Search This Blog

7.6.12

பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் - 5


அசுரர்களை அழிக்கவே அவதாரங்கள்


தந்தை பெரியார் அவர்கள் கடவுள் அவதாரக் கதைகள்பற்றிக் கூறுகையில்,

அவதாரக் கதையில் சொல்லப்படும் அவதாரங்களில் மீன் (மச்ச) அவதாரத்தைப் பார்ப்போம். ஒரு அரசன் வேதத்தைத் திருடிக் கொண்டு போய்க் கடலில் ஒளித்து வைத்துவிட்டானாம். அதை மீட்பதற்காகக் கடவுள் மச்ச அவதாரம் எடுத்துப் போய் மீட்டு வந்தார் என்பது கதை. இதை எங்காவது நம்ப முடியுமா? முதலில் வேதத்தை எவனும் திருட முடியாது. காரணம் அது ஒலி வடிவில் உள்ளது ஆகும். அப்படியே போனலும் இன்னொரு தடவை வேதத்தை ஓதி எழுதிக் கொண்டிருக்கலாமே!

என்ன நடந்திருக்கும் என்றால், அந்த அரசன், எவனும் தன் நாட்டில் வேதம் ஓதக் கூடாது என்று கூறியிருப்பான். அதனால் பார்ப்பனர்கள் அவனை ஒழித்து விட்டார்கள்.

புத்தர் காலத்தில் வேதத்திற்கும், சாஸ்திரத்திற்கும், பார்ப்பானுக்கும் மரியாதை இல்லாமல் போய்விட்டது.

இவர்கள் மீண்டும் எப்படித் திரும்பினார்கள் என்பதுதான் படிப்படியாகப் பத்து அவதாரக் கதைகளாக வந்துள்ளன. பத்து அவதாரக் கடவுள்களும் ராட்சதர்களைக் கொன்று குவித்தவைதான்!

அதுமட்டுமா?

சமுதாய சம்பந்தமான, மதச் சம்பந்தமான ஆதாரங்களை, புராணங்களை எடுத்துப் பார்த்தால், தசாவதாரம் என்கிறவைகளில் உள்ள அவதாரங்கள் என்பவைகள் யாவும் சமுதாய சம்பந்தமான திருத்தப்பாட்டிற்குத் தொண்டு செய்தவனைக் கொலை செய்ததை விளக்குவதற்காகவே எழுதப்பட்ட கதைகள் ஆகும் என்கிறார்.


இதற்கு பாகவதம் துவக்கமே சரியான ஆதாரம் ஆகும்!

ஸ்ரீவேத வியாசர் அருளிச் செய்த ஸ்ரீமஹா பாகவதம் (சித்திரப் படங்களுடன்) திருவனந்தபுரம் பாகவத சிரேஷ்டரான வேணுகோபாலாசார்யர் அவர்களால் ஸம்ஸ்க்ருத காவ்யத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. வெளியிட்டவர் பி. இரத்தின நாயகர் ஸன்ஸ் திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1955.

முதலாவது அத்தியாயம் இப்படித் துவங்குகிறது.

(பூமி தேவி பசுரூபியாய் பிரம்மாவைச் சரணடைந்து, அவர் திருப்பாற்கடலிற்கு தேவர்களுடன் சென்று பகவானை சரணமடைதலும், அப்போது அஸரீரி வாக்குண்டானதைப் பற்றியும் சொல்லப்படுகின்றன).

ஸ்ரீ கோவிந்தனது பாதங்களில் மனதை நிறுத்திய செல்வனே கேட்பாயாக! பொறுமையிற் சிறந்த பூமிதேவியானவள், மஹா கர்வத்தையடைந்து அரசர்களென்று பெயர் பெற்ற கொடிய அசுரர்களினது அநேககோடி சேனா சமுத்திரங்களின் செய்கைகளினால் உண்டாகின்ற பாபமாகிற பாரத்தினால் வருந்தப் பட்டவளாகி, கோ ரூபத்தைத் தரித்து, மிகுந்த துக்கத்தை யடைந்து, சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமாவைச் சரணமடைந்து, கண்களில் ஜலத்தைப் பெருக்கி தனது வியாகூலத்தை முறையிட்டனள். அம்முறையைக் கேட்ட பிரமதேவர் உருத்திர பகவான் முதலியவெல்லா தேவர்களுடன் அந்நிலமகளை யழைத்துக்கொண்டு க்ஷீராப்தி தீரத்தைச் சேர்ந்து, அவ்விடத்தில் சர்வ நியந்தாவாயும், பரிபூரணராயும், ஜகந்நாதராயு மிருக்கின்ற ஸ்ரீ வாசுதேவரை புருஷசூக்த மந்திரங்களால் ஒரே மனதாக யாவரோடுந் துதி செய்தார்கள். அப்பொழுது அவ்விடத்தில் உண்டான அசரீரி வாசகத்தைப் பிரமா கேட்டு, தேவர்களைப் பார்த்து, நீங்கள் யாவரும் ஸ்ரீ பகவ தாக்கினையின்படி விரைந்து செய்யக்கடவீர்கள். அஃதென்னவெனில், முன்னமே ஸ்ரீ பகவான் பூமிதேவியினது விசனங்களை யறிந்து, தமது வியாபகத்வமாகிற காலரூப திவ்விய சக்தியைக் கொண்டு, பூமிபார நிவர்த்தியின் பொருட்டு, இப் பிரபஞ்சத்தில் வசுதேவர் கிருகத்தில் அவதாரஞ் செய்யச் சங்கற்பித்திருக்கின்றார். ஆகையினால் நீங்கள் யதுவம்சத்தில் ஜனிக்கக் கடவீர்கள். ஸ்ரீ வாசு தேவாம்சத்தி லுண்டான அனந்தர் அந்த ஸ்ரீமந் நாராயணனுக்கு முன்னே அவதரிக்கப் போகின்றார். சர்வ ஜகத்தையு மோகிக்கச் செய்கிற பகவன் மாயையானது ஸ்ரீ ஹரியின் திவ்வியாக்கினையால் காரியார்த்தமாக ஸ்ரீ யசோதா பிராட்டியினிடத்தில் அவதரிக்கப் போகின்றது என்று கட்டளையிட்டு, பின்பு அந்தப் பூதேவியை நோக்கி,

பசுமையான துழாய் மாலையை அழகுபெறத் தரித்த முதற் கடவுள் உன்னை வந்து காப்பாற்றுவான். நீ வருந்துதல் வேண்டாம் என்றுரைத்து, கடலை உடையாய்த் தரித்த நிலமகளை விட்டு, இதழ்களால் நிரம்பப் பெற்ற தாமரை மலரி லுதித்த பிரமதேவன் தனது பெருமையில் சிறந்த சத்திய லோகத்தை யடைந்தான்.

இதன்படி அசுரர்களான (திராவிடர்களை) அழிக்கவே கடவுள் அவதாரங்கள் உருவாக்கப்பட்டன என்ற தந்தை பெரியார் கருத்து நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது அல்லவா?

----------------(தொடரும்)- கி.வீரமணி அவர்கள் ஜூன் “உண்மை” 1 - 15 2012 இதழில் எழுதிய கட்டுரை

6 comments:

தமிழ் ஓவியா said...

குடியரசுத் தலைவர் பதவி: கழகத் தலைவர் கருத்தும் கலைஞரின் பதிலும்


சென்னை, ஜூன் 7- அடுத்த குடியரசு தலைவர்பற்றி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தெரி வித்த கருத்துப்பற்றி திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பதில் அளித்தார். விவரம் வருமாறு:

தி.மு.க. தலைவர் கலைஞர் சென்னையில் நேற்று செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும்

அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றிருக் கிறாரே, என்ன காரணம்?

பதில்:- டெல்லிக்குப் போகக் கூடாதா என்ன?

கேள்வி:- குடியரசுத் தலைவர் தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:- குடியரசுத் தலைவர் தேர் தலில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை ஏற்கெனவே இங்கே வந்த மத்திய அமைச்சர் அந்தோணியிடம் விளக்கியிருக்கிறோம். உங்களிடமும் அதைப்பற்றி ஓரளவுக்கு சொல்லி யிருக்கிறேன்.

கேள்வி:- சேலத்தில் ராஜேந்திரன் அணியினருக்குத்தான் கட்சியில் பதவி தருவதாகவும் வீரபாண்டி அணி யினரை புறக்கணிப்பதாகவும் சொல் கிறார்களே?

பதில்:- அதெல்லாம் உங்கள் பத்தி ரிகை செய்திகள், நாட்டு நடப்பு அல்ல.

கேள்வி:- கி.வீரமணி குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல்கலாமை நிறுத்த வேண்டுமென்று சொல்லியி ருக்கிறாரே?

பதில்:- அது அவருடைய கருத்து. அதில் நான் அவருடன் முரண்பட வில்லை.

கேள்வி:- உள்கட்சித் தேர்தலில் நீங்கள் தலைவர் பதவிக்குப் போட்டி யிடுவீர்களா?

பதில்:- இப்போது தேர்தல் நடக்க வில்லை. இன்னும் ஓராண்டு இருக் கிறது.

கேள்வி:- ஓராண்டுக்குப் பிறகு?

பதில்:- ஓராண்டுக்குப் பிறகு உயி ரோடிருந்தால் போட்டியிடுவேன்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறினார்.7-6-2012

தமிழ் ஓவியா said...

பெரியார் அன்று சொன்னதும் - இன்று நடப்பதும்


ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டில் உள்ள பெண்களின் முன்னேற்றத்தைப் பொறுத்தது ஆகும்.

எனவேதான் உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் தொலைநோக்குப் பார்வையோடு 1929-ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 50 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவர அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும் என்று வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினை வார்த்தெடுத்தார்.

இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினைக் கொண்டு வருவதற்கு நாற்பது நாட்களுக்கு முன்பே 1929-ஆம் ஆண்டு ஜனவரி 5,6 ஆகிய இரு நாட்களில் வேலூரில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாத வாலிபர் மாநாட்டில், யாருக்கும் எண்ணத் தோன்றாத, சிந்தித்துக் கூடப் பார்க்க முடியாத கால கட்டத்தில் நமது பெண்மணிகளுக்குக் குடும்பச் சொத்தில் ஆண்களைப் போலவே சரிபங்கு இருக்க வேண்டும், விதவைகள் என்பவர்களுக்கும் அவர் களின் புருஷர்களுக்குள்ள சொத்துக்கள் முழுவதிலும் பூரண சுதந்திரம் இருக்க வேண்டும், மேலும், பாகம் பிரியாத குடும்பங்களிலும் புருஷர்களுக்குக் கிடைக்கக்கூடிய சொத்துக்களின் உரிமை முழுவதும் அவர்கள் இறந்த பிறகும் அவர்களின் மனைவிகளுக்குக் கிடைக்க உரிமை இருக்க வேண்டும் என்று சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிகரமான தீர்மானம் கொண்டு வந்து உலகையே வியக்க வைத்தார் உலகத் தலைவரான தந்தை பெரியார்.

ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் இருப்பின், அதில் பெண்குழந்தைக்கு முதலில் முன்னுரிமை கொடுத்து படிக்கவையுங்கள். அப்போது தான் அக்குடும்பம் செழிக்கும். அதன் மூலம் நாடும் முன்னேற்றம் அடையும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவுப் பகலவன் பெரியார் அவர்கள் தனது எழுச்சி மிகு பிரச்சாரத்தின் வாயிலாக மக்களிடம் எடுத்துரைத்தார்.

இதன் பயனாய், பெரும்பான்மையான மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வும், முற்போக்குச் சிந்தனையும் ஏற்பட்டது. இதன் காரணமாக பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க ஆர்வத்துடன் முன் வந்தனர்.

அதன் விளைவால், தற்போது பெண் கள் படித்துப் பட்டம் பெற்று வேலைக்குச் செல்கின்ற நிலையினை எட்டியுள்ளனர் என்பது வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு கல்வியும் - வேலை வாய்ப்பும் சரியான முறையில் அளிக்கப் பட்டால், அவர்கள் ஆண்களை விஞ்சும் வகையில் திறம்பட செயல்பட்டு வெற்றி வாகை சூடுவார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டு.

தற்போது பெண்கள் இந்திய நாட்டின் ஜனாதிபதியாகவும், நாடாளுமன்றத்தில் சபாநாயகராகவும், பல்வேறு மாநிலங் களில் முதல் அமைச்சர்களாகவும், அரசியல் கட்சித் தலைவர்களாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளாகவும், மாநகர மேயர்களாகவும், நகராட்சி - ஊராட்சி மன்றத் தலைவர்களாகவும் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளிலும், தனியார் துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றி முத்திரை பதித்து வருகின் றனர் என்பது நாடறிந்த உண்மை நிலையாகும்.

வீட்டிற்குள் சிறைப்பறவைகளாய் இருந்த பெண்களை, வெளி உலகிற்கு சுதந்திரப் பறவைகளாகக் கொண்டு வந்தவர் பெண்ணுரிமைக் காவலர் பெரியார் அவர்கள் மட்டுமே என்பதை மகளிர் சமுதாயம் நன்றி உணர்வோடு பெரியாரை நாளும் போற்றிப் புகழ்கின் றனர்; பேருவகை அடைகின்றனர்.

ஆண்களுக்கு என்னென்ன உரிமை கள் இருக்கின்றனவோ அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று, ஒரு ஆணாக இருந்து கொண்டு பெண்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் விடுதலைக்காகவும் பெண்ணுரிமைக் காவலர் பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் போராடியதின் பயனாய்;

இந்தியாவிலேயே முதன் முறையாக 1989-ஆம் ஆண்டு மானமிகு கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் பெண்களுக்கு தந்தையின் சொத்தில் சமபங்கு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்தம் கொண்டு வர சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, மத்திய அரசும் 2005-ஆம் ஆண்டு முதல் மேற்கண்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தி வரு கின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய விடய மாகும். இதன் வாயிலாக, இந்தியாவில் உள்ள பெண்கள் அனைவரின் வாழ்வுரி மைக்கும், வாழ்வாதாரத்திற்கும் வளம் சேர்ப்பதற்கு உறுதுணையாக அமைந் துள்ளது என்பது அனைவராலும் பாராட் டப்படவேண்டிய இனிய செய்தியாகும்.

மேற்கண்ட தேனினும் இனிய செய்தி யினை அறிந்த மகளிர் அமைப்புகள், மாதர் சங்கங்கள், இன மீட்பாளர்கள் மற்றும் சமூகநீதிச் சிந்தனையாளர்கள், சமுதாய நல ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பகுத் தறிவாளர்கள், முற்போக்குச் சிந்தனை யாளர்கள், சான்றோர் பெருமக்கள் ஆகியோர் வரவேற்று அகமகிழ்ந்தனர். மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர்.

மகளிர் சமுதாயம் தங்களது வாழ்வில் விடியல் ஏற்பட்டு விட்டதாக இன்பத்தில் திளைந்திருக்கும் அதே வேளையில்; மற்றொரு புறம் பெண்களை பணம் பறிக்கும் இயந்திரமாகக் கருதி ஈவு இரக்கமின்றி வரதட்சணைக் கொடுமை, பாலியல் பலாத்காரம், வன்கொடுமை மற்றும் பல்வேறு கொடுமைகளுக்கு அவர்களை ஆட்படுத்துவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி செய்வதறியாது திகைத்து நின்று, விரக்தியின் விளிம் பிற்கே சென்று தற்கொலை எனும் கசப்பான முடிவிற்குத் தள்ளப்பட்டு, தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர் என்கின்ற துயரமான செய்தியை நாளேட்டின் வாயிலாக நாளும் நோக்கும் போது பெண்ணுரிமை மாண் பாளர்கள், இனமீட்பாளர்கள் ஆகியோர் அதிர்ச்சி அலையில் சிக்குண்டுத் தவித்தனர். வேதனை மிகுதியால் வாய டைத்து நின்றனர். அவர்களின் உதிரம் உறைந்து போனது! நா தழுதழுத்தது! நாம் நாகரிக உலகில்தான் வாழ்கின்றோமா? என்கின்ற அய்யப்பாடு ஆழ்மனதைத் துளைத்து எடுத்தது.

இத்தகைய வேதனை மிகுந்த சூழலில்தான், சற்றே ஆறுதல் தரக்கூடிய செய்தியாக, பெரியார் அவர்களால் எண்பது ஆண்டுகளுக்கு முன்பே வேலூரில் நடைபெற்ற பார்ப்பனரல்லாத வாலிபர் மாநாட்டில் (1929) கொண்டு வரப்பட்ட பல்வேறு புரட்சிகரமான தீர்மானங்கள் விவாகரத்து ஆன பெண்களுக்குக் கணவர் சொத்தில் சமபங்கு எனும் புதிய சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச் சரவை (17-5-2012) ஒப்புதல் அளித் துள்ளது அனைவராலும் கையொலி எழுப்பி வரவேற்கப்பட வேண்டிய மகிழ்ச்சியான செய்தியாகும்.

காலம் தாழ்ந்தாலும், தாழ்த்தப்பட் டாலும் பெரியாரின் கொள்கை வெற்றி முனையை அடைந்தே தீரும் என்பதற்கு அடையாளமாக, அண்மையில் (17-05-2012) மேற்கண்ட புதிய சட்டத்திருத்தத் திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது சரியான சான்றுகளாகும்.

- சீ. இலட்சுமிபதி, தாம்பரம் 7-6-2012

தமிழ் ஓவியா said...

12ஆம் தேதி ஆர்ப்பாட்டம்


தொழிற் கல்லூரிகளில் சேர்வதற்காக அனைத் திந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்த இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் அறிவித்துள்ளதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நேற்று (6.6.2012 விடுதலை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். வரும் 12ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சமூகநீதிக்கு ஊறு என்று சொன்னால், சற்றும் தாமதிக்காது அடுத்த கணமே போர்க்கொடி தூக்குவது திராவிடர் கழகமே!

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராகவிருந்த போதுதான் முதன் முதலாக நுழைவுத் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது.

நுழைவுத் தேர்வு என்பது ஒட்டகம் நுழையும் கதைதான் என்று அபாயசங்கை ஊதினார் தமிழர் தலைவர் (விடுதலை 8.6.1984).

தமிழ்நாடெங்கும் நுழைவுத் தேர்வு ஆணையைக் கொளுத்தும் போராட்டத்தை நடத்தியது கழகம் (29.6.1984).

திமுக ஆட்சியில் தான் நுழைவுத் தேர்வு ரத்து செய்யும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதற்குமுன் அதிமுக ஆட்சியில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது என்றாலும் சரியான அடிப்படையில் அந்த ஆணை உருவாக்கப்படாததால் நீதிமன்றத் தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

கலைஞர் அவர்கள் முறையாக - கல்வியாளர்கள் குழு ஒன்றை அமைத்து, அவர்களின் அறிக்கையைப் பெற்று, அதன் அடிப்படையில் நுழைவுத் தேர்வு ரத்து ஆணைபிறப்பிக்கப்பட்டதால், அது செல்லுபடியானதே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டது.

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது என்று சட்ட ரீதியாகத் தெளிவாக்கப்பட்டபின், அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு என்பது - கண்டிப்பாக மாநில ஆட்சி உரிமையில் மத்திய அரசு மூக்கை நுழைக்கும் அத்துமீறிய செயலே என்பதில் எவ்வித அய்யப்பாட்டுக்கும் இடம் இல்லை.

இதனைத்தான் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவும் சுட்டிக் காட்டியுள்ளது. கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து, பொதுப் பட்டியலுக்கு நெருக்கடி நிலை காலத்தைப் பயன்படுத்தி, ஒரு சார்பாக எடுத்துச் சென்றதால், ஏற்பட்ட கேடான விளைவு இது.

இந்த நுழைவுத் தேர்வுதான் சரியானது திறமையைச் சரியாக எடை போடுவது என்ற கருத்தைக் கல்வியாளர்களும் ஏற்றுக் கொள்ள வில்லை. நீதிமன்றமும் ஒப்புக் கொள்ளவில்லை.

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நுழைவுத் தேர்வு ரத்து ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட கருத்து மிகவும் முக்கியமானதாகும்.

நுழைவுத் தேர்வை நடத்தினாலும் முழு சமநிலை என்பது கட்டுக்கதைதான். ஏனென்றால் சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட கோன்பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சிபோல அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை டிக் செய்யும் வாய்ப்புள்ளது என்று கூறி விட்டார்களே!

இதற்குப் பிறகு மத்திய அமைச்சர் கபில்சிபல் நுழைவுத் தேர்வுதான் சரியான அளவுகோல் என்று கூறுவது சரியானதுதானா?

இளங்கலை பட்டப் படிப்பு முதற்கொண்டு நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் ஒரு கட்டத்தில் கூறியுள்ளார். அகில இந்திய அளவில் அய்.ஏ.எஸ். போல அகில இந்தியக் கல்வித்துறை (ஐ.நு.ளு.) ஒன்றைக் கொண்டு வருவது - குறித்து ஒரு யோசனை இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கோணிப்பைக்குள் இருக்கும் பூனைக்குட்டி வெளியில் வந்தது என்று சொல்லுவார்களே. அதுதான் இந்தக் கருத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் - நுழைவுத் தேர்வு தொடர்பான கருத்து குறித்து, தமிழ்நாடு முதல் அமைச்சர், தம் கருத்தினை வெளியிடுவது அவசியம்.

ஏற்கெனவே நுழைவுத் தேர்வு கூடாது என்ற கருத்தின் அடிப்படையில் ஆணை பிறப்பித்த முதல் அமைச்சர் அவர்கள், இந்தத் தருணத்தில் தமிழக அரசின் கருத்தினை வலியுறுத்துவார் என்று எதிர்ப்பார்க்கிறோம். 7-6-2012

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் இன்னமும் அவமானப்படுத்தப்படுகிறார்

விருதுநகர், ஜூன் 7- ஊராட்சி மன்றக் கூட்டங்களில் மற்ற ஜாதி உறுப்பினர்கள் நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு தன்னை மட்டும் தரையில் உட்கார வைத்து அவமானப் படுத்துகிறார்கள் என்று விருதுநகர் மாவட்டம் கொட்டக் கச்சிநேந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் வி.கருப்பன் கூறியுள்ளார். தேர்தல் நடந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏழு மாதங்கள் கடந்த பிறகும், தன் மீது ஜாதி பாகுபாடு காட்டப்படுவதாகவும், தன்னுடன் ஒத்துழைக்க முன்வராத தாலும் கடந்த ஒரு மாதமாக ஊராட்சி மன்றப் பணிகள் எதுவும் நடைபெறா மல் நின்று போயுள்ளன என்று அவர் கூறுகிறார்.

ஊராட்சி மன்றத் துணைத் தலை வர், ஆறு ஊராட்சி மன்ற உறுப்பினர் கள் மற்றும் எழுத்தாளர் ஆகியோர் தன்னைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கவில்லை என்று காவல் துறை இயக்குநருக்கு எழுதி அனுப்பி யுள்ள ஒரு புகார் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

ஊராட்சி மன்றக் கூட்டத்தின் போது, மற்ற உறுப்பினர்கள் நாற்காலி களில் உட்கார்ந்து கொண்டு, தன்னை மட்டும் தரையில் உட்கார வைத்து அவமானப் படுத்துவதாகவும் அவர் புகார் கூறியுள்ளார். ஜாதியின் பெயரால் தான் அடிக்கடி அவமானப் படுத்தப் படுவதாகவும், பாகுபாட்டு டன் நடத்தப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

படித்துப் பார்க்காமல் ஒரு ஆவ ணத்தில் கையெழுத்திட துணைத் தலைவரும், அவரது கணவரும் வற் புறுத்தியபோது, கையெழுத்திட தான் மறுத்துவிட்டு மாவட்ட நிர்வாகத் திடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாப்பா பட்டி, கீரிப்பட்டி, கொட்டைக் கச்சிய னேந்தல் ஆகிய ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் ஜாதி இந்துக்கள் ஒத்துழைக்காமல் இருந்ததால் பல ஆண்டு காலமாக நடத்தப்பட முடி யாமல் போனதும் பின்னர் அரசின் தனிப்பட்ட முயற்சியால் தேர்தல் நடத் தப்பட்டதும் குறிப்பிடத்தக்கவை யாகும்.7-6-2012

தமிழ் ஓவியா said...

பத்திரிகையாளர் சந்திப்பில் ரகளை: சோகத்தில் ஆதீனம்சாமியார் நித்யானந்தா பேட்டியின் போது, "கன்னட "டிவி' சேனல் நிருபர்' நீதிமன்ற சம்மன் பற்றி, கேள்வி எழுப்பியதால், அவரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதனால், பத்திரிகையாளர் சந்திப்பில் ரகளை ஏற்பட்டது.

சாமியார் நித்யானந்தா வழக்கில், சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஆர்த்தி ராவ் சென்னையை சேர்ந்தவர். அமெரிக்க குடியுரிமை பெற்றவர். 2004 முதல், 2010 வரை, நித்யானந்தா ஆசிரமத்துடன் தொடர்பு வைத்திருந்தவர். இவர், "கன்னட "டிவி' சுவர்ணா'வில் அளித்த பேட்டியில், "நித்யானந்தா, காவி அணிந்து மக்களை ஏமாற்றுகிறார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அந்தஸ்தை எண்ணி, வெளியில் சொல்லாமல், குமுறிக் கொண்டுள்ளனர். அவரிடம் எந்த சக்தியும் இல்லை. பக்தர்களை ஏமாற்றி, பணம் சம்பாதித்தார். இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் சொத்துகள் உள்ளன. இது குறித்து, அரசு விசாரணை செய்ய வேண்டும். தியானம் கற்றுக் கொள்ள வந்த என்னிடம், பல முறை தொடர்பு கொண்டார். அவரால் பாதிக்கப்பட்ட நான், அவர் மீது வழக்கு தொடர உள்ளேன்' என்று கூறியிருந்தார்.

குற்றச்சாட்டு பொய்: இந்த பேட்டிக்கு பதிலளிக்க, பிடதி நித்யானந்தா ஆசிரமத்தில், பத்திரிகையாளர் சந்திப்புக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. நிருபர்களிடம் நித்யானந்தா கூறியதாவது: ""ஆர்த்தி ராவ் குற்றச்சாட்டு பொய்யானது. என்ன சொல்கிறார், என்ன செய்கிறார் என்பதை உணர முடியாது. என் ஆசிரமத்துக்கு வந்த போது, அவரது நோயை குணப்படுத்த முயற்சித்தேன். ஆனால், என் மீது குற்றம் சாட்டியுள்ளார். பீடத்தில் ஆண், பெண் சீடர்கள், பக்தர்கள் உள்ளனர். பூஜை, தியானம் நடந்து வருகிறது. யாரையும் வசியப்படுத்தவோ, தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதோ இயலாத காரியம். ஆர்த்தி முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். அவருக்கு, ஹெச்.ஐ.வி., சம்பந்தமான, "ஹெர்பஸ் 2' என்ற நோய் உள்ளது. ஆர்த்தி ராவுடன் தொடர்பு வைத்திருந்தால், எனக்கும் அந்த நோய் வந்திருக்கும். இது தொடர்பாக ரத்தப் பரிசோதனை செய்ய நான் தயார். அவர் தயாரா. இதுபற்றி சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்,'' என்றார்.

நிருபர் கேள்வி: இந்த நேரத்தில், ஸ்வர்ணா, கன்னட, "டிவி' நிருபர் அஜித், நித்யானந்தாவுக்கு கோர்ட் அனுப்பிய சம்மன் ஒன்றின் நகலை காண்பித்து, "நீதிமன்றம் அனுப்பிய சம்மனை வாங்கிக் கொள்ள மறுத்தது ஏன்?' என்று கேட்டார். அதற்கு நித்யானந்தா, "எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. வழக்குகளை சட்டப்படி சந்தித்து வருகிறேன். தலைமறைவாகவில்லை. உங்கள் கண் முன்பே நிற்கிறேன்' என்றார். அப்போது, "டிவி' நிருபர், "சம்மன் நகலை காண்பித்து, சம்மனை வாங்காமல், திருப்பி அனுப்பியுள்ளீர்கள். சம்மனை பெறாவிட்டால், நீதிமன்றம் விட்டு விடாது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி மீண்டும் வாரண்ட் வரும்' என்றார். இதனால், கோபமடைந்த நித்யானந்தா, பத்திரிகையாளர் சந்திப்பில், மற்றவர்களுக்கு அனுமதியில்லை. பத்திரிகையாளர்கள் தவிர, மற்றவர்களை வெளியேற்றுங்கள் என்று சீடர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் சீடர்கள், நிருபர் அஜித்தை வெளியேற்ற முயற்சித்தனர். இதனால் வாக்குவாதம் முற்றியது. கைகலப்பு சூழ்நிலை உருவானது. நிருபர்கள் சிலர், கை கலப்பை கட்டுப்படுத்த முயன்றனர்.

அமைதியாக ஆதீனம்: உடனடியாக நித்யானந்தா, "பிரஸ் மீட்டுக்காக அழைத்தேன். ஆனால், தேவையின்றி சட்ட விஷயங்கள் பேசுகின்றவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நேரங்களில், பக்தர்களும், சீடர்களும் அரணாக இருந்து பாதுகாக்க வேண்டும்' என்றார். பேட்டியின் போது, அடிக்கடி மாஜி நடிகை, ராகசுதாவை அழைத்து, பத்திரிகையாளர்களை அங்கிருந்து வெளியேற்றும்படி உத்தரவிட்டார். இந்த ரகளையின் போது, மதுரை ஆதீனம், தன் கன்னத்தில், "கை' வைத்தவாறு, சோகமாக பார்த்து கொண்டிருந்தார்.