Search This Blog

4.7.14

சிதம்பரம் தீட்சதர்களின் அடுத்த சுரண்டல்!
சிதம்பரம் நடராஜன் கோவில், தீட்சதர்கள் கையில் சிக்கியவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தாவியுள்ளனர்.

அக்கோயிலில் நாட்டியாஞ்சலி என்பது முக்கியமான ஒன்றாகும். கடந்த 1981ஆம் ஆண்டு முதல் 33 ஆண்டுகளாக இந்த நாட்டியாஞ்சலி நடந்து வருகிறது; வெளிநாடுகளில் இருந்தெல்லாம்கூட கலைஞர்கள் அழைக்கப்படுவதுண்டு.

இந்த நாட்டியாஞ்சலியை நடத்திட குழு ஒன்று உள்ளது. குழுவின் தலைவர் வழக்குரைஞர் நடராசன், செயலாளர் வழக்குரைஞர் சம்பந்தம் ஆகியோர் முயற்சியால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதத்தில் சிவராத்திரி என்று சொல்லப்படும் நாளில் தொடங்கி அய்ந்து நாட்கள் இந்தக் கலை நிகழ்ச்சி நடைபெறும்.

இப்பொழுது அந்த நாட்டியாஞ்சலியை, விழாக் குழுவினருக்குப் பதிலாக 2015ஆம் ஆண்டு முதல் தாங்களே அந்த நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக தீட்சதர்கள் முடிவு எடுத்து விட்டனர். முடிவு எடுத்ததோடு மட்டுமல்லாமல் கலைஞர்களுக்கு அவர்களே கடிதமும் எழுதியிருக்கிறார்கள்.

இந்தப் புதிய டிரஸ்டின் தவைராக நவமணி தீட்சதரும், செயலாளராக அய்யப்பத் தீட்சதரும் இருப்பார்களாம்.

இப்பொழுது பிரச்சினை வெடித்து விட்டது. நாட்டியாஞ்சலியை நடத்தப் போவது வழக்குரைஞர் நடராசன் தலைமையில் உள்ள குழுவா, தீட்சதர்கள் தலைமையிலான குழுவா என்ற போர் மூண்டு விட்டது.

எங்களுக்குத் தீட்சதர்களிடமிருந்து எந்தவிதத் தகவலும் வரவில்லை என்று ஏற்கெனவே இருந்து வந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் கோயில் தங்கள் ஆதிக்கத்துக்கு வந்து விட்டது என்கிற ஆணவத்தில் தீட்சதர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது பொது மக்களிடையே பரவலான பேச்சு!

இப்பொழுது என்ன சொல்ல ஆரம்பித்துள்ளார்கள் தெரியுமா?

இதுவரை நடத்தி வந்த குழுவுக்கும், கோவிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரவு பத்து மணிக்கு அர்த்த ஜாம பூஜை முடிந்து விடுகிறது. அதன் பிறகு இரண்டு மணி வரை நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்துவதால் இந்தக் கோயிலுக்குப் பாதுகாப்பு இல்லை. அது மட்டுமல்ல, கோயிலுக்கு என்று லட்சக்கணக்கில் ஆண்டுதோறும் செலவு செய்யும் கட்டளைக்காரர் களின் குடும்பத்தினருக்கு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புக்கேட்டால் மறுக்கப்படுகிறது.

அவர்கள் எங்களை விரோதிகளாகவும், எதிரியாக வும் பார்க்கிறார்கள். காது குத்துதல் முதல் கருமாதி வரை நடராஜனின் அருளைப் பெறும் அவர்களுக்கு எங்களால் எந்தப் பதிலும் சொல்ல முடிவதில்லை. ஒரு திருமண மண்டபத்தைத் தொடர்ந்து வாடகைக்கு எடுப்பதாலேயே அதனை அவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது. அது போலத்தான் இதுவரை நாட்டியாஞ்சலி நடத்தியவர்கள் அதற்கு உரிமை கோர இயலாது. எனவே இனி நாங்களே நாட்டியாஞ்சலி விழாவை நடத்துவதாக அறிவித்திருக்கிறோம். அதனைச் செயல்படுத்தியும் காட்டுவோம். அதற்கு  நடராஜனின் பரிபூரண ஆசியும் இருக்கும் என்று திமிராகவும் பதில் சொல்லியுள்ளனர்.

கோயிலில் கொள்ளையடித்தது போதாது என்று நாட்டியாஞ்சலி என்ற பெயரில் பெரிய வசூல் கொள்ளை நடக்கப் போகிறது என்பதுதான் இதன் உட்பொருள்.

2008ஆம் ஆண்டு வரை சிதம்பரம் கோவிலில் உண்டியல் என்பதே கிடையாது. அதுவரை ஆண்டு ஒன்றுக்கு வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டும்தான். வருமானம் என்று காட்டி வந்தனர். ஆனால் இந்து அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் அக்கோயில் வந்தவுடன் மூன்று ஆண்டுகளில் மட்டும் ஒன்றரைக் கோடி ரூபாய் உண்டியலில் சேர்ந்ததே. சுமார் 100 கிராம் தங்க நகைகளும் உண்டியலில் விழுந்ததுண்டே!

தீட்சதர்கள் எங்களுக்கே சிதம்பரம் கோயில் சொந்தம் என்று கூறும் இரகசியத்தின் பின்னணி இந்தப் பகற்கொள்ளை தான்.

சிதம்பரம் கோயிலுக்குப் பக்தர் ஒருவர் அளித்த மூன்றரைக் கோடி மதிப்புள்ள பவள மாலை கணக்கில் வராததால், இந்து அறநிலையத்துறை கோயில் தீட்சதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2006ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சிதம்பரம் நடராஜர் கோயிலைச் சேர்ந்த தீட்சதர் நகரில் தொடர்ந்து சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நிலையில் ஒருமுறை கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார்.

பெங்களூருவில் வெளியாகும் பாரதீயரு என்ற வார இதழின் ஆசிரியர் லட்சபதி என்பவர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்தபோது, அவரது துப்பாக் கியைக் களவு செய்தவரும் கோயில் தீட்சதரே!

சிதம்பரம் கோயில் தீட்சதர்களின் யோக்கியதை எந்தத் தரத்தில் உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதெல்லாம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கண் களுக்கும், கருத்துக்கும் புலப்படவே புலப்படாது. நீரைவிட வலிமை உடையதாயிற்றே - அந்தப் பாசம்!
எவ்வளவு காலத்திற்கு அவாளின் கொட்டம் கூத்தாடும் என்பதைப் பார்க்கத்தானே போகிறோம்.

                 --------------------------”விடுதலை” தலையங்கம்  3-7-2014

36 comments:

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


கண்ணன்

சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடினான், வாலிப வயதில் பெண்ணைத் திருடினான் கண்ணன் என்பது பின்பற்றத் தகுந்ததுதானா? இத்தகையவன் வழிபடத்தக்கவன் தானா?

Read more: http://www.viduthalai.in/e-paper/83332.html#ixzz36STaiip3

தமிழ் ஓவியா said...


குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சி பட்டறை கொள்கைப் பயிர்களை உருவாக்கிய விதைப் பண்ணை


குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சி பட்டறை

கொள்கைப் பயிர்களை உருவாக்கிய விதைப் பண்ணை

தமிழர் தலைவர் சூட்டும் புகழாரம்


தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க உரிமை இல்லையாம்!

கடந்த மாதம் ஜூன் 26 முதல் 29 முடிய குற்றாலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப் பெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் சிறப்பு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கடந்த ஜூன் 26,27,28,29 ஆகிய நான்கு நாள்களிலும் குற்றாலத்தில் வீசிய கொள்கைச் சாரலும், அருவி போல் கொட்டிய தந்தை பெரியார் தம் தத்துவக் கோட்பாடுகள் பற்றிய விளக்கங்களும் மிகச் சிறப்பானதாகவும், இதமானதாகவும். இணையற்ற முறையிலும் அமைந்திருந்தது.

கொள்கைப் பயிரை உருவாக்கும் விதைப் பண்ணை

38ஆம் ஆண்டு தொடர்ந்து (ஆண்டு தோறும் பெரியாரியல் பயிற்சி முகாம்) நடைபெறும் இக்கொள்கைப் பயிற்சிப் பட்டறை இளைய தலைமுறையிடம் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியதாகும். பலரும் தேர்ந்த பேச்சாளர்களாகவும், கருத்தாளர்களாகவும் ஆகி, புகழ் மலர்களைப் பெற்று மகிழ்கின்றனர்.

தமிழ் ஓவியா said...

நல்லொழுக்கம் - கட்டுப்பாடு - பகுத்தறிவுச் சிந்தனை என்ற பயனுறு வாழ்வியல் கூறுகளை அங்கே கூடும் இளைஞர்கள் குறுகிய காலத்தில் கற்றுத் துறைபோக ஆயத்தமாகி விடுகின்றனர்!

கொள்கைப் பயிர்களை உருவாக்கும் விதைப் பண்ணையாகவும், நாற்றங்கால் ஆகவும் இப்பயிற்சிப் பட்டறை அமைகிறது என்பதைத் தொடர்ந்து கவனித்து வருபவர் களுக்குப் புரியும்.

அடுத்த பட்டறை புதுச்சேரியில்..

தமிழ்நாட்டில் மட்டுமல்ல; புதுச்சேரி மாநிலத் திலும்கூட இத்தகைய பயிற்சிப் பட்டறைகள் மூலம் பெரியார் இயல் பிரச்சாரத்தினை நடத்திட புதுவை மாநிலத் தோழர்களும் தலைமைக் கழகத்தினைத் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்!

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வள்ளல் வீகேயென் கண்ணப்பன்

முன்பெல்லாம் இடந்தேடி அலையும் நிலையும், அலைக்கழிக்கப்படும் அவலமும் இருந்தது. ஆனால், ஒப்பாரும் மிக்காருமில்லாத நம் உறவான வள்ளல் வீகேயென் கண்ணப் பனார் அவர்கள்; ஒரு பெரும் மாளிகையை அமைத்து, ஆண்டுதோறும் அவர்களே விருந்தோம்பல் நடத்துவதில் - நாம் எவ்வளவு அவர்களுக்குத் தொல்லை - செலவு இருக்கக் கூடாது என்பதற்காக குறைந்தபட்சம் சமையலை யாவது நாங்களே செய்து கொள்கிறோம் என்று மன்றாடியும்கூட, அவர்கள் பிடிவாதமாக, இல்லை நான்தான் உபசரிப்பாளராக இருப்பேன்; அதில் யாம் பெறும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையேது என்று உறுதிபட மறுத்துவிட்டார்.

அவரின் வற்றாத பெரு உள்ள அன்பின் ஊற்றுதான் என்னே!

பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களோ - எவ்வாண்டும் இல்லாத அளவு 51 பட்டதாரிகள் - மொத்தம் புடைத்து சலித்து எடுத்து அனுமதிக்கப்பட்டவர்கள், எண்பது இருபால் இளைஞர்கள்.

பொறியாளர்கள், மேற்பட்டப் படிப்பாளிகள், பட்டதாரிகள் முதல் பலரும் உண்டு. ஈர்ப்புடனே பெரியார் இயலைச் சுவாசித்தினர்.

அவர்களுக்கு 4 நாள்களும் தங்கி வகுப் பெடுத்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, தலைமைக் கழக பொதுச் செயலாளர் வீ. அன்பு ராஜ், பிரச்சாரப் பொறுப்புப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன், டாக்டர் கவுத மன், பேராசிரியர் காளிமுத்து, கோ. கருணாநிதி, டாக்டர் அன்பழகன் ஆகியோர் பாராட்டுக் குரியோர் ஆவர். நாள்தோறும் காலையில் யோகா பயிற்சி தஞ்சை யோகராசா என்னும் இராசமாணிக்கம் அவர்களால் அளிக்கப்பட்டது.

இளைஞரணி பொறுப்பாளர் பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், இளைஞரணி மாநிலச் செயலாளர் இராசபாளையம் திருப்பதி ஆகியோர் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக மேற்பார்வையிட்டு நடத்திய தென் மாவட்ட அமைப்புச் செயலாளர் மதுரை வே. செல்வம், நெல்லை மண்டலச் செயலாளர் பால். இராசேந்திரம், நெல்லை மண்டலத் தலைவர் பொறியாளர் மனோகரன், மாவட்டத் தலைவர் டேவிட் செல்லதுரை அனைவரது ஒத்துழைப்பும், வீகேயென் ஊழியத் தோழர்கள் திரு. பாண்டியன் தலைமையில் பம்பரமாய் சுழன்ற பாங்கு மறக்கற்பாலதோ!

நான்கு நாட்களும் பார்வையாளராக இருந்து பயிற்சி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகை யில் ரூ.5000 மதிப்புள்ள இயக்க நூல்களைப் பரிசாக அளித்த ஈரோடு தோழர் சம்பத்குமார் அவர்களின் செயல் ஓர் எடுத்துக்காட்டானது.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
3.7.2014

Read more: http://www.viduthalai.in/e-paper/83330.html#ixzz36SU5WJYd

தமிழ் ஓவியா said...


கச்சத்தீவு: இந்தியா- இலங்கை இடையே ஒப்பந்தமே இல்லையாம்!


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய வெளியுறவு அமைச்சகம் பதில்

கோவை, ஜூலை 3_ கச்சத்தீவில் மீன் பிடிப்பது தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கை இடை யே எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை மய்யப் படுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்த மீனவ நல அமைப்புகள் முடிவெடுத் துள்ளன.

கச்சத்தீவை மீட்டு, அங்கு தமிழக மீனவர் களுக்கு மீன் பிடி உரிமை கள் வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரப்பட்டு வருகிறது. தமிழக அரசியல் கட்சி களும் தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக பீட்டர் ராயன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் இந்தியா_இலங்கை இடையிலான 1974ஆ-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கோவை யைச் சேர்ந்த சமூக சேவகர் எம்.சஞ்சய் காந்தி, மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒரு பதிலைப் பெற்றுள் ளார். இலங்கைக்கான இந்திய வெளியுறவு அமைச் சக துணைச் செயலாளர் மாயங்க் ஜோஷி கையெழுத் திட்டு அளித்துள்ள அந்த பதிலில், தற்போதைய அரசு ஆவணங்களின்படி, இந்தியா_இலங்கை இடையில் கச்சத்தீவு தொடர்பாக எந்த ஒப்பந்த மும் இல்லை. அதேநேரம் இரு நாடு களுக்கு இடை யிலான கடல் நீர் எல்லை தொடர்பாக மட்டும் ஒப் பந்தம் உள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோ பரில் இந்த பதில் வெளி யுறவுத் துறை மூலம் அளிக் கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் மீனவர் கள் மற்றும் கச்சத்தீவு மீட்பு இயக்கத்தினருக்கு அதிர்ச்சி தருவதாக உள்ளது. இதுகுறித்து சமூக சேவகர் சஞ்சய் காந்தி கூறும்போது, கச்சத்தீவு ஒப்பந்தத்தின் நகல் வேண்டும் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் மத்திய வெளி யுறவுத் துறையிடம் கேட் டேன். அவர்கள் அப்படி ஒரு விண்ணப்பமே இல்லை என்று பதில் அளித்துள்ள னர். எனவே, இல்லாத ஒப்பந்தத்தை இருப்பதாகக் கூறி தமிழக மக்களை ஏமாற்றும் வேலை நடக் கிறது. கடல் நீர் எல்லை தொடர்பான வரையறை யிலும், இரு நாடுகளிடை யே எந்தவிதமான அரசு முத்திரையோ, நாடாளு மன்ற அனுமதியோ, அரசு அதிகாரிகளின் கையெழுத் தோ இல்லை. எனவே, வெறும் வெற்றுத் தாளை ஒப்பந்தம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளக் கூடிய தாக இல்லை என்றார்.

சமூக நல அமைப்பு...

கச்சத்தீவு மீட்பு போராட்டங்களை நடத்தி வரும் தூத்துக்குடி வீராங் கனை சமூக நல அமைப் பின் தலைவர் பாத்திமா பாபு, கூறும்போது, மத்திய வெளியுறவுத் துறையின் இந்தத் தகவல் அதிர்ச் சியளிப்பதாக உள்ளது. வெற்றுத்தாளை எப்படி ஒப்பந்தமாக ஏற்க முடி யும். அதுவும் மீன் பிடிப்பது தொடர்பாகவே, தீவு யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாகவோ எந்தவித மான திட்டவட்ட வரைய றையும் இதுவரை இல்லை என்பதே எங்களுக்கு பெரிய ஆவணமாக உள்ளது. எனவே, மத்திய வெளி யுறவுத் துறையின் தகவலை மய்யமாக வைத்து, சட்ட ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் அனைத்து அமைப்புகளுடன் சேர்ந்து போராட முடிவு செய்துள் ளோம் என்றார்.

மத்திய அரசு வெளி யிட்டுள்ள ஆவணத்தில், 1974-ஆம் ஆண்டு ஜூன் 26 மற்றும் 28ஆ-ம் தேதியில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ள வரையறை பிரிவு அய்ந்தில், கச்சத் தீவுக்கு தமிழக மீனவர்கள் மற்றும் பக்தர் கள் சென்று வரலாம். இதற்கு இலங்கை அரசிடம் விசா போன்ற போக்குவரத்து ஆவணங் கள் எதுவும் பெறத் தேவை யில்லை. ஒவ்வொருவரின் கடல் பகுதியிலும், இரு நாட்டு பாரம்பரிய நீர் வழி கலங்கள் இயங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கச்சத்தீவு மீட்புக்குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீதை யின் மைந்தன் கூறியதாவது:

இரு நாடுகளுக்கிடையே பாரம்பரிய நீர் வழிப் பகுதிகள் குறித்து எல்லை வரையறுத்ததில், நியாய மான முறை பின்பற்றப்பட வில்லை. இந்தியாவுக்கு 18 கி.மீ, வரை நீர் எல்லை வகுத்துவிட்டு, இலங்கைக்கு 22 கி.மீ. வரை வகுத்துள் ளனர். சர்வதேச நீர் எல்லை விதிகளின்படி, இந்தியாவுக்கு 20 கி.மீ. என்று குறிப்பிட்டிருந்தால், கச்சத்தீவு சொந்தமா, இல்லையா என்ற கேள்வி யே எழுந்திருக்காது.

மேலும் பாரம்பரிய நீர் எல்லை வரையறை ஒப்பந் தத்திலும், இரு நாட்டு நீர் வழிக் கலன்கள் (ஊர்திகள்) இயங்கலாம்; நீர் வழி உரிமைகளும் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒப்பந்தப் படியே மீன் பிடிக்கும் உரிமை, வலை காயவைக்கும் உரிமை அனைத்தும் இந்தியாவுக்கு உள்ளது என்றார்.

Read more: http://www.viduthalai.in/page-3/83364.html#ixzz36SUn4J7Y

தமிழ் ஓவியா said...


குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாம் சிந்தனை


- முனைவர் துரை.சந்திரசேகரன்

குற்றாலம் - தென்பொதிகை மலையின் புகழ்மிக்க ஊர். நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ச்சி பெறுவோர்க்கு தீராத இன்பத்தை அளித்திடும் இடம். குற்றால அருவியிலே குளித்தது போல், இருக்குதாம் என்கிறது திரைப்பாடல். குற்றாலத்தை _ குற்றால அருவியை மனதுக்கு மகிழ்வளிக்கும் இடமாக மட்டுமே பார்த்திடும் பழக்கம் மக்களுக்கு. ஆனால், பகுத்தறிவாளர்களுக்கோ, தீந்தமிழ் திராவிடர் கழகத்தவர்க்கோ ஆண்டுக்கொரு முறை நடைபெறும் பெரியாரியல் பயிற்சி முகாம் என்பதே நினைவுக்கு வரும். கடந்த 38 ஆண்டுகளில் 37ஆவது முறையாக இந்த பயிற்சி முகாம் ஜூன் 26, 27, 28, 29 ஆகிய நான்கு நாட்களும் வீகேயென் மாளிகையில் நடந்தது. ஆம்! 37ஆவது பெரியாரியல் பயிற்சி பட்டறை இது.

தொழிலதிபர் வீகேயென் மற்றும் வகுப்பெடுத்தவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

பாசறை வீரர்களை தயாரித்தளிக்கும் பட்டறை போன்று பெரியாரியலில் தோய்ந்த கொள்கைப் பேராசி ரியர்களால் பயிற்றுவித்து, கொள்கை மாவீரர்களை, மானவீரர்களை உருவாக்கிடும் வகையில் இம்முகாம் அமைவது வழமை. இம்முறை 63 இளைஞர்களும், 17 பெண்களுமாக 80 பேர் முகாமில் பங்கேற்றனர். 51 பேர் பட்டதாரிகள். பெரும்பாலானவர்கள் பொறியியல் பட்டதாரிகள். 25 பார்வையாளர்கள். இவர்கள் தவிர்த்து தென் மாவட்ட கழக நிருவாகிகள், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி கழகத்தவர் என 150 பேர்களுக்கு மேல்.

தமிழர் தலைவர் 3 நாட்கள் தங்கி இருந்து மாணவச் செல்வங்களுக்கு வகுப்பு எடுத்திட வாய்ப்பு. ஒவ்வொரு நாளும் தஞ்சை யோகிராசா ராசரத்தினம் அளித்திட்ட யோகா பயிற்சி உடலுக்கும், உள்ளத்துக்கும் வலிமையை ஏற்படுத்திட்ட நல்வாய்ப்பு. கணினிப் பயிற்சியை, அதன் மீதான ஆர்வத்தை தூண்டிட பெரியார் கணினிப் பயிற்சி மய்யம் வழங்கிய வாய்ப்பு, நூல் வாசிப்பை ஏற் படுத்திட, ஊக்கமளித்திட பெரியார் நூல்கள் 50 விழுக் காடு கழிவில் மாணவர்களுக்கு என அருமையான தமிழர் தலைவரின் ஆணையால் ஏராளமான பெரியார் நூல் களை மாணவர்கள் வாங்கிய சூழல், புதிய வரவுகளுக்கு பெரியார் ஒளி எனும் புத்தறிவை போதித்திட, கற்பித்திட பெரியாரியல் பயிற்சி முகாம் இந்த முறை சீரும் சிறப்புமாக அமைந்தது. குற்றாலச் சாரலில் நனைய வாய்ப்பில்லாமல் போகலாம். பெரியார் கொள்கைச் சாரலுக்கு பஞ்சமில்லை, பெரியார் எனும் பகுத்தறிவுச் சாரலில் நனைந்து சமுதாயத்துக்கு பயன்தரும் மனிதர்களாய் உருப்பெற இந்த பயிற்சி முகாம் அமைந்தது என்பதே உண்மை.

கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பெரியாரை புதிய வரவுகளுக்கு அழகோவியமாக படம் பிடித்துக்காட்டும் வண்ணம் பெரியாரில் பெரியார் எனும் தலைப்பில் முதல் வகுப்பினை நடத்தினார். எடுத்த எடுப்பிலேயே 65 பேர்களையும் தாண்டி மாணவர்களின் வருகை இருந்தது. பார்வையாளர்களாக 15 பேர்கள் அப்போது இருந்தனர். தொடர்ந்து இரண் டாவது வகுப்பினை கழக செயலவைத் தலைவர் சு.அறி வுக்கரசு சுயமரியாதை இயக்கம் _ நீதிக்கட்சி வரலாறு பற்றிய பொருளில் எடுத்தார். அடுத்து கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இயக்க நிறுவனங்களின் அரும்பணிகள் எனும் தலைப்பில் பவர்பாயின்ட் முறையில் மூன்றாவது வகுப்பினை போதித்தார். முதல் முறையாக தோழர் வீ.அன்புராஜ் வகுப்பு நடத்திய பாங்கு எங்களை வியக்கவைத்தது. மாணவர் களுடன் ஒன்றி பெரியார் கல்வி நிறுவனங்களின் மக்கள் தொண்டினை அவர் பட்டியலிட்டபோது நேர்த்தியான வகுப்பாக பளிச்சிட்டது.

மதிய உணவுக்குப்பின் பிற்பகல் முதல் வகுப்பாக திராவிடர் கழக வரலாறு 1973 வரை பட்டியலிட்டார் மானமிகு சு.அறிவுக்கரசு. ஏராளமான செய்திகள், குறிப்புகள் வந்து விழுந்து கொண்டே இருக்கும் அவர் வகுப்பில். மீண்டும் வீ.அன்புராஜ் நமது அணுகுமுறை எனும் தலைப்பில் பாடம் எடுத்தார். பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் எனும் தலைப்பில் கலி.பூங்குன்றன் அன்னை மணியம்மையார், ஆசிரியர் காலங்களில் கழகத்தின் வளர்ச்சிப் போக்கு பற்றியும், வரலாறு குறித்தும் இறுதி வகுப்பினை அன்று நடத்தினார். இரவு 9 மணி முதல் பெரியார் திரைப்படம் பெரியார் வலைக்காட்சி குழுவினரால் திரையிடப் பட்டது. பாடம் நடத்துவதுடன் செயல்முறை பயிற்சியும் தேவை என்பதற்காகத்தான் பெரியார் படம்.


தமிழ் ஓவியா said...

இரண்டாம் நாள்...

27.6.2014 அன்று காலை 9 மணிக்கு வகுப்பு தொடங்கியது. அறிவியலும் மூடநம்பிக்கையும் எனும் பொருளில் அறிவியல் ஆசிரியரைப் போல அழகாக வகுப்பெடுத்தார் சு.அறிவுக்கரசு. பார்ப்பனர் பண்பாட்டு படையெடுப்பு எனும் தலைப்பில் கலி.பூங்குன்றன் மாண வர்களின் பெயர்களை சொல்லச் சொல்லி பலருக்கு சமஸ்கிருதம் கலந்த பெயர்களாக இருப்பதை நினை வூட்டி எப்படி பார்ப்பனர்களின் கலாச்சார சீரழிவு நம்மை சாய்த்தது என்பதை வகுப்பாக்கி தந்தார்.
கடவுள் மறுப்பு எனும் தலைப்பில் எளிமையாக, இயல்பாக, இளைய தலைமுறையினரை ஈர்த்திடும் வண்ணம் வகுப்பெடுத்தார் தமிழர் தலைவர். அடிப் படை கருத்தை அருமையாக மாணவர்களின் உள்ளத் தில் பதிய வைத்தார் என்றே சொல்லலாம். பேராசிரியர் ப.காளிமுத்து திராவிடரா? தமிழரா? எனும் தலைப்பில் தமிழ் தேசியம் என வாதிட்டு பெரியாரை, திராவிடர் என்பதைக் கொச்சைப் படுத்தும் குழப்பவாதிகளுக்கு விளக்கமளிப்பதை போன்று மாணவர்களிடம் வகுப்பெடுத்தார்.

பிற்பகல் வகுப்பின் தொடக்கத்தில் புராணங்களும், இதிகாச வேதப் புரட்டு களும் எனும் தலைப்பில் நகைச் சுவையோடு அவரே வகுப்பினை தொடர்ந்தார். இயக்கப் போராட்டங்கள் என்பது பற்றிய வகுப்பு பொதுச் செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகரன் 1938இல் கட்டாய இந்தியை எதிர்த்து இயக்கம் நடத்திய போராட்டம் தொடங்கி 2014 வரை போராட்டங் களின் பட்டியலை வகுப் பாக்கி தந்தார். தமிழர் தலைவரின் வாழ்வும் பணியும் எனும் பொருளில் முனைவர் நம்.சீனிவாசன் தமிழர் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து பொறுமையாகவும், அருமையாக வும் வகுப்பு நடத்தினார். இதே தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்திட்ட அவரின் வகுப்பு தகவல் களஞ்சியம் என்றே சொல்லலாம். இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை பேச்சுப் பயிற்சி களப்பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

மூன்றாம் நாள் முகாம்

மூன்றாம் நாள் பயிற்சி பட்டறையின் முதல் வகுப்பு தமிழர் தலைவர் ஆசிரியர் நடத்திய நமது அரசியல் அணுகு முறை எனும் தலைப்பிலானது. ஆளுங் கட்சிகளை மாறி மாறி ஆதரிக்கக் கூடியவர்கள் திராவிடர் கழகத்தின் எனும் அழுக்கு விமர்சனத்தை அம்பலப்படுத்துவதாகவும், தமிழர் நலன் ஒன்றையே நோக்கமாக கொண்டது திராவிடர் கழகத்தின் அரசியல் அணுகுமுறை என்பதை ஆணி அடித்த மாதிரி வரிசைப்படுத்தி விளக்கமளித்தார் ஆசிரியர். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் காலங்களில் நமது அணுகுமுறைக்கு அடிப்படை எது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக்கி வகுப்பெடுத்தார் தலைவர்.

உலகம் படைப்பா? பரிணாமமா? எனும் வகுப்பினை சு.அறிவுக்கரசு அறிவியல் நோக்கில் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை எளிதாக இளம் தோழர்கள் அறிந்து கொள்ளும்படியாக நடத்தினார். மூடநம்பிக்கைகள் மோசடியே! எனும் சிரிக்கவும், சிந்திக்கவுமான பேயாட்டம், சாமியாடுதல், பில்லி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை தோலுரித்து டாக்டர் இரா.கவுதமன் நடத்திய வகுப்பு அனைவரையும் ஆரவாரத்தோடு உசுப்பிவிட்டது என்றே சொல்லலாம். பிற்பகல் வகுப்பின் தொடக்கம் கலி.பூங்குன்றன் மாணவர்களிடம் நடத்திய நேர்முகம். தனித்தனியே மாணவர்களை அழைத்து அவர்களின் இயக்க ஆர்வம், குடும்பச் சூழல் பற்றிய கள ஆய்வு என்று சொல்லும்படி அவ்வகுப்பு அமைந்தது. இடஒதுக்கீடு _- வேலை வாய்ப் புகள் -_ இன்றைய நிலை எனும் தலைப்பில் கோ.கருணா நிதி புள்ளி விவரத்துடன் நடத்திய வகுப்பு தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களுக்கு வழிகாட்டி வகுப்பைப் போல அமைந்தது. தன்னம் பிக்கையூட்டும் வகுப்பு என்றும் சொல்லலாம்.

இந்துத்துவா பற்றிய தமிழர் தலைவரின் வகுப்பு பாசிச சக்திகளை, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கும்பலின் பழமைவாத கோட்பாடுகளை, அதனால் நாடு சந்திக்கும் அச்சுறுத்தலை அலசிடும் விதமாக எச்சரிக்கை உணர்வோடு மனித நேயர்களின் செயல்பாடுகள் இப்பிரச்சினையில் அமைதல் அவசியம் என்பதையும் சுட்டிக் காட்டும் வண்ணம் இந்த வகுப்பு அமைந்தது. முனைவர் அதிரடி அன்பழகன் திராவிடர் இயக்க மாவீரர்கள் சர்பிட்டி தியாகராயர், மாதவனார், நடேசனார் தொடங்கி முன்னோடி தலைவர்களின் வாழ்வியலை பட்டியலிட்டார். அவர் வகுப்பில் ஈகம் நிறைந்த வரலாறு அவரின் வகுப்பில் திராவிடர் இயக்க முன்னோடிகள் வரலாறாக வெளிப்பட்டது.

தமிழ் ஓவியா said...

பரபரப்பான பட்டிமன்றம்

பேச்சுப் பயிற்சியின் ஓர் அம்சமாக பட்டிமன்றம் ஒவ்வொரு முகாமிலும் நடத்தப்படுவது வழமை. அதுபோலவே இந்த முகா மிலும் தந்தை பெரியார் தொண்டில் விஞ்சி நிற்பது பகுத்தறிவா? இனநலமா? எனும் பட்டிமன்றம் நடத் தப்பெற்றது.

நடுவராக தோழர் பால் இராசேந்திரம் பொறுப் பேற்றார். பகுத்தறிவே என்ற அணிக்கு அண்ணா. சரவணனும், இனநலமே என்ற அணிக்கு புலவர் சு.இரா வணனும் அணித் தலைவர்களாக அமர்ந்து வாதிட் டனர். ஒவ்வொரு அணியிலும் அய்ந்து மாணவர்கள் வாதிட்டனர். கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் நெறிப்படுத்தினார். மாணவர்களின் வாதப் பிரதிவாதங்களுக்குப்பின் நடுவர் _ தந்தை பெரியார் தொண்டில் விஞ்சி நிற்பது இனநலமே என்று தீர்ப்புரைத்தார். பட்டிமன்றத்தில் பங்கேற்று பேசிய மாணவர் பயிற்சியாளர்கள் செந்தூர் பாண்டியன், மாணிக்கம், கருப்பசாமி, செல்வம், சிந்துஜா, சி.பிரபாகரன், தமிழ்ச் செல்வம், ஜெ.சி.பிரபாகரன், மணிகண்டன், தேன்மொழி ஆகியோர்.

தமிழ் ஓவியா said...

நான்காம் நாள்

சமூக நீதி எனும் வகுப்பினை கழகத் தலைவர் தமிழர் தலைவர் இடஒதுக்கீட்டின் வரலாறு, வகுப் புரிமையால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பெற்ற பயன், இந்தியாவிலேயே 69 சதவீத இடஒதுக்கீடு உள்ள மாநிலம் தமிழ்நாடு மட்டுமே என்பன போன்ற குறிப்புகளை அடுக்கடுக்காக சொல்லி நடத்தினார். பெரியார் போற்றிய பெண்ணியம் எனும் பொருள் பற்றி கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி தந்தை பெரியாரின் பெண்ணுரிமைப் பணிகளை பட்டியலிட்டு தொகுத்து வழங்கினார். கவிஞர் கலி.பூங்குன்றன் நம்முன் உள்ள சவால்கள் எனும் தலைப்பில் இறுதி வகுப்பினை எடுத்தார். கேள்வியும் கிளத்தலும் மாணவர்கள் எழுப்பிடும் வினாக்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அளித்திடும் பதில்கள் சுவா ரஸ்யமாக இருந்தது. சில கேள்விகளுக்கு சுருக்கமாகவும், சில கேள்விகளுக்கு விளக்கமாகவும், குழப்பமாக எழுப்பட்ட வினாக்களுக்கு கேட்டவரின் குழப்பம் தீரும் வண்ணம் சூடாகவும் தமிழர் தலைவரின் விடைகள் அமைந்தன.

பயிற்சியில் சிறந்த மாணவர்கள்

திராவிடப் பொன்னி, பிரபாகரன், சுகந்த், தேன்மொழி ஆகிய மாணவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்றமையால் தாங்கள் அடைந்த பயனை அற்புதமாக எடுத்துச் சொன்னார்கள். குறிப்புகள் சிறப்பாக எழுதியிருந்த மாணவர்கள் க.தாயன்பன், மு.நன்னன், அன்பரசி ஆகியோருக்கும், பேச்சாளராக தேர்வுபெற்ற ரா.சி.பிரபாகரன், தேன்மொழி, செல்வம் ஆகியோருக்கும் 5000 ரூபாய் மதிப்பிலான நூல்களை ஈரோடு சம்பத்குமார் பரிசுகளாக வழங்கினார். முகாமில் பங்கு பெற்ற மாணவர்கள் அனைவருக்குமே பெரியார் நூல் ஒன்று பரிசாக அவரே வழங்கினார். மதுரை செல்வம், புலவர் ராவணன், கீழகலங்கல் சண்முகவேல், தாமோ தரன், அன்னக்காளை, சவுந்திரபாண்டியன் ஆகியோர் பாடல்கள் பாடி மகிழ்வித்தனர்.

நிறைவு விழா

பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி தமிழர் தலைவர் நிறைவுரையாற்றினார். இளங்குருத்து களான நீங்கள் பெரியாரை, பெரியார் கொள்கையை நெஞ்சிலே தாங்கி, இயக்கத்தை உங்கள் பகுதிகளிலே உருவாக்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுலையை தூக்கிப் பிடித்திட வேண்டும். அனைவர்க்கும் அனைத்தும், எல்லார்க்கும் எல்லாமும் என்பதே நமது இதய நாதம், அதற்காக தொடர்ந்து பாடுபடவேண்டும் என்று மாணவர்களுக்கு ஊக்க உரை தந்தார்.

பெரியாரியல் பயிற்சி முகாம் வெற்றிக்கு வீகேயென்!

வள்ளல் வீகேயென் பெரியாரியல் பயிற்சி முகாமுக்காகவே இந்த கட்டடத்தை உருவாக்கியவர். உணவு, உறையுள் உட்பட ஊக்கப் பரிசும் தந்து இந்த பயிற்சி முகாம் பலரும் பயன்பெறும் வண்ணம் வெற்றிக்குரியதாக ஆக்கிய வள்ளல் அவர். அவரின் கொடை உள்ளத்தை பாராட்டுகிறோம். அவரின் ஊழி யர்கள் ஒவ்வொருவரையும் பாராட்டுகிறோம். தமிழர் தலைவர் 80 மாணவர்கள் பெரியார் கொள்கையில் ஏற்றம் பெற வாய்ப்பாக, உதவியாக இருந்தவர் வீகேயென். விருந்தோம்பலுக்கு இலக்கணமானவர் அவர் என்று தமது உரையில் குறிப்பிட்டார்.
வகுப்பு எடுத்த பேராசிரியர் பெருமக்களுக்கும், கழக நிருவாகிகளுக்கும், பயிற்சி முகாமில் பங்கு பெற்ற மாணவர்களுக்கும் ஹாட்பேக் வழங்கினார் வீகேயென். தமிழர் தலைவருக்கும், தலைமைக் கழக நிர்வாகி களுக்கும் ஆடைபோர்த்தி சிறப்பு செய்தார் வீகேயென். வீகேயென் அவர்களுக்கும், அவரின் இல்லப் பணியாளர்களுக்கும், சமையல் கலைஞர்களுக்கும், நகர திமுக செயலாளர் இராசாராமுக்கும் ஆடைபோர்த்தி கழகத்தின் சார்பில் சிறப்பு செய்தார் தமிழர் தலைவர்.

கழக துணைத் தலைவர் கலி-.பூங்குன்றன் கருத்துரை யாற்றினார். நிகழ்ச்சியை பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் ஒருங்கிணைத்தார். பொதுச் செயலாளர் இரா.செயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் இல.திருப்பதி, மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், துணைச் செயலாளர் இளந் திரையன், மாவட்டத் தலைவர் டேவிட் செல்லதுரை, தென் மாவட்ட பிரச்சார குழுத் தலைவர் எடிசன், மதுரை வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்) மண் டலத் தலைவர் பொறியாளர் மனோகரன், கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, டாக்டர் கவுதமன், பேராசிரியர் காளிமுத்து ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர். முடிவில் பால் இராசேந்திரம் (மண்டலச் செயலாளர்) நன்றி கூறினார். அய்யாவின் லட்சியத்தை ஈடேற்றுவோம் என்ற உறுதிப்பாட்டுடன் மாணவர்கள் குற்றாலத்திலிருந்து புறப்பட்டனர்.

Read more: http://www.viduthalai.in/page-4/83378.html#ixzz36SVf36ng

தமிழ் ஓவியா said...


அடடே, கண்டுபிடித்துவிட்டாரே காரணத்தை! நாயுடு பொறுப்பேற்ற நேரம் சரியில்லையாம்! கூறுகிறார் சாரதா பீடம் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி


அய்தராபாத், ஜூலை 3_ தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின் உள்ள, ஆந்திர மாநில முதல்வர், சந்திரபாபு நாயுடு பதவி யேற்ற நேரம் சரியில்லை என்பதால் தான், அம் மாநிலத்தில் தொடர்ந்து சோக சம்பவங்கள் நடக் கின்றன என, சாரதா பீடத்தின் சுவாமி ஸ்வரூ பானந்த சரஸ்வதி கூறி யுள்ளாராம்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திர பாபு நாயுடு, சீமாந்திரா என அழைக்கப்பட உள்ள, தெலங்கானா மாநிலம் தவிர்த்து பிற பகுதியின் முதல்வராக, கடந்த மாதம் 8 இல், பொறுப்பேற்றார். தேர்தல் முடிவுகள் வெளி யாகி, 20 நாள்களுக்குப் பின், ஜூன் 8, இரவு 7:27 மணிக்கு, குண்டூர் மாவட் டத்தின் மங்களகிரி என்ற இடத்தில் பொறுப்பேற்றார்.

இதுகுறித்து, விசாகப் பட்டினம் அருகே உள்ள பெண்டுருத்தி என்ற இடத்தில் உள்ள, சாரதா பீடத்தின் சுவாமி, ஸ்வரூ பானந்த சரஸ்வதி கூறிய தாவது:

முதல்வர், நாயுடு பொறுப்பேற்ற நேரம் சரியில்லை. மன்னர்கள் முடிசூடும் நாள், மங்கள கரமான நாளாகவும், முன்னேற்றம் தரும் நாளா கவும் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், அதை கவனிக்காமல், 8 ஆம் தேதி பொறுப்பேற்றார்; அது மட்டுமின்றி, இரவு, 7 மணிக்கு மேல் பொறுப் பேற்றுள்ளார்.

இது போன்ற முக்கிய பொறுப்பு ஏற்பவர்கள், சூரியன் உலா வரும் காலத்தில் பதவியேற்க வேண்டும். சந்திரன் பார் வையுள்ள இரவு நேரத் தில் பதவியேற்கக் கூடாது. மேலும், நீண்ட தாமதத் திற்கு பின், முதல்வராகி யுள்ளார்.

அதனால் தான், பியாஸ் நதியில் ஆந்திர மாணவர்கள், 25 பேர் இறந்தனர்; விசாகப்பட்டி னம் ஸ்டீல் தொழிற் சாலையில் விபத்து ஏற் பட்டது; கிழக்கு கோதா வரியில், காஸ் பைப் உடைந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மேலும், நாயுடு பொறுப் பேற்ற நாள் முதல், ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. இதனால், குடிநீர், தொழிற்சாலை களுக்குத் தண்ணீர் தட் டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மோசமான நேரத்தில் அவர் முதல்வராக பொறுப் பேற்றதால், இந்த ஆண்டு இறுதிவரை, இந்நிலை நீடிக்கும். அதற்குப் பரி காரங்களும் உள்ளன. அவற்றை செய்தால், பாதிப்பிலிருந்து சற்று விலகலாம் என்று கூறியுள்ளார்.

Read more: http://www.viduthalai.in/page-8/83355.html#ixzz36SW7GSwz

தமிழ் ஓவியா said...


பாம்புக்கடிக்கு மூக்கு மருந்து: கண்டுபிடிப்பில் முன்னேற்றம்

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள் என மதிப்பிடப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாம்புக் கடியால் பலியாகிறார்கள்.

எவ்விதமான பாம்புக்கடிக்கும் சட்டென் றும் சுலபமாகவும் பயன்படுத்தப்படவல்ல பாம்புக்கடி மருந்து ஒன்றைக் கண்டு பிடிப்பதில் ஒருபடி முன்னேற்றம் கண்டுள்ள தாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பாம்புக்கடித்த நபருக்கு மூக்கிலே பீய்ச்சித் தெளிக்கின்ற ஸ்பிரேயாகவே கொடுக்கவல்ல மருந்தை ஆய்வாளர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள் என மதிப்பிடப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாம்புக் கடியால் உயிரிழக்கிறார்கள்.

நிலக்கண்ணியில் சிக்கி ஆட்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையை விட இது முப்பது மடங்கு அதிகமான ஒரு எண் ணிக்கை.

உலகிலேயே அதிகம் பேர் பாம்புக் கடியால் உயிரிழப்பது இந்தியாவில்தான். அந்நாட்டில் ஹெச்.அய்.வி.யால் உயிரிழப் பவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு பாம்புக் கடியால் உயிரிழப் பவர்களின் எண்ணிக்கை அமைந்துள்ளது. பாம்புக் கடிக்கான பொதுவான சிகிச்சை என்பது விஷம் முறிக்க வல்ல மாற்று மருந்து ஒன்றை பாம்பு கடித்தவருக்கு கொடுப்பது தான்.

ஆனால் பாதிக்கப்பட்டவரை மருத்துவ மனையில் சேர்த்து, ஊசி மூலமாக அவருக்கு அந்த மருந்தை செலுத்தி, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதாக இந்த முறை அமைந்துள்ளது. தவிர இந்த மருந்தின் விலையும் அதிகம்.

விஷ முறிவு மருந்து அல்லாது பாதிப்பு ஏற்படுத்துவதைத் தடுக்கவல்ல ஆன்டி பராலிடிக் மருந்தான நியோஸ்டிக்மீன் என்ற மருந்தை பாம்பு கடித்தவருக்கு வழங்கும் ஒரு சிகிச்சை முறையும் இருந்துவருகிறது.

ஆனால் இதுவும் நரம்பு ஊசி வழியாகத் தான் செலுத்தப்பட முடியும்.

அதிகம் பேர் பாம்புக்கடிக்கு ஆளாவது என்னவோ ஏழ்மையான, கிராமப் பகுதிகளில் தான், அவர்களால் எல்லா நேரத்திலும் மருத்துவ வசதிகளைப் பெற முடிவதில்லை.

எனவே பாம்புக்கடிக்கு மேம்பட்ட மருந்தும் சிகிச்சையும் தேவைப்படுகின்ற அவசியம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில்தான் விரைவாகவும் சுலபமாகவும் மூக்கில் அடிக்கக்கூடிய ஸ்பிரேயாக பயன்படுத்தவல்ல பாம்புக்கடி மருந்து ஒன்றை கண்டறிவதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக கலிஃபோர்னியா அறிவியல் கழகத்தில் சென்டர் ஃபார் எக்ஸ்ப்ளொ ரேஷன் அன்ட் டிராவல் ஹெல்த் என்ற மய்யத்தின் இயக்குநராகவுள்ள டாக்டர் மேத்யூ லூவின் கூறுகிறார்.

இந்த மருந்து எலிகளிடம் பரிசோதிக் கப்பட்டுள்ளது. மேற்கொண்டு மனிதர்களிடம் ஆய்வுகளை நடத்தி மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், ஏராளமானோருக்கு பலன் தரும் மருந்தாக இந்தக் கண்டுபிடிப்பு உருவெடுக் கலாம்.

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் மனித தயாரிப்பு ஸ்புட்னிக் என்ற ரஷ்ய செயற்கைக்கோள் ஆகும். அனுப்பப்பட்ட ஆண்டு 1957.

Read more: http://www.viduthalai.in/page-7/83342.html#ixzz36SWUI7Hg

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

பிள்ளையார்

இந்தியாவில் மட்டுமல்ல - பிள்ளையார் ஜப்பானிலும் உள்ளார்; கணபதி கங்கிதேன், பினாயக்தேன் என்று அழைக் கப்படுகிறாராம். புத்தனுக்கு விநாயகர் என்று பெயர். இதை உல்டா பண்ணி தமிழ் நாட்டில் புத்தர் சிலைகளை உருமாற்றி விநாயகர் என்று அழைத்த சூழ்ச்சி, ஜப்பானிலும் அரங்கேறியுள்ளது போலும்!

Read more: http://viduthalai.in/e-paper/83397.html#ixzz36YKl8Rf7

தமிழ் ஓவியா said...

இப்படியும் மூட நம்பிக்கை

தான் விரும்புகின்ற எண்ணை (ஜிஷி09 ணிகி 3456) தன்காருக்குப் பெறுவதற்காக பிவிஎஸ் ராஜூ என்பவர் அந்த விருப்ப எண்ணுக்காக மட்டும் ரூ.2.70 இலட்சம் தொகையை செலவிட்டுள்ளார். அவர் புதிதாக வாங்கி உள்ள ஆடிகாரின் விலை ரூ.41.23 இலட்சமாகும். இத்தகவலை தெலங்கானா போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/83397.html#ixzz36YL0GYt4

தமிழ் ஓவியா said...


மத்திய அரசுக்கு லகான் போடும் இந்துத்துவா அமைப்பு!


மத்திய அரசுக்கு லகான் போடும் இந்துத்துவா அமைப்பு!
தேசிய கலாச்சாரம் என்ற போர்வையில் அரசைக் கண்காணிக்கிறது


புதுடில்லி ஜூலை 4_ வாஜ்பாயி ஆட்சிக்கு பிறகு 10 ஆண்டுகளாக சற்று அமைதியாக இருந்த இந்துத்துவ அமைப்புகள் தற்போது மீண்டும் தங் களது பழமைவாத திட் டங்களை நம் நாடு நமது தொன்றுதொட்ட கலாச் சாரம் என்ற பெயரில் செயல்படுத்த ஆரம்பித் துள்ளது. மத்திய அரசுக்கு லகான் போடும் வேலை யிலும் இறங்கியுள்ளது.

வாஜ்பாய் அரசு பல் வேறு திட்டங்களில் பழ மைவாதக் கொள்கை களை சங்க்பரிவாரங்களின் துணை அமைப்புகளின் உதவியுடன் செயல்படுத்தி வந்தது. இதுபோன்ற அமைப்புகளின் ஒன்று சுதேசி ஜாகரன் மஞ்ச் (உள்நாட்டு கலாச்சார விழிப்புணர்வு இயக்கம்)

இந்த அமைப்பு தற் போது வளர்ந்து வரும் நாகரீக வளர்ச்சிக்கு எதிரான கொள்கைகளை கொண்டது. அதாவது தற் போதைய காலகட்டத்தில் அனைத்துத் துறையிலும் அதிநவீன தொழில் நுட் பம் வந்துவிட்டது, இத னால் பல்வேறு வேலை கள் மிகவும் எளிதாகவும், விரைவாகவும் முடிக்கப் பட்டு வருகிறது இந்த அமைப்பு வாஜ்பாய் அரசின் அந்நிய நேரடி முதலீட்டுக்கொள்கையை கடுமையாக எதிர்த்து வந்ததும் இங்கு குறிப் பிடத்தக்கது. மய்ய அரசுடன் நேரடித் தொடர்பு

தற்போது இந்த அமைப்பின் புதிய தலைமை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் மீண்டும் இந்திய கலாச்சாரத்திற்கு உகந்த கொள்கைகளைக் கொண்ட செயல் திட் டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வலியுறுத்தி யுள்ளது.

சுவதேசி ஜாகரன் மஞ் சின் ஆலோசனைப்படி பாரதிய கிசான் சங் (இந்திய விவசாயிகள் அமைப்பு) பாரதிய மஸ் தூர் சங் போன்றவை மய்ய அரசுடன் நேரடித் தொடர்பில் இருப்பது போன்ற பொது அமைப்பு ஒன்றை அமைத்து அதன் மூலம் அரசிடம் தங்களது கொள்கைகளை வலியுறுத் துவதோடு அது நடை முறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்கானிக் கவும் முடிவு செய்யப்பட வுள்ளது. கடந்த மே மாதம் சுவதேசி ஜாகரன் மன்சின் தலைவர்கள் ஆர்.எஸ். எஸ் அமைப்பின் தலை வர் மோகன் பகவத்தை சந்தித்த போது தங்களது கொள்கை முடிவுகளை பற்றிக்கூறி மோடி அரசு தங்களின் ஆலோ சனையை ஏற்குமாறு வலியுறுத்திக் கூறினர்.

சுதேசி ஜாகரன் மஞ்சு சார்பாக பேசிய அதன் தலைவர்களில் ஒருவரான அருண் ஓஜா பத்திரிகை யாளர்களிடம் பேசும் போது இந்த அமைப்பு இந்தியக்கலாச்சாரத்தை பாதுகாக்கவும், இந்தியக் கலாச்சாரத்திற்கு ஏற்ப மக்களின் வாழ்க்கை முறையை மாற்றவும் பாடுபடுகிறது. புதிய அரசு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பிக் கையுடன் உள்ளோம். எங்களைப்பொறுத்தவரை மத்திய அரசின் நேரடி முதலீட்டுக்கொள்கை மற்றும் பல்வேறு அயல் நாட்டு நிறுவனங்களின் உள்நாட்டு வியாபாரம் தொடர்பான சட்டதிட் டங்களில் மாற்றங்கள் கொண்டுவர அரசை வலியுறுத்துவோம். இழந்துபோன நமது கலாச்சாரத்தை மீட்டுக் கொண்டு வரும் வகையில் எங்களது நடவடிக்கைகள் அமையும் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/83389.html#ixzz36YLJGt7V

தமிழ் ஓவியா said...


இதுதான் பார்ப்பனீயம்!


50 ஆண்டுகளுக்கு முன் என்ற தலைப்பில் இன்றைய இந்து ஏடு (ஏப்.23) வெளியிட்டிருக்கும் செய்தி இது. இந்தச் சம்பவம் நடந்தது 1928ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதியாகும்.

லாலா லஜபதிராய் அவர்களையே பார்ப்பனர்கள் கோயிலுக்குகள் அனுமதிக்க மறுத்த சமுதாயக் கொடுமை பற்றிய செய்தி இது! இந்து ஏட்டில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி அப்படியே தமிழில் மொழி பெயர்த்து தரப்படுகிறது.

நேற்று இங்கு வந்த லாலா லஜபதிராய், மாலை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, மலபாரில் நடைபெறும் சமுதாயக் கொடுமைகளை கடுமையாக சாடினார்.

குறிப்பாக நம்பூதிரிகள் சமுதாயத்தில் காணப்படும் மோசமான திருமண சம்பிரதாய அமைப்பையும், அதன் காரணமாக ஏற்படுகிற ஒழுக்கக் கேடுகளையும், முறைகேடான பாலியல் உறவு முறைகளையும் அவர் கடுமையாக எதிர்த்தார்.

இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் தீண்டாமை கொடுமை களையும் சுட்டிக் காட்டி, இவை எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கும் வைதீக பார்ப்பனீய கொள்கைகளை வீசி எறியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

அடுத்த தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் அனைவரும் தீண்டாமையை ஒழித்து சமூக நீதிக்குப் பாடுபட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பத்மநாபசாமி கோயிலுக்குள் சென்று பார்வையிட வேண்டும் என விரும்பிய லாலா லஜபதிராய்க்கு கோயில் அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர். இவ்வாறு இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/83405.html#ixzz36YNpjtl0

தமிழ் ஓவியா said...

இங்கர்சாலுக்கும் பாதிரியாருக்கும்

ஒருநாள் பாதிரியார் ஒரு வருக்கும் இங்கர்சாலுக்கும் நடை பெற்ற தர்க்கமாவது;-

பாதிரியார் ஞானஸ்நானம் பற்றி ஒரேயடியாகப் புகழ்ந்தார். அதற்கு இங்கர்சால் பதில் இறுத்த தாவது:

எனது ஞானஸ் நானம் சுத்தமாக குளிப்பதுதான்! அது தங்கள் ஞானஸ்நானத்தை விடச் சிறந்தது என்றார்.

Read more: http://viduthalai.in/page-7/83405.html#ixzz36YNz2tzo

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற்றத் தக்க குடிமகன் இல்லாத இனம் வேர்ப்பற்றில்லாத மரம்போல் - கோடாலிக் கொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல் - தானாகவே விழுந்துவிடும்.

நமக்கு ஓர் அறிவு அதிகமிருந்தும் பயன் என்ன? மிருகங்களுக்கு ஓர் அறிவு குறைவு என்றாலும் ஜாதி இல்லையே? மிருகங் களுக்கு அறிவில்லாததின் பயன் ஜாதி இல்லை. நமக்குள்ள இழிவு ஜாதியால் தானே. இதைச் சிந்திக்க வேண்டாமா?

Read more: http://viduthalai.in/page-7/83413.html#ixzz36YOJkBTn

தமிழ் ஓவியா said...


உண்ணாமுலையாம்! ஞானப்பாலாம்!!


கேள்வி: ஒரு பசு மாடு என்ன போட்டால் கறக்கும்?

பதில்: புல்லு, வைக்கோல், தவிடு, பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை போட்டால் பால் கறக்கும்!

உண்மை: கறக்காது!...கறக்காது!!... கன்று போட்டால் தான் கறக்கும்! அதாவது கன்றீனாதெதுவும் பால் கறக்காது! இதுவே உண்மை நிலை.
அப்படியானால், உண்ணாமுலைகளைச் சுமந்ததாகக் கூறப்படும் பார்வதியின் முலைகள் மட்டும் எப்படிச் சுரந்தன? -என்ற கேள்வி எழுவது சகஜமே!

பார்வதிக்கு இரு குமாரர்கள் என்பது புராணக்கூற்று. இரண்டும் கர்ப்பத்திலிருந்து பிறவாதவைகள் ஒன்று பார்வதி தம் உடலழுக்கை உருட்டித் திரட்டிப் பிடித்து வைத்ததே பிள்ளையார்! ஆனை முகன்! ஆனை வாய் உண்ணாமுலை! மற்றது பரமசிவனது விந்து தெரித்து - அதாவது பார்வதியின் கர்ப்பத்தில் ஊறாமல் - சரவணப் பொய் கையில் விழுந்து ஆறுமுகங்களுடன் பிறந்தது!

அதற்கும் ஆறு கிருத்திகைக் கன்னியர்கள் தாம் பாலூட்டியதாகப் புராணமேயொழிய பார்வதி பாலூட்டினாள் என்பதாக இல்லை! ஆறுமுகமும் உண்ணாமுலை! ஆக, இங்ஙனம் அவதரித்த இரு குமாரர்களும் உண்ணாத முலைகளையுடைய பார்வதிக்கு உண்ணா முலை என்ற ஒரு பெயரும் வந்தது போலும்!

இவ்விருவருக்கும் ஊட்டக் கிடைக்காத முலைப்பால் பாப்பாரச் சம்பந்தனுக்கு மட்டும் ஞானப் பாலாக ஊட்ட எப்படிச் சுரந்தது? சவுண்டி சம்பந்தன், ஞான சம்பந்தன் ஆனது எங்ஙனம்? தேவாரம் பாடியதும் எங்ஙனம்? ஞானப்பால் உண்டதால் பாடினான் என்றால் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எப்பால் உண்டு தேவாரங்கள் பாடினார்கள்? என்பன போன்ற பகுத்தறிவுக் கேள்வி களுக்கு என்ன சமாதானம்?

இவைகளைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், வயிற்றுப் பிழைப்பாகக் காலட்சேபம் செய்யும் பண்டாரங்கள் ஞானப்பால் உண்டால் பக்திப் பாடல் பாடலாம்; புட்டிப் பால் உண்டால் டப்பா பாட்டுத்தான் பாடலாம்;

இக்காலத் தாய்மார்களுக்கு பால் சுரப்பில்லை யென்றும், தாய்க்குலத்திற்கு இழிவையூட்டும் வகையில் உளறித் திரிவதென்றால் எவ்வளவு நெஞ்சுத் திமிர் இருக்கும்? மக்கள் முன்னேற்றத்திற்கு வேண்டிய கருத்துக் களைச் சொன்னால் பயனுள்ளதாகவும், நாடு முன்னேறு வதாகவும் அமையும். பண்டாரங்கள் இனியேனும் அறிவு பெற்றுத் திருந்தட்டும்!

Read more: http://viduthalai.in/page-7/83408.html#ixzz36YOSB18K

தமிழ் ஓவியா said...


பன்னாட்டு மனித நேயத்தலைவர் லெவி பிராகலுக்குப் பாராட்டு விழா


வளர்ந்த நாடுகள் பொருளாதார அளவில்தான் வளர்ந்துள்ளன பகுத்தறிவில் நாம்தான் அவர்களைக் காட்டிலும் வளர்ந்துள்ளோம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் பெருமிதம்

பன்னாட்டு மனிதநேயத்தலைவர் லெவிபிராகல், ஆந்திர நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் முனைவர் கோ.விஜயம் ஆகியோருக்கு பகுத்தறிவாளர்கழகத்தின் புரவலர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து நூல்களை வழங்கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பன்னாட்டு மனிதநேயத்தலைவர் லெவிபிராகல் நினைவுப் பரிசாக நூலை வழங்கினார் (சென்னை, 3.7.2014)

சென்னை, ஜூலை 4_ வளர்ந்த நாடுகள் பொருளா தார அளவில்தான் வளர்ந்துள்ளன. பகுத்தறிவில் நாம்தான் அவர்களைக்காட்டிலும் வளர்ந்துள்ளோம் என சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு மனிதநேயத்தலைவர் லெவிபிராகல் அவர்களுக்கான பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெருமிதத்துடன் கூறினார்.

சீரிய பன்னாட்டு மனித நேயத்தலைவரும், பன்னாட்டு மனித நேய,நன்னெறிகள் ஒன்றியம் (IHEU) நார்வே (அய்ரோப்பா) நாட்டின் மேனாள் தலை வருமாகிய லெவி பிராகல் அவர்களுக்கு, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதையொட்டி, தமிழ் நாட்டுக்கு வருகை தந்துள்ள அவருக்கு சென்னையில் வரவேற்பு, பாராட்டு விழா நடைபெற்றது.

மின்னஞ்சல்மூலம் வாழ்த்தும், பாராட்டும்!

இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்னயா, இந்திய பகுத்தறிவாளர் அமைப்பு, கோவா தலைவர் சோமு, கேரள யுக்தி வாகினி என்னும் பகுத்தறிவாளர் அமைப்பின் சார்பில் கே.அனில்குமார், ஈகிள் நிறுவனம் சார்பில் பிரதாப்சிங் உள்ளிட்ட பலரும் மின்னஞ்சல்மூலம் இந்த விழாவுக்கு தங்கள் வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்திருந்தனர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று (3.7.2014) சென்னை வேப்பேரி, பெரியார் திடலிலுள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் விழா நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் பல்வேறு தகவல்களைக் குறிப்பிட்டு, தமிழிலும், ஆங்கிலத்திலும் வரவேற்றுப் பேசினார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் எமரால்டு கோ.ஒளிவண்ணன் லெவி பிராகல் ஆற்றிவரும் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து தமிழிலும், ஆங்கிலத்திலும் அறிமுக உரை ஆற்றினார்.

ஆந்திர நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் முனைவர் கோ.விஜயம் தந்தைபெரியார், கோரா ஆகியோரின் வழியில் தமிழர் தலைவர் ஆசிரியர், லெவி பிராகல் உள்ளிட்ட அனைவருமே மனித நேயத்துக் காகவும், சுயமரியாதைக்காகவும், சமூக நீதிக்காகவும் பாடுபட்டுவரும் சமூகத்தொண்டர்கள் என்று ஆங்கிலத்தில் விரிவாகப் பேசினார். மேலும், தந்தை பெரியார் கொள்கைகளைப் பரப்பிவரும் இயக்கம், கல்விப் பணியையும் மேற்கொண்டு மனித நேயத் தொண்டை ஆற்றி வருவதாகத் தமிழர் தலைவர் ஆசிரியரைப் பாராட்டிப் பேசினார்.

தமிழர் தலைவர் சிறப்புரை

சிறப்புரையாக பகுத்தறிவாளர் கழகப் புரவலர், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் உரை ஆற்றினார்.

டாக்டர் பட்டம் பெறவுள்ள பன்னாட்டு மனித நேய முக்கிய தலைவர் லெவி பிராகல் இந்தியாவுக்கு அறிமுகம் என்பது தந்தை பெரியாரால், அவர் கொள்கைகளால், திராவிடர் கழகத்தால்தான் என்றும், இதற்குமுன்பாக 1989ஆம் ஆண்டில் தொடங்கி, 25 முறை இந்தியாவுக்கு வருகை தந்து இயக்கத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

பெரியார் கொள்கைகள் உலகமயமாகி வருவதற்கானத் தேவைகள், விளையாட்டு வீரர்களிடம் உள்ள மூடநம்பிக்கைகள், வளர்ந்த நாடுகள் பொருளாதார அளவில்தான் வளர்ந்துள்ளன. பகுத்தறிவில் நாம்தான் அவர்களைக்காட்டிலும் வளர்ந்துள்ளோம் என்பதையும் சுட்டிக்காட்டி பல்வேறு தகவல்களை சிறப்புரையில் குறிப்பிட்டார். லெவி பிராகல் பாராட்டு பெறுவதற்கான பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

லெவி பிராகல்

லெவி பிராகல் உரையின்போது தமிழர்தலைவருடன் இணைந்து ஆற்றிய பணிகள்குறித்து பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். இதுபோன்ற பொது நிகழ்வுகளில் பெண்கள் அதிகமாகப் பங்கேற்பதன்மூலம் மனித நேயம் சிறக்கும் என்று கூறினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் தரப்பில் தொடுக்கப்பட்ட பல்வேறு வினாக்களுக்கு லெவி பிராகல், தமிழர் தலைவர் ஆசிரியர் சளைக்காமல் பதிலளித்தனர்.

Read more: http://viduthalai.in/page-8/83427.html#ixzz36YOycpms

தமிழ் ஓவியா said...


செத்தான்நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோ மானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.
(விடுதலை, 14.3.1970)

Read more: http://viduthalai.in/page-2/83481.html#ixzz36eF8Xu1y

தமிழ் ஓவியா said...


வாஸ்து?

வாஸ்து என்ற ஒன்று மிக அதிகமாகப் பேசப் படும் காலம் இது. இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் கட்டும் வீட்டுக்கு மட்டும் தானா இது? மற்ற மதக்காரர்கள் வீடு களைக் கட்டுவதே கிடையாதா? அவர்கள் வாஸ்து பார்க்கிறார்களா? மதச் சார்பற்றவர்கள் வீடு கட்டுவதில்லையா? அவர்கள் வாஸ்து பார்க்காததால் என்ன கெட்டு விட்டதாம்? ஒரே ஒரு கேள்வி - வாஸ் துவில் கழிவறைக்கு (Toilet) இடம் உண்டா?

சோதிடம் எப்படி அறிவியலுக்குப் பொருத்தமற்றதோ, அதே நிலைதான் வாஸ்துவுக் கும். எல்லாவற்றிற்கும் இந்து மதத்தில் அறி வுக்குப் பொருத்தமற்ற புராண சமாச்சாரங்கள் உண்டு. அது இதோ:

ஒரு சமயம், தேவ, அசுரர் யுத்தத்தில் பிருகு முனிவரும் அவரது பத் தினியும் அசுரர்களைப் பாதுகாத்துக் காப்பாற் றினர். இதனை அறிந்த தேவர்கள், பிருகு முனிவரின் பத்தினியின் தலையை வெட்டிவிட்ட னர். இதனைக் கண்டித்த பிருகு முனிவர் கோபம் கொண்ட சமயம் அவரது தேகத்தில் உண்டான வியர்வை பூமியில் விழுந்து, ஓர் அசுர உத்த மன் (வாஸ்து புருஷன்) உண்டாகித் தேவர்களை அழிக்க ஆரம்பித்தான். இதனை அறிந்த தேவர்கள் வாஸ்து புரு ஷனின் தலையிலிருந்து பாதம் வரை அவனது உடலை ஆக்கிரமித்து அவனை எழுந்திருக்க விடாமல் செய்தனர்.

அது சமயம் பிரம்மா அவன் பூமியிலிருந்து தோன்றியதால், அவனைப் பூமியின் புதல்வன் என்று கூறி, உன்னை மனிதர்கள் பூமியில் வீடு, கிராமம், பட்டினம், யாகசாலை, ஆலயங்கள் ஆகிய வற்றை உண்டாக்கும் சமயம் வழிபடுவார்கள்.

அதனால் உனக்கு அளவற்ற திருப்தி உண் டாகும் உன்னை வழிபடு பவர்கள் அனைத்து நலன்களும் பெறுவர் என வாஸ்து புருஷ னுக்கு வரமளித்தார். இதுதான் வாஸ்து புருஷன் தோன்றிய வரலாறு.

எந்தக் காலத்திலோ, எந்தக் கிறுக்கனோ எழுதி வைத்த இந்தக் குப்பைகளை ஏற்றுக் கொள்ள முடியுமா? முகலிவாக்கம் 11 மாடி கட்டடம் வாஸ்து பார்த் துக் கட்டப்பட்டதுதான். அவர்களின் வலைத் தளத்திலேயே இது இருக் கிறது.

61 பேர் பலி கொண்ட பிறகும் வாஸ்துவை, வாஸ்தவமாக நம்பு கிறீர்களா? - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/83471.html#ixzz36eFOmaSI

தமிழ் ஓவியா said...


இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாம் மதுபானம் சொல்கிறார் கோவா பா.ஜ.க., - எம்.எல்.ஏபனாஜி, ஜூலை 5_ கோவாவில், பெண்கள் மதுபானக் கூடத்திற்கு செல்லும் கலாசாரம் குறித்து, மாநில அமைச்சர் ஒருவர் கடுமையாக விமர்சித்த நிலையில், 'மதுபானக் கூடமும், மதுவும், இந்திய கலாச் சாரத்தின் ஒரு அங்கம்' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோவா சட்டசபை எம்.எல்.ஏ.,வான விஷ்ணு வாகா, இது தொடர்பாக கூறியதாவது: கோவா சட்டசபை கூட்டத் தொடர், வரும், 22ஆம் தேதி துவங்குகிறது. அப்போது, சட்ட சபைக்கு வேட்டி அணிந்து செல்வேன். 'கோவா கடற்கரைக்கு, பெண்கள் அரைகுறை ஆடை அணிந்து செல் வதும், மதுபானக் கூடங் களுக்கு செல்வதும், இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது' என, தெரி வித்த, அமைச்சர் சுதின் தவாலிகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இவ்வாறு செய்வேன். 'குட்டையான உடைகள் அணிந்து, மதுபானக் கூடங்களுக்கு பெண்கள் செல்வதை தடை செய்ய வேண்டும்' என, அமைச் சர் தவாலிகர் தெரிவித்தது ஏற்றுக் கொள்ள முடியா தது. தவாலிகரின் மூதா தையர்கள் எல்லாம், வேட்டி தான் அணிந்தனர். அதனால், அவரும் வேட்டி அணிந்து சட்ட சபைக்கு வர வேண்டும். இந்திய கலாச்சாரத்தின் மீது, அவருக்கு உண்மை யிலேயே அக்கறை இருந் தால், இதைச் செய்ய வேண்டும். பண்டைக் காலங் களில், கடவுளுக்கு மது பானத்தை படைத்து வழிபாடும் நடத்தி உள்ள னர். எனவே, மதுபானக் கூடங்களுக்கு செல்வதை யும், மது அருந்துவதையும், மதம் மற்றும் கலாச்சாரத் தின் பெயரில் எதிர்ப்பது சரியல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/83474.html#ixzz36eG1Phsq

தமிழ் ஓவியா said...


முத்துலட்சுமி ரெட்டி மசோதா


(டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியின் பொட்டறுப்பு மசோதா விஷயமாக அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டுமென்று சென்னை சர்க்கார் கேட்டுக் கொண்டதற் கிணங்க திரு. ஈ. வெ. ராமசாமியார் சென்னை சட்ட சபை காரியதரிசிக்கு அனுப்பி இருக்கும் ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது)

1. இந்துப் பெண்களை இந்து ஆலயங்களில் பொட்டுக் கட்டுவதினால் அவர்கள் விபசாரம் செய்யும்படி தூண்டப்படுகிறார்கள்.

2. பண ஆசையினால் தேவதாசிகள் விபசாரம் செய்வதினால் அவர்களது வாழ்க்கை இயற்கைக்கு விரோதமாகவும், ஆபாசமாகவும் இருக்கிறது. இந்த விபசாரிகளால் மேக வியாதிகள் பரப்பப்படுவதினால் அந்நோய் அந்நியர்களுக்கு பரவாமல் தடுக்க வேண்டியதும் முக்கியமானதாகும்.

3. டாக்டர். முத்துலட்சுமி மசோதாவின் நோக்கம் விபசாரத்தை அடியோடு ஒழிப்பதல்லவானாலும் விபசாரம் விருத்தியாவதற்குள்ள ஒரு முக்கியமான வழியை அடைப்பதுதான் அதன் நோக்கம். விபசாரத்தை அடியோடு ஒழிக்கத்தக்கவாறு இந்திய சமூகம் இன்னும் முன்னேற்றமடையவில்லை.

வெளிநாட்டு நிலைமையும் இவ்வாறே இருந்து வருகிறது. பணத்துக்காகப் பெண்கள் விபசாரம் செய்வதைத் தடுக்க சட்டம் இயற்றும் காலம் இன்னும் வரவில்லை. ஆனால், சமயத்தின்பேரால் மதக் கடமை யாகப் பெண்கள் விபசாரம் செய்வதைத் தடுக்க நாம் முன்னாடியே சட்டம் இயற்றி இருக்கவேண்டும்.

தற்காலச் சட்டப்படி 18 வயதிற்குப் பிறகு பொட்டுக் கட்டப்படும் பெண்களுக்கும்கூட இளவயது முதலே பெற்றோராலும், வளர்ப்போராலும் விபசாரம் செய்யத் தூண்டப்பட்டும், தயார் செய்யப்பட்டும் வருகிறார்கள். பொட்டுக்கட்டி விபசாரம் செய்வது மோட்ச சாதனமான தென்றும், பணம் சம்பாதிக்க நல்லவழி என்றும், சிறுவயது முதலே அப்பெண்களுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது.

பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தாமல் சட்டம் ஏற்படும்வரை பெற்றோரும், வளர்ப்போரும் அவர்களை விபசாரம் செய்யப் பழக்கிப் பணம் சம்பாதிக்கத்தான் செய்வார்கள்.

4. மைனர் பெண்களுக்கு பொட்டுக்கட்டக் கூடாதென்று ஏற்கெனவே சட்டம் ஏற்படுத்தி, மதவிதிகள் அப்போதே மீறப்பட்டு விட்டது. எனவே இம்மசோதா விஷயத்தில் மதத்துக்கு ஆபத்து என்னும் வாதத்தைக் கிளப்ப இடமே இல்லை. பருவமடைந்த பெண்களுக்குப் பொட்டுக்கட்ட சாஸ்திரத்தில் அனுமதி இல்லை.

ஆதலால், சாஸ்திரங்களுக்குப் பயந்து பருவமடைந்த பெண்கள் பொட்டுக்கட்டைத் தடுக்க சட்டமியற்ற சர்க்கார் பயப்படத் தேவையில்லை. டாக்டர். முத்துலட்சுமி மசோதா விரும்பும் சீர்திருத்தம் இந்து சமுக சுயமரியாதையை உத்தேசித்து எவ்வளவோ காலத்துக்கு முன்னாடியே அமலில் வந்திருக்க வேண்டும். எனவே அம்மசோதாவை நான் பூர்ணமாக ஆதரிக்கிறேன்.

- குடிஅரசு - கடிதம் -30.03.1930

Read more: http://viduthalai.in/page-7/83438.html#ixzz36eHlierK

தமிழ் ஓவியா said...


கடைசிப் போரின் முதல் பலன்


திரு. காந்தியார் ஆரம்பித்திருக்கும் கடைசிப் போரினால் இந்தியாவுக்கு அரசியல் துறையிலும் சமுதாயத் துறையிலும் பல கெடுதல்கள் ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றம் தடைப்பட்டுப் போகும் என்று நாம் எழுதியும் பேசியும் வருவது நேயர்களுக்கு நன்றாய் தெரிந்திருக்கும். அதற்கு இப்போதே ஒரு தக்க ருஜுவு ஏற்பட்டுவிட்டது.

அதாவது சாரதா சட்டம் சிறிது ஆட்டம் கொடுத்து விட்டதேயாகும். பார்ப்பனர்கள் பெரும்பாலும் திரு. காந்திக்கு உதவியாயிருப்பதாகவும் காந்தி இப்போரில் மிக்க அக்கறை இருப்பதாகவும் இது சமயம் காட்டிக் கொண்டிருப்பதின் பல இரகசியங்களில் முக்கியமானது இந்த சாரதா ஆக்டை ஆடச் செய்வதற்காகவேயாகும்.

உப்பு சத்தியாக்கிரகத்திற்குப் பயந்து கொண்டுதான் சர்க்கார் சாரதா சட்டத்தில் பின்வாங்கக் கூடுமே ஒழிய மற்றபடி சாரதா சட்டம் தப்பு என்றோ சர்க்காரார் தாங்கள் செய்தது பிசகு என்றோ கருதி அல்ல.

உப்பு சத்தியாக்கிரகம் முடிவு பெறுவதற்குள் வைதிகர்கள் இதுபோல் அநேக காரியங்கள் சாதித்துக் கொள்ளப் போகின்றார்கள் என்பது நமக்குத் தெரியும். இவ்விதக் கெடுதியை திரு. காந்தியைப் போன்ற தலைவர்களைக் கொண்ட இந்திய மக்கள் அடைவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

எப்படி இருந்தாலும் நமது நாட்டில் அரசாங்கத்தார் சீர்திருத்தம் செய்ய இசைந்தாலும்கூட அதை நடைபெற வொட்டாமல் தடுப்பவர்கள் இந்தியர்கள் தானா அல்லவா? பொது மக்கள் பிரத்தியட்சத்தில் அறிந்து கொள்ள இதனாலாவது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதைக் குறித்து ஒரு விதத்தில் நமக்கு மகிழ்ச்சியேயாகும்.

ஏனெனில் நமது நாட்டில் சில போலி தேசிய வீரர்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு சர்க்காரே காரணம் என்று பேசி மக்களை ஏய்ப்பதற்குச் சரியான பதிலாகும். ஆனாலும், இது விஷயத்தில் இது உண்மையா யிருக்குமானால் சர்க்காருடைய நடவடிக்கையை நாம் அழுத்தமாகக் கண்டிக்கின்றோம்.

கண்டிக்கின்றோமென்பது போலி தேசிய வீரர்களைப் போல் வாயினாலும் எழுத்தினாலும் மாத்திரம் அல்ல என்றும் அதற்கு அறிகுறி காரியத்திலேயே காட்டப் போகின்றோமென்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

உணராமல் சாரதாச் சட்டத்தை சர்க்கார் திருத்து வார்களேயானால், வைதிகக் கூச்சலுக்குப் பயப்படுவார் களேயானால் அது கடைசிப்போரின் முதல் பலனாகுமே ஒழிய வைதிகர்களின் வெற்றி என்பதாக நாம் ஒரு காலமும் ஒப்புக்கொள்ள மாட்டோம். இது மாத்திரமல்லாமல் கடைசிப்போர் முடிவு பெறுவதற்குள் இதுபோல் இன்னும் அநேகக் கெடுதிகள் ஏற்படப்போவதையும் எதிர்ப் பார்த்துதான் ஆகவேண்டும்.

- குடிஅரசு - கட்டுரை - 13.04.1930

Read more: http://viduthalai.in/page-7/83445.html#ixzz36eHvBqDD

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

ஜாதி ஒழியக் கூடாது; சூத்திரன் படிக்கக்கூடாது; சூத்திரன் பெரிய உத்தி யோகத்திற்குப் போகக் கூடாது; சூத்திரன் வயிறார கஞ்சி குடிக்கக் கூடாது - என்பதற் காகவே மனுதர்மச் சாஸ்திரம் பார்ப்பனரால் எழுதப்பட்டது. இதுதான் இந்து லாவுக்கு அடிப்படையாக உள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/83439.html#ixzz36eI3W3jD

தமிழ் ஓவியா said...

சிவகாமி - சிதம்பரனார் திருமண அழைப்பு

திருவாளர் தமிழ்ப் பண்டிதர் சாமி சிதம்பரனார் அவர்கட்கும் கும்பகோணம் திரு. குப்புசாமி பிள்ளை அவர்கள் குமாரத்தி திருமதி. சிவகாமி அம்மாள் அவர் கட்கும் 05.05.1930 திங்கட்கிழமை மாலை5 மணிக்கு திரு. ஈ. வெ.ரா. அவர்கள் தோட்டத்தில் போடப்பட்டிருக்கும் சுய மரியாதை மகாநாட்டுப் பந்தலில் திருமணம் நடைபெறும்.

திருமதி ஈ.வெ.ரா. நாகம்மாள் அவர்கள் திருமண வைபவத்தை நடத்தி வைப்பார்கள். - குடிஅரசு - ஈ.வெ.ராமசாமி - திருமண அழைப்பிதழ் - 04.05.1930

Read more: http://viduthalai.in/page-7/83439.html#ixzz36eI81IPQ

தமிழ் ஓவியா said...

ஆப் கி ரெட்டை நாக்கு சர்க்கார்!.2012ல் ரயில் கட்டணத்தை உயர்த்திய போது அப்போதைய பிரதமருக்கு நரேந்திரமோடி கடிதம் எழுதி கட்டண உயர்வை வாபஸ் பெறக்கேட்டார். அதில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பாக, ரயில் கட்டணத்தை உயர்த்தி இந்த அரசு நாடாளுமன்றத்தை புறக் கணித்துவிட்டது என்றும் மோடி குற்றம் சாட்டியிருந்தார்.

இப்போது மோடி அரசு, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு ரயில் கட்ட ணத்தை உயர்த்தியுள்ளது. எனவே இதை ஆப் கி பார் டபுள் ஸ்பீக் சர்க்கார் என்று அழைக்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரசின் திக் விஜய் சிங்.

தமிழ் ஓவியா said...

கர்ப்ப காலத்தில் உறவு - இந்திரன் தந்த வரமா?


பிரம்மஹத்யம் அஞசலைன
ஜகரஹ யத் அபிஸ்வராஹ
சாமவதசரந்தோ தத அக்ஹம் புதா(ஹ)னம்
ப்ஹுமய் அம்பு(ஹ) துர்ம யொஸித்பயாஸ்
சதுரத வயப்ஹஜத த(ஹ)ரிய(ஹ) - பகவத் கீதை

மேலுள்ள வேதமொழிச் செய்யுளின் விளக்கம் இதுதான்.

இந்திரன் தெரியாத்தனமாக ஒரு பார்ப்பனனைக் கொலை செய்துவிட்டானாம். அவனுக்கு மிகவும் கொடுமையான பிரம்மஹஸ்தி தோசம் பிடித்துவிட்டதாம். அதற்காக கவலைப்படத் தேவையில்லை. அதைப் பங்கிட்டுக் கொடுக்க பார்ப்பனர்களுக்கு மாத்திரம் அனுமதியுள்ளது. தன்னுடைய தோசத்தைப் பெண்களுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டானாம். அதற்குப் பரிகாரமாக பெண்கள் என்ன வரம் கேட்டார்கள் தெரியுமா? அதாவது தனது கர்ப்பகாலத்திலும் ஆண்களுடன் உறவு கொள்ளும் வரத்தை இந்திரனிடம் கேட்டு, கர்ப்பகாலத்திலும் உறவு கொள்ளலாம் என்ற வரத்தைப் பெற்றார்களாம். பெண்களுக்கு வரம் கேட்பதற்கு வேறு விசயமே இல்லை பாருங்க! எதிலும் இதே சிந்தனைதான்.- சரவணா இராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் பெண்கள், சிறுமியர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. அதேபோல், குழந்தைகளைப் புறக்கணிக்கும் நடைமுறையும் அதிகமாக உள்ளது.

பாதிக்கப்படும் பெண்கள் புகார் கொடுக்க முன்வருவதில்லை. அவர்களுக்கு ஆதரவாக சமுதாயத்தினர் இருப்பதில்லை. இந்நிலை, சமீபகாலமாக உச்சத்தை அடைந்துள்ளது. பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்கும் உயரிய பொறுப்பிலிருந்து இந்திய அரசு தவறிவிட்டது.

பொதுவான சட்டங்கள் இருந்தபோதிலும் அவை சரியானபடி நிறைவேற்றப்படுவதில்லை. இந்நிலை மாற வேண்டும்.

- பென்யாம் மெஜ்முர்,
அய்.நா. குழந்தைகள் உரிமைக் குழுத் துணைத் தலைவர்.

தமிழ் ஓவியா said...

சிவப்புதான் அழகா? விளம்பர வாய்ப்பை மறுத்த நடிகை


சிவப்பழகு கிரீம்கள் என்று நடிகர் நடிகையரெல்லாம் கோடிகளைப் பெற்றுக்கொண்டு மக்களிடம் தாழ்வு மனப்பான்மையை விதைத்துக்கொண்டிருக்க நடிகை கங்கணா ரனாவத் 2 கோடி ரூபாய் விளம்பர வாய்ப்பை மறுத்துள்ளார்.

அதோடு அவர் எழுப்பியுள்ள மனிதத் தன்மையுள்ள கேள்வி சிந்திக்கத்தக்கது. அழகு பற்றி இங்கு நிலவும் கண்ணோட்டம் குறித்து என் குழந்தைப் பருவத்திலிருந்தே புரிந்துகொள்ள முடிந்ததில்லை.

அப்படி இருக்கும் நிலையில், பிரபலமாகக் கருதப்படும் நான் இளைஞர்களிடம் என்ன மாதிரியான முன்னுதாரணத்தை உருவாக்கப் போகிறேன்.

அழகு கிரீம் விளம்பர வாய்ப்பை (ரூ.2 கோடி) மறுத்ததற்கு எந்தவிதக் கவலையும் இல்லை. ஒரு பொது மனுஷியாக எனக்குப் பொறுப்புகள் உள்ளன. என் சகோதரி மாநிறம் கொண்டவள். ஆனாலும் அழகானவள்.

இந்த விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நான் என் சகோதரியை அவமதிப்பதாக ஆகிவிடும். என் சகோதரிக்குச் செய்ய விரும்பாததை இந்த நாட்டுக்கு எப்படி நான் செய்ய முடியும்? என்கிறார் கங்கணா. மற்ற நடிகர்கள் சிந்திப்பார்களா?

தமிழ் ஓவியா said...

ஜாதிகள் ஒழிந்தால் நாடு முன்னேறும்


மைசூர் அருகே சாமுண்டி மலையடிவாரத்தில் உள்ள சுத்தூர் மடத்தில் நடைபெற்ற ஜெகத்ஜோதி பசவண்ணர் ஜெயந்தி விழா(பசவ ஜெயந்தி விழா)வில் கலந்து கொண்டார் கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா.

விழாவில் பேசியபோது, நமது நாட்டில் இன்னும் ஜாதிகள் ஒழியவில்லை. கடந்த 850 ஆண்டுகளுக்கு முன்னே ஜாதிகளை ஒழிக்கப் பாடுபட்டவர் பசவண்ணர். ஜாதிகளை ஒழிக்க நீண்ட காலமாகப் போராட்டம் நடத்தியதுடன் தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றாகச் சேர்த்து, மனித ஜாதி ஒன்றே, வேறு எந்த ஜாதியும் இல்லை என உலகத்திற்கு அறிவித்தவர். ஜாதிகளை ஒழிக்க மகாமனே மற்றும் அனுபவ மண்டபங்களை உருவாக்கி அனைத்து மக்களும் சரிசமமாக வாழ நடவடிக்கை மேற்கொண்டவர்.

இன்றுவரை ஜாதிகள் ஒழியவில்லை. ஒவ்வொரு இனத்தினருக்கும் ஒரு ஜாதி உள்ளது. அந்த ஜாதிகளை ஒழிக்க நாம் ஒவ்வொருவரும் பாடுபட்டால்தான் நம் நாடு முன்னேறும். மனிதர்கள் அனைவரும் மனிதாபிமானத்துடன் வாழ வேண்டும். இன்றைய இளைஞர்கள் ஜாதி வெறியைத் தூக்கி எறிய வேண்டும் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள்


தமிழகத்தில் 6 வயது முதல் 14 வயது வரை பள்ளிக்குச் செல்லாமல் 27,400 குழந்தைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் 2,794 குழந்தைகளுடன் முதல் இடத்திலும் காஞ்சிபுரம் மாவட்டம் 2,225 குழந்தைகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. நீலகிரி மாவட்டம் 153 குழந்தைகளுடன் இறுதி இடத்தில் உள்ளது.

இந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தாலும், சில காரணங்களால் குழந்தைகள் இடையிலேயே கல்வியை விடும் நிலை ஏற்படுகிறது. எனவே, இதனையும் கண்காணித்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர், பெற்றோரிடம் பேசி மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கணக்கெடுப்பினை மேற்கொண்ட பள்ளி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

2013ஆம் ஆண்டு 10,800 குழந்தைகள் என்ற நிலையில் இருந்தது தற்போது 27,400 என உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள்


தமிழகத்தில் 6 வயது முதல் 14 வயது வரை பள்ளிக்குச் செல்லாமல் 27,400 குழந்தைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் 2,794 குழந்தைகளுடன் முதல் இடத்திலும் காஞ்சிபுரம் மாவட்டம் 2,225 குழந்தைகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. நீலகிரி மாவட்டம் 153 குழந்தைகளுடன் இறுதி இடத்தில் உள்ளது.

இந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தாலும், சில காரணங்களால் குழந்தைகள் இடையிலேயே கல்வியை விடும் நிலை ஏற்படுகிறது. எனவே, இதனையும் கண்காணித்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர், பெற்றோரிடம் பேசி மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கணக்கெடுப்பினை மேற்கொண்ட பள்ளி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

2013ஆம் ஆண்டு 10,800 குழந்தைகள் என்ற நிலையில் இருந்தது தற்போது 27,400 என உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

பிராமணாள் கபே!ஜாதிப் பெயரில் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. அப்படி தங்கள் ஜாதிப் பெயரை வெளிப்படுத்துவதைப் பெருமையாகக் கருதுகின்றனர். ஆனால் பிராமணர்கள் பயன்படுத்தக்கூடாதா? பிராமணர்கள் மற்றும் பிராமணியத்திற்கு எதிராக திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் பேசுவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என சிவகாசிப் பார்ப்பனர் ஒருவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள செய்தியை நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன.

எந்த ஜாதிப் பெயரையும் பொது இடங்களில் பயன்படுத்தக்கூடாது என திராவிடர் இயக்கம் வலியுறுத்தி வந்ததால்தான், கடந்த திராவிட இயக்க ஆட்சிக் காலங்களில் பெரும்பாலான தெருக்களின் பெயர்களில் ஒட்டி இருந்த ஜாதி வால் நறுக்கப்பட்டது. தற்போதும் இந்த நிலை தனியார் நிறுவனங்களில் தொடர்வது விரும்பத்தக்கதல்ல என்பதோடு அகற்றப்பட வேண்டியவை என்பதிலும் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் நாடார் மெஸ்சும், தேவர்ஸ் பிரியாணி கடையும், பிராமணாள் கபேயும் ஒன்றா?

தேவரும், நாடாரும், அய்யரும், அய்யங்காரும் ஜாதிப்பெயர்கள். பிராமணாள் என்பது ஜாதிப்பெயரா? வர்ணாசிரம தர்மப்படி இந்துக்கள் பிராமணன், வைசியன், சத்திரியன், சூத்திரன் என நான்கு வருணங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் வைசியனும், சத்திரியனும், மறைந்து பிராமணன், சூத்திரன் என்கிற இரண்டு வர்ணங்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. சூத்திரன் என்பவன் அடிமைப் போரில் புறமுதுகிட்டு ஓடியவன். பிராமணர்களுக்கு சேவகம் செய்யக்கூடியவன். பிராமணர்களின் வைப்பாட்டி (தேவடியாள்) மக்கள் என்று மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

எனவே, ஒருவன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்வானானால் மற்றவர்கள் சூத்திரர்கள் எனப் பொருள்பட்டுவிடும் என்பதாலேயே பிராமணாள் என்கிற சொல்லை எதிர்க்கிறோம்.

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே தந்தை பெரியார் அவர்கள் பிராமணாள் கபே பெயர்ப் பலகை அழிப்புப் போராட்டத்தை அறிவித்தார்கள். சென்னையில் இயங்கி வந்த பிராமணாள்(முரளி)கபே முன்பு நடைபெற்ற தொடர் போராட்டத்தில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திராவிடர் கழகத் தோழர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னை நோக்கித் திரண்டனர். எங்கள் ஊர் மயிலாடுதுறை தோழர்களும் பலர் அதில் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் சென்னையில் தங்கவைக்கப்பட்டு தினசரி அய்ம்பது தோழர்கள் புறப்பட்டு முரளி கபே வாயிலில் நின்று வாடிக்கையாளர்களிடம் தமிழர்களை இழிவுபடுத்தும் கடைக்குச் செல்லவேண்டாம் எனக் கேட்டு மறியலில் ஈடுபட்டனர்.

கடைத் தொழிலாளர்கள் மூலம் கழகத் தோழர்களைத் தாக்கிய வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றது. போராட்டம் தொடர்ந்தது. தொடர்ந்து கடையை நடத்த இயலாத நிலையில் கடை உரிமையாளர் தந்தை பெரியார் அவர்களிடம் நேரில் வருத்தம் தெரிவித்து கடையின் பெயர்ப் பலகையை மாற்றினார். அதனைத் தொடர்ந்து அங்கங்கிருந்த ஒன்றிரண்டு பிராமணாள் பெயர்ப் பலகைகளும் காலப்போக்கில் மறைந்து போயின.

தற்போது 60 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரியம் கோலோச்சுகின்ற நிலையில் பார்ப்பனியம் படமெடுத்தாடத் தொடங்கியிருக்கிறது. ஆரிய பவன்களும், உடுப்பி ஹோட்டல்களும்கூட நம் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. தேவைப்படும்பொழுது அவற்றை எதிர்த்தும் கிளர்ச்சிகள் நடைபெறுவது உண்டு. அது வேறு, பிராமணாள் கபே அழிப்பு என்பது இன இழிவு ஒழிப்பு!. மான உணர்வுள்ள, சுயமரியாதை உள்ளம் கொண்ட எவனும் இதைச் சகித்துக்கொண்டிருக்க முடியாது. எதிர்த்துப் போராடவே செய்வான். கொசுறுச் செய்தி: சிவகாசிப் பார்ப்பனர் தொடுத்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.

- கி.தளபதிராஜ்

தமிழ் ஓவியா said...

பெரியாரைப் படிப்போம்


கழிவுகளைக் கையால் அள்ளும் தொழிலுக்கு முழுமையாகத் தடை கொண்டுவர வேண்டுமானால் முதலில் ஜாதியற்ற சமூகம் உருவாக்கப்பட வேண்டும். ஜாதிப் பாகுபாடே இந்தத் தொழில் தொடர்வதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் சட்டமேதை அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு என்ற நூலும் தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலும் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் கல்வித்துறை, புத்தர் கல்வித்துறை என்ற 2 புதிய துறைகள் உருவாக்கப்பட வேண்டும்.- ரவீந்திரன்,
இதழியல் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கைகளைப் படம்பிடித்த முண்டாசுப்பட்டி


அண்மைக் காலமாக தமிழ் சினிமா ஒரு புதிய தடத்தை நோக்கிப் பயணிக்கிறது என்பது அதன் முழு வடிவம் புரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அந்த வகையில் கிராமங்களில் நிலவும் பல வகையான மூட நம்பிக்கைகளுக்கு ஒரு கிராமமாக ஒட்டு மொத்த அடிமையாக இருக்கும் சூழலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான் முண்டாசுப்பட்டி. அதென்ன முண்டாசுப்பட்டி? அந்த ஊரில் எல்லோரும் எப்போதும் தலையில் முண்டாசு கட்டிய படியே உள்ளனர். எனவே அது முண்டாசுப்பட்டி அவ்வளவுதான். மற்றபடி அதற்க்கு ஒரு பெரிய விளக்கம் இல்லை.1947இல் இந்திய நாடு விடுதலை அடைவதற்கு முன் அந்த கிராமத்திற்கு வரும் ஒரு வெள்ளைக்கார அதிகாரி அங்கு உள்ள கலாச்சாரங்களை தனது புகைப்பட கருவியில் (போட்டோ கேமரா) பதிவு செய்கிறார்.

அப்போது ஒரு வயதான மூதாட்டியைப் படம் பிடிக்கும்போது தன்னியல்பாக அவர் இறந்து போகிறார். மேலும், அந்தக் கிராமத்தில் ஒரு விதமான நோய் பரவி பலர் இறக்கின்றனர். அதைக் கண்டு அச்சப்படும் மக்களிடயே மேலும் ஒரு பிரச்சினையாக கொள்ளைக்காரர்கள் கூட்டமாக வந்து கொள்ளையடிக்கின்றனர். அப்போது அந்த கிராம மக்கள் கடவுளை நோக்கி எங்களைக் காப்பாற்று என்று வேண்டும்போது வானியல் அதிசய நிகழ்வாக விண்கல் ஒன்று வேகமாகப் பயணித்து அந்த முண்டாசுப்பட்டி கிராமத்திலேயே அதுவும் அந்த கொள்ளைக்காரர்கள் மீதே வந்து விழுந்து விட, அந்தக் கல்லையே கடவுளாக வழிபடத் தொடங்கி விடுகின்றனர். அதன் பிறகு அந்தக் கிராமத்தில் யாரும் போட்டோ எடுக்கக் கூடாது மீறி எடுத்தால் இறந்து விடுவோம் என்ற மூட நம்பிக்கை பரவுகிறது. அடுத்து கதைக்களம் 1982ஆம் ஆண்டில் பயணிக்கிறது. இது போக மேலும் பல சின்னச் சின்ன மூட நம்பிக்கைகள் அந்த மக்களிடையே நிலவுகிறது. பக்கத்து ஊரில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் கதாநாயகன், அவனது உதவியாளர், முண்டாசுப்பட்டி கிராமத்தின் தலைவரின் மகள் கதாநாயகி, நகைச்சுவை நடிகராக பாத்திரமேற்றிருக்கும் முனீஸ்காந்த், என இந்த நால்வரைச் சுற்றியே கதை நகருகிறது. முன்பு போட்டோ எடுத்த அந்த வெள்ளைகார அதிகாரி அந்த ஊரில் விழுந்த விண்கல்லின் துகள்களை ஆய்வு செய்து அது விலை மதிக்க முடியாத கனிமம் என்று கோமளப்பட்டி ஜமீன்தாரிடம் சொல்ல அவரும் அந்தக் கல்லைத் (வானமுனி இது அந்த விண்கல்லுக்கு கிராமத்தினர் வைத்த பெயர்) திருட முயற்சிக்கும் வேலை ஒரு பக்கம் என்று படம் மிகச் சிறப்பாக நகர்கிறது. ஒருவரிக் கதையை வைத்துக் கொண்டு கொஞ்சமும் சலிப்பில்லாமல் அதே நேரத்தில் இப்படித்தான் சினிமா என்பதை உடைத்து சாதாரணமாகப் பதிவு செய்த இயக்குனரைப் பாராட்டியே ஆக வேண்டும். இது போக அந்த ஊரில் ஒரு சாமியார். அவரிடம் குறி கேட்டுத்தான் அந்தக் கிராமமே இயங்குகிறது. ஆனால் அவரின் பின்புலம் என்ன என்று பார்த்தால் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலை ஆகி வந்தவர். வெளியில் வந்து முண்டாசுப்பட்டி கிராமத்தின் கோவிலில் ஓர் இரவு படுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்தால் கிராம மக்கள் அவர் முன் கூடி சாமி! நீங்கதான் எங்க கிராமத்தைக் காப்பாத்தணும் என்று சொல்ல, அவரும் நமக்கு ஒரு சரியான இடம் கிடைத்து விட்டது என்று அந்த ஊரிலேயே தங்கி தனது வாழ்க்கையை நடத்துகிறார்.

(இப்படி பல ஊர்களில் சாமியார்கள் உண்டு என்பதை அனைவரும் அறிவோமல்லவா?). அந்தக் கிராமத்தில் உள்ள வானமுனியைக் கடத்திப் போக அதை மீட்டு வந்து தந்து கதாநாயகன், தன் காதலியான அந்த ஊரின் தலைவர் மகளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். இறுதியில் கதாநாயகன் திட்டப்படிதான் வானமுனி காணாமல் போனது என்று தெரியவர, கல்யாணம் நடத்தி முடித்த கையோடு ஊரை விட்டு ஓடிப்போகும் போது அந்த ஊர் மக்கள் அவர்களைப் பிடிக்க விரட்டுகிறார்கள். அப்போது வேறு வழியே இல்லாமல் அவர்களிடம் இருந்து தப்பிக்க, திரும்பி கேமராவை எடுத்துக் காட்ட கிராம மக்கள் பயந்துகொண்டு திரும்ப ஓடுகிறார்கள்.படம் முழுக்க சின்னச் சின்ன விசயங்களை மிக அழகாக, நேர்த்தியாக இணைத்து மக்கள் மத்தியில் மண்டக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை எடுத்துச் சொல்லியுள்ள இயக்குனர் வசனங்களிலும் சரியாகக் கவனம் செலுத்தியுள்ளார்.

மற்றபடி ஒளிப்பதிவு, பின்னணி இசைப் பாடல்கள்,என அனைத்தும் வித்தியாசமாக செய்திருக்கிறார்கள். படக்குழுவினர் படம் தொடங்கியதிலிருந்து, முடியும் வரை முழு நீள நகைச்சுவைப் படமாக நகர்கிறது. கதை நாயகன், நாயகி தவிர மற்ற நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் புதியவர்கள். மிக சாதாரண மனிதர்களிடம் உள்ள திறமைகள் கண்டிப்பாய் மதிக்கப்பட வேண்டும். அதைச் சரியாக இனங்கண்டு பயன்படுததியிருக்கிறார்கள். எள்ளி நகையாடப்படவேண்டிய மூடநம்பிக்கைகளை அதே சுவையில் சொல்லி அனைவரையும் கவர்ந்திருக்கும் மூடநம்பிக்கைப்பட்டி மன்னிக்கவும் முன்டாசுப்பட்டி நல்ல செய்தியுடன் கூடிய பொழுதுபோக்குப் படம்.

- தம்பியப்பா