Search This Blog

14.6.12

முஸ்லிமும், வெள்ளைக்காரனும் இப்படியா கடவுள் வைத்திருக்கிறான்?


பகுத்தறிவுவாதிகளாக வேண்டும்

நீங்கள் அனைவரும் பகுத்தறிவுவாதிகளாக ஆக வேண்டும். உலகத்திலேயே அறிவுத் துறையில் நாம் மிகப் பின்னடைந்து இருக்கிறோம். சம்பாதிப்பதில் பிள்ளை பெறுவதில் மூட்டை கட்டுவதில் வேண்டுமானால் நீங்கள் புத்திசாலிகளாக இருக்கலாம். வெள்ளைக்காரன் இன்றைக்கு பகுத்தறிவுவாதியாக இருக்கிறானே, அதனாலே கடவுள் போய் விடுமென்று யாரும் பயப்பட வேண்டாம். அறிவுப்படி அவசியத்துக்கேற்ப சடங்கு முறையில் அவன் ஒரு கடவுளை வைத்திருக்கிறான். அதுபோல வேண்டுமானால், நீங்களும் வைத்துக் கொள்ளுங்கள். கிறித்துவர், முஸ்லிம்கள் தொழும் கடவுள், நம்பிக் கையை அடிப் படையாகக் கொண்டது. ஒழுக்கம், அருள், கருணை இவைகளை உடையது. அது தனக்கு என்று ஒன்றும் வேண்டாதது என்று அவன் சொல்லு கிறான். ஆனால், நீ என்ன சொல்லுகிறாய்? நெருப்புக் குச்சிகள் மாதிரி, செங்கல் மாதிரி லட்சம், பத்து லட்சக்கணக்கில் ஏராளமாக கடவுள்களை வைத்திருக்கிறாய். ரோடு ஓரத்தில் படுத்திருக்கும் குழவிக் கல்லை நிமிர்த்தி வைத்தால் அதைக் கடவுள் ஆக்கி விடுகிறாய்! மாட்டுச் சாணியை கொழுக்கட்டையாட்டம் பிடித்து வைத்தால் அது உன் கடவுள்! மைல்கல், ஃபர் லாங்குகல் எல்லாம் கூட கடவுள்கள் ஆக்கப்பட்டிருக்குமே, நாங்கள் இல்லா விட்டால்! முஸ்லிமும், வெள்ளைக்காரனும் இப்படியா கடவுள் வைத்திருக்கிறான்?

உன் கடவுளுக்கு பெண்டாட்டி, பிள்ளைக்குட்டிகள் திருட்டு, புரட்டு, கொலை, கொள்ளை இத்தனையும் தேவைப்படுகிறதே? உன் கடவுள் என்றால் 1,000 முகமுடையாள், 2,000 கையுடையாள் என்று அளக்கிறான்! நாமும் மடப்பசங்கள் என்பதால் பார்ப்பான் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்ளுகிறோம். ஒவ்வொரு உருவத்திற்கும் ஒவ்வொரு முட்டுக்கல் அடிக்கிறாங்களே, ஒண்ணும் வேண்டாதவர் கடவுள் என்றால் அவருக்கு மனைவி எதற்கு? திருமணம் எதற்கு? பிள்ளைக் குட்டிகள் எதற்கு? ஆறு வேளை பூசை எதற்கு? யாரும் கேட்பதில்லையே? வெள்ளைக்காரன் இப்படியெல்லாம் கட்டிக் கொண்டா அழுகிறான்? நீ என்ன அவனைவிட அறிவாளியா? உன் கடவுளுக்கு ஒழுக்கமிருக்கிறதா? 1,000 வைப்பாட்டிகளை வைத்திருந்தது என்று எழுதி வைத்திருக்கிறாயே, அந்தக் கடவுளுக்கு மானம் வேண்டாமா? உன் கடவுள்கள் சாகிறதே, பிறக்கிறதே! இப்படிப்பட்ட தன்மையில் நாம் இருக்கிறோம். உனக்கு என்னென்ன வேண்டுமோ, அதெல்லாம் கடவுளுக்கு வேண்டும் என்று சொல்லி விடுகிறாய். அவ்வளவு முட்டாள்களாக இருக்கிறோம்.

கருணாமூர்த்தி உன் கடவுள் என்றால் கொடுவாளும், அரிவாளும், வேலும், வில்லும், ஈட்டியும், சூலாயுதமும், மழுவும், கொழுவும், கொட்டாபுளியும் எதற்கு? இது காட்டுமிராண்டிப் பசங்க சங்கதி என்பதைத் தவிர வேறு என்ன? கள்ளு, சாராயம், கஞ்சா, அபினி, கொள்ளை, கொலை இவ்வளவும் உன் கட வுளுக்கு தேவை. அப்புறம் திருட்டுப் பசங்களுக்கும், கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? யோசித்துப் பாருங்கள். நம் புத்தகங்களை விடுதலை பத்திரிகை முதலியன வற்றை படித்தால்தான் நீங்கள் பகுத்தறிவுவாதிகளாக ஆக முடியும். இந்தப் பார்ப்பானுங்க நடத்துகிற பத்திரிகைகளில் புராண, இதிகாச ஒழுக்கமற்ற ஆபாசக் கதைகளைத் திணித்து விஷமிட்டும், அதை நம்முடைய மனத்தில் புக வைத்து விடுவான். மற்றவர்கள் இக்கருத்துகளைச் சொல்ல மாட்டார்கள். உயிருக்குத் துணிந்து இருக்கிற எங்களால்தான் இது போன்ற காரியங்களைச் செய்திட முடியும்.

------------------முசிறியில் ஆறு ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - "விடுதலை" 20.9.1964

9 comments:

பாண்டியன் said...
This comment has been removed by the author.
தமிழ் ஓவியா said...

வேலியே பயிரை மேயும் கூத்துகள்! போக்குவரத்துக் கழகத் தொழிற்கூடத்தில் கோயில் கட்டி கும்பாபிஷேகமா?

உச்சநீதிமன்ற தீர்ப்பு - அரசு ஆணைகள் குப்பைக் கூடையில் தூக்கியெறிப்படுகின்றனசென்னை, ஜூன் 15- அரசு அலுவகலகங்கள் வளாகங்கள், நடைமுறைகள், அரசுக்குச் சொந்தமான இடங்களில் எந்த மத சம்பந்தமான கோவில்களும் கட்டக் கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு, மத்திய மாநில அரசுகளின் ஆணைகள் திட்டவட்டமாக இருந்தும் தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துத் துறை வளாகத்திலேயே கோவில் கட்டிக் கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளது.

1) மத்திய அரசு கடித எண் 3379/(L&OB) 91-3 துறை நாள் 16.9.1993.

2. மத்திய அரசு உள்துறை கடிதம் எண் 5/23/94 - CHC (மத்திய அரசு கூடுதல் செயலாளர் டி.என். ஸ்ரீவத்சவா) மாநில அரசுகளின் தலைமைச் செயலாள ருக்கு எழுதிய கடிதம்.

3) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் என். அரிபாஸ்கர் அவர்களின் கடிதம் நாள்: 16.8.1994.

இந்த ஆணைகளின்படி அரசு அலுவலகங்கள், அவற்றின் வளாகங்களுக்குள் எந்த மத சம்பந்தமான வழிபாட்டு நிலையங்களும் கட்டப்படக் கூடாது!

இவையல்லாமல் 2010 செபம்டம்பர் 14 அன்று உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றினையும் வழங்கியது.

பொது இடங்களிலும் அரசு இடங்களிலும் கட்டப் பட்டுள்ள அனைத்து மதச் சின்னங்களும் அகற்றப்பட வேண்டும். இது குறித்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து பதில் சொல்லியாக வேண்டும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகபட்சமாக 77,450 கோவில்கள். சட்ட விரோதமாகக் கட்டப்பட் டுள்ளன என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட வில்லையா? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணைக்கு எதிராகவும் பொது இடங்களில் கோவில்கள் கட்டப்படுவது எந்த வகையில் சரி?

சென்னை குரோம்பேட்டையில்

சென்னை குரோம்பேட்டை ராதா நகரிலுள்ள மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்கூட வளாகத்தில், ஓட்டுநர் பயிற்சி மற்றும் பேருந்து சம்பந்தப்பட்ட தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த இடம் தமிழக அரசிற்குச் சொந்தமான இடமாகும்.

இந்த வளாகத்தில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரின் ஆதரவுடன் (8.6.2012) கருமாரி அம்மன் கோவில் கட்டி, கும்பாபிசேகத்தை நடத்தியுள் ளனர் அந்தப் பகுதியிலுள்ள கோவில் பூசாரிகள்.

அரசுக்குச் சொந்தமான இடத்தில் மத சம்பந்தப்பட்ட சின்னங்களோ, வழிபாட்டுத் தலங்களோ இருக்கக் கூடாது என்று அரசாங்க ஆணை உள்ளது.

இந்த ஆணையை மீறும் வகையில் சென்னை குரோம்பேட்டை ராதா நகரிலுள்ள மாநகர போக்குவரத் துக் கழக தொழிற்கூட வளாகத்தில் கோவில் கட்டி கும்பாபிசேகம் நடத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? கோயில் அகற்றப்படுமா?

தமிழ் ஓவியா said...

யாகங்கள் நடத்திக் கொண்டே பெரியார் பெயரை உச்சரிப்பதா? முதல்வரை நோக்கி கலைஞர் வினா!


சென்னை, ஜூன் 15- வேத ஆகம பாராயணங் களோடு மழைக்காக யாகம் நடத்துபவர்கள் எல்லாம் தந்தை பெரி யார் பெயரைப் பயன் படுத்தலாமா என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பியுள்ளார் திமுக தலைவர் கலைஞர் அவர்கள்.

முரசொலியில் இன்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது:

கேள்வி :- மத்திய அரசின் பாடப் புத்தகங் களில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கிண் டல் செய்து வெளி வந்த கார்ட்டூனை அகற்ற வேண்டு மென்று கடை சியாக தமிழக முதல மைச்சர் ஜெயலலிதாவும் ஓர் அறிக்கை வெளி யிட்டிருக் கிறாரே?

கலைஞர் :- தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் சார் பில் தமிழகத்தின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் வெளியிட்டுள்ள கேலிச் சித்திரம் குறித்து, தமிழ கத்திலே உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர் களும் கண்டனம் தெரி வித்து, அந்தக் கேலிச் சித்திரம் உடனடியாக அந்தப் பாடப் புத்த கத்தில் இருந்து அகற்ற மத்திய அரசு ஆவன செய்திட வேண்டு மென்று அறிக்கை கொடுத்ததோடு, போராட்டங்களும் நடத்தி முடித்த பிறகு, தமிழக ஆளுங்கட்சியின் தலைவியும், முதலமைச் சரு மான ஜெயலலிதா திடீரென விழித்துக் கொண்டு அவசர அவ சரமாக ஓர் அறிக்கை கொடுத்து, அதனை தமிழ்நாட்டுப் பத்திரிகை கள் எல்லாம் முக்கியத் துவம் கொடுத்து வெளி யிட்டுள்ளன.

இந்தியை எதிர்த்து அண்ணா முழங்கி யதையெல்லாம் ஜெய லலிதா தனது அறிக்கை யில் குறிப்பிட்டிருக் கிறார். ஆனால்அண்ணா அவர்களின் நூற்றாண்டு நினைவாக கழக ஆட்சி யில் எழுப்பப்பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் என்ற கட்டடத்தை மாற்று கிறேன் என்று சண்ட மாருதம் செய்தவருக்கு, தற்போது அண்ணா அவர்களின் பேச்சு ஞாபகத்திற்கு வந்தது ஆச்சரியம்தான். இதிலே ஜெயலலிதா அறிக்கை விடுத்தாரா இல்லையா என்பதல்ல பிரச்சினை. ஒட்டு மொத்த தமிழர்களை யும், அவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட் டத்தையும் கிண்டல் செய்த கேலிச் சித்திரம் அரசின் சார்பாக வெளி யிடப்பட்டுள்ள புத்தகத் தில் இடம் பெறக் கூடாது என்பதுதான் அனைவரின் கோரிக்கை யும், வேண்டுகோளு மாகும். எனவே மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தி, இதனைப் பெரிய பிரச்சினையாக வளர்த்து விடாமல், உடனடியாக தலை யிட்டு அந்தக் கேலிச் சித்திரத்தை அகற்றுவ தற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்.

அதுபோலவே தந்தை பெரியாரின் பெயரை யும் குறிப்பிட்டு அவரை அவமதிக்கும் செயல் என்றும் தனது அறிக்கை யில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக் கிறார். தமிழகத்திலே மழை இல்லை என்ப தற்காக திருச்சியில் காவிரியில் அ.தி.மு.க. அமைச்சரின் முன்னி லையில் வேத ஆகம பாராயணங்களோடு மூன்று நாட்களுக்கு முன்பு யாகம் நடத்தி விட்டு, தற்போது பெரி யாரின் பெயரைக் கூறி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைத்தால் திராவிடர்கள் என்ன அவ்வளவு ஏமாளிகளா?

15-6-2012

தமிழ் ஓவியா said...

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

இளைஞர்களே, உங்கள் உள்ளங்களைத் திறந்து இடமளியுங்கள்!


நேற்று உலக குருதிக் கொடை நாள் மட்டுமல்ல, முதியோர்களைக் கொடுமைப்படுத்தலைத் தடுக்கும் நாளும் கூட.

உலகெங்கும் உள்ள பல நாடுகளில் முதியோர்கள் எண்ணிக்கை மிகவும் கூடியிருக்கிறது. இந்தியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளும் பல அய்ரோப்பிய நாடுகளும் கூட இந்தப் பட்டியலில்!

முன்பு இருந்த சராசரி வயது இப்போது கூடியுள்ளது. மருத்துவ வசதிகளின் பெருக்கம், அறிவியல் மின்னணுவியல் துறை வளர்ச்சி க்ஷடி-அநனஉயட என்ற துறையில் பொறியியல் மருத்துவத் தொழில் நுட்பம் மிகவும் உதவிகரமாக உள்ளது. ழநயடவா ஊயசந என்ற ஒரு துறையே மருத்துவப் பொறியியல் துறையில் கூடுதலாக இணைந்து ஓர் அமைதிப் புரட்சிக்கு வித்திட்டு, மனித ஆயுளை மேலும் பல ஆண்டுகள் கூட்டியுள்ளது. இதெல்லாம் மகிழ்ச்சிக்குரிய சாதனைதான்; ஆனால் இதற்கொரு மறுபக்கம் நம் நாட்டிலும் மற்ற சில நாடுகளிலும் உள்ளது பற்றியும் நாம் யோசிக்க வேண்டாமா?

கூட்டுக்குடும்ப முறை நம் நாட்டில் வேகமாகச் சிதைந்து அல்லது தளர்ந்து வரும் இன்றைய கால கட்டத்தில், சொந்த மகன்கள் அல்லது மகள்கள் தங்களது தாய், தந்தையர்களைப் பெரிதும் கொடுமையாக நடத்தும் போக்கு தொத்து நோய் போல, (பன்றிக் காய்ச்சல் - டெங்குக் காய்ச்சல் போல) வேகமாகப் பரவி வருகிறது!

தங்களைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி, கல்வி கொடுத்து, உத்தியோகம் பார்த்து கை நிறையச் சம்பாதிக்கும் நிலைக்குத் தன்னை உருவாக்கிய பெற்றோர்களை - அவர்களது முதுமைக்காலத்தில் மிகவும் மோசமாக, அலட்சியத்துடன், ஏதோ பிச்சைக்காரர்களைப் போல கேவலமாக நடத்தும் கொடுமை - அவமானம் பற்பல குடும்பங்களில் அன்றாட வாழ்க்கையாகி உள்ளது!

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - தாய் சொல் மிக்க வாசகம் இல்லை என்று சொல்லிக் கொடுக்கப்பட்ட தமிழ்நாட்டிலேயே - கைவிடப்பட்ட அல்லது விரட்டப்பட்ட முதுமையடைந்த தாய் தந்தையர்களின் கண்ணீர்க் கதைகள், சோக வரலாறுகள் அன்றாட அவல நிலையாகி வருகின்றன!

எதையும் பயன்படுத்திவிட்டு, பிறகு குப்பையில் எறிதல் போன்று (ருளந யனே வாசடிற) அவர்களை மனிதர்களாகவே நடத்தாத அவரது பிள்ளைகள், பெண் கள் - இரு பாலரும் மிகப் பெரிய சமூக விரோதிகள் அல்லவா? நன்றி கொல்லும் நயவஞ்சக நரிகள் அல்லவா?

இவர்களைக் கிரிமினல் குற்றவாளி களாக்க புதுப்புதுச் சட்டங்கள் நம் நாட்டிலேயே செயல்படத் துவங்கி யுள்ளன.

சில மாதங்களுக்கு முன் தந்தைக்குச் சோறு போட மறுத்த ஒரு மகனை சென்னை அயன்புரம் காவல்துறையினர் அழைத்துக் கண்டித்து, காவல்துறை லாக்அப்பில் உள்ளே தள்ளி, பிறகு நடவடிக்கைக்குப் பயந்தவர் தந்தையைப் பராமரிக்க ஒரு வழியாக ஒப்புக் கொண்ட தால் வெளியே அனுப்பிய செய்தி இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய செய்தி யாகும்!

சட்டத்தாலா மகன் தந்தை உறவும், பாசமும் கடமையும் நிலை நிறுத்தப்படவேண்டும்? இதைவிட நம் சமுதாயத்தின் கீழிறக்க நிலைக்கு வேறு என்ன உதாரணம் தேவை?

கணவன் - மனைவி உறவு கூட விலகிக் கொள்ள உரிமை அளிக்கும் உறவுதான். ஆனால் தாய் தந்தையுடன் மகன், மகள் உறவு, அண்ணன் தம்பி உறவு என்பவைகளெல்லாம் விலகிக் கொள்ளும் உரிமையை சட்டமோ அறநிலையோ அனுமதிப்பதில்லையே! அதுதானே அதன் தனிச் சிறப்பு.

மனித பாசத்தை, அன்பை, காதலை சட்டம் போட்டா ஒரு சமுதாயம் நிலை நிறுத்துவது? இதை விட மிகமிக வெட்கக்கேடு வேறு உண்டா?முதியவர்களிடம் அலட்சியம் காட்டி, புறந்தள்ளி ஒதுக்கப்பட்டவர் களாக்கும் இளையவர்களே, உங்களுக்கு ஏன் ஒன்று மறந்து விடுகிறது?

நாளை நீங்களும் முதியவர்களாகி முதுமையில் தள்ளாடும் நிலை காலத்தின் கட்டாயம் என்பதை ஏனோ வசதியாக மறந்து விடுகிறீர்கள்? அப்போது உங்கள் செல்வர்கள் (பிள்ளை, பெண்கள்) உங்களை இப்படி நடத்திடுவர்; அப்போது உங்கள் மனம் எப்பாடுபடும் என்பதைச் சிந்தித்தீர்களா?

எனவே முதியோர் இல்லங்களைத் தேடாதீர்கள் உங்கள் பெற்றோர் களுக்காக - மூடிய உங்கள் உள்ளங் களைச் சற்றே அகலமாகத் திறந்து அவர்களை மீள் குடியேற்றுங்கள். இது அவர்களுக்காக அல்ல; நீங்கள் மனிதம் உள்ள மனிதர்கள்தான் என்பதை மன்பதைக்குக் காட்ட - மதிப்பும் மரியாதையும் பெறுவதற்காக! புரிகிறதா? 15-6-2012

தமிழ் ஓவியா said...

தமிழர் திருமணத்தில் தேவையில்லாச் சடங்குகள்!திருமணத்தில் நம் நாட்டிற்கும், நம் கொள்கைகளுக்கும், பகுத்தறிவிற்கும், தன்மானத்திற்கும் பிடித்தமில்லாத பல சடங்குகள் அனாவசியமாகப் பார்ப்பனப் புரோகிதருக்கு அரிசியும், பணமும் மற்றப் பொருள்களும் கிடைப்பதற்காகவே செய்யப்படுகின்றன. மணவினையின் தொடக்கத்தில் மணமகன் பரதேசம் போவதும், நிறைகுடப் பூசையும் ஏமாற்று வித்தைகள் ஆகும். பிள்ளையார் பூசை, நவக்கிரக பூசை ஆகியவை தமிழர்க்கு முரணான செயல்கள்.
பகலில் காணமுடியாத அருந்ததி நடத்திரத்தை பார் என்று மணமகன் மணமகளுக்குக் காட்டுவதும், மணமகளின் காலைத்தூக்கி மணமகன் பந்தலில் வைக்கப்பட்டுள்ள அம்மியின் மீது வைப்பது ஆன அறிவற்ற ஆபாச சடங்குகளைச் செய்யக்கூடாது.

எரி ஓம்பல் அவசியம் இல்லாத சடங்கு உலர்ந்த தருப்பை புல்லையும், சமித்து என்று சொல்லப்படும் ஆல்வேல் அத்தி மா முதலிய மரங்களின் சுள்ளிகளையும் கொளுத்தி அதில் நம்நாட்டு மக்களின் பெரும்பாலோர் சுவைத்தே அறியாத அருமையான நெய்யைக் கொட்டி புகையை உண்டாக்கித் திருமணத்தைக் காண வந்திருப்பவர்களின் கண்களுக்கு தொந்தரவுக் கொடுப்பதுதான் ஓமம் வளர்த்தலின் பயன் இம்மாதிரி அக்கினியை போற்றுவதும் பூசிப்பதும் பனியும் குளிரும் அதிகமாகயுள்ள மத்திய ஆசியாவில் உடைகள் இன்றி வெற்றுடம்புடன் வாழ்ந்திருந்த ஆரியர்கட்குத்தான் தகும். உஷ்ண நாடான இந்தியாவில் ஒரே இடத்தில் தங்கி வசித்து வந்த தமிழர்கட்கு அக்கினியை ஒரு தெய்வமாகக் கொள்வது அவசியமில்லை.

(ஆதாரம்: பேராசிரியர் அ.கு.பாலசுந்தரனார் எழுதிய தமிழர் திருமண முறைகள் என்னும் நூலில் பக்கம் 3, 4, 14, 15, 23) தொகுப்பு: வை.மு. கும்பலிங்கன், குடந்தை

தமிழ் ஓவியா said...

கோவிலுக்குள் மூலஸ்தானம் தவிர மற்ற எல்லா இடங்களிலும் இந்து மதத்தை நம்பாதவர்களும், அதற்கு எதிரிடையாயுள்ளவர்களும் சுற்றித் திரிய இடங்கொடுத்துவிட்டு, இந்துமதத்தைக் கொண்டாடுவதோடு அல்லாமல், இந்து மதத்தில் பிறந்து அதையே நம்பி, அதிலேயே இருந்து அதற்காகவே இறந்து கொண்டு இருக்கிற இந்து மக்கள் கோவிலுக்குள் நுழைய கூடாது என்பது பொல்லாத தலைவிதியாயிருக்கிறது. என்னுடைய அபிப்பிராயத்தில் இது தீண்டாமையை விடக் கேவலமான தாயிருக்கிறது.- பி.டி.ராஜன் (9.6.1928)(லால்குடி தாலுகா முதலாவது சுயமரியாதை மாநாட்டின் தலைமை உரையில்)

தமிழ் ஓவியா said...

நாத்திகம் பற்றி வினோபா!வினோபாவே அவர்கள் 22.8.1956 காலை 10 மணிக்கு பவானி கூடுதுறையிலுள்ள திருமுறைக்கழகக் கட்டடத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்ட கருத்துகளை இங்கே தருகிறோம்:-
நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்ல, எல்லாக் கட்சியினரும் எனக்கு வேண்டும். நாஸ்திகன்தான் மக்களுக்கு உண்மையான சேவை செய்பவன். ஆத்திகனால் சேவை செய்ய முடியாது. உதாரணமாக, ஒருவன் பீடி குடிக்கிறானென்றால், அவனுக்கு பீடி கொடுத்துக் கொண்டிருப்பது சேவை செய்வதாகாது. அவனுடைய மனத்தை மாற்றி பீடி குடிப்பதை நிறுத்துவதுதான் உண்மையான சேவையாகும். எந்த அரசாங்கமும் நாத்திகத் தன்மையில் இருந்தால்தான் மக்களுடைய தேவைகளை அனுசரித்து சேவை செய்ய முடியும்.

தமிழ் ஓவியா said...

கிருஸ்தவர்கள் பாதரட்சை அணியலாமா?(அப்போஸ்தலர்: 7:33)ல் பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாத ரட்சை களை கழற்றிப் போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது. என்றும் (அப்போஸ்தலர்: 12:7-9)ல் தூதன் பேதுருவை எழுப்பி; பேதுருவை நோக்கி: உன் அறையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக் கொள் என்றான். அந்தப் படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று... என்றும் இருக்கிறது. இதிலிருந்து பேதுரு இயேசுவின் கட்டளையை நம்பவில்லை என்று தானே தெரியவருகிறது? ஒரு வானொலி நிலையத்தின் ஒலிபரப்பில் கிருஸ்தவர்கள் கோவிலுக்குள்ளும் செருப்பு அணிந்து செல்கின்றனரே? என்ற கேள்வி எழுந்தது. இதிலிருந்து இயேசுவை கிருஸ்தவர்கள் கூட நம்பவில்லை என்று தெரியவில்லை?

(ஆதாரம்: இந்திய வேதாகமச் சங்கத்தாரால் 1978ல் வெளியிடப்பட்ட புதிய ஏற்பாடு)

விழித்துக்கொள் said...

thiru thamizh ooviya avargalukku thangaludaiya kolgaigal makkalai kuzhappuvadhaaga ulladhe thavira manidhargalai nervazhipaduththa alla