Search This Blog

30.6.12

ஜாதியை ஒழித்து, சமத்துவ சமதர்ம சமுதாயம் படைக்க


தீண்டாமைச் சுவர்கள்

அண்மைக் காலமாக சில கிராமங்களில் தீண்டாமை என்னும் பாம்பு தலைகாட்டுகிறது. தீண்டாமைச் சுவர் என்னும் தகவலும் வெளி வருகிறது. தேநீர்க் கடைகளில் இரட்டைத் தம்ளர் முறை நடைமுறையில் இருப்பதாகவும், ஊடகங்கள் வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கின்றன.

இதற்குக் காரணம் என்ன? இவற்றின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது கண்டிப் பாகக் காவல்துறை உளவுப் பிரிவினருக்கு மிகவும் நன்றாகவே தெரிந்திருக்கும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மற்ற மாநிலங் களைவிட விழிப்புணர்வுப் பிரச்சாரம், பகுத்தறிவுப் பிரச்சாரம் மிக மிக அதிகம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர்; அதற்குக் காரணம் ஈ.வெ. ராமசாமி என்பது அமெரிக்கப் பேராசிரியர் களின் கருத்து என்று அமெரிக்கப் பேராசிரியர் ஜான்ரைலி கூறியதை ஆனந்தவிகடன் இதழேகூட வெளிப்படுத்தியதுண்டு.

திராவிடர் கழகம் ஒவ்வொரு நாளும் இந்தத் திசையில் பாடுபட்டுக் கொண்டுதானிருக்கிறது என்பதும் ஊருக்குத் தெரியும்.
இதற்கு மேலும் அந்த அசிங்கமானது (ருபடல ழநயன) தலை தூக்குவது ஏன் என்பது முக்கியமான அவசியமான கேள்வியாகும்.

தமிழ்நாட்டில் கீரிப்பட்டி, பாப்பாரப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டங்கச்சியேந்தல் முதலிய ஊராட் சிகளில் ஊராட்சித் தேர்தலையே நடத்த முடியா திருந்த கொடுமையை மானமிகு கலைஞர் அவர்கள் கடந்த முறை முதல் அமைச்சராக இருந்தபோது நீக்கி, சம்பந்தப்பட்ட கிராமங்களில் ஊராட்சித் தேர்தல்கள் சுமூகமாக வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதே!
ஆட்சியர்களாக இருக்கக் கூடியவர்களின் அணுகுமுறையும், அக்கறையும் இதில் மிக முக்கியமானது. சில நாட்களுக்குமுன் ஈரோடு கொடுமுடியையடுத்த நகப்பளையம் என்னும் கிராமத்தில் 100 அடி நீளமும், 4 அடி உயரமும் கொண்ட சுவர் ஒன்று எழுப்பப்பட்டது. வருவாய்த் துறை அதிகாரிகள் தலையிட்டு, சுவர் அகற்றப்பட்டது என்பது நல்ல செய்தியாகும். மதுரை மாவட்டத்திலும் உத்தபுரத்தில் இப்படி நடைபெற்றதுண்டு.

இரு தரப்பாரையும் அழைத்துப் பேசுவது, அமைதிக் குழு (ஞநயஉந ஊடிஅஅவைவநந) போடுவது என்பதெல்லாம் சடங்காச்சாரமாக நடைபெறு வதாகத் தான் பொருள் - அதுதான் யதார்த்தமும் கூட!

அதைவிட இந்த விஷம வேலைகளில் ஈடுபடுபவர்கள் யார்? அமைப்பு எது? என்பதைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

சம்பந்தப்பட்ட ஊர்களில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் கட்சிகளுக்கும். ஜாதிகளுக்கும் அப்பால்கூடி, சீர்திருத்த முற்போக்கு எண்ணத்தோடு செயல்பட முன் வருவார்களேயானால், இதற்கு உடனடியாகத் தீர்வு கிடைத்து விடும்.

அனைத்துக் கிராமங்களிலும் அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. எந்தக் கட்சியும் தீண்டாமை இருக்க வேண்டும் என்று சொல் லுவதில்லை. (பி.ஜே.பியைத் தவிர).

இந்த நிலையில், தீண்டாமை ஒழிப்பில் நம்பிக் கையுள்ள கட்சிகள் இந்தப் பிரச்சினையில் எப்படி நடந்து கொள்கின்றன என்பது மிகவும் முக்கிய மல்லவா! கொள்கைப் பூர்வமாக அரசியல் கட்சிகள் இயங்கவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

தீண்டாமையை எந்த நிலையில் அனுசரித்தாலும் அது சட்டபடி குற்றம் என்பதுதான் சட்டத்தின் நிலை! இதற்கென்றே காவல்துறையில் தனிப்பிரிவே கூட இயங்குகிறது. ஆனாலும் விளைவு ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லை.

திராவிடர் கழகத் தோழர்களுக்கு நமது வேண்டுகோள்: எந்த இடத்தில் எந்த வகையில் தீண் டாமை மற்றும் ஜாதி வெறிப் பாம்பு தலை தூக்கினாலும், உடனடியாக தலைமைக் கழகத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். முதற் கட்டமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நட வடிக்கை - அடுத்த கட்டமாக நேரில் களத்தில் இறங்குவது - தொடர் பிரச்சாரம் செய்வது என்பது போன்ற முறைகளில் நமது பணிகள் அமைதல் வேண்டும்.

தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டியதுதான்; அதே நேரத்தில் ஜாதியின் விளைவுதான் தீண்டாமை என்று மக்கள் மத்தியில் எடுத்துக் கூற வேண்டும்; குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்க தேவையான திட்டங்களைச் செயல் படுத்துவோம்.

இந்து சமய அமைப்பு என்பது வருண பேதம் எனும் அடித்தளத்தின்மீது நிமிர்ந்து நிற்கிறது.

இந்த மூலபலத்தைத் தகர்த்தெறிவதுதான் நிரந்தரமான தீர்வு.

ஜாதியை ஒழித்து, சமத்துவ சமதர்ம சமுதாயம் படைக்க இளைஞர்களே ஒன்று திரள்வீர்!
----------------------- “விடுதலை” தலையங்கம் 29-6-2012

6 comments:

தமிழ் ஓவியா said...

புத்தி?

புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடியில் நடை பெற்ற ஒரு தகவலை நமது விடுதலை செய்தியாளர் ம.மு.கண்ணன் தெரிவித் துள்ளார்.

சந்திரன் என்பவர் நவதானிய வியாபாரி. அவரது மொபட் இரு சக்கர வண்டி காணாமற் போய்விட்டது.

யாரேனும் நண்பர்கள் எடுத்துச் சென்றிருப்பார் கள், கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள் என்று நம்பி இருந்துவிட் டார். மூன்று நாட்கள் ஓடியும் மொபட் வந்து சேரவில்லை. அப்பொழுதுதான் அவ ருக்கு திடுக்கென்று அச்சம் மேலிட்டது.

காவல்துறையில் புகாரும் கொடுத்துப் பார்த் தார். வேலைக்கு ஆக வில்லை. என்ன செய்தார்? தம் கடைக்கு முன் ஒரு தட்டியில் எழுதி வைத்தார்.

எச்சரிக்கை

இந்த எண் உள்ள வண்டியை எடுத்தவர்கள் 10 நாட்களுக்குள் கொண்டு வந்து வைக்கவும். அப்படி இல்லை என்றால், வெட்டு காளியம்மன் கோவிலில் போய் நான் மந்திரிச்சுவிட்டு வந்துவிடுவேன். பிறகு கை, கால் விளங்காமல் போய் விடும்!
என்பதுதான் அந்த எச்சரிக்கை விளம்பரம்.

பக்தி வந்தாலே புத்தி போய்விடும் என்பார்களே. அதற்குக் கண் கண்ட எடுத்துக்காட்டு இதுதான்.

பொருளைப் பத்திர மாகப் பூட்டி வைக்கவேண் டாமா? அடுத்து காவல் துறைக்கு உடனடியாக புகார் கொடுக்க வேண் டாமா? இவற்றையெல்லாம் அறிவு ரீதியாகச் செய்யத் துப்பு இல்லாமல், கோயிலுக் குப் போய் மந்திரிக்கப் போகிறாராம். அதற்கு ரூ 500 முதல் 600 ரூபாய் வரை செலவானாலும் பரவாயில்லை என்று சொல்லுகிறாராம்.

எப்படி இருக்கிறது? மொபட் இரு சக்கர வண்டியைப் பறி கொடுத்து நட்டப்பட்டதோடு அல்லா மல் கோயிலுக்கும் சென்று மந்திரிக்க மேலும் 600 ரூபாய் வரை செலவு செய் யப் போகிறாராம்.

இதுதான் நம் மக்களின் அதல பாதாள பரிதாப நிலை!

முட்டாள்தனத்துக்கு மேலும் அபராத வட்டியா? கோயிலுக்குள்ளிருக்கும் கடவுளையே கடத்திக் கொண்டு போய் விற்று விடுகிறார்கள். அப்படியி ருக்கும்போது, திருடு கொடுத்த பொருளை மீட்கக் கோயிலுக்குச் செல் லுகிறாராம்!

மனிதனுக்கு பகுத்தறிவு எவ்வளவு அவசியம் என்று இதன் மூலம் விளங்க வில்லையா?

பக்தி வந்தால் புத்தி போகும்

புத்தி வந்தால் பக்தி போகும்!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

- மயிலாடன் 29-6-2012

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாட்டுக்கு எதிர்பார்ப்புக் கூடுகிறது

மாநாட்டுக்குத் தடை விதிக்க வேண்டுமாம்!

பிரதமர் மன்மோகன் சிங்குக்குப் பவுத்த பிக்குகள் கடிதம்

அஞ்ச வேண்டியவர்கள் அஞ்சுகிறார்கள், தமிழர்களே புரிந்து கொள்க!

கொழும்பு, ஜூன் 29- விழுப்புரத்தில் ஆகஸ்டு 5ஆம் தேதி நடை பெற உள்ள டெசோ மாநாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு இலங்கையில் உள்ள பவுத்தமத வெறியர்கள் கடிதம் எழுதி யுள்ளனர்.

தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு தனியீழம் தான் என்ற நிலைப்பாடு இன்று உலகமெங்கும் எழுந்து நிற்கிறது.

திமுக தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தமிழர் தேசியக் கட்சித் தலைவர் பழ. நெடுமாறன், பார்வேடு பிளாக் தலைவர் அய்யண் ணன் அம்பலம் ஆகியோர் அடங்கிய டெசோ என்ற அமைப்பால் தமிழ் நாட்டு முக்கிய நகரங்களான கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்சி, வேலூர் போன்ற இடங்களில் 1985 அக்டோபரில் மிகப் பெரிய எழுச்சி உருவாக்கப்பட்டது.

இந்தக் கால கட்டத்திற்கு மிகவும் தேவையான தனியீழம் தான் ஒரே தீர்வு என்ற கொள்கையுடைய டெசோ மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. (30.4.2012).

தி.மு.க., தி.க., திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்ற அமைப்புகளு டன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் இணைக்கப்பட்டு, புதிய பொலிவுடனும், எழுச்சியுடனும் இந்த அமைப்பு செயல்பட உள்ளது.

இதன் முக்கியக் குறிக்கோள்: பல்லாண்டுகளாகப் பாரம்பரியமான முறையில் இலங்கையின் தேசிய இனமாக இருந்து வரும் தமிழினம்; மனித உரிமைகளும், குடிமை உரிமை களும் பறிக்கப்பட்டு, இந்த நூற்றாண் டில் மிகப் பெரிய இனம் படு கொலைக்கு ஆளாக்கப்பட்டு, அணி அணியான அல்லல்களால் அனு தினமும் அலைக் கழிக்கப்பட்டு வரும் பிரச்சினை தீர்வதற்கு தனித்தமிழ் ஈழம்! அமைவதைத் தவிர வேறு தகுந்த வழியில்லை என்ற உண்மை நிலைமை இந்திய நாட்டின் பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும்  உணரச் செய்வதற்கும் தக்க ஆதரவு திரட்டுவதற்கும் உகந்த நடவடிக் கைகளை மேற்கொள்வதாகும்.

முதல் நிகழ்ச்சியாக முக்கிய மாநாடு விழுப்புரத்தில் வரும் ஆகஸ்டு 5ஆம் தேதி என்று அறி விக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாநாடு பெரும் எதிர்ப்பார்ப்பை உலக அளவில் ஏற்படுத்தி விட்டது.

இதன் முக்கியத்துவத்தை இத னால் ஏற்படப் போகும் விளைவை யார் அறிகிறார்களோ இல்லையோ - தமிழர்களின் ரத்தத்தைக் குடிப்பதில் வெறி பிடித்துத் திரியும் இலங்கையில் சிங்களப் புத்தப் பிக்குகள் மிகச் சரியாகவே உணர்ந்து விட்டனர்.
அதன் வெளிப்பாடு தான் இந்தி யப் பிரதமருக்கு அவர்கள் எழுதி யுள்ள கடிதமாகும்.

இலங்கைப் பவுத்த பிக்குகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமய என்ற அமைப்பின் சார்பில் எழுதப்பட் டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட் டுள்ளதாவது:

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தமிழீழ ஆதரவு இயக்கம் எனும் அமைப்பின் சார்பில் இந்தியாவில் ஆகஸ்ட் 5ஆம் தேதி மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாக நாம் அறிகிறோம். தமிழர்களுக்குத் தனியான தாயகம் அமைக்கப்பட வேண்டும் என்று பிரகடனப்படுத் துவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. பல துன்பமான சம்பவங்களுக்கு பயங்கரவாத யுத்தத் திற்கு வழி வகுத்ததுதான் தனி நாடு அமைப்பதற்கான 1976 ஆம் ஆண்டு தீர்மானம் என்பதைச் சுட்டிக் காட்டு கிறோம்.

இந்தியாவுக்கு எதிரான நடவ டிக்கைகளை இலங்கையில் நாங்கள் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. இதில் நாங்கள் உறுதியாக உள் ளோம். நட்பு நாடு என்ற அடிப் படையில் அத்தகைய நடவடிக்கைகள் இடம் பெறுவதை நாம் எப்போதும் அனுமதிக்க மாட்டோம் என்று இந்தியப் பிரதமருக்கு எழுதப்பட் டுள்ள கடிதத்தில் தந்திரமான வாச கங்களும் இடம் பெற்றுள்ளன.

நம் மாநாடுகளுக்கு பொதுவாக நம் எதிரிகள்தான் விளம்பர இலா காவை எடுத்துக் கொள்வர் என்று தந்தை பெரியார் கூறுவதுண்டு.

இப்பொழுது விழுப்புரத்தில் வரும் ஆகஸ்டு 5 அன்று நடைபெற உள்ள டெசோ மாநாட்டுக்கான அகில உலக விளம்பரத்தை சிங்கள பவுத்த அமைப்பு எடுத்துக் கொண்டுள்ளது போலும்!

இதன் பின்னணியைப் புரிந்து கொண்டாவது, நம் உள்ளூர்த் தோழர் கள் டெசோ மீது சேற்றை வாரி இறைப்பதை நிறுத்திக் கொள் வார்களா? 29-6-2012

தமிழ் ஓவியா said...

பிஞ்சு உள்ளங்களில் விதைக்கப்படும் நச்சு விதைகள்

தென்னிந்தியாவில் உள்ள நவோதயப் பள்ளிகளுக்கு ஆங்கிலப் பாடங்களைப் பாடபுத்தகங்களாக வெளி யிடுவதற்கு ஆங்கில மொழிப் பயிற்சிக் குழு ஒன்று அய்தராபாத்தில் இயங்கி வருகிறது. இக்குழுவில், தில்லி, அய்தரா பாத்திலுள்ள ஆங்கில ஆசிரியர்கள் பாடத் திட்டத்தை அமைத்துத் தரு கிறார்கள். பாட நூல்களை மத்திய அரசின் செலவில் புதுதில்லியிலுள்ள ஆக்ஸ்போர்டு அச்சகம் அச்சடித்துத் தருகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டில் அய்தராபாத் பயிற்சி நிறுவனம், ஸ்கை லைன் ஆசிரியர்கள் (ஹரவாடிசள டிக ளுமலடநே)  பரிந்துரையில் முதல் வகுப்பிற்கு உரிய பாடப் புத்தகத்தை வெளியிட்டு ஆந்திரா, கன்னடம், கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களிலுள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் பாடமாக வைத்துள்ளது. அந்தப் பாடப் புத்தகத்தின் ஆசிரியராகச் சியாமளா குமாரதாஸ் அய்தராபாத் அவர்களும், பதிப்பாளராக பால் குணசேகர் அவர்களும் இருந்துள்ளனர்.

முதல் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் முதல் பாடம் பூக்களின் மணம் (கூந ளுஅநடட டிக குடடிறநசள)  என்பது. முதல் பாடத் திலேயே சாதி இழிவு புகட்டப்படுகிறது. அந்தப் பாடத்தின் கருத்தைச் சற்று காண்போம். மீனு என்பவள் ஒரு மீனவப்பெண்; ஒவ்வொரு நாளும் அவள் கூடையில் மீன்களைக் கடைக்குக் கொண்டு சென்று விற்று வருவது வழக்கம். ஒரு நாள் மீன் விற்பதற்கு நீண்ட நேரம் ஆகிவிட்டதால், இருட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அப்போது மழை பெய்யத் தொடங்கிவிட்டது. தன் வீடு நீண்ட தூரத்தில் இருந்ததால், மழையின் காரணமாக, வழியில் அழகிய தோட்டத்தோடு கூடிய வீட்டைக் கண்டதும் அந்த வீட்டின் கதவைத் தட்டி மழை நிற்கும் வரை நான் இந்த முற்றத்தில் தூங்கலாமா? என்று வீட்டுக்காரியை நோக்கிக் கேட்டிருக்கிறாள். வீட்டுக்காரி யான இலட்சுமி, தோட்டத்தில் பூக்கும் பூக்களைப் பறித்து விற்று வாழ்க்கை நடத்தி வருபவள்.

மழை விடாமல் பெய்வதைக் கண்ட வீட்டுக்காரி, மீனுவுக்கு உண்ண உணவும், படுக்கப் பாயும் கொடுத்து உதவுகிறாள்; மீனுவும் உணவு அருந்திவிட்டு உறங்கு கிறாள்; அவள் உறுங்குவதைக் கூட பாட ஆசிரியர் இழிவு செய்கிறார்; அதாவது  ளுந ளடநயீவ டி வாந அயவ என்று குறிப் பிடாமல் ளுந சடிடடநன நசளநடக ரயீ  வாந அயவ  என்று குறிப்பிடுகிறார். அதாவது மீன் காரிக்கு ஒழுங்காகப் படுக்கக் கூடத் தெரியாது என்கிறார் ஆசிரியர். இத்தோடு விடவில்லை; மேலும் கேவலப்படுத்து கிறார்.

மீனு இரவு முழுதும் தூங்க முயன்றும் முடியவில்லையாம். காரணம், முற்றத்திற் குப் (கூடம்) பக்கத்திலுள்ள அறையில் ஏராளமான பூக்கள் கொட்டப்பட்டு இருந்ததாம். அந்தப் பூக்களின் நறுமணம் மீனுவுக்கு ஆகவில்லையாம். காரணம் அவள் எப்போதும் மீனையே சுவாசித்துக் கொண்டிருந்ததால் மலரின் மணம் பிடிக்க வில்லையாம். மலரின் மணம் சிறிதும் பிடிக்காததால் அவளுக்குத் தூக்கம் வரவில்லையாம். பின் ஒரு யோசனை வந்ததாம். உடனே மீன் நாற்றமுடைய கூடையை எடுத்துத் தன் முகத்தை மூடிக்கொண்டாளாம். சிறிது நேரத்தில் நல்ல வாசனையோடு அவள் அயர்ந்து தூங்கினாளாம். மீனுவுக்கு மலரின் மணம் பிடிக்கவில்லையாம்; மீன் நாற்றம்தான் பிடிக்கிறதாம். கூந நெயரவகைரட ளஅநடட டிக களை கடைடநன நச டிளவசடைள யனே ளடநயீவ ளடிரனேடல  என்று ஆசிரியர் கேவலப்படுத்துகிறார்.

ஓர் ஆசிரியர் நூலறிவும், கேள்வியறி வும் பெற்று உலகியல் அனுபவத்தோடு சிறந்து விளங்க வேண்டும். மற்றத் துறையில் உள்ளவர்களைக் காட்டிலும் ஆசிரியர்கள்  அனுபவம் மிக்கவர்கள்; ஆண்டு தோறும் புதிய புதிய மாணவ - மாணவியரைக் காணும் வாய்ப்பால் அனுபவம் அவர்களுக்குக் கூடுகிறது. எதனை எழுத வேண்டும், எதனை எழுதக் கூடாது என்பதும் அவர்களுக்குத்தான் நன்கு தெரியும். இந்த அனுபவம் அந்த ஆசிரியர்களுக்கு எப்படி இல்லாமல் போயிற்று? அனுபவம் இல்லையென்று கூறமுடியுமா? முடியாது. மேட்டுக் குடி யினர் கீழ்க்குடியினரை எப்போதும் இழிவு செய்வதை ஒரு கவுரவமாகக் கொள்பவர் கள்; அவர்களை இழிவுபடுத்துவதில் அவர்களுக்கு அற்ப சந்தோஷம். அந்த அற்ப சந்தோஷத்தைத்தான் இங்கு காண முடிகிறது.

இந்த அற்ப சந்தோஷம் சாதாரண மானவர்களிடம் கூட இருக்கக்கூடாது; ஏனெனில் இது குடியாட்சிக்காலம். இக்காலத்தில் ஆசிரியர்களிடத்தில் அது இருக்கலாமா? எவ்வளவு படித்திருந் தாலும் ஆதிக்க உணர்வு, சாதியிழிவு ஆசிரியர்களிடத்தும் இருக்கும் போலும்! அதனைத்தான் இந்தப் பாடத்தில் காண முடிகிறது. மேட்டுக் குடியின் ஆதிக்க உணர்வும், எள்ளல் போக்குமே இங்குக் காட்சி அளிக்கின்றன.

பா. வீரமணி 29-6-2012

தமிழ் ஓவியா said...

இந்திய மதங்கள்

கிறித்தவர்கள், முஸ்லீம், புத்த மதத்தினர், ஜைனர்கள், பார்சிகள் என்றழைக்கப்படுகின்ற மக்கள் பிரிவினரைத் தவிர இந்தியாவிலுள்ள மற்றவர்களெல்லாம் இப்பொழுது இந்துக்கள் என்றே கொள்ளப்படுகின்றனர். வேத காலம் தொடங்கியுள்ள வரலாற்றை உரிமை கொண்டாடுகின்ற ஒரு மதமே இப்பொழுது இந்து மதம். ஆனால், முன்பு ஒரு போதும் இந்த பெயரில் ஒரு மதம் இருந்ததில்லை. ஒவ்வொரு காலத்திலும் இந்தியாவில் உருவான மதங்களையெல்லாம் ஓர் இழையில் கோத்து இணங்க வைத்து ஒரு மதமாக்க நடத்துகின்ற முயற்சிகள் இன்றுவரை வெற்றி பெறவில்லை. இஸ்லாம், கிறித்தவ மதங்கள் புகுந்ததைக் கண்டு மலைத்த இந்தியர்கள் அவர்களுடைய பழைய பகைமையையெல்லாம் மறந்து ஒன்றிணைய முயலுகின்றனர் - அவ்வளவுதான். வைதிக மதம், சைவ மதம், வைஷ்ணவ மதம், புத்த மதம், ஜைன மதம், அத்வைத மதம், கோஸாயி மதம்,  விசிஷ்டாத்வைத மதம், திராவிட மதம், காபாலிக மதம், தாந்தீரிக மதம் எனப்பல மதங்கள் இந்தியாவில் தோன்றின. பிறநாடுகளில் நிகழ்ந்ததைப் போலவே இந்த மதத்தினரும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளவும் தாக்குதல் - எதிர்த்தாக்குதல் நடத்தவும் செய்தனர். அதன் பலனாக இவற்றில் பல மதங்களும் அழிந்து விட்டன. 29-6-2012

தமிழ் ஓவியா said...

தாந்த்ரீக மதம்இந்து மதத் திலிருந்து பிரிந்து உரு வான ஒரு தனி மதப்பிரிவு இது. சிவனைத் தான் இவர்கள் வழிபடுகின் றனர். சிவலிங் கத்துடன் இவர்கள் பெண்ணின் பிறப்புறுப்பையும் வழிபடு கின்றனர். இவர்களுடைய சக்தி பூஜை பல சமயங்களிலும் உடலுறவு பந்தத்துடன் தொடர்பு கொண்டே நடைபெறுகின்றது. நிர்வாணமான ஆணும், நிர்வாணமான பெண்ணும் தங்களைச் சிவனும் சக்தியுமாக நினைத்து இணைவது இந்த மதத்தில் சாதாரணச் செயலாகும். ஒரு மதம் என்ற நிலையில் தாந்த்ரீக மதமும் அழிந்துவிட்டது. ஆனால், இப்பொழுதும் அதைப் பின்பற்று கின்றவர்களும் உண்டு.

விசிஷ்டாத்வைத மதம், காபாலிக மதம் முதலிய பல இந்திய மதங்களும் பெயரளவுக்கே எஞ்சியுள்ளன. அவற்றினுடைய சில அம்சங்கள் இந்து மதத்தில் இருக்கின்றன.
(ஆதாரம்: மதமும் பகுத்தறிவும் மலையாளத்திலிருந்து தமிழில் - அமலா)

தமிழ் ஓவியா said...

இங்கர்சால் பேசுகிறார்மனிதனுடையவும் பொருளினுடையவும் விசயத்தில், பொருட்களுக்கு பொருட்களோடும் சக்திக்கு சக்தியோடும் செயலுக்குச் செயலோடும் காரியத்திற்கு காரணத்தோடும் உள்ள தொடர்பு உறுதியானதும் மாற்றமில்லாததும் ஆகும் - ஒரு வட்டத்தின் விட்டமும், பரிதியும் போல. வட்டத்தின் விட்டத்துக்கும் பரிதிக்கும் உள்ள உறவை மாற்ற சர்வ வல்லமை படைத்த கடவுளாலும் கூற முடியாது. அப்படியிருக்கையில் பிரபஞ்சத்தின் நிலைகளைக் கட்டுப்படுத்தவும் இயற்கைச் சக்திகளைப் பயன்படுத்தி மனித இனத்துக்கு மகிழ்ச்சி உண்டாக்கவும் மனிதனுடைய ஆராய்ச்சி ஆற்றலினாலும் பகுத்தறிவு உணர்வினாலும் மட்டுமே முடியும். மகிழ்ச்சிக்குப் பதில் துக்கமும், நன்மைக்குப் பதில் தீமையும் உண்டாகின்றதென்றால் அதற்குக் காரணம், செல்வத்தையும் மனித சக்தியையும் சமூக நன்மைக்காகப் பயன்படுத்தாததுதான். பெரும்பாலான நேரங்களில் பழைய நம்பிக்கைகளின் ஆதிக்கம்தான் இதற்கு காரணம். ஒரே பாதை வழியாக சுற்றுகின்ற சக்கரத்தின் போக்கை மாற்ற, சுற்றுகின்ற ஆற்றலில் கட்டுப்பாடோ மறுப்போ தேவையாகும். இங்கேதான் நிலை மறுப்பின் நிலை மறுப்பு ஆரம்பிக்கின்றது. நிலை மறுக்கப்பட்டவற்றின் நிலை மறுப்பின் வழியாகத்தான் மனிதன் அறியாமை இருளிலிருந்து அறிவின் வெளிச்சத்துக்கு வருகிறான்.                                 (ஆதாரம்: மதமும் பகுத்தறிவும் மலையாளத்திலிருந்து தமிழில் - அமலா)