இராஜன்: ஏண்டா, டேய்! இராமா! பெண்கள் விடுதலை, பெண்கள் விடுதலை என்று பேசுகிறார்களே, அதென்ன விடுதலை? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?
இராமன்: உனக்கெப்படியப்பா புரியும்? உனக்கு கால் டஜன் பெண்டாட்டிகள் இருக்கிறார்கள்; அரை டஜன் வைப்பாட்டிகள் இருக்கிறார்கள்; அதோடு நிறையப் பணமும் இருக்கிறதே?
இராஜன்: நான் சொல்லுவது உனக்குக் கேலியாக இருக்கிறது. இந்தப் பெண்களிடமிருந்து எனக்கு (ஆண் களுக்கு) விடுதலை கிடைப்பதுதான் பெரிய கஷ்டமாயிருக்கிறது? ஒருத்தி விட்டால் மற்றொருத்தி இழுக்கிறாள். இவர்களைவிட்டு நான் எப்படி விடுதலை அடைகிறது?
இராமன்: சரிதான்; இப்போது புரிந்தது. நீ அந்தப் பெண்களிடம் கஷ்டப்படுவதினால் உனக்குத்தான் விடுதலை வேண்டும் என்கிறாய். உனக்கு 9 பெண்கள் எதற்கு? ஒரு பெண் இருந்தால் போதாதோ? ஒரு பெண் 9 கணவனை மணம் செய்து கொண்டும் காதலனாக வைத்துக் கொண்டும் இருந்தால் நீ அந்த ஒன்பதில் ஒருவனாக இருக்க சம்மதிப்பாயா?
இராஜன்: ஒரு பெண்ணுக்கு 9 புருஷன் என்றால் அது என்ன மிருகமா? நாமென்ன மிருக சாதியா? நன்றாய்ச் சொல்லுகின்றாய் நாக்கு கூசாமல்!
இராமன்: பெண்கள் விடுதலை என்றால் இப்போது உனக்கு அருத்தமாச்சுதா? நீ ஒன்பது பெண்களை வைத்துக் கொண்டு அவர்களுடைய இயற்கை உணர்ச்சிக்கு உன்னை வலிய இழுக்க வேண்டிய மாதிரிக்கு அவர் களை அடைத்து வைக்கலாம்.அது மனுஷத்தன்மை என்கிறாய். ஒரு பெண் 9 கணவனை வைத்துக் கொண்டி ருந்தால் அது மிருகத்தனம் என்கிறாய், இந்தக் கொள்கை போக வேண்டு மென்பதைத் தான் பெண்கள் விடுதலை என்று சொல்லுவது. புரிந்ததா?
இராஜன்: புரிந்தது. நன்றாய்ப் புரிந்தது. நான் அவசரப்பட்டு மிருகத் தன்மை என்று சொல்லிவிட்டேன். ஒரு பெண்ணுக்கு 9 பேர் என்பது இன்றும் தாராளமாய் நடக்கின்றதே. நம்ம தேவதாசிகளைப் பாரேன். நம்ம விலைமாதர்களைப் பாரேன். 9 தானா 90ம், 900-மும்கூட இருக்கும் போலிருக்கின்றதே.
மக்கள் அங்கு போவ தில்லையா? அவர்களுக்கு மரியாதை செய்வதில்லையா? அந்தப் பெண் களுக்குச் சுதந்திரமில்லையா? தங்கள் இஷ்டம் போல் பணம் கேட்பதும் தங்கள் இஷ்டம் போல் ஒருவனை நீ வேண்டாம் வெளியில் போ என்பதும் நாம் தினமும் பார்க்கவில்லையா? ஆகவே அவர்களுக்குச் சுதந்திரமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?
இராமன்: பொறு, பொறு அவசரப்படாதே. சுதந்திரம் இருப்பதாக நீ சொல்லும் பெண்கள் யார் என் பதைத் தெரிந்து கொண்டாயா? தேவதாசிகளுக்கும் விலைமாதர் களுக்கும் சுதந்திரம் இருப்பதாகச் சொன்னாய். நீ சொல்கிறபடி பார்த்தால் ஒரு பெண் சுதந்திரமாக இருக்க வேண் டுமானால் ஒன்று தேவதாசியாகப் போய்விட வேண்டும்.
அல்லது விலைமாதாகப் போய்விட வேண்டும். வெள்ளைத் தமிழில் சொல்ல வேண் டுமானால் தேவடியாளாக அல்லது குச்சுக்காரியாகப் போய்விட வேண்டும் என்கிறாய். ஒருவனையே கணவனாகக் கொண்டு திருமணம் செய்து வாழ்க்கை நடத்துகிற பெண்களுக்கு விடுதலை என்பது ஒரு ஆணுக்குப் பல பெண்களில் ஒருத்தியாய் இருந்து அடைபட்டுக் கிடக்க வேண்டியதுதான் கடமைபோல் இருக்கிறது.
இராஜன்: ஒரு பெண் தனிமையில் இருந்து வாழ்க்கை நடத்திக் கொள்ளட்டுமே, யார் வேண்டாம் என் கின்றார்கள்? பெண்கள் தாங்களாகத்தானே யாருக்காவது ஒருவ க்கு வாழ்க்கைப்பட வேண்டும் என்று துடிக்கிறார்கள். அவர்கள் பெற் றோர்களும் வயது வந்துவிட்டதே என்ன செய்வது? யார் தலையிலாவது கட்டிவிட வேண்டுமே, இல்லா விட்டால் கெட்ட பெயர் வந்து விடுமே என்று கவலைப்படுகிறார்கள். அதற்கேற்றபடியே கல்வி இல்லாமலும் தொழிலில் பழக்காமலும் வளர்க் கிறார்கள்.
அப்படிப்பட்ட பெண்ணைக் கட்டிக் கொள்ள வருபவனும் தனக்கு அடிமைத் தொழில் செய்ய ஒரு ஜீவன் வேண்டும் என்று கருதியே பெண்ணைத் தேடுகிறான். அதோடு இவள் பெறுகின்ற குழந்தைகளுக்கும் இவளுக்கும் வாழ்விற்கு வேண்டியதை எல்லாம் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டு செய்கிறான்.
இதற்கு மேல் அடிமை புகுந்தவளுக்கு எஜமானன் வேறு என்ன செய்ய முடியும்? தான் தேடிய சொத்துக்களையும் அடிமை பெற்ற குழந்தைகளுக்கே வைத்து விட்டுப் போகிறான். இன்னும் என்ன தான் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறாய்?
இராமன்: நீ சொல்லுவதைப் பார்த்தால் பெண்களைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டாம் என்கிறாய் போல் இருக்கிறது. கல்யாணம் செய்து கொண்டால் அடிமையாகத்தான் இருக்க வேண்டும் என்கின்றாயாக்கும்?
இராஜன்: நான் அப்படிச் சொல்லவில்லை; இயற்கை அது. கொடுப்பவன் கை மேலாகவும், வாங்குபவன் கை கீழாகவும்தான் இருக்கும். கல்யாணம் இல்லாமல் இருந்தால் என்ன முழுகிப்போய் விடும்? மலையாளத்தில் சில இராணிகளும் ஜமீன்தாரணிகளும் சம்பளம் கொடுத்து புருஷன்மார்களை வைத்துக் கொண்டு இருக்கிறார்களே, அவர்கள் கவுரவம் குறைந்துபோய் விட்டதா? அல்லது சமுதாயத்தில் குறை கூறுகிறார்களா?
அவ்வளவு தூரம் போக உன்னால் முடியாவிட்டால் பெண்களை நன்றாய்ப் படிக்க வைத்து அல்லது ஏதாவது ஒரு தொழிலில் அமர்த்தி, 25 வருடம் வரை கல்யாணப் பேச்சு பேசாமல் 25 முதல் 30 வயதிற்குள் அந்தப் பெண்ணையே தனக்குப் பிடித்தவனை ரிஜிஸ்டர் கல்யாணம் செய்துகொள்ளும்படிச் செய். வாழ்க்கைக்கு (அன்னவஸ்திரத்துக்கு) புருஷன் கையை எதிர்பார்க்காமல் செய். அப்போது பெண் விடுதலை வேண்டி இருக்குமா அல்லது ஆண் விடுதலை வேண்டியிருக்குமா அல்லது இருவரும் தங்களை ஒருவருக்கொருவர் கட்டுப் படுத்திக் கொள்வார்களா என்று பார்!
------------------சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் தந்தை பெரியாரால் எழுதப்பட்டது-குடிஅரசு 27.9.1945
8 comments:
உதவாதினி ஒரு தாமதம்
வரும் ஆகஸ்ட்- 10 ஆம் நாள் இயக்க வரலாற்றில் மட்டுமல்ல; இனவரலாற்றிலும் மிக முக்கியமான நாள். இந்நாளில்தான் 1962 ஆம் ஆண்டு விடுதலையில் தமிழர்களின் உரிமை மீட்பர் தந்தை பெரியார் அவர்கள் வரவேற்கிறேன் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். விடுதலையின் ஆசிரியராக திரு கி.வீரமணி பொறுப்பேற்கிறார். அவரது ஏக போகத்தில் விடுதலை ஒப்படைக்கப்படுகிறது! என்று. அதுவரை தந்தை பெரியார் அவர்களால் இந்த அளவு உரிமை வேறு யாருக்கும் வழங்கப்பட்டதில்லை என்று கணிக்கும் அளவுக்கு வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதினார்.
தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு வீண் போகவில்லை என்பது விடுதலை நடந்து வந்த கடந்த கால பாதை, நடந்து வருகின்ற நிகழ்காலப் பாதைகளை காழ்ப்பின்றி, கழிப்பின்றி திறந்த மனத்தோடு பார்ப்பவர்கள் நிச்சயம் அறிவார்கள்.
50 ஆண்டு விடுதலை ஆசிரியராகப் பணி புரிந்த ஆசிரியருக்கு 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களை அளிப்பது என்ற தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொடுத்த கருஞ்சட்டையினர், புளகாங்கிதத்தோடு வீறுநடை போட்டுக் கொண்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக 6 மாத சந்தா இந்த ஜூன் மாதத்தோடு முடிவுறும் நிலையில், அவற்றைப் புதுப்பிக்கச் செய்யும் பணியில் மீண்டும் நாம் ஈடுபட்டு களத்தில் இறங்கியுள்ளோம்.
இதுவரை, கிருட்டிணகிரி, தருமபுரி, சேலம், ஆத்தூர், மேட்டூர், திருச்சி, லால்குடி, கரூர், திருவண்ணாமலை, செய்யாறு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கற்பட்டு, விழுப்புரம், திண்டிவனம், பெரம்பலூர், கும்பகோணம் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், பழனி, தேனி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, மதுரை, மதுரை புறநகர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கலந்துரையாடல் கூட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன. அடுத்துத் தொடரவும் உள்ளன.
மாநிலக் கழகப் பொறுப்பாளர்கள் இக்கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த முறை காட்டிய எழுச்சியில் எள்ளளவும் குறைவில்லாமல் கருஞ்சட்டைத் தோழர்கள் காட்டிய எழுச்சியும், ஆர்வமும் நெகிழ வைக்கின்றன.
சமூகப் புரட்சிக்காகவே கருப்பு மெழுகுவர்த்திகளாகத் தங்களை ஒப்படைத்துக் கொண்டுள்ள இத்தோழர்களின் தொண்டறத்தை என்னவென்று சொல்லி பாராட்டுவது!
இந்தத் தொண்டர்களுக்கு நிகர் இந்த உலகில் வேறு யார்? நம்மால் முடியாதது மற்றவர்களாலும் முடியாது - மற்றவர்களால் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்று கழகத் தலைவர் அவர்களின் கணிப்பே கணிப்பு!
கலந்துரையாடல் கூட்டங்களில் கருத்துகள் தெரிவித்த தோழர்கள் ஒரே மாதிரியாக ஒன்றைச் சொன்னார்கள்.
மக்களிடம் சென்றால் வரவேற்பிருக்கிறது - மரியாதை இருக்கிறது - நம்மிடம் அன்பு காட்டுகிறார்கள் - பாசம் காட்டுகிறார்கள் - நம் தொண்டைப் பாராட்டிப் பேசுகிறார்கள்.
விடுதலையை முதன்முதலாகப் படித்த சந்தாதாரர்கள் இது போன்ற ஏட்டை இதுவரை நாங்கள் படித்ததில்லை. அவ்வளவு தகவல்கள், கருத்துகள் பூத்துக் குலுங்குகின்றன - எழிலாகவும் ஏடு உள்ளது - எடுப்பாகவும் உள்ளது என்று மனந்திறந்து பாராட்டுகிறார்கள் என்று சொன்னபோது மனமெல்லாம் புல்லரித்தது. நல்ல சமயமிது - தோழர்களே - நழுவ விடாதீர்கள்! - கொள்கைப் பரப்புதலில் மகத்தான புலிப் பாய்ச்சல் விடுதலை சந்தாதாரர்களின் எண்ணிக்கையை பெருக்குவது.
கடைசி மூடன் திருந்தும் வரைக்கும் , கடைசி சுரண்டல் ஆசாமிகள் நடமாடும் வரைக்கும், நமக்கு வேலைகள் உண்டே!
இதனைச் சாதிப்பதில் நமக்குக் கிடைத்திருக்கும் போர் ஆயுதம் அறிவு ஆசான் அய்யா நம்மிடம் பத்திரமாகக் கொடுத்துச் சென்ற விடுதலை எனும் ஆயுதமே!
பாதுகாப்பான ஆயுதத்தை மட்டும் அய்யா கொடுத்துச் செல்லவில்லை. அதனைப் பாதுகாக்கும் மகத்தான தலைவரை ஆசிரியராகவும் நமக்குக் கொடுத்துச் சென்றார்.
இந்தச்சூழலில் எதை நம்மால் சாதிக்க முடியாது? நம் பலம் நமக்குத் தெரிய வேண்டாமா?
கருஞ்சட்டைக் குடும்பத்தினரே, களத்தில் இறங்குவீர்! ஒவ்வொரு சந்தாதாரரையும் சந்திக்கப் போகும்போது தனியாகச் செல்லாதீர்கள். குறைந்த பட்சம் நான்கைந்து பேராவது செல்லுங்கள்.
விடுதலை வாசகர் வட்டத்தைத் தொடங்குங்கள்! தொடங்குங்கள்!! ஊத்தங்கரை வழிகாட்டுகிறது - உதவாதினி ஒரு தாமதம், உடனே எழுவீர் கருஞ்சட்டை வீரர்காள்!
- மின்சாரம் 25-6-2012
சிறுவாணி ஆற்றின்மீது அணையைக் கட்டாதே! கோவையில் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
கோவை, ஜூன் 25- கோவை மாநகர மக்களின் குடிநீருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும், கோவை, திருப்பூர் மாவட்டங்களின் விவசாயத் தைப் பாதிக்கச் செய்யும் வகையிலும், சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டத் திட்ட மிட்டுள்ள கேரள மாநில அரசைக் கண்டித்தும், அதனைத் தடுக்கக் கோரி மத்திய அரசை வலி யுறுத்தியும் கோவை மாநகரில் செஞ்சிலுவைச் சங்கம் அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப் பாட்டம் இன்று நடைபெற்றது. ஏராளமான கருஞ் சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்றனர்.
கழகத் துணைப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையிலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிறைநுதல் செல்வி முன்னிலை யிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்ட முழக்கங்கள்
வாழ்க, வாழ்க, வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே
அன்னை மணியம்மையார் வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே
தமிழர் தலைவர் வீரமணி வாழ்கவே!
வெல்க வெல்க வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!
போராட்டம் பேராட்டம் உரிமை மீட்புப் போராட்டம்
உரிமை மீட்புப் போராட்டம்
கேரள அரசே, கேரள அரசே,
கட்டாதே, கட்டாதே! சிறுவாணி ஆற்றிலே
சிறுவாணி ஆற்றிலே அணையைக் கட்டாதே
அணையைக் கட்டாதே!
சட்டவிரோதம் சட்ட விரோதம்
மத்திய அரசின் மத்திய அரசின்
அனுமதி பெறாமல், அனுமதி பெறாமல்
அணையைக் கட்டாதே, அணையைக் கட்டாதே!
மத்திய அரசே, மத்திய அரசே!
நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு!
சட்டவிரோதமாய், சட்டவிரோதமாய்
அணையைக் கட்டும், அணையைக் கட்டும்
கேரளாவின் மீது, கேரளாவின் மீது
நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு!
கேரள அரசே, கேரள அரசே!
வயிற்றில் அடிக்காதே, வயிற்றில் அடிக்காதே!
ஏழை விவசாயிகளின், ஏழை விவசாயிகளின்
வயிற்றில் அடிக்காதே, வயிற்றில் அடிக்காதே!
வேடிக்கை பார்க்காதே, வேடிக்கை பார்க்காதே!
மத்திய அரசே, மத்திய அரசே!
வேடிக்கை பார்க்காதே, வேடிக்கை பார்க்காதே!
ஆபத்து, ஆபத்து! குடி நீருக்கும் குடி நீருக்கும்
ஆபத்து, ஆபத்து!
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
சட்டவிரோத சட்ட விரோத
மனித விரோத மனித விரோத
கேரள அரசை, கேரள அரசை
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்!
முல்லைப் பெரியாறு, முல்லைப் பெரியாறு
பிரச்சினையிலும் பிரச்சினையிலும்
கேரளா மீது கேரளா மீது
தேவை, தேவை நடவடிக்கை தேவை!
போராடுவோம் போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை வெற்றி கிட்டும் வரை
போராடுவோம், போராடுவோம்! என்று முழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், தலித் விடுதலை கட்சி ஆகிய அமைப்புகள்மூலம் ஏராள மான தோழர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
கோவை மண்டல செயலாளர் பாண்டியன், கோவை மாநகர மாவட்டத் தலைவர் பிரகஸ்பதி, கோவை மாவட்ட செயலாளர் ரகுநாத், திருப்பூர் மாவட்ட தலைவர் ஆறுமுகம், திருப்பூர் மாவட்ட செயலாளர் சக்திவேல், கோவை புறநகர் மாவட்டத் தலைவர் பரமசிவம், கோவை புறநகர் மாவட்ட செயலாளர் ஆனந்தசாமி, மேட்டுப்பாளைய மாவட் டத் தலைவர் வேலுசாமி, மேட்டுப்பாளையம் மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி, மண்டல இளைஞரணி செயலாளர் சந்திரசேகரன், பொதுக் குழு உறுப்பினர்கள் சிங்கை ஆறுமுகம், பழ. அன்பரசு, கோவை ஜோதிபாசு, ஆடிட்டர் ராஜா, பழனியப்பன், பொன்குமார், கழக சொற்பொழி வாளர் வீரமணி, கு.வெ.கி. செந்தில், ஆட்டோ சக்தி, முருகானந்தம், புளியம்புத்தூர் தமிழ்ச்செல்வம், கணபதி தமிழ்ச்செல்வம், தமிழரசன்.
கோவை புறநகர் மாவட்டம்
தமிழ்முரசு, அக்ரி நாகராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில்நாதன், பொதுக்குழு உறுப்பினர் மாரிமுத்து, கிருஷ்ணமூர்த்தி, கண்ணப் பன், சதீஷ்குமார், வெற்றிச்செல்வன், தலைவர் பழனிச்சாமி, சுகுமார், வேடியப்பன், மாரியப்பன், குமரேசன், குரு,
மகளிரணி தோழியர்கள்
கலைச்செல்வி, திலகமணி, ஜோதிமணி.
திருப்பூர் மாவட்டம்
கனியூர் மயில்சாமி, சாமிநாதன், கோபி குமாரராஜா, திருப்பூர் நகர செயலாளர் பால கிருஷ்ணன், திருப்பூர் சரவணன், ஆனந்தன், சாக்ரடீஸ், பல்லடம் பரந்தாமன், விஜிகுமார், மோகன், கவிநிலவு, பன்னீர், திராவிடச்செல்வன், மணிகண்டன், சிவக்குமார், பாண்டியன், அரசு போக்குவரத்து கழக திராவிடர் தொழிற்சங்க செயலாளர் பழனி மணி, தம்பி பிரபாகரன்,
நீலகிரி மாவட்டம்
மாவட்டத் தலைவர் கருணாகரன், மாவட்ட செயலாளர் நாகேந்திரன், மருத்துவர் கவுதமன், சாந்தா ராமமூர்த்தி, சத்தியநாதன், ராவணன், வாசுதேவன்,
பொள்ளாச்சி மாவட்டம்
செழியன், செல்வராசு, சிவராஜ், நாகராசு, நெல்லை முத்து
மேட்டுப்பாளையம் மாவட்டம்
தியாகராசன், செல்வராசு, சுப்பையன், சுப்பிரமணி, வீரபாண்டி சுப்பிரமணி,
கரூர் மாவட்டத் தலைவர் மு.க. ராஜசேகரன், ஜூலியஸ், புலவர் கருப்பண்ணன் மற்றும் தலித் விடுதலை கட்சியைச் சேர்ந்த கோவை, ஈரோடு மாவட்ட தோழர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
கேரள அரசைக் கண்டித்து கோவையில் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் கோவை பெருமக்களை உணர்ச்சி கொள்ள வைத்தது.
ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து தங்கள் பேராதரவைத் தெரிவித்தனர். 25-6-2012
இலங்கை வாழ் சிறுபான்மையினருக்கு...
மயிலைப் பேராயர் ஏ.எம். சின்னப்பா அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியுள்ள தகவல்களும். கருத்துகளும் மிக முக்கியமானவை.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, அனைத்து மத, அனைத்துப் பிரிவு தமிழ் மக்கள் மன்றம் என்ற புதிய அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மயிலைப் பேராயர் ஏ.எம். சின்னப்பா சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது: இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கண்டிக்க பல சமயத் தலைவர்கள் அடங்கிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இலங்கையில் போருக்கு பின்னால், தமிழர்களின் பகுதிகளை மறு கட்டமைப்பு செய்வதாகக் கூறிய ராஜபக்சேவின் வாக்குறுதிகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. தேசப் பாதுகாப்பு என்ற பெயரில், தமிழர் பகுதிகளில் அதிகளவு ராணுவ மயமாக்கல் திணிக்கப் பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, வெளிநாட்டினர் அளிக்கும் உதவியோடு கட்டப்படும் வீடுகள் சிங்களர்களுக்கே கையில் கொடுக்கப்படுகிறது. கோவில்கள், கிறித்துவ தேவாலயங்கள், மசூதிகள் தொடர்ந்து தாக்கப் படுகின்றன. கடந்த 8 ஆண்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேலான இந்துக் கோவில்களும், 300-க்கும் அதிகமான கிறிஸ்தவ தேவாலயங்களும், மசூதிகளும் இடிக்கப்பட்டுள்ளன. கிறித்துவ தேவாலயங்களை தகர்ப்பதோடு, கத்தோலிக்க பாதிரியார்களை கொலை செய்தும் கடத்தியும் சென்று விடுகின்றனர். இலங்கை அரசின் அடக்குமுறைகளை உரிமை மீறல்களை எதிர்த்து ஈழத்தமிழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு வலிமை சேர்க்க வேண்டிய கடமை தமிழகத்தில் வாழும் தமிழர்களாகிய நமக்கு இருக்கிறது. தமிழர்கள் அங்குவாழ இனி வாய்ப்பே இல்லை.
எனவே, அய்க்கிய நாடுகள் சபையும், மத சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட ஆணையமும், உடனடியாகத் தலையிட்டு, தமிழ் மக்களின் இனப்படுகொலை குறித்தும், திட்டமிட்ட அழித்தொழிப்பு குறித்தும் ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கையில் இந்த அமைப்பு தொடர்ந்து ஈடுபடும் இவ்வாறு பேராயர் கூறினார். அனைத்துப் பிரிவு தமிழ் மக்கள் மன்றம் என்ற அமைப்பில் இஸ்லாமியர்கள் உட்பட 11 அமைப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒன்றை இந்த இடத்தில் குறிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சிங்கள ராஜபக்சே இன வெறி அரசைப் பொறுத்தவரையில் இந்துக்களாக இருந்தாலும் சரி, சைவர்களாக இருந்தாலும் சரி, கிறித்துவர்களாக இருந்தாலும் சரி, முசுலிம்களாக இருந்தாலும் சரி - அதைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அவர்கள் தமிழர்களாக இருக்கும் மாத்திரத்திலேயே, தங்களின் பகைவர்களாக, வெறுப்புக்கு உரியவர்களாகவே கருதுகிறார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?
இலங்கையில் தமிழர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் - அங்கே தீவிரவாதமும் போராளிகளால் தலைதூக்கி நிற்கிறது என்று வாய்க் கூசாமல் பேசுகிறவர்களும், கைக்கூசாமல் எழுதுகிற எழுத்தாளர்களும் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சர்ச்சுகளும், மசூதிகளும் சிங்கள அரசின் துணையோடு இடிக்கப்படுகின்றனவே - இவர்கள் எல்லாம் தீவிரவாதி களா?
இலங்கைத் தீவில் மூர்க்கத்தனமான போர், குடிமக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு, ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டு - அதன் தொடர்ச்சியாக இலங்கை அதிபர் போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற மனித உரிமைக் குரல் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கும் நேரம் இது.
அய்.நா.வின் மனித உரிமை அமைப்பு ஜெனீவாவில் கூடி ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பதற்கான முகாந்திரம் இருப்பதை ஒப்புக் கொண்டு, கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்தக் காலக் கட்டத்தில், சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தினை இடிக்கும் மூர்க்கத்தனத்தில் சிங்கள மக்கள் இறங்குகிறார்கள் - அதற்கு அரசின் ரத கஜ துரக பதாதிகள் துணை போகி றார்கள் என்றால், எந்தத் தைரியத்தில் இவை நடக்கின்றன?
அய்.நா. மிரட்டினாலும் சரி, உலக நாடுகள் கண்டனம் செய்தாலும் சரி, தமிழன் அழிப்பு என்பதில் பின்வாங்கப் போவதில்லை என்று முகத்தில் அறைந்து சொல்லுவது போன்றதல்லவா இந்த நடவடிக்கைகள்?
உலகின் கிறித்துவ நாடுகளும், முஸ்லிம் நாடுகளும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனவே - அவை இந்தப் பிரச்சினையில் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றன என்று தெரியவில்லை.
இலங்கை மீதான போர்க் குற்ற நடவடிக்கைகளுக்கு உரிய தண்டனை வழங்குவதில் அய்.நா. சுணக்கம் செய்யுமேயானால் மேலும் மேலும் தமிழர்களுக்கு அதிக தொல்லையும், வாழும் உரிமைகளுக்கான கேள்விக் குறியும் தொடர்ந்து கொண்டேதானிருக்கும்.
தாமதிக்கப்பட்ட நீதி - மறுக்கப்பட்ட நீதி என்ற சட்டரீதியான பொன்மொழியை இந்த இடத்தில் நினைவு கொள்வது பொருத்தமே.
இலங்கை வாழ் சிறுபான்மையினருக்கு ஒரு வேண்டு கோள். ஈழப் போராளிகளுடன் அங்குள்ள சிறுபான்மை மக்கள் முரண்பட்டு வாழ்கிறார்கள் என்ற செய்தி ஒன்று கடலைத் தாண்டி உலவிக் கொண்டிருப்பது உண்மையே.
இது உண்மை என்றால், இதற்குப் பிறகாவது மதம் உள்ளிட்ட தடைகளைக் களைந்து தமிழர்கள் வாழ்வுரிமை - சுயமரியாதை வாழ்வு காப்பாற்றப்பட சிறுபான்மையினர் ஓரணியில் நிமிர்ந்து நிற்பார்களாக! 25-6-2012
சொல்லப்படாத மதப்போர்
சிலுவையில் வழியும் நீர், சர்ச்சின் கோபம், வழக்குகளை எதிர்நோக்கும் ஒரு பகுத்தறிவுவாதி இதெல்லாம் நமது குழம்பிய மதச்சார்பற்ற நிலையின் கூறுகளா? சந்திரன் அய்யர் எழுதும் கட்டுரை
இந்தியாவெங்கும் பிள்ளை யார் சிலை கள் பால்குடித்ததாக 1995-இல் சொல்லப் பட்டது நினைவிருக்கலாம். விஞ்ஞானிகள் குழு ஒன்று இதை ஆராய்ந்து, எந்த அற் புதமும் இதில் இல்லை என்றும் கூறி நிரூ பித்தது. அப்போது எந்த இந்துவும் இப்படிச் செய்த விஞ்ஞானிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவோ, காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவோ இல்லை. ஆனால், சர்வதேச பகுத்தறிவாளர் அமைப்பின் தலைவரும், நிறுவனருமான சணல் இடமருகுக்கு நடந்தது துரதிருஷ்ட வசமானது. மும்பையின் மேற்குப் புறநகர் பகுதியான விலேபார்லே பகுதியில் உள்ள தேவாலயத்தில் சிலுவையிலிருந்து நீர்வடியும் நிகழ்ச்சி ஒரு அற்புதமென்று கருதப்பட்டது. இது கழிவுநீர் தேங்கியதால் ஏற்பட்ட தென்று இடமருகு சொல்லியதால் போலீஸ் புகார்கள் இவர்மீது குவிந்தன. மதத் துவேஷம், மத உணர்வுகளைப் புண்படுத் துதல், போப்புக்கு எதிரான விமர்சனம் சொல் லுதல் எனப் பல புகார்கள் சொல்லப்பட்டன. இடமருகுவின் கூற்றால் பாதிக்கப்பட்ட வேளாங்கண்ணி தேவாலயத்தின் குருவும் கத்தோலிக்க அமைப்பின் பிரதிநிதிகளும் அவரிடம் இந்த அற்புத நிகழ்ச்சி பணம் பண்ணும் மோசடி வேலை என்று கூறியதற் காக பொது மன்னிப்பு கோருமாறு கேட்டார் கள். ஆனால் இடமருகு அதற்கு மறுத்துவிட் டார். ஒரு தாந்திரீகரை அழைத்து தொலைக் காட்சி காமிராக்களுக்கு முன்னால் தன்னை மந்திரத்தால் கொல்லுமாறு இடமருகு சவால் விட்டது புகழ்பெற்ற ஒன்றாகும். ஆனால், அந்த தாந்திரீகரால் இடமருகுவைக் கொல்ல முடியவில்லை. சக்திவாய்ந்த கடவுளின் அருளால் இடமருகு பிழைத்து விட்டதாக அந்த தாந்திரீகர் கூறினார். ஆனால் அவரோ தான் ஒரு நாத்திகர். தன்னிடம் கடவுளுக்கு வேலை இல்லை என்று கூறினார்.
இடமருகுமீது வழக்குகள் தொடரப்பட்டி ருப்பது பற்றி இந்து சாமியார்களை அம்பலப்படுத்துவதில் (சமீபத்தில் நிர்மல் பாபா) முனைப்பு காட்டும் வெகுஜன ஊட கங்களில் செய்தி எதுவும் இல்லை என்பதும் நமது ஊடகவியலாளர்களின் குழம்பிய மனநிலையைக் காட்டுவதாகும். எங்கள் செய்தித்தாளான விடுதலையில் இட மருகுக்கு ஏற்பட்ட நிலையை எழுதினோம். நாங்கள் விஞ்ஞானபூர்வமான அணுகு முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்து உயர்சாதியினர் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்களில் இப்பிரச்சினை இந்து தெய் வங்கள் தொடர்பாக இல்லாததால் கண்டு கொள்ளப்படவில்லை. அது நமது கடவுளாக இல்லாதபோது எதற்கு கவலைப்பட வேண் டும் என்றே எண்ணுகிறார்கள் என்று கருது வதாகக் கூறுகிறார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலிபூங்குன்றன். மகாராஷ்டிரா கிறிஸ்துவ இளைஞர்கள் அமைப்பின் தலைவர் ஆக்னலோ பெர் னாண்டஸ், இடமருகு மீது குறைந்த அனு தாபமே காட்டவேண்டும் என்கிறார். சிலுவை யிலிருந்து நீர்வடிந்ததை தேவாலயம் அற் புதம் எனக் கூறவில்லை. ஆனால் தேவாலய குருக்கள் மக்களை ஏமாற்றி பணம் செய்வ தாக இடமருகு விமர்சித்துள்ளார் என்கிறார். இவர் ஜுஹு காவல் நிலையத்தில் இடமருகு மீது புகார் கொடுத்துள்ளார். அற்புதங்கள் என்று போலியான தகவல் பரப்புவதைத் தடுக்கவே, தான் இவ்வாறு செய்வதாக இடமருகு விளக்கம் அளிக் கிறார். (பார்க்க பேட்டி). மும்பைக்கு வெளியே அவரது தரப்புக்கு ஆதரவுகள் பெருகிவருகின்றன. சென்னையில் சமூக செயல் பாட்டாளரான அ.மார்க்ஸ் இடமருகு வுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஆம்ஸ்டர் டாமில் போப் ஜான்பாலைக் கூட பாலியல் ரீதியாக சித்தரிக்கும் சுவரொட்டிகளை நான் பார்த்திருக்கிறேன். கிறிஸ்துவர்கள் பெரும் பான்மையாக இருக்கும் நாடுகளில் இதுபோன்ற சித்தரிப்புகள் அனுமதிக்கப் படுகின்றன. இங்கே சிறுபான்மையினராக இருப்ப தால் உணர்வுபூர்வமான பிரச்சினை ஆகி றது. இடமருகு செய்தது சரிதான். அவருக்கு எப்போதும் மதரீதியான பாகுபாடு இருந்தது இல்லை என்கிறார். தமிழ்நாடு பகுத்தறி வாளர் கழக பொதுச்செயலாளர் வி.கும ரேசன், இந்திய அரசியல் சாசனத்தின் 51 ஆவது சட்டப்பிரிவு படி ஒவ்வொரு குடி மகனும் விஞ்ஞான அறிவு, பகுத்தறிவு, மனி தாபிமானம் மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்த்துக்கொள்வது அடிப்படைக் கடமை யாகும். அது பகுத்தறிவாளர்களின் கடமை மட்டுமல்ல என்கிறார். தமிழ்நாட்டில் பகுத் தறிவாளர் கழகம் மூடநம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்யக்கூடிய அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இடமருகு இன்னமும் போலீஸ் விசா ரணைக்குப் போகவில்லை. ஜுஹு காவல் நிலையத்தின் மூத்த ஆய்வாளரான அருண் பகத் இவர்மீதான புகார்களை விசாரித்து வருகிறார். கிறிஸ்துவ அமைப்பின் உறுப் பினர்கள் கொடுத்த புகாரின் பெயரில் மதஉணர்வுகளைப் புண்படுத்தும் வழக்கு அவர்மீது பதியப்பட்டுள்ளது. அவரை விசா ரித்த பின்னர் என்ன செய்யவேண்டும் என்பதை முடிவு செய்வோம் என்கிறார் அவர். தற்போதைக்கு இந்த வழக்கு விடாப் பிடியாக இருக்கும் இடமருகுவுக்கும் கோபத்தில் இருக்கும் தேவாலயத்துக்கும் நடுவில் உள்ளது. நாம் மதச்சார்பின்மையை கடைப் பிடிப்பவர்கள் என்ற உறுதியுடன் இப்போதும் இருக்கிறோம்.
அனுராதா பிரீதம் (டெல்லி),
என். அசோகன் (சென்னை) உதவியுடன், சணல் இடமருகு, தலைவர், இந்திய பகுத்தறிவு கழகம்
மகாராஷ்டிர கிறிஸ்துவக் கழக அமைப் பின் தலைவரும் வைல் பார்லே தேவால யத்தின் பாதிரியாரும், நீர்வடியும் சிலுவையை அற்புதம் என்று தாங்கள் சொல்லவில்லை என்று கூறுகிறார்கள். அப்படியிருந்தும் ஏன் நீங்கள் விமர்சிக்கிறீர்கள்?
நீர் வடியும் சிலுவையை ஒரு அற்புத மாக்கும் பிரச்சாரத் திட்டம் உறுதியாக இருந்தது. ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் அதை எப்படி அவர்கள் காண்பித்தார்கள் என்பதைப் பார்க்க யு டியூபில் போய் பாருங்கள். பணம் சம்பாதிக்கவே அந்நிகழ்வை உருவாக்கினார்கள் என்று ஏன் நீங்கள் குற்றம்சாட்டினீர்கள்?
நான் அந்த தேவாலயத்துக்குப் போன போது சிலுவையில் இருந்து வடிந்த நீரை புனித நீராக விநியோகித்துக் கொண் டிருப்பதைப் பார்த்தேன்.
திருச்சபை அதை அற்புத நிகழ்வாக அறிவிக்கவில்லை என்று பேராயர் கூறுகிறாரே?
முதலில் அற்புதம் என்றுதான் பிரச்சாரம் செய்தனர். தற்போது அந்தப் பேராயர் வேறொரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது தெரிகிறது. உங்கள் மீது கொடுக்கப்பட்ட போலீஸ் புகார்கள் பற்றி?
அவர்கள் என்னை வேட்டையாட முயன் றனர். நான் கிறிஸ்துவர்களின் மத உணர்வு களைப் புண்படுத்துமாறு எதையும் கூற வில்லை. அவர்கள் சிலுவை அற்புதத்திற்கு வாட்டிகனின் அங்கீகாரத்தை வாங்க பரபரப்பைக் கிளப்பினார்கள். தற்போது அவர்களது முயற்சிகள் வீணாகிவிட்டன. உங்களை மன்னிப்பு கோர கூறி யுள்ளார்களே?
மன்னிப்பு கோருவது பற்றி பேச்சே இல்லை. பைபிளில் ஏசு சொன்னதை குறிப் பிடவே விரும்புகிறேன். தந்தையே அவர் களை மன்னியும். அவர்களுக்கு தாங்கள் செய்வது இன்னதென்று தெரியவில்லை.
நன்றி: தி சண்டே இந்தியன்

Post a Comment