Search This Blog

1.6.12

சோ எழுதும் பகுதியை எரித்து சாம்பலைப் பெண்கள் துக்ளக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டாமா?


சண்டைக்காரர்களா பெண்கள்?


வேலூரில் நடைபெற்ற புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டின் ஒவ்வொரு தீர்மானமும் தேவைப்படக் கூடியவை - அவசியமானவை! ஒவ்வொரு தீர்மானம் குறித்து விளக்கமாக - விரிவாக எழுதலாம். அந்த அளவுக்கு அவை முக்கியத்துவம் வாய்ந்தவை!

பெண்களை ஆபாசமாகச் சித்தரிப்பது, நுகர்வுப் பொருளாக, விளம்பரப் பொருளாகப் பயன்படுத்துவது, பெண்கள் என்றால் மற்றவர்களால் அடி - உதைப் படவேண்டியவர்கள், வில்லிகள் என்ற முறையில் ஊடகங்கள், சின்னத்திரை பெரிய திரைகளில் சித்தரிப்பது குறித்து மாநாட்டில் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெண்களை இழிவுப்படுத்தும் இந்தப் போக்கினை எதிர்த்து நேரடியாகப் போராட்டங்களில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மதங்கள் பொதுவாக பெண்களை ஒரு ஜீவனாகக் கூடக் கருதுவது கிடையாது என்றாலும் இந்துமதம் என்பது பெண்களை இழிப்பிறவிகளாகக் கருதுவது அதன் குருதியோட்டமாகும்.

அதுவே பெரும்பாலும் சமுதாய ஓட்டமாக அமைந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. கல்வி வளர்ந்த பிறகும் பெண்களுக்குச் சொத்துரிமை கிடைத்த நிலையிலும், பெண்கள் உரிமைகளுக்கான பல்வேறு சட்டங்கள் அதிகாரப் பூர்வமாகக் கிடைத்து விட்ட பிறகும்கூட, பெண்களை ஊடகங்கள் கேவல மாகச் சித்தரிப்பதன் பொருள் என்ன?

ஆண் ஆதிக்கமும் அதன் அகம்பாவமும் மனம் மாறாப் பண்பும்தான் இந்த நிலைக்குக் காரணங் களாகும்.

உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் பெண்கள் நுகர்வுப் பொருளாக மாற்றப்படுகிறார்கள்; அவர்களது உடலும் அழகும் காட்சிப் பொருளாக ஆக்கப்பட்டு, விளம்பரக் கருவிகளில் முதல் இடத்தில் வைக்கப்படுகிறார்கள்.

அழகுப் போட்டி நடத்தப்படுவதும் அந்த அடிப் படையில் தான்! பன்னாட்டு தொழில் முதலைகள்தான் இதன் பின்னணியிலும் இருக்கிறார்கள். ஒரு பெண்ணை அழகுப் போட்டிக்குத் தயாரிப்பதற்காக பெண்ணின் உறுப்புகள் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றன. தாங்கள் கணிக்கும் ஒரு பெண்ணை அப்படியெல்லாம் தயாரித்து உலக அழகியாகத் தேர்வு செய்யவும் வைத்து அந்த அழகை தன் உற்பத்திப் பொருளுக்கான விளம்பர சாதனமாக மாற்றும் கயமையை என் சொல்வது!

படித்த பெண்கள்கூட இதுபற்றி எல்லாம் சிந்திக்காததுதான் வேதனை! வெறும் பகட்டும், நாகரிகமும்தான் உரிமை என்று நினைப்பது வெட்கக் கேடு அல்லவா!

ஒரு ஜாதியை இழிவுப்படுத்தும் ஒரு வசனம் ஒரு திரைப்படத்தில் இடம் பெற்றால் ஒட்டு மொத்த அந்த ஜாதியினரே கிளர்ந்து திரண்டு விடுகிறார்கள்.

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதியினரான பெண்களை இழிவாகவும், வியாபாரப் பொருளாகவும் சித்தரிக்கிறார்களே - சின்னத் திரைகளிலும், பெரிய திரைகளிலும் ஊடகங்களிலும்; ஏன் கோபப் புயல் வெடித்துக் கிளம்பவில்லை பெண்கள் மத்தியில்? பெண்களுக்கு ஏன் போராடும் பெருங்குணம் ஏற்படுவதில்லை? ஒவ்வொரு வாரமும் துக்ளக் இதழில் பார்ப்பன சோ ராமசாமி பெண்களை எப்படியெல்லாம் மட்டந் தட்டியும், இழிவுப்படுத்தியும் எழுதி வருகிறார்.

இந்த வார இதழில்கூட (6.6.2012) ஒரு கேள்வி பதில் இதோ!

கேள்வி: சீனாவில் நடந்த உலகக் குத்துச் சண்டை போட்டிகளில் நமது இந்தியப் பெண்கள் மந்தாகினி, நீந்துசாசல் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள் ளார்களே! இப்பொழுது என்ன சொல்கிறீர்கள்?

பதில்: இரண்டு பெண் மணிகள் எந்தப் போட்டியில் வெற்றி பெற்றார்கள்? குத்துச் சண்டை போட்டியிலா? சரி, சரி, பெண்கள் சண்டைக்காரர்கள் என்று ஒப்புக் கொள்ளுமாறு என்னை வற்புறுத்துகிறீர்கள். உங்கள் மனம் நோவதில் எனக்கென்ன லாபம்? ஒப்புக் கொள்கிறேன் என்று பதில் எழுதியுள்ளார்.

கேள்விக்கும் - பதிலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா! இப்படிப்பட்டவர்கள்தான் அவாள் வட்டாரத்தில் அறிவு ஜீவிகள்! அந்தக் கேள்விக்குள் போக மனம் வருவதில்லை; மாறாக பெண்களைப் பற்றி தம் மனதில் தேக்கி வைத்துள்ள விஷத்தைக் கக்குவதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

இதுபோல எழுதும் பகுதியையாவது எரித்து அதன் சாம்பலைப் பெண்கள் துக்ளக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டாமா?

சோமீது கூட குற்றம் இல்லை. அவர் உடம்பில் ஓடும் பார்ப்பன இந்துத்துவா குருதி இப்படியெல்லாம் எழுத வைக்கிறது. பெண்களே கிளர்ந்து எழுக!

------------------------"விடுதலை” தலையங்கம் 1-6-2012

17 comments:

தமிழ் ஓவியா said...

குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஏ.பி.ஜே.அப்துல் கலாமை நிறுத்த வேண்டும்



திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

இந்திய நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் பற்றிய விவாதம் அரசியல் களத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் உயர்திரு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களையே இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அடுத்த குடியரசுத் தலைவர் வேட்பாளரை எதிர் அணியாக இருக்கும் ஒரு தரப்பு அறிவித்துவிட்ட நிலையில் (முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா) ஆளும் கூட்டணியாகிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) இன்னும் தனது வேட்பாளரை ஆய்வு செய்து கொண்டிருக்கும் நிலையே தொடர்கிறது.

பா.ஜ.க. வின் உட்கட்சி சண்டையும், பூசல்களும் கோஷ்டி கானங்களும் அது தனது செல்வாக்கினை கொஞ்சம் கொஞ்சமாக பற்பல மாநிலங்களிலும் இழந்து வருகின்ற நிலையே நீடிக்கிறது.

அயக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக பிரபல விஞ்ஞானியும், இளைஞர்களின் உள்ளங்களையெல்லாம் கொள்ளை கொண்ட பொறியாளர், மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களையே தமது வேட்பாளராக அறிவிக்கலாமே. அதனை பல எதிர்க் கட்சி வட்டாரங்களும் கூடி வரவேற்று ஆதரவு தருவதற்கு முன்வரக்கூடும்.



தமிழ்நாட்டுக்காரருக்கு முன்பு வட மாநிலத்தவர் ஒரு பெண்மணி - அம்மையார் பதவி வாய்ப்பைப் பெற்றார். தமிழ்நாட்டின் தி.மு.க.வின் - பங்கு அதன் தலைவர் கலைஞர் அவர்களின் செயலாக்கம் மிகவும் குறிப்பிடத் தக்கதாக அமைந்தது.

பிரச்சினை ஏதும் இல்லாமல் அவரது பதவிக் காலம் முடிவடையும் நிலையில், இப்போது தேவைப்படுவது ஒரு பொதுநிலையில் பல கட்சியினராலும், கட்சிக்கு அப்பாற்பட்டவராகவும் இருப்பதோடு, மனசாட்சியை அடகு வைத்துவிடாதவராக, ஓர்ந்து கண்ணோடாது, தேர்ந்து முடிவு செய்யும் சமன் செய்து சீர்தூக்கும் துலாக்கோல் போன்றவரே முழுத் தகுதியானவர் ஆவார்!

அவருடைய கனிந்த அனுபவ அடிப்படையில் உலகத்தின் பார்வையை வெகுவாக ஈர்த்த சர்வதேசப் புகழ் பெற்றவர், ஒரு சிறுபான்மைச் சமூகத்தவரானவர்; அனைத்துத் தரப்புடனும் அன்போடு, பண்போடு பழகும் பான்மையர் மேதகு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் ஆவார்கள்!

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய நாடான நமது நாட்டின் மக்களால் விரும்பப் படுபவர் என்ற முத்திரை பெற்றவர். ஆளும் கூட்டணியின் பொது வேட்பாளராகவே அறிவித்தால், வெற்றியும் எளிது; விவேகமான பொதுமை நிறைந்த முடிவாக அமையவும் கூடும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியும் அதன் தலைமையும், தோழமைக் கட்சிகளும் இவரை வேட்பாளராக்க முயற்சித்தல் சிறப்பானதாக அமையும்.

வேண்டுகோளாக இதனை விடுக்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகm 1-6-2012

தமிழ் ஓவியா said...

5 மணித் துளிகளில் அனைத்து முக்கியச் செய்திகள்
எழுத்துரு அளவு
வெள்ளி, 01 ஜூன் 2012 14:57
பிரதமர் மன்மோகன்சிங் மீது நிலக்கரி வாங்கிய ஊழல் பற்றிய குற்றச்சாட்டு

பல லட்சம் கோடி ரூபாய்கள் இழப்பு இதனால் ஏற்பட்டுள்ளது என்று மத்திய தணிக்கைத் துறை அதிகாரி (CAG) ஆடிட் (தணிக்கை) அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் பெரிதாக எடுத்துக் கொண்டு குற்றச்சாட்டுக் கூறி விசாரணைக் கமிஷன் வேண்டுமென்று கூறு கின்றனர்.

கோல் இண்டியா என்ற அரசு நிறுவனத்தின் மூலம் வாங் காமல், தனியார் நிறுவனத்தின் மூலம் வாங்கினார் என்பதும், நிலக்கரித் துறை அமைச்சு பொறுப்பு முன்பு பிரதமர் வசம் இருந்தபோது இது நடந்தது என்று ம் புகார் கூறப்பட்டுள்ளது.
அதை பிரதமர் மன்மோகன் சிங் மறுத்தது அதை நிரூபித்தால் பொது வாழ்க்கையை விட்டே தாம் விலகிவிடுவதாக, காட்ட மாக செய்தியாளர்களிடம் கூறி யுள்ளார்.

சி.பி.அய். இதை விசாரிக்க வேண்டும் என்று விஜிலென்ஸ் கமிஷன் கூறியதைத் தொடர்ந்து நேற்று சி.பி.அய். அதிகாரிகள் ஆலோசித்து விவாதித்ததாகத் தெரிகிறது.

வெளிநாட்டுப் பல்கலைக் கழக மசோதா கொல்லைப்புற வழியில் நிறைவேற்ற கபில்சிபல் முயற்சி?

வெளிநாட்டுப் பல்கலைக் கழக நுழைவு ஒழுங்குபடுத்தும் மசோதா 2010 நிறைவேற்றப் படும் முன்பே கடும் எதிர்ப்பு நாடாளுமன்ற மக்களவையில் ஏற்பட்டு, கிடப்பில் போடப் பட்டு, இப்போது மீண்டும் மாநிலங்கள் அவைமூலம் இத னைக் கொணர்ந்து நிறைவேற்றிட திட்டமிடப்படுகிறதாம்!

ஏற்கெனவே வெளிநாட்டுப் பல்கலைக் கழகக் கல்வி வசதி இணைப்புடன் 631 கல்வி அமைப் புகள் உள்ளன (2010-லேயே) இதில் 440 தத்தம் வளாகங்களிலேயே இருந்து இயங்குகின்றன. 5 மட்டும் இந்தியாவில் புதிய வளா கங்களை ஏற்படுத்திக் கொண்டு இயங்குகின்றன! 60 மற்ற உள்ளூர் கல்வி அமைப்புகளுடன் ஒப் பந்தம் போட்டு இயங்குகின்றன 49, இரட்டை கல்விஆண்டு- கல்வித் திட்டம் மூலம் இயங்கி வரு கின்றன.

கபில்சிபல் அமெரிக்காவிற்கு ஜூன் மாதம் செல்லவிருப்பதால் அதற்குள் இதை முடித்து அங்கே போய் அழைப்பு விடத் திட்டமிட்டுள்ளனர். அதனால் ஜூலை 21-ஆம் தேதி நடக்க விருந்த பல்கலைக் கழக மான்ய குழுவின் கூட்டம், ஜூன் 2-ஆம் தேதி (நாளை) நடைபெற ஏற்பா டாகி இருக்கிறது!

பெட்ரோல் விலை குறைப்பு

கிளம்பிய எதிர்ப்பு கண்டு திகைத்துள்ள நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை ரூபாய் 1.60 குறைக்க யோசிக்கப் பட்டுள்ளதாம்! எண்ணெய் கம் பெனிகளின் முடிவு இது! இன்றோ, நாளையோ இந்த விலைக் குறைப்பு முடிவு அறிவிக் கப்படலாம் எனத் தெரிய வரு கிறது!

புதியதொலைத் தொடர்புக் கொள்கை

புதிய தொலைத் தொடர்பு கொள்கையை (New Telecom Policy) அத்துறைக்கான அமைச்ச கம், அறிவித்துள்ளது.

புதிய தேசிய தொலை தொடர்புக் கொள்கை 2012 அறிவிக்கப்பட்டது. அதில் ரோமிங் கட்டணம் இனி வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெளிநாட்டு நேரடி மூலதன வரத்தோ, உள்நாட்டு மூலதன முத லீடோ அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பு ஏற் படாது என்றே நோக்கர்கள் கூறு கின்றனர்!

பா.ஜ.க. கட்சியில் பிளவும் கோஷ்டிகளும்!

பா.ஜ.க.வின் மூத்த தலைவர் களில் ஒருவரான அத்வானி பா.ஜ.க. மக்களாதரவினை இழந்து வருகிறது என்று கூறியுள் ளார்; நிதின்கட்காரி என்ற அதன் தலைவருக்கு மீண்டும் 2வது தடவை தலைமை நியமனத் தேர்வு நடைபெறுகிறது ஆர்.எஸ்.எஸ்.சின் வற்புறுத்தலால். அதை அத்வானி விரும்பவில்லை; தனது எதிர்ப்பைப் பதிவு செய்யவே அவரும், எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மாசுவராஜூம் சேர்ந்து மும்பை பொதுக் கூட் டத்தை புறக்கணித்தார்கள்!

ஊழலுக்கெதிரான வலுவான இயக்கத்தினை கட்டி நடத்திட பா.ஜ.க. தலைமை தயாராக இல்லை என்பதை அத்வானி நேற்று புதுடில்லியிலும் கூறியுள்ளார்.

ஒடிசாவில் நவீன்பட்நாயக் அரசில் கோஷ்டி தலை தூக்கல்

ஆளுங்கட்சியை சேர்ந்த சுமார் 30 எம்.எல்.ஏ.க்கள், இவரது ஆட்சிக்கு எதிராக கோஷ்டியாக சில கவிழ்ப்பு ஒத்திகைகளை நடத்தினர். அமெரிக்காவில் உள்ள முதல்வர் நவீன் எல்லாம் சரியாக உள்ளது; வந்து கவனித் துக் கொள்வேன் என்று கூறி யுள்ளார்!

குடிஅரசுத் தலைவர் வேட் பாளர் பற்றி அரசியல் நடத்து வதைவிட, தனது ஆட்சியை ஆடாமல் பார்த்துக் கொள்ள முயலுவதே அவரது முதல் வேலையாக இருக்கக் கூடும்!

தமிழ் ஓவியா said...

தமிழ் இணையப் பயிலரங்கம்



மக்கள் பல்கலைக்கழகமாம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில், ஊரக வளர்ச்சி உயராய்வு மய்யத்தின் சார்பாக தமிழ் இணையப் பயிலரங்கம் 20.05.2012 காலை 10 மணி முதல் மாலை 7 வரை நடைபெற்றது. தந்தை பெரியாரின் வழிமுறையே மக்கள் நலனை முன்னிட்டு வேறு யாரும் சிந்திக்காத வழியில் சிந்திப்பது, அதனை செயல்படுத்த எத்தனை இடை யூறுகள் வந்தாலும் எதிர்கொள்வது, இறுதி வெற்றி நமதே என்னும் நம்பிக்கையில் தொடர்ந்து பயணிப்பது, வெற்றி பெறுவது என்னும் வழிமுறையாகும். அந்த வழியில் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்த தமிழ் இணையப் பயிலரங்கத்தில் பங்கு பெற்றோருக்கு ஒரு புதிய அனுபவமாகவும் அமைந்தது. தொடக்க விழா தொடக்க விழாவில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அனைவரையும் வரவேற்றார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் துணை முதன்மையர் பேரா.க. திருச்செல்வி தலைமையுரையாற்றினார். பகுத்தறி வாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு அறிமுகவுரையாற்றினார். மக்கள் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச் சந்திரன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.

கிராமப் பகுதிகளிலிருந்து வந்திருந்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில் அவரது உரை அமைந்தது. மிக சமீபத்தில் வெளிவந்த சுபாரட்டோ பாக்சி என்பவர் எழுதிய ஆங்கிலப் புத்தகமான M.B.A. at 16 A teenagers guide to Business... என்னும் புத்தகத்தில் இருந்த வாழ்க்கை வரலாறுகளை சுட்டிக்காட்டினார். சாதாரண கிராமத் தில் பிறந்து வளர்ந்த அவர்கள் எப்படி பெரிய ஆட்களாக வளர்ந்தார்கள் என்பதனையும், அதற்கு இணையம் எவ்வளவு உதவியாக இருந்தது என்பதனை யும் புத்தகத்திலிருந்து மேற்கோள்கள் காட்டி உரை யாற்றினார். இணையத் தினை சரியாகப்பயன்படுத்து வதன் மூலம் பலவகை களில் முன்னேறலாம் என்பதனை எடுத்துக்காட்டினார். தொடர்ந்து திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு குணசேகரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் கா.செந்தில்குமார் அவர்கள் நன்றி கூற காலை தொடக்க விழா முடி வுற்றது. வந்திருந்த பயிற்சியாளர்கள், விருந்தினர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டு, கணினி அறைக்கு வந்து சேர்ந்தோம்.



திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் உரையாற்றினார். (20.5.2012 வல்லம்)

பயிற்சியின் ஆரம்பத்தில் தடுமாற்றம்

ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், அனைவரும் லேப்டாப் எனப்படும் மடிக் கணினி முன் அமர்ந்தனர். பயிற்சியாளர்களில் 80 சதவீதம் 21 வயதுக்கு உட்பட்டவர்கள். பெரும்பாலோர் இப்போது தான் கணினியைப் பயன்படுத்துகிறோம் என்று கூறிட கணினி வகுப்பினை ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் எடுக்க ஆரம்பித்தார். கணினியைப் பற்றி, இணையம் பற்றிய வரலாறுகளை எடுத்துக்கூறிவிட்டு , நோட்பேடு எனப்படும் கணினி மென்பொருளை திறந்து ஆங்கிலத்தில் டைப் செய்யுங்கள் என பணித்தார். பல பேர் அப்போதுதான் தட்டுத்தடுமாறி கணினி விசைப்பலகையில் தட்டச்சு செய்ய ஆரம்பித்தனர். அடுத்து தேடு தளம் என்றால் என்ன என்பதனைக் கூறி கூகிள் என்னும் தேடுதளம் பற்றிய குறிப்புகளைத் தந்தார். கூகிள் என்னும் தேடுதளத்தில் தமிழிலேயே நீங்கள் தேடலாம் என்பதனைத் தெளிவுபடுத்தினார். தமிழில் நீங்கள் தட்டச்சு செய்யலாம் என்பதனைக் குறிப்பிட்டு தமிழெழுதி என்னும் (Tamil editor) இணைய தளத்தினை பயிற்சியாளர்களுக்கு அறிமுகப் படுத்தினார். தமிழ் எழுதி என்னும் பகுதிக்குச் சென்று தங்கள் பெயரை, தங்கள் ஊர்ப்பெயரை எல்லாம் அடிக்க ஆரம்பித்தவுடனேயே பயிற்சி பெறுபவர்களிடம் ஓர் உற்சாகம் பற்றிக்கொண்டது. கணிப்பொறியைக் கையாளுவது மட்டுமல்ல, அதில் தமிழில் தாங்கள் விரும்பியவண்ணம் அடிக்கலாம் என்பதனை நேரடியாகக் கற்றுக்கொண்டனர். கணினி கற்றுக் கொள்வது கடினமல்ல, இணைய இணைப்பு இருந்தால் தமிழில் நமது கருத்துகளை பகிர்ந்து கொள்வது கடினமல்ல என்பதனை உணர்ந்து கொண்டனர். கணினியில் தட்டச்சு செய்வதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் கை தூக்குங்கள் எனச்சொல்ல, அப்படி கை தூக்கியவர்களிடத்தில் அருகில் சென்று எப்படி தட்டச்சு செய்வது என்பதனை தெளிவுபடுத்தினர். தெளிவுபடுத்தும் பணியில் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்வமாக இந்த பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு தெளிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தமிழ் ஓவியா said...

மின்னஞ்சலும் நடைமுறை வாழ்வும்

அருமையான மதிய உணவு பல்கலைக்கழகத்தின் சார்பாக வழங்கப்பட்டது. மதிய உணவுக்குப்பின் பயிற்சி பெறுபவர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். ஏற்கெனவே கணினி தெரிந்தவர்களுக்கு, மேலும் பல செய்திகளை வழங்கும்முகமாக பிரின்சு என்னாரெசு பெரியார் வகுப்பு எடுத்தார். ஜிமெயிலில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என்பதனை வா.நேரு விளக்கிக்கூறி, ஒவ்வொரு படியாக கேட்கும் விவரங்களை பதிவு செய்யச் சொல்ல, பயிற்சி பெறுவோர் தங்களுக்குரிய மின்னஞ்சல்களை உருவாக்கிக்கொண்டனர். மின்னஞ் சல் அனுப்புவது எப்படி, மின்னஞ்சலில் உள்ள பல்வேறு வசதிகள் போன்றவை சொல்லித்தரப்பட்டது. சமூக வலைத்தளங்கள் என்றால் என்ன? பேஸ் புக்கைப் பயன்படுத்துவது எப்படி, நாம் எப்படி கேள்விகள் கேட்கலாம், பதில்கள் எப்படிக் கொடுக்கலாம் போன்ற வற்றை பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி விளக்கினார். எங்கு போனாலும் மின்னஞ்சல் இனித் தேவை, மின்னஞ்சலின் பாஸ்வேர்டை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்பதும் சொல்லப்பட்டது. விக்கிபீடியா என்னும் இணைய தளத்தின் பயன், அதில் சென்று எப்படி கருத்துக்களை எழுதுவது, தவறாக யாரும் எழுதி யிருந்தால் எப்படி சரி செய்வது போன்றவை விளக்கிக் கூறப்பட்டன.

இணைய இணைப்பில் நீங்கள் தனியாக அமர்ந்திருந் தாலும், நீங்கள் கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றீர்கள் என்னும் உண்மையை உணர்ந்து செயல்படுங்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் கதவு எண்ணும், தெருப்பெயர், ஊர்ப்பெயர் இருப்பதைப் போலவே, ஒவ்வொரு இணைய இணைப்பிற்கும் அய்.பி. எனப்படும் இணைய முகவரி இருக்கிறது, எளிதாக யார், எதனை எங்கிருந்து அனுப்பியிருக்கின்றார்கள் என்பதனை கண்டுபிடிக்க இயலும் என்பவை போன்ற நடைமுறை உண்மைகளை, பயிற்சியாளர்களுக்கு செய்தித்தாள் களில் வந்த சில செய்திகளைக் குறிப்பிட்டு பயிற்றுநர்கள் விளக்கினர்.

நமது வலைதளங்கள்

நமது விடுதலை இணைய தளத்தின் முகவரி, விடுதலை இணைய தளத்தில் உள்ள Periyar.org மற்றும் பெரியார் பண்பலை , எப்படி விடுதலை இணைய தளத்தில் சென்று நமது கருத்துகளை எழுதுவது போன்ற பல்வேறு செய்திகள் விளக்கப்பட்டன. உண்மை, தி மாடர்ன் ரேசனலிஸ்ட், பெரியார் பிஞ்சு என நமது பத்திரிகைகள் அனைத்திற்கும் இருக்கும் வலைத் தளங்கள் விளக்கப் பட்டன.

நடக்க இருப்பவை பகுதியில் எப்படி கழக நிகழ்வுகளைப் பார்ப்பது என்பது விளக்கப்பட்டது. பின்பு பிளாக் என்றால் என்ன? பழனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தோழர் வ.மாரிமுத்துவின் தமிழோ வியா.பிளாக்ஸ்பாட். காம் (tamizhoviya.blogspot.com..) மற்றும் பல தனிப்பட்ட மனிதர்களால் இயக்கப்படும் வலைத் தளங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. பயிலரங்கத்தின் இறுதிப் பகுதியில் திராவிடர் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் கலந்து கொண்டார். தோழர்களின் வினாக்களுக்கு விடைகள் அளிக்கப்பட்டு சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன.

சான்றிதழும் நன்றியும்

பயிலரங்கத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாலை 5.30 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அய்ன்ஸ்டீன் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் மு. அய்யாவு அவர்கள் தலைமையு ரையாற்றினார். அவர் தனது உரையில் ஏன் கணினி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை விளக்கி மாணவர்கள் மனதில் பதியும் வண்ணம் உரையாற்றினார். சான்றிதழ் வழங்கிய தலைமை நிலைய செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள், இந்த பயிற்சி ஒரு தொடக்கமே, இப்பயிற்சியினைத் தொடர்ந்து முயற்சி எடுத்து நல்ல நிலையில் கணினியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறிப்பிட்டு 1998-இல் முதன்முதலில் தான் கணினியை இயக்கிய சூழலை எடுத்துரைத்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்ற வருடம் தந்தை பெரியார் பிறந்தநாள் ஆண்டு மலரில் இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்கள். இங்கு சிறப்பாக நடந்து முடிந்தி ருக்கிறது.இன்னும் பல ஊர்களில் இந்த தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். இந்த பயிலரங்கம் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார், மாநில மாணவரணி தோழர் திராவிட எழில் மற்றும் பேராசிரியர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார் தலைமை நிலையச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள். தொடர்ந்துஅனைவ ருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழ் ஓவியா said...

பயிலரங்கத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை மேடையில் வந்து தெரிவித்தனர். கணினி பயிற்சி பெற்ற கொத்தனார் முருகேசன் சொன்னார், நான் 6ஆம் வகுப்புதான் படித்திருக் கிறேன். கணினியை என் னால் இயக்க முடியும் என்று நினைத்ததே இல்லை, இன்று இயக்கினேன், மிக்க நன்றி என்றார், கும்பகோணத்தை சேர்ந்த நாட்டியக் கலைஞர் தமிழ்விழி சொன்னார், நான் மட்டும் இங்கு வந்து கணினி கற்றுக்கொள்ளவில்லை, , எங்கள் அம்மாவும் வந்து கற்றுக்கொண்டார்கள்,மிக்க மகிழ்ச்சி என்றார்.



வடசேரி பன்னீர்செல்வம் தனது மகளோடு ஒரு விண்ணப்பத்தை நிரப்பும்போது , மின்னஞ்சல் இல்லாமல் அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை , இப்போது கற்றுக்கொண்டேன் , மிக மிக நன்றி என்றார். ஓவியர் சுந்தர் , சிறீரங்கம் தமிழ் செல்வன்,ஆசிரியர் அன்பரசு எனக் கருத்து தெரிவித்த அனைவருமே மிகப் பயனுள்ள பயிற்சி எனத் தெரிவித்தனர்.இறுதியாக ஊரக வளர்ச்சி உயராய்வு மய்யத்தின் கூடுதல் இயக்குநர் பேரா. முனைவர்.ந.சிவசாமி அவர்கள் நன்றி கூறினார். கணினி கற்றவர்களே, அடுத்த வேலை என்ன? வலைத் தளங்கள் என்பது இன்றைக்கு பெரும்பாலும் பார்ப்பனர்கள் கையில் உள்ளது. திராவிட இயக்கத் தலைவர்களைப் பற்றி, திராவிட இயக்கம் பற்றி கண்டபடி எழுதுகிறார்கள்.பதிலடி கொடுக்காமல் பார்ப்பனர்கள் திருந்த மாட்டார்கள். அவர்கள் எந்த மொழியில், நடையில் எழுது கிறார்களோ அதே மொழியில், அதே நடையில் நமது தோழர்கள் பதில் கொடுக்க வேண்டும். வரலாற்றைத் திரித்து எழுதுவோர்க்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். விடுதலை இணைய தளத்தை தோழர்கள் மத்தியில் பரப்ப வேண்டும். பொதுவானவர்கள் என்ற போர்வை போர்த்தி பேஸ்புக் போன்ற இணைய தளங்களில் இடக்கு மடக்காய் எழுதுவோர்க்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

மின்னஞ்சலை நன்றாகக் கையாளத் தெரிய வேண்டும். நக்கீரன் போன்ற பத்திரிகைகள் 500 வார்த்தைகளுக்குள் கருத்துக்கூற வசதி செய்து கொடுக்கின்றார்கள். நறுக்கென்று சுருக்கமாய் செய்தியை சொல்லத் தெரியவேண்டும், ஆதாரத் தோடு சொல்லத் தெரியவேண்டும்.பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நமது இயக்க தோழர் களோடு நட்பில் இருந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நமது மரியாதைக்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவது போல " நமது இயக்கம் பிரச்சார இயக்கம்". இந்த பிரச்சார இயக்கத்தின் மூலமாக தமிழ் இணைய தளப் பயிற்சியினைப் பெற்றவர்கள் இணைய வழிப் பிரச்சாரத்தை செய்தல் வேண்டும், அதுவே உண்மை யான நன்றியாகும். தோழர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் கணினி ஆசிரியராய் வகுப்பெடுத்தார், கணினி இணைப்பில் தொழில்நுட்ப மேலாளராய் சரி செய்தார், பேஸ் புக் , மற்றும் நமது விடுதலை இணைய தளத்தில் சென்றபோது இயக்கத்தோழராய் கருத்து களை முன்வைத்தார். வலைத்தள உருவாக்கத்தில் கணினி மென்பொருள் வல்லுநராய் கணினி நுட்பங் களைச் சொன்னார்.

இந்தப் பயிலரங்கத்தில் அவரின் பன்முகப்பணி பெரிதும் பாராட்டத்தக்கது.துணைவேந்தர் அவர் களின் வழிகாட்டுதலில் பேரா.கா.செந்தில்குமார், பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அதிகாரி திரு. பாண்டியன், பேரா. இளங்கோ, முனைவர் அதிரடி க.அன்பழகன் என ஒரு பேராசிரியர்கள் குழுவே முனைப்புடன் செயல்பட்டு இந்த நிகழ்வை வெற்றி கரமாக நடத்திட பேருதவி புரிந்தனர். 1-6-2012

தமிழ் ஓவியா said...

எழுச்சித் தமிழர் பார்வை - சோ பக்கம் திரும்புமா?

அண்ணல் அம்பேத்கர் அவர் களைக் கொச்சைப்படுத்தி கார்ட்டூன் படம் ஒன்று சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் நத்தையின் மேல் உட் கார்ந்திருப்பது போலவும், சாட் டையைக் கொண்டு நேரு அவர்கள் அடித்து விரட்டுவது போலவும் வரையப்பட்ட கார்ட்டூன் அது. நாடாளுமன்றத்திலும் மற்றும் வெளி யிலும் கடும் கண்டனப் புயல் அதிர்ந்து கிளம்பியது.

மத்திய மனிதவளத் துறை அமைச் சர் கபில்சிபல் மன்னிப்பு கோரினார். அந்தப் பாடம் உடனடியாக நீக்கப் பட்டது. என்.சி.ஆர்.டி. குழுத் தலைவர் பதவி விலகினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடுத்துள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களைக் கொச்சைப் படுத்தியுள்ள அந்தப் பாடப் புத்தகத்தின் விற் பனையைத் தடை செய்ய வேண்டும் என்று மனுவில் அவர் கோரியுள்ளார்.

இத்தகைய காலக்கட்டத்தில், சூழலில், இந்த வார துக்ளக் இதழில் (4-6-2012) கேள்வி பதில் பகுதியில் என்ன எழுதுகிறார் திருவாளர் சோ. இராமசாமி?

கேள்வி: சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத்தில் டாக்டர் அம்பேத்கரை இழிவுபடுத்தும் கார்ட்டூன்கள் இடம் பெற்றது தொடர்பாக, மத்திய அமைச்சர் கபில் சிபல் மன்னிப்புக் கேட்டுள்ளது பற்றி?

பதில்: எதையுமே அரசியலாக் குவது பழக்கம் இன்று நன்றாகப் பதிந்துவிட்டது. அதனுடைய விளைவு தான் இந்த சர்ச்சை. 1949 இல் சங்கர்ஸ் வீக்லியில் இந்தப் படம் பிர சுரமானபோது யாரும் எந்த ஆட்சே பணையும் எழுப்பவில்லை. அது ஒரு கார்ட்டூனாகவே பார்க்கப்பட்டது. அவ்வளவுதான். அதில் கார்ட் டூனிஸ்ட் யாரையும் இழிவு படுத்திவிட வில்லை. அரசியல் சட்டம் வடிவு பெறுவது தாமதமாகிக் கொண்டிருக் கிறது என்பதைச் சுட்டிக் காட்டிய ஒரு கார்ட்டூன் அது. அதற்கு இன்று இவ்வளவு அமர்க்களம்! கபில் சிபில் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அன்று இருந்த பக்குவம் இன்று அரசியல் வாதிகளிடம் இல்லாமல் போனது தான் இதற்குக் காரணம். இவ்வாறு சோ எழுதியுள்ளாரே! பாடத்திட்டத்தில் அம்பேத்கர் அவர் களை இழிவுபடுத்தி வெளியிட்டுள்ள கார்ட்டூனுக்கு வக்காலத்து வாங்கி யுள்ளாரே!

மனப் பக்குவம் இல்லாதவர் கள்தான் இதனைக் கண்டிப்பதாக எழுதுகிறாரே!

கார்ட்டூன் போட்டுக் கொச்சைப் படுத்தியது ஒரு பக்கம் என்றால், அப்படிக் கொச்சைப்படுத்தியவர்களைக் கண்டிப்பவர்களையும் சேர்த்து சோ கொச்சைப்படுத்தி யுள்ளாரே!

அன்றைக்கு அம்பேத்கர் அவர்களையும், அவரை மதிக்கும் மக்களை யும் மட்டந்தட்டி எழுதியுள்ளாரே!

அம்பேத்கர் என்றால் இந்தப் பார்ப்பனர்களின் பார்வை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

எழுச்சித் தமிழர் இதனையும் கவ னத்தில் கொள்வார் என்றே நம்பு கிறோம். 1-6-2012

தமிழ் ஓவியா said...

கூடாரத்துக்குள் ஒட்டகமா?

கட்டுப்பாடு மிகுந்த கட்சி என்று பெருமை பேசிக் கொண் டிருந்த பா.ஜ.கட்சிக்குள் இன்று கோஷ்டி சண்டையும், வெட்டு-குத்துமாக இருக்கிறது.
பா.ஜ.க.அதிகார பூர்வ ஏடான கமல் சந்தேஷ் இதழில் அண்மை யில் வெளிவந்த தலையங்கம் ஒன்றில் கட்சியின் மூத்த தலை வர்களின் ஒழுக்கமின்மை, கட்டுப் பாடின்மை பற்றி கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பா.ஜ.க. ஆளுங்கட்சியாக உள்ள கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் மாநில நிகழ்வுகள் பொது மக்களின் உணர்வுகளைப் பெரிதும் புண்படுத்தி உள்ளன என்று அது தெரிவிக்கிறது. அண்மைக் காலமாக பல தலை வர்கள் வேக வேகமாக அறிக்கை கள் விடுவதையும் அது கண்டித் துள்ளது. தலைவர்கள் கட்சியை விட மேம்பட்டவர்கள் அல்ல என்றும், கட்சிக்குத்தான் முதலி டம் என்றும் அது கூறியுள்ளது.

காங்கிரசுக்கு எதிராக உள்ள மக்களின் மன நிலையை பா.ஜ.க.க்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ள கட்சியின் தலைமை தவறிவிட்டது என்று அத்வானி ஒரு பக்கம் புலம்பி யுள்ளார். காங்கிரஸ் மீது மக்கள் கோபமாக உள்ளனர்; பா.ஜ.க. பற்றி மக்கள் ஏமாற்றமடைந் துள்ளனர் என்று அத்வானி கூறினார். கட்சியின் நலன்களைப் பாதிக்கும் பல முடிவுகளை கட்சித் தலைவர் கட்காரி மேற்கொண்டது பற்றி அத்வானி கண்டித்துப் பேசியுள்ளார்.

மூத்த தலைவர்களிடையே கோஷ்டி மனப்பான்மையும், கட்டுப்பாடின்மை, ஒழுக்க மின்மை வளர்ந்து வருகிறது என்றும் அத்வானி கூறியுள்ளார். தேசிய செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னர் மோடியின் அச்சுறுத் தலுக்கு எவ்வாறு கட்காரி பணிந்தார் என்று அவர் கூறினார். கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவையும் கட்டுப் படுத்த கட்காரியால் முடிய வில்லை.

குலாப் சந்த் வாரியாவின் யாத் திரையைத் தடுத்து நிறுத்தா விட்டால், எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக சில வாரங்களுக்கு முன்பு ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே அச்சுறுத்தி இருந்தார்.

கட்சியின் ஒரே தலைவராக எவர் ஒருவரையும் ஏற்றுக் கொள் ளும் நிலையில் பா.ஜ.க.வின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் இன்று இல்லை. தலைமைப் பதவிக்குத் தாங்கள்தான் தகுதி பெற்றவர்கள் என்று ஒவ்வொரு வரும் கருதிக் கொண்டிருக் கின்றனர்.2-6-2012

தமிழ் ஓவியா said...

வேலியே பயிரை மேய்கிறது!



சுரங்க அதிபர் கலி. ஜனார்த் தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்க 15 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டு, ரூபாய் 10 கோடிக்கு முடிவு செய்து, 3 கோடி ரூபாய் முன் பணம் பெற்ற ஆந்திர மாநில பெல்லாரி சி.பி.அய்.நீதிமன்ற நீதிபதி பட்டாபிராமராவ் உயர் நீதிமன்றத்தினால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சி.பி.அய். அவர் மீதும், அவரது மகன் மற்றும் 5 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது. நீதிபதியின் மகன் பெயரில் அசோக் நகரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் லாக்கர்களில் இருந்து லஞ்சம் வாங்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பட்டாபிராம ராவும் அவரது மகனும் சி.பி.அய். யினால் கைது செய்யப் படு வார்கள் என்று தெரிகிறது.2-6-2012

தமிழ் ஓவியா said...

கை சுட்டதடா!



அண்மையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் லண்டன் சென்றிருந்தபோது, கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி, அவரது அரசைக் கவிழ்க்க நடைபெற்ற சதியை அடுத்து, நாடு திரும் பியதும் கட்சியில் ஏற்பட்டுள்ள கலவரங்களை ஒடுக்க அவர் அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார்.

தனக்கு எதிராகக் கலகம் செய்யக் காரணமாக இருந்த மாநிலங்களவை உறுப்பினரான பியாரிமோகன் மஹாபத்ரா வையும் மற்றும் பிரபாத் பிஸ்வால், பிபூதி பாலபந்தே ஆகிய இரு சட்டமன்ற உறுப் பினர்களையும் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்துள்ளார்.

மேலும் தனது அமைச் சரவையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச் சர் அஞ்சலி பெஹ்ரா மற்றும் போக்குவரத்துத் துறை அமைச் சர் சஞ்ஜீப் குமார் சாகூ இரு வரையும் பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்குப் பரிந்துரைத் துள்ளார். பியாரிமோகன் மஹாபத்ரா வீட்டில் நடைபெற்ற கூட்டத் தில், நவீன் பட்நாயக்கை நீக்கி விட்டுத் தன்னை கட்சித் தலை வராக நியமிக்கக் கோரும் கடிதத்தில் கையெழுத்திடும்படி தங்களைக் கேட்டதாக கட் சியைச் சேர்ந்த பல சட்ட மன்ற உறுப்பினர்கள் நவீன் பட்நாயக் கிடம் கூறினர். இக்கூட்டத்திற்கு 30 உறுப்பினர்கள் சென்றிருந் ததாகத் தெரிகிறது.

நவீன் பட்நாயக் நாடு திரும் பும் முன் 94 சட்ட மன்ற உறுப் பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தில் கையெ ழுத்திட்டனர். மஹாபத்ராவின் முயற்சியை முறியடித்து கட் சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் பட்நாயக் வைத்துக் கொள்வார் என்று தெரிகிறது. 2-6-2012

தமிழ் ஓவியா said...

பெண்கள் விடுதலை எங்கே இருக்கிறது?

பெண்களை இழிவுபடுத்தும், பெண்களின் உரிமைகளை மறுக்கும் மத நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள், சாஸ்திரங் களை அறவே புறக்கணிப்பதன் மூலமே பெண்கள் தங்கள்மீது சுமத்தப்பட்ட இழிவுகளிலிருந்தும், உரிமை மறுப்புகளிலிருந்தும் விடுதலை பெற முடியும் என்று இம்மாநாடு உறுதியாக வெளிப் படுத்துகிறது

- இவ்வாறு 14ஆவது தீர்மானமாக வேலூரில் நடைபெற்ற புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டில் (29.5.2012) நிறைவேற்றப்பட்டது.

என்னதான் கல்வி வாய்ப்புகள், உத்தியோக வாய்ப்புகள் சொத்துரிமை போன்ற சட்டங்கள் செய்யப்பட்டு இருந்தாலும், உண்மையிலேயே பெண்களின் விடுதலை என்பதற்கான அடித்தளம் மேற்கண்ட தீர்மானத்தின் உள்ளடக்கத்தில் புதைந்து இருக்கிறது என்பதை எந்த வகையிலும் மறுக்க முடியாது.

மானமும் அறிவும் மனிதனுக்கழகு என்றவர் தந்தை பெரியார், இந்த இரண்டும் கிடைக்கப் பெறாதவர்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்கள் உருவத்தால் மனிதர்களே தவிர, உணர்வால் அத்தகுதியை பெறக் கூடியவர்கள் அல்லர்.
அதிலும் குறிப்பாகப் பெண்களின் உண்மையான விடுதலைக்கு எதிரானவற்றைத் தங்கள் மூளையில் திணித்துக் கொண்டு அலைகிறார்கள்.
கடவுள் நம்பிக்கை என்பது ஒருபுறம் இருக்கட்டும்; பெண் கடவுளுக்கும் பூசை செய்யும் உரிமை ஏன் பெண்களுக்கு இருக்கக் கூடாது என்கிற அளவுக்காவது சிந்திக்க வேண்டாமா?

பெண்களைத் தெய்வமாகவும், பூமியைப் பூமாதேவி என்றும், தண்ணீரைக் கங்காதேவியாகவும் வெளித் தோற்றத்தில் கூறப்பட்டு வந்தாலும் மதத்தின் பேராலும், சாத்திரங்களின் பேராலும் வேதங்களின் பேராலும் எந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்?

குறிப்பாக இந்துமத வியாபாரிகள் உலகெங்கும் பரப்பியுள்ள கீதையில் பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது குறித்து எந்தப் படித்த பெண்கள், எந்தப் பெண் விஞ்ஞானிகள், எந்தப் பல்கலைக் கழக பெண் துணை வேந்தர்கள்; பெண் கல்வியாளர்கள், பெண் வரலாற்றுப் பேராசிரியர்கள் கவலைப்பட்டுள்ளனர்? விமர்சனங்களை வைத்துள்ளனர்?

இதில் என்ன கொடுமை என்றால், இப்படி சொன்னவர் இந்து மதத்தின் கடவுள் கிருஷ்ணன் என்று கூறுகிறார்கள் என்றால் இந்த நாட்டில் கடவுள்களும், இந்து மதமும், அதன் சாத்திரங்களும் எந்த அடித்தளத்தின்மீது உருவாக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ளுதல் எளிதுதானே!

இந்த எளிதான வெளிப்படையான உண்மைகளைப் புரிந்து கொள்வதில் என்ன கடினம்? கடவுள் என்ற கற்பனையின்மீது இவர்கள் வைத்துள்ள முட்டாள்தனமான நம்பிக்கையும், இனந் தெரியாத அச்சமும்தான். இந்த இழிவைப்பற்றி கோப உணர்ச்சி பெற முடியாமல் தடுத்துக் கொண்டுள்ளன.

பெரியார் என்ற மாபெரும் புரட்சியாளரால்தான் எந்தவித ஆசாபாசத்துக்கும், கட்டுக்குள்ளும் தன்னைச் சிறைப்படுத்தி கொள்ளாமல், தங்குத் தடையற்ற தன் சுய சிந்தனையால் உண்மையை மட்டும் வெளிப்படுத்த முடிந்திருக்கிறது.

ஒரே ஒரு நிமிடம் பெண்கள் தங்களின் சிந்தனையை விழிக்கச் செய்தாலே அறியாமை, அச்சம் எனும் இருட்டிலிருந்து வெளியேறி உண்மையைச் சிக்கெனப் பிடித்துக் கொள்வார்கள்.

நாம் நீண்ட காலமாக நம்பி வந்த, வழிபட்டுவந்த கடவுள், மதம், சாஸ்திர சம்பிரதாயங்களால் கல்வி உரிமை பெற்றோமா? உத்தியோக வாய்ப்பு கிடைக்கப் பெற்றோமா? சொத்துரிமை போன்ற சட்டங்கள் வந்து சேர்ந்தனவா? என்ற வினாக்களைத் தங்களுக்குள் எழுப்பிட வேண்டும்.

கடவுள் இல்லை - மதம் வேண்டாம், சாத்திரங்களைத் தூக்கி எறி - எரி என்று சொன்ன புரட்சித் தந்தை பெரியாரால் தானே இந்த வாய்ப்புக் கதவுகள் திறந்து விடப்பட்டன என்ற உண்மையை ஏற்றுக் கொண்டால் அவர்களின் பரிணாம வளர்ச்சி அதிசயிக்கத்தக்கதாக இருக்கும். இதைத்தான் வேலூர் பெண்கள் மாநாட்டு கடைசித் தீர்மானம் வலியுறுத்துகிறது - சிந்திப்பார்களாக!2-6-2012

தமிழ் ஓவியா said...

»பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது


சோ.பாலகிருஷ்ணன்: 1977-78 அன்றைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். பொருளாதார அடிப்படையில் ஒரு இட ஒதுக்கீடு செய்ய வேண்டு மென்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். ஆனால், அன்று நம்முடைய முதலமைச் சர் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து மிகக் கடுமையாக அதை எதிர்த் தார்கள். இப்போது அந்த முறையைக் கொண்டு வர வேண் டுமென்று நம்முடைய சொக்கர் அவர்கள் மிக வலியுறுத்தி சொன்னார். காரணம் என்ன வென்று சொன்னால், நாடார் சமுதாயம் என்பது - அவர் நாடார் சமுதாயத்தை சேர்ந் தவர், பெரிய முதலாளி, நன்கு படித்தவர் - இந்தச் சமுதாயத்தில் ஏற்படுகின்ற பலன் அனைத் தையும் இவர் போன்ற ஒரு சிலர்தான் அனுபவிக்கிறார்கள். என்னுடைய ஊரில் இருக்கின்ற அந்தப் பனையேறி நாடார் ஏழையெளிய மக்கள் எல்லாம் அந்தப் பலனை அனுபவிக்க முடியாமல் போகிறது. காரணம், அவர்களுடைய குழந்தை அந்த அளவிற்கு படிக்க முடியாது. ஆகவே, நம்முடைய முதல மைச்சர் அவர்கள் இதை ஒரு மறுபரிசீலனைகூட செய்ய வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

சொக்கர்:- எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேசும் போது, நான் சொன்னதாக ஒரு கருத்தை சொன்னார். நான் சொன்ன கருத்துதான். அதைத் தெளிவுபடுத்தவில்லையென்றால் வீணான சந்தேகம் வந்து விடும். அதற்காகச் சொல்கிறேன். அனைத்து சமுதாயத்திலும் வசதி உள்ளவர்களும் இருக் கிறார்கள்; வசதி இல்லாதவர் களும் இருக்கிறார்கள். வசதி இல்லாதவர்கள் உயர வேண்டு மென்பதுதான் இடஒதுக்கீடு முறையினுடைய அடிப்படை நோக்கம்.

ஆனால், நான் சார்ந்துள்ள சமூகத்தில் எத்தனையோ ஏழை யெளியவர்கள் இருக்கிறார்கள். ஆகவே, வசதி உள்ளவர்களுக்கு அளிக்கக்கூடிய சலுகைகளை நிறுத்திவிட்டு, அதே சமூகத்தில் உள்ள வசதி இல்லாதவர்களுக்கு இந்தச் சலுகைகளைக் கொடுத் தால் சமுதாயம் வேகமாக வள ரும் என்ற கருத்து கொண்டவன் நான். ஆனால் முதலமைச்சர் இதற்கு எதிரான கருத்து கொண் டவர் என்று கருதுகிறேன்.

முதல்வர் கலைஞர்:- இந்த ஒதுக்கீடே ளுடிஉயைடடல யனே நனரஉயவடியேடடல என்ற அடிப்படை யிலேதான் இந்த இடஒதுக்கீடு இருக்க வேண்டுமென்று தந்தை பெரியார் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள் கூட அப்படித்தான் விரும்பினார்கள். அப்படித்தான் அன்றைக்கு திருத்தப்பட்டு அது நடைமுறை யில் இருந்து வருகிறது. பொரு ளாதார ரீதியாக என்று எடுத்துக் கொண்டால் ளுடிஉயைடடல யனே நனரஉயவடியேடடல என்பது அடிபட்டு போய்விடும். எனவேதான் பொருளாதார ரீதியாக என்று அன்றைக்கு அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச் சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட அந்த உச்சவரம்பை நாம் எதிர்த்தோம். திராவிடர் முன்னேற்றக் கழகம், திராவிடக் கழகம் ஆகிய இந்த திராவிட இயக்கம் மாத்திரமல்ல, அன் றைக்கு காங்கிரசிலே உள்ள பல தலைவர்களும் எங்களுடைய மேடையிலே வந்து பேசி னார்கள். கம்யூனிஸ்ட் கட்சி யினுடைய தலைவர்களும் எங்களுடைய மேடையிலே வந்து, நான் வீரபாண்டியார், பேராசிரியர், அதைப் போல நம்முடைய வீரபாண்டியன், ரமணிபாய், திண்டிவனம் இராமமூர்த்தி, இவர்களெல் லாம் ஒரே மேடையில் பேசி அதை கண்டித்திருக்கிறோம் அன்றைக்கு. ஆகவே, பொரு ளாதார அடிப்படையிலே இது கூடாது என்பதுதான் நம் முடைய வாதம், 9 ஆயிரம் ரூபாய் என்று அப்பொழுது உச்சவரம்பு வைக்கப்பட்டது. அப்பொழுது ஒரே வீட்டில் ஒருவர் முன்னேறிய சமுதாய மாக ஆகிவிடுவார். இன்னொரு வர் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாக ஆகிவிடுவார். 9 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்ற அண் ணன் முன்னேறிய சமுதாயம், 8,999 ரூபாய் சம்பாதிக்கின்ற தம்பி பிற்படுத்தப்பட்ட சமு தாயம் என்று ஆகிவிடும். இந்தக் கோளாறுகளையெல்லாம் அன்றைக்கு எடுத்து விளக்கித் தான் அந்த உச்சவரம்பு வேண் டாமென்று அன்றைக்கு எடுத் துக் கூறி, அதற்குப் பிறகு எம்.ஜி.ஆர். அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு அதைத் திருத்தினார்.

- சட்டப்பேரவை நிகழ்ச்சி - 13.4.1999

தமிழ் ஓவியா said...

தமிழன் மானத்தோடு வாழ கலைஞரின் ஆட்சி தேவை!


(இரண்டாவது முறையாக டாக்டர் கலைஞர் முதலமைச்ச ராக இருந்தபோது, நமது நல்லாசிரியர் குரல் புலவர் கா. முத்துசாமி அவர்கள் 18.4.1972இல் பெரிய குளத்தில் தந்தை பெரியார் அவர்களிடம் பேட்டி:)

(பேட்டியின்போது பெரியகுளம் பெரியார் பெருந்தொண்டர் ம.பெ. முத்துக்கருப்பையா, பெரியகுளம் ச.வெ. அழகிரி (மாவட்ட தி.க. செயலாளர்) உடன் உள்ளார்கள்.

கேள்வி: கலைஞர் அவர்கள் தங்களிடம் பணியாற்றிய போது, அவரிடம் தாங்கள் கண்ட நிறை என்ன? குறை என்ன?
பெரியார்: சொன்னதை எல்லாம் ஒழுங்காகவும், சிறப்பாகவும் செய்வார், பாராட்டும்படி பணிபுரிந்தார். அவரிடம் நிறைவைக் கண்டேன் குறை இல்லை.

கேள்வி: கலைஞர் அவர்களுடைய எழுத்தாற்றலைப் பற்றி தங்கள் கருத்து என்ன?

பெரியார்: எந்த விஷயத்தையும் எழுதுவார், திறமையாகவும் எழுதுவார்.

கேள்வி: கலைஞர் அவர்களுடைய கலைப்பணியைப் பற்றி தங்கள் கருத்துஎன்ன?

பெரியார்: அவருடைய நாடகம், சினிமா எல்லாம் சிறப்பாக இருக்கு - மக்கள் கூட்டம் கூட்டமாக ரசிக்கிறார்கள் என்று பலர் என்னிடம் கூறியிருக்காங்க.

கேள்வி: கலைஞர் அவர்கள் தங்களிடம் ஆலோசனைகள் கேட்பது உண்டா?

பெரியார்: நிறையக் கேட்பார். கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

கேள்வி: அவைகளில் முக்கியமானது எது?

பெரியார்: எல்லாமே முக்கியம்தான்!

கேள்வி: உங்களுடைய ஆலோசனைகளை ஏற்று செயல்படுகிறாரா?

பெரியார்: நான் சொன்னாலும் அவருக்குச் சரி என்று பட்டால்தான் செய்வார்.

கேள்வி: கலைஞர் அவர்களுடைய செயல்களில் தங்களுக்கு விருப்பமானது எது?

பெரியார்: நிறைய இருக்கு. அவருடைய தமிழ் உணர்வு, பகுத்தறிவு - மக்களுக்காக நிறைவேற்றும் திட்டங்கள், எல்லாம் எனக்கு விருப்பமானவை.

கேள்வி: கலைஞர் அவர்கள் மக்களில் ஒருவராக - மக்களோடு தொடர்பு கொண்டு செயலாற்றுகிறார். அவரிடம் முதலமைச்சர் என்ற அதிகார வெறி இல்லை, ஆனால் சிலர் ஆர்ப்பாட்டம் செய்து அவர்களுக்கு தொல்லை கொடுக் கிறார்களே ஏன்?

பெரியார்: எதிரிகளுக்கு வேறு வழியில்லை. எப்படியாவது யாரையாவது தூண்டி விட்டு பதவிக்கு வர முயற்சி செய்கிறார்கள். அதனால் சிலரைத் தூண்டி விடுகிறார்கள். புரியாமல் சிலர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

கேள்வி: கலைஞர் அவர்களுடைய ஆட்சியைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன?

பெரியார்: வேறு யாரும் செய்ய நினைக்காத காரியங்களை, வேறு யாராலும் செய்ய முடியாத காரியங்களை கலைஞர் உற்சாகத்தோடும் - ஊக்கத்தோடும் நன்றாகச் செய்கிறார் - தமிழன் மானத்தோடு வாழ்வதற்கு கலைஞரின் ஆட்சிதான் தேவை.



இந்த ஆட்சி மாறினால்...



எனது 92வது ஆண்டு செய்தியாக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், இந்த ஆட்சியை இன்னும் ஒரு பத்தாண்டுக்குப் பாதுகாத்து வர வேண்டுமென்பதே ஆகும்.

தேசம் மிருகப் பிராயத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது. யாரும், எப்படிப்பட்டவரும் எந்த இழிவான காரியத்தைச் செய்யவும் பயப்படு வதில்லை. ஒழுக்கம், நேர்மை, நாணயம், அமைதி என்பது பெரும்பா லோரிடம் காண முடிவதில்லை. பொதுவில் பார்த்தால் நமது நாடுதான் இந்தியாவிலேயே பாதுகாப்பான நாடு என்று கருதத்தக்கதாய் இருந்து வருகிறது.

இதற்குக் காரணம் தி.மு.க., ஆட்சிதான் என்று உறுதியாய்க் கூறுகிறேன். எனவே, இதற்கு ஏதாவது மாற்றம் ஏற்படுமானால் அதை வேறு எந்த ஆட்சி வந்து மக்களை இன்றைய நிலைக்கு கேடில்லாமல் ஆள முடியும்? சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இந்த ஆட்சிக்கு மாற்றம் ஏற்படுமானால் - அடுத்துவர இருப்பது பார்ப்பன ஆட்சிதான்! அதாவது, வர்ணாசிரமத்தை நிலை நிறுத்தும் ஆட்சிதான்! இது உறுதி; உறுதியேயாகும்.

- தந்தை பெரியார் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் அறிக்கையில் (17.9.1970)



திராவிடன் ஏன்?

திராவிட என்ற வார்த்தை அலங்காரத்திற்காகச் சொல்வதில்லை. நம்முடைய தமிழகத்திலே பெரும் புலவர்கள், விற்பன்னர்கள், பேராசிரியர்கள் எல்லாம் கண்டுபிடித்த உண்மைகளிலே மிக முக்கியமான உண்மைதான் திராவிட என்கின்ற அந்த உணர்வு - நாம் தமிழர் என்று சொல்லிக் கொண்டாலும்கூட திராவிடன் என்று சொல்லிக் கொள்ளும்போது தான் பெரியார் அடிக்கடி சொல்வார் - உன்னைத் திராவிடன் என்று சொல்லிக் கொண்டால்தான் திராவிடன் வேறு, ஆரியன் வேறு என்ற அந்தப் பாகுபாடு தெரியும். ஆகவே நீ தமிழன் என்றாலும் கூட திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்பதை மறந்து விடாதே என்று பெரி யாரும் அண்ணாவும் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

(அதிமுக., மதிமுக., தேமுதிகவிலிருந்து திமுகவுக்கு வந்த தோழர்கள் மத்தியில் கலைஞர் ஆற்றிய உரையிலிருந்து முரசொலி 6.6.2010).

தமிழ் ஓவியா said...

திராவிட மொழி ஞாயிறு பாவாணர் பார்வையில் கலைஞர்


கரிகால் வளவனே திரும்ப நம் கருணாநிதியாராகப் பிறந்தானோ என்றுகூட நாம் நம்பும்படியாக இருக்கின்றது. அந்தக் கரிகால் வளவனும் காவிரி நாட்டிலேதான் பிறந்தான். இவரும் அந்த நாட்டிலேதான். அந்தப் பூம்புகாரை அவன் வளப்படுத்தினான். இவரும் இப்போது அதைப் புதுப்பித்து வருகின்றார்... அவன் இளமையிலே பகைவராலே இடர்பட்டுத் துன்பப்பட்டு அதிலிருந்து தப்பினான். அப்படியே இவரும் போன பொதுத் தேர்தலிலே (1971), எப்படியோ பகைவரிடத்தில் அகப்பட்டுத் தப்பினார்... அந்தக் காலத்திலேயே அவரைப் பற்றி ஏதாவது ஒரு புகைப்படமோ, பூச்சுப் படமோ இருந்திருந்தால், இந்த முகச்சாடைகூட ஒத்துப் போகுமோ என்றுகூட நாம் நினைக்கும்படியாக இருக்கிறது (பாவாணர் உரைகள் - பக் 82).

தமிழ் ஓவியா said...

ஏ சூத்திரா, பஞ்சமா - எட்டி நில் என்ற காலம் போய் விட்டது! கலைஞர்


எங்கே சூத்திரர்கள், திராவிடர்கள் - அவர்கள் தஸ்யூக்கள் என்று அழைக்கப்பட்ட மக்கள் நல்லாட்சி நடத்துகிறார் களோ அவர்களையெல் லாம், வீழ்த்தி விட்டு, அங்கே தாங்கள் வந்து அமர்ந்து கொள்ள ஒரு கதையை ஜோடிப் பார்கள். அந்தக் கதையை ஜோடித்து விட்டு அதற்கு ஒரு பண்டிகையின் பெயரை இடுவார்கள். அது போலத்தான் தமிழ் நாட்டிலே நடைபெறு கின்ற இந்தஆட்சி நான் மாவலி அல்ல- அவ்வளவு வலிமை பொருந்தியவன் அல்ல - மாவலி மரபின் ஆட்சி அவ்வளவுதான் - மாவலி மன்னனுடைய மரபு ஆட்சி. அந்த ஆட்சியில் ஒருவனாக நான் இருக்கிறேன் என் றால் என் தலைமையிலே இருக்கின்ற இந்த ஆட் சியை வீழ்த்த ஒழிக்க அகற்ற புறம் கூறி இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட என்னென்ன தில்லு முல்லுகள் உண்டோ, திருகு தாளங்கள் உண் டோ அவ்வளவையும் செய்துபார்க்க ஒரு கூட்டம் தயாராகியிருக் கின்றது. ஏனென்றால் அவர்கள் கையைவிட்டு அதிகாரம் போய், ஆட்சி போய் ஏ சூத்திரா, எட்டி நில்! ஏ, பஞ்சமா, பக்கத்திலே வராதே என்றெல்லாம் ஆணை யிட்ட அந்தக் காலம் போய் பல ஆண்டுகள் ஆகிறது. அதை மீண்டும் பெறுவதற்காக ஒரு கூட்டம் இன்றைக்கு முயற்சித்துக் கொண்டி ருக்கின்றது. அந்த முயற் சிக்கு அவர்களுக்குக் கிடைத்துள்ள சாதன மாக இருப்பது செய்திப் பத்திரிகைகள் - தொலைக்காட்சிகள் - இவைதான் அவர் களுக்குப் பக்கபலமாக இருக்கின்றன. பொய்ப் பிரச்சாரத்தைச் செய்தே இந்த ஆட்சியை வீழ்த்தி விட்டு, நாம் வந்து அமர்ந்து விடலாம் என்று கருதுகிறார்கள் என்றால், அது முடியுமா, நடக்குமா என்பதுதான் கேள்வி. ஆனால், அந்த முயற்சி இப்போது நடக்கிறது - அதை நாம் இப்போது அனுமதித்துக் கொண்டிருக்கிறோமே - இதனுடைய விளைவு களையும் நாம் அனுப வித்துத்தானே ஆக வேண்டும் என்ற அந்த நிலையை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண் டும்.

(3.2.2011 அன்று சைதை பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலைஞர்)

தமிழ் ஓவியா said...

கலைஞரைப் பாராட்டி அய்யா! தமிழர்களுக்குப் புதுவாழ்வு தந்தவர்!


கலைஞர் அவர்கள் நமக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு என்று சொல்ல வேண்டும். இதற்கு முன் ஆட்சியில் இருந்த கட்சிக்காரர்களைவிட பகுத்தறிவாளராவார். அவருக்குப் பிறந்தநாள் மலர் வெளியிடுவது அவரது கொள்கை களைப் பின்பற்ற வேண் டும் என்பதாகும். மனிதர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதாவது நம்பிக்கையாளர்கள் பகுத்தறிவாளர்கள் என்பதாகும். முன் னோர்கள் சொன்னது பழையகாலம் முதல் இருந்து வருவது என்பதற்காக எதையும் சிந்திக் காமல் கடவுள்-மதம்-ஜாதி-சாஸ்திரம் என்கிற பெயரால் பல மடைமை களைச் சிந்திக்காமல் ஏற்றுக்கொள்பவர்கள் நம்பிக்கையாளர்கள் ஆவார்கள். அறிவைக் கொண்டு ஆராய்ந்து அறிவிற்கும் ஏற்றதை ஏற்றுக்கொண்டு மற்றதை தள்ளிவிடக் கூடியவர்கள் பகுத்தறி வாளர்கள் ஆவார்கள். இதில் நம் நாட்டில் நம்பிக்கை யாளர்கள்தான் அதிகம். பகுத்தறிவாளர்கள் இருப்பது மிகமிகக் குறைவேயாகும்.

நமது கலைஞர் அவர்கள் தலை சிறந்த பகுத்தறிவுவாதி ஆவார்.

இத்தகைய பகுத்தறிவாளராகவும் ஆட்சிக் கலையில் உரிய ராஜதந்திரியாகவும், முன்யோசனை யுடனும் அவர் நடந்து வருவதின் மூலம் தமிழர்கட்கு புதுவாழ்வு தருபவர் ஆகிறார் நமது கலைஞர் அவர் பல்லாண்டு வாழ்ந்து அவர்பணி வெற்றியடைய வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

- தந்தை பெரியார்
(கலைஞர் 48வது பிறந்தநாள் மலர்

தமிழ் ஓவியா said...

கீதை + குறள்


அந்த உணர்வு இன்னமும்; இங்கேயும் இருக்கிறது என்ற தலைப்பில் 31.07.2002 அன்று நான் எழுதிய உடன்பிறப்புக்கு கடிதத்தில் மனித சமுதாயத்திலே கலப்பு ஏற்படக் கூடாது என்றும் அப்படி ஏற்படுவதால் தன்னுடைய ஆரிய இனம் வலுவிழந்து போய்விடும். ஆரிய கலாச்சாரம் பாதிக்கப்படும் என்றும் இட்லர் தன்னை அடை யாளம் காட்டிக் கொண்டிருப் பதையும் அதற்கான சான்று களையும் அவன் எழுதிய எனது போராட்டம் (மெய்ன் கேம்ப்) எனும் நூலில் இருந்தே எடுத்துக் காட்டியிருந்தேன்.

அதைப் படித்த பகலவன் என்ற மும்பை தோழர் ஒருவர் இட்லரின் இதே கருத்தைத்தான் பரமாத்மா கிருஷ்ணனும் பகவத்கீதையிலே வெளியிட்டிருக்கிறார் என்று எழுதியுள்ளார். அவர் அதற்காக எடுத்துக்காட்டியுள்ள பகவத் கீதையினுடைய ஆதாரம் வருமாறு:
பகவத் கீதை முதல் அத்தியாயத் தில் 43ஆவது சுலோகம்.

தோஷை - ரேதை: குலக்னானாம்

வர்ணஸங்கர - காரகை:

உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாச்ச சாச்வதா : ணி

இதன் தமிழாக்கம்: சாதிய வருணங்களி டையே கலப்பு ஏற்படு வது குலபாதகமாகும். கலப்பு எனப்படும் இத் தகைய தீமையால் நிரந் தரமாக உள்ள சாதி தர்மங்களும் மேன்மை யும் அழிந்து விடும் என்பது அதற்குப் பொருள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவத்தை நிலை நாட்டும் திருக்குறளுக் கும், நான்கு வருணங்களை நிலை நாட்டி அவற்றில் மேல் வருணம். கீழ் வருணம் என்றெல்லாம் பேசி அதற்கிடையே கலப்பு ஏற்படுவது அதர்மம் என்று போதிக்கின்ற கீதைக்கும் உள்ள வேறுபாட்டை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

எனவே, இளைய சமுதாயம் எதைப் பின்பற்றுவது? ஆண்டவன் உபதேசித்ததாகக் கூறப்படும் கீதையையா? அய்யன் வள்ளுவனின் குறளையா?

- கலைஞர், முரசொலி 05.08.2002

தமிழ் ஓவியா said...

கலைஞருக்குப் பட்டம்
29.4.1990 - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழாவில் - சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த புரட்சிக் கவிஞர் தொடர் விழாவில் முதல் வர் கலைஞருக்கு - மக ளிர் உரிமைகளுக் காகத் தொடர்ந்து சட்டங்களும், திட்டங் களும் நிறைவேற்றி வருவதற்காக மகளிர் உரிமை ஆட்சி மாண் பாளர் என கழக சார்பில் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர் களால் பட்டம் அளிக்கப் பட்டது. தமிழறிஞர்கள் பாராட்டப்பட்டார்கள். விலங்கு மாட்டப்பட்ட பெண் சிலை கழக மகளிரணியால் தரப்பட்டது. அச்சிலை யின் விலங்குகளை அகற்றி முதல்வர் கலை ஞர் அதைப் பெற்றுக் கொண்டார்.