Search This Blog

16.6.12

ஆபாசமே! உன் பெயர்தான் ஆரியமா?

இரண்டு கேள்வி பதில்கள்

திருவாளர் சோ ராமசாமி துக்ளக் வார இதழில் (9.5.2012) இரண்டு கேள்வி களுக்குப் பதில்கள் எழுதியுள்ளார்.

முதல் கேள்வி: இன்று பெரும் பாலான கல்லூரி மாணவ - மாணவி களிடம் மேற்கத்திய கலாச்சாரம்பரவி வருவது பற்றி?

பதில்: மேற்கத்திய கலாச்சாரம் பரவி வருகிறதா? அது என்ன பரவி வருகிறது? அது என்றோ பரவி விட்டதே? இப்போது நீங்கள் கேட்பதனால் இன்றைய கல்லூரி மாணவ - மாணவியரிடையே பாரத கலாசாரம் இன்னமும் கொஞ்சம் மிச்சம் மீதி இருக்கிறதாமே? அப்படியா? என்று கேட்க வேண்டும். அதில் அர்த்தம் இருக்கும் என்கிறார் திருவாளர் சோ.

அது என்ன பாரத கலாச்சாரம்? அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்பதா?

ரீனா ராய் என்ற வட நாட்டு நடிகை ஒருவர் ருசியா சென்றபோது, தனது கணவனை அறிமுகப்படுத்தி வைத்தார். அப்பொழுது அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் உங்களின் மீதி நான்கு கணவர்கள் எங்கே என்று கேட்டனராம். நடிகை திருதிரு என்று விழித்தாராம். அவர்களின் கேள்வியில் ஒரு நியாயம் இருக்கிறது.

இந்தியாவின் மகாபாரதம் பற்றி அவர்கள் கேள்விபட்டுள்ளனர்.

அதில் திரவுபதைக்கு அய்ந்து கணவர்கள் என்று இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் இந்தியாவில் ஒவ்வொரு பெண்ணுக்கும் அய்ந்து கணவர்கள் உண்டு என்று அவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விதான் அது.

மகாபாரதத்தை அவர்கள் ஒழுங்காக படித்திருந்தால் இன்னொரு கேள்வியையும் நாக்கைப் பிடுங்கக் கேட்டு இருப்பார்கள். அய்ந்து கணவர் போதாது என்று ஆறாவது கணவர்மீதும் இந்தியாவில் உள்ள பெண் ஆசைப்படுவாளாமே என்று கேட்டு இருப்பார்கள். அந்தக் கள்ளநாயகன் திரவுபதிக்குக் கர்ணன் அல்லவா!
கர்ணன்மீது திரவுபதை ஏன் ஆசைப்பட்டாளாம்? திரவுபதை வாயால் கேட்டால்தானே சுவராஸ்யமாக இருக்கும்? என் கணவன்களில் தருமன் இருக்கிறானே சதா வேதாந்தம் பேசிக் கொண்டு இருப்பான்.

இரண்டாவது கணவன் பீமன் இருக்கிறானே உடல் பெரியவன் _ குண்டோதரன், சதா சாப்பிட்டுக் கொண்டே இருப்பான்.

மூன்றாம் புருஷன் அர்ச்சுனன் இருக்கிறானே - அவனுக்கு ஏகப்பட்ட மனைவிகள் (ஆற்று மணலை எண்ணினாலும் அர்ச்சுனன் மனைவிகளை எண்ண முடியாதாம்!)
அடுத்து நகுலனும், சதாதேவனும் எனது பிள்ளைகள் மாதிரி - எனவே கர்ணன்மீது எனக்கு ஒரு கண் என்றாள் - இந்தப் பாரதக் கலாச்சாரம் கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கிறது - பேஷ்! பேஷ்!! என்கிறாரா திருவாளர் சோ?

இவர்களின்ஆரியக் கலாச்சாரம்பற்றி இல்லஸ்டிரேட்டட் வீக்லி இதழில் (3.5.1987 பக்கம்- 39) சிதாந்தர தாஸ் குப்தா எழுதியுள்ளார். அதுவும் காளிதாசரின் படைப்பிலிருந்து எடுத்துக்காட்டி In Ancient Sanskrit literature including the work of kalidasa there are frequent references to Madanotsara a day on which any man or woman could ask another even a stranger for sexual bliss a sort of "Free Love Day"

இந்தியாவின் பழைய இலக்கியங்களில் குறிப்பாக காளிதாசன் படைப்புகள் உட்பட ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. மதன உத்சவா என்ற பேரில் ஒரு நாளில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு, எந்த ஒரு ஆடவனும் எந்த ஒரு பெண்ணையும் எந்த ஒரு பெண்ணும் எந்த ஒரு ஆடவனையும் உடலுறவு கொள்ள அழைக்கலாம் _ அப்படியொரு நாளைக் கொண்டாடினார்கள், கடைப்பிடித்தார்கள் என்று கூறப்பட்டுள்ளதே.

இந்தப் பாரதக் கலாச்சாரத்தைத் தான் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கிறாரா? மனிதர்கள் இருக்கட்டும்! சோ நம்பும், மதிக்கும், தூக்கித் தலையில் வைத்துக் கரகாட்டம் ஆடும். இந்து மதத்துக் கடவுள்களின் கலாச்சார யோக்கி யதைகள்தான் என்ன?

மும்மூர்த்திகளில் ஒருவராவது ஒழுக்கவானா? பெற்ற மகளையே சரஸ்வதியையே பெண்டாடியவன் தானே பிர்மா? தார்காவனத்து ரிஷிப் பத்தினிக ளின் கற்பைச் சூறையாடியவன் தானே சிவன். அதனால் ரிஷிகள் சாபமிட சிவனின் ஆண்குறி அறுந்து விழுந்தது. அதனைப் பார்வதி தன் குறியால் தாங்கிப் பிடித்தாள்.

அதைத்தான் சிவலிங்கமாக கோயில் கட்டிக் கும்பிடுகிறோம் என்பதுதானே ஒரு உயர்தர இந்துவின் உயர்தரமான பண்பாடும் வழிபாடும்.


விஷ்ணுவின் யோக்கியதைதான் என்ன? சலந்திரன் மனைவி பிருந்தை மீது காமம் கொண்டு சலந்திரனை சூதால் கொன்று, அவனைப்போல் வேடம் பூண்டு விருந்தையைப் புணர்ந்தானே!

இவர்கள்தம் தேவர்களின் நாதனாகிய இந்திரன் கவுதம முனிவரின் மனைவி அகலிகையை, கவுதம முனிவர்போல் வேடம் பூண்டு கற்பழித்ததன் காரணமாக உடல் எல்லாம் பெண் குறியாகக் கடவது என்று கவுதம முனிவரால் சாபம் விடப்படவில்லையா? ஆயிரம் கண்ணுடையான் என்று இந்திரனைப் புகழுவது இந்த அசிங்கத்தைத்தானே!

அந்தத் தேவநாதன்களின் அச்சாகத்தானே காஞ்சிபுரம் மச்சேஸ்வரன் கோயில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன்.

காஞ்சி ஜெகத் குருக்களின் யோக்கியதை மட்டும் என்ன! பாரதக் கலாச்சாரம் வேண்டுமாமே _ வெட்கக் கேடு! வெட்கக் கேடு!!


சோவின் இரண்டாவது கேள்வி பதில்:

கேள்வி: ராமருக்குக் கெட்ட பெயர் உண்டாக்கச் சிலர் முயற்சி செய்கிறார்கள்- என்று கலைஞர் வருத்தப்படுகிறாரே?

பதில்: கலைஞர் எந்த ராமரைச் சொல்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. சேது பாலத்தைக் கட்டுவதற்கு ராமர் என்ன என்ஜினியரிங் கல்லூரியில் படித்தவரா? எந்த என்ஜினியரிங் கல்லூரி? என்று கலைஞர் கேட்டாரே அந்த ராமரா? அல்லது ராமன் குடிகாரன் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னாரே, அந்த ராமரா? அல்லது இதற்கும் முன்னால் இவருடைய குருநாதராகிய பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ராமர் படத்தை வைத்து செருப்பால் அடித்தார்களே அந்த ராமரா? எந்த ராமர் பெயரை யாரோ கெடுப்பதாக கலைஞர் சொல்கிறார்? தெரிய வில்லையே?

இப்படி ஒரு பதிலை அருளியுள்ளார் அக்கிரகார சோ; ஏதோ ராமன் குடிகாரன் என்று கலைஞர் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததாகப் புலம்புகிறாரே - இராமாயணத்தில் இல்லாததையா கலைஞர் சொல்லி விட்டார்? இராமாயணத்தில் இடம் பெற்ற மதுவகைகள் ராமன் மாந்தியவைபற்றி எல்லாம் கேரவன் பட்டியலிட்டுள்ளதே.

இராமனும் குடியும்

1. கிதை சுரா _ இது காய்ச்சி இறக்கப்படும் சாராயத்தின் பெயர்.

2. மைரேயா _ இது வாசனை யூட்டப் பட்ட பானம்; இதனை மது என்றும் கூறுவர்.

3. மத்யா...இது போதை தரும் பானம்.

4. மந்தா _ இது சாதாரண சாராயத் திலுள்ள அமித போதை தணிக் கப்பட்டது. இதற்குப் பிதா மந்தா என்றும் பெயர். போதை இருக்காது. எனவே, இதனை யாவரும் விரும்பிக் குடிப்பர்.

5. சுராபானம் _ கிதை சுராவுக்கு மாறானது; கிதை சுராபானம் செயற்கையில் செய்யப்படுவது; சுரா என்பது இயற்கைக் சாராயம். இயற்கை முறையில் வடித்தெடுக்கப்படுவது; சாதா ரண மக்களின் பானம். இதைப்பற்றித்தான் புராணங்களில் அதிகமாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

6. சிந்து _ கழிவு வெல்லப் பாகி லிருந்து வடித்தெடுக்கப்படும் பானம்.

7. சவ்வீரகா _ மட்டரகப் பானம்.

8. வரருணி _ அக்காலத்தில் உபயோ கிக்கப்பட்ட மதுவகை களில் மிகவும் காட்டமானது. (போதை அதிகமானது) இந்தப் பானம். இதனைக் குடித்த அதே நொடியில் போதை உண் டாகித் தள்ளாடி விழச்செய்து விடுமாம்.

--------------- டில்லியிலிருந்து வெளிவரும் சிகிஸிகிக்ஷிகிழி என்ற ஆங்கில ஏட்டின் 15.8.54 இதழில் இராமாயணத்தில் மதுக்குடி என்ற தலைப்பில் டாக்டர் எஸ்.என். வியாஸ் எழுதிய கட்டுரையில் காணப்படுபவை இவை!

மது மட்டுமா! ராமன் மாமிசம் சாப்பிடவில்லையா? கருஞ்சட்டைத் தோழர்களோ, கலைஞர் அவர்களோ சொன்னால் கோபம் பொத்துக் கொண்டு கிளம்பும்.
அவர்களின் மேதை ராஜாஜியே என்ன சொல்கிறார்? அதுவும் அவர் வாழ்நாளில் பெரும் புண்ணிய காரியம் செய்ததாகத் தம்பட்டம் அடிக்கும் அவர் எழுதிய சக்ரவர்த்தி திருமகன் நூலிலேயே என்ன குறிப்பிடுகிறார்? இவ்விடத்திலும் இன்னும் பல இடங்களிலும் இராம, லட்சுமணர்கள் வேட்டையாடி பூஜைக்குத் தகுந்த - அதாவது வழக்கப்படி சாப்பிடத்தகுந்த வேட்டையாகாரம் சம்பாதித்து உண் டார்கள் என்று வால்மீகி முனிவர் எழுதியிருக்கிறார்.

சந்தேகத்திற்கு இட மில்லாமல் விளக்கமாக எழுதியிருக்கிறார். இதைப்பற்றி நாம் குழப்பம் அடைய வேண்டியதில்லை. சத்திரியர்கள் ஆச்சாரப்படி மாமிச ஆகாரத்தில் குற்ற மில்லை.

காலத்துக்கும் குல வழக்கத் துக்கும் ஏற்றபடி உடலைப் பாதுகாப்ப தற்காக எந்த உணவும் தக்க வழியில் சம்பாதித்து, பூஜையில் வைத்து அளவுக்கு மிஞ்சாமல் உண்பதில் யாதொரு தவறுமில்லை என்பது பாரத தேசத்துப் பொது தருமம்

---------------------(சக்ரவர்த்தி திருமகன் - ராஜாஜி பக்கம் 88)
சந்தேகத்திற்கு இடமில்லாமல் ராமன் மாமிசம் உண்டான் என்று கூறி விட்டாரே!

ஏன் அப்படி சொன்னார்? சோ போன்ற சந்தேகப் பிராணிகள் பிற் காலத்தில் வருவார்கள் என்று தொலை நோக்கோடு ஆச்சாரியார் சொன்னார் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

கடைசிக் கடைசியாக ராமனை செருப்பால் அடித்ததையும் கூறி மங்களம் பாடி விட்டார் திருவாளர் சோ!

சூத்திரன் என்பதற்காக சம்பூகனை ராமன் வாளால் வெட்டிக் கொல்லலாம். அப்படிக் கொன்றவனை சூத்திரப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் செருப்பால் அடிக்கக் கூடாதா - என்ன?

**************************************************

ஆபாசமே! உன் பெயர்தான் ஆரியமா? (வால்மீகி) ராமாயணம் உத்ரகண்டம் 18-ஆம் சுருக்கம் சொல்வதென்ன)

மருத்தன் என்ற ஒரு அரசன் யாகம் செய்து கொண்டிருந்தானாம். அந்த யாகத்தில் கலந்து கொள்ள இந்திரன், எமன், குபேரன், வருணன் எல்லாரும் வந்தி ருந்தார்களாம்.

மாவீரன் இராவணன் அந்த யாகத்தை அழிக்க வந்தானாம். ராவணனைப் பார்த்த இந்திரன் முதலான தேவர்கள் எல்லாரும் பயந்து கொண்டு, பறவைகளைப் போலவும் மற்ற பிராணிகள்போலவும் உருமாறி தப்பி ஓடி விட்டார்களாம்.

இந்திரன் மயில் போல தனது உருவத்தை மாற்றிக் கொண்டு ஓடி ஒளிந்து கொண்டானாம். இராவணன் அங்கிருந்து சென்றவுடன் இந்திரன் மயிலுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மயிலைப் பார்த்து, எனக்கு ஆயிரம் கண்கள் இருந்தன. அதைப்போல் உன் தோகையில் ஆயிரம் அழகிய கண்கள் தோன்றட்டும். மேக மூட்டத்தைக் கண்டு நீ ஆடுவாய் என்று வரம் கொடுத்தானாம்.

இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் எப்படி வந்தன? அந்த ஆபாசத்தைக் கேளுங்கள்: கவுதமர் என்ற முனிவரின் பத்தினி அகலியை என்பவர்மீது ஆசை கொண்டு இந்திரன் நடு இரவில் சேவல் உருவம் கொண்டு சேவல் போல கூவியிருக்கிறான்.

முனிவர் விடியற்காலை வந்துவிட்டதென்று ஆற்றுக்கு குளிக்க போய்விட்டாராம். இந்த நேரத்தில் இந்திரன் அந்த முனிவரைப் போல உருவத்தை மாற்றிக் கொண்டு அவளிடம் இன்பம் அனுபவித்திருக்கிறான்.

அகலியையும் வந்தவன் தன் கணவன் அல்ல என்று தெரிந்திருந்தும் அவனிடம் இன்பம் அனுபவித் திருக்கிறாள்.

முனிவர் நேரம் தவறிவிட்டதை தெரிந்து கொண்டு மீண்டும் குடிசைக்கு வந்தவர் - அகலியாவை கல்லாகப் போகுமாறு சாபம் கொடுத்துவிட்டு, இந்திரனைப் பார்த்து அவனது ஆண்குறி அறுந்துவிழ வேண்டும் என்றும், அவன் உடம்பெல்லாம் பெண்ணின் பிறப்புறுப்புகள் தோன்றட்டும் என்றும் சாபம் கொடுத்திருக்கிறார்.

தேவர்கள் ஒரு ஆட்டின் ஆண்குறியை எடுத்து இந்திரனுக்கு ஒட்ட வைத்திருக்கிறார்கள். ஆனால் உடல் முழுவதும் ஆயிரம் பெண்குறி தோன்றவே அவன் வெளியே வராமல் ஒரு மறைவிடத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறான்.

இதைத்தான் இந்திரன் உடம்பில் ஆயிரம் கண்கள் என்று பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் புளுகி யிருக்கிறார்கள்.

திராவிட இயக்கம் தோன்றிய காலமுதல் நாம் கேட்டு வரும் கேள்வி: பிரம்மாவின் நெற்றியிலிருந்து பாதம் வரை, மனிதர்கள் தோன்றினார்கள் என்றால் அங்கெல்லாம் பிரம்மனுக்கு பெண்ணின் பிறப்பு உறுப்பு இருந்திருக்கிறதா?

அப்படியானால் அவனையும் புணர்ந்தவன் யார்? இந்தக் கேள்விகளுக்கும் யாரிடமிருந்தும் இதுவரை பதில் வரவில்லை.

மயிலே, மயிலே, அழகிய மயிலே, மனிதர்களுக்குள்தான் பார்ப்பனர்கள் பேதம் கற்பித்தனர் என்றால் பறவையாகிய உன்னையும் ஆபாசமான புனை கதைகள் மூலம் இழிவுபடுத்திவிட்டனரே. நீ அழகாக இருப்பதுதான் நீ செய்த குற்றமா?

------------------க. இராசமாணிக்கம், இராஜேந்திரம்

(வால்மீகி/ராமாயணத்தை தமிழில் மொழிபெயர்த்த சோ. இராமசாமி இதற்கு என்ன பதில் சொல்வார்)

------------------16-6-2012 "விடுதலை” ஞாயிறு மலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

6 comments:

தமிழ் ஓவியா said...

செய்திச் சிதறல்கள்!


செய்தி: மனித உரிமை அமைப்புகள் என்ற பெயரால் வசூல் வேட்டை.

இதற்கு முன்பு கூட இது போன்ற தகவல்கள் வந்ததுண்டு. இந்தத் தலைப்பு எளிதாக மக்களை ஈர்க்கக்கூடியதாகும்.

மனித உரிமைகள் கழகம், தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பகம் என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்ற முகமூடியில் உலா வருகின்றன.

நீண்ட க்யூ வரிசையில் நிற்காமல் திருப்பதி, பழனி கோயில்களில் தரிசனம் செய்ய வேண்டுமா? ரயிலில் உயர் வகுப்பில் பயணிக்க வேண்டுமா? எங்களை அணுகுங்கள். எங்கள் அமைப்பில் உறுப்பினராக ஆகுங்கள்; கட்டணம் அதிகம் இல்லை; வெறும் ரூபாய் அய்யாயிரம்தான்.

நாங்கள் யார் தெரியுமா?

அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றவர்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள்.
இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் மீது, அமைப்புகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் காணோம். மனித உரிமைகள் ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் கூறுவது, எங்களுக்கும் புகார்கள் வருகின்றன. அவற்றைக் காவல்துறைக்கு அனுப்பி வைக்கிறோம்; அதற்கு மேல் நாங்கள் என்ன செய்ய முடியும்? காவல் துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி ஆளுக்கு ஆள் பொறுப்பைத் தட்டிக் கழித்தால் மோசடிப் பேர்வழி களுக்குத்தான் கொண்டாட்டம்! பொது மக்களுக்கோ திண்டாட்டம்!!

வாஸ்து காப்பாற்றியதா?

செய்தி: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் வாஸ்துவுக்காக இடம் மாற்றி வைத்திருந்த லாக்கரை உடைத்து 32 சவரன் நகை, ரூபாய் 2 லட்சம் திருடியவர்களைக் காவல்துறை தேடுகிறது.

வாஸ்து என்பதே புராணக் குப்பையில் கிடக்கும் ஒரு கழிவுப் பொருள். ககண்டி முனிவருக்கும், பூமா தேவிக்கும் பிறந்தவன் என்று கதை ஆரம்பிக்கிறது. (இந்து மதத்தில் தொட்ட இடமெல்லாம் ஆபாசச் சாக்கடைதான்!)
வாஸ்துவின் பின்னணியிலும் வருண தர்மம் இருக்கிறது.

(அ) பொன்னிறமான மண்ணில் இனிப்பு ருசியும், தாமரை மலரின் வாடையும் இருந்தால் அந்தணர் இதில் வீடு கட்டலாம்.

(ஆ) சிவந்த நிறமும், கார்ப்பு ருசியும், குதினாவின் வாடையும் உள்ள மண்ணில் சத்திரியர் வீடு கட்டலாம்.

(இ) பச்சை நிறமும் உள்ள புளிப்பு ருசியும் உள்ள மண்ணில் வைசியர்கள் வீடு கட்டலாம்.

(ஈ) கறுப்பு நிறமும், கசப்பு ருசியும், தானிய வாடையும் உள்ள மண்ணில் மற்ற இனத்தவர்கள் (சூத்திரர்கள்) வீடு கட்டலாம்.
இதே போல்
அந்தணர் தென்திசை, ஆயர் மேற்றிசை
வந்திடு வணிகர் நல்வடக்கு வான்திசை
தொந்தமில் சூத்திரர் தோன்றுங் கீழ்திசை
பிந்திய நாடுவது பிரமன் தானம்

ஒரு கோயிலுக்கும் எந்த வருணத்தைச் சேர்ந்தவர் எந்தத் திசையில் நுழைவது என்று வரையறை செய்கிறது வாஸ்து. பார்ப்பனர்களின் இந்த சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் வாஸ்து என்று அஞ்சுவது பரிதாபம்.

ஆந்திர முதல் அமைச்சர் என்.டி.ராமராவ் தலைமைச் செயலகத்தின் நுழைவு வாயிலை மாற்றி அமைத்தார். பி.ஜே.பி.யின் டில்லி தலைமை அலுவலகம் வாஸ்து முறைப்படி மாற்றியமைக்கப்பட்டது. பிள்ளை பிழைத்த பாடில்லையே! திருவள்ளூரில் வாஸ்துவுக்காக மாற்றி அமைக்கப்பட்ட லாக்கர் உடைக்கப்பட்டுள்ளதே. இதற்கு மேலுமா வாஸ்து மூடநம்பிக்கை?

நில நடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து வீழ்கின்றன. பூமிக்குள் புதைகின்றன. அத்தனை வீடுகளும் வாஸ்துவுக்கு விரோதமாகத்தான் கட்டப் பட்டவையா? சிந்திப்பீர்!

இதுவன்றோ புரட்சி!

புரட்சி புரட்சி என்று வாய் கிழியக் கத்துகிறார்களே! கருஞ்சட்டை இயக்கத்தின் கடைசி தொண்டரின் சாதனை முன் அவர்கள் நிற்க முடியுமா?

பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் இரா. அரங்கராசன் தனது தாயார் மறைவைத் தொடர்ந்து, அவர் எப்படி அடக்கம் செய்துள்ளார்?

பாடையைப் பெண்களே தூக்கிச் சென்றனர். பெண்கள் சுடுகாட்டுக்குப் பெரும் எண்ணிக்கையில் சென்றுள்ளனர். பொதுவாக பாடை என்றால் ஆண்கள்தான் தூக்கிச் செல்வர். சுடுகாட்டுக்கும் ஆண்கள்தான் செல்வார்கள். இவை எல்லாம் பெண்களுக்குத் தடையுள்ள பகுதிகள் - அம்சங்கள் அப்படித்தானே நாட்டின் நிலைமை?

அவற்றை எல்லாம் சுக்கு நூறாக உடைத்து எறிந்த வீராங்கனைகளுக்கும், அதற்குக் காரணமாக இருந்த இயக்கத் தோழர் மானமிகு அரங்கராசனுக்கும் பாராட்டுகள்! பாராட்டுகள்!!

இதற்கு முன்பும் கூட மயிலாடுதுறை நகர திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ந.தியாகராசன் அவர்களின் அன்னையார், திருவரங்கம் பெரியார் பெருந்தொண்டர் கோ. பாலு ஆகியோரின் உடல்களையும் பெண்களே தூக்கிச் சென்று வழி காட்டியுள்ளனர் என்பது நினைவூட்டத் தக்கது. இந்தப் புரட்சிக்கு முன் எந்தப் புரட்சி முகம் காட்டும்? பண்பாட்டுப் புரட்சி என்பதற்கான எடுத்துக்காட்டு இதுவன்றோ! 16-6-2012

தமிழ் ஓவியா said...

மோடிமீது பாயும் சட்டப் பிரிவுகள்

153A (1)(a) & (b), 153 B (1) (c), 166 மற்றும் 505 (2) பிரிவுகளின்கீழ் குற்றப் பத்திரிகை தெகல்கா அம்பலப்படுத்துகிறது

புதுடில்லி, ஜூன் 16- குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி மீது இந்திய குற்றவியல் சட்டத்தில் பல பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரங்களில் நரேந்திர மோடியின் பங்கு என்ன என்பதைப் பற்றி ராகவன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு திரட்டிய சாட்சியங்கள் மற்றும் மேற்கொண்ட முடிவுகளைப் பற்றி குறை கூறி உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப் பட்ட வழக்கறிஞர் (அமிகஸ் குரியி) ராமச்சந்திரனின் அறிக்கை இறுதி யில் பொது மக்களின் பார்வைக்கு வந்துவிட்டது.

மதப் பகையை வளர்த்தல், தேசிய ஒருமைப் பாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களை மேற் கொள்ளல், சட்டத்திற்கு வேண் டுமென்றே கீழ்ப்படியாதிருத்தல் போன்ற குற்றங்களுக்காக நரேந் திர மோடி மீது நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தொடர ராமச்சந்திரன் பரிந்துரைத் துள்ளது, மோடி மீது குற்றவியல் வழக்கு தொடர போதுமான சாட்சியங்கள் இல்லை என்று கூறிய சிறப்புப் புலனாய்வுக் குழு வின் அறிக்கையில் ஒரு பெரிய ஓட்டையை ஏற்படுத்தி விட்டது.

சஞ்சீவிபட்

முக்கியமாக, காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் நம்பத்தகுந்த சாட்சியல்ல என்று சிறப்புப் புலனாய்வுக் குழு கூறியதை ராமச்சந்திரன் நிராகரித்துள்ளார். சிறப்பு விசாரணைக் குழு அளித்த விசித்திரமான, பொருளற்ற விளக்கங்களையும் அவரது அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. எடுத்துக்காட்டாக, குற்றவியல் வழக்கு தொடர முடியாத ஆதாரங்கள் என்று சிறப்பு விசாரணைக் குழு எவற்றைக் கூறியதோ, அதே ஆதாரங்கள் குற்றவியல் வழக்கு தொடரப் போது மானவை என்று ராமச்சந்திரன் கருதுகிறார். மோடியின் மீதான வழக்கை முடிக்க சிறப்பு புலனாய்வுக் குழு மேற்கொண்ட சுயமுரண்பாட்டு நிலைகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். மோடிக்கு ஆதரவாக சாட்சி அளித்த நம்பத்த காத சாட்சிகளின் சாட்சியத்தைப் பயன்படுத்தி, மோடிக்கு எதிராக சாட்சி அளித்த சாட்சிகளை நம்பத்தகாதவைகளாக சிறப்பு விசாரணைக் குழு ஆக்கிவிட்டது.

எந்த சாட்சியங்களின் அடிப் படையில் சில காவல்துறை அதி காரிகள் மீது துறை நடவடிக்கை மட்டுமே எடுக்க முடியும் என்று சிறப்பு விசாரணைக் குழு கூறியதோ அதனை மறுத்து, தவறு செய்த காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தொடரத் தேவையான பலத்தை அச்சாட்சியங்கள் பெற் றுள்ளன என்று ராமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். குல்பர்க் சொசைட்டி பகுதியில் கலவரம் நடந்தபோது அங்கு செல்வதைத் தவிர்ப்பதற்காக, தாங்கள் அலுவலகத்தில் இல்லை என்று காட்டிக் கொள்ள, கலவரம் அதிகமில்லாத மற்றொரு பகுதியில் மதக்கலவரங்கள் நடந்ததாக போலி முதல் தகவல் அறிக்கைகளை வேண்டுமென்றே பதிவு செய்யச் செய்த குற்றம், அப்பாவி மக்கள் படுகொலை செய்யப் படுவதற்கு வழி வகுத்த மூத்த காவல்துறை அதிகாரிகள் கோண்டியா மற்றும் டாண்டன் இருவர் மீதும் துறை நடவடிக்கை மட்டுமே எடுக்கத் தக்கது என்று சிறப்பு புலனாய்வுக் குழு நம்புகிறது. இது ஒன்றும் சாதாரண கடமை தவறிய, கடமையை அலட்சியம் செய்த குற்றமல்ல என்றும், பல அப்பாவி மக்கள் உயிரிழக்கக் காரணமாக இருந்த செயல் என்றும் அமிகஸ் குரியி நம்புகிறார். ஆனால் சிறப்பு புலனாய்வுக் குழு அவரது கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

தமிழ் ஓவியா said...

புலனாய்வு விசாரணை

நீதி மற்றும் அமைதிக்கான மக்கள் இயக்கத்தின் டீஸ்டா சேடல்வாட் மற்றும் கலவரங்களின் போது தனது கணவரும் காங்கிரஸ் தலைவருமான ஈஷான் ஜஃப்ரியும் டஜன் கணக்கான மற்ற முஸ்லிம்களும் கொல்லப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி ஜகியா *ஜஃப்ரி ஆகியோர் 2009 இல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், மோடி மற்றும் அவரது அரசுக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பற்றி புலனாய்வு விசாரணை மேற்கொள்ள இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்தது. தனது மனுவில் ஜகியா *ஜஃப்ரி 32 குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார். அவற்றில் மிகவும் கடுமையான குற்றச்சாட்டு என்னவென்றால், சபர்மதி விரைவு ரயில் படுகொலைகளுக்காக முஸ்லிம்கள் மீதான தங்களின் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள இந்துக்களை சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும் என்று அப்போதிருந்த காவல்துறைத் தலைவர், தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு முதல்வர் இல்லத்தில் 27-2-2002 அன்று நடைபெற்ற கூட்டத்தில் நரேந்திர மோடி அறிவுரைகள் வழங்கினார் என்பதுதான்.

மாநில உளவுத் துறையில் உதவி காவல்துறை ஆணையராக அப்போது நியமிக்கப்பட்டிருந்த பட், இத்தகைய சட்டத்துக்குப் புறம்பான அறிவுரைகளை கீழ்க்குறிப்பிட்ட சொற்களில் முதல்வர் நரேந்திர மோடி வழங்கிய அதிகாரிகளின் கூட்டத்தில் தானும் கலந்து கொண்டதாக, விசாரணைக் குழுவின் முன் 2010 இல் சாட்சியம் அளித்தார். மக்களிடையே பெருங்கோபம் நிலவுகிறது. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது ஒரு சமமான அணுகுமுறையை மேற்கொள்வது என்பது இந்த முறை நடக்காது. மக்களின் கோபம் தீர்த்துக் கொள்ளப்பட அனுமதிக்கப்படுவது அவசியமானது.

ஆனால், கீழ்க் குறிப்பிடப்பட்ட காரணங்களுக்காக பட்டை நம்பத்தகுந்த சாட்சியாகக் கருதமுடியாது என்று சிறப்பு புலனாய்வுக் குழு கூறி தள்ளுபடி செய்துவிட்டது.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற மூத்த அதிகாரிகள் பட் கூறியதை உறுதிப்படுத்தவில்லை.

தகுந்த விளக்கம் இல்லாமல் 9 ஆண்டு காலம் அவர் இது பற்றி பேசாமல் மவுனமாக இருந்தது.

பட் மீது எண்ணற்ற துறை நடவடிக்கைகள் நிலுவையில் இருந்தபடியால், மோடி அரசின் மீது பழி தீர்த்துக் கொள்ள அவருக்கு முகாந்திரம் உள்ளது.

ஆனால், சிறப்பு புலனாய்வுக் குழுவின் வாதங்களை எடைபோட்டுப் பரிசீலனை செய்த அமிகஸ் ராமச்சந்திரன் அதற்கு முற்றிலும் எதிரான ஒரு முடிவுக்கு வந்தார். இந்த நிலையிலேயே பட்டின் சாட்சியத்தை நம்பத் தேவையில்லை என்ற சிறப்பு புலனாய்வுக் குழுவின் முடிவை நான் ஒப்புக் கொள்ளவில்லை. பட்டும், அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறிய மற்ற அதிகாரிகளும் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். மோடி அரசின் மீதுள்ள கோபத்தால் உள்நோக்கத்துடன் பட் சாட்சியம் அளித்துள்ளார் என்ற முடிவையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அமிகங்குரியின் அறிக்கை

சிறப்பு புலனாய்வுக் குழு அளித்த பல்வேறுபட்ட சட்ட விளக்கங்களைப் பற்றியும் இந்த அமிகஸ் குரியியின் அறிக்கை கேள்விகளை எழுப்பியுள்ளது. 2002 பிப்ரவரி 27 அன்று இரவு முதல்வர் மோடியின் இல்லத்தைத் தவிர வேறு ஓரிடத்தில் பட் இருந்தார் என்பதற்கான சாட்சியத்தை சிறப்பு புலனாய்வுக் குழு காணவில்லை என்னும் நிலையில், பட் கூறுவது, மோடியும் அவரது குழுவினரும் அதனை மறுத்துக் கூறுவது ஆகியவற்றின் உண்மைத் தன்மையை சோதித்துப் பார்ப்பது என்ற ஒன்றே தர்க்கரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கையாகும்.

பட் சொல்லியது, அதற்கு எதிராக அவரது மூத்த அதிகாரிகள் சொல்லியது ஆகிய இரண்டில், மூத்த அதிகாரிகள் சொல்லியதையே சிறப்புப் புலனாய்வுக் குழு நம்ப முடிவு செய்தது என்று கூறிய அமிகஸ் ராமச்சந்திரன், பல்வேறுபட்ட சாட்சியங்களைப் பொருத்தவரையில் சிறப்பு புலனாய்வுக் குழு மேற்கொண்ட முரண்பட்ட நிலையை சுட்டிக் காட்டுகிறார். மோடியின் மீது குற்றம் சாட்டப்பட பயன்படுத்தப்பட்டுள்ள அதே சாட்சிகளை சிறப்பு புலனாய்வுக் குழு நம்பவில்லை என்று அவர் குறிப்பிடுகிறார். அவர்களில் பெரும்பாலோருக்கு ஓய்வு பெற்ற பிறகு முதல்வரால் நல்ல நல்ல பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...

அதே போல, பட்டின் மீது நிலுவையில் உள்ள விசாரணைகளைப் பற்றிய சிறப்பு புலனாய்வுக் குழுவின் வாதங்களையும், மோடி கூறியதாக பட் கூறுவதை ஒன்பது ஆண்டுகள் கழித்து அவர் தெரிவித்துள்ளார் என்ற வாதத்தையும் ஏற்றுக் கொள்ள அமிகஸ் மறுத்துள்ளார். தான் ஒரு உளவுத் துறை அதிகாரி என்றும், சட்டப்படி என்னிடம் கேட்கும்போது மட்டுமே என்னால் எந்த அறிக்கையையும் வெளியிட முடியும் என்றும் பட் கூறியது ஏற்றுக் கொள்ளத் தக்கதே என்று ராமச்சந்திரன் கூறுகிறார். பின்னர் தன் வீட்டில் முதல்வர் மோடி அந்தக் கூட்டத்தைக் கூட்டிய சூழ்நிலைகள் பற்றிய விவரங்களையும், தெரிய வந்துள்ள உண்மைகளின் வெளிச்சத்தில், புலனாய்வின் இந்த நிலையிலேயே பட் கூறுவதை நம்பாமல் இருப்பது சரியானதாக இருக்காது என்பதையும் அமிகஸ் விரிவாக எடுத்துரைக்கிறார்.

பெரிய சதித் திட்டம்

உள்துறைக்குத் தொடர்பு இல்லாத இரு அமைச்சர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தனர் என்ற உண்மையே இந்தக் கலவரங்களுக்குப் பின்னால் ஒரு பெரிய சதித்திட்டமே இருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு வலுவூட்டுகிறது என்பதையும் அமிகஸ் வலியுறுத்துகிறார். ஒரு புகாரில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் மீது குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு ஆதரவாக ஆவணங்கள் உள்ளனவா என்பதுதான் சட்டத்திற்குத் தேவை என்றும் அவர் கூறுகிறார். இந்த பரிசோதனையில் மோடியின் மீதான வழக்கு வெற்றி பெற்றுள்ளது என்றும், எனவே சட்டப்படி செயல்படுவதை விட்டுவிட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்படும் முன்பாகவே இந்த வழக்கில் மோடிக்கு ஆதரவாக சிறப்பு புலனாய்வுக் குழு தீர்ப்பு அளித்துவிட்டது.

குற்றப் பிரிவுகள்

குற்றவியல் வழக்கு தொடுக்க தக்க ஆதாரங்கள் உள்ள இந்த ஆரம்ப நிலையில் நரேந்திர மோடி மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 153 ஹ (1)(ய) (), 153 க்ஷ (1) (உ), 166 மற்றும் 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்படலாம் என்பது எனது கருத்து என்று அமிகஸ் தனது அறிக்கையை முடித்திருக்கிறார்.
(நன்றி: தெகல்கா 19-5-2012 தமிழில்: த.க.பாலகிருட்டினன்.)

தமிழ் ஓவியா said...

குடியரசு தலைவர் தேர்தலும் - பா.ஜ.க.வும்


அடுத்து மத்தியில் எங்கள் ஆட்சிதான் என்று மார்தட்டிக் கொண்டிருந்த பா.ஜ.க., பல்வேறு பிரச் சினைகளில் சிக்கிப் புதைந்து கொண்டிருக்கிறது.

பா.ஜ.க.வைத் தூக்கிச் சுமந்து கொண்டிருந்த திருவாளர் சோ ராமசாமிகூட பிரயோசனமில்லை என்று முடிவு செய்து தொப்பென்று கீழே போட்டு விட்டார்.

தாங்கள் அடுத்த ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று அக்கட்சியில் பலருக்கு நம்பிக்கை தோன்றி விட்டது. ஆனால் தங்களுக்குத் தாங்களே பிரதமராக நியமித்துக் கொள்ளவும் பலர் முற்பட்டு விட்டார்கள். இப்படி தோன்றியுள்ள பிரதமர்கள் மற்ற பிரதமர்களை முன் கூட்டியே கவிழ்த்து விட செய்கிற முயற்சிகளின் விளைவுதான் இப்போது அக்கட்சியில் காணப்படும் பூசல்களுக்குக் காரணம் - என்று (துக்ளக் 13.6.2012). சட்டி சுட்டதடா கைவிட்டதடா என்ற பாணியில் முன்கூட்டியே கருத்துக் கூறித் தப்பிக்கப் பார்க்கிறார்.

இவர் நினைப்பதுபோல அடுத்த ஆட்சி பா.ஜ.க. என்ற நினைப்புக்கூட பிழைப்பைக் கெடுக்கக் கூடியதுதான்; இவர்கள் ஆளும் மாநிலங்களின் இலட்சணம் எந்தக் கதியில் இருக்கிறது? குஜராத் மாநிலத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்களே - அங்கேயே மக்களின் அதிருப்தி வெடிக்கும் கட்டத்திற்குச் சென்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தலில்கூட பா.ஜ.க. தோல்வியை நல்ல அளவுக்குச் சுமக்கும் நிலைதான்.

வெளியில் விளம்பரப்படுத்தப்படுவதற்கும் அங்குள்ள உள்நாட்டு நிலைமைக்கும் சற்றும் சம்பந்தம் கிடையாது. கட்சிக்குள்ளும் மோடிக்கு ஏகப்பட்ட நெருக்கடி! இவரின் எதிரியான சஞ்சய் ஜோஷி கட்சிப் பொறுப்பு களிலிருந்து விலகியுள்ளார். பயந்தல்ல வேறு காரணங்களின் அடிப்படையில்!

பா.ஜ.க.வின் அதிகாரபூர்வ ஏடான கமல் சந்தேஷ்! ஏடு உள்கட்சி உள் குத்துகள்பற்றி வெளிப்படையாகவே எழுதி விட்டது.

பா.ஜ.க. ஆட்சி நடத்தும் கருநாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் எதிர்க்கட்சியாக உள்ள ராஜஸ்தானிலும் கட்சிக்குள் விரும்பத்தகாத பல நிகழ்வுகள் நடந்துள்ளன. குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி, ராஜஸ்தான் முன்னாள் முதல் அமைச்சர் வசந்த ராராஜே, கருநாடகா முன்னாள் முதல் அமைச்சர் பி.எஸ். எடியூரப்பா ஆகியோர் கட்சியின் தலை மைக்குக் கட்டளையிடும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.

அதிலும் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி வேகமாக இரயிலைப் பிடிக்கும் பயணி மற்றவர்களை இடித்துக் கொண்டு ஓடுவது போல செயல்படுகிறார் என்று வரிந்து தள்ளி விட்டது. மனிதன் ஆடிய போய்விட்டார். சாய்வு நாற்காலியில் ஓய்ந்து கிடக்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பேயியையும், உள்ளுக்குள் தமக்குப் பிடிக்காத லால்கிஷண் அத்வானியையும் மோடி ஓடி ஓடிச் சந்தித்து இருக்கிறார்.

மோடியைப் பற்றி அறிந்தவர்களுக்கு இந்தச் செயல் அவருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியின் உந்துதல்தான் என்பது விளங்காமற் போகாது.

இதற்கிடையே குடியரசு தலைவர் தேர்தல் குறுக்கிட்டு பா.ஜ.க.வை வெறும் கூடு என்று அம்பலப்படுத்தி விட்டது. தம்மால் நிறுத்தப்படும் வேட்பாளர் குடியரசு தலைவர் தேர்தலில் நிச்சயம் தோற்பார் என்று தெரிந்துவிட்ட நிலையில் காங்கிரசுடன் பேரம் பேசிப் பார்த்தது.

குடியரசு தலைவர் பதவி உங்களுக்கு, துணைத் தலைவர் பதவி எங்களுக்கு என்பதுதான் பி.ஜே.பி. யின் பேரம்; இந்த வலையில் காங்கிரஸ் சிக்கிக் கொள்ளவில்லை.

2014இல் மக்களவைத் தேர்தல் நடக்க யாருக்கும் நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் முக்கியத் துவம் வாய்ந்தது என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான்!

காங்கிரஸ் அறிவிக்கும் வேட்பாளர்தான் வெற்றி பெறுவார் என்று ஆகிவிட்ட பிறகு பா.ஜ.க.வின் நிலை பரிதாபப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுவதுதான். அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைமை இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு எந்த முடிவையும் தக்க காலத்திலும் எடுத்து சரியான வகையில் செயல்படக் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். 16-6-2012

Seeni said...

mudiyala azhuthuduven...