சூத்திரன் பிராமணன்
(கேள்வி - பதில்)
மாணவன்:- சூத்திரனுக்குத் தன் இனத்திற்கு அல்லது ஜாதிக்கு என்று குறிப்பிட்ட பழக்க வழக்கம் ஆச்சார அனுஷ்டானம் கிடையாது. கொஞ்சம் விவரம் தெரிந்தவர்களுக்குள் தாங்கள் சைவர்களா, வைணவர்களா என்ற சமய உணர்ச்சி உண்டு. சிலருக்குச் சூத்திரர்களில் தாங்கள் கீழ்ஜாதியா மேல் ஜாதியா என்ற வகுப்பு உணர்ச்சி உண்டு. இவர்களில் பெரும்பாலோருக்கு வைணவம் என்றால் என்ன? சைவம் என்றால் என்ன? இரண்டிற்கும் என்ன பேதம்? எது மேலானது? இவைகளில் ஒன்றை உரிமையாக்கிக் கொள்வதில் பயன் என்ன? அவைகளைக் கடவுளாகவோ சமயமாகவோ கொள்வதில் பயன் என்ன? என்பன போன்றவைகள் ஒன்றும் தெரியாது.
பிராமணனுக்கு இவையெல்லாம் தெரியும். தெரியாவிட்டாலும் இவைகளால் தனக்கு உள்ள பயன் நன்றாகத் தெரியும்.
வாத்தியார்;:- பிராமணனுக்கும் சூத்திரனுக்கும் அடையாளம் என்ன?
மாணவன்:- பிராமணன் தன்னைப் பிராமணன் என்று நினைத்துக் கொண்டு சில தனி உரிமைகளை அனுபவிப்பதும், அதற்கு ஏற்றபடி நடிப்பவனுமாவான்.
சூத்திரன் தன்னைச் சூத்திரன் என்பதாக நினைத்துக் கொண்டு அதற்கு ஏற்ப பிராமணனுக்குப் பயன்படும்படி நடந்து கொண்டு தன்னுடைய இழிவையும் இழி நிலையையும் பற்றிக் கவலையோ மானமோ இல்லாமல் இருப்பவனுமாவான்.
வாத்தியார்:- சூத்திரனுக்குத் தன் இழிநிலைப்பற்றி மானத்தைப் பற்றிக் கவலை இல்லை என்பதற்கு என்ன உதாரணம்?
மாணவன்:- சூத்திரன் "பிராமணன் தன்னைவிட மேல் சாதி" என்பதை மனம் வாக்கு காயங்களால் ஒப்புக் கொள்கிறான்.
அவனைச் சாமி என்று அழைப்பதோடு, அவனை மரியாதையோடு பன்மையிலேயே பேசுகிறான்! இந்தப் பழக்கம் சூத்திரர்களில் எல்லா பெரிய மனிதர், படிப்பாளி, பணக்காரர் என்பவர்கள் முதல் எல்லோரிடமும் இருக்கிறது.
உதாரணமாக, ஒரு சூத்திரன் தன்னிடம் வேலைக்கு இருக்கும் 'பிராமணனை' சாமி, வாங்க, போங்க, வாரும், போம் அய்யரே என்று பன்மையில் தான் பேசுகிறார்.
ஒரு போலீசு டிப்டி சூப்ரண்டு (காவல்துறைக் கண்காணிப்பாளர்) ஒரு பிராமண கான்ஸ்டேபிள், தலைமை கான்ஸ்டேபிளைப் பன்மையில்தான் பேசுகிறார். பிராமண சமையற்காரனை அவனது எஜமான் பன்மையில் தான் பேசுகிறார்.
சூத்திரப் பெண்கள் எல்லாம் பிராமணனை வெகுமரியாதையாகப் பேசுகிறார்கள்.
கோவில்களில் 'பிராமணர்கள்' மேல் தாங்கள் பட்டுவிட்டால் தோஷம் என்று கருதுகிறார்கள்.
கல்யாணம், கருமாதி, காரியங்களில் அவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுகிறார்கள்.
பிராமணர்களுக்குக் கூட்டங்களில் முதலில் மரியாதை செய்கிறார்கள்.
100-க்கு 60 பேர் பிராமணர்கள் வீட்டில் சாப்பிடுவதை உயர்வு என்று கருதுகிறார்கள்.
சூத்திரன் வீட்டுக் கல்யாணம், கருமாதி, பிள்ளைப்பேறு, சாந்தி, குடிபுகுதல் முதலிய சமுதாயக் காரியங்களுக்குப் பிராமணனைக் கொண்டு செய்வது மேல் என்று கருதி அவனை மரியாதை செய்கிறான். அவனை வைத்துச் செய்து கொள்கிறான்.
பிராமணனேதான், பூஜை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருக்கின்ற கோவில்களுக்குச் சென்று வெளியில் இருந்து சாமியை வணங்குகிறான்.
பிராமணன், தான் மேலான ஜாதி என்று உரிமை கொண்டாடுவதைச் சூத்திரன் பொறுத்துக் கொண்டு அனுமதித்துக் கொண்டு இருக்கிறான்.
பிராமணன் உயர்ந்தவன், சூத்திரன் தாழ்ந்தவன் என்று குறிப்பிட்டிருக்கிற நூல்களையெல்லாம் தனது சமய நூல்களாகவும், தனது கடவுள் தன்மை வாய்ந்ததாகவும், புண்ணிய நூலாகவும் கருதி அவைகளுக்கு மரியாதை செய்கிறான்.
ஜாதி முறையை வெறுத்த சூத்திரன், அதை ஆதரிக்கும் புராண இதிகாசங்களைவெறுத்த சூத்திரன் சூத்திரன்களில் 1000-க்கு ஒருவர் கூட கிடையாது.
பிராமணன் மேல் ஜாதி என்பது 100-க்கு 99 சூத்திரர்களின் இரத்தத்தில் ஊறிப் போய் இருக்கிறது. சாதாரணமாகச் சூத்திரர்கள் சங்கராச்சாரியை மதிக்கிற அளவுக்குப் பண்டார சன்னிதிகளை மதிப்பதில்லை.
சாதாரணமாக, சூத்திரர்கள் பிராமணனுக்கு உதவி பண்ணுகிற அளவு பிச்சை கொடுக்கிற அளவு - சூத்திரனுக்குக் கொடுப்பதில்லை.
சாதாரணமாக, மேல் தரத்தில் உள்ள சூத்திரர்கள் பிராமணன் வீட்டில் சாப்பிடுவது போல் அவன் ஓட்டலில் பலகாரக் கடையில் சாப்பிடுவது போல் சூத்திரன் வீட்டில் ஓட்டலில் சாப்பிடுவது இல்லை.
பார்ப்பனன் இடமும், பிராமணனுக்குக் கீழும் இருக்கும் ஆண்கள் எல்லோரும் அவனை சாமி என்றே தான் அழைக்கிறார்கள். அந்தப் பிராமண வீட்டார்கள் தங்களை இழிவாய் கீழாய் நடத்துவதை எல்லா சூத்திர ஆள்களும் பொறுத்துக் கொள்கிறார்கள்.
-------------------------- பெரியார் ஈ.வெ.ரா உரையாடல்- "விடுதலை", 23.07.1950
64 comments:
மழைக்கு சிறப்பு பூஜை ஆணையிட்ட அதிகாரி மீது வழக்கு தொடுக்கப்படும்
தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத்துறை - காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதற்காக சிறப்பு பூஜைகளை நடத்துமாறு அத்துறையைச் சார்ந்த அனைத்து செயற்பொறியாளர்களுக்கும் ஆணை பிறப்பித்துள்ளது.
1. பொறியியல் படித்தவர்கள் அறிவியலுக்கு மாறான - அவர்கள் படித்த படிப்புக்கு முரணான வகையில் இப்படி ஓர் சுற்றறிக்கையை ஆணையாக வெளியிட்டு இருப்பது மிக கேலிக்குரியது என்பதில் சந்தேகம் இல்லை.
யாகம் செய்தால் மழை பொழிந்து விடுமா? மழை எப்படி பொழிகிறது என்பதை இரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களைக் கேட்டாலே எளிதில் தெரிந்து விடுமே! பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்குத் தெரியவில்லையா? படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று தந்தை பெரியார் கூறியது சரியாகி விட்டதே!
அதிகாரிகளா அழுக்கு மூட்டைகளா இவர்கள்?
2) இரண்டாவதாக அரசு அலுவலர்கள் - இந்தியா மதச் சார்பற்ற நாடு (Secular State) என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? கோயில்களில் சிறப்புப் பூஜைகள், யாகங்கள் நடத்தினால் மழை பொழிந்து தீர்த்து விடுமா?
மக்களுக்குத் தேவை என்பது கடவுள்களுக்குத் தெரியாதா? பூஜை செய்தால்தான் கடவுள் மனம் திறப்பாரா? அப்படி என்றால் கடவுள் மனம் கல்லா? கருணையே உருவானவன் கடவுள் என்பது எல்லாம் புனை சுருட்டுதானா?
வருண பகவானுக்காக யாகம் நடத்தினால் மழை பொழியும் என்பது இந்து மதத்தின் ஏற்பாடு; யாகம் மூலம் பார்ப்பனப் புரோகிதர்களுக்கு நல்ல வருவாய்க்கிட்டும் அல்லவா! மக்களின் மூடத்தனம்தானே அவர்களுக்கு முதலீடு.
1992இல் மதுரா நகரில் 86 வயதான முதியவர் ஒருவர் யாகம் நடத்தி மழையை வரவழைக்கிறேன் என்று சவால் விட்டார். அந்தச் சமயத்தில் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அதனைக் கண்காணித்தனர். ஒரு சொட்டு மழைகூட பெய்யவில்லை என்பதை டில்லியிலிருந்து வெளிவந்த நேச்சர் (ழிணீக்ஷீமீ) என்ற இதழில் கே.எஸ். ஜெயராமன் கட்டுரை ஒன்றை எழுதியதை இந்த இடத்தில் நினைவூட்டுவது பொருத்தமானதாகும்.
3) அரசு என்பது மதச் சார்பற்றது - அது எந்த மதச் சடங்கோடும் தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளக்கூடாது.
உச்சநீதிமன்றத்தில் பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட ஓர் அமர்வு வழங்கிய தீர்ப்பு மிகவும் முக்கியமானது. எந்த ஒரு மாநில அரசும், மதச் சார்பின்மைக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருப்பதோ, மதச் சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதோ அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. அத்தகைய மாநில ஆட்சிகளை அரசமைப்புச் சட்டத்தில் 356ஆவது பிரிவின்கீழ் கலைக்க குடியரசு தலைவருக்கு உரிமை உண்டு என்று 1994 மார்ச்சில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பில் கூறியுள்ளது. எங்களுடைய இந்தக் கருத்துகளை சிலர் ஜீரணிக்க முடியாமல் போகலாம். அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
மதச் சார்பின்மைக்கு விரோதமாக நடப்பது எவ்வளவுப் பெரிய குற்றம் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?
மழை பொழிவதற்கு இந்து மதத்தின்படி பூஜை நடத்த சொல்லி ஆணை பிறப்பித்த அதிகாரிகள்மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இந்த சுற்றி அறிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; இல்லையெனில் இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை திராவிடர் கழகம் தொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
4) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51கி(லீ) என்ற பிரிவு என்ன கூறுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ பிரிவில் ஒவ்வொரு குடிமகனும் கடைப்பிடிக்க வேண்டிய பத்து அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties) சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அதில் எட்டாவது கடமையில் - 51ஏ(எச்) அறிவியல் உணர்வையும், மனிதநேயத்தையும், சீர்திருத்தத்தையும் ஆய்வு மனப்பான்மையையும் போற்றி வளர்க்க வேண்டும். To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reforms 51A(h), என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள இந்த விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமானது - மழைக்காக சிறப்புப் பூஜை நடத்துவது, யாகம் நடத்துவது என்பது வெளிப்படை; இந்த வகையிலும் தமிழ்நாடு அரசு, அதன் நீர்வளத்துறை சட்டத்தை மீறி இருக்கிறது. தமிழ்நாடு அரசு இதற்குரிய விளக்கங்களை அளிக்க வேண்டும்; தவறு செய்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். இல்லையெனில் அரசும் இதற்குப் பொறுப்பு ஏற்க நேரிடும். அடுத்த கட்டமாக சட்ட ரீதியான நடவடிக்கையில் விரைவில் திராவிடர் கழகம் ஈடுபடும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி,
ஆசிரியர்
அய்யாவிற்கு அய்.நா. (யுனஸ்கோ) விருது தந்த நாள் “ 27-06-1970
உலகில் எந்தத் தலைவருக்கும் கிடைக்காத ஒப்பற்ற வாசகங்களை பாராட்டுரையில் கொண்ட விருது; ஒப்பற்ற ஏற்பளிப்பு. உலகில் வேறு யாருக்கும் இந்த பெருமை கிடைத்ததில்லை. இவ்விருது 27.06.1970 அன்று மத்திய அமைச்சர் திரிகுணசென் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் பங்கேற்ற விழாவில் வழங்கப்பட்டது. தந்தை பெரியார் என்றால் பார்ப்பானைத் திட்டுவார்; கடவுள் இல்லையென்பார் என்று குறுகிய வட்டத்திற்குள் அவரை குறைத்து குறுக்கிக் காட்டும் குள்ளநரிக் கூட்டத்திற்கு இவ்விருது ஒரு பதிலடி!
ஆரிய பார்ப்பனக் கூட்டம் அய்யாவை எவ்வளவு மறைக்க முயன்றாலும் அய்யா ஆதவன்போல் அறிவு பரப்பி வெளிப்படுவார் என்பதன் அடையாளம் இவ்விருது. “
Periyar - The Prophet of the New age;
The Socrates of South East Asia;
Father of the Social reform movement;
and Arch enemy of ignorance, superstitions,
meaningless customs and base manners”.
- UNESCO (27.06.1970)
இதன் தமிழாக்கம்: பெரியார் _ புதிய உலகின் தொலைநோக்காளர்; தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி அண்ணா அவர்கள் (தமிழக முதல்வர்) அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற நிலையில் 10.10.1968இல் தந்தை பெரியாருக்கு எழுதிய கடிதத்தில், தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வகையில், இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்ததில்லை, அதுவும் நமது நாட்டில் என்று குறிப்பிட்டு பெருமைப்படுத்தினார். தந்தை பெரியார் ஒப்பாரில்லா உலகத் தலைவர் என்பதை இந்த விருது வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு, அவரைக் கொச்சைப்படுத்த, புரட்டு, திரிபுவாதங்கள், அபாண்ட குற்றச்சாட்டுகள் கூறும் குறுமதியாளர்களின், மோசடிப் பேர்வழிகளின் அயோக்கியர்களின் முகத்திரையையும் கிழித்தெறிந்தது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கூறிய மண்டைச் சுரப்பை உலகு தொழும்! என்ற வரிகளின் ஏற்பளிப்பாகவும் இது அமைந்தது! தந்தை பெரியாரின் இனிவரும் உலகம் என்ற நூல் அவர் ஓர் தொலைநோக்காளர் என்பதை உறுதிசெய்தது.
அதையும் இவ்விருது ஏற்பளிப்புச் செய்தது! வாழ்க பெரியார் பெருமை!
குறிப்பு: இந்த விருது பற்றி, தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், ஒரு நாளைக்கு ஒரு வரியை எடுத்துக்கொண்டு நான்கு நாள்கள் ஆற்றிய உரை (23.09.2014 முதல் 26.09.2014 வரை) விரைவில் நூலாக வந்து, அய்யாவின் பெருமையின் அழியாச் சின்னமாக நிலைக்கவுள்ளது என்பதை அறிவித்து மகிழ்கிறோம்.
செய்யக் கூடாதவை!
பல்வலிக்கு கற்பூரத்தை வைக்கக் கூடாது!
கற்பூரம் வேதிப் பொருள்களால் (Chemicals) ஆனது. அதைப் பல்லில் வைக்கும்போது, கன்னத்தின் உட்புறமுள்ள மென்மையான சதைப் பகுதியை அரித்துவிடும். கற்பூரம் வைக்கும்போது (பல்லில்) தற்காலிகமாக வலி நின்றதுபோல் தோன்றினாலும், அது நிரந்தரத் தீர்வு அல்ல. பல்வலிக்கு வலிக்கும் பல்லால் இரு கிராம்பை மென்று அப்படியே அவ்விடத்தில் வைத்தால் வலி நீங்கும். பின் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
நீண்ட நேரம் பல் தேய்க்கக் கூடாது
பிரஷ் கொண்டு பல் தேய்க்கும்போது அதிக நேரம் தேய்க்கக் கூடாது. அதிக பற்பசையும் உபயோகிக்கக் கூடாது. பட்டாணிக்கடலை அளவிற்குப் பற்பசை எடுத்துக் கொண்டு, பற்களில் கீழ்வரிசைப் பற்களைக் கீழிருந்து மேலும், மேல்வரிசைப் பற்களை மேலிருந்து கீழும் தேய்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியையும் இரண்டு மூன்று முறை மென்மையாய்த் தேய்த்தால் போதும் ஓரிரு நிமிடங்களில் தேய்த்து, முடித்து நன்றாகக் கொப்பளித்துத் துப்பி வாயைத் தூய்மை செய்ய வேண்டும்.
கருவேலன், வேம்பு, ஆல மரவிழுது இவற்றைக் கொண்டு பல் துலக்குவது பல்லுக்கு நன்மை பயக்கும். கிடைக்கின்றவர்கள் இவற்றைப் பயன்படுத்துவதே நலம்.
காலை எழுந்தவுடனும், இரவு படுக்கப்போகும் முன்னும் பல் துலக்குவது நலம்.
விரலால் பல் துலக்கக் கூடாது
விரலால் பல் துலக்கினால் பல்லிடுக்கில் உள்ள உணவுத் துணுக்குகள் வெளியில் வராது தங்கி, பற்களுக்கும், உடல் நலத்திற்கும் கேடு தரும். எனவே, மேற்சொன்ன குச்சிகள் அல்லது பிரஷ் கொண்டு துலக்குவதே நன்று. விரலால் துலக்கக் கூடாது.
அதிக குளிர்ச்சியோ, அதிக சூடோ பற்களில் படக் கூடாது
அதிக குளிர்ச்சியான அய்ஸ்கிரீம், அய்ஸ், குளிர்பானம், மிகச் சூடான வெந்நீர், பால், காபி போன்றவற்றைச் சாப்பிடுதல் கூடாது. அவை பற்களுக்கும் நல்லதல்ல; உடலுக்கும் நல்லதல்ல.
செங்கற்பொடி, சாம்பல் கொண்டு பல் தேய்க்கக் கூடாது
செங்கல்லைத் தூளாக்கி அல்லது சாம்பலைப் பொடித்துப் பற்களில் விரலால் தேய்ப்பர். இவை ஈறுகளைத் தேய்த்துப் பற்களையும் கெடுக்கும். பற்களின் மேலுள்ள பளபளப்பைத் தேய்த்து அழித்துவிடும். ஈறுகள் தேய்ந்து பற்கள் வலுவிழந்து போகும். எனவே, செங்கற்பொடி, சாம்பல் கொண்டு பல் துலக்கக் கூடாது.
இயற்கையாய் ஏற்படும் பல்வலிக்குப் பனிக்கட்டியை வைக்கக் கூடாது
பல்லில் அடிபட்டு வலியிருந்தால் பனிக்கட்டி வைக்கலாம்.
உப்பு கலந்த நீரை (ஒரு டம்ளர் நீரில் ஒரு டிஸ்பூன் உப்பு கலந்து) வாயில் ஊற்றிக் கொப்பளித்து வந்தால் பல்வலி நீங்கும். ஈறுகளிலுள்ள கிருமிகளும் அழியும். இதைத் தினமும் செய்தால் பல்வலி வரவே வராது.
கடும் வெய்யிலில் சென்று வந்தவுடன் குளிர்பானம் அருந்தக் கூடாது
பொதுவாகச் செயற்கைக் குளிர்பானங்கள் அருந்தக் கூடாது. காரணம், அதில் கலக்கப்படும் எப்பொருளும் உடலுக்கு நன்மை செய்வன அல்ல. மாறாகக் கேடு பயப்பன.
கடும் வெய்யிலில் செல்லும்போது நம் உடலும் நரம்புகளும் சூடேறியிருக்கும். சூடான பொருளில் திடீரென குளிர்ந்த நீர்பட்டால் உடனே அது நொறுங்கும். சூடான கண்ணாடியில் குளிர்ந்த நீர் ஊற்றினால் அது நொறுங்கிவிடும். அப்படித்தான் நம் உடல் நரம்புகளும் சூடேறி இருக்கும்போது அச்சூடு தணிவதற்குள் குளிர்ந்த பானம் குடிப்பதோ, குளிர்ந்த நீரில் குளிப்பதோ கூடாது. அவ்வாறு செய்தால் நமது நரம்புகள் பெரிதும் பாதிக்கப்படும்.
அதேபோல் உடல் சூடாகியுள்ள நிலையில் குளிர்ந்த நீர் குடிக்கவும் கூடாது. உடற்சூடு தணிந்த நிலையிலேதான் குடிக்க வேண்டும். அய்ஸ் கலந்த நீர் எவ்வகையிலும் நல்லதல்ல. குளிர்ந்த நீர் வேண்டுமானால், மண்பானையில் வைத்துக் குடிக்க வேண்டும். குளிர்ந்த மண்பானை நீரைக்கூட வெய்யிலிருந்து வந்தவுடன், உடல்சூடு தணிவதற்குள் குடிக்கக் கூடாது.
மண்பானை நீரில் வெல்லம் கலந்து பருகுவது உடல்நலத்திற்கு உகந்தது. சோற்றுக்கற்றாழையில் உள்ள சோற்றை ஏழுமுறை அலசி, சோற்றுக்கற்றாழையில் தேன் கலந்து சாப்பிடுவதும், வெந்தயத்தை ஊற வைத்து உண்பதும், பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி கீரைகள் சாப்பிடுவதும் உடல்சூடு தணிக்கும். வளமை தரும்.
ஒரு பெண்ணைக் கைது செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!
இந்திய அரசியல் சாசனம் நாட்டுக் குடிமக்களுக்கு பல அடிப்படை உரிமைகளை அளித்துள்ளது. நாட்டுப் குடிமக்களுக்கு, அவர்கள் விருப்பப்படி, நாட்டு நலனுக்கு ஏற்ற முறையில், மக்களின் நன்மைகளை வலியுறுத்தும் வகையில் பல சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த உரிமை, குடிமக்களோ அல்லது அயல்நாட்டுவாசிகளோ, குற்றம் செய்தால், அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.
சட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் காவல்துறை, அவர்கள் கைது செய்ய உரிமை பெற்றுள்ளது. காவல்நிலையக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, வன்முறை, சித்திரவதை நடக்க வாய்ப்பிருக்கிறது. அடிப்படை உரிமைகளின் அத்துமீறலுக்கு வழிவகுக்கிறது.
ஒரு குடிமகனைக் கைதுசெய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றிய முதல் திருப்புமுனை தீர்வு D.K.Basu Vs. State Case என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்திலிருந்து வந்தது. இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை செய்ய, காவல்துறை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைக் குறித்து உச்சநீதிமன்றம் சில குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைஅறிவித்துள்ளது.
இதனால், போலீஸ் காவலில் குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும்போது, சித்திரவதைக்கு ஆளாகாமல் தடுக்க முடியும். ஆனால், இந்தியாவில் பெண்கள் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும்பொழுது பல சூழ்நிலைகளில் அவர்கள் காவல் நிலையத்தில் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. பெண்கள் பல காவல் நிலையங்களில் பாலியல் கொடுமைகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உச்சநீதிமன்றமும், அரசியல்வாதிகளும் சேர்ந்து பெண்களின் பாதுகாப்பிற்காக பல வழிகாட்டுதல்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.
பெண்களைக் கைது செய்யும்போது காவல்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:-
1. கைது செய்யப்பட்ட பெண்களை, ஆண் குற்றவாளிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு, தனி லாக்-_அப்பில் அடைக்கப்பட வேண்டும். தனியாக லாக்_அப் இல்லாவிட்டால், பெண்களை தனி அறைகளில் அடைக்க வேண்டும். மேலும், பெண்கள் கைது செய்யப்படும்போது, பெண் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. பெண்களை, சூரிய அஸ்தமனம் -_ சூரிய உதயம் இடையே அதாவது இருட்டியபிறகு, கைது செய்யக்கூடாது. ஆண் காவலர்களால் பெண்கள், பாலியல் தொல்லைகளுக்கு காவல் நிலையத்திலேயே ஆளாக்கப்பட்டதால், இந்த விதி உருவாக்கப்பட்டது.
3. மூன்றாவதாக, பெண்களை, சிறுமிகளை காவல் நிலையத்திற்கோ, வேறு இடங்களுக்கோ விசாரணை செய்ய அழைக்கக்கூடாது. அவர்கள் வசித்துவரும் வீட்டில்தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை செய்ய வேண்டிய நேரமும், முறையும் பெண்களுக்கு கூச்சத்தை, அவமானத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.
4. பெண் கைதிகளுக்கு, அல்லது வேறு பெண்களுக்கு மருத்துவ சோதனை செய்ய பெண் மருத்துவர்களையே அனுமதிக்க வேண்டும். பெண் அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த மருத்துவ பரிசோதனை கையாளப்பட வேண்டும். பெண் கைதிகள் குழந்தை பெற்றால், Prenatal and Postnatal Care பராமரிப்பு அளிக்க வேண்டும்.
5. பெண்கள் பேறுகாலத்தில் இருந்தால், அவர்களை கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமல்ல, கருவில் இருக்கும் சிசுவும் சேதமுற வாய்ப்புகள் இருப்பதால், இந்த முடிவை முடிந்த அளவிற்குத் தவிர்க்க வேண்டும். மேலும், கருத்தரித்த பெண்களை கட்டுப்படுத்தக் கூடாது.
ஓரளவு சுதந்திரம் அளிக்க வேண்டும். பெண்களையும், சிறுமிகளையும் பெண் காவலர்கள் அல்லது பெண் அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும். பெண் காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
மாட்டிறைச்சி உண்பதில் மக்களின் உணர்வு மதிக்கப்பட வேண்டும் மத்திய உள்துறை அமைச்சர் கருத்து
மகாராட்டிராவில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தது குறித்து கருத்துக்கூறிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் உணவுப் பழக்க வழக்கங்களுக்குக் கட்டுப்பாடோ தடையோ விதிக்கக் கூடாது என்றார்.
மாட்டிறைச்சியை உண்ண விரும்பக் கூடியவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட வேண்டும் என்று அடாவடியான, ஆதிக்கப் போக்கிலான கருத்தைச் சொன்னவர் முக்தார் அப்பாஸ் நக்வி. இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நான் மாட்டிறைச்சியை உண்பவன் என்னைத் தடுக்க யாராலும் முடியாது என்று காட்டமாய் பதில் கூறி கண்டனம் தெரிவித்தவர்தான் கிரண் ரிஜிஜு அவர்கள்.
மதச்சார்பற்ற நாட்டில் மத நல்லிணக்கத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் ரிஜிஜு.
- தினமணி, 28.05.2015
ஜூன் 16-30 தமிழ்ப் பாடலில் தமிழர் நாடுகளின் எல்லை!
தமிழ்ப் பாடலில் தமிழர் நாடுகளின் எல்லை!
சோழநாட்டு எல்லை
கடல்கிழக்குத், தெற்குக் கரைபொரு வெள்ளாறு,
குடதிசையில் கோட்டைக் கரையாம்; - வடதிசையில்
ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோணாட்டு எல்லையெனச் செப்பு.
சோழ நாட்டிற்கு எல்லையாகக் கிழக்குத் திசையில் கடலும், தெற்குத் திக்கில் நீர் நிரம்பிக் கரைகளைத் தாக்குகின்ற வெள்ளாறும், மேற்குத் திசையில் கோட்டைக் கரையும், வடக்குத் திக்கில் ஏணாட்டின் வயல்களும் உள்ளன. இவற்றிற்கு இடைப்பட்ட இருபத்து நான்கு காத தூரம் உள்ள நிலப் பரப்பே சோழநாடாகும் என்று சொல்வாயாக!
வெள்ளாறு _ புதுக்கோட்டை நகருக்கு அருகில் ஓடும் ஆறு. இதனைத் தென் வெள்ளாறு எனலாம்; குடதிசை _ மேற்குத் திசை; கோட்டைக்கரை குழித்தலைப் பகுதியாக இருக்கலாம். (திருச்சி மாவட்ட கெசட்டியர் ப.28); ஏணாடு _ நடுநாடு (திருக்கோவலூர் வட்டம்); காதம் _ பத்து மைல்கள்.
பாண்டிநாட்டு எல்லை
வெள்ளாறு அதுவடக்காம்; மேற்குப் பெருவழியாம்;
தெள்ளார் புனல்கன்னி தெற்காகும்; - உள்ளார
ஆண்ட கடல்கிழக்காம் அய்ம்பத்து அறுகாதம்
பாண்டிநாட்டு எல்லைப் பதி.
பாண்டிய நாட்டின் எல்லையாவது, வெள்ளாறு வடக்கு எல்லையாகும்; மேற்குத் திசையில் உள்ள பெருவழி (Highway) அத்திக்கில் உள்ள எல்லையாகும்; தெளிந்த நீரையுடைய குமரி ஆறு தெற்கு எல்லையாகும்; மனமார ஆட்சிக்குரிய கடல் கிழக்கு எல்லையாகும். இந்நான்கு எல்லைகளுக்கு உள்ளடக்கிய அய்ம்பத்தாறு காததூரம் உள்ள இடம் பாண்டிய நாடாகும்.
கன்னி ஆறு _ மிகப் பழங்காலத்தில் தமிழகத்தின் தென்பகுதியில் குமரிக்கண்டம் என்னும் நிலப்பரப்பு இருந்தது; அங்கே குமரிமலை என்றொரு மலை இருந்தது; அம்மலையில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய ஆற்றிற்குக் குமரி ஆறு என்று பெயர். அவ்வாறு, பாண்டிய நாட்டின் தென் எல்லையாகத் தலைச் சங்க காலத்தில் இருந்தது. கடல் கொந்தளிப்பால் அந்த நிலப்பகுதி கடலுள் மூழ்கி மறைந்தது. பிறகு இன்றைய குமரிமுனை பாண்டிய நாட்டின் தென் எல்லையாக இருந்து வருகிறது. கன்னி _ குமரி.
சேரநாட்டு எல்லை
வடக்குத் திசைபழனி; வான்கீழ் தென்காசி;
குடக்குத் திசைகோழிக் கோடாம்;- கடற்கரையின்
ஓரமோ தெற்காகும்; உள்எண் பதின்காதம்
சேரநாட்டு எல்லையெனச் செப்பு.
வடதிசையில் பழனியையும், பெருமை உடைய தென்காசியைக் கீழ்த் திசையிலும், மேற்குத் திசையில் கோழிக் கோட்டையும் (கள்ளிக்கோட்டை), தெற்கில் கடற்கரையையும் எல்லையாக உடையது சேரநாடு. அதன் பரப்பு எண்பது காத தூரமாகும் என்று கூறுக!
தொண்டைநாட்டு எல்லை
மேற்குப் பவளமலை; வேங்கட நேர்வடக்காம்;
ஆர்க்கும் உவரி அணிகிழக்கு; _ பார்க்குள்உயர்
தெற்குப் பினாகினி திகழிருப தின்காதம்
நல்தொண்டை நாடெனவே நாட்டு.
மேற்குத் திசையில் பவளமலையும், நேரே வடதிசையில் திருவேங்கட மலையும், அழகிய கிழக்குத் திசையில் ஒலிக்கின்ற கடலையும், தென்திசையில் உலகில் சிறந்த பெண்ணை ஆற்றையும் எல்லையாக உடையது சிறந்த தொண்டைநாடு. அதன் அமைப்பு இருபது காத தூரம் என்று உறுதியாகச் சொல்லுக.
வேங்கடம் _ திருப்பதி; ஆர்க்கும் _ ஒலிக்கும்; உவரி _ கடல்; பார் _ உலகு; பினாகினி _ பெண்ணையாறு, தென்பெண்ணை.
கல்லூரி முதல்வரானார் திருநங்கை!
நாட்டில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராகியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் மிதுனபுரி மாவட்டத்தில் உள்ள விவேகாநந்தர் நூற்றாண்டு நினைவுக் கல்லூரியில் வங்கமொழி ஆசிரியராகப் பணியாற்றிய மானபி பந்தோ பாத்தியாயா என்ற இவர் ஜூன் மாதம் (2015) 9ஆம் தேதி முதல் கிருஷ்ணா நகர் பெண்கள் கல்லூரியில் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். தற்போது கிடைத்துள்ள இந்த உயர்வு சிறப்பு வாய்ந்தது. வாழ்வில் சாதிக்க பாலினம் ஒரு தடையல்ல என்பதை இது உறுதிசெய்கிறது என்றார்.
இந்தியா எங்கும் “தமிழ்” என்று தொடங்கும் ஊர்ப் பெயர்கள்
ஆந்திராவில் - 29 ஊர்கள்
அருணாசலப் பிரதேசத்தில் - 11 ஊர்கள்
அசாமில் - 39 ஊர்கள்
பீகாரில் - 53 ஊர்கள்
குஜராத்தில் - 5 ஊர்கள்
கோவாவில் - 5 ஊர்கள்
அரியானாவில் - 3 ஊர்கள்
இமாசலப்பிரதேசத்தில் - 34 ஊர்கள்
கர்நாடகாவில் - 24 ஊர்கள்
மகாராட்டிரத்தில் - 120 ஊர்கள்
மேகாலயாவில் - 5 ஊர்கள்
மணிப்பூரில் - 14 ஊர்கள்
மத்தியப்பிரதேசத்தில் - 60 ஊர்கள்
தமிழ் என்று தொடங்கும் ஊர்களுக்கு அருகே பழனி, தேக்கடி, தேனி, போடி என மதுரை மாவட்டத்தில் உள்ள ஊர்கள் உள்ளன.
நாகாலாந்தல் 4, ஒரிசாவில் 84, பஞ்சாபில் 4, இராசஸ்தானில் 26, தமிழ்நாட்டில் 10, உத்திரபிரதேசத்தில் 64, மேற்கு வங்கத்தில் 24 உள்ளன.
இந்தியா முழுமையிலும் தமிழ் என்று தொடங்கும் ஊர்கள் 612 உள்ளன.
சிந்துவிலும் காவிரியிலும் ஒரே நாகரிகம்!
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் செம்பியன் கண்டியூரில் 2006 பிப்ரவரியில் இரு புதிய கற்காலக் கைக்கோடாரிகள் கண்டெடுக்கப்பட்டன.
அவற்றுள் ஒன்றில் கி.மு.2000 கி.மு.1500ஆண்டுகளுக்கு இடைப்பட்ட அரப்பா மொகஞ்சதாரோ கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை தெரிவிக்கிறது.
இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் சிந்துசமவெளி நாகரிகமும் தொல்தமிழர் நாகரிகமும் திராவிடர் நாகரிகமும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டுப் புதிய கற்கால மக்கள் அரப்பா மக்களின் திராவிட மொழியைப் பயன்படுத்தினர் என்பது இதன்வழி தெரிகிறது. இது தமிழ்நாட்டில் புதிய கற்கால மக்கள் தமிழ்ப் பேசியதற்கான முதல் சான்று.
ஆதாரம்: (உலக மொழிகளில் தமிழ்ச் சொற்கள் - ப.சண்முகசுந்தரம், உலக தமிழாராய்ச்சி நிறுவனம்)
குறிப்பு: இந்த இரண்டு சான்றுகளும் இந்தியா தமிழர் (திராவிடர்) மண் என்பதை உறுதி செய்கின்றன.
மாட்டிறைச்சி உண்பதில் மக்களின் உணர்வு மதிக்கப்பட வேண்டும் மத்திய உள்துறை அமைச்சர் கருத்து
மகாராட்டிராவில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தது குறித்து கருத்துக்கூறிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் உணவுப் பழக்க வழக்கங்களுக்குக் கட்டுப்பாடோ தடையோ விதிக்கக் கூடாது என்றார்.
மாட்டிறைச்சியை உண்ண விரும்பக் கூடியவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட வேண்டும் என்று அடாவடியான, ஆதிக்கப் போக்கிலான கருத்தைச் சொன்னவர் முக்தார் அப்பாஸ் நக்வி. இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நான் மாட்டிறைச்சியை உண்பவன் என்னைத் தடுக்க யாராலும் முடியாது என்று காட்டமாய் பதில் கூறி கண்டனம் தெரிவித்தவர்தான் கிரண் ரிஜிஜு அவர்கள்.
மதச்சார்பற்ற நாட்டில் மத நல்லிணக்கத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் ரிஜிஜு.
- தினமணி, 28.05.2015
திரைப்பார்வை : புறம்போக்கு
இயல்பாகவே தான் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர் என்று சொல்லாமல் தன் படங்களின் வாயிலாக அதனை வெளிப்படுத்தி வருபவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.
இவரின் படங்கள் அனைத்தும் அனைவராலும் அந்தந்த காலகட்டத்தில் பேசப்படுபவையாகவே அமையும், அதற்கு இந்த புறம்போக்கு என்கிற பொதுவுடைமை திரைப்படம் விதிவிலக்கல்ல.
இந்த திரைப்படம் ஒரு வழக்கமான திரைப்படம் கிடையாது. ஆழமான சமூக கருத்தினை அடிப்படையாகக் கொண்டது. தேசத் துரோகக் குற்றச்சாட்டிற்காக மூன்று மரண தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டிய குற்றவாளி ஆர்யா. இந்த மரண தண்டனையைக்கூட அனுபவமிக்க, கைதேர்ந்த தூக்கிலிடும் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரை வைத்தே செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இந்த பாலுச்சாமி என்கிற ஆர்யாவின் தேசத்துரோகம் அமைந்திருக்கிறது.
தூக்கிலிடும் அனுபவத்தை தன் தந்தையின் மூலமாக பெற்றிருக்கும் எமலிங்கம் என்கிற விஜய் சேதுபதியை வலை வீசிப் பிடிக்கிறது சிறை நிர்வாகம். கலாசியாக பணியாற்றும் விஜய் சேதுபதி முதலில் வரமாட்டேன் என்று முரண்டு பிடித்து பின்பு ஒத்துக்கொள்கிறார். தூக்கிலிட அல்ல, தூக்கில் தொங்க வேண்டியவரைக் காப்பாற்ற. கதாபாத்திரங்களின் பெயர்களையே பொருத்தம் பார்த்து வைத்துள்ளார் இயக்குநர். தமிழகத்தின் புரட்சி வீராங்கனை வேலு நாச்சியார் அவர்களின் பாசறையில் முக்கிய பங்கு வசித்து, பின்னர் ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்த குயிலியின் பெயர் கார்த்திகாவிற்கும், சுதந்திரப் போராட்ட காலத்தில் மதுரையில் பிறந்து பின்னர் ஆந்திராவில் வாழ்ந்த வரலாற்று நாயகன் பாலுவின் பெயரை ஆர்யாவிற்கும், ஆங்கிலேயர்களின் கல்வி முறையையும், அவர்களின் கடுமையான தண்டனையையும் அறிமுகப்படுத்தியவருமான மெக்காலேவின் பெயர் சிறைத்துறை அதிகாரி ஷாமுக்கும் வைக்கப்பட்டுள்ளன.
படத்தின் தொடக்கத்திலேயே வெளிநாடுகளில் குப்பை என்று சொல்லப்படுபவையெல்லாம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு அப்பாவி மக்களுக்கு ஆபத்தாக மாறி வருவதையும், குப்பைக் கூளங்களால் இந்தியாவே குப்பையாகிக் கொண்டிருப்பதையும் இந்த ஏகாதிபத்திய அவலட்சணத்தை இந்திய அரசு மறைமுகமாக ஊக்குவித்து வருவதையும் கடுமையாகச் சாடியிருக்கிறார் இயக்குநர்.
திரைப்படத்தின் வசனங்கள் மிகவும் கூர்மையானவை. நம் புத்தியை குத்திக் கிளறுகிறது. கிடங்குகளில் இருப்பு வைத்து வீணாகிக் கொண்டிருக்கும் தானியங்களை மக்களுக்கு பிரித்துக் கொடுக்கச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிடுகிறது. எடுத்துக் கொடுத்தால் உள்ளூர் போலீஸ் கைது செய்கிறது என்று நாயகன் பேசும்போது காட்சியோடு ஒன்றிப்போன பார்வையாளர்களுக்கு அரசின் மீதான கோபம் கைத்தட்டலாக வெளிப்படுகிறது.
இப்படிப்பட்ட வசனங்கள் வாயிலாக பொதுவுடைமை என்றால் என்ன? மார்க்சியம் என்றால் என்ன? மக்களுக்கும் மார்க்சியத்திற்கும் இடைவெளி ஏன்? யார் மக்கள் என்பதையெல்லாம் விலாவாரியாக இயக்குநர் விளக்கியுள்ளார்.
நடிகர் ஷாமுக்கும், ஆர்யாவுக்குமான பல வசனங்கள் இன்றைய புரட்சிகர அரசியலை எடுத்துக் காட்டுகிறது.
நீ கொஞ்ச நாள்ல சாகப்போற தூக்கு தண்டனைக் கைதி என்ன எழுதப்போற? என்று சிறை அதிகாரி ஷாமின் கேள்விக்கு எல்லோருமே ஒரு நாள் சாகத்தான் போறோம், சாகுறதுக்கு முன்னாடி என்ன செய்யுறோம் என்பதுதான் முக்கியம் என்ற பாலுவாகிய ஆர்யாவின் பதில் இறப்பதற்கு முன் வயலின் வாசிக்க கற்றுக்கொண்ட சாக்ரடீஸை நினைவுப்படுத்துகிறது.
வெறுமனே தூக்குத் தண்டனைக்கு எதிரான திரைப்படமாக காட்டாமல், ஏன்? எதற்கு? எதனால்? என்பதற்கான காரண காரியங்களுடன் விளக்கமாக காட்சிகளை நகர்த்தியுள்ளார் இயக்குநர்.
இன்றைய குடி தமிழகத்தின் அவலநிலையை தோலுரித்துக் காட்டும் வகையில், குடும்பம் அழியுது ஆனால் அரசு நடக்குது என்ற பாடல் வரிகளை இடம்பெறச் செய்து அசத்தி இருக்கிறார்.
பாலியல் தொழில் செய்யும் பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, அவளையும் நல்லவளாக மாற்றிடலாமே என்ற தாயின் வசனங்கள் தோழர்களின் சமூகம் சார்ந்த அக்கறையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
சிறைச்சாலையை வடிவமைத்த கலை இயக்குநரையும், அதை அழகாக பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளரையும் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
மொத்தத்தில் புறம்போக்கு என்னும் பொதுவுடைமை, பாலைவனத்தில் ஒரு சோலை? பொதுவுடைமை ஒளிச்சிந்தும் புரட்சி வெடி!
- அமுதரசன்
வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
ஆலயம் இதையும் வடசொல் என்று கூறுகின்றார்கள் பார்ப்பனரும் அவர் அடியார்க்கடியாரும். ஏன் கூறமாட்டார்கள். ஏமாந்தாரும் காட்டிக் கொடுத்தாரும் நிறைந்த தமிழகத்தில்? ஆல் என்பதனடியாகப் பிறந்தது இச்சொல். ஆல்+அ+அம் எனின் அவ்வும், அம்மும் சாரியைகள். அம் என்பது அகம் என்பதன் திரிபு எனினும் அமையும். ஆலயம் என்பன் நேர்பொருள் ஆலாகிய இடம் என்பதாம். முன்நாளில் ஆலின் அடியில் அமைந்த நிழல் மிக்க பேரிடத்தை வழக்குத் தீர்ப்பிடமாகவும், கல்வி பயிலிடமாகவும், விழா நடைபெறுமிடமாகவும் கொண்டு பெருமைப்படுத்தினார்கள். அதுவே பிற்காலத்தில் உருவ வணக்கத்திற்குரிய இடமாயிற்று என்றும் ஆராய்ந்துரைத்தார்கள் அறிஞர்கள் பலர். ஆலயம் இடம் என்ற பொருளில் இலக்கியங்களிலும் வந்துள்ளது.
.................. மழை இடிப்புண்டு ஓர் நாகம் ஆலயத்தழுங்கி யாங்கு மஞ்சரி அவல முற்றாள். (சீவக சிந்தாமணியின் 897 ஆவது பாடல்) என்று வரும் அடிகளில் ஆலயம் என்பது நாகம் தங்கும் இடம் என வந்துள்ளது. தான் விளையாடி மேனாள் இருந்ததோர் தகைநல் ஆலைத் தேன் விளையாடும் மாலை யணிந்தபொற் பீடம் சேர்த்தி யான் விளையாடும் அய்ந்தூர் அதன்புறம் ஆக்கி னானே! என்ற சிந்தாமணிச் செய்யுளையும் நோக்குக.
எனவே, ஆலயம் காரணப் பெயராகிய தூய தமிழ்ச் சொல்லே. நாகரிகம் நகர சம்பந்தம் நாகரிகம் என்று கரடி விடுவார் தமிழின் பகைவர். அன்று! நாகரிகம் தூய தமிழ்ச் சொற்றொடர் என்க, என்னை? நாகம் என்ற சொல்லுக்கு, நாகன் விண் குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பு யானை என்ற நூற்பாவினால், இத்தனை பொருள்கள் இருப்பது அறியப்படும். எனவே, நாகம் மலைக்கும் பெயர். நாகர் என்பது மலையாளிகள் என்பதாயிற்று. இனி இகத்தல் என்பது பகைத்தல் வெறுத்தல் என்பதாம். நாகரிகம் என்பது நாகர்களை _ மலையாளிகளை வெறுப்பதோர் பண்பாடு என்க. நாகரிகம் ஈறு திரிந்ததோர் ஆகுபெயர். பண்டு தீயொழுக்கத்தவரான ஆரியர் தமிழரால் புறந்தள்ளப்பட்டனர். அவ்வாரியர் மலைப்பாங்கில் ஒதுங்கி வாழ்ந்தனர். அவர் தீயொழுக்கம் தமிழர்க்குத் தீரா வெறுப்பை உண்டாக்கிற்று. தமிழரிடத்து _ ஓர் புதிய பண்பாடு தோன்றியது. நாகரை _ நாகரின் தீயொழுக்கத்தை வெறுப்பதென்று அன்று தோன்றியதே நாகரிகம் என்பது. ஆதலின் நாகரிகம் காரணம் பற்றி வந்த செந்தமிழ்ச் செல்வமே என்க. (குயில், 08.07.1958) வேட்டி! இது வேஷ்டி என்ற வடசொல்லின் சிதைவாம். இவ்வாறு பார்ப்பனரும், பார்ப்பனர் அடியாரும் பகர்வர்.
வெட்டப்படுதலின் வேட்டி எனத் தூய தமிழ்க் காரணப்பெயர். வெட்டல் என்ற தொழிற் பெயரின் அல், இறுதிநிலை கெட, வெட்டு என நின்று முதல் நீண்டது வேட்டு என. அது இ என்னும் பெயர் இறுதி பெற்று வேட்டி ஆனது. அறுக்கப் படுதலின் அறுவை என்றும், துணிக்கப் படுதலின் துணி என்றும், துண்டிக்கப் படுதலின் துண்டு என்றும் வருவதும் ஒப்பு நோக்கத் தக்கதாகும். முட்டி இது முஷ்டி என்ற வடசொற் சிதைவாம். முட்டுதல், முட்டு, முட்டி என வந்தது காண்க.
(குயில், 15-07-1958)
அறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமும்’
ஆசிரியர்: பேராசிரியர் அ.அய்யாசாமி வெளியீடு : அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், 10 (ணி55), மூன்றாம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை- -_ 600041. விலை: ரூ.50 பக்கங்கள்: 72
அண்ணாவின் வாழ்வு என்பது தனிமனிதரின் சராசரி வாழ்வாகாது. அது வரலாற்றோடு பிணைந்தது. அதிலும் தந்தை பெரியாருடன் இணைந்தது என்னும்போது அந்த வரலாறு இன்னும் முதன்மைப் பெறுகிறது. அண்ணாவின் இளமைக் காலம் முதல் இந்நூலில் விளக்குகிறார். இந்நூலுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அணிந்துரை அளித்து அனைவரும் படித்து, பரப்ப வேண்டு என்கிறார் என்றால் அந்நூலின் உள்ளடக்கம் எத்தகையது என்பதை எளிதில் உணரலாம்.
தி.க.வும் தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை இந்நூல் விளக்குகிறது. ஒரே நோக்கத்திற்கான இரு பிரிவுகள் என்பது அதன் பொருள். அதை மிகச் சரியாக அய்யாவும் அண்ணாவும் உறுதி செய்தனர். அதன் பின் கலைஞரும், அன்னை மணியம்மையாரும், தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் நிலைநாட்டியுள்ளனர். இந்தத் துப்பாக்கிக்கு மட்டுமே ஆரியம் அலறுகிறது என்பதே அந்த வெற்றியை வெளிப்படுத்துகிறது.
அண்ணா கண்ட _ கொண்ட ஒரே தலைவர் பெரியார். பெரியாரின் வழிசென்று அரிய சாதனைகள் புரிந்தவர் அண்ணா. அண்ணாவிடம் பெட்டிச் சாவியை ஒப்படைத்தவர் பெரியார்.
ஜாதி ஒழிப்பு,மத ஒழிப்பின் மூலமே முடியும் என்ற அய்யாவின் முடிவை அண்ணா ஏற்றார். அரசியல் ஈடுபாட்டில் அய்யாவிடம் அண்ணா வேறுபட்டார். விளைவு தி.மு.க.
திராவிட அமைப்புகள் பிரிந்து பிரிந்து வளர்ந்தன. அதன் பயன் தமிழ்நாட்டில் திராவிடம் என்ற சொல்லை, பெரியார் என்ற வழிகாட்டலை சொல்லாமல் அரசியல் இல்லை என்றானது. இதுதான் ஆரியத்தைக் கலக்குகிறது.
அண்ணா அரசியலில் சாதித்தார். அய்யாவின் எண்ணத்தைச் சட்டமாக்கினார். எதிரியின் தோளில் ஏறி எட்ட வேண்டியதை எட்டிய கெட்டிக்காரர் அண்ணா. அவரை இன்றைய தலைமுறைக்கு இந்நூல் அறிமுகம் செய்கிறது கொள்கை வெளிச்சத்தில். இதுபோன்ற நூல்கள் ஏராளமாய் இளைஞர்களைச் சென்றடைய வேண்டும். இது ஒரு தொடக்கப் பாடநூல். இதன் வழி பல்கலைக்கழகம் வரைப் பயிலலாம்.
காரைக்குடி தி.பெரியார் சாக்ரடீசு பெயரால் விருதுகள்
சீரிய பகுத்தறிவாளரும், செயல்வீரரும், உண்மை-பெரியார் பிஞ்சு இதழ்களின் பொறுப்பாசிரியராகக் கடமையாற்றியவருமான காரைக்குடி தி.பெரியார் சாக்ரடீசு அவர்களின் பெயரால் பெரியார் சாக்ரடீசு நினைவு விருது வழங்கும் விழா சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் அவரது முதலாமாண்டு நினைவு நாளில் (12.05.2015) நடைபெற்றது. பெரியாரின் கருத்துக்களை கொண்டு செல்வதில் முனைப்புடன் செயலாற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவது என பெரியார் சாக்ரடீசு நினைவு விருது விழாக்குழுவினர் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டனர். இக்குழுவைச் சேர்ந்த முனைவர் எம்.நாச்சிமுத்து, எழுத்தாளர் அஜயன்பாலா உள்ளிட்டோர் இதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தனர். ஆவணப்பட இயக்குநரும் செயல்பாட்டாளருமான ஆர்.பி.அமுதன் அவர்கள் முதல் விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இயக்குநர் தங்கர்பச்சான் விருதினை வழங்கிச் சிறப்பித்தார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் விழாவில் பங்கேற்று பெரியார் சாக்ரடீசு குறித்து நினைவுரையாற்றினார். இதழாளர்கள் கோவி.லெனின், மை.பா.நாராயணன் ஆகியோர் தங்களுக்கு பெரியார் சாக்ரடீசுக்கும் இடையிலான நட்பையும், அவர் தம் பணியையும் எடுத்துரைத்தனர்.
இதேபோல், காரைக்குடி பாரதிதாசன் தமிழ்ப்பேரவையின் சார்பில் 24.05.2015 அன்று காரைக்குடியில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் விழாவில், செம்மொழித் தமிழுக்குச் சிறந்த பணியாற்றிவரும் அழகப்பா பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் சே.செந்தமிழ்ப்பாவை அவர்களுக்கு அறிவாளர் தி.பெரியார் சாக்ரடீசு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
பெரியாரியலைப் பரப்பும் பணியிலும், அதை நோக்கி இளைஞர்களை ஈர்க்கும் பணியிலும் தன் வாழ்க்கையைச் செலவிட்டு, எண்ணற்ற புதிய படைப்பாளர்களை உருவாக்கி, இளம் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், படைப்பாளர்களையும் அடையாளம் கண்டு, ஊக்குவித்து நெறிப்படுத்திய பெரியார் சாக்ரடீசின் பெயரால், அதே பணியை மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தல் சாலப்பொருத்தம். பெரியார் சாக்ரடீசு மறைவின்போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஆயிரம் பெரியார் சாக்ரடீசுகளை உருவாக்குவோம் என்ற வரி செயல்வடிவம் பெற இப்பணிகள் தான் அடிகோலும்.
குரங்குக்கு நோட்டீஸ்!
திங்கள், 15 ஜூன் 2015
மத்திய பிரதேச மாநிலம், பிண்ட் மாவட்டத்தில் உள்ள பஜாரியா என்ற இடத்தில் உள்ள அனுமார் கோவில் சமீபத்தில் பெரிதாகக் கட்டப் பட்டது. பெரிதாகக் கட்டப் பட்ட போது அரசு நிலத் திலும் ஆக்ரமித்து மண்டபம் ஒன்றும், சிறிய ராமர் கோவி லும் கட்டப்பட்டன. இதனை எதிர்த்து அப்பகுதியில் உள்ள வணிக அமைப்பினர் மாநகராட்சியில் முறையிட் டனர். மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காத தால் குவாலியர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி வணிக அமைப்பின் கோரிக் கையை ஏற்று, அரசு நிலத் தில் கட்டப்பட்ட கோவில் மற்றும் மண்டபத்தை இடிக்க வேண்டும் என்று உத்தர விட்டார்.
இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் அந்தக் கோவில் நிர்வாகி வைபவ் சுக்லா என்பவருக்கு நோட் டீஸ் அனுப்பியது. அதற்குப் பதிலளித்த பூசாரி இந்தக் கோயிலை அனுமார் மற்றும் அவரது வானரங்கள்தான் (குரங்குகள்) நிர்வகிக்கின்றன.
அவர்கள்தான் இந்தக் கோவிலுக்கான உரிமையா ளர்கள், நான் அவர்களுக்குப் பணிவிடை செய்யும் சாதா ரண தொண்டன். ஆகவே எனக்கு இந்தக் கோவில் அத்துமீறி கட்டப்பட்ட ராமர் கோவில் மற்றும் மண்ட பத்தை இடிக்க உரிமை யில்லை என்று கூறி விட்டார்.
இதனை அடுத்து மாநக ராட்சி நிர்வாகம் குரங்கு பெயரிலும், ராமர் கோவிலில் சிலையாக உள்ள, ராமர் பெயரிலும் நோட்டீஸ் அனுப் பியுள்ளது. அதில் கூறப் பட்டுள்ளதாவது:
பெறுநர்:
மிஸ்டர் அனுமான் ஜி
நீங்கள் வார்ட் எண் 29 பஜாரியா பகுதியில் புதிய மண்டபமும், ராமர் கோவி லும் உங்கள் ஆணைப்படி கட்டப்பட்டள்ளன. முக்கிய மான சுற்றுலாத்தலமான இப்பகுதி மத்திய அரசின் புராதன துறையினரால் பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள கடைகளுக்குச் செல்லும் பகுதியை ஆக்ரமித்து கோவில் கட்டப்பட்டுள்ளது. இது மாநகராட்சி சட்டம் 1961, 187,223 பிரிவின்படி சட்ட விரோதச் செயலாகும்.
ஏற்கெனவே 17.7.2014 ஆம் தேதி அன்று உங்களது கோவில் பூசாரிக்கு சட்ட விரோதமாக கட்டடம் கோவில் கட்டக் கூடாது என்று அறிவுறுத்திக் கடிதம் எழுதியுள்ளோம். அதையும் மீறி மண்டபம் கோவில் கட்டப்பட்டுள்ளது. பிரச் சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளதால் இந்தக் கடிதம் கண்ட ஒரு வாரத்திற்குள் நீங்கள் விதி முறை மீறி கட்டிய கட்ட டத்தை இடிக்க வேண்டும். அப்படி இடிக்காவிட்டால் அதற்கான அபராதத் தொகை மற்றும் மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
(என்று இதில் எழுதியுள் ளோம்) இப்படிக்கு நிர்வாக அதிகாரி மாநகராட்சி பிண்ட்.
சபாஷ்! மாநகராட்சி நிருவாகம் அனுப்பிய நோட் டீசுக்கு அனுமானாகிய குரங்கு சாமி பதில் அனுப் புமா? அப்படி அனுப்பா விட்டால் சாமியாவது - கீமியாவது எல்லாம் வெறுங் கல்லு என்ற பகுத்தறிவுவாதி களின் கருத்தை ஏற்றுக் கொள்வார்களா?
பதில் இல்லாத நிலையில் ஒரு தலைப்பட்சமாக (ணிஜ்ஜீணீக்ஷீமீ) தீர்ப்பு வழங்க வேண்டியதுதானே? அப்பொழுது மட்டும் இந்தப் பக்தர்கள் முஷ்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பு வார்கள். ஆம் மனிதர் என் பது உண்மை - கடவுள் என்பது பொய் என்று ஆகி விட்டதா இல்லையா?
- மயிலாடன்
இன்றைய ஆன்மிகம்?
பக்தி
தந்தையைக் கொன்று, தாயைப் புணர்ந் தவனுக்கு மதுரையில் சிவன் மோட்சம் கொடுத்தான் என்று எழுதி வைத்துள் ளார்களே இதுதான் பக்தி வழிகாட்டும் ஆன்மிகமா?
செய்தியும் சிந்தனையும்
ஏழுமலையான்
செய்தி: திருப்பதி கோவி லுக்கு மேலே விமானம் பறந்தால் ஆகம விதிப்படி கேடு விளையும்.
- திருப்பதி கோயில் அர்ச்சகர்
சிந்தனை: எத்தனையோ ஆண்டுகளாக திருப்பதி கோயிலுக்கு மேலே விமா னங்கள் எல்லாம் பறந்து கொண்டுதான் உள்ளன. அப்பொழுதெல்லாம் ஏற் படாத கேடு திடீரென்று குதிக்கிறதோ
அது என்ன திருப்பதி ஏழுமலையின் ஸ்பெஷல் மற்ற மற்ற கோவில்களுக்கு மேலே பறக்கலாமோ!
சிந்திக்க முடிந்தது
புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் ஒன்று இல்லை; அது இருக்கவேண்டிய அவசிய முமில்லை என்று சொன் னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.
_ (விடுதலை, 23.1.1968)
கிஸ்தானும், வங்காளதேசமும் இந்து நாடுகளாம்!
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறுகிறார்
மதுரா, ஜூன் 15_ -பாகிஸ்தான், மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் அனைவரும் இந்து நாட்டில் வாழ்பவர் களே என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மதுராவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொண்ட அதன் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:-
ஒரே இந்து நாடு என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவை யில்லை.இந்தியா என்பது இந்துநாடு என்ற நம்பிக் கையை எந்த விலை கொடுத்தாலும் மாற்ற முடியாது. சில மக்கள் தங்களை இந்துக்கள் என சொல்கின்றனர். சிலர் இந்தியன் என சொல் கின்றனர். இன்னும் சிலர் தங்களை ஆரியர்கள் என் றும் சிலர் உருவ வழி பாட்டில் நம்பிக்கையற்ற வர்கள் எனவும் கூறிக் கொள்கின்றனர். இந்தி யாவை இந்து ராஷ்டிரா என்று ஏற்றுக் கொண் டாலும் எந்த மாற்றமும் இதில் ஏற்படாது.
இந்திய துணைக் கண்டத்தில் வாழும் அனைவருமே இந்துநாட்டை சேர்ந்தவர்கள்தான். அவர்கள் வேறுபட்ட குடியுரிமையை கொண்டி ருந்தாலும் அவர்களுடைய நேஷனாலிட்டி இந்து தான். சிந்து நதி இங்கு ஓடியதால் அரபு மன் னர்கள் இந்த பகுதியை இந்து என அழைக்க தொடங்கினர். பாகிஸ் தான் 1947 ஆம் ஆண்டு இந்தியாவிடம் இருந்து பிரிக்கப்பட்டது. 1971 ல் வங்காளதேசம் பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டது. இந்த நாடுகளில் உள்ள மக்களின் குடியுரிமை மாறுவதற்கு பிரிக்கப்பட்டதே காரணம். ஆனால், அவர்கள் தங்கள் வீடுகளையோ, நாடுகளையோ விட்டு செல்லவில்லை. எனவேதான் அவர்களின் நேஷனாலிட்டி இன்னும் மாற வில்லை என்று நான் கூறுகிறேன். சில மக்கள் தெளிவில்லாமல் தங்களை கிறிஸ்தவர்கள் என்றும் முஸ்லீம்கள் எனவும் கூறிக் கொள்கின்றனர். இந்த நிலப்பரப்பின் பழங்கால பெயர் இந்துஷ்தான். வெளிப்படையாகவே இங்கு வாழும் மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்துக்களே என்று தெரிவித்தார்.
திராவிடர் கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நன்றி
சென்னை, ஜூன் 15_ இந்திய கம்யூனிஸ்டு கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளி யிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க் சிஸ்டு) மற்றும் இடது சாரி கட்சிகளின் ஆதர வோடு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்த லில் போட்டியிடும் சிபி அய் வேட்பாளர் சி.மகேந் திரனுக்கு ஆதரவு அளிப்ப தென திராவிடர் கழக மாநிலக் குழு முடிவு செய்துள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பதுடன் திராவி டர் கழக தலைவர் கி.வீர மணிக்கு சிபிஅய் தமிழ் நாடு மாநிலக்குழு சார் பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜனதா தளம் (எஸ்) ஆதரவு
இதற்கிடையே சி. மகேந்திரனுக்கு மதச்சார் பற்ற ஜனதா தளம் ஆத ரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் பி.முக மது இஸ்மாயில் தலைமை யில் சென்னையில் நடை பெற்றது. துணைத் தலை வர் எம்.சொக்கலிங்கம், மாநிலப் பொதுச் செயலா ளர்கள் கே.ஜான்குமார், கரு. பவனாச்சாரி உள்ளிட் டோர் பங்கேற்றனர். கூட் டத்தில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்த லில் போட்டியிடும் இடது சாரி இயக்கங்களின் வேட் பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து களப்பணி ஆற் றுவது எனத் தீர்மானிக் கப்பட்டது.
சீரான உடல் நலத்துக்கு தூதுவளை
சிறிய, உடைந்த முள் போன்ற இலைகளையும், மித ஊதா நிற பூக்களையும், உருண்டையான பச்சைநிறக் காய்களையும், சிவப்பு நிறப் பழங்களையும், வளைந்த முட்களைப் போன்ற தண்டையும் உடைய தூதுவளை, கொடி இனமாகும். இதை நம் வீட்டு தோட்டத்தில் பந்தல் போட்டு வளர்ப்பது சிறந்த முறையாகும்.
அய்ந்து ஆண்டுகள் வரை வளரும் இக்கொடியின் தண்டுகளில் முட்கள் இடைவிடாமல் நிறைந்திருக்கும். சரியான முறையில் தூதுவளை கொடியை வளர்த்தால், அவை அதிக நாட்கள் வரை வளர வாய்ப்பு உள்ளது.
தூதுவளையின் வேர் முதல் பழம் வரை எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இதன் இலையும் பூவும் கோழை சளியை அகற்றவும், நம் உடலைப் பலப்படுத்தவும், வீரிய சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. இதன் காய் மற்றும் பழங்கள்நமக்கு பசியைத் தூண்டுவதுடன், மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது. தமிழகம் முழுவதும் பரவியுள்ள இந்த தூதுவளை கொடி சிங்கவல்லி, ரத்து நயத்தான், தூதுவேளை, தூதுளம், தூதுளை என்று அழைக்கப்படுகிறது.
மருத்துவ குணங்கள்- தூதுவளை இலைகளை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி பொடியை காலை வேளையில் மட்டும் ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து குடித்தால் நாக்கு வறட்சி, கபநீர், மூட்டுவலி மற்றும் காசநோய் குணமாகும். தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, குழம்பாக கடைந்தோ சாப்பிட்டு வந்தால், நெஞ்சில் சேரக்கூடிய கபக்கட்டு நீங்குவதுடன், நம் உடல் பலம் பெறும்.
தூதுவளை இலையை சாறு பிழிந்து, அதே அளவு நெய்யில் காய்ச்சி, ஒரு தேக்கரண்டி அளவு 2 வேளை தொடர்ந்து குடித்து வந்தால் எலும்புருக்கி காசம், மார்சளி உடனடியாக நீங்கும். தூதுவளை காயை நிழலில் உலர்த்தி காயவைத்து தயிர், உப்பு சேர்த்து பதப்படுத்தி, எண்ணெயில் வறுத்து உணவுடன் உண்டுவர மனநல பாதிப்பு, இதய பலவீனம், மலச்சிக்கல் போன்றவை குணமாகும்.
தூதுவளை சமூலத்தை 50 கிராம் அளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, 150 மி.லி. அளவுக்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி, தொடர்ந்து 2 வேளை குடித்து வந்தால் இரைப்பு, சுவாச சளி, இருமல் குணமாகும்.
தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்து பொடியாக்கி புகைமூட்டம் போட்டு நுகர்ந்து வந்தால் மூச்சிரைப்பு இருமல், மூச்சு திணறல் விலகுவதுடன், மார்பில் சேர்ந்த சளி இளகி வெளியேறும்.
தூதுவளை பூக்களை 10 எண்ணிக்கை எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் பாலில் காய்ச்சி வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்து, 48 நாட்கள் தொடர்ந்து 2 வேளையும் பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படுவதுடன் உடல் பலம் பெறுவதுடன், நமது முகமும் வசீகரமாகும்.
நீரிழிவு நோயை போக்கும் முட்டை
மனிதர் களை தாக்கும் முக்கிய நோய் களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது. அதில் டைப் 2 நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு போன்றவைகளால் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் அதிக அளவு கொழுப்பு சத்துகளால் உடலில் குளுக்கோஸ் குறைபாடு ஏற்பட்டு அதன்மூலம் இந்தநோய் ஏற்படுவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக் கின்றன. இந்நிலையில் தற்போது முட்டை சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. முட்டையில் உள்ள கொழுப்பு சத்து உடலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை சரி சமப்படுத்தி சீரமைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகத்தின் இருதயநோய் தடுப்பு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் 432 பேரிடம் ஆய்வு நடத்தினார்கள். அதில் வாரத்துக்கு ஒரு முட்டை சாப்பிடுபவர்களை விட வாரத்துக்கு 4 முட்டை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது. அதன் மூலம் முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் எடையைக் குறைக்க வழி?
நீங்கள் உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும். வராதி என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவை 200 மி .லி அளவில் கிடைக்கும்.
3 ஸ்பூன் மருந்து + 12 ஸ்பூன் (60 மி .லி) கொதித்து ஆறிய தண்ணீர் + கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிடவும். காலையில் மருந்தைச் சாப்பிட்டதும் அரை மணி நேரம் இடது பக்கமாகச் சரிந்து படுத்திருக்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வாய் கழுவி, சூடாகத் தண்ணீரைக் குடிக்கவும். உடல் பருமனைக் குறைக்க இது நல்ல கஷாயம்.
தயிரைத் தவிர்த்து தெளிந்த மோர் அருந்தவும். தேன் கால் ஸ்பூன் சிறிது தண்ணீரில் கலந்து அல்லது திரிபலா எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் 1 ஸ்பூன் (5 கிராம்) 80 மி .லி தண்ணீரில் சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறிய பிறகு, கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, இரவு உணவிற்குப் பிறகு உடனே அருந்த வேண்டும். அதன் பிறகு முன் குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிடலாம்.
உடற்பயிற்சி மிகவும் அவசியம். காலையில் கஷாயம் குடித்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு 40 முதல் 45 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும். நன்கு வியர்வை வரும்படி நடந்தால்தான் எடை, குறையும். பகல் தூக்கம் தவிர்க்கவும்.
தினமணி: லலித் மோடிக்கு வக்காலத்தா?
புதன், 17 ஜூன் 2015 15:16
லலித் மோடி விவகாரத்தில் வழக்கம்போல பி.ஜே. பி.,க்கு வரிந்து கட்டிக்கொண்டு தலையங்கம் எழுதியுள்ளது தினமணி. அதில் ஓரிடம் கவனிக்கத்தக்கது.
பல கோடி ரூபாய் புழங்கும் இடத்தில் (அய்.பி.எல். கிரிக்கெட்டில்) குறைபாடுகள் இல்லாமல் எப்படி இருக்கும்? என்று தலையங்கப் பகுதியில் எழுதியுள்ளது தினமணி.
எப்படி இருக்கிறது நியாயம்?
பல கோடி ரூபாய் புழங்கும் இடத்தில் முறைகேடுகள் நடக்கத்தான் செய்யும். இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று எழுதுகிறது தினமணி.
இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இன்னொரு நேரத்தில் நமக்குப் பயன்படும்.
காவிரி நீர்ப் பிரச்சினை தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினை
பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினால் மட்டும் போதாது!
அனைத்துக் கட்சியினரையும், எம்.பி.,க்களையும் இணைத்து முதல்வர் தலைமையில் தூதுக்குழு பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டும்
தமிழக அரசுக்கு தமிழர் தலைவரின் வேண்டுகோள் அறிக்கை
காவிரி நதிநீர்ப் பிரச்சினை தமிழ்நாட்டின் வாழ் வாதாரப் பிரச்சினை; இதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி களைச் சமாளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் அனைத் துக் கட்சித் தூதுக்குழு ஒன்றை தமது தலைமையில் அமைத்து பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
1. காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கைவைத்து, அதனை தமிழ்நாட்டின் வறண்ட பூமியாகவும், தப்பித்தவறி விடப்படும் (கருநாடகத்தால்) நீர் கழிவுப் பொருள்கள் கலந்த நீராகவும் வருகிறது என்ற வேதனை - விவசாயப் பெருங்குடிகளை மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளது.
பசுமை
தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீரில் விளையும் பயிர் களில் துத்த நாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப் பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
வெந்த புண்ணில் வேல்!
இவைகளோடு, வெந்த புண்ணில் வேலைச் சொருகும் வகையில், கருநாடக அரசு காவிரியின் குறுக்கே நான்கு சிறிய அணைகளைக் கட்டிட மிகவும் மும்முர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இரண்டு பெரிய அணைகளைக் கட்டினால் மத்திய அரசின் அனுமதி பெற்றாகவேண்டும் என்ற சட்ட விதிகளைப் புறந்தள்ளிடவே இப்படி ஒரு தந்திர வியூகம்!
மற்றொரு தந்திரம் தங்களுக்குக் குடிநீர் தேவை என்ற ஒரு பொய்ச் சாக்கைப் பயன்படுத்தி இப்படி ஒரு முயற்சி.
முல்லைப் பெரியாறிலும் பிரச்சினை!
2. இதுபோலவே, கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கட்டின் உயரத்தை தமிழ்நாடு அரசு உயர்த்திட லாம்; மேலும் கூடுதலாகத் தண்ணீரைத் தேக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினையே புறந்தள்ளி, குறுக்கு வழியில், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைக்காமல் தடுக்க, புதிதாக ஒரு அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சின் அனு மதிகூட பெறாமல், தன்னிச்சையாக, துணிவாக அணைகள் கட்ட சர்வே முதலியவற்றை முடுக்கிவிட்டுள்ளது.
இதை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கண்டும், காணாததுபோல இருப்பதும் ஏனோ?
உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் ஆணையம் - மேற்பார்வை பொறுப்பு - வழக்கு - பிரச்சினை ஏற்படினும், தீர்வு தரும் நிலையை உடனடியாகத் தரக்கூடிய பொது அமைப்பாக இன்னும் மத்திய அரசால் அமைக்கப்பட வில்லை!
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே வந்த உச்சநீதி மன்றத் தீர்ப்பு - தேர்தல் முடிந்தவுடன் அமைக்கப்படும் என்று தமிழ்நாட்டிற்கு மோடி அவர்கள் வந்தபோது கூறிய தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று? காற்றில் பறந்து போயிற்றா?
கருநாடகத்தையும், கேரளாவையுமாவது தங்கள் பா.ஜ.க. கட்சி வசப்படுத்த வேண்டுமென்பதற்காக மத்திய அரசு கண்ணை மூடி ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்ளுகிறதா என்ற அய்யம் பரவலாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.
குறுவை சாகுபடிக்கு வழமைபோல இவ்வாண்டும் மேட்டூர் தண்ணீர் ஜூன் 12 இல் திறக்கப்படவில்லை; மாறாக, குறுவை தொகுப்பு உதவி என்ற பஞ்சு மிட்டாயை அழும் குழந்தைக்குக் காட்டுவதுபோன்று தமிழக அரசு காட்டி விவசாயிகள் வீட்டு அடுப்பில் பூனை தூங்கச் செய்கிறது!
கடிதம் எழுதினால் போதாது - பிரதமரைச் சந்திக்க அனைத்துக் கட்சி தூதுக்குழு தேவை!
இதற்காக பிரதமருக்கு முதலமைச்சர் வெறும் கடிதம் எழுதினால் போதாது.
அதன்மேல் நடவடிக்கையாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கருநாடகா, கேரள அரசுகளின் அணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு, மேலும் காலம் தாமதிக் காமல், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட உடனடியாக முன்வரவேண்டியது அவசியம்.
இதற்காக முதல்வர் தலைமையில், அனைத்துக் கட்சியினரை அழைத்து, எம்.பி.,க்களோடு இணைத்து, தூதுக்குழுவாக பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்ய தமிழக அரசு, முதலமைச்சர் முன்வரவேண்டும்.
கட்சிக் கண்ணோட்டம் வேண்டாம்!
இதில் கட்சிக் கண்ணோட்டத்திற்கு இடமின்றி, அனைத் துக் கட்சிகளும் முதல்வரின் முயற்சிக்கு - அரசியலைத் தாண்டி - ஒத்துழைப்பு நல்குவர் என்பது உறுதி.
எனவே, மேலும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக இக்கருத்தினை ஏற்று செயல்படவேண்டியது அவசரம்! அவசியம்!!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
17.6.2015
இன்றைய ஆன்மிகம்?
உதைபட்டது சிவனா? ஆறுமுகசாமியா?
மாணிக்கவாசகர் தனது இறுதிக் காலத்தில் சிதம்பரத்தில் வாழ்ந்து வந்தார். ஒருமுறை அவரைப் பார்க்க அந்தணர் உருவில் வந்தார் சிவபெருமான். மாணிக்க வாசகரிடம், இதுவரை அவர் பாடிய பாடல்களை தனக்கு சொல்லி அருளும்படி வேண்டினார். மாணிக்கவாசகரும் அந்தணரை அருகில் இருத்தி, தாம் பாடிய திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் சொல்லியருளினார். அந் தணரும் தம் திருக்கரத்தால் அவைகளை எழுதி முடித்தார்.
பின்னர் திருக்கோவை என்ற நூல் பாடலையும் பாடச் சொல்லிக் கேட்டு, அதனையும் தன் திருக்கரத் தால் எழுதி முடித்தார். பின்னர் அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தார். அதைக் கண்ட மாணிக்க வாசகர், வந்தது சிவபெருமானே என்று எண்ணி ஆனந்தக் கண்ணீர் பெருக்க இறைவனைத் துதித்தார்.
திருவாதவூரரின் திருவாசகத்தையும், திருக்கோவை யையும் தம் கையால் எழுதிய இறைவன், அந்த நூல்களை உலகறியச் செய்வதற்காக, நூலின் முடிவில், திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து என கையொப்பம் இட்டு தில்லைச் சிற்றம்பலத்தில் வாசல் படியில் வைத்தருளினார்.
இப்படி சிவனே கைப்பட எழுதிய திருவாசகத்தை சிவனடியார் ஆறுமுகசாமி சிதம்பரம் நடராஜன் (சிவன்) கோவில் சிற்றம்பல மேடையில் பாடியபோது, தீட்சதர் கள் அடித்து உதைத்தனரே - அப்படி என்றால், உதை பட்டது சிவனா? ஆறுமுகசாமியா?
இதுதான் பா.ஜ.க. ஆட்சி!
தாழ்த்தப்பட்ட சிறுமியின் நிழல் பட்டதால் தாக்கப்பட்ட பெருங்கொடுமை
சத்தார்பூர், ஜூன் 17_ பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கணேஷ்புரா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சிறுமி யின் நிழல் பட்டுவிட்டது என உயர் ஜாதி ஆணவத் தால் அச்சிறுமியை மோச மாகத் தாக்கிய கொடுமை நடந்துள்ளது.
13.6.2015 அன்று கணேஷ்புரா கிராமத்தில் ஒரு சிறுமி தண்ணீர் எடுப்பதற்காக ஆழ் துளைக்கிணறு அமைக் கப்பட்ட இடத்துக்கு சென்றாள். அப்போது உயர்ஜாதியைச் சேர்ந்த ஒருவர்மீது தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த அச்சிறுமியின் நிழல் விழுந்ததாம். அதனால், அச்சிறுமியை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
அப்பெண்ணின் தந்தை தகவல் அறிந்து தன் மகளுடன் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க செல்ல முயன்ற போது, மற்றவர்களால் தடுக்கப்பட்டார். இருந்த போதிலும், வேறு வழியில் காவல்நிலையத்துக்கு சென்று தன் மகள் தாக் கப்பட்டது தொடர்பாக புகார் அளித்தார். புகா ரின்பேரில் காடி மல் ஹேரா காவல்நிலையத் தில் வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறை கூடுதல் கண் காணிப்பாளர் நீரஜ் பாண்டே கூறும்போது, சிறுமியின் தந்தை அளித்த புகாரில் குறிப் பிடும்போது, அவர் மகள் கிராமத்தில் உள்ள பொதுக்குழாயில் தண் ணீர் எடுப்பதற்காக சென்றபோது (உயர் ஜாதியைச் சேர்ந்த) புரான் யாதவ் என்பவர்மீது அவர் மகளின் நிழல்பட் டது என்று அச்சிறுமியை அவர் தாக்கியுளளார். அதைத் தொடர்ந்து உயர்ஜாதியினர் என்று கூறிக்கொள்ளும் அவர் குடும்பத்து பெண்ணும் சிறுமியை சரமாரியாகத் தாக்கியதோடு, இனிமேல் அந்த பொதுக்குழாய் பக்கம் வரக்கூடாது என் றும் எச்சரித்து உள்ளனர். அப்படி மீண்டும் அந்தப் பொதுக்குழாய் பக்கம் அச்சிறுமியைப் பார்த்தால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கக்கூடாது என் றும் தடுத்துள்ளனர். ஆனால், வேறு வழியாக காவல்நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்து விட்டார்கள் என்று கூறினார்.
அந்தப் புகாரின் பேரில் இந்திய தண்ட னைச் சட்டப்பிரிவுகள் 323, 341, 506 ஆகிய பிரி வுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடை பெற்று வருகிறது.
இந்தியாவின் பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் தீண்டாமை இன்னமும் சர்வ சாதாரணமாக இருந்துவருகிறது.
தாழ்த்தப்பட்ட வகுப் பினத்தவர்கள் உயர்ஜாதி யினராக இருப்பவர்களை சந்திப்பதோ, அவர்கள் சமைத்த உணவை பகிர்ந்து கொள்ளுவதோ முடியா தது மட்டுமன்றி, அவர்கள் பார்வையில்கூட படக் கூடாது என்கிற நிலை இருந்துவருகிறது. தாழ்த் தப்பட்டவர்களின் நிழல்கூட உயர்ஜாதியினர் மீதுபட்டுவிட்டால் தீட் டாகிவிடுகிறது என்று கூறுகிறார்கள்.
யோகா வேண்டாம்! பி.ஜே.பி. முதலமைச்சர்!
புதன், 17 ஜூன் 2015
பனாஜி, ஜூன் 17- வருகிற 21 ஆம் தேதி உலக யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் அன்றைய தினம் யோகா பயிற்சி மற்றும் சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால் சிறுபான்மையினர் எதிர்ப்பு காரணமாக சூரிய நமஸ்காரம் ரத்து செய்யப்பட்டு யோகா மட்டும் நடத்தப் படுகிறது. கோவாவில் 21 ஆம் தேதி பாம்புலிம் ஸ்டேடி யத்தில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் யோகா சனம் நிகழ்ச்சியில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளு மாறு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
இதற்கு சிறுபான்மையினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது. யோகா பயிற்சி கட்டாயம் என்று கூறப்படாவிலும் அன்றைய தினம் நடத்துவது தங்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் என்று சிறுபான்மையினர் கேட்டுக் கொண்டதால் உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் லட்சுமி காந்த் பர்சேகர் தெரிவித்தார்.
செய்தியும்
சிந்தனையும்
ஆச்சாரம் கெடாதோ...!
செய்தி: தமிழ்நாட்டில் 37 இந்துக் கோவில்களில் தங்கத் தேர் வடிவமைத்துக் கொடுத்தவர் மதுரையைச் சேர்ந்த ரகுமான் என்ற முஸ்லிம்
சிந்தனை: இங்கு மட்டும் ஆச்சாரம் கெடாதோ? தண்ணீருக்குத் தீட்டு; பாலுக்குத் தீட்டு இல்லை என்று சொல்லும் கும்பல்தானே!
சுயமரியாதை
மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடப் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு, தாழ்வு உணர்ச்சி போய் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் ஏற்படவேண்டும்.
_ (குடிஅரசு, 3.4.1927)
நாட்டு நடப்புகள்
நாடாளுமன்றம், நீதிமன்றம், நிருவாகம், பத்திரிகை கள் இவை நான்கும் நாட்டின் தூண்கள் என்று சொல்லப்படுகின்றன. இவை நான்கும் நாணயமான முறையில் நடந்துகொள்ளுமேயானால், நாடும் ஒழுங் காக நாளும் பயணிக்கும் என்பதில் அய்யமில்லை.
ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த நான்கும் நேர்மையான முறையில் நடக்கவில்லை என்பது நன்கு தெரிந்ததுதான்.
எல்லா அமைப்புகளையும்விட கூடுதலான அதிகாரம் படைத்த நீதிமன்றங்களே - ஏன் உச்சநீதி மன்றமே சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நடக்கவில்லை என்கிறபோது, மற்றவற்றைப்பற்றிக் கேட்பானேன்?
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிமீதே வழக்குத் தொடுக்கப்பட்ட நிலை எல்லாம் உண்டே! சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவரே (ஜஸ்டிஸ் இராமச்சந்திர அய்யர்) தன் வயதை தன் பதிவேட்டில் (சர்வீஸ் ரிஜிஸ்டர்) திருத்தி மோசடி செய்து பதவியில் நீடிக்கவில்லையா?
தலைமை நீதிபதியே தவறு செய்யும்போது கடுமை யான அதிகபட்சத் தண்டனையை அல்லவா அளித்திருக்கவேண்டும்? வேலியே பயிரை மேய்வது எவ்வளவுப் பெரிய ஆபத்தானது!
ஆனால், என்ன நடந்தது? குடியரசுத் தலைவராக வும் ஒரு பார்ப்பனர் இருந்ததால், பூணூல் பாலங்கள், நீதிபதிக்கு ஒரு சொட்டு வேர்வைக்குக்கூட சேதாரம் இல்லாமல் வெளியில் அனுப்பிய பவித்திரம் சாதாரணமானதுதானா?
நீதித்துறை இப்படி என்றால், ஆட்சித்துறை எப்படி இருக்கிறது என்பதற்கு இப்பொழுது நடந்துகொண்டு இருக்கும் லலித் மோடி பிரச்சினை ஒன்றே ஒன்று போதாதா? அறிவிக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் காதும் காதும் வைத்தாற் போல உதவி செய்வது எந்த வகையில் சரியானது?
நிருவாகத் துறையின் இலட்சணத்திற்கு ஓர் உதாரணம் அண்மையில் நடைபெற்ற அகில இந்திய மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு. கேள்வி - பதில்கள் குறுஞ்செய்திகளாக உலா வருகின்றன என்றால், மேலே என்ன சொல்லவேண்டும்?
பத்திரிகைகளைப்பற்றிக் கேட்கவே வேண்டாம்; அய்.பி.எல்.லில் பெரும் பணம் புழக்கத்தில் இருப்பதால், அதில் தவறுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததே என்று தினமணி இன்று தலையங்கத்திலேயே குறிப்பிட்டுள்ளதே.
நடுநிலையில் நின்று பேனா பிடிப்பதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் துக்ளக் ஆசிரியர், சம்பந்தப்பட்டவர் பார்ப்பனர் என்றால், அவர் பேனா எப்படியெல்லாம் நாட்டியம் ஆடும்; கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, சிறையிலும் இருந்து வந்தவர்தானே அவாளுக்கு லோகக் குரு; வழக்கு நடந்துகொண் டிருந்தபோது, சங்கராச்சாரியார் விஷயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது! என்று எழுதினாரா இல்லையா?
பக்தி, தாத்பர்யம், தார்மீகம்பற்றியெல்லாம் எச்சில் ஒழுகப் பேசுகிறார்களே - அந்தப் பக்தி லோகம் எப்படி இருக்கிறது? இன்றைய ஏடுகளில்கூட ஒரு சேதி வெளிவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருநின்ற வூர் பக்தவத்சலப் பெருமாள் கோவிலின் அர்ச்சகர் மணிவண்ணன் - புதிய தேர் செய்வதாகக் கூறி, ரூ.60 லட்சம் கையாடல் என்று, தினமலரே செய்தி வெளியிடுகிறதே!
சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி, தங்கும் இடத்தில் மதுபாட்டில்கள், விபச்சாரி வீட்டில் கைது என்றெல்லாம் செய்திகள் வெளிவரவில்லையா?
குஜராத் மாநில சவுமிய நாராயணசாமி கோவில் குருக்கள் குடியிருப்பில் விபச்சாரிகளுடன் குருக்கள் சல்லாபம் என்ற செய்தி பலான படங்களுடன் வெளிவரவில்லையா?
வெகுதூரம் போவானேன்? காஞ்சிபுரம் மச்சேந்திர நாதர் கோவில் குருக்கள் பார்ப்பான் தேவநாதன், கோவிலுக்குச் சாமி கும்பிட வந்த பெண்களைப் பாலியல் வெறிக்குப் பயன்படுத்தினான் என்ற தகவல் கள் பக்கம் பக்கமாக வெளிவரவில்லையா? இதுகுறித்து எந்தப் பார்ப்பன ஏடுகளாவது மூக்குச் சிந்தியது உண்டா?
பக்தி பெருகினால் ஒழுக்கம் பரவும் என்று சொல்லு வதெல்லாம் யாரை ஏமாற்ற? இன்னும் சொல்லப் போனால், பக்தி பெருகப் பெருகத்தான் ஒழுக்கக்கேடும் வால் முளைத்து, இறக்கைகள் முளைத்து வீறுகொண்டு விண்ணில் பறக்கின்றன.
12 ஆண்டுகள் பாவம் செய்து விட்டு 12 ஆவது ஆண்டு வரும் கும்பகோணம் மகாமகக் குளத்தில் குளித்துவிட்டால், பாவங்கள் பஞ்சாகப் பறந்து போய் விடும் என்றால், நாட்டில் ஒழுக்கக்கேடாக நடக்காதவன் பைத்தியக்காரனாகப் பார்க்கப்படமாட்டானா?
குறைந்த முதலீடு - கொள்ளை லாபம் என்றால், பலகீனமான மனிதன், அந்தப் பக்கம்தானே தாவுவான்!
இந்து மதமும், பார்ப்பன தர்பாரும் நாட்டில் நீடிக் கும்வரை நேர்மை, நடுநிலைமை, ஒழுக்கம் என்பதெல் லாம் குதிரைக் கொம்பே! ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் கோணல் புத்திதான் நடமாடும்.
இதைத் தந்தை பெரியார் உரைக்கல்லில் உரைத்துப் பார்த்து, பகுத்தறிவைக் கூர்தீட்டிப் பார்த்தால், உண்மைகளின் தன்மை வெளிச்சமாகவே தெரியும்!
சிறப்பான வாழ்விற்கு சிந்தனையே மூலதனம்
யானைக்கு மதம் பிடித்தால் காடு தாங்காது, மனிதனுக்கு மதம் பிடித்தால் நாடு தாங்காது என்பார்கள். இதற்கு புண்ணிய பாரதமே. ஒரு சிறந்த எடுத்துக் காட்டு, காரியம் ஆகிறவரை காலைப் பிடிப்பதும் காரியம் முடிந்ததும் கழுத் தைப் பிடிப்பதும் பார்ப்பனியத்துக்கே உள்ள தனிப்பண்பு.
விடுதலை ஞாயிறு மலரில் (7.6.2015) தி இந்து தமிழ் நாளேட்டில் வந்துள்ள பத்து ரூபாய்த் தாள் படம் ஒன்றே போதும் இதனை உறுதிப்படுத்த! வெள் ளையரை விரட்டும்வரை தேவைப்பட் டார் காந்தி. விடுதலை நாள் விழாவிற்குக் கூட அவர் அழைக்கப்படவில்லை. அப் படியிருக்க ரூபாய்த் தாளிலே நோட் டிலே மட்டும் அவர் படத்தை எப்படி இடம் பெறச் செய்வார்கள்? அதனால் தான் காந்தியாரையே சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு நாடு நெடுகிலும் சிலை வைக்க வேண்டுமென்று கொஞ்சமும் கூச்சநாச்சமோ மனித நேயமோ இன்றி உளறிக் கொண்டிருக்கிறார்கள்! குடி வைத்த வீட்டிலேயே கொள்ளி வைக்கத் தயங்காத இந்தக்கும்பலுக்கு அன்றும் இன்றும் காந்தியார் மீது ஏன் இத்தகைய வெறுப்பு என்பதற்கும் காரணம் இருக் கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல இதோ, ஒரு சான்று 1909இல் இந்தியன் ஒப்பீனியன் என்ற இதழில் காந்தியார் எழுதியிருப் பது:
திராவிட மொழிகளில் மிகச்சிறந்தது தமிழ்மொழி. அய்ரோப்பிய நாடுகளுக்கு லத்தீன் மொழி எப்படியோ, அதே போன்று இந்தியாவுக்குத் தமிழ் மொழி பழைமையானது ஆகும். எந்த வகையில் பார்த்தாலும் லண்டன் பல்கலைக்கழகத் தில் விருப்பப்பாடமாக ஏற்கத் தகுந்தது தமிழே ஆகும். அதுமட்டுமல்ல. இந்திய ஒருமைப்பாட்டிற்காக வடமாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ் மொழியைக் கற்க வேண்டும்!
இது பாக்யா இதழிலும் (4.10.2013) வெளியாகி இருக்கிறது.
இந்தியாவையே இந்துத்வா நாடாக்க வேண்டும். சமஸ்கிருதத்தைத் தேசிய மொழி ஆக்கவேண்டும். கீதையை தேசிய நூலாக்க வேண்டும். காஷ்மீரி லிருந்து கன்னியாகுமரிவரை பார்ப்ப னியப் பேரரசே தழைத்துச் செழிக்க வேண்டும் என்று துடிதுடித்துக் கொண் டிருப்போருக்கு காந்தியாரின் இந்தக் கருத்து பிடிக்குமா? பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பித்து, அடுத்தவர் உழைப்பை அட்டைபோல் உறிஞ்சி, தானும் தன் இனமும் மட்டுமே கொழுக்க வேண்டும் என்ற கெடு நினைப்பு கொண்டோருக்கு, காந்தியார் தமிழ்மொழியைப் புகழு வதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? அதனால்தான் அவர்களுக்கே உரித் தான அந்த சிறுமைப் பண்பிலே இறங்கி இருக்கிறார்கள்.
அரசியல் பற்றியும், சமூகக் கருத்துக் கள் பற்றியும் சொல்லும்போது வர லாற்றுப் பிழைகள் இருக்கக்கூடாது. ஆனால் பார்ப்பனியமோ புராணப் புளுகுகளை எல்லாம் வரலாறு என புளுகும். தமிழகவரலாற்றுச் செய்தி களையே ஊடகங்களைத் துணை கொண்டும், பணபலம், அதிகாரபலம் கொண்டும் அப்படியே புரட்டிப்போட்டு விடும்! தமிழர் தனது உழைப்பால் உயர்ந்தால் கூட, அதற்குப் பொறுக்காது. உடனே ஏதாவதொரு பழி சுமத்தி ஒழித்துவிடத்துடிக்கும்!
இதனைத் தமிழினம் புரிந்து கொண் டால், தன்னலத் தலைவர்களைக் கொண்ட இத்தனை அரசியல் கட்சிகள் முளைத்திருக்காது. கோட்டையிலே பார்ப்பனக்கொடி பறந்திருக்காது!
இனியேனும் ஒற்றுமையின் அவசி யத்தை தமிழ் மக்களின் நலன் கருதி உணர்வார்களா தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள்?
செல்லும் பாதை.. அய்யா தந்த பகுத்தறிவுப் பாதையாக இருக்கும்போது மெல்ல ஓடினாலும் அது வெற்றியிலே தான் முடியும்! இது வரலாறு!! ஆம் சிறப்பான தமிழினத்தின் நல்வாழ்வுக்கு அய்யா, நமக்களித்த சிந்தனையே மூலதனம்!
பகுத்தறிவுச் சிந்தனையால், பார்ப் பனியத்தை வெல்வோம்! அய்யாவின் அறிவுப்படை என்றுமே தோற்றதில்லை!! இதுவும் கடந்த கால வரலாறே!
- நெய்வேலி க.தியாகராசன்,
கொரநாட்டுக் கருப்பூர்
தஞ்சைப் பொதுக் குழுவில் கழகத் தோழர்கள் காட்டிய மகத்தான அன்பு - யான் பெற்ற பெரும் பேறு!
இலட்சியப் போரில் வெற்றி பெற போராட்ட வீரர்களின் பட்டியல் தொடரட்டும்!
பொதுக் குழுவை சிறப்பாக நடத்திய தஞ்சை மாவட்ட தோழர்களுக்குப் பாராட்டு!
கழகத் தலைவர் ஆசிரியர் விடுக்கும் அறிக்கை
தஞ்சாவூரில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழு குறித்தும், கொள்கைக் குடும்பத்தினர் காட்டிய அன்பால், தாம் அடைந்த மகிழ்ச்சிப் பேறு பற்றியும் - எந்தப் பணியைக் கொடுத்தாலும் முகம் சுளிக்காது பெரும் சிறப்புடன் நிகழ்ச்சியை நடத்திக் காட்டும் தஞ்சை மாவட்ட கழகத் தோழர்களின் செயல் திறன் குறித்தும் பாராட்டி அடுத்து நாம் சந்திக்க இருக்கும் இலட்சியப் போராட்டங்களில் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கும் போராட்ட வீரர்தம் பட்டியலின் அவசியம் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
13.6.2015 சனிக்கிழமை தஞ்சையில் சுமார் ஆயிரம் (1000) கழகத் தோழர்கள் - தோழியர் களைக் கொண்ட கழகத்தின் கொள்கைக் குடும்பப் பொறுப்பாளர்களை - 40 நாள்கள் இடைவெளியில் சென்னை மருத்துவமனையிலிருந்து திரும்பி பணியாற்ற பக்குவமாகித் திரும்பிய நான், சந்தித்தபோது அடைந்த எல்லையற்ற கொள்ளை மகிழ்ச்சியை அளக்கத்தான் அளவுகோல் ஏது?
அதேபோல், எம்மைச் சந்தித்த கழகக் குடும்பத்தவரின் மகிழ்ச்சிக் கண்ணீர் அருவியில் குளிக்கத் தள்ளி விட்டனர்!
கொள்கை வாழ்வில் கிடைக்கும் அரும் பேறு! கொள்கை வாழ்வில் கிடைக்கும் அரும் பேறு இது! இதற்கு பட்டமோ, பதவியோ, பணமோ ஒரு போதும் ஈடாகாது!
எனது உணர்ச்சிகளை - அவர்கள் காட்டிய அன்பெனும் வெள்ளத்தில் மிதக்க விட்டேன் என்றாலும் அதை வெளியே தெரியாத அடி நீரோட்டமாகவே அமைத்து விட்டேன்.
நம் அறிவு ஆசானையும், அவரைத் தொடர்ந்து நம்மை வழி நடத்திய அன்னையாரையும் என்றென்றும் தலைவர்களாக ஏற்று, பதவி நாடா, சுகம் தேடா, மானம் பாரா நன்றியை எதிர்பாரா எதிர் நீச்சல் - போராட்ட களம் என்ற தன்னலமற்ற தியாக வாழ்வு - இவைகளையே தங்களது தனித் தன்மையாகக் கொண்ட இயக்கத் தளபதிகள், தளர்ச்சி தலை காட்டாத செயல் வீரர் - வீராங்கனைகளின் பாசறைச் சந்திப்பாக அச்சந்திப்பு - இரு வழிப் பாதையாக அமைந்தது எனக்கு அருமருந்து, அதிக வேக நடைகுன்றா உற்சாக ஊற்று ஆகும்!
தஞ்சைத் தோழர்களின் செயல் திறன்
தஞ்சைக் கழகப் பொறுப்பாளர்கள் எப்போது தலைமை சொன்னாலும், ஓ செய்து முடித்து விடுகிறோம் அதிலென்ன அட்டி? என்று முகம் சுளிக்காது, அகம் மலர சாதனையாளராகக் கொண் டவர்கள் - அவர்களுக்கு வழிகாட்ட 91 வயது இளைஞர் நம் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அய்யா ராஜகிரி கோ. தங்கராசு அவர்கள்!
கமிட்டியும், மாலைப் பொதுக் கூட்டமும் மிகவும் அருமையான ஏற்பாடுகளாலும், அவர்தம் அயராத உழைப்பினாலும், மாபெரும் வெற்றியாக அமைந்தன.
வழக்கம் போன்று ஊடகங்களில் பல, நம் நிகழ்வை இருட்டடித்து, தங்கள் தனித்துவத்தை நிலை நாட்டின.
எதிரிகளின் எதிர்ப்பு என்ற உரம்!
நாளும் பல்லாயிரக்கணக்கில் மக்களைச் சந்திக்கும் இயக்கம் நம் இயக்கம். இது ஒன்றும் காசு கொடுத்து மற்றும் கொடுக்கக் கூடாதவைகளைக் கொடுத்து ஆள் பிடித்து அடைத்து பெருங் கூட்டம் என்று காட்டும் கட்சிகளின் வரிசையில் உள்ள இயக்கம் அல்ல. 250 மாநாடுகள் - இன்னும் தொடரும் மாநாடுகள் என்ற கொள்கை உறுதியுடன் தனித்துவ முடிவுகளை, தக்க நேரத்தில் எடுத்து தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கு நம் இயக்கம்!
நம் எதிரிகள் எப்போதும், எதிர்ப்பு என்ற உரமிட்டு வளர்க்கத் தவறாத வாய்ப்புள்ள இயக்கம் நமது என்பதை எவரே மறுப்பர்?
பெரியார் என்ற தத்துவம் தந்த தலைவர் இன்று உலகமயமாகி, அதனை வழி நடத்தும் சமூக விஞ்ஞானியாக வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலை இத்தனை ஆண்டு உழைப்பிற்குக் கிடைத்த மகத்தான வெற்றி!
உள்ளூர் தொடங்கி, உலக நாடுகள் வரை கல்வி மூலமாகவும், கழகச் செயற்பாடுகள் வாயிலாகவும் பெரியார் என்பது ஒரு சகாப்தம், கால கட்டம், திருப்பம் என்று அறிஞர் அண்ணா தீட்டிய ஓவியம் - என்றும் உயிர் ஓவியமாக ஒளி பொருந்திய இலக்கியமாக உள்ளது.
போராட்ட வீரர்களின் பட்டியல் தொடரட்டும்!
எனவே, இருட்டடிப்பு, எதிர்ப்பு மலை, ஏகடியப் பேச்சு இவைகளை அலட்சியப்படுத்தி சிறைச் சாலை நோக்கிச் சென்று, அதை வாசமாகக் கொள்ளத் தேவைப்படின் நாங்கள் என்றும் தயார் என்று தந்தப் பட்டியல் தொடரட்டும்! அதுவே இயக்க ஆரோக்கிய காப்பீடு - மறவாதீர்!
நன்றி! நன்றி!! நன்றி!!!
உங்கள் அன்பின் அடிமை
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
ஐ-ஐயர்
ஒரு காலத்தில் நமது பாடத் திட்டத்தில் இவ்வாறு இருந்தது.
இவன் உழவன் - ஏர் உழுகிறான், இவன் தச்சன் - மரம் அறுக்கிறான், இவன் வண்ணான் - துணி துவைக்கிறான், இவன் அம் பட்டன் - சவரம் செய்கிறான், இவன் குயவன் - மண் பாண்டம் செய்கிறான், இவர் அய்யர் - பாடம் படிக்கிறார் என்று பாடத் திட்டங்களில் இருந்தது இறந்த காலம் என்று எண்ணி மகிழ வேண்டாம்.
இதோ சேலத்தில் ஒரு தனியார் புத்தக நிறுவனம் (Shabari Book House) வெளியிட்டுள்ள புத்தகத்தில் உயிர் எழுத்துகள் ஐ - ஐயர் என்று வெளியிட்டுள்ளது. இதுவரை ஐ - ஐவர் என்று தான் இருந்து வந்திருக்கிறது.
இந்தத் திடீர் மாற்றத் திற்கு என்ன காரணம் என் பதைவிட இந்தத் தைரியத் துக்கு என்ன பின்னணி என்று கேள்வியை மாற்றிக் கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
1937இல் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் சென்னை மாநில பிரதமராக இருந்தபோது ஆசாரியார்கள் ஆச்சாரியார் என்று போடக் கூடாது என்று ஆணை பிறப்பித்ததுண்டு.
காலம் மாறி விட்டது; பழையன கழிந்துஓடி விட் டன. இப்பொழுதெல்லாம் யார் ஜாதி பார்க்கிறார்கள்? பிராமணர்கள்கூட மாறித் தான் இருக்கிறார்கள்; என் நண்பன் முனியாண்டி ஓட் டலில் என்னோடு தினமும் சாப்பிடுகிறான் என்று சொல் லும் விரிந்த (?) மனப் பான்மை கொண்ட மெத்தப் படித்த மேதாவிகள் நம் மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.
தினமணியையும் தின மலரையும் துக்ளக்கையும் தொடர்ந்து படித்து வந்தால் அதில் துள்ளும் பூணூல் வக்கிரத்தைத் தெரிந்து கொள்ள முடியும். தொலைக் காட்சிகளில் அரட்டைக் கச்சேரி நடத்தும் பிஜேபி பார்ப்பனர்களின் தடித்த வார்த்தைகளைக் கேட்கும் போதும் புரியும்.
தமிழில் பெயர் சூட்டிக் கொள்ளும் ஒரே ஒரு பார்ப்பனரைக் காட்டுவதுகூட கடினம்தான். ஒரே ஒரு பரிதிமாற் கலைஞரைத் தவிர (இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி) வேறு ஒருவரைச் சுட்டிக் காட்ட முடிய வில்லையே!
கோயிலுக்குள் தமிழில் வழிபாடு என்றால் விட் டேனா பார் என்று எகிறிக் குதித்து உச்சநீதிமன்றத்தின் கதவில் போய் முட்டு கிறார்களே..
ஐ - ஐயர் என்றால் நீங்கள் எண்ணுவதுபோல பார்ப்பனரையல்ல - பெரி யோர், பெருமையிற் சிறந்தவர், பாதிரிமார் பட்டப் பெயர் என்று தப்பிக்க முடியாது; காரணம் ஒரு ஐயர் படத்தையும் போட்டு பச்சையாக ஜாதி உணர் வைக் காட்டி விட்டனரே!
தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போட்டுக் கொள்வதற்கு வெட்கப்படும்படிச் செய்தார் தந்தை பெரியார். மீண்டும் தலை தூக்கப் பார்க்கிறது;
மத்தியில் மதவாத ஆட்சியும், மாநிலத்தில் அதற்குத் துணை போகும் ஆட்சியும் இருப்பதுதான் இதற்குக் காரணம் போலும்!
- மயிலாடன்
காலந்தோறும் மனித குலத்துக்குத்
தேவைப்படும் மாமருந்து தந்தை பெரியார்
பார்வர்டு பிரஸ் இதழைச் சுட்டிக் காட்டி முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெருமிதம்
சென்னை, ஜூன் 16- டில்லியிலிருந்து வெளி வரும் பார்வேர்டு பிரஸ் இந்தி - ஆங்கில இதழில் வெளிவந்த கட்டுரையைச் சுட்டிக் காட்டி (விடுதலை ஏட்டில் வெளிவந்துள் ளதைச் சுட்டிக் காட்டி!) தந்தை பெரியார் காலஞ் தோறும் மனித குலத் துக்குத் தேவைப்படும் மாமருத்து என்று கலைஞர் எழுதியுள் ளார். இன்றைய (16.6.2015) முரசொலி யில் அவர் எழுதியுள்ளதாவது:
கேள்வி :- தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்கள் பற்றி, டெல்லி யிலிருந்து வெளிவரும் "பார்வர்டு பிரஸ்" என்ற மாதம் இருமுறை இதழ் மிகச் சிறப்பாக எழுதியதோடு, அந்தக் கருத்துக்கள் இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டு மென்றும் வலியுறுத்தியிருக்கிறதே?
கலைஞர் :- அந்த இதழில் பெரியார் பற்றி கூறியிருந்ததை, "விடுதலை" நாளேட்டில் முழு வதுமாக மொழி யாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்கள். அதில் ஆதிக்கச் சாதியினரின் சர்வாதிகாரத்தைச் சாமானிய மக்களிடம் விளக்கி மகத்தான வெற்றி பெற்ற மாபெரும் புரட்சியாளர் தந்தை பெரியார் என்றும், அவருடைய கருத் துக்கள் இந்தக் கால கட்டத்தில் மிகவும் தேவை என்றும், அந்தக் கருத்துக்களை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்ல வேண்டுமென்றும் எழுதியிருக் கிறது. பெரியார் போன்ற தலைவர்களின் கருத்துக் களால்தான் இந்தியா இன்று சமூக நீதிக் களத்தில் முன்னேற்றம் பெற்று வீர நடைபோடுகிறது. தற்போது இந்துத்துவாக் கொள்கை களைப் போற்றும் ஆட்சியாளர்களால் சமூக நீதிக்குச் சிறிது பின்னடைவு ஏற்படத் துவங்கியுள்ளது. இந்தக் கால கட்டத்தில் பெரியாரின் கருத்துக் களுக்கு மீண்டும் உயிரூட்டம் கொடுத்து இந்தியா முழுவதும் கொண்டு செல்லக் கடமைப்பட்டுள் ளோம் என்றெல்லாம் அந்த இதழில் செய்தி வந்துள்ளது. காலந் தோறும் பெரியார், மனித குலத்துக்குத் தேவைப்படும் மாமருந்து என்பது அசைக்க முடியாத உண்மை!
கடவுள் சக்தியின் சாதனையை பாரீர்!
குமரி மாவட்டத்தில் கோவில் உண்டியலை உடைத்துப் பணம் கொள்ளை கன்னியா குமரி மாவட்டம் திருவட் டார் அருகே காங்கரை என்னும் ஊரில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு கோவில் நிர்வாகிகள் நேற்று காலை சென்ற போது அந்த கோவிலில் உள்ள உண்டியல் உடைக் கப்பட்டு அதிலிருந்த பணம் திருட்டுப் போய் இருந்தது தெரிய வந்தது. உடைக்கப்பட்ட உண்டி யலில் பணத்தை திருடி விட்டு அந்த உண்டியலை திருடர்கள் அருகில் உள்ள ரப்பர் தோட்டத் தில் வீசி விட்டு சென் றுள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகி திரு வட்டார் காவல் நிலை யத்தில் புகார் செய்தார். தனது உண்டியலையே பாதுகாக்க இயலாத வக்கற்ற அந்த கடவுள் பொம்மை பக்தர்களைப் பாதுகாக்க போகிறது. இயேசுவின் சக்தியும் சந்தி சிரிக்கிறது
கன்னியாகுமரி மாவட் டம் தக்கலை அருகே உள்ள கடமலைக்குன்று பகுதியில் உள்ள சி. எஸ். அய். தேவாலயத்திற்கு வழிபாட்டுக்கு நேற்று மக்கள் வந்தனர். அப் போது ஆலயத்தின் ஒரு பக்க கதவு உடைக்கப் பட்டு ஆலயத்தில் உள்ள பொருட்களும் மாயமாகி இருந்தன. இது பற்றி ஆலய நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட் டது. ஆலய நிர்வாகிகள் வந்து உள்ளே சென்று பார்த்த போது உள்ளே இருந்த ரூபாய் 8 ஆயிரம் பணம், மற்றும் ஆலயப் பொருட்களும் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.
கர்த்தருக்கு சக்தி இருந் தால் இந்த பணத்தை பறி கொடுத்திருப்பாரா?
ராமர் கோவில் கட்டுவதை தடுத்தால் மசூதிகள் கோயில்களாக மாறுமாம்
மதக் கலவரத்தைத் தூண்டுகிறார் வி.எச்.பி. தலைவர்
புதுடில்லி, ஜூன் 16_ அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை தடுத் தால் அனைத்து மசூதி களும் கோயில்களாக மாறும் என விஷ்வ இந்து பர்ஷத் தலைவர் அசோக் சிங்கால் எச்சரிக்கை விடுத் திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டில்லியில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பது ராம ரின் விருப்பம் என்றார். இதனை யாரால் எதிர்க்க முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர் ராமர் கோவில் கட்டுவது குறித்து முடிவு எடுக்கவிடாமல் தடுத்தால் அனைத்து மசூதிகளும் கோயில் களாக மாறும் என்றார். பாஜக ஆட்சியிலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என அக்கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ் அண்மையில் கூறியிருந்தார். இல்லையெல் ராமர் கோவில் கட்டுவதை தடுத் தால் அனைத்து மசூதி களும் கோவில்களாக அசோக் சிங்கால் கூறியி ருப்பது சர்ச்சையை ஏற் படுத்தி உள்ளது.
இல்லவே இல்லை!
எல்லா மதக்காரர்களும் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது, ஒரு முடிகூட உதிராது என்று கூறுகிறார்கள். அது வெறும் வேஷம் ஆகும். அவன் அவன் முடியை எடுத்துக்கொள்ள வேண்டுமானால், நாவிதனிடம்தான் போகின்றான்! எனவே, 370 கோடி மக்க ளில் எவனும் கடவுளிடம் நம்பிக்கை உடையவன் இல்லவே இல்லை.
_ (விடுதலை, 26.4.1972)
சமைப்பது மட்டுமே பெண்களின் வேலையா?
தடைகளும் சோதனைகளும்தான் ஒரு மனிதனை முன்னுக்குக் கொண்டுவரும் முக்கியப் படிக்கட்டுகள் என்பதை உணர்த்துகிறது சந்திராவின் வாழ்க்கை.
காரைக்குடியைச் சேர்ந்த சந்திரா, கைவினைக் கலைஞர், கராத்தே பயிற்சியாளர், ஒப்பனைக் கலை நிபுணர், செல்போன் பழுது நீக்குபவர் எனப் பன்முகம் காட்டுகிறார். இவர் இந்த உயரத்துக்கு வரக் கடந்துவந்த பாதை கரடுமுரடானது, வலிகள் நிறைந்தவை. இவருடைய அம்மா ராமு, பிரசவத்தின் போது மகளின் முகத்தைக்கூடப் பார்க்காமல் கண்ணை மூடிவிட்டார்.
மகள் மீது அந்தச் சோகம் படராமல் வளர்த்தார் அப்பா சேது ராமன். ஆனால், சந்திராவுக்கு 12 வயதிருக்கும்போது அப்பாவும் ஒரு விபத்தில் உயிரிழக்க, துவண்டு போனார் சந்திரா.
அப்பாவையும் பறிகொடுத்துட்டு அந்தச் சின்ன வயசுல அடுத்த வேளைக்கு எங்க போறதுன்னு தெரியாம நின்னேன். அப்பச் சித்தியும் மாமாவும் எனக்கு ஆறுதலா இருந்தாங்க. இங்க கொஞ்ச நாள் அங்கக் கொஞ்ச நாள்னு ரெண்டு பேர் வீட்டுலயும் நாட்களை ஓட்டினேன்.
அப்பவே, எப்படியாவது கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து சொந்தக் காலில் நிக்கணும்னு எனக்குள்ள ஒரு வைராக்கியம் இருந்துச்சு. கஷ்டப்பட்டுப் பி.பி.ஏ. வரைக்கும் படிச்சேன். கூடவே தனித் திறமைகளையும் வளர்த்துக்கிட்டேன். போலீஸ், இல்லாட்டி ராணுவத்துல சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்யணும்ங்கிறது என்னோட விருப்பம்.
அதுக்குத் தற்காப்பு கலை அவசியம். எங்க மாமா கராத்தே மாஸ்டரா இருந்ததால அதுவும் எனக்கு எளிதில் சாத்தியமாச்சு என்று தான் கடந்து வந்த பாதையை விவரிக்கிறார் சந்திரா. கராத்தேயில் மூன்று பிளாக் பெல்ட் வாங்கியிருக்கும் சந்திரா, அய்ந்து முறை தேசியச் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறார். 2006இல் இவருக்குக் காவல்துறையில் வேலை கிடைத்தது. ஆனால், இவரது லட்சியம் பெரிதாக இருந்தாலும் காவல்துறை கனவு நிறைவேறவில்லை.
அதற்காக வீட்டுக்குள் முடங்கிவிடாமல், கிராஃப்ட், ஃபேஷன் டிசைனிங் படிப்புகளில் சேர்ந்து அவற்றையும் கற்றுக் கொண்டார். செல்போன் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் தொழில்நுட்பமும் படித்திருக்கும் இவர், செல்போன் சர்வீஸ் செய்துகொண்டே பியூட்டி பார்லரில் பயிற்சியாளராகவும் இருக்கிறார். காலை, மாலை வேளைகளில் கராத்தே வகுப்புகளையும் நடத்துகிறார்.
இவை அனைத்தும்தான் இப்போது சந்திராவைத் தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாகத் தலை நிமிர்ந்து நடக்கவைத்திருக்கின்றன. அரசுப் பள்ளி தையல் ஆசிரியர் பணிக்கும் சமீபத்தில் தேர்வாகியிருக்கிறார். முதலில் என்னை நான் ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்க முடியும். அதைத்தான் இப்போது நான் செய்து கொண்டிருக்கிறேன்.
சமைத்துப் போடுவது மட்டுமே பெண்களின் வேலை இல்லை. அந்தக் குறுகிய வட்டத்தைத் தாண்டி ஆண்களுக்கு நிகராகப் பெண்களாலும் அனைத்துத் துறைகளிலும் கோலோச்ச முடியும். திறமை இருந்தால் படிக்காவிட்டாலும் சாதிக்க முடியும். அதற்கேற்ப பெண்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
அப்படி, பெண்கள் தங்களை அனைத்து விதத்திலும் தயார்படுத்திக் கொள்ளும் ஒரு பயிற்சி மய்யத்தை மதுரையில் தொடங்கப் போகிறேன். அங்கு வரும் பெண்கள் பயிற்சி முடித்ததும் தன்னம்பிக்கை உடையவர்களாக வெளியில் வருவார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் சந்திரா.
உள்ளூரிலிருந்து உலகச் சந்தைக்கு!
வெளிநாட்டுப் பயணிகளுடன் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் அந்தக் கிராமத்துப் பெண்களைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. நம் எண்ணத்தைப் புரிந்து கொண்டவர்கள் போல, நாங்க கிராமத்துல பிறந்திருந்தாலும் நாங்கள் தயாரிக்கிற பொருட்கள் வெளிநாடு களுக்குப் போவதால் ஆங்கிலத்தையும் கத்துக்கிட்டோம் என்கிறார்கள்.
புதுச்சேரி அருகே உள்ளது சர்வதேச நகரம் ஆரோவில். காகிதத்திலிருந்து கலைப் பொருட்களை உருவாக்கி அசத்தி வருகின்றனர் கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்த மதர், அரவிந்தர், ஜெயம், எஸ்தர் மகளிர் குழுவினர். வழக்கமான வீட்டு வேலைகளைக் கவனித்துக் கெள்வதுடன் தங்களுக்கு ஏற்ற வருமானத்தையும் ஈட்டி வருகின்றனர்.
இவர்களின் விருப்ப மொழியே, நேற்றைய நாளிதழ் இன்றைய கலைப் பொருள் என்பதுதான். நாளிதழ்களில் இருந்து வண்ண வண்ணக் கலைப் பொருட்களைத் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறார்கள். நாளிதழ்களைக் கொண்டு வட்ட மற்றும் சதுர வடிவிலான கூடைகள், கிண்ணங்கள், காகித நகைகள் ஆகியவற்றைச் செய்கிறார்கள்.
பேக்கிங் செய்யப் பயன்படும் அட்டைகள், மாங்கொட்டைகள், தண்ணீர் பாட்டில்கள், தேவையில்லாத சிடி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பலவிதப் பொம்மைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்றவற்றையும் செய்கின்றனர்.
இப்படித் தயாராகும் காகிதக் கலைப் பொருட்கள் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதே போல் சென்னை, பெங்களூரு, மும்பை, டில்லி, கொல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலச் சந்தைகளிலும் இவர்களின் கலைப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு. ஆர்வமுள்ளவர்களுக்கு இங்கே குறுகிய காலப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடந்த 2005ஆம் ஆண்டு ஆரோவில்லுக்கு இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த டேனி-ஓர்லி இணையர் வந்தனர். ஆரேவில் கிராமச் செயல்வழிக் குழுவில் இருந்த எங்களுக்குப் பழைய பேப்பர்களைக் கொண்டு கூடைகள் செய்ய நான்கு மாதம் பயிற்சியளித்தனர்.
நாங்கள் தயார் செய்யும் கலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக வெல் பேப்பர் என்ற நிறுவனத்தை உருவாக்கிக் கொடுத்ததுடன் இன்றும் துணையாக இருக்கின்றனர் என்கிறார்கள் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள்.
இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். தொடக்கத்தில் எட்டுப் பேராக இருந்த குழுவில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 25. குழுவுக்கு மாதம் ரூ. 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.
நாங்கள் செய்யும் வேலைக்கு நாள் ஒன்றுக்குத் தலா ரூ. 180 ஒவ்வொருவருக்கும் தரப்படும். மீதமுள்ள தெகையை வங்கிக் கணக்கில் சேமிப்போம். எங்களுக்குள் முதலாளி, தொழிலாளி என்ற பேதம் கிடையாது.
அனைவரும் இங்கே சமம். வெல் பேப்பர் நிறுவனம் சார்பில் எங்கள் தனித்திறமையை உயர்த்திக்கொள்ளும் வகையில் ஆங்கிலம் பேசவும், யோகா செய்யவும் பயிற்சி தருகின்றனர் என்று சொல்லும் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள், பழைய சேலைகளைக் கொண்டு புதுமையான கையடக்கப் பைகளைத் தயார்செய்ய முடிவெடுத்திருக் கிறார்களாம். இதுவும் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும் என்கின்றனர் உற்சாகமாக.
வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
ஊன்றிப் படித்து உண்மையை உணருக!
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
பகவன்
பகவான் என்று வடவர் சொல்லுகிறார்களே அதுதானாம் இது. இது கலப்பில்லாத முட்டாள்தனமான பேச்சு. பகல் என்பதும் பகவு என்பதும் ஒரே பொருளைய சொற்கள். பகல் என்பதில் பகு முதனிலை. பகவன் என்பதில் பகவு முதனிலை. பகல் என்பதற்கும் பகவு என்பதற்கும் நடுவுநிலை. அறிவு என்பன பொருள்கள்.
பகவு என்பதற்கு பாவேந்தர்கள் அன் இறுதிநிலை சேர்த்துப் பகவன் என்று சிறப்புறுத்துவார்கள். எனவே பகவு, பகவன் இவைகட்கு அறிவு, அறிவன் என்பன பொருள். பகவன் தூய தமிழ்ச்சொல். பகவன் வடசொல்லாம், அது திருவள்ளுவரின் தந்தையின் பெயராம். அந்த பகவனும் பார்ப்பனனாம். ஆதியும் பகவனும், புலைச்சியும் பார்ப்பனனுமாம். திருவள்ளுவர் பேரறிஞராகத் திகழக் காரணம் அவர் பகவன் என்னும் பார்ப்பனனுக்குப் பிறந்ததாகும். இப்படி அந்தப் பாவிகள் ஒரு கதை கட்டி விட்டிருக்கிறார்கள்.
(குயில், 24.6.58)
சலம்
ஜலம் என்ற வடசொல்லின் சிதைவு என்று கூறுவார்கள் கலகக்காரர்கள்.
சலம் என்பது காரணம் பற்றிவந்த தூய தமிழ்ச் சொல். சல, சல என்று இயங்குவது காரணமாக தண்ணீர் சலம் என்று பெயர் பெற்றது. இவ்வாறு மறைமலையடிகளும் கூறியருளினார். இதைப் பார்ப்பனர் ஜலம் என்கிறார்கள் அல்லவா? நாத்திருந்தாமை அவர் கொண்ட குற்றம். அதனால் சலம் அவர் மொழியாகிவிட்டது.
(குயில், 1.7.58)
உவமை
உவமை என்பது உபமானம் என்பதன் சிதைவாம். இவ்வாறு மொட்டைத் தலைக்கும் முழந்தாளுக்கும் முடிபோடுவர் பார்ப்பனரும், அவர் அடியாரும். பொருள் நிலை உணர்வித்து உவப்புறச் செய்வது உவமை. உவத்தல், உவமை ஒரு பொருட் சொற்கள். தாமரை மலர் முகம் என்பதில் தாமரை மலர் உவமை முகம் உவமை ஏற்கும் பொருள். இவ்வாறு கூறாமல் முகம் என்று மட்டும் சொன்னால் முகம் என்ற பொருளின் நிலையை நன்கு உணரச் செய்ததாகாது என்பதை நோக்குக. உவப்புறச் செய்வது உவமை எனின் இச்சொல் காரணப் பெயராதலும் அறிக. எனவே, உவமை செந்தமிழ்ச் செல்வமே என்க.
அமிழ்து
இது குன்று, குன்றம் என அம் சாரியை பெற்றது போல், அமிழ்தம் என்றும் வரும். அன்றியும் அமுதம் அமுது என்றும் மருவி வழங்கும். இதை பார்ப்பனரும் அவர்களின் அடியார்க்கடியாரும் அம்ருதம் என்னும் வடசொற் சிதைவு என்று கதைப்பர். அது கான்றுமிழத் தக்கதோர் கதை என்க. அமிழ்து என்பது அமிழ்+து எனப்பிரியும். இதன் பொருள் மேலிருந்து அமிழ்கின்ற உணவு என்பது மழைக்குப் பெயர். அமிழ்+து வினைத்தொகை நிலைத் தொடர். அமிழ்து மழைக்குப் பெயர் என்பதென்ன? மழையானது வாழ்வார்க்குப் பயன்படும் வகையில், வளவயல் வறளாது உயிர் மருந்தாய்ப் பெய்யும் நிலையில் அமுது எனப்படும். மேலிருந்து அமிழும் உணவும் என்றும் இத்தொடரின் பொருள் கண்டு இன்புறுக. து_-உணவு. இதனாற்றான் வள்ளுவரும்,
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
என்று குறித்தார். எனவே அமிழ்து, அமிழ்தம், அமுதம், அமுது என்பன அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களே என்க.
மழை என்று தோன்றிற்று. அன்று தோன்றிற்று அதன் பெயராகிய அமிழ்து என்பது. அதன்பின் அதாவது கிரேதாயுகத்தில் பாற்கடல் கடைந்ததில் வந்ததாக உள்ள பொய்க்கதையில் வந்துள்ளது அம்ருதம் என்ற சொல். இதனால் அமிழ்தை அம்ருதம் என்று எடுத்தாண்டனர் வடவர் என்று தெளிதல் வேண்டும்.
(குயில், 08.07.1958)
நான் ஒரு நாத்திகன் - அய்ன்ஸ்டீன் அறிவிப்பு
நான் ஒரு நாத்திகன்
- அய்ன்ஸ்டீன் அறிவிப்பு
அறிவியல் மேதை, அய்ன்ஸ்டைன் ஒரு நாத்திகர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் அவரது கடிதமே சான்றாவணம்!
இயற்பியல் அறிவியலாளர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனின் கடவுள் மற்றும் மதம் பற்றிய அவரது கருத்துகளைப் பிரதிபலிக்கும் இரண்டு அரிய கடிதங்கள் அமெரிக்காவில் ஏலத்திற்கு வந்தன. இந்தக் கடிதம் இந்திய ரூபாய் மதிப்பில் 10 லட்சம் முதல் 25 லட்சம் வரை ஏலம் போகும் என்று தெரிகிறது. இந்தக் கடிதங்களில் அய்ன்ஸ்டைனின் மனைவி மிலெவா மாரிக் மற்றும் அவரது மகன்களான ஹான்ஸ், எட்வார்ட் ஆகியோருக்கு 1949-ஆம் ஆண்டு அய்ன்ஸ்டைன் தனது கைப்பட எழுதிய கடிதமும் அடங்கும்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: தனது அணுப்பிளவுக் கொள்கை மற்றும் சார்பியல் கோட்பாடு குறித்தும், மற்றும் மதம் கடவுள் குறித்த தனது நிலைப்பாட்டையும் எழுதியுள்ளார். முக்கியமாக ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் மீண்டும் பதவிக்கு வருநிலை உள்ளதால் தான் ஜெர்மன் திரும்ப வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தக் கடிதம் குறித்து வரலாற்று ஆய்வாளர், மற்றும் புகழ்பெற்ற நபர்களின் கடிதங்களைப் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்துவரும் அமைப்பின் தலைவரான ஜோசப் மெடலினா கூறியதாவது,: அய்ன்ஸ் டைனின் புகழ்பெற்ற இக்கடிதங்கள் ஜூன் மாதம் 11-ஆம் தேதி ஏலத்திற்கு வரும், இந்தக் கடிதங்கள் அய்ன்ஸ்டைனின் கடவுள் குறித்த பார்வையைத் தெளிவாகக் கூறும் விதத்தில் உள்ளன. ஒரு தலைசிறந்த இயற்பியலாளர் கடவுள் குறித்த தனது பார்வையைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
மேலும் 1945-ஆம் ஆண்டு கய் எச் ரானேர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில், நான் யூதனாக அறியப்பட்டாலும் நான் ஒரு நாத்திகனே என்று குறிப்பிட்டுள்ளார். நான்கு ஆண்டிற்குப் பிறகு மீண்டும் அவர் ரானேருக்கு எழுதிய கடிதத்தில் அவர் தான் ஒரு நாத்திகன் என்பதை மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தி உள்ளார்.
கடவுள் நம்பிக்கை என்பது குழந்தைத்தன-மானது, புரியாத வயதில் எளிதில் எதையும் நம்புவது போன்றது, ஆனால் நாத்திகம் என்பது தெளிவான ஒரு மனநிலையில் எந்த ஒரு செயலையும் சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுப்ப-தாகும், இங்கு நான் ஒரு கடவுள் மறுப்பாளராகவே இருக்கிறேன் என்று எழுதியுள்ளார்.
அய்ன்ஸ்டைன் தனது இளைய மகன் ஹன்ஸ்ற்கு எழுதிய கடிதத்தில் அணு குண்டு பற்றியும் அது ஹிரோஷிமா, நாகாசாகி போன்ற நகரங்களில் ஏற்படுத்திய பேரழிவு பற்றியும் குறிப்பிட்டு தனது சார்பியல் கோட்பாட்டை அதனுடன் இணைத்துத் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். மற்றொரு கடித்தில் அவர் நாஜிக்களின் மோசமான நடவடிக்கையால் ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு இடம் பெயர வேண்டியிருந்தது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் ஜெர்மனியில் வாழும் யூதர்கள் பற்றியும், யூதக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் தனது கடிதத்தில் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். 1933-ஆம் ஆண்டு ஜெர்மன் குடியுரிமை தொடர்பாக தனது மகனுக்கு எழுதிய கடிதம் மற்றும் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் தனது மகனின் திருமணம் மற்றும் தனது கண்டுபிடிப்புகள் குறித்த தனது மனநிலையை எழுதியுள்ளார். இந்தக் கடிதங்கள் அனைத்தும் ஏலத்திற்கு வரும்போது அமெரிக்க டாலர் மதிப்பில் 15,000 முதல் 25,000 டாலர் வரை விலைபோகும் என்று தெரிகிறது.
கலாச்சாரம் காக்கும் லட்சணம் இதுதானா?
மகனின் ஓரினச் சேர்க்கைக்கு ஆண் தேடும் பார்ப்பனத் தாய்!
கலாச்சாரம் காக்கும் லட்சணம் இதுதானா?
மும்பை மே 22_ மும்பையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக நடத்தப்படும் பத்திரிகை ஒன்றில் தனது மகனுக்காக தகுந்த மணமகன் வேண்டும் என்று ஒரு பார்ப்பனத்தாய் விளம்பரம் செய்துள்ளார்.
ஹரீஸ் அய்யர் என்ற 36 வயதுடைய மும்பை பார்ப்பனப் பையனுக்கு அவனுடைய இனத்தில் பெண் கிடைக்கவில்லை. நீண்ட நாள்களாக தேடிய பிறகு சலித்துப்போன அந்தப் பார்ப்பனத்தாய் தனது மகனுடன் கலந்து ஆலோசித்து ஒரு திடகாத்திரமான ஆணை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என்று கேட்டுள்ளார். அதற்கு அவனும் தலையை ஆட்டிவிட, உடனே இந்தியாவில் இருந்து வெளிவரும் ஒரே ஓரினச் சேர்க்கையாளருக்கான இதழில் விளம்பரம் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
ஓரினச்சேர்க்கை மணமகன் தேவை; வயது 25 முதல் 40 வயதுவரை; எனது மகனின் தகுதி _ வளர்ப்புப் பிராணிப் பிரியர், சைவ உணவுப் பழக்கம் உள்ளவர். ஒரு தொண்டு நிறுவனத்தில் பணி யாற்றுகிறார். நல்ல சம்பாத்தியம், என்று குறிப்பிட்டு முக்கியமாக ஜாதிபற்றிக் கவலையில்லை என்று தெரிவித்திருக்கிறார். அந்த விளம்பரத்தில் மின்னஞ்சல் முகவரி குறிப்பிட்டு உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டும் இருக்கிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியான இந்த விளம்பரத்திற்கு இணையதளம் மூலம் ஆயிரக் கணக்கான விருப்ப மின்னஞ்சல் சென்றுள்ளதாம். பொதுவாக இந்தியாவில் தற்போது கலாச்சாரக் காவலர்கள் ஆட்சியில் இருக்கும்போது பூணூல் அணிந்த பார்ப்பானுக்கு அவனது தாயே ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அனுமதியளித்து இணையும் தேட ஆரம்பித்துவிட்டார். இந்தியாவில் இருந்தும் அயல் நாடுகளிலும் இருந்தும் நிறைய அழைப்புகள் வருவதாகவும், எனது மகன்தான் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்வான் என்றார். மேலும் திருமணம் முழுக்க முழுக்க இந்து முறைப்படி சாஸ்திர சாம்பிரதாயங் களுடன் நடைபெறும் என்றார்.
கலாச்சாரம் காக்கும் காவலர்களே!
இதற்கு என்னச் செய்யப் போகிறீர்கள்?
புலிக்கறி சாப்பிட்ட புரட்சிக்கவிஞர்
அரிய செய்திகள் :
புலிக்கறி சாப்பிட்ட புரட்சிக்கவிஞர்!
குப்புறப்படுத்து மார்புக்குத் தலை-யணையைத் தாங்கலாக வைத்துக் கொண்டு எழுதும் வழக்கமுடையவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
(ஆதாரம்: பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம் பக்கம் _ 18)
தமிழ் எழுத்தாளர் தமிழை நன்றாகக் கற்கவேண்டும். இன்றைய தமிழ் எழுத்தாளர் பலருக்குத் தமிழே தெரியாது. எழுத்தாளன் என்பவன் எப்போதும், எவருக்கும் அஞ்சாமல் தன் உள்ளத்தில் தோன்றும் கருத்தை வெளியிடும் துணிச்சல் பெற்றவராய் இருக்க வேண்டும்.
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
கறியை விடாதே. கறிதான் மனிதனுக்கு உணர்ச்சி வெறியை உண்டாக்குது. உணர்ச்சி வெறிதான் கவிஞனுக்கு வேண்டும். கடைசிவரை கறியை விடாதே. நான் அதுக்கு எடுத்துக்காட்டு... என்ன... சைவத்தை நம்பி நம்பி வீரஉணர்ச்சியே போயிடிச்சு!
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
இலையில் பரிமாறப்பட்டிருந்த உப்புக் கண்டத்தைக் காட்டி இது என்ன உப்புக் கண்டம்? சொல்லு பார்க்கலாம் என்றார் பாவேந்தர். நான் அதைச் சுவைத்துப் பார்த்தபோது அது ஆட்டுக்கறியாகத் தெரியவில்லை. சுவை மாறுபட்டிருந்ததால் மான் கறியாக இருக்கும் என்று நினைத்து மான்கறியா? என்றேன். உடனே பாவேந்தர், இல்லை. புலிக்கறி என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
என்ன புலியா? புலிக்கறி எப்படிக் கிடைக்கிறது? என்றேன்.
புதுக்கோட்டை அரசருக்கு வேண்டிய ஒரு நடிக நண்பர் எனக்கு அடிக்கடி அனுப்புவார். சாப்பிடு! என்றார்.
- கவிஞர் முருகு.சுந்தரம்
* * *
தப்பெனில் ஒப்பும் தலைமைப் பண்பினர்
கனியிடை ஏறிய சுவையும் _ முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் _ காய்ச்சுப்
பாகிடை ஏறிய ருசியும்
என்ற புரட்சிக்கவிஞரின் பாடலைப் படித்த தமிழ் மறவர் பொன்னம்பலனார், புரட்சிக்-கவிஞரிடம் இதிலுள்ள ருசி என்னும் வடசொல்லை நீக்கி சுவை என்று அழகு தமிழில் சொல்லலாமே என்றார்.
தவறு என்று அறிந்ததும் உடனே அதை ஏற்று அடுத்த பதிப்பில் சுவை என்று மாற்றம் செய்யச் சொன்னார் புரட்சிக்-கவிஞர். தவற்றை ஒப்பிக் களைதல்தானே தலைமைப் பண்பிற்கு அழகு! அது புரட்சிக்கவிஞரின் முரட்டு உள்ளத்திற்குள் அழகுறக் குடிகொண்டிருந்ததை நம்மால் இதன் வழி அறிய முடிகிறது. அது மட்டுமல்ல அதன்பின் வடசொல் கலப்பின்றி எழுத முற்பட்டார், எழுதினார்.
* * *
தமிழாசிரியர்களின் சம்பளத்தை ரூ.45/_லிருந்து ரூ.75/_ஆக உயர்த்த அரசுக்குப் பரிந்துரை செய்து உயர்த்தச் செய்தவர் பொன்னம்பலனார்.
தியாகராய நகர் இராமன் தெருவில் பாவேந்தர் வாழ்ந்தபோது, ஆனந்த-விகடனில் பாரதியாரைப் பற்றி எழுதும்படி திரு.எஸ்.எஸ்.வாசனே நேரில் வந்து கேட்டுக்கொள்ள, அதற்கு இணங்கிய பாவேந்தர் ஒரு கட்டுரை அனுப்பினார். அதன்பின் எழுத-வில்லை, நிறுத்திவிட்டார். ஏன் மறந்துவிட்டீர்கள் என்று கேட்ட-போது, முகத்தைச் சுளித்தார். பதில் எதுவும் சொல்லவில்லை.
கவிஞர் தாகூரிடம் ஒரு வினோத பழக்கம் உண்டு. அவருடைய கையெழுத்துப் படியில் மை சிந்திவிட்டால் அல்லது எழுத்தில் பிழை ஏற்பட்டுவிட்டால் அதை ஓர் ஓவியமாக மாற்றிவிடுவார். அதேபோல், தன் கையெழுத்துப் படியில் மை சிந்தினால் அதைப் பூவாக மாற்றும் பழக்கம் பாவேந்தருக்கும் உண்டு.
தாம் கதை வசனம் எழுதிய வளையாபதி திரைப்படத்தில் சில வரிகளை மாற்றிவிட்டார்கள் என்பதற்காக, மார்டன் தியேட்டர்ஸாரின் ரூ.40,000/_ ஒப்பந்தத்தைத் தூக்கி எறிந்துவிட்டு வந்த சுயமரியாதைக்-காரர் புரட்சிக்-கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.
நூல் மதிப்புரை
எம்.எஸ்.எஸ்.பாண்டியன் காலச்சுவடு கட்டுரைகள்
மறைந்த எம்.எஸ்.எஸ். பாண்டியன் (1958_2014) அவர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு எம்.எஸ்.எஸ். பாண்டியன் பெயரில் வெளியிட்டுள்ளன.
இப்புத்தகத்திலுள்ள மூன்று கட்டுரைகளும் வெவ்வேறு காலக்கட்டத்தில் வந்திருப்பினும் ஒன்றோடொன்று கருத்துரீதியாக தொடர்புடையவையாக உள்ளன.
தேசியத்தை பழமையிலிருந்து விடுவித்து எதிர்காலத்தில் நிலைகொள்ள பகுத்தறிவு, அறிவியல், மனித விடுதலை, போராட்டம் மூலம் முன்னேற்றம் தேவை என்று பெரியார் வழிகாட்டியதாகக் கூறுகிறார்.
மனிதனின் பிறப்புரிமையான சுதந்திரத்தைப் பெற சுயமரியாதை ஒன்றே வழி என்பதே பெரியாரின் கருத்து என்று எழுதிய திரு. பாண்டியன் அவர்கள், அடித்தட்டு மக்கள் பகுத்தறிவு, அறிவியல் ஆகியவற்றின் மூலமே சுயமரியாதையையும் அதன்மூலம் அரசியல் முகமையையும் பெற முடியும் என்று பெரியார் அவர்கள் கருதியதாகவும் கூறியுள்ள நிலையில், பாண்டியன் அவர்களின் எழுத்துகள் பன்மைப் புலம் சார்ந்ததாகவும், பெரியார் அவர்கள் நிலைகொண்ட திராவிட அரசியல் ஆதரவு என்பதாகவும் இருந்துள்ளதை அறிய முடிகிறது.
புத்தகத்திலுள்ள அய்ந்து கட்டுரைகளுமே எம்.எஸ்.எஸ். பாண்டியன் அவர்களின் அறிவுக் கூர்மையையும், துணிச்சலையும் எடுத்துக் காட்டுகிறது. அறிவை வளர்த்துக்கொள்ள விழைவோருக்கு இந்த நூல் சிறப்பு விருந்து என்று கூறினால் தவறில்லை.
வெளியீடு :
காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்,
669, கே.பி.சாலை, நாகர்கோவில்-629001.
பக்கங்கள்: 95, விலை: 75/-
பெரியாரைத் தோற்கடிக்க முடியாது!
கேள்வி: சமீபகாலமாக, தமிழகத்தில் ஜாதி அமைப்புகள் வலுவடைந்து வருகின்றன. மதவாத சக்திகளும் இவற்றை ஊக்கப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அரை நூற்றாண்டுக்கு மேலாக ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த பெரியாரின் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுகின்றனவே?
பதில்: பெரியார் தோற்றுப்போகவில்லை என்பது மட்டுமல்ல, பெரியாரைத் தோற்கடிக்க முடியாது. ஏனென்றால், அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர். அவர் மனிதகுலத்தின் விடுதலைக்கு இந்தியாவின் தென்பகுதியில் முதல் நிபந்தனையாக முன்வைத்தது ஜாதி ஒழிப்பு என்பதைத்தான். எனவே, அவரை மனித குலத்தின் விடுதலையைத் தேடியவர் என்று சொல்லமுடியுமே தவிர, தமிழர்களின் விடுதலையைத் தேடியவர் என்றுகூட சொல்லமுடியாது. அந்த விடுதலைக்கான வழியாக அவர் ஜாதி ஒழிப்பை முன்வைத்தார். கடவுள் ஒழிப்பு, மத ஒழிப்பு அல்ல, ஜாதி ஒழிப்புதான். ஜாதி புகல்கிற கோவில்கள், ஜாதி புகல்கிற இலக்கியங்கள், ஜாதி புகல்கிற மொழி என்று அவர் அதை முன்வைத்தார்.
ஜாதிக்கு அங்கீகாரம் தருகிற எல்லாவற்றுக்கும் அவர் அங்கீகாரம் தர மறுத்தார். பெரியாரைப் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வருவதற்குக் காரணம் நம் கல்வியறிவின் வக்கிரங்கள்தான். நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டதால்தான் பெரியாரை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. ஊழல், அரசியல் ஒழுக்கமின்மை காரணமாக, பெரியாரை திராவிடக் கட்சிகளால் முன்வைக்க முடியவில்லை. பெரியாரை, சமூகத்திடம் கொண்டு செல்வதற்கான திறனை அவர்கள் இழந்துவிட்டார்கள்.
- பேராசிரியர் தொ.பரமசிவன்
நன்றி: தி இந்து தமிழ், 17.5.2015
முரண்பாடுகளின் மொத்தமே மத நம்பிக்கைகள்!
மதம், மத நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், மூடச் சடங்குகள் ஆகியவற்றின் பெயரால் மனிதன் தன்னுடைய அறிவை இழக்கிறான். மதத்தைப் பின்பற்றுவோர் முற்றிலும் முரண்பாடுகளைக் கொண்டிருப்பதை இங்கே உள்ள படங்கள் காட்டுகின்றன.
அர்ச்சகர்களுக்கும், மூட நம்பிக்கை மற்றும் சடங்குகளுக்கும் பணத்தை மக்கள் கொடுக்கின்றனர். அதேநேரத்தில், பெற்றோருக்கு உணவளிக்க, கவனிக்க மறுக்கிறார்கள். இறந்தபின் திதி கொடுக்கிறார்கள்!
கர்நாடகாவில் பொங்கல் விழாக் கொண்டாட்டத்தில் எருதுகளைத் தீயில் புகுந்து விரட்டுகிறார்கள். அதேநேரத்தில் பசுவைப் புனிதம் என்பார்கள். மாட்டிறைச்சியை உண்பவர்கள்மீது ஆத்திரப்படுவார்கள். வழிபாடு என்பதன் பெயரால் விலங்குகளைக் கொடுமைக்கு உள்ளாக்குகிறார்கள். அனுமனுக்குக்கூட பான் அட்டை கொடுக்கும் அவல நிலை. தேவி சரசுவதி பெயரில் முகநூல். அதேநேரத்தில் மேற்கத்தியக் கலாச்சாரம் என்று எதிர்ப்பு, விமர்சனம் செய்கிறார்கள்!
பன்னாட்டளவில் ஒவ்வொரு 3.6 வினாடிகளிலும் பட்டினியால் வதைபடுகிறார்கள் என்கின்ற நிலையில், லட்சக்கணக்கில் குழந்தைகளுக்கு பாலில்லை. ஆனால், கல் கடவுளுக்கு பாலாபிஷேகம், தேனாபிஷேகம். இதில் யாருக்கு முக்கியத்துவம்? சாப்பிட முடியாத கடவுளுக்கா? சாப்பிட முடிந்த மனிதனுக்கா?
சிந்திக்க வேண்டாமா? முரண்பாடுகளின் மொத்த உருவம்தானே மதம், மத நம்பிக்கைகள்.
50 ஆயிரம் செலவில் விநாயகர் சிலை ஆயிரக்கணக்கில் அதற்குப் பூசை - வணக்கம்! அடுத்த நாள் அதைத் தடியால் அடித்து கடலில் மிதிக்கிறான்!
கருடனை பார்த்து கன்னத்தில் போட்டு வணங்குகிறான். கோழிக்குஞ்சை அது தூக்கும்போது கல்லால் அடித்து விரட்டுகிறான்.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்கிறான். ஆனால் கோயிலுக்குப் பூட்டுப் போடுகிறான்!
கடவுள் நம்மைப் படைத்தது; நம்மைக் காப்பது என்கிறான். ஆனால், இவன்தான் கடவுளைப் படைக்கிறான், காக்கிறான்.
சிந்தியுங்கள்...
உற்சாக சுற்றுலாத் தொடர் - 9
- மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன்
ஆக்ரா - அய்.நா.அடையாளச் சின்னம் ஆக்ரா கோட்டை
தாஜ்மகாலை விட்டுப் பிரிவது, காதலர்கள் சந்திப்பின் பின்னர் பிரிவது போலத்தான்! மீண்டும் வருகின்றோம் என்று சொல்லி விடை பெற்றோம்.
ஆக்ராவின் அடுத்த சிறப்பான இடம் ஆக்ரா கோட்டை. ஆக்ரா கோட்டை பல வரலாற்று மிக்க இடம். மூன்று பானிப்பட்டுப் போர்கள் பற்றி வரலாற்றில் படித்திருப்போம். ராஜபுத்திரர்களுக்கும், முகமதியர்களுக்கும் நடந்த போர்கள். மாறி மாறி இந்தக் கோட்டையில் ஆண்டுள்ளனர்.அக்பர் கோட்டையைப் பெரிதாக்கி உள்ளே அரண்மனைகளையும் கட்டியுள்ளார். 500 கட்டிடங்களில் தற்போது 30-_35 கட்டிடங்கள் மட்டுமே அழிக்கப்படாமல் உள்ளன. சுற்றிலும் பெரிய அகழ்வுகள், அடுத்து 70 அடி உயர கோட்டைச் சுவர்கள். மிகவும் பெரிய, வேலைப்பாடு மிக்க கோட்டை நுழைவுகளும், கதவுகளும். உள்ளே நுழைந்ததும் 90 டிகிரியில் திரும்பும் பாதை யானைகள் வேகமாக உள்ளே நுழைந்தாலும் அதே வேகத்தில் இதில் திரும்ப முடியாது தங்கள் வலுவை இழந்து விடுமாறு இந்தத் திருப்பம். உள்ளே அழகிய பூங்காக்கள், அரண்மனைகள், மாட மாளிகைகள். அற்புத வேலைப்பாடுகள். ராஜபுத்திர, முகமதிய அடையாளங்கள் கலந்துள்ளன. ஜஹாங்கீர் அரண்மனை மிகவும் அழகாக உள்ளது.
அரண்மனைவாசிகளுக்காக பெரிய நீர்த்தொட்டி! அதிலே ரோசாப்பூ நீர் வைக்கப்பட்டிருக்குமாம். மாடியில் ஒரு அரண்மனையில்தான் ஷாஜஹான் அவரது மகன் ஔரங்கசீப்பால் சிறை வைக்கப் பட்டிருந்தாராம். அது ஒன்றும் சிறை அல்ல. மாடமாளிகைதான். அங்கிருந்து தாஜ்மஹால் அழகாகத் தெரிகின்றது. அதுதான் அவருக்குத் தண்டனையாம். பின்னர் ஆக்ரா கோட்டையிலிருந்து டில்லி செங்கோட்டைக்கு ஆட்சி மாற்றப்பட்டு விட்டது.
ஆக்ரா கோட்டையில்தான் 1857இல் பன்றிக் கொழுப்பைப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட்டம், சிப்பாய்க் கலகம், முதல் விடுதலைப் போராட்டம் என்றெல்லாம் அழைக்கப்படும் போராட்டம் நடந்தது. அதன் முடிவுதான் கிழக்கிந்தியக் கம்பெனி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தது. இப்போதும் இந்தியப் படையின் ஒரு பிரிவு கோட்டையின் மேற்குப் பகுதியில் உள்ளது.
அங்கிருந்து மற்றும் இரண்டு இடங்களைப் பார்த்தோம். ஒன்று, உலகின் பெரிய சித்திர வேலைப்பாடுகள் பளிங்குக் கற்களில் பொதிக்கப்படும் விற்பனைச் சாலை. சிறியதும் பெரியதுமான விலையுயர்ந்த கற்கள் பெரிய பளிங்குக் கற்களிலும், யானை போன்ற அழகான சிலைகளிலும் பொதிக்கப் படுகின்றன. ஆயிரக்கணக்கல்ல, கோடிகள் விலை பெறும் அற்புதங்களைப் படைத்து உலகெங்கும் விற்பனை செய்கின்றனர். அதை வாங்குவது ஒருபுறம் இருக்கட்டும், அதை வைப்பதற்குச் சரியான அரண்மனை வேண்டாமா? அரசியல்வாதிகளுக்காகத்தான் செய்கின்றார்கள் போலும்! எங்களுடன் வந்தவர்கள் சில சிறிய அழகிய சிற்பங்களை வாங்கினார்கள்.
அடுத்துச் சென்ற இடம் ஆம்! ஒரு நகைக் கடை. கொல்லம் பட்டறையில் ஈக்களுக்கு என்ன வேலை? இது ஒரு குடும்பத்தின் கதை. இந்தக் குடும்பம் மும்தாஜ் மஹாலுக்கே நகை செய்து தந்த குடும்பம். பல அரச குடும்பத்தினருக்குச் செய்த நகைகளையும், மும்தாஜ் அணிந்திருந்த நகைகளையும், எங்கள் குழுவிற்குக் காண்பிப்பதற்காகவே வங்கியின் பாதுகாப்பிலிருந்து எடுத்து வந்திருந்தனர். அந்தக் குடும்பத்தினர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் நான் ஒரு பெரிய கழுத்தணியையும், மும்தாஜின் மோதிரத்தையும் அணிந்தேன். அப்போதாவது நாங்கள் ஏதாவது விலையுயர் நகை வாங்குவோம் என்று பார்த்திருக்கலாம்! நல்ல வேலைப்பாடு, அது போலவே விலையும் நிறையதான். எங்கள் குழுவில் சிலர் வாங்கினார்கள்.
கனவுகள் கலைந்து நினைவுலகத்திற்கு வந்து விமானத்தில் ஏறிய எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி காத்திருந்தது!
நாடாளுமன்றத்திலே பெண்ணுக்கு நா(நீ)தியில்லையா?
நாட்டையே பாதுகாக்கும் செயல்களை நிறைவேற்றும் நாடாளுமன்றத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்யும் பெண் ஒருவர் அவரது மேலதிகாரியால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளார்.
நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் துப்புரவுப் பணியை ஒப்பந்த அடிப்படையில் பி.வி.ஜி. லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செய்துவருகிறது. நாடாளுமன்ற இணைப்புக் கட்டிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பெண் 2013ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார். 2014ஆம் ஆண்டு புதிய மேற்பார்வையாளராகப் பொறுப்பேற்ற நபரால் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்துள்ளார்.
கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும்போது, மேற்பார்வையாளர் பின்தொடர்ந்து வந்து அநாகரிகமாகப் பேசுவார் என்றும், எதிர்ப்புத் தெரிவித்தால் மிரட்டுவார் என்றும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், கழிப்பறைகள் சுத்தம் செய்வதற்கான இரசாயணப் பொருள்கள் காலியாகிவிடவே, புதிதாகத் தருமாறு அவரது அறைக்குச் சென்று கேட்டுள்ளார். உடனே, பதிலுக்கு நீ என்ன தருவாய்? என மேற்பார்வையாளர் கேட்டதும், கழிப்பறையைச் சுத்தம் செய்யும் என் கடமையை ஒழுங்காகச் செய்வேன் என்று கூறியுள்ளார் அந்தப் பெண். அதுதவிர நீ கொடுப்பதற்கு நிறைய இருக்கிறது என்றதும் மேற்பார்வையாளரை வன்மையாகக் கண்டித்து எச்சரித்ததும், பணிநீக்கம் செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து, டெல்லி கனோட் பிளேசில் இருக்கும் பி.வி.ஜி. தலைமை அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்ததையடுத்து, அந்தப் பெண்ணுக்கு மக்களவையில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. 2015 ஏப்ரலில், பி.வி.ஜி நிறுவனம் மீண்டும் நாடாளுமன்ற வளாக இணைப்புக் கட்டிடத்தில் பணி வழங்கியிருப்பதாக கூறியதும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மேற்பார்வையாளரை மன்னிப்புக் கேட்கும்படிக் கூறியுள்ளது. இன்றுவரை அந்த மேற்பார்வையாளர் மன்னிப்புக் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நான் என் உரிமைகளுக்காகப் போராட விரும்புகிறேன். என் குழந்தையைப் பராமரிக்க நான் மட்டுமே இருக்கிறேன். இந்நிலையில் என் பணிக்குப் பாதுகாப்பு இல்லாமல் போனால் அது இன்னமும் சிக்கலாகும் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்குரைஞர், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களைப் பரிசீலிக்கும் குழு நாடாளுமன்றத்தில் வெறும் காகிதங்களில் மட்டுமே இருக்கிறது. ஆனால், உண்மையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண் தன் வேலையைக் காப்பாற்றிக் கொள்ளக்கூட வழியில்லாமல் இருக்கிறது என வருத்தத்துடன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணே தனது குறைகளுக்குத் தீர்வு காண எவ்வித உதவியும் பெற முடியவில்லை என்பது கவனிக்க வேண்டிய பிரச்சினை என மே 3 அன்று தி.மு.க. எம்.பி. கனிமொழி குரல் எழுப்பினார். இப்பிரச்சினையில் சிறப்புக் கவனம் செலுத்திய ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே.குரியன், இப்பிரச்சினை தொடர்பாக சிறப்புக் கவன ஈர்ப்பு நோட்டீஸ் சமர்ப்பிக்க அனுமதி வழங்கினார். பின்னர் மக்களவையிலும் எதிரொலித்தது.
இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, நாடாளுமன்றத்தில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறிய புகார் தொடர்பாக லோக்சபா செயலர் தகவல் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அறிவோம்! தெளிவோம்!
கோபுர தரிசனம் செய்வதால் மட்டுமே கோயிலுக்குச் சென்றுவந்த பலனைப் பெற முடியுமா?
- இது 11.12.14 தினமலர் பக்தி மலரில் கேட்கப்பட்ட கேள்வி. அதற்கு, வேலைநிமித்தமாக கோவிலுக்குச் செல்ல முடியாதவர்களுக்கும், பயணம் செய்பவர்களுக்கும் பொருத்தமான விஷயம் இது. மற்றபடி கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தால்தான் சிறப்பு - என பதில் தரப்பட்டிருக்கிறது. ஆக,
ஆரியக் கூத்தாடினாலும் ஆரியம், காசு காரியத்தில் கண்ணாயிருக்கும் என்பது இதன் வாயிலாக உறுதிப்படுத்தப்படுகிறது. பக்தர்கள் கோவிலுக்குப் போனால்தானே குருக்களுக்குத் தட்சணை கிடைக்கும். பக்தியின் பெயரால் இப்படிச் சுரண்டித்தானே... பார்ப்பனீயம் இதுவரை செழித்துக்கொண்டிருக்கிறது. இதன் ஆணிவேரை அறுக்கத்தானே தந்தை பெரியார் அகவை 95லும் அயராது உழைத்தார்!
விளைவு? இன்று....
அறிந்தோம்! தெளிந்தோம்!!
கோபுர தரிசனம் எதற்கு? தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர் இந்து மதத்தைவிட்டு விலகவும் கூடாது... ஆனால், அதேசமயம் அவர்களை கோயிலுக்குள்ளே அனுமதிக்கவும் கூடாது! ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதுதானே பார்ப்பனீயத்தின் சூழ்ச்சி! அதன் தாரக மந்திரம்!! இதைத் தோலுரித்துக் காட்டிவிட்டாரே தந்தை பெரியார்!
அதனால்தானே இன்று தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் தலைமையில் இளைஞர் படை அணிவகுத்து நிற்கிறது. இன்று அறிந்தோம்! தெளிந்தோம்!! என்று உறுதிகூறி!
- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
சொன்னது சொன்னபடி
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். எனினும் இப்போதைய சூழ்நிலையில் கோவில் கட்ட முடியவில்லை. காரணம், ராஜ்யசபாவில் எங்கள் கட்சிக்குப் போதிய பலம் இல்லை. அதனால்தான் ராஜ்யசபாவில் மசோதா கொண்டுவந்து நிறைவேற்ற முடியவில்லை.
- ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர்
முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றிய நிலம் கையகப்படுத்துதல் சட்டம் அவசரக் கோலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம். அதற்கு பா.ஜ.வும் ஆதரவு அளித்து அப்போது தவறு செய்துவிட்டது. நான் பிரதமரானதும் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என பல மாநில முதல்வர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் எழுதிய கடிதங்கள் என்னிடம் உள்ளன.
- நரேந்திர மோடி, இந்தியப் பிரதமர்
திருநங்கைகள் பாதுகாப்பை உறுதி செய்யும்விதமாக அவர்களுக்கு எதிராக இருக்கிற 377 சட்டப் பிரிவை முழுமையாக நீக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு என்பது எப்படி அரசு மற்றும் தனியார் துறையில் அனைவருக்கும் கிடைக்கிறதோ அதேபோல் திருநங்கைகளுக்கும் வழங்க அரசு இடஒதுக்கீடு செய்ய வேண்டும்.
_ திருநங்கை ரேவதி
உயர் பதவிகளில் இருப்பவர்கள் வழக்கமான சிந்தனையிலிருந்து மாறுபட்டுச் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் பிரச்சினைகளுக்குப் புதுமையான தீர்வுகளைத் தர முடியும்.
_ ஹர்ஷ் வர்தன், மத்திய அமைச்சர்
சென்னையிலும் அதனைச் சுற்றியுள் ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் உள்ள மரங்களின் அடர்த்தி 13 விழுக்காடு குறைந்திருக்கின்றன. இந்த அளவில் மரங்களின் மோசமான இழப்புக்குக் காரணம் ரியல் எஸ்டேட் தொழில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதே ஆகும்.
இதனைச் சரிசெய்ய அனைவரும் ஒன்றிணைந்து மரங்களை நடும் முயற்சியில் ஈடுபட வேண்டும். மரங்கள் நடுவதோடு நமது கடமை முடிந்து விடுவதில்லை. அதனை முறையாகப் பராமரிப்பதுதான் அந்த முயற்சியின் முழுமையான வெற்றி.
- சாந்தா ஷீலா நாயர், தமிழ்நாடு திட்டக்குழுத் துணைத் தலைவர்
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள வெளிநாட்டினர் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் விஷயத்தில் பன்னாட்டு விதிமுறையைப் பின்பற்ற சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப சட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் விரைவில் பரிசீலிக்கும்.
_ அம்மான், பொருளாதாரத்துறை அமைச்சர், சுவிட்சர்லாந்து
மாநிலங்களவை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. மாநிலங்களவையின் கருத்துக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்.
_ சோம்நாத் சட்டர்ஜி, மக்களவை மேனாள் தலைவர்
கார்கில் போரின்போது நான்கு இடங்களில் பாகிஸ்தான் வீரர்கள் முன்னேறினர். அந்தப் போரில் இந்தியாவின் கழுத்தை நெரித்துவிட்டோம். அதை இந்தியாவால் மறக்கவே முடியாது.
_ பர்வேஸ் முஷாரப், மேனாள் அதிபர், பாகிஸ்தான்
புதுப்பா
ஓராயிரம் சூரியனின்
வெப்பம் தெறிக்கும்,
உன் வார்த்தைகள்!
எதிரிகளை வதம் செய்கையில் உன் (எழுத்து) நடையின்
அதிர்வில்
நடுங்குகிறது ஆரியம்! உன் சிந்தனையின்
பெரு வெடிப்பில்
சின்னா பின்னமாகிறது
ஜாதியக் கோட்டைகள்!
உன் கைத்தடியில்
அடி பட்டு
நொறுங்கிக் கிடக்கிறது
மத வெறி! தன்மானம் இழந்தேனும்
இனமானம் காத்தவரே,
கனமான கொள்கைகளை
கிழத் தோளில் சுமந்தவரே, எத்தனை விமர்சனம்
இன்றும் உன் மீது,
எவர் சொன்னது ?
நீ இறந்து விட்டாயென்று ....
- பாசு.ஓவியச் செல்வன்
ஆட்சியர் அணியலாமா கூலிங் கிளாஸ்?
சத்தீஸ்கர் மாநிலத்திற்கு மே 9 அன்று சென்ற பிரதமர் மோடியை அம்மாநிலத்திலுள்ள பஸ்தார் மாவட்ட ஆட்சியர் அமித் கட்டாரியா வரவேற்றுள்ளார். அப்போது அவர், பந்காலா என்ற அலுவலக அதிகாப்பூர்வ அணியாமலும் கூலிங் கிளாஸ் அணிந்தும் கை கொடுத்து (கொலுத்தும் வெயிலில் அணியத்தக்க உடை அல்ல அது) பிரதமரை வரவேற்றதற்காக சத்தீஸ்கர் மாநில அரசு நோட்டீசு அனுப்பியுள்ளது.
அதில், பஸ்தார் மாவட்ட ஆட்சியராக நீங்கள் பிரதமரை ஜக்தால்பூரில் வரவேற்றீர்கள். நீங்கள் அப்போது முறையான உடைகளை அணியவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டதுடன் கூலிங் கிளாஸ் அணிந்தும் வரவேற்றுள்ளீர்கள். இனி இத்தகைய தவறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டாம் என மாநில அரசு உங்களை எச்சரிக்கிறது.
நீங்கள் செய்தது அரசு ஊழியருக்குரிய நடத்தை விதிகளுக்குப் புறம்பாக அமைந்துள்ளது. அரசு ஊழியர்கள், குறிப்பாக சேவைத் துறையில் பணியாற்றுபவர்கள் நேர்மையையும், கடமை உணர்வையும் பராமரிப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது.
மோடி மட்டும் கோமாளி கூத்து போல விதவிதமான ஆடைகள் அணிவதும், ஆடை முழுவதும் தன்னுடைய பெயரை பதித்து 10 இலட்ச ரூபாய்க்கு வெளிநாட்டு ஆடை அணிவதும் நடக்கலாம். அய்.ஏ.எஸ். அதிகாரி வெயிலுக்கு கூலிங்கிளாஸ் அணியக் கூடாது. நல்லா இருக்கு உங்க நடத்தை விதிமுறைகள்!
நான் என்ன மாடா? என் கழுத்துக்கு ஏன் லைசென்ஸ்?
தாலிக்கு எதிராய்
புரட்சிக்கவிஞர் மகளின் கேள்வி :
நான் என்ன மாடா? என் கழுத்துக்கு ஏன் லைசென்ஸ்?
1944இல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மூத்த மகள் சரஸ்வதிக்கும், கரூர் அருகில் உள்ள கட்டிப்பாளையத்தைச் சேர்ந்த கண்ணப்பருக்கும் திருமணம் முடிக்க முடிவாயிற்று.
திருமணத்துக்கு முன்பு தாலி செய்வதைப் பற்றி பேச்சு எழுந்தது. உடனே சரசு (சரஸ்வதி) என்னைப் பார்த்து,
ஏன் அத்தை! நான் என்ன மாடா? முனிசிபாலிட்டியில் கட்டுவதுபோல் எனக்கும் லைசென்ஸா கட்டப் போறாங்க?
என்று கேட்டாள். நான் வியப்பில் விக்கித்துப் போனேன். தமிழ்நாட்டின் புரட்சிக்கவிஞனுக்கு ஏற்ற புரட்சிப் பெண்தான் இவள் என்று நான் மகிழ்ச்சியடைந்தேன்.
- திருமதி மஞ்சுளாபாய் கானாடுகாத்தான்
குறிப்பு: திருமதி மஞ்சுளாபாய் பெரும் செல்வந்தரான வை.சு.சண்முகம் செட்டியாரின் இணையர். தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் ஆகியோருடன் பற்றுக் கொண்டவர். அன்னை நாகம்மையார் காலனியில் தங்கி, சுயமரியாதை இயக்கப் பணியாற்றியவர்.
பக்தர்கள் உயிரிழப்பை பகவான் தடுக்காததேன்?
கடவுள் நம்பிக்கை, பக்தி இவைதான் மூடநம்பிக்கைகளிலேயே தாய் மூடநம்பிக்கை! காரணம், அறிவுக்குச் சிறிதேனும் இடந்தராது கண்ணை மூடிக்கொண்டு நம்பி, மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும் என்பதுபோல மீளமுடியாத பழக்கம், பிறகு வழக்கமாகியதன் விளைவுதான் இந்த நம்பிக்கை.
மனிதனைவிட கடவுள் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று காட்டி, பக்தியின் பேரால் சுரண்டிக் கொழுப்பதில் மதங்களுக்குள் போட்டி ஏராளம்!
இதற்கு விதிவிலக்கு சிராவணம் (சமணம்), பவுத்தம் _ இரண்டும் கடவுளை நம்பாத நெறிகள். (பிற்காலத்தில் இவற்றையும் மதமாக்கி புத்தரை அவதாரமாக்கி, ஜாதகக் கதைகளை தம் இஷ்டம்போல் புனைந்து புழக்கத்தில்விட்டுள்ளனர்.
மனிதனைவிட கடவுளே உயர்ந்தவர். இயற்கையை மீறிய சக்தி என்றெல்லாம் புளுகப்பட்டது!
முப்பெரும் தன்மைகள் எல்லா மதக் கடவுள்களுக்கும் இட்டுக்கட்டப்பட்டன!
எல்லாம் கடவுள் செயலா? சிந்தியுங்கள்!
1. கடவுள் சர்வசக்தி வாய்ந்தவர். (Omnipotence)
2. கடவுள் சர்வவியாபி (Omnipresence)
3. கடவுள் கருணையே வடிவானவர் (Omniscience)
இந்த மூன்றும் எந்தக் கடவுளுக்கு இருந்தது _ இருக்கிறது என்று இதுவரை உலக நடப்புகள் தொன்றுதொட்டு இன்றுவரை நிரூபித்து உள்ளனவா?
கடவுள் சர்வசக்தி உடையவன் என்றால், அவனால் சிருஷ்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் அவனது பிள்ளைகளுக்குள் சண்டை _ போர் _ நடந்து ஒருவரை மற்றவர் அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை முன்கூட்டியே அவன் தடுத்து இருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை?
கடவுளைத் தொழ _ வணங்கச் செல்லும் பக்தர்கள் உயிர் பறிபோகிறது விபத்து மூலம். அதை அங்கிங்கெனாதபடி எங்கும் உள்ள கருணையே வடிவான கடவுள் தடுத்து இருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?
தூங்கிய காவல்காரனைக்கூட தண்டிக்கிறோம்; காரணம், அவன் கடமை தவறி தூங்கியதால் பொருள் களவு போனது என்று. இத்தனைக்கும் அவன் சராசரி மனிதன்; ஆனால், அதைவிட மேலான அற்புத சக்தி படைத்ததாகச் சொல்லப்படும் கடவுள்கள் ஏன் 10 ஆயிரம் மக்களைப் பலிகொண்ட ஈவிரக்கம் அற்ற நேபாள பூகம்பத்தைத் தடுத்து நிறுத்தவில்லை?
எவ்வளவு அறியாமை!
ஒரு சில உயிர் பிழைத்தவர்கள் நாங்கள் தெய்வாதீனமாக _ கடவுள் அருளால் உயிர் பிழைத்து மீண்டோம் என்று கூறுகின்றனரே!
இத்தனை ஆயிரம் பேர் செத்தார்களே! அது எந்த ஆதினம்? என்று பகுத்தறிவு உள்ளவர் கேட்க வேண்டாமா?
பஞ்சாபில், ஒரு மத்திய அமைச்சருக்குச் சொந்தமான ஓடும் பேருந்தில் ஓர் இளம் பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட கொடுமையோடு, அப்பெண்ணை ஓடும் பேருந்திலிருந்து கீழே, ஈவிரக்கம் சிறிதும் இன்றி தள்ளிவிட்டனர்; அவர் மாண்டார்.
இந்தக் கொடுமையான காட்டுமிராண்டிச் செயலைக் கண்டித்து நாடே குமுறிய நிலையில் (சில வாரங்களுக்கு முன்) பஞ்சாப் அமைச்சரவையில் அமைச்சராக உள்ள ஒருவர் (பா.ஜ.க. கூட்டணி அமைச்சர்) இதுபற்றி சிறிதும் கூச்சநாச்சம், மனிதாபிமானம் இன்றி, இது ஆண்டவன் செயல் என்று வெகு சாதாரணமாகக் கூறி, இன்னமும் அமைச்சராக நீடிக்கும் அவலம் இந்த ஞானபூமியில் உள்ளது!
நம் கடவுள்கள் எவ்வளவு கேவலமான, கொடூரமான உணர்வாளர்களாக இருக்க வேண்டும்? மகா வெட்கக்கேடு! இது நம் நாட்டில் மட்டுமா? கடவுள் நம்பிக்கை என்ற மூடத்தனம் உலகளாவிய நிலையிலும்கூட மக்களை எப்படி ஏமாற்றப் பயன்படுகிறது என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு:
முன்பு அமெரிக்காவில் அதிபராக (குடியரசுக் கட்சி) இருந்து, ஈராக் மீது போர் நடத்தி அந்நாட்டை அழிக்க முயன்ற (ஜுனியர்) ஜார்ஜ் புஷ் அவர்கள், ஈராக் மீது போர் தொடுக்குமாறு கடவுள்தான் எனக்குக் கட்டளை இட்டார் என்று புருடா விடவில்லையா?
கடவுள் என்பது எப்படிப்பட்ட ஏமாற்றுக் கருவியாகப் பலருக்கும் பயன்படுகிறது என்பதற்கு இதைவிட நல்ல உதாரணம் தேவையா?
சில நாள்களுக்கு முன் வேலூர் அருகில் ஒரு கோவில் தேரோட்டத்திற்காக _ தேர் இழுத்து, பொம்மை விளையாட்டு விளையாடிய பெரியவர்களில், மின்சாரம் தாக்கி (தேரின் கம்பி மின்சாரக் கம்பியுடன் உரசி) ஆறு பேர் உயிர் இழந்த கொடுமை கண்டு, நாம் துன்பமும் துயரமும் கொள்ளுகிறோம்.
பக்தர்கள் பக்திப் பரவசம் அடைந்து தேர் இழுத்தனர். கருணையே வடிவான கடவுள் காப்பாற்றவில்லையே!
கடவுளைவிட மனிதன் கண்டுபிடித்த மின்சாரம் சக்தி வாய்ந்தது என்பது புலனாகவில்லையா?
இம்மாதிரி பக்தர்களின் மரண ஓலம் நாளும் இடையறாது கேட்டுக் கொண்டேதானே இருக்கிறது!
இதெல்லாம் தலைவிதி _ தலையெழுத்து என்று சமாதானம் கூறப்படுமானால், கடவுள் சக்தியற்றவராக, கருணையற்றவராக அதற்குமுன் காட்சியளிக்கிறார் என்றுதானே அர்த்தம்? அதுபற்றிச் சிந்திக்க வேண்டாமா?
பக்தி வந்தால் புத்தி போகும் என்ற பெரியார் மொழி எத்தகைய பொய்யாமொழி!
சிந்தியுங்கள் பக்தர்களே, சிந்தியுங்கள்!
நாம் வாழுவது 21ஆம் நூற்றாண்டில்!
- கி.வீரமணி,
ஆசிரியர்
உங்களுக்குத் தெரியுமா?
மாண்டேகு - செம்ஸ் போர்டு அறிக்கை, சட்டம் ஆவதற்கு முன், நீதிக் கட்சித் தலைவரான டாக்டர் நாயர் தாழ்த்தப்பட்டோருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் சட்டமன்றத்தில் ஒதுக்கீடு தேவை என்று வற்புறுத்தச் சென்றபோது, 1918ஆம் ஆண்டு லண்டனுக்குத் இங்கிலாந்து அரசாங்கம் அவர் கருத்துத் தெரிவிக்கத் தடைபோட்டதும், தளர்ச்சி அடையாமல் டாக்டர் நாயர், தனித்தனியாக ஆங்கிலேய அதிகாரிகளைச் சந்தித்துத் தடையை நீக்கச் செய்து, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை எடுத்துச் சொல்லிவிட்டுத்தான் சென்னை திரும்பினார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
பி.ஜே.பி. அரசு எங்கே போகிறது?
அவசர நிலைப் பிரகடனம் வரும்
அத்வானி அபாய அறிவிப்பு!
புதுடில்லி, ஜூன் 18_ முன்னாள் பிரதமர் இந் திரா காந்தி காலத்தில் அவசரநிலைப் பிரகடனத் தின்போது சிறை சென்ற அன்றைய ஜனசங்கக் கட்சித் தலைவரும் இன் றைய பாஜகவின் முக்கிய தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி மீண் டும் ஒரு அவசரநிலைப் பிரகடனம் வர 99 விழுக் காடு வாய்ப்புள்ளது என் றும், இதற்குக் காரணமாக அவர் கூறும் போது மோடி அரசின்மீது எதிர் கட்சிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் போது அரசு வேறு வழி யின்றி அவசர நிலைப் பிரகடனம் செய்யக் கூடும் என்று கூறினார்.
பத்திரிகைக்குப் பேட்டி
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு வியாழ னன்று பேட்டியளித்த லால்கிருஷ்ண அத்வானி கூறும்போது,
மீண்டும் ஒரு அவசர நிலைப் பிரகடனத்திற்கு தற்போதைய அரசு தயா ராகி வரக்கூடும். இதற்கு முக்கியக் காரணமாக அரசியல் சூழல் தற்போது மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது. இதை யாரும் மறுக்கமுடியாது. 2015- ஆம் ஆண்டு இறு திக்குள் அரசியல் மற்றும் சட்டம் போன்றவை களால் சூழ்நிலையை சமாளிக்க இயலாத நிலை உருவாக்கூடும், அந்த நேரத்தில் அவசரநிலைப் பிரகடனம் ஏற்பட்டால் அரசியல் மற்றும் சட்டம் போன்றவை மக்களைப் பாதுகாக்கும் கவசமாக இருக்க முடியாது. அதே நேரத்தில் மக்களின் சுதந் திரம் மற்றும் உரிமைகள் பறிக்கப்படும் வாய்ப்பை யும் மறுக்க முடியாது.
அதிகாரம் திசை மாறுகிறது
அவசரநிலைப் பிரகட னத்தை இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் அதுவும் தற்போதைய சூழலில் கொண்டுவருவது இயலாதகாரியம் என்றா லும், மக்களாட்சியில் சில எதிர்மறை சக்திகளின் வலிமை பெருகிக் கொண்டு இருக்கிறது, மேலும் சில அரசியல் சக்திகளின் தலைமையின் போக்கில் மாற்றம் ஏற்படும் போது அது அவசரநிலைப் பிர கடனத்திற்கு வழிவகுக் கும், காரணம் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சிலரின் கைகளில் இருந்து அதிகாரம் திசைமாறு கிறது. இதை யாரும் மறுக்க முடியாது. தற்போதுள்ள சூழ் நிலையில் நான் அவசர நிலைப் பிரகடனம் குறித்து வலியுறுத்திக் கூறக்காரணம் _ அரசியல் சூழல் மாறிக்கொண்டு வருகிறது. இங்கு நீதிமன் றம் மற்றும் ஆட்சி அதி கார வலிமை மெல்ல மெல்ல வலுவிழந்து கொண்டிருக்கிறது.
2015- இறுதியில் மீண் டும் அரசியல் குழப்பம் ஏற்படும்; இந்த நிலையில் அவசர நிலைப்பிரகடனம் என்பது தவிர்க்க முடி யாது ஒன்றாகிவிடும். அப் போது எந்த அரசியல் சக்தியும் மக்கள் உரிமை களை மீட்டெடுக்க குர லெழுப்ப இயலாத நிலைக் குச் சென்றுவிடும், எப்படி இந்திரா காந்தியின் காலத் தில் ஏற்பட்டதோ அதே நிலை மீண்டும் ஏற்படும் என்று என் உள்மனம் கூறுகிறது என்று கூறி னார்.
கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் ஒழிப்புப் போராட்டம் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் திடீர் வரவு பற்றி கூறும் போது ஊடகங்களுக்கு அளவுக்கு மீறி சுதந்திரம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த அதி காரம் மக்களின் உரிமை மற்றும் மக்களாட்சிக்கு எதிராக திருப்பப்படும் அச்சமும் உள்ளது. எடுத் துக்காட்டாக அன்னா அசாரே நடத்திய ஊழல் ஒழிப்புப் போராட்டம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால், இறுதியில் அது அரசியல் கலந்து ஆம் ஆத்மி கட்சி உருவாகவே பயன்பட்டது. இதனால் மக்கள் ஏமாற்றமடைந் துள்ளனர்.
ஆம் ஆத்மி கருத்து
அத்வானியின் இந்த பேட்டி குறித்து உடனடி யாக கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி கூறிய போது, அரசியலில் மிக வும் பழுத்த அனுபவாதி யான அத்வானி இப்படி மக்களாட்சிப் படுகொலை குறித்து கூறுவது, மிகவும் வியப்பாக உள்ளது.
மோடி தலைமையை ஏற் றுக்கொண்டு மோடிக்கு எதிராகவே கருத்து கூறு வது நகைப்பிற்குரியதாக உள்ளது. அத்வானியின் இந்தப் பேச்சு சுஷ்மாவின் தவற்றை திசை திருப்புவ தற்காகக் கூட இருக்க லாம் இருப்பினும் அரசியல் சூழலில் அத்வானி கூறுவதுபோல் நடக்க லாம் எதற்கும் மக்கள் தயாராக இருக்கவேண்டும் என்று கூறினார்.
ராமர் கோயில் கொள்கையில் மாற்றமில்லையாம் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா
வியாழன், 18 ஜூன் 2015
புதுடில்லி, ஜூன் 18_ அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது மற்றும் அரசியல் சாசன சட்டம் 370- ஆவது பிரிவை நீக்கு வது ஆகிய கொள்கை களில் எந்தவித மாற்றமும் இல்லை என்று மத்திய சட்ட அமைச்சர் சதா னந்த கவுடா தெரிவித் துள்ளார்.
அதே வேளையில் இந்த விவகாரங்களில் விரி வான ஆலோசனைக்குப் பிறகே எந்த முடிவும் எடுக்க முடியும் என்றும் மத்திய சட்ட அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு அவர் கூறும்போது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத் துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட் டத்தின் 370 ஆ-வது பிரிவை நீக்குவது ஆகி யவை பாஜகவின் கொள் கைகளாக தொடர்கின் றன. எங்களுடைய கட்சி யின் தேர்தல் வாக்குறுதி யிலும் இதுபற்றி குறிப் பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஒருபோதும் நாங்கள் கைவிடமாட் டோம்.
குறிப்பாக 370- ஆவது சட்டப் பிரிவை நீக்குவது குறித்து பல்வேறு அரசி யல் கட்சிகளுடன் விரி வான ஆலோசனை நடத்த வேண்டி உள்ளது. மேலும், இதனால் பயன டையும் பகுதி மக்களிட மும் கருத்து கேட்கப்படும். அதன் பிறகுதான் இது பற்றி முடிவு எடுக்க முடி யும். அனைத்து தரப்பின ரின் ஒருமித்த கருத்தை எட்டாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவும் எடுக்கப்படமாட் டாது. இதுதொடர்பான நடைமுறைகள் மெதுவாக நடைபெறும். எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். _ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
யோகா தின கொண்டாட்டங்களில் உத்தரகாண்ட் பங்கேற்காது:
முதல்வர் ஹரிஷ் ராவத்
டேராடூன், ஜூன் 18_ வருகிற ஜூன் 21- ஆம் தேதி முதல் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் யோகா தின கொண் டாட்டங்களில் உத்தரகாண்ட், அதிகாரப்பூர்வமாக பங்கேற்காது என்று அறிவித்துள்ளார். டேராடூனில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அவர், நாங்கள் சர்வதேச யோகா நாளில் பங்கேற்கப் போவதில்லை. இந்த முடிவு குறித்து தம்பட்டம் அடிப்பதில் எங்களுக்கு ஆர்வமில்லை. என்றார். மேலும் இந்தியாவின் பாரம்பரியமான உடல் மற்றும் மன ஒழுக்கங்களை பொதுமக்களிடையே பிரபலப்படுத்துவதில் மாநில அரசு முழு ஆர்வத்து டன் திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரி வித்தார்.
சோம்பேறிகளுக்கும், பணக்காரர்களுக்கும்தான் யோகாசனம் தேவை:
கருநாடக அமைச்சர்
பெங்களூரு, ஜூன் 18_- உலகம் முழுவதும் வரும் 21- ஆம் தேதியை சர்வதேச யோகா நாளாகக் கடை பிடிக்க உள்ள நிலையில் சோம்பேறிகளுக்கும், பணக்காரர்களுக்கும் தான் யோகாசனம் தேவை என கருநாடக சமூக நலத்துறை அமைச்சர் அன் ஜனய்யா கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- யோகாசனம் என்பது சோம்பேறிகளுக்கான, குறிப்பாக பணக்காரர்களுக்கான ஒரு பயிற்சியாகும். அவர்களுக்குதான் பொது இடங்களில் நடைபயிற்சி செய்வதற்குக்கூட நேரம் கிடைப்பதில்லை. ஆனால், வயல்களில் வியர்வை சொட்டச்சொட்ட கஷ்டப் பட்டு வேலை செய்பவர்களுக்கு யோகாசனம் தேவை இல்லை. யோகாசனத்துக்கு பதிலாக, மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை ஓட்டப் பயிற்சி, நெடுந்தூர நடைப் பயிற்சி போன்ற திறந்தவெளி பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும். யோகாவின் பலன்களை விளக்கவும், பயிற்சிகளை அளிக்கவும் எத்தனையோ குருக்களும், நிபுணர்களும் உள்ளனர். பிரதமரின் நேரம் என்பது மிகவும் பொன்னானது, யோகா சனத்தை பற்றி விளக்கம் அளிப்பதை விட்டுவிட்டு, இந்த நாட்டை வழிநடத்துவதில் அவர் தனது நேரத்தை செலவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு
தஞ்சைப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடுபற்றியது குறிப்பிடத்தக்க தாகும்.
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற சொலவடையை உருவாக்கி மக்கள் மத்தியில் அது குறித்து சிந்தனைப் பொறியைத் தட்டி எழுப்பிடும் பணியைத் தொடர்ந்து செய்து வந்துகொண்டிருக்கும் இயக்கம் திராவிடர் கழகம் என்பது நாட்டு மக்கள் அறிவார்கள்.
கச்சத்தீவு, காவிரி நதி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறுப் பிரச்சினை, பாலாறுப் பிரச்சினை என்று தமிழ்நாடு, தமிழர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் சூழ்நிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
நதிநீர்ப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும்கூட, அதனைச் சற்றும் பொருட்படுத்தாத போக்குகள் தொடர்ந்து கொண்டுள்ளன; காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கருநாடகமும், முல்லைப் பெரியாறுப் பிரச்சினையில் கேரளமும் இத்தகைய போக்குகளை மேற்கொண்டு வருகின்றன. நீதிமன்ற அவ மதிப்பு என்ற ஒன்று இருக்கிறதா? அதன்மீதான மரியாதையின் கதி இதுதானா? என்ற கேள்விகளும் செங்குத்தாகவே எழுந்து நிற்கின்றன.
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல நீதிமன்ற தீர்ப்புக்குமேல், மேலும் அதிரடி யாகவும், ஆணவமாகவும் நீதிமன்ற தீர்ப்புகளைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டு, அதற்குமேலும் தீவிரமாக சட்ட விரோத - நீதிமன்ற தீர்ப்பு விரோத வேலைகளில் வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுவதை என்ன சொல்ல?
காவிரியின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 2500 ஏக்கர் பரப்பளவில் இரண்டு பெரிய அணைகள் கட்டுவதாக தொடக்கத்தில் கூறப்பட்டது. இப்பொழுது அதில் சிறு மாற்றம் செய்து, நான்கு சிறிய அணைகளை எழுப்பி 100 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கிட கருநாடக அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த அணைகள் மூலம் பெங்களூரு, மைசூரு, கோலார், சிக்பள்ளாப்பூர், தும்கூரு உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் குடிநீர் வழங்கிட இத்திட்டமாம்.
கருநாடக மாநில நீர்வளத் துறை நிபுணர்கள் காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து இதற்கான திட்ட அறிக் கையைத் தயாரித்துள்ளனர். கருநாடக வனத்துறையினரும், மேகதாதுப் பகுதியை ஆக்கிரமித்துள்ள தனியார் விடுதிகளின் கூட்டமைப்பினரும் தனித்தனியாக அறிக்கைகளைத் தயாரித் துள்ளனராம். குடிநீருக்காக மட்டுமல்ல 1000 மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இத்தோடு நின்றுவிடவில்லை கருநாடகா, டில்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடமும் பன்னாட்டுத் தனியார் நிறுவனம் ஒன்றிடமும்கூட வரைவு அறிக்கை கோரப்பட் டுள்ளதாம். போகிற போக்கைப் பார்த்தால் அதிவிரைவில் இந்தச் சட்ட விரோதப் பணிகளில் கருநாடக அரசு ஈடுபடுவதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
பிரதமரைச் சந்தித்தாகி விட்டது; குடியரசுத் தலைவரையும் சந்தித்து மனுக்கள் கொடுக்கப்பட்டு அலுத்துப் போய்விட்டது தமிழ்நாடு.
தமிழ்நாடு அரசோ நாங்களும் இதில் செயல்பட்டோம் என்று காட்டிக் கொள்ளும் மேனா மினுக்கித்தனமாக செயல்படுகிறதே தவிர - குறைந்தபட்சம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி - இப்பிரச்சினையில் தமிழ்நாடு ஒன்று பட்டு நிற்கிறது என்று காட்டுவதற்குக்கூடத் தயாராக இல்லை என்பது பெரிதும் வேதனைக்குரியது. தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இதனைப் பலமுறை வலியுறுத்தியும்கூட தமிழ்நாடு அரசு கேளாக்காதாக இருப்பது சரியல்ல.
அதேநேரத்தில், கருநாடகத்தில் என்ன நடந்துகொண்டி ருக்கிறது? கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றாலும், மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசின் அமைச்சர்கள், கருநாடகத் தின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்குத் துணை நிற்போம் என்று பச்சையாகக் கருத்துத் தெரிவிக்கின்றனரே!
2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டது. 2013 பிப்ரவரி 19 ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதுவரை ஏன் அந்த அமைப்பு உருவாக்கப்படவில்லை? காங்கிரஸ் ஆட்சியை மட்டும் குறைகூறி பி.ஜே.பி. அரசு தப்பிப் பிழைக்க முடியாது.
மத்திய அமைச்சர்கள் அனைத்து மாநிலங்களுக்கும், பொதுவானவர்கள் என்பதையும் மறந்து கருநாடக மாநில உணர்வோடு பேசுவது சரியானதுதானா?
காவிரி நீரில் கருநாடகப் பகுதியில் கழிவு நீர் கலக்கப்படு வதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றாலும், அதனைச் சந்திக்க கருநாடகம் தயார் என்று சொல்லுவது பி.ஜே.பி.யைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா (கருநாடகம்) என்பதை மறந்துவிடக் கூடாது. ஒரு மத்திய அமைச்சரே ஒரு சார்பாகப் பேசுவதுபற்றி பிரதமர் கண்டிக்க வேண்டாமா?
இந்தியத் தேசியம்பற்றி வாய் கிழியப் பேசுவார்கள்; அதே நேரத்தில், மாநில சுயநலம் என்று வரும்போது தேசியமாவது - கீசியமாவது என்று கிழித்து எறிந்துவிடுவார்கள்.
கடந்த நூற்றாண்டுக்காலமாக தமிழ்நாட்டு விவசாயம் சாகடிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. விவசாயத்தை நம்பியுள்ள விவசாயப் பெருங்குடி மக்கள் சாவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கான விவசா யிகள் விவசாயத் தொழிலுக்கே முழுக்குப் போட்டுவிட்டு வேறு கூலி வேலைகளுக்கு நகர்ப்புறங்களுக்குப் படையெடுக்கும் பரிதாப நிலை.
காவிரி மட்டுமல்ல, முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் கேரள அரசு - கருநாடக அரசுக்கு அப்பனாகவே நடந்து கொண்டு வருகிறது!
இன்னும் எத்தனை முறைதான் நிபுணர்கள் குழு முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது! உறுதியாக இருக்கிறது! என்று தண்டோரா போட்டுச் சொல்லவேண்டுமோ?
நீரோட்டத்தில் நியாயமான முடிவு எட்டப்படா விட்டால், தேசிய நீரோட்டம் என்பது கேள்விக்குறியாக ஆகும் நிலைக்குத் தள்ளப்படுவது தவிர்க்கப்படவே முடியாததுதான்.
தமிழ்நாடு, உபரி நீரின் வடிகாலாக இருக்கும் பிச்சைக் காரப் பூமியாக ஆக்கப்பட்டு விட்டது. இதற்காக வெட்கப்பட வேண்டியவர்கள் தேசியவாதிகளே!
பார்ப்பான் பொதுநலவாதியல்லன்
இந்த நாட்டில் பார்ப்பானைத் தவிர மற்றவர்களெல்லாம் பொதுமக்களுக்குப் பாடுபடுகிறவர்கள்தாம். உலகத்தில் மனிதனாக உள்ள அனைவரும் பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பொதுமக்களுக்குத் தொண்டாற்றுகிறவர்கள்தாம்.
_ (விடுதலை, 11.4.1959)
அஞ்சுவதற்கல்ல முதுமை; அனுபவப் பகிர்வுக்கே!
--veramani
அமெரிக்க குடிஅரசுத் தலைவர் களில், மிகுந்த பண்பாளர்களில் ஒருவ ராகத் திகழ்ந்த மிக நல்ல ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அவர்கள்!
அப்போதே இந்திய நாட்டை மிகவும் நேசித்து, நல்லறிவுடன் இருந்த குடிஅரசுத் தலைவர். இவர் விவசாயி களின் பிரதிநிதியாவார். இவருக்கு மற்றொரு செல்லப் பெயரே - பதவி வகித்தபோது ‘Peanut President’ - வேர்க்கடலை ஜனாதிபதி என்பதாகும்!
சில ஆண்டுகளுக்குமுன் அமெ ரிக்கா சென்றிருந்தபோது நான் வாங்கிப் படித்துச் சுவைத்த அவரது அறிவுச் செல்வ நூல் ஒன்று, ‘‘The Virtues of Aging’’(வயதாவது - முதுமை என்ற பெரும் நன்மைகளுக்கான வாய்ப்பு) என்ற நூல்.
மறுமுறை இப்போது படித்தேன் - சுவைத்தேன்!
இவர் 56 வயதிலேயே பதவி வாழ்க் கையிலிருந்து ஓய்வு பெற்று, மக்களி டையே தொண்டறத்தை மேற்கொண்ட வர்.
அமெரிக்காவில் 65 வயது அல்லது அதற்கு மேலும் என்ற வயது முதுகுடி மக்கள் என்ற தகுதி முத்திரையைப் பொறிக்கக்கூடியதாகும்.
எந்த வயதை அடைந்தால் நாம் முதியவர் (வயதானவர்) என்ற நிலையை அடைகின்றோம்? என்ற கேள்விக்கு அவர் அந்த பொத்தகத்தில் சிறப்பாக விடையளிக்கிறார்:
அது வெறும் வயதின் கூட்டலினால் வருவதல்ல; ஒவ்வொரு நபருக்கும், இடம் பொறுத்து மாறுகிறது. உதாரணத் திற்கு அமெரிக்காவில் இது சராசரியாக 73 வயதாகிற நிலையில், முதியவர் என்ற பட்டத்திற்குத் தயாராகிறார்கள்.
ஒருவர் எப்போது வயதானவராக முதுமை அடைந்தவராக - கருதப்படு கிறார்? என்ற கேள்விக்கு அருமை யான இலக்கணம் கூறுகிறார்! நம்மில் அவர் எப்படி சிந்திக்கிறாரோ அதைப் பொறுத்தே அதற்கு விடை கிடைக் கிறது! நகர முடியாத குந்தியே இருக்கும் நிலை, மற்றவர்களின் உதவியைப் பெரிதும் நாடியே வாழும் சூழ்நிலை, குறிப்பிடத்தக்க அளவு நம்முடைய உடல், உள்ள இயக்கத்தின் அளவு குறைந்துவிட்டது என்ற உணரும் நிலை, நாம் சந்தித்து உரையாடிடும் நண்பர் களின் எண்ணிக்கை குறையும்போது - அந்தப் பருவம் - நிலை நம்மைத் தொடுகிறது என்று கருதலாம்.
எத்தனை ஆண்டுகள் வாழுகிறோம் என்பது வயதுடன் இணைந்த ஒன்றல்ல. வயதுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே நடைமுறை உண்மை யாகும்.
நம்முடைய ஆயுள் குறைவதோ, நீளுவதோ, நம் இளமைக்கால நடவடிக் கைகளின்போது ஏற்படும் உடல்நலப் பாதுகாப்பைப் பொறுத்த ஒன்றேயாகும்.
அமெரிக்காவின் 6 குடிஅரசுத் தலை வர்கள் (வாஷிங்டனில் தொடங்கி ஜான்குன்சி ஆடம்ஸ்வரை) சராசரி வயது 76 ஆண்டுகள் ஆகும்.
கடைசி 6 குடிஅரசுத் தலைவர்கள் (பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் முதல் ரிச்சர்ட் நிக்சன்வரை) வாழ்ந்த சராசரி வயது 70 ஆண்டுகளே; கென்னடியைத் தவிர்த்து விட்டுக் கணக்கிட்டால், மற்ற வர்கள் சராசரி வயது 74.8 ஆண்டுகளே என்று விவரிக்கிறார்!
ஜிம்மி கார்ட்டர் அவர்கள் பதவியை விட்டு விலகி ஓய்வுக்குத் தயாராகும் போது, அவர்பற்றி பல அரிய தகவல் களைத் திரட்டி எழுதிய பார்பாரா வால்டர் என்ற எழுத்தாளர், இவரைப் பேட்டி கண்டு ஓர் அருமையான கேள் வியைக் கேட்டார்!
மிஸ்டர் பிரசிடெண்ட், நீங்கள் எவ்வளவு பரபரப்பான, சவால் விடுத்த பணிகளையெல்லாம் எதிர்கொண்டு பணியாற்றியுள்ளீர்கள். எது உங்களுக்கு மிகவும் சிறப்பான ஆண்டுகள், விளக்குவீர்களா? என்று கேட்டார்.
சிறிது நேர யோசனைக்குப்பின், ஜிம்மி கார்ட்டர் கூறினார்:
(இது) இப்போதுதான் சிறப்பான ஆண்டு எனக்கு.
அந்த கேள்வியாளருக்கு வியப்பு. காரணம் கூற முடியுமா? என்று கேட்கிறார்.
சிறிதுநேரம் மீண்டும் யோசிக்கிறார் ஜிம்மி கார்ட்டர்; பிறகு பதிலளிக்கிறார்:
எனக்குப் பல்வேறு விஷயங்களைப் பற்றி நிதானமாக, முன்பு எதிரொலித்த சிந்தனைகளையும், எனது குடும்பத்த வருடன் மேலும் அதிகநேரம் செலவிட வும், எனது முந்தைய தவறுகளை நான் திருத்திக் கொண்டு வாழும் வாழ்க்கையை நடத்த அரிய வாய்ப்பு - இந்த நிலையில்தான் என்று கூறுகிறார்.
எவ்வளவு நேர்த்தியான பதில் - அறிவார்ந்த விளக்கம்!
முதுமையில் நம்மை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது நாம் சேர்த்த செல்வம் அல்ல; அனுபவித்த பதவியல்ல; முன்பு சுவைத்த ஆடம்பரங்கள் அல்ல.
நல்ல ஆதரவுள்ள அன்பு பொழியும் - வழியும் - நல்ல குடும்பத்தவர். நண்பர் கள் வட்டம்.
புதுப்புது திட்டங்கள் - தொண்டறப் பணிகள் நம்மை என்றும் சீர் இளமை யாகவே வைத்திருக்கும். முதுமை என் பது பயந்து ஓடவேண்டிய ஒன்றல்ல; மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு, வாழ்க்கை யில் முன்பு கிடைக்காததற்கு வருத்தப் படாமல், கிடைத்தவைகளை மகிழ்ச்சியாக ஏற்று, அனுபவித்துள்ள மகிழ்ச்சியை அசை போட்டு வாழுவதே முதுமையின் நற்பயன்கள்!
இளமையில் கிட்டாத வாய்ப்பு - முதுமை என்ற அனுபவக் களஞ்சியத் தின் தொகுப்பு என்பதாகும். அதைப் பகிர்ந்தளித்து நாளும் மகிழ்வுடன் வாழுவோம்.
எதுவும் நம் மனதின் எண்ண ஓட்டத்தைப் பொறுத்ததே!
நன்றும் தீதும் பிறர் தர வாரா! - இல்லையா?
Post a Comment