தலைவர் அவர்கள் தனது உரையில் எனக்குப் பின் எனது புத்தகங்களே வழிகாட்டும் என்று குறிப்பிட்டார்கள். இந்த தொண்டும், பிரச்சாரமும் அறிவை மட்டும் சேர்ந்ததல்ல, உணர்ச்சியையும் சேர்ந்தது. அந்தப் பக்குவம் உள்ள ஒருவன் இருந்தால், அவன் அடுத்து தலைமையேற்க வருவான். அதுவரை யார் என்றால், இந்தப் புத்தகங்கள்தான் வேறு யாரும் வரக்கூடாது என்பதல்ல என் கருத்து. அந்தப் பக்குவம் உள்ளவனிருந்தால் அவன் வருவான்!
முகமது நபியைப் பார்த்து உங்களுக்குப் பின் யார்? என்று கேட்டதற்கு, அவர் எனக்குப் பின் வேறு யாருமில்லை என்று கூறி விட்டார். நான் அப்படிக் கூற விரும்பவில்லை. அறிவும், உணர்ச்சியும், துணிவும் உள்ள யார் வேண்டுமானாலும் வரலாம்.
----------------------------------------------"விடுதலை" 22.1.1965
அறிவாராய்ச்சி மனிதனை உயர்விக்கும்
மணமக்களுக்கு வாழ்த்தும், அறிவுரையும் கூறு முறையில் தந்தை பெரியார் அவர்கள் கூறியதாவது:-
நம்மிடையே நடைபெற்று வரும் கல்யாணங்கள் மூலம் பெண் அடிமையை நிலைத்திருக்கும்படி செய்வது ஜாதியை நிலைக்கச் செய்வது, மூட நம்பிக்கையை நிலைக்கச் செய்வது ஆகிய மூன்றுதான் ஆகும்.
இந்த மூன்றையும் ஒழிக்கின்றது தான் எங்கள் கொள்கையாகும். கடவுள், மதம், சாஸ்திரம் முதலியவற்றில் மக்கள் தங்கள் சொந்தப் புத்தியைப் பயன்படுத்துவது தடைப்பட்டு விட் டது. அதனால் தான் மனிதன் இந்த அவல நிலையில் இருக்கின்றான். இதனை மாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் வேலை.
மனிதன் அறிவை எவ்வளவுக்கு பயன்படுத்தி ஆராய்கின்றானோ, அவ்வளவுக்கு அவ்வளவு உன்னத நிலையை அடை கின்றான்.
மனிதன் ஆகாய விமானத்தில் சுமார் 150 மைல்கள் உயரத்துக்கு மேல் பறந்து விமானத்தை விட்டு வெளியே வந்து காற்றில்லாத விண்வெளியில் நீச்சல் அடிக்கக்கூடிய நிலை மையினை நாம் பத்திரிகையின் வாயிலாகக் காண்கின்றோம்.
மனிதன் பிறந்த நாள் முதல் கொண்டு சாகின்ற வரையில் உலகில் மாணாக்கனாகவே இருக்கின்றான். அவன் கற்றுக் கொள்ள வேண்டியது அவ் வளவு இருக்கின்றது.
மனிதன் பற்றற்ற நிலையிலிருந்து எதையும் சிந்திக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். மேலும் பேசுகை யில், சீர்திருத்தத் திருமணம் மூலம் பெண்ணுரிமை நிலை நாட்டப்படுவது பற்றியும் நமது இன இழிவு மூட நம்பிக்கையும் ஒழிக்கப்படுவது பற்றியும், மணமக்கள் வாழ்க்கையில் பகுத்தறிவுடனும், சிக்கனத்தைக் கடைப்பிடிக்கக் கூடியவராகவும் வாழ வேண்டிய அவசியம் பற்றியும் தெளிவுப் படுத்திப் பேசினார்.
--------------------------தந்தை பெரியார் -"விடுதலை" 22.6.1965.
5 comments:
மதுரை ஆதீனத்தில் ரஞ்சிதா, வைஷ்ணவி அறுவறுக்கத்தக்க நடனம்-கோர்ட்டில் வழக்கு
மதுரை: மதுரை ஆதீன மடத்தில் நடிகை ரஞ்சிதா, வைஷ்ணவி மற்றும் நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் அறுவறுக்கத்தக்க வகையில் ஆபாசன நடனம் ஆடியதாக கூறி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சோலை கண்ணன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனு:
நான் மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டுள்ளதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறேன். கடந்த மாதம் 12-ந்தேதி மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் என்னை மடத்திற்கு அழைத்தார். அங்கு அருணகிரிநாதருடன் நித்தியானந்தாவும் இருந்தார்.
அப்போது அருணகிரி நாதர் என்னிடம் மதுரை ஆதீன மடத்திற்கென்று தனி புகழ் உள்ளது. பிரச்சினைகள் செய்ய வேண்டாம். நித்தியானந்தா மிகவும் ஒழுக்கமானவர். புனிதமானவர் என்று கூறினார்.
அப்போது அவரிடம், நான் மடத்திற்கு எதிரானவன் அல்ல. ஆதீன மரபுபடி நித்தியானந்தா மொட்டையடித்து உங்களுக்கு கீழ் பணி செய்தால் அதை நான் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன் என்று கூறினேன். பின்னர் ஆதீன மடத்தின் மாடியில் நடைபெறும் பஜனையில் கலந்து கொள்ள என்னை அழைத்தனர்.
பின்னர் இரவு 7 மணிக்கு பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இதில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா, வைஷ்ணவி மற்றும் சீடர்கள் கலந்து கொண்டனர்.
அந்த சமயத்தில் என்னிடம் அங்கிருந்த சீடர்கள் புனித நீர் என்று கூறி ஒரு டம்ளரில் தண்ணீர் கொடுத்தனர். அதை குடித்த எனக்கு சிறிது நேரத்தில் மயக்கம் வந்ததுபோல உணர்வு ஏற்பட்டது. அந்த தண்ணீரை குடித்த சீடர்கள் உள்பட அனைவரும் மயக்க நிலையில் இருந்தனர்.
அந்த நேரத்தில் புலித்தோல் விரிக்கப்பட்டது. அதில் யானை தந்தம், மான் கொம்புகள் பரப்பப்பட்டது. அப்போது நித்தியானந்தாவின் பாடல்கள் ஒலிபரப்பானது. நடிகை ரஞ்சிதா மயக்க நிலையில் நித்தியானந்தா அருகிலேயே நடனமாடி கொண்டிருந்தார். வைஷ்ணவியும், பெண் சீடர்களும் அருவறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டனர்.
மதுரை ஆதீன மடத்தை களங்கப்படுத்தும் முயற்சி நடக்கிறது. ஆபாச நடனங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என நான் விளக்குத்தூண் போலீசில் கடந்த மாதம் 15-ந்தேதி புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி செல்வம், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக போலீஸ் டி.ஜி.பி., மதுரை போலீஸ் கமிஷனர், விளக்குத்தூண் இன்ஸ்பெக்டர், நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா, வைஷ்ணவி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு ஜூன் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-----------------http://tamil.oneindia.in/news/2012/06/11/tamilnadu-obscene-dance-madurai-aadheenam-155487.html
நித்யானந்தா ஆசிரமத்தில் காண்டம், கஞ்சா, மது பாட்டில்கள்!
பெங்களூரு, ஜூன் 15- கர்நாடக மாநிலம் பிடதி நித்யானந்தா ஆஸ் ரமத்தில், இரண்டாவது நாளாக, காவல்துறை யினர் சோதனை மேற் கொண்டனர். ஆஸ்ர மத்தில், பெண் துறவி களை வைத்து, ஆபாச படம் எடுத்ததாக சமூக சேவகர் ஒருவர், காவல் துறையிடம் ஆதாரங் கள் கொடுத்து பர பரப்பை ஏற்படுத்தினார்.
பிடதி நித்யானந்தா ஆசிரமத்தில், சட்ட விரோத செயல்கள் நடப்பதாக புகார் வந் ததையடுத்து, கர்நாடகா முதல்வர் சதானந்த கவுடா, பிடதி ஆஸ்ர மத்தில் சோதனையிட்டு, "சீல்' வைக்கவும், நித் யானந்தா பிணையை ரத்து செய்து, கைது செய்யவும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உத் தரவிட்டார். இதை யடுத்து, நேற்று முன் தினம் மாலையில், பெங்களூரு - ராம்நகர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் அர்ச்சனா தலைமையில், பிடதி ஆசிரமத்துக்குள் சோதனை யிட காவல்துறையினர் சென்றனர். நான்கு மணி நேரம் சோதனை நடத் தப்பட்டது.
இரண்டாவது நாளாக, 13ஆம் தேதி காலை, 9 மணிக்கு சோதனை துவங்கியது. அதிக நிலப்பரப்பில் ஆசிரமம் அமைந்துள்ள தால் சோதனை நடத்து வதில் அதிகாரிகள் திணறினர். ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வீடியோ பதிவு செய்யப் பட்ட பின்னர், அந்த அறை பூட்டப்படுகிறது. 12ஆம் தேதி ஏழு அறை களில் சோதனையிடப் பட்டு, பூட்டு போடப் பட்டது.
மதுபான பாட்டில், ஆணுறை: சோதனை நடப்பதாக வந்த தகவலையடுத்து, ஆசிரமத்திலிருந்து சில பொருட்கள் வெளியே வீசப்பட்டுள்ளன. நித் யானந்தா போட்டோக் கள், சி.டி.,க்கள், பெண் கள் படத்துடன் குறுந் தகடுகள், தமிழ் வார இதழ்கள் கிடந்தன. சில இடங்களில் கஞ்சா, பீடி, மாத்திரைகள், காலி மதுபான பாட்டில்கள், ஆணுறை ஆகியவையும் கிடந்தன. நேற்று காலை, ராம்நகரை சேர்ந்த சமூக சேவகர் நவீன், மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகார் மனுவில், நித் யானந்தா ஆசிரமத்தில் ஆபாசப் படம் எடுக் கப்பட்டது என்று குறிப் பிட்டிருந்தார். இதற் கான சில சி.டி.,க்கள், போட்டோக்கள், ஆதா ரங்களையும் கொடுத் துள்ளார். இதையடுத்து, அவருடன் காவல்துறை யினர் பிடதி ஆசிரமத் துக்குள் சென்றனர். பிடதி ஆசிரமம் அமைந் துள்ள, 42 ஏக்கர் நிலம், விவசாய நிலம். இந்த நிலத்தை ஆசிரமம் அமைக்க குறைந்த விலையில் வாங்கி, சட்ட விரோத செயலில் நித் யானந்தா ஈடுபடுகிறார். அடுக்கு மாடி கட்ட டங்கள், "காட்டேஜ்' சொகுசு பங்களா கட்டி யுள்ளார். எனவே, நிலங் களை மீட்டு திரும்ப தர வேண்டும் என, தாசப் பன தொட்டி கிராம மக்கள், போராட்டம் நடத்தினர். இப் போராட்டத்தையடுத்து, விவசாய நிலம் குறித்து சர்வே எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கூறினார். ஆசிரமத்தில், 20 முதல் 30 கண்டெய்னர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. என்ன விஷயம் என ஆஸ்ரமத்திலிருந்தவர் களிடம் காவல்துறையி னர் கேட்டதற்கு, சாமி விக்ரகங்கள் உள்ளது என்றனர். கண்டெய்னர் களை சோதனையிடும் போது, பல மர்மம் வெளி யாகும் என தெரிகிறது.
விரைவில் "சீல்': ராஜஸ்தானிலிருந்து வரவழைக்கப்பட்ட, 40-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை என்ன செய் வது என்பது பற்றி அதி காரிகள் ஆலோசனை யில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரமத்தில் கூலி வேலை செய்ய வந்த ராய்ச்சூரை சேர்ந்த, 25 பேர், காலி செய்து சென்றனர். ஆசிரமத்தில், 120 சீடர்கள் உள்ளனர். இதில், 50 பேர் வெளி நாட்டவர். அவர்களை என்ன செய்வது என்பது பற்றியும் யோசித்து வரு கின்றனர். ஆசிரமத்துக்கு சீல் வைக்க, அதிகாரிகள் தாமதம் செய்கின்றனர் என, முதல்வர் சதானந்தா கவுடாவை சந்தித்து, கன்னட அமைப்பான நவ நிர்மாண் சேனை யினர் புகார் மனு அளித் தனர். "விரைவில் சீல் வைக் கப்படும்' என, முதல்வர் உறுதியளித்தார்.
அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவு: "நித் யானந்தா ஆசிரம விவகாரம் குறித்து, அரசு விளக்கமளிக்க வேண் டும்' என, கர்நாடகா உயர்நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது. முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரிய, நித்யானந்தா மனு மீதான விசாரணை, வரும் 15ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. நித்யானந்தா கைது: கடந்த ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த நித்தியானந்தா நேற்று மதியம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஆனால், அவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் அறிவித்தனர்.14-6-2012
வாயால் சிரிக்க முடியவில்லையே! கடவுள் ஜகந்நாதர் படுத்த படுக்கையாகக் கிடக்கிறாராம் 15 நாட்கள் ஓய்வு தேவையாம்!
லக்னோ, ஜூன் 14: வாரணாசி யில் உள்ள ஜகன்னாத ஆண்டவ னுக்கு உடல் நிலை சரியில்லையாம்! அவர் 15 நாட்கள் படுக்கையிலேயே ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டு மாம்!
ஜேஷ்ட பூர்ணிமா அன்று கட வுளைக் குளிப்பாட்டியதால் அவ ருக்கு உடல் நல மில்லாமல் போய் விட்டதாம். கடுமையான சளி மற்றும் இருமலால் ஆண்டவன் மிகவும் கஷ்டப்படுகிறாராம்!
வாரணாசியிலுள்ள அசி பகுதி யில் உள்ள கோவில் கதவுகள் அவரை தரிசிக்க முடியாதபடி அடைக் கப்பட்டுள்ளன. ஆண்டவனின் தனி மருத்துவர் அவருக்கு வைத்தியம் செய்து வருகிறாராம்! அவரை குணப்படுத்த மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கதா என்னும் கஷாயம் தினமும் இரண்டு முறை அவருக்குக் கொடுக்கப்படுகிறதாம்!
இந்தக் கதையைக் கேட்டு நீங்கள் வியப்படையலாம். வாரணாசி ஜகன் னாத ஆண்டவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவது வழக்கமாக நடைபெறும் ஒரு சம்பிரதாய நிகழ் வாம். கடவுளையும், மனி தனாகப் பாவிக்கும் பக்தர்கள் ஆண்டு தோறும் இந்த நிகழ்ச்சியைக் கொண் டாடுகிறார்களாம்!
ஆண்டுதோறும் முழு நிலவு நாள் அன்று ஜகன்னாத ஆண்டவனும், அவரது சகோதரன் பலராம் மற்றும் சுபத்ரா ஆகியோரும் குளிப்பாட்டப் பட்டதற்கு அடுத்த நாள் கடவுளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் விடுமாம்! பக்தர்கள், ஆண்டவனுக்கு அளவுக்கு அதிகமாக தண்ணீர் கொடுத்துவிடுவதால் இந்த உடல் நலக்கோளாறு ஏற்படுமாம்!
33 வயது பண்டிட் சிறீராம் சர்மா கடவுளின் வைத்தியராக பல ஆண்டு களாக நீடித்து வருகிறாராம்!
தன்னையே நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள் பக்தர்களை காப்பாற்றப் போகிறாராம்! ஹி.... ஹி....14-6-2012
வீட்டுக்கு வீடு விடுதலை எனும் இயக்கத்தைத் தொடங்குவீர்! தமிழர் தலைவர், விடுதலை ஆசிரியர் வேண்டுகோள்
தமிழர்களின் இல்லம் என்பதற்கு அறிவிப்புப் பலகையான விடுதலையை வீட்டுக்கு வீடு கொண்டு சேர்க்கும் இயக்கத்தைத் தொடங் குவீர் என்று திராவிடர் கழகத் தலைவர் - விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அருமைக் கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே! கடந்த ஆண்டு தந்தை பெரியார் நினைவு நாளன்று (24.12.2011) 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களைத் திரட்டி சாதனை படைத்து என்னிடம் அளித்து மகிழ்ந்தீர்கள்.
இதைவிடவா சிறந்த பரிசு?
இதைவிட சிறந்த பரிசு எனக்கு வேறொன்றும் இருக்க முடியாது என்பதை அறிந்தே அதனைச் சாதித்து முடித்தீர்கள்.
விடுதலை புதிய புதிய வாசகர்களைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. புதிதாக விடுதலையைப் படித்தவர்கள் எல்லாம் மனந்திறந்து பாராட்டுகிறார்கள்.
பல்சுவைப் பலகணி!
பல்வேறு தகவல்களையும் திரட்டி பல்சுவைத் தோப்பாக பலகணியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. வேறு ஏடுகளில் வெளி வராத தகவல்களும் திரட்டித் தரப் படுகின்றன.
வாழ்வியல் சிந்தனைகள், செய்திச் சிதறல்கள், வரலாற்றுச் சுவடுகள், பகுத்தறிவரங்கம், இளைஞர் அரங்கம், மகளிர் அரங்கம், அறிவியல் அரங்கம், மருத்துவத் தகவல்கள் என்று அன்றாடம் புதுப்புது மலராக மக்கள் மத்தியில் சென்று கொண்டிருக்கிறது.
ஆறு மாத சந்தாக்கள் முடிவுறும் தறுவாயில்
நீங்கள் திரட்டித் தந்த ஆறு மாத சந்தாக்கள் இம்மாத இறுதியோடு முடிந்துவிடக் கூடிய நிலை. எந்தக் காரணத்தைக் கொண்டும் சந்தாக்களின் எண்ணிக் கையில் வீழ்ச்சி ஏற்பட்டு விடக் கூடாது. நடப்பில் இருந்து வரும் சந்தாதாரர்களை அணுகி புதுப்பிக்கும் பணிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். புதிய புதிய சந்தாதாரர்களையும் கொண்டு வாருங்கள். கூடுமான வரை ஆண்டு சந்தா, ஆயுள் சந்தா என்று திரட்டினால் நல்லது.
விடுதலையின் தேவை!
வேறு எந்த காலத்திலும் தேவைப்பட்டதைவிட இந்தக் காலத்தில் விடுதலையின் பணி மிக மிக அதிகமாகத் தேவைப்படுகிறது.
புதிய புதிய சவால்கள் கிளம்புகின்றன. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சில ஆரிய அடிமைகள் கிளம்பியுள்ளனர்.
அவர்களுக்கு ஆரிய ஊடகங்கள் விளம்பர சடகோபத்தைச் சாத்துகின்றன. இதன் பின்னணியில் ஆழமான பார்ப்பன சதியும் - நிதியும் உண்டு.
கூழாங்கற்கள் எம்மாத்திரம்?
இமயமலைகளையே எத்தி எறிந்த நமக்கு இந்தக் கூழாங்கற்கள் எம்மாத்திரம்? அதே நேரத்தில் திசை திருப்பும் சூழ்ச்சிக்கு இளைஞர்களை இரையாக்கி விடக் கூடாதல்லவா!
ஜாதிப் பாம்பு படம் எடுத்துப் பார்க்கிறது. சமூக நீதியில் ஈட்டப்பட வேண்டிய உரிமைகள் பல உண்டு. தனியார்த்துறைகளில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தே தீர வேண்டிய கட்டாயமும் உண்டு! பார்ப்பன ஊடகங்களால் விசிறி விடப்படும் மூடநம்பிக்கைகள் ஒருபுறம்; சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் மகளிருக் கான இடஒதுக்கீடும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
கல்வி - மீண்டும் மாநிலப் பட்டியலில்
கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்குத் தூக்கிச் சென்றதன் தீய விளைவை மாநிலங்கள் தூக்கிச் சுமக்கின்றன; மீண்டும் கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வந்தே தீர வேண்டிய அவசியப் பணி நம் முன்னே!
அழிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள்போல எஞ்சியிருக்கும் தமிழர்களின் வாழ்வுரிமைக் காகக் களங்கள் அமைக்கப்பட வேண்டும் - தனியீழத்தை நோக்கிப் பயணிக்கச் செய்ய வேண்டும். டெசோ புதுப்பிக்கப்பட்டதன் நோக்கமும் அதுதான்! டெசோ மாநாடும் விழுப்புரத்தில் ஆகஸ்டு 5-இல் ஒரு திருப்பமாக அமைய வேண்டும்.
சீரழிவு நுகர்வுக் கலாச்சாரம்!
இளைஞர்களைச் சீரழிக்கும் நுகர்வுக் கலாச்சாரம் இறக்கை கட்டிப் பறக்கிறது உலகமயம் மக்களை போதைமயமாக்குகிறது.
எல்லாவற்றிற்கும் நிவாரணம் என்பது மக்களிடத்தே விதைக்கப்படும் விழிப்புணர்வைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
வீட்டுக்கு வீடு விடுதலை
இத்திசையில் விடுதலையின் பணி மகத்தானது. வீட்டுக்குவீடு விடுதலையைக் கொண்டு சேர்க்கும் பணியில் நாம் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும். ஓர் இயக்கமாவே இதனை நடத்தியே தீர வேண்டும்.
விடுதலையால் பலன் பெற்றிராத ஒரே ஒரு தமிழன் வீடு உண்டா? ஒற்றைத் தமிழன் உண்டா? இந்தத் தைரியத்தில் ஒவ்வொரு வீட்டின் கதவுகளையும் தட்டுவீர்!
தமிழன் இல்லம் என்பதற்கு அறிவிப்புப் பலகை விடுதலை என்றாரே தவத்திரு குன்றக்குடி அடிகளார் - அதை மனதில் வைத்துச் செயல்படுவீர்!
தந்தை பெரியார் பணி முடிப்போம்! என்று நாம் சொல்லுவது - விடுதலையின் பலத்தையும், நம் உழைப் பையும், தமிழர்களின் ஆதரவையும் நம்பித்தானே! அந்த வகையில் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர்களின் சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக நடத்திக் கொடுப்பீர்!
நம்மால் முடியாதது வேறு யாரால் முடியும்?
நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது - என்பது வெறும் வார்த்தைகளின் அணிவகுப்பல்ல - வாகை முடிக்கும் நமது உண்மையான செயல் திறனின் அறத்துப்பால் பொருள்பால் அது!
அதனை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாக இதனைக் கருதுவீர்! செயல்படுவீர்! செயல்படுவீர்!
இந்த வெற்றியில்தான் எம் ஆயுளில் நீட்சி! நன்றி!
மிக்க எதிர்பார்ப்புடன்
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம் 14-6-2012
Post a Comment