Search This Blog

30.3.10

சோ ராமசாமியின் அக்ரகாரச் சிந்தனை!


சோ!

திருவாளர் சோ ராமசாமி ஏதோ சிந்திக்கக் கூடியவராம். இந்த வார துக்ளக் (31.3.2010) தலையங்கத்தில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் முயற்சியால் கட்டப்பட்ட தலைமைச் செயலகம்பற்றி வழக்கமான பாணியில் அகடவிகடக் கிண்டல்கள், அரட்டைக் கச்சேரிகள், கோணங்கித்தனங்கள், கிச்சுக்கிச்சுகள்!

இந்தச் சேட்டை, மூட்டை செவ்வாய்க்கிழமைகளுக்கிடையே ஒரு படு தமாஷ்!

தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ளதைப் பாராட்டவேண்டியதுதான். ஆனால், கொஞ்சம் சிந்திக்கவேண்டியிருக்கிறது.

இந்தப் பாழாய்ப்போன சிந்திக்கிற பழக்கத்தினால்தான் நாம் குட்டிச்சுவர் ஆகிறோம் என்பது தெரிந்தும் வழக்கத்தை விட முடியவில்லை என்று தலையங்கம் பகுதியில் தீட்டியுள்ளார்.

அவர் ஏதோ சிந்திக்கக்கூடிய சிற்பியாம். பூணூல் திரண்ட முதுகை ஒருமுறை தட்டிக் கொள்கிறார்.

ஆமாம், பெரியார், அண்ணா, கலைஞர், வீரமணி, வி.பி. சிங் என்று வந்துவிட்டால், அவர் சிந்தனை ஊற்று பொத்துக்கொண்டு கிளம்பிவிடும்.

இதே துக்ளக்கில் ஹிந்து மகாசமுத்திரம் பற்றி எழுதும்போது மட்டும் மண்டை காய்ந்துவிடும்.

ராமன் 17 லட்சம் ஆண்டுகளுக்குமுன் குரங்குகள், அணில்கள் துணைகொண்டு பாலம் கட்டினான் என்றால், அந்த இடத்தில் மட்டும் அவாள் சிந்தனை பிரேக் போட்டுவிடும்!

மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் போய் விழுந்தான் என்று நம்புகிற நேரத்தில் மட்டும் கண்டிப்பாக சோ ராமசாமி அய்யர்வாளின் சிந்தனை மை காய்ந்து போய்விடும்.

காஞ்சி மட சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் காமலீலை சரசங்கள் சம்பந்தப்பட்டவை என்று வந்துவிட்டால் சிந்தனை ஜில்லிட்டு உறைந்து போய்விடும்.

இஸ்லாமியர்களை வேட்டையாடிய நரேந்திர மோடியின் சமாச்சாரங்கள் என்ற கட்டம் வரும்போது கண்டிப்பாக பூணூலின் சிந்தனை உள் தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளும்.

காஷ்மீர் பண்டிட்டகள் (பார்ப்பனர்கள்) பிரச்சினை என்று வந்துவிட்டால் சிந்தனைக் கொம்பு சீறிக்கொண்டு பாயும். ஈழத் தமிழர் பிரச்சினை என்றால், சிந்தனைக்குச் சீக்கு வந்துவிடும்.

அடேயப்பா! எப்படிப்பட்ட சிந்தனை இந்த ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் (மனுவாத) அக்ரகாரச் சிந்தனை!

------------- மயிலாடன் அவர்கள் 30-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

5 comments:

UnmaiAlwaysSudum said...

Pity .... whatever and however he thinks he can never compete with our great leader Naathiga rajaji thiru k veeramani ayya avargal.

How much time he would have thought before building a dubakoor university , so that he can cheat millions of tamils with their hard earned money.

yes yes... Cho can never think like that... pityful guy

Giri Ramasubramanian said...

அவர் என்ன சொன்னாரென்று நாங்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பையும் தரவில்லையே உங்கள் கட்டுரை.

நம்பி said...

இந்த ஹிந்து மகா சமுத்திரத்தை வைத்து பார்ப்பனர்கள் பொது மன்றத்திலும் 1http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=32373&start=330 (வலைத்தளத்தில் அல்ல), இதை பரப்புரையாக செய்து வருகின்றனர். அதுவும் எப்படி வர்ணாசிரமம், சூத்திரன் என்று இழித்தும் பழித்தும் கூறும் போக்கை பார்ப்பனர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். (விடுவோமா?) இந்த இணைய காலத்திலும் அவர்களின் வர்ணாசிரமம், திராவிடர்களை தாழ்த்தும் குணம், இழிவு படுத்தும் குணம் இன்னும் மாறவில்லை. பாரதியார் பெயரிலும் வர்ணாசிரமம் புகுத்தப்படுகிறது. அதுவும் புதிய முறையில் அதுவும் எப்படி நான்கு குழுக்களாக இப்பொழுது பிரிக்கின்றனர். 1926 லேயே பாராதியார் அப்படி நினைத்து வர்ணாசிரமத்தை பிரித்தாராம். பிரதமர், ஐ பி எஸ், ஐ ஏ எஸ்...கிளர்க், அப்பறம் தொழிலாளர்கள்,அப்பறம் சிறுத் தொழிலாளர்கள்...என்று இதையும் தலையாட்டிக்கொண்டும், வாயைப்பிளந்து கொண்டும் கேட்பார்கள் என்று. (அப்படித்தான் இருக்கிறார்கள். குஜராத்தில் மோடியைப்படிக்கிறது, செத்துப்போன ராஜிவ் காந்தியைப்பிடிக்கிறது, சோனியா காந்தியை பிடிக்கவில்லை, ஆனால் அவரது பிள்ளை ராகுல் காந்தியை பிடிக்கிறது. ஆர் எஸ் எஸ் பரப்புரை வேறு. தீவிரவாதம் என்றால் எல் டி டி ஈ, பாலஸ்தீனம்....என்ற பரப்புரை வேறு ஆனால் காந்தியை கொன்ற பார்ப்பன கோட்சே ஆர் எஸ் எஸ் ஒரு தீவிரவாத இயக்கம் தான் இரண்டு முறை தடை செய்யப்பட்டது என்றால் பேச்சு மூச்சைக்காணோம். உங்களுடைய பல விஷயங்கள் இது போன்றவர்களின் பரப்புரையைத் தடுக்கப் பயன்படுகிறது. உங்கள் பணி மேன் மேலும் சிறக்க என் இனிய உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள். நன்றியுடன்.

தீபிகா சரவணன் said...

www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.

Unknown said...

Cho supported ex-Justice Ramasamu when there was a move to impeach him.Veeramani also supported him.
Why both took the same stand.Was that also agrahara thinking.
Why the new complex was inagurated when the work was not fully over.
Was it inagurated at Rahu Kalam or Yema Kandam.