சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை - இது ஆங்கிலத்தில் உள்ள சோஷியலிசம் என்னும் வார்த்தைக்குத் தமிழ் மொழிபெயர்ப்பாகக் கையாளப்படுகிற தென்றாலும், சோஷியலிசம் என்ற வார்த்தையே தேசத்துக்கு ஒருவிதமான அர்த்தத்தில் பிரயோகிக் கப்படுகிறது. அநேகமாக அவ்வார்த்தை அந்தந்தத் தேச நிலைமைக்கும், தகுதிக்கும், சவுகரியத்துக்கும், அரசாங்கத் துக்கும் தகுந்தபடிதான் பிரயோகிக்கப் படுகின்றது. சில இடங்களில் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டும், சில இடங்களில் சட்ட திட்டங்களுக்கு மீறின தாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்கின்ற வார்த்தை பிரயோகிக்கப் படுகிறது. ஆகவே சோஷியலிசத்துக்கு, இதுதான் அர்த்தம் என்று வரையறுக்க, அவ்வார்த்தையில் எவ்விதக் குறிப்பும் இல்லை.
சில இடங்களில் சோஷியலிசத்துக்கும், பொது உடைமை என்பதற்கும் பேதமே இல்லாமல் அர்த்தம் இருந்து வருகிறது. சில இடங்களில் வெகு சாதாரண விஷ யத்துக்கும் அப்பெயர் இருந்து வருகிறது. சில இடங்களில் பொதுவுடைமை வேறாகவும் சமதர்மம் வேறாகவும் இருந்து வருகின்றன.
இங்கும் சமதர்மம் என்கின்ற வார்த்தைக்கு, சமுகத்துறையிலும் பொருளாதாரத் துறையிலும் மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவ மாய்ப் (பேதமின்றி) வாழவேண்டும் என்பதையே, சமதர்மம் என்று நான் கருத்துக் கொண்டு சமதர்மம் என் கின்ற வார்த்தையை இங்குப் பிரயோகிக்கின்றேன்.
ஏனெனில், மற்ற நாட்டில் சமுகத் துறையில் நமது நாட்டில் உள்ளதுபோன்ற உயர்வு, தாழ்வு, பேதாபேதம் இல்லை. பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றன. நமது நாட்டுச் சமுதாய உயர்வு தாழ்வானது, பிறவி யிலேயே வகுக்கப்பட்டு அதை மதத்தோடு பொருத்தி, அதற்கு அரசியல் பாது காப்பளிக்கப்பட்டு இருந்து வருகிறது. அரசியலில் உள்ள பாதுகாப்பை உடைப்பது என்று முதலில் ஆரம்பித்தால், அதற்கு நம் நாட்டு மக்கள், அதுவும் பொருளாதாரத்தால் மிகவும் நொந்து ஏழ்மை நிலையில் இருக்கும் மதநம்பிக்கை கொண்ட பாமர மக்கள் என்பவர்களே சிறிதுகூட ஒப்பமாட்டார்கள். ஒப்பமாட் டார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல் அவர்களே நமக்கு எதிரிகளாகவும் இருப் பார்கள். ஏனெனில் பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு மதத்தில் சம்பந்தப் பட்டு, அம்மதம் பாமர மக்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும், அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும், அதை மாற்றாமல் அதை மாற்றுவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல், மேல்நாட்டுச் சமதர்மம் பேசுவது, பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவேயாகும்.
முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டுச் சம தர்மத்துக்கு முதற்படியாகும். அதனாலேயே பொருளாதார சமதர்மமே மனித சமுக சாந்திக்கு, மருந்து என்று கருதி இருக்கும் நான், சமுதாயத்தில் வாழ்க்கையில் சமதர்மத்தை அபேத வாதத்தை முக்கியமாய் வலியுறுத்தி வருகிறேன்.
நிற்க, பொதுவாகவே சமதர்மம் என்பது எந்த அர்த்தத்தில் இருந்தாலும், சமுதாயம் முக்கியமானாலும், பொருளாதாரம் முக்கியமானாலும் அதற்குக் கடவுள் உணர்ச்சி மதநம்பிக்கை என்பவைகளுக்கு எதிராகவே இருந்து வந்திருக்கின்றன. சர்வதேச சமதர்ம வாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும், மதநம்பிக்கையும் சமதர்மத்திற்கு விரோதமானவை என்று தான் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால் எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொறுத்த வரையில் அபிப்பிராயபேதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வேலை அபிப்பிராய பேதமில்லாமல் நடந்து தான் தீரும்.
நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து, மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதா யிருக்கிறது. ஜாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான் சமுக வாழ்க் கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும் சமுக ஜாதி பேதமுறைதான் பெரிதும் காரணமாய்க் காவலாய் இருந்து வந்திருக் கிறது. இன்றும் பெருவாரியான மக் களுக்கு ஜாதிபேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது.
எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல் லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும், நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணி விடும். மற்ற நாட்டு மக்களுக்குப் பொரு ளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணமெல்லாம், அவர்களில் பிறவியில் கீழ் மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும். நமது மக்களுக்கு வெறும் பொருளாதாரச் சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி, பொருளாதார சமதர்மம் சொன்னால் தான் உண்மையாகக் கஷ்டப் படுகின்ற மக்களுக்கு உணர்ச்சி உண் டாக்க முடிகின்றது. ஆகவே சமுக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம், ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம் பொருளாதார சமதர்மத்துக்காகவே பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கின்றது என்றும், பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதாரமான மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோம். மதத்தைப் பற்றியோ மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப் பற்றியோ பேசினாலும், அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை நாஸ்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால் தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப் பாய் நாஸ்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.
நாஸ்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்றுகூடச் சொல்ல வேண்டிய தில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போது மானதாக இருக்கிறது. ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட்டனவாக - கடவுளால் கற்பிக்கப்பட்டனவாக - கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த மத சாஸ்திரங்கள் வேதமாகவும், வேதம் போன்றதாகவும் கருதப்படுகின் றன. உதாரணமாக பகவத்கீதை என்பது இந்துக்கள் என்பவர்களுக்கு மிகப் புனிதமானதும் மேலானதுமான புஸ்தகம் என்று பெயர். மகமதியர்கள் குரானை மதிப்பதைவிட, கிறிஸ்தவர்கள் பைபிளை மதிப்பதைவிட, கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதித்திருக்கிறார்கள். ஆனால், அப்புஸ்தகத்தில் நான்கு ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதிப் பெயர்களும், அததற்குத் தனித்தனி வேலைக் கிரமங்களும் சொல்லப்பட்டி ருக்கின்றன. கீதை என்றாலே பகவான் வாக்கு என்று அர்த்தம்.
ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசுகிறவர்களில்கூட 100க்கு 99 பேர், கீதையைப் பகவான் வாக்கு என்று நம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஜாதி வித்தியாசம், உயர்வுதாழ்வு ஆகியவை களைப் பற்றிக் கண்ணீர்விட்ட பெரியார் காந்தியார் கூடக் கீதைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருப்பதாய்ச் சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல் கீழ் நிலைகளை எப்படி ஒழிக்க முடியும். கீதை முறை தவறு என்றோ, கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந்தாலும் அதைப் பற்றிக் கவலை இல்லை என்றோ சொல்லத் துணியா விட்டால் - சொல்ல தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படி சொல்லத் தயார் செய்யாவிட்டால், ஜாதிப் பிரிவு, ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்? ஆகவே இந்தப்படி சொல்லும் படியான ஒருவன் கீதையையும் கிருஷ்ணனையும் நம்பும் மக்களால் நாஸ்திகன் என்று சொல் லப்படாமல் இருக்க முடியாது. ஆதலால் நாஸ்திகனாகவோ நாஸ்திகனாவதற்குத் தயாராகவோ நாஸ்திகன் என்று அழைக் கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.
இதுமாத்திரமல்லாமல் சர்வமும் கடவுள் செயல் என்றும், மனித சமுகத்தில் பிறவி மூலமாகவும் வாழ்வு மூலமாகவும் இன்று இருந்துவரும் பிரிவுக்கும், பேதத்துக்கும், உயர்வு தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளியென்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்றும் சொல்லப்படுமானால் - அதை நம்பாமல் இருப்பது நாஸ்திக மானால் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாஸ்திகனாகத்தான் வேண் டும். ஏனெனில், செல்வவான்களிடம் இருக்கும் செல்வமும் பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதி தத்துவமும் கடவுள் கொடுத்தது என்றும், கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால் அந்தக் கடவுளை யார்தான் ஏற்றுக் கொள்ள முடியும்? அதை யார்தான் நிலைத் திருக்கவிட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக்கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும் மனிதரில் ஒருவரை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் படிக்கும், மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கிப் பாடுபட்டு பாடுபட்டு சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டுப் பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தை அற்று, இருக்க இட மற்றுத் திரியும்படியும் சொல்லி இருக்கவே இருக்காது.
இந்தக் காரியங்களுக்குக் கடவுளைப் பொருத்துகின்றவர்களை யோக்கியர்கள் என்றோ, அறிவாளிகள் என்றோ யாராலும் சொல்ல முடியாது. ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது. நாட்டுக் கோட்டையார்களில் 10 லட்சம், 20 லட்சம், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துள் ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும் பாட்டிற்கும் இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும் இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ் வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா? ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத் தனத்தினால், தொழில் முறையினால், மனவலிமையினால், சம்பவங்களால் ஏற்பட்டதென்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேருவதற்கு ஆதாரமாய் இருந்த முறையை யார்தான் சரியான முறை என்று சொல்லிக்கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குக் கொடுத்தவர்களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார்தான் நல்லநிலை என்று சொல்ல முடியும்? இவற்றையெல்லாம் மாற்றவேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கைகளையும் கொண்டுவந்து குறுக்கே போட்டால் அக்கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?
மற்றும் கடன்பட்டு வட்டிகொடுத்த மக்களுடையவும், பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களுடையவும் மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய அப்பணங்களைக் கோவில் கட்ட, வாகனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கலியாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாசிகளை வைத்து உற்சவம், வாண வேடிக்கை செய்யப் பாழ் பண்ணப் படுமானால் யார்தான் சகித்துக்கொண்டு இருக்க முடியும்? இந்த அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்? அப்படியும் ஒரு கடவுள் இருக்கிறது என்று சொல்லப்படுமானால் அப்படிப்பட்ட கடவுளை அழித்து ஒழித்து விடுவதில் யாருக்கு என்ன நஷ்டம் வரும்? அப்படிப்பட்ட கடவுளை யாரும் ஒழிக்க முடியாது என்று சொல்லப்படுமானால், அது ஒழிந்து போகுமே என்று ஒருவராவது ஏன் வருத்தப்பட வேண்டும்? இதையெல்லாம் பார்க்கும்போது கடவுளைக் கற்பித்தது நல்ல எண்ணம் கொண்டு என்பதாக நம்ப நம்மால் முடியவில்லை. சோம்பேறிக் கொள்ளைக் கூட்டங்கள், கொடுங் கோன்மைக்காரன், பேராசைக்காரன் முதலிய கூட்டத்தாரின் சுயநலத்துக் குத்தான் பயன்படுகின்றதே ஒழிய, வேறு காரியத்துக்குக் கடவுள் பயன்படுவதே இல்லை. மனித சமுக வாழ்க்கை ஒழுக்கத்திற்காக என்று கடவுள் சிருஷ்டிக்கப் பட்டிருக்குமானால், அப்படிப்பட்ட கடவுளைப்பற்றி அது இருந் தாலும் அது இல்லாவிட்டலும் நமக்குக் கவலையில்லை இதுவரை எந்தக் கடவுளால் யாருக்கு எப்படிப்பட்ட ஒழுக்கம் ஏற்பட்டதென்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கிறேன்.
கடவுளைச் சதாகாலம் கட்டியழுது அதனாலேயே ஜீவனம் நடத்தும் அர்ச்சகர்கள், குருக்கள் ஆகியவர்கள் முதலில் ஒழுக்கமாய் இருக்கிறார்களா? இவர்களுடைய ஒழுக்கக் காரியங்கள் நமக்குத் தெரியாதா? கடவுளுக்காக லட்சம், பத்து லட்சம் பணம் போட்டுக் கோவிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து அய்ந்து வேளை, ஆறு வேளை பூஜை செய்து மானியம் விட்ட கடவுள் பக்தர்களில் எவராவது ஒழுக்கமாய் யோக்கியமாய் நடக்கிறார்களா? கடவுளுக் காவே சன்னியாசியாய், குருவாய், சங்கராச்சாரியாராய், தம்பிரானாய், முல்லாவாய், மவுலானாவாய், பாதிரியாய், பெரிய குருவாய் இருக்கிறவர்களிலாவது எல்லோரும் ஒழுக்கமானவர்கள் என்று சந்தேகமறச் சொல்லத்தக்கவர்களாய் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் நிலையே இப்படி இருக்கக் கடவுள் நம்பிக்கை உள்ள சாதாரணப் பாமர மக்களிடத்தில் எப்படி ஒழுக்கம், யோக்கியதையை எதிர் பார்க்கமுடியும்?
எப்படியானாலும் கடவுளைப் பற்றிய எண்ணமே யாருக்கும் இருக்கக் கூடாது என்பதற்காக நான் கூறவில்லை. மனித சமுக சமதர்ம வாழ்வுக்குத் தடையாய், எந்தக் கடவுளும் இருக்கக் கூடாது என்றும், அப்படிப்பட்ட கடவுளை இருக்க விடக் கூடாது என்றும் தான் வற்புறுத்திக் கூறுகிறேன். மனித வாழ்க்கைக்கும் பேதா பேதங்களுக்கும் கடவுள் சம்பந்தமில்லை என்று சொல்லும் பட்சம் அக்கடவுளைப் பற்றி நமக்கு என்ன கவலை?
----------------- தந்தை பெரியார்-"குடிஅரசு" - கட்டுரை - 18.06.1949
11 comments:
வேலியே பயிரை மேயும் கூத்துகள்! போக்குவரத்துக் கழகத் தொழிற்கூடத்தில் கோயில் கட்டி கும்பாபிஷேகமா?
உச்சநீதிமன்ற தீர்ப்பு - அரசு ஆணைகள் குப்பைக் கூடையில் தூக்கியெறிப்படுகின்றன
சென்னை, ஜூன் 15- அரசு அலுவகலகங்கள் வளாகங்கள், நடைமுறைகள், அரசுக்குச் சொந்தமான இடங்களில் எந்த மத சம்பந்தமான கோவில்களும் கட்டக் கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு, மத்திய மாநில அரசுகளின் ஆணைகள் திட்டவட்டமாக இருந்தும் தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துத் துறை வளாகத்திலேயே கோவில் கட்டிக் கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளது.
1) மத்திய அரசு கடித எண் 3379/(L&OB) 91-3 துறை நாள் 16.9.1993.
2. மத்திய அரசு உள்துறை கடிதம் எண் 5/23/94 - CHC (மத்திய அரசு கூடுதல் செயலாளர் டி.என். ஸ்ரீவத்சவா) மாநில அரசுகளின் தலைமைச் செயலாள ருக்கு எழுதிய கடிதம்.
3) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் என். அரிபாஸ்கர் அவர்களின் கடிதம் நாள்: 16.8.1994.
இந்த ஆணைகளின்படி அரசு அலுவலகங்கள், அவற்றின் வளாகங்களுக்குள் எந்த மத சம்பந்தமான வழிபாட்டு நிலையங்களும் கட்டப்படக் கூடாது!
இவையல்லாமல் 2010 செபம்டம்பர் 14 அன்று உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றினையும் வழங்கியது.
பொது இடங்களிலும் அரசு இடங்களிலும் கட்டப் பட்டுள்ள அனைத்து மதச் சின்னங்களும் அகற்றப்பட வேண்டும். இது குறித்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து பதில் சொல்லியாக வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகபட்சமாக 77,450 கோவில்கள். சட்ட விரோதமாகக் கட்டப்பட் டுள்ளன என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட வில்லையா? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணைக்கு எதிராகவும் பொது இடங்களில் கோவில்கள் கட்டப்படுவது எந்த வகையில் சரி?
சென்னை குரோம்பேட்டையில்
சென்னை குரோம்பேட்டை ராதா நகரிலுள்ள மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்கூட வளாகத்தில், ஓட்டுநர் பயிற்சி மற்றும் பேருந்து சம்பந்தப்பட்ட தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த இடம் தமிழக அரசிற்குச் சொந்தமான இடமாகும்.
இந்த வளாகத்தில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரின் ஆதரவுடன் (8.6.2012) கருமாரி அம்மன் கோவில் கட்டி, கும்பாபிசேகத்தை நடத்தியுள் ளனர் அந்தப் பகுதியிலுள்ள கோவில் பூசாரிகள்.
அரசுக்குச் சொந்தமான இடத்தில் மத சம்பந்தப்பட்ட சின்னங்களோ, வழிபாட்டுத் தலங்களோ இருக்கக் கூடாது என்று அரசாங்க ஆணை உள்ளது.
இந்த ஆணையை மீறும் வகையில் சென்னை குரோம்பேட்டை ராதா நகரிலுள்ள மாநகர போக்குவரத் துக் கழக தொழிற்கூட வளாகத்தில் கோவில் கட்டி கும்பாபிசேகம் நடத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? கோயில் அகற்றப்படுமா? 15-6-2012
யாகங்கள் நடத்திக் கொண்டே பெரியார் பெயரை உச்சரிப்பதா? முதல்வரை நோக்கி கலைஞர் வினா!
சென்னை, ஜூன் 15- வேத ஆகம பாராயணங் களோடு மழைக்காக யாகம் நடத்துபவர்கள் எல்லாம் தந்தை பெரி யார் பெயரைப் பயன் படுத்தலாமா என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பியுள்ளார் திமுக தலைவர் கலைஞர் அவர்கள்.
முரசொலியில் இன்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது:
கேள்வி :- மத்திய அரசின் பாடப் புத்தகங் களில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கிண் டல் செய்து வெளி வந்த கார்ட்டூனை அகற்ற வேண்டு மென்று கடை சியாக தமிழக முதல மைச்சர் ஜெயலலிதாவும் ஓர் அறிக்கை வெளி யிட்டிருக் கிறாரே?
கலைஞர் :- தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் சார் பில் தமிழகத்தின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் வெளியிட்டுள்ள கேலிச் சித்திரம் குறித்து, தமிழ கத்திலே உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர் களும் கண்டனம் தெரி வித்து, அந்தக் கேலிச் சித்திரம் உடனடியாக அந்தப் பாடப் புத்த கத்தில் இருந்து அகற்ற மத்திய அரசு ஆவன செய்திட வேண்டு மென்று அறிக்கை கொடுத்ததோடு, போராட்டங்களும் நடத்தி முடித்த பிறகு, தமிழக ஆளுங்கட்சியின் தலைவியும், முதலமைச் சரு மான ஜெயலலிதா திடீரென விழித்துக் கொண்டு அவசர அவ சரமாக ஓர் அறிக்கை கொடுத்து, அதனை தமிழ்நாட்டுப் பத்திரிகை கள் எல்லாம் முக்கியத் துவம் கொடுத்து வெளி யிட்டுள்ளன.
இந்தியை எதிர்த்து அண்ணா முழங்கி யதையெல்லாம் ஜெய லலிதா தனது அறிக்கை யில் குறிப்பிட்டிருக் கிறார். ஆனால்அண்ணா அவர்களின் நூற்றாண்டு நினைவாக கழக ஆட்சி யில் எழுப்பப்பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் என்ற கட்டடத்தை மாற்று கிறேன் என்று சண்ட மாருதம் செய்தவருக்கு, தற்போது அண்ணா அவர்களின் பேச்சு ஞாபகத்திற்கு வந்தது ஆச்சரியம்தான். இதிலே ஜெயலலிதா அறிக்கை விடுத்தாரா இல்லையா என்பதல்ல பிரச்சினை. ஒட்டு மொத்த தமிழர்களை யும், அவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட் டத்தையும் கிண்டல் செய்த கேலிச் சித்திரம் அரசின் சார்பாக வெளி யிடப்பட்டுள்ள புத்தகத் தில் இடம் பெறக் கூடாது என்பதுதான் அனைவரின் கோரிக்கை யும், வேண்டுகோளு மாகும். எனவே மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தி, இதனைப் பெரிய பிரச்சினையாக வளர்த்து விடாமல், உடனடியாக தலை யிட்டு அந்தக் கேலிச் சித்திரத்தை அகற்றுவ தற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்.
அதுபோலவே தந்தை பெரியாரின் பெயரை யும் குறிப்பிட்டு அவரை அவமதிக்கும் செயல் என்றும் தனது அறிக்கை யில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக் கிறார். தமிழகத்திலே மழை இல்லை என்ப தற்காக திருச்சியில் காவிரியில் அ.தி.மு.க. அமைச்சரின் முன்னி லையில் வேத ஆகம பாராயணங்களோடு மூன்று நாட்களுக்கு முன்பு யாகம் நடத்தி விட்டு, தற்போது பெரி யாரின் பெயரைக் கூறி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைத்தால் திராவிடர்கள் என்ன அவ்வளவு ஏமாளிகளா?
15-6-2012
வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
இளைஞர்களே, உங்கள் உள்ளங்களைத் திறந்து இடமளியுங்கள்!
நேற்று உலக குருதிக் கொடை நாள் மட்டுமல்ல, முதியோர்களைக் கொடுமைப்படுத்தலைத் தடுக்கும் நாளும் கூட.
உலகெங்கும் உள்ள பல நாடுகளில் முதியோர்கள் எண்ணிக்கை மிகவும் கூடியிருக்கிறது. இந்தியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளும் பல அய்ரோப்பிய நாடுகளும் கூட இந்தப் பட்டியலில்!
முன்பு இருந்த சராசரி வயது இப்போது கூடியுள்ளது. மருத்துவ வசதிகளின் பெருக்கம், அறிவியல் மின்னணுவியல் துறை வளர்ச்சி க்ஷடி-அநனஉயட என்ற துறையில் பொறியியல் மருத்துவத் தொழில் நுட்பம் மிகவும் உதவிகரமாக உள்ளது. ழநயடவா ஊயசந என்ற ஒரு துறையே மருத்துவப் பொறியியல் துறையில் கூடுதலாக இணைந்து ஓர் அமைதிப் புரட்சிக்கு வித்திட்டு, மனித ஆயுளை மேலும் பல ஆண்டுகள் கூட்டியுள்ளது. இதெல்லாம் மகிழ்ச்சிக்குரிய சாதனைதான்; ஆனால் இதற்கொரு மறுபக்கம் நம் நாட்டிலும் மற்ற சில நாடுகளிலும் உள்ளது பற்றியும் நாம் யோசிக்க வேண்டாமா?
கூட்டுக்குடும்ப முறை நம் நாட்டில் வேகமாகச் சிதைந்து அல்லது தளர்ந்து வரும் இன்றைய கால கட்டத்தில், சொந்த மகன்கள் அல்லது மகள்கள் தங்களது தாய், தந்தையர்களைப் பெரிதும் கொடுமையாக நடத்தும் போக்கு தொத்து நோய் போல, (பன்றிக் காய்ச்சல் - டெங்குக் காய்ச்சல் போல) வேகமாகப் பரவி வருகிறது!
தங்களைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி, கல்வி கொடுத்து, உத்தியோகம் பார்த்து கை நிறையச் சம்பாதிக்கும் நிலைக்குத் தன்னை உருவாக்கிய பெற்றோர்களை - அவர்களது முதுமைக்காலத்தில் மிகவும் மோசமாக, அலட்சியத்துடன், ஏதோ பிச்சைக்காரர்களைப் போல கேவலமாக நடத்தும் கொடுமை - அவமானம் பற்பல குடும்பங்களில் அன்றாட வாழ்க்கையாகி உள்ளது!
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - தாய் சொல் மிக்க வாசகம் இல்லை என்று சொல்லிக் கொடுக்கப்பட்ட தமிழ்நாட்டிலேயே - கைவிடப்பட்ட அல்லது விரட்டப்பட்ட முதுமையடைந்த தாய் தந்தையர்களின் கண்ணீர்க் கதைகள், சோக வரலாறுகள் அன்றாட அவல நிலையாகி வருகின்றன!
எதையும் பயன்படுத்திவிட்டு, பிறகு குப்பையில் எறிதல் போன்று (ருளந யனே வாசடிற) அவர்களை மனிதர்களாகவே நடத்தாத அவரது பிள்ளைகள், பெண் கள் - இரு பாலரும் மிகப் பெரிய சமூக விரோதிகள் அல்லவா? நன்றி கொல்லும் நயவஞ்சக நரிகள் அல்லவா?
இவர்களைக் கிரிமினல் குற்றவாளி களாக்க புதுப்புதுச் சட்டங்கள் நம் நாட்டிலேயே செயல்படத் துவங்கி யுள்ளன.
சில மாதங்களுக்கு முன் தந்தைக்குச் சோறு போட மறுத்த ஒரு மகனை சென்னை அயன்புரம் காவல்துறையினர் அழைத்துக் கண்டித்து, காவல்துறை லாக்அப்பில் உள்ளே தள்ளி, பிறகு நடவடிக்கைக்குப் பயந்தவர் தந்தையைப் பராமரிக்க ஒரு வழியாக ஒப்புக் கொண்ட தால் வெளியே அனுப்பிய செய்தி இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய செய்தி யாகும்!
சட்டத்தாலா மகன் தந்தை உறவும், பாசமும் கடமையும் நிலை நிறுத்தப்படவேண்டும்? இதைவிட நம் சமுதாயத்தின் கீழிறக்க நிலைக்கு வேறு என்ன உதாரணம் தேவை?
கணவன் - மனைவி உறவு கூட விலகிக் கொள்ள உரிமை அளிக்கும் உறவுதான். ஆனால் தாய் தந்தையுடன் மகன், மகள் உறவு, அண்ணன் தம்பி உறவு என்பவைகளெல்லாம் விலகிக் கொள்ளும் உரிமையை சட்டமோ அறநிலையோ அனுமதிப்பதில்லையே! அதுதானே அதன் தனிச் சிறப்பு.
மனித பாசத்தை, அன்பை, காதலை சட்டம் போட்டா ஒரு சமுதாயம் நிலை நிறுத்துவது? இதை விட மிகமிக வெட்கக்கேடு வேறு உண்டா?
முதியவர்களிடம் அலட்சியம் காட்டி, புறந்தள்ளி ஒதுக்கப்பட்டவர் களாக்கும் இளையவர்களே, உங்களுக்கு ஏன் ஒன்று மறந்து விடுகிறது?
நாளை நீங்களும் முதியவர்களாகி முதுமையில் தள்ளாடும் நிலை காலத்தின் கட்டாயம் என்பதை ஏனோ வசதியாக மறந்து விடுகிறீர்கள்? அப்போது உங்கள் செல்வர்கள் (பிள்ளை, பெண்கள்) உங்களை இப்படி நடத்திடுவர்; அப்போது உங்கள் மனம் எப்பாடுபடும் என்பதைச் சிந்தித்தீர்களா?
எனவே முதியோர் இல்லங்களைத் தேடாதீர்கள் உங்கள் பெற்றோர் களுக்காக - மூடிய உங்கள் உள்ளங் களைச் சற்றே அகலமாகத் திறந்து அவர்களை மீள் குடியேற்றுங்கள். இது அவர்களுக்காக அல்ல; நீங்கள் மனிதம் உள்ள மனிதர்கள்தான் என்பதை மன்பதைக்குக் காட்ட - மதிப்பும் மரியாதையும் பெறுவதற்காக! புரிகிறதா? 15-6-2012
தமிழர் திருமணத்தில் தேவையில்லாச் சடங்குகள்!
திருமணத்தில் நம் நாட்டிற்கும், நம் கொள்கைகளுக்கும், பகுத்தறிவிற்கும், தன்மானத்திற்கும் பிடித்தமில்லாத பல சடங்குகள் அனாவசியமாகப் பார்ப்பனப் புரோகிதருக்கு அரிசியும், பணமும் மற்றப் பொருள்களும் கிடைப்பதற்காகவே செய்யப்படுகின்றன. மணவினையின் தொடக்கத்தில் மணமகன் பரதேசம் போவதும், நிறைகுடப் பூசையும் ஏமாற்று வித்தைகள் ஆகும். பிள்ளையார் பூசை, நவக்கிரக பூசை ஆகியவை தமிழர்க்கு முரணான செயல்கள்.
பகலில் காணமுடியாத அருந்ததி நடத்திரத்தை பார் என்று மணமகன் மணமகளுக்குக் காட்டுவதும், மணமகளின் காலைத்தூக்கி மணமகன் பந்தலில் வைக்கப்பட்டுள்ள அம்மியின் மீது வைப்பது ஆன அறிவற்ற ஆபாச சடங்குகளைச் செய்யக்கூடாது.
எரி ஓம்பல் அவசியம் இல்லாத சடங்கு உலர்ந்த தருப்பை புல்லையும், சமித்து என்று சொல்லப்படும் ஆல்வேல் அத்தி மா முதலிய மரங்களின் சுள்ளிகளையும் கொளுத்தி அதில் நம்நாட்டு மக்களின் பெரும்பாலோர் சுவைத்தே அறியாத அருமையான நெய்யைக் கொட்டி புகையை உண்டாக்கித் திருமணத்தைக் காண வந்திருப்பவர்களின் கண்களுக்கு தொந்தரவுக் கொடுப்பதுதான் ஓமம் வளர்த்தலின் பயன் இம்மாதிரி அக்கினியை போற்றுவதும் பூசிப்பதும் பனியும் குளிரும் அதிகமாகயுள்ள மத்திய ஆசியாவில் உடைகள் இன்றி வெற்றுடம்புடன் வாழ்ந்திருந்த ஆரியர்கட்குத்தான் தகும். உஷ்ண நாடான இந்தியாவில் ஒரே இடத்தில் தங்கி வசித்து வந்த தமிழர்கட்கு அக்கினியை ஒரு தெய்வமாகக் கொள்வது அவசியமில்லை.
(ஆதாரம்: பேராசிரியர் அ.கு.பாலசுந்தரனார் எழுதிய தமிழர் திருமண முறைகள் என்னும் நூலில் பக்கம் 3, 4, 14, 15, 23) தொகுப்பு: வை.மு. கும்பலிங்கன், குடந்தை
தமிழர் திருமணத்தில் தேவையில்லாச் சடங்குகள்!
திருமணத்தில் நம் நாட்டிற்கும், நம் கொள்கைகளுக்கும், பகுத்தறிவிற்கும், தன்மானத்திற்கும் பிடித்தமில்லாத பல சடங்குகள் அனாவசியமாகப் பார்ப்பனப் புரோகிதருக்கு அரிசியும், பணமும் மற்றப் பொருள்களும் கிடைப்பதற்காகவே செய்யப்படுகின்றன. மணவினையின் தொடக்கத்தில் மணமகன் பரதேசம் போவதும், நிறைகுடப் பூசையும் ஏமாற்று வித்தைகள் ஆகும். பிள்ளையார் பூசை, நவக்கிரக பூசை ஆகியவை தமிழர்க்கு முரணான செயல்கள்.
பகலில் காணமுடியாத அருந்ததி நடத்திரத்தை பார் என்று மணமகன் மணமகளுக்குக் காட்டுவதும், மணமகளின் காலைத்தூக்கி மணமகன் பந்தலில் வைக்கப்பட்டுள்ள அம்மியின் மீது வைப்பது ஆன அறிவற்ற ஆபாச சடங்குகளைச் செய்யக்கூடாது.
எரி ஓம்பல் அவசியம் இல்லாத சடங்கு உலர்ந்த தருப்பை புல்லையும், சமித்து என்று சொல்லப்படும் ஆல்வேல் அத்தி மா முதலிய மரங்களின் சுள்ளிகளையும் கொளுத்தி அதில் நம்நாட்டு மக்களின் பெரும்பாலோர் சுவைத்தே அறியாத அருமையான நெய்யைக் கொட்டி புகையை உண்டாக்கித் திருமணத்தைக் காண வந்திருப்பவர்களின் கண்களுக்கு தொந்தரவுக் கொடுப்பதுதான் ஓமம் வளர்த்தலின் பயன் இம்மாதிரி அக்கினியை போற்றுவதும் பூசிப்பதும் பனியும் குளிரும் அதிகமாகயுள்ள மத்திய ஆசியாவில் உடைகள் இன்றி வெற்றுடம்புடன் வாழ்ந்திருந்த ஆரியர்கட்குத்தான் தகும். உஷ்ண நாடான இந்தியாவில் ஒரே இடத்தில் தங்கி வசித்து வந்த தமிழர்கட்கு அக்கினியை ஒரு தெய்வமாகக் கொள்வது அவசியமில்லை.
(ஆதாரம்: பேராசிரியர் அ.கு.பாலசுந்தரனார் எழுதிய தமிழர் திருமண முறைகள் என்னும் நூலில் பக்கம் 3, 4, 14, 15, 23) தொகுப்பு: வை.மு. கும்பலிங்கன், குடந்தை
கோவிலுக்குள் மூலஸ்தானம் தவிர மற்ற எல்லா இடங்களிலும் இந்து மதத்தை நம்பாதவர்களும், அதற்கு எதிரிடையாயுள்ளவர்களும் சுற்றித் திரிய இடங்கொடுத்துவிட்டு, இந்துமதத்தைக் கொண்டாடுவதோடு அல்லாமல், இந்து மதத்தில் பிறந்து அதையே நம்பி, அதிலேயே இருந்து அதற்காகவே இறந்து கொண்டு இருக்கிற இந்து மக்கள் கோவிலுக்குள் நுழைய கூடாது என்பது பொல்லாத தலைவிதியாயிருக்கிறது. என்னுடைய அபிப்பிராயத்தில் இது தீண்டாமையை விடக் கேவலமான தாயிருக்கிறது.- பி.டி.ராஜன் (9.6.1928)
(லால்குடி தாலுகா முதலாவது சுயமரியாதை மாநாட்டின் தலைமை உரையில்)
கோவிலுக்குள் மூலஸ்தானம் தவிர மற்ற எல்லா இடங்களிலும் இந்து மதத்தை நம்பாதவர்களும், அதற்கு எதிரிடையாயுள்ளவர்களும் சுற்றித் திரிய இடங்கொடுத்துவிட்டு, இந்துமதத்தைக் கொண்டாடுவதோடு அல்லாமல், இந்து மதத்தில் பிறந்து அதையே நம்பி, அதிலேயே இருந்து அதற்காகவே இறந்து கொண்டு இருக்கிற இந்து மக்கள் கோவிலுக்குள் நுழைய கூடாது என்பது பொல்லாத தலைவிதியாயிருக்கிறது. என்னுடைய அபிப்பிராயத்தில் இது தீண்டாமையை விடக் கேவலமான தாயிருக்கிறது.- பி.டி.ராஜன் (9.6.1928)
(லால்குடி தாலுகா முதலாவது சுயமரியாதை மாநாட்டின் தலைமை உரையில்)
நாத்திகம் பற்றி வினோபா!
வினோபாவே அவர்கள் 22.8.1956 காலை 10 மணிக்கு பவானி கூடுதுறையிலுள்ள திருமுறைக்கழகக் கட்டடத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்ட கருத்துகளை இங்கே தருகிறோம்:-
நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்ல, எல்லாக் கட்சியினரும் எனக்கு வேண்டும். நாஸ்திகன்தான் மக்களுக்கு உண்மையான சேவை செய்பவன். ஆத்திகனால் சேவை செய்ய முடியாது. உதாரணமாக, ஒருவன் பீடி குடிக்கிறானென்றால், அவனுக்கு பீடி கொடுத்துக் கொண்டிருப்பது சேவை செய்வதாகாது. அவனுடைய மனத்தை மாற்றி பீடி குடிப்பதை நிறுத்துவதுதான் உண்மையான சேவையாகும். எந்த அரசாங்கமும் நாத்திகத் தன்மையில் இருந்தால்தான் மக்களுடைய தேவைகளை அனுசரித்து சேவை செய்ய முடியும்.
நாத்திகம் பற்றி வினோபா!
வினோபாவே அவர்கள் 22.8.1956 காலை 10 மணிக்கு பவானி கூடுதுறையிலுள்ள திருமுறைக்கழகக் கட்டடத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்ட கருத்துகளை இங்கே தருகிறோம்:-
நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்ல, எல்லாக் கட்சியினரும் எனக்கு வேண்டும். நாஸ்திகன்தான் மக்களுக்கு உண்மையான சேவை செய்பவன். ஆத்திகனால் சேவை செய்ய முடியாது. உதாரணமாக, ஒருவன் பீடி குடிக்கிறானென்றால், அவனுக்கு பீடி கொடுத்துக் கொண்டிருப்பது சேவை செய்வதாகாது. அவனுடைய மனத்தை மாற்றி பீடி குடிப்பதை நிறுத்துவதுதான் உண்மையான சேவையாகும். எந்த அரசாங்கமும் நாத்திகத் தன்மையில் இருந்தால்தான் மக்களுடைய தேவைகளை அனுசரித்து சேவை செய்ய முடியும்.
கிருஸ்தவர்கள் பாதரட்சை அணியலாமா?
(அப்போஸ்தலர்: 7:33)ல் பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாத ரட்சை களை கழற்றிப் போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது. என்றும் (அப்போஸ்தலர்: 12:7-9)ல் தூதன் பேதுருவை எழுப்பி; பேதுருவை நோக்கி: உன் அறையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக் கொள் என்றான். அந்தப் படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று... என்றும் இருக்கிறது. இதிலிருந்து பேதுரு இயேசுவின் கட்டளையை நம்பவில்லை என்று தானே தெரியவருகிறது? ஒரு வானொலி நிலையத்தின் ஒலிபரப்பில் கிருஸ்தவர்கள் கோவிலுக்குள்ளும் செருப்பு அணிந்து செல்கின்றனரே? என்ற கேள்வி எழுந்தது. இதிலிருந்து இயேசுவை கிருஸ்தவர்கள் கூட நம்பவில்லை என்று தெரியவில்லை?
(ஆதாரம்: இந்திய வேதாகமச் சங்கத்தாரால் 1978ல் வெளியிடப்பட்ட புதிய ஏற்பாடு)
கிருஸ்தவர்கள் பாதரட்சை அணியலாமா?
(அப்போஸ்தலர்: 7:33)ல் பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாத ரட்சை களை கழற்றிப் போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது. என்றும் (அப்போஸ்தலர்: 12:7-9)ல் தூதன் பேதுருவை எழுப்பி; பேதுருவை நோக்கி: உன் அறையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக் கொள் என்றான். அந்தப் படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று... என்றும் இருக்கிறது. இதிலிருந்து பேதுரு இயேசுவின் கட்டளையை நம்பவில்லை என்று தானே தெரியவருகிறது? ஒரு வானொலி நிலையத்தின் ஒலிபரப்பில் கிருஸ்தவர்கள் கோவிலுக்குள்ளும் செருப்பு அணிந்து செல்கின்றனரே? என்ற கேள்வி எழுந்தது. இதிலிருந்து இயேசுவை கிருஸ்தவர்கள் கூட நம்பவில்லை என்று தெரியவில்லை?
(ஆதாரம்: இந்திய வேதாகமச் சங்கத்தாரால் 1978ல் வெளியிடப்பட்ட புதிய ஏற்பாடு)
Post a Comment