Search This Blog

15.6.12

இந்து மதம் விதைத்த விஷச்செடி இன்னும் உயிரோடு இருக்கிறதே!

ஆடையூர் அவலம்

திருவண்ணாமலையை அடுத்த ஆடையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி; அப்பள்ளியில் 135 இருபால் மாணவர்கள் படித்துக் கொண்டுள்ளனர். அப்பள்ளியில் இதுவரை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சேர்க்கப்படவில்லை என்கிற தகவல் அதிர்ச்சி அளிக்கக் கூடியது. இச்செய்தி வெளியில் வராமல் இருந்தது எப்படி என்பது கூட திகைப்பாகவே இருக்கிறது.

ஆடையூரில் வாழும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குமார் என்பவர் தனது மகன்கள் சதீஷை ஆறாம் வகுப்பிலும், முத்து ராஜை முதல் வகுப்பிலும் 6.5.2012 அன்று அப்பள்ளியில் சேர்த்துள்ளார்.

இதனை எதிர்க்கும் வகையில் மற்ற ஜாதியினர் தம் வீட்டுப் பிள்ளைகளைப் பள் ளிக்கு அனுப்பவில்லையாம். அனுப்பாததோடு மட்டுமல்லாமல் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வந்து தகராறும் செய்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் சென்று, அதிகாரிகள் தலையிட்ட பிறகு, பிரச்சினை தீர்வுக்கு வந்துள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து அப்பள்ளியில் படித்து வருகின்றனர் என்பது நல்ல செய்தியாகும்.
பெற்றோர்களின் ஜாதி வெறி கண்டிக்கத் தக்கது என்றாலும், அவர்கள் நடந்து கொண்ட விதத்தால் அப்பள்ளியில் படிக்கும் தாழ்த்தப் பட்ட மாணவர்களோடு மற்ற ஜாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் நெருக்கமாகப் பழகிட முடியுமா?

அந்தப் பிள்ளைகள்தான் இயல்பாகக் கலந்து படிக்கக் கூடிய சூழலும், மனநிலையும் ஏற்படுமா? தங்கள் நெஞ்சில் தேக்கி வைத்துள்ள நஞ்சை தங்களோடு முடித்துக் கொள்ளாமல் அடுத்த தலைமுறையினருக்கும் தாராளமாக வழங்கும் கேவலத்தை என்ன சொல்ல! இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இந்து மதம் விதைத்த விஷச் செடி இன்னும் உயிரோடு இருக்கிறதே!

நீதிக்கட்சி ஆட்சிக் காலத்திலேயே இன்றைக்கு 90 ஆண்டுகளுக்கு முன், தாழ்த்தப் பட்ட சமூக மாணவர்களைச் சேர்க்காத கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மான்யம் நிறுத்தப்படும் என்றும், தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காத பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டதாக ஆடிப் பாடும் ஒரு நாட்டில் அதற்காக பொன் விழா கொண்டாடப்பட்ட இந்திய நாட் டில், இப்படி ஒரு கொடுமை என்பது மன்னிக்க முடியாத ஒன்று. ஒரு சுதந்திர நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவு இருக்கலாமா?

ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? சுதந்திரம் இருக்கும் இடத்தில் ஜாதிக்கு இடம் இருக்கலாமா என்ற வினாவை எழுப்பினாரே - தந்தை பெரியார். அந்தக் கேள்விக்கு இதுவரை பதில் உண்டா?

இந்தக் காரணத்துக்காகத்தான் 1957 நவம்பர் 26இல் ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவை எரிக்கும் போராட்டத்தை நடத்தி, அதன் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள், கருஞ்சட்டையினர் மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையை அனுபவிக்க நேர்ந்ததே!

இன்றுவரை இதில் மாற்றமில்லாத நிலை தானே - அதன் தீய விளைவுதானே ஆடையூர் சம்பவம்!

ஆடையூர் பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்று தகராறு செய்தவர்கள்மீது. தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். அப்பொழுதுதான் ஜாதி வெறியர்களுக்கு மனத்தளவிலாவது ஓர் அச்சம் ஏற்படும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது என்பது நம் நாட்டுப் பழமொழி!
--------------------"விடுதலை”தலையங்கம் 15-6-2012

4 comments:

தமிழ் ஓவியா said...

வேலியே பயிரை மேயும் கூத்துகள்! போக்குவரத்துக் கழகத் தொழிற்கூடத்தில் கோயில் கட்டி கும்பாபிஷேகமா?

உச்சநீதிமன்ற தீர்ப்பு - அரசு ஆணைகள் குப்பைக் கூடையில் தூக்கியெறிப்படுகின்றன

சென்னை, ஜூன் 15- அரசு அலுவகலகங்கள் வளாகங்கள், நடைமுறைகள், அரசுக்குச் சொந்தமான இடங்களில் எந்த மத சம்பந்தமான கோவில்களும் கட்டக் கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு, மத்திய மாநில அரசுகளின் ஆணைகள் திட்டவட்டமாக இருந்தும் தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துத் துறை வளாகத்திலேயே கோவில் கட்டிக் கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளது.

1) மத்திய அரசு கடித எண் 3379/(L&OB) 91-3 துறை நாள் 16.9.1993.

2. மத்திய அரசு உள்துறை கடிதம் எண் 5/23/94 - CHC (மத்திய அரசு கூடுதல் செயலாளர் டி.என். ஸ்ரீவத்சவா) மாநில அரசுகளின் தலைமைச் செயலாள ருக்கு எழுதிய கடிதம்.

3) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் என். அரிபாஸ்கர் அவர்களின் கடிதம் நாள்: 16.8.1994.

இந்த ஆணைகளின்படி அரசு அலுவலகங்கள், அவற்றின் வளாகங்களுக்குள் எந்த மத சம்பந்தமான வழிபாட்டு நிலையங்களும் கட்டப்படக் கூடாது!

இவையல்லாமல் 2010 செபம்டம்பர் 14 அன்று உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றினையும் வழங்கியது.

பொது இடங்களிலும் அரசு இடங்களிலும் கட்டப் பட்டுள்ள அனைத்து மதச் சின்னங்களும் அகற்றப்பட வேண்டும். இது குறித்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து பதில் சொல்லியாக வேண்டும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகபட்சமாக 77,450 கோவில்கள். சட்ட விரோதமாகக் கட்டப்பட் டுள்ளன என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட வில்லையா? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணைக்கு எதிராகவும் பொது இடங்களில் கோவில்கள் கட்டப்படுவது எந்த வகையில் சரி?

சென்னை குரோம்பேட்டையில்

சென்னை குரோம்பேட்டை ராதா நகரிலுள்ள மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்கூட வளாகத்தில், ஓட்டுநர் பயிற்சி மற்றும் பேருந்து சம்பந்தப்பட்ட தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த இடம் தமிழக அரசிற்குச் சொந்தமான இடமாகும்.

இந்த வளாகத்தில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரின் ஆதரவுடன் (8.6.2012) கருமாரி அம்மன் கோவில் கட்டி, கும்பாபிசேகத்தை நடத்தியுள் ளனர் அந்தப் பகுதியிலுள்ள கோவில் பூசாரிகள்.

அரசுக்குச் சொந்தமான இடத்தில் மத சம்பந்தப்பட்ட சின்னங்களோ, வழிபாட்டுத் தலங்களோ இருக்கக் கூடாது என்று அரசாங்க ஆணை உள்ளது.

இந்த ஆணையை மீறும் வகையில் சென்னை குரோம்பேட்டை ராதா நகரிலுள்ள மாநகர போக்குவரத் துக் கழக தொழிற்கூட வளாகத்தில் கோவில் கட்டி கும்பாபிசேகம் நடத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? கோயில் அகற்றப்படுமா?

தமிழ் ஓவியா said...

யாகங்கள் நடத்திக் கொண்டே பெரியார் பெயரை உச்சரிப்பதா? முதல்வரை நோக்கி கலைஞர் வினா!

சென்னை, ஜூன் 15- வேத ஆகம பாராயணங் களோடு மழைக்காக யாகம் நடத்துபவர்கள் எல்லாம் தந்தை பெரி யார் பெயரைப் பயன் படுத்தலாமா என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பியுள்ளார் திமுக தலைவர் கலைஞர் அவர்கள்.

முரசொலியில் இன்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது:

கேள்வி :- மத்திய அரசின் பாடப் புத்தகங் களில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கிண் டல் செய்து வெளி வந்த கார்ட்டூனை அகற்ற வேண்டு மென்று கடை சியாக தமிழக முதல மைச்சர் ஜெயலலிதாவும் ஓர் அறிக்கை வெளி யிட்டிருக் கிறாரே?

கலைஞர் :- தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் சார் பில் தமிழகத்தின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் வெளியிட்டுள்ள கேலிச் சித்திரம் குறித்து, தமிழ கத்திலே உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர் களும் கண்டனம் தெரி வித்து, அந்தக் கேலிச் சித்திரம் உடனடியாக அந்தப் பாடப் புத்த கத்தில் இருந்து அகற்ற மத்திய அரசு ஆவன செய்திட வேண்டு மென்று அறிக்கை கொடுத்ததோடு, போராட்டங்களும் நடத்தி முடித்த பிறகு, தமிழக ஆளுங்கட்சியின் தலைவியும், முதலமைச் சரு மான ஜெயலலிதா திடீரென விழித்துக் கொண்டு அவசர அவ சரமாக ஓர் அறிக்கை கொடுத்து, அதனை தமிழ்நாட்டுப் பத்திரிகை கள் எல்லாம் முக்கியத் துவம் கொடுத்து வெளி யிட்டுள்ளன.

இந்தியை எதிர்த்து அண்ணா முழங்கி யதையெல்லாம் ஜெய லலிதா தனது அறிக்கை யில் குறிப்பிட்டிருக் கிறார். ஆனால்அண்ணா அவர்களின் நூற்றாண்டு நினைவாக கழக ஆட்சி யில் எழுப்பப்பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் என்ற கட்டடத்தை மாற்று கிறேன் என்று சண்ட மாருதம் செய்தவருக்கு, தற்போது அண்ணா அவர்களின் பேச்சு ஞாபகத்திற்கு வந்தது ஆச்சரியம்தான். இதிலே ஜெயலலிதா அறிக்கை விடுத்தாரா இல்லையா என்பதல்ல பிரச்சினை. ஒட்டு மொத்த தமிழர்களை யும், அவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட் டத்தையும் கிண்டல் செய்த கேலிச் சித்திரம் அரசின் சார்பாக வெளி யிடப்பட்டுள்ள புத்தகத் தில் இடம் பெறக் கூடாது என்பதுதான் அனைவரின் கோரிக்கை யும், வேண்டுகோளு மாகும். எனவே மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தி, இதனைப் பெரிய பிரச்சினையாக வளர்த்து விடாமல், உடனடியாக தலை யிட்டு அந்தக் கேலிச் சித்திரத்தை அகற்றுவ தற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்.

அதுபோலவே தந்தை பெரியாரின் பெயரை யும் குறிப்பிட்டு அவரை அவமதிக்கும் செயல் என்றும் தனது அறிக்கை யில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக் கிறார். தமிழகத்திலே மழை இல்லை என்ப தற்காக திருச்சியில் காவிரியில் அ.தி.மு.க. அமைச்சரின் முன்னி லையில் வேத ஆகம பாராயணங்களோடு மூன்று நாட்களுக்கு முன்பு யாகம் நடத்தி விட்டு, தற்போது பெரி யாரின் பெயரைக் கூறி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைத்தால் திராவிடர்கள் என்ன அவ்வளவு ஏமாளிகளா?

15-6-2012

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

இளைஞர்களே, உங்கள் உள்ளங்களைத் திறந்து இடமளியுங்கள்!

நேற்று உலக குருதிக் கொடை நாள் மட்டுமல்ல, முதியோர்களைக் கொடுமைப்படுத்தலைத் தடுக்கும் நாளும் கூட.

உலகெங்கும் உள்ள பல நாடுகளில் முதியோர்கள் எண்ணிக்கை மிகவும் கூடியிருக்கிறது. இந்தியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளும் பல அய்ரோப்பிய நாடுகளும் கூட இந்தப் பட்டியலில்!

முன்பு இருந்த சராசரி வயது இப்போது கூடியுள்ளது. மருத்துவ வசதிகளின் பெருக்கம், அறிவியல் மின்னணுவியல் துறை வளர்ச்சி க்ஷடி-அநனஉயட என்ற துறையில் பொறியியல் மருத்துவத் தொழில் நுட்பம் மிகவும் உதவிகரமாக உள்ளது. ழநயடவா ஊயசந என்ற ஒரு துறையே மருத்துவப் பொறியியல் துறையில் கூடுதலாக இணைந்து ஓர் அமைதிப் புரட்சிக்கு வித்திட்டு, மனித ஆயுளை மேலும் பல ஆண்டுகள் கூட்டியுள்ளது. இதெல்லாம் மகிழ்ச்சிக்குரிய சாதனைதான்; ஆனால் இதற்கொரு மறுபக்கம் நம் நாட்டிலும் மற்ற சில நாடுகளிலும் உள்ளது பற்றியும் நாம் யோசிக்க வேண்டாமா?

கூட்டுக்குடும்ப முறை நம் நாட்டில் வேகமாகச் சிதைந்து அல்லது தளர்ந்து வரும் இன்றைய கால கட்டத்தில், சொந்த மகன்கள் அல்லது மகள்கள் தங்களது தாய், தந்தையர்களைப் பெரிதும் கொடுமையாக நடத்தும் போக்கு தொத்து நோய் போல, (பன்றிக் காய்ச்சல் - டெங்குக் காய்ச்சல் போல) வேகமாகப் பரவி வருகிறது!

தங்களைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி, கல்வி கொடுத்து, உத்தியோகம் பார்த்து கை நிறையச் சம்பாதிக்கும் நிலைக்குத் தன்னை உருவாக்கிய பெற்றோர்களை - அவர்களது முதுமைக்காலத்தில் மிகவும் மோசமாக, அலட்சியத்துடன், ஏதோ பிச்சைக்காரர்களைப் போல கேவலமாக நடத்தும் கொடுமை - அவமானம் பற்பல குடும்பங்களில் அன்றாட வாழ்க்கையாகி உள்ளது!

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - தாய் சொல் மிக்க வாசகம் இல்லை என்று சொல்லிக் கொடுக்கப்பட்ட தமிழ்நாட்டிலேயே - கைவிடப்பட்ட அல்லது விரட்டப்பட்ட முதுமையடைந்த தாய் தந்தையர்களின் கண்ணீர்க் கதைகள், சோக வரலாறுகள் அன்றாட அவல நிலையாகி வருகின்றன!

எதையும் பயன்படுத்திவிட்டு, பிறகு குப்பையில் எறிதல் போன்று (ருளந யனே வாசடிற) அவர்களை மனிதர்களாகவே நடத்தாத அவரது பிள்ளைகள், பெண் கள் - இரு பாலரும் மிகப் பெரிய சமூக விரோதிகள் அல்லவா? நன்றி கொல்லும் நயவஞ்சக நரிகள் அல்லவா?

இவர்களைக் கிரிமினல் குற்றவாளி களாக்க புதுப்புதுச் சட்டங்கள் நம் நாட்டிலேயே செயல்படத் துவங்கி யுள்ளன.

சில மாதங்களுக்கு முன் தந்தைக்குச் சோறு போட மறுத்த ஒரு மகனை சென்னை அயன்புரம் காவல்துறையினர் அழைத்துக் கண்டித்து, காவல்துறை லாக்அப்பில் உள்ளே தள்ளி, பிறகு நடவடிக்கைக்குப் பயந்தவர் தந்தையைப் பராமரிக்க ஒரு வழியாக ஒப்புக் கொண்ட தால் வெளியே அனுப்பிய செய்தி இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய செய்தி யாகும்!

சட்டத்தாலா மகன் தந்தை உறவும், பாசமும் கடமையும் நிலை நிறுத்தப்படவேண்டும்? இதைவிட நம் சமுதாயத்தின் கீழிறக்க நிலைக்கு வேறு என்ன உதாரணம் தேவை?

கணவன் - மனைவி உறவு கூட விலகிக் கொள்ள உரிமை அளிக்கும் உறவுதான். ஆனால் தாய் தந்தையுடன் மகன், மகள் உறவு, அண்ணன் தம்பி உறவு என்பவைகளெல்லாம் விலகிக் கொள்ளும் உரிமையை சட்டமோ அறநிலையோ அனுமதிப்பதில்லையே! அதுதானே அதன் தனிச் சிறப்பு.

மனித பாசத்தை, அன்பை, காதலை சட்டம் போட்டா ஒரு சமுதாயம் நிலை நிறுத்துவது? இதை விட மிகமிக வெட்கக்கேடு வேறு உண்டா?

முதியவர்களிடம் அலட்சியம் காட்டி, புறந்தள்ளி ஒதுக்கப்பட்டவர் களாக்கும் இளையவர்களே, உங்களுக்கு ஏன் ஒன்று மறந்து விடுகிறது?

நாளை நீங்களும் முதியவர்களாகி முதுமையில் தள்ளாடும் நிலை காலத்தின் கட்டாயம் என்பதை ஏனோ வசதியாக மறந்து விடுகிறீர்கள்? அப்போது உங்கள் செல்வர்கள் (பிள்ளை, பெண்கள்) உங்களை இப்படி நடத்திடுவர்; அப்போது உங்கள் மனம் எப்பாடுபடும் என்பதைச் சிந்தித்தீர்களா?

எனவே முதியோர் இல்லங்களைத் தேடாதீர்கள் உங்கள் பெற்றோர் களுக்காக - மூடிய உங்கள் உள்ளங் களைச் சற்றே அகலமாகத் திறந்து அவர்களை மீள் குடியேற்றுங்கள். இது அவர்களுக்காக அல்ல; நீங்கள் மனிதம் உள்ள மனிதர்கள்தான் என்பதை மன்பதைக்குக் காட்ட - மதிப்பும் மரியாதையும் பெறுவதற்காக! புரிகிறதா? 15-6-2012