Search This Blog

3.6.15

ஜாதி ஒழிப்பும் ஆச்சாரியார் கல்வித் திட்ட ஒழிப்பும் ஒன்றே!-பெரியார்

சாதி ஒழிப்பும் ஆச்சாரியார் கல்வித் திட்ட ஒழிப்பும் ஒன்றே

தந்தை பெரியார்


ஆச்சாரியார் கல்வித்திட்டம் சாதியை வளர்க்கும் கல்வித்திட்டம், ஆகையால் தான் சாதி ஒழிக்கும் பணியில் முன்நின்று இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம். சாதி ஒழிய  வேண்டுமாயின்  சாதிக் குறை பாட்டை எடுத்துச் சொன்னால் மட்டும் போதாது.  நீங்கள்  நன்றாக  ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். சாதியை ஒழிக்க வேண்டுமானால் சாதி அடிப்படையை ஒழித்தாக வேண்டும். பணக்காரர்களெல் லாரும் சூத்திரர்கள்தானே, ராஜாக்கள் எல்லாரும் சூத்திரர்கள் தானே? பணம் மட்டும் சேர்ந்துவிட்டால் சூத்திரப் பட்டம் போய் விடுமா?


மனித சமுதாயத்தின்  மக்கள் பிறவியில் உள்ள பேதத்தை  ஒழிப்பதற் காகவும், மற்ற நாட்டு  மக்களைப்போல் நாமும் நம் நாட்டில் பூரண சுயேட்சை, சம அந்தஸ்து, சம உரிமையோடு வாழ்வதற்காகவும் பாடுபடுவதாகும். சமுதாயத்தின் பேரால், சாஸ்திரங்களின் பேரால், மதத்தின் பேரால், சட்டங்களின் பேரால் நம்  மக்களுக்குள்ள இழிவு களைப் போக்கப் பாடுபட்டு வருகிறது. சமுதாயத்துறையிலே, மதத்துறையிலே, கடவுள் துறையிலே,  திராவிட மக் களுக்கு இழைத்த கேடுகளை  ஒழிக் கவே சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற புத்தர் கொள்கைப் பிரசார மாநாட்டில் தீர்மானம் போட்டோம்.

அம்மாநாட்டிற்குத் தலைமை தாங் கியவர் - உலக புத்த மத அய்க்கிய சங்கத் தலைவர் (ஜி. பி. மல்லலசேகரா) மாநாட் டைத் திறந்து வைத்தவர். எல்லா இந்திய தாழ்த்தப்பட்டவர் சங்கக் காரியதரிசியும், பார்லிமெண்டு மெம்பருமான தோழர் ராஜ்போஜ் அவர்கள் ஆவார்கள். இப் போது இங்கு ஷெட்யூல்வகுப்பு ஸ்தாபன சார்பாக மாலையிட்ட நண்பர்.


நாங்கள் இம்மாநாடுகளின் தீர்மானங் களை ஆதரிக்கின்றோம்; ஆச்சாரியார் கல்வித்திட்ட ஒழிப்புமாத்திரமல்ல, ஜாதி ஒழிப்புக்கும் நீங்கள் பாடுபட வேண்டும். என்று கேட்டுக்கொண்டார். திராவிடர் கழகக் கொள்கை என்ன என்பதை அவர் சரிவர புரிந்துகொள்ளவில்லை என்று கருதுகிறேன்.

ஜாதி ஒழிப்பு என்பதும் ஆச்சாரியார் கல்வித்திட்ட ஒழிப்பு என்பதும்  வேறு அல்ல. ஆச்சாரியார் கல்வித்திட்டம் ஒழிய வேண்டும் என்று ஏன் கூறுகி றோம்? அவர் கல்வித்திட்டமே தன் சுயஜாதி பாதுகாப்புத் திட்டமாகும். அதாவது வருணாசிரம பாதுகாப்புத் திட்டம். ஆகையால் அதை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஜாதி என்பது வருணாசிரமத்தின்படி ஏற்பட்ட தாகும். ஜாதிகளை எடுத்துக் கொண்டால் அவை அத்தனையும் 3 ஜாதிக்குள் அடங்கிவிடும்.

இன்று செட்டியார், நாயுடு, முதலியார், கவுண்டர், ரெட் டியார், படையாச்சி, பறையன், சக்கிலி என்று சொல்லப்படும் அத்தனை ஜாதி களும் அந்த 3 ஜாதிக்குள்ளேயேதான் அடங்கிவிடுகின்றன. என்ன அந்த 3 ஜாதி? 1. பார்ப்பான் அதாவது பிராமண ஜாதி என்று ஒருவன் சொல்லிக் கொள்வது; 2. சூத்திரஜாதி நம்மவர்களை - திராவிடர்களைக் காட்டுவது 3. அடுத் தாற்போல் ஆதாரம் இல்லாமல் தந்திர மான முறையில் புகுத்திய பஞ்சம ஜாதி அல்லது சண்டாள ஜாதியாகும்.

இன் றைய தினம் நாட்டிலே வருணாசிரம  முறைப்படிதான். இந்தப் பார்ப்பனனும், நம்மவர்களான சூத்திரர்களும், பஞ்சமர் களும் இருக்கின்றனர்.


நம்மவர்களில் சிலபேர் அவனை பிராமணன்  என்றே கூப்பிடுகிறார்கள்.
சில பார்ப்பன அடிமைகள் திராவி டர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? என்று தெரிந்தோ தெரியாமலோ கேட்கிறார்கள்.


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்களெல்லாரும் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள் தான். இதை அவர்கள்  பின்பற்றுகிற கலாசாரப்படி கூறுகிறோம். உதாரணமாக, முஸ்லிம் ஒருவரை இரத்தப் பரிட்சை செய்து பார்த்தால், நமக்கும் அவருக்கும் பேதம் இருக்காது. அவன் முன்பு நம்ம வனாக இருக்கலாம். ஆனால் கலாசாரப் படி முஸ்லிம் என்கிறான்.

பார்ப்பானை ஏன் ஆரியன் என்கிறோம்? ஆரிய கலாசாரம் வேறு; அவன் பூணூல் போட் டுக் கொள்கிறான். ஆரியர்கள், மற்றும் ஆரியர் கடவுள்கள், இதிகாசங்கள், சாஸ்திர புராணங்கள் வேறு. ஆனால் இவற்றையெல்லாம் நம் தலைமையில் கட்டினான். அவன் வேறு ஜாதி, பிறப்பு; நாம் வேறு ஜாதி, பிறப்பு என்ற முறையைப் புகுத்தினான்.

ஆச்சாரியார் புதுக் கல்வித்திட் டத்தைக் கொண்டு வந்ததன் நோக்க மென்ன? அந்தக் கல்வித்திட்டத்தின் அடிப்படை என்ன? நீங்கள் கவனிக்க வேண்டும். சூத்திரர்கள் படிக்கக்கூடாது. இதுதான் ரகசியம். வேறு ஒன்றுமில்லை. பாதிநேரம் படிக்கச்சொல்லுகிறார். அந்தந்த சாதித் தொழில் சரிவர செய்யும் அளவுக்குப் படிக்கவேண்டும். ஆரியரின் ஜாதிமுறை, வருணாசிரம முறை.

வருணாசிரம முறைப்படி, நாம் படிக் கவே கூடாது. ஏதோ வெள்ளைக்காரன் காலத்தில் நாம் 100க்கு 10 பேர் படித்து விட்டோம். அந்தப்படிப்பைப் படித்ததால் இன்று நாம் பார்ப்பனர்களை மதிப்பது கிடையாது. அவர்கள் என்ன உசத்தி, நாம் என்ன தாழ்வு என்கிறோம். இன்று நகரங்களில் யாரும் பார்ப்பானை சாமி என்று கூப்பிடுவது கிடையாது. ஏதோ பட்டிக்காட்டில் தெரியாத காரணத்தால் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலர் மான உணர்ச்சி இல்லாமல் சாமி என்கிறார்கள். அதுவும் மாறிக் கொண்டு வருகிறது.

திராவிடர்களாகிய நாம் இங்குக் குடி புகுந்த அந்நியனை பார்ப்பானை ஒழி; அவனை வெளியேற்று என்று சொல் கிறோம். சர்க்காரால் (அரசால்) ஒன்றும் செய்ய முடியாது. இந்தியப் பிரதமர் நேரு வும் சென்னைப் பிரதமர் ஆச்சாரியாரும், பார்ப்பனரே வெளியேறு என்றால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. இவர்களின் கூப்பாட்டினால் பெரிய கிளர்ச்சி உண்டாகி விடுமே என்று பயப்படுகிறார்கள்.

ஏன்? பார்ப்பானே வெளியேறு என்பதற்கும் வெள்ளையனே வெளியேறு என்பதற்கும் சிறிதும் வித்தியாசமில்லை. பார்ப்பான் மேல்ஜாதிக்காரனாம். உழைத்து உண்பவர்க ளாகிய நாம் கீழ்ஜாதிக்காரர்களாம்; இந்த நிலைமையைச் சகிக்க முடியாமல்தான் மேல்ஜாதிக்காரனே வெளியேறு என்கி றோம். இந்தக் கிளர்ச்சி இன்று நேற்றல்ல. 25 வருடங்களாகவே பார்ப்பானை ஒழிப்பது என்ற கருத்தில் நாம் இயக்கம் நடத்தி வந்தோம்.

வெள்ளைக்காரனை வெளியேற்ற நாமும் காலித்தனமாக  ரயிலைக் கவிழ்த்துத் தண்ட வாளத்தைப் பிடுங்கினதாலே வெள்ளையன் இந்தப் பசங்கள் முட்டாள்கள்; ஆகையால் நாம் பார்ப்பானிடமே அதி காரச் சாவியைக் கொடுத்து விட்டுப் போவோம். அவன் கிட்டேயிருந்தால் தான் இவனுங்களுக்குப் பாப்பனர்கள் தக்க புத்தி கற்பிப்பார்கள் என்று நினைத்துக் கொடுத்து விட்டுப் போயிட்டான்.

அதுவும் வெள் ளைக்காரன் இவ்வளவு நாளாக நம்மைச் சுரண்டி நம் நாட்டுக்கு அனுப்பிக் கொண் டிருந்தால், இப்பொழுது முடியாமற் போகும் எனப் பயந்து பார்ப்பானிடம் லேவாதேவி, பாங்க், மில்கள் முதலியவற்றின் மூலம் சுரண்டுவதற்குப் பூரண உரிமை ஒப்பந்தம் செய்துகொண்டு சாவி கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.

அந்தப்படி சாவி வாங்கின பார்ப்பான் அம்பாரம் அம்பாரமாகப் பதவி, உத்தியோகக் கொள்ளை அடிக்கிறான். கூன், குருடு, செவிடு, கைகால் நடுக்கம் உள்ள தன் இனத்தாருக்கு கவர்னர், மந்திரி, எஞ்சினியர், எலக்ட்ரிக் எஞ்சினியர் முதலிய 1000 கணக்கான ரூபாவுக்கு  மேலும் உள்ள பதவிகளில் அமர்த்துகிறான்.  பிரசி டெண்ட் (குடியரசுத் தலைவர்) இராசேந்திர பிரசாதுக்கு ரூ. 10000 சம்பளம்.

ஒரு சாதாரண புரோகிதகுடும்பம்; அவர் தகுதியெல்லாம் காந்திக்கு நல்லபிள்ளை. வெள்ளைக்கார னிடம் சாவிவாங்கியதும் சம்பளம்மாதம் 1-க்கு 10000 ரூபாய். வருடம் ரூ. 400000 படி, இவர்கள்தான் மாதம் 1-க்கு  500க்கு மேல் சம்பளம் வாங்கமாட்டோம் என்ற தீர்மானம் போட்டவர்கள். இன்னும் அந்தத் தீர்மானம் அப்படியே இருக்கிறது. பிரசிடெண்ட் தங்கியிருப்பதற்கு வைசிராய் பங்களா.

இவர்கள்தான் தியாகிகளாம்! ஏழை பங்காளர் இவர்கள்! இப்படிக் கொள்ளை யடிக்கிறார்கள். சுகவாழ்வு வாழ்கிறார்கள். நம்மவர்கள் பார்ப்பான் காலைக் கழுவிக் கும்பிட்டு மானம் கெடுகிறார்கள். வெள் ளைக்காரன் போனதும் அரையணா கார்டை (அஞ்சல் அட்டையை) முக் காலணா ஆக்கினார்கள். ஓரணா கவரை (அஞ்சல் உறையை) இரண்டணா ஆக்கி னார்கள். நாலணா தந்தியைப்  பனிரெண் டணா ஆக்கினார்கள்.

மைலுக்கு 3 காசு; 4காசு ரயில் சார்ஜ்  (கட்டணம்) 5-6 பைசாவாக ஆக்கினார்கள். ஒன்றையும் குறைக்கவில்லை. எங்களுக்கு இவர்கள் என்ன பண்ணினார்கள்? மாறாக, நம்மை அப்பன் தொழில்செய்யணும்; உத்தியோக வேலை செய்யக்கூடாது; ஜாதிக் தொழில் தான் செய்ய வேண்டும். 1/2 நாள் தான் படிக்கவேண்டுமாம்.

இதுதான் ஆச்சாரியார் கல்வித்திட்டம். வெள்ளையன் போன பின்பு அவர்கள் எல்லாத்துறையிலும் ஆக்கிரமித்து நம்மைப் பாழாக்கி விட்டார்கள். ஆகையால்தான் நாம் வருணாசிரம கல்வித்திட்டத்தை எதிர்க் கிறோம். சாதியை மேலும் வளர்க்கின்ற காரணத்தினால் தான் இத்திட்டத்தை எதிர்க்கின்றோம்.

உண்மையிலேயே இந்த நாட்டில் மாத்திரமல்ல; இந்தியா முழு மைக்குமே சாதி ஒழிய வேண்டும் - அது அழிந்து பட வேண்டும், என்று சொல்லு கின்ற ஒரு ஆள்-ஒரு கழகம் இருக்கிற தென்றால் திராவிடர் கழகமும் நாங்களும் தான். இப்படிப் பேசுவது சும்மா சவடால், புளுகு சொல்லிப் போவதற்காக அல்ல. யாராவது சொல்லட்டுமே என்னைத் தவிர, திராவிடர் கழகத்தைத் தவிர சாதி ஒழிய வேண்டும்.

என்று சொல்பவர்களைக் காட்டுங்கள் பார்க்கலாம் - இந்த 2000 வருடங்களாய் எங்களைத் தவிர? காந்தியாராவது ஜாதி ஒழிய வேண்டும் என்று சொன்னதுண்டா? இன்று தானா கட்டும் யாராவது சொல்லட்டுமே! காந்தி யார் சாதியைக் காப்பாற்ற வேண்டும். அது நீடித்திருக்க வேண்டும். என் மூச்சே வருணாசிரமம் காப்பற்றப் படத்தான்
என்று தானே சொன்னார்.


தீண்டாமை ஒரு வழக்கம் தீண்டாமை ஒழிந்த தினமே பறையன் மாறிப் போவானா? தீண்டாமை ஒழிந்துவிட்டதால் சக்கிலி வேறாய் விட் டானா? நமக்குத் தீண்டாமை இல்லை யென்பதாலேயே நமக்குச் சூத்திரப்பட்டம் போய்விட்டதா?

டெல்லி ஆட்சியின் அரசமைப்புச் சட்டத்திலே ஒரு வார்த்தை ஜாதி  ஒழிக என்று இருக்கிறதா? இந்தியாவைத் தவிர, தமிழ் நாட்டைத் தவிர, வேறு எங்காவது ஜாதி இருக்கிறதா? இந்த அரசமைப்புச் சட்டத்தை எழுதியவர் டாக்டர் அம்பேத்கர் தானே, ஜாதி ஒழிக்க வேண்டுமென்று அவர்கூட ஒரு வரி எழுதவில்லையே! டாக்டர் அம்பேத்கர் தான் அரசமைப்புச் சட்டகர்த்தா; கீழ்ஜாதி, தீண்டாதார் களுக்குத் தலைவர். அவர் எழுதின சட்டத்தில் அவர்களுக்குச் சலுகைகொடு என்றுதான் கேட்டார்.


உடனே  பார்ப்பான் சலுகை கொடுத்துவிட்டான். அவர்களின் விகிதாசாரப் படி 100க்கு 15 பேருக்குப் பதவி கொடுக்கிறேன் என்று சொன்னான். 2000 மைசூர் ஆனைக்குட்டி களைக் கொண்டு வந்து பஞ்சமர் கிட்டே உங்கள் விகிதாசாரம் 100க்கு 15 வீதம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றால் அவன் எடுத்துக் கொள்வானா? அவனால் முடியுமா அதைக் காப்பாற்ற? அனுபவிக்க? அவ்வளவு காசுக்கு எங்கே போவான்? அதுபோல் அவர்களில், 15 முனிசீஃபு உத்யோகம் கொடுக்கிறேன் என்றால் ஒரு ஆள்தான்தேருவான். இரண்டொரு ஆண்டுகளுக்கு முன் 72 முன்சீஃப் பதவிகளுக்கு ஷெட்யூல் வகுப்பாருக்கு 12 பேருக்கு ஒரு ஆள்தானே விண்ணப்பம் போட்டார். பாக்கி ஆட்கள் வரவேண்டுமென்றால் 18 வருடம் படித்து பாஸ்செய்து, (தேர்ச்சிசெய்து) 3 வருடம் பிராக்டிஸ் செய்தல்லவா வரவேண்டும்? ஆதலால் அந்த 12-ல் ஒன்று தாழ்த்தப் பட்டவனுக்கு. பாக்கியெல்லாம் அவன் சாக்கில்  பார்ப்பானுக்குத்தானே போயிற்று? இது எவ்வளவு பெரிய சூழ்ச்சி? நாங்கள் படித்துவிட்டு தகுதியோடு தயாராய்  இருக்கிறோம்.

எங்கள் விகிதாசாரப்படி எங்களுக்குப் பதவிகொடு என்றால் அதைப்பார்ப்பான் இது வகுப்புவாதம்; திறமை கெட்டுவிடும்; கொடுக்கமாட்டேன் என்கிறானே? படிக்க முடியாத, படிக்காத, தயாராக வேண்டிய அளவுபடி இல்லாத மக்களுக்கு வகுப்பு நீதி வழங்கி இருப்ப தாகப் பித்தலாட்டம் செய்கிறான்.
தோழர் ராஜ்போஜ் தெளிவாக திருப் பத்தூரில் இதை சொல்லிவிட்டாரே! அராசங்கத்தார் எங்களை ஏமாற்றி விட்டார்கள். நாங்களும் தெரிந்துதான் ஏமாந்தோம். அதை ஒப்புக்கொள்ளா திருந்தால் இந்நேரம் எங்கள் அம்பேத் கரைக் கொன்றிருப்பார்கள். அம்பேத் கருக்கு உயிர் மேல் கவலையில்லையென்றாலும், கொன்று விடுவதாக வந்த கடிதங்களைக் கண்டு பயந்து, ஏதோ நாம் இன்னும் சில காலம் உயிருடன்  இருந் தாலும் ஒன்றிரண்டு நன்மைகளாவது செய்யமுடியுமே என்ற எண்ணத்தில், அவர்கள் காட்டின இடத்தில் கையெழுத் துப்போட்டார் என்பதாக அதாவது காந்தியார் உண்ணாவிரதம் இருந்தார். டாக்டர் அம்பேத்கர் அவர்கள்  ஒப்பந்தத் தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். மறுத்ததன்  காரணமாக அவரைக் கொல்ல முயற்சிசெய்தார்கள். அதிலிருந்து தப்பி மறுநாள் கையொப்பம் போட்டதனால்தான் அவர் உயிர் தப்பியது என்றார்.


ஆச்சாரியார் கல்வித்திட்டம் சாதியை வளர்க்கும் கல்வித்திட்டம், ஆகையால் தான் சாதி ஒழிக்கும் பணியில் முன்நின்று இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம். சாதி ஒழிய  வேண்டுமாயின்  சாதிக் குறை பாட்டை எடுத்துச் சொன்னால் மட்டும் போதாது.  நீங்கள்  நன்றாக  ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். சாதியை ஒழிக்க வேண்டுமானால் சாதி அடிப்படையை ஒழித்தாக வேண்டும். பணக்காரர்களெல் லாரும் சூத்திரர்கள்தானே, ராஜாக்கள் எல்லாரும் சூத்திரர்கள் தானே? பணம் மட்டும் சேர்ந்துவிட்டால் சூத்திரப் பட்டம் போய் விடுமா? தஞ்சாவூர் புதுக்கோட்டை திருவாங்கூர்- கொச்சி ராஜாக்களெல் லாரும் சூத்திரர்கள்தானே.

பணம் இருக்கிறதாலேயே பதவி இருக்கிறதாலேயே, மடாதிபதியாக இருப்பதாலேயே சூத்திரப் பட்டம்  போய் விடுகிறதா? கவர்னராக (ஆளுநராக) இருந்த சர். கே.வி.ரெட்டி, மந்திரியாக இருந்த பி.டி. ராஜன், இவர்களெல்லரும் சூத்திரர்கள் தானே? சாதிஒழிய சூத்திரப்பட்டம் போக நாங்கள் தானே பாடுபடுகிறோம்? ஜாதி எதனால் ஏற்பட்டது? சாஸ்திரங்களினால், மதங்களி னால், புராணத்தினால், கடவுளால் ஏற் பட்டது. பார்ப்பான் ஆட்சியில் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், பார்ப்பான், இவைகளை ஒழித்தால்தான் சாதி ஒழிய முடியும்.

தாழ்த்தப்பட்டவர்கள் மந்திரி ஜோதி அம்மையார் உட்பட நான் சொல்லு கிறேன். இவர்கள்  கடவுள், மதத்தை ஒழித் தால்தான், அதிலிருந்து விடுபட்டால்தான் அவர்கள் மனிதர்கள் ஆவார்கள். என்னுடைய  சிநேகிதர்கள்தான் சிவ ராஜும் அவரது மனைவியாரும். அவர்கள் வீட்டில் இந்துமதம் இருக்கிறது! சாமிபடம் இருக்கிறது. செட்யூல்ட் (ஆதிதிராவிட) வகுப்புத் தோழர்கள் சொல்லட்டுமே, சாமி, சாஸ்திரம், மதத்தில் கைவைத்தால் சர்க்கார் (அரசு) ஒழித்துக் கட்டிவிடுவோம் என்று! யாரோ சிலர் தைரியசாலிகள், சட்ட சபைக்குப் போகாதவர்கள் தான் அவற்றை ஒதுக்கிவிடுகிறார்கள். நாங்கள் கடவுளை உடைத்து ரோடுக்கு (சாலைக்கு) ஜல்லி போட்டால்தான்  இவைகளை ஒழிக்க முடியும் என்று கூறுகிறோம்.

தலையில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறப்பித்த சாமி இருந்தால் எப்படி நமக்கு சூத்திரன் என்ற பட்டத்தைத்  தோளில் போட்டுக்கொண்டு  நம்மக்கள், மந்திரிகள், மடாதிபதிகள் மகான் மற்றும் கடவுள், மதப்பிரச்சாரம் செய்கிறார்களே! ஆகையால் கடவுள், மதம், சாஸ்திரம் இவைகளை ஒழித்தால்தான் சாதி ஒழியமுடியும்.

---------------------------------------------24-2-1954 ந் தேதியன்று  சேலம் மாவட்டம், பள்ளிப்பட்டியை அடுத்த அதிகாரப்பட்டியில் தந்தை பெரியார் சொற்பொழிவு: "விடுதலை" 27-2-1954

33 comments:

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரையும் தாண்டி நூறாண்டு வாழ்கவே!மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னை ஒருவரி விமர்சனத்தில் அடக்கி அகிலத்திற்கு அடையாளம் காட்டிய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இன்று (3.6.2015) 92ஆம் ஆண்டு அகவை தொடக்கம்!

அவரது ஒப்பற்ற உழைப்பும், கொண்ட லட்சியத்தில் தளரா உறுதியும் அவரை என்றும் சீரிளமையோடு வைத்துக் கொண்டுள்ளது!

அவர் ஒரு பல்கலை அறிஞர். அவரிடமிருந்து ஆட்சியை, ஜனநாயகத்தின் கோணல் புத்தி சிற்சில நேரங்களில் பறிக்கலாம்; ஆனால் அவரது ஆற்றல் மிக்க- வாளினும் வலிமை வாய்ந்த எழுதுகோல் என்றென்றும் அவரது தனி உடைமை!

ஆம் பொதுஉடைமையை பொதுஉரிமையைப் பரப்பும் தனிஉடைமை!

எழுத்துகள் அவரது ஏவல்படைகள்; கருத்து களும் லட்சியங்களும் அவைகட்குக் காவல் படைகள்!

ஆட்சிதான் என்றும் இனமான உணர்வாளர் களின் இதயங்களில்- மக்களின் இதயச் சிம்மாசனம் நிரந்தரமானது. பதவிச் சிம்மாசனம் அதன்முன் எம்மாத்திரம்? தந்தை பெரியார்தம் குருகுலத்தில் பூத்துக் குலுங்கிக் காய்த்த அந்தக் கனியை அறிஞர் அண்ணா தன்கனிவால் பழமாக்கினார்.

எனவேதான் இன்றும் கலைஞர் என்ற மாமனிதத்தின் கூட்டுச் சேர்க்கை அய்யாவின் துணிவு+அண்ணாவின் கனிவு!

ஆட்சியில் அமர்ந்து வரலாற்றில் இடம் பிடித்த வர்கள் பலர்.

ஆனால் ஆட்சியையே வரலாறாக்கியவர்கள் சிலரே!

அதில் கலைஞரின் இடம் தனிஇடம்; எளிதில் எவராலும் தொட்டுவிடமுடியாத சாதனைச் சிகரம்!

நன்றி மறந்தோரைத் தவிர, நல்லோர் பாராட்டுவர்; எதிர்நீச்சல் என்பது அய்யா என்ற ஆசானிடம் அவர் கற்றுத்துறை போகிய பயிற்சி!

எதையும் தாங்கும் இதயம் என்பது அண்ணா விடம் அவர் கற்றுக்கொண்ட பாடம்!!

நெருக்கடி காலம் என்ற நெருப்பாற்றில் நீந்தி தி.மு.க.வைக் கரைசேர்த்த உத்தமத் தலைவர்!
முதன்முதல் பதவிஏற்றபோது, தான் மிக மிக பிற்படுத்தப்பட்ட எளிய குடும்பத்தவன். எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் என்றுகூறி, அதைப் பணியாகக் கருதி உழைத்தவர் உழைப்பவர்!

சோர்வறியாதவர் என்பது எப்படியோ, அப்படியே தனிப்பட்ட முறையிலும் தோல்வி அறியாதவர் அவர் என்பது அவரது அரசியல் வாழ்வின் சாதனை.

முடிவுகளை எடுக்கும்போதெல்லாம் அவை விரைந்த முடிவுகளாகவே அமையும் என்பதே உண்மை; ஆனால் அவை அவசர முடிவுகள் அல்ல. 92 அகவை என்பது முதுமை அல்ல;

முதிர்ச்சி! முதிர்ச்சி!! எழுச்சி!!!

தந்தை பெரியார் வயதினையும் தாண்டி, நூறாண்டுக்கு மேல் வாழ்ந்து, திராவிடத்தின் பெருமையை திக்கெட்டும் பரப்பட்டும் என்று வாழ்த்துகிறோம்!
வாழ்க பல்லாண்டு!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்சென்னை
3.6.2015Read more: http://www.viduthalai.in/e-paper/102623.html#ixzz3c0hQCmXD

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவாளர் கடமை


நாடு, மொழி, கடவுள், மதம், ஜாதி என்ற எந்தப் பற்றுமின்றி மானிடப் பற்றுடன், அறிவைக் கொண்டு சிந்தித்துச் செயல்புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும்.
_ (உண்மை, 15.9.1976)Read more: http://www.viduthalai.in/page-2/102627.html#ixzz3c0hqOdxV

தமிழ் ஓவியா said...

ஆப்பதனை அசைத்துவிட்ட இந்துத்துவாவாதிகளுக்கு அர்ப்பணம்
அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம்
மும்பை, ஜாதவ்பூர், டில்லியிலும் துவங்கியது
டில்லி, ஜூன் 3_ சென்னை அய்.அய்.டி.யிலும் அம் பேத்கர், பெரியார் வாசகர் வட்டத்தைத் தடை செய்ததன் எதிரொலியாக மும்பை, டெல்லி, ஜாதவ் பூரிலும் இந்த அமைப்பத் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை அய்.அய்.டி நிர்வாகம் மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் சர்வாதிகார ஆணைக்கு அடிபணிந்து, ஹிட்லரின் நடவடிக்கை யைப் போல் அம்பேத்கர் _ பெரியார்- வாசகர் வட் டத்தை தடை செய்தது. இந்தத் தடையை எதிர்த்து தமிழகத்தில் துவங்கிய போராட்டம் டில்லியிலும் எதிரொலித்தது.

திங்கள் அன்று மும்பை _ பவாயில் உள்ள அய். அய்.டி தலைமையத்தில் முற்போக்கு சிந்தனை யுள்ள மாணவர்கள் ஒன்று கூடி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து அம்பேத் கர் _ பெரியார்- _ புலே பெயரில் வாசகர் வட்டம் ஒன்று துவங்கப்பட்டது.

துவங்கிய உடனே அதன் முதல் கூட்டத்தில் இந்த மூன்று தலைவர்களின் கருத்துகளை மக்களி டையே பரப்பும் கொள் கைதான் இந்த வாசகர் வட் டம் துவங்கப்பட்டதன் நோக்கம் என்று அறிவிக் கப்பட்டது. இந்நிலையில் மும்பையைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்து அய்.அய்.டி-யிலும் பெரி யார் _ அம்பேத்கர் வாசகர் வட்டம் துவங்கப்பட்டுள் ளது.

டில்லி, கான்பூர் அய்.அய்.டியில் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட் டம் பல்வேறு குழுக்க ளைச் சேர்ந்த மாணவர் கள் ஒன்றிணை மீது ஆரம் பித்தனர்.

இதேபோல் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்திலும் அம்பேத்கர் _ பெரியார்- மாணவர் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் துவக்கம்

இந்தியாவின் மிக முக் கியமான உயர்கல்வியக மான டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செவ்வாய் அன்று அம் பேத்கர் _ -பெரியார் மாண வர் வாசகர் வட்டம் துவங் கப்பட்டது. மதவாத மாணவர் அமைப்பான எபிவிபி தலைமையகத் தின் எதிரிலேயே இந்த வாசகர் வட்டம் துவக்கப் பட்டது.

துவக்க விழாவில் கலந்து கொண்ட மாண வர் அமைப்பினர் செய்தி யாளர்களிடம் பேசும் போது அம்பேத்கர் _ பெரி யார் -வாசகர் வட்டமா னது உடனடியாக அனைத்து சமூகவலைதளங்களிலும் தங்களது அமைப்பிற்கென புதிய பக்கங்களைத் துவங் கியுள்ளது. மேலும் விரை வில் இதற்கென ஒரு இணையதளமும், கொள் கைகளை விளக்கும் இதழ் களையும் தொடர்ந்து வெளியிட முடிவுசெய்துள் ளதாக தெரிவித்தனர்.

டில்லி அய்.அய்.டி. மாணவர்கள் கருத்து

டில்லி அய்.அய்.டி அம்பேத்கர் _ பெரியார்-வாசகர் வட்ட மாணவர் கள் கூறியதாவது, இந்தியா வில் மொத்தம் 16 அய். அய்.டிக்கள் உள்ளன. தற்போது அய்ந்து அய். அய்.டிக்களில் பெரியார் _ அம்பேத்கர் வாசகர் வட் டம் துவங்கியிருக்கிறோம். இன்னும் சில நாட்களில் இந்தியா முழுவதிலும் உள்ள 16 அய்.அய்.டிக் களிலும் வாசகர் வட்டம் துவங்க தீர்மானித்து இருக் கிறோம்.

கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் உயர் கல்வி நிறுவனம் இந்துத் துவ சிந்தனைகொண்ட வர்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனமாகும், அங்கே உள்ள மாணவர் களால் அம்பேத்கர் பெரியார்- _ வாசகர் வட்டம் துவங்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

ஆகையால் மற்ற உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அய்.அய்.டிகளில் துவங்குவது மிகவும் எளிதான செயலாகும். விரைவில் அனைத்து அய்.அய்.டி மாணவர் வாசகர்வட்டத்தையும் ஒன்றிணைக்க இருக்கி றோம் என்று கூறினர்.

பிரதமர் மோடி மற்றும் இந்துத்துவா கொள் கைகளை விமர்சிக்கிறது எனக் கூறி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச் சகத்துக்கு ஒரு அனாம தேய கடிதம் வந்தது என்று கூறி ஸ்மிருதி இரா னியின் தலையீட்டால் தடைசெய்யப்பட்ட சென்னை அய்.அய்.டி பெரியார்- _ அம்பேத்கர் வாசகர் வட்டம் தற்போது பெரிய அளவில் இந்தியா முழுவதும் பரவி நிற்கிறது.

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று பெண்ணடிமைச் சின்ன மான தாலி அகற்றுதல் குறித்த நிகழ்ச்சியை சென்னை பெரியார் திட லில் திராவிடர் கழகம், தமிழர் தலைவர் தலை மையில் நடத்தியது.

இதற்கு தடை மற்றும் இந்துத்துவ அமைப்பின் போராட்டத் தின் காரணமாக பெண் ணடிமைச் சின்னமாம் தாலியை அகற்றும் நிகழ்வு உலகம் முழுவதிலுமுள்ள முற்போக்குவாதிகளிடம் போய்ச் சேர்ந்தது. அதே போல் அம்பேத்கர் பெரி யார்- _ வாசகர் வட்டத் தின் தடையும் இன்று இந் தியா முழுவதிலுமுள்ள மாணவர்களை சென்ற டைந்துள்ளது.Read more: http://www.viduthalai.in/page-8/102622.html#ixzz3c0izsbo6

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட மாணவர்களுக்கு அருந்ததி ராய் ஆதரவு

சென்னை, ஜுன் 3_ மாணவர் அமைப்பால் என்ன நேர்ந்துவிட்டது? ஏன் கல்விநிறுவனத்தின் தலைவர் அவர்களைக்கண்டு அச்சப் பட வேண்டும்? ஏன் அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும்?

அதற்கான காரணங்க ளாக அவர்கள் கூறுவது வழ மையான முட்டாள்தனமான காரணத்தையேதான் குறிப் பிட்டுள்ளார்கள். வெறுப்பு களை வகுப்புகளுக்கிடையே பரப்புகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அடுத்த காரணமாக அமைப் பின் பெயரில் அரசியல் இருப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், இதேபோன்று செயல்பட்டுவரும் அமைப் பாக விவேகானந்தா வாசகர் வட்டம் இருப்பதற்கு இவை யெல்லாம் பொருந்தவில் லையாம்.

இந்துத்துவத்தின் தேசிய அளவிலான நிகழ்ச்சியாக கர்வாப்சியை (ஏற்கெனவே ஆர்ய சமாஜம் சார்பில் சுத்தி நிகழ்ச்சியைப்போன்று) நடத்திவந்தபோது தாழ்த்தப் பட்டவர்களை இந்துக்கள் என்கிற வளையத்துக்குள் கொண்டுவருவதற்காக இந்துமதத்தை வெளிப் படையாகக் கண்டித்தவ ராகிய அம்பேத்கரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளை , அவர் ஓர் இந்து என்று கூறிக்கொண்ட இந்துத்துவா அமைப்புகள் கொண்டாடி யதாக ஊடகங்களில் தக வல்கள் வெளிவந்தன.

அப் படி இருக்கும் போது, அம் பேத்கரைப் பின்பற்றுபவர் களாக இருப்பவர்கள் அவர் பெயரைப் பயன்படுத்தும் போது, ஹைர்லாஞ்சியில் உள்ள சுரோகா பாட்மாங்கே குடும்பத்தினர் கொல்லப் பட்டது ஏன்? செல்பேசியில் ஒலிக்கும்போது அம்பேத்கர் புகழ் பாடல் ரிங் டோன் ஒலித்ததால் தாழ்த்தப்பட்ட இளைஞரை அடித்தே கொன்றது ஏன்?

அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர் அமைப்புக்குத் தடை போடுவதும் ஏன்? ஏனென்றால், எந்த நோக் கத்தாலோ, ஆட்டம் போடு வதன்மூலமாக ஆபத்தான இடத்தில் கைவைத்து விட்டார்கள். பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களிலும் ஜாதி யத்தை ஊடுருவச் செய்து விட்டார்கள். இந்த ஆட்சி யில் பல முனைகளிலும் அச்சுறுத்தல்களின் மூலமாக செய்துவரும் கேடுகளைவிட,

பகத்சிங் மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவரின் பெயரில் விழாக்களைக் கொண்டாடு வதன் மூலமாக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் என்ன கேட்டினை செய்து விட்டது? இதுதான் அவர்களைக் கொந்தளிப்புக்கு உள்ளாக் கிள்ளது. ஆகவே, இதுதான் அவர்களைத் தடையை நீக்க வலியுறுத்திள்ளது.

இடதுசாரிகள் மற்றும் முற்போக்கான முசுலீம் அமைப்புகளுடன் கைகோர்ப் பதாக விடுதலை சிறுத்தை கள் கட்சியின் அறிவிப்பு அதற்கேற்பவே ஆட்சியா ளர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்துக்கு விதிக் கப்பட்டுள்ள தடையின் மூலமாக ஒருமித்த கருத்துள் ளவர்களை ஒன்றிணைப்ப தன் தொடக்கமாக அமைந் துள்ளது.

_இவ்வாறு அருந்ததிராய் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.Read more: http://www.viduthalai.in/page-8/102622.html#ixzz3c0jBmWOr

தமிழ் ஓவியா said...

அய்அய்டி இயக்குநருக்கு தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம் அழைப்பாணை

புதுடில்லி, ஜூன் 3_ சென்னை அய்அய்டியில் மாணவர் அமைப்பான அம்பேத்கர்-, பெரியார் வாசகர் வட்டத்தின் அங் கீகாரம் ரத்து செய்யப் பட்ட விவகாரத்தில், மத் திய மனித வளத் துறைச் செயலர், சென்னை அய் அய்டி இயக்குநர் ஆகி யோருக்கு தாழ்த்தப்பட் டோர்களுக்கான தேசிய ஆணையம் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

இருவரும் ஜூன் 8ஆம் தேதி ஆணையம் முன் ஆஜராக உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த விவகா ரத்தில், சென்னை அய்அய் டியிடம் விளக்கம் கேட்டு ஆணையம் ஏற்கெனவே கடிதம் அனுப்பியிருந்தது. "விதிகளை மீறி செயல் பட்டதால், அந்த மாண வர் அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பட்டது' என்று அந்த கடிதத்திற்கு அய்.அய்.டி. நிர்வாகம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்த விசா ரணைக்காக ஆஜராகும் படி மத்திய மனித வளத் துறை செயலருக்கும், சென்னை அய்அய்டி இயக் குநருக்கும் செவ்வாய்க் கிழமை அழைப்பாணை கள் அனுப்பப்பட்டதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.Read more: http://www.viduthalai.in/page-8/102622.html#ixzz3c0jIoVEr

தமிழ் ஓவியா said...

காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்!
கடவுள்களைக் காப்பாற்றுங்கள்!!
கோவில் கலசம் திருட்டு - மாரியம்மனுக்கு தாலியறுப்புவிருத்தாசலம், ஜூன் 3_- விருத்தாசலம் அடுத்த எருமனூர் மாரியம்மன் கோவிலில் அம்மனின் தாலியை யாரோ திருடிச்சென்றுள்ளனர். எருமனூர் கிராமத்தில் காட்டுப்பகுதியில் இருப்புப்பாதை அருகில் புற்று மாரியம்மன் கோயில் உள்ளது. தனிநபருக்கு சொந்தமான இக்கோயிலில் கிராம மக்கள் பொது வழிபாடு நடத்துவார்களாம்.

இந்நிலையில், வெள்ளிக் கிழமை மாலை மாரியம்மன் சிலைக்கு படைத்து விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து, சனிக்கிழமை காலை கோயிலுக்கு சிறுவர்கள் விளையாடச் சென்று ள்ளனர். அப்போது, கோபுரத்தின்மீது கலசம் இல்லாததைப் பார்த்த சிறுவர்கள், கிராம மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொது மக்கள் வந்து பார்த்தபோது, கலசத்தையும், மாரி யம்மன் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தாலியையும் யாரோ திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவலர்கள், காவல் உதவி ஆய்வாளர் அன்பரசு தலைமையில் நேரில் சென்று விசாரணை நடத் தினர். அப்போது, கிராம மக்கள் கூறியதாவது:

இதுவரை மூன்று முறை இக்கோயிலில் திருட்டு போயுள்ளது. 10 கிலோ மணி, உண்டியல், பித்தளைப் பொருள்கள் ஆகியவற்றை முன்பு திருடிச் சென்றுள்ளனர். இப்போது, அம்மன் கலசம் மற்றும் தாலியையும் திருடிச் சென்றுள் ளனர் எனவே, திருடர்களைக் கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறினர்.

தன் தாலியையே காக்க முடியாத மாரியம்மனா ஊரார் தாலியைக் காக்கப் போகிறது? திராவிடர் கழகத்துக்காரர்கள் தாலி அறுத்து விட்டதாகக் கொக்கரிக்கும் மதவாதிகளே, சர்வ சக்தியுள்ள தாகக் கூறும் மாரியம்மனின் தாலியை திருட்டுப் பக்தர்கள் அறுத்துச் சென்றுள்ளனரே. மாரியம்மனின் சக்தி இதுதானோ?

பெரியார் திடலில் தாலியை அகற்றிக் கொண் டவர்களுக்கு திவசம் நடத்திய மதவாதிகளே, ஆத்தா தாலி அறுக்கப்பட்டு களவாடப்பட் டுள்ளதே, இப்போது யாருக்கு திவசம் நடத்து வீர்கள்?!Read more: http://www.viduthalai.in/page-8/102621.html#ixzz3c0jk8azs

தமிழ் ஓவியா said...

ஆனந்தவிகடன் (10.6.2015) தரும் தகவல்1959ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை அய்.அய்.டி.யில் ஏராளமான மாணவர் அமைப்புகள் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

1. விவேகானந்தர் வாசிப்பு வட்டம்
2. வசிஷ்டர் வாசிப்பு வட்டம்
3. வியாஸர் வாசிப்பு வட்டம்
4. துர்வாசர் வாசிப்பு வட்டம்
5. இராமாயண வாசிப்பு வட்டம்
6. ஹரே இராமா, ஹரே கிருஷ்ணா வாசிப்பு வட்டம்
7. வந்தே மாதரம் இயக்கம்
8. ஜிந்தாபாத் (அரசியல் அமைப்பு)
9. க்வெஸ்ட் (அரசியல் அமைப்பு)
10. அய்.அய்.டி. ஃபார் சொசைட்டி
போன்றவை உள்ளன.
11. வர்ணம் (மாற்றுத் திறனாளிகள்)
12. அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் - இதற்கு மட்டும் தடையாம்!

அம்பேத்கரும், பெரியாரும் சமூக விரோதிகளா? தேச விரோதிகளா?

பார்ப்பனீய ஹிந்துத்துவ விரோதிகள் என்பதால் தான் கசக்கிறதோ?

மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி என்பது இது தானோ!

பெரியார் - அம்பேத்கர் என்ற இரு பெயர்களும் பஞ்சமர் சூத்திரர் எனும் வெகு மக்களின் எழுச் சித் தீ பிழம்பு - ஆதிக்க சக்திகளின் ஆணி வேரை அசைக்கும் என்ற அச்சம் தானே இதன் பின்னணியில் உள்ளது! வசிஷ்டர், வியாசர்கள் உலவும் இடத்திலே பெரியாரும், அம்பேத்கரும் நுழைந்தால்.. அதன் விளைவை அவர்கள் அறி வார்கள் அல்லவா! அதற்குத்தானே இந்தத் தடை!

இன்றைய சமூகப் போராட்டத்தின் அடிநாதமே இதுதான் - ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேர்வீர்!Read more: http://www.viduthalai.in/e-paper/102669.html#ixzz3c65qe28K

தமிழ் ஓவியா said...

ஜூன் 5 : சுற்றுப்புறச்சூழல் நாள்


நாம் உலக சுற்றுப்புறச்சூழல் தினத்தைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். நாம் கொண்டாடுவதற்கு முன்பு கடந்த மாதம் உலகம் முழுவ திலும் ஏற்பட்ட பருவநிலை மாற்றத் தைக் கணக்கில் கொள்ளவேண்டும். எப்போதுமில்லாத அளவிற்கு இந்தி யாவில் மாத்திரம் இந்தக் கோடையில் 3000 பேர் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண் டுள்ளது இந்த கோடைக்காலம் நமக்கு உடனடி ஆபத்தை உணர்த்திவிட்டது. ஆனால் இனி வரப்போகும் ஓர் ஆபத்து நம் கண்முன்னே நிற்கிறது அது இந்த ஆண்டு பருவமழை குறைந்து வரலாறு காணாத அளவிற்கு வறட்சியை ஏற்படுத்திவிடும் என்ற அதிர்ச்சி அறிக்கை தான்.

எல்நினோ விளைவு இப்படி பருவமழை குறைந்து போவதற்கு முக்கிய காரணமாக எல் நினோவைக் குறிப்பிடுகின்றனர்.பசிபிக் பெருங்கடலில் கடல் பரப்பு வெப்ப நிலை, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு (7 முதல் 24 மாதங்கள் வரை) சராசரி வெப்ப நிலையை விட அதிகமாகும். இது எல் நினோ என அழைக்கப்படு கிறது. இந்த மாற்றம் பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகள் இடைவெளியிலும் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இந்த எல்நினோ நிலை இந்த ஆண்டு உள்ளது. பசிபிக் பெருங்கடல் பரப்பு வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால்தான் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆண்டு கோடை வெயில் வறுத்தெடுத்து, நூற்றுக்கணக்கா னோரை உயிரிழக்கச் செய்தது. இந்த எல் நினோவின் கைவரிசையால்தான், பருவ மழையும் குறையப்போகிறது. எல்நினோ வுக்கும், பருவ மழை குறைவதற்கும் தொடர்பு இருப்பதாக உலக அளவில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வுத் துறையின் நெடுந்தொலைவு முன்னறிவிப்புப் பிரிவின் தலைவர் டி. சிவானந்த் பாய் கூறும்போது, முதலில் அளவீடு செய்யப்பட்ட ஏப்ரல் மாதத் துடன் ஒப்பிடுகிறபோது, இப்போது எல்நினோ அளவீடு மேம்பட்டுள்ளது என்கிறார்.

மராட்டிய மாநிலம், புனேயில் உள்ள அய்.அய்.டி.எம். என்னும் இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம், எல்நினோ நிலவரம் மேலும் வலு வடைந்து, பருவமழைக் காலத்தில் மழைப் பொழிவு குறையும் என கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் எல்நினோ தாக்கம் நிலவுவதற்கு 90 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் அது கணித்துள்ளது.

தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட பாதிப்பு

இந்த எல்நினோ பாதிப்பு என்பது மனித குலம் தன்னுடைய அழிவிற்கு தானே உருவாக்கிக்கொண்ட ஒரு செயற்கைவினையாகும், அதாவது காடுகளை அழித்தல், நகரமயக்கல், இயற்கைவளங்களை ஆக்ரமித்து நீர் உற்பத்திப் பகுதிகளை தடுத்துவிடுதல் போன்ற பல்வேறு மனித சுயநல விளைவுகளால் இந்த எல்னோ பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நூற்றாண்டில் தற்போது ஏற்பட்டுள்ள எல்நினோ விளைவு ஒர் கடுமையான எச்சரிக்கை மட்டுமே, இதை நாம் உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு சுற்றுப்புறச்சூழலைக் காப்பாற்ற சடுதியில் முயலவேண்டும். விழித்துக்கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம், இல்லையென்றால் இந்தியா போன்ற ஏழைநாடுகள் வரும் ஆண்டுகளில் கடுமையான பாதிப்பு களை சந்திக்கும்.

- சரவணா ராஜேந்திரன்Read more: http://www.viduthalai.in/page-2/102653.html#ixzz3c66YslFt

தமிழ் ஓவியா said...

பொதுவுடைமை- பொதுவுரிமை

பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.

- (குடிஅரசு, 25.3.1944)Read more: http://www.viduthalai.in/page-2/102649.html#ixzz3c66tTpJW

தமிழ் ஓவியா said...

அண்ணாவின் பெயரில் உள்ள ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக

மழை வேண்டி வருண பகவானுக்கு யாகமாம்!
திருச்சி, ஜூன் 5- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் மூடநம்பிக்கையை வளர்க்கும் வகையில், அறிஞர் அண்ணாவின் பெயரில் நடக்கும் ஆட்சியில், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக மழை வேண்டி வருண பகவானுக்கு யாகமாம்!

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது அரசு அலுவலகங் களில் உள்ள கடவுளர் படங்களை உடனே அகற்றுமாறு தனது ஆட்சியின்போது சுற்றறிக்கை விடுத்தார். அண்ணா திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகளே மழை வேண்டி யாகம் நடத்த அறிவுறுத்தி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிக் கொண்டிருக்கும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து டெக்கான் கிரானிக்கல் ஆங்கிலப் பத்திரிகையில் இன்று (5.6.2015) வந்த செய்தியில்:- பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் பிறந்த மண்ணில் தமிழக அரசு அலுவலகமே மழைவேண்டி யாகம் செய்ய சுற்றறிகை விட்டுக்கொண்டு இருக்கிறது, தமிழக நீர்வள ஆதாரத்துறை அலுவலகம் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைவேண்டி சிறப்பு யாகங்கள் செய்யுமாறு கட்டளையிட்டுள்ளது. இயற்கை அன்னையின் பெயரில் மழைவேண்டி குறிப்பிட்ட கோவில்களில் யாகம் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நீர்வளத்துறை தலைமைப்பொறியாளர் எஸ்.அசோகன் இது குறித்து தனது கடிதத்தில் எழுதிய விபரம் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஜுன் ஒன்றாம் தேதி யாகம் நடத்திய பிறகு அதன் விபரங்களை படங்களோடு எந்த முறையில் செய்தீர்கள் என விளக்கமாக ஜூன் இரண்டாம் தேதி 10 மணிக்குள் தலைமைப்பொறியாளர் பார்வைக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது என செய்தி வெளிவந்துள்ளது.

இன்றைய நவீன உலகில் அறிவியல் கண்டுபிடிப்புகளால் அனைத்து துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ள கால கட்டத்தில் அரசே மூடப் பழக்க வழக்கங்களை வளர்க்கும் வகையில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியதாகும்.

குறிப்பு: அரசியல் அமைப்புச் சட்டம் கூறுவது என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ பிரிவில் ஒவ்வொரு குடிமகனும் கடைப்பிடிக்க வேண்டிய பத்து அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties) சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அதில் எட்டாவது கடமையில் - 51ஏ(எச்) அறிவியல் உணர்வையும், மனிதநேயத்தையும், சீர் திருத்தத்தையும் ஆய்வு மனப் பான்மையையும் போற்றி வளர்க்க வேண்டும். ’To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reforms 51A(h), என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. இது குடிமகனுக்கும் பொருந்தும் அதைவிட ஆட்சியாளர்களுக்கும் அரசு பதவியில் உள்ளவர்களுக்கும் கட்டாயமாக பொருந்தும் காரணம் அவர்கள் அரசியலைப்புச் சட்டத்தின் படி நடப்பேன் என்று உறுதிமொழி எடுத்து பதவிக்கு வருகின்றனர்.Read more: http://www.viduthalai.in/e-paper/102715.html#ixzz3cCCpHyI9

தமிழ் ஓவியா said...

மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்துவதற்கு அதிகாரி உத்தர விடுவதா? அதிமுக அரசுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடும் கண்டனம்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில்

மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்துவதற்கு அதிகாரி உத்தர விடுவதா?

அதிமுக அரசுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடும் கண்டனம்
சென்னை, ஜூன். 5 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி. கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறி இருப்ப தாவது:

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் அண்ணாவின் பெயரில் கட்சி தொடங்கி, ஆட்சி நடத்தி வருகிற அ.தி.மு.க.வினரின் மூடப் பழக்க வழக்கங்கள் எல் லையற்று போய்க் கொண்டிருக்கின்றன. அதுபற்றி நாம் கவலைப் படவில்லை.

தமிழக அரசின் நீர் வளத்துறையினுடைய தலைமைப் பொறியாளர் எஸ். அசோகன் மே 26, 2015 நாளிட்ட சுற்ற றிக்கை மிகுந்த அதிர்ச் சியை ஏற்படுத்துகிறது. அந்த சுற்றறிக்கையின்படி செயற்பொறியாளர்கள் அனைவரும் மழை வேண்டி வருண பகவா னுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி அதற்கான விவ ரங்களை ஜூன் 1ஆம் தேதி மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டு மென்று கேட்டுக் கொள் ளப்பட்டிருக்கிறார்கள்.

தமிழக அரசு என்பது அனைத்து மதங்களுக்கும், வழிபாடுகளுக்கும் பொதுவானதாகவும், தொடர்பில்லாததாகவும் இருக்க வேண்டுமென பலமுறை அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டிருக் கின்றன.

அந்த அரசா ணைகளை உதாசீனப் படுத்துகிற வகையில் தமிழக அரசின் நீர்வளத் துறையே இந்துமத சடங்குகள்படி இத்தகைய சிறப்பு பூஜைகளை நடத்த வேண்டும் என்று சொல் வது அப்பட்டமான சட்ட விரோத செயலாகும்.

இத்தகைய உரிமை இஸ்லாமிய, கிறிஸ்துவ மதத்தினருக்கும் வழங் குவதற்கு வாய்ப்பிருக் கிறதா? அப்படி வாய்ப்பில்லாத போது குறிப்பிட்ட மதத்தின் நம்பிக்கைகளை மற்றவர்கள் மீது புகுத்த லாமா?

அ.தி.மு.க.வினர் செயல் படுவதை பற்றி நாம் விமர்சிக்க விரும்பவில்லை.

ஆனால் தமிழக அரசின் துறையைச் சார்ந்த தலைமைப் பொறியாளரே ஒரு குறிப்பிட்ட மதச் சார்பு நிலையை எடுப் பதை எப்படி அனுமதிக்க முடியும் ?

எனவே, இத்தகைய சட்ட விரோதச் செயல் கள் நடைபெறுவதை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டுமெனில் முதற்கட்டமாக சுற்ற றிக்கை அனுப்பிய குறிப் பிட்ட அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்படி நட வடிக்கை எடுத்தால் தான் இத்தகைய மூடப்பழக்க வழக்கங்களை தடுத்து நிறுத்த முடியும்.

வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்வ தால் மழை பெய்யும் என்று தமிழக அரசுக்கு நம்பிக்கை ஏற்படுமெனில் அறிவியலின் அடிப் படையில் செயல்படுகிற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் அறிக்கைகளை எப்படி மக்கள் நம்பி ஏற்றுக்கொள்வார்கள்?

அறிவியலில் அற்பு தங்கள் நிகழ்ந்து கொண் டிருக்கிற நவீன யுகத்தில் இத்தகைய பிற்போக்குத் தனமான நடவடிக்கை களை உடனடியாக நிறுத் திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.Read more: http://www.viduthalai.in/e-paper/102717.html#ixzz3cCD3ExkJ

தமிழ் ஓவியா said...

சால்வை வேண்டாம் சந்தாக்களைத் தாரீர்!


அருமைக் கழகத் தோழர்களே! உரிய சிகிச்சைக்குப் பின் நமது அருமைக் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க தஞ்சை வருகிறார்கள் (13.6.2015).

கழகத் தோழர்களும், உடல் நலம் பெற்று திரும்பும் தலைவர் அவர்களைச் சந்திக்க பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தோழர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய முக்கிய - அவசியமான - செய்தி ஒன்று உண்டு.

இதே தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில்தான் எனக்குச் சால்வை வேண்டாம் சால்வைக்குப் பதில் விடுதலை சந்தா வேண்டும் என்ற அறிவார்ந்த அன்பு வேண்டுகோளை தமிழர் தலைவர் முன் வைத்தார்கள் (விடுதலை 27.11.2003).

அதனை மீண்டும் மிகவும் அழுத்தமாக வலியுறுத்த வேண்டிய கால கட்டம் இது.

ஆசிரியர் அவர்களின் அய்ம்பதாண்டு விடுதலை ஆசிரியர் பணிக்காக 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களை அளித்து அவரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினோம்.

வேறு எதைக் கொடுத்தாலும் இதற்கு ஈடானது. அவர்களைப் பொறுத்தவரையில் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை அறிந்தவர்கள் ஆயிற்றே நாம்.

எனவே, அருமைக் கழகக் குடும்பத்த வர்களே! தஞ்சையில் நமது தலைவரைச் சந்திக்கும் பொழுது ஆசிரியர் அவர்களே ஆச்சரியமும், ஆனந்தப் பெருக்கும் அடையும் அளவுக்கு சந்தாக்களின் எண்ணிக்கையை அதிக அளவில் அவர்களின் கைகளில் அளி யுங்கள்! அளியுங்கள்!! அதன் மூலம் பெரும் மகிழ்வையும் உற்சாகத்தையும் தாருங்கள்! தாருங்கள்!!

- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை, 5.6.2015Read more: http://www.viduthalai.in/e-paper/102721.html#ixzz3cCDGcLwG

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

துப்பாக்கியைத் தூக்க மாட்டானா?

திண்டுக்கல் அருகே இராணுவத்தில் பணியாற் றும் கணவர்களின் ஆயு ளுக்காக சப்பரத்தைப் பெண்கள் தோளில் தூக்கி வந்தனராம். பக்தி என்று வந்துவிட்டால் புத்தி வேலை செய்யாது என்பதற்கு இந்த எடுத்துக் காட்டுப் போதாதா?

சப்பரத்தைத் தூக்கி னால் எதிரி துப்பாக்கி யைத் தூக்கமாட்டானா?Read more: http://www.viduthalai.in/e-paper/102719.html#ixzz3cCDWCOQ8

தமிழ் ஓவியா said...

வீட்டு வசதி வாரிய இடத்தில் விநாயகர் கோயிலா? அரசு அகற்றுமா?சென்னை, ஜுன்5_ சென்னை எண்ணுர் காவல்நிலையப் பகுதிக் குட்பட்ட எர்ணாவூர் நெய்தல் நகர் அரசு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 156 அடுக்குமாடி களுடன் அடுக்குமாடிக் குடியிருப்பு அமைக்கப்பட் டுள்ளது. இக்குடியிருப்பு அமைக்கப்ட்டு ஏறக் குறைய 13ஆண்டுகள் ஆகின்றன. இக்குடியிருப் புப் பகுதியில் மதவேறு பாடுகள் ஏதுமின்றி இசு லாமிய, கிறித்தவ, இந்து மதங்களைச் சேர்ந்த வர்கள் என்று அனை வரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

அந்தக் குடியிருப்புப் பகுதியில் நிலவிவரும் மத நல்லிணக்கம் மற்றும் அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில் சட்டவிரோதமாக அர சின் வீட்டுவசதி வாரியத் துக்குச் சொந்தமான இடத்தில் பிள்ளையார் கோயிலைக் கட்டும் முயற் சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் குடியி ருப்பின் க்யூ பிளாக் பகுதிக்கு அருகில் 30.5.2015 அன்று இரவோடு இர வாக அத்துமீறி அந்த இடத்தில் செங்கல், சிமெண்ட் கொண்டு பீடம் அமைத்து, பிள்ளை யார் சிலையை வைத் துள்ளனர். அவ்வப்போது கோயிலை வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்த மான இடத்தில் அமைக்க முயற்சி செய்கிறார்கள் என்பதுகுறித்து குடியி ருப்பு சங்கத்தின் இந்நாள், மேனாள் நிர்வாகிகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை உதவி ஆணையர் தென்னரசு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குப்பன் உள்ளிட்டவர்களின் கவனத்துக்கு வீட்டுவசதி வாரியத்தில் குடியிருப் பவர்களால் கொண்டு செல்லப்பட்டும் அதைத் தடுத்து நிறுத்திட எவ்வித முயற்சியும் அவர்கள் எடுத்ததாகத் தெரிய வில்லை.

ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி வகையறாக்கள் தற்பொழுது இதுதான் சந்தர்ப்பம் என்று காவல் துறையினரையும் இச் சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக்கிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். திருவள் ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், வீட்டு வசதித்துறையின் இயக் குநர் என்று அரசுத் துறையின் எந்த மட்டத் திலும் உரிய அனு மதியைப் பெறாமலே சிலையை வைத்து கோயி லைக்கட்டும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

அரசு வீட்டுவசதித் துறையின் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் களும் இதை விரும்ப வில்லை.

நெய்தல் நகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப் போர் சங்கத்தின் துணைத் தலைவர் வி.மாணிக்கம், மேனாள் செயலாளர் சேகர் உள்ளிட்ட இந் நாள் மற்றும மேனாள் சங்க நிர்வாகிகள் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து வருகின்றனர் என்றாலும், அரசு வீட்டுவசதி வாரியம் எனும் அரசுத்துறையும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் முன் னெச்சரிக்கையாக ஆக்கிர மிப்பை தொடக்கத் திலேயே அகற்றிட வேண் டும் என்று அப்பகுதிவாழ் பொதுமக்களும் எதிர் பார்க்கின்றனர்.

அரசு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்த மான பகுதியை ஆக்கிர மித்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலையை அகற்றி, உரிய நடவடிக் கையை அப்பகுதியை ஆக்கிரமிப்பிலிருந்து காத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?Read more: http://www.viduthalai.in/e-paper/102720.html#ixzz3cCDdBS9m

தமிழ் ஓவியா said...

கடவுளின் பெயரால் மோதல்:

கோயில் விவகாரத்தில் இரு தரப்பினரிடையே மோதல் 21 கிராமங்களில் 144 தடை உத்தரவு

சேலம், ஜூன் 5--_ சேலத்தை அடுத்த திருமலைகிரியில் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலை அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பு மக்கள், புனர மைப்பு செய்து குட முழுக்கு நடத்த ஏற்பாடு செய்தனர். கடந்த மார்ச் 4ம் தேதி குடமுழுக்கு நடக்க இருந்த நிலையில், கோயிலுக்குள் வருவது தொடர்பாக மற்றாரு தரப் பினருக்கிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட் டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், மாநகர காவல்துறையின ரும் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். அதில் முடிவு ஏற் படாததால், திருமலைகிரி உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள 21 கிராமங்களில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப் பித்தது. மேலும் கோயிலை இழுத்து பூட்டி சீல் வைத்தனர். குடமுழுக்கும் தடைப்பட்டது.

பின்னர், தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சு நடத்தியும் தீர்வு ஏற் படாததால், 3 முறை 144 தடை உத்தரவு நீட்டிக் கப்பட்டது. மேலும் இக் கோயில் விவகாரம் தொடர்பாக இருதரப்பி னரும் சேலம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத் தில்  வழக்கு தொடர்ந் துள்ளனர். இந்நிலையில் இறுதியாக விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு  2ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைய இருந்தது. அதனால் மாவட்ட நிர்வாகம், மாந கர காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தியது. அதன்பின் சேலம் ஆர்டிஓ ஷேக் முகைதீன், திருமலை கிரி உள்ளிட்ட 21 கிரா மங்களிலும் 144 தடை உத்தரவு வரும் ஜூலை 2ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கும் என அறிவிப்பு வெளியிட்டார். இந்த உத்தரவு, அந்த கிராம பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. காவல் பாதுகாப்பு, ரோந்து தொடர்ந்து இருக்கும் என காவல் அதிகாரிகள் தெரி வித்தனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற் றமான சூழல் நிலவுகிறது.

தமிழ் ஓவியா said...

சிறப்பு


விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவையில்லாவிடின், பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பயனில்லை. அறிவுடை யோர்க்கே சென்றவிடமெல்லாம் சிறப்பு.
(விடுதலை, 12.3.1965)Read more: http://www.viduthalai.in/page-2/102708.html#ixzz3cCEae2Pd

தமிழ் ஓவியா said...

பொக்கிஷத்தைப் பாதுகாப்போம்


01.06.2015 தேதியிட்ட நமது விடுதலையில் தங்களது விடுதலையை வாங்கிப் படியுங்கள் - தாங்கிப் பிடியுங்கள் என்ற தலைப்பிலான அறிக்கையை படித்துப்பார்த்து கண் கலங்கினேன். உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் தங்கி, தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டு இல்லம் திரும்பிய பிறகு நீங்கள் எழுதிய முதல் அறிக்கை என்பதை தெரிந்து கொண்டேன்.

தலைவர் தந்தை பெரியார் காலத்தில் விடுதலை ஏட்டிற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டு தொடர்ந்து தொய்வில்லாமல் 53 ஆண்டு காலம் விடுதலை நாளேட்டின் ஆசிரியராகப் பணியாற்றி வருவது சாதாரண விசயமே அல்ல, சம்பளத்திற்காக பிற இதழ்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூட எந்த ஏட்டிலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணி புரிந்து வந்ததாக தற்காலத்தில் சொல்ல முடியாது. கொள்கை களையும், லட்சியங்களையும் மட்டும் சம்பளமாகவும், சன்மானமாகவும் பெற்றுக் கொண்டு மலிவான, சுவை மிகுந்த, மக்களை விரைவில் சென்றடையும் விளம் பரங்களோ, செய்திகளோ இல்லாமல் சமூக நீதிக்களத்தில் மற்ற ஏடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அவர்கள் வீடெல்லாம் சென்று வரும் விடுதலைப் பயணத்திற்கு நீங்கள் கடந்த 50 ஆண்டு காலமாக ஆசிரியராக மட்டுமல்ல அதன் எல்லாமு மாகவே இருந்து வருகின்றீர்கள்.

மேலும் தங்களது அறிக்கையில், நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும், ஜோதிட மூடநம்பிக்கை, ராசிபலன், மலிவான சுவை களங்களான சின்னத்திரை, பெரிய திரை, மதம், ஆன்மிக வியாபாரம் இவற்றில் மக்களை சுரண்டாத சுயமரியாதை சொக்கத் தங்க நாளேடு விடுதலையை தவிர வேறு உண்டா? விரலை மடக்கத்தான் எவராலும் முடியுமா? என்று கேட்டிருப்பது இன எதிரிகளுக்கும், இயக்க துரோகிகளுக்கும் தாங்கள் கொடுத்த மிகப்பெரிய சாட்டையடி சவாலாகும். இதை எந்தக் கொம்பனும் நேருக்கு நேர் நின்று ஆதாரங்களோடு மறுக்க முடியாது.

அதுமட்டுமல்ல வருமானத்திற்காக முன் பக்கங்களை கூட காவு கொடுத்துள்ள நாளேடுகள் இன்று நம் கண் முன்னே சர்வ சாதாரணம் என்று தாங்கள் சொல்லியி ருப்பது நிதர்சனமான உண்மை என்பதோடு, இன்றைய கால கட்டத்தில் வருமானத்திற் காக கொள்கையை விலை பேசும் கூட்டத்தின் நடுவில் சுயமரியாதையை காப்பாற்றுவதற்காகவும், இனமானத்தை காப்பாற்றுவதற்காகவும் தொடர்ந்து லட்சங் களை தவிர்த்துவிட்டு லட்சியங்களுக்காக நஷ்டத்தில் இயங்கிவரும் நமது விடுதலை தமிழர்கள் நெஞ்சத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது நமது நஷ்டங்களும், சங்கடங்களும் நமக்கு தூசாகவே தெரிகிறது.

அய்யா! விடுதலை ஏட்டை தொடர்ந்து நடத்துவதற்கும், நமது இயக்கத்தை தொய்வில்லாமல் இன எதிரிகள் மத்தியில் வீறுநடைபோடும் அளவிற்கு தொண்டாற் றவும், தலைவர் தந்தை பெரியாருக்குப் பின்னால், அன்னை மணியம்மையாருக்குப் பின்னால், எங்களைப் போன்ற கோடிக் கணக்கான தமிழர்களின் சமூக நலனில் அக்கறையுடன் உடல்நலத்தைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து இரவு, பகல் பாராமல் பணியாற்றி வரும் தங்களைப் பாராட்டுகின்ற நேரத்தில் அன்போடு கேட்டுக்கொள்வதெல்லாம் தங்கள் உடல் நலனை முதலில் கவனமாகப் பேணுங்கள், உங்களை வைத்து தான் இன்னும் கால் நூற்றாண்டிற்கு நமது இயக்கம் இன எதிரிகளை எல்லா களத்திலும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

அதனால்தான் தங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்று ஒரு மாதத்திற்கு முன்பாக கேள்விப்பட்டும் கூட நேரிலோ, தொலைபேசியிலோ தங்களை சிரமப் படுத்தவில்லை. எங்களுக்கு தொடர்ந்து தங்களுடைய பணி மேலும் கால் நூற்றாண் டுக்கு கிடைக்க வேண்டும் எனவே தயவு செய்து தங்களுக்கு தற்பொழுது தேவை பரிபூரணமான, ஓய்வு, ஓய்வு, ஓய்வு! வணக்கம்.

- கே.செல்வராஜ்
மாவட்ட திமுக வழக்குரைஞரணி அமைப்பாளர், தாராபுரம்Read more: http://www.viduthalai.in/page-2/102713.html#ixzz3cCEzIApv

தமிழ் ஓவியா said...

மந்திரம் செய்கிறேன் என்று சொல்லி ஏமாற்றுவோரின் தந்திரங்களை அறிந்து கொள்ளவேண்டும்
அறிவியல் முகாமில் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை

புதுகை, ஜூன் 5_ ஆலங் குடியில் உள்ள தேசிய தனிப் பயிற்சி மய்யத்தில் திருவரங்குளம் ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கோடை அறிவியல் திரு விழா நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு அறி வியல் இயக்கப் பொறுப் பாளர் கவிஞர் நீலா தலைமை வகித்து கதை எழுதுவது, கவிதைகள் புனைவது குறித்து விளக் கியதோடு எழுதும் பயிற் சியும் அளித்தார். ஒன்றி யப் பொறுப் பாளர் கருப் பையா வரவேற்றார்.

ஆசிரியர் சதாசிவம் பேப் பர் மடிப்புக் கலையையும், சிவக்குமார் கவிதைகள் குறித்தும், ஓவியர் சுப்பிர மணியன் ஓவியக் கலை யின் சிறப்புகள் பற்றியும், அருள்ராஜா நவீன தொழில் நுட்பங்கள் குறித்தும் ஆசிரியர் திரு முருகன் பாடல்கள் பற்றிய பயிற்சியும் அளித் தனர்.

இப்பயிற்சியின் போது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ் நாடு அறிவியல் இயக்க மாநில துணைச் செயலா ளர் பாலகிருஷ்ணன், மந்திரமா, தந்திரமா எனும் நிகழ்ச்சியை நடத்தி விளக்கியபோது, இன் றைக்கு அறிவியல் பூர்வ மாகச் சிந்திக்க வேண்டிய மனிதர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்று ஒன்றைத் தோற் று வித்து மூடநம்பிக்கைககள் பற்றி விளக்கிச்சொல்லவேண் டிய அவசியம் வந்திருக் கிறது.

எச்டூஓ என்றால் தண்ணீர் என்பதை சிறு வயதிலேயே அறிந்து கொள்ளவேண்டும். அதை ஆசிரியர்கள் மட்டுமல் லாது பெற்றோரும் தம் பிள்ளைகளுக்கு விளக்க வேண்டும். அதை விட்டு வேறு வகையில் விளக்கி னால் சில நூறு ஆண்டு கள் மனித வளர்ச்சியில் பின் தங்கிவிடுவோம். எதையும் அறிவியல் கண் கொண்டு பார்க்க வேண் டும்.

அறிவியல் சிந்தனை களை வளர்த்துக் கொள் ளவேண்டும். சிலர் மந்திரம் செய்கி றேன் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக் கிறார்கள். அவர்களின் தந்திரம் என்ன என்ப தைத் தானும் அறிந்து கொண்டு சிறு வ ய துப் பிள்ளைகளிடமும் விளக் கிக் கூற வேண்டும்.

இன்றைக்கு கைகால் களை விபத்துகளில் இழக்க நேரிடும்போது கூட செயற்கை உறுப்பு களைப் பொருத்தும் அள விற்கு முன்னேறி விட்ட பிறகும் நரபலிகளைப் பற்றிக் கேள்விப்படும் நிலையில் நாமும் நம்மைச் சுற்றியும் இருப்பதைப் பார்க்கிறோம்.

அது போன்ற அவலங்களை நாட்டை விட்டே அகற் றும் பணியில் படித்த ஒவ் வொருவரும் தங்களை ஈடு படுத்திக்கொண்டால் தான் அடுத்த தலைமுறை யைச் சேர்ந்த இளைஞர் களைச் சிறந்த தலை முறையினராக வளர்த் தெடுக்க முடியும் என்றார். எளிய முறையில் கிடைக் கும் பொருட்களைக் கொண்டு சில மேஜிக்கு களையும் செய்து காண் பித்தார்.

நிகழ்ச்சியில் மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலை வர் ஆசிரியர் மணவா ளன், மாவட்டச் செய லாளர் வீரமுத்து, உஷா நந்தினி, இயக்கப் பொறுப் பாளர்கள் ஓவியர் கருப் பையா. அன்புராஜ், நீல கண்டன், அருள், தங்க வேல், ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பயிற்சி பெற்ற மாணவ, மாணவியரில் கதை, சிறு கதை, கவிதைகள் சிறப் பாக எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கள் வழங்கப்பட்டன. சசிக் குமார் நன்றி கூறினார்.Read more: http://www.viduthalai.in/page-5/102732.html#ixzz3cCFvM7jl

தமிழ் ஓவியா said...

சர்வ சக்தியா? சர்வ சைபரா?சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்கமாட்டேன் என்கிறானே.

ராமன்: அது மாத்திரம், அதிசயமல்லப்பா பசியாவரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக்கிடக்கிறார். ஒருவன் கூட ஒரு கை கூழ் ஊத்தமாட்டேங்கிறானே.

சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?

ராமன்: இது தான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?

ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்றாய், அவனை ஒருத்தன் அப்படிப்பட்ட கடவுள் இல்லே என்று சொல்லுகிறான் என்றால் அது வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: சர்வசக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்யமுடியவில்லை என்றால் இது முட்டாள் தனமான, சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?

அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட் டம் இருக்கிறதோ அதேபோல் சர்வசக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனை நம்பச்செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.

- சித்திரபுத்திரன் (விடுதலை 22.2.1972)Read more: http://www.viduthalai.in/page-7/102755.html#ixzz3cCGGNNB5

தமிழ் ஓவியா said...

இராமாயணம் கற்பனை கதையே
இந்தோ- ஆரியர் போரைக் குறிப்பது

இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ - ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும். இவைகள் உண்மையென்று நான் நம்பியதேயில்லை. பஞ்ச  தந்திரக் கதையிலுள்ள கற்பனைக் கதையைப் போன்றவை என்பதே என் கருத்து

- நேரு, டிஸ்கவரி ஆஃப் இந்தியா

தமிழ் ஓவியா said...

அட, அயோக்கிய புரோகிதர்களே!
சுவாமி விவேகானந்தர்மைசூர் ராஜ்யத்திலிருந்து புறப்பட்ட சுவாமிஜி, கொச்சி ராஜ்யத்தை அடைந்தார். அங்கு சில தினங்கள் தங்கிவிட்டு திருவனந்தபுரத்துக்குப் போனார். வழிநெடுகிலும் வனப்பு மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்ணுற்று மகிழ்ந்தவாறே திருவனந்தபுரத்தை அடைந்தார். அப்போது டிசம்பர் மாதம்.

பேராசிரியர் சுந்தரராம அய்யர் வீட்டில் சுவாமிஜி தங்கினார். சுந்தரராம அய்யர், திருவிதாங்கூர் இளவரசருக்கு ஆங்கிலக் கல்வி போதிக்கும் ஆசிரியர் ஆவார்.

சுந்தரராம அய்யர் பிராமண உணர்வு மிகுந்தவர், வைதிக ஹிந்து சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர், எதையும் பிராமண இயல்போடு நோக்குபவர், பிராமணர் அல்லாத வர்களை சமபுத்தி இல்லாதவர் என்று சுவாமிஜி கூறியதாக எழுதி இருப்பவர். இவர் கூற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது ஆராயற்பாலது. பிராமண குலம் இந்தி யாவுக்கு மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறது.

இப்பொழுதும் மகத்தான காரியங்களை செய்து வருகிறது. இனியும் மகத்தான காரியங்களைச் செய்யும் என்று சுவாமிஜி கூறியதாகச் சுந்தரராம அய்யர் எழுதி இருக்கிறார் பிராமணர்களைப் பற்றிச் சுவாமிஜி கூறியிருக்கும் கருத்துக்கு இந்தக் கருத்து முற்றும் முரண்படுகிறது.

வேதங்களை இயற்றிவர்கள்?

வேதாந்தத்துக்கு ஆதாரமாய் இருப்பவை உபநிடதங்கள்; வேதங்களிலுள்ள இந்தப் பகுதிகள் க்ஷத்திரியர்களால் இயற்றப் பட்டவை என்பது சுவாமிஜியின் கருத்து. இது பிராமணர்கள் மகத்தான காரியங்களை இந்தியாவுக்கு செய்தார்கள் என்ற கருத்தோடு மாறுபடுகிறது.

வேதவியாசர், வசிஷ்டர், நாரதர் போன்றவர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர். பிராமணர்களின் கருணை யின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார். அந்தக் கருத்துகளைத் தொகுத்து அடியில் தந்திருக்கிறோம்.

உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர் களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிட மிருந்து பிறக்கவில்லை (3.280)

முன் காலத்திலே ரிஷிகள் ஆனோர் பலர். வசிஷ்டர் பிறப்பினால் இழிந்தவர்; வியாசர் மீனவப் பெண்ணுக்குப் பிறந்தவர்; நாரதர் பணிப்பெண்ணின் பிள்ளையாகப் பிறந்தவர். இவ்வாறு பிறந்தவர்கள் பலர் ரிஷிகள் ஆனார்கள் (6.433).

நெடுங்காலமாகத் தான் சேகரித்து வைத்திருக்கும் ஞானத்தைப் பிராமணன் இப்பொழுது பொது ஜனங்களுக்கு அளிக்க வேண்டும், இங்ஙனம் அவன் கொடுக்காத காரணத்தினால் முகம்மதியப் படையெடுப்புகள் சாத்தியமாயின. (6.234)

பார்ப்பனரல்லாதார் துயில் நீக்கம்!

குமரிலர், சங்கரர், ராமானுஜர் போன்ற முனிவர்கள், பிராமணர் சக்தியை மீண்டும் நிலைநாட்ட முயன்றனர். சிறிது காலம் அச்சக்தி இராசபுத்திர அரசரது வாளின் ஆதரவையும் பெற்றது. சமண புத்த எதிரிகளின் வீழ்ச்சிக்குப்பின், அது தனது அமைப்பை மறுபடியும் புதுப்பிக்கவும் முயன்றது. ஆயினும், அது, முகம்மதியரது ஆட்சியின் கீழ் என்றைக்கும் உறங்கும்படி செய்யப்பட்டது. (1.172)

பிராமணரல்லாத வகுப்பார் படிப்படியாகத் துயில் நீங்கி எழுகிறார்கள். பிராமணருடைய சாத்திரங்களிலும் மந்திரங்களி லும் அவர்களுக்குள்ள நம்பிக்கை நீங்குகிறது.

மேலை நாட்டுக் கல்வி பரவியதனால் பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக் காலத்திலே பதுமா நதியினுடைய கரைகள் இடிந்து விழுவதுபோல அழிந்து போகின்றன! (5.180) இந்த அயோக்கியப் புரோகிதர்களோ, அல்லது இவர்களுடைய முன்னோர்களோ, சென்ற நானூறு தலைமுறைகளாக, வேதப் புத்தகம் ஒன்றைக் கூடப் பார்த்தது இல்லை.

கலியுகத்துப் பிராமண ரூபத்தில் இருக்கின்ற இராட்சசர்களிடமிருந்து இந்த அப்பாவி மக்களை, இறைவா! காத்து இரட்சிப்பாயாக! (9.126)
ஆதாரம்: சுவாமி விவேகானந்தர் வரலாறு (பக்கம் 162 முதல் 164 வரை)Read more: http://www.viduthalai.in/page-7/102756.html#ixzz3cCGZRVLp

தமிழ் ஓவியா said...

மதத்தில் இடமில்லை அறிவுக்கு


பொதுவாக, மதம் சில கொள்கை களை எடுத்துக்கூறி இதுதான் உண்மை, இதைத்தான் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாகவும் பலாத்காரமாக கட்டாயப்படுத்தியும் சாதிக்க ஆரம் பித்தது.

மதத்துக்கு யாவற்றையும் படித்து ஆராய்ந்து தேடித் தெரியக்கூடிய அறிவு என ஒன்று இருப்பதைப் பற்றி கவலை கிடையாது. விஞ்ஞானம் அய்யத்தோடும் தயக்கத்தோடும் பேசுகிறது.

ஏனெனில் விஞ்ஞானத்தின் தன்மையே இதுதான் உண்மை என்று எதையும் சாதிக்க இயலாது. பகுத்தறிவின் துணை கொண்டு எதையும் நன்கு சோதித்து ஆராய்ந்து பார்த்த பிறகே அது ஒன்றை முடிவு கட்ட இயலும். விஞ்ஞானத்தையும், விஞ்ஞான முறைகளையுமே நான் விரும்புகிறேன் என்பதை நான் உனக்குச் சொல்லத் தேவை இல்லை.

-நேரு, உலக சரித்திரம் பக்கம் 346

தமிழ் ஓவியா said...

மீண்டும் சமஸ்கிருதம்: ஆழம் பார்க்கும் மோடி அரசுபுதுடில்லி, ஜூன் 6 -இந்தியா முழுவதும் அனைத்துப் பள்ளிகளி லும் மாணவர்களிடம் சமஸ்கிருத மொழித் திணிப்புக்கு ஆழம் பார்க் கும் வேலையை மத்திய மோடி அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை தொடங்கியுள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில் மாணவர்களி டம் சமஸ்கிருத மொழித் திணிப்புக்கு மத்திய அரசு தயாராகி வருவது, சமஸ் கிருத மொழி பயில்வோர் பற்றிய விபரம் சேகரிக்க அனுப்பப்பட்டுள்ள சுற்ற றிக்கை மூலம் தெரிய வரு கிறது.

என்.சி.இ.ஆர்.டி எனப்படும் தேசிய கல்வி யியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் இந்தியா முழு வதும் அனைத்து மாநிலங் களின் கல்வித் துறைக்கும் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. இதில் மத்திய அரசின்மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் டிஜிட்டல் இந்தியா திட் டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் அதன் ஒரு பகுதியாக என்.சி.இ. ஆர்.டி., இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சமஸ்கிருத கல்வியின் தற்போதைய நிலை குறித்து ஒரு முன்னோட்ட ஆய்வை மேற்கொள்வதா கவும் கூறப்பட்டுள்ளது. இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் சமஸ்கிரு தம் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்த சமீபத்திய நிலை குறித்த புள்ளி விவரத்தை உடன டியாக அனுப்ப வேண் டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.

இதை மத்திய மனித வளமேம்பாட்டு அமைச் சகத்துக்கு அனுப்ப வேண்டியிருப்பதால் இந்த தகவல்களை சேகரித்து விரைவில் அனுப்ப வேண் டும் என்றும் வற்புறுத்தப் பட்டுள்ளது. இந்த சுற்ற றிக்கையை முன்மொழிந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவ னமும் மாநில பள்ளி கல்வித் துறைக்கும், மெட் ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநருக்கும் சுற்ற றிக்கை அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையுடன், பூர்த்தி செய்யப்பட வேண்டிய பட்டியலும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 2010ஆம் ஆண்டு முதலாக அனைத்து வகுப்புகளிலும் மொத்தம் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை, அதில் சமஸ்கிருதம் பயிலும் மாணவர்கள் எவ்வளவு பேர் என்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

அத்துடன் சமஸ்கிரு தம் கற்க விரும்பும் மாணவர்கள் எண்ணிக் கையும், இந்த மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆண், பெண் என இரு பாலினர் பற்றிய மிகவும் விலாவாரியான விவரங் கள் கேட்கப்பட்டுள்ளன. யாருமே படிக்காவிட்டா லும் இல்லை என்ற விப ரத்தையும் எழுத்துப்பூர்வ மாக சமர்ப்பிக்ககேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த அனைத்து விபரங் களையும் ஜூன் 8ம் தேதிக் குள் (திங்கள்கிழமை) அனைத்து பள்ளிகளும் மாநில கல்வித் துறைக்கு அனுப்பிவைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் கற்க விருப்ப முள்ள மாணவர்கள் என்ற ஒரு கேள்விபட்டி யலில் கேட்கப்பட்டுள்ள தன் மூலம், இந்தியா முழுவதும் எவ்வளவு பேர் இதில் ஆர்வமாக உள்ள னர் என்ற தகவலைத் திரட்ட அரசு திட்டமிட் டிருப்பது தெரிகிறது.

இதன் மூலம் சமஸ் கிருத திணிப்புக்கு வழி செய்யப்படுவதை நாம் அறியலாம். ஒருபுறம் அய்அய்டி கல்வி நிலையத் தில் அம்பேத்கர் - _ பெரி யார் வாசிப்பு வட்டத் திற்கு தடை விதித்து விட்டு, மறுபுறம் இந் துத்துவ அரசியலை, சமஸ்கிருதத் திணிப்பைச் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்ட முறையில் செயல்பட்டு வருவதை இந்த சுற்றறிக்கை அம் பலப்படுத்துகிறது. மத்திய அரசின் இந்த ஜனநாயக விரோத சமஸ்கிருத மொழித் திணிப்பு முக்கிய அரசியல் பிரச்சனை என்பதுடன், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டுக்கான பாடத் திட்டங்கள், வகுப் புகள் என வேலைப்பளு அதிகமாக இருக்கும் நிலையில், வேண்டாத வேலையாக இதையும் எங் கள் தலையில் திணித்து சிரமப்படுத்து கின்றனர் என்று பள்ளி நிர்வாகங் களும் வேதனை தெரிவித் துள்ளன.Read more: http://www.viduthalai.in/e-paper/102808.html#ixzz3cHSthirf

தமிழ் ஓவியா said...

மோடி அரசுக்கு எதிர்ப்பு

50 ஆண்டுகள் ஆனாலும் கங்கையை சுத்தம் செய்ய முடியவே முடியாது! முரளிமனோகர் ஜோஷி அதிரடிவாரணாசி, ஜுன்6_ பாஜக தலைமையிலான மத்திய அரசின் முக்கியத் துவம் வாய்ந்த திட்டங் களில் முதன்மையானதாக இருப்பது கங்கையை சுத்தம் செய்யும் திட்டம் நமாமி கங்கா(புனித கங்கை) என்று கூறிக் கொள்கிறார்கள்.

பாஜகவின் இந்தத் திட்டம் குறித்து பாஜக வின் முக்கிய தலைவர் களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், கங்கையை சுத்தப்படுத்துவது என்பது 50 ஆண்டுகள் ஆனாலும் முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலத்துக்கான கனவுத் திட்டமாக வேண் டுமானால் இருக்கலாம். தடைகளில்லாமல் நீரோட் டம் இருந்தால்தான் அது வும் சாத்தியம். ஆகவே, அடுத்த 50 ஆண்டுகள் ஆனாலும் கங்கையை சுத்தம் செய்ய முடியாது. அடுத்த 50 ஆண்டுகளில் கங்கை ஆற்றோட்டப் பகுதிகளை சிறுசிறு பாகங்களாகப்பிரித்து, சிறிய நீர்த் தேக்கங்களாக மாற்றினால் கங்கையைச் சுத்தம் செய்யலாம். என்று ஜோஷி கூறினார். மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கங்கையில் கப்பல் விடப்போவதாகக் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு முரளி மனோகர் ஜோஷி கூறும் போது, பெரிய படகுகளே செல்ல முடியாத கங்கை யில் கப்பலை எப்படி விட முடியும்? என்று கேட் டார்.Read more: http://www.viduthalai.in/e-paper/102806.html#ixzz3cHT3uiYC

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

ஈயம் கலந்த உணவுப் பொருள் எதுவும் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கச் செய்யும். டின்களில் அடைத்து வைக்கப்படும் உணவுப் பொருள்களில் பெரும்பாலும் ஈயம் கலந்திருக்கும் - உண்ணாதீர் எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...

நல்ல தமாஷ்!

பிஜேபியில் 30 லட்சம் சிறுபான்மையினர் உறுப்பி னர்கள் ஆகியுள்ளார்களாம். இந்தியக் கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசனையே மிஸ்டு காலில் பிஜேபி உறுப்பினராக ஆக்கியவர்கள் ஆயிற்றே.

தமிழ் ஓவியா said...

ஜூன் 7 : புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கான நாள்

ஒரு நோய் பாதிப்பிலிருந்து மீண்ட வர்களிடம் தான் அந்த நோய் பற்றிய உண்மையான அக்கறை இருக்கமுடியும், அதன் படி புற்று போன்ற கொடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு மீண்டவர் களுக்கான நாளாக ஜூன் இரண்டாம் வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த ஆண்டு ஏழாம் தேதி கொண்டாடப் படுகிறது.

நோயிற்கு மருத்துவம் ஆலோசனைகளைவிட அதனால் பாதித்து மீண்டவர்களின் ஆலோச னைகள் நமக்கு மிகவும் அவசிய மானவை. மீண்டவர்கள் சுற்றுப்புறச்சூழல் காரணமாகத்தான் எங்களுக்கு புற்று நோய் ஏற்பட்டது என்று கூறுகின்றனர். உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. புற்றுநோயால் நிகழும் இறப்புகளும் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. பொதுவாகப் புற்றுநோய் வந்துவிட்டால் உயிர் பிழைப்பது கடினம் என்றுதான் படித்தவர்களும் நினைக் கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. மரபணு மூலம் தொடர்ந்து அடுத்த தலை முறைக்குத் தொடரும் புற்றுநோயைத் தடுக்க முடியாது என்றாலும் குறித்த சமயத்தில் கண்டறிந்து குணப்படுத்த முடியும். தூய்மையான பழக்கவழக்கம் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும் முக்கிய காரணியாகும்.

புற்றுநோய் வருவதில் சுற்றுச்சூழலின் பங்கு அதிகம் என்று புற்று நோய் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். புகையிலைப் பொருட் களால் அதிக அளவு புற்றுநோய் ஏற்படு கிறது. புகையிலைப் பழக்கத்திற்கு அடிமை யானவர்களின் அதாவது சிகரெட், பீடி, பான்பராக், புகையிலை போன்ற பழக்கங் களால் வாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் தாக்கும்.

தூய்மையற்ற நீர், மசாலா கலந்த உணவுகள், சரியான தூக்கமின்மை போன் றவைகள் உணவுப்பாதை நோய்களை உருவாக்கும், முக்கியமாக மாட்டிறைச் சியில் புற்றுநோய் உருவாக்கும் காரணிகள் என்ற ஒரு பொய்யான கருத்து பரப்பட்டு வருகிறது, இது உண்மையல்ல, எந்த ஒரு இறைச்சியானாலும் காய்கறி உணவானாலும் அதிக அளவு கார வகைகளைச் சேர்த்து உண்ணும் போது உணவுக்குழாய் பாதிப்பு ஏற்பட்டு நாளடைவில் புற்றுநோய் உருவாகும். நன்கு வேக வைத்து உண்ணும் மாட்டிறைச்சி புற்றுநோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும், நொதிகளை அதிகம் உற்பத்தி செய்யும் புரதங்களுக்கு ஊக்க மூட்டி களாக இருக்கிறது. தொடக்க அறிகுறிகள் உடலில் வலியில்லாத கட்டிகள், திடீர் எடை குறைவு, உடல் பாகங்களில் இருந்து ரத்தம் வடிதல், தொடர்ந்த மலச்சிக்கல் போன்றவை புற்றுநோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். நவீன மருத்துவ வசதிகள் அதிகரித்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் நோய் பற்றி கவலை கொள்ளத் தேவை யில்லை, தொடக்கத்தில் நாம் மருத்துவர் களை அணுகி தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் புற்று நோயை குணப்படுத்தி விடலாம்

இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்குமேல் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 80 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர்.

ஆண்களுக்கு நுரையீரல், வாய், உணவுக்குழாய், வயிறு ஆகிய உறுப் புகளில் புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. பெங் களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, திரிபுரா, கொல்லம், திருவனந் தபுரம் ஆகிய மய்யங்களில் நுரையீரல் புற்று நோய் பாதிப்பு அதிகம் பதிவாகியிருக் கிறது. குஜராத், மகாராஷ்டிரம், போபால் (ம.பி.) ஆகியவற்றில் வாய் புற்றுநோய் அதிகமாகப் பதிவாகியிருக்கிறது.

பெண்களைப் பொருத்தவரை மார் பகப் புற்றுநோயும், கருப்பைவாய்ப் புற்றுநோயும் அதிகம். கட்டிகளால் ஏற்படும் புற்றுநோய்கள் சிறுவர் சிறுமிகளையும் குழந்தைகளையும் அதிகம் பாதிக்கிறது. முக்கியமாக சிறுவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்கள் அதிகம் சுகாதாரமற்ற சூழலினால் உருவாகிறது. நகர்ப்புறக் குடிசைப்பகுதி மற்றும் நெருக்கடியான நகர்ப்புறங் களில் வாழும் குழந்தைகளைப் புற்றுநோய் எளிதில் தாக்குகிறது.

தூய்மையான புறச்சூழல், நல்ல உணவுப் பழக்கவழக்கம் போன்றவை புற்றுநோயை எதிர்க்கும் காரணி களாகும், மரபணுமூலம் வரும் புற்று நோய் மிகவும் சொற்பமானவையே இவையெல்லாம் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் நமக்கு கற்பிக்கும் பாடங்கள், சுற்றுப்புறத்தைச் சுகாதாரமாகப் பேணி புற்றுநோயின் தாக் கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வோம்.

- சரவணா ராஜேந்திரன்Read more: http://www.viduthalai.in/page-2/102801.html#ixzz3cHTjRZyW

தமிழ் ஓவியா said...

சொல்லவேண்டும்

பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன் னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பத்திரிகைகளும் சர். சண்முகமும்


தோழர் ஆர்.கே. சண்முகம் இந்தியா முழுவதுக்கும் தெரிந்த ஒரு முக்கியஸ்தர். அவருடைய நடவடிக்கைகளும், பேச்சுக் களும் மக்கள் கவனிக்கப்பட தக்கது என்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. பலர் எதிர்பாக்கவும் கூடும்.

இந்நிலையில் தேசியப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனப் பத்திரிகை அவரது நடவடிக் கைகளை யோக்கியமாய் பிரசுரிக்காமலும், பிரசங்கங்களையும் கேள்விகளையும், பதில்களையும் சிறிதும்கூட பிரசுரிக்காமலும் இருந்து வருகின்றன. சர். சண்முகம் அவர்கள்.

இந்திய சட்டசபையில் இராணுவ சம்பந்தமான பிரச்சினையில் கொடுத்த ஒரு தீர்ப்பு விஷயமாய் பார்ப்பனப் பத்திரிகைகள் பாராட்டாவிட்டாலும், விஷமத்தனமான பரிகாசங்களைச் செய்தன.

தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி அய்யர், ஜம்பை வைத்தியனாத பாகவதர், ரமண ரிஷி போன்றவர்கள் விஷயங்களைப் பெருக்கி கண்ணு, மூக்கு வைத்து கலம் கலமாய் அலங்கரிக்கின்றன.

இந்த மாதிரியான காரியங்களால் பார்ப்பனர்களுக்குக் கீர்த்தியும், மேன்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ, பார்ப்பனரல்லாதாருக்கு அபகீர்த்தியும், தாழ்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ நாம் சொல்ல வரவில்லை.

இந்த மாதிரியான நிலையில் பார்ப்பனர் இருக்கின்ற வரையில் சித்திரத்தில் மாதிரி பார்த்து எழுதக் கூட ஒரு பார்ப்பனர் கிடைக்காமல் பூண்டற்று போகக் கூடிய காலம் வரும் என் கின்ற தைரியம் நமக்கு உண்டு. அந்தத் தைரியம் இல்லாவிட்டால் இத் தொண்டை நாம் மேற்கொண்டிருக்க மாட்டோம்.

ஆனால் எதற்காக இதை எழுதுகின்றோம் என்றால், பார்ப்பனப் பத்திரிகைகள் தேசியப் பத்திரிகைகள் என்றும், பல பார்ப்பனர்கள் பார்ப்பனத் தன்மை இல்லாமல் நடு நிலைமை வாய்ந்தவர்கள் என்றும் கருதிக் கொண்டு பார்ப்பன சிஷ்யர்களாகவும், பார்ப்பன கூலிகளாகவும், பார்ப்பனர் களுக்கும், பார்ப்பன பத்திரிகைகளுக்கும் ஆதரவளிப்பவர் களாகவும் இருக்கும் முட்டாள்தனத்தையும், சுயமரியாதை அற்ற தன்மையையும் வெளிப்படுத்தவே இதை எழுதுகிறோம்.

விகடப் பத்திரிகை என்று வேஷம் போட்டுக் கொண்டு சில பத்திரிகைகள் பார்ப்பனியத்தைப் பிரச்சாரம் செய்துகொண்டு பார்ப்பனரல்லாத பிரமுகர்களை இழிவுபடுத்திக் கொண்டு வருகின்றன.

அவைகளுக்கும் சுத்த இரத்த ஓட்டமில்லாத - சுயமரியாதை அற்ற பணம் பிரதானமே தவிர வேறொன்றும் இல்லை என்று கருதுகின்ற சில பார்ப்பனரல்லாதார் ஆதர வளிக்கின்றதையும் பார்த்து வெட்கப்படுகின்றோம்.

என்ப தோடு 10 பணத்துக்கு மிஞ்சிய பதிவிரதை இல்லை என்று கற்பின் பித்தலாட்டத்துக்கு ஒரு பழமொழி சொல்வது போல் பணத்தை விட தங்கள் சுய நல வாழ்க்கையை விட, மானம் பெரிதல்ல என்று எண்ணி வாழ்க்கை நடத்தும் பார்ப்பனரல்லா தாரைக் கண்டு இரங்குகின்றோம்.

பார்ப்பனரைப் பார்த்து பாரதியார் நாயும் பிழைக்கு மிந்தப் பிழைப்பு என்று சொன்னது போல், ஒரு மனி தனின் பிழைப்பிற்காக மானத்தைத் தனது சமுகத்தை விற்று விட்டு ஜீவிக்க வேண்டியதில்லை என்றுதான் பரிதாபத்துடன் கண்ணீர் விட்டுக் கொண்டு இதை எழுதுகிறோம்.

- பகுத்தறிவு - கட்டுரை - 30.09.1934Read more: http://www.viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3cHVjbxIE

தமிழ் ஓவியா said...

விஷமத்துக்கு விஷமமா?
அல்லது உண்மையா?திருச்சி நகர தூதன் பத்திரிகையில் தோழர் அவிநாசி லிங்கம் நிற்கவில்லை என்கின்ற தலைப்பின் கீழ் கோயம்புத்தூர், சேலம், வடாற்காடு ஜில்லாக்களின் இந்திய சட்டசபைத் தொகுதிக்குக் காங்கிரஸ் சார்பாக அபேட்ச கராய் நிறுத்தப்பட்டதாக சொல்லப்படும் தோழர் அவிநாசிலிங்கம் செட்டியார் கடைசிவரை அபேட்சகராய் நிற்க மாட்டாராம்.

காங்கிரசின் பெயரால் தோழர் அவிநாசிலிங்கம் செட்டியாரை முன்னிருத்தி அத்தகுதியைப் பயன்படுத்தி முடிந்ததும் கடைசியில் இருக்கக் கூடிய நிலைமையை அனுசரித்து இறுதியாகத் தோழர் ராஜகோபாலாச்சாரியாரே அதில் அபேட்சகராக நின்றுவிட ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த இடத்திலிருந்து தெரியவருகிறது என்ற ஒரு சிறு குறிப்புக் காணப்படுகிறது.

பொய்க்கு பொய், கோளுக்குக் கோள், விஷமத்துக்கு விஷமம் செய்யத் தகுதி உள்ளவனுக்குத்தான் உலகில் இடமுண்டு என்கின்ற ஒரு ஆப்த வாக்கியம் உண்டு.

நகர தூதனில் காணப்படும் இந்தக் குறிப்பானது நகர தூதனுக்கு நம்பத் தகுந்த இடத்திலிருந்து வந்திருந்தாலும் இருக்கலாம். என்றாலும் அந்த நம்பத் தகுந்த இடத்துக்கு, நம்பத்தகுந்த இடத்திலிருந்து வந்தது உண்மையாய் இருக்குமா அல்லது மேல்கண்ட ஆப்தவாக்கியத்தை ஒட்டியதாக இருக்குமா என்பதை உறுதி கூற நம்மால் முடியவில்லை.

ஆகவே, தோழர் அவிநாசிலிங்கம் அவர்கள் நிற்கப் போவதில்லை என்பது உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம். அல்லது பொய்க்குப் பொய், கோளுக்குக் கோள், விஷமத்துக்கு விஷமம் என்கின்ற மனுதர்ம சாஸ்திரத்தை அனுசரித்து இருந்தாலும் இருக்கலாம் என்று எண்ணுகிறோம்.

- பகுத்தறிவு - கட்டுரை - 23.09.1934Read more: http://www.viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3cHVvSPcL

தமிழ் ஓவியா said...

நாத்திகத்தைப்பற்றி அவதூறா?
பிரேசிலில் தண்டனைபிரேசிலைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் நேரலை நிகழ்ச்சியை வழங்கி உள்ளது. அந்த நிகழ்ச்சியில் நாத்திகர்கள்குறித்து எதிர் மறையான கருத்துகளைக் குறிப்பிட்டது.

2010ஆம் ஆண்டில் ரெடி பான் டெய்ரெண்டிஸ் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய பிரேசிலின் அவசரம் (அர்ஜென்ட் பிரேசில்) நிகழ்ச்சியை ஜோஸ் லூயிஸ் தாடெனா என்பவர் வழங்கினார். இளைஞர் ஒருவர் கடவுள் இல்லாமைகுறித்து விளக்கினார்.

நிகழ்ச்சியை வழங்கியவர் குறிப்பிடும்போது என்னுடைய கருத்தாக கூறுவது என்னவென்றால், ஒருவர் நாத்திகராக இருப்பதால், எந்த வித வரையறையுமில்லாமல் ஏராளமான குற்றங்கள் நடைபெறுவதை நாம் காண்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அதேபோன்ற கருத்துகளை தொடர்ச்சியாக அந்த நிகழ்ச்சி முழுவதுமாக, நாத்திகர்கள் என்றாலே குற்றம் செய்பவர்கள் என்கிற கருத்தைப் பேசிவந்தார். அதேபோல் எவ்வளவுபேர் கடவுள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பதை வாக்கெடுப்பாகவும் நடத்திக்கொண்டிருந்தார்.

நிகழ்ச்சியை வழங்கியவரின் கருத்துகளால் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக அரசு வழக்குரைஞர்கள் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.

மத சுதந்திரம் மற்றும் சட்டத்துக்கு விரோதமாக மதசகிப்புத்தன்மையில்லாமல் எவரும் பேசுவது என்பது சட்டவிரோதமானது. தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சியை வழங்கியவரின் கற்பனையால் புனையப்பட்டு கூறப்பட்ட கருத்துகள் பிரேசில் நாட்டின் அரசமைப்புக்கு விரோதமாக இருந்துள்ளது. அப்படி சட்ட விரோதமாக எவரும் பேசுவது என்பது அபராதம் விதிப்பதற்கு அல்லது சிறைத்தண்டனைக்கு உரியதாகும்.

மத சுதந்திரம் என்கிற பெயரில் அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் அந்த நிகழ்ச்சியை வரும் நவம்பர் மாதம்வரை 72 முறை ஒளிபரப்புவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து வரக்கூடிய கருத்துகள் ஒருவருக்கொருவர் மாறுபாடுகளைக் கொண்டுள்ளதாக இருக்கிறது.

ஏராளமானவர்கள் தங்களின் கருத்துகளாகக் குறிப்பிடும்போது, மதங்கள்தான் போர்கள் நடைபெறுவதற்கு காரணங்களாக இருக்கின்றன. மதங்களால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் நாத்திகத்தை குறை கூறக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.

மக்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும். உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான தளமாக தாடெனா மற்றும் ஏவர் ஆகியோர் இணைந்து வழங்கிய அந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டது. தாடெனா என்பவரும் நம்மைப் போன்ற மனிதர்தான். அந்த நிகழ்ச்சி நேரலை என்பதால், அளவுகடந்து சென்று விட்டார் என்று ஒருவர் குறிப்பிட்டார்.

இதுபோன்று அவதூறுகளைப் பரப்புகர்களுக்கு அபராதமோ, சிறைத் தண்டனையோ விதிக்கப்படும் என்றும் வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

பொதுவாக பிரேசிலில் நாத்திகர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக் கிறார்கள் என்று சொல்லப்பட்டுவந்தாலும், அண்மையில் வெளிவந்த ஆய்வுத் தகவலின்படி, அமெரிக்க அய்க்கிய நாடுகளில் நாத்திகத்தின் விழுக்காடு அதிகரித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த ஆய்வில் பிரேசிலில் நாத்திகர்களின் எண்ணிக்கை 50 விழுக்காட்டுக்கும் மேல் இருப்பது தெரியவந்துள்ளது.Read more: http://www.viduthalai.in/page3/102777.html#ixzz3cHX1CMO1

தமிழ் ஓவியா said...

சித்ரா பவுர்ணமி சொற் குற்றமும் பொருள் குற்றமும்

சைத்ரா என்றால் சமற்கிருதத்தில் ஆடு எனப் பொருள்படும். மேழம் என்றால் தமிழில் ஆடு எனப் பொருள்படும். பூமி சூரியனைச் சுற்றிவரும் பெயர்ச்சியின்போது இந்த மாதத்தில், பூமியில் இருந்து பார்க்கும்போது நிலவுக்குப் பின்னால் காணும் விண்மீன் கூட்டங்களை கற்பனைப் புள்ளியால் ஒருங்கிணைத்தால் ஆடு போன்ற தோற்றம் நினைவில் வரும்.

அதை தமிழ் முன்னோர்கள் மேழம் மாதம் என்று பெயர் சூட்டினார்கள். அதைத்தான் ஆரியம் புகுந்து மேஷம் என மாற்றியது. இந்த மாதம்  முழுவதும் ஆடு போன்ற தோற்றத்தை கற்பனை செய்து நிலவின் பின்புலம் அல்லது தோற்றம் என அழைத்தனர்.

பின்புலம் அல்லது தோற்றம் என்பதுதான் ஆரியத்தால் இராசி என அழைக்கப்பட்டு மேழம் பின்புலம் என்பது மேஷராசி ஆனது. சைத்ரா என்பது சித்திரை ஆனது.

பூமிக்கு இருக்கும் ஒரு நிலவு பூமியைச் சுற்றிவர 27.3 நாள்கள் ஆவதைத்தான் குசேலனுக்கு 27 பிள்ளைகள் என கதை அளந்த ஆரியப் புராணம் வேறு. சித்திரை பவுர்மணி என்பது மருவி சித்ரா பவுர்ணமி ஆகி, சித்ரா வெள்ளாடு ஆகி வழக்கில் உள்ளது.

அதைப் போலத்தான் கள்ளழகர் என்ற கற்பனை உருவ பொம்மையை உருவாக்கி இந்த மாதத்தில் வைகை ஆற்றில் இறக்கி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் என்று பத்திரிகைகளும், ஊடகங்களும் சொல்கின்றன.

உண்மையில் கள்ளழகர் என்ற (கடவுள்) சிலையை பக்தர்கள் சுமந்து வந்து வைகை ஆற்றில் இறக்கினார்கள் என்றல்லவா எழுத வேண்டும் அதை விடுத்து கள்ளழகர் ஆற்றில் இறங்கினார் என்றால், பக்தர்கள் யாருடைய துணையும் இல்லாமல் தானே அல்லவா இறங்கி இருக்க வேண்டும்.  அப்படி இறங்கினால்தானே இறங்கினார் என எழுத வேண்டும். சொல்ல வேண்டும்.

அப்படி எழுதினால் அதை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்க திராணியற்ற பத்திரிகை ஊடகங்களே இனிமேல் கள்ளழகர் சிலை பக்தர்களால் வண்ண உடை உடுத்தி சுமந்து செல்லப்பட்டு வைகை ஆற்றில் இறக்கப்பட்டது என எழுதுங்கள் உங்களுக்கு பத்திரிகை தருமம், எழுத்தில் நேர்மை, நாணயம் இருந்தால் இப்படி எழுதுங்கள்.

தயாரா? சொல்லில் குற்றம் இருந்தால் பொரு ளிலும் குற்றம் வரும். பொருள் படும்படி... படி என்கிறார் புரட்சிக் கவிஞர்.

- _ வசந்த விண்முகில்
- _ எதிலும் கட...உள் பேரவை-

தமிழ் ஓவியா said...

பிழை திருத்தும் மென்தமிழ் மென் பொருள் உருவாக்கிய அறிஞர்தமிழைப் பிழை இல்லாமலும், மொழிக் கலப்பு இல்லாமலும் எழுதக் கூடிய சிறந்த தமிழ் மென் பொருளை உருவாக்கியுள் ளார் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம். இதைக் கொண்டு கோடிக்கணக் கான தமிழ் சொற்களின் பிழைகளைத் திருத்த முடியும்.

இந்த மென்பொருளைச் சிறப்பாக வடிவமைத்த தெய்வசுந்தரம், முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற முதன்முறையாகத் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஓர் இலட்சம் ரூபாய், ஒரு பவுன் தங்கம், பாராட்டுப் பத்திரம் கொண்ட விருது விரைவில் அவருக்கு வழங்கப்பட வுள்ளது.

இந்த மென்பொருளை கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் பதிவேற்றி விட்டால், தமிழ் வார்த்தைகளில் உள்ள தவறை எளிதாகக் கண்டுபிடித்து ஒரு வினாடியிலேயே திருத்த முடியும். வார்த்தையில் ஓர் எழுத்து விடுபட்டி ருக்கலாம் அல்லது எழுத்து இடம் மாறி யிருக்கலாம் அல்லது தேவையில்லாமல் ஓர் எழுத்து சேர்க்கப்பட்டிருக்கலாம்.

இதுபோன்ற தவறுகளைக் கண்டுபிடித்து வினாடியிலே திருத்துவதுதான் இந்த மென்பொருளின் சிறப்பு. உதாரணத்துக்குக் கசலம் என்ற தவறான வார்த் தையைச் சொற்பிழை திருத்தியைக் கொண்டு திருத்தும்போது கசம், கலம், கமலம், கலசம் ஆகிய வார்த்தைகள் கம்ப்யூட்டர் திரையில் தோன்றும். அதில் நமக்குத் தேவையான சரியான வார்த்தையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சந்திப்பிழையையும் திருத்த முடியும். எடுத்துக்காட்டாகப் படித்து பார்த்தான், வந்துப் பார்த்தான் என்ற வார்த்தை களில் உள்ள ஒற்றுப் பிழையைத் திருத்தி, படித்துப் பார்த்தான், வந்து பார்த்தான் என்று காண்பிக்கிறது. எண்களைக் கொடுத்தால் எழுத்துகளாக்கு கிறது. தமிழ் எழுத்துகளுக்கு எண்களைத் தருகிறது.

அதாவது 1,20,00,000 என எண் வடிவில் தட்டச்சு செய்தால் ஒரு கோடியே இருபது லட்சம் என்று தமிழ் எழுத்துகளாக வருகிறது. இந்த மென் பொருளில் உள்ள 56 ஆயிரம் தமிழ் அகராதி சொற்களைக் கொண்டு கோடிக்கணக்கான வார்த்தைகளைத் திருத்த முடியும்.

தமிழைத் தமிழாகவும், பிற மொழிக் கலப்பு இல்லாமலும், பிழை இல்லாமலும் எழுதப் பயன்படும் இந்த மென்பொருள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அரசு மற்றும் தனியார் அலுவலகப் பணியாளர்களுக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம். ஆங்கிலம் மற்றும் தமிழ் அகராதியும் இருப்பது தனிச்சிறப்பு.

இந்தச் சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கிய சென்னைப் பல்கலைக்கழக மொழியியல் துறை முன்னாள் தலைவர் ந.தெய்வசுந்தரம் கூறியதாவது:

எனது தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவின் 5 ஆண்டு உழைப்பே இந்த மென்பொருள். கணினி பயன்படுத்தத் தெரிந்த அனைவரும் இதன் முழுப்பலனைப் பெற முடியும். 15 வகையான கீ போர்டு வசதி இருப்பதால் உலகம் முழுவதும் பயன்படுத்தலாம்.

இத்தகைய மென்பொருட்களை உருவாக்கத் தமிழ் இலக்கணம் மட்டும் படித்தால் போதாது. மொழியியல் அறிவும் அவசியம். அதற்குப் பல்கலைக் கழகங்களில் மொழியியல் பாடம் கட்டாயம் இருக்க வேண்டும். அதன் மூலமே ஏராளமான தமிழ் மென் பொருட்களை உருவாக்கிக் கணினித் தமிழ்ப் பயன்பாட்டை ஆங்கில மொழிப் பயன்பாட்டுக்கு இணையாக வளர்க்க முடியும்.

_இவ்வாறு பேராசிரியர் தெய்வ சுந்தரம் கூறினார்.