Search This Blog

22.6.12

நேற்றிரவு ஷீலாவுடன் சந்தோஷமாக இருக்க எவ்வளவு பணம் கொடுத்தாய்?ஆபாச நச்சு விதை!


முரட்டு இந்துத்துவாவாதியான மோடி செய்வாரா?

காதலியிடம் காதலன்: உன்னைப் போன்ற அழகான பெண்ணை முத்தமிட நான் 5000 ரூபாய் கூட கொடுப்பேன்.

காதலி: அய்யோ, நேற்று இரவு மகேஷ் எனக்கு முத்தம் கொடுத்தான். ஆனால் பணம் ஏதும் தரவில்லையே!

கணவனிடம் மனைவி: நேற்றிரவு ஷீலாவுடன் சந்தோஷமாக இருக்க எவ்வளவு பணம் கொடுத்தாய்?

கணவன்: நூறு ரூபாய் கொடுத்தேன்.

மனைவி: அவமானம்! அவளது காதலன் என்னி டம் வரும்போது, அய்ம்பது ரூபாய் மட்டுமே கொடுத்தான்.

சென்சஸ்அதிகாரி ஒருவர் ஓர் வீட்டின் பெண் மணியிடம் கேட்கிறார்: உங்கள் கணவர் 9 ஆண்டுகளுக்கு முன் இறந்து போய்விட்ட போது, உங்களுக்கு எப்படி 5 வயதிலும் 3 வயதிலும் மகன்கள் உள்ளனர்?

நகைச்சுவைத் துணுக்குகள் என்ற கண்ணோட் டத்தில் பார்த்தாலும்கூட மேற்கண்டவை ரசிக்கத் தக்கவையல்ல - வெறுக்கத்தக்கவை. நகைச்சுவை என்ற மிக உயர்ந்த அம்சத்தைக் கொச்சைப்படுத் துவதாகும்.

எந்தப் பெண்ணும் இந்தத் தரங்கெட்ட வகையில் பேசவும் மாட்டார்; நடந்து கொள்ளவும் மாட்டார்.

இந்தநிலையில் பள்ளிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க எப்படித் தான் மனம் வந்ததோ?

சோ கூட்டம் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றதே - கொஞ்சுகின்றதே - அடுத்த பிரதமர் இவரை விட்டால் வேறு ஆள் யார்? என்று காற்றடித்து ஊதிப் பெருக்க வைக்கிறதே பார்ப்பன ஊடகங்கள் - அந்த மகத்தான குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரதாஸ் தாமோதரதாஸ் மோடியின் ஆட்சியில் தான் பள்ளிப் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.

இந்துத்துவாவாதிகளுக்கு இவைபற்றியெல்லாம் கவலை ஏது? இந்துத்துவா என்கிற போது அதன் மூலம் இந்து என்பதிலிருந்து தானே கிளைக்கிறது. அந்த இந்துவின் யோக்கியதைபற்றி அறிந்தவர்களுக்கு ஒரு பிஜேபி ஆட்சியில் இவ்வளவு ஆபாசமான பாடத் திட்டங்கள் அமைவதில் ஆச்சரியம் இருக்கவே முடியாது.

அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த நிலையில் சட்டப் பேரவையிலேயே சொன்னதைக் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம். நினைத்தபின் கொஞ்சம் அசைப் போட்டும் பார்க்க வேண்டும். அப்படி சிந்திக்கும் பொழுது ஆசா பாசத்துக்கு ஆட்படக் கூடாது; பக்தி என்னும் போதைக் கண்ணாடியையும் அணியக் கூடாது. அப்பொழுதுதான் எது ஒழுக்கம், எது ஒழுக்கக் கேடு என்பதும் புத்திக்கும் படும். இதோ அண்ணா பேசுகிறார்.

கண்ணன் தின்னும் பண்டம் எது? கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய் என்பதைக் கற்றுத் தர இப்படிப் போட்டிருக்கும். கைக்கெட்டாத பொருளை எவருக்கும் தெரியாமல் எப்படி எடுப்பது என்பதைச் சொல்லிக் கொடுக்கும் வகையில் இப்படம் இருக்கிறது. இப்படி நான் சொல்வதால் புராணம் கூடாது என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்தக் கருத்தை இங்கு சொல்லவில்லை. மாலை 6 மணிக்கு மேல் பொதுக் கூட்டத்தில் வைத்துக் கொள்கிறேன்.

பள்ளிக்கூடத்துக் கட்டடத்துக்குப் பக்கத்தில் உள்ள பிறர் வீட்டுத் தோட்டத்தில் காய்த்துத் தொங்குகிற மாங்கனியைப்பறிக்க சோனிப் பையன் ஒருவனைக் குனிய வைத்து மாங்காய் பறிக்கலாம் என்ற வழியை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதாக ஆகிறது. இந்தக் கருத்தை பகுத்தறிவு என்று எடுத்துக் கொண்டாலும் சரி, சுயமரியாதைக் கருத்து என்று எடுத்துக் கொண்டாலும் சரி, பயப்படாமல் உலக அறிவு என்று திருத்தி அமைத்தால் கல்வி அறிவும், தரமும் பெருகும்.

------------------முதலமைச்சர் அண்ணா கல்வி மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளிக்கையில் 23.3.1967இல் பேசிய பேச்சின் ஒருபகுதி இது.

பகுத்தறிவுக் கண்ணோட்டம் முக்கியம் - பகுத்தறிவு என்பது வெறும் தகவலைச் சேகரிப்பது அல்ல - மனித நேயத்தையும், ஒழுக்கத்தையும் அளிப்பதாகும். அதனைத்தான் தந்தை பெரியார் போதித்தார்.

குஜராத்தில் பிஞ்சு உள்ளத்தில் ஆபாச நச்சு விதைகளைத் தூவுவதற்குக் காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முரட்டு இந்துத்துவாவாதியான மோடி செய்வாரா? எங்கே பார்ப்போம்!

-------------------"விடுதலை” தலையங்கம் 22-6-2012

9 comments:

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவுமுன் மதம் மண்டியிட்டது


உலகம் உருண்டை அது தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது - சூரியனைச் சுற்றி வருகிறது என்று கண் டறிந்தான் விஞ்ஞானி கலிலி யோப் இது பைபிள் கருத்துக்கு விரோதம் என்று கூறி ரோமன் கத்தோலிச் சர்ச் விஞ்ஞானிக்கு வாழ்நாள் முழுவதும் வீட்டுக் காவல் தண்டனையை அளித்தது. அப்படி தண்டனை விதிக்கப்பட்ட நாள் தான் இன்று (1633) அந்தத் தண்டனை தவறு - கலிலியோ சொன்னது சரிதான் என்று, தவறுக்கு 359 ஆண்டுகளுக்குப்பின் அதே ரோமன் கத்தோ லிக்க சர்ச் வருத்தம் தெரிவித்துக் கொண்டது (1992).

தமிழ் ஓவியா said...

டெசோவின் தேவை அதிகமாகிறது : இந்தியாவை அவமதிக்கும் இலங்கை கலைஞர் சுட்டிக் காட்டுகிறார்



சென்னை, ஜூன் 22- இலங்கை அரசு இந்திய அரசை ஒரு பொருட்டாகவே கருத வில்லை என்பதை தி.மு.க. தலை வர் கலைஞர் சுட்டிக் காட்டி யுள்ளார். இதுகுறித்து இன்றைய முர சொலியில் அவர் எழுதி இருப்பதாவது:

கேள்வி:- இந்திய அரசையே இலங்கை அலட்சியப்படுத்துவ தாக செய்தி வந்திருக்கிறதே?

கலைஞர்:- இலங்கை மின்துறை அமைச்சர் ஒருவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதைப் பற்றி நான் நேற்றையதினம் பிரதமருக்கு விளக்கமாக கடிதம் எழுதியி ருந்தேன். அதைத் தொடர்ந்து இன்றையதினம் தினமணி நாளிதழில் வெளிவந்துள்ள கருத்து மேலும் நம்மை அதிர்ச் சியில் ஆழ்த்தும் விதமாக உள் ளது. அதில், சமீபகாலமாக இந்திய அரசையே அலட்சியப் படுத்துகிறது இலங்கை அரசு. இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங் களை ரத்து செய் யவும், கொடுத்த வாக்குறுதி களைக் காலில் போட்டு மிதிக் கவும் தயாராகி வருகிறது. அத் துடன் சீனாவுடன் கொஞ்சிக் குலாவத் தொடங்கிவிட்டது.

இலங்கையின் எந்தவொரு வளர்ச்சித் திட்டமாக இருந்தா லும், அது சீனாவுக்கே தரப் படுகிறது. சாம்பூர் என்ற இடத் தில் இந்தியா நிறுவி வரும் மின் உற்பத்தி நிலையம் போன் றவற்றை சீர்குலைக்கும் வகை யிலேயே அரசின் நடவடிக் கைகள் அமைந்து வருகின்றன. இந்த திட்டம் குறித்து 2006 முதலே பேசி வருகின்றனர். ஆனால் இன்னமும் இதை அமல்படுத்த வழி ஏற்படவில்லை.

இந்தத் திட்டம் தொடர்பாக ஏற்கனவே பேசி முடிக்கப்பட்ட அம்சங்கள் தொடர்பாகக்கூட, இலங்கையின் தலைமை அரசு வழக்கறிஞர் ஏதாவது சந்தே கங்களைக் கிளப்பிக் கொண்டே இருக்கிறார்.

போர் படிப்பினை, நல்லி ணக்கக்குழு அளித்த அறிக்கை களை அமல் செய்வது தொடர் பான தகவல்களைக்கூட அமெ ரிக்க அரசுக்குத்தான் இலங்கை அரசு தெரிவிக்கிறது. இந்தி யாவுக்கு அதுகுறித்து எதையும் தெரிவிப்பதில்லை.

இலங்கையின் வடக்கில் தமிழர் வசிப்பிடங் களில் அள வுக்கு அதிகமாக ராணுவ வீரர் களைத் தங்க வைத்து, சிவிலி யன்களை அச்சுறுத்தக் கூடாது, ராணுவத்தினரை வெளி யேற்ற வேண்டும் என்று ஒப்புக் கொள் ளப்பட்ட விஷயத்திலும் இலங்கை அரசு வேண்டுமென்றே மெத் தனம் காட்டுகிறது.

அத்துடன்அதுகுறித்து இந்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைப்போல நடந்து கொள்கிறது. ராணுவத்தினரின் எண்ணிக்கையும் குறைய வில்லை. சிவிலியன் நிர்வாகத் தில் ராணுவத்தினரின் ஆதிக்க மும் குறையவில்லை.

தமிழர்களுடைய வீடுகளை யும், நிலங்களையும் ராணுவம் தன்வசம் எடுத்துக் கொள்வது வேகமாகவும் அதிக அளவிலும் நடக்கிறது. பற்றி எரியும் பிரச் சினையாக இது உருவெடுத்து வருகிறது. இந்திய அரசு இனி யும் இதை கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டு வருகிறது என்று விரிவாக கூறப்பட்டுள் ளது. இந்தச் செய்தியை இந்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதோடு, இந்திய அரசு இதற்குப் பிறகும் அலட்சியமாக இல்லாமல் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அதிக அளவிற்கு அக்கறை காட்டிட வேண்டு மென்று வலியுறுத்துகிறேன். 22-6-2012

தமிழ் ஓவியா said...

இலங்கை அமைச்சரின் பேச்சு: டெசோ மாநாட்டில் அறிவிப்பு கலைஞர் பேட்டி



சென்னை, ஜூன் 22- தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் நேற்று (21.6.2012) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

செய்தியாளர்: இலங்கை அமைச்சர் ஒருவர் பேசியதைக் கண்டித்து பிரதம ருக்கு நேற்று நீங்கள் கடிதம் எழுதியிருக்கிறீர்கள். அதற்காக தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளதா?

கலைஞர்: நாங்கள் இப்போதுதான் டெசோ ஆரம்பித்திருக்கிறோம். அதன் சார்பில் மாநாடு நடைபெறவுள்ளது. டெசா மாநாட்டில் இதைப்பற்றிய கருத்துக்கள் எல்லாம் பேசப்படும் என்று கலைஞர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

இந்தியாவின் மதச் சார்பின்மைக்கு அச்சுறுத்தல்! இந்துத்துவவாதி இந்தியாவின் பிரதமரா? ஆர்.எஸ்.எஸ். பாம்பு நஞ்சு கக்குகிறது



புதுடில்லி, ஜூன் 21 - ஓர் இந்துத்துவவாதி இந்தியா வின் பிரதமராக வரவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத் கூறியுள்ளார். இது இந்திய அரச மைப்புச் சட்டத்தின் மதச் சார் பின்மைக்கு பெரும் அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது. லத்தூரில் நடைபெற்ற ஒரு ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பேசும் போது, மோகன் பகத், தேசிய ஜன நாயகக் கூட்டணியின் பிரதமர் வேட் பாளர் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும் என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார். இது அரசியல் சந்தர்ப்ப வாதத்தையே காட்டுகிறது. தனது வாக்கு வங்கியை இழந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் இது போல அறிவித்திருக்கிறார் என்று கூறினார்.

இந்து கோட்பாட்டுக்கு ஆதர வாக இருக்கும் ஒருவர் ஏன் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அக்கூட்டத்தில் மோகன்பகத் கேட்டுள்ளார்.

மோகன்பகத்தின் பேச்சைத் தொடர்ந்து அய்க்கிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் சிவானந்த திவாரி, ஒரு தீவிர இந்துத்துவ வாதியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்திக் காட்டுவது எங்கள் கட்சிக்கு ஏற்புடைய தல்ல. எங்கள் மாநில அரசு நிலைக்குமா அல்லது நமது கூட்டணி நிலைக்குமா என்பது பற்றி எங்களுக்குக் கவலையில்லை என்று கூறியுள்ளார்.

2004 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு குஜராத் கலவரங்களே காரணம் என்று திவாரி குற்றம் சாட்டும் நிலையில், அவரது பேச்சு பா.ஜ.க. அய்க்கிய ஜனதா தளக் கட்சிகளுக்கிடையேயான கூட்டணி ஆட்டம் கண்டுள்ள தாக தெரிகிறது.

இரு பக்கங்களிலும் கடுமையான சொற்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் முயற்சிகள் மேற் கொள்ளப் பட்ட போதிலும், இரு கட்சிகளுக் கிடையேயான உறவு பதற்றம் நிறைந் ததாகவே இருக்கிறது.

இந்தக் கருத்து வேறுபாடே தேவையற்றது. யார் மதச்சார்புடை யவர் - யார் மதச்சார்பற்றவர் என்று ஆணையிடும் உரிமை எவருக்கும் இல்லை. மக்கள் தங்களுக்கென்று தனி கருத்துகளைக் கொண்டுள் ளனர் என்று பா.ஜ.க. மாநிலங் களவை உறுப்பினர் பல்பீர் பூஞ்ச் கூறினார்.

மோகன்பகத்தின் பேச்சை மென் மையானதாக ஆக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளரான ராம் மாதவ், இந்துத்துவக் கோட்பாட்டை மதச்சார்பின்மைக்கு எதிரானதாகக் காட்டுவது சரியானது அல்ல என்ப துடன் குறுகிய நோக்கம் கொண்டது மாகும். இந்துத்துவாதான் மதச் சார்பின்மைக்கு ஒரு உண்மையான எடுத்துக்காட்டு என்று கூறி யுள்ளார்! ஆனால் மாதவின் பேச்சு பகத்தின் பேச்சை விடக் கடுமை யானதாக இருக்கிறது. இந்துத்துவா தான் மதச்சார்பின்மைக்கு உண்மை யான எடுத்துக்காட்டாம்! எப்படியி ருக்கிறது அவரது கூற்று!

மொத்தத்தில் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்துத் துவக் கோட்பாட்டை முன்வைத்தே பா.ஜ.க. போட்டியிடப்போகிறது என்பது மட்டும் தெளிவாகிறது. ஆனால் இதற்குத் தேசிய ஜன நாயகக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எவ்வாறு உடன்படப் போகின்றனவா என்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும் 22-6-2012

தமிழ் ஓவியா said...

கொலை முயற்சி வழக்கு ஜெயேந்திரருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும்! நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் சாட்சியம்

சென்னை, ஜூன் 22- கொலை முயற்சி வழக்கில் ஜெயேந் திரருக்கு அதிகபட்ச தண்டனையை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் சாட்சி கூறினார்.

சென்னை மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு சென்னை முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கில் ராதா கிருஷ்ணன் 5 நாட்களாக அரசுத் தரப்பில் சாட்சியம்அளித்து வருகிறார்.

இந்த நிலையில், நீதிபதி கே.தட்சணாமூர்த்தி முன்பு நேற்றுவழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டரகு, கதிரவன், மீனாட்சிசுந்தரம், லட்சுமணன், பூமிநாதன், அப்ரூவர் ரவிசுப்பிரமணியம் ஆகியோர் ஆஜரா கினர். ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், அப்பு, ஆனந்தகுமார், கண்ணன், சின்னகுமார் ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில்மனு தாக்கல் செய்யப்பட்டது. ராதாகிருஷ்ணன் 5ஆவது நாளாக நேற்றும் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், `என்னை வீடு புகுந்துதாக்கியவர்களை சென்னை மத்திய சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பின்போது, அடையாளம் காட்டினேன். என்னையும் என் மனைவி, வேலைக் காரரையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ய முயன்றவர்களுக்கும், இந்தவழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கும் அதிகபட்ச தண்டனையை இந்த நீதிமன்றம் வழங்கவேண்டும்` என்றுகுறிப்பிட்டார்.

இதன்பின்னர் ஜெயேந்திரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் வி.கிருஷ்ணகுமார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், `நீதிமன்றத்தில் அளிக்கும் சாட்சியங்களின் விபரங்களை வெளியில் சென்று தொலைக்காட்சிகளுக்கு ராதாகிருஷ் ணன் பேட்டியளிக்கிறார். இதனால் அந்த தொலைக்காட்சி களில் ஒரு தரப்புவிளக்கங்கள் மட்டும் ஒளிப்பரப்பாகின்றன. பதிலுக்கு எங்களால் விளக்கம் அளிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. எனவே தொலைக்காட்சி சேனல் களுக்குபேட்டியளிக்க ராதா கிருஷ்ணனுக்கு தடை விதிக்க வேண்டும்`என்று கூறியிருந்தார்.
இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞர் விஜயராஜூக்கு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஜூன் 29ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அன்று அப்ரூவர் ரவிசுப்பிரமணியம் சாட்சியம் அளிக்க வேண்டும் என்று அழைப்பாணைஅனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார். 22-6-2012

தமிழ் ஓவியா said...

கொள்ளையனின் அருள்வாக்கு கடவுள் உங்களைக் காப்பாற்றுவார்


கும்பகோணத்தில் உள்ள சாமிநாதன் நகரைச் சேர்ந்தவர் சடகோபன். இவர் அங்குள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். இதை அறிந்த யாரோ அன்று இரவு பேராசிரியரின் வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவுக்குள் இருந்த நகை - பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

மறுநாள் காலை சடகோபன் வீட்டு வாசலை பெருக்கி கோலம் போடுவதற் காக வந்த பெண், பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பது கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து சடகோபனின் உறவினரான வெங்கடாசலத்திடம் கூறினார். அவர் உடனடியாக சடகோபனுக்கு போனில் தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும் சடகோபன் விரைந்து வந்தார். பீரோவில் இருந்த 59 பவுன் நகைகள், 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் கைக் கடிகாரம் கொள்ளை போனதாக கூறினார். கொள்ளை போன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.2.50 லட்சம். இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு கொள்ளையர்கள் எழுதி வைத்து விட்டுச் சென்ற ஒரு மன்னிப்புக் கடிதம் சிக்கியது. அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது:- நகை, பணம் கொள்ளை போனதற்காக வீட்டுக்காரர்கள் வருத்தப்பட வேண்டாம். எனது வறுமை காரணமாகத் தான் திருட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக பொருள்கள் கிடைத்து விட்டன. மிக்க மகிழ்ச்சி. உங்களை கடவுள் பார்த்துக் கொள்வார். மேற்கண்டவாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களைத் தேடி வருகிறார்கள். நன்றி: மாலை மலர், 17.12.2002

தமிழ் ஓவியா said...

கேப்டனிடம்ஒருகேள்வி!


- சிவகாசி மணியம்

சட்டசபைக்கு விஜய்காந்தை வரச்சொல் என்கிறார்கள். நான் வந்தால் பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டணத்தைக் குறைத்துவிடப் போகிறார்களா? மேலே இருக்கிற ஆண்டவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான் இப்படிச் சொன்னவர் கவுண்டமணியோ, செந்திலோ, விவேக்கோ, வடிவேலோ அல்ல.

வெள்ளித் திரையில் கொடிய வர்களைப் புரட்டி எடுக்கும் ஹீரோ கேப்டன் விஜய்காந்த்தான்! 18-.5.-2012 தினமலர் மதுரை பதிப்பு நாளிதழ் கட் டம் கட்டி செய்தியை வெளியிட் டிருக்கிறது.

கானல் வெளியை நீர் என நம்பிக் காலம் தள்ளும் பேதமை, ஒரு கட்சியின் தலைவரைப் பற்றிக் கொண்டு பாடாய்ப் படுத்துவதை பகுத்தறிவாளர் களால் எத்தனை நாளைக்குத்தான் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? சகித்துக் கொள்ள முடியும்?
முதன் முதலில் தேர்தல் களத்தில் இவர் குதித்தபோது எனக்கும் கடவுளுக்கும்தான் கூட்டு என்று சொல்லி நகைச்சுவை விருந்தளித்தார்.

எந்தெந்த தொகுதிகளை இவரும் கடவுளும் பங்கிட்டுக் கொண்டார்கள் என்ற விவரம் அறிவிக்கப்படாமலே அந்தத் தேர்தல் நடந்து முடிந்தது. விருத்தாசலம் தொகுதியில் இவர் மட்டுமே வெற்றி என்ற செய்தி வந்தது. கடவுளின் கூட்டணி அன்றோடு கரைந்து போனது.

இன்று நாள்தோறும், எல்லா மாவட்டங்களிலும் காய்ச்சலால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் செத்துக் கொண்டிருக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. டெங்கு, டைபாய்டு, மலேரியா, பறவை, பன்றி என காய்ச்சலில்தான் எத்தனை வகை! இவற்றை அழித்து ஒழிக்க அறிவியலும், மருத்துவமும்தான் போராடிக் கொண்டிருக்கின்றன.

மேலே இருப்பவனால் வேடிக்கை பார்க்கத்தான் முடியும் போலும்! கடவுள் நம்பிக் கையில், ஜோதிட நம்பிக்கையில் விஜயகாந்துக்குச் சற்றும் சளைத்தவர் அல்ல மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா! நேரில் வந்து உதவத்தான் யோக்கியதை இல்லை. முதல்வரின் கனவில் தோன்றியாவது கட்டணங் களை உயர்த்தக் கூடாது என்று சொல்லி தடுத்து நிறுத்தியிருக்கலாமே கடவுள். ஏன் செய்யவில்லை?

கேப்டன் அவர்களே, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டேயாக வேண்டும். உங்கள் பார்வையில் அடல்ஸ்ஒன்லி கேள்வியாகக் கூட அது இருக்கலாம். மன்னித்துவிடுங்கள். இதோ கேள்வி:

மேலே இருந்து இங்கே நடப் பதையெல்லாம் ஒருவன் பார்த்துக் கொண்டிருக்க நாம் அனுமதிக்கலாமா? அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? இதனால் நம்முடைய சுதந்திரமும் ஆளுமையும், உரிமையும் கேள்விக் குறி ஆகாதா? பட்டப் பகலில் பகிரங்கமாக நடப்பவைகளை மட்டும்தான் பகவானால் பார்க்க முடியுமா?

அர்த்த ராத்திரியில் அடைக்கப்பட்ட நம் வீடுகளில், தாழிடப்பட்ட படுக்கை அறைகளில் நிகழும் அந்தரங்கங் களையும் கண்டுகளிக்க அவனால் முடியுமா? விளக்குகள் அணைக்கப் படுகிறதே முன் எச்சரிக்கையினாலா? இறைவனது பார்வைக்குப் பயந்துதான் இப்படி நடக்கிறதா? இருட்டறையில் உள்ள உலகத்தைப் பார்க்க அவனால் முடியாது என்றால் எல்லாம் வல்லவன் என்பது வடிகட்டிய பொய்தானே?

உண்மையில் நீங்கள் ஓர் மனித நேயர் என்றால் தந்தை பெரியார் காட்டிய வழிக்குத்தான் வந்திருப்பீர்கள். மனிதனை முழுமனதோடு நினைக்க, நேசிக்க வேண்டுமானால், கடவுளை நீக்கியாக வேண்டும்.

அதைத்தான் கடவுளை மற; மனிதனை நினை என்று நமக்குக் கற்றுத் தந்தார் பகுத்தறிவுப் பகலவன் நம் பெரியார். 23-6-2012

தமிழ் ஓவியா said...

சோ அவர்களே! சோடி போட்டுக்குவோமா சோடி?


கேலிச் சித்திரத்தை கேலிச் சித்திரமாகப் பார்க்க வேண்டும்; கோலிக் குண்டை கோலிக் குண்டாகப் பார்க்க வேண்டும்! என்றெல்லாம் கருத்துச் சுதந்திர வியாக் யானம் பேசுகிறார்கள் சோ கும்பலும் அறிவு ஜீவிகளும்!

அம்பேத்கரை இழிவுபடுத்தியும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை இழிவுபடுத்தியும் வெளிவந்த கார்ட்டூன்களுக்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியிருக்கும் சூழலில் தான் இவர்களுக்கு கருத்துச் சுதந்திரமும், சகிப்புத் தன்மையும் நினைவுக்கு வரும்!

கேலிச் சித்திரத்துக்கெல்லாம் கொந்தளித்திருந்தால் துக்ளக், தினமலர் உள்ளிட்ட உள்ளூர் ஏடுகள் முதல் இந்திய தேசிய ஏடுகள் வரை இவற்றின் அலுவலகங்கள் எல்லாம் செங்கல் செங்கலாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போதைய பிரச்சினை கேலிச் சித்திரம் பற்றியதல்ல! அதைப் பாடப் புத்தகங்களில் சேர்ப்பது பற்றித்தான்.

எவ்வித வாய்ப்பும் இன்றி வரலாற்றை வரலாறாகத் தர வேண்டிய பாட நூல்களில் பார்ப்பனிய விஷம் குழந்தைகளுக்கு ஊட்டப்படுவதைக் கண்டித்துத் தான் இன்று நாடு முழுக்கக் குரல் எழுகிறது. நாமும் வேண்டுமானால் நமது தமிழ்நாட்டுப் பாட நூலில் கேலிச் சித்திரங்களை இடம் பெறச் செய்வோம்.

இதோ மணவை திருமலைச்சாமி நடத்திய நகர தூதனில் 1937 டிசம்பரில் வெளிவந்த கேலிச் சித்திரம்; இதை தமிழ்நாட்டு வரலாற்றுப் பாடத்தில் வெளியிட்டால் பூணூலை இறுக்கிக் கட்டிக் கொண்டிருப்பாரா சோ? குல்லுகப்பட்டருக்காக குதிகால் தரையில் படாமல் அல்லவா குதிப்பார்! வெளியிட்டுப் பார்ப்போமா?

- ஈரோட்டுக் கண்ணாடி

விஸ்வேஸ்வரன் said...

I like this blog expressing and explaining the views of Thanthai Periyar. While his views must be propgated to all Tamils, It must be linked with existing litarature. I talk about Thirukkural.
Thirukkural is corrupted by parimemazakar. His misinterpretation has given an impression that kural supports Aryan views.Not at all.
இம்மை must be interpreted as 'the present time'
மறுமை must be interpreted as 'future'
பழமை must be 'The past'

There are a lot of such reinterpretations are needed.

I have attempted at them in my blogs

www.tamilinkural.blogspot.in
www.philosophyofkuralta.blogspot.in

I request you to go through the interpretation of chapter 1 and the artilce in the second blog
H.V.VISWESWARAN