Search This Blog

4.6.15

 நாயன்மார் முத்திபெற்ற விதம்!இப்படித்தான் பக்தி செலுத்துவதா?சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்-பெரியார்

 
 நாயன்மார் முத்திபெற்ற விதம்!பெரிய புராணத்தில் காணும் நாயன்மார்கள் பலர் அவர்களில் அறுபத்துமூவர் சிறந்தவர்கள்.
 
இவர்கள் "நற்கருமங்கள் செய்து கைலாயத்தை அடைந்தவர்கள்." இதில் "கடவுளே நேரில் வந்து முக்தி கொடுக்கப்பட்டவர்கள் பலர்."
 
முக்தி பெற இவர்கள் செய்த நற்கருமம் என்ன? என்பது பற்றி சிந்திப்போம்.
 

1.திருநீலக்கண்ட நாயனார்
 
இவர் ஜாதியில் குயவர். நடத்தையால் மிக்க இழி நிலை உடையவர். அதாவது காமக்காந்தகரராய் திரிந்தவர் என்பதை அறிந்து இவரது மனைவியார் தம்மை இனி தீண்டக் கூடாது என்றார்.
 
அதனால் இவர் எந்த மாதரையும் தீண்டாமல் இருந்தார். இவை அறிந்து பரமசிவன் வந்து முக்தி அளித்தார்.
 
2.இயற்பகை நாயனார்
 
அவர் தனது மனைவியை ஓர் அயோக்கியப் பார்ப்பான் விரும்ப, அவனுக்கு அளித்து விட்டார்! அதற்காக சிவபெருமான் வந்து முக்தி அளித்தார்.
 
3.இளையான்குடிமாற நாயனார்
 
இவர் மனைவி தனது வீட்டுக் கூரையைப் பிடுங்கி அடுப்பெரித்து ஒரு பார்ப்பானுக்கு சோறு சமைத்துப் போட்டார்.
 
அதற்காக சிவபெருமான் வந்து இருவருக்கும் முக்தி அளித்தார்.
 

4.மெய்ப்பொருள் நாயனார்

இவர் ஓர் அரசர். இவருக்கு ஞானாபதேசம் செய்வதாய், இந்த அரசரது பகைவன் சிவனடியார் வேடம் தரித்துக்கூற, இவர் மெய்யெனக்கருதி வணங்கும்போது இவரை சிவனடியான் கொன்று விட்டான். அந்த சிவனடியானை, அரசனின் ஆள் கொல்லுகையில் சிவன் வந்து தடுத்தார். இதனால் இவர் முக்தி பெற்றார்.
 
5.அமர்நீதி நாயனார்
 
இவரிடம் ஒரு பிரம்மச்சாரி கொடுத்து வைத்த கோவணம் காணாமல் போனதால் அதற்காக சரி எடையாக வேறு துணி கொடுப்பதாகக் கூறி, ஒரு கோவணத்துணிக்கு சரி எடை பார்க்கையில் தானும் தன் மனைவியும் திராசுத் தட்டில் உட்கார்ந்து சரி செய்து அந்த பிரம்மச்சாரிக்கு தங்களை அடிமைப்படுத்திக் கொண்டார்கள்.

அதனால் சிவன் இவர்களுக்கு முக்தி கொடுத்தார்.

 
6.எறிபத்த நாயனார்
 
இவர் வேறு ஒரு சிவனடியார் கடவுளுக்குப் பூசை செய்ய பூக்குடலை எடுத்து வருகையில் ஒரு யானை அந்தப் பூக்குடலையைப் பிடுங்கி நாசமாக்கிவிட்டது. அதுகேட்டு எறிபத்த நாயனார் அந்த யானையையும் யானைப் பானையும் வெட்டிக் கொன்றுவிட்டார். இதற்காக சோழராஜன் விசாரித்து அக்குற்றத்திற்குத் தன்னை கொல்லும்படி உடைவாளை எறிபத்தரிடம் கொடுத்தார். எறிபத்தர் அதை வாங்கி தன் கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றார்.
 
இதற்காக சிவன் வந்து முக்தி அளித்தார்.
 
7.ஏனாதி நாயனார்
 
இவரை இவரது பகைவன் கொல்ல நெற்றியில் விபூதி தரித்து வந்து விபூதிப் பையைக் காட்ட நாயனார் வணங்கி செயலற்று நிற்க உடனே பகைவன் கொன்றுவிட்டான்.
 
அதற்காக சிவபெருமான் முக்தி கொடுத்தார்.
 
8.கண்ணப்ப நாயனார்
 
இவர் தனது இரண்டு கண்ணையும் தோண்டி எடுத்து கடவுளுக்குப் புதைத்து தான் குருடனாக இருந்து கொண்டே கடவுளுக்குப் பூசை செய்தவர்.
 
இவரது இரண்டாவது கண்ணைப் பிடுங்கி கடவுள் கண்ணில் புதைக்கும் போது, கடவுளின் கண் இருக்குமிடம் தெரிவதற்காக தனது ஒரு செப்புக்காலை கடவுள் கண் இருக்குமிடத்தில் வைத்து அடையாளம் கண்டுபிடித்து கண்ணை ஒட்ட வைத்தார்.
 
பன்றி மாமிசத்தைச் சுவைத்து ருசி பார்த்து கடவுளுக்கு ஊட்டினார். அதனால் சிவபெருமான் இவருக்கு முக்தி அளித்தார்.
 
9.அரிவாட்ட நாயனார்
 
இவர் தனது செந்நெல் அரிசியைக் கடவுளுக்குப் படைத்துவிட்டு தாம் கார்நெல் அரிசி சாப்பிட்டு வந்தார். அந்த ஊரில் கார்நெல் அரிசி விளையவில்லை. அதனால் பசியோடு இருந்தே செந்நெல் அரிசியை கடவுளுக்கு படைத்து வந்ததால் ஒரு நாள் படைக்க எடுத்துக் கொண்டு கோவிலுக்கு போகும்போது பசி களைப்பால் கால் இடறி விழுந்து விட்டார். படைப்பு உணவு கீழே சிந்திவிட்டது. கடவுளுக்கு இன்று படைக்க உணவு இல்லையே என்று கருதி நாயனார் தன் கழுத்தை அறுத்துக் கொள்ள கத்தியை கழுத்தில் வைத்தார்.
 
இதனால் சிவபெருமான் இவருக்கு முக்தி கொடுத்தார்.
 
10.ஆனாய நாயனார்
 
இவர் புல்லாங்குழலில் பஞ்சாட்சரத்தை வாசிப்பார். சராசரங்கள் எல்லாம் ஸ்தம்பித்து நிற்கும். இதனால் சிவபெருமான் இவருக்கு முக்தி அளித்தார்.


 
இந்தப் பத்து நாயன்மார்கள் முக்தி பெற்ற சரிதம் இது. இதைத்தான் பெரிய புராணம் கற்பிக்கிறது. இன்னும் உள்ள நாயன்மார் சரித்திரம் பின்னால் வரும்.

இப்படித்தான் பக்தி செலுத்துவதா? இதற்குத்தான் சிவபெருமான் முக்தி கொடுப்பதா?
 
இதில் இருந்து பக்தர்கள் எவ்வளவு முட்டாள்களாக இருக்க வேண்டி இருக்கிறது?
 
கடவுள்கள் எவ்வளவு இழிதன்மை உடையவர்களாக இருக்க வேண்டி இருக்கிறது?
 
இவைகளை சிவபக்தர்களும், ஆஸ்திகர்களும், புலவர்களும், பெரிய புராணத்தைப் படிக்க வேண்டும் என்று கூறும் சர்.ஆர்.கே.சண்முகம் அவர்களும் மற்றும் கலைவாணர்களும் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

------------------------------------------சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் அவர்கள்  எழுதிய கட்டுரை-----"விடுதலை", 06.05.1950
  

47 comments:

தமிழ் ஓவியா said...

ஆனந்தவிகடன் (10.6.2015) தரும் தகவல்1959ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை அய்.அய்.டி.யில் ஏராளமான மாணவர் அமைப்புகள் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

1. விவேகானந்தர் வாசிப்பு வட்டம்
2. வசிஷ்டர் வாசிப்பு வட்டம்
3. வியாஸர் வாசிப்பு வட்டம்
4. துர்வாசர் வாசிப்பு வட்டம்
5. இராமாயண வாசிப்பு வட்டம்
6. ஹரே இராமா, ஹரே கிருஷ்ணா வாசிப்பு வட்டம்
7. வந்தே மாதரம் இயக்கம்
8. ஜிந்தாபாத் (அரசியல் அமைப்பு)
9. க்வெஸ்ட் (அரசியல் அமைப்பு)
10. அய்.அய்.டி. ஃபார் சொசைட்டி
போன்றவை உள்ளன.
11. வர்ணம் (மாற்றுத் திறனாளிகள்)
12. அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் - இதற்கு மட்டும் தடையாம்!

அம்பேத்கரும், பெரியாரும் சமூக விரோதிகளா? தேச விரோதிகளா?

பார்ப்பனீய ஹிந்துத்துவ விரோதிகள் என்பதால் தான் கசக்கிறதோ?

மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி என்பது இது தானோ!

பெரியார் - அம்பேத்கர் என்ற இரு பெயர்களும் பஞ்சமர் சூத்திரர் எனும் வெகு மக்களின் எழுச் சித் தீ பிழம்பு - ஆதிக்க சக்திகளின் ஆணி வேரை அசைக்கும் என்ற அச்சம் தானே இதன் பின்னணியில் உள்ளது! வசிஷ்டர், வியாசர்கள் உலவும் இடத்திலே பெரியாரும், அம்பேத்கரும் நுழைந்தால்.. அதன் விளைவை அவர்கள் அறி வார்கள் அல்லவா! அதற்குத்தானே இந்தத் தடை!

இன்றைய சமூகப் போராட்டத்தின் அடிநாதமே இதுதான் - ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேர்வீர்!Read more: http://www.viduthalai.in/e-paper/102669.html#ixzz3c65qe28K

தமிழ் ஓவியா said...

அய்.அய்.டி.நிர்வாகம் அம்பேத்கர் - பெரியார் மாணவர் அமைப்புக்கு மீண்டும் அங்கீகாரம் அளிக்க வேண்டும்

கல்வியாளர்கள் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 4- இந்திய தொழில் நுட்ப கழகம் (அய்.அய்.டி.) சென்னை வளாகத்தில் அக்கல்வி நிலையத்தின் (அய்.அய்.டி.) மாணவர் களால் உருவாக்கப்பட்டு இயங்கி வந்த அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத் திற்கு அளிக்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்து கடிதம் வழங்கப் பட்டதை திரும்பப் பெற வேண்டும் என கல்வியா ளர்கள் வலியுறுத்தினர்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஏற்பாட் டில் சென்னையில் நேற்று (3.6.2015) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மனோன்மணீயம் சுந்தர னார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் வே.வசந்தி தேவி, மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகா யம், சென்னை விவேகா னந்தா கல்லூரியின் மேனாள் வரலாற்றுத் துறை தலைவர் பேராசிரி யர் அ.கருணானந்தம் கல்வியியல் ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கத்தின் தலைவர் செ.அருமைநா தன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் மாணவர்கள் நலன் சார்ந்த உரிமைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

அய்.அய்.டி போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் இந்தியா வின் மொத்த பள்ளி படிப்பை முடிக்கும் மாண வர்களில் ஒரு சதவிகிதத் திற்கு குறைவானவர்களே நுழைய முடிகிறது. எனவே இவர்கள் ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிநிதியா கவே கருதப்பட வேண்டி யுள்ளது. இச்சமூக பொறுப்பை உணர்ந்து, தாங்கள் பெறும் உயர்கல்வி அறிவை எவ்வாறு இந்தி யாவில் பல நூற்றாண் டாக நிலவி வரும் சமூக-பொருளாதார சிக்கல் களை தீர்க்க பயன்படுத்திட முடியும் என்ற விவாதத்தை மாணவர் பருவத்தில் உரு வாகிட வேண்டிய அவசி யமும் கடமையும் இம் மாணவர்களுக்கு உண்டு.

தமிழ் ஓவியா said...


அறிவியல் வளர்ச்சியில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்திய ஆல்பர்ட் அய்ன்ஸ்டீனும் சர்.சி.வி. இராமனும் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அறிவியல் அறிவை எவ்வாறு மக் களின் இன்னல்களைத் தீர்க்கவும் நாடு எதிர் கொண்டுள்ள சவால் களை சந்திக்கவும் பயன் படுத்துவது என சிந்திக்கச் சொன்னார்கள்.

50 ஆண்டுகாலத்திற்கு பிறகாவது இன்றைய சென்னை அய்.அய்.டி. மாணவர்கள் இந்திய சமூகத்தின் மிகப்பெரிய நோயாக இருக்கக்கூடிய ஜாதிய சிக்கல்கள் குறித் தும், இந்தியாவின் பொதுத் துறையைக் காப்பாற்றுவது குறித்தும், நில வளம், மண் வளம் காத்தல் குறித்தும், உழுபவன் நிலத்தை பறித் தால் உணவுக்கு எங்கே போவோம் என்று கேள் விகள் குறித்தும் விவாதிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 14,15,16,17,21,38,39,41,42 ஆகியவற்றை நடை முறைப்படுத்த தங்களின் அய்.அய்.டி கல்வியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விவா திக்க தொடங்கி இருக் கிறார்கள். இவ்வாறு விவா தம் செய்ய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)(ஏ) உரிமை அளிக்கிறது.
இவற்றை விவாதிப்ப தற்கு சமூக சமத்துவத்திற் காகவும், மனித உரிமைக் காகவும் ஒட்டு மொத்த மக்கள் மேம்பாட்டிற்காக வும் தங்கள் வாழ்க்கை யையே அர்ப்பணித்து இடைவிடாது போராடிய அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் பெயரைச் சூட்டி அம்பேத்கர் - பெரி யார் வாசகர் வட்டம் என்ற அமைப்பை சென்னை அய்.அய்.டி மாணவர்கள் உருவாக்கி நடத்தி வந்துள்ளனர். இவர்களில் பெரும்பா லோர் சமூக ஒடுக்கு முறைக்குள்ளான தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாண வர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

எந்த விதமான விசார ணையும் இன்றி அய்.அய்.டி நிர்வாகம் இதன் அங்கீ காரத்தை ரத்து செய்வது மாணவர்கள் பொதுப் பிரச்சினையைப் பற்றி பேசினால் அவர்களுக்கு சிக்கல் உருவாகும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி சமூக மாற்றத்தைக் குறித்து சிந்திக்க முன்வரும் மாண வர்களை பயமுறுத்தி தடுக்கும் உள்நோக்கம் கொண்டது. இச்செயலை வன்மையாக கண்டிப்ப தோடு அய்.அய்.டி நிர்வா கம் உடனடியாக அங்கீ காரத்தை திரும்பப்பெற்று மாணவர்களுக்கு உண் டான முழு சுதந்திரத் துடன் அய்.அய்.டி வளாகத்தின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி தொடர்ந்து அவர்கள் வாசிக்கவும், சிந்திக்கவும், பல அறிஞர்களை அழைத்து உரையாற்றிடச் செய்யவும் அனுமதி அளித் திட வேண்டும். கல்வி வளாக ஜனநாயகம் காப் பாற்றப்பட வேண்டும். அய்.அய்.டியின் இந்த மாணவர்கள் செயல் பாட்டை முன்னுதாரண மாகக் கொண்டு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர் கள் விவாதங்களை நடத்த முன்வர வேண்டும். கேள்வி எழுப்புதலே கல்வியியல் செயல்பாட்டின் தொடக் கம். எழுப்பப்படும் கேள் விக்கு இன்று விடை இல்லாமல் இருக்கலாம். எழுப்பப்பட்ட கேள்விக் கான விடையைக்கண்டு பிடிப்பதுதான் இன்றைய மாணவர்களின் எதிர்கால கடமையாக இருக்கும் என்பதை உணர்ந்து கல் லூரி பல்கலைக்கழக நிர் வாகங்கள் மாணவர்களின் சுயசிந்தனைக்கும், சுய கல்விக்கும் அனைத்து வசதிகளையும் வாய்ப்பு களையும் ஏற்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.


Read more: http://www.viduthalai.in/e-paper/102666.html#ixzz3c662mFuu

தமிழ் ஓவியா said...

பெரியார், அம்பேத்கர் ஆகியோர் மாபெரும் புரட்சியாளர்கள்!
அவர்களுக்கான குரலை நசுக்கலாமா?

காங். துணைத் தலைவர் ராகுல் காந்திகேள்வி மவூ (மத்திய பிரதேசம்), ஜூன் 4-- பெரியார், அம்பேத்கர் ஆகியோர் மாபெரும் சமூகப் புரட்சியாளர்கள் அவர்கள் கருத்தைக் கூறும் அமைப்புகளின் குரலை நசுக்கலாமா என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பினார். அகில இந் திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள அம்பேத்கர் பிறந்த ஊரான மாவூ கிராமத் தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்னை அய். அய்.டி. -பெரியார் அம் பேத்கர் வாசகர் வட்டத்தி ற்கான தடை என்பது ஜாதிக்கொடுமையின் வேர் இன்றும் பலமாக உள்ளது என்பதை காட் டுகிறது என்று கூறினார். டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரின் சொந்த ஊரான மவூ(மபி) வில் அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த ஆண்டை காங் கிரஸ் கட்சி பெரிய அளவில் கொண்டாடி வருகிறது. கொண்டாட் டத்தின் ஒரு பகுதியாக அவ்வூரில் உள்ள மவூ ஊரில் தலித் தலைவர் களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். அதன் பிறகு அந்த ஊரில் நடந்த பொதுக்கூட்டத் தில் அவர் உரையாற்றிய போது கூறியதாவது:

மோடி தலைமையி லான பாஜகஅரசின் கொள்கைகள் சாதி மற்றும் மதத்தை மய்யப் படுத்தி மக்களைப் பிளவு படுத்துகின்றன. முக்கிய மாக ஒரு சாராரின் அதி காரங்கள் ஆட்சியில் குவிவது சாதி அமைப்பை வலுப்படுத்துவதாகும். அதிகாரம் அனைவருக் கும் சமமாக பகிரப்படும் போது ஜாதி அமைப்புகள் வலுவிழந்து போகும், இதையே அம்பேத்கரும் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சரிவிகிதத் தில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். முக்கியமாக பிற்படுத்தப் பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசுப்பணி களில் அதிக அளவு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பாபாசாகிப் அம்பேத்கரின் கனவை நினைவாக்குவது எளி தான காரியமாகத் தெரி யாது, இதற்கு முக்கிய காரணம் ஜாதிவெறி அமைப்புகள் பெருந்தடை யாக உள்ளன. அரசு கடுமையான நடவடிக்கை களை எடுத்து பிற்படுத்தப் பட்ட தாழ்த்தப்பட்ட மக் களுக்கு அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமைகளை பெற்றுத் தரவேண்டும். ஆனால் கடந்த ஓராண்டாக மோடி அரசு பிற்படுத்தப் பட்ட தாழ்த்தப்பட்ட மக் களை வெறும் வாக்கு வங்கி கூட்டமாக பாவித் துக்கொண்டு வருகிறது, தற்போது அவர்களது வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது. நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவது கவலைதரும் செய்தியாகும். ஆனால் மோடி அரசு இது குறித்து அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.

தமிழ் ஓவியா said...

ஜாதியவாதமும் அம்பேத்கரும் அம்பேத்கர் ஜாதி வெறியர்களின் நடவடிக் கையால் மிகவும் பாதிக்கப் பட்டார், அவரது வாழ் நாளில் நடந்த பல்வேறு ஜாதிக்கொடுமைகள் இன்று அதிகரித்துள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களுக் காக அம்பேத்கர் தமது வாழ்நாள் முழுவதும் போராடினார். கல்வி ஒன்றே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மிகப்பெரிய ஆயுதம் என்பதை எப்போ தும் வலியுறுத்திக் காண் பித்தார். அவர் ஒடுக்கப் பட்ட மக்களிடையே தாமே ஒரு எடுத்துக்காட் டாக திகழ்ந்தார். நாம் ஒன்றிணைந்து தற்போது மிகவும் அதிக வேகமாக பரவிவரும் ஜாதிவெறியை ஒழிக்க வேண்டும். உயர்கல்வி நிலையங்களில் ஜாதிவெறி கல்விதான் ஒடுக்கப் பட்ட மக்களுக்கான ஆயுதம் என்று அம்பேத் கர் கூறினார். அம்பேத் காரின் இந்த அறிவு ரையை ஒடுக்கப்பட்ட மக்கள் கையிலெடுக்கும் நேரமாகப் பார்த்து ஜாதிவெறியர்கள் தங் களின் கோரமுகத்தை வேறுவகையில் காட்டத் துவங்கியுள்ளனர். முக்கிய மாக உயர்கல்வி நிலை யங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள் தடுக்கப்பட்டு வருகின்றன.
நமது நாடு இன்றள வும் ஜாதி ஆளுமையில் இருந்து வெளியே வர வில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது அந்த இளைஞர்கள் அமைதிகாத்து இருக்கக் கூடாது. இளைஞர்கள் மிகபெரிய சக்தி என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். உரிமைகள் மறுக்கப்படும் போது போராடும் குணம் தான் வருங்கால சந்ததியினரைக் காப்பாற்றும்.

பெரியாரும் - அம்பேத்கரும் மாபெரும் புரட்சியாளர்கள் ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் இன்று மக் களைப் பிளவுபடுத்தும் சக்திகள் உயிர்பெற்றுவிட் டன.

அவர்கள் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு உரி மைகள் வழங்காமல் தடுத்து விடுகின்றனர். அம்பேத்கர், பெரியார் போன்ற மாபெரும் புரட் சியாளர்களின் சிந்தனை யால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விளைந்த நன்மைகள் ஏராளம், அவர்கள் காட்டிய வழி யில் செல்லும் இளைஞர் களை அடக்க ஜாதி வெறிக்கூட்டம் முனை கிறது. பெரியார் அம் பேத்கர் வாசகர் வட்டம் இந்தப் புரட்சியாளர் களின் சிந்தனைகளை மக்களிடையே கொண்டு சென்று விழிப்புணர்வை ஊட்டும் பணியைச் செய்கிறது. இந்த பணியைச் செய்யவிடாமல் அவர் களின் உரிமைக் குரல் வளையை நெரிக்கும் வகை யில் அதிகார வர்க்கம் செயல்பட்டு வருகிறது. அரசை விமர்சிப்பது ஆரோக்கியமான ஒன்றே ஆகும், இதை அனை வரும் ஒப்புக் கொள் வார்கள்; ஆனால் அர சையும் இந்துத்துவ கொள்கைகளையும் விமர்சித்த காரணத்தைக் கூறி அந்த அமைப்பைத் தடைசெய்வதென்பது நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சம உரி மைகள் இல்லை என் பதையே காட்டுகிறது. அதே நேரத்தில் முக்கிய இடங்களில் அதிகாரத்தில் உள்ளவர்கள் உள்ளத்தில் இன்றளவு ஜாதிவெறி வேர் எந்த அளவு ஊன் றியுள்ளது என்பதையே இது தெளிவுபடக் காட் டுகிறது. அதே போல் தற்போது நடந்துவரும் மோடி தலைமையிலான அரசின் நடவடிக்கை சமூக சமஉரிமைக்கு எதிரானது என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது. பல்வேறு அமைப்புகள் மதரீதியாக சிறுபான் மைக்கு எதிராக பேசிக் கொண்டு வரும்போது ஒற்றுமை மற்றும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தி பெரியார் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பெயரில் இயங்கும் அமைப் பைத் தடைசெய்தது -- _ ஜாதிவெறியின் உச்சமில் லாமல் வேறு என்ன வென்று கூறமுடியும் என்று மவூ கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத் தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.Read more: http://www.viduthalai.in/headline/102663-2015-06-04-10-28-32.html#ixzz3c66KVfQW

தமிழ் ஓவியா said...

ஜூன் 5 : சுற்றுப்புறச்சூழல் நாள்


நாம் உலக சுற்றுப்புறச்சூழல் தினத்தைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். நாம் கொண்டாடுவதற்கு முன்பு கடந்த மாதம் உலகம் முழுவ திலும் ஏற்பட்ட பருவநிலை மாற்றத் தைக் கணக்கில் கொள்ளவேண்டும். எப்போதுமில்லாத அளவிற்கு இந்தி யாவில் மாத்திரம் இந்தக் கோடையில் 3000 பேர் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண் டுள்ளது இந்த கோடைக்காலம் நமக்கு உடனடி ஆபத்தை உணர்த்திவிட்டது. ஆனால் இனி வரப்போகும் ஓர் ஆபத்து நம் கண்முன்னே நிற்கிறது அது இந்த ஆண்டு பருவமழை குறைந்து வரலாறு காணாத அளவிற்கு வறட்சியை ஏற்படுத்திவிடும் என்ற அதிர்ச்சி அறிக்கை தான்.

எல்நினோ விளைவு இப்படி பருவமழை குறைந்து போவதற்கு முக்கிய காரணமாக எல் நினோவைக் குறிப்பிடுகின்றனர்.பசிபிக் பெருங்கடலில் கடல் பரப்பு வெப்ப நிலை, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு (7 முதல் 24 மாதங்கள் வரை) சராசரி வெப்ப நிலையை விட அதிகமாகும். இது எல் நினோ என அழைக்கப்படு கிறது. இந்த மாற்றம் பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகள் இடைவெளியிலும் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இந்த எல்நினோ நிலை இந்த ஆண்டு உள்ளது. பசிபிக் பெருங்கடல் பரப்பு வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால்தான் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆண்டு கோடை வெயில் வறுத்தெடுத்து, நூற்றுக்கணக்கா னோரை உயிரிழக்கச் செய்தது. இந்த எல் நினோவின் கைவரிசையால்தான், பருவ மழையும் குறையப்போகிறது. எல்நினோ வுக்கும், பருவ மழை குறைவதற்கும் தொடர்பு இருப்பதாக உலக அளவில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வுத் துறையின் நெடுந்தொலைவு முன்னறிவிப்புப் பிரிவின் தலைவர் டி. சிவானந்த் பாய் கூறும்போது, முதலில் அளவீடு செய்யப்பட்ட ஏப்ரல் மாதத் துடன் ஒப்பிடுகிறபோது, இப்போது எல்நினோ அளவீடு மேம்பட்டுள்ளது என்கிறார்.

மராட்டிய மாநிலம், புனேயில் உள்ள அய்.அய்.டி.எம். என்னும் இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம், எல்நினோ நிலவரம் மேலும் வலு வடைந்து, பருவமழைக் காலத்தில் மழைப் பொழிவு குறையும் என கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் எல்நினோ தாக்கம் நிலவுவதற்கு 90 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் அது கணித்துள்ளது.

தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட பாதிப்பு

இந்த எல்நினோ பாதிப்பு என்பது மனித குலம் தன்னுடைய அழிவிற்கு தானே உருவாக்கிக்கொண்ட ஒரு செயற்கைவினையாகும், அதாவது காடுகளை அழித்தல், நகரமயக்கல், இயற்கைவளங்களை ஆக்ரமித்து நீர் உற்பத்திப் பகுதிகளை தடுத்துவிடுதல் போன்ற பல்வேறு மனித சுயநல விளைவுகளால் இந்த எல்னோ பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நூற்றாண்டில் தற்போது ஏற்பட்டுள்ள எல்நினோ விளைவு ஒர் கடுமையான எச்சரிக்கை மட்டுமே, இதை நாம் உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு சுற்றுப்புறச்சூழலைக் காப்பாற்ற சடுதியில் முயலவேண்டும். விழித்துக்கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம், இல்லையென்றால் இந்தியா போன்ற ஏழைநாடுகள் வரும் ஆண்டுகளில் கடுமையான பாதிப்பு களை சந்திக்கும்.

- சரவணா ராஜேந்திரன்Read more: http://www.viduthalai.in/page-2/102653.html#ixzz3c66YslFt

தமிழ் ஓவியா said...

பொதுவுடைமை- பொதுவுரிமை

பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.

- (குடிஅரசு, 25.3.1944)Read more: http://www.viduthalai.in/page-2/102649.html#ixzz3c66tTpJW

தமிழ் ஓவியா said...

கடவுள் பற்றி பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கும்போது கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்ய உரிமை கிடையாதா?

உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணா கேள்வி

வட்டார மாநாடு நடத்த அனுமதி கொடுக்கக்கூறி காவல்துறைக்கு உத்தரவு

சென்னை, ஜூன் 4-_ பல்லாவரம் பகுதியில் நடை பெறவிருந்த திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டை பல்லாவரம் காவல் ஆய்வாளர் மூன்று முறை தடை செய்ததால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்யநாராயணா அவர்கள் இரு தரப்பி னரையும் விசாரித்து காவல்துறையின் தடையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

திராவிடர் கழகத்தின் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் கடந்த ஏப்ரல் மாதம் 16.4.2015 அன்று பல்லாவரத்தில் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு நடத்த அனுமதி கேட்டு, பல்லாவரம் காவல் நிலையத்தில் மனு கொடுத்தார். அந்த மனு ஏப்ரல் 9-ஆம் தேதியன்று நிராகரிக்கப்பட்டது.

அதற்கான காரணங்களில் ஒன்று, அந்த இடத்தில் ரங்கநாதன் கோயில் இருக்கிறது என்றும் பக்தர்கள் மனம் புண்படும் என்றும் மாநாடு நடத்தும் அளவுக்கு அந்த இடம் போதுமானதாக இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது. இதை எதிர்த்து முத்தையன் சென்னை உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடுத்தார்.

நீதிபதி சத்யநாராயணா

கடந்த 24.4.2015 அன்று நீதிபதி எம்.சத்யநாராயணா 16-ஆம் தேதி முடிவடைநதுவிட்ட காரணத்தினால், புதிய மனு ஒன்றை முத்தையன் காவல் துறையிடம் அளிக்க வேண்டும் என்றும் அதில் எத்தனை வாகனங்களில் வந்து கலந்து கொள்வார்கள், எவ்வளவு பேர் வரு வார்கள் என்பதை அவர்கள் கூற வேண்டும் என்றும் அதனடிப்படையில் வட்டார மாநாடு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 8.5.2015 அன்று மாநாடு நடத்த அனுமதி கேட்டார்.

அந்த மனுவினை எற்றுக்கொண்ட பல்லாவரம் காவல்துறை 12- ஆம் தேதி மீண்டும் அனுமதி மறுத்தது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ் ஓவியா said...

கடந்த 20.5.2015 அன்று இந்த மணு விசாரணைக்கு வந்தது. மேற்படி மனுவை விசாரித்த நீதிபதி எம்.துரை சாமி மாநாடு நடத்த கேட்டிருந்த தேதியான 12.5.2015 முடிந்துவிட்ட காரணத்தினால் வேறு ஒரு மனுவினை அளித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தர விட்டார்.

மீண்டும் பல்லாவரம் காவல்துறைக்கு 22.5.2015 அன்று புதிய மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவைப் பெற்றுக்கொண்டு 6 நாள்கள் கழித்து ஒரு காரணம் கேட்டும் விளக்கக்குறிப்பாணையை பல்லாவரம் உதவி ஆணையர் அனுப்பியிருந்தார்.

அந்தக் குறிப்பாணையில் மயிலாப்பூர் மாம்பலம் ஆகிய பகுதிகளில் சிலர் பூணூல் அறுத்த காரணத்தினாலும் , பல்லாவரத்தில் பதற்ற சூழ்நிலை நிலவுவதாகவும், பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்தியதால் இந்து அமைப்பினர் கோபமாக இருப்பதாகவும் மேலும் இந்து கோயி லொன்று அங்கு இருப்பதாகவும், மசூதி இருப்பதாகவும்,

பொதுக்கூட்டம் நடத்த உத்தேசித்துள்ள இடம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியென்றும் குறிப்பிட்டு, எனவே உங்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப் படக்கூடாது என்பதற்கான விளக்கத்தினை அடுத்த நாளான 29.5.2015 அன்று மாலை 4 மணிக்குள் அனுப்ப வேண்டு மென்று அறிவுறுத்தி இருந்தார்கள்.

மீண்டும் மீண்டும் அனுமதி மறுப்பா?

அதன் அடிப்படையில் மிக நீண்ட விளக்கமான ஒரு கடிதம் பல்லாவரம் காவல்துறை உதவி ஆணை யருக்குக் கொடுக்கப்ட்டது. அடுத்த நாள் 30.5.2015 அன்று மீண்டும் அனுமதி மறுப்புக் கடிதம் வழங்கப்பட்டது. பல்லாவரத்தில் மட்டும் மூன்றுமுறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகிய மாவட்டத் தலைவர் ப.முத்தை யனின் மனு நீதிபதி எம்.சத்யநாரயணன் முன்பு விசார ணைக்கு வந்தது. வழக்குரைஞர் சு.குமாரதேவன் முத்தை யன் சார்பாக வாதாடினார்.

அரசு தரப்பு வழக்குரைஞர் பல்லாவரம் பகுதியில் திராவிடர் கழகம் கூட்டம் நடத்துவதற்கு இந்து அமைப்பினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளதாகவும், கூட்டம் நடத்த உத்தேசித் துள்ள இடம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி யென்றும், அந்த இடத்தில் அனுமதி அளிக்கக்கூடாது என்று கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி எம்.சத்யநாராயணா, அந்த இடம் நெரிசலான பகுதி என்று சொன்னால், வேறு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுங்கள். நான் கடவுள் நம்பிக்கை யாளனாக இருந்தால் கூட கடவுளை வழிபடுபவர்கள் அவர்களது கருத்துக்களைச் சொல்ல எப்படி உரிமை இருக்கிறதோ, அதுபோலவே கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கும் கருத்துச் சொல்ல உரிமை உள்ளது.

ஏற்கெனவே இரண்டு முறை நீதிமன்றத்தை அணுகிய பிறகும் எதற்கு காவல்துறை மீண்டும் மீண்டும் மறுப்பு தெரிவிக்கிறது என்று வினா எழுப்பினார்.

வழக்குரைஞர் குமாரதேவன், தமிழ்நாடு முழுவதும் 200-_க்கும் மேற்பட்ட மாநாடுகளை கடந்த 6 மாதத்தில் திராவிடர் கழகம் நடத்தியுள்ளது என்றும் நடைபெற்ற எந்த மாநாட்டிலும் அசம்பாவித சம்பவங்களோ, கலவரங்களோ ஏற்படாமல் அமைதியாக நடந்துள்ளது என்றும்,

நீதிபதி பரந்தாமன் கடந்த ஏப்ரல் மாதம் திராவிடர் கழகம் தாக்கல் செய்த மனுவில் விளக்கமான உத்தரவு பிறப்பித்திருக்கிறார் என்றும், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி துரைசாமி தொடர்ந்த வழக்கில் கருத்து சுதந் திரத்தினை தடுப்பதற்கு காவல்துறைக்கு அதிகாரம் இல்லையென்று நீதிபதி ராமசுப்பிரமணியம் தீர்ப் பளித்திருக்கின்றார் என்றும் கடந்த ஏப்ரல் மாதம் பூவிருந்தவல் லியில் வட்டார மாநாடு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்து, சிறப்பாக நடந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டி, அதற்கான விடுதலை நாளேட்டின் செய்திப் பகுதியை அளித்தார்.

இதற்குப்பின் நீதிபதி எம்.சத்ய நாராயணா திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு பல்லாவரத்தில் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட உத்தரவினை ரத்து செய்தும், எதிர்வரும் ஜூன் 10 ஆம் தேதியோ அல்லது அதற்கு பின்பு எந்த நாளிலும் திரா விடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நடத்திக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தார்.Read more: http://www.viduthalai.in/page-8/102700.html#ixzz3c67NIeyq

தமிழ் ஓவியா said...

மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்துவதற்கு அதிகாரி உத்தர விடுவதா? அதிமுக அரசுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடும் கண்டனம்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில்

மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்துவதற்கு அதிகாரி உத்தர விடுவதா?

அதிமுக அரசுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடும் கண்டனம்
சென்னை, ஜூன். 5 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி. கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறி இருப்ப தாவது:

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் அண்ணாவின் பெயரில் கட்சி தொடங்கி, ஆட்சி நடத்தி வருகிற அ.தி.மு.க.வினரின் மூடப் பழக்க வழக்கங்கள் எல் லையற்று போய்க் கொண்டிருக்கின்றன. அதுபற்றி நாம் கவலைப் படவில்லை.

தமிழக அரசின் நீர் வளத்துறையினுடைய தலைமைப் பொறியாளர் எஸ். அசோகன் மே 26, 2015 நாளிட்ட சுற்ற றிக்கை மிகுந்த அதிர்ச் சியை ஏற்படுத்துகிறது. அந்த சுற்றறிக்கையின்படி செயற்பொறியாளர்கள் அனைவரும் மழை வேண்டி வருண பகவா னுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி அதற்கான விவ ரங்களை ஜூன் 1ஆம் தேதி மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டு மென்று கேட்டுக் கொள் ளப்பட்டிருக்கிறார்கள்.

தமிழக அரசு என்பது அனைத்து மதங்களுக்கும், வழிபாடுகளுக்கும் பொதுவானதாகவும், தொடர்பில்லாததாகவும் இருக்க வேண்டுமென பலமுறை அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டிருக் கின்றன.

அந்த அரசா ணைகளை உதாசீனப் படுத்துகிற வகையில் தமிழக அரசின் நீர்வளத் துறையே இந்துமத சடங்குகள்படி இத்தகைய சிறப்பு பூஜைகளை நடத்த வேண்டும் என்று சொல் வது அப்பட்டமான சட்ட விரோத செயலாகும்.

இத்தகைய உரிமை இஸ்லாமிய, கிறிஸ்துவ மதத்தினருக்கும் வழங் குவதற்கு வாய்ப்பிருக் கிறதா? அப்படி வாய்ப்பில்லாத போது குறிப்பிட்ட மதத்தின் நம்பிக்கைகளை மற்றவர்கள் மீது புகுத்த லாமா?

அ.தி.மு.க.வினர் செயல் படுவதை பற்றி நாம் விமர்சிக்க விரும்பவில்லை.

ஆனால் தமிழக அரசின் துறையைச் சார்ந்த தலைமைப் பொறியாளரே ஒரு குறிப்பிட்ட மதச் சார்பு நிலையை எடுப் பதை எப்படி அனுமதிக்க முடியும் ?

எனவே, இத்தகைய சட்ட விரோதச் செயல் கள் நடைபெறுவதை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டுமெனில் முதற்கட்டமாக சுற்ற றிக்கை அனுப்பிய குறிப் பிட்ட அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்படி நட வடிக்கை எடுத்தால் தான் இத்தகைய மூடப்பழக்க வழக்கங்களை தடுத்து நிறுத்த முடியும்.

வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்வ தால் மழை பெய்யும் என்று தமிழக அரசுக்கு நம்பிக்கை ஏற்படுமெனில் அறிவியலின் அடிப் படையில் செயல்படுகிற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் அறிக்கைகளை எப்படி மக்கள் நம்பி ஏற்றுக்கொள்வார்கள்?

அறிவியலில் அற்பு தங்கள் நிகழ்ந்து கொண் டிருக்கிற நவீன யுகத்தில் இத்தகைய பிற்போக்குத் தனமான நடவடிக்கை களை உடனடியாக நிறுத் திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.Read more: http://www.viduthalai.in/e-paper/102717.html#ixzz3cCD3ExkJ

தமிழ் ஓவியா said...

சால்வை வேண்டாம் சந்தாக்களைத் தாரீர்!


அருமைக் கழகத் தோழர்களே! உரிய சிகிச்சைக்குப் பின் நமது அருமைக் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க தஞ்சை வருகிறார்கள் (13.6.2015).

கழகத் தோழர்களும், உடல் நலம் பெற்று திரும்பும் தலைவர் அவர்களைச் சந்திக்க பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தோழர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய முக்கிய - அவசியமான - செய்தி ஒன்று உண்டு.

இதே தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில்தான் எனக்குச் சால்வை வேண்டாம் சால்வைக்குப் பதில் விடுதலை சந்தா வேண்டும் என்ற அறிவார்ந்த அன்பு வேண்டுகோளை தமிழர் தலைவர் முன் வைத்தார்கள் (விடுதலை 27.11.2003).

அதனை மீண்டும் மிகவும் அழுத்தமாக வலியுறுத்த வேண்டிய கால கட்டம் இது.

ஆசிரியர் அவர்களின் அய்ம்பதாண்டு விடுதலை ஆசிரியர் பணிக்காக 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களை அளித்து அவரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினோம்.

வேறு எதைக் கொடுத்தாலும் இதற்கு ஈடானது. அவர்களைப் பொறுத்தவரையில் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை அறிந்தவர்கள் ஆயிற்றே நாம்.

எனவே, அருமைக் கழகக் குடும்பத்த வர்களே! தஞ்சையில் நமது தலைவரைச் சந்திக்கும் பொழுது ஆசிரியர் அவர்களே ஆச்சரியமும், ஆனந்தப் பெருக்கும் அடையும் அளவுக்கு சந்தாக்களின் எண்ணிக்கையை அதிக அளவில் அவர்களின் கைகளில் அளி யுங்கள்! அளியுங்கள்!! அதன் மூலம் பெரும் மகிழ்வையும் உற்சாகத்தையும் தாருங்கள்! தாருங்கள்!!

- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை, 5.6.2015Read more: http://www.viduthalai.in/e-paper/102721.html#ixzz3cCDGcLwG

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

துப்பாக்கியைத் தூக்க மாட்டானா?

திண்டுக்கல் அருகே இராணுவத்தில் பணியாற் றும் கணவர்களின் ஆயு ளுக்காக சப்பரத்தைப் பெண்கள் தோளில் தூக்கி வந்தனராம். பக்தி என்று வந்துவிட்டால் புத்தி வேலை செய்யாது என்பதற்கு இந்த எடுத்துக் காட்டுப் போதாதா?

சப்பரத்தைத் தூக்கி னால் எதிரி துப்பாக்கி யைத் தூக்கமாட்டானா?Read more: http://www.viduthalai.in/e-paper/102719.html#ixzz3cCDWCOQ8

தமிழ் ஓவியா said...

வீட்டு வசதி வாரிய இடத்தில் விநாயகர் கோயிலா? அரசு அகற்றுமா?சென்னை, ஜுன்5_ சென்னை எண்ணுர் காவல்நிலையப் பகுதிக் குட்பட்ட எர்ணாவூர் நெய்தல் நகர் அரசு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 156 அடுக்குமாடி களுடன் அடுக்குமாடிக் குடியிருப்பு அமைக்கப்பட் டுள்ளது. இக்குடியிருப்பு அமைக்கப்ட்டு ஏறக் குறைய 13ஆண்டுகள் ஆகின்றன. இக்குடியிருப் புப் பகுதியில் மதவேறு பாடுகள் ஏதுமின்றி இசு லாமிய, கிறித்தவ, இந்து மதங்களைச் சேர்ந்த வர்கள் என்று அனை வரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

அந்தக் குடியிருப்புப் பகுதியில் நிலவிவரும் மத நல்லிணக்கம் மற்றும் அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில் சட்டவிரோதமாக அர சின் வீட்டுவசதி வாரியத் துக்குச் சொந்தமான இடத்தில் பிள்ளையார் கோயிலைக் கட்டும் முயற் சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் குடியி ருப்பின் க்யூ பிளாக் பகுதிக்கு அருகில் 30.5.2015 அன்று இரவோடு இர வாக அத்துமீறி அந்த இடத்தில் செங்கல், சிமெண்ட் கொண்டு பீடம் அமைத்து, பிள்ளை யார் சிலையை வைத் துள்ளனர். அவ்வப்போது கோயிலை வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்த மான இடத்தில் அமைக்க முயற்சி செய்கிறார்கள் என்பதுகுறித்து குடியி ருப்பு சங்கத்தின் இந்நாள், மேனாள் நிர்வாகிகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை உதவி ஆணையர் தென்னரசு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குப்பன் உள்ளிட்டவர்களின் கவனத்துக்கு வீட்டுவசதி வாரியத்தில் குடியிருப் பவர்களால் கொண்டு செல்லப்பட்டும் அதைத் தடுத்து நிறுத்திட எவ்வித முயற்சியும் அவர்கள் எடுத்ததாகத் தெரிய வில்லை.

ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி வகையறாக்கள் தற்பொழுது இதுதான் சந்தர்ப்பம் என்று காவல் துறையினரையும் இச் சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக்கிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். திருவள் ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், வீட்டு வசதித்துறையின் இயக் குநர் என்று அரசுத் துறையின் எந்த மட்டத் திலும் உரிய அனு மதியைப் பெறாமலே சிலையை வைத்து கோயி லைக்கட்டும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

அரசு வீட்டுவசதித் துறையின் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் களும் இதை விரும்ப வில்லை.

நெய்தல் நகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப் போர் சங்கத்தின் துணைத் தலைவர் வி.மாணிக்கம், மேனாள் செயலாளர் சேகர் உள்ளிட்ட இந் நாள் மற்றும மேனாள் சங்க நிர்வாகிகள் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து வருகின்றனர் என்றாலும், அரசு வீட்டுவசதி வாரியம் எனும் அரசுத்துறையும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் முன் னெச்சரிக்கையாக ஆக்கிர மிப்பை தொடக்கத் திலேயே அகற்றிட வேண் டும் என்று அப்பகுதிவாழ் பொதுமக்களும் எதிர் பார்க்கின்றனர்.

அரசு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்த மான பகுதியை ஆக்கிர மித்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலையை அகற்றி, உரிய நடவடிக் கையை அப்பகுதியை ஆக்கிரமிப்பிலிருந்து காத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?Read more: http://www.viduthalai.in/e-paper/102720.html#ixzz3cCDdBS9m

தமிழ் ஓவியா said...

கடவுளின் பெயரால் மோதல்:

கோயில் விவகாரத்தில் இரு தரப்பினரிடையே மோதல் 21 கிராமங்களில் 144 தடை உத்தரவு

சேலம், ஜூன் 5--_ சேலத்தை அடுத்த திருமலைகிரியில் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலை அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பு மக்கள், புனர மைப்பு செய்து குட முழுக்கு நடத்த ஏற்பாடு செய்தனர். கடந்த மார்ச் 4ம் தேதி குடமுழுக்கு நடக்க இருந்த நிலையில், கோயிலுக்குள் வருவது தொடர்பாக மற்றாரு தரப் பினருக்கிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட் டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், மாநகர காவல்துறையின ரும் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். அதில் முடிவு ஏற் படாததால், திருமலைகிரி உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள 21 கிராமங்களில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப் பித்தது. மேலும் கோயிலை இழுத்து பூட்டி சீல் வைத்தனர். குடமுழுக்கும் தடைப்பட்டது.

பின்னர், தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சு நடத்தியும் தீர்வு ஏற் படாததால், 3 முறை 144 தடை உத்தரவு நீட்டிக் கப்பட்டது. மேலும் இக் கோயில் விவகாரம் தொடர்பாக இருதரப்பி னரும் சேலம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத் தில்  வழக்கு தொடர்ந் துள்ளனர். இந்நிலையில் இறுதியாக விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு  2ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைய இருந்தது. அதனால் மாவட்ட நிர்வாகம், மாந கர காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தியது. அதன்பின் சேலம் ஆர்டிஓ ஷேக் முகைதீன், திருமலை கிரி உள்ளிட்ட 21 கிரா மங்களிலும் 144 தடை உத்தரவு வரும் ஜூலை 2ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கும் என அறிவிப்பு வெளியிட்டார். இந்த உத்தரவு, அந்த கிராம பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. காவல் பாதுகாப்பு, ரோந்து தொடர்ந்து இருக்கும் என காவல் அதிகாரிகள் தெரி வித்தனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற் றமான சூழல் நிலவுகிறது.

தமிழ் ஓவியா said...

பொக்கிஷத்தைப் பாதுகாப்போம்


01.06.2015 தேதியிட்ட நமது விடுதலையில் தங்களது விடுதலையை வாங்கிப் படியுங்கள் - தாங்கிப் பிடியுங்கள் என்ற தலைப்பிலான அறிக்கையை படித்துப்பார்த்து கண் கலங்கினேன். உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் தங்கி, தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டு இல்லம் திரும்பிய பிறகு நீங்கள் எழுதிய முதல் அறிக்கை என்பதை தெரிந்து கொண்டேன்.

தலைவர் தந்தை பெரியார் காலத்தில் விடுதலை ஏட்டிற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டு தொடர்ந்து தொய்வில்லாமல் 53 ஆண்டு காலம் விடுதலை நாளேட்டின் ஆசிரியராகப் பணியாற்றி வருவது சாதாரண விசயமே அல்ல, சம்பளத்திற்காக பிற இதழ்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூட எந்த ஏட்டிலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணி புரிந்து வந்ததாக தற்காலத்தில் சொல்ல முடியாது. கொள்கை களையும், லட்சியங்களையும் மட்டும் சம்பளமாகவும், சன்மானமாகவும் பெற்றுக் கொண்டு மலிவான, சுவை மிகுந்த, மக்களை விரைவில் சென்றடையும் விளம் பரங்களோ, செய்திகளோ இல்லாமல் சமூக நீதிக்களத்தில் மற்ற ஏடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அவர்கள் வீடெல்லாம் சென்று வரும் விடுதலைப் பயணத்திற்கு நீங்கள் கடந்த 50 ஆண்டு காலமாக ஆசிரியராக மட்டுமல்ல அதன் எல்லாமு மாகவே இருந்து வருகின்றீர்கள்.

மேலும் தங்களது அறிக்கையில், நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும், ஜோதிட மூடநம்பிக்கை, ராசிபலன், மலிவான சுவை களங்களான சின்னத்திரை, பெரிய திரை, மதம், ஆன்மிக வியாபாரம் இவற்றில் மக்களை சுரண்டாத சுயமரியாதை சொக்கத் தங்க நாளேடு விடுதலையை தவிர வேறு உண்டா? விரலை மடக்கத்தான் எவராலும் முடியுமா? என்று கேட்டிருப்பது இன எதிரிகளுக்கும், இயக்க துரோகிகளுக்கும் தாங்கள் கொடுத்த மிகப்பெரிய சாட்டையடி சவாலாகும். இதை எந்தக் கொம்பனும் நேருக்கு நேர் நின்று ஆதாரங்களோடு மறுக்க முடியாது.

அதுமட்டுமல்ல வருமானத்திற்காக முன் பக்கங்களை கூட காவு கொடுத்துள்ள நாளேடுகள் இன்று நம் கண் முன்னே சர்வ சாதாரணம் என்று தாங்கள் சொல்லியி ருப்பது நிதர்சனமான உண்மை என்பதோடு, இன்றைய கால கட்டத்தில் வருமானத்திற் காக கொள்கையை விலை பேசும் கூட்டத்தின் நடுவில் சுயமரியாதையை காப்பாற்றுவதற்காகவும், இனமானத்தை காப்பாற்றுவதற்காகவும் தொடர்ந்து லட்சங் களை தவிர்த்துவிட்டு லட்சியங்களுக்காக நஷ்டத்தில் இயங்கிவரும் நமது விடுதலை தமிழர்கள் நெஞ்சத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது நமது நஷ்டங்களும், சங்கடங்களும் நமக்கு தூசாகவே தெரிகிறது.

அய்யா! விடுதலை ஏட்டை தொடர்ந்து நடத்துவதற்கும், நமது இயக்கத்தை தொய்வில்லாமல் இன எதிரிகள் மத்தியில் வீறுநடைபோடும் அளவிற்கு தொண்டாற் றவும், தலைவர் தந்தை பெரியாருக்குப் பின்னால், அன்னை மணியம்மையாருக்குப் பின்னால், எங்களைப் போன்ற கோடிக் கணக்கான தமிழர்களின் சமூக நலனில் அக்கறையுடன் உடல்நலத்தைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து இரவு, பகல் பாராமல் பணியாற்றி வரும் தங்களைப் பாராட்டுகின்ற நேரத்தில் அன்போடு கேட்டுக்கொள்வதெல்லாம் தங்கள் உடல் நலனை முதலில் கவனமாகப் பேணுங்கள், உங்களை வைத்து தான் இன்னும் கால் நூற்றாண்டிற்கு நமது இயக்கம் இன எதிரிகளை எல்லா களத்திலும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

அதனால்தான் தங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்று ஒரு மாதத்திற்கு முன்பாக கேள்விப்பட்டும் கூட நேரிலோ, தொலைபேசியிலோ தங்களை சிரமப் படுத்தவில்லை. எங்களுக்கு தொடர்ந்து தங்களுடைய பணி மேலும் கால் நூற்றாண் டுக்கு கிடைக்க வேண்டும் எனவே தயவு செய்து தங்களுக்கு தற்பொழுது தேவை பரிபூரணமான, ஓய்வு, ஓய்வு, ஓய்வு! வணக்கம்.

- கே.செல்வராஜ்
மாவட்ட திமுக வழக்குரைஞரணி அமைப்பாளர், தாராபுரம்Read more: http://www.viduthalai.in/page-2/102713.html#ixzz3cCEzIApv

தமிழ் ஓவியா said...

மந்திரம் செய்கிறேன் என்று சொல்லி ஏமாற்றுவோரின் தந்திரங்களை அறிந்து கொள்ளவேண்டும்
அறிவியல் முகாமில் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை

புதுகை, ஜூன் 5_ ஆலங் குடியில் உள்ள தேசிய தனிப் பயிற்சி மய்யத்தில் திருவரங்குளம் ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கோடை அறிவியல் திரு விழா நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு அறி வியல் இயக்கப் பொறுப் பாளர் கவிஞர் நீலா தலைமை வகித்து கதை எழுதுவது, கவிதைகள் புனைவது குறித்து விளக் கியதோடு எழுதும் பயிற் சியும் அளித்தார். ஒன்றி யப் பொறுப் பாளர் கருப் பையா வரவேற்றார்.

ஆசிரியர் சதாசிவம் பேப் பர் மடிப்புக் கலையையும், சிவக்குமார் கவிதைகள் குறித்தும், ஓவியர் சுப்பிர மணியன் ஓவியக் கலை யின் சிறப்புகள் பற்றியும், அருள்ராஜா நவீன தொழில் நுட்பங்கள் குறித்தும் ஆசிரியர் திரு முருகன் பாடல்கள் பற்றிய பயிற்சியும் அளித் தனர்.

இப்பயிற்சியின் போது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ் நாடு அறிவியல் இயக்க மாநில துணைச் செயலா ளர் பாலகிருஷ்ணன், மந்திரமா, தந்திரமா எனும் நிகழ்ச்சியை நடத்தி விளக்கியபோது, இன் றைக்கு அறிவியல் பூர்வ மாகச் சிந்திக்க வேண்டிய மனிதர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்று ஒன்றைத் தோற் று வித்து மூடநம்பிக்கைககள் பற்றி விளக்கிச்சொல்லவேண் டிய அவசியம் வந்திருக் கிறது.

எச்டூஓ என்றால் தண்ணீர் என்பதை சிறு வயதிலேயே அறிந்து கொள்ளவேண்டும். அதை ஆசிரியர்கள் மட்டுமல் லாது பெற்றோரும் தம் பிள்ளைகளுக்கு விளக்க வேண்டும். அதை விட்டு வேறு வகையில் விளக்கி னால் சில நூறு ஆண்டு கள் மனித வளர்ச்சியில் பின் தங்கிவிடுவோம். எதையும் அறிவியல் கண் கொண்டு பார்க்க வேண் டும்.

அறிவியல் சிந்தனை களை வளர்த்துக் கொள் ளவேண்டும். சிலர் மந்திரம் செய்கி றேன் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக் கிறார்கள். அவர்களின் தந்திரம் என்ன என்ப தைத் தானும் அறிந்து கொண்டு சிறு வ ய துப் பிள்ளைகளிடமும் விளக் கிக் கூற வேண்டும்.

இன்றைக்கு கைகால் களை விபத்துகளில் இழக்க நேரிடும்போது கூட செயற்கை உறுப்பு களைப் பொருத்தும் அள விற்கு முன்னேறி விட்ட பிறகும் நரபலிகளைப் பற்றிக் கேள்விப்படும் நிலையில் நாமும் நம்மைச் சுற்றியும் இருப்பதைப் பார்க்கிறோம்.

அது போன்ற அவலங்களை நாட்டை விட்டே அகற் றும் பணியில் படித்த ஒவ் வொருவரும் தங்களை ஈடு படுத்திக்கொண்டால் தான் அடுத்த தலைமுறை யைச் சேர்ந்த இளைஞர் களைச் சிறந்த தலை முறையினராக வளர்த் தெடுக்க முடியும் என்றார். எளிய முறையில் கிடைக் கும் பொருட்களைக் கொண்டு சில மேஜிக்கு களையும் செய்து காண் பித்தார்.

நிகழ்ச்சியில் மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலை வர் ஆசிரியர் மணவா ளன், மாவட்டச் செய லாளர் வீரமுத்து, உஷா நந்தினி, இயக்கப் பொறுப் பாளர்கள் ஓவியர் கருப் பையா. அன்புராஜ், நீல கண்டன், அருள், தங்க வேல், ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பயிற்சி பெற்ற மாணவ, மாணவியரில் கதை, சிறு கதை, கவிதைகள் சிறப் பாக எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கள் வழங்கப்பட்டன. சசிக் குமார் நன்றி கூறினார்.Read more: http://www.viduthalai.in/page-5/102732.html#ixzz3cCFvM7jl

தமிழ் ஓவியா said...

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில்
பெரியார் சிந்தனை மய்யம் - கல்வியியல் துறை இணைந்து நடத்திய
அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான பயிற்சிப்பட்டறை
வல்லம், ஜூன் 5_ பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பெரியார் சிந்தனை மய்யம்_- கல்வியல் துறை இணைந்து நடத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான பயிற்சிப்பட்டறை நேற்று (4.6.2015) காலை 9.30 மணிக்கு பல்கலைக்கழக கல்வியல் துறை அரங்கில் மொழிவாழ்த்துடன் தொடங்கியது. கல்வியியல் துறை ஆசிரியை சுகந்தி வரவேற்புரை ஆற்றினார்.

பயிற்சிப் பட்டறைக்கு துணைவேந்தர் கர்னல் பேரா.நல்.இராமச்சந்திரன் தலைமையேற்று சிறப்பித்தார். திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் (மாவட்ட வருவாய் அலுவலர் ஓய்வு) பட்டறையைத் தொடங்கி வைத்து உரையாற் றினார். பெரியார் சிந்தனை மய்ய துணை இயக்குநர் டாக்டர் க.அன்பழகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

துணைவேந்தர் தலைமை உரை

பல்கலைக்கழக துணைவேந்தர் தமதுரையில் குறிப்பிட்டதாவது:

இந்திய துணைக்கண்டத்திலேயே ஒரு கல்வி நிறு வனத்தில் அறிவியல் மனப்பான்மையை உருவாக்குவ தற்கான ஒரு பயிற்சிப் பட்டறையை நமது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்தான் உருவாக்கியுள்ளது என பெருமைபடக் கூறினார்.

மேலும் நாட்டைத் திருத்தும் பொறுப்பிலுள்ள வருங்கால ஆசிரியர்களை நீங்கள் முதலில் திருத்தவேண்டும் அதன்பின் நீங்கள் வருங்கால சமூகத்தைத் திருத்தவேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டம் 51-கி(லீ) கூறுகிறபடி இந்தியக் குடிமக்கள் அனைவரும் அறிவியல் மனப்பான்மை உடையவராகவும், அதனை வளர்ப்பவராகவும் கட் டாயம் இருக்கவேண்டும்.

ஆக அரசமைப்புச் சட்டம் கூறுவதை நடைமுறைப்படுத்துவதுதான் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நடத்தும் இந்த அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான பயிற்சிப் பட்டறை என்று குறிப்பிட்டார்.

திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு

பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்து பேசும் போது வேறு கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் அரசுத் துறையினர் செய்யாததை, செய்ய வேண்டியதை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் செய்கிறது. பெரியார் படிப்பிற்கும், அறிவிற்கும் நம் நாட்டில் சம்பந்தமில்லை என்று கூறினார்.

காரணம் நமது கல்வி முறையில் அறிவியல் மனப்பான்மையை உருவாக்கும் திட்டம் பயனில்லை. எனவேதான், படித்தவர் எல்லாம் பகுத்தறிவாளராக இல்லாது இருக்கின்றனர். எனவேதான், இந்த அறிவியல் மனப்பான்மையை உருவாக்கும் இந்தப் பயிற்சிப் பட்டறையை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நடத்துகிறது. நாட்டுக்கு இந்தப் பயிற்சிப் பட்டறை தான் முதல் நிகழ்வு.

அதனை தொடங்கி வைப்பது எனக்கு பெரும்பேறு என்று கூறி தொடங்கி வைத்தார். நிகழ்வில் மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் அழகிரிசாமி, கல்வியியல் துறை பேராசிரியர்கள் டாக்டர் ஆரோக்கியதாஸ், டாக்டர் சாமிநாதன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.Read more: http://www.viduthalai.in/page-8/102763.html#ixzz3cCG4r9vI

தமிழ் ஓவியா said...

இராமாயணம் கற்பனை கதையே
இந்தோ- ஆரியர் போரைக் குறிப்பது

இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ - ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும். இவைகள் உண்மையென்று நான் நம்பியதேயில்லை. பஞ்ச  தந்திரக் கதையிலுள்ள கற்பனைக் கதையைப் போன்றவை என்பதே என் கருத்து

- நேரு, டிஸ்கவரி ஆஃப் இந்தியா

தமிழ் ஓவியா said...

அட, அயோக்கிய புரோகிதர்களே!
சுவாமி விவேகானந்தர்மைசூர் ராஜ்யத்திலிருந்து புறப்பட்ட சுவாமிஜி, கொச்சி ராஜ்யத்தை அடைந்தார். அங்கு சில தினங்கள் தங்கிவிட்டு திருவனந்தபுரத்துக்குப் போனார். வழிநெடுகிலும் வனப்பு மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்ணுற்று மகிழ்ந்தவாறே திருவனந்தபுரத்தை அடைந்தார். அப்போது டிசம்பர் மாதம்.

பேராசிரியர் சுந்தரராம அய்யர் வீட்டில் சுவாமிஜி தங்கினார். சுந்தரராம அய்யர், திருவிதாங்கூர் இளவரசருக்கு ஆங்கிலக் கல்வி போதிக்கும் ஆசிரியர் ஆவார்.

சுந்தரராம அய்யர் பிராமண உணர்வு மிகுந்தவர், வைதிக ஹிந்து சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர், எதையும் பிராமண இயல்போடு நோக்குபவர், பிராமணர் அல்லாத வர்களை சமபுத்தி இல்லாதவர் என்று சுவாமிஜி கூறியதாக எழுதி இருப்பவர். இவர் கூற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது ஆராயற்பாலது. பிராமண குலம் இந்தி யாவுக்கு மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறது.

இப்பொழுதும் மகத்தான காரியங்களை செய்து வருகிறது. இனியும் மகத்தான காரியங்களைச் செய்யும் என்று சுவாமிஜி கூறியதாகச் சுந்தரராம அய்யர் எழுதி இருக்கிறார் பிராமணர்களைப் பற்றிச் சுவாமிஜி கூறியிருக்கும் கருத்துக்கு இந்தக் கருத்து முற்றும் முரண்படுகிறது.

வேதங்களை இயற்றிவர்கள்?

வேதாந்தத்துக்கு ஆதாரமாய் இருப்பவை உபநிடதங்கள்; வேதங்களிலுள்ள இந்தப் பகுதிகள் க்ஷத்திரியர்களால் இயற்றப் பட்டவை என்பது சுவாமிஜியின் கருத்து. இது பிராமணர்கள் மகத்தான காரியங்களை இந்தியாவுக்கு செய்தார்கள் என்ற கருத்தோடு மாறுபடுகிறது.

வேதவியாசர், வசிஷ்டர், நாரதர் போன்றவர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர். பிராமணர்களின் கருணை யின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார். அந்தக் கருத்துகளைத் தொகுத்து அடியில் தந்திருக்கிறோம்.

உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர் களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிட மிருந்து பிறக்கவில்லை (3.280)

முன் காலத்திலே ரிஷிகள் ஆனோர் பலர். வசிஷ்டர் பிறப்பினால் இழிந்தவர்; வியாசர் மீனவப் பெண்ணுக்குப் பிறந்தவர்; நாரதர் பணிப்பெண்ணின் பிள்ளையாகப் பிறந்தவர். இவ்வாறு பிறந்தவர்கள் பலர் ரிஷிகள் ஆனார்கள் (6.433).

நெடுங்காலமாகத் தான் சேகரித்து வைத்திருக்கும் ஞானத்தைப் பிராமணன் இப்பொழுது பொது ஜனங்களுக்கு அளிக்க வேண்டும், இங்ஙனம் அவன் கொடுக்காத காரணத்தினால் முகம்மதியப் படையெடுப்புகள் சாத்தியமாயின. (6.234)

பார்ப்பனரல்லாதார் துயில் நீக்கம்!

குமரிலர், சங்கரர், ராமானுஜர் போன்ற முனிவர்கள், பிராமணர் சக்தியை மீண்டும் நிலைநாட்ட முயன்றனர். சிறிது காலம் அச்சக்தி இராசபுத்திர அரசரது வாளின் ஆதரவையும் பெற்றது. சமண புத்த எதிரிகளின் வீழ்ச்சிக்குப்பின், அது தனது அமைப்பை மறுபடியும் புதுப்பிக்கவும் முயன்றது. ஆயினும், அது, முகம்மதியரது ஆட்சியின் கீழ் என்றைக்கும் உறங்கும்படி செய்யப்பட்டது. (1.172)

பிராமணரல்லாத வகுப்பார் படிப்படியாகத் துயில் நீங்கி எழுகிறார்கள். பிராமணருடைய சாத்திரங்களிலும் மந்திரங்களி லும் அவர்களுக்குள்ள நம்பிக்கை நீங்குகிறது.

மேலை நாட்டுக் கல்வி பரவியதனால் பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக் காலத்திலே பதுமா நதியினுடைய கரைகள் இடிந்து விழுவதுபோல அழிந்து போகின்றன! (5.180) இந்த அயோக்கியப் புரோகிதர்களோ, அல்லது இவர்களுடைய முன்னோர்களோ, சென்ற நானூறு தலைமுறைகளாக, வேதப் புத்தகம் ஒன்றைக் கூடப் பார்த்தது இல்லை.

கலியுகத்துப் பிராமண ரூபத்தில் இருக்கின்ற இராட்சசர்களிடமிருந்து இந்த அப்பாவி மக்களை, இறைவா! காத்து இரட்சிப்பாயாக! (9.126)
ஆதாரம்: சுவாமி விவேகானந்தர் வரலாறு (பக்கம் 162 முதல் 164 வரை)Read more: http://www.viduthalai.in/page-7/102756.html#ixzz3cCGZRVLp

தமிழ் ஓவியா said...

மதத்தில் இடமில்லை அறிவுக்கு


பொதுவாக, மதம் சில கொள்கை களை எடுத்துக்கூறி இதுதான் உண்மை, இதைத்தான் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாகவும் பலாத்காரமாக கட்டாயப்படுத்தியும் சாதிக்க ஆரம் பித்தது.

மதத்துக்கு யாவற்றையும் படித்து ஆராய்ந்து தேடித் தெரியக்கூடிய அறிவு என ஒன்று இருப்பதைப் பற்றி கவலை கிடையாது. விஞ்ஞானம் அய்யத்தோடும் தயக்கத்தோடும் பேசுகிறது.

ஏனெனில் விஞ்ஞானத்தின் தன்மையே இதுதான் உண்மை என்று எதையும் சாதிக்க இயலாது. பகுத்தறிவின் துணை கொண்டு எதையும் நன்கு சோதித்து ஆராய்ந்து பார்த்த பிறகே அது ஒன்றை முடிவு கட்ட இயலும். விஞ்ஞானத்தையும், விஞ்ஞான முறைகளையுமே நான் விரும்புகிறேன் என்பதை நான் உனக்குச் சொல்லத் தேவை இல்லை.

-நேரு, உலக சரித்திரம் பக்கம் 346

தமிழ் ஓவியா said...

அண்ணா பதில் சொல்கிறார்(திராவிட நாடு இதழில், வாசகர்களின் முக்கிய வினாக்களுக்கு அண்ணா அளித்த அரிய விடைகள் இங்கே தரப்படுகின்றன ஆ.ர்.)

கேள்வி: ஏடுகளில் காணப்படும் கலாச்சார வரலாற்றின் அடிப்படை யை ஆதாரமாகக் கொண்டு ஆரியர் _ திராவிடர் என்று பேசுகிறீரே, இன இலக் கணங்கள் இன்று மாறு பட்டுள்ளன என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்?

பதில்: மறுக்கவில்லை நண்பரே! மறுத்ததுமில்லை. இனங்கள் பலப்பல காலமாக ஓரிடத்தில் வாழ்வதால் கலப்பு ஏற்படுவது இயல்பு என்ற பொது உண்மையை யாரும் மறுக்கவில்லை.

ஆனால், இவ்வளவு காலமாக ஒன்றாக வாழ்ந்தும், கலந்திருந்தும் கூட ஒரு கூட்டத்தினர் இன்னமும் தங்கள் மொழி, நடை, உடை பாவனை ஆகியவைகளை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியும் உயர்வு என்று கூறியும் வருவதைக் காண்கிறோம். இந்தப் போக்கைக் கொண்டுதான் ஆரியர், திராவிடர் என்று கூறுகிறோம். வாழ்க்கை முறை மனப்பான்மை இவைகளையே முக்கியமாக கவனிக்கிறோம்.

ஜப்பான் நாட்டவனொருவன் மக்கள் பிறவியில் பேதம் கிடையாது என்று கூறி அத்தகைய பேதம் இருக்கும் முறைகளை மறுப்பானானால் அவனையும் திராவிடன் என்று நான் கொள்வேன் என்று பெரியார் சென்ற கிழமை குமரிமுனையருகே நாகர் கோயிலில் கூறி இருக்கிறார் என்பதை நண்பருக்குக் கவனப்படுத்துகிறேன்.

சுருக்கமாகவும் சூட்சமத்தைக் காட்டும் முறையிலும் கூறுவதானால் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிப்பவர் ஆரியர். வர்ணாஸ்ரம தர்மம் கூடாது சமத்துவமே நிலவவேண்டும் என்பவர்கள் திராவிடர் சுயதர்மம் கோருவோர் ஆரியர். சமதர்மம் கோருவோர் திராவிடர். திராவிடர் ஒரு குறிச்சொல். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை இலட்சியத்தைக் காட்டவே அதனை உபயோகிக்கிறோம்.

பழைய ஏடுகளிலே இருந்து இதற்கான ஆதாரங்கள் காட்டும் போது நாம் அந்த நாள் கலாச்சாரம் அவ்வளவையும் ஆதரிக்கிறோம் என்பதல்ல பொருள். ஆரியர் திராவிடர் என்று. தனித்தனி இனமாக இருந்த வரலாற்று உண்மையைக் காட்டவே அந்த ஏடுகளைப் பயன்படுத்துகிறோமேயன்றி அந்த ஏடுகளிலே உள்ளபடி, நாடு மீண்டும் ஆக வேண்டும் என்பதற்கல்ல.

அந்த நாள் வாளும், வேலும், ஈட்டியும், சூலமும், பறையும், பரசலும் இன்றும் நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்பதல்ல, நமது நோக்கம். ஒரு காலத்தில் ஜாதியும் அதையொட்டிய பேத முறைகளும் வர்ணாஸ்ரமமும் அதை வளர்த்துப் பலன் பெற்ற கூட்டமும் இல்லாமல், மக்கள் அனைவரும் சமம், என்ற பெரு நோக்குடன் வாழ்ந்து வந்தனர்.

இந்தப் பகுதியிலே இருந்து வந்த பெரும்பாலான மக்கள் அவர்கள் திராவிடர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கொண்டிருந்த அந்தக் கொள்கை இன்று நமக்கு வேண்டும் என்று கூறுகிறோம். இதிலே பரிகசிக்கவோ அருவருக்கவோ காரணமில்லையே!

-அண்ணா- திராவிட நாடு, 16.11.1947Read more: http://www.viduthalai.in/page-7/102757.html#ixzz3cCGqMf55

தமிழ் ஓவியா said...

மீண்டும் சமஸ்கிருதம்: ஆழம் பார்க்கும் மோடி அரசுபுதுடில்லி, ஜூன் 6 -இந்தியா முழுவதும் அனைத்துப் பள்ளிகளி லும் மாணவர்களிடம் சமஸ்கிருத மொழித் திணிப்புக்கு ஆழம் பார்க் கும் வேலையை மத்திய மோடி அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை தொடங்கியுள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில் மாணவர்களி டம் சமஸ்கிருத மொழித் திணிப்புக்கு மத்திய அரசு தயாராகி வருவது, சமஸ் கிருத மொழி பயில்வோர் பற்றிய விபரம் சேகரிக்க அனுப்பப்பட்டுள்ள சுற்ற றிக்கை மூலம் தெரிய வரு கிறது.

என்.சி.இ.ஆர்.டி எனப்படும் தேசிய கல்வி யியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் இந்தியா முழு வதும் அனைத்து மாநிலங் களின் கல்வித் துறைக்கும் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. இதில் மத்திய அரசின்மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் டிஜிட்டல் இந்தியா திட் டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் அதன் ஒரு பகுதியாக என்.சி.இ. ஆர்.டி., இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சமஸ்கிருத கல்வியின் தற்போதைய நிலை குறித்து ஒரு முன்னோட்ட ஆய்வை மேற்கொள்வதா கவும் கூறப்பட்டுள்ளது. இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் சமஸ்கிரு தம் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்த சமீபத்திய நிலை குறித்த புள்ளி விவரத்தை உடன டியாக அனுப்ப வேண் டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.

இதை மத்திய மனித வளமேம்பாட்டு அமைச் சகத்துக்கு அனுப்ப வேண்டியிருப்பதால் இந்த தகவல்களை சேகரித்து விரைவில் அனுப்ப வேண் டும் என்றும் வற்புறுத்தப் பட்டுள்ளது. இந்த சுற்ற றிக்கையை முன்மொழிந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவ னமும் மாநில பள்ளி கல்வித் துறைக்கும், மெட் ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநருக்கும் சுற்ற றிக்கை அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையுடன், பூர்த்தி செய்யப்பட வேண்டிய பட்டியலும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 2010ஆம் ஆண்டு முதலாக அனைத்து வகுப்புகளிலும் மொத்தம் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை, அதில் சமஸ்கிருதம் பயிலும் மாணவர்கள் எவ்வளவு பேர் என்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

அத்துடன் சமஸ்கிரு தம் கற்க விரும்பும் மாணவர்கள் எண்ணிக் கையும், இந்த மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆண், பெண் என இரு பாலினர் பற்றிய மிகவும் விலாவாரியான விவரங் கள் கேட்கப்பட்டுள்ளன. யாருமே படிக்காவிட்டா லும் இல்லை என்ற விப ரத்தையும் எழுத்துப்பூர்வ மாக சமர்ப்பிக்ககேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த அனைத்து விபரங் களையும் ஜூன் 8ம் தேதிக் குள் (திங்கள்கிழமை) அனைத்து பள்ளிகளும் மாநில கல்வித் துறைக்கு அனுப்பிவைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் கற்க விருப்ப முள்ள மாணவர்கள் என்ற ஒரு கேள்விபட்டி யலில் கேட்கப்பட்டுள்ள தன் மூலம், இந்தியா முழுவதும் எவ்வளவு பேர் இதில் ஆர்வமாக உள்ள னர் என்ற தகவலைத் திரட்ட அரசு திட்டமிட் டிருப்பது தெரிகிறது.

இதன் மூலம் சமஸ் கிருத திணிப்புக்கு வழி செய்யப்படுவதை நாம் அறியலாம். ஒருபுறம் அய்அய்டி கல்வி நிலையத் தில் அம்பேத்கர் - _ பெரி யார் வாசிப்பு வட்டத் திற்கு தடை விதித்து விட்டு, மறுபுறம் இந் துத்துவ அரசியலை, சமஸ்கிருதத் திணிப்பைச் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்ட முறையில் செயல்பட்டு வருவதை இந்த சுற்றறிக்கை அம் பலப்படுத்துகிறது. மத்திய அரசின் இந்த ஜனநாயக விரோத சமஸ்கிருத மொழித் திணிப்பு முக்கிய அரசியல் பிரச்சனை என்பதுடன், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டுக்கான பாடத் திட்டங்கள், வகுப் புகள் என வேலைப்பளு அதிகமாக இருக்கும் நிலையில், வேண்டாத வேலையாக இதையும் எங் கள் தலையில் திணித்து சிரமப்படுத்து கின்றனர் என்று பள்ளி நிர்வாகங் களும் வேதனை தெரிவித் துள்ளன.Read more: http://www.viduthalai.in/e-paper/102808.html#ixzz3cHSthirf

தமிழ் ஓவியா said...

மோடி அரசுக்கு எதிர்ப்பு

50 ஆண்டுகள் ஆனாலும் கங்கையை சுத்தம் செய்ய முடியவே முடியாது! முரளிமனோகர் ஜோஷி அதிரடிவாரணாசி, ஜுன்6_ பாஜக தலைமையிலான மத்திய அரசின் முக்கியத் துவம் வாய்ந்த திட்டங் களில் முதன்மையானதாக இருப்பது கங்கையை சுத்தம் செய்யும் திட்டம் நமாமி கங்கா(புனித கங்கை) என்று கூறிக் கொள்கிறார்கள்.

பாஜகவின் இந்தத் திட்டம் குறித்து பாஜக வின் முக்கிய தலைவர் களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், கங்கையை சுத்தப்படுத்துவது என்பது 50 ஆண்டுகள் ஆனாலும் முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலத்துக்கான கனவுத் திட்டமாக வேண் டுமானால் இருக்கலாம். தடைகளில்லாமல் நீரோட் டம் இருந்தால்தான் அது வும் சாத்தியம். ஆகவே, அடுத்த 50 ஆண்டுகள் ஆனாலும் கங்கையை சுத்தம் செய்ய முடியாது. அடுத்த 50 ஆண்டுகளில் கங்கை ஆற்றோட்டப் பகுதிகளை சிறுசிறு பாகங்களாகப்பிரித்து, சிறிய நீர்த் தேக்கங்களாக மாற்றினால் கங்கையைச் சுத்தம் செய்யலாம். என்று ஜோஷி கூறினார். மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கங்கையில் கப்பல் விடப்போவதாகக் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு முரளி மனோகர் ஜோஷி கூறும் போது, பெரிய படகுகளே செல்ல முடியாத கங்கை யில் கப்பலை எப்படி விட முடியும்? என்று கேட் டார்.Read more: http://www.viduthalai.in/e-paper/102806.html#ixzz3cHT3uiYC

தமிழ் ஓவியா said...

ஜாதி மறுப்புத் திருமணம் செய்த இணையருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடில்லி, ஜூன் 6- மதம் மாறி கலப்பு திருமணம் செய்த இணை யருக்கு கட்டப்பஞ் சாயத்து தீர்ப்பின் எதி ரொலியாக விடுக்கப்படும் கொலை மிரட்டலில் இருந்து அவர்களை பாது காக்குமாறு காவல்துறை யினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரியானா மாநிலத் தில் உள்ள பரிதாபாத் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் குடும்பத் தாரின் பூரண ஒப்புத லுடன் தனது மனதுக்கு விருப்பமானவரை மதம் மாறி திருமணம் செய்து கொண்டார். உத்தரப்பிர தேசம் மாநிலத்தை சேர்ந்தவரான அந்த பெண்ணின் கணவர் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இருவரும் இந்து முறைப் படி ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண் டனர்.

இந்த திருமணம் தொடர்பாக விசாரிக்க கூடிய உள்ளூர் பஞ்சாயத் தார், இந்த இணையரை கொன்றுவிடும்படி உத்தரவிட்டுள்ளனர். இதனால் பயந்துப்போன அந்த துணையர் தங்களது உயிருக்கு பாதுகாப்பு தேடி வழக்குரைஞரின் மூலமாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் விடுமுறைக்கால அவசர அமர்வு முன்னர் இம் மனு விசாரணைக்கு வந் தது. இந்த இணையருக்கு தேவையான பாதுகாப்பு அளிக்குமாறும் இந்த புகார் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் தாக்கல் செய்யும்படியும் அரியானா மற்றும் டில்லி காவல்துறையினருக்கு நீதிபதிகள் உத்தரவிட் டுள்ளனர்Read more: http://www.viduthalai.in/e-paper/102814.html#ixzz3cHTE9tmA

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

ஈயம் கலந்த உணவுப் பொருள் எதுவும் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கச் செய்யும். டின்களில் அடைத்து வைக்கப்படும் உணவுப் பொருள்களில் பெரும்பாலும் ஈயம் கலந்திருக்கும் - உண்ணாதீர் எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...

நல்ல தமாஷ்!

பிஜேபியில் 30 லட்சம் சிறுபான்மையினர் உறுப்பி னர்கள் ஆகியுள்ளார்களாம். இந்தியக் கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசனையே மிஸ்டு காலில் பிஜேபி உறுப்பினராக ஆக்கியவர்கள் ஆயிற்றே.

தமிழ் ஓவியா said...

ஜூன் 7 : புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கான நாள்

ஒரு நோய் பாதிப்பிலிருந்து மீண்ட வர்களிடம் தான் அந்த நோய் பற்றிய உண்மையான அக்கறை இருக்கமுடியும், அதன் படி புற்று போன்ற கொடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு மீண்டவர் களுக்கான நாளாக ஜூன் இரண்டாம் வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த ஆண்டு ஏழாம் தேதி கொண்டாடப் படுகிறது.

நோயிற்கு மருத்துவம் ஆலோசனைகளைவிட அதனால் பாதித்து மீண்டவர்களின் ஆலோச னைகள் நமக்கு மிகவும் அவசிய மானவை. மீண்டவர்கள் சுற்றுப்புறச்சூழல் காரணமாகத்தான் எங்களுக்கு புற்று நோய் ஏற்பட்டது என்று கூறுகின்றனர். உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. புற்றுநோயால் நிகழும் இறப்புகளும் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. பொதுவாகப் புற்றுநோய் வந்துவிட்டால் உயிர் பிழைப்பது கடினம் என்றுதான் படித்தவர்களும் நினைக் கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. மரபணு மூலம் தொடர்ந்து அடுத்த தலை முறைக்குத் தொடரும் புற்றுநோயைத் தடுக்க முடியாது என்றாலும் குறித்த சமயத்தில் கண்டறிந்து குணப்படுத்த முடியும். தூய்மையான பழக்கவழக்கம் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும் முக்கிய காரணியாகும்.

புற்றுநோய் வருவதில் சுற்றுச்சூழலின் பங்கு அதிகம் என்று புற்று நோய் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். புகையிலைப் பொருட் களால் அதிக அளவு புற்றுநோய் ஏற்படு கிறது. புகையிலைப் பழக்கத்திற்கு அடிமை யானவர்களின் அதாவது சிகரெட், பீடி, பான்பராக், புகையிலை போன்ற பழக்கங் களால் வாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் தாக்கும்.

தூய்மையற்ற நீர், மசாலா கலந்த உணவுகள், சரியான தூக்கமின்மை போன் றவைகள் உணவுப்பாதை நோய்களை உருவாக்கும், முக்கியமாக மாட்டிறைச் சியில் புற்றுநோய் உருவாக்கும் காரணிகள் என்ற ஒரு பொய்யான கருத்து பரப்பட்டு வருகிறது, இது உண்மையல்ல, எந்த ஒரு இறைச்சியானாலும் காய்கறி உணவானாலும் அதிக அளவு கார வகைகளைச் சேர்த்து உண்ணும் போது உணவுக்குழாய் பாதிப்பு ஏற்பட்டு நாளடைவில் புற்றுநோய் உருவாகும். நன்கு வேக வைத்து உண்ணும் மாட்டிறைச்சி புற்றுநோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும், நொதிகளை அதிகம் உற்பத்தி செய்யும் புரதங்களுக்கு ஊக்க மூட்டி களாக இருக்கிறது. தொடக்க அறிகுறிகள் உடலில் வலியில்லாத கட்டிகள், திடீர் எடை குறைவு, உடல் பாகங்களில் இருந்து ரத்தம் வடிதல், தொடர்ந்த மலச்சிக்கல் போன்றவை புற்றுநோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். நவீன மருத்துவ வசதிகள் அதிகரித்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் நோய் பற்றி கவலை கொள்ளத் தேவை யில்லை, தொடக்கத்தில் நாம் மருத்துவர் களை அணுகி தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் புற்று நோயை குணப்படுத்தி விடலாம்

இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்குமேல் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 80 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர்.

ஆண்களுக்கு நுரையீரல், வாய், உணவுக்குழாய், வயிறு ஆகிய உறுப் புகளில் புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. பெங் களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, திரிபுரா, கொல்லம், திருவனந் தபுரம் ஆகிய மய்யங்களில் நுரையீரல் புற்று நோய் பாதிப்பு அதிகம் பதிவாகியிருக் கிறது. குஜராத், மகாராஷ்டிரம், போபால் (ம.பி.) ஆகியவற்றில் வாய் புற்றுநோய் அதிகமாகப் பதிவாகியிருக்கிறது.

பெண்களைப் பொருத்தவரை மார் பகப் புற்றுநோயும், கருப்பைவாய்ப் புற்றுநோயும் அதிகம். கட்டிகளால் ஏற்படும் புற்றுநோய்கள் சிறுவர் சிறுமிகளையும் குழந்தைகளையும் அதிகம் பாதிக்கிறது. முக்கியமாக சிறுவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்கள் அதிகம் சுகாதாரமற்ற சூழலினால் உருவாகிறது. நகர்ப்புறக் குடிசைப்பகுதி மற்றும் நெருக்கடியான நகர்ப்புறங் களில் வாழும் குழந்தைகளைப் புற்றுநோய் எளிதில் தாக்குகிறது.

தூய்மையான புறச்சூழல், நல்ல உணவுப் பழக்கவழக்கம் போன்றவை புற்றுநோயை எதிர்க்கும் காரணி களாகும், மரபணுமூலம் வரும் புற்று நோய் மிகவும் சொற்பமானவையே இவையெல்லாம் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் நமக்கு கற்பிக்கும் பாடங்கள், சுற்றுப்புறத்தைச் சுகாதாரமாகப் பேணி புற்றுநோயின் தாக் கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வோம்.

- சரவணா ராஜேந்திரன்Read more: http://www.viduthalai.in/page-2/102801.html#ixzz3cHTjRZyW

தமிழ் ஓவியா said...

சொல்லவேண்டும்

பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன் னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பத்திரிகைகளும் சர். சண்முகமும்


தோழர் ஆர்.கே. சண்முகம் இந்தியா முழுவதுக்கும் தெரிந்த ஒரு முக்கியஸ்தர். அவருடைய நடவடிக்கைகளும், பேச்சுக் களும் மக்கள் கவனிக்கப்பட தக்கது என்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. பலர் எதிர்பாக்கவும் கூடும்.

இந்நிலையில் தேசியப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனப் பத்திரிகை அவரது நடவடிக் கைகளை யோக்கியமாய் பிரசுரிக்காமலும், பிரசங்கங்களையும் கேள்விகளையும், பதில்களையும் சிறிதும்கூட பிரசுரிக்காமலும் இருந்து வருகின்றன. சர். சண்முகம் அவர்கள்.

இந்திய சட்டசபையில் இராணுவ சம்பந்தமான பிரச்சினையில் கொடுத்த ஒரு தீர்ப்பு விஷயமாய் பார்ப்பனப் பத்திரிகைகள் பாராட்டாவிட்டாலும், விஷமத்தனமான பரிகாசங்களைச் செய்தன.

தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி அய்யர், ஜம்பை வைத்தியனாத பாகவதர், ரமண ரிஷி போன்றவர்கள் விஷயங்களைப் பெருக்கி கண்ணு, மூக்கு வைத்து கலம் கலமாய் அலங்கரிக்கின்றன.

இந்த மாதிரியான காரியங்களால் பார்ப்பனர்களுக்குக் கீர்த்தியும், மேன்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ, பார்ப்பனரல்லாதாருக்கு அபகீர்த்தியும், தாழ்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ நாம் சொல்ல வரவில்லை.

இந்த மாதிரியான நிலையில் பார்ப்பனர் இருக்கின்ற வரையில் சித்திரத்தில் மாதிரி பார்த்து எழுதக் கூட ஒரு பார்ப்பனர் கிடைக்காமல் பூண்டற்று போகக் கூடிய காலம் வரும் என் கின்ற தைரியம் நமக்கு உண்டு. அந்தத் தைரியம் இல்லாவிட்டால் இத் தொண்டை நாம் மேற்கொண்டிருக்க மாட்டோம்.

ஆனால் எதற்காக இதை எழுதுகின்றோம் என்றால், பார்ப்பனப் பத்திரிகைகள் தேசியப் பத்திரிகைகள் என்றும், பல பார்ப்பனர்கள் பார்ப்பனத் தன்மை இல்லாமல் நடு நிலைமை வாய்ந்தவர்கள் என்றும் கருதிக் கொண்டு பார்ப்பன சிஷ்யர்களாகவும், பார்ப்பன கூலிகளாகவும், பார்ப்பனர் களுக்கும், பார்ப்பன பத்திரிகைகளுக்கும் ஆதரவளிப்பவர் களாகவும் இருக்கும் முட்டாள்தனத்தையும், சுயமரியாதை அற்ற தன்மையையும் வெளிப்படுத்தவே இதை எழுதுகிறோம்.

விகடப் பத்திரிகை என்று வேஷம் போட்டுக் கொண்டு சில பத்திரிகைகள் பார்ப்பனியத்தைப் பிரச்சாரம் செய்துகொண்டு பார்ப்பனரல்லாத பிரமுகர்களை இழிவுபடுத்திக் கொண்டு வருகின்றன.

அவைகளுக்கும் சுத்த இரத்த ஓட்டமில்லாத - சுயமரியாதை அற்ற பணம் பிரதானமே தவிர வேறொன்றும் இல்லை என்று கருதுகின்ற சில பார்ப்பனரல்லாதார் ஆதர வளிக்கின்றதையும் பார்த்து வெட்கப்படுகின்றோம்.

என்ப தோடு 10 பணத்துக்கு மிஞ்சிய பதிவிரதை இல்லை என்று கற்பின் பித்தலாட்டத்துக்கு ஒரு பழமொழி சொல்வது போல் பணத்தை விட தங்கள் சுய நல வாழ்க்கையை விட, மானம் பெரிதல்ல என்று எண்ணி வாழ்க்கை நடத்தும் பார்ப்பனரல்லா தாரைக் கண்டு இரங்குகின்றோம்.

பார்ப்பனரைப் பார்த்து பாரதியார் நாயும் பிழைக்கு மிந்தப் பிழைப்பு என்று சொன்னது போல், ஒரு மனி தனின் பிழைப்பிற்காக மானத்தைத் தனது சமுகத்தை விற்று விட்டு ஜீவிக்க வேண்டியதில்லை என்றுதான் பரிதாபத்துடன் கண்ணீர் விட்டுக் கொண்டு இதை எழுதுகிறோம்.

- பகுத்தறிவு - கட்டுரை - 30.09.1934Read more: http://www.viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3cHVjbxIE

தமிழ் ஓவியா said...

விஷமத்துக்கு விஷமமா?
அல்லது உண்மையா?திருச்சி நகர தூதன் பத்திரிகையில் தோழர் அவிநாசி லிங்கம் நிற்கவில்லை என்கின்ற தலைப்பின் கீழ் கோயம்புத்தூர், சேலம், வடாற்காடு ஜில்லாக்களின் இந்திய சட்டசபைத் தொகுதிக்குக் காங்கிரஸ் சார்பாக அபேட்ச கராய் நிறுத்தப்பட்டதாக சொல்லப்படும் தோழர் அவிநாசிலிங்கம் செட்டியார் கடைசிவரை அபேட்சகராய் நிற்க மாட்டாராம்.

காங்கிரசின் பெயரால் தோழர் அவிநாசிலிங்கம் செட்டியாரை முன்னிருத்தி அத்தகுதியைப் பயன்படுத்தி முடிந்ததும் கடைசியில் இருக்கக் கூடிய நிலைமையை அனுசரித்து இறுதியாகத் தோழர் ராஜகோபாலாச்சாரியாரே அதில் அபேட்சகராக நின்றுவிட ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த இடத்திலிருந்து தெரியவருகிறது என்ற ஒரு சிறு குறிப்புக் காணப்படுகிறது.

பொய்க்கு பொய், கோளுக்குக் கோள், விஷமத்துக்கு விஷமம் செய்யத் தகுதி உள்ளவனுக்குத்தான் உலகில் இடமுண்டு என்கின்ற ஒரு ஆப்த வாக்கியம் உண்டு.

நகர தூதனில் காணப்படும் இந்தக் குறிப்பானது நகர தூதனுக்கு நம்பத் தகுந்த இடத்திலிருந்து வந்திருந்தாலும் இருக்கலாம். என்றாலும் அந்த நம்பத் தகுந்த இடத்துக்கு, நம்பத்தகுந்த இடத்திலிருந்து வந்தது உண்மையாய் இருக்குமா அல்லது மேல்கண்ட ஆப்தவாக்கியத்தை ஒட்டியதாக இருக்குமா என்பதை உறுதி கூற நம்மால் முடியவில்லை.

ஆகவே, தோழர் அவிநாசிலிங்கம் அவர்கள் நிற்கப் போவதில்லை என்பது உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம். அல்லது பொய்க்குப் பொய், கோளுக்குக் கோள், விஷமத்துக்கு விஷமம் என்கின்ற மனுதர்ம சாஸ்திரத்தை அனுசரித்து இருந்தாலும் இருக்கலாம் என்று எண்ணுகிறோம்.

- பகுத்தறிவு - கட்டுரை - 23.09.1934Read more: http://www.viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3cHVvSPcL

தமிழ் ஓவியா said...

வாழ்க பெரியார் அம்பேத்கர் ஜிந்தாபாத்!

கவிஞர் கலி. பூங்குன்றன்அய்.அய்.டி. என்றால்
என்ன தெரியுமா?
அய்யர் அய்யங்கார்
டெக்னாலஜிதான்?
ஆமாம் அதற்கு இப்பொழுது
என்னாயிற்றாம்!
பெரியார் - அம்பேத்கர்
என்னும்
இரட்டை சிங்கங்கள்
உள்ளே நுழைந்து விட்டன!
அய்யய்யோ! அய்யய்யோ!
ஆரியத்தின் அலறல் சத்தம்!

நரிகள் உலவிய நாரதர் காட்டிலே

அரிமாக்கள் நுழைந்தால்
அச்சம் உலுக்காதா?
அதுவும்
வியாசர், வசிஷ்டர்
விவேகானந்தர்கள்
உறையும் ஆசிரமத்தில்
விவேக வெடிகுண்டுகள்
வீச ஆரம்பித்தால்
அதன் விளைவு..
அவாளுக்கு
நன்னாவே தெரியுமே!
ஆபத்து வந்து விட்டது
அடிநொறுங்கிப் போய் விடுவோம்
ஆதிக்கத்தின் வேரில்
அடி விழப் போகிறதே!
அலறுகிறார்கள் அலறுகிறார்கள்
ஆந்தைகளாக
ஆமாம் அலறுகிறார்கள்

ஏன்
ஆபத்பாந்தவனை
அழைப்பதுதானே?
கிருஷ்ண பரமாத்மாவைக்
கூப்பிடுவதுதானே!
மகா விஷ்ணுவே
மகாவிஷ்ணுவே
சக்ராயுதத்துடன்
வாருமய்யா என்று
வருந்தி அழைப்பதுதானே?
எப்படி வருவார்கள்?
அப்படிப்பட்டவர்கள்
இருந்தால்தானே
வந்து குதிக்க முடியும்?

கீதையைப்பற்றிப்
பிரச்சாரம் கீச்கீச் சென்று
கத்தும் இடத்தில்
கீதையைக் கிழித்து
கிழங்கு சுடும்
கிழக்குச் சூரியன்
கிளர்ந்தெழுந்தால்
கிலிபிடிக்காதா?
கிண்டி அக்ரகாரத்தில்
இந்துத்துவா சங்கீதம்
ஏழு கட்டையில்
வாசித்த இடத்தில்
இந்து என்று சொல்லாதே
இழிவைத் தேடிக் கொள்ளாதே!
எனும்
கட்டளைக் காம்போதி
களை கட்டினால்
கடையைக் கட்டிக்

கொள்ளத்தானே நேரும்?
அம்பேத்கரைக்கூட
ஏற்றுக் கொள்வார்களாம்
ஆனால்
அந்தத் தாடிக் கிழவரை
மட்டும்
ஏற்றுக் கொள்ள
மாட்டார்களாம்!
புரியகிறதா - இதற்குப்
பெயர்தான்
பிரித்தாளும் சூழ்ச்சி என்பது!

ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான்
இவ்விரு சிங்கங்களும்
என்று புரியாதா என்ன?
ஆரியத்தின் சூழ்ச்சிகளை
அகர முதல் னகரம் வரை
சொல்லிக் கொடுத்தவர்களிடமே
சூழ்ச்சி நரிகளின்
சூதாட்ட வித்தைகளா!
சுக்கல் நூறாகும்
எச்சரிக்கை!
முன்புத்தி இல்லாதவர்கள்
முப்புரியார்கள் என்று
தந்தை பெரியார் சொன்னது
இதோ கண்முன் நடக்கிறதே!
கிண்டி அய்.அய்.டி. கிண்டிவிட்ட தீயால்
மும்பை, டில்லி என்று
அண்ணல் அம்பேத்கரும்,
அய்யா பெரியாரும்
ஆகாய மார்க்கம்

பறந்து சென்றனரே!
அடுத்த கட்டம்?
அங்கு இங்கெனாதபடி
அய்யாவும், அம்பேத்கரும்
அனைத்துக் கல்விக்
கூடங்களிலும்
அவதாரம் எடுக்கப்
போகிறார்களே!
அன்றைய அவதாரம்
அசுரர்களை வதம்
செய்தது என்றால்
இவ்விரு அவதாரங்களும்
சுரர்களை
சூறையாடப் போகிறது
சூழ்ச்சி முடிச்சுகளை
கந்தலாக்கப் போகிறது
வன்முறையால் அல்ல
அறிவார்ந்த நன்முறை
அஸ்திரங்களால்!
ஒடுக்கப்பட்டோரே!
உங்களுக்கு அடையாளம்
காட்டி விட்டார்கள் -
காகபட்டர் பரம்பரையினர்!
அய்யாவும், அண்ணலும்
நம்மிரு விழிகள்
அடையாளம் காட்டும்
அன்னை மொழிகள்
நம்மை வாழ்விக்கும்
புரட்சி விழிகள்!
வாழ்க பெரியார்!
அம்பேத்கர் ஜிந்தாபாத்!Read more: http://www.viduthalai.in/page-1/102774.html#ixzz3cHWIIw73

தமிழ் ஓவியா said...

சித்ரா பவுர்ணமி சொற் குற்றமும் பொருள் குற்றமும்

சைத்ரா என்றால் சமற்கிருதத்தில் ஆடு எனப் பொருள்படும். மேழம் என்றால் தமிழில் ஆடு எனப் பொருள்படும். பூமி சூரியனைச் சுற்றிவரும் பெயர்ச்சியின்போது இந்த மாதத்தில், பூமியில் இருந்து பார்க்கும்போது நிலவுக்குப் பின்னால் காணும் விண்மீன் கூட்டங்களை கற்பனைப் புள்ளியால் ஒருங்கிணைத்தால் ஆடு போன்ற தோற்றம் நினைவில் வரும்.

அதை தமிழ் முன்னோர்கள் மேழம் மாதம் என்று பெயர் சூட்டினார்கள். அதைத்தான் ஆரியம் புகுந்து மேஷம் என மாற்றியது. இந்த மாதம்  முழுவதும் ஆடு போன்ற தோற்றத்தை கற்பனை செய்து நிலவின் பின்புலம் அல்லது தோற்றம் என அழைத்தனர்.

பின்புலம் அல்லது தோற்றம் என்பதுதான் ஆரியத்தால் இராசி என அழைக்கப்பட்டு மேழம் பின்புலம் என்பது மேஷராசி ஆனது. சைத்ரா என்பது சித்திரை ஆனது.

பூமிக்கு இருக்கும் ஒரு நிலவு பூமியைச் சுற்றிவர 27.3 நாள்கள் ஆவதைத்தான் குசேலனுக்கு 27 பிள்ளைகள் என கதை அளந்த ஆரியப் புராணம் வேறு. சித்திரை பவுர்மணி என்பது மருவி சித்ரா பவுர்ணமி ஆகி, சித்ரா வெள்ளாடு ஆகி வழக்கில் உள்ளது.

அதைப் போலத்தான் கள்ளழகர் என்ற கற்பனை உருவ பொம்மையை உருவாக்கி இந்த மாதத்தில் வைகை ஆற்றில் இறக்கி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் என்று பத்திரிகைகளும், ஊடகங்களும் சொல்கின்றன.

உண்மையில் கள்ளழகர் என்ற (கடவுள்) சிலையை பக்தர்கள் சுமந்து வந்து வைகை ஆற்றில் இறக்கினார்கள் என்றல்லவா எழுத வேண்டும் அதை விடுத்து கள்ளழகர் ஆற்றில் இறங்கினார் என்றால், பக்தர்கள் யாருடைய துணையும் இல்லாமல் தானே அல்லவா இறங்கி இருக்க வேண்டும்.  அப்படி இறங்கினால்தானே இறங்கினார் என எழுத வேண்டும். சொல்ல வேண்டும்.

அப்படி எழுதினால் அதை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்க திராணியற்ற பத்திரிகை ஊடகங்களே இனிமேல் கள்ளழகர் சிலை பக்தர்களால் வண்ண உடை உடுத்தி சுமந்து செல்லப்பட்டு வைகை ஆற்றில் இறக்கப்பட்டது என எழுதுங்கள் உங்களுக்கு பத்திரிகை தருமம், எழுத்தில் நேர்மை, நாணயம் இருந்தால் இப்படி எழுதுங்கள்.

தயாரா? சொல்லில் குற்றம் இருந்தால் பொரு ளிலும் குற்றம் வரும். பொருள் படும்படி... படி என்கிறார் புரட்சிக் கவிஞர்.

- _ வசந்த விண்முகில்
- _ எதிலும் கட...உள் பேரவை-

தமிழ் ஓவியா said...

பிழை திருத்தும் மென்தமிழ் மென் பொருள் உருவாக்கிய அறிஞர்தமிழைப் பிழை இல்லாமலும், மொழிக் கலப்பு இல்லாமலும் எழுதக் கூடிய சிறந்த தமிழ் மென் பொருளை உருவாக்கியுள் ளார் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம். இதைக் கொண்டு கோடிக்கணக் கான தமிழ் சொற்களின் பிழைகளைத் திருத்த முடியும்.

இந்த மென்பொருளைச் சிறப்பாக வடிவமைத்த தெய்வசுந்தரம், முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற முதன்முறையாகத் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஓர் இலட்சம் ரூபாய், ஒரு பவுன் தங்கம், பாராட்டுப் பத்திரம் கொண்ட விருது விரைவில் அவருக்கு வழங்கப்பட வுள்ளது.

இந்த மென்பொருளை கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் பதிவேற்றி விட்டால், தமிழ் வார்த்தைகளில் உள்ள தவறை எளிதாகக் கண்டுபிடித்து ஒரு வினாடியிலேயே திருத்த முடியும். வார்த்தையில் ஓர் எழுத்து விடுபட்டி ருக்கலாம் அல்லது எழுத்து இடம் மாறி யிருக்கலாம் அல்லது தேவையில்லாமல் ஓர் எழுத்து சேர்க்கப்பட்டிருக்கலாம்.

இதுபோன்ற தவறுகளைக் கண்டுபிடித்து வினாடியிலே திருத்துவதுதான் இந்த மென்பொருளின் சிறப்பு. உதாரணத்துக்குக் கசலம் என்ற தவறான வார்த் தையைச் சொற்பிழை திருத்தியைக் கொண்டு திருத்தும்போது கசம், கலம், கமலம், கலசம் ஆகிய வார்த்தைகள் கம்ப்யூட்டர் திரையில் தோன்றும். அதில் நமக்குத் தேவையான சரியான வார்த்தையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சந்திப்பிழையையும் திருத்த முடியும். எடுத்துக்காட்டாகப் படித்து பார்த்தான், வந்துப் பார்த்தான் என்ற வார்த்தை களில் உள்ள ஒற்றுப் பிழையைத் திருத்தி, படித்துப் பார்த்தான், வந்து பார்த்தான் என்று காண்பிக்கிறது. எண்களைக் கொடுத்தால் எழுத்துகளாக்கு கிறது. தமிழ் எழுத்துகளுக்கு எண்களைத் தருகிறது.

அதாவது 1,20,00,000 என எண் வடிவில் தட்டச்சு செய்தால் ஒரு கோடியே இருபது லட்சம் என்று தமிழ் எழுத்துகளாக வருகிறது. இந்த மென் பொருளில் உள்ள 56 ஆயிரம் தமிழ் அகராதி சொற்களைக் கொண்டு கோடிக்கணக்கான வார்த்தைகளைத் திருத்த முடியும்.

தமிழைத் தமிழாகவும், பிற மொழிக் கலப்பு இல்லாமலும், பிழை இல்லாமலும் எழுதப் பயன்படும் இந்த மென்பொருள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அரசு மற்றும் தனியார் அலுவலகப் பணியாளர்களுக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம். ஆங்கிலம் மற்றும் தமிழ் அகராதியும் இருப்பது தனிச்சிறப்பு.

இந்தச் சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கிய சென்னைப் பல்கலைக்கழக மொழியியல் துறை முன்னாள் தலைவர் ந.தெய்வசுந்தரம் கூறியதாவது:

எனது தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவின் 5 ஆண்டு உழைப்பே இந்த மென்பொருள். கணினி பயன்படுத்தத் தெரிந்த அனைவரும் இதன் முழுப்பலனைப் பெற முடியும். 15 வகையான கீ போர்டு வசதி இருப்பதால் உலகம் முழுவதும் பயன்படுத்தலாம்.

இத்தகைய மென்பொருட்களை உருவாக்கத் தமிழ் இலக்கணம் மட்டும் படித்தால் போதாது. மொழியியல் அறிவும் அவசியம். அதற்குப் பல்கலைக் கழகங்களில் மொழியியல் பாடம் கட்டாயம் இருக்க வேண்டும். அதன் மூலமே ஏராளமான தமிழ் மென் பொருட்களை உருவாக்கிக் கணினித் தமிழ்ப் பயன்பாட்டை ஆங்கில மொழிப் பயன்பாட்டுக்கு இணையாக வளர்க்க முடியும்.

_இவ்வாறு பேராசிரியர் தெய்வ சுந்தரம் கூறினார்.

தமிழ் ஓவியா said...

கடல் சூழ் உலகு (ஜூன் 8 உலக கடல் நாள்)

இவ்வுலகு நான்கில் மூன்று பாகம் கடலால் நிரம்பியுள்ளது. மனித இனம் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் கடலை நம்பித்தான் உயிர்வாழ்கின்றன. கடலை நாம், சாதாரணமாக பார்க்கும் போது நீல வண்ணம் பவளம் போர்த்தியது போல் காட்சி தரலாம், கடலின் உள்ளே மனிதன் இதுவரை கண்டறியாத பல அறிவியல் அற்புதங்கள் புதைந்து கிடக்கின்றன. நமது அறிவியலாளர்கள் ஹப்பில் தொலைநோக்கி மூலம் நமது பால்வெளியையும் தாண்டி வேற்று பால்வெளியை (ஆண்டிரோமீடா) கண்டுவிட்டனர். ஆனால் தினசரி காணம் கடலில் வெறும் 30 விழுக்காடு மட்டுமே அறிந்துள்ளோம். அதே வேளையில் 70 விழுக்காடு கடலை நாம் வெறும் ஊகத்தின் அடிப்படையில்தான் இப்படி இருக்கலாம் என்று அறிந்து வருகிறோம். கடலில் தோன்றும் சிறிய மாற்றங்கள் கூட நிலப்பகுதியில் மிகப்பெரிய் சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஜூன் மாதம் துவங்கியதும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை துவங்கி, மேற்கு தொடர்ச்சி மலையின் இறுதி முனையில் உள்ள தார்ப்பாலைவனத்தில் மழையே காணாத மாற்றங்களும் கடலில் ஏற்படும் மாற்றங்களால்தான் உருவாகிறது. மேற்குதொடர்ச்சி மலைதான் இந்தியாவின் பொருளாதாரத்தையே தீர்மானிக்கிறது. ஓர் ஆண்டு மேற்குதொடர்ச்சி மலை மழை தருவதை நிறுத்திவிட்டால் இந்தியாவில் மிகபெரிய பஞ்சம் ஏற்பட்டுவிடும். 2013-ஆம் ஆண்டு ஜூலை வார இறுதியில் தார்ப் பாலைவனப்பகுதியில் கடுமையான மழைபெய்தது, இது குறித்து தார்ப்பாலைவனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வரும் 79 -வயது முதியவர் ஒருவர் கூறும் போது எனது தாத்தா தந்தை மற்றும் என்னுடைய காலத்தில் இதுபோன்ற மழையை கேள்விப்பட்டது மில்லை, கண்டதுமில்லை என்றார். அதே நேரத்தில் மற்றொரு மாற்றம் மத்திய இந்திய பகுதிகளில் வெறும் 30 விழுக்காடு மழைமட்டுமே பெய்துள்ளது. இது தொடர்ந்தால் இந்தியாவில் 50 விழுக்காடு மக்கள் பஞ்சத்தால் வாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் இந்தத் திடீர் மாற்றம் இந்தியப்பெருங்கடலின் உள்ளே உருவாகிவரும் மிகபெரிய மாற்றத்தின் ஆரம்பக் கட்டம்தான். ஆகையால்தான் தார்ப் பாலைவனத்தில் வெள்ளம் வரும் அளவிற்கு மழையும் ஆயிரம் ஆண்டுகளாக நல்ல மழைபெய்துவரும் பகுதிகளில் ஏற்பட்ட வறட்சியும் கொடுக்கிறது. கடலுக்கடியில் தேங்கும் வெப்பம் கோடிக்கணக்கான ஆண்டுகளாக புவியில் இயற்கையாக தோன்றும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை மெல்லுடலிகள் உறிஞ்சி அதை சுண்ணாம்புப் பாறையாக தொடர்ந்து மற்றிக்கொண்டு வருகின்றன. ஆனால் கடந்த சில நூற்றாண்டாக தொழில்வளர்ச்சி காரணமாக உருவாகும் கார்பன் டை ஆக்ஸைடு வாயு, கடலின் அடியில் அளவுக்கு அதிகமாக தேங்கிக்கொண்டு வருகிறது, இப்படி தேங்கியிருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு வாயு இதை எடுத்துக்கொள்ளும் மெல்லுடலிகளை மெல்ல மெல்ல அழித்து வருகிறது. ஒருபுறம் கார்பன் தேக்கம் என்றால் மனிதன் உருவாக்கும் கழிவுகளும் கடலை மெல்ல மெல்ல நாசம் செய்துவருகின்றன.

உலகின் குப்பை கூடமாக மாறும் இந்தியப்பெருங்கடல் முக்கியமாக இந்தியப்பெருங்கடல் உலகின் வியாபாரப் பாதையாக மாறிவிட்ட சூழலில் மற்ற எந்த கடலையும் விட அதிக அளவு மாசுபடுகிறது. இந்திய பெருங்கடல் நாடுகளில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூரைத் தவிர மற்ற நாடுகள் இந்தியா உட்பட அனைத்தும் வறுமை தாண்டவமாடும் நாடுகள்தான், இந்தியப்பெருங்கடலில் ஏற்படும் மாசுக்கள் இந்த ஏழை நாடுகளை மேலும் பாதிக்கும் அபாயம் ஏற்படும் சூழல் நெருங்கி வருகிறது. மேலை நாடுகள் தங்கள் கடற்பகுதிகளை பாதுகாக்க பல்வேறு திட்டங்களை அவசர அவசரமாக நடைமுறைப் படுத்திக் கொண்டு இருக்கும் போது கடல்மாசை கட்டுபடுத்தவேண்டிய இந்தியா போன்ற நாடுகள் மேலை நாடுகளின் கூலியாளாக செயல்பட்டு தங்கள் கடலை குத்தகைக்கு விடும் கேவலமான நிலைக்குச் சென்றுவிட்டது. மேலைநாடுகளின் கைக்கூலிகளாக செயல்படும் அரசுக்கட்டிலில் அமர்ந்திருப்பவர்களின் பணத்தாசை, இந்தியா போன்ற நாடுகளின் வாழும் மக்களில் வாழ்வாதாரத்தையே பாதித்துவிடும். கடல்மாசடைவதை தடுப்பதோடு மேலை நாடுகள் இந்தியப் பெருங்கடலை ஆக்ரமிப்பதையும் தடுத்து நிறுத்தவேண்டிய சூழல் தற்போது நமக்கு ஏற்பட்டுள்ளது. இன்றைய கடல்தினத்தில் நாம் ஆற்றவேண்டிய கடமை அதிகமுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.Read more: http://www.viduthalai.in/page-4/102883.html#ixzz3cNEQpuZM

தமிழ் ஓவியா said...

மழைக்காக சிறப்பு பூஜைகள் செய்வதா?
மூடநம்பிக்கையை தமிழக அரசு பரப்புவதா!
ராமதாஸ் கண்டனம்

சென்னை, ஜூன் 7_ தமிழக அரசின் நீர்வளத் துறை மூடநம்பிக்கையை பரப்பும் வகையில் மழைக் காக சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடுகள் செய்வ தற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டித்து உள்ளனர்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில்:_ தமிழ்நாட்டை நான்காவது ஆண்டாக வறட்சி வாட் டிக் கொண்டிருக்கும் நிலை யில், மழை பெய்ய வேண்டி தமிழகத்திலுள்ள பொதுப் பணித்துறையின் நீர்வளப் பிரிவு செயற்பொறியாளர் கள் அனைவரும் சிறப்பு பூஜைகளை நடத்த வேண் டும் என்றும், அதுகுறித்த விவரங்களை தலைமை அலுவலகத்திற்கு தெரி விக்க வேண்டும் என்றும் அத்துறையின் தலைமைப் பொறியாளர் அசோகன் சுற் றறிக்கை அனுப்பியுள்ளார்.
வறட்சியைப் போக்க மழை வேண்டும் என்ற நோக்கத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ச் சியடைந்துள்ள இக்காலத் தில், செயற்கை மழை பெய்ய ஏற்பாடு செய்திருந் தால் அதை வரவேற்று பாராட்டியிருக்கலாம். அதை விடுத்து மூடநம்பிக் கையை பரப்பும் வகையில் மழை வேண்டி சிறப்பு பூஜைகளை செய்ய வேண் டும் என்று வலியுறுத்துவது கண்டிக்கப்பட வேண்டிய தாகும்.
மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பார் கள். அதேபோல், ஜெயலலி தாவின் விடுதலைக்காக அமைச்சர் பெருமக்கள் அனைவரும் யாகம், பூஜை போன்றவற்றில் ஈடுபட்ட தன் பாதிப்போ என்னவோ அதிகாரிகளும் அதே வழி யில் செல்லத் தொடங்கி யுள்ளனர். இது மிகவும் ஆபத்தான போக்காகும். பகுத்தறிவுக்கும், அறிவிய லுக்கும் ஒவ்வாத இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, வறட்சிக்கு அறிவியலின் உதவியுடன் தீர்வு காண்ப தற்கு தலைமைப் பொறியா ளர் முயல வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

மழைக்கு யாகம் வளர்க்க சொன்ன பொறியாளருக்கு அறிவிக்கை


சென்னை, ஜூன் 8 தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாசன தேவையை மேட்டூர் அணை பூர்த்தி செய்து வருகிறது. அதன் படி இந்தாண்டு குறுவை நெல் சாகுபடிக்காக ஜுன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் குறைந்த பட்சம் 90 அடி தண்ணீர் இருந்தால் மட்டுமே திறந்து விட முடியும். ஆனால், தற் போது மேட்டூர் அணை யின் நீர்மட்டம் 72.64 அடியாக உள்ளது. இத னால், குறுவை சாகு படிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்துவிட இயலாது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு திருச்சி நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் மண்டலத்திற்குட்பட்ட 30 உபகோட்ட அலுவல கத்திற்கு சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில், மழை வேண்டி ஒவ்வொரு அலுவலகம் சார்பிலும் அந்தெந்த பகுதிகளில் உள்ள கோயி லில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என்று குறிப் பிட்டிருந்தார். அதன்படி கடந்த 3ஆம் தேதி திருச்சி மண்டலத்தில் 30 கோயில் களில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அரசே அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக மூடநம்பிக்கை பரப்பும் வகையில் அரசு அதிகாரி களே யாகம் நடத்திய தற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண் டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பொதுப் பணித்துறை தலைமை அறிவுரை இல்லாமல் தலைமை பொறியாளர் தன்னிச்சையாக யாகம் நடத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த அதி காரியிடம் விளக்கம் கேட்டு பொதுப்பணித் துறை தலைமை அறி விக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பொதுப் பணித்துறை உயர் அதி காரி ஒருவர் கூறியதாவது: பொதுப்பணித்துறையில் நீர்வளத்துறை திருச்சி மண்டலத்தில், தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாசன தேவையை பூர்த்தி செய்ய மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு இல்லாததால், இந்த ஆண்டு குறுவை சாகு படிக்கு, தண்ணீர் திறக் கப்படவில்லை. இந் நிலையில், திருச்சி மண் டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், மழை வேண்டி யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

கோயில்களில் யாகம் நடத்த கூறியிருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு அறி விக்கை அனுப்பப்பட்டுள் ளது. இதற்கு 15 நாட் களுக்குள் அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அதன் பிறகு அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப் பது குறித்து ஆலோசிக் கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.Read more: http://www.viduthalai.in/e-paper/102907.html#ixzz3cThqSR9C

தமிழ் ஓவியா said...

சமூகநீதிக்கு விரோதமாக அய்.அய்.டி. பேராசிரியர்கள் நியமனப் பட்டியல்

சென்னை அய்.அய்.டி.யையே எடுத்துக் கொள்ள லாம் மொத்தம் 212 பேராசிரியர்கள் என்றால் அவர்களில் உயர் ஜாதியினர் 209. (98.59 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம்; தாழ்த்தப்பட்டோர் 3 (1-41 சதவீதம்) பழங்குடியினர் பூஜ்ஜியம்.

இணை பேராசிரியர்கள் (Associate Professors)  91 பேர் என்றால் அதில் உயர் ஜாதியினர் 88 (96.70 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம் தாழ்த்தப் பட்டோர் 3 (3.3. சதவீதம்) பழங்குடியினர் பூஜ்ஜியம், உதவிப் பேராசிரியர் 177 என்றால் அதில் உயர் ஜாதியினர் 165 (93.22 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் 7 (3.95 சதவீதம்) தாழ்த்தப்பட்டோர் 4 (2.25 சதவீதம்) பழங்குடியினர் - 1.

ஆகக் கூடுதல் உயர் ஜாதியினர் (பெரும்பாலும் பார்ப்பனர்களே!) 462, பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் 7, தாழ்த்தப் பட்டோர் 10, பழங்குடியினர் ஒன்றே ஒன்று -இதுதான் சென்னை அய்.அய்.டி.யின் நிலை.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு - மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப் படையில் வழங்கப்பட்டதால்தான் முதன் முதலாக உதவிப் பேராசிரியர்களில் மட்டும் 7 இடங்கள் கிடைத் துள்ளன. பேராசிரியராகவோ, இணைப் பேராசிரி யராகவோ ஒரே ஒரு பிற்படுத்தப்பட்டோர்கூட இல்லை; பழங்குடியினரிடமிருந்து ஒரே ஒருவர் மட்டும் - அதுவும் உதவிப் பேராசிரியர் பணியில்.

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட தடையை நீக்க இணையத்தின் வாயிலாக வலியுறுத்திய பல்லாயிரக்கணக்கானவர்கள்


சென்னை ஜூன் 8 கல்வியாளர்களாக, ஆராய்ச் சியாளர்கள், மாணவர்கள் மற்றும் இந்தியக் குடிமக் களாக உள்ள ஏராளமானவர்கள் இணையத்தின் வாயிலாக சென்னை அய்.அய்.டி. இயக்குநருக்கு பன்னாட் டளவில் ஆயிரக்கணக்கானவர்கள் இணையத்தின் வாயிலாக சென்னை அய்.அய்.டி இயக்குநருக்கு கோரிக்கையை விளக்கி கடிதம் அனுப்பினார்கள். www.change.org எனும் தளத்தின் வாயிலாக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்துக்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது. அந்த வகையில் 100, 200 எனத் தொடங்கி பன் னாட்டளவில் உள்ள சமூக நீதிப் பற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போய் 7.597பேர் என்கிற அளவிலான எண்ணிக்கையினர் இணை யத்தில் இந்தத் தளத்தில் மட்டும் பதிவு செய் துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முகநூலில் ஏராளமானவர்கள் அவரவர் முகநூல் பக்கம் மட்டுமன்றி புதிதாக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் என்று டில்லி, மகாராட்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியது. டிவிட்டரிலும் சென்னை அய்.அய்.டி. பக்கத்தில் அவ்வப்போதைய தகவல்கள் பரிமாற்றம் இருந்தவண்ணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊண் உறக்கம் இன்றி சமூக நீதிக்களத்தில் இறங்கிய மறவர்கள் ஏராளமானவர்கள் களம் கண்டனர்.Read more: http://www.viduthalai.in/e-paper/102908.html#ixzz3cTiHBBtz

தமிழ் ஓவியா said...

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?மோடி செய்த 20 சாதனைப் பணிகள் என்ன என்று தகவல் உரிமைஅறியும் சட்டத்தில் கேட்டபோது பிரதமர் ஆற்றிய பணிகுறித்த எந்த விவரமும் எங்களிடம் இல்லை என்று பிரதமர் அலுவலகம் பதில் அனுப்பியுள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்து ஒர் ஆண்டு முடிந்துவிட்டது, பாஜக தலைவர் களும் அமைச்சர்களும், நாடெங்கும் கூட்டம் போட்டு ஏழைமக்களுக்காக 20 சாதனைத் திட்டங்கள் நாங்கள் கொண்டுவந்துவிட்டோம். இதுதான் மோடியின் சாதனைகள் என்ற பெயரில் பல்வேறு பொய் கதைகளைப் பேசி தேர்தல் பிரச்சாரங்கள் போல் தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்; மே மாதம் 26-ஆம் தேதி மதுராவில் நடந்த கூட்டத்தில், மோடியும், தன் பங்கிற்கு தனது முதுகில், தானே தட்டிக்கொண்டார். அப்படி மோடி என்னதான் செய்துவிட்டார் என்ற உண்மையை அறிந்துகொள்ள அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் அலுவலகத்திற்கு, மோடி ஆட்சிக்கு வந்த ஓராண்டு ஆகிவிட்டது, மக்களுக்காக பிரதமர் செய்த பணிகள் குறித்த விவரங்களைப் பட்டியலிட்டுத்தாருங்கள் என்று கேட்டிருந்தார். அதற்குப் பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில் பிரதமர் பணி குறித்த விவரம் இதுவரை எங்களிடம் வர வில்லை. பிரதமர் பணிகள் குறித்த விவரங்களை எல்லாம் சேகரித்து வைப்பது எங்கள் பணியல்ல, அதேபோல் பிரிவு 6(3)-ன் கீழ் தனிப்பட்ட ஒருவருக்கு பிரதமர் அலுவலகம் விளக்கம் அளிக்கவேண்டிய அவசியம் கிடையாது என்று பதில் அனுப்பி இருந்தது. இதுகுறித்து அகமதாபாத்தைச் சேர்ந்த, தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு அனுப்பிய நபர் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது, பிரதமரின் ஓராண்டு நிறைவை ஒட்டி அவர் மக்களுக்காக என்ன என்ன பணிகளைச் செய்துள்ளார்? இனிமேல் எது மாதிரியான திட்டங்களை நிறைவேற்ற உள்ளார்? என அறிந்து கொள்ள விவரம் கேட்டு பிரதமர் அலுவலகத் திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுதியிருந்தேன்.

ஆனால், பிரதமர் அலுவலகம் அனுப்பிய பதிலோ ஏமாற்றத்தைத் தருவதாக இருந்தது, மே 5 ஆம் தேதியிட்டு வெளிவந்த பிரதமர் அலுவலக தகவல் தொடர்பு அதிகாரி அம்புஜ் சர்மா என்பவர் எழுதிய பதில் கடிதத்தில் உங்களின் கேள்விகளுக்கான பதில்கள் எங்களிடமில்லை என்று வந்துள்ளது. மோடியின் ஓராண்டு ஆட்சி குறித்து ஊடகங்கள் புகழ்ந்துகொண்டு இருக்கும் போது பிரதமர் அலு வலகமே எங்களிடம் விவரம் எதுவுமில்லை என்று குறிப்பிட்டுள்ளது, மோடியின் ஆட்சியின் நிலை என்ன என்பதைத் தெளிவாக காட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது பிரதமர் மோடிக்கும் அவரது அலுவலகத்திற்கும் எந்த ஒரு தொடர்புமில்லை, பிரதமர் எந்த நாட்டிற்குச் செல்கிறார் என்பது கூட தெரியாமல் பத்திரிகை செய்திகள் வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றன. பிரதமர் தனது அலுவலக வேலைகளைத் தவிர மற்ற அமைச்சர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்று பார்ப்பதையே முக்கியமான பணியாகக் கொண்டு இருக்கிறார். இதனால் கேபினெட் அமைச்சரவையின் பணியில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன என்று கூறியிருந்தார். இதே போல் லண்டனில் இருந்து வெளிவரும் தி எகனாமிஸ்ட் என்ற இதழும் பிரதமர் தன்னுடைய பணியை விட்டுவிட்டு மற்ற எல்லா அமைச்சர்களின் பணியிலும் தலையிடுகிறார் என்று எழுதியிருந்தது. இவர்களின் கூற்றை பிரதமர் அலுவலகமும் உண்மை தான் என்று குட்டை உடைத்துவிட்டது. மோடி நிருவாகத்திற்கு ஈடு இணை ஏது? இதுவரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களிலேயே தலை சிறந்தவர் என்று தம்பட்டம் அடிப்பவர்களுக்கு இது அர்ப்பணம்!

சட்டியிலிருந்தால்தானே அகப்பையில் வரும்? வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்? குறிப்பிடத்தகுந்த சாதனைகளை மோடி அரசு செய்திருந்தால், கண்டிப்பாக பிரதமர் அலுவலக தகவல் தொடர்பு அதிகாரி தெரிவித்திருக்க மாட்டாரா?

அந்த அதிகாரி அதற்காகத் தானே பிரதமரின் அலுவலகத்தில் அமர்த்தப்பட்டுள்ளார்! ஓராண்டில் சாதனை என்பதெல்லாம் மக்களுக்கு வேதனைப் பரிசே தவிர வேறு என்னவாம்?

குதிரை கீழே தள்ளியதோடு குழியையும் பறித்த கதை போல நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றில் தீவிர கவனத்தை செலுத்தி விவசாயி மக்களின் வாழ்வில் விளையாடிப் பார்க்க அல்லவா ஆசைப் படுகிறது. பலன் விவசாயிகளின் தற்கொலைப் பட்டியல் தான் நீண்டு கொண்டே போகிறது. விவசாயிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கு வட்டி விகிதம் அதிகம்; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே மானியங்களும், கடனுக்கான வட்டி விகித குறைப்புகளும். எல்லாம் தலைகீழ் தான் நரேந்திரமோடி ஆட்சியில்; வேதனைப் பட்டியல் உண்டே தவிர சாதனைப் பட்டியலுக்கு எங்கே போவது?

இதில் ஜனநாயகத்தின் நேர்த்தி இழையைக் காண முடியவில்லை - சர்வாதிகாரத்தின் நெடி அல்லவா அனல் கக்குகிறது.Read more: http://www.viduthalai.in/page-2/102915.html#ixzz3cTihZ8q8

தமிழ் ஓவியா said...

மனிதத் தன்மை

மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும். - (விடுதலை, 13.8.1961)Read more: http://www.viduthalai.in/page-2/102914.html#ixzz3cTjAQt00

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத் தடை நீக்கம்: கலைஞர் வரவேற்புசென்னை, ஜூன் 8_ சென்னை அய்.அய்.டி.யில் அம்பேத்கர் _ பெரியார் வாசகர் வட்டத் தடை நீக்கம் செய்யப்பட்டதை வரவேற்று இன்று (8.6.2015) தி.மு.க. தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:_

31.-5.-2015 அன்று நான் விடுத்த அறிக்கையில், சென்னை அய்.அய்.டி. நிறுவனத்தில் உள்ள அம்பேத்கர் _ -பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர்கள் அமைப்பு குறித்து, யாரோ ஒருவர் அனுப்பிய அநாமதேய - மொட்டைக் கடிதத்தின் காரணமாக,மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, சம்பந்தப்பட்டோரிடம் எந்தவித விளக்கத்தையும் கேட்டுப் பெறாமல், அந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அமைதியாக இயங்கி வந்த அந்த நிறு வனம் தற்போது போராட் டக் களமாக மாறியுள்ளது. எனவே இந்தப் பிரச் சினையில் உடனடியாக பிரதமர் அவர்கள் நேரடி யாகத் தலையிட்டு, சென் னையில் உள்ள அய்.அய்.டி. நிறுவனத்தில் அமைதி யையும், ஆரோக்கியமான கல்விச் சூழலையும் நிலை நாட்ட உதவிடுவதோடு, அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதிக் கப்பட்டுள்ள தடையை உடனடியாக விலக்கிட ஆவன செய்திட வேண்டு மென்றும் கேட்டுக் கொண்டிருந்தேன். என் னைப் போலவே தமிழகத் தைச் சேர்ந்த வேறு பல கட்சிகளின் தலைவர்க ளும் இது பற்றி கண்டன அறிக்கைகள் விடுத்திருந் தனர். மாநிலங்களவை உறுப் பினர் கனிமொழி அந்த நிறுவன இயக்குனருக்கு நேரடியாகக் கடிதமே எழுதியிருந்தார். தி.மு. கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப் பட்டது. இவைகளின் விளைவாக நேற்றைய தினம் அய்.அய்.டி. நிர்வா கம் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடையினை நீக்கியதோடு, சுயேச்சையான அமைப் பாக அது செயல்பட அனு மதி அளித்திருப்பதாக இன்று ஏடுகளில் செய்தி வந்துள்ளது. அய்.அய்.டி. நிர்வாகத்தின் இந்த முடி வினை தி.மு. கழகத்தின் சார்பில் வரவேற்பதோடு, மாணவர்களின் இந்தப் போராட்டம் வெற்றி பெற ஒத்துழைத்த, போராடிய அனைவருக்கும் நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறேன்.Read more: http://www.viduthalai.in/page-4/102941.html#ixzz3cTja2LN8

தமிழ் ஓவியா said...

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ தக்காளியைத் தமது உணவில் சேர்த்து கொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 20 சதவீதம் குறைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.

உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாக, புராஸ்டேட் சுரப்பியில் காணப் படுகிறது. பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு 35 ஆயிரம் ஆண்களுக்கு இந்தப் புற்று நோய் ஏற்படுகிறது. அ

வர்களில் 10 ஆயிரம் பேர் இந்த நோய் காரணமாக இறந்து போகிறார்கள். பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டுமானால் உணவில் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதோடு, இறைச்சியின் அளவையும் கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது மருத்துவர் களின் பரிந்துரையாக இருந்து வருகிறது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வா ளர்கள் சுமார் 20 ஆயிரம் ஆண்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 50 முதல் 69 வயது வரை யானதாக இருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் வாரத்துக்கு குறைந்தது 1500 கிராம் தக்காளியை உணவில் சேர்த்துக் கொண்டவர்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் தோன்றுவதன் சாத்தியம் 18 சதவீதம் வீழ்ச்சியடைந்ததை இவர்கள் கண்டறிந்தனர்.

அத்துடன் சராசரியாக ஒரு நாளைக்கு தங்களின் மொத்த உணவில் குறைந்தது 500 கிராம் பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும், சாப்பிட்டவர்களுக்கு புராஸ்டேட் புற்று நோய் தாக்குவதற்கான சாத்தியம் 24 சதவீதம் அளவுக்குக் குறைவதையும் இவர்கள் கண்டறிந்தனர்.

புராஸ்டேட் புற்றுநோய் தடுப்பில் தக்காளி முக்கிய பங்காற்றுவதாகத் தங்களின் ஆய்வு கண்டறிந் திருப்பதாகக் கூறும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறையைச் சேர்ந்த வனசாஏர், அதே சமயம், இதை உறுதி செய்ய வேண்டு மானால் இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். எனவே தக்காளியை ஆய்வாளர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.Read more: http://www.viduthalai.in/page-7/102921.html#ixzz3cTjquTRn

தமிழ் ஓவியா said...

எண்ணற்ற நோய்களுக்கு மருந்தாகும் முருங்கைபச்சைக்கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம் தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும் என்று சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதை யர்கள். கீரை வகைகளில் இரும்புச்சத்து கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக்கீரையின் பயன்களைப் பார்ப்போம்.

முருங்கைமரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப்பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேக வைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம் , உடல் சூடு, கண் நோய் , பித்த மூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக்கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது.

இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவே தான், இக்கீரைக்கு விந்துகட்டிஎன்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளிசேர்த்தோ சமைப்பது நலம்.முருங்கைப் பட்டையை நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும். முருங்கை இலைகளில் இரும்பு , தாமிரம்,சுண்ணாம்புச்சத்து ஆகியவை இருக்கின்றன.

இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைப்பட்டை, உலோகச்சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.

கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப்புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்காய் கை கண்ட மருந்து. முருங்கைக்காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக்காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே.

இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண்நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒரு முறையோ இரண்டு முறையோ முருங்கைகாயை உணவாக உபயோகித் தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன.

வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம்.

இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கைவிதைக்கு முதலிடம் தரலாம். முருங்கைமரத்தி லிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. இந்த மரத்தின் வேர் மற்றும்பிசின் சம் பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல்தள்ளிப்போகும்.

மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப்பூ வெப்பத்தை உண்டு பண்ணக் கூடியது தான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப்பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப்பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப் பிணி களுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.

கர்ப்பப்பையின் மந்தத்தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும்ப தார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.Read more: http://www.viduthalai.in/page-7/102922.html#ixzz3cTjyHsWw

தமிழ் ஓவியா said...

வெயில் கால வெப்பக் கோளாறுகளை குணமாக்கும் பாசிப்பயறு!பாசிப்பயறு இந்தியாவில் விளையக்கூடிய சத்தான பயறு வகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன் பின்னர் தெற்கு சீனா, இந்தோ - சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில் தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது.

பாசிப்பயறில் உள்ள சத்துக்கள் இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கி யுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கி யுள்ளன. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம்.

எளிதில் செரிமானமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம்பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக் கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

காய்ச்சல் குணமாகும்

சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊற வைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதே போல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

நினைவுத் திறன் கூடும்

மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத் திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.Read more: http://www.viduthalai.in/page-7/102925.html#ixzz3cTk5BuMX

தமிழ் ஓவியா said...

ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு தேவை?

உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாகும். நீரிழிவு நோய்க்குக் காரணமாகும். உயர் ரத்த அழுத்தத்துக்கு உப்பே முழு முதல் காரணம்.

நான்கு பேர் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்குத் தேவையான அதிகபட்ச உப்பின் தேவை 4 டீஸ்பூன்தான். ஆனால், ஒவ்வொரு உணவிலும் நான்கு டீஸ்பூன் உப்பைக் கொட்டினால், அதனால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்.

மனிதன் ஆரோக்கி யமாக வாழ, ஒரு நாளைக்கு 2 கிராம் அளவுக்கு மேல் உப்பு தேவையில்லை. உப்பைக் குறைக்கக் குறைக்க அதற்கேற்ப உங்களுடைய படபடப்பும் குறைவதை உணரலாம்.

பழங்கள், காய்கறிகளில் இயல்பிலேயே அதிகமாக இருக்கும் பொட்டாசியம் சத்து உடலில் உப்பு சேர்வதைக் கட்டுப்படுத்துகிறது. அதனால், இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இதிலிருந்து பெறப்படும் வைட்டமின் - பி, சிறுநீரகச் செயல்பாட்டைச் சீராக்கி, ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருப்பதற்கு உதவும்.

தமிழ் ஓவியா said...

பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப்பில் பகுத்தறிவுப் பணிகளை விரைவுபடுத்தவேண்டும்
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

சென்னை, ஜூன் 8_ பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் 07.06.2015 ஞாயிறு காலை 11 மணியளவில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. கலந்துரையாடலுக்கு பகுத்தறிவாளர் கழகத் தின் புரவலர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு, பொதுச் செயலாளர்கள் தகடூர் ஜெ.தமிழ்ச்செல்வி, தஞ்சை மா.அழகிரிசாமி, மாநில துணைத்தலைவர்கள் வட சேரி வ.இளங்கோவன், கோ.ஒளிவண்ணன், அண்ணாசரவணன், பேரா.திருமாவளவன், ச.குரு சாமி(கே.டி.சி), மாநில பொருளாளர் சி.தமிழ்ச் செல்வன்,

மாநில அமைப்புச்செயலாளர் இரா. தமிழ்ச்செல்வன், தாம்பரம் மாவட்ட ப.க.தலைவர் அ.தா.சண்முகசுந்தரம் ஆகியோர் பகுத்தறிவாளர் கழகத்தின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்யலாம் என்பது குறித்தும் தங்களது பங்களிப்பும் குறித்தும் எடுத்துரைத்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் தனது வழிகாட்டுதல் உரையில், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டதைக் கண்டித்தும், மதச்சார்பின் மைக்கு எதிராக நடக்கும் மத்திய_ மாநில அரசு களின் போக்குகளைக் கண்டித்தும் கருத்தரங்கு களை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக பல் வேறு இடங்களில் நடத்தவேண்டும்.

நமது இயக்க கொள்கைகளை மக்களிடம் கொண்டுசெல்ல, பெரியார் நகர்வு புத்தகச் சந்தைகளை ஊர்தோறும் நடத்துகின்றோம். இந்த நகர்வு புத்தகச் சந்தைகள் நல்ல முறையில் நடைபெற திராவிடர் கழகப் பொறுப்பாளர்களுக்கு அனைத்து ஒத்துழைப்பு களையும் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் கள் செய்தல்வேண்டும்.

பெரியார் ஆயிரம் வினா_ விடைப்போட்டிகள் நடைபெறவுள்ளன. பகுத்தறிவாளர் கழகத்தின் சார் பாக ஆக்க நடவடிக்கை (core) குழு ஏற்படுத்தி, அப்போட்டிகள் செம்மையாக நடைபெறச் செய் யுங்கள். நமது புத்தக வெளியீடுகள் - புத்தக அறிமுக நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி கணக்குகளை இந்த மாத (ஜூன் 30) இறுதிக்குள் ஒப்படையுங் கள்.

அறிவியல் மனப்பான்மை வளர நமது தொடர் பிரச்சாரங்கள்தான் அடிப்படை, அதனைத் தொடர்ந்து நிகழ்த்துங்கள் என்று அறிவுறுத்தி னார்.

கீழ்க்கண்ட பிரச்சினைகள் குறித்து கலந்துரை யாடலில் விவாதிக்கப்பட்டன.

1) பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொறுப் பாளர்கள் மாவட்டங்கள்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும். மண்டல அளவில் நாலைந்து மாவட்டங்களை இணைத்து கலந்துரை யாடல் நடத்தி அமைப்புப் பணிகளை விரிவுபடுத்த வேண்டும். அமைப்புகள் இல்லாத கழக மாவட் டங்களில் அமைப்புகள் ஏற்படுத்தவேண்டும்.

2) உறுப்பினர் சேர்க்கை பணி மேற்கொள் ளப்படவேண்டும். உறுப்பினர் படிவங்கள் மாவட் டப் பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டு உறுப் பினர் சேர்க்கை முழுமைப்படுத்தப்படவேண்டும்.

3) இணையதளப் பிரச்சாரத்தில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்_அப் போன்றவற்றில் பகுத்தறி வாளர் கழகப் பொறுப்பாளர்களின் பணி இன்னும் அதிகளவில் விரைவுபடுத்தப்படவேண்டும்.

4) மாநிலப் பொறுப்பாளர்களின் பொறுப்புகள், பணிகள் வரையறுக்கப்படல் வேண்டும். செய்யப் பட்ட பணிகள் குறித்த விவரங்கள் கொடுக்கப்படல் வேண்டும்.

பகுத்தறிவாளர் கழகப் புரவலர், தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுத லில் மாநிலப் பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர்களின் குழுக்கள் அமைக்கப்பட்டன.

பகுத்தறிவாளர் கழக அமைப்புக் குழு

மா.அழகிரிசாமி _ இரா.தமிழ்ச்செல்வன்

ஊடகம், செய்தி ஊடகம் - இணையதளம்

வீ.குமரேசன் _ கோ.ஒளிவண்ணன்,

புத்தகங்கள் அறிமுகக்குழு

தகடூர் ஜெ.தமிழ்ச்செல்வி, வடசேரி வ.இளங் கோவன், அண்ணா சரவணன்.

அறிவியல் மனப்பான்மைக்குழு

டாக்டர் சி.தமிழ்ச்செல்வன், மு. ந. நடராசன்

உறுப்பினர் சேர்க்கைக்குழு

வா.நேரு _ வீ.குமரேசன்

பெரியார் ஆயிரம் ஆக்கக் குழு

வா.நேரு, மா.அழகிரிசாமி, பேரா. திருமாவளவன், க.நல்லதம்பி, ச.குருசாமி (கே.டி.சி)

தகவல் தொடர்பு குழு

மா.அழகர்சாமி, ஆ.முனியன்

மாவட்டங்கள் கலந்துரையாடல் கூட்டம்

இடம்: மத்தூர், நாள்: 28.06.2015 காலை 10 மணி- கலந்துகொள்ளும் மாவட்டங்கள்: தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, செய்யாறு

இடம்: சேலம் நாள்: 28.06.2015 மாலை 5 மணி- பங்கேற்கும் மாவட்டங்கள் : சேலம், ஆத்தூர், மேட்டூர், நாமக்கல், ஈரோடு, கோபி.Read more: http://www.viduthalai.in/page-8/102929.html#ixzz3cTkPprea

தமிழ் ஓவியா said...

மேகி விற்பனை அதிகரிப்புக்கு சோம்பல் மிகுந்த இளம் தாய்மார்களே காரணமாம் பாஜக பெண் எம்.எல்.ஏ-வின் பேச்சால் பரபரப்பு

புதுடில்லி, ஜூன் 8_ மேகி விற்பனை அதி கரிக்க சோம்பலான தாய் மார்களே காரணம் என்று கூறிய பாரதீய ஜனதா எம்.எல்.ஏ பேச்சு சர்ச்சை யாக வெடித்துள்ளது.

மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்டதை விட ரசாயனம் அதிகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, இந்தி யாவில் பல்வேறு மாநி லங்களில் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த நட வடிக்கையை மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ உஷா தாகூர் வரவேற்றுள்ளார்.

இன்றைய தலைமுறை தாய்மார்கள் சோம்பல் காரணமாக விரைவு உணவு நூடுல்ஸ்களை குழந்தைகளுக்குத் தருவ தாகக் கூறிய அவர், அதன் காரணமாகவே மேகி போன்ற உணவு பொருள் களின் விற்பனை அதி கரித்து இருப்பதாக தெரி வித்தார்.

மக்கள் மீதான அக் கறை காரணமாகவே மேகிக்கு பாஜக அரசு தடை விதித்திருப்பதாக கூறிய உஷா தாகூர், மேகி போன்ற விரைவு உணவு களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட் டுக்கொண்டார். பாஜக பெண் எம்.எல்.ஏ.வின் இத்தகைய பேச்சு சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கள்  சட்டமன்ற உறுப்பி னர்கள் தொடர்ந்து ஏதா வது உளறி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நட வடிக்கை தொடர்கதை யாகி வருகிறது.