Search This Blog

2.6.12

இழிவை ஒழிக்கப் புரட்சி செய்வோம்!





வேலூரில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் த.அ. ஓவியா ஆற்றிய உரை வருமாறு:

திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் புத்துலக பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டில் கழகக் கொடியேற்றி பேசுவதற்கு எனக்கு மாபெரும் வாய்ப்பளித்த அனைத்து உள்ளங்களுக்கும் என்னுடைய பசுமையான நன்றி கலந்த வணக்கத்தை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வரலாற்றையே உருவாக்கிய பகுத்தறிவுப் பல்கலைக் கழகம் தந்தை பெரியாரைப் பற்றி கலைஞர் அவர்கள் கூறுகையில்,

எரிமலையாய்ச் சுடுதழலாய்

இயற்கைக் கூத்தாய்

எதிர்ப்புகளை நடுங்கவைக்கும் இடியொலியாய்

இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்

இழிவுகளைத் தீர்த்துக் கட்டும் கொடுவாளாய்

இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்

எப்போதும் பேசுகின்ற ஏதேன்சுநகர் சாக்ரடிசாய்

ஏன் என்று கேட்பதிலே வைர நெஞ்ச வால்யேராய்

எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார் என்று

கவிதை மழை பொழிந்த முத்துக்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

திராவிடர்கள் யார்? ஆரியர்கள் யார்?

திராவிடர் கழகம் உருவானது எப்படி?

திராவிடர் கொடியின் கரு உருவாகக் காரணமாக இருந்தவர் யார்?

திராவிடர் கொடியைச் சித்தரித்தவர் யார்?

திராவிடர் கொடியின் கொள்கை என்ன?

என்ற அடிப்படையான வரலாற்று உண்மைகளை திராவிடர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது தலையாய கடமையாகும் என்பதால் திராவிடர் வரலாற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

06-10-1929 இல் ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற நீதிக்கட்சி பொது நிர்வாகக் குழுவில், நீதிக்கட்சியிலே பார்ப்பனர்களையும் உறுப்பினர்களாகச் சேர்க்கலாம் என்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தந்தை பெரியார் எதிர்த்துப் பேசுகையில் பிராமணர்கள் பிராமணர் மகாசபை வைத்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்குப் பெருமையும், உரிமையும் கிடைக்கின்றன. நாம் நம்மைச் சூத்திரன் என்று கூறிக் கொண்டால் பார்ப்பானுக்கு அடிமையாயிருக்கும் உரிமைதான் கிடைக்கும். அதனால்தான் நம்மைச் சூத்திரர் என்று கூறிக்கொள்ளாமல் திராவிடர் என்று கூறிக்கொள்கிறோம். திராவிடர் என்று கூறினால் திராவிடர் அல்லாத பார்ப்பான் அதில் வந்து புகுந்து கொள்ள முடியாது. நாம் ஒழிக்கப் பாடுபடும் பிறவி காரணமாக இழித் தன்மையும் பார்ப்பனர்களுக்கு இல்லை. ஆகவே அவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கும் காரணம் இல்லை. திராவிடர் என்கின்ற சொல்தான் ஆரியர் அல்லாதவர் என்பதற் குச் சரியானதாக மட்டுமல்ல வரலாற்று ரீதியான உண்மையும் கூட என்று தெளிவு படுத்தித் தீர்மானத்தைத் தோற்கடித்தார்.

குடந்தையில் திராவிடர் மாணவர் கழகம்

1943 ஆம் ஆண்டில் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் திராவிட மாணவர் கழகம் தோற்றுவிக்கப் பட்டது. அதே கும்பகோணத்தில் 1944 பிப்ரவரி 19,20 ஆகிய இரு நாள்களிலும் திராவிட மாணவர் முதல் மாநாடும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 1944 ஏப்ரல் 17-இல் ஈரோட்டில் திராவிட இளைஞர் மாநாடு நடைபெற்றது. 1944 ஆகஸ்டு 27-இல் சேலத்தில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நீதிக் கட்சியின் 16-ஆவது மாநில மாநாடு சேலம் விக்டோரியா மார்க்கெட் மைதானத்தில் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் கூடியது. அம்மாநாட்டில்தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயர் அதிகார பூர்வமாக திராவிடர் கழகம் என்று பெயர் மாற்ற தீர்மானம் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டு, அன்று கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களால் முன் மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. கட்சிக்குப் புதுப்பெயர் சூட்டப்பட்டு புதிய கொள்கைகளும், திட்டங்களும் வகுக்கப்பட்ட போதிலும் கழகத்திற்கென்று உடனடியாக கொடி ஒன்று உருவாக்கப்படவில்லை.

நீதிக்கட்சியின் கொடியாகிய சிவப்புத் துணியில் வெள்ளை நிறத்தில் தராசு கொடியே தொடர்ந்து கழக மாநாடுகளில் ஏற்றப்பட்டு வந்தது. அந்தக் கொடியின் பின் பக்கத்தில் ஜஸ்டிஸ் கட்சியைக் குறிக்கும் து என்ற எழுத்தும் இடம் பெற்றிருந்தது. திருச்சி புத்தூர் மைதானத்தில் 29-9-1945 அன்று நடைபெற்ற 17-ஆவது திராவிடர் கழக மாநில மாநாட்டில் கொடியை ஏற்றி வைத்த தோழர் மிராண்டா கஜேந்திரன் பி.ஏ., அவர்கள் உரையாற்றுகையில்,

நம்முடைய கொடியில் இருக்கும் செங்குருதி யொத்த நிறத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் அதனிடையே பொறிக்கப்பட்டுள்ள தராசு சின்னத்தை நான் ஒப்புக் கொள்ள முடியாது. நாம் வேண்டுவது தலைகீழ் மாறுதல் புரட்சி! இன்னல்செய்யும் ஆரியத்தை சின்னா பின்னமாக்க ஓர் சின்னம் தேவை. தராசு, புரட்சியைக் குறிக்கும் சின்னமாகாது. தலைகீழ் மாறுதல் வேண்டி நிற்கும் எதிர்கால ஆக்க இளைஞர் உணர்ச்சிக்கு இந்தத் தராசு எந்த விதத்திலும் ஓர் அறிகுறியோ அல்லது வழிகாட்டியோ ஆகாது. புத்துலகிற்கும், புதுவாழ்விற்கும் வழிகாட்டக்கூடிய தீவிர மான ஒரு புரட்சிச் சின்னத்தை ஏற்படுத் துமாறு வேண்டிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கழகக் கொடி பிறந்தது

தந்தை பெரியார் பேசுகையில் கொடி என்பது விஞ்ஞான அறிவோடு, நம் இலட்சியத்தைக் கிளப்பும் உணர்ச்சியூட்டும் முறையிலும் இருக்க வேண்டும். அப்படி இன்று ஒரு கட்சிக் கொடியுமில்லை. நமது கட்சிக் கொடியாக இருக்கும் தராசுக் கொடியும் அர்த்தமில்லாததும், காலத்திற் கேற்றபடியும் இல்லாதிருக்கிறது. இது காலத்திற்குத் தக்கபடி மாறியாக வேண்டும். கொடியினால் மக்களுக்கு உணர்ச்சி ஏற்பட வேண்டும் என்று கூறியதன் விளைவால் தோழர் பி. சண்முக வேலாயுதம் அவர்கள் சிந்தனையில் உதயமாகி சித்தரிக்கப்பட்டது தான் கறுப்புத் துணியில் மத்தியில் வட்டமாக சிவப்புத் துணி தைத்த கொடி. இதைத்தான் திராவிடர் கழகக் கொடியாகக் கொள்வதென 22-4-1946 அன்று திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக நிர்வாகக் கமிட்டிக் கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டது. கொடிக்கான கரு கொடுத்தவர் தந்தை பெரியார், உரு கொடுத்தவர் தோழர் சண்முக வேலாயுதம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

திராவிடர் கழகக் கொடியைப் பற்றி அன்னை மணியம்மையார் அவர்கள் பேசுகையில், திராவிடர் களாகிய நாம் மேற்கண்ட சமுதாய, அரசியல், மதவியல், பொருளாதார இயல் ஆகியவற்றை விட்டு மிகவும் முக்கியமான தாகிய நம்முடைய சமுதாய சுயமரியாதை யைக் குறியாய்க் கொண்டு நம்முடைய இழிவுகளும், தடைகளும் நீக்கப்பட்டு மனிதத்தன்மை பெறுவதே முக்கிய நோக்கம் என்பதையும், அதையே நாங்கள் முக்கிய மாகக் கருதுவதோடு, அதற்காக நாங்கள் பெரிதும் துக்கப்படுகிறோம் என்கிற துக்கக் குறியையும் காட்டுவதற்காக கறுப்பு வண் ணத்தையும், அதற்காக தீவிரக் கிளர்ச்சியில் இறங்கி விட்டோம். இனி ஓயவே மாட்டோம். எதுவரினும் எதிர்த்து நிற்போம் என்பதைக் காட்டுவதற்காக நடுவில் சிவப்பு வண்ணத் தையும் வைத்துதான் நமது திராவிடர் கழகக் கொடியாய் பயன்படுத்துகிறோம். நமது கொடியானது நம்மை விடுதலைக்கும், சுயமரியாதைக்கும் இழுத்துச் செல்வதாக இருக்க வேண்டும். நம்முடைய இழிவைக் காட்டிக் கொள்ளும் சின்னம் கறுப்பு நிறம் என்று சொல்வதில் சில தோழர்கள் வெட்கப்படுகிறார்கள். நம்முடைய இழிவுக்கு வெட்கப்படாமல், நம்முடைய இழிவைப் பற்றிச் சொல்வதற்கும், பேசுவதற்கும் வெட்கப்பட்டு, இழிவுகளை மூடி மூடி மறைத்து நம்மை இழிவில்லாதவர்கள் என்று காட்டிக் கொண்டதன் பயனே இன்றும் நம் இழிவுகள் சட்டத்தில், அரசியலில் மற்ற ஆதாரங்கள் நடப்புகளில் இந்த இருபதாவது நூற்றாண்டிலும் வெளிப்படையாக இருந்து வருகிறது. ஆகவே நம் இழிவுகளை தாராள மாக வெட்கப்படாமல் வெளியில் சொல்ல வேண்டும். இழிவு நீங்க என்ன வேண்டு மானாலும் செய்வோம் என்று துணிவு கொண்டு அதற்குத் தக்கவாறு நடந்து கொள்ள வேண்டும். நம் கறுப்புக் கொடி என்றும் நிரந்தரமானது அல்ல. அதிலிருக் கும் சிறு சிவப்பு நாளாவட்டத்தில் வளர்ந்து கறுப்பையே மறைத்துவிடும். அது மறையும் படி செய்ய வேண்டிய பொறுப்பு நம்மிடத்தில் தான் இருக்கிறது. நாம் செய்தே தீருவோம் என்று கூறியுள்ளதை நினைவு படுத்தி,

வாழ்க தந்தை பெரியார்!

வாழ்க அன்னை மணியம்மையார்!!

வாழ்க தமிழர் தலைவர்!! என்று கூறி உரையை முடிக்கிறேன். நன்றி. வணக்கம்.

----------------29-5-2012 அன்று வேலூரில் நடைபெற்ற புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில த.அ. ஓவியா, திராவிடர் கழக மாவட்டமாணவரணி தலைவர்,
(வேலூர் மாவட்டம்)மாநாட்டில் திராவிடர் கழகக் கொடியை ஏற்றி வைத்து ஆற்றிய உரை --"விடுதலை” 1-6-2012

11 comments:

தமிழ் ஓவியா said...

உலக செஸ் போட்டியில் விசுவநாதன் ஆனந்த் பட்டம் வென்றதற்காக தமிழ் நாடு அரசு சார்பில் ரூபாய் 2 கோடியை முதலமைச்சர் தூக்கிக் கொடுத்துள்ளார்.

அரிய சாதனைதான் - பாராட்டலாம்! அதற்காக அரசுப் பணத்தை 2 கோடி அள்ளிக் கொடுக்க வேண் டுமா?

தமிழ்நாட்டில் பல கிராமத்துப் பிள்ளைகள், திறமையிருந்தும் போட்டி யில் பங்கு கொள்வதற் கான நிதி வசதி கிடைக்கா மல் அல்லாடுகிறார்களே - ஏடுகளில் செய்திகள் வரு கின்றனவே. அவர்களுக்கு இத்தகைய உதவிகளைச் செய்யக் கூடாதா?

விசுவநாதன் ஆனந்த் என்ன வறுமைக் கோட்டுக்கு கீழ் உழல்கிறாரா?

என்ன இருந்தாலும் அவாள் அல்லவா!2-6-2012

தமிழ் ஓவியா said...

மடியில் கனமா...

தமிழ்நாடு அமைச்சர் களாக இருக்கும் பலர் குருபெயர்ச்சியின் போது தங்கள் பதவிகளுக்கு பெயர்ச்சி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் சனி பகவான் கோயிலைத் தேடித் தேடி அலைகிறார் களாம்!

என்ன செய்வது மடியில் கனம்!2-6-2012

தமிழ் ஓவியா said...

தினை விதைப்பவன் தினையறுப்பான்!



பிகார் மாநிலத்தில் உள்ள உயர்ஜாதி நிலச்சுவான்தார்களின் படையான ரன்வீர்சேனா வின் தலைவர் முக்கியாஜி எனப்படும் பிரம்மேஸ்வர் சிங் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் பாட்னாவில் இருந்து 71 கி.மீ. தொலைவில் உள்ள கதிரா மொகல்லாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து போஜ்பூர் மாவட்டத் தலைநக ரான ஆராவில் மூண்ட கலவரத்தில் தனியார் மற்றும் அரசு உடைமைகளான 5 வாகனங்கள் தீயிட்டுக் கொளுத் தப்பட்டுள்ளன. இங்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது. மூத்த அதிகாரிகள் பரிசீலனைக்குப் பின் ஊரடங்கு சட்டம் விலக்கிக் கொள்ளப் பட்டடது.

கலவரப் பகுதிக்கு வருகை தந்திருந்த காவல்துறைத் தலைவர் அபயானந்தை உள்ளூர் மக்கள் கேலியும், கிண்டலும் செய்த துடன், சிங்குக்கு தக்க பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டினர்.

இது பற்றி தக்க விசாரணை நடத்தப்படும் என்று கூறிய முதல்வர் நிதிஷ் குமார், மக்களை அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டார். புலன் விசாரணைக் காக ஓர் உயர்மட்டக் குழு நியமிக்கப் பட்டது.

ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த நிலமற்ற ஏழை மக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக சிங் மீது தொடரப்பட்ட பல வழக்குகளில் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்குள் அவரது ஆயுளே முடிந்து போய் விட்டது.
தினை விதைத்தவர் தினை யறுத்தார்.

2-6-2012

தமிழ் ஓவியா said...

பெண்கள் விடுதலை எங்கே இருக்கிறது?

பெண்களை இழிவுபடுத்தும், பெண்களின் உரிமைகளை மறுக்கும் மத நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள், சாஸ்திரங் களை அறவே புறக்கணிப்பதன் மூலமே பெண்கள் தங்கள்மீது சுமத்தப்பட்ட இழிவுகளிலிருந்தும், உரிமை மறுப்புகளிலிருந்தும் விடுதலை பெற முடியும் என்று இம்மாநாடு உறுதியாக வெளிப் படுத்துகிறது

- இவ்வாறு 14ஆவது தீர்மானமாக வேலூரில் நடைபெற்ற புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டில் (29.5.2012) நிறைவேற்றப்பட்டது.

என்னதான் கல்வி வாய்ப்புகள், உத்தியோக வாய்ப்புகள் சொத்துரிமை போன்ற சட்டங்கள் செய்யப்பட்டு இருந்தாலும், உண்மையிலேயே பெண்களின் விடுதலை என்பதற்கான அடித்தளம் மேற்கண்ட தீர்மானத்தின் உள்ளடக்கத்தில் புதைந்து இருக்கிறது என்பதை எந்த வகையிலும் மறுக்க முடியாது.

மானமும் அறிவும் மனிதனுக்கழகு என்றவர் தந்தை பெரியார், இந்த இரண்டும் கிடைக்கப் பெறாதவர்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்கள் உருவத்தால் மனிதர்களே தவிர, உணர்வால் அத்தகுதியை பெறக் கூடியவர்கள் அல்லர்.
அதிலும் குறிப்பாகப் பெண்களின் உண்மையான விடுதலைக்கு எதிரானவற்றைத் தங்கள் மூளையில் திணித்துக் கொண்டு அலைகிறார்கள்.
கடவுள் நம்பிக்கை என்பது ஒருபுறம் இருக்கட்டும்; பெண் கடவுளுக்கும் பூசை செய்யும் உரிமை ஏன் பெண்களுக்கு இருக்கக் கூடாது என்கிற அளவுக்காவது சிந்திக்க வேண்டாமா?

பெண்களைத் தெய்வமாகவும், பூமியைப் பூமாதேவி என்றும், தண்ணீரைக் கங்காதேவியாகவும் வெளித் தோற்றத்தில் கூறப்பட்டு வந்தாலும் மதத்தின் பேராலும், சாத்திரங்களின் பேராலும் வேதங்களின் பேராலும் எந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்?

குறிப்பாக இந்துமத வியாபாரிகள் உலகெங்கும் பரப்பியுள்ள கீதையில் பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது குறித்து எந்தப் படித்த பெண்கள், எந்தப் பெண் விஞ்ஞானிகள், எந்தப் பல்கலைக் கழக பெண் துணை வேந்தர்கள்; பெண் கல்வியாளர்கள், பெண் வரலாற்றுப் பேராசிரியர்கள் கவலைப்பட்டுள்ளனர்? விமர்சனங்களை வைத்துள்ளனர்?

இதில் என்ன கொடுமை என்றால், இப்படி சொன்னவர் இந்து மதத்தின் கடவுள் கிருஷ்ணன் என்று கூறுகிறார்கள் என்றால் இந்த நாட்டில் கடவுள்களும், இந்து மதமும், அதன் சாத்திரங்களும் எந்த அடித்தளத்தின்மீது உருவாக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ளுதல் எளிதுதானே!

இந்த எளிதான வெளிப்படையான உண்மைகளைப் புரிந்து கொள்வதில் என்ன கடினம்? கடவுள் என்ற கற்பனையின்மீது இவர்கள் வைத்துள்ள முட்டாள்தனமான நம்பிக்கையும், இனந் தெரியாத அச்சமும்தான். இந்த இழிவைப்பற்றி கோப உணர்ச்சி பெற முடியாமல் தடுத்துக் கொண்டுள்ளன.

பெரியார் என்ற மாபெரும் புரட்சியாளரால்தான் எந்தவித ஆசாபாசத்துக்கும், கட்டுக்குள்ளும் தன்னைச் சிறைப்படுத்தி கொள்ளாமல், தங்குத் தடையற்ற தன் சுய சிந்தனையால் உண்மையை மட்டும் வெளிப்படுத்த முடிந்திருக்கிறது.

ஒரே ஒரு நிமிடம் பெண்கள் தங்களின் சிந்தனையை விழிக்கச் செய்தாலே அறியாமை, அச்சம் எனும் இருட்டிலிருந்து வெளியேறி உண்மையைச் சிக்கெனப் பிடித்துக் கொள்வார்கள்.

நாம் நீண்ட காலமாக நம்பி வந்த, வழிபட்டுவந்த கடவுள், மதம், சாஸ்திர சம்பிரதாயங்களால் கல்வி உரிமை பெற்றோமா? உத்தியோக வாய்ப்பு கிடைக்கப் பெற்றோமா? சொத்துரிமை போன்ற சட்டங்கள் வந்து சேர்ந்தனவா? என்ற வினாக்களைத் தங்களுக்குள் எழுப்பிட வேண்டும்.

கடவுள் இல்லை - மதம் வேண்டாம், சாத்திரங்களைத் தூக்கி எறி - எரி என்று சொன்ன புரட்சித் தந்தை பெரியாரால் தானே இந்த வாய்ப்புக் கதவுகள் திறந்து விடப்பட்டன என்ற உண்மையை ஏற்றுக் கொண்டால் அவர்களின் பரிணாம வளர்ச்சி அதிசயிக்கத்தக்கதாக இருக்கும். இதைத்தான் வேலூர் பெண்கள் மாநாட்டு கடைசித் தீர்மானம் வலியுறுத்துகிறது - சிந்திப்பார்களாக!2-6-2012

தமிழ் ஓவியா said...

கலைஞரிடம் நாடு நிரம்ப எதிர்பார்க்கிறது!


தம்பி கருணாநிதியினுடைய ஆற்றல் பற்றியும், ஆற்றல் காரணமாகப் பெற்ற வெற்றிகள் பற்றியும், பெற்ற வெற்றிகளெல்லாம் நாட்டு முன்னேற்றத் திற்குப் பயன்பட்டன என்பது பற்றியும், அந்த ஆற்றலும் வெற்றியும் நாட்டுக்கு இனியும் நல்ல முறையில் பயன்படும் என்பது பற்றியும் நண்பர்கள் பலர் எடுத்துச் சொல்லிக் கேட்பதில் எனக்கு மிகுந்த பெருமிதம் உண்டாகும் என்பதில் யாருக்கும் அய்யப்பாடில்லை.
வண்ணமான எண்ணத்தை மிகச் சிறு பருவத்தில் பெற்றவர் கருணாநிதி. அவர் இளமைப்பருவ முதல் நாட்டு மக்களுக்கு எதை யாவது சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தோடு சில எண்ணங்களை உருவாக்கிக் கொண்டு கையேட்டுப் பிரதிகள் மூலமாகச் சொல்லி, அதற்குப் பிறகு மேடையிலே பேசுவதன் மூலமாகச் சொல்லி - கட்டுரை வடிவத்தில் - சினிமாத்துறை மூலம் சொல்லி, இன்றைய தினம் அமைச்சராக இருந்து அந்த எண்ணங்களுக் கெல்லாம் அமைச்சர் என்ற முறையில் எந்த அளவுக்கு வடிவம் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு வடிவம் கொடுத்து வருவதை நாமெல்லாம் மகிழ்ச்சியோடு பாராட்டுகிறோம்.

கலைத்துறையில் ஈடுபாடு கொண்ட ஒருவர் பொறுப்புகளை நிறைவேற்றுவாரா என்ற அய்யப்பாடு இருந்தது. ஒரு நல்ல கலைஞர் - சிறந்த கலைஞர் என்றால், அவர் கலையில் எந்த அளவு திறமை காட்டுகிறாரோ, அந்த அளவு திறமை அவர் எடுத்துக் கொண்ட பொறுப்பு ஒவ்வொன்றிலும் காட்டுவார் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன். ஒரு நாளைக்கு கருணாநிதி எத்தனை மணி நேரம் தூங்குகிறார் என்பதை யாராவது அவருக்குத் தெரியாமல் பார்த்தால்தான் அவர் இத்தகைய திறமையைப் பெற்றதன் அடிப்படை - உழைப்பு என்பதை உணருவார்கள். உழைக்காமல் இந்தத் திறமை வந்துவிடவில்லை. உழைக்காமல் ஒரு திறமை வராது. சிலப்பதிகாரத்தைக் கருணாநிதி இன்றைய நடைக்கு ஏற்ற அளவில் ஆக்கித் தந்திருக்கிறார் என்றால் அதற்கு நூறு முறை யாவது முறைப்படி படித்திருப்பார். அப்படிப் பட்ட கடுமையான உழைப்புக்குக் காரணம், நாம் பெற்றிருப்பது நாட்டுக்கு அளிப்பதற்குப் போதாது என்ற அடக்க உணர்ச்சிதான். எனக்கு எல்லாம் தெரியும் என்று ஒருவர் எண்ணியவுடன் அவருடைய சரித்திரத்தை எழுதி மலிவுப் பதிப்பு வெளியிட்டு, இரண்டாம் பதிப்பு வராது என்று உலகத்துக்கு அறிவித்துவிடலாம்.

நான் கருணாநிதி அமைச்சரானபோது அடைந்த மகிழ்ச்சியைவிட, அவர் மாற்றாரால் அமைச்சர் என்ற முறையிலும் தாக்கப்படு வாரானால், நிமிர்ந்த நடைபோட்டு என் தம்பி எதையும் ஏற்றுக் கொள்கிறவன் என்று சொல் வேன். என்னை முழுவதும் அறிந்தவர்கள்தான் கழகத்தில் இருக்கிறார்கள். அவர்களிலே முற்றி லும் அறிந்தவர் என்று சொல்லத் தக்கவர்களிலே கருணாநிதிக்கு மிகச் சிறந்த இடம் உண்டு. அவர் மூலமாக நானும் நாடும் நிரம்ப எதிர்பார்த் திருக்கிறோம். இப்பொழுது செய்திருக்கின்ற காரியங்களைப் போல் பல மடங்கு அதிகமான காரியங்கள் அவருடைய திறமையின் மூலம் நாட்டுக்கு கிடைக்க வேண்டியிருக்கிறது 2-6-2012

தமிழ் ஓவியா said...

தமிழன் மானத்தோடு வாழ கலைஞரின் ஆட்சி தேவை!


(இரண்டாவது முறையாக டாக்டர் கலைஞர் முதலமைச்ச ராக இருந்தபோது, நமது நல்லாசிரியர் குரல் புலவர் கா. முத்துசாமி அவர்கள் 18.4.1972இல் பெரிய குளத்தில் தந்தை பெரியார் அவர்களிடம் பேட்டி:)

(பேட்டியின்போது பெரியகுளம் பெரியார் பெருந்தொண்டர் ம.பெ. முத்துக்கருப்பையா, பெரியகுளம் ச.வெ. அழகிரி (மாவட்ட தி.க. செயலாளர்) உடன் உள்ளார்கள்.

கேள்வி: கலைஞர் அவர்கள் தங்களிடம் பணியாற்றிய போது, அவரிடம் தாங்கள் கண்ட நிறை என்ன? குறை என்ன?
பெரியார்: சொன்னதை எல்லாம் ஒழுங்காகவும், சிறப்பாகவும் செய்வார், பாராட்டும்படி பணிபுரிந்தார். அவரிடம் நிறைவைக் கண்டேன் குறை இல்லை.

கேள்வி: கலைஞர் அவர்களுடைய எழுத்தாற்றலைப் பற்றி தங்கள் கருத்து என்ன?

பெரியார்: எந்த விஷயத்தையும் எழுதுவார், திறமையாகவும் எழுதுவார்.

கேள்வி: கலைஞர் அவர்களுடைய கலைப்பணியைப் பற்றி தங்கள் கருத்துஎன்ன?

பெரியார்: அவருடைய நாடகம், சினிமா எல்லாம் சிறப்பாக இருக்கு - மக்கள் கூட்டம் கூட்டமாக ரசிக்கிறார்கள் என்று பலர் என்னிடம் கூறியிருக்காங்க.

கேள்வி: கலைஞர் அவர்கள் தங்களிடம் ஆலோசனைகள் கேட்பது உண்டா?

பெரியார்: நிறையக் கேட்பார். கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

கேள்வி: அவைகளில் முக்கியமானது எது?

பெரியார்: எல்லாமே முக்கியம்தான்!

கேள்வி: உங்களுடைய ஆலோசனைகளை ஏற்று செயல்படுகிறாரா?

பெரியார்: நான் சொன்னாலும் அவருக்குச் சரி என்று பட்டால்தான் செய்வார்.

கேள்வி: கலைஞர் அவர்களுடைய செயல்களில் தங்களுக்கு விருப்பமானது எது?

பெரியார்: நிறைய இருக்கு. அவருடைய தமிழ் உணர்வு, பகுத்தறிவு - மக்களுக்காக நிறைவேற்றும் திட்டங்கள், எல்லாம் எனக்கு விருப்பமானவை.

கேள்வி: கலைஞர் அவர்கள் மக்களில் ஒருவராக - மக்களோடு தொடர்பு கொண்டு செயலாற்றுகிறார். அவரிடம் முதலமைச்சர் என்ற அதிகார வெறி இல்லை, ஆனால் சிலர் ஆர்ப்பாட்டம் செய்து அவர்களுக்கு தொல்லை கொடுக் கிறார்களே ஏன்?

பெரியார்: எதிரிகளுக்கு வேறு வழியில்லை. எப்படியாவது யாரையாவது தூண்டி விட்டு பதவிக்கு வர முயற்சி செய்கிறார்கள். அதனால் சிலரைத் தூண்டி விடுகிறார்கள். புரியாமல் சிலர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

கேள்வி: கலைஞர் அவர்களுடைய ஆட்சியைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன?

பெரியார்: வேறு யாரும் செய்ய நினைக்காத காரியங்களை, வேறு யாராலும் செய்ய முடியாத காரியங்களை கலைஞர் உற்சாகத்தோடும் - ஊக்கத்தோடும் நன்றாகச் செய்கிறார் - தமிழன் மானத்தோடு வாழ்வதற்கு கலைஞரின் ஆட்சிதான் தேவை.



இந்த ஆட்சி மாறினால்...



எனது 92வது ஆண்டு செய்தியாக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், இந்த ஆட்சியை இன்னும் ஒரு பத்தாண்டுக்குப் பாதுகாத்து வர வேண்டுமென்பதே ஆகும்.

தேசம் மிருகப் பிராயத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது. யாரும், எப்படிப்பட்டவரும் எந்த இழிவான காரியத்தைச் செய்யவும் பயப்படு வதில்லை. ஒழுக்கம், நேர்மை, நாணயம், அமைதி என்பது பெரும்பா லோரிடம் காண முடிவதில்லை. பொதுவில் பார்த்தால் நமது நாடுதான் இந்தியாவிலேயே பாதுகாப்பான நாடு என்று கருதத்தக்கதாய் இருந்து வருகிறது.

இதற்குக் காரணம் தி.மு.க., ஆட்சிதான் என்று உறுதியாய்க் கூறுகிறேன். எனவே, இதற்கு ஏதாவது மாற்றம் ஏற்படுமானால் அதை வேறு எந்த ஆட்சி வந்து மக்களை இன்றைய நிலைக்கு கேடில்லாமல் ஆள முடியும்? சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இந்த ஆட்சிக்கு மாற்றம் ஏற்படுமானால் - அடுத்துவர இருப்பது பார்ப்பன ஆட்சிதான்! அதாவது, வர்ணாசிரமத்தை நிலை நிறுத்தும் ஆட்சிதான்! இது உறுதி; உறுதியேயாகும்.

- தந்தை பெரியார் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் அறிக்கையில் (17.9.1970)



திராவிடன் ஏன்?

திராவிட என்ற வார்த்தை அலங்காரத்திற்காகச் சொல்வதில்லை. நம்முடைய தமிழகத்திலே பெரும் புலவர்கள், விற்பன்னர்கள், பேராசிரியர்கள் எல்லாம் கண்டுபிடித்த உண்மைகளிலே மிக முக்கியமான உண்மைதான் திராவிட என்கின்ற அந்த உணர்வு - நாம் தமிழர் என்று சொல்லிக் கொண்டாலும்கூட திராவிடன் என்று சொல்லிக் கொள்ளும்போது தான் பெரியார் அடிக்கடி சொல்வார் - உன்னைத் திராவிடன் என்று சொல்லிக் கொண்டால்தான் திராவிடன் வேறு, ஆரியன் வேறு என்ற அந்தப் பாகுபாடு தெரியும். ஆகவே நீ தமிழன் என்றாலும் கூட திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்பதை மறந்து விடாதே என்று பெரி யாரும் அண்ணாவும் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

(அதிமுக., மதிமுக., தேமுதிகவிலிருந்து திமுகவுக்கு வந்த தோழர்கள் மத்தியில் கலைஞர் ஆற்றிய உரையிலிருந்து முரசொலி 6.6.2010).

தமிழ் ஓவியா said...

திராவிட மொழி ஞாயிறு பாவாணர் பார்வையில் கலைஞர்


கரிகால் வளவனே திரும்ப நம் கருணாநிதியாராகப் பிறந்தானோ என்றுகூட நாம் நம்பும்படியாக இருக்கின்றது. அந்தக் கரிகால் வளவனும் காவிரி நாட்டிலேதான் பிறந்தான். இவரும் அந்த நாட்டிலேதான். அந்தப் பூம்புகாரை அவன் வளப்படுத்தினான். இவரும் இப்போது அதைப் புதுப்பித்து வருகின்றார்... அவன் இளமையிலே பகைவராலே இடர்பட்டுத் துன்பப்பட்டு அதிலிருந்து தப்பினான். அப்படியே இவரும் போன பொதுத் தேர்தலிலே (1971), எப்படியோ பகைவரிடத்தில் அகப்பட்டுத் தப்பினார்... அந்தக் காலத்திலேயே அவரைப் பற்றி ஏதாவது ஒரு புகைப்படமோ, பூச்சுப் படமோ இருந்திருந்தால், இந்த முகச்சாடைகூட ஒத்துப் போகுமோ என்றுகூட நாம் நினைக்கும்படியாக இருக்கிறது (பாவாணர் உரைகள் - பக் 82).

தமிழ் ஓவியா said...

ஏ சூத்திரா, பஞ்சமா - எட்டி நில் என்ற காலம் போய் விட்டது! கலைஞர்


எங்கே சூத்திரர்கள், திராவிடர்கள் - அவர்கள் தஸ்யூக்கள் என்று அழைக்கப்பட்ட மக்கள் நல்லாட்சி நடத்துகிறார் களோ அவர்களையெல் லாம், வீழ்த்தி விட்டு, அங்கே தாங்கள் வந்து அமர்ந்து கொள்ள ஒரு கதையை ஜோடிப் பார்கள். அந்தக் கதையை ஜோடித்து விட்டு அதற்கு ஒரு பண்டிகையின் பெயரை இடுவார்கள். அது போலத்தான் தமிழ் நாட்டிலே நடைபெறு கின்ற இந்தஆட்சி நான் மாவலி அல்ல- அவ்வளவு வலிமை பொருந்தியவன் அல்ல - மாவலி மரபின் ஆட்சி அவ்வளவுதான் - மாவலி மன்னனுடைய மரபு ஆட்சி. அந்த ஆட்சியில் ஒருவனாக நான் இருக்கிறேன் என் றால் என் தலைமையிலே இருக்கின்ற இந்த ஆட் சியை வீழ்த்த ஒழிக்க அகற்ற புறம் கூறி இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட என்னென்ன தில்லு முல்லுகள் உண்டோ, திருகு தாளங்கள் உண் டோ அவ்வளவையும் செய்துபார்க்க ஒரு கூட்டம் தயாராகியிருக் கின்றது. ஏனென்றால் அவர்கள் கையைவிட்டு அதிகாரம் போய், ஆட்சி போய் ஏ சூத்திரா, எட்டி நில்! ஏ, பஞ்சமா, பக்கத்திலே வராதே என்றெல்லாம் ஆணை யிட்ட அந்தக் காலம் போய் பல ஆண்டுகள் ஆகிறது. அதை மீண்டும் பெறுவதற்காக ஒரு கூட்டம் இன்றைக்கு முயற்சித்துக் கொண்டி ருக்கின்றது. அந்த முயற் சிக்கு அவர்களுக்குக் கிடைத்துள்ள சாதன மாக இருப்பது செய்திப் பத்திரிகைகள் - தொலைக்காட்சிகள் - இவைதான் அவர் களுக்குப் பக்கபலமாக இருக்கின்றன. பொய்ப் பிரச்சாரத்தைச் செய்தே இந்த ஆட்சியை வீழ்த்தி விட்டு, நாம் வந்து அமர்ந்து விடலாம் என்று கருதுகிறார்கள் என்றால், அது முடியுமா, நடக்குமா என்பதுதான் கேள்வி. ஆனால், அந்த முயற்சி இப்போது நடக்கிறது - அதை நாம் இப்போது அனுமதித்துக் கொண்டிருக்கிறோமே - இதனுடைய விளைவு களையும் நாம் அனுப வித்துத்தானே ஆக வேண்டும் என்ற அந்த நிலையை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண் டும்.

(3.2.2011 அன்று சைதை பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலைஞர்)

தமிழ் ஓவியா said...

கலைஞரைப் பாராட்டி அய்யா! தமிழர்களுக்குப் புதுவாழ்வு தந்தவர்!


கலைஞர் அவர்கள் நமக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு என்று சொல்ல வேண்டும். இதற்கு முன் ஆட்சியில் இருந்த கட்சிக்காரர்களைவிட பகுத்தறிவாளராவார். அவருக்குப் பிறந்தநாள் மலர் வெளியிடுவது அவரது கொள்கை களைப் பின்பற்ற வேண் டும் என்பதாகும். மனிதர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதாவது நம்பிக்கையாளர்கள் பகுத்தறிவாளர்கள் என்பதாகும். முன் னோர்கள் சொன்னது பழையகாலம் முதல் இருந்து வருவது என்பதற்காக எதையும் சிந்திக் காமல் கடவுள்-மதம்-ஜாதி-சாஸ்திரம் என்கிற பெயரால் பல மடைமை களைச் சிந்திக்காமல் ஏற்றுக்கொள்பவர்கள் நம்பிக்கையாளர்கள் ஆவார்கள். அறிவைக் கொண்டு ஆராய்ந்து அறிவிற்கும் ஏற்றதை ஏற்றுக்கொண்டு மற்றதை தள்ளிவிடக் கூடியவர்கள் பகுத்தறி வாளர்கள் ஆவார்கள். இதில் நம் நாட்டில் நம்பிக்கை யாளர்கள்தான் அதிகம். பகுத்தறிவாளர்கள் இருப்பது மிகமிகக் குறைவேயாகும்.

நமது கலைஞர் அவர்கள் தலை சிறந்த பகுத்தறிவுவாதி ஆவார்.

இத்தகைய பகுத்தறிவாளராகவும் ஆட்சிக் கலையில் உரிய ராஜதந்திரியாகவும், முன்யோசனை யுடனும் அவர் நடந்து வருவதின் மூலம் தமிழர்கட்கு புதுவாழ்வு தருபவர் ஆகிறார் நமது கலைஞர் அவர் பல்லாண்டு வாழ்ந்து அவர்பணி வெற்றியடைய வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

- தந்தை பெரியார்
(கலைஞர் 48வது பிறந்தநாள் மலர்

தமிழ் ஓவியா said...

கீதை + குறள்


அந்த உணர்வு இன்னமும்; இங்கேயும் இருக்கிறது என்ற தலைப்பில் 31.07.2002 அன்று நான் எழுதிய உடன்பிறப்புக்கு கடிதத்தில் மனித சமுதாயத்திலே கலப்பு ஏற்படக் கூடாது என்றும் அப்படி ஏற்படுவதால் தன்னுடைய ஆரிய இனம் வலுவிழந்து போய்விடும். ஆரிய கலாச்சாரம் பாதிக்கப்படும் என்றும் இட்லர் தன்னை அடை யாளம் காட்டிக் கொண்டிருப் பதையும் அதற்கான சான்று களையும் அவன் எழுதிய எனது போராட்டம் (மெய்ன் கேம்ப்) எனும் நூலில் இருந்தே எடுத்துக் காட்டியிருந்தேன்.

அதைப் படித்த பகலவன் என்ற மும்பை தோழர் ஒருவர் இட்லரின் இதே கருத்தைத்தான் பரமாத்மா கிருஷ்ணனும் பகவத்கீதையிலே வெளியிட்டிருக்கிறார் என்று எழுதியுள்ளார். அவர் அதற்காக எடுத்துக்காட்டியுள்ள பகவத் கீதையினுடைய ஆதாரம் வருமாறு:
பகவத் கீதை முதல் அத்தியாயத் தில் 43ஆவது சுலோகம்.

தோஷை - ரேதை: குலக்னானாம்

வர்ணஸங்கர - காரகை:

உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாச்ச சாச்வதா : ணி

இதன் தமிழாக்கம்: சாதிய வருணங்களி டையே கலப்பு ஏற்படு வது குலபாதகமாகும். கலப்பு எனப்படும் இத் தகைய தீமையால் நிரந் தரமாக உள்ள சாதி தர்மங்களும் மேன்மை யும் அழிந்து விடும் என்பது அதற்குப் பொருள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவத்தை நிலை நாட்டும் திருக்குறளுக் கும், நான்கு வருணங்களை நிலை நாட்டி அவற்றில் மேல் வருணம். கீழ் வருணம் என்றெல்லாம் பேசி அதற்கிடையே கலப்பு ஏற்படுவது அதர்மம் என்று போதிக்கின்ற கீதைக்கும் உள்ள வேறுபாட்டை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

எனவே, இளைய சமுதாயம் எதைப் பின்பற்றுவது? ஆண்டவன் உபதேசித்ததாகக் கூறப்படும் கீதையையா? அய்யன் வள்ளுவனின் குறளையா?

- கலைஞர், முரசொலி 05.08.2002

தமிழ் ஓவியா said...

கலைஞருக்குப் பட்டம்
29.4.1990 - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழாவில் - சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த புரட்சிக் கவிஞர் தொடர் விழாவில் முதல் வர் கலைஞருக்கு - மக ளிர் உரிமைகளுக் காகத் தொடர்ந்து சட்டங்களும், திட்டங் களும் நிறைவேற்றி வருவதற்காக மகளிர் உரிமை ஆட்சி மாண் பாளர் என கழக சார்பில் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர் களால் பட்டம் அளிக்கப் பட்டது. தமிழறிஞர்கள் பாராட்டப்பட்டார்கள். விலங்கு மாட்டப்பட்ட பெண் சிலை கழக மகளிரணியால் தரப்பட்டது. அச்சிலை யின் விலங்குகளை அகற்றி முதல்வர் கலை ஞர் அதைப் பெற்றுக் கொண்டார்.