Search This Blog

9.6.15

மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்!-பெரியார்

கடவுள்!மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்.

மனிதனுக்குள் கடவுளைப் புகுத்துவது மனிதனை முட்டாளாக்கும் டானிக்(வைட்டமின் சத்து) ஆகும். இதை இன்று பார்ப்பனர்கள், சங்கராச்சாரிகள் கடவுள் பிரசாரம் செய்வதில் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

கடவுள் மனித நலத்துக்காகக் கண்டு பிடித்த சாதனம் அல்ல. மனிதனை முட்டாளாக்குவதற்குப் பயன்படுத்தும் சாதனமேயாகும். சூரியனை, சந்திரனை நெருப்பை, நீரை, காற்றை, கல்லை, மண்ணை எந்த மனிதனும் கண்டுப்பிடிக்கவில்லை. அவற்றின் பெயர்களைத்தான் மனிதன் தெரிந்து கொண்டான்.

இவற்றிற்கு விளக்கம் தேவை இல்லை. காரண காரியங்கள் தேவையில்லை. மனிதன் என்றால் இவைகளை அறிந்தே ஆகவேண்டும்; இவற்றின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

ஆனால், கடவுள் அப்படி அல்ல; ஒருவன் சொல்லி அதுவும் சொல்லுவது மாத்திரமல்ல; நம்பும்படி செய்து, நம்பும்படி செய்வது மாத்திரமல்ல; நம்பும்படி கட்டாயப்படுத்தி மனித மூளைக்குள் புகுத்தியாக வேண்டும்.

இந்தக் கதி சர்வ சக்தியுள்ள "கடவுளுக்கு" ஏற்பட்டது பரிதாபம்! மகா பரிதாபம்!

கடவுள் கதை ஒரு முட்டாளுக்குத் தோன்றிய தோற்றம். இது உலக அறிவையே பாழாக்கிவிட்டது. அதாவது சிறு குழந்தை கையில் கிடைத்த நெருப்புப்பந்தம் வீட்டையே, ஊரையே எரித்து சாம்பலாக்கியது என்பது போல் கடவுள் எண்ணம் அறிவையே கொன்று விட்டது என்று சொல்லலாம்.

கடவுள் என்பது "பிடிக்குப்பிடி நமசிவாயம், (நமசிவாயம் என்றால், இங்கு ஓன்றும் இல்லை; சூனியம் என்றுதான் பொருள்)

அது "கடவுள்" என்றால் ஒரு "சக்தி," "சக்தி கூட அல்ல;" "ஒரு காரணம்" "காரணப் பொருள்கூட அல்ல" அப்படி நினைப்பது, நினைத்துக் கொள்வது மனிதனுக்கு ஒரு "சாந்தி" என்பதாக கா.சு.வும் (M.L .பிள்ளை), திரு.வி.க.வும் சொன்ன விளக்கம் - இதை பழைய "குடிஅரசு" இதழில் காணலாம். ஆனாலும் இவர்கள் விக்கிரக பூசையும், பட (உருவ) பூசையும் செய்து வந்தார்கள். கடைசியாக மாற்றிக் கொண்டார்கள்.


மனிதனுக்கு எதற்காக கடவுள் தேவைப்பட்டது என்பது எனக்கு இன்னமும் விளங்கவில்லை. அதிலும், கடவுளை நம்பும் எவனும் அதன் சர்வ சக்தியில் நம்பிக்கை வைப்பதே இல்லை. எவனும் சம்பிரதாயத்திற்காக "கடவுள் செயல்" என்கிறானே தவிர, காரியத்தில் மனிதன் செயல் என்றும், இயற்கை என்றும், அகஸ்மாத், தற்சம்பவம், ஆக்சிடெண்ட் என்றும் தான் முடிவு செய்து கொண்டவனாகிறான்.

சர்வம் கடவுள் செயல் என்று சொல்லுகின்ற எவனும் சர்வத்திற்கும் தற்காப்பு செய்து கொள்ளாமல் இருப்பதில்லை. சர்வம் கடவுள் செயலாயிருக்கும் போது நாஸ்திகன் - கடவுள் இல்லை என்பவன் எப்படித் தோன்றினான் என்பது பற்றிச் சிந்திப்பதில்லை.

மற்றும் சர்வத்திலும் வியாபகமாக இருக்கிற கடவுள் மக்களுக்கு ஏன் தான் இருப்பதாக, தன்னைத் தானாகத் தெரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை என்பதை சிந்திக்கவே மாட்டேன் என்கிறான்.

கிருஸ்து பாதிரி இந்தக் கேள்விக்குப் பதிலாக "கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்துவிட்டான்; அந்த அறிவைக் கொண்டு கடவுளைத் தெரிந்து கொள்ள வேண்டியது மனிதன் கடமை" என்று சொல்லிவிட்டார்.

உன் அறிவுக்கு எட்டிய கடவுள் ஏன் என் அறிவுக்கு எட்டவில்லை? என்று கேட்டதற்கு, "பாபஜன்மங்களுக்கு எட்டாது" என்று சொல்லிவிட்டார்.

அந்த பாபஜன்மங்களை யார் படைத்தது? படைத்தது கடவுளானால், பாபஜன்மங்களை ஏன் படைத்தார்? கடவுள் பாபஜன்மங்களைப் படைக்கவில்லையானால், பாபஜன்மங்களைப் படைத்தது யார்? என்று கேட்டேன்.

'சாத்தான் படைத்தான்' என்றும், மற்றும் அவருக்கே புரியாத எதை எதையோ யோசித்துப் பேசினார்.

இஸ்லாத்தின் கதியும் இப்படித்தான். இந்துவின் கதியே மும்மூர்த்திகள், ஓங்காளி, மாரி, காத்தவராயன், மதுரை வீரன், கருப்பண்ணன், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சமாதி, கல்லுகள், படங்கள், பட்சிகள், மிருகங்கள், மரங்கள், சாணி (மூட்டை உருவ), உருண்டைகள், செத்துப்போன மனிதர்கள் முதலிய எத்தனையோ பண்டங்கள் கடவுள்களாக வணங்கத் தக்கவைகளாகவும் இருந்து வருகின்றன.

இவைகளை ஏன் சொல்லுகிறேன் என்றால், ஒரு சர்வ சக்தியுள்ள கடவுளுக்குத் தன்னைப்பற்றித் தெரிவித்துக் கொள்ள – தன் உருவத்தை விளக்க சக்தியில்லை என்பதைக் காட்டத்தான்.

பிறகு – முன்ஜென்மம் - பின் ஜென்மம், கருமம், விதி, நரகம், சொர்க்கம், வைகுண்டம், கைலாயம் இப்படி இன்னும் பல பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினது போல் உளறல் மேல் உளறல்கள்.

மனிதனுக்குப் பிறகு முதல் சாவுவரை எதத்னையோ துன்பமும், தொல்லையும், இருக்க இந்தக் கடவுள், கருமம், மோட்ச – நரகத் தொல்லைகள் ஒருபுறம் மனிதனைச் சித்திரவதை செய்கிறது. மனிதன் (ஜீவ கோடிகள்) பிறப்புக்கும், வாழ்க்கைக்கும், சாவுக்கும் இடையில் அனுபவிக்கும் இன்பம், துன்பம், கவலை, தொல்லை முதலிய காரியங்களுக்கு அவசியம் என்ன? காரணம் என்ன? என்பதை எவனாலும் இதுவரை தெரிந்து கொள்ள முடியவில்லையே! இத்தனைக்கும் மனிதன் கழுதை, குதிரை, நாய், நரி, எருமை, யானை, புலி, சிங்கம், ஈ, எறும்பு முதலான எண்ணிறந்த ஜீவராசிகளைவிட அதிகமான அறிவு (பகுத்தறிவு) படைத்தவனாவான்.

இந்தப் பகுத்தறிவின் பயனால்தான் மற்ற ஜீவப்பிராணிகளுக்கு இல்லாத தொல்லையை மனிதன் அனுபவிக்கிறான். காரணம், இந்தப் பாழாய்ப்போன கடவுளால் தான் அதிகத் தொல்லை என்பேன்.

"உள்ளத்தைப் பங்கிட்டு உண்பது," "உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது" என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு, வேலையோ, அவசியமோ இருக்காது.

இப்போது கையில் வலுத்தவன் காரியமாகவும், அயோக்கியன் ஆதிக்கமாகவும் இருப்பதால், மனிதன் அறிவு இருந்தும் தொல்லைக்கும் துன்பத்திற்கும் ஆளாகிறான் - அடிமையாக வாழ்கிறான்.

இனி ஒரு அய்ம்பது ஆண்டுக்குள் மனிதனுக்கு சராசரி வயது 100–ஆகப் போகிறது. இது உறுதி. இப்பொழுதே பல நாடுகளில் சராசரி மனித வயது
67-முதல் 74-வரை இருந்து வருகிறது. நமது நாட்டில் 1950–ல் சராசரி வயது 32- ஆக இருந்தது. இன்று 50-ஆக ஆகிவிட்டது! இதற்குக் காரணம், 1940–ல் படித்த மக்கள் நம்நாட்டில் 100–க்கு 9–பேராக இருந்தவர்கள் காமராசர் முயற்சியால் 100– க்கு 50–பேராக ஆனதுதான். அதோடு கூடவே, "கடவுளும்," "கடவுள் செயலும்" வெகுதூரம் குறைந்து மறைந்து வருவதும் தான் என்று சொல்லுவேன்.

கடவுள் மறைய மறைய மனிதனுக்கு அறிவு வளரும்; சுதந்திரம் அதிகமாகும். நமது பெண்களுக்குப் பூணர சுதந்திரம் இருக்குமானால் - வாழ்வில் சுயேச்சையும், சமத்துவமும் ஏற்படுமானால், மனிதன் அறிவும், ஆயுளும் எல்லை இல்லாமல் வளர்ந்து கொண்டே போகும்.

முதலில் கடவுள் எண்ணம் மறையட்டும். இன்னும் நம்நாட்டு ஆட்சியாளர்களுக்கு (உண்மையான) தி.மு.க. காரருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர்கள் (தி.மு.க.காரர்) இனியும் இரண்டு லட்சம் மெம்பர்களைச் சேர்க்க வேண்டும். பிறகு இவர்களை அசைக்க எந்த மாஜிகளாலும் முடியாது.

இது தான் கடவுள் இரகசியம்.----------------------------------03.11.1970- "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்

37 comments:

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர்மீது புதிய கரிசனம் ஏன்?

செவ்வாய், 09 ஜூன் 2015


அம்பேத்கரின் மீதான காவிகளின் கரிசனம் மிகவும் வஞ்சகமானது.

கொஞ்சம் பழைய கதை. 11ஆம் நூற்றாண்டு வரை அதாவது `பரிபாடல் காலம் வரை தமிழகத்தில் சுப்பிரமணியன் கிடையாது முருகன் மட்டுமே உண்டு. வேலவன் என்றும் அவனை அழைப்பர். குறிஞ்சி நிலக்கடவுள் அவர். அவருக்கு ஒரே மனைவி வள்ளிக்குறத்தி. பின்னர் வடநாட்டு சுப்பிரமணியனையும் முருகனையும் இணைத்து கதையுண்டாக்கி; சுப்பிரமணியன் மனைவி தெய்வானையை முருகனுக்கும் மனைவி யாக்கி; வள்ளிக்குறத்தியை சக்களத்தி ஆக்கி விட்டார்கள்; அரவணைத்தும் தோளில் கைப் போட்டும் அழித்தொழிப்பதில் அவர்கள் வல்லவர்கள். சரி ! நாம் ஏமாளியானால்; தூங்கினால் அவர்கள் தொடையில் கயிறென்ன வடமே திரிப்பார்கள். அம்பேத்கர் பெயரை மகாராஷ்டிர பல்கலை.க்கு வைத்தபோது கொந்தளித்த காவிக்கூட்டம் இன்று திடீரென உரிமை கொண்டாடுவது ஏன்?

வாஜ்பாய் அமைச்சரவையில் பங்கு விலக்கல் துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி எனும் பிராமணிய அறிவுஜீவி பெரியாரும் - அம்பேத்கரும் தவறான தலைவர்கள் எனப் பேசியும் எழுதியும் வந்தார். கீஷீக்ஷீலீவீஜீஜீவீஸீரீ திணீறீமீ நிஷீபீ என அம்பேத்கரை அசிங்கப்படுத்தி ஒரு நூலே எழுதினர். தலித் இயக்கங்கள் கடுமையாக எதிர்த்தன. முற்போக்காளர்கள். இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்தனர். சங்பரிவார் அந்நூலைத் தூக்கிச் சுமந்தது. இப்போது திடீரென அதையெல்லாம் நாம் மறந்திருப்போம் எனக் கருதி வாயினிக்கப் பேசி வஞ்சக நாடகமாடுகின்றனர். அம்பேத்கரை ஒரு சாமியாக்கி விட்டு அவரது கொள்கைகளைப் புதைப்பதுதான் நோக்கம். இதை உணர்க! சரி! வைதீகத்தை - சனாதனத்தை எதிர்த்துக் கிளம்பிய சமணத்தையும், புத்தத்தையும் தனது ஒரு பகுதி என இந்துத்துவா வாதிடுகிறது. நம் கேள்வி சீனா, பர்மா, ஜப்பான் உள்ளிட்ட நாடு களில் புத்தமதத்தை பின்பற்றுவோரே அதிகம்; அப்படியானால் அவர்கள் இந்துக்களா? அப்படிச் சொன்னால் உலகம் கைக்கொட்டிச் சிரிக்காதோ?

அம்பேத்கர் நான் இந்துவாகப் பிறந்தேன் இந்துவாகச் சாகமாட்டேன் என சபதமிட்டு புத்தமதத்துக்கு மாறினாரே! அவரை இந்துத்துவ சக்திகள் இப்போது உரிமை கொண்டாடுவது வஞ்சக நோக்கின்றி வேறென்ன?

அம்பேத்கர் சிலை இந்தியா முழுவதும் ஊருக்கு வெளியேயும் - சேரிப்புறத்திலும் மட்டும் அமைக்கப்பட்டு இருப்பதேன்? ஆதிக்க வெறியும் மேல்சாதி ஆணவமும் இன்னும் நீடிப்ப தால்தானே? பெரியாருக்கும் - அம்பேத்கருக்கும் மார்க் சிஸ்ட்டுகளுக்கும் கோட்பாடு ரீதியாக சில மாறுபாடு உண்டு ஆனால் அவை முரண்பாடல்ல; பகையல்ல; ஒருவருக்கொருவர் எதிரியல்ல; இன்னும் வலுவாக இந்துத்துவாவை எதிர்ப்பது என்பதில்தான் இவர்களுக்குள் போட்டி; இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களை விரைந்து கைதூக்கிவிடுவது என்பதில்தான் போட்டி; ஆகவே மித்தரபேதம் கற்பித்து இவர்களை மோதவிட கனவுகாணும் சங்பரிவார் முயற்சி பலிக்காது.

- சுபொஅ

நன்றி: தீக்கதிர் 9.6.2015Read more: http://www.viduthalai.in/e-paper/102961.html#ixzz3cZcdMyzb

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர்மீது புதிய கரிசனம் ஏன்?

செவ்வாய், 09 ஜூன் 2015


அம்பேத்கரின் மீதான காவிகளின் கரிசனம் மிகவும் வஞ்சகமானது.

கொஞ்சம் பழைய கதை. 11ஆம் நூற்றாண்டு வரை அதாவது `பரிபாடல் காலம் வரை தமிழகத்தில் சுப்பிரமணியன் கிடையாது முருகன் மட்டுமே உண்டு. வேலவன் என்றும் அவனை அழைப்பர். குறிஞ்சி நிலக்கடவுள் அவர். அவருக்கு ஒரே மனைவி வள்ளிக்குறத்தி. பின்னர் வடநாட்டு சுப்பிரமணியனையும் முருகனையும் இணைத்து கதையுண்டாக்கி; சுப்பிரமணியன் மனைவி தெய்வானையை முருகனுக்கும் மனைவி யாக்கி; வள்ளிக்குறத்தியை சக்களத்தி ஆக்கி விட்டார்கள்; அரவணைத்தும் தோளில் கைப் போட்டும் அழித்தொழிப்பதில் அவர்கள் வல்லவர்கள். சரி ! நாம் ஏமாளியானால்; தூங்கினால் அவர்கள் தொடையில் கயிறென்ன வடமே திரிப்பார்கள். அம்பேத்கர் பெயரை மகாராஷ்டிர பல்கலை.க்கு வைத்தபோது கொந்தளித்த காவிக்கூட்டம் இன்று திடீரென உரிமை கொண்டாடுவது ஏன்?

வாஜ்பாய் அமைச்சரவையில் பங்கு விலக்கல் துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி எனும் பிராமணிய அறிவுஜீவி பெரியாரும் - அம்பேத்கரும் தவறான தலைவர்கள் எனப் பேசியும் எழுதியும் வந்தார். கீஷீக்ஷீலீவீஜீஜீவீஸீரீ திணீறீமீ நிஷீபீ என அம்பேத்கரை அசிங்கப்படுத்தி ஒரு நூலே எழுதினர். தலித் இயக்கங்கள் கடுமையாக எதிர்த்தன. முற்போக்காளர்கள். இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்தனர். சங்பரிவார் அந்நூலைத் தூக்கிச் சுமந்தது. இப்போது திடீரென அதையெல்லாம் நாம் மறந்திருப்போம் எனக் கருதி வாயினிக்கப் பேசி வஞ்சக நாடகமாடுகின்றனர். அம்பேத்கரை ஒரு சாமியாக்கி விட்டு அவரது கொள்கைகளைப் புதைப்பதுதான் நோக்கம். இதை உணர்க! சரி! வைதீகத்தை - சனாதனத்தை எதிர்த்துக் கிளம்பிய சமணத்தையும், புத்தத்தையும் தனது ஒரு பகுதி என இந்துத்துவா வாதிடுகிறது. நம் கேள்வி சீனா, பர்மா, ஜப்பான் உள்ளிட்ட நாடு களில் புத்தமதத்தை பின்பற்றுவோரே அதிகம்; அப்படியானால் அவர்கள் இந்துக்களா? அப்படிச் சொன்னால் உலகம் கைக்கொட்டிச் சிரிக்காதோ?

அம்பேத்கர் நான் இந்துவாகப் பிறந்தேன் இந்துவாகச் சாகமாட்டேன் என சபதமிட்டு புத்தமதத்துக்கு மாறினாரே! அவரை இந்துத்துவ சக்திகள் இப்போது உரிமை கொண்டாடுவது வஞ்சக நோக்கின்றி வேறென்ன?

அம்பேத்கர் சிலை இந்தியா முழுவதும் ஊருக்கு வெளியேயும் - சேரிப்புறத்திலும் மட்டும் அமைக்கப்பட்டு இருப்பதேன்? ஆதிக்க வெறியும் மேல்சாதி ஆணவமும் இன்னும் நீடிப்ப தால்தானே? பெரியாருக்கும் - அம்பேத்கருக்கும் மார்க் சிஸ்ட்டுகளுக்கும் கோட்பாடு ரீதியாக சில மாறுபாடு உண்டு ஆனால் அவை முரண்பாடல்ல; பகையல்ல; ஒருவருக்கொருவர் எதிரியல்ல; இன்னும் வலுவாக இந்துத்துவாவை எதிர்ப்பது என்பதில்தான் இவர்களுக்குள் போட்டி; இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களை விரைந்து கைதூக்கிவிடுவது என்பதில்தான் போட்டி; ஆகவே மித்தரபேதம் கற்பித்து இவர்களை மோதவிட கனவுகாணும் சங்பரிவார் முயற்சி பலிக்காது.

- சுபொஅ

நன்றி: தீக்கதிர் 9.6.2015Read more: http://www.viduthalai.in/e-paper/102961.html#ixzz3cZcdMyzb

தமிழ் ஓவியா said...

ராமன் கோயிலைக் கட்டா விட்டால்
அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்

மோடியை மிரட்டுகிறது சிவசேனா
மும்பை, மே 9_ ராமர் கோவில் விவகா ரத்தை வைத்து தான் இந்துக்களின் நம்பிக் கையைப் பெற்று ஆட் சிக்கு வந்தீர்கள், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு ராமர்கோவில் கட்ட காலம் தாழ்த்தினால் மக்கள் உங்களை வெறுத்து ஒதுக்கிடுவார்கள், ஆகவே மன்கி பாத் நிகழ்ச்சியில் ராமர் கோவில் விவகாரத் திற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசவேண்டும் என்று சிவசேனா அதி காரப் பூர்வ ஏடான சாம்னா தனது தலை யங்கத்தில் குறிப்பிட் டுள்ளது. மோடி தன்னுடைய ஓராண்டு ஆட்சியில் நடந்த தோல்விகளை மறைக்க கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் தனது ஆட்சியின் மிக முக்கிய பிரச்சனை யான இந்துத்துவா மற் றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித் தும் பேசியிருந்தார். அதில் எனது ஆட்சி இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுத்துக் கொடுத்துள்ள பாதையில் தான் செல் கிறது. சிறுபான்மையின ருக்கு எந்த வடிவில் பாதிப்பு நிகழ்ந்தாலும் நான் பொறுத்துக் கொண்டு இருக்க மாட் டேன். சிறுபானையினர் இரவு 2 மணிக்குக் கூட என்னை நேரில் சந்தித்து தங்களது பிரச்சனை களைக் கூறலாம் என்று தேர்தல் பிரச்சார மேடைப் பேச்சு போல் பேசியிருந்தார். மோடியின் சிறுபான்மையினர் மீதான இந்தக் கரிசனப் பார்வை பலரது புருவங்களை உயர்த்தியது. ஆனால் மோடியின் பேச்சு எல் லாம் நடிப்பு தான் என்று சிவசேனா தலைமை தங்களது நாளிதழான சாம்னா மூலமாக மறை முகமாக காட்டிக் கொடுத்துவிட்டது. சாம்னாவின் தலை யங்கத்தில் எழுதியதன் விபரம் வருமாறு:

சிறுபான்மையினருக்கான மோடியின் பேச்சு குறித்து பலர் வியப்படைந்துள் ளனர். ஆனால் மோடி யின் பேச்சில் உள்ளார்ந்த விளக்கம் இந்துத்துவாதி களுக்கு மாத்திரமே தெரி யும், மோடி மறைமுகமாக மதம்மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ள சிறு பான்மை மதத்தலைவர் களுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளார். இது இந்து நாடு; இங்கு வேறுமதத் தலைவர்களுக்கு வேலை யில்லை, வேறு மதத்தலை வர்களுக்கு மோடி கசப் பான மருந்தைக் கொடுத் துள்ளார். முக்கியமாக பிரிவினை பேசும் காஷ்மீர் தலைவர்களுக்கும், இங் குள்ள ஒவைசி போன்ற வர்களுக்கும் தான் மோடியின் இந்த பேச்சு கசப்பான மருந்தாகும். அவர்கள் தான் கவலைப் படவேண்டும், இந்துக் களின் மடியில் கன மில்லை ஆகையால் இந் துக்கள் மோடியின் பேச்சால் பாதிக்கப்படப் போவதில்லை, பொதுச் சிவில் சட்டம் குறித்த சரியான பாதையில் மோடி சென்று கொண்டு இருக்கிறார். இது அவரது தற்போதைய நடவடிக்கை யில் தெரியவராது ஆனால் அவர் இதைச் செய்வார் என்று சிலருக்கு மாத்தி ரம் (சங்கப் பரிவாரத் தலைவர்கள்) தெரியும். காஷ்மீருக்கான சிறப்பு தகுதியை ரத்து செய்ய வேண்டும் என்பதில் மோடிக்கும் பாஜக தலை வர் அமித்ஷாவிற்குமி டையே கருத்துவேறுபாடு கிடையாது. எதை எப் போது செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்கத் தான் பாஜக தலைமையி னால் ஆன ஆட்சிக்கு முழு பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். ராமர் கோவில் விவ காரம் குறித்து மீண்டும் சர்ச்சை எழும்பத்துவங்கி யுள்ளது. இது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை.

மக்கள் ராமர்கோவில் கட்ட முழு விருப்பம் தெரிவித்து மோடியின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். மோடிக்கு மக்களின் எண்ண ஓட்டம் என்ன என்பது நன்கு தெரியும், ஆகவே ராமர் கோவில் விவகாரத்தை வாஜ்பாய் அரசைப் போல் பரணில் தூக்கிப் போட முடியாது. அல்லது அதை மீண்டும் பேச்சு வார்த்தை என்ற பெயரில் இழுத்தடிக்க முடியாது. ஒராண்டில் மோடிக்குப் பழைய தவறுகளைத் திருத்தவே நேரம் சரியாகப் போய் விட்டது. இனிவரும் ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட வேண்டும். மக்களின் எண்ணம் ராமர் கோவில் தான்; அதை மோடி தலைமையினால் ஆன அரசு விரைவில் கட்டித் தர வேண்டும். அதே நேரத்தில் மோடி வானோலியில் பேசும் நிகழ்ச்சியான மன் கி பாத்தில் ராமர் கோவில் விவகாரம் குறித்துப் பேசவேண்டும் காலம் தாழ்த்தினால் மக்கள் மோடியை வெறுக்கத் துவங்கிவிடுவார்கள், அதன் பிறகு வாஜ்பாய் அரசுக்கான அதே நிலைதான் மோடிக்கும் ஏற்படும் என்று அந்த தலையங்கத்தில் எழுதி யுள்ளார்கள்.Read more: http://www.viduthalai.in/e-paper/102957.html#ixzz3cZcuZg4w

தமிழ் ஓவியா said...

சென்னை அய்.அய்.டி. விவகாரம்:

இயக்குநர் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை

ஜூலை 6இல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவுபுதுடில்லி, ஜூன்.9- சென்னை அய்.அய்.டி.யில் உள்ள அம்பேத்கர் _ -பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப் புக்கு தடை விதித்தது தொடர்பாக விளக்கம் அளிக்க சென்னை அய்.அய்.டி. இயக்குனர் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத் தின் செயலாளர் ஆகி யோர் நேரில் ஆஜராக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் நோட் டீசு அனுப்பியிருந்தார்.

அதன்படி நேற்று சென்னை அய்.அய்.டி. இயக்குநர் (பொறுப்பு) பாஸ்கரன் ராமமூர்த்தி மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை செயலாளர் பிர வீண் குமார் (முன்னாள் தமிழக தேர்தல் ஆணை யர்) ஆகியோர் தேசிய ஆதி திராவிட ஆணையத் தின் தலைவர் பி.எல். புனியா முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

விசாரணை கூட்டம் முடிந்ததும் தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் தலைவர் பி.எல்.புனியா செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

சென்னை அய்.அய்.டி. இயக்குநரிடம் எதன் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டது என்று விளக்கம் கேட்கப் பட்டது. முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த விளக்கத்தை தேசிய ஆதி திராவிடர் ஆணையம் ஏற்கவில்லை. இந்த விளக் கம் முழுமையானதாகவும் திருப்தி அளிப்பதாகவும் இல்லை என்பதால் பத்து நாட்களுக்குள் பதிலளிக்கு மாறு மேலும் ஒரு நோட்டீசு சென்னை அய்.அய்.டி.க்கு அனுப் பப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 6-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப் பித்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறி னார்.Read more: http://www.viduthalai.in/e-paper/102960.html#ixzz3cZd69cQI

தமிழ் ஓவியா said...

தமிழர் நலம் பெற...


தமிழ்நாடும், தமிழ்மொழியும், தமிழர் தன்மானமும், விடுதலையும் பெற்று வளர்ச்சியடைய வேண்டுமானால், தமிழன் காரியத்தில் தமிழனல்லாதவன்- அவன் எப்படிப்பட்டவன் ஆனாலும் தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டும். இதை வேறு எதை ஒழித்தாவது ஒழிக்கவேண்டும்.
(குடிஅரசு, 19.2.1944)Read more: http://www.viduthalai.in/page-2/102951.html#ixzz3cZdNOIL4

தமிழ் ஓவியா said...

இதயம் காக்க! இதோ ஒரு காப்பீடுப் புத்தகம்!


கடந்த 4.6.2015 அன்று தி.மு.க. பொதுச் செயலாளரும், இனமானப் பேராசிரியரும், தமிழ்நாட்டின் மூத்த சுயமரியாதைக்காரருமான க. அன்பழகனார் அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்து சிறிது நேரம் உரையாடி மகிழ்ந்து விடை பெற்றுக் கொண்டோம்.

என்னுடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பேராசிரியர் மங்கள முருகேசன் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

அப்போது அங்கே, பேராசிரியர் அவர்களது மூத்த மருமகனும், பிரபல இதய நோய் மருத்துவ நிபுணருமான டாக்டர் வி. சொக்கலிங்கம் அவர்களும் அவரது வாழ்விணையர் (பேராசிரி யரின் மூத்த மகள்) டாக்டர் செந் தாமரை அவர்களும் உடன் இருந் தனர்.

டாக்டர் வி. சொக்கலிங்கம், இதயப் பாதுகாப்பு - நலன் பற்றி தொலைக் காட்சிகளிலும் மற்றும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளிலும் எளியவர்களுக்கும் புரியும் வண்ணம் எடுத்து விளக்கி, இதய நோய் வராமல் தடுக்க வழி முறைகளைச் செய்வதைக் கடமையாக கொண்ட மக்கள் நல மருத்துவர்.

அவர் 2008இல் எழுதி, இதுவரை பதினான்கு பதிப்பாக வெளிவந்த நூல்-
இதயம் காக்க..

மாரடைப்பு தடுக்கும் குணப் படுத்தும் வழிமுறைகள்! என்ற மிக அருமையான நலப் பாதுகாப்பு கவசம் போன்ற புத்தகத் தினை எங்களுக்கு அளித்து மகிழ்ந் தார். நன்றியுடன் பெற்றுக் கொண்டேன்.

சிறு குழந்தைகள் எப்படி புது பொம்மையை அவரது பெற்றோர் களோ, நண்பர்களோ வாங்கிக் கொடுத்த பின், உடனடியாக அதனைத் திறந்து பார்த்து மகிழ அவசரப்படு வார்களோ, அதுபோன்ற சுபாவம் - பழக்கம் எனக்குப் புத்தகங்களைப் பொறுத்தவரை நிரம்ப உண்டு!

தமிழ் ஓவியா said...

காரில் ஏறி அமர்ந்து அடையாறு இல்லம் சேருமுன் நான் ஏறத்தாழ பாதி நூலை வேகவேகமாகப் படித்து முடித்தேன்; பெரிதும் சுவைத்தேன். 45 மணித் துளிகள் பறந்தன!

எளிய பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில், அரிய செய்திகளை வினயத் தோடும் விவரங்களோடும் எழுதியுள்ளார் டாக்டர்!

முதல் பகுதி மனமும் இதயமும் என்ற தலைப்பில் பல்வேறு அடிப்படைக் கருத்து விளக்கம். பகுதி 22: மாரடைப்பு, வருமுன் காக்க, வந்த பின் காக்க என்ற பகுதி மிக முக்கியமானதாகும். மாரடைப்பு, மாரடைப்பு வர அபாய காரணங்களும் அதிலிருந்து விடுபடுவ தற்கான வாழ்க்கை முறைகளும், மனதின் போராட்டமும், மனதின் அழுத்தமும், மனதின் வலி, மனப் போராட்டத்தைத் தவிர்க்க கையாளும் வாழ்க்கை முறைகள் என்று துவங்கி சுமார் 30 தலைப்புகளில், வகுப்புப் பாடங்களைப் போன்று, எழுதி மகிழ்ந்தார். மூன்றாம் பகுதி (3): மாரடைப்பு - அவரவர் பார்வையில் எனது அனுபவங் களைப் பகிர்ந்து கொள்ள இப்படி மிகவும் பயனுள்ள முக்கிய தகவல்கள்!

மருத்துவத்தைத் தாண்டி அந்நூலில் டாக்டர் வி. சொக்கலிங்கம் கூறும் சில முக்கிய கவன ஈர்ப்புப் பகுதியை எடுத்துக்காட்டாகத் தர விரும்புகிறோம்.

ஒவ்வொரு சிந்தனைக்கும், செய லுக்கும், நாமே நமக்குத் தடையை விதித்து (Limiting belief)  நம்மைச் சிறைப்படுத்தி, நாம் கட்டுண்டு போவதால் (invisible Chains) நம் சக்தியை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

உதாரணம்; யானை, குட்டியாக இருக்கும் பொழுது, எங்கும் ஓடாமல் இருக்க ஒரு காலில் சங்கிலியால் கட்டி வைப்பான் - யானைப் பாகன். அதே யானை வளர்ந்த பிறகும், சங்கிலியால் கட்டுண்ட காலை மட்டும் அசைக்கா மலும், மற்ற கால்களை அசைத்துக் கொண்டும் ஒரே இடத்தில் நிற்கும். சிறு வயதில் இருந்தே பதிந்த ஆழ்ந்த எண்ணங்களால் அதன் உண்மைப் பலத்தையும், சக்தியையும் மறந்து, செயற்படும் திறமையற்ற நிலைமையில் இருக்கின்றது.

உண்மையில், காலில் கட்டியுள்ள சங்கிலி அந்த யானைக்கு, ஒரு பொருட்டே இல்லை. இதே நிலை யில் தான், பல மனிதர்கள், சிறு வயதில் தம் மனதில் பதிந்த எண்ணங்களால், மனதளவில், தங்களைத் தாங்களே கட்டிப் போட்டுக் கொண்டு, வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் அடையாமல் இருக் கிறார்கள். இவர்கள் வலது மூளையின் திறனை வளர்த்துக் கொண்டால், கட்டிப் போட்ட மனநிலையில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு வாழ்வில் முன் னேற்றம் காண முடியும்.

உதாரணம்: 1. பள்ளியில் படிக்கும் குழந்தைகளை சிறு வயதில் இருந்தே, நீ உருப்படவே மாட்டாய், எதற்கும் லாயக்கு இல்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லி, அந்தக் குழந்தை யின் மனதில் அது பதிந்து விடுமா யின், அவன் உண்மையிலேயே உருப்படாமல் போய் விடுவான்.

எரியும் விளக்கிற்கே கூட தூண்டு

கோல் வேண்டும் என்ற நிலையில், அது மனிதனுக்கும் இன்றியமை யாதது அன்றோ!

உதாரணம்: 2 ஜாதகத்தையே முழுமையாக நம்பியவர்களால் தண்ணீரில் தான் உனக்கு கண்டம் உண்டு என்று அடிக்கடி சொல்லிச் சொல்லி, அந்த மாணவன் நீச்சல் அடிக்கும் திறமையையே இழந்து விட்டவனாகிறான்.

அஸ்ட்ராலஜிஸ்ட், நேமாலஜிஸ்ட், நியூமராலஜிஸ்ட், ஜெம்மாலஜிஸ்ட் போன்றவர்களின் கற்பனைக் கூற்றை ஏற்று, அதனால் நம்பிக்கையைப் பெற்று, மன நிம்மதியுடன் வாழ்வதற்கு மறுப்புச் சொல்பவனாக நான் இல்லா விடினும், நீங்கள் இந்த கார்டிய லஜிஸ்டின் கூற்றையும் எண்ணிப் பார்த்து ஏற்று, மனதை மாற்றிக் கொண்டு, தம் நிலை அறிந்து, அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும், நீண்ட காலம் நலத்துடன் வாழ வழி செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே நான் இவற்றைத் தெரிவித்துள்ளேன்.

- இன்னும் சுவையான, தேவை யான நல வாழ்வுக்கான வழிகாட்டும் அறிவுரைகள், நம் வாழ்வை மகிழ்ச் சிப் பூங்காவாக்கிடக் கூறுகிறார்.

வாங்கிப் படியுங்கள் - இந்நூல் ஒவ்வொரு வீட்டுப் புத்தக அல மாரியிலும் இருக்க வேண்டும்  - அதைவிட முக்கியம் படித்து, உள் வாங்கி நடைமுறைப்படுத்த வேண் டும்.

இத்தகைய நல்ல பணி - அவர் அறிவுடைமையைப் பொது உடை மையாக்கிய போற்றத்தக்கப் பணி யாகும்!
வளர்க அவர்தம் தொண்டறம்!

தமிழ் ஓவியா said...

ராமராஜ்ஜியத்துக்கான அடித்தளம் - எச்சரிக்கை!


மகாராஷ்டிராவில் பிறந்த தலைவர்களுக்கு என புதிய பொது நினைவிடம் ஒன்று வைக்க அம்மாநில அரசு முடிவு செய்தது. இதில் சமூகநீதிக்களத்தில் நின்றுபோராடிய டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர், மகாத்மா புலே போன்ற தலைவர்கள் இல்லை, இஸ்லாமியத் தலைவர்களான மவுலானா அஸ்வக்குல்லா கான், அபுல்கலாம் ஆசாத் போன்ற தலைவர்கள் இல்லை, மாறாக இந்துத்துவாக் கொள்கைகளை தீவிரமாக மேற்கொண்ட தலைவர்கள் அனைவரும் இதில் இடம் பெற்றுள்ளனர். இது குறித்து சட்டசபையில் பேசிய தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது: மகாராஷ்டிராவில் பிறந்த பல்வேறு தலைவர்களுக்கு பல இடங்களில் நினைவிடங்கள் மற்றும் சிலைகள் உள்ளன.

ஆகையால் மக்கள் அறியாத பல தலைவர்களை உலகிற்குக் கொண்டு வரும் வகையில் அனைவருக்கும் பொதுவான ஒரு நினைவிடம் உருவாக்கப்படும் இதற்காக நரிமன்பாயிண்ட் அல்லது கொலாபா போன்ற பகுதியில் இடம் தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய மஸ்ஜித் எ - இர்தாதுல் முஸ்லீமின் என்ற அமைப்பின் சட்டமன்ற உறுப்பினரும், பத்திரிகையாளருமான இம்தியாஸ் ஜலீஸ் கூறும்போது மக்களின் பணத்தில் நலத்திட்டங்கள் செய்யாமல், கட்சியின் மறைந்த உறுப்பினர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்புவதால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்துப் அசாசுத்தீன் ஓவைசி கூறும்போது இந்தியாவிலேயே முதல் முதலாக சமூகநீதிப் போராட்டம் தொடங்கக் காரணமாக இருந்த மாநிலம் மகாராஷ்டிரா; இந்தியாவே கொண்டாடும் டாக்டர் பாபாசாகிப் அம் பேத்கர், மகாத்மா புலே மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அஸ்வக்குல்லா கான் மவுலானா அபுல்கலாம் ஆசாத் போன்றோர்களை அரசு மறைத்து வருகிறது, மேலும் இவர்களின் பங்கை மறைக்கும் விதமாக பல்வேறு கட்டு கதைகளை அரசு மறைமுகமாக பரப்பி வருகிறது, தற்போது மகாராஷ்டிரா தலைவர்களுக்கான நினைவிடம் என்ற பெயரில் பால் தாக்கரே, கோபிநாத்முண்டே, சாவாக்கர் போன்ற கட்சி மற்றும் மதம் சார்ந்த தலை வர்களை கவுரவிக்க முயல்கிறது என்று கூறியிருந்தார். இதுகுறித்து சிவசேனா தனது அதிகாரபூர்வ ஏடான சாம்னாவில் தலையங்கத்தில் மீண்டும் ஒரு பதிவை செய்துள்ளது. முஸ்லீம்கள் இங்குவந்து அறிவுரை கூறுவது நகைப்பிற்குரியதாக உள்ளது, அதுவும் எங்கள் மாபெரும் தலைவர்களின் நினைவிடங்கள் குறித்து விமர்சனம் செய்கிறார்கள், இதற்கான அருகதை அவர்களுக்கு உள்ளதா என்று தெரியவில்லை, நாட்டில் உள்ள மசூதிகள் எல்லாம் எப்படிக் கட்டினார்கள் என்று இங்குள்ள ஒவ்வொரு இந்துவுக்கும் தெரியும், மேலும் இந்துக்களின் புனித கோவில்கள் எல்லாம் எப்படி ஆக்கிரமிக்கப்பட்டு இடிக்கப்பட்டு மசூதிகள் ஆனது என்றும் தெரியும், மகா ராஷ்டிராவில் வாழ்ந்து மறைந்த தலைவர்கள் இந்துக்களின் தலைவர்கள் மட்டுமல்ல, அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை எந்த அளவுக்கு அடக்கி வைத்த தலைவர்கள், அவர்கள் இல்லையென்றால் இன்று இந்துக் களின் நிலை எந்த அளவிற்கு மோசமாகப் போயிருக்கும்?

தமிழ் ஓவியா said...

அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை மாத்திரம் அல்ல, இந்தியாவில் வாழ்ந்து கொண்டு இந்தியக் கலாச்சாரத்திற்கு விரோதமாக பேசும் மற்ற மதத்தவர்களின் கொட்டத்தை அடக்கியவர்களும் கூட; அதனால் தான் எங்கள் தலைவர் களின் நினைவிடம் என்ற பேச்சுக்கூட அவர்களின் (முஸ்லீம்களின்) வயிற்றைக் கலக்குகிறது, நமது நாடு சிறுபான்மையினர் என்ற பெயரில் சிலருக்கு அதிகமாக நிதிகளை ஒதுக்கி செலவழித்து வருகிறது. இதில் லாப மடைபவர்கள் முஸ்லீம்களே, இந்த நாடு ஒன்றும் தங்கச் சுரங்கத்தை தங்கள் வசம் வைத்துக்கொள்ளவில்லை, வந்தவர்கள் எல்லாம் சுரண்டிக்கொண்டு செல்ல, சமூக நீதிபற்றி பேசும் அசாசுத்தின் ஓவைசி உண்மையில் மக்கள் மீது அக்கறையுள்ளவராய் இருந்தால் ஹஜ் பயணத்திற்கு ஒதுக்கும் அரசின் நிதியை வேண்டாம் என்று கூறலாமே, அந்த நிதியை சமூகநீதி வேண்டி நிற்கும் மக்களுக்காக செலவழிக்க வழிவிடத்தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் சாம்னாவில் எழுதியுள்ளதாவது, இங்குள்ள கோவில்கள் அனைத்தையும் அபகரித்து அதன் மீது மசூதிகள் எழுப்பப்பட்டுள்ளன. உண்மையில் அக்கறை யிருந்தால் அந்த மசூதிகளை இடித்துவிட்டு அங்கு மீண்டும் கோவில் கட்ட வழிவிடுங்கள், நாட்டில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் வந்தே மாதரம் என்று கூறிய பிறகு அறிவுரை சொல்ல வாருங்கள் என்று மிரட்டும் தொனியில் எழுதியுள்ளது. இந்த தலையங்கம் குறித்து கருத்து தெரிவித்த இம்தியாஸ் ஜலீல், இது போன்ற எழுத்துக்கள் எழுதுவது சாம்னாவிற்கென்று உள்ள குணாதிசயம் ஆகும், தொடர்ந்து முஸ்லீம்களுக்கு ஓட்டுரிமை வேண்டாம், இஸ்லாமியர்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்த பிறகு ரேசன் கார்டு கொடுக்க வேண்டும் என்று எழுதித் தள்ளுகிறார்கள். அவர்களுக்கு எழுத உரிமை இருக்கிறது எழுதுகிறார்கள்; நாங்கள் அது குறித்து கவலைப்பட வில்லை, அதே நேரத்தில் அரசுக்கு சொந்தமான இடங்களில் என்ன என்ன செய்ய வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்திலேயே உள்ளது, தேவையில்லாமல் அரசு இடத்தில் மதத்தலைவர்களுக்கு நினைவிடம் கட்டுவதைக் கைவிடவேண்டும், பட்னாவிஸின் இந்த முடிவிற்கு எதிராக நாங்கள் நீதிமன்றம் செல்லவிருக் கிறோம் என்று பதிலளித்தார்.

போகிற போக்கைப் பார்த்தால் இந்தியாவின் மதச் சார்பற்ற சட்ட அமைப்பினைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு - அதனையே ஒரு நினைவுச் சின்னம் என்று குறிப்பிட்டு கல்வெட்டு ஒன்றைச் செதுக்கி வைத்துவிட்டு இன்று முதல் இந்தியா இந்து நாடு ஆகிறது என்று நாடாளுமன்றத்தில் சட்டம் செய்யக்கூட முயற்சிப்பார்கள் என்றே தோன்றுகிறது. இந்து நாடு என்று இதுவரை அறிவிக்காமல், அதே நேரத்தில் அதற்கான அடித்தளமி டும் வேலைகளில் பம்பரமாக சுற்றிச் சுற்றிக் செயல்பட்டுக் கொண்டுள்ளனர். காந்தியார் சுட்டுக் கொல்லப்படுவதற்கு மூளையாக இருந்த சாவர்க்கார் படம் நாடாளுமன்றத்தில் வைக்கப் படவில்லையா?

மண்ணுருண்டை மாளவியாவுக்கு பாரத ரத்னா பட்டம் அளிக்கப்படவில்லையா?

பி.ஜே.பி.யை வெறும் அரசியல் கட்சியாக மட்டும் பார்த்தால் இந்த உண்மைகள் எல்லாம் புரியாது கொஞ்சம் பகுத்தறிவுப் பார்வையில் கவனித்தால் இந்தச் சூட்சுமங்கள் தெரிய வரும். குறைந்தபட்சம் தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளாவது மதவாத பிஜேபியை முற்றிலுமாகத் தனிமைப்படுத்த வேண்டும். தப்பித் தவறி எந்த அரசியல் கட்சியாவது பிஜேபியோடு கைகோர்த்தால் அந்தக் கட்சியையும் சேர்த்துத் தனிமைப்படுத்த வேண்டும் - தந்தை பெரியார் பூமி தமிழ்நாடு என்பதற்கு அதுதான் அர்த்தமாகவும் இருக்க முடியும்.Read more: http://www.viduthalai.in/page-2/102952.html#ixzz3cZe1QnbP

தமிழ் ஓவியா said...

சர்க்கரை நோய் பற்றிய வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை


விடுதலை நாளிதழில் 25.5.2015இல் ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையான சர்க்கரை நோய் பற்றிய சில புரட்டுகளுடன் உண்மை களும் என்ற கட்டுரை மிகவும் பயன் தரத்தக்கதாக இருந்தது. முழு வதுமாக படித்த போது சிறந்த மருத்துவர் கூட தர முடியாத அருமையான அறிவுப்பூர்வமான குறிப்புகளாக இருந்தது. இன்றையக் காலக்கட்டத்திலே பெரும்பாலோருக்கும் சர்க்கரை நோய் தவிர்க்க முடியாததாகி விட்ட சூழ்நிலையில் அது வந்த பின் எப்படி கட்டுப்பாட்டிற்குள் வைப்பது என்பது குறித்தும் - சர்க்கரை நோய் பற்றிய புரட்டுகளை விளக்கமாக புரட்டு எண் 1 முதல் 5 வரை புரட்டு - உண்மை என்று அருமையான விளக்கமாக தெளிவுரை கிடைத்தது. எனக்கும் type-2 சர்க்கரை இருந்தாலும் மருத்துவரின் மாத்திரைகள், நடைபயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகிய வற்றால் கட்டுக்குள் வைத்திருந்தாலும், ஆசிரியர்கள் கட்டு ரைகள் எனக்கு மட்டுமல்ல பல்லா யிரக்கணக்கான வாசகர்களுக்கும் இன்றைய கால கட்டத்தினை பயன் தரத்தக்கதாய் அமைந்துள்ளது.

விடுதலை 26.5.2015 ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந் தனைக் கட்டுரையில் மவுனம் அமைதி யின் விழுமிய சிந்தனையும் பயனும் என்ற கட்டுரை மிகவும் அற்புதமாக இருந்தது. அருமையான நூல் கிருஸ்டோபர் அன்சார்டு என்பவர் எழுதியThe Tibetan Art of Living  புத்தகத்திலிருந்து அருமை யான விளக்கங்களை நமக்கு தருகிறார் ஆசிரியர்.

Wise body -- புத்திசாலித்தனமான உடல்
Wise mind -புத்திசாலித்தனமான மனம்

Wise Life -  புத்திசாலித்தனமான வாழ்க்கை என்ற தலைப்பில் பல செய்திகள் - அதில் மன அமைதி ஷிவீறீமீஸீநீமீ  என்பது அவசியம் நம் வாழ்வில் எவ்வளவு முக்கிய மானது என்பதற்கான அரிய விளக்கம் குறித்தும் கட்டுரை முழுவதும் சிறப்பாக எழுதியிருக் கிறார்கள். ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைகள் மக்களின் - மன இருளைப் போக்கும் பகுத்தறிவுச் சூரியனாக பிரகாசிக்கிறது.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- தி.க.பாலு
(மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல் - 3)

தமிழ் ஓவியா said...

அய்.அய்.டி.யில் தடை நீக்கம்: தலைவர்கள் வரவேற்பு

சென்னை, ஜூன் 9_ அய்.அய்.டியில் அம்பேத் கர், பெரியார் மாணவர் வட்டத்திற்கான தடை நீக்கப்பட்டதை கட்சித் தலைவர்கள் வரவேற்றுள் ளனர். இது தொடர்பாக தனது டுவிட்டர் செய்தி யில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:

ராகுல் காந்தி

இதற்கு தனது மகிழ்ச் சியை தெரிவித்தார் ராகுல் காந்தி. இந்த விஷ யத்தில் மோடி அரசு, பின் வாங்கியுள்ளது. இது மாணவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேஸ்புக் கில் கூறியிருப்பதாவது: அய்.அய்.டி. சென்னை யில் மீண்டும் அம்பேத்கர்_- பெரியார் மாணவர்  வட் டம் சுதந்திரமான மாண வர் அமைப்பாக செயல் படுவதற்கு அனுமதி அளிக் கப்பட்டுள்ளதை மனதார வரவேற்கிறேன். விவா தங்களுக்கும், கருத்துப்  பரிமாற்றங்களுக்கும் நமது கல்வி நிறுவனங்கள் போதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

ஆட் சேபணைக்குரிய கருத்துக் கள் பற்றி  விவாதிப்பதற் குக் கூட கல்வி நிறுவனங் களில் மாணவர்களுக்கு சுதந்திரம் இருக்கவேண் டும். சட்டத்திற்கு உட் பட்டும், கல்வி நிறுவனத் தின்  விதிமுறைகளுக் குட்பட்டும் கருத்துக் களைப் பரிமாறிக் கொள் வதற்கு மாணவர் அமைப்பு களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கவேண்டும்.

நம் நாட்டின் நாளைய எதிர்காலம் இளைய தலைமுறைதான். எனவே, அவர்கள் ஆக்கப்பூர்வ மான விவாதங்களில் பங்கேற்பதற்கும், தங்களது  வேறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் உரிய சுதந்திரத்தை நாம் வழங்க வேண்டும் என் பதை இந்த தருணத்தில் வேண்டுகோளாக வைக்க  விரும்புகிறேன்.

ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன் (த.மா.கா): மாணவர்களின் தொடர் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் அய்அய்டி  நிர்வாகத்துக் கும் அய்அய்டி அம்பேத்கர் -_பெரியார் வாசகர் வட்ட  நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை யின் முடிவில் அந்த அமைப்புக்கு விதிக்கப்பட் டிருந்த தடை   நீக்கப்பட் டுள்ளது. உடன்பாடு ஏற்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி. மேலும் மாண வர்கள் இனிமேல் படிப் பில் முழு கவனம் செலுத்தி வெற்றி பெற  வேண்டும்.

முத்தரசன்

முத்தரசன் (இந்திய கம் யூனிஸ்ட் மாநில செயலா ளர்): சென்னை அய்அய்டி நிர்வாகம் கடந்த 6 ஆம் தேதி மாணவர் அமைப்பு டன் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை  நடத்தி, தடையை விலக்கி, அம் பேத்கர்-_பெரியார் வாசகர் வட்டத்தை மீண்டும் அங்கீகரித்துள்ளது. கருத் துரிமை பாதுகாப்புக்கான ஒன்றுபட்ட போராட்டத் திற்கு கிடைத்த குறிப்பிட் டத்தக்க வெற்றியாகும்.

இப்போராட்டத்தை ஆத ரித்தவர்களுக்கும், பங் கேற்றோர்களுக் கும் இந் திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது டன், அய்அய்டி நடவடிக் கையை வரவேற்கிறது.

தமிழ் ஓவியா said...

மதச்சார்பற்ற நாட்டில் கல்விக் கூடங்களில் கீதை, சூரிய நமஸ்காரமா?
நீதிமன்றம் செல்லுகின்றன இஸ்லாமிய அமைப்புகள்

புதுடில்லி, ஜூன் 10_  அகில இந்திய முஸ்லிம் சட்ட அமைப்பகம் மற் றும் சில சிறுபான்மை அமைப்புகள் ஒன்றி ணைந்து மகாராஷ்டிரா, அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அனைத்து மத மக்கள் மீதும் கீதை, சூரிய நமஸ் காரம், யோகா மற்றும் வேத சுலோகங்களை நெட்டுரு செய்ய வற்புறுத் துவதை எதிர்த்து உச்சநீதி மன்றம் செல்ல முடிவு செய்துள்ளது.    அரியானா, மகாராஷ் டிரா, ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங் களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டு வரு கிறது. இந்த மாநில அரசுகள் ஆட்சிக்கு வந்த உடனேயே இளம்வயதின ரின் கல்வித்திட்டத்தில் இந்துத்துவக் கொள்கை களை திணிக்கும் முயற்சி யில் ஈடுபட்டு வருகின்றன.    அரியானா மாநில அரசு, தான் ஆட்சிக்கு வந்த உடனேயே அரி யானா மாநிலத்திலுள்ள பள்ளிகள் அனைத்திலும் பகவத் கீதையை ஒரு பாடமாக சேர்த்தது. இதனைத் தொடர்ந்து யோகா, சூரிய நமஸ்காரம், மற்றும் வேதங்களில் உள்ள சுலோகங்களை எல்லாக் குழந்தைகளும் கட்டாயம் படிக்கவேண் டும் என்று உத்தரவிட்டி ருந்தது. அரியானாவைத் தொடர்ந்து மகாராஷ் டிராவில் அனைத்து மாந கராட்சிகளுக்கு உட்பட்ட பள்ளிகள் அனைத்திலும் பகவத் கீதை, ஒரு பாட மாக கட்டாயமாக்கப் பட்டது. மெல்ல மெல்ல அனைத்துப் பள்ளிகளுக் கும் கொண்டு செல்லும் திட்டத்தையும் முன்வைத் துள்ளது.

மகாராஷ்டிரா வில் உள்ள தனியார் பள்ளிகள் அனுமதியின் போது கட்டாயம் யோகா மற்றும் சூரிய நமஸ்காரத் திற்கு தனி ஆசிரியர்கள் நியமிக்கவேண்டும் என்ற நிபந்தனையும் சேர்க்கப் பட்டது. மேலும் யோகா சூரியநமஸ்காரத்திற்கான தனி வகுப்புகளும் கட்டா யப்படுத்தப்பட்டன. இந்த இரு மாநிலங்களைத் தவிர ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங் களி லுள்ள பள்ளிகளில் பகவத் கீதை சூரியநமஸ்காரம் கட்டயமாக்கப்பட்டது. இந்தியா போன்ற மதச் சார்பற்ற நாட்டில் குறிப் பிட்ட மதத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் காரணத்தாலும் மதம் சார்பான கட்சி ஆட்சியமைந்ததாலும் அரசியல் சட்டம் கூறிய மதச்சார்பின்மை குப்பை யில் தூக்கி எறியப்பட்டது.  இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் சட்ட அமைப்பு மற்றும் சிறு பான்மையினர், மாநில அரசுகளின் இந்த அரா ஜகப் போக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளனர்.  இது குறித்து முஸ்லிம் சட்ட ஆணையத்தின் பேச்சாளர் அப்துல் ரகீம் குரோஷி கூறியதாவது, இந்த நாடு, மதச்சார்பற்ற நாடு, இங்கு அனைத்து மதத்தவரும் அவர்களின் நம்பிக்கைப்படி வாழ உரிமை உள்ளது, முஸ்லிம் கள் அல்லாவை மட்டுமே வணங்குகின்றனர். இது அவர்களின் மதநம்பிக்கை தொடர்பான விவகாரம், ஆனால் சில மாநில அர சுகள் பள்ளிகளில் சூரிய நமஸ்காரம் செய்வதையும், பகவத் கீதைப் படிப்பதை யும் கட்டாயமாக்கியுள் ளார்கள்.  இந்தப் பள்ளி களில் முஸ்லிம் கிறிஸ்தவ மற்றும் இதர மதத்தைச் சேர்ந்த குழந்தைகளும் கல்விகற்கின்றனர். இதைக் கருத்தில் கொள்ளாது மத உணர்வுகளை வேண்டு மென்றே புண்படுத்தும் செயல்களைச் செய்துவரு கிறது.  மாநில அரசுகளின் இந்த செயல்கள் தேசியத் தின் ஒற்றுமையைச் சீர் குலைக்கும் விதமாக உள் ளது. தேச ஒற்றுமையை யும், சமூக அமைதியையும் பாதுகாக்கும் வகையில் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திடம் எடுத்துச் செல்ல உள்ளோம். நீதி மன்றம் செல்லாமல் இதற் குத் தீர்வு காணமுடியாது. மேலும் நாடு தழுவிய போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

செய்தியும்சிந்தனையும்

இதற்குப் பிறகாவது...

செய்தி: திராவிடக் கட்சிகளை யாராலும் அழிக்க முடியாதுதான்; ஆனால், அவர்களே அவற்றை அழித்து விடுவார்கள்.
- மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

சிந்தனை: இதற்குப் பிறகாவது எந்த ஒரு திராவிடர் கட்சியாவது பி.ஜே.பி.யுடன் கூட்டு வைத்துக்கொள்ள நினைத்தால், அவர்கள் தானாகவே அழிந்து விடுவார்கள் என்பது மட்டும் உண்மை.

குறிப்பு: தமிழ்நாட்டில் பி.ஜே.பி. பிறக்கும்போதே இறந்துதானே பிரசவமானது.

தமிழ் ஓவியா said...

ஜாதியை ஒழித்தாலே சமபங்கு நிலைக்கும்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜாதிப் பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும், ஒரே வருஷத்தில் பழையபடி ஆகிவிடும். ஜாதியைக் கவனிக்காமல், ஜாதியை ஒழிக்காமல் பொதுவுடைமை பேசுவது அரிச்சுவடி படிக்காமல், பி.ஏ. வகுப்பைப்பற்றிப் பேசுவதாகும்.

_ (குடிஅரசு, 9.2.1936)Read more: http://www.viduthalai.in/page-2/103022.html#ixzz3celQRcYX

தமிழ் ஓவியா said...

செல்லக்கிளி (எ) சு.அறி வுச்செல்வன் _ வ.சந்தியா ஆகியோரது வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவை திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை ஏற்று நடத்தி வைத்து பேசியதாவது:_ மணமகன் செல்லக்கிளி பழகுமுகாம் மாணவர் அவர் இரண்டு முறைதான் வாய் திறப்பார் ஒன்று கொட்டாவி விடும் போது இரண்டாவது சாப் பிடும்போது. பழகு முகாம் நிறைவில் அவருடைய பேச்சை நிறுத்த முடியாத அளவு பேசும் திறனை பழகு முகாம் வளர்த்தது என் பதை நினைவுபடுத்தி தந்தை பெரியார் கல்வி வள்ளல் காமராசர் உழைப்பால் பட்டிதொட்டி எங்கும் பள்ளிகளை தொடங்கி வைத் ததால் நாம் இன்றைக்கு நமது செல்லக்கிளி (எ) அன்புச்செல்வன் - மண மகள் வ.சந்தியா ஆகியோர் பட்டயப்படிப்பை முடித்து உள்ளனர். இந்த அளவுக்கு நாம் உயரக் காரணம் தந்தை பெரியார் பெற்று தந்த இடஒதுக்கீட்டால் என்பதை மறக்கக்கூடாது. இது சுயமரியாதைத் திரும ணம் இதுவே புரோகிதத் திருமணமாக இருந்தால் பார்ப்பான் சொல்லும் மந்திரம் நமக்கு ஒன்றும் புரியாது. மணமக்களுக்கும் ஒன்றும் புரியாது. தீ குண் டம் வளர்த்து எண்ணெயை ஊற்றி புகை கிளப்பி மண மகள் கண்ணில் கண்ணீர் வரும் அளவிற்கு எற்பாடு செய்வார். மணமகளை கேவலப்படுத்தும் வகையில் மந்திரங்களை கூறுவார். இது போன்ற சுயமரியாதை திருமணத்தில் அனைவருக் கும் புரியும்படியான நமது தாய் தமிழ் மொழியில் வாழ்த்துக்களை தெரிவித்து மணமக்கள் உறுதிமொழி கூறி மாலை மாற்றி கொண் டனர். இது போல ஒவ் வொரு தமிழன் இல்லத்தி லும் நடைபெறும் விழாக் களை நம்முடைய பெரி யோர்கள், பெற்றோர்கள் முன்னின்று நடத்துங்கள் தமிழன் இல்ல நிகழ்ச்சிக்கு பார்ப்பனனை அழைக் காதீர்கள் என்று கூறி மண மக்கள் எக்காரணத்தை கொண்டும் பெற்றோர் களை புறந்தள்ளக்கூடாது நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்று கூறி நிறைவுரையாற்றினார்.

குறிப்பு: மணவிழா நிகழ்ச்சி நடந்துகொண் டிருக்கும்போது உற்றார் _ உறவினர்கள், நண்பர்கள் அன்பளிப்பு அளிக்க மேடையை நோக்கி வருகை தந்தபோது மணமகன் செல்லக்கிளி (எ) அன்புச் செல்வன் எழுந்து வந்து மைக்கை வாங்கி அனைவ ரும் தயவு செய்து இருக்கை யில் அமருங்கள் நமக்கு தெரிந்த மொழியில்தான் தமிழில்தான் பேசுகிறார் கள். நமக்கு புரியாத சமஸ் கிருத மொழியில் என்ன பேசுகிறார் என்பதை தெரி யாத நாம் மணிகணக்கில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் நம்முடைய தலைவர்கள் நமக்கு தெரிந்த மொழியில் கருத்துக்களை கூறுகிறார் கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தயவு செய்து அமைதியாக உட்கார்ந்து கருத்துகளை தெரிந்து கொண்டு சொல்ல வேண் டும் என்று மணமகன் அன் புச்செல்வன் கேட்டுக்கொண் டதால் அனைவரும் இருக் கையில் அமர்ந்து கொண்ட னர்.

கழக மாநாடு போல பையூர் பெரியார் சிலை அருகிலிருந்து மணமகன் செல்லக்கிளி இல்லம் வரையும், காவேரிப்பட் டணம் பெரியார் சிலையி லிருந்து தருமபுரி சாலை எஸ்.எம்.கல்யாண மகால் மண்டபம் வரை நூற்றுக் கும் மேற்பட்ட கழகக் கொடி கட்டியும், டிஜிட் டல் பேனர்கள் வைத்தும், பையூர் தந்தை பெரியார் சிலைக்கு மணமகன் மாலை அணிவித்து சிறப்பித்தார். மாநாடு போல சிறப்பாக செல்லக்கிளி (எ) அன்புச் செல்வன் _ வ.சந்தியா இணை நல ஒப்பந்த விழா நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியுடன் மாநாடுபோல நடைபெற் றது. இறுதியாக பையூர் திமுக பேச்சாளர் தி.க. இளைய ராசா நன்றி கூறினார்.

10-06-2015

தமிழ் ஓவியா said...

அம்பேத்கரையும், பெரியாரையும் பிரித்தாளத் துடிக்கும் காவிகள் - பார்ப்பனர்கள்!
இந்து ஏடு திரட்டி வெளியிட்ட கருத்துகள்

சென்னை, ஜூன் 10_ சென்னை அய்.அய்.டி. விவகாரத்தில் தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் பிரிக்கும் சூழ்ச்சியில் சங் பரிவார்க ளும், பார்ப்பனர்களும் மேற் கொள்ளும் சூழ்ச்சிபற்றி இந்து ஏடு பலரிடம் கருத் துகளைக் கேட்டு வெளி யிட்டுள்ளது.

விவரம் இதோ:
சென்னை அய்.அய்.டி யில் புயலடித்து ஓய்ந்த  அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை தொடர்பான சர்ச்சை அர சியல் கட்சிகளின் ஒரு மித்த போராட்டத்தின் விளைவால் முடிவுக்கு வந்துள்ளது. அனைத்துக் கட்சிகளும் ஒரு முகமாக அம்பேத்கர்_ பெரியார் வாசகர் வட்டத்தின் பேச் சுரிமை சுதந்திரத்திற்கு குரல் கொடுத்து அதில் வென்றுள்ளனர்.

அவ்வி ரண்டு தலைவர்களின் கருத்துக்கள் மேலும் மக்களிடையே கொண்டு செல்ல புதிய பாதை உரு வாகியுள்ளது.   பாஜக மற்றும் அதன் துணை அமைப்புபோல் செயல்படும் உதிரிக் கட்சி, அம்பேத்கர்_பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடையைக் கொண்டாடி யுள்ளது.

அதேபோல் முக் கியமாக உதிரிக் கட்சி ஒன்று அம்பேத்கர் இந்து மத பாதுகாவலர் போல வும், பெரியார் தாழ்த்தப் பட்டவர்களின் விரோதி கள் போலவும் சித்தரித்து வருகிறார்கள். மத்தியிலும் தொடர்ந்து அம்பேத் கருக்கு இந்து மதச்சாயம் பூசும் உள்ளார்ந்த வேலை கள் நடந்துவருகின்றன.

சங்பரிவார்களின் இந்த நரித்தந்திரத்தை தமிழகத் தில் உள்ள உதிரிக்கட்சி ஒன்று தமிழக மண்ணில் செயல்படுத்த முனைந் துள்ளது. இதற்கு அம்பேத் கர்_ பெரியார் வாசகர் வட் டத்திற்கான தடையை சாத மாக எடுத்துகொண்டது.

கலி.பூங்குன்றன்

அம்பேத்கர் பெரியார் ஒரு நாணயத்தின் இரு பக் கங்கள், இதை உடைக்க தமிழ்நாட்டில் உள்ள சில சில்லறைக் காவி அமைப்பு கள் முனைந்துள்ளன. தமிழகத்தில் உள்ள தலித் தலைவர்கள் அம்பேத்கர்_ பெரியார் இருவரின் சமூக போராட்டங்களை நன்கு உணர்ந்துள்ளனர்.

இருவ ருமே ஜாதிய வேறு பாட்டை உடைத்தெரிய வேண்டுமென்றால் முத லில் பார்ப்பனர்கள் வகுத்த வர்ண முறையை வேரோடு பிடுங்கி எரித்து சாம்ப லாக்கவேண்டும், இதையே தான் பெரியாரின் திரா விட இயக்கமும், அம்பேத் கரின் போராட்டங்களும் தெற்கிலும் வடக்கிலும் வலியுறுத்தி வந்தன.

அம்பேத்கர் மற்றும் பெரியார் இருவருக்குமே ஒரே இலக்குதான், இந்து மதத்தை ஒழித்தாலொழிய இந்தச் சமூகத்தில் புரை யோடிக்கிடக்கும் ஜாதீயக் கொடுமைகளை நீக்க முடியாது.

இந்த வர்ண பேத ஒழிப்புப் போராட் டத்தில் இருவரின் அணுகு முறைகளும் வேறாக இருந்தாலும் அவர்கள் வலியுறுத்தியது சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, ஆனால் தற்போது இருவரின் கருத் துக்களிடையே பிளவை ஏற்படுத்தி குழப்பத்தை உருவாக்க பார்ப்பன நரித் தந்திரம் சூழ்ச்சி செய்து வருகிறது, என்று விடு தலை பத்திரிகையின் பொறுப்பாசிரியர் கலி. பூங்குன்றன் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

மேலும் அவர் கூறிய தாவது,

அய்.அய்.டி சென்னை முழுவதுமே பார்ப்பனர் களால் ஆக்கிரமிக்கப் பட்ட நிறுவனமாக மாறி விட்டது. உயர் ஜாதியினர் அந்த நிறுவனத்தின் அனைத்து முக்கிய பதவிக ளிலும் 95 விழுக்காடு ஆக்கிரமித்துள்ளனர். பேராசிரியர்கள் இணைப் பேராசிரியர்கள் முதல் உதவிப் பேராசிரியர்கள் வரை எங்கும் பார்ப்பன மயம்தான். அங்கு இருந்து கொண்டு இட ஒதுக்கீட் டின் மூலம் வாய்ப்புப் பெற்று நுழைந்தவர்கள் சமூகநீதிபற்றி பேசும் போதுதான் பிரச்சினையே வெடிக்கிறது என்று கலி. பூங்குன்றன் கூறினார்.

ரவிக்குமார்

விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் குறிப்பிடும்போது, பெரியார் குறித்தும் திராவிட இயக்கம் குறித் தும் சில எதிர்மறைக் கருத் துக்களை கூறியிருந்தாலும், இந்துத்துவா சக்திகளிட மிருந்து பாதுகாப்பது பெரியார் மற்றும் பெரி யாரின் கருத்துகள்தான் என்று தனது நிலைப் பாட்டை கூறினார்.

புனிதபாண்டியன்

தலித் முரசு ஆசிரியர் புனிதபாண்டியன் குறிப் பிடும்போது, சங்கபரிவார் அமைப் புகள் இந்தியா முழுவது முள்ள தலித்துகளின் வாக்குவங்கி மீது நீண்ட நாட்களாகவே ஒரு பார் வையை வைத்துள்ளன.

சங்கபரிவார் அமைப்புகள் வட இந்தியாவில் உள்ள தலித்துகளை மூளைச் சலவை செய்து அம்பேத்கா ரின் இந்துத்துவ எதிர்ப்பு மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீதான எதிர் மறைக் கருத்துக்களை மறைத்து அம்பேத்கர் சங் பரிவாருக்கு ஆதரவான வர்; அவர்களின் கொள் கைகளை முழுக்க முழுக்க ஆதரிப்பவர் என்ற போலி யான கருத்துகளை தலித் துகளிடையே பரப்பி வரு கிறனர்.

அம்பேத்கர் வலி மையான இந்தியாவை உருவாக்க பாடுபட்டார். அதே நேரத்தில் பார்ப் பனக் கொள்கைகளை கடுமையாக எதிர்த்து வந்தார்.   பெரியார் தனி திரா விட நாட்டை வலியுறுத்தி வந்தார், மேலும் பார்ப் பனீயத்தை எதிர்த்து பார்ப் பனரல்லாத மக்களை ஒன்றுதிரட்டினார். இந்த அமைப்பு அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு கொள்கையை முற்றிலும் ஆதரித்து ஒன் றாக செயல்பட்டு வந்தது.

சென்னை அய்.அய்.டி. யின் அம்பேத்கர்_பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டதன் எதிர் விளைவாக தமிழகம் மற்றும் இந்தியா முழுவது அம்பேத்கர்_பெரியார் பெயரில் அமைப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

சென்னையின் அம்பேத் கர்_பெரியார் வாசகர் வட்டம் துவக்கவிழா ஒன் றில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமா வளவன், பெரியாரிய கருத்துகள், அம்பேத்கரிய கருத்துகள், இடதுசாரி சிந் தனைகள் கொண்டவர் கள் அனைவரும் ஒன்று பட்டு செயல்படவேண் டிய தருணம் வந்துவிட் டது. காரணம் மூவருக்கும் பொதுவான எதிரி ஒரு வரே என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

//பார்ப்பான் என்னைக் கொல்ல மாட்டான்//
நானும் பிரான்சிசும் அய்யாவை வழக்கம் போல சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது, நாளைக்கு திருச்சி கடை வீதியில் உண்டியல் வசூல் செய்ய வேண்டும். நானும் வருகிறேன் , நோட்டீஸ் போடுங்கள் என்றார் அய்யா. என் கையைப் பிடித்துக் கொண்டு, சாதி ஒழிப்பு போராட்ட நிதிக்காக திருச்சி நகரில் ஈ.வெ.ரா பிச்சை எடுப்பார்" என்று நோட்டீஸ் அடிக்க வேண்டும் என்றார் அய்யா.
மறுநாள் 01.08.1957 அன்று காலை சைக்கிள் ரிக்‌ஷாவில் அய்யா உட்கார்ந்து வர, மார்க்கெட்டில் உள்ள மளிகைக் கடைக்காரர்கள் அனைவரும் உண்டியலில் பணம் போட்டனர். நேராக மலைவாசல் திரும்பினோம். இப்போது "மங்கள் &மங்கள் " கடை இருக்கும் இடத்திற்கு முன்பு அப்போது பார்ப்பனர் ஓட்டல் ஒன்று இருந்தது.
சற்று தூரத்தில் அய்யா வரும் போதே, சைக்கிள் ரிக்‌ஷாவைப் பார்த்த பார்ப்பன முதலாளி, கையில் ரோஸ் மில்க்குடன் ஓடிவந்ந்தார். அய்யாவும் அதை வாங்கிக் குடித்தார்.டம்ளரை வாங்கிக் கொண்டு உண்டியலில் 100 ரூபாய் போட்ட விட்டு சென்றார் அந்தப் பார்ப்பனர். எனக்கு கோபமாக இருந்தது.
அம்பீஸ் கபே தாண்டி, சாமி ஆர்ட்ஸ் ஸ்டூடியோ தாண்டி தெப்பக்குளம் அருகே போகும் போது ரிக்‌ஷாவை நிறுத்தச் சொன்னார் அய்யா. என்ன பழனி? என் மேல் கோபமா? என்றார்.
ஆமாம் என்று சத்தமாகவே கூறினேன்.பார்ப்பான் கொடுத்ததை நீங்கள் வாங்கிக் குடிக்கிறீர்கள். ஏதாவது நடந்தால் யார் பதில் சொல்வது? இந்த நகரத்துக்கு நான் பொறுப்பு.நான் நகரச் செயலாளர் என்று கோபமாகவே பேசினேன்.

அய்யா சிரித்துக் கொண்டே, "என்னப்பா நீ, பார்ப்பான் என்றைக்கும் என்னைக் கொல்ல மாட்டான்.என்னைக் கொன்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று அவனுக்கு தெரியும். நான் உயிரோடு இருப்பதே அவனுக்கு பாதுகாப்பு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறான்" என்று கூறி விட்டு வேனில் ஏறி மாளிகைக்கு சென்று விட்டார்..
--பெரியார் தொண்டர் திருசி வீ.அ பழனி வாழ்வும் போராட்டமும் என்ற நூலில் இருந்து,,

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

பூக்குழி

செய்தி: பழநியையடுத்த கே. வேலூர் காளியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் பூக்குழி (நெருப்பில்) இறங்கி நேர்த்திக் கடன் கழித்தனர்.

சிந்தனை: விரதம் இருக் காமலேயே கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்று கூறி திராவிடர் கழகத் தோழர்கள் பூக்குழி இறங் கியதுண்டே! கே.கே. பட்டி யில் (தேனி மாவட்டம்) கோயில் திருவிழா பூக்குழி யிலேயே கடவுள் மறுப்புக் கூறி கருஞ்சட்டைத் தோழர் கள் பூக்குழி இறங்கிக் காட்டி பக்தர்களை மலைக்க வைத் தனரே பூக்குழியில் ஓடும் பக் தர்கள் சிறிது நேரம் தீக்குழி யில் நின்று காட்டுவார்களா?

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

குத்துக் கல்லு

கோயில் திருவிழா வில்  பக்தர்களிடையே மோதல்  சாவு -காயம் என்று செய்திகள் வரு கின்றனவே - அந்தக் கோயிலுக்குள் குடியிருக்கும் கடவுள் என்ன செய்து கொண்டு இருக்கிறதாம்?

கடவுளாவது வெங் காயமாவது - அது வெறும் குத்துக்கல் தான் என்று ஒப்புக் கொள்வார்களா?

தமிழ் ஓவியா said...

யாரிந்த ஆணையர்?

முழு அதிகாரம், முழுமையாக பிழைபடுத்திவிடும்

POWER CORRUPTS;
ABSOLUTE POWER CORRUPTS ABSOLUTELY

அதிகாரம் பிழைபடுத்திவிடும்;
முழு அதிகாரம், முழுமையாக பிழைபடுத்திவிடும்.

எங்களது ஓராண்டு ஆட்சியில் ஊழல் இருந்ததா? என கேள்வி எழுப்பினார் இன்றைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.

மோடி அரசின் ஓராண்டு ஆட்சியில் ஊழல் கண்காணிப்புத் தலைமை ஆணையர் பதவி நிரப்பப் படாமல் இருந்தது. இதனை அனைவரும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைத்தனர்.

இப்போது இந்த உயரிய பதவிக்கு கே.வி.சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பரிந்துரையில் மோடி இதனை ஏற்றுக் கொண்டு  குடிஅரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில் அவரும் நேற்று பதவியேற்றார்.

இந்த நிலையில், பாஜகவின் முன்னாள் சட்ட அமைச்சரும், வழக்குரைஞருமான ராம் ஜெத்மலானி, மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கு கே.வி. சவுத்ரியை நியமிக்கக்கூடாது என்றும், அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்றும், அதற்கான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டும் மோடிக்கும், குடிஅரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதி யுள்ளார்.

அரசின் சார்பில் இந்த நியமனம் செய்யப்பட்டி ருப்பதை உறுதி செய்து அரசின் அட்டார்னி ஜெனரல், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்ட நிலையில், இந்த நியமனத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வாதாட இருப்பதாக வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் நேர்மையும், யோக்கியதையும் விரைவில் அம்பலமாகும்.

தமிழ் ஓவியா said...

நீதிமன்றத்தின் கதவுகளையும் தட்டுவோம்!


தமிழ்நாட்டில் மழை பொழியவேண்டி தமிழ்நாடு அரசுத் துறையான நீர்வளத்துறை - அதன் தலைமைப் பொறியாளர் திருச்சிராப்பள்ளி மண்டலத்துக்குட்பட்ட 30 உட்கோட்ட அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கைப் போல் ஒன்றை அனுப்பினார்.

ஒவ்வொரு உட்கோட்டம் சார்பிலும் ஆங்காங்கே உள்ள கோவிலில் சிறப்பு யாகம், சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டது.

இது ஒரு பிற்போக்குத்தனமான - விஞ்ஞானத்திற்கு எதிரான பழைமை வாய்ந்த இந்து மத மூடநம்பிக்கையைச் சேர்ந்த பழங்குப்பையாகும்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையே அழுத்தமாக வரையறுத்துள்ளது. இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு மதத்தின் நம்பிக்கையை தனக்குரிய அதிகாரத்தையும், மக்களின் மூடத்தனத்தையும் பயன்படுத்தி அதிகார பூர்வமாக ஆணை பிறப்பித்திருப்பது அசல் அத்துமீறிய - அப்பட்டமான சட்ட மீறலாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) பிரிவு மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் வளர்க்கவேண்டியது ஒவ் வொரு குடிமகனின் கடமை என்று வலியுறுத்தியுள்ளது.

அதன்படிப் பார்த்தால் நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொண்ட குற்ற வாளியாவார்.

இந்த அடிப்படையில்தான் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சட்ட விரோதமாக செயல்பட்ட அதிகாரிகள்மீது திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்குத் தொடுக்கப்படும் என்று அறிவித்தார் (விடுதலை, 6.6.2015).

சம்பந்தப்பட்ட அதிகாரியின் சட்ட மீறலோடு அந்த நடவடிக்கை முடிந்து விடவில்லை. கோவில்களில் யாகங்கள், சிறப்புப் பூஜைகள் நடத்துவது என்பது அதிகாரிகளின் சொந்த செலவில் அல்ல; அரசுப் பணம்தான் அரசுக் கொள்கைக்கும், சட்டத்திற்கும் விரோதமாகச் செலவழிக்கப்படுகிறது என்பதும் முக்கியமானதாகும்.

திராவிடர் கழகத் தலைவர் அறிக்கையின் எதிரொலியாக பொதுப் பணித்துறையின் உயர்நிலை அதிகாரியான மழைக்காக சிறப்புப் பூஜைகள் நடத்த சுற்றறிக்கை வெளியிட்ட தலைமைப் பொறியாளரிடம் விளக்கம் கேட்டு இருப்பதாகத் தகவல் வெளிவந் துள்ளது. 15 நாள்களுக்குள் பதிலை அளிக்கவேண்டும் என்று அதில் வலியுறுத்தவும் பட்டுள்ளது. அது ஒரு அரசுத் துறை நடவடிக்கையாக இருக்கக்கூடும்.

அரசு அலுவலகங்களுக்குள் கடவுள் படங்களை மாட்டுவது, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜை போடுவது, ஆயுத பூஜை கொண்டாடுவது, காவல் நிலையங்களில் ஒலி பெருக்கி வைத்தே தடபுடலாக ஆயுத பூஜை நடத்துவது, அதற்காக வசூல் வேட் டைகளில் ஈடுபடுவது, வேலியே பயிரை மேய்வது போல நீதிமன்ற வளாகங்களுக்குள்ளேயே கோவில் களைக் கட்டுவது - இன்னோரன்ன அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளிக் கிடைத்தாக வேண்டும்.

திராவிடர் கழகம் தாக்கல் செய்ய இருக்கும் இந்த வழக்கு பல வகைகளிலும் ஒரு சரியான பாதையை - வழிகாட்டுதலை அரசுத் துறைகளுக்கும், அதன் அதிகாரிகளுக்கும் காட்டும் வகையில் அமையும்.

நடைபாதைக் கோவில்களை உடனே அகற்றிட வேண்டும். அப்படி அகற்றாத மாநில அரசுகளின் (தமிழ்நாடு உள்பட) தலைமைச் செயலாளர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து விளக்கம் சொல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டும், அப்படிச் செயல்படாத அரசுகளுள் ஒன்றுதான் தமிழ்நாடு அரசு.

மக்கள் மத்தியில் உரிய வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நமது கடமையாகும். ஒரு பக்கத்தில் பொதுக்கூட்டங்களின் வாயிலாகவும், ஏடுகள் வாயிலாகவும் திராவிடர் கழகம் அதன் ஒப்பற்ற பணியை எழுச்சியோடு செய்துகொண்டுள்ளது.

இன்னொரு கட்டமாகத்தான் நீதிமன்றத்தின் கதவையும் தட்டுகிறது கழகம். மந்திரத்தால் மாங்காய் விழுமா என்ற பழமொழி வழக்கில் உள்ளது. அப்படி விழுமேயானால், பிரச்சினைகள் மிக எளிதாகவே தீர்க்கப்பட்டு விடும் அல்லவா?

யாகத்தாலும், பூஜை புனஸ்காரங்களாலும் விரும்பியதை எட்ட முடியும் என்றால், அரசாங்கம் கூடத் தேவைப்படாதே! எல்லாவற்றையும் பூஜைகள், புனஸ்காரங்கள், யாகங்கள் மூலமாக நிறைவேற்றிக் கொள்ளலாமே!

மெத்தப் படித்தவர்கள்கூட, பொறியியல் பட்டம் பெற்றவர்களே கூட பகுத்தறிவைச் செலுத்தாமல், பக்திப் போதைக்கு அறிவைப் பலி கொடுத்து, தாங்கள் நாசமாவதுடன், மற்றவர்களையும் அந்த மூடப் படுகுழியில் தள்ளுவது - மன்னிக்கவே பட முடியாத பெருங்குற்றமாகும்.

நான் ஒரு நிமிடம் அரசனானால், அறிவை நாசப்படுத்துபவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுப்பேன் என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள் கருத்தை எண்ணிப் பாருங்கள் - அறிவின்மீது அவர் வைத்துள்ள மதிப்பையும், சீர்தூக்கிப் பாருங்கள், பாருங்கள்!

தமிழ் ஓவியா said...

புதுமைத் தென்றல் : வி.ஸ. காண்டேகரின் கருத்து மழை


மராத்திய புதுமை எழுத்தாளர் - புதினம் புனையும் பொலிவு மிக்க கருத்தாளர் வி.ஸ. காண்டேகர் அவர்கள் ஆவார்கள்.

மராத்தியில் அவர் எழுதிய புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள் - இவைகளை தமிழில் சுவை குன்றாமல் தரும் பணியை - அரும்பணி செய்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்களுக்கு புது உலகம் தேடுவோர் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

மருத்துவமனையில் நான் சிகிச்சை பெறும் முன்னரும், பெற்ற பின்னரும் எனக்குத் தேவையான மெல்லியப் பூங்காற்றை  (சுவாசிப்பதைப்போல) வாசிப்பது அவசியம் - நேரமும் பறந்து விடும். வலியை மறந்து விடுவோம் என்ற வகையில் காண் டேகர்தான் எனக்குத் துணையாக இருந்தார் - முழு நேரப் பணி பெரியார் சிந்தனைகளை பரப்புவதுதான் என்றாலும்கூட!

வி.ஸ.காண்டேகர் கதைகள் என்ற நூலில் மூன்று உருவகங்களைக் கொண்ட யதார்த்தத்தை கற்பனை வண்ணம்பூசி அருமையாக தந்துள் ளார் நந்தவனம் என்ற  தலைப்பில் ஒரு சிறுகதையில்; அதைப் படித்து (ஏற்கெனவே படித்திருந்த போதும்) நவில்தொறும் நூல் நயம் கண்டேன்!

அதனை உங்களைப் போன்ற பயில்தொறும், படிக்கும் வாசக நண்பர் களுடன் பகிர்ந்து கொண்டு, யான் பெற்ற இன்பத்தை எனது வாசக உலகமும் பெறட்டும் என்பதாக இதனைத் தருகிறேன்.

அடிவானம்
புதுயுகம்
மரத்தின் வேர்
பெண்ணின் உள்ளம்
வழிபாடு
என்ற அய்ந்து குறுந் தலைப்புகளில் சுவைமிக்க கருத்து உருவகங்கள்-

கற்க வேண்டிய பாடங்களே அவரவர் பயிற்சிக்கும், பக்குவத்திற்கும்  ஏற்பவே ரசனைகள் அமையக் கூடும்.

சமைத்து வைத்த சுவை உணவைப் பரிமாறுகிறவன் பரிமாறாமல் பசி வந்தவர்முன் பலபடப் பேசுவதும் காலத்தைத் தாழ்த்துவதும் கூடா ஒன்று அல்லவா?

அதனால் நேரே நந்தவனத்தின் நறு மலர்களின் மணத்தை அனுபவிக்கவும், மலர்க் காட்சியைக் கண்டு உள்ளங்  குளிரவும் அழைத்துச் செல்கிறேன்.

புதுயுகம் என்ற சிறு தலைப்பின் கீழ்

முன் காலத்து முனிவர்களுக்கு உற்சாகம் பிறந்தது. இறைவனுடைய வடிவத்தைக்காண அவர்களின் அறிவு முயன்றது. வேதங்கள் பிறந்தன. ஆண்டவனைப்பற்றி இது அல்ல அது அல்ல என்ற அறிவு மட்டுமே அவர் களுக்கு உண்டாயிற்று.

உண்மையான தத்துவஞானம் இதுதான்! என்று மக்கள் வியந்தனர்.

இடைக்காலத்துப் பெரியவர்களுக்கு உற்சாகம் பிறந்தது. இறைவனுடைய வடிவத்தைக் காண அவர்கள் பிரதிக் கினை செய்து கொண்டார்கள். அப்புறம் கேட்க வேண்டுமா? கல் தெய்வமாயிற்று; குரங்கு தெய்வமாயிற்று. ஆண்டவன் நீரிலும், தரையிலும், மரத்திலும், கல்லிலும் இருப்பதாக அவர்கள் அறிந்தார்கள். உண்மையான பக்தி இதுதான்! என்று மக்கள் மகிழ்ச்சியோடு கூவினார்கள்.

விஞ்ஞான யுகம் வந்தது. விஞ் ஞானிகளுக்கு உற்சாகம் பிறந்தது. கல்லிலிருந்து, குரங்கு வரைக்கும் எல்லாப் பொருள்களின் வாழ்வையும் அவர்கள் ஆராய்ந்தார்கள். எந்தப் பொருளிலும் எங்கும் அவர்களுக்கு இறைவன் புலப் படவில்லை. அவர்கள் இகழ்ச்சியோடு, இதுவும் அல்ல, அதுவும் அல்ல என்றார்கள்.

நாஸ்திகன் நாஸ்திகன்! என்று மக்கள் சினம் பொங்கக் கத்தினார்கள்.

@@@@@@@@@@@@@

மற்றொரு மிக அருமையான உருவகம்!
மரத்தின் வேர் என்ற தலைப்பில் -
ஒரு மரத்தில் மலர்களின் மணம் எங்கும் பரவி இருந்தது.
வழிப்போக்கன் ஒவ்வொருவனும் அந்த மணத்தை நுகர்ந்து கொண்டு அங்கே கணப் பொழுதாவது நிற்காமல் போவதில்லை.

அந்த மரத்தில் கனிகள் காய்த்துக் குலுங்கின. அவற்றின் நறுமணத்தில் மயங்கி, நிறம் நிறமான பறவைகள் அந்த மரத்தைச் சுற்றிக் கூத்தாடின.

மலர்களும், கனிகளும் சொர்க்க இன்பத்தை எய்தின.

ஒருநாள் காலையில் தோட்டக் காரன் அந்த மரத்தின் வேருக்கு நீர் பாய்ச்சினான்.

மலர்கள் அவனைப் பார்த்து, தோட்டக்காரா! உனக்குப் புத்தியே இல்லை! அங்கே மண்ணில் எதற் காகத் தண்ணீர் விடுகிறாய்! பீச்சாங் குழலினாலே எங்கள்மீது நீர்த்துளி களை வீசு. முகத்தைப்போலே அவை ஒளிவீசும் என்றன.

பழங்களும் அப்படியே பிடிவாதம் பிடித்தன. கோணல் மாணலான, நிறமும் அழகும் இல்லாத, எப்பொ ழுதும் மண்ணிலே புரளுகிற அந்த வேர்களுக்கு எதற்காக நீரினால் அபிஷேகம் செய்ய வேண்டும்? என்று அவை நினைத்தன.

தோட்டக்காரன் மலர்களுக்கும், கனிகளுக்கும், நீரைத் தெளித்தான்.

தண்ணீர் கிடைத்துங்கூட மலர்கள் வாடின; கனிகள் அழுகின.

அவை கடைசியில் தோட்டக்கார னுடைய காலில் விழுந்து, தோட்டக் காரத் தாத்தா, மண்ணில் இருக்கும் அந்த வேர்களுக்கே முதலில் நீர் பாய்ச்சுங்கள், அவை பிழைத்தால் தான் நாங்கள் உயிர் வாழ்வோம் என்று கெஞ்சின. - இதனைப் புரிந்து கொள்ளுங் கள்; ஓர் இயக்கம், குடும்பம்,நிறுவனம் எல்லாவற்றுக்குமே இந்த உண்மை புரிய வேண்டும் - புரிந்து நடக்க வேண்டும்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

இறந்த பின்...

ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

தமிழ் ஓவியா said...

இங்கல்ல - கருநாடகத்தில்
தண்டோரா போட மறுத்ததால் ஊரைவிட்டு ஒதுக்கியவர்கள்மீது வழக்கு

சிக்மகளூரு, ஜுன்11_  முன்னோர் செய்த தொழிலான தண்டோரா போட்டு  அடித்து தகவல் தெரிவிப் பதற்கு மறுத்ததால் தண்டத்தொகை விதிப்பு, தண்டத் தொகையைக் கட்ட மறுத்ததால் தாழ்த்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் ஒதுக்கிவைக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஏழுபேர்மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள் ளனர்.
கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் வட்டத்தில் வத்தாரஹள்ளி கிரா மத்தைச் சேர்ந்த குருபா வகுப்பினத் தவர் உள்ளிட்ட பிற வகுப்பினரால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் புறக்கணிக்கப் பட்டுள்ளனர். அவர்களின் முன்னோர் செய்து வந்த பணியை (தண்டோரா போட்டு தகவல் தெரிவிப்பது) அவர்கள் தொடர்ந்து செய்வதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் பிற வகுப்பினரால் புறக்கணிக்கப் பட்டுள்ளனர்.

சித்தய்யா என்பவர் கூறும்போது, கடந்த யுகாதி திருவிழாவின்போது, உயர் ஜாதியினர் என்று சொல்லப் பட்ட கிராமத்தினர் அந்த திருவிழா குறித்து  கிராமத்தைச் சுற்றிவந்து தண்டோரா போட்டு தெரிவிக்குமாறு என்னுடைய சகோதரர் ரங்கய்யா விடம் கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார். அதனால் அவர்கள் எங்கள்மீது கோபமாக இருந்து வருகிறார்கள் என்றார்.

29.5.2015 அன்று இந்தப் பிரச்சினை தீவிரமானது. கிராமத்தைச் சேர்ந்த உயர் ஜாதியைச் சேர்ந்த நிஞ்சே கவுடா என்பவர் சித்தய்யாவிடம் இதுகுறித்து சச்சரவு செய்துள்ளார். அதில் பிரச் சினை பெரிதாகி நிஞ்சே கவுடா மறுநாளே (30.5.2015) பஞ்சாயத்தைக் கூட்டி உள்ளார்.  கிராமப் பஞ்சாயத் துக் கூட்டத்தில் சித்தய் மற்றும் அவர் சகோதரர் ரங்கய்யா ஆகிய இருவரும் தலா ரூ.2,001 தண்டத் தொகை கட்டவேண்டும் என்று பஞ்சாயத்தில் தீர்ப்பாக கூறப்பட்டது. ஆனால், அவ்விருவரும் அதை ஏற்க மறுத்து தண்டத் தொகையைக் கட்ட மறுத்துவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து அந்த கிராமத்தினர் எவரும் சித்தய்யா மற்றும் ரங்கய்யா, அவர்களின் சகோ தரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத் தினர்களிடம் பேசுவது உள்பட எவ் விதத் தொடர்பும் கொள்ளக்கூடாது என்று முடிவாக அறிவித்தனர். மேலும், அவர்களுக்கு மளிகைக் கடைகள் மற்றும் பால் கடைகளிலி ருந்து  பொருள்கள் எதையும் விற்பனை செய்யக்கூடாது என்றும் முடிவானது.

இவ்வளவு காலங்களாக அவர் களின் முன்னோர்கள் செய்துவந்த பணிகளையே கட்டாயத்தின்பேரில் செய்துவந்த சித்தய்யா மற்றும் அவர் சகோதரர் ரங்கய்யாவும் செய்ய மறுத்து விட்டதுதான் காரணமாக கூறப் பட்டுள்ளது. சித்தய்யா ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும்  பஞ்சாயத்து முடிவு குறித்து சிக்மகளூரு காவல்நிலையத் தில் புகார் தெரிவித்தார்.

காவல்துறையினர் சித்தய்யாவின் புகாரின்பேரில் அந்த ஊரைச் சேர்ந்த வர்களான நிஞ்சே கவுடா, சன்னே கவுடா, ஜயண்ணா, பசவராஜு, தர்மாச்சாரி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிருஷ்ணே கவுடா ஆகிய ஏழுபேர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

ரயில் பயணம் தத்கல் முறையில் மாற்றங்கள்

புதுடில்லி, ஜூன் 11_  ரயிலில் பயணம் செய்ய, கூடுதல் கட்டணத்தில் டிக்கெட் பெறும், 'தத்கல்' முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காலை, 10 மணிக்கு மேல், பயணச்சீட்டு இருக்கும் வரை, எவ்வளவு நேரமும் பெற முடியும் என்ற நிலை, தற்போது மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.

*தினமும், காலை, 10 _ 11 மணி வரை, 'ஏசி' வசதி டிக்கெட்டுகளும், 11_ 12 மணி வரை, இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டுகளும், தத்கல் முறையில் பெறமுடியும்.

*உறுதி செய்யப்பட்ட தத்கல் பயணச்சீட்டு பெற்ற பிறகு, அதை ரத்து செய் தால், இதுவரை பணம் திருப்பிக் கொடுப்பதில்லை. அதில் மாற்றம் செய்யப் பட்டு, இனிமேல், 50 சதவீத கட்டண பணம் திருப்பிக் கொடுக்கப்படும்.

* தத்கல் கட்டணத்தில் பயணச்சீட்டு பெற்றவர்கள் பயணிக்கும் தனி ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இவை, தத்கல் சிறப்பு ரயில் கள் என அழைக்கப்படும்.

* அதிக தேவை உள்ள வழித்தடங்களில், தத்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப் படும்.

*புதிதாக அறிமுகப் படுத்தப்பட உள்ள தத்கல் சிறப்பு ரயில்களுக்கு, குறைந்தபட்சம், 10 நாட் களுக்கு முன்னதாகவும், அதிகபட்சம், 60 நாட் களுக்கு முன்னதாகவும், பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இப்போது, தத்கல் பயணச்சீட்டு, பயண நாளுக்கு ஒருநாள் முன்ன தாக வழங்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன், அதிக தேவை உள்ள வழித்தடங்களில், பிரீமியம் ரயில்கள் என்ற பெயரில், ரயில்கள் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளன. அந்த ரயில் களில் பயணிக்க, தேவையை பொறுத்து, பயணச்சீட்டு கட்டணம் மாறுபடும். குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்படும்; அதற்கு மேல், தேவைக்கு ஏற்ப, பயணச் சீட்டு கட்டணம் உயர்ந்து கொண்டே செல்லும்.

ஆனால், புதிதாக அறி முகப்படுத்தப்பட உள்ள தத்கல் ரயிலில், தத்கல் கட்டணத்தில் தான் அனைத்து பயணச்சீட்டு களும் விற்கப் படும். 175 முதல், 400 ரூபாய் வரை உயர்வு இருக்கும்.
பிரீமியம் ரயில்களுக் கான பயணச்சீட்டை, அய்.ஆர்.சி.டி.சி., இணைய தளம் மூலமே பெற முடியும். தத்கல் சிறப்பு ரயில் பயணச் சீட்டை, ரயில் நிலையங் களிலும், இணையதளம் மூலமும் பெறலாம்.

இந்த மாற்றங்கள் இரண்டொரு நாட்களில் அமலாகும் என, ரயில்வே வாரிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

மனிதருள் மாணிக்கம்!எம்.வி.வள்ளியப்பன்
வீகேயென் நிறுவனத்தின் வி திரு.எம்.வி. வள்ளியப்பன் அவர்கள் வீகேயென் உடன் தனக்குள்ள நட்பைப் பெருமையுடன் நினைவு கூர்கிறார்.

வீகேயென் எனக்கு 1965 முதல் பழக்கம் இருவரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒன்றாக என்ஜினி யரிங் படித்தோம். வகுப்பில் மட்டுமில்லை விடுதியிலும் நான் அவருக்கு ரூம்மெட். நியூ ப்ளாக்கில் அறை எண் 51 அந்த நெருக்கத்தை வாழ்வில் மறக்கவே முடியாது. வீகேயென் எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை.

யாருடனும் அந்த மாதிரி பழகுவதில்லை. படிப்பிலும் கூட அப்படித்தான். படிப்பில் சாதனையாளராக வரவேண்டும் என்று அவர் நினைத்ததில்லை. அப்போதே அவருடைய நினைவும், கனவும் தொழில் பற்றியதாகத்தான் இருக்கும். எப்போதும் அந்த சிந்தனையிலேயே இருப்பார். இளம் பருவத்திலேயே சாதிக்க வேண்டும் என்பதை லட்சியமாக, வெறியாகக் கொண்டு நடந்தவர்.

படித்து முடித்த பின்பு  தொழில் தொடங்க வேண்டி வீகேயென் இடம் ஏற்கெனவே ஒதுக்கீடு பெற்றிருந்தார். அந்த நேரம் முதலீட்டுக்காகப் பணம் தேவைப்பட்ட  போது அவர் என்னை அணுகிய போது தொழில் பார்ட்னராக வா என்று தான் அழைத்தார். அவரது ஆர்வம், நேர்மை, திறமை பற்றி எனக்குத் தெரியும். எங்கள் வீட்டினருக்குத் தெரியாது.

தவிர ஏற்கெனவே குடும்பத்தினர் பார்த்து வந்த தொழி லைப் பார்க்க ஆள் தேவைப்பட்ட போது புதுத் தொழி லுக்கு நிச்சயம் சம்மதிக்க மாட்டார்கள் என்று எனக்கு தெரி யும். ஆனால் எனக்கு வீகேயென் மீது நல்ல நம்பிக்கை இருந்தது. கூட இருந்தே கவனித்து வந்திருக்கிறேனே! இவர் நன்றாக வருவார் அதற்குப் பணம் கொடுத்து உதவலாம் என்று குடும்பத்தில் என் சேமிப்பிலிருந்து எடுத்துக் கொடுத்தேன்.

வீகேயென் நிறுவனம் நன்கு வளர்ந்த பிறகு கூட அவ்வப்போது என்னிடம் பார்டனராக வா! என்று அழைப்பார். ஒரு நிறுவனம் தொடங்கும் போது எவ்வளவோ கஷ்ட நட்டங்கள் சோதனைகள் வரும். அவற்றை எல்லாம் கடந்து இவர் இன்று வெற்றிகரமாய் நடத்தும் போது பார்ட்னராக சேருவது நல்ல நட்புக்கு அழகல்ல என்று மறுத்துவிட்டேன். ஏதோ முதலீடு கொடுத்தேன் என்பதற்காக நன்றிகாட்டும் விதம் என் முதலெழுத்து வி யைத் தன் நிறுவனத்தின் முதல் எழுத்தாக வைத்திருப்பதை எண்ணும் போது எனக்குப் பெருமையாக இருக்கிறது. சமயத்தில் கூச்சமாகவும் இருக்கிறது.  மேலும் எந்தப் பிரபலம் வந்தாலும் அவர்களிடம் என்னை வீகேயென்னின் வி இவர்தான் என அறிமுகப் படுத்தி மகிழ்வார்.

வீகேயென் உயரிய பண்பு மிக்கவர். தன்மானத்துடன் செயல்படுபவர். தொழிலாளர் நலம் பேணுபவர். மிகுந்த திறமையும், ஆற்றலும் கொண்டவர். நேர்மை யாய் நடப்பவர். துணிவுமிக்கவர். தவறான பாதைக்கு இவரும் போகமாட்டார். மற்றவரையும் அனுமதிக்க மாட்டார். தவறைச் சுட்டிக்காட்ட தயங்கவும் மாட்டார்.  ஒருவரின் தவறை அவரின் முகத்துக்கு நேராய் தெரிவிக்கும் வல்லமை பெற்றவர். இவருக்கு கம்ப்யூட்டர் அறிவு, யானை அளவுக்கு ஞாப சக்தி உண்டு. கணக்கில் இவரிடம் ஏமாற்ற முடியாது. குழப்பமோ, குதர்க்கமோ இவரிடம் கூடாது.

நேராக வா, நேராக போ!
இவருடைய வெற்றிக்குப் பின்னால் இப்படி எத்தனையோ விஷயங்கள் உள்ளன. இவரது வெற்றி சும்மா அதிர்ஷ்டத்திலோ, பிறரை வஞ்சித்தோ வந்ததல்ல. எல்லாமே சீரிய உழைப்பு. மனிதநேய மாமணி

தமிழ் ஓவியா said...

வீகேயென் பாண்டியன்
வீகேயென் இது வெறும் ஆங்கில எழுத்துகளல்ல, என்னைப் பொருத்தவரை இவைதான் எனக்கு உயிரெழுத்துகள். அரை நூற்றாண்டுக் காலத்தை தாண்டிய எனது வாழ்க்கையின் பெரும் பகுதி இந்த மூன்றெழுத்திற்குள்தான் அடங்கியிருக்கிறது.

படித்துமுடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த  என்னை 1974 ஆம் ஆண்டு இனி இவர்தான் உனக்கு எல்லாம் என்று என்னை எனது தந்தை ஆறுமுகம் பிள்ளை வீகேயெனிடம் ஒப்படைத்தார். அப்போது வீகேயென் அவர்கள் துவாக்குடியில் விகேயென் நிறுவனத்தைப் புதிதாக தொடங்கி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு இருந்த தொழிலதிபர்.

அவரது ஊழியனாக அவரோடு என்னை இணைத்துக் கொண்டதுதான் என் வாழ்வில் நான் பெற்ற பெரும் பாக்கியம்.  மூன்று தொழிலாளர்களோடு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் இன்று 500 பேர் பணி புரிகின்றார்கள். அதே இந்நிறுவனத்தின் கிளை ராணிப் பேட்டையிலும் தொடங்கியிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் தொழிலதிபர் திரு.வீகேயென் அவர்களின்  உழைப்பு என்பதைத் தவிர வேறெதையும் சொல்ல முடியாது. தொழிற் சாலை அவருக்கு இன்னொரு தாய் வீடு அதன் ஒவ்வொரு செங்கல்லும் ஒவ்வொரு இரும்புத் துண்டும் அவரது பெயரைச் சொல்லும். தொழிற்சாலை வளாகத்திலேயே தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு தருபவர் எனக்குத் தெரிந்து தமிழ் நாட்டிலேயே திரு. வீகேயென் அவர்கள் ஒருவர்தான்.

அது மட்டுமல்ல. உணவு நேரத்தில் தொழிற்சாலையில் இருந்தால் அவர்களுடன் அமர்ந்து அதே உணவைத் தானும் சாப்பிடுவார். தனது தொழிலாளர்கள் தொழில் கற்றுக் கொண்டு தனியாகத் தொழில் செய்ய விரும்பினால் அவர்களை ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொடுத்து அந்தத் தொழிலாளியின் தனி வாழ்க்கையைத் தொடங்கி வைப்பார்.

இதுவரை 120 தொழிலாளர்களுக்குத் தலா 1 இலட்சம் கொடுத்துப் புதுவாழ்க்கை அமைத்து கொடுத்திருக்கிறார்.  மேலும் தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வசதியும் இலவசமாக செய்து கொடுத்துள்ளார்.

திராவிடர் கழகத்தோடும், அதன் தலைவர் கி.வீரமணி அவர்களோடும் நெருங்கிய நட்பும், அன்பும் கொண்டு உள்ளார். பெரியார் இல்லமும், திராவிடர் கழக கல்வி நிறு வனங்களும் அவருக்கு கண் போன்றவை.

அந்த நிறுவனங் களுக்கு தன் பொருளையும் உழைப்பையும் வாரி வழங்கி யிருக்கிறார். பெரியார் மணியம்மை மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு, தாளாளராக இருந்து பணியாற்றி வருகிறார். மேலும் தஞ்சை  வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின்  இணைவேந்தர் பதவி அவரை தேடி வந்தபோது அதனை மறுத்தார்.

ஆனாலும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் வற்புறுத்தி அந்த உயரிய கவுரவுத்தை அவருக்கு வழங்கினார். இப்போதும் அந்த பணியிணை சிறப்பாக செய்து வருகிறார். நான் அறிந்த வகையில் நன்றிக்கு இலக்கணமாக மாமனிதன் திரு.வீகேயென் அவர்கள் அளவுக்கு யாரும் இல்லை என்று சொல்வேன்.

தமிழ் ஓவியா said...

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாணவி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு


கிருஷ்ணகிரி,  ஜூன் 11_ கிருஷ்ணகிரியில் பிளஸ் 2 தேர்வில் பொருளாதாரப் பாடத்தில் 24 மதிப்பெண் கள் பெற்று தோல்விய டைந்ததாக அறிவிக்கப் பட்ட மாணவிக்கு விடைத் தாள் நகல் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்ட நிலையில், அவர் 123 மதிப் பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி பாரதி நகரைச் சேர்ந்தவர் சுப் பிரமணி. தொழிலாளி. இவரது மகள் கவிதா மணி. கிருஷ்ணகிரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 கணக்குப்பதிவியல் பாடப் பிரிவில் பயின்று வந்த அவர், பொதுத் தேர்வை எழுதினார். கடந்த மாதம் அறிவிக் கப்பட்ட தேர்வு முடிவில் அவர் மொத்தம் 584 மதிப் பெண்கள் பெற்றதாகவும், பொருளாதாரப் பாடத் தில் 200-_க்கும் 24 மதிப் பெண்கள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததாக மதிப்பெண் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கவிதா மணி தனது விடைத்தாள் நகலை உரிய முறையில் பெற்றுப் பார்த்த போது, விடைத்தாள் நகலின் முன்பகுதியில் கவிதாமணி யின் பெயர், பதிவு எண் இருந்தது. ஆனால், அவர் எழுதிய விடைத்தாளுக் குப் பதிலாக மற்றொரு வரின் விடைத்தாள் இணைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதை யடுத்து, கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவ லகத்தை அவர் தொடர்பு கொண்டபோது, விடைத் தாள் வேலூர் மாவட்டம், ஆம்பூரில் திருத்தப் பட்ட தும், அப்போது தவறு ஏற்பட்டதும் தெரிய வந்தது.

மேலும், 10 நாள் களில் உரிய விடைத்தாள் நகல் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கல்வித்துறை அலுவலர்கள் உறுதியளித் ததாகக் கூறப்படுகிறது. ஆனால், எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை யாம். இதனால், பாதிக்கப் பட்ட மாணவி எந்தக் கல்லூரியிலும் விண்ணப் பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து செய்தி வெளியான நிலையில், பொருளாதாரப் பாடத்தில் கவிதாமணி 123 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாக கல் வித் துறையினர் அறிவித் ததாக அவரது தந்தை சுப்பிரமணி தெரிவித்தார்.

மேலும், மாணவி கவி தாமணி பொருளாதாரப் பாடத்தில் 123 மதிப் பெண்கள் பெற்றுள்ளதை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லக வட்டாரங்கள் உறு திப்படுத்தின.

தமிழ் ஓவியா said...

மனமகிழ வாழ்த்துகிறேன்...


க.நா.நேரு
தி.மு.க. மாவட்ட செயலாளர், திருச்சி தெற்கு மாவட்டம்

மிசா காலம் தொட்டு...
இன்று வரை தி.மு.க.விற்கு பொருளாதார ரீதியாக மிக பெரிய பேருதவியாக
இருந்து வருபவர் அண்ணன் வீகேயென் அவர்கள்
தி.மு.கவிற்கும், தி.கவிற்கும் மனவருத்தம் இருந்த காலத்தில் கூட கலைஞர், ஆசிரியர் ஆகிய
இரு தலைவர்களையும் விட்டு
கொடுக்காமல் பேசி வந்தவர், அந்த மனவருத்தங்கள் போக்கிட விரும்பியவர் அண்ணன் வீகேயென் அவர்கள்.
தகுதியானவர்
இல்லத் திருமணத்திற்கு தகுதியானவர்களாக வாழ்த்த வருகை தரும் திருமிகு தளபதியார், மானமிகு ஆசிரியர் மற்றும் முன்னோடி பெருமக்களும் நன்றி.
வாழ்த்துகிறேன்...

தமிழ் ஓவியா said...

வாழிய வீகேயென் அய்யா
இல்ல மணவிழா


மனித நேயமிக்க மாமனிதராய்
உழைப்பாலும், நேர்மையாலும்
உயர்ந்து நிற்பவர் வீகேயென் அவர்கள்.

உண்மையிலும், உன்னத்திலும் சிகரமாய் விளங்கக் கூடிய
எளிமையானவர், வித்தியாசமானவர்.
எதையும் வலிமையோடு, எதிர் கொள்பவர்.
எடுத்த முடிவில் சமரசம் ஆகாதவர்.
கடந்து வந்த பாதையை மறக்காதவர்
உதவியவர்களுக்கு உயிராய் இருப்பவர்
கழகத் தலைவர் ஆசிரியர் மீது
என்றும் அன்புடையவர்.
தொண்டுள்ளம் கொண்டவர்
கழக நிகழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் அள்ளிக் கொடுப்பவர்.
கொடை வள்ளல் வீகேயென்.
உழைப்பை மட்டும் நம்புபவர்
உன்னத நேர்மையாளர். தந்தை பெரியாரின் கொள்கையை என்றும் மனதில் கொள்பவர்.
கழகத்திற்கு தோன்றா துணையாய் இருப்பவர்.
வீகேயென் மணவிழா சிறக்க வாழ்த்துகள்!

மு.சேகர்
திருச்சி மாவட்ட தலைவர்
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

பார்த்தசாரதி


சென்னைத் திருவல்லிக் கேணி என்றால் பார்த்தசாரதி கோயிலைத்தான் சொல்லு வார்கள். பார்த்தசாரதியாகிய கிருஷ்ணன் இந்தக் கோயி லில் மீசை முறுக்கோடு செதுக்கி வைக்கப்பட்டுள் ளான். இவருக்கு மீசைப் பெருமாள் என்ற பெயரும் உண்டு. வைகுந்த ஏகாதசி திருவிழாவின் போது பகல் பத்து ஆறாம் நாளிலிருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் மீசையில் லாமல் தரிசிக்கலாமாம்! (ஓட்டு மீசையோ!)

ஒவ்வொரு கோயிலுக்கும் தலப் புராணம் போல சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கும் இருக்காதா? 108 திவ்ய தேசங்களில் இது 61ஆவது திவ்யதேசமாம். திருமாலின் பக்தனான சுமதி ராஜன் என்னும் மன்னனுக்கு பெருமாளை குருக்ஷேத்திர போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனாக தரிசிக்க ஆசை யாம்; தன் ஆசையை பெரு மாளிடம் தெரிவித்தாராம். பெருமாளும் இங்கு தேரோட் டியாக காட்சி அளித்தாராம்  திருவல்லிக்கேணி பார்த்த சாரதியின் தலபுராணம் இது தான்.

சரி, இதுபோன்றவை எல்லாம் கடந்த காலத்தில் அதாவது இறந்த காலத்தில் நடந்ததாகத் தானே எழுதித் தள்ளியுள்ளார்கள். இப்பொ ழுதெல்லாம் ஏன் நடப்ப தில்லை? பார்த்தசாரதிக்கு சுமதி ராஜன் போன்ற பக் தர்கள் இப்பொழுதெல்லாம் கிடைக்கவில்லையா? ஏன் ஜீயராவது பெருமாளை வேண்டி அவரின்லீலை களைக் கொஞ்சம் நிகழ் காலத்தில் செய்து காட்டச் சொல்ல வேண்டியதுதானே?

இந்தப் பார்த்தசாரதிக்கும், திராவிட இயக்கத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு என்று சொன்னால் சிலருடைய புருவங்கள் ஏறி இறங்கும் - ஆச்சரியம் செங்குத்தாக எழுந்தும் நிற்கும்.

சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாக பிட்டி தியாகராயரும், டாக்டர் டி.எம். நாயரும் சம காலத்தில் பணியாற்றினர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உள்ள தெப்பக்குளம் அசுத்த மாகி நோய் பரப்பும் இடமாக இருந்து வந்ததால் மக்கள் நலம் கருதி குளத்தை மூடி ஆங்கோர் பூங்காவை நிறு வலாம் என்ற யோச னையைத் தெரிவித்தார் டாக்டர் டி.எம். நாயர். அவ்வளவுதான் பக்திப் பழ மான வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயருக்கு மீசை துடித்தது.

நாயரின் தீர்மானத்தை முன்னின்று தோற்கடித்தார் தியாகராயர். இதே பார்த்த சாரதி கோயில் தெப்பக் குளத்தை மய்யமாக வைத்து இன்னொரு சண்டை இரு வருக்கும்.

அந்தத் திருக்குளத்துக்கு வரியில்லாமல் தண்ணீர் விட வேண்டும் என்றார் தியாக ராயர் (1908) டாக்டர் நாயர் எழுந்து அப்படியானால் மற்ற கோயில் குளங்களுக்கும் அதே மாதிரி நகராட்சி செலவிலேயே தண்ணீர் விட வேண்டும். மேலும் இக்குளம் பொதுக் குளம் அல்ல, கோயிலுக்குச் சொந்தமானது. நல்லளவு வருமானம் வரும் கோயில், அதற்கு ஏன் சலுகை என்று ஒரு போடு போட்டார் டாக்டர் நாயர்.

டாக்டர் நாயர் லண் டனில் மறைந்தபோது இந்தக் கோயிலில் தேங்காய் உடைத் துக் குதியாட்டம் போட்டனர் பார்ப்பனர்கள்.

இந்த வைணவக் கோயில்கள்பற்றி ஒரு முக்கிய தகவல் உண்டு.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் தமிழக அரசுக்குக் கொடுத்த அறிக்கை ஒன்றில்  108 வைணவக் கோயில்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதில் 30 கோயில்களில் மட்டும் ஆகமம் தெரிந்த அர்ச்சகர்கள் உள்ளனராம்.

அந்தப்பட்டியலில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியும் ஒன்றா?

- மயிலாடன்

இன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு ஜீரணத் தோரண பூர்ண கும்பாபிஷேகமாம்.

தமிழ் ஓவியா said...

அறிவுரை யாருக்கோ?

மதத்துடன் யோகாவை தொடர்புபடுத்த வேண்டாம்.
- உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

இதைத்தான் மற்றவர்களும் சொல்லுகிறார்கள்;  யோகாவை (இந்து) மதத் தோடு தொடர்புபடுத்த வேண்டாம் - சூரிய நமஸ் காரம் வேண்டாம், ஓம் வேண்டாம் என்றுதான் மற்ற வர்களும் சொல்லுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

போர்

அமைதியான வாழ்வுக்கும் உலகுக்கும் வழிகாட்டக் கூடியவர் கடவுள் என்று சொல்லிக் கொண்டு, போரை நடத்தச் சொல்லி தனது உறவினர்களையும், கொல்லு கொல்லு என்று ஆணையிடும் பார்த்த சாரதிகள் (கடவுள் கிருஷ் ணன்) உள்ள இந்து மதத்தின் ஆன்மிக லட் சணம் இதுதானா

தமிழ் ஓவியா said...

ராமராஜ்ஜியத்திற்கு முன்னோட்டமா?
இராமாயணத்தைப்பற்றி அருங்காட்சியகமாம்!

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சொல்லுகிறார்
புதுடில்லி, ஜுன் 12_ இராமாயணா சர்க்குயூட் என்கிற பெயரில்  இராமா யணத்தைப் பரப்புவதற் காக பல சுற்றுகள் வாயிலாக பல்வேறு செயல் திட்டங்களின் ஒரு பகுதியாக இராமாயணத் தில் கூறப்பட்டவைகளைக் கொண்டு  அயோத்தியா வில் இராமன் அருங் காட்சியகம் அமைப்ப தற்கு திட்டமிட்டுள்ள தாக மத்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச் சர் மகேஷ் சர்மா கூறி யுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, இராமன் அருங்காட்சியகத்தில் அரசியல்ரீதியிலான மோதல்கள் ஏற்படுவதற் கான வாய்ப்பு இருப்ப தால்,  பிரச்சினைக்குரிய இடமாக உள்ள (பாப்ரி மஸ்ஜித்) பகுதிகுறித்த தகவல் எதுவும் இடம் பெறாது.

இதுவரை இல்லாத அளவில் அருங்காட்சிய கம் மாபெரும் அளவில் அமைத்திட திட்டமிடப் பட்டு வருகிறது. இராமா யண இராமனின் மகிமை களை சித்தரிப்பவையாக அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் பிரச் சினைக்குரிய இடம் (பாப்ரி மஸ்ஜித்)குறித்து எந்த வகையிலும் குறிப் பிடாதவாறு அமைக்கப் படுகிறது.

தமிழ் ஓவியா said...

இந்த அருங்காட்சிய கத் திட்டத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப் படுவதுடன் எவ்வளவு நிதி இருக்கிறதோ அந்த அளவுக்கு செய்யப்படும். அடுத்த ஆண்டில் இதைச் செய்துவிடுவோம்.

விரிவான திட்டத்தின் அறிக்கையுடன் விரைவில் இந்த பணியைத் தொடங்க உள்ளோம். டில்லியில் உள்ள சுவாமிநாராய ணன் அக்ஷார்தாம் கோயிலை மாதிரியாகக் கொண்டு அருங்காட்சியம் அமைத்திடத் திட்டமிடப் பட்டுள்ளது.

ஒளி, ஒலி அமைப்பு களுடன் காட்சிகள், படகு சவாரி, படக்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம் சங்கள்  மற்றும் தெய்வத் தன்மையுடன் தொடர் புள்ள தொல்பொருள் துறையின் பொருள்கள் அருங்காட்சியகத்தில் இடம் பெறும்.

அரசு சார்பில் திட்டங்கள்

அயோத்தியாவை மாபெரும் கலாச்சாரத் தின் மய்யமாக உருவாக்கு வதற்கு அயோத்தியா மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் அரசு சார்பில் வளர்ச்சித் திட் டங்கள் செயல்படுத்தப் படும். உத்தரப்பிர தேசத்தில் தேர்தல் நடை பெற உள்ள சூழலில்   2017ஆம் ஆண்டில் அருங் காட்சியகப் பணிகள் நிறைவடையலாம். சுற்று லாவைத்தான் நாங்கள் வளர்க்கிறோம். அங்கு இராமன் கோயில் அமைக் கப் போகிறோம் என்று நாங்கள் கூறவில்லை.
ஏற்கெனவே அரசு சார்பில் ஒன்றுடன் ஒன்று தொடர்சங்கிலியாக பணியாற்றும்வகையில் அய்ந்து சுற்றுகள் செய லாக்கம் பெற்றுள்ளன. ஆண்டுதோறும் வெவ் வேறான சுற்றுகள்குறித்து அறிவிக்கப்படும். அயோத் தியாவின் மய்யமான ஏதோ ஒரு பகுதியிலும், சித்திரக்கூட் பகுதியிலும் இராமாயணா சுற்று முதலில் தொடங்கப்படு கிறது. பஸ்தியில் உள்ள மகோடா பகுதிக்கும் கண்டிப்பாக செல்வோம். இராமன் தொடர்புடைய உன்னாவ் பகுதியில் ஜானகி குண்ட் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிகளை செய்வதே எங்கள் திட்டமாகும்.
திட்டத்தின் ஒரு பகு தியாக, அரசே நடத்தக் கூடிய கலாச்சார செயல் பாடுகளாக இராமன் மற்றும் இராமாயணத்தை மய்யப்படுத்தி வெளிநாடு களிலும், இந்திய விழாக் களிலும் போக்குவரத்து வணிகப்பகுதிகள் உள் ளிட்ட பகுதிகளிலும் நடத்தப்பட உள்ளது என்று கூறினார்.

பிரசாத் திட்டம்

மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் சார்பில்  புனித யாத்திரை புத்துணர்வு மற்றும் ஆன்மீகம் பெருக்குதல் இயக்கத் திட்டம் (பிர சாத்) (Pilgrimage Rejuvenation and Spirituality Augmentation Drive-PRASAD) எனும் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட் டங்களுக்கான முன்வரை வுகளை அனுப்புமாறு ஏற்கெனவே உத்தரப்பிர தேச மாநில அரசிடம் கோரப்பட்டுள்ளது.

மகேஷ் சர்மாவை அமைச் சராகக் கொண்டுள்ள கலாச்சாரத்துறையிடம் அருங்காட்சியகத்துக்கான பணிகள் மற்றும் இரா மன் மற்றும இராமாய ணத்துடன் தொடர்பு டைய கலாச்சாரங்களை செயல்படுத்தவும் கோரப் பட உள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சகத்துக்கான செயலாளர் லலித் பவார் கூறுகையில், உத்தரப் பிரதேச மாநில அரசிடம் பிரசாத் திட்டத்தின்கீழ் திட்டமுன்வரைவுகளை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். இத் திட்டம் மாநில அரசுகள் செய்ய வேண்டியத் திட்ட மாகும். ஆகவே, இதே போன்று மற்ற மாநிலங் களிடமும் இதுகுறித்து பேசு வோம் என்று கூறினார்.
இந்திராகாந்தி தேசிய கலை மய்யத்தின் (Indira Gandhi National Centre for Arts)
சார்பில் பணிகள் தொடங்கப்பட்டு நடை பெற்றுவருகின்றன. கடந்த ஆண்டில் இராம்லீலா குறித்த ஆய்வுகளைக் கோரி இருந்தது.

இந்திய தொல் பொருள் துறையின் தலை வராக உள்ள ராகேஷ் திவாரி கூறுகையில் இரா மாயணா சுற்றுகுறித்த விவாதங்கள் தொடக்க நிலையிலேயே உள்ளது. அதன் செயல்பாடுகளில் சுற்றுலாத்துறை க்கு இயன்ற அனைத்து உதவி களையும் தொல்பொருள் துறை செய்யும். இந்த சுற்றுகளின் வளர்ச்சிக்கு எங்களை அரசு என்ன செய்ய சொல்கிறதோ அதை செய்வதற்கு நாங் கள் ஆயத்தமாக இருக் கிறோம். இராமாயணத்து டன் தொடர்பு கொண் டுள்ள நாட்டுப்புற கலை ஞர்கள் மற்றும் கலாச் சாரம் தொடர்பில் உள்ள அனைவரையும் ஒருங் கிணைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

பொருளல்ல...

 

மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொரு ளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும்.
(விடுதலை, 10.6.1970)