Search This Blog

13.6.15

நம் ஆட்கள் பார்ப்பனத்தியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால்?-பெரியார்

முற்காலச் ஜாதிக் கொடுமைகளை இக்கால இளைஞர் எப்படி அறிவர்?


என்னுடைய கழகத் தோழர்கள் பலர் பல மாதங்கள் தண்டிக்கப்பட்டு பலவித கஷ்ட நஷ்டங்களுக்கும் ஆளாகி வெளியே வந்திருக்கிறார்கள். இன்னும் பலர் ஒன்றரையாண்டு, 2-ஆண்டு தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். பத்துப்பேருக்கு மேல் சிறையில் சாகடிக்கப்பட்டுமிருக்கிறார்கள். இன்னும் பலர் சாக இருக்கிறார்கள்! இதற்குப் பெரும்பாலன காரணம் சிறையிலே இருக்கிற டாக்டர்கள் அல்லது கல் மன மனிதர்கள். டாக்டர்களுடைய அன்பான நடத்தையாலேயே உலகத்தில் அரைவாசி நோய் போய்விடும். ஆனால் ஜெயிலுக்குப் (சிறைக்குப்) போனால் அங்கிருக்கிற டாக்டர் பார்த்தாலே நோய் தானாக வருகிறது!

இந்தத் திருச்சியிலே சர்க்கார் (அரசு) ஆஸ்பத்திரியிலே (மருத்துவமனையிலே) இருக்கிற (மாவட்ட மருத்துவ அதிகாரியிடம்) டி.எம்.ஓ.விடம் நோய் என்று சொல்லி எங்களுடைய ஆள்கள் போனால் மிகவும் மரியாதைக் குறைவான வார்த்தைகளால் திட்டி இழிவு படுத்துகிறாராம்.... அவர் ஜாதிமுறைப்படி ஓர் ஆதிதிராவிடர் பறையன், பஞ்சமன் என்று சொல்லப்படும் கீழ்ஜாதியைச் சார்ந்த ஒருவர். இவர்களுக்கெல்லாம் என்ன பிறக்கும்போதே யோக்கியதை, அந்தஸ்து (தகுதி) வந்துவிட்டதா? யாராலே வந்தது இந்த யோக்கியதை என்று எண்ணிப்பார்க்க வேண்டாமா? இந்த சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகுதானே பறையன், சக்கிலி, பஞ்சமன் என்பவையெல்லாம் மாறிக்கொண்டு வருகின்றன. யாராவது மறுக்கட்டுமே பார்க்கலாம். இதுமாதிரி ஆள்கள் எல்லாம் டி.எம்.ஓ.வாக வருவதற்கு யார் முயற்சி பண்ணினது? சொல்லட்டுமே பார்ப்போம்! ஜஸ்டிஸ் கட்சி என்று இந்தத் திராவிடர் கழகம் தோன்றுவதற்கு முன்னால் எந்தப் பறையன், எந்தச் சக்கிலி, எந்தப் பஞ்சமன் இங்கு டி.எம்.ஓ.வாக (மாவட்ட மருத்துவ அதிகாரியாக) வந்திருக்கிறான்? எடுத்துக்காட்டினால் ஏற்றுக்கொள்கிறேன்.

நீங்கள் பிறவியில் இழிந்தவர்; ஜாதியால் கீழ்ஜாதி; உங்கள் பிறவி இழிவை ஒழிக்கப் பாடுபடுகிறோம். அதற்கு ஆக ஜெயிலுக்கு (சிறைக்கு) வந்தோம்; நீங்கள் பிறக்கும்போது உமக்கிருந்த யோக்கியதை என்ன? இந்த நாட்டிலேயே பிறக்கும் போதே பிறவியினால் யோக்கியதை ஒருவனுக்கு உண்டு என்றால் அது பார்ப்பானுக்குத்தானே யொழிய யாருக்கும் இல்லை. இதை நினைக்க வேண்டாமா?

அப்படியேதான் உனக்கு என்று ஒரு அந்தஸ்து (தகுதி) அரசாங்கத்தின் மூலம் ஏற்பட்டது என்று சொன்னாலும் யார் நீ? எங்களுடைய (public Servant) வேலைக்காரன்தானே? மேலே இந்த நாட்டுக்கே பிரதம மந்திரியாக இருக்கிற நேரு சொல்லுகிறார் "நான் மக்களுடைய வேலைக்காரன்" என்று. அப்புறம் நீ யார்? எம்மாத்திரம்?

எனக்கு யாரோ சொன்னார்கள் "இந்த ஆசாமி அப்படி நடப்பதற்குக் காரணம் ஒரு பார்ப்பனத்தியைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதனாலேயே தன்னைப் பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டு தான் தோன்றித்தனமாக நடந்து வருகிறார் என்று.

நம் ஆட்கள் சிலர் பார்ப்பனத்தியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் அவள் நம் ஜாதியாக ஆவதற்குப்பதிலாக இவன் பார்ப்பானாகிவிடுகிறான்! பார்ப்பான் மாதிரியே பேசுகிறான். நடை, உடை, பாவனைகள், பேச்சு, உணர்ச்சி எல்லாவற்றையும் மாற்றிக் கொள்கிறான். அவர் அப்படிப்பட்ட ஆள்களில் ஒருவராக இருப்பதால்தானோ என்னவோ தம்முடைய ஆட்களை மனிதர்களாகவே மதித்து நடப்பதில்லை. இதற்கு ஏதாவது வழி பிறக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் பல பேர்கள் சாகப்போவது உறுதிதான். இது போன்றவர்கள் தாங்கள் செய்யும் தொழிலுக்கு எப்படி பொருத்தமானவர்கள் ஆவார்கள்?"

ஆகவே எங்களைப் பாராட்டுவதைவிட ஜெயிலில் செத்துப் போனார்களே அவர்களைப் பாராட்டுவதும் சாக இருப்பவர்களைப் பாராட்டுவதும் தான் முக்கியமானதாகும்.

என்னைப் பொறுத்தவரையில் சிறையில் நான் எந்தவிதக் கஷ்டமும்படவில்லை. மிகவும் சௌக்கியமாக இருந்தேன். ஆரம்பத்தில் சில நாட்கள் தவிர மீதி நாட்கள் பூராவும் ஆஸ்பத்திரியில் வைத்து என்னை மிகவும் பொறுப்பாகக் கவனித்துக் கொண்டார்கள். ஒரு ஓட்டைக்காரை ஓவர் ஆல் (பழுது பார்த்து) பண்ணி சர்வீசுக்கு (முழுத்தொண்டுக்கு) இலாயக்கானதாக ஆக்கி அனுப்பி வைப்பது போல் என்னை இளையவனாக அனுப்பி வைத்தார்கள். கிழடு தட்டிப்போன என்னை வயசு வந்தவனாக ஆக்கி அனுப்பியிருக்கிறார்கள். எல்லோரும் சர்க்காரைத் (அரசை) திட்டுவார்கள். நான் பாராட்டுகிறேன். எல்லோரும் நினைத்தார்கள் சரி இவர்களும் ஒழிந்தார்கள் என்று; ஆனால் ஏமாந்து போனார்கள். நம் தமிழர் ஆட்களுக்கு இன உணர்ச்சியே கிடையாது.

ஆனால் இன்றைக்கு நம் நாட்டிலே ஆட்சி பீடத்தில் உள்ள முதல் அமைச்சர் காமராசர்தான் தமிழன் என்று நினைப்பவர். மற்றவர்களுக்கு இந்த எண்ணமே கிடையாது. ஏன்? இவரிடத்தில் இருக்கும் மற்ற எல்லா மந்திரிகளுக்கும் இந்த எண்ணம் இருக்கிறது என்று சொல்லும்படி நடந்துகொள்ளத் துணிவில்லை என்றாலும் கிழவன் போயிட்டா அப்பறம் நமக்கு யாரும் இல்லை. மற்றவர்கள் யார் இதைச் சொல்லுவார்கள் என்பது தெரியும். ஆகவே இன்னும் பல ஆண்டுகளுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மிகவும் கவலையோடு என்னைக் கவனித்தார்கள். அதற்காக நீங்கள் இந்த மந்திரிகளைப் பாராட்ட வேண்டும்.

நான் ஒன்றரை ஆண்டு தண்டனைபெற்று 6-மாதம் ஜெயிலுக்கு போனதால் ஒன்றும் கெட்டுவிடவில்லை. நான் இருக்கும் போது எப்படியோ அதைவிட அதிகப் பிரசாரம் நடந்தது. நாம் ஒழிந்ததாக நினைத்த பல பேரும் ஏமாந்துபோனார்கள். 10-பேர் செத்தார்கள் என்பது இருந்தாலும், சும்மா சாகிறது ஒரு நல்ல காரியத்திற்குத் தங்கள் உயிரைக் கொடுத்தார்கள் என்ற புகழோடு பெருமையோடு செத்தார்கள். செத்தும் சாகாத மாதிரி செத்தார்கள். பொது வாழ்விலே இருக்கிறவர்களுக்கு எப்படிப்பட்ட சாவு வரவேண்டுமோ அப்படியான சாவு அவர்களுக்கு வந்தது!

இந்த இயக்கத்திலே இருக்கிற 100-க்கு 90-பேர் சொந்த வீட்டுச் சோற்றைத் தின்றுவிட்டுத் தங்கள் கைக் காசைச் செலவு செய்து கொண்டு கஷ்டங்களை ஏற்றுக்கொண்டு பாடுபடுவார்கள். இயக்கத்தால் பலன் காணுபவர்கள் பெரும்பாலும் கிடையாது.

இதனால் ஏற்பட்ட பலன், செய்திருக்கிற தியாகத்தைவிட அதிகமாகும். ஏராளமான உணர்ச்சிகளைக் கிளப்பிவிட்டது. நம் கொள்கைக்கு இலட்சியங்களுக்கு எதிரிகளே இல்லாத அளவுக்கு ஆக்கிவிட்டுவிட்டது. எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரில் இதுவரை பார்க்காத அளவு பிரசாரம். இதைவிட பெரிய கிளர்ச்சி நடைபெறுவதற்கு இக்கிளர்ச்சி வழிவகுக்கிறது. பொதுமக்களுக்கு நல்ல அளவு உணர்ச்சியை ஊட்டியுள்ளது நமது கிளர்ச்சி. நாமும் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். எனவேதான் இதை ஒரு வழியனுப்புக் கிளர்ச்சி என்று சொன்னேன். ஆகவே இதில் தாய்மார்கள் ஏராளமாகப் பங்கு பெறவேண்டும் குடும்பம் குடும்பமாக நாம் ஜெயிலுக்குப் போக வேண்டும்.

ஜாதி இழிவு என்பது கொடுமையானது என்பது யாருக்குத் தெரியாது? அதற்கு இனிச் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதும், அதற்காகக் காரியத்தில் செய்யவேண்டியவைகள் என்ன என்று தயார் செய்து கொள்ள வேண்டியதுதான் நமது வேலை. சர்க்காரும் (அரசு) இரண்டில் ஒன்று பார்த்து ஆகவேண்டும். இதில் சுமார் 50,000- பேர்களுக்குக் குறையாமல் சிறைக்குப் போக வேண்டும். போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் படத்தைக் கொளுத்த வேண்டும். தயாராகப் போக வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் நாம் ஜெயிலுக்குப் போனபோது சாகவில்லையே என்ற கவலையே தவிர மற்றபடி இது வியாபாரம் மாதிரி எனக்குக் கிடையாது. மற்ற என்னுடைய கழகத் தோழர்களும் அப்படிப்பட்டவர்கள் தானே தவிர வேறில்லை.

எனக்கு இப்போது 80-வயது ஆகிறது 15, 20, 30-வயதிலே இருந்த ஜாதி ஆதிக்கம் இப்போது இருக்கிற இளைஞர்களுக்குத் தெரிய முடியாது. இப்போது அவையெல்லாம் ஒரு வேடிக்கையாகக் கூடத் தோன்றலாம்.

என்னுடைய இளம் வயதிலேயே ஜாதி ஒழிப்பு உணர்ச்சி எனக்கு எப்படியோ தோன்றிவிட்டது. என் சரித்திரம் 'தமிழர் தலைவர்' என்று விற்கப் படுகிறதே அதைப் பார்த்தால் தெரியும். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே "கீழ் ஜாதிக்காரர்கள் வீட்டில் - வாணியர் என்று அழைக்கப்படுபவர்கள் வீட்டில் - தண்ணீர் குடிக்காதே; வாத்தியார் வீட்டில் குடி" என்று சொல்லித்தான் தினம் தினம் எங்க அம்மா என்னைப் பள்ளிக்கு அனுப்புவார்கள். நான் அங்குக் குடிக்காமல் கீழ்ஜாதி எனப்படுவோரின் வீட்டிலேயே தண்ணீர் குடித்துவிட்டுப் பொய் சொல்லிவிடுவேன். பிறகு இந்தச் சேதி எப்படியோ வீட்டிற்குத் தெரிந்து அதற்காகவே நீ படிக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.

அந்தக் காலத்தில் இருக்கிற கொடுமை இன்றைக்கு யாருக்குத் தெரியும்? இன்றைய தினம் பெரிய மாறுதல் பரியாரி என்று சொன்னால் மிகவும் கேவலமாக நடத்தப்பட்டவர்கள். வண்ணானைவிட மிகவும் கேவலமாக நடத்தப்பட்டவர்கள். அவர்கள் பறையன், சக்கிலி ஜாதியாக இருந்தவர்கள். எவ்வளவோ மாறிவிட்டு இருக்கிறார்கள். அப்போதெல்லாம் ஜாதியைக் காப்பாற்றுவதுதான் ஒரு பொதுத் தொண்டு. அது இன்று நிலைமை தலை கீழாக மாறி இருக்கிறது!

இன்றைக்கு முதல் மந்திரியாக இருப்பவர் கீழான ஜாதி என்பதிலிருந்தே வந்திருக்கிறார்கள். அந்தச் ஜாதி நாடார் ஜாதி. அது மிகவும் கீழான ஜாதி என்று கருதப்பட்டதாகும். அதாவது வண்ணான், பரிபாரி முதல்கொண்டு தெருவில் போகலாம். நாடார் ஜாதிக்காரர்கள் போகக்கூடாது என்று சில இடத்தில் வைத்திருந்தார்கள். கோவிலுக்குள்கூட பரிபாரியையும், வண்ணாரையும் உள்ளே விடுவான். நாடாரை உள்ளேவிட மாட்டான். இந்த இயக்கம் இல்லாவிட்டால் அவர்கள் காலில் செருப்புக் கூடப்போட்டு அக்கிரகாரத்தில் போக முடியாது. அந்தக் கஷ்டங்களையெல்லாம் அனுபவித்தவர்களாதலால் காமராசருக்கு ஒரளவு இவற்றையெல்லாம் உணர்ந்து நடந்து கொள்ள முடிகிறது. நம் இன மக்களுக்கு இன்றைய ஆட்சியிலே இவ்வளவு வசதிகள் செய்ய வேறு யாராலும் முடியாது. அவர் பல அருமையான காரியங்களைச் செய்து வருகிறார்.

------------------------------------- 14.11.1958-மணச்சநல்லூரில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு: ”விடுதலை”, 26.11.1958

69 comments:

sivaje36 said...

நீங்க ஏன் பார்பனர்களை கல்யாணம் பண்ணனும் ? ஏன்னா அவர்கள் நல்லவர்கள் , அழகானவர்கள் , சுத்தமானவர்கள் , சரிதானே? ஈ வெ ர அவர்களே நீ பெரியார் இல்லை .. மகா திருடன் . உன் வேலையை நீங்க பிறந்த உங்க கர்நாடநக்கத்தில் செய்ய வேண்டியதுதானே , அங்கேதான் உங்க பருப்பு வேகாதே.. நீங்களும் உங்க திராவிடமும் ..

sivaje36 said...

நீங்க ஏன் பார்பனர்களை கல்யாணம் பண்ணனும் ? ஏன்னா அவர்கள் நல்லவர்கள் , அழகானவர்கள் , சுத்தமானவர்கள் , சரிதானே? ஈ வெ ர அவர்களே நீ பெரியார் இல்லை .. மகா திருடன் . உன் வேலையை நீங்க பிறந்த உங்க கர்நாடநக்கத்தில் செய்ய வேண்டியதுதானே , அங்கேதான் உங்க பருப்பு வேகாதே.. நீங்களும் உங்க திராவிடமும் ..

தமிழ் ஓவியா said...

மணவை முஸ்தபா அவர்களுக்கு வாழ்த்து!மணவையார் அமெரிக்கா வந்து தமிழ்ச்சங்கப் பேரவையிலும் மற்ற தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தமிழின் பெருமையை நிலை நாட்டினார். தமிழுக்காகத் தனக்கு கிடைத்த வேலையை உதறி தமிழால் முன்னேறி உலகம் போற்ற அய்க்கிய நாட்டுப் பணியை ஆற்றிய மேன்மையை அறிவோம்.

இங்கு எங்கள் பலர் இல்லங்களிலே அவர் தங்கியிருந்தமை எங்கட்கெல்லாம் பெருமை. பேச்சுத் திறனை இழந்தாலும் மூச்சு தமிழுக்கே என்று வாழும் பெருந்தகையே உமை வாழ்த்த வார்த்தைகள் பல நீர் எழுதிய பல அறிவியல் களஞ்சியங்களிலே உண்டு ஆனாலும் அதற்கும் மேலும் ஒரு வார்த்தை அறிவியல் வள்ளுவன். வாழிய நீவிர்! - சோம.இளங்கோவன்
FeTNA, Past President, Periyar International USA

தமிழ் ஓவியா said...

கடவுள் பக்தியும் - சக்தியும் இதுதான்!

ஏழுமலையானுக்கு அரோகரா! திருப்பதி சென்ற விவசாயி வீட்டில் கொள்ளை!
ஓமலூர், ஜூன் 12_ சேலம் மாவட்டம் ஓம லூரை அடுத்த தொப்பூர் ஆர்.எஸ். பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (40) விவசாயியான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு நேற்று மாலை 8 மணிக்கு வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து யாரோ சில நபர்கள் அதில் வைக்கப் பட்டிருந்த 3 பவுன் தங்க செயின் மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திருடி சென் றுள்ளது தெரியவந்தது.

தமிழ் ஓவியா said...

இதுகுறித்து தீவட் டிப்பட்டி காவல் நிலை யத்திற்கு தகவல் கொடுத் தார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை தேடி வருகின் றனர்.

கோவில் ஊழியர் வெட்டிக்கொலை!

பழனி, ஜூன் 12_ பழனி பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் கருப்பணன். இவரது மகன் செல்வராஜ் (வயது38). பழனி மலைக் கோவில் இழுவை ரயில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கவிதா. குகன் (7), தீபிகா (3) என்ற 2 குழந் தைகள் உள்ளனர்.
செல்வராஜ் வழக்க மாக தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து வேலைக்கு செல்வார். அதுபோல் நேற்று அதி காலை எழுந்த அவர் காப்பி குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்றார்.

பால்பண்ணை அருகே சென்றபோது இருட்டில் மறைந்திருந்த யாரோ சிலர் அவரை வழி மறித் தனர். திடுக்கிட்ட செல்வ ராஜ் தப்பிக்க முயன்றார். எனினும் அவர்கள் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.

இதில் சம்பவ இடத்தி லேயே செல்வராஜ் துடி துடித்து இறந்தார். அதன் பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென் றனர்.
நீண்ட நேரமாகியும் செல்வராஜ் வேலைக்கு வராததால் மேல் அதி காரிகள் அவரை செல் பேசியில் தொடர்பு கொண்டனர். செல்பேசி அனைத்து வைக்கப்பட்டி ருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து மற்ற ஊழியர்கள் அவரை தேடி வீட்டுக்கு வந்தனர். அப்போது பால்பண்ணை அருகே செல்வராஜ் வெட்டி கொலை செய் யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந் தனர்.

அதன்பின்னரே இந்த சம்பவம் அவரது குடும்பத் தாருக்கு தெரிய வந்தது. செல்வராஜின் மனைவி கவிதா குழந்தைகளுடன் நேற்று மூலனூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவரும் உறவி னர்களும் அங்கு வந்து கதறி அழுதனர். சம்பவ இடத்துக்குப் பழனி டவுன் காவல்துறையினர் விரைந்து வந்து விசா ரணை மேற்கொண்டனர்.
அவரது உடல் பிரேத பரிசோனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட் டது.

கோவில் ஊழியர் செல்வராஜை கொலை செய்தவர்கள் யார்? எதற் காக கொலை செய்தார் கள்? என்று தெரிய வில்லை. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பழனி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜோதிடர் படுகொலை!

வாடிப்பட்டி, ஜூன் 12_ மதுரை மாவட்டம், வாடிப் பட்டி அருகே உள்ள செம்மினிப்பட்டி காம ராஜர்புரம் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் செல்லப் பாண்டி (வயது 36).

இவர் ஜோதிடம் பார்ப்பது, மாந்தீரிகம் செய்வது போன்ற வேலை களை செய்து வந்தார். இவரது மனைவி செல்வி (34). இவர்களுக்கு ராஜ பாண்டி (16), என்ற மகனும், யோகேஸ்வரி (14) என்ற மகளும் உள்ளனர்.

தொழில் விஷயமாக செல்லப்பாண்டி அடிக் கடி வெளியூர் செல்வார். அப்போது பல பெண் களுடன் தொடர்பு ஏற் பட்டது. இது செல்விக்கு தெரியவந்தது.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற் பட்டது. நேற்றிரவும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் உருவானது. பின்னர் அனைவரும் வீட் டில் படுத்து தூங்கினர்.

இந்தநிலையில் நள் ளிரவு 12.30 மணிக்கு செல்வி எழுந்தார். கண வரை ஆத்திரத்தோடு பார்த்த அவர், அங்கிருந்த கிரைண்டர் கல்லை எடுத்து செல்லப்பாண்டி தலையில் போட்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
இதனைத் தொடர்ந்து காவல் நிலையம் சென்று செல்வி சரண் அடைந் தார். கொலை நடந்த இடத்தை சமயநல்லூர் காவல் துணை கண் காணிப்பாளர் வேல்முரு கன் நேரில் சென்று பார் வையிட்டார்.

வாடிப்பட்டி காவல் துறையினர் விரைந்து சென்று செல்லப் பாண்டி உடலை கைப் பற்றி உடற்கூறு பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர்.Read more: http://www.viduthalai.in/page1/103131.html#ixzz3cwRQHGOc

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ்.இன் ஆபத்தான துணை அமைப்புகளைக் காணீர்!


சற்றும் தயங்காமல் துணிவுடன் சண்டை போடத் தயாராக இருக்கும் சங்பரிவாரத்தை மிஞ்சிய அதன் துணை அமைப்புகள், தங்களின் சொற்களோ அல்லது செயல்களோ பிரதமருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி சற்றும் கவலைப்படாமல் இருப் பவையாகும். விசுவ இந்து பரிசத்திலிருந்து அதிகமாக அறியப்படாத இந்து மக்கள் கட்சி வரை விசித்திரமான தங்களின் சொந்த செயல்திட்டங்களை உருவாக்கிக் கொண்டு, அவ்வப்போது கவலை அளிக்கும் வகையில் பேசி வருகின்றன. மிகுந்த ஆக்ரமிப்பு உணர்வு கொண்ட சங் பரிவாரத்தின் 10 துணை அமைப்பு களை எகனாமிக் டைம்ஸ் இங்கே தேர்ந்தெடுத்து அளித்துள்ளது.

தரம் ஜாகரான் சமன்வாய் சமிதி

உண்மையைக் கூறுவதானால், ஆர்.எஸ்.எஸ்.இன் இந்த மதமாற்றப் பிரிவின் தலைமையில் இவர்களின் மதமாற்றப் பிரச்சாரம் நீண்டதொரு காலமாகவே நடைபெற்று வருகிறது. மோடி அரசு பதவிக்கு வந்தபிறகுதான், கர்வாப்சி என்னும் மதமாற்றம் தலைப்புச் செய்திகளில் இடம் பெறத் தொடங்கி யுள்ளது. மிகுந்த விளம்பரத்துடன் ஆக்ராவில் 2014 ஆம் ஆண்டின் இறுதி யில் நடத்தப்பட்ட மதமாற்ற நிகழ்ச்சி யில், இப்பிரிவின் தலைவர் ராஜேஸ்வர் சிங் 300 முஸ்லிம்களை இந்து மதத்திற்கு மாற்றினார். டிசம்பர் 25 அன்று அலிகா ரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டி ருந்த ஒரு பெரிய மதமாற்ற நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டது என்றாலும் அதன் செயல்திட்டம் அதிக விளம்பரமற்ற முறையில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய நிகழ்ச்சிகளினால் மத்திய அரசுக்கு ஏற் படும் சங்கடங்களையும், எதிர்ப்புகளை யும், கண்டனங்களையும், முரண்பாடு களையும் தவிர்க்க ஊடகத்தினரின் பார்வையில் இருந்து முற்றிலுமாக விலகி செயல்படும்படி இந்தக் குழுவிற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த குறுக்கீட்டினை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சிங்கை சங்கம் கேட்டுக் கொண்டது.

அகில பாரதிய இந்து மகாசபா நாட்டில் உள்ள இந்து அமைப்புகளில் மிகவும் பழமை வாய்ந்த அமைப்பான இக்குழு, நாட்டின் பல்வேறுபட்ட நகரங்களிலும், தனது புகழ் பெற்ற உறுப்பினரான நாதுராம் கோட்சேயின் சிலைகளை நிறுவ வேண்டும் என்பதை வலியுறுத்துவதன் மூலம் அவருக்கு பெருமை சேர்க்க முடிவு செய்தது. பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜினால் ஆதரவு அளிக்கப்பட்ட, கோட்சே ஒரு தேசபக்தன் என்ற இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்தில் ஒரு பெரும் புயலைக் கிளப்பியது.

இக்குழு பிப்ரவரி 14 அன்று பிரேம் விவா திவாஸ் என்ற நிகழ்ச்சியைக் கொண்டாடியது. பிற மதங்களைச் சார்ந் தவர்களுடன் காதல் கொண்டிருப் பவர்கள் திருமணம் செய்து கொண்டு, பிற மதங்களில் உள்ள அவர்களை இந்து மதத்திற்குக் கொண்டு வரும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

விசுவ இந்து பரிசத்

சங்பரிவாரத்தின் துணை அமைப்பு களின் தாய்அமைப்பு இது. சிறுபான்மை யினர் தங்களின் தோற்ற மூலத்திற்கே திரும்பிச் செல்லவேண்டும் என்பதை வலியுறுத்தும் அறிக்கைகளை இக் குழுவின் தலைவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வெளியிடத் தொடங்கியுள்ளனர். கோவாவில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் கிறித்துவ மதத் திற்கு மாறுவதற்கு கட்டாயப்படுத்தப் பட்ட, முன்னர் இந்துக்களாக இருந்த வர்களின் வாரிசுகளை இந்து மதத்திற்கு மாறச் செய்யும் கர்வாப்சி நிகழ்ச்சியை நடத்துவோம் என்று பிப்ரவரியில் இந்த அமைப்பு அறிவித்தது. ஒரு முஸ்லிமை மணந்து கொண்ட கரீனா கபூர் போன்ற திரைப்பட நடிகைகள் சமூகத்தின் மீது ஒரு தீய செல்வாக்காக அமைந்தவர்கள் என்று இக்குழு வெளிப்படையாக அறிவித்தது.

தேசிய இந்து இயக்கம்

தங்கள் குழந்தைகளைக் கான்வென்ட் பள்ளிகளில் சேர்ப்பதன் மூலம் தங்கள் குழந்தைகளை இந்து கலாச்சாரத்தை அறியாதவர்களாக ஆக்காமல் இருக்கும் படி இந்து பெற்றோர்களை வலியுறுத்தி கோவா, மகாராஷ்டிர மாநிலத்தின் பல இடங்களிலும் இக்குழு எதிர்ப்புப் பேரணிகளை நடத்தியுள்ளது.

ராஷ்டிரிய இந்து அந்தோலன்

மகாராஷ்டிர மாநிலத்தைத் தனது தலைமையிடமாகக் கொண்டுள்ள, பல இந்து குழுக்களுக்கு நிழல்தரும் குடை போன்ற இந்த அமைப்பு, அமீர்கான் நடித்த ஆர்.கே. என்ற திரைப்படத்தில் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத் தும் காட்சிகள் இருப்பதனால், அத் திரைப்படம் திரையிடப்படுவதற்கு எதிராக நாடு முழுவதிலும் போராட்டங் களை நடத்தியது.

தமிழ் ஓவியா said...

ராஷ்டிரவாடி சிவசேனா

புதுடில்லியில் அக்பர் மற்றும் பெரோஸ்கான் போன்ற முஸ்லிம் மன் னர்களின் பெயர்களில் அமைந்திருந்த தெருக்களின் பெயர்ப் பலகைகளில் தார்பூசி அழிக்கும் போராட்டத்தை இக் குழு 2015 மார்ச் மாதத்தில் நடத்தியது. தேசபக்தி இல்லாத மக்களின் பெயர் களில் சாலைகள் அமைந்திருப்பதில் தங்களுக்கு ஒரு பிரச்சினை உள்ளதாக இக்குழுவின் உறுப்பினர்கள் கூறினர்.

இந்து ஜனஜாக்ருதி சமிதி

இந்து கலாச்சாரத்தின் பாதுகாவ லர்கள் தாங்கள்தான் என்று கூறிக் கொள்ளும் இக்குழுவினர் இந்த ஆண் டில், ஆர்.கே., சிங்கம் 2 உள்ளிட்ட 6 இந்தி திரைப்படங்களுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்து பெண்களை முஸ்லிம்களிடமிருந்து எவ்வாறு காப்பாற்றுவது, கர்வாப்சி என்ற மதமாற்றத்தை எவ்வாறு செய்வது என்பது போன்றவைகளுக்கான ஒரு பயிற்சியை இக்குழு அளிக்கிறது. சிறு பான்மை மத மக்களிடம் மென்மையாக நடந்து கொள்வதாக மோடி மீது இக்குழு குற்றம் சாட்டுகிறது.

இந்து தர்ம சேனா

2015 மார்ச் மாதத்தில் ஜபல்பூரில் ஒரு கிறித்துவ தேவாலயத்தை இக்குழு தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அதன் அய்ந்து உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். ஏறக்குறைய 200 உள்ளூர் பழங்குடியின மக்களை கிறித் துவ மதத்திற்கு மாற்றிவிட்டதாக தேவா லயத்தின் மீது இக்குழு குற்றம் சாட்டு கிறது.
இந்து மக்கள் கட்சி

தமிழ்நாட்டில் உள்ள தீவிர வலதுசாரிக் குழுவான இது பற்றி, பெருமாள் முருகனின் மாதொருபாகன் புத்தகத்துக்கு எதிரான போராட்டத்தை அது முன்னின்று நடத்திய போதுதான் பலருக்கும் தெரிய வந்தது. அந்த எழுத்தாளர் தான் எழுதுவதையே கைவிட்டு விட்டதாக அறிவித்த பிறகும் கூட, மதவெறியர்களிடமிருந்து வரும் அழுத்தத்தைச் சுட்டிக் காட்டி, இன் னமும் கூட தங்களின் போராட்டங் களை இக்குழுவினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்து ராஷ்டிர சேனா

கடந்த ஆண்டு பூனாவில் அமை தியைக் குலைத்து, 28 வயதான ஒரு தொழில்வல்லுநர் கொலை செய்யப் படுவதற்குக் காரணமான உணர்வு களைத் தூண்டும் பிரசுரங்களை வினி யோகித்து கலகம் விளைவித்ததாக இக் குழுவின்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மோடியை யார் கேட்பது? அதுதான் பிரச்சினை. மோடியை நீங்கள் கேட் டாலும், அவர் தனது கருத்தை மாற்றிக் கொள்ளப்போவதில்லை என்பதால், உங்கள் மனதை நீங்கள் மாற்றிக் கொள்வீர்களா? நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதா மக்களிடையே கோபத்தை உருவாக்கும் என்ற அச்சத்தில் இந்தி பேசும் மாநிலங்களின் பா.ஜ.க. அரசியல்வாதிகள் உள்ளனர். விவசாயத்துறை இளைய அமைச்சர் சஞ்சீவ் பாலியான் பிரதமரை சந்தித்து, மேற்கு உத்தரப் பிரதேசப் பகுதியில் இந்தப் புதிய சட்டம் மோசமான எதிர் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

இதற்கெல்லாம் பிரதமர் அசையவே இல்லை என்று அதிகாரிகள் கூறுகின் றனர். தங்களின் தொகுதிகளுக்குச் செல்லும்படி நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு பிரதமர் கூறியுள்ளார். அத்தகைய பயணத்திற்குப் பிறகு அனைத்து பா.ஜ.க. உறுப்பினர்களும் பிரதமரின் கண் ணோட்டத்தை ஏற்றுக் கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

என்றாலும் தனது மனதை மாற்றிக் கொள்ள அவரால் முடியும்

இவற்றில் எவையும், பிரதமர் வளைந்து கொடுக்கத் தெரியாதவர் என்று கூறுவதாக ஆகாது. தக்க காரணங்கள் இருப்பதைக் கண்டால், தனது வழியை அவர் மகிழ்ச்சியுடனேயே மாற்றிக் கொள்கிறார். அவரது அணுகுமுறையில் இதுதான் பெரும் அனுகூலமானதாக இருப்பதாக அவருடன் நெருக்கமாகப் பணியாற்றும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சுட்டிக் காட்டுகின்றனர். ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு, பல பிரச்சினைகளில் பா.ஜ.க.வின் நிலையை மோடிமாற்றி இருக்கிறார். சில நேரங்களில் அய்.மு.கூ.யின் நிலையை ஏற்றுக் கொண்டுமுள்ளார். எடுத்துக் காட்டாக அணுஆற்றல் ஒப்பந்தம் மற்றும் இந்திய-_-வங்காளதேச எல்லை ஒப்பந்தம் ஆகியவற்றைக் கூறலாம்.

தானே தலைமை தாங்கி முடிவு மேற்கொண்ட விவகாரங்களிலும் கூட மோடி மாற்றம் செய்திருக்கிறார். உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் இதற்கு மிகச் சரியான எடுத்துக் காட்டாகும். கடந்த ஆண்டு மோடி அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தபோது, வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவை இறுதி வரை எதிர்த்து நின்றதற்காக மோடியை அதிகாரிகள் பாராட்டினர்.

ஆனால் இந்தப் பிரச்சினையின் முழு பரிமாணத்தையும் இன்னமும் தான் அறிந்து கொள்ளவில்லை என்ற உணர்வையே வளர்த்துக் கொண்டுள் ளார். இப்பிரச்சினையை மறுபடியும் ஒரு முறை பரிசீலனை செய்து பார்க்க அவர் உத்தரவிட்டார். அதன் விளைவு? கடந்த ஆண்டு பிரிஸ்பேனில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், இந்தியா அது வரை நிலவி வந்த முட்டுக்கட்டையை தகர்த் தெறிந்தது. பிரதமர் தனது மனதை மாற்றிக் கொண்டார். ஒரு முக்கிய உலக ஒப்பந்தத்தில் இந்தியா தனது நிலையை மாற்றிக் கொண்டது. அதுதான் மோடி யின் சிறப்பு. அல்லது தேசியபாதுகாப்பு பிரச்சினை பற்றிய அவரது அணுகு முறையை எடுத்துக் கொள்ளுங்கள்.Read more: http://www.viduthalai.in/page-1/103171.html#ixzz3cwSMq4Bl

தமிழ் ஓவியா said...

ஒப்பற்ற பண்பாட்டுக்கு உரியவர் வீகேயென்
மணமக்களே, அவரைப் போல வாழ்ந்து காட்டுங்கள்!

வீகேயென் இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் வாழ்த்துரை
திருச்சி, ஜூன் 12- ஒப்பற்ற பண்பாட்டுக்குரிய வீகேயென் போல மணமக்கள் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று மணமக்களுக்கு அறிவுரை கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இன்று (12.6.2015) காலை 10 மணியளவில் திருச்சி சங்கம் ஓட்டல் வசந்தம் மகாலில் நடைபெற்ற டாக்டர் வீகேயென் கல்யாணசுந்தரம் - நிவேதிதா ஆகியோரின் மணவிழாவிற்கு முன்னிலை வகித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லாமல்...

நம் அனைவருடைய மிகுந்த மகிழ்ச்சிக்குரிய அருமை வீகேயென் அவர்களுடைய இல்லத்து மணவிழா என்ற பெருமைக்குரிய அருமை நண்பர்கள் திருவாளர்கள் வீகேயென் கல்யாணசுந்தரம் - நிவேதிதா ஆகியோருடைய வாழ்க்கை இணையேற்பு விழா மிகச் சீரோடும், சிறப்போடும் நடைபெறக்கூடிய, நடத்தி வைக்கக்கூடிய நம்முடைய அனைவருடைய நம்பிக்கைக்கும் இன்றைக்குப் பாத்திரமாகி, ஆளுங் கட்சி - எதிர்க்கட்சி என்ற பேதம்கூட இல்லாமல்,  எல் லோருடைய அன்பையும் ஒருமுகமாகப் பெற்றிருக்கக் கூடிய நம்முடைய அருமைத் தளபதி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொருளாளர் அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களே,

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, எனக்கு முன்பு மணமக்களை வாழ்த்திய அருமைத் தோழர்கள் எ.வ.வேலு அவர்களே, பொன்முடி அவர்களே, திருச்சி சிவா அவர்களே, நகை பொய்யாமொழி அவர்களே, இன்னும் ஏராளமாக இங்கே குழுமியிருக்கக்கூடிய அருமை நண்பர்களே, வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலாளர் அருமைச் சகோதரர் நேரு அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, அருமை டாக்டர் வீகேயென் அவர்களே, அவர்களுடைய சம்பந்தியார் குடும்பத்தினர்களே, உற்றார், உறவினர்களே, நண்பர் களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மணவிழாவைப் பொறுத்தவரையில், ஒரு மிகுந்த மகிழ்ச்சிக்கிடையில், ஒரு சங்கடமான சூழ்நிலை அனைவருக்கும் உண்டு. நம்முடைய வீகேயென் அவர்களோடு இருந்து, அவருடைய வாழ்விணையராக இருந்த அருமை ஆச்சியார் அவர்கள், இன்றைக்கு உருவத்தால் இல்லை என்றாலும், உணர்வோடு நம்மோடு இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு, நாம் இந்த மணவிழாவினை நடத்தி வைக்கின்றோம்; கலந்துகொள்கின்றோம், வாழ்த்துகின்றோம்.

உரிமையோடும், உறவோடும் நான் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்

டாக்டர் வீகேயென் அவர்களுடைய இல்ல மண விழா என்பது எங்களைப் பொறுத்தவரையில், இது மூன்று குடும்பங்களுக்கும் சம்பந்தமான ஒரு மணவிழா என்ற உரிமையோடும், உறவோடும் நான் உங்கள் அனைவரையும், அருமைச் சகோதரர் நேரு அனைவர் சார்பாக,  வரவேற்றாலும்கூட,  இந்த மூன்று குடும்பங் களின் சார்பாக வரவேற்க நான் கடமைப்பட்டிருக் கிறேன். இரண்டு முறை, மூன்று முறை வரவேற்பது என்பது, நகரத்தார்களுக்குப் புதிதல்ல. ஒரு வீட்டிற்கு உள்ளே போனால், ஒவ்வொருவரும், வாங்க, வாங்க, வாங்க என்று கூப்பிடுவது, அவர்களுடைய தனித்த பண்பு.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், வீகேயென் அவர் களுடைய குடும்பத்திற்கு நாங்கள் எவ்வளவு நெருக்க மானவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில் இந்தக் குடும்பம், அவர்களுடைய ஒரு சிறந்த தொண்டறம் என்பது, எல்லோரையும் இணைக் கக்கூடிய ஒன்று.

பெரியார் கல்விக் குழுமங்களின் சார்பாகவும் வரவேற்கிறேன்...

எனவே, குறிப்பாக அந்தக் குடும்பத்தின் சார்பாக, இன்றைக்கு எல்லோரையும் வரவேற்கக் கடமைப் பட்டிருக்கின்றோம். மணமகளாக இருக்கக்கூடிய அருமை செல்வி நிவேதிதா அவர்கள், பெரியார் மணியம்மை பள்ளிக்கூடத்தில், எங்களுடைய கல்வி நிறுவனத்தில் பணியாற்றியவர் என்கிற முறையில், மிகப்பெருமையோடு சொல்லிக் கொள்கின்ற நேரத்தில், அந்த உறவும் நிச்சயமாக இருக்கிறது; அந்தக் கல்விக் குழுமத்தினுடைய தலைவர் என்கிற முறையிலும் நான் உங்களை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதோடு,  வீகேயென் அவர்களுக்கு இன்னொரு உறவு உண்டு. அது என்னவென்றால், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தினுடைய இணை வேந்தர் வள்ளல் வீகேயென் அவர்களாவார்கள். நான் அந்தப் பல்கலைக் கழகத்தில் வேந்தராக உள்ள காரணத்தினால், இந்தக் கல்விக் குழுமங்களின் சார் பாகவும் வரவேற்கிறேன், இந்த இரண்டு குடும்பங் களின் சார்பாகவும் வரவேற்கிறேன், எல்லாவற்றையும் விட திராவிட இயக்கத்திற்கு என்றைக்கும் புரவலராக இருக்கக்கூடியவர்கள், திராவிடர் இயக்கக் குடும்பங் களின் சார்பாகவும் அனைவரையும் வரவேற்கிறேன்.

தமிழ் ஓவியா said...

அய்யா வீகேயென் அவர்களுடைய உள்ளம், எல்லோரும் அறிந்த உள்ளம். அவருடைய பண்பு என்பது, வியக்கத்தக்கப் பண்பு. ஒரு நிகழ்வை, கொஞ்சம் துயரத்தைக் கிளறக்கூடிய நிகழ்வாக இருந்தாலும்கூட, இந்த நேரத்தில் பகிர்ந்துகொள்வது என்பது மிகமிக முக்கியமான ஒன்றாகும்.

ஒப்பற்ற பண்பாட்டுக்கு உரியவர்தான் வீகேயென் அவர்கள்

ஆச்சியார் அவர்கள் மறைந்த நிலையில், ஆறுதல் கூறுவதற்காக நம்முடைய தளபதி அவர்கள் ஓடோடி வந்து அவருடைய கடமையைச் செய்தார்கள். கொள்கைக்காரர்களாக இருந்தாலும், கொள்கைக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் உடல்நலம் குன்றியிருந்தாலும் சரி, மருத்துவமனை களுக்குச் சென்று பார்ப்பதிலும் சரி, அதேபோல, மிகப்பெரிய அளவில், அந்த இல்லங்கள் நிகழ்வு என்று சொன்னால், மகிழ்ச்சியிலும் கலந்துகொண்டு, துயரத்திலும் ஆறுதல் சொல்லக்கூடிய பண்பாடு, நம்முடைய தளபதி அவர்களுடைய தனித்த, ஒரு தலைமைத்துவ, வியக்கத்தகுந்த பண்பாடாகும். அந்த வகையில் அவர்கள் இங்கே திருச்சிக்கு வந்திருந்த போது, நாங்கள் உரையாடிக் கொண்டிருந்தோம், அப்பொழுது அவர்கள் சொன்னார்கள், டாக்டர் வீகேயென் அவர்கள், எப்படிப்பட்ட பண்புள்ளவர்; என்றைக்கும் மாறாத ஒரு நிலையில் இருக்கக்கூடியவர் என்பதற்கு ஒரு அடையாளம் என்னவென்றால், நாமெல்லாம் அதிர்ச்சியடைக்கூடிய ஒரு சம்பவம் நடந்தது. நான் அவரைப் பார்த்து, மரியாதை செய்து விட்டு, மறைந்த ஆச்சியார் அவர்களின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, திரும்பும் நேரத்தில், அந்தத் துயரத்திலே கூட அவர்கள் கார்வரை வந்து என்னை வழியனுப்பினார்கள். நான் என்ன சொல்லியும் கேட்காமல், மறுத்துவிட்டார்கள். இப்படிப்பட்ட ஒப்பற்ற பண்பாட்டுக்கு உரியவர்தான் வீகேயென் அவர்கள். அவருக்கு நிகர் அவர்தான். அதிலே யாரும் எட்ட முடியாத உயரத்திற்கு வீகேயென் அவர்கள் வளர்ந் திருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான், பலரும் அவரால் ஈர்க்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.அந்த வகையில், இந்தக் குடும்பம் நம்முடைய பெருங்குடும்பம். மிகப்பெரிய வாய்ப்புள்ள குடும்பம். எனவே, அருமை மணமக்களே, உங்களுக்கு அதிகமாக சொல்லவேண்டிய அவசியமில்லை. தளபதி அவர்கள் அடுத்து உரையாற்ற இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட மணவிழாவை செய்வதற்குரிய நல்ல துணிச்சலோடு முன்வந்து, இதனை நடத்தி வைப்ப தற்கு முன்வந்த டாக்டர் வீகேயென் அவர்களுக்கு திராவிட இயக்கக் குடும்பங்களின் சார்பாக நன்றியைத் தெரிவிக்கின்ற இந்த நேரத்தில், அன்பார்ந்த மண மக்களே, நீங்கள் இருவரும் நல்ல பயிற்சி பெற்ற மண மக்கள். இப்பொழுதெல்லாம் எந்த மணவிழாவிலும் அறிவுரை சொல்வதில்லை நாங்கள். ஏனென்றால், இளைஞர்களுக்கு அறிவுரை என்றாலே அவர்களுக்கு ஒவ்வாமை உண்டு; ஒரு அலர்ஜி உண்டு. ஆரம்பித்து விட்டார்கள் என்று அவர்கள் முணுமுணுத்துக் கொண் டிருப்பார்கள். எனவே,  அவர்களுக்கு அறிவுரையை நாங்கள் சொல்வதில்லை. மாறாக, கருத் துரை, வேண்டு கோள் உரையை மட்டும் நான் சொல் வது வழமை யான ஒன்று.

நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்க லாம்; அவரைவிட கூட அதிகமான அளவிற்கு நீங்கள் பொருள் ஈட்டலாம்; புகழ் ஈட்டலாம். ஆனால் ஒன்று, எந்த நிலைக்கு நீங்கள் சென்றாலும், அருமைச் செல் வங்களே, மணமக்களே ஒன்றை நீங்கள் மறக்காமல் செய்யவேண்டும். அதுதான், உங்கள் பெற்றோர்களிடம் பாசம் காட்டுவது, நன்றி காட்டுவது இதனை என்றும் நீங்கள் மறக்காதீர்கள்.

தமிழ் ஓவியா said...

உங்களுடைய ஆற்றல், உங்களுடைய உழைப்பு, உங்களுடைய திறமை இவைகளுக்கெல்லாம் கதவு திறந்துவிட்டவர்கள் பெற்றோர்கள்; அதற்கு அடிக்கல் நாட்டியவர்கள் அவர்கள். எனவே, பெற்றோர்களை நீங்கள் எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொண்டு, இறுதி வரையில் அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். அதுதான் மிக முக்கியமானது.

நேற்றைய விடுதலையில் வீகேயென்பற்றி...

பெரிய அளவிற்கு இன்றைக்குப் பட்டங்கள் பெருகு கின்றன; செல்வங்கள் வளர்கின்றன. ஆனால், இந்தப் பண்பாடு நாட்டிலே குறைவாக ஆகிக் கொண்டிருக் கின்ற இந்த காலகட்டத்திலே, நீங்கள் அதற்கு எப் பொழுதும் அதற்கு விதிவிலக்காக வாழ்ந்து காட்டுங் கள்; அதுதான் எங்களுக்குப் பெருமை. அதுதான் சிறப்பானது என்பதை இந்த நேரத்தில் கூறி, மணமக்கள், அறிவார்ந்த மணமக்கள். இவர்கள் எல்லா வளமும் பெற்று, எல்லா துறைகளிலும் இன்பம் பெற்று, டாக்டர் வீகேயென் அவர்கள் எப்படிப்பட்ட உள்ளத்தோடு இருக்கிறார்களோ, அதனை நினைத்துப் பார்த்து வாழவேண்டும். இன்றைக்கு விடுதலை நாளிதழை உங்களுக்குக் கொடுத்திருப்பார்கள். அதில், இரண்டு கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. ஒன்று திருவாளர் எம்.வி.வள்ளியப்பன் எழுதிய கட்டுரை. எப்படி  வி என்பது அவருக்கு எப்படி வந்தது என் பதை, மிகுந்த நன்றியுணர்ச்சியோடு, பாராட்டுரை யோடு, அதிர்ச்சியோடு அவர்கள் அதை எழுதியி ருந்தார்கள். அதுபோல, அவரிடத்திலே எல்லா தரப் பிலும் ஈர்க்கப்படுகின்றதற்கு அடையாளம், அவரு டைய நிழலாகவே இருக்கக்கூடிய பாண்டியன் அவர்கள் ஆவார்கள்.

பாண்டியன்கள் அவரைச் சுற்றி ஏராளமாக இருக்கின்றார்கள்...

பாண்டியன் எழுதியிருக்கிறார்; வீகேயென் என்பது ஆங்கில எழுத்தல்ல என்னைப் பொறுத்தவரையில் எனக்கு உயிரெழுத்து என்று எழுதியிருக்கின்றார். இப்படி நினைக்கக்கூடிய பாண்டியன்கள் அவரைச் சுற்றி ஏராளமாக இருக்கின்றார்கள். எனவே, அந்தப் பண்பாட்டுக்குரிய வீகேயென் அவர்களைப் போல வாழுங்கள்; அவர்களைப் போல உயர்ந்து வாழுங்கள்; அவர்களைப் போன்று உயர்ந்த உள்ளத்தோடு வாழுங்கள் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, வாழ்க பெரியார்! வாழ்க மணமக்கள் என்று கூறி, விடைபெறுகிறேன் நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

தமிழ் ஓவியா said...

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களின் அம்பேத்கர்- பெரியார் வழக்குரைஞர்கள் படிப்பு வட்டம் தொடக்கவிழா


சென்னை, ஜூன் 12_ சென்னை அய்.அய்.டி. மாண வர்களின் அம்பேத்கர்_ பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டது. அதனால், நாடுதழுவிய அளவில் பெருமளவில் எதிர்ப்புகள் வெடித்தன. அய்.அய்.டி. நிர்வாகம் மட்டுமன்றி மத்திய மனிதவள மேம்பாட் டுத்துறை அமைச்சகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த பாஜகவின் மத்திய அரசையே நிலைகுலையச் செய்தது. காரணம் அய்.அய்.டியில் விதிக்கப்பட்டத் தடையை எதிர்த்து போராட்டங்கள் ஒரு பக்கம் என்றால், மும்பை, டில்லி, கான்பூர் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங் களிலும் மாணவர்களின் சார்பில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால், நாடுமுழுவதும் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டங்கள் மிகுந்த எழுச்சியை ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்திவந்தன. வேறு வழியின்றி ஆளும் பாஜகவின் அரசு தன் கையாலாகாத தனத்தை மறைத்துக்கொண்டு, இந்துத்துவாவின் வாலை சுருட்டிக்கொண்டு, தடைக்கான காரணமாக ஒப்புக்கு சப்பான காரணங்களைச் சொல்லியது. அய்.அய்.டி.நிர்வாகத்தின் சார்பில் மாணவர்களுக்கான நடத்தை விதிமுறைகள் 18.4.2015 அன்று உத்தரவானது என்றும், ஆனால், அதற்கு முன்பே 14.4.2015 அன்று சென்னை அய்.அய்.டி. மாணவர்களின் அம்பேத்கர்_ பெரியார் வாசகர் வட்ட நிகழ்ச்சி நடந்தது என்பதால், அந்த உத்தரவின்மூலம் அவ்வமைப்புக்கு விதிக்கப்பட்டத் தடையை விலக்கிக்கொள்வதாகக் கூறப்பட்டது. ஆனால், உண்மை என்னவெனில் ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்கள் பெயரில் அமைப்பு அய்.அய்.டி. நிறு வனத்துக்குள் இருப்பதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மேலும், சென்னை அய்.அய்.டி மாண வர்களின் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அமைப்பு மோடியின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுவரும் இந் துத்துவா செயல்திட்டங்களை வெளிப்படையாகக் கண்டித்ததுதான் முதன்மையான காரணமாகும்.

ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்களின் பெயரில் அமைப்பு இருக்கக்கூடாது என்கிற பாசிச பாஜகவின் எதேச்சாதிகாரத்துக்கு சாட்டைஅடி கொடுக்கும்வகையில் மேலும் மேலும் பல்வேறு இடங்களில் அம்பேத்கர்_ பெரியார் வாசகர் வட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டு வருகின்றன. சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சார்பில் அம்பேத்கர்_ பெரியார் வழக்குரைஞர்கள் படிப்பு வட்டம் நேற்று (11.6.2015) அன்று ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேட் அரங்கில் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தலைமையில் தொடங்கப்பட்டது. வழக்குரைஞர் வை.இளங்கோவன் வரவேற்றார்.

அம்பேத்கர்_ பெரியார் வழக்குரைஞர்கள் படிப்பு வட்ட தொடக்க விழாவில் உயர்நீதிமன்றத்தின் வழக் குரைஞர்களால் அரங்குநிறைந்தது. மூத்த வழக்குரை ஞர்கள், இளம் வழக்குரைஞர்கள் என்று அனைத்து தரப்பினரும் அமைப்பில் இணைந்து ஒடுக்கப்பட்ட வர்களின் குரல்வளையை எவரும் நெரித்துவிட முடியாது என்று அறிவிக்கும்வகையில் இருபால் வழக்குரைஞர் களும் கலந்துகொண்டனர். தொடக்க விழாவில் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்க உரையாற்றினார். தொடக்க உரையில் அய்.அய்.டி. மாணவர்களின் அம்பேத்கர்_ பெரி யார் வாசகர் வட்ட மாணவர் அமைப்புக்கு விதிக்கப் பட்ட தடை மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவர்களிடையே ஏற்பட்ட எழுச்சி குறித்து விரிவாக எடுத்துக்கூறினார்.

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார்கள்.

திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையில் அம்பேத்கர்_ பெரியார் வழக்குரைஞர்கள் படிப்பு வட்ட அமைப்பை தோற்றுவித்துள்ள சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்குரைஞர்களை பெரிதும் வாழ்த்திப் பாராட்டினார். மேலும், இவ்வமைப்பு போல் பல்வேறு இடங்களிலும் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் தம்முடைய விருப்பத்தையும் தெரிவித்தார் வழக்குரைஞர் துரை.அருண் நன்றி கூறினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால்கனகராஜ், வழக்குரைஞர் சமூக பேரவை தலைவர் கே.பாலு, வழக்குரைஞர்கள் நளினி, ஆ.வீரமர்த்தினி, ந.விவேகானந்தன், சென்னியப்பன், அருள்மொழி உள்பட ஏராளமானவர்கள் விழாவில் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...

மோடி ஆட்சி இதுதான்

குறுகிய நீண்ட பாதையில் சூடான பலூன் எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கும்?பாஜக, மோடியின் ஓராண்டு கால ஆட்சியில் வளர்ச்சியில் முன்னேற்றங் களைவிட தடைகளே அதிகமாகி உள்ளதை ப.சிதம்பரம் குறிப்பிடுகையில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 7.4 விழுக் காடாக இருந்தபோதிலும், பச்சை விளக் குகளை விட சிவப்பு விளக்குகளே அதிக மாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசு தோல்வி அடைந் தது, மோடி வெற்றி பெற்றார் என்பதை நிதானித்தே கூறுகிறேன். தேர்தலின் போது பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பாஜகவின் மேல்மட்டத்தின் தலை வர்கள் அளித்த வாக்குறுதிகளை எவ ருமே நினைவில் கொள்ளவில்லை. பாஜகவின் தலைவராக இருந்த ராஜ் நாத்சிங் என்ன கூறினார்? என்ன செய் தார்? என்னென்ன உறுதிமொழிகளை அளித்தார்? என்பதையெல்லாம் எவருமே நினைவில் கொண்டிருக்கவில்லை. அவர் அரங்கேற்றிய நாடகமாக தேர்தல் முழக்கமாகிய இந்த நேரத்தில், பாஜக அரசு (ஆப்கி பார், பிஜேபி சர்க்கார்) என்று விளம்பரப்பதாகைகள் அமைக்கப் பட்ட சில மணித்துளிகளில் இந்த நேரத்தில் மோடி அரசு (ஆப்கி பார், மோடி சர்க்கார்) என்று மாற்றப்பட்டது.

மோடி என்கிற தனி நபரை முன்னிறுத்தியே, முத்திரையாகப் பயன் படுத்தியே அந்தத் தேர்தலை சந்தித் தார்கள். அவருடைய பேச்சுகள், வாக் குறுதிகள்தான் பாஜகவின் தேர்தல் அறிக்கையாக வெளியிடப்பட்டது. இந்திய எல்லைக்குள் சீனாவின் ஆக்கிரமிப்புகள், தீவிரவாதம், கருப்பு பணத்தை மீட்பது, இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் அவருடைய நிலைப்பாட்டையே முடிவாகக் கொண்டிருந்தது. மோடி வெற்றி பெற்றதோடு, ஏறக்குறைய அனைத்து பாஜக வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.

மோடி எங்கு சென்றாலும் அல்லது பேசினாலும், தன்னையே முன்னிறுத்திப் பேசியதுடன், வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புக்கான வாக்குறுதி அளித்தார். மோடிக்கு வாக்களித்தால் நாடுமுழுவதும் நல்ல நாள் ஏற்படும் என்று உறுதி கூறப்பட்டது.

வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள்

ஓராண்டுக்குப்பிறகு அறிக்கை அளிக்க வேண்டிய நேரமாக உள்ளது. அரசியல் அரங்கின்  காட்சிகளில் ஆதிக்கம் செலுத் தக் கூடியவராக மோடி இருந்து வரு கிறார். பாஜக அரசில் ஊடகங்களிலும், பொது விவாதங்களிலும் ஆதிக்கம் செலுத்திவரும் நபராக மோடி இருந்து வருகிறார். எப்படி இருந்தாலும் சிறிய அளவிலேயே நாடாளுமன்றத்தில் தாக்ககத்தை ஏற்படுத்தி உள்ளார். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நாடா ளுமன்றத்துக்குள் ஆதிக்கம் செலுத்த முடியாதவராகத்தான் பிரதமர் இருப்பார். ஆனால், தோல்வியைத் தழுவக் கூடிய முதல் பிரதமராக மோடி மட்டும் இல்லை. செய்தியாளர்களின் கேள்விக்கு மேல் கேள்வி என்பதை தவிர்ப்பதற்காக, செய்தி யாளர்கள் சந்திப்பைத் தவிர்த்து விடு கிறார். அவருடைய தகவல் தொடர்பு என்பதே ஒரு வழிப்பாதைதான். பொருளாதார வளர்ச்சிகுறித்து அளவிடு வதில், வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த இரண்டு முக்கிய மான அளவீடுகளாக இருப்பவைகளை விட்டுவிடுகின்றன.

இந்த நிலையில் மோசமான தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த அளவீடுகளை அளப்பதில் சிறப்பான வழிமுறையாக இருப்பது மக்களை சந்தித்து நேரிடையாகக் கேட்பது, அவர்களின் பார்வையில், சாதனைகளில் சிறப்பானவைகுறித்தும் அல்லது மோடி அரசுகுறித்து மக்கள் எதை நினைவு கூர்கிறார்கள் என்பதன்மூலம் அறியலாம்.

தமிழ் ஓவியா said...

டைம்ஸ் ஆப் இந்தியா_அய்பிசோஸ் ஆய்வு வெளியிட்டுள்ள (16.5.2015)  புள்ளிவிவரத்தின்படி, தூய்மை இந்தியா, ஜன்தன், மேக் இன் இந்தியா ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.

மாவன் மேக்னஸ் நிறுவனத்தின் உரையாடல்மூலம் எடுக்கப்பட்ட ஆய்வில் (எகனாமிக் டைம்ஸ் 17.5.2015) வெளியான ஆய்வுத்தகவலின்படி, மூன்று திட்டங்களுக்கு முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன. அதன்படி ஜன்தன் (73 விழுக்காடு), மேக் இன் இந் தியா (70 விழுக்காடு), தூய்மை இந்தியா (69விழுக்காடு) உள்ளதாக வெளியாகி உள்ளது. இதுபோன்ற புள்ளிவிவரங்கள் சரியான தொடக்கமே. பதிவுக்காக கூறுவ தானால், தூய்மை இந்தியா திட்டமோ, ஜன்தன் திட்டமோ தேர்தல் பிச்சாரங் களில் மோடியின் பேச்சுகளில் இடம் பெறவே இல்லை என்பதுதான். ஆகஸ்டு 2014வரையிலும் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகத்தான் பேசினாரே ஒழிய, மேக் இன் இந்தியா பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை.

தூய்மை இந்தியா திட்டத்தாலோ, ஜன்தன் திட்டத்தாலோ பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வர முடியாதவையாகும். மிகக் குறைந்த அளவிலான வளர்ச்சியையோ, வேலை வாய்ப்புகளையோ உருவாக்குபவையாக இருக்கலாம்.
தூய்மை இந்தியா என்பது சமூகத் தின் குறிக்கோள் அல்லது மதிப்பாக இருந்தால் வரவேற்கப்பட வேண்டியது தான். அதை ஏற்கெனவே நிர்மல் பாரத் அபியான் என்கிற பெயரில் செய்து வந்துள்ளோம். வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்கிற திட்டத்தைப்போன்றே ஜன்தன் என்பது நிர்வாகத்துக்கான கருவியாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணி 12 கோடி வங்கிக் கணக்குகளைக் கொண்டு வந்துள்ளதைப் பாராட்டும் அதே நேரத்தில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மார்ச் 2014 வரையிலும் 24 கோடி வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டன என்பதால் பெருமளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேக் இன் இந்தியா என்பது புத்தி சாலித்தனமான முழக்கமாக இருப்பினும், தொழில் நுட்பங்களில் பிரதி எடுப்பவர் களின் கனவாக  இருந்த போதிலும், உற் பத்தித் தொழிலுக்குரிய முக்கியத்து வத்தை அளிப்பதன்மூலம், வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

புள்ளிவிவரங்கள், முரண்பாடுகள்

வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புக்கும் இடையே உள்ள தொடர்பு என்பதில் புள்ளிவிவரங்கள் என்ன கூறுகின்றன என்பதை அருகில் உள்ள அட்டவணையில் காணலாம்.
நாட்டின் வளர்ச்சி விகிதம் 7.4 விழுக்காடாக இருந்த போதிலும், முன் னேற்றங்களைவிட முன்னேற்றங்களுக் கான தடைகளே அதிகமாக உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியும் அதல பாதா ளத்தில் செல்லக்கூடும் என்று எச்சரிக் கையாகக் கூறியுள்ளது.

காங்கிரசுத் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக்காலமான 2012_2013 பணவீக்கம்   மற்றும் நிதியாண்டு மற்றும் அவ்வப் போதான கணக்குகளில் இரட்டை பற்றாக்குறைகள் ஏற்பட்டன. 2013_2014 பொருளாதார பாதிப் பிலிருந்து மீட்பதற்கு  அப்போது முயற்சி எடுக்கப்பட்டது. அய்க்கிய முற்போக்கு கூட்டணியைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு அமைந்தது. நாட்டின் வளர்ச்சி விகிதம் 2013_2014,இல் 6.9 விழுக்காடாக இருந்தது. எண்ணெய் விலையில் பன்னாட்டளவில் பெருத்த சரிவு ஏற்பட்டதால், எதிர் பாராத அளவில் பொருளாதாரத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. அந்த நிலையே எண்ணெய் விலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலும் 2014_15இலும் நீடித்தது.

கவலைகளுக்கான காரணங்கள்

கவலை தரத்தக்கவையாக உள்ளவை யாக வளர்ச்சியில் வேகமில்லாத நிலை இருப்பதால்,  முதலீட்டாளர்கள் காத்தி ருக்கும் நிலை உள்ளது.

தேவை குறைவாக இருப்பதால், ஊதி யங்கள் மற்றும் திரும்ப பெறப்படாத வருவாய் அழுத்தப்படுகிறது.

செயல்பாட்டுக்கான கொள்கையோ, தொடக்கத்திற்கான அறிகுறிகளோ தென் படவில்லை என்பதால், திட்டங்கள் முடங்கி உள்ளன. அல்லது நிறுத்தப்பட் டுள்ளன.

புதிதாக உற்பத்திக்கான தொழிற் சாலைகள் ஏற்பட்டதற்கான ஆதா ரங்கள் ஏதுமில்லை. வேலைவாய்ப்பு களும் உருவாக்கப்படவில்லை. ஆகவே, முக்கியத்துறைகளில் போதிய அளவில் செயல்பாடுகளைக் காண முடியவில்லை.
பெரிய அளவிலான கொள்கைகள் உறுதியான நிலையில் இல்லை. திஷிலிஸிசி பரிந்துரைகள் பின்னுக்குத் தள்ளப் பட்டன. நேரடி வரிவிதிப்புக்கான விதி முறைகள் கண்டுகொள்ளப்படவில்லை. எவ்வளவு நாளைக்குத்தான் காற் றடைத்த பலூன்களாக, இந்த தயவுகளை கொண்டிருக்க முடியும்?  மோடி அரசுக்கு இதமாகச் சொல்லவேண்டுமானால்,   பிரகாசிப்பதுபோல் தோன்றினாலும், ஓராண்டை இழந்து விட்டது.

தமிழ் ஓவியா said...

நூல்  மதிப்புரை

திராவிட சினிமாதிராவிட சினிமா என்ற நூலினை இரா. பாவேந்தன் மற்றும் வீ.எம்.எஸ். சுபகுணராஜன் அவர்களும் சேர்ந்து தொகுத்து வழங்கிய இந்த நூல் கயல்கவின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்த நூலின் தொகுப்பாளர்கள் திரு. இரா. பாவேந்தன் அவர்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியர் மற்றும் சமூக ஆராய்ச்சியாளர்கூட, வீ.எம்.எஸ். சுப குணராஜன் அவர்கள் மதுரையைச் சேர்ந்த முற்போக்கு எண்ணங் கொண்ட திராவிட இயக்க ஆய்வாளர் என்றும், இந்த நூலினை தொகுத்து தமிழ் சினிமா (குறிப்பாக திராவிட சினிமா) என்ற தலைப்பைக் கொடுத்து தமிழ் நல்லுலகத்திற்கு நாடகம் முதல் திரைப்படம், ஊமை முதல் பேசுப்படம் உள்ளிட்ட வரை அவர்களுக்கே உரிய பாணியில் திராவிட இயக்கத்தினரின் திரைப் பங்களிப்பை பெரியார் முதல் கலைஞர் வரை அவர்களது தொடர்பை ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த நூல் திராவிட இயக்கத்தின் திரைப்பட முன்னெடுப்புகளைத் திட்டமிட்டு மறைத்த அடாத செயலை அறிவுப்பூர்வமாக முறியடிக்கவே இந்த நூலினைத் தொகுத்து, இதனை தமிழ் சினிமாவின் தலையாய படைப்பாளி. முத்தமிழ் அறிஞர் கலைஞர். மு. கருணாநிதி அவர்களுக்கு காணிக்கையாக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட சினிமா என்ற இந்த தொகுப்பு நூலிற்கு 49 தலைப்புகளில் திரைப்படத் தொடர்புடைவர்களின் கருத்துக்களை தொகுத்து மிகப் பெரிய படைப்பை உருவாக்கி கொடுத்துள்ளார் என்று கூறலாம்.

தமிழ் ஓவியா said...

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்னை மாகாணத்தின் வேலை வாய்ப்புகளைப் பார்ப்பனர்கள் ஏகபோகமாக்கிக் கொண்டதற்கு எதிராக அணி திரண்ட பார்ப்பனரல்லாதார் எழுச்சி திராவிடர் சங்கம் (1912) அதன் தொடர்ச்சியாக தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (1916) முதலிய இயக்கங்கள் உருவாக காரணமாகியது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோன்றிய அதே ஆண்டில், சென்னையைச் சேர்ந்த நடராஜ முதலியார் என்ற தமிழர் தென்னிந்தியாவின் முதல் சலன மவுனப் படமான கீசகவதையைத் தயாரித்து சென்னையில் வெளியிட்டார். தென்னிந்திய நல உரிமைச் சங்கம், சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என விரியும் திராவிட இயக்கத்தின் சினிமா பார்வை, சினிமாவை அவ்வியக்கம் அணுகிய அணுகுமுறை, புதிய ஊடகத்தைப் பற்றிய புரிந்துணர்வு, கருத்துப் பரப்புரைகளுக்குப் பயன்படுத்திய முறை தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் திராவிடர் இயக்கத்தின் பங்கு, திராவிடர் இயக்க திரைப்படங்கள் ஏற்படுத்திய சமூக, அரசியல் பண்பாட்டு மாற்றங்கள் ஆகியனவற்றை வரலாற்று நோக்கில் ஆவணப்படுத்துவது இந்தத் தொகுப்பின் நோக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிக்கட்சிக்கும், சினிமாவுக்கும் இருந்த தொடர்பைப்பற்றிய குறிப்பு 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது. செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் சந்திர - கமலா அல்லது சுயமரியாதையின் வெற்றி என்ற நாடகத்தை திருச்சி முருகானந்த சபையார் நடத்த உள்ளதாக திராவிடன் 15.02.1929 இதழில் விளம்பரத்தையும், செங்கல்பட்டு சுயமரியாதை மகாநாட்டில் பகுத்தறிவுக்குப் புறம்பான நாடகங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றத் திட்டமிடப்பட்டதையும் அறியலாம் என்பதை எடுத்து பதிவு செய்துள்ளார். டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகங்கள் ஈரோட்டில் நடைபெறும்போது பெரியாரோடு இருந்த அறிஞர்அண்ணா இந்த நாடகங்களை காண வருவார் என்றும், டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்திய இராமாயணம் நாடகத்தை நிறுத்த, பெரியார் திட்டமிட்டபோது அறிஞர் அண்ணா அவர்கள் நாடகங்களின் வலிமையை, தந்தை பெரியாரிடம் எடுத்துரைத்து அவர்கள் நாடகங்களில் காலப் போக்கில் மாற்றம் வரும் வாய்ப்பு உண்டு என சமாதானப்படுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

தேசிய இயக்க நாடகக் கலைஞர்கள் நடத்தி வந்த நாடகங்களுக்குத் தமிழக மக்களிடம் காணப்பட்ட வரவேற்பை அண்ணா கூர்ந்து கவனித்து வந்தார். நாடகங்களின் மூலம் திராவிடர் கழகத்தின் கருத்துக்களைப் பரப்பத் திட்டமிட்டார்.
அண்ணாவின் திராவிட நாடு இதழில் பெரியாரின் தலைமையில் நாடகம் நடைபெறுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பெரியாரின் தலைமையில் தொடங்கிய அண்ணாவின் கலைப் பயணம் நல்லதம்பி (1949) வேலைக்காரி (1949) ஆகிய திரைப்படங்களில் வசனம் எழுதியதன்மூலம் புதிய போக்கைத் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது.

சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் எழுச்சியின் விளைவாகப் படைப்பிலக்கியத் துறைக்குள் பண பலம், அதிகார பலம், எதுவும் இல்லாமல் நுழைந்து படைப்பாக்கத் திறமையையும், கொள்கையுறுதியையும் மட்டுமே முதலீடாகக் கொண்டு சமூக வாழ்வின் அனைத்து வகையான ஆதிக்க உணர்வுகளுக்கும் எதிரான கருத்துக்களைத் தங்களின் படைப்புகளில் திராவிட இயக்க கலைஞர்கள் முன் வைத்தனர் என்பதனை மிகவும் அறிவுப் பூர்வமாக ஆராய்ச்சி செய்து ஒவ்வொரு  கட்டுரையிலும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய படைக்கலன் என்பதில் அய்யமில்லை.

நூல் கிடைக்குமிடம்: திராவிட சினிமா

கயல் கவின் பதிப்பு, 16/25, இரண்டாவது கடற்கரை சாலை,

வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை - 41, செல்: 044-42020398 விலை: 400/-

தமிழ் ஓவியா said...

ஹோசிமின் கூறுகிறார்
பழம் பெருமைப் பேசாதே!

கம்யூனிஸ்டுகள் எளிமையாகவும், பணிவாகவும் எத்தகைய கடின உழைப்பையும் ஏற்றுக் கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். கம்யூனிஸ்டு மற்றவர்களுக்கு முன்னதாக உழைப்பைப் பற்றி சிந்திப்பவர்களாகவும், மகிழ்ச்சியோடு இருப்பதை மற்றவர்களுக்குப் பின்னர் எண்ணுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

புரட்சியாளர்கள் பழம் பெருமை பேசுவது கூடாது

- பீப்பிள் டெமாக்கிரசி

தமிழ் ஓவியா said...

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் அரசமைப்பின் கொள்கை என்ன ஆயிற்று?


அரசமைப்பின் நோக்கங்கள் பலவற்றை சிதைத்து சகோதரத் துவத்தை பாதிப்படையச் செய்ததுதான் மோடியின் ஓராண்டு சாதனையாக உள்ளது. ஆளும் நாடாளுமன்ற உறுப் பினர்கள் வெறுப்புணர்ச்சி, வகுப்பு மோதலைப் பரப்புவதை மட்டுமே செய்கின்றனர். சகோதரத்துவத்தை வலியுறுத்தும் அரசமைப்பின் கொள்கை என்ன ஆயிற்று?

அரசமைப்பை வழங்கிய பாபா சாகேப் அம்பேத்கர் அரசமைப்பின் மய்யப்புள்ளியாக சகோதரத்துவத்தை வளர்த்திடவும், ஜனநாயகத்தை உறுதிப் படுத்தவும் வேண்டும் என்பதை பல இடங்களில் வலியுறுத்திக் குறிப்பிட் டுள்ளார்.

பந்துத்துவா

சகோதரத்துவம் என்பதை அரசமைப்பில் பயன்படுத்தப்படும் சொல்லுக்கு இந்தியில் பந்த்துத்துவா என்று உள்ளது. அச்சொல் ஒருவருக் கொருவர் தோழமை உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வெளிப் படுத்துவதாகும்.

பலதரப்பட்ட வேறுபாடுகளைக் கடந்து நம்பிக்கைகள், ஜாதி, பிரிவுகள், பாலினம், மொழி, உடுத்தும் உடை, உண்ணும் உணவு, திருமணம், மண விலக்கு, விழாக்கள், துக்கங்கள் என்று அனைத்திலும் நம் வாழ்வு முடிகிறது. ஏனென்றால், நாம் ஒருவரைச் சார்ந்து ஒருவர் உள்ள நிலை இருக்கிறது. பிரதமராகப் பொறுபேற்ற மோடி முதலாம் ஆண்டில் செயல்பட்ட விதத்தைக் குறிப்பிடுவதானால், அரசமைப்பின் கொள்கையான சகோ தரத்துவத்துக்கு விரோதமாக எவருமே ஏற்கமுடியாத பேச்சும், செயலுமாகவே இருந்து வருகிறது.

சகோதரத்துவம் என்பது பொது வானது. சகோதரன், சகோதரி என்கிற மனப்பான்மையை முழுமையாக நினைத்திட வேண்டும். தனிப்பட்ட ஒருவர் அல்லது ஒரு குழுவினர் என்று இல்லாமல் நம்மில் வரையறைகளின்றி உள்ள வேறுபாடுகள் உள்ளன. அதனாலேயே நாம் எதையுமே சாதிக்க முடியாதவர்களாக இருக்கிறோம்.

அதற்குப் பதிலாக முழுமையாக ஒன்றுபட்டு இருப்பதன்மூலம், மத நல்லிணக்கத்துடன் வேறுபாடுகளைக் களைவதன்மூலமாக சரி செய்ய முடியும். அதன்மூலம் அமைதியான வாழ்க் கையை எட்டலாம். பொதுவாழ்வில் குறைந்தபட்சம் அரசமைப்பின் இரண்டு அடிப்படை உரிமைகளாக உள்ள பொது மரியாதை மற்றும் பொது நேர்மை ஆகிய இரண்டும் மோடியின் ஓராண்டு கால ஆட்சியில் சிதைந்து போய் விட்டன.

தமிழ் ஓவியா said...

பொது மரியாதை, பொது நேர்மை

சுதந்திர இந்தியாவில் எப்போதுமில் லாத வகையில் நாடாளுமன்ற உறுப் பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விஷம் தோய்ந்த பேச்சுகளால் நாட்டில் உள்ள மக்களின் பொது மரியாதை என்பது மறைந்துபோனது. பாஜகவின் நாடாளு மன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ் என்பவர் லவ் ஜிகாத், தீவிரவாதக் கல்வி என்று கூறி மதரசாக்கள் தீவிர வாதிகளின் மய்யங்கள் என்கிறார். அதுமட்டுமன்றி, முசுலீம்கள் 4 மனைவி, 40 குழந்தைகளுடன் இருப் பதால், மோடியின் காலத்தில் (மோடி யுகம்) பெரும்பான்மையைக் காத்திட கட்டாயமாக இந்துப் பெண்கள் 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். அவர் மேலும் கூறும்போது, காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசப் பற்றுள்ளவர் தியாகி என்று கூறியுள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான யோகி ஆதித்யநாத் கூறும்போது, ராமன் இல்லாத இந்தியாவை கற்பனை செய்து கூட காண முடியாது. அதற்காக கலவரங்களில் ஈடுபட வேண்டும். இந்து மதம் மாறிய ஒவ்வொரு வரும், 100 முசுலீம் பெண்களை கட்டாய மதமாற்றம் செய்ய வேண்டும் என்றார்.
அமைச்சராக உள்ள சாத்வி நிரஞ்சன் ஜோதி கூறும்போது, ராமனை வணங்காதவர்கள் மோசமானவர்கள் அல்லது யாருக்கோ பிறந்தவர்கள் என்று கூறினார்.
சிவசேனா நாடாளுமன்ற உறுப் பினர் ஒருவர் உணவகத்தில் பணி யாற்றிய முசுலீம் ஒருவருக்கு நோன்பு காலத்தில் கட்டாயமாக உணவைத் திணித்தார். மேலும், சஞ்சய் ராட் முசுலீம்களாக இருக்க முடியாது என்று கூறினார்.

இவை யாவும் வெறுமனே வெறுப் புணர்ச்சிகளால் மட்டும் நடைபெறு வதல்ல. வெறித்தனங்களின் உச்சகட்டங் களாகும். ஆளும் கூட்டணியினரின் தேர்ந் தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்குள்ளேயே இப்படி செய்துவருவது, பொதுமக்களிடத்தில் தொடர்ச்சியான மன உளைச்சலை ஏற் படுத்துபவையாக இருந்துவருகின்றன.

இந்த வார்த்தைகள் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளவோ, பெருமைப் படவோ செய்யாது என்பதை ஆளும் பிரதமர் அறியாதவரா? கேளாக் காதி னராக, மவுனியாக பிரதமராக அவர் இருப்பதன்மூலம் அவருடைய அமைச் சர்கள், கட்சியினரை அப்படியே தொடர்ந்து செய்யுங்கள் என்று கூறுவ தாகவே இருக்கிறது. வெறுப்புணர்ச் சியைத் தூண்டக்கூடிய குற்றங்களாக உள்ள அவருடைய அமைச்சர்கள் உள்ளிட்டவர்களின் அறிக்கைகளுக்கு அவர் பொறுப்பு ஏற்காமல் மவுன மாகவே இருக்கிறார். எப்போதாவது ஏதாவது சொல்கிறார் என்றால் அதிலும் கடுமை இருக்காது.

மக்களிடையே பொதுவாக இருக்க வேண்டிய நேர்மை என்பதில் மோடி ஆட்சியின் ஓராண்டு நிலை என்ன என்று பார்த்தால், பொது நேர்மைக்கு இடமே கிடையாது என்பதுதான் பதிலாக உள்ளது.

கொலைகாரன் மாயா கொத்னானிக்கு பிணை

குஜராத் மாநிலத்தை எடுத்துக் கொண்டால், 36 பெண்கள் 35 குழந் தைகள் உள்ளிட்ட முசுலீம்களைக் கொடுமையாகக் கொன்று 28 ஆண்டு களாக நரோடாவில் 1997 முதல் 2002ஆம் ஆண்டுவரை சிறையில் இருந்த கொலைகாரன் மாயா கொத்னானி ஜூலை 2014 குடல்நோய் என்று கூறி பிணையில் விடப்பட்டான்.

கொலைகாரன் பாஜூ பஜ்ராங்கிக்கு பிணை

அதேபோல், திட்டமிட்ட கொலை களை அரங்கேற்றியவனான பாஜூ பஜ்ராங்கி ஆயுள் தண்டனை பெற்ற வன். டெகால்காவின் கேமராவில் சிக்கியபோது, அவன் கூறியதாவது: நாங்கள் தாக்கினோம், எரித்தோம், தீ வைத்தோம், ஏனென்றால், இந்த மோசமானவர்களை அடக்கம் செய்து விடக்கூடாது என்பதால், என்னுடைய இறுதி விருப்பம் என்னவென்றால், தண்டனைப்படி என்னைச் சாக விடுங்கள். தூக்குத் தண்டனைக்கு முன்பாக இரண்டு நாள்கள் அவகாசம் கொடுங்கள், ஒரே நாளில் அவர்களின் இடத்திலேயே முடித்து விடுகிறேன். குறைந்தபட்சம் 25000 முதல் 50000 வரையேனும் அவர்கள் சாக வேண்டும் என்று கூறினான். அவனுக்குத்தான் கண் நோய் என்று காரணம் கூறி ஏப்ரல் 2015இல் பிணை வழங்கப்பட்டது.

போலி என்கவுன்ட்டர் குற்றவாளி வன்சாரா விடுவிப்பு

இளைஞர்களான இஷ்ரத் ஜஹான், சொராபுதீன் மற்றும் பலரும் போலியாக என்கவுன்ட்டர் என்கிற பெயரில் கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ் சாட் டப்பட்ட மூத்த காவல்துறை அதிகாரி வன்சாரா பிப்ரவரி 2015இல் பிணையில் விடப்பட்டார். ஆனால், போலி என்க வுன்ட்டருக்கு துணை போகாமல் தைரியம் மிக்கவர்களாக இருந்தவர் களான ராகுல் சர்மா மற்றும் ரஜ்னீஷ் ராய் ஆகியோர்மீது சரமாரியான புகார்கள் தெரிவிக்கப்பட்டது. குற்றச் சாட்டுகள் வலுவிழந்து முடிந்து போனநிலையிலும், வளைந்து கொடுக்காத அவர்களில் ராகுல் சர்மா கடைசியில் விருப்ப ஓய்வையே பெற நேர்ந்தது. காவல் துறை அதிகாரியான சஞ்சீவ்பட் என்பவர் இன்னமும் பணியிடை நீக்கத் திலேயே இருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

சட்டப் போராட்டம்

2002 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர் களுக்காக சட்டப்போராட்டத்தை நடத்திவந்தவரான கஸ்டி தீஸ்தா செட்லவாட் ஏராளமான குற்ற வழக்குகளைச் சந்திக்க நேர்ந்தது. உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின்மூலமே அவர் கைது செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது.

வகுப்புவாதக் கொந்தளிப்பு

இந்திய அரசமைப்பு சட்டம் சிறுபான்மையரின் மத நம்பிக்கையில் மட்டும் உரிமையைமட்டும் பாதுகாப் பதாக இல்லாமல், அவர்களின் நம்பிக்கைகளைப் பரப்புவதற்கும் உரிமையை வழங்கி உள்ளது. அப் படியான குறிக்கோள் இருக்கும்போது, அதற்கு முரணான நிலையில், மற்ற வர்கள்மீதான ஆதிக்க மனப்பான்மை யுடன் தேசிய அளவில் மத மாற்றத்தை தடை செய்ய சட்டத்தை கொண்டு வருவதாகக் கூறிவருகிறார்கள்.

கண்மூடித்தனமாக, உச்சகட்டத்தில் ஓங்கி ஒலித்த நிகழ்ச்சிகளாக இசுலாம் மற்றும் கிறித்தவ மதங்களிலிருந்து மீண்டும் திரும்பும் நிகழ்வுகளாக இந்து மதத்துக்குள் மாற்றப்படுகிறார்கள். இந்த நிக்ழச்சிகளை தாய் வீட்டுக்குத் திரும்புதல் என்று தலைப்பிட்டுக் கூறுவது, இந்தியர்கள் என்றாலே சட்டப்படி அவரவர்களின் நம்பிக் கைகளுக்கு ஏற்ப இந்து மதத்திலோ, இசுலாத்திலோ, கிறித்துவத்திலோ இருக்கலாம் என்பதை மாற்றிட கட்டுக்கடங்காத வெறியுடன், கேடான வழிகளை பிரதிபலிப்பவர்களாக உள்ளனர்.

அதேபோன்று இந்து மதத்தின் பெயரால் பெரும்பான்மையினர்மீது உயர்ஜாதியினர் கலாச்சார ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். மகாராட்டிர மாநிலத்தில் மாட்டி றைச்சியை விற்பனை செய்யவும், உண் ணவும் தடை விதித்திருப்பதன்மூலம், இந்துக்கள் அல்லாதவர்கள் மட்டுமன்றி, இந்துக்களிலேயே தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் பழமையான உணவுமுறையைக் கூட குற்றமாக ஆக்கிவிட்டார்கள்.

இப்படியாக இந்த ஓராண்டில் வகுப்புவாத கொந்தளிப்புகளை ஏற் படுத்தி பரப்பி வருகிறார்கள். ஆட்சி யாளர்களின் அன்றாட செயல்பாடு களின் வாயிலாக பன்னாட்டளவிலான கண்டனங்களை சந்தித்து வருவதால், பெரிய அளவிலான வகுப்புவாத வன் முறைகள் நடைபெறாமல் இருக்கின்றன. ஆனால், அங்கிங்கெனாதபடி நாடு முழுவதும் அறிவிக்கப்படாத வன் முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட வண்ணம் உள்ளன. சிறிய அளவில் இருந்தாலும், அவை ஜீரணித்துக் கொள்ள முடியாத அளவில், மிகவும் நஞ்சைக் கக்குபவையாக, வகுப்புவாத தாக்குதல்களாக, மோதல்களாக நடைபெற்றவண்ணம் உள்ளன.

கிறித்தவ சர்ச்சுகளைத் தாக்குவது, ஒரு பக்கம் என்றால், மசூதிகள் மற்றும் கல்லறைகள் அமைந்துள்ள இடங்கள் மீதான பிரச்சினைகளை ஏற்படுத்துவது, மத நிகழ்வுகளின்போது சோதனை இடுவது, வழிபாட்டு இடங்கள்மீது இறைச்சிகளை வீசி எறிகிறார்கள்.

வெவ்வேறான மத நம்பிக்கைகளில் உள்ள இளைய தலைமுறையினர் காதல் வயப்படும்போது அல்லது மணம்புரிந்து கொள்ளும்போது வகுப்புவாத பதற்றங் களை அதிகரிப்பது, இறைச்சிக்காக மாட்டை கொல்வதற்கு எதிராக என்று இதுபோன்று நூற்றுக்கணக்கில் வகுப்பு வாத மோதல்களை, நாடெங்கிலும் அதிலும் குறிப்பாக தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தேர்தலை சந்திப் பதற்காக, அதிக அளவில் வகுப்பு வாத மோதல்களை உருவாக்கி வருகிறார்கள்.

கோடைப்பருவத்தில் ஏற்படும் கொப்புளங்கள்போல், பெரும்பான் மையைப் பெற்றுவிட்ட மோடி அவருடைய முதல் ஆண்டிலேயே நம் நாட்டை நீண்ட தூரத்துக்கு இழுத்து சென்றுவிட்டார். ஓராண்டு கால ஆட்சியில் வருத்தமுடன் சொல்வதா னால் நீதித்துறை உள்பட அரசின் நிறுவனங்களில் நேர்மை சாகடிக்கப் பட்டுவிட்டது. அதேபோல் சகோதரத் துவத்தையும், சமூக உறவுகளையும் காயடித்துவிட்டது.

வலதுசாரி தீவிரவாதிகளாக ஆட்சியாளர்கள்

வலதுசாரி தீவிரவாதிகளால் இந்து மதம் அல்லாத பல லட்சக்கணக்கான பிற மதத்தவர்கள் நாட்டைவிட்டே வெளியேற வேண்டுமோ என்று மிரட்சி அடைந்துள்ளார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் இந்த ஓராண்டின் சாதனையாகக் குறிப்பிடுவதற்கு இல்லை. ஆனால், இந்துக்கள் அல்லாத பல லட்சக்கணக்கான பிற மதத்தவர்களாக இருப்பவர்கள் வாழுமிடத்திலிருந்தும் பிரிந்து தனியே வாழவேண்டும், பொருளாதாரத்திலும் நலிவடைந்து, தாழ்ந்து, வாக்குரிமையும் பறிக்கப் பட்டநிலையில் வாழ்வதற்கு ஒப்புக் கொள்ள பழக வேண்டும். இதுதான் அவர்களை வெற்றிகொள்ள வழி என்றும் ஆட்சியாளர்களாக உள்ள வலதுசாரிகள் கருதுகிறார்கள்.

- ஸ்க்ரோல் இன் இணைய இதழ்Read more: http://www.viduthalai.in/page5/103173.html#ixzz3cwVENkQf

தமிழ் ஓவியா said...

காவியுடை பாசிசம் நூல் மதிப்பீடு - டி.ஆர். சவுத்ரி

[காவியுடை பாசிசம் - சியாம் சந்த், ஹேம்குந்த் பதிப்பகம், டெல்லி - 1178 பக்கம் விலை ரூ 395]

காவியுடை என்பது  இப்போதெல்லாம் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் ஒரு சொல்லாகும். பா.ஜ.க., விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள் போன்ற எண்ணற்ற துணை அமைப்புகளைக் கொண்டுள்ள சங் பரிவாரம் நம் நாட்டின் சமூகப் பொருளாதாரக் கோட்பாட்டின் மீது மேற்கொள்ளும் ஆற்றல் மிகு தாக்குதல்தான் காவியுடை பாசிசம் என்பது. இவர்களின் கோட்பாட்டை இந்நூலாசிரியர் காவியுடை பாசிசம் என்று வகைப்படுத்துகிறார்.

எனது கண்ணோட்டம் கொண்டவர்களை எச் சரிக்கவும்,  மதச் சார்பின்மை மற்றும் மக்களாட்சி என்னும் விலைமதிப்பற்ற மாண்புகளை நிலை நிறுத்தவும் இந்த நூலை நான் எழுதவேண்டியவனாக ஆனேன். இந்த பாரம்பரிய மாண்புகள் அழிவுக்கு இலக்காயிருப்பதாக அவர் உணர்கிறார். இந்திய சமூகத்தில் பார்ப்பனீய ஆதிக்கத்தை நிலை நிறுத்து வதை நோக்கமாகக் கொண்டது ஆர்.எஸ்.எஸ். அதன் இந்துத்துவ, கலாச்சார தேசியம் என்பவை வெறும் முகமூடிகளே. ஹிட்லரின் பாசிசத்தைப் போன்ற சில கவலையளிக்கும் அம்சங்களை ஆர்.எஸ்.எஸ் கொண்டிருப்பதாக நூலாசிரியர் கூறுகிறார். அது போடும் வேடம், செய்யும் பாசாங்கு, உருவாக்கும் அமைப்பு ரீதியான தீவிரவாதம், பரப்பும் புராணக் கட்டுக்கதைகள் ஆகியவை ஹிட்லரும் அவரது ஆதரவாளர்களும் பின்பற்றிய உத்திகள் மற்றும் நடைமுறைகளைப் போன்றவையாகும். இடையில் செயல்படாமல் நின்றுபோன இந்து மகாசபையை 1923இல் சாவர்கர் மறுபடியும் துவங்கிய பிறகு, ஆர்.எஸ்.எஸ். என்ற ஒரு புதிய அமைப்பை தோற்றுவிக்க வேண்டும் என்று ஹெட்கேவார் ஏன் விரும்பினார் என்ற ஒரு முக்கியமான கேள்வியை இந்நூலாசிரியர் எழுப்புகிறார். இதற்காக ஆசிரியர் தரும் ஒரு விளக்கம் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவே இருக்கிறது. முதலாவது இந்து மகாசபா என்பது நாட்டின் விடுதலைக்காகப் போராடும் ஒரு அரசியல் அமைப்பு என்பது. நாட்டின் சுதந்திரப் போராட் டத்தில் ஆர்.எஸ்.எஸ். எந்தப் பங்கினையும் ஆற்ற வில்லை. இரண்டாவதாக,  நாட்டின் பல பகுதி களிலும், குறிப்பாக தென்னிந்தியாவில் தோன்றிய பார்ப்பனரல்லாத இயக்கங்களின் தீவிர தாக்குதலை பார்ப்பனீய ஆதிக்கம் எதிர்கொள்ள வேண்டியிருந் தது என்பது.

தமிழ் ஓவியா said...

ஆனால் பார்ப்பனீய ஆதிக்கத்தை நிலைநிறுத்த ஆர்.எஸ்.எஸ். உறுதி பூண்டிருந்தது. மூன்றாவதாக,  சதுர் வர்ணத்திலும்,  அதனைத் தொடர்ந்த ஜாதிப் பிரிவினைகளிலும் ஆர்.எஸ்.எஸ். ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த நிலையில் சாவர்க்கரால் ஒன்றுபடுத்தப்பட்ட விடுதலை இயக்கம் குறுகிய ஜாதி அரசியலைக் கடந்ததாக இருந்தது. மதிப்பீடு செய்யப்பட்டுள்ள இந்நூலில் ஜாதி நடைமுறை மிக விரிவாகவும் ஆழ்ந்தும் ஆய்வு செய்யப்பட்டிருப்பதை வாசகர் மிகுந்த கவனத்துடன் பார்க்கவேண்டும். ரிக்வேதத்தில் புருஷ சூக்தாவில் இருந்து ஊக்கம் பெற்ற மனுஸ்மிருதியில் இந்த ஜாதி நடைமுறைக்கான தோற்றத்தைக் காணலாம். இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த பிரும்மா என்று புருஷ சூக்தா தெரிவிக்கிறது. பார்ப்பனர்,க்ஷத்திரியர், வைசியர், சூத்ரர் முறையே  பிரும்மாவின் வாயிலிருந்தும், கைகளில் இருந்தும், தொடையில் இருந்தும், பாதங்களில் இருந்தும் பிறந்தவர்கள் என்று அது கூறுகிறது. இது உண்மையற்ற தவறான கருத்து என்று நூலாசிரியர் கூறுகிறார். பிரும்மா காட்சிக்கு வருவதற்கு முன்பாகவே, வருணன், மித்ரா, அக்னி, இந்திரன் என்பவர்கள் தெய்வங்களாகத் தொழப் பட்டனர்; பிரும்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் ரிக் வேதத்தின்படி முதல் நிலையில் தொழப்படக் கூடிய தெய்வங்கள் அல்ல. இரண்டாவதாக இனப்பெருக்கு என்பது மகளிரின் பணி; அதனால் நான்கு வர்ண மக்கள் ஆணாகிய பிரும்மாவிடமிருந்து தோற்றம் பெற்றனர் என்பது அறிவியலுக்குச் சற்றும் பொருந்தா தது ஆகும். புருஷ சூக்தா என்பது ரிக்வேதத்தினைப் போல பரந்த எண்ணம் கொண்டதாக இல்லை என்பதால், அது ரிக்வேதத்தின்  இடைச்செருகல் என்பதே நூலாசிரியரின் தீர்மானமான கருத்தாகும். ஜாதி நடைமுறை வேத பாரம்பரியத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். பார்ப்பனர்களின் போலித்தனமான பாண்டியத்தின் பாதிப்பால், இந்த ஜாதி நடைமுறை ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் பல தலைகள் கொண்ட கொடிய மிருகம் போல வளர்ந்துவிட்டது. எந்த சீர்திருத்தக்காரராலும் இதனை அடக்க முடியவில்லை. மனுவின் ஜாதி நடைமுறையில் அய்ந்தாவது வர்ணத்திற்கு இட மில்லை என்பதால், தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்கள் என்று அங்கீகரிக்கப்படவில்லை. வர்ண நடைமுறைக்கு வெளியே இருக்கும் வர்ணமற்றவர்கள் என்று அவர்களைப் பற்றி மனு பேசுகிறார்.

தமிழ் ஓவியா said...


அப்படி இருந்தால், புகழ் பெற்ற தலித் பேரறிஞர் தனது புகழ் பெற்ற நான் ஏன் ஒரு இந்துவல்ல? நூலில் குறிப்பிட்டிருக்கும் கோட்பாடு மிகச் சரியானது. இந்தியா அடிமைப்பட்டதற்கான முக்கியமான காரணமே இந்த ஜாதிய நடைமுறைதான் என்ற தொரு கோட்பாட்டை நூலாசிரியர் முன் வைக்கிறார். ஏராளமான பிரிவினைகளைப் கொண்ட இந்த நடை முறை புதிய திறமைகளும், ஆற்றல்களும் வெளிப்படுத் தப்படுவதை அனுமதிக்கவில்லை. வகுப்பு மற்றும் ஜாதி ஆகியவற்றை ஒப்பு நோக்கும்போது, இவை இந்திய சமூகத்தின் ஈடு இணையற்ற ஒரு நடைமுறை என்பதும், அண்மைக்காலம் வரை உரிய கவனம் பெறப்படவில்லை என்பதும் தெரிகிறது. அதனுடைய தாக்கத்திறன் இன்னமும் முழுமையாக கண்டறியப் படவில்லை.
தனது நூலின் முன்னுரையில், தான் ஒரு வரலாற் றாசிரியர் அல்ல என்று  சியாம் சந்த் கூறுகிறார். என்றாலும் தொழில்முறையிலான வரலாற்றாசிரியர் களின்  ஆய்வுக்கான ஒரு முக்கியமான தீர்வுக்கான குறிப்பையும், சிக்கலைத் தீர்க்கும் தகவலையும் அவர் அளித்துள்ளார். இந்திய வரலாற்றில் முதன் முறை யாக ஜாதிய நடைமுறை ஆக்க பூர்வமான பங்கினை யாற்றுகிறது என்பதே அவலம்தான். ஒரு சமூகத்தில் ஜாதி ஆற்றுகின்ற  பணி இரண்டு வகையானது.  உயர்ஜாதி மேல் தட்டு மக்களின் நலன்களை மேம் படுத்துவதற்கான ஒரு கருவியாக ஜாதிய நடைமுறை பயன்படுத்தப்பட்டால், அது குறுகச்செய்யும், பிற் போக்குத்தனமான, பிரிவினை சக்தியாக ஆகிவிடு கிறது. ஜாதிய நடைமுறையினால் யுகம் யுகமாகத் துன்புற்று வந்த மக்களின் விருப்பங்களையும், எதிர் பார்ப்புகளையும் நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தப் படும்போது, புத்துணர்வை ஊட்டும், பரந்த மனப் பான்மையைக் காட்டும், ஒன்றுபடுத்தும் சக்தியாக விளங்குவதுடன், அதன் உள்ளுறை ஆற்றலை வெளிப்படுத்துகிறது. ஜாதிய நடைமுறையின் இந்த இரண்டாவது பரிமாணம்தான் இந்து சமூகத்தில் இக்காலத்தில் தன்னை உறுதிப்படுத்திக் கொள்கிறது; தலித்துகளின் எண்ணற்ற கோரிக்கைப் போராட் டங்களை இந்த வெளிச்சத்தில்தான் நாம் பார்க்க வேண்டும். காவியுடை பாசிசம் என்பது கொடுமை யான வெறுப்புணர்வைத் தூண்டுவதும், தனது குரலின் ஏற்ற இறக்கத்தினால் தந்திரம் செய்வதும் ஆகும். தொடக்கத்திலேயே ஆசிரியர் கூறுகிறார்:  நான் இந்த நூலை எழுத முற்பட்டது கோபத்தினால் அல்ல;  கடுமையான வேதனையினால்தான். 60 ஆம் ஆண்டுகளில் நிலவிய மக்களின் கடமை உணர்வு, 90களில் மக்கள் அனைவருமே சுயநலமானவர்கள் என்ற எண்ணமே அனைவரிடமும் மேலோங்கி நிற்பதைக் கண்டு ஏற்பட்ட மனவேதனை இது. இது முற்றிலும் உண்மையே.  பரந்த மனம் கொண்ட அறி ஞர்களின் ஒரு பிரிவு தங்களைத் தாங்களே கூட் டுக்குள் சுருக்கிக்கொண்டது இழப்புக் கேடானதே யாகும். ஆசிரியரின் வேதனை நியாயமான பெரும் கோப மாக அவ்வப்போது பரவுவதை புரிந்து கொள்ள முடிகிறது. எவ்வாறாயினும்,  இந்திய சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவில் வேர் கொண்டுள்ள  படைப்புத் திறன் மிக்க அறிஞர்களும், எழுத்தாளர் களும் இப்போராட்டத்திற்கு மேலும் வலு சேர்த்தனர். இத்திசையில் ஷாம் சந்தின் நூல் வியக்கத்தக்க  ஒரு முயற்சியே.

(ஆர்.எஸ்.எஸ். வெளியிட்ட 411 எண் இரகசிய சுற்றறிக்கையிலிருந்து)

தமிழ் ஓவியா said...

பெண்மைச் சமத்துவம் பேணல் நன்றே!
-----வா.மு.சேதுராமன்பெண்ணடிமைச் சின்னம்தான் தாலி என்றால்
பீடுடையார் அதை மறுத்துச் சொல்வா ராமோ?
கண்ணுடையான் சிவபெருமான் தன்னில் பாதி
கற்பகத்தாய் உமையாளை வைத்துப் போற்றும்
மண்ணுடையார் பெண்கட்கு மட்டும் தாலி
மாட்டைப்போல் மூக்கணாங்கயிறுமாட்டி
நுண்ணறிவில் இடர்ப்பாட்டால் தாலி கட்ட
நுவன்றிட்டால் வருங்காலம் ஏற்ப துண்டோ

புண்ணியமும் பாவமும்அத் தாலி இல்லை
பொற்கொடியர் கற்புநெறி ஐயம் கொண்டு
கண்ணியமில் தாலியினை மாட்டி விட்டுக்
காரிகையர் அடிமையாக ஞாலம் தன்னில்
வண்ணஎழில் ஓவியத்தைச் சிதைத்த லைப்போல்
வன்கொடுமை செய்பவர்கள், மாதர் தம்மை
எண்ணில்லா இடும்பைக்கே ஆளாக் கும்அவ்
இயற்கைக்கு முரணா ம்அத் தாலி அன்றோ?

தொல்காப்பி யர்காலத் தின்முன் தாலி
துணைவியர்க்கோ அடையாள மாக இல்லை
பல்விதத்தும் பொய்புரட்டுச் சூழ வாழும்
பாங்குக்குத் தக்கவழிக் கரணம் கண்டார்
எல்லையிலாத தம்வீரம் காதல் ஆக
இவையிரண்டு மேதமிழர் வாழ்வுக் கேதான்
நல்லிரு வெல் கண்களாகப் போற்றிக் காத்தல்
நாடுகாதல் வாழ்விலாண்பெண் சமமே கண்டார்

அடலேற்று வீரமகன் செறிந்த காட்டுள்
அதி எதிர்க்கும் வேங்கை கள்வென்று கொண்ட
இடம்தந்த பொருள் களபல் செயல்கள் ஆண்மை
ஏற்றதிரு அடையாள மாக காதல்
மடலவிழ்பூங் கோதைக்குப் பரிசு தந்தான்
மாவேற்றோ டேசண்டை போட அஞ்சும்
தடந்தோள்கள் இல்லானை மங்கை நல்லாள்
தான்விரும்பாள் என்றெல்லாம் பாக்கள் உண்டே!

வீரத்திற் கொருகாலம் மதிப்பு பின்னாள்
வேண்டறிவு விவேகத்தின் மதிப்பே விஞ்சி
நேர்காதல் ஆண்பெண்கள் சமம்என் னும்நல்
நிலைவந்த காலத்தில் பெண்கள் ஆண்கள்
சேரத்தான் முறைவரைய றைகள் என்னும்
திருப்பூட்டின் வழக்கங்கள் அரங்கே றிற்றே
பாரம் பெண் மக்களுக்கே ஆண் களுக்கே
பதில்சுமை என்? பகுத்தறிவு கேட்கும் கேள்வி!

எம்மதத்தும் இந்துமதம் போன்ற பெண்மைக்கு
இரங்காத கொடியநிலை இல்லை! அந்த
அம்மதங்கள் தாலியைஓர் பொருட்டாய் எண்ணா!
அமெரிக்கா ஐரோப்பா நாட்டுப் பெண்கள்
தெம்பாக ஆண்கள் போல் தாலி இன்றி
தேவைஒருவ னுக் கொருத்தி யாக வாழும்
செம்மைதேர்நெறிவாழ்வு நடத்தல் கண்டோம்!
தேவைதாலி கற்புகாக்கும் என்ற  பொய்யே!

மாதருக்குத் தாலியென்றால் ஆண்களுக்கென்?
மறுமலர்ச்சிக் காலத்தில் மானம் கற்பு
தோதிருபா லவர்க்குமொன்றே தேவை மாற்றம்
திகழ்காலம் தாலியினை அகற்றல் பெண்மை
காதல்நெறிக் கற்புநெறிச் சமத்துவத்தைக்
காட்டுகின்ற விழிப்புணர்ச்சி தேவை! தேவை!
ஈதறத்தை செயல்முனைந்த தி.க. வாழ்க!
எம்தமிழர் வீரமணி வாழ்க மாதோ!

நன்றி: தமிழ்ப் பணி மே 2015

தமிழ் ஓவியா said...

உயிரைக் காக்கும் தலைக்கவசம்


இரு சக்கர வாகன ஒட்டிகள் கட்டாயம் தலைக் கவசம் (Helmet) அணிய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இப்படி ஆணை பிறப்பிப்பது ஒன்றும் புதியதல்ல. இதற்குமுன் இது போன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தும் அது ஏட்டளவில் இருந்ததே தவிர, நடைமுறைப் படுத்தப்படவில்லை.

இது போன்ற சட்டங்கள் தங்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் என்பதை வாகன ஒட்டிகள் முதலில் உணர வேண்டும், ஏதோ அரசு தேவையில்லாமல் இது போன்ற ஆணைகளைப் பிறப்பிப்பதாகக் கருதக் கூடாது.

மருந்து சாப்பிடுவது நோய் தீர்வதற்காகத்தானே தவிர, டாக்டர் வருத்தப்பட்டு விடக் கூடாது என்பதற் காகவா மருந்து சாப்பிடுகிறோம்?

நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு என். கிருபாகரன் வரும் ஜூலை முதல் தேதி முதல் இரு சக்கர வாகன ஒட்டிகள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்திட வேண்டும் என்ற தீர்ப்பே கொடுத்து விட்டார் என்று சொல்ல வேண்டும்.

வாகனங்கள் பெருக்கம் வாயு வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. நடைபாதைகளும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கோயில்களும், கடைகளும் அவற்றை நிரப்பி விடுகின்றன.  நடைப் பயணிகள் பாடு திண்டாட்டம் தான்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை 2006-2007இல் இருந்த இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 75 லட்சத்து  3 ஆயிரத்து 426 ஆகும். 2013-2014ஆம் ஆண்டிலே இது ஒரு கோடியே 55 லட்சத்து 95 ஆயிரத்து 140 ஆக வளர்ந்து விட்டது.

அதுவும் இளைஞர்கள் கைகளில் சிக்கிய இந்த இரு சக்கர வாகனங்கள் போகும் வேகம் பார்ப்பவர்களுக்குப் பெரும் திகிலைத்தான் ஏற்படுத்துகிறது. போதும் போதாதற்கு டாஸ்மாக் என்னும் அதி வேக ஊக்க மருந்தும் சேர்ந்து விட்டால் கேட்கவும் வேண்டுமோ!

தலைக்கவசம் அணியாத காரணத்தால் 2005ஆம் ஆண்டில் பலியானோர் எண்ணிக்கை 1670; 2014ஆம் ஆண்டிலோ 6419 என்று பல மடங்கு உயிரைக் குடித்து விட்டது. விலை மதிக்க முடியாத மனித உயிர் இப்படி போதிய பாதுகாப்பு நடவடிக்கையின்மையால் பரிதாபமாக மலிவாக இழக்கப்படுவதை நினைத்தால் பெரும் வேதனை.

தொலைக்காட்சிகள் வேண்டாத வேலைகளுக் கெல்லாம் சத்தம் போட்டுப் பேசுகின்றன. இது போன்ற விழிப்புணர்வுக்காக சில நொடிகளை ஒதுக்கக்கூடாதா? எல்லாவற்றிலும் காசு பண்ணுவதுதான் ஊடகங்களின் ஓய்வறியாத குறிக்கோளா? சமூகப் பொறுப்பு என்பது அவர்களுக்குக் கிடையவே கிடையாதே - பாடத் திட்டத்திலும் பாலகர்களிடமிருந்து இதனை ஆரம்பிக்க வேண்டும்.

எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் சிந்தனையாளர்களும் இது போன்ற அவசியமான கருத்துக்களை மக்கள் மத்தியில் நயம்படக் கொண்டு சேர்க்க வேண்டாமா!

ஒரு இளைஞன் சாலை விபத்தில் பலியாகிறான் என்றால், அவனோடு அந்தப் பிரச்சினை முடிந்து விடக் கூடியதல்ல; அவனை நம்பி ஒரு குடும்பமே இருக்கிறதே நினைத்துப் பார்க்க வேண்டாமா?

தலைக்கவசம் அணியுங்கள்; அதன் மூலம் இன்னுயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்பதை மாற்றி தலை தப்புவது - தலைக்கவசத்தின் புண்ணியம் என்ற புதுப் பொருளை உண்டாக்குங்கள்!

தமிழ் ஓவியா said...

ஜெயேந்திரர் மிரட்டுகிறார் அப்ரூவர் ரவி சுப்பிரமணியம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

சங்கரராமன் கொலை வழக்கில்

பிறழ்சாட்சி சொல்லி குற்றவாளிகளை தப்பிக்க விட்டதற்கு என் மனசாட்சி ஏற்கவில்லை

உண்மையை சொல்ல முயற்சிப்பதால் ஜெயேந்திரர் மிரட்டுகிறார்

அப்ரூவர் ரவி சுப்பிரமணியம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

சென்னை, ஜூன் 13_- பொய் சொல்லி உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப விட்டுவிட்டேன். சங்கரராமன் கொலையில் உண்மையைச் சொல்ல முயற்சிப்பதால் ஜெயேந்திரர் மிரட்டுகிறார் என்று முதலமைச்சர் பிரிவில் அப்ரூவர் ரவி சுப்பிரமணியம் மனு கொடுத்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மற்றும் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் ரவிசுப்பிரமணியம் (வயது 59) கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு மற்றும் ஆடிட்டர் ராதாகிருஷ் ணன் தாக்கப்பட்ட வழக்கு ஆகிய இரண்டு வழக்கு களிலும் 26.12.2004 அன்று நான் கைது செய்யப் பட்டேன். இரு வழக்கிலும் நான் அப்ரூவராக (குற்றத்தை ஒப்புக்கொண்டு அரசுத் தரப்புக்கு சாதக மாக சாட்சி அளிக்கும் நபர்) மாறினேன்.

நான் அப்ரூவராக வாக்குமூலம் அளித்ததால் அந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர் மற்றும் அந்த வழக்குகளில் தொடர்புடைய அனைவருக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், அவர்கள் அனைவரும் தண்டனைக்கு உள்ளாகும் நிலையும் எழுந்தது.

எனவே, எனது மற்றும் எனது குடும் பத்தாரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அரசு உணர்ந்து, என்னை உரிய பாதுகாப்புடன் சிறையில் வைத் திருந்தது.

பிறழ் சாட்சி

ஆனால், சிறைத்துறையின் அப்போதைய அதிகாரி ராமச்சந்திரனின் (சிறைத்துறையின் முன் னாள் டி.அய்.ஜி.) மூலமாக அப்பு, கதிரவன் (இரண்டு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்ட வர்கள்) ஆகி யோர் என்னைக் மிரட் டினர். அவர்களின் கட்டுப் பாட்டுக்குள் என்னை கொண்டு வந்தனர். அவர் களின் மிரட்டலால் நான் பிறழ் சாட்சியாக மாறிவிட்டேன்.

மேலும் பல்வேறு உத்திகளைக் கையாண்டு பணபலம் மற்றும் ரவுடி அரசியல் துணையோடு சாட்சியங்களை யும், நீதியையும் விலைக்கு வாங்கிய தன் மூலம், சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை ஆனார்கள்.

இந்த உண்மையை சி.பி. சி.அய்.டி. (ஆடிட்டர் வழக்கின் விசாரணை முகமை) மூலமாக நான் நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன். கடந்த 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த எனக்கு ராதாகிருஷ்ணன் வழக்கில் 18.12.2013 அன்று சென்னை உயர் நீதிமன்றம் பிணை வழங்கி விடுவித்தது.

தமிழ் ஓவியா said...

நான் வெளியே வந்த பிறகும் ஜெயேந்திரரின் உத்தரவின் பேரில் அப்பு என்னை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தற்போது அப்புவும், கதி ரவனும் இறந்துவிட்டனர். எனவே நான் சற்று சுதந்திரமாக இருக்கிறேன்.

ஆனாலும் பிறழ்சாட்சி சொல்லி உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க விட்ட எனது செயலை எனது மன சாட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. இரவும், பகலும் மனசாட்சி என்னை உறுத்திக் கொண்டிருக்கி றது. அதனால் நான் வெகுவாக மன உளைச்சலுக்கு ஆளானேன்.

இந் நிலையில் ராதா கிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்குக்கான சிறப்பு அரசு வழக்குரைஞரை 8.6.2015 அன்று நீதிமன்றத்தில் சந்தித்து, நடந்த உண்மை களையெல்லாம் கூறுவதற்கான ஆலோ சனையைக் கேட்டேன். அதற்கான மனுவையும் அவரிடம் சமர்ப்பித்தேன்.

இதை ஜெயேந்திரரின் வழக்குரை ஞர்களும், வழக்கில் குற்றம்சாட்டப்பட் டுள்ள காஞ்சிமடத்தைச் சேர்ந்த சுந்தரேசய்யரும் பார்த்தனர். சிறிது நேரத் தில் சுந்தரேசய்யர் என்னை தனியாக அழைத்தார். பெரியவா இன்றைக்கு வரச்சொன்னார். சாயங் காலம் வந்துவிட்டுப் போ என்றார். மாலையில் ஜெ யேந்திரரைச் சந்தித்தேன்.

அப்போது ஜெயேந்திரர் என்னிடம், என்ன மறுபடியும் எனக்கெதிராக சாட்சி சொல்லப் போகிறாயா? உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைச் சிப்புடுவேன். சங்கரராம னுக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் என்று மிரட்டினார்.

அங்கிருந்த சுந்தரே சய்யர் என்னைப் பார்த்து, நீ பெரியவாவை பகைச் சிண்டேன்னா இந்தியாவின் எந்த மூலையிலும் உயிரோடு வாழ முடியாது. மத்திய அரசுக்கே ஆலோசகராக அவர் இருப்பது உனக்குத் தெரியாதா? என எச்சரித்தார்.

காஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளரா கப் பணியாற்றும் கண்ணன் என்ற மடத்துக் கண்ணன் சிறிது நேரத்தில் வந்தார். பெரியவாளுக்கு எதிராக ஏதாவது செய்தால் நீ காணாமல் போயிடுவாய். சிறையில் டி.அய்.ஜி.யாக இருந்ததால் ராமச்சந்திர னுக்கு மாநிலத்தில் உள்ள அத்தனை ரவுடி களும் தெரியும். பக்குவமாக நடந்து கொள் என்று எச்சரித்தார்.
இந்த வழக்குக்காக பெரியவாவுக்கு வேலூர் சிறையில் ராமச்சந்திரன் செய்த உதவிகளை கண்ணன் மேற்கோள் காட்டினார். ராமச்சந்திரன் தற்போது காஞ்சி மடத்தின் பல்கலைக்கழக முதன்மை நிர்வாக அதி காரியாக இருக்கிறார்.

இவர்களால் எனது உயிருக்கு ஆபத்து வரும் என்று உணர முடிகிறது. என் வாழ்க்கையை முடித் துக் கொள்ளலாம் என்று கூட இவர்களால் தள்ளப்படுகிறேன். எனவே ஜெயேந்திரர் மற்றும் அவர் களின் கூட்டாளிகள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஜெயேந்திரர், ராமச்சந் திரன், கண்ணன் ஆகியோரே முக்கிய காரணம் என் பதையும் அதற்கு சுந்தரேசய்யர் தொடர்பு டையவர் என்பதையும் கூறிக்கொள் கிறேன்.

முக்கிய சாட்சியான என்னை கலைத்ததோடு இல்லாமல் பல சாட்சி களையும் இவர்கள் கலைத்துள்ளனர். ராதாகிருஷ் ணன் தாக்கப்பட்ட வழக் கின் மீதமுள்ள சாட்சிகளையும் கலைக்கும் முயற் சியில் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கு சம்பந்தமான பல சாட்சிகள், தடயங் களை அழித்து, மீதியை அழிக்க முயற்சித்து வருகிற ஜெயேந்திரர், சுந்தரேசய்யர் ஆகியோருக்கு வழங்கி யுள்ள பிணையை ரத்து செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும். மடத்துக்கு தொடர்புடைய சிலர் என்னை பின்தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Read more: http://www.viduthalai.in/page-2/103206.html#ixzz3cwY31mCV

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் பெறும் அறிவுத் தெளிவு மாணவர் மன இருளைப் போக்கும்!

ஆசிரியர்களுக்கான பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

பார்வையாளரே பக்தியை விட்டார்!

தொகுப்பு:
மஞ்சை வசந்தன்

திருச்சியில் ஆசிரியர்களுக்கான இரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மே 9, 10 ஆகிய நாள்களில் நடந்தது. பயிற்சி முடிந்த பின் பயன் பெற்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவர் தாம் பெற்ற பயனை ஒரு பதிவேட்டில் பதிவு செய்தனர். பயிற்சி சிறக்க, பரவ ஆலோசனைகளையும் வழங்கினர். அவை இப்பயிற்சியின் வெற்றியை அறிவிப்பதாய் அமைந்தன.

என்னைக் கூர்மைப்படுத்தியது

ஊற்றங்கரை வட்டம் பொடார் கிராமம் திரு.வெங்கடேசன் எம்.ஏ., பி.எட். முடித்த ஆசிரியர். இவர் தான்பெற்ற பயிற்சி பற்றி கூறுகையில், இப்பயிற்சி என்னைக் கூர்மையாக் கியது. மாணவர்களையும், இச்சமுதா யத்தையும் பகுத்தறிவுப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல இது பயன்படும். அவ்வாறு முன்னெடுத்துச் செல்வேன் என உறுதியும் எடுத்துக்கொண்டேன் என்றார்.

வளர் இளம் பிள்ளைகளை வார்த்தெடுக்க உதவும்; கல்லூரியிலும் கிடைக்காத அறிவு!

நாகர்கோயிலைச் சேர்ந்த ச.ச.மணி மேகலை என்ற ஆசிரியர், இன்றைய காலக்கட்டத்தில் வளர் இளம் மாணவர் களை நல்லதொரு சமூக மாற்றத்திற்கு உரியவர்களாய் கொண்டுவர ஆசிரி யர்களுக்கு இப்பயிற்சி பெரிதும் பயன்படும். கல்லூரிகளில்கூட கிடைக் காத அறிவை இரண்டு நாளில் இங்கு பெற்றோம் என்றார்.

தன்மான உணர்வு தலைதூக்கச் செய்தது

பகுத்தறிவுத் தெளிவு கிடைத்ததோடு, தன்மான உணர்வும் பெற்றோம். நாம் யார்க்கும் அடிமையல்ல, எல்லோரும் சம உரிமையும் சம வாய்ப்பும் உடையவர்கள் தான். ஆதிக்கக் கூட்டத்தை எதிர்த்து நமது உரிமைகளை நாம் அடைய வேண் டும் என்பதைத் தெளிவாய் அறிந்தோம் என்றார் வடக்குநந்தலைச் சேர்ந்த ஆசி ரியர் வை.பழனியம்மாள்.

இணையம் மூலம் பரப்ப பயிற்சி வேண்டும்

பயிற்சி மிகப் பயனுடையதாய் இருந் தது. அளிக்கப்பட்ட பயிற்சியோடு, தந்தை பெரியாரின் சிந்தனைகளை, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் மூலம் பரப்பவும் பயிற்சியளித்தால் மிகவும் பயன்தரும் என்று ஆலோசனையும் வழங்கினார் ஓம லூரைச் சேர்ந்த ஆசிரியர் சி.மதியழகன்.

தமிழ் ஓவியா said...

சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றோம்

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மவளன் மோசல் என்ற ஆசிரியர், பலநூறு புத்தகங் களைப் படித்துப் பெறும் அறிவை இரு நாளில் பெற்றோம். ஆதிக்கச் சக்திகளின் அடக்குமுறையை எதிர்க்கும் ஆற்றல் எங்களுக்குக் கிடைத்தது. அறிவுத் தெளிவு துணிவைத் தரும் என்பதை இதன்வழி உணர்ந்தோம் என்றார்.

மாவட்டம் தோறும் இப்பயிற்சி வேண்டும்

ஆத்தூரைச் சேர்ந்த வா.தமிழ் பிரபா கரன் அவர்கள், இப்பயிற்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டு இன்னும் அதிகப்படியான ஆசிரியர்கள் தெளிவு பெற ஆவன செய்ய வேண்டுகிறேன் என்றார்.

கல்லூரி ஆசிரியர்களுக்கும் இப்பயிற்சி வேண்டும்

ஒரத்தநாட்டைச் சேர்ந்த அ.சாந்தி பழனிவேல் அவர்கள், இப்பயிற்சி கல்லூரி ஆசிரியர்களுக்கும் அளிக்கப்படுதல் வேண்டும் என்ற ஆலோசனையைப் பதிவு செய்தார்.

குழு விவாதம் வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரைச் சேர்ந்த அண்ணா சரவணன் அவர்கள், பயிற்சியின்போது குழுவாகப் பிரித்து விவாதங்கள், கேள்வி-பதில், அய்யம் அகற்றல் செய்தால் மேலும் பயன்தரும் என்றார்.

பெண்ணுரிமை அவசியம் அறிந்தோம்

மூடநம்பிக்கை ஒழிப்பு, இனஉணர்வு, பேய் பில்லி சூனிய மடமை பற்றி அறிந்து தெளிந்த வேளையில் பெண்ணுரிமை பேணப்பட வேண்டியது கட்டாயம் என்பதை அறிந்தோம் என்று சிதம்பரம் வட்டம், பூந்தோட்டம் வே.அசோக்குமார் தெரிவித்தார்.

கருத்துக் குறிப்புக் கையேடு வழங்கினால் பயன்தரும்
பயிற்சியளித்தோரின் கருத்துச் சுருக்கம் தொகுக்கப்பட்டு கையேடாக வழங்கினால் பெரும்பயன் தரும் என்று தம் கருத்தைப் பதிவு செய்தார் தளவாய்ப் பாளையம் ந.காமராசு என்ற ஆசிரியர்.

உண்மையில், விடுதலை பெற்றேன்!

பயிற்சியின் மூலம் பல உண்மைகளை அறிந்து அதன்வழி பல மடமைகளி லிருந்து விடுதலை பெற்றேன் என்றார் சிவகிரியைச் சேர்ந்த இரா.செழியரசு.

இவருடன் வந்த இவரது இணையர் சலோமி ஜெஸி இந்தப் பயிற்சியில் பார்வையாளராய் இருந்து தெளிவு பெற்றார். விவரம் பெட்டிச் செய்தியில்.

பயிற்சிக்கு வந்தேன் பக்தியை விட்டேன்!

திருநெல்வேலி மாவட்டம், சிவகிரியைச் சேர்ந்த இரா.செழியரசு என்ற ஆசிரியர் பயிற்சிக்கு வந்த போது, அவரது இணையர் சலோமி ஜெஸியும் உடன் வந்திருந்தார். பயிற்சி வகுப்புகளைக் கூர்மையாக இரு நாளும் கவனித்தார். பயிற்சி யின் நிறைவுக்குப் பின் வீட்டிற்குச் சென்ற இவர், கடவுள் நம்பிக் கையை முழுமையாக விட்டார், வீட்டில் பூசையில்லை, சர்ச்சுக்குச் செல்வதையும்  விட்டார். இச்செய் தியை பெரியார் திடலுக்கு வந்தி ருந்த கழகப் பொதுச் செயலர்  ஜெயக் குமார் என்னிடம் தெரிவித்தார். உடனே நான் அந்த அம்மையாரை செல்பேசி வழித் தொடர்புகொண்டு பாராட்டி, அவர் மனமாற்றம் குறித் துக் கேட்டேன். அவர் கூறியவை அவர் மொழியிலே இதோ: நான் சர்ச்சுக்குப் போவதை வழக்கமாய்க் கொண்டிருந்தேன். மதம் சார்ந்த அனைத்திலும் நம்பிக்கை கொண்டி ருந்தேன். என் கணவர் இப்பயிற்சி முகாமிற்கு கலந்துகொள்ள வந்த போது, நானும் உடன் வந்தேன். பின் நானும் பங்குகொண்டேன். பயிற்சி முடிந்தபின் நான் முழுமையான இறை மறுப்பாளராய், பகுத்தறிவாள ராய் மாறினேன். பயிற்சி முடித்து வந்தபின் சர்ச்சுக்கும் செல்வதில்லை. மதச் சடங்கும் செய்வதில்லை. இனி இயக்க நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கு கொள்வேன் என்றார்.

பயிற்சி தந்த பலனுக்கு இது ஒரு பதம்! வருங்காலங்களில் பல சலோமி ஜெஸி உருவாவார்கள்!

தமிழ் ஓவியா said...

இரண்டாவது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு உண்டு

 

மதுரை, ஜூன் 13_ 'அரசு பெண் ஊழியருக்கு, முதலில் இரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கும், மகப்பேறு விடுப்பு அனுமதிக்க வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை பிரியதர்ஷினி தாக்கல் செய்த மனு: எனது முதல் பிரசவத்திற்காக, கடந்த, 2011இல், 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தேன். எனக்கு, இரட்டை குழந்தை பிறந்தது. இரண்டாவது பிரசவத்திற்காக, கடந்த, 2014, அக்., 12 முதல், 179 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தேன். இதையடுத்து, கடந்த, ஏப்., 10ஆம் தேதி, பணியில் சேர்ந்தேன்.
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,'உங்களுக்கு, ஏற்கெனவே இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இரண்டாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பில் சென்றதை அனுமதிக்க முடியாது' என்றார். இந்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்து, நீதிபதி எஸ்.வைத்திய நாதன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரருக்கு, முதல் பிரசவத்திலேயே, இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அதை காரணமாக வைத்து, அடுத்த பிரசவத்திற்கு, மகப்பேறு விடுப்பு அனுமதிக்கமுடியாது என்பது ஏற்புடையதல்ல. மகப்பேறு விடுப்பு, பெண்களின் உடல்நலம், பாது காப்பை கருத்தில் கொண்டு அனு மதிக்கப்படுகிறது. முதலில், இரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண் டாவது பிரசவத்திற்கு, விடுப்பு அனுமதிக்க வேண்டும். சம்பளப் பிடித்தம் உத்தரவிற்கு தடை விதிக்கப் படுகிறது. வரும், 23ஆம் தேதிக்கு, விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

தமிழ் ஓவியா said...

தோழர் சத்தியமூர்த்தி புகார்களுக்குப் பதில்
தேர்தலில் போட்டி அபேட்சகர்கள் ஒருவரை யொருவர் இகழ்வதும், எதிர் அபேட்சகர் மீது வாக்காளர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும்படி செய்வதும் உலகம் முழுதும் சகஜமாகிவிட்டது. ஆனால் அவ்விதம் செய்வதற்கும் ஓர் எல்லையுண்டு. இப்போது சென்னை நகர் சம்பந்தப்பட்ட வரையில், காங்கிரஸ் பெயரைக் கூறிக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அபேட்சகராக நிற்கும் ஆளைக் கவனிக்காதீர்கள். மகாத்மா காந்திக்காக ஓட்டுபோடுங்கள் எனக் கூறுகிறார்கள்.

இது நாமம் போட்ட சோம்பேறிகள் திருப்பதி வெங்கிடாசலபதிக்கு உண்டியல் பிச்சை கேட்பது போலாகும். ஆனால் நான் அவ்விதம் எதுவும் கூற விரும்பவில்லை. சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட வரையில் பார்ப்பனர் - அல்லாதார் ஜாதியை ஆதாரமாகக் கொண்டே தேர்தல் இயக்கம் நடந்து வருகிற நீங்களெல்லோரும் சென்னை நகரத்துக்கு அபேட்சகராக நிற்கும் தோழர் ராமசாமி முதலியாரின் அந்ததையும், யோக்கியதாம் சங்களையும் தோழர் சத்தியமூர்த்தி யோக்கியதாம்சத்தையுமே கவனிக்க வேண்டும். அபேட்சகர்களில் யார் செய்வது சரி, யார் செய்து தப்பு என்பதைப் பகுத்தறிந்து, உங்களிஷ்டம் போல் ஒருவருக்கு ஓட்டு போடும் உரிமை உங்களுக்குண்டு. எனவே, வீண் புரட்டுகளைக் கேட்டு நீங்கள் ஏமாற மாட்டீர்களென்பது நிச்சயம்.

காங்கிரஸ் பெயரால் நடந்து வரும் பிரச்சாரத்தை நீங்கள் கவனிக்கக் கூடாது. காங்கிரஸ் அரசியலில் இன்னும் சிறிது காலத்தில் மிகுந்த மாறுதலேற்படலாம். ஏனெனில் காந்தியார் காங்கிரசிலிருந்து விலகிவிட உத்தேசித்துள்ளார். அப்படி யிருந்தும் காங்கிரஸ்வாதிகள் தேர்தலுக்காக மகாத்மா பெயரை உபயோகித்து வருகிறார்கள்.

தோழர் சத்தியமூர்த்திக்கு 4000 பிராமணரின் ஓட்டுகள் நிச்சயமாக இருக்கிறதென்றும், அதற்குமேல்தான் அவர் இப்போது கணக்கிட வேண்டு மென்றும் அவருடைய நண்பர்கள் கூறுகின்றனர். அப்படியாயின், தோழர் ராமசாமி முதலியாருக்கு 11,000 பிராமணரல்லாதாரின் ஓட்டுகள் நிச்சயமாக இருக்கின்றன வென்று நீங்கள் தைரியமாகக் கூற வேண்டும். இப்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் தோழர் சத்திய மூர்த்தி, தோழர் முதலியாருக்கு விரோதமாக பல பொய்யான விஷயங்களைக்  கூறியிருக்கிறார். அவைகளால் பொதுஜன அபிப்பிராயம்

மாறக்கூடுமோவென்றே, இப்போது தோழர் முதலியார் அவைகளுக்குப் பதில் கூற வேண்டியிருக்கிறது.
(20-10-1934) மாலை சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் தலைமை தாங்கி  ஆற்றிய உரை.)
- பகுத்தறிவு - சொற்பொழிவு - 28.10.1934

தமிழ் ஓவியா said...

மார்க்கட்டு நிலவரம் - சித்திரபுத்திரன்


தமிழ்நாட்டில் மார்க்கட்டு நிலவரம் தெரியப்படுத்தி வெகுநாள் ஆகிவிட்டதால் இது சமயம் இரண்டொரு சரக்குகளுக்கு மாத்திரம் நிலவரம் எழுதுகிறோம்.

பெண்கள்
செட்டி நாட்டில் ஒரு பெண்ணுக்கு (முன் விலை) 35000 முதல், 45000 ரூபாய் வரை இருந்து வந்ததானது, இப்போது சவுத்துப் போய் ஒரு சைபருக்கே மோசமேற்பட்டு 4000, 5000 விலையில் அசல் செட்டி நாட்டுப் பெண்கள் தாராளமாய் கிடைக்கும் நிலைமை வந்துவிட்டது. காரணம் சுயமரியாதை தேசத்திலிருந்து ஏராளமான சரக்குகள் (பெண்கள்) வந்து இறங்கத் தலைப்பட்டு விட்டன. ஆதலால் வெளிநாட்டு சரக்குகளை (சுயமரியாதைப் பெண்களை) செட்டி நாட்டுக்குள் வராதபடி வெளி நாட்டுச் சரக்குகளுக்கு வரி போட வேண்டுமாய்ச் செட்டி மார்களும் சர்க்காருக்கு (சமுகத்தாருக்கு) விண்ணப்பம் போட்டிருக்கிறார்கள். அப்படி அரசாங்கத்தார் (சமுகத்தார்) வரி போடுவார்களானால் பெண்கள் இருக்கிற நாட்டுக்கே, குடிபோய்விடுவதாக பெண் வாங்குவோர்கள் கூடிப் பேசி முடிவு செய்து தீர்மானத்தை அரசாங்கத்துக்கு (தங்கள் சமுகத்தாருக்கு) தெரிவித்து இருப்பதாகத் தெரிகிறது.

ஓட்டுகள்
முனிசிபல் ஓட்டர்களுக்கு இது சமயம் கிராக்கி அதிகம். பொப்பிலி ராஜாவின் ஒரு அறிக்கையின் பயனாய் முனிசிபல் ஓட்டுகளுக்கு கிராக்கியற்று சில இடங்களில் அவ்வளவையும் சமுத்திரத்தில் கொட்ட வேண்டி வருமோ என்று விவசாயிகள் (ஓட்டர்கள்) கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். நல்ல வேளை யாய் அந்த உத்தரவு வரவில்லை. எல்லா முனிசிபாலிட்டி களுக்கும் தேர்தல் இந்த வருஷத்திலேயே அதுவும் இந்த மாதத்திலேயே நடக்க வேண்டுமென்று கட்டளையிட்டு விட்டதால் ஓட்டர்கள் நிலவரம் வெகு கிராக்கியாகிவிட்டது.

ஈரோடு
குறிப்பாக ஈரோட்டில் சில வார்டுகளில் ஓட்டுச் செலவே இல்லாமல் போய்விட்டது. சில வார்டுகளில் மொத்தத்தில் எதிர் அபேட்சகருக்கு 250 முதல் 500 ரூபாய் வரை ஆகிவிட்டது.
சில வார்டுகளில் அதாவது குடியானவர்களே சம்பந்தப் பட்ட வார்டுகளில் ஓட்டு ஒன்றுக்கு 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை. சில வார்டுகளில் அதாவது வியாபாரிகள் சம்பந்தப்பட்ட வார்டில் ஓட்டு ஒன்றுக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய், 20 ரூபாய் கூட ஆகிவிட்டது என தெரிகிறது.

சில வார்டுகளில் அதாவது காங்கிரசு சம்பந்தப்பட்ட வார்டு என்று சொல்லப்படுவதில் ஓட்டு ஒன்றுக்கு 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலும், சில ஓட்டுகள் விஷயத்தில் 40, 50 ரூபாய் வரையில் கூட விலை ஏறிவிட்டது.
சுமார் 300 ஓட்டர்கள் உள்ள ஒரு வார்டுக்கு ஒரு அபேட் சகர் 3000ரூ எடுத்து வைத்திருப்பதாகத் தெரிகின்றது. மற்றொரு அபேட்சகர் 5000ரூ எடுத்து வைத்து எலக்ஷன் இன்னும் 10 நாள் இருக்கும் போதே 2000 ரூபாய்க்கு மேல் செலவழித்து விட்டதாகவும் தெரிகின்றது. அதிகப் பணம் செலவு செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது பார்வதிக்குப் பரமசிவன் சொன்ன உறுதி மொழியாகும்.

ஆகவே இந்த எலக்ஷன் முறை, ஏழை ஒட்டர்கள் பிழைக்க அரசாங்கத்தார் செய்த தர்மமாகும். ஆதலால் ஓட்டர்கள் பணம் கொடுப்பவர்களை வாழ்த்துவதை விட, இப்படிப்பட்ட தேர்தல் முறையைக் கற்பித்த அரசாங்கத்தார் நீடூழி காலம் சிரஞ்சீவியாய் - எப்படிப்பட்ட சிரஞ்சீவியாய் -  மார்க்கண்டன், அனுமார், விபீஷணன் போன்ற சிரஞ்சீவியாய் அல்ல. சூரியன், சந்திரன் போன்ற சிரஞ்சீவியாயும் அல்ல. அவைகள் கூட ஒரு காலத்தில் இல்லாமல் போய்விடும். மற்றெப்படிப்பட்ட சிரஞ்சீவியாய் என்றால் - கல்லும், காவேரியைப் போல் சிரஞ் சீவியாய் இருக்க வேண்டுமென்று வாழ்த்த கடமைப்பட்டி ருக்கிறார்கள்!

சில கடவுள்களும் இந்த அரசாங்கத்துக்கு சிரஞ்சீவி பட்டம் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர்.
ஏனெனில் ஓட்டுக்கு விலையாக ஓட்டர்களுக்குப் பணம் கொடுப்பது மாத்திர மல்லாமல் கோவில்கட்ட, மசூதி கட்ட, சர்ச் சட்ட, என்று 100, 500, 1000 கணக்காய் ரூபாய் கொடுக்க வேண்டியிருப்பதால், அந்த மதக் கடவுள்கள் இப்படிப்பட்ட எலக்ஷனை உண்டாக்கிய அரசாங்கத்தை ஆசிர்வதிக்க கடமைப்பட்டிருக்கின்றன.

நல்ல வேளையாக ஈரோட்டைப் பொறுத்தவரை, ஓட்டுகளுக்கு ஜாதிச் சண்டைகளை விலையாகக் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. அதன் பெருமை சேர்மனுக்கே சேர வேண்டியது.
- பகுத்தறிவு - கட்டுரை - 23.09.1934

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பத்திரிகைகளும் சர்.சண்முகமும்

தோழர் ஆர்.கே. சண்முகம் இந்தியா முழுவதுக்கும் தெரிந்த ஒரு முக்கியஸ்தர். அவருடைய நடவடிக்கைகளும், பேச்சுக்களும் மக்கள் கவனிக்கப்பட தக்கது என்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. பலர் எதிர்பார்க்கவும் கூடும். இந்நிலையில் தேசியப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனப் பத்திரிகை அவரது நடவடிக் கைகளை யோக்கியமாய் பிரசுரிக்காமலும், பிரசங்கங் களையும் கேள்விகளையும், பதில்களையும் சிறிதும்கூட பிரசுரிக்காமலும் இருந்து வருகின்றன. சர். சண்முகம் அவர்கள். இந்திய சட்டசபையில் இராணுவ சம்பந்தமான பிரச்சினையில் கொடுத்த ஒரு தீர்ப்பு விஷயமாய் பார்ப்பனப் பத்திரிகைகள் பாராட்டாவிட்டாலும், விஷமத்தனமான பரிகாசங்களைச் செய்தன.

தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி அய்யர், ஜம்பை வைத்தியனாத பாகவதர், ரமண ரிஷி போன்றவர்கள் விஷயங்களைப் பெருக்கி கண்ணு, மூக்கு வைத்து கலம் கலமாய் அலங்கரிக்கின்றன. இந்த மாதிரியான காரியங்களால் பார்ப்பனர்களுக்குக் கீர்த்தியும், மேன்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ, பார்ப்பனரல்லாதாருக்கு அபகீர்த்தியும், தாழ்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ நாம் சொல்ல வரவில்லை. இந்த மாதிரியான நிலையில் பார்ப்பனர் இருக்கின்ற வரையில் சித்திரத்தில் மாதிரி பார்த்து எழுதக் கூட ஒரு பார்ப்பனர் கிடைக்காமல் பூண்டற்று போகக் கூடிய காலம் வரும் என் கின்ற தைரியம் நமக்கு உண்டு. அந்தத் தைரியம் இல்லாவிட்டால் இத் தொண்டை நாம் மேற் கொண்டிருக்க மாட்டோம்.

ஆனால் எதற்காக இதை எழுதுகின்றோம் என்றால், பார்ப்பனப் பத்திரிகைகள் தேசியப் பத்திரிகைகள் என்றும், பல பார்ப்பனர்கள் பார்ப்பனத்தன்மை இல்லாமல் நடு நிலைமை வாய்ந்தவர்கள் என்றும் கருதிக் கொண்டு பார்ப்பன சிஷ்யர்களாகவும், பார்ப்பன கூலிகளாகவும், பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன பத்திரிகைகளுக்கும் ஆதரவளிப்பவர்களாகவும் இருக்கும் முட்டாள்தனத்தையும், சுயமரியாதை அற்ற தன்மையையும் வெளிப்படுத்தவே இதை எழுதுகிறோம்.

விகடப் பத்திரிகை என்று வேஷம் போட்டுக் கொண்டு சில பத்திரிகைகள் பார்ப்பனியத்தைப் பிரச்சாரம் செய்து கொண்டு பார்ப்பனரல்லாத பிரமுகர்களை இழிவுபடுத்திக் கொண்டு வருகின்றன. அவைகளுக்கும் சுத்த இரத்த ஓட்டமில்லாத - சுயமரியாதை அற்ற பணம் பிரதானமே தவிர வேறொன்றும் இல்லை என்று கருதுகின்ற சில பார்ப்ப னரல்லாதார் ஆதர வளிக்கின்றதையும் பார்த்து வெட்கப் படுகின்றோம். என்ப தோடு 10 பணத்துக்கு மிஞ்சிய பதிவிரதை இல்லை என்று கற்பின் பித்தலாட்டத்துக்கு ஒரு பழமொழி சொல்வது போல் பணத்தை விட தங்கள் சுய நல வாழ்க் கையை விட, மானம் பெரிதல்ல என்று எண்ணி வாழ்க்கை நடத்தும் பார்ப்பனரல்லா தாரைக் கண்டு இரங்குகின்றோம். பார்ப்பனரைப் பார்த்து பாரதியார் நாயும் பிழைக்கு மிந்தப் பிழைப்பு என்று சொன்னது போல், ஒரு மனி தனின் பிழைப்பிற்காக மானத்தைத் தனது சமுகத்தை விற்று விட்டு ஜீவிக்க வேண்டியதில்லை என்றுதான் பரிதாபத்துடன் கண்ணீர் விட்டுக் கொண்டு இதை எழுதுகிறோம்.
- பகுத்தறிவு - கட்டுரை - 30.09.1934

தமிழ் ஓவியா said...

சர்வ சக்தியா? சர்வ சைபரா?சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்கமாட்டேன் என்கிறானே.

ராமன்: அது மாத்திரம், அதிசயமல்லப்பா பசியாவரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக்கிடக்கிறார். ஒருவன் கூட ஒரு கை கூழ் ஊத்தமாட்டேங்கிறானே.

சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?

ராமன்: இது தான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?

ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்றாய், அவனை ஒருத்தன் அப்படிப்பட்ட கடவுள் இல்லே என்று சொல்லுகிறான் என்றால் அது வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: சர்வசக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்யமுடியவில்லை என்றால் இது முட்டாள் தனமான, சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?

அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட் டம் இருக்கிறதோ அதேபோல் சர்வசக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனை நம்பச்செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.

-  சித்திரபுத்திரன் (விடுதலை 22.2.1972)

தமிழ் ஓவியா said...

அண்ணா பதில் சொல்கிறார்(திராவிட நாடு இதழில், வாசகர்களின் முக்கிய வினாக்களுக்கு அண்ணா அளித்த அரிய விடைகள் இங்கே தரப்படுகின்றன ஆ.ர்.)

கேள்வி: ஏடுகளில் காணப்படும் கலாச்சார வரலாற்றின் அடிப்படை யை ஆதாரமாகக் கொண்டு ஆரியர் _ திராவிடர் என்று பேசுகிறீரே, இன இலக் கணங்கள் இன்று மாறு பட்டுள்ளன என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்?

பதில்: மறுக்கவில்லை நண்பரே! மறுத்ததுமில்லை. இனங்கள் பலப்பல காலமாக ஓரிடத்தில் வாழ்வதால் கலப்பு ஏற்படுவது இயல்பு என்ற பொது உண்மையை யாரும் மறுக்கவில்லை.

ஆனால், இவ்வளவு காலமாக ஒன்றாக வாழ்ந்தும், கலந்திருந்தும் கூட ஒரு கூட்டத்தினர் இன்னமும் தங்கள் மொழி, நடை, உடை பாவனை ஆகியவைகளை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியும் உயர்வு என்று கூறியும் வருவதைக் காண்கிறோம். இந்தப் போக்கைக் கொண்டுதான் ஆரியர், திராவிடர் என்று கூறுகிறோம். வாழ்க்கை முறை மனப்பான்மை இவைகளையே முக்கியமாக கவனிக்கிறோம்.

ஜப்பான் நாட்டவனொருவன் மக்கள் பிறவியில் பேதம் கிடையாது என்று கூறி அத்தகைய பேதம் இருக்கும் முறைகளை மறுப்பானானால் அவனையும் திராவிடன் என்று நான் கொள்வேன் என்று பெரியார் சென்ற கிழமை குமரிமுனையருகே நாகர் கோயிலில் கூறி இருக்கிறார் என்பதை நண்பருக்குக் கவனப்படுத்துகிறேன்.

சுருக்கமாகவும் சூட்சமத்தைக் காட்டும் முறையிலும் கூறுவதானால் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிப்பவர் ஆரியர். வர்ணாஸ்ரம தர்மம் கூடாது சமத்துவமே நிலவவேண்டும் என்பவர்கள் திராவிடர் சுயதர்மம் கோருவோர் ஆரியர். சமதர்மம் கோருவோர் திராவிடர். திராவிடர் ஒரு குறிச்சொல். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை இலட்சியத்தைக் காட்டவே அதனை உபயோகிக்கிறோம்.

பழைய ஏடுகளிலே இருந்து இதற்கான ஆதாரங்கள் காட்டும் போது நாம் அந்த நாள் கலாச்சாரம் அவ்வளவையும் ஆதரிக்கிறோம் என்பதல்ல பொருள். ஆரியர் திராவிடர் என்று. தனித்தனி இனமாக இருந்த வரலாற்று உண்மையைக் காட்டவே அந்த ஏடுகளைப் பயன்படுத்துகிறோமேயன்றி அந்த ஏடுகளிலே உள்ளபடி, நாடு மீண்டும் ஆக வேண்டும் என்பதற்கல்ல.

அந்த நாள் வாளும், வேலும், ஈட்டியும், சூலமும், பறையும், பரசலும் இன்றும் நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்பதல்ல, நமது நோக்கம். ஒரு காலத்தில் ஜாதியும் அதையொட்டிய பேத முறைகளும் வர்ணாஸ்ரமமும் அதை வளர்த்துப் பலன் பெற்ற கூட்டமும் இல்லாமல், மக்கள் அனைவரும் சமம், என்ற பெரு நோக்குடன் வாழ்ந்து வந்தனர்.

இந்தப் பகுதியிலே இருந்து வந்த பெரும்பாலான மக்கள் அவர்கள் திராவிடர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கொண்டிருந்த அந்தக் கொள்கை இன்று நமக்கு வேண்டும் என்று கூறுகிறோம். இதிலே பரிகசிக்கவோ அருவருக்கவோ காரணமில்லையே!

-அண்ணா- திராவிட நாடு, 16.11.1947

தமிழ் ஓவியா said...

சமூகக் கண்ணோட்டத்தில் பார்ப்பனிய இந்துத்துவா - பொருளாதாரத்தில் கார்ப்பரேட்களின் ஆதிக்கம்!


பிஜேபியின் இப் பாசிசப் போக்கினை அம்பலப்படுத்துவோம்!

தஞ்சை - திராவிடர் கழகப் பொதுக் குழுவில் 16 தீர்மானங்கள்மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் அமைப்புகளை வலிமைப்படுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
கல்வியையும், வேலை வாய்ப்பையும் அடிப்படை உரிமையாக்குக!
வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமை மீட்கக் குரல் கொடுப்போம்!

தஞ்சாவூர், ஜூன் 13- சமுதாயத் துறையில் இந்துத் துவாவையும், பொருளாதாரத்தில் கார்ப்ப ரேட்டுகளையும் தூக்கிப் பிடிக்கும் பிஜேபி அர சினை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம், வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமை களை மீட்போம் என்பது உட்பட 16 தீர்மானங்கள் தஞ்சாவூரில்  நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

13.6.2015 சனிக்கிழமை காலை 10 மணிக்கு தஞ்சையில் (ராமசாமி திருமண மண்டபத்தில்) திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர் களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:இரங்கல் தீர்மானம் (4ஆம் பக்கம் காண்க)
தீர்மானம் 2:
இளைஞர்கள் மத்தியில்
விழிப்புணர்வு பிரச்சாரம்
திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி, மகளிரணியை மேலும் வலிமைப்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இளைஞர்கள் எண்ணிக்கை நாளும் வளர்ந்துவரும் நிலையில், இவர்கள் மத்தியில் ஏற்படும் விழிப்புணர்வும், முற்போக்குச் சிந்தனைகளும்தான் வலிமையான வளமையான நாட்டை உருவாக்கும் என்ப தாலும், இன்றைய நிலையில் பல்வேறு சீரழிவுச் சிந்தனை களின் தாக்கம் இவர்களிடம் பரவி வருவது என்பதும் யதார்த்தமாகும். இதனை வெறும் குற்றப் பத்திரிகையாகப் படிக்காமல், அவர்கள் மத்தியில் தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாறு, ஜாதீயக் கொடுமைகள், மூடத் தனத்தால் விளையும் கேடுகள், பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை யின் அவசியம் குறித்துச் சிந்திக்கச் செய்யும் செயல்பாட் டுத் திட்டங்களை வகுத்துப் பணியாற்றுவது, பயிற்சி அளிப் பது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 2 (அ):
வெளியீடுகள்
சின்னஞ்சிறு வெளியீடுகள், பகுத்தறிவுக் கண்காட்சி கள், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பல்வேறு போட்டிகள் என்கிற முறையில் இளைஞர்களின் மத்தியில் இயக்கத்தை மேலும் வலுவாகக் கொண்டு செல்லுவது என்று தீர்மானிக்கப் படுகிறது.
தீர்மானம் 2 (ஆ):
வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் கொண்டு வருக!
இளைஞர்களைப் பொறுத்தவரையில் வேலை வாய்ப்பு என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்கும் வகையில் சட்டம் கொண்டு வர மத்திய - மாநில அரசுகளை இப்பொதுக்குழு வலியுறுத் துவதோடு, கழக இளைஞரணி சார்பில் நாடு தழுவிய அளவில் ஓர் ஆர்ப்பாட்ட இயக்கத்தை முன்னெடுப்பது என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் 2 (இ):
இளைஞர்களை நல்வழிப்படுத்திட....
இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் மருந்து போதை, மது போதை, கிரிக்கெட் போதை போன்ற  சமூக விரோத அழிவு நோய்கள் பெருகிவருவது அவர்களின் நிகழ் காலத்தையும், எதிர்காலத்தையும் உறுதியாகப் பாழடிக்கும் என்பதால், அவர்கள் மத்தியில் இதமாக உண்மை நிலையை உணர்த்தும் வகையில், பல்வேறு யுக்திகளைக் கையாண்டு நல்வழிப்படுத்தும் வகையில் செயல்படுவது என்று தீர்மானிக்கப் படுகிறது. குறிப்பாக இணைய தளம் இளைஞர் களை ஈர்ப்பதில் முதலிடத்தில் இருப்பதால், இதனைப் பயன்படுத்தியும் இந்தப் பணியை மேற் கொள்வது,
வாசிப்புப் பக்கம் அவர்களைத் திருப்புவது, உடல் நல னுக்கும், மனநலனுக்கும் நல்வழிப்படுத் தும் விளையாட்டு களை ஊக்குவித்தல்; குறிப் பாக, தமிழர் மண்ணுக்குரிய வீர விளையாட் டான கபடி மற்றும் கால் பந்து போன்ற விளை யாட்டுகள் பக்கம் திருப்புவது போன்ற ஆக்க ரீதியான வழிகளை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது. பெரியார் வீர விளை யாட்டுக் கழகத்தினை இதற்குப் பயன்படுத்திக் கொள்வது என்றும் முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 2 (ஈ):
மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களிலும், விடுதிகளிலும் மாணவர் அமைப்பினை உருவாக்குவது என்றும், விடுதிகளில் இயக்க வெளி யீடுகளை விநியோ கிப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 2 (உ):
மாணவர், இளைஞர் பிரச்சினைகளை மய்யப்படுத்தி மாவட்ட அளவில் சிறப்புக் கருத் தரங்குகளை நடத்துவது என்றும் தீர்மானிக் கப்படுகிறது.
தீர்மானம் 2 (ஊ):
பெரியார் சமூகக் காப்பு அணியை உடனடி யாகப் புதுப்பித்தல், விரிவுபடுத்துதல் - அவர் களுக்கான சமூகப் பணிகளை நெறிப்படுத்துவது.
தீர்மானம் 2 (எ):
பெரியாரியல் பயிற்சி முகாம்களை அனைத்து மாவட்டங்களிலும் நடத்துவது.
தீர்மானம் 2 (ஏ):
எழுத்துப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, கணினிப் பயிற்சிகளை அளிப்பது என்கிற வகையில் இளைஞர்களை, மாணவர்களை இயக்கத்திற்குள் கொண்டுவர தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 3:
மகளிரணி, மகளிர் பாசறையைப் பலப்படுத்துதல்
மத நம்பிக்கையும், பக்தியும் பெரும்பாலும் பெண்கள் வழியாகப் புகுத்தப்படுவதால், பெண்கள் பகுத்தறிவு வழியில் முற்போக்குச் சிந்தனை உள்ளவர்களாக மாற்றப் படுவது அவசியம் என்பதால், கழகத்தின் மகளிரணி, மகளிர் பாசறை வழியாக பிரச்சாரம் செய்வதற்கு மகளிர்ப் பிரச்சாரப் படை ஒன்றை உருவாக்குவது என்று தீர்மானிக்க ப்படுகிறது. அதன் பொறுப்பாளராக, கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி இருந்து, அதற்கான திட்டங்களை வகுக்குமாறு கேட்டுக்கொள் ளப்படுகிறது. மூன்று மாதங்களில் ஓர் அறிக்கையை தலைமைக்கு அளிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தீர்மானம் 4:
சமூகநீதி
1990 ஆகஸ்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று சமூகநீதிக் காவலர் - அன்றைய பிரதமர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்களால் அறிவிக்கப்பட்டும், நீதிமன்றத் தடையால் 1992 ஆம் ஆண்டில்தான் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

உண்மை நிலை என்னவென்றால் இதுவரை அவர் களுக்கான இட ஒதுக்கீடு 7 சதவிகிதத்திற்குள்தான் முடக்கப் பட்டுள்ளது!
தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் அவர்களுக்குரிய சதவிகிதத்தினை (15+7.5 சதவிகிதம்) எட்டும் நிலை இன்னும் ஏற்படவில்லை. குறிப்பாக குரூப் ஒன்று பதவிகளில் பல துறைகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்யம் என்ற பரிதாப நிலைதான் இன்றுவரை; அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பதவிகளில் இவர்களுக்குரிய இடம் அறவே இல்லை என்று சொல்லும் அளவுக்குச் சதவிகிதம் குடை சாய்ந்து விழுந்து கிடக்கிறது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிரீமிலேயர் என்ற தந்திர அளவுகோல் புகுத்தப்பட்டுள்ளதால் தகுதியுள்ளவர்கள் வெளியேற்றப்படும் சூழ்நிலையில், அந்தக் காலி இடங் களையும் பொதுப் போட்டியில் பெரும்பாலும் உயர்ஜாதிக் காரர்கள் கபளீகரம் செய்துகொண்டு விடுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

இட ஒதுக்கீட்டில் தொடக்கம்முதல் உயர்ஜாதி - அதி கார வர்க்கம், நீதித்துறை பல்வேறு முட்டுக்கட்டைகளையும், புதிய நிபந்தனைகளையும் புகுத்தி, சமூகநீதித் தத்துவத்தின் ஆணிவேரையே நசுக்கும் நயவஞ்சக வேலைகளில் ஈடுபட்டு வருகிறது; சட்டம் இருந்தும், அதன்படி அனு பவிக்கும் நிலை மறுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டோரி டமிருந்தும், பிற்படுத்தப்பட்டோரிடமிருந்தும் வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்பட்டு வருகின்றன.

தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் எந்தெந்த வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்; அவர் களுக்குரிய இடங்கள் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டு உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யும் குழு ஒன்றை நியமித்து அறிக்கை பெற்று, அதனடிப்படையில் முழுமை யான அளவுக்கு சட்டப்படி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்களை உறுதி செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலை வாய்ப்பில் பணிகள், கல்வியில் மாணவர்கள் சேர்க்கையில் தவறு செய்யும் அதிகாரிகள்மீது சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் தலைமையில் அமைந்த நாடாளுமன்றக் குழு அளித்த பரிந்துரைப்படி தண்டனை அளிக்க முன்வரவேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

இட ஒதுக்கீட்டில் ஏழையாக உள்ள உயர்ஜாதிக்காரர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு கூப்பாடு உரத்த முறையில் ஒலிக்கப்படுகிறது. கல்வியில் பல தலைமுறை களாக உயர்ந்த அவர்களின் ஏழ்மையைப் போக்கும் வகையில் பொருளாதார உதவிகளைத் தாராளமாக செய்யலாம் என்ற கருத்தில் சமூகநீதியாளர்களுக்கு மாறுபாடு இல்லை என்பதை இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் 5:
தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு தேவை!
அரசுத் துறைகளும், பொதுத் துறைகளும் சுருங்கி, தனியார்த் துறைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தலைதூக்கும் நிலையில், தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்பதுதான் உண்மையான சமூகநீதிக் குரலாக இருக்கவும் முடியும். தனியார்த் துறைகளில் ஆட்களைப் பணியமர்த்தும் இடத்தில் உள்ள இயக்குநர்களில் 92.6 சதவிகிதம் உயர்ஜாதியினரே இருப்பதால், (Economic and Political Weekly -
11.8.2012) இருப்பதால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புக் கிட்டுவது குதிரைக் கொம்பே! இந்நிலையில், தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு கிடைத்திட சட்டத் திருத்தம் கொண்டுவரு மாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6:
தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் ஆணையம் அமைக்கக் கோருதல்
இந்திய அரசமைப்புச் சட்டம் 339 இன்படி தாழ்த்தப் பட்டவர்களுக்கும், 340-இன்படி பிற்படுத்தப்பட்டவர்களுக் கும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை Commission (ஆணை யம்) அமைக்கப்பட்டு, அவற்றிடமிருந்து பரிந்துரைகள் பெறப்பட்டு, அவற்றைச் செயல்படுத்தவேண்டும். பல பத்தாண்டுகள் கழிந்த பிறகும் மீண்டும் தாழ்த்தப்பட்டவர் களுக்கும், பிற்படுத் தப்பட்டவர்களுக்கும் ஆணையம்  அமைக்கப்படவில்லை.

இந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்கள் பகுதியினருக்கு மேலும் பல வாய்ப்புகளும், உரிமைகளும் கிடைக்கப் பெறவேண்டிய நிலையில், தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் தனித்தனியே தக்கவர்களின் தலைமையில் ஆணையங்கள் அமைக்கப்படவேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
மாநில அரசுகளும் இப்பிரச்சினையில் மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 7:
பி.ஜே.பி.யின் கொள்கைகள் - செயல்பாடுகள்!
மத்தியில் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கொள்கை என்பது

தமிழ் ஓவியா said...

1. பார்ப்பனீய இந்துக் கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடித்து, இந்தியாவை இந்து நாடாகவே ஆக்குவது.
2. கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கைப்பாவையாகச் செயல்படுவது என்கிற தண்டவாளத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைப் பேச்சுகள் - வன்முறை செயல்கள், சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம், இந்து மதத்தின் புனித நதி என்று கூறி கங்கையை சுத்தப்படுத் தும் திட்டம்; 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் குலத்தொழிலை செய்யலாம் - அது குழந்தைத் தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் வராது என்கிற குலக்கல்வித் திட்டம் புதுப்பிப்பு, கீதையை பாடத் திட்டத்தில் சேர்ப்பது, கீதையைப் புனித நூலாக அறிவிப்போம் என்று கூறுவது, மாட்டுக்கறிக்குத் தடை என்பது,
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச்சார்பின்மை Secular) சோசலிஸ்ட் (Socialist)ஆகிய அதி முக்கியமான கொள்கைச் சாசன சொற்களை அகற்றிவிட்டு, குடியரசு நாள் விளம்பரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது உள்ளிட்ட பார்ப்பனீய இந்துக் கலாச்சாரத்தை மத்திய அரசு தூக்கி நிறுத்துவது-
அரசமைப்புச் சட்டத்துக்கும், மக்கள் நல்லிணக்கத் திற்கும் எதிரானது என்பதை இப்பொதுக்குழு ஆணித்தர மாக சுட்டிக்காட்டுகிறது. பொருளாதாரத் துறையிலோ பகிரங்கமான முதலாளித்துவ முறையில் கார்ப்பரேட் நிறு வனங்களின் கைப்பாவையாகச் செயல்பட்டே வருகிறது.

நிலம் கையகப்படுத்துதல் என்ற முறையில் விவசாயி களின் நிலங்களைக் கிட்டத்தட்ட சட்ட வன்முறைமூலம் பறித்து, விவசாயத் தொழிலையே நசுக்குவது, விவசாயிகள் கடனுக்கான வட்டியை உயர்த்தி விவசாயிகள் தற்கொலைக் குத் தள்ளப்படும் நிலைக்கு ஆளாக்குவது - அதேநேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகையை வாரி வழங்குவது-

நூறு தொழிலாளர்களுக்குள் பணியாற்றும் தொழிற் சாலைகளை இழுத்து மூடுவதற்கு அரசு அனுமதி தேவை யில்லை என்பதை மாற்றி, 1000 தொழிலாளர்கள்வரை பணியாற்றும் தொழிற்சாலைகளை இழுத்து மூடிட அரசின் அனுமதி தேவையில்லை என்பது, சிறு தொழில்கள் என்ற பட்டியலிலிருந்து ஊறுகாய் செய்தல், ஊதுபத்தி செய்தல், மெழுகுவத்தி செய்தல், தீப்பெட்டி செய்தல் போன்றவற்றை நீக்கியும், சில்லறை வியாபாரத்தில்கூட அந்நிய முதலாளி களை இறக்குமதி செய்வதும், பச்சையான தொழிலாளர் விரோதப் போக்கும், அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட சோசலிசம் என்பதைத் தூக்கி எறிவதுமான அசல் பிற்போக்குத்தனம் என்பது மிகவும் வெளிச்சமான உண்மையாகும். மோட்டார் வாகன திருத்தச் சட்டம் (2015) என்ற பெயரில் போக்குவரத்துத் தொழிலை நம்பி வாழும் கோடிக்கணக்கான ஓட்டுநர்கள், வாகனம் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
சமுதாயத் துறையில் பார்ப்பனீய இந்துத்துவ அணுகு முறை, பொருளாதாரத் துறையில் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கே கைலாகு கொடுக்கும் முதலாளித்துவ அணுகு முறை இரண்டுமே பிற்போக்குத்தனமும், நாட்டை நலிவு படுத்தக் கூடியவை என்பதை இப்பொதுக்குழு நாட்டு மக்களுக்கு அடையாளப்படுத்துகிறது.

தமிழ் ஓவியா said...

இந்தப் பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சிக்கோ, பி.ஜே.பி.,க்கோ நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தேர்தலிலோ மற்ற மற்ற நேரங்களிலோ ஆதரவுக்கரம் நீட்டும் எந்தக் கட்சியும், அமைப்பும், தலைவர்களும், ஊடகங்களும் வெகுமக்களுக்கு எதிரான பிற்போக்குச் சக்திகளே என்பதையும் இப்பொதுக்குழு அம்பலப்படுத்து கிறது. இணையதளம் போன்ற வசீகரப் பிரச்சார மயக்கத்தில் வீழ்ந்த விட்டில் பூச்சிகளாக பலர் செயல்பட்ட காரணத் தால், மத்தியில் மதவாதப் பிற்போக்கு ஆட்சி என்ற மிகப்பெரிய விலையை நாடு கொடுக்க நேர்ந்தது என் பதைச் சுட்டிக்காட்டி, வெகுமக்கள் எழுச்சியின் மூலமா கவே இவற்றைத் தடுத்து நிறுத்த முடியும் என்பதால், குறிப் பாக இளைஞர்கள் அதற்கான பிரச்சாரம், களப்பணி உள் ளிட்ட அத்தனை முயற்சிகளிலும் ஈடுபடவேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துவதுடன், திராவிடர் கழகம் என்ற சமூகப் புரட்சி இயக்கம் இதில் தக்க முறையில் சட்டத் திற்குட்பட்ட முறைகளில் வழிகாட்டும் என்றும் இப்பொதுக் குழு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 8:
கல்வித் திட்டம்
தற்போது நமது கல்வித் திட்டம் என்பது வெறும் மனப்பாட முறையாக இருந்து வருகிறது. மாணவர்களின் சுயசிந்தனையையும், படைப்பாற்றலையும், முனைப்பாகச் செயல்படும் உணர்வையும், சாதனை படைக்கவேண்டும் என்ற வெறியையும் ஊட்டக்கூடிய வகையில் திருத்தி அமைக்கப்படவேண்டும். தொழிற்சாலைகளுக்கும், கல்விக் கூடங்களுக்குமி டையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, படிக்கும்பொழுதே நவீன தொழில்நுட்பங்களை அறிய உதவும் கல்வியாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

கல்வியையும், வேலை வாய்ப்பையும் அடிப்படை உரிமையாக்கி +2 வரை இலவசக் கல்வியாக்கப்பட்டு மேற் படிப்பில் ஏழை - எளிய மக்களுக்கு இலவசக் கல்வி கட்டாயமாக்கும் திட்டத்தை வகுக்கவேண்டும் என்று மத் திய - மாநில அரசுகளை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

17:35:25
இந்துத்துவா கல்வி
கடந்த 8.6.2015 அன்று டில்லியில் இந்துக் கல்வி ஆணை யம் என்ற அரசுக்குத் தொடர்பு இல்லாத மதக்கல்வி அமைப்பு நடத்திய கருத்தரங்கில் கல்வியில் ஆன்மிகத்தை யும், இந்துக் கலாச்சாரத்தையும் புகட்டவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் கிருஷ்ணகோபால் என்பவரால் கூறப்பட்ட கருத்தினை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜயந்த சின்கா, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு ஆகியோர் அந்நிகழ்ச்சி யில் பங்குகொண்டு ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளரின் கருத்தை வரவேற்பதாகக் கூறியிருப்பதானது, இந்தியாவின் மதச்சார்பின்மையைத் தகர்த்து, ஆர்.எஸ்.எஸின் இந்து ராஷ்டிரம் கொள்கையைக் கல்விமூலம் திணிக்கும் சூழ்ச்சி என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது. இந்த முயற்சி மேற்காள்ளப்படுமேயானால், மிகப்பெரிய மக்கள் எழுச்சி வெடிக்கும் என்பதை இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.
விஞ்ஞான மனப்பான்மையையும், செயல்திறனையும் ஊக்குவிக்கும் கல்வி முறையே இன்றைய தேவை என்பதையும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 10:
சென்னை அய்.அய்.டி.யின் பார்ப்பனீய -இந்துத்துவா போக்கு!
சென்னை அய்.அய்.டி.யில் வியாசர் பெயரிலும், துர் வாசர் பெயரிலும், விவேகானந்தர் பெயரிலும், இராமாய ணம் பெயரிலும், அரே கிருஷ்ணா அரே ராமா என்ற பெயராலும் மாணவர்கள் அமைப்பு இயங்கி வருவதை அனுமதித்த அய்.அய்.டி. நிருவாகம் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் என்ற அமைப்பைத் தடை செய்தது கண்டிக்கத்தக்கதாகும்.

சமூகநீதி, மதச்சார்பின்மை இவற்றை உள்ளடக்கிய கருத்தரங்குகளை நடத்தியதானது - பார்ப்பனர் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கும் அந்த நிறுவனத்தின் கண்களை உறுத்திய காரணத்தால், மொட்டைக் கடுதாசியை ஆதாரமாகக் கொண்டு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையும், சென்னை அய்.அய்.டி.யும், அம்பேத்கர் - பெரியார் பெயரால் இயங்கி வந்த அமைப்பைத் தடை செய்தது பச்சையாக - கருத்துரிமைக்கும், முற்போக்குச் சிந்தனைகளுக்கும், சமூகநீதிக்கும் எதிராக ஏவப்பட்ட ஜனநாயக விரோதமான நடவடிக்கை என்பதில் எவ்வித அய்யப்பாடும் இல்லை.

தமிழ் ஓவியா said...

மாணவர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.25,000 அரசு பணம் செலவழிக்கப்படும் இந்த உயர்கல்வி நிறுவனத்தில் மாணவர்களும், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களும் 90 சதவிகிதத்துக்குமேல் பார்ப்பன மயமாகக் கொழுத்துக் காணப்படுவது - சகிக்கவே முடியாத சமூகநீதிக்கு எதிரான ஒன்றேயாகும்.

அம்பேத்கர் - பெரியார் பெயரில் இயங்கி வந்த மாணவர் அமைப்பின்மீதான தடையைத் தொடர்ந்து கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில், அனைத்துத் தரப்பினரும் போராட்ட நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டதின் காரணமாக, வேறு வழியின்றி சென்னை அய்.அய்.டி. நிருவாகம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அம்பேத்கர் - பெரியார் அமைப்புமீதான தடையை விலக்கிக்கொண்டது, ஒரு தற்காலிக வெற்றியாகவே இப்பொதுக்குழு கருதுகிறது.

அய்.அய்.டி.யில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்துத் தரப்பினருக்கும் மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம் அனைத்திலும் கிடைக்கும்வரை நமது போராட்டம் தொடரும் என்றும், அம்பேத்கர் - பெரியார் பெயரிலான வாசகர் வட்டம் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மட்டுமல்லாமல், அனைத்துத் துறை களிலும் உருவாக்கும் அரும் பணியில் திராவிடர் கழகம் தொடர்ந்து ஈடுபடும் என்பதை இப்பொதுக்குழு தெரிவித் துக் கொள்கிறது. கழக மாணவரணி, இளைஞரணியினர் இதில் முக்கிய பங்கு வகிக்குமாறு பணிக்கப்படுகிறார்கள்.

தீர்மானம் 11:
சட்டம் ஒழுங்குப்  பிரச்சினை!
தமிழ்நாட்டில் நாள்தோறும் கொலைகள், கொள்ளைகள், திருட்டு, கவுரவக் கொலைகள் என்பது சர்வ சாதாரணமாக அன்றாடம் பொதுமக்களை மிரட்டிக் கொண்டுள்ளது; வேறு எந்தக் காலகட்டத்திலும் இந்த அளவு சட்டம் ஒழுங்குக் கெட்டுப் போய்விட்டது என்று சொல்ல முடியாத அளவுக்கு நிலைமைகள் முற்றிலும் மோசமாகிவிட்டன; பொதுமக்கள் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று நினைக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துவிட்டது. முதலமைச்சரின் பொறுப்பில் உள்ள ஒரு துறை இந்த அளவுக்குப் பலகீனமானது வருந்தத்தக்கது.
முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, சட்டம் ஒழுங்கைச் சரிவர பராமரிக்குமாறு இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 12:
திராவிடர் கழகப் பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை நீக்கப்படவேண்டும்
திராவிடர் கழகம் என்ற சமுதாயப் புரட்சி இயக்கம் மக்கள் மத்தியில் பகுத்தறிவு, சமூகநீதி, ஜாதி -ஒழிப்பு,-பெண்ணுரிமை, சமதர்மம், சமத்துவம்பற்றி மக்களிடத்திலே மாறுதலை ஏற்படுத்த - பிரச்சாரத்தை முக்கிய அணுகு முறையாகக் கருதக்கூடிய இயக்கமாகும். தந்தை பெரியார் அவர்கள் வகுத்துக் கொடுத்த இந்த நெறிமுறைப்படி செயல் பட்டுவரும் அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள பீடிகையின் அடிப்படை உரிமைகளை, அடிப்படைக் கடமைகளை நாளும் பிரச்சாரம் செய்யும் அமைப்பு திராவிடர் கழகம்.

அதன் பிரச்சாரக் கூட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், பல வகைகளில் காவல்துறை அனுமதி மறுப்பு என்பதை ஓர் அன்றாட அணுகுமுறையாகக் கொண் டிருப்பது கண்டிக்கத்தக்கதும், கருத்துரிமைப் பரப்பும் அடிப்படை உரிமைக்கு எதிரானதுமாகும். நீதிமன்றம் சென்றுதான் ஒவ்வொரு முறையும் அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை நடத்துவது என்பது நடைமுறை சாத்திய மில்லாததாகும். தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு, கழகத்தின் பிரச்சார நிகழ்ச்சிகளுக்குத் தங்குத் தடையற்ற வகையில் பிரச்சாரம் செய்வதற்கான அனுமதியை அளிக்க வழி செய்யவேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இல்லை எனில், இதில் நிரந்தரத் தீர்வுக்கு நீதிமன்றம் வாயிலாகப் பரிகாரம் தேடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 13:
கச்சத்தீவை மீட்கவேண்டும்!
ஈழத் தமிழர்கள் பிரச்சினையானாலும் சரி, தமிழக மீனவர்கள் பிரச்சினையானாலும் சரி, மத்தியில் உள்ள பி.ஜே.பி. தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசில் எந்தவித முன்னேற்றமும் எட்டப்படவில்லை; வெறும் வார்த்தை ஜாலங்கள்தான் கண்டது மிச்சமாக உள்ளது என்பதை மிகுந்த வேதனையுடன் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

ஈழத் தமிழர்கள் எல்லா வகைகளிலும் தன்னுரிமையுடன் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு, சுயமரியா தைக்குப் பங்கமில்லாத வாழ்க்கையை நடத்திட உத்தர வாதம் ஏற்பட மத்திய அரசு உள்ளப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்குக் கச்சத்தீவு மீட்பே நிரந்தரப் பரிகாரம் என்பதால், அதனை மீட்பதற்கான முயற் சியை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் 14 (அ):
தமிழக நலனுக்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு போராடவேண்டும்
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், நடுவர் மன்றம் தீர்ப்பு அளித்தும்கூட காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட் டுக்குரிய தண்ணீரை கருநாடக அரசு தமிழ்நாட்டுக்குத் தர மறுக்கிறது. நடுவர் மன்றம் ஆணையிட்டும் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வராதது பெரிதும் கண்டிக்கத்தக்கதாகும்.

குதிரை கீழே தள்ளியதோடு குழியும் பறித்த கதையாக, காவிரியின் குறுக்கே கருநாடகப் பகுதிகளில் அணை களைக் கட்ட முடிவு செய்துள்ளது. இதைப்பற்றியெல்லாம் மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு கண்டுகொள்வது கிடையாது.
காவிரியில் வஞ்சித்தது போதாது என்று மேலும் தென்பெண்ணை ஆற்றையும் தடுத்து மாலூர் மாவட்டத் திற்குத் திருப்பிவிடும் திட்டத்தையும் தொடங்கியுள்ளது.

தமிழ் ஓவியா said...

இதுபோலவே முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவே கேரள அரசு செயல்பட்டு வருகிறது.
கேரள அரசு முல்லைப் பெரியாறுக்குக் குறுக்கே அணைகட்ட முயற்சிப்பதும், அதற்கு முதற்கட்டமாக ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதாகும்.

பாலாற்றுப் பிரச்சினையிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப் படுகிறது. தமிழ்நாடு அரசு அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசைத் தட்டிக் கேட்கத் தயங்கும் நிலையால் - தமிழ்நாடு மேலும் மேலும் வஞ்சிக்கப்படும் நிலைக்குத்தான் ஆளாகும் நிலை; தமிழ்நாடே பாலைவனமாக ஆக்கப்படும் இந்தக் கொடுமையிலிருந்து மீள அனைத்துக் கட்சிகளும் ஒன்று பட்டுப் போராட இப்பொதுக்குழு அழைப்பு விடுக்கிறது.

தீர்மானம் 14(ஆ):
நதிகள் தேசியமாக்கப்படவேண்டும்
இதற்கு நிரந்தரத் தீர்வு - நதிகள் இணைப்பு - நதிகளை தேசிய மயமாக்குவதே ஆகும். முதற்கட்டமாக தென்னக நதிகள் இணைப்பை - உலக வங்கி போன்ற அமைப்புகளின் நிதி உதவியோடு தொடங்க மத்திய அரசு முன்வரவேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 15:

தமிழ் ஓவியா said...

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்
தமிழர்களின் நீண்ட கால கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை - ராமன் பாலம் என்ற மதவாத நம்பிக்கையைக் கொண்டுவந்து திணித்து தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களுக்கான வேலை வாய்ப்பு, பொருளாதாரச் செழிப்புக்குத் தடை விதிப்பதை இப் பொதுக்குழு கண்டிக்கிறது. இதற்கு மேலும் காலதாமதம் செய்யாமல், அத்திட்டத்தை விரைந்து முடிக்குமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசும் இதில் முக்கியக் கவனம் செலுத்தித் திட்டத்தைச் செயல்படுத்திட ஆவன செய்யுமாறு இப்பொதுக்குழு தமிழ்நாடு அரசை வற்புறுத்துகிறது.

தீர்மானம் 16:
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் சி.பி.அய். தோழர் மகேந்திரனுக்கு ஆதரவு
சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் அவர்களுக்கு திராவிடர் கழகம் ஆதரவு அளிப்பதாக இப்பொதுக்குழு தீர்மானிக்கப்படுகிறது.

மதச் சார்பின்மை உள்ளிட்ட பல்வேறு முக்கியமான கொள்கை சார்ந்த பிரச்சினைகளில் இடதுசாரிகள் நம்மோடு நெருக்கமாக இருக்கும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர் சி.மகேந்திரன் அவர்களை ஆதரிப்பது என்பதை அறிவிக்கிறோம்.தமிழ் ஓவியா said...

தீர்மானம் 1:
இரங்கல் தீர்மானம்
திராவிட இயக்கப் பிரபல பாடகர் இசைமுரசு நாகூர் அனீபா (வயது 90, மறைவு 8.4.2015), மறைந்த சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் துணைவியாரும், அ.இ.அ.தி.மு.க. அமைப்புச் செயலாளருமான சுலோச்சனா சம்பத் (வயது 87, மறைவு 7.6.2015), பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் (வயது 81, மறைவு 8.4.2015), தி.மு.க. விவசாய அணி செயலாளர் எடமேலையூர் அழகு.திருநாவுக்கரசு (வயது 67, மறைவு 15.5.2015), சுதந்திர போராட்ட வீரர் - பொதுவுடைமைவாதி மாயாண்டி பாரதி (வயது 98, மறைவு 25.2.2015), தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிறுவனர் ஆசிரியர் மஜீத் (மறைவு 5.4.2015), தமிழ்நாடு காங்கிரஸ் முன்னணி தலைவர்களுள் ஒருவராக இருந்த தி.சு.கிள்ளிவளவன் (வயது 90, மறைவு 13.3.2015), பேராசிரியர் முனைவர் இளவரசு (வயது 76, மறைவு 22.1.2015), கீழக்கரை கல்வி வள்ளல் பி.எஸ்.அப்துல் ரகுமான் (வயது 88, மறைவு 7.1.2015), தஞ்சை யோகி இராசமாணிக்கம் (வயது 76, மறைவு 4.12.2014), ஆனந்தவிகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியம் (19.12.2014), சுயமரியாதை இயக்க எழுத்தாளர் கைவல்யம் பேரன் திவாகர் கைவல்யம் (வயது 73, மறைவு 2.4.2015) ஆகியோரின் மறைவிற்கு திராவிடர் கழகப் பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறது.

திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினரும், மறைந்த டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் அவர் களின் இணையரும், கொள்கை வீராங்கனையு மாகிய ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் (வயது 81, மறைவு 19.12.2014),
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் வேல்.சோமசுந்தரம் (வயது 91, மறைவு 15.5.2015), திராவிடர் தொழிலாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் திண்டுக்கல் ஆ. நாகலிங்கம் (வயது 69, மறைவு 7.4.2015), திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ப.சங்கர நாராயணன் (வயது 76, மறைவு 17.5.2015), நெல்லை மண்டல திராவிடர் கழகத் தலைவர் பொறியாளர் சி.மனோகரன் (வயது 65, மறைவு 9.1.2015), கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் - காவேரிப்பட்டணம் மு.தியாகராசன் (வயது 70, மறைவு 1.2.2015), மேட்டூர் மாவட்ட திராவிடர் கழக முன்னாள் மாவட்டத் தலைவர் இராமகிருஷ்ணன் (25.3.2015), சட்ட எரிப்புப் போராட்ட வீரர்கள் கீழ்வேளூர் அகரக்கடம்பனூர் ப.திருவேங்கடம் (வயது 85, மறைவு 19.2.2015), புதுச்சேரி பெரியார் பெருந்தொண்டர் மா.பலராமன் (மறைவு 25.2.2015), மயிலாடுதுறை கொக்கூர் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் குஞ்சிதபாதம் (வயது 91, மறைவு 11.4.2015), சிதம்பரம் வட்டம் வல்லம் படுகை பெரியார் பெருந்தொண்டர் பட்டுசாமி (வயது 78, மறைவு 3.6.2015), விழுப்புரம் மாவட்டம் சவுந்தர வல்லிப்பாளையம் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பெ.கண்ணாயிரம் (19.12.2014), சென்னை பெரம்பூர் பெரியார் பெருந்தொண்டர் நாத்திக சின்னசாமி (வயது 76, மறைவு 31.12.2014), துறையூர் நகர திராவிடர் கழகத் தலைவர் வி.கே.என். இளங்கோவன் (மறைவு 4.1.2015), அரியலூர் ஆசிரியர் சுவை மருதவாணன் (8.12.2014), கும்பகோணம் ஒன்றிய கழக முன்னாள் தலைவர் நாச்சியார் கோவில் வீரமணி (வயது 60, மறைவு 17.12.2014),

அறந்தாங்கி - பாத்தம்பட்டி கழக அமைப்பாளர் வே.சங்கர் (வயது 45, மறைவு 17.12.2014), கரூர் பெரியார் நகர் பெரியார் பெருந்தொண்டர் கருப்பண்ணன் (வயது 80, மறைவு 27.12.2014), ஜோலார்ப்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் ஜே.எம்.பெருமாள் (வயது 87, மறைவு 4.2.2015), தேனி மாவட்டம் பெரியகுளம் கழக செயலாளர் மு.ரெங்கன் (வயது 83, மறைவு 14.2.2015), பெரியார் பெருந்தொண்டர் தேவகோட்டை (பள்ளத்தூர்) சிவசுப்பிர மணியம் (வயது 92, மறைவு 4.3.2015), கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் தி.சுரேஷ்பாபு (வயது 48, மறைவு 18.3.2015), பெங்களூர் பெரியார் பெருந்தொண்டர் கழக முன்னாள் செயலாளர் மா.செயராமன் (வயது 93, மறைவு 15.4.2015), கரூர் - தான்தோன்றிமலை ஒன்றிய கழக அமைப்பாளர் டி.எம்.முருகேசன் (வயது 77, மறைவு 22.4.2015), கரூர் மாவட்டம் கட்டிப்பாளையம் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் ஆ.சங்கரன் (வயது 83), எடப்பாடி பெரியார் பெருந்தொண்டர் கழக நகர அமைப்பாளர் இராமன் (வயது 78, மறைவு 20.5.2015), பெரியார் பெருந்தொண்டர் பெரியதுரை (25.3.2015) ஆகிய கழகச் செயல் வீரர்களின் மறைவிற்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் அளப்பரிய இயக்கப் பொதுத்தொண்டுக்கு வீரவணக்கத்தைச் செலுத்திக் கொள்கிறது. ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், பொறியாளர் சி.மனோகரன், வடலூர் புலவர் இராவணன் அவர்களின் இணையர் சுப்புலட்சுமி ஆகியோர் உடற்கொடை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 13-06-2015

தமிழ் ஓவியா said...

மழைக்கு சிறப்பு பூஜை ஆணையிட்ட அதிகாரி மீது வழக்கு தொடுக்கப்படும்


தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத்துறை - காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதற்காக சிறப்பு பூஜைகளை நடத்துமாறு அத்துறையைச் சார்ந்த அனைத்து செயற்பொறியாளர்களுக்கும் ஆணை பிறப்பித்துள்ளது.

1. பொறியியல் படித்தவர்கள் அறிவியலுக்கு மாறான - அவர்கள் படித்த படிப்புக்கு முரணான வகையில் இப்படி ஓர் சுற்றறிக்கையை ஆணையாக வெளியிட்டு இருப்பது மிக கேலிக்குரியது என்பதில் சந்தேகம் இல்லை.

யாகம் செய்தால் மழை பொழிந்து விடுமா? மழை எப்படி பொழிகிறது என்பதை இரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களைக் கேட்டாலே எளிதில் தெரிந்து விடுமே! பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்குத் தெரியவில்லையா? படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று தந்தை பெரியார் கூறியது சரியாகி விட்டதே!

அதிகாரிகளா அழுக்கு மூட்டைகளா இவர்கள்?

2) இரண்டாவதாக அரசு அலுவலர்கள் - இந்தியா மதச் சார்பற்ற நாடு (Secular State) என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? கோயில்களில் சிறப்புப் பூஜைகள், யாகங்கள் நடத்தினால் மழை பொழிந்து தீர்த்து விடுமா?

மக்களுக்குத் தேவை என்பது கடவுள்களுக்குத் தெரியாதா? பூஜை செய்தால்தான் கடவுள் மனம் திறப்பாரா? அப்படி என்றால் கடவுள் மனம் கல்லா? கருணையே உருவானவன் கடவுள் என்பது எல்லாம்  புனை சுருட்டுதானா?

வருண பகவானுக்காக யாகம் நடத்தினால் மழை பொழியும் என்பது இந்து மதத்தின் ஏற்பாடு; யாகம் மூலம் பார்ப்பனப் புரோகிதர்களுக்கு நல்ல வருவாய்க்கிட்டும் அல்லவா! மக்களின் மூடத்தனம்தானே அவர்களுக்கு முதலீடு.
1992இல் மதுரா நகரில் 86 வயதான முதியவர் ஒருவர் யாகம் நடத்தி மழையை வரவழைக்கிறேன் என்று சவால் விட்டார். அந்தச் சமயத்தில் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அதனைக் கண்காணித்தனர். ஒரு சொட்டு மழைகூட பெய்யவில்லை என்பதை டில்லியிலிருந்து வெளிவந்த நேச்சர் (ழிணீக்ஷீமீ) என்ற இதழில் கே.எஸ். ஜெயராமன் கட்டுரை ஒன்றை எழுதியதை இந்த இடத்தில் நினைவூட்டுவது பொருத்தமானதாகும்.

3) அரசு என்பது மதச் சார்பற்றது - அது எந்த மதச் சடங்கோடும் தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளக்கூடாது.

உச்சநீதிமன்றத்தில் பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட ஓர் அமர்வு வழங்கிய தீர்ப்பு மிகவும் முக்கியமானது. எந்த ஒரு மாநில அரசும், மதச் சார்பின்மைக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருப்பதோ, மதச் சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதோ அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. அத்தகைய மாநில ஆட்சிகளை அரசமைப்புச் சட்டத்தில் 356ஆவது பிரிவின்கீழ் கலைக்க குடியரசு தலைவருக்கு உரிமை உண்டு என்று 1994 மார்ச்சில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பில் கூறியுள்ளது. எங்களுடைய இந்தக் கருத்துகளை சிலர் ஜீரணிக்க முடியாமல் போகலாம். அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மதச் சார்பின்மைக்கு விரோதமாக நடப்பது எவ்வளவுப் பெரிய குற்றம் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

மழை பொழிவதற்கு இந்து மதத்தின்படி பூஜை நடத்த சொல்லி ஆணை பிறப்பித்த அதிகாரிகள்மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இந்த சுற்றி அறிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; இல்லையெனில் இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை திராவிடர் கழகம் தொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

4) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51கி(லீ) என்ற பிரிவு என்ன கூறுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ பிரிவில் ஒவ்வொரு குடிமகனும் கடைப்பிடிக்க வேண்டிய பத்து அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)  சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அதில் எட்டாவது கடமையில் - 51ஏ(எச்) அறிவியல் உணர்வையும், மனிதநேயத்தையும், சீர்திருத்தத்தையும் ஆய்வு மனப்பான்மையையும் போற்றி வளர்க்க வேண்டும். To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reforms 51A(h),  என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.  அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள இந்த விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமானது - மழைக்காக சிறப்புப் பூஜை நடத்துவது, யாகம் நடத்துவது என்பது வெளிப்படை; இந்த வகையிலும் தமிழ்நாடு அரசு, அதன் நீர்வளத்துறை சட்டத்தை மீறி இருக்கிறது. தமிழ்நாடு அரசு இதற்குரிய விளக்கங்களை அளிக்க வேண்டும்; தவறு செய்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். இல்லையெனில் அரசும் இதற்குப் பொறுப்பு ஏற்க நேரிடும். அடுத்த கட்டமாக சட்ட ரீதியான நடவடிக்கையில் விரைவில் திராவிடர் கழகம் ஈடுபடும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

அய்யாவிற்கு அய்.நா. (யுனஸ்கோ) விருது தந்த நாள் “ 27-06-1970
உலகில் எந்தத் தலைவருக்கும் கிடைக்காத ஒப்பற்ற வாசகங்களை பாராட்டுரையில் கொண்ட விருது; ஒப்பற்ற ஏற்பளிப்பு. உலகில் வேறு யாருக்கும் இந்த பெருமை கிடைத்ததில்லை. இவ்விருது 27.06.1970 அன்று மத்திய அமைச்சர் திரிகுணசென் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் பங்கேற்ற விழாவில் வழங்கப்பட்டது. தந்தை பெரியார் என்றால் பார்ப்பானைத் திட்டுவார்; கடவுள் இல்லையென்பார் என்று குறுகிய வட்டத்திற்குள் அவரை குறைத்து குறுக்கிக் காட்டும் குள்ளநரிக் கூட்டத்திற்கு இவ்விருது ஒரு பதிலடி!

ஆரிய பார்ப்பனக் கூட்டம் அய்யாவை எவ்வளவு மறைக்க முயன்றாலும் அய்யா ஆதவன்போல் அறிவு பரப்பி வெளிப்படுவார் என்பதன் அடையாளம் இவ்விருது. “

Periyar - The Prophet of the New age;
The Socrates of South East Asia;
Father of the Social reform movement;
and Arch enemy of ignorance, superstitions,
meaningless customs and base manners”.
- UNESCO (27.06.1970)

இதன் தமிழாக்கம்: பெரியார் _ புதிய உலகின் தொலைநோக்காளர்; தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி அண்ணா அவர்கள் (தமிழக முதல்வர்) அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற நிலையில் 10.10.1968இல் தந்தை பெரியாருக்கு எழுதிய கடிதத்தில், தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வகையில், இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்ததில்லை, அதுவும் நமது நாட்டில் என்று குறிப்பிட்டு பெருமைப்படுத்தினார். தந்தை பெரியார் ஒப்பாரில்லா உலகத் தலைவர் என்பதை இந்த விருது வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு, அவரைக் கொச்சைப்படுத்த, புரட்டு, திரிபுவாதங்கள், அபாண்ட குற்றச்சாட்டுகள் கூறும் குறுமதியாளர்களின், மோசடிப் பேர்வழிகளின் அயோக்கியர்களின் முகத்திரையையும் கிழித்தெறிந்தது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கூறிய மண்டைச் சுரப்பை உலகு தொழும்! என்ற வரிகளின் ஏற்பளிப்பாகவும் இது அமைந்தது! தந்தை பெரியாரின் இனிவரும் உலகம் என்ற நூல் அவர் ஓர் தொலைநோக்காளர் என்பதை உறுதிசெய்தது.

அதையும் இவ்விருது ஏற்பளிப்புச் செய்தது! வாழ்க பெரியார் பெருமை!

குறிப்பு: இந்த விருது பற்றி, தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், ஒரு நாளைக்கு ஒரு வரியை எடுத்துக்கொண்டு நான்கு நாள்கள் ஆற்றிய உரை (23.09.2014 முதல் 26.09.2014 வரை) விரைவில் நூலாக வந்து, அய்யாவின் பெருமையின் அழியாச் சின்னமாக நிலைக்கவுள்ளது என்பதை அறிவித்து மகிழ்கிறோம்.

தமிழ் ஓவியா said...

செய்யக் கூடாதவை!
பல்வலிக்கு கற்பூரத்தை வைக்கக் கூடாது!

கற்பூரம் வேதிப் பொருள்களால் (Chemicals) ஆனது. அதைப் பல்லில் வைக்கும்போது, கன்னத்தின் உட்புறமுள்ள மென்மையான சதைப் பகுதியை அரித்துவிடும். கற்பூரம் வைக்கும்போது (பல்லில்) தற்காலிகமாக வலி நின்றதுபோல் தோன்றினாலும், அது நிரந்தரத் தீர்வு அல்ல. பல்வலிக்கு வலிக்கும் பல்லால் இரு கிராம்பை மென்று அப்படியே அவ்விடத்தில் வைத்தால் வலி நீங்கும். பின் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

நீண்ட நேரம் பல் தேய்க்கக் கூடாது

பிரஷ் கொண்டு பல் தேய்க்கும்போது அதிக நேரம் தேய்க்கக் கூடாது. அதிக பற்பசையும் உபயோகிக்கக் கூடாது. பட்டாணிக்கடலை அளவிற்குப் பற்பசை எடுத்துக் கொண்டு, பற்களில் கீழ்வரிசைப் பற்களைக் கீழிருந்து மேலும், மேல்வரிசைப் பற்களை மேலிருந்து கீழும் தேய்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியையும் இரண்டு மூன்று முறை மென்மையாய்த் தேய்த்தால் போதும் ஓரிரு நிமிடங்களில் தேய்த்து, முடித்து நன்றாகக் கொப்பளித்துத் துப்பி வாயைத் தூய்மை செய்ய வேண்டும்.

கருவேலன், வேம்பு, ஆல மரவிழுது இவற்றைக் கொண்டு பல் துலக்குவது பல்லுக்கு நன்மை பயக்கும். கிடைக்கின்றவர்கள் இவற்றைப் பயன்படுத்துவதே நலம்.

காலை எழுந்தவுடனும், இரவு படுக்கப்போகும் முன்னும் பல் துலக்குவது நலம்.

விரலால் பல் துலக்கக் கூடாது

விரலால் பல் துலக்கினால் பல்லிடுக்கில் உள்ள உணவுத் துணுக்குகள் வெளியில் வராது தங்கி, பற்களுக்கும், உடல் நலத்திற்கும் கேடு தரும். எனவே, மேற்சொன்ன குச்சிகள் அல்லது பிரஷ் கொண்டு துலக்குவதே நன்று. விரலால் துலக்கக் கூடாது.

அதிக குளிர்ச்சியோ, அதிக சூடோ பற்களில் படக் கூடாது

அதிக குளிர்ச்சியான அய்ஸ்கிரீம், அய்ஸ், குளிர்பானம், மிகச் சூடான வெந்நீர், பால், காபி போன்றவற்றைச் சாப்பிடுதல் கூடாது. அவை பற்களுக்கும் நல்லதல்ல; உடலுக்கும் நல்லதல்ல.

செங்கற்பொடி, சாம்பல் கொண்டு பல் தேய்க்கக் கூடாது

செங்கல்லைத் தூளாக்கி அல்லது சாம்பலைப் பொடித்துப் பற்களில் விரலால் தேய்ப்பர். இவை ஈறுகளைத் தேய்த்துப் பற்களையும் கெடுக்கும். பற்களின் மேலுள்ள பளபளப்பைத் தேய்த்து அழித்துவிடும். ஈறுகள் தேய்ந்து பற்கள் வலுவிழந்து போகும். எனவே, செங்கற்பொடி, சாம்பல் கொண்டு பல் துலக்கக் கூடாது.

இயற்கையாய் ஏற்படும் பல்வலிக்குப் பனிக்கட்டியை வைக்கக் கூடாது

பல்லில் அடிபட்டு வலியிருந்தால் பனிக்கட்டி வைக்கலாம்.

உப்பு கலந்த நீரை (ஒரு டம்ளர் நீரில் ஒரு டிஸ்பூன் உப்பு கலந்து) வாயில் ஊற்றிக் கொப்பளித்து வந்தால் பல்வலி நீங்கும். ஈறுகளிலுள்ள கிருமிகளும் அழியும். இதைத் தினமும் செய்தால் பல்வலி வரவே வராது.

கடும் வெய்யிலில் சென்று வந்தவுடன் குளிர்பானம் அருந்தக் கூடாது

பொதுவாகச் செயற்கைக் குளிர்பானங்கள் அருந்தக் கூடாது. காரணம், அதில் கலக்கப்படும் எப்பொருளும் உடலுக்கு நன்மை செய்வன அல்ல. மாறாகக் கேடு பயப்பன.

கடும் வெய்யிலில் செல்லும்போது நம் உடலும் நரம்புகளும் சூடேறியிருக்கும். சூடான பொருளில் திடீரென குளிர்ந்த நீர்பட்டால் உடனே அது நொறுங்கும். சூடான கண்ணாடியில் குளிர்ந்த நீர் ஊற்றினால் அது நொறுங்கிவிடும். அப்படித்தான் நம் உடல் நரம்புகளும் சூடேறி இருக்கும்போது அச்சூடு தணிவதற்குள் குளிர்ந்த பானம் குடிப்பதோ, குளிர்ந்த நீரில் குளிப்பதோ கூடாது. அவ்வாறு செய்தால் நமது நரம்புகள் பெரிதும் பாதிக்கப்படும்.

அதேபோல் உடல் சூடாகியுள்ள நிலையில் குளிர்ந்த நீர் குடிக்கவும் கூடாது. உடற்சூடு தணிந்த நிலையிலேதான் குடிக்க வேண்டும். அய்ஸ் கலந்த நீர் எவ்வகையிலும் நல்லதல்ல. குளிர்ந்த நீர் வேண்டுமானால், மண்பானையில் வைத்துக் குடிக்க வேண்டும். குளிர்ந்த மண்பானை நீரைக்கூட வெய்யிலிருந்து வந்தவுடன், உடல்சூடு தணிவதற்குள் குடிக்கக் கூடாது.

மண்பானை நீரில் வெல்லம் கலந்து பருகுவது உடல்நலத்திற்கு உகந்தது. சோற்றுக்கற்றாழையில் உள்ள சோற்றை ஏழுமுறை அலசி, சோற்றுக்கற்றாழையில் தேன் கலந்து சாப்பிடுவதும், வெந்தயத்தை ஊற வைத்து உண்பதும், பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி கீரைகள் சாப்பிடுவதும் உடல்சூடு தணிக்கும். வளமை தரும்.

தமிழ் ஓவியா said...

ஒரு பெண்ணைக் கைது செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!
இந்திய அரசியல் சாசனம் நாட்டுக் குடிமக்களுக்கு பல அடிப்படை உரிமைகளை அளித்துள்ளது. நாட்டுப் குடிமக்களுக்கு, அவர்கள் விருப்பப்படி, நாட்டு நலனுக்கு ஏற்ற முறையில், மக்களின் நன்மைகளை வலியுறுத்தும் வகையில் பல சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த உரிமை, குடிமக்களோ அல்லது அயல்நாட்டுவாசிகளோ, குற்றம் செய்தால், அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

சட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் காவல்துறை, அவர்கள் கைது செய்ய உரிமை பெற்றுள்ளது. காவல்நிலையக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, வன்முறை, சித்திரவதை நடக்க வாய்ப்பிருக்கிறது. அடிப்படை உரிமைகளின் அத்துமீறலுக்கு வழிவகுக்கிறது.

ஒரு குடிமகனைக் கைதுசெய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றிய முதல் திருப்புமுனை தீர்வு D.K.Basu Vs. State Case என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்திலிருந்து வந்தது. இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை செய்ய, காவல்துறை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைக் குறித்து உச்சநீதிமன்றம் சில குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைஅறிவித்துள்ளது.

இதனால், போலீஸ் காவலில் குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும்போது, சித்திரவதைக்கு ஆளாகாமல் தடுக்க முடியும். ஆனால், இந்தியாவில் பெண்கள் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும்பொழுது பல சூழ்நிலைகளில் அவர்கள் காவல் நிலையத்தில் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. பெண்கள் பல காவல் நிலையங்களில் பாலியல் கொடுமைகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உச்சநீதிமன்றமும், அரசியல்வாதிகளும் சேர்ந்து பெண்களின் பாதுகாப்பிற்காக பல வழிகாட்டுதல்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.


பெண்களைக் கைது செய்யும்போது காவல்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:-

1.    கைது செய்யப்பட்ட பெண்களை, ஆண் குற்றவாளிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு, தனி லாக்-_அப்பில் அடைக்கப்பட வேண்டும். தனியாக லாக்_அப் இல்லாவிட்டால், பெண்களை தனி அறைகளில் அடைக்க வேண்டும். மேலும், பெண்கள் கைது செய்யப்படும்போது, பெண் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2.    பெண்களை, சூரிய அஸ்தமனம் -_ சூரிய உதயம் இடையே அதாவது இருட்டியபிறகு, கைது செய்யக்கூடாது. ஆண் காவலர்களால் பெண்கள், பாலியல் தொல்லைகளுக்கு காவல் நிலையத்திலேயே ஆளாக்கப்பட்டதால், இந்த விதி உருவாக்கப்பட்டது.

3.    மூன்றாவதாக, பெண்களை, சிறுமிகளை காவல் நிலையத்திற்கோ, வேறு இடங்களுக்கோ விசாரணை செய்ய அழைக்கக்கூடாது. அவர்கள் வசித்துவரும் வீட்டில்தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை செய்ய வேண்டிய நேரமும், முறையும் பெண்களுக்கு கூச்சத்தை, அவமானத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.

4.    பெண் கைதிகளுக்கு, அல்லது வேறு பெண்களுக்கு மருத்துவ சோதனை செய்ய பெண் மருத்துவர்களையே அனுமதிக்க வேண்டும். பெண் அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த மருத்துவ பரிசோதனை கையாளப்பட வேண்டும். பெண் கைதிகள் குழந்தை பெற்றால், Prenatal and Postnatal Care  பராமரிப்பு அளிக்க வேண்டும்.

5.    பெண்கள் பேறுகாலத்தில் இருந்தால், அவர்களை கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமல்ல, கருவில் இருக்கும் சிசுவும் சேதமுற வாய்ப்புகள் இருப்பதால், இந்த முடிவை முடிந்த அளவிற்குத் தவிர்க்க வேண்டும். மேலும், கருத்தரித்த பெண்களை கட்டுப்படுத்தக் கூடாது.

ஓரளவு சுதந்திரம் அளிக்க வேண்டும். பெண்களையும், சிறுமிகளையும் பெண் காவலர்கள் அல்லது பெண் அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும். பெண் காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சி உண்பதில் மக்களின் உணர்வு மதிக்கப்பட வேண்டும் மத்திய உள்துறை அமைச்சர் கருத்து


 
மகாராட்டிராவில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தது குறித்து கருத்துக்கூறிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் உணவுப் பழக்க வழக்கங்களுக்குக் கட்டுப்பாடோ தடையோ விதிக்கக் கூடாது என்றார்.

மாட்டிறைச்சியை உண்ண விரும்பக் கூடியவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட வேண்டும் என்று அடாவடியான, ஆதிக்கப் போக்கிலான கருத்தைச் சொன்னவர் முக்தார் அப்பாஸ் நக்வி. இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நான் மாட்டிறைச்சியை உண்பவன் என்னைத் தடுக்க யாராலும் முடியாது என்று காட்டமாய் பதில் கூறி கண்டனம் தெரிவித்தவர்தான் கிரண் ரிஜிஜு அவர்கள்.

மதச்சார்பற்ற நாட்டில் மத நல்லிணக்கத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் ரிஜிஜு.

- தினமணி, 28.05.2015

தமிழ் ஓவியா said...

ஜூன் 16-30 தமிழ்ப் பாடலில் தமிழர் நாடுகளின் எல்லை!
தமிழ்ப் பாடலில் தமிழர் நாடுகளின் எல்லை!


சோழநாட்டு எல்லை

கடல்கிழக்குத், தெற்குக் கரைபொரு வெள்ளாறு,
குடதிசையில் கோட்டைக் கரையாம்; - வடதிசையில்
ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோணாட்டு எல்லையெனச் செப்பு.

சோழ நாட்டிற்கு எல்லையாகக் கிழக்குத் திசையில் கடலும், தெற்குத் திக்கில் நீர் நிரம்பிக் கரைகளைத் தாக்குகின்ற வெள்ளாறும், மேற்குத் திசையில் கோட்டைக் கரையும், வடக்குத் திக்கில் ஏணாட்டின் வயல்களும் உள்ளன. இவற்றிற்கு இடைப்பட்ட இருபத்து நான்கு காத தூரம் உள்ள நிலப் பரப்பே சோழநாடாகும் என்று சொல்வாயாக!

வெள்ளாறு _ புதுக்கோட்டை நகருக்கு அருகில் ஓடும் ஆறு. இதனைத் தென் வெள்ளாறு எனலாம்; குடதிசை _ மேற்குத் திசை; கோட்டைக்கரை குழித்தலைப் பகுதியாக இருக்கலாம். (திருச்சி மாவட்ட கெசட்டியர் ப.28); ஏணாடு _ நடுநாடு (திருக்கோவலூர் வட்டம்); காதம் _ பத்து மைல்கள்.

பாண்டிநாட்டு எல்லை

வெள்ளாறு அதுவடக்காம்; மேற்குப் பெருவழியாம்;
தெள்ளார் புனல்கன்னி தெற்காகும்; - உள்ளார
ஆண்ட கடல்கிழக்காம் அய்ம்பத்து அறுகாதம்
பாண்டிநாட்டு எல்லைப் பதி.

பாண்டிய நாட்டின் எல்லையாவது, வெள்ளாறு வடக்கு எல்லையாகும்; மேற்குத் திசையில் உள்ள பெருவழி (Highway) அத்திக்கில் உள்ள எல்லையாகும்; தெளிந்த நீரையுடைய குமரி ஆறு தெற்கு எல்லையாகும்; மனமார ஆட்சிக்குரிய கடல் கிழக்கு எல்லையாகும். இந்நான்கு எல்லைகளுக்கு உள்ளடக்கிய அய்ம்பத்தாறு காததூரம் உள்ள இடம் பாண்டிய நாடாகும்.

கன்னி ஆறு _ மிகப் பழங்காலத்தில் தமிழகத்தின் தென்பகுதியில் குமரிக்கண்டம் என்னும் நிலப்பரப்பு இருந்தது; அங்கே குமரிமலை என்றொரு மலை இருந்தது; அம்மலையில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய ஆற்றிற்குக் குமரி ஆறு என்று பெயர். அவ்வாறு, பாண்டிய நாட்டின் தென் எல்லையாகத் தலைச் சங்க காலத்தில் இருந்தது. கடல் கொந்தளிப்பால் அந்த நிலப்பகுதி கடலுள் மூழ்கி மறைந்தது. பிறகு இன்றைய குமரிமுனை பாண்டிய நாட்டின் தென் எல்லையாக இருந்து வருகிறது. கன்னி _ குமரி.

சேரநாட்டு எல்லை

வடக்குத் திசைபழனி; வான்கீழ் தென்காசி;
குடக்குத் திசைகோழிக் கோடாம்;- கடற்கரையின்
ஓரமோ தெற்காகும்; உள்எண் பதின்காதம்
சேரநாட்டு எல்லையெனச் செப்பு.

வடதிசையில் பழனியையும், பெருமை உடைய தென்காசியைக் கீழ்த் திசையிலும், மேற்குத் திசையில் கோழிக் கோட்டையும் (கள்ளிக்கோட்டை), தெற்கில் கடற்கரையையும் எல்லையாக உடையது சேரநாடு. அதன் பரப்பு எண்பது காத தூரமாகும் என்று கூறுக!

தொண்டைநாட்டு எல்லை

மேற்குப் பவளமலை; வேங்கட நேர்வடக்காம்;
ஆர்க்கும் உவரி அணிகிழக்கு; _ பார்க்குள்உயர்
தெற்குப் பினாகினி திகழிருப தின்காதம்
நல்தொண்டை நாடெனவே நாட்டு.

மேற்குத் திசையில் பவளமலையும், நேரே வடதிசையில் திருவேங்கட மலையும், அழகிய கிழக்குத் திசையில் ஒலிக்கின்ற கடலையும், தென்திசையில் உலகில் சிறந்த பெண்ணை ஆற்றையும் எல்லையாக உடையது சிறந்த தொண்டைநாடு. அதன் அமைப்பு இருபது காத தூரம் என்று உறுதியாகச் சொல்லுக.

வேங்கடம் _ திருப்பதி; ஆர்க்கும் _ ஒலிக்கும்; உவரி _ கடல்; பார் _ உலகு; பினாகினி _ பெண்ணையாறு, தென்பெண்ணை.

தமிழ் ஓவியா said...

கல்லூரி முதல்வரானார் திருநங்கை!
நாட்டில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராகியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் மிதுனபுரி மாவட்டத்தில் உள்ள விவேகாநந்தர் நூற்றாண்டு நினைவுக் கல்லூரியில் வங்கமொழி ஆசிரியராகப் பணியாற்றிய மானபி பந்தோ பாத்தியாயா என்ற இவர் ஜூன் மாதம் (2015) 9ஆம் தேதி முதல் கிருஷ்ணா நகர் பெண்கள் கல்லூரியில் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். தற்போது கிடைத்துள்ள இந்த உயர்வு சிறப்பு வாய்ந்தது. வாழ்வில் சாதிக்க பாலினம் ஒரு தடையல்ல என்பதை இது உறுதிசெய்கிறது என்றார்.

தமிழ் ஓவியா said...

இந்தியா எங்கும் “தமிழ்” என்று தொடங்கும் ஊர்ப் பெயர்கள்

ஆந்திராவில் - 29 ஊர்கள்
அருணாசலப் பிரதேசத்தில் - 11 ஊர்கள்
அசாமில் - 39 ஊர்கள்
பீகாரில் - 53 ஊர்கள்
குஜராத்தில் - 5 ஊர்கள்
கோவாவில் - 5 ஊர்கள்
அரியானாவில் - 3 ஊர்கள்
இமாசலப்பிரதேசத்தில் - 34 ஊர்கள்
கர்நாடகாவில் - 24 ஊர்கள்
மகாராட்டிரத்தில் - 120 ஊர்கள்
மேகாலயாவில் - 5 ஊர்கள்
மணிப்பூரில் - 14 ஊர்கள்
மத்தியப்பிரதேசத்தில் - 60 ஊர்கள்

தமிழ் என்று தொடங்கும் ஊர்களுக்கு அருகே பழனி, தேக்கடி, தேனி, போடி என மதுரை மாவட்டத்தில் உள்ள ஊர்கள் உள்ளன.

நாகாலாந்தல் 4, ஒரிசாவில் 84, பஞ்சாபில் 4, இராசஸ்தானில் 26, தமிழ்நாட்டில் 10, உத்திரபிரதேசத்தில் 64, மேற்கு வங்கத்தில் 24 உள்ளன.

இந்தியா முழுமையிலும் தமிழ் என்று தொடங்கும் ஊர்கள் 612 உள்ளன.

தமிழ் ஓவியா said...

சிந்துவிலும் காவிரியிலும் ஒரே நாகரிகம்!நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் செம்பியன் கண்டியூரில் 2006 பிப்ரவரியில் இரு புதிய கற்காலக் கைக்கோடாரிகள் கண்டெடுக்கப்பட்டன.

அவற்றுள் ஒன்றில் கி.மு.2000 கி.மு.1500ஆண்டுகளுக்கு இடைப்பட்ட அரப்பா மொகஞ்சதாரோ கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை தெரிவிக்கிறது.

இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் சிந்துசமவெளி நாகரிகமும் தொல்தமிழர் நாகரிகமும் திராவிடர் நாகரிகமும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டுப் புதிய கற்கால மக்கள் அரப்பா மக்களின் திராவிட மொழியைப் பயன்படுத்தினர் என்பது இதன்வழி தெரிகிறது. இது தமிழ்நாட்டில் புதிய கற்கால மக்கள் தமிழ்ப் பேசியதற்கான முதல் சான்று.

ஆதாரம்: (உலக மொழிகளில் தமிழ்ச் சொற்கள் - ப.சண்முகசுந்தரம், உலக தமிழாராய்ச்சி நிறுவனம்)

குறிப்பு: இந்த இரண்டு சான்றுகளும் இந்தியா தமிழர் (திராவிடர்) மண் என்பதை உறுதி செய்கின்றன.

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சி உண்பதில் மக்களின் உணர்வு மதிக்கப்பட வேண்டும் மத்திய உள்துறை அமைச்சர் கருத்து


 
மகாராட்டிராவில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தது குறித்து கருத்துக்கூறிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் உணவுப் பழக்க வழக்கங்களுக்குக் கட்டுப்பாடோ தடையோ விதிக்கக் கூடாது என்றார்.

மாட்டிறைச்சியை உண்ண விரும்பக் கூடியவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட வேண்டும் என்று அடாவடியான, ஆதிக்கப் போக்கிலான கருத்தைச் சொன்னவர் முக்தார் அப்பாஸ் நக்வி. இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நான் மாட்டிறைச்சியை உண்பவன் என்னைத் தடுக்க யாராலும் முடியாது என்று காட்டமாய் பதில் கூறி கண்டனம் தெரிவித்தவர்தான் கிரண் ரிஜிஜு அவர்கள்.

மதச்சார்பற்ற நாட்டில் மத நல்லிணக்கத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் ரிஜிஜு.

- தினமணி, 28.05.2015

தமிழ் ஓவியா said...

திரைப்பார்வை : புறம்போக்கு
இயல்பாகவே தான் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர் என்று சொல்லாமல் தன் படங்களின் வாயிலாக அதனை வெளிப்படுத்தி வருபவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.

இவரின் படங்கள் அனைத்தும் அனைவராலும் அந்தந்த காலகட்டத்தில் பேசப்படுபவையாகவே அமையும், அதற்கு இந்த புறம்போக்கு என்கிற பொதுவுடைமை திரைப்படம் விதிவிலக்கல்ல.

இந்த திரைப்படம் ஒரு வழக்கமான திரைப்படம் கிடையாது. ஆழமான சமூக கருத்தினை அடிப்படையாகக் கொண்டது. தேசத் துரோகக் குற்றச்சாட்டிற்காக மூன்று மரண தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டிய குற்றவாளி ஆர்யா. இந்த மரண தண்டனையைக்கூட அனுபவமிக்க, கைதேர்ந்த தூக்கிலிடும் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரை வைத்தே செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இந்த பாலுச்சாமி என்கிற ஆர்யாவின் தேசத்துரோகம் அமைந்திருக்கிறது.

தூக்கிலிடும் அனுபவத்தை தன் தந்தையின் மூலமாக பெற்றிருக்கும் எமலிங்கம் என்கிற விஜய் சேதுபதியை வலை வீசிப் பிடிக்கிறது சிறை நிர்வாகம். கலாசியாக பணியாற்றும் விஜய் சேதுபதி முதலில் வரமாட்டேன் என்று முரண்டு பிடித்து பின்பு ஒத்துக்கொள்கிறார். தூக்கிலிட அல்ல, தூக்கில் தொங்க வேண்டியவரைக் காப்பாற்ற.   கதாபாத்திரங்களின் பெயர்களையே பொருத்தம் பார்த்து வைத்துள்ளார் இயக்குநர். தமிழகத்தின் புரட்சி வீராங்கனை வேலு நாச்சியார் அவர்களின் பாசறையில் முக்கிய பங்கு வசித்து, பின்னர் ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்த குயிலியின் பெயர் கார்த்திகாவிற்கும், சுதந்திரப் போராட்ட காலத்தில் மதுரையில் பிறந்து பின்னர் ஆந்திராவில் வாழ்ந்த வரலாற்று நாயகன் பாலுவின் பெயரை ஆர்யாவிற்கும், ஆங்கிலேயர்களின் கல்வி முறையையும், அவர்களின் கடுமையான தண்டனையையும் அறிமுகப்படுத்தியவருமான மெக்காலேவின் பெயர் சிறைத்துறை அதிகாரி ஷாமுக்கும் வைக்கப்பட்டுள்ளன.

படத்தின் தொடக்கத்திலேயே வெளிநாடுகளில் குப்பை என்று சொல்லப்படுபவையெல்லாம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு அப்பாவி மக்களுக்கு ஆபத்தாக மாறி வருவதையும், குப்பைக் கூளங்களால் இந்தியாவே குப்பையாகிக் கொண்டிருப்பதையும் இந்த ஏகாதிபத்திய அவலட்சணத்தை இந்திய அரசு மறைமுகமாக ஊக்குவித்து வருவதையும் கடுமையாகச் சாடியிருக்கிறார் இயக்குநர்.

திரைப்படத்தின் வசனங்கள் மிகவும் கூர்மையானவை. நம் புத்தியை குத்திக் கிளறுகிறது. கிடங்குகளில் இருப்பு வைத்து வீணாகிக் கொண்டிருக்கும் தானியங்களை மக்களுக்கு பிரித்துக் கொடுக்கச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிடுகிறது. எடுத்துக் கொடுத்தால் உள்ளூர் போலீஸ் கைது செய்கிறது  என்று நாயகன் பேசும்போது காட்சியோடு ஒன்றிப்போன பார்வையாளர்களுக்கு அரசின் மீதான கோபம் கைத்தட்டலாக வெளிப்படுகிறது.

இப்படிப்பட்ட வசனங்கள் வாயிலாக பொதுவுடைமை என்றால் என்ன? மார்க்சியம் என்றால் என்ன? மக்களுக்கும் மார்க்சியத்திற்கும் இடைவெளி ஏன்? யார் மக்கள் என்பதையெல்லாம் விலாவாரியாக இயக்குநர் விளக்கியுள்ளார்.

நடிகர் ஷாமுக்கும், ஆர்யாவுக்குமான பல வசனங்கள் இன்றைய புரட்சிகர அரசியலை எடுத்துக் காட்டுகிறது.

நீ கொஞ்ச நாள்ல சாகப்போற தூக்கு தண்டனைக் கைதி என்ன எழுதப்போற? என்று சிறை அதிகாரி ஷாமின் கேள்விக்கு எல்லோருமே ஒரு நாள் சாகத்தான் போறோம், சாகுறதுக்கு முன்னாடி என்ன செய்யுறோம் என்பதுதான் முக்கியம் என்ற பாலுவாகிய ஆர்யாவின் பதில் இறப்பதற்கு முன் வயலின் வாசிக்க கற்றுக்கொண்ட சாக்ரடீஸை நினைவுப்படுத்துகிறது.

வெறுமனே தூக்குத் தண்டனைக்கு எதிரான திரைப்படமாக காட்டாமல், ஏன்? எதற்கு? எதனால்? என்பதற்கான காரண காரியங்களுடன் விளக்கமாக காட்சிகளை நகர்த்தியுள்ளார் இயக்குநர்.

இன்றைய குடி தமிழகத்தின் அவலநிலையை தோலுரித்துக் காட்டும் வகையில், குடும்பம் அழியுது ஆனால் அரசு நடக்குது என்ற பாடல் வரிகளை இடம்பெறச் செய்து அசத்தி இருக்கிறார்.

பாலியல் தொழில் செய்யும் பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, அவளையும் நல்லவளாக மாற்றிடலாமே என்ற தாயின் வசனங்கள் தோழர்களின் சமூகம் சார்ந்த அக்கறையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

சிறைச்சாலையை வடிவமைத்த கலை இயக்குநரையும், அதை அழகாக பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளரையும் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
மொத்தத்தில் புறம்போக்கு என்னும் பொதுவுடைமை, பாலைவனத்தில் ஒரு சோலை? பொதுவுடைமை ஒளிச்சிந்தும் புரட்சி வெடி!

- அமுதரசன்

தமிழ் ஓவியா said...

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?


- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்ஆலயம் இதையும் வடசொல் என்று கூறுகின்றார்கள் பார்ப்பனரும் அவர் அடியார்க்கடியாரும். ஏன் கூறமாட்டார்கள். ஏமாந்தாரும் காட்டிக் கொடுத்தாரும் நிறைந்த தமிழகத்தில்? ஆல் என்பதனடியாகப் பிறந்தது இச்சொல். ஆல்+அ+அம் எனின் அவ்வும், அம்மும் சாரியைகள். அம் என்பது அகம் என்பதன் திரிபு எனினும் அமையும். ஆலயம் என்பன் நேர்பொருள் ஆலாகிய இடம் என்பதாம். முன்நாளில் ஆலின் அடியில் அமைந்த நிழல் மிக்க பேரிடத்தை வழக்குத் தீர்ப்பிடமாகவும், கல்வி பயிலிடமாகவும், விழா நடைபெறுமிடமாகவும் கொண்டு பெருமைப்படுத்தினார்கள். அதுவே பிற்காலத்தில் உருவ வணக்கத்திற்குரிய இடமாயிற்று என்றும் ஆராய்ந்துரைத்தார்கள் அறிஞர்கள் பலர். ஆலயம் இடம் என்ற பொருளில் இலக்கியங்களிலும் வந்துள்ளது.

.................. மழை இடிப்புண்டு ஓர் நாகம் ஆலயத்தழுங்கி யாங்கு மஞ்சரி அவல முற்றாள். (சீவக சிந்தாமணியின் 897 ஆவது பாடல்) என்று வரும் அடிகளில் ஆலயம் என்பது நாகம் தங்கும் இடம் என வந்துள்ளது. தான் விளையாடி மேனாள் இருந்ததோர் தகைநல் ஆலைத் தேன் விளையாடும் மாலை யணிந்தபொற் பீடம் சேர்த்தி யான் விளையாடும் அய்ந்தூர் அதன்புறம் ஆக்கி னானே! என்ற சிந்தாமணிச் செய்யுளையும் நோக்குக.

எனவே, ஆலயம் காரணப் பெயராகிய தூய தமிழ்ச் சொல்லே. நாகரிகம் நகர சம்பந்தம் நாகரிகம் என்று கரடி விடுவார் தமிழின் பகைவர். அன்று! நாகரிகம் தூய தமிழ்ச் சொற்றொடர் என்க, என்னை? நாகம் என்ற சொல்லுக்கு, நாகன் விண் குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பு யானை என்ற நூற்பாவினால், இத்தனை பொருள்கள் இருப்பது அறியப்படும். எனவே, நாகம் மலைக்கும் பெயர். நாகர் என்பது மலையாளிகள் என்பதாயிற்று. இனி இகத்தல் என்பது பகைத்தல் வெறுத்தல் என்பதாம். நாகரிகம் என்பது நாகர்களை _ மலையாளிகளை வெறுப்பதோர் பண்பாடு என்க. நாகரிகம் ஈறு திரிந்ததோர் ஆகுபெயர். பண்டு தீயொழுக்கத்தவரான ஆரியர் தமிழரால் புறந்தள்ளப்பட்டனர். அவ்வாரியர் மலைப்பாங்கில் ஒதுங்கி வாழ்ந்தனர். அவர் தீயொழுக்கம் தமிழர்க்குத் தீரா வெறுப்பை உண்டாக்கிற்று. தமிழரிடத்து _ ஓர் புதிய பண்பாடு தோன்றியது. நாகரை _ நாகரின் தீயொழுக்கத்தை வெறுப்பதென்று அன்று தோன்றியதே நாகரிகம் என்பது. ஆதலின் நாகரிகம் காரணம் பற்றி வந்த செந்தமிழ்ச் செல்வமே என்க. (குயில், 08.07.1958) வேட்டி! இது வேஷ்டி என்ற வடசொல்லின் சிதைவாம். இவ்வாறு பார்ப்பனரும், பார்ப்பனர் அடியாரும் பகர்வர்.

வெட்டப்படுதலின் வேட்டி எனத் தூய தமிழ்க் காரணப்பெயர். வெட்டல் என்ற தொழிற் பெயரின் அல், இறுதிநிலை கெட, வெட்டு என நின்று முதல் நீண்டது வேட்டு என. அது இ என்னும் பெயர் இறுதி பெற்று வேட்டி ஆனது. அறுக்கப் படுதலின் அறுவை என்றும், துணிக்கப் படுதலின் துணி என்றும், துண்டிக்கப் படுதலின் துண்டு என்றும் வருவதும் ஒப்பு நோக்கத் தக்கதாகும். முட்டி இது முஷ்டி என்ற வடசொற் சிதைவாம். முட்டுதல், முட்டு, முட்டி என வந்தது காண்க.

(குயில், 15-07-1958)

தமிழ் ஓவியா said...

அறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமும்’
ஆசிரியர்:      பேராசிரியர் அ.அய்யாசாமி     வெளியீடு :          அன்னை முத்தமிழ்ப்            பதிப்பகம்,      10 (ணி55), மூன்றாம்        குறுக்குத் தெரு,     திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை- -_ 600041. விலை: ரூ.50 பக்கங்கள்: 72

அண்ணாவின் வாழ்வு என்பது தனிமனிதரின் சராசரி வாழ்வாகாது. அது வரலாற்றோடு பிணைந்தது. அதிலும் தந்தை பெரியாருடன் இணைந்தது என்னும்போது அந்த வரலாறு இன்னும் முதன்மைப் பெறுகிறது. அண்ணாவின் இளமைக் காலம் முதல் இந்நூலில் விளக்குகிறார். இந்நூலுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அணிந்துரை அளித்து அனைவரும் படித்து, பரப்ப வேண்டு என்கிறார் என்றால் அந்நூலின் உள்ளடக்கம் எத்தகையது என்பதை எளிதில் உணரலாம்.

தி.க.வும் தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை இந்நூல் விளக்குகிறது. ஒரே நோக்கத்திற்கான இரு பிரிவுகள் என்பது அதன் பொருள். அதை மிகச் சரியாக அய்யாவும் அண்ணாவும் உறுதி செய்தனர். அதன் பின் கலைஞரும், அன்னை மணியம்மையாரும், தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் நிலைநாட்டியுள்ளனர். இந்தத் துப்பாக்கிக்கு மட்டுமே ஆரியம் அலறுகிறது என்பதே அந்த வெற்றியை வெளிப்படுத்துகிறது.

அண்ணா கண்ட _ கொண்ட ஒரே தலைவர் பெரியார். பெரியாரின் வழிசென்று அரிய சாதனைகள் புரிந்தவர் அண்ணா. அண்ணாவிடம் பெட்டிச் சாவியை ஒப்படைத்தவர் பெரியார்.

ஜாதி ஒழிப்பு,மத ஒழிப்பின் மூலமே முடியும் என்ற அய்யாவின் முடிவை அண்ணா ஏற்றார். அரசியல் ஈடுபாட்டில் அய்யாவிடம் அண்ணா வேறுபட்டார். விளைவு தி.மு.க.

திராவிட அமைப்புகள் பிரிந்து பிரிந்து வளர்ந்தன. அதன் பயன் தமிழ்நாட்டில் திராவிடம் என்ற சொல்லை, பெரியார் என்ற வழிகாட்டலை சொல்லாமல் அரசியல் இல்லை என்றானது. இதுதான் ஆரியத்தைக் கலக்குகிறது.

அண்ணா அரசியலில் சாதித்தார். அய்யாவின் எண்ணத்தைச் சட்டமாக்கினார். எதிரியின் தோளில் ஏறி எட்ட வேண்டியதை எட்டிய கெட்டிக்காரர் அண்ணா. அவரை இன்றைய தலைமுறைக்கு இந்நூல் அறிமுகம் செய்கிறது கொள்கை வெளிச்சத்தில். இதுபோன்ற நூல்கள் ஏராளமாய் இளைஞர்களைச் சென்றடைய வேண்டும். இது ஒரு தொடக்கப் பாடநூல். இதன் வழி பல்கலைக்கழகம் வரைப் பயிலலாம்.

தமிழ் ஓவியா said...

காரைக்குடி தி.பெரியார் சாக்ரடீசு பெயரால் விருதுகள்


 
சீரிய பகுத்தறிவாளரும், செயல்வீரரும், உண்மை-பெரியார் பிஞ்சு இதழ்களின் பொறுப்பாசிரியராகக் கடமையாற்றியவருமான காரைக்குடி தி.பெரியார் சாக்ரடீசு அவர்களின் பெயரால் பெரியார் சாக்ரடீசு நினைவு விருது வழங்கும் விழா சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் அவரது முதலாமாண்டு நினைவு நாளில் (12.05.2015) நடைபெற்றது. பெரியாரின் கருத்துக்களை கொண்டு செல்வதில் முனைப்புடன் செயலாற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவது என பெரியார் சாக்ரடீசு நினைவு விருது விழாக்குழுவினர் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டனர். இக்குழுவைச் சேர்ந்த முனைவர் எம்.நாச்சிமுத்து, எழுத்தாளர் அஜயன்பாலா உள்ளிட்டோர் இதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தனர். ஆவணப்பட இயக்குநரும் செயல்பாட்டாளருமான ஆர்.பி.அமுதன் அவர்கள் முதல் விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இயக்குநர் தங்கர்பச்சான் விருதினை வழங்கிச் சிறப்பித்தார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் விழாவில் பங்கேற்று பெரியார் சாக்ரடீசு குறித்து நினைவுரையாற்றினார். இதழாளர்கள் கோவி.லெனின், மை.பா.நாராயணன் ஆகியோர் தங்களுக்கு பெரியார் சாக்ரடீசுக்கும் இடையிலான நட்பையும், அவர் தம் பணியையும் எடுத்துரைத்தனர்.

இதேபோல், காரைக்குடி பாரதிதாசன் தமிழ்ப்பேரவையின் சார்பில் 24.05.2015 அன்று காரைக்குடியில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் விழாவில், செம்மொழித் தமிழுக்குச் சிறந்த பணியாற்றிவரும் அழகப்பா பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் சே.செந்தமிழ்ப்பாவை அவர்களுக்கு அறிவாளர் தி.பெரியார் சாக்ரடீசு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

பெரியாரியலைப் பரப்பும் பணியிலும், அதை நோக்கி இளைஞர்களை ஈர்க்கும் பணியிலும் தன் வாழ்க்கையைச் செலவிட்டு, எண்ணற்ற புதிய படைப்பாளர்களை உருவாக்கி, இளம் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், படைப்பாளர்களையும் அடையாளம் கண்டு, ஊக்குவித்து நெறிப்படுத்திய பெரியார் சாக்ரடீசின் பெயரால், அதே பணியை மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தல் சாலப்பொருத்தம். பெரியார் சாக்ரடீசு மறைவின்போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஆயிரம் பெரியார் சாக்ரடீசுகளை உருவாக்குவோம் என்ற வரி செயல்வடிவம் பெற இப்பணிகள் தான் அடிகோலும்.

தமிழ் ஓவியா said...

குரங்குக்கு நோட்டீஸ்!

திங்கள், 15 ஜூன் 2015
 

மத்திய பிரதேச மாநிலம், பிண்ட் மாவட்டத்தில் உள்ள  பஜாரியா என்ற இடத்தில் உள்ள அனுமார் கோவில் சமீபத்தில் பெரிதாகக் கட்டப் பட்டது. பெரிதாகக் கட்டப் பட்ட போது அரசு நிலத் திலும் ஆக்ரமித்து மண்டபம் ஒன்றும், சிறிய ராமர் கோவி லும் கட்டப்பட்டன. இதனை எதிர்த்து அப்பகுதியில் உள்ள வணிக அமைப்பினர் மாநகராட்சியில் முறையிட் டனர். மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காத தால் குவாலியர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி வணிக அமைப்பின் கோரிக் கையை ஏற்று, அரசு நிலத் தில் கட்டப்பட்ட கோவில் மற்றும் மண்டபத்தை இடிக்க வேண்டும் என்று உத்தர விட்டார்.

இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் அந்தக் கோவில் நிர்வாகி வைபவ் சுக்லா என்பவருக்கு நோட் டீஸ் அனுப்பியது. அதற்குப் பதிலளித்த பூசாரி இந்தக் கோயிலை அனுமார் மற்றும் அவரது வானரங்கள்தான் (குரங்குகள்) நிர்வகிக்கின்றன.

அவர்கள்தான் இந்தக் கோவிலுக்கான உரிமையா ளர்கள், நான் அவர்களுக்குப் பணிவிடை செய்யும் சாதா ரண தொண்டன். ஆகவே எனக்கு இந்தக் கோவில் அத்துமீறி கட்டப்பட்ட ராமர் கோவில் மற்றும் மண்ட பத்தை இடிக்க உரிமை யில்லை என்று கூறி விட்டார்.

இதனை அடுத்து மாநக ராட்சி நிர்வாகம் குரங்கு பெயரிலும், ராமர் கோவிலில் சிலையாக உள்ள, ராமர் பெயரிலும் நோட்டீஸ் அனுப் பியுள்ளது. அதில் கூறப் பட்டுள்ளதாவது:

பெறுநர்:
மிஸ்டர் அனுமான் ஜி

நீங்கள் வார்ட் எண் 29 பஜாரியா பகுதியில் புதிய மண்டபமும், ராமர் கோவி லும் உங்கள் ஆணைப்படி கட்டப்பட்டள்ளன. முக்கிய மான சுற்றுலாத்தலமான இப்பகுதி மத்திய அரசின் புராதன துறையினரால் பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள கடைகளுக்குச் செல்லும் பகுதியை ஆக்ரமித்து  கோவில் கட்டப்பட்டுள்ளது. இது மாநகராட்சி சட்டம் 1961, 187,223 பிரிவின்படி சட்ட விரோதச் செயலாகும்.

ஏற்கெனவே 17.7.2014 ஆம் தேதி அன்று உங்களது கோவில் பூசாரிக்கு சட்ட விரோதமாக கட்டடம் கோவில் கட்டக் கூடாது என்று அறிவுறுத்திக் கடிதம் எழுதியுள்ளோம். அதையும் மீறி மண்டபம் கோவில் கட்டப்பட்டுள்ளது. பிரச் சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளதால்  இந்தக் கடிதம் கண்ட ஒரு வாரத்திற்குள் நீங்கள் விதி முறை மீறி கட்டிய கட்ட டத்தை இடிக்க வேண்டும். அப்படி இடிக்காவிட்டால் அதற்கான அபராதத் தொகை மற்றும் மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

(என்று இதில் எழுதியுள் ளோம்) இப்படிக்கு நிர்வாக அதிகாரி மாநகராட்சி பிண்ட்.

சபாஷ்! மாநகராட்சி நிருவாகம் அனுப்பிய நோட் டீசுக்கு அனுமானாகிய குரங்கு சாமி பதில் அனுப் புமா? அப்படி அனுப்பா விட்டால் சாமியாவது - கீமியாவது எல்லாம் வெறுங் கல்லு என்ற பகுத்தறிவுவாதி களின் கருத்தை ஏற்றுக் கொள்வார்களா?

பதில் இல்லாத நிலையில் ஒரு தலைப்பட்சமாக (ணிஜ்ஜீணீக்ஷீமீ) தீர்ப்பு வழங்க வேண்டியதுதானே? அப்பொழுது மட்டும் இந்தப் பக்தர்கள் முஷ்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பு வார்கள். ஆம் மனிதர் என் பது உண்மை - கடவுள் என்பது பொய் என்று ஆகி விட்டதா இல்லையா?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பக்தி

தந்தையைக் கொன்று, தாயைப் புணர்ந் தவனுக்கு மதுரையில் சிவன் மோட்சம் கொடுத்தான் என்று எழுதி வைத்துள் ளார்களே இதுதான் பக்தி வழிகாட்டும் ஆன்மிகமா?

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பக்தி

தந்தையைக் கொன்று, தாயைப் புணர்ந் தவனுக்கு மதுரையில் சிவன் மோட்சம் கொடுத்தான் என்று எழுதி வைத்துள் ளார்களே இதுதான் பக்தி வழிகாட்டும் ஆன்மிகமா?

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

ஏழுமலையான்

செய்தி: திருப்பதி கோவி லுக்கு மேலே விமானம் பறந்தால் ஆகம விதிப்படி கேடு விளையும்.
- திருப்பதி கோயில் அர்ச்சகர்

சிந்தனை: எத்தனையோ ஆண்டுகளாக திருப்பதி கோயிலுக்கு மேலே விமா னங்கள் எல்லாம் பறந்து கொண்டுதான் உள்ளன. அப்பொழுதெல்லாம் ஏற் படாத கேடு திடீரென்று குதிக்கிறதோ


அது என்ன திருப்பதி ஏழுமலையின் ஸ்பெஷல் மற்ற மற்ற கோவில்களுக்கு மேலே பறக்கலாமோ!

தமிழ் ஓவியா said...

சிந்திக்க முடிந்தது

புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் ஒன்று இல்லை; அது இருக்கவேண்டிய அவசிய முமில்லை என்று சொன் னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.
_ (விடுதலை, 23.1.1968)

தமிழ் ஓவியா said...

கிஸ்தானும், வங்காளதேசமும் இந்து நாடுகளாம்!

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறுகிறார்மதுரா, ஜூன் 15_ -பாகிஸ்தான், மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் அனைவரும் இந்து நாட்டில் வாழ்பவர் களே என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மதுராவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொண்ட அதன் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:-

ஒரே இந்து நாடு என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவை யில்லை.இந்தியா என்பது இந்துநாடு என்ற நம்பிக் கையை எந்த விலை கொடுத்தாலும் மாற்ற முடியாது. சில மக்கள் தங்களை இந்துக்கள் என சொல்கின்றனர். சிலர் இந்தியன் என சொல் கின்றனர். இன்னும் சிலர் தங்களை ஆரியர்கள் என் றும் சிலர் உருவ வழி பாட்டில் நம்பிக்கையற்ற வர்கள் எனவும் கூறிக் கொள்கின்றனர். இந்தி யாவை இந்து ராஷ்டிரா என்று ஏற்றுக் கொண் டாலும் எந்த மாற்றமும் இதில் ஏற்படாது.

இந்திய துணைக் கண்டத்தில் வாழும் அனைவருமே இந்துநாட்டை சேர்ந்தவர்கள்தான். அவர்கள் வேறுபட்ட குடியுரிமையை கொண்டி ருந்தாலும் அவர்களுடைய நேஷனாலிட்டி இந்து தான். சிந்து நதி இங்கு ஓடியதால் அரபு மன் னர்கள் இந்த பகுதியை இந்து என அழைக்க தொடங்கினர். பாகிஸ் தான் 1947 ஆம் ஆண்டு இந்தியாவிடம் இருந்து பிரிக்கப்பட்டது. 1971 ல் வங்காளதேசம்  பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டது. இந்த நாடுகளில் உள்ள மக்களின் குடியுரிமை மாறுவதற்கு பிரிக்கப்பட்டதே காரணம். ஆனால், அவர்கள் தங்கள் வீடுகளையோ, நாடுகளையோ விட்டு செல்லவில்லை. எனவேதான் அவர்களின் நேஷனாலிட்டி இன்னும் மாற வில்லை என்று நான் கூறுகிறேன்.  சில மக்கள் தெளிவில்லாமல் தங்களை கிறிஸ்தவர்கள் என்றும் முஸ்லீம்கள் எனவும் கூறிக் கொள்கின்றனர். இந்த நிலப்பரப்பின் பழங்கால பெயர் இந்துஷ்தான். வெளிப்படையாகவே இங்கு வாழும் மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்துக்களே என்று தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நன்றி


சென்னை, ஜூன் 15_ இந்திய கம்யூனிஸ்டு கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளி யிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க் சிஸ்டு) மற்றும் இடது சாரி கட்சிகளின் ஆதர வோடு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்த லில் போட்டியிடும் சிபி அய் வேட்பாளர் சி.மகேந் திரனுக்கு ஆதரவு அளிப்ப தென திராவிடர் கழக மாநிலக் குழு முடிவு செய்துள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பதுடன் திராவி டர் கழக தலைவர் கி.வீர மணிக்கு சிபிஅய் தமிழ் நாடு மாநிலக்குழு சார் பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜனதா தளம் (எஸ்) ஆதரவு

இதற்கிடையே சி. மகேந்திரனுக்கு மதச்சார் பற்ற ஜனதா தளம் ஆத ரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் பி.முக மது இஸ்மாயில் தலைமை யில் சென்னையில் நடை பெற்றது. துணைத் தலை வர் எம்.சொக்கலிங்கம், மாநிலப் பொதுச் செயலா ளர்கள் கே.ஜான்குமார், கரு. பவனாச்சாரி உள்ளிட் டோர் பங்கேற்றனர். கூட் டத்தில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்த லில் போட்டியிடும் இடது சாரி இயக்கங்களின் வேட் பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து களப்பணி ஆற் றுவது எனத் தீர்மானிக் கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

சீரான உடல் நலத்துக்கு தூதுவளைசிறிய, உடைந்த முள் போன்ற இலைகளையும், மித ஊதா நிற பூக்களையும், உருண்டையான பச்சைநிறக் காய்களையும், சிவப்பு  நிறப் பழங்களையும், வளைந்த முட்களைப் போன்ற தண்டையும் உடைய தூதுவளை, கொடி இனமாகும். இதை நம் வீட்டு  தோட்டத்தில் பந்தல் போட்டு வளர்ப்பது சிறந்த முறையாகும்.

அய்ந்து ஆண்டுகள் வரை வளரும் இக்கொடியின் தண்டுகளில்  முட்கள் இடைவிடாமல் நிறைந்திருக்கும். சரியான முறையில் தூதுவளை கொடியை வளர்த்தால், அவை அதிக நாட்கள் வரை  வளர வாய்ப்பு உள்ளது.

தூதுவளையின் வேர் முதல் பழம் வரை எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இதன் இலையும் பூவும் கோழை சளியை  அகற்றவும், நம் உடலைப் பலப்படுத்தவும், வீரிய சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. இதன் காய் மற்றும் பழங்கள்நமக்கு  பசியைத் தூண்டுவதுடன், மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது. தமிழகம் முழுவதும் பரவியுள்ள இந்த தூதுவளை கொடி  சிங்கவல்லி, ரத்து நயத்தான், தூதுவேளை, தூதுளம், தூதுளை என்று அழைக்கப்படுகிறது.

மருத்துவ குணங்கள்- தூதுவளை இலைகளை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி பொடியை காலை  வேளையில் மட்டும் ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து குடித்தால் நாக்கு வறட்சி, கபநீர், மூட்டுவலி மற்றும் காசநோய்  குணமாகும். தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, குழம்பாக கடைந்தோ சாப்பிட்டு வந்தால், நெஞ்சில்  சேரக்கூடிய கபக்கட்டு நீங்குவதுடன், நம் உடல் பலம் பெறும்.

தூதுவளை இலையை சாறு பிழிந்து, அதே அளவு நெய்யில் காய்ச்சி, ஒரு தேக்கரண்டி அளவு 2 வேளை தொடர்ந்து குடித்து  வந்தால் எலும்புருக்கி காசம், மார்சளி உடனடியாக நீங்கும். தூதுவளை காயை நிழலில் உலர்த்தி காயவைத்து தயிர், உப்பு  சேர்த்து பதப்படுத்தி, எண்ணெயில் வறுத்து உணவுடன் உண்டுவர மனநல பாதிப்பு, இதய பலவீனம், மலச்சிக்கல் போன்றவை  குணமாகும்.

தூதுவளை சமூலத்தை 50 கிராம் அளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, 150 மி.லி. அளவுக்கு சுண்ட  காய்ச்சி வடிகட்டி, தொடர்ந்து 2 வேளை குடித்து வந்தால் இரைப்பு, சுவாச சளி, இருமல் குணமாகும்.

தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்து பொடியாக்கி புகைமூட்டம் போட்டு நுகர்ந்து வந்தால் மூச்சிரைப்பு  இருமல், மூச்சு திணறல் விலகுவதுடன், மார்பில் சேர்ந்த சளி இளகி வெளியேறும்.

தூதுவளை பூக்களை 10 எண்ணிக்கை  எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் பாலில் காய்ச்சி வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்து, 48 நாட்கள் தொடர்ந்து 2 வேளையும் பருகி  வந்தால் தாது விருத்தி ஏற்படுவதுடன் உடல் பலம் பெறுவதுடன், நமது முகமும் வசீகரமாகும்.

தமிழ் ஓவியா said...

நீரிழிவு நோயை போக்கும் முட்டைமனிதர் களை தாக்கும் முக்கிய நோய் களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது. அதில் டைப் 2  நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு போன்றவைகளால் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் அதிக அளவு கொழுப்பு சத்துகளால் உடலில் குளுக்கோஸ் குறைபாடு ஏற்பட்டு அதன்மூலம் இந்தநோய் ஏற்படுவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக் கின்றன. இந்நிலையில் தற்போது முட்டை சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் தாக்கம்  குறையும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. முட்டையில் உள்ள கொழுப்பு சத்து உடலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை சரி  சமப்படுத்தி சீரமைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகத்தின் இருதயநோய் தடுப்பு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் 432 பேரிடம் ஆய்வு நடத்தினார்கள்.  அதில் வாரத்துக்கு ஒரு முட்டை சாப்பிடுபவர்களை விட வாரத்துக்கு 4 முட்டை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது. அதன் மூலம் முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

உடல் எடையைக் குறைக்க வழி?

நீங்கள் உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும். வராதி என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவை 200 மி .லி அளவில் கிடைக்கும்.

3 ஸ்பூன் மருந்து + 12 ஸ்பூன் (60 மி .லி) கொதித்து ஆறிய தண்ணீர் + கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிடவும். காலையில் மருந்தைச் சாப்பிட்டதும் அரை மணி நேரம் இடது பக்கமாகச் சரிந்து படுத்திருக்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வாய் கழுவி, சூடாகத் தண்ணீரைக் குடிக்கவும். உடல் பருமனைக் குறைக்க இது நல்ல கஷாயம்.

தயிரைத் தவிர்த்து தெளிந்த மோர் அருந்தவும். தேன் கால் ஸ்பூன் சிறிது தண்ணீரில் கலந்து அல்லது திரிபலா எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் 1 ஸ்பூன் (5 கிராம்) 80 மி .லி தண்ணீரில் சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறிய பிறகு, கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, இரவு உணவிற்குப் பிறகு உடனே அருந்த வேண்டும். அதன் பிறகு முன் குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி மிகவும் அவசியம். காலையில் கஷாயம் குடித்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு 40 முதல் 45 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும். நன்கு வியர்வை வரும்படி நடந்தால்தான் எடை, குறையும். பகல் தூக்கம் தவிர்க்கவும்.