Search This Blog

22.6.15

தலையில் கொள்ளிக்கட்டையை எடுத்துச் சொறிந்து கொள்வது போன்றதுதான் திராவிட நாடு கேட்பது-பெரியார்

பார்ப்பான் சமுதாய குஷ்டரோகி!


இப்போது நான் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெற்று வந்தேன். டாக்டர்கள் ஒரு மாதத்திற்கு நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள். ஓய்வில் இருக்கும் போது செத்துவிட்டால் என்ன செய்வது? நான் பேச வேண்டியதெல்லாம் என்னாவது என்று கருதி டாக்டர் பேச வேண்டாம் என்று கூறிவந்தாலும் இப்போது ஒரு வாரமாகச் சுற்றி வருகிறேன். 

வண்டியிலே போகும் போது நெஞ்சுவலித்து உயிர் போனாலும் போச்சு. ஒரு மாத ஓய்வின்போது செத்தாலும் போச்சு. அதனால் தான் இருக்கிற நாள் வரையிலும் பேசித் தீர்த்துவிடுவோம் என்று கிளம்பிவிட்டேன். அப்படி என்ன எனக்கு மட்டும் இந்த ஆத்திரம்? இந்த வேலையை எங்களைத் தவிர வேறு யாரும் செய்ய மாட்டேன் என்கிறானே? பொறுக்கித்தின்னத்தானே எவனுமிருக்கிறான்? நாங்கள் மட்டும்தானே இதைப் பற்றிப் பேசுகிறோம் - புத்தகம் முன்னுரை எழுதுவான்! சினிமாக் கதை எழுதிச் சம்பாதிப்பான்! அவர்களுக்கு இந்த விஷயங்கள் தெரிந்தாலும்கூட எழுதுவதில்லை. ஏன்? வயிற்றுப் பிழைப்புக்காகத்தான்! நாங்கள்தான் துணிந்து பச்சையாக உண்மையை எழுதுகிறோம்; பேசுகிறோம்.


திராவிடர் கழகத்திற்கு இரண்டு முக்கியக் கொள்கைகள். முதலாவது ஜாதி ஒழிப்பு; இரண்டாவதாகத் தமிழ்நாடு சுதந்திரமாக இருத்தல்; ஜாதி ஒழிய வேண்டும்; இந்த நாட்டில் பார்ப்பான் உண்டு பண்ணிய ஜாதி பூண்டோடு அழிய வேண்டும். உலகத்திலே எங்குமே இல்லாத ஜாதி இங்கு மட்டும் ஏன் இருக்க வேண்டும்? மனிதன்தான் இங்கு இருக்க வேண்டும்.

அதுபோலவே நாம் இன்னொருவனுக்கு அடிமையாக இருக்கிறோம்; அதுவும் வேறு ஜாதிக்காரனுக்குப் - பார்ப்பானுக்கு - நம்மைத் தொட்டால் தீட்டு என்று கூறி நம்மைக் கீழ்ஜாதியாக வைத்திருப்பவனுக்குப் - புரோகிதப் பார்ப்பானுக்கு - அடிமையாக இருக்கிறோம். ஜனநாயகம் என்கிறான். 100-க்கு 97-பேர் அடிமையாக இருப்பதா ஜனநாயகம்?

தமிழர்களாகிய நாமே நம் நாட்டை ஆளவேண்டும். நமக்கு எல்லாவித உரிமையும் இருக்க வேண்டும். இந்த இரண்டையும் எங்களைத் தவிர கேட்க யார் முன் வருகிறார்கள்? ஓட்டு வாங்கி ஏய்க்கத்தான் வருவான். நாங்களும் அப்படிப்பட்ட கொள்கையுடையவர்கள் தான் என்று.

தமிழ்நாட்டை அல்லாதவன் இங்கு வந்தால் அவன் மடியைப் பிரித்துப் பார்க்க வேண்டும். உலகத்திலே எங்கும் பார்ப்பான் மேல்ஜாதி, மற்றவர்கள் கீழ்ஜாதி என்பது இல்லை. அந்த மாதிரி இங்கும் ஆகவேண்டும். 30, 40-ஆண்டுகளாக நான் இதற்காகப் பாடுபட்டு வருகிறேன்.

பாடுவது நம் திராவிட இனம். மனித சமுதாயம் வாழ்வதற்கு வேண்டிய உணவு உற்பத்தி செய்வது நாம். தங்குவதற்கு வீடு கட்டுவது நாம். மானத்தோடு வாழ ஆடை உண்டாக்குவது நாம். மற்றும் சமுதாயம் நன்மை பெற சிரைப்பது, வெளுப்பது, கக்கூஸ் எடுப்பது போன்ற அவசியமான முக்கிய வேலைகளையெல்லாம் செய்வது நாம். அப்படியிருக்க உணவு உண்டாக்கித்தரும் இனம் இன்று அரை வயிற்றுக்குக் கூட உணவு கிடைக்காது பஞ்சம் பட்டினி என்று இருப்பதேன்?

குடியிருக்க வீடும் இல்லை; கட்டுவதற்குத் துணி இல்லை; அம்மணமாகத் திரியுது. இப்படிச் சமூதாயத்திற்கு முக்கிய தொண்டாற்றும் நாம் கீழ்ஜாதி. படிக்கக்கூடாது. நமக்குப் பியூன் வேலைதான். உழைக்காது நம் உழைப்பைக் கொண்டு உயர்ஜாதி என்று தன்னைக் கூறிக் கொள்ளும் பார்ப்பான் மட்டுமே படிக்கலாம். உயர்ந்த வேலைகள் பார்க்கலாம் என்றால் என்ன அர்த்தம்? இம்மாதிரி அநியாயம் உலகத்தில் இருக்கலாமா? நீதியா? சிந்திக்க வேண்டாமா இவற்றையெல்லாம்? நம் சமுதாயத்திற்குப் பார்ப்பான் குஷ்டரோகம் போன்றவன் ஆகும். நம்பிள்ளைக்கு 100-க்கு 10, 15, 5-என்றுதான் படித்திருக்கும். ஆனால் அவன் பெண்டு பிள்ளைகள் 100-க்கு 100-படித்து பெரிய உத்தியோகமாகப் பார்ப்பார்கள். பார்ப்பாத்திகள் எல்லோரும் கலைவாணி என ஆகிவிடுவாள். நமக்குத்தான் பஞ்சமாச்சே. எங்கே படிக்க வைக்கிறோம்? மக்களை மாடுமேய்க்கத் தானே அனுப்புகிறோம்?

அதனால்தான் இன்றையதினம் காமராசர் முதலமைச்சராக வந்து 5-லட்சத்து 20-ஆயிரம் பிள்ளைகட்குமேல் ஒரு வேளை சோறு இலவசமாகப் போட்டுப் படிக்க வைக்கிறார். இந்த 5-லட்சத்து 20-ஆயிரம் பேரிலே ஒரு பார்ப்பனப் பையன் வீட்டிலேயே பச்சை அரிசி சோறு இருக்கும்போது நான் உன்னிடம் சாப்பிட மாட்டேன் என்கிறான். பார்ப்பான் என்றுமே ஆண்டவன் பரம்பரையினன் அல்ல. பிச்சை எடுத்த பரம்பரையாவான். நாம் ஆண்ட பரம்பரை கன்னியாகுமரி முதல் திருப்பதி வரைக்கும் ஆண்டிருக்கிறோம் நாம்! என்ன இல்லை நம் நாட்டில்? ஏன் தனித்து இயங்கி சுதந்திரமாக வாழ முடியாது? அப்படி ஏதாவது வெளியில் இருந்து கொண்டு வர வேண்டுமென்றால் கடல் இருக்கிறது கொண்டுவர. டில்லியில் இருந்து என்ன கொண்டுவர வேண்டியிருக்கின்றது? 250-கோடிக்குப் பட்டாளம் வைத்திருக்கிறாய்! அப்படியிருக்கும் உன்னை (பாகிஸ்தான்) மிரட்டுகிறான்.

கொஞ்சம் கொஞ்சமாக இடம் எடுத்துக் கொள்கிறான். அதைக் கூடத் தடுக்க முடியவில்லை உன்னால்! எங்களைத் தனித்திருக்கக் கூடாது என்றால் என்ன அர்த்தம்? மலையாளி, கன்னடக்காரன், தெலுங்கன் எங்களை என்ன செய்யமுடியும்? எதற்காகப் பார்ப்பானிடம் - டில்லி ஆட்சியிடம் நாங்கள் அடிமையாக இருக்க வேண்டும்? எனவே தான் அடுத்து யூனியன் (இந்தியநாடு) நிலப் படத்தையே தமிழ்நாடு நீங்களாகக் கொளுத்தப் போகிறோம்.

சிலர் கூறுவார்கள். இவன் இதெல்லாம் கூறுகிறான். இருந்தாலும் இவன் காமராசரை - காங்கிரசை ஆதரித்தானே என்று. ஆம் காமராசரை ஆதரித்தேன்! ஆட்சியில் நம் உணர்ச்சியுள்ளவர் இருந்தால் நலம் என்பதால் ஆதரித்தேன். நான் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரும். மெஜாரிட்டியாக வராது. 75-பேர் வந்தாலும் துரோகிகளைச் சேர்த்துக் கொண்டு மந்திரிசபை அமைத்து விடுவான். எனவேதான் அந்தப்படி ஒரு பார்ப்பான் அல்லது அவனது அடிமை வருவதை விட நம்மினத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர் எதிர்நீச்சல் போடும் தைரியம் உடையவர் வந்தால் நலமாயிருக்கும் என்றுதான் அவரை ஆதரித்தேன்.

சி.ஆர்.(சி.இராசகோபால ஆச்சாரி) அல்லது அவரது அடிமை வந்திருந்தால் நம் நிலை என்னவாகியிருக்கும்? காமராசர் வந்தார். நம்மின மக்களின் கல்வியைப் பாழ் ஆக்கும் குலக் கல்வித் திட்டத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டார். ஆச்சாரியார் மூடிய 5000-ஆரம்பப் பள்ளிகளைத் திறந்ததோடு அல்லாமல் மேலும் 5000-புதிய பள்ளிகளைத் திறந்ததோடு அல்லாமல் மேலும் 5000-புதிய பள்ளிகளைத் திறந்தார். சி.ஆர். ஹைஸ்கூல் தேவையில்லை என்றார். இவர் 1,100 (ஆயிரத்து நூறு) உயர் நிலைப் பள்ளிகளைத் திறந்து சட்டத்தில் இனி ஹைஸ்கூலே தேவையில்லை என்று எழுதும் படியான அளவு செய்தார். இலவசக் கல்வி வசதியுடன் மதியம் சோறும் போட்டு வருகிறார். இருக்கின்ற தலைமைப் பதவிகளில் பாதிக்குமேல் நம்மவர்கள் (தமிழர்கள்) இடம்பெறும்படி செய்தார். இன்னும் இதுபோன்று செய்துவருகிறார். கண்ணீர்த்துளி, கம்யூனிஸ்ட் இவர்களுக்கெல்லாம் கொஞ்சமாவது வெட்கம், சூடு, சுரணை, மானம் இருந்தால் காமராசர் ஒழியணும் என்று கூறுவார்களா?

ஒரு மேல் அதிகாரி நம்மவனாக இருந்தால் கீழுள்ள எத்தனை நம் தொழிலாளர்களுக்குப் பயமில்லாமல் - இடைஞ்சல் இல்லாமல் - வேலை பார்க்கலாம்! மற்ற இராஜ்ஜியங்களில் (மாநிலங்களில்) எல்லாம் ரகளை - நம்பிக்கையில்லாத் தீர்மானம், செருப்பு வீச்சு, கல்லடி, ஊழல் இப்படியாக சந்தி சிரிக்கிறதே! சென்னை இராஜ்ஜியம் ஒன்றுதான் நல்லவிதமாக ரகளை (கலகம்) இல்லாமல் இருந்து வருகிறது. பார்ப்பான் வயிறு வெந்து கிடக்கிறானே தவிர, வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை அவனால்! ஆரிய ஏடான 'ஆனந்த விகடன்' "சபாஷ் தமிழ்நாடு" என்று புகழ்ந்து கூறி எழுதும் அளவுக்கு நம் சென்னை மாநில ஆட்சி - காமராசர் ஆட்சி - மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்குகிறது. அவனே (ஆனந்த விகடன்) எழுதுகிறான். "இத்தனைச் சிறப்புக்கும் காரணம் திறமையும் நல்ல அனுபவமும் மிக்க சிறந்த முதல் மந்திரியை அடைந்திருப்பதுதான்" என்று.

அடுத்தபடியாக முன்பு திராவிட நாடு கேட்டேன்! இப்போது தமிழ்நாடு கேட்கிறேன் என்பார்கள் நான் தமிழ்நாடு கேட்கிறபோது தமிழர்கள் மெஜாரிட்டியாக (பெரும்பான்மை) இருக்கிறார்கள். மற்றவர்கள் மைனாரிட்டி (சிறுபான்மை) இன்று தெலுங்கன்கள் 31/2 கோடி. நாம் 3 கோடி. இந்த ஒரு நாடே நம்மை மைனாரட்டி ஆக்கிவிடுகிறது. மைசூர் 2 கோடி கன்னடம் 1 1/2 கோடி; ஆக மொத்தம் (திராவிட நாட்டில்) 6 3/4 கோடி. நாம் 3கோடி தான். நம்மைவிட மற்ற மொழியினர் 2 பங்கு அதிகம்; உன்னை முதல் மந்திரியாக வரவிடுவானா? அவன் 600 M.L.A நீ 200 M.L.A தான். யாருக்கு முதல் மந்திரி? அவனுக்குத் தானே வரும்?

புத்தர் ஒருவர்தான் 2000-ஆண்டுகட்கு முன் தோன்றி, "எந்தச் சங்கதியானாலும் சரி, அது யார் சொன்னாலும் சரி, அதை அப்படியே நம்பாதே! உன் புத்தி என்ற உரைகல்லில் தேய்த்துப் பார்- ஆராய்ச்சி செய்- புத்தி என்ன சொல்லுகிறதோ அதன்படி நட!" என்றார்.

புத்தியை உபயோகப்படுத்துபவன்தான் புத்தன் என்பதாகும். புத்தியை ஆதாரமாகக் கொண்டதால் புத்தன் எனப் பெயர் வந்தது.

இந்த புத்தர்தான் பார்ப்பான் - கடவுள் சாதி - கோயில்கள்- இவையெல்லாவற்றையும் ஒழிக்கப் பாடுபட்டார். இந்தப் பார்ப்பனர்கள் அவரை ஒழித்துக்கட்டி விட்டார்கள். அதற்குப் பிறகு யாருமே அறிவுப் பிரச்சாரம் செய்யவில்லை.

அவதாரம் - கடவுள், சாஸ்திரம், புராணம் என்று கூறுபவையெல்லாம் நம்மை அடிமைப்படுத்திப் பார்ப்பானை உயர்த்தவேயாகும்.

விபூதி பூசுகிறார்களே அதனால் என்ன பயன்? சைனா, ஜப்பான் எந்த நாட்டிலாவது பூசுகிறானா? வெள்ளைக்காரன் பூசுகிறானா? நீ மட்டும் ஏன் பூச வேண்டும்? அதைச் சிந்திக்க வேண்டும்.

உலகத்திலே சரிபாதி கிட்டத்தட்ட கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் இருக்கிறார்கள். துலுக்கனும், கிறிஸ்தவனும் கடவுள் உண்டு என்கிறார்கள். அவன் கடவுள் எப்படி உள்ளது? உருவம் இல்லாதது; அன்பானது; அருளானது; அவனுடைய இராஜ்ஜியம் (நாடு) சிறிதாக இருப்பினும் அவனவனே ஆள்கிறான். உலகத்தில் எங்குப் பார்த்தாலும் ஒவ்வொரு நாடும் அதன் மக்களாலேயே ஆளப்படுகிறது. அதை ஜனநாயகம் என்றாலும் பொருந்தும். நீ இங்கு நடப்பது ஜனநாயகம் என்றால் பொருந்துமா? சிந்திக்க வேண்டும். எங்கள் வேலையே அறிவுப் பிரச்சாரம்தான்.

தலையில் கொள்ளிக்கட்டையை எடுத்துச் சொறிந்து கொள்வது போன்றதுதான் திராவிட நாடு கேட்பது.

(ஏனென்றால் பழைய சென்னை மாகாணம் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடாகா என்று மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டு விட்டது)

நீங்கள் வெறுப்பது பார்ப்பானையா? அல்லது பார்ப்பனீயத்தையா? அல்லது பார்ப்பனீயம் என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் என்பது என்ன? பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனீயம் வந்தது; எனவேதான் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன்.

திருடனை வெறுக்கிறாயா அல்லது திருட்டை வெறுக்கிறாயா என்பது போல் இருக்கிறது; திருடனாக இருப்பதால்தானே அவன் திருடுகிறான்; எனவே இது அர்த்தமற்றதாகும். திருட்டுதனத்தை வெறுக்கும்போது திருடனையும் வெறுப்பதாகத்தானே அர்த்தம்? எனவே பார்ப்பானில் இருந்துதான் பார்ப்பனீயம் வந்தது; மூலத்தை ஒழிக்கப்பாடுபடுகிறேன்.---------------------- 31.08.1959  சிதம்பரத்தை அடுத்த கண்ணன்குடியில் பெரியார் ஈ.வெ.ரா.சொற்பொழிவு.”விடுதலை” 11.09.1959

20 comments:

தமிழ் ஓவியா said...

அடைய முடியும்

மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...

எதிலும் அளவறிந்து வாழ்வோம் (2)


எதுவும் அளவுடன் இருப்பதே எல்லா வகையிலும் வாழ்க்கையின் சிறப்புக்கு வரப்பு கட்டியதாகும். என்பதை சனிக்கிழமையன்று (20.5.2015) வெளிவந்த வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை கூறியது.

மேற்கொண்டும் சிந்திப்போமா? அளவுடன் இருப்பதுடன் அதே நேரத்தில் குறையாமலும் பார்த்துக் கொள்வது அச்சிறப்பிற்கு மேலும் சீர் சேர்க்கக் கூடியதாகும்.

இதற்கு ஆங்கிலத்தில் ‘Optimum’  என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகின்றனர்  ‘Optimum Level’  என்றெல்லாம் கூடக் கூறுவர்.

எது இரண்டு நிலைகளுக்கும் நடுவில், பொருத்த மாகவும் மிகாமலும், குறையாமலும் அமைந்து நல்ல பயனையும் விளைவையும் தருமோ அதுவே அந்த போதிய அளவுத் திறன் (Optimum) ஆகும்!

உடலில் உள்ள ஒவ்வொரு சத்தும்கூட இப்படி மிகவும் - அதிகமாகவும் கூடாது; அதே நேரத்தில் சீரான - போதிய தேவை அளவைவிட - குறைந்து விடவும் கூடாது!
எடுத்துக்காட்டாக நம் உடலில் இருக்கும் சத்துக் களின் அளவையேகூட  காட்டலாம்!

உப்பு (Sodium)ச் சத்து நமக்கு அதிகமாகக் கூடாது; அதே நேரத்தில் மிகவும், குறையவும்  கூடாது. அதிகமானால் சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பர் மருத்துவர்கள்.

குறைந்து போனால் அது பல நேரங்களில் மூளையின் இரத்த ஓட்டத்தைக்கூட பாதித்து, பேசுவது, செயல்படுவது போன்றவற்றினைக்கூட தடுத்து விடும் என்பதையும் புரிந்து கொண்டால் உப்புக்குப் பெறாத விஷயம் என்ற சொற்றொ டரைக்கூடத் தயங்கித்தான் இனி நாம் பயன் படுத்துவோம் - இல்லையா?

இரத்தத்தில் சர்க்கரை அளவும்கூட இது போலத்தான்!

சர்க்கரை நோயாளிகள் - சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் இன்சூலின் ஊசி போடுவதோ (Type I) அல்லது மருந்து எடுத்துக் கொள்ளும்போதோ (Type II)கூட சர்க்கரை அளவினை திடீரெனச் சரிந்து விட்டால் அது பற்பல நேரங்களில் மாரடைப்பில் கொண்டு போய் நிறுத்தி விடக் கூடும்.

‘Hyper’  என்றால் அதிகம் - மிகை
‘Hypo’ என்றால் அளவு குறைதல் என்பதாகும்.

நம் உடலேகூட நமது வாழ்க்கைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்  நல்லாசான்; நம்மில் பலரும் கூர்ந்து கவனஞ் செலுத்தி மனதைப் பக்குவப்படுத்த அதனையே படித்துக் கொண்டு வாழலாமே!

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்        (குறள் - 479)

பொருள்: தனக்குள்ள பொருளின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப வாழாதவனுடைய வாழ்க்கையானது, முதலில் வசதி உள்ளது போலத் தோற்றமளித்துப் பின்னர் அந்தத் தோற்றமும் இல்லாமல், கெட்டுப் போய் விடும்.
உடம்பிலிருந்து எல்லாவற்றிலுமே அளவறிந்து- அளவு குன்றாமலும், மிகாமலும் வாழ்ந்தால் பின்னால் வலியோ, வம்போ ஏற்படவே ஏற்படாது.

இதே அதிகாரத்தில் வள்ளுவர் கூறிய மற்ற இரண்டு குறள்களும்கூட நம் அனைவருக்குமே வாழ்நாள் வாழ்க்கைப் பாடங்கள் ஆகும்!
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்   (குறள் - 475)

பொருள்: மிக மெல்லியதான மயில் இறகுகள் ஏற்றப்பட்ட வண்டியேயானாலும்கூட, அந்த இறகு களை அளவுக்கு மீறிய வகையில் மிகுதியாக வண்டி யில் ஏற்றினால், அந்த வண்டியின் அச்சு, ஒரு கட்டத் தில் பளு தாங்க முடியாமல் முறிந்து போய் விடும்.

எளிய உவமை! அரிய உண்மைப் போதனை!!

அடுத்த மற்றொரு குறள்; அதே அதிகாரத்தில்,
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதியாகி விடும்         (குறள் - 476)

பொருள்: ஒரு மரக்கிளையின் நுனி வரை சென்றவர் அதற்கு அப்பாலும் ஏற முயலுவாரே யானால்; அம்முயற்சி, அவரது உயிருக்கு அழிவைத் தந்து விடும்.

குறைந்த உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடிகூட சற்றுக் குறைவாக இருக்கும்; ஆளைக் காப்பாற்றி விடலாம்; ஆனால் மிக உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடியும் பலமாக, உயிர்  பிழைக்கும் வாய்ப்பும் அரிதாகி விடக் கூடுமே! இல்லையா?

அதிகாரத்திற்கு வந்து தலைகால் புரியாமல்  ஆடும் நுனிக்கொம்பர்களுக்கு பிரான்சிஸ் பேகன் என்ற ஆங்கில எழுத்தாளர் ஓர் அரிய உண்மையை நினைவூட்டினார்!

கீழே விழுகின்றவரை அந்த நுனிக்கொம்பர் களுக்கு இது விளங்காது, விளங்கவே விளங்காது; விழுந்து உயிருக்குப் போராடிடும் நிலைமைக்குப் பின்னரே அது விளங்கும்.

அப்போது விளங்கி யாருக்குப் பயன்?

“Power Corrupts;
Absolute Power;
Corrupts Absolutely”

ஆட்சி - அதிகாரம் - கெடுக்கும்; அதிகமான செல்வாக்குப் படைத்த ஆட்சி - அதிகாரமோ - முழுமையாக - தேற முடி யாத அளவு அவர்களைக் கெடுக்கும் என்றார்!

எனவே, அளவுடன் தூக்கம், அளவுடன் செலவு, அளவுடன் மகிழ்ச்சி, புகழ் எல்லாம் கொண்டு மகிழ்ச்சி ஊற்று வற்றாத வாழ்க்கை வாழக் கற்றுக் கொள்ளுவோம்!

 

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் இடஒதுக்கீடு கிடையாதா?
 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரே பல்கலைக் கழகம் மத்திய அரசின் சார்பில் இயங்கும் மத்திய பல்கலைக் கழகமாகும். புதுச்சேரி காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டுப் பகுதியில் 780 ஏக்கர் பரப்பளவில், விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு 1985இல் தொடங்கப்பட்டது.

இந்தியா முழுமையும் மட்டுமல்ல; வெளிநாடுகளில் இருந்தும்கூட வந்து படிக்கின்றனர்; இவ்வாறு 6500 இருபால் மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இப்பல் கலைக் கழகத்தில் 87 கல்லூரிகள் இணைக்கப்பட்டும் உள்ளன. புதுச்சேரி மாநிலம் என்று சொல்கிறபோது புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என்று பல பிரிவுகளிலும் வாழும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வெகு நாட்களாக இருந்துவருகிறது; மாணவர்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

துணைவேந்தராக டாக்டர் ஞானம் அவர்கள் வந்தபோது 25 சதவீத இடஒதுக்கீட்டை அப்பல்கலைக் கழகத்தில் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தார். 71 பட்ட மேற்படிப்புகள் இப்பல்கலைக் கழகத்தில் இருந்தாலும் 18 படிப்புகளுக்கு மட்டுமேதான் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது.

51 முனைவர் பட்ட (பி.எச்.டி.) ஆய்வுப் படிப்பிலோ இடஒதுக்கீடு அறவே கிடையாது. இதுகுறித்து பேராசிரியர் முனைவர் இராமதாஸ் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றைப் பல்கலைக் கழகமே நியமித்து அறிக்கையினைக் கோரியது.

பல்கலைக் கழகத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துப் பிரிவுப் படிப்புகளிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று அந்த ஆய்வுக் குழு அறிக்கை கூறியது. இதில் வேடிக்கை என்னவென்றால் பல்கலைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையை அந்தப் பல்கலைக் கழக நிருவாகமே நிராகரித்த கொடுமையாகும்.

தமிழ் ஓவியா said...

பொதுவாக ஒன்றை முடிவு செய்து கொள்ள வேண்டும். மத்திய அரசு சம்பந்தப்படுத்தப்பட்ட எந்த நிறுவனமும், அமைப்பும் பெரும்பாலும் அவை பார்ப்பனிய ஆதிக்கப்புரி தர்பாராகவே இருக்கும்.  சட்டப்படி இடஒதுக்கீடு இல்லை என்று மத்திய அரசு சொல்ல முடியுமா என்றால் சட்டப்படி அவ்வாறு கூற முடியாது. மத்திய அரசுத் துறைகளில் கல்வி, வேலை வாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்டவர் களுக்கும், 15 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஏழரை சதவீதம் மலைவாழ் மக்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் சட்டப்படியான நிலைப்பாடாகும். அப்படி இருக்கும் பொழுது பல்கலைக் கழக நிருவாகம் தானடித்த மூப்பாக நடந்து கொள்வது எப்படி? ஏற்கெனவே புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் தமிழ் விரோத நடவடிக்கையை எதிர்த்து திராவிடர் கழகம் போராட்டத்தில் ஈடுபட்டதுண்டு; மறுபடியும் அதற்கு மேற்பட்ட போராட்டத்தை நடத்திட திராவிடர் கழகம் என்றைக்கும் தயாராகவே இருக்கிறது. காரணம் திராவிடர் கழகம் சமூக நீதிக்கு உரத்தக் குரல் கொடுத்து போராடிக் கொண்டிருக்கும் சமூகப் புரட்சி அமைப்பாகும். மண்டல் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் அகில இந்திய அளவில் 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்தி, தன் வரலாற்றுக் கடமையைத் திராவிடர் கழகம் செய்து வந்திருக்கிறது. அதன் விளைச்சல்தான் மத்திய அரசு கல்வி, மற்றும் வேலை வாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு கிடைத்திட உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தைப் பொறுத்த வரையில் பேராசிரியர் முனைவர் இராமதாசு அவர்கள் தலைமையிலான மூவர் குழு அளித்த பரிந்துரையைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து விட்டு, மறுபடியும் ஆறு பேர் கொண்ட குழு ஒன்றும் இடஒதுக்கீடு தொடர்பாக அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் இடஒதுக்கீடு கொடுக் கக் கூடாது என்று சொல்லவில்லை; மத்திய அரசின் அனுமதியைப் பெற்று தாராளமாக இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தலாம் என்றுதான் கூறியுள்ளது.

மத்திய அரசு இதுவரை அதற்கான பச்சைக் கொடியைக் காட்டவில்லை; கல்வியாண்டு தொடங்கப் பட்ட நிலையில், இதுவரை மத்திய அரசின் ஆணை கிடைக்கப் பெறாத நிலையில், இவ்வாண்டில் இடஒதுக்கீடு என்னும் சமூகநீதிக்கு வாய்ப்பு இல்லாமலேயே தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட இருபால் மாணவர்களும் பெரும் மன உளைச்சல்களுக்கு ஆளாகியுள்ளனர். துணைவேந்தரும், நிருவாக குழுவும் நினைத் திருந்தால் பேராசிரியர் முனைவர் இராமதாஸ் அவர்கள் தலைமையிலான மூவர் ஆய்வுக் குழு அளித்த அறிக் கையின் அடிப்படையிலேயே இடஒதுக்கீட்டைத் தாராள மாக செயல்படுத்தி இருக்கலாம்; இதற்கு முன்னோடியாக இதே பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக இருந்த டாக்டர் ஞானம் அவர்களே வழிகாட்டியும் இருக்கிறார்கள். பெரும்பாலும் மத்திய பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுபவர்கள் பார்ப்பனர்களாகவே இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டைப் போடுவதைத் தங்களின் பரிசுத்த ரத்த ஓட்டக் கடமையாகவே கருதிக் கொண்டுள்ளனர்.  அகில இந்திய அளவில் துணைவேந்தர்களை நியமிக்கும்போது அதில்கூட சமூகநீதி - இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண் டும் என்ற உரிமைக் குரலைக் கொடுக்க வேண்டியவர் களாகவே இருக்கிறோம்.

மத்திய அரசுத் துறைகளில் சில குறிப்பிட்ட துறைகள் இடஒதுக்கீடு முறையிலிருந்து விதி விலக்கு அளிக்கப்படும் சூழ்ச்சியும் உள்ளன; இதனை எதிர்த்துத் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியதுண்டு - அதற்கான மசோதாவை அய்க்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலம் முடிவுறும் தறுவாயில் அவசர அவசரமாக மாநிலங்கள வையில் தாக்கல் செய்யப்பட்ட சூழ்ச்சியைத் திராவிடர் கழகம்தான் அம்பலப்படுத்தியது அதற்காகப் போராட் டமும் நடத்தப்பட்டது. மக்களவைக்கு கொண்டு வரப் படவில்லை.

எந்த ஒரு சிறு வாய்ப்புகள் கிடைத்தாலும் பார்ப் பனர்கள் அதிகார நிலையில் இருக்கும் எந்த இடத்திலி ருந்தும் இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்து கொண்டு தானிருக்கும். கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் நின்று சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு போராடுவோம் வாரீர் என்று திராவிடர் கழகம் அன்பு அழைப்பை விடுக்கிறது. தமிழ்நாட்டைப் போல புதுச்சேரி மாநிலத்திலும் 69 சதவீத இடஒதுக்கீட்டு உரிமைகளைப்  பெற போராடுவோம்  - வெற்றி பெறுவோம்!

தமிழ் ஓவியா said...

ஓரணியாய் திரள்வோம் - சமூகநீதி காப்போம்

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், வாழ்வியல் சிந்தனைகள் பகுதியில், புதுமைப்பித்தன் அவர்களின் பகுத்தறிவு சிந்தனை முத்துக்கள், காண்டேகரின் கருத்துமழை ஆகிய இலக்கியச் சுவை பகுதிகளை, அவரும் சுவைத்து நம்முடன் பகிர்ந்தளித்த மாண்பை மிகவும் ரசித்துப்படித்து உணர்கிறேன். இனமானப் பேராசிரியரைப் பார்க்கச் சென்றபோது பெற்ற இதயம் காக்க, நூலைப்படித்து எமக்குத்தந்த குறிப்புகள் மிகச்சிறப்பாக பயன் தருகிறது. புத்தகத்தை வாங்கிப்படிக்க ஆர்வம்.

புதுமைப்பித்தன் சிந்தனைச் சுவைகளைத் தொடுத்து பெரியார் புத்தக நிலையம் வெளியிடலாமே. இதயம் காக்க நூலையும் வாங்கி விற்பனை செய்யலாமே.

தாலி அகற்றும் நிகழ்ச்சியன்று நடந்த மதவாதிகளின் தாக்குதலை சந்திக்க உருவாக்கப்பட்ட வழக்கு நிதிக்கு, தந்தை பெரியாரின் உழைப்பால் சகிப்புத் தன்மை நிறைந்த தியாகத்தால் பெற்ற இடஒதுக்கீடு காரணமாக அரசுப் பணியில் உள்ள பார்ப்பனரல்லாத பணியாளர்கள், வழக்கு நிதியை வழங்கிட முன்வர வேண்டும்.

மய்ய, மாநில அரசுகளின் முன்னணித் துறைகளில் மறுக்கப்படுகின்ற சமூக நீதியை ஆர்ப்பாட்டம், போராட்டம் மூலமாக மட்டுமல்ல நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக்கேட்கவும், கழக வழக்குரைஞர்கள் சட்டத்தின் சரத்துகளை வைத்து வாதாடி வென்றிடவும் வழக்குநிதி நிறைய தேவைப்படுவதாக உணர்கிறோம். தங்களால் இயன்ற நிதியை தாமதிக்காமல் வழங்கிட வேண்டுகிறோம்.

உயர்நீதிமன்றம், அய்.அய்.டி. நியமனம், அஞ்சலகங்கள், விமான நிலையங்கள், வானிலை ஆய்வு நிறுவனங்கள், ரயில்வே துறை போன்றவற்றில் மறுக்கப்படுகிற சமூகநீதியை எதிர்ப்போம். ஆசிரியரின் தன்னலமற்ற பொதுப்பணியில் நம்மை இணைத்துக் கொள்வோம். வேண்டு கோளையும், திட்டங்களையும் செயல் படுத்துவதில் முனைப்பு எடுப்போம்.

ஆர்.எஸ்.எஸ். மதவாதி மோகன் பகவத்துக்கும், ராம்தேவ் உணவகத்துக்கும், மத்திய அரசின் பாதுகாப்பா? கங்கையை சுத்தம் செய்ய ஒதுக்கிய நிதி, தமிழக அரசின் திட்ட நிதிகளைப்போல எங் கேயோ ஒதுக்கி எப்போதோ பட்டுவாடா செய்யவா? பகுத்தறிவுச் சிந்தனையாளர் களும், சமூகநீதி சிந்தனையாளர்களும் ஓரணியில் திரண்டு மக்களிடையே பரப்புரை செய்ய வேண்டிய நேரம், மிக அவசரமாக நெருங்கி வருகிறது. இணைந்து பணியாற்ற பெரியார் திடல் வருக. மதவாத சதியாளர்களை துரத்திட கரம் கோர்த்து வருக. இணையதளங் களிலும் பரப்புரை புள்ளி விவரங்களை பதிவேற்றுவோம்.

- ஆ.வேல்சாமி
பகுத்தறிவாளர் கழகம், அறந்தாங்கி மாவட்டம்

தமிழ் ஓவியா said...

நுரையீரலுக்கு உகந்த பீன்ஸ்நமது உடலில் உள்ள முக்கியமான பாகங்களில் நுரையீரலும் ஒன்று. இதில் உள்ள மூச்சுப்பைகளே சுவாசத்தில் பங்கு  வகிக்கின்றன. நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் உயிருக்கு உலைவைக்கும் அளவுக்கு ஆபத்தானவை. குறிப்பாக புகைபிடிக்கும்  பழக்கமும், சுற்றுச்சூழல் மாசுகளும் நுரையீரலை அதிகமாக பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.

ஏற்கனவே அத்தகைய பாதிப்பு  இருப்பவர்களுக்கும் வியாதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டு நல்ல நிவாரணம் கிடைப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ட்டின் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஜப்பானில் உள்ள மருத்துவமனைகளில் இதற்கான  ஆய்வுகளை நடத்தி இதை கண்டுபிடித்து உள்ளனர்.

தினமும் குறைந்த பட்சம் 50 கிராம் அளவுக்கு குறையாமல் பீன்ஸ்  உணவுகளை சேர்த்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணங்கள்

பிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத்திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளும் இந்நிலை நீடிக்கிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புத்திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும் போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எலும்பு அரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக் கொண்டு வெளியாவ தில்லை.

எலும்புகள் எலும்பரிப்பால் பலகீனமடைந்திருக்கும் போது பலமாக இருமினால் கூட அல்லது வேகமாக நடந்து செல்லும் போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதயநோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளை விட எலும்பரிப்பு நோய் தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம்.

இரண்டில் ஒரு பெண்தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறாள். ஆண்களை விட பெண்கள் இந்த நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண்களுக்கு எலும்புத்தசைகள் ஆண் களை விடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந்திருப்பதும் முக்கிய காரணம். 35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச் சியும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக உள்ளது. அதன்பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச்சத்து சமநிலை அடைகிறது.

அதுதான் எலும்பரிப்பு துவக்க நிலை. 35 வயதுக்கு பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பின் பெண்களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது. இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும் பின் எடை குறையும் அபாயத்தை எட்டுகிறாள். இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகுசுலபமாக ஏற்படுகிறது.

பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுகுறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகிவிடு கி றது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ஈஸ்ட் ரோஜன் அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம். சுண்ணாம்புச்சத்து சமநிலையில் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப்பருவம் வரையிலும். மேலும் ஒரு பெண்கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச்சத்து அவசியம் தேவை.

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங் கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந் துள்ளது. சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான் பொன்னாங்கண்ணி. பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்ட சத்து, நீர்ச்சத்து, கொழுப்புசத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது.

இந்தக் கீ ரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லிய மாக தெரிய உதவும். பொன்னாங்கண்ணியின் பயன்கள் சில..
1. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

2. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.

3. உடலை, தோலைப்பளபள என்று மாற்றுவதில் பெரும் பங்கு பொன்னாங்கண்ணிக்கு உண்டு

தமிழ் ஓவியா said...

மருத்துவக் குறிப்புகள்


* தாகம், ஜூரம், கீல்வாதம், ஜலதோஷம், ஈரல் கோளாறு ஆகியவற்றை எலுமிச்சம்பழரசம் போக்கிவிடும். சாதாரணப் பல்வலிக்கு ஒரு துண்டுச் சுக்கை வாயில் ஒதுக்கிக் கொண்டால் பல்வலி குணமாகி விடும். கடுகை அரைத்து வலியுள்ள இடத்தில் வெளிப்பக்கம் பற்றுப் போட்டால் கூடப் போதும் பல் வலி குணமாகிவிடும். ர் உடம்பெல்லாம் வலிக்கிறதா? அப்படியானால் உங்கள் வயிறும் இரத்தமும் சுத்தமாக இல்லை. உடனே மலத்தையும் இரத்தத்தையும் எடுத்துச் சோதியுங்கள். தினமும் கொஞ்சம் வேப்பம் கொழுந்து சாப்பிட்டு வந்தால், சரியாகிவிடும்.

* சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நடுவே தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட பிறகு இளஞ்சூடான தண்ணீரைக் குடிக்க வேண்டும். இப்படிச் செய்தால், சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிவிடும். சாப்பிடும் போது இடை இடையே தண்ணீர் குடிப்பது ஜீரணத்திற்கு இடைஞ்சலாக இருக்கும். ர் பெண்களே, உங்களுக்குத் தாய்ப்பால் சுரக்க வில்லையா? எள் உருண்டை நிறையச் சாப்பிடுங்கள். எள், நிறைய பால் சுரக்கும்படி செய்கிறது.

* உடம்பு எப்போதும் சூடாக இருக்கிறதா? கொஞ்சம் வெந்தயத்தைத் தண்ணீரில் போட்டு ஊற வையுங்கள். காலையில் எழுந்ததும் இந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டு வாயில் வெந்தயத்தைப் போட்டு மென்று சாப்பிட்டால், உடல் சூடு தணிந்துவிடும். வெயில் காலத்தில் பலருக்கு நீர்க்கடுப்பு வரும். நீர்க்கடுப்பு வந்தால் ஒரு கிளாஸ் மோரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாப்பிடலாம். மோரில் இளநீர் கலந்து சாப்பிடுங்கள். நீர்க்கடுப்பு குணமாகிவிடும்.

* குழந்தைகள் குடல் வளர்ச்சி பெறச் சிறந்த டானிக் எது தெரியுமா? தேன். உங்கள் குழந்தைகளுக்குத் தினசரி கால் ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் தேன் கொடுத்து வாருங்கள். குழந்தைகளின் தசைகளும் உடலும் வலிமை பெறும் பெண்கள் அடிக்கடி தலைவலி மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது. தலைவலி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்குக் குழந்தைகள் பிறப்பதில்லை.

* தினசரி ஏதாவது ஒரு காய்கறி சூப் சாப்பிடுங்கள். காய்கறி சூப்பைச் சாப்பிடுவதால் உடலுக்குப் பலம் கிடைக்கிறது. சுறுசுறுப்பு ஏற்படுகிறது. வேப்பம் விதையில் உள்ள பருப்பையும் வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகிறது. தோலில் ஏற்படும் நோய்களும் கூட இதனால் குணமாகின்றன. சாப்பிட்டவுடன் வாந்திவரும் போல் இருந்தால் இலவங்கம், அல்லது ஏலக்காயை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். குமட்டல் நிற்கும். வாந்தி வராது.

தமிழ் ஓவியா said...

அட நடராஜா!

புதன், 24 ஜூன் 2015

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நடராஜக் கட வுளின் தாத்பரியம்பற்றி அள்ளி விடுவார்கள். இந்த நடராஜனை ஆகாய லிங்க வடிவில் வழிபடு கிறார்களாம். கோவில் என்றாலே, அது சிதம் பரம் நடராஜன் கோவி லைத்தான் குறிக்குமாம்.

நடராஜர் நடனக் கலை வல்லுநராம். 108 வகை நடனங்களை ஆடு பவராம். நடராஜர் சிலை கனகசபையில் உள்ளது. மூலஸ்தானத்துக்கும், இதற்குமிடையே திரை ஒன்றுள்ளது. அந்தத் திரைக்குப் பின்புறத்தில் தான் ஆகாய வடிவம் இருக்கிறது. அதிலிருந்து தான் நடராஜப் பெருமான் தோன்றி பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்னும் இருடிகளுக்காக நடனம் ஆடினாராம்.

அடேயப்பா, இப்படிப் பட்ட சிதம்பரம் நடராஜன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத கையா லாகாத்தனத்தை எண்ணி னால் வயிறு முட்ட சிரிப்புதான் மிஞ்சும்.

இதோ அந்த வரலாறு

முப்பத்தேழு ஆண்டு, பத்து மாதம், இருபது நாள்கள் (24.12.1648 முதல் 14.11.1686) வரை சிதம்பரம் கோவிலில் உள்ள நட ராஜர் சிலை சிதம்பரத்தி லிருந்து வெளியேறியி ருந்தது என்னும் உண்மை இப்போதுதான் தெரிய வந்துள்ளது. சிதம்பரத்தி லிருந்து எடுத்துச் செல் லப்பட்ட நடராஜர் சிலை, முதல் நாற்பது மாதங்கள் குடுமியான்மலையிலும்,  பின்னர் மதுரையிலும் இருந்திருக்கிறது. இந்தச் செய்தி, இப்போது திரு வாரூரில் கிடைத்திருக் கும் மூன்று வடமொழிச் செப்பேடுகளிலிருந்து தெரிய வருகிறது.

தில்லையை விட்டு நடராஜர் சிலை அகற்றப் பட்டதற்கு என்ன கார ணம் என்பது சரிவரத் தெரியவில்லை. இருந் தாலும், அக்காலச் சூழ் நிலைகளை வைத்து ஆராயும்போது, பீஜப்பூர் சுல்தானுடைய படையெ டுப்புக்கு பயந்து கொண்டோ அல்லது 1647 ஆம் ஆண்டு தமி ழகத்தின் வடபகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் காரணமா கவோ சிதம்பரத்திலுள்ள நடராஜருக்குச் சரிவர பூஜை நிகழ்த்த முடியாது என்று நினைத்த சில பக்தர்கள் இப்படி நட ராஜர் சிலையை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று யூகிக்கலாம்.

கடைசியில் மதுரை யில் இருந்த நடராஜரை மீண்டும் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்தது, மராட் டிய மன்னன் சகசி காலத் தில்தான் என்றும் தெரி கிறது.

ஆதாரம்: தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்

(இந்தச் செய்தி இத யம் பேசுகிறது இதழிலும் எடுத்துப் போடப்பட்டுள் ளது).

இப்பொழுது சொல் லுங்கள், இந்த சிதம்பரம் நடராஜக் கடவுள்பற்றி அளப்பதெல்லாம் அசல் கட்டுக்கதைகளா இல் லையா?      - மயிலாடன்

தமிழ் ஓவியா said...

பெண்களைக் கடத்திய மதபோதகர்

புதன், 24 ஜூன் 2015

திருச்சி, ஜூன் 24_ புதுக்கோட்டை மாவட் டம் விராலிமலை அருகே உள்ள ராமகவுண்டம் பட்டியைச் சேர்ந்தவர் கிட்டப்பா(வயது 48). இவர் விராலிமலை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்ப தாவது:

நான் விராலிமலை பகுதியில் விறகு வியாபா ரம் செய்து வருகிறேன். எனக்கு தனலெட்சுமி(45), மோகனா(38) என 2 மனைவிகளும், புஷ்ப லதா(27), ரேவதி(25), ராஜேஷ்வரி(19) பாக்கிய லெட்சுமி(17) என 4 மகள் களும் உள்ளனர். இவர் களில் புஷ்பலதாவுக்கும், ரேவதிக்கும் திருமணமாகி விட்டது. ராஜேஸ்வரி, பாக்கியலெட்சுமி ஆகிய இருவரும் தனியார் கல் லூரியில் படித்து வருகின் றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி பாலக்கரையை சேர்ந்த முத்து ஆப்ரகாம் என்ற மத போதகருக்கும், எனது மகள் ரேவதிக்கும் நட்பு ஏற்பட்டது. இதை பயன்படுத்தி முத்து ஆப்ர காம் எனது மனைவிகள் தனலெட்சுமி, மோகனா, மகள்கள் ரேவதி, ராஜேஸ் வரி, பாக்கியலெட்சுமி ஆகியோரிடம் மூளை சலவை செய்துள்ளார்.

மேலும் நீங்கள் மதம் மாறினால் நன்றாக இருக் கலாம் என்று கூறி வீட்டில் வியாபாரத்திற்கு வைத்திருந்த ரூ. 8.6 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 28 பவுன் தங்க நகைகளுடன் அவர்களை கடத்திச் சென்று விட் டார். அவர்களை பத்திர மாக மீட்டு தர வேண்டும் என்று அதில் கூறி உள்ளார்.

இது குறித்து விசா ரணை நடத்திய விராலி மலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வரு கிறார்கள். மத போதகர் ஒருவரே வியாபாரியின் 2 மனைவிகள், 3 மகள்களை கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் ஓவியா said...

துணைக் குடியரசுத் தலைவர் பாகிஸ்தான் செல்லட்டும்!
வி.எச்.பி. சாமியாரிணி அடாவடிப் பேச்சு

புதுடில்லி, ஜூன் 24_ அதிரடி விவாதப் பேச் சைப் பேசிவரும்  விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப் பின் தலைவர்களில் ஒரு வரான சாமியாரினி பிராச்சி தற்போது மேலும் அடாவடித்தனமாகப் பேசியுள்ளார்.

டில்லியில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சிக்கு துணைக் குடியரசுத் தலை வர் ஹமித் அன்சாரிக்கு அழைப்பு விடுக்கப்படா தது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிராச்சி யோகா தினம் ஒன்றும் திருமண நிகழ்ச்சி கிடை யாது; அழைப்பிதழ் வைத்து அழைக்க, அவரா கவே வந்து கலந்து கொள்ளவேண்டும். அப்படி பிடிக்கவில்லை என்றால் பாகிஸ்தான் சென்றுவிடலாம் என்று துணைக் குடியரசுத் தலை வர் அமித் அன்சாரியைக் குறிப்பிட்டு அவர் கூறி யுள்ளார் மனங்களை இணைக்கும் பாலமாகச் செயல்படும் யோகாசனம் என்பது ஒரு தனிப்பட்ட மத நம்பிக்கைக்கு மட்டும் சொந்தமானது அல்ல.

இந்தியாவில் உள்ள மக்களின் பாரம்பரியங் களுக்கும், கலாசாரங்களுக் கும் ஆட்சேபணை தெரி விப்பது ஒருபோதும் தேவையில்லாத செயலா கும். இந்த நாட்டின் நலனுக்காக அவர் (ஹமீது அன்சாரி) என்ன செய் துள்ளார் அவர் அந்தப் பதவியில் இருப்பதே எதற்காக என்று தெரிய வில்லை. இதை நானும் பல நாள்களாக பார்த்து வருகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் கலாச் சாரம் மற்றும் பாரம்பரி யத்துடன் முஸ்லிம்களே தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும். அதை விடுத்து ஆட்சேபம் தெரி விக்கக்கூடாது என்றும், அப்படி ஆட்சேபணை தெரிவிப்பவர்கள் இந் தியாவுக்குள் வாழ்வதற்கு உரிமை இல்லாதவர்கள் என்றும், அவர்கள் பாகிஸ் தானுக்கு போய் விடலாம் எனவும் சாமியாரிணி பிராச்சி கூறினார்.

தமிழ் ஓவியா said...

நலவாழ்வின் எதிரி சர்க்கரை நோய் - புரிந்திடுவீர்!


சர்க்கரை நோய் என்பது மிகவும் ஆபத்தானது; அது மட்டுமா? ஒருமுறை நம் உடம்பினுள் புகுந்து அது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டால், அது நமக்கு வாழ்நாள் முழுவதும் கூடவே இருந்தே தீரும் என்பதுதான் இதுவரை நிலவிவரும் மருத்துவத் தகவல். இனி எதிர்காலத்தில் - ஆய்வுகளால் எப்படி மாறுமோ? நாம் அறியோம்!

இன்றைய (24.6.2015) டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆங்கில நாளேட்டில் இந்த நோய் தாக்குவதற்குரிய மூலகாரணம் ஒன்றைப்பற்றி மிகவும் தெளிவாக ஒரு செய்திக் கட்டுரை வந்துள்ளது.

மிக நீண்ட நேரம் அமர்ந்தே, எழா மல், சிறிதுநேரம்கூட நடந்து, திரும்பி பணியை மேற்கொள்ளாது பணியாற்றும் போது, அந்தப் பல மணிநேர அமர்வு - உட்கார்ந்திருத்தல்கூட, நாம் பணியாற்று கிறோம்; சும்மா இருக்கவில்லை என்ற போதிலும்கூட, அது நமது ரத்தத்தின் சர்க்கரை அளவை மிகவும் கூடுதலாக்கி, சர்க்கரை நோயை (Diabetes) கொண்டு வந்து விடுகிறது.

பொதுவாக பணியாற்றுகிறவர்கள் கணினி முன்னால், அல்லது பல மணிநேரம் இடைவிடாது நாற்காலியில் அமர்ந்தோ தொடர்ந்து தொலைக் காட்சி (டி.வி.) பார்த்துக்கொண்டே இருக்கும் இருபாலர்களோ, சில பொது நிகழ்ச்சிகளில்கூட அன்பு தண்டனை யாக மூன்று, நான்கு மணிநேரம் நம்மை அமரச் செய்து, நீங்கள் முக்கிய மானவர்; இறுதியில் பேசுங்கள்; அப் போதுதான் கூட்டம் கலையாமல் இருக்கும் என்று கூறி, நேரத்தை வீணாக்கி, மற்ற பலரையும் பேசவிட்டு, பெருங்கூட்டத்தைக் கொஞ்சம் கொஞ்ச மாகக் கலையச் செய்த பிறகு, கூட்டத் தினரிடையே பேச வைக்கும் ஏற்பாடு - இப்படி எத்தனையோ விதங்களில் தொடர்ந்து அமர்ந்திருப்பது - எழாமல் இருப்பது - சர்க்கரை நோய் மட்டுமல்ல - கூடுதல் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) - அதன் விளைவாக மாரடைப்பு - இருதய நோயை உண்டாக்குதல் போன்றவை களோகூட முன்னோட்டமான நிலை மைகளை உருவாக்குவது போன்ற தொடர் நிகழ்வுகள்தான்!

இவைகளைத் தவிர்க்க, எளிய வழிகள்:

1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காமல், அடிக்கடி எழுந்து, அல்லது அலுவலக அறைக் குள்ளே பொடி நடைச் சுற்று சுற்றி மீண்டும் வந்து அமர்ந்து பணி தொடர் தல் போன்றவற்றைச் செய்யலாம்.

உடல் அசைவுகள், எல்லா உறுப்பு களுக்கும் ரத்த ஓட்டம் செல்லும்படி சிறு சிறு மாற்றுப் பணிகள் இடைவேளை களில் செய்தல், எழுந்து, நடந்து மீண்டும் அமர்தல் போன்றவைகளைச் செய்யலாம்.

நீண்ட நேரம் அமர்ந்திருப்பது (தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்த உருளைக்கிழங்கு போண் டாக்களும் இது சேர்ந்ததே)

இருதயம்:

எந்தெந்த உடல் உறுப்புகளை இப்படி நீண்ட நேரம் குந்தியே (உட் கார்ந்தே) சில ஊர்களில் இச்சொற் றொடர் புழக்கத்தில் உள்ளது.

நீங்கள் அமர்ந்தே இருக்கும்போது ரத்த ஓட்டம் குறைகிறது; தசைகளில் கொழுப்பை (உணவின்மூலம் சேரு வதை) எரிப்பது குறைகிறது. விளைவு கொழுப்பு திரவங்கள் (Fatty Acids) இதயத்தின் இரத்தக் குழாய்களை அடைக்கின்றன.

கணையம்:

உடல் உறுப்பில் இந்தக் கணையம் (Pancreas) தான் இன்சுலின் என்பதை ஈர்த்து ஒழுங்குபடுத்தும் கருவி,  ஒரு நாள் அதிகமாக உட்கார்ந்தே இருப்பது அதிகமான அளவு இன்சுலின் அதிக அளவில் உற்பத்தியாவதற்குக் காரண மாக - சர்க்கரை நோயைத் தோற்று விக்கிறது.

செரிமான உறுப்புகள்:

உட்கார்ந்தே இருப்பதால், செரி மானப் பணிகளைச் செய்யும் வயிற்று உறுப்புகள் சுருங்கி, செரிமானத்தைத் தாமதிக்கிறது. இப்படி சரியானபடி ஆகாத மிகவும் தாமதமான செரிமானம் - வயிற்றில் ஒரு பிடிப்பு (வலி) (Cramping, Bloating) நெஞ்சு எரிச்சல் (Heart Burn)  மலச்சிக்கல் (Constipation) இவைகளை உருவாக்குகிறது.

உடற்பயிற்சி ஏதும் செய்யாது மிக நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதனால், சுறுசுறுப்பு இன்றி மிகவும் டல்லாக குறைந்த சக்தியை மட்டுமே பெறும் அளவுக்கு ஆக்கி அசத்தி உட்காரவும் வைத்துவிடுகிறது!

எனவே, அடிக்கடி எழுந்து குறு நடை நடைப் பயிற்சி செய்து; உள்ளே, வெளியே சென்று தண்ணீர் குடித்தோ, உரையாடியோ திரும்புங்கள்.

இன்று வந்துள்ள இந்து ஆங்கில நாளேட்டில் சர்க்கரை நோய் வரு வதற்கு நான்கு முக்கிய காரணங்கள் என்பவைபற்றியும் விளக்கி ஒரு செய்திக் கட்டுரை வந்துள்ளது.

அந்த நான்கு பெரிய (Big Four) என்ன தெரியுமா?

1. உணவு - கண்டதையும் அரைத்தல் (குறிப்பாக, வேக உணவுகள்)

2. உடற்பயிற்சி இன்மை - lack of exercise

3. உடற்பருமன் - Obesity

4. கொலஸ்ட்ரால் (கொழுப்புச் சத்து) மிகுதல்

இவற்றில் நாம் அனைவரும் கவனம் செலுத்துதல் முக்கியம் - மிக முக்கியம்  - நல வாழ்வுக்கு.

தமிழ் ஓவியா said...

எதிலும் மதப்பார்வை என்பது ஆபத்தானது!


தீவிர அரசியலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஊடுருவ வேண்டும் என்ற திட்டத்தின்படி ராம் மாதவ் சிவ்பிரகாஷ் போன்றோர் 2014 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி  பாஜகவில் இணைந்தனர். அதற்கு முன்வரை ஆர்.எஸ்.எஸின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஆந்திரக்காரர் இவர்.

முக்கியமாக ராம் மாதவ் பாஜகவில் இணைந்த உடனேயே பள்ளிக் கல்வியில் மாற்றம் குறித்த கூட்டத்திற்கு கலந்தாய்வு செய்ய அரசுக்கு சிறிதும் தொடர்பில்லாத பல இந்து அமைப்புகளின் தலைவர்களை அழைத்து ஸ்மிரிதி இராணியுடன் பேசச் செய்தார். கடந்த ஜூலை 10 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடனான ஸ்மிரிதி இராணியின் சந்திப்பு முடிந்த பிறகுதான் சமஸ்கிருத பிரச்சினை வெடித்தது.    ராம் மாதவ் மத்தியில் உள்ள சிறுபான்மை இன அதிகாரிகளையும், உயர்பதவி வகிக்கும் பலரையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து மத ரீதியாகவே விமர்சனம் செய்து வந்தார்.

ஜனவரி 26 ஆம் தேதி நடந்த குடியரசு நாள் விழாவில் அமீத் அன்சாரி கொடிவணக்கம் செலுத்தவில்லை என்று கூறி பிரச்சினையைக் கிளப்பியதின் பின்புலத்திலும் ராம்மாதவ் இருந்திருக்கிறார்.  ராம்மாதவின் இதுபோன்ற மட்டமான செயல்களுக்கும் மோடி மறைமுக ஆதரவுஅளித்தார். ராம் மாதவ் எழுப்பும் எந்தவொரு செயலுக்கும் பாஜக தரப்பில் மறுப்போ அல்லது வருத்தமோ தெரிவிப்பதில்லை. குடியரசு நாள் விழா விவாதத்தில்கூட துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகம் தான் விதிப்படி குடியரசுத் தலைவர் தலைமையில் நடக்கும் விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் கொடிவணக்கம் செலுத்தக் கூடாது என்ற விதி உள்ளதைக் கூறியுள்ளது.  கடந்த ஞாயிறு அன்று  டில்லியில் நடைபெற்ற உலக யோகா நாள் நிகழ்ச்சிக்கு துணைக் குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீத் அன்சாரி ஏன் வரவில்லை என தேவையில்லாமல் கேள்வி எழுப்பி இருந்தார்.

மிகவும் உயர்ந்த பதவியில் உள்ளவரை சிறுபான்மை யினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக மீண்டும் மீண்டும் அவரை இழிவுபடுத்தும் நோக்கில் செயல் படுகிறார்கள். எதிலும் மதப் பார்வைதான் இந்த மதம் பிடித்தவர்களுக்கு. முதலில் யோகா நாள் விழாவில் கலந்துகொள்ள துணைக் குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவேயில்லை. இதற்கு ஆயுர் வேத அமைச்சகம் தெரிவித்துள்ள சப்பைக் காரணமானது பிரதமர் தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படுவதில்லை என்று கூறியிருந்தார். ஆனால், இது மிகவும் பொய்யான ஒரு தகவலாகும்; அரசின் சார்பில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் மரியாதை நிமித்தமாக குடியரசுத்தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும். இது பாரம்பரியமாக இருந்துவரும் நடைமுறையேயாகும்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, மோடி நேரில் சந்தித்து உலக யோகா நிகழ்ச்சிபற்றி உரையாடி அழைப்பிதழ் கொடுத்துள்ளார்; குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி யோகா நாள் வாழ்த்துக்களும், அதற்காக சிறப்புரையும் ஆற்றினார். அப்படி இருக்க துணைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல்  இருந்துவிட்டு குட்டு உடைந்த பிறகு, ஒரு அமைச்சகமே இப்படி மக்களிடையே பொய் கூறியுள்ளது.

புளுகினாலும் பொருத்தமாகப் புளுகவேண்டாமா? கெட்டிக்காரன் புளுகே எட்டு நாளைக்குத்தான் - இவர்கள் புளுகோ இரண்டு நாள்களுக்குத் தாங்கவில்லையே!

யோகாவுக்கு வராத துணைக் குடியரசுத் தலைவர் பாகிஸ்தான் செல்லவேண்டும் என்று வி.எச்.பி. முன்னணி தலைவரான பிராய்ச்சி சாமியாரிணி கீழ்த்தரமாகப் பேசியுள்ளார்! பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என்று இப்படி இந்தக் கூட்டம் அடிக்கடி கூறுவது - பக்கத்து நாட்டையும் பகைக்கும் தன்மையதே!

முதலில் துணைக் குடியரசுத் தலைவர் உடல் நிலை சரியில்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று மேலும் ஒரு பொய்யைக் கூறிய உடன் தான் மத்திய அரசின் ஏமாற்றுவேலை வெளியே தெரியவந்துள்ளது.

ராம் மாதவின் இந்த பிரிவினைவாத நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கூறியதாவது, அன்சாரி புறக்கணிக்கப் பட்டதன்மூலம் பா.ஜ.க.வின் பிரிவினைவாத அரசியல் முகம் வெளிப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய ஆயுர்வேத அமைச்சர் சிறீபாத் நாயக் தெரியாமல் இந்த தவறு நிகழ்ந்து விட்டதாகவும், ராம் மாதவும் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதை தவிர்த்திருக்க முடியும் என்று கூறியுள்ள அவர், நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் ஒரு முஸ்லிம் என்பதாலேயே இந்த இந்துத்துவாவாதிகளால் குறி வைத்துத் தாக்கப்படுகிறார். மிகப்பெரிய பதவியில் உள்ளவர்களுக்கே இத்தகைய அவமானம் என்றால், பி.ஜே.பி. ஆட்சியில் சட்டம் ஒழுங்கையோ, மரபுகளையோ, நாகரிகத்தையோ எதிர்ப்பார்க்க முடியுமா?

தமிழ் ஓவியா said...

குலத் தொழிலுக்குத் தலைமுழுக்கிடுக!


எப்பாடு பட்டாவது மக்களைப் படிக்க வைத்து வசதி செய்து கொடுத்துத் தகப்பன் வேலையை விட்டு, ஜாதி வேலையை விட்டு, வேறு வேலைக்கு அனுப்பவேண்டும். எந்தத் தலை முறையும் தன் ஜாதி வேலைக்கே வராமல் செய்வதுதான் முக்கியக் கடமையாகும். _ (விடுதலை, 9.5.1961)

தமிழ் ஓவியா said...

நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழாவை நடத்துகின்ற தகுதி யார் யாருக்கெல்லாம் உண்டு

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேச்சு
கரூர், ஜூன் 24_ கரூர் மாவட்ட திராவிடர் கழ கத்தின் சார்பில் திராவி டர் விழிப்புணர்வு 4ஆவது வட்டார மாநாடு வேலா யுதம்பாளையத்தில் பெரி யார் திடல், ச.சங்கரன் நினை வரங்கம் மலைவீதியில் நடைபெற்றன. நிகழ்ச்சி யில் ஆ.பழனிசாமி (பகுத் தறிவாளர் கழகம்) அவர் கள் அனைவரையும் வர வேற்று பேசினார். கரூர் ஒன்றியத் தலைவர் சு.பழனி சாமி தலைமையில் நடை பெற்ற மாநாட்டில் பெரி யார் சுயமரியாதைப் பிரச் சார நிறுவனத்தலைவர் பொத்தனூர் க.சண்முகம் மாநாட்டு கொடி ஏற்றி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியின் தொடக் கத்தில் திண்டுக்கல் அழ கர்சாமியின் மந்திரமா? தந் திரமா? நிகழ்ச்சியை செய்து காட்டினார். சாமியார்கள் செய்யும் மந்திர வித்தை கள், பித்தலாட்டங்கள் ஆகியவற்றினைப் பற்றி எல்லாம் மந்திரம் அல்ல தந்திரமே என்று செய்து காட்டினார். மாநாட்டின் சிறப்புரையை தலைமைக் கழகப் பேச்சாளர் என்ன ரெசு பிராட்லா மத்திய, மாநில அரசுகளின் மக் கள் விரோத இந்துத்துவா கொள்கைகளை பரப்பும் செயல்களை கண்டித்துப் பேசினார். இறுதியாக கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேசிய தாவது:_

நீதிக்கட்சி தொடங்கி வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி 100 ஆண்டு ஆகிறது. தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் நூற் றாண்டு விழாவை நடத்து கின்ற தகுதி திராவிடர் கழகத்திற்கும், திமுக, மதி முக போன்ற தோழமை கட்சிகளுக்கு மட்டும் சொந்தம் கொண்டாட தகுதி உள்ளது. பிஜேபியி னர் ராகுல் காந்திக்கு என்ன படிப்பு தகுதி உள் ளது என்று கேட்கின்றனர். ஆனால் பிஜேபி மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிருதி ரானிக்கு என்ன கல்வித் தகுதி என்று காங்கிரஸ் கேட்டனர் பி.காம் என்று அமைச்சர் சொன்னார் ஹார்வர்ட் பல்கலைகழ கத்தில் நடந்த பயிற்சி முகா மில் 15 நாட்கள் கலந்து கொண்டு சான்றிதழ் வாங்கியுள்ளதை டிப் ளமோ படித்தேன் என்கி றார். உலகில் 53 இராமா யணங்கள் உள்ளது. ஜப் பான், இந்தோனேசியா, தாய்லாந்து, திபெத், இலங்கை போன்ற நாடு களில் ஒவ்வொரு இராமா யணக் கதை உள்ளன. இந் தோனேசியாவில் உள்ள இராமாயணத்தில் இரா மன் தலையை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருந்தாக அறிஞர் அண்ணா எடுத்து கூறி னார். கல்கியில் இராஜாஜி எழுதிய இராமாயணத் தில் எட்டாவது பக்கத்தில் இராமன் கடவுள் அல்ல கற்பனை கதை என்பதை மு.கருணாநிதி முரசொலி யில் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் இராமாய ணத்தை முழுவதுமாக படித்தவர் பெரியார், இராஜாஜி இருவர் மட் டும் தான், உலகத்தில் மூன்று இனம் (வெள்ளை, கருப்பர் _ (நீக்ரோ இனம்), மாநிறம் (மங்கலான சிவப்பு) சாப்பிடவே வழி யில்லாமல் இருக்கும்போது யோகா ஒரு கேடா என் றார் லல்லுபிரசாத் யாதவ். தமிழகத்தில் இரண்டு முறை முதல்வர் பொறுப்பு வந்தும், வேண்டாம் என்று உதறித் தள்ளியவர் பெரி யார் என்று செயலவைத் தலைவர் பேசினார். இறுதியாக பெருமாள் நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...

யோகா திராவிடர் கலையே! ஆரியர்களுடையது அல்ல!

சூழ்ச்சியால், தங்கள் கலையாக்கிக் கொண்டனர்

பெங்களூரு மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல அதிரடி!பெங்களூரு ஜூன் 23_ யோகக்கலை திராவிடக் கலாச்சாரம் கொடுத்த கொடையாகும், அதை ஆரியர்கள் சூழ்ச்சி செய்து தனதாக்கிக் கொண் டார்கள்  என்று, நிடுமா முடி மடத்தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள் தெரிவித்தார்.

பெங்களூரு நகரில் திங்களன்று நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் நிடுமாமுடி மடத் தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது யோகா குறித்து அவர் கூறியதாவது:  யோகா கலை என்பது வாழ்வியல் தொடர்பான ஒன்று இது சிந்துவெளி நாகரிகத்தில் இருந்து தொடர்ச்சியாக திராவிட நாகரிகம் உள்ள இடங்கள் அனைத்திலும் வியாபித் திருந்தது. இது ஒரு தனிப் பட்ட இந்து மதத் துற வியோ அல்லது முனிவர் களோ வழங்கியது அல்ல, யோகாவிற்கும் ஆரிய வேத கலாச்சாரத்திற்கும் எள்ளளவும் தொடர் பில்லை. ஆரியர்கள் திரா விடர்களின் இந்த வாழ் வியல் கலையை தங்கள தாக்கிக் கொண்டனர். பிறகு அதனுடன் வேத ஸ்லோகங்களை இணைத்து அதை வேதகால கலையைப் போல் மாற்றிவிட்டனர்.   யோகா என்பது இந்து மத முனிவர்கள் அல்லது குருக்கள் கொண்டு வந்த கலை என்று தற்போது அதிகம் பேசப்பட்டு வரு கிறது. ஆனால் இது முழுவதும் பொய்யான ஒன்றாகும். யோகா கலையை வேதகாலத்தில் கற்றுக்கொண்டவர்கள் தங்களது மாணவர்களுக்கு இந்தக்கலை குறித்த பொய்யான தகவலைக் கூறிவைத்தனர். இந்த பொய்த்தகவல் காரண மாக பிற்காலத்தில் இது வேதமதம் தொடர்புடைய தாக மக்கள் நினைத்துக் கொண்டனர்.   யோகா என்பது மதம் தொடர்பானது அல்ல; இது மனித குலத்திற்குத் தேவையான நல்ல ஒரு மென்மையான உடற் பயிற்சியாகும். மனவளம் பெறவும் யோகா மிகவும் உதவியாக இருக்கும்.

ஆனால், தற்போது சிலர் யோகா பயிற்சிக்கு மதச்சாயம் பூசி, பணம் பார்க்கும் தொழிலாக  மாற்றிவிட்டனர். யோகாவின் மூலம் பணம் பார்ப்பவர்களால் எப்படி மக்களைத் தெளிவாக வைத்திருக்க முடியும்? இந்துத்துவ அமைப் புகள் வலுக்கட்டாயமாக யோகாவை பிறரிடம் திணிக்க முயற்சிக்கிறது. இந்துத்துவ அமைப்பு களின் பிடியில் இருந்து யோகா விடுதலை பெற்று அனைவரிடமும் போய்ச் சேரவேண்டும் என்று, நிடுமாமுடி மடத்தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

கவனிக்கவேண்டும்

மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துகளும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா, நீங்காதா என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.
_ (விடுதலை,3.12.1962)

தமிழ் ஓவியா said...

யாகம் நடத்திய அதிகாரிக்கு மன்னிப்பாம்!


சென்னை, ஜூன் 23_ தமிழகத்தின் டெல்டா மாவட் டங்களில் பாசனத் துக்கு தேவையான தண் ணீர் இல்லை. எனவே, பயிர்கள் கருகும் நிலை உருவானது. எனவே, திருச்சி நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், 30 உப கோட்ட அலுவலகத்துக்கு சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில், மழை வேண்டி ஒவ்வொரு அலுவலகம் சார்பில் அந்தெந்த பகுதிகளில் உள்ள கோயிலில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி கடந்த 3ஆம் தேதி திருச்சி மண்டலத்தில் 30 கோயில்களில் சிறப்பு யாகம் நடந்தது.  இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், பொதுப் பணித் துறை தலைமை அறிவுரை இல்லாமல் அந்த தலைமை பொறியாளர் தன்னிச் சையாக யாகம் நடத்த உத்தர விட்ட தாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த அதிகாரியிடம் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென்று கேட்டு பொதுப் பணித் துறை தலைமை அறிவிக்கை அனுப்பியது. இந்த நிலையில், அரசு தரப்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பொதுப் பணித் துறை தலை மைக்கு உத்தரவிட்டதாக கூறப்படு கிறது. இதனை தொடர்ந்து அந்த தலைமை பொறியாளரை அழைத்து விளக்கம் கேட்டதுடன், அவரை மன்னித்து அனுப்பிவிட்டது.

இதுகுறித்து பொதுப் பணித்துறை உயர் அதி காரி ஒருவர் கூறும் போது, மழை வேண்டி யாகம் நடத்த உத்தர விட்ட பிரச்சினையில் தலைமை பொறியாளர் மீது நடவடிக்கை எடுப்ப தால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. இதுதொடர்பாக மேலிடம் தலையிட்டு தலைமை பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று உத்தர விட்டதால் அவரிடம் விளக்கம் மட்டும் கேட்கப்பட்டது.

தொடர்ந்து பொதுப் பணித்துறை தலைமை அனுமதி இல்லாமல் இனிமேல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்ற அறிவுரையும், மன்னிப்பும் வழங்கியது பொதுப்பணித் துறை என்றார்.

தமிழ் ஓவியா said...

கீதைக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு!கீதை மனிதநேயத்தை சிதைக்கிறது, அரசு அலுவலகங்களில் பகவத் கீதை படிக்க கொடுப் பது அமெரிக்க மதச்சார்பின்மைக்கு எதிரான தாகும் என்கிறார்- அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ்விக்.

அமெரிக்க ஆளும் கட்சியின் இடஹோ மாகாண உறுப்பினர் தனது மாகாண அரசு அலுவலகத்தில் பகவத் கீதைவகுப்பு  குறித்த நிகழ்ச்சிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது இந்து மதம், மனிதர்களைப் பிரிக்கும் ஜாதியை மய்யமாகக் கொண்டது, பகவத் கீதை ஜாதியை வலியுறுத் துகிறது மனித நேயமற்ற கருத்தை வலியுறுத்தும் ஒரு மதவழிபாடு இங்கு நடைபெறுமாயின் அது அமெரிக்க மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும் என்று கூறினார்.

அமெரிக்காவின் இடஹோ மாகாண அரசு அலுவலகத்தில் பகவத் கீதை தொடர்பான வகுப்பு ஒன்றை நடத்த அம்மாகாண உறுப்பினர் களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான பரிசீலனையின் போது இடஹோ மாகாண உறுப்பினர் ஸ்டீவ் விக் கூறியதாவது:  அமெரிக்காவில் எந்த ஒரு மாகாணத்திலும்  அரசு அலுவலகங்களில் பகவத் கீதைவகுப்பு களுக்கு அனுமதியளிக்கக்கூடாது.

மேலும் இந்து மதம், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டுள்ளது.  அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டம் தயாரிக்கப்பட்ட போது அனைத்து மதவிதிகளும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது இந்துமதம் மற்றும் அதில் உள்ள ஜாதிய பேதங்கள் குறித்து அந்த மத பிரதிநிதி களுடன் விவாதிக்கப்பட்டது.

அந்த மதத்தில் மனிதர்களைப் பிரிக்கும் ஜாதி உள்ளது. ஆகை யால் அமெரிக்க அரசமைப்புச் சட்ட நூலில் இந்துமதம் குறித்த எந்த ஒரு வாசகமும் இடம் பெறவில்லை, பகவத் கீதை மனிதர்களைப் பிரிக்கும் ஜாதியை வலியுறுத்துகிறது,

பிறப்பால் ஜாதிபாராட்டும் நூல் பகவத் கீதை, பிறப்பால் ஒருவரை ஜாதிகளாகப் பிரிக்கும் மனிதநேயமற்ற கருத்தைக் கூறும் பகவத் கீதை என்ற நூல் வலியு றுத்தும் மதம் அமெரிக்க மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும், அதை அமெரிக்க அரசு அலுவலகங்களில் படிக்கக்கூடாது என்று கூறி இந்து மதவழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்து அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

மேலும் அவர் முகநூலில் எழுதியுள்ளதாவது, இந்து மதவழிபாட்டை ஆதரித்துதான் இந்திய நாட்டுடன் நட்புறவை வலுப்படுத்தவேண்டும் என்று சொல்வதற்கில்லை. எனது கருத்துகள் இந்தியாவில் தவறாகப் பிரச்சாரம் செய்யப்பட லாம். அதுகுறித்து, நான் கவலைப்படமாட்டேன். எனது கருத்துகளை மனிதநேயமுள்ள இந்தி யர்கள் பாராட்டுவார்கள் என்று தனது முக நூலில் எழுதியிருந்தார்.

தமிழ் ஓவியா said...

மூளையின் அதிசய செயல்பாடுகள்மூளையின் எடை 1200 கிராம் முதல் 1350 கிராம் அளவுதான். ஆனால் இதில் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன. ஒரு பில்லியன்: 100 கோடி. உலகின் மிகப்பெரிய அதிசயங்களில் ஒன்று மனித மூளை. உங்கள் மூளை மிகவும் சுறுசுறுப்பாக, பரபரப்பாக இல்லாமல் ஓய்வாக இருக்கும் நேரத்தில் தான் புதுமையான புதுப்புது ஆலோசனைகளை கண்டு பிடிப்புகளைச் சொல்லும்.

மிகவும் சோர்வாக இருக் கின்றதா? அதிக மூளை உழைப்பு உங்களை களைப்பாக்கி விட்டது என்றால் சற்று ஓய்வு எடுங்கள். நல்ல குளியல் எடுங்கள். அப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையில் புதுப்புது யோசனைகள் கிடைக்கும். நம்புங்கள் இது ஆராய்ச்சி பூர்வமான உண்மை.

* மனஉளைச்சல் மூளையை சுருங்கச் செய்து சிரிதாக்கி விடுகின்றது. சுருங்கிய மூளையால் அநேக பாதிப்புகள் ஏற்படும்.

* ஒரே நேரத்தில் பல விஷயங்களை நினைப்பது மூளைக்கு சுமையாக இருக்கும். பொறுமையாக ஒவ்வொன்றாக செய்தால் நிறைய சாதிக்கலாம்.

* சின்னச்சின்ன தூக்கம். அதாவது, பத்து நிமிடம் கண்மூடி அமைதி யாக இருப்பது மூளையின் செயல்பாட்டுத்திறனை கூட்டும்.

* ஹிப்போகாம்பஸ் எனும் பகுதியில் தான் மூளை நினைவுகளை பதிவு செய்யும். மூளை மிக வேகமாக அதிக மாக பதிவு செய்யும் போது பல விஷயங்களை பதிவு செய்ய மறந்து விடுகின்றது. 10 அல்லது- 20 நிமிட குட்டித் தூக்கம் ஞாபகத் திறனை கூட்டுகின்றது. படிக்கும் ஆற்றலை அதிகரிக்கின்றது.

உங்கள் மூளையின் சிறந்த நேரம் எது என்று நீங்களே உங்களை ஆராய்ந்து பாருங்கள். பலர் காலை நேரத்தில் நல்ல சுறுசுறுப்புடன் இருப்பார்கள். மணி அடித்தார் போல் இரவு 9 மணிக்கு படுத்து தூங்கி விடுவார்கள். பலர் இரவு எட்டு மணிக்கு மேல் தான் படிப்பார்கள், எழுதுவார்கள். இரவில் வெகு நேரம் கண் விழித்திருப்பார்கள்.

காலை 8 மணிக்கு முன்னால் எழுந்திருக்க மாட்டார்கள். பொதுவில் அன்றாட செயல்களுக்கான மூளையின் சிறந்த நேரங்கள் காலை 9 முதல் 11 மணி ஆகும். மூளை சிறிதளவு ஸ்டிரெஸ் ஹார்மோன் கார்டிசால் இருக்கும். காரணம் படிப்போ, வேலையோ அதற்காக உங்களை தயார்படுத்தி பழகியிருப்பதால் நல்ல கவனத்தை செய்யும் வேலையில் உங்களால் செலுத்த முடியும்.