Search This Blog

8.10.14

ஜெயலலிதா அம்மையார் வேண்டாத கடவுளா? செய்யாத நேர்த்திக் கடனா?மனுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி!

 மனுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி!


மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி என்ற வாக்கிய அமைப்பை அளித்த மனோன்மணியம் சுந்தரனார் அவர்களின் வாய்க்குச் சர்க்கரையைத்தான் கொட்ட வேண்டும்.

முன்னாள் முதல் அமைச்சர் ஜெ. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. இவ்வளவுக்கும் ஜெயலலிதாமீது வழக்கைத் தொடுத்தவர் தி.மு.க. தலைவர் அல்லர் - சுப்பிரமணியசாமி அய்யர்தான் வழக்கின் மூலகர்த்தா. பின்னர் அதில் இணைந்து கொண்டதுதான் திமுக.

இதில் ஏதோ தி.மு.க. சதித் திட்டம், ஜெயலலிதாவின் அரசியலுக்கு மூடு விழா செய்வதற்கான ஏற்பாடு என்று இந்தப் பார்ப்பன ஏடுகள் எழுதுவதைப் பார்த்தால், ஜெயலலிதா தவறு செய்திருக்கிறார் அவற்றை மறைக்கத்தான் இந்தப் பார்ப்பனர்கள் வரிந்து கட்டிக்கொண்டு இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்ற முடிவுக்குத் தான் வர வேண்டியுள்ளது.


இந்தத் தீர்ப்போடு இது முடிந்து விடுவதல்ல; இதற்கு மேல் மேல் முறையீடுகள் உள்ளன என்று எழுது கிறார்கள். மிகப் பெரிய ஆய்வு நடத்திக் கண்டு பிடித்தவர்கள் போல மிகுந்த எதிர்பார்ப்புடன் எழுது கிறார். இது கோலி விளையாடும் சிறுவனுக்குக்கூடத் தெரிந்த தகவல்தான். இதில் ஓர் அற்ப சந்தோஷம் இந்தப் பார்ப்பனப் பத்திரிகையாளர்களுக்கு


தினமணி எழுதுகிறது: ஜெயலலிதாவுக்கு எப்பொழுதுமே ஒரு ராசி உண்டு. மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு படுமோசமான தோல்வியும், படுமோசமான தோல்வியைத் தொடர்ந்து  மிகப் பெரிய எழுச்சியும்தான் ஜெயலலிதா இயற்காட்சியின் (பினாமினன்) தனித் தன்மை - அய்ந்து முறை தமிழக முதல்வராகப் பதவி ஏற்றவர் என்ற கருணாநிதியின் சாதனையை மேல் முறையீட்டில் விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வராவதன் மூலம் ஜெயலலிதா சமன் செய்தால் வியப்படையத் தேவையில்லை என்று தலையங்கமாகவே தீட்டுகிறது தினமணி (29.9.2014).


அறிவார்ந்த முறையில் விவாதிக்க முடியாத நிலையில், ராசியின் மூடு திரையில் நுழைந்து கொண்டு மூடநம்பிக்கையைக் கையில் எடுத்துக் கொண்டு மனத் திருப்தியை அடைகிறது தினமணி.


ஜெயலலிதா அம்மையார் வேண்டாத கடவுளா? செய்யாத நேர்த்திக் கடனா? எத்தனை எத்தனை யாகங்கள்! எத்தனைப் பேர் இந்த அம்மையாருக்காக மண் சோறு சாப்பிட்டார்கள். எத்தனைப் பேர் மொட்டை போட்டார்கள், எத்தனைப் பேர் கோயி லுக்குச் சென்று தேர் இழுத்தார்கள்.


கடைசியில் என்னவாயிற்று? விளக்கெண் ணெய்க்கு கேடாக முடிந்ததே தவிர பிள்ளை பிழைத்த பாடில்லை என்ற நிலைதானே.


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை என்றவுடன் 2ஜியை இழுப்பதை கவனிக்கத் தவறக் கூடாது.


இந்த இரண்டுக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு.  ஒன்று ஊழல், இன்னொன்று அரசின்  கொள்கை முடிவால் ஏற்பட்ட இழப்பு - இரண்டும் எப்படி ஒன்றாக முடியும் என்பது ஒருபுறம் இருந்தாலும் ஒரு குற்றம் இன்னொரு குற்றத்திற்குச் சமாதானம் ஆகிவிட முடியுமா?


குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டு, சாட்சி யங்கள் ஜோடிக்கப்பட்டு, ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்கிற முனைப்புடன் இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்கிற ஜெயலலிதா தரப்பு வழக்குரைஞர்களின் வாதம் பொய்யானது, என்று தள்ளிவிட முடியாது என்பது தினமணியின் அதே தலையங்கத்தில் இன்னொரு இடத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.


இந்த வழக்கு தமிழ்நாட்டில் நடைபெற்றபோது பிறழ் சாட்சியாக மாற்றப்பட்ட நிலையெல்லாம் உண்டே; அதில் அதிகாரிகள்கூட இடம் பெற்றிட வில்லையா? அந்தச் சூழ்நிலையில் தானே இந்த வழக்கு வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டது; அதனை வசதியாக தினமணி தலையங்கக் கர்த்தா மறைக்கப் பார்ப்பதை நன்றாகவே ரசிக்க முடிகிறது.


மற்றொன்றையும் நினைக்க வேண்டும். அரசு தரப்பில் வாதாடிய வழக்குரைஞர் ஆச்சாரியார் ஏன் விலக நேர்ந்தது? புதிதாக அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் தொடக்கத்தில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்? என் வழக்கை அரசு தரப்பில் அவர்தான் வாதாட வேண்டும் என்று ஜெயலலிதா அவர்கள் சொல்லவில்லையா? அவர்தானே வழக்கில் வாதாடி முன்னாள் முதல் அமைச்சருக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார். குறிப்பிட்ட வழக்குரைஞர்தான் தன்னை விசாரிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டதை எந்தக் காலத் திலாவது யாரேனும் செவியுற்றதுதான் உண்டா?


இவற்றையெல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைத்து விட்டு தினமணியார் ஏதோ முன்னாள் முதல்வருக்கு அநீதி நடந்து விட்டதுபோல - அதுவும் தலையங்கம் தீட்டலாமா?


நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இவ்வளவு வன்முறைகள் நடத்துபற்றி தினமணி வகையறாக் களுக்கு அக்கறை இல்லாதது ஏன்? நீதிபதி கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்; அதனால்தான் இப்படியொரு தீர்ப்பு என்று இந்து மகாசபை என்ற அமைப்பு சுவ ரொட்டி ஒட்டுவதையெல்லாம்  இந்த வகையறாக்கள் கண்டு கொள்ளாது. காரணம் தொடக்கத்தில் சொன்னதுபோல மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி.


முன்னாள் முதல்வருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தாலும்  - தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டியதுதான் என்றே குறிப்பிட்டு இருப்போம்.

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் வழக்குத் தீர்ப்பைப் பற்றி எல்லாம் எவ்வளவோ எழுதலாமே!  பார்ப் பனர்கள் எப்பொழுதும் அந்தப் பூணூல் சித்தாந்தத்தி லிருந்து ஓரிழைகூட பிறழாமல்தான் இருக்கின்றனர் என்பதை நமது மக்கள் தெரிந்து கொள்ளட்டும்!

                        ------------------------------”விடுதலை” தலையங்கம் 7-09-2014

2 comments:

தமிழ் ஓவியா said...

முதலாளிகளின் பின்பலம்


அரசாங்கம் முதலாளிகளுக்கு அனுசரணையாக இல்லையானால், தொழிலாளிகளின் சமூகத்தை எதிர்த்துத் தனிப்பட்ட முதலாளிகள் எத்தனை நாள் வாழ முடியும்?
_ (விடுதலை, 20.1.1948)

Read more: http://viduthalai.in/e-paper/88901.html#ixzz3FYtx3gVF

தமிழ் ஓவியா said...

பகல் கொள்ளை, பகல் கொள்ளைன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னாய்யா?



கேள்வி: ஏன்யா, பகல் கொள்ளை, பகல் கொள்ளைன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னாய்யா?

பதில்: அதென்னய்யா, நீ உலகம் புரியாத ஆளா இருக்கிறீயே, சிறப்பு ரயிலை, பிரிமியம் ரயிலை உட்ராறு பாரு, நம்ம மோடி, அதுக்குப் பெயர்தான், பகல் கொள்ளை.

கேள்வி: எப்படிய்யா, பிரிமியம் ரயிலை பகல் கொள்ளைன்னு சொல்றே,

பதில்: பண்டிகை காலத்துலே, கூட்ட நெரிசலை குறைக்க, சிறப்பு ரயில்ன்னு, விடுவாங்க. அந்த சிறப்பு ரயிலுக்கும் அதே கட்டணம்தான். ஆனா, நம்ம மோடி இருக்கார்லே, அதாவது, நான் டீ போட்டவன், சாதாரண ஆள்னு சொல்லிகிட்டு, அதானிங்கிற தொழிலதிபர் விமானத்திலே பறந்துகிட்டு இருக்கிற ஏழை மகராசன், அவர் என்ன செஞ்சிட்டார்னா, சிறப்பு ரயிலை, பிரிமியம் ரயில்ன்னு பேரை மாத்தினார். அதோட, கட் டணத்தை, அய்ந்து மடங்கு உசத்திப்புட்டார். அப்புறம், நீங்க டிக்கெட் வாங்கிட்டு, போக லைன்னா, பணமும் திருப்பி கிடைக்காது.

இப்ப புரியுதா, இதுக்குப் பெயர்தான், பகல் கொள்ளைன்னு.

கேள்வி கேட்டவர்: ஆகா, பேஷா புரியுது. ஆப் கி பார், மோடி சர்க்கார்ன்னு புரியுது.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/e-paper/88905.html#ixzz3FYukpTch