நிலவுக்குச் சுற்றுலா செல்ல ரூ.900 கோடி செலவாகும். தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு ருசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
நிலா நிலா ஓடிவா, நில்லாமல் ஓடி வா, மலை மேல் ஏறி வா, மல்லிகைப்பூ கொண்டு வா! என்று பாட்டுப் பாடி குழந்தைகளுக்குச் சோறூட்டும் காலம் ஒன்று இருந்தது. நிலா இங்கே வராது - நிலாவுக்குத்தான் நாம் செல்ல வேண்டும்.
இனிமேலாவது பித்தா பிறை சூடிப் பெருமானே - சிவபெருமான் தலையில் சூட்டப்பட்டிருக்கும் சந்திரனே என்று சொல்லும் செய்யுள்களைக் குப்பைக் கூடை யில் தூக்கி எறிந்தால் புத்திக்கு மதிப்புக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று நம்பலாம்.
குரு பத்தினியைக் கற்பழித்து விட்டான் சந்திரன், குருவின் சாபத்தால் தேய்பிறையானான் என்கிற மூளிகளை மூளையிலிருந்து கூட்டிப் பெருக்கி, மூலையில் ஒதுக்கினால் ஓகோ, கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர் எனும் பாராட்டுக்கூடக் கிடைக்கப் பெறலாம்.
ராகு, கேது என்ற பாம்புகள் சந்திரனை விழுங்குவதால்தான் சந்திரன் தேய்ந்து கொண்டு போகிறான் என்கிற புராண மூட் டையைப் பொசுக்கி எறிந்தால், அடுத்த தலை முறையினராவது அறிவு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
நவக்கிரகங்களுள் முக்கியமானதான பூமியைப் பட்டியலில் சேர்க்காமல், பூமியின் துணைக் கோளான சந்திரனை நவக்கிரகப் பட்டியலில் சேர்த்துள்ள சோதிடர்களை - மக்கள் மத்தியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மைக்கு எதிராக (51ஹ () முட்டாள் தனத்தை முதலாக்கி வியாபாரம் செய்ய முனைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப் படையில் சிறைக் கொட்டடியில் அடைத்தால் விஞ்ஞான மனப்பான்மை இந்தியாவில்கூட முளை விட ஆரம்பித்து விட்டது என்று மன நிறைவு அடையலாம்.
விஞ்ஞானத்தையும் ஒரு பக்கத்தில் அன்றாடம் அனுபவித்துக் கொண்டு, இன்னொரு பக்கத்தில், அஞ்ஞானத்தையும் ஆலிங்கனம் செய்யும் இரட்டை வேடக்காரர்கள் இனியாவது திருந்துவார்களா?
------------------- மயிலாடன் அவர்கள் 21-6-2012 “விடுதலை” டில் எழுதிய கட்டுரை
16 comments:
இலங்கை அமைச்சரின் பேச்சு பிரதமருக்குக் கலைஞர் கடிதம்
சென்னை, ஜூன் 21 - இலங்கை அமைச்சர் இனி நூறு முள்ளிவாய்க்கால்கள் வெடிக்கும் என்று அச்சுறுத்தலாகப் பேசி இருப்பது குறித்து திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:
நூறு இனப்படுகொலைகள் நடை பெறும் என்று எச்சரித்ததுடன், ஒரு முள்ளிவாய்க்கால் போது மென்றும், மேலும் நூறு முள்ளிவாய்க்கால்களுக்கு எவரும் முயற்சிக்கக் கூடாது என்றும் இலங்கை அமைச்சர் சம்பிகாரணவாக பேசியுள்ளதாக எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.
இலங்கை அமைச்சரின் பேச்சு மிகவும் ஆத்திர மூட்டுவது என்பதால் கண்டனத்துக்குரியது. இலங்கை அமைச்சரின் கண்டனத்துக்குரிய பேச்சினால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெருமளவு கலக்கம் அடைந்துள்ளனர். தாங்கள் இந்தப் பிரச்சினையை இலங்கை அரசிடம் எடுத்துக்கூறி கட்டுப்பாட்டுடனும் மனித நேயத்துடனும் நடந்து கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும். இலங்கை அரசின் கடுமையான நிலைப்பாடு குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு கலைஞர் அவர்கள் தமது கடிதத்தில் கூறியுள்ளார். 21-6-2012
நீரோமன்னன் நரேந்திரமோடி (பிஜேபி) ஆளும் குஜராத்தில் மாணவர்களுக்கு ஆபாசப் பாடங்கள்! பெற்றோர்கள் கொந்தளிப்பு
அகமதாபாத் ஜூன் 21- நரேந்திரமோடி ஆளும் குஜராத்தில் மாணவர்களுக்கு ஆபாச மான பாடங்கள் சொல் லிக் கொடுக்கப்படுகின் றன - பெற்றோர்கள் கொந்தளித்து எழுந் துள்ளனர்.
இந்தியாவிலேயே வித்தியாசமான கட்சி என்று தன்னைத் தானே அழைத்துக்கொள்ளும் பாஜக ஆளும் குஜராத் தில் ஆரம்பப்பள்ளி பாடப்புத்தகங்களிலேயே ஆபாச பாடங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் குஜராத்தில் உள்ள கல்வியாளர்கள், மாணவர்கள், பெற் றோர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய அரசு அனை வருக்கும் கல்வி என்ற திட்டத்தை இந்தியா முழுமைக்கும் செயல் படுத்தி வருகிறது. இத் திட்டம் குஜராத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் குஜராத் அரசு சார்பில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு மாதாந்திர புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இப்புத்தகம், குழந்தை களிடையே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டு வதற்காகவும், கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் வழங்கப்படுபவையாம். வழக்கம் போல் இந்தாண்டு பள்ளி விடுமுறைகள் முடிந்து இந்த கல்வியாண்டு துவங் கியுள்ளது. மீண்டும் பள்ளிக்கு ஆர்வமுடன் வந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குஜராத் அரசு சார்பில் ஆரம்பப் பள்ளி மாண வர்களுக்கு பஜ்ஜில் மேஜிக் எனும் புத்தகம் வழங்கப்பட்டது. இப் புத்தகம் 50 பக்கங் களைக் கொண்டது. இதுவரை இப்புத்தகம் குஜராத்திலுள்ள 35,000 ஆரம்பப் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. இப்புத்தகத்தை மிகவும் புகழ்பெற்ற நிறுவன மான கோலிபர் எனும் அச்சகம் வெளியிட்டு வருகிறது. இதில், நகைச் சுவை என்ற பெயரில் பாடத்திற்கு கொஞ்சம் கூட தொடர் பில்லாத அருவருக்கத் தக்க வகை யில் ஆபாச மான வார்த் தைகள் 4 பக்கங்களுக்கு இடம்பெற்றிருந்தன. இதனைப் பார்த்த மாணவர்கள் மற்றும் பெற்றேர்கள் அதிர்ச்சி யடைந்தனர். இதற்கு கல்வியாளர்கள் மத்தி யிலும் பெரும் கொந் தளிப்பு ஏற்பட்டுள்ளது. இப்புத்தகங்களை அச் சிடுவதற்கான ஒப்பந்தம்,
மத்திய அரசின் நிதி உத வியுடன் செயல்படுத்தப் பட்டு வரும் மாவட்ட ஆரம்பக் கல்வி திட் டத்தின் கீழ் மாநில அர சால் வழங்கப்பட்டுள் ளது. இவ்வொப்பந்தம், அஹமதாபாத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நிறு வனமான அமிஷா பிரிண்டர்ஸுக்கு வழங் கப்பட்டது. பின்னர், அந்நிறுவனம் அதனை, கோலிபர் நிறுவனத் திற்கு துணை ஒப்பந்த மாக வழங்கியுள்ளது. இந்நிறுவனம் வெளி யிட்டு மாணவர்களுக்கு வினியோகித்து வரும் புத்தகங்களை அங்கிருக் கும் கல்வித்துறை அதி காரிகள் எவ்வித கண் காணிப்பும் செய்யாமல் இஷ்டத்திற்கு விநி யோகித்திருப்பது தற் போது தெரியவந்துள் ளது. இதுகுறித்து, கோலிபர் நிறுவனத்தின் ஆசிரியர்களில் ஒருவ ரான மோஹ்சின் கோலிபர் தெரிவிக்கை யில், இப்புத்தகம் இரண் டாவது வெளியீடுதான். இது மிகவும் மோசமான தவறு. மேலும், அனைத்து புத்தகங்களையும் திரும்பப் பெற்று வரு கிறோம் என்றார். இத் தவறு எவ்வாறு நடந்தது என்ற கேள்விக்கு, தான் வெளியில் சென்று விட்டதாகவும், புத்தகத்தை இறுதி செய் யும் பணியை தனது பணியாளர்களிடம் ஒப் படைத்துவிட்டுச் சென் றதாகவும், அவர்கள் இத்தகைய பிழையை செய்து விட்டதாகவும் கூறி தப்பித்துக் கொள் கிறார்.
உண்மையில், இப்புத்தகம் ஐந்தாவது வெளியீடு. மேலும் அனைத்து புத்தகங்களி லும் இதுபோன்ற அரு வருக்கத்தக்க நகைச் சுவை வசனங்கள் இடம் பெற்றிருப்பதும் தற் போது தெரிய வந்தி ருக்கிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆரம்பக் கல்வி திட்ட இயக்குநர் மனோஜ் அகர்வால் தெரிவிக்கையில், புத்த கத்தில் இடம் பெற் றுள்ள நகைச்சுவைமிக வும் மோசமானது. இது சகித்துக் கொள்ளமுடி யாதது. எனவே, புத்த கங்களை அச்சிடுவதற் காக அளிக்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங் களையும் ரத்து செய்து விட்டோம் என்று கூறி யுள்ளார்.
இதன் பின்னர் விழித் தெழுந்த அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி, இச்சம்பவம் குறித்து விசாரிக்க உத் தரவிட்டுள்ளார்.
பாஜக எப்போதும் பாடப் புத்தகங்களை மத வெறியை தூண்டும் வகையில் மாற்றி வெளி யிட்டு வருவதையே வழக்கமாக கொண்டி ருந்தது. ஆனால் தற் போது புதுவிதமாக ஆபாச பாடங்களையும் மாணவர்கள் மத்தியில் கொண்டு சென்றிருக் கிறது. இதுதான் வித் தியாசமான கட்சியின் வித்தியாசமான செயல் பாடோ என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இடம் பெற்றவை என்ன?
இப்பத்திரிகையில் வெளிவந்துள்ள நகைச் சுவை துணுக்குகளாம் இவை:
காதலியிடம் காதலன்: உன்னைப் போன்ற அழ கான பெண்ணை முத்தமிட நான் 5000 ரூபாய் கூட கொடுப்பேன்.
காதலி: அய்யோ, நேற்று இரவு மகேஷ் எனக்கு முத்தம் கொடுத் தான். ஆனால் பணம் ஏதும் தரவில்லையே!
கணவனிடம் மனைவி: நேற்றிரவு ஷீலாவுடன் சந் தோஷமாக இருக்க எவ் வளவு பணம் கொடுத்தாய்?
கணவன்: நூறு ரூபாய் கொடுத்தேன்.
மனைவி: அவமானம்! அவளது காதலன் என்னி டம் வரும்போது, அய்ம்பது ரூபாய் மட்டுமே கொடுத் தான்.
சென்சஸ்அதிகாரி ஒருவர் ஓர் வீட்டின் பெண் மணியிடம் கேட்கிறார்: உங்கள் கணவர் 9 ஆண்டுகளுக்கு முன் இறந்து போய்விட்ட போது, உங்களுக்கு எப்படி 5 வயதி லும் 3 வயதிலும் மகன்கள் உள்ளனர்?
பி.ஜே.பி. ஆட்சியில் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் பாடங்களைப் பார்த் தீர்களா! 21-6-2012
நித்திய + ஆனந்தா நினைத்துப் பார்ப்பாரா?
இராசபாளையத்தில் நித்தி யானந்தாவுக்குச் சொந்தமான ஆசிரமம் பக்தகோடிகளால் எரிக்கப்பட்டது. பூஜைப் பொருட் கள் உட்பட எரிந்து சாம்பலாயின.
இத்தகைய வன்முறைகளுக்குத் தூபம் போடுபவர்கள் நாம் அல்லர். அதே நேரத்தில் இதனைச் செய்திருப் பவர்கள் பக்தர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. பக்தி என்னும் மூடத் தனத்தில் அவிக்கப்பட்டவர்கள் மத்தியிலேயே நித்தியானந்தாவின் செயல்பாடுகள் மீது கடும் எதிர்ப்பு சுனாமி வெடித்துக் கிளம்பியிருக் கிறது. புத்திசாலியாக இருந்தால் நித்திய ஆனந்தா புரிந்து கொள்ள வேண்டும்.
நித்யானந்தாவின் ஆன்மீக சக்தி என்பதெல்லாம் சுத்தப் புருடா - அப்படி ஒரு சக்தி அவரிடம் குடி கொண்டிருந்தால், அவரது ஆசிர மத்தை அக்னி பகவான் அண்டி யிருப்பாரா? தீ வைப்பது, இடிப்பது, வன்முறை வெறியாட்டம் போடுவது எல்லாம் ஆத்திகர்களுக்கே உரிய வரப் பிரசாதமோ! 21-6-2012
அஞ்சுகின்ற துறை
சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகத் தில் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 30 ஆம் தேதி காலை நடை பெறும்.
அஞ்சல்துறை என்பது இப்பொ தெல்லாம் அஞ்சுகின்ற துறையாக மாறிவிட்டது. ஒரு கால கட்டத்தில் ரயில்வே துறையும், அஞ்சல் துறையும் கொடிகட்டிப் பறந்தன.
ஞாயிற்றுக் கிழமை கூட தபால் வரும் (அதற்கென கூடுதல் அஞ்சல் தலை ஒட்டவேண்டும்.) அது அந்தக் காலம். உடல்நலம் சரியில்லை என்று கடிதம் போட்டால், கருமாதி நடக்கும் அன்றுதான் தபால் வந்து சேரும் நிலை இன்று.
குறிப்பாக விடுதலை போன்ற நாளேடுகளும் அதிகமான அளவில் அஞ்சலில் சென்று கொண்டுள்ளன. அன்றைக்கு அதனைக் கொடுப்ப தில்லை. சேர்த்து வைத்துக் கொண்டு, அந்தப் பக்கம் வேறு தபால்களைக் கொடுக்க நேரும்போது, அய்ந்தாறு நாள் விடுதலை ஏடு களைக் கொடுக்கும் கொடுமைக்கு - விஷமத்துக்கு என்ன செய்ய!
அஞ்சல் துறையே இந்தத் தள்ளாட்டத்தில்; தான் உள்ளது. தனியார் துறை (கொரியர்) கிங்காங் மாதிரி கொழுத் துத் திரிகிறது.
அஞ்சல் துறை ஏழை எளிய மக் களின் சேவகன் என்ற நிலை மீண்டும் ஏற்படுமா?
குறிப்பு: காலதாமதமாக விடுதலை வருவது குறித்து அதற் கான தக்க ஆவணங்களுடன் தலைமை அஞ்சல் துறை அதிகாரி, அண்ணா சாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்குப் புகார் செய்யலாம். முடிந்தவர்கள் நேரில் சென்றும் முறையிடலாம்.
21-6-2012
பா.ஜ.க.வின் ஓட்டைப் படகு சவாரி
குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஜே.பி.யின் நிலைப்பாடு!
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி முதலில் வேட்பாளரை அறிவிக் கட்டும்; அதன்பின் தேசிய ஜன நாயகக் கூட்டணி தன் வேட் பாளரை அறிவிக்கும் என்று முதிர்ந்த ராஜதந்திரிக வார்த்தைகளைக் கொட்டி வந்தனர்.
காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி, தன் வேட்பாளர் என்று பிரணாப் முகர்ஜியை அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் பி.ஜே.பி. தலை மையிலான அணி தன் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் விழி பிதுங்கு வானேன்? கை பிசைந்து நிற் பானேன்?
காரணம் எளிதானதுதான் - புரிந்து கொள்ளக் கூடியதுதான். அவாள் சவாரி செய்யும் படகுக் குள்ளேயே ஓட்டை விழுந்துவிட்டது.
சிவசேனா, அய்க்கிய ஜனதா தளமும், அகாலி தளமும் முரண்டு பிடித்துவிட்டன. விஞ்ஞானி அப்துல் கலாமிடம் கெஞ்சிப் பார்த்தார்கள்.
நம்மை வைத்து அரசியல் கிரிக் கெட்டை நடத்தப் பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட நிலையில் மிக உயர்ந்த நாகரிகத்துடன் பண் பாட்டுப் பெருமையுடன் நான் குடியரசுத் தலைவர் வேட்பாளர் இல்லை என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக அறிவித்து தன் தகுதியை வெகுவாக உயர்த்திக் கொண்டு விட்டார் கலாம்.
இருதலைக் கொள்ளி எறும்பு போல பா.ஜ.க. தவியாய்த் தவிக்கிறது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சமாதானம் சொல்வதற்காக எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
சங்மாவை ஆதரித்தால் அதில் தம் கட்சிக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும். இரவல் வீட்டில் குடி புகுந்ததாக ஆகிவிடுமே என்ற வீராப்பும், வெட்டி ஜம்பமும் மற்றொரு புறம்! அவர்களை அழுத்திப் பிடித் தாலும்; இன்று சற்றுமுன் கடைசிக் கடைசியாக சங்மாவை ஆதரிப்பது என்ற இரவல் வீட்டில் குடி போக முடிவு எடுத்து விட்டனர் என்று தெரிய வருகிறது. 2014 - மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே ஒரு வழியாக பி.ஜே.பி. பிணமாகி, உள் கட்சி அரசியல் கழுகுகள் கொத்தித் தின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை21-6-2012
பாரத ரத்னா
இம்முறை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தகுதியான செஸ் ஆனந்தின் பெய ரைப் பரிந்துரை செய்தால் அவருக்குப் பாரத ரத்னா விருது அளிக்கப் பிரத மருக்கு நிச்சயம் பரிந் துரை செய்வேன் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் கூறியுள்ளார்.
கிடப்பது கிடக்கட் டும்; கிழவனைத் தூக்கி மணையில் வை என்ற பழமொழிதான் நினை வுக்கு வருகிறது. இந்த நாட்டில் பார்ப் பன இனம், பார்ப்பன இனம் என்ற ஓர் இனம் உண்டு. அதன் சாமர்த்தி யமும், தந்திரமும், சுட்டுப் போட்டாலும் யாருக்கும் வரப்போவதில்லை. (வரவேண்டாம்!)
கிரிக்கெட்டில் பெரும் சாதனை படைத்ததாக சச்சின் டெண்டுல் கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண் டும் என்று தூபம் போட் டுப் பார்த்தனர். ஒரு செய்தியைச் சன்னமாகத் தூவிவிட்டு, அதனை அறு வடை செய்வதில் அவர் கள் காட்டும் சாமர்த் தியமே சாமர்த்தியம்!
கட்டிலுக்கு வெட்டப் பட்ட மரம் கலப்பைக்கா வது ஆகாதா என்ற முறை யில் எப்படியோ அவரை மாநிலங்கள் அவை உறுப் பினராக ஆக்கிவிட்டார் கள்.
பாருங்களேன். ஒவ் வொரு மக்கள் பிரச் சினையின் போதும் அப் படியே பிளந்து கட்டப் போகிறார் சச்சின் - நாடே மெய் சிலிர்த்து நிற்கப்போகிறது!
டெண்டுல்கருக்குத் தான் பாரத ரத்னா கிடைக்கவில்லை - செஸ் ஆனந்துக்கு முயற்சி செய்து பார்ப்போம் என்று பூணூலை உருவி விட்டுப் புறப்பட்டுவிட்டனர்.
விசுவநாதன் ஆனந் தின் சாதனைக்காக ஆனந்த விகடன் தலை யங்கமே தீட்டுகிறது.
கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்த கபில்தேவ், தோனி பற்றி இப்படி யெல்லாம் எழுதியதுண்டா?
எப்படி எழுதுவார்கள்? இவர்கள் தோள்களில் பூணூலா ஊஞ்சலாடு கிறது?
இப்பொழுது உலகக் கோப்பைக் கால்பந்தாட் டம் நடந்து கொண்டிருக் கிறது. இன்னும் சொல் லப்போனால் கிரிக்கெட் விரல் விட்டு எண்ணப் படக்கூடிய ஆங்கிலேயர் கள் கால் பதித்த சில நாடுகளில் மட்டுமே உண்டு. கால்பந்தோ பெரும் பாலான நாடு களில் ஆடப்பட்டும், திறமைக்கு உண்மையிலேயே இடம் உள்ள விளையாட்டு.
பார்ப்பன ஊடகங்கள் கிரிக்கெட்டுக்குக் கொடுத்த விளம்பரங் களைக் கால்பந்துக்குக் கொடுக்கின்றனவா?
காந்தியானாலும், கட வுளானாலும் பார்ப்பானுக் குப் பயன்படுவதைப் பொறுத்துதான் என்கிற போது, கால் பந்து எம்மாத் திரம்!
- மயிலாடன் 20-6-2012
பவானியாற்றின் குறுக்கே அணை: கலைஞர் கருத்து
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட முயற்சிப்பது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தெரி வித்துள்ள கருத்து வருமாறு:
திருப்பூருக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடியில் கேரளா புதிதாக அணை கட்டி னால், நீர்வரத்து முற்றிலும் குறைந்து, திருப்பூர், கோவை மாநகராட்சிகள், மேட்டுப்பாளையம் நக ராட்சி, பெரியநாயக்கன் பாளையம், நரசிம்மநாயக் கன் பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய பேரூ ராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். மேலும், ஈரோடு மாவட்டத்தின் பாசனமும் பாதிக்கப்படும்.
இப்படி அணைகள் கட்டி தமிழக மக்களின் குடிநீர் ஆதாரத்தையும், தமிழக விவசாயிகளின் வாழ்வா தாரத்தையும் கேள்விக்குறியாக்க முனையும் கேரளா வின் முயற்சிக்குத் தமிழக அரசு தடுப்பணை கட்ட முன்வருமா? என்று கூறியுள்ளார்.
இந்திய இறையாண்மை - இந்திய தேசியம்பற்றிப் பேசுபவர்கள்தான் கேரளத்தில் ஆட்சியில் இருக் கிறார்கள். இருந்தும் என்ன பயன்? தந்தை பெரியார் மொழியில் சொல்லவேண்டுமானால், வெங்காய தேசியம்தானோ! 21-6-2012
சிருங்கேரி சங்கராச்சாரியார் சென்னையில் முகா மிட்டுள்ளார். அவர் ஒன்றைத் திருவாய் மலர்ந்துள்ளார். ஆள் பலம், பணம் செல்வாக்கால் ஒன்றும் சாதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
சிருங்கேரியார் சொல்லும் ஒவ்வொன்றும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரை மனதில் வைத்துக் கொண்டே சொல்வதுபோல் இருக்கிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரின் பங்கை மனதில் கொண்டு சொன்னதுபோல் சில நாள்களுக்குமுன் திருவாய் மலர்ந்தார் சிருங்கேரியார்.
நாம் செய்யும் பாவ - புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்க இறைவன் இருக்கிறான் என்றார்.
இப்பொழுதோ பண பலம், ஆள் பலம் பற்றியெல்லாம் சிலாகித்துள்ளார். சங்கரராமன் கொலையில் தாதாக்கள், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதில் ஆள்கள் ஏற்பாடு என்பதையெல்லாம் பார்க்கும்பொழுது இப்படி யூகிப்பதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.21-6-2012
திருடனாக மாறிய சாமியார்
சாமியார் தொழிலில் வருமானம் இல்லாததால் ரயில்வே சிக்னல் பெட்டிகளை உடைத்த ஆந்திர ஆசாமி கைது செய்யப் பட்டார்.
சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.ஆர். காந்தி உத்தரவுப்படி, உதவி ஆய்வாளர் மகா ராஜன் தலைமையிலான தனிப்படையினர் கிண்டி சைதாப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடை யில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ரயில் பாதையோரம் கோணிப்பையுடன் வந்தவரை மடக்கி பிடித்தனர். அவர் வைத்திருந்த கோணிப்பையில் தண்டவாளத்தை இறுக்கி பிடிக்கும் 5 இரும்பு சுருள்கள், சிக்னல் பெட்டி மூடி ஆகியவை இருந்தன. விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் கிருஷ்ணாரெட்டி (54). நான்கு மாதம் முன்பு சென்னை வந்ததும் தெரிந்தது.
சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் பகுதிகளில் உள்ள கோயில் முன் அமர்ந்து குறிசொல்லி வந்துள்ளார்.
அதில் வருமானம் இல்லாததால் தண்டவாள இரும்பு சுருள், சிக்னல் பெட்டி மூடி ஆகியவற்றை திருடியுள்ளார் என்பது தெரிந்தது. தண்டவாளத்தை இணைக்கும் இரும்பு சுருளை எடுத்துவிட்டால் ரயில் கவிழ்ந்துவிடும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணாரெட்டியை கைதுசெய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
சாமியார் என்றாலும், திருடன் என்றாலும் பெரிய வித்தியாசம் இல்லையல்லவா!
21-6-2012
நரேந்திர மோடி மதச்சார்பற்றவரா? பிரதமர் பதவிக்கு லாயக்கற்றவர்!நிதிஷ்குமார் கடும் எதிர்ப்பு
புதுடில்லி, ஜூன் 20- 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கமாட்டோம் என்று பா.ஜ.க. உறுதி அளித்தால் மட்டுமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தன்னால் நீடிக்க முடியும் என்று அய்க்கிய ஜனதா தளத் தலைவர்களில் ஒருவரும், பிகார் முதல்வருமான நிதிஷ்குமார் கூறியிருக்கிறார்.
எக்கனாமிக் டைம்ஸ் ஆங்கில நாளிதழுக்கு அளித்த ஒரு பேட்டியில், கூட்டணியின் தலைவர் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியான நம்பிக்கை கொண்ட வராகவும், பரந்த மனம் கொண்டவராகவும், ஜன நாயக மதிப்பீடுகளில் முழு நம்பிக்கை கொண்டவ ராகவும் இருக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்று கூறியது மோடியை இலக்காகக் கொண்டு தாக்குவது போன்றே இருந்தது.
பல மதங்கள், பல மொழிகள் கொண்ட நம் நாட்டைப் போன்ற ஒரு நாட்டில் தலைவரானவர் தனது தனித்தன்மையில் கரடு முரடானவராக இருக்கக் கூடாது... விட்டுக் கொடுப்பவராக தலைவர் இருக்கிறார் என்று மக்கள் கருதினால் மட்டுமே மக்களின் நம்பிக்கையை ஒரு கூட்டணியால் பெற முடியும் என்று அவர் கூறியது, கருத்து வேறுபாட்டை விரும்பாதவர், கடுமையான நிலையை மேற்கொள்பவர் என்று பெயர் பெற்ற மோடியைக் குறிப்பிடுவதாகவே தோன்றியது.
கடந்த முறை எல்.கே.அத்வானியை பிரதமர் வேட்பாளராக முன்வைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்த பா.ஜ.க. 2014 தேர்தலில் யாரை பிரதமர் வேட்பாளராக முன்வைப்பது என் பதை அறிவிப்பதில் தயக்கம் காட்டு கிறது.
தனது போட்டியாளர் சஞ்சய் ஜோஷியை கட்சியில் இருந்தே நீக்கச் செய்ததன் மூலம் கட்சியில் தனது செல்வாக்கைப் பெருக்கிக் கொண்ட நரேந்திர மோடியின் மனதைப் புண் படுத்தவும் அது விரும்பவில்லை.
கட்சியில் செல்வாக்கு பெற்றுள்ள மோடியுடன், லாலு பிரசாத் பக்க மிருந்து முஸ்லிம்களை மிகுந்த முயற்சி யுடன் தங்கள் பக்கம் திருப்பும் நிதிஷ் குமார் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களை சமன்படுத்துவது பா.ஜ. க.வுக்கு பெரும் சவாலாக விளங்கு கிறது.
அய்க்கிய ஜனதா தளக் கட்சி கடந்த வாரத்தில் நிறைவேற்றிய தீர்மானத் திலும், அளித்த பேட்டியிலும் இத் தகைய கருத்துகள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.
மோடிக்கு பா.ஜ.க.வில் செல்வாக்கு பெருகி வரும் நேரத்தில் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. வரும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மோடி வெற்றி பெற்றுவிட்டால், அவரையே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துவர் என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
பா.ஜ.க. மவுனம்
குடியரசுத் தேர்தலில் தங்கள் கருத்துக்கு நிதிஷ்குமாரை ஒப்புக் கொள்ளச் செய்ய பா.ஜ.க. முயன்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மோடிக்கு எதிராக நிதிஷ்குமார் பேசியுள்ளதைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் பா.ஜ.க. மவுனம் காக்கிறது.
மோடியை பிரதமர் வேட்பாளராக ஆக்கும் திட்டம் ஏதுமில்லை என்று கூறப்பட்ட பிறகும், நிதிஷ்குமார் தனது கருத்தை இவ்வாறு வெளி யிட்டிருக்கத் தேவையில்லை என்று பா.ஜ.க. தலைவர்கள் தங்கள் அதிர்ச் சியினை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனால், நிதிஷ்குமாரும், அவரது ஆதரவாளர்களும் இதைப்பற்றியெல் லாம் கவலைப்படவில்லை.
நான் கூறியவற்றிலேயே உறுதியாக நிற்கி றேன். பொன்மொழிகள் திரும்பத் திரும்பக் கூறப்படுவதில்லை. எங்கள் கண்ணோட்டமும், நிலையும் தெளிவானது. இதற்கு முன் பிரதமர் வேட்பாளர் முன் கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ள போது, இப்போதும் அதே போல் ஏன் அறிவிக்கக்கூடாது? என்று பிகார் அய்க்கிய ஜனதா தளக் கட்சித் தலை வர் வசிஷ்டநாராயண் சிங் கேட்கிறார்.
20-6-2012
கோவையும் - சேலமும் குலுங்கட்டும்!
கோவையில் வரும் 25 ஆம் தேதியிலும், சேலத்தில் வரும் 26 ஆம் தேதியிலும் ஆர்ப்பாட்டங்களைத் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவித்துள்ளார்.
பாவத்தின் தண்டனை மரணம் என்று விவிலியம் கூறுவதுண்டு. அது அறிவிற்கு ஏற்றதன்று.
இந்திய தேசத்தின் குடிமகனாக இருப்பதால் கிடைக்கும் தண்டனை - தமிழர்கள் நாவறண்டு, வயிறு காய்ந்து சாவதுதான் போலும்.
தாமிரபரணியைத் தவிர தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே தன் பயணத்தை முடித்துக் கொள்ளும் நதி வேறு எதுவும் இல்லை என்பதால் இந்த நிலையோ!
ஆந்திரமும், கருநாடகமும், கேரளமும் தமிழ்நாட்டு மக்களைப் பட்டினி போடுவது என்ற ஒரே தீர்மானத்தில் உறுதியாக இருக்கிறார்களோ!
ஒரு பக்கம் பாலாற்றுப் பிரச்சினை! இன்னொரு பக்கம் காவிரிப் பிரச்சினை!! மூன்றாம் பக்கம் கேரளா என்று தமிழர்களை நோக்கிச் சூலாயுதம் தூக்கி நிற்பது ஏன்?
இந்தியா ஒரே நாடு என்பது பொய்யா?
ஆமாம் என்று சொல்லிவிட்டு, கேரளம் முட்டுக் கட்டை போடட்டும்; கருநாடகாவும் நடத்தட்டும் தனது தர்பாரை! ஆந்திரமும் தன் பங்குக்குப் பாலாற்றின் குறுக்கே தடுப்பணையைக் கட்டித் தமிழர்களின் தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போடட்டும்!
தமிழ் நாட்டில் உற்பத்தியாகும் நெய்வேலி மின்சாரமும், கல்பாக்கத்தில் கிடைக்கும் மின்சாரமும் மட்டும் மற்ற மற்ற மாநிலங்களுக்குப் பங்குப் போட்டுக் கொடுக்க வேண்டும். கருநாடகத்துக்கு நாள்தோறும் 11 கோடி யூனிட், கேரளாவுக்கோ நாள்தோறும் 9 கோடி யூனிட், ஆந்திராவுக்கு 6 கோடி யூனிட் மின்சாரம் தாரை வார்க்கப்படுகிறது. வெளி மாநிலத் தண்ணீர் மட்டும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவே கூடாது. ஆகா, என்னே தாராள உள்ளமும், தனிப்பெருங் கருணை யும்! (வாழ்க இந்திய தேசிய ஒருமைப்பாடு!)
ஓர் உண்மை தெரியுமா? 2000 டி.எம்.சி. நீரை கேரளா கடலில் கலக்க விட்டாலும் விடுமே தவிர தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சொட்டு நீரைக் கூடக் கொடுக்க மனம் ஒப்பாது!
இதைப்பற்றியெல்லாம் எந்த பார்ப்பன ஏடும் சிணுங்காது. சிணுங்கினால் இந்திய ஒருமைப்பாட்டின் சுவாசக் குழாய் அடைபட்டுப் போய்விடாதா!
இப்பொழுது கோவை மக்களுக்குக் கிடைத்து வரும் சிறுவாணி நீருக்கும் ஆபத்தோ ஆபத்து!
பவானியின் குறுக்கே சித்தூர் அருகில் அணை ஒன்றைக் கட்டும் வேலையில் கேரளா இறங்கியுள்ளது. கோவை மக்களின் தவித்த வாய்க்குத் தண்ணீர் மறுக்கப் படுவது மட்டுமல்ல - திருப்பூர், ஈரோடு மாவட்டங் களில் வேளாண்மை கடுமையாகப் பாதிக்கப் படும். பின்னலாடை திருப்பூரில் கூட இனி கோவணாண்டிகளைப் பார்க்கலாம்.
என்னதான் நடந்தாலும் இந்திய அரசு கண்டு கொள்ளாது. கேட்டால் அதோ பாருங்கள் குரங்கு பொம்மையை! கண்களையும், காதுகளையும், வாயையும் பொத்திக் கொண்டு இருக்கிறதே - உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா - அர்த்தமும் புரியவில்லையா என்பார்கள்.
நல்ல தேசியம் - நல்ல இறையாண்மை!
மயிலே மயிலே என்றால் இறகு போடுமா? ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கணுமாம் - பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்கணுமாம் - சொல்லி வைத்திருக்கிறார்கள்.
எனவே தோழர்களே! கோவை ஆர்ப்பாட்டம் கொந்தளிக்கும் கடலாய் குமுறும் எரிமலையாய், கட்டுப் பாட்டோடு நடக்கட்டும்! நடக்கட்டும்!!
சேலம் கோட்டம் ரயில்வேக்கு தலைமை இடம் பாலக்காடாக இருந்தது. சேலம் கோட்டம் என்று சொல்லிக் கொண்டு, பாலக்காட்டில் கொண்டு போய் தலைமையகத்தை வைப்பது என்ன நியாயம் என்று போராடி சேலத்திற்கே தலைமையிடத்தைக் கொண்டு வந்தோம்.
ஆண்டுகள் பல ஆனபிறகு, இப்பொழுது மீண்டும் அதைப் பாலக்காட்டுக்குக் கொண்டு போகத் துடிக்கிறார்கள்.
மலையாளிகளின் இன உணர்வுக்கு ஈடு ஏது? தென்னகத்தில் ரயில்வே வளம் கொழிப்பு என்பது கேரளத்தில்தான்.
ஈரோடு எக்ஸ்பிரஸ் என்பார்கள்; பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளி கோவை எக்ஸ்பிரஸ் என்பார்கள். அடுத்த கட்டமாக அது கேரளாவின் மங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிவிடும்.
என்னே தந்திரம்! தமிழனைப் போல இளிச்சவாயன் எங்குக் கிடைப்பான்?
கருஞ்சட்டைச் சேனைதான் இருக்கவே இருக்கிறது. வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கும் முப்படையும் அதுதானே!
வரும் 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சேலத்தில் சிலிர்த்தெழுந்தது காண் கருஞ்சட்டை சிங்கக் கூட்டம் என்று கண்டோர் திகைக்கும் அளவுக்கு ஆட்சியாளர்கள் அகலவிரித்துக் கண்களால் பார்க்கும் அளவுக்கு நடக்கட்டும், நடக்கட்டும் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!
- மின்சாரம் 21-6-2012
ஆபாச வீடியோ காட்சிகள் வழக்கில் நித்தியானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை
பெங்களூரு, ஜூன்.21- ஆபாச வீடியோ காட்சிகள் வெளியான வழக்கில் நித்தியானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய ராமநகர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
பெங்களூரு அருகே உள்ள பிடதி தியான பீட சாமியார் நித்தியானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கர்நாடக காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நித்தியானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை, ரத்த மாதிரி பரிசோதனை மற்றும் குரல் பரிசோதனை செய்ய வேண்டி உள்ளதால் அதற்கு அனுமதி வழங்க கோரி கர்நாடக சி.அய்.டி. சார்பில் ராம்நகர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நித்தியானந்தாவுக்கு மருத்துவ பரி சோதனை செய்ய அனுமதி வழங்கி உத் தரவிட்டது. இதற்காக நித்தியானந்தா சி.அய்.டி. காவல்துறையினர் முன் ஆஜ ராக வேண்டி உள்ளது.
பெங்களூரு அருகே உள்ள பிடதி யில் கடந்த 7ஆம் தேதி நடந்த செய்தியா ளர்கள் சந்திப்பின்போது ஏற்பட்ட பிரச் சினையில் நித்தியானந்தா கைது செய்யப் பட்டார். பின்பு ஜாமீனில் விடுவிக்கப் பட்டு உள்ளார்.
நித்தியானந்தா ஆசிரமத்தை மூட வேண்டும் என்றும், அவரை கர்நாட கத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கன்னட அமைப்பு கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த கோரிக் கையை வலியுறுத்தி பல் வேறு கன்னட அமைப்புகள் நேற்று ராமநகரில் இருந்து பாதயாத்திரையாக பிடதிக்கு வந்தனர். அங்கு இருந்து அவர்கள் பெங்களூரு விதானசவுதாவை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். 21-6-2012
Post a Comment