Search This Blog

9.6.12

இந்தி எதிர்ப்புக் களத்தில் பெண்கள்



1938 நவம்பர் 14 தமிழ்நாட்டின் வரலாற்றில் வீரஞ் செறிந்த ஒப்பரும் நாள். இந்நாளில்தான் இந்தி எதிர்ப்புக் களத்தில் பெண்கள் முதன் முதலாகப் போர்க் கோலம் பூண்டு, மறியல் செய்து சிறைக்கோட்டம் சென்ற மயிர்க் கூச் செறியும் மகத்தான நாள்.

இதற்கு முதல் நாள்தான் (13-11-1938) சென்னை ஒற்றைவாடை அரங்கில் நடந்த தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டுக்கு திருவாட்டி நீலாம்பிகை அம்மையார் (மறைமலை அடிகளார் மகள்) தலைமை தாங்கி உரையாற்ற, தோழியர் மீனாம்பாள் சிவராஜ் தமிழ்க் கொடி உயர்த்த, பண்டிதை நாராயணி அம்மையார் மாநாட்டைத் திறந்து வைத்தார். தாமரைக் கண்ணி அம்மையார் வரவேற்புரை ஆற்றினார். நாகம்மையார் படத்தினை தோழியர் பார்வதி அம்மையார் திறந்து வைத்தார். டாக்டர் தருமாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் போன்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பெரியார் பட்டம்

அம்மாநாட்டில்தான் பெரியார் என்ற பட்டம் சூட்டப்பட்டது. இந்தியாவில் இதுவரை தோன்றிய சீர்திருத்த தலைவர்களால் செய்ய இயலாமற் போன வேலைகளை நம் மாபெரும் தலைவர் ஈ.வெ.ரா. அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், ஒப்பாகவும் நினைப்பதற்கு வேறு ஒருவரும் இல்லாமையானும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போது பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்கவேண்டும் என்று முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம் மாநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய உரை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்கள் பங்கு பெறச் செய்யத் தூண்டினார் என்று குற்றம் சாற்றப்பட்டு தண்டனை வழங்கப் பட்டது. தந்தை பெரியார் உரை கேட்டு மகளிர் போர்க் கோலம் பூண்டனர்.

1938 நவம்பர் 14 சென்னையில் பெத்து நாயக்கன் பேட்டை காசி விசுவநாதர் கோயில் அருகிலிருந்து டாக்டர் தருமாம்பாள், இராமாமிர்தம் அம்மையார், மலர்முத்தம்மையார், பட்டம்மாள் (பாவலர் பாலசுந்தரம் அவர்களின் துணைவியார்), சீதம்மாள் ஆகியோர் இந்து தியாலாஜிகல் பள்ளி நோக்கி மறியலுக்குப் புறப்பட்டனர்- கைது செய்யப்பட்டனர். நீதிபதிகள் எவ்வளவோ கேட்டுக் கொண் டும் முன் வைத்த காலைப் பின் வைக்க மறுத்தனர் வீரத்தாய்மார்கள். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மறியலில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர்.

1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்ற வீரப் பெண்கள் 73 பேர்; அவர்களுடன் சென்ற குழந்தைகள் 32 பேர். தமிழ்நாட்டுப் பொது வாழ்வில் பெண்கள் போர்க் கோலம் பூண்டு சிறைக் கோட்டம் ஏகியது என்பது இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

வேலூரில் மீண்டும் ஒரு முறை 1938ஆம் ஆண்டு டிசம்பர் 26-லும் நடை பெற்றுள்ளது. இந்தி எதிர்ப்புப் போரில் சிறைக் கோட்டம் ஏகிய மூதாட்டிகள் தருமாம்பாள், கொடியேற்றிட, நாராயணி யம்மாள் தலைமையில் நடைபெற்றுள்ளது. தாமரைக் கண்ணி அம்மையார் மாநாட் டுத் திறப்பாளர். இந்தி எதிர்ப்புப் போராட்டம் காரணமாக தந்தை பெரியார் அவர்கள் சிறைக் கோட்டத்தில் இருந்த அந்த கால கட்டத்தில் இந்தத் தமிழ்ப் பெண்கள் மாநாடு நடைபெற்றுள்ளது.

அந்த கால கட்டத்தில் பார்ப்பனர்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொண் டனர் என்பதற்கு அம் மாநாட்டில் அமைச் சர் டி.எஸ்.எஸ்.ராஜன் பற்றி நிறைவேற் றப்பட்ட தீர்மானமே சான்றாகும்.

1. சிறை சென்ற பெரியார் ஈ.வெ.ரா. தொண்டர்கள், தாய்மார்கள் ஆகியோரை இம்மாநாடு பாராட்டுகிறது.

2. இந்தி எதிர்ப்பிற்காகச் சிறை வைக் கப்பட்டுள்ள எல்லோரையும் நிபந்தனை யின்றி உடனே விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தாரை வற்புறுத்துகிறது.

3. குழந்தைகட்குப் பால் கிடைக்கு மென்று கருதியே பெண்கள், குழந்தைகளுடன் சிறைக்கு வருகிறார்கள் என்று மந்திரி கனம் டாக்டர் ராஜன் கூறியதை வாபஸ் வாங்கிக் கொண்டு மன்னிப்புக் கேட்கவேண்டும்; இன்றேல் மந்திரி பதவியை விட்டு ராஜிநாமா செய்ய வேண் டும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

4. விதவை மணத்தையும், கலப்பு மணத்தையும் இம்மாநாடு பெரிதும் ஆதரிப்பதுடன் பால்யமணம் செய்தல் கூடாதெனத் தமிழ் மக்களை வேண்டிக் கொள்கிறது.

திராவிடர் கழகம்தான்

பெண்களின் உரிமைகளுக்காக மாநாடு கூட்டுவது - போர்ப்பறை கொட் டுவது - தீர்மானங்களை நிறைவேற்றுவது - பேரணி நடத்தி முழக்கமிடுவது என்பன போன்ற முற்போக்கு நடவடிக்கைகள் அனைத்தையும் செய்தது - இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாட்டில் தான் - அதற்குக் காரணம் புரட்சித் தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும்தான்.

திருவாட்டி தருமாம்பாள் தலைமையில் மகளிர் இந்தியெதிர்ப்பு மாநாடு நடை பெற்றது. தமிழ்ப் பெண்டிர் பல இந்தி எதிர்ப்பு மாநாடுகளிலும், போராட் டங்களிலும் பங்கு கொண்டாலும், பெண் களுக்கென பெண்களே நடத்திய முதல் இந்தியெதிர்ப்பு மாநாடு இதுவேயாம். தமிழ்நாட்டில் முதன் முதலாக 1938ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 3 ஆம் நாள் நடந்த இந்தியெதிர்ப்புப் போராட்டத்தில் 73 பெண்கள் கைது செய்யப்பட்டதை முன்னமே கூறினோம்.

ஜூன் 27 இரு வீராங்கனைகளை நினைவூட்டும் நாள். திராவிட இயக்க வீராங்கனை மூவலூர் ஆ.இராமாமிர்தம் (1962) அலர்மேலு அப்பாதுரையார் (2001) ஆகியோர் நினைவு நாள்.

இந்த இரு வீராங்கனைகளும் 1938 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில் பங்கு கொண்டு சிறை சென்ற சீலர்கள் ஆவர். பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் அவர்களின் இணை யரான அலர் மேலு அம்மையார் தி.மு.க. மகளிர் அணிச் செயலாளராகவும், தமிழ் நாடு சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார்.

தமிழர் பெரும்படை

1-8-1938 அன்று திருச்சி உறை யூரிலிருந்து இந்தியை எதிர்த்துத் தமிழர் பெரும்படை தஞ்சை அய்.குமாரசாமிப் பிள்ளை அவர்களின் தலைமையில், உறையிலிருந்து வெளிப்பட்ட வாளாகப் புறப்பட்டது. அஞ்சாநெஞ்சன் பட்டுக் கோட்டை கே.வி.அழகிரிசாமி படையை நடத்தும் தளபதியாகச் செயல்பட்டவர். நூறுபேர் கொண்ட அந்தத் தமிழர் பெரும் படையில் ஒரே ஒரு பெண் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் என்றால்,

அந்தத் தீரத்தை என்னவென்று சொல்வது! நடைப் பயணம் என்றால் சாதாரண மானதல்ல. 577 மைல்கள். படை என்னும் அந்த நதி சென்னைக் கடற்கரையில் சங்கமித்தபோது அங்கு ஒன்றரை லட்சம் மக்களைக் கொண்ட ஒரு பெருங்கடல் உள் வாங்கிக் கொண்டது.

தமிழ்நாடு தமிழருக்கே

அந்த வரவேற்புப் பொதுக் கூட்டத்தில்தான் தந்தை பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே! எனும் முழக்கத்தை முதன் முதலாக முன் வைத்தார். மறைமலை அடிகள் தலைமை வகித்த அந்த மாபெரும் கூட்டத்திலும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திருவாரூரில் பிறந்த அம்மையாரின் பெற்றோர் கிருஷ்ணசாமி - சின்னம்மாள் வறுமையின் காரணமாக பத்து ரூபாய்க்கும், ஒரு முழம் புடவைக்குமாக விற்கப் பட்டவர் - விலைக்கு வாங்கிக் கொண் டவர் ஆச்சிக் கண்ணு.

மூவலூரில் வாழ்ந்து வந்தாலும் ஆச்சிக் கண்ணு தம்மை வளர்த்து எடுத்தாலும் நன்றி உணர்வோடு, தன் பெயரில் மூவலூர் ஆ.இராமாமிர்தம் என்று இணைத்துக் கொண்டவர்.

காங்கிரஸ் கட்சியில் மாகாணக் குழு உறுப்பினராகவும் இருந்தவர். தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி யதும் அவரும், உடன் வெளியேறி சுய மரியாதை இயக்கத் தொண்டராக, பேச்சாளராக நாட்டில் வலம் வந்தார். தேவதாசி என்று கூறப்படும் சமூகத்தில் பிறந்ததால் அதன் கொடுமைகளை உணர்ந்தவர் - தாசிகளின் மோக வலை எனும் நூலை எழுதியவர். தேவதாசி முறை ஒழிப்புக்கு டாக்டர் முத்துலட்சுமிக்கு தோள் கொடுத்த மூதாட்டியை எப்படித் தான் மறக்க முடியும்?

நம் முன்னோர்கள் - அதாவது நம் பாட்டிகள் கொளுத்திவிட்டுப் போன மொழி உணர்வுத் தீ இன்னும் அணைந்து விடவில்லை. இந்தி என்றைக்கும் நம்மை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்க முடியாது - நம்முடைய குழந்தைக்கும் நாம் தமிழைத்தான் பாலாக ஊட்டியிருக் கிறோம். அவர்களும் பரம்பரை நெருப்பை மொழி உணர்வு நெய்விட்டு வளர்ப்பார்கள் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கோட்சேக்கள் கூட்டம்
கொணர்ந்தது இந்தி
கொலைகாரக் கொள்கையினை
நடுங்கச் செய் முந்தி
- என்ற பாவேந்தரின் வரிகள் நமக்கு மொழி உணர்ச்சியினை ஊட்டியது என் பதற்கு இதைவிட வேறு என்ன சான்று இருக்க முடியும் என்று உரையாற்றினார்.

பெண்கள் சாதனை செய்வது என்பது புதிதல்ல. ஆனால் வேலூரில் 2012 மே 29 ஆம் நாளும் தமிழக சரித்திரத்தில் முக்கிய இடம் பிடிக்கப்போகிறது. இம்மாநாட்டில் படிக்கப்படும் ஒவ்வொரு தீர்மானமும் நாளை நாடாளுமன்றத் திலும், சட்டமன்றங்களிலும் படிக்கப்பட்டு சட்டங்களாக நிறைவேற்றப்படும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

---------------------வேலூரில் 29-5-2012 அன்று நடைபெற்ற புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டில், இந்தி எதிர்ப்புக் களத்தில் பெண்கள் என்ற தலைப்பில் ஆற்றிய உரை. "விடுதலை” 4-6-2012

10 comments:

தமிழ் ஓவியா said...

பாடத் திட்டத்தில் தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பைக் கொச்சைப்படுத்துவதா?


மத்திய அமைச்சர் கபில்சிபலிடமிருந்து மனிதவள மேம்பாட்டுத்துறையை மாற்ற வேண்டும்
தமிழர் தலைவர் அறிக்கை

தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பைக் குறித்து 12ஆம் வகுப்புப் பாடத்தில் கொச்சைப் படுத்திக் கார்ட்டூன் போடப்பட்டு இருப்பதைக் கண்டித்தும், தொடர்ந்து கல்வி - சமூக நீதித் துறையில் பல்வேறு குளறுபடிகளைச் செய்து கொண்டிருக்கும் மத்திய அமைச்சர் கபில்சிபலிட மிருந்து மனிதவள மேம்பாட்டுத் துறையை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (NCERT) வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்பு அறிவியல் பாடத் புத்தகத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப் பினைக் கேலி செய்யும் கார்ட்டூன் இடம் பெற்றுள்ளது.

இந்தியைப் பற்றிப் புரிதல் இல்லாமல் மொழிப் பிரச்சினையைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினை நடத்தினார்கள் என்கிறது அந்தக் கேலிச் சித்திரம்.

உண்மை என்ன?

உண்மை என்னவென்றால், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிகள் ஏன் நடைபெற்றன என்பதைப் புரிந்து கொள்ளாதது என்.சி.இ.ஆர்.டி. என்ற அமைப்பு தானே தவிர தமிழ்நாட்டு மக்களோ, மாணவர்களோ, திராவிடர் இயக்கத்தினரோ அல்ல.

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருதத்தைக் கொண்டு வரவே!

1937இல் சென்னை மாகாணத்தின் பிரதமராக வந்த ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் தான் முதன் முதலில் இந்தியைத் தமிழகப் பள்ளிகளில் புகுத்தினார். இந்தியாவில் வேறு மாநிலங்களில் அப்பொழுது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தாலும், அங்கெல்லாம் இந்திப் புகுத்தப்படவில்லை.

ஆச்சாரியார்தான் குயுக்தியாக சென்னை மாநிலத்தில் இந்தியைத் திணித்தார். சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தத்தான் தொடக்கக் கட்டமாக இந்தியைக் கொண்டு வந்துள்ளேன் என்று வெளிப் படையாக தம் பார்ப்பன உள்ளக் கிடக்கையை வெளிப் படுத்தினார்.

தந்தை பெரியார் தலைமையில் தமிழ் அறிஞர்கள் நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள் எல்லாம் அணி வகுத்து நின்றனர். இந்தி என்பது பார்ப்பனீய - சமஸ்கிருத கலாச்சாரத் திணிப்பு என்பது வரலாற்றுக் கண் கொண்டு பார்ப்பவர் களுக்குத் தெரியக் கூடிய உண்மையாகும்.

இந்தி தமிழ்நாட்டில் திணிக்கப்படும் ஒவ்வொரு கால கட்டத்திலும் தமிழ்நாடே எரிமலையாகக் கொந்தளித்து எழுந்திருக்கிறது.

தேசியக் கொடியைக் கொளுத்தும் போராட்டம்

உச்சக் கட்டமாக தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தையே (1.8.1955) தந்தை பெரியார் அறிவித்தார். அதைக் கேட்டு இந்தியாவே குலுங்கியது.

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி புகுத்தப்படாது என்று பிரதமர் நேரு அவர்களின் சார்பாக தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் காமராசர் அவர்கள் அளித்த உறுதி மொழியின் பேரில், போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று அறிக்கை வெளியிட்டார் தந்தை பெரியார்.

அண்ணாவின் இரு மொழி சட்டம்

அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக குறுகிய காலம்தான் இருந்தார் என்றாலும், அந்தக் கால கட்டத்தில் தமிழ்நாட்டில் இரண்டே மொழிகள்தாம் தமிழும், ஆங்கிலமும்தான்; இந்திக்கு இடமில்லை என்று சட்டமே இயற்றப்பட்டு விட்டதே!

இந்தப் பின்னணிகளையெல்லாம் தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் சிறுபிள்ளைத்தனமாக என்.சி.இ.ஆர்.டி. பள்ளி மாணவர்கள் மத்தியில் பொய்யான நச்சு விதைகளை விதைக்கலாமா?

பாடத் திட்டம் என்றால் தகவல்களைத் தெரிவிக்கலாம். தங்களின் கருத்துக்களைத் திணிக்க முயலக் கூடாது என்பது அடிப்படையாயிற்றே!

அண்ணல் அம்பேத்கர் பற்றி...

அண்ணல் அம்பேத்கர் அவர்களை கொச்சைப்படுத்திக் கார்ட்டூன் வெளியிட்டதன் காரணமாக எழுந்த புயல் அடங்குவதற்குமுன், இப்பொழுது இந்தப் புயலையும் கிளப்பி விட்டுள்ளனர். உடனடியாக இந்தி எதிர்ப்பைக் கொச்சைப்படுத்திய இந்தப் பகுதி நீக்கப்பட வேண்டும்; இதற்குக் காரணமானவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

கபில்சிபல் விலக வேண்டும்

கல்வியிலும் - அதன் தொடர்பான சமூகநீதியிலும், பாடத் திட்டங்களிலும் பல குளறுபடிகள் நடந்து வருவ தற்குப் பொறுப்பேற்க வேண்டியவர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் ஆவார். பார்ப்பன சிந்தனைக்கு ஆட்பட்டு சமூகநீதிக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார். மனித வள மேம்பாட்டுத்துறை - அவரிடமிருந்து எடுக்கப்பட வேண்டும் என்பதே நமது முக்கியமான வேண்டுகோள்.

இந்தி எதிர்ப்புத் தொடர்பான பகுதியை நீக்காவிடின் அடுத்த கட்டப் போராட்டம் குறித்துக் கழகம் யோசிக்கும்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம் 9-6-2012

தமிழ் ஓவியா said...

கல்வித்துறைக்குப் பார்ப்பனர் அமைச்சராக இருக்கக்கூடாது


ஏதோ எந்தக் காலத்திலோ சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்று பார்ப்பனர்கள் எழுதி வைத்துத் தொலைத்தார்கள் - காலம் மாறி வரும் சூழலில் அவர்களின் மனப் பான்மையில் ஏதாவது மாற்றம் வந்திருக்குமா என்று எதிர்பார்த்தால், பலத்த ஏமாற்றம்தான்.

எப்பொழுதுமே அவர்களின் சிந்தனைகள், பார்ப்பனர் அல்லாதார் படித்துவிடக் கூடாது என்பதுதான்; 1937இல் முதன் முதலாக ஆச்சாரியார் என்று அழைக்கப்படும் ராஜாஜி அவர்கள் சென்னை மாநிலத்தின் பிரதமராக வந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார்; பள்ளிகளில் இந்தியையும் திணித்தார். 1952இல் கொல்லைப்புறம் வழியாக சட்ட மேல் சபையில் நுழைந்து தமிழ்நாட்டின் முதல் அமைச்சார் ஆனார் என்றால், அப்பொழுதும் 6000 தொடக்கப் பள்ளிகளை இழுத்து மூடி, அரை நேரம் படித்தால் போதும்; மீதி நேரம் மாணவர்கள் அவரவர் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற நவீன குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

சுதந்திர இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டுக்கு வழியில்லாமல் கதவை அடைத்து விட்டனர்.

சட்டத் தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து புதிய புதிய சட்டங்களைக் கொண்டு வந்தாலும், அதன் சந்து பொந்துகளில் நுழைந்து ஏதாவது தொல்லை கொடுத்து வருவது பார்ப்பனர்களின் ஜீவ சுபாவமாகவே போய் விட்டது.

திறந்த போட்டி (Open Competition) என்பதை பிற சாதியினர் (Other Community) என்று திரிபுவாதம் செய்து அனைத்து ஜாதியினரும் போட்டியிடத் தகுதி உடைய அனைத்து இடங்களையும் பார்ப்பனர்களே பறித்துக் கொண்டனர். அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. அதற்குள் இரண்டு மூன்றாண்டுகள் ஓடி விடும் - கிடைத்த வரை ஆதாயம்தானே!

மத்திய தேர்வாணையம் வரை உள்ள பார்ப்பன அதிகார மய்யங்கள் - இந்த அக்கிரமத்தைச் செய்தன! அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வில்கூட அதிக மதிப்பெண்கள் பெற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்டோருக்கு திறந்த போட்டிக்குரிய ஒதுக்கீட்டில் இடம் அளிக்காமல்; தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோருக்குரிய ஒதுக்கீட்டில் இடங்களை அளித்து திறந்த போட்டிக்குரிய அந்த இடங்களையெல்லாம் இந்த உயர் ஜாதிக்காரர்களே சுளையாக விழுங்கினார்கள்.

இப்பொழுதுதான் எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது. திமுக ஆட்சியில் ஒழிக்கப்பட்டு விட்டது; உச்சநீதிமன்றம் வரை சென்று பார்ப்பனர் முட்டி மோதிப் பார்த்தனர். ஒன்றும் நடக்கவில்லை என்றவுடன் இப்பொழுதோ அகில இந்திய நுழைவுத் தேர்வு என்ற ஒன்றைக் கொண்டு வந்து வாசல் வழியாக உள்ளே நுழைய முடியாத பார்ப்பன சாதி ஒட்டகம் கொல்லைப்புற வழியாக நுழைய பார்க்கிறது.

பொறியியல் - கல்லூரிகளில் சேருவதற்குத் தகுதி மதிப்பெண்களை தமிழ்நாடு அரசு ஒன்றை நிர்ணயம் செய்தால் உடனே அகில இந்திய தொழில் நுட்பக் கவுன் சில் (AICT) என்ன செய்கிறது? தகுதி மதிப்பெண்களை உயர்த்தி அறிவிக்கிறது.

தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரியில் சேர்ந்திட நுழைவுத் தேர்வு கிடையாது. இதனை எதிர்த்து வழக்கொன்று தொடுக்கப்பட்டுள்ளது. அரசு சட்டக் கல்லூரியில் சேர்வதற்குத் தகுதி மதிப்பெண் குறைவாகவும், சட்டப் பல்கலைக் கழகத்தில் சேர்வதற்குத் தகுதி மதிப்பெண் வேறாகவும் இருக்கிறது. பல்கலைக் கழகத்தில் விதிக்கப்பட்டுள்ள தகுதி மதிப்பெண்ணையே (பொதுப் பிரிவுக்கு 70 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 60 சதவீதம்) அரசு கல்லூரியில் சேருவதற்கும் வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழக்கை ஏற்றுக் கொண்டு சம்பந்தப் பட்டவர்களுக்குத் தாக்கீது அனுப்பியுள்ளது. மனப்பாடம் பண்ணி வாங்கும் மதிப்பெண்ணில்தான் ஒட்டு மொத்தமாக தகுதியும் கூடாரம் அடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதாக அடம் பிடித்துச் சாதிக்கப் பார்க்கிறார்கள் பார்ப்பனர்கள்.

டில்லி பல்கலைக் கழகம் மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர் களைச் சேர்ப்பதில் நிருவாகம் செய்த தில்லுமுல்லுகளை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், ஆர்.வி. ரவீந்திரன் ஆகியோர் ஒன்றைக் குறிப்பிட்டனர்.

அந்த நாட்களில் தேர்ச்சி பெற குறைந்தளவு மதிப்பெண்கள் 35 ஆகும். அம்பேத்கர் 37 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். கல்லூரியில் சேர அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தால் உங்களுக்கு ஒரு அம்பேத்கரும், அருமையான அரசமைப்புச் சட்டமும் கிடைத்திருக்குமா என்று கேட்டனர். இந்த உண்மைகள் எல்லாம் உயர் ஜாதிக்காரரான - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபலுக்கு எங்கிருந்து தெரியப் போகிறது? கல்வித் துறைக்குப் பார்ப்பனர் அமைச்சராக இருப்பது ஆபத்தானது! ஆபத்தானது!! 9-6-2012

தமிழ் ஓவியா said...

நுழைவுத் தேர்வை நுழைய விடோம்!


ழைவுத் தேர்வு என்ன? சமூக நீதிக் கப்பலுக்கு ஓட்டை போட முனையும் எந்தச் சக்தியையும் முறியடிப்போம் தோழர்களே!

நுழைவுத் தேர்வு என்றால் என்ன பொருள் தெரியுமா? காலம் காலமாக தள்ளுபடி செய்யப்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் - மனுதர்ம காலம் தொட்டு, கல்வி மறுக்கப்பட்ட பஞ்சம, சூத்திர மக்கள் ஆகி யோர்களை கல்விச் சோலைக் குள் நுழைய விடக் கூடாது என்கிற சூழ்ச்சியை மூடி மறைக்கும் முகமூடி!

மத்திய மனித வள மேம் பாட்டுத்துறை (கல்வி) அமைச்சர் கபில் சிபல் நுழைவுத் தேர்வு - நுழைவுத் தேர்வு என்று எதற் கெடுத்தாலும் சலங்கை கட்டி ஆடுகிறாரே - இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் குக்கிராமங்கள் உட்பட சமமான அளவுக்குக் கல்விக் கூடங் களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளனவா?

நகர்ப்புறக் கல்வி நிறுவனங் கள் என்றால் அய்ந்து நட்சத்திர வசதிகள், குக்கிராமங்கள் என்றால் குடிசை நிலை என்ற வேறுபாடுகள் இருக்கின் றனவா, இல்லையா?

கரும்பலகை இல்லாத பள்ளிகள் இன்னும் உண்டு என்ற வெட்கம் கெட்ட நிலையில், நுழைவுத் தேர்வு என்ற வக்கணையைத் திணிப்பது யாரை ஏமாற்ற? யாரை வஞ்சிக்க?

இந்தியா முழுமையும் ஒரே நுழைவுத் தேர்வு என்று கதைக் கிறாரே மத்திய அமைச்சர். இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான கல்வித் திட்டமா உள்ளது? பல இனங்கள், பல மொழிகள், பல கலாச் சாரங்கள், பல வகையான சுற்றுச் சூழல்கள் புவியியல் மாற்றங்கள் உள்ளனவா இல்லையா? இந்தியா ஒரே நாடு அல்லவே - துணைக் கண்டம்தானே! இந்த நிலையில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு எப்படிப் பொருந்தும்?
போட்டித் தேர்வும், நுழைவுத் தேர்வும் ஒன்றல்ல - இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது.

நுழைவுத் தேர்வுதான் அறிவை அளக்கும் பாகைமானியா? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் நுழைவுத் தேர்வு குறித்து என்ன கூறினார்கள்? நுழைவுத் தேர்வை நடத்தி னாலும் முழு சமநிலை என்பது கட்டுக்கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந் தெடுப்பதை விட கோன்பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சி போல அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை டிக் செய்யும் வாய்ப்புள்ளது என்று மண்டையில் அடித்தாற்போல கூறி யுள்ளார்களே. இதற்குக் கபில்சிபல் வைத்திருக்கும் பதில் என்ன?

அகில இந்திய நுழைவுத் தேர்வு என்கிறபோது எந்த மொழியில் எழுதப் போகிறார்கள்? ஆங்கிலத் திலும், இந்தியிலும்தானே? இந் தியைத் தாய்மொழியாகக் கொண் டவர்களுக்குத்தானே குலோப்ஜான் மாதிரி.

தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்த முதல் தலை முறையைச் சேர்ந்தவர்கள் முக்காடு போட்டுக் கொண்டு மூலையில் ஒதுங்கிக் கிடக்க வேண்டுமா?

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட வர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் கிராமவாசிகள் படிக்க ஆரம்பித்து விட்டனர், பட்டதாரிகள் ஆகிவிட் டனர், டாக்டர்கள் ஆகிவிட்டனர், பொறியாளர்கள் ஆகிவிட்டனர். இவர்களை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்ற திட்டத்தில் தீவட் டியைத் தூக்கிக் கொண்டு ஒரு கூட்டம் புறப்பட்டிருக்கின்றது; ஒடுக் கப்பட்ட மக்களே எச்சரிக்கை! எச்சரிக்கை !! தமிழ்நாட்டில் பட்டதாரியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த முதல் தலை முறையினருக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகள் எல்லாம் அகில இந்திய திட்டத்தின்கீழ் புதைக்க ப்படப் போகின்றன - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

ஏற்கெனவே தமிழ் நாட்டிலிருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண் ணிக்கையில் 15 விழுக்காட்டை மத்திய தொகுப்புக்கு என்று கூறி விழுங்கி விட்டார்கள். மருத்துவ முதுநிலை படிப்புக்கும் 50 விழுக்காடு இடங்களைத் தூக்கிச் சென்று விட்டார்கள். இப்பொழுது அகில இந்திய நுழைவுத் தேர்வு என்று கூறி, இந்தியில் எழுதலாம் என்ற ஏற்பாடு செய்து எஞ்சிய இடங்களையும் தமிழ்நாட்டிலிருந்து கொள்ளை யடித்துக் கொண்டு போகப் போகி றார்கள். ஒடுக்கப்பட்ட மக்களே உஷார்! உஷார்!!

தமிழர் தலைவர் ஆணை பிறப் பித்து விட்டார்!

12 ஆம் தேதி தமிழ்நாடெங்கும் நுழைவுத் தேர்வை எதிர்த்து கழகம் நடத்த இருக்கும் கண்டன ஆர்ப் பாட்டத்தில் மாணவர் பட்டாளம் திரளட்டும்! திரளட்டும்!! இளைஞர் கள் ஈட்டி முனையாய்க் கிளம்பட்டும்! கிளம்பட்டும்!!

மாணவரணி, இளைஞரணி தோழர்களே என்ன செய்யப் போகி றீர்கள்? களத்தில் இறங்கிவிட் டீர்களா? இன்னும் இரண்டே நாட் கள்தான் - களப்பணி ஆற்றிடுவீர்! ஆற்றிடுவீர்!! 9-6-2012

தமிழ் ஓவியா said...

பொது நுழைவுத் தேர்வு யாரை மேம்படுத்த?


பொறியியல் படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் அறிவித் திருக்கிறார். வருகின்ற 12-06-2012 செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தோழர்களும், தோழி யர்களும், சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகளும் ஆர்த்தெழுந்து நுழைவுத்தேர்வினை எதிர்த்து தமிழர் தலைவர் அவர்களின் ஆணையின்படி ஆர்ப்பாட்டத்தினை நடத்த இருக் கின்றார்கள். ஒரு காட்டில் பலவிதமான பறவைகள் இருந்ததாம். அந்த பறவைகள் காட்டிற்கு ஆட்சி செலுத்த பெங்குயின் பறவைகளுக்கு வாய்ப்பு வந்ததாம். பெங்குயின் பறவைகள் புத்திசாலிகள் அல்ல, புகழ் வாய்ந்தவைகளும் அல்ல ஆனால் காட்டின் அதிகாரம் அனைத்தும் அவைகளின் கையில் இருந்ததாம்.

மத்திய அமைச்சர் சொல்லும் திட்டம்: நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் இந்த திட்டத்தின் கீழ் வரும். அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் சேருவதற்கு ஒரே ஒரு நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படும். அந்த நுழைவுத்தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் ஒரு பட்டியல் (டேட்டா) தயாரிக்கப்படும். அந்தப்பட்டியலில் முன் னணியில் உள்ள மாண வர்கள், மாணவியர்கள் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகளில் சேர் வார்கள், அடுத்தடுத்த பொறியியல் கல்லூரிகளில் அடுத்தடுத்த மாணவ மாணவிகள் சேர்க்கப் படுவார்கள். நாடு முழு வதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் இந்தத் திட்டத்தின் கீழ் வரும். இந்த திட்டத்தின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். இதனைப் போலவே மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்கையும் அகில இந்திய நுழைவுத்தேர்வு அடிப் படையில் நடைபெறும். இது மட்டுமல்ல கலை, அறிவியல் கல்லூரிகளின் உயர் கல்விக்கான மாணவர்கள் சேர்க்கையும் இதே மாதிரியான நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே நடைபெறும் என்று மத்திய அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

தமிழகமும் நுழைவுத் தேர்வும்: தமிழகத் திலே ஒரு காலத்தில் நுழைவுத்தேர்வு இருந்தது, அது திராவிடர் கழகத்தின் தொடர்ந்த போராட்டங்களால், தமிழக ஆட்சியாளர்களின் விழிப்புணர்வால் ஒழிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது மத்திய அரசாங்கம் மறைமுகமாக நுழை வுத் தேர்வு முறையை தமிழகத்திற்கும் சேர்த்து புகுத்துகிறது. இதனைத் தடுக்க வேண்டாமா?என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேட்டிருக்கிறார். தமிழகத்தில் பொ றியியல் படிப்புக்கான கலந்தாய்வு சமூக நீதி அடிப்படையில் அமைந்துள்ளது. ஒரு குடும்பத்தில் முதன் முதல் பட்டதாரி என்றால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, படிப்புக்கான கட்டணங்கள் விலக்கப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்ட மாணவன் அதுவும் அவரது தந்தை கூலித்தொழிலாளி என்றால் அவருக்கு முன்னுரிமை கொடுக் கப்படுகின்றது. தாழ்த்தப்பட்ட மாண வர்களில் மிகவும் அடித்தட்டில் உள்ள அருந்ததியர் வகுப்பு மாணவர்களுக்கு வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப் படுகின்றது. இவ்வாறு ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமைகளை எல்லாம், சமூக நீதியை எல்லாம் குழிதோண்டிப்புதைக்க கொண்டு வரப்படும் திட்டமே இந்த நுழைவுத்தேர்வு திட்டமாகும்.

நுழைவுத் தேர்வும் கிராமப்புற மாணவர்களும்: இப்பொழுதுதான் தமிழகத்தில் உள்ள கிராமங்களில் ஓரிருவர் பொறியியல் பட்டதாரிகளாய் படித்து பட்டம் பெற்றுள்ளனர். கிராமப்புற மாணவர்களை ஒட்டு மொத்தமாக பொறியியல் கல்லூரிகள் பக்கம் வராம லேயே தடுப்பதற்கு கொண்டு வரப்படும் திட்டமே இந்த நுழைவுத்தேர்வு திட்ட மாகும். நமது மக்கள் பெரிதும் படிக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதற்கு தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள், நம்மவர்களுக்கு புத்தி இல்லை என்றோ படிப்பில் ஆசை இல்லை என்றோ சொல்லி விட முடியுமா? பின் என்னவென்றால் படிப்புக்கு உள்ள சவுகரியமும் அதற்குப்பிடிக்கும் செல வுக்கு ஏற்ற பணமும் பெருவாரி மக்க ளாகிய நம்மிடம் இல்லை, அதனாலேயே பெரிதும் நம்மவர்கள் படிக்க முடிய வில்லை". இதில் படிப்பு என்பதற்கு பதிலாக நுழைவுத்தேர்வு எனக்குறித்தால் நுழைவுத்தேர்வுக்கு உள்ள சவுகரியமும், அதற்குப் பிடிக்கும் செலவுக்கு ஏற்ற பணமும் கிராமப்புற மாணவர்களிடம் இல்லை, ஒடுக்கப்பட்ட வகுப் பினை சேர்ந்த மாணவர்களிடம் இல்லை எனவே அவர்கள் ஒட்டு மொத்தமாக வராமல் தடுக்கப்படுவார்கள். பொறி யியல் கல்லூரிக்கு நுழைவுத் தேர்வு என்று சொன்ன வுடனேயே இந்தியா டுடே பத்திரிகையில் பிரபலமான சில நிறுவனங்கள், இந்த நுழைவுத் தேர்வுக்காக நாங்கள் பயிற்சி கொடுக்கப்போகிறோம், எங்களிடம் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் சேர்வார்கள் என்று பேட்டி கொடுக்கின் றார்கள். ஆம், கொல்லைப்புற வழியில் உயர் ஜாதி மாண வர்கள் பலன் பெறுவதற்காக ஒடுக்கப்பட்ட மாணவர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் திட்டமே இந்த நுழைவுத்தேர்வு திட்டமாகும். நகர்ப்புற மாணவர்கள் , பணம் கொடுத்து பயிற்சி பெற்று குப்பன் வீட்டு, சுப்பன் வீட்டுப் பிள்ளைகளின் வாய்ப்பினைத் தட்டிப் பறிக்கும் திட்டமே நுழைவுத்தேர்வு திட்டமாகும்.

தமிழ் ஓவியா said...

குரங்கு கையில் பூமாலை: அனைத்து பொறியியல் கல்லூரிகளுக் கும் சேர்வதற்கான நுழைவுத்தேர்வினை யார் நடத்துவார்கள் என்றால், அய்.அய்.டி. நிறுவனங்கள் நடத்தும் என்று மத்திய அமைச்சர் சொல்லியி ருக்கிறார். அது மட்டுமல்ல, இரண்டு கட்டங்களாக இந்தத் தேர்வு நடக்கும், வினாத்தாள் தயாரிப்பு போன்றவற்றை அய்.அய்.டி. நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தயாரிப்பார்கள் என்று கூறியிருக்கின்றார். ஏற்கெனவே 17 அய்.அய்.டி. நிறுவ னங்களுக்காக நடத்தப்படும் தேர்வுகளில் ஒடுக்கப்பட்ட மாணவர்களோ, கிராமப்புற மாணவர்களோ, மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்களோ தேர்ச்சி பெற முடியவில்லை. கான்பூர், டில்லி போன்ற அய்.அய்.டி.நிறுவனத்தின் சிண்டிகேட் உறுப்பினர்கள் இந்த பொது நுழைவுத் தேர்வு என்பதனை எதிர்க்கின்றார்கள் என்பதற்காக, அவர்களை சமாதானப் படுத்தும் விதமாக , இந்த தேர்வினை அய்.அய்.டி. நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நடத்துவார்கள் என்று கூறியிருக்கின்றார். குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல் இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர் காலத்தை, பொறியியல் கல்லூரி சேர்க் கையை அய்.அய்.டி.யினர் தீர்மானிப் பார்கள் என்பது கொடுமையாகும், சமூக அநீதியாகும்

ஆதரிக்கும் பார்ப்பனர்கள்: மத்திய அரசின் கல்வி மசோதா குறித்தும், நுழைவுத்தேர்வினை எதிர்த்து நடக்கும் ஆர்ப்பாட்டம் குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விளக்கமான அறிக் கைகளை விடுதலையில் கொடுத் துள்ளார். தனது அறிக்கையில் "ஒவ்வொரு மாநிலமும் மொழி, கலாச்சாரம், பண்பாட்டில் தனித்தனியானவை; இவற் றின் பன்முகக் கலாச்சாரத்தைப் பறித்து ஒருவகைப் பாசிசத்தை உருவாக்குவதே இம்மசோதா; எனவே நாடு தழுவிய அளவில் கல்வியாளர்களின் எதிர்ப்பும் அவசர அவசியமாகத் தேவை" எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதனால் தான் நவீன காலத்து பாசிஸ்டுகளின் அரசான குஜராத் அரசினர் இந்த திட்டத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். பார்ப் பனர்கள் பத்திரிகைகளில் இதனை ஆதரிக்கின்றார்கள். நாம் இதனை எதிர்க்க ஒன்று சேரவேண்டாமா? எதிர்த்து குரல் கொடுக்க வேண்டாமா? ஆர்ப்பரித்து வாருங்கள், 12.6.2012 நுழைவுத்தேர்வினை எதிர்த்து நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு வாருங்கள்.

- முனைவர் வா. நேரு
தலைவர், பகுத்தறிவாளர் கழகம் 9-6-2012

தமிழ் ஓவியா said...

தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் ஆ.இராசா செய்தியாளர்கள் சந்திப்பு


சென்னை, ஜூன் 9- தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் மற்றும் ஆ.இராசா ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

தலைவர் கலைஞர் அவர்களை நேற்று மாலை - சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வினையடுத்து கலைஞர் அவர்கள், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஓராண்டுக்குப் பிறகு ஆ.ராசாவை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் தொடுத்த வினாவிற்குப் பதிலளித்த கலைஞர் அவர்கள், ``ஏறத்தாழ ஓராண்டுக்கு மேலாகப் பிரிந்திருந்த தம்பியைப் பார்க்கும்போது, ஓர் அண்ணனுக்கு என்ன உணர்வு இருக்குமோ, அந்த உணர்வுதான் தம்பி ராசாவைப் பார்க்கும்போது எனக்கு இருந்தது என்று குறிப்பிட்டார். செய்தி யாளர் பேட்டியின்போது வினா ஒன்றுக்குப் பதிலளித்த ஆ.இராசா ``தலைவர் கலைஞரின் `நெஞ்சுக்கு நீதியை இருபது முறைக்கு மேல் படித்ததில் கிடைத்த வலிவு, இதைவிட சோ தனையைக் கூட தாங்கி வெளிவரக் கூடிய வலிவை எனக்குக் கொடுத்திருந்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி., புதுடெல்லியிலிருந்து நேற்று மாலை சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேராக - அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார்.

அறிவாலயத்தில் - கலைஞர் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வணங்கினார். தலைவர் கலைஞர் அவர்கள், ஆ.ராசாவுக்குப் பொன்னாடையும் மாலையும் அணிவித்து வாழ்த்தினார்.

அதேபோல் - கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர், பொருளாளர் மு.க. ஸ்டாலின், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி ஆகியோருக்கும் ஆ.ராசா, பொன்னாடை அணிவித்து வணங்கினார். பேராசிரியர், மு.க.ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி ஆகியோரும் ஆ.ராசாவுக்குப் பொன்னா டைகள் அணிவித்தனர். கலைஞரை - ஆ.ராசா சந்தித்த இந்த நிகழ்வுக்குப் பிறகு, கலைஞர் அவர்கள், அறிவாலயம் - பத்திரிகையாளர் அரங்கில் திரண் டிருந்த ஏராளமான செய்தியாளர்களுக்கும், தொலைக் காட்சி நிருபர்களுக்கும் பேட்டியளித்தார்.

அப்பேட்டி வருமாறு:- செய்தியாளர் :- ராஜா அவர்களை இத்தனை மாதங்கள் கழித்து நீங்கள் பார்க்கிறீர்கள். அவரைப் பார்த்தபோது உங்கள் உணர்வு எப்படி இருந்தது? ராஜா எப்படி உணர்ந்தார்? கலைஞர் :- ஏறத்தாழ ஓராண்டு காலத்திற்கு மேலாக பிரிந்திருந்த தம்பியை, ஓர் அண்ணன் பார்க்கும்போது என்ன உணர்வு இருக்குமோ அந்த உணர்வுதான் என்னுடைய உணர்வாகவும் இருந்தது. என்னுடைய உணர்வுதான் தம்பி ராஜாவின் உணர்வும்!

செய்தியாளர் :- ராஜா மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவாரா? கலைஞர் :- இப்போதே அவர் தீவிர அரசியலிலே தான் இருக்கிறார்.

செய்தியாளர் :- கூட்டங்களில் ராஜா பேசுவாரா?

கலைஞர் :- பேசுவார்.

செய்தியாளர் :- ராஜா! நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

ராஜா :- தலைவர் அவர்கள் என்ன சொன்னார்களோ, அது தான் என்னுடைய உணர்வு.

செய்தியாளர் :- ராஜா இத்தனை நாட் களாக நீங்கள் ஏன் ஜாமீன் கோரவில்லை? ராஜா:- வழக்கு தொடர்ந்து நடந்து கொண் டிருக்கின்றது. எனவே பதில் சொல்ல விரும்ப வில்லை.

செய்தியாளர் :- ராஜா, அலைக்கற்றை வழக்கைப் பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சி உங்கள் மீது குற்றஞ்சாட்டியதாக நீங்கள் உணருகிறீர்களா?

கலைஞர் :- வழக்கு நடந்து கொண்டிருக் கிறது. அப்படியெல்லாம் நான் உணரவில்லை.

செய்தியாளர் :- வழக்கே ஒன்றும் இல்லை என்று சொல்கிறார்கள். சி.பி.அய். மேலே இந்த வழக்கைத் தொடர முடிய வில்லை என்று சொல்கிறார்களே?

கலைஞர் :- நீங்கள் சொல்வது சிந்திக்கத்தக்கது.

செய்தியாளர் :- ராஜா அவர்களே, மாநில அரசியலில் தொடர்ந்து ஈடுபட இருக்கிறீர்களா?

ராஜா :- தலைவர் அவர்கள் என்னை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்களோ, அந்த வகை யில் நான் பணியாற்றுவது பற்றி தலைவரும், தலைமைக் கழகமும் முடிவெடுக்கும். செய்தியாளர் :- தலைவரைப் பார்த்த போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

ராஜா:- தலைவர் சொன்ன மாதிரிதான்!

செய்தியாளர்:- தொடக்கத்திலேயே வெளிப்படையாக இருப்பேன், இந்த வழக்கை நிரூபிப்பேன் என்றெல்லாம் சொல்லியிருக் கிறீர்கள். வழக்கு தொடர்ந்து ஓராண்டு ஆகி யிருக்கிறது. உங்கள் உணர்வு இப்போது எப்படி இருக்கிறது? வழக்கின் வெற்றி எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

ராஜா :- நீங்கள் வழக்கு விசாரணையைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த வகையில் இதுவரையில் எனக்கென்ன பாதிப்பு ஏற்பட்டுள் ளது? 45 சாட்சிகள் இதுவரை விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை எனக்கு எதிர்ப்பாக என்ன உள்ளது?

செய்தியாளர் :- இந்த வழக்கில் முக்கிய மான நீரா ராடியா போன்றவர்கள் எல்லாம் கைது செய்யப்படவில்லை. ஆனால் நீங்கள் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள். அதை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்?

தமிழ் ஓவியா said...

ராஜா :- இன்னும் யார் யார் பாக்கியிருக் கிறார்கள் என்று நீங்கள் சி.பி.அய்.யிடம் சொன்னால், அவர்கள் கைது செய்யலாம். (சிரிப்பாக)

``தலைவர் கலைஞரின் அறிவுரைப்படிபணியை தொடர்ந்து கொண்டிருப்பேன் - ராசா

செய்தியாளர் :- இந்த வழக்கிலே உங்களை நடத்திய விதத்திற்கும், இதுபோன்ற வழக்கிலே வேறு சிலர் நடத்தப்பட்ட விதத்திற் கும் வேறுபாடு இருந்ததாக உணர்கிறீர்களா?
ராஜா :- வழக்கு நீதிமன்றத்தின் முன்னால் இருக்கின்ற நிலையில், இதைப்பற்றி நான் பதில் சொல்வது சரியாக இருக்காது.
செய்தியாளர் :- நீங்கள் கைது செய்யப் பட்டது, அரசியல் பழிவாங்கும் செயல் என்று நினைக்கிறீர்களா?
ராஜா :- இந்தக் கேள்விக்கு நான் எதையும் யூகமாகக் கூற முடியாது.

``பனிக்குடத்தில் உள்ள குழந்தை போல கலைஞரின் கரங்களில் நான்! - ஆ.ராசா!

செய்தியாளர் :- நீங்கள் சிறையிலே இருந்த போது தி.மு. கழகம் உங்களுக்கு ஒத்துழைப்பு தந்ததா?

ராஜா :- பனிக் குடத்தில் உள்ள குழந்தையைப் போல நான் தலைவர் கலைஞர் கரங்களிலும், தலைமைக் கழகத்தின் கரங்களிலும் பத்திரமாக இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன்.

செய்தியாளர் :- நீங்கள் சிறையிலே இருந்தபோது ஒரு கட்டத்தில் உங்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டதா?
ராஜா :- அப்படியெல்லாம் இல்லை.

செய்தியாளர் :- 15மாதங்கள் சிறையிலே இருந்ததால் நீங்கள் எதை இழந்ததாகக் கருதுகிறீர்கள்?

ராஜா :- தனி மனித சுதந்திரம்.

செய்தியாளர் :- 15 மாத காலம் சிறை யிலே இருந்த பிறகு உங்களுடைய அரசியல் வாழ்வில் உயர்வு ஏற்பட்டதாக நினைக் கிறீர்களா?

ராஜா :- தலைவர் கலைஞர் அவர்களின் நெஞ்சுக்கு நீதியை இருபது முறைக்கு மேல் படித்திருக்கிறேன். அந்த நெஞ்சுக்கு நீதி புத்தகம் கொடுத்திருக்கிற வலிவு, இதை விட சோதனையைத் தாங்கி என்னால் வெளிவர முடியும்.

செய்தியாளர் :- உங்களைத் தேர்ந் தெடுத்த நீலகிரி பகுதி மக்களுக்கும், உங்களுக்குச் சொந்த ஊரான பெரம்பலூர் பகுதி மக்களுக்கும் இந்த நேரத்தில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ராஜா :- தொடர்ந்து என்னுடைய பணியைச் செய்து கொண்டே இருப்பேன். தலைவர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலுடன், தலைமைக் கழகத்தின் அறிவுரைப்படியும்.

செய்தியாளர் :- தி.மு. கழகத்தின் முக்கிய தலைவர்கள் விமான நிலையத்தில் உங்களை வரவேற்க வராதது உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறதா?

ராஜா :- தலைவர் கலைஞர் அவர்கள் பேசியதற்குப் பிறகு, நேற்றையதினம் பொருளாளர் தளபதி அவர்கள் டெல்லிக்கு என்னுடைய இல்லத்திற்கே வந்ததற்குப் பிறகு, முழு தலைமைக் கழகமும் என்னை வரவேற்ற தாக நான் உணருகிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு மாலை அணிவித்து வரவேற்றபோது நான் என்னுடைய பிறவிப் பயனை அடைந்ததாக உணருகிறேன். இதை விட எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. செய்தியாளர் :- கனிமொழிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு உங்களுக்குத் தரப்படவில்லையே?

கலைஞர் :- இதுவரை செய்திகள் கேட்டீர்கள். இப்போது கலகம் பண்ணப் பார்க்கிறீர்கள். (சிரிப்பு) ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நல்ல பத்திரிகைக்காரர்களாக நடந்து கொள்ளுங்கள்.

தமிழ் ஓவியா said...

செய்தியாளர் :- ராஜா அவர்களே, உங்கள் மீது மிகப் பெரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது! இந்திய சுதந்திர வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய ஊழல் நடக்கவில்லை என்றெல்லாம் சொல்கிறார்கள். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? மக்களுக்கு என்ன பதில் சொல்ல விரும்பு கிறீர்கள்?

கலைஞர் :- இந்த வழக்கு பற்றி ஏராளமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. பத்திரிகை களிலே அதைப்பற்றி செய்திகள் வந்திருக் கின்றன. ஏற்கனவே இந்தத் துறையிலே இருந்த அமைச்சர்கள், யார் யார் காலத்தில் எப்படி நடைபெற்றது? என்ன முறை பின்பற்றப்பட்டது? என்பதெல்லாம் விளக்கப் பட்டிருக்கின்றன. இதற்கு மேல் அதைப்பற்றி எதுவும் சொல்லி, வழக்கின் விவரங்களுக்குள் செல்ல விரும்ப வில்லை. அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

ராஜா :- நீங்கள் பெரிய ஊழல் என்றெல்லாம் கேட்டீர்கள். இதைச் சொல்லும் போது 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அதற்குப் பிறகு சி.பி.அய். 35 ஆயிரம் கோடி ரூபாய் என்று சொன்னார்கள். ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதை ஒத்துக் கொள்ளவில்லை. நீதி மன்றம் குற்றச் சாட்டை வரையும்போது (உயசபந கசயஅந) அதையும் ஒத்துக் கொள்ளவில்லை. எனவே 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்பது நீங்கள் பத்திரிகையாளர்கள் இதுவரை சொல்லிக் கொண்டே இருக்கின்ற விஷயம். அதை ஏற்றுக் கொண்டு எந்த நீதிமன்றமும் என்மீது குற்றச் சாட்டு சுமத்தவில்லை.

செய்தியாளர் :- 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்ற தணிக்கை அதிகாரியின் அறிக்கை காங்கிரஸ் கட்சியின் துணையோடு செய்யப்பட்ட சதி என்று நினைக்கிறீர்களா?

ராஜா :- இது உங்களுடைய கற்பனையான கேள்வி. செய்தியாளர் :- அப்படியானால் உண் மையான தொகைதான் எவ்வளவு?

ராஜா :- நீதி மன்றக் குற்றச்சாட்டின் வரைவை எடுத்துப் பாருங்கள். அதிலே அரசாங்கத்திற்கு எவ்வளவு இழப்பு என்று குறிப்பிடவே இல்லை.

செய்தியாளர் :- இந்தக் குற்றச்சாட்டினை உங்கள் மீது சாட்டிய போது, உண்மையை நிரூபிப்பேன் என்று சொன் னீர்கள். எப்படி நிரூபிக்கப் போகிறீர்கள்?

ராஜா :- நான்தான் உங்களிடம் கூறினேனே! 43 சாட்சிகள் விசாரணை முடிந்திருக்கிறது. பத்திரிகையாளர்கள் நிரம்பிய நீதிமன்றத்திலே நானே வாதம் செய்திருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் நான் எங்கள் வீட்டிலே எட்டாவது பையன். ஏழு அண்ணன் தம்பிகள் வீட்டிலே அக்காள் தங்கைகள் வீட்டிலே சோதனை நடந்தது. சி.பி.ஐ. வந்திருக்கிறார்கள். அமுலாக்கப் பிரிவினர் வந்திருக்கிறார்கள். வருமான வரித் துறையினர் வந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்ன கண்டுபிடித்தார்கள் என்று நீதிமன்றத்திலே கேட்டேன். அந்தக் கேள்வியை நான் தொடர்ந்து கேட்பேன்.9-6-2012