பாட்டி சொன்னால் கேட்காதவர்கள் பாட்டிலில் அச்சடித்துச் சொன்னால் கேட்கிறார்களாம்.
இது என்ன பூடகம்? வேறு ஒன்றும் இல்லை. மாட்டு மூத்திரத்தைக் கோமியம் என்று சொல்லி பாட்டிலில் அடைத்து ரூபாய் 20க்கு (200 மில்லி) விற்றுக் கொண்டு இருக்கிறார்களாம்.
திதியின் போது பார்ப்பனப் புரோகிதர்கள் பஞ்ச கவ்யம் என்ற ஒன்றைக் கொடுப்பார்கள். மாட்டு மூத்திரம், மாட்டுச் சாணம், பால், தயிர், வெண்ணெய் என்கிற பசு மாட்டின் மூலம் கிடைக்கும் அய்ந்து பொருள்களையும் கலக்கிக் கொடுப்பதுதான் பஞ்ச கவ்யம்.
பார்ப்பனப் புரோகிதன் கொடுக்கும் இந்த கோமியத்தை நம் வீட்டுப் பெரியவர்கள் தட்சணை கொடுத்து வாங்கி முடக்கு முடக்கு என்று பக்திப் பரவசத்தால் குடிப்பார்கள். அது கீழே சிந்தி விடக் கூடாதாம். அப்படி சிந்துகின்ற அந்த மாட்டு மூத்திரம் கலந்த அந்தப் பஞ்ச கவ்யத்தைக் கைகளில் பிடித்து பய பக்தியுடன் தலையிலும் தடவிக் கொள்வார்கள். பக்தியின் பெயரால் இந்த ஆபாசம் - அநாக ரிகக் கூத்து அரங்கேறுவதுண்டு.
இதுகுறித்து தந்தை பெரியார் அவர்கள் நம் மக்களுக்குப் புரியும்படி ஒன்றைச் சொல்லுவார்கள்.
அந்த மாட்டு மூத்திரம், சாணியைக் கரைத்துக் குடிக்கும்போது முகம் சுளிக்காமல் குடிக்கிறானா என்று பார்ப்பான் பார்ப்பானாம்; முகம் சுளிக்காமல் குடித்தால், பரவாயில்லை இந்த முட்டாள் பசங்களை இன்னும் ஆயிரம் வருஷங்களுக்கு மொட்டை அடிக்கலாம் - சுரண் டலாம்! என்று பார்ப்பான் முடிவுக்கு வருவான் என்று கூறிய பகுத்தறிவுப் பகலவன் பஞ்சகவ்யத்தை நம் மக்கள் குடிப்பது - நமது முட்டாள்தனத்தை அளக்கும் தர்மாமீட்டர் என்று குறிப்பிட்டாரே பார்க்கலாம்.
முட்டாள்தனம் பாட்டிலில் அடைத்து விற்கப்படுவதும், இந்த அடி முட்டாள்கள் காசு கொடுத்து அதை வாங்கிக் குடிப்பதும் எவ்வளவுக் கேவலம்!
கடைசியில் ஒரு கேள்வி (Tailpiece) பாட்டிலில் அடைத்து விற்கப்படும் அந்தப் பசு மூத்திரத்தை கிண்டி கிங் இன்ஸ்டியூட்டுக்கு அனுப்பி பரிசோதிக்கத் தயாரா? விஞ்ஞானத் துக்கு உட்படுத்தப்படாத இந்த அசிங்கத்தை ஆபத்தை அரசு எப்படி அனுமதிக்கிறது?
------------------- மயிலாடன் அவர்கள் 19-6-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
8 comments:
கைதேர்ந்தவர்கள்
உலகில் அர்ச்சகன், மாந்திரிகன், சோதிடன் இவர்களைவிடப் பித்தலாட்டத்தில் கைதேர்ந்தவர்கள் கிடையாது.
_பெரியார் -”விடுதலை”, 27.6.1973
கேரளா - இலங்கை உறவு என்ன?
எதிரிக்கு எதிரி நண்பன் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. கேரள மாநில அரசுக்கும், இலங்கை அரசுக்கும் ஏற்பட்டு இருக்கும் நெருக் கமும் - பாசப் பிணைப்பும் அந்தப் பழமொழியைத் தான் நினைவூட்டுகிறது.
இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரிய வசம் கேரள மாநில அரசின் விருந்தினராக சென்றுள்ளார். கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டியைச் சந்தித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரும் உடன் இருந்துள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தனிப்பட்ட வாழ்த்துக்களை கேரள முதல் அமைச்சருக்கு இலங்கைத் தூதர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் - கேரளாவுக்கும் இடையே பொருளாதார உறவுகள் பலப்படுத்தப்படுமாம்!
கேரள எழுச்சி 2012 வர்த்தக முதலீட்டு ஊக்குவிப்பு மாநாட்டில் இலங்கை அரசு பங்கேற்கு மாறு முதல் அமைச்சர் உம்மன்சாண்டி இலங்கைத் தூதரைக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
ஏனிந்த திடீர் உறவும் - பாசமும்? தமிழ்நாடு இன்றைய தினம் இலங்கை அரசுக்கும், கேரள அரசுக்கும் பொதுவான எதிரி மாநிலம் என்பதுதான் இதற்குள் புதைந்து இருக்கும் இரகசியமாகும்.
குறிப்பாக கேரள மாநில அரசு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு எதிரி மாநிலமாகச் செயல்பட்டு வருகிறது.
152 அடி அளவுக்கு பெரியாறு அணையில் நீர் தேங்கும் நிலை இருந்து வந்தது. ஆனால் அண்மைக் காலமாக 136 அடிக்குமேல் தண்ணீரைத் தேக்கக் கூடாது என்பதிலே கேரள மாநில அரசு அடாவடித்தனமாகப் பிடிவாதம் காட்டி வருகிறது. இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் இரண்டு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியின்றிப் பாலைவனமாகிக் கொண்டு இருக்கின்றன. குடி தண்ணீர் பஞ்சமும்கூட!
உச்சநீதிமன்றம் கூறினாலும், அந்த ஆணை களைக் காலில் போட்டு மிதிக்கும் மனப்பான்மையில் தான் கேரள அரசு நடந்து கொண்டு வருகிறது.
சேலம் கோட்டம் ரயில்வே நிருவாகம் என்று பெயர் ஆனால் அதன் தலைமை இடமோ பாலக்கோடில்தான் இருக்கும். பெரும் போராட்டங்களுக்குப்பின் அது மீட்கப்பட்டுள்ள நிலையில், அதனை பாலக் கோடுக்குக் மீண்டும் கொண்டு போவதில் குறியாகவே இருந்து வருகிறது. இப்படி தமிழ்நாட்டுக்கும் கேரளத்திற்கும் தொடர்ந்து நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில்தான் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் தன் மூக்கை நுழைக்கிறார்.
ஈழத் தமிழர் பிரச்சினையில்கூட தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு தவறான முடிவுகள் எடுப்பதற்குக் கேரளாவைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகளே முக்கிய காரணம் என்ற குற்றச்சாற்று இன்னொரு பக்கம் உண்டு. என். நாராயணன்; சிவ சங்கரமேனன் போன்றவர்கள் இதில் குறிப்பிடத்தக்க கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
இந்தப் பின்னணிகளைக் கருத்தில் கொண்டால் தான் இலங்கை - கேரளப் பாச உணர்வின் பின்புலம் பளிச்சென்று எளிதில் புரியும்.
இன்னொன்றும் இதில் மிக முக்கியமானது. கேரள மாநில அரசு இந்தியாவுக்குள்தான் இருக் கிறதா? அல்லது கேரள அரசு தனி நாடாகச் செயல்பட்டு வருகிறதா?
ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித் துள்ளது; அதன் காரணமாக இலங்கை அரசு அதிருப் தியுடன் இருக்கும் நிலையில், இந்தியாவுக்குள் ஒரு மாநிலமாக உள்ள கேரள மாநில அரசு மட்டும் தனி வெளிநாட்டுக் கொள்கையோடு செயல்படுகிறதோ! அதன் எதிரொலிதான் இலங்கை அரசு - கேரள மாநில அரசின் பிணைப்பும் இணக்கமும் என்று கருதுவதற்குத் தாராளமாக இடம் இருக்கிறது.
இந்தக் கூத்தில் இந்தியத் தேசியம் என்று வாய் கிழியப் பேசுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.
தேசிய உணர்வு என்பது ஒரு வழிப்பாதையோ என்று தமிழர்கள் சிந்திக்கும் நிலை ஏற்படாதா? 19-6-2012
மதுரையில் தமிழில் இணைய தளம் பயிற்சி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தியது
மதுரை, ஜூன் 19- 17.6.2012 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை மதுரை மன்னர் திரு மலை நாயக்கர் கல் லூரியில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்க விழாவில் பகுத்தறிவா ளர் கழக மாவட்ட செய லாளர் சுப.முருகானந் தம் அனைவரையும் வர வேற்றார். பகுத்தறிவா ளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா. நேரு தலைமை தாங் கினார்.
இணைய தள பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
திராவிடர் கழ கத்தின் தலைமைச் செயற் குழு உறுப்பினர் தே. எடிசன் ராஜா, மதுரை மண்டல தி.க. செய லாளர் வே.செல்வம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசி ரியர் ஜி.ஜெகஜோதி ஆகி யோர் முன்னிலை வகித் தனர்.
ப.க. மாநிலச் செய லாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் அறிமுக வுரையாற்றினார். அவர் தனது உரையில் தமிழில் இணையதளப் பயிற்சி, தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் நடை பெறுகிறது.
நமது எதி ரிகள் இணையதளத்தில் பல்வேறு பொய் செய் திகளைப் பரப்புகிறார் கள். எடுத்துக்காட்டாக , விற்பனைக்கு என்று வெளிநாட்டில் விளம் பரம் செய்யப்பட்ட வீட்டை முன்னாள் மத் திய அமைச்சர் ஆ.ராசா வின் வீடு என்று இணை யத்தில் பொய்யாய்ப் பரப்பினார்கள்.
இப்படி பொய், பொய் யாய்ப் பார்ப்பனர்களும், ஊடகங்களும் பரப்பும் பொய்மைக்கு எதிராக இணையதளத்தில் கருத்துப்போராட்டம் நடத்த வேண்டியிருக் கிறது. அதற்கு இப்படிப் பட்ட தமிழ் இணைய தளப் பயிற்சி தேவைப் படுகின்றது என்று குறிப் பிட்டார்.
தலைமை வகித்த வா.நேரு தனது உரையில் இக்கல்லூரி யில் பயிலரங்கம் நடத்த அனுமதி அளித்த மன் னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் செயலாளர் அய்யா எம்.விஜய ராகவன் அவர்களுக்கும், முதல்வர் ச.நேரு, சுய நிதிப் பிரிவு இயக்குநர் இராஜா.கோவிந்தசாமி அவர்களுக்கும் பேருதவி புரியும் பேரா.நம்.சீனி வாசன் அவர்களுக்கும் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கும் நன்றியைக்கூறி , இப்பயி லரங்க வகுப்பை முழு மையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பயிற்சி யாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
குடியரசுத் தலைவ ரின் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்ற புதுச்சேரியைச் சார்ந்த பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகப் பங் கேற்று வகுப்புக்களை நடத்தினார்.
தமிழ் இணையம் - தோற்றம், வளர்ச்சி, தமிழில் இணை யத்தை பய்ன்படுத்துவ தற்காக உழைத்த பெரு மக்களை அவர்களின் புகைப்படங்களோடு குறிப்பிட்டு அவர்களின் பங்களிப்பை விளக் கினார். தமிழ் இணைய மாநாடுகள்,சென்னை தமிழ் இணைய மாநாடு 99-ஆம் ஆண்டு நடை பெற்றதன் பயனாக ஒருங் குறி (ரஉடினந) உருவாக் கம் போன்ற வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிட் டார்.
மின்னஞ்சல் பயன் பாடுகள், வலைப்பூ உருவாக்கம்,வலைப்பூவில் எப்படி படங்களை ஏற் றுவது, எப்படி செய்தி களை ஏற்றுவது போன் றவற்றை விளக்கிக் கூறி னார். தமிழில் எப்படி தேடுவது, எப்படி டைப் செய்வது போன்றவற்றை விளக்கிப் பயிற்சியளித் தார். அடுத்த வகுப்பில் , தமிழ் விக்கிபீடியா, இணைய இதழ்கள், பல் வேறு வலைத்தளங்கள், தமிழ் இணையப் பல் கலைக்கழகம் போன்ற தலைப்புகளில் செய் முறையோடு பேராசிரி யர் முனைவர் மு.இளங் கோவன் பாடம் நடத் தினார்.
விடுதலை இணைய தளம், அதில் உள்ள பெரியார் வலைக்காட்சி, பெரியார் பண்பலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசன லிஸ்டு போன்ற இதழ் களை எப்படி படிப்பது, கழக நிகழ்ச்சிகளை எப் படிப் பார்ப்பது, விடு தலை குழுமத்தில் எப் படி இணைவது, பேஸ் புக் போன்ற சமூக தளங் களை எப்படிப்பார்ப் பது போன்றவற்றை ச.பிரின்சு என்னாரெசு பெரியார் விளக்கினார்.
பங்கேற்ற மாணவ மாண விகள் கணினி செயல் முறை வகுப்புகளின் மூலம் தமிழில் இணைய தளத்தைப் பயன்படுத் தவும், தமிழில் உள்ள இணையதளங்களைப் பற்றி அறிந்துகொள்ள வும் மிகப்பெரிய வாய்ப் பாக இப்பயிலரங்கம் அமைந்தது.
மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் மதுரை புற நகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் மா.பவுன்ராசா, மாநகர் மாவட்ட பகுத்தறிவா ளர் கழகத் தலைவர் சே.முனியசாமி ஆகி யோர் முன்னிலை வகித் தனர். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் நம்.சீனி வாசன், பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவர் க.நல்லதம்பி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பேரா.ஜெகஜோதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பங்கேற்பா ளர்கள் சார்பாக சுசீலா வேல்முருகன், கவிஞர் கோ ஆகியோர் தாங்கள் பயன்பெற்றது பற்றி கருத்துக் கூறினர்.
கவிஞர் கோ, தற் செயலாக இப்பயிலரங் கம் பற்றி கேள்விப்பட்ட தாகவும், இன்றைக்கு வராமல் போயிருந்தால் எவ்வளவு பெரிய வாய்ப் பைத் தவற விட்டிருப் பேன் என்று குறிப்பிட்டு சிறப்பாக பயிலரங்கம் நடைபெற்றதற்கு நன்றி தெரிவித்தார். பங்கு பெற்ற மாணவ மாணவி களுக்கு சான்றிதழ்கள் வழங்கி, ஓய்வு பெற்ற நீதிபதி பொ.நடராசன் சிறப்புரையாற்றினார் .
அவர் தனது உரையில் கணினி இன்றைய நிலை யில் எல்லா நேரங்க ளிலும் தேவைப்படுகின் றது. மதுரையில் இன் னும் இதனைப் போல 4, 5 தமிழ் இணையப் பயிலரங்கங்கள் நடை பெற வேண்டும். அப்படி நடைபெற அனைத்து விதமான உதவிகளை யும் வழங்கத் தான் தயாராக இருப்பதாக வும் தெரிவித்தார்.
மன் னர் திருமலை நாயக்கர் கல்லூரி கணினி பயிற்சி கத்தில் பணியாற்றும் பேராசிரியர் கண்ணன் மற்றும் ஊழியர்களுக் கும், பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகப்பேராசிரியர்கள் அருணா, ஜி.ஜெகஜோதி அவர்களுக்கும் புத்தங் கங்கள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர்களுக் கும், வலைப்பூவை சிறப் பாக வடிவமைத்து தொடர்ந்து இயஙகும் தோழர் பழனி வ.மாரி முத்து(த மிழோவியா. பிளாக்ஸ் பாட்.காம்) ஆகியோர்களுக்கு சிறப் புகள் செய்யப்பட்டன. மதிய உணவு, தேநீர், மினரல் வாட்டர், குறிப் பேடு உள்ளிட்டவைகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்வின் இறுதியில் மதுரைபுறநகர் மாவட்ட திராவிடர் கழக செய லாளர் அ.வேல்முருகன் நன்றி கூறினார். "விடுதலை” 19-6-2012
பதிவு ஒரிஜினல் இல்லை.....கேள்வியும் நீயே பதிலும் நீயே......
கலைஞரின் சரியான வாரிசு நீதானப்பா......
இதை கொஞ்சம் பாருங்கோன்னா!
==================
ரெவெரி சொல்வது அத்தனையும் வடிகட்டின பொய்கள்; உண்மையை மறைத்து இந்தியனைப் பற்றி சொல்லும் பீ-த்த பெருமைகள்-பொய்கள். படியுங்க...மேலும்...
அமெரிக்கா ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்களின் நாடு!லிங்க்...
http://www.nambalki.com/2012/06/blog-post_14.html
அமெரிக்க ஏழை பணக்கார இந்தியனை விட சொகுசாக வாழ்கிறான்! லிங்க்...
http://www.nambalki.com/2012/06/blog-post_4241.html
அமெரிக்கநாய்க்கும் அரசாங்க புகலிடம், Govt.Shelter, குளுகுளு A/C வசதி!லிங்க்...
http://www.nambalki.com/2012/06/govtshelter-ac.html
என்ன கேள்வியை வேண்டுமானாலும் eஎன்னிடம் கேளுங்கள். உங்கள் அபிமான ரெவெரியிடம் விவாதம் செய்ய நான் ரெடி! ரெவெரி ரெடியா? கேட்டு சொல்லுங்கள்!
அன்புள்ள,
நம்பள்கி!
www.nambalki.com
Bas Bas. Nannaa sonna ambi
தினத்தந்தி பார்வையில் சுயமரியாதைத் திருமணம்: தத்துவமும், வரலாறும்
தந்தை பெரியார், சமு தாய சீர்திருத்தத்துக்காக பல முற்போக்கான நட வடிக்கைகளை அறிவித்தார். அவற்றை நடைமுறையிலும் கொண்டு வந்தார். அவர் கூறிய சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண்ண டிமை ஒழிப்பு, சிக்கனம், எளிமைக்கு ஏற்றம், இவை கள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் வகையில், அவர் கொண்டு வந்த மாற்றம்தான் சுயமரியாதைத் திருமணம். இந்த சுயமரியாதைத் திருமணத்தின் தத்துவத்தையும் வரலாற்றையும், நூல் ஆசிரியரான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இந்த நூலில் மிக ஆழமாக வடித்து தந்திருக்கிறார்.
1935ஆம் ஆண்டு நடந்த ஒரு திருமணத்தில் தந்தை பெரியார் சுயமரியாதைத் திருமணம் அல்லது சீர்திருத்த திருமணம் என்ற பொருள் பற்றி பேசிய பேச்சே இந்த நூலுக்கு அடிப்படை. பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவனின் ஒரு அமைதி புரட்சியை அறிவதற்காக அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் அது.
வெளியீடு: திராவிடர் கழகம்
கிடைக்குமிடம்: பெரியார் புத்தக நிலையம், பெரியார் திடல், 84/1, ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7; விலை: ரூ.130)
- நன்றி: தினத்தந்தி, 20.6.2012
Post a Comment