Search This Blog

13.6.12

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது அறியாமையே! அகம்பாவமே!

திருவெறும்பூர் பட்டிமன்றத்தில் தமிழர் தலைவரின் நிறைவுரை (11.6.2012)

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று அறியாமையால் கூறுவோர் மன்னிக் கப்படலாம், அகம்பாவம் என்றால் திருத்தப்படுவார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

திருச்சி மாவட்ட, ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது அறியாமையே! அகம்பாவமே! என்ற தலைப்பில் மாபெரும் பரபரப்பான பட்டிமன்றம் நேற்றிரவு 7 மணிக்கு திருவெறும்பூர், கடைவீதி, அண்ணா சீரணி அரங்கில் திரளான மக்கள் வெள்ளத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தி.க. தலைவர் மு.சேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய தி.க. தலைவர் மாரியப்பன் வரவேற்புரையாற்றினார். மண்டல தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர்கள், தி.மகா லிங்கம், கணபதி, ரெஜினா பால்ராஜ், ஒன்றிய செயலாளர் இரா.தமிழ்ச்சுடர், தி.தொ.க. பேரவை பொது செயலாளர் ஆறுமுகம், ப.க. செயலாளர் மேகநாதன், மாநகரத் தலைவர் மு.நற்குணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பட்டிமன்றத்திற்கு தலைமையேற்றும், நடுவராகவும் தி.க. பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு உரையாற்றினார். அறியாமையே! என்ற தலைப்பில் முனைவர் துரை. சந்திரசேகரன், இரா.பெரியார் செல்வம் ஆகியோரும், அகம் பாவமே என்ற தலைப்பில் முனைவர் அதிரடி க.அன்பழகன், வழக்கறிஞர் பூவை. புலிகேசி ஆகியோரும் வாதிட்டு உரையாற்றினர்.

நிறைவுரையாக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசுகையில்:

திராவிட இயக்கத்தை குறை சொல்லுகிறவர்கள். திராவிடர் இயக்கத்திலே சிலர் பலியாகி இருக்கிறார்கள். ஆரியத்தின் சூழ்ச்சிக்கு அம்பாகி இருக்கிறார்கள். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது அறியாமையாலா? அகம் பாவத்தாலா? அறியாமை என்றால் அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால் அகம்பாவம் என்றால் அது திருத்தப்பட வேண்டியது. இந்த இயக்கத்தை அழிப்பதற்கு நிறைய பேர் சூழ்ச்சி செய்தார்கள். ராஜகோபாலாச்சாரியார் மிகப் பெரிய சூழ்ச்சி செய்து பார்த்தார். தந்தை பெரியாரிடத்திலிருந்து, அண்ணாவைப் பிரித்துவிட்டோம் என்று ஆச்சாரியார் நினைத்தார். ஆனால் அண்ணா முதலமைச்சர் ஆனவுடன் நேராக பெரியாரைத் தேடி திருச்சி பெரியார் மாளிகைக்குத்தான் வந்தார். இதைக்கண்டு ராஜகோபாலாச்சாரியார் பயந்து போனார். ஆரிய- திராவிடப் போராட்டம் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் வரும். அதை இந்த இயக்கம் எதிர்கொண்டிருக்கிறது; வெற்றி பெற்று இருக்கிறது. ஆரியம் - மனுதர்மம்; திராவிடம் மனிதநேயம்!

ஆரியம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? ஆரியம் என்பது மனுதர்மம், திராவிடம் என்பது மனிதநேயம். தமிழ், தமிழ் என்று பேசுகிறார்களே, தமிழ் தேசியவாதிகள், இந்தத் தமிழால் ஒரு கோவிலுக்குள் நுழைய முடிந்ததா? நுழைய வைத்தது திராவிட இயக்கம் இல்லையா?

திராவிடர் இயக்கம் இல்லையென்றால் தமிழே கிடையாதே!

பெரியார்தானே இம்மொழியையும், உணர்வையும் வெளியே கொண்டு வந்தார். திராவிடர் என்பது பண்பாட்டுத் தத்துவம். இந்த வரலாற்றுச் செய்திகளை எல்லாம் புரிந்து கொள்ளாத, தெரிந்து கொள்ளாத நன்றி கெட்ட முண்டங்களே! நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். சூத்திரப் பட்டம் போக வேண்டுமென பெரியார் மட்டும் தானே போராடினார். இல்லையென்றால் நமது நிலைமை என்னவென்று நினைத்துப் பார்க்க வேண்டும். வேறு எந்த மகான்களாவது கூறி னார்களா? தமிழ் இனவுணர்வு, தமிழ் மொழி உணர்ச்சிகளை சொல்லிக் கொடுத்தவர் தந்தை பெரியார். குறிப்பாக ஒரு காலக்கட்டத்தில் பெண்கள் ரவிக்கை போட முடியாது. இந்த மாற்றம் யாரால் வந்தது? எனவே திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது அறியாமை யாலேயும், அகம்பாவத்தாலேயும் பேசப்படுகிறது. திராவிடத்தால் எழுந்தோம் என்பதுதான் வரலாறு. அகம்பாவம் அழிந்து போகட்டும். அறியாமையால் பேசுகிறவர்கள் திருந்தி நம்மிடமே வந்து சேரட்டும். இவ்வாறு தமிழர் தலைவர் பேசினார்.

------------------ "விடுதலை” 13-6-2012

17 comments:

aaju said...

திராவிடர் இயக்கம் இல்லையென்றால் தமிழே கிடையாதே!



தமிழ், திராவிடம்,ஆரியம் என்று இன்னும் எதனை பேரை முட்டாளாக்க நினைக்கிறார்.இந்த வீரமணியும் அவரது தலைவர் மு.க வும் (இவரது தலைவர் நம் பெரியார் இல்லை)

aaju said...

என்னை தவறாக நினைக்க வேண்டாம்.தமிழ் ஓவிய அவர்களே!
நான் பெரியாரின் கருத்துகளும் கொள்கைகளையும் படிக்கலாம் என்றுதான் உங்கள் வலைதளத்திற்கு வந்தேன்.ஆனால்,யார்யாரையோ பற்றி எழுதுகிறீர்கள்.என்னை மன்னிக்கவும்,இந்த வலைதளத்திற்கு ஏதேனும் உதவிகள் செய்கிறாரா திரு.வீரமணி அவர்கள்,தயவு செய்து கூறுவிர்களா?
என்னுடைய ஈ -மெயில் முகவரி:aaju .aaju2 @gmail .com .நன்றி,
பதிலை எதிர்பார்த்து உங்கள் நண்பன்
aaju

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் அரசியல் புரட்சி இல்லை!


இந்த நாட்டில் அரசியல் புரட்சி என்பதாக ஒன்று, சரித்திரம் தெரிந்த காலந்தொட்டு நடந்துவரவில்லை.

தோழர்களே! புராணங்களில்கூட அரசியல் காணப்படுகிறது. கந்தபுராணம் இருக்கின்றது. அதில் சூரபத்மன் அரசாண்டு இருக்கின்றான். பாகவதத்தில் விஷ்ணு, பத்துக் கடவுள்களாக அவதாரம் எடுத்தான். அந்த 10 அவதாரங்களும் 10 அரசர்களைக் கொல்லு வதற்கே ஆகும். அவர்கள் இராவணன், இரணியன், இரண்யாட்சதன், மாபலி முதலானவர்களைக் கொன்று இருக்கிறார்கள். அப்படி அவதாரம் எடுத்த புராணக் கடவுள்கள், புராண கால அரசர்களை ஒழித்தது அரசியலுக்காக அல்ல; சாதிக்காக ஆகும். அத்தனை இராஜாக்கள் பண்ணிய காரியங்களும் ஒரு சாதியாரை - அதாவது தேவர்களைக் கொடுமை பண்ணினார்கள் என்பதே!

அனைத்தும் சாதிப் போராட்டமே!

இந்தத் தேவர்கள் எத்தனை பேர்? இன்றையப் பார்ப்பனர்கள் போல 100க்கு 2, 3 பேர்களே! ஆனால், அசுரர்கள் என்பவர்கள் 100-க்கு 97 பேர்கள். இந்த 97 பேர்கள் மீது 100-க்கு 3 பேராக உள்ள தேவர்களால் சுமத்தப்பட்ட பழியும் அதற்காக அவர்களை ஒழித்ததும் அரசியல் ஆகிவிடுமா? அது சாதிப் போராட்டமேயாகும்.

அடுத்து, சரித்திர காலத்தை எடுத்துக்கொண் டால், நமக்குக் கேடான ஆட்சியும், பார்ப்பனனுக்கு நன்மையான ஆட்சியுமே நடந்து வந்திருக்கின்றது. அதன் காரணமாக தேவாசுரப் போராட்டம் நடைபெற வில்லை. அந்த அரசர்கள் எல்லாம் பார்ப்பானுக்கு அடிமையாக இருந்து, அவனுக்குத் தொண்டு செய்வதே மேலான புண்ணியம் என்று கருதி ஆண்டு வந்தார்கள். பார்ப்பானுக்குப் பிழைக்கக் கோவிலும் மானியமும் வேதபாடசாலையும் ஏற்படுத்தி, அவர்கள் ஆதிக்கத்தை வளரச் செய்யப் பாடுபட்டார்களே ஒழிய, நம் மக்களின் நலனிலோ கல்வியிலோ அக்கறை காட்டவில்லை.

அடுத்து, முஸ்லீம்கள் இந்த நாட்டை ஆண்டார்கள். அவர்களும் பார்ப்பானுக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டுத் தங்கள் ஆட்சியை நடத்திக் கொண்டு போனார்களே ஒழிய, இந்த நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.

வெள்ளையரின் துரோகம்!

அடுத்து, அறிவு வளர்ச்சி அடைந்த வெள்ளைக் காரன் 200 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தும் - நம் நலனிலோ, கல்வியிலோ அக்கறை செலுத்தாமல், பார்ப்பானுக்குக் கல்வி, உத்தியோகம், பதவி முதலியன பெற வாய்ப் பளித்து வந்தானே ஒழிய, நம்மைப் பற்றி கவலைப் படவில்லை.

அடுத்து, காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டது. காமராசர் ஆட்சிப் பொறுப்புக்கு வரும் வரையில் எவனும் இந்நாட்டு மக்களின் நலனில் அக்கறை காட்டாமல், பார்ப்பானுக்கே, பார்ப்பான் உயர்வுக்கே, பார்ப்பான் வாழ்வுக்கே - பாடுபட்டு வந்தார்கள்.

தோழர்களே! சேரன், சோழன், பாண்டியன் காலம் முதல் காமராசர் பதவிக்கு வரும் முன்பு வரையில், எவராவது 100-க்கு 97 பேராக உள்ள இந்த நாட்டு மக்களைப் பற்றிக் கவலை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள் என்று சொல்ல, ஒன்றும் இல்லை.

பெரியார்-“விடுதலை”, 6.4.1961

தமிழ் ஓவியா said...

பரிதாபமே!


இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல; மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.

பெரியார்- குடிஅரசு, 8.9.1940

தமிழ் ஓவியா said...

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்போரே, இதற்கு என்ன பதில்! சூத்திரன் என்ற இழி பட்டத்தை ஒழித்தது எந்த இயக்கம்?


ஆதாரங்களைக் காட்டி வேலூரில் தமிழர் தலைவர் எழுச்சி முரசம்

சென்னை, ஜூன் 13- சூத்திரன் என்ற இழி பட்டத்தை ஒழித்தது திராவிட இயக்கம் அல்லவா? திராவிடத்தால் வீழ்ந்தோம் என்போரே, சிந்திப்பீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

வேலூரில் 30.5.2012 அன்று நடைபெற்ற புத்துலக பெண்கள் எழுச்சி மாநில - திறந்தவெளி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

இன்றைக்கு இங்கே திராவிட இயக்க சமூகப் புரட்சி புத்தகம் வெளியிட்டார்களே. அதனுடைய சிறப்பு என்ன? 95 ஆண்டுகளுக்கு முன்பே துவக்கப்பட்டது திராவிடர் இயக்க சமூகப் புரட்சி! இந்த இயக்கம் இல்லையென்றால் இந்த மாதிரி தகவலே உங்களுக்குக் கிடைத்திருக்காது.

ஆய்வுக்குரிய புத்தகம்

இது வருங்காலத்தில் ஆய்வுக்குரிய புத்தகங்களில் மிக முக்கியமான புத்தகம் ஒரு சுநளநயசஉ ஆயவநசயைட. ஆய்வு செய்யக்கூடியது.

1927ஆம் ஆண்டிலேயே

1927லே சென்னை மாகாண பார்ப்பனர் அல்லாத வாலிபர்கள் முதல் மாகாண மாநாடு. எங்களைப் போன்றவர்கள் உங்களிலே பலர் பிறக்காத கால கட்டத்திலே 1927லே இந்த மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. தந்தை பெரியாருக்குத் தாடி முளைக்காத காலம். பெரியார் காங்கிரசிலிருந்து வெளியே வந்து சுயமரியாதை இயக்கம் தொடங்கி ஓராண்டு காலம் ஆகியிருக்கிறது.

ஆனால் அதற்கு முன்னாலேயே அவர் காங்கிரசில் இருந்த பொழுதே பார்ப்பனர் அல்லாதார் மாநாட் டிற்குக் கொடி ஏற்றி வைத்தார்கள். அப்படிப்பட்ட இந்த மாநாட்டில் தீர்மானங்களை நிறைவேற்றி னார்கள்.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லுகின்ற முண்டங்கள்

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சில முண்டங்கள் உளறுகின்றனவே நான் கடுமையான வார்த்தையில் எப்பொழுதும் பேச மாட்டேன் என்பது உங்களில் பல பேருக்குத் தெரியும்.

முண்டம் என்பது யாரையும் திட்டுவதல்ல. உடம்புக்கு கழுத்துக்கு மேலே இருப்பது தான் தலை. தலையில் இருப்பதுதான் மூளை. மூளையைப் பயன்படுத்தாமல் யார் பேசினாலும் தலை இல்லாதவன் என்று தான் அர்த்தம். அதற்குப் பெயர்தான் முண்டம்!

ஆகவேதான் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லுகின்ற முண்டங்கள். தலையைப் பயன்படுத் தாதவர்களைப் பற்றி நாங்கள் சொல்லுகின்றோம்.

திராவிடம் இல்லை என்றால் - என்ன ஆவாய்?

திராவிடம் இல்லை என்றால் நீ என்ன ஆவாய்? உனக்கும் சேர்த்து சொல்கிறேன். பெண்கள் அல்லவா துடிக்க வேண்டும். பெரியார் பெண்ணுரிமைக்குப் போர் தொடுத்தார். வாழ்வுரிமை கொடுத்தார். பெண்களுக்கு இதெல்லாம் இருக்கட்டும் இது எல்லாவற்றையும் விட நமக்கு என்ன பெயர் வைத்திருந்தான்? சூத்திரன்! சூத்திரன் என்றால் பாரத ரத்னா பட்டமா? சூத்திரன் என்றால் என்ன? பழைய காலத்து ராவ் பகதூர் பட்டமா? திவான் பகதூர் பட்டமா? தாசிமகன் என்று பொருள்.

என்னுடைய கையிலே மனுதர்மம் இருக்கிறது. இப்படி பொருள் இல்லை என்று யாராவது வந்து சொல்லட்டும்.

தமிழ் ஓவியா said...

மனுதர்மத்தில் எழுதி வைத்திருக்கின்றானே. சூத்திரன் என்றால் ஏழு வகைப்படும். அதில் தாசி புத்திரன், தேவடியாள் மகன். யுத்தத்தில் புறங்காட்டி ஓடியவன். இப்படி ஏழு பொருள் உண்டு என்று எழுதி வைத்திருக்கின்றான்.

ஆண்களை விட பெண்களுக்கல்லவா முதல் இழிவு

என் தாயை அவமானப்படுத்தியிருக்கின்றானே. என் தாயைக் கேவலப்படுத்தியிருக்கின்றானே. என் தாயை தாசி என்று சட்டபூர்வமாக சொல்லி என்னையே ஒப்புக்கொள்ள வைத்தானே. அப்படியானால் என்னுடைய மூளை என்ன ஆனது? எனது சிந்தனா சக்தி என்ன ஆனது?

நமக்குப் போதையை ஏற்றி விட்டால் அல்லது குளோரோஃபார்ம் கொடுத்து அறுவை சிகிச்சை செய்தால் யாருக்காவது தெரியுமா? ஒன்றும் தெரியாது.

அது மாதிரி நம்மை சூத்திரன் என்று சொல்லி வைத்துவிட்டான். ஆண்களை இழிவுபடுத்துவதை விட முதலில் இழிவுபடுத்துவது பெண்களைத்தான். சூத்திரச்சி என்று சொல்கிறான்.

சூத்திரன் - தாசி - புத்திரன் என்றால் என்ன அர்த்தம்? என் தாயை தேவடியாள் என்று சொல்லுகின்றான். இதைவிட கொடுமை வேறு என்ன இருக்க முடியும்?

இதை மானத்தோடு சிந்தித்து இருந்த இழிவைத் துடைத்த ஒரு இயக்கம் இருக்கிறதென்றால் அந்த இயக்கத்திற்குப் பெயர்தான் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகின்ற திராவிடர் இயக்கம். இந்த இயக்கம் பிறக்கவில்லையென்றால் நீங்கள் மனிதனாக இருக்க முடியுமா?

நீங்கள் மனிதனாக இருப்பதற்குக் காரணம்

நீங்கள் காங்கிரசில் இருக்கலாம். கம்யூனிஸ்ட்டாக இருக்கலாம். எந்த இஸ்ட்டாகவும் இருக்கலாம். இன்னும் என்னென்னவோ கட்சிகளிலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் எந்த கட்சியில் இருந்தாலும் மனிதனாக இருப்பது இந்த இயக்கத்தினால் தானே. அதை மறந்து விடாதீர்கள். இன்றைக்குத் தோளில் துண்டு போட்டிருக் கிறோமே இது யாரால் ஏற்பட்டது? பெரியாராலே! முழங்காலுக்குக் கீழே வேட்டி, கட்டியிருக்கிறோமே யாரால்? தந்தை பெரியாராலே!

சகோதரிகள் மன்னிக்க வேண்டும். மார்பகத்தை மறைத்து இன்றைக்கு ரவிக்கை போட்டிருக்கிறார்களே. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என்னுடைய இனத்தைச் சேர்ந்த தாய் தமக்கை சகோதரிகள் எல்லாம் இவர்களுக்கெல்லாம் ஒரு காலத்தில் அந்த உரிமை கிடையாதே - மறுக்கப் பட்டதே!

இதற்கு நூறு வருடமாகப் போராட்டம் நடத்தி அல்லவா வந்தது.

ரவிக்கை அணியும் உரிமை உயர்ஜாதி பெண்களுக்கு மட்டும்தானாம்!

நமது பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது என்று சொல்லிவிட்டார்களே. அந்த உரிமை உயர்ஜாதிக்காரப் பெண்களுக்கு மட்டும்தான் என்று சொல்லிவிட்டார் களே. இதைவிட அவமானம் வேறு என்ன இருக்க முடியும்? எல்லோரும் பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்.

கிராமத்தில் வயதான பாட்டிமார்கள் இன்னமும் ரவிக்கை அணியாமல் இருப்பார்களே!

இன்றைக்குத்தானே அது அநாகரிகம் என்று கருதி ரவிக்கை அணிகிறார்கள். இந்த உணர்வுக்கு யார் காரணம்? இது ஒன்று போதாதா? படிப்பு இருக்கட்டும், உத்தியோகம் இருக்கட்டும், மற்றவை இருக்கட்டும். எப்படிப்பட்ட இழி நிலையில் இருந்தோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?

சென்னையில் 1927இல் நடந்த மாநாட்டில் ஜனக சங்கர கண்ணப்பர் ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிற்ர்.

தமிழ் ஓவியா said...

பெரியார் - பனகல் அரசர்

பெரியார் அவர்கள், பனகல் அரசர் இவர்கள் எல்லாம் பங்கு கொண்ட மாநாடு. இந்த வரலாற்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பல பேருக்கு இந்த வரலாறு தெரியாது. சென்னையிலிருந்து இரண்டு இரண்டரை மணி நேரத்தில் வண்டியில் வேகமாக வேலூருக்கு வந்து விட்டோம். காரணம் நல்ல சாலை. தி.மு.க. ஆட்சி, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி. டி.ஆர்.பாலு நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தார். அவரே சாலையில் நின்று கண்காணித்து சாலைகளை பாலங்களை வேகமாகப் போடச் செய்தார்.

இன்றைக்கு சென்னையிலிருந்து வேலூருக்கு வேகமாக வந்துவிட்டோம். யாராவது பாலம் போட்டவரைப் பற்றிக் கவலைப்பட்டிருப்போமோ? ஓகோ! எப்பொழுதும் இப்படித்தான் இருந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

பழைய ரோட்டிலேயும் போய், அதற்கு நான்கு மணி நேரம் செலவு செய்து இரண்டையும் ஒப்பிட்டால் தானே இந்தப் பாலத்தினுடைய பெருமை தெரியும். அதுபோலத்தான் நண்பர்களே! வகுப்புரிமையி னுடைய பெருமை. திராவிட இயக்கத்தின் பெருமை அதுதான்.

நம்மை மனிதர்களாகக் கருதினார்களா பார்ப் பனர்கள்? பார்ப்பனர்கள் நமக்கு உத்தியோகத்தில் இடம் கொடுக்கவில்லையே!
அப்படியே அதைத்தாண்டி அரசாங்க வேலைக்குப் போனால் என்ன நிலை? வில்லை சேவகம் டாக்டர் நாயர் சொல்கிறார் வில்லை சேவகம் என்று.

டவாலி போட்ட நம்மாள்

நீதிமன்றத்தில் டவாலி போட்டுக் கொண்டிருப் பார்கள் பாருங்கள் இந்த வேலை எல்லாம் நமக்கு. கேட்டு சாத்துகிற வேலை கேட்காமல் சாத்துகிற வேலை எல்லாம் நமக்குத்தான். ரயில்வே துறையில் டிராலியைத் தள்ளுகிறார்கள் பாருங்கள் கேங்க்மென் இந்த வேலை முழுவதும் நமக்கு.

இப்பொழுதுதான் தண்டவாளத்தில் ஓடுகின்ற டிரயல் பார்க்கின்ற மோட்டார் வந்திருக்கிறது. தண்டவாளம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேலைக்குப் பயன்படுகின்ற மோட்டார் வண்டி அதற்கு முன்பெல்லாம் அப்படி இல்லை.
நமது அதிகாரி தண்டவாளத்தின் மீது நிறுத்தப் பட்டிருக்கின்ற டிராலி மீது ஏறி உட்கார்ந்து கொள்வார் அவர் டிப்ளமோ ஹோல்டராக இருப்பார். நம்மாள் இரண்டு பேர் காக்கி சட்டை காக்கி அரைக்கால் டிராயர் போட்டுக் கொண்டு டிராலியைத் தள்ளு வார்கள். இது நமது இளைஞர்களுக்குத் தெரியாது.

இரண்டு பேரும் டிராலியைத் தள்ளிக் கொண்டு அந்தத் தண்டவாளத்தின் மீதே ஓடிவருவார்கள். வெயில் கடுமையாக இருக்கும். அந்த வண்டியைத் தள்ளுகின்ற நம்மாள்களுடைய கால் காய்ப்புக் காய்த்துப் போயிருக்கும்.

வண்டியைத் தள்ளிக் கொண்டே ஓடி வருவார்கள். வாழ்நாள் முழுக்க கேங்க் மென்தான். கடைசியாகப் பதவியை விட்டு போகும் பொழுது மேலதிகாரியிடம் போய் கேட்பார்.

தமிழ் ஓவியா said...

அய்யா என் பிள்ளைக்கு இந்த கேங்க் மென் வேலை கொடுக்க வேண்டும். துரை எனக்கு கருணை காட்ட வேண்டும் என்று கேட்பார்.

இது கிடைத்துவிட்டால் ஏதோ சாலோப, சாமீப, சாரூப விருது வந்த மாதிரி இவருக்கு, மோட்சத்தில் முன் சீட்டுக் கிடைத்த மாதிரி.

பங்கா என்றால் தெரியுமா?

யாருக்காவது உங்களில் பங்கா என்றால் என்ன வென்று தெரியுமா? இளைஞர்களைக் கேட்கிறேன். இப்பொழுது இணையதளத்தின் மூலம் எல்லாவ ற்றையும் பார்த்துக் கொள்கிறார்கள்.

வேலூர் இன்னும் மற்ற இடங்களில் பழைய அலுவலகங்களில் பார்த்தால் இருக்கும். பழைய கோர்ட், தாலுகா, கச்சேரி ஆபீஸ் எல்லாம் இருக்கிறது. அந்த பழைய கட்டடத்தில் உற்று மேலே பார்த்தீர்க ளேயானால் ஒரு உருளை - கப்பி இருக்கும். கயிறு கட்டித் தொங்கவிடுவதற்காக அந்த உருளையை வைத்திருப்பார்கள்.

நம்மாள் கையில் ஒரு பெரிய பளபளப்பான வில்லையைக் கட்டியிருப்பார். அதற்குப் பங்கா புல்லர் என்று பெயர்.

அந்தக்காலத்தில் அப்பொழுது மின்சாரம் கிடையாது. கண்டுபிடிக்கவில்லை. வெள்ளைக்கார நீதிபதி நீதிமன்றத்திற்குள்ளே உட்கார்ந்திருப்பார். அல்லது அது போன்ற அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) மேலே உட்கார்ந்திருப்பார். கலெக்டரை துரை என்று அழைப்பார்கள். அல்லது தாசில்தார் உட்கார்ந்திருப்பார்.

நம்மாள் நீதிமன்றத்திற்கு வெளியே திண்ணையில் வாசல்படியில் உட்கார்ந்து கொண்டு கையில் வில்லையைக் கட்டிக் கொண்டு பங்கா இழுப்பார். அந்தக் கயிற்றை இழுத்து இழுத்து விசிறுவார். நீதிபதிக்கு அதிகாரிகளுக்கு காற்று வீச வேண்டும் என்பதற்காக இவருக்கு மாத சம்பளம் எட்டு ரூபாய்.

அரசாங்க ஆவணத்தில் இதற்கு என்ன பெயர் வைத்தார்கள் என்றால் பங்கா புல்லர் என்று வைத்தார்கள்.

சூத்திரன் கூடாது அன்றைக்குப் போட்ட தீர்மானம்

இங்கே தீர்மானத்தைப் படிக்கின்றேன். சென்னை மாகாண அலுவலக ஆவணங்களில் சூத்திரா என்ற சொல் பயன்படுத்தப்படுவதை இம்மாநாடு (பார்ப்பனர் அல்லாத வாலிபர்கள் மாநாடு திராவிடர் இயக்க மாநாடு) கவலையுடன் பார்க்கிறது.

பார்ப்பனர் அல்லாத சமூகத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு அவர்களின் சுயமரியாதை உணர்வுக்குப் பெரும் இழிவை ஏற்படுத்துவதாக அமைந்ததாகும். எனவே பழைய ஆவணங்களில் உள்ள இது போன்ற குறிப்புகளை நீக்குவதுடன் அலுவலக ஆவணங்களில் (அரசாங்க ரெக்கார்டு) சூத்திரா என்ற சொல் எப்பொழுதும் பயன்படுத்தக் கூடாது என்று அனைத்துத் துறை களுக்கும் ஒரு ஆணை பிறப்பிக்க வேண்டுமென்று அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...

இங்கே சொன்னார்கள் பாருங்கள். இன்றைக்கு போடுகின்ற தீர்மானங்கள் நாளைக்கு சட்டங்கள் என்று. நீதிக்கட்சி ஆட்சி வந்தது. பெரியாருடைய கருத்து அதன் மூலம் வெளிவந்தது. இப்படி ஒரு தீர்மானம் அன்றைக்குப் போட்ட வுடனே (1927) சூத்திரன் பட்டத்தை நீக்கினார்கள். இல்லையென்றால் இன்றைக்கும் நமது அடையாளம் சூத்திரன் தான்!

இது புரியாமல் நம்மாள் சற்சூத்திரன் என்று சொன்னார்கள். பெரியார் கேட்டார். சூத்திரன் என்றாலே தேவடியாள் மகன் என்று எழுதி வைத்திருக்கின்றான். நமக்கு அசிங்கமாக இருக்கிறது.

சற்சூத்திரன் என்றால் என்ன அர்த்தம்?

இதிலே வேறு நீ சற்சூத்திரன் என்று சொன்னால் என்ன அர்த்தம்? நல்ல தேவடியாள் மகன் என்றல்லவா அர்த்தம். இதுமாதிரியா ஒருவரை சொல்வது என்று பெரியார் கேட்டார். சவுக்கால் அடித்த மாதிரி இருந்தது. அப்பொழுதுதான் உணர்ந்தார்கள்.
இந்த இயக்கம் இல்லை எனற்ல் நண்பர்களே, இந்த சூத்திரப் பட்டம் போயிருக்குமா? அதற்கு மாறாக என்ன ஆகியிருக்கும் - ஒவ்வொருத்தனும் நெற்றியில் பச்சைக் குத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லியிருப்பானே!
நம்மாள் என்ன பண்ணுவான்? மறுத்திருப்பானா? நல்ல இடமாகப் பார்த்து பளிச்சென்று தெரிகிற மாதிரி நெற்றியில் குத்துங்கள் என்று சொல்லியிருப்பானே!

திராவிடத்தால் வீழ்ந்தீர்களா? எழுந்தீர்களா?

திராவிடத்தால் வீழ்ந்தோமா? எழுந்தோமா? என்பது இது ஒன்று போதாதா? நம்மை சூத்திரனாக ஆக்கிப் பஞ்சமனாக ஆக்கி பஞ்சமன் படிக்கக் கூடாது. சூத்திரன் படிக்கக் கூடாது. பெண்கள் அதைவிட கீழானவர்கள். அவர்கள் படிக்கக் கூடாது இவ்வளவும் இருந்ததொட்டுதான் நம்மாட்களுக்குப் படிப்பில்லை.
படிக்காததினாலேதான் மூட்டை தூக்கினான். அந்த காலத்தில் நமது உத்தியோகம் எல்லாம் என்ன? போலீஸ் கான்ஸ்டபிளோடு சரி. இதற்கு முன்பு நான் சொன்ன கேங்க் மென்னோடு சரி!
கேங்க் மென்னுக்கு என்றைக்காவது புரமோசன் உண்டா?
கேங்க்மென்னுக்கு கிடைத்த ஒரே ஒரு புரமோசன்!
கேங்க் மென் சுடும் வெயிலில் தண்டவாளத்தின் மீதுள்ள டிராலியைத் தள்ளிக்கொண்டே ஓடி அது ஓடும் பொழுது டபக்கென்று பின்னால் ஏறி கொஞ்ச தூரம் வண்டி ஓடுகிறவரை பின்னால் நின்று கொள்வான். அதுதானய்யா அந்த கேங்க்மென் வாழ்க்கையில் கிடைத்த ஒரே ஒரு புரமோசன் வேறு கிடையவே கிடையாது.
இன்றைக்கு நம்மாட்கள் எல்லாம் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்., கலெக்டராக வருகிறார்கள் என்றால் யார் காரணம், எந்த இயக்கம் காரணம், நன்றியோடு சிந்திக்க வேண்டாமா?
(தொடரும்) 13-6-2012

தமிழ் ஓவியா said...

நித்யானந்தா ஆசிரமத்தில் காண்டம், கஞ்சா, மது பாட்டில்கள்!


பெங்களூரு, ஜூன் 15- கர்நாடக மாநிலம் பிடதி நித்யானந்தா ஆஸ் ரமத்தில், இரண்டாவது நாளாக, காவல்துறை யினர் சோதனை மேற் கொண்டனர். ஆஸ்ர மத்தில், பெண் துறவி களை வைத்து, ஆபாச படம் எடுத்ததாக சமூக சேவகர் ஒருவர், காவல் துறையிடம் ஆதாரங் கள் கொடுத்து பர பரப்பை ஏற்படுத்தினார்.

பிடதி நித்யானந்தா ஆசிரமத்தில், சட்ட விரோத செயல்கள் நடப்பதாக புகார் வந் ததையடுத்து, கர்நாடகா முதல்வர் சதானந்த கவுடா, பிடதி ஆஸ்ர மத்தில் சோதனையிட்டு, "சீல்' வைக்கவும், நித் யானந்தா பிணையை ரத்து செய்து, கைது செய்யவும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உத் தரவிட்டார். இதை யடுத்து, நேற்று முன் தினம் மாலையில், பெங்களூரு - ராம்நகர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் அர்ச்சனா தலைமையில், பிடதி ஆசிரமத்துக்குள் சோதனை யிட காவல்துறையினர் சென்றனர். நான்கு மணி நேரம் சோதனை நடத் தப்பட்டது.

இரண்டாவது நாளாக, 13ஆம் தேதி காலை, 9 மணிக்கு சோதனை துவங்கியது. அதிக நிலப்பரப்பில் ஆசிரமம் அமைந்துள்ள தால் சோதனை நடத்து வதில் அதிகாரிகள் திணறினர். ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வீடியோ பதிவு செய்யப் பட்ட பின்னர், அந்த அறை பூட்டப்படுகிறது. 12ஆம் தேதி ஏழு அறை களில் சோதனையிடப் பட்டு, பூட்டு போடப் பட்டது.

மதுபான பாட்டில், ஆணுறை: சோதனை நடப்பதாக வந்த தகவலையடுத்து, ஆசிரமத்திலிருந்து சில பொருட்கள் வெளியே வீசப்பட்டுள்ளன. நித் யானந்தா போட்டோக் கள், சி.டி.,க்கள், பெண் கள் படத்துடன் குறுந் தகடுகள், தமிழ் வார இதழ்கள் கிடந்தன. சில இடங்களில் கஞ்சா, பீடி, மாத்திரைகள், காலி மதுபான பாட்டில்கள், ஆணுறை ஆகியவையும் கிடந்தன. நேற்று காலை, ராம்நகரை சேர்ந்த சமூக சேவகர் நவீன், மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகார் மனுவில், நித் யானந்தா ஆசிரமத்தில் ஆபாசப் படம் எடுக் கப்பட்டது என்று குறிப் பிட்டிருந்தார். இதற் கான சில சி.டி.,க்கள், போட்டோக்கள், ஆதா ரங்களையும் கொடுத் துள்ளார். இதையடுத்து, அவருடன் காவல்துறை யினர் பிடதி ஆசிரமத் துக்குள் சென்றனர். பிடதி ஆசிரமம் அமைந் துள்ள, 42 ஏக்கர் நிலம், விவசாய நிலம். இந்த நிலத்தை ஆசிரமம் அமைக்க குறைந்த விலையில் வாங்கி, சட்ட விரோத செயலில் நித் யானந்தா ஈடுபடுகிறார். அடுக்கு மாடி கட்ட டங்கள், "காட்டேஜ்' சொகுசு பங்களா கட்டி யுள்ளார். எனவே, நிலங் களை மீட்டு திரும்ப தர வேண்டும் என, தாசப் பன தொட்டி கிராம மக்கள், போராட்டம் நடத்தினர். இப் போராட்டத்தையடுத்து, விவசாய நிலம் குறித்து சர்வே எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கூறினார். ஆசிரமத்தில், 20 முதல் 30 கண்டெய்னர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. என்ன விஷயம் என ஆஸ்ரமத்திலிருந்தவர் களிடம் காவல்துறையி னர் கேட்டதற்கு, சாமி விக்ரகங்கள் உள்ளது என்றனர். கண்டெய்னர் களை சோதனையிடும் போது, பல மர்மம் வெளி யாகும் என தெரிகிறது.

விரைவில் "சீல்': ராஜஸ்தானிலிருந்து வரவழைக்கப்பட்ட, 40-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை என்ன செய் வது என்பது பற்றி அதி காரிகள் ஆலோசனை யில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரமத்தில் கூலி வேலை செய்ய வந்த ராய்ச்சூரை சேர்ந்த, 25 பேர், காலி செய்து சென்றனர். ஆசிரமத்தில், 120 சீடர்கள் உள்ளனர். இதில், 50 பேர் வெளி நாட்டவர். அவர்களை என்ன செய்வது என்பது பற்றியும் யோசித்து வரு கின்றனர். ஆசிரமத்துக்கு சீல் வைக்க, அதிகாரிகள் தாமதம் செய்கின்றனர் என, முதல்வர் சதானந்தா கவுடாவை சந்தித்து, கன்னட அமைப்பான நவ நிர்மாண் சேனை யினர் புகார் மனு அளித் தனர். "விரைவில் சீல் வைக் கப்படும்' என, முதல்வர் உறுதியளித்தார்.

அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவு: "நித் யானந்தா ஆசிரம விவகாரம் குறித்து, அரசு விளக்கமளிக்க வேண் டும்' என, கர்நாடகா உயர்நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது. முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரிய, நித்யானந்தா மனு மீதான விசாரணை, வரும் 15ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. நித்யானந்தா கைது: கடந்த ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த நித்தியானந்தா நேற்று மதியம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஆனால், அவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் அறிவித்தனர்.14-6-2012

தமிழ் ஓவியா said...

வாயால் சிரிக்க முடியவில்லையே! கடவுள் ஜகந்நாதர் படுத்த படுக்கையாகக் கிடக்கிறாராம் 15 நாட்கள் ஓய்வு தேவையாம்!


லக்னோ, ஜூன் 14: வாரணாசி யில் உள்ள ஜகன்னாத ஆண்டவ னுக்கு உடல் நிலை சரியில்லையாம்! அவர் 15 நாட்கள் படுக்கையிலேயே ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டு மாம்!

ஜேஷ்ட பூர்ணிமா அன்று கட வுளைக் குளிப்பாட்டியதால் அவ ருக்கு உடல் நல மில்லாமல் போய் விட்டதாம். கடுமையான சளி மற்றும் இருமலால் ஆண்டவன் மிகவும் கஷ்டப்படுகிறாராம்!

வாரணாசியிலுள்ள அசி பகுதி யில் உள்ள கோவில் கதவுகள் அவரை தரிசிக்க முடியாதபடி அடைக் கப்பட்டுள்ளன. ஆண்டவனின் தனி மருத்துவர் அவருக்கு வைத்தியம் செய்து வருகிறாராம்! அவரை குணப்படுத்த மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கதா என்னும் கஷாயம் தினமும் இரண்டு முறை அவருக்குக் கொடுக்கப்படுகிறதாம்!

இந்தக் கதையைக் கேட்டு நீங்கள் வியப்படையலாம். வாரணாசி ஜகன் னாத ஆண்டவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவது வழக்கமாக நடைபெறும் ஒரு சம்பிரதாய நிகழ் வாம். கடவுளையும், மனி தனாகப் பாவிக்கும் பக்தர்கள் ஆண்டு தோறும் இந்த நிகழ்ச்சியைக் கொண் டாடுகிறார்களாம்!

ஆண்டுதோறும் முழு நிலவு நாள் அன்று ஜகன்னாத ஆண்டவனும், அவரது சகோதரன் பலராம் மற்றும் சுபத்ரா ஆகியோரும் குளிப்பாட்டப் பட்டதற்கு அடுத்த நாள் கடவுளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் விடுமாம்! பக்தர்கள், ஆண்டவனுக்கு அளவுக்கு அதிகமாக தண்ணீர் கொடுத்துவிடுவதால் இந்த உடல் நலக்கோளாறு ஏற்படுமாம்!

33 வயது பண்டிட் சிறீராம் சர்மா கடவுளின் வைத்தியராக பல ஆண்டு களாக நீடித்து வருகிறாராம்!

தன்னையே நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள் பக்தர்களை காப்பாற்றப் போகிறாராம்! ஹி.... ஹி....14-6-2012

தமிழ் ஓவியா said...

கலைஞர் அவர்களின் எச்சரிக்கை!


என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்ட பாடத் திட்டத்தில் தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பைக் கேலி செய்து கேலிச் சித்திரம் வெளியிட்டதன் மூலம், தமிழ்நாட்டில் மீண்டும் இந்தி எதிர்ப்புத் தீ கிளர்ந்து எழக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து திமுக தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்து மிக முக்கியமானது.

கேள்வி: மத்திய அரசு இந்தியைத் திணிக்கும் முயற்சியில் மீண்டும் ஈடுபடுகிறதா?

கலைஞர்: அரசு அத்தகைய முயற்சிகளில் ஈடுபடா விட்டாலும், ஆங்காங்குள்ள சில அதிகாரி களும், இந்தி வெறியர்களும், இந்தியைத் திணிக்கும் முயற்சியில் மறைமுகமாக தங்களால் இயன்ற அளவிற்கு ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார் கள். அத்தகைய முயற்சிகளில் ஒன்றுதான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கிண்டல் செய்து வெளியிட்ட கேலிச் சித்திரம்.

அதுபோலவே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரிந்துவரும் அலுவலகங்களில் பதவி உயர்விற்குக் கருத்து கொள்ளப்படும் அம்சங்களில் ஒன்றாக, அவர்கள் ஆட்சி மொழியான இந்தி மொழியின் செயல்பாட்டிற்கு ஆற்றிட்ட பணிகளைக் குறிப்பிட வேண்டுமென்று கேட்டிருப்பதாக எனக்குத் தகவல் சொல்லப்பட்டது.

இந்தி மொழி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அலுவலர்களைப் பாதித்திடும் இதுபோன்ற செயல்களையெல்லாம் மத்திய அரசு உடனடியாகக் கவனித்து, நேரு கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்றிடும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இது ஏதோ சின்ன விடயம் என்று மத்திய அரசு அலட்சியப்படுத்துமானால், விபரீதத் தீயாக வெடித்துக் கிளம்பும் என்று எச்சரிக்கிறோம்.

மற்ற மற்ற மாநிலங்கள் எப்படியிருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தி எதிர்ப்பு என்பது தமிழர்களின் இரத்தவோட்டத்தில் கலந்த ஒன்றாகும்.

இந்தியை ஒரு மொழி திணிப்பாக மட்டும் கருதவில்லை. பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பாகவே கருதுகிறது தமிழ்நாடு!
யாரும் நினைத்துப் பார்க்காத கால கட்டத்திலேயே தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு இதழில் (7.2.1926). தமிழிற்குத் துரோகமும், இந்தியின் இரகசியமும் எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றினைத் தீட்டியுள்ளார்கள்.

1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உச்சக்கட்டமாகத்தான் தமிழ்நாடு தமிழருக்கே! என்று முழக்கமிட்டார் தந்தை பெரியார் என்பதை மறந்துவிடக் கூடாது.

1955 ஆகஸ்டு முதல் தேதியன்று தேசியக் கொடியைக் கொளுத்தும் போராட்டம் தந்தை பெரியார் அவர்களால் அறிவிக்கப்பட்டதும் இந்தித் திணிப்பை மய்யப்படுத்தி தான் என்பதை மறக்க வேண்டாம். பிரதமர் நேரு அவர்கள் சார்பாக முதல் அமைச்சர் காமராசர் அவர்கள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் அந்தப் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக தந்தை பெரியார் அவர்கள் அறிவித்தார்கள் என்பது நினைவூட்டத்தக்கதாகும்.

திமுக ஆட்சியைப் பிடித்து, அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராகக் குறைந்த காலமே இருந்தாலும்கூட, அந்தக் கால கட்டத்திலேயே தமிழ்நாட்டில் இரண்டே மொழிகள்தான் - தமிழும் - ஆங்கிலமும்தான் என்று வரையறுத்துச் சட்டம் செய்தார் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

நேர்முகமாக இந்தியைத் திணிக்க முடியா விட்டாலும் சிறிது சிறிதாக இந்தியின் விஷம வால் அவ்வப்போது நீட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் அறிவிப்புக் கற்களிலும் நுழைத்துப் பார்த்தார்கள். அடுத்த கணமே ஆவேசத்தைக் காட்டியவுடன் வாலை இழுத்துக் கொண்டார்கள்.

இப்பொழுதுகூட அகில இந்தியத் தேர்வுகளை இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே எழுதிட அனுமதிக்கப்படுகிறது.

மானமிகு கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்று வோர் இந்தியைப் படித்தால் பலன் உண்டு என்கிற வகையில் மறைமுக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

திராவிட இயக்கம் இவற்றையெல்லாம் எந்தக் காரணத்தை முன்னிட்டும் அனுமதிக்காது - அனுமதிக்கவே அனுமதிக்காது - எச்சரிக்கை! 14-6-2012

தமிழ் ஓவியா said...

இது பெண்களின் சாதனைக் காலமோ!


பகுத்தறிவு பகலவன் என்று போற்றப்படும் தந்தை பெரியார் பற்றி இந்த சமுதாயம் குறிப்பாக, தமிழ்நாடு இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லையோ என்றுதான் அய்யப்பட வைக்கிறது. அதிலும் குறிப்பாக, இப்போதுள்ள தலைமுறைக்கு, அவர் திராவிட இயக்கத்தின் தந்தை, கடவுள் இல்லை என்பதைத்தான் தன் வாழ்நாள் முழுவதும் ஆணித்தரமாக கூறிவந்தார் என்று மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்கிறது. அவருடைய கடவுள் மறுப்புக் கொள்கையும், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான், அவர் சமு தாயத்தை சீர்திருத்துவதற்காக எவ்வளவோ போராட்டங்களை நடத்தினார். பெண்கள் முன்னேற வேண்டும், ஆண்-பெண் வித்தி யாசம் இல்லாமல், ஆணுக்குள்ள உரிமை அனைத்தையுமே பெண் களும் பெற்றாகவேண்டும் என்பதை யெல்லாம் அழுத்தமாக கூறி வந்தார். அவர் சொன்ன பாங்கு வேண்டுமானால் அதிரடியாக இருக்குமே தவிர, ஆழ்ந்து நோக் கினால் அவர் சொன்ன கருத்துகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சமுதாயத்தை அசைத்து, இப்போது பெண்கள் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் காலமாக, பெண்கள் சாதனைபுரியும் காலமாக உருவாகிவிட்டது.

பெரியார் பேச்சுவழக்கில், சாதாரண வார்த்தைகளில் சொன்ன பல கருத்துகளை பாட்டுடைத் தலைவன் பாரதியார் கவிதை வடிவில் வடித் தெடுத்தார். அய்யா பெரியார் சொன்னதும், பாரதியார் கவிதையில் வடித்தெடுத்ததும் இப்போது நிறைவேறிக்கொண்டு இருக்கின்றன. 2 நாட்களுக்கு முன்பு அசாம் மாநிலம் கவுகாத்தியில் தரையிறங்க வேண்டிய ஒரு ஏர் இந்தியா விமானம், முன் சக்கரம் இல்லாத நிலையில் எங்கே விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த அனைவரும், பரலோகம் போய்விடுவார்களோ என்று அஞ்சிக் கொண்டிருந்த நேரத்தில், அந்த விமானத்தை ஓட்டி வந்த ஊர்மிளா யாதவ் என்ற பெண் விமானி, சற்றும் பதற்றம் அடையாமல் சமயோசித முடிவுகளை மேற்கொண்டு, யாருக்கும் ஒரு சிறு சிராய்ப்புகளும் ஏற்படாமல் லாவகமாக தரையிறக்கினார். விண் ணில் பறக்கும் விமானத்தில் மட்டு மல்லாமல், இந்த மண்ணிலும் பல்வேறு துறைகளில் பெண்களின் பங்கு பரிணமிக்கத் தொடங்கிவிட்டது. அரசி யலில் சோனியாகாந்தி தொடங்கி, ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் பெண்கள் ஜொலிக்கத் தொடங்கி விட்டனர். தமிழ்நாட்டிலும், மேற்கு வங்காளத்திலும், பெண் முதல்-அமைச்சர்கள் ஒட்டுமொத்த இந்தி யாவே உற்றுநோக்கும் வகையில், ஆட்சி செய்து வருகிறார்கள். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாநிலத்தின் உரிமைகளுக்காக மத்திய அரசாங்கத்தை நோக்கி போர்க்குரல் எழுப்புவதில் ஒரு போதும் சளைக்கவில்லை. மேற்குவங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, தன் கையில் உள்ள 19 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு, மத்திய அரசாங் கத்தை தன் மாநிலத்தின் கோரிக் கைகளுக்காக ஒரு உருட்டு உருட்டி விடுகிறார்.

இப்படி, எந்த துறையில் வெற்றி பெறும் பெண்கள் என்றாலும், அவர்கள் வெற்றிக்கு பின்னால் சமுதாயத்துக்கு ஒரு பாடம் இருக்கிறது. இந்தியா வுக்கே பெருமை தேடித்தரும் அப்துல் கலாம், எப்போதும் `கனவு காணுங்கள்' என்று கூறுவார். அதுபோல தும்பா ராக்கெட் தளத்தின் அருகே சின்னஞ்சிறு சிறுமியாக வாழ்ந்த டெசிதாமஸ் அன்று விமானங்களை பார்த்து கண்ட கனவுதான் இன்று அக்னி புத்திரியாக `அக்னி-5' ஏவு கணையை விண்ணில் செலுத்தி, அகில உலகத்தையே வியக்க வைத் திருக்கிறார். அடுத்து இந்த வரிசையில் வருகிறவர் தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் அரியலூரைச் சேர்ந்த வளர்மதி. `ரிசாட்-1' செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பொறுப்பு வகித்த வளர்மதி மிக வெற்றிகரமாக அந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தினார்.

தமிழ்நாட்டில் பொதுவாகவே ஒரு கருத்து நிலவுகிறது. அந்த பள்ளிக் கூடத்தில் படித்தால்தான் முன்னேற முடியும், சென்னை போன்ற பெரிய நகரங்களில் படித்தால்தான் வாழ்க்கையில் உயர முடியும் என்றெல்லாம் வீணான கற்பனை நிலவிக்கொண்டு இருக்கிறது. ஆனால், அரியலூர் நிர்மலா பெண்கள் பள்ளியில் படித்த வளர் மதி, அங்கு சிறப்பான கல்வியை கற்று, நன்றாக படித்து, தொடர்ந்து தொழில் நுட்பக் கல்லூரிகளில் படித்த படிப்புதான் கேம்பஸ் இன்டர்வியூவில் அவருக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (இஸ்ரோ) வேலை கிடைக்கச் செய் தது. அதிலும் தன் முத்திரையைப் பதித்த அவர், தற்போது செயற்கைக் கோளையே விண்ணில் செலுத்தி விட்டார். இன்னும் என்னென்ன சாதனைகளை புரியப்போகிறாரோ? என்று எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக, கல்வியாண்டு தொடங்கும் இந்த நேரத்தில், "எந்த பள்ளிக்கூடம் என்பது முக்கியமல்ல, எங்கு படித்தாலும், எப்படி படிக்கிறோம்?'' என்பதை வைத்துதான் முன்னேற் றம் என்பதை ஒரு பாடமாக வளர்மதி சொல்லிவிட்டார். இதையே எல்லா மாணவர்களும் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்.

நன்றி: தினந்தந்தி தலையங்கம் 13.6.2012

தமிழ் ஓவியா said...

மகுடிக்கு மயங்குமா பாம்பு?

உண்மையில் சொல்லப் போனால் பாம்புக்குச் சுத்தமாகக் காது கேட்காது. இது ஒரு செவிட்டுப் பிராணி என்பதே உண்மை. ஊர்வன வகையைச் சார்ந்த எந்த உயிரினத்திற்கும் பாலூட்டிகளைப் போல புறக்காது கிடையாது. ஆனால், மாண்டிபுளார் வழி எனப்படும் காதுத் துளை உண்டு. இத்துளைகள் மூலம் இவை ஓசையை நன்கு கேட்டு அறிய முடியும். ஆனால், பாம்புக்கு மாண்டிபுளார் செவியும் கிடையாது.

அதேசமயம் பாம்பு மிகவும் அருகில் ஏற்படும் அதிர்வு களை அறிந்துகொள்ளும் திறன் பெற்றது. இதைத்தான் பாம்புக்கு கூர்மையான செவி அமைப்பு உடையதாக தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். இருப்பினும் ஒரு கூடுதல் செய்தி என்னவென்றால், பாம்பாட்டிகள் மகுடி ஊதும்போது, மகுடி ஓசை மென்மையாக பூமியில் தவழ்ந்து ஓடுகிறது. அவ்வாறு தவழ்ந்தோடும் இசை பூமியின் தரை மீது இருக்கும் பாம்பின் உடலில் பட்டு அதிர்கிறது. அந்த அதிர்வுக்கு ஏற்பவே பாம்பு படமெடுத்து ஆடுகிறது. 14-6-2012

தமிழ் ஓவியா said...

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது அறியாமையா? அகம்பாவமா?

பட்டிமன்றத்தை பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து தமிழர் தலைவர் ரசித்த காட்சி



12.06.2012 அன்று திருவெறும்பூரில் "திராவிடத் தால் வீழ்ந்தோம் என்பது அறியாமையா? அகம் பாவமா?" எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடை பெற்றது. மிகச் சிறப்பான ஏற்பாடும், மிக மிகச் சிறப்பான கூட்டமும், திராவிடத்தால் வீழவில்லை என்பதை மெய்ப்பித்தது.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்பவர் களுக்கு அகம்பாவம் எனும் பெயரைக் கொடுத்து விடலாம். ஓ... அப்படி இருக்க வாய்ப்பிருக்குமோ என எண்ணுபவர்கள் அறியாமையில் இருப்பதாய் கருதலாம். எப்படி இருந்தாலும் உண்மை நிலவரம் எப்போதும் தோற்ற வரலாறு இல்லை. பார்ப்பன வரலாற்றில், அவர்களின் சூழ்ச்சிகளுக்கு பெரும் பாலும் தோல்விகளே இருந்ததில்லை. ஆனால் பெரியாரை மறைக்க அல்லது அழிக்க எடுத்த அத்தனை முயற்சிகளும் அவர்களுக்குத் தோல்வி களையே தந்தன. அதுவும் சாதாரண தோல்விகள் அல்ல. தொடர் தோல்விகள். சரி பெரியார் இருந்த போதுதான் முடியவில்லை, மறையட்டும் பார்க் கலாம் எனக் காத்திருந்தார்கள். மறைந்த பிறகு நேரடியாகவும், மறைமுகமாகவும், சில கூலித் தமிழர்களை வைத்தும் பெரியாரைத் தொட்டுப் பார்த்தார்கள். அவர் வாழ்ந்த காலத்தை விடவும் அவருக்கான ஆதரவு பல்கிப் பெருகியிருப்பதைக் கண்டுப் பதறித்தான் போனார்கள் என்பதைவிட வும், குலை நடுங்கிப் போனார்கள் என்பது தான் மிகச் சரியானதாய் இருக்கும். பகுத்தறிவைப் புரிந்துக் கொள்வதும், முற்போக்காய் வாழ்வது என்பதும் உலகில் சாதாரணமான நடவடிக்கையாகக் கொள்ள முடியாது. அதை எந்த ஒன்றோடும் ஒப்பிட முடியாது. நானும் பகுத்தறிவுவாதி, நானும் முற்போக்காளர் என சிலர் கூறிக் கொள்வதுண்டு. ஆனால் காலம் அவர்களை யார் என்று நமக்குச் சொல்லிவிடும். அவர்களின் புரிதல், தெளிதல், உறுதி அனைத்தும் அப்போது நமக்கு விளங்கிவிடும். அப்படியான புரிதல், தெளிதல் உள்ள மனிதர்களைப் பார்ப்பனீ யம் சுலபமாக விலைக்கு வாங்கிவிடும். ஆனால் ஜெயிக்க முடியாது. அதையும் பார்ப்பனர்கள் அறிவர். எனினும் சலசலப்பை உண்டு பண்ணி 3 சத விகிதம் குழப்படியை ஏற்படுத்தினாலே போதும் என நினைப்பார்கள். நமக்கு 3 சின்னதாக இருக்க லாம். பார்ப்பனர்களுக்கு அது பெரிய சங்கதி. காரணம், அவர்கள் இனத்தின் மொத்த அளவே அவ்வளவுதானே! ஆனால் அது தெரியாமல் நாளையே உலகை மாற்றப் போகிறேன் எனத் துடிக்கும் சில அதிதீவிர முற்போக்குகள் வந்த வேகத்தில் மறைந்து போவார்கள். இப்படி உயிர் வாழ்ந்து கொண்டே மறைந்து இருப்பவர்கள் கொஞ்சம் இருக்கிறார்கள். இவர்கள் மீண்டும் பார்ப்பானிடம் போக முடியாது. காரியம் முடிந் ததும் அவன் கதவைச் சாத்திவிடுவான், மரியாதை கிடைக்காது. தமிழர்களிடம் வந்தால் அவமரியாதை கூட கிடைக்காது, போக வேண்டியதுதான். அப்படிப் போக இருக்கும் சிலர் நம்மைச் சீண்டவும், மக்களைச் சிதறடிக்கவும் இப்போது வந்திருக் கிறார்கள். வா! பகையே வா ! என மிரட்டலைக் கூட கவிதை வடிவில் எழுதி வரவேற்ற இனம் தமிழரினம். உங்களின் கடைசிக் காலம் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று உங்கள் வீட்டில் கூட எதிர்பார்த் திருக்கமாட்டார்கள். மக்களைக் குழப்பவும், சிதறவும் செய்ய நினைப்பவர்கள், நிழல் கூட இல்லாமல் காணாமல் போவார்கள் என்பது தான் நடைமுறை நிஜம்.

தமிழ் ஓவியா said...

இப்படியான நிலையில், மக்களுக்கு லேசான அதிர்வு வரும் நேரத்தில் கூட அவர்களுக்குப் பக்க பலமாய் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், "திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது அறியாமையா? அகம்பாவமா? எனும் பட்டிமன்றம் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக் கரசு நடுவர் பொறுப்பை ஏற்றார். திராவிடத்தால் வீழ்ந்தோமா? எழுந்தோம்!

அறியாமையே எனும் தலைப்பில் பேசிய துணைப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன்,

ஆற்றல் இல்லாத, தமிழினத்தின் அருமை தெரியாத, அறியாமையால் உழல்பவர்களே திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிறார்கள். ஆனால் திராவிடத்தால் எழுந்தோம் என்பதுதான் வரலாறு! தொடர்ந்து வாழ்கிறோம் என்பதுதான் நடைமுறை! தனிப் பெருந்தலைவரான பெரியார் மட்டும் பிறவாமலிருந்தால் ஏனென்று கேட்கவும் நாதியில் லாமல் போயிருப்போம். தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்களின் அன்றைய, இன்றைய நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் அருமை தெரியும். வீழ்ந்தோம் என்பது நன்றி கொல்பவர் வார்த்தை. இடி ஒளியாய்த் தோன்றி, அறியாமை இருள் கிழித்த சூரியன் அல்லவா பெரியார் ! பார்ப்பன இனத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும் சொல் அல்லவா திராவிடம் என்பது! அந்தத் திராவிடத்தின் பெயரால் தானே இந்தச் சமூகத்திற்கு மண்ணுரிமை, பெண்ணுரிமை, தன்னுரிமை ஆகிய வற்றைப் பெரியார் பெற்றுத் தந்தார். அது போகட் டும், தமிழின் சுயமரியாதையைக் காப்பாற்றியவர் யார்? இந்தித் திணிப்பு திமிறி வந்தபோது, நேரெதிர் நின்ற நெஞ்சுரம் யாருடையது? அனைத்தும் செய்தவர் பெரியார். நீங்கள் செய்தது என்ன? இந்தி எழுத்துகளைக் கறுப்பு மையால் அழித்தால், கறுப் புக்கு மறுப்பு என்றீர்கள்! மறுப்புக்கு (மன்னிக்கவும்) செருப்பு என்று பேசும் நிலையெல்லாம் அன்று தோன்றியதே. ஆக இந்தித் திணிப்பில் இருந்தும், உங் களின் தப்பும் தவறுமான கணிப்புகளில் இருந்தும் தமிழை மீட்டது தந்தை பெரியார் அல்லவா? எனக் கேள்விகளைத் தொடர் குண்டுகளாய் வீசினார் துரை.சந்திரசேகரன்.

தெரிந்தே பேசுவதற்குப் பெயர் அறியாமையா? அகம்பாவமா? எல்லாமும் தெரிந்தே பேசும் இவர்களின் பெயர் அறியாமை அல்ல, அகம்பாவமே எனப் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் துணை இயக்குநரும், தலைமைக் கழகப் பேச்சாளருமான அதிரடி அன் பழகன் பேசினார். பார்ப்பான் கை ஏவுகணையாகச் சிலர் புதிய பொறுப்பேற்றுள்ளனர். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பவர்களின் வாய்ப்பு, வசதி, தந்திரங்கள், இன்னபிற எல்லாவற்றையும் எண்ணிப் பாருங்கள். அப்போது தெரியும் அறியாமைக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை என்பது. ஒரு கவிஞன் பெரியார் குறித்து இப்படி எழுதினான். "நீ பிறக்கவில்லை எனில், அறிவில்லை, ஆக்கமில்லை, அறிஞர் பிறப்பே இல்லை" என்று. ஆக அறிஞர் பிறப்பே இல்லை எனும் போது, இந்தப் "புடலங் காய்கள்" எம்மாத்திரம்? பெரியரால் வாழ்ந்து கொண்டு, பெரியாரையே குறை கூறும் சமூகக்குற்றவாளிகள் இவர்கள். திராவிடர் எனப் பயன்படுத்தியதால் எல்லாமும் போனது என் கிறார்கள். உ.வே.சா-வை "தமிழ்த் தாத்தா" என் கிறார்கள். பார்ப்பான் போனால் போகிறதென்று ஒப்புக் கொள்கிறான். இதையே "திராவிடத் தாத்தா" எனச் சொல்லுங்கள். உ.வே.சா-வே ஒப்புக் கொள்ளமாட்டார். "தமிழன் வெங்கட்ராமன்" ஜனாதிபதியாக இருந்தார் எனச் சொல்லுங்கள், பார்ப்பான் சிரிப்பான்; சிலிர்ப்பான்! "திராவிடன் வெங்கட்ராமன்" எனச் சொல்லிப் பாருங்கள்... சவுண்டியிலிருந்து, சங்கரமடம் வரைக்கும் குதிக்கிற சத்தம் கேட்கும். தமிழ், தமிழர் என்போரே! நான் ஒன்று கேட்கிறேன். தமிழுக்கும், தமிழருக்கும் எதிரான பார்ப்பனர்களை எதிர்த்துப் பேசுவீர்களா? கடவுளை, மூடத்தனத்தை எதிர்க்கத் தயாராவீர் களா? திராவிடர் என்றால் யாருக்கோ அடிமை என்கிறார்கள். யாருக்கு என்றுதான் புரியவில்லை? பங்களாதேசுக்கா, பாகிஸ்தானுக்கா என்று கேட்டுச் சொல்லுங்கள் என முடித்தார். தமிழ்ப் புத்தாண்டு மாறிவிட்டது... தெரியுமா?

தமிழ் ஓவியா said...

தமிழை வாழ வைப்பதாய் நித்தமும், நிறையப் பேசும் தமிழ் அன்பர்களைக் கேட்கிறேன். தமிழ்ப் புத்தாண்டு தை-1 எனத் திராவிடர் இயக்கம் தான் சட்டம் இயற்றியது. அது இப்போது மாற்றப்பட்டது. இதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? இனியும் என்ன செய்வதாய் உத்தேசத்தில் இருக்கிறீர்கள்? தமிழில் பேசினால் தீட்டாகிவிடும் என்றார் சங்கரமட ஆசாமி. அப்போதுதான் என்ன செய்தீர்கள்? திருக்குறளைக் தீக்குறள் என்றார்கள். அப்போதாவது ஏதும் செய்தீர்களா? கடவுள், மதம், ஜாதி, மூடத்தனம் இவற்றுக்கு எதிராய் நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். தமிழ், தமிழர், தமிழ்த்தேசம் எனத் தொடர்ந்து பேசும் நீங்கள், அவற்றுக்காவது ஏதாவது செய்ததுண்டா? இங்கே சமூகநீதிப் போராளி என்றெல்லாம் சிலர் போட்டுக் கொள்கிறார்கள். இந்தியாவின் உண்மையான சமூகநீதிப் போராளி வி.பி.சிங் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, "கதவை மூடுங்கள்; கறுப்புக் கொடி காட்டுங்கள் " என வசனமெல்லாம் பேசப்பட்டது. திராவிடர் எனும் பெயரைப் பாதுகாப்புக் கருதிப் பெரியார் பயன்படுத்தினார். ஆனால் தமிழருக்கும், தமிழுக்கும் அவர்தான் அத்தனையும் செய்தார். நீங்கள் தமிழ், தமிழர் எனும் சொற்களை மட்டுமே பேசுகிறீர்கள். அந்தத் தமிழுக்கும், அந்தத் தமிழருக்கும் இதுவரை நீங்கள் செய்தது ஒன்றாவது இருக்கிறதா? எனத் தலைமைக் கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் கேட்டார்.

சாதாரண அகம்பாவம் அல்ல... ஆரிய அகம்பாவம்!