Search This Blog

10.6.12

பார்ப்பன எழுத்தாளர் மாலன் முதல் ஞானி வரை


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று போற்றப்படும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் பற்றி என்.சி.இ.ஆர்.டி. தயாரித்த பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற கார்ட்டூன் இந்தியாவில் பெரும் சர்ச்சைப் பூகம்பத்தை ஏற்படுத்திவிட்டது. நாடாளுமன்றம் வரை அதன் எதிரொலியைக் காண முடிந்தது.

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட 2 ஆண்டுகள் 11 மாதம் 17 நாட்கள் ஆயின. இந்த கால தாமதத்தைக் குறிக்கும் வகையில் நத்தையின் மீது டாக்டர் அம்பேத்கர் ஊர்ந்து செல்வது போலவும், பிரதமர் நேரு சாட்டையைச் சுழற்றி விரட்டுவது போலவும் ஒரு கார்ட்டூன் படத்தை பிரபல கார்ட்டூனிஸ்ட் கேசவ சங்கர பிள்ளை என்பவரால் 1949 இல் வரையப்பட்டது.

63 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கார்ட்டூன் பள்ளிப் பிள்ளைகளின் பாடத் திட்டத்தில் வைக்கப் பட்டது ஏன் என்பதுதான் இப் பொழுது செங்குத்தாக எழுந்து நிற்கும் கேள்வி.

இது குறித்து நேற்று புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் வாதப் பிரதி வாதங்கள் நடந்தன.

சொல்லி வைத்தாற்போல பார்ப்பனர்கள் எல்லாம் அந்தக் கார்ட்டூனை வரவேற் றும், மற்றவர்கள் எல்லாம் அதனை எதிர்த்தும் கருத்து சொன்னதும் கவனிக்கத் தக்கதாகும்.

இது தவிர பார்ப்பன எழுத்தாளர் மாலன் முதல் ஞானி வரை கார்ட்டூனை ஆதரித்துக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சகிப்பு மனப்பான்மை வேண்டாமா? கருத்துச் சுதந்திரத்துக்கு இடம் அளிக்க வேண்டாமா? என்றெல்லாம் பரந்து விரிந்த மனப் பான்மையைக் குத்தகை எடுத்தவர்கள் போல சண்டப் பிரசண்டம் செய்கிறார்களே, அவர்களைப் பார்த்து நாம் கேட்கும் கேள்வி.

தீண்டாமை ஷேமகரமானது என்று கூறியவர் மறைந்த காஞ்சி சங்கராச் சாரியாரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி. அதற்காக அவரை விரட்டியடிப்பது போலவும், அவர் மிரண்டு ஓடுவது போலவும் கார்ட்டூன் ஒன்று வெளியிடப்பட்டால் இந்த பரந்து விரிந்த (?) மனப்பான்மைக்குச் சொந் தக்காரர்களான பார்ப்பனர்கள் ரசிப்பார்களா? பலே, பலே பிரமாதமான கார்ட்டூன் என்று கைதட்டுவார்களா?

இதில் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் காலதாமதம் ஏற்பட்டதற்கு அப்பொழுதே அண்ணல் அம்பேத்கர் விளக்கம் அளித்துவிட்ட நிலையில், இந்தக் கார்ட்டூனைப் பாடப் புத்தகத்தில் வெளியிடுவதன் உள் நோக்கமென்ன ?

கார்ட்டூனை அச்சடித்துக் கொடுத்தவர்கள், அம்பேத்கர் அப்போது அளித்திருந்த விளக்கத்தையும் இடம் பெறச் செய்யாதது ஏன்?

இங்குதான் பார்ப்பன நாகம் படம் எடுத்து ஆடுகிறது! இவர்கள் தரும் வெண்டைக்காய், விளக்கெண்ணெய் வியாக்கியானம் ஒரு பக்கம் இருக் கட்டும்! அந்தக் கார்ட்டூனைப் பார்க்கும் அளவில் எந்த எண்ணத்தைத் தோற்று விக்கும்? அதுதான் முக்கியம்.

--------------- ----- மயிலாடன் அவர்கள் 10-6-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

9 comments:

தமிழ் ஓவியா said...

(Otherwise) பிரசிடெண்டு வெங்கட்ராமய்யர் யோக்கியதை - நடத்தை - பாராட்டத் தகுந்ததா?
ஆர்.எஸ்.எஸ். காரர் குருமூர்த்தி அய்யரின் கோணல் பார்வை: ஒரு சாட்டையடி

- சர்ச்லைட்

இதுவரை வந்த குடிஅரசுத் தலைவர்களிலேயே ஒரே ஒரு பாரிஜாத மலர் பார்ப்பனப் பூணூல் திருமேனி ஆர். வெங்கட்டராமய்யர்தான் என்று பூணூல் திருமேனி குருமூர்த்திகள் சகஸ்ரநாமம் பாடுகிறார் இனமணி ஏட்டில்!

அந்த மகா மகா மேதையின் கடந்த கால நடவடிக்கை குடி அரசுத் தலைவர் பதவிக்கு இருந்த மரியாதையை ஒழிக்கும் வண்ணம் நடந்த நிகழ்ச்சிகள்.

(1) தனக்கு கோட்டூர்புரத்தில் அரண்மனை போன்ற இரண்டு வீடுகள் அடுத்தடுத்து இருந்தும், இலவசமாக அரசு பங்களா ஒன்றைத் தருகிறது என்ற வுடன் அந்த இரண்டையும் வாடகைக்கு விட்டுவிட்டு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவை வாசஸ்தலமாக ஆக்கிட்ட யோக்கியர் அவர்! இதற்கு அன்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் போட்ட நிலையில் டில்லியில் வீடு வாங்கிக் கொண்டு வாழ்ந்தவர் இவர்!

(2) தனது அரசு மனையான புதுடில்லி ராஷ்டிரபதி பவனில் மகள் மூலம் ஒரு டிரஸ்ட் அமைத்தது பற்றி இல்லஸ்டிரேடட் வீக்லி ஆஃப் இண்டியாவில் தனிக் கட்டுரைகள் எழுதப்பட்டு, அதிகார துஷ்பிரயோகம் என்று சுட்டிக் காட்டப்படவில்லையா?

(3) ஓய்வு பெற்ற பிறகு எந்த குடிஅரசுத் தலைவரும் கிளர்ச்சியில் ஈடுபட்டு, அப்பதவியின் மரியாதையைக் குறைத்ததே கிடையாது; கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரிகள் - ஜெயேந்திரர், விஜயேந்திரர் கைது செய்யப்பட்ட போது, புது டில்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று கூறி அமர்ந்தவர் அல்லவா இந்த உத்தம புருஷன்?

இப்படிப் பலப்பல, என்றாலும் பூணூல் பாசம் இவர் சிறந்தவர் என்று பிரச்சாரம் செய்யச் செய்கிறது.10-6-2012

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் சிலை வைப்பதாலேயே குழந்தைகள் நாத்திகர்கள் ஆகிவிட மாட்டார்கள் சிலை எதிர்ப்பு மனு தள்ளுபடி


தந்தை பெரியாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதியின் புகழாரம்

மதுரை, ஜூன் 10: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தின் ஒரு மூலையில் தந்தை பெரியார் சிலை அமைப்பதை எதிர்த்து பா.ஜ.கட்சியினர் தொடுத்த மனுவை மதுரை கிளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் கே.சந்துரு அவர்கள் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

2009 டிசம்பர் 11 அன்று தந்தை பெரியார் சிலை அமைக்க அனுமதித்து அரசு பிறப்பித்த ஆணையை எதிர்த்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, ஒரு மாபெரும் தலைவரின் சிலையை வைப்பதால் மட்டுமே பள்ளிக் குழந்தைகள் தாங்களாகவே நாத்திகர்களாக மாறிவிடுவார்கள் என்று மனுதாரர் எவ்வாறு கூறமுடியும் என்று தனது வியப்பைத் தெரிவித்தார்.

அதற்கு மாறாக, பெரியாரின் வாழ்க்கை மற்றும் அவரது சேவை பற்றி பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இதனால், தனித்தன்மை வாய்ந்த ஒரு தலைவரின் கோட்பாட்டை, தத்துவத்தை நன்கு புரிந்து கொள்வது, அரசமைப்பு சட்ட 51-ஹ பிரிவில் வலியுறுத் தப்பட்டுள்ள அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், கேள்வி கேட்டு ஆராயும் உணர்வு, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்க்கும் அடிப்படைக் கடமையை ஆற்ற மாணவர்களுக்கு பெரிதும் உதவும் என்று நீதியரசர் கூறினார்.

2008 செப்டம்பர் 4 அன்று பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்த பிறகுதான் சிலை அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். ஆனால் உள்ளூர் பா.ஜ.கட்சித் தலைவர்கள்தான் பெரியார் சிலை அமைப்பதை எதிர்த்தனர். ஆர்.எஸ்.எஸ். தோற்றுநர் ஹெட்கேவாரின் சிலையை அங்கே வைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

அதனால், மனுதாரர் இந்த மனுவை ஒரு அரசியல் கட்சியின் தூண்டுதலால்தான் தாக்கல் செய்துள்ளார் என்பதும், இந்தக் கட்சியினர் நேரடியாக வழக்காட முன் வராமல், சட்டப்படி செல்லத் தகாதது மட்டு மல்லாமல், இந்த நீதிமன்றத்தால் எப்போதுமே ஏற்றுக் கொள்ளப்பட இயலாத காரணங் களைக் கூற மனுதாரர் போன்றவர்களை நிர்ப்பந்தித்து உள்ளனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. பொதுமக்களுக்கோ, பள்ளி மாணவர்களுக்கோ எந்த இடையூறும் இன்றி, வெண்கலச் சிலை ஒன்றை நிறுவி, அதனை பராமரிக்க ஒரு தனியார் அமைப்புக்கு அனுமதி அளித்து இந்த அரசாணையை பிறப்பித்ததன் மூலம் அரசு எந்த தவறையும் சட்டத் திற்குப் புறம்பாகச் செய்து விடவில்லை.

உண்மையைக் கூறுவதானால், சமூக அடக்குமுறையை எதிர்த்து தனது வாழ்நாள் முழுவதிலும் போரிட்ட ஒரு மாபெரும் மனிதருக்கு அரசு பெரிய மரியாதை செய்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

பெரியாரின் போதனைகள் பற்றி மனுதாரர் தனது மனுவில் தெரிவித்தி ருப்பவையே, தமிழ் சமூகத்தைப் பல வழிகளிலும் மறுமலர்ச்சி பெறச் செய்வதில் ஒரு மாபெரும் தலைவர் ஆற்றிய பெரும் பங்கினை அறியாதவர் என்பதைக் காட்டிக் கொடுக்கின்றன என்று நீதியரசர் கே. சந்துரு கூறினார்.
10-6-2012

Unknown said...

சிலை வழிபாட்டை எதிர்த்த தந்தை பெரியார்க்கு ஏன் சிலை வைக்கிறீர்கள்

தமிழ் ஓவியா said...

திருச்சி மருத்துவமனை பெரியார் மணியம்மை குழந்தைகள் பிரிவு: முதல் அமைச்சரின் ஆணைக்கு நமது நன்றி!


திருச்சியில் உள்ள கி.அ.பெ.வி. அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 44 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வரும் பெரியார் ஈ.வெ.ரா. மணியம்மை குழந்தைகள் நலப் பிரிவு EVRM Medical Ward என்ற பெயரை மாற்றம் செய்து, வெறும் குழந்தைகள் நலப் பிரிவு என்றுதான் இனி அழைக்கப்படல் வேண்டும் என்ற ஆணை (கடந்த 4ஆம் தேதி ஜூன் 2012) வழங்கப்பட்டதைக் கண்டித்து எழுதி இருந்தோம். *(7.6.2012) முதல் அமைச்சர், அறிஞர் அண்ணா அவர்களிடம் இந்த குழந்தைகள் நலப் பிரிவுக்கு 1 லட்ச ரூபாய் பெரியார் அறக் கட்டளையிலிருந்து அய்யா அவர்களால் நன்கொடையாக அளிக்கப்பட்டு, பிறகு அண்ணா முதல் அமைச்சர் அவர்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்கள். மொத்தம் 9 அமைச்சர்கள் முன்னிலையில் அய்யா அம்மா பெயர்களை அறிவித்து மகிழ்ந்ததை நாம் எழுதியிருந்தோம்.

அத்துடன் இந்த மாதிரி தேவையற்ற, சர்ச்சையைக் கிளப்பும் இந்த ஆணை முதல் அமைச்சரின் தகவலுக்கே போகாமல் செய்யப்பட்டிருக்கக் கூடும் என்பதால் முதல் அமைச்சரின் கவனத்துக்கு என்று எழுதி இந்தஆணையை ரத்து செய்து (Restore Status quo Ante) என்பதை வேண்டுகோளாக வைத்திருந்தோம்.

மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களின் கவனத்திற்குச் சென்று உடனடியாக இதற்குப் பரிகாரம் தேடப்பட்டு, பழைய ஆணை ரத்து செய்யப்பட்டு, புது ஆணை பழைய பெயராலேயே கட்டாயம் அழைக்கப்படல் வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.

மாண்புமிகு முதல் அமைச்சருக்கு நமது நன்றியைத் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டமைக்குப் பாராட்டையும் தெரிவிக்கிறோம்.

இனி இதுபோன்ற ராஜாவை மிஞ்சும் இராஜ விசுவாசிகளையும் சரியான கண்டிப்புக்கு ஆட்படுத்துதலும் அவசியம் ஆகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம் 11-6-2012

தமிழ் ஓவியா said...

புதிய இராணுவத் தளபதியின் அறிவுரை


இந்திய இராணுவத்தின் புதிய தளபதியாக ஜெனரல் விக்ரம் சிங் பொறுப்பேற்றுக் கொண்டுள் ளார். இராணுவத் தலைமையகத்தில் அய்ந்து முக்கிய மான பதவிகளை வகித்த சிறப்புப் பெற்றவர் இவர்.

பதவியை ஏற்றுக் கொண்டு அவர் தெரிவித்த கருத்துக்கள் மிக முக்கியமானவை.

இராணுவத்தில் பணியாற்றும் அனைவரும் அரசியல் சார்பற்ற முறையிலும், மதச் சார்பற்ற முறையிலும் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவின் இராணுவத் தளபதி ஒருவர் இவ்வாறு அறிவுரை கூற வேண்டிய அவசியம் என்ன? என்பது சிந்திக்க வேண்டியதாகும்.
இந்திய இராணுவத்தில் ஆர்.எஸ்.எஸ். - சங்பரிவார்க் கும்பலின் ஊடுருவல் கணிசமாக உள்ளது என்பதற்குப் பல நிகழ்வுகளும் ஆதார ங்களும் இருக்கவே செய்கின்றன.

இராணுவத்தில் முக்கிய பிரிவுகளில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் நியமிக்கப்பட்டனர் என்று விமானப்படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத் போட்டு டைக்கவில்லையா?

ஓய்வு பெற்ற 96 இராணுவ அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் பி.ஜே.பி. ஆட்சியில் சேர்க்கப்பட்டனர் என்றால் அந்த நிலையைக் கூர்மையாகச் சிந்தித்தால் உண்மை என்ன என்ற நிலைமை புரியுமே!

பி.ஜே.பி.யின் தேசியச் செயற்குழுக் கூட்டத்திற்கு இராணுவத் தலைமை அதிகாரிகள் அழைக்கப்பட்ட நிலைமை கூட உண்டே!

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியார்? சிறீகாந்த் புரோகித் என்ற பார்ப்பனர் இராணுவ அதிகாரி அல்லவா?

மாலேகான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடி மருந்து வெளியில் கிடைக்க முடியாதவை - இராணுவத் துறையில் மட்டும் பயன்படுத்தப்படக் கூடியவை; அதனை மாலேகான் குண்டு வெடிப்பில் பயன்படுத்தியுள்ளனர் என்றால் இராணுவத்தில் இவர்கள் எந்தளவு ஊடுருவியிருக்கின்றனர் என்பது விளக்காமலேயே விளங்கும்.

இவர்கள் இராணுவப் பள்ளிகளையும் நடத்து கின்றனர். இங்கு பயிற்சி பெறுவோர் ஆயிரக் கணக்கில் இராணுவத்துக்கு எடுத்துக் கொள்ளப் படுகின்றனர். மாலேகான் குண்டு வெடிப்பில் முதல் குற்ற வாளியும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான சிறீகாந்த் புரோகித்தின்மீதுள்ள குற்றச்சாற்று என்ன?

இந்து ராஷ்டிரம் அமைக்கத் திட்டமிட்டு அரசியல் சட்டம், கொடி போன்றவற்றையும் எழுதியும், வடிவமைத்தும் வைத்திருந்தனர். இசுரேலுடன் தொடர்பு கொண்டு போட்டி அரசாங்கம் ஒன்றினை நடத்திடத் திட்டமிட்டிருந்தனர் என்பது அவர் மீதுள்ள முக்கிய குற்றச்சாற்றாகும். இந்தியாவிலிருந்து வெளியேறி இசுரேலிடம் சரண் அடைந்து போட்டி அரசினை நடத்திடத் திட்டமிட்டிருந்தனர் என்ற குற்றச்சாற்று என்ன சாதாரணமா?

இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து உரிய முறையில் ஆய்வு செய்தால், புதிய இராணுவத் தளபதி ஜெனரல் விக்ரம்சிங் தெரிவித்த அறிக் கைக்கு ஆழமான பின்னணி உண்டு என்பதை எளிதிற் புரிந்து கொள்ளலாமே!

சங்பரிவார்க் கும்பல் இராணுவத்தில் ஊடுருவல் என்பது நாட்டைக் காட்டிக் கொடுப்பது மட்டுமல்ல; இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கும் பேராபத்தாகும்.

இந்து ராஷ்டிரத்தை அமைத்தே தீருவோம் என்ற கொள்கையுடைய சங்பரிவார்க் கும்பல் இராணுவத் தில் ஊடுருவி இருந்தால், அது இராணுவத்தில் மதச் சிக்கலை உண்டாக்குவதோடு அல்லாமல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பற்ற தன்மைக்கும் ஆபத்தாக முடியக் கூடிய நிலை தான் ஏற்படும்.

எனவே புதிய தளபதியின் அறிவுரை மிக மிக முக்கியமானது. பி.ஜே.பி. ஆட்சி காலத்தில் இராணு வத்தில் புகுத்தப்பட்டவர்கள்பற்றி ஆய்வு செய்து அவர்களை வெளியேற்றுவது அவசர அவசியமான கடமையாகும்.

வரலாற்றில் காட்டிக் கொடுப்பது என்பது பார்ப் பனர்களுக்குக் கை வந்த கலையாகும். உஷார்! உஷார்!! 11-6-2012

தமிழ் ஓவியா said...

வாழ்க்கை வதைபடுவதற்கா? - மருத்துவர் -சரோ இளங்கோவன்

தந்தை பெரியார் அரும்பாடு பட்டு பெண்ணுரிமையையும் கல்வி உரிமையையும் வாங்கித் தந்தார். இதனால் பயனடைந்த பலர் கல்வி பெற்று, பொருளாதாரத்தில் முன்னேறி வாழ்கின்றனர்.அதனுடன் கூடிய பொறுப்பும், நன்றியும் போற்றி மகிழ்வுடன் வாழ வேண்டிய காலத்தில் பலர் உள்ளனர்.

ஆனால் இதில் சிலர் நல்ல வேலை, கை நிறைய பணம் இருந்தும் வாழ்வில் மகிழ்வில்லாமல் குழப்பத் திலும் கோளாறிலும் சீர் குலைந் திடுவது மிக்க வருத்தமளிக்கின்றது. அதிலும் அமெரிக்கா வந்து வாடும் இணையத்தில் வேலை செய்யும் பல இளையவர்கள் வாழ்வில் இணை யாமல் பிரிவது மிகுந்து வருகின்றது

கருத்து வேறு பாடுகள், மற்ற குடும்பத்தினரின் அர்த்தமற்ற தலை யீடும் எதிர்பார்ப்பும் பல நேரங்களில் காரணங்களாகி விடுகின்றன. குழந் தைகளின் இன்பத்தை அனுபவிக்கத் தெரியாமல் அவர்களையும் வாட்டி வதைக்கும் செயல்கள் நடந்து விடுகின்றன.

அண்மையில் ஒரு இளம் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்தார். மருத்துவ மனையில் சேர்க்கப்பட் டார். கணவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இளங் குழந்தையை அரசு கண்காணிப்பில் பாதுகாப்பாய் வைத்துக் கொண்டது. இனி மருத்துவம், வழக்கறிஞர், நீதி மன்றம், மன மருத்துவம் என்று சட்டம் ஆட்டிப் படைத்து விடும்.

கல்லூரியில் கணினி மட்டும் படிக்காது சில வாழ்க்கைச் சிக்கல் களையும் எதிர் கொள்ளும் பக்குவம் பெற வேண்டும். விட்டுக் கொடுக்கும், சிந்தித்துச் செயல் படும் திறன் பெற வேண்டும்.பெரும்பாலான இளைஞர் கள் இப்போதெல்லாம் குழந்தை வளர்ப்பில் நன்கு திறமையுடன் உள்ளனர்; சேர்ந்து உழைத்து மகிழ் வுடன் வாழ்கின்றனர். ஆனால் தொல் லையில் உள்ளவர்கள் யாருடனும் பேசாமல், பழகாமல் ஒதுங்கிக் கடைசியில் பெரும் விலை கொடுத்து வாழ்க்கையையே கெடுத்துக் கொள் கின்றனர். ஆங்காங்கே பல உதவும் அமைப் புகள் உள்ளன.

மனநல வல்லுநர்கள் பலர் உள் ளனர். ஆரம்பத்திலேயே போனால் எளிதில் தீர்த்துச் சரி செய்து விடலாம்.

ஆனால் அதில் பயன் பெறுவோர் மிகவும் குறைவு. வரட்டுத் திமிரும் நீ தான் போக வேண்டும் , நான் எதற்குப் போக வேண்டும் என்ற பிடிவாதமும் வாழ்க்கையை குலைக்கலாமா? வாழ்க்கை வாழ்வதற்கா? இல்லை வதைபடுவதற்கா?
11-6-2012

தமிழ் ஓவியா said...

திருவிழாக்களிலும் கூட ஜாதிப் பாகுபாடு

உசிலம்பட்டி, ஜூன் 11- கிராமங்களில் திருவிழாக்களிலும் கூட ஜாதி பாகுபாடு தலை விரித்தாடுகிறது. உசிலம்பட்டி அருகே உள்ள தும்மகுண்டு கிராமத்தின் உள்ளூர் கோவில் திருவிழாவின்போது, கிராமத்தின் குளத்தில் தங்கள் முளைப் பாரியைக் கரைக்க தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் உயர் ஜாதியினரால் தடுக்கப் பட்டதால், இக்கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது.

இதனால் ஏற்பட்ட ஜாதிக் கலவரத் தை உசிலம்பட்டி கோட்ட ஆய்வாளர் தலை யிட்டு சமாதானம் செய்து வைத்தார். இதைப் பற்றி விசாரிக்க தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தினரும் கம்யூனிஸ்டு கட்சியினரும் இந்தக் கிராமத்துக்குச் சென்றபோது உயர் ஜாதியினர் ஊருக்குள் அவர்களை வரவிடாமல் தடுத்து நிறுத் தினர். இது பற்றி சிந்துப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட் டுள்ளது. இதனையடுத்து காவல் துறை யினர் அக்கிராமத்துக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த பெண்களை எழுப்பி அவர்களின் கணவர்களைப் பற்றி விசாரித்தனராம். இதனால் எரிச்ச லடைந்த கிராமத்தினர் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனராம். திருமங் கலம் உதவி காவல்துறை கண்காணிப் பாளரும், வட்டாட்சியரும் பேச்சு வார்த்தை நடத்தி கிராமத்தினரை அமைதிப்படுத்தினராம். 11-6-2012

தமிழ் ஓவியா said...

மன்னார்குடி அடுத் துள்ள மேலவாசல் குமரபுரத்தில் இந்திரா காந்தி கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சதாசிவம் கதிர் காமவள்ளி கல்வி நிறுவனத்திற்கு உள்பட்ட அருணாமலை கல்வியியல் கல்லூரியில் பெரியார் சிந்தனை மய்யம் துவக்க விழா நடைபெற்றது. 27.4.2012 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்ற துவக்க விழாவிற்கு கல்வி நிறுவனங் களின் தலைவர் க.சதாசிவம் தலைமை வகித்தார். அருணாமலை கல்வியியல் கல்லூரி நிருவாக இயக்குநர் தரங்கை ச.பன்னீர்செல்வம், அருணா மழை ஆசிரியர், பயிற்சி நிருவாக இயக்குநர் சி.செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிரடி அன்பழகன்

இதில் சிறப்பு அழைப்பாளராக தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பெரியார் சிந்தனை மய்ய துணை இயக்குநர் முனைவர் அதிரடி க.அன்பழகன் கலந்து கொண்டு பெரியார் பிறவாமல் இருந்திருந்தால் என்ற தலைப்பில் பெரியார் சிந்தனை மய்யத்தை துவக்கி வைத்து பேசும்போது, மருத்துவர், பொறியாளர் படிப்பும் பணியை விட ஆசிரியர் படிப்பும், பணியும் உயர்ந்த நிலையை அடைய கூடியவர்களை உருவாக்கும் வகையில் உள்ளது. ஆசிரியர் பயிற்சியுடன் உளவியல் கல்வியையும் கற்று எதிர்கால சந்ததி யினருக்கு கற்பிக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர் களுக்குள்ளது. அதற்கு காரணம் சமுதாய மாற்றம் செய்யும் சக்தி ஆசிரியர் பணியால் மட்டுமே முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எதையும் ஏன், எதற்கு, எப்படி என்ற சிந்தனை தோன்றினாலே தஞ்சை பெரியகோவிலைக் கட்டிய ராஜராஜசோழனுக்கு ஆண்டுதோறும் சதய விழா எடுக்கும் தமிழக அரசு கல்லணையை கட்டிய கரிகாற் சோழனுக்கு விழா எடுக்காமல் இருப்பது எதனால் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.

இங்கு விழா துவங்கும் போது மாணவிகள் தமிழ்தாய் வாழ்த்து பாடினர். இந்த பாடலில் இரண்டு வரிகள் நீக்கப்பட்டு தற்போது பாடி வருகிறோம் என்ற செய்தி எத்தனை பேருக்கு தெரியும். இதுபற்றி சிந்தனை தோன்றினால் விளக்கம் கிடைக்கும்.

பெண்களின் நிலை

நான்கு வகை வர்ணங்களுக்கு அடுத்த நிலையில் தான் பெண்கள் வைக்கப்பட்டுள்ளனர். திருவி தாங்கூர் தேவஸ்தானத்தில் பெண்கள் ரவிக்கை அணிந்தார்கள் என்ற காரணத்தினால் மார்பகங் களை வெட்டிய நிகழ்ச்சியும், ரவிக்கைக்கு வரிபோடும் முறையும், கோவில்களில் பொட்டு கட்டுதல் என்ற தேவதாசிமுறையும் இருந்தது பல நூற்றாண்டுக்கு முன் அல்ல. நாம் வாழும் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் தான் இந்த கொடுமைகள் பெண்களுக்கு எதிராக இருந்து வந்தன. நீதிக்கட்சி ஆட்சியில் தான் பெரியார் கருத்துகளை டாக்டர் முத்துலட்சுமிரெட்டி சட்டமன்றத்தில் எதிரொலித்து பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி பெரியாரின் போராட்டம் வெற்றி பெற்று பொதுமகள், விலை மகள் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த தேவதாசி முறையைச் சட்டம் போட்டு தடைவிதித்தது அரசு. இதற்கு காரணம் பெரியார் சிந்தனைதான்.
கற்புகரசிக்கு அடையாளம் கண்ணகி என கூறி சென்னையில் அரசு சார்பில் கண்ணகிக்கு சிலை வைத்த போது, அதனை கடுமையாக எதிர்த்தவர் பெரியார். நாட்டில் சரிபாதி பெண்கள் எண் ணிக்கை இருக்கும் போது ஒரே ஒருவர் மட்டும் தான் கற்புகரசியா என வெளிநாட்டுக்காரன் கேட்டால் என்ன பதில் சொல்வது என பகுத்தறிவு கொண்டு கேள்வி எழுப்பியதுடன் சிலையை பெண்கள் உடைத்து எறிய வேண்டும் என்ற எழுச்சி சிந்தனையை உருவாக்கி முழக்கமிட்டவர் பெரி யார். பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சொத் தில் சரிபங்கு வழங்க வேண்டும் என்பதுடன் ஆணுக்குள்ள உரிமை அத்தனையும் பெண் ணுக்கு உண்டு என்றவர் பெண்கள் தன்னம்பிக்கை யுடன், சுயமரியாதையு டன் வாழ திருமணத் திற்கு கற்பனையை அகற்ற விட வேண்டும் புரட்சிகருத்து களை வித் திட்டவர் பெரியார்.

1929ஆம் ஆண்டிலேயே....

1929ஆம் ஆண்டி லேயே துவக்கப்பள்ளி களில் பெண் களை மட்டுமே ஆசிரியர் களாக நியமிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நீதிக்கட்சி மாநாட்டில் கொண்டு வந்து நிறைவேற் றியவர் பெரியார். பெண் களுக்கு ராணுவப் பயிற்சி அளிப்பதுடன், விளை யாட்டு, கனரக வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் பெரியார். இதனால்தான் இன்று அரசியல், கல்வி, விளை யாட்டு, வேலை வாய்ப்புகளில் பெண்கள் சாதனையாளர் களாக விளங்க காரணம் பெரியார் சிந்தனை புரட்சிதான்.

மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டு பாட்டிகள் சாமியாடிய காலம் மாறி பெரியாரின் பகுத்தறிவு புரட்சி மூலம் பேத்திகள் கணினி உலகத்தில் கோலோச்சி வருகின்றனர். மாணவிகள் அறிவியல் கருத்து என்பது வேறு, அறிவியல் மனப்பான்மை வேறு என்பதை உணர வேண்டும். எதையும் பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டும், அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சுயமரியாதை உணர்வுடன் முன்னேற்றப் பாதையில் புதிய உலகம் படைக்க பெரியார் சிந்தனைகளை துணை கொண்டு வெற்றி பெற வேண்டும் என்றார் அதிரடி அன்பழகன்.11-6-2012

தமிழ் ஓவியா said...

மதுரை ஆதீனத்தில் ரஞ்சிதா, வைஷ்ணவி அறுவறுக்கத்தக்க நடனம்-கோர்ட்டில் வழக்கு


மதுரை: மதுரை ஆதீன மடத்தில் நடிகை ரஞ்சிதா, வைஷ்ணவி மற்றும் நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் அறுவறுக்கத்தக்க வகையில் ஆபாசன நடனம் ஆடியதாக கூறி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சோலை கண்ணன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனு:
நான் மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டுள்ளதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறேன். கடந்த மாதம் 12-ந்தேதி மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் என்னை மடத்திற்கு அழைத்தார். அங்கு அருணகிரிநாதருடன் நித்தியானந்தாவும் இருந்தார்.
அப்போது அருணகிரி நாதர் என்னிடம் மதுரை ஆதீன மடத்திற்கென்று தனி புகழ் உள்ளது. பிரச்சினைகள் செய்ய வேண்டாம். நித்தியானந்தா மிகவும் ஒழுக்கமானவர். புனிதமானவர் என்று கூறினார்.
அப்போது அவரிடம், நான் மடத்திற்கு எதிரானவன் அல்ல. ஆதீன மரபுபடி நித்தியானந்தா மொட்டையடித்து உங்களுக்கு கீழ் பணி செய்தால் அதை நான் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன் என்று கூறினேன். பின்னர் ஆதீன மடத்தின் மாடியில் நடைபெறும் பஜனையில் கலந்து கொள்ள என்னை அழைத்தனர்.
பின்னர் இரவு 7 மணிக்கு பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இதில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா, வைஷ்ணவி மற்றும் சீடர்கள் கலந்து கொண்டனர்.
அந்த சமயத்தில் என்னிடம் அங்கிருந்த சீடர்கள் புனித நீர் என்று கூறி ஒரு டம்ளரில் தண்ணீர் கொடுத்தனர். அதை குடித்த எனக்கு சிறிது நேரத்தில் மயக்கம் வந்ததுபோல உணர்வு ஏற்பட்டது. அந்த தண்ணீரை குடித்த சீடர்கள் உள்பட அனைவரும் மயக்க நிலையில் இருந்தனர்.
அந்த நேரத்தில் புலித்தோல் விரிக்கப்பட்டது. அதில் யானை தந்தம், மான் கொம்புகள் பரப்பப்பட்டது. அப்போது நித்தியானந்தாவின் பாடல்கள் ஒலிபரப்பானது. நடிகை ரஞ்சிதா மயக்க நிலையில் நித்தியானந்தா அருகிலேயே நடனமாடி கொண்டிருந்தார். வைஷ்ணவியும், பெண் சீடர்களும் அருவறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டனர்.
மதுரை ஆதீன மடத்தை களங்கப்படுத்தும் முயற்சி நடக்கிறது. ஆபாச நடனங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என நான் விளக்குத்தூண் போலீசில் கடந்த மாதம் 15-ந்தேதி புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி செல்வம், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக போலீஸ் டி.ஜி.பி., மதுரை போலீஸ் கமிஷனர், விளக்குத்தூண் இன்ஸ்பெக்டர், நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா, வைஷ்ணவி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு ஜூன் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-----------------http://tamil.oneindia.in/news/2012/06/11/tamilnadu-obscene-dance-madurai-aadheenam-155487.html