மக்கள் மீது மடமையை ஏவி, ஏமாற்றிப் பிழைத்தது இனியும் செல்லாது!
அன்பர்களே, நான் ஆரியர் - திராவிடர் என்ற வேற்றுமைகளையும் அதன் காரணமாக நாட்டிலேயுள்ள மடமைகளையும் எடுத்துக் கூறினால் நம்மிலே மிகப் பெரியவர்கள் என்று கருதப்படும் சிலர் ஆரியராவது திராவிடராவது என்று அலட்சியம் செய்கின்றனர். நான் கூறுகிறேன் பார்ப்பனர் உயர்ந்த ஜாதி என்பதால்தானே அவர்கள் பாடுபடாமலேயே கஷ்டப்படாமலேயே சுகம் அனுபவிப்பதும், அதே சமயத்தில் பாடுபட்டும், கஷ்டப்பட்டும், வரி கொடுத்தும், சுருங்கக் கூறின் நாட்டின் வாழ்வுக்கு அஸ்திவாரமான காரியங்களைச் செய்து வரும் நாட்டுக்குரியவர்களாகிய நமது இனத்தவர்கள் அதாவது திராவிடர்கள் - சூத்திரர் என்ற காரணத்தால் இழிவு படுத்தப்பட்டு வருகிறோம். இதைத்தவிர பார்ப்பனரிடத்தில் உயர்ந்த பண்புகள் நம்மைவிட என்ன இருக்கிறது?
இவ்வித வித்தியாசங்கள் ஒழிய வேண்டும் என்று எங்களை விட வேறு யார் கவலைப்பட்டு வருகிறார்கள். அக்காலத்திலேயிருந்த ஆழ்வார்களோ, நாயன்மார்களோ, மகான்களோ, கவலைப்படாதிருந்தார்கள் என்பது மட்டுமல்ல, இக்காலத்திலும் அதற்கு யார் பாடுபடுகின்றனர்.
கம்யூனிஸ்டுகள் என்போர் ஏதோ சில பணக்காரர்களைத் திட்டவதும், அதிலே கஷ்டப்படும் தொழிலாளி ஜே போடுவதையுந்தான் பொதுவுடமை என்று இந்நாட்டிலே கருதப்படுகிறதேயன்றி, பார்ப்பனர்களில் மட்டும் ஏன் பாடுபடும் தொழிலாளி இல்லை என்பதற்குக் காரணங்கள் என்ன கற்பிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டுபிடித்து அவைகளை ஒழித்து யாவரும் சரிநிகர் சமானமாயிருக்க வழி வளர செய்தார்களா?
சோஷலிஸ்டுகள் தானாகட்டும், உண்மையிலேயே, மக்கள் சமூதாயத்திலே சமதர்மம் நிலவ வேண்டுமானால் அதற்கானவற்றை செய்தார்களா? ஏதோ காங்கிரசின் பலம் சரியாதிருக்க அதற்கு முட்டுக் கொடுக்கும் வஸ்துக்கள் போலவே இந்நாட்டு சோஷலிசமும் இருந்து வருகிறதேயன்றி அதனின் உண்மைத் தத்துவம் வளர்க்கப்படுகிறதா?
தீவிரவாதிகளெனப்படும் கம்யூனிஸ்டு - சோஷலிஸ்டுகளின் நிலையே இவ்வாறு இருக்கும்போது நாம் காங்கிரசாரைப் பற்றி கூறத் தேவையேயில்லை.
ஆனால், இவர்களுக்கெல்லாம் மக்களின் உண்மையான விடுதலைக்கு ஏற்ற மார்க்கங்கள் எவை எவை என்பது தெரியாததா? தெரிந்தும் ஏன் இவ்வாறு நடக்கின்றனர் என்றால் பொது மக்களிடத்திலே செல்வாக்கு இருக்காது. ஓட்டு வராது. அரசைக் கைப்பற்ற முடியாது என்று கருதியே பொது மக்களின் காதுக்கினிய வார்த்தைகளைக் கூறி அவர்களது கருத்தை அழிய வைக்கின்றனர்.
ஆனால் திராவிடர் இயக்கமானது கேவலம் பட்டம், பதவி, சட்டசபை வேலை, அதற்காக ஓட்டு ஆகியவைகளை லட்சியம் செய்யாமல் மனித சமூதாயத்திலே வளர்ந்துள்ள மடமையை ஒழிக்க சற்ற கடினமான மருந்து கொடுத்து வருகிறோம். நாங்கள் மக்களின் எதிர்ப்புக்கும், அதனால் ஏற்பட்ட பெரும் கஷ்ட நஷ்டங்களுக்கும், அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கும் ஆளாகியதால்தான் இன்றைய நிலையிலாவது மக்கள் ஓரளவுக்க அறிவு பெற்ற வருவதோடு, நான் எந்த கொள்கைக்காக காங்கிரசை விட்டு வெளியேறினேனோ அது இன்று மக்கள் சமூதாயத்திலே வேறுன்றி விட்டது.
அச் சக்தியை இனி, எவராலும் அசைக்க முடியாது; அழிக்கவும் முடியாது; அழிக்கவோ, அசைக்கவோ முற்படுபவர்கள் யாராவராயிருப்பினும், கடவுளாயிருந்தாலுங்கூட தாங்களாகவே தங்களுக்கு அழிவு தேடிக் கொண்டவர்களாவார்களென்பதை எடுத்தக்காட்ட விரும்புகிறேன்.
மடைமையை மக்கள் சமூதாயத்திலே பரப்பி ஏமாற்றிப் பிழைத்து வந்த கூட்டத்தினர் மீது அவர்களால் கற்பிக்கப்பட்ட கடவுள் - ஜாதி - மதம் - புராணம் - இதிகாசங்கள் மீது இன்று மக்களுக்கு அவ்வளவு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டு விட்டது என்பதை பார்ப்பனீயத்தை ஆயுதமாகக் கொண்ட ஒவ்வொருவரும் உணர்ந்து விரைவில் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
இனி எங்களை வகுப்பு வாதிகள், தேசத் துரோகிகள், கடவுள் துரோகிகள் என்று எவரும் கூற முடியாது ஏன்?
இதுவரை, வகுப்பு வித்தியாசங்களைப் பிறவியின் பேரால் தனிப்பட்ட உரிமையை, ஜாதியின் பேரால் சலுகையை அடைந்துவந்த பார்ப்பனர்களே இந்நாட்டில் வகுப்புவாதிகளாயிருக்கின்றனர். வகுப்புவாதம் நம் நாட்டிலே தலைவிரித்தாடுவதற்குக் காரணமே பார்ப்பனர்கள்தானென்று நமது நிதி அமைச்சர் கனம் கோபால் ரெட்டியார் அவர்கள் சட்டசபையில் பார்ப்பன அம்மையார் ருக்குமணி லட்சுமதி அவர்கள் கேட்ட கேள்விக்கு விவரமாகப் பதிலளித்துள்ளதை நேயர்கள் அறிந்திருப்பீர்கள்.
அவர் மட்டுமல்ல; மற்றொரு அமைச்சர் கனம் பக்தவச்சலம் கூட "இதுவரை பார்ப்பனர்கள் தங்கள் வகுப்பின் நலனுக்காக தனி உரிமையைப் பெற்று வாழ மிக சாமர்த்திமாக வகுப்புவாதத் தன்மையுடன் நடந்து கொண்டு அதே சமயத்தில் மற்றவர்களை வகுப்புவாதிகள் என்று கூறி வந்துள்ளனர்" என்று சில நாட்களுக்கு முன் சென்னை மவுண்ட்ரோட் சர்க்கார் மாளிகையிலே நடைபெற்ற பத்திரிகை செய்தியாளர்கள் மாநாட்டிலே கூறியிருக்கிறார்.
இவ்விதமாக காங்கிரஸ் மந்திரிகளும் பொதுவாக மக்களும், உணர ஆரம்பித்துவிட்டனர். யார் வகுப்புவாதிகளென்பதை.
அதே போன்று கோயில் - மடங்கள் ஒழிய வேண்டுமென்று நான் கூறி வந்த போது என்னையும் எங்கள் இயக்கத்தாரையும் நாத்திகர்கள் என்று கூறி நாட்டிலே எங்களுக்குப் பொல்லாப்பை உண்டாக்கியப் பார்ப்பனர்களே! நீங்கள் இனி அத்துறையிலும் மக்களை ஏமாற்ற முடியாது. சர்க்காரே அச்சட்டத்தைக் கொண்டு வர முனைந்துவிட்டனர். முன்னாள் பிரதமர் ஓமத்தூரார் ஆட்சியின் கடைசி கட்டத்தில் கொண்டு வரப்பட்ட கோயில் - மட சொத்து பாதுகாப்பு மசோதாவின் போது பார்ப்பனர்களும் அவர்களின் கையாட்களான இரண்டொரு திராவிட விபீஷணர்களும் கொடுத்தத் தொல்லை எவ்வளவு? இதை நாட்டினர் அறிந்ததுதானே! எனினும் மக்களிடத்தில் அம்மசோதாவுக்கு பேராதரவு இருந்து வருகிறதென்பதைப் பார்க்கும்போது எங்களைக் கோயில் - மட எதிரிகள் என்று கூறி எங்களது கொள்கைக்கு அழிவுதேட எவராலும் முடியுமா?
எனவே, நான் கூறிவந்த கொள்கைகள் இனி ஒவ்வொன்றாக நடைபெற்றாக வேண்டிய கால நிலையை நாடும் மக்களும் அடைந்து விட்டனர். காலமாறுதல் மனப் புரட்சி என்னும் வேகத்திலே பழமையெனும் பித்தலாட்டங்கள் இனி எதிர்த்து நிற்க முடியாது என எச்சரிக்கிறேன்.
--------------------------------------தாராபுரத்தில் தந்தை பெரியார் அவர்கள் 13-04-1949 அன்று ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை"19-04-1949
27 comments:
பி.ஜே.பி. அரசு எங்கே போகிறது?
அவசர நிலைப் பிரகடனம் வரும்
அத்வானி அபாய அறிவிப்பு!
புதுடில்லி, ஜூன் 18_ முன்னாள் பிரதமர் இந் திரா காந்தி காலத்தில் அவசரநிலைப் பிரகடனத் தின்போது சிறை சென்ற அன்றைய ஜனசங்கக் கட்சித் தலைவரும் இன் றைய பாஜகவின் முக்கிய தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி மீண் டும் ஒரு அவசரநிலைப் பிரகடனம் வர 99 விழுக் காடு வாய்ப்புள்ளது என் றும், இதற்குக் காரணமாக அவர் கூறும் போது மோடி அரசின்மீது எதிர் கட்சிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் போது அரசு வேறு வழி யின்றி அவசர நிலைப் பிரகடனம் செய்யக் கூடும் என்று கூறினார்.
பத்திரிகைக்குப் பேட்டி
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு வியாழ னன்று பேட்டியளித்த லால்கிருஷ்ண அத்வானி கூறும்போது,
மீண்டும் ஒரு அவசர நிலைப் பிரகடனத்திற்கு தற்போதைய அரசு தயா ராகி வரக்கூடும். இதற்கு முக்கியக் காரணமாக அரசியல் சூழல் தற்போது மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது. இதை யாரும் மறுக்கமுடியாது. 2015- ஆம் ஆண்டு இறு திக்குள் அரசியல் மற்றும் சட்டம் போன்றவை களால் சூழ்நிலையை சமாளிக்க இயலாத நிலை உருவாக்கூடும், அந்த நேரத்தில் அவசரநிலைப் பிரகடனம் ஏற்பட்டால் அரசியல் மற்றும் சட்டம் போன்றவை மக்களைப் பாதுகாக்கும் கவசமாக இருக்க முடியாது. அதே நேரத்தில் மக்களின் சுதந் திரம் மற்றும் உரிமைகள் பறிக்கப்படும் வாய்ப்பை யும் மறுக்க முடியாது.
அதிகாரம் திசை மாறுகிறது
அவசரநிலைப் பிரகட னத்தை இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் அதுவும் தற்போதைய சூழலில் கொண்டுவருவது இயலாதகாரியம் என்றா லும், மக்களாட்சியில் சில எதிர்மறை சக்திகளின் வலிமை பெருகிக் கொண்டு இருக்கிறது, மேலும் சில அரசியல் சக்திகளின் தலைமையின் போக்கில் மாற்றம் ஏற்படும் போது அது அவசரநிலைப் பிர கடனத்திற்கு வழிவகுக் கும், காரணம் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சிலரின் கைகளில் இருந்து அதிகாரம் திசைமாறு கிறது. இதை யாரும் மறுக்க முடியாது. தற்போதுள்ள சூழ் நிலையில் நான் அவசர நிலைப் பிரகடனம் குறித்து வலியுறுத்திக் கூறக்காரணம் _ அரசியல் சூழல் மாறிக்கொண்டு வருகிறது. இங்கு நீதிமன் றம் மற்றும் ஆட்சி அதி கார வலிமை மெல்ல மெல்ல வலுவிழந்து கொண்டிருக்கிறது.
2015- இறுதியில் மீண் டும் அரசியல் குழப்பம் ஏற்படும்; இந்த நிலையில் அவசர நிலைப்பிரகடனம் என்பது தவிர்க்க முடி யாது ஒன்றாகிவிடும். அப் போது எந்த அரசியல் சக்தியும் மக்கள் உரிமை களை மீட்டெடுக்க குர லெழுப்ப இயலாத நிலைக் குச் சென்றுவிடும், எப்படி இந்திரா காந்தியின் காலத் தில் ஏற்பட்டதோ அதே நிலை மீண்டும் ஏற்படும் என்று என் உள்மனம் கூறுகிறது என்று கூறி னார்.
கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் ஒழிப்புப் போராட்டம் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் திடீர் வரவு பற்றி கூறும் போது ஊடகங்களுக்கு அளவுக்கு மீறி சுதந்திரம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த அதி காரம் மக்களின் உரிமை மற்றும் மக்களாட்சிக்கு எதிராக திருப்பப்படும் அச்சமும் உள்ளது. எடுத் துக்காட்டாக அன்னா அசாரே நடத்திய ஊழல் ஒழிப்புப் போராட்டம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால், இறுதியில் அது அரசியல் கலந்து ஆம் ஆத்மி கட்சி உருவாகவே பயன்பட்டது. இதனால் மக்கள் ஏமாற்றமடைந் துள்ளனர்.
ஆம் ஆத்மி கருத்து
அத்வானியின் இந்த பேட்டி குறித்து உடனடி யாக கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி கூறிய போது, அரசியலில் மிக வும் பழுத்த அனுபவாதி யான அத்வானி இப்படி மக்களாட்சிப் படுகொலை குறித்து கூறுவது, மிகவும் வியப்பாக உள்ளது.
மோடி தலைமையை ஏற் றுக்கொண்டு மோடிக்கு எதிராகவே கருத்து கூறு வது நகைப்பிற்குரியதாக உள்ளது. அத்வானியின் இந்தப் பேச்சு சுஷ்மாவின் தவற்றை திசை திருப்புவ தற்காகக் கூட இருக்க லாம் இருப்பினும் அரசியல் சூழலில் அத்வானி கூறுவதுபோல் நடக்க லாம் எதற்கும் மக்கள் தயாராக இருக்கவேண்டும் என்று கூறினார்.
ராமர் கோயில் கொள்கையில் மாற்றமில்லையாம் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா
வியாழன், 18 ஜூன் 2015
புதுடில்லி, ஜூன் 18_ அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது மற்றும் அரசியல் சாசன சட்டம் 370- ஆவது பிரிவை நீக்கு வது ஆகிய கொள்கை களில் எந்தவித மாற்றமும் இல்லை என்று மத்திய சட்ட அமைச்சர் சதா னந்த கவுடா தெரிவித் துள்ளார்.
அதே வேளையில் இந்த விவகாரங்களில் விரி வான ஆலோசனைக்குப் பிறகே எந்த முடிவும் எடுக்க முடியும் என்றும் மத்திய சட்ட அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு அவர் கூறும்போது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத் துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட் டத்தின் 370 ஆ-வது பிரிவை நீக்குவது ஆகி யவை பாஜகவின் கொள் கைகளாக தொடர்கின் றன. எங்களுடைய கட்சி யின் தேர்தல் வாக்குறுதி யிலும் இதுபற்றி குறிப் பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஒருபோதும் நாங்கள் கைவிடமாட் டோம்.
குறிப்பாக 370- ஆவது சட்டப் பிரிவை நீக்குவது குறித்து பல்வேறு அரசி யல் கட்சிகளுடன் விரி வான ஆலோசனை நடத்த வேண்டி உள்ளது. மேலும், இதனால் பயன டையும் பகுதி மக்களிட மும் கருத்து கேட்கப்படும். அதன் பிறகுதான் இது பற்றி முடிவு எடுக்க முடி யும். அனைத்து தரப்பின ரின் ஒருமித்த கருத்தை எட்டாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவும் எடுக்கப்படமாட் டாது. இதுதொடர்பான நடைமுறைகள் மெதுவாக நடைபெறும். எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். _ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
யோகா தின கொண்டாட்டங்களில் உத்தரகாண்ட் பங்கேற்காது:
முதல்வர் ஹரிஷ் ராவத்
டேராடூன், ஜூன் 18_ வருகிற ஜூன் 21- ஆம் தேதி முதல் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் யோகா தின கொண் டாட்டங்களில் உத்தரகாண்ட், அதிகாரப்பூர்வமாக பங்கேற்காது என்று அறிவித்துள்ளார். டேராடூனில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அவர், நாங்கள் சர்வதேச யோகா நாளில் பங்கேற்கப் போவதில்லை. இந்த முடிவு குறித்து தம்பட்டம் அடிப்பதில் எங்களுக்கு ஆர்வமில்லை. என்றார். மேலும் இந்தியாவின் பாரம்பரியமான உடல் மற்றும் மன ஒழுக்கங்களை பொதுமக்களிடையே பிரபலப்படுத்துவதில் மாநில அரசு முழு ஆர்வத்து டன் திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரி வித்தார்.
சோம்பேறிகளுக்கும், பணக்காரர்களுக்கும்தான் யோகாசனம் தேவை:
கருநாடக அமைச்சர்
பெங்களூரு, ஜூன் 18_- உலகம் முழுவதும் வரும் 21- ஆம் தேதியை சர்வதேச யோகா நாளாகக் கடை பிடிக்க உள்ள நிலையில் சோம்பேறிகளுக்கும், பணக்காரர்களுக்கும் தான் யோகாசனம் தேவை என கருநாடக சமூக நலத்துறை அமைச்சர் அன் ஜனய்யா கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- யோகாசனம் என்பது சோம்பேறிகளுக்கான, குறிப்பாக பணக்காரர்களுக்கான ஒரு பயிற்சியாகும். அவர்களுக்குதான் பொது இடங்களில் நடைபயிற்சி செய்வதற்குக்கூட நேரம் கிடைப்பதில்லை. ஆனால், வயல்களில் வியர்வை சொட்டச்சொட்ட கஷ்டப் பட்டு வேலை செய்பவர்களுக்கு யோகாசனம் தேவை இல்லை. யோகாசனத்துக்கு பதிலாக, மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை ஓட்டப் பயிற்சி, நெடுந்தூர நடைப் பயிற்சி போன்ற திறந்தவெளி பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும். யோகாவின் பலன்களை விளக்கவும், பயிற்சிகளை அளிக்கவும் எத்தனையோ குருக்களும், நிபுணர்களும் உள்ளனர். பிரதமரின் நேரம் என்பது மிகவும் பொன்னானது, யோகா சனத்தை பற்றி விளக்கம் அளிப்பதை விட்டுவிட்டு, இந்த நாட்டை வழிநடத்துவதில் அவர் தனது நேரத்தை செலவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு
தஞ்சைப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடுபற்றியது குறிப்பிடத்தக்க தாகும்.
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற சொலவடையை உருவாக்கி மக்கள் மத்தியில் அது குறித்து சிந்தனைப் பொறியைத் தட்டி எழுப்பிடும் பணியைத் தொடர்ந்து செய்து வந்துகொண்டிருக்கும் இயக்கம் திராவிடர் கழகம் என்பது நாட்டு மக்கள் அறிவார்கள்.
கச்சத்தீவு, காவிரி நதி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறுப் பிரச்சினை, பாலாறுப் பிரச்சினை என்று தமிழ்நாடு, தமிழர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் சூழ்நிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
நதிநீர்ப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும்கூட, அதனைச் சற்றும் பொருட்படுத்தாத போக்குகள் தொடர்ந்து கொண்டுள்ளன; காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கருநாடகமும், முல்லைப் பெரியாறுப் பிரச்சினையில் கேரளமும் இத்தகைய போக்குகளை மேற்கொண்டு வருகின்றன. நீதிமன்ற அவ மதிப்பு என்ற ஒன்று இருக்கிறதா? அதன்மீதான மரியாதையின் கதி இதுதானா? என்ற கேள்விகளும் செங்குத்தாகவே எழுந்து நிற்கின்றன.
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல நீதிமன்ற தீர்ப்புக்குமேல், மேலும் அதிரடி யாகவும், ஆணவமாகவும் நீதிமன்ற தீர்ப்புகளைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டு, அதற்குமேலும் தீவிரமாக சட்ட விரோத - நீதிமன்ற தீர்ப்பு விரோத வேலைகளில் வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுவதை என்ன சொல்ல?
காவிரியின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 2500 ஏக்கர் பரப்பளவில் இரண்டு பெரிய அணைகள் கட்டுவதாக தொடக்கத்தில் கூறப்பட்டது. இப்பொழுது அதில் சிறு மாற்றம் செய்து, நான்கு சிறிய அணைகளை எழுப்பி 100 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கிட கருநாடக அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த அணைகள் மூலம் பெங்களூரு, மைசூரு, கோலார், சிக்பள்ளாப்பூர், தும்கூரு உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் குடிநீர் வழங்கிட இத்திட்டமாம்.
கருநாடக மாநில நீர்வளத் துறை நிபுணர்கள் காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து இதற்கான திட்ட அறிக் கையைத் தயாரித்துள்ளனர். கருநாடக வனத்துறையினரும், மேகதாதுப் பகுதியை ஆக்கிரமித்துள்ள தனியார் விடுதிகளின் கூட்டமைப்பினரும் தனித்தனியாக அறிக்கைகளைத் தயாரித் துள்ளனராம். குடிநீருக்காக மட்டுமல்ல 1000 மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இத்தோடு நின்றுவிடவில்லை கருநாடகா, டில்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடமும் பன்னாட்டுத் தனியார் நிறுவனம் ஒன்றிடமும்கூட வரைவு அறிக்கை கோரப்பட் டுள்ளதாம். போகிற போக்கைப் பார்த்தால் அதிவிரைவில் இந்தச் சட்ட விரோதப் பணிகளில் கருநாடக அரசு ஈடுபடுவதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
பிரதமரைச் சந்தித்தாகி விட்டது; குடியரசுத் தலைவரையும் சந்தித்து மனுக்கள் கொடுக்கப்பட்டு அலுத்துப் போய்விட்டது தமிழ்நாடு.
தமிழ்நாடு அரசோ நாங்களும் இதில் செயல்பட்டோம் என்று காட்டிக் கொள்ளும் மேனா மினுக்கித்தனமாக செயல்படுகிறதே தவிர - குறைந்தபட்சம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி - இப்பிரச்சினையில் தமிழ்நாடு ஒன்று பட்டு நிற்கிறது என்று காட்டுவதற்குக்கூடத் தயாராக இல்லை என்பது பெரிதும் வேதனைக்குரியது. தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இதனைப் பலமுறை வலியுறுத்தியும்கூட தமிழ்நாடு அரசு கேளாக்காதாக இருப்பது சரியல்ல.
அதேநேரத்தில், கருநாடகத்தில் என்ன நடந்துகொண்டி ருக்கிறது? கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றாலும், மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசின் அமைச்சர்கள், கருநாடகத் தின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்குத் துணை நிற்போம் என்று பச்சையாகக் கருத்துத் தெரிவிக்கின்றனரே!
2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டது. 2013 பிப்ரவரி 19 ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதுவரை ஏன் அந்த அமைப்பு உருவாக்கப்படவில்லை? காங்கிரஸ் ஆட்சியை மட்டும் குறைகூறி பி.ஜே.பி. அரசு தப்பிப் பிழைக்க முடியாது.
மத்திய அமைச்சர்கள் அனைத்து மாநிலங்களுக்கும், பொதுவானவர்கள் என்பதையும் மறந்து கருநாடக மாநில உணர்வோடு பேசுவது சரியானதுதானா?
காவிரி நீரில் கருநாடகப் பகுதியில் கழிவு நீர் கலக்கப்படு வதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றாலும், அதனைச் சந்திக்க கருநாடகம் தயார் என்று சொல்லுவது பி.ஜே.பி.யைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா (கருநாடகம்) என்பதை மறந்துவிடக் கூடாது. ஒரு மத்திய அமைச்சரே ஒரு சார்பாகப் பேசுவதுபற்றி பிரதமர் கண்டிக்க வேண்டாமா?
இந்தியத் தேசியம்பற்றி வாய் கிழியப் பேசுவார்கள்; அதே நேரத்தில், மாநில சுயநலம் என்று வரும்போது தேசியமாவது - கீசியமாவது என்று கிழித்து எறிந்துவிடுவார்கள்.
கடந்த நூற்றாண்டுக்காலமாக தமிழ்நாட்டு விவசாயம் சாகடிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. விவசாயத்தை நம்பியுள்ள விவசாயப் பெருங்குடி மக்கள் சாவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கான விவசா யிகள் விவசாயத் தொழிலுக்கே முழுக்குப் போட்டுவிட்டு வேறு கூலி வேலைகளுக்கு நகர்ப்புறங்களுக்குப் படையெடுக்கும் பரிதாப நிலை.
காவிரி மட்டுமல்ல, முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் கேரள அரசு - கருநாடக அரசுக்கு அப்பனாகவே நடந்து கொண்டு வருகிறது!
இன்னும் எத்தனை முறைதான் நிபுணர்கள் குழு முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது! உறுதியாக இருக்கிறது! என்று தண்டோரா போட்டுச் சொல்லவேண்டுமோ?
நீரோட்டத்தில் நியாயமான முடிவு எட்டப்படா விட்டால், தேசிய நீரோட்டம் என்பது கேள்விக்குறியாக ஆகும் நிலைக்குத் தள்ளப்படுவது தவிர்க்கப்படவே முடியாததுதான்.
தமிழ்நாடு, உபரி நீரின் வடிகாலாக இருக்கும் பிச்சைக் காரப் பூமியாக ஆக்கப்பட்டு விட்டது. இதற்காக வெட்கப்பட வேண்டியவர்கள் தேசியவாதிகளே!
பார்ப்பான் பொதுநலவாதியல்லன்
இந்த நாட்டில் பார்ப்பானைத் தவிர மற்றவர்களெல்லாம் பொதுமக்களுக்குப் பாடுபடுகிறவர்கள்தாம். உலகத்தில் மனிதனாக உள்ள அனைவரும் பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பொதுமக்களுக்குத் தொண்டாற்றுகிறவர்கள்தாம்.
_ (விடுதலை, 11.4.1959)
முழுவதுமாக மாற்றப்படும் தொழிலாளர் சட்டங்கள்
புதுடில்லி, ஜூன் 18- மத்திய அரசால் தொழிலாளர் சட்டங்களில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் நாடாளுமன்றத் தால் அங்கீகரிக்கப்பட்டாலும், மிகப் பெரிய பொருளாதாரச் சீர்திருத்தமாகக் கூறப்பட்டாலும், அவை நாடாளுமன் றத்தில் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு மற்றும் தொழிலாளர்களுக்காக உழைப் பவர்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியுள்ளது.
பிரதமர் மோடி சுதந்திர நாளிலிருந்து தொடர்ந்து பல லட்சம் வேலை வாய்ப் புகளை உருவாக்குவதாகக் கூறி வரு கிறார். அரசியல்ரீதியிலான பின்னடை வுகள் சீர்திருத்தங்கள் செய்ய தடை களாக உள்ளன. மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தில் அலுவலர்களாக உள்ள மூன்று பேர் கூறும்போது, அமைச்சகத் தின் சார்பில் வரும் நாடாளுமன்றத்துக் கான கூட்டத் தொடரில் சட்ட முன் வரைவு தாக்கல் செய்யப்பட உள்ளது. அச்சட்ட முன்வரைவில் தொழிலாளர் களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ள விதிமுறைகளை தளர்த்தி, தொழிலாளர் கள் சங்கங்களை எளிதாக அமைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். தொழிலாளர் சட்டங்களில் மாற்றங் களை நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டால், இந்தியாவில் 1991 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கப் பட்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற் படலாம். ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பை யும், மற்றவகையில் தொழிலாளர் நல அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்தியா குறித்து உலக வங்கி கூறும் போது, பன்னாட்டளவில் தொழிலாளர் சந்தையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படாத நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் தற்பொழுதுள்ள தொழி லாளர் சட்டங்கள் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், மோடியின் மேக் இன் இந்தியா நோக்கத்தில், உற்பத்தித் துறைகளில் 20 கோடி இந்தியர்களுக்கு அடுத்த 20 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறிவருகிறார். ஆனால், மோடி தொழிலாளர் சட்டங் களில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் பெரிய அளவிலான தடைகள் உள்ளன. நாடாளுமன்றத்தில் மக்களவையில் முழு அளவிலான பெரும்பான்மை யைப் பெற்றிருக்கும் அவருக்கு மேலவையில் போதிய அளவில் அவர் நினைக்கும் எதையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாதவராக இருக்கிறார்.
ஊனமுற்ற ஒருவருக்குத் தடைகள் இருப்பதுபோன்று அவருடைய வணி கத்தை எளிதாக்கும் முயற்சிகளாக விவசாய நிலங்களை வாங்கி ஆசியா விலேயே பொதுச்சந்தையில் மூன்றா வது மிகப்பெரிய பொருளாதார மய்ய மாக மாற்றிட தடைகள் உள்ளன.
அய்எச்எஸ் குளோபல் இன்சைட் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பகுதி களுக்கான பொருளாதார வல்லுநர் ராஜீவ் பிஸ்வாஸ், மோடி எதைச் செய்வதாக இருந்தாலும் அவரால் சிறிதளவே செய்ய முடியும், ஆனால், குறிப்பிட்ட வரையறைகளுக்குள்தான் செய்ய முடியும்.
இதுபோன்ற சீர்திருத்தங்களை செய்யவில்லையானால், பொருளாதா ரம் தேக்கநிலையை அடைந்துவிடும். முதலீட்டாளர்கள் வேறு இடம்தேடிச் சென்றுவிடுவார்கள். உறுதியான முடிவு களை எடுக்கவில்லையானால், அரசிய லில் எதிர்க்கட்சியினராக இருப்பவர்கள் மன்னித்துவிடமாட்டார்கள்.
கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இன்றுவரை மோடி, தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முனையும்போது, அதன் கடுமையைக் குறைக்க வேண்டியதாக இருக்கிறது. அவர் தலைமையிலான அரசின் அர சியல் ரீதியிலான பின்னடைவுகளால், தொழிலாளர் விவகாரங்களில் இந்திய மாநிலங்களுடன் உள்ள பிணைப்பு தகர்ந்து அதற்கு அவரே பொறுப்பேற் கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவர் எடுக்கும் முடிவுகளை அப் படியே ஏற்கச் செய்யவேண்டுமானால், அவர் கட்சியான பாஜக ஆளும் ராஜஸ் தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வேண்டுமானால் முன்னெடுக்கலாம்.
இந்த மாநிலங்களில் வெற்றிகர மாகவும், சத்தமில்லாமலும் நடை முறைப்படுத்த ஊக்கப்படுத்தப்படுகிறது. அரசின் தொழிலாளர் துறை அமைச் சகம் அதையே முன்மாதிரியாகக் கொண்டு தேசிய அளவில் தொழிலாளர் சட்ட மாற்றங்களை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என்று தொழிலாளர் அமைச்சகம் கருதுவதாக அமைச்சகத் தின் அலுவலர் ஒருவர் தெரிவித்துள் ளார்.
தொழிலாளர் சட்டங்களில் சீரமைப் புத் திட்டத்தில் 300-க்கும் குறைவாக தொழிலாளர்கள் உள்ள நிறுவனங்கள் அரசின் அனுமதி இல்லாமல் தொழிலா ளர்களை பணியிலிருந்து நீக்கிவிடலாம். ஏற்கெனவே உள்ள தொழிலாளர் சட்டத்தின்படி, நூறு தொழிலாளர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட தொழி லாளர்களைக் கொண்டுள்ள தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்கவேண்டுமா னால் அரசின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியமாகும். ஆனால், சீரமைப்புத்திட்டத்தில் பணியிலிருந்து விலக்கப்படும் தொழிலாளர்களுக்கு மூன்று மடங்கு தொகுப்பு நிதியாக வழங்கிட வேண்டும் என்று உள்ளதாக அமைச்சக அலுவலர் கூறினார்.
தொழில் நிறுவனங்கள் நசிவடை யும்போது ஏற்படும் சிக்கல்களின் போதும், ஏற்கெனவே இருந்ததைவிட சிறிய நிறுவனமாக தக்க வைத்துக் கொண்டு தொடர்ந்து நடத்துவதற்கும், தொழில் நிறுவனங்கள் தொழிலாளர் களை பணியிலிருந்து வெளியேற்றுவ தற்கான அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்திடுமாறு நீண்டகாலமாகவே கோரி வந்துள்ளனர். தொழிலாளர் சட்டங்களில் சீரமைப்பு குறித்த ஆலோசனைகளை அளித்து வரும் தொழிலாளர் அமைச்சகத்தின் மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளரின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் சமூகப்பாதுகாப்பு ஆகியவைகளை உறுதிப்படுத்தவும் தொழிலாளர் சட்டங்களில் சீரமைப்பு வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றார்.
அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களில் தொழிலாளர் சட்டங்கள் மீதான சீரமைப்பு வரைவு முழுமை யாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுவதாகவும், அதன்பின்னர் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப் பப்பட உள்ளதாகவும் அமைச்சகத்தின் அலுவலர் கூறினார்.
தொழிலாளர் சட்டங்களில் மாற்றங் கள் செய்ய உள்ள திட்டத்தை எதிர்த்து தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங் கங்கள் போராடலாம், வேலைநிறுத்தம் கூட செய்யலாம். ஆனால், இச்சீர மைப்புமூலமாக அனைத்து தொழிலா ளர்களுக்கும் குறைந்தபட்ச கூலி உறுதிசெய்யப்படும்.
பன்னாட்டு வங்கி இந்தியாவின் தொழிலாளர் நிலைகுறித்துக் குறிப்பிடும் போது, பன்னாட்டளவில் மற்ற நாடு களுடன் ஒப்பிடும்போது, தொழிலாளர் களிடையே பெரிய அளவிலான மாற் றங்களை செய்ய முடியாத நிலை உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சீனாவு டன் ஒப்பிடும்போது, அந்த நாட்டில் 32 விழுக்காட்டினர் இருநூறாயிரம் கோடி அமெரிக்க டாலர் கொண்டுள்ள பெரும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்தியாவில் 16 விழுக்காட் டினர் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் தொழில் ஆலோ சனை நிறுவனமாகிய மெக்கின்சி நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வில் 2009ஆம் ஆண்டில் இந்தி யாவில் 84 விழுக்காட்டினர் உற்பத்தி யாளர்கள் 50 பணியாளர்களை மட்டுமே பணியில் அமர்த்தி இருந்துள்ளனர். சீனாவுடன் ஒப்பிடுகையில் அது வெறும் 25 விழுக்காட்டளவுதான் என்று ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார வல்லுநர்கள் குறிப் பிடும்போது, தற்போதைய தொழிலாளர் சட்டங் களில் சீரமைப்பு என்பதில் பெரிய அளவில் தேக்கநிலை உள்ளது. மோடி யின், மேக் இன் இந்தியா திட்டத்தில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ள 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அடுத்த 20 ஆண்டுகளில் எட்டுவதாகக்கூறுவதில் தேக்கநிலை உள்ளது.
இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்களில் எட்டு விழுக்காட்டினர் மட்டுமே நிரந்தரமான தொழிலாளர் களைக் கொண்டுள்ளனர். மற்றபடி, குறைந்த காலத்துக்கான ஒப்பந்தமுறைத் தொழிலாளர்களாகவே நடத்தப்பட்டு சமூகப் பாதுகாப்பினை குறைந்த அளவிலேயே பெறுகின்றனர்.
அரசியல்ரீதியிலான அழுத்தங் களின் வாயிலாக உரிய பாதையை அமைத்தால்தான் தொழிலாளர் சட்டங் களில் மாற்றங்களை ஏற்படுத்தும் சட்ட சீரமைப்புக்கான முன்வரைவை துரிதப் படுத்த முடியும்.
யூரோசியா தொழில் ஆலோசனைக் கான நிறுவனத்தின் இயக்குநர் கில் பிந்தர் தோசாஞ்ச் கூறுகையில், அவர்கள் அறிமுகப்படுத்தலாம், ஆனால், செயலாக்கம் என்பதில் மிகுந்த சுணக்கம் இருக்கும் என்றார்.
அஞ்சுவதற்கல்ல முதுமை; அனுபவப் பகிர்வுக்கே!
--veramani
அமெரிக்க குடிஅரசுத் தலைவர் களில், மிகுந்த பண்பாளர்களில் ஒருவ ராகத் திகழ்ந்த மிக நல்ல ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அவர்கள்!
அப்போதே இந்திய நாட்டை மிகவும் நேசித்து, நல்லறிவுடன் இருந்த குடிஅரசுத் தலைவர். இவர் விவசாயி களின் பிரதிநிதியாவார். இவருக்கு மற்றொரு செல்லப் பெயரே - பதவி வகித்தபோது ‘Peanut President’ - வேர்க்கடலை ஜனாதிபதி என்பதாகும்!
சில ஆண்டுகளுக்குமுன் அமெ ரிக்கா சென்றிருந்தபோது நான் வாங்கிப் படித்துச் சுவைத்த அவரது அறிவுச் செல்வ நூல் ஒன்று, ‘‘The Virtues of Aging’’(வயதாவது - முதுமை என்ற பெரும் நன்மைகளுக்கான வாய்ப்பு) என்ற நூல்.
மறுமுறை இப்போது படித்தேன் - சுவைத்தேன்!
இவர் 56 வயதிலேயே பதவி வாழ்க் கையிலிருந்து ஓய்வு பெற்று, மக்களி டையே தொண்டறத்தை மேற்கொண்ட வர்.
அமெரிக்காவில் 65 வயது அல்லது அதற்கு மேலும் என்ற வயது முதுகுடி மக்கள் என்ற தகுதி முத்திரையைப் பொறிக்கக்கூடியதாகும்.
எந்த வயதை அடைந்தால் நாம் முதியவர் (வயதானவர்) என்ற நிலையை அடைகின்றோம்? என்ற கேள்விக்கு அவர் அந்த பொத்தகத்தில் சிறப்பாக விடையளிக்கிறார்:
அது வெறும் வயதின் கூட்டலினால் வருவதல்ல; ஒவ்வொரு நபருக்கும், இடம் பொறுத்து மாறுகிறது. உதாரணத் திற்கு அமெரிக்காவில் இது சராசரியாக 73 வயதாகிற நிலையில், முதியவர் என்ற பட்டத்திற்குத் தயாராகிறார்கள்.
ஒருவர் எப்போது வயதானவராக முதுமை அடைந்தவராக - கருதப்படு கிறார்? என்ற கேள்விக்கு அருமை யான இலக்கணம் கூறுகிறார்! நம்மில் அவர் எப்படி சிந்திக்கிறாரோ அதைப் பொறுத்தே அதற்கு விடை கிடைக் கிறது! நகர முடியாத குந்தியே இருக்கும் நிலை, மற்றவர்களின் உதவியைப் பெரிதும் நாடியே வாழும் சூழ்நிலை, குறிப்பிடத்தக்க அளவு நம்முடைய உடல், உள்ள இயக்கத்தின் அளவு குறைந்துவிட்டது என்ற உணரும் நிலை, நாம் சந்தித்து உரையாடிடும் நண்பர் களின் எண்ணிக்கை குறையும்போது - அந்தப் பருவம் - நிலை நம்மைத் தொடுகிறது என்று கருதலாம்.
எத்தனை ஆண்டுகள் வாழுகிறோம் என்பது வயதுடன் இணைந்த ஒன்றல்ல. வயதுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே நடைமுறை உண்மை யாகும்.
நம்முடைய ஆயுள் குறைவதோ, நீளுவதோ, நம் இளமைக்கால நடவடிக் கைகளின்போது ஏற்படும் உடல்நலப் பாதுகாப்பைப் பொறுத்த ஒன்றேயாகும்.
அமெரிக்காவின் 6 குடிஅரசுத் தலை வர்கள் (வாஷிங்டனில் தொடங்கி ஜான்குன்சி ஆடம்ஸ்வரை) சராசரி வயது 76 ஆண்டுகள் ஆகும்.
கடைசி 6 குடிஅரசுத் தலைவர்கள் (பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் முதல் ரிச்சர்ட் நிக்சன்வரை) வாழ்ந்த சராசரி வயது 70 ஆண்டுகளே; கென்னடியைத் தவிர்த்து விட்டுக் கணக்கிட்டால், மற்ற வர்கள் சராசரி வயது 74.8 ஆண்டுகளே என்று விவரிக்கிறார்!
ஜிம்மி கார்ட்டர் அவர்கள் பதவியை விட்டு விலகி ஓய்வுக்குத் தயாராகும் போது, அவர்பற்றி பல அரிய தகவல் களைத் திரட்டி எழுதிய பார்பாரா வால்டர் என்ற எழுத்தாளர், இவரைப் பேட்டி கண்டு ஓர் அருமையான கேள் வியைக் கேட்டார்!
மிஸ்டர் பிரசிடெண்ட், நீங்கள் எவ்வளவு பரபரப்பான, சவால் விடுத்த பணிகளையெல்லாம் எதிர்கொண்டு பணியாற்றியுள்ளீர்கள். எது உங்களுக்கு மிகவும் சிறப்பான ஆண்டுகள், விளக்குவீர்களா? என்று கேட்டார்.
சிறிது நேர யோசனைக்குப்பின், ஜிம்மி கார்ட்டர் கூறினார்:
(இது) இப்போதுதான் சிறப்பான ஆண்டு எனக்கு.
அந்த கேள்வியாளருக்கு வியப்பு. காரணம் கூற முடியுமா? என்று கேட்கிறார்.
சிறிதுநேரம் மீண்டும் யோசிக்கிறார் ஜிம்மி கார்ட்டர்; பிறகு பதிலளிக்கிறார்:
எனக்குப் பல்வேறு விஷயங்களைப் பற்றி நிதானமாக, முன்பு எதிரொலித்த சிந்தனைகளையும், எனது குடும்பத்த வருடன் மேலும் அதிகநேரம் செலவிட வும், எனது முந்தைய தவறுகளை நான் திருத்திக் கொண்டு வாழும் வாழ்க்கையை நடத்த அரிய வாய்ப்பு - இந்த நிலையில்தான் என்று கூறுகிறார்.
எவ்வளவு நேர்த்தியான பதில் - அறிவார்ந்த விளக்கம்!
முதுமையில் நம்மை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது நாம் சேர்த்த செல்வம் அல்ல; அனுபவித்த பதவியல்ல; முன்பு சுவைத்த ஆடம்பரங்கள் அல்ல.
நல்ல ஆதரவுள்ள அன்பு பொழியும் - வழியும் - நல்ல குடும்பத்தவர். நண்பர் கள் வட்டம்.
புதுப்புது திட்டங்கள் - தொண்டறப் பணிகள் நம்மை என்றும் சீர் இளமை யாகவே வைத்திருக்கும். முதுமை என் பது பயந்து ஓடவேண்டிய ஒன்றல்ல; மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு, வாழ்க்கை யில் முன்பு கிடைக்காததற்கு வருத்தப் படாமல், கிடைத்தவைகளை மகிழ்ச்சியாக ஏற்று, அனுபவித்துள்ள மகிழ்ச்சியை அசை போட்டு வாழுவதே முதுமையின் நற்பயன்கள்!
இளமையில் கிட்டாத வாய்ப்பு - முதுமை என்ற அனுபவக் களஞ்சியத் தின் தொகுப்பு என்பதாகும். அதைப் பகிர்ந்தளித்து நாளும் மகிழ்வுடன் வாழுவோம்.
எதுவும் நம் மனதின் எண்ண ஓட்டத்தைப் பொறுத்ததே!
நன்றும் தீதும் பிறர் தர வாரா! - இல்லையா?
யோகா: வழிக்கு வந்தது மத்திய அரசு
வெள்ளி, 19 ஜூன் 2015 1
புதுடில்லி, ஜூன்.19- தாங்கள் நடத்தும் யோகா தின நிகழ்ச்சி யில் சூரிய நமஸ் காரத்தை சேர்ப்பது இல்லை என்ற முடி வில் மத்திய அரசு திட்டவட்டமாக உள்ளது. ஓம் மந் திரத்தை உச்சரிப்பது கட்டாயம் அல்ல என்றும் கூறியுள்ளது. சர்வதேச யோகா தினம், ஜூன் 21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகா நிகழ்ச்சிகளில், சூரிய நமஸ்காரமும், ஆசனம் செய்யும்போது, ஓம் என்ற மந்திர உச்சரிப்பும் இடம்பெறச் செய்ய திட்ட மிடப்பட்டது. இதற்கு சில சிறுபான்மை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால், சூரிய நமஸ்காரம் செய்வது கட்டாயம் அல்ல என்று மத்திய அரசு ஏற்கெனவே கூறிவிட்டது. அத்துடன், டில்லியில், தாங்கள் நடத்தும் யோகா தின கொண்டாட்டத்தில், சூரிய நமஸ்காரம் இடம்பெறாது என்றும், ஓம் மந்திரத்தை உச்சரிப்பது கட்டாயம் அல்ல என்றும் தெரிவித்தது. இதற்கு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்து அமைப்புகளின் எதிர்ப்பு பற்றி, நேற்று டில்லியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை ராஜாங்க அமைச்சர் சிறீபாத் நாயக்கிடம் செய்தி யாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், சூரிய நமஸ் காரம் இடம்பெறாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக கூறினார்.
அவர் கூறியதாவது:- மத்திய அரசின் யோகா தின கொண்டாட்டத்தில், சூரிய நமஸ்காரம் இடம்பெறாது. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதும் கட்டாயம் அல்ல. அவரவருக்கு பிடித்த கடவுளின் பெயரை உச்சரித்துக் கொள்ளலாம்.
சில அரசு சார்பற்ற அமைப்புகள், யோகா தின கொண்டாட்டத்தை தனியாக நடத்து கின்றன. ஆயிரக்கணக்கான ஆசனங்கள் இருப்பதால், அவர்கள் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு எந்த ஆசனத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம். தங்கள் மத நம்பிக்கைப்படி, எந்த பெயரையும் உச்சரித்துக் கொள்ளலாம். இவ்வாறு சிறீபாத் நாயக் கூறினார்.
Read more: http://www.viduthalai.in/e-paper/103541.html#ixzz3dW4yTsLg
இன்றைய ஆன்மிகம்?
சூழ்ச்சி
சிவனுக்கும்- பார்வ திக்கும் ஆடல் போட்டி நடைபெற்றது. சிவனால் வெல்ல முடியாத நிலை யில் காலைத் தூக்கிக் காட்டினான்; பெண் என்பதால் பார்வதியால் காலைத் தூக்கிக் காட்ட முடியவில்லை; அதனால் சிவனிடம் பார்வதி தோற் றதாகச் சொல்லு கிறார்களே.
இதில் சிவன் திறமை யால் வென்றானா? அரு வருப்பான சூழ்ச்சியால் வென்றானா? சூழ்ச்சியும் ஒரு திறமைதானே என்று ஆன்மிகக் குஞ்சுகள் சொல்லுமோ!
கான்வென்ட் பள்ளிகளைத் தடை செய்ய வேண்டுமாம்!
கோவாவில் இந்து மத மாநாட்டில் வெறிக் கூச்சல்
பனாஜி, ஜுன்19_ பாஜக ஆளும் கோவா மாநிலத்தில் இந்து அமைப் புகள் ஒன்று கூடி மாநாடு ஒன்றை நடத்தியுள்ளன. அம்மாநாட்டில் கான் வென்ட் பள்ளிகள் மற் றும் மாட்டிறைச்சிக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட் டுள்ளது. ராம்நாத்தி கிராமத் தில் வலது சாரி இந்து அமைப்பான இந்து ஜன கிருதி சமிதிசார்பில் அனைத்திந்திய இந்துமத மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் இந்தியா முழுவதும் 22 மாநிலங்களி லிருந்தும், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற அண்டை நாடுகளிலிருந் தும் பலர் பங்கேற்றனர். இதில் 210 இந்து அமைப் புகள் பங்கேற்றன.
மாநாட்டில், இந்து மாணவர்கள் பழைமை யான இந்துக் கலாச்சா ரத்தைப் பின்பற்ற அனு மதிக்காமல் கான்வென்ட் பள்ளிகள் தடையாக இருக் கின்றன. கான்வென்ட் பள்ளிகளில் படித்துவரும் இந்து மாணவர்கள் இந்து பழக்கவழக்கங்களாக உள்ள மருதாணி வைத்துக் கொள்ளவும், மலர்களைச் சூடிக்கொள்ளவும், துப் பட்டா அணிவதற்கும், குங்குமம் அல்லது பொட்டு வைத்துக்கொள்வதற்கும் கான்வென்ட் பள்ளிகள் தடை விதித்துள்ளன. இது நிறுத்தப்பட வேண் டும். கான்வென்ட் பள்ளி களில் ஒட்டுமொத்தத்தில் பாகுபாடுகள் இருக்கின் றன என்று குறிப்பிட்டுள் ளார்கள்.
இந்து ஜனகிருதி சமிதி தேசிய ஒருங்கிணைப்பா ளர் சாருதத் பிங்க்ளே கூறு கையில், மாநாட்டின் மூலமாக கோவா முதல் வர் லட்சுமிகாந்த் பர் சேகர் ஆளும் கோவா மாநிலத்தில் 70 விழுக் காடு இந்து மாணவர்கள் கான்வென்ட் பள்ளிகளில் படித்துவருகிறார்கள். ஆகவே, அந்த மாநிலத் தில் கான்வென்ட் பள்ளி களைத் தடை செய்யுமாறு அவரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளோம். கத்தோலிக்க கிறித்த வர்கள் அரசு செயல்பாடு களில் தலையிடமுடியும் என்றால், இந்து அமைப்பு களுக்கும் அதே உரிமை உண்டு என்று அதற்கான கோரிக்கையை எழுப் புவோம் என்றார்.
கோவாவில் கத்தோ லிக்கக் கிறித்தவ சட்ட மன்ற உறுப்பினர்களிடம் கோவாவின் கிறித்தவ சர்ச் அமைப்பாகிய ஆர்ச் டையாசன் கல்வி வாரியம் என்று வைத்துக் கொண்டு பல்வேறு கோரிக்கைளை எழுப்பிவருகிறார்கள் என்பதைக் குறித்தே அவர் இவ்வாறு குறிப் பிட்டுள்ளார்.
மாநாட்டில், நாடு முழுவதும் மாட்டிறைச் சிக்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், கான் வென்ட் பள்ளிகளுக்கும் தடை விதிக்கப்பட வேண் டும் என்றும் தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளனவாம்
இந்தியாவில் மீண்டும் நெருக்கடி நிலையா?
மோடியைத்தான் அத்வானி விமர்சித்து இருக்கிறார் - எதிர்க்கட்சிகள் கருத்து
புதுடில்லி, ஜூன் 19_ இந்தியாவில் மீண்டும் நெருக்கடி நிலை வராது என கூற முடியாது என்று பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கூறி இருப்பதுவும், அரசியல் தலைமையிடம் நம்பிக்கை இல்லை என கூறி இருப்பதுவும் பரபரப்பான விவாதத்துக்கு வழி வகுத்து விட்டது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கூறி உள்ளனர். அது வருமாறு:-
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் டாம் வடக்கன் கருத்து தெரிவிக்கையில், நீதிபதி வெளியே வந்திருக்கிறார். அத்வானி பேசுகிற தலை வர். அவர் எதை சொல்ல வேண்டுமோ அதை சொல்லி விட்டார். அவர் களது அரசு இருக்கிறது. அவர்களது பிரதமர் இருக் கிறார். இந்த நிலையில் அவர் யாரைப்பற்றி சொல்லி இருக்கிறார் என்பது தெளிவு. இதை அவர் அறிவார். அவர் ராஜதந்திரி. பிரதமர் பெயரை குறிப்பிட விரும்ப வில்லை. ஆனால் அவரது பேட்டியை வாசிக்கிற அனைவரும் அவர் மோடியைப் பற்றித்தான் கூறி உள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடியும் என்று கூறினார்
நிதிஷ்குமார்
பீகார் முதல் அமைச் சருமான நிதிஷ்குமார், அத்வானி மிக மூத்த தலைவர். அவரது கருத் துக்கள் தீவிர பரிசீல னைக்கு உரியவை. தினமும் இப்போது நெருக்கடி நிலை போன்ற சூழலைத் தான் எதிர் கொண்டிருக் கிறோம் என கருத்து தெரிவித்தார்.
சமாஜ்வாடி
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால், அத்வானி பேட்டி குறித்து கருத்து கூறும்போது, அத்வானி ஒரு கவலையை வெளியிட் டிருக்கிறார் என்றால், கட்சியின் மூத்த உறுப் பினர் கூறி இருக்கிறார் என்ற வகையில் அதை அரசாங்கம்தான் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். நாட் டில் இப்போது நடந்து கொண்டிருக்கிற ஆட்சி முறை ஜனநாயக ரீதியி லானதாக இல்லை. சர் வாதிகார மனப்பாங்கு பிர திபலிக்கிறது என குறிப் பிட்டார்.
ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்-அமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், நெருக்கடி நிலை வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறிவிட முடியாது என அத்வானி கூறி இருப்பது சரிதான். டில்லிதான் அவர்களது முதல் பரிசோதனையோ? என கேள்வி எழுப்பி உள்ளார்.
இப்படி எதிர்க்கட்சி தலைவர்கள், அத்வானி பேட்டியில் விமர்சித்திருப் பது பிரதமர் மோடியைத் தான் என குறிப்பிடுகிற போது, அதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பாரதீய ஜனதாவும் மறுத்துள்ளன
ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.ஜி. வைத்யா, இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், அத்வானி, பாரதீய ஜனதாவின் மகா தர்ஷக் மண்டலில் (வழி காட்டும் குழு) உறுப்பினர். அவர் வயதாலும், அனுப வத்தாலும் மூத்த தலைவர். அவர் மோடியிடம் பேச முடியும். இந்த பேட்டியின் வாயிலாக மோடிக்கு செய்தி அனுப்பும் நோக்கம் அவருக்கு இருக்கும் என நான் கருதவில்லை என கூறினார்.
பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் எம்.ஜே.அக்பர், அத்வானி தனிப்பட்ட நபர்களைவிட அமைப்புகளைத்தான் குறிப்பிடுவதாக நினைக் கிறேன். அத்வானியின் கருத்தை மதிக்கிறேன். ஆனால் நாட்டில் நெருக் கடி நிலை அமல்படுத் தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தனிப்பட்ட முறையில் நான் கருத வில்லை. அந்தக் காலம் முடிந்துவிட்டது. இந்திய ஜனநாயகம் இப்போது மிகவும் வலுவாக உள்ளது என குறிப்பிட்டார்.
மறைப்பது ஏன்?
வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டம் 2010 என்பதில் மேலும் சில திருத்தங்கள் கொண்டு வரப்படுவது குறித்து தலையங்கம் தீட்டியுள்ள இன்றைய தினமணியில், இத்தகைய நன்கொடைகளை அதிகம் பெற்றுக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். வி.எச்.பி. உள்ளிட்ட சங்பரிவாரங்கள் குறித்து மூச்சு விடாதது - ஏன்?
முதல் தலைமுறை!
அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.ஈ., பி.டெக் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள 1.56 லட்சம் பேர்களில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளின் எண்ணிக்கை 80 ஆயிரம்.
தெரியுமா?
குழந்தை நாள் ஒன்றுக்கு 200 தடவை சிரிக்கிறது. வயதானவர்கள் நாள் ஒன்றுக்கு 15 தடவை மட்டுமே சிரிக்கின்றனராம்.
ரூ.ஒரு கோடியே 40 லட்சம்
தமிழ்நாட்டில் நிர்வாக ஒதுக்கீட்டால் எம்.பி.பி.எஸ். படித்து முடிக்க ஒரு மாணவனுக்கு ஆகும் செலவு ரூ.ஒரு கோடியே 40 லட்சமாகும்.
கண்ணாடியும் - நண்பர்களும்
வெள்ளி, 19 ஜூன் 2015
காலத்தை வென்ற மேல்நாட்டுக் கலைவாணர் (நகைச் சுவை அரசு என்.எஸ். கிருஷ்ணனைப் போல்) சார்லி சாப்ளின் அவர்கள் வெறும் சிரிப்புமூட்டும் கலைஞர் மட்டுமல்ல; சிரிக்கவும் வைத்து உலக மக்களைச் சிந்திக்கவும் வைத்த மிகப் பெரிய மேதை.
அவரது சிந்தனையின் பலனாக உருவாக்கப்பட்ட திரைப்படங் களையே கண்டு மிரண்ட அரசுகளும், அதன் காரணமாக நாட்டையே விட்டு வெளியேறிட வேண்டிய நிர்ப்பந்த மும்கூட அவருக்கு ஏற்பட்டதுண்டு!
மக்களையெல்லாம் இப்படி மகிழ்ச்சி அருவியில் குளிக்க வைத்து மகிழ்வித்த அந்த மாமேதையின் வாழ்க்கைக்குள்ளோ எத்தனையோ சோகத் தாக்குதல்கள்; அவற்றை மறைத்தோ, மறந்தோ அவர் மக் களுக்கு தனது நகைச்சுவை (துணுக் குகள்) மூலம் அறிவு கொடுக்கத் தவறவில்லை!
அவர் ஒருமுறை சொன்ன கருத்து உலகம் முழுவதும் பரவிய கருத்து; ஊடகங்களும்கூட இதனை அவ்வப் போது மேற்கோளாகக் காட்டிடத் தவறவில்லை!
முகம் பார்க்கும் கண்ணாடி (Mirror) தான் என் சிறந்த நண்பர்; ஏனெனில் நான் அழும்போது, அது ஒரு போதும் சிரித்ததில்லை - சார்லி சாப்ளின்
இதில்தான் எத்தனைத் தத்துவங்கள் புதைந்துள்ளன, பொதிந்துள்ளன!
நம்முடைய நண்பர்களில் பலர் நமக்கு முகமன் கூறியே நம்மிடம் சலுகையோ, தயவோ, பெற விரும்புவர்கள்.
நகுதல் பொருட்டல்ல நட்பு என் பதைக் கடைப்பிடித் தொழுகுவதை அறியாதவர்கள்.
காரியம் ஆவதற்குக் காலைப் பிடி; காரியம் முடிந்தவுடன் கழுத்தைப் பிடி என்ற அனுபவ மொழிக்கேற்ப, பயன் கருதி நட்புப் பாராட்டுபவர்களே உலகில் ஏராளம்!
ஒப்பனை இல்லாத நட்பே உயர் நட்பு!
இடுக்கண் வருங்கால் நகுக என்ப தற்கு நாங்கள் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் படித்த 60 ஆண்டு களுக்கு முன்பு - இக்குறளைப் பல நண்பர்கள் எப்படிப் பொருள் கொண்டு கூறினார்கள் தெரியுமா?
துன்பம்; இன்னல், சோதனை ஒருவருக்கு வரும்போது அதுகண்டு உதவிடவோ, ஆதரவுக்கரம் நீட்டவோ கூடச்செய்யாது, சிரித்து மகிழ்வதில் - அதாவது கேலிச் சிரிப்பு நகுதலை வாடிக்கையாகக் கொண்டு ஒழுகுக என்பது இன்றைய நடைமுறை என்று மாணவத் தோழர்கள் கூறுவதுண்டு.
நம்மில் பலரும் - அது குடும்பமா கவோ, நிறுவனமாகவோ, இயக்கமாகவோ - எதுவாக வேண்டுமானாலும் இருக் கட்டும், பரவாயில்லை. அவற்றுடன் தொடர்புடைய நமது நண்பர்கள் கூறும் மாறுபட்ட கருத்து எதையும் கேட்கக் கூட நம்மில் பலர் தயாராக இருப்பதில்லை.
எப்போதும் புகழுரை என்ற குளிர் பதனத்தையே அனுபவித்துக் கொண் டுள்ள நாம், கொஞ்சம் வித்தியாசமான - அது நம்முடைய உண்மை நலனில் அக்கறை கொண்ட கருத்துரையாக இருப்பினும்கூட, வெப்பம் போல் அதைக் கேட்கக் கூடத் (ஏற்றுக் கொள்வது பிறகு அடுத்த நிலை - அல்லது இறுதி நிலை) தயாராக இருப்பதில்லை.
எந்தக் கருத்து, அறிவுரையாயினும் நண்பர்கள் - உள்நோக்கம் ஏதுவும் இன்றி - கூற முன் வரும்போது அதை வர வேற்று, பொறுமையுடன் காது கொடுத்துக் கேட்டு, கொள்ளுவதைக் கொள்ளலாம்; தள்ளுவதைத் தள்ளலாம். திருத்திக் கொள்ள வேண்டியவற்றைத் திருத்தி நாம் மேலும் வளரலாம் - வாழலாம்.
அதற்குப் பலரும் தயாராவ தில்லை என்பது ஒரு கெட்ட வாய்ப்பே ஆகும்!
மழையோ, புயலோ வரக்கூடும் என்று வானிலை நிலவரம் கூறும் பொறியாளர் - விஞ்ஞானி மக்கள் பகைவரா?
ஆட்சிக்கு எதிரான சதிகாரரா? இல்லையே, மக்களை எச்சரிக்கைப் படுத்திடும் மிக அரிய பணியைச் செய்யும் நண்பர் அல்லவா?
உடைந்த எலும்பை படமாகக் காட்டும் எக்ஸ்ரே கருவியை - நாம் விரோதி என்றா கருதுகிறோம்?
அதன் மூலம் தானே நாம் நம் உடல் நலத்தை சீரமைத்துக் கொள் ளும் வாய்ப்பை மருத்துவ உதவி மூலம் பெறுகிறோம் - இல்லையா?
எனவே, உண்மை நட்பை - அவர்கள் கசப்பு மருந்தை தந்தாலும் அதை உண்டு நலம் பெறுவோம். ஒப்பனை (முகமன் கூறும்) நண் பர்களை அடையாளம் காண்போம். சில கண்ணாடிகள் மாற்றிக் காட்டி னால் அதை எறிந்துவிடுங்கள்.
சில நண்பர்கள், கண்ணாடி கீழே விழுந்தால் பட்டென்று உடை வதுபோல் உடைந்து, ஒதுங்கி விடு வதும் உண்டு; அதையும் மறுபுறம் கவனத்தில் கொள்ளத் தவறாதீர்கள்.
அக நக நட்பே; தலையாயது என்று உறுதியுடன் கணியுங்கள்.
- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
பகுத்தறிவு
பகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்து வதில்லை, தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை.
(குடிஅரசு, 26.5.1935)
அய்யா அகராதி
இராமாயணம் - பார்ப்பனரின் புரொசீஜர் கோட்
கற்பு - பெண்ணடிமை ஆயுதம்
சாதி - மனிதனை மனிதன் இழிவுபடுத்துவது
சமயம் - சாதிக்கு வித்து
கடவுள் - சமயத்தின் காவலன்
பார்ப்பான் - இம்மூன்றையும் படைத்த கர்த்தா
குருக்கள் - மோட்ச லோகக் கைகாட்டி
கோயில் - அறிவு பணம், இரண்டையும் இழக்கும் இடம்
சத்தியாகிரகம் - சண்டித்தனம்
உண்ணாவிரதம்- தற்கொலைக் குற்றமுள்ள நோய்
தியாகம் - அர்த்தமில்லாச் சொல்
சோதிடம் - சோம்பேறிகளின் மூலதனம்
புராணங்கள் - புளுகு மூட்டைகள்
புலவர்கள் - பழைமைக் குட்டையில் படிந்து ஊறிய பாசி
உற்சவம் - கண்ணடிக்கும் கான்பரன்ஸ்
வக்கீல் - சேலை கட்டாத தாசி
வியாபாரி - நாணயமற்ற லாப வேட்டைக்காரர்
மோட்சம் - முடிச்சுமாறிகளின் புரட்டு
நரகம் - வெறும் கற்பனைப் பூச்சாண்டி
பிரார்த்தனை - பேராசையின் மறுபெயர்
நாஸ்திகம் - அறிவின் உண்மையான எல்லை
மூடநம்பிக்கை - Observation and Experiment இரண்டுக்கும் உட்படாதது
நாணயம் - ஒருவனுடைய இலட்சியத்தையும், தேவையையும் பொறுத்த ஒழுக்கம்
ஆசிரியர்- பையன் பாஸ் செய்தால் கெட்டிக்காரர் என்று பெயர் வாங்குபவர் - பெயில் ஆகிவிட்டால் பையன் முட்டாள் என்று பெயர் சூட்டுபவர்.
பிச்சைக்காரன் - பாடுபட சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு ஏமாற்றுவதாலும் சண்டித்தனத்தாலும் கெஞ்சி புகழ்ந்து வாழ்பவர்கள்.
தொழிலாளி - தன் வயிற்றுப் பிழைப்புக்காக தனது உழைப்பை மாற்றுப் பண்டமாகப் பிறருக்குக் கொடுக்கிறவன் அல்லது பிறர் இஷ்டப்படி நடக்க வேண்டியவனாகிறவன்.
முதலாளி - தன் உழைப்பைத் தன் இஷ்டமான விலைக்கு பிரதிப் பிரயோசனத்திற்கு மாறுப்பண்டமாக விலை பேசுகிறவன்.
மனைவி - ஓர் ஆணுக்குச் சமையற்காரி; ஓர் ஆணின் வீட்டுக்கு ஒரு காவல்காரி; ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை.
பெண்ணுரிமை - பெண்களுக்கும் ஆண்கள் போன்று வீரம், வன்மை, ஆளுந்திறன் உண்டென்பதை ஆண்கள் உணரச் செய்வது.
சாதி ஒழிப்பு - நாட்டில் லைசென்ஸ் பெற்ற திருடர்களை அயோக்கியர்களை, மடையர்களை ஒழிப்பது.
கிராமம் - ஒரு வித வருணாசிரம தர்ம முறையில் கீழான சாதி.
ஆரிய (மிலேச்ச)ரைப் பற்றி வ.உ.சிதம்பரனார்
பிராமணரல்லாதார்களாகிய தமிழர்களின் முன்னோர்கள் பிராமணர்களின் முன்னோர் களாகிய ஆரியர்களை மிலேச்சர் என்றும், யாகத்தின் பெயரால் கண்டவற்றையெல்லாம் தின்பவர் களென்றும், நினைத்தவற்றை யெல்லாம் செய்பவர்களென்றும், சொல்லியும், நிகண்டு முதலிய நூல்களில் எழுதி வைத்தும்,
அவர்களைத் தொடாமலும், அவர்கள் தொட்ட பொருள் களைத் கொள்ளாமலும், அவர்களை தொட நேர்ந்தபோது குளித்தும் அவர்களை இழிவுபடுத்தி வந்தார்கள். அவ்விழிவை ஒழிப்பதற்கு வழி என்ன என்று அவ்வாரியர்கள் ஆலோசனை செய்தார்கள்:- உடனே தங்களைப் பிராம ணர்கள் என்றும், சொல்லவும், எழுதவும் தலைப்பட்டார்கள்;
அவ்வாறு தாங்கள் மேலான ஜாதியார் என்றும், தமிழர்களெல்லாம் கீழான ஜாதியார் என்றும், நடத்தையிலும் காட்டினார்கள். அந்த மருந்தையே தமிழர்கள் கைக்கொள்ளின் அவர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற நோய் நீங்கிப்போம்.
அதாவது, பிராமணரல்லாத ஜாதியார்களில் ஒவ்வொரு வரும் தாம் பிராமணருக்கு மேற்பட்ட ஜாதியர்களை நடத்துகிறது போல் பிராமணர்களை நடத்தி வருவாராயின் தம் ஆரோப இழிவு நோய் போய் விடும். இந்நோய் முதலைப் போக்குவதற்கு வேறு மருந்து தேட வேண்டியதில்லை.
(5.11.1927இல் நடந்த சேலம் ஜில்லா மூன்றாவது அரசியல் மாநாட்டுத் தலைமை தாங்கும் போது திரு. வ.உ.சி. அவர்கள் ஆற்றிய சொற்பொழிலிருந்து எடுக்கப்பட்டது. பக்கம் 39, 40, 41)
Read more: http://www.viduthalai.in/e-paper/103549.html#ixzz3dW8rdRTx
புராணப் பிரியர்களும் சிரிக்கிறார்கள்
நமது பெரியவர்கள் சொல்லிவிட்டு போன கதைகளைச் சொன்னால் இந்தகாலத்துப் பசங்கள் கேலி பேசறதா; நம்பமாட்டேன் என்கிறா - நையாண்டி செய்யறா - அனுமாரின் வாலை நீர் அளந்து பார்த்தீரோ; அரம்பை ஆடுவது கண்டீரோ;
இந்திரன் கண்களை எண்ணிப் பார்த்தீரோ என்றெல்லாம் கேள்விகளைப் பூட்டிப் பேசறா - நாம் என்ன இருக்கு, செய்ய? ஒவ்வொன்றுக்கும் காரணம் கேட்கிறதா, அர்த்தம் கேட்கிறதா, ஆதாரத்தைக் காட்டுன்னு மல்லுக்கு நிற்கிறா - என்று தான் வைதீகர்கள் - புராணப் பிரியர்கள் தங்கள் முகாமிலே கூட ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் போது விசாரப்படுகிறார்கள்;
பதைக்கிறார்கள் முதலில் - பிறகு திகைக்கிறார்கள் - கடைசியில் அவர்களே சிரிக்கிறார்கள். ஆமாம்! இந்தப் பயல்கள் சொல்வது போல் புராணக் கதைகள் நம்ப முடியாதவைகளாகத்தான் இருந்து தொலைக்கின்றன - நாம் என்ன செய்வது என்று சிந்தித்து விட்டுச் சிரிக்கிறார்கள்.
- 5.12.1948, திராவிடநாடு
இராமாயண ஆராய்ச்சி
வால்மீகிக்கும் சீதைக்கும் சம்பந்தம் -சித்திரபுத்திரன்
இராமன் தன் மனைவியின் நடத்தைக் கேட்டினால் அவளை 4 மாத சினை (கர்ப்பம்)யுடன் ஆளில்லாத காட்டில் கண்களை மூடி கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி தம்பிக்கு கட்டளை இட்டு மனைவியை தம்பியுடன் காட்டுக்கு அனுப்பி விட்டான்.
தம்பி இலட்சுமணன் அண்ணன் உத்தரவிற்கு விரோதமாக சீதையை வால்மீகி முனிவன் வாழும் காட்டில் கொண்டு போய் வால்மீகியிடம் விட்டு விட்டு வந்துவிட்டான்.
அதன் பிறகு சீதை காட்டில் இரட்டை பிள்ளை பெற்றாள் என்று வால்மீகி இராமாயணத்தில் காணப்படுகிறது.
மற்றொரு இராமாயணம்:
மற்றொரு இராமாயணத்தில் சீதை காட்டில் ஒரு பிள்ளைதான் பெற்றாள் என்றும் மற்றொரு பிள்ளை வால்மீகியால் உண்டாக்கப்பட்டது என்றும் காணப் படுகிறது.
இந்த இரண்டாவது பிள்ளையின் கதையை பகுத்தறிவுபடி பார்த்தால் இது சீதைக்கு வால்மீகியின் சம்பந்தத்தால் ஏற்பட்ட பிறந்த பிள்ளை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனென் றால் இந்த இரண்டாவது பிள்ளையின் கதை அவ்வளவு முட்டாள்தனமான கட்டுக் கதையாகவே காணப்படுகிறது.
என்னவென்றால் வால்மீகி முனிவருடன் சீதை காட்டில் வாழ்கிறாள். அப்போது அவளுடைய (ஒரு) குழந்தையை வால்மீகியைப் பார்த்துக் கொள் ளும்படி சொல்லி ஒப்புவித்து விட்டு தண்ணீர் கொண்டு வர நதிக்குப் போகிறாள். வால்மீகி குழந்தையை கவனித்து வருகிறான். அப்படி கவனித்துக் கொண்டு இருக்கும் போதே வால்மீகி நிஷ்டையில் இறங்கி விட்டான். அதாவது கண்ணை மூடிக் கொண்டு ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டான்.
இதன் மத்தியில் தண்ணீர் கொண்டு வர நதிக்கு சென்ற சீதை வழியில் ஒரு பெண் குரங்கு தனது குட்டி வயிற்றில் தொத்திக் கொண்டிருக்க நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தாள். இந்த குரங்குக்கு இருக்கிற புத்திகூட நமக்கு இல்லையே! குரங்குக் குட்டியை தன் னுடன் வைத்துக் கொண்டே அல்லவா நடக்கிறது, நாம் குழந்தையை விட்டு தனியே தண்ணீருக்குப் போகிறோமே;
இது எவ்வளவு அன்பு அற்ற தன்மை என்று நினைத்து உடனே வால்மீகி ஆசிரமத்திற்கு திரும்பி வந்து தன் குழந்தையை எடுத்துக் கொண்டு நதிக்குச் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள்.
ஆசிரமத்திற்கு வந்தவுடன் அங்கு மற்றும் ஒரு குழந்தை இருக்கக் கண்டாள். இந்த குழந்தை எது? என்று வால்மீகியை சீதை கேட்டாள் அதற்கு வால்மீகி சீதையைப் பார்த்து நீ தண்ணீர் எடுத்து வரச் சென்றபோது உன் குழந்தையை என்னிடம் விட்டுவிட்டு சென்றாய். உடனே நான் நிஷ்டையில் இறங்கி விட்டேன்.
நிஷ்டை முடிந்து கண் திறந்து பார்த்ததும் குழந்தையைக் காணவில்லை. நீ வந்து குழந்தை எங்கே என்று என்னைக் கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று கவலைப்பட்டு, குழந்தையை ஏதோ ஒரு காட்டு மிருகம் தூக்கிக் கொண்டு போய்த் தின்றிருக்கும் என்று கருதி உடனே என் தவ மகிமையினால் ஒரு தர்ப்பைப் புல்லைக் கிள்ளிப் போட்டு அதை ஒரு குழந்தையாக ஆகச் செய்து இவனுக்கு குசன் என்று பெயர் இட்டு விட்டேன்.
இதுதான் இந்த இரண்டாவது குழந் தையின் உற்பத்திவிவரம் என்று சொன் னான். (குசம் என்றால் தர்ப்பைப்புல்)
உடனே சீதை மகிழ்ந்து இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்தாள். இந்த குழந்தைகளுக்குப் பெயர் லவ, குசா. இவற்றுள் வடமொழியில் குசம் என்றால் தர்ப்பைக்குள் பெயர்.
இதைப்பற்றி சிந்திப்போம்
வால்மீகிமுனி ஞான திருஷ்டி உள்ளவன். இராமாயணத்தில் வால்மீகி ஞான திருஷ்டியால் பல காரியங்களை அறிந்து நடந்தார் என்று காணப்படுகிறது. அப்படிப்பட்டவருக்கு நிஷ்டை முடிந்தவுடன் பக்கத்தில் இருந்த குழந்தை என்ன ஆயிற்று என்று கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்குமா?
மற்றும் அங்குள்ள மற்ற முனிவர்கள், ரிஷிகள் வால்மீகி சீதை விஷயமாய் நடந்துகொண்ட விஷயம்பற்றி வால்மீகியை குறை கூறி இருக்கிறார்கள். இதற்கு வால்மீகி சீதைத் தவறாக நடக்கவில்லை என்று சோதனை காட்டியதாகவும் இராமா யணத்தில் காணப்படுகிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது சீதையின் இரண் டாவது குழந்தை வால் மீகியால் சீதைக்கு சினை உண்டாக்கப் பட்டது என்று தான் கருத வேண்டியிருக்கிறது.
குறிப்பு: இராமாயணம் கட்டுக்கதை என்றுக் கருதினாலும் இந்தக் கருத்துடன் தான் அந்தக் கதை கட்டப்பட்டிருக்கிறது என்று கருத வேண்டியிருக்கிறது.
மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில் கடுகளவுகூட குறையும், ஒழுக்கக் கேடும், அசவுகரியமும் ஏற்பட இடமிருக்காது.
மனிதன் மானத்தில் இலட்சியமற்றவனாக ஆகிவிட்டதனாலேயே பகுத்தறிவுள்ள மனித ஜீவனின் கூட்டு வாழ்வு காட்டில் கெட்ட மிருகங்களிடையில் வாழும் தற்காப்பற்ற சாது ஜீவன்கள் தன்மையாக ஆகிவிட்டது.
- தந்தை பெரியார்
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட மாணவர் அமைப்பு
சனி, 20 ஜூன் 2015
எங்கெங்கு காணினும் பெரியார் கொள்கை மயம்!
அம்பேத்கர் - பெரியார் அமைப்பை சென்னை அய்.அய்.டி. தடை செய்ததன் எதிரொலி:
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட மாணவர் அமைப்பு
தந்தை பெரியாரின் ராமாயண பாத்திரங்கள் ஆய்வு ஹிந்தி நூலை பிரச்சாரம் செய்கிறது!
புதுடில்லி, ஜூன் 20- அம் பேத்கர் - பெரியார் அமைப்பை சென்னை அய்.அய்.டி. தடை செய்ததன் எதிரொலியாக டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட மாண வர் அமைப்பு தந்தை பெரி யாரின் ராமாயண பாத்திரங்கள் ஹிந்தி நூலை பிரச்சாரம் செய்கிறது. புதுடில்லி ஜவகர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் சமீபத்தில் மலர்ந்தது. இந்த வாசகர் வட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாக தந்தை பெரியார் தமிழில் எழுதிய ராமாயணபாத்திரங்கள் என்ற நூல் இந்தியில் சச்சி ராமாயணா என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது இந்த நூலை மக்களிடையே கொண்டு செல்லும் பரப்புரையை மேற்கொண்டனர். தங்களது வாசகர் வட்ட மையத்தில் இணைந்துள்ள வர்களுக்கு தங்களது நண்பர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் மென்புத்தகம் (PDF) அனுப்பி அனைவரையும் படித்து தெளிவு பெறுமாறு கேட்டுக் கொண்டனர்.
இராமாயணப் பாத்திரங்கள் - வால்மீகி இராமாயணத் தில் உள்ளபடி உண்மை இராமாயணம்? ‘Ramayana - True Reading’ என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நூல். பல்லாயிரக்கணக்கில் பிரதிகள் விற்கப்பட்டன. தமிழில் பல லட்சக்கணக்கான பிரதிகள் மக்களால் வாங்கப் பெற்றது. பவ்லா ரிச்சமென் (Paula Richman) என்ற அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியரான அம்மையார் (இவரை சென்ற ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இதுபற்றி உரையாடி மகிழ்ந்து நன்றி சொன்னார்).
1958இல் தந்தை பெரியார் அவர்களை உத்தர பிரதேசத்தில் ஒடுக்கப்பட்டோர் மாநாட்டினைத் திறந்து வைக்க அழைத்திருந்தபோது அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார், ஆசிரியர் கி. வீரமணி, புலவர் கோ. இமய வரம்பன், ஆனைமலை நரசிம்மன், இராம கிருஷ்ணம்மாள் ஆகியோருடன் கான்பூர், லக்னோ, டில்லி போன்ற ஊர்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தபோது லாலைசிங் யாதவ் (Lalai Singh Yadav) என்ற நண்பர் -ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட தந்தை பெரியாரின் உண்மை இராமா யணம் (True Reading) புத்தகத்தை ஹிந்தியில் மொழிபெயர்த்து வெளியிட அனுமதி கேட்டார்.
தந்தை பெரியார் அவர்கள் மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார்.
அது சச்சி இராமாயணா என்ற பெயரில் ஹிந்தியில் வெளி வந்து பல பதிப்புகள் விற்பனையானது.
இதனை எதிர்த்து உத்தரப்பிரதேச அரசு - பார்ப்பனர் எழுப்பிய எதிர்ப்புக் கூச்சல் கண்டு அந்நூலைத் தடை செய்தது. அதன்மீது உயர்நீதிமன்றத்தில் நூல் வெளியீட் டாளர் லலித்சிங்யாதவ் வழக்கு போட்டு, வென்றார். அதன் மீது உ.பி. அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தடையை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசு வாதாடியது.
நெருக்கடி காலம் அமுலில் இருந்தபோது, 1976 வாக்கில் இந்த மேல் முறையீடு வழக்கு சுப்ரீம்கோர்ட்டில், நீதிபதிகள் ஜஸ்டீஸ் வி.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையில் அமைந்த அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பு எழுதிய வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள்,
ஆயிரம் பூக்கள் மலருவது ஒரு பூந்தோட்டத்திற்கு அழகு; அதுபோல இராமாயணத்தைப் பற்றி பல்வேறு கோணங்களில் கருத்துரைகள், நூல்கள் வெளிவருவது வரவேற்கத்தக்கது.
உத்தரப்பிரதேச அரசு தடை போட்டது செல்லாது என்று திட்டவட்டமாக கூறியது. அதுவும் நெருக்கடி காலம் அமுலில் இருந்தபோது வந்த வரலாற்று முக்கியத்தீர்ப்பு இது!
1976 முதல் இன்று வரை 39 ஆண்டுகளாக இந்நூல் வடநாட்டில் அமோக விற்பனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதன்
மனிதன் என்பதற்கே பொருள், விசயங்களை ஆராய்ந்து பார்த்து, நன்மை - தீமை என்பதை உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதேயாகும்.
(விடுதலை, 26.3.1951)
எதுவும் அளவுக்கு மிஞ்சிட வேண்டாம்!
veramani
வாழ்க்கையில் நம்மில் பலருக்குத் துன்பம் ஏற்படுவதற்கு நாம் கையாளும் நடைமுறை பழக்க வழக்கங்கள் பெரிதும் காரணமாகும்.
எளிய பழமொழிகள் பல அனுபவத் தின் அடிப்படையிலேயே முகிழ்த் தவை. அவற்றிற்கு நாம் அதிக முக்கி யத்துவம் தராமல் அலட்சியப்படுத் துவதே துன்ப, துயரங்களுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற மூதுரையின் முக்கியத் துவத்தை அலட்சியப்படுத்தியோ, வாழ்வில் கடைப்பிடித்தொழுகு வதையோ நாம் செய்வதில்லை. (அமிழ்து என்பது இனிய சுவை தரும் பண்டம்)
எதையும் அளவுவோடு விரும்புதல் ஆசை என்பதாகும்.
அளவின்றி மோக முள் அதன்மீது குத்திக் குத்தி, இரத்தம் சிந்தினாலும் கூட அந்த ஆசைக்கு எல்லைக்கோடு - வரையறை செய்யாது, அலையோ அலை என்று அலைந்து பணம், சொத்து, புகழ் சேர்க்க வேண்டும் என்று நடப்பது பேராசை என்பதாகும்.
மீதூண் விரும்பேல் என்பது எவ்வளவு பெரிய அறிவுரை!
நன்கு சுவைத்து உண்ணும் அளவுக்கு உணவு வகைகள் மிகுந்த சுவைமிக்க தாயினும், அளவு - வரம்பு கடந்தால் செரிமானக் கோளாறுதானே!
பிறகு அதற்குரிய மருத்துவம், மருந்து, அவதி - இவையெல்லாம் தவிர்க்க இய லாத அவசியமற்ற விளைவுகள் தானே!
நம்மில் எத்தனை பேர் இதனைக் கடைப்பிடித்து ஒழுகுபவர்களாக உள் ளோம்?
வயிற்றில் ஒரு பகுதி எப்போதும் காலியாக வைத்துக் கொண்டே (முக்கால் + கால்) எந்த விருந்தாயினும் உடனே எழுந்து கை கழுவி விட்டீர்களானால், அது கையை மட்டும் கழுவியதாகாது, அஜீரணக் கோளாறு என்ற நோயை யும்கூட கை கழுவியதாகவே ஆகும்!
வயிறுமுட்டச் சாப்பிடுவது என்பதும் அதனைக் குறைத்துச் சாப்பிடுவது என்பதும் எல்லாம் நம் கையில் - நம் முடிவில் தான்! இருக்கிறது!
உண்ணும்போது சபல அலைகள் நம்மை, தம்பக்கம் சாய்த்து விடாமல் காக்க வேண்டிய பொறுப்பு பிறருக்கா? நமக்கா? உபசரிக்கிறவர்கள் விளைவை அனுப விப்பவர்கள் அல்லவே?
அப்படி மறுக்கும்போது கனிவுடன் அதனை மறுப்பதே நல்லது. விருந்தளிப் போரைச் சங்கடப்படுத்தி எரிச்சல் ஊட்டி ஏண்டா இந்த மனுஷனை வீட்டிற்கு அழைத்து விருந்து போட்டோம்! என்று தன்னைத்தானே நொந்து கொள்ளும் நிலையை ஏற்படுத்தலாமா?
அதில் சற்று நயத்தக்க நாகரிகம் ததும்ப வேண்டாமா?
உணவு - பரிமாறல் - விருந்து பற்றி பரவலான ஒரு உண்மை, பலராலும் சொல்லப்படும் கருத்து, சாப்பாடு ஒன்று தான் போதும் என்று சொல்லும் அளவுக்கு நிறுத்தச் சொல்வது; மற்றவை களுக்கு இது மாதிரி உச்சவரம்பு கட்டுவதே இல்லையே!
அண்மைக்கால அன்றாடச் செய்திகள் பணத்தாசை, திடீர் பணக்காரராக பிறரை வஞ்சித்து, களவாடி, பறித்து, கொள்ளை யடித்து, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து - அதன் விளைவாக தீராத சங்கடங்களையும், ஆறாத அவலத்தை யும் அனுபவித்தாலும், போதையை விரும்பி மது குடிப்பவன் - வேட்டி அவிழ்ந்து வீதியில் கிடந்து அவதியுற் றாலும் மறுநாளும் நேற்று குடித்த அளவுக்குமேல் குடித்துக் கும்மாளம் போட்டு, அதே இடத்தில் மீண்டும் முழு நிர்வாண கோலத்தில் மூச்சுப் பேச்சின்றி விழுந்து கிடப்பதில் ஒரு சுயஇன்பம் காணுவது போன்ற பரிதாபம் அல்லவா?
பணம் - காசு - செல்வம் தேவை மூச்சு விடுதலுக்குத் தேவையான பிராண வாயு போல - மறுக்கவில்லை நாம்!
அதையே மூச்சு முட்டித் திணறும் அளவுக்கு ஒரு வழிப்பாதையாக்கி, மறுவழி செலவோ, நன்கொடையோ, பொதுத் தொண்டோ, செய்யாமல் பாடுபட்டுப் பணத்தைச் சேர்த்து அனுபவிக்கக்கூட முடியாதபடி ஊர் சிரிக்க, உலகம் கெக்கெலி கொட்ட, சட்டம் தண்டிக்க, உச்சியிலிருந்து அதல பாதாள பள்ளத்தில் வீழ்ந்து எழ முடியாமல் நாதியற்று பிறர் நெருங்க அஞ்சிடும் நிலைக்குத் தள்ளப்பட்ட வர்களாவது எதனால்?
அளவுக்கு மிஞ்சி பொருள் சேர்த்த குற்றம் புரிந்ததினால்தானே!
புகழேகூட போதையில் பெரும் போதையாகும். அதையேகூட ஒரு கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் அது நம் உயிர்க்கு இறுதியாகி விடும்.
புகழுக்காக வேட்டையாடுதல், செலவழித்தல் அறவிலை வணிகர் ஆவது விரும்பத்தக்கதா? ஆராய்ந்து பார்க்க!
(எஞ்சியது நாளை)
விடுதலையின் பணி
விடுதலை 15.6.2015 நாளிதழில் மயிலாடன் அவர்களின் ஒற்றைப் பத்தியில் குரங்குக்கு நோட்டீஸ் என்ற செய்தி கட்டுரையில் மிகவும் நகைச்சுவையாகவும், இந்து மத கேலிக்கூத்துகளும் எப்படி இருக்கின்றன என்பதை மயிலாடன் அவர்கள் அருமையாக எழுதியுள்ளார். முழுவதுமாக படித்துப்பார்த்தால் இந்துமதக் கோயில்களில் எவ்வளவு கேலிக்கூத்துகளும், மூடத்தனத்தின் உச்சாணி நிகழ்வும் எப்படி நிகழ்கின்றன என்பதை ஆதார பூர்வமாக அருமையாக விளக்கியுள்ளார். மயிலாடன் அவர்களின் ஒற்றைப்பத்தி புதிய புதிய செய்திகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும் தினந்தோறும் அருவியாக தந்து கொண்டிருக்கிறது.
அந்த நாள் விடுதலையில் மஞ்சை வசந்தன் அவர்களின் இருட்டுக் கால திருட்டு செய்ய எத்தனிக்கும் எத்தர்கள் என்று கட்டுரை பிஜேபி, இந்துத்துவா கூட்டாளிகள் முகத்திரையை கிழிப்பதாக இருந்தது.
ஆட்சிக்கு வந்து ஓராண்டு கடந்து விட்டநிலையில் வளர்ச்சியெங்கே என்றால் வாய்ச்சவடால் அடிக்கிறார். மோடி என்ன மோடி மஸ்தானா? வளர்ச்சி மந்திரம் மூலம் வருமா என்ன? மோடி வந்தால் ஆறுமாதத்தில் வளர்ச்சிவரும் என்றனர். இன்றைக்கு மோடி என்ன மந்திரமாக வைத்திருக்கிறார் என்று அயோக்கியத்தனமாக மாற்றிப் பேசு கிறார்கள். ஆக இந்த மதவாதக் கும்பல் ஒரு மோசடிக் கும்பல், அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பே இருக்காது. இவ் வாறு கட்டுரை முழுவதும் எரியீட்டியாக எழுச்சி நடையில் வீசுகிறார் மஞ்சை வசந்தன்.
அதே நாள் விடுதலையில் தஞ்சைத் தீர்மானம் என்ற தலையங்கத்தில் அண்ணா பெயரில் கட்சி வைத்து அண்ணாவின் கொள்கைக்கு புறம்பாக நடைபோடும் கட்சிக்கு சரியான சவுக்கடி, எச்சரிக்கை மணி.
பால்காவடி எடுப்பதுதான் பகுத் தறிவா? தேர் இழுப்பதுபற்றி எல்லாம் அண்ணா எழுதவில்லையா? பேச வில்லையா?
அண்ணா நாமம் வாழ்க என்று சொல்லிக்கொண்டே அண்ணாமலையார் கோவிலில் விழுந்து புரளுவதுதான் அண்ணா திமுகவா? அண்ணா ஆட்சியா?
இவ்வளவு ஆணித்தரமாக கொள்கை ரீதியாக நமது இயக்கத்தைவிட வேறு யார் சொல்லிட இயலும், சொல்லிட தைரியம் வரும், விடுதலையைத் தவிர வேறு யாருக்கு இந்த வீரம் வரும், வாழ்க பெரியார்!
- தி.க.பாலு
(மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல் - 3.)
Post a Comment