Search This Blog

24.6.12

செத்தமொழியைச் சிங்காரிக்க பார்ப்பனர்கள் படும் பாடு!

இனப்பற்று

சென்னை மயிலாப்பூரில் சமஸ்கிருத கல்லூரி ஒன்று இருக்கிறது. அத னோடு இணைந்து செயல்படுவது குப்புசாமி சாஸ்திரி சமஸ்கிருத மய்யம் ; அரசிடம் இருந்து நிதி உதவி பெற்று வந்த இந்த மய்யம் 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நிதி கிடைக்காமையால் தள்ளாடியது.

மின்னஞ்சல் வழியாக இந்த நிலையை அறிந்து கொண்ட ரவி என்ற பார்ப் பனர் பதைபதைத்துப் போனார்! தான் ஆடாவிட் டாலும் சதை ஆடாதா என்ன!

ரவி தன் பார்ப்பன நண்பர்களோடு இணைந்து இந்த மய்யத்தைத் தூக்கி நிறுத்தும் வேலையில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். (சிருங்கேரி மடம் நடத்தும் சமஸ்கிருத வகுப்புகளுக்குச் சென்று சமஸ்கிருதம் கற்று வரு கிறாராம்)
என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டாராம் - இந்த ரவி? பெரிய பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் பார்ப்பனர்களோடு ஒருங்கிணைப்பாளராக யிருந்து தொடர்பு கொண்டு, நிதியின் வாய்க்காலைத் திறக்கச் செய்து மய்யத்தை அழிவிலிருந்து காப்பாற்றி விட்டார். இன்னொரு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மய்யத்தில் வெளியிடப்படும் ஆராய்ச்சி நூல்களை வாழ்நாள் உறுப்பினராக இரண்டாயிரம் ரூபாய் செலுத்தி, பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் அந்தப் புதிய திட்டம்.


மய்யத்திற்கு நிதியும் ஆயிற்று; மய்யத்தில் நூல்கள் விற்பனையும் ஆயிற்று. ஒரே கல்லால் இரண்டு காய்களை அடிக்கும் இந்த சாமர்த்தியம் நம் மக்களுக்கு எங்கிருந்து வரப்போகிறது?

மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டதில் நூறு வாழ்நாள் உறுப்பினர்கள் கிடைத்துள்ளனராம்.

இன்னொன்றுதான் முக்கியம். சென்னை அய். அய்.டி.யில் உள்ளோர் (முழுக்க அக்கிரகாரம் தானே!) மத்திய அரசின் சில துறைகளிலிருந்து நிதியைத் திரட்டுவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டுள்ளனராம். (அவர்களால் முடியக் கூடிய காரியம்தானே!)

செத்தமொழி என்றாலும் அதனைச் சிங்காரிக்க பார்ப்பனர்கள் என்ன பாடு படுகிறார்கள் பார்த்தீர்களா?

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது நீடாமங்கலத்திலிருந்து ஒரு பார்ப்பனர் மின்னஞ்சல் மூலம் பார்ப்பனர் வட்டாரத்துக்குத் தகவல் அனுப் பினாரே நினைவிருக்கிறதா? தவறாமல் தாய் மொழி சமஸ்கிருதம் என்று சொல்லுங்கள் என்று அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டு இருந்ததே! தமிழர்களே இந்த இனப்பற்று உங்களுக்கு எப்பொழுது வரப் போகிறது?

----------------- மயிலாடன் அவர்கள் 24-6-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

தமிழ் ஓவியா said...

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதை

இலங்கையில் மசூதிகளும், சர்ச்சுகளும் இடிப்பு ராஜபக்சே அரசின் அட்டூழியம்

சென்னை, ஜூன்.24 இலங்கையில் தமிழர் களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளன. தமிழர்கள் என்ற நிலையில் அவர்கள் கிறித்துவர் களாக இருந்தாலும், முகமதியர்களாக இருந்தாலும் அவர்களை அழிக்க திட்டமிட்டு ராஜபக்சே அரசு செயல்பட்டு வருகிறது. தமிழர்களுக்கு வெளி நாட்டினரின் உதவியோடு கட்டிக் கொடுக்கப்படும் வீடுகளில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர். கோயில்கள் மட்டுமின்றி சர்ச்சுகளும், மசூதிகளும் இடிக்கப்பட்டு, தமிழனின் அடையாளம் முழுவது மாக அழிக்கப்படுகிறது என்று சென்னை மயிலை பேராயர் ஏ.எம். சின்னப்பா தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, அனைத்து மத, அனைத்துப் பிரிவு தமிழ் மக்கள் மன்றம் என்ற புதிய அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள் ளது. இதுகுறித்து, சென்னை மயிலைப் பேராயர் ஏ.எம். சின்னப்பா சென்னையில் நேற்று செய்தியாளர் களிடம் கூறிய தாவது: இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கண்டிக்க பல சமயத் தலைவர்கள் அடங்கிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இலங்கையில் போருக்கு பின்னால், தமிழர்களின் பகுதிகளை மறு கட்டமைப்பு செய்வதாகக் கூறிய ராஜபக்சேவின் வாக்குறுதிகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. தேசப் பாதுகாப்பு என்ற பெயரில், தமிழர் பகுதிகளில் அதிகளவு ராணுவ மயமாக்கல் திணிக்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, வெளிநாட்டினர் அளிக்கும் உதவியோடு கட்டப்படும் வீடுகள் சிங்களர்களுக்கே கையில் கொடுக்கப்படுகிறது. கோவில்கள், கிறித்துவ தேவாலயங்கள் மசூதிகள் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. கடந்த 8 ஆண்டு களில் 2 ஆயிரத்திற்கும் மேலான இந்துக் கோவில் களும், 300 க்கும் அதிகமான கிறிஸ்தவ தேவாலயங் களும், மசூதிகளும் இடிக்கப்பட் டுள்ளன. தேவாலயங்கள் தகர்ப்பதோடு கத்தோலிக்க பாதிரி யார்களை கொலை செய்தும் கடத்தியும் சென்று விடுகின்றனர். இலங்கை அரசின் அடக்குமுறைகளை உரிமை மீறல்களை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டி ருக்கின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு வலிமை சேர்க்க வேண்டிய கடமை தமிழகத்தில் வாழும் தமிழர்களாகிய நமக்கு இருக்கிறது. தமிழர்கள் அங்குவாழ இனி வாய்ப்பே இல்லை.

எனவே, அய்க்கிய நாடுகள் சபையும், மத சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட ஆணையமும், உடனடியாகத் தலையிட்டு, தமிழ் மக்களின் இனப்படுகொலை குறித்தும், திட்ட மிட்ட அழித்தொழிப்பு குறித்தும் ஒரு விசாரணையை மேற் கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கையில் இந்த அமைப்பு தொடர்ந்து ஈடுபடும். இவ்வாறு அவர் கூறினார். சென்னை மயிலைப் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் இயங்கும் இந்த அமைப்பில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஹைதர்அலி, இந்திய தவ்ஹித் ஜமாத் தேசியத் தலைவர் எஸ்.எம்.பக்கர், இந்திய கிறிஸ்துவ மக்கள் கட்சித் தலைவர் எப்.ஏ.நாதன், தேசிய லீக் தலைவர் பஷீர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில், தமிழக இந்து துறவியர் பேரவை அமைப்பாளர் சுவாமி சதா சிவனந்தா உள்பட 11 இயக்கங்கள் இணைந்து உள்ளன 24-6-2012

தமிழ் ஓவியா said...

நாட்டு நடப்பு

குடியரசுத் தலைவர் தேர்தல் எனும் குறியீடு...


குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அறிவிக்கப் பட்டது. பல கட்சிகளின் சாயம் வெளுத்துப் போய்விட்டது. ஆமை முயல் கதை என்பார்களே அதுதான் இந்த விடயத்திலும் நடந்திருக்கிறது.

அவசர அவசரமாக ஒரிசாவின் பட்நாயக்கும் தமிழ்நாட்டின் முதல மைச்சரும் ஒரு வேட்பாளரை முன்னிறுத்தினார்கள்.

விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களில் கருத்தைக் கேட்கா மலேயே மேற்கு வங்க முதல் அமைச் சர் மம்தா பானர்ஜி அவர் பெயரை முன்மொழிந்தார். (அவர் இசைந் திருந்தால் ஒருக்கால் இப்பொழு துள்ள அரசியல் மேகங்கள் வேறு திசைகளில் கொஞ்சம் பயணித் திருக்கக் கூடும்).

அப்துல் கலாம் பெருமை மிக்க ஒரு மணி மகுடம்! அரசியல் வாதி களின் வெட்டுப் புலி ஆட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் மக்கள் மனதில் குடியேறி விட்டார்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி யிடம் தலைவர் பதவி உங்களுக்கு; துணைக் குடியரசுத் தலைவர் பதவி எங்களுக்கு என்று பேரம் பேசிய பி.ஜே.பி.யின் தாஜா பலிக்கவில்லை.

என்ன செய்வது என்று முடியைப் பிய்த்துக் கொண்டதில் பி.ஜே.பி. அணிக்குத்தான் முதலிடம்.

சரியான தேர்வை செய்ய முடியாத தாலும் 2014 இல் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் குஜராத் முதல் அமைச்சர் தாமோதரதாஸ் நரேந்திர மோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்ற பிம்பம் தூக்கிப் பிடிக்கப் பட்டதாலும் அது வரை காத்திராமல் தம் அதிருப்தியை வெளிப்படுத்த வெளிச்சமான சந் தர்ப்பம் இதுதான் என்று கருதிய பிகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார், தங்கள் வாக்கு பிரணாப் முகர்ஜிக்கே என்று வாக்கு சுத்தமாகச் சொல்லி முடித்துவிட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் அடுத்த பிரதமராக வரக்கூடியவர் மதச் சார்பின்மைக் கொள்கைக்குச் சொந்தக்காரராக இருக்க வேண்டும் என்று கறாராகவே பட்டுத் தெரித்தது போல மனிதன் போட்டு உடைத்து விட்டார்!

குடியரசுத் தலைவர் தேர்தல் நம் கைவிட்டுப் போனாலும் பரவா யில்லை; 2014 மக்களவைத் தேர்தல் என்னும் தேரின் அச்சு இப்பொழுதே முறிந்து விட்டதே என்ற கவலையில் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது பி.ஜே.பி. போதும் போதாதற்கு, சிவ சேனையும் கழன்று கொண்டு விட்டது.

இன்னொரு பக்கத்தில் உச்சநீதி மன்றத்தில் மோடிக்குத் தொடர்ந்து மொத்துகள் விழுந்து கொண்டு இருக்கின்றன. அவர் மீது வழக்கு தொடுக்கப்படுவதற்கான சகல அம்சங்களும் அம்சமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தால் நியமனம் செய் யப்பட்ட வழக்கறிஞர் (அமிகஸ் குரியா) ராமச்சந்திரனின் அறிக்கை கூறிவிட்டது.

அனேகமாக 2014 மக்களவைத் தேர்தலின் போது மோடி உள்ளே இருப்பாரா? வெளியே இருப்பாரா? நீதிமன்றத்தின் கைகளில் இருக் கிறது இதற்கான பதில்.

(சாதாரண குற்றங்களல்ல; குற்றப் பிரிவுகள் 53 A(1)(a), 6 (b), 153-B, (1) (c), 166 மற்றும் 505 (3) பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.)

இது மட்டுமல்ல. கட்சிக்குள்ளும் கடும் எதிர்ப்பு. கட்சியின் தலைவர் நிதின் கட்காரியும் அவருக்கு எதிர் அணிதான். அத்வானி, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் என்ற ஒரு நீண்ட பட்டியலே பிரதமர் பதவிக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலைகிறது.

ஆர்.எஸ்.எஸ்.சின் ஆதரவு - நீரோ மன்னன் மோடிக்கு இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

பரிதாபம் சோ ராமசாமியோ உடல் நலம் கடுமையாக பாதிக்கப் பட்டு இருந்தாலும், படாதபாடுபட்டுக் கொண்டு இருக்கிறார் - எப்படியும் மோடியைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக.

சண்டை போட்டுக் கொள்ளா தீர்கள். ஒழுங்காக மோடியை முன்னி றுத்துங்கள் என்று ஒவ்வொரு துக்ளக் இதழிலும் கெஞ்சிக் கூத் தாடுகிறார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் மக்களவைத் தேர்தலில் செல்வி ஜெயலலிதாவின் தயவு தங்கள் பக்கம் இருக்கும் என்ற கணக்கு ஒரு புறம்.

எது எப்படி இருந்தாலும் குடிய ரசுத் தலைவர் தேர்தலில் பி.ஜே.பி. அணிக்கு கிடைக்க இருக்கும் மரண அடி போன்ற தோல்வி அந்த அணியை மேலும் கலகலக்க வைத்து விடும் என்பதில் அய்யமில்லை.

அடுத்த இரண்டாண்டுகளில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு - மக்களின் பொருளாதாரச் சுமைகளை இறக்கும் வகையில் நடைபோடுமா என்பது கேள்வி! 24-6-2012