Search This Blog

3.6.12

கலைஞரின் 89ஆம் ஆண்டு பிறந்தநாள் - புரட்சியை நிகழ்த்தியவர் கலைஞர்!

89ஆம் ஆண்டு முதிர்ந்த இளைஞர் பல்லாண்டு நல வாழ்வு வாழ்க!



(2012) ஜூன் 3 - திராவிடர் இயக்க வரலாற்றில் முக்கியமாக இடம்பெறும் வரலாற்று எழுச்சி நாள்!

ஓய்வறியா ஒப்பற்ற உழைப்பாளியாம் மானமிகு சுயமரியாதைக்காரர் என்று தன்னை பெருமிதத்துடன் பிரகடனப்படுத்திக் கொள்ளும் பெரியார் பெருந் தொண்டர், அண்ணாவின் அன்பைப் பெற்று காப்பாற்றும் அவரின்அருமைத் தம்பியாம் கலைஞரின் 89ஆம் ஆண்டு பிறந்தநாள்.

திராவிடர் திருநாள்!

இது வீழ்ச்சியுற்ற திராவிடத்தில் எழுச்சித் தீபம் ஏற்றிட சலிப்பில்லாமல் களங்காணும் எங்கள் கண்ணுதல் கலைஞரின் பொது வாழ்க்கை - ஒரு எழுபதாண்டு என்ற முத்திரையை பதிக்கும் ஒரு சிறப்பான சகாப்தத்தின் மைல் கல் ஆகும்!

தந்தை பெரியாரின் துணிவும், உழைப்பும், அறிஞர் அண்ணாவின் கனிவும் ஒருங்கே இணையப் பெற்று, ஈடில்லா லட்சியப் பயணத்தை எத்தனை எத்தனை எதிர்ப்புகளும், துரோகங்களும் தடுத்தாலும், அத்தடைகளைத் தூள் தூளாக்கி, துவளாது தொய்வடையாமல் ஒரு பிறவிப் போர்த் தளபதியாக இந்த இனத்தின் மானத்தை, உரிமையைக் காத்திட என்றும் உழைத்திடும் உத்தமரின் இனிய பிறந்த நாள்!

கலைஞர் அய்ந்து முறை முதல்வராக இருந்தார் என்பது மட்டுமல்ல வரலாறு; அவர் பிரகடனப்படுத்தி எமது அரசு சூத்திர - பஞ்சம் மக்களுக்கெனப்பாடுபடும் 4ஆம் பிரிவு, 5ஆம் பிரிவு மக்களுக்கான அரசு என்று சட்டமன்றத்திலேயே முழங்கி வரலாற்றில் ஒரு அமைதிப்

புரட்சியை நிகழ்த்தியவர் கலைஞர்!

150 ஆண்டுகளுக்குமேல் ஒரு சிறு கும்பலுக்கு - ஆரியக் கூட்டத்திற்குச் சொந்தமானது என்ற தில்லை தீட்சதர்களின் கொட்டத்தை அடக்க, முந்தைய அரசுகளால் முடியாததை மிக அருமையான சாதனையாக்கி, இந்து அற நிலையப் பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டு வந்து, சோழ அரசர்கள் பறி கொடுத்த சிதம்பரம் கோவில் உரிமைகளை, இந்த 21ஆம் நூற்றாண்டு இராவணனின் பேரன் அல்லவா மீட்டெடுத்தார்!

நீதிக்கட்சி ஆட்சியில் பிரதமராக இருந்த பனகல் அரசர் கொண்டு வந்து எத்தனையோ எதிர்ப்புக் இடையில் நிறைவேற்றிய இந்து அறநிலையச் சட்ட வெற்றிக்கு அடுத்த தொடர்ச்சிதான் கலைஞர் அரசின் இந்தச் சரித்திர சாதனை!

பக்தர்களும் தில்லைப் பெருமக்களும் மகிழ்ந்தார்களே! இதுஒரு அமைதிப் புரட்சி அல்லவா - கலைஞரின் துணிச்சல் அல்லவா இதற்குக் காரணம்!

தேவாரம் பாடிட உரிமை மறுக்கப்பட்டு, அடித்து துரத்தப்பட்ட ஆறுமுகசாமி போன்ற பக்தர்களும் உள்ளே சென்று அமர்ந்து தமிழில் பாடுகிறார்களே - அதுவும் அரசு உதவியுடன் - செயற்கரிய செயல் அல்லவா இது!

அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை என்று கூறிய வடலூர் வள்ளலாரின் சத்தியஞான சபையில் இருந்த பூணூல் சிலந்திக் கூடுகள் ஒட்டடை அடிக்கப்பட்டு, ஆறாம் திருமுறையின் அருந்தத்துவ ஒளி அங்கே இன்று பாய்கிறதே!

அது எளிதானதா?

அதனால் தான் முதலமைச்சர் பதவி இழந்தார் அவர் என்பது சில ஆரிய நாகங்களின் வாதமானால், அதற்கு அவர் இன்னும் ஆயிரம் முறைகூட நாற்காலியை இழப்பார்! காரணம் பதவியால் அவருக்குப் பெருமை இல்லை; அவரால் பதவிக்கு - இல்லை இல்லை அப்பொறுப்புக்குப் பொலிவு! முள் வேலிக்குள் வதியும் ஈழத் தமிழருக்கு நிரந்தர விடுதலை - தமிழ் ஈழம்தான் எனக் கூறி, டெசோ மூலம் களம் காணத் தயாராகும் 89 வயது முதிர்ந்த இளைஞரே! வாழ்க வாழ்கவே!!


-------------------கி.வீரமணி,தலைவர்,திராவிடர் கழகம் 2-6-2012
*****************************************
அய்யா சொன்னதும் - கலைஞர் சொல்வதும்!





இனி கண்ணீர்த் துளிகள் தங்களின் கட்சி தேர்தலுக்குப் பிறகு இந்த நாட்டில் உலவ வேண்டுமானால், பார்ப்பன வெறுப்புச் சாதனத்தைத்தான் கைத்தடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள். இந்தக் காரியத்துக்காக என்னை அணுகலாம். நானும் ஆதரவளிக்கலாம். எனக்குச் சமுதாயத்துறையில் பார்ப்பனர்களைத் தவிர வேறுயாரும் எதிரிகளல்லர்

(விடுதலை 1.1.1962) என்றார் இனவுரிமைக் காவலராம் தந்தை பெரியார்.

தி.மு.க.வை ஒரு கட்டத்தில் சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்த ராஜாஜி அவர்கள் 1967 தேர்தலில் ஆதரித்திருந்தாலும், பூணூலைப் பிடித்துக் கொண்டு உதய சூரியனுக்கு வாக்களியுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தாலும், பார்ப்பனர்கள் உண்மையான திராவிட இயக்க அரசியல் கட்சியான தி.மு.க.வின் மீது நல்லெண்ணம் கொண்டவர் களல்லர்.

1967 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று, அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சர் ஆன நிலையில், திரா விடர் இயக்கத்தின் ஆரிய எதிர்ப்புக் கொள்கையைத் துடைத்து எறிந்து விடலாம் என்று மனப்பால் குடித்தனர்.

தி.மு.க. பெரியார் என்ற பழம் பெருங்காயம் இருந்த பாண்டம்; அதனைத் துடைத்தெறிந்து விட்டேன் என்றார் ஆச்சாரியார்.

ஆனாலும் என்ன நடந்தது? ஆட்சி ஏற்ற அண்ணா, அய்யா பெரியாரை நோக்கித்தான் விரைந்தார்.

எங்களின் தேனிலவு முறிந்துவிட்டது என்று ஆச்சாரியார் ஒப்புக் கொள்ளும் அளவுக்கு, அண்ணாவின் குறுகிய கால ஆட்சியின் செயல்பாடுகள் - திராவிடர் இனவுணர்வின் பாங்கில் பூத்துக் குலுங்கி விட்டன.

அடுத்த தேர்தலிலேயே ஆச்சாரியார் தம் அரசியல் எதிரியான காமராசர் அவர்களை இணைத்துக் கொண்டு தி.மு.க.வை எதிர்த்து, அதிலும் தோல்வி கண்டார்.

அந்த 1971 பொதுத் தேர்தல் சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் அடிப்படையில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டமாகவே மிகவும் வெளிப்படை யாகவே நடைபெற்றது.

அந்தத் தேர்தல் முடிவு தி.மு.க.வுக்கு அபார வெற்றியைத் தந்தது - தமிழ் மண் தந்தை பெரியாரின் ஆரிய எதிர்ப்புத் திராவிட மண் என்பதை மற்றொரு முறை உலக அரங்கிற்கு மணி அடித்து அறிவித்து விட்டது. இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கையாக்கப்பட்டது என்று முதல் அமைச்சர் அண்ணா சட்டப் பேரவையில் பிரகடனப்படுத்தினார். இது சூத்திரர் களால், சூத்திரர்களுக்காக ஆளப்படும் அரசு என்று முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் கம்பீரமாக அறிவித்ததும் எந்த அடிப்படையில் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் தந்தை பெரியார் 1962-இல் கூறிய கருத்தின் அருமையும் அவசியமும் அப்பட்டமாக விளங்கும்.

கடந்தமுறை ஆட்சிக்கு வந்த மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் முத்திரை பொறித்த சில திட்டங்கள் கவனத்துக்கு உரியவை.

1. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று இரண்டாவது முறையாக அதே கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிக் கொடுத்த தீர்மானம்!

2. கோயில்களில் தமிழிலும் அர்ச் சனை என்பதில் உள்ள உம் என்பது (உம்மை இழிவுச் சிறப்பு) தூக்கி எறியப்பட்டது.

3. தீட்சதர்களின் ஆதிக்கத்தில் பன்னூறு ஆண்டுகாலம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சிதம்பரம் நட ராசன் கோயிலை அரசின் அதிகாரத் துக்குள் கொண்டு வந்தது.

4. வள்ளலார் உருவாக்கிய கொள் கைக்கு முரணாக வடலூர் சத்திய ஞானசபையில் உருவ வழிபாட்டு முறை களைத் திணித்து ஆட்டம் போட்டு வந்த ஆரியப் பார்ப்பனரை வெளியேற்றியது.

5) தமிழ் செம்மொழி என்பதை அங்கீகரிக்கச் செய்தது.

6) சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடுக்கு வழி வகை செய்தது.

7) நீண்டகாலத்திற்குப் பிறகு, பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கச் செய்தது.

8) நுழைவுத் தேர்வை ஒழித்தது - இவை எல்லாம் பார்ப்பனர்களின் கண்ணோட்டத்தில் திராவிடர் இயக்கச் சார்பானவை - பார்ப்பனர் எதிர்ப்பை அடிப்படையில் கருவாகக் கொண்டவை.

இதனை மிகவும் நுணுக்கமாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் பார்ப்பனர்கள் (நம், மக்களுக்குத் தான் இதில் தடுமாற்றம்!)

சில பூணூல்கள் சேர்ந்து திமுக ஆட்சியை ஒழித்து விட்டனர் என்று கலைஞர் அவர்களே வெளிப்படையாகவே கூறும் நிலையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பார்ப்பன ஊடகங்கள் கலைஞர் அவர்களையும், தி.மு.க.வையும் கொச்சைப் படுத்துவதற்கு அளவு இல்லாமல் போய் விட்டது.

ஒவ்வொருவார துக்ளக் இதழைப் புரட்டினாலும் அன்றாடம் வெளிவரும் தினமணி தினமலர்கள்மீது கண் ணோட்டம் செலுத்தினாலும் ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட் டத்தை அறிந்து கொள்ளலாம்.

மானமிகு கலைஞர் அவர்களும் ஆரியப் பார்ப்பனர்களை எதிர்கொள்ளத் தயாராகி விட்டார். மனுதர்மத்துக்கு மறு பிறவி கிடையாது என்று அவர் எழுதினார்; திராவிடர் தோழர்களே ஞான சூரியனைப் படியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் என்பதெல்லாம் இதற்கான அத் தாட்சிகள்! பரம்பரைப் போர் என்றும் தேர்தல் நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பட்டவர்த்தனமாகவும் அறிவித்தாரே - எதிர்கொள்வோம் என்று தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பதிலடி கொடுக்கவில்லையா?

இப்பொழுது 1962 இல் தந்தை பெரியார் அவர்கள் கணித்ததை தொலை நோக்காகக் கூறியதை ஒரு முறை அசை போட்டுப் பார்க்கலாம்.

இவ்வளவுக்கும் 1962-ஆம் ஆண்டு என்பது திராவிடர் கழகத்துக்கும் தி.மு.க.வுக்கும் சுமூகமான உறவு இல்லாத ஒரு கால கட்டம்! அந்த நிலையிலேயே தி.மு.க. எதிர்காலத்தில் பார்ப்பனர் எதிர்ப்பைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் என்று கூறினார்.

அதற்காகத் தன்னை தி.மு.க. அணுகும் என்றும், அதற்கு நான் உதவக் கூடும் என்றும் தந்தை பெரியார்கூறியது - இதோ நம் கண்முன் நடந்து கொண்டிருக்கும் பிரத்தியட்ச சாட்சிகள்.

இதனை ஒவ்வொரு உண்மையான திராவிடர் இயக்கத் தொண்டரும் உணரும் வகையில் செயல்பட வேண்டும். திராவிடர் இயக்க அடிப்படைச் சித்தாந்தம் ஊட்டப்பட வேண்டும்.

மானமிகு கலைஞர் அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாளில் திராவிடர் இயக்கம் புது உத்வேகத்தோடு தோள் தூக்கி போர்க் குணத்தோடு நடைபோட உறுதி மேற்கொள்ள வேண்டும். எதிரிகள் தயாராகி விட்டார்கள்!
தயாராக வேண்டியது நாம்தான்!
----------------------------------கவிஞர் கலி. பூங்குன்றன் பொதுச் செயலாளர், திராவிடர்கழகம் ”விடுதலை” தலையங்கம் 2-6-2012

18 comments:

nalkuditamilan said...

யார் யாருக்கெல்லாம் சாவு வருகிறது.இந்த கொலைஞருக்கு ஒரு சாவு வரமாட்டேங்கிறதே! ஓவியா உங்களை அசிங்கப்படுத்தி விட்டீர்கள்.

nalkuditamilan said...

யார் யாருக்கெல்லாம் சாவு வருகிறது.இந்த கொலைஞருக்கு ஒரு சாவு வரமாட்டேங்கிறதே! ஓவியா உங்களை அசிங்கப்படுத்தி விட்டீர்கள்.

nalkuditamilan said...

யார் யாருக்கெல்லாம் சாவு வருகிறது.இந்த கொலைஞருக்கு ஒரு சாவு வரமாட்டேங்கிறதே! ஓவியா உங்களை அசிங்கப்படுத்தி விட்டீர்கள்.

தமிழ் ஓவியா said...

நமது போராட்டம் வெறும் தேர்தலைப் பொறுத்ததல்ல!


இனத்தின் சுயமரியாதையையும், இன உணர்வையும்
காப்பாற்றிக் கொள்வதற்காக நடக்கும் போராட்டம்!
தி.மு.க. தலைவர் கலைஞரின் இன முழக்கம்!

சென்னை, ஜூன் 4- வெறும் தேர்தல் - அர சியலுக்காக தோற்றுவிக் கப்பட்டதல்ல நமது கழகம் - நாம் மேற் கொண்டுள்ள போராட் டம் வெறும் பதவிகளுக் காகவும் அல்ல - நமது இனத்தின் சுயமரியா தையை, இனவுணர் வைக் காப்பாற்றுவதற் காக நடத்தும் போராட் டம் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

சென்னை கலைஞர் நகரில் நேற்று (3.6.2012) நடைபெற்ற கலைஞர் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் ஏற்புரையாக உரை யாற்றுகையில் கலைஞர் அவர்கள் குறிப்பிட்ட தாவது:

திராவிட சமுதாயத் தில் ஒரு எழுச்சியை உருவாக்குவதற்காக தொடங்கிய ஒரு இயக்கம்தான் - நூறு ஆண்டு கால சரித்திரம் படைத்த திராவிடர் இயக்கம். அந்த இயக்கம் 100 ஆண்டுகள் நடை பெற்றுக் கொண்டிருக் கின்ற இந்தக் காலகட் டத்தில் இன்னும் பல சாதனைகளை தொடர வேண்டியிருக்கிறது. திராவிட இயக்கம் உரு வானதால்தான் மனிதன் மனிதனாக நடமாட முடிகிறது. நான் உங் களுக்குச் சொல்கின் றேன், முதன் முதலாக நான் சட்டசபையில் இடம் பெற்று சென்று அமர்ந்த போது அப் பொழுது முதலமைச் சராக பெருந்தலைவர் காமராஜர் இருந்தார்.

50 ஆண்டுகளுக்கு முன்....

நான் சட்டசபைக்கு அய்ம்பதாண்டுகளுக்கு முன்பு செல்கிறேன். சட்டசபையில் 50 ஆண்டுகள் உறுப்பின ராக இருக்கிறேன். சட்ட சபையில் ஒரு குறிப்புப் புத்தகத்தைக் கொண்டு வந்து வைப்பார்கள். அந்தக் குறிப்புப் புத்த கத்தில் சில தகவல்கள் - உறுப்பினர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் இருக்கும். அதிலே ஜாதிகளைப் பற்றி குறிப்புகள் அடங் கிய புத்தகம்! அந்தப் புத்தகத்தை நாற்காலி யிலே அமர்ந்த படியே புரட்டிப் பார்த்தேன். புரட்டிப் பார்த்த போது திடுக்கிட்டேன். எதற் காக என்றால், ஜாதி வாரியாக - ஜாதியால் முற்போக்கானவர்கள், ஜாதியால் பிற்படுத்தப் பட்டவர்கள், ஜாதியால் மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள் என்று ஒரு பட்டியல் அதிலே வெளி யிடப் பட்டிருந்தது. அதிலே எனக்கு வருத் தம் ஏற்படவில்லை. ஏனென்றால் என்னு டைய சமூகத்தைப் பற்றி குறிப் பிட்ட போது, நான் என் சமுதாயம் எது, யார் யாருடைய சமு தாயம் எவையெவை என்பதைப் பற்றியெல் லாம் என்றைக்கும் கவ லைப்படுகிறவன் அல்ல. இருந்தாலும் ஒரு குறிப் புக்காகச் சொல்கிறேன். இசை வேளாளர் என்று ``ர் என்ற எழுத்து கடைசி எழுத்தாகப் போடப் பட்டு குறிப்பிடப்பட்டி ருந்தது. குயவன், வண் ணான், கருமான் என்று சில ஜாதிகளுடைய பெயர்களைக் குறிப் பிட்டு ``ன் விகுதிகளோடு அந்தப் பெயர்கள் சொல்லப்பட்டிருந்தன. எல்லா ஜாதிக்கும் ``ன் போடப்படுகிறதே, அய்யர்களுக்கு என்ன போடுகிறார்கள் என்று பார்த்தேன்.

குயவன் மண் பாண்டம் செய்கிறான். குயவன் ``ன் - செய்கிறான் ``ன் - வண்ணான் துணி துவைக்கிறான், வண் ணான் ``ன் - துவைக் கிறான் ``ன்- சரி, பட்டி யலில் மேலும் படித்துப் பார்த்தால், ``அய்யர் பூஜை செய்கிறார் என்று போடப்பட்டிருந்தது. எல்லாவற்றுக்கும் ``ன் விகுதி போட்டு விட்டு, அய்யர் என்று வருகிற இடத்தில் மட்டும் பூஜை செய்கிறார் என்று ``ர் விகுதி போடப்பட்டிருக் கிறது. அப்போது மாண் புமிகு கனம் கக்கன் அவர்கள் அந்தத் துறை யினுடைய அமைச்சர். முதலமைச்சர் பெருந் தலைவர் காமராஜர். நான் எழுந்து ஒழுங்குப் பிரச்சினை - Point Of Order என்று கேட்டேன். அப்போது பேரவைத் தலைவர் யு. கிருஷ்ணா ராவ் - அவர் ஒரு நாகரிகமான மனிதர்.

தமிழ் ஓவியா said...

அவர் தான் அப்போது சபாநாயகர். இப் பொழுது ஜெ. அன்பழகன் எழுந்து, ஒழுங்கு பிரச் சினை என்று கேட்டால், ``உட்கார் என்கிறார்கள். அன்றைய சட்டமன்றமும் இன்றைய சட்ட மன்றமும் ஏன் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பக் கூடாதா என்று கேட்டால், வெளியேற்றுகிறேன் என்று இது தான் இன்றைக்கு! அப்போது நான் ஒழுங்கு பிரச் சினை எழுப்பிய போது, பெருந்தலைவர் காமராசர் திரும்பிப் பார்த்தார். எதற்காக ஒழுங்கு பிரச்சினை என்றார். நான் சொன்னேன், வண்ணான், மருத் துவன், குயவன் என்றெல்லாம் `ன் விகுதி போடப் பட்டிருக்கிறது, ஐயர் என்பதில் மாத்திரம் `ர் விகுதி போட்டிருக்கிறது, இது சாதி வித்தியாசத்தை நாமே தூண்டுவதாக ஆகாதா என்று கேட்டேன். உடனே காமராசர் பக்கத்தில் இருந்த கக்கனை திரும் பிப் பார்த்தார். அவரும் திரும்பிப் பார்த்தார்; இருவரும் பேசி விட்டு, கக்கன் எழுந்து நின்று, ``ஆமாம், அது தவறுதலாக வந்திருக்கிறது. திருத்திக் கொள்கிறோம் என்று சொன்னார். (பலத்த கை தட்டல்) அது பெருந் தன்மை. இன்றைக்கு தவறுதலாக வந்தால் வந்ததுதான். நாங்கள் திருத்தவே மாட்டோம். இது என்ன தன்மை? என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

திராவிடர் இயக்கத்தின் குரலை முதன்முதலில்
சட்டமன்றத்தில் ஒலித்தவர்களில் நானும் ஒருவன்

இதை நான் சொல்வதற்கு காரணம் இப்படி சாதி களைப் பற்றி பேசும்போது - குறிப்பிடும்போது, அது பாடப் புத்தகங்களிலேயே, ஏன் சட்டமன்றத் தில் வைக் கின்ற குறிப்பு ஏடுகளிலேயே `ன் `ர் என்ற விகுதிகளில் வித்தியாசங்கள் இருந்த காலம் அந்தக் காலம். அந்தக் காலத்தில் திராவிடர் இயக்கத்தின் குரலை முதன் முதலாக சட்டமன்றத்திலே ஒலித்தவர் களிலேயே இந்த கருணாநிதியும் ஒருவன் என்பதற் காகத்தான் இதைச் சொல்லுகிறேன் (பலத்த கை தட்டல்).

பதவிக்காக அல்ல!

எனவே நம்முடைய போராட்டம் என்பது வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற் காக அல்ல. நம்முடைய இலட்சியங்களை நிறைவேற்ற வேண்டும் என்கிற அதே நேரத்தில்; அந்த இலட்சியங் கள் தமிழரை, திராவிடரை உயர்த்தக்கூடியதாக அவனை தீரராக சுயமரியாதைக் காரராக ஆக்கக்கூடிய வகையிலே அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இயக்கத்தை தந்தை பெரியார் அவர்கள் தூக்கிப் பிடித்தார். அறிஞர் அண்ணா இந்த இயக்கத்தைப் பரப்பினார், நாங்கள் எல்லாம் பாடுபட்டோம். அப்படி பாடு பட்டு வளர்த்த இந்த பயிரை அடியோடு நாசம் செய்ய ஒரு கூட்டம் தமிழகத்திலே இன்றைக்கு கிளம்பி இருக்கிறது. ஆகவே பெரியோர்களே, தாய்மார்களோ, நண்பர் களே இந்த போராட்டம் தேர்தலைப் பற்றியது அல்ல, தேர்தலுக்காக நடைபெறுகின்ற போராட்டம் அல்ல, நம்முடைய சுய மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள - நம்முடைய இன உணர்வை காப்பாற்றிக்கொள்ள நடைபெறுகின்ற போராட்டம் என்பதை உங் களுக்கு உணர்த்துவதற்காகத்தான் இதை சொல்லு கின்றேன். இந்த உணர்வு தமிழகத்தோடு மாத்திர மல்ல, நம் முடைய நண்பர் ஆர்க்காட்டார் எடுத்துக் காட்டி யதைப்போல நம்முடைய உணர்வு இலங்கையிலும் இன்றைக்கு தெரிந்தாக வேண்டும். இலங்கையிலே தமிழன் இருக்கிறான். ஆனால் அவன் தன்மான முள்ளவனாக இன்றையதினம் காட்டப்படவில்லை. அவன் சுதந்திர மனிதனாக இல்லை. அவனை சம அந்தஸ்து உள்ளவனாக அங்கு இருக்கின்ற இலங்கை அரசு சிங்களவர் களோடு வைத்து மதிப்பிடவில்லை, அந்த மதிப்பீடு தேவை என்பதற்காக; சிங்களர்கள் வேறு, தமிழர்கள் வேறு; அந்த இனம் வேறு, இந்த இனம் வேறு; அது உயர்ந்த இனம், இது தாழ்ந்த இனம்; அவர்களுக் குள்ள உரிமையெல்லாம் தமிழர்களுக்கு கிடையாது என்று சொல்லுகின்ற அந்த சர்வாதி காரத்தை, எதேச்சதிகாரத்தை.

டெசோ மாநாடு

ஏற்றத்தாழ்வை அடித்து வீழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் ``டெசோ இயக்கத்தினுடைய மாநாட்டை மீண்டும் நாம் தமிழகத்திலே நடத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கி றோம். என்னுடைய பிறந்த நாள் செய்தியாக நான் சொல்லுகிறேன், விரைவில் விழுப்புரத்தில் நம் முடைய திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை ஆகிய இந்த இயக்கங்கள் எல்லாம் சேர்ந்து - இலங்கை யிலே தமிழர்கள் மீட்சி - ஈழத் தமிழர்களுடைய மீட்சி என்பதற்காக நாம் நடத்தவிருக்கின்ற அந்த அருமையான மாநாடு வெகு விரைவிலே ஈழத்திலே ஒரு தனி நாடாக - தனித் தமிழ்நாட்டை உருவாக் குவதற்கு (பலத்த கைதட்டல்) பயன்பட வேண்டும். அப்படிப் பயன்படுவதற்கு ஏற்ற வகையிலே நம்முடைய பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும், தொடங்கப்பட வேண்டும் என்பதை இந்த பிறந்த நாள் விழாவிலே உங்களுக்கெல்லாம் செய்தியாக தெரிவித்து விடைபெறுகிறேன்.
இவ்வாறு கலைஞர் அவர்கள் உரையாற்றினார். 4-6-12

தமிழ் ஓவியா said...

தச்சார்பின்மை பற்றி ஜின்னாவின் பேச்சை இந்திய வானொலியிடம் பாகிஸ்தான் வானொலி கேட்கிறது

இந்தியா, பாகிஸ்தான் நாடு களிடையே உறவுகள் ஓரளவுக்கு சீரடைந்துள்ளதை அடுத்து, 1948 ஆகஸ்ட் 11 அன்று, மதத்திற்கோ, ஜாதிக்கோ, இனத்துக்கோ அரசின் செயல்பாடுகளில் எந்த வேலையுமில்லை என்று பாகிஸ் தான் நாடு உருவாகக் காரணமாக இருந்த முகமதலி ஜின்னா பேசிய அகில இந்திய வானொலிப் பேச்சைத் தருமாறு பாகிஸ்தான் ஒளிபரப்பு நிறுவனம் இப்போது கேட்டுள்ளது.

மக்களவை சபா நாயகர் மெய்ரா குமார் போன்ற இந்திய அரசின் பல்வேறு நிலைப் பதவி களில் உள்ளவர் களிடம் வாய் மொழியாகக் கேட்டு எந்தப் பயனும் ஏற்படாத தால், அகில இந்திய வானொலி நிறுவனத்தின் தலைவருக்கு பாகிஸ்தான் ஒளிபரப்பு நிறுவனத் தலைவர் கடிதமாக எழுதியுள் ளார். இது பற்றி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதுவர் ஷகித் மாலிக்கையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜின்னாவின் இந்த ஒரு பேச்சு தான் பாகிஸ்தான் ஒலிபரப்பு நிறுவனத்திடம் இல்லை. பாகிஸ்தானின் முதல் அதிப ராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்னா பாகிஸ்தான் அரச மைப்பு சட்ட மன்றத்தில் 1947 ஆகஸ்ட் 11 அன்று பேசிய பேச்சு இது. பிரிக்கப்பட்ட பாகிஸ் தானில் இருந்த லாகூர், பெஷா வர், டாக்கா ஆகிய வானொலி நிலையங்களில் ஒலிப் பதிவு வசதிகள் இல்லாததால், டில்லி வானொலி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்ட குழு இந்தப் பேச்சை ஒலிப் பதிவு செய்தது.

வரலாற்றுப் புகழ் மிக்க இப்பேச்சை இருட்டடிப்பு செய்ய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோவும், ராணுவ அதிபதி ஜியா-உல்-ஹக் ஆகி யோர் முயன்றிருக்கின்றனர்.

ஜின்னா கனவு கண்ட பாகிஸ் தானை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்கும் பாகிஸ்தான் அவரது இந்தப் பேச்சை மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறது.4-6-12

தமிழ் ஓவியா said...

கலைஞர் பிறந்த நாள் எழுச்சியின் பின்னணி


தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களின் இவ்வாண்டு பிறந்த நாள் விழாவுக்கு ஒரு விசேட சிறப்பு எழுச்சி இருப்பதை நாடு கண்டுள்ளது.

கழகத்தவர்களும், பொது மக்களும் பெருந் திரளாகக் கூடி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி யுள்ளனர்.

இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சியின் மீது வெகு மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆட்சியின்மீது அதிருப்தி என்கிறபோது மக்களின் இன்றியமையாத பொருள்களின் மேல் ஏற்பட்ட விலை உயர்வும்; மின் வெட்டை ஒழித்துக் கட்டுகிறேன் என்று சவால் விட்டு, அதில் கண்ட பெருந்தோல்வி ஒரு பக்கம் என்றாலும் நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகக் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த ஆட்சியைக் கட்டிக் காப்பதில் காலூன்றி நிற்கும் திருவாளர் சோ. ராமசாமிகூட இதனை ஒப்புக் கொண்டு எழுதியுள்ளார் என்பதன் மூலம் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ள அளவின் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும் ஏடுகளைப் புரட்டும்போது கொலை, கொள்ளை, நகைப்பறிப்பு, திருட்டு என்ற தகவல்கள் அலை அலையாக இடம் பெறுவதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

ஆட்சியின்மீது மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் அதிருப்தி - தி.மு.க.வுக்கு இலாபகரமாக அமைந்து விட்டது. அதனுடைய காட்சிதான் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் எழுந்து நிற்கும் உணர்ச்சி என்று அரசியல் விமர்சகர்கள் கூறக் கூடும்.

பொதுவாக ஆளும் கட்சி என்று ஆகி விட்டால் அதிருப்தியைத் தேடிக் கொள்வது இயல்பானதுதான் என்று சமாதானம் சிலர் கூறக் கூடுமானாலும் - இப்பொழுது ஏற்பட்டுள்ள அதிருப்தி அந்த வகையைச் சேர்ந்ததல்ல.

சமச்சீர் கல்வியில் ஆரம்பித்து, அண்ணா நூலகம் இட மாற்றம், புதிய தலைமைச் செயலகம் முடக்கம், தமிழர்களின் பண்பாட்டுத் தளத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டத்தை ரத்து செய்தது என்பவையெல்லாம் தமிழர்கள் மத்தியில் கடும் சினத்தை உற்பத்தி செய்து விட்டன என்பதில் அய்யமில்லை.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உரிமைகள் பறிப்பு - ஆளும் கட்சியின் தற்புகழ்ச்சிப் புராணம் இவையெல்லாம் படித்த மக்கள் மத்தியில் முகச் சுளிப்பை ஏற்படுத்தி விட்டன.

இது ஒரு பக்கம் இருந்தாலும் தி.மு.க.விடம் மக்கள் எதிர்ப்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. விருகம் பாக்கத்தில் நேற்று நடைபெற்ற கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்ப ழகன் அவர்கள் பேசியது மிகவும் குறிப்பிடத் தக்கதாகும்.

அரசியல் பணி என்பது ஒரு வகையில் பொழுது போக்குப் பணி - அதையும் கடந்து இனத்தின் மக்களுக்காக அவர்களின் உரிமைகளுக்காக பாடுபடும் பணி தான் முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.

அதனை வழிமொழிகிற வகையில் திமுக தலைவர் கலைஞர் அவர்களும் உரையாற்றினார்.

ஜூன் 2ஆம் தேதி தி.மு.க. இளைஞரணி சார்பில் சென்னை காமராசர் அரங்கில் நடைபெற்ற கலைஞர் அவர்களின் பிறந்த நாள் கருத்தரங்கிலும் இந்த வுணர்வு தலைதூக்கி நின்றதைக் காண முடிந்தது.

டெசோ என்ற அமைப்பு மீண்டும் தொடங்கப்பட்டு இருப்பது ஒரு புது நம்பிக்கையைத் தமிழர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அந்தக் கருத்தரங்கில் அதனைச் சுட்டிக் காட்டியும் உள்ளார். ஆகஸ்டு 5ஆம் தேதி டெசோ சார்பில் மாநாடு விழுப்புரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த உணர்ச்சிகளின் சங்கமத்தை இவ்வாண்டு கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கண்ணெதிரே காண முடிந்தது என்பது முக்கிய உண்மையாகும். அது வளர வேண்டும் - வளர்க்கப்படவும் வேண்டும் 4-6-2012

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் வைத்த முத்தாய்ப்பு

- நமது சிறப்பு செய்தியாளர் -



ஏழை மாணவர்களுக்கு நோட்டு மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கியபோது



ஏழை மாணவர்களுக்கு சீருடை மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கியபோது

சென்னை - காமராசர் அரங்கில் நேற்று மாலை நடைபெற்ற கலைஞர் பிறந்த நாள் விழா கருத்தரங்கிற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

1. கலைஞர் யார்? என்ற கேள்வியை எழுப்பி அதற்கான விடையினை அளித்தார்; முதலில் கலைஞர் அவர்களின் வாயாலேயே சொல்ல வைத்தார்!

கேள்வி: உங்களைப் பற்றி நீங்களேஒரு வரியில் சுயவிமர்சனம் செய்யுங்களேன்.

கலைஞர் பதில்: மானமிகு சுயமரியாதைக்காரன் (குங்குமம் 30.4.2006)

இதைவிட மிகச்சரியாக யாராலும் படம் பிடிக்க முடியாத காரணத்தால் கலைஞரைக் கொண்டே கலைஞர் அவர்களை எடை போட்டுச் சொல்லி விட்டார்.

இதற்கு மேலும் ஓர் விளக்கம் இருக்கிறது. அதையும் மானமிகு கலைஞர் அவர்களே சொல்லி இருக்கிறார்.

நான் தலைவனாக விளங்குகிறனோ இல்லையோ இளமை தொட்டு, தென்னையின் விழாத மட்டைகள் தரும் பயன்களையும், விழுந்த மட்டைகள் தரும் பயன்களையும் மறைந்த மட்டைகள் விட்டுச் சென்ற வடுக்களையும் கண்டுணர்ந்து, தொண்டுள்ளத்தைத் தொலைக்காமல் இருப்பவன்; மானமிகு இல்லையேல் மாண்புமிகுகளுக்கு மதிப்பில்லை என்பதை அறிந்தவன் (முரசொலி 15.9.2005) என்பதை பதவியில் உள்ளவர்கள் கண்ணாடிச் சட்டம் போட்டு வைத்து ஒவ்வொரு நாள் காலையிலும், இரவிலும் பார்த்துக் கொள்வதுகூட நல்லதே!
இன்னொரு தகவலும் உண்டு.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது பேசிய ஓர் எதிர்க்கட்சி உறுப்பினர் அமைச்சர்களுக்குச் சுயமரியாதை இருந்தால்...! என்று ஆரம்பித்தார்; அவ்வளவுதான் அரிமாவாக எழுந்தார் கலைஞர்.

சுயமரியாதை எங்கள் சொத்து; நாங்கள் தந்தை பெரியார் அவர்களின் பிள்ளைகள்! முழுக்க முழுக்க சுயமரியாதை இயக்கத்திலேயே வளர்ந்தவர்கள்தான் என்றாரே பார்க்கலாம் (8.8.1973).

கலைஞர் யார் என்பதற்கு இவற்றை விடவா ஆதாரங்கள் தேவைப்படும்?

2. இரண்டாவதாக தமிழர் தலைவர் மலரும் நினைவாக எடுத்துச் சொன்னவை இன்றைய தலைமுறையினர் பொது வாழ்வில் உள்ளோர் தெரிந்து கொள்ள வேண்டியது.

கலைஞர் என்றால் 5 முறை முதல் அமைச்சராக இருந்தார் என்பதை மட்டும் தெரிந்து கொள்வதால் பயனில்லை. அதற்கு முன்னாள் நடந்து வந்த சுயமரியாதை இயக்கப் பாதை கரடு முரடனானது.

அறுபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி; திருத்துறைப்பூண்டி வட்டம் வேளுக்குடி, சங்கந்தியில் கூட்டத்தை முடித்து விட்டு எங்கள் பயணம் எதில் தெரியுமா? கட்டை வண்டியில், கூண்டு வண்டிகூடக் கிடையாது. காலையில் திருத்துறைப்பூண்டிக்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தோம். காலை சிற்றுண்டி ஹாஜா மொய்தீன் என்ற கழகத் தொண்டர் வீட்டில்.

இப்பொழுதுள்ள வசதிகளையும் அந்தக் காலப் பொதுத் தொண்டின் தன்மை எப்படிப்பட்டது என்பதையும் இந்தத் தலைமுறையினர் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். திருத்துறைபூண்டியில் ஒரு மாநாடு, கலைஞர் அவர் களை வரவேற்க ரயில்வே நிலையத்திற்குச் சென்றோம். உடம்பு முழுவதும் மறைக்கும் முழுக்கைக் கருப்புச் சட்டைக் கோலத்தோடு வருகிறார்.

முகத்தில் எல்லாம் முத்துமுத்தாக அம்மைக் கொப்புளங்கள், உடல் முழுமையும் கொப்பளங்கள் தான்; அதனை மறைக்கத்தான் இந்த முழுக்கைச்சட்டை அத்தோடு மாநாட்டுக்கு வந்தவர் தான் கலைஞர்.

கலைஞர் அவர்கள் இந்த இடத்துக்கு வந்து சேர்வதற்கு முன்பட்ட கஷ்டங்கள், வசதிக் குறைவுகள். இவற்றையெல்லாம் ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும். பின்னாளில் முதல் அமைச்சராக ஆகப் போகிறோம் என்று எதிர்பார்த்து பொதுப் பணிக்கு வரவில்லை என்று தமிழர் தலைவர் சொன்னபோது ஒரே நிசப்தம்.

இதோ கலைஞர் சொல்வதைக் கேளுங்கள்:

தமிழ் ஓவியா said...

இந்த இயக்கம் சமுதாயத்திலே நமக்கு ஏற்பட்டுள்ள இழிவுகளைத் துடைத்துக் கொள்ள - ஏற்றம் பெற - நாமும் மனிதர்கள்தான் என்கிற சுயமரியாதை உணர்வு கொள்ள - பக்தி என்ற பெயரால் - பஞ்சாங்கம் என்ற பெயரால் - மூடநம்பிக்கை என்ற பெயரால், ஆண்டவன், ஆலயம் என்ற பெயரால் - குருட்டு நம்பிக்கையால் இந்தச் சமுதாயத்திற்கு எந்தக் காலத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டு விடக்கூடாது என்பதைத் தடுத்து நிறுத்துவதற்காகத் தான். இந்த ஆட்சி அமைந்த காலத்திலிருந்து இது வரையில் எத்தனையோ எதிர்ப்புகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அத்தனையையும் பொருட்படுத்தாமல், அனைத்து எதிர்ப்புகளுக்கும் ஈடு கொடுத்து - பெண்களுக்காகப் பாடுபடுகிற நேரத்திலும் சரி - மகளிர் உரிமைக்காகக் குரல் கொடுத்த நேரத்திலும் சரி - அல்லது மூட நம்பிக்கைகளை வீழ்த்த வேண்டுமென்று பேசுகிற நேரத்திலும் சரி - எழுதுகிற நேரத்திலும் சரி - அவை களைக் கலைக் காட்சிகளாகத் தெரிவிக்கிற நேரத்திலும் சரி - எல்லா நேரத்திலும் கொள்கையை விட்டு நாம் அகன்றதில்லை; இம்மியும் நழுவியதில்லை.

நமக்கு இருப்பது ஒரே பெருமை - ஒரே செல்வாக்கு - ஒரே சக்தி இதுதான் - அதை விட்டு நாம் விலகாத வரை, நம்மை யாரும் வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கையை நான் பெறுகிறேன். இன்றைக்கு இந்த நாற்காலி இருக்கலாம் - கோட்டையிலே நமக்காகப் போடப்படுகின்ற சிம்மாசனம் ஓராண்டு காலம், இரண்டாண்டு காலம் இருக்கலாம். எப்போதும் நிரந்தரமல்ல. அவைகளுக் காகவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டதல்ல. இந்த இயக்கத்திலே இருக்கின்ற நாம் சுயமரியாதை உணர் வோடு வாழ வேண்டும் என்று கலைஞர் அவர்கள் பேசியுள்ளார்.

(சென்னை அண்ணா அறிவாலயத்தில் 2-6-2008 அன்று நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து கலைஞர் அவர்கள் ஆற்றிய மானமிகு உரையின் ஒரு சிறு பகுதி இது)

இந்த இடத்தில் கலைஞர் அவர்களின் மேற்கண்ட கருத்து எடுத்துக்காட்டத் தகுந்ததாகும்.

3. கலைஞர் தோளில் ஒரு பூணூல் தொங்கி இருந்தால் லெனின் என்று சொல்லி இருப்பார்கள் என்றெல்லாம் இங்குப் பேசினார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. அவதாரமாக்கி இருப்பார்கள் - சில தலபுராணங்களையும் எழுதி இருப்பார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்னபோது சிரிப்பொலியும், கரவொலியும் சங்க மித்தன.

வெறும் வாழ்த்துகள், பாராட்டுகள் என்பதல்ல - இந்த விழா! தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்கள்.

வாழ்த்துவதற்கெல்லாம் நான் சந்தோஷப்பட வேண்டும் என்றால், என்னை வாழ்த்தியவர்களைவிட சாபமிட்டவர் கள். வசை பாடியவர்கள்தான் அதிகம். வாழ்த்துகளுக்கு மகிழ்ந்தால் இந்த வசவுகளுக்குச் சங்கடப்பட நேரிடுமே! என்னைப் பொறுத்தவரை எனக்கு இரண்டும் ஒன்றுதான் என்றார்; அது கலைஞருக்கும் பொருந்தும்! என்றார் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள்.

4) அண்ணா அவர்கள் மறைந்த நிலையில் அடுத்து, யார் முதல் அமைச்சர் என்ற கேள்வி எழுந்தபோது கலைஞர்தான் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தவர் தந்தை பெரியார். அதற்கான சாட்சியங்களாக நாங்கள் இன்னும் இருக்கிறோம் என்று குறிப்பிட்டார் தமிழர் தலைவர்.

தமிழ் ஓவியா said...

5) இன்றைய தினம் சிலர் கிளம்பி இருக்கிறார்கள். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்.

யார் அவர்கள்? அவர்கள் பின்னணி என்ன? விரை வில் அம்பலமாகும் அல்லது அம்பலப்படுத்திப்படுவார்கள்!

ஆச்சரியார் - ராஜாஜி உள்ளங்கால் முதல் உச்சந் தலைவரை மூளை உள்ளவர் என்று சொல்லுவார்கள்.

ஒரு காலத்தில் இந்தியைத் திணித்தவரும் அவர்தான். சமஸ்கிருதத்தைப் புகுத்துவதற்காக இந்தியைப் படிக்கச் சொல்லுவதாகக் கூறினார் அவர். அதனை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் தமிழ்நாடே போர்க்கோலம் பூண்டது.

அதே ராஜாஜி பிற்காலத்தில் என்ன சொன்னார்? ழனே சூநஎநச, நுபேடளை நுஎநச என்று சொல்ல வைத்தது யார்? திராவிடர் இயக்கம் அல்லவா! எவ்வளவோ சொல்லலாம்.

ஆரியத்தால் வீழ்ந்தோம் என்பதுதான் உண்மை. அதனை மறைக்கத்தான் - திசை திருப்பத்தான் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சிலர் ஒரு குறிப்பிட்ட பின்னணியோடு கிளம்பியுள்ளார்கள். அவர்களை நம்மால் முறியடிக்க முடியும். நம் இளைஞர்கள் அத்தகைவர்களை அடையாளம் காணச் செய்வோம்!

6. கலைஞர்அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி வெளியிடப்பட்டுள்ள முரசொலி மலரில் கனடா நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஜோசப் ஹார்ப்பர் அவர்களின் வாழ்த்துச் செய்தி இடம் பெற்றுள்ளது.

இவர் யார்? 2008இல் இலங்கையில் நடந்த இனப்படு கொலை தொடர்பாக அய்.நா. வல்லுநர் குழு மூலமாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என உலகளாவிய அளவில் முதலில் குரல் கொடுத்தவர்!

அப்படிப்பட்ட கனடா நாட்டின் பிரதமர் அவர்கள் கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார் என்றால் அதன் பொருள் என்ன?

ஈழத் தமிழர் பிரச்சினை என்பது உலகப் பிரச்சினையாக உருமாற்றம் பெற்றுள்ளது. டெசோவின் பங்களிப்பு முக்கியமானது என்கிற கால கட்டம் ஏற்பட்டுவிட்டது என்பதற்கு கனடா நாட்டுப் பிரதமரின் வாழ்த்து ஒரு அடையாளமாகும் என்றார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
7) நிறைவாக தமிழர் தலைவர் தெரிவித்த கருத்து, அறிவித்த தகவல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

முரசொலியில் தமது பிறந்த நாள் மலரில் மானமிகு கலைஞர் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் ஒரு பகுதியைப் படித்துக் காட்டினார்.

இன்னும் பெருந்தொண்டு; பெரியார் வழி நடக்கும் தொண்டு! பேரறிஞர் அண்ணாவின் மொழிகளை இதயத்தில் பதித்து, தொடரும் தொண்டு என்ன என்பதை அறிந்து என்றென்றும் இந்த இனம் காக்கும் தலைவர் கள்தான் நம்மை வழி நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து நடைபோடுவாய் எனக் கூறும் இந்த வேளையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரங்களை, பெரியாரும், அண்ணாவும் நமக்காக உச்சரித்தார்கள் என்று எண்ணுவது மட்டுமல்லாமல்; எதற்காக உச்சரித்தார்கள் என்பதையும் சிந்தித்துத் தெளிவுபெற வேண்டும். தெளிவு பெற்று நமது இயக்கப் பணியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்படும் நெளிவுகளை நிமிர்த்தி; கட்டுப்பாடு போற்றி, களங்களில் நாம் காணும் வெற்றிகளுக்கு பின்னரும் கண்ணியம் கவசமாகட்டும்! ஒற்றுமை உரமாகட்டும்! என்றுரைக்கின்றேன்.

நமது படைக்கலனாம் இனமானக் கொள்கையையும் - பாசறைகளாம் கழக அமைப்புக்களையும் - திராவிட இயக்க நூற்றாண்டு விழா கொண்டாடுகிற இந்த நேரத்தில் மேலும் வலுப்படுத்திடவும் - இங்கே தமிழகத்தில் தன்மான உணர்வு பெருகிடவும் - ஈழத்தில் தனித்தமிழ்நாடு உருவாகிடவும் -வஞ்சகர் வந்தவர் தமிழால் செழித்தார்;

வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்

என்ற புரட்சிக் கவிஞரின் புயல் வரிகளுக்குப் பொருள் புரிந்து போர் முரசம் ஆர்த்திடவும் - நம்மைத் தயார்படுத்திக் கொள்ள சூளூரை ஏற்பதே இந்தச் சுயமரியாதைக்காரனின் பிறந்த நாள் வாழ்த்தாகும் என; என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்குத் தெரிவித்து வணங்குகிறேன்!

என்று மானமிகுகலைஞர் அவர்கள் குறிப்பிட்டு இருப்பதை அவரின் பிறந்த நாள் விழா கருத்தரங்கில் எடுத்துக் கூற விரும்புகிறேன்.

கலைஞர் அவர்களைப் பாராட்டுவதோடு நில்லாமல் அவர் கூறியவற்றில் கண்டுள்ளவற்றைக் கவனமாக உள்வாங்கி செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் திராவிடர் கழகத் தலைவர்.

இந்தக் கருத்தரங்கின் முத்தாய்ப்பு இதுதான் என்பது அங்குக் கூடியிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் உள்ளக்கிடக்கையாக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

தமிழர் தலைவர் எடுத்துக்காட்டிய கலைஞர் அவர் களின் இந்தச் செய்தி - மேலும் அனைவரையும் அடையும் போது, மற்றவர்களும் இந்தவுணர்வுக்கு ஆளாவார்கள் என்பதில் அய்யமில்லை. 3-6-2012

தமிழ் ஓவியா said...

காமராசர் அரங்கில் கலைஞர் கருத்தரங்கக் காவியம்! ஒரு விமர்சனம்



விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமை உரையாற்றினார்

தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, தி.மு.க.வின் பல்வேறு அணிகள் சார்பாக தலைநகரில் மிக நேர்த்தியாகக் கொண்டாடப்பட்டது.

குறிப்பாக தி.மு.க. இளைஞரணியின் சார்பில் சென்னை காமராசர் அரங்கில் நேற்று மாலை (2-6-2012) நடைபெற்ற கருத்தரங்கம் பயனுள்ள வகையில் அமைந்தது.

தஞ்சை செல்வி - அய்யப்பன் குழுவினர்தம் நாட்டுப்புறத் தெம்மாங்கு இசையுடன் விழா களை கட்டியது. மாலை 5 மணிக்கே அரங்கம் நிரம்பி வழிந்தது.

கருத்தரங்கம் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மேனாள் மேயரும் தி.மு.க. இளைஞரணி மாநில துணைச் செயலாளருமான மா.சுப்பிரமணியன் அனை வரையும் வரவேற்று உரையாற்றினார்.

தோழர் இரகுபதி முன்னின்று நடத்தும். நரிக்குறவர் பள்ளிக்குத் தேவையான சீருடைகள் 250. அதே போல எவர்சில்வர் தட்டுகள், கணினி உட்பட நல உதவிகள் விழாக்குழுவினர் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் வழங்கினார். அப் பொருள்களை தோழர் இரகுபதி அவர்களிடமும், பள்ளிப் பிள்ளைகளிடமும் அளித்தார்.

தோழர் பொன்.குமார்

கட்டடத் தொழிலாளர் சங்கத் தலைவர் பொன். குமார் அவர்கள் கலைஞர் உழைப்போரின் உற்ற நண்பர் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பூமி தன்னைத் தானே சுற்றுகிறது. நமது தலைவர் கலைஞர் அவர்களோ சக்கர நாற்காலி மூலம் இந்தப் பூமியையே சுற்றுகிறார் என்ற பீடிகையுடன் கலகலப் பாகத் தன் உரையைத் தொடங்கினார்.

மருத்துவமனையில் இருந்த போதும் கூட அதனைத் தலைமைச் செயலகமாக ஆக்கிக் கொண்டு பணியாற்றிய முதல் அமைச்சர் கலைஞர் என்று கலைஞர் அவர்களின் செயல் திறனை எடுத்துக் காட்டினார்.

அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் தொடர்பாக முதல் நாள் உள்துறை அமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் சட்டப் பேரவையில் ஓர் அறிவிப்பைக் கொடுத்தார். மறுநாள் தலைமைச் செயலகத்துக்கு நான் சென்றேன். அப்பொழுது முதல் அமைச்சர் அவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தார்.

எதிர்பாராத விதமாக அவரைச் சந்திக்க நேர்ந்தது. நாளை தேர்தல் நாள் அறிவிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. நேற்றுத் துணை முதல் அமைச்சர் சட்டப் பேரவையில் தெரிவித்த அறிவிப்புக்கான ஆணையை இன்றைக்குள் பிறப்பிக்காவிட்டால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் பிறப்பிக்க முடியாது என்று கூறினேன். அந்த இடத்திலேயே தம் செயலாளர் இராச மாணிக்கம் அவர்களை அழைத்து ஆணை பிறப்பிப்ப தற்கான ஏற்பாட்டைச் செய்தார்.

இப்படி எந்த ஒரு முதலமைச்சரையும் எளிதாகச் சந்தித்து மக்கள் நலனுக்கான ஆணையைப் பெற முடியும் என்று தோழர் பொன். குமார் சொன்னபோது - மக்கள் மன்றம் அதனை ஓர் ஆச்சரியமான தகவலாகத்தான் எதிர்கொண்டு கரஒலி எழுப்பியது.

கலைஞர் அவர்களின் ஆட்சியில் 32 வாரியங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் நலப் பணிகள் நடைபெற்றன. இந்த ஆட்சியில் அவற்றின் நிலை என்ன?

தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த வாரியங்கள் முடக்கப்பட்டு விட்டதாக உச்ச நீதிமன்றமே தலையில் குட்டியுள்ளது என்று எடுத்துச் சொல்லி, கலைஞர் ஆட்சியின் உண்மையான மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைப் பொருத்தமாக எடுத்துக் காட்டினார்.

திருமதி பர்வீன் சுல்தானா

பேராசிரியை பர்வீன் சுல்தானா கலைஞர் இலக்கிய ஏந்தல் என்ற தலைப்பில் சுவையாக எடுத்துக்காட்டிப் பேசினார்.

எடுத்த எடுப்பிலேயே திராவிடர் இயக்கத்தால் தமிழ் இலக்கிய வளர்ச்சி ஏற்பட்டதை எடுத்துக் கூறினார். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சில தறுதலைகள் கூறிவருகிறார்களே - தமிழுக்கு திராவிடர் இயக்கம் என்ன செய்து கிழித்தது என்று கூறும் குள்ள மனிதர்களுக்குச் சூடு கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது அவரது தொடக்கம்.

தமிழ் ஓவியா said...

புரட்சிக் கவிஞர், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், புலவர் குழந்தை, முடியரசன் என்று திராவிட இயக்கத்தின் படைப்பாளர்கள் பட்டியல் மிகவும் நீண்டது. நெஞ்சில் உண்மை சிறிதுமின்றி குற்றப் பத்திரிகைகள் படிக்கத் தொடங்கியுள்ளது - பார்ப்பனர்களின் தூண்டு தலால் ஒரு சிறு கும்பல்.

1330 குறள்களில் 354 குறள்களைத் தேர்வு செய்து கலைஞர் அவர்கள் அளித்துள்ள தெளிவுரை கருத்துரை களின் தனித்தன்மைகளை இலக்கியச் சுவையோடு விளக்கினார் பேராசிரியை.

தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களைக் கூட தொல்காப்பியப் பூங்காவாக்கி நம்மை உலவ விட்டுள்ள புலமையினை வெகுவாகச் சிலாகித்தார்.

நேர நெருக்கடியால் கலைஞர் அவர்களால் படைக்கப்பட்ட சிறுகதைகளும் சரி, கவிதைகளும் சரி இனநலம், பகுத்தறிவு வளம் சார்ந்தவை என்று விளக்கிட வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

சிறுகதைகள் கூட சீர்திருத்த நோக்குடையவை. இளமைப் பலி, நளாயினி, துடிக்கும் இளமை போன்ற சிறுகதைகள் என்ன- தீட்டாயிடுத்து, மானங்காக்க, அண்ணாமலைக்கு அரோகரா போன்ற கருவூலக் கட்டுரைகள் என்ன - இவை எல்லாம் திராவிடர் இயக்கச் சிந்தாந்த மகரந்தங்களை உள்ளடக்கமாகக் கொண்டவை.

கவிதையல்ல என்ற தலைப்பில் ஈரோட்டுக் குருகுலத்தின்போது கலைஞரால் வெளியிடப்பட்ட கையடக்க நூலில் இடம் பெற்ற கவிதைகள் கற்கண்டு கள்தான்.

பசிக்குதே பசியென்றுரைத்து
வீதியில் புரளுகின்ற பாழும் பரதேசிக்கும்
எங்கள் சாதி சாதித்த நீதி என்ன?
வேதியர்க்கு வெண்பட்டும், வெண் பொங்கலும்
அளித்த சாதி அவர்கள் வைத்த மீதியையாவது
நாதியற்றோர்க்கு அளிக்க நினைத்ததா?
பேதியும் பீதியும் நம் சேரிக்கு
விடுத்தது சாதியல்லவா?
போதி மரத்துப் புத்தன் புலம்பியதும்
ஆதிமகனார் வள்ளுவன் அலறியதும்
சாதி ஒழியவேண்டுமென்றுதானே

என்று 1940 களில் எழுதியவர் கலைஞர். சாதி ஒழிப்பும், பார்ப்பனீயத்தின் சதியும் கலைஞர் அவர்களின் எழுதுகோல் குத்தீட்டியிடம் என்ன பாடுபடுகிறது?

இலக்கியம் என்பது அவரின் பொழுது போக்கல்ல. அரசியல் எனக்கு பிராணவாயு எனில் இலக்கியம் எனக்குத் தெம்பூட்டும் சரிவிகித உணவு என்பது கலைஞரின் சுயவிமர்சனம்.
(ராணி பேட்டி 3-8-2008)

ஒரு காலகட்டத்தில் திராவிடர் இயக்கத்தின் சார்பில் வெளிவந்த ஏடுகளும், இதழ்களும் எண்ணில் அடங்காதவையாயிற்றே! தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தது தந்தை பெரியார் அல்லவா! இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துத் திராவிடர் இயக்கம் தமிழுக்கு என்ன செய்தது என்று கேட்பது பேதைமையல்ல கீழ்த்தரமான புத்தியும் - பார்ப்பனீயத்தின் அம்பும் என்பதுதான் உண்மை.

பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன்

இந்திய யூனியன் முசுலிம் லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவரும் அகில இந்திய செயலாளருமான பேராசிரியர் கே.எம். காதர் மெய்தீன் அவர்கள் சிறுபான்மையினரின் சீரிய காவலர் எனும் தலைப்பில் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.

எடுத்த எடுப்பிலேயே திராவிடர் இயக்கத்தின் பாரம்பரியம் மேலே எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற பீடிகையோடு தன் கருத்தாழ மிக்க உரையைத் தொடங் கினார்.

நபிகளை மனிதனாகப் பார் - அவர் போதனைகள் என்ன என்பதைச் சிந்தித்துப் பார் என்று சொன்னவர் தந்தை பெரியார். அவரைத் தெய்வமாகப் பார்க்க வேண் டாம் என்று பகுத்தறிவுப் பக லவன் கூறியதை மறைக்கா மல் சொன்னார் பேராசிரியர்.

சிறுபான்மையினருக்குக் கலைஞர் அவர்கள் பாதுகாவலர் என்பதற்கு அவர் ஆதாரப் பூர்வமாக எடுத்துச் சொன்ன தகவல், தமிழ்நாட்டில் இஸ்லாமியர் களுக்கு இட ஒதுக்கீடு மூன்றரை சதவிகிதத்தை அளித்தவர் கலைஞர்தான் என்பதாகும்.

தமிழ் ஓவியா said...

இதுபோன்ற ஆணையை ஆந்திரா வழங்கியுள்ளது; கருநாடகா அளித்துள்ளது; மத்திய அரசு நான்கரை சதவிகிதம் அளித்துள்ளது. ஆனால் இவை எல்லாம் நீதி மன்றத்தால் அடி வாங்கி இருக்கும் போது, தமிழ்நாட்டில் மட்டும் சட்ட சம்மதத்துடன் நடைமுறையில் இருப்பதற்குக் காரணம் - கலைஞர் அவர்களின் மதி நுட்பமும், பிரச்சினையின் மீதுள்ள அக்கறையும்தான் என்பதை அவர் குறிப்பிட்டது ஆயிரம் பொன் பெறும்.

எப்படி கலைஞர் அவர்களால் வெற்றி பெற முடிகிறது?

பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் (ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம்) அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் ஆணை பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றமே ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டதே.

கலைஞர் அவர்கள் எதைச் செய்தாலும் தொலை நோக்கோடும், தக்கவர்களை அழைத்து ஆலோசனை நடத்தியும் செயல்படக் கூடியவராக இருப்பதால் வெற்றி பெற முடிகிறது.

அதிமுக ஆட்சியில் நுழைவுத் தேர்வு ரத்தினை நீதிமன்றம் ரத்து செய்ததும், அதே நேரத்தில் முதல் அமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் பிறப்பித்த நுழைவுத் தேர்வு ரத்து நீதிமன்றத்தில் செல்லுபடியான தற்கும் கூட இதே அணுகுமுறைதான் காரணமாகும்.
பிரச்சினையின் மீது முழு நம்பிக்கையும், அக்கறை யும், கவலையும் கலைஞர் அவர்களுக்கு இருப்பதைத்தான் இவை காட்டுகின்றன. தலை சிறந்த நிருவாகி என்பதற்கு இவைதான் எடுத்துக்காட்டுகள் ஆகும்.

பீட்டர் அல்போன்ஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும் சட்டப் பேரவையின் முன்னாள் உறுப்பினருமான பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் மக்களாட்சியின் மாண்பறிந்தவர் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் எங்கள் குரல் ஒலிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தவர் கலைஞர் என்று எடுத்துரைத்த இவர் கலைஞர் அவர்களின் கொள்கை சார்ந்த அரசியல் பார்வைக்கு ஓர் எடுத்துக்காட்டை முன் வைத்தார்.

சில பிரச்சினைகளை எடுத்துக் காட்டி மத்திய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்து வெளியேறுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட போது கலைஞர் அவர்கள் என்ன சொன்னார்?

அப்படி வெளியேறினால் அதன் விளைவு என்ன என்று சிந்திக்க வேண்டாமா? மதச்சார்ப்பற்ற நமது அரசமைப்பைக் கைவிட்டு, மதவாத ஆட்சி நடத்த விரும்புபவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விட முடியுமா? என்ற கேள்வியை முன் வைத்தார் - இந்த முதிர்ச்சியுள்ள தலைவர்! இந்திய அரசியலுக்கு இது போன்ற தலைவர்கள் இருந்தால்தான் சரியான வழிகாட்ட முடியும் என்பதே பீட்டர் அல்போன்சின் உரையின் அடிநாதமாக இருந்தது.

தமிழ் ஓவியா said...

தொல். திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்கள் சமத்துவப் பெரியார் எனும் தலைப்பில் உரையாற்றினார்.

அவர் உரை சுற்றிச் சுற்றி தந்தை பெரியார் அவர்களை மய்யப் புள்ளியாக வைத்தே சுழன்றது.

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டங்கச்சி ஏந்தல் போன்ற ஊராட்சிகளில் தேர்தல் நடத்த முடியாத ஜாதி இறுக்கம் இருந்து வந்தது. அந்த ஊராட்சிகளில் தேர்தலை வெற்றிகரமாக நடத்திய சாதனையை தி.மு.க. ஆட்சி நிகழ்த்திக் காட்டியது.
அதற்காக சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் சமத்துவப் பெரியார் என்று தொல். திருமாவளவன் அவர்கள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களை அழைத்தார்.

ஆனாலும் மாண்புமிகு கலைஞர் அவர்கள் பெரியார் ஒருவர்தான் என்று அந்த விழாவிலேயே அறிவித்து விட்டார்கள்.

அதே நேரத்தில் தொல். திருமாவளவன் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை அடிப்படையில் கலைஞர் அவர்கள் எப்படி எல்லாம் சிந்திக்கிறார் - செயல்படுகிறார் என்று விரிவாக எடுத்துக் காட்டி மிக அழுத்தமாகப் பேசினார்.

பார்ப்பனர் ஆதிக்கத்தைத் தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்து இருந்தாலும், அவருக்குப் பெரும் எதிர்ப்புகளைக் கொடுத்தவர்கள் - முட்டுக்கட்டை போட்டவர்கள்சூத்திரர்கள்தான்.

கல்லால் அடித்தவர்களும், அழுகிய முட்டைகளை வீசியவர்களும் நம் மக்கள்தானே!

ஆனாலும் தந்தை பெரியார் அவர்கள் எதிர்ப்பைக் கண்டு அஞ்சவில்லை, ஒதுங்கிப் போய்விடவுமில்லை. அந்த சூத்திர மக்களுக்காக, பஞ்சம மக்களுக்காகத் தான் பாடுபட்டார் (சூத்திரர்களைப் பார்த்து பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது என்று சொன்னவரும் பெரியாரே!)

தந்தை பெரியாரின் அந்த உணர்வு கலைஞர் அவர்களிடம் குடிகொண்டு இருந்ததை எடுத்துக் காட்டினார் தோழர் திருமாவளவன். தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடந்த நிகழ்வு அது (26-7-1971).

சுதந்திரா கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எச்.வி.ஹண்டே முதல் அமைச்சர் கலைஞர் அவர்களைப் பார்த்து மூன்றாம் தர அரசு (Third Rate Government) இது என்று கூறினார்.

அடுத்த நொடியே முதல் அமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள் மிகக் கம்பீரமாக எழுந்து, முக்கியமாக ஒன்றைப் பிரகடனப்படுத்தினார். இந்த அரசு நாலாஞ்சாதி மக்களுக் கான, சூத்திரர்களுக்காகப் பாடுபடும் அரசுதான். எங்களை எல்லாம் ஆளாக்கி உருவாக்கிய தந்தை பெரியார் அவர் களுடைய மொழியில் கூறுகிறேன். இவ்வரசு நாலாந்தர அரசுதான். பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்ற முறையில் நாலாந்தர அரசைத்தான் நாலாந்தர மக்களின் நலனுக்காகவே நடத்துகிறோம் என இறு மாப்புடனும், பெருமையுடனும், கர்வத்துடனும் கூறிக் கொள்கிறேன் என்று பிரகடனப் படுத்தினாரே பார்க்கலாம்.

இந்த அறிவிப்பைத்தான் தொல். திருமாவளவன் அவர்கள் மிகுந்த பொருத்தமாக தந்தை பெரியார் வழியில் கலைஞர்அவர்கள் எப்படி சிந்திக்கிறார் என்பதை எடுத்துக் காட்டி, பெரும் கர ஒலியைப் பெற்றார்.
மற்றொரு முக்கிய அவலத்தை மறக்காமல் நினைவூட்டினார்.

தாழ்த்தப்பட்டவன் அய்.ஏ.எஸ். ஆக லாம்; அய்.பி.எஸ். ஆகலாம். ஏன், தொழில திபரும் ஆகலாம். ஆனால் அர்ச்சகனாக ஆக முடியுமா?

ஏன் இந்த அவலம்? உரிமை மறுப்பு? என்ற வினாவை எழுப்பியவர் தந்தை பெரியார்; அதற்காகப் போராடியவரும் தந்தை பெரியார் அவர்களே! அதன் அடிப்படையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியவர் நமது கலைஞர்.

அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று முடக்கி இருப்பவர்கள் பார்ப்பனர்கள் என்பதை நினைவூட்டி, பார்ப்பனர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள்? எந்த உணர்வோடு இருக்கிறார்கள் என்பதை எடுத்துச் சொன்னார்.

இன்றைய விடுதலையில் இராவணன் பேரன் கலைஞர் என்று தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுதி இருந்ததை எடுத்துக் காட்டி, எழுச்சித் தமிழர் அது எவ்வளவு சரியானது என்பதை யும் எடுத்துக் காட்டத் தவறவில்லை.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ராமன் பாலம் என்று சொல்லி முடக்கிய போது கலைஞர் அவர்கள் முதல் அமைச் சராக இருந்து கொண்டே பகுத்தறிவின் அடிப்படையில், ராமன் என்ன என்ஜினீ யரா? எந்தப் பொறியியல் கல்லூரியில் படித் தான்? என்று கேட்டார். (பலத்த கரஒலி!)

இந்த இடத்தில் இரண்டு நிகழ்வுகளை நினைவூட்டிக் கொள்வது: நல்லது, பொருத்த மானது. என்.டி.டி.வி. சார்பில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களைப் பேட்டி கண்டவர் சேகர் குப்தா. அதில் ஒரு கேள்வி: வாஜ்பாய் ஒப்புக் கொண்டதாகச் சொல் கிறீர்கள். இப்பொழுது அது மதப் பிரச் சினையாக ஆகியிருக்கிறது. ஏனென்றால் ஏராளமானவர் இந்தப் பாலத்தை ராமர் கட்டினார் என்று நம்புகிறார்கள். அந்தப் பாலத்தை உடைத்து பாதை அமைக்கப் படக்கூடாது என்று விரும்புகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

முதல் அமைச்சர் கலைஞரின் பதில்: அது தேவையே இல்லை. அதை உடைக்க வேண்டிய அவசியம் கிடையாது. உடைப்பது ராமர் கட்டிய பாலம் அல்ல. நான் இன்னும் சொல்கிறேன். அப்படியே இருந்தாலும் என்ன, அதனை அகற்றக்கூடாதா? நாட்டு மக்களின் நலனுக்காக அதை அகற்றிவிட்டு கப்பல் போக்குவரத்துக் கால்வாய் அமைக்கக் கூடாதா? என்று கேட்டாரே!
(முரசொலி, 29-10-2007)

சென்னை கலைவாணர் அரங்கத்தில் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் நடைமறந்த நதியும், திசை மாறிய ஓடையும், பனிபெய் யும் பகல் ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டு, உரையாற்றுகையில் முதல மைச்சர் டாக்டர் கலைஞர் ஒன்றைக் குறிப்பிட்டார்: (18.10.1998)
மனிதனைத் தேட மார்க்கம் என்ன? என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள அந்தக் கவிதையில்தான் எனக்குச் சற்று மாறுபாடு. மாறுபாடுகளைச் சொன்னால் பாராட்டு விழாவிலே தம்பி தமிழன்பன் வருத்தப்பட மாட்டார் என்று கருதுகிறேன். உரிமையுள்ள அண்ணன் என்ற காரணத்தால் சொல் கின்றேன்.

இராமன் இராவணர்களோடு கூட்டுச் சேர்ந்து
கொண்டான்
சரயூ வெள்ளத்தில்
தருமத்தின் பிணங்கள்
என்று குறிப்பிடுகிறார்.

இராவணர்களோடு கூட்டுச் சேர்ந்தால் தருமம் பிணமாகிவிடும் என்பது நம்முடைய தம்பி ஈரோடு தமிழன்பனுடைய கருத்தாக வெளிப்பட்டிருக்கின்றன்றது. வெளிப் பட்ட கவிதை அவருடைய கருத்தோ என்று தோன்றச் செய்திருக்கிறது. உண்மை யிலேயே அது அவருடைய கருத்தல்ல என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் அவருடைய கருத்தோ என்று தோன்றச் செய்திருக் கின்றது என்று கூறி ராவணனை குறைக் கூறி என் நெஞ்சைப் புண்படுத்த வேண்டாம் என்று கலைஞர் கூறியதையும் இந்த இடத்தில் சேர்த்துக் கொள்ளலாமே.
ஒரு மதச் சார்பற்ற அரசுக்குத் தலைமை தாங்குபவர் - மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும். அது குடிமகன் ஒவ்வொரு வனுடைய கடமை என்று இந்திய அர சமைப்புச் சட்டம் கூறுகிறதே (51A-h) . அதன்படி பார்த்தாலும் முதல்வர் கலைஞர் அவர்கள் சொன்ன கருத்து மிகவும் சரியானதும் - செறிவானதும் ஆயிற்றே!



இன்னொன்றும் உண்டு.

எழுச்சித் தமிழரின் பேச்சில் முக்கிய இடம் பெற்றது பெரியார் நினைவு சமத்து வபுரம் ஆகும்.

கலைஞர் அவர்களுக்கு மட்டும் இந்தச் சிந்தனை உதிப்பானேன்? காரணம் அவர் தந்தை பெரியாரின் தொண்டர். சமத்து வத்தை விரும்புவர்.

கலைஞர் ஆட்சிக்கு வந்தால் பெரியார் நினைவு சமத்துவபுரம் வருகிறது. அம்மையார் ஆட்சிக்கு வந்தால் பெரியார் நினைவு சமத்துவபுரம் மறைகிறது. காரணம் என்ன? கலைஞர் அவர்களுக்கு சமத்துவச் சிந்தனை இருக்கிறது. அம்மையாருக்கு எப்படி வரும் சமத்துவச் சிந்தனை? என்று தோழர் திருமா அவர்களின் கேள்வி அர்த்தம் நிறைந்ததே.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்சனையை சட்டப் பேரவையில் பேசக்கூட அனுமதிக் காதவர் அம்மையார் என்பதையும் நினை வூட்டத் தவறவில்லை மானமிகு திருமா அவர்கள்.

திராவிடத்தைக் கொச்சைப்படுத்தும் தமிழ் தேசியவாதிகளையும் ஒரு பிடி பிடித்தார்.

திராவிடத் தேசியம் தமிழ்த் தேசியத்துக்கும் தமிழுக்கும் ஒன்றும் எதிரியல்ல. ஜான் ரத்தினம் என்ற பாதிரியார் முதல் முதலில் திராவிடர் கழகம் என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினார்.

ஈழ விடுதலை என்பதற்கும் திராவிடம் ஒன்றும் எதிரானதல்ல. தமிழ் ஈழம் என்ற உணர்வை தி..க. மேடையிலும், திமுக மேடை யிலிருந்தும் கேட்டு உணர்வு பெற்றவன்தான் இந்தத் திருமா என்று சவுக்கடி கொடுத்தார். டெசோ மறுபடியும் தொடங்கப்பட்டு இருப் பது சரியானதே! கலைஞர் அவர்கள் தலை மையில் சாதிக்க முடியும் என்றும் தெரி வித்தார்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென் றால் எழுச்சித் தமிழரின் உரை உணர்ச்சிக் கடலின் அலை வீச்சாக இருந்தது.

கலைஞர் அவர்களும் மானமிகு ஆசிரியர் அவர்களும் நம் இனத்துக்கு வாளும் கேடயமுமாகவும் இருக்கின்றனர். அதனால்தான் நம் எதிரிகள் இந்த இரு தலைவர்களின் மீது குறி வைத்துத் தாக்குகின்றனர் என்பதையும் மிகச் சரியாக, முக்கியமாக விழா மேடையில் அடையாளம் காட்டியுள்ளார். பாராட்டுகள்!







தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, கவிஞர் கனிமொழி, ஏ.வ.வேலு, கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலிபூங்குன்றன், நல்ல.கிருஷ்ணமூர்த்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் (சென்னை, 2.6.2012).

- தொகுப்பு: மின்சாரm

தமிழ் ஓவியா said...

தமிழுக்குப் புதிய முகவரி தந்த உங்களை வணங்கி வாழ்த்துகிறோம்!

தி.மு.க. தலைவர் கலைஞருக்கு ஆ.இராசா எம்.பி., பிறந்தநாள் வாழ்த்துமடல்



புதுடில்லி, ஜூன் 3- தலைவர் கலைஞர் அவர் களுக்கு - அவரது பிறந்தநாளையொட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா எம்.பி., வாழ்த்து மடலொன்று எழுதியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

அதில் அவர், தமிழுக்குப் புதிய முகவரி தந்த உங்களை வணங்கி வாழ்த்து கிறோம்! என உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.

தலைவர் கலைஞர் அவர்களுக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா எழுதியுள்ள கடிதம் வருமாறு:-

தனக்குவமையில்லா தலைவர் மூதறிஞர் கலைஞர் அவர்களுக்கு, வணக்கம். நேரில் வந்து வணங்கிட இயலாத நிலையில் - உங்களின் 89ஆவது பிறந்த நாளில் என் நினைவுகள் மீண்டு வந்து உங்களை பணிந்து வாழ்த்திடத் தலைப்படுகின்றன. கால் நூற்றாண்டு கடந்துபோய்விட்ட, முதன் முதலாய் முழுக்கால் சட்டை அணிந்த அந்த காலத்து கணங்களை நினைவு கொள்கிறேன்.

கடற்கரை வெளியில், நெருங்க முடியாத அருகாமையும் தொடமுடியாத தூரமும் ஆக்கிரமித் திருந்த அந்த இரவு வெளிச்சத்தில் நடந்த உங்களின் மணிவிழாவில் உங்கள் ஏற்புரை யையும் திராவிட இயக்கத்தின் தீராக் களஞ்சியம் பேராசிரியர் அவர்களின் வாழ்த்து ரையையும் கேட்டு ஊர்திரும் பிய நாள்முதல் - கண்டும் கேட்டும் உயிர்த்தும் உங்களின் ஆளுமையில் அமிழ்ந்து போனவன் என்ற பெருமிதம் என்நெஞ்சில் ததும்புகிறது.

`நெஞ்சுக்கு நீதியில் நீங்கள் அவதரித்த 1924ஆம் ஆண்டை அடையாளப்படுத்தும் போது -`உழைப்பின் ஆற்றல்;

தலைவனிடத்தில் தளராத பற்று;

மக்கள் சேவையில் தன்னலமற்ற ஊக்கம்; இவைகள் ஒரு தலைவனுக்கு அழகு என்று அறுதியிட்ட ஸ்டாலின் உலகின் மூன்றில் ஒரு பங்கு இயக்கத்தின் தலைவனான ஆண்டு

- என்று நீங்கள் எழுதிய முகவுரைக்கு நீங்களே தகவுரையான இந்த 88-ஆண்டுகளும் காலக் கரைசலில் நீர்த்துப்போகாத நித்திய சரித்திரம்!

`வாழ்க்கை போராட்டம் என வருணிப் போர் உளர்; எனக்கோ போராட்டமே வாழ்க்கை - இது உங்களைப் பற்றிய உங்களின் சுயவிமர்சனம். இந்த வரையறைக்குள் வர `எனக்கும் தகுதி உண்டு என வரித்துக் கொள்வதற்கு உங்களுக்குப் பின் தலைவனில்லை என்பது உங்களுக்குப் பெருமை; எங்களின் வெறுமை!

உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும் தேச எல்லைகளை தேவையற்றதாக்கி விட்டதை `வர்த்தகப்புரட்சி என்றும் `அறிவியலின் அருங் கொடை என்றும் கொண்டாடி மகிழும் அதே வேளையில் `அவசிய அடையாளங்களான மொழி யும் இனமும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தின் விளிம்பிலும் மிச்சமிருக்கிற ஒரு தலைவனை போற்றி உயர்த்த வேண்டியது தனிமனித வேலையல்ல; சமூகக் கடமை. கடமைமறந்தவர்களுக் கும் உரிமை கேட்கும் ஒரே போராளி நீங்கள்!

1857 சிப்பாய் கலகத்திற்குப்பின் `இந்தியாவின் மத விவகாரங்களில் தலையிடுவதில்லை என்று விக்டோரியா மகாராணியிடம் கேட்டுப்பெற்ற உறுதிமொழியை ஆங்கில அரசு வீழும் வரை விடாப்பிடியாய் காப்பாற்றி தங்களின் சாதீய - அடுக்குகளையும் மதத்தையும் நிலைநிறுத்த முனைந்த சிலருள் ஒருவரான சர்.சி.பி.இராமசாமி அய்யர்,

திராவிடக்குடும்பத்தின் தமிழும், வடமொழி சமஸ்கிருதமும் இந்தியாவின் இருபெரும் மாறு பட்ட கலாச்சாரக் கூறுகள் - என்றே பதிவு செய்துள்ளார். அந்த வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் `வழக்கழித்தொழிந்த வட மொழியை வாழ வைக்க முயற்சிக்கும் தலைவர் களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால், அரசியல் மற்றும் பண்பாட்டுப் படை யெடுப்புகளால் பன்னெடுங்காலமாய் தாக்குதலுக்கு ஆளானபோதும் அழிந்து விடாத தமிழுக்கு உலக விலாசம் தந்தவர் நீங்கள் என்பதால் தமிழும் உங்களை வாழ்த்துகிறது.

தமிழ் ஓவியா said...

மெல்லத்தமிழினிச்சாகும் - அந்த

மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!

இந்த வசை எனக்கு எய்திடலாமோ?

-என்று பாரதி தமிழுக்கு தானே முழுப் பொறுப்பாளியாய் சொந்தம் கொண்டாடினான்; கர்வப்பட்டான். `தமிழுக்கு நீ என்ன மொத்த குத்தகைதாரரா? என்று இலக்கிய உலகம் பாரதியிடம் சமருக்கு நின்றதில்லை; சத்தியம் அதுதான் என்பதால்! பாரதிக்குப்பின், பெற்ற புலமையாலும் தமிழுக்குப் பூட்டிய அணிகலன் களாலும் `இந்த வசை எனக்கு வந்திடலாமோ? என்று கம்பீரக் கேள்வி கேட்டுக்கொள்ள உரிமையுடையவர் நீங்கள்.

பரிவர்த்தனைக்கான பாஷை என்பதைத் தவிர மொழிக்கு சமூக நோக்கம் இருந்திட வேண்டிய அவசியமில்லை என்பது மொழியாராய்ச்சியாளர் களின் முடிவு. என்றாலும், தமிழின் நோக்கையும், தமிழர்களின் போக்கையும் ஆய்வாளர்கள் அட்ட வணைப்படுத்தினார்கள். பேரா. சுந்தரம்பிள்ளை, ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோரின் சமய நோக்கு - பேரா.தெ.பொ. மீனாட்சிசுந்தரம், வையாபுரிப்பிள்ளை, மயிலை. சீனி, வெங்கடசாமி, சாமி.சிதம் பரம் ஆகி யோரின் மதச்சார்பற்ற போக்கு. ஜீவா, வானமாமலை, கைலாசபதி, கேசவன் ஆகியோரின் மார்க்கசீய நோக்கு - மணிக்கொடி குடும்பமும், கா.நா.சுப்ர மணியமும் கொண்டிருந்த மேற்கத்திய நோக்கு- இவைகளோடு, ஒட்டியும் வெட்டியும் வளர்ந்த திராவிட நோக்கு - இத்தனை நோக்கு களையும் நிரலிட்ட நீங்கள், தமிழ றிஞர்களின் போக்குகளை குவியப்படுத்தி பிரபஞ்சத்திற்கு அறிவித்தீர்கள் :

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அடுத்தப் பிறவியில் நம்பிக்கை கொண்ட தமிழனும் உங்களை இந்நாளில் வாழ்த்துகிறான்.

மூலதனம் எழுதப்பட்ட பின்பும் சிலர் கேட்ட கேள்வி - மார்க்கசீயம் என்றால் என்ன? தங்களின் மூலதனத்தை அறியாமையில் முதலீடு செய்திருந்தவர்களின் மத்தியில் - ரஷ்யா சென்று வந்திருந்த தந்தை பெரியாரின் சுருக்கமான பதில் : உணவு, உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், முதுமையில் பாதுகாப்பு ஆகியவற்றைத் தருவது தான் மார்க்கசீயம். - இவை எல்லாவற்றையும் அளித்த அரசு உங்களின் அரசு. மீண்டும் பெரியார் பேசுகிறார்:

நன்றி, பெற்றுக்கொண்டவன்

காட்ட வேண்டிய உணர்ச்சி ;

செய்தவன் சொல்லிக்கொள்ள வேண்டிய

ஒன்றல்ல

நன்றி மறந்தவர்கள் சார்பாகவும் உங்களை வாழ்த்துகிறோம்.

2000 ஆண்டுகளுக்கு முன்னால் புரட்சி யாளனாய் தோன்றிய புத்தரின் பவுத்தம் மூன்று காரணிகளில் நின்றது.

புத்தம் - தலைவன்

தம்மம் - கொள்கை

சங்கம் - நிறுவனம்

தமிழர்களின் மேன்மைக்கு இம்மூன்றும் முக்கியம்!

நீங்கள் மூன்றுமாய் இருப்பது சத்தியம்!!

மீண்டும் பணிந்து வணங்கி வாழ்த்து கிறேன்; நன்றி. தங்களின் அன்பான தம்பி ஆ.இராசா.
இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்களுக்கு எழுதியுள்ள மடலில் ஆ.இராசா குறிப் பிட்டுள்ளார்.