Search This Blog

6.6.12

ஞானசூன்யமா இந்த ஜெகத்குரு?ஜெயேந்திர சரஸ்வதி

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் என்று கூறப்படும் ஜெயேந்திர சரஸ்வதி என்பார் கொலைக் குற்றத்தின் கீழ் பிணையில் நடமாடும் பேர் வழி.

கிரிமினல் குற்றத்தின்கீழ் 61 நாள்கள் சிறையில் கம்பி எண்ணி விட்டு வந்துள் ளோமே என்கிற வெட்கம் சிறிதும் இல்லாத ஆசாமி இவர்!
அது ஒருபுறம் இருக்கட்டும்; ஆன்மீக சம்பந்தப்பட்ட விஷயங்களிலாவது ஞானம் உண்டா என்று கேட்டால் அதிலும் சைபர்தான்!

காஞ்சி மடத்தின் பிரதான ஆதரவோடு நடைபெற்றுவரும் காமகோடி மே மாத இதழில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

கேள்வி: ஆஸ்திகம், நாஸ்திகம் பற்றி ஸ்வாமிகளின் விளக்கம் என்ன? உண்மை யான ஆஸ்திகன் எப்படி இருக்கவேண்டும்?

ஜெயேந்திர சரஸ்வதி பதில்: நாஸ்திகம் என்று சொல்லும்போதே அது ஆஸ்திகத்தின் எதிர்மறையானது என்பது புரியும். கடவுள், கர்ம சித்தாந்தம், பாவ புண்ணியங்கள் இவைகளை ஏற்றுக் கொண்டவர்கள் ஆஸ்திகர்கள்; இவைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாஸ்திகர்கள்; உண்மையான ஆஸ்திகர் அனுஷ்டானங்களையும், கர்மாக்களையும் விடாமல் செய்வர் என்று ஜெயேந் திரர் கூறியுள்ளார்.

இவர் இப்படி சொல்ல, இவரின் குருநாத ரான மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஆஸ்திகம், நாஸ்திகம் என்பதற்கு என்ன விளக்கம் சொல்லுகிறார்?

இதோ அவரின் தெய்வத்தின் குரல் பேசுகிறது. (இரண்டாம் தொகுதி பக்கம் 407-408).

நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீஸ்வரவாதம் என்று தானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இது தப்பு. ஸ்வாமி யில்லை என்று சொல்லிக் கொண்டேகூட ஆஸ்திகர்களாக இருக்க முடியும்.

அப்படிப்பட்ட பல பேர் இருக்கின்றார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம்.

வைதிக வழக்கை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே ஞான சம்பந்தரின் கொள்கையாகவும் இருந்திருக்கிறது. ஈசுவர பக்தி இல்லாமலிருப்பதால் கூட அல்ல... என்று கூறுகிறாரே!

இதில் யார் சொல்லுவது உண்மை?

கடவுள் நம்பிக்கை இல்லாமலிருப்பதுதான் நாஸ்திகம் என்கிறார் ஜெயேந்திர சரஸ்வதி.

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் வேதத்தை நம்பினால் அவர் ஆஸ்திகர் தான்.

நாஸ்திகர் என்பது கடவுளை மறுப்பதல்ல. வேதத்தை மறுப்பதுதான் என்கிறார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி? எது உண்மை?

ஜெயேந்திர சரஸ்வதி கூறுவதுதான் தவறு - அவருக்குத் தெரிந்ததெல்லாம் காமாந்தகார சமாச்சாரங்கள்தாம் - விட்டால் அதுபற்றி மனுஷன் மணிக்கணக்கில் பேசுவார். மாமிகளிடம் செல்போன்களில் பேசவே அவருக்கு நேரம் போதவில்லை; அப்படி இருக்கும்போது சாஸ்திரத்தைப் படிக்க அவருக்கு நேரம் ஏது?

இந்து மத சாஸ்திரங்கள் என்ன கூறுகின்றன? குறிப்பாக இந்து மதத்தின் மனுதர்ம சாஸ்திரம் என்ன சொல்லுகிறது?

வேதம் (சுருதி) தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகனாகின்றான் (மனுதர்மம்: அத்தியாம் 2 சுலோகம் 11)

கடவுளை மறுத்தாலும் பரவாயில்லை வேதத்தை ஏன் மறுக்கக் கூடாதாம்?

அங்கேதான் இருக்கிறது தங்கமலை இரகசியம்! வேதம்தான் நான்கு வருணாசிரம தர்மத்தை வலியுறுத்துகிறது. அந்த வர்ணா சிரமம் நிலைத்தால்தான் பார்ப்பான் பிராமணர் ஆகிறான்; பிர்மாவின் முகத்தில் பிறந்தவன் ஆகிறான்.

அதன் காரணமாக பிராமணனுக்கு என்ன லாபம்?

இதோ அதே மனுதர்ம சாஸ்திரம்தான் கூறுகின்றது!

பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும், பிரம்மாவின் உயர்ந்த இடத்தில் (முகத்தில்) பிறந்ததனாலும் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான்
(மனுதர்மம்: அத்தியாயம் - 1 சுலோகம் 100)

இந்த வசதியும், வாய்ப்பும் வேதத்தில் இருப்பதால் கடவுளைவிட பார்ப்பனர்களுக்கு வேதம்தான் அவசியமாகிறது.

திராவிடர் கழகம் மனுதர்ம சாஸ்திரத்தை ஏன் கொளுத்தியது என்பது இப்பொழுது புரிகிறதா?


இன்னொன்றும் முக்கியம்.

சங்கராச்சாரியாருக்குள்ளேயே ஒரு முக்கிய விஷயத்தில் முரண்பாடு! ஞான சூன்யங்கள்தான் அவாளுக்கு லோகக் குருவோ!

-----------------------"விடுதலை” 6-6-2012

15 comments:

தமிழ் ஓவியா said...

மீண்டும் நுழைவுத் தேர்வா? தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்!


தமிழர் தலைவர் விடுத்துள்ள மிக முக்கிய அறிக்கைஇந்தியா முழுவதற்கும் ஒரே கல்விக் கொள்கை, ஒரே நுழைவுத் தேர்வு என்பது போன்ற கூட்டாட்சித் தத்துவத்திற்கே உலை வைக்கும் திட்டத்தை மத்திய மனித வள அமைச்சகம் செய்வதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

கல்வி என்பது முன்பு மாநிலப் பட்டியலில் (State List) அரசியல் சட்டக் கர்த்தாக்களால் வைக்கப் பட்டது - நீண்ட ஆலோசனைக்குப் பிறகு.

ஆனால், எந்தவித கலந்தாலோசனைக்கும் இடம்தராது, நெருக்கடிகால நிலை அமுலில் இருந்தபோது, 1976 இல், இது திடீரென்று நாடாளுமன்றத்திலோ, மாநிலங்கள் கருத் தறிந்தோ - இது ஏதும் நடைபெறாமல், அது பொதுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப் பட்டது.

உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்பட்ட பிறகும்...

இப்போது இந்தியா முழுவதற்கும் ஒரே கல்விக் கொள்கை, ஒரே நுழைவுத் தேர்வு என்பது போன்ற கூட்டாட்சித் தத்துவத்திற்கே உலை வைக்கும் திட்டத்தை மத்திய மனித வள அமைச்சகம் செய்வது தவறான நிலைப்பாடாகும். மறைமுகமாக மாநிலப் பட்டியலை மத்தியப் பட்டியலுக்குக் கொண்டுவரும் மகாசூழ்ச்சியாகும்.

ஏற்கெனவே தமிழ்நாடு அரசு - தி.மு.க. அரசு எதிர்த்து அதை ஒழித்து தனி ஏற்பாட்டினை சட்ட ரீதியாக செய்தும், அது உச்சநீதிமன்றத்தால்கூட ஏற்கப்பட்டது.

கபில்சிபலின் பிடிவாதம்

இப்போது கபில்சிபல் பிடிவாதமாக இதை அறிவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. நுழைவுத் தேர்வை ரத்து செய்வதன் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்; கிராமப்புற மாணவர் களுக்கும், ஏழை, எளிய மாணவர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன!

மீண்டும் இந்த ஏற்பாட்டின்மூலம் ஒருவகை பன்முக கலாச்சாரம், மொழி, கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றம் இவைகளுக்கு ஆப்பு அடிக்கப்படுகிறது!

தமிழக முதலமைச்சரும் எதிர்த்துள்ளார்

இதனை முழு மூச்சாக எதிர்த்து தடுத்து நிறுத்தவேண்டியது - கட்சி வேறுபாடுகளைத் தாண்டிய முக்கிய கடமையாகும்!

தமிழ்நாடு அரசுக்கும் இதில் முக்கிய கடமை உள்ளது. முதலமைச்சர் அவர்களும் இந்த நுழைவுத் தேர்வு ஏற்பாட்டை எதிர்த்துள்ளார் எனினும், இப்போது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.

எனவே, உடனடியாக அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும், கல்வியாளர்களும் இந்தப் பிரச்சினை - தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கும் இந்த ஏற்பாட்டினை - கையில் எடுத்து, தங்களது பலத்த எதிர்ப்பைக் காட்டி, இந்தப் புதிய சதித் திட்டத்தை ஒழிக்க முன்வரவேண்டும்!

திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

இதைக் கண்டித்து வருகிற 12.6.2012 செவ்வாய் அன்று மாவட்டத் தலைநகரங் களில் திராவிடர் மாணவர்கள், இளைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.

ஒத்த கருத்துள்ளவர்களும் இதில் இணைந்து கொள்ளலாம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம். 6-6-2012

தமிழ் ஓவியா said...

விடுதலை விடுதலை!

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (5.6.2012) பல முக்கியமான தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக, திராவிடர் இனத்தின் வாளும் கேடயமுமான விடுதலையை மய்யப்படுத்தியுள்ள தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பேராசான் தந்தை பெரியார் அவர்களின் படைக் கலனாக இருந்து பகைவர்களைப் பந்தாடியிருக் கிறது!

காலம் காலமாக நம்மினத்தை தலையெடுக்க வொட்டாமல் அழுத்தி வந்த சனாதன - வைதீகக் காடுகளின் ஆணி வேர்களை அழித்து முடித்ததில் விடுதலையின் பங்களிப்பு அசாதாரணமானது!

ஜாதி ஒழிப்புக் களத்தில் - மூட நம்பிக்கை ஒழிப்புப் போரில், சமூகநீதித் தளத்தில் விடுதலை என்னும் விவேகமிக்க வீரன் வென்று குவித்தவை காலாகாலத்துக்கும் நின்று புகழ்ப் பரணி பாடக் கூடியவை!

ஆம், விடுதலையால் நாம் வாழ்வு பெற்றோம் என்ற எண்ணம் நம் மக்களில் எத்தனைப் பேருக் குத் தெரியும்? என்ற கேள்விக்குக் கிடைக்கும் விடை வேதனைக்கு உரியதாக இருக்கலாம்.

நன்றி என்பது பலன் பெற்றவர்கள் காட்ட வேண்டிய உணர்வே தவிர, அதற்குக் காரணமான வர்கள் எதிர்பார்ப்பது சிறுமைக் குணம் என்பார் தந்தை பெரியார்.

இன்றைய சூழலில் மதவாதம் தொடை தட்டி நிற்கிறது ஒரு பக்கம்! பெண்கள் மீதான வன் கொடுமைகளும் ஒழிந்தபாடில்லை.

ஊடகங்களின் போக்கோ வெட்கப்படத்தக்க தாகவே உள்ளன. சீரழிவுக் கலாச்சாரம் என்ற நோய் இளைஞர்களை விரட்டி விரட்டித் தொற்றுகிறது!

எல்லா வகையான சீரழிவுகளிலிருந்தும் இச் சமூகத்தை மீட்டெடுக்க தந்தை பெரியார் அவர் களின் சிந்தனை ஒளி கண்டிப்பாகத் தேவைப் படுகிறது.

அந்தச் சிந்தனை ஒளியைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டு செல்லும் பெரும் பணியை விடுதலை தான் செய்து கொண்டிருக்கிறது.

எனவே, அந்த விடுதலையை வீட்டுக்கு வீடு கொண்டு சேர்க்கும் பொறுப்பை - கடமையை திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு அழுத்த மாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

விடுதலையை வார ஏடாக நடத்தலாம் என்ற நிலைக்குத் தந்தை பெரியார் தள்ளப்பட்டபோது, வாராது வந்த மாமணியாய், அதனைத் தடுத்தாட் கொண்டு, ஆசிரியர் பொறுப்பை ஏற்று, அரை நூற்றாண்டுக்காலம் ஒருவர் தொய்வில்லாமல் தொடர்ந்து ஈடுபட்டார் - ஈடில்லாமல் உழைத்தார் ஒருவர் என்பதற்கு - எடுத்துக்காட்டிப் பேச இதுவரை ஒருவரும் பிறக்கவில்லை! அத்தகைய சாதனைக்குரிய அரும்பெரும் தலைவர்தான் நமது ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

ஒருக்கால் அவருடைய அளவிறந்த அடக்க உணர்வு - அவருடைய பெரும் பணியின் வீச்சு வெளியில் தெரிவதற்குத் தடையாக இருக்கலாம் - அதுவேறு விடயம்!

அதேநேரத்தில், அரை நூற்றாண்டு ஆசிரியர் பணி என்பது மிகப்பெரிய வரலாற்றுக்குறிப் பல்லவா! அதனைப் பயன்படுத்தி விடுதலை விடுதலை என்ற தமிழர் இல்லத்தின் முகவரியை வீட்டுக்கு வீடு கொண்டு சேர்த்தே தீரவேண்டும்.

விடுதலை விற்பனையைக் கருதி அல்ல - தமிழர் தம் உரிமை வாழ்வுக்காக!

மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு என்று தந்தை பெரியார் அவர்கள் திருவள்ளுவரைவிட சுருக்கமாகச் சொல்லி இருக்கிறாரே! (திருக் குறளில் ஏழு சீர்கள் உண்டு; ஆனால், தந்தை பெரியார் தெரிவித்த இந்தக் கருத்தில் நான்கே சீர்கள்தான் உள்ளன).

அந்த நிலையை உருவாக்க விடுதலை பரப்பும் பணியை - தமிழர் தலைவரின் அரைநூற்றாண்டு விடுதலைப் பணி என்னும் வரலாற்று நாளைப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் அல்லவா!

தோழர்களே அணியமாவீர்!6-6-2012

தமிழ் ஓவியா said...

சிந்துவெளி ஆராய்ச்சிக்கு தேவையான நிதிஉதவிகளை வழங்கிட வேண்டும் தி.மு.க. தலைவர் கலைஞர்

சென்னை, ஜூன் 6- சிந்துவெளிப் பண் பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மத்திய, மாநில அரசுகள் சிந்துவெளி ஆராய்ச்சிக்கு தேவையான நிதி உதவிகளை வழங்கிட வேண்டுமென்று தி.மு.க தலைவர் கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது கேள்வி - பதில் வருமாறு :- கலைஞர் பதில்கள் 5.6.2012

கேள்வி: நெய்வேலி ஒப்பந்தத் தொழி லாளர்கள் பிரச்சினை குறித்து தாங்கள் உருக்கமாக கடிதம் எழுதிய பிறகும், மாநில அரசு அதிலே தலையிட்டதாகத் தெரிய வில்லையே?

கலைஞர்:- தொழிலாளர்களுக்கு என் னென்ன செய்தோம் என்று ஏடுகளுக்கு முழு பக்க விளம்பரம் கொடுக்க வேண்டிய நேர நெருக்கடியில் மாநில அரசு இருக்கிறதாம்! அதனால் நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்சினையில் தலையிட நேரம் இல்லையாம்! நல்லவேளையாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று, வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டு விட்டதாக செய்திகள் வந்துள்ளன. பேச்சுவார்த்தை என்றதும், மாநில அரசுதான் இதிலே தலையிட்டு உதவி செய்து, பிரச்சினை முற்றுப் பெற்றிருக்கிறதோ என்று எண்ணிச் செய்தியைப் படித்தபோது, மத்திய தொழிலாளர் நல ஆணையமும், என்.எல்.சி. நிர்வாகமும், தொழிற்சங்கத்தினரும் பேச்சுவார்த்தை நடத்திய தாகத்தான் செய்தி வந்திருக்கிறதே தவிர, கடைசிவரை மாநில அரசின் அமைச்சர்களோ, முதலமைச்சரோ அதில் தலையிடவே இல்லை.

கேள்வி :- தமிழக அரசு சார்பில் பணி நியமனம் செய்வதில் முஸ்லீம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள் தெரிவித்திருக்கிறாரே?

தமிழ் ஓவியா said...

கலைஞர் :- உண்மைதான்! அதனால் தான் தி.மு. கழக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு 3.5 சதவிகிதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது அதைக் கடைப் பிடிக்கவில்லை போலும்! தமிழக அரசின் சார்பில் 1,300 மருத்துவர்களை ஒப்பந்த முறையிலே நியமனம் செய்த தாகவும், அதிலே ஒருவர்கூட இஸ்லாமியர் இல்லை என்றும் அதைப்போலவே விழுப்புரம் மாவட்டத்தில் 41 நூலகர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப் பட்டதாகவும், அதிலும் ஒருவர் கூட இஸ்லா மியர் இல்லை என்றும் செய்திகள் வந்துள்ளன. இது உண்மையாக இருக்குமேயானால், சிறுபான்மை சமுதாயத்தினரை அ.தி.மு.க. அரசு எந்த அளவிற்கு வஞ்சிக்கிறது என் பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. தமிழக அரசு இதே போக்கைத் தொடர்ந்து கடைப் பிடிக்காமல், மற்ற வேலைவாய்ப்புகளிலும், தொழிற் கல்வியில் மாணவர்களை அனுமதிப் பதிலும் சிறுபான்மை இஸ்லாமி யர்களுக் கென வழங்கப் பட்டுள்ள 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை முறையாகக் கடைப் பிடித்து நிறைவேற்றிடுவார்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி :- போதிய நிதி இல்லாமல் சிந்துவெளி ஆய்வுகள் தேங்கும் நிலை ஏற் பட்டு ஆய்வாளர்கள் கவலை அடைந்ததாக ஒரு செய்தி வந்திருக்கிறதே?

கலைஞர் :- சிந்துவெளி ஆராய்ச்சியில் கிடைத்த முத்திரைகள் அனைத்தையும் தொகுத்து அவற்றின் குறியீடுகளை ஆய்வு செய்து 1977இல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் நூல் ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1977க்குப்பின் கிடைத்த முத்திரை களைத் தொகுத்து, அவற்றின் புகைப்படங்கள் அடங்கிய நூல் ஒன்றை 2010இல் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த தமிழ் அறிஞர் அஸ்கோ பர்போலா வெளியிட்டார். சிந்துவெளி ஆராய்ச் சியை ஊக்குவிக்க வேண்டுமென்ற நோக்கத் தோடு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களுக்கு; நான் ஒரு கோடி ரூபாய் தனிப்பட்ட முறையில் வழங்கி, அதன் மூலம் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையின் சார்பில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் வாயிலாக ஆண்டுதோறும் வழங்கப்படும் பத்து இலட்ச ரூபாய் மதிப்பிலான கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது முதன் முதலாக வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். தமிழகத்தில் கோவை மாவட்டம், சூலூர்; செங்கற்பட்டுக்கு அருகே உள்ள சாணூர்; மயிலாடுதுறைக்கு அருகே உள்ள செம்பியன் கண்டியூர் ஆகிய ஊர்களில் சிந்துவெளிக் காலத்தோடு ஒப்பிடக் கூடிய பொருள்கள் அகழாய்வு மூலம் கிடைத்துள்ளன. இதுவரை யில் நடைபெற்ற ஆராய்ச்சியின் மூலம் சிந்து வெளியில் திராவிடப் பண்பாடு தான் நிலவியது என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று மேலும் பல உண்மை விவரங் கள் வெளி உலகத்திற்குக் கொண்டு வரப்பட்டு திராவிட நாகரிகத்தின் அசைக்க முடியாத ஆதாரங்கள் நிலைநாட்டப் பட வேண்டும்.

அதற்கு நிதி ஒரு தடையாக இருந்து விடக் கூடாது. சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிலையத்தோடு இணைந் துள்ள 2007ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சிந்து வெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மத்திய, மாநில அரசுகள் சிந்துவெளி ஆராய்ச் சிக்குத் தேவையான நிதி உதவிகளை வழங் கிட முன்வரவேண்டுமென்று விரும்புகிறேன். கேள்வி :- அரசு பொது மருத்துவமனை யில் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், அதன் காரணமாக அவசர சிகிச்சை பெற வந்த நோயாளிகளில் 5 பேர் இதுவரை பலியாகி யிருப்பதாகவும் செய்திகள் வருகிறதே?

கலைஞர் :- வேலை நிறுத்தம் தொடங்கி மூன்று நாட்கள்தானே ஆகின்றன. நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடங்கி 44 நாட்களுக்குப் பிறகுதானே, ஜெயலலிதா அரசின் தலையீ டோ, உதவியோ இன்றி அவர்களுக்குள்பேசி முடிவு கண்டிருக் கிறார்கள். மருத்துவர்கள் பிரச்சினையைப் பொறுத்தவரை இது முழுக்க முழுக்க மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் செய்யப்பட வேண்டியது என்றாலும், அந்தத் துறையின் அமைச்சர் உட்பட, அனைத்து அமைச்சர்களும் செயின்ட் ஜார்ஜ்கோட் டையில் தாங்கள் ஆற்ற வேண்டிய அரசு கடமைகளைத் துறந்து, இடைத் தேர்தல் பணியாற்ற புதுக் கோட்டைக்குச் சென்று விட்டதால், மருத்து வர்கள் பிரச்சினை பற்றி பேசுவதற்கோ, அவர்களின் குறைபாட்டைக் கேட்பதற்கோ யாருக்கும் நேரம் இல்லையாம்! ஜூன் 12ஆம் தேதி புதுக்கோட்டை இடைத் தேர்தல் முடியட்டும்; அதற்குப் பிறகு பொது மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தம் பற்றி நேரம் இருந்தால் கவனிப் பார்கள்.6-6-2012

தமிழ் ஓவியா said...

கடவுளைப் பற்றி இவர்கள்
நேரம் என்ற பெரும் செல்வத்தை ஒதுக்குவதில் திறமை படைத்ததாக மதம் இருப்பதல்ல. ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை நேரத்தில் தேவாலயத்துக்கு செல்வதை விட நான் செய்வதற்கு மிகச் சிறந்த வேலைகள் இருக்கின்றன. - பில் கேட்ஸ்எனக்கென்று ஒரு கடவுள் இருக்கத் தேவையில்லை. ஆன்மீகம் என்று ஏதோ ஒன்று மக்க ளிடம் இருக்கிறது. அது கடவுளைப் போன்றது. மக்கள் கூறுகிறார்கள் என்பதற்காக எதையும் செய்யவேண்டும் என்று நான் எண்ணுவதில்லை - ஏஞ்சலினா ஜோலி

தமிழ் ஓவியா said...

16 பேரை பலிக்கொண்ட தேர்த் திருவிழாக்கள்!
நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும்,மத பண்டிகைகள் வந்து மக்களின் பணத்தை உரியும். அதேபோல மே மாதம் வந்தால் போதும் ஒவ்வொரு ஊரிலும் கோயில் திருவிழாக்களும் தேர்களும் மக்களை உறிஞ்ச ஆரம்பித்துவிடும். இதில் என்ன வேடிக்கை என்றால் போக்கு வரத்து சிக்னலில் 30 நொடிகள் கூட நிற்க பொறுமை இல்லாத வாகன ஓட்டிகள்கூட தேர் என்றால் போதும் இரண்டு மூன்று மணி நேரம் கூட போக்குவரத்து நெரிசலில் நிற்பார்கள். இந்த மே மாதமும் தேர் திருவிழாக்கள் வந்தன. ஆனால் அவை பக்தர்களின் உயிரைக் குடிக்கும் ஒரு ஆயுதமாகவே வந்தன. எந்த ஆண்டும் இல்லாத அளவாக இந்த ஆண்டு 16 பேர் தேர்களினால் ஏற்பட்ட விபத்துகளினால் உயிர் இழந்துள்ளனர். மே ஒன்றாம் தேதி- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள கோட்டை அறம்வளர் நாயகி உடனுறை கயிலாயநாதர் சிவன்கோவில் திருவிழாவில் தேர் அச்சு முறிந்து விழுந்ததில் 5 பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள். இரண்டாம் தேதி- நாகூர் சந்தன கூடு ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலியானார்கள். அதே நாள் (மே 2)- வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவின்போது தேர் மீது மின்சார கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி 5 பேர் இறந்தனர். அய்ந்தாம் தேதி- கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவில் விழாவில் தேர்அச்சு முறிந்ததில் தேர் சக்கரத்துக்கு முட்டு கொடுத்தவர் பலியானார்.

ஆறாம் தேதி- தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூரில் கதலி நரசிங்கபெருமாள் கோவில் திருவிழாவில் தேர் அச்சுமுறிந்து கவிழ்ந்தது. இதில் உயிர்ச்சேதம் இல்லை. ஒன்பதாம் தேதி- விருதுநகர் அருகே வெங்கடாஜலபதி கோவில் விழா ஊர்வலத்தில் பல்லக்கு மின்கம்பியில் உரசியதில் 3 பேர் பலியானார்கள். ஏதாவது நன்மை நடந்தால் அது கடவுள் சக்தி என்றும், அதே சமயம் ஏதாவது தீங்கு ஏற்பட்டால் அது விதி விட்ட வழி என்றும் இருக்கும் பக்தர்களுக்கு, வெறும் 10 கிலோ சிலையை ஏன் டன் கணக்கில் இருக்கும் தேரில் வைத்து தேவையில்லாமல் இழுக்க வேண்டும் என்று சிந்திக்கத் தோன்றாது. மத வேறுபாடு இல்லாமல் நடந்த இந்த விபத்துகளுக்குக் காரணம் மனிதர்களின் அறியாமையும் அஜாக்கிரதையும்தான் என்பது நம்மைப் போன்ற பகுத்தறிவாளர்களுக்குத் தெரியும். ஆனால் கடவுள் நம்மைக் காப்பாற்றும் என்று நம்பித் தேரிழுத்தவர்கள் தானே உயிரைவிட்டுள்ளார்கள். அவர்கள் நம்பிய கடவுள் அவர்களைக் காப்பாற்றவில்லையே என்பது குறித்து யோசிப்பார்களா?

- புருனோ

தமிழ் ஓவியா said...

கடவுள் இருக்கிறாரா? சோதிப்போம் வாங்க...


ஆணாதிக்கக் கற்பனைகள் படைத்தளித்த கடவுள் கற்பனைகள் - மகிழ்நன்

கடவுள் கற்பனைதான் எல்லாம் அறிந்த, முழுமை பெற்ற, அன்பால் நிறைந்த என்று கருதப்படும் உங்கள் கடவுள், நீங்கள் நம்பும் கடவுள் மனித இனத்தின் சரிபாதி பங்கான பெண்ணை வெறுப்பதையும், பெண்கள் மீதான வன்மத்தை கக்குவதையும் பாருங்கள். கருஞ்சட்டைக்காரனும், செஞ்சட்டைக்காரனும் பெண்கள் சம உரிமை பெற வேண்டுமென்று பேசும் வேளையில் எல்லாம் வல்ல இறைவனுக்கு பெண்களுக்கு உள்ளமுண்டு, அவர்கள் ரத்தமும், சதையும், உணர்வும் ஊரிப்போன மனிதர்களே என்பதுகூட தெரியாதா?

கிறித்துவம்

இறைமக்களின் எல்லாத் திருச்சபைகளிலும் இருக்கும் ஒழுங்குக்கேற்ப, சபையில் பெண்கள் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும், அவர்களுக்குப் பேச அனுமதியில்லை. மாறாகத் திருச்சட்டம் கூறுவது போல அவர்கள் பணிந்திருக்க வேண்டும். அவர்கள் எதையேனும் அறிய விரும்பினால், அதை வீடில் தங்கள் கணவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளட்டும். பெண்கள் திருச்சபையில் பேசுவது வெட்கத்திற்குரியதாகும்.

(1 கொரிந்தியர் 14 ஆம் அதிகாரம்- 33-35)

பெண்கள் மீது எத்தனை வன்மம் பார்த்தீர்களா? பெண்களுக்கு சுய அறிவே இருக்காதா? இப்படியான வன்மத்தோடு எந்த தலைவனாவது பேசினால் இன்று அவர் நிலைமை என்ன? மகளிர் அமைப்புகள் சும்மா விடுமா? திராவிடர் கழகம் சும்மாவிடுமா? திராவிடர் இயக்க தோழர்கள் சும்மா விடுவார்களா? பெண்ணியவாதிகளோ, பொதுவுடமைவாதிகளோ சும்மா விடுவார்களா?

ஏசாயா 40 அதிகாரம், 8 வசனத்தின் படி..

புல் உலர்ந்து போகிறது, பூ உதிர்ந்து போகிறது. நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.

பைபிளை நம்பும் எவராவது கர்த்தராகிய இயேசு கிறித்துவின் சொல்லை இந்த வசனத்தை படித்தபின் மறுக்க முடியுமா? மறுத்தால் மெய்யான கிறித்துவராக இருக்க முடியுமா? ஆக, நம்மிடம் கடவுளின் வார்த்தைகள் என்றும் அழிக்க முடியாததென்றும், பெண்கள் சபையில் பேசுவது அத்துமீறலென்றும் இந்த வசனங்கள் கூறுகின்றன. இந்தச் சொல்லை இன்று எந்த நாட்டு கிறித்துவனும் நம்புவதில்லையே, பெண்கள் இன்று தாராளமாக படிக்கிறார்களே.. கடவுளின் சொல்லை அத்துமீறும் துணிச்சல் கிறித்துவர்களுக்கு எப்படி வருகிறது. தாங்கள் நம்பும் கடவுள் _ கற்பனை என்பதால்தானே அல்லது தாங்கள் நம்பும் கடவுள் - உண்மையில்லை என்பதால்தானே..

பைபிளிலும் குரானிலும் மனுதரும சிந்தனை

நீங்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்; ஒவ்வொரு பெண்ணுக்கும் தலைவர் ஆண்; ஆணுக்கு தலைவர் கிறித்து, கிறித்துவுக்கோ தலைவர் கடவுள்.
(1 கொரிந்தியர் 11 அதிகாரம், 3 வசனம்)

பெண்களை இழிவுப்படுத்துவதில் நாங்கள் குறைந்தவர்கள் அல்ல என்ற ரீதியில் மனுநீதியில் சொல்லப்பட்டுள்ள கீழ்க்கண்ட வாசகத்தோடு எந்தளவுக்கு பைபிள் ஒத்துப்போகின்றது என்பதை பாருங்கள்
பால்யத்தில் தகப்பனுக்கும், திருமணத்திற்கு பின் கணவனுக்கும், கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது. (அத் 5. சு.148)

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார். (அத் 9. சு.17) என்று மனுநீதி சொல்கிறதென்றால் பைபிள் அதற்கு ஆலோசனை கூறுகிறது.

அவ்வாறே பெண்கள் பின்னற் சடை, பொன், முத்து, விலையுயர்ந்த ஆடைகள் ஆகியவற்றால் தங்களை அணி செய்து கொள்ளாமல், நாணத்தோடும் தன்னடக்கத்தோடும் ஏற்புடைய ஆடைகளை அணிய வேண்டும். (1 திமோத்தேயு அதிகாரம் 2: வசனம் 9) இந்த ஆணாதிக்க மத நிறுவனர்களின் ஆதிக்க அட்டூழியம் குரானிலும் தொடர்கிறது

ஓர் ஆணின் சாட்சிக்கு ஈடாக இரண்டு பெண்களின் சாட்சிகள் (குரான் 2:282)

ஆணுக்கு கட்டுப்பட்டு நடப்பவளே நல்லொழுக்கமுடையவள். கணவனை மதிக்காத மனைவியை படுக்கையை விட்டு விலக்கி, அடித்து கட்டுப்படுத்தலாம் (குரான் 4:34)

கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுத்தால் அவள் விடியும் வரை சபிக்கப்பட்டவளாகிறாள். (புஹாரி 3237)
குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டால் குழந்தைகள் மீது மனைவிக்கு எந்த உரிமையும் இல்லை. பால் கொடுத்தால் கூட அதற்கு விலை கொடுக்க வேண்டும். (குரான் 2:233)

தமிழ் ஓவியா said...

தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள், ஆண் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள் (குரான் 3:14)

இப்படியான சமநிலை சமூகத்திற்கு எதிராக மானுட குலத்திற்கு எதிராக சிந்தித்தவர் எல்லாம் வல்ல இறைவனாக இருப்பாரா? அல்லது பைபிளை தமது நலனுக்காக அன்றைய காலக்கட்டத்தில் ஆணாதிக்க சிந்தனை படைத்த கயவர்களாக இருப்பார்களா? இந்த சொல்லுக்கு சொந்தக்காரர் எல்லாம் வல்ல இறைவன்தான் என்ற கருத்து கற்பனையாகத் தான் இருக்க வேண்டும் அல்லது உங்கள் கடவுள் கயவனாக இருக்க வேண்டும்...சரிதானே..

இதற்குபிறகு பெண்கள் இந்த கயமைத்தனம் படைத்த கடவுளர்களின் பக்தர்களாக இருக்க வேண்டுமா?

இவையெல்லாம் திரிக்கப்பட்டவை; இந்த வசனங்களுக்கும், வாசகங்களுக்கும் அப்பாற்றப்பட்டவர் கடவுள் என்று கூறி தப்பித்துக் கொள்ள முயலலாம். ஆனால், சமூக எதார்த்தத்தில் இந்த வாசகங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் பலப்பல...

முதன்முதலில் உருவாக்கப்பட்ட சட்டம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை மறுத்தது, 1920 வரை இந்த நிலைதான் நீடித்தது. 1956 தனது முத்திரையாக ஏற்றதையும், அதையே1957 தொடங்கி அமெரிக்கா தனது ரூபாய் நோட்டில் “In God we Trust” என்று அச்சிட்டிருப்பதையும் கூறி பெருமை கொள்பவர்கள் ஏன் இந்த தகவல்களையும் சேர்த்து சொல்வதில்லை. (1956 க்கு முன் அமெரிக்கர்கள் யாரும் கடவுளை நம்பவில்லையா என்று கேள்வி கேட்டுவிடக் கூடாது). இந்தியாவில் சென்னை மாகாணத்தில் 1921 இல் நீதிக்கட்சி ஆட்சியில்தான் பெண்களுக் கான வாக்குரிமை ஆண்களை போலவே வழங்கப்படுகிறது. அதுவும் கற்ற, பணக்கார பெண்களுக்கு மட்டுமே. ஆண்களுக்கும் அன்றைய சூழலில் இருந்த வாக்குரிமை இதுபோன்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1947 இல் தான் அனைத்து பெண்களுக்கும் இந்தியாவில் வாக்குரிமை அங்கீகரிக்கப்படுகிறது. இவை மத நூல்கள் செலுத்திய கருத்தியல் செல்வாக்கினால் அல்லாமல் வேறென்ன? இத்தனை ஆண்டுகளாக பெண்கள் பட்ட துன்பத்திற்கு இழப்பீடென்ன பெண்கள் சிந்திக்க வேண்டாமா? சிந்திக்க துணிவோமா......

தமிழ் ஓவியா said...

இந்தியர் ஒருவரின் கடன் ரூ.33,000
மார்ச் 2012 கணக்கெடுப்புப்படி இந்தியர்களாகிய(?) நம் ஒவ்வொரு வரின் கடன் சுமை எவ்வளவு தெரியுமா? 33,000 ஆயிரம் ரூபாய்தான். இது போன ஆண்டை விட அதிகம். போன ஆண்டு 26,600 ரூபாயாக இருந்து இப்ப 33,000 ரூபாய் ஆகியிருக்கிறது. விலைவாசி யெல்லாம் ஏறும்போது கடன் ஏறக்கூடாதா என்ன? இந்தப் புள்ளி விவரத்தைச் சொல்லியிருப்பது மத்திய நிதி அமைச்சகம். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அரசு வாங்கும் கடன் அளவு அதிகரித்ததே இதற்கு காரணம்.

அரசும்,ஆளும் அரசியல்வாதிகளும்,அரசு நிர்வாகிகளும் தங்களின் அனாவசிய செலவுகளைக் குறைத்தாலே இவ்வளவு கடன் சுமை ஏற்பட வாய்ப்பில்லை. எனக்கென்ன என்ற மனநிலையில் மக்கள் பணத்தைச் செலவு செய்வதால்தானே இத்தனைக் கடன் சுமை ஏறிவிட்டது.

தமிழ் ஓவியா said...

சூத்திரனுக்கு தமிழ் கற்பிக்க மாட்டேன்திருவல்லிக்கேணி கலாசார அகாதெமி சார்பில் உ.வே.சாமிநாதய்யர் படத் திறப்பு விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பேசிய "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததற்குக் காரணம் உ.வே.சா.தான் என்று கூறினார்.
- செய்தி

பாருய்யா பார்ப்பன பற்று எப்படி என்று....?

இந்த உ.வே.சா யோக்கியதை என்ன என்று இதோ பாருங்கள்.....

உ.வே.சா.வின் கையெழுத்துப் படிகளை சென்னை ஆனந்தபோதினி அச்சகத்தில் அச்சடிப்பது வழக்கம். இதன் உரிமையாளர் முனிசாமி முதலியார். நிர்வாகப் பொறுப்பு - ஜீவா என்று புனை பெயரில் அழைக்கப்பட்ட நாரண துரைக்கண்ணனிடம் இருந்தது. நாரண துரைக்கண்ணன் கள் இறக்கும் மரபில் பிறந்தாலும் தமிழை விரும்பிக் கற்றார். மறைமலை அடிகள், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், திரு.வி.க. சீனி.வேங்கடசாமி, பா.வே.மாணிக்கம், கா.நமச்சிவாயம் போன்ற அறிஞர் பெருமக்களிடம் உறவாடி தமிழ் பயின்றார்.

உ.வே.சா.வின் கையெழுத்துப் படிகள் அன்றும் வழக்கம்போல் ஆனந்த போதினி அச்சகத்திற்கு அச்சுக் கோர்க்கப் போனது. அதில் இருந்த பாடலில் பிழைகண்ட நாரண துரைக்கண்ணன் அதைத்திருத்தியே அச்சடித்தார். தவறை காலதாமமாக உணர்ந்த உ.வே.சா. தன் உதவியாளர் இராசகோபால் அய்யங்காரை விரைந்து அனுப்பி, பிழை திருத்தி அச்சேற்றும்படி அனுப்பி வைத்தார். அதற்கு முன்பே படிகள் அச்சாகி விட்டன. ஆனால் பிழை திருத்தப்பட்டது கண்டு வியந்து போய் உதவியாளர் அய்யங்கார், நாரண துரைக்கண்ணனின் தமிழறிவை வெகுவாகப் பாராட்டியதுடன், அவர் சம்மதித்தால், உ.வே.சா.விடம் மேலும் தமிழ்ப்பாடம் பயின்று, அறிவை பட்டை தீட்ட ஏற்பாடு செய்வதாய் சொல்லிச் சென்றார்.

அதற்கு உ.வே.சா. ஒப்புதல் தரவில்லை. அதற்கு உ.வே.சா. சொன்ன காரணம். நான் சூத்திரனுக்கு தமிழ் கற்பிக்க மாட்டேன் என மறுத்துவிட்டார். ஆனால் அவர் தமிழ் கற்றது மட்டும் கும்பகோணத்தில் இருந்த திருசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தான்.


- பரணீதரன் கலியபெருமா

தமிழ் ஓவியா said...

பக்தி முற்றினால்...
விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள சுப்ரமணியசாமி கோவிலில் ஒரே ஒரு எலுமிச்சம் பழம் 14 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது. இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும் என்ற நம்பிக்கை வேறு. இந்த மூடநம்பிக்கையில் விழுந்து போன குழந்தை இல்லாத 58 வயதுடைய ஒருவர் கண்மூடித்தனமாக 14 ஆயிரத்துக்கு அதை வாங்கியுள்ளார்.

அடமூடர்களே எலுமிச்சம் பழத்தால் குழந்தையும் வராது குரும்பையும் வராது என்பதை நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் கண்டுபிடிக்கும் வழிமுறையை கண்டறிந்து அதை ஊடகங்களிலும் விளக்கிக் கூறியிருக்கிறான்.

பக்தி மனிதனை சூன்யத்துக்குள் இழுத்துச் செல்கிறது. பகுத்தறிவு வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. விருத்தாச்சலத்தை அடுத்த காணாது கண்டான் கிராமத்தில் உள்ள பிடாரி அம்மன் கோவிலில் கர்ப்பிணிகள் சுகப்பிரசவம் நடக்கவும் பிறந்த குழந்தைகள் நோயில்லாமல் வாழவும் தங்களது தாலிகளைக் கழற்றி அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினார்களாம். இன்னும் சில பெண்களோ குழந்தை வேண்டியும் இப்படிச் செய்தார்களாம்.

அடுத்து திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரம் தேவாலயத்தில் பருக்கள் - தேமல் - சிரங்கு போன்ற தோல் நோய்கள் வராமலிருக்க விளக்குமாறை நேர்த்திக் கடனாக வழங்கினார்களாம். பக்திக்கும் மாயைக்கும் அடிமை ஆகிப்போன இந்த பதர்களோடு ஒரு கேள்வி. உங்கள் வீட்டில் நீங்கள் வளர்க்கிற ஆடு, மாடு, நாய், பூனை, கோழிகள் எல்லாம் சுகமாகப் பிரசவித்து அதன் குட்டிகளும் நன்றாகத்தானே வளர்கின்றன.

அப்படியே அந்தப் பிராணிகளுக்கு நோய் வந்தாலும்கூட நீங்கள்தானே காரிலோ, கால்நடையாகவோ அவைகளுக்கான மருத்துவ மனைகளுக்கு கொண்டுபோய் சிகிச்சை அளிக்கச் செய்கிறீர்கள்.

நான்கறிவு, அய்ந்தறிவு உள்ள உயிர்கள் கூட உலகில் அறிவு சார்ந்து மதிப்புடன் வாழ்கின்றன. ஆறு அறிவுடைய மனிதர்களே பதில் சொல்லுங்கள். பக்தி எனும் அஞ்ஞானக் குப்பைக்குள் விழுந்து பாழாகுவது பரிதாபத்திற்-குரியதல்லவா?

தமிழ் ஓவியா said...

12ஆம் தேதி ஆர்ப்பாட்டம்


தொழிற் கல்லூரிகளில் சேர்வதற்காக அனைத் திந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்த இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் அறிவித்துள்ளதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நேற்று (6.6.2012 விடுதலை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். வரும் 12ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சமூகநீதிக்கு ஊறு என்று சொன்னால், சற்றும் தாமதிக்காது அடுத்த கணமே போர்க்கொடி தூக்குவது திராவிடர் கழகமே!

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராகவிருந்த போதுதான் முதன் முதலாக நுழைவுத் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது.

நுழைவுத் தேர்வு என்பது ஒட்டகம் நுழையும் கதைதான் என்று அபாயசங்கை ஊதினார் தமிழர் தலைவர் (விடுதலை 8.6.1984).

தமிழ்நாடெங்கும் நுழைவுத் தேர்வு ஆணையைக் கொளுத்தும் போராட்டத்தை நடத்தியது கழகம் (29.6.1984).

திமுக ஆட்சியில் தான் நுழைவுத் தேர்வு ரத்து செய்யும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதற்குமுன் அதிமுக ஆட்சியில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது என்றாலும் சரியான அடிப்படையில் அந்த ஆணை உருவாக்கப்படாததால் நீதிமன்றத் தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

கலைஞர் அவர்கள் முறையாக - கல்வியாளர்கள் குழு ஒன்றை அமைத்து, அவர்களின் அறிக்கையைப் பெற்று, அதன் அடிப்படையில் நுழைவுத் தேர்வு ரத்து ஆணைபிறப்பிக்கப்பட்டதால், அது செல்லுபடியானதே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டது.

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது என்று சட்ட ரீதியாகத் தெளிவாக்கப்பட்டபின், அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு என்பது - கண்டிப்பாக மாநில ஆட்சி உரிமையில் மத்திய அரசு மூக்கை நுழைக்கும் அத்துமீறிய செயலே என்பதில் எவ்வித அய்யப்பாட்டுக்கும் இடம் இல்லை.

இதனைத்தான் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவும் சுட்டிக் காட்டியுள்ளது. கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து, பொதுப் பட்டியலுக்கு நெருக்கடி நிலை காலத்தைப் பயன்படுத்தி, ஒரு சார்பாக எடுத்துச் சென்றதால், ஏற்பட்ட கேடான விளைவு இது.

இந்த நுழைவுத் தேர்வுதான் சரியானது திறமையைச் சரியாக எடை போடுவது என்ற கருத்தைக் கல்வியாளர்களும் ஏற்றுக் கொள்ள வில்லை. நீதிமன்றமும் ஒப்புக் கொள்ளவில்லை.

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நுழைவுத் தேர்வு ரத்து ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட கருத்து மிகவும் முக்கியமானதாகும்.

நுழைவுத் தேர்வை நடத்தினாலும் முழு சமநிலை என்பது கட்டுக்கதைதான். ஏனென்றால் சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட கோன்பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சிபோல அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை டிக் செய்யும் வாய்ப்புள்ளது என்று கூறி விட்டார்களே!

இதற்குப் பிறகு மத்திய அமைச்சர் கபில்சிபல் நுழைவுத் தேர்வுதான் சரியான அளவுகோல் என்று கூறுவது சரியானதுதானா?

இளங்கலை பட்டப் படிப்பு முதற்கொண்டு நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் ஒரு கட்டத்தில் கூறியுள்ளார். அகில இந்திய அளவில் அய்.ஏ.எஸ். போல அகில இந்தியக் கல்வித்துறை (ஐ.நு.ளு.) ஒன்றைக் கொண்டு வருவது - குறித்து ஒரு யோசனை இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கோணிப்பைக்குள் இருக்கும் பூனைக்குட்டி வெளியில் வந்தது என்று சொல்லுவார்களே. அதுதான் இந்தக் கருத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் - நுழைவுத் தேர்வு தொடர்பான கருத்து குறித்து, தமிழ்நாடு முதல் அமைச்சர், தம் கருத்தினை வெளியிடுவது அவசியம்.

ஏற்கெனவே நுழைவுத் தேர்வு கூடாது என்ற கருத்தின் அடிப்படையில் ஆணை பிறப்பித்த முதல் அமைச்சர் அவர்கள், இந்தத் தருணத்தில் தமிழக அரசின் கருத்தினை வலியுறுத்துவார் என்று எதிர்ப்பார்க்கிறோம்.7-6-2012

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் இன்னமும் அவமானப்படுத்தப்படுகிறார்

விருதுநகர், ஜூன் 7- ஊராட்சி மன்றக் கூட்டங்களில் மற்ற ஜாதி உறுப்பினர்கள் நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு தன்னை மட்டும் தரையில் உட்கார வைத்து அவமானப் படுத்துகிறார்கள் என்று விருதுநகர் மாவட்டம் கொட்டக் கச்சிநேந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் வி.கருப்பன் கூறியுள்ளார். தேர்தல் நடந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏழு மாதங்கள் கடந்த பிறகும், தன் மீது ஜாதி பாகுபாடு காட்டப்படுவதாகவும், தன்னுடன் ஒத்துழைக்க முன்வராத தாலும் கடந்த ஒரு மாதமாக ஊராட்சி மன்றப் பணிகள் எதுவும் நடைபெறா மல் நின்று போயுள்ளன என்று அவர் கூறுகிறார்.

ஊராட்சி மன்றத் துணைத் தலை வர், ஆறு ஊராட்சி மன்ற உறுப்பினர் கள் மற்றும் எழுத்தாளர் ஆகியோர் தன்னைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கவில்லை என்று காவல் துறை இயக்குநருக்கு எழுதி அனுப்பி யுள்ள ஒரு புகார் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

ஊராட்சி மன்றக் கூட்டத்தின் போது, மற்ற உறுப்பினர்கள் நாற்காலி களில் உட்கார்ந்து கொண்டு, தன்னை மட்டும் தரையில் உட்கார வைத்து அவமானப் படுத்துவதாகவும் அவர் புகார் கூறியுள்ளார். ஜாதியின் பெயரால் தான் அடிக்கடி அவமானப் படுத்தப் படுவதாகவும், பாகுபாட்டு டன் நடத்தப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

படித்துப் பார்க்காமல் ஒரு ஆவ ணத்தில் கையெழுத்திட துணைத் தலைவரும், அவரது கணவரும் வற் புறுத்தியபோது, கையெழுத்திட தான் மறுத்துவிட்டு மாவட்ட நிர்வாகத் திடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாப்பா பட்டி, கீரிப்பட்டி, கொட்டைக் கச்சிய னேந்தல் ஆகிய ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் ஜாதி இந்துக்கள் ஒத்துழைக்காமல் இருந்ததால் பல ஆண்டு காலமாக நடத்தப்பட முடி யாமல் போனதும் பின்னர் அரசின் தனிப்பட்ட முயற்சியால் தேர்தல் நடத் தப்பட்டதும் குறிப்பிடத்தக்கவை யாகும்.7-6-2012

தமிழ் ஓவியா said...

நித்யானந்தா ஆசிரமத்தில் காண்டம், கஞ்சா, மது பாட்டில்கள்!


பெங்களூரு, ஜூன் 15- கர்நாடக மாநிலம் பிடதி நித்யானந்தா ஆஸ் ரமத்தில், இரண்டாவது நாளாக, காவல்துறை யினர் சோதனை மேற் கொண்டனர். ஆஸ்ர மத்தில், பெண் துறவி களை வைத்து, ஆபாச படம் எடுத்ததாக சமூக சேவகர் ஒருவர், காவல் துறையிடம் ஆதாரங் கள் கொடுத்து பர பரப்பை ஏற்படுத்தினார்.

பிடதி நித்யானந்தா ஆசிரமத்தில், சட்ட விரோத செயல்கள் நடப்பதாக புகார் வந் ததையடுத்து, கர்நாடகா முதல்வர் சதானந்த கவுடா, பிடதி ஆஸ்ர மத்தில் சோதனையிட்டு, "சீல்' வைக்கவும், நித் யானந்தா பிணையை ரத்து செய்து, கைது செய்யவும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உத் தரவிட்டார். இதை யடுத்து, நேற்று முன் தினம் மாலையில், பெங்களூரு - ராம்நகர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் அர்ச்சனா தலைமையில், பிடதி ஆசிரமத்துக்குள் சோதனை யிட காவல்துறையினர் சென்றனர். நான்கு மணி நேரம் சோதனை நடத் தப்பட்டது.

இரண்டாவது நாளாக, 13ஆம் தேதி காலை, 9 மணிக்கு சோதனை துவங்கியது. அதிக நிலப்பரப்பில் ஆசிரமம் அமைந்துள்ள தால் சோதனை நடத்து வதில் அதிகாரிகள் திணறினர். ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வீடியோ பதிவு செய்யப் பட்ட பின்னர், அந்த அறை பூட்டப்படுகிறது. 12ஆம் தேதி ஏழு அறை களில் சோதனையிடப் பட்டு, பூட்டு போடப் பட்டது.

மதுபான பாட்டில், ஆணுறை: சோதனை நடப்பதாக வந்த தகவலையடுத்து, ஆசிரமத்திலிருந்து சில பொருட்கள் வெளியே வீசப்பட்டுள்ளன. நித் யானந்தா போட்டோக் கள், சி.டி.,க்கள், பெண் கள் படத்துடன் குறுந் தகடுகள், தமிழ் வார இதழ்கள் கிடந்தன. சில இடங்களில் கஞ்சா, பீடி, மாத்திரைகள், காலி மதுபான பாட்டில்கள், ஆணுறை ஆகியவையும் கிடந்தன. நேற்று காலை, ராம்நகரை சேர்ந்த சமூக சேவகர் நவீன், மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகார் மனுவில், நித் யானந்தா ஆசிரமத்தில் ஆபாசப் படம் எடுக் கப்பட்டது என்று குறிப் பிட்டிருந்தார். இதற் கான சில சி.டி.,க்கள், போட்டோக்கள், ஆதா ரங்களையும் கொடுத் துள்ளார். இதையடுத்து, அவருடன் காவல்துறை யினர் பிடதி ஆசிரமத் துக்குள் சென்றனர். பிடதி ஆசிரமம் அமைந் துள்ள, 42 ஏக்கர் நிலம், விவசாய நிலம். இந்த நிலத்தை ஆசிரமம் அமைக்க குறைந்த விலையில் வாங்கி, சட்ட விரோத செயலில் நித் யானந்தா ஈடுபடுகிறார். அடுக்கு மாடி கட்ட டங்கள், "காட்டேஜ்' சொகுசு பங்களா கட்டி யுள்ளார். எனவே, நிலங் களை மீட்டு திரும்ப தர வேண்டும் என, தாசப் பன தொட்டி கிராம மக்கள், போராட்டம் நடத்தினர். இப் போராட்டத்தையடுத்து, விவசாய நிலம் குறித்து சர்வே எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கூறினார். ஆசிரமத்தில், 20 முதல் 30 கண்டெய்னர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. என்ன விஷயம் என ஆஸ்ரமத்திலிருந்தவர் களிடம் காவல்துறையி னர் கேட்டதற்கு, சாமி விக்ரகங்கள் உள்ளது என்றனர். கண்டெய்னர் களை சோதனையிடும் போது, பல மர்மம் வெளி யாகும் என தெரிகிறது.

விரைவில் "சீல்': ராஜஸ்தானிலிருந்து வரவழைக்கப்பட்ட, 40-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை என்ன செய் வது என்பது பற்றி அதி காரிகள் ஆலோசனை யில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரமத்தில் கூலி வேலை செய்ய வந்த ராய்ச்சூரை சேர்ந்த, 25 பேர், காலி செய்து சென்றனர். ஆசிரமத்தில், 120 சீடர்கள் உள்ளனர். இதில், 50 பேர் வெளி நாட்டவர். அவர்களை என்ன செய்வது என்பது பற்றியும் யோசித்து வரு கின்றனர். ஆசிரமத்துக்கு சீல் வைக்க, அதிகாரிகள் தாமதம் செய்கின்றனர் என, முதல்வர் சதானந்தா கவுடாவை சந்தித்து, கன்னட அமைப்பான நவ நிர்மாண் சேனை யினர் புகார் மனு அளித் தனர். "விரைவில் சீல் வைக் கப்படும்' என, முதல்வர் உறுதியளித்தார்.

அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவு: "நித் யானந்தா ஆசிரம விவகாரம் குறித்து, அரசு விளக்கமளிக்க வேண் டும்' என, கர்நாடகா உயர்நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது. முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரிய, நித்யானந்தா மனு மீதான விசாரணை, வரும் 15ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. நித்யானந்தா கைது: கடந்த ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த நித்தியானந்தா நேற்று மதியம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஆனால், அவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் அறிவித்தனர்.14-6-2012

தமிழ் ஓவியா said...

வாயால் சிரிக்க முடியவில்லையே! கடவுள் ஜகந்நாதர் படுத்த படுக்கையாகக் கிடக்கிறாராம் 15 நாட்கள் ஓய்வு தேவையாம்!


லக்னோ, ஜூன் 14: வாரணாசி யில் உள்ள ஜகன்னாத ஆண்டவ னுக்கு உடல் நிலை சரியில்லையாம்! அவர் 15 நாட்கள் படுக்கையிலேயே ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டு மாம்!

ஜேஷ்ட பூர்ணிமா அன்று கட வுளைக் குளிப்பாட்டியதால் அவ ருக்கு உடல் நல மில்லாமல் போய் விட்டதாம். கடுமையான சளி மற்றும் இருமலால் ஆண்டவன் மிகவும் கஷ்டப்படுகிறாராம்!

வாரணாசியிலுள்ள அசி பகுதி யில் உள்ள கோவில் கதவுகள் அவரை தரிசிக்க முடியாதபடி அடைக் கப்பட்டுள்ளன. ஆண்டவனின் தனி மருத்துவர் அவருக்கு வைத்தியம் செய்து வருகிறாராம்! அவரை குணப்படுத்த மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கதா என்னும் கஷாயம் தினமும் இரண்டு முறை அவருக்குக் கொடுக்கப்படுகிறதாம்!

இந்தக் கதையைக் கேட்டு நீங்கள் வியப்படையலாம். வாரணாசி ஜகன் னாத ஆண்டவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவது வழக்கமாக நடைபெறும் ஒரு சம்பிரதாய நிகழ் வாம். கடவுளையும், மனி தனாகப் பாவிக்கும் பக்தர்கள் ஆண்டு தோறும் இந்த நிகழ்ச்சியைக் கொண் டாடுகிறார்களாம்!

ஆண்டுதோறும் முழு நிலவு நாள் அன்று ஜகன்னாத ஆண்டவனும், அவரது சகோதரன் பலராம் மற்றும் சுபத்ரா ஆகியோரும் குளிப்பாட்டப் பட்டதற்கு அடுத்த நாள் கடவுளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் விடுமாம்! பக்தர்கள், ஆண்டவனுக்கு அளவுக்கு அதிகமாக தண்ணீர் கொடுத்துவிடுவதால் இந்த உடல் நலக்கோளாறு ஏற்படுமாம்!

33 வயது பண்டிட் சிறீராம் சர்மா கடவுளின் வைத்தியராக பல ஆண்டு களாக நீடித்து வருகிறாராம்!

தன்னையே நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள் பக்தர்களை காப்பாற்றப் போகிறாராம்! ஹி.... ஹி....14-6-2012