Search This Blog

28.10.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 39


இதுதான் வால்மீகி இராமாயணம்

அயோத்தியா காண்டம்

ஒன்பதாம் அத்தியாயம் தொடர்ச்சி




19) பரதனுக்குக் கொடுப்பதாய் விவாக காலத்தில் பிரதிக்ஞை செய்த இராஜ்யத்தை இராமனுக்குக் கொடுப்பதாக

நிச்சயித்ததைக் கேட்டால் கேகய மன்னன் ஆட்சேபிப் பானென்று அவனுக்குச் சமாச்சாரம்

அனுப்பாமலிருந்ததும்.

20) மற்ற அரசர்களுக்குச் சொல்லி அனுப்பியதும் சிக்கலான் விஷயங்களே...

பதம புராணத்தில் இதைக் காரணமாக வைத்துக் கொண்டு கைகேயிக்குத் தசரதர் செய்த பிரதிக்ஞையை

நிறைவேற்றுவதற்காக இராமனுக்குச் செய்த பிரதிக்ஞை யைத் தவறினாரென்றும், அதற்காக அவருக்கு நல்ல கதி

கிடைக்கவில்லையென்றும் சொல்லப்படுகிறது... மேலும் கைகேயியும் மந்தாரையும் செய்த காரியங் களுக்குத்

தகுந்த நியாயமும் காரணங்களும் காணப்படு கின்றன. அவற்றைப் புறக்கணித்து அவர்களை எல்லையில்லாமல்

நிந்திப்பதும் குற்றஞ்சாட்டுவதும் நியாத்திற்கு ஒத்ததாகத் தெரியவில்லை. இதன் இரசியத்தைப் பரத்வாசர்

பரதனுக்குச் (92-ஆவதில்) சொல்லுகிறார்.

மேலே கண்ட குறிப்புகளெல்லாம் மொழி பெயர்ப் பாளர் அய்யங்காருடையன. அவற்றில் பல உண்மைகள்

உணரவிருப்பதை அறிஞர் அறிவார்களாக!

பத்தாம் அத்தியாயம்

இனி கதைத் தொடர்ச்சியிற் செல்வோம்.

பிராமணர்கள் பலர் இராமனைத் தொடர்ந்து சென்றனர். அவர்களை நோக்கி இராமன், என்னிடத் திலுள்ள

அன்பை இனி பரதனிடம் வையுங்கள். அவன் கைகேயியின் மகனல்லவா? அவளுடைய தீய குணங்கள்

அவனிடமுமிருக்குமல்லவா? அவனிடத்தில் எங்களைக் காட்டிக் கொடுக்கலாமா என்று நீங்கள் சொல்லலாம்.

ஆனால், பரதன் மிகவும் நல்லவன், அவனை இளவரசனாக அரசர் நியமித்திருக்கிறார் என்றான்.

இச்சாதுரியமான பேச்சால் அவர்களுக்கு இராமனே அரசனாக வேண்டுமென்று ஆசை அதிக ரித்தது.

அவர்களிற் கிழவர் நடக்க முடியாது வருந்து வதைக் கண்டு இராமன் தேரை விட்டுக் கீழேயிறங்கி நடந்தான்.

தமசா நதிக்கரை குறுக்கிட்டது. இரவு அங்கே யாவரும் தங்கினர். விடிந்தது. பிராமணர்களனைவரும்

தூங்குவதைக் கண்ட இராமன் அவர்கள் எழுமுன்தான் அயோத்திக்குப் போனதாகத் தேரை நடத்திக் காட்டி

ஏமாற்றிவிட்டுச் சென்றான். பிராமணர்கள் ஏமாந்து அயோத்தியையடைந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலு முள்ள

பெண்ணும் தங்கள் கணவரைப் பார்த்து அழுது கொண்டு கூர்மையான மரவெட்டியால் யானையைக்

குத்துவதுபோல் ஏற்கெனவே புண்பட்ட அவர்களுடைய மனத்தைக் கொடுமையான சொற்களால் துளைத்து

அவர்களை நிந்திக்கிறார்கள். இராமனை அழைத்து வரத் திறமற்றவர்களுக்குப் பெண்டாட்டி பிள்ளைகளேன்?

தீயவளாகிய கைகேயியின் நாட்டில் யாம் தங்கோம். எல்லோரும் இராமனிடம் போவோம். மலையுச்சி

களிலுள்ள மரங்களின் அடிகளில் உதிர்ந்துள்ள தளிர் களாலும், மலர்களாலுமாகிய படுக்கைகளில் சீதையுடன்

இராமனைக் கூடிக் கலந்து விளையாடச் செய்யும் இராமனின் கட்டழகையுடைய திருமேனியைக் கண்டு

காட்டிலுள்ளவர்களல்லவா இன்புறுவார்கள்? அவன் எப்போதும் இனிமையாகப் பேசுகிறவன். யாரிலும் தானே

முதலில் பேசுபவன், எல்லோருடைய மனத்தையும் கவர்பவன். எப்போதும் சிரித்த முகத்தையுடைய அவனை

இன்னொரு முறை காண்போமோ? என அப்பெண்கள் புலம்பினர்.

இராமன் வடகோசல நாட்டின் எல்லையையடைந்த போது அங்குள்ள குடிகள், நம் அரசன் அறிவற்றவன்,

எவனாவது இந்தக் கிழவயதில் காமத்திற்கு அடிமைப் பட்டு இத்தீய செயலைச் செய்வானா? தன் மகனைக்

காட்டிற்கனுப்ப வேண்டும் என்ற எண்ணம் தசரதனுக்கு எப்படி வந்தது? கைகேயி மரியாதையற்றவள், மிகவும்

தீயவள் என்று சொல்வதைக் கேட்டுக் கொண்டு இராமன் கோசலத்தைத் தாண்டிப் போனான். அவன்

சுமந்திரனைப் பார்த்து, நான் திரும்பிவந்து இன்னுமொரு தரம் சரயூ நதிக்கரையிலுள்ள காடுகளில்

வேட்டையாடுவேனா? என்று கூறினான். பின் இராமன் அயோத்தி நகரத் தேவதைகளை வணங்கிக் கொண்டு

அங்கு நின்ற குடிகளையும் அனுப்பிவிட்டுக் கங்கைக் கரையைச் சீதையுடனும் இலக்குவனுடனும் அடைந்தான்.

சிருங்கபேரபுரத்தை நோக்கிச் செல்லும் இராமன் தேரை நிறுத்தச் சொல்லி அவர்களோடும் அங்கே தங்கினான்.
அந்த நாட்டிற்கு அரசன் குகன். அவன் இராமனுக்கு உயிர்த்தோழன். இராமன் வந்திருப்பதை அறிந்து அவன்

உறவினரோடு பார்க்க வந்தான். அவன் வருவதைத் தூரத்திலேயே கண்டு இராமனும் இலக்குவனும் எழுந்து

எதிர்கொண்டு உபசரித்தார்கள். இராமனை அந்நிலையிற் கண்டு மிகவும் கவலைப்பட்டு அவனை அன்புடன்

கட்டியணைத்து, இந்நாடு உன்னுடையது. இங்கேயே தங்கலாம் என்று கூறி மதுரமான பலவித மாமிசங் களையும்

உணவுப் பொருட்களையும் கொண்டு வந்து வைத்தான். அதைக்கண்டு இராமன் அவனை இறுகத் தழுவி,

உன்னுடைய இனிய சொற்களால் மிகவும் மகிழ்ந்தேன். இப்போது நான் பிறரிடத்தில் எதையும் பெறுவதும்

உண்பதும் கூடாது. இந்தக் குதிரைகளுக்கு வேண்டுவன கொடு என்று கூறி இலக்குவன் தந்த கங்கை நீரைக்

குடித்தான். இராமனும் சீதையும் தரையில் படுத்துக்கொண்ட பிறகு இலக்குவன் அவர்களுடைய கால்களைக்

கழுவிவிட்டுக் குகனிருந்த இடம் வந்தான். குகன் அவனுடன் விற்பிடித்து இராமனைப் பாதுகாத்தி ருந்தான்.

குகன் இலக்குவனையும் படுத்துக்கொள்ள வேண்டினன். இலக்குவனோ இராமனும் சீதையும் புல்லின்மேல்

தூங்குவதைப் பார். அவர்கள் அவ்வாறு தூங்கும்போது எனக்குத் தூக்கமும் வருமா! தந்தைக்கு எங்கள்

நால்வரிலும் இராமனிடத்தில் மிகவும் பிரியம்! அவனைப் பார்க்காமல் அவருடைய உடலில் உயிர் நிற்குமா?

கோசலையும் இறப்பாள். நிகரற்ற அழகு வாய்ந்த வேசைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள அயோத்தியில்

வாழ்பவர்களே புண்ணிய சாலிகள். நாங்கள் திரும்ப அயோத்தியில் புகுவோமா? என்று ஏங்குகிறான்.

பொழுதும் விடிந்தது, இராமனுடைய வேண்டுதலால், குகன் நல்ல மரக்கலம் கொண்டு வரக் கட்டளையிட்டான்.

இராமன் தம்பியுடன் போர்க்கருவி களையணிந்து படகை நோக்கி நடந்தான். சுமந்திரன், பாவியாகிய

கைகேயியிடம் எங்களை ஒப்புவித்துப் போகலாமா? நானும் கூட வருவேன் என்றான். இராமன், என்

தந்தையின் மனோரதங்களெல்லாம் வீணாயின.

அதனால் காமத்தில் ஈடுபட்ட அவருடைய கவலை களைப் போக்குவது உமது கடமை. கைகேயிக்காக அவர்

விரும்புவதைச் செய்யும். அவரிடம் நாங்கள் விரைவில் பார்ப்போமெனச் சொல்லும் தாய்மாரிடம்

கவலையற்றிருக்கக் கூடும். பரதனிடத்தில் தந்தையைப் போலவே தாய்மார்களையும் பணிந்து நடக்க

வேண்டுமென்றும், அதிலும் என் தாய் கோசலையை மிகவும் கவனிக்க வேண்டுமென்றும், சொல்லும் எனப்

புகன்றான். சுமந்திரன் போக மறுக்க இராமன் மறுபடியும், நான் உம்மைத் திரும்பிப் போகக் சொல்லப்பல

காரணங்களுள.

கைகேயி நீர் போனவுடன் நான் காடடைந்தததாக உறுதியாக நினைத்து அரசர்மீதுள்ள பொய் சொல்லுகிறவன்

என்ற சந்தேகத்தை நீக்குவாள் என்றான். பின் அவன் குகனிடம் ஆலம்பால் கொண்டு வரச் சொல்லித்

தலையைச் சடையாக்கினான். பின் குகனுக்கும் விடை கொடுத்து இலக்குவனிடம், தம்பி! சீதையை ஓடத்திலேற்றி

நீயும் ஏறு என்றான். பின் தானும் ஏறினான். ஓடமோட்டி விரைவில் ஓட்டினான். போகும்போது சீதை

கங்காதேவி எங்களைக் காப்பாற்றும், நாங்கள் சுகமே திரும்பிவரும்போது பல்லாயிரம் பசுக்களையும், நல்ல

உடைமையும், நல்ல உணவையும். பிராமணர்களுக்குக் கொடுத்து உம்மைத் திருப்தி செய்கிறேன். பல்லாயிரம்

கள்ளுக்குடங்களாலும் பலவகையான மாமிசங்களாலும் உம்மையும் பிற தெய்வங்களையும் திருப்தி செய்கிறேன்

என வேண்டிக் கொண்டாள். அக்கரை சேர்ந்தவுடன்  அவர்கள் மூவரும் கரையில் இறங்கி நடந்தார்கள்.

இவர்கள் மத்ச நாட்டில் வந்து அங்கே காட்டுப்பன்றி, ரிசியம், பிருஷதம், மகாகுரு என்று சொல்லப்படுகின்ற

மான்கள் ஆகிய இந்நான்கு பெரிய மிருகங்களையும் விரைவிற் கொன்றெடுத்து ஒரு பெரிய மரத்தடியில்

அவற்றைத் தின்ன உட்கார்ந் தார்கள்.

தின்றபின் இராமன் படுக்கையிற் படுக்கப்போகும் போது இலக்குவனை நோக்கி, இப்போது தந்தை துக்கத்தால்

தூக்கம் வராமல் வருந்துவார். கைகேயி தன் மகனுக்கு நாடு உறுதியாகக் கிடைக்க வேண்டும் என்ற

எண்ணத்தால் ஒருவேளை தந்தையைக் கொன்றாலும் கொல்லுவாள். அவரோ காமத்திற்கு வசப்பட்டவர்.

கைகேயியிடத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார். நானும் பக்கத்திலில்லை. அய்யோ என் செய்வார்? நம் பிதா

செய்ததை ஒருவன் எவ்வளவு மூடனானாலும் ஒரு பெண்ணை மகிழ்விக்கத் தன் மனப்படி நடக்கும் மகனைக்

காட்டிற்குத் துரத்துவானா? அவர் இன்னும் எத்தனை நாள் வாழப்போகிறார்? பரதன் தன் மனைவியுடன்

கோசல நாட்டைத் தான் ஒருவனாகச் சுகமாக அனுபவிக்கப் போகிறானே. புதிதாக அதிகாரம் கிடைத்த

கொழுப்பால் கைகேயி இப்போதே கோசலை யையும் சுமித்திரையையும் தொந்தரவு செய்வாள். ஆதலின்

காலையில் அயோத்திக்குப் போ. கைகேயி அநியாயக்காரி. முற்பிறப்பில் என் தாய் பல மாதர்களைத் தன் தன்

பிள்ளைகளிடமிருந்து பிரித்தாளென்பது நிச்சயம். அதனாலேயே நான் அவளைப் பிரிய நேர்ந்தது. எனக்குக்

கோபம் வந்தால், நானொருவனே உலகை வென்று அயோத்திக்கு என்னை அரசனாக்கிக் கொள்வேன்.

உலகத்தார் பழிப்பார்களென்று அஞ்சியே சும்மாயிருக்கிறேன் எனப் பலவாறு புலம்பிக் கண்ணீர் வடித்தான்.

இலக்குவன் இராமனைப் பிரிந்தால் இறப்பதாகக் கூறினான். பின் அவர்கள் அந்த மரத்தடியில் படுத்துக்

கொண்டார்கள்.
     ------------------ தொடரும் ---------------"விடுதலை” 28-10-2014

13 comments:

தமிழ் ஓவியா said...

பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வா? மக்கள் நல அரசு என்பதற்கு உகந்ததல்ல!


தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருளான பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு என்பது மக்கள் நல

அரசு என்பதற்கு எதிரானது; தமிழ்நாடு அரசு இதனைக் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளார்.
அறிக்கை வருமாறு:

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி 2011 இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் வராததுமாக பால் விலை, மின் கட்டணம்,

பேருந்துக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியது.

அன்றே எழுதினோம்!

அப்பொழுதே அதுகுறித்துக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டோம்.

மத்திய அரசு அண்மையில் பெட்ரோல் விலை ஒன்றுக்கு ரூ.2.10 ஏற்றியதற்கு எவ்வளவுக் கடுமையாக அறிக்கை

வெளியிட்டார் நமது முதலமைச்சர்? நாமும் அந்த விலையேற்றத்தைக் கண்டித்தோம். பெட்ரோலைப்

பயன்படுத்துபவர்கள் வாக்காளர்களில் ஒரு பகுதிதான். ஆனால், அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான

பால், பேருந்துக் கட்டணங்கள் தமிழக அரசால் பல மடங்கு ஏற்றப்பட்டு, நடைமுறைக்கு அமலில் உடனடியாக

வரும் என்று அறிவிக்கப்பட்டு விட்டதே!

வரலாறு காணாத அளவுக்கு 75 விழுக்காடு பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டது. மின்சாரக்

கட்டணத்தை உயர்த்துமாறு மின்வாரியத்திற்குப் பரிந்துரை செய்து அனுமதியளித்துள்ளனர். பால், பேருந்து,

மின்சாரம் இவைகளைப் பயன்படுத்துவோர் அம்பானிகளோ, கிருபானிகளோ, டாடா, பிர்லாக்களோ, ஆலை

முதலாளிகளோ, பெருமுதலாளிகளோ மட்டும் அல்ல; பெரும்பாலும் இந்த ஆட்சிக்கு வாக்களித்த ஏழை, எளிய

மக்கள்தான்.

வாக்களித்தவர்களுக்கு ஆறு மாதத்திற்குள் இந்த அரசு தரும் பரிசு இதுதானா? இது நம்முடைய கேள்வியல்ல -

மெஜாரிட்டி ஆட்சி என்று மார்தட்டும் முதலமைச்சரை அவரது ஆட்சியை நோக்கி மக்கள் எழும்பிக் குமுறும்

குரல்கள் ஆகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தேன். (விடுதலை, 21.11.2011)

மக்கள் தலையில் இடியோ!

இப்பொழுது இன்னொரு ஆபத்தான இடியை ஏழை, எளிய, நடுத்தரப் பாட்டாளி மக்கள் தலையில் இறக்கி

வைத்துள்ளது தமிழ்நாட்டை ஆளும் அ.இ.அ.தி.மு.க. அரசு; லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 அளவுக்கு பால் விலை

உயர்வாம்; ஓர் அத்தியாவசியமான அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருள்மீது இவ்வளவு அபாயகரமான

விலை ஏற்றம்; இது என்ன கொடுமை!

நட்டம் ஏற்படுகிறது என்பதற்காக இப்படி ஒரு ஈவு இரக்கமற்ற, மனிதநேயமற்ற செயலில் ஈடுபடலாமா?
2011 நவம்பரில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.6.25 உயர்த்தியதும் இதே அ.தி.மு.க. ஆட்சிதான். இப்பொழுதோ ரூ.10

அதிகம்.

பால் விலை உயர்வு என்றால், அத்தோடு முடியக் கூடியதல்ல; அது தொடர்புடைய 43 பொருள்கள்

இருக்கின்றன. அவை அத்தனையும் 15 சதவிகிதம் அளவுக்கு உயர்கின்றன.

ஆட்சி நடத்துவது வியாபாரம் அல்ல!

எல்லாத் துறைகளிலும் இலாபம் வரும் என்று அரசு எதிர்பார்க்கக்கூடாது; அப்படி எதிர்பார்ப்பது தனிப்பட்ட

வியாபாரிகளுக்கான தர்மமாக இருக்கலாமே தவிர, அரசின் தர்மமாக இருக்க முடியாது. (வியாபாரிகள்கூட

தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலையைக் கண்மூடித்தன மாக ஏற்றிவிட முடியாது; அதற்கும் அரசு சில கட்டுப்

பாடுகளை விதித்துள்ளது) அரசோ அப்படிப்பட்டதல்ல - மக்கள் நலன் சார்ந்தது! (Welfare State).
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முக்கிய கட்சிகளும் எதிர்த்துள்ளன - போராட்டங்களையும் அறிவித்துள்ளன.

இன்னும் சொல்லப்போனால், அ.இ.அ.தி.மு.க.வை ஆதரிப்பவர்கள்கூட இந்தப் பால் விலை உயர்வை

விரும்பவில்லை - எதிர்த்துக் கருத்துக் கூறியுள்ளனர்.

மறுபரிசீலனை தேவை!

தமிழ்நாடு அரசு இதில் மறுபரிசீலனை செய்யவேண்டும்; மறுபரிசீலனை என்ற பெயரில் ஒரு ரூபாய், இரண்டு

ரூபாய் குறைப்பு என்ற கண் துடைப்பு வேலையில் இறங்கினாலும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்

என்பதையும் இடித்துச் சொல்லுவது நமது கடமையாகும்.

அடுத்து மின்கட்டண உயர்வு என்ற அதிர்ச்சி (ஷாக்) அச்சாரம் போட்டுக்கொண்டு இருக்கிறது. அரசு

கொள்ளிக் கட்டையை எடுத்துக்கொண்டு தலையைச் சொரிய ஆசைப்பட்டால், யார்தான் என்ன செய்ய

முடியும்?


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/90121.html#ixzz3HUgHkVRK

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்தி இவ்வளவுதானா?

குமரி மாவட்டத்தில் கோவில்கள் கொள்ளையோ கொள்ளை!

குமரி மாவட்டம், குளச்சல் அருகே மேற்கு நெய்யூரில் இருக்கும் இசக்கி அம்மன் கோவிலுக்கு நேற்று காலை

கோவில் நிர்வாகி சிவராம் சென்று பார்க்கும்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த

நகை திருட்டுப் போயி ருந்தது.

உடனடியாக அவர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்

தனது நகையைக் கூட பாதுகாக்க இயலாத இந்தக் கடவுளா பக்தர்களைப் பாதுகாக்கப் போகிறது?

ராஜாக்க மங்கலத்தில்...

குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் பண்ணயூரில் உள்ள இசக்கியம்மன் கோவில் பூசாரி ராஜேஷ் நேற்று

முன்தினம் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு பின்னர் கோவிலுக்குள் வந்து பார்க்கும்போது கோவில்

உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் ரூ2ஆயிரம் திருடப்பட்டிருந்ததைப் பார்த்தார்
உடனே ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதுபோல ராஜாக்கமங்கலம் அருகே பாம்பன் விளையில் உள்ள விநாயகன் கோவிலிலும் பூட்டு உடக்கப்பட்டு

பணம் திருட்டுப் போய் உள்ளது. அந்த கோவில் பூசாரியும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்

தொடர்ச்சியாக கோவிலில் பணம் திருடப்பட்ட போதும் இந்த சக்தியற்ற கடவுளர்களை நம்பி கோவிலுக்குப்

போவதை பக்தர்கள் என்றுதான் நிறுத்துவார்களோ.


கும்மிடிப்பூண்டி:

கோவில் பூட்டை உடைத்து திருட்டு

கும்மிடிப்பூண்டியை அடுத்த காட்டுக்குளம் கிராமத்தில் பழைமை வாய்ந்த பொற்காளியம்மன் கோவில் உள்ளது.

நேற்று காலை கோவில் பூசாரி ராஜீ(வயது 50) கோவிலை திறக்கச் சென்றார். அப்போது கோவிலின் முன்பக்க

இரும்பு கதவு மற்றும் அதனை அடுத்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி

அடைந்தார்.

யாரோ சிலர் கோவிலின் 2 கதவு பூட்டுகளையும் உடைத்து உள்ளே புகுந்து அங்கு இருந்த இரண்டு

உண்டியல்களையும் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணம் மற்றும் சில்லறை காசுகளை அள்ளிச் சென்று

உள்ளனர். மேலும் அங்கு இருந்த இரும்பு பெட்டியை தூக்கிச்சென்று சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ள

வயல்வெளியில் வைத்து அதனை உடைத்து அதில் இருந்த அரை பவுன் எடை உள்ள தங்கக் காசுகளையும்

அவர்கள்அள்ளிச்சென்று விட்டனர். இதுபற்றி கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கடந்தாண்டு இந்தக் கோவிலின் கோபுரத்தில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ளஅய்ம்பொன் கலசங் களை யாரோ

சிலர் திருடிச்சென்று விட்டது குறிப் பிடத்தக்கது.


Read more: http://viduthalai.in/e-paper/90124.html#ixzz3HUgd3OVv

தமிழ் ஓவியா said...

மக்களை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசு மரபணு மாற்றம் கத்திரிக்காய் அனுமதி!


புதுடில்லி, அக். 28- மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் பற்றி கள ஆய்வு நடத்த மத்திய அரசு

அனுமதி அளித்துள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட வேளாண் விளை பொருள்கள் பற்றி கள ஆய்வு நடத்த முந்திய அய்க் கிய

முற்போக்குக் கூட்டணி அரசில் தடை விதிக்கப் பட்டிருந்தது.ஆனால் 18 மாதங்களுக்குப் பிறகு தற் போது

இந்தத் தடையை பா.ஜ.க. அரசு நீக்கியுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் மற்றும் கடுகு

ஆகியவை பற்றி கள ஆய்வு நடத்த சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு சுற்றுசூழல் அமைச்சகம் பதிலளித் துள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுபற்றி ஆய்வு நடத்துவதற்கு டில்லி பல்கலைக்கழகத்துக்கு அனுமதி

அளிக்கப்பட்டது. மரபணு மாற்றம் செய்யப் பட்ட கத்திரிக்காய் பற்றி ஆய்வு நடத்த மராட்டிய மாநிலத்தைச்

சேர்ந்த பிஜோ சீட்ஸ் பிரைவேட் லிமி டெட் என்ற நிறுவனத்துக்கு அனுமதியளிக்கப் பட் டது. கடந்த ஆகஸ்டு

21 இல் இவ்வாறு அனுமதி அளித் தோம் என சுற்றுசூழல் அமகம் பதிலளித்துள்ளது.


Read more: http://viduthalai.in/e-paper/90123.html#ixzz3HUglL3Cp

தமிழ் ஓவியா said...

சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்!!


நடிகர் ரஜினிகாந்த் பிஜேபிக்கு வர வேண்டும் என்று அழைப்புக் கொடுத்த தமிழக பிஜேபியின் தலைவர்

டாக்டர் தமிழிசை, ரஜினியை நம்பி பிஜேபி இல்லை என்று இப்பொழுது கூறியுள்ளார்.

சீச்சீ... இந்தப் பழம் புளிக் கும் என்பது இதுதானோ!

Read more: http://viduthalai.in/e-paper/90127.html#ixzz3HUh5B9dU

தமிழ் ஓவியா said...

இந்துக்கள் 10 குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டுமாம்! சொல்லுகிறார் சிவசேனை தலைவர்

லக்னோ, அக். 28 இந்துக்கள் பெரும்பான்மை யினர் தகுதியை தக்க வைத்துக் கொள்ள இந்து குடும்பங்கள் 10

குழந்தை களுக்கும் மேல் பெற்றெ டுக்க வேண்டும் என உத்தரப்பிரதேச சிவசேனா தலைவர் அனில் சிங் தெரி

வித்திருப்பது பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்துக்கள் பெரும்பான் மையினர் என்ற தகுதியை தக்க வைத்துக்கொள்ள இந்து குடும்பங்கள் 10

குழந்தைகளுக்கும் மேல் பெற்றெடுக்க வேண்டும். அவ்வாறு பத்து அல்லது பத்துக்கும் மேற்பட்ட குழந் தைகள்

பெற்றுக்கொள்ளும் குடும்பத்திற்கு தலா ரூ.21,000 வெகுமதி வழங் கப்படும். அக்குடும்பங் களுக்கு தேசிய நலன்

கருதி மக்கள் தொகையை அதி கரித்ததற்காக பாராட்டு சான்றிதழும் அளிக்கப் படும் என அனில் சிங்

கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவசேனா தலைவரின் இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மற்றொரு தலைவரான சுரேந்திர

ஷர்மா, இந்துக் களின் எண்ணிக்கை குறைந் தால் நமது தேசத்தில் நாமே சிறுபான்மையின ராக மாறிவிடுவோம்

என கூறியிருக்கிறார்.

இக்கருத்திற்கு பிற கட்சிகள் கண்டனம் தெரி வித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரீட்டா

பகுகுணா ஜோஷி, உத்தரப்பிரதேசத்தில் வகுப்புவாத கலவரங்களை தூண்டும் வகையில் நடந்து கொள்ளும்

சிவசேனா வெட்கப்படவேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த் ஷாகித் சித்திக்கி கூறுகையில், 10 குழந்தைகளை பெற்றுக் கொள்வது

பெண்களுக்கு வேதனையானது. சிவசேனா இதற்காக ரூ.21,000 மட்டும் தருவதாக தெரிவித்துள்ளது. அவர்கள்

ரூ.21 லட்சம் கொடுக்க வேண்டும். ஆனால், அப்படி அதிக தொகை கொடுத்தாலும் இந்த எண்ணம் தவறானது.

வளர்ந்த நாடுகள் மக்கள் தொகையை குறைக்க நட வடிக்கை மேற்கொண்டு வரும் வேளையில், சிவ சேனா

மக்கள் தொகையை அதிகரிக்க ஆலோசனை கூறியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/90136.html#ixzz3HUi5fTLg

தமிழ் ஓவியா said...

ஹிட்லரை எதிர்த்த சோபி ஸ்கால்


உலகம் முழுவதுமே மிக மோசமான பின் விளைவு களை ஏற்படுத்திய இரண்டாம் உலகப் போர் காலகட்டம்... ஹிட்லர் தலைமையில் ஜெர்மனிதான் இந்தப் போருக்குத் தலைமை தாங்கியது. ஆனாலும், எல்லா ஜெர்மனியர்களும் போருக்கு ஆதரவாக இல்லை. அப்படி, சொந்த நாடாக இருந்தாலும், சொந்த நாட்டு அதிபராக இருந்தாலும் ஹிட்லரை எதிர்த்தவர்களில் ஒருவர் சோபி ஸ்கால்!

1921 மே 9 அன்று பிறந்தார் சோபி. சோபி நிறையப் படிப்பார்... ஓவியங்கள் தீட்டுவார்... இசையிலும் ஆர்வம் இருந்தது. பள்ளியில் படிக்கும்போது மாணவர் தலைவராக இருந்து, திறமையாகச் செயல்பட்டார். நாஜி இளைஞர் படை, பெண்கள் படை போன்றவற்றில் இணைந்து பணி புரிந்தார். பள்ளி இறுதி முடித்தவர்கள் கட்டாயம் தேசச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று சட்டம் இருந்தது.

அதற்காக பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, ஆசிரியராக சிறிது காலம் வேலை செய்துகொண்டிருந்தார் சோபி. பிறகு, முனிச் பல்கலைக் கழகத்தில் படிக்கச் சென்றார். அங்கேதான் சோபியின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.

யூதர்களுக்குத் தனிப் பள்ளி, தனிக் கடைகள், உடையில் சின்னம் அணிந்திருக்க வேண்டும், குறிப்பிட்ட நேரங் களில்தான் வெளியில் வரவேண்டும், மற்றவர்களுடன் பேசக்கூடாது என்றெல்லாம் நாஜிகள் மிக மோசமான சட்டங்களைக் கொண்டு வந்தனர். இவற்றைக் கண்டு அதிர்ந்து போனார் சோபி.

இன்னொரு பக்கம் ஹிட்லரை எதிர்த்தவர் களுக்குக் கிடைத்த தண்டனைகளும் அவரை நிலைகுலையச் செய்தன. சோபியின் அப்பா ஹிட்லரின் நடவடிக்கைகளை எதிர்த்த காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு தனிநபரின் கைகளில் முழு அதிகாரமும் இருந்தால், அவர் எந்த அளவுக்கு சர்வாதிகாரியாக நடந்துகொள்வார் என்பதை அப்போது புரிந்துகொள்ள முடிந்தது. அண்ணன் ஹான்ஸ் மற்றும் அவர் தோழர்களுடன் சேர்ந்து ஹிட்லரை எதிர்க்கும் போராட்டங்களில் பங்கேற்றார் சோபி.

ஒயிட் ரோஸ் என்ற அமைப்பு உருவானது. 1942 ஜூன் முதல் 1943 பிப்ரவரி வரை இந்த அமைப்பு மிகவும் தீவிரமாகச் செயல்பட்டது. ஹிட்லருக்கு எதிரான செயல்களில் ஈடுபட் டதாக குற்றம் பதிவு செய்யப்பட்டது. வெகு விரைவில் விசாரணை முடிந்தது. சோபி, ஹான்ஸ் மற்றும் தோழர்களுக்கு கெல்லட்டின் கொண்டு தலை வெட்டும் தண்டனை வழங்கப் பட்டது.

1943 பிப்ரவரி 22... ஹான்ஸ், நண்பர் கிறிஸ்டோப் ப்ராப்ஸ்ட், சோபி மூவரையும் தண்டனை அளிப்பதற்காக அழைத்துச் சென்றனர், வேண்டும் சுதந்திரம் என்றபடி ஹான்ஸ் கொலை மேடைக்குச் சென்றார். அவர் தலை துண்டிக்கப்பட்டது. 21 வயதே நிரம்பிய சோபி, துணிச்சலுடன் கண்களை இமைக்காமல் மரணத்தை எதிர்கொண்டார்.

Read more: http://viduthalai.in/page-7/90156.html#ixzz3HUilLc6O

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


1932 இல் காஞ்சி பெரியவாள் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி தஞ்சாவூரிலிருந்து காசிக்கு நடந்தே போனாராம். ஆறு மாதம் நடந்தாராம். எவ்வளவோ கேட்டுக் கொண்டும், மறுபடியும் நடந்தே திரும்பினாராம்.

அப்படியென்றால், விமானத்தில் பறந்து திரி யும் ஜெயேந்திர சரஸ்வதி சாஸ்திரத்தை மீறியவர் ஆகவில்லையா!

நடந்து போனவரும் ஜெகத்குரு, விமானத்தில் பறப்பவரும் ஜெகத்குரு தானா?

என்னே, பார்ப்பனப் பற்று!

தமிழ் ஓவியா said...


மதவாதம் - அறிஞர்களின் மவுனம் ஆபத்தானது!

வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் எச்சரிக்கை!

புதுடில்லி, அக்.29_- மதவெறி நோக்கில் பாடப் புத்தகங்கள் திருத்தப் படுவது குறித்தும், மதச் சார்பின்மை அடிப்படை யிலான புத்தகங்கள் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்படுவது குறித்தும் அறிஞர்கள் கேள்வி எழுப்பவேண்டும் என்று வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் வற் புறுத்தினார். புதுடில்லியில் நிகில்சக் கரவர்த்தி நினைவு அறக் கட்டளை சார்பில், கேள்வி எழுப்புவதா? கேள்வி எழுப்பாமல் இருப்பதா? -இதுதான் இப்போதைய கேள்வி என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.

முன்பை விட இப் போது ஏராளமான அறி ஞர்கள் உள்ளனர். ஆனால், அதிகாரத்தோடு மோத அவர்கள் மறுக்கின்றனர். சிந்தனை சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுக் கப்படும்போதுகூட அவர் கள் மவுனம் சாதிக்கின் றனர். ஏனெனில் அவர் கள் சர்ச்சையற்ற முறை யில் இயங்க விரும்புகின் றனர் அல்லது தங்களது அறிவாற்றலை அமுக்கிக் கொள்ள சம்மதிக்கின் றனர் என்று அவர் குறிப்பிட்டார்.பண்டைய இந்தியாவில் பிராமணர் அல்லாத சிந்தனையாளர் கள் நாத்திகர்கள் அல்லது கடவுள் மறுப்பாளர்கள் என்று முத்திரை குத் தப்பட்டு ஒடுக்கப்பட்ட னர். தற்போது இந்துத் துவா போதனைகளை ஏற்க மறுப்பவர்கள் அத் தனை பேரும் மார்க்சிஸ்ட் டுகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படு கின்றனர் என்று ரொமிலா தாப்பர் குறிப் பிட்டார்.

பகுத்தறிவுச் சிந்தனை என்பதுதான் நம்முடைய அறிவுலகின் பாரம்பரியம். அதை முன்னெடுத்துச் செல்ல அறிஞர்கள் துணிச்சலுடன் முன்வர வேண்டும் என்று குறிப் பிட்ட அவர், இனவெறி, மதவெறி அடிப்படையில் மனித உரிமைகள் மறுக் கப்படுவதற்கு எதிராக அறிஞர்கள் குரல் கொடுக்கவேண்டும் என் றார்.

மவுன சாட்சியாகி விடுகின்றனர்

இன்றைய நாளில் அறிஞர்கள் என்று அறியப்படுபவர்கள் அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்ப அஞ்சுகின்றனர்.

அதிகாரத்தில் உள்ளவர் கள் தங்களது சிந்தனைகளை திணிக்கும்போது அதற்கு எதிராக எதுவும் பேசாமல் மவுன சாட்சி யாகி விடுகின்றனர் என் றார் அவர்.

மதச்சார்பற்ற கோட் பாடுகளை முன்வைக்கும் புத்தகங்கள் தடை செய் யப்படுகின்றன. பாடத் திட்டங்கள் மதவெறி அடிப்படையில் திருத்தி எழுதப்படுகின்றன.

மத மற்றும் அரசியல் தலை யீடுகளின் காரணமாக இவ்வாறு நடக்கிறது. அரசியல் அதிகாரத்தை கண்டு அறிஞர்கள் அஞ்சு வதால்தான் சிறு எதிர் வினையைகூட செய்வ தற்கு இவர்கள் தயங்கு கின்றனர் என்று குறிப் பிட்ட ரொமிலா தாப்பர், மத அடிப்படையிலான அரசியல் திட்டமிட்டு வளர்க்கப்படுவதால் மக் களிடையே பகைமை உருவாக்கப்படுகிறது. இதனால் சுதந்திரமான சிந்தனை மறுக்கப்படு கிறது. அறிஞர்கள் இத் தகைய போக்கை எதிர்த்து மேலும் மேலும் கேள்வி எழுப்ப வேண்டும். அறி வுத்தளத்தில் போர்புரிய வேண்டும். ஆனால், இதுமிகவும் குறைவாகவே உள்ளது என்று அவர் குறிப்பிட் டார்.

Read more: http://viduthalai.in/e-paper/90194.html#ixzz3HaOgZcvR

தமிழ் ஓவியா said...

பேயை விரட்ட பிரார்த்தனையாம் குமரியில் இளம்பெண் சாவு!


கன்னியாகுமரி, அக்.29- குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்துள்ள சாலூர் பகுதியைச் சேர்ந்த ரூபனின் மனைவி சுபிதா (வயது 27) உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த சுபிதாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் உடல் நிலை சரியாகாததால் அவருக்கு பேய் பிடித்திருக்கலாம் என சந்தேகப்பட்டு காட்டா விளை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் அவரை தங்கவைத்து ஜெபம் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஜெபக்கூட வளாகத்தில் தீயில் உடல் கருகிய நிலையில் சுபிதா பிணமாகக் கிடந்தார். இந்தத் தகவல் அறிந்ததும் பொது மக்கள் கடையாலு மூடு காவல்நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். சுபிதாவின் உடல் அருகே மண்ணெண்ணெய் கேன் இருந்தது. அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக காவல்துறையினர் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

பேய் என்பது இல்லாத ஒன்று. பேய் அந்தப்பெண்ணுக்கு (சுபிதா) பிடித்திருப்பதாகக் கூறி அந்த பெண்ணை ஜெபக்கூட்டத்தில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். ஜெபக்கூட்டங்களுக்குச் சென்றால் நோய் குணமாகி விடுமா?

பேய், ஜெபக்கூட்டம் போன்ற மூடநம்பிக்கைகளை நம்பாமல் உரிய முறையில் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்திருந்தால் அந்தப் பெண்ணைக் காப்பாற்றி இருக்கலாம். மூடநம்பிக்கை என்ற பெயரால் அந்தப் பெண் சாகடிக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை. இனியாவது திருந்துவார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/90191.html#ixzz3HaP0NmVg

தமிழ் ஓவியா said...

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் தகவல்


டில்லி, அக்.29- பாலியல் தொழிலுக்கு சட்டப்படியான அங்கீகாரம் வழங்குவதன் மூலம் பாலியல் தொழிலாளர்களுக்கு பணி நேர வரையறை, ஊதியம், உடல் நலம் மற்றும் அவர்களின் குடும்பத் தினருக்கு கல்வி மற்றும் பொருளாதார மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று லலிதா குமாரமங்கலம் கூறுகிறார்.

தேசிய மகளிர் ஆணையத்தின் National Commission for Women (NCW) தலைவர் லலிதா குமாரமங்கலம் பாலியல் தொழிலை ஒரு தொழிலாக முறைப் படுத்தி, அத்தொழிலில் பணத்துக்காக ஈடுபட்டுள்ள பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றப்போவதாகவும், பாலியல் தொழிலை சட்டப்படியாக ஒரு தொழிலாக அங்கீகரிப்பதுடன், பாலியலில் ஈடுபட்ட பெண்கள் எச்.அய்.வி. நோய் மற்றும் பாலியல் நோய்களிலிருந்தும் பாதிக்கப்படு வதைக் குறைக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, பெண் களுக்கான தேசிய ஆணையத்தின் சார்பில் 8.11.2014 அன்று அதிகாரமுள்ள குழுக்கூட்டம் நடைபெறும். அக்கூட்டத் தில் சட்ட ரீதியிலான அங்கீகாரத்தை வாங்கி ஒரு தொழிலாகவும் முறைப்படுத் தப்படும். ஏராளமான பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளனர். சட்ட அங்கீகாரம் வழங்கியபிறகு, பாலியல் தொழிலில் கட்டாயமாகத் தள்ளப்படுவது கடும்நடவடிக்கைகளால் குறைந்துவிடும் என்று லலிதா குமாரமங்கலம் கூறுகிறார்.

பாலியல் தொழில் முறைப்படுத்தப் படாமல் இருப்பதால் அத்தொழிலில் உள்ள பெண்கள் விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஆணு றைகள் இல்லாமல் சுகாதாரமற்ற நிலை ஏற்படுகிறது. எச்.அய்.வி. மற்றும் பிற எஸ்.டி.டி. போன்ற பாலியல் நோய்கள் பரவிவிடும்.

கொல்கட்டாவில் உள்ள சோனாகச்சி (பாலியல் தொழிலுக்கான பகுதி)யில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கம் நன்றாக செயல்பட்டு வருகிறது. அவர்களின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. வாடிக்கை யாளர்களாக வருபவர்கள் வழக்கத்துக்கு மாறாக ஆணுறைகளைப் பயன்படுத்த விரும்பாததால் நோய்களைப் பரப்புபவர் களாக உள்ளனர். பாலியல் தொழிலாக முறைப்படுத்தப்படும்போது இவை யாவும் மாற்றப்படும்.

பணிநேர வரையறை, ஊதியமுறை, உடல்நலம் ஆகியவை பாலியல் தொழி லாளர்களுக்கு வரையறுக்கப்படும். அவர்கள் குடும்பத்தாருக்கு கல்வி, பொருளாதார மாற்று ஏற்பாடுகள் உரு வாக்கப்படும். பெண்களுக்கு பாலியலைத் தவிர்த்து மற்ற பணிவாய்ப்புகளும் அளிக்க வேண்டிய தேவை உள்ளது. பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திவரும் இடைத்தரகர்கள், பாலியல் முகவர்கள் ஆகியோர் பெண்களைப்பயன்படுத்தி வருகின்றனர்.

பாலியல் தொழிலாக, சட்ட ரீதியான அங்கீகாரம் அளிக்கப்படும்போது, அவர்களுக்கு இடமில்லாமல் போகும். பெண்களுக்காகப் போராடிவருபவர்கள் பாலியல் தொழிலாக அங்கீகரிப்பதை ஏற்காமல், எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அப்னே ஆப் விமன் வேர்ல்ட்வைட் Apne Aap Women Worldwide என்னும் பாலியல் தொழிலை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய ஆணிவேர் போன்ற அமைப் பின் சார்பில் டிங்கு கன்னா கூறுகையில்,

பாலியல் தொழிலாக சட்ட அங்கீகாரம் அளித்தால் விபச்சாரத்தை ஊக்கப்படுத்திவிடும். எங்கள் அனுபவத் தின் அடிப்படையில் பெண்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அவர் களின் விருப்பமில்லாதநிலையிலும் பாலி யல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறார்கள். பாலியல் தொழிலில் உள்ள பெண்கள் அவர்களுக்காக மட்டும் வேலை செய் வதில்லை. அவர்களும் அத்தொழிலில் ஒருவர் என்றுதான் உள்ளனர். இடைத் தரகர்கள் தொழிலில் இருக்கிறார்கள். அவர்கள் பாலியல் தொழிலால் லாப மடைகிறார்கள். சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டால், அப்பெண் களுக்காகப் பணியாற்றிவரும் நாங்கள் எங்கள் பணிகளை முடித்துக் கொள் ளுவோம். என்றார்.

உச்சநீதிமன்றத்தின் வழக்குரைஞரும், தொண்டு நிறுவனத் தலைவருமாகிய சக்தி வாகினி ரவி காந்த் பாலியல் தொழிலை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டு மின்றி, பெண்களை பாலியல் தொழிலில் தள்ளுகின்றவர்களுக்கு கடுமையான தண்டனையும் அளிக்க வேண்டும் என்றார். மேலும் அவர் கூறும்போது, இதுபோன்ற மோசமான சமூகக் கேட் டைக் களைவதற்கு உச்சநீதிமன்றம் பல்வேறு சிபாரிசுகளை செய்துவந்தாலும், எந்த அரசும் உரிய நடவடிக்கையை எடுப்பதே இல்லை என்றார்.

Read more: http://viduthalai.in/page-2/90176.html#ixzz3HaPGxGJV

தமிழ் ஓவியா said...

குழந்தைகள் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்


திண்டுக்கல், அக்.29 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குள்ளிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருடைய மகள் ரம்யா (வயது13). நிலக்கோட் டையில் உள்ள ஒரு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலை யில் ரம்யாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

அதே பகுதியை சேர்ந்த உறவுக் காரர் மகனுக்கு ரம்யாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட் டது. இதையடுத்து இரு வீட்டாரும் நிச்சயதார்த்தம் செய்தனர்.

இதுபற்றிய தகவல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தெரிய வந்தது. இதையடுத்து ஆட் சியர் வெங்கடாசலத்தின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று சிறுமி ரம்யாவுக்கு ஏற்பாடு செய் திருந்த திருமணத்தை தடுத்து நிறுத் தினர். பின்னர் ரம்யாவின் பெற் றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. சிறு வயதில் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதால் ஏற்படும் துன் பங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

மேலும் ரம்யாவை தொடர்ந்து படிக்க வைப்பதுடன் உரிய வயது வந்தபின்னரே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று அவர்களிடம் எழுதி வாங்கப்பட்டது.

இதுபோன்று பழனி அருகே கீரனூரிலும் ஒரு குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. அவ்வூரை சேர்ந்த முகமது என்பவர் மகள் மஜிதா பானுவுக்கும் (15). அதே பகுதியை சேர்ந்த முகமது உசேனுக்கும் இன்று திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக் கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று மஜிதாபானுவின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

அவரின் பெற்றோருக்கும் ஆலோ சனை கூறிய அதிகாரிகள் குழந்தை களுக்கு சிறு வயதில் திருமணம் செய்து வைக்கமாட்டோம் என்ற உறுதி மொழியை எழுதி வாங்கினர்.

Read more: http://viduthalai.in/page-2/90179.html#ixzz3HaPSOde6

தமிழ் ஓவியா said...

மனிதன் என்றால்...


மனிதன் யார் என்றால் நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப்பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சியும் வாழும் ஜீவப் பிராணிகளேயாகும்.

- (குடிஅரசு, 23.10.1943)

Read more: http://viduthalai.in/page-2/90174.html#ixzz3HaPaSImt

தமிழ் ஓவியா said...

உணவுக்குழாய் புற்றுநோயை தடுக்க உடற்பயிற்சி அவசியம்

சென்னை, அக். 29_ உடற்பயிற்சி செய்தால் உணவுக்குழாய் புற்றுநோய் உள்ளிட்ட எவ்விதமான நோயும் வராது என ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சைத் துறை தலைவர் மருத்துவர் சந்திரமோகன் தெரிவித்தார்.

கனடாவில் நடந்த சர்வதேச மாநாட்டில், சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை பட்ட மேற்படிப்பு மாணவர்கள் 6 பேர் 14 ஆய்வுக் கட்டு ரைகளைச் சமர்ப்பித்தனர்.

இந்த ஆய்வுக் கட்டுரை களில் முக்கியமாக பழைய சாதத்துடன் ஊறுகாய், கருவாடு, உப்புக் கண்டம் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் உணவுக் குழாய் புற்றுநோய் வருவ தற்கு வாய்ப்புள்ளது என்ற ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்துள்ளனர்.

இதுதொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சை துறை தலைவர் மருத்து வர் சந்திரமோகன் கூறிய தாவது:_ என்னுடைய தலைமையில் சென்று தான் ஆய்வுக் கட்டுரை களை சமர்ப்பித்தோம்.

உணவில் உப்பை அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடு படுத்தி செய்யும் உணவு களை சாப்பிடக்கூடாது. நெருப்பில் நேரடியாக இறைச்சியை சுட்டு சாப் பிடக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் தெரி வித்துள்ளது. அதனை பின்பற்றித்தான் ஆய்வு நடத்தினோம்.

அந்த காலத் தில் பழைய சாதத்துடன் கருவாடு, ஊறுகாய் போன் றவற்றை சாப்பிட்ட மக்கள் 90, 100 வயது வரை வாழ்ந்துள்ளனர். அதற்கு முக்கிய கார ணம், அவர்களிடம் உடல் உழைப்பு அந்த அளவுக்கு இருந்தது. அதனால் அவர் களுக்கு உடலில் எவ்வித மான பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்த காலத்தில் மக்களிடம் உடல் உழைப்பு இல்லை. சரியான உடற்பயிற்சியும் செய்வதில்லை.

கம்ப்யூட் டர் முன்பு அமர்ந்து வேலை பார்ப்பது, சாப் பிடுவது, தூங்குவதுமாக இருக்கின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் வருகிறது. முக் கியமாக உடல் பருமன் நோயால் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர். உடற்பயிற்சி செய்தால் உணவுக்குழாய் புற்றுநோய் உள்ளிட்ட எவ்விதமான நோயும் வராது. ஆரோக்கியமான உடலுக்கும், வாழ்விற்கும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-7/90187.html#ixzz3HaR26W5I