Search This Blog

18.10.14

திருவாளர் சோவின் இனப் பார்வை-திராவிடர் இயக்கத்தின்மீது குறைகூறும் டாக்டர்

செய்தியும் சிந்தனையும்
செய்தியும் சிந்தனையும்


 
I.  திருவாளர் சோவின் இனப் பார்வை

II. திராவிடர் இயக்கத்தின்மீது குறைகூறும் டாக்டர்

துக்ளக் இதழில் (22.10.2014) அதன் ஆசிரியர் திருவாளர் சோ ராமசாமி தலை யங்கம் பகுதியில் பின்வருமாறு எழுதி யுள்ளார்.

கேள்வி: ஜெயலலிதாவுக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளதைப் பற்றி?


பதில்: ஜாமீன் பெறப்படுவதும், மறுக்கப் படுவதும் சட்ட ரீதியான விதிமுறைகளைப் பொறுத்தது அல்ல. நீதிமன்ற மரபுகளையும், சம்பந்தப்பட்ட நீதிபதியின் அணுகுமுறை யையும் பொறுத்தவிஷயமாகத்தான் இது நடைமுறையில் அமைகிறது. சமீப காலமாக சுப்ரீம் கோர்ட் இந்த விஷயம் தொடர்பாகக் கூறி வருகிற கருத்துக்கள், ஜாமீன் மனுவை விசாரிக்கிற ஹைகோர்ட்களினால் கவனமாகப் பார்க்கப்படுகின்றன.


சாதாரணமாக, ஜாமீன் மறுக்கப்படுவ தென்றால், அதற்குச் சில காரணங்கள் இருக்க முடியும். குற்றம் சாட்டப்பட்டவர் சட்டத்திலிருந்து தப்பிப்பதற்காகத் தலை மறைவாகி விடுவார் அல்லது நாட்டை விட்டு வெளியேறி விடுவார் என்ற சந்தேகத் துக்கு இடமிருந்தால், அப்போது ஜாமீன் மறுக்கப்படலாம்; அந்த மாதிரி சந்தேகத் துக்கு இவ்வழக்கில் இடம் இருப்பதாக கர் நாடக ஹைகோர்ட்டே கூட கூறவில்லை.

ஜாமீனில் வெளியே வருகிறவர் சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்ற எண்ணத்துக்கு இடமிருந்தால், அப்போதும் ஜாமீன் மறுக்கப்படலாம்; இந்த ஜாமீன் மனுவைப் பொறுத்த வரையில், வழக்கு விசாரணை ஏற்கெனவே முடிந்து விட்டது; அத்துடன் சாட்சிகள் விசாரணையும் முடிந் தது; ஆகையால், இனி சாட்சிக் கலைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.


ஜாமீனில் வெளியே இருக்கும்போது சம்பந்தப்பட்டவர் மீண்டும் குற்றம் செய்ய வாய்ப்பிருக்கிறது என்று நீதிமன்றம் கருதி னால், அப்போதும் ஜாமீன் மறுக்கப்படும்;  இந்த வழக்கில் அதற்கும் இடம் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அது ஒரு காரணமாக நீதிமன்றத்தால் குறிப்பிடப் படவும் இல்லை.


நீதிமன்றம் ஜாமீன் மறுப்புக்கு கூறியிருக் கிற காரணங்களில் முக்கியமானது, ஜாமீன் மறுப்பையே நியாயமற்றதாக்குகிறது என்பது என் கருத்து. தனி நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அலசி ஆராய்ந்து பார்க்கும்போது, குற்றவாளிகள் தவறு செய்துள்ளதற்கான அனைத்து முகாந்திர மும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதை மிகவும் சரியான தீர்ப்பாகவே நீதிமன்றம் கருதுகிறது - என்று கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி கூறியிருக்கிறார்.
ஜாமீன்  கோரிக்கையுடன், தனி நீதி மன்றத்தின் தீர்ப்பையே ரத்து செய்ய வேண் டும் என்ற கோரிக்கையையும் உள்ளடக்கிய மனுவை விசாரிக்கையில்தான், நீதிபதி இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, அப்பீலுக்கே இடமில்லை என்று சொல்லாத குறையாக ஒரு உத்தரவை அவர் வழங்கி யிருக்கிறார்.


தனி நீதிமன்றத் தீர்ப்பை அலசி ஆராய்ந்து பார்த்தாகி விட்டது; குற்றவாளி களின் தவறுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன; அது மிகவும் சரியான தீர்ப்பு என்றெல்லாம் ஹைகோர்ட் நீதிபதி கூறியிருக்கிறார். இந்த முடிவுக்கு வந்த பிறகு அப்பீல் எதற்கு? அதையும் இவர்தானே விசாரிக்கப் போகிறார்? இப்படியொரு காரணத்தைக் கூறி இதற்கு ஜாமீனையும் மறுத்திருக்கிறார் நீதிபதி.


இதனால்தான் கர்நாடக ஹைகோர்ட் டின் இந்த உத்தரவு நியாயமானதாகத் தெரியவில்லை என்று நான் கூறிகிறேன் என்று சோ எழுதியுள்ளார்.

இமயம் அளவுக்குத் தவறு செய்தாலும் முன்னாள் முதல்வரும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெ. ஜெய லலிதாவைக் காப்பாற்ற வேண்டிய காரி யத்தில்  இருந்து தீர வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார்.
(திருமதி சசிகலா அவர்கள் போயஸ் தோட்டத்திலிருந்து  வெளியேறிய போது, அவ்வம்மையார் வகித்து வந்த இயக்குநர் பதவிகளில் திருவாளர் சோ ராமசாமி ஜெயலலிதா அவர்களால் நியமிக்கப்பட் டதை இந்த இடத்தில் நினைவூட்டிக் கொண்டால், அடுத்த நிமிடத்திலேயே இதற்கான விடை வெடுக்கென்று கிடைத்து விடாதா என்ன?)

ஜெயலலிதா அவர்களை ஆதரிக்க வேண்டிய அவசியத்தில் இல்லாதிருந்தால் இதே சோ என்ன எழுதி இருப்பார்?

அதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப் படாது. இதோ திருவாளர் சோவைக் கொண்டே அதனை எளிதில் நிரூபித்து விடலாமே!

14.1.2002 அன்று சென்னையில் நடை பெற்ற துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சோ பேசுகிறார் கேண்மின். 

இப்பொழுது டான்சி உட்பட அய்ந்து வழக்குகளில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டி ருக்கிறார். விடுதலை என்று தீர்ப்பு வந்து விட்டதாலேயே ஜெயலலிதா நிரபராதி என்று சொல்ல மாட்டேன். 1991-1996 ஆண்டுகளில் பதவி வகித்த அ.தி.மு.க. ஆட்சியின்போது, ஊழல் நடந்தது உண்மையே. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தொடர்ந்த வழக்குகளை பொய் வழக்கு என்று கூற மாட்டேன். அ.தி.மு.க. ஆட்சி யில் அதிக அளவுக்கு ஊழல் நடந்தது என்பதை மறக்க முடியாது. அப்படி நான் குற்றம் சாட்டியதில் எந்தத் தவறும் இல்லை. குற்றச் சாட்டு நிரூபிக்கப்படாத தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான் என்று சோ அவர்கள் பேசினாரா இல்லையா?

இந்த எடுத்துக்காட்டை திமுக தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் வெளிப்படுத் தியதுண்டு. (முரசொலி 18.1.2014).

திருவாளர் சோ என்றால் நடுநிலை யாளர் - அவருக்கென சார்புகள் கிடையாது - யாரையும், எதையும் விமர்சனம் செய்யக் கூடிய வித்தகர் என்று சொல்லும், நம்பும் அப்பாவிகள் உண்டு. அப்படி நம்பும் அளவுக்குச் சாமர்த்தியமாக எழுதக் கூடிய குல்லூகப்பட்டர் அவர்.


இல்லாவிட்டால் ஆர்.எஸ்.எஸ். பாஞ்ச சன்யா என்ற விருதை முதலாவதாக திருவாளர் சோவுக்கு அளித்திடுமா? (குமுதம் ஏட்டுக்கு சோ அளித்த பேட்டி யில் - 7.8.2013 பக்கம் 84).

வாஜ்பேயி தலைமையில் மத்தியில் 13 நாள் பிஜேபி ஆட்சி நடந்ததே, போதிய பெரும்பான்மை இல்லாமையால் ஆள் பிடிக்கும் வேலையில் பலரும் - களத்தில் இறக்கி விடப்பட்டனர். சென்னையில் சோ இறக்கி விடப்பட்டார். அவர் குறி மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் பக்கம் திரும்பியது.


மூப்பனாரைச் சந்தித்தார்;  பிஜேபிக்கு ஆதரவு அளிக்குமாறு தாவாயைப் பிடிக் காத குறைதான், துணைப் பிரதமர் பதவி அளிப்பதாக பேரத்தின் உச்ச ஸ்தானத் திற்குச் சென்றார். மக்கள் தலைவர் மூப்ப னாரோ அதனை ஏற்காமல்தான் ஒரு பெரிய மனிதர் என் பதைக் காட்டிக் கொண்டு விட்டார். (ஆதாரம்: சோ பேட்டி  குமுதம் 7.8.2013 பக்.86).


சு.சாமிக்கு அடுத்தபடியாக அசல் அரசியல் புரோக்கராக சோ செயல்பட்டார் என்பதை ஒப்புதல் வாக்கு மூலமாக குமுதம் பேட்டியில் கொடுத்து விட்டாரே!
சங்கராச்சாரியார் கொலை வழக்கில் சங்கர மடத்துக்கு அநீதி நடந்து விட்டது என்று சொன்னவரும் இவரே! (சோவின் பேட்டி இந்தியா டுடே 9.2.2005 பக்.24)
சோ விமர்சனத்தைப் படிக்கும் பொழுது இந்தப் பின்னணியையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் - இல்லா விட்டால் சோவின் அகட விகடத்தில் ஏமாந்து விடுவார்கள்.


புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் பேட்டி ஒன்று தனியார்த் தொலைக்காட்சியில் இடம் பெற்றது.

அவரும் ஒரு காலத்தில் திராவிடர் இயக்கத்தில் இருந்தவர்தான்; திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்தவர்தான் என்பதை மறந்துவிட்டு  அல்லது மறைத்து விட்டு திராவிடர் இயக்கத்தின்மீது சேற்றை வாரி இறைத்தது சரியல்ல - வருந்த வேண்டிய ஒன்று.

திராவிடர் இயக்கமான நீதிக் கட்சி ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்டங்கள், திட்டங்கள் வரலாற்றில் என்னும் நிமிர்ந்து நின்று ஒளி கூட்டக் கூடியவையாயிற்றே!

பொது வீதிகள், பொதுக் கிணறுகள் முதலியவற்றை தாழ்த்தப்பட்டவர்கள் பயன் படுத்துவதற்கான உத்தரவு.


தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்க்காத பள்ளிகளுக்கு மான்யம் ரத்து.
தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காத பேருந்து களுக்கான உரிமம் ரத்து என்று அனைத்து சிவில் உரிமைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உத்தரவாதம் அளித்தது நீதிக்கட்சி அரசு அல்லவா!


தொழிலாளர்த்துறை என்ற ஒன்றை உருவாக்கி  லேபர் கமிஷனர் என்ற பத வியை ஏற்படுத்தித் தாழ்த்தப்பட்டவர்களின் கல்வி, குடியிருப்பு, சுகாதாரம் என்று அனைத்துத் திசைகளிலும் தோள் கொடுக்க ஏற்பாடு  செய்தது திராவிடர் இயக்க (நீதிக் கட்சி) ஆட்சியல்லவா!


இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்டவர் களுக்கு உட்பட இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததும் அந்த அரசு தானே!


மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ் கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்த நிபந்தனையை திராவிடர் இயக்க ஆட் சியின் (நீதிக்கட்சி) பிரதமரான பனகல்அரசர்) நீக்காமலிருந்தால் தம் பெயருக்கு முன்னாள் சகோதரர் கிருஷ்ணசாமி அவர்கள் டாக்டர் பட்டத்தைப் போட்டுக் கொள்ளத்தான் முடியுமா?


நூறு ஆண்டு கால சென்னை உயர்நீதி மன்றத்தில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர்கூட நீதிபதியாக அமரவில்லையே - ஏன்? இது என்ன கோயில் கர்ப்பக்கிரகமா என்ற கிளர்ச்சிச் சிந்தனையைத் தந்தை பெரியார் தட்டி எழுப்பியதன் எதிரொலியாக, அன் றைக்கு முதல் அமைச்சராகவிருந்த மானமிகு கலைஞர் அவர்கள்  தேடிப் பிடித்து, ஜஸ்டிஸ் திரு. ஏ. வரதராசன் அவர்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமரும் ஆசனத்தில் அமர வைத்தது - அசாதாரணமான நடவடிக்கை மட்டுமல்ல; ஒடுக்கப்பட்ட மக்கள், சமூக நீதியில் அக்கறை கொண்டவர்கள் ஆனந் தக் கண்ணீர் வடிக்கும் கம்பீரம் மிகுந்த அருமையான வரலாற்றுச் சிலாசாசனம் - அல்லவா!


அதே ஜஸ்டிஸ் ஏ. வரதராசன் அவர்கள் தானே உச்சநீதிமன்றத்தில் தம் கால்களைப் பதித்த முதல் ஒடுக்கப்பட்ட குடிமகன் பெரு மகன் என்பதெல்லாம் டாக்டர் கிருஷ்ண சாமி அவர்களுக்குத் தெரியாதா!?


தமிழரசர்கள் கட்டிய கோயிலுக்குள் தமிழர்கள் உழைப்பாளியாக, தொழிலாளி யாகயிருந்து உருவாக்கிய கோயிலுக்குள் தமிழர்கள் கருவறைக்குள் புக முடியாத தீண்டாமைப் பார்ப்புப் பாம்புப் படம் எடுத்து ஆடுவதைப்பற்றி கவலைப்பட்டவர்கள் யார்? தன்மான எழுச்சி கொண்டு சிந்தித்த வர்கள் யார்? அதற்கான களம் அமைத்தது தந்தைபெரியார் தானே - இன்று வரை போராடி வருவதும் திராவிடர் கழகம்தானே! இதற்கான சட்டத்தைக் கொண்டு வந்ததும் கலைஞர் தலைமையிலான திராவிடர் இயக்க ஆட்சி தானே!


இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று முடக்கியுள்ள பார்ப்பனர்கள்பற்றி சகோதரர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் திருவாய் மலர்ந்தருளியது உண்டா?


கருவறைக்குள் தாழ்த்தப்பட்டவர் உட்பட தமிழர்கள் செல்லக் கூடாது என்ப தற்கு வைதீகம் - பார்ப்பனீயம் எந்த நியா யத்தை வைத்துள்ளது? 

கருவறைக்குள் நாம் நுழைந்தால் தீட்டுப்பட்டு விடும்; புனிதம் கெட்டு ஒழிந்துவிடும் என்பது நம் இனத் திற்கு விடப்பட்ட கேவலமான சவால் அல்லவா?


அரசியல், சட்டமன்ற பதவிகள் நாடா ளுமன்றத்தில் இடம் கிடைக்குமா என்பது தான் நாட்டுக்குச் செய்யும்  நற்றொண் டாகும் என்று முடங்கிவிட வேண்டுமா?


அந்தத் தனியார்த் தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர் நறுக்கென்று ஒரு வினாவை வைத்தார் - டாக்டர் அதிலிருந்து விடுபட வெகு நேரமாயிற்று - வார்த்தைகள் தடுமாறின. நா- குளறியது.கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியின்போது அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு 3 சதவீதம் அளித்துள்ளது பற்றிய வினா அது!

பறையர்களும், பள்ளர்களும், அருந்ததியர்களுமான நாங்கள் எல்லாம் தாழ்த்தப் பட்டவர்கள் ஷெட்யூல்டு பிரிவினர் எங்களைப் பிரிக்க இவர்கள் யார் - என்பது தான் டாக்டரின் கேள்வி.

ஏதோ கலைஞர் அவர்கள் முயற்சியை மேற்கொண்டு சட்டம் போட்டு நீ பறையன், நீ பள்ளன், நீ சக்கிலியன், நீ அருந்ததியன் என்று பிரித்ததுபோலப் பேசுகிறாரே - படித்த டாக்டர்களுக்கு இது நியாயமாகப்படுகிறதா?


ஏற்கெனவே இருந்த பிரிவுகள் - அதில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பிரிவினர், மனிதன் மலத்தை கையால் அள்ளி, தலையால் சுமக்கும் அருந்ததி மக்களுக்குக் கல்வியிலும் - வேலை வாய்ப்பிலும் 3 சதவீதம் இடம் கொடுக்க திராவிடர் இயக்க ஆட்சி ஆணை பிறப்பித்ததால் அடே யப்பா என்ன குதி குதித்தார் நமது சகோதரர் டாக்டர் கிருஷ்ணசாமி.


நம் சகோதரர்களின் கீழே கிடக்கின்ற  இன்னொரு சகோதரனைக் கை கொடுத்துத் தூக்கி விடுவது குற்றமா? இது என்ன புதிய பார்ப்பனீயம்!
மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் இடம் அளிக்கும் ஆணையைக் கொண்டு வந்து செயல்படுத்தியதால் ஏற்பட்ட மகத்தான மாற்றத்தை மனங் களித்துப் பாராட்டும் பக்குவம் டாக்டருக்கு இல்லாமற் போனது வேதனைக்குரியது! சமுதாயத் திற்குக் கை விளக்காக இருக்க வேண்டி யவர்கள் கை விலங்காக மாறலாமா?


திமுக என்ற திராவிடர் இயக்க ஆட்சி யின் அந்த ஆணையினால் அருந்ததி யர்கள் பெற்ற பலன் என்ன? இதோ: 2006-2007ஆம் ஆண்டில் அருந்ததியருக்கு மருத்துவக் கல்லூரியில் கிடைத்த இடங்கள் மொத்தம் 13; 2007-2008ஆம் ஆண்டில் கிடைத்த இடங்கள் மொத்தம்  17; 2008-2009ஆம் ஆண்டில் கிடைத்த இடங்கள் மொத்தம் 29. ஆனால், அவர்களுக்கு 3 சதவிகித உள் இடஒதுக்கீட்டிற்கான சட்டம் நிறைவேற்றியதற்குப் பிறகு 2009-2010ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் கிடைத்த மொத்தம் இடங்கள் 56. அதைப் போல பொறியியல் பட்டப் படிப்பைப் பொறுத்தவரை அண்ணா பல்கலைக் கழகம் - அரசு மற்றும் உதவிப் பெறும் பொறியியல் கல்லூரிகள் - சுயநிதி பொறியியல் கல் லூரிகள் ஆகிய அனைத்திலும் சேர்த்து 2007-2008ஆம் ஆண்டில் (அதாவது உள் ஒதுக்கீட்டிற்கான சட்டம் நிறைவேற்று வதற்கு முன்பு) அருந்ததியருக்குக் கிடைத்த மொத்த இடங்கள் 744, ஆனால், உள் ஒதுக்கீட்டிற்கான சட்டம் நிறைவேறிய தற்குப் பிறகு 2009-2010ஆம் ஆண்டில் பொறியியல் பட்டப் படிப்பில் அருந்ததியர் பெற்ற மொத்த இடங்கள் 1165.
இவ்வாறு உள் இடஒதுக்கீடு வழங்கி யதன் காரணமாக மருத்துவக் கல்லூரி களைப் பொறுத்தவரை அருந்ததியர் பெற்றுள்ள இடங்கள் 93 சதவிகிதம் அதி கரித்துள்ளன. அதைப்போல பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை அவர்கள் பெற்றுள்ள இடங்கள் 57 சதவிகிதம் அதிகரித்துள்ளன.
மலம் அள்ளும் ஜாதியாகத்தான் அருந்ததி மக்கள் கிடக்க வேண்டுமா? ஆங்கே மருத்துவர்கள் உருவாகக் கூடாதா? பொறியாளர்கள் தோன்றக் கூடாதா? இதை நம்மால் பொறுக்க முடியாது என்றால், ஆண்டாண்டுக் காலமாக ஆதிக்கபுரியில் அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்திருந்த பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாத மக்களின் உரிமை வேட்கையை அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா?


அருந்ததியர் குறித்து எழுப்பிய வினா வுக்கு விடையிறுக்க இயலாது திணறிய டாக்டர் அவர்கள் உடனே உத்தரப்பிர தேசத்துக்கு சென்றார். மாயாவதியை அங்கு இருக்கும் பிராமணர்கள் ஆதரிக் கிறார்கள் என்று பார்ப்பனர்களுக்கு ஒரு நற்சான்றுப் பத்திரம் அடித்துக் கொடுத்தார்.


கான்ஷிராம் பகுஜன் சமாஜ் கட்சியைத் தோற்றுவித்ததன் ஆணி வேரைப் பிடுங்கி எறிந்ததற்கு ஒரு சபாஷா?


தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையினர் இவர்கள்தான் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள், (பகுஜன்) எனவே இவர்கள் கைகளில்தான் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்பதற் காக கான்ஷிராம் அவர்களால் தொடங் கப்பட்டதுதான் பகுஜன் சமாஜ் கட்சி.


பார்ப்பனர்களைத் தனிமைப்படுத் துங்கள் என்று அறைகூவல் கொடுத்த தோடு அவர்களைத் தவிர்த்து ஒடுக்கப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மாயாவதி அவர்களை உத்தரப்பிரதேச ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தும் காட்டினாரே!

உ..பி. தலைநகரம் லக்னோவில் 3 நாட்கள் பெரியார் மேளாவை நடத்தி இந்தியத் துணைக் கண்டத்தையே திருப்பிப் பார்க்க வைத்தாரே!
இன்றைக்கு நிலை என்ன? பகுஜன் சர்வஜன்  என ஆக்கப்பட்டது ஏன்? ஒரு கட்டத்தில் நெருங்கி வந்த அந்த அரசியல் வெற்றி நிலைக்காமல் நீர்க் குமிழியாய் மறைந்தது ஏன்?


ஒரு கால கட்டத்தில் தந்தை பெரியார் கொள்கைகளையும்,  திராவிடர் இயக்கக் கோட்பாடுகளையும் சுவாசித்து கொண்டி ருந்த டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இப்பொழுது திராவிடர் இயக்கத்தை சிறுமைப்படுத்தி அதன் சாதனைகளைச் சாதாரணமாகப் பேசக் கிளம்புவது நியாயமா? சரியா? நியாயமா!


நண்பர்கள் யார்? பகைவர்கள் யார்? என்பதை தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் ஆழமாக அச்சுப் புள்ளியாக நமக்கு அடையாளம் காட்டிச் சென்றுள்ளார்கள்; வெறும் தேர்தல் அரசியலில் சிக்கிக் கொண்டதால் ஏற்பட்ட ஏமாற்றங்களின் காய்ச்சலால் திராவிடர் இயக்கத்தின்மீது, அதன் கோட்பாடுகளின்மீது, அதன் சாதனைகள்மீது சேற்றைவாரி இறைப்பதை தவிர்ப்பது நல்லது; இவை நம் இன எதிரிகள் செய்ய வேண்டிய வேலைகளே தவிர, நாம் செய்யக் கூடிய ஒன்றல்ல - பகுத் தறிவாளர் கழகத்திலும் இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் சிந்திப்பார்களாக!

               ---------------------------------”விடுதலை” ஞாயிறுமலர் 18-10-2014 இல் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

50 comments:

தமிழ் ஓவியா said...

தீபாவளி தமிழர் விழாவா? எப்பொழுது புகுந்தது தமிழ்நாட்டில்?தீபாவளி தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதால், பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெரு நாள்... இது பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படவேயில்லை.

சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை

- அ.கி. பரந்தாமனார் எழுதிய மதுரை நாயக்கர் வரலாறு - பக்கம் 433-434).

தீபாவளி கொண்டாடும் தமிழர்களே தீபாவளி நமது விழாவா? இப்பொழுது சொல்லுங்கள்!

இடையில் புகுத்த இந்த இடைச்செருகல் எப்படி நமது விழாவானது? ஒரே ஒரு கணம் சிந்தித்து புறக்கணிப்பீர்! புத்தியைப் பயன்படுத்துவீர்!

பொருள் இழப்பைத் தவிர்ப்பீர்!
பொழுதை வீணாக்காதீர்!

ஆரியர் திராவிடரை வீழ்த்திய நாளை திராவிடர்கள் கொண்டாடலாமா? கொண்டாடலாமா?

Read more: http://viduthalai.in/e-paper/89516.html#ixzz3GVYwxxh1

தமிழ் ஓவியா said...

பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக் கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ, நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது.
(விடுதலை, 3.5.1965)

Read more: http://viduthalai.in/page-2/89520.html#ixzz3GVZsOWch

தமிழ் ஓவியா said...

அட்ரா சக்கை; அட்ரா சக்கை!!!


- குடந்தை கருணா

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக் கும் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு மூட்டை கட்டிக் கொண்டு வரு வோம்; அந்தப் பணத்தை களவாடி வைத்திருக்கும் பெயர்களை வெளி யிடுவோம் என இந்தியில் நீட்டி முழக்கமிட்டவர் இப்போதைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நூறு நாட்களில் கருப்புப்பணத்தை வெளி நாட்டிலிருந்து கொண்டு வருவோம் என மேடைகளில் சூளு ரைத்தவர். அன்றைய பாஜகவின் தலைவரும், இன்றைய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங்.

தனது டிவிட்டரில், காங்கிரசு ஏன் கருப்புப்பணத்தை கொண்டு வரத் தயங்குகிறது? ஏனென்றால், அது யாருடையது என்று அவர்களுக்குத் தெரியும்; எங்கள் ஆட்சி வந்தவுடன், பைசா முதல் கொண்டு, வெளி நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை கொண்டுவருவோம் என தேர்த லுக்கு முன், மார்ச் 30, 2014-ல் தனது டிவிட்டரில், நரேந்திரமோடி அளந் தார்.

நம்மாளும், இதை படிச்சுட்டு, ஆகா, வந்துட்டார்யா, யோக்கியர். இவருக்கு வோட்டு போட்டா, எல்லா கருப்புப் பணமும் இந்தி யாவுக்கு வந்துடும். இங்கே, பஞ்சமே இருக்காது. யாரும், வரிக்கூட கட்ட வேண்டியிருக்காதுன்னு, அவரோட அல்லக்கைகள் மேடைபோட்டு முழங்கின. இப்போது, அதைச் சொல்லி ஆட்சிக்கும் வந்தாச்சு; இப்போ என்னாச்சு. நேத்து, நிதி மந்திரி சொல்றார். பெயரெல்லாம் சொல்லக் கூடாது; சொல்ல முடியாது. ஏன்னா, அப்படித்தான் ஒப்பந்தம் போட்டிருக்காங்க.. இது பத்திரிக்கையாளர் கிட்டே அப்படின்னு அவர் சொல்லிட்டார்.

இதுமட்டுமில்லை; உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகட்கி, வெளிநாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பெயரை வெளியிட முடியாதுன்னு சொல்லிட்டார். காரணம், ஜெர்மனியோட போட்ட ஒப்பந்தம்னு சொன்னார். முந்தைய காங்கிரசு ஆட்சியிலே, இதே காரணத்தை சொன்னப்ப, ஏத்துக் காத உச்ச நீதிமன்றம், இப்ப, அதே காரணத்தை ஏத்துக்கிடுச்சே.

இந்தக் கருத்தை, மூத்த வழக் குரைஞர் ராம் ஜெத்மலானி கடு மையா சாடியிருக்கார். இந்த மாதிரி கோர்ட் டுலே, குற்றவாளிகள்தான் சொல்லி யிருக்கனும். ஆனா, அரசே சொல் லுதேன்னு, கடுமையா அறிக்கை விட்டிருக்கார்.

அதைவிட இன்னும் சிறப்பு; நம்ம அட்டார்னி ஜெனரல், பத்திரிக்கை யாளர்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா? வெளி நாட்டில் துவங் கப்பட்டுள்ள இந்தியர்களின் எல்லா கணக்கிலும், கருப்புப்பணம்தான் இருக்கும்னு சொல்லமுடியாது; அப்படி கணக்கை துவங்குறது குற்றம்னு சொல்லமுடியாது; இதைப் பிரிச்சு, எது நல்ல கணக்கு, எது கருப்புக் கணக்குன்னு பார்த்து, அப் புறம்தான் சொல்லமுடியும்னு சொல்லிட்டார்.

அட்ரா சக்கை; அட்ரா சக்கை;

ஆக, இப்போதைக்கு, ஒன்னும் ஆகாதுங்கறது நல்லா தெரியுது.

Read more: http://viduthalai.in/page-2/89528.html#ixzz3GVa2preE

தமிழ் ஓவியா said...

பெண்களின் திருமண வயது உயர்வை வரவேற்போம்!

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்றில் நீதிபதிகள் எஸ். மணிக்குமார், வி.எஸ். இரவி ஆகி யோர் ஒரு முக்கியமான கருத்தினைத் தெரிவித்தனர். பெண்களின் திருமண வயதினை 18லிருந்து 21ஆக உயர்த்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் கருத்தாகக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தொலைக்காட்சிகளில் விவாதங்கள் களைகட்டத் தொடங்கின. நல்ல கருத்து என்று ஒரு தரப்பிலும் தேவையில்லாத கருத்து என்று இன்னொரு தரப்பிலும் ... அலசப்பட்டும் வருகிறது.

இப்பொழுது ஆண்களுக்குத் திருமண வயது 21 என்றும் பெண்களுக்குத் திருமண வயது 18 என்றும் சட்டம் இருக்கிறது.

ஒரு காலத்தில் பெண்கள் ருது ஆவதற்கு முன்பே திருமணம் செய்து விட வேண்டும் என்ற சாஸ்திர நம்பிக்கை இருந்ததுண்டு. பெண்கள் திருமண வயதை 13க்குக் கீழ்ப்படாமலும் 14 வயதுக்கு மேற்படாமலும் திருமணம் செய்விக்க வேண்டுமென்று சர் அலக்சாந்தர் முட்டிமன் ஒரு மசோதாவை அரசு சார்பில் கொண்டு வந்து 1925இல் நிறைவேற்றப்பட்டது.

வைதிகப் பார்ப்பனர்கள் பொதுவாக பெண்களின் திருமண வயதை உயர்த்தக் கூடாது என்பதில் பிடிவாதமாகவே இருப்பர். ஒரு பெண் ருது ஆவதற்கு முன் கல்யாணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்று பராசரர் கூறுகிறார். உங்கள் சட்டமோ அதற்கு மாறாகக் கூறுகிறது. நாங்கள் சட்டத்தை மீறி சிறைக்குச் சென்றாலும் செல்லுவோமே தவிர, ஒருக்காலும் சாஸ்திரத்தை மீறி ரௌரவாதி நரகத்திற்குச் செல்ல மாட்டோம் என்று கூறினார்கள் என்றால் நம் நாட்டின் சனாதனமும், வைதிகமும் எத்தகைய பிற்போக்குக் குணம் கொண்டவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் இப்படி பால்ய வயதில் கல்யாணம் செய்து வைப்பதால் சிறு வயதிலேயே பெண்கள் கருத்தரித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு, நோயின் வடிவமாகக் காட்சி அளிப்பது குறித்து மிஸ்மேயோ என்ற அமெரிக்க மாது இந்தியாவைச் சுற்றிப் பார்த்து பல பிரசவ மருத்துவமனைகளையும் நேரில் கண்டு, கண்ணீர் வடித்துள்ளார்; அது மதர் இந்தியா என்ற நூலாகவே வெளி வந்தது.

9வயது சிறுமி கல்யாணமான மறுநாள் இடது கால் எலும்பு பிசகி விட்டது. கருப்பை கவிழ்ந்து விட்டது, உள்ளே புண்; 10 வயது சிறுமி; நிற்கக் கூட சக்தி இல்லை. பெண் குறியில் புண் உண்டாகி ரத்தம் பெருகி ஒழுகுகின்றது.

இன்னொரு 9 வயது சிறுமி; பெண்ணின் உறுப்பில் அதிக ரணம், இவளைத் தவிர இவள் புருஷனுக்கு இரண்டு மனைவிகள்; ஏழு வயது சிறுமி; சிற்றின்ப விஷயத்தில் புருஷனுடைய கொடுமை பொறுக்க முடி யாமல் உயிர் துறந்தார் என்று மேயோ எழுதியுள்ளார்.

இந்து - வைதிகத்தின் எதிர்ப்புகளை எல்லாம் தாண்டித் தாண்டித்தான் பெண்களுக்குத் திருமண வயது 18 என்று உயர்த்தப்பட்டது.

பெண் கல்வி என்பது நாளும் வளர்ந்து வருகிறது. 18 வயதில் திருமணம் என்று சொன்னால், அனேகமாக +2 என்கிற அளவில் அந்தப் பெண் கல்விக்கு மூடு விழா செய்து கொள்ள வேண்டும்.

குறைந்தபட்சம் ஒரு பட்டப் படிப்பு ஒரு பெண் பெற வேண்டுமானால் கண்டிப்பாக 21 வயதை நெருங்க வேண்டும். மருத்துவம், பொறியியல் கல்லூரி படிப்புகளை முடிக்க வேண்டுமானால் இன்னும் கூடுதல் ஆண்டுகள் கூடத் தேவைப்படும்.

இந்தச் சூழலில் பெண்கள் வயது 18லிருந்து 21ஆக உயர்ந்தப்படுவது அவசியமும், நியாயமும், நேர்மை யுமாகும். பெண் என்றால் ஆணைவிட குள்ளமாக இருக்க வேண்டும். கணவனைவிட பெண் அதிகம் படித் திருக்கக் கூடாது; ஆண் சம்பாத்தியத்தை எதிர்ப்பார்த்து மனைவி இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தான் பெண்ணின் திருமண வயதுக்கு முட்டுக்கட்டை போடுவார்கள்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இதைத் தான் கூறுகிறார். கணவனைவிட மனைவி அதிகம் படித்து அதிக வருவாய் உடையவராக இருந்தால் ஈகோ ஏற்படும் - எனவே அத்தகைய மனைவிகளை விட்டு வெளியேறுங்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறவில்லையா?

இந்தப் பிற்போக்குத்தனங்களைப் பெண்கள் பொருட்படுத்தத் தேவையில்லை. ஆண்களுக்கு நிகராக மட்டுமல்ல; மேலாகவும் படிக்க வேண்டும்; பொருளாதாரத்தில் தன் காலில் நிற்க வேண்டும்; அந்தச் சூழல் வருமேயானால் பெண்களை ஆண்கள் அடிமைப்படுத்தும் கொடுமை ஒழியும் என்பது தான் தந்தை பெரியார் அவர்களின் கருத்தாகும்.

எனவே மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத் திற்கு மாநில, மத்திய அரசுகள் பச்சைக் கொடி காட்ட வேண்டும் மகளிர் அமைப்புகளும் இதனை வரவேற்க முன் வர வேண்டுமென்று கேட்டுக கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/89522.html#ixzz3GVaAWkwh

தமிழ் ஓவியா said...

இதுதான் பாரதம் குழந்தைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி 3,400 கோடி டாலர் கொள்ளை


இதுதான் பாரதம்
குழந்தைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி 3,400 கோடி டாலர் கொள்ளை

டில்லி, அக்.18- குழந்தைகள் உரிமைக்காக செயல்பட்டுவருபவரான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலகப் பயணம் (The Global March Against Child Labour) என்கிற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வு புள்ளிவிவரம் எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது.

நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து சிறுமிகள் இந்தியா வுக்குள் கொண்டுவரப்படுகின்றனர். பின்னர் பாலியல் தொழிலில் கட்டாய மாகத் தள்ளப்படுகின்றனர். இது தணிவதற்கான அறிகுறியே தென்பட வில்லை. பாலியல் தொழிலில் 30 இலட்சம் பெண்கள் ஈடுபடுத்தப்பட் டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறு கின்றன.

எச்சரிக்கை மணியாக ஒலிக்கும் இப்புள்ளிவிவரம் குழந்தைகள் உரி மைக்காக நோபல் பரிசு பெற்றுள்ள கைலாஷ் சத்யார்த்திமூலம் எடுக்கப் பட்ட ஆய்வில் வெளிவந்துள்ள தகவலாகும். பாலியல் தொழிலில் தள்ளப்படுபவர்களின் பின்னணியில் உள்ள பொருளாதாரம் என்கிற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு இப் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார்.

சட்ட விரோத வியாபாரம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்கான அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களுடன், இதற்கிடையே சிவப்பு விளக்கு பகுதிகளில் பணி யாற்றும் பெண்கள் குறித்து வெளி யான எண்ணிக்கையின்படி 60 லிருந்து 90 ,லட்சம் வரை பெண்கள் சட்டவிரோத வணிகமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுளளனர். மது அருந்தும் இடங்களில், நடன மாடுமிடங்கள், மசாஜ் பார்லர்கள் ஆகியவையும் இதனுளடங்கி உள்ளன.

அதிர்ச்சி அளிக்கக்கூடிய புள்ளி விவரங்களாக, வயதான பெண்களைக் காட்டிலும், குறைந்த வயதுள்ள பெண் கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறார் கள். வயதானவர்களுடன் ஒப்பிடும் போது, வயது குறைந்த பெண்கள் நீண்ட காலத்துக்கு பாலியல் தொழி லில் பணியாற்ற முடியும் என்பதால் அதிக விலைக்கு விற்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் மட்டும் பாலியல் தொழிலில் பணப்பரிமாற்றம் 34,300 கோடி டாலரைத் தாண்டுகிறதாம்.
சத்யார்த்தி தன்னுடைய ஆய்வுத் தகவலாக கூறும்போது, ஏராளமான முகவர்கள் பாலியல் தொழிலுக்கான முகவர்கள், பாலியல் விடுதி உரிமை யாளர்கள், வட்டிக்கடைக்காரர்கள், சட்ட அமலாக்கத்துறை அலுவலர்கள், வழக்குரைஞர்கள், நீதித்துறையினர் மற்றும் சில கட்டங்களில் வணிகத் துக்காக பாலியல் தொழிலில் கட் டாயமாக ஈடுபடுத்தப்பட்டு பாதிக்கப் பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இத்தொழிலின்வாயிலாக பணத்தைப் பெறுகின்றனர் என்று கூறியுள்ளார்.

2,400 கோடி டாலர் சுரண்டல்

ஆய்வுத்தகவல்களின்படி, சட்ட அமலாக்கத்துறை அலுவலர்கள் (காவல்துறையினர் மற்றும் பலர்) 2,400 கோடி டாலர் அளவில் குழந்தை களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத் துவதன்மூலம் சுரண்டலில் ஈடுபட் டுள்ளனர்.

அதேபோல், இந்தியாவில் வழக் குரைஞர்கள் மற்றும நீதித்துறையினர் 5,150 கோடி டாலர் அளவில் இலாபம் பெற்றுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

குழந்தைகளைப் பாலியல் தொழி லில் ஈடுபடுத்தி சுரண்டுவதன்மூலம் ஒட்டுமொத்தமாக 30,900 கோடி டாலர் மதிப்பில் பாலியல் தொழில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. அதன் சாத்தியமான ஆதாயமாக 3,400 கோடி டாலர் இருந்துவந்துள்ளது.

இந்தியாவில் கூலிவேலைக்கு பணியமர்த்தும் முகவர்களால் வீட்டு வேலைகளில் குழந்தைகள் சுமார் 36 இலட்சம் அளவில் ஈடுபடுத்தப்படு கிறார்கள் என்று ஆய்வுத்தகவல் கூறு கிறது. டில்லியில் மட்டும் 3 ஆயிரம் அலுவலகங்கள் குழந்தைகளைப் பணியமர்த்தும் முகவர்களுக்கான அலுவலகங்களாக உள்ளனவாம்.

ஆய்வு அறிக்கையில், குழந்தைத் தொழிலாளர்கள் வீட்டுப்பணிகளில் ஈடுபடுத்த தலைநகரத்தில் உள்ள சந்தைகளில் பலகாலமாக இருந்து வரும் அளவைவிட இரண்டரை மடங்கு உயர்ந்து காணப்படுகிறது. இதில் சட்ட விரோத பணப்பரி மாற் றம் 3,500 கோடி டாலரிலிருந்து 36,100 கோடி டாலர் அளவுவரையிலும் உள் ளது என்று ஆய்வறிக்கை கூறு கிறது.


தமிழ் ஓவியா said...

சவுக்கடி

அறியாமையில் உள்ள இந்தியா நோபல் பரிசு பெற்றவரால் விழிப்புக்கு கொண்டு வரப்படுகிறது. வளரும் நாடுகளில் வீட்டு வேலை களில் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் பாலியல் சுரண்டல் ஆகிய வற்றின்மீது கவலை அளிப்பதாகும்.

கைலாஷ் சத்யார்த்தி கூறும்போது, பீகாரிலிருந்தும், அசாமிலிருந்தும் இந்த குழந்தைகள், அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்கிற போர்வையில் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள்.

அவர்களில் அதிகமாக இளம் பெண்கள் உள்ளனர். அவர்கள் பணிபுரியும் இடங்களில், முதலாளி களால் ஏராளமானவகைகளில் சுரண்டப்படுகிறார்கள். வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் 40 விழுக்காட்டளவில் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள் என்று கூறினார். மத்திய அரசு மனித விரோத நடவடிக்கைகள், மற்றும் சட்ட விரோத தொழில் ஆகிய வற்றைக் குறைப்பதற்கான நட வடிக்கை எடுத்துவருவதாக கூறுகிறது.

உள்துறை அலுவலக அலுவலர் கூறும்போது, பாலியல் தொழிலால் பாதிக்கப்படுவோருக்கு பொருளாதார இழப்பீடு வழங்கப்படுகிறது. பல மாநி லங்களில் பாதிப்புக்குள்ளானவர் களுக்கு (ரூ.25 ஆயிரம் முதல் ரூ.2 இலட்சம்வரையிலும்) இழப்பீடு தரும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஆனால், அதுவே நிரந் தரமானதும் அல்ல. போதுமானதும் அல்ல. அரசு சரியான புள்ளிவிவரங் களை சேகரித்து, உரிய கண்காணிப் பையும் உறுதிப்படுத்த உள்ளது. பெண்கள் கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவோர்குறித்து மாநில வாரியாக அறிந்துகொள்ள வாய்ப்பாக தனியே அலுவலகங் களைத் தொடங்க உள்ளோம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/89524.html#ixzz3GVaKqPaq

தமிழ் ஓவியா said...

புத்தர், அம்பேத்கர், பெரியார் காட்டிய சமூக நீதிக்காகப் போராடுவோம்: ராம்விலாஸ் பஸ்வான்


சென்னை, அக்.18_ புத்தகர், அம்பேத்கர், பெரியார் வழியில் சமூக நீதியை காப்போம் என மத்திய உணவு, பொது விநியோகத் திட்ட மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

தமிழக லோக் ஜன சக்தி தலைவர் ச.வித்யாதரன் தந்தை தேசிய பொதுச்செயலாளர் பெ.சந்திரகேசன்-சக்குபாய் 60 ஆண்டு மணவிழா மற்றும் சந்திரகேசன் எழுதிய நூல் வெளியீட்டுவிழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் சமூகநீதிக்காகப் போராட வேண்டும் என்று பேசினார்.

சென்னை தியாகராயர் நகரில் தியாகராயர் அரங்கத்தில் லோக் ஜன சக்தியின் தேசிய செயலாளர் சந்திரகேசன் எழுதிய எனது வாழ்வில் சில துளிகள்(நினைவலைகள்) நூல் வெளியீட்டு விழாவில் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். மிசோரம் மேனாள் ஆளுநர் ஆ.பத்மநாபன் நூலைப்பெற்றுக் கொண்டு வாழ்த்துரை ஆற்றினார். (16.10.2014)

முன்னதாக லோக் ஜன சக்தியின் மாநிலத் தலைவர் ச.வித்யாதரன் அனைவரையும் வரவேற்றார்.

மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.குழந்தை வேலு, இந்திய சமூகநீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், காங்கிரசு கட்சியைச்சேர்ந்த ஜி.ஏ.வடிவேலு, அம்பேத்கர் அகாடமி வழக்குரைஞர் எழுத்தாளர் பசுபதி தன்ராஜ், கேரள மாநில லோக் ஜன சக்தியின் தலைவர் மெகபூப், தமிழக பாஜக தலைவர் மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரின் வாழ்த்துரையைத் தொடர்ந்து பெ.சந்திரகேசன் ஏற்புரை ஆற்றினார். மத்திய உணவுத்துறை அமைச்சர், லோக் ஜன சக்தியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் சிறப்புரை ஆற்றினார்.


தமிழ் ஓவியா said...

திராவிடர்கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும்போது, பெ.சந்திரகேசன்-சக்குபாய் தம்பதியர் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிந்தனைகளை வாசிப்பவர்கள் அல்ல. சுவாசிப்பவர்கள். மேனாள் பிரதமர் விபிசிங் திராவிடர்கழகத்தலைவர் கி.வீரமணி, பஸ்வானிடமிருந்து சமூகநீதி உணர்வைப்பெறுகிறேன் என்றார். மண்டல் குழு, சமூக நீதிக்காக 42 மாநாடுகள், 16 போராட்டங்களை திராவிடர்கழகம் நடத்தி உள்ளது. பெரும்பாலான மாநாடுகளிலும் பஸ்வான் கலந்து கொண்டுள்ளார். சமூகநீதி மட்டுமின்றி காரைக்குடியில் நடைபெற்ற இராமாயண எதிர்ப்பு மாநாட்டிலும் கலந்து கொண்டு சூத்திர சம்பூகனை வெட்டிய ராமனை வெட்டிடும் காலம் இது என்று பேசினார். மதவாத அரசியலில் தடுப்பு அரணாக பஸ்வான் இருக்கிறார் என்பது நிம்மதி என்று பேராயர் பேசினார். 86வயது இளைஞராக உள்ள சந்திரகேசன் தந்தையார் தென்னிந்திய நல உரிமைச்சங்கத்தில் ஆம்பூர் பொறுப்பாளராக இருந்தவர். அவரைப்போலவே சந்திரகேசனும் கடவுள் மறுப்பாளர், நாத்திகர். 86 வயதில் கடவுள் மறுப் பாளர் என்று இருக்கிறார் நாத்திகக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி. ஒரு முதலமைச்சர் கோயிலுக்குச் சென்றால் தீட்டுப் பட்டு விட்டது என்று கழுவும் நிலை உள்ளது. சமூகநீதிப் பிரச்சினை அப்படியே உள்ளது. தாழ்த்தப்பட்ட வர்களுக்கு இட ஒதுக்கீடு என்று வரும் போது குரூப் ஒன்று ,குருப் இரண்டில் கிடையாது. 22.5% மட்டுமின்றி 50% இடஒதுக்கீடு குரூப் டி எனும் துப்புரவுப் பணிகளில்தான் உள்ளது. இங்கே பேசிய மேனாள் ஆளுநர் பத்மநாபன் தந்தைபெரியார், அண்ணல் அம்பேத்கருடன் பழகியவர். சென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பாளராக இருந்தவர். அவரிடம் உண்மைக்காகப் பேட்டி கண்டோம். அப்போது அவர்கூறும்போது, தமிழ்நாட்டிலிருந்து சென்று அண்ணல் அம்பேத்கரை சந்தித்தவர்கள் தமிழ்நாட்டில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அண்ணல் அம்பேத்கர் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் இருக்கிறார். அவர் சொல்படி நடந்தால் போதும் என்றார். இன்னும் செல்ல வேண்டிய தூரம் உள்ளது. தந்தை பெரியார் இறுதிப்போராட்டம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று கலைஞர் சட்டம்போட்டும் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் உச்சநீதிமன்றத்துக்கு சென்று தடை பெற்றனர். அமாவாசை அர்ச்சகராக வேண்டும். ஆராவமுதன் அய்யங்கார் அர்ச்சனை செய்யக் கோர வேண்டும். காகா கலேல்கர் கூறியதுபோல், சங்கர மடத்தில் தாழ்த்தப்பட்டவர் சங்கராச்சாரியாக வரவேண்டும். ஆணாதிக்க சமுதாயத்தில் யாருமே சொல்லத்துணியாத கருத்தை சந்திரகேசன் அவர் நூலில் பதிவு செய்துள்ளார். அவர் பெற்ற வெற்றிக்கெல்லாம் காரணம் அவர் துணைவியார் என்றும், தோல்விகளுக்கு தாம் மட்டுமே பொறுப்பு என்றும் கூறியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்கள் பத்திரிகைகளை வாங்கிப் படிப்பதில்கூட சிந்திக்கவேண்டும். ஆதரவாக உள்ள பத்திரிகைக்கு ஆதரவளிக்க வேண்டும். எதிராக உள்ள பத்திரிகைகளை அடையாளம் காண வேண்டும் இவ்வாறு திராவிடர்கழகத்துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.

தமிழ் ஓவியா said...

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்

நூலை வெளியிட்டு அமைச்சர் பஸ்வான் பேசிய தாவது:_ 37 ஆண்டுகளாக எனக்கு சந்திரகேசன் பழக்கத்தில் உள்ளார். 1977ஆம் ஆண்டில் நாடாளு மன்ற உறுப்பினர் ஆனேன். ரயில்வே கமிட்டியில் தமிழ்நாட்டுக்கு வந்தேன். ரயில் நிலையத்தில் சந்திரகேசனை சந்தித்தேன். இன்றுவரை குடும்ப உறுப்பினர்களாக உள்ளோம். சந்திரகேசன் தமிழகத்தில் தலித் சேனாவின் தலைவராக இருந்தார். இன்று லோக் ஜனசக்தியின் தேசியப் பொதுச் செயலாளராக உள்ளார். அம்பேத்கர், பெரியார் சிந்தனைகளால் ஒன்றாக இருந்துவருகின்றோம்.

என் அன்புக்குரிய சமூக நீதிக்கான மண் தமிழ்நாடு. இங்கு சந்திரகேசன் தம்பதியினருக்கு விழா. ஆனால், பேசிய பலரும் என்னைப்பற்றியே பேசினார்கள் என்பதால் வருத்தப்பட்டேன். சந்திரகேசன் திறந்த புத்தகம். இது தனி ஒரு கட்சி நிகழ்ச்சி அல்ல. சமூகநீதி, மதசார்பின்மைக்கான அமைப்புகள் இணைந்துள்ள நிகழ்ச்சி. 1969ஆம் ஆண்டில் அரசியலுக்கு வந்தேன். இன்று வரை போராடி வருகிறேன். 45 ஆண்டுகளுக்கு முன் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் நிலை எப்படி இருந்தது? பாபாசாஹெப் அம்பேத்கர் ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்றார். பிறப்பிலிருந்து சாகும்வரையிலும் ஜாதியில் இருக்கிறோம். அதிகாரம் அளித்தால் சமத்துவம் வரும். சமூகநீதி நம்முள் கலந்துவிட்ட ஒன்று. அம்பேத்கர், பெரியார் சமூக நீதிக்காகப் பாடுபட்டவர்கள். சமூக நீதிக்காகப் போராட வேண்டும்.

கலாச்சாரப் புரட்சி என்கிறார்கள். சமூக நீதிப் புரட்சிக்குப் பிறகுதான் கல்விப்புரட்சி, பொருளாதாரப் புரட்சி கிடைக்கும். அம்பேத்கர், பெரியார் அவர்களுக்கும் முன்பாக புத்தர் ஜாதி ஒழிப்புக்குப் போராடினார்கள். பஸ்வான் இன்று இருப்பார், நாளை இருக்க மாட்டார். சமூகநீதிப்போராட்டம் என்றும் இருக்கும். ஏழ்மை, வறுமை எல்லா ஜாதியிலும் உள்ளது. ஆனால், தீண்டாமை தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் உள்ளது. அமைச்சராக உள்ள பஸ்வான் ஜாதிக்காகப் பேசுகிறேன் என்கிறார்கள். அப்படிச் சொல்லும் சமூகம் சமூகநீதி வழங்க மறுக்கிறது.

சுதந்திரமடைந்த இந்தியாவில் சிறந்த மாநிலங்களாக தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வளர்ந்து உள்ளன. ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினத்தவர், பெண்கள் மற்றும் முசுலீம்கள் நிலை எப்படி இருக்கிறது? இவர்கள்நிலையை உயர்த்த வேண்டும். சமுதாயத்தில் இதற்காகப் போராட வேண்டி உள்ளது. அம்பேத்கர், பெரியார், புத்தர் காட்டிய சமூக நீதிக்காக, மதசார்பின்மைக்காகப் போராட வேண்டும். போராடுங்கள்.

-இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் பேசினார்.

கழகத் தலைவர் சார்பில் அமைச்சர் பஸ்வான் அவர்களுக்கு தந்தை பெரியார் பற்றிய ஆங்கில நூலை அளித்தும், சால்வை அணிவித்ததோடு, 60 ஆண்டு மண விழா காணும் சந்திரகேசன், சக்குபாய் இணை யருக்குச் சால்வை அணிவித்தார் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்.

Read more: http://viduthalai.in/page-3/89488.html#ixzz3GValBcbj

தமிழ் ஓவியா said...

சுப்பண கவுண்டர்


கோபிக்கு அடுத்த கூகலூர் திருவாளர் கே. சுப்பண கவுண்டர் அவர்கள் காங்கிரசினிடமும், காந்தியினிடமும் அதிகப்பற்றுள்ளவராயிருந்தாலும் தீண்டாமை, வருணா சிரமம் ஆகியவைகள் ஒழிய வேண்டுமென்பதில் உண்மையாகவே பற்றும், உண்மையான ஊக்கமும், செல்வமும், செல்வாக்கும் கொண்ட ஒரு வேளாளப் பெரியாராவார்.

இவர் இரண்டு வாரத்திற்கு முன்பு தனது தோட்டத்துக் கிணற்றில் ஆதி திராவிடர்களைத் தண்ணீர் எடுக்க அனுமதித்ததினால் ஊரார் இவரைப் பகிஷ்காரம் செய்து இவர் வீட்டு வேலைக்கும், விவசாய வேலைக்கும் ஆள்களைப் போகாவொட்டாமல் தடுத்து விட்டார்கள்.

இதனால் வெளியூர்களில் இருந்து ஆள்கள் தருவிக்கப் பட்டு திரு. கவுண்டர் அவர்களின் குடித்தனம் கிரமமாய் நடைபெற்று வருகின்றதோடு அநேக அறிவாளிகளும், சில மிராசுதாரர்களும் திரு. சுப்பண கவுண்டருக்கு அனுகூல மாகவும் இருப்பதாகத் தெரிய வருகின்றது.

ஆனாலும், மூடப்பழக்கவழக்கங்களைக் கையாளும் அஞ்ஞானி களாயுள்ள சிலர் அந்த ஜாதிப் பெரியார்களான பட்டக்காரர்கள் என்பவர்களுக்குக் கடிதம் எழுதி கவுண்டர் வீட்டில் வேலை செய்யும் ஆட்களைச் சாதியைவிட்டு நீக்கும்படி கேட்டுக் கொள்வதாகப் பயமுறுத்துகின்றார்கள் என்பதாகத் தெரிய வருகின்றது.

இந்த மாதிரியான காரியங்களில் எல்லாம் பட்டக்காரர் கனவான்கள் துணிந்து முன் வந்து அஞ்ஞானிகளுக்கு ஞான உபதேசம் செய்து இக்கால நிலைக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும், நாகரிகத்திற்கும் ஏற்றவண்ணமே நடந்து மக்களுக்கு சுதந்திரமும், சமத்துவமும் கிடைக்கும்படி செய்வதன்மூலம் தங்கள் பட்டத்திற்கும், ஸ்தானத்திற்கும் பெருமை விளைய செய்வார்கள் என்றே கருதுகின்றோம். கடைசியாக இவ்வளவு மேலான ஒரு காரியத்தைத் துணிந்துமேற்போட்டுக் கொண்டு செய்த திரு. சுப்பண கவுண்டர் அவர்களையும், இவ்விஷயத்தில் அவருக்கு உதவி செய்து துணையாய் இருக்கும் மற்ற கனவான்களையும் போற்றிப் பாராட்டுகின்றோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 17.05.1931

Read more: http://viduthalai.in/page-7/89544.html#ixzz3GVbi0Lpk

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

ஒருவன் சமதர்மத்திற்கு உழைப்பதானால் அவன் முதலில் ஓர் உண்மையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். உழைப்பதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று;

இவர்களது உழைப்பின் பயனை அனுபவித்துக் கொண்டு சுகபோகியாய் வாழ்வதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று இருப்பதை ஒழிக்க வேண்டும் - கிள்ளி எறிய வேண்டும் என்பதே அந்த அடிப்படை நிலை.

இதைச் செய்யும் வரையில் எவ்விதப் பொருளாதாரச் சமதர்மத் திட்டமும் இந்த நாட்டில் அரை வினாடி நேரமும் நிலைத்து நிற்காது என்பதைச் சமதர்மம் பற்றிப் பேசுவோர். நினைப்போர், ஆசைப்படுவோர் மனத்தில் கொள்ள வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/89544.html#ixzz3GVbpO59D

தமிழ் ஓவியா said...

தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்கள்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பகத்சிங்

1. (a) பொது உடைமை, சமதர்மம் ஆகிய கொள்கை களுக்காக தனது உயிரை மனப்பூர்த்தியாக தியாகம் செய்த உண்மை வீரர் பகத்சிங்கை இம்மகாநாடு மனமாரப் பாராட்டுகின்றது.

(b) பகத்சிங் தூக்கிலிடப்பட்டதின் மூலம் உண்மையும் வீரமும் பொருந்திய வாலிபர்களின் உள்ளத்தை சமதர்ம தத்துவமும், பொது உடைமைக் கொள்கையும் கவர்ந்து கொள்ளும் படி ஏற்பட்டு விட்டதால் அச்சம்பவத்தை இம்மகாநாடு ஆர்வத் தோடு வரவேற்கின்றது.

(c) இந்திய வாலிபர்கள் இது காரணமாய் தங்களுக்குள் பொங்கித் ததும்பும் ஆர்வத்தை அறிவும், சாந்தமும், பொருந்திய வழிகளில் தேச சேவைக்கு உபயோகப் படுத்தவேண்டும் என்று வற்புறுத்துகின்றது.

விடுதலை சுதந்திரம்

2. இந்திய நாடு உண்மையான விடுதலை பெறுவற்கு வருணாசிரம மத வித்தியாசங்களை அடியோடு அழித்து கடவுள், மோட்சம், நரகம், கர்ம பலன், மறுபிறப்பு, தலைவிதி முதலிய விஷயங்களில் இருந்துவரும் மூட நம்பிக்கை களை ஒழித்து தன்னம்பிக்கையும், தன் முயற்சியும் உண்டாக்கும் கொள்கைகளை மக்களுக்குப் புகட்டி பூமிக்கு உடையவன் - உழுகின்றவன், முதலாளி - தொழிலாளி, ஆண் - பெண், மேல்ஜாதி - கீழ்ஜாதி என்பவைகளான பேதங்களை அகற்றி தொழில் முறைகளிலும், சமுகத் துறைகளிலும், அரசியல்களிலும் சகலரும் சம சுதந்திரத்துடன் ஈடுபட சம அவகாசமும், சம அந்தஸ்தும், சம ஊதியமும் கிடைக்கக்கூடிய முறையில் நமது சமுகத்தைத் திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று இம் மகாநாடு தீர்மானிக்கிறது.
பெண் உரிமை

3. (a) விவாகம், விவாகரத்து, கல்வி, சொத்து, கற்பு, ஒழுக்கம், தொழில், அரசியல் முதலிய துறைகளில் ஆண்களுக்கு உள்ள சகல உரிமைகளும் பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டுமென்பதாக இம்மகாநாடு திட்ட மாய்க் கருதுகின்றது. (தீ) நமது பெண்மக்கள் வாழ்விற்கு அவசியமான வகையில் உடைகளையும், நகைகளையும் சுருக்கிக் கொள்ளவேண்டும் எனவும், தேகசக்திக்கும் செல்வ நிலைக்கும் தகுந்த அளவில் குழந்தைகளைப் பெறுவதற் காகக் கர்ப்பத்தடை முறைகளை அவசியம் கையாள வேண்டும் என்றும் இம்மாகாநாடு தீர்மானிக்கின்றது.

நம்பிக்கையில்லை

4.

1. மகாத்மா காந்தியவர்கள் மதத்தின் பேரால் நடைபெறுகின்ற மூடநம்பிக்கை களையும், மூடப்பழக்க வழக்கங்களையும் கையாளுவதினாலும்,

2. தனது செய்கைகளுக்கும், பேச்சுகளுக்கும் கடவுளே காரணம் என்பதாக அடிக்கடி சொல்லி வருவதால் ஜனங்களின் தன்னம்பிக்கையும், தன் முயற்சியும் பொறுப்புமற்றுப் போவதாலும்,

3. வருணாசிரமம், இராமராஜ்யம், மனுஸ்மிருதி, தர்மம் முதலிய பழைய கொடுங் கோன்மையான ஏற்பாடுகளை மறுபடியும் திருப்பிக் கொண்டுவர முயற்சி செய்து வருவதாலும்

4. நமது நாட்டில் இயந்திர வளர்ச்சியைத் தடைசெய்து வருவதாலும், 5. சமதர்மகொள்கைகளுக்கு விரோதமாய் இருந்து வருவதாலும் அவரிடத்தில் நம்பிக்கை இல்லையென்று இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.

குடிஅரசு - தீர்மானங்கள் - 12.04.193

Read more: http://viduthalai.in/page-7/89546.html#ixzz3GVbxfyee

தமிழ் ஓவியா said...

மூன்றாவது மாகாண சுயமரியாதை மகாநாடு

விருதுநகரில் நடக்கவிருக்கும் 3வது சுயமரியாதை மகாநாடானது முன் குறிப்பிட்டபடி ஜூன் 6, 7, தேதிகளில் நடத்துவது சற்று தாமதித்து அதாவது ஒரு வாரம் பொறுத்து நடத்த வேண்டியதாக ஏற்பட்டு விட்டதென்று தெரிவிக்க வேண்டியதாகி விட்டது.

ஏனெனில், மகாநாட்டிற்குத் தலைமை வகிக்க ஏற்கனவே இசைந்து அதை உத்தேசித்தே சுமார் 1 மாதத்திற்கு முன்னதாகவே இங்கு வந்து நீலகிரியில் (ஊட்டியில்) தங்கியிருந்த உயர்திருவாளர் ஹரி சிங்கவர் அவர்களுக்கு பல்லில் வலி ஏற்பட்டு அதனால் ஒரு பல் எடுக்கவேண்டியதாகியும், மேலும் அவருக்கு அந்த வலி நிற்காமல் மிகவும் தொந்தரவு கொடுத்ததால் அவர் மகாநாட்டுக்கு வர முடியாமலும் திடீரென்று தமது ஊருக்குப் புறப்பட வேண்டியதாகிவிட்டது.

ஆன போதிலும் மகாநாட்டை எந்த விதத்திலும் ஒரு வாரம் முன் பின்னாகவாவது நடத்தி விடலாம் என்கிற தீர்மானத்தின் மீதே தலைவர் உயர்திருவாளர் சௌந்தரபாண்டியன் அவர்களும் மற்றும் விருதுநகர் பிரமுகர்கள் திருவாளர்கள் வி.வி.ராமசாமி, செந்தில்குமார் நாடார் முதலியவர்களும் வெகு மும்முரமாகவே மகாநாட்டு வேலைகளைக் கவனித்துக்கொண்டு வருகின்றார்கள். வேறு தலைவர் தேர்ந்தெடுத்து சீக்கிரம் மகாநாடு நடக்கும் தேதியை தெரிவிக்கப்படும்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 24.05.1931

Read more: http://viduthalai.in/page-7/89546.html#ixzz3GVcDkV8T

தமிழ் ஓவியா said...

திருநெல்வேலி ஜில்லா 4ஆவது சுயமரியாதை மகாநாடு

சகோதரர்களே! இன்று இந்த மகாநாட்டுக்குத் தலைமை வகிக்கும் திரு.எஸ். இராமநாதன் அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. அவர் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு மிராசுதாரகுமாரர். அவர் எம்.ஏ., பி.எல்., படித்துப் பட்டமும், சன்னதும் பெற்று, சென்னையில் ஹைகோர்ட்டு வக்கீலாயிருந்தவர்.

ஒத்துழையாமையின் போது வக்கீல் வேலையையும் தனது சம்பாதனையையும் விட்டு வெளியேறி சிறைச் சென்றவர். இவர் சிறைச் சென்ற காலம் எது என்றால், இப்போதைப்போல் சிறைக்குப் போகின்றவர்களுக்கு மாமியார் வீட்டுக்கு முதல் தவணை செல்லும் மருமகனை போல் அளவுக்கும், தகுதிக்கும் மீறின மரியாதைகளும், சுக போகங்களும் சிறையில் கிடைத்துக் கொண்டிருக்கும் காலம் அல்ல அது.

திரு. இராமநாதன் அவர்கள் தலையில் கூடையும், கையில் மண்வெட்டியும் கொடுக்கப்பட்டு தெருவில் ரோடு போடும் வேலை செய்தவர். சிறை அதிகாரிகளால் பல நிர்ப்பந்த தண்டனைகள் செய்யப்பட்டதல்லாமல், தனி அறையில் அதாவது கூனுகொட்டடியில் போட்டு மக்களைப் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் இல்லாமல் வதைக்கப்பட்டவர்.

இதற்காக இவரைப்பற்றி மாத்திரம் சட்டசபையில் பலகேள்விகள் கேட்கப்பட்டதும் உங்களுக்குத் தெரியும். தவிர, சென்னை மாகாஜன சங்க காரியதரிசியாயும், தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியில் காரியதரிசி யாயும் இருந்தவர். இவ்வளவும் தவிர தமிழ் , கேரளம், கர்நாடகம் ஆகிய நாடுகளுக்கு கதர் போர்டு நிர்வாகக் காரியதரிசியாகவும் இருந்தார்.

திரு. காந்தியவர்களுக்கு உற்ற சீடராகவும் இருந்து, திரு. காந்தியவர்களால் மிகவும் போற்றப்பட்டவராகவும் இருந்தவர் இவ்வளவும் அல்லாமல், யாதொரு சுயநலப் பிரதிப்பிரயோஜனமும் எதிர்பாராமலும், தன் கைப்பொறுப்பிலேயே சகல செலவும் செய்து கொண்டு இவ்வியக்கத்தில் உழைப்பவர்.

அன்றியும் அவரது கொள்கையில் மயக்கமும், குளறுபடியும், சமயத்திற்குத் தகுந்த அர்த்த வியாக்கி யானமும் இல்லாமல் மிகத் தெளிவும், ஒரே நிலையும் உள்ளவர். ஆகவே, இப்படிப்பட்ட ஒருவர் இந்து மகாநாட்டுக்குக் கிடைத்திருப்பதால் மகாநாடு உண்மைச் சுயமரியாதை மகாநாடாக நடந்து உண்மையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு உண்மை யான வழிகாட்டும் என்பதில் அய்யமில்லை.

குடிஅரசு - சொற்பொழிவு - 12.04.1931

Read more: http://viduthalai.in/page-7/89545.html#ixzz3GVcU9gBT

தமிழ் ஓவியா said...

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் அய்ரோப்பிய ஒன்றியத்தை இந்திய அரசும் பின்பற்ற வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!


சென்னை, அக்.18_ அய் ரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள் விடுதலைப்புலி கள் அமைப்பு மீதான தடையை நீக்கி, சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு முதல் விடு தலைப்புலிகள் மீது விதித் திருந்த தடையைத் தற் போது விலக்கிக் கொண் டிருக்கிற அய்ரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம், இந்திய அரசின் நடவடிக் கைகளையும் விமர்சித்துள் ளது.

இந்திய அரசு, இலங் கைப் பிரச்சினையில், ஒரு சார்பான அணுகுமுறை களைக் கொண்டிருக் கிறது என்றும், எனவே, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அரசு முன்வைக்கும் கருத்து களில் நம்பிக்கை இல்லை என்றும் அய்ரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள் தமது தீர்ப்பில் குறிப்பிட் டுள்ளனர். விடுதலைப் புலிகள்மீது சிங்கள அர சும், இந்திய அரசும் எவ் வாறு அவதூறுகளைப் பரப்பிவந்துள்ளன என் பதை இதிலிருந்து சர்வ தேச சமூகத்தால் அறிந்து கொள்ள முடியும்.

சிங்கள இனவெறியர்களின் கைகளில் ஆட்சியதிகாரம் இருப்பதால், மிக இலகு வாக சர்வதேச நாடுகளின் ஆட்சியாளர்களை அணுகி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான அவதூறுகளைப் பரப்ப முடிகிறது. ஒரு தரப்பு கருத்துகளை மட் டுமே கேட்கிற வாய்ப் பைப் பெற்ற நாடுகள், அவற்றை உண்மையென நம்பி, விடுதலைப் புலி களுக்கு எதிரான முடி வெடுக்கும் நிலையும் உரு வாகிறது. சிங்கள அரசுக் குத் துணையாக இந்திய அரசு விடுதலைப் புலி களுக்கு எதிரான அவ தூறுகளைப் பரப்பி சர்வதேச நாடுகளை நம்ப வைத்துள்ளது.

அதனடிப் படையில், அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளும் விடு தலைப் புலிகள் மீது தடைவிதித்திருந்தது. தற்போது, சட்டபூர்வ மாக விசாரணை நடத்தி யதில் அய்ரோப்பிய ஒன் றியத்தின் நீதிபதிகள் அக் கருத்தை மாற்றிக் கொண்டு, புலிகள் மீதான தடையை விலக்கிக் கொண்டுள்ளனர்.

இது சர்வதேச சமூகத்தின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத் தும் என்பதுடன், புலி களின் மீது ஒரு புதிய பார் வையை ஏற்படுத்தும் என் றும் நம்புகிறோம். அய் ரோப்பிய ஒன்றியத்தைப் பின்பற்றி பிற நாடுகளும் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் நிலை உருவாகும்.

அந்த வரி சையில், இந்திய அரசும் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண் டுமென்றும் புலிகளின் மீதான தடையை விலக் கிக் கொள்ள வேண்டு மென்றும் விடுதலைச் சிறுத்தைகள் இந்திய ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுக் கிறது.

அத்துடன், விடு தலைப் புலிகள் இயக்கம் வெகுமக்களின் பேராதரவு பெற்ற ஒரு தேசிய இன விடுதலைப் போராட்ட இயக்கம் எனவும் இந்திய அரசு அங்கீகரித்து ஏற்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக் கொள்கிறது. _ இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி யுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/89531.html#ixzz3GVcl7000

தமிழ் ஓவியா said...

குறளுக்கு குரல் கொடுத்த பெரியார்

வரையறுத்துக் கூற முடியாத தொன்மை வாய்ந்த உலகப் பந்து தோன்றியபோது இருள் சூழப்பட்டு எங்கும் நைட்ரஜன் பரவி, நெருப்புக் கோளமாகி, மிதமிஞ்சிய வெப்பத்தால் பேரொலியுடன் வெடித்து சிதறிய தாகவும், சிதறிய துண்டங்கள் பல கோடிக்கணக்கான ஆண்டுகள் எரிந்து பெரிதும் சிறிதுமான நட்சத்திரங் களாகின எனவும் அவற்றின் நடுநாயக மாக சூரியனும் அதனைச் சுற்றி பூமி, வீனஸ், மார்ஸ், ஜூபிடர், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என பல கோள்கள் ஏற்பட்டதெனவும் ஆராய்ச் சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு 10 ஆயிரம் டிகிரி செல்சியசாக இருந்த பூமியின் வெப்பம் 150 செல்சியசாக குளிர்ந்து நிலப்பரப்பும், நீர்ப்பரப்புமாக மாறியது என்பர்.அதில் ஏராளமான எரிமலைகளும், பூகம்ப பள்ளத்தாக்குகளும் நீர் நிலைகளும் நிறைந்திருந்தன எனவும் அறிய வருகிறது.

காலச்சுழற்சியில் ஓர் அணு உயிரிகள் தோன்றி பலவாறாகப் பெருகின. புல்லாகி, பூவாகி பூண்டாகி, செடியாகி, கொடியாகி, மரமாகி, புழு வாகி, பூச்சியாகி பரிணாம வளர்ச்சியில் குரங்காகி மனிதனாகி வளரத் தொடங்கின. அவ்வாறு மனித இனம் முதலில் தோன்றியது ஆப்பிரிக்காவின் சவானா காடுகளில் தான்என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மனிதனோடு விலங்குகளும் தோன்றி பாகுபாடு இன்றி வளர்ந்து பசித்த போது காடுகளில் கிடைத்த இலை, தழை, காய், கனிகளை உண்டு வாழ்ந் தது. எதுவுமே தெரியாத மனித இனம், இடி, மின்னல், மழை, புயல், பூகம்பம், நெருப்பு ஆகிய இயற்கை சீற்றங்களைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்தன. நமக்கு மீறிய சக்திகளாக எண்ணி அவைகளை வணஙக ஆரம்பித்தனர். அவர்களுக்கு பேசத் தெரியாது. மனம் போன போக் கில் ஒலி எழுப்பியும், சைகைகளை காட்டியும் தங்களின் உள்ளுணர்வு களை வெளிப்படுத்தினர். அவையே மொழியாக உருவெடுத்து வழக்கத்திற்கு வந்தது. எழுதத் தெரியாத மனித இனம் சித்திரங்களால் தரையிலும், மரத்திலும், மரப்பட்டைகளிலும், ஓலைகளிலும், இறந்த விலங்குகளின் காய்ந்த தோல் களிலும் தாம் இயற்கையாக கண்ட காட்சிகளை கிறுக்கிப் பார்த்தது. அதுவே வளர்ச்சி பெற்று வரிவடிவங் களாகின. மொழியும் எழுத்தும் சிறிது சிறிதாக பல்வேறு மாற்றங்களைப் பெற்று தற்போதுள்ள நடைமுறைக்கு வந்துள்ளன. இக்காலத்திலும் எழுத் தில்லா மொழிகளும், பேச்சு வழக் கில்லா மொழிகளும் உலகில் பல பாகங்களிலிருக்கின்றன. லத்தீன், பிரா கிருதம் சமஸ்கிருதம் போன்ற வழக் கொழிந்த மொழிகளுமிருக்கின்றன.

தமிழ் ஓவியா said...

இன்றைய தமிழ்நாடு பன்னெடுங் காலத்துக்கு முன் ஆப்பிரிக்கா கண்டத் துடன் இணைந்த ஒரே நிலப்பரப்பாக இருந்ததாகவும், அவை லெமூரியாக் கண்டம், குமரிக்கண்டம் என வழங்கப் பட்டதாகவும் 18 அல்லது 15 கோடி ஆண்டுகளுக்குப்பின் கடலால் பிரிவு பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதுபோல கிழக்கிந்திய தீவுகள் ஆஸ்திரேலியா இந்தியா ஆகியவையும் இணைந்த நிலப்பரப்பாக இருந்து கொண்ட்வானா என்ற பெயருடன் விளங்கி காலப் போக்கில் கடல் கோளால் பிரிவுபட்ட பகுதிகளாகின எனவும் தெரியவருகிறது. பூம்புகார் பட்டினம் கடலுக்குள் மூழ்கியிருப்பதும் ஆய்வுகளால் வெளிப்படுத்தப்பட்டுள் ளது. வடக்கே சிந்து மாகாணத்தில் லாக்கானா என்ற வட்டத்தில் 70 அடி உயரமுள்ள மண்மேட்டை அகழ்ந்து பார்த்தபோது கிடைத்த மண்பாண்ட ஓடு தான் மொகஞ்சோதாரோ நகரத்தை வெளிக்கொணர்ந்தது. அதுபோல் ஹரியூபீயா என்ற வழங்கப்பட்ட நகரம் தான் அரப்பா எனத் திரிந்து நமக்கு தெரிய வந்தது. 3000 மைல்கள் நீளமும் 1000 மைல்கள் அகலமும் கொண்ட சஹாரா பாலைவனத்தில் நின்ற கடல் 16000 மைல்கள் நீளமுள்ள தமிழ கத்தையே விழுங்கி விட்டது. பாகிஸ் தானில் சிந்து வெளிப்பகுதியில் நம் தமிழ் நகரங்களான கொற்கை, வஞ்சி, தொண்டி என்பவை இன்றும் இருப்ப தாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரி விக்கிறார். சீன நாட்டிலும் ரோமானிய நாட்டிலும் கிடைத்த புதைப் பொருள் களில் தமிழ் எழுத்துகளிருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி பரந்து விரிந்து புகழ்பரப்பிய தமிழ் மண் இயற்கை சீற்றங்களாலும், கால மாற்றங்களாலும் சிதைந்து குறுகிய வட்டத்துக்குள் அடங்கிவிட்டது.

தமிழ் ஓவியா said...

ஒரு நாட்டின் நாகரிகத்திற்கும், மக்களின் பண் பாட்டு நெறி முறைகளுக்கும் அளவுகோலாக இருப்பது அங்கே பேசப்பட்ட மொழி யின் வளமேயாகும். நம் தாய்மொழி தமிழ் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் என்ற பெருமைக்குரியது. தமிழ் என்ற சொல்லிலேயே வல்லினம், மெல்லினம், இடையினம் இருக்கிறது. முக்கடல் சூழ் குமரி கண்டத்திலும் அவ்வகை வரம்புள்ளது. நாட்டின் பெருமையையும் நாகரிகத்தின் பழமையையும் பறை சாற்றும் நகரங்கள் புதைந்து போனா லும் சிதைந்து போனாலும் எஞ்சியவை நினைவுச் சின்னங்களாக இருந்து நம்மை எழுச்சி பெற செய்கிறது. அவைகளை படம் பிடித்திடுவது போல் நம் முன்னோர்கள் தமிழ்ப் பெரும் புலவர்கள் எண்ணற்ற நீதி நூல் களையும் மருத்துவம், வானவியல், கட்டிடக் கலை சார்ந்த பல்வேறு நூல்களையும் எழுதி வைத்துள்ளனர். அவற்றுள் தொல்காப்பியம் - புறநானூறு பதிற்றுப் பத்து -_ அகநானூறு _ பரிபாடல் என சிற்றிலக்கியங்களும் பேரிலக்கியங்களும் எழுதப்பட்டி ருந்தன. இயற்கை சீற்றங்களால் எதிரிகளின் படையெடுப்பால் எரிந்து சாம்பலானவை பலப்பல, பாதுகாப்பு இல்லாமல் பறிபோனவை, கரையான் களால் அரிக்கப்பட்டவை, எதிரிகளால் மறைக்கப்பட்டவை, மாற்றி எழுதப் பட்டவை, சிதைக்கப்பட்டவை, சீரழிக் கப்பட்டவை என நம் அரிய கருவூ லங்கள் பறிபோயின.
முத்தொள்ளாயிரம் எனும் நூலின் 2700 பாடல்களில் 200 மட்டுமே எஞ் சியுள்ளன. புறநானூறுப் பாடல்களில் 398 தான் உள்ளன. பரிபாடல் 22 பாடல்களே மீதம். இப்படி விரித்துக் கொண்டே போகலாம். எனவே இழந் ததை எண்ணி வருந்தாமல் இருப் பதைக் காப்பது தமிழர்களாகிய நமது கடமையாகும். அய்யாயிரம் ஆண்டுகள் தாய்மொழி தமிழை செம்மொழி தரத்துக்கு உயர்த்தி நடுவண் அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. நாம் அறிந்ததே, ஆனால் அதன் தொன்மைச் சிறப்பை சுமார் 1500 ஆண்டுகளுக்குள் தோன்றிய சமஸ்கிருத மொழியுடன் ஒப்பிட்டு குறைத்தே மதிப்பிட்டிருந்தது. தமிழ் வளம் மிக்க மொழி -_ எண்ணற்ற இடையூறுகளைக் கடந்து நலிவுறாது சீரிளமைத் திறம் வியந்து பாடக்கூடிய அளவில் வளர்ந் துள்ளது. தென்பாண்டிய மன்னர்கள் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் என அமைப்புகளை உருவாக்கி வளர்த்தனர். ஆனால் பிறமொழி மோகங்கொண்டு பல மன்னர்கள் தமிழுக்கு இழைத்த தீங்கினையும் நாம் நினைவு கூரத்தான் வேண்டும். உதாரணத்திற்காக சிலவற்றைக் கீழே விரித்துள்ளேன்.

தமிழ் ஓவியா said...

சோழ மன்னன் முதலாம் இராசேந் திரன் 11ஆம் நூற்றாண்டில் தென்னாற் காடு மாவட்டத்தில் எண்ணாயிரம் என்ற ஊரில் சமஸ்கிருதக் கல்விக் கழகம் அமைத்து 14 ஆசிரியர்களை நியமித்து 340 மாணவர்கள் படிக்க உதவித் தொகையோடு நெல் அளந்தும் கொடுத் தான். இங்கு தமிழ் கற்பிக்கப் படவில்லை.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் மத்தவிலாசம் என்ற நாடகத்தை சமஸ்கிருத மொழியில் தானே எழுதி பரப்பினான். தமிழுக்கு அங்கு வாய்ப்பில்லை. மூன்றாம் குலோத்துங்க சோழன் திருவெற்றியூரில் மட்டும் 3 சமஸ்கிருதக் கல்லூரிகளை ஆரம்பித்து 340 மாணவர்களுக்கு சமஸ்கிருத இலக்கணம் கற்பிக்கச் செய்தான். தமிழ் புறக்கணிக்கப்பட்டது. இவை தவிர, திருமுக்கூடல், திருவாவடுதுறை, பாகூர் - பெருவள்ளூர் - காம்பள்ளூர் -_ ஆனியூர் (ஆனூர்) ஆகிய இடங்களி ல்லாம் பள்ளிகள் அமைக்கப்பட்டு நான்கு வேதம் _ ஆறுசாஸ்திரம் _ மகாபாரதம் _ இராமாயணம் _ மனுநீதி மீமாம்சை, வியாகரணம் பாஷ்யங்கள் என 18 வகையான வித்தைகள் சமஸ்கிருத மொழியில் கற்றுத் தரப் பட்டன. சமஸ்கிருதம் சொல்லி கொடுக் கப்ட்டது. தமிழ் மறுக்கப்பட்டது.மதுரை நாயக்கர் காலத்தில் 10,000 பார்ப்பன மாணவர்களுக்கு வேதக் கல்வியும், சமஸ்கிருதமும் பயிற்றுவிக்கப்பட்டது தமிழர்களுக்கல்ல. பல்லவர் காலத்தில் காஞ்சியில் கடிகை என்ற உலகப் புகழ் பெற்ற வடமொழிக் கல்லூரி உருவாக் கப்பட்டு 400 வருடங்கள் சிறப்பாக நடைபெற்றது. இப்படி புறக்கணிக் கப்பட்ட தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்து போற்றிப்புகழ மேலை நாட்டு அறிஞர்கள் வந்தனர். அவர்களில் ஒரு சிலரது தமிழ்த் தொண்டினைப் பாராட்டி நன்றி செலுத்த வேண்டு மல்லவா! அந்த அறிஞர்களை கீழே தொகுத்துள்ளேன்.

இத்தாலி நாட்டில் வெனீஸ் நகரில் 1680இல் பிறந்த கான்ஸ்டென்டைன் ஜோசப் பெஸ்கி என்பவர் 1710இல் இந்தியா வின் கோவாவுக்கு வந்து, திரு. சுப்ரதீபக் கவிராயர் என்ற தமிழ் அறி ஞரிடம் இருபது ஆண்டுகள் மாணவ ராக தமிழ் பயின்று தேம்பாவணி என்ற தமிழ் நூலை எழுதி மதுரை தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றிய போது வீரமாமுனிவர் என்ற விருதினை தமிழ்ப் புலவர்கள் அவருக்கு வழங்கி கவுரவித்தனர். உலகப் பொது மறையாம் திருக்குறளின் அருமையுணர்ந்து அறத்துப்பாலையும், பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார். இதுவே திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பு அக்காலத்தில் தமிழில் அகராதி என்னும் அமைப்பு இல்லை. நிகண்டு எனும் பெயரில் தான் இயங்கி வந்தது. அதனை பெயர் - பொருள், தொகை, தொடை என நான்கு அதிகாரங்களைக் கொண்ட சதுரகராதி என உருவாக் கினார். தமிழ் எழுத்துக்களில் ஏ ஒ எனும் நெட்டெழுத்துக்களை வழக் கிற்குகொண்டு வந்தார். இப்படி எண்ணற்ற தமிழ்த் தொண்டாற்றினார்.

இங்கிலாந்து நாட்டில் 1820இல் பிறந்து ஜியார்ஜ்யுக்ளோ என்று வழங் கப்பெற்ற ஜி.யு. போப் 1839இல் தமிழகத் திற்கு வருகைபுரிந்து இராமானுஜ கவிராயர் என்ற தமிழறிஞரிடம் தமிழ் கற்றுத் தேர்ந்தார். தமிழ்ச் செய்யுட் கலம்பகம் எனும் நூலை வெளியிட் டார். ஆங்கிலம் _- தமிழ் தமிழ் _ ஆங்கிலம் அகராதியை தயாரித்தார். 40 ஆண்டுகள் திருக்குறளைப் படித்தறிந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்து 1886இல் முகவுரையுடன் வெளியிட் டார். 1884இல் மறைநூல் அறிஞர், வேதசாஸ்திரி எனும் பட்டங்களைப் பெற்றார். தன் கல்லறையில் ஒரு தமிழ் மாணவன் என்று பொறிக்கப்பட வேண்டும் என்று கூறிச் சென்றார். தமிழ்மீது அவர் கொண்ட பற்று நம்மை வியக்க வைக்கிறது.

தமிழ் ஓவியா said...

அய்ரோப்பாவின் அயர்லாந்தில் 1815இல் பிறந்த கால்டுவெல் 1838இல் சென்னைக்கு வந்தார். தமிழ் மொழியை பிழையறக்கற்று தஞ்சை திருச்சி, சிதம்பரம், நீலகிரி, கோவை, மதுரை ஆகிய ஊர்களுக்கெல்லாம் சென்று இறுதியாக இளையான் குடியில் தங்கி தமிழைப் பரப்பினார். கிறித்துவ வேத நூல்களான பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு ஆகியவற்றை தமிழில் மொழி பெயர்த்தார். தமிழ் மொழியுடன் தொடர்புடைய தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவைகளின் ஒப்பியல் களை ஆராய்ந்து திராவிட மொழி களின் ஒப்பிலக்கணம் எனும் நூலை உருவாக்கினார். தமிழ்த்தாயின் தவப்புதல்வர் என்றும் தமிழ்ப் பாது காவலர் என்றும் சிறப்பிக்கப்பட்டார். தமிழ் மொழிக்காகவே வாழ்ந்த கால்டுவேல், தன் நாட்டுக்கு திரும்பாமல், இந்தியாவில் தான்உயிர் துறப்பேன் என்று கூறியவாறே, கொடைக்கானலில் மறைந்தார்.

தமிழ் ஓவியா said...

இவர்களைப்போலவே ஜெர்மனி நாட்டில்பிறந்த இரேனியஸ், சீகன் பால்கு, இத்தாலி நாட்டின் ராபர்ட்டி நோபிலி, ஆங்கில நாட்டில் பிறந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் ஆகியோர் நம் தாய்மொழி தமிழை வளர்க்க அரும்பாடுப்பட்டனர். ஆனால் நம் மன்னர்கள் டர்கீஸ் மொழி - _ ஈரானிய மொழி _ பர்மியன் மொழி ஆகிய வற்றின் கூட்டமைப்பில் உருவாகி, செப்பனிடப்பட்டது என்று பொருளை தரக்கூடியதுமான சமஸ்கிருதத்தையே வளர்த்தனர்.

தந்தை பெரியார் தமிழ் இலக்கி யங்கள் பெரும்பாலானவற்றை படித் தும், பிறரைப் படிக்கச் சொல்லிக் கேட் டும் அவற்றுள் பொதிந்துள்ள நல்ல கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும் எழுதவும் செய்தார். அதே நேரத்தில் மனித வாழ்வுக்கு ஊறு விளைவிக்கும் கற்பனைக் கதைகளை யும், பொய்மை உரைகளையும், மனிதநேயமற்ற மதச் சடங்குகளையும், ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தும் சாதி மத பேதங்களை வலியுறுத்தும் புராண இதிகாசங்களையும், கடவுளர்களின் கண்மூடித்தனமான, இயற்கைக்கு ஒவ் வாததுமான செயல்களைக் கூறும் நூல்களையும் வெறுத்து ஒதுக்கினார். பிணத்தை ஆய்வு செய்யும் மருத்து வரைப்போல ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து நல்லவை கொண்டு அல்லவை தவிர்த்தார். கடவுள் பெயரைச் சொல்லி கயமைத்தனம் செய்யும் சமுதாய விரோதிகளைக் கண்டித்தார். மக்களிடையே சமத்துவம் வளரவும், சன்மார்க்கம் தழைக்கவும் சாதிகள் மடியவும், தாழ்வு மனப் பான்மை மறையவும், கல்வி அறிவு பெற்று மக்கள் உயரவும் பெண்களின் அடிமைத்தனத்தைப் போக்கவும் தன்வாழ்நாளை அர்ப்பணித்த பெரியார் அவைகளை நிறைவேற்ற திருக்குறள் ஒன்று தான் சிறந்ததென தேர்ந்தார்.

தமிழ் ஓவியா said...

தேடிய நூல்கள் தேர்ந்த தமிழறி ஞர்களின் புத்தக அலமாரிகளில் இருப்புக் கணக்கைக்காட்ட முடக்கி வைக்கப்பட்டிருந்ததே தவிர மக்களுக்கு பயன்படச் செய்யவில்லை. புலவர்களின் பாராமுகம் திருக்குறளை இருட்டடிப்பு செய்தது. கம்பராமாயண சொற் பொழிவுகளும், மகாபாரத உபன்யாசங் களும், சிலப்பதிகார பட்டிமன்றங்களும், திருப்பாவை திருவெம்பாவை மாநாடு களும் நடத்தி தங்களின் ஆய்வுத் திறமையைக் காட்டி வந்த தமிழறி ஞர்கள் சமுதாயத்தை நினைக்கவில்லை. தங்களின் புலமையை மற்ற ஆராய்ச்சி யாளர்கள் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்று நினைத்து செயல் பட்டார்களேயொழிய நாம் சார்ந்துள்ள தமிழ்ச் சமுதாயம் விழிப்புணர்வு பெற்று எழுச்சி பெற வேண்டும் என்று எண்ணவில்லை. சமுதாய அக்கறை கொண்ட பகுத்தறிவுப் பகலவன் பெரியார்தான் முடங்கி கிடந்த குறளுக்கு குரல் கொடுத்தார்.

மனிதநேயத்தை வலியுறுத்தும் திருக்குறளை எழுதியவர் யார்? எந்த மதத்தைச் சார்ந்தவர்? எங்கே பிறந் தவர்? அவரது சமகாலப் புலவர்கள் யாவர்? எப்படி நூல் அரங்கேற்றம் செய் யப்பட்டது? பத்துபாடல்கள் கொண்ட அதிகாரங்களாக பாகுபடுத்தியதுயார்? என்று கேள்விகளைக் கேட்டு விடை காண விரும்பவில்லை பெரியார். தமிழ் மொழியில் எழுதப்பட்டு உலகமாந்தர் எல்லோராலும் ஒத்துக் கொள்ளக் கூடிய பெரும்பாலான கருத்துக்களை உள்ளடக்கிய நூல் என்பதை மட்டுமே மனதில் கொண்டு அதனை முன்னி லைப்படுத்தினார். எனினும் கால வரம்பை நிலைநாட்ட வேண்டிய கட் டாயம் தமிழர்களுக்கு உண்டு என்பதால் 530 தமிழறிஞர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1929 மார்ச் 11ஆம் நாளில் ஒன்றுகூடி தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமி நாதர் தலைமையில் விவாதித்தனர். 10 புலவர்கள் விளக்க உரையாற்றியும் எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் பசுமலைப் பாரதி என்றழைக் கப்பட்ட அறிஞர் சோமசுந்தர பாரதியார் பதினோராவதாக தன் கருத்துக்களை பிற நூல்களுடன் ஒப்பிட்டுக் காட்டி ஆதாரங்களை அடுக்கி விளக்கம் தந்தார். அதன் வழி ஏசு கிறிஸ்து பிறப் பதற்கு 31 ஆண்டுகள் முன்னதாக திருவள்ளுவர் பிறந்தார் என்ற முடிவு கூட்டத் தலைவரின் இசைவோடு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படி ஆங்கில ஆண்டோ 31 ஆண்டு களைச் சேர்த்து திருவள்ளுவர் தொடர் ஆண்டு கணக்கிடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

தந்தை பெரியார் அத்தோடு நில்லாமல் தமிழ் அறிஞர் பெரு மக் களைக் கூட்டி ஆய்வு செய்து கலந் துரையாடச் செய்தார். மக்களின் மன நிலை ஓரளவு பகுத்தறிய தொடங்கும் வரை பிரச்சாரம் செய்து விழிப் புணர்வை ஊட்டினார். 1949ஆம் ஆண்டில் ஜனவரி 15_16 தேதியில் சென்னை பிராட்வே டாக்கீசுக்கு அடுத்த மைதானத்தில் திருக்குறள் மாநாடு நடத்தி அறிஞர்களையும் மொழி ஆர்வலர்களையும் பேச வைத்து இன உணர்வையும், சுயமரி யாதை சிந்தனையையும் வளர்த்தார். பாராமுகமாக விருந்த பாவலர்கள் பெரியாரின் முயற்சிகளைப் பாராட்டத் தொடங்கினர். பைபிளைப் படிப்பவர் கிறித்துவராகலாம், குரானைப் படிப்பவர்கள் முகமதியராகலாம். கீதையைப் படிப்பவர் இந்துதவாகலாம் எல்லாமே மதம் சார்ந்தவை. ஆனால் திருக்குறளைப் படிப்பவர்கள் மனித நேயமிகுந்த மனிதராகலாம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முது மொழிக்கு உயிர்ப்பைக் கொடுக்கலாம் என்ற உணர்வு அறிஞர்களிடம் பரவத் தொடங்கியது.

உலகமாந்தர் எல்லோ ரும் ஓர் குலம் ஓர் இனம் என்ற மனித நேயப்பண்பு வளரத் தொடங்கியது. மேடையில் முழங்கும் அறிஞர் பெருமக்கள் திருக்குறளைச் சொல்லியே ஆரம்பிக்கவும் முடிக்கவும் பழகிக் கொண்டனர். ஏராளமான திருக்குறள் மன்றங்கள் தோன்றின. திருக்குறள் விளக்கப் பேரவைகள், பேரணிகள் ஆய்வுக் கூட்டங்கள் என பரந்து விரிந்து செயல்படத் தொடங்கின பெரியாரின் கொள்கைகளை மக்களின் மனதில் பதிய வைக்க திருக்குறள் நெறி முறைகள் படிக்கட்டுகளாக அமைந்தன. பழமை எண்ணங்களின் தாக்கம் குறைய ஆரம்பித்தது. புதிய அறிவியல் சிந்தனையின் நோக்கம் வளரத் தொடங்கியது. தந்தை பெரியாரின் தன்னலமற்ற தொண்டு தமிழ் சமுதாயத்தை மட்டுமல்லாமல் மனித இனத்தையே வாழ வைக்கும் மனித நேயத்தை வளர்க்கும் தொண்டு. அதற்கு முதற்படியாக வள்ளுவத்தை வாழ்வியலாக்குவோம், வளம் பெறுவோம் -_ நலம் பெறுவோம் வாருங்கள். பெரியார் குறளுக்குக் குரல் கொடுத்து வழிகாட்டியுள்ளார். அறிஞர்கள் பாதைகளை அமைத்துள் ளனர். அவைகளைப்பற்றி மன உறுதியோடு நடப்போம். தடையி ருப்பின் தகர்ப்போம். வாழ்வினிலே உயர்வோம்.

ஆக்கம்: பெரியார் அண்ணா கலை விருதுகள் பெற்ற நாடகச் செம்மல் கு.ப. செயராமன்
பாபநாசம்

Read more: http://viduthalai.in/page2/89471.html#ixzz3GVd6LfWn

தமிழ் ஓவியா said...

பொதுபலசேனா -இலங்கை ஆர்.எஸ்.எஸ். - ஆர்.எஸ்.எஸ். இந்திய பொதுபலசேனா

சில நாட்களுக்கு முன்பு இலங்கையின் சிங்கள பயங்கரவாத இயக்கமான பொதுபலசேனா இந்துத்துவ இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தது. மேலும் கீழை நாடுகளில் உள்ள பல்வேறு பவுத்த இயக்கத்துடன் பேசி வருவதாகவும், அடுத்த ஆண்டு வைசாக் அன்று இலங்கையில் பவுத்த இந்து அமைப்புகள் இணைந்து மாநாடு ஒன்று நடத்தவிருப் பதாகவும் செய்திகள் வந்தது.இதில் முக்கியமான அமைப்பு ஒன்று தானாகவே முன்வந்து கரம் கோர்த்துள்ளது, அந்த அமைப்பு கடந்த ஆண்டு பர்மாவில் உள்ள ரெஹிங்கோ இஸ்லாமிய கலவரத்தில் மறைமுகத்தொடர்பு கொண்ட மியன்மா 969 அமைப்பு என்ற அமைப்பாகும்.தெற்காசியப்பகுதியில் சமத்துவமற்ற அமைதியற்ற சூழலை உருவாக்க பொதுபலசேனா தயாராகி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஈரான் பகுதிகளை இணைத்து அகண்ட பாரதம் என்ற கனவு காண்கிறேன், இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே என்று கூறுகிறார். அதாவது தற்போது சில பழமைவாதக் குழுக்களால் மேற்கு மற்றும் மத்திய ஆசியப்பகுதியில் அமைதி குலைந்து இருப்பது போன்ற சூழ்நிலையை தெற்காசியாவிலும் உருவாக்க முனைவது இவர்களின் பேச்சிலும் போக்கிலும் நன்றாகத்தெரிகிறது. முக்கியமாக 2009 இலங்கையில் போர் முடிந்த பிறகு பொதுபலசேனா ஒரு அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அதில் இலங்கையில் உள்ள இஸ்லாமியர் மற்றும் இதர மதத் தவர் சிங்கள நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும், என நேரடியாக மிரட்டும் தொனியில் அறிக்கை ஒன்றை விட்டிருந் தது. அன்றிலிருந்தே இலங்கையில் இஸ்லாமியர் மீதான விரோதப்போக்கு மெல்ல மெல்ல அதிகரித்து 2013- அக் டோபரில் கலவரத்தில் முடிந்தது.

அதா வது இந்தியாவில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இலங்கையில் இயங்கும் பொதுபலசேன இரண்டும் சிறுபான்மை மதத்தினருக்கு ஒரு அச்சுறுத்தலை தெற்காசியப்பிராந்தியத்தில் உருவாக் குவதை விரும்புகிறதோ என்றே தோன்று கிறது. ஒரு பழமைவாத மத அமைப்பிற்கு மற்றொரு பழமைவாத மத அமைப்பு என்றுமே ஒரு தீர்வாக இருக்காது. போட்டிக்கு போட்டி என்பது சமூகத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கி பிராந்தியத்தையே அச்சத்தில் வாழும் சூழ்நிலையை உருவாக்கிவிடும். இதை நாம் மத்திய ஆசிய இஸ்லாமிய நாடுகளில் கண்டு வருகிறோம். அங்கு அளப்பரிய எண்ணெய் வளம் இருப்பதால் பிற நாடுகளின் தலையீடு இருக்கிறது. ஆனால் இங்கே அழிந்து வரும் இயற்கை வளம் மற்றும் மூடப்பழக்கங்களில் உழலும் மக்கள் அதிகம் வாழும் பிராந்தியத்தில் இப்பழமை வாதிகளின் போக்கு மிகவும் மோசமான சூழலை உருவாக்கிவிடும். பொதுபல சேனாவின் இந்த வெளிப் படையான அறிக்கைக்கு இந்துத்துவத் தலைவர்களின் சிலர் முக்கிய காரணமாக இருக்கின்றனர். முக்கியமாக சுப்பிர மணிய சுவாமி மற்றும் சில வட இந்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் இலங்கையில் இஸ்லாமியத்தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக அறிவித்திருந்தனர்.

அதே போல் தமிழ் நாட்டில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டு அவர்கள் பாகிஸ் தானின் உளவாளிகள் என்று பத்திரி கையில் செய்திகள் வெளியாகின. மோகன் பகவத்தின் அக்டோபர் 3-இல் பேசிய பேச்சில் தெளிவாக இரண்டு வார்த்தைகளை குறிப்பிட்டார். அதாவது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தீவிர வாதிகளின் நடமாட்டம் உள்ளது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் புலிகள் இன்றும் தங்களது தீவிரவாத நடவடிக்கைகளை தொடரத் தயாராக இருக்கிறார்கள் என்று சிங்கள பத்திரிகை ஒன்று கடந்த செப்டம்பர் முதல் வாரம் செய்திவெளியிட்டிருந்த்து.

அதாவது இலங்கையில் பாதுகாப்பு மாநாடு நடந்து கொண்டு இருக்கும், போது இந்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது தீவிரவாதிகளின் நடமாட் டம் இருக்கிறது, புத்தமதத்திற்கும் இந்துத்துவாவிற்கும் என்ன தொடர்பு என்று கேள்வி வைக்கப்பட்டால் ஒரு உண்மை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். இலங்கையில் இருக்கும் தேரவாத புத்தம் என்பது பார்ப்பனிய வகைப்பட்ட புத்தவாதம். இன ஒதுக்குதலையும், இனவெறியையும் உள்ளே வைத்து செயல்படும் பவுத்தம் உன்மையான பவுத்தமல்ல. இங்கே தாழ்த்தப்பட்ட மக்களை தங்கள் பக்கம் இழுக்க அம்பேத்கரின் பெயரைக்கூறி சில சாதி அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ்சின் சூழ்ச்சிக்கு பலியாகி இருப்பதுவும், தேசியம்-பாரதம்-இந்துப்புனிதம் என்று பேச ஆரம்பித்திருப்பதையும் கவனத்தில் எடுக்கவேண்டும். இதில் ஒரு புறம் தமிழர்களை இந்துத்துவ மயமாக்க முற்படுவதும், மறுபுறத்தில் பவுத்த பேரினவாதத்திற்கு துணை போவதும் கவனிக்கப்படவேண்டியவை. இவ்விரண்டு பேரினவாத அமைப்பு களின் முக்கிய நோக்கம் தமிழர் அழிப்பு என்பதில் மய்யம் கொண்டு இருக்கிறது என்பதை கவனிக்கவேண்டியது இங்கே அவசியமாகிறது. அதாவது இத்தனை நாட்களாக தனித்தனியாக இயங்கிவந்த மதவாதக்குழுக்கள் ஆட்சி அதிகாரம் முழுமையாக கையில் வந்த பிறகு பிராந்தியத்தையே தங்கள் கைவசம் கொண்டுவரும் திட்டத்தில் இறங்கி விட்டது.

Read more: http://viduthalai.in/page2/89476.html#ixzz3GVePkkBC

தமிழ் ஓவியா said...

பிற மொழிகளில் இராவண மருத்துவ நூல்கள்புனித இராவணன் உலக மக்களின் நல்வாழ்வுக்காக தாய் தனித் தமிழில் இயற்றிய ஆதித் தமிழர்களின் அரிய மருத்துவக் கலை, தமிழ் மக்களின் அறி வுக்கு எட்டாதவாறு அபகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டும், அடுத்தவர் மொழிக்கு மாற்றப்பட்டும் விட்ட சூழ்நிலையில் இவ்வையகத்து மக்களின் மெய் நலனுக்காக தமிழ் மருத்துவம் தந்த அந்த ஒப்பற்ற தமிழ்த் தலைவரை இழிவுபடுத்தித் திட்டமிட்டு எழுதி வைத்த கட்டுக் கதைகளை நம்பி வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் மத்தியில் அவர் இயற்றிய தமிழ் மருத்துவம் பிற மொழி மருத்துவர்களால் அபகரித்து எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இராவணனை இழிவுபடுத்தி இட்டுக் கட்டிய பொய்க் கதைகளை எழுதி தமிழர்களிடம் அன்னாரை ஒரு அரக்கனாக, கொடுங் குணங் கொண்டவனாக சித்தரித்து மட்டும் அறிமுகப்படுத்தி விட்டு, அவர் இயற்றிய மருத்துவத்தை அன்னாரை இழிவுபடுத்தியவர்களால் பெருமளவில் கையாளப்பட்டு வரும் நிச நிலையை தமிழ் மருத்துவர்களும், தமிழ் கூறும் மக்களும் தெரிந்து கொள்ள வேண்டு மென்ற நன்னோக்கத்தில் எங்களுக்கு கிடைக்கப் பெற்ற ஆதார அடிப்படை யில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

1. இராவணன் தீ நீர் மருத்துவம்: அர்க்கபிரகாசம் எனும் பெயரில் மலையாள மொழியில் வெளியிடப் பட்டுள்ளது. இந்நூல் மூலிகை மற்றும் கடைச் சரக்குகளை முறைப்படி தீ நீராகச் செய்து அனைத்து வகையான வியாதிகளுக்கும் வழங்கும் அரிய மருத்துவ முறையாகும்.

இந்நூலை மீண்டும் தமிழாக்கம் செய்து சென்னை பெசன்ட் நகர் முனைவர் இர. வாசுதேவன் Ph.D. அவர்கள் வெளியிட் டுள்ளார்கள். தொடர்புக்கு அலைபேசி - 9444892216. மேலும் இராவணன் இயற்றிய குழந்தை மருத்துவம் குமார தந்திர என்ற பெயரில் ஆந்திராவில் தெலுங்கிலும் வட இந்தியாவில் ஆங்கி லத்திலும் இராவணன் பெயரிலேயே நூலாக உள்ளது என்ற தகவலையும், முனைவர் இர. வாசுதேவன் அவர்கள் எமக்கு அளித்துள்ளார். எனவே குமரி மாவட்டத்தில் புழக்கத்திலுள்ள குழந்தை மருத்துவத்தின் மூல நூல் இராவணன் இயற்றிய மதலைவாகட நூலே என்பது தெளிவாக தெரிகிறது.

2. இந்த தீ நீர் மருத்துவ நூல் தெலுங்கில் அர்க்க பிரகாச என இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இராவணன் இயற்றிய மாதர் மருத்து வத்தில் ஒரு சிறு பகுதி அடங்கிய நூலும் தெலுங்கு மொழியிலுள்ளது.

3. இராவணன் மருத்துவ நூல் பல, தென் இலங்கையில் சிங்கள மொழியில் இருப்பதாக 2000ஆம் ஆண்டு தமிழ் ஈழத்திலிருந்து மரு. சிவ சண்முக ராசா (சி), (கந்தரோடை, சுன்னாகம்) அவர் களால் வெளியிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டில் ஈழத்து சித்த மருத்துவம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4. இராவணன் தீ நீர் மருத்துவ நூல் 16ஆம் நூற்றாண்டில் உருது மொழியில் மொழி பெயர்த்து பாகித்தானில் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஒரு தகவல் உள்ளது.

5. இந்தி மொழியில் இராவணன் சம் கீத என்ற பெயரில் இராவண மருத்துவ இரு அறிவியல் நூல்கள் வட இந்தியா வில் வெளியிடப்பட்டுள்ளன. அவற் றிலுள்ள உள்ளடக்க அறிவியல் தகவல் இங்கே தரப்படுகின்றன.

தமிழ் ஓவியா said...

1. இராவணன் பிறப்பு, 2. வான் அறிவியல், 3 நட்சததிரங்களின் நகர்வு, 4. மதலை நோய் மருத்துவம் (குழந்தை மருத்துவம்), 5. மக்கள் நோய் மருத்துவம், 6. பற்ப, செந்தூர, தீ நீர் வகைகள், 7. மானுட மருத்துவம் , 8.புவியியல் அறிவு தகவல்கள், 9. இரச மருந்துகளின் வீரி யங்கள், தயாரிப்பு முறைகள், 10. யோகா சன செய்முறைப் பயிற்சி, 11. யோகாசன மருத்துவப் பரிகார முறை (யோகா தெரபி), 12. யோகாசனங்களின் வகைகள், 13. சஞ்சீவி முறைகள், 14. உப்பு முறைகள், 15. இராமன் இராவணனை புகழ்தல், 16. பொது மருத்துவ அறிவியல் முறை கள், 17. சிர நோய் மருத்துவம், 18. கிரகங் களின் இடப்பெயர்ச்சிக்கு தீர்வு இந்நூல் களில் மேலும் பல தகவல்கள் உள்ளன.

6. இது மட்டுமன்றி இராவணன் இயற்றிய நாடி நூலும் வட இந்திய தேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிறீ இராவண நாடி கிறிதா என்ற பெயரில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட சமஸ் கிருத சுலோகங்களுடன் இந்தி மொழி யில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நூலை மீண்டும் தமிழாக்கம் செய்து சென்னை தியாகராச நகர் புதிய புத்தக உலகம் சிறிய இராவண நாடி பரீட்சை என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


7. பர்மா நாட்டில் இராவண மருத் துவ நூல்கள் மொழி மாற்றம் செய்யப் படாமல் அசல் தமிழ் நூல்களாகவே இருப்பதாக தகவல் உள்ளன. அதை பெறுவதற்கு தமிழக அரசும், தமிழ் மருத்துவ உலகமும் தீவிர முயற்சி மேற் கொள்ள வேண்டும். குமரி மாவட்டத் திலும் கேரள மாநிலத்தில் திருவனந்த புரம் மாவட்டத்திலும் சில குறிப்பிட்ட பாரம்பரியம் மிக்க குடும்பங்களில் கோர்வையாக இராவண மருத்துவ நூல்கள் அசல் தமிழ் நூல்களாகவே இருப்பதாக சில ஆசான்கள் கூறுகின் றனர். இந்நிலையில் தமிழ் மக்களுக்கு இந்த அறிவியல் கிடைத்திட பாடுபடா விட்டால் மிகப் பெரிய தமிழர் அறிவி யலை நாம் இழந்து விட நேரிடும் என் பதை நாம் நினைவில் கொள்ள வேண் டும். இன்னும் பல அரிய தமிழர் அறிவி யல் தகவல்களுடன் இந்தி மொழியி லுள்ள இராவண நூல்களில் ஒன்று 1 கிலோ எடை உள்ளது. அதன் விலை ரூ.500/-_ இன்னொரு நூல் சுமார் 5 கிலோ எடை உள்ளது அதன் விலை ரூ.2000/-_ இந்நூல்களை வாங்கி படிக்க வும் வாங்கி தமிழாக்கம் செய்யப்படவும் வேண்டும். இந்நூல்களை பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

Manoj Publications,
1583-84, Daribakalam,
Chandhi Chowk, Delhi -6,
Mobile - 09818753569

இராவணனின் மற்றுமொரு மிகப் பெரிய இந்தி மொழி நூல் ரூ.7500/-_ பெறுமானது. இது மூன்று தொகுதியாக வெளியிடப்பட்டுள்ள மிகப் பெரிய நூலாகும். இதில் தமிழர்களின் மருத்துவ அறிவியல் அதிகமாக அடங்கியுள்ள தாக தகவல் கிடைத்துள்ளது. அதன் முகவரி மற்றும் தகவல் பெற

Tantratmak ravan Samhita
Edited by Swami Premanand ‘Alakh’
D.P.B. Publications, 110, Chawari Lazar,
Chawk, Badshahbulla, Post Box No:2037,
Delhi- 110 006. ªî£ì˜¹‚°: 011232516300
தொடர்புக்கு: 011232516300

இந்நூல்களை பெற விரும்புவோர் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தொடர்பு கொண்டு பேசி தகவலறிந்து பணம் செலுத்தி நூலை பெறலாம். இந்த முக வரிகளை எமக்கு அளித்த மரபுதமிழ் மருத்துவர் திரு. தாமரை செல்வன் (வியாசர்பாடி, சென்னை) அவர்களுக்கு நன்றி. அவரது அலைபேசி: 9444580701. அரசு பணியாளரான அவரிடம் இரவு 6.30 மணிக்கு மேல் தொடர்பு கொள்ள லாம். மேலும் வட இந்தியாவில் இந்தி மொழியாக்கம் செய்யப்பட்ட ரூ.20,000/-_ (இருபதாயிரம் விலையுடைய மிகப் பெரிய இராவண நூல் உள்ளது. இன்னும் 50க்கும் மேற்பட்ட பல இராவணன் நூல்கள் வட இந்தியாவில் இருப்பதாக மேலும் சில தகவல்கள் கூறுகின்றன.

(மருத்துவர் பு.சாலின் மனோகர் எழுதிய அவசர கால புறமருத்துவ முறைகள் எனும் நூலிலிருந்து....

Read more: http://viduthalai.in/page2/89477.html#ixzz3GVef9ma8

தமிழ் ஓவியா said...

இறந்த பிறகும் உயிர் வாழச் செய்யுறாங்க....

போடி ஜே.கே. பட்டியில் சுந்தரபாண்டியன் என்பவர் திடீரென்று இறந்து போகவே கண்தானம் வழங்க சம்பந்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் உடனே ரகுநாகநாதனுக்கு போன் பண்ணுங்க.. எனக் கூறியது வியப்பாக இருந்தது. அவர்களிடம் கேட்ட போது.... இறந்த பின்பும் உயிர் வாழத்தான் கண் கொடை என்றனர். சிறிது நேரத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர்களும் வீட்டிற்கு வந்தனர். சற்று நேரத்திலே அறுவை சிகிச்சை செய்து சுந்தரபாண்டியன் கண்களை கொண்டு சென்றனர். சரி ரகுநாகநாதன் யார் என்று கேட்டபோது, போடி பி.எச். ரோட்டில் குருதி, விழி, உடல் கொடைக் கழகம் நடத்தி வருகிறார்.

இனி ரகுநாகநாதன்....

இருக்கும்போது நாம் பலருக்கு உதவியாக இருக்கின்றோம். இறந்த பின் மண்ணுக்கு உரமாவது தவிர வேறு பயன் ஒன்றும் தருவதில்லை. ஆனால், இறந்த பின்பும் நம் உடல் உறுப்புகள் உடல் வாழ்வதற்கும், மருத்துவ கல்லூரி மாணவர்கள் மனித உடல் சம்பந்தமாக பயிற்சி பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கும். இந்த நோக்கம் பிடித்துப் போனதால் குருதி விழி, உடல் கொடைக் கழகம் என்ற பெயரில் குருதி, கண், உடல் உறுப்புகள் கொடை பெற்று மற்றவர்களுக்கு உதவி செய்து வருகின்றோம். 10 பேர் கொண்ட நிர்வாகக் குழு மூலம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு என்றார். இறந்த பின்பும் பிறர் உயிர் வாழ விழி, உடல் கொடை செய்ய ரகுநாதகநாதனை தொடர்பு கொள்ள - 98421 20321.

Read more: http://viduthalai.in/page2/89481.html#ixzz3GVf9hbPq

தமிழ் ஓவியா said...

ஒளிமறைவு (கிரகணம்) என்றால் என்ன?


புவியும் நிலவும் சூரியனிடமிருந்து தான் ஒளியைப் பெறுகின்றன. அவ்வாறு புவியும் நிலவும் பெறுகின்ற சூரியஒளியைப் புவியோ அல்லது நிலவோ தடுக்கும் போது ஒளிமறைவு (கிரகணம்) ஏற்படுகின்றது. இத்தகைய ஒளிமறைவைத்தான் நாம் கிரகணம் என அழைக்கிறோம். இந்நிகழ்ச்சியை ஒரு எடுத்துக் காட்டுடன் நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். காலை அல்லது மாலை வேளைகளில் சூரியனை நோக்கி நில்லுங்கள். அப்பொழுது உங்கள் நிழல் உங்களுக்குப் பின்னால் விழு வதைப் பார்க்கலாம். மற்றொருவரை உங்களுக்குப் பின்னால் உங்கள் நிழலில் நிற்கச் சொல்லுங்கள். அவர் மீது உங்கள்நிழல் படிந்திருக்கும். அவ்வாறு நிற்பவரின் மீது சூரிய ஒளி விழாமல் உங்கள் நிழல் தடுக்கிறது. உங்கள் நிழலில்நிற்பவரை நிழலிலிருந்து விலகி நிற்கச் சொல்லுங்கள், இப்பொழுது சூரிய ஒளி இருவர் மீதும் சமமாக விழுகிறது.

அது போலவே சூரியனுக்கு நேராக வரும் பொழுது புவியின் நிழலும், நிலவின் நிழலும் விண்வெளியில் விழுகின்றன. புவியின் நிழலில் நிலவு வரும் பொழுது அல்லது நிலவின் நிழலில் புவி வரும் பொழுது ஒளிமறைவு நிகழ்ச்சி (கிரகணம்) ஏற்படுகிறது.

ஒளிமறைவு நிகழ்ச்சி (கிரகணம்) எல்லா பவுர்ணமி, அமாவாசை நாட் களிலும் நிகழ்வதில்லை. ஏன்? நிலவு, புவியை வலம் வரும் பாதையின் கோணம், புவி, சூரியனை வலம் வரும் பாதைக் கோணத்தை விட 5 பாகை (டிகிரி) சாய்வாக உள்ளது. எனவே பெரும்பாலும் நிலவு புவியின் நிழல் விழும் பகுதிக்கு அப்பால் சென்று விடுகிறது.அது போலவே புவியும் நிலவின் நிழல் விழும் பகுதிக்கு அப்பால் சென்று விடுகிறது. அவற்றின் சுழலும் காலவேறுபாட்டினால் எதிர் பாராத ஒரு சூழ்நிலையில் புவியானது, நிலவின் நிழல் விழும் பகுதியிலும், நிலவானது, புவியின் நிழல் விழும் பகுதியிலும் வந்து விடுகின்றன.

அவ்வேளைகளில் சூரியன், புவி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து விடுகின்றன. ஆதலால் இவை மூன்றின் அமைவிடங் களைப் பொறுத்து கிரகணம் என்னும் ஒளிமறைவு நிகழ்வு ஏற்படுகிறது. சந்திரன் ஒளிமறைவு (கிரகணம்) சந்திர நிகழ்வு ஏற்பட கீழ்க்கண்ட சூழல்கள் உருவாக வேண்டும்.

1. சூரியன், புவி மற்றும் நிலவு ஆகியவை மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் அமைய வேண்டும்.

2. நிலவுக்கும், சூரியனுக்கும் இடை யில் புவி அமைய வேண்டும்.

3. முழுநிலவாகக் காட்சியளிக்கும் பவுர்ணமி இரவாக இருத்தல் அவசியம். இவையே உண்மையான காரணங் களாகும். ஆன்மீகவாதிகள் கூறும் காரணங்கள் பொய்யானவை. அவற் றிற்கு எந்த நிரூபிப்பும் இல்லை.

Read more: http://viduthalai.in/page2/89483.html#ixzz3GVg4rN8w

தமிழ் ஓவியா said...

அரசியல் கட்சிகளுக்கு புதிய கடிவாளம்


அரசியல் கட்சிகளின் நிதி, தேர்தல் செலவுகள் ஆகியவற்றை முழுமையாகக் கண்காணிக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் புதிய நெறிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 324ஆவது பிரிவின் கீழ், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி, தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்திருந்தது. அன்று பிறப்பித்த உத்தரவின் நெறிமுறைகளில்,

* அரசியல் கட்சியின் பொருளாளர், தனது கட்சியின் வரவு, செலவுக் கணக்குகள் அடிமட்ட நிலைகளிலும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

* பராமரிக்கப்படும் ஆண்டுக் கணக்குகள், தகுதியுடைய கணக்குத் தணிக்கையாளர்களால் முறையாக சான்றளிக்கப்பட வேண்டும்.

* அரசியல் கட்சிகள் 20 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான தொகையை எந்தவொரு தனிநபருக்கோ, நிறுவனத்திற்கோ ரொக்கமாக வழங்கக்கூடாது.

* மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தேர்தல் செலவுகளுக்காக வேட்பாளருக்கு அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மேல் அரசியல் கட்சிகள் வழங்கக்கூடாது.

* வேட்பாளருக்கான தொகையை வங்கிக் கணக்கு மூலம் காசோலையாகவோ, வரைவோலையாவோ மட்டுமே வழங்க வேண்டும்.

* அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், கணக்கு தணிக்கையாளர் ஆய்வு செய்து சான்றொப்பம் அளித்த ஆண்டு வரவு-செலவு தொடர்பான அறிக்கைகளை, தேர்தல் ஆணையத்திடம் ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

* அங்கீகரிக்கப்படாத கட்சிகள், மாநிலத் தேர்தல் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
முதலான புதிய விதிமுறைகள் குறிப்பிடப்பட்டன. இந்தப் புதிய நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

Read more: http://viduthalai.in/page2/89484.html#ixzz3GVgEciHS

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஏனிந்த குழப்பம்

தீபாவளியின்போது தமிழ்நாட்டில் நாராய ணனையும், மகாலட்சுமி யையும், வழிபடுவார்கள். நேபாளத்தில் லட்சுமி யையும் ராஜஸ்தானில் ராமரையும், மத்தியப் பிரதேசத்தில் குபேர னையும், வழிபடுவர் வங் காளத்தில் காளிதேவி யையும், மராட்டியத்தில் மகாபலி சக்ரவர்த்தியை யும் வழிபடுகிறார்களாம்.

கிறிஸ்துமஸ் என்றால், ரம்ஜான் என்றால் சம்பந் தப்பட்ட மதங்களைச் சார்ந்தவர்கள் ஒரே மாதிரி யான தகவல்களைத்தான் சொல்லுவார்கள்; உலகம் முழுவதும் ஒரே நிலை தான் அவர்களிடத்தில். இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஏனிந்த குழப் பம்! குழப்பம்தானே இந்து மதம் என்கிறீர்களா? அது வும் சரிதான்.

Read more: http://viduthalai.in/page1/89439.html#ixzz3GVgjGCJP

தமிழ் ஓவியா said...

சுக வாழ்வில் இல்லை

ஒரு நாட்டின் பொது வாழ்வும், ஒற்று மையும் அந்நாட்டின் ஒவ்வொரு வகுப்பின் முன்னேற்றத்திலும், திருப்தி யிலும் தான் இருக்கிறதே ஒழிய, ஏதோ ஒரு வகுப்பின் மேம்பட்ட சுக வாழ்வில் இல்லை.
(விடுதலை, 8.9.1950)

Read more: http://viduthalai.in/page1/89427.html#ixzz3GVh8sHL1

தமிழ் ஓவியா said...

கோழிக்கறி இறக்குமதியின் பின்னணியில்!

அமெரிக்காவில் இருந்து கோழி இறக்குமதிக்கு மன் மோகன் சிங் அரசு 2011- ஆம் ஆண்டு சில விதிமுறை களைக் கொண்டு வந்தது. இதனை உலக வர்த்தக அமைப்பு இந்திய அரசு கொண்டுவந்த விதிமுறைகள் செல்லாது என்று உத்தரவிட்டது. 2011-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பறவைக் காய்ச்சல் பரவியதன் காரணமாக உலகின் பல நாடுகள் கோழி இறக்குமதியைத் தடை செய்திருந்தன. இந்தியாவில் இருந்து கோழி ஏற்றுமதிக்கும் உலக நாடுகள் தடை விதித்தன. இதனையடுத்து மன்மோகன்சிங் தலைமையி லான அரசு அமெரிக்காவில் இருந்து அதிகளவில் மாவின் மூலம் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை (டோப்பிங் செய்யப்பட்ட) இறக்குமதி செய்ய தடைவிதித்தது. இத்தடையின்மூலம் இந்தியக் கோழிப் பண்ணைகள் மீண்டும் புத்துயிர் பெற்றன. இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இத் தடையை விலக்கக் கோரி சுகாதார அமைப்பில் அமெ ரிக்கா வழக்குத் தொடர்ந்தது. இதனைச் சிறப்பு வழக்காக ஏற்றுக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் உணவுப் பொருள் ஏற்றுமதி விவ காரத்திற்கான வல்லுநர்கள் குழு இந்தியாவின் தடை செல்லாது என்று அறிவித்தார்கள்.

வல்லுநர் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ள தாவது: உணவுப்பொருள் ஏற்றுமதி என்பது மக்கள் தொகை பெருகிவரும் இக்காலகட்டத்தில் அனைத்து நாடுகளுக்கும் தேவையான ஒன்றாகும். இந்திய அரசு உள்ளூர் இறைச்சி உற்பத்தியாளர்களின் நலன் கருதி சர்வ தேச இறக்குமதியைத் தடைசெய்யும் விதமாக செயல் படுவது நல்லதல்ல. இது ஒருதலைப்பட்சமான முடிவாகும். இந்தியாவின் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இறைச்சி உற்பத்தி இல்லாத நிலையில் இறக்குமதியைத் தடைசெய்வது நேர்மையற்ற செய லாகும். உணவுப் பொருள் ஏற்று மதிக்கு என்று உலக நாடுகள் பொதுவான ஒரு விதியைப் பின்பற்றுகின்றன. இதில் இந்தியாவும் முழு சம்மதத்துடன் கையொப்பமிட்டு இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு அமெ ரிக்கா இந்தியாவிற்குக் கோழி களை ஏற்றுமதி செய்யலாம். இந்தியா கொண்டு வந்துள்ள தடை செல்லாதது என்று உணவுப் பொருள் ஏற்றுமதி விவகாரத்திற்கான வல்லுநர்கள் குழு தனது அறிக்கையில் தெரிவித் துள்ளது. உலக வர்த்தக மய்யத்தின் இந்த அறிக்கையால் இந்தி யாவில் குறிப்பாக தமிழகத்தில் பெருமளவு செயல்படும் கோழிப் பண்ணைகளுக்கு ஆண்டிற்கு 15 முதல் 20 கோடிவரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது

தமிழ் ஓவியா said...

இதில் உள்ள சூட்சமம் கவனிக்கத்தக்க ஒன்று; கோழியின் தொடைக்கறி அதிக கொழுப்பு சக்தியைக் கொண்டது. அதன் காரணமாக அமெரிக்கர்கள் அந்தப் பகுதியை உண்ண மாட்டார்கள். இப்பொழுது இந்தியா வுக்கு இறக்குமதி செய்யவிருப்பது - அமெரிக்கர்களால் ஒதுக்கப்பட்ட இந்தக் கோழித் தொடைக் கறிதான். இந்தியர்களோ அந்தத் தொடைக் கறியைத்தான் (லிமீரீ றிவீமீநீமீ) விரும்பிக் கேட்டு வாங்கி உண்ணு கின்றனர். இதற்குப் பெயர்தான் இந்தியப் புத்தி என்பதோ!

சீனாவில் இந்தப் பிரச்சினை வந்தபோது, அனுப்பி னால் முழுக் கோழிக் கறியையும் அனுப்பிட வேண்டும்; அமெரிக்கர்களால் கழித்துக் கட்டப்படும் கறிப் பகுதியை ஏற்க மாட்டோம் என்று சீனா கறாராகச் சொல்லி விட்டது. அத்தகைய முதுகெலும்பு இந்தியாவுக்கு ஏனில்லை என்பதுதான் கேள்வி. என்றைக்குப் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற திரிசூலம் புறப்பட்டதோ, அன்று முதல் பொதி சுமக்கும் மிருகமாக ஆகி விட்டது நம் நாட்டு நிலைமை.

தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்ற சூறாவளி பல நாடுகளை நொறுக்கித் தள்ளி விட்டது. இந்தப் பொருளாதார கொள்கையில் காங்கிரஸ், பிஜேபி என்ற பேதம் கிடையாது! இதில் மட்டும் ஒரே கூட்டணிதான்.

மகாராட்டிர மாநிலத்தில் டபோலில் என்ரான் மின் உற்பத்தி நிறுவனத்துக்கு எதிராக பிஜேபி பெரும் போராட்டத்தையே நடத்தியதுண்டு. அமெரிக்காவின் என்ரான் நிறவனத்துடன் பெரும் பேரம் பேசி முடித்துவிட்டது என்று காங்கிரஸ் மத்திய ஆட்சியின்மீது பெரும் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டதுண்டு. அதே பிஜேபி பிற்காலத்தில் (1996இல்) என்ன செய்தது? வாஜ் பேயி தலைமையில் 13நாள் ஆட்சி நடைபெற்றது அல்லவா!

தம் ஆட்சி கவிழப் போகிறது என்று தெரிந்திருந்தும் அவசர அவசரமாக அதே அமெரிக்காவின் என்ரான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட மோசடியை என்ன வென்று சொல்வது!

பிஜேபி ஆட்சியில் 1999இல் என்ன நடந்தது? இறக்குமதி கட்டுப்பாட்டிலிருந்த 1429 பொருட்களை 2011 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அளவு கட்டுப்பாட்டில்லாமல் இந்தியாவில் இறக்குமதி செய்ய அனுமதிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் இந்தியா கையொப்பமிட்டதே!

அமெரிக்காவின் மான்சான்டோ மற்றும் கார்கில் நிறுவனங்கள் டெர்மினேட்டட் மலட்டு விதைகளை இந்தியா விவசாயிகளின் தலையில் கட்டவில்லையா? இந்த விதையைப் பிற்காலத்தில் விதை நெல்லாகப் பயன்படுத்த முடியாது; அமெரிக்காவின் அந்த மலட்டு விதையை எதிர்பார்த்துத்தான் கையேந்தி நிற்க வேண்டும்.

உள்நாட்டுத் தொழில்களை ஒழித்துக் கட்டி விட்டு, அத்தொழில்களை நம்பி உயிர் வாழும் மக்களை நடுத் தெருவில் நிறுத்திவிட்டு, அயல்நாட்டுச் சரக்குகளைக் கண் மூடித்தனமாக இறக்குமதி செய்து உள்நாட்டு மக்களை நடுத் தெரு நாராயணன் ஆக்கும் கொடுமையை என் சொல்ல!

அமெரிக்காவின் கோழிக் கறி இறக்குமதியால் இந்தியாவில் அத்தொழிலில் ஈடுபடுவோரில் 40 சதவீதம் வரை பாதிக்கப் படுவார்கள் என்று கூறப்படுகிறது.

தொடக்கக் காலத்தில் வெள்ளைக்காரன் நாடு பிடிக்கும் எண்ணத்திலா இந்தியாவுக்கு வந்தான்? சோப்பு, சீப்பு, கண்ணாடியை விற்க வந்தவன் இந்திய மக்களின் பல பட்டறைத் தன்மையைக் கூர்ந்து நோக்கி, மதத்தால், ஜாதியால் பிளவுண்டு கிடப்பதைச் சரியாகக் கணக்கிட்டு, மித்திர பேதம் செய்து கடைசியில் 350 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவில்லையா!

இப்பொழுது நவீனம் என்ற பெயரில் மயக்கும் பொருளாதாரக் கொள்கையை உலவவிட்டு இந்தியாவைச் சந்தைப்படுத்தும் கொடுமைக்குச் சிகப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது, மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டியது - முற்போக்கு சக்திகளின் -இடதுசாரிகளின் தலையாய கடமையாகும்.

ஏழை, நடுத்தர மக்கள் வீதிக்கு வந்து நிற்பது தடுக்கப் பட வேண்டுமானால், மக்கள் வீதிக்கு வந்து போராடத் தயாராக இருக்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/89428.html#ixzz3GVhGLEPG

தமிழ் ஓவியா said...

அக்டோபர் 17 உலக வறுமை ஒழிப்பு தினம் இந்தியாவில் வறுமை ஒழிப்பு என்பது சமூக நீதியின் மூலமே சாத்தியமாகும்

வறுமையும் பட்டினியும் ஒட்டிப்பிறந்த சகோதரிகள் என்ற வழக்கு மொழியைக் கேள்விப்பட்டிருப்போம். ஆகவே தான் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி உலக உணவு தினம் அதற்கு அடுத்த நாள் உலக வறுமை ஒழிப்பு தினம் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. உலக வறுமை ஒழிப்பு தினம் (International Day for the Eradication of Poverty) ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி உலகெங்கும் கடைப் பிடிக்கப்படுகிறது. உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி 1.4 பில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் மிகவும் அடிமட்டத்தில் வாழ்கின்றார்கள். இவர்களின் நாள் வருமானம் இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ 35 ஆகும். உலக மக்களிடையே வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், வறுமை காரணமாக மரணமடைந்தவர் களுக்கு மரியாதை செலுத்தும் வித மாகவும், பசிக் கொடுமையில் இருந்து மக்களை விடு விப்பதற்காகவும் அய்க்கிய நாடுகள் சபை 1992ஆம் ஆண்டு வறுமை ஒழிப்புத் தினத்தை அதிகாரப் பூர்வமாக அறி வித்தது.

வறுமை பற்றி உலகம் விழிப்புணர்வு பெற முதல்முறையாக 1987ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸ் நகரில் பசி, வறுமை, வன்முறை, பயம் போன்றவற்றில் உயிரி ழந்தவர்களை நினைவிற்கொள்ளும் வகையில் சுமார் பத்தாயிரம் மக்கள் 'டொர்கேட்ரோ'வின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்று கூடினர். அங்கு உலகம் முழுவதும் வறுமை நிலை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

வறுமை நிலை காரணமாக உலகளா விய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக் களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவ னத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரு கின்றன. ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்குக் கீழ் வாழும் மக்களை ஏழ்மை நிலையில் அல்லது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என வரை விலக்கணப் படுத்தலாம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே வறுமை நிலை அளவு சார்ந்து மதிப்பிடப்படு கின்றது. தீவிர வறுமை நிலை என்பது நாளொன்றுக்கு ரூ.35க்கு குறைவான தொகையில் ஒருவர் வாழ்க்கை நடத்து வது என்று விளக்கம் அளிக்கப்பட் டுள்ளது.Read more: http://viduthalai.in/page1/89433.html#ixzz3GVhQqRE8

தமிழ் ஓவியா said...

இது நாட்டுக்கு நாடு வேறுபடலாம். பொதுவாக வறுமை நிலை உணவு, சுத்தமான நீர், உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், சமூக வாய்ப்புக்கள், மனித அரசியல் உரிமைகள், பிற சமூகங்களுடன் தொடர்புகள் அற்ற அல்லது மட்டுப் படுத்தப்பட்ட ஒரு நிலையைக் குறிக் கின்றது. உலகளாவிய ரீதியில் வறுமை சடுதியாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட் டுள்ளதாக வாஷிங்டனில் நடைபெற்ற நிதி மற்றும் வளர்ச்சித் துறை மாநாட்டில் (2009) எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள அதே வேளை, வறிய நாடுகளுக்கான உதவி களை செல்வந்த நாடுகள் தொடர்ந்தும் வழங்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் 185 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் கலந்து கொண்ட நிதி மற்றும் வளர்ச்சித் துறை மாநாட்டில் நிதி நெருக்கடி நீண்டகாலத்திற்கு நீடிக்கும் பட்சத்தில் உலக வங்கிக்கான வளங்களை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படலாமெனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. உலகில் தற்பொழுது நிலவும் பொருளாதார பின்னடைவின் காரணமாக முன்னேறிய நாடுகளில் நிலவும் பொருளாதாரச் சூழல் மற்றும் ஆடம்பர வாழ்க்கை ஏழை நாடுகளின் வளர்ச்சிக் குப் பெரும் முட்டுக்கட்டையாக இருக் கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஏழ்மைக்கு முக்கிய காரணமாக ஊழல் உள்ளது. வறிய நாடுகளின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள ஊழலை வளர்ந்த நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன. அதிகாரி களை வளைக்கவும், ஒப்பந்தங்களை கைப்பற்றவும் முறைகேடான வழிகளில் பணத்தை செலவிடும் இந்த நிறுவனங்கள் ஏழை நாடுகளின் குடிமக்களின் வரிப்பணத்தை தெரிந்தே சுரண்டுகின்றன. குற்றங்கள் அதிகரிக்க வறுமையும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. வறுமையும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த சமூகத்தில், வன்முறையையும், குற்றங்களையும் தவிர்க்க முடியாது.

இந்தியாவைப் பொறுத்தவரை வறுமை சமூகத்தில் மிகபெரிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி விட்டது. இந்தியாவில் வறுமைக்கு முக்கியக் காரணம் இங்குள்ள சாதி அமைப்புகள், முக்கியமாக உயர்சாதி அமைப்புகள் அதிகாரங்களை கையில் எடுத்துக்கொண்டு பிற மக்களை தங் களுக்குச் சமமாக வரவிடாமல் காலங் காலமாக தடைகளை ஏற்படுத்தி வரு கின்றனர். சமூக நீதியை நிலை நிறுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை சீர்திருத்த தென் இந்தியாவில் தந்தைப்பெரியார் வட இந் தியாவில் டாக்டர் அம்பேத்கர் போன்றோர் பலத்த எதிர்ப்பிற்கிடையே தங்களுடைய பணியைத் தொடர்ந்தனர். ஆனாலும் அவர்கள் விட்டுச்சென்ற சமூகநீதிப்பணிக்கு இன்றும் உயர்சாதி வர்க்கம் பெரிதும் தடையாக உள்ளது. இந்திய பொருளாதார நிலைக்கோட்டை நன்கு கவனித்தால் எண்ணிக்கையில் உள்ள சில உயர்சாதிக்குழுக்கள் பெரும் எண்ணிக்கையினால் ஆன இந்திய நாட்டின் பூர்வீக மக்களின் பொருளா தாரச் சூழலில் பெரிதும் தடையாக நிற்கின்றனர். அதாவது அரசு எந்த ஒரு நல்ல திட்டத்தை முன்னெடுத்தாலும் அதை சரிசமமாக அனைத்து மக்களிடமும் பரவிவிடாமல் தடையாக நிற்பதற்கு சாதியக் கட்டமைப்பே முக்கியக் காரண மாக இருக்கிறது, இந்தியாவில் வறுமை ஒழிப்பு என்பது சமூக நீதியின் மூலமே சாத்தியமாகும் அதுவரை எந்த ஒரு அரசு திட்டங்களும் அவர்கள் கொடுக்கும் புள்ளி விபரங்களும் பயனற்றவைகளா கவே இருக்கும்.

- சரவணா ராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

கடவுள் இல்லை

கடவுள் என்பது திருடர் களின் இரதத்திற்காக செய்யப் பட்ட கடையாணிப் போன்றது. - தந்தை பெரியார்

ஒன்றுமில்லாத இந்த ஆகாயத்திலே கடவுளை வைத் திருக்கும் மனிதர்களை நீ நம்பாதே. - பெர்னாட்சா

கடவுள் என்பது கற்பனையப்பா கற்பனை- காண்டேகர்

கடவுளை யாரும் கண்டதில்லை - குருசேவ் (அய்.நா. சபையில்)

மனிதனுக்குக் கேவலம் ஒரு புழுவைப் படைக்கத் தெரியவில்லை. நிமிடத்துக்கு நிமிடம் ஆயிரக்கணக்கான

கடவுளைப் படைக்கத் தெரியும். - ஒரு மேனநாட்டறிஞன்

உனக்கெட்டாத கடவுளைப் பற்றி நீ நம்பாதே - வால்விச்மன்

Read more: http://viduthalai.in/page1/89464.html#ixzz3GViXNuyR

தமிழ் ஓவியா said...

பிராமணன் கடவுள்!

புருஷ சரீரம் பரிசுத்தமாயிருக்கிறது. அதில் நாடிக்கு மேல் பாகம் அதிக பரிசுத்தமானது. ஆகையால் பிர்மாவின் முகம் அதிகம் பரிசுத்தமாயிருக்கிறது. பிர்மாவின் முகத்திலிருந்து ஜனித்ததாயிருப்பதாலும், மற்ற ஜாதி களுக்குத் தருமத்தை உபதேசிக்க வேண்டியிருப்ப தாலும், வேதத்தைத் தரிப்பதாலும் இவ்வுலகில் பிராமணன் கடவுள் ஆகிறான்

- மனு தர்மம் அத்தியாயம் 1, சுலோகம் 92, 93
(பார்ப்பான்தான் கடவுளைக் கற்பித்தான் என்பது விளங்க வில்லையா?)

Read more: http://viduthalai.in/page1/89464.html#ixzz3GVidXOJJ

தமிழ் ஓவியா said...

கடவுளும் மின்சாரமும்!


கேள்வி: Can you live without god? (கடவுள் இல்லாமல் உங்களால் வாழ முடியுமா?)

பதில்: Yes. I can live without god, but I cannot live without electricity (கடவுள் இல்லாமல் நான் வாழ முடியும். ஆனால், மின்சாரம் இல்லாமல் நான் வாழ முடியாது) (சிரிப்பு).

அமெரிக்காவில் ஒருநாள் திடீரென மின்தடையை ஏற்படுத்தினார்கள். அமெரிக்கா முழுவதும் மக்கள் சில நிமிடங்கள் அவதிப்பட்ட பின்னர். மீண்டும் மின் ஓட்டத்தை இயக்கி விட்டு, வானொலியில் அறிவித்தார்கள்.

சில நிமிடங்கள் மின்சாரம் இல்லாவிடில் எவ்வளவு அவஸ்தை? இப்போது புரிகிறதா மின்சாரத்தைக் கண்டுபிடித்த ஆல்வா எடிசனின் பெருமை?

(மதுரை பல்கலைக்கழக மாலை நேரக் கல்லூரி பகுத்தறிவுச் சிந்தனை கலந்துரையாடலில் கழகப் பொதுச் செயலாளர் கூறியது) 15.3.1980

Read more: http://viduthalai.in/page1/89465.html#ixzz3GVik5CE5

தமிழ் ஓவியா said...

மதத்திற்கு எதிராக..

தன்னுடைய அடிமைத் தனத்தை உணருகின்ற, தன்னை விடுதலை செய்து கொள்வதற்காகப் போராட கிளர்ந் தெழுகின்ற ஓர் அடிமை, தன்னுடைய அடிமை நிலையில் பாதியை ஒழித்து விடுகின்றான்.

தொழிற்சாலை அமைப் பினாலும், பெருமளவு உற்பத்தி செய்யும் நவீன தொழில்மூலமும், நவீன நகர வாழ்க்கையிலும் வளர்ந்து வரும் வர்க்க உணர்வுள்ள தொழிலாளி ஒரு நவீன மதத்துவேச எண்ணங்களை அருவருத்து ஒதுக்கித் தள்ளுகிறான். சொர்க்கலோக நம்பிக்கையைப் பாதிரிமார்களும் பூர்ஷ்வா பிற்போக்காளர்களும் வைத்துக் கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான்.

இந்த உலகில் இன்றே இக்கணமே தனக்காக ஒரு நல்வாழ்வை அடைய முன்வருகிறான். நவீன பாட்டாளி வர்க்கம் சோஷலிஸத்தின் பக்கமே நிற்கிறது.

மதம் என்ற பனித்திரையை எதிர்த்த போராட்டத்திற்கு விஞ்ஞானத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது. தொழிலாளர்களை மறு உலக நம்பிக்கையிலிருந்து விடுவித்து, ஒன்றுபடுத்தி இவ்வுலகில் இன்றே ஒரு நல்வாழ்வை அடையப் போராடுகிறது.

- லெனின்

Read more: http://viduthalai.in/page1/89465.html#ixzz3GVitM4QG

தமிழ் ஓவியா said...

குழந்தை மணம்


பெண்ணை ருதுகாலத் திற்கு முன்பு தக்கவரனுக்குக் கல்யாணம் செய்து கொடாத தந்தையும், மனைவியை ருது காலத்தில் புணராத கணவனும், கணவன் இறந்த பின்பு தாயைக் காப்பாற்றாத பிள்ளையும் நிந்திக்கப்படுவர்.
-மனுதர்மம் - அத்தியாயம் 9

குலம், நல்லொழுக்கம் இவைகளால் உயர்ந்தவரை யும், பெண்ணுக்குத் தக்க ரூபம் உடையவனாயும் இருக்கின்றவனுக்குத் தனது பெண் 8 வயதுக்கு உட்பட்டு இருந்தாலும் விதிப்படி விவா கம் செய்து கொடுத்து விட லாம்.
- மனுதர்மம் அத்தியாயம் 9

8 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப்ப வன் சுவர்க்க லோகத்தையும், 9 வயதுப் பெண்ணை விவா கம் செய்து கொடுப்பவன் வைகுண்டத்தையும், 10 வயதுப் பெண்ணை விவா கம் செய்து கொடுப்பவன் பிரம்மலோகத்தையும் அடை கின்றான். அதற்கு மேற் பட்டுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் ரௌர வாத நரகத்தை அடைகிறான்.
- பராசரர்

ஆஜ்மீர் - மொர்வாராத் தொகுதியில் இருந்து டில்லி சட்டசபைக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட ராய்சாகிப் ஹரிபிலாஸ் சாரதா என்பார் இந்துக் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் திருமண வயது சீர்திருத்த மசோதா” என்ற ஒன்றைக் கொண்டு வந்தார் (1.2.1927).

இது குறித்து வைதிகப் பார்ப்பனர்கள் பூமிக்கும் வானுக்கும் வானரமாய்த் தாவிக் குதித்தார்கள். நாக்கை நான்கு முழம் நீட்டி முழங்கும் அரசியல் பிரமுகரான திரு வாளர் சத்தியமூர்த்தி அய்யர் அப்பொழுது கூறினார்.

“அரசாங்கம் இந்துக்களு டைய விவாகத்தில் தலை யிட்டால் இந்துச் சமூகமே கெட்டு இந்து மதமே பாழாகி விடும். பெண்களுக்கு 10,12 வயதுக்கு முன்னமேயே விவாகம் செய்துவிட வேண் டும். இல்லையேல் பாவம் வந்து சூழும் என்று பராசரர் எழுதி இருக்கிறார். நாங்கள் பாவத்திற்குப் பயப்படு வோமா? அல்லது உங்கள் சட்டத்திற்குப் பயப்படு வோமா?” என்று கூறினார் என்றால் அவர்களின் வைதி கப் பித்துக்கு என்ன அளவு கோல் இதைவிடத் தேவை?

கவர்னர் ஜெனரலாக இருந்த லார்டு இர்வின் வரை சென்று பார்த்தனர் 12 வயதுக்குப் பிறகு விவாகம் செய்தால் மதமே கெட்டுப் போய் விடும் என்று வைசி ராய்க்குச் சங்கராச்சாரியார் தந்தியே கொடுத்தார்.

“சாரதா சட்டம் என்பது மதப் பிரச்சினை, வகுப்புப் பிரச்சினை சம்பந்தப்பட்ட தல்ல. இது வைத்தியம் மற் றும் சுகாதாரம் சம்பந்தப்பட் டது என்று கூறி அவாள் கூக் குரல்களைக் குப்பைக் கூடை யில் ஒதுக்கித் தள்ளினார்.

சர்தார் பகதூர் காப்டன் ஹீராசிங் பிரார் என்ற பஞ்சா பியர் இதுகுறித்து இந்தியா சட்டசபையில் பேசினார்.

“நம் நாட்டில் சிசு மரணம் அதிகமாய் ஏற்படுவது பல கீனமான குழந்தைகளைப் பெறுவதால் தான்; இதற்குத் தாயும், தந்தையுமே காரணம். நிலைமை இவ்விதமிருக்க பெண்களும், ஆண்களும் தக்க வயதும், பருவமும் அடைந்த பின்னரே மணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் முயற்சித்தால், உடனே வைதீகர்களுக்கு ஆத்திரம் பொங்கி, அவர்கள் இதைப் பலமாகக் கண்டிக்கப் புறப்பட்டு விடுகின்றனர்.

9 அல்லது 10 வயதுள்ள ஒரு பெண்ணையும் பத்து அல்லது 12 வயதுள்ள ஓர் ஆணையும் மனைவி புருஷன் என அழைப்பது உங்களுக்கு வெட்கமில் லையா? என்று கேட்டபோது “இல்லை - இல்லை” என்று பார்ப்பனர்கள் சத்தம் போட்டனர். என்றால் பார்ப் பனர்களின் சட்டசபையில் பிற்போக்குத்தனத்தை எந்த வெட்கம் கெட்ட மையினால் எழுதித் தொலைப்பது?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/89581.html#ixzz3GazSY22g

தமிழ் ஓவியா said...

1கோடியே,-68லட்சத்து,-97ஆயிரத்து-425-ரூபாய்,-மற்றும்-88-கிராம்-தங்கம்,-149-கிராம்-வெள்ளி-நகைகள்

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை தமிழ்க அரசின் இந்து சமய அறநிலையத்துறை எடுத்துக் கொண்டு 2009ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி செயல் அலுவலரை அரசு நியமித்தது. இதனையடுத்து நடராஜர் கோயிலில் 9 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில், செயல் அலுவலர் நியமனத்தை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் கடந்த ஜனவரி 6ம் தேதி உத்தரவிட்டது. மீண்டும் தீட்சிதர்களின் நிர்வாகத்தின் கீழ் கோயில் வந்தது. 2014 அக்டோபர் 7-ஆம்தேதி கடைசியாக உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் 25 முறை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் கிடைத்த மொத்த தொகை இது. சராசரியாக ஆண்டொன்றுக்கு 35 லட்ச ரூபாய்க்கும் மேல் வருமானம் கிடைத்த உண்டியல்கள் அகற்றப்பட்டு, இனி தீட்சதர்களின் தொப்பை தான் உண்டியலாகப்போகிறது. இப்படி தீட்சதர்கள் கைக்குக் கோயில் போகுமாறு ஆணையிட்டது உச்சநீதிமன்றம்! பார்ப்பனப் பண்ணையம்!

தமிழ் ஓவியா said...

அ.தி.மு.க. தலைமை சிந்திக்கட்டும்!


வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருக்கும், அவருடன் மற்ற மூவருக்கும் பெங்களூரு தனி நீதிமன்றம் கடந்த 27.9.2014 அன்று நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் வழங்கியுள்ளதைக் கண்டு அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியும், துயரமும் அடைவது இயற்கைதான்.

அதற்கென இனி உள்ள சட்டபூர்வ வாய்ப்புகள் - பிணை (ஜாமீன்) கோரி, தண்டனையை நிறுத்தி வைக்கவும் அல்லது ரத்து செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் போன்ற மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் பரிகாரம் தேடி, வெளியே வர முயற்சிப்பதும்தான் சரியான வழிமுறை.

நீதிபதியை மனம்போனபடி விமர்சிப்பது, கருநாடக அரசு, மத்திய அரசு போன்றவற்றில் பொறுப்பில் உள்ளவர்களை உணர்ச்சிவசப்பட்டு தாக்கிப் பேசிடுவது, பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய அளவில் இடையூறுகளைத் தானே உண்டாக்கும்? ஆங்காங்கே துண்டு துண்டாக நினைத்தபடி கிளர்ச்சிகளை, கடையடைப்புகளை, தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் களை - குறிப்பாக கலைஞர் போன்ற மூத்த தலைவர்களை வசைபாடுவதோ, பிரச்சினைக்குத் தீர்வை கொண்டு வந்து சேர்க்காது; மாறாக சட்டப்பூர்வமான ஆக்க ரீதியான மேல்முறையீடுகளைச் செய்யலாம்.

அனுதாப அலை என்றெல்லாம் காட்ட ஆவேசம், உணர்ச்சிவயப்பட்டு சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, மனம்போன போக்கில், பதிவாகவேண்டும் நம் எதிர்ப்பு - உரியவர்கள் கவனத்திற்குச் சேர வேண்டும், எதிர்கால பதவி அரசியலுக்கு இதுவே ஒரு அரிய வாய்ப்பு என்றும் நினைக்கலாமா? வன்முறை அல்லது பொது அமைதிக்குக் கேடு விளைவித்தல்மூலம், மக்களின் வெறுப்புதான் வளருமே தவிர, வேறு உருப்படியான பலன் கிடைக்காது.

இப்போது இவர்கள் நீதிமன்றங்களைக் கடுமையாக விமர்சிப்பது, நீதிபதிகளைத் தரக்குறைவாக உள்நோக்கம் கற்பித்துப் பேசுவது, எழுதுவது, தீர்மானங்களை தாங்கள் வகிக்கும் பொறுப்பான மன்றங்களில் நிறைவேற்றுவது போன்றவை எந்த அளவுக்கு அம்மையார் ஜாமீனில் வெளியே வருவதற்குத் துணை புரியும் என்பதை அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கவேண்டும்.


எல்லாவற்றையும்விட, இக்கட்சியினர் தமிழகத்தில் ஆளுங்கட்சி என்ற பொறுப்பில் இருந்துகொண்டு ஆட்சி நடத்துகின்ற நிலையில், அவர்களுக்குச் சட்டம் - ஒழுங்கு, பிரச்சினையை ஏற்படுத்தலாமா? அன்றாட அரசியல் ஆளுமை, மின்வெட்டு முதலான பல்வேறு பிரச்சினை களுக்குத் தீர்வு காண்பதல்லவா அவசியம்!
இவ்வாட்சியை இவர்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பதுபோல மத்திய அமைச் சர்கள் இங்கே விடுக்கும் எச்சரிக்கைகளை - எல்லாம் மனதிற்கொண்டு, தங்களது நடவடிக்கைகளை ஆளும் கட்சியினர், ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டியதே இப்போது அவசியமாகும்!

மீறி நீதிமன்ற நடவடிக்கைகள், தாறுமாறான விமர் சனங்கள் - அவர்களது தலைவி வெளியே வருவதற்கு இத்தகு நடவடிக்கைகள் உதவுவதற்குப் பதிலாக, எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்; ஊடகங்கள்மூலம் நீதித் துறையும், உலகமும், பொதுவானவர்களும் பார்த்துக் கொண்டு, முகம் சுளிக்கவும் செய்கின்றனர்!

நாம் இப்படி எழுதுவது அக்கட்சி-யினருக்குக் கசப்பாகக் கூட இருக்கலாம். முதியவர்கள் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்னே கசந்து பின்னே இனிக்கும் என்பது பழமொழி. அ.தி.மு.க.வினரின் நடவடிக்கை எதுவாயினும் - இந்த இக்கட்டான தருணத்தில் அவர்கள் தலைவிக்கு உதவுமா? கேடு செய்யுமா? என்றே யோசிக்கவேண்டுமே தவிர, ஆத்திரக்காரர்களுக்கு அறிவு மட்டு என்ற முறை யில் ஆவேசம், ஆர்ப்பாட்டம், தரமற்ற வசைமாரிகளால் கேடுகளும், எதிர்-விளைவுகளும்-தான் மிஞ்சும்.

யார் வழக்குப் போட்டது என்று ஆத்திரப்படுவதைவிட, ஏன் வழக்கு வந்தது? என்று சம்பந்தப்பட்டவர்கள் சுயபரிசோதனை செய்து, இனி எதிர்கால பொதுவாழ்க்கை எப்படி அமைத்துக் கொள்ளப்படவேண்டும் என்று முடிவு எடுத்துச் செயல்பட்டால், அது பயனுறு விடையாக, தீர்வாக உண்மையிலே அமையும்!

இப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் தைரியத்தில் விரும்பத்தகாத செயல்கள் மேலும் மேலும் பிரச்சினைகளை சிக்கலாக்கும் என்பதை உணர்ந்து, அத்தலைமையே முன்வந்து இவர்களுக்கு அறிவுரை கூறினால், அது அவருக்கும், கட்சிக்கும், ஆட்சிக்கும் பயன்படக் கூடும்.

அரசியல் பார்வை இதில் ஏதுமில்லை!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


1925 ஆண்டு காங்கிரஸ்காரரான கோவை அய்யாமுத்து புதுப் பாளையத்தில் நடத்தி வந்த ஆதிதிராவிடர் பாடசாலையில் பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்ற பாரதி பாடலை மாணவர்கள் பாடி வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதைப் பாடக் கூடாது என்று தடை போட்டவர் சந்தானம் அய்யங்கார் என்ற பார்ப்பனத் `தேசியத்' தலைவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கருத்து


மேல்நாடுகளில் சிறந்த கல்விமுறை வேண்டி ஆசிரியர்கள் போராடு-கின்றனர். ஆனால், இங்கே அதற்காக எந்த ஆசிரியரும் போராடவில்லை. சம்பள உயர்வு கேட்டுத்தான் போராடுகின்றனர். கல்வி முறையும் உலக நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் மோசமாக உள்ளது.

-தங்கர் பச்சான், திரைப்பட இயக்குநர்.

முதியவர்கள் மீதான நம்முடைய அன்பும் அக்கறையும் கூடுதலாகத் தேவைப்படுகிறது. தங்களின் பெற்றோர்களைக் கவனிக்க வேண்டியது ஒவ்வொரு இளைஞனின் கடமையாகும். இதனைக் கடமை என்று மட்டும் எண்ணாமல், பெற்றோர்களுக்கு முதுமைக் காலத்தில் உறுதுணையாக இருப்பது பெருமை எனக் கருத வேண்டும்.

- கே.ரோசய்யா, தமிழக ஆளுநர்

தரமான விதைகள், தடையில்லா மின்சாரம், உயர்தர உரம் போன்றவற்றை வழங்கினாலே விவசாயம் செழிக்கும். மானியமே வேண்டாம் என பிகார் விவசாயிகள் என்னிடம் தெரிவித்துள்ளனர். குறைந்த நீரில் அதிக மகசூல் செய்யும் விதைகளை ஆராய்ச்சி செய்து அதனைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

-அப்துல் கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்


இந்தியாவில் மனித உரிமை மீறல்கள், அனைத்துத் துறைகளிலும் நடக்கின்றன. மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஆண்டு-தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் வருகின்றன. இதில், போலீசார் மீதான புகார்களே அதிகமாக உள்ளன.

-கே.ஜி.பாலகிருஷ்ணன், மனித உரிமைகள் ஆணையர்

புகையிலைப் பொருள்கள் பயன்-படுத்தாதவர்-களுக்கும் புற்றுநோய் ஏற்படுகிறது. வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோயால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்-படுகின்றனர். இது குறித்த ஆராய்ச்சிகளில் முன்னேற்றம் காண வேண்டும்.

- மருத்துவர் வி.சாந்தா, அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மய்யத் தலைவர்சொல்றாங்க....

காஷ்மீர் பிரச்சினையைப் பொருத்தவரை, அதை இனியும் மூடிமறைக்க முடியாது. காஷ்மீர் மக்கள் தங்களது நிலையை சுய நிர்ணயம் செய்து கொள்ளும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அய்.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 60 ஆண்டு-களுக்கு மேலாகிவிட்டது. இதுவரை அந்தப் பொது வாக்கெடுப்பு நடைபெறவில்லை. காஷ்மீர் மக்களின் உரிமையை நிலைநாட்டுவதுதான் பாகிஸ்தானின் லட்சியம் ஆகும்.

- நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் பிரதமர்

ஜம்மு காஷ்மீர் மக்கள் உலகம் முழுவதும் ஏற்றுக்-கொண்ட ஜனநாயக கொள்கைகள் மற்றும் நெறி-முறைகளின் அடிப்படையில் தங்களது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுத்து அமைதியான முறையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். அதையே அவர்கள் தொடர்வார்கள் என்பதையும் பெருமைமிக்க இந்தச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். எனவே, பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

- அபிஷேக் சிங், அய்.நா.சபைக்கான இந்தியத் தூதரக முதன்மைச் செயலாளர்

தமிழ் ஓவியா said...

சிம்சாங் கார்ட்டூனும் யோகன் கார்ட்டூனும்

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விவாதத்திற்குரிய கருத்துப் படம் ஒன்றை வெளியிட்டதாகப் பரபரப்பு கிளம்பியது.

அறிவியலாளர்கள் உள்ள பணக்கார நாடுகளின் Elite Space Clubக்குள் தலைப்பாகை, வேட்டியுடன் இந்தியர் ஒருவர் மாடு ஓட்டிக்கொண்டு வந்து அலுவலகக் கதவைத் தட்டுவது போன்று கருத்துப் படம் வரையப்பட்டுள்ளது.

இந்தியர்களை, குறிப்பாக மலையாள மக்களை இந்தக் கருத்துப்படம் கோபப்படுத்தி உள்ளதாம். (அவர்கள் ஆதிக்கம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகம் உள்ளதால் இருக்குமோ?) நியூயார்க் டைம்ஸ் பன்னாட்டுப் பதிப்பில் தலையங்கத்தை ஒட்டி வெளியிடப்பட்ட இந்த கருத்துப்படம் சிங்கப்பூர் ஓவியர் ஹெங் சிம்சாங் என்பவரால் வரையப்பட்டது.பணக்கார, மேற்கத்திய நாடுகளால்தான் முடியும் என்பதை மாற்றி, இந்தியா செவ்வாய்க்கலன் ஏவியுள்ளது என்பதையே கருத்துப் படத்தின் ஓவியர் கருத்துப்படத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துப்படத்தின் மூலம் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினால், நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பைக் கோருகிறோம். ஓவியர் ஹெங் எந்தவிதத்திலும் இந்தியாவையோ, அதன் அரசு மற்றும் குடிமக்களையோ எதிராகக் கருதவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் செய்திப் பிரிவின் சார்பில் அந்தப் பக்கத்திற்கான ஆசிரியர் ஆன்ட்ரியூ ரோசன்-தால் தெரிவித்துள்ளார்.

கோபம் எதற்கென்றால், தலைப்பாகை, கையில் மாடு என்று ஏழை வடநாட்டுக் குடியானவன் போல படம் போட்டு விட்டார்கள் என்பதற்காகவாம். சம்பந்த-மில்லாமல் தேசபக்தியும், ரோசமும் பொத்துக்-கொள்ளும் இவர்களுக்கு! இப்படித்தான் இந்த நாட்டின் வெகுமக்கள் இருக்கிறார்கள். அப்படியே இப்படம விமர்சிக்கிறது என்றாலும் அது மேலை நாடுகளையே ஏளனம் செய்கிறது. இந்தியாவைப் பாராட்டத்-தான் செய்கிறது. போகட்டும். இவர்களை இப்படியா விமர்சிப்பது? மங்கள்யானை அனுப்புவதற்கு கோயில், நாள், நேரம் என்று திரிந்தவர்கள் எங்கு எதை அனுப்பினால் என்ன? அடிப்படை அறிவில்லாவிட்டால் செவ்வாய்க்கலன் அனுப்பி என்ன பயன்? மைல் கல்லைக் கும்பிடும் இந்தக் கும்பலுக்கும், ராக்கெட் மாதிரியைக் காட்டி பகவானிடம் அப்ரூவல் வாங்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? எனக்கென்னமோ, சிம்சாங்கின் கார்ட்டூனை விட, நம் கார்ட்டூனிஸ்ட் யோகனின் கார்ட்டூன்தான் இதற்கு சரியென்று படுகிறது.

தமிழ் ஓவியா said...

டில்லியில் இராவணன் விழா : தெலங்கானாவில் நரகாசுரன் விழா :


டில்லியில் இராவணன் விழா :

தெலங்கானாவில் நரகாசுரன் விழா :

மைசூரில் இராவணனுக்குக் கொண்டாட்டம் :

இராமாயணத்தால் இழிவுபடுத்தப்பட்ட தென்னாட்டு மக்களைத் தொடர்ந்து இழிவு-படுத்தும் விதமாக ஆண்டுதோறும் இராவணன், கும்பகர்ணன்,மேகநாதன் உருவங்களைக் கொளுத்தி ராமலீலா கொண்டாடு-கின்றனர் வடநாட்டார். அதற்கு எதிர்வினையாக இராமன், லட்சுமணன், சீதை உருவங்களைக் கொளுத்தி அன்னை மணியம்மையார் நடத்திய இராவணலீலா வடநாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது வரலாற்றுக் குறிப்பு. எனினும் இன்னும் இராமலீலா நடைபெற்றே வருகிறது.

அண்மைக்காலமாக, தமிழ்நாட்டில் மட்டும் ஒலித்த இராமலீலாவுக்கு எதிரான குரல், இப்போது பரவலாக பல இடங்களிலுமிருந்து வருகிறது. தில்லி ஜவகர்லால் பல்கலைக்-கழகத்தின் உயர்பொறுப்பில் இருப்போர் இத்தகைய விழாக்களில் பங்கெடுப்பதைக் கண்டித்தும், நாங்கள் இராவண லீலா நடத்தினால் இராமனைக் கொளுத்த வருவீர்களா என்று கேட்டும், அப்பல்கலைக்கழகத்தின் துணை-வேந்தருக்கு மாணவர்கள் ஒரு திறந்த மடலை எழுதியுள்ளனர். தமிழ்நாட்டில் இராவணலீலா நடந்தபோது அன்றைய பிரதமர் இந்திராகாந்திக்கு அன்னை மணியம்மையாரின் சார்பாக ஆசிரியர் கி.வீரமணி எழுதிய கடிதத்தையும் அதில் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள் மாணவர்கள். மேலும் தந்தை பெரியாரின் படத்தையும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்-கிறார்கள்.

தெலங்கானா உஸ்மானியா பல்கலைக்-கழக மாணவர்கள் அக்டோபர் 31 அன்று திராவிட வீரன் நரகாசுரன் நினைவுநாளை அனுசரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்நிலையில், கர்நாடகா பி.ஜெ.பி. தலைவர் பிரகலாத் ஜோஷி,இராவணன், லங்கேஷ் என்று பெயர் வைத்திருப்பவர்கள் எல்லாம் மாமாக்கள். என்று உளறிக் கொட்ட, கான்பூர் முதல் கன்னியாகுமரி வரை, மைசூர் உள்பட பலவிடங்களிலும் இராவணனைக் கொண்டாடும் மக்கள் இருப்பதை எடுத்துக் காட்டி பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் கன்னட இளைஞர்கள். திராவிடர் இயக்கம் வைத்த இன உணர்வுத்தீ நாடெங்கும் பற்றிப் பரவுகிறது என்பதைத்தானே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

தமிழ் ஓவியா said...

தூர்தர்ஷன் துஷ்பிரயோக்


மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிறுவப்பட்ட நாள் நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பாகவத் ஆற்றிய உரை அரசு ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்சனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கு நாடெங்கும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. கண்டனம் தெரிவித்து டில்லி காங்கிரஸ் சார்பில் அக்டோபர் 5 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இன்றைய தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சு தூர்தர்ஷனில் நேரலை செய்யப்பட்டது நாட்டின் மதச் சார்பின்மை கொள்கையின் அடிப்படையையே தகர்த்துள்ளது. நாடெங்கும் மதக் கலவரங்களைப் பரப்பி வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சி நாட்டில் முதல் முறையாக அரசுத் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டுள்ளது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

இதுபோன்று மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத் தகர்க்கும் மத்தியில் ஆளும பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளையும், தூர்தர்ஷனை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊதுகுழலாக மாற்ற முயற்சிப்பதையும் காங்கிரஸ் கட்சி பொறுத்துக் கொள்ளாது. என்றார் டில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங். இடதுசாரிகள், முற்போக்காளர்கள், மதச்சார்பற்றோர் முன்னமே எதிர்பார்த்த மோடி அரசின் இந்தப் போக்கு மோடிக்கு வாக்களித்தவர்கள் மத்தியிலேயே வெறுப்பைத் தோற்றுவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

மேடிசன் மோடி... மோகன்’லால்’ காந்தி!


பிரச்சாரத்திற்குப் போன காலத்திலெல்லாம் தப்புந்தவறுமாக வரலாற்றுச் செய்திகளைச் சொல்லிக் கொண்டுதிரிந்த மோடி, பத்தாண்டுகளாக நுழைய முடியாமலிருந்த அமெரிக்காவுக்குப் போவதற்காகவே பிரதமராகி, சகிக்க முடியாமல் அவர்களும் அனுமதித்துவிட்டார்கள். விசா மறுக்கப்பட்டுவந்த மோடிக்கு, அங்கே ரொம்ப காலமாக சம்மன் மட்டும் தயாராக இருந்தது வேறு கதை! நம் கதை... சாரி... மேடிசன் சதுக்கத்தில் பேசிய மோடியின் கதை என்னவென்றால், காந்திக்குப் புதுப்பெயர் வைத்தது தான். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று ஒன்னாப்பு படிக்கும் பிள்ளைக்குக் கூட சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் நாட்டின் பிரதமரோ மோகன்லால் காந்தி என்றார். கமுக்கமாகச் சிரித்தார்கள் அமெரிக்கக் காவலர்கள்! (முன்குறிப்பு: மேடிசனில் மட்டுமல்ல... ராஜஸ்தானில் கடந்த ஆண்டு பேசும்போதும் காந்தியை அவர் மோகன் லால் என்று குறிப்பிட்டதை அப்போதே பத்திரிகைகள் எடுத்துக் காட்டின.) வாட் டு டூ? மோடி கேட்ச்சுடு ரேபிட் ஹாஸ் திரி லெக்ஸ்பா! அட, புரியலையா... அவர் புடிச்சா முயலுக்கு மூணு காலுதான். சப்போஸ், நாலு காலுன்னு முயல் சொன்னா, ஒரு காலை உடைச்சுட்டு இப்போ மூணு தானே என்பார். சோ, மூணு என்று ஒப்புக்கொள்ளுதல்தானே முயலுக்கு நல்லது. அதுமாதிரி காந்தியே வந்து பெயரை மாற்றினாலும் மாற்றிக் கொள்ளக்கூடும்.