Search This Blog

12.6.15

பெரியார் கருத்துக்கள் இந்தக் கால கட்டத்தில் மிகவும் தேவையே!பார்ப்பனிய ஆதிக்கத்தை சாமானிய மக்களிடமும் கொண்டு சென்று மகத்தான வெற்றி பெற்ற மாபெரும் புரட்சியாளர் பெரியார்!

பார்ப்பனிய ஆதிக்கத்தை சாமானிய மக்களிடமும் கொண்டு சென்று
மகத்தான வெற்றி பெற்ற மாபெரும் புரட்சியாளர் தந்தை பெரியார்!

பெரியார் கருத்துக்கள் இந்தக் கால கட்டத்தில் மிகவும் தேவையே!
இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்ல வேண்டும்


டில்லி பார்வேர்டு பிரஸ் இதழ் படப்பிடிப்புபுதுடில்லி, ஜூன் 12_ பார்ப்பனிய ஆதிக்கத்தைச் சாதாரண மக்களிடமும் கொண்டு சென்று மிகப் பெரிய வெற்றியை ஈட்டி யவர் தந்தை பெரியார் அவர் கொள்கைகள் இன்றைக்கும் தேவையே இந்தியா முழுமையும் கொண்டு செல்ல வேண் டும் என்று டில்லியிலி ருந்து மாதம் இரு முறை வெளி வரும் இந்தி- இங்கிலீஷ் - இரு மொழி களிலும் வெளிவரும்  ‘Forward Press’ ஏடு ஆய்வு நோக்கோடு எழுதியுள்ளது.


அதிகரித்துவரும் இந் துத்துவ வெறி, வர்ண பேதம், அரசியலில் புகுந் துவிட்ட காவிக்கொள்கை களின் தாக்கத்தால் நடு நிலைவகிக்கும் மக்களும், சமூக அமைதியை விரும் பும் மக்களும் தற்போது பாபாசாகிப் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு சோச லிச கொள்கைகளை உயிர்மூச்சாக கொண்டு தூய நாத்திகனாக திகழ்ந்த பகத் சிங் போன்றோரின் கருத்துகளை மீண்டும் புதுப்பிக்கவேண்டிய காலத்தை உணர்ந்துள்ளனர்.

இந்தியாவில் நீண்ட நெடுங்காலமாக மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஜாதி பேதத்தை உருவாக்கி அதன் மூலம் மக்களை ஒரு பிரிவினர் துண்டாடி தங்கள் பிழைப்பை நடத்திவந்தனர், இதனால் கடந்த நூற் றாண்டுவரை இந்தியா வில் சமூக ஒற்றுமை இல்லாமலிருந்தது, அடி மைத்தனமே ஜாதிரீதியாக மேலோங்கி இருந்தது.  இவற்றை எல்லாம் கண்டு பொங்கி எழுந்தது சமூக நீதியை மீட்டுக் கொடுத் தவர்களில் பாபாசாகிப் அம்பேத்கர், மகாத்மா புலே போன்றோருடன் தென் இந்தியாவில் புகழ் பெற்ற ஈ.வெ.ராமசாமி என்ற பெயர் கொண்ட தந்தை பெரியாரும் முக்கியமானவர்.

வட இந்தியாவில் மிகவும் குறைந்த அளவு மக்களே ஈ.வெ.ராமசாமி என்ற பெரியாரை அறிந் துள்ளனர். தென் இந்தி யாவில் தந்தை பெரியார் என்ற பெயரை மக்கள் அதிகம் அறிந்திருக்கின் றனர். பெரியார் தென் இந்தியாவில் திராவிடர் கழகத்தை உருவாக்கியவர், திராவிடர் கழகத்தின் மூலம் பார்ப்பனரல்லாத மக்களை ஒன்றிணைத்த வர், சமூகத்தில் நிலவிவந்த ஜாதிபேதம், சமூகக் கொடுமை பெண்ணடிமை போன்றவற்றை துணிந்து நின்று எதிர்த்தார். அக் காலகட்டத்தில் ஜாதிய வாதம் வேர்விட்டு தனது கொடிய நச்சுக்கிளைகளை பரப்பிய வேளையில் பெரியாரின் பணி துவங் கியது.

சுயமரியாதை என்னும் ஆயுதம்  பெரியாரின் முதல் வேலை நச்சுக்கிளை களைப் பரப்பிவந்த வர் ணாஸ்ரம ஜாதிபேத மரத்தின் வேரை வெட்டி எரித்துப் பொசுக்கவேண் டிய கட்டாயமிருந்தது. அது அவ்வளவு எளிதான வேலையில்லை, தனது வீட்டில் இருந்து ஆரம் பித்து தனது ஊர் நகரம் மாவட்டம் என நீண்ட பெரும் போராட்டத்தை சந்திக்கவேண்டி இருந்தது. பெரியார் சுயமரியாதை என்னும் ஆயுதத்தை கையிலெடுத்தார்; அவர் கூறினார் ஒருவன் தனக்கு எவ்வளவு மரியாதையை எதிர்பார்க்கிறானோ அதையே மற்றவருக்கும் கொடுக்கவேண்டும் என்று நினைக்க வேண் டும். சுயமரியாதை இயக் கம் ஒரு புரட்சிகர இயக்க மாகும், சமூக நீதி என்பது உட்கார்ந்து தன்னுடைய எஜமானர்களிடம் கெஞ் சிப் பேசி பெறும் ஊதியம் கிடையாது, புரட்சியால் மலரவேண்டிய மாற்றம் என்று பெரியார் கூறினார்.

மேலும் அவர் கூறிய தாவது, உலகில் திருத்த முடியாதவை மிகச்சிலவே அதில் முக்கியமானவை பார்ப்பன சித்தாந்தம் _ அவர்கள் கொடுத்த இந்து மதம் என்று அடித்துக் கூறினார்.

உண்மையைச் சொல்ல அவர் எந்த இடத்திலும் தயங்க வில்லை, அதே நேரத்தில் தான் கூறியதை சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்று கூறினார். அரசியல் விழிப்புணர்வு 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்ததில் இந்தியா முழுவதும் அரசியல் விழிப்புணர்பு, சமுக நீதிப் போராட்டம், நிறைந்தி ருந்தது. எந்த இடத்திலும் பார்ப்பனர்களின் ஆதிக் கமே மேலோங்கி இருந் தது.
1870 முதல் 1900 வரை கல்லூரியில் படித்து வெளிவரும் மாணவர் களில் 80 விழுக்காடு பார்ப்பனர்களே இருந் தனர். மீதமுள்ளவர்களில் உயர் ஜாதியினர் ஆக்கிர மித்திருந்தனர். ஆனால்

இந்தியா முழுவதும் பெரியார் தேவை
1879 ஆம் ஆண்டு ஈரோட்டில் உதித்த பெரியார் என்னும் பகுத்தறிவுப் பகலவன் தன்னுடைய  மரணத்தின் சில நாட்கள் முன்கூட 94 வயதிலும் தன்னுடைய கொள்கைகளைப் பரப்புவதிலும் மக்களுக்காக வாழ்வதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டார். பெரியாருக்கு யுனஸ்கோ அமைப்பு 1970-ஆம் ஆண்டு தெற்காசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டத்தைக் கொடுத்து சிறப்பித்தது. பெரியார் போன்ற தலைவர்களின் கருத்துக் களால் இன்று இந்தியா சமூக நீதிக்களத்தில் முன்னேற்றம் பெற்று வீரநடைபோடுகிறது.  தற்போது இந்துத்துவக் கொள்கைகளைக் கொண்ட ஆட்சியாளர்களால் சமூக நீதிக்கு சிறிது பின்ன டைவு ஏற்படத் துவங்கியுள்ளது. இந்தக் கால கட்டத்தில் பெரியாரின் கருத்துக்களை மீண்டும் உயிரூட்டம் கொடுத்து இந்தியா முழுவதும் கொண்டு செல்லக் கடமைப் பட்டுள்ளோம்.

பெரியாரால் திறந்துவைக்கப்பட்ட இந்த வெற்றிப்பாதையில் வீரநடைபோட்டு பார்ப் பனரல்லாதமக்கள் ஒன்றுதிரண்டு தங்கள் உரிமைக்காக பெரியார் தலைமையில் போராட ஆரம்பித்தனர். இதன் விளைவாக இந்தியாவெங்கும் சமூகநீதிக்கான போராட்டம் பற்றிக் கொண்டது, அரசுகள் வேறு வழியின்றி பிற்படுத்தப்பட்ட, மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை வகுக்கமுன்வந்தது.சுதந்திரப்போராட்டத்தில் பார்ப்பனர்களின் பங்கு 3 விழுக்காடு மாத்திரமே இருந்தது. 1912-ஆம் ஆண்டில் 55 விழுக்காடு துணை மாவட்ட ஆட்சியாளர்கள், 82 விழுக்காடு நீதிபதிகள், 72 விழுக்காடு நகர நிர்வாக அதிகாரிகள் பதவியில் பார்ப்பனர்களே நிறைந் திருந்தனர். ஆனால் சமூகத்தில் பார்ப்பனரல்லாதோர் மிகவும் அதிகமாக இருந்தனர். அதேபோல் 80 விழுக்காடு பார்ப்பனர்கள் ஆங்கிலவழிக் கல்விகற்று ஆங்கிலேயே அரசாங்கத்தில் பெரும்பான்மையான பதவிகளைப் பெற்றிருந்தனர். இந்த நேரத்தில் பெரியார் தனது இயக்கத்தின் மூலம் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் கல்வி முதல் எல்லாப் பதவியிலும் இட ஒதுக்கீடு வேண்டுமென்ற போராட்டத்தில் இறங்கினார். போராட்டத்தின் அதிர்வு ஆங்கிலேய அரசாங்கத்தை அசைத்துப் பார்த்தது. இதன் விளைவாக 1928-ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் (தற்போது தமிழ்நாடு, ஆந்திரா,தெற்கு கர்னாடகா, கேரளா அடங்கிய பகுதி) இட ஒதுக்கீடு அமுலுக்கு வந்தது. இந்தியாவில் முதல்முதலாக சமூகநீதிக்கான ஒரு போராட்டம் வெற்றிப் பாதையை திறந்து வைத்தது. பெரியாரால் திறந்து வைக்கப்பட்ட இந்த வெற்றிப் பாதை!
பெரியார் எந்த ஒரு இடத்திலும் தம்மக்களுக்கான உரிமையை மீட்டுத்தர பின்வாங்கியதில்லை, பெரியார் தீவிர கடவுள் மறுப்பாளர், தான் கடவுள் மறுப்பாளராக இருப்பினும் கோவில்களில் பூசைசெய்யும் உரிமையை பார்ப்பனர்கள் மட்டும் வைத்திருப்பதை கடுமையாக எதிர்த்தார். பார்ப்பனரல்லாதவர்களும் கருவறைக்குள் சென்று பூசை செய்யும் உரிமைக்காக இறுதிமூச்சுவரை போராடினார்.
இந்துமதத்தில் உள்ள வேதங்கள், ராமாயணம், மகாபாரதம் போன்றவை தான் ஜாதிபேதமுறையை பரப்பும் முக்கிய கருவிகள் என்பதை அறிந்துகொண்ட பெரியார் அந்த புராணப்புரட்டு நூல்களில் புதைந்துள்ள மோசடிகளை மக்களிடையே கொண்டு சென்றார். பெரியார் மற்றும் திராவிடர் கழகம் இந்த நூல்களில் மறைந்துள்ள பிரிவினைவாதக் கருத்துக் களை சாமானியமக்கள் வரை கொண்டு சேர்த்தனர்.  மக்களிடையே ஏற்படுத்தும் ராமாயணப்புரட்டு என்ற நூலையே திராவிடர்கழகம் வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டியது. பெரியார் ஆரியர் களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போராட்டமே ராமாயண கதையாக மாற்றப்பட்டது என்று அடித்துக் கூறினார். பிற்காலத்தில் பல்வேறு ஆய்வுகளின் மூலம் பெரியாரின் கூற்று உண்மையாக நிரூபிக்கப்பட்டது.
ராவண காவியம்
ராவணனே ராமாயண நாயகன் என்று திராவிடர் கழகம் மக்களிடையே கொண்டு சென்றது; இதற்காக பல நூல்கள் வெளிவந்தன. அதில் ராவண காவியம் என்ற நூலும் முக்கியமானதாகும். திராவிடர் கழகம் குறித்து ஆய்வு செய்த எம்.எஸ்.எஸ்.பாண்டியன் கூறும் போது திராவிடர் கழகம் ராவணனை திராவிடர்களின் நாயகனாக மக்களிடையே சித்தரித்தது. ஆரியர்களால் மறைத்து எழுதப்பட்ட ராவணனின் உண்மையான குணநலன்களை ராவணகாவியத்தில் வெளிக் கொணர்ந்திருந்தது, அதே போல் ராமனின் அயோக்கியத்தனத்தையும் மக்களிடையே பரப்பினர். (புலவர் குழந்தையால் எழுதப்பட்டது இராவண காவியம்). பெரியார் மூடத்தனம், மதத்தின் பெயரால் நடைபெறும் மூடநம்பிக்கை செயல்கள் மற்றும் மதநம்பிக்கைகளை கடுமையாக எதிர்த்தார்.
அதே நேரத்தில் நவீன அறிவியல் குறித்து ஆர்வத்துடன் பல்வேறு கருத்துக்களை மக்களிடையே வைத்தார். மக்களின் உழைப்பால் வந்த பணத்தை மத நம்பிக்கையின் பெயரால் வீணாக்குவதை கடுமையாக எதிர்த்தார். பெரியார் தனது கருத்துக்களை சாமான்ய மக்களிடையே எளிமையாகக் கொண்டுசேர்க்கும் வகையில் தமிழ் மொழி நடையை எளிமையாக்கினார்.    சி.என். அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது, பெரியாரின் கனவை நனவாக்கினார்கள். அண்ணாதுரை மதராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றினார்.
பெரியாரின் சிந்தனையில் எழுந்த புரட்சிகர திருமணமான சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக இயற்றினார். கலைஞர் கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைச் சட்டமாக்கினார்.
பெண் விடுதலையும் பெரியாரும்
பெரியார் ஆயிரம் நூற்றாண்டுகளாக சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்டுவரும் கொடுமைகளை களையத்தவறவில்லை. கற்பு புனிதம் போன்றவைகளின் பெயர்களால் பெண்களை அடிமைப்படுத்தும் முறையைக் கடுமையாக எதிர்த்தார். கற்பு புனிதம் என்பது பெண்களுக்கு மட்டும் என்று எப்படி சொல்ல முடியும் என்று  பெண்ணடிமைத்தனத்தை ஆண்டாண்டு காலமாக வைத்திருக்க காரணமே இந்த கற்பு புனிதம் போன்றவை தான் என்று கூறினார்.

ஆண்களுக்கு இணையாக பெண்களும் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். கல்வி, வேலை போன்றவற்றில் ஆண்களோடு பெண்களும் சரி சமமாக இருக்கவேண்டும் என்று கூறினார். திராவிடர்கழகம் பெண்ணடிமைகளை ஒழிக்க பெரும் போராட்டமே சமூகத்தில் நடத்தியது அதன் பலனை இன்று தென்னகத்துப் பெண்கள் அனுபவித்து வருகின்றனர்.


தந்தை பெரியாரின் தன்னுடைய போராட்டங்களின் பலனை தனது கண்ணால் கண்டு மகிழ்ந்தார் பெரியார் போன்று உலகில் மிகச்சில தலைவர்களே உண்டு, பெரியார் தன்னுடைய கொள்கையில் எந்த அளவிலும் பிசகாமல் தன்னுடைய புரட்சிப் பயணத்தை தொடர்ந்தார். - சத்ய சாகர், சமூக சேவகர், பத்திரிகையாளர்,  தலைநகர் டில்லியில் இருந்து வெளிவரும் பார்வேர்ட் பிரஸ் என்ற இருமொழி மாத இதழின் ஜூன் பதிப்பில் எழுதியதுமகாராஷ்டிராவில் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாதா சாவித்திரிபாய் புலேவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பெரியார் அவர் செய்ய மறந்த பல்வேறு பெண்ணுரிமைப் புரட்சிகளை தமிழக மண்ணில் நடத்திக் காட்டினார்.

-----------------------------------------”விடுதலை” 12-06-2015


Read more: http://www.viduthalai.in/headline/103124-2015-06-12-10-02-04.html#ixzz3cqEuoAtU

17 comments:

தமிழ் ஓவியா said...

பார்த்தசாரதி


சென்னைத் திருவல்லிக் கேணி என்றால் பார்த்தசாரதி கோயிலைத்தான் சொல்லு வார்கள். பார்த்தசாரதியாகிய கிருஷ்ணன் இந்தக் கோயி லில் மீசை முறுக்கோடு செதுக்கி வைக்கப்பட்டுள் ளான். இவருக்கு மீசைப் பெருமாள் என்ற பெயரும் உண்டு. வைகுந்த ஏகாதசி திருவிழாவின் போது பகல் பத்து ஆறாம் நாளிலிருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் மீசையில் லாமல் தரிசிக்கலாமாம்! (ஓட்டு மீசையோ!)

ஒவ்வொரு கோயிலுக்கும் தலப் புராணம் போல சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கும் இருக்காதா? 108 திவ்ய தேசங்களில் இது 61ஆவது திவ்யதேசமாம். திருமாலின் பக்தனான சுமதி ராஜன் என்னும் மன்னனுக்கு பெருமாளை குருக்ஷேத்திர போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனாக தரிசிக்க ஆசை யாம்; தன் ஆசையை பெரு மாளிடம் தெரிவித்தாராம். பெருமாளும் இங்கு தேரோட் டியாக காட்சி அளித்தாராம்  திருவல்லிக்கேணி பார்த்த சாரதியின் தலபுராணம் இது தான்.

சரி, இதுபோன்றவை எல்லாம் கடந்த காலத்தில் அதாவது இறந்த காலத்தில் நடந்ததாகத் தானே எழுதித் தள்ளியுள்ளார்கள். இப்பொ ழுதெல்லாம் ஏன் நடப்ப தில்லை? பார்த்தசாரதிக்கு சுமதி ராஜன் போன்ற பக் தர்கள் இப்பொழுதெல்லாம் கிடைக்கவில்லையா? ஏன் ஜீயராவது பெருமாளை வேண்டி அவரின்லீலை களைக் கொஞ்சம் நிகழ் காலத்தில் செய்து காட்டச் சொல்ல வேண்டியதுதானே?

இந்தப் பார்த்தசாரதிக்கும், திராவிட இயக்கத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு என்று சொன்னால் சிலருடைய புருவங்கள் ஏறி இறங்கும் - ஆச்சரியம் செங்குத்தாக எழுந்தும் நிற்கும்.

சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாக பிட்டி தியாகராயரும், டாக்டர் டி.எம். நாயரும் சம காலத்தில் பணியாற்றினர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உள்ள தெப்பக்குளம் அசுத்த மாகி நோய் பரப்பும் இடமாக இருந்து வந்ததால் மக்கள் நலம் கருதி குளத்தை மூடி ஆங்கோர் பூங்காவை நிறு வலாம் என்ற யோச னையைத் தெரிவித்தார் டாக்டர் டி.எம். நாயர். அவ்வளவுதான் பக்திப் பழ மான வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயருக்கு மீசை துடித்தது.

நாயரின் தீர்மானத்தை முன்னின்று தோற்கடித்தார் தியாகராயர். இதே பார்த்த சாரதி கோயில் தெப்பக் குளத்தை மய்யமாக வைத்து இன்னொரு சண்டை இரு வருக்கும்.

அந்தத் திருக்குளத்துக்கு வரியில்லாமல் தண்ணீர் விட வேண்டும் என்றார் தியாக ராயர் (1908) டாக்டர் நாயர் எழுந்து அப்படியானால் மற்ற கோயில் குளங்களுக்கும் அதே மாதிரி நகராட்சி செலவிலேயே தண்ணீர் விட வேண்டும். மேலும் இக்குளம் பொதுக் குளம் அல்ல, கோயிலுக்குச் சொந்தமானது. நல்லளவு வருமானம் வரும் கோயில், அதற்கு ஏன் சலுகை என்று ஒரு போடு போட்டார் டாக்டர் நாயர்.

டாக்டர் நாயர் லண் டனில் மறைந்தபோது இந்தக் கோயிலில் தேங்காய் உடைத் துக் குதியாட்டம் போட்டனர் பார்ப்பனர்கள்.

இந்த வைணவக் கோயில்கள்பற்றி ஒரு முக்கிய தகவல் உண்டு.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் தமிழக அரசுக்குக் கொடுத்த அறிக்கை ஒன்றில்  108 வைணவக் கோயில்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதில் 30 கோயில்களில் மட்டும் ஆகமம் தெரிந்த அர்ச்சகர்கள் உள்ளனராம்.

அந்தப்பட்டியலில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியும் ஒன்றா?

- மயிலாடன்

இன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு ஜீரணத் தோரண பூர்ண கும்பாபிஷேகமாம்.

தமிழ் ஓவியா said...

அறிவுரை யாருக்கோ?

மதத்துடன் யோகாவை தொடர்புபடுத்த வேண்டாம்.
- உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

இதைத்தான் மற்றவர்களும் சொல்லுகிறார்கள்;  யோகாவை (இந்து) மதத் தோடு தொடர்புபடுத்த வேண்டாம் - சூரிய நமஸ் காரம் வேண்டாம், ஓம் வேண்டாம் என்றுதான் மற்ற வர்களும் சொல்லுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

போர்

அமைதியான வாழ்வுக்கும் உலகுக்கும் வழிகாட்டக் கூடியவர் கடவுள் என்று சொல்லிக் கொண்டு, போரை நடத்தச் சொல்லி தனது உறவினர்களையும், கொல்லு கொல்லு என்று ஆணையிடும் பார்த்த சாரதிகள் (கடவுள் கிருஷ் ணன்) உள்ள இந்து மதத்தின் ஆன்மிக லட் சணம் இதுதானா

தமிழ் ஓவியா said...

ராமராஜ்ஜியத்திற்கு முன்னோட்டமா?
இராமாயணத்தைப்பற்றி அருங்காட்சியகமாம்!

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சொல்லுகிறார்
புதுடில்லி, ஜுன் 12_ இராமாயணா சர்க்குயூட் என்கிற பெயரில்  இராமா யணத்தைப் பரப்புவதற் காக பல சுற்றுகள் வாயிலாக பல்வேறு செயல் திட்டங்களின் ஒரு பகுதியாக இராமாயணத் தில் கூறப்பட்டவைகளைக் கொண்டு  அயோத்தியா வில் இராமன் அருங் காட்சியகம் அமைப்ப தற்கு திட்டமிட்டுள்ள தாக மத்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச் சர் மகேஷ் சர்மா கூறி யுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, இராமன் அருங்காட்சியகத்தில் அரசியல்ரீதியிலான மோதல்கள் ஏற்படுவதற் கான வாய்ப்பு இருப்ப தால்,  பிரச்சினைக்குரிய இடமாக உள்ள (பாப்ரி மஸ்ஜித்) பகுதிகுறித்த தகவல் எதுவும் இடம் பெறாது.

இதுவரை இல்லாத அளவில் அருங்காட்சிய கம் மாபெரும் அளவில் அமைத்திட திட்டமிடப் பட்டு வருகிறது. இராமா யண இராமனின் மகிமை களை சித்தரிப்பவையாக அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் பிரச் சினைக்குரிய இடம் (பாப்ரி மஸ்ஜித்)குறித்து எந்த வகையிலும் குறிப் பிடாதவாறு அமைக்கப் படுகிறது.

இந்த அருங்காட்சிய கத் திட்டத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப் படுவதுடன் எவ்வளவு நிதி இருக்கிறதோ அந்த அளவுக்கு செய்யப்படும். அடுத்த ஆண்டில் இதைச் செய்துவிடுவோம்.

விரிவான திட்டத்தின் அறிக்கையுடன் விரைவில் இந்த பணியைத் தொடங்க உள்ளோம். டில்லியில் உள்ள சுவாமிநாராய ணன் அக்ஷார்தாம் கோயிலை மாதிரியாகக் கொண்டு அருங்காட்சியம் அமைத்திடத் திட்டமிடப் பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

ஒளி, ஒலி அமைப்பு களுடன் காட்சிகள், படகு சவாரி, படக்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம் சங்கள்  மற்றும் தெய்வத் தன்மையுடன் தொடர் புள்ள தொல்பொருள் துறையின் பொருள்கள் அருங்காட்சியகத்தில் இடம் பெறும்.

அரசு சார்பில் திட்டங்கள்

அயோத்தியாவை மாபெரும் கலாச்சாரத் தின் மய்யமாக உருவாக்கு வதற்கு அயோத்தியா மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் அரசு சார்பில் வளர்ச்சித் திட் டங்கள் செயல்படுத்தப் படும். உத்தரப்பிர தேசத்தில் தேர்தல் நடை பெற உள்ள சூழலில்   2017ஆம் ஆண்டில் அருங் காட்சியகப் பணிகள் நிறைவடையலாம். சுற்று லாவைத்தான் நாங்கள் வளர்க்கிறோம். அங்கு இராமன் கோயில் அமைக் கப் போகிறோம் என்று நாங்கள் கூறவில்லை.
ஏற்கெனவே அரசு சார்பில் ஒன்றுடன் ஒன்று தொடர்சங்கிலியாக பணியாற்றும்வகையில் அய்ந்து சுற்றுகள் செய லாக்கம் பெற்றுள்ளன. ஆண்டுதோறும் வெவ் வேறான சுற்றுகள்குறித்து அறிவிக்கப்படும். அயோத் தியாவின் மய்யமான ஏதோ ஒரு பகுதியிலும், சித்திரக்கூட் பகுதியிலும் இராமாயணா சுற்று முதலில் தொடங்கப்படு கிறது. பஸ்தியில் உள்ள மகோடா பகுதிக்கும் கண்டிப்பாக செல்வோம். இராமன் தொடர்புடைய உன்னாவ் பகுதியில் ஜானகி குண்ட் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிகளை செய்வதே எங்கள் திட்டமாகும்.
திட்டத்தின் ஒரு பகு தியாக, அரசே நடத்தக் கூடிய கலாச்சார செயல் பாடுகளாக இராமன் மற்றும் இராமாயணத்தை மய்யப்படுத்தி வெளிநாடு களிலும், இந்திய விழாக் களிலும் போக்குவரத்து வணிகப்பகுதிகள் உள் ளிட்ட பகுதிகளிலும் நடத்தப்பட உள்ளது என்று கூறினார்.

பிரசாத் திட்டம்

மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் சார்பில்  புனித யாத்திரை புத்துணர்வு மற்றும் ஆன்மீகம் பெருக்குதல் இயக்கத் திட்டம் (பிர சாத்) (Pilgrimage Rejuvenation and Spirituality Augmentation Drive-PRASAD) எனும் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட் டங்களுக்கான முன்வரை வுகளை அனுப்புமாறு ஏற்கெனவே உத்தரப்பிர தேச மாநில அரசிடம் கோரப்பட்டுள்ளது.

மகேஷ் சர்மாவை அமைச் சராகக் கொண்டுள்ள கலாச்சாரத்துறையிடம் அருங்காட்சியகத்துக்கான பணிகள் மற்றும் இரா மன் மற்றும இராமாய ணத்துடன் தொடர்பு டைய கலாச்சாரங்களை செயல்படுத்தவும் கோரப் பட உள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சகத்துக்கான செயலாளர் லலித் பவார் கூறுகையில், உத்தரப் பிரதேச மாநில அரசிடம் பிரசாத் திட்டத்தின்கீழ் திட்டமுன்வரைவுகளை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். இத் திட்டம் மாநில அரசுகள் செய்ய வேண்டியத் திட்ட மாகும். ஆகவே, இதே போன்று மற்ற மாநிலங் களிடமும் இதுகுறித்து பேசு வோம் என்று கூறினார்.
இந்திராகாந்தி தேசிய கலை மய்யத்தின் (Indira Gandhi National Centre for Arts)
சார்பில் பணிகள் தொடங்கப்பட்டு நடை பெற்றுவருகின்றன. கடந்த ஆண்டில் இராம்லீலா குறித்த ஆய்வுகளைக் கோரி இருந்தது.

இந்திய தொல் பொருள் துறையின் தலை வராக உள்ள ராகேஷ் திவாரி கூறுகையில் இரா மாயணா சுற்றுகுறித்த விவாதங்கள் தொடக்க நிலையிலேயே உள்ளது. அதன் செயல்பாடுகளில் சுற்றுலாத்துறை க்கு இயன்ற அனைத்து உதவி களையும் தொல்பொருள் துறை செய்யும். இந்த சுற்றுகளின் வளர்ச்சிக்கு எங்களை அரசு என்ன செய்ய சொல்கிறதோ அதை செய்வதற்கு நாங் கள் ஆயத்தமாக இருக் கிறோம். இராமாயணத்து டன் தொடர்பு கொண் டுள்ள நாட்டுப்புற கலை ஞர்கள் மற்றும் கலாச் சாரம் தொடர்பில் உள்ள அனைவரையும் ஒருங் கிணைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

பொருளல்ல...

 

மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொரு ளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும்.
(விடுதலை, 10.6.1970)

தமிழ் ஓவியா said...

மணவை முஸ்தபா அவர்களுக்கு வாழ்த்து!மணவையார் அமெரிக்கா வந்து தமிழ்ச்சங்கப் பேரவையிலும் மற்ற தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தமிழின் பெருமையை நிலை நாட்டினார். தமிழுக்காகத் தனக்கு கிடைத்த வேலையை உதறி தமிழால் முன்னேறி உலகம் போற்ற அய்க்கிய நாட்டுப் பணியை ஆற்றிய மேன்மையை அறிவோம்.

இங்கு எங்கள் பலர் இல்லங்களிலே அவர் தங்கியிருந்தமை எங்கட்கெல்லாம் பெருமை. பேச்சுத் திறனை இழந்தாலும் மூச்சு தமிழுக்கே என்று வாழும் பெருந்தகையே உமை வாழ்த்த வார்த்தைகள் பல நீர் எழுதிய பல அறிவியல் களஞ்சியங்களிலே உண்டு ஆனாலும் அதற்கும் மேலும் ஒரு வார்த்தை அறிவியல் வள்ளுவன். வாழிய நீவிர்! - சோம.இளங்கோவன்
FeTNA, Past President, Periyar International USA

தமிழ் ஓவியா said...

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களின் அம்பேத்கர்- பெரியார் வழக்குரைஞர்கள் படிப்பு வட்டம் தொடக்கவிழா


சென்னை, ஜூன் 12_ சென்னை அய்.அய்.டி. மாண வர்களின் அம்பேத்கர்_ பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டது. அதனால், நாடுதழுவிய அளவில் பெருமளவில் எதிர்ப்புகள் வெடித்தன. அய்.அய்.டி. நிர்வாகம் மட்டுமன்றி மத்திய மனிதவள மேம்பாட் டுத்துறை அமைச்சகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த பாஜகவின் மத்திய அரசையே நிலைகுலையச் செய்தது. காரணம் அய்.அய்.டியில் விதிக்கப்பட்டத் தடையை எதிர்த்து போராட்டங்கள் ஒரு பக்கம் என்றால், மும்பை, டில்லி, கான்பூர் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங் களிலும் மாணவர்களின் சார்பில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால், நாடுமுழுவதும் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டங்கள் மிகுந்த எழுச்சியை ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்திவந்தன. வேறு வழியின்றி ஆளும் பாஜகவின் அரசு தன் கையாலாகாத தனத்தை மறைத்துக்கொண்டு, இந்துத்துவாவின் வாலை சுருட்டிக்கொண்டு, தடைக்கான காரணமாக ஒப்புக்கு சப்பான காரணங்களைச் சொல்லியது. அய்.அய்.டி.நிர்வாகத்தின் சார்பில் மாணவர்களுக்கான நடத்தை விதிமுறைகள் 18.4.2015 அன்று உத்தரவானது என்றும், ஆனால், அதற்கு முன்பே 14.4.2015 அன்று சென்னை அய்.அய்.டி. மாணவர்களின் அம்பேத்கர்_ பெரியார் வாசகர் வட்ட நிகழ்ச்சி நடந்தது என்பதால், அந்த உத்தரவின்மூலம் அவ்வமைப்புக்கு விதிக்கப்பட்டத் தடையை விலக்கிக்கொள்வதாகக் கூறப்பட்டது. ஆனால், உண்மை என்னவெனில் ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்கள் பெயரில் அமைப்பு அய்.அய்.டி. நிறு வனத்துக்குள் இருப்பதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மேலும், சென்னை அய்.அய்.டி மாண வர்களின் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அமைப்பு மோடியின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுவரும் இந் துத்துவா செயல்திட்டங்களை வெளிப்படையாகக் கண்டித்ததுதான் முதன்மையான காரணமாகும்.

ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்களின் பெயரில் அமைப்பு இருக்கக்கூடாது என்கிற பாசிச பாஜகவின் எதேச்சாதிகாரத்துக்கு சாட்டைஅடி கொடுக்கும்வகையில் மேலும் மேலும் பல்வேறு இடங்களில் அம்பேத்கர்_ பெரியார் வாசகர் வட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டு வருகின்றன. சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சார்பில் அம்பேத்கர்_ பெரியார் வழக்குரைஞர்கள் படிப்பு வட்டம் நேற்று (11.6.2015) அன்று ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேட் அரங்கில் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தலைமையில் தொடங்கப்பட்டது. வழக்குரைஞர் வை.இளங்கோவன் வரவேற்றார்.

அம்பேத்கர்_ பெரியார் வழக்குரைஞர்கள் படிப்பு வட்ட தொடக்க விழாவில் உயர்நீதிமன்றத்தின் வழக் குரைஞர்களால் அரங்குநிறைந்தது. மூத்த வழக்குரை ஞர்கள், இளம் வழக்குரைஞர்கள் என்று அனைத்து தரப்பினரும் அமைப்பில் இணைந்து ஒடுக்கப்பட்ட வர்களின் குரல்வளையை எவரும் நெரித்துவிட முடியாது என்று அறிவிக்கும்வகையில் இருபால் வழக்குரைஞர் களும் கலந்துகொண்டனர். தொடக்க விழாவில் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்க உரையாற்றினார். தொடக்க உரையில் அய்.அய்.டி. மாணவர்களின் அம்பேத்கர்_ பெரி யார் வாசகர் வட்ட மாணவர் அமைப்புக்கு விதிக்கப் பட்ட தடை மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவர்களிடையே ஏற்பட்ட எழுச்சி குறித்து விரிவாக எடுத்துக்கூறினார்.

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார்கள்.

திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையில் அம்பேத்கர்_ பெரியார் வழக்குரைஞர்கள் படிப்பு வட்ட அமைப்பை தோற்றுவித்துள்ள சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்குரைஞர்களை பெரிதும் வாழ்த்திப் பாராட்டினார். மேலும், இவ்வமைப்பு போல் பல்வேறு இடங்களிலும் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் தம்முடைய விருப்பத்தையும் தெரிவித்தார் வழக்குரைஞர் துரை.அருண் நன்றி கூறினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால்கனகராஜ், வழக்குரைஞர் சமூக பேரவை தலைவர் கே.பாலு, வழக்குரைஞர்கள் நளினி, ஆ.வீரமர்த்தினி, ந.விவேகானந்தன், சென்னியப்பன், அருள்மொழி உள்பட ஏராளமானவர்கள் விழாவில் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...

ஹோசிமின் கூறுகிறார்
பழம் பெருமைப் பேசாதே!

கம்யூனிஸ்டுகள் எளிமையாகவும், பணிவாகவும் எத்தகைய கடின உழைப்பையும் ஏற்றுக் கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். கம்யூனிஸ்டு மற்றவர்களுக்கு முன்னதாக உழைப்பைப் பற்றி சிந்திப்பவர்களாகவும், மகிழ்ச்சியோடு இருப்பதை மற்றவர்களுக்குப் பின்னர் எண்ணுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

புரட்சியாளர்கள் பழம் பெருமை பேசுவது கூடாது

- பீப்பிள் டெமாக்கிரசி

தமிழ் ஓவியா said...

சிகாகோவில் ஒரு தமிழ்ப் பள்ளி சிகரமாய் ஒளிர்கிறது!


இன்று பல கிளைகளுடன் நானூற் றுக்கும் மிகுதியான குழந்தைகளுடன் இயங்கிக் கொண்டிருக்கும் பெரு மையைப் பெற்றுள்ளது.

சூன் 7ஆம் நாள் பள்ளிகளின் ஆண்டு விழா மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது .ஆரம்ப காலத்தில் பயின்ற தமிழ் குழந்தைகளின் குழந் தைகளே இன்று பங்கேற்று அவர்களின் தாத்தா பாட்டிகளை மகிழ்விப்பது இன்பத்தின் எல்லை !

குழந்தைகள் உன்னிப்பான உச்சரிப்புடன் உன்னதமாகப் பொருள் விளங்க திருக்குறள் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குறள்களை ஒப்பு வித்தது கண்டு சிகாகோவின் பழம் பெருந்தமிழர் தமிழறிஞர்

புலவர் சவரிமுத்து அவர்களும், மற்ற நடுவர் பேராசிரியர் கோபாலன் அவர்களும் வியப்புற்றுப் பாராட்டினர். ஏழு பள்ளிகளுக்கும் தாளாளராக இருந்து கடமை, கண்டிப்பு, திறம்பட்ட இலக்கணம் ,உச்சரிப்பு என்று தன் வாழ் நாள் பணியாக ஆரம்ப காலத்திலிருந்து பாடு பட்டு வரும் சீரிய தமிழன்

இனமான உணர்வாளர் வ.ச. பாபு அவர்களை எவ்வளவு பாராட்டினா லும் தகும் என்று பெருமைப் பட்டனர். பெரும்பாலும் குழந்தைகளே நடத்திய ஆண்டுவிழா நிகழ்சசிகளே பெருமைப் படக் கூடியனவாகும்.

விரைவாக வார்த்தைப் போட்டிகள். வார்த்தையில் வரும் எழுத்தை வைத்து. அடுத்த வார்த்தை சொல்ல வேண்டும். மாணவச் செல்வங்கள் சொன்ன வார்த்தைகள் நம்மையே திணறடிக்கக் கூடியவை. பலவார்ததைகள் கரவொலி பெற்றன. இறுதி வரை நின்று வார்த்தைகள் சொன்னவர்கள் பாராட் டும் பரிசும் பெற்றனர் .

பல. போட்டிகள்,சிலகடுமையான போட்டிகளாக இருந்தன. திரையிலே படங்கள் காடசிகளைக் காண்பிக்க குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலங்களைப் பற்றி ஒவ்வொரு வராக வந்து நிலம், வாழ்க்கை, மிரு கங்கள், மலர்கள், விளை பொருள்கள் பற்றி நமக்கே பாடமெடுத்தனர்.

பழ மொழிப் போட்டியில் அணி களாகப் போட்டியிட்டு நடுவர் ஒரு வார்த்தை சொல்ல அதை வைத்துப் பழ மொழியைச் சொல்வார்கள். கரை என்றால் உடனே இக்கரைக்கு அக்கரை பச்சை என்பர்.

குழந்தைகள் சேர்ந்துபாடிய செம் மொழிப் பாடல் திரையிலே காட்சிகள் தோன்ற பாடப் பட்ட போது நெஞ்சைத் தொட்டது. இது நாள்முழுதும் நடந்த நிகழ்ச்சிகளின் சிறு எடுத்துக்காட்டு மட்டுமே!

பங்கு பெற்ற அத்தனைக் குழந்தை களும் கற்றுவித்த ஆசிரியப் பெருமக் களும், ஒத்துழைத்த பெற்றோர்களும் பாராட்டப்பட்டனர் .

அமெரிக்காவின் பல நகரங்களிலே தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்படும் பல தமிழ்ப்பள்ளிகள் அதிலே தமிழை நல்ல உச்சரிப்புடன் பயின்று பேசும் மாணவச் செல்வங்கள், அவர்களாகவேநடத்தும் நிகழ்ச்சிகள், ஆண்டுதோறும் நடக்கும் சூலை 4 தமிழ்த் திருவிழாவில் அக மகிழ வைக்கும் குழந்தைகள் நிகழ்ச்சிகள் போன்றவை அமெரிக்காவில் தமிழ் வளர்கின்றது என்ற மகிழ்ச்சியை எங்களுக்கு அளிக்கின்றது.Read more: http://www.viduthalai.in/page-1/103182.html#ixzz3cwWK2gPv

தமிழ் ஓவியா said...

பெண்மைச் சமத்துவம் பேணல் நன்றே!
-----வா.மு.சேதுராமன்பெண்ணடிமைச் சின்னம்தான் தாலி என்றால்
பீடுடையார் அதை மறுத்துச் சொல்வா ராமோ?
கண்ணுடையான் சிவபெருமான் தன்னில் பாதி
கற்பகத்தாய் உமையாளை வைத்துப் போற்றும்
மண்ணுடையார் பெண்கட்கு மட்டும் தாலி
மாட்டைப்போல் மூக்கணாங்கயிறுமாட்டி
நுண்ணறிவில் இடர்ப்பாட்டால் தாலி கட்ட
நுவன்றிட்டால் வருங்காலம் ஏற்ப துண்டோ

புண்ணியமும் பாவமும்அத் தாலி இல்லை
பொற்கொடியர் கற்புநெறி ஐயம் கொண்டு
கண்ணியமில் தாலியினை மாட்டி விட்டுக்
காரிகையர் அடிமையாக ஞாலம் தன்னில்
வண்ணஎழில் ஓவியத்தைச் சிதைத்த லைப்போல்
வன்கொடுமை செய்பவர்கள், மாதர் தம்மை
எண்ணில்லா இடும்பைக்கே ஆளாக் கும்அவ்
இயற்கைக்கு முரணா ம்அத் தாலி அன்றோ?

தொல்காப்பி யர்காலத் தின்முன் தாலி
துணைவியர்க்கோ அடையாள மாக இல்லை
பல்விதத்தும் பொய்புரட்டுச் சூழ வாழும்
பாங்குக்குத் தக்கவழிக் கரணம் கண்டார்
எல்லையிலாத தம்வீரம் காதல் ஆக
இவையிரண்டு மேதமிழர் வாழ்வுக் கேதான்
நல்லிரு வெல் கண்களாகப் போற்றிக் காத்தல்
நாடுகாதல் வாழ்விலாண்பெண் சமமே கண்டார்

அடலேற்று வீரமகன் செறிந்த காட்டுள்
அதி எதிர்க்கும் வேங்கை கள்வென்று கொண்ட
இடம்தந்த பொருள் களபல் செயல்கள் ஆண்மை
ஏற்றதிரு அடையாள மாக காதல்
மடலவிழ்பூங் கோதைக்குப் பரிசு தந்தான்
மாவேற்றோ டேசண்டை போட அஞ்சும்
தடந்தோள்கள் இல்லானை மங்கை நல்லாள்
தான்விரும்பாள் என்றெல்லாம் பாக்கள் உண்டே!

வீரத்திற் கொருகாலம் மதிப்பு பின்னாள்
வேண்டறிவு விவேகத்தின் மதிப்பே விஞ்சி
நேர்காதல் ஆண்பெண்கள் சமம்என் னும்நல்
நிலைவந்த காலத்தில் பெண்கள் ஆண்கள்
சேரத்தான் முறைவரைய றைகள் என்னும்
திருப்பூட்டின் வழக்கங்கள் அரங்கே றிற்றே
பாரம் பெண் மக்களுக்கே ஆண் களுக்கே
பதில்சுமை என்? பகுத்தறிவு கேட்கும் கேள்வி!

எம்மதத்தும் இந்துமதம் போன்ற பெண்மைக்கு
இரங்காத கொடியநிலை இல்லை! அந்த
அம்மதங்கள் தாலியைஓர் பொருட்டாய் எண்ணா!
அமெரிக்கா ஐரோப்பா நாட்டுப் பெண்கள்
தெம்பாக ஆண்கள் போல் தாலி இன்றி
தேவைஒருவ னுக் கொருத்தி யாக வாழும்
செம்மைதேர்நெறிவாழ்வு நடத்தல் கண்டோம்!
தேவைதாலி கற்புகாக்கும் என்ற  பொய்யே!

மாதருக்குத் தாலியென்றால் ஆண்களுக்கென்?
மறுமலர்ச்சிக் காலத்தில் மானம் கற்பு
தோதிருபா லவர்க்குமொன்றே தேவை மாற்றம்
திகழ்காலம் தாலியினை அகற்றல் பெண்மை
காதல்நெறிக் கற்புநெறிச் சமத்துவத்தைக்
காட்டுகின்ற விழிப்புணர்ச்சி தேவை! தேவை!
ஈதறத்தை செயல்முனைந்த தி.க. வாழ்க!
எம்தமிழர் வீரமணி வாழ்க மாதோ!

நன்றி: தமிழ்ப் பணி மே 2015

தமிழ் ஓவியா said...

உயிரைக் காக்கும் தலைக்கவசம்


இரு சக்கர வாகன ஒட்டிகள் கட்டாயம் தலைக் கவசம் (Helmet) அணிய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இப்படி ஆணை பிறப்பிப்பது ஒன்றும் புதியதல்ல. இதற்குமுன் இது போன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தும் அது ஏட்டளவில் இருந்ததே தவிர, நடைமுறைப் படுத்தப்படவில்லை.

இது போன்ற சட்டங்கள் தங்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் என்பதை வாகன ஒட்டிகள் முதலில் உணர வேண்டும், ஏதோ அரசு தேவையில்லாமல் இது போன்ற ஆணைகளைப் பிறப்பிப்பதாகக் கருதக் கூடாது.

மருந்து சாப்பிடுவது நோய் தீர்வதற்காகத்தானே தவிர, டாக்டர் வருத்தப்பட்டு விடக் கூடாது என்பதற் காகவா மருந்து சாப்பிடுகிறோம்?

நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு என். கிருபாகரன் வரும் ஜூலை முதல் தேதி முதல் இரு சக்கர வாகன ஒட்டிகள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்திட வேண்டும் என்ற தீர்ப்பே கொடுத்து விட்டார் என்று சொல்ல வேண்டும்.

வாகனங்கள் பெருக்கம் வாயு வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. நடைபாதைகளும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கோயில்களும், கடைகளும் அவற்றை நிரப்பி விடுகின்றன.  நடைப் பயணிகள் பாடு திண்டாட்டம் தான்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை 2006-2007இல் இருந்த இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 75 லட்சத்து  3 ஆயிரத்து 426 ஆகும். 2013-2014ஆம் ஆண்டிலே இது ஒரு கோடியே 55 லட்சத்து 95 ஆயிரத்து 140 ஆக வளர்ந்து விட்டது.

அதுவும் இளைஞர்கள் கைகளில் சிக்கிய இந்த இரு சக்கர வாகனங்கள் போகும் வேகம் பார்ப்பவர்களுக்குப் பெரும் திகிலைத்தான் ஏற்படுத்துகிறது. போதும் போதாதற்கு டாஸ்மாக் என்னும் அதி வேக ஊக்க மருந்தும் சேர்ந்து விட்டால் கேட்கவும் வேண்டுமோ!

தலைக்கவசம் அணியாத காரணத்தால் 2005ஆம் ஆண்டில் பலியானோர் எண்ணிக்கை 1670; 2014ஆம் ஆண்டிலோ 6419 என்று பல மடங்கு உயிரைக் குடித்து விட்டது. விலை மதிக்க முடியாத மனித உயிர் இப்படி போதிய பாதுகாப்பு நடவடிக்கையின்மையால் பரிதாபமாக மலிவாக இழக்கப்படுவதை நினைத்தால் பெரும் வேதனை.

தொலைக்காட்சிகள் வேண்டாத வேலைகளுக் கெல்லாம் சத்தம் போட்டுப் பேசுகின்றன. இது போன்ற விழிப்புணர்வுக்காக சில நொடிகளை ஒதுக்கக்கூடாதா? எல்லாவற்றிலும் காசு பண்ணுவதுதான் ஊடகங்களின் ஓய்வறியாத குறிக்கோளா? சமூகப் பொறுப்பு என்பது அவர்களுக்குக் கிடையவே கிடையாதே - பாடத் திட்டத்திலும் பாலகர்களிடமிருந்து இதனை ஆரம்பிக்க வேண்டும்.

எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் சிந்தனையாளர்களும் இது போன்ற அவசியமான கருத்துக்களை மக்கள் மத்தியில் நயம்படக் கொண்டு சேர்க்க வேண்டாமா!

ஒரு இளைஞன் சாலை விபத்தில் பலியாகிறான் என்றால், அவனோடு அந்தப் பிரச்சினை முடிந்து விடக் கூடியதல்ல; அவனை நம்பி ஒரு குடும்பமே இருக்கிறதே நினைத்துப் பார்க்க வேண்டாமா?

தலைக்கவசம் அணியுங்கள்; அதன் மூலம் இன்னுயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்பதை மாற்றி தலை தப்புவது - தலைக்கவசத்தின் புண்ணியம் என்ற புதுப் பொருளை உண்டாக்குங்கள்!

தமிழ் ஓவியா said...

தோழர் சத்தியமூர்த்தி புகார்களுக்குப் பதில்
தேர்தலில் போட்டி அபேட்சகர்கள் ஒருவரை யொருவர் இகழ்வதும், எதிர் அபேட்சகர் மீது வாக்காளர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும்படி செய்வதும் உலகம் முழுதும் சகஜமாகிவிட்டது. ஆனால் அவ்விதம் செய்வதற்கும் ஓர் எல்லையுண்டு. இப்போது சென்னை நகர் சம்பந்தப்பட்ட வரையில், காங்கிரஸ் பெயரைக் கூறிக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அபேட்சகராக நிற்கும் ஆளைக் கவனிக்காதீர்கள். மகாத்மா காந்திக்காக ஓட்டுபோடுங்கள் எனக் கூறுகிறார்கள்.

இது நாமம் போட்ட சோம்பேறிகள் திருப்பதி வெங்கிடாசலபதிக்கு உண்டியல் பிச்சை கேட்பது போலாகும். ஆனால் நான் அவ்விதம் எதுவும் கூற விரும்பவில்லை. சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட வரையில் பார்ப்பனர் - அல்லாதார் ஜாதியை ஆதாரமாகக் கொண்டே தேர்தல் இயக்கம் நடந்து வருகிற நீங்களெல்லோரும் சென்னை நகரத்துக்கு அபேட்சகராக நிற்கும் தோழர் ராமசாமி முதலியாரின் அந்ததையும், யோக்கியதாம் சங்களையும் தோழர் சத்தியமூர்த்தி யோக்கியதாம்சத்தையுமே கவனிக்க வேண்டும். அபேட்சகர்களில் யார் செய்வது சரி, யார் செய்து தப்பு என்பதைப் பகுத்தறிந்து, உங்களிஷ்டம் போல் ஒருவருக்கு ஓட்டு போடும் உரிமை உங்களுக்குண்டு. எனவே, வீண் புரட்டுகளைக் கேட்டு நீங்கள் ஏமாற மாட்டீர்களென்பது நிச்சயம்.

காங்கிரஸ் பெயரால் நடந்து வரும் பிரச்சாரத்தை நீங்கள் கவனிக்கக் கூடாது. காங்கிரஸ் அரசியலில் இன்னும் சிறிது காலத்தில் மிகுந்த மாறுதலேற்படலாம். ஏனெனில் காந்தியார் காங்கிரசிலிருந்து விலகிவிட உத்தேசித்துள்ளார். அப்படி யிருந்தும் காங்கிரஸ்வாதிகள் தேர்தலுக்காக மகாத்மா பெயரை உபயோகித்து வருகிறார்கள்.

தோழர் சத்தியமூர்த்திக்கு 4000 பிராமணரின் ஓட்டுகள் நிச்சயமாக இருக்கிறதென்றும், அதற்குமேல்தான் அவர் இப்போது கணக்கிட வேண்டு மென்றும் அவருடைய நண்பர்கள் கூறுகின்றனர். அப்படியாயின், தோழர் ராமசாமி முதலியாருக்கு 11,000 பிராமணரல்லாதாரின் ஓட்டுகள் நிச்சயமாக இருக்கின்றன வென்று நீங்கள் தைரியமாகக் கூற வேண்டும். இப்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் தோழர் சத்திய மூர்த்தி, தோழர் முதலியாருக்கு விரோதமாக பல பொய்யான விஷயங்களைக்  கூறியிருக்கிறார். அவைகளால் பொதுஜன அபிப்பிராயம்

மாறக்கூடுமோவென்றே, இப்போது தோழர் முதலியார் அவைகளுக்குப் பதில் கூற வேண்டியிருக்கிறது.
(20-10-1934) மாலை சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் தலைமை தாங்கி  ஆற்றிய உரை.)
- பகுத்தறிவு - சொற்பொழிவு - 28.10.1934

தமிழ் ஓவியா said...

மார்க்கட்டு நிலவரம் - சித்திரபுத்திரன்


தமிழ்நாட்டில் மார்க்கட்டு நிலவரம் தெரியப்படுத்தி வெகுநாள் ஆகிவிட்டதால் இது சமயம் இரண்டொரு சரக்குகளுக்கு மாத்திரம் நிலவரம் எழுதுகிறோம்.

பெண்கள்
செட்டி நாட்டில் ஒரு பெண்ணுக்கு (முன் விலை) 35000 முதல், 45000 ரூபாய் வரை இருந்து வந்ததானது, இப்போது சவுத்துப் போய் ஒரு சைபருக்கே மோசமேற்பட்டு 4000, 5000 விலையில் அசல் செட்டி நாட்டுப் பெண்கள் தாராளமாய் கிடைக்கும் நிலைமை வந்துவிட்டது. காரணம் சுயமரியாதை தேசத்திலிருந்து ஏராளமான சரக்குகள் (பெண்கள்) வந்து இறங்கத் தலைப்பட்டு விட்டன. ஆதலால் வெளிநாட்டு சரக்குகளை (சுயமரியாதைப் பெண்களை) செட்டி நாட்டுக்குள் வராதபடி வெளி நாட்டுச் சரக்குகளுக்கு வரி போட வேண்டுமாய்ச் செட்டி மார்களும் சர்க்காருக்கு (சமுகத்தாருக்கு) விண்ணப்பம் போட்டிருக்கிறார்கள். அப்படி அரசாங்கத்தார் (சமுகத்தார்) வரி போடுவார்களானால் பெண்கள் இருக்கிற நாட்டுக்கே, குடிபோய்விடுவதாக பெண் வாங்குவோர்கள் கூடிப் பேசி முடிவு செய்து தீர்மானத்தை அரசாங்கத்துக்கு (தங்கள் சமுகத்தாருக்கு) தெரிவித்து இருப்பதாகத் தெரிகிறது.

ஓட்டுகள்
முனிசிபல் ஓட்டர்களுக்கு இது சமயம் கிராக்கி அதிகம். பொப்பிலி ராஜாவின் ஒரு அறிக்கையின் பயனாய் முனிசிபல் ஓட்டுகளுக்கு கிராக்கியற்று சில இடங்களில் அவ்வளவையும் சமுத்திரத்தில் கொட்ட வேண்டி வருமோ என்று விவசாயிகள் (ஓட்டர்கள்) கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். நல்ல வேளை யாய் அந்த உத்தரவு வரவில்லை. எல்லா முனிசிபாலிட்டி களுக்கும் தேர்தல் இந்த வருஷத்திலேயே அதுவும் இந்த மாதத்திலேயே நடக்க வேண்டுமென்று கட்டளையிட்டு விட்டதால் ஓட்டர்கள் நிலவரம் வெகு கிராக்கியாகிவிட்டது.

ஈரோடு
குறிப்பாக ஈரோட்டில் சில வார்டுகளில் ஓட்டுச் செலவே இல்லாமல் போய்விட்டது. சில வார்டுகளில் மொத்தத்தில் எதிர் அபேட்சகருக்கு 250 முதல் 500 ரூபாய் வரை ஆகிவிட்டது.
சில வார்டுகளில் அதாவது குடியானவர்களே சம்பந்தப் பட்ட வார்டுகளில் ஓட்டு ஒன்றுக்கு 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை. சில வார்டுகளில் அதாவது வியாபாரிகள் சம்பந்தப்பட்ட வார்டில் ஓட்டு ஒன்றுக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய், 20 ரூபாய் கூட ஆகிவிட்டது என தெரிகிறது.

சில வார்டுகளில் அதாவது காங்கிரசு சம்பந்தப்பட்ட வார்டு என்று சொல்லப்படுவதில் ஓட்டு ஒன்றுக்கு 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலும், சில ஓட்டுகள் விஷயத்தில் 40, 50 ரூபாய் வரையில் கூட விலை ஏறிவிட்டது.
சுமார் 300 ஓட்டர்கள் உள்ள ஒரு வார்டுக்கு ஒரு அபேட் சகர் 3000ரூ எடுத்து வைத்திருப்பதாகத் தெரிகின்றது. மற்றொரு அபேட்சகர் 5000ரூ எடுத்து வைத்து எலக்ஷன் இன்னும் 10 நாள் இருக்கும் போதே 2000 ரூபாய்க்கு மேல் செலவழித்து விட்டதாகவும் தெரிகின்றது. அதிகப் பணம் செலவு செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது பார்வதிக்குப் பரமசிவன் சொன்ன உறுதி மொழியாகும்.

ஆகவே இந்த எலக்ஷன் முறை, ஏழை ஒட்டர்கள் பிழைக்க அரசாங்கத்தார் செய்த தர்மமாகும். ஆதலால் ஓட்டர்கள் பணம் கொடுப்பவர்களை வாழ்த்துவதை விட, இப்படிப்பட்ட தேர்தல் முறையைக் கற்பித்த அரசாங்கத்தார் நீடூழி காலம் சிரஞ்சீவியாய் - எப்படிப்பட்ட சிரஞ்சீவியாய் -  மார்க்கண்டன், அனுமார், விபீஷணன் போன்ற சிரஞ்சீவியாய் அல்ல. சூரியன், சந்திரன் போன்ற சிரஞ்சீவியாயும் அல்ல. அவைகள் கூட ஒரு காலத்தில் இல்லாமல் போய்விடும். மற்றெப்படிப்பட்ட சிரஞ்சீவியாய் என்றால் - கல்லும், காவேரியைப் போல் சிரஞ் சீவியாய் இருக்க வேண்டுமென்று வாழ்த்த கடமைப்பட்டி ருக்கிறார்கள்!

சில கடவுள்களும் இந்த அரசாங்கத்துக்கு சிரஞ்சீவி பட்டம் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர்.
ஏனெனில் ஓட்டுக்கு விலையாக ஓட்டர்களுக்குப் பணம் கொடுப்பது மாத்திர மல்லாமல் கோவில்கட்ட, மசூதி கட்ட, சர்ச் சட்ட, என்று 100, 500, 1000 கணக்காய் ரூபாய் கொடுக்க வேண்டியிருப்பதால், அந்த மதக் கடவுள்கள் இப்படிப்பட்ட எலக்ஷனை உண்டாக்கிய அரசாங்கத்தை ஆசிர்வதிக்க கடமைப்பட்டிருக்கின்றன.

நல்ல வேளையாக ஈரோட்டைப் பொறுத்தவரை, ஓட்டுகளுக்கு ஜாதிச் சண்டைகளை விலையாகக் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. அதன் பெருமை சேர்மனுக்கே சேர வேண்டியது.
- பகுத்தறிவு - கட்டுரை - 23.09.1934

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பத்திரிகைகளும் சர்.சண்முகமும்

தோழர் ஆர்.கே. சண்முகம் இந்தியா முழுவதுக்கும் தெரிந்த ஒரு முக்கியஸ்தர். அவருடைய நடவடிக்கைகளும், பேச்சுக்களும் மக்கள் கவனிக்கப்பட தக்கது என்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. பலர் எதிர்பார்க்கவும் கூடும். இந்நிலையில் தேசியப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனப் பத்திரிகை அவரது நடவடிக் கைகளை யோக்கியமாய் பிரசுரிக்காமலும், பிரசங்கங் களையும் கேள்விகளையும், பதில்களையும் சிறிதும்கூட பிரசுரிக்காமலும் இருந்து வருகின்றன. சர். சண்முகம் அவர்கள். இந்திய சட்டசபையில் இராணுவ சம்பந்தமான பிரச்சினையில் கொடுத்த ஒரு தீர்ப்பு விஷயமாய் பார்ப்பனப் பத்திரிகைகள் பாராட்டாவிட்டாலும், விஷமத்தனமான பரிகாசங்களைச் செய்தன.

தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி அய்யர், ஜம்பை வைத்தியனாத பாகவதர், ரமண ரிஷி போன்றவர்கள் விஷயங்களைப் பெருக்கி கண்ணு, மூக்கு வைத்து கலம் கலமாய் அலங்கரிக்கின்றன. இந்த மாதிரியான காரியங்களால் பார்ப்பனர்களுக்குக் கீர்த்தியும், மேன்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ, பார்ப்பனரல்லாதாருக்கு அபகீர்த்தியும், தாழ்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ நாம் சொல்ல வரவில்லை. இந்த மாதிரியான நிலையில் பார்ப்பனர் இருக்கின்ற வரையில் சித்திரத்தில் மாதிரி பார்த்து எழுதக் கூட ஒரு பார்ப்பனர் கிடைக்காமல் பூண்டற்று போகக் கூடிய காலம் வரும் என் கின்ற தைரியம் நமக்கு உண்டு. அந்தத் தைரியம் இல்லாவிட்டால் இத் தொண்டை நாம் மேற் கொண்டிருக்க மாட்டோம்.

ஆனால் எதற்காக இதை எழுதுகின்றோம் என்றால், பார்ப்பனப் பத்திரிகைகள் தேசியப் பத்திரிகைகள் என்றும், பல பார்ப்பனர்கள் பார்ப்பனத்தன்மை இல்லாமல் நடு நிலைமை வாய்ந்தவர்கள் என்றும் கருதிக் கொண்டு பார்ப்பன சிஷ்யர்களாகவும், பார்ப்பன கூலிகளாகவும், பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன பத்திரிகைகளுக்கும் ஆதரவளிப்பவர்களாகவும் இருக்கும் முட்டாள்தனத்தையும், சுயமரியாதை அற்ற தன்மையையும் வெளிப்படுத்தவே இதை எழுதுகிறோம்.

விகடப் பத்திரிகை என்று வேஷம் போட்டுக் கொண்டு சில பத்திரிகைகள் பார்ப்பனியத்தைப் பிரச்சாரம் செய்து கொண்டு பார்ப்பனரல்லாத பிரமுகர்களை இழிவுபடுத்திக் கொண்டு வருகின்றன. அவைகளுக்கும் சுத்த இரத்த ஓட்டமில்லாத - சுயமரியாதை அற்ற பணம் பிரதானமே தவிர வேறொன்றும் இல்லை என்று கருதுகின்ற சில பார்ப்ப னரல்லாதார் ஆதர வளிக்கின்றதையும் பார்த்து வெட்கப் படுகின்றோம். என்ப தோடு 10 பணத்துக்கு மிஞ்சிய பதிவிரதை இல்லை என்று கற்பின் பித்தலாட்டத்துக்கு ஒரு பழமொழி சொல்வது போல் பணத்தை விட தங்கள் சுய நல வாழ்க் கையை விட, மானம் பெரிதல்ல என்று எண்ணி வாழ்க்கை நடத்தும் பார்ப்பனரல்லா தாரைக் கண்டு இரங்குகின்றோம். பார்ப்பனரைப் பார்த்து பாரதியார் நாயும் பிழைக்கு மிந்தப் பிழைப்பு என்று சொன்னது போல், ஒரு மனி தனின் பிழைப்பிற்காக மானத்தைத் தனது சமுகத்தை விற்று விட்டு ஜீவிக்க வேண்டியதில்லை என்றுதான் பரிதாபத்துடன் கண்ணீர் விட்டுக் கொண்டு இதை எழுதுகிறோம்.
- பகுத்தறிவு - கட்டுரை - 30.09.1934

தமிழ் ஓவியா said...

சர்வ சக்தியா? சர்வ சைபரா?சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்கமாட்டேன் என்கிறானே.

ராமன்: அது மாத்திரம், அதிசயமல்லப்பா பசியாவரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக்கிடக்கிறார். ஒருவன் கூட ஒரு கை கூழ் ஊத்தமாட்டேங்கிறானே.

சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?

ராமன்: இது தான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?

ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்றாய், அவனை ஒருத்தன் அப்படிப்பட்ட கடவுள் இல்லே என்று சொல்லுகிறான் என்றால் அது வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: சர்வசக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்யமுடியவில்லை என்றால் இது முட்டாள் தனமான, சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?

அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட் டம் இருக்கிறதோ அதேபோல் சர்வசக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனை நம்பச்செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.

-  சித்திரபுத்திரன் (விடுதலை 22.2.1972)

தமிழ் ஓவியா said...

அண்ணா பதில் சொல்கிறார்(திராவிட நாடு இதழில், வாசகர்களின் முக்கிய வினாக்களுக்கு அண்ணா அளித்த அரிய விடைகள் இங்கே தரப்படுகின்றன ஆ.ர்.)

கேள்வி: ஏடுகளில் காணப்படும் கலாச்சார வரலாற்றின் அடிப்படை யை ஆதாரமாகக் கொண்டு ஆரியர் _ திராவிடர் என்று பேசுகிறீரே, இன இலக் கணங்கள் இன்று மாறு பட்டுள்ளன என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்?

பதில்: மறுக்கவில்லை நண்பரே! மறுத்ததுமில்லை. இனங்கள் பலப்பல காலமாக ஓரிடத்தில் வாழ்வதால் கலப்பு ஏற்படுவது இயல்பு என்ற பொது உண்மையை யாரும் மறுக்கவில்லை.

ஆனால், இவ்வளவு காலமாக ஒன்றாக வாழ்ந்தும், கலந்திருந்தும் கூட ஒரு கூட்டத்தினர் இன்னமும் தங்கள் மொழி, நடை, உடை பாவனை ஆகியவைகளை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியும் உயர்வு என்று கூறியும் வருவதைக் காண்கிறோம். இந்தப் போக்கைக் கொண்டுதான் ஆரியர், திராவிடர் என்று கூறுகிறோம். வாழ்க்கை முறை மனப்பான்மை இவைகளையே முக்கியமாக கவனிக்கிறோம்.

ஜப்பான் நாட்டவனொருவன் மக்கள் பிறவியில் பேதம் கிடையாது என்று கூறி அத்தகைய பேதம் இருக்கும் முறைகளை மறுப்பானானால் அவனையும் திராவிடன் என்று நான் கொள்வேன் என்று பெரியார் சென்ற கிழமை குமரிமுனையருகே நாகர் கோயிலில் கூறி இருக்கிறார் என்பதை நண்பருக்குக் கவனப்படுத்துகிறேன்.

சுருக்கமாகவும் சூட்சமத்தைக் காட்டும் முறையிலும் கூறுவதானால் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிப்பவர் ஆரியர். வர்ணாஸ்ரம தர்மம் கூடாது சமத்துவமே நிலவவேண்டும் என்பவர்கள் திராவிடர் சுயதர்மம் கோருவோர் ஆரியர். சமதர்மம் கோருவோர் திராவிடர். திராவிடர் ஒரு குறிச்சொல். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை இலட்சியத்தைக் காட்டவே அதனை உபயோகிக்கிறோம்.

பழைய ஏடுகளிலே இருந்து இதற்கான ஆதாரங்கள் காட்டும் போது நாம் அந்த நாள் கலாச்சாரம் அவ்வளவையும் ஆதரிக்கிறோம் என்பதல்ல பொருள். ஆரியர் திராவிடர் என்று. தனித்தனி இனமாக இருந்த வரலாற்று உண்மையைக் காட்டவே அந்த ஏடுகளைப் பயன்படுத்துகிறோமேயன்றி அந்த ஏடுகளிலே உள்ளபடி, நாடு மீண்டும் ஆக வேண்டும் என்பதற்கல்ல.

அந்த நாள் வாளும், வேலும், ஈட்டியும், சூலமும், பறையும், பரசலும் இன்றும் நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்பதல்ல, நமது நோக்கம். ஒரு காலத்தில் ஜாதியும் அதையொட்டிய பேத முறைகளும் வர்ணாஸ்ரமமும் அதை வளர்த்துப் பலன் பெற்ற கூட்டமும் இல்லாமல், மக்கள் அனைவரும் சமம், என்ற பெரு நோக்குடன் வாழ்ந்து வந்தனர்.

இந்தப் பகுதியிலே இருந்து வந்த பெரும்பாலான மக்கள் அவர்கள் திராவிடர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கொண்டிருந்த அந்தக் கொள்கை இன்று நமக்கு வேண்டும் என்று கூறுகிறோம். இதிலே பரிகசிக்கவோ அருவருக்கவோ காரணமில்லையே!

-அண்ணா- திராவிட நாடு, 16.11.1947