Search This Blog

30.10.14

நடுநிலை பிறழ்ந்து யாருக்கும் சகாயம் செய்யாத அதிகாரி


அய்.ஏ.எஸ். அதிகாரி சகாயம் என்னும் பெயர் ஊட கங்களில்  அதிகம் இடம் பெறும் பெயராகி விட்டது - இதற்குத் தமிழ்நாடு அரசின் அணுகுமுறைதான் காரணம்.

கனிம குவாரிகளில் ஊழல் அதிகரித்து விட்டது; பெரும் சுரண்டல் நடைபெறுகிறது, இதனால் தனி நபர்கள் பெரும் பயன் அடைகிறார்கள்; அரசுக்கு வர வேண்டிய நிதி தனிப்பட்டவர் பீரோவுக்குள் செல்கிறது என்ற குற்றச்சாற்று பரவலாக மக்கள் மத்தியில் நிலவுகிறது; ஊடகங்களில் அவ்வப்போது கசிந்தும் வருகின்றன.


இந்தப் பகல் கொள்ளை தொடர்பாக சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அய்.ஏ.எஸ். அதிகாரியை விசாரணை அதிகாரியாக - சட்ட ஆணையராக நியமித்தது.


சகாயம் அவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியராக 2011 மார்ச்சு முதல் 2012 மே வரை பணியாற்றியவர். அந்தக் கால கட்டத்தில் மேலூர் வட்டாரத்தில் ரூ.16 ஆயிரம் கோடி அளவு கிரானைட் நிறுவனங்களில் முறைகேடு நடந்துள்ளது என்று அரசுக்கு அறிக்கை கொடுத்தவர் ஆவார்.


அதனை மனதிற் கொண்டுதான் சகாயம் அவர்களை விசாரணை அதிகாரியாக நியமித்து இரண்டு மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திற்கு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் (முதல் அமர்வு) உத்தரவு பிறப்பித்தது (11.9.2014).


சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது தமிழ்நாடு அரசு. மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
அதோடு நின்றதா தமிழ்நாடு அரசு? சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தது.

இந்த மனுவில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள காரணங்கள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட கனிமக் குவாரி குத்தகைகளை ரத்து செய்தாகி விட்டது. மாநில அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் சகாயம் என்ற அதிகாரியை உயர்நீதிமன்றம் நியமித்து விட்டது. இது ஓர் அரசின் அதிகாரத்தில் குறுக்கிடுவதாகும் மதுரை யில் 175 கிரானைட் குவாரிகள்மீதான ஆய்வுகள் முடிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டன. எனவே அதிகாரி சகாயத்தின் விசாரணை இனி தேவைப்படாது. இதனால் மேலும் கால தாமதமும், குழப்பமும்தான் விஞ்சும் என்று தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவைத் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், சத்திய நாராயணன் அடங்கிய அமர்வு விசாரித்தது.


தமிழ்நாடு அரசின் மனுவை ஏற்கெனவே உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதன் மூலம் ஒரு மாத காலத்தை தமிழ்நாடு அரசு வீணடித்து விட்டது. தமிழ்நாடு அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசுக்கு ரூ.10 ஆயிரம் வழக்கு செலவாக விதிக்கப்படுகிறது. நான்கு நாட்களுக்குள் அதிகாரி சகாயம் கேட்கும் தேவை யானவற்றை தமிழ்நாடு அரசு செய்து கொடுக்க வேண்டும். மாநில அரசிடமிருந்து இடையூறு ஏற்பட்டாலோ, உதவிக் குறைவு ஏற்பட்டாலோ அதிகாரி சகாயம் நீதிமன்றத்தை அணுகலாம் என்று கறாராக ஆணை பிறப்பித்து விட்டது சென்னை உயர்நீதிமன்றம்.


இத்தகைய ஒரு தீர்ப்பு அரசுக்குக் குறிப்பிடத்தக்க அளவில் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது என்பதில் அய்யமில்லை. இதற்குக் காரணம் தமிழ்நாடு அரசின் அணுகுமுறையும், செயல்பாடுமேயாகும்.

மடியில் கனமில்லை என்றால் எந்த அதிகாரி விசாரித்தால் தான் என்ன என்ற எண்ணம் வரும். தமிழ்நாடு அரசு நடந்து கொண்டுள்ள போக்கைக் கவனிக்கும் சாமான்ய மனிதன்கூட  தமிழ்நாடு அரசு தரப்பில் ஏதோ தவறு இருக்கிறது; அதன் காரணமாகத் தான் நேர்மையான ஓர் அதிகாரி விசாரணை நடத்தக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறது என்று நினைக்கக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது.


சாதாரணமாக முடிய வேண்டிய ஒன்றை மேலும் சிக்கலாக்கிக் கொண்டு விட்டதே தமிழ்நாடு அரசு.


திமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டமா? அதனை ஏற்க மாட்டோம்  - சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமா? அது திமுக அமைச்சர் முன் னின்று நடத்திய திட்டம் - இப்படி எதற்கெடுத்தாலும் அரசியல் .கண் கொண்டு பார்த்ததும் பொது வானவர்கள் மத்தியில் முகச் சுளிப்பை ஏற்படுத்தியது.


மக்கள் நல அரசு என்ற கண் கொண்டு ஒரு பிரச்சினையை அணுக வேண்டுமே தவிர, வேறு உணர்ச்சிகளுக்கு இடம் தந்தால் அது எதிர் விளைவைத் தான் ஏற்படுத்தும். சென்னை உயர்நீதி மன்ற அமர்வின் இந்த ஆணைக்குப் பிறகாவது தமிழ்நாடு அரசு தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது!


சகாயம் என்ற அதிகாரி யாருக்கும் சகாயமாக நடந்து கொள்ள மாட்டார் - நேர்மையான அதிகாரி என்ற பெயரெ டுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

                                  --------------------------”விடுதலை” 30-10-2014

25 comments:

தமிழ் ஓவியா said...

இராமகிருஷ்ணர்

ராமகிருஷ்ண பரம ஹம்சர் பூசாரியாக இருந்த காளிகோயில் ராணி ராசாமணி என்பவருக்குச் சொந்தமானது. ராணியின் மருமகனான மதுரா னந்தா பிஸ்வாஸ் என்ப வரே தக்ஷிணேசுவரத்தில் உள்ள காளி கோவிலைக் கட்டியவர்.

ராணியின் எண்ணற்ற சொத்துகளை நிர்வாக மும் செய்துவந்தார். 1868-ஆம் ஆண்டில் அவர் காசிக்கு ஒரு புனித யாத் திரையை ஏற்பாடு செய் தார். அந்த யாத்திரைக் குழுவில் 125 அன்பர்கள் அடங்கியிருந்தனர். இந்தக் குழு முதலில் தியோகரில் தங்கி, அங் குள்ள பரமேசுவரனின் ஆலயத்திற்குச் செல்ல முடிவானது. அந்த இடத்தை அடுத்த கிராமம் ஒன்று கடும் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு ராம கிருஷ்ணர் அளவுக்கதிக மான துயரமும் பாதிப்பும் அடைந்தார்.

அவர் மதுரரிடம், ராணி மாதாவின் அனைத் துச் சொத்துகளுக்கும் நீங் கள்தான் நிர்வாகி. இந்த ஏழைகளுக்கு உடுத்த ஒரு ஆடையும், ஒரு வேளைச் சோறும், தலைக் குச் சிறிது எண்ணெயும் கொடுக்க ஏற்பாடு செய் யுங்கள் என்றார்.

மதுரரோ பகவானே! இந்த யாத்திரைக்குப் பெரும் செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்த யாத்திரையில் நூற்றுக் கணக்கான அன்பர்கள் உள்ளனர். உங்கள் வேண் டுகோளை ஏற்றால் யாத்திரைக்குச் செலவு செய்ய வைத்திருக்கும் கையிருப்பு குறைந்து விடும் என்றார்.

மதுரரின் மறுமொ ழியைக் கேட்ட பரமஹம் சர் வேதனையில் கதறி னார்: மூடனே! நான் வாரணாசி வரவில்லை. இவர்களுடன் இருக்கி றேன். இவர்களுக்குக் கவலைப்பட எவரு மில்லை. நான் இவர் களை விட்டு நீங்குவதாக இல்லை என்றார்.

மதுரர் வேறு வழியின்றிப் பணிந்தார். தேவைப்பட்ட ஆடை களைக் கல்கத்தாவிலி ருந்து தருவித்தார். மேலும் பரமஹம்சர் பணித்ததை எல்லாம் செய்தார். அதன் பின்னரே யாத்திரை வார ணாசி நோக்கித் தொடர்ந் தது. இப்படி எல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அவர் மனநலம் சரியில்லாதவர்!

மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட் டவர்! தன் மலத்தையே தின்றார். பிணம் தின்றார் என்றால் பார்த்துக் கொள் ளுங்களேன்.

(ஆதாரம்: இராமகிருஷ்ணர் வாழ்வும் கொள்கைகளும் தபஸ்யானந்தா)

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/90228.html#ixzz3Hie4INrN

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கந்த சஷ்டி கவசம்

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை நிலவும் இந்தக் கால கட்டத்தில் கந்த சஷ்டி கவசம் படித்தால் பாது காப்பைத் தருமாம்.

அடடே, இவ்வளவு சுலபமாக வழியிருக்கும் போது காவல்துறை ஏன்? நீதிமன்றம் ஏன்? சிறைச் சாலைதான் ஏன்? ஏன்? ஏன்?? பெண்கள் இனி வெளியில் செல்லும் பொழுதெல்லாம் கந்த சஷ்டியைப் படித்துக் கொண்டே போனால் (எதிரில் வாகனம் வந்தா லும்) எந்தச் சிக்கலும் இல்லை - அப்படித்தானே!

Read more: http://viduthalai.in/e-paper/90236.html#ixzz3HieRLYt1

தமிழ் ஓவியா said...

மெட்ராஸ் அய் எனப்படும் கண்நோய்


தற்போது நிறைய ஊர் களில் மெட்ராஸ் அய் என் றழைக்கப்படும் கண்நோய் பரவி வருகிறது.

மெட்ராஸ் அய் என்றால் என்ன?

கண்களின் வெளி சவ்வு அழற்சியே - சிவந்த கண் அல்லது மெட்ராஸ் அய் எனப்படுகிறது. அடினோ வைரஸ் (Adeno virus - conjunctivitis) என்ற கிருமியே இதற்கு பெரும்பாலும் காரணம்.

பருவநிலை மாறுபாட் டால் வரும் நோய்பரப்பும் இந்த வைரஸ் சூடான, ஈரப்பதமான நிலையில் மிக வேகமாக பரவக்கூடி யது. இது காற்று மற்றும் நாம் பயன்படுத்தும் பொதுவான பொருட்கள் மூலம் (கர்சிப், துண்டு, பேனா, பென்சில், அழிப் பான், காகிதம்) பரவும் நோய் ஆகும். கை குலுக் குவதாலும் இது விரை வாக மற்றவர்களுக்குப் பரவும்.

கருப்புக் கண்ணாடி போடுவதால் பிறருக்கு பரவாது என்பது தவறு. கண்ணாடி போடுவதால் அதிகபடியான சூரிய வெளிச்சம் மூலம் வரும் எரிச்சலை மட்டுமே தடுக்க மூடியும்.

ஒருவர் பயன்படுத்திய கண்ணாடியை மற்றவர் பயன் படுத்தக் கூடாது கண் சொட்டு மருந்தை ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை மருத்துவர் ஆலோசனைப் படி போடவேண்டும். கண் களை கசக்கக் கூடாது.

தும்மல், இருமல் மூலமும் இந்த வைரஸ் பரவும், எனவே மற்றவர் களுக்குப் பரவாமல் இருக்க இருமல் வரும் போது வாயில் துணி வைத்து மறைத்துக் கொள்ள வேண்டும்.

கண்களை குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவவும், ஆதற்கு முன்பு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவவும்.

மிதமான வெந்நீரில் துண்டை நனைத்து ஒத் தடம் கொடுக்கவும்.

நேருக்கு நேர் பார்த் தால் வராது. ஆனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவானவர்களும், குழந்தைகளுக்கும் அருகில் வந்தாலே மூச்சுக் காற்று மூலம் தொற்று ஏற்படும். மெட்ராஸ் அய் வந்த வர்கள் தங்களது உடை மைகளை ஈரப்பதமில்லாத உலர்ந்த நிலையில் தூய் மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கண்களை ஒரே கைக்குட்டையில் மீண்டும் மீண்டும் துடைக் காமல் பேப்பர் நாப்கின் களைப் பயன்படுத்தும் போது மெட்ராஸ் அய் யின் பாதிப்பு விரைவில் குறைந்து விடுகிறது.

மெட்ராஸ் அய் வந்த வர்களுக்கு சிறப்பு உணவு என்று ஒன்றுமில்லை, எரிச்சல் அதிகம் இருந் தால் எரிச்சல் குறைவ தற்கு மருத்துவர்கள் சில நோய் எதிர்ப்பு மருந்து களைக் கொடுப்பார்கள், தூய்மையாக, கவனமுடன் இருந்தால் இரண்டு அல் லது மூன்று நாட்களில் குணமாக வாய்ப்புண்டு.

Read more: http://viduthalai.in/e-paper/90267.html#ixzz3HigOtSDt

தமிழ் ஓவியா said...

நாம் சுவாசிக்க நாள்தோறும் 16 கிலோ காற்று!

நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.

நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சத விகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகி தமும் உள்ளன.

நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.

உடலின் மிகப்பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும்.

வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாது காக்கும் போர்வையாக விளங்குகிறது.

நமது உடலில் உள்ள ஈரல் 500 வகையான வேலைகளை செய்கிறது. மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் ஆகும். ர் மனித உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பி கல்லீரல்தான்.

Read more: http://viduthalai.in/e-paper/90258.html#ixzz3Hii1RCji

தமிழ் ஓவியா said...

விழுமா விண்கல்?

உண்மையில் பூமியைத் தாக்கக்கூடிய விண்கற்கள் லட்சக்கணக்கில் உள்ளன. ஆனால், பெருங்கேடு விளைவிக்கக்கூடிய பிரமாண்டமான விண்கற்கள் அரிதாகவே காணப்படுகின்றன.

டைனோசர்களை இவ்வுலகை விட்டு நீங்கச் செய்ததைப் போன்ற அசுர விண்கற்கள் 10 கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் விழக்கூடும். 100 மீட்டர் குறுக்களவு கொண்ட விண்கல், ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது காணக் கிடைக்கிறது. ஆனாலும், ஆயிரக்கணக்கான கிலோ எடை கொண்ட விண்கற்கள் ஒவ்வொரு நாளுமே பூமியை அடைகின்றன.

அவை மக்கள் நெருக்கம் இல்லாத பகுதிகளிலோ, கடலிலோ விழுவதால், பரபரப்பை ஏற்படுத்துவதில்லை. விண்கல் தாக்கி ஒருவர் மரண மடைவது என்பது சாலையைக் கடக்கும்போது ஏற்படும் அபாயத்தை விட குறைவானது தான்.

Read more: http://viduthalai.in/e-paper/90257.html#ixzz3Hii8Ai3U

தமிழ் ஓவியா said...

முதல்வகை நீரிழிவு நோய்க்கான ஆய்வில் முன்னேற்றம்

முதலாவது வகை நீரிழிவு நோயை சுகப்படுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அண்மைக்காலத்தில் உலக விஞ்ஞானிகள் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள். உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்ட கலங்களை உடலின் நோயெதிர்ப்புச் சக்தி நிர்மூலம் செய்வதால் இந்த வகை நீரிழிவு வருகிறது.

இரண்டாவது வகை நீரிழிவு நோய் இதிலிருந்து வேறுபட்டது. அது பெரும்பாலும் சீரற்ற வாழ்க்கை முறையால் வருவதாகும்.

ஹவார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று, ஆய்வுகூடத்தில் குருத்துக்கலங்களில் இருந்து பல மில்லியன் கணக்கான பீட்டா கலங்களை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர்.

கணையத்தில் இருக்கும் பீட்டா கலங்கள் இன்சுலினை சுரக்கின்றன. அந்த இன்சுலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

ஆனால், உடலின் நோயெதிர்ப்புச் சக்தியானது சிலருக்கு அவர்களது கணையத்தில் உள்ள பீட்டா கலங்களை அழித்துவிடுகிறது. இதனால் அவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்கடங்காது போய் விடுகிறது. இதனையே டைப் 2 வகை நீரிழிவு என்கிறார்கள்.

பேராசிரியர் டவுக் மெல்ட்டன் தலைமையிலான ஹவார்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு 23 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த முதலாவது வகை நீரிழிவுக்கான சிகிச்சையை கண்டுபிடிக்கும் முயற்சியை ஆரம்பித்தது.

பேராசிரியர் டவுக் அவர்களின் மகனுக்கு இந்த நோய் இருந்ததை அடுத்தே அவர் இந்த ஆராய்ச்சியை ஆரம்பித்தார். பின்னர் அவரது மகளுக்கும் இந்த நோய் வந்துவிட்டது.

நோயெதிர்ப்புச் சக்தியால் அழிக்கப்பட்ட 15 கோடி பீட்டா கலங்களுக்கு மாற்றீடான கலங்களை, குருத்துக் கல தொழில்நுட்பத்தின் மூலம் அவர் தயாரித்தார்.

ஒரு வகை நுட்பமான இரசாயனங்களின் கலவை, கருக்குருத்துக்கலங்களை பீட்டாக் கலங்களாக மாற்றுகிறது என்று அவர் கண்டுபிடித்தார்.

சோதனை எலிகளில் இந்தக் கலங்களை பரிசோதித்துப் பார்த்தபோது அவை இன்சுலினை உற்பத்தி செய்வதைக் காணக்கூடியதாக இருந்தது. அது பல மாதங்களுக்கு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தியது.

சாத்தியம் என்று நாம் எப்போதும் நினைத்தால், அதனை ஒரு நாள் சாத்தியமாக்கலாம் என்று தனது சோதனை குறித்து மருத்துவர் மெல்ட்டன் கூறியுள்ளார்.

இந்த விசயத்தில் நாம் இறுதி வெற்றியைக் காண்பதற்கு மருத்துவ ரீதியாக இன்னமும் ஒரு படி முன்னேறியாக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இருந்தாலும், ''இந்தக் கண்டுபிடிப்பை முதலாவது வகை நீரிழிவு நோயை முற்றாக குணமாக்குவதற்கான திசையில் ஒரு படி முன்னேற்றமாக கருதலாமே, ஒழிய இதுதான் இறுதி தீர்வு என்று கருத முடியாது'' என்று இந்தச் சோதனைக்கு நிதி வழங்கிய தொண்டு நிறுவனமான ஜே டி ஆர் எஃப்பின் சாரா ஜோண்சன் பிபிசியிடம் கூறியுள்ளார்.

மாற்றீடு செய்யப்படும் கலங்கள் இன்சுலினை சுரப்பதுடன், உடலின் நோயெதிர்ப்புச் சக்தியின் தாக்குதலை தாக்குப் பிடிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதுவே இந்தப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வாக அமைய முடியும்.

''ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு எலியை குணமாக்கலாம், ஆனால், மருத்துவ ரீதியில் அது முழுமையான வெற்றிய பெற வேண்டுமானால், அந்த மருத்தை பெருமளவில் உற்பத்தி செய்து பல லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை யளிக்கக் கூடிய நிலை வரவேண்டும்'' என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் குருத்துக்கல ஆய்வு விஞ்ஞானியான பேராசிரியர் கிறிஸ் மேசன் கூறியுள்ளார்.

அடுத்த கட்டமாக இந்தக் கலங்களை உடலினுள் வைத்து பராமரித்து, அவற்றின் மூலம் இன்சுலினை சுரக்கச் செய்வதற்கான வழியையும் கண்டுபிடித்தாகவேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/90257.html#ixzz3HiiEXmq0

தமிழ் ஓவியா said...

இந்துக்களே என்று உரக்கக்கூவும் பார்ப்பனீயத்தைப் பாருங்கள் தமிழர்களே!


பார்ப்பனர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவர்களின் தந்திரத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளவும் இந்தச் செய்தி உதவும் என்று கருதுகிறோம். இந்தியாவில் இருக்கும் அனைவரும் (அதாவது இஸ்லாமியர்கள் கிறிஸ்த வர்கள் சீக்கியர்கள் உட்பட) இந்துக்கள் என்று இந்துத்துவாவாதிகள் சொல்லி வருவது மட்டுமல்ல; மேடைகள் தோறும் முழங்கி வருகிறார்கள். அவர்கள் சொல்வது சரியா தவறா என்று ஆய்வு செய்வது ஒரு புறம் இருக்க இந்துக்கள் அனைவரும் இந்துக் கள் என்று ஏற்றுக் கொள்ள அவாள் தயாராக இல்லையே. இது தினமலர் நாளிதழில் வெளிவந்த விளம்பரம் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறதே. அதில் குறிப்பிடப் பட்டிருக்கும் தொலைபேசி எண்ணில் எத்தனை முறை தொடர்பு கொண்டும் அவர்களிடம் விளக்கம் ஏதும் பெற முடியவில்லை. பெரும்பாலும் தொலைபேசியை எடுக்கவே இல்லை.

இந்தத் தகவல் தினமலரில் வெளி வந்தது. அதில் சமையல் கலைஞர்கள் ஆண்கள் மட்டும் வேண்டும் என்ற தோடு நிறுத்தியிருந்தால் அடுத்த கட்டத்திற்கு நாம் போக வேண்டிய தில்லை. அதென்ன பிராமணாள் மட்டும் வேலைக்குத் தேவை என்று? அதை வெளியிடவே வெகு துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் அவர் களுக்கு வந்திருக்கிறது.

எந்த ஒரு வேலைக்கு ஆள் எடுப்ப தென்றாலும் பல வகையிலும்தான் எடுப்பார்கள். ஆனால் இதற்கு மட்டும் பிராமணாள் மட்டும் தேவைப்படுகிறது. அப்படி என்றால் இந்துக்கள் அனை வரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூவும் கூவல் என்னவாயிற்று? மற்ற எல்லாவற்றுக்கும் இந்துக்களே ஒன்று படுங்கள் என்பார்கள். ஆனால் இதுபோன்ற பணிகளுக்கு இந்துக்கள் வேண்டாம். இந்துக்கள் என்பதற்கு இங்கு வேலையே இல்லை.

தேரிழுக்கும்போது தேரின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு இந்துக்களே ஒன்று சேருங்கள். நான் சாமிக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு பணத்தை வசூலித் துக் கொள்கிறேன். வடத்தைப் பிடித்துத் தேரை இழுங்கள் என்று சொல் கிறார்கள். எங்காவது மதம் குறித்த பிரச்சினைகள் வந்தால் அதன் ஆணி வேர் பார்ப்பனியமாக இருக்கிறது. அங்கு தன் பலத்தை உயர்த்திக் கொள்ள அனைத்து இந்து இன மக்களையும் ஒன்று சேர்த்துத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று உரக்கக் குரல் எழுப்புவது. அதாவது நான் படுத்துக் கொள்கிறேன். என் மீது அனைவரும் படுத்துக் கொள்ளுங்கள் நாம் பாதுகாக்கப்பட்டு விடுவோம் என்று சொல்லி முதல் ஆளாய்ப் படுத்துக் கொண்டு மற்ற வர்களைக் கொண்டு தன்னைப் பாது காத்துக் கொள்வது. சைவ சமையலுக்கு ஆள் வேண்டும் என்றால் அந்தக் குறிப்பை மட்டுமே வெளியிட வேண்டி யதுதானே. எதற்குப் பிராமணாள் என்ற அழுத்தம்?

அது போன்ற எண்ணற்ற செயல் பாடுகளுக்கு எல்லாம் இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று சொல்லி விட்டு சமையல் வேலைக்கு மட்டும் பிராமணாள் மட்டும் தேவை. இங்கு இந் துக்கள் எல்லோரும் வந்து விடக் கூடாது. ஏனென்றால் பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் சூத்திரர்கள். அவர்கள் தொட்டால் தீட்டாகிவிடும் என்பதை அறிவிக்கவே இதுபோல் நடந்து கொள்கிறார்கள். எச்சரிக்கை வேண்டும் தமிழர்களே!

- ம.மு.கண்ணன், புதுக்கோட்டை.

Read more: http://viduthalai.in/page8/90355.html#ixzz3HpWkawuQ

தமிழ் ஓவியா said...

கருப்புப் பணம் பதுக்கப்படும் 11 நாடுகள்


உலகில் கருப்பு பணத்தை பதுக்கிவைக்கும் சொர்க்கபுரிகளாக ஐரோப்பாவை சேர்ந்த சில நாடுகள் திகழ்கின்றன. இந்தப் பட்டியலில் மொத்தம் 11 நாடுகள் உள்ளன. இந்நாடுகளில் உள்ள பன்னாட்டு வங்கிகளில் பல்லாயிரம் கோடி கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப் பணத்துக்கு ஒரு சதவீதம் மட்டுமே வட்டி வழங்கப்படுகிறது. கருப்பு பணம் அதிகம் பதுக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலின் முதல் இடத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது.

இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 41,285 கி.மீட்டர். மக்கள் தொகை 72,88,010. இதற்கு அடுத்து 10 மிகச் சிறிய நாடுகள் உள்ளன. அவை வருமாறு:

ஜிப்ரால்ட்டர்: ஜிப்ரால்டார் நீரிணை பகுதியில் அமைந்துள்ள இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 6.8 கி.மீட்டர். மக்கள் தொகை 28,875. மொனாக்கோ: பிரான்ஸ் அருகேயுள்ள மிகச் சிறிய நகர நாடான மொனாக் காவின் பரப்பளவு 2.02 கி.மீட்டர். மக்கள் தொகை 36,371. சான் மரீனோ: ஜரோப்பாவின் பழமையான குடியரசு நாடு என்றழைக்கப்படும் சான் மரீனோவின் பரப்பளவு 61 கி.மீட்டர். மக்கள் தொகை 28,117. லீச்டென்ஸ்டெய்ன்: நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள லீச்டென்ஸ் டெய்ன் நாட்டின் பரப்பளவு 160 கி.மீட்டர். மக்கள் தொகை 33,987. குயெர்ன்சி: சிறிய தீவு தொகுப்புகளை கொண்ட குயெர்ன்சியின் பரப்பளவு 78 கி.மீட்டர். மக்கள் தொகை 65,573.

மான் தீவு: பிரிட்டன் அருகேயுள்ள மான் தீவின் பரப்பளவு 572 கி.மீட்டர். மக்கள் தொகை 80,058. அந்தோரா: பிரான்ஸ் அருகே அமைந்துள்ள அந்தோராவின் பரப்பளவு 468 கி.மீட்டர். மக்கள் தொகை 71,822. ஜெர்ஸி: பிரான்ஸ் அருகே உள்ள ஜெர்ஸி நாட்டின் பரப்பளவு 116 கி.மீட்டர். மக்கள் தொகை 89,300. லக்சம்பர்க்: மேற்கு ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க்கின் பரப்பளவு 2586 கி.மீட்டர். மக்கள் தொகை 4,39,539. சைப்ரஸ்: மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள சைப்ரஸ் மிகச் சிறிய தீவு நாடாகும். இதன் பரப்பளவு 9251 கி.மீட்டர். மக்கள் தொகை 788457.

Read more: http://viduthalai.in/page8/90356.html#ixzz3HpWwgwQE

தமிழ் ஓவியா said...

கருப்புப் பண வேட்டையில் இதுவரை..


2009, மார்ச்: வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூ. 70 ஆயிரம் கோடி கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிடு மாறு உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பொது நல வழக்கு தொடர்ந்தார்.

2011, ஜூலை: கருப்பு பணத்தை மீட்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பது தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

2014, மார்ச்: சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைப்பது தொடர்பான உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

லீச்டென்ஸ்டெய்னில் உள்ள எல்ஜிடி வங்கியில் கருப்பு பணம் வைத்திருந்த இந்தியர்கள் தொடர்பாக ஜெர்மனி அரசு அளித்த ரகசிய பட்டியலை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2014, ஏப்ரல்: எல்ஜிடி வங்கியில் கணக்கு வைத்திருந்த 26 பேர் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்தது. இதில், 18 பேர் மீது மட்டுமே வழக்கு தொடர முடியும் என்றும், மீதமுள்ள 8 பேர் சட்டப்படி வங்கிக் கணக்குகளை வைத்துள்ளவர்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பது தொடர் பான உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி கோரி மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இதைக் கண்டித்த உச்ச நீதிமன்றம்,னது உத்தரவை செயல்படுத் தாததன் மூலம் நீதிமன்ற அவமதிப்பில் மத்திய அரசு ஈடுபடுவதாக விமர்சித்தது.

2014, மே: மத்தியில் பாஜக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த 3 நாட்களில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கருப்பு பணத்தை மீட்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

2014, அக்டோபர்: கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் தொடர்பாக தன்னிடம் உள்ள பட்டியலை வெளியிட தயார் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரி வித்தது. அதே சமயம், ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்படி பகிரங்கமாக வெளி யிட முடியாது என்று பாஜக அரசு தெரிவித்தது. முந்தைய காங்கிரஸ் அரசும் இதே நிலைப்பாட்டை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருப்பு பணம் மீட்பு தொடர்பாக 2011-ம் ஆண்டு, ஜூலையில் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பாஜக கூட்டணி அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. ரகசியம் காக்கப்படும் என்ற உத்தர வாதத்தை தராவிட்டால், கருப்பு பணம் வைத்திருப்போரின் பட்டியலை அளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்படுத்த வெளிநாடுகள் முன்வராது என்று மத்திய அரசு கருத்துத் தெரிவித்தது.

2014, அக்டோபர் 27: கருப்பு பணம் வைத்திருப் போர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 3 பேரின் பெயர்களை மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

2014, அக்டோபர் 28: முழுமையான பெயர் பட்டியலை சீலிடப்பட்டுள்ள கவரில் வைத்து அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2014, அக்டோபர் 29: கருப்பு பணம் வைத்திருப் பது தொடர்பாக 627 பேர் அடங்கிய பட்டியலை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்தது.

Read more: http://viduthalai.in/page7/90353.html#ixzz3HpXF9VJH

தமிழ் ஓவியா said...

கடவுள் மறுப்பாளர் விஞ்ஞானி சந்திரசேகர்

சுப்பிரமணியன் சந்திரசேகர் (1910 - 1995) ஒரு வானியல் - இயற்பியல் விஞ் ஞானி. ஆங்கிலேயர் கால இந்தியாவில், இன்றைய பாகிஸ் தான் பகுதியான லாகூரில் சுப்பிரமணியன் - சீதாலட்சுமி தம்பதிக்குப் பிறந்த தமிழர்.

அவர் லாகூரிலும், பிறகு லக்னோ விலும் வாழ்ந்தபின், சென்னை வந்தடைந் தார். 11 வயதில் அவர் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். மாநிலக்கல்லூரியில் இயற்பியல் படித்தார். அப்போதுதான் அவரது சித்தப்பா சர்.சி. வி. ராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தது. சந்திரசேகரின் அம்மா உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர் ஹென்ரிக் இப்சனின் நாடகத்தைத் தமிழாக்கியவர். அவரின் அறிவார்ந்த ஆற்றலும் இளம் சந்திர சேகருக்கு மாபெரும் தூண்டுதலாக இருந்தது.

சந்திரசேகர் 19 வயது மாணவராக இருக்கும்போதே ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். 1930 - ஆம் ஆண்டு, இந்திய அரசின் பண உதவி பெற்று, மேல்படிப் புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத் துக்குப் போனார்.

அவர் தனது 19ஆம் வயதில் ஐன்ஸ் டீனின் சார்பியல் தத்துவத்தையும் குவாண்டம் கோட்பாட்டையும் பயன் படுத்தி ஒரு வானியல் கோட்பாட்டை உருவாக்கினார்.

விண்வெளியில் உள்ள ஒரு நட்சத் திரத்தின் இறுதிக் காலம் அது எவ்வளவு பொருள்நிறையைக் கொண்டதாக உள்ளது என்பதைப் பொறுத்ததாக அமைகிறது. மிக அதிகமான பொருள் நிறையை கொண்டுள்ள நட்சத்திரங்கள் தங்களின் இறுதிநாளில் நியூட்ரான் நட்சத்திரங்களாகவோ அல்லது கருந் துளைகளாகவோ மாறுகின்றன.

பொருள்நிறை குறைவாக உள்ள அல்லது நடுத்தரமான பொருள்நிறை உள்ள நட்சத்திரங்கள் - உதாரணமாக - நமது சூரியனைவிட ஏறத்தாழ எட்டு மடங்கு பொருள்நிறை குறைவாக உள்ள நட்சத்திரங்கள் - வெள்ளைக் குள்ளன் எனும் ஒரு அடர்த்தியான நிலையை அடைகின்றன.

இந்த நிகழ்ச்சிப்போக்கை நாம் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு வரையறையை கணித அவதானிப்புகள் மூலம் அவர் அறிவித்தார். அவரது இந்த வரையறைதான் நட்சத்திரங்களின் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு பற்றிய ஆய்வில் இன்றும் வழிகாட்டுகிறது.

இந்த ஆய்வுக்காக இவருக்கு, 1983 - இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வில்லியம் பவுலர் என்பவரோடு இணைத்து வழங்கப்பட்டது.

1937 - இல் சந்திரசேகர் அமெரிக்கா வின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகச் சேர்ந்தார். 1995 - இல் 84 வயதில் இறக்கும்வரை அதே பல்கலைக்கழகத்திலேயே பணிபுரிந்தார். இவர் 1953 முதல் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்தார். அமெ ரிக்காவில் 50 முனைவர் பட்டதாரிகளை உருவாக்கினார். அமெரிக்காவின் விண் வெளி ஆய்வு அமைப்பான நாசா உள் ளிட்ட பல இடங்களுக்கு அவரது நினை வாகப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. கடவுள் நம்பிக்கை இல்லாதவராக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நீடித்தார்.
நன்றி: தி இந்து (தமிழ்) 20.10.2014

Read more: http://viduthalai.in/page6/90350.html#ixzz3HpXR8RNc

தமிழ் ஓவியா said...

நாசாவின் பெயரால் மதவாதிகளின் மீண்டும் ஒரு ஏமாற்று வேலை

அமெரிக்க வானியில் ஆய்வுத்துறை யான நாசா கூறியதாகக் கூறி அவ்வப் போது கட்டுக்கதைகள் உலகெங்கிலும் உள்ள சில மதவாதிகள் பரப்பி விடுவதுண்டு, அதுவும் நாசாவின் இணையத்தளத்தில் இருந்து எடுத்தது போன்ற பொய்யான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உலகையே நம்ப வைப்பது தற்போது ஒரு ஏமாற்றுக்கலையாகப் போய்விட்டது,

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதோ ராமர் பாலம், நாசாவே உறுதி செய்த படம் என்று கூறி சில மத அமைப்புகள் பரபரப்பை உண்டாக் கின. இதற்கு நாசாவே மறுப்பு தெரி வித்தும் இன்றும் ஒரு கூட்டம் இதை நம்புகிறது. சிதம்பரம் கோவிலுக்கு நேர் எதிரே வானவெளியில் இருந்து படம் எடுத்தால் அது வெண்மையாகத் தெரியுமாம் இது நாசா பெயரில் வந்த கட்டுக்கதை. திருநள்ளாறுக்கு நேர் எதிராக வான்வெளியில் கடக்கும் எந்த ஒரு செயற்கைக் கோளும் சில நொடிகள் செயலிழந்து விடுமாம். இவை எல்லாம் நாசாவின் பெயரால் பரப்பப்படுவதால் நாசா அவ்வப்போது மறுப்பு வெளி யிட்டுள்ளது. இப்போது மேலும் ஒரு புரளி நிலவுகிறது.

2014 டிசம்பர் மாதம் உலகம் இருளில் மூழ்கப் போகிறதாம்

கிருஸ்தவ மதத்தின் சில பிரிவினர் இதோ தேவ மைந்தனின் இரண்டாம் வருகை என்று அவ்வப்போது பய முறுத்திக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் தற்போது தங்களின் வணிகத்திற்கு, நாசாவையும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். '

உலகம் மூன்று நாட்கள் இருளில் மூழ்கும். அப்போது இறைவனுக்கு எதிரானவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பது கிறித்தவ மதத்தில் உள்ள ஒரு பிரிவினரின் நம்பிக்கை ஆகும். அவர்கள் தற்போது புதிய கட்டுக் கதையைப் பரப்பி மக்களைக் குழப்பி வருகிறார்கள்

வரும் டிசம்பர் 2014 இல் உலகம் ஆறு நாட்கள் இருளில் மூழ்க இருப்பதாகவும், சூரியனில் ஏற்படும் காந்தப்புயலே இதற்கு காரணம் என நாசா கூறிவிட்டது கதை விட்டு மக்களைக் குழப்புகிறார்கள்.

எப்போதும் போல், இது போன்ற மடமைத்தனமாக செய்திகள் மேலும் பரவாமல் தடுக்க நாசா முன்னேச்சரிக் கையாக மறுப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள செய்தியில், டிசம்பர் மாதம் 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கி இருக்கும் என்ற கட்டுக்கதை நாசாவின் பெயரால் பரப் பப்பட்டு வருகிறது, இது உண்மை யல்ல, அறிவுள்ள அனைவருக்கும் தெரியும். உலகம் பாதி நாள் இருளிலும் பாதி நாள் பகலிலும் உள்ளது. இருளை மனிதஇனம் விளக்குகளின் வெளிச் சத்தில் வென்றுவிட்டது.

தற்போது சிலரால் பரப்பப்படும் கட்டுக்கதைகளின் படி மின்சாரம் தடைபட்டால் தான் இருளில் மூழ்க வாய்ப்புள்ளது. சூரியப்புயல் மட்டு மல்ல; எந்த ஒரு இயற்கைக் காரணத் தாலும் மனிதனால் செயற்கையாகத் தயாரிக்கப்படும் மின்சாரத்தை தடை செய்ய முடியாது,

பருவநிலை மழை, வெள்ளம், புயல் போன்ற நேரங்களில் மின்சாரம் தடைபடுவது அந்தந்தப் பகுதியில் மட்டுமே அதுவும் விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும், ஆகவே உலகம் இனி வரும் காலத்தில் மேலும் மிகுந்த அறிவியல் வளர்ச்சி பெற்று முன் னேறுமே தவிர இப்படி பொய்யான கதைகள் போன்று இருளில் மூழ்காது. மேலும் அந்த பொய்யான இணைய தளத்தில் சிலர் தொலைக்காட்சியில் உரையாடுவது போன்ற நிகழ்ச்சி, அதன் பின் புலத்தில் நாசாவின் அடையாளம் எல்லாம் பொய்யாக தயாரிக்கப்பட்ட வைகளாகும். சூரியப்புயல்கள் என்பது மூன்றாண் டுகளுக்கு ஒரு முறை பூமியின் மேற் பரப்பு வரை வந்து செல்கிறது. இதை புவியின் மேலடுக்கில் உள்ள வளி மண்டலம் தடுத்து மீண்டும் வானத் திற்கே அனுப்பிவிடும். இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று நாசா வெளியிட்டுள்ள மறுப்புச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொய்கள் பரவும் வேகத் தில் நாசாவின் உண்மை நிலை பரவுவ தில்லை.

- சரவணா ராஜேந்திரன்

Read more: http://viduthalai.in/page6/90351.html#ixzz3HpXaoCRG

தமிழ் ஓவியா said...

இவர் தான் மகாராட்டிர மாநில முதல் அமைச்சர்! (பிஜேபி)


பாஜக முதல்வரின் குற்றப் பின்னணி மகாராட்டிர முதல் வர் தேவேந்திர கங்காதர்ராவ் பட்னவிஸ்மீது நாக்பூர் மற்றும் இதர நீதிமன்றங்கள், காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும் குற்றச் சாட்டுப் பதிவுகளும்.

இ.பி.கோ பிரிவு 135, 37,39,40 நாக்பூர் நீதிமன்ற குற்ற எண் 3051/06 வழக்கு எண் 962/06 (2010)
நாக்பூர் நீதிமன்ற குற்ற எண் 3122/06, வழக்கு எண் 281/06, (2008)
நாக்பூர் நீதி மன்ற குற்ற எண் .5096/09, வழக்கு எண் 1390/06, (2009)
இ.பி.கோ 146, 147, 148, 324(2009)
நாக்பூர் நீதிமன்ற குற்ற எண் 10009/03, (2008)
இ.பி.கோ 143, 427 (2005)
இ.பி.கோ 188, 171,,பி 34 (2004)
இ.பி.கோ 143, 147, 34 (2010)
இ.பி.கோ 141, 341 (2011)
இ.பி.கோ 134, 135B.P. Act, 39, 66,/192 M.V. Act(2004)
இ.பி.கோ 188 (2000) றீ இ.பி.கோ 188 (2008)
இ.பி.கோ 188 (2009)
இ.பி.கோ 135 B.P. Act,,, (2002) றீ இ.பி.கோ 341 /135B.P. Act, 39, 66,/192 M.V. Act(2004)
இ.பி.கோ 338 (2001) றீ இ.பி.கோ 188, 34 (2011)
இ.பி.கோ 134,135 B.P. Act, 179(1), 21(20), 119, 115, 177 MV Act (2000)

உள்ளிட்ட 22 குற்ற வழக்குகளை மகா ராட்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் எதிர்கொள்கிறார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் குற்ற வழக்குகளும்

மகாராட்டிர மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சியாக பாஜக 122பேரைக் கொண் டுள்ளது. அதேபோல் குற்ற வழக்குகளிலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களில் அதிக எண்ணிக்கையாக 74 பேரைக் கொண்டுள்ளது. பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்களில் குற்றவழக்கு களைக் கொண்டுள்ளவர்கள் 60 விழுக்காடாகும்.

அதிக மோசமான குற்றங்கள்

அதிக மோசமான குற்றங்களில் தொடர்புள்ளவர்களாக 53பேர் உள்ளனர். இதில் 43விழுக்காடாக உள்ளது. மகாராட்டிர மாநிலத்தில் சட்டமன்றத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள சிவசேனா கட்சியின் 63 சட்டமன்ற உறுப்பினர்களில் 48பேர் குற்ற வழக்குகளில் தொடர்புள்ளவர்களாக உள்ளனர்.

இது 76 விழுக்காடாகும். மிக மோசமான குற்றவழக்குகளில் தொடர்புள்ள வர்களாக 36பேர் உள்ளனர். இது 87 விழுக்காடாகும். மிக மோசமான குற்ற வழக்குகளில் தொடர்புள்ள கட்சிகளிலும் இரண்டவதாக சிவசேனா உள்ளது.

பகுதிவாரியாக குற்றவழக்குகளில் தொடர்புள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் விதர்பா பகுதியில் அதிக எண்ணிக்கையில் 58 விழுக்காட்டளவில் உள்ளனர். அதனை யடுத்து கொங்கன் பகுதியில் 57 விழுக் காட்டளவில் உள்ளனர். மிக மோசமான குற்றவழக்குகளில் தொடர்புள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் அதிக அளவில் கந்தேஷ் பகுதியில் உள்ளனர். இது 48 விழுக்காடாகும்.

மிக மோசமான வழக்குகளில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:

கலவர வழக்குகளில் தொடர்புள்ள வர்கள் - 81 பேர்,

பொது ஊழியர்களிடத் தில் காயங்களை உண்டாக்கி தாக்கிய குற்றங்களில் தொடர்புள்ளவர்கள் - 50 பேர்

ஏமாற்றியவர்கள் பட்டியலில் உள்ள வர்கள் - 31 பேர்

கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகயில் தொடர்புள் ளவர்கள் - 15 பேர்

வழிப்பறி, கொள் ளையில் தொடர்புள்ளவர்கள்- 11 பேர்

பெண்களுக்கு எதிரான குற்றமிழைத்த வர்கள் - 10 பேர்

கடத்தல் வழக்குளில் தொடர்புள்ளவர்கள் - 8 பேர் றீ பிளாக் மெயில் வழக்கில் தொடர்புள்ளவர்கள் - 6 பேர்

ஊழல் முறைகேடுகளில் - 3 பேர், மேலும் கொலை வழக்கில் ஒருவர், கொலை முயற்சி வழக்கில் ஒருவர் ஆக உள்ளனர்.

மேற்கண்டவை 2014ஆம் ஆண்டில் உள்ள தகவலின்படி சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள் குறித்த தகவல்கள்ஆகும்.

- டைம்ஸ் ஆப் இந்தியா, 28.10.2014

Read more: http://viduthalai.in/page6/90352.html#ixzz3HpXkk1MR

தமிழ் ஓவியா said...

காற்று என்னை எடுத்துச் செல்லட்டும்' -
தூக்கிலிடப்பட்ட ஈரானியப் பெண்ணின் மனதை உருக்கும் கடைசி செய்தி

ஈரானில் வன்புணர்ச்சி செய்ய முயன்றவரை கொலை செய்ததற்காக தூக்கிலிடப்பட்ட ரேஹானே ஜப்பாரி எனும் பெண் தனது தாய்க்கு இறுதியாக உருக்கமான செய்தி ஒன்றை தெரி வித்துள்ளார்.

ஈரானை சேர்ந்த ரேஹானே என்பவர் 2009 ஆம் ஆண்டு தன்னை கற்பழிக்க முயன்ற புலனாய்வுத் துறை அதிகாரியை கொலை செய்தார். இதனால் கொலை குற்றவாளியாக ஈரானிய அரசு கடந்த சனிக்கிழமை அவரை தூக்கிலிட்டது. இந்நிலையில் அவரது தாயாருக்கு தெரிவித்த கடைசி செய்தி குரல் வடிவில் வெளியாகியுள்ளது. அது அனைவரது மனதையும் கரையச் செய்வதாக உள்ளது. அதில், "அன்பிற்கினிய ஷோலே, நான் எனது வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை அடைந்துவிட்டேன் என்று நீயாகவே ஏன் எனக்கு தெரி விக்கவில்லை என்பது எனக்கு வருத்த மளிக்கிறது. எனக்கு இந்த விஷயம் தெரிய வேண்டுமென உனக்கு தோன்ற வில்லையா? நீ சோகமாக இருப்பது என்னை எவ்வளவு வெட்கமடைய செய்கிறது என்பது உனக்கு தெரியுமா? உனக்கோ அல்லது தந்தையினது கரங்களையோ முத்தமிடுவதற்கு நீங்கள் ஏன் எனக்கு எந்த வாய்ப்பையும் வழங்க வில்லை? 19 ஆண்டுகள் வாழ்வதற்கு எனக்கு இந்த உலகம் அனுமதித்திருக் கிறது. அன்று இரவு நான் கொல்லப் பட்டிருக்க வெண்டும். என்னுடைய உடல் இந்த நகரத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் வீசப்பட்டிருக்கும். நானும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப் பட்டேன் என உனக்கு தெரிந் திருக்கும். என்னை சீரழித்தவனை கண்டுபிடிக்க முடியாமலேயே போயிருக்கும். ஏனென்றால் நம்மிடம் இல்லாத பலமும், பணமும் அவர்களிடம் உள்ளதே. அதன்பின் இதை நினைத்து நீ அவமானப்பட்டு சில ஆண்டுகள் கழித்து இறந்து போயிருப்பாய். ஆனால், இப்போது கதை மாறியுள் ளது. என் உடல் சாலையோரத்தில் வீசப்படவில்லை. சிறை கல்லறையில் எனக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நினைவிருக்கிறதா நாங்கள் நடந்துகொள்ளும் முறை குறித்து நீங்கள் குறிப்பிட்டது? உங்களது அனுபவம் தவறானது. இந்த நிகழ்ச்சி நடந்ததற்குப் பிறகு, நான் கற்றது எனக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. நீதிமன்றம் என்னை இரக்கமில்லா கொலைகாரியாகவும், கொடுமையான குற்றவாளியாகவும் கருதுகிறது. என்னிடம் கண்ணீர் இல்லை. பிச்சை எடுக்கவுமில்லை. நான் சட்டத்தை நம்பியதிலிருந்து எனது தலைகுனிந்து அழவில்லை.

நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், நான் கொசுக்களைக் கூட கொன்றதில்லை. கரப்பான்பூச்சிகளை அதன் உணர் கொம்புகளை பிடித்து மெதுவாகத்தான் வெளியேற்றி இருக்கிறேன். தற்போது நான் திட்டமிட்ட கொலைகாரியாக இருக்கிறேன்.

எப்படியாகிலும் சரி, நான் இறப்ப தற்கு முன் உங்களை ஒன்று வேண்டு கிறேன். உங்களால் முடிந்தவரை எந்த வழியிலாவது, எனக்காக நீங்கள் இதை செய்ய வேண்டும். ஒருவேளை இந்த உலகத்திடமிருந்து, இந்த தேசத்தி லிருந்து, உங்களிடமிருந்து நான் வேண்டிக்கொள்ளும் ஒன்றாக இதுதான் இருக்கும். இதற்காக உங்களுக்கு நேரம் தேவைப்படும் என்பது எனக்குத் தெரியும். நீதிமன்றத்தில் என்னுடைய வேண்டுகோளை நீங்கள் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். சிறைத்தலைவர் ஒப்புதலோடு உங்களுக்கு என்னால் சிறையிலிருந்து எந்த கடிதத்தையும் எழுத முடியாது. ஆகையால் மீண்டும் என்னால் நீங்கள் பாதிப்படையக்கூடும். அன்பு ஷோலே, நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பதற்காக அழக்கூடாது. என்னுடைய தாயே, எனது சிந்தனை மாறிவிட்டது.

அதற்காக நீங்கள் வருத்தப்படவேண்டாம். என்னுடைய வார்த்தைகள் முடிவில்லாதது. எனது அன்பிற்கினிய தாயே, அன்பு ஷோலே, எனது வாழ்வை விட நீயே எனக்கு விருப்பமானதாய் இருந்தாய். நான் மண்ணில் அழுகிப்போக விரும்பவில்லை. எனது கண்களோ, எனது இளமையான இதயமோ வெறும் புழுதிக்குள் எறியப்பட வேண்டாம். நான் தூக்கிலிடப்பட்டதற்கு பின் எனது உடலில் இருந்து பிறருக்கு உபயோகப் படும் அனைத்து உறுப்புகளையும் அகற்றி அதனை தேவைப்படுபவர் களுக்கு பரிசாக அளித்துவிடுமாறு கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். என் உடலில் இருந்து அகற்றப்பட்ட உறுப்புகளை பெற்றவர்களுக்கு நான் யார் என்பதோ, என் பெயரோ எதுவும் தெரியவேண்டாம். அவர்கள் எனக்கு பூச்செண்டு தரவும் வேண்டாம், எனக்காக பிரார்த்தனையும் செய்ய வேண்டாம். நான் எனது இதயத்தின் அடியா ழத்திலிருந்து சொல்கிறேன், எனக்கு கல்லறை வேண்டாம்.

எனக்காக நீங்கள் அங்கு வந்து வேதனைப்பட்டு அழத் தேவையில்லை. எனக்காக கருப்புத் துணியால் உன்னை மூடிக்கொள்வதை நான் விரும்பவில்லை. என்னுடைய கடினமான நாட்களை மறந்து விடுவது நல்லது. 'காற்று என்னை எடுத்து செல்லட்டும்'." இவ்வாறு ரேஹானே ஜப்பாரி தனது தாயாரிடம் தன்னுடைய கடைசி செய்தியை தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page5/90348.html#ixzz3HpYF9uxw

தமிழ் ஓவியா said...

மொட்டை போட்டது முன்னாள் முதல்வருக்கா - அண்ணா கொள்கைக்கா?

ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையானதால் 4 அமைச்சர்கள் மொட்டை போட்டனர் என்பது செய்தி.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையானதால் செந்தில்பாலாஜி, செல்லூர் ராஜு, எஸ்.பி. வேலுமணி, அக்ரிகிருஷ்ணமூர்த்தி ஆகிய அமைச்சர்கள் மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 100 கோடி அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அன்றைய தினமே கர்நாடகாவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார்.

இதனால் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி கோவில்களில் சிறப்பு பூஜை, யாகம், திருவிளக்கு பூஜை, பால்குட ஊர்வலம், காவடி, அலகு குத்தி நேர்த்திக் கடன், முளைப்பாரி ஊர்வலம், தேர் இழுத்தல், முடி காணிக்கை தேவாலயங்களில் பிரார்த்தனை என பல்வேறு வழிகளில் அ.தி.மு.க.வினர் வேண்டுதலில் ஈடுபட்டனர். அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தாடியுடன் காணப்பட்டனர்.

இந்த நிலையில் 21 நாள் சிறையில் இருந்த ஜெயலலிதா கடந்த 18ஆம் தேதி ஜாமீனில் விடுதலையானார். ஆனால் அதன் பிறகும் பல அமைச்சர்கள் தாடியை எடுக்காமல் இருந்தனர். அமைச்சர் செந்தில்பாலாஜி தீபாவளி கொண்டாடாமல் திருப்பதி சென்று மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தி வந்துள்ளார்.

இதே போல் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, எஸ்.பி.வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். அமைச்சர் ஆனந்தன் தாடியை எடுத்துள்ளார். இதே போல் ஒவ்வொரு வரும் கோவில் களுக்கு சென்று முடி காணிக்கை செலுத்த உள்ளனர்.

வாழ்க அண்ணா நாமம்!

Read more: http://viduthalai.in/page2/90342.html#ixzz3HpZKKPXQ

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஒழுக்கக்கேடு

கீதையின் 18வது அத்தியாயத்தில் மாமேகம் சரணம் வரஜ என்று சரண ஸ்லோகம் இடம் பெற்றுள்ளது. என் திருவடியைப் பற்றிக் கொள்; உனக்கு மோட்சம் கிடைக்கச் செய்வது என் பொறுப்பு என்று கண்ணனே சொல்கிறானாம்.

பஞ்சமாபாதகம் செய்தாலும் கண்ணனின் திருவடியைப் பற்றிக் கொண்டால் மோட்சம் கிடைக்கும் என்றால் இதைவிட ஒழுக்கக் கேட்டை வளர்க்கும் ஏற்பாடு வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்!

Read more: http://viduthalai.in/e-paper/90358.html#ixzz3HpZqA6a5

தமிழ் ஓவியா said...

மய்ய மனிதவள அமைச்சரைச் சந்தித்த ஆர்.எஸ்.எஸ். கும்பல்: சில பூனைக்குட்டிகள்!

மய்ய அரசின் கல்வி அமைச்சர் சுமதி இராணியை ஆர்.எஸ்.எஸ்.முதன்மையாளர்கள் கிருஷ்ணா கோபால், சோனி, தத்தாத்ரேய முதலானவர்கள் சந்தித்து மூன்று கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

ஒன்று தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்விக்கட்டணங்கள் உயர்வாக இருக்கின்றன.

இரண்டு பள்ளிகளிலும் ஒழுக்கத்தைப் போதிக்கும் பாடத்தைச் சேர்க்க வேண்டும்.

மூன்றாவது வரலாற்றுப் பாடத்தில் பல தவறுகள் சொல்லிக் கொடுக்கப்படவேண்டும் என்பதாகும்.

இரண்டாவதாகக் கூறப்பட்டுள்வை என்ன என்ன தெரியுமா? ஏற்கனவே பள்ளிகளில் ஒழுக்கம் போதனை --(விஷீக்ஷீணீறீ மிஸீக்ஷீநீவீஷீஸீ) என்ற பெயரில் மதம் சம்பந்தமான இராமாயணம், பாரதம், கீதை என்று சொல்லிக் கொடுத்தார்கள். அது நிறுத்தப்பட்டது. அதனை புதுப்பிக்க பார்க்கின்றனர். மூன்றாவது கோரிக்கை ஆபத்தானது ஏற்கெனவே சொல்லிக் கொடுக்கப்படும் உண்மை வரலாற்றைத் திரித்து இந்துத்துவாப் பள்ளியில் மாணவச் செல்வங்கள் மத்தியில் நஞ்சை விதைக்கும் முயற்சி.

நம்முடைய முதற்கேள்வி இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்கள் என்ன கல்வியாளர்கள் இர்பான்ஃஹபீபா, தொமிலாதாப்பரா, கே.எம்.பணிக்கரா அல்லது வங்கத்துக் கல்வி அறிஞரா இல்லை. இவர்களுக்குக் கல்விப் பாடத்தைப் பற்றிப்பேச என்ன யோக்கியதை இருக்கிறது? முழுக்க முழுக்கப் புலிவேடம் போட்ட இந்தப் பூனைக்குட்டிகள் மெல்ல, மெல்ல மியாவ் மியாவ் என இந்துத்துவா குரலை எழுப்புகின்றன. வாலை ஆட்டிப்பார்கின்றன.

இதைக் கல்வியாளர்கள் கண்டிக்கவில்லை என்றால் சிந்து சமவெளிநாகரிகம் சரசுவதி நாகரிகம் என்று இல்லாத நதியில் பேரால் திராவிட நாகரிகத்தை மறைக்கப் பார்ப்பார்கள். ஏற்கெனவே பி.என்.ஓக் போன்றவர்கள் தாஜ்மகால் இராஜபுத்திர அரண்மனை என்று கட்டுக் கதைகளாகப்புகுத்துவார்கள்.

தமிழ் ஓவியா said...

டெல்லிச் சுல்தானியம் மொகலாயர் ஆட்சி எல்லாம் இந்துக்களுக்கு எதிரானது என்று அக்பர் போன்ற சமத்துவ உணர்வுள்ளவர் சாதனைகளை மூடப் பார்பார்கள் இந்த மூடர். எனவே கல்வியாளர்கள் தமிழக அளவிலே மட்டுமல்ல இந்திய அளவிலேயே இம்முயற்சிகனை முறியடிக்க வேண்டும். முன் வந்து கண்டிக்க வேண்டும்.

புதிதாகப் பள்ளிப்பாடத்தில் சமயக்கல்வி, ஒழக்கக் கல்விக்கு என்ன தேவை வந்து விட்டது? இன்னும் தமிழ்ப்பாடத்தில் முறையாக தேவாரம், திருவாசகம், நாலாயிரதிவ்ய பிரபந்தம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பெரியபுராணம், இரட்சண்ய யாத்திரீகம், சீறாப்புராணம், சிவகசிந்தாமணி என்று இந்து, புத்த, சமண, கிறித்துவ, இசுலாமியப் பாடல்கள் பாடல் களாகத்தானே இருக்கின்றன. இவை தவிரப் புதுயுகக் கவிஞர்கள் பாரதி, பாரதிதாசன், முடியரசன் கண்ணதாசன் முதலியோர் பாடல்களும் இடம் பெற்றே இருப்பது உண்மை.

அடுத்து, திமுக ஆட்சியில் இன்று சமச்சீர் கல்வி வந்து கல்வியில் ஏற்பட்ட புரட்சி இவர்கள் கண்ணை உறுத்துகிறது போலும். இந்தியா முழுமைக்கும் சமச்சீர் கல்வியைக் கொண்டு வரவேண்டியதுதானே.

அடுத்து, தாய்மொழிக் கல்விக்கு இவர்களின் முயற்சி அபாயத்தை விளைத்து விடக்கூடாது. எனென்றால் தாய்மொழிக் கல்வி தமிழ்மொழிக் கல்விதான் மாணவர் உள்ளங்களில் அறிவு விதையை ஆழமாக ஊன்றி உரமிட்டு வளர்க்கும்.

இல்லையென்றால் ராஜீவ்காந்தி காலத்தில் மய்ய அரசு தரமான பள்ளிகள் முதன்மை நிறுவனங்கள் என்ற போர்வையில் இந்தியைத் திணிக்க முயற்சி செய்த நிலை மீண்டும் தொடரும். ஏனென்றால் எம்மைப் பொறுத்த வரையில் காங்கிரசும், பிஜேபியும் வேறு வேறு அல்ல. கொஞ்சம் இந்துத்துவால் பெருங்காயம் காங்கிரசிடம் குறைவாக இருக்கும்.

எனவே செவன்த் சேனல் எனும் தொலைக் காட்சியில் சுமதி இராணியை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சந்தித்தது குறித்து விவாதம் நடந்தது. திராவிடர் வரலாற்று மய்யச் செயலாளர் பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் அவர்களும், பிஜேபி யின் பொறுப்பாளர்களில் ஒருவரான இராகவன் அவர்களும் பங்கேற்றார்.

தமிழ் ஓவியா said...


பேராசிரியர் மங்களமுருகேசன் அவர்கள் பிஜேபி அரசு இந்த முயற்சி வாயிலாக இந்துத்துவாவைப் புகுத்த முயற்சிக்கிறது. கி.பி. 2000 இல் பேராசிரியர் அவர்கள் கல்வி அமைச்சராக விளங்கியபோது நடைபெற்ற அகில இந்தியக் கல்வி அமைச்சர் மாநாட்டில் சரசுவதி வந்தனத்தைப்பாடி எல்லாச் சமயக்கல்வி அமைச்சர்களும் பங்கேற்ற மாநாட்டில், சமயச் சார்பிலாநாடு எனும் நாட்டில் தனித்த இந்துச்சமயப் பாடலைப் பாடி இருப்பதைக் கண்டித்துப் பேராசிரியர் உள்ளிட்ட கல்வி அமைச்சர்கள் வெளிநடப்புச் செய்ததையும், அந்த மாநாட்டில் சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த கல்வி அமைச்சர் இல்லாத ஒருவரின் கல்விக் கொள்கை நிகழ்ச்சி நிரலில் இடம் பெற அதை நீக்கும்வரை மாநாட்டில் பங்கேற்பதில்லை எனக்காலை பத்துமணி முதல் மதியம் இரண்டு மணி வரையும் வெளிநடப்புச் செய்யக் கடைசியில் முரளி மனோகர் ஜோஷி பணிந்ததையும் எடுத்துக்கூறினார்.

பிஜேபி ராகவன், ஆர்.எஸ்.எஸ் அரசு தான் பிஜேபி அரசு, கல்வி அமைச்சரை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சந்தித்தது ஒன்றும் புதிது அல்ல, இதில் இரகசியம் இல்லை. சரசுவதி வந்தனம் பாடியதில் என்ன தவறு?, மெக்காலே கல்விச் சிந்தனை தான் இருந்து வருகிறது. அதை மாற்ற வேண்டும் என்பதோடு ஆரியமாவது, திராவிடமாவது என்றதோடு தமிழ்த்தாய் வணக்கத் தையும் சிலர் வேறு கடவுளை வணங்க மாட்டோம் என்று கூறினார்கள் என்று கூறியதோடு வந்தே மாதரம் பாடியது தவறில்லை என்று பேசினார்.

இப்போது கொஞ்சம் பிஜேபிக் காரார்களுக்குத் துணிவு துளிர்விட்டிருக்கிறது என்பது தான், மீண்டும் இந்துக்குரலை எழுப்புவதன் பின்னணி, பேராசிரியர் மங்களமுருகேசன் தத்துவநிலை ஆதாரத்துடன் எடுத்து வைத்ததும் இராகவன் அவர்கள் வாதம் எடுபடாமல் போயிற்று.

எனவே இன்றைய நாளில் திராவிட இயக்கத்தவர் மட்டும் விழிப்போடு இருப்பதில் பயனில்லை. தமிழகக் கல்வியாளர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். அகில இந்தியக் கல்வியாளர்களுடன் தொடர்பு கொண்டு இந்த இந்துத்துவாவாதிகளின் நச்சுப்பிரச் சாரத்தை முறியடிக்க வேண்டும்.

இல்லையெனில் இந்த அய்ந்தாண்டுகளில் ஏற்பட்டுவிடும் ஆரிய இனவாதப் போக்கை மீண்டும் மாற்ற நீண்டகாலம் போராட வேண்டியிருக்கும்.

- பேராசிரியர் மங்கள முருகேசன்

Read more: http://viduthalai.in/page-3/90368.html#ixzz3Hpap8tpy

தமிழ் ஓவியா said...

ஈ.வெ.ரா. காவடிச்சிந்து

- கவிஞர் கி. கோவிந்தராசு -


வணிகத்தொழில் செய்த குடும்பம் - நல்ல
வசதி நிறைந்திட்ட குடும்பம் - அங்கே
விளைந்தார் இராமசாமி
வெங்கடநாயக்கர்
மகனாய் - மதி - முகனாய்
அணிகளும் மணிகளும்பூட்டி - நல்ல
அறிவுள்ள கல்வியும் ஊட்டி - அவரை
அன்னையும் தந்தையும்
அன்புடன் வளர்த்தர் சீர்
ஆட்டி- பாசம்- காட்டி
வேதத்தைக் கற்பிக்க ஒருவர் - வந்து
வீட்டிலே சொல்லியே தருவார் - அன்று
அறியாத வயதிலே
ஆன்மீகம் கற்றுமே
சிறந்தார் - பின்னாள் - மறந்தார்
வாதங்கள் செய்வாரம் உடனே - வேத
வகுப்புகள் முடிந்திடும் முன்னே! - அந்த
இளையவயதிலேயே
ஏன்?எதற்கு?என்ற
தெரிவு - பகுத் - தறிவு!
காசிக்கும் பெரியாரும் சென்றார் - அந்தக்
கங்கையில் அழுக்குகள் கண்டார் - மனித நேயமே இல்லாது
நிகழ்ந்திடும் கொடுமைகள்
உணர்ந்தார் - காவி - துறந்தார்
யோசித்தார் இவையாவும் எதனால்? - முடிவில்
உணர்ந்திட்டார் கடவுள்தான் அதனால் - எனக்
கருதியநாள் முதல்
உறுதியாய் இருந்திட்டார்
பொறுப்பாய் - கடவுள் - மறுப்பாய்!
கீதை படித்தவர்கள் கொஞ்சம் - கள்
போதை அடித்தவர்கள் கொஞ்சம் - என
மேலும் கீழும் என
வேறுபாடுகளைப்
பார்த்தார் - நெஞ்சம் - வேர்த்தார்!
சீதை இராமன் கதை கற்றால் - சமூகம்
சீர்பெற போவதில்லை முற்றாய் - எனப்
பகுத்தறிந்து உண்மை
பார்த்து அறிய ஒரு
பாதை சொன்ன -மேதை!
சாதிப் பெயர் தன்னைச் சொல்லி - கோயில்
சன்னதி நுழையாது தள்ளி - நம்
ஆதிதிராவிடரை
வேதியர் சிலர் ஆங்கே
ஒடுக்க - எழுந்தார்- தடுக்க!
வீதியில் இறங்கிப்போர் செய்தார் - அந்த
விஷமர்கள்மேல் அம்பு எய்தார்- பின்பு
கோவில் பொதுவென்ற
கூற்றால் பகைவென்ற
சூரர் - வைக்கம் - வீரர்!
மூடப்பழக்கத்தினாலே - தமிழன்
மூளை இழந்திருந்தவேளை - பெரியார்
பகுத்தறிவு சொல்லிப்
பாடம்புகட்டினாரே
மெல்ல - அறிவு - வெல்ல!
கூடாஒழுக்கம் கள் குடித்தல் - எனக்
கொள்கை முழக்கங்கள் செய்தார்- பெயரில்
சாதிப் பெயர்சேர்த்தல்
சற்றும் கூடாதென்றே
உரைத்தார் - வேர் - அறுத்தார்!

பெரியோரைத் தலைமையாய்க்
கொண்டு - பெற்ற
பெற்றோரே முதன்மையாய் நின்று - செய்யும்
சடங்கில்லாத் திருமணம்
சுயமரியாதையின்
பிறப்பு - சாதி - மறுப்பு!
மரியாதை மனிதர்க்குத் தேவை - பிறரை
மதிக்கின்ற பண்பதுவும் தேவை - நம்மில்
ஆணுக்குப் பெண்ணிங்கே
அடிமைபோல் இருப்பதும்
நாடா - வெட்கக் - கேடா!
பழுத்துக் கனிந்ததோர் மேனி - தமிழ்
எழுத்துகள் சீர்செய்த ஞானி - பெரியார்
சேமிக்கும் குணத்திலும்
சிக்கனச் செயலிலும்
தேனீ - நமக்கு - ஏணி!
தழும்புகள்தான் பெற்றார் நிறைய - அனைத்தும்
தமிழினம் முன்னேற்றம் அடைய - பெரியார்
ஞானத்தைஉலகமே
நயம் என ரசித்தது
அறிய - புகழ் - விரிய!
கைத்தடி ஊன்றிய சிங்கம் - பெரியார்
பைந்தமிழ் காத்திட்ட தங்கம் - அவர்
அறிவார்ந்த கருத்தினை
ஆர்வத்தோ(டு) அறிந்திடின்
தங்கும் - வாழ்க்கை - பொங்கும்!
வைத்தகால்பின் வாங்காவீரர் - பெரியார்
வாக்குப் பிறழாததீரர் - கொண்ட
கொள்கையில் மாறாத
கோடிக்கு மயங்காத
திண்ணன் - வெள்ளை - வண்ணன்!
தமிழ்நாடு தமிழர்க்கே என்று - பெரியார்
தனியொரு மனிதனாய் நின்று - செய்த
இந்தி எதிர்ப்புப்போர்
இந்தியா முழுவதும்
செல்ல - தமிழ் - வெல்ல!
தமிழர்க்குத் தமிழரேபோட்டி - ஒரு
தமிழனை இன்னொருவன் காட்டி - தந்து
உயர்ந்திடும் நிலை அதுவும்
உலகினில் இதுவரை
ஏனாம் - இனி - வேணாம்!
வேறு
மூடப்பழக்கங்கள் முடைநாறிக் கிடந்த
பேதை தமிழினத்தின்
வேதனைகள் நீக்கவந்த
மேதை அவர்தானே பெரியார் - அவர்
மேன்மை உணராதார் அறியார்!

(26.10.2014 அன்று நடைபெற்ற தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தோம்பலில் பாடப்பட்ட கவிதை)

Read more: http://viduthalai.in/page-5/90387.html#ixzz3HpbTVX8e

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை உதயம் பெண்கள் சுதந்திரம்


சொத்து உரிமை: மைசூர் சமஸ்தானத்தில் பெண் மக்களுக்குச் சொத்து உரிமை அதாவது தகப்பன் சொத்தில் பெண்களும் பங்கு பெறவும், சொத்துக்களை வைத்து, சுதந்திரமாய் அனுபவிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள். கல்யாண ரத்து: பரோடா சமஸ்தானத்தில் ஆணும், பெண்ணும் கல்யாண ரத்து செய்து விலகிக் கொள்ள சட்டம் கொண்டுவர அனுமதிக்கப்பட்டாய் விட்டது.

அதாவது, தம்பதிகளில் ஆணோ, பெண்ணோ 7வருஷ காலம் இருக்குமிடம் தெரியாமல் பிரிந்து இருந்தாலும், வேறு மதத்தைத் தழுவிக் கொள்வதில் இஷ்டமில்லாவிட்டாலும், சன்னியாசியாகி விட்டாலும், 3 வருஷ காலம், ஒற்றுமை யின்றி சதா குடும்பத்தில் கண்டிப்பாயிருந்தாலும், வேண்டாம் என்று பிரிந்து போய்விட்டாலோ, குடியில் மூழ்கினவர்களாயிருந்தாலோ, சதா பிறர் மீது காதலுள் ளவர்களாக இருந்தாலோ ஆகிய காரணங்களால் துன்பப் படும் புருஷனோ, மனைவியோ தங்கள் விவாகங்களை சட்ட மூலம் ரத்து செய்து கொள்ளலாம்.

மற்றும் கல்யாணமாகும் சமயத்தில் தம்பதிகளில் யாராவது செவிடு, ஊமை, வியாதி, குருடு, பைத்தியம், ஆகியவைகள் இருந்ததாகவோ அல்லது மைனராக இருந்ததாகவோ தெரிய வந்தாலும், இஷ்டப்படாவதவர்கள் தன்னைக் கல்யாணப்பந்தத்தில் இருந்து விலக்கிக் கொள் ளலாம். இந்தப்படி விலக்கிக்கொண்ட 6 மாதம் பொறுத்து அவரவர்கள் இஷ்டப்படி வேறு கல்யாணம் செய்து கொள்ளலாம்.

மைசூரில் கல்யாண வயது

மைசூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு 14 வயது ஆனபிறகு தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர ஏற்பாடாயிருக்கிறது.

செங்கல்பட்டு தீர்மானங்களைப் பார்த்த கனவான்கள் - ஜஸ்டிஸ் பேப்பர் உள்பட சுயமரியாதை இயக்கம், மத சமூகத்தைக் கட்டுத்திட்டமில்லாமல் செய்கின்றது என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இப்போது இந்திய சமஸ்தானங்களைப் பார்த்தாவது புத்தி பெறுவார்கள் என்று கருதுகின்றோம். குடிஅரசு - செய்திக்கட்டுரை - 21.06.1931

Read more: http://viduthalai.in/page-7/90372.html#ixzz3HpcEf3Qo

தமிழ் ஓவியா said...

புதியமுறை சீர்திருத்த மணம்


சீர்திருத்தத் திருமணம் என்றும், சுயமரியாதைத் திருமணம் என்றும் சொல்லப்படுபவை எல்லாம் எனது கருத்துப்படி பழைய முறையில் உள்ள அதாவது தெய்வீக சம்பந்தம், சடங்கு, இருவருக்கும் சம உரிமையில்லாத கட்டுப்பாடு, நியாய வாழ்க்கைக்கு அவசியமில்லாத, இயற்கைத் தத்துவத்திற்கு முரணான நிபந்தனைகள் ஆகியவைகளில் இருந்து விடுபட்டு நடைபெறும் திருமணங்களேயாகும். சுயமரியாதை இயக்கத்திற்குப் பின் இத்திருமண விஷயத்தில் அநேகவித சீர்திருத்த மணங்கள் நடை பெற்றிருக்கின்றன. அதாவது பார்ப்பனப் புரோகிதமில்லாத அர்த்தமற்ற, அவசியமற்ற சடங்குகள் இல்லாத புரோகிதமேயில்லாத, ஒரே நாளில் ஒரே மணியில் நடைபெறக்கூடிய வீண் செலவு இல்லாத முதலிய மாதிரியிலும் மற்றும் கலப்பு மணங்களும், விதவை மணங்களும், குழந்தைகளுடன் விதவை மணங்களும், ஒரு கணவன் ஒரே காலத்தில் இரு பெண்களை வாழ்க்கைத் துணைவர்களாய் ஏற்றுக் கொண்ட மணங்களும், மனைவியைப் புருஷன் ரத்து செய்துவிட்டு வேறு பெண்ணை செய்து கொண்ட மணங்களும் மற்றும் கிறிஸ்துவ மதத்தில் ஒரு மனைவி ஏற்கனவே இருக்க அதைத் தள்ளிக் கொண்ட திருமணமும் மற்றும் பொட்டுக்கட்டி தாசித் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் பொட்டுகளை அறுத்துவிட்டுச் செய்து கொண்ட மணமும் இப்படியாகப் பலவித சீர்திருத்த மணங்கள் இதுவரை நடைபெற்று வந்திருக்கின்றன. ஆனால், இந்தத் திருமணம் என்பதானது இதுவரை நடந்த சீர்திருத்தத் திருமணங்களையெல்லாம்விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய மணமகளாகிய திருமதி. சுலோசனா ஏற்கனவே திருமணம் நடந்து அந்தம்மையினுடைய கணவனார் இப்பொழுது நல்ல நிலையிலும் உத்தியோகத்திலும் இருந்து கொண்டிருக்கிறார். அப்படியிருக்க இந்தம்மைக்கு இப்போது முதல் புருஷன் இருக்கவே அவரிடமிருந்து விலகி, இது இரண்டாவ தாகச் செய்துகொள்ளும் சீர்திருத்தத் திருமணமாகும். இந்தத் திருமணம் முதல் புருஷனுடைய சம்மதப்படியே நடைபெறுவதாகும். பெண்ணின் தகப்பனாரும் மற்ற நெருங்கிய பந்துக்களுடையவும் முழு சம்மதத்துடனேயே இது நடைபெறுகின்றது. பெண்ணின் தகப்பனார் இப்பொழுது 500,600ரூபாய் சம்பளத்தில் சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பதாக அறிகிறேன். பெண்ணின் தகப்பனார் பெண்ணுக்கு இந்த நகைகள் போட்டிருப்பதல்லாமல் இந்த மகாநாட்டுச் செலவு, கல்யாணச் செலவு, மற்ற செலவு ஆகியவைகள் அவராலேயே செய்யப்படுகிறது. பெண்ணின் சிறிய தகப்பனார் நேரில் இருந்து எல்லாக் காரியங்களையும் நடத்துகின்றார். அதனால்தான் இந்தத் திருமணம் இதுவரை நடந்த சீர்திருத்தத் திருமணங்களை யெல்லாம் விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்று சொன்னேன். மணமகன் திரு. பொன்னம்பலம் அவர்களைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அவர் சைவ வேளாளர் வகுப்பு என்பதைச் சேர்ந்தவராயிருந்தாலும் அவற்றையெல்லாம் அடியோடு ஒழித்து எவ்வித ஜாதிமத பேதமில்லாமல் சகலத்திற்கும் துணிந்து சுயமரியாதைத் தொண்டாற்றிவருபவர். பெண் ஸ்ரீ வைணவ என்று சொல்லப்படுவதும் சாத்தாதார் என்று சொல்லப்படுவதுமான வகுப்பைச் சேர்ந்திருந்தவர். அவற்றை யெல்லாம் அடியோடு விட்டுவிட்டதுடன், இத்திருமணவிஷயத்தில் அப்பெண்ணுக்கு வேறு யார் யாரோ எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து பெரும் பழிகள் கூறி, அதன் புத்தியைக் கலைத்தும் அதற்கெல்லாம் முற்றிலும் ஏமாறாமல் தைரியமாய் இருந்து இத்திருமணத்திற்கு இசைந்தனர். ஆகவே, இத்திருமணமானது நாம் விவாக முறையில் என்னென்ன விதமான கொள்கைகளை நமது இயக்கத்தின் மூலமாக பிரச்சாரம் செய்கின்றோமோ அவைகளில் முக்கியமானதொன்றென்றும், ஆண் பெண் விவாக விஷயத்தில் ஏற்படும் சீர்திருத்தமே நமது நாட்டை ஏன் உலகத்தையே சமதர்ம மக்களாகச் செய்யக்கூடிய ஒரு முக்கியக் கருவியாக இருக்கும் என்றும் கருதுகிறேன்.

(24.5.1931இல் நடைபெற்ற திருவாளர் பொன்னம்பலனார் - சுலோசனா மணவிழாவில் ஆற்றிய உரை)
குடிஅரசு சொற்பொழிவு 31.05.1931

Read more: http://viduthalai.in/page-7/90373.html#ixzz3HpcOTsxT

தமிழ் ஓவியா said...

இந்து மதம்


இந்து மதம், இஸ்லாமானவர்களுக்கும், கிறிஸ்தவர் களுக்கும் கொள்கையில் எவ்வளவு கெடுதியோ அதைவிடப் பல மடங்கான கெடுதிகளை பார்ப்பனரல்லாத மக்களுக்கு காரியத்தில் விளைவிக்கின்றது. அதைவிடப் பன்மடங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விளைவிக்கின்றது. இஸ்லாம் ஆனவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இந்து மதத்தால் யாதொரு கெடுதியும் இல்லை என்று சொல்லலாம். இஸ்லாமியரையும், கிறிஸ்தவரையும். இந்துக்கள் வேறாகக் கருதுகின்றார்கள். தங்கள் சமுகத்திற்கு எதிராய் கருதுகின்றார்கள் என்பதைத் தவிர வேறில்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பயனாய் அவர்கள் பார்ப்பனரொழிந்த இந்துக்களைவிட சற்று அதிகமாக நிலையில் லாபமே அடைந்திருக்கிறார்கள். ஆனால், இந்துமதம் காரணமாக பார்ப்பனரல்லாதாரும் தீண்டா தாரும் இழிவாய் நடத்தப்படுவதுடன் சுயமரியாதை இல்லாத முறையிலும், சுதந்திரமில்லாமலும் நடத்தப்படு கிறார்கள். மேலும் இவர்களைப் பார்ப்பனர்கள் அடிமை யாக்கிக் கொண்டும், இவர்களது கஷ்டத்தின் பயன்களை அனுபவித்துக் கொண்டும் இவர்களை (பார்ப்பனரல்லா தாரையும், தீண்டாதாரையும்) தலையெடுக்கச் செய்யாமலும் செய்து வருகிறார்கள். இந்து மதம் என்பதாக ஒன்று இருப்பது இஸ்லாமான வர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் மற்றொரு விதத்தில் லாபகரமான தென்றே சொல்லலாம். எப்படியெனில் மேற்கண்ட இரண்டு மதமும் இரண்டு சமுக எண்ணிக் கையிலும் பெருக்க மேற்படுவதற்கு இந்து மதமே காரண மாயிருக்கின்றது. இந்தியாவில் இந்து மதமில்லாமல் வேறு புத்த மதம், கிறிஸ்து மதம் ஆகியவை இருந்திருந்தால் இஸ்லாம் மதம் சமுக எண்ணிக்கை இவ்வளவு பெருகி இருக்காது. அதுபோலவே, வேறு மதங்கள் இருந்திருந்தால் கிறிஸ்து மத சமுக எண்ணிகையும் இவ்வளவு பெருகி இருக்காது. ஆகவே அவ்விஷயத்தில் இந்து மதம் இருப்பது முஸ்லீம், கிறிஸ்தவ மதங்களுக்கு லாபமேயாகும். ஆகையால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டியதென்பது இந்திய பார்ப்ப னரல்லாத மக்களுக்கும், அவர்களில் தீண்டப்படாதார் என்கின்ற மக்களுக்கும் தான் மிகவும் அவசியமானது என்று சொல்லுவோம். இதோடு ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கூட சமத்துவமும், பொது உடைமை தத்துவமும் ஏற்பட வேண்டுமானால் முதலில் இந்து மதம் ஒழிய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07.06.1931

Read more: http://viduthalai.in/page-7/90374.html#ixzz3HpcWHW5d

தமிழ் ஓவியா said...

'பெரியார் என்பது வெறும் பெயரல்ல.இந்தியாவில் உள்ள ஏழை,எளிய அடித்தட்டு மக்கள்,கல்வியில் உயர்ந்து நிற்பதற்குக் காரணமாக இருந்த மகத்தான சக்தி அது.

இப்போது சாதி மத பேதமில்லாமல் அருகருகே உட்கார்ந்து நாம் கல்வி கற்கிறோம்.அதற்கு தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கார் போன்றவர்களின் மகத்தான தியாகமும்தான் காரணம்.''

- எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் (ஜூனியர் விகடன் 29.10.14.பக்.20.)

தமிழ் ஓவியா said...

நிருபர் : பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் பற்றிய தங்கள் கருத்தென்ன?
அண்ணா .: இங்குள்ள பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினை வேறு. வடநாட்டிலுள்ள இந்து முஸ்லீம் விஷயம் வேறு. பார்ப்பனர் தங்களை உயர்ந்தவர் என்று கருதுகிறார்கள். சமுதாயத்தில் அவர்கள் செல்வாக்கு அதிகம். ஆகவே, அரசியலிலும் பொருளாதாரத்திலும் அவர்களுக்கே செல்வாக்கு இருக்கிறது.

நிருபர் : இந்தப் பிரச்சினை தீர வழி இல்லையா?
அண்ணா .: இன்னும் ஐந்து ஆண்டுகளில் தீர்ந்துவிடலாம்.

நிருபர் : அதெப்படி? அவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள்.
அண்ணா .: இது எங்கள் ஆசையைக் காட்டுகிறது. இப்போதே முக்கியப் பார்ப்பனத் தலைவர்கள் இப்பிரச்சினை முடிவு காட்டப்படவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

நிருபர் : பார்ப்பனத் தலைவர்கள் இங்குள்ள இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயலவில்லையா?
அண்ணா .: முயன்றிருந்தால் பிரச்சினை வெகு சீக்கிரம் முடிந்திருக்கும். உதாரணத்துக்குச் சொல்கிறேன். இந்த 1950 -ல் கூட, எங்களால் பார்ப்பனர் வசிக்கும் அக்கிரகாரத்தில் ஒரு வீடு வாங்க முடியாது. அது மட்டுமல்ல, கோயிலிருக்கிறது. அங்கு எங்களால் பூசை முதலாய காரியங்களை அவர்கள் மூலந்தான் செய்ய வேண்டியிருக்கிறது. எங்களால் செய்ய முடிவதில்லை. அதேபோலத்தான் எங்கள் சடங்குகளும்.

நிருபர் : ஐரோப்பாவில்கூட மதகுருமார் இருக்கத்தான் செய்கிறார்கள்!
அண்ணா .: அங்கு யாரும் மதகுருவாகலாம். அதேபோல இங்கு நான் விரும்பினால் அப்துல் லத்தீப் ஆகிவிடலாம். ஆனால் அனந்தாச்சாரி ஆக முடியாது. எவ்வளவு வேதசாத்திரங்களைக் கற்றாலும், இங்கு நான் புரோகிதர் ஆக முடியாது.

நிருபர் : மனிதாபிமானம் நிறைந்தோர் இக் கொடுமைகள் ஒழிய வேண்டும் என்றே விரும்புவர். சமுதாய நீதி கிடைக்கவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு மகாத்மா காந்தியின் தத்துவமே போதுமே! பிரிவினயா கேட்க வேண்டும்.

அண்ணா .: காந்தியார் நல்ல தத்துவம் தந்தார். ஆனால், இங்குள்ளோர் தங்களுக்கேற்ற வகையில் அதைத் திரி்த்துக் கொண்டனரே!
இராம ராஜ்யமாக நாடு இருக்கவேண்டும், அது நல்ல நாடாக இருக்கவேண்டும என்னும் பொருளில் சொன்னார். ஆனால், அதைப் பரப்பும் வசதி கொண்டவர்களோ இராம இராஜ்யம் என்றால், இந்து ராஜ்யம், அதாவது வருணாசிரம தர்மம் இருக்கவேண்டும், நாலு சாதிகள் இருக்கவேண்டும் என்றல்லவா திரித்துப் பேசுகிறார்கள்.

காந்தியார் தங்கத்தைத் தந்தார். ஆனால், அதைத் தங்கள் இஷ்டத்திற்கேற்றவாறு நகைகளாகச் செய்துகொண்டனர் அவரது சகாக்கள். ஆனால், இங்குள்ளோரோ அதைக் கொண்டு விலங்கைச் செய்து எங்கள் கைகளில் அல்லவா பூட்டி இருக்கிறார்கள்.

- இந்தி நல்லெண்ணக் குழுவினருக்கு அறிஞர் அண்ணா
அளித்த பேட்டியிலிருந்து ( 11 - 10 1950 )

தமிழ் ஓவியா said...

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி

கலைவாணரும், பழைய சோறும்…!
...........................................................

ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும்… முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன், “என்னங்க… மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா..? பழைய சோறு சாப்பிடுறீங்க..!”

கலைவாணர் எதுவும் பேசாமால், வேலைக்காரரைக் கூப்பிட்டு,

“இந்தா… இந்த ஒரு ரூபாய்க்கு… பழைய சோறு வாங்கிட்டு வா…” என்றார்.

ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர்,

“ஐயா… நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன். ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல..” என்றார்.

“கேட்டீங்களா நடராசன்…

எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்…

அதனால்தான் இதை சாப்பிட்டேன்!” என்று கலைவாணர்

சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி…

மதுரமும் அசந்து விட்டார்.