Search This Blog

28.6.15

பார்ப்பானைக் கடவுள் பார்ப்பானாகப் படைத்தாரா?-பெரியார்

ஜாதிக்குச் சட்டப் பாதுகாப்பு அளித்தது காந்தியே!

  

2500- ஆண்டுகட்கு முன் சித்தார்த்தர் 'ஜாதி இல்லை' என்றார். அதன் காரணமாகவே பார்ப்பனர்கள் புத்த நெறியாளர்களின் மடங்களுக்குத் தீ வைத்தும், கொடூரமாகக் கொன்று குவித்தும், கழுவேற்றியும் ஒழித்துக்கட்டி விட்டார்கள்.

அதற்கு 500- வருடங்களுக்குப் பிறகு வள்ளுவர் சொன்னார். மிகவும் பயந்து "பிறப்பினால் எல்லோரும் ஒத்தவர்கள்" என்று சொன்னார். அந்தக் குறளைக் குப்பையில் போட்டுவிட்டார்கள். பகுத்தறிவாளர்கள் ஆகிய நாங்கள் அதை வெளிப்படுத்திய பிறகுதான் இப்போது திருக்குறள் வெளிவருகிறது. ஒரு மூலையில் செருப்புத் தைப்பவனிடம போய் "வள்ளி சுப்பிரமணியன் யார்?" என்றால் உடனே சொல்லுவான்; வள்ளுவர் யார் என்றால் "படி என்ன விலை?" என்பான். அந்த அளவு அவர் மறைக்கப்பட்டுவிட்டார்.

இது தவிர ஜாதியை எதிர்த்துப் போராடியதாகச் சொல்ல சரித்திரப்படி ஆதாரமில்லை. பார்ப்பனருக்கான சில இலக்கிய முண்டல்லவா! இராமாயணம், பாரதம், புராணங்கள், கந்த புராணம், பாகவதம் இப்படி? அவற்றிலிருந்து ஜாதியை ஒழிக்க, பார்ப்பானை ஒழிக்க வேத சாஸ்திர புராணங்களை ஒழிக்க முயற்சி நடந்ததாக அறிகிறோம்.

அதாவது இரணியன், இராவணன், சூரபத்மன் முதலியவர்கள் வேதம், யாகம், பார்ப்பனர் இவற்றை ஒழிக்கப் பாடுபட்டதாக உள்ளது. நேரிடையாகப் பார்ப்பானிடமே சண்டை போட்டிருக்கிறார்கள். அதைத்தான் பித்தலாட்டமாகத் தேவர்களுடன் சண்டையிட்டார்கள் என எழுதி, ஜாதி ஒழிய வேண்டும் என்றவர்களைக் கொடூரமாகக் கொன்றிருக்கிறார்கள். அதுவே புராணங்களாயின. இன்று நாம் தான் ஜாதி ஒழிய வேண்டும் என்று போராடுகிறோம். மற்றவன் எவனுக்கும் கவலையில்லை.

இன்று படித்தவன் இருக்கிறான்; படித்தவன் எல்லாம் படிப்பைக் கொண்டு வயிறு வளர்க்கலாமா என்று பார்க்கிறானே தவிர, இதுபற்றி கவலைப்படுவதில்லை! "பணக்காரனுக்குப் பத்துலட்சம், அய்ம்பது லட்சமாக வேண்டும்; கோடியாக வேண்டும்" என்று இப்படிக் கவலைப்படுகிறானே தவிர, அம்பது லட்சமிருந்தும் நாம் ஏன் தேவடியாள் மகனாக சூத்திரனாக இருக்க வேண்டும் என்று யார் கவலைப்படுகிறார்கள்? பதவியில் இருப்பவனுக்கும் இந்த உத்தியோகத்தைவிட இன்னும் பெரிய உத்தியோகம் வராதா? சட்டசபை மெம்பராக உறுப்பினராக இருந்து மந்திரியாக மாட்டோமா? என்றுதான் கவலைப்படுவானே தவிர, நாம் ஏன் கீழ்ஜாதி என்று எவனுக்குக் கவலையிருக்கிறது? சட்டசபை மெம்பராவதில் உறுப்பினராவதில் தான் கவலை. நாம் ஏண்டா தேவடியாள் மகனாக இருக்க வேண்டும் என்று எவன் சிந்திக்கிறான்? எப்படியோ இது எனக்குத்தான் அவமானமாகத் தோன்றியது?

ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் (நீதிக்கட்சியினர்) கூட பார்ப்பான் மட்டும் என்ன உயர்ந்தவன் - அதுவும் உத்தியோகத்துறையில் மாத்திரம்? என்றார்களே தவிர, நாம் ஏன் கீழ்ஜாதி, மட்டமான ஜாதி என்று சிந்திக்கவில்லை; ஆயினும் அந்த அளவில் அதுவே பெரிய புரட்சிதான்.

இன்று இந்தியா முழுவதுமே வேறு யாரும் செய்யாத தொண்டு இப்போது திராவிடர் கழகம் செய்துவரும் தொண்டு. 30, 35- வருட காலமாகச் சொல்லி வந்தாலும் இவ்வளவு முக்கியமாகக் கருதும் நிலை இப்போதுதான் வந்துள்ளது. நான் பொதுவாழ்வுக்கு வரும்போது ஜாதி ஒழிய வேண்டுமே என்ற எண்ணம் எனக்கு இருந்தது. காங்கிரசில் இருக்கும் போதே ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசி எழுதிவந்தவன் நான். இது இப்போது ஏதோ சமய சந்தர்ப்பவாதமாகச் சொல்வதல்ல; 1925, 26- 'குடிஅரசு' முதல் வால்யூம் (தொகுதி) இதோ இருக்கிறது. இதில் பார்த்தால் தெரியும். தீண்டாமை ஒழிப்புப் பித்தலாட்டத்தை அப்போதே கண்டித்து நிறைய எழுதியிருக்கிறேன்.

அதுமுதல் 30, 35- வருட காலமாகவே ஜாதி ஒழிப்பை முக்கியமாக வைத்து, ஜாதிக்கு ஆதாரம் என்ற முறையில் மதம், சாஸ்திர புராணங்கள், கடவுள்கள் ஒழிய வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறேன்.

சென்ற வருடம் பிறந்த தினவிழா அறிக்கையில் ஜாதி ஒழிப்பது இந்த ஆண்டு வேலைத்திட்டம்; அதற்காக இரண்டு காரியங்கள் நடக்க வேண்டும்; ஒன்று, சர்க்கார் (அரசு) அனுமதி பெற்று நடத்தப்படும் ஓட்டல்களில் 'பிராமணாள்' என்று பெயர்ப்பலகையில் போடக்கூடாது; மற்றது, கோவிலில் பார்ப்பான் தான் மணியடிக்கலாம் என்று இருக்கக் கூடாது என்பதாகும்.

இதற்காகக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்று சொன்னேன்; தேர்தலால் சிறிது காலம் கடந்தது.

தேர்தல் முடிந்ததும் "பிராமணாள்" என்ற போட்டிருப்பதை அழித்துவிடுங்கள்; அழிக்காவிட்டால் நாங்கள் அழிப்போம்; தடுத்தால் அந்தக்கடையில் யாரும் சாப்பிடக்கூடாது என்று மறியல் செய்வோம்" என்று ஆரம்பித்தோம். இதைச் சாதாரணமாக நினைத்துத்தான் ஆரம்பித்தோம். 100- க்கு 90- பார்ப்பான் அழித்துவிட்டான். சென்னையில் ஒரு பார்ப்பான் மட்டும் அழிக்கமாட்டேன் என்றான். மறியல் ஆரம்பித்தோம்; அதாவது, 'அவன் பிராமணனாம்! அதன் மூலம் நம்மைச் சூத்திரன் என்கிறான்! அங்குப் போய்ச் சாப்பிடாதே' அவ்வளவுதான் நமது வேண்டுகோள்.

இதற்குப் பார்ப்பானும் சண்டைக்கு வரவில்லை; சாப்பிடப் போகிறவனும் சண்டைக்கு வரவில்லை; சர்க்கார் (அரசு) குறுக்கே வந்து விழுந்து கைது செய்கிறது! அதிலும் அக்கிரமமாக! மறியல் செய்யச் சட்டப்படி உரிமையிருக்கும் போது போக்குவரத்துக்கு இடைஞ்சல், அது இது என்று சொல்லிக் கைது செய்கிறார்கள்! இதுவரை 600- பேருக்கு மேல் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். நாம் இன்னும் கொஞ்சம் தீவிரமான பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளது. கடினமான பிரச்சனைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்று யோசித்துப் பார்க்கும் போது விஷயம் தெரிந்தது. சட்டத்திலேயே ஜாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்; அந்தப்படி செய்வதற்கு அடிப்படைக் காரணம் காந்தி.

காந்தி பெயரைச் சொல்லித்தான் ஜாதிக்கும் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது எனவே இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன்.

காந்தி சிலையை உடைக்க நமக்கு உரிமையுண்டு.

இன்று காங்கிரஸ்காரன் சொல்கிறானே, வெல்லிங்டன் சிலை இருக்கக்கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை கூடாது என்று! அதுபோல காந்தி சிலை எங்கள் தமிழ் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது.

ஒரு வெல்லிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தைக் காந்தி செய்துள்ளார்.

காந்தி மனதார ஏமாற்றிச் ஜாதியைக் காப்பாற்றப் பலமான சட்டம் செய்து கொண்டு, பார்ப்பானுக்குப் பாதுகாப்பு கொடுத்து, நம்மை என்றும் அடிமையாக இருக்க ஏற்பாடு செய்து விட்டுக் போய்விட்டார்.

நம்மவனோ நான் நாயக்கனாயிற்றே, நான் கவுண்டனாயிற்றே என்று நினைத்துக் கொண்டு, சூத்திரன் (தேவடியாள் மகன்) என்பதைப் பற்றிக் கவலைப்படமால் இருக்கிறானே தவிர வேறு என்ன? தெரியாமல் தொட்டால் நெருப்பு சுடாமல் விடுமா? தெரியாததுபோலவே இருந்துவிட்டால் சூத்திரப்பட்டம் இல்லாது போய்விடுமா?

இந்தியா முழுவிலும் அகில இந்தியக் காங்கிரஸ் வந்து 70- வருடமாக இருக்கிறது. இந்தக் காங்கிரஸ் வந்தபின் நமக்கு ஏற்பட்ட இலாபமென்ன? பார்ப்பானுக்கு ஏற்பட்ட இலாபமென்ன? என்று கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டாமா?

காங்கிரஸ் வந்த 50- வருடத்தில் பார்ப்பான் 100-க்கு 100- பேர் படித்தவன். பாப்பாத்தியும் படித்தவள். 70- வருட காங்கிரஸ் அவர்களை அந்த அந்தஸ்தில் (உயர்மதிப்பில்) வைத்துவிட்டது. அதே காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்து தீர்மானங்களுக்குக் கைதுக்கிப் பலப்படுத்திய நம் கதி என்ன? 100- க்கு 18- பேர் படித்திருக்கிறான்; இந்த 18- பேரும் எப்படிப் படித்தவன்? பார்ப்பானைப் போலவே படித்தவனா? அதில் 10- பேர் சும்மா கையெழுத்துப் போடத் தெரிந்தவன்; அவ்வளவுதான்! வெள்ளைக்காரன் போகிறபோது 12- பேர்தான் படித்தவன்; சுதந்திரம் வந்து 10- ஆண்டு ஆகியும் அதுவும் காமராசர் முதலைச்சராக வந்ததால் இன்று 100- க்கு 18- பேர் படித்தவன்.

காமராசர் வராவிட்டால் குறைந்திருக்கும். ஆச்சாரியார் வந்ததும் 4000- பள்ளிக்கூடத்தை மூடினார். மெடிக்கல், எஞ்சினியரிங் காலேஜ்களில் (கல்லூரிகளில்) பார்ப்பானுக்குக் கொடுப்பார்; மிஞ்சினால் மலையாளிக்குக் (மருத்துவப் பொறியியல் கல்லூரிகளில்) கிறிஸ்தவனுக்குக் கொடுப்பார்; நம்மவனுக்குக் கிடைக்காது; பிறகு அவனவன் ஜாதித்தொழில்தான் படிக்கணும். எல்லோரும் படித்தால் வேலைக்கு எங்கே போவது? சூத்திரனுக்கு சூத்திரனுக்கு எதற்குப் படிப்பு என்று சொல்லிவிட்டார்.

அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து ஒழிக்க வேண்டிய அவசியம் வந்தது; காமராசர் வந்தார்; ஆச்சாரியார் மூடிய பள்ளிகளைத் திறந்து மேற்கொண்டும் பள்ளிக்கூடம் திறந்தார். காலேஜ்களில் (கல்லூரிகளில்) ஆச்சாரியார் இருக்கும்போது பார்ப்பானுக்கு 100- க்கு 63- கொடுத்தார். இவர் வந்ததும் தமிழனுக்கு 63- வீதம் என்ற கொடுத்தார். அய்க்கோர்ட் ஜட்ஜ் (உயர் நீதி மன்றம் நீதிபதி) காலியானது 2- தமிழனுக்குக் கொடுத்தார். நேற்று கூட மெடிக்கல் சர்வீசு டைரக்டர் (மருத்துவத் துறை இயக்குநர்) பதவி காலியாயிற்று ஒரு வடநாட்டான் இருந்தான். அதை இப்போது ஒரு தமிழனுக்குக் கொடுத்துள்ளார்.

எத்தனை நாளைக்குக் காமராசரே இருக்க முடியும்? எலும்பு போட்டால் நம் ஆளே காமராசர் தலையில் கல்போடுவானே? இதையெல்லாம் யார் சிந்தித்தார்கள்? ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டுத் தீர வேண்டும்.

பார்ப்பானும் பறையனும் ஒழிந்து ஒரே ஜாதி ஆவதால் வரும் நட்டமென்ன?

பார்ப்பான் இல்லாவிட்டால் என்ன காரியம் நடக்காது? "அய்யோ பாவம்! பார்ப்பான் எங்கே போவான்?" என்கிறவன்தான் சொல்லட்டுமே!

நான் தான் உயர்ந்த ஜாதி என்று சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருப்பவனை வைத்துக் கொண்டிருப்பதால் என்ன பயன்?

பார்ப்பானைக் கடவுள் பார்ப்பானாகப் படைத்தாரா? அப்படியெனில் உச்சிக்குடுமியையும் பூணூலையும்அறுத்துக் கொண்டு நிர்வாணமாக (அம்மணமாக) நிற்க வைத்தால் மற்றவனுக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் காணமுடியும்? கடவுள் படைத்தார் என்றால் ஒரு அடையாளம் வைத்துப் படைத்திருக்க மாட்டாரா? இந்தப் புத்திகூட இல்லையே நம்மவனுக்கு? அந்தக் கடவுளே அவனைப் பார்ப்பானாகவும் நம்மைத் தேவடியாள் மகனாகவும் படைத்திருந்தால் அந்த கடவுளே பித்தலாட்டக் கடவுள்தானே! நான் மட்டும் என்ன காரணத்திற்காகத் தாழ்ந்தவன் என்று கேட்க வேண்டாமா?

ராஜாக்கள், ஜமீன்தார்கள், மிராசுகளைப் போக்கச் சட்டம் செய்ததுபோல பார்ப்பானுக்கும் போட வேண்டியதுதானே? "நீ ஏன் உயர்ந்தவன்? பிறக்கும் போதே பூணூலுடனா பிறந்தாய்? கழற்று பூணூலை! வெட்டு உச்சிக்குடுமியை! என்று சொல்ல வேண்டியது தானே?

கேரளத்தில் 10- ஏக்கருக்கு மேல் உனக்குப் பூமி வேண்டாம் என்று பிடுங்கி வருகிறான். இங்கு ஏதோ மிராசுதாரன் தயவு கேட்டு காலத்தை தட்டிக் கொண்டு வருகிறான். இங்கு வரத்தான் போகிறது. இந்தச் சட்டமெல்லாம் செய்வதற்கு மக்கள் உரிமை கொடுத்துள்ள போது பார்ப்பானை ஒழிக்கிற உரிமை மாத்திரம் கூடாதென்றால் என்ன நியாயம்? சூத்திரன் சூத்திரனாகவே தான் இருக்க வேண்டும்; வண்ணான் வண்ணானாகவே தான் இருக்க வேண்டும்; அதுபற்றிப் பேசமாட்டேன் என்றால் பேச வைக்க வேண்டாமா?

'சுலபமாகக் காரியம் நடந்துவிடும். நமது மந்திரிகள் செய்துவிடுவார்கள். நீதானே காமராசரை ஆதரித்தாய்; அவர் செய்வது தானே' என்று பொறுப்பில்லாமல் பேசலாம்; ஆனால் ஜாதி ஒழிய வேண்டும் என்பது காமராசர், சுப்பிரமணியம் பக்தவச்சலம் இவர்கள் கையில் இல்லை. இவர்  ரயில்வேயின் கட்டணத்தில் ஒரு காசு குறைக்க முடியுமா? கார்டு கவருக்குக் காசு ஏற்றுகிறான் என்பதற்காக காமராசர் ஒழிக என்பது பொருந்துமா?  

காமராசருக்குச் ஜாதி ஒழிய வேண்டும் என்பதில் ஆசையில்லாமல் இருக்குமா? ஜாதி ஒழியாமல் மத்திய அரசாங்கத்தில் சட்டம் செய்து பலமான பாதுகாப்புத்தேடி வைத்துள்ளார்கள். அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்குப் பாதுகாப்பு அளித்துச் சட்டம் செய்துள்ளார்கள். அடிப்படை உரிமை (Fundamental Right) குறித்து சட்டம் செய்கையில் அவரவர் பழக்க வழக்கம், மத அனுஷ்டானங்கள் காப்பாற்றப்படும் என்று ஜாதியைக் காப்பாற்ற, பலமான பாதுகாப்புச் செய்துள்ளார்கள்! அதுமாத்திரமல்ல. இது பற்றி ராஜ்ய அரசாங்கம் சட்டம் செய்யக்கூடாது என்று இருக்கிற, அடிப்படைச் சுதந்திரம் பற்றிச் சட்டம் செய்யும் உரிமை மத்திய அரசாங்கத்திற்குத்தான். சட்டத்தை மாற்ற வேண்டும். சட்டத்தை மாற்றினாலும் ஜனாதிபதி (குடியரசுத் தலைவர்) அங்கீகாரம் செய்தால்தான் உண்டு 'இது அடிப்படைக்கு விரோதம். பொதுஜன அமைதிக்கு கேடு', என்று சொல்லிப் பிரசாரத்தை நிறுத்திவிட முடியும்.

இதற்கு என்ன வழி? இதை மாற்றுவேன் என்று சர்க்கார் (அரசு) இணங்கும்படியான கிளர்ச்சியில் இறங்க வேண்டும். கிளர்ச்சி மூலம்தான் முடியும். பார்லிமெண்ட் (நாடாளுமன்ற) முறை பயன்படாது.

---------------------------------- 19.09.1957- இல் தருமபுரியில் தந்தை பெரியார் விரிவுரை:  “விடுதலை”, 08.10.1957

17 comments:

தமிழ் ஓவியா said...

பக்தி படுத்தும் பாட்டைப் பாரீர்!வினோத வழிபாடாம்:
அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணமாம்!
வத்தலக்குண்டு, ஜூன். 29 திண் டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி அண்ணா நகரில் கருப்பண்ணசாமி பாண்டி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சிவனின் உருவமாக அரச மரத்தையும், அம்மனின் உருவமாக வேப்பமரத்தையும் கருதி இரு மரங் களுக்கும் கிராம மக்கள் திருமணம் நடத்தி வினோத வழிபாடு செய்து வருகிறார்கள்.

உலக அமைதி வேண்டி இந்த திருமணம் ஆண்டுதோறும் நடை பெறுவதாக கிராம மக்கள் அய்தீகமாக கருதுகின்றனர். இதே போல இந்த ஆண்டும் மணமக்கள் போல அரச மரத்தையும், வேப்பமரத்தையும் ஜோடித்து திருமணம் செய்து வைக் கப்பட்டது.

இதற்காக மணமேடை அமைத்து யாகம் வளர்த்து கோவில் குருக்கள் மூலம் திருமணம் நடத்தி வைக்கப்பட் டது. தொடர்ந்து ஊர் கிராம மக்கள் அட்சதை தூவி வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் வத்தலக்குண்டு, பட்டி வீரன் பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்னர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், இயற்கையான மரங்களை தெய்வங்களாக வழிபட்டு அவற்றுக்கு திருமணம் செய்து வைத்தால் ஊரில் அமைதி நிலவும் என்பது எங்களது அய்தீகம். அதனால் ஊரில் அமைதி நிலவ மரங்களுக்கு திருமணம் நடத் தினோம். கடந்த 33 ஆண்டுகளாக இது போன்று செய்து வருகின்றோம் என்றனர்.Read more: http://www.viduthalai.in/e-paper/104167.html#ixzz3eTLCnh3g

தமிழ் ஓவியா said...

பூசாரி வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்
வால்பாறை, ஜூன் 29 வால் பாறை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் னால் வில்லோனி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த 2 குட்டி உள்பட 7 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் லோயர் பாரளை எஸ்டேட் பகுதி குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி விட்டு புதுத்தோட்டம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்தது.

 

இந்த யானைகள் கூட்டம் நேற்று இரவு அங்கிருந்து வால்பாறை பொள்ளாச்சி மெயின்ரோட்டை கடந்து புதுத்தோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்து பூசாரி மணி என்பவரின் வீட்டின் ஜன்னலை உடைத்தது.

வீட்டுக்குள் துதிக்கையை உள்ளே விட்டு சாப்பிடுவதற்கு அரிசி கிடைக்குமா? என்று தேடியது. வீட்டி லிருந்த பொருட்கள் முழுவதையும் உடைத்து சேதப்படுத்தியது. தகவல றிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் எஸ்டேட் பகுதி மக்களுடன் இணைந்து யானை களை விரட்டினர்.

தமிழ் ஓவியா said...

அம்மன் கோவிலில் தீ விபத்து: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
காஞ்சீபுரம், ஜூன் 29 காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் பின்வாயில் பகுதி யில் சிறீதண்டு மாரியம்மன் கோவில் உள்ளது.
புகழ் பெற்ற இக்கோவிலுக்கு பொதுமக்கள் தினமும் அதிகளவில் வந்து செல்வர். இந்நிலையில் நேற்று மதியம் கோவிலில் அமைக்கப்பட் டுள்ள இன்வெர்டர்கள் திடீரென வெடித்தது. இதனால் தீ மளமளவென பரவ தொடங்கியது.

 

இதை பார்த்து கோவில் அருகில் இருந்தவர்கள், பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். விபத்து குறித்து காஞ்சீபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இது குறித்து விஷ்ணு காஞ்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

மந்திரச்சடங்குகளுக்காக தம்பியின் ரத்தத்தையே உறிஞ்சி எடுத்த  மந்திரவாதி கைது

புர்த்வான், ஜூன் 29- வளர்ச்சி யடைந்த நவீன சமூகம் என்று மனித சமூகம் தன்னை கருதிக் கொள்ளும் இந்தக் காலத்திலும் கூட, மந்திரச் சடங்குகளுக்காக தனது உடன்பிறந்த சகோதரரின் ரத்தத்தையே உறிஞ்சி எடுத்த கொடூரம் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்துள்ளது. காஞ்சன் நகர் கிராமத்தில் மந்திர தந்திர வேலைகளில் ஈடுபட்டு வருபவர் ஷூபஜித்(40).

கடந்த சில வாரங்களாக இவரது தம்பியான ஷாமிக்கை கிராமத்தில் எங்கும் காணமுடியாததால், சந்தேகமடைந்த கிராம மக்கள் அவரது வீட்டை மறைமுகமாக சோதனையிட்டனர். அப்போது, அவரது தம்பி ஷாமிக், உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித் தனர்.  இதுகுறித்து காவல் நிலை யத்தில் புகாரளித்தனர்.

உடனடியாக நடவடிக் கையில் இறங்கிய காவல் துறையினர் ஷூபஜித்தின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடந்த ஒன்றரை மாதங்களாக ஷாமிக்கை அடைத்து வைத்து தனது மந்திரச் சடங்கு களுக்காக  அவரிடமிருந்து ரத்தத்தை உறிஞ்சி எடுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஷூபஜித்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

ஆட்சியாளர்கள் வரலாற்று பாடப் புத்தகங்களை எழுதக் கூடாது : அப்துல் கலாம்புதுடில்லி ஜூன் 29_ ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் வரலாற்றுப் பாடப் புத்தகங்களை எழுதக் கூடாது என்று குடியரசு முன்னாள் தலை வர் அப்துல் கலாம் கூறி யுள்ளார்.

ஒளிமயமான எதிர் காலத்துக்கு அறிவியல் வழிகள்' என்ற நூலை அப்துல் கலாம் எழுதியுள் ளார். அதில், விண்வெளி அறிவியல், ரோபாட் டிக்ஸ், மருத்துவம், புதைப் படிமவியல் ஆகிய துறை களில் உள்ள இளைஞர் களுக்கு அறிவுரை வழங் கும் வகையில் இந்தப் புத் தகம் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், டில்லியில் அவர், ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

பெரும்பாலான வரலாற் றுப் பாடப் புத்தகங்கள் ஆட்சியாளர்களால் எழுதப்பட்டவை. அந்தப் புத்தகங்களை நேர்மை யுடன் அணுகி, ஆய்வு செய்ய வேண்டும். வர லாற்று ரீதியாக உண்மை யில் என்ன நடந்தது என் பதையும் கண்டறிய வேண்டும்.

புத்தகங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு, முறையாக எழுதப்பட வேண்டும். அந்தப் புத்த கங்களை ஆட்சியதிகாரத் தில் இருப்பவர்கள் எழுதக் கூடாது. மாறாக, கல்வித் துறையில் சிறந்து விளங்கு பவர்கள் எழுத வேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை

வெளிநாடுகளில் இந்திய முதலாளிகள் பதுக்கி வைத்துள்ள தொகை அசாதாரணமானது; குறிப்பாக ஸ்விட்சர்லாந்து நாட்டு வங்கிகளில்தான் பெருந் தொகை பதுங்கிக் கிடக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி, கறுப்புப் பணத்தைக் கொண்டு வந்தே தீருவோம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று அடேயப்பா மோடியும் அவரைச்சார்ந்த விற்பன்னப் புலிகளும் கொட்டி முழங்கிய சமாச்சாரத்தைக் கேட்டு கொட்டாவி விட்டுக் காத்துக் கொண்டு இருந்தனர் - இந்திய மக்களும், இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கும் கீழ் இருக்கும் மக்கள் 30 சதவிகிதம் மக்களும். இரவு உணவுக்கு வழியின்றி வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு புரண்டு புரண்டு படுக்கும் மக்கள் தொகை 19 கோடி.

நாள் ஒன்றுக்கு வெறும் 20 ரூபாய் வருமானம் உடையோர் 77 விழுக்காடு  என்று புள்ளி விவரங்களை அள்ளி விடுவதும் இந்திய அரசுதான்.
இந்தச் சூழலில் வெளிநாட்டு வங்கிகளில் பதுங்கிக் கிடக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் கொண்டு வருவோம் என்று சொல்லிக் கொண்டுதான் வருகிறார்களே தவிர நடைமுறையில் சுழியம்தான் இவ்வளவுக் கால அவகாசம் கொடுத்தால் பண முதலைகள் வாளா இருக்குமா?
அந்தக் கறுப்புப் பணத்தை அந்த வங்கிகளிலிருந்து எடுத்து வேறு ஏற்பாடுகளைச்  செய்துவிட மாட் டார்களா?
தேர்தலுக்கு முன்பு மோடி பேசிய பேச்சை இப்பொழுது மாற்றிப் பேச ஆரம்பித்து விட்டனர்.

'வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள அனைத்து கருப்புப் பணத்தையும் மீட்டு நாட்டின் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம்' என்று மோடி(போபாலில் 18 ஏப்ரல் 2014-அன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது) பேசியது குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.

மாநிலங்களவையில் அருண் ஜேட்லி இது குறித்து விளக்கம் அளிக்கும்போது, "வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் பற்றிய உத்தேசங் களின் அடிப்படையில் ஓர் 'எடுத்துக்காட்டுக்கு' கூறியதே அந்த ரூ.15 லட்சம் விவகாரம்" என்றார். நாடாளுமன்ற தேர்தலின்போது கருப்புப் பணத்தை ஒழிப்பது பற்றி தனது பிரச்சாரங்களில் மோடி கூறிய போது, கருப்புப் பணம் முழுதையும் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் சேர்ப்போம் என்று கூறியது பற்றி மாநிலங்களவையில்  கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த ஜேட்லி, "வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் அளவு, அதைப் பற்றிய உத்தேசக் கணிப்புகளின் அடிப்படையில் அந்தத் தொகையை ஏற்றுக் கொண்டோமேயானால், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஏற்படும் பயன் ரூ.15 லட்சமாக இருக்கும் என்ற அடிப்படையில் எடுத்துக் காட்டு கூற்றாக மட்டுமே அது கூறப்பட்டது.

மேற்கூறிய இந்த அர்த்தத்தில்தான் பலரும் அதனைப் பயன்படுத்தினர். எனவே இதனை இந்தப் பொருளில் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அருண் ஜேட்லி. இது எவ்வளவுப் பெரிய உண்மைக்கு மாறானது என்பது நாட்டு மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும். பாஷ்ய கர்த்தாக்கள் இப்படித் தான் பேசுவார்கள்.
இவர்கள் வியாக்கியானம் மக்களைத் திருப்திப் படுத்தாத நிலையில், பிஜேபியின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா வேறு வழியின்றி ஓருண்மையைப் போட்டு உடைத்து விட்டார்.

மோடி பேசியது உண்மைதான்; அது தேர்தல் நேரத்தில் அரசியலுக்காகச் சொல்லப்பட்டது என்று சொன்னாரே பார்க்கலாம். மக்களின் மறதிதான் இத்தகைய அரசியல்வாதிகளுக்கு மூலதனமாகும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது நிலத்தைக் கையகப்படுத்தும் மசோதாமீது எப்படியெல்லாம் இந்த பிஜேபி நாடாளுமன்ற உறுப் பினர்கள் குதியாட்டம் போட்டார்கள்; இப்பொழுது இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா என்கிற பாணியில் பேச ஆரம்பித்து விட்டார்கள். மக்கள் பிரச் சினையைத் திசை திருப்பிட யோகா போன்றவற்றைக் கொண்டு வந்து திணிக்கிறார்கள். கழுதை தேய்ந்து  கட்டெறும்பு ஆன கதைதான்.

இரயில்வே போன்ற பெரும் அரசுத் துறைகளே கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குத்தான் போகப் போகின்றன. உண்மையிலேயே ஆட்சி நடத்துப வர்களும் அவர்களே!

தமிழ் ஓவியா said...

முதலில்...

மனிதத் தர்மத்தை அடிப்படையாக வைத்து மனிதச் சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டு மானால், முதலில் செய்யவேண்டியது பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும், சிந்திக்கச் செய்வதுமே யாகும்.
(விடுதலை, 25.7.1968)

தமிழ் ஓவியா said...

செத்தமொழி சமஸ்கிருதத்திற்கு மோடி அரசு தரும் முக்கியத்துவத்தை பாரீர்

குடந்தை கருணா


ஆண்டு தோறும் உலக அளவில் சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ஒருவருக்கு 20,000 அமெரிக்க டாலர் பரிசாக வழங் கிடவும், வெளியுறவு அமைச்சகத்தில் சமஸ்கிருதத்திற்கு என தனியாக ஒரு இணை செயலாளர் நியமனம் செய்வதாகவும், பாங்காக் நகரில் நடந்த உலக சமஸ்கிருத மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச் சர் சுஸ்மா சுவராஜ் அறிவித்தார்.

மோடி அமைச்சரவை பதவி ஏற்கும்போது, சுஸ்மா சுவராஜ் சமஸ்கிருத மொழியில் உறுதி மொழி எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அம்மையார்தான், பகவத் கீதை தேசிய நூல் என அரசு அறி விக்க இருக்கிறது என்பதை டில்லி யில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசியவர். தற்போது, அரசால் குற்ற வாளி என அறிவிக்கப்பட்ட அய்.பி. எல். சூதாட்ட நாயகன் லலித் மோடிக்கு மனிதாபிமான அடிப் படையில் விசா வழங்கியதாகக் கூறு வதும்  இந்த சுஸ்மா சுவராஜ் தான்.

தமிழ் ஓவியா said...

அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின்
சத்துக்களும், மருத்துவ குணங்களும்
தக்காளி: வைட்டமின், ஏ, பி, சி மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளன. உடல் உறுதி, ரத்தவிருத்திக்கு நல்லது.

கத்தரிக்காய்: வைட்டமின் பி, சி, பாஸ்பரஸ், போலிக் ஆசிட் உள்ளன. ரத்தத்தை சுத்திகரிக்கும் இயல்புடையது.

புடலங்காய்: வைட்டமின் ஏ, பி, இரும்பு, தாமிரம், கால்சியம் சத்துக்கள் உள்ளன. பீன்ஸ்: புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் உள்ளன. எலும்பு வலுவடைய உதவுகிறது.

வெண்டைக்காய்: மூளை  வளர்ச்சிக்கு உதவும், குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். போலிக் ஆசிட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துகள் உள்ளன. அவரைக்காய்: நார், புரதச்சத்துக்கள் உள்ளன. மலச்சிக்கலை நீக்கும்.

முருங்கைக்காய்: வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் உள்ளன. ஆண்களுக்கு  ஆண்மையை அதிகரிக்க உதவும், பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.

வெங்காயம்: தினமும் சாப்பாட்டில் சின்ன வெங்காயம் சேர்த்தால் கொழுப்பு கரையும். கால்சியம், இரும்புச்சத்துக்கள் உள்ளன.

சுண்டைக்காய்: வைட்டமின் ஏ, புரதம், இரும்புச்சத்துக்கள் உள்ளன. எலும்புகளுக்கு  வலு சேர்க்கவும், ரத்தசோகை வராமல் தடுக்கவும் உதவும்.

கருணைக்கிழங்கு:  கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி சத்துக்கள் உள்ளன. இதை சாப்பிட்டால், உடல்  வளர்ச்சிக்கு நல்லது. மூல நோய் வராமல் தடுக்கவும்,  கட்டுப்படுத்தவும் செய்கிறது.

வாழைத்தண்டு: பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் சத்துக்கள், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளன. சிறுநீர் பாதையில் கல் அடைப்பை கரைக்க உதவும்.

வாழைப்பூ: கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார், இரும்புச்சத்துகள் உள்ளன. வைட்டமின் பி, சி உள்ளன. மலச்சிக்கலை போக்க உதவும்.

பீட்ரூட்: சோடியம், துத்தநாகம், கால்சியம், பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. உடலை வலுப்படுத்தும்.

உருளைக்கிழங்கு: மாவுச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.

பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், கால்சிய சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

காரட்: வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பார்வை கோளாறை கட்டுப்படுத்தும். ரத்த விருத்தி தரும்.

மரவள்ளிக்கிழங்கு: உடலுக்கு குளிர்ச்சி தரும். பனங்கிழங்கு: புரதச்சத்து அதிகமுடையது. மலச்சிக்கலை போக்கி பசியை அதிகரிக்கும்.

இப்படி பலப்பல சத்துக்கள் காய்கறிகளில் குவிந்து கிடக்கின்றன. எனவே, கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில், தமிழகத்தில் காரைக்குடி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் வீட்டு உரிமையாளர்கள் மொட்டை மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகளை வளர்த்து வருகின்றனர். இயற்கை முறையில், பூச்சிக்கொல்லி மருந்து அதிகமின்றி உருவாகும் இந்த காய்கறிகள் உடலுக்கும் நல்லது.

தமிழ் ஓவியா said...

அனைவருக்கும் உகந்த வெங்காயம்...!

ஒரு கடி வெங்காயத்தில் ஒரு பிடி பழங்கஞ்சி குடிக்கிற ஏழ்மை. பர்கரிலும் வெங்காயம் சுவைக்கிற வளமை... இப்படி வெங்காயம் ஒரு பொதுமை காட்டி நிற்கிறது. இது ஒரு பழமையான மூலிகைப்பயிர்.  6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் ருசித்தது. இதன் அதிக பயன்பாட்டை அரேபியர்களிடம் பார்க்கலாம்.

வெங்காய காரத்திற்கு அலைல் புரோப்பைல் டை சல்பைடு வேதிப்பொருளே காரணமாம். இதுவே நெடி நிரப்பி, கண்ணீர் வரவழைக்கிறது. எனவேதான் வெட்டுபவனையே அழவைத்து விந்தை செய்யும் வெங்காயத்தை தமிழ் இலக்கியங்களும் விட்டுவைக்கவில்லை. மரத்தில் தொங்கும் தேன் ராட்டு எடுக்க, வெங்காயத்தை மென்று ஊதி ஈ துரத்துவதை கிராமத்துச் சிறுவர்களிடம் இன்றும் காணலாம்.

இன்றும் திருமண வீடுகளில் வழங்கும் சீர்பொருட்களில் ஒரு தட்டு வெங்காயமும் இடம் பிடிக்கிறது. சந்தனத்திற்கு மாற்றாக வெற்றிலையுடன் வெங்காயம் சேர்த்து அரைத்த கலவையை புண், வேனற்கட்டு வராதிருக்க குழந்தைகளின் மொட்டைத் தலைகளில் தடவுதல் தென்மாவட்டத்தில் தொடர்கிறது.

தவறுக்கு தண்டனையாய் கண்களில் வெங்காயச் சாறிடுதல் தென்னக கிராமங்களில் இருக்கிறது. மயங்கியவரை எழுப்பிட வெங்காயம் முகரச் செய்தலும் உண்டு. வெங்காயத்தில் புரதம், தாது உப்புகள், வைட்டமின்கள் என உடம்புக்கான ஊட்டச்சத்து அதிகம். இதய சக்தி தருகிறது. நரை, தலை வழுக்கையை தடுக்கிறது. உடல் வெம்மை தணித்து, ரத்த விருத்தி, எலும்பு வலிமை நிறைக்கிறது.

பித்த, கண், வாத நோய்கள் தீர்க்கிறது. பாலில் இட்டு காய்ச்சிக் குடித்தால் சளி, இருமல் பறக்கிறது. இன்னும் உணவே மருந்தாக வெங்காயம் செய்யும் விந்தைகள் ஏராளம்.

தமிழ் ஓவியா said...

வாத நோய் போக்கும் நன்னாரிஅங்காரி மூலி, நறுநெட்டி, பாதாள முளி, கோபாகு, சாரிபம், பாறட்கொடி, நீறுண்டி, சாரியம் என்று பல்வேறு பெயர்களால்  அழைக்கப்படும் நன்னாரி நமது உடலில் ஏற்படும் அதிகமான வெப்பத்தை அகற்றி பல்வேறு வெப்ப நோய்களையும் நீக்குகிறது.  நன்னாரி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது சர்பத்துதான். இதன் மணத்திற்கும் சுவைக்கும் ஆட்படாதவர்களே இல்லை  என்று கூறலாம்.

அதுவும் கோடைகாலத்தில் சில் என்று அதை குடிக்கும் போது ஏற்படும் அனுபவமே தனியானது. எதிரடுக்கில் நீண்ட இலைகள்  கொண்டது. இதன் கொடிகம்பி போன்று அமைந்திருக்கும். மணம் வீசும் வேர்கள் மருத்துவ குணம் கொண்டவை. தானாகவே  வளரும் பாலுள்ள கொடி இனம்.

நறுக்குமூலம்,நறுநீண்டி, தாதுவெப்ப அகற்றியாகவும் வியர்வை, சிறுநீர் ஆகியவற்றை பெருக்கும்  மருந்தாகவும் நோயகற்றி உடல் தேற்றவும் உடல் உரமூட்டவும் பயன்படும். குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் போது சில  ஆண்களுக்கு எரிச்சல் ஏற்படும்.

இவர்கள் நன்னாரி வேரை 15 கிராம் அளவில் எடுத்து 500 மிலி தண்ணீரில் நசுக்கி போட்டு 250  மிலியாக சுண்டியதும் வடிகட்டி 50மிலி அளவில் மூன்று நாட்கள் காலை மாலை குடித்து வர எரிச்சல் நீங்கி முழுமையான  குணம் ஏற்படும்.

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மிலி பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாட்கள் இதை சாப்பிட்டு வர நரை முற்றிலும் மாறும். நன்னாரி வேரை குடிநீர் செய்து இளம் சூட்டில் 100மிலி அளவில் குடித்து வந்தால் ஆண்மை பெருகும். நன்னாரி சர்பத்தாகவும்  குடிக்கலாம்.

நன்னாரி வேர் 20 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 200 மிலியாக காய்ச்சி 100 மிலி வீதம் காலை  மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம். பாரி சவாதம், தோல் நோய்கள் நீங்கி குணமடையும். பித்த குன்மம் முற்றிலும் நீங்கும்.

நன்னாரி வேரை இடித்து 135 கிராம் எடை எடுத்து அதனுடன் 700 மில்லி வெந்நீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைத்து  வடிகட்டி 1 கிலோ அளவில் சீனியை சேர்த்து சிறு தீயில் காய்ச்சி வைத்துக் கெண்டு வேளை ஒன்றுக்கு 2 தேக்கரண்டி வீதம்  தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வெப்பம் தணியும்.

நன்னாரி வேரை வாழை இலையில் சுருட்டி பொட்டலமாக கட்டி அதை  கும்பிசாம்பலில் புதைத்துவைத்து மறுநாள் எடுத்து நன்னாரி வேரில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு, வெல்லம், சீரகம் சேர்த்து  அரைத்து நெல்லிக்காய் அளவு உருண்டையாக பிடித்து உண்டு வந்தால் நீர் சுருக்கு, நீர் எரிச்சல் நீங்கும்.

தமிழ் ஓவியா said...

மாதுளம் பழமும் மருத்துவச் சிறப்பும்மாதுளம்பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்து விட்டு விதைகளை உமிழ்ந்து விடுவார்கள். ஆனால் மாதுளம்பழத்தின் சத்தோ அதன் விதைகளில் தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவச் சிறப்புகளையும் இப்போது பார்ப்போம். மாதுளம்பழத்தில் அதிக பட்சமாக நீர்சத்து 78 விழுக்காடு உள்ளது. மாதுளம் பழத்தைப் பொறுத்தவரை பூ, தோல், விதை என அனைத்து மே மருத்துவச் சிறப்பு வாய்ந்தவை.

மாதுளம் பூ, இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, சூடு முதலியவற்றை போக்கும். பூவை கஷாயமாக செய்து குடித்தால் தொண்டை தொடர்பான பலபிணிகளும் அகலும். மாதுளம் பழரசம் தாதுவைப் பெருக்கும், வாந்தியை நிறுத்தும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் குறை பாடுகளை அகற்றும்.

இது தவிர, காதடைப்பு, வெப்பக்காய்ச்சல், மந்தம், மயக்கம் ஆகியவற்றையும் பழரசம் விலக்கும். மாதுளம் பழரசத்துடன் ஒன்றரைப் பங்கு கற்கண்டு அல்லது வெள்ளைச் சர்க்கரை சேர்த்துப் பாகு பதத்தில் காய்ச்சி வைத்துக் கொண்டு சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சினைகள் நீங்கும்.

அன்றாடம் பாதி மாதுளம்பழம் அளவிற்கு நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு நீங்கும், மாதுளம் பழச்சாறும், இஞ்சிச்சாறும் சம அளவு எடுத்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் எவ்வளவு கடுமையான இருமலும் குணமாகும். மாதுளம்பழத்தின் விதைகளை எடுத்து வெயிலில் உலர்த்திப் பொடி செய்து தினமும் பசும்பாலில் சிட்டிகை அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் பெற்று உடலும் நலம் பெறும். இது தவிர,

மேலே குறிப்பிட்டது போல் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு நீங்கும். மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் தொடர்ந்து ஏற்படும் விக்கல் உடனே நிற்கும். ஏதேனும் காரணத்தினால் நீர் அருந்தாமலே,

டலில் நீர்த் தன்மை குறைந்த அதிக தாகம் எடுக்கும் போதே மாதுளம்பழம் சாப்பிட்டால் உடனடியாக தாகம் தணியும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். உடல் குளிர்ச்சியடையும்.  மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருதம் மக்களின் மனதைத் தூய்மைப்படுத்துகிறதாம் சுஷ்மா ஸ்வராஜ்


பாங்காக், ஜூன் 30_- சமஸ்கிருத மொழி மக்களின் மனதைத் தூய்மைப்படுத்துவதாகவும் அதனை மேலும் விரிவாகப் பரப்ப வேண்டு மெனவும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருக்கிறார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 16ஆவது உலக சமஸ்கிருத மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 60 நாடுகளைச் சேர்ந்த சமஸ் கிருத நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசியபோது மக்களிடம் சமஸ்கிருத மொழி பேசுவதற்கு பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். இந்த மொழி மக்களின் மனதை துய்மைப்படுத் துவதுடன் உலகம் முழுவதையும் புனிதப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். மேலும், சாஸ்திரங் களுக்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள இடை வெளியை குறைக்க வேண்டும் என்பதில் நாங்கள் முயற்சி எடுக்கி றோம் என்றும் அமைச்சர் சுஷ்மா தனது உரையில் தெரிவித்தார். அவர் இந்த மாநாட்டில் சமஸ்கிருத மொழியிலேயே பேசியது குறிப் பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

குஜராத்தில் யோகா கட்டாய பாடமாம்

காந்திநகர், ஜூன் 30- குஜராத் மாநிலத்தில் வருகிற 2016-ஆம் ஆண்டு 9-ஆம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாண வர்களுக்கு யோகாவை கட்டாய பாடமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆர் எஸ்எஸ்-சின் யோகா திட்டத்தை, குஜராத் மாநில அரசு முதன் முதலில் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் உயர் கல்வி படிக்கும் மாணவ ர்கள் வரை கட்டாய பாடமாக கொண்டுவர திட்டமிட்டு உள்ளது. குஜராத் மாநிலம் முழு வதும் உள்ள 15 ஆயிரம் உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளில் 2016-ஆம் ஆண்டு முதல் யோகா பாடம் நடத்தப் பட உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி களில் யோகா பாடத்தை நடத்த குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சாதஸ்மா தலைமையில் அமைக்கப்பட்ட குழு முடிவு செய்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே தொடங்கி விட்டதாகவும் கூறப்படு கிறது. மேலும் இந்த ஆண்டு தீபாவளி விடு முறையில் பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரி யர்களுக்கும் யோகா பயிற்சி அளிக்க திட்ட மிடப்பட்டிருக்கிறது. அப்போது அவர்களுக்கு யோகாவில் உள்ள பல ஆசனங்கள் செய்வது பற்றி பயிற்சி அளிக்கப் படும். அது மட்டுமல்லா மல் யோகாவில் ஏற்படும் நன்மைகள் குறித்து மாண வர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சாதஸ்மா தெரிவித்தார். பள்ளி மாணவர்களின் யோகா பாடத்தில் போக்குவரத்து விதிமுறைகள், சுற்றுச் சூழல் சுகாதார விழிப் புணர்வு, மரம் நடுதல், காடுகள் அவசியம் குறித் தவைகளும் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. மேலும் தொழில் அதிபர்கள் திருபாய் அம் பானி, நான்ஜி மேத்தா பற்றிய பாடங்களையும் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதுபற்றி கடந்த வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சாதஸ்மா தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இறுதி முடிவு விரைவில் கல்விக்குழு எடுக்கும் என்று கூறப்படுகிறது. இதேபோல் கடந்த ஆண்டு நரேந்திர மோடி குறித்து பள்ளிகளில் பாடத்தை கொண்டு வர அரசு திட்டமிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் தனது திட்டத்தை அரசு கை விட்டது. ஏற்கெனவே குஜராத்தில் கல்வியை காவிமயமாக்கும் விதத்தில் பல்வேறு பாடத் திட்டங் கள் சேர்க்கப்பட்டிருக் கின்றன என்பது குறிப் பிடத்தக்கது

தமிழ் ஓவியா said...

பா.ஜனதா தலைவர் பாலியல் தொல்லை பெண் தொண்டர் புகார் - காவல்துறை விசாரணை

கான்பூர், ஜூன் 30_ உத்தரபிரதேசம் மாநிலத் தில் பாரதீய ஜனதா தலைவர் மற்றும் அவரது 4 உதவியாளர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் தொண்டர் புகார் கொடுத்து உள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அனுப் திவாரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள் ளார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜூன் 20ஆ-ம் தேதி பெண் தொண்டரை அவரது வீட்டில் இறக்கிவிடுவதாக காரில் ஏற்றிச்சென்ற, திவாரி காரில் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர் பாக கட்சியின் அப்பகுதி தலைவர்களிடம் பாதிக்கப் பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கட்சியின் அலுவலகத்திற்கு மறுநாள் வந்த திவாரி தனது உதவியாளர்கள் நான்கு பேருடன் புகார் அளித்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு உள்ளனர். அவருடைய ஆடைகளை களைவதற் கும் முயற்சி செய்துள் ளனர் என்று காவல்துறை யில் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு சம் பவம் தொடர்பாக கட் சியின் அப்பகுதியை சேர்ந்த தலைவர்களிட மும், மாநில தலைவர்களி டமும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்து உள்ளார் என்றும் இது தொடர்பாக அவர்களுக்கு எதிராக எந்தஒரு நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே பாதிக் கப்பட்ட பெண் காவல் நிலையத்தை அனுகி உள் ளார் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. காவல் அதிகாரியின் உத்தரவின்பேரில், பெண் ணின் புகாரை ஏற்றுக் கொண்டு காவல்துறையி னர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இதுதொடர் பாக விசாரணை நடை பெற்று வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என் றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.Read more: http://www.viduthalai.in/e-paper/104219.html#ixzz3eYRa2RGf

தமிழ் ஓவியா said...

கவலை ஏன்?

மனிதர்கள் எந்த மதத்தில் இருந் தாலும், அவர்கள் எந்த மதத்திற்குப் போனாலும், மற்ற மதத்தைச் சார்ந்த மனிதனுக்கு அதனால் கவலை ஏன் ஏற்படவேண்டும்?
_ (குடிஅரசு, 16.11.1946)

தமிழ் ஓவியா said...

கழகக் கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பது குறித்து சட்டரீதியாக அணுகப்படும் திராவிடர் கழக வழக்குரைஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஜூன் 30_ கழகக்கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப் பது குறித்து சட்ட ரீதியாக அணுகப்படும் திராவிடர

கழகக் கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பது குறித்து சட்டரீதியாக அணுகப்படும்

திராவிடர் கழக வழக்குரைஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்சென்னை, ஜூன் 30_ கழகக்கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப் பது குறித்து சட்ட ரீதியாக அணுகப்படும்

திராவிடர் கழக வழக் குரைஞரணி கலந்துரை யாடல் கூட்டம் சென்னை, பெரியார் திடலில் 21.6.2015 அன்று காலை 10.30 மணி யளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திராவி டர் கழகத் தலைவர், தமி ழர் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத் தில் கலந்து கொண்டவர் களும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் பின்வரு மாறு:_

கி.வீரமணி, ஜெ.துரை சாமி, கரூர் இராசசேகரன், மு.சென்னியப்பன், ஆ.வீரமர்த்தினி, ஆ.பாண் டியன், ம.வீ.அருள்மொழி, ந.இளங்கோ, த.வீரசேக ரன், சின்னம்பேடு எஸ். கண்ணன், செஞ்சி விவே கானந்தன், ஜெ.தம்பிபிர பாகரன், வி.பெரியசாமி, எஸ்.பி.சக்திவேல், எஸ்.குமாரதேவன், இராம ராஜன், அ.அருள்மொழி, பீ.இரமேஷ், இரா.சர வணகுமார், மு.இராசா

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) தற்போதைய சூழ் நிலையில் சட்டக்கல்வி யின் அவசியம் அதிகரித்து வருவதாகவும், தற்போ தைய சட்டக்கல்வி தர மானதாகவும், போது மானதாகவும் இல்லாத தால் பெரியார்- _ மணி யம்மை பல்கலைக் கழகத்தில் சட்டக்கல்லூரி தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பெரியார் மணியம்மை கல்வி அறப் பணிக்கழகத்தையும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

2) அண்மைக்காலத் தில் திராவிடர் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யும் பொதுக்கூட்டங்களுக்கு உரிய காலத்தில் அனுமதி தராமலும், போதிய கார ணமின்றி அனுமதி மறுப் பதும், சட்டவிரோதமான வகையில் கூட்டத்தில் பேச வேண்டிய கருத்து களுக்கு தடைவிதிப்பதும், காவல் துறையின் வாடிக் கையாக இருந்து வருகிறது. இந்த சட்ட விரோத போக்கினை தடுப்பதற்கு அந்தந்த மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் திராவிடர் கழக சட்டத் துறை அமைக்க, சட்ட ஆலோசனைக் குழுவிடம் அணுக வேண்டுமென்று மேற்படி சட்ட ஆலோ சனைக்குழு தமிழகம் எங்கும் ஒரே சீரான அணுகுமுறையை மேற் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட் டுக்கொள்கிறது. இப்பிரச் சினை சட்ட ரீதியாக அணுகப்படும்.3) திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பாக விரைவில் மாவட்டம் தோறும் முக்கியமான சட்டப்பிரச்சினைகள் குறித்த கருத்தரங்குகள் நடைபெற வேண்டுமென தீர்மானிக்கப்படுகிறது.

4) ஆங்கிலேயர் ஆட் சிக் காலத்தில் குடிமக் களை அடக்கி ஒடுக்குவ தற்காக ஏற்படுத்தப்பட்ட பல காலாவதியான சட் டங்களை தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறும், அரசியல் சட்டம் அங் கீகரிக்கும் கருத்துரிமை, பேச்சுரிமைகளுக்கு பங்கம் ஏற்படாதவகையில் திருத் தங்கள் மேற்கொள்ளப் பட வேண்டுமென்று மத் திய _ மாநில அரசைக் இக் கூட்டம் கேட்டுக்கொள் கிறது.

5) விரைவில் திராவி டர் கழக வழக்குரைஞரணி மண்டல, மாவட்ட நிர் வாகிகள் நியமிக்கப்பட வேண்டுமென்றும் தீர் மானிக்கப்படுகிறது.

திராவிடர் கழக வழக் குரைஞரணி மதுரை மண் டல மாவட்ட நிர்வாகிகள்  நியமனம்

தராவிடர் கழக சட் டத்துறை செயலர் ச. இன் பலாதன் அவர்களால் ஏற்பாடு செய்யப்படட தராவிடர் கழக வழக்கு ரைஞரணி அமைப்புக் கூட்டம் 27.10.2014 மதுரையில் தராவிடர் கழக வழக்குரைஞரணி துணைத்தவைர் பொ.நடராசன் நீதிபதி (பணி நிறைவு) அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற போது கீழ்க்கண்ட நர் வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.

மதுரை மண்டலம்

தலைவர்: கோ. சுப்பிர மணியன் பி.ஏ. பி.எல்., வழக் குரைஞர், தண்டுக்கல். செயலர்: -மு. சத்தார்த் தன், பி.ஏ., பி.எல்., வழக் குரைஞர், உயர்நதிமன்றம், மதுரை.

மதுரை மாவட்டம்

தலைவர்: கே. பொன் னையா, எம்.ஏ., பி.எல்., வழக் குரைஞர், உயர்நதிமன்றம், மதுரை, செயலர்: சோ. தியாக ராசன், பி.ஏ., பி.எல்., வழக் குரைஞர், உயர்நதி மன்றம், மதுரை,

தண்டுககல் மாவட்டம்

தலைவர்: சுப. ஜெக நாதன், பி.ஏ., பி.எல்., வழக குரைஞர், திண்டுக்கல்
செயலர்:- சாக்ரடீஸ், பி.ஏ., பி.எல்., வழக்கு ரைஞர், திண்டுக்கல்.

விருதுநகர் மாவட்டம்

அமைப்பாளர் - பகர தன் பி.ஏ., பி.எல்., வழக் குரைஞர், திருவில்லிபுத் தூர்
தேனி மாவட்டம்

அமைப்பாளர்: - சின்ன முத்து பி.ஏ., ப.எல்., வழக் குரைஞர், பெரியகுளம்.