Search This Blog

2.6.15

பெரியார் எப்போது பார்ப்பனர்களின் பூணூலை அறுக்கச் சொன்னார்? அதற்கு என்ன ஆதாரம்?துக்ளக்குக்கு பதிலடி!

துக்ளக்குப் பதிலடி! பிரித்தாளும் நரியே போற்றி!

 மத்தியில் பாரதிய ஜனதா தலை மையிலான ஆட்சி - அதன் நடவடிக் கைகள் - அக்கட்சியின் அமைச்சர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பிஜேபியின் ஆணி வேர்களான சங்பரிவார் வட்டாரங்கள் நடந்து கொள்ளும் போக்குகளாலும், செயல் பாடுகளாலும் - தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும் - திராவிடர் கழகக் கொள்கைகள் பற்றியும், பாபா சாகேப் அம்பேத்கர் இந்து மதத்தை எதிர்த்துக் கூறிய கருத்துக்கள் பற்றியும், இந்து மதத்திலிருந்து லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களுடன் முழுக்குப் போட்டு, பவுத்தத்திற்குச் சென்றது குறித்தும், இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் - ஏன், பார்ப்பனர் அல்லாதார் அருமையாக அவசியமாக சிந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


கீதையைத் தூக்கிப் பிடிப்பது. அதனைப் பாடத் திட்டத்தில் வைப்பது - சமஸ்கிருதத்தைத் திணிப்பது - கங்கையைச் சுத்தப்படுத்தப் போகி றோம் என்பது - ராமர் பாலத்தை(?)  இடிக்க விடோம் என்பது எல்லாம் பார்ப்பனர்கள் இன்னும் திருந்திட வில்லை; சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தார்கள் என்ற எண்ணம் வெகு மக்கள் மத்தியிலே பெரு நெருப்பாகக் கனன்று கிளம்பி விட்டது.
சென்னை அய்.அய்.டி.யில் அம் பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தைத் தடை செய்ததன் விளைவை நாடே இன்று பார்த்துக் கொண்டு இருக்கிறது. புலியை இடறியதன் விளைவை அனு பவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் பார்ப்பன அறிவு ஜீவிகள் என்று கருதிக் கொண்டு இருக்கக் கூடிய பார்ப்பனர்கள், துக்ளக் போன்ற பார்ப்பன ஏடுகள்.

பெரியாரும், அம்பேத்கரும் இரு துருவங்கள், அம்பேத்கர் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்று சொன்னவர், பெரியார் தலித்து களுக்கு எதிரி என்று இந்தத் தலை வர்கள் பெயரால் தாழ்த்தப்பட்டவர் களையும், பிற்படுத்தப்பட்டவர்களை யும் பிரிக்கும் - பிளவுபடுத்தும் சச்சரவுகளை  ஏற்படுத்தும் (இவர்களின் ஆசை இது! - இது நடக்குமா என்பது வேறு பிரச்சினை) நரித் தந்திர நச்சுவேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பெரியார்பற்றி மறைந்த ஜீவா என்ன பேசினார் தெரியுமா? என்று துக்ளக் கில் (10.5.2015) ஒருவர் எழுதியுள்ளார்.

தலைவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்படுவதோ, ஒரு கட்டத் தில் ஒருவருக்கொருவர் மாறுபட்டுக் கருத்துக் கூறுவதோ தவறான ஒன்றல்ல; சில பிரச்சினைகளில் மாறுபடுவதாலேயே அடிப்படையில் வேறுபடுகின்றனர் என்று பொருளல்ல.

ஆனால், இந்தத் தலைவர்களின் அடிப்படை நோக்கம் அதற்கான பணிகள் எதை நோக்கி என்பதுதானே முக்கியம்.

பெரியார் பற்றி ஜீவா சொன்னதாக  துக்ளக் கூறுகிறதே - ஜீவாவின் நூலிலி ருந்தோ, ஆதாரத்திலிருந்தோ அதனை எடுத்துக் காட்ட முடியவில்லையே ஏன்? ஜீவா சொன்னதாக யாரோ ஒரு கிருஷ்ண மாசார்யர் எழுதிய நூலிலிருந்து எடுத்துக் காட்டுவதுதான் அறிவு நாணயமா?


கண்டாரைக் கண்டாரைக் கண்டேன் என்று பொத்தாம் பொதுவாக தெருப் புழுதியாக மண்ணை வாரி இறைப்பவர் களின் மண்டைக்குள் குடைந்து கொண்டு இருப்பது தந்தை பெரியார் என்னும் பகுத்தறிவுப் பூகம்பம்.
துக்ளக்கில் வெளி வந்துள்ள கட்டுரை எதன் அடிப்படையில்? திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.  பூங்குன்றன் எழுதி துக்ளக்கில் (6.5.2015) வெளிவந்த மறுப்புக் கட்டுரைக்குப் பதில் என்ற முறை யில் அந்தக் கட்டுரை வெளி வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அவர் எழுதிய மறுப்புக்கு நேர்மையான முறையில், அறிவார்ந்த முறையில் துக்ளக் கட்டுரையில் பதில் எழுதப்பட்டுள்ளதா?

பெரியார் எப்போது பார்ப்பனர்களின் பூணூலை அறுக்கச் சொன்னார்? அதற்கு என்ன ஆதாரம்? என்ற கேள்விக்கு நாணயமாக துக்ளக் என்ன பதில் எழுத வேண்டும்?


இந்த இடத்தில் இன்ன தேதியில்  பெரியார் சொன்ன கருத்து - இந்த ஏட்டில் இந்தத் தேதியில் வெளிவந்தது என்று சொன்னால் அதற்குப் பெயர்தான் அறிவு நாணயம் என்பது. அதனை விட்டு, ஜீவா சொன்ன தாக - இன்னொருவர் இன்னொரு நூலில் குறிப்பிட்டுள்ளார் என்பதுதான் நியாய மான பதிலா?

அதே ஜீவா அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்பதை எங்களால் எடுத்துக்காட்ட முடியுமே! தேதி உட்படக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமே! இதோ ஜீவா பேசுகிறார் கேளுங்கள்.

கருத்து ஒற்றுமைபட்டு ஒன்று சேர்ந்து மன மகிழ்வோடு கலந்து கொள்கிறேன். அன்றைய தினம் பிரிந்து சென்றது துணிச்சல் என்று வைத்துக் கொண்டாலும் சரி, ஆனால், அன்றைய தினம் கூறியது எல்லாம் ஒரே ஒரு வாக்குதான், அதாவது பெரியார் அவர்கள் சுயமரியாதைக்காரர் அல்ல என்று பேசி விட்டு வெளி யேறினேன்; ஆனால் இன்றைய தினம் பெரியார் அவர்களுடைய பெரிய சமூக சேவையையெல்லாம் கண்ட பிறகு தமிழ்நாட்டின் தலைவர் பெரியார் என்று மனப் பூர்வமாக மட்டுமல்ல. அறிவுப் பூர்வமாக சரித்திரத்தின் நடைமுறையிலே கண்ட உண்மையின் பூர்வமாக பெரியார் அவர்களுக்கு ஈடு இணையாக யாரும் இல்லை எனக் சொல்லுவதற்குத்தான் இங்கு நிற்கிறேன்.

பணக்காரத் தன்மையையும், வைதீகத் தையும் ஆளத் தெரியாத அரசாங்கத் தையும், கடவுளையும் கண்டித்தே வந்திருக்கிறார். இந்த 25 ஆண்டுகள் ஓய்வு ஒளிவுமின்றி.

மாபெரும் காரியங்களை எல்லாம் சாதித்து வந்து இருக்கும் அய்யா அவர் களைப் பற்றிப் பேசும்போது கொஞ்சம் நிதானமாகத்தான் பேச வேண்டும். இஷ்டம் போல சொல்லும்போது யாரை யும் வானளாவப் புகழ்ந்து கூறலாம். ஆனால், பெரியார் அவர்கள் செய்த பெரும் சாதனைகள் மக்கள் கண்முன் நின்று கொண்டிருக்கும்போது அப்படிப் புகழ்ந்து கூற நிதானம் மிகவும் தேவை தான். ஏனென்றால், அரசியல் தெளி வோடு ஆராய்ந்து பார்க்கும்போது பெரியார் அவர்கள் 25 ஆண்டுகளாக விடாமல் ஒரு பெரும் கூட்டத்தாருக்குத் தலைவராகவே இருந்து வருகிறார் என்பது தெரியும். மற்ற தலைவர்களில் பெரும்பாலோர் கட்சியின் தலைவராக இருந்துதான் வந்திருப்பார்கள். ஆனால், அய்யா அவர்கள் மாத்திரம் இயற்கை யாய் வெகுநாள்களாக மக்களுடைய தலைவராகவே இருந்து வருகிறார்கள். என்றைய தினமும் அய்யாவை மக்கள் பிரிந்தது கிடையாது. தமிழ் மக்களின் வாழ்க்கையின் அடிப்படையில் பெரியார் அவர்களின் நினைப்பு வேரூன்றித் தான் இருக்கும். இருபது ஆயிரம் பேர்கள் கூட்டத்திலே பேசியும் இருக்கலாம். லட்சம் பேர் கூட்டத் திலேயும் பேசி இருக்கலாம். இருநூறு பேர் கூட்டத்திலேயும் பேசி இருக் கலாம். ஆனால், மக்களின் மனதிலே வேறுபாடின்றி எப்போதுமே மக்களின் தலைவராகவே விளங்கி வந்தி ருக்கிறார். வாழ்க்கை யின் போக்கிலே ஏற்றத் தாழ்வு இருக்கலாம். ஆனால், கொள்கையிலே ஏற்றத்தாழ்வு காண முடியாது.

இப்படிப்பட்ட ஒரு கட்சி உலக சரித்திரத்திலே இந்தியாவிலே இருக்க முடியாதது. அந்த அளவுக்கு அதிலே உழைத்து வந்திருக்கிறார்
லெனின் சொல்லுகிறார். மக்களு டைய இதயத் துடிப்பை நேர்மையாகத் தேடிப் பிடித்து எவன் தெரிந்து கொள் ளுகிறானோ, அவன் உண்மையான கம்யூனிஸ்டாக முடியுமென்று கூறு கிறார். அதைப் போல பெரியார் அவர்களும், மக்களின் போக்கு எப்படி இருக்கிறது என்று பார்த்து, யாரை முன்னுக்குக் கொண்டு போக வேண்டுமோ அந்த சமூகத்தினரை முன்னுக்குக் கொண்டு வரப்பாடுபட வேண்டுமென்கிறார். ஆகவே, தந்தை பெரியார் அவர்கள் நம் நாட்டிற்கு மட்டுமல்ல. இந்திய நாட்டிற்கே ஒரு பெரும் மக்கள் தலைவர் எனக் கூற வேண்டும்.
-----------------------------------(பெரம்பூர் செம்பியம் பொதுக் கூட்டத்தில் 23.11.1951 அன்று தோழர் ஜீவானந்தம் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து விடுதலை 27.11.1951 பக்.3)

தந்தை பெரியார் யார்? அவர் எதற் காகப் பாடுபட்டார்? அவர் உண்டாக்கிய கட்சி போல் உலக சரித்திரத்திலே இந்தியாவிலே இருக்க முடியாது - அந்த அளவுக்கு உழைத்து இருக்கிறார் என்று தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும், அவர்தம் இயக்கம் குறித்தும் பேசி இருக்கிறாரே ஜீவா - அதையெல்லாம் மறைத்து விட்டு அய்யோ கங்காதரா மாண்டாயா? என்று ஒப்பாரி வைப்பது என்பது பூணூல் கூட்டத்திற்கே உரிய கைவந்த கலையாகும்.

அவர்கள் திருந்தவில்லை;  திருந்தப் போவதும் இல்லை என்பதை அன்றாடம் நிரூபித்துக் கொண்டுதான் வருகிறார்கள் - அய்.அய்.டி. பிரச்சினை வரை.

Tail Piece

உண்மையைச் சொல்ல வேண்டு மெனில் பார்ப்பனர்களின் உச்சிக் குடுமியையும் பூணூலையும் அறுக்கச் சொன்னவர் திரு மூலர்தான்.

நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே
(திருமந்திரம் 230)

-----------------கலி. பூங்குன்றன் அவர்கள் 2-06-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

Read more: http://www.viduthalai.in/page-2/102566.html#ixzz3buY9woQS

31 comments:

தமிழ் ஓவியா said...

புலியை இடறியதன் விளைவு: மும்பை அய்.அய்..டி.யில் அம்பேத்கர் - பெரியார் - புலே வாசகர் வட்டம் தோற்றம்

மும்பை, ஜுன்1_ சென்னை அய்.அய்.டி.யில் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தைத் தடை செய்ததன் விளைவு _- எதிரொலியாக மும்பை அய்.அய்.டி.யில் அம்பேத்கர் பெரியார் புலே வாசகர் வட்டம் புதிய அமைப்பு உருவாகியுள்ளது.

சென்னை அய்.அய்.டி மாணவர்களின் அமைப் பாகிய அம்பேத்கர் பெரியார் வாசகர் வட் டத்துக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடையைக் கண் டித்து ஜனநாயக உரிமை கோருபவர்களும், கருத்து ரிமை கோருபவர்களும் கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டம் நடத்துபவர்கள்மீது தாக்குதலா?

தேசிய அளவில் அந் தத் தடையை கண்டித்து மாணவர் அமைப்புகள் கிளர்ந்து எழுந்து போராட் டத்தில் குதித்துள்ளனர். புதுடில்லியில் இந்திய தேசிய மாணவர் ஒன்றியம் சார்பில் புதுடில்லியில் போராட்டத்தை நடத்தி னார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாண வியர்மீது காவல்துறை யினர் கடுமையாக நடந்து கொண்டு தாக்கி உள்ள னர். அத்தாக்குதல்களைக் கண்டித்து சென்னை அய்.அய்.டி மாணவர்கள், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அமைப்பு மாணவர்கள் கடும் கண் டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை அய்.அய்.டி. மாணவர்கள்

தேசிய அளவில் விவா தமாக உருவாகி இருப்பது என்னவென்றால், சென்னை அய்.அய்.டி. நிறுவனத்தின் தலைவராக இருப்பவரிடம் எந்த விதத்திலும் நீதி, நேர்மை ஏதும் கிடையாது. நிர்வாக ரீதியாக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட் டத்துக்கு தடைவிதிப்பதற் கான உரிமை அல்லது தனிப்பட்ட மாணவரின் சுதந்திரத்தில் தலையிடும் உரிமை என்று எதுவுமே அவருக்கு கிடையாது.

அவருடைய தனிப் பட்ட வலதுசாரி சிந் தனைகளுடன், தன்னு டைய அதிகாரத்தை தவ றாகப் பயன்படுத்துவதா கவே அவருடைய செயல் இருக்கிறது. மாணவர்கள் தங்களின் கருத்துகளை நிகழ்ச்சிகளின் வாயி லாகவோ, துண்டறிக்கை களை வழங்குவதன் வாயி லாகவோ இன்னும் பிற வகையிலோ கருத்து தெரி விப்பதைக் கண்காணிப்ப தற்கோ, கட்டுப்படுத்துவ தற்கோ நிர்வாகத்துக்கு எவ் வித அதிகாரமும் இல்லை.

அய்.அய்.டி நிறுவப் பட்ட காலத்திலிருந்து சர்வாதிகார முறையில் இது போன்ற கருத்துகளுக்கான சுதந்திரங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதேநேரத்தில் வலது சாரிக் குழுக்களாக உள்ள பார்ப்பனீய கொள்கை களைப் பரப்புவதற்கு மட்டும் அனுமதிக்கும் நிலை இருந்துவருகிறது.

விவேகானந்தா வாசகர் வட்டம் Vivekananda study circle (VSC) வந்தே மாத ரம் உள்ளிட்டவை மற்றும் அலுவலக ரீதியில் இல் லாமல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகா ஆகிய வற்றைச் செய்து வருகின் றது. விவேகானந்தா வாசகர் வட்ட அமைப்பு செயல்படுவதற்காக தனியே பிரம்புத்திரா விடுதியில் இணைந்துள்ள நூலகத்துடன் கூடிய ஓர் அறையும், அய்.அய்.டி. இணைய தளத்தின்மூலம் இணைந்திருக்கும் வசதி யும், அதன் தொடர்புடைய மின்னஞ்சல் வசதியும் அளிக்கப்பட்டுள்ளதுடன், நிதிவசதியும், அய்.அய்.டி அரங்குகளையும் பயன் படுத்திக்கொள்ளவும் உள் ளட்ட பல்வேறு வகை யிலும் விவேகானந்தா வாசகர் வட்டம் அமைப்பு செயல்படுவதற்கான அனைத்துவகையிலான வாய்ப்புகளும் சென்னை அய்.அய்.டியில் வழங்கப் பட்டுள்ளன.

ஆகவே, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட் டத்தின் சார்பில் கீழ்க் காணும் வசதிகளை அளிக் குமாறு கேட்டுக்கொள் கிறோம். சென்னை அய். அய்.டி. வளாகத்துக்குள் எந்த ஒரு மாணவர் அமைப்பாக இருப்பினும் எவ்வித கேள்விகளும், இடையூறுமின்றி, சுதந் திரமாக இயங்க வேண்டும்.

விவாதங்கள் நிகழ்ச் சிகளை நடத்திட அய். அய்.டியின் எந்த விடுதி யிலாவது நிரந்தரமான அறை ஒதுக்கப்பட வேண்டும். நூலகத்துக்கு போதிய இடத்தை அளிக்க வேண்டும். மாணவர்களின் தகவல்களை அளிப்பதற்கு அய்.அய்.டியின் இணைய தளத்தில் இடம் ஒதுக்க வேண்டும். மாணவர்கள் தொடர்பு கொள்ள மாண வர்மின்னஞ்சல் (SMail) கணக்குகள் தொடங்குவ தற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும். மாண வர் அமைப்புகளுக்கு என ஒதுக்கப்படும் நிதியை சம அளவில் அனைத்து மாண வர் அமைப்புகளுக்கும் வழங்கிட வேண்டும்

இந்த கோரிக்கைகளை சென்னை அய்.அய்.டி மாணவர் அமைப்பாகிய அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் சார்பில் மாணவர்கள் கோரி உள்னர்.

மும்பை அய்.அய்.டி.யில் புதிய அமைப்பு

சென்னை அய்.அய்.டி. யின் தடையை எதிர்த்து மும்பையில் மும்பை அய். அய்.டி மாணவர்கள் சார்பில் கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் மனிதச் சங்கிலிப் போராட் டத்தை நடத்தி உள்ளனர்.
சென்னை அய்.அய்.டி யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத் தடையின் எதிரொலியாக சமுதாயத் தில் அரும்பெரும் பணி களை ஆற்றியுள்ள தலை வர்களின் பெயரில் மும்பை அய்.அய்.டி. மாணவர்களின் சார்பில் அம்பேத்கர் பெரி யார் புலே வாசகர் வட்டம் என்ற புதிய அமைப்பு உருவாகி உள்ளது.Read more: http://www.viduthalai.in/e-paper/102547.html#ixzz3bungdqxe

தமிழ் ஓவியா said...

பஞ்சாயத்து என்ற பெயரால் நடைபெறும் ஜாதிக் கொடுமைகள், பெண்ணடிமைத்தனங்களை ஒழிக்க தனிச்சட்டம் கோரி ஆர்ப்பாட்டம்திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறையினர் திரண்டனர்
சென்னை, ஜுன்2_ சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று (1.6.2015) மாலை 4.00 மணியளவில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி தலைமையில் இந்தியா முழுவதிலும் பஞ்சாயத்து என்ற பெயரில் நடை பெறும் ஜாதிக்கொடுமைகள், பெண்ணடிமைத்தனங் களை ஒழிக்க தனிச்சட்டம் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள், மகளிரணி கு.தங்கமணி, சுமதி கணேசன், த.மரகதமணி, தேன்மொழி ஆகியோர் முன்னிலையில் வழக்குரை ஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி தொடக்க உரை ஆற்றினார். சென்னை மண்டல மாணவரணி செய லாளர் பா.மணியம்மை, பெரியார் களம் இறைவி ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர்.

விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு.தாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.வீரபத்திரன், கே.இராசேந்திரன், பேராசிரியர் ராமு, பெருமாள், விஜயலட்சுமிதாஸ், திண்டிவனம் மாவட்டச் செயலாளர் நவா.ஏழுமலை, மாவட்ட மகளிரணி விஜயலட்சுமி, மாவட்ட பாசறை சரோஜா, சாந்தி பரந்தாமன், வடசென்னை மாவட்டத் தலைவர் தி.வே.சு.திருவள்ளுவன், மாவட்டச் செயலாளர் வெ.மு.மோகன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மயிலை சேதுராமன், தொழிலாளரணி பாலு, சி.செங் குட்டுவன், ஆவடி மாவட்டச் செயலாளர் பா.தென்னரசு, கலைமணி, தென் சென்னை இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன், செயலாளர் சண்முகப்பிரியன், ஈழமுகிலன், பெருமாள், வடசென்னை இளைஞரணி தளபதி பாண்டியன், திருவொற்றியூர் கணேசன், ஒளிவண்ணன், திண்டிவனம் சிந்தனைசிற்பி, முத்தழகன், புழல் நகரத்தலைவர் ஏழுமலை, ஜனாதிபதி, சுவர் எழுத்து இரணியன், நா.பார்த்திபன், ஓவியர் பாசுகர், பொன்னேரி பாலு, தரமணி மஞ்சுநாதன், இராசேந்திரன், பட்டாளம் பன்னீர், தாம்பரம் பாசு.ஓவியச் செல்வன், கோ.சுரேஷ், ரேவந்த், சிவக்குமார், திலீபன், இரா.சத்தீஷ், வ.மணி கண்டன், சண்முகம், இராமதுரை, யுவராஜ், மகேசுவரன், முத்துராஜ், ஆனந்த், இசையின்பன், ஆவடி தமிழ்மணி, எழில், தொழிலாளரணி துணை செயலாளர் செல்வராசு, மதிவாணன், மகளிரணி உமா, சி.வெற்றிச்செல்வி, வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி, செ.பூங்குழலி, மீனாட்சி, திலகவதி சென்னியப்பன், மோ.மீனாகுமாரி, பாக்யா கலைமணி, ஆவடி பாசறை செயலாளர் பெரியார் செல்வி, மு.சந்திரா, அறிவுச்சுடர், ஈசுவரி, சீனியம்மாள், பகுத்தறிவு, அஜந்தா, வி.யாழ்ஒளி, வி.வளர்மதி, வி.தங்கமணி, கோ.குமாரி, கீர்த்தி, பூவை செல்வி, பொன்மணி, தென்னரசி, விஜயா, திலகவதி, பசும்பொன், குடியாத்தம் ஓவியா, நிலா, பெரியார் பிஞ்சுகள் கவியமுதன், செம்மொழி, பகுத்தறிவு உள்பட சென்னை மண்டலத்தைச் சேர்ந்த தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, ஆவடி கழக மாவட்டங்களின் சார்பில் கழகத் தோழர்கள், தோழியர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்ட முடிவில் மு.பவானி நன்றி கூறினார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட்ட விளக்க உரை

திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறையின் சார்பாக திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறை நுதல்செல்வி தலைமை ஏற்று இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஆர்ப்பாட்டமானது, கடந்த ஒரு மாதமாக இந்தியாமுழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கொடுமைகளும் தொடர்ந்து நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. இதைக் கவனித்த தமிழர் தலைவர் அவர்கள் ஓர் அறிக்கையின் வாயிலாக இந்தப் போராட்டத்தை அறிவித்தார்கள்.

தமிழ் ஓவியா said...

குறிப்பாக மகாராட்டிர மாநிலத்திலே ஒரு தாழ்த்தப்பட்ட தோழர் வைத்திருந்த கைப்பேசியில் அம்பேத்கர் பாடல் இடம் பெற்றிருந்தது என்று இருந்த காரணத்தால் அங்கே இருந்த உயர்ஜாதியினர், அவரை அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் மீரட் பகுதியிலே பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்கிற கட்டுப்பாட்டை மீறி ஆறு பெண்கள் குடும்ப வறுமையைப் போக்குவதற்காக வேலைக்கு சென்றார்கள். உடனே, ஊர்ப்பஞ்சாயத்து என்று கூடி, அந்த பெண்களை அடித்து உதைத்தது மட்டுமல்லாமல், கிராமமே அவர்களைப் புறக்கணித்தது.

அந்த புறக்கணிப்பிலிருந்து அவர்கள் மீள வேண்டுமென்றால், ஓர் இலட்சரூபாய் பணம் கட்ட வேண்டும். அந்த ஒரு லட்சரூபாய் பணத்தை கிராமத்தில் உள்ளவர்களிடம் கடனாக வாங்கி, அதற்கு வட்டி சதவிகிதம் 120 சதவிகிதம் கொடுத்து, அந்தக் கடன் அடைத்து, அந்தத் தண்டனையிலிருந்து விடுபட வேண்டும் என்று செய்தி வருகிறது.

மூன்றாவதாக பாட்னாவிலிருந்து ஒரு செய்தி வருகிறது. ஒரு யாதவ இளைஞன் மாற்று ஜாதி பெண்ணைத் திரு மணம் செய்து கொண்டான் என்பதற்காக ஊர்ப்பஞ்சாயத் தைக் கூட்டி 50ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக் கிறார்கள்.
அதைவிடக் கொடுமை பஞ்சாபிலே பேருந்திலே சென்று கொண்டிருந்த ஒரு தாயையும், மகளையும் அங்கே இருந்த இரண்டு காலிகள் பாலியல் தொந்தரவு செய்த நேரத்தில் அதிலிருந்து மீள முடியாத சூழ்நிலையில் அந்தப் பெண் பேருந்திலிருந்து குதித்துவிட்டார். குதித்தவர் அங்கே மரணம் அடைந்தார்.

இது பெரிய பிரச்சினையான நேரத்திலே பஞ்சாப் மாநில கல்வி அமைச்சராக இருப்பவர் சொல்கிறார், இது சாதாரண விபத்து, இது கடவுள் செயல். இதையெல்லாம் பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று சொன்னார். இப்படித் தொடர்ந்து பல்வேறு செய்திகள் பெண்களின்மீது ஒடுக்குமுறை என்பது தலைவிரித்தாடக்கூடிய கேவலம் நடந்துகொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டிலும் பல்வேறு செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. குறிப்பாக குடியாத்தத்திலே 5 வயது சிறுமி ஒரு கோயில் குருக்களால் பாலியல் வன்முறை செய்து படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். குருக்களுக்கு 10 ஆண்டுகள் தண்டனை என்றுகூட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல கிருஷ்ணகிரியிலே பெங்களூருவில் வேலை பார்த்த ஒரு தோழர் நவீனமான கைபேசி வைத்திருந்தார் என்பதற்காக உயர்ந்த ஜாதிக்காரர்கள் அடித்து உதைத்திருக்கிறார்கள்.

இப்படித் தொடர்ந்து ஜாதியும், தீண்டாமையும் தொடர்ந்து தலைவிரித்தாடுகின்ற காரணத்தாலே, ஊர்ப் பஞ்சாயத்து என்ற பெயரிலே சாட்டை அடி கொடுப்பது, அபராதம் போடுவது என்று கொடுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிற காரணத்தாலே, இவற்றை எல்லாம் கண்டித்து மக்கள் மத்தியிலே விழிப்புணர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆர்ப் பாட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.
குறிப்பாக மத்தியிலே பிஜேபியின் மதவாத ஆட்சி வந்ததற்குப்பின்னாலே இந்துத்துவ உணர்வு தலைதூக்கு கின்ற ஒரு

சூழ்நிலையிலே இத்தகைய ஒடுக்குமுறைகள் நாட்டில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
அவற்றைக் கண்டிக்கின்ற வகையில்தான் மக்கள் மத்தியிலே அதைப்பற்றிய விழிப்புணர்ச்சியை உண்டாக்க வேண்டும். இந்தக் கொடுமையிலிருந்து விடுபடுவதற்காக மத்திய அரசு ஒரு தனிச்சட்டத்தையே கொண்டுவர வேண்டும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்கள். அதை வலியுறுத் தித்தான் இந்த ஆர்ப்பாட்டம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் - இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசுகையில் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

பொருளாளர் தலைமையுரை

ஆர்ப்பாட்டத் தலைமையேற்று திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி பேசுகையில் குறிப்பிட்டதாவது: பஞ்சாயத்து என்ற பெயரில் நடைபெறும் ஜாதிக்கொடுமைகள், பெண்ணடிமைத்தனங்களை ஒழிக்க தனிச்சட்டம் கோரி ஆர்ப்பாட்டம் என்ற திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணையின்படி, இங்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறு கின்றது. இந்த நாடு சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் ஆகின்றது.

ஆனாலும்கூட இன்னும் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. பஞ்சாயத்து என்ற பெயரால் கட்டப்பஞ்சாயத்து, ஜமீன்தார் பஞ்சாயத்து, நில உரிமைதாரர்களின் பஞ்சாயத்து, ஜாதிப்பஞ்சாயத்து என்று பஞ்சாயத்துகள் நடந்துகொண்டி ருக்கின்றன. இவைகளெல்லாம் கட்டப் பஞ்சாயத்து களாகவே நடந்துகொண்டிருக்கின்றன. நீதித்துறை அல்லது சட்டத்துறையாக இருந்தாலும் அல்லது காவல்துறையாக இருந்தாலும் எந்த துறைகளுமே இதில் செயல்படும் பொழுது இதில் கண்துடைப்பு நாடகமாகத்தான் அதில் நடந்துகொண்டிருக்கின்றன. சமூகநலத்துறையும், சமூகப் பாதுகாப்புத்துறையும், மனித உரிமை ஆணையமும் இருந்தும், பெண்ணடிமைத் தனங்கள் ஒழிய வேண்டும் என்று கூறும் எத்தனையோ பெண்ணுரிமை அமைப்புகள் இருந்தும்கூட அவை செயல்பட முடியாத நிலையில்தான் இருக்கின்றன.

இப்படிப் பட்ட ஒரு சூழலில் கட்டப்பஞ்சாயத்து என்ற பெயரால், ஜாதிப்பஞ்சாயத்து என்ற பெயரால், நாட்டாண்மை பஞ்சாயத்து என்ற பெயரால் சவுக்கடியைக் கொடுப்பதும், சாணிப்பால் கரைத்து ஊற்றுவதும், மலத்தை வாயில் திணிப்பதும், சிறுநீரை வாயில் ஊற்றுவதுமாகிய பல கொடுமைகள், சாட்டை அடிகள், அபராதங்கள் இவை நடந்துகொண்டிருக்கின்றன.
பெண்ணடிமைத்தனம் தலைதூக்கி நிற்கும் நிலையில், பெண்களை ஒரு பாவைகளாக, அனுபவிக்கத்தக்க பாவைகளாக மட்டுமே நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இருக்கும்போது, பெண்களை ஓர் அலங்காரப் பதுமைகளாக நினைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கும்போது, இவையெல்லாம் மாற வேண்டும் என்று அதற்காக சிறப்பான சட்டங்கள் அமைக்கப்பட வேண்டும்.

இன்றும் நம்முடைய சட்டத்திலே 18 இடங்களிலே ஜாதி இருக்கிறது. தந்தைபெரியார் அவர்கள் சொன்னதைப்போல, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொல்வதைப்போல, ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக சட்டம் வரவேண்டும், தீண்டாமை ஒழிக்கப்படுவதற்கான சட்டம் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். பெண்ணடிமைத் தனம் ஒழிக்கப்படுவதற்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஜனநாயகத்தின் 4 தூண்களாக இருக்கக்கூடிய நீதித்துறையாக இருந்தாலும், நிர்வாகத் துறையாக இருந்தாலும், சட்டமன்றம், நாடாளுமன்றமாக இருந்தாலும், ஊடகத்துறையாக இருந்தாலும் அதில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும், பெண்களுக்கும் அவரவர்களுக்குரிய விழுக்காட்டளவில் பங்களிப்பு அளிக்கப்பட்டால்தான், பெண்களுக்கு குறைந்த பட்சம் 33 விழுக்காடு பங்களிப்பு அளிக்கப்பட்டால்தான் இந்தக் கொடுமைகள் அகற்றப்படும்.

ஏனென்றால், புகாரை வாங்குமிடத்திலும், புகார்மீதான சட்டத்தை செயல்படுத்தும் நேரத்திலும், அதை ஊடகங் களில் சொல்லக்கூடிய நிலையாக இருந்தாலும், சட்டமன்றத் திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ கேள்விகளை எழுப்புகின்ற நிலையாக இருந்தாலும், அதில் அவரவர் களுக்குரிய விழுக்காட்டளவிலான மக்கள் இருந்தால்மட் டும்தான் அதை செயல்படுத்த வேண்டும், செயல்படுத்த முடியும் என்ற காரணத்தால்தான் அதை விளக்கித்தான் பொதுமக்களுக்காக இந்த ஆர்ப்பாட்டத்தை இங்கே நடத்திக்கொண்டிருக்கிறோம். பொதுமக்கள் இதைப்புரிந்துகொண்டு இதற்கான தங்களின் ஆதரவை கொடுக்க வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் வேண்டுகோளாகக் கூறி அனைவரும் ஆதரவை அளித்திட முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி தலை மையுரையில் குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதியில் கருங்கடலாக கழக கொடிகளுடன் தோழர்கள் தோழியர்கள் பெரியார் பிஞ்சுகள் குவிந்தனர்.

Read more: http://www.viduthalai.in/e-paper/102557.html#ixzz3buntb6vK

தமிழ் ஓவியா said...

சென்னை அய்.அய்.டி.க்கு தேசிய ஆதிதிராவிட நல ஆணையம் மீண்டும் கடிதம் : விளக்கம் அளிக்காவிட்டால் அழைப்பாணை அனுப்ப நேரிடும்

புதுடில்லி, ஜூன்.2- அம்பேத்கர்- _ பெரியார் வாசகர் வட்டத்திற்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு ஏற்கெனவே அனுப்பிய கடிதத்திற்கு உடனடியாக பதிலளிக்காவிட்டால் அழைப்பாணை அனுப்ப நேரிடும் என்றும் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம் சென்னை அய்.அய்.டி.யின் இயக்கு நருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னை அய்.அய்.டி.யில் உள்ள அம்பேத்கர்-_ பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்பு பிரதமர் நரேந்திர மோடியை விமர் சனம் செய்ததாக நிகழ்வு கூறி அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இந்நிகழ்வு தேசிய அளவில் பெரும் பரபரப்பையும், எதிர்ப்பையும் ஏற் படுத்தியுள்ளது. இந்தியாவின் பல் வேறு இடங்களில் மாணவர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத் தின் இந்த உத்தரவை எதிர்த்து ஆர்ப் பாட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் தேசிய ஆதிதிராவி டர் நல ஆணையத்தின் சார்பில் அதன் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான பி.எல்.புனியா தன்னிச் சையாக விளக்கம் கேட்டு சென்னை அய்.அய்.டி. இயக்குனர் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி கடிதம் அனுப்பியிருந்தார். அதில் ஜூன் ஒன்றாம் தேதிக்குள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து விளக்கம் அனுப்ப வேண்டும் என்றும் குறிப் பிட்டு இருந்தார்.

இந்த கடிதத்திற்கு எந்த விளக்க மும் அளிக்கப்படாத நிலையில் நேற்று மீண்டும் சென்னை அய்.அய்.டிக்கு ஒரு கடிதத்தை தேசிய ஆதிதிராவிட நல ஆணையம் அனுப்பியுள்ளது.

அதில், ஏற்கெனவே அனுப்பப் பட்ட கடிதத்திற்கு இதுவரை எந்த விதமான விளக்கமும் அளிக்கப்பட வில்லை. தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம் கோரியுள்ள விளக்கத்தை உடனடியாக அனுப்பாவிட்டால் சென்னை அய்.அய்.டி.யின் இயக்குநர் ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அழைப்பாணை அனுப்ப நேரிடும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம் பாட்டுத் துறைக்கும் இதே போன்று ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.Read more: http://www.viduthalai.in/page-2/102568.html#ixzz3bup0PS1K

தமிழ் ஓவியா said...

மூன்றாம் முறையாக அவசர சட்டமா?

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மூன்றாம் முறையாக மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (என்டிஏ) அவசரச் சட்டமாக செயல்படுத்த துடிக்கிறது.

இதற்குமுன் இரண்டு முறை மாநிலங்களவையில் அதற்கு ஆதரவு கிடைக்காத நிலையில் மூன்றாம் முறையாகக் கொண்டு வர முனையும் இந்த அவசர சட்டத்துக்குக் குடியரசு தலைவர் எப்படி கையொப்ப மிடுகிறார் என்பது நியாயமான வினாவாகும். அதிகாரமற்ற பதவி என்று இந்தியக் குடியரசு தலைவர் விமர்சிக்கப்பட்டாலும், இதுபோன்ற சந்தர்ப்பத் திலாவது மோடி அரசைப் பார்த்து சன்னமான ஒரே ஒரு கேள்வியைக்கூட எழுப்பக் கூடாதா? ஒரு ஜனநாயக அமைப்பில் நாடாளுமன்றத்தை இப்படி சிறுமைப்படுத்துவது நல்லதல்ல என்று செல்ல மாகவாவது பிரதமர் மோடி தலையில் ஒரு குட்டு வைக்கக் கூடாதா?
1894ஆம் ஆண்டில் வெள்ளையர் அரசாங்கம் பின்பற்றிய அதே பாணியை சுதந்திர நாடாகக் கூறப்படும் ஒரு நாடு கண் மூடிப் பின்பற்றலாமா?
முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (ஹிறிகி) 2013ஆம் ஆண்டில் நிலம் கையகப்படுத்துதல் மறு வாழ்வு மற்றும் மீள் குடியேற்றச் சட்டத்திற்கு பிஜேபி உள்ளிட்ட பல கட்சிகளும் கைதூக்கின என்பது உண்மையே!

ஆனால், அறிவு நாணயத்தோடு இப்பொழுது பிஜேபி ஆட்சி நடந்து கொள்ளவில்லை என்பதுதான் குற்றச்சாற்று. அந்த ஆட்சியில் இந்தச் சட்டத்தில் விவசாயிகளுக்கு, நில உரிமையாளர்களுக்கு வழங்கப் பட்டு இருந்த உரிமைகளும், சலுகைகளும் இந்த மோடி அரசில் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன என்பதுதான் கொடுமை!
ஆளும் கட்சியை எதிர்க்கக் கிடைத்த அரசியல் ஆயுதமாக எதிர்க்கட்சிகள் இதனை மாற்றி விட்டன என்று பொத்தாம் பொதுவாகவும் குற்றப் பத்திரிகை படிக்கவும் முடியாது - கூடாது; பிஜேபி தலைமையி லான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் இதனை எதிர்க்கின்றன.

தமிழ் ஓவியா said...

ஏற்கெனவே ரியல் எஸ்டேட் என்ற பெயரில் வயிற் றுக்குச் சோறு போடும் விளை நிலங்களில் எல்லாம் கான்கிரீட் வீடுகள் கண் சிமிட்டி நிற்கின்றன. இப்பொ ழுது வெளிநாட்டுப் பெரு முதலாளிகளின் தொழிற் சாலைகளுக்காகப் பாரம்பரிய விவசாயிகளின் நிலங்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டு வரப்படுவதுதான் நாடு தழுவிய கடும் எதிர்ப்புக்களுக்குக் காரணமாகும்.

பி.ஜே.பி. அரசின் இந்தப் புதிய சட்டப்படி பாதிக்கப் பட்டவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது.
80 சதவீத நில உரிமையாளர்களில் ஒப்புதல் தேவை, நகர்ப்புற நில உரிமையாளர்களுக்கு சந்தை விலையை விட இரு மடங்கும், கிராமப்புறங்களில் சந்தை விலையைவிட நான்கு மடங்கும் இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட வேண்டும் என்பது மன்மோகன் அரசின் சட்டம். மோடி அரசோ அதனைத் தூக்கித் தூர எறிந்து விட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் காலால் ஆட்டும் ஆணையை பிஜேபி அரசு தலையாட்டி செய்கிறது.

நில உரிமையாளர்களுக்கான மீள் குடியேற்றம், மறுவாழ்வு பற்றி மன்மோகன் அரசின் சட்டம் பேசியது. உத்தரவாதமும் தந்தது. மோடி அரசோ அதனை முகர்ந்துகூடப் பார்க்கத் தயாராகவில்லை.
அரசு நிலம் கையகப்படுத்தும் முறையில் ஏற்கெ னவே நாட்டு மக்களுக்குக் கடும் கசப்பான அனுப வங்கள் உண்டு.
எடுத்துக்காட்டாக சிறீபெரும்புதூரில் நோக்கியா நிறுவனத்துக்கு 1000 ஏக்கருக்கு மேல் நிலம் தாரை வார்க்கப்பட்டது. அந்த நிறுவனத்தைக் காதும் காதும் வைத்தாற்போல ஊற்றி மூடி விட்டனர். திண்டுக்கல்லில் சிப்காட்டுக்காக 500 ஏக்கர் நிலத்தை எடுத்தார்களே - அங்கு எந்தத் தொழிற்சாலை எழுந்து நிற்கிறது?

பாரம்பரியம் பாரம்பரியமாக ஒரு குழி நிலம் இருந் தாலும் அதுதான் மிகப் பெரிய பெருமை, அந்தஸ்து என்று கருதிய மக்களிடத்திலிருந்து சட்டத்தைக் காட்டிப் பறித்து வருகிறார்களே அவர்கள் வீட்டுப் பிள்ளை களுக்கு எந்த அளவுக்கு வேலை வாய்ப்பை தந்தனர்? அதிகமாகப் போனால் வாட்சுமேன் வேலை அவ்வளவு தானே! நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திற்காக நிலங்களை வழங்கியவர்கள் இந்த உரிமைக்காக இன்றுவரை கைப் பிசைந்து நிற்கிறார்களே!
இந்த நிலக் கையகப்படுத்தும் சட்டத்தால் பெரும் பாலும் பாதிக்கப்படும் மக்கள் யார் தெரியுமா? 80 சதவீத மக்கள் பழங்குடி மக்கள், 10 சதவீத மக்கள் தாழ்த்தப் பட்டவர்கள், 10 சதவீத மக்கள் பிற்படுத்தப்பட்டவர்கள்; ஆக இதிலும்கூட சமூக நீதி பலிகடா ஆக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

இந்தப் பிரச்சினையைத்தான் சென்னை அய்.டி.அய். மாணவர்கள், சமூகப் பொறுப்போடு விவா தித்து இருக்கிறார்கள். கருத்துக்களை வெளியிட்டுள் ளார்கள். நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்த வகையில் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்குத் துணை போகிறது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதைத் தான் பிரதமர் மோடியின் மீதான விமர்சனம் என்று கூறி, சென்னை அய்.அய்.டி. நிறுவனத்தில் செயல்பட்டு வந்த அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை முடக்கியுள்ளனர்.

மூன்றாம் முறையாக அவசர சட்டம் மூலம் இதனைச் செயல்படுத்தத் துடிக்கும் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங் களின் அரசு என்று சென்னை அய்.அய்.டி. மாண வர்கள் கருத்துச் சொன்னதுதான் அவர்களின் அஸ்தி வாரத்தில் கை வைத்திருக்கிறது. அதனால்தான் அவசர அவசரமாக மொட்டைக் கடுதாசியை ஆதாரமாகக் கொண்டு அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் பெயரில் அமைந்துள்ள சமூக விழிப்புணர்வு அமைப் பினைத் தடை செய்துள்ளனர்.

பொதுவாக இந்துத்துவா கோட்பாடு விவசாயத்துக்கு எதிரானது. அதன் பார்வையில் விவசாயம் பாவத் தொழிலாகும் என்பதையும் அறிந்தால், இந்துத்துவா கட்சியான பிஜேபி அரசில் நிலக் கையகப்படுத்தும் சட்டத்திற்கான தாத்பரியம் புலப்படும் - எச்சரிக்கை!Read more: http://www.viduthalai.in/page-2/102562.html#ixzz3bupC9fc7

தமிழ் ஓவியா said...

பரிதாபமே!

இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல; மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.
(குடிஅரசு, 8.9.1940)Read more: http://www.viduthalai.in/page-2/102561.html#ixzz3bupUpewS

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரையும் தாண்டி நூறாண்டு வாழ்கவே!மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னை ஒருவரி விமர்சனத்தில் அடக்கி அகிலத்திற்கு அடையாளம் காட்டிய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இன்று (3.6.2015) 92ஆம் ஆண்டு அகவை தொடக்கம்!

அவரது ஒப்பற்ற உழைப்பும், கொண்ட லட்சியத்தில் தளரா உறுதியும் அவரை என்றும் சீரிளமையோடு வைத்துக் கொண்டுள்ளது!

அவர் ஒரு பல்கலை அறிஞர். அவரிடமிருந்து ஆட்சியை, ஜனநாயகத்தின் கோணல் புத்தி சிற்சில நேரங்களில் பறிக்கலாம்; ஆனால் அவரது ஆற்றல் மிக்க- வாளினும் வலிமை வாய்ந்த எழுதுகோல் என்றென்றும் அவரது தனி உடைமை!

ஆம் பொதுஉடைமையை பொதுஉரிமையைப் பரப்பும் தனிஉடைமை!

எழுத்துகள் அவரது ஏவல்படைகள்; கருத்து களும் லட்சியங்களும் அவைகட்குக் காவல் படைகள்!

ஆட்சிதான் என்றும் இனமான உணர்வாளர் களின் இதயங்களில்- மக்களின் இதயச் சிம்மாசனம் நிரந்தரமானது. பதவிச் சிம்மாசனம் அதன்முன் எம்மாத்திரம்? தந்தை பெரியார்தம் குருகுலத்தில் பூத்துக் குலுங்கிக் காய்த்த அந்தக் கனியை அறிஞர் அண்ணா தன்கனிவால் பழமாக்கினார்.

எனவேதான் இன்றும் கலைஞர் என்ற மாமனிதத்தின் கூட்டுச் சேர்க்கை அய்யாவின் துணிவு+அண்ணாவின் கனிவு!

ஆட்சியில் அமர்ந்து வரலாற்றில் இடம் பிடித்த வர்கள் பலர்.

ஆனால் ஆட்சியையே வரலாறாக்கியவர்கள் சிலரே!

அதில் கலைஞரின் இடம் தனிஇடம்; எளிதில் எவராலும் தொட்டுவிடமுடியாத சாதனைச் சிகரம்!

நன்றி மறந்தோரைத் தவிர, நல்லோர் பாராட்டுவர்; எதிர்நீச்சல் என்பது அய்யா என்ற ஆசானிடம் அவர் கற்றுத்துறை போகிய பயிற்சி!

எதையும் தாங்கும் இதயம் என்பது அண்ணா விடம் அவர் கற்றுக்கொண்ட பாடம்!!

நெருக்கடி காலம் என்ற நெருப்பாற்றில் நீந்தி தி.மு.க.வைக் கரைசேர்த்த உத்தமத் தலைவர்!
முதன்முதல் பதவிஏற்றபோது, தான் மிக மிக பிற்படுத்தப்பட்ட எளிய குடும்பத்தவன். எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் என்றுகூறி, அதைப் பணியாகக் கருதி உழைத்தவர் உழைப்பவர்!

சோர்வறியாதவர் என்பது எப்படியோ, அப்படியே தனிப்பட்ட முறையிலும் தோல்வி அறியாதவர் அவர் என்பது அவரது அரசியல் வாழ்வின் சாதனை.

முடிவுகளை எடுக்கும்போதெல்லாம் அவை விரைந்த முடிவுகளாகவே அமையும் என்பதே உண்மை; ஆனால் அவை அவசர முடிவுகள் அல்ல. 92 அகவை என்பது முதுமை அல்ல;

முதிர்ச்சி! முதிர்ச்சி!! எழுச்சி!!!

தந்தை பெரியார் வயதினையும் தாண்டி, நூறாண்டுக்கு மேல் வாழ்ந்து, திராவிடத்தின் பெருமையை திக்கெட்டும் பரப்பட்டும் என்று வாழ்த்துகிறோம்!
வாழ்க பல்லாண்டு!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்சென்னை
3.6.2015Read more: http://www.viduthalai.in/e-paper/102623.html#ixzz3c0hQCmXD

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவாளர் கடமை


நாடு, மொழி, கடவுள், மதம், ஜாதி என்ற எந்தப் பற்றுமின்றி மானிடப் பற்றுடன், அறிவைக் கொண்டு சிந்தித்துச் செயல்புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும்.
_ (உண்மை, 15.9.1976)Read more: http://www.viduthalai.in/page-2/102627.html#ixzz3c0hqOdxV

தமிழ் ஓவியா said...

ஆப்பதனை அசைத்துவிட்ட இந்துத்துவாவாதிகளுக்கு அர்ப்பணம்
அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம்
மும்பை, ஜாதவ்பூர், டில்லியிலும் துவங்கியது
டில்லி, ஜூன் 3_ சென்னை அய்.அய்.டி.யிலும் அம் பேத்கர், பெரியார் வாசகர் வட்டத்தைத் தடை செய்ததன் எதிரொலியாக மும்பை, டெல்லி, ஜாதவ் பூரிலும் இந்த அமைப்பத் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை அய்.அய்.டி நிர்வாகம் மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் சர்வாதிகார ஆணைக்கு அடிபணிந்து, ஹிட்லரின் நடவடிக்கை யைப் போல் அம்பேத்கர் _ பெரியார்- வாசகர் வட் டத்தை தடை செய்தது. இந்தத் தடையை எதிர்த்து தமிழகத்தில் துவங்கிய போராட்டம் டில்லியிலும் எதிரொலித்தது.

திங்கள் அன்று மும்பை _ பவாயில் உள்ள அய். அய்.டி தலைமையத்தில் முற்போக்கு சிந்தனை யுள்ள மாணவர்கள் ஒன்று கூடி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து அம்பேத் கர் _ பெரியார்- _ புலே பெயரில் வாசகர் வட்டம் ஒன்று துவங்கப்பட்டது.

துவங்கிய உடனே அதன் முதல் கூட்டத்தில் இந்த மூன்று தலைவர்களின் கருத்துகளை மக்களி டையே பரப்பும் கொள் கைதான் இந்த வாசகர் வட் டம் துவங்கப்பட்டதன் நோக்கம் என்று அறிவிக் கப்பட்டது. இந்நிலையில் மும்பையைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்து அய்.அய்.டி-யிலும் பெரி யார் _ அம்பேத்கர் வாசகர் வட்டம் துவங்கப்பட்டுள் ளது.

டில்லி, கான்பூர் அய்.அய்.டியில் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட் டம் பல்வேறு குழுக்க ளைச் சேர்ந்த மாணவர் கள் ஒன்றிணை மீது ஆரம் பித்தனர்.

இதேபோல் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்திலும் அம்பேத்கர் _ பெரியார்- மாணவர் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் துவக்கம்

இந்தியாவின் மிக முக் கியமான உயர்கல்வியக மான டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செவ்வாய் அன்று அம் பேத்கர் _ -பெரியார் மாண வர் வாசகர் வட்டம் துவங் கப்பட்டது. மதவாத மாணவர் அமைப்பான எபிவிபி தலைமையகத் தின் எதிரிலேயே இந்த வாசகர் வட்டம் துவக்கப் பட்டது.

துவக்க விழாவில் கலந்து கொண்ட மாண வர் அமைப்பினர் செய்தி யாளர்களிடம் பேசும் போது அம்பேத்கர் _ பெரி யார் -வாசகர் வட்டமா னது உடனடியாக அனைத்து சமூகவலைதளங்களிலும் தங்களது அமைப்பிற்கென புதிய பக்கங்களைத் துவங் கியுள்ளது. மேலும் விரை வில் இதற்கென ஒரு இணையதளமும், கொள் கைகளை விளக்கும் இதழ் களையும் தொடர்ந்து வெளியிட முடிவுசெய்துள் ளதாக தெரிவித்தனர்.

டில்லி அய்.அய்.டி. மாணவர்கள் கருத்து

டில்லி அய்.அய்.டி அம்பேத்கர் _ பெரியார்-வாசகர் வட்ட மாணவர் கள் கூறியதாவது, இந்தியா வில் மொத்தம் 16 அய். அய்.டிக்கள் உள்ளன. தற்போது அய்ந்து அய். அய்.டிக்களில் பெரியார் _ அம்பேத்கர் வாசகர் வட் டம் துவங்கியிருக்கிறோம். இன்னும் சில நாட்களில் இந்தியா முழுவதிலும் உள்ள 16 அய்.அய்.டிக் களிலும் வாசகர் வட்டம் துவங்க தீர்மானித்து இருக் கிறோம்.

கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் உயர் கல்வி நிறுவனம் இந்துத் துவ சிந்தனைகொண்ட வர்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனமாகும், அங்கே உள்ள மாணவர் களால் அம்பேத்கர் பெரியார்- _ வாசகர் வட்டம் துவங்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

ஆகையால் மற்ற உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அய்.அய்.டிகளில் துவங்குவது மிகவும் எளிதான செயலாகும். விரைவில் அனைத்து அய்.அய்.டி மாணவர் வாசகர்வட்டத்தையும் ஒன்றிணைக்க இருக்கி றோம் என்று கூறினர்.

பிரதமர் மோடி மற்றும் இந்துத்துவா கொள் கைகளை விமர்சிக்கிறது எனக் கூறி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச் சகத்துக்கு ஒரு அனாம தேய கடிதம் வந்தது என்று கூறி ஸ்மிருதி இரா னியின் தலையீட்டால் தடைசெய்யப்பட்ட சென்னை அய்.அய்.டி பெரியார்- _ அம்பேத்கர் வாசகர் வட்டம் தற்போது பெரிய அளவில் இந்தியா முழுவதும் பரவி நிற்கிறது.

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று பெண்ணடிமைச் சின்ன மான தாலி அகற்றுதல் குறித்த நிகழ்ச்சியை சென்னை பெரியார் திட லில் திராவிடர் கழகம், தமிழர் தலைவர் தலை மையில் நடத்தியது.

இதற்கு தடை மற்றும் இந்துத்துவ அமைப்பின் போராட்டத் தின் காரணமாக பெண் ணடிமைச் சின்னமாம் தாலியை அகற்றும் நிகழ்வு உலகம் முழுவதிலுமுள்ள முற்போக்குவாதிகளிடம் போய்ச் சேர்ந்தது. அதே போல் அம்பேத்கர் பெரி யார்- _ வாசகர் வட்டத் தின் தடையும் இன்று இந் தியா முழுவதிலுமுள்ள மாணவர்களை சென்ற டைந்துள்ளது.Read more: http://www.viduthalai.in/page-8/102622.html#ixzz3c0izsbo6

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட மாணவர்களுக்கு அருந்ததி ராய் ஆதரவு

சென்னை, ஜுன் 3_ மாணவர் அமைப்பால் என்ன நேர்ந்துவிட்டது? ஏன் கல்விநிறுவனத்தின் தலைவர் அவர்களைக்கண்டு அச்சப் பட வேண்டும்? ஏன் அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும்?

அதற்கான காரணங்க ளாக அவர்கள் கூறுவது வழ மையான முட்டாள்தனமான காரணத்தையேதான் குறிப் பிட்டுள்ளார்கள். வெறுப்பு களை வகுப்புகளுக்கிடையே பரப்புகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அடுத்த காரணமாக அமைப் பின் பெயரில் அரசியல் இருப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், இதேபோன்று செயல்பட்டுவரும் அமைப் பாக விவேகானந்தா வாசகர் வட்டம் இருப்பதற்கு இவை யெல்லாம் பொருந்தவில் லையாம்.

இந்துத்துவத்தின் தேசிய அளவிலான நிகழ்ச்சியாக கர்வாப்சியை (ஏற்கெனவே ஆர்ய சமாஜம் சார்பில் சுத்தி நிகழ்ச்சியைப்போன்று) நடத்திவந்தபோது தாழ்த்தப் பட்டவர்களை இந்துக்கள் என்கிற வளையத்துக்குள் கொண்டுவருவதற்காக இந்துமதத்தை வெளிப் படையாகக் கண்டித்தவ ராகிய அம்பேத்கரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளை , அவர் ஓர் இந்து என்று கூறிக்கொண்ட இந்துத்துவா அமைப்புகள் கொண்டாடி யதாக ஊடகங்களில் தக வல்கள் வெளிவந்தன.

அப் படி இருக்கும் போது, அம் பேத்கரைப் பின்பற்றுபவர் களாக இருப்பவர்கள் அவர் பெயரைப் பயன்படுத்தும் போது, ஹைர்லாஞ்சியில் உள்ள சுரோகா பாட்மாங்கே குடும்பத்தினர் கொல்லப் பட்டது ஏன்? செல்பேசியில் ஒலிக்கும்போது அம்பேத்கர் புகழ் பாடல் ரிங் டோன் ஒலித்ததால் தாழ்த்தப்பட்ட இளைஞரை அடித்தே கொன்றது ஏன்?

அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர் அமைப்புக்குத் தடை போடுவதும் ஏன்? ஏனென்றால், எந்த நோக் கத்தாலோ, ஆட்டம் போடு வதன்மூலமாக ஆபத்தான இடத்தில் கைவைத்து விட்டார்கள். பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களிலும் ஜாதி யத்தை ஊடுருவச் செய்து விட்டார்கள். இந்த ஆட்சி யில் பல முனைகளிலும் அச்சுறுத்தல்களின் மூலமாக செய்துவரும் கேடுகளைவிட,

பகத்சிங் மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவரின் பெயரில் விழாக்களைக் கொண்டாடு வதன் மூலமாக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் என்ன கேட்டினை செய்து விட்டது? இதுதான் அவர்களைக் கொந்தளிப்புக்கு உள்ளாக் கிள்ளது. ஆகவே, இதுதான் அவர்களைத் தடையை நீக்க வலியுறுத்திள்ளது.

இடதுசாரிகள் மற்றும் முற்போக்கான முசுலீம் அமைப்புகளுடன் கைகோர்ப் பதாக விடுதலை சிறுத்தை கள் கட்சியின் அறிவிப்பு அதற்கேற்பவே ஆட்சியா ளர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்துக்கு விதிக் கப்பட்டுள்ள தடையின் மூலமாக ஒருமித்த கருத்துள் ளவர்களை ஒன்றிணைப்ப தன் தொடக்கமாக அமைந் துள்ளது.

_இவ்வாறு அருந்ததிராய் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.Read more: http://www.viduthalai.in/page-8/102622.html#ixzz3c0jBmWOr

தமிழ் ஓவியா said...

அய்அய்டி இயக்குநருக்கு தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம் அழைப்பாணை

புதுடில்லி, ஜூன் 3_ சென்னை அய்அய்டியில் மாணவர் அமைப்பான அம்பேத்கர்-, பெரியார் வாசகர் வட்டத்தின் அங் கீகாரம் ரத்து செய்யப் பட்ட விவகாரத்தில், மத் திய மனித வளத் துறைச் செயலர், சென்னை அய் அய்டி இயக்குநர் ஆகி யோருக்கு தாழ்த்தப்பட் டோர்களுக்கான தேசிய ஆணையம் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

இருவரும் ஜூன் 8ஆம் தேதி ஆணையம் முன் ஆஜராக உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த விவகா ரத்தில், சென்னை அய்அய் டியிடம் விளக்கம் கேட்டு ஆணையம் ஏற்கெனவே கடிதம் அனுப்பியிருந்தது. "விதிகளை மீறி செயல் பட்டதால், அந்த மாண வர் அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பட்டது' என்று அந்த கடிதத்திற்கு அய்.அய்.டி. நிர்வாகம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்த விசா ரணைக்காக ஆஜராகும் படி மத்திய மனித வளத் துறை செயலருக்கும், சென்னை அய்அய்டி இயக் குநருக்கும் செவ்வாய்க் கிழமை அழைப்பாணை கள் அனுப்பப்பட்டதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.Read more: http://www.viduthalai.in/page-8/102622.html#ixzz3c0jIoVEr

தமிழ் ஓவியா said...

காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்!
கடவுள்களைக் காப்பாற்றுங்கள்!!
கோவில் கலசம் திருட்டு - மாரியம்மனுக்கு தாலியறுப்புவிருத்தாசலம், ஜூன் 3_- விருத்தாசலம் அடுத்த எருமனூர் மாரியம்மன் கோவிலில் அம்மனின் தாலியை யாரோ திருடிச்சென்றுள்ளனர். எருமனூர் கிராமத்தில் காட்டுப்பகுதியில் இருப்புப்பாதை அருகில் புற்று மாரியம்மன் கோயில் உள்ளது. தனிநபருக்கு சொந்தமான இக்கோயிலில் கிராம மக்கள் பொது வழிபாடு நடத்துவார்களாம்.

இந்நிலையில், வெள்ளிக் கிழமை மாலை மாரியம்மன் சிலைக்கு படைத்து விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து, சனிக்கிழமை காலை கோயிலுக்கு சிறுவர்கள் விளையாடச் சென்று ள்ளனர். அப்போது, கோபுரத்தின்மீது கலசம் இல்லாததைப் பார்த்த சிறுவர்கள், கிராம மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொது மக்கள் வந்து பார்த்தபோது, கலசத்தையும், மாரி யம்மன் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தாலியையும் யாரோ திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவலர்கள், காவல் உதவி ஆய்வாளர் அன்பரசு தலைமையில் நேரில் சென்று விசாரணை நடத் தினர். அப்போது, கிராம மக்கள் கூறியதாவது:

இதுவரை மூன்று முறை இக்கோயிலில் திருட்டு போயுள்ளது. 10 கிலோ மணி, உண்டியல், பித்தளைப் பொருள்கள் ஆகியவற்றை முன்பு திருடிச் சென்றுள்ளனர். இப்போது, அம்மன் கலசம் மற்றும் தாலியையும் திருடிச் சென்றுள் ளனர் எனவே, திருடர்களைக் கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறினர்.

தன் தாலியையே காக்க முடியாத மாரியம்மனா ஊரார் தாலியைக் காக்கப் போகிறது? திராவிடர் கழகத்துக்காரர்கள் தாலி அறுத்து விட்டதாகக் கொக்கரிக்கும் மதவாதிகளே, சர்வ சக்தியுள்ள தாகக் கூறும் மாரியம்மனின் தாலியை திருட்டுப் பக்தர்கள் அறுத்துச் சென்றுள்ளனரே. மாரியம்மனின் சக்தி இதுதானோ?

பெரியார் திடலில் தாலியை அகற்றிக் கொண் டவர்களுக்கு திவசம் நடத்திய மதவாதிகளே, ஆத்தா தாலி அறுக்கப்பட்டு களவாடப்பட் டுள்ளதே, இப்போது யாருக்கு திவசம் நடத்து வீர்கள்?!Read more: http://www.viduthalai.in/page-8/102621.html#ixzz3c0jk8azs

தமிழ் ஓவியா said...

ஆனந்தவிகடன் (10.6.2015) தரும் தகவல்1959ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை அய்.அய்.டி.யில் ஏராளமான மாணவர் அமைப்புகள் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

1. விவேகானந்தர் வாசிப்பு வட்டம்
2. வசிஷ்டர் வாசிப்பு வட்டம்
3. வியாஸர் வாசிப்பு வட்டம்
4. துர்வாசர் வாசிப்பு வட்டம்
5. இராமாயண வாசிப்பு வட்டம்
6. ஹரே இராமா, ஹரே கிருஷ்ணா வாசிப்பு வட்டம்
7. வந்தே மாதரம் இயக்கம்
8. ஜிந்தாபாத் (அரசியல் அமைப்பு)
9. க்வெஸ்ட் (அரசியல் அமைப்பு)
10. அய்.அய்.டி. ஃபார் சொசைட்டி
போன்றவை உள்ளன.
11. வர்ணம் (மாற்றுத் திறனாளிகள்)
12. அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் - இதற்கு மட்டும் தடையாம்!

அம்பேத்கரும், பெரியாரும் சமூக விரோதிகளா? தேச விரோதிகளா?

பார்ப்பனீய ஹிந்துத்துவ விரோதிகள் என்பதால் தான் கசக்கிறதோ?

மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி என்பது இது தானோ!

பெரியார் - அம்பேத்கர் என்ற இரு பெயர்களும் பஞ்சமர் சூத்திரர் எனும் வெகு மக்களின் எழுச் சித் தீ பிழம்பு - ஆதிக்க சக்திகளின் ஆணி வேரை அசைக்கும் என்ற அச்சம் தானே இதன் பின்னணியில் உள்ளது! வசிஷ்டர், வியாசர்கள் உலவும் இடத்திலே பெரியாரும், அம்பேத்கரும் நுழைந்தால்.. அதன் விளைவை அவர்கள் அறி வார்கள் அல்லவா! அதற்குத்தானே இந்தத் தடை!

இன்றைய சமூகப் போராட்டத்தின் அடிநாதமே இதுதான் - ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேர்வீர்!Read more: http://www.viduthalai.in/e-paper/102669.html#ixzz3c65qe28K

தமிழ் ஓவியா said...

ஜூன் 5 : சுற்றுப்புறச்சூழல் நாள்


நாம் உலக சுற்றுப்புறச்சூழல் தினத்தைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். நாம் கொண்டாடுவதற்கு முன்பு கடந்த மாதம் உலகம் முழுவ திலும் ஏற்பட்ட பருவநிலை மாற்றத் தைக் கணக்கில் கொள்ளவேண்டும். எப்போதுமில்லாத அளவிற்கு இந்தி யாவில் மாத்திரம் இந்தக் கோடையில் 3000 பேர் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண் டுள்ளது இந்த கோடைக்காலம் நமக்கு உடனடி ஆபத்தை உணர்த்திவிட்டது. ஆனால் இனி வரப்போகும் ஓர் ஆபத்து நம் கண்முன்னே நிற்கிறது அது இந்த ஆண்டு பருவமழை குறைந்து வரலாறு காணாத அளவிற்கு வறட்சியை ஏற்படுத்திவிடும் என்ற அதிர்ச்சி அறிக்கை தான்.

எல்நினோ விளைவு இப்படி பருவமழை குறைந்து போவதற்கு முக்கிய காரணமாக எல் நினோவைக் குறிப்பிடுகின்றனர்.பசிபிக் பெருங்கடலில் கடல் பரப்பு வெப்ப நிலை, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு (7 முதல் 24 மாதங்கள் வரை) சராசரி வெப்ப நிலையை விட அதிகமாகும். இது எல் நினோ என அழைக்கப்படு கிறது. இந்த மாற்றம் பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகள் இடைவெளியிலும் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இந்த எல்நினோ நிலை இந்த ஆண்டு உள்ளது. பசிபிக் பெருங்கடல் பரப்பு வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால்தான் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆண்டு கோடை வெயில் வறுத்தெடுத்து, நூற்றுக்கணக்கா னோரை உயிரிழக்கச் செய்தது. இந்த எல் நினோவின் கைவரிசையால்தான், பருவ மழையும் குறையப்போகிறது. எல்நினோ வுக்கும், பருவ மழை குறைவதற்கும் தொடர்பு இருப்பதாக உலக அளவில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வுத் துறையின் நெடுந்தொலைவு முன்னறிவிப்புப் பிரிவின் தலைவர் டி. சிவானந்த் பாய் கூறும்போது, முதலில் அளவீடு செய்யப்பட்ட ஏப்ரல் மாதத் துடன் ஒப்பிடுகிறபோது, இப்போது எல்நினோ அளவீடு மேம்பட்டுள்ளது என்கிறார்.

மராட்டிய மாநிலம், புனேயில் உள்ள அய்.அய்.டி.எம். என்னும் இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம், எல்நினோ நிலவரம் மேலும் வலு வடைந்து, பருவமழைக் காலத்தில் மழைப் பொழிவு குறையும் என கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் எல்நினோ தாக்கம் நிலவுவதற்கு 90 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் அது கணித்துள்ளது.

தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட பாதிப்பு

இந்த எல்நினோ பாதிப்பு என்பது மனித குலம் தன்னுடைய அழிவிற்கு தானே உருவாக்கிக்கொண்ட ஒரு செயற்கைவினையாகும், அதாவது காடுகளை அழித்தல், நகரமயக்கல், இயற்கைவளங்களை ஆக்ரமித்து நீர் உற்பத்திப் பகுதிகளை தடுத்துவிடுதல் போன்ற பல்வேறு மனித சுயநல விளைவுகளால் இந்த எல்னோ பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நூற்றாண்டில் தற்போது ஏற்பட்டுள்ள எல்நினோ விளைவு ஒர் கடுமையான எச்சரிக்கை மட்டுமே, இதை நாம் உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு சுற்றுப்புறச்சூழலைக் காப்பாற்ற சடுதியில் முயலவேண்டும். விழித்துக்கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம், இல்லையென்றால் இந்தியா போன்ற ஏழைநாடுகள் வரும் ஆண்டுகளில் கடுமையான பாதிப்பு களை சந்திக்கும்.

- சரவணா ராஜேந்திரன்Read more: http://www.viduthalai.in/page-2/102653.html#ixzz3c66YslFt

தமிழ் ஓவியா said...

பொதுவுடைமை- பொதுவுரிமை

பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.

- (குடிஅரசு, 25.3.1944)Read more: http://www.viduthalai.in/page-2/102649.html#ixzz3c66tTpJW

தமிழ் ஓவியா said...

அண்ணாவின் பெயரில் உள்ள ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக

மழை வேண்டி வருண பகவானுக்கு யாகமாம்!
திருச்சி, ஜூன் 5- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் மூடநம்பிக்கையை வளர்க்கும் வகையில், அறிஞர் அண்ணாவின் பெயரில் நடக்கும் ஆட்சியில், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக மழை வேண்டி வருண பகவானுக்கு யாகமாம்!

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது அரசு அலுவலகங் களில் உள்ள கடவுளர் படங்களை உடனே அகற்றுமாறு தனது ஆட்சியின்போது சுற்றறிக்கை விடுத்தார். அண்ணா திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகளே மழை வேண்டி யாகம் நடத்த அறிவுறுத்தி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிக் கொண்டிருக்கும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து டெக்கான் கிரானிக்கல் ஆங்கிலப் பத்திரிகையில் இன்று (5.6.2015) வந்த செய்தியில்:- பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் பிறந்த மண்ணில் தமிழக அரசு அலுவலகமே மழைவேண்டி யாகம் செய்ய சுற்றறிகை விட்டுக்கொண்டு இருக்கிறது, தமிழக நீர்வள ஆதாரத்துறை அலுவலகம் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைவேண்டி சிறப்பு யாகங்கள் செய்யுமாறு கட்டளையிட்டுள்ளது. இயற்கை அன்னையின் பெயரில் மழைவேண்டி குறிப்பிட்ட கோவில்களில் யாகம் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நீர்வளத்துறை தலைமைப்பொறியாளர் எஸ்.அசோகன் இது குறித்து தனது கடிதத்தில் எழுதிய விபரம் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஜுன் ஒன்றாம் தேதி யாகம் நடத்திய பிறகு அதன் விபரங்களை படங்களோடு எந்த முறையில் செய்தீர்கள் என விளக்கமாக ஜூன் இரண்டாம் தேதி 10 மணிக்குள் தலைமைப்பொறியாளர் பார்வைக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது என செய்தி வெளிவந்துள்ளது.

இன்றைய நவீன உலகில் அறிவியல் கண்டுபிடிப்புகளால் அனைத்து துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ள கால கட்டத்தில் அரசே மூடப் பழக்க வழக்கங்களை வளர்க்கும் வகையில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியதாகும்.

குறிப்பு: அரசியல் அமைப்புச் சட்டம் கூறுவது என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ பிரிவில் ஒவ்வொரு குடிமகனும் கடைப்பிடிக்க வேண்டிய பத்து அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties) சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அதில் எட்டாவது கடமையில் - 51ஏ(எச்) அறிவியல் உணர்வையும், மனிதநேயத்தையும், சீர் திருத்தத்தையும் ஆய்வு மனப் பான்மையையும் போற்றி வளர்க்க வேண்டும். ’To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reforms 51A(h), என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. இது குடிமகனுக்கும் பொருந்தும் அதைவிட ஆட்சியாளர்களுக்கும் அரசு பதவியில் உள்ளவர்களுக்கும் கட்டாயமாக பொருந்தும் காரணம் அவர்கள் அரசியலைப்புச் சட்டத்தின் படி நடப்பேன் என்று உறுதிமொழி எடுத்து பதவிக்கு வருகின்றனர்.Read more: http://www.viduthalai.in/e-paper/102715.html#ixzz3cCCpHyI9

தமிழ் ஓவியா said...

மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்துவதற்கு அதிகாரி உத்தர விடுவதா? அதிமுக அரசுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடும் கண்டனம்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில்

மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்துவதற்கு அதிகாரி உத்தர விடுவதா?

அதிமுக அரசுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடும் கண்டனம்
சென்னை, ஜூன். 5 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி. கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறி இருப்ப தாவது:

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் அண்ணாவின் பெயரில் கட்சி தொடங்கி, ஆட்சி நடத்தி வருகிற அ.தி.மு.க.வினரின் மூடப் பழக்க வழக்கங்கள் எல் லையற்று போய்க் கொண்டிருக்கின்றன. அதுபற்றி நாம் கவலைப் படவில்லை.

தமிழக அரசின் நீர் வளத்துறையினுடைய தலைமைப் பொறியாளர் எஸ். அசோகன் மே 26, 2015 நாளிட்ட சுற்ற றிக்கை மிகுந்த அதிர்ச் சியை ஏற்படுத்துகிறது. அந்த சுற்றறிக்கையின்படி செயற்பொறியாளர்கள் அனைவரும் மழை வேண்டி வருண பகவா னுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி அதற்கான விவ ரங்களை ஜூன் 1ஆம் தேதி மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டு மென்று கேட்டுக் கொள் ளப்பட்டிருக்கிறார்கள்.

தமிழக அரசு என்பது அனைத்து மதங்களுக்கும், வழிபாடுகளுக்கும் பொதுவானதாகவும், தொடர்பில்லாததாகவும் இருக்க வேண்டுமென பலமுறை அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டிருக் கின்றன.

அந்த அரசா ணைகளை உதாசீனப் படுத்துகிற வகையில் தமிழக அரசின் நீர்வளத் துறையே இந்துமத சடங்குகள்படி இத்தகைய சிறப்பு பூஜைகளை நடத்த வேண்டும் என்று சொல் வது அப்பட்டமான சட்ட விரோத செயலாகும்.

இத்தகைய உரிமை இஸ்லாமிய, கிறிஸ்துவ மதத்தினருக்கும் வழங் குவதற்கு வாய்ப்பிருக் கிறதா? அப்படி வாய்ப்பில்லாத போது குறிப்பிட்ட மதத்தின் நம்பிக்கைகளை மற்றவர்கள் மீது புகுத்த லாமா?

அ.தி.மு.க.வினர் செயல் படுவதை பற்றி நாம் விமர்சிக்க விரும்பவில்லை.

ஆனால் தமிழக அரசின் துறையைச் சார்ந்த தலைமைப் பொறியாளரே ஒரு குறிப்பிட்ட மதச் சார்பு நிலையை எடுப் பதை எப்படி அனுமதிக்க முடியும் ?

எனவே, இத்தகைய சட்ட விரோதச் செயல் கள் நடைபெறுவதை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டுமெனில் முதற்கட்டமாக சுற்ற றிக்கை அனுப்பிய குறிப் பிட்ட அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்படி நட வடிக்கை எடுத்தால் தான் இத்தகைய மூடப்பழக்க வழக்கங்களை தடுத்து நிறுத்த முடியும்.

வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்வ தால் மழை பெய்யும் என்று தமிழக அரசுக்கு நம்பிக்கை ஏற்படுமெனில் அறிவியலின் அடிப் படையில் செயல்படுகிற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் அறிக்கைகளை எப்படி மக்கள் நம்பி ஏற்றுக்கொள்வார்கள்?

அறிவியலில் அற்பு தங்கள் நிகழ்ந்து கொண் டிருக்கிற நவீன யுகத்தில் இத்தகைய பிற்போக்குத் தனமான நடவடிக்கை களை உடனடியாக நிறுத் திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.Read more: http://www.viduthalai.in/e-paper/102717.html#ixzz3cCD3ExkJ

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

துப்பாக்கியைத் தூக்க மாட்டானா?

திண்டுக்கல் அருகே இராணுவத்தில் பணியாற் றும் கணவர்களின் ஆயு ளுக்காக சப்பரத்தைப் பெண்கள் தோளில் தூக்கி வந்தனராம். பக்தி என்று வந்துவிட்டால் புத்தி வேலை செய்யாது என்பதற்கு இந்த எடுத்துக் காட்டுப் போதாதா?

சப்பரத்தைத் தூக்கி னால் எதிரி துப்பாக்கி யைத் தூக்கமாட்டானா?Read more: http://www.viduthalai.in/e-paper/102719.html#ixzz3cCDWCOQ8

தமிழ் ஓவியா said...

வீட்டு வசதி வாரிய இடத்தில் விநாயகர் கோயிலா? அரசு அகற்றுமா?சென்னை, ஜுன்5_ சென்னை எண்ணுர் காவல்நிலையப் பகுதிக் குட்பட்ட எர்ணாவூர் நெய்தல் நகர் அரசு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 156 அடுக்குமாடி களுடன் அடுக்குமாடிக் குடியிருப்பு அமைக்கப்பட் டுள்ளது. இக்குடியிருப்பு அமைக்கப்ட்டு ஏறக் குறைய 13ஆண்டுகள் ஆகின்றன. இக்குடியிருப் புப் பகுதியில் மதவேறு பாடுகள் ஏதுமின்றி இசு லாமிய, கிறித்தவ, இந்து மதங்களைச் சேர்ந்த வர்கள் என்று அனை வரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

அந்தக் குடியிருப்புப் பகுதியில் நிலவிவரும் மத நல்லிணக்கம் மற்றும் அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில் சட்டவிரோதமாக அர சின் வீட்டுவசதி வாரியத் துக்குச் சொந்தமான இடத்தில் பிள்ளையார் கோயிலைக் கட்டும் முயற் சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் குடியி ருப்பின் க்யூ பிளாக் பகுதிக்கு அருகில் 30.5.2015 அன்று இரவோடு இர வாக அத்துமீறி அந்த இடத்தில் செங்கல், சிமெண்ட் கொண்டு பீடம் அமைத்து, பிள்ளை யார் சிலையை வைத் துள்ளனர். அவ்வப்போது கோயிலை வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்த மான இடத்தில் அமைக்க முயற்சி செய்கிறார்கள் என்பதுகுறித்து குடியி ருப்பு சங்கத்தின் இந்நாள், மேனாள் நிர்வாகிகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை உதவி ஆணையர் தென்னரசு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குப்பன் உள்ளிட்டவர்களின் கவனத்துக்கு வீட்டுவசதி வாரியத்தில் குடியிருப் பவர்களால் கொண்டு செல்லப்பட்டும் அதைத் தடுத்து நிறுத்திட எவ்வித முயற்சியும் அவர்கள் எடுத்ததாகத் தெரிய வில்லை.

ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி வகையறாக்கள் தற்பொழுது இதுதான் சந்தர்ப்பம் என்று காவல் துறையினரையும் இச் சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக்கிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். திருவள் ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், வீட்டு வசதித்துறையின் இயக் குநர் என்று அரசுத் துறையின் எந்த மட்டத் திலும் உரிய அனு மதியைப் பெறாமலே சிலையை வைத்து கோயி லைக்கட்டும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

அரசு வீட்டுவசதித் துறையின் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் களும் இதை விரும்ப வில்லை.

நெய்தல் நகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப் போர் சங்கத்தின் துணைத் தலைவர் வி.மாணிக்கம், மேனாள் செயலாளர் சேகர் உள்ளிட்ட இந் நாள் மற்றும மேனாள் சங்க நிர்வாகிகள் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து வருகின்றனர் என்றாலும், அரசு வீட்டுவசதி வாரியம் எனும் அரசுத்துறையும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் முன் னெச்சரிக்கையாக ஆக்கிர மிப்பை தொடக்கத் திலேயே அகற்றிட வேண் டும் என்று அப்பகுதிவாழ் பொதுமக்களும் எதிர் பார்க்கின்றனர்.

அரசு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்த மான பகுதியை ஆக்கிர மித்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலையை அகற்றி, உரிய நடவடிக் கையை அப்பகுதியை ஆக்கிரமிப்பிலிருந்து காத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?Read more: http://www.viduthalai.in/e-paper/102720.html#ixzz3cCDdBS9m

தமிழ் ஓவியா said...

கடவுளின் பெயரால் மோதல்:

கோயில் விவகாரத்தில் இரு தரப்பினரிடையே மோதல் 21 கிராமங்களில் 144 தடை உத்தரவு

சேலம், ஜூன் 5--_ சேலத்தை அடுத்த திருமலைகிரியில் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலை அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பு மக்கள், புனர மைப்பு செய்து குட முழுக்கு நடத்த ஏற்பாடு செய்தனர். கடந்த மார்ச் 4ம் தேதி குடமுழுக்கு நடக்க இருந்த நிலையில், கோயிலுக்குள் வருவது தொடர்பாக மற்றாரு தரப் பினருக்கிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட் டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், மாநகர காவல்துறையின ரும் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். அதில் முடிவு ஏற் படாததால், திருமலைகிரி உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள 21 கிராமங்களில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப் பித்தது. மேலும் கோயிலை இழுத்து பூட்டி சீல் வைத்தனர். குடமுழுக்கும் தடைப்பட்டது.

பின்னர், தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சு நடத்தியும் தீர்வு ஏற் படாததால், 3 முறை 144 தடை உத்தரவு நீட்டிக் கப்பட்டது. மேலும் இக் கோயில் விவகாரம் தொடர்பாக இருதரப்பி னரும் சேலம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத் தில்  வழக்கு தொடர்ந் துள்ளனர். இந்நிலையில் இறுதியாக விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு  2ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைய இருந்தது. அதனால் மாவட்ட நிர்வாகம், மாந கர காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தியது. அதன்பின் சேலம் ஆர்டிஓ ஷேக் முகைதீன், திருமலை கிரி உள்ளிட்ட 21 கிரா மங்களிலும் 144 தடை உத்தரவு வரும் ஜூலை 2ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கும் என அறிவிப்பு வெளியிட்டார். இந்த உத்தரவு, அந்த கிராம பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. காவல் பாதுகாப்பு, ரோந்து தொடர்ந்து இருக்கும் என காவல் அதிகாரிகள் தெரி வித்தனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற் றமான சூழல் நிலவுகிறது.

தமிழ் ஓவியா said...

சிறப்பு


விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவையில்லாவிடின், பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பயனில்லை. அறிவுடை யோர்க்கே சென்றவிடமெல்லாம் சிறப்பு.
(விடுதலை, 12.3.1965)Read more: http://www.viduthalai.in/page-2/102708.html#ixzz3cCEae2Pd

தமிழ் ஓவியா said...

பொக்கிஷத்தைப் பாதுகாப்போம்


01.06.2015 தேதியிட்ட நமது விடுதலையில் தங்களது விடுதலையை வாங்கிப் படியுங்கள் - தாங்கிப் பிடியுங்கள் என்ற தலைப்பிலான அறிக்கையை படித்துப்பார்த்து கண் கலங்கினேன். உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் தங்கி, தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டு இல்லம் திரும்பிய பிறகு நீங்கள் எழுதிய முதல் அறிக்கை என்பதை தெரிந்து கொண்டேன்.

தலைவர் தந்தை பெரியார் காலத்தில் விடுதலை ஏட்டிற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டு தொடர்ந்து தொய்வில்லாமல் 53 ஆண்டு காலம் விடுதலை நாளேட்டின் ஆசிரியராகப் பணியாற்றி வருவது சாதாரண விசயமே அல்ல, சம்பளத்திற்காக பிற இதழ்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூட எந்த ஏட்டிலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணி புரிந்து வந்ததாக தற்காலத்தில் சொல்ல முடியாது. கொள்கை களையும், லட்சியங்களையும் மட்டும் சம்பளமாகவும், சன்மானமாகவும் பெற்றுக் கொண்டு மலிவான, சுவை மிகுந்த, மக்களை விரைவில் சென்றடையும் விளம் பரங்களோ, செய்திகளோ இல்லாமல் சமூக நீதிக்களத்தில் மற்ற ஏடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அவர்கள் வீடெல்லாம் சென்று வரும் விடுதலைப் பயணத்திற்கு நீங்கள் கடந்த 50 ஆண்டு காலமாக ஆசிரியராக மட்டுமல்ல அதன் எல்லாமு மாகவே இருந்து வருகின்றீர்கள்.

மேலும் தங்களது அறிக்கையில், நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும், ஜோதிட மூடநம்பிக்கை, ராசிபலன், மலிவான சுவை களங்களான சின்னத்திரை, பெரிய திரை, மதம், ஆன்மிக வியாபாரம் இவற்றில் மக்களை சுரண்டாத சுயமரியாதை சொக்கத் தங்க நாளேடு விடுதலையை தவிர வேறு உண்டா? விரலை மடக்கத்தான் எவராலும் முடியுமா? என்று கேட்டிருப்பது இன எதிரிகளுக்கும், இயக்க துரோகிகளுக்கும் தாங்கள் கொடுத்த மிகப்பெரிய சாட்டையடி சவாலாகும். இதை எந்தக் கொம்பனும் நேருக்கு நேர் நின்று ஆதாரங்களோடு மறுக்க முடியாது.

அதுமட்டுமல்ல வருமானத்திற்காக முன் பக்கங்களை கூட காவு கொடுத்துள்ள நாளேடுகள் இன்று நம் கண் முன்னே சர்வ சாதாரணம் என்று தாங்கள் சொல்லியி ருப்பது நிதர்சனமான உண்மை என்பதோடு, இன்றைய கால கட்டத்தில் வருமானத்திற் காக கொள்கையை விலை பேசும் கூட்டத்தின் நடுவில் சுயமரியாதையை காப்பாற்றுவதற்காகவும், இனமானத்தை காப்பாற்றுவதற்காகவும் தொடர்ந்து லட்சங் களை தவிர்த்துவிட்டு லட்சியங்களுக்காக நஷ்டத்தில் இயங்கிவரும் நமது விடுதலை தமிழர்கள் நெஞ்சத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது நமது நஷ்டங்களும், சங்கடங்களும் நமக்கு தூசாகவே தெரிகிறது.

அய்யா! விடுதலை ஏட்டை தொடர்ந்து நடத்துவதற்கும், நமது இயக்கத்தை தொய்வில்லாமல் இன எதிரிகள் மத்தியில் வீறுநடைபோடும் அளவிற்கு தொண்டாற் றவும், தலைவர் தந்தை பெரியாருக்குப் பின்னால், அன்னை மணியம்மையாருக்குப் பின்னால், எங்களைப் போன்ற கோடிக் கணக்கான தமிழர்களின் சமூக நலனில் அக்கறையுடன் உடல்நலத்தைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து இரவு, பகல் பாராமல் பணியாற்றி வரும் தங்களைப் பாராட்டுகின்ற நேரத்தில் அன்போடு கேட்டுக்கொள்வதெல்லாம் தங்கள் உடல் நலனை முதலில் கவனமாகப் பேணுங்கள், உங்களை வைத்து தான் இன்னும் கால் நூற்றாண்டிற்கு நமது இயக்கம் இன எதிரிகளை எல்லா களத்திலும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

அதனால்தான் தங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்று ஒரு மாதத்திற்கு முன்பாக கேள்விப்பட்டும் கூட நேரிலோ, தொலைபேசியிலோ தங்களை சிரமப் படுத்தவில்லை. எங்களுக்கு தொடர்ந்து தங்களுடைய பணி மேலும் கால் நூற்றாண் டுக்கு கிடைக்க வேண்டும் எனவே தயவு செய்து தங்களுக்கு தற்பொழுது தேவை பரிபூரணமான, ஓய்வு, ஓய்வு, ஓய்வு! வணக்கம்.

- கே.செல்வராஜ்
மாவட்ட திமுக வழக்குரைஞரணி அமைப்பாளர், தாராபுரம்Read more: http://www.viduthalai.in/page-2/102713.html#ixzz3cCEzIApv

தமிழ் ஓவியா said...

மந்திரம் செய்கிறேன் என்று சொல்லி ஏமாற்றுவோரின் தந்திரங்களை அறிந்து கொள்ளவேண்டும்
அறிவியல் முகாமில் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை

புதுகை, ஜூன் 5_ ஆலங் குடியில் உள்ள தேசிய தனிப் பயிற்சி மய்யத்தில் திருவரங்குளம் ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கோடை அறிவியல் திரு விழா நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு அறி வியல் இயக்கப் பொறுப் பாளர் கவிஞர் நீலா தலைமை வகித்து கதை எழுதுவது, கவிதைகள் புனைவது குறித்து விளக் கியதோடு எழுதும் பயிற் சியும் அளித்தார். ஒன்றி யப் பொறுப் பாளர் கருப் பையா வரவேற்றார்.

ஆசிரியர் சதாசிவம் பேப் பர் மடிப்புக் கலையையும், சிவக்குமார் கவிதைகள் குறித்தும், ஓவியர் சுப்பிர மணியன் ஓவியக் கலை யின் சிறப்புகள் பற்றியும், அருள்ராஜா நவீன தொழில் நுட்பங்கள் குறித்தும் ஆசிரியர் திரு முருகன் பாடல்கள் பற்றிய பயிற்சியும் அளித் தனர்.

இப்பயிற்சியின் போது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ் நாடு அறிவியல் இயக்க மாநில துணைச் செயலா ளர் பாலகிருஷ்ணன், மந்திரமா, தந்திரமா எனும் நிகழ்ச்சியை நடத்தி விளக்கியபோது, இன் றைக்கு அறிவியல் பூர்வ மாகச் சிந்திக்க வேண்டிய மனிதர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்று ஒன்றைத் தோற் று வித்து மூடநம்பிக்கைககள் பற்றி விளக்கிச்சொல்லவேண் டிய அவசியம் வந்திருக் கிறது.

எச்டூஓ என்றால் தண்ணீர் என்பதை சிறு வயதிலேயே அறிந்து கொள்ளவேண்டும். அதை ஆசிரியர்கள் மட்டுமல் லாது பெற்றோரும் தம் பிள்ளைகளுக்கு விளக்க வேண்டும். அதை விட்டு வேறு வகையில் விளக்கி னால் சில நூறு ஆண்டு கள் மனித வளர்ச்சியில் பின் தங்கிவிடுவோம். எதையும் அறிவியல் கண் கொண்டு பார்க்க வேண் டும்.

அறிவியல் சிந்தனை களை வளர்த்துக் கொள் ளவேண்டும். சிலர் மந்திரம் செய்கி றேன் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக் கிறார்கள். அவர்களின் தந்திரம் என்ன என்ப தைத் தானும் அறிந்து கொண்டு சிறு வ ய துப் பிள்ளைகளிடமும் விளக் கிக் கூற வேண்டும்.

இன்றைக்கு கைகால் களை விபத்துகளில் இழக்க நேரிடும்போது கூட செயற்கை உறுப்பு களைப் பொருத்தும் அள விற்கு முன்னேறி விட்ட பிறகும் நரபலிகளைப் பற்றிக் கேள்விப்படும் நிலையில் நாமும் நம்மைச் சுற்றியும் இருப்பதைப் பார்க்கிறோம்.

அது போன்ற அவலங்களை நாட்டை விட்டே அகற் றும் பணியில் படித்த ஒவ் வொருவரும் தங்களை ஈடு படுத்திக்கொண்டால் தான் அடுத்த தலைமுறை யைச் சேர்ந்த இளைஞர் களைச் சிறந்த தலை முறையினராக வளர்த் தெடுக்க முடியும் என்றார். எளிய முறையில் கிடைக் கும் பொருட்களைக் கொண்டு சில மேஜிக்கு களையும் செய்து காண் பித்தார்.

நிகழ்ச்சியில் மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலை வர் ஆசிரியர் மணவா ளன், மாவட்டச் செய லாளர் வீரமுத்து, உஷா நந்தினி, இயக்கப் பொறுப் பாளர்கள் ஓவியர் கருப் பையா. அன்புராஜ், நீல கண்டன், அருள், தங்க வேல், ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பயிற்சி பெற்ற மாணவ, மாணவியரில் கதை, சிறு கதை, கவிதைகள் சிறப் பாக எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கள் வழங்கப்பட்டன. சசிக் குமார் நன்றி கூறினார்.Read more: http://www.viduthalai.in/page-5/102732.html#ixzz3cCFvM7jl

தமிழ் ஓவியா said...

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில்
பெரியார் சிந்தனை மய்யம் - கல்வியியல் துறை இணைந்து நடத்திய
அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான பயிற்சிப்பட்டறை
வல்லம், ஜூன் 5_ பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பெரியார் சிந்தனை மய்யம்_- கல்வியல் துறை இணைந்து நடத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான பயிற்சிப்பட்டறை நேற்று (4.6.2015) காலை 9.30 மணிக்கு பல்கலைக்கழக கல்வியல் துறை அரங்கில் மொழிவாழ்த்துடன் தொடங்கியது. கல்வியியல் துறை ஆசிரியை சுகந்தி வரவேற்புரை ஆற்றினார்.

பயிற்சிப் பட்டறைக்கு துணைவேந்தர் கர்னல் பேரா.நல்.இராமச்சந்திரன் தலைமையேற்று சிறப்பித்தார். திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் (மாவட்ட வருவாய் அலுவலர் ஓய்வு) பட்டறையைத் தொடங்கி வைத்து உரையாற் றினார். பெரியார் சிந்தனை மய்ய துணை இயக்குநர் டாக்டர் க.அன்பழகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

துணைவேந்தர் தலைமை உரை

பல்கலைக்கழக துணைவேந்தர் தமதுரையில் குறிப்பிட்டதாவது:

இந்திய துணைக்கண்டத்திலேயே ஒரு கல்வி நிறு வனத்தில் அறிவியல் மனப்பான்மையை உருவாக்குவ தற்கான ஒரு பயிற்சிப் பட்டறையை நமது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்தான் உருவாக்கியுள்ளது என பெருமைபடக் கூறினார்.

மேலும் நாட்டைத் திருத்தும் பொறுப்பிலுள்ள வருங்கால ஆசிரியர்களை நீங்கள் முதலில் திருத்தவேண்டும் அதன்பின் நீங்கள் வருங்கால சமூகத்தைத் திருத்தவேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டம் 51-கி(லீ) கூறுகிறபடி இந்தியக் குடிமக்கள் அனைவரும் அறிவியல் மனப்பான்மை உடையவராகவும், அதனை வளர்ப்பவராகவும் கட் டாயம் இருக்கவேண்டும்.

ஆக அரசமைப்புச் சட்டம் கூறுவதை நடைமுறைப்படுத்துவதுதான் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நடத்தும் இந்த அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான பயிற்சிப் பட்டறை என்று குறிப்பிட்டார்.

திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு

பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்து பேசும் போது வேறு கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் அரசுத் துறையினர் செய்யாததை, செய்ய வேண்டியதை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் செய்கிறது. பெரியார் படிப்பிற்கும், அறிவிற்கும் நம் நாட்டில் சம்பந்தமில்லை என்று கூறினார்.

காரணம் நமது கல்வி முறையில் அறிவியல் மனப்பான்மையை உருவாக்கும் திட்டம் பயனில்லை. எனவேதான், படித்தவர் எல்லாம் பகுத்தறிவாளராக இல்லாது இருக்கின்றனர். எனவேதான், இந்த அறிவியல் மனப்பான்மையை உருவாக்கும் இந்தப் பயிற்சிப் பட்டறையை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நடத்துகிறது. நாட்டுக்கு இந்தப் பயிற்சிப் பட்டறை தான் முதல் நிகழ்வு.

அதனை தொடங்கி வைப்பது எனக்கு பெரும்பேறு என்று கூறி தொடங்கி வைத்தார். நிகழ்வில் மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் அழகிரிசாமி, கல்வியியல் துறை பேராசிரியர்கள் டாக்டர் ஆரோக்கியதாஸ், டாக்டர் சாமிநாதன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.Read more: http://www.viduthalai.in/page-8/102763.html#ixzz3cCG4r9vI

தமிழ் ஓவியா said...

சர்வ சக்தியா? சர்வ சைபரா?சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்கமாட்டேன் என்கிறானே.

ராமன்: அது மாத்திரம், அதிசயமல்லப்பா பசியாவரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக்கிடக்கிறார். ஒருவன் கூட ஒரு கை கூழ் ஊத்தமாட்டேங்கிறானே.

சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?

ராமன்: இது தான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?

ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்றாய், அவனை ஒருத்தன் அப்படிப்பட்ட கடவுள் இல்லே என்று சொல்லுகிறான் என்றால் அது வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: சர்வசக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்யமுடியவில்லை என்றால் இது முட்டாள் தனமான, சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?

அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட் டம் இருக்கிறதோ அதேபோல் சர்வசக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனை நம்பச்செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.

- சித்திரபுத்திரன் (விடுதலை 22.2.1972)Read more: http://www.viduthalai.in/page-7/102755.html#ixzz3cCGGNNB5

தமிழ் ஓவியா said...

இராமாயணம் கற்பனை கதையே
இந்தோ- ஆரியர் போரைக் குறிப்பது

இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ - ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும். இவைகள் உண்மையென்று நான் நம்பியதேயில்லை. பஞ்ச  தந்திரக் கதையிலுள்ள கற்பனைக் கதையைப் போன்றவை என்பதே என் கருத்து

- நேரு, டிஸ்கவரி ஆஃப் இந்தியா

தமிழ் ஓவியா said...

அட, அயோக்கிய புரோகிதர்களே!
சுவாமி விவேகானந்தர்மைசூர் ராஜ்யத்திலிருந்து புறப்பட்ட சுவாமிஜி, கொச்சி ராஜ்யத்தை அடைந்தார். அங்கு சில தினங்கள் தங்கிவிட்டு திருவனந்தபுரத்துக்குப் போனார். வழிநெடுகிலும் வனப்பு மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்ணுற்று மகிழ்ந்தவாறே திருவனந்தபுரத்தை அடைந்தார். அப்போது டிசம்பர் மாதம்.

பேராசிரியர் சுந்தரராம அய்யர் வீட்டில் சுவாமிஜி தங்கினார். சுந்தரராம அய்யர், திருவிதாங்கூர் இளவரசருக்கு ஆங்கிலக் கல்வி போதிக்கும் ஆசிரியர் ஆவார்.

சுந்தரராம அய்யர் பிராமண உணர்வு மிகுந்தவர், வைதிக ஹிந்து சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர், எதையும் பிராமண இயல்போடு நோக்குபவர், பிராமணர் அல்லாத வர்களை சமபுத்தி இல்லாதவர் என்று சுவாமிஜி கூறியதாக எழுதி இருப்பவர். இவர் கூற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது ஆராயற்பாலது. பிராமண குலம் இந்தி யாவுக்கு மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறது.

இப்பொழுதும் மகத்தான காரியங்களை செய்து வருகிறது. இனியும் மகத்தான காரியங்களைச் செய்யும் என்று சுவாமிஜி கூறியதாகச் சுந்தரராம அய்யர் எழுதி இருக்கிறார் பிராமணர்களைப் பற்றிச் சுவாமிஜி கூறியிருக்கும் கருத்துக்கு இந்தக் கருத்து முற்றும் முரண்படுகிறது.

வேதங்களை இயற்றிவர்கள்?

வேதாந்தத்துக்கு ஆதாரமாய் இருப்பவை உபநிடதங்கள்; வேதங்களிலுள்ள இந்தப் பகுதிகள் க்ஷத்திரியர்களால் இயற்றப் பட்டவை என்பது சுவாமிஜியின் கருத்து. இது பிராமணர்கள் மகத்தான காரியங்களை இந்தியாவுக்கு செய்தார்கள் என்ற கருத்தோடு மாறுபடுகிறது.

வேதவியாசர், வசிஷ்டர், நாரதர் போன்றவர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர். பிராமணர்களின் கருணை யின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார். அந்தக் கருத்துகளைத் தொகுத்து அடியில் தந்திருக்கிறோம்.

உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர் களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிட மிருந்து பிறக்கவில்லை (3.280)

முன் காலத்திலே ரிஷிகள் ஆனோர் பலர். வசிஷ்டர் பிறப்பினால் இழிந்தவர்; வியாசர் மீனவப் பெண்ணுக்குப் பிறந்தவர்; நாரதர் பணிப்பெண்ணின் பிள்ளையாகப் பிறந்தவர். இவ்வாறு பிறந்தவர்கள் பலர் ரிஷிகள் ஆனார்கள் (6.433).

நெடுங்காலமாகத் தான் சேகரித்து வைத்திருக்கும் ஞானத்தைப் பிராமணன் இப்பொழுது பொது ஜனங்களுக்கு அளிக்க வேண்டும், இங்ஙனம் அவன் கொடுக்காத காரணத்தினால் முகம்மதியப் படையெடுப்புகள் சாத்தியமாயின. (6.234)

பார்ப்பனரல்லாதார் துயில் நீக்கம்!

குமரிலர், சங்கரர், ராமானுஜர் போன்ற முனிவர்கள், பிராமணர் சக்தியை மீண்டும் நிலைநாட்ட முயன்றனர். சிறிது காலம் அச்சக்தி இராசபுத்திர அரசரது வாளின் ஆதரவையும் பெற்றது. சமண புத்த எதிரிகளின் வீழ்ச்சிக்குப்பின், அது தனது அமைப்பை மறுபடியும் புதுப்பிக்கவும் முயன்றது. ஆயினும், அது, முகம்மதியரது ஆட்சியின் கீழ் என்றைக்கும் உறங்கும்படி செய்யப்பட்டது. (1.172)

பிராமணரல்லாத வகுப்பார் படிப்படியாகத் துயில் நீங்கி எழுகிறார்கள். பிராமணருடைய சாத்திரங்களிலும் மந்திரங்களி லும் அவர்களுக்குள்ள நம்பிக்கை நீங்குகிறது.

மேலை நாட்டுக் கல்வி பரவியதனால் பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக் காலத்திலே பதுமா நதியினுடைய கரைகள் இடிந்து விழுவதுபோல அழிந்து போகின்றன! (5.180) இந்த அயோக்கியப் புரோகிதர்களோ, அல்லது இவர்களுடைய முன்னோர்களோ, சென்ற நானூறு தலைமுறைகளாக, வேதப் புத்தகம் ஒன்றைக் கூடப் பார்த்தது இல்லை.

கலியுகத்துப் பிராமண ரூபத்தில் இருக்கின்ற இராட்சசர்களிடமிருந்து இந்த அப்பாவி மக்களை, இறைவா! காத்து இரட்சிப்பாயாக! (9.126)
ஆதாரம்: சுவாமி விவேகானந்தர் வரலாறு (பக்கம் 162 முதல் 164 வரை)Read more: http://www.viduthalai.in/page-7/102756.html#ixzz3cCGZRVLp

தமிழ் ஓவியா said...

மதத்தில் இடமில்லை அறிவுக்கு


பொதுவாக, மதம் சில கொள்கை களை எடுத்துக்கூறி இதுதான் உண்மை, இதைத்தான் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாகவும் பலாத்காரமாக கட்டாயப்படுத்தியும் சாதிக்க ஆரம் பித்தது.

மதத்துக்கு யாவற்றையும் படித்து ஆராய்ந்து தேடித் தெரியக்கூடிய அறிவு என ஒன்று இருப்பதைப் பற்றி கவலை கிடையாது. விஞ்ஞானம் அய்யத்தோடும் தயக்கத்தோடும் பேசுகிறது.

ஏனெனில் விஞ்ஞானத்தின் தன்மையே இதுதான் உண்மை என்று எதையும் சாதிக்க இயலாது. பகுத்தறிவின் துணை கொண்டு எதையும் நன்கு சோதித்து ஆராய்ந்து பார்த்த பிறகே அது ஒன்றை முடிவு கட்ட இயலும். விஞ்ஞானத்தையும், விஞ்ஞான முறைகளையுமே நான் விரும்புகிறேன் என்பதை நான் உனக்குச் சொல்லத் தேவை இல்லை.

-நேரு, உலக சரித்திரம் பக்கம் 346

தமிழ் ஓவியா said...

அண்ணா பதில் சொல்கிறார்(திராவிட நாடு இதழில், வாசகர்களின் முக்கிய வினாக்களுக்கு அண்ணா அளித்த அரிய விடைகள் இங்கே தரப்படுகின்றன ஆ.ர்.)

கேள்வி: ஏடுகளில் காணப்படும் கலாச்சார வரலாற்றின் அடிப்படை யை ஆதாரமாகக் கொண்டு ஆரியர் _ திராவிடர் என்று பேசுகிறீரே, இன இலக் கணங்கள் இன்று மாறு பட்டுள்ளன என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்?

பதில்: மறுக்கவில்லை நண்பரே! மறுத்ததுமில்லை. இனங்கள் பலப்பல காலமாக ஓரிடத்தில் வாழ்வதால் கலப்பு ஏற்படுவது இயல்பு என்ற பொது உண்மையை யாரும் மறுக்கவில்லை.

ஆனால், இவ்வளவு காலமாக ஒன்றாக வாழ்ந்தும், கலந்திருந்தும் கூட ஒரு கூட்டத்தினர் இன்னமும் தங்கள் மொழி, நடை, உடை பாவனை ஆகியவைகளை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியும் உயர்வு என்று கூறியும் வருவதைக் காண்கிறோம். இந்தப் போக்கைக் கொண்டுதான் ஆரியர், திராவிடர் என்று கூறுகிறோம். வாழ்க்கை முறை மனப்பான்மை இவைகளையே முக்கியமாக கவனிக்கிறோம்.

ஜப்பான் நாட்டவனொருவன் மக்கள் பிறவியில் பேதம் கிடையாது என்று கூறி அத்தகைய பேதம் இருக்கும் முறைகளை மறுப்பானானால் அவனையும் திராவிடன் என்று நான் கொள்வேன் என்று பெரியார் சென்ற கிழமை குமரிமுனையருகே நாகர் கோயிலில் கூறி இருக்கிறார் என்பதை நண்பருக்குக் கவனப்படுத்துகிறேன்.

சுருக்கமாகவும் சூட்சமத்தைக் காட்டும் முறையிலும் கூறுவதானால் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிப்பவர் ஆரியர். வர்ணாஸ்ரம தர்மம் கூடாது சமத்துவமே நிலவவேண்டும் என்பவர்கள் திராவிடர் சுயதர்மம் கோருவோர் ஆரியர். சமதர்மம் கோருவோர் திராவிடர். திராவிடர் ஒரு குறிச்சொல். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை இலட்சியத்தைக் காட்டவே அதனை உபயோகிக்கிறோம்.

பழைய ஏடுகளிலே இருந்து இதற்கான ஆதாரங்கள் காட்டும் போது நாம் அந்த நாள் கலாச்சாரம் அவ்வளவையும் ஆதரிக்கிறோம் என்பதல்ல பொருள். ஆரியர் திராவிடர் என்று. தனித்தனி இனமாக இருந்த வரலாற்று உண்மையைக் காட்டவே அந்த ஏடுகளைப் பயன்படுத்துகிறோமேயன்றி அந்த ஏடுகளிலே உள்ளபடி, நாடு மீண்டும் ஆக வேண்டும் என்பதற்கல்ல.

அந்த நாள் வாளும், வேலும், ஈட்டியும், சூலமும், பறையும், பரசலும் இன்றும் நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்பதல்ல, நமது நோக்கம். ஒரு காலத்தில் ஜாதியும் அதையொட்டிய பேத முறைகளும் வர்ணாஸ்ரமமும் அதை வளர்த்துப் பலன் பெற்ற கூட்டமும் இல்லாமல், மக்கள் அனைவரும் சமம், என்ற பெரு நோக்குடன் வாழ்ந்து வந்தனர்.

இந்தப் பகுதியிலே இருந்து வந்த பெரும்பாலான மக்கள் அவர்கள் திராவிடர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கொண்டிருந்த அந்தக் கொள்கை இன்று நமக்கு வேண்டும் என்று கூறுகிறோம். இதிலே பரிகசிக்கவோ அருவருக்கவோ காரணமில்லையே!

-அண்ணா- திராவிட நாடு, 16.11.1947Read more: http://www.viduthalai.in/page-7/102757.html#ixzz3cCGqMf55