Search This Blog

4.10.14

இதுதான் வால்மீகி இராமாயணம் -32

இதுதான் வால்மீகி இராமாயணம்

எட்டாம் அத்தியாயம் தொடர்ச்சி


கம்பர் பின்னர் வசிட்டன் மன்னவையடைந்து, அங்கே கூடியிருந்தவரிடம் நிகழ்ந்தது கூறிய தாகவும், அதைக்கேட்டவர் யாவரும் அழு தரற்றினரெனவும், அதைக்கேட்டு இலக் குவன் துடிதுடித்து வந்தானெனவும், அவனுடைய கோபத்தை அவன் நாணொலியாலறிந்த இராமன் சுமத்திரை வீட்டிலிருந்து வந்து தணித்ததாகவும் எழுதுகிறார். இவ்வரலாறும் வால்மீகிக்கு முற்றிலும் மாறுபட்டதே. வசிட்டன் கைகேயியை இகழ்ந்தது இராமன் முன்னி லையில் என்று அவன் காடேகும் சமயத்தில் கூறுகிறார். மேலும் இலக்குவன் - இராமனை விட்டுப் பிரியாமல் கைகேயியரண்மனையடைந்ததும், பின் கோசலை வீடடைந்ததும், அங்கே தசரதனைச் சினந்துரைத்ததும், இராமன் அவனையும் கோசலை யையும் தேற்றியதும், பின் அவனுடனேயே சீதையிடம் சென்றதுமாகிய வால்மீகி கூறும் வரலாறெல்லாம் முன்னரே தெளிவாகக் கண்டோம். இவ்வுண்மைகளுக்கு மாறாகக் கம்பர் இராமன் இலக்குவனைச் சினந்து நின்றபோது கண்டதாகக்கூறுகிறார். நாம் மேலே ஆராய்ந்துள்ள இலக்குவனுடைய இழிகுணத்தைக் காட்டும் பேராசைப் பேச்சுகளையெல்லாம் கம்பர் மறைத்தார். ஏனெனில் அவனை நல்லவனாகக் காட்ட வேண்டியே. வால்மீகி பெரும்பாலும் தசரதனையே இலக்குவன் சினந்துரைத்த தாகக் கூறக் கம்பர், கைகேயியையே பெரும்பாலும் 

சினந்துரைப்பதாகக் கூறுகிறார். மேலும் கம்பர்,
சிங்கக்குருளைக்கிடு தீஞ்சுவையூனை நாயின்
வெங்கண்சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே

என்று இலக்குவன் கூறுவதாகக் கூறுகிறார். இவ்வுவமையில், தீஞ்சுவையூன் போன்றது அரசாட்சி. அது சிங்கக்குட்டி போன்ற இராமனுக்கே உரியது. அதை நாய்க்குட்டி போன்ற பரதனுக்குக் கைகேயி கொடுக்க விரும்பினாள் என்பது விளங்குகிறது. அரசாட்சியை ஊனென்றது மிகவும் இழிவான உவமை.
பின் இராமனும் இலக்குவனும் சுமித்திரையைக் கண்டு அவள் நன்மதி கேட்டதாகக் கூறுகிறார். இது முற்றிலும் மாறுபட்டதே. இராமன் சுமத்திரையைக் காணவே இல்லை. கடைசியாகக் காடேகும்போது கண்டும் தனித்து வணங்கவில்லை என்று வால்மீகி கூறுகிறார். சுமித்திரை இச்சமயம் இலக்குவனுக்குக் கூறும் நன்மதிகளையெல்லாம் இராமன் காடேகும் சமயம் அவள் தசரதன் முன்னிலையிற் கூறியதாக வால்மீகி கூறுகிறார். சுமித்திரையிடமிருக்கும்போது, கைகேயியனுப்பிய மரவுரிகள் இராமனுக்கு வருகின்றன என்று கம்பர் கூறுகிறார். ஆனால் வால்மீகியோ தசரதனிடம் வழியனுப்பப் போனபோது, இராமனே கைகேயியிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறான் என்று கூறுகிறார். இவையெல்லாம் பின்னர் விவரமாக ஆராயப்படும்.


இருவரும் சீதையைப் பார்க்கப் புறப்பட்டபோது, இலக்குவனும் மரவுரியுடுத்தமை கண்டு இராமன் தடுக்கத் தானும் கானகம் வரப்போவதால் தடுக்கக்கூடாதென இலக்குவன் கூற இராமனும் இசைகிறான். இது கம்பர் கூற்று. வால்மீகி சீதையை அழைத்தேக இசைந்த பின்னர் இது நிகழ்ந்ததாகக் கூறுகிறார்.


அச்சமயம் வசிட்டமுனி வந்து தோன்றி இராமனைக் காடேகாதிருக்கக் கூறியதாகவும், அதற்கு இராமன் இசையவில்லையென்றும், பின் முனிவன் அரசனிருந் தவிடம் சென்றனனென்று கம்பர் கூறுகிறார். இவை யெல்லாம் வால்கீமி கூறாததே.

பின் இராமன் இலக்குவனுடன் வீதிவழியே சென்றதாகவும், நகரத்தார் பலரும் அதுகண்டு புலம்பினரெனவும், பின்னர் இராமன் சீதையையடைந்து உண்மை கூறியதாகவும், சீதை அவன் தன்னைப் பிரிவானெனவருந்தி உள்ளே போய் மரவுரியுடுத்து வந்தாளெனவும், அதைக்கண்ட இராமன் எனக்கு எல்லையில்லாத துயர்தருவாய் என்றானென்றும், அதுகேட்ட சீதை, என்னைக் கூடியிருத்தலாலுண்டாகும் துயரம் என்னைப் பிரிவதால் இன்பமாமோ என்று சீறினாளென்றும், அதன்பின் இராமன் ஒன்றும் பேசாமல் அவளை அழைத்தேக இசைந்தானெனவும் கம்பர் கூற்றுப் பொருந்தாது மாறுபடுகின்றது. மேலும் சீதை இராமனைப் பற்றி மிகவும் கேவலமாகப் பேசிய பேச்சையெல்லாம் வால்மீகி விவரமாகக் கூறியிருக்க, அவற்றையெல்லாம் கம்பர் மறைத்துவிட்டு மேலே கூறிய ஒரே வார்த்தையே கூறினளெனக் கூறுகிறார். இது சீதையையும் இராமனையும் மிகவும் நல்லவர்களாகவும் ஒழுக்கமுடையவராகவும் உலகத்துக்குக் காட்டி ஏமாற்றப்போலும்.

ஒன்பதாம் அத்தியாயம் இராமனும், இலக்குவனும், சீதையும் வீதி வழியே போவதைப் பார்த்த குடிமக்கள், அய்யோ! இராமன் வெளியில் புறப்படும்போது நால்வகைச் சேனையும் பின் போமே. இன்று ஒருவருமில்லையே. இராமன் காடேகி னால் நாமனைவரும் கூடவே போவோம். காடு நாடாகும், இவ்வயோத்தி காடாகும் என்று வருந்தினர். அரண் மனை வாயிலையடைந்தவுடன், அங்கே நின்ற சுமந்திரனை இராமன் பார்த்து. உள்ளே போய் அரசரி டத்தில் நாங்கள் விடைபெற்றுப்போக வந்திருக்கிறோ மென்று சொல்லும் எனச் சொல்லியனுப்பி வெளியே நின்றான். சுமந்திரன் சென்று தெரிவிக்கத் தசரதன், என் மனைவியரை விரைவில் வரும்படிச் சொல். என் மகனை நான் அவர்களால் சூழப்பட்டவனாகப் பார்க்க விரும்புகிறேனென்று கட்டளை யிட்டான். சுமந்திரன் அவ்வாறே சென்றுகூற, அரசனுடைய முந்நூற்றைம்பது மனைவியரும் கோசலையை முன்னிட்டுக் கொண்டு துக்க மிகுதியோடு வந்து சேர்ந்தார்கள். அதைக்கண்ட தசரதன், சுமந்திரா! என் மகனை அழைத்து வா என்றான். சுமந்திரன் வெளியிற்போய் இராமனை அழைத்து வந்தான். அவனைத் தூரத்திலேயே பார்த்த தசரதன் திடீரென்று தாவி எதிர்கொண்டு தழுவப் போனான். அவன் மனைவியரும் அவனைப் பின் தொடர்ந்தார்கள். அரசனோ, கண்ணீரால் கண்கள் மறைந்து இராமனிருக்கு மிடத்தைக் காணாது கொஞ்ச தூரத்திலேயே பார்த்த தசரதன் திடீரென்று தாவி எதிர்கொண்டு தழுவப் போனான். அவன் மனைவியரும் அவனைப் பின் தொடர்ந்தார்கள். அரசனோ, கண்ணீரால் கண்கள் மறைந்து இராமனிருக்குமிடத்தைக் காணாது கொஞ்ச தூரத்திலேயே மூச்சற்றுக்கீழே விழுந்தான்.


உடனே இராமனும் இலக்குவனும் தாவிப் பாய்ந்து அவனைத் தாங்கிக் கட்டிலில் கிடத்தினார்கள். பெண்கள் கதறினர். தசரதனுக்கு அறிவு வந்தவுடன், இராமன் தங்களுக்கு விடைதர வேண்டினன். அது கேட்ட மன்னன், இராம! நான் கைகேயிக்கு வரங்களைக் கொடுத்து அவளால் ஏமாற்றப்பட்டேன். ஆகையால் நான் செய்வது ஒன்றும் நியாயமில்லை. என் அறிவு என்னிடமில்லை. ஆதலின், இப்போது நீ என்னை விலக்கி இந்த நாட்டுக்கு அரசனாக இரு என்றான். இராமன், நீரே நெடுநாள் ஆளும்; நான் காடேகி மீள்வேன் என்றான். தசரதனைக் கைகேயி, இராமனை இப்போதே காட்டிற்கனுப்பும் என்று ஒரு பக்கத்தில் அந்தரங்கமாக வற்புறுத்திக் கொண்டிருந்தாள். அதனால், தசரதன் இராமா போய் வா; நீ நீடுழி வாழ்க. ஆனால் இன்று இரவு நீ புறப்படுவதில் எனக்குக் கொஞ்சமேனும் பிரியமில்லை. நீ போகவே கூடாது. உன்னை ஓர் இரவு முழுவதும் பார்க்கும் நன்மையாவது எனக்குக் கிடைக்குமல்லா? இது நான் விரும்பிச் செய்ததன்று; கைகேயி என்னை ஏமாற்றிவிட்டாள் என்றான்.


இராமன், எனக்கு இந்த அரசில் விருப்பமொன்று மில்லை. ஆதலின் நான் இப்போதே காடேக வேண்டும்; வாக்குறுதியை நிறைவேற்றுவதே சிறந்தது. பரதனுக்கு இப்போதே இந்த அரசைக் கொடும் என்றான். தசரதன் இராமனைக் கட்டியணைத்துக் கீழே சாய்ந்தான்.


அப்போது சுமந்திரன், கைகேயியிடத்தில் தசரத னுக்குக் கொஞ்சமும் அன்பில்லையென்பதைத் தெரிந்து கெண்டு, அடீ, பாதகி! உன் கணவன் பேச்சைக் கேட்காமல் இராமனைக் காட்டுக்கனுப்புகிறாயா? உன்னை வசிட்டர் முதலியவர்கள் அழிக்காமலிருப்பது என்ன விந்தை? உன் தாலைப்போல நீயும் வந்துவிட்டாய். ஒரு கந்தர்வனிடமிருந்து பிராணிகள் பேச்சையறியும் திறமையைப் பெற்ற உன் தந்தை, ஒரு சமயம் எறும்புகள் பேச்சைக்கேட்டு நகைக்க, அதன் காரணத்தை உன் தாய் கேட்க, உண்மையைக் கூறினால் தன் தலை வெடித்துவிடுமென உன் தந்தை கூற,  தலை வெடித்தாலும் சரி; உண்மையைக் கூறுமென உன்தாய் கூறியவள்தானே?அவ்வளவு கெட்டவளுடைய மகளா கையால் நீயுமிவ்வாறு நடந்தாய் போலும். உனக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு இராமனுக்கு அரசைக்கொடு என்று கடிந்துரைத்தான். இதனால் கைகேசிக்குக் கோபம் அதிகம் பட்டது. தசரதன், சுமந்திரா! நமது நால்வகைச் சேனைகளும், அழகாலும், பேச்சாலும் மனத்தைக் கவரும் வேசைகளும், வணிகர் களும், இராமனனுடன் போகட்டும். நமது தானியக் களஞ்சியம் பணக்களஞ்சியம் யாவும் அவனுடன் போகட்டும். அவளுடன் துணை போகிறவர்களுக்கு வேண்டும் பொருள்களெல்லாம் கொடுக்கப்படட்டும். பரதன் அயோத்தியில் ஆளட்டும், நான் இப்பொழுது சொன்ன ஏற்பாடுகளுடன் காடேகட்டும் என்றான். அதைக்கேட்டுக் கைகேயிக்குப் பெரும் பயம் பிடித்தது. அவள் ஓ, மகா யோக்கியரே! இந்த நாட்டிலுள்ள குடிகள், தனதானிய சேனைகள் எல்லாவற்றையும் இராமனுடன் அனுப்பிவிட்டு ஒன்றுமற்ற நாட்டைய பரதனுக்குக் கொடுக்கப்போகிறீர்? இந்தத் தானம் வேண்டா மென்றாள். தசரதன், சேனை, செல்வம் இவற்றை யெல்லாம் அனுப்பக் கூடாதென்று முன்னரே கேட்க மறந்துவிட்டு இப்போது குறுக்கே விழுந்து தடுத்தால் ஆகவேண்டிய காரியம் நிற்குமா? என்றான்.


                                     ---------------------- தொடரும்--”விடுதலை” 4-10-2014

52 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

செவ்வாய் கிரகம்

செவ்வாய்க் கிழமைக் குத் தனிச் சிறப்பு உண்டு. செவ்வாய்க்கிழமையும் தேய்பிறை சதுர்த்தி திதியும் சேர்ந்தால் அது சாபங் களைத் தொலைக்கும் நன்னாளாக அமையும் என்கிறது ஓர் இதழ்.

இது உண்மையானால் செவ்வாயில் கல்யாணம் முதலிய நல்ல காரியங் களைச் செய்யத் தயங்கு வது ஏனோ?

Read more: http://viduthalai.in/e-paper/88627.html#ixzz3F8MpBPwO

தமிழ் ஓவியா said...

பெண்கள் உடை:
சர்ச்சையில் சிக்கிய யேசுதாஸ்!

திருவனந்தபுரம், அக்.3- பெண்கள் ஜீன்ஸ் அணி வது குறித்து பிரபல பாடகர் யேசுதாஸ் தெரி வித்த கருத்து பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியுள் ளது. கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி ஏற் பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாசா ரத்திற்கு எதிரானது என்றார். பெண்கள் ஜீன்ஸ் அணிவதன் மூலம் மற்றவர்களுக்கு தொந் தரவு ஏற்படுத்தக் கூடாது என்றும் யேசுதாஸ் கூறி யுள்ளார். எளிமை மற்றும் உயர் பண்புகளை கொண்ட இந்தியாவின் கலாசாரம், ஜீன்ஸ் அணி வதன் மூலம் சீர்கெடுவ தாகவும் யேசுதாஸ் தெரி வித்தார். யேசுதாஸின் இந்த கருத்துகளுக்கு கேரள மகிளா காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. இதனை கண் டித்து திருவனந்தபுரத்தில் பேரணியும் நடைபெற்றது. யேசுதாஸின் கருத்துகள் ஏற்கதக்கதல்ல என்றும், பெண்களின் சுதந்திரத் திற்கு எதிரான என்றும் மகிளா காங்கிரஸ் தலை வர் பிந்து கிருஷ்ணா கூறியுள்ளார். அனைத்து இந்தியர்களாலும் மதிக்கப் படும் ஒரு பாடகர் பெண் களின் உடை குறித்து இவ்வாறு கருத்து கூறுவது வருந்தத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/88626.html#ixzz3F8N7BBpT

தமிழ் ஓவியா said...

கருநாடக முதல்வரின் கருத்தாழமான குரல்!

கருநாடக மாநில முதல் அமைச்சர் சித்தராமையா மங்களூருவில் அறிவியல் மய்யத்தைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரை சிறப்பானது; வரவேற்கத்தக்கதாகும்.

மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மோசடிப் பேர்வழிகள், இப்போதும் இருப்பது வருந்தத்தக்கது. மத்திய அரசு, அரசியல் சட்டம், 51இல், திருத்தம் கொண்டு வந்து, விதிமுறைகளைச் சேர்த்துள்ளது. இதன்படி, மூடநம்பிக்கை, மாய மந்திரங்கள் செய்வது சட்டப்படி குற்றம். ஆனால், இந்த சட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை. இன்றைய சமுதாயம், விஞ்ஞான ரீதியில், வளர்ச்சியடையவில்லை. செவ்வாய் கோளுக்கு, ராக்கெட் அனுப்பும், இந்த சூழ்நிலையிலும் கூட, மூட நம்பிக்கை அதிகரிக்கிறது.

பாவம், புண்ணியம் என்று எதுவுமில்லை. 'உண்மையே சொர்க்கம். பொய்யே நரகம்' என, பசவண்ணர் தெரிவித் துள்ளார். பாவம், புண்ணியம் என்று எதுவும் கிடையாது. மக்கள், இது போன்ற மூட நம்பிக்கைகளிலிருந்து, வெளியே வர வேண்டும்.

மத்திய அரசு, 50 சதவீத நிதியுதவியில், ஏற்கெனவே, மைசூருவில், மாநில அறிவியல் மய்யம் துவங்கப்பட் டுள்ளது. தற்போது,மங்களூருவில், இம்மய்யம் துவங்கப் படுகிறது. புதிதாக, 10 மாவட்டங்களிலும், மாநில அறிவியல் மய்யத்தை துவங்க, மத்திய அரசிடம் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை அங்கீகரிக்க வேண்டும். தட்சிண கன்னடா மாவட்டத்தில், நூறு சதவீதம் அளவு, படித்தவர்கள் உள்ளனர். ஆனால், இங்கு, மூட நம்பிக்கை இன்னும் உயிருடன் இருக்கிறது. கல்வியுடன் சேர்த்து, விஞ்ஞான உணர்வும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு, கருநாடக முதல் அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் அண்ணா கலைஞர் போன்றவர்கள் இப்படிக் கூறியிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இன்னொரு மாநிலத்தில் இப்படியொரு பெரியார் குரல் ஒலித்திருப்பதுதான் மிக முக்கியமானது. சில மாதங் களுக்கு முன் ஒரு கதை கிளப்பி விடப்பட்டது. கரு நாடகாவில் சாம்ராட் நகருக்குச் சென்று வந்தால் அந்த முதல் அமைச்சரின் பதவி காலாவதியாகி விடும் என்று ஒரு கதையைக் கட்டிப் பறக்க விட்டனர். பகுத்தறி வாளரான முதல் அமைச்சர் சித்தாராமையா அவர்களோ அஞ்சாது அந்த சாம்ராட் நகருக்குக் கம்பீரமாகச் சென்று திரும்பி வந்தார் - வெற்றி நடை போட்டு சென்று கொண் டுள்ளார். அண்மையில் அம்மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில்கூட வெற்றியைக் குவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு இடை இடையே பெரியார் பெயரையும் உச்சரித்துக் கொண்டிருக்கும் ஆட்சி - மூடநம்பிக்கையின் மொத்த உருவமாக நடைபெற்று வருவதைப் பார்க்கும் பொழுது கருநாடக முதல்வரின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் போற்றத்தக்கவைகளாகவே உள்ளன! தந்தைபெரியார் அவர்கள் இன்றைக்கு 46 ஆண்டு களுக்கு முன் விடுதலை ஏட்டில் (18.5.1968) வெளி யிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் இங்கே மூடநம்பிக்கை ஒழிப்பு இலாகா என ஒன்றை உண்டாக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்தியாவைப் பொறுத்தவரை மூடநம்பிக்கை ஒழிப்புத் துறை ஒன்றை மகாராட்டிர மாநிலம்தான் நிறைவேற்றி யுள்ளது (20.9.2013). அம்மாநிலத்தில் நரேந்திர தபோல்கர் 1998இல் ஓர் அமைப்பை நிறுவினார். அந்த ஷரத்தா நிர்மூலன் சமிதி (மராத்திய மூடநம்பிக்கைகளுக்கு எதிரான குழு) ஒன்றை உருவாக்கி, மக்கள் மத்தியில் வேர் பிடித்துத் கூத்தாடும் பில்லி, சூன்யம் உள்ளிட்ட சாமியார் களின் நடவடிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வந்தார். பரிவர்த்தனா என்ற ஒரு மய்யத்தையும் தொடங்கினார். சாதனா என்ற வார இதழையும் நடத்தியவர் அவர்.

அவரின் இந்த மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிக்கு எதிரான பிற்போக்கு இந்துத்துவா சக்திகள் அவரைச் சுட்டுக் கொன்று தனது கோர முகத்தை வெளிப்படுத்திக் கொண்டன.

தமிழ் ஓவியா said...

அதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் மூடநம்பிக் கைகளுக்கு எதிராக சட்டம் ஒன்று இயற்றப்பட்டு பில்லி, சூனியம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவோர்மீது ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் சட்டம் இயற்றப் பட்டது (Maharashtra Act No xxx of 2013)
மகாராட்டிர மாநிலம் நிறைவேற்றிய இது போனற சட்டத்தை மற்ற மற்ற மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டாமா?

இன்னும் சொல்லப் போனால் இப்படியொரு சட்டத்தை மத்திய அரசே கொண்டு வந்து வழிகாட்ட வேண்டும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதியில் (51A(h)).

விஞ்ஞான ரீதியான அணுகுமுறை, மனிதாபிமானம் மற்றும் ஆராய்வு, ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையாகும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதே!

இதனை வலியுறுத்தும் வகையில், இந்த நோக் கத்தையும் செயல்படுத்தும் தன்மையில் விரிவான தனி சட்டம் - ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால், மக்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லவா!

இப்பொழுது மத்தியில் உள்ள ஆட்சியோ அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள இந்தப் பகுதியைக் கருப்படித்து விடக் கூடிய மனப்பான்மை கொண்டது தான்; மக்கள் நலத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ராமன் பாலம் என்ற கற்பனைக் கதையைக் கட்டிவிட்டு முடக்கி வருகிறதே இன்றைய மத்திய அரசு! ஆம், ஆம் என்று தமிழ்நாட்டை ஆளும் அ.இ.அ.தி.மு.க. அரசும் அதற்கு தாளமும் போட்டு, ஒத்தும் ஊதுகிறதே!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படும் அந்த விஞ்ஞான மனப்பான்மை என்பது ஒவ்வொரு குடி மகனின் உள்ளத்தில் குடிபுகுவது அப்புறம் இருக்கட்டும்; அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதை முதலில் அரசு கடைப்பிடிக்க வேண்டாமா?

அந்த வகையில் கருநாடக முதல் அமைச்சர் சித்தராமையா அவர்கள் கூறியுள்ள கருத்து மிகவும் முக்கியமானதாகும். மக்களிடத்தில் விஞ்ஞான மனப் பான்மை பகுத்தறிவு நோக்கு இல்லையென்றால் என்னதான் பொருளாதாரம் வளர்ந்தாலும் யதார்த்தமான வாழ்வைத் தொலைத்து விட்டவர்கள் ஆக மாட்டார்களா?

உழைத்துச் சம்பாதித்த பணத்தைக் கோயில் உண்டி யலில் கொட்டுவதும், அதனை வைத்து உழைக்காத ஒரு கும்பல் சுரண்டிப் பிழைப்பதும் அனுமதிக்கத் தக்கது தானா?
கடன் வாங்கியும் வெளியூர் கோயில்களுக்குச் சென்று நேர்த்திக் கடன்களைச் செய்வது, தங்கத்தினால் கண் ணடக்கம் செய்விப்பது என்பதெல்லாம் காலக்கேடும், பொருள் கேடும் அல்லவா!

மற்ற நாடுகளைவிட இந்தியாவுக்கு மூடநம்பிக்கை ஒழிப்புத்துறை என்பது அரசு மட்டத்தில் அவசியம் தேவையே!

Read more: http://viduthalai.in/page-2/88654.html#ixzz3F8Nt423I

தமிழ் ஓவியா said...

சிங்கப்பூர் நாட்டின் தமிழ்ப் புதையல்கள் (2)


தமிழர்களில் ஆற்றலும் அறிவுக் கூர்மையும், அனுபவங்களின் கட லாகவும் இருந்த இருபெரும் தமிழர்கள் ஒரே நேரத்தில் இரு நாடுகளின் குடிஅரசுத் தலைவர்களாக இருந்து, திறம்பட தமது ஆளுமைகளை சிறப் பாகச் செய்து வரலாறு படைத்தார்கள்.

இந்தியத் திருநாட்டின் குடிஅரசுத் தலைவர் மதிப்பிற்குரிய ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள்; அதுபோல சிங்கப்பூர் குடிஅரசின் தலைவராக - அதிபராக இருந்த மதிப்பிற்குரிய திரு. எஸ்.ஆர். நாதன் அவர்கள் ஆவார்கள்.

1924 ஜூலை 3ஆம் தேதி சிங்கப்பூரில் பிறந்தவர்; இவரது இள வயதில் குடும்பத்துடன் மலேசியா நாட்டுப் பகுதியான ஜோகூர் மாநிலத்தின் மூவாரில் வசித்த குடும்பத்தவர்களாக இருந்தவர்கள் -

அவரது தன் வரலாறு ஆங்கி லத்தில் ‘An Unexpected Journey path of Presidency’ என்ற தலைப்பிட்டு சில ஆண்டுகளுக்கு முன்பே வெளி வந்தது - அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு.

அப்போதே அதைப் படித்து மகிழ்ந்தேன் இப்போது அதே சுய சரிதை ‘(Autobiography) ‘ உழைப்பின் உயர்வு என்ற தலைப்பில் திருவாளர் ஆர். பழனியப்பன் அவர்களால் தமிழாக்கப்பட்டு, 678 பக்கங்களில் மிக அருமையான கண் - கருத்து - கவர் பதிப்பாக, சிங்கப்பூரின் பாரம்பரியம் மிக்க தமிழ் நாளேடான (ஆசிரியர் தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களால் துவக்கப்பட்டு, சுமார் 80 ஆண்டுகளைக் கடந்து வரும்) தமிழ்முரசு வெளியீட்டகம் சார்பாக சில வாரங்களுக்கு முன் வெளியி டப்பட்டுள்ளது.

என்னிடம் அன்பு பூண்ட மேனாள் அதிபர் பெருந்தகையாளர் (தற் போதைய பேராசிரியர்) அவர்கள், நண்பர் இலியாஸ் மூலமாக எனக்குக் கையொப்பமிட்டு அந்நூலை அனுப்பி வைத்தார்! அவரது அன்பிற்கும், பண் பிற்கும் எப்படித்தான் நன்றி சொல் வதோ! - தெரியவில்லை!

பெரியார் - மணியம்மைப் பல் கலைக் கழகத்தின் பணிகளை கேட்டு, படித்து, பாராட்டியவர் சிங்கப்பூர் மேனாள் அதிபர் அவர்கள்.

தமிழ் ஓவியா said...

எந்த நூலையும் எப்படியாவது நேரத்தை ஒதுக்கிக் கொண்டு படித்து விடும் ஒரு பழக்கம் என்பது எனது அன்றாடக் கடமைகளில் ஒன்று. அதன்படி படித்தேன் - நூலோ படி - தேனாகச் சுவைத்தது - அரிய பல்வேறு அரசியல் நிகழ்வுகள் இளமைக்கால நினைவுகளை எழுதும்போதுகூட எதையும் மறைத்தெழுதாத, உண்மை யின் வெளிச்சங்களாகவே உள்ள செய்திகள் எழுதியவரின் அறிவு நாணயம் எவ்வளவு உயர்ந்தது என் பதைக் காட்டுவதாக உள்ளது!

இதோ எடுத்துக்காட்டாக ஒரு சோறு பதம்:

..இளம் பிராயத்தில் எனக்கு நினைவுள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று - சிங்கப்பூரில் நான் பள்ளிக்கு அனுப்பப் பட்டது

நான் ஓர் இந்துவாக இருந்தாலும் நாங்கள் அனைவருமே பள்ளியில் உள்ள சிறு தேவாலயத்திற்குச் செல் வோம் (அது ஒரு மெதடிஸ்ட் பள்ளி. நாம் யாராக இருந்தாலும் கடவுள் ஒன்றுதான். ஆகவே, அங்கு போய்வா என்றார் என்தாய்) வாய்ப்பாட்டு வகுப்புகளும் இருந்தன, அதனை நடத்தியது எங்கள் இசை ஆசிரியர் குமாரி ரஸ்ஸல். சிறந்த பாடகர்கள் முதல் பிரிவில் இருந்தனர். நான் இரண்டாம் பிரிவில் இருந்தேன் என்று சொல்லத் தேவையில்லை. என் நண்பர் களுடன் நான் ‘God Save the King’ (ஆண்டவன் அரசரைக் காப்பாற்றட்டும்) என்பதற்குப் பதிலாக, ‘’God Shave the King’’ (ஆண்டவன் அரசருக்குச் சவரம் செய்யட்டும்) என்று அப்போதைய தேசிய கீதத்தை மாற்றிப் பாடினேன். அது ஒரு வகையில் நியாயம்தானே - அய்ந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு மெல்லிய தாடி இருந்தது. ஒரு நாள் குமாரி ரஸ்ஸல் எங்களைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார். எப்படி பாடினீங்க? என்று கோபமாக கேட்டார். “God Shave the King” (ஆண்டவன் அரசருக்கு சவரம் செய்யட்டும்) என்று நான் ஒன்றும் அறியாதவன் போலச் சொன்னேன். இல்லை, இல்லை, அப்படி இல்லை என அவர் அலறினார். அது, save, அதாவது, S-A-V-E! என்றார். நாங்கள் வேடிக்கையாக சிரித்து மகிழ்ந்தோம்.

இளவயதில் வறுமையை அனுபவித் தவர் இவரும், இவரது குடும்பத்தினரும் - அதை மறைக்காமல் விவரிக்கிறார்!

சிங்கப்பூர் நாடு, மலேசியா பற்றிய பல்வேறு சுவையான அரசியல் நிகழ்வு களின் பதிவுகளின் ஆவணமாகவும் இந்த தன் வரலாறு அமைந்துள்ளது.

நவீன சிங்கப்பூர் நாட்டைச் செதுக்கிப் பாதுகாத்து வளர்ச்சி குன்றா, வளமுள்ள சிறிய நாடாக ஆக்கியுள்ள மேதகு லீக்வான்யூ அவர்கள் இவரை இதனை இதனால் இவன் முடிப்பன் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல் என்ற குற ளுக்கு ஏற்ப, அதிபர் பொறுப்பில் அமர, PAP என்ற கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு உயர்ந்தார்!

அதைத்தான் இது நான் முற்றிலும் எதிர்பாராத பயணம் - எனது வாழ்வில் எனக் குறிப்பிடுகிறார்!

தமிழ் ஓவியா said...

அந்த மிகப் பெரிய பதவிக்குச் செல்லுமுன் இவர் (திரு S.R. நாதன்) பல ஆட்சி பதவிகளில் இருந்து சிறப்பான சாதனை புரிந்து, அனுபவக் கொள் கலனாக இருந்துள்ளார்!

முன்பு அவர் வகித்த பதவிகளிலும் ஒன்றில் ஏற்பட்ட சுவையான ஒரு தக வலைக் கூறுகிறார்: கேட்போம். பெரிய பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு மிக மதி நுட்பம் இன்றியமையாதது என்பதை விளக்குகிறது அச்சம்பவம்.

1970ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரதமர் லீ குவான் யூ மேற்கொண்ட விரிவான உலக சுற்றுப்பயணத்தில் நான் அவருடன் சென்றேன்.

அவற்றைத் தொடர்ந்து அமெரிக்காவுக்குச் சென்றோம். (மேலும் முக்கிய அனுபவ பாடம் இதோ)

மூத்த அதிகாரிகளால் முடியாததை

நாங்கள் பயணம் மேற்கொண்ட முதல் நாடு சிலோன், அது இப்போது ஸ்ரீலங்கா என அழைக்கப்படுகிறது. (இந்தி யாவைப் போல) சிலோன், அணிசாரா நாடுகள் இயக்கத்தில் ஒரு செல்வாக்கு மிக்க நாடாக இருந்தது. அந்தச் சமயத்தில் அதற்கு ஒளிமயமான பொருளாதார எதிர்காலம் இருப்பதாகத் தோன்றியது. 1970ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 மாலை கத்துநாயகே விமானநிலையத்தில் நாங்கள் வந்து சேர்ந்த போது, அந்நாட்டு பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகெ எங்களை வரவேற்க, விழாக்கோல கண்டி மேளதாளம் ஒலிக்க, சிலோன் அரச விமானப்படைப் பிரிவினர் கவுரவ அணிவகுப்பு நடத்தினர். எங்களின் வாகனங்கள் சென்ற வழியில் எல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையாக நின்றனர். ஒரு மணிநேரப் பயணத்தின் பின்னர், பிரதமர் பண்டாரநாயகெயின் அதிகாரப்பூர்வ இல்லமான டெம்பிள் ட்ரீஸ் இல்லத்தை அடைந்தோம். அது காலனித்துவ ஆட்சியின் கீழ் கட்டப்பட்ட பழைய கட்டடம். மரங்கள், செடி கொடிகள் பூத்துக் குலுங்கும் தாவரங்கள் நிறைந்து பரந்த இடத்தில் அது அமைந் திருந்தது.

அரச தந்திர நடைமுறையில் உள்ள மரபுச் சீர்முறை பழக்கங்கள் சார்ந்த பிரச்சினையைத் தீர்ப்பதில் பரிசாரகர்கள் கூட எவ்வளவு முக்கியமானவர்களாக இருக்க முடியும் என்பதை அடுத்த நாள் ஏற்பட்ட அனுபவம் எனக்குத் கற்றுத் தந்தது.

தமிழ் ஓவியா said...

மாலை 4 மணிக்கு பேரணி ஒன்றில் பிரதமர் லீ கலந்து கொள்ள திருமதி பண்டாரநாயகெ ஏற்பாடு செய்திருந்தார். வெயில் கொளுத்திய காலை நேர நிகழ்ச்சிகளுக்கு பின் பிரதமர் ஓய்வு எடுக்க விரும்பினார். எனவே, மதிய உணவிற்குப் பிறகு என்னிடம் மாலை 4 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பேரணியில் தாம் கலந்து கொள்ள முடியாமைக்கு தம்மை பொறுத்தருளு மாறு கேட்டு கொள்ளும்படி என்னிடம் சொன்னார். நான் அந்நாட்டுத் தலைமை மரபுச் சீர்முறை அதிகாரியை அணுகி னேன். தமது பிரதமர் நேரடியாக அதற்கு ஏற்பாடு செய்திருப்பதால் தான் அதில் தலையிட முடியாது என அவர் உறுதி யுடன் மறுத்துவிட்டார். அதற்குள் மணி 3 ஆகி விட்டது. அதன் பிறகு நான் சிலோன் வெளியுறவு அமைச்சின் நிரந் தரச் செயலாளரை அணுகினேன். பயணத்திற்கு முன்னரே நிகழ்ச்சி நிரல் சிங்கப்பூருடன் கலந்தாலோசிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டது என்று கூறி அவரும் மறுத்துவிட்டார். அவர் தமது நிலையிலிருந்து அசைந்து கொடுக்க மறுத்து விட்டார். திருமதி. பண்டார நாயகெ வருகையளிக்கும் நேரம் நெருங் கிக் கொண்டிருந்தது. பிரதமர் லீ இன்னும் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். என்ன செய்வது என்ற சிந்தனையோடு நான் வாயிலில் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தேன்.

மூத்த அதிகாரிகளால் முடியாதது கீழ்மட்ட ஊழியரால் முடியும்

டெம்பிள் ட்ரீசுக்குப் பொறுப்பான தலைமைப் பரிசாரகர் நான் எதைப் பற்றிக் கவலைப்படுகிறேன் என்று கேட்டார். கவலைப்பட வேண்டாம், நான் அவருடன் பேசுகிறேன், அவர் புரிந்து கொள்வார் என்று அவர் சொன்னார் அவர் மரியாதைக்காக அவ்வாறு சொல்வதாக நினைத்தேன்.

கடிகார முள் ஓடிக் கொண்டி ருந்தது. திருமதி பண்டார நாயகெ குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேர்ந் தார். தலைமைப் பரிசாரகர் அவரை வாசலில் வரவேற்பதையும் அவரிடம் சிங்கள மொழியில் பேசுவதையும் என்னால் பார்க்க முடிந்தது. உள்ளே வந்ததும், நமது பிரதமர் பேரணியில் கலந்து கொள்ள இயலாமை குறித்த செய்தியைத் தாம் பெற்றதாகவும் அப்பேரணியில் தாம் மட்டும் தோன் றுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் நிலைமையை விளக்கிக் கூறுவ தாகவும் திருமதி பண்டார நாயகெ என்னிடம் சொன்னார். திரு லீக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம் என என்னை அவர் கேட்டுக் கொண்டார். எல்லாம் நல்ல விதமாக முடிந்தது. தலைமைப் பரிசாரகர் நிலைமையைக் கையாண்ட விதம் என் மனதில் பதிந்தது. திருமதி பண்டாரநாயக அங்கிருந்து சென்றதும் அவர் அதை எப்படிச் செய்து முடித்தார் என்று கேட்டேன். பிரதமரிடம் எது முக்கியம் என்று - அதாவது பேரணியா அல்லது அரசு விருந்தாளியா என்று தாம் கேட்டதாக அவர் சொன்னார். அக்கேள்வியை எதிர்கொண்ட சிலோன் பிரதமர், பேரணியில் கலந்து கொள்வதை நமது பிரதமர் தவிர்க்கலாம் என ஒப்புக் கொண்டார். இந்தச் சம்பவம் சிறு விஷயமாக இருந்தாலும், கீழ்மட்ட ஊழியர்கள் கூடச் சில சமயங்களில் தங்களின் முக்கிய அதிகாரிகளுடன் அணுக்க மான உறவு வைத்திருப்பார்கள் என்பதையும் அத்தகைய தனிப்பட்ட தொடர்புகள் இல்லாத மூத்த அதிகாரிகளால் செய்ய முடியாததை அவர்களால் செய்ய முடியும் என் பதை தான் உணர்ந்து பாராட்ட அது எனக்கு உதவியது.

இவரது உடன் தோன்றிய மதி நுட்பம் எப்படி இவருக்குக் கை கொடுத்துள்ளது பார்த்தீர்களா?
இதுபோல சுவைபடச் சொல்லும் நிகழ்வுகள் பற்பல.

இந்த புத்தகம் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிங்கப்பூர் தமிழ் எழுத் தாளர், படைப்பாளிகளின் செறிந்த கருத்துவளம் தமிழாக்கம் போலவே படிப்பவருக்கு அது மொழிபெயர்ப்பு என்று தெரியாத அளவுக்கு சுவை குன்றா ஆற்றொழுக்கு நடை உள்ளது இந்த அரிய களஞ்சியத்தில்!

தமிழில் அளித்த தமிழ் முரசு குழுமத் தலைவர் திரு சந்திரதாசும் பொறுப்பாசிரியர் இராஜேந்திரனும் தமிழ் கூறும் நல்லுலகத்தின் நன்றிக் குரியர். சிங்கப்பூர் பிரபல பல்கலைக் கழகங் களின் பேராசிரியராக இன்றும் உழைப் பின் உருவமாய் உள்ள மேனாள் அதிபர் திரு. எஸ்.ஆர். நாதன் அவரது வாழ்விணையரான திருமதி ஊர்மி நாதன் அவர்களும் பாராட்டத்தக்க நமது வாழ்த்துகளுக்கும் உரியவர் ஆவர்!- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page-2/88655.html#ixzz3F8O46vCr

தமிழ் ஓவியா said...

உலக குடியிருப்பு நாள்-அக்டோபர் 3: குடியிருப்பா? குடியறுப்பா?


கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்த மனிதன் சமூகத் தோடு தொடர்பை உண்டாக்கி வாழத்துவங்கிய போது குடியி ருப்புகள் உருவாகத் துவங் கியது. நாகரிகம் வளர வளர தனது குடியிருப்பில் பல்வேறு வசதிகளை செய்துகொண் டான். தனக்குத்தேவையான வற்றை எளிதில் பெறும் விதமாக தனது இருப்பிடத்தை சந்தைகள் அல்லது தொழிற் சாலைகள் அருகில் அமைத்துக் கொள்கிறான். இங்கிருந்து தான் நகர வாழ்க்கை துவங்கிறது. வளர்ச்சியடைந்த நாடு களில் சீரான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக மக் களின் குடியிருப்புகள் அனைத்து வசதிகள் கொண்ட அமைதியான சூழலில் உருவா கிறது, இந்தியா போன்ற வளர்ச் சியடைந்த நாடுகளில் சூழ்நிலை அப்படியல்ல. முக்கியமாக நகர வாழ்க்கை. இந்தியாமிகப் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. முக்கியமாக இங்கு விவசாயமே கடந்த நூற்றாண்டு வரை பிரதானமாக இருந்தது, ஆங்கிலேயர் வரு கைக்கு முன்பு நகரங்களை விட கிராமங்களிலேயே மக்கள் அதிகம் வாழ்ந்தனர். கிராம வாழ்க்கை இந்தியாவில் காணப் பட்ட இறுக்கமான ஜாதியப் பாகுபாட்டால் மிகப்பெரிய சமூகம் அடிமை வாழ்க்கையை தலைமுறை தலைமுறையாக ஏற்று வாழ்ந் தனர். அய்ரோப்பியர்களின் வருகை இந்தியாவில் அடிமை வாழ்க்கைவாழ்ந்தவர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. பொதுவாக அய்ரோப்பியர்கள் வருகை புரிந்த ஆரம்ப காலத் தில் அனைத்துச் சமூக மக் களிடமும் ஜாதியப்பாகு பாடின்றி மக்களிடம் வேலை வாங்கத்துவங்கினர். உடல் உழைப்பு வேலைசெய்ய ஏழைகள் அதிகமாக அய்ரோப் பியர்களிடம் வேலைக்குச் சேர்ந்தனர். 1700-களில் இந்தி யாவில் தொழில் நகரங்கள் உருவாக ஆரம்பித்தன. அப் போது பெரும்பாலான கடை நிலைச்சமூகம் நகரங்களை நோக்கி குடியேற்றம் செய்யத்துவங்கினர். இதற்கு எடுத்துக்காட்டாக மும்பை நகரைக் கூறலாம். 1700 இடை யில் ஆங்கிலேயர்கள் மும்பை நகரை நிர்மானிக்கத்திட்ட மிட்டனர். இதற்காக தென் தமிழகத்தில் உள்ள ஏழைகள் பெருமளவில் கொச்சின் துறை முகத்தில் இருந்து மும்பைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அப்படிச் சென்றவர்கள் நகர நிர்மாணப்பணிகள் முடிந்த உடன் ஆங்கிலேயர்களிடம் வேலைபார்க்கத்துவங்கினர். மும்பை நகரம் முழுவ துமாக உருவாகிய 100 ஆண்டுகள் வரை மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அப்பால் கிழக்கு மராட்டியப் பகுதிகளில் இருந்த வசதிமிகுந்த மராட்டியர்களுக்குத் தெரியாது. அதாவது

தமிழ் ஓவியா said...

மராட்டியர்களுக்கு முன்பே தமிழகம் கேரளம், தென் குடகு மற்றும் மைசூர் பிராந்தியத்தைச் சேர்ந்த ஏழைகள் மும்பாய் நகரில் குடி யேற்றத்தைத் துவங்கிவிட்டனர். இதே நிலைதான் இந்தியா முழுவதும் இருந்த பெரு நகரங்களில் இருந்தது. 100-ஆண்டுகளுக்குள் இந்தியா வின் அனைத்து புதிய நகரங் களில் கிராமப்புறங்களில் இருந்த ஏழைகள் குடியேறிவிட்டனர். நகரங்களுக்குப் புலம் பெயர்ந் தவர்கள் அவ்வப்போது கிராமத்திற்கு திரும்பும் போது அவர்களின் வசதியான வாழ்க்கை கிராமத்தில் உள்ள செல்வந்தர்களையும் ஈர்க்க மிகக்குறைந்த அளவு நகரத் திற்கு குடியேற ஆரம்பித்தனர்.

தமிழ் ஓவியா said...

மக்கள்தொகை பெருக்கம் மற்றும் அரசுகளின் இரக்கமற்ற போக்குக்காரணமாக நகரங் களை உருவாக்கிய ஏழைகள் மற்றும் கிராமங்களில் இருந்து வருகைபுரிந்த நிலச்சுவான்தார் களிடையே பொருளாதார பேதம் ஏற்படத்துவங்கியது. இந்த பொருளாதாரபேதம் இதர நாடுகளில் தற்போதும் உள்ளது. ஆனால் அவை தனிமனிதப் பாதிப்பிற்கு இடமில்லாதவாறு உள்ளது. ஆனால், இந்தியாவில் சாதி, இன மற்றும் மதரீதியான பேதங்கள் இருப்பதால் வசதி யுள்ளவர்களுக்காக அரசு அடி பணியத்துவங்கியது, காரணம் இந்திய அரசியல் பெரும்பாலும் பணக்கார உயர்சாதிகளின் அதிகாரச்சபையாக மாறி விட்டது. இதனால் நகரை உருவாக்கிய மக்கள் சந்ததி யினரின் பேருழைப்பு பெறப் பட்டும் அவர்களுக்கு உழைப் பிற்கேற்ப ஊதியம் கொடுக்காத காரணத்தான் அவர்கள் நகரங் களில் இருந்தாலும் தங்கள் குடியிருப்புகளை வசதியான ஒரு அமைப்பாக மாற்ற இய லாமல் போய்விடுகிறது, இதற்கு சான்றாக சிந்தாதிரிப் பேட்டை, சைதாப்பேட்டை போன்ற இடங்களை காணலாம், இங்கு நூற்றாண்டுகளாக வாழும் தலைமுறையினர் இன்றும் அதே குடிசைவீடு களில் வாழ்கின்றனர். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய வசதிமிக்கவர்கள் அனைத்து வசதியுடன் கூடிய குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு உயர்வகுப்பு வாழ்க்கை வாழ்கின்றனர். இன்றும் சென்னை அசோக் நகர் பகுதியை காணும் போது 25 ஆண்டுகளுக்குள்ளான மாற்றம் தெரியவரும். சென்னை அசோக் நகர்பகுதியில் ஒரு புறம் தலைமுறை தலைமுறை யாக வாழ்ந்த மக்கள் தற்போது பலத்தபொருளாதார நெருக் கடியில் தங்களது குடியிருப்பை அமைத்துக்கொண்டு இருக் கின்றனர். அதே வேளையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள் வசதிமிகுந்த அய்ந்து நட்சத்திர மாளிகை போன்ற வீடுகளை கட்டி குடி யிருக்கின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் குடியிருப் பில் ஏற்படும்பாகுபாடு தலை முறைகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது, குடியிருப்பு அல்ல குடியறுப்பு தற்போது நகரங்களில் வசதி மிக்கவர்களுக்கு ஏற்றவாறு அவர்களின் வசதிக்கு ஏற்ற வகையில் புதிய திட்டங்களில் வருகிறது, அதாவது நகரின் முன்னேற்றத்திற்கு ஆரம்ப காலத்தில் இருந்து ஊன்று கோலாக இருந்து வந்த மக்க ளை நகர வளர்ச்சி என்ற பெயரில் நகரை விட்டு புற நகருக்கு துரத்தும் கொடுமை இந்தியா முழுவதும் உள்ள பெருநகரங்களில் நடந்து வருகிறது. இப்படி அனுப்பும் காரணத்தால் நூற்றாண்டாக வாழ்ந்து வந்த மக்கள் தங்கள் சொந்த இடத்தை இழப்பது மின்றி பள்ளி, மருத்துவமனை இதர அத்தியாவசிய தேவைகள் எதுவுமே இல்லாத ஒரு பகுதிக்கு தள்ளப்படுகின்றனர். அப்படியே அவர்கள் அங்கி ருந்து நகரத்திற்கு வருவதற்கு கூட பல மணிநேரங்கள் கடந்து வருகைதரவேண்டியுள்ளது. குடியிருப்பு குடியிருக்கும் இடம் அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இருந்தாக வேண்டும். ஆனால் இங்கே குடியிருப்பு என்பது ஏழை மற்றும் பாட்டாளிமக்களின் குடியறுப்பு இடமாக உள்ளது.

இலங்கையில் சிங்களப் பேரின வாத தாக்குதல் காரணமாக அகதிகளாக பல்வேறு நாடு களுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்றும் தங்களது குடியிறுப்பை நிரந்தரமாக்க முடியாமல் ஆதரவற்றவர்களாக என்று நாம் மீண்டும் இலங் கைக்கு விரட்டப்படுவோமோ என்று அச்சத்துடன்வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உலகக் குடியிருப்புத் தினம் என்பது வளரும் நாடுகளில் சமூகத்திற்கிடையே ஏற்படும் பேதமையை ஒழிக்கும் தினமாக கடைபிடிக்கவேண்டும். முதலாளிகளின் கைப்பாவை யாக செயல்படும் அரசுகள் இருக்கும் வரை நகரத்தை உருவாக்கிய பூர்வீக குடிகளின் குடியிருப்புகள் செல்வந்தர் களின் சொகுசுவிடுதிகளாகவும், கேளிக்கை மற்றும் ஆடம்பர குடியிருப்புகளாக மாறும் இப்படி குடியிருப்புகளில் பேதங் கள் தோன்றும் போது சமூகத் தில் ஏற்றத்தாழ்வுகள் அதிக ரித்தும் புறநகரங்களில் நெருக் கடிகள் அதிகரித்தும் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும்தடையாக இருந்துவிடும்.

Read more: http://viduthalai.in/page-3/88637.html#ixzz3F8OLvenr

தமிழ் ஓவியா said...

ஜாதிக் கொடுமை

ஒருமுறை சண்டாளன் தான் உண்ட பிறகு எச்சில் இலையை வீசி எறிந்தான். அது காற்றில் பறந்து பதின றாயிரம் பிராமணர்களுக்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுச் சாலையில் விழுந்தது. அதனை முதலில் கவனியாமல் உணவுண்ட பதினறாயிரம் பிராமணர்களும் செய்தி தெரிந்த பின் பிராமண ஜாதியிலிருந்து நீக்கப்பட்டு சூத்திராயினர்.
மற்றொரு ஊரில் பசித்தாளாமல் சூத்திரன் உண்டு எச்சில் சோற்றை தின்ற பிராமணன் தன் சாதிக்காரர்களின் கொடுமைக்கு அஞ்சித் தற்கொலை செய்து கொண்டான் என்ற புத்த சாதகக் கதைகளில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம்: ஜாதிகளின பொய்த் தோற்றம் என்ற நூல், பக்கம் 108 யாரால் அனுப்பப்பட்டார்கள்? ஆழ்வார்கள், அவதார புருஷர்கள், நாயன்மார்கள், நபி கள், தேவகுமாரர்கள் என்பவர்கள் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய்யர் கள், திருடர்கள், கொலைகாரர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்கிறவர்கள், வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப்பட்டவர்கள்?

- (குடிஅரசு, 27.8.1949

Read more: http://viduthalai.in/page-7/88642.html#ixzz3F8OwmSlJ

தமிழ் ஓவியா said...

இங்கர்சால் மணிமொழிகள்

தேவலோகம் என்று ஒன்று இருக்குமானால் - அதில் எல்லையற்ற இறைவன் இருப்பது உண்மையானால் அவர் கோழைகளின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார் நயவஞ்சகர்களின் செயல்களைக் கண்டு மகிழ மாட்டார் இந்த வஞ்சகர்களைக் கண்டு ஒருக்காலும் திருப்தி யடையமாட்டார்.

************

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியைப் பிரித்து விடும் மதங்கள் அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி தூரப்போடுங்கள். சிந்திக்காதே அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்ராயம் எந்த மூலையில் எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.

************

அறியாமை - இரகசியத்தின் தாய்; துன்பத்தின் பிறப்பிடம் குருட்டு நம்பிக்கையின் அன்னை; சங்கடம் தோன்றிய இடம்; அழிவும், மறுமையும் வாழும் தாயகம்.

************

முடிவில்லாத முதல்வன் இருப்பது உண்மையானால் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான எண்ணம் உடையவராய் இருக்க வேண்டும் என்று அவர் கருதுவாரானால் ஏன் அவன் ஒருவனுக்கு குறைந்த அறிவும், மற்றொருவனுக்கு அதிக அறிவும் கொடுத்தான். அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியாக எண்ண வேண்டும் ஒரே மாதிரியாக உணர வேண்டும் என்பது அவன் நோக்கமானால் அறிவு வித்தியாசங்கள் ஏன்?

மனித குலம் கூவிய கூக்குரலும் கோரிக்கைகளும் பக்தியும் பைத்தியக்காரத் தன்மையும். கடவுள்களுக்குத் திருப்தியை உண்டு பண்ணியதா? இல்லை. இல்லவே இல்லை. மனித இனத்திற்கு வர விருந்த எந்த விபத்தாவது தவிர்க்கப்பட்டதா? புதிய வரப்பிரசாதம் ஏதும் கிடைத்ததா? இல்லை அப்படியிருக்க இந்த ஆண்ட வனுக்கு - இந்தக் கண்மூடிக் கபோதிஆண்டவனுக்கு நாம் நன்றி செலுத்தலாமா? கைகூப்பி வணங்கலாமா? தேவை இல்லை.

************

எனக்கு இந்த உரிமைகள் வேண்டும் என்று கூறுகின்றவர் அதே உரிமைகளை வேறொரு மனிதன் விரும்பும்போது அளிக்க மறுத்தால் அவன் எந்த பாகத்திலிருந்தாலும் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என்று கூறினாலும் அவன் காட்டுமிராண்டியின் நிலைக்குச் சமீபத்தில் வசித்தவன் என்று நான் கூறுவேன்

Read more: http://viduthalai.in/page-7/88643.html#ixzz3F8PLvmz9

தமிழ் ஓவியா said...

மந்திர நீரும் - முடிவெட்டுவோர் நீரும்!

பொதுமக்களே! நீங்கள் பார்ப்பனர்களுக்கு பொன்னும் பொருளும் தருகின்றீர்கள். அந்த பார்ப்பனர்கள் உங்களிடம் பொருள் பெற்று தம் கல்வியை பெருக்கிக் கொள்கின்றனர். பொதுமக்கள் அனைவருக்கும் கல்வி அறிவையும் மெய்ப்பொருள் தெளிவையும் கற்றுத் தருவார்களானால், நீங்கள் அவர்களுக்கு பொன்னும் பொருளும் தருவது தகும்.

நீர் நிலைகளிலும், ஆறுகளிலும் வேள்விகளின் போது தலையை மொட்டை அடித்து கொள்கின்றீர்கள். அதனால் என்ன பலன்? நீர் நிலைகளில் நீராடியதால் தீவினை அகன்றிருந்தால் மொட்டையடித்துக் கொள்வது தேவை இல்லை. மொட்டை அடிப்பவன் கையால் தெளிக்கும் நீரால் அவர்கள் செய்த தீவினை அகல்வதாக இருக்கும் நிலையை பார்த்தால் போற்றத்தக்க நீர் நிலைகளைவிட தலை மழிப்பவனின் கையில் உள்ள நீரே பெருமையுடைய

தாகிறது. மந்திர நீரை விட முடி மழிப்பாளனின் கை நீர் மேன்மை யானது. தலைமொட்டையானாலும் தாழ்வான எண்ணங் களும் ஜாதி வேறுபாட்டு உணர்வுகளும் மொட்டையடிக்க படுவதில்லை அல்லவா?
- ஆந்திர சீர்திருத்தவாதி வேமண்ணா

Read more: http://viduthalai.in/page-7/88643.html#ixzz3F8PUJ6dO

தமிழ் ஓவியா said...

சிந்தனைப் பூக்கள்

நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திருதராஷ் டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப்பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயி ருக்கின்றது என்றால் உடனே கோபித்துக் கொள்ளு கின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.

மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதாயுகத்து கெய்டைப் பார்த்து, கலியுகத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமென் கின்றோம்.

பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

மேல்நாட்டானுக்கு பொருளாதாரத்துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.

அரசியல் இயக்கம், முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால், சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/88644.html#ixzz3F8PcNbv1

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டின் மகாத்மா காந்தி பெரியார்! உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து தீர்ப்புரைசென்னை, செப்.17- பெரியார் சிலை அமைப் பதற்கு இடம் ஒதுக்கித்தர மறுக்கும் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் மகாத்மா காந்தி போல் பெரியார் போற்றப் பட வேண்டியவர் என்று கூறியுள்ளது.

சுயமரியாதை இயக்கத் தின் தலைவர், திராவிடர் கழகத்தின் நிறுவனர் ஈ.வெ.இராமசாமி மகாத்மா காந்தியைப் போன்று போற் றிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத் தின் அமர்வு தீர்ப்பில் கூறியுள்ளது.

தந்தை பெரியாரின் 136ஆம் ஆண்டு பிறந்த நாளில் இந்தக்கருத்து வெளி யாகி உள்ளது பொருத்த மானதாக உள்ளது.

திருச்சி மாவட்டம் திரு வெறும்பூர் அருகில் கூத் தப்பார் என்கிற இடத்தில் தந்தை பெரியார் சிலை அமைப்பது குறித்த வழக் கில் நீதிபதி எஸ்.நாகமுத்து கூறும்போது பெரியார் தமிழ்நாட்டின் மகாத்மா காந்தி என்று அழைக்கப்பட வேண்டிய உயர்ந்த தலை வராவார்.

ஈ.வெ.இராமசாமி அன்போடு பெரியார் என்று அழைக்கப்படுபவர். சமூக நீதிக்காக தம் வாழ் நாளில் புரட்சிகரமாகப் போராடி வந்தவர்.

ஜாதி யற்ற சமுதாயத்தை அமைப்பது, பெண்கள் அதிகாரம் பெறுவது ஆகிய அவரது கொள்கை கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நீதிபதி கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/87882.html#ixzz3F8QcG5tw

தமிழ் ஓவியா said...

உலகத் தலைவரின் உன்னத பிறந்த நாள்!


இன்று உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் உன்னத பிறந்த நாள்.

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் என்றால் அது ஒட்டுமொத்த தமிழர்களின் தேசியத் திருநாள்!

வரலாற்றை எழுதுகின்ற எவரும், பெரியாருக்கு முன் - பெரியாருக்குப் பின் என்றுதான் பார்க்கவேண்டும். அதற்கான காரணங்கள் ஏராளம்! ஏராளம்!!

மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்திய பார்ப்பனிய வருணாசிரம சமூக அமைப்பு. அதனைக் கட்டிக் காக்கும் கடவுள், மதம், வேத சாஸ்திர ஏற்பாடுகள்!

இந்தப் பிறவிப் பேதத்தை முற்றிலும் ஒழித்துக்கட்ட தந்தை பெரியார் அவர்கள் மூல பலத்தோடு போர் புரியும் மகத்தான பணியில், தன்னையே நம்பி இறங்கினார். தனக்குப் பின்னால் யார் வருகிறார்கள் என்பதை அவர் திரும்பிக்கூட பார்த்ததில்லை.

இந்தப் போரில் அவர் மகத்தான வெற்றி பெற்றார்; அதனால்தான் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி அறிஞர் அண்ணா அவர்கள், பெரியார் ஒரு சகாப்தம் - காலகட்டம் - ஒரு திருப்பம்! என்று படம் பிடித்தார்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் அவர்களைப்பற்றி பொதுவாகக் கூறும்போது அவர் ஒரு நாத்திகர் - கடவுள் மறுப்பாளர் என்று சொல்லுவது பெரும்பாலோரின் வழக்கமாகும்.

உண்மைதான்! அந்தக் கடவுள் மறுப்பு என்பதுகூட எதிலிருந்து தோன்றியது என்பது கவனிக்கத்தக்கது. கடவுளின் பெயரால் ஜாதி - ஜாதியின் பெயரால் பேதம் - மனிதன் பிறக்கும்பொழுது எந்த ஜாதி அவன்மீது சுமத்தப்படுகிறதோ அந்த ஜாதி சுடுகாட்டிலும், இடுகாட்டிலும் கூடத் தொடர்கிறது. மனிதன் சாகிறான் ஆனால், அவன்மீது சுமத்தப்பட்ட அந்த ஜாதி மட்டும் சாவதில்லை.

எனவே, கடவுளோடு, மதத்தோடு முடிச்சுப் போட்டு வைக்கப்பட்டுள்ள இந்த ஜாதியை ஒழிக்கும் நிலையில் அதன் மூலமான கடவுள் மத வகையறாக்களையும் சேர்த்து ஒழிக்கும் நிலை ஏற்பட்டது என்பதுதான் உண்மை!

இந்தியத் துணைக் கண்டத்தை எடுத்துக்கொண்டாலும், தமிழ் மண் சமூக சீர்திருத்தத்திலும், மறுமலர்ச்சியிலும் முன்னணி மாநிலமாக, முற்போக்குச் சிந்தனைகள் செழித்த பூமியாக இருப்பதற்குக் காரணம் - அமெரிக்கப் பேராசிரியர் ஜான் ரைலி போன்ற பேராசிரியர்கள் கணித்ததுபோல தந்தை பெரியார் அவர்களே காரணமாகும்.

இந்தியாவுக்கே சமூகநீதியைத் தொடங்கி வைத்த பூமியும் தமிழ்நாடே! தந்தை பெரியார் போராடிப் பெற்றுத் தந்ததுதான் கல்வியிலும் இட ஒதுக்கீடு என்ற மகத்தான உரிமை.

அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தமும் இந்தக் காரணத்துக்காகவே மேற்கொள்ளப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கதாகும். இந்தியத் துணைக் கண்டத்திலேயே 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதும் தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டில்தான் என்பதும் சுட்டிக் காட்டத்தக்கதாகும்.

சமூகநீதித் திசையில் இன்னும் பயணிக்கவேண்டிய மைல்கற்கள் உண்டு. குறிப்பாக அய்.அய்..டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படவேண்டியுள்ளது.

இந்தியாவின் பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் இட ஒதுக்கீட்டில் அடையவேண்டிய சட்ட ரீதியான உரிமைகளுக்கும் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை யூற்றமே தாக்கத்தை ஏற்படுத்தவேண்டிய நிலை!

மற்றொரு முக்கியமான பிரச்சினை; இந்தியத் துணைக் கண்டத்தில் மக்கள் முன் எழுந்து நிற்பது - அரற்றிக் கொண் டிருப்பது இந்துத்துவா மதவாதம் ஆகும். இந்தக் கொள்கையுடைய அமைப்பு இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. இந்தியா என்றால், இந்து நாடு என்று சொல்லுகிறார்கள். இங்குள்ள சிறுபான்மையினரும் தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று அச்சுறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிராக மதக் கலவரங்கள் தூண்டப் படுகின்றன. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள மதச்சார்பின்மையின் வேரிலே வெட்டரிவாளை வீசுகின்றது இந்துத்துவா!

உண்மையைச் சொல்லப்போனால் இந்தியாவில் சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள், கல்வி, வேலை வாய்ப்புகளில் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர்; வறுமைக்கோட்டுக்கும் கீழே கிடந்துழலுபவர்களில் முஸ்லிம்கள் பெரும் அளவில் இடம் பிடித்துள்ளனர். இந்த நிலையில், அவர்களைக் குறி வைத்துத் தாக்கும் பாசிச நோக்கில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

உண்மையான நிலை என்ன? இந்து மதம் என்ற போர்வையில் இந்நாட்டின் பெரும்பான்மை மக்களான தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பார்ப்பனர் அல்லாதார் மீது ஆதிக்கத்தைச் செலுத்துவது உயர்ஜாதியினரான பார்ப்பனர்கள்.

அவர்களின் எண்ணிக்கைக்குமேல் கல்வி, வேலை வாய்ப்புகளில் பல மடங்கு கூடாரம் அடித்துக் கொண்டுள்ளனர். அரசுத் துறைகளில் மட்டுமல்ல; தனியார்த் துறைகளிலும்கூட உயர்மட்ட பதவிகளில், பணி நியமனங்களைச் செய்யும் இடத்தில் பார்ப்பனர்களே இருந்து வருகின்றனர்.

சமூக அந்தஸ்து என்ற இடத்திலும் அவர்களுக்குத்தான் முதலிடம். கோவிலுக்குள், கர்ப்பக்கிரகத்தில் நின்று வழிபாடு நடத்தும் தகுதி அவர்களுக்கு மட்டுமே இருக்கிறது.

இதனை மாற்றி அமைக்கும் முயற்சியில் இழிவுபடுத்தப்பட்ட மக்கள் ஈடுபட்டால், ஏன், ஒரு மாநில அரசே சட்டத்தின்மூலம் செயல்படுத்த முனைந்தால், பார்ப்பனர்கள் தங்களுக்குரிய செல்வாக்கைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம்வரை சென்று முடக்கிவிடுகின்றனர்.

இந்து மதத்தைச் சேர்ந்த எவரும் சங்கராச்சாரியாக முடியாது என்கிற ஜாதிக் கோட்டையைக் கட்டி வைத்துள்ளனர். வெகுமக்கள் சிந்தனையும், போர்க்குணமும் இந்த இந்துத்துவா கட்டமைப்பின் பக்கம் எங்கே திரும்பி விடுமோ என்ற அச்சத்தில் சிறுபான்மை மக்கள்மீது பக்தியால் பாதிக்கப்பட்ட மக்களை ஏவும் மதவெறியைத் தூண்டி விடுகின்றனர்.

எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்ற தெளிவு முதலாவது நம் மக்களுக்கு விளங்க வைக்கப்படவேண்டும். தந்தை பெரியார் அவர்களின் ஈரோட்டுக் கண்ணாடியை அணிந்து பார்த்தால்தான் அடையாளம் அய்யமின்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.

தமிழ் ஓவியா said...

இந்த அடிப்படையான பணியைத்தான் திராவிடர் கழகம் தன் தோளில் தாங்கி ஈடுபட்டு வருகிறது.

உலகளவில் பார்த்தாலும் மதவாதம் மக்களைக் கொலைக் களத்தில் தள்ளியுள்ளது. மதமற்ற உலகே மக்களுக்குச் சமத்துவ சமாதான வாழ்வைத் தர முடியும் என்பதால், உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் உயர் எண்ணங்கள் உலகப் பந்துக்கே தேவைப்படுகிறது. எதிர்கால உலகம் அந்த வகையில் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை நோக்கி வரும் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

Read more: http://viduthalai.in/page1/87890.html#ixzz3F8Rbi0xi

தமிழ் ஓவியா said...

நீதிக்கட்சித் தலைவர்கள் பார்வையில் பெரியார்!

டாக்டர் டி.எம்.நாயர்

அன்னி பெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக் கத்திற்குப் பல காங்கிரசுப் பார்ப்பனத் தலைவர்கள் ஆதரவு தந்து வருவதோடு, ஒரு சில திராவிடக் கருங் காலிகளும், கங்காணிகளும் விபீஷணர் களாக ஆகிப் பேராதரவு தந்து வரு கின்றனர். காங்கிரசுத் தலைவர்களில், சேலம் டாக்டர் பி.வரதராசுலு நாயுடு, ஈரோடு இராமசாமி நாயக்கர், தூத்துக் குடி வழக்குரைஞர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சென்னைப் புலவர் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் போன் றோரே, பார்ப்பனரல்லாதார் சமூகத் திற்குப் பாடுபடும் தலைவர்களாக இருந்து வருகின்றனர். மற்ற தேசியத் தலைவர்கள் எல்லோருமே பார்ப்பனர் கள்தாம். அவர்களால் நடத்தப்படும் செய்தித் தாள்களில் ஆசிரியர்களும், அவற்றின் நிருபர்களும் பார்ப்பனர் களே! அவர்கள் தங்களின் சுயநல அரசியல் செல்வாக்கையும், தலைமை யையும் வளர்த்துக் கொள்வதற்கு, அவர்களுடைய பொய், பித்தலாட்ட இந்து, சுதேசமித்திரன், பிரபஞ்சமித் திரன் போன்ற சாக்கடைச் செய்தித் தாள்கள் பெரிதும் உதவுகின்றன! (வெட்கம்! வெட்கம்! என்ற ஆரவாரம்)
(புகழ்பெற்ற சென்னை ஸ்பர்டங் சாலை உரையிலிருந்து, 7.10.1917)

பனகல் அரசர்

தற்காலத்திய மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதி திரு.இராமசாமி நாயக்கரே ஆவார். நமது மக்களின் நல னுக்காக அவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் சிறை செல்வார். அவர் தமது உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருப்பவர் ஆவார்.
(1928)

பொப்பிலி அரசர்

சுயமரியாதை இயக்கம் என்பது பல உன்னதமான கொள்கைகளைக் கொண்டது என்றே கூறு வேன். இந்து மதத்தை பெருமை அடை யச் செய்யக்கூடியதாகவும், பலம் பெறச் செய்யக் கூடியதாகவுமே நான் உணரு கிறேன்.
(1934, செப்டம்பர்)

சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்

காங்கிரஸ்காரர்களுக்கு வார்தா எப்படியோ, அப் படித்தான் நம் மக்களுக்கு ஈரோடு. காந்தி யின் அறிவுரை கேட்க அவர்கள் வார்தா போவது போல, பெரியார் அறிவுரை கேட்க, நாம் ஈரோடு போகிறோம்.

சர்.கே.வி.ரெட்டி (நாயுடு)

திரு.இராமசாமி நாயக்கர் ஒரு உண்மையான சிங்கம். அவர் சிங்கத்தின் இதயத்தைப் பெற்றிருக் கிறார்; வாழ்க்கையில் அச்சம் என்ப தையே அறியாதவர். அவசியம் நேர்ந்தால் எந்தவிதமான தியாகத் திற்கும் தயாராக இருப்பவர் அவர்.

- (1928 இல் சென்னை மாகாணத்தின் தற்காலிக ஆளுநராக இருந்தபோது)

Read more: http://viduthalai.in/page1/87892.html#ixzz3F8RxMiuq

தமிழ் ஓவியா said...

நாம் யார்?


சமுதாய சீர்திருத்தம் என்றால் ஏதோ அங்கும் இங்கும் ஆடிப்போன, சுவண்டு போன, இடிந்து போன பாகங்களைச் சுரண்டிக் கூறு குத்தி, மண்ணைக் குழைத்துச் சந்து பொந்துகளை அடைத்துப் பூசி மெழுகுவது என்றுதான் அனேகர் கருதியிருக்கின்றார்கள். ஆனால், நம்மைப் பொறுத்தவரை, நாம் அம் மாதிரித் துறையில் உழைக்கும் சமுதாயச் சீர் திருத்தக்காரரல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். மற்றபடி நாம் யார் என்றால், என்ன காரணத்தினால் மக்கள் சமுதாயம் ஏன் சீர்திருத்தப்பட வேண்டிய நிலைக்கு வந்தது என்பதை உணர்ந்து, உணர்ந்தபடி மறுபடியும் அந்நிலை ஏற்படாமலிருப்பதற்கு நம்மால் இயன்றதைச் செய்யும் முறையில், அடியோடு பேர்த்து அஸ்திவாரத்தையே புதுப்பித்து என்கின்றதான தொண்டை மேற்கொண்டிருக்கிறபடியால், சமுதாய சீர்திருத்தம் என்பதைப் பற்றி மற்ற மக்கள் அனேகர் நினைத் திருந்ததற்கு நாம் மாறுபட்ட கொள்கையையும், திட்டத்தையும், செய்கை யையும் உடையவராய் காணப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

- தந்தை பெரியார், குடிஅரசு: 3.5.1931

Read more: http://viduthalai.in/page1/87897.html#ixzz3F8S6F6QC

தமிழ் ஓவியா said...

எவர் பெரியார்...? அவர் வாழ்க...!


குமரி நாட்டின் தமிழ்நான் மறைகள்
அமிழ்ந்தன! வடவர் மறைகள் நிமிர்ந்தன!
தமிழன் முதலில் உலகினுக் களித்த
அமிழ்துநேர் தத்துவம் ஆன எண்ணூல்
அமிழ்ந்தது! வடவரின் அறிவுக் கொவ்வாப்
பொய்ம்மைகள் மெய்ம்மைகள் ஆகிப் பொலிந்தன!
அகத்தியன் தொல்காப் பியன்முத லானவர்
தகுதிறம் தமிழிற் பெறுதிறம் அருளிய
எண்ணருங் கண்ணிகர் தமிழ்பாடும் ஏடுகள்
மறைந்தன! வடவர் தீயொழக்க நூற்கள்
நிறைந்தன! இந்த நெடும்புகழ் நாட்டில் தீது செய்யற்க செய்யில் வருந்துக
ஏதும் இனியும் செய்யற்க வெனும்
விழுமிய தமிழர் மேன்மை நெஞ்செலாம்
கழுவாய் எனுமொரு வழுவே நிறைந்தது.
நல்குதல் வேள்வி என்பது நலியக் -
கொல்வது வேள்வி எனும்நிலை குவிந்ததே!
ஒருவனுக் கொருத்தி எனும் அகம் ஒழிய
ஐவருக் கொருத்தி எனும் அயல் நாட்டுக்
குச்சிக் காரிக்குக் கோயிலும் கட்டி
மெச்சிக் கும்பிடும் நிலையும் மேவிற்று.
மக்கள் நிகர்எனும் மாத்தமிழ் நாட்டில்
மக்களில் வேற்றுமை வாய்க்கவும் ஆனதே!
உயர்ந்தவன் நான்என் றுரைத்தான் பார்ப்பான்
அயர்ந்தவன் நான்என் றுரைத்தான் தமிழன்
இப்படி ஒருநிலை காணுகின் றோமே
இப்படி எங்குண் டிந்த உலகில்?
இறந்த காலத் தொடக்கத் திருந்து
சிறந்த வாழ்வுகொள் செந்தமிழ் நாடு
இழிநிலை நோக்கி இறங்குந் தோறும்
பழிநீக் கிடஎவன் பறந்தான் இதுவரை?
இதுவரை எந்தத் தமிழன் இதற்கெலாம்
பரிந்துபோ ராடினான்? எண்ணிப் பார்ப்பீர்!
தமிழன் மானம் தவிடுபொடி ஆகையில்
வாழாது வாழ்ந்தவன் வடுச்சுமந்து சாகையில்
ஆ என்று துள்ளி மார்பு தட்டிச்
சாவொன்று வாழ்வொன்று பார்ப்பேன் என்று
பார்ப்பனக் கோட்டையை நோக்கிப் பாயும்இவ்
அருஞ்செயல் செய்வார் அல்லால்
பெரியார் எவர்? - நம் பெரியார் வாழ்கவே!

- பாரதிதாசன் (8.6.1958, 6)

Read more: http://viduthalai.in/page1/87913.html#ixzz3F8SJVTQA

தமிழ் ஓவியா said...

எதிர்வினை புரிந்த குரல் கவிஞர் கண்ணிமை


வினையாற்றிய வல்லாளர்களால்
ஊர்ப்பெயர் வரைபடத்தில் பதிந்ததுண்டு
பெரியாரால் இசை குவித்தது
நீரோடை என்னும் ஈரோடு
இவரை நெருப்பாக்கியது
இக்கந்தக நிலம்
கல்வி கேள்விகளாலும் கண்களாலும்
அச்சம் கண்டறியாத
எஃகின் வார்ப்படம்
இவரது கூர் நகங்கள்
கீறிக் கிழித்தது பழம்பஞ்சாங்கம்
பூவாங்கிக் கொடாதே
ஓர்... புத்தகம் வாங்கிக் கொடு
என்ற புதிய பொருள் மொழி
நால்வருணம் என்ற சொல்
மீளவும் முளைவிடாதவாறு
அடக்கம் செய்தவர்
கேள்விகளால் புலர்ந்த கிழக்கு
தனித்துச் சுட்டப்படும் தடம்
பகுத்தறிவுப் பாசறை
சுற்றிச் சுழன்ற கடற்சூறை
திருவிடத்தின் அகண்ட திரை
பகுத்தறிவுப் படைவீடு
அறிவு முகந்து புகட்டிய
காலக் கணியன்
மடமை இருள் அப்பிக் கிடந்த
உச்சிப் பகல்
கூனிக் குறுகிய மனிதன்
விடுதலை அறியாப் பாமரன்
கற்றலின் சீர் மறந்து
அடிமை வயப்பட்ட ஏழ்மை
படைத்தவன் எழுதிய விதி பசி
என வாழ்ந்த ஊமை
இன்னவாறான இருப்பின் பொதிகளை
அறுத்துக் கூறிட்ட அறக் கூற்றுவன்
வான்வெளியில் உயர நிற்கும்
ஒற்றைக் கோள்
உயர்வு நவிற்சி இல்லாத எளிய உரு.
இறைவீடு எல்லோர்க்கும் பொது என்று
வைக்கம் நுழைந்த
வரலாற்றுத் தோற்றுவாய்
திரியும் தீக்குச்சியும் வைத்து
வல்லினங்களை உரசி எறிந்தவர்
எரிபொருள் வெடிபொருள் நிரப்பும்
ஆரியப் படை கடந்த
கொங்குச் சோழன்
கருஞ்சட்டை அணி வரிசைகளால்
இருளின் அடர்த்தி அமிழ்த்துச்
சுவடின்றிச் செய்த சூரிய விளக்கு
தந்தை பெரியார் கடந்து ஒலிக்கும் என்றும்
எதிர்வினை புரிந்த குரல்!

Read more: http://viduthalai.in/page1/87880.html#ixzz3F8V1QN8z

தமிழ் ஓவியா said...

வாஜ்பேயி எப்படி?


இந்தி திணிப்பு என்பதில் காங்கிரஸ் ஆட்சிகூட இலை மறை காய் மறையாக இருந்து வந்துள்ளது. இந்தி யாவிலேயே தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் மட்டுமே கலாச்சார ஆதிக்க எதிர்ப்பில் முன்னணி எரி மலையாக என்றும் எழுந்து நிற்கக் கூடியது!

இந்தி என்பது ஆரியக் கலாச்சாரப் படையெடுப்பின் ஒரு கூர்முனையாகும்; இந்தியில் இலக்கியம் என்று மெச்சத் தகுந்ததாக இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சும் நூல் துளசிதாசரின் இராமாயணமாகும்.

துளசிதாசரின் இராமா யணம் என்ன கூறுகிறது? இதோ இராமன் பேசுகிறான்:

பிராமணர்களை வெறுப் போர் என்னால் விரும்பப்பட மாட்டார்கள். பிராமணர் களின் செல்வாக்கிற்குட்பட்டு இருக்கின்ற பிர்மாவும், சிவனும், பிற கடவுளரும் பிராம்மணர்களை விசுவாசத் துடன் வழிபடுகின்றனர்.

பிராமணன் ஒருவன் சாபம் கொடுத்தாலும், கொலை செய்தாலும், கொடிய சொற் களைப் பேசினாலும்கூட அந்தப் பிராமணன் வழிபடத் தக்கவன்.

இந்தவுலகில் ஒருவன் செய்யத்தக்க நற்செயல் ஒன்றே ஒன்றுதான். அந்த நற்செயல் என்பது பிரா மணர்கள், ரிஷிகள் முனிவர் களின் பாதங்களை வணங்கு வதுதான். அவ்வாறு செய் தால் கடவுளர் மகிழ்ச்சி அடைகின்றார்கள் என்று இராமன் கூறுவதாக துளசி தாசரின் இராமாயணம் கூறுகிறது.

இதனைத்தான் இந்தி யைப் படிப்பதன்மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகி றோம் என்று சுட்டிக் காட்டினார் தந்தை பெரியார்.

1922ஆம் ஆண்டில் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலேயே இராமாயணத்தையும், மனு தர்ம சாஸ்திரத்தையும் கொளுத்த வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்.

எனவே இந்தி மொழி என்றாலும், அதன் தாயான சமஸ்கிருதம் என்றாலும் அவை பரப்புவதெல்லாம் வருணாசிரம நோய்களைத் தான், பார்ப்பன ஆதிபத்தி யத்தைத்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்துத்துவாவை வலியுறுத்தும், இந்து ராம ராஜ்யத்தை உண்டாக்குவ தாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு ஆட்சிப் பீடம் ஏறிய பி.ஜே.பி. ஆட்சி இந்தியை, சமஸ்கிருதத்தைப் பரப்புவதில் ஆச்சரியப்படுவ தற்கு என்ன இருக்கிறது?

அய்.நா.விலேயே பிரதமர் நரேந்திரமோடி இந்தியில் பிளந்து கட்டப் போகிறார் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நீட்டி முழங்குகிறார். வாஜ்பேயி கூட அய்.நா.வில் இந்தியில் தான் பேசினார் என்றெல் லாம் கூடக் கூறியுள்ளார்.

இதுபற்றிய ஒரு தகவல் குறிப்பிடத்தக்கதாகும். அதுவும் வாஜ்பேயி குறித்து அறிஞர் அண்ணா சொன்ன தகவல் அது.

ஜன சங்கத்தைச் சேர்ந்த வாஜ்பேயி என்னும் உறுப் பினர் ஆங்கிலத்தில் நன் றாகப் பேசக் கூடியவர் அவர் மாநிலங்களவையில் பேசும் போதெல்லாம் இந்தியி லேயே பேசுகிறார். அவரிடம் நான் நண்பர் என்ற முறை யில் கேட்டேன்.

நீங்கள் பேசுவதையெல்லாம் நாங் கள் புரிந்து கொள்ள வேண் டாமா? ஆங்கிலத்தில் பேசக் கூடாதா? என்று. அதற்கு அவர் நான் வெளியில் வந் ததும் உங்களுக்கு ஆங்கிலத் தில் விளக்கிச் சொல்லு கிறேன். உள்ளே இந்தியில் தான் பேசுவேன் என்றார்.

இங்குள்ளவர்களுக்கு இது இந்தி வெறியாகப்பட வில்லை. போலீஸ் ஸ்டே ஷனை காவல்நிலையம் என்று சொன்னால் தமிழ் வெறியாகப்படுகிறது என்றார் அண்ணா.(சென்னை சட்டக் கல்லூரி தமிழ் இலக்கியப் பேரவை 1963-64-இல் வெளியிட்ட சிறப்பு மலரில்).

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/87835.html#ixzz3F8YulAcS

தமிழ் ஓவியா said...

மாணவச் செல்வங்களே படியுங்கள்!


ஆண்டாண்டுக் காலமாக கல்வி மறுக்கப்பட்ட இனம் நமது இனம். அதுவும் பிறப்பின் அடிப் படையிலே கீழ் ஜாதி மக்களாக பஞ்சமர்களாக, சூத்திரர்களாக ஆக்கப்பட்ட இனம் இந்த இனம்.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பது வெறும் சாஸ்திரம் மட்டுமல்ல; அந்த சாஸ்திரமேதான் சட்டமாக இருந்து ஆட்டிப் படைத்தது நம்மை.

வீராதி வீரர்கள், சூராதி சூரர்களான நமது அரசர்கள் எல்லாம் ஆரியத்தின் கைக் கூலிகள்! அவர்கள் வடித்துக் கொட்டியதெல்லாம், தானமாகக் கொட்டிக் கொடுத்ததெல்லாம் மானியமாகத் தூக்கிக் கொடுத்ததெல்லாம் சமஸ்கிருதப் படிப்புக்குத்தான் - அவை எல்லாம் அறுத்து வைத்தது ஆரியப் பார்ப்பனர்களுக்கு மட்டுமேதான்.

ஏதோ வெள்ளைக்காரன் வந்து கல்வியைப் பரவலாக்கினான். திராவிட இயக்கமும், சுயமரியாதை இயக்கமும், தந்தை பெரியாரும் பிறப்பெடுத்ததால் போராடிப் போராடி, அங்குலம் அங்குலமாகக் கல்வி உரிமையை நமக்குப் பெற்றுத் தந்தனர்.

அருமை மாணவச் செல்வங்களே, பார்ப்பனர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்களே, உங்களுக்கு ஒரு வரலாறு தெரியுமா?

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என்ற ராஜாஜி இரண்டு முறை சென்னை மாநிலத்தில் முதல் அமைச்சராக இருந்தாரே - அந்த இரண்டு முறையும் அந்த அய்யங்கார் செய்தது என்ன தெரியுமா? 1937லேயே 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார். (அந்தக் கால கட்டத்திலே இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு இருந்திருக்கும்; அந்த நிலையிலேயே கிராமத்துப் பள்ளிகளை இழுத்து மூடினார் என்றால் அதன் தன்மையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்).

1952இல் இதே ஆச்சாரியார் மீண்டும் சென்னை மாநிலத்தில் முதல் அமைச்சராக வந்தார்; அப்பொழுதும் ஆறாயிரம் பள்ளிகளையும் இழுத்து மூடினார் - அரை நேரம் படித்தால் போதும்; மீதி அரை நேரத்திலே அப்பன் தொழிலை பிள்ளை செய்ய வேண்டும் என்ற குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

மலம் அள்ளுபவன் மகன் மலம் அள்ள வேண்டும்; சிரைக்கிறவன் மகன் சிரைக்க வேண்டும்; வெளுக் கிறவன் மகன் வெளுக்க வேண்டும்; பார்ப்பான் மட்டும் அவன் அப்பன் தொழிலான வக்கீலாக, டாக்டராக பயிற்சி பெற வேண்டும்.

உடம்பெல்லாம் மூளை உள்ளவர் என்றும், மூதறிஞர் என்றும் போற்றிப் புகழப்படும் ஆச்சாரியா ருக்குத் தெரியாதா? கல்வி என்பது அடிப்படையில் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டியது அரசின் கடமை என்பதை அறியாதவரா அவர்? எல்லாம் தெரிந்துதான் சட்டத்தைவிட சாஸ்திரம், மனு தர்ம சாஸ்திரம் அடித்துச் சொல்லுகிறதே - சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்று.

அதனைத்தான் சட்டம் படித்த அந்த மேதை, சட்டத்தை சவக் குழியில் போட்டு விட்டு, அதன்மீது ஏறி நின்று சாஸ்திரத்தில் கூறியதைச் செயல்படுத்தினார்.

அன்று தந்தை பெரியார் மட்டும் போர்க் கொடி தூக்காமல் இருந்திருந்தால், தீப்பந்தம் ஏந்துவீர்! என்ற எழுச்சித் தீயை மூட்டாமல் இருந்திருந்தால், அந்தக் குலக் கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டு இருக்குமா? ஒரு பச்சைத் தமிழரைத் தான் நாடு அடையாளம் கண்டு இருக்குமா?

அதற்குப் பிறகுதான் கல்வி வெள்ளம் நாடெல்லாம் பாய்ந்தது. பார்ப்பனர் அல்லாத மக்களாகிய நாமும் படிக்க ஆரம்பித்தோம். சமூக நீதி என்ற தாய் நம் மக்களை ஊட்டி வளர்த்தாள் அதன் பலனை நாடே இன்றைக்கு அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.

மாணவர்களே, உங்களுக்குத் தெரியுமா? ஒரு கால கட்டத்தில் சென்னையில் தங்கி படிக்க பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு விடுதிகள் கிடையாது - உணவு விடுதிகளில் உட்கார்ந்து சாப்பிடவும் முடியாது; எடுப்புச் சாப்பாடு வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாம்.

அத்தகு ஒரு கால கட்டத்தில், வாராது வந்த மாமணி யாக டாக்டர் சி. நடேசன் திராவிட மாணவர்களுக்காக விடுதியை ஏற்படுத்தி; தங்கும் வசதி செய்து கொடுத்து நம் மாணவர்களை கல்லூரிகளின் படிக்கட்டுகளை மிதிக்கச் செய்த வரலாறு இந்தத் தலைமுறைக்குத் தெரியாதது - ஒரு பெரிய குறைதான்.

அதனால்தான் கல்லூரிகளில் படிக்கும் நம் இனத்து மாணவர்கள் கோஷ்டி கோஷ்டிகளாக பிரிந்து, பிளவு பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்கிறார்கள் - வெட்டிக் கொள்கிறார்கள். புத்தகங்களைச் சுமக்க வேண்டிய கைகளில் கொலைக் கருவிகளோடு சுற்றித் திரிகிறார்கள் என்றால் இந்தக் கொடுமையை, அவ லத்தை என்னவென்று சொல்லுவது?

தமிழ் ஓவியா said...

கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் நீக்கப்படு கிறார்கள். கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதால் சிறைக்குச் செல்லுகிறார்கள் என்றால், வேதனைப் படுகிறோம் - வெட்கப்படுகிறோம். இதில் எந்தப் பார்ப்பன மாணவனும் சிக்கப் போவதில்லை சீரழிவது எல்லாம் நம் இனத்து மாணவர்கள்தான்!

மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை ஒரே ஒரு முறை எண்ணிப்பார்க்க வேண்டாமா? அவர்கள் பெற்றோர் தம் எதிர்ப் பார்ப்பினைக் கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டாமா?

நம்முடைய தலைவர்கள் பாடுபட்டதெல்லாம் பாழாகிவிட வேண்டுமா?

தலைவர்கள் என்ன செய்கிறார்கள்? நமது ஊடகங்கள் என்ன செய்கின்றன? எழுத்தாளர்கள் சிந் தனையாளர்கள், சமூக நல் விரும்பிகள், கல்வியாளர் கள் ஏன் உறங்கிக் கொண்டு இருக்கிறார்கள்? பெற்றோர்கள்தான் தங்கள் பொறுப்பை உணராதது ஏன்?

நமது கல்வி திட்டத்தில் கல்வியைச் சொல்லி கொடுக்கும் முறையில், அடிப்படையில் எங்கே தவறு இருக்கிறது? அதனைச் சரி செய்ய வேண்டியது நம் அனைவரின் பொறுப்பும் கடமையுமாகும்.

கடைசியாக ஒன்று, மாணவர்களே! அரிவாளை ஏந்துவதற்குப் பதில் அறிவாயுதத்தைத் தரும் கல்வி என்னும் அழியாச் செல்வம் பக்கம் உங்கள் கவனத் தையும் கருத்தையும் செலுத்துங்கள்! செலுத்துங்கள்!!

Read more: http://viduthalai.in/page1/87827.html#ixzz3F8ZCkBFB

தமிழ் ஓவியா said...

அண்ணாவின் மூன்று சாதனைகள் கழகத் தலைவர் ஆசிரியர் பேட்டி


சென்னை அண்ணாசாலையில் அண்ணா சிலைக்குக் கழகத் தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அண்ணா என்பவர் ஒரு தத்துவம்; அவர் ஒரு பெரும் பாடம் என்பது மிக முக்கியமானது. படத்தோடு அண்ணா முடிந்துவிட்டார் என்று கருதாமல், கொள்கையோடு வாழ்வதுதான் அண்ணாவிற்கு நாம் காட்டக் கூடிய சிறப்பு என்று மிகப்பெரிய அளவிலே உணர்வுகளைப் பெற வேண்டும்.

அண்ணா செய்த சாதனைகள்

அண்ணா மூன்று சாதனைகளைத் தமிழ்நாட்டில் செய்தார். ஆட்சிக்கு வந்த நிலையில்!

தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுத்தார்.

அதுபோலவே, இருமொழிக் கொள்கை - இந்திக்கு இடமில்லை என்று சொன்னார். ஆனால், இன்றைக்கு இந்தியும், சமஸ்கிருதமும் மீண்டும் இந்தத் தமிழ் மண் ணிலே மட்டுமல்ல, இந்தியாவையே ஆளத் துடித்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், அண்ணா, தந்தை பெரியார் வழியிலே மிகவும் நினைவூட்டப்பட வேண்டி யவர் மட்டுமல்ல, அண்ணாவை ஏந்தி, அவர்தந்த களத்தை நாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டியதுதான், அண்ணாவின் பிறந்த நாளில் நாம் ஏற்கவேண்டிய சூளுரையாகும்.

மோடி வித்தை எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் பலிக்காது!

செய்தியாளர்: இப்பொழுது தொடர்ந்து மோடி அரசாங்கம் இந்தியை பல வகைகளில் ஆட்சி மொழியாக்கவேண்டும் என்று சுற்றறிக்கையை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்; இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர் பதில்: மோடியை ஆதரித்தவர் களிடம் கேட்கவேண்டிய கேள்வி இது. எங்களைப் பொறுத்த வரையில், இது வியப்பானது அல்ல; எதிர் பார்க்காததும் அல்ல. ஏற்கெனவே, மோடி வந்தால் என்ன செய்வார் என்பதை தேர்தலுக்கு முன்பாகவே நாங்கள் சொன்னோம்.

அதைத் தாண்டி, அவர் ஆட்சிக்கு வந்தால் எதை எதையோ செய்துவிடுவார்கள் என்று நினைத் தார்கள்; எனவே, மோடி வித்தை எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் பலிக்காது!

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியில் கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/87803.html#ixzz3F8Zx7LBT

தமிழ் ஓவியா said...

அண்ணா வெறும் படமல்ல - பாடம்! அவற்றைப் படிப்போம் - செயல்படுத்துவோம்! தமிழர் தலைவர் அறிக்கை


அறிஞர் அண்ணாவின் 106ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அறிஞர் அண்ணாவின் 106ஆம் பிறந்த நாள் பெரு விழா! (செப்.15- 2014) இன்று.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் தலை சிறந்த மாணவராகத் திகழ்ந்து, அவர் கண்ட பகுத்தறிவு - சுயமரியாதை இயக்கத்தின் தளபதியாய் உயர்ந்து, பிறகு கோலோச்சும் நிலைக்கு மக்கள் ஆட்சியின் மகத்தான வாய்ப்புக் காரணமாக உயர்த்தப்பட்ட நிலையில், இளமையில் கற்ற பாடங்களை மறக்காது, ஆட்சியின் அரிய திட்டங்களாக - சட்டங்களாக ஆக்கி, தன்னை ஆளாக்கிய தலைவனின் பாராட்டையும், வாழ்த்தையும் பெறும் அளவுக்கு வாழ்ந்து காட்டி, வரலாறு படைத்தவர் அறிஞர் அண்ணா. ஆட்சி அவருக்கு அலங்கார பீடமல்ல; அவனியோர்க்கு ஆற்ற வேண்டிய மனித நேயக் கடமைக்களுக்கான வாய்ப்பு ஆகும்.

அப்படித்தான் செயற்கரிய செய்து குறுகிய காலத்தில் சாதனைச் சரித்திரம் படைத்தார்.

இன்றோ அண்ணாவைப் பற்றிய வெளிச்சங்கள், வாண வேடிக்கைகள் அதிகம்; ஆனால், அண்ணா எந்த பகுத்தறிவுக் கொள்கையை இறுதி மூச்சடங்கும் வரை ஆட்சியில் இருந்தபோதும் செயல்படுத்துவதில் சமரசம் விரும்பாத தலைவராக இருந்தாரோ, அந்தப் புரிதலும் அதை ஒட்டிய செயல்பாடும் தேடித் தேடியும், காணாமற் போனவைகளாகி விட்டது - வேதனைக்கும் வெட்கத் திற்கும் உரியது!

கடவுள் படங்களை நீக்கச் சொன்னார்

ஆட்சிக்கு வந்தவுடன், மதச் சார்பின்மை என்பது ஆட்சியின் தத்துவம் ஆனதால், அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்களை மாட்டியிருப்பது தவறு; அவைகளை அகற்றிட வேண்டும் என்று சுற்றறிக்கையே அனுப்பி தலைமைச் செயலகத்திலேயே அதனை செயல்படுத்தவும் வற்புறுத்தினார் 1967-இல்.

அவருக்கு ஆதரவு கொடுத்த ஆச்சாரியார் - ராஜாஜி அவர்களேகூட இந்தச் சுற்றறிக்கையை பின் வாங்கிட வேண்டும் - தமிழக அரசு என்று அறிக்கை விட்டு, எதிர்ப்புத் தெரிவித்ததையும் பொருட்படுத் தாது, ஆட்சியைத் தொடர்ந்த துணிச்சலின் சொந்தக்காரராக முதல் அமைச்சர்அண்ணா திகழ்ந்தார்!

ஆனால், அது பிறகே செயல்பாடற்றுப் போனது - வேதனையான நிலையே!

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே பார்ப் பனர் இல்லாத அமைச்சரவையை அமைத்து வெறும் 9 பேர்களையே (முதல்வர் உட்பட) கொண்டு ஆட்சியை நடத்தி, அகிலத்தையே வியக்க வைத்தார்!

எங்கும் பகுத்தறிவு முழக்கம் செய்தார்; பட்டமளிப்பு விழாக்கள் என்றாலும் சரி, பாராட்டு விழாக்களானாலும் சரி, அதை ஒரு முக்கிய கடமையாகவே செய்து சரித்திரம் படைத்தார்! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற சொற்களையும் அண்ணாவையும் பிரித்துப் பார்க்க முடியாது!

ஆனால், இன்று அண்ணா பெயரைப் பயன்படுத்தியும், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், கொடியில் பொறித்தும் நடத்துகின்றவர்கள் இம்மூன்றையும் கடைப் பிடித்து ஒழுகும் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்கள் தானா என்று நெஞ்சில் கைவைத்து கேள்வி கேட்டு நேர்மையான விடை காண முயல வேண்டும்.

அண்ணா வெறும் படம் அல்ல.
பாடம்! பாடம்! படிப்பினை
பெரியார் வாழ்க! அண்ணா விரும்பிய புதிய சமுதாயம் மலர்க!

சென்னை
15.9.2014

கி. வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page1/87808.html#ixzz3F8a90RvX

தமிழ் ஓவியா said...

அண்ணா பிறந்த நாளில்....


அறிஞர் அண்ணாவின் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள். தமிழ் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. தந்தை பெரியார் பிறந்த நாளும் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளும் அடுத்தடுத்து வருகின்றன.

இருவர் விழாவையும் இணைத்துக் கொண்டாடும் வாய்ப்பு இயல்பாகவே அமைந்து விட்டது. தந்தை பெரியார் அவர்கள் தத்துவக் கர்த்தா என்றால் அதனை எடுத்துப் பரப்பியதில் ஆற்றல் வாய்ந்த தலை மகனாக ஒளி விட்டவர் அண்ணா ஆவார்.

செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் அல்லர் அண்ணா; அந்தக்கால கட்டத்தில் எம்.ஏ. படிப்பு என்பது சாதாரண மானதல்ல; ஒரு நடுத்தரக் குடும்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற எவரும் அரசுப் பணியில் அமர்ந்து கை நிறைய பொருளீட்டி தம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பதுதான் எதார்த்தமாகும்.

ஆனால், அண்ணா அந்த மலிவான - பெரும்பாலோர் எண்ணக் கூடிய அந்தச் சுயநல சிறைக்குள் தன்னைச் சிக்க வைத்துக் கொள்ளாமல், சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களின் கரம் பிடித்து, காடுமேடுகள் எல்லாம் சுற்றித் திரிந்து, ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக நம்மை தளைப்படுத்திய பழைமைவாத வைதீக முதலைப் பிடியிலிருந்து விடுதலை செய்விக்க அரும்பெரும் தலைமைப் பிரச்சாரகராக விளங்கினார்.

தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் அவருக்கு இருந்த தனிப் பெரும் ஆற்றல் - சொற்பொழிவிலும், எழுத்திலும் போட்டிப் போட்டுக் கொண்டு முகிழ்த்து நின்றன. இளைஞர்களை ஈர்த்தன! வைதீகப்புரியைக் குலை நடுங்க செய்தது; சங்கராச்சாரியாரின் மடம் அமைந்த அந்தக் காஞ்சியிலே தான் அண்ணாவும் பிறந்தார்.

சங்கராச்சாரியார்பற்றி அண்ணா எழுதியவை அனந்தம் சங்கராச்சாரி பதவி தற்கொலை என்று திராவிட நாடு இதழில் (19.4.1942) அண்ணா எழுதியதுண்டு.

ஈட்டிய பொருளில் வாழ்க்கைக்குத் தேவையானது போக மீதியைச் சொத்தாகவும், சுகபோகக் கருவியாகவும் மாற்றாமல், ஏழைகள் உய்யச் செலவிட வேண்டும் என்ற உருக்கமான இந்த உபதேசம்; துறவு நிலை பூண்டு உள்ளவரால் இல்லறவாசிகளுக்கு எடுத்து ஓதப்படுகிறது. மிகச் சரி! ஆனால் சுவாமிகளின் நிலைமை என்ன?

அவர் வாழ்க்கை இருக்கும் விதம் எப்படி? மேனி வாடாது, பாடுபடாது பல்லக்குத் தூக்கிகள் வேகமாகச் செல்லவில்லையே, பக்தக் கோடிகள் மேலும், மேலும் பணம் தரவில்லையே, சூடிய பூ வாடிற்றே, பட்டாடையின் பளபளப்பு மங்குகிறதே, மணியின் மெருகு குலைகிறதே, பஞ்சணையில் மல்லிகையின் காம்பு உறுத்துகிறதே என்ற கவலைகள் தவிர, வேறு கவலையற்றுப் பாதத்தைப் பலர்தடவிக் கண்களில் ஒத்திக் கொள்ள பகவானின் பிரதி நான் என்று கூறிக் கொண்டு கரி, பரி காவலருடன் காடு உலவி வரும் ராஜபோகமன்றோ சங்கராச்சாரியாருடையது! முதல் இல்லா வியாபாரம்!

தமிழ் ஓவியா said...

சோகமில்லா வாழ்வு! உழைப்பு கிடையாது! உல்லாசத்திற்குக் குறைவு கிடையாது; இங்ஙனம் இவர் வாழ்ந்து கொண்டு மிராசுதார், வியாபாரி மற்றவர் ஆகியோருக்குக் கீதை உபதேசம் புரிவது, ஏதேனும் பொருளுடையதாகுமா? கன்னக் கோலன் கள்வன் கேடு பற்றியும், காமவண்ணத்தான் ஒழுக்கப் போதனையும், கசடன் கற்றதனால் ஆன பயனையும் எடுத்துக் கூறுவது எள்ளி நகையாடக் கூடியதன்றோ! என்று அழகு தமிழில் அருமையான கருத்துக்களைக் குழைத்துத் தந்தவர்தான் அறிஞர் அண்ணா!

அவர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போதும் அடிப்படையில் ஈரோட்டுக் குருகுலத்தில் அவர் கற்றவற்றை, ஆழ்ந்து உணர்ந்தவற்றை - இந்தச் சமுதாயத்துக்கு ஆற்றப்பட வேண்டியவை என்று ஆழமாக அவர் உணர்ந்தவற்றை அவர் ஆட்சியில் அமர்ந்திருந்த அந்தக் குறுகிய காலத்திலேயே சட்ட வடிவமாக்கி, தன் ஆசான் தந்தை பெரியார் அவர்களின் திருமுன்னே அளித்து, ஆட்சி யையே காணிக்கையாக்கிய வாய்ப்பு எந்தக் காலத்தில் நடந்திருக்கிறது?

சட்டமன்றத்தின் படிக்கட்டுகளை மிதிக்காத தலை வருக்குச் சட்டமன்றம் - அமைச்சரவை காணிக்கையாக் கப்பட்டது அசாதாரணமானது.

அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு ஆட்சி பொறுபுக்குவந்த மானமிகு கலைஞர் அவர்களோ இது சூத்திரர்களுக்காக ஆளப்படும் சூத்திரர்களின் அரசு! என்று சூளுரைத்தது காலத்தையும் தாண்டி எதிரொலித்து கொண்டுதானிருக்கும்! இதுதான் திமுகவின் பலம் என்பது ஒரு புறம் இருந்தாலும், இன எதிரிகள் இனம் கண்டு தாக்குவதற்கும் காரணமாகும்; இது தவிர்க்க முடியாத ஒன்றே!

இன்றைய நிலை என்ன? இந்தியாவின் தென் பகுதியில் முகிழ்த்த சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம் எடுத்துக் கொடுத்த - பகுத்தறிவு - சுயமரியாதை, சமத்துவ - சமதர்மக் கொள்கைகள் இந்தியா முழுமையும் இன்று தேவை - அவசியம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்துத்துவாவாதம் எழுந்து நிற்கிறது. இந்துத்துவா பற்றிக்கூட இந்து இட்லரிஸம் என்ற கட்டுரையில் தம் கருத்தினைப் பதிவு செய்துள்ளார் அண்ணா (திராவிட நாடு 29.7.1942).

இந்தக் கால கட்டத்தில் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று ஆரியத்தின் தொங்கு சதையாக இருந்து ஆரம்பித்துள்ள திராவிட இயக்கத்தால் பலன் பெற்ற சில தமிழர்கள்.

இராவணன் காலத்திலேயே விபீடணர்கள் தோன்றிட வில்லையா? இதனை அய்யாவும், அண்ணாவும் எடுத்துக் காட்டியதில்லையா? இத்தகையவர்களை - திராவிடத்தால் பலன் பெற்ற நம் மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்குவார்கள் என்பதில் அய்யமில்லை.

மற்றொருபுறம் அண்ணாவின் பெயரால் கட்சியை வைத்துக் கொண்டு, அண்ணாவின் உருவத்தைக் கட்சியின் கொடியில் பொறித்துக் கொண்டு, திராவிட இனக் கலாச்சார சொல்லையும் ஒட்டிக் கொண்டு, இவற்றிற்கு எதிரான ஒரு கட்சி (அகில இந்திய அண்ணா திமுக ஆட்சி அதிகாரத்திற்கும் வந்து விட்ட - அவலம்). எந்த அளவுக்கு அந்தக் கட்சி ஆரிய ஊடுருவலாக ஆகி விட்டது என்றால் அக்கட்சி நடத்தும் அதிகாரப் பூர்வமான நாளேட்டில் (Dr. நமது எம்.ஜி.ஆர்.) பூணூலின் தத்துவம் என்று கூறி, படம் போட்டு விளக்கம் சொல்லும் அளவுக்கு அக்ரகாரத் தனமாக விளங்குகிறது.

திராவிடர் இயக்கத்தில் ஆரிய ஊடுருவலால் ஏற்பட்ட விபரீதம் இது! அய்யா, அண்ணா பிறந்த நாள் என்கிற போது அவர்களை என்றும் படமாக பார்க்காமல், அவர்கள் நாட்டு மக்களுக்குப் போதித்த பாடங்களை ஆழமாக படித்து உணர்ந்து, அவர்கள் காண விரும்பிய சமு தாயத்தை படைக்க உறுதி எடுத்து உறுதியாக செயலாற்று வதுதான் மிக முக்கியம்!
வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!!

Read more: http://viduthalai.in/page1/87809.html#ixzz3F8aLv48V

தமிழ் ஓவியா said...

பெருமை

மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக் காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.

- (விடுதலை, 10.10.1973)

Read more: http://viduthalai.in/page1/87810.html#ixzz3F8aXpbjg

தமிழ் ஓவியா said...

ஆயுதம் ஏந்தாத அறிவுப் புரட்சியை செய்தது திராவிடர் இயக்கமே!

மணமேல்குடி எஸ்.என்.சிவசாமி மகன் பிரபாகரன் - சத்யா மணவிழா வரவேற்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவார்ந்த உரை

மணமேல்குடி ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் எஸ்.என்.சிவசாமி இல்லத் திருமண நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் இருந்து இயக்க நூல்களை பெறுகின்றனர் மணமக்கள் பிரபாகரன் - சத்யா

மணமேல்குடி, செப். 15- ஆயுதம் ஏந்தாத அறிவுப் புரட்சியை செய்தது திராவிடர் இயக்கமே என்ற அறிவார்ந்த உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

ஆகவே, திராவிடர் இயக்கம் என்ன செய்தது? என்றால், ஆயுதம் ஏந்தாத அறிவுப் புரட்சியை செய் தது; அறிவாயுதத்தை ஏந்துங்கள் என்று பெரியார் சொன்னார். இடையறாமல் பெரியார் போராடினார்; பெண்கள் படிக்கவேண்டும் என்று சொன்னார்.

ஒரே ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னால், அதை ஆணுக் குக் கொடுக்கக்கூடாது; அதனைப் பெண்ணுக்குக் கொடுக்கவேண்டும் என்று சொன்னார். ஏனென்றால், ஒரு பெண் படித்தால், நான்கு ஆண்கள் படிப்பதற்குச் சமம் என்று தெளிவாகச் சொன்னார்.

எனவே, இப்படிப்பட்ட அருமையான மணவிழா வரவேற்பு நிகழ்வில், தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டும், அவர்களிடம் நான் அன்பாகக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் என்ன கொடுக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல; கல்வியைக் கொடுங்கள்;

பள்ளிக்கூடத்திற்கு அனுப் புங்கள்; பிள்ளைகளை நன்றாகப் படிக்க வையுங்கள்; தொழிற்கல்வியைப் படிக்க வையுங்கள்; அப்படி நீங்கள் செய்தால், அவர்கள் தங்களுடைய சொந்தக் காலில் நிற்பார்கள். யார் தயவையும் எதிர்பார்க்கமாட்டார்கள்.

2005 ஆம் சட்டம் வந்தது; இதற்குத் திட்டம் போட்டது 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற மாநாட்டில்!

எல்லாப் பெண்களுக்கும் சம உரிமை சொத்தில் உண்டு. ஆண்களுக்கு என்னென்ன உரிமை இருக் கிறதோ, அத்தனையும் பெண்களுக்கும் உண்டு என்று சட்டம் செய்த பெருமை, தந்தை பெரியாருடைய இயக்கத்தின் தாக்கத்தினாலே, கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, 2005 ஆம் ஆண்டு மத்திய அரசு அந்தச் சட்டத்தினை நிறைவேற்றியது. இதற்குத் திட்டம் போட்டது 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற மாநாட்டில்.

பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், 1956 ஆம் ஆண்டு காலகட்டத்தில், அவர் மத்திய அமைச்ச ராக இருந்தார்; பெண்களுக்குச் சொத்துரிமை என்ற வுடன், காங்கிரஸ்காரர்களிலேயே வைதீக உணர்வு படைத்தவர்கள் அனுமதிக்கவில்லை; அவர்கள் எல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

அப்பேர்ப்பட்ட நிலையில், அம்பேத்கர் அவர்கள் பதவியை விட்டே போகிறேன்; இதனை செய்ய முடியவில்லை என்றால், இந்தப் பதவி தேவையில்லை என்று சொன்னார்.

இன்றைக்கு 2005 ஆம் ஆண்டு அந்த சட்டம் நிறைவேறிவிட்டது. இன்றைக்கு ஆண் களைப் போலவே, பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு. பெண்களைக் கொச்சைப்படுத்த முடியாது; பெண்களைக் கேவலப்படுத்த முடியாது. சட்டங்கள் இருக்கின்றன.


தமிழ் ஓவியா said...

எனவேதான், இந்த மணமக்கள், அறிவார்ந்த இந்த மணமக்கள் நல்ல படிப்பாளிகளாக இருக்கிறார்கள். பகுத்தறிவாளர்களாக இருக்கவேண்டும், அதுதான் மிக முக்கியம். சிந்தித்து செயல்படவேண்டும்; மூட நம் பிக்கைகளுக்கு ஆட்படக்கூடாது.

நீங்கள் தைரியமாகப் பகுத்தறிவைப் பயன்படுத்தினீர்கள் என்றால், உங்களுக் குப் பயம் இருக்காது. உறுதியாக ஒவ்வொரு அடியை எடுத்துக் வைக்கவேண்டும். வள்ளுவர் நீண்ட காலத்திற்கு முன்பாகவே, இந்தத் தத்துவத்தை,

ஆகாறு அளவிட்டடிதானும் கேடில்லை போகாது அகலாக் கடை என்று சொன்னார்.

வருகின்ற வருமானம் குறைவாக இருக்கிறதே என்பதைப்பற்றி கவலைப்படாதீர்கள்; செலவழிக்கின்ற வழி இருக்கிறதே அது, அதைவிட அகலமாக இருக்கக் கூடாது, அதுதான் மிக முக்கியம்.

பணத்தை நம்முடைய வேலைக்காரனாகக் கருதவேண்டுமே தவிர, என்றைக்கு பணம் மனிதனுக்கு எஜமானனாக கருதக்கூடாது

மனிதர்கள் எவ்வளவு பணம் சேர்த்தார்கள் என்பது முக்கியமல்ல; ரொம்பப் பேர் பணம் சேர்த்தவர்கள் எல்லாம் இப்பொழுது அவதிப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்;

பணம் சேர்த்தவர்கள் எல்லாம் இப்பொழுது சிறைச்சாலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். பணமே தேவையில்லை என்று யாரும் சொல்ல முடியாது. பணம் வாழ்க்கைக்குத் தேவை. அதனை ஒரு கருவியாகப் பயன்படுத்தவேண்டும்.

காரில் வருகிறோம்; கார் எதற்கு? நாம் பயணம் செய்வதற்கு கார் தேவை. எவ்வளவுதான் விலை உயர்ந்த கார் வாங்கினாலும்கூட, அதிலேயே படுத்துத் தூங்கி, குளித்து எழுவது கிடையாது; வெளியில் விட்டுவிட்டுத்தான் வருகிறோம்.

ஆகவேதான், பணத்தை ஒரு வாகனமாக - நம் முடைய வேலைக்காரனாகக் கருதவேண்டுமே தவிர, என்றைக்குப் பணம் மனிதனுக்கு எஜமானனாக மாறுகிறதோ, அன்றைக்கு அவனுடைய வாழ்க்கை என்பது கேவலமான வாழ்க்கையாக, இன்ப வாழ்க்கை மாறி, துன்ப வாழ்க்கையாக மாறக்கூடியதாக ஆகிவிடுகிறது.

ஆகவே, அருமை மணமக்களாக இருக்கின்ற எங்கள் செல்வங்களே, நீங்கள் எந்த நாட்டில் இருந் தாலும், எந்த நிலையில் இருந்தாலும், இதனை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்; நல்ல பகுத்தறிவாளர்களாகத் திகழுங்கள்; நல்ல பண்புள்ளவர்களாகத் திகழுங்கள்;

மற்றவர்களுக்கு உதவக் கூடியவர்களாக மாறுங்கள்; நல்ல அளவிற்கு நீங்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழுங்கள். இந்தக் குடும்பம் நல்ல குடும்பம்; நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்றார் புரட்சிக் கவிஞர் அவர்கள்.

உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய ஒரு அரிய வாய்ப்பு ஏற்பட்டது

தோழர் சிவசாமி அவர்கள் நம்முடைய இயக்கத் தில் ஒரு எளிய தோழர். அவர் தன்னால் இயன்றவரை பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்துள்ளார்.

திட்டமிட்ட வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு பெரிய நோக்கம் என்னவென்றால், எப்படியாவது இதை ஒரு பிரச்சாரமாக்கவேண்டும் என்று நினைத்தார்; எங்களை அழைத்தார்.

இன்றைக்கு அவருடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். அதன்மூலமாக நமக்கும் ஒரு பெரிய வாய்ப்பு, உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய ஒரு அரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் பகுதிக்கு மற்றொரு முறை பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்து, விரிவாக, விளக்கமாக உரையாற்றுவேன் என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி முடிக்கிறேன்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page1/87774.html#ixzz3F8akh17m

தமிழ் ஓவியா said...

எத்தனை காலம்தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே!

ஊசி மிளகாய்

தந்தை பெரியார் அவர்கள் பொதுக் கூட்டங்களில் பேசும்போது, ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கவே செய்வார்கள்; எனவே நம் மக்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி, தக்க விழிப்புடன் தத்தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அருமையாக இடித்துரைப்பார்கள்.

நேற்று காலை ஒரு நாளேட்டில் வந்துள்ள செய்தியை அப்படியே தருகிறோம். படியுங்கள்

மீண்டும் மந்திரச் செம்பு மோசடி: போலீஸ்காரர் உட்பட இருவர் கைது

உத்தமபாளையம் : மந்திர செம்பு மோசடியில் ஈடுபட்ட போலீஸ்காரர் உட்பட, இருவர் கைது செய்யப் பட்டனர். சென்னை, வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன், (38); அரசு பஸ் டிரைவர். தேனி, கம்பம் புதுப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன், (40); ஆம்னி பஸ் டிரைவர். சென்னையில், இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

ரூ.2 லட்சம் : வேல்முருகன், தான் மிகுந்த பணக் கஷ்டத்தில் இருப்பதாக இளங்கோவனிடம் கூற, அவர், 'தேனி மாவட்டத்தில், மந்திரச் செம்பு பூசாரி உள்ளார். அங்கு, பூஜையில் பங்கேற்று, எவ்வளவு பணம் செலுத்துகிறீர்களோ, அதற்கு, இரு மடங்கு பணம் கிடைக்கும்' எனக் கூறி இருந்தார்.

தமிழ் ஓவியா said...

இதனால், கடந்த, செப்., 7இல், வேல்முருகன், இரண்டு லட்சம் ரூபாயுடன் சின்னமனூர் வந்தார். இருவரும், ஓடைப்பட்டி அருகே உள்ள கரிச்சிபட்டியில் வசிக்கும், பூசாரி சரவணன், (45) என்பவரது, வீட்டிற்கு சென்றனர். அங்கு, 'பூஜை பொருட்கள் வாங்குவதற்காக, இரண்டு லட்சம் ரூபாயை, என் உதவியாளர் தங்கராஜிடம் கொடுத்து விடுங்கள்' என, பூசாரி கூறினார். பணத்தைக் கொடுத்த உடன், வேல் முருகனும், தங்கராஜும், பைக்கில் சின்னமனூர் சென்றனர்.

பணம் தானாக வரும் : அப்போது, ஓடைப்பட்டி அருகே போலீஸ்காரர் ஒருவர், இவர்களை மடக்கி, 'வழக்கு தொடர்பாக, உன்னை தேடிக் கொண்டிருக்கிறோம்; என்று கூறி, தங்கராஜை அழைத்து சென்றார். சந்தேகம் அடைந்த வேல்முருகன், இதுகுறித்து, தன் நண்பர் இளங்கோவனிடம் தெரிவித்தார். அவர், நிலைமை சரியில்லை; ஊருக்குச் செல்லுங்கள்.

பணம் தானாக வரும்' என, கூறியுள்ளார். ஏமாற்றப்படுவதை உணர்ந்த வேல்முருகன், ஓடைப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, போலீசார், இளங்கோவனைப் பிடித்து, விசாரித்தனர்.

அதில், அனைவரும் கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் செந்தில்குமாருக் கும், மோசடியில் பங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, செந்தில்குமார் கைது செய்யப்பட்டார்.

தலைமறைவான, பூசாரி சரவணன், தங்கராஜ் ஆகி யோரை, போலீசார் தேடி வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன், மந்திரச் செம்பு மோசடிக் கும்பலை, போலீசார் கைது செய்தனர்.
- ஏற்கெனவே இந்த மந்திரச் சொம்பு மோசடி பற்றி ஏடுகளில் வந்துள்ளது. காவல்துறையினர் நடவடிக்கை களையும் எடுத்துள்ளனர்.

அதன் பின்னரும் ஒரு மடங்கு ரூபாய் கொடுத்து பூஜை செய்து இந்த மந்திரச் சொம்புக்குள் போட்டால், அதுபோல இரண்டு மடங்குத் தொகை கிடைக்கும் என்ற மோசடி வியாபாரத்தை பூசாரிகளும் அர்ச்சகர்களும், மந்திரவாதி என்ற பெயரால் மோசடிக்காரர்களும், சாமியார்களும், தாயத்து வியாபாரம் போல செய்து, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கின்றனர் என்றால், மக்களுக்கு அறிவு வேண்டாமா? உழைக்காமல் குறுக்கு வழியில் பணம் சேர்க்க விரும்பும் பேராசைக்கு முற்றுப் புள்ளி வைத்தால் ஒழிய இம்மாதிரி ஏமாறும் சோணகிரிகள் மலிந்து கொண்டு தானே இருப்பார்கள்?

ஏமாற்றுகிறவர்களைப் பற்றிச் சொல்லிய நீங்கள் இப்படி ஏமாறுகிறவர்கள் பற்றி குறை சொல்லுகிறீர்களே என்று சிலர் கேட்கக் கூடும்.

பள்ளத்தில் விழாமல் தவிர்ப் பதற்கு நடப்பவர் அல்லவா கவனத்துடன் அடியெடுத்து வைக்க வேண்டும்? பள்ளத்தைக் குறை கூறி என்ன பயன்? பள்ளத்தையும் மூடத்தான் வேண்டும்; அதுபோல ஏமாற்றுகிறவர்களை சிறையில் தள்ளிட வேண்டும். சிங்கப்பூர் போல சவுக்கடி, பிரம்படிகளையும் கொடுக்க முன் வர வேண்டும் (சட்டத்தைத் திருத்தியாவது)

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் கூறுவார் கள். தமிழர்களை நினைத்து நான் வேதனைப்படுவ தெல்லாம் நேற்று விழுந்த இடத்திலேயே இன்றும் விழுகிறார்களே! இன்று ஒரு புது இடத்திலாவது விழுந்து தொலைக்கக் கூடாதா? என்று கூறுவார்கள்.

அந்த அறிவுரைதான் இப்போது நினைவுக்கு வரு கிறது. கடவுள் பக்தி, பூஜையே பேராசையின் மற்றொரு வெளிப்பாடுதானே!

புதுப்புது மோசடி, ஈமுக் கோழி மோசடி, தீபாவளிச் சீட்டு மோசடி, வேலை வாங்கித் தரும் மோசடி என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அரங்கேறும் மோசடிகளுக்குக் குறைவே இல்லை - இந்த பாரத புண்ணிய பூமியில்.

21ஆம் நூற்றாண்டிலா நாம் வாழுகிறோம்? என்று கேள்வியைக் கேட்டு, வெட்கப்பட வேண்டும் நாம் அனைவரும்.

Read more: http://viduthalai.in/page1/87744.html#ixzz3F8bMpw2P

தமிழ் ஓவியா said...

தெரிந்து கொள்க!


கழிவறைக்குச் சென்று திரும்புகிறோம். கைப்பிடியைப் பிடித்து இழுத்துக் கதவைத் திறந்து வீட்டுக்குள்ளோ, அலுவலகத்துக்குள்ளோ செல்கிறோம். கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் கைப்பிடியில் ஒட்டிக் கொள்ளும். கதவைத் திறக்கும் இன்னொருவர் கைகளில் கிருமிகள் பயணத்தைத் தொடரும். அதிகம் பேர் வேலை செய்யும் அலுவலகங்களில், யார், எந்த அளவுக்குக் கையைச் சோப்புப் போட்டுக் கழுவி சுத்தமாக வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. கழிவறை என்றில்லை. பேருந்தின் நாம் இறுகப் பற்றும் இடங்களில் உள்ள கிருமிகள் வீடு வரை, அலுவலகம் வரை வந்து விடுகின்றன. இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க இப்போது கதவுகளில் பொருத்த ஒரு புதுவிதமான கைப்பிடி Pull Clean என்ற பெயரில் வந்துள்ளது. இந்தக் கைப்பிடியின் உள் பகுதியில் கிருமியை அழிக்கும் பொருள் நிரப்பப்பட்டிருக்கும். கதவைத் திறக்கும்போது கைப்பிடியின் கீழ்ப்பகுதியை அழுத்தினால் கைப்பிடியின் உள்ளிருந்து அந்த கிருமியை அழிக்கும் பொருள் கைகளுக்கு வரும். அதை இரு உள்ளங்கைகளிலும் தேய்த்துக் கொண்டால் போதுமானது. கிருமிகள் அழிந்துவிடும்.
(தினமணி கதிர் 28.9.2014)

Read more: http://viduthalai.in/page5/88674.html#ixzz3FAl5ZfbG

தமிழ் ஓவியா said...

திராட்சை


எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்ட மின் ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும்.

பொதுவாக சரியாகப் பசி எடுக்காமல் வயிறு மந்த நிலை யில் காணப்படுபவர் கள் கருப்பு திராட்சை எனப்படும்
பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதகக் கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த தீர்வாகும்.

மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாகவும், அதிகமாகவும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும்.
திராட்சைச் சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டி ருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். திராட்சைச் சாற்றை தினமும் அருந்தினால் இந்தத் தொல்லைகள் நீங்கும்.


Read more: http://viduthalai.in/page5/88675.html#ixzz3FAlS5E1w

தமிழ் ஓவியா said...

ஆனந்த லீலை

ஆண்டுக்கு ஆண்டு ஆண்டவனுக்கு
திருமணம் செய்திடும் பக்தனே! உன்
அருமை மகளுக்கு திருமணத்தை
நீயும் செய்ய நினைத்தாயா?
தேங்காய் உடைக்கும்
ஸ்டாண்டுகளாய் - இளைஞர்கள்
தலைகள் ஆகிப்போச்சு
மூளை என்பது மென்மையான
ஜெல்லி பாகம் அல்லவா?
மூளை கலங்கிப் போகாதா?
முயற்சியின் செயல்களே
வெற்றி பெறும்
உன்னை நீயே நம்பாமல்
எல்லாம் அவன் செயல்
என்கின்றாய்.
உன் செயல் இன்றி
ஒரு செயலும் இல்லை - என்பதை
உணர்ந்திடுவாய்.. அறிந்திடுவாய்...
பெரியார் சொன்ன கருத்துக்களை
சிந்தித்து நீயும் ஏற்றுக் கொண்டால்
விரயச் செலவைத் தவிர்த்திடலாமே!
வாழ்வில் வளமை பெற்றிடலாமா!
கடவுளே துணை என்பதெல்லாம்
கையா லாகாதவனுக்கே என்றிடுவோம்
கடின உழைப்பு ஒன்று மட்டுமே
ஆனந்த அலையை கொடுத்திடுமே
சாமியார்கள் பின்னே சென்றிட்டால்
ஆனந்த லீலைகள் பிறந்திடுமே
பரபரப்பாய் செய்திகளும்
செய்தித்தாளில் வந்திடுமே
அறிக! அறிக!! அறிந்திடுக!!!

- சு. ஆறுமுகம், நன்னிலம்

Read more: http://viduthalai.in/page6/88677.html#ixzz3FAm2I3wC

தமிழ் ஓவியா said...

கேட்பவன் கேணையன் என்றால்...

அபிராமி பட்டர் என்பவருடைய ஊர் திருக்கடவூர். இவர் தேவி வழி பாட்டில் சிறந்தவர்.

ஒரு முறை தஞ்சை சரபோஜி மன்னனர் ஆலயம் வந்தபோது, அதைக் கவனிக்காமல் அபிராமி பட்டர் மட்டும் தேவியை மனதில் இருத்தி தியானம் செய்துகொண்டிருந்தார். மகாராஜா அவரிடம் இன்று திதி என்ன என்று கேட்டார். அதற்கு அபிராமி பட்டர் பவுர்ணமி திதி என்று கூறி விட்டார்.

ஆனால், அன்றைய தினம் அமா வாசை திதியாகும். இதனால் கோப மடைந்த மகாராசா அதை நிரூபிக்க முடியுமா, என்று கேட்டார். அம்மா வாசையை பவுர்ணமி என்று கூறியதை வாதிக்கும் பொருட்டு, அபிராமி பட்டரும் முடியும் என்றார்.

பிறகு உமாதேவியைப் பிரார்த்தித்துக் கீழே வெட்டி குழியிலே நெருப்பு எரிய விட்டு மேலே தூக்கிய நூறுவடம் கொண்ட உறிஒன்றிலே ஏறினார். அபிராமி அருளவில்லை என்றால் இந்த நெருப்பில் வீழ்ந்து உயிர் துறப்பேன் என்றார்.

இவ்வாறு கூறி அபிராமி அம்மைமீது அந்தாதி ஒன்று பாடத் தொடங்கினார். அவ்வாறு பாடுகையில் ஒரு பாடல் முடிவில் ஒரு வடமாக உறியின் ஒவ்வொரு வடத்தையும் அறுத்தார்.

பாடல் முடிய தேவியும் வெளிப் பட்டாள். அவள் தன்னுடைய காது தோடுகளுள் ஒன்றைக் கழற்றி ஆகாயத்தில் வீசினாள். அந்த தோடு நிலவாக மாறி பவுணர்மி போல காட்சி அளித்தது. இதனால் தேவியின் அருளைப் பாராட்டி மற்ற பாடல் களையும் பாடி முடித்தார் அபிராமி பட்டர்.
இத்தகைய சிறப்புமிக்க அபிராமி அந்தாதியை பாராயணம் செய்பவர் களுக்கு பக்தியும் சித்தியும் கைவரப் பெறும் என்பது உறுதி.

கேட்பவன் கேணையன் என்றால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொல்ல மாட்டானா?

இவ்வளவு அபத்தமான அறிவுக்குச் சற்றும் பொருத்தமில்லாதவற்றை விற்றுப் பிழைப்பதும் ஒரு பிழைப்பா?

Read more: http://viduthalai.in/page7/88679.html#ixzz3FAmEKezG

தமிழ் ஓவியா said...

பொறியியல் பட்டம் பெற்ற பெண்களின் பரிதாப நிலை


பொறியியல் பட்டம் பயிலக்கூடிய பெண்கள் குறித்த ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது. அந்த ஆய்வில் பொறியியல் பட்டம் முடித்த பெண்கள் அந்தப்படிப்பிற்குரிய பணிவாய்ப்புகளுக்கு செல்லாமல் இருப்பதும், அதற்கான தொழிலிலும் ஈடுபடுவ தில்லை என்றும் தெரிய வந்துள்ளது. பொறியியல் பட்டம் படித்து முடித்த பெண்களில் 40 விழுக்காட்டினர் உரிய கல்வித்தகுதி இருந்தும், அவர்கள் முறை யாக நடத்தப்படாததாலும், குறைந்த அளவிலேயே பணிசெய்யுமிடம், சூழல்கள் இருப்பதாலும், உடன் பணி யாற்றுபவர்களாலும், மேலாளர்களா லும் தவறாக நடத்தப்படுவதாலும் பொறியியல் பட்டம் பெற்ற பெண்கள் பணிக்கு செல்லமுடியாத சூழல்கள் உள்ளனவாக ஆய்வுத்தகவல்கள் கூறு கின்றன.

அமெரிக்காவில் உள்ள விஸ்கான் சின் மில்வாக்கி பல்கலைக்கழகத்தின் முனைவர் நாட்யா ஃபோவுட் ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆய்வின் முதற்கட்டமாக மூன்று ஆண்டுகளில் தேசிய அறிவியல் அறக்கட்டளை (National Science Foundation)
ஆய்வுக்காக 5,300 பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆறு தலைமுறை களில் படித்தவர்களைக் கணக்கெடுத் துக்கொண்டது. அதிக அளவில் பெண்கள் பயின்ற 30 பல்கலைக் கழகங்களிலிருந்து அதிக எண் ணிக்கையிலான பொறியியல் பட்டம் பயின்றவர்களைக் கணக்கில் எடுத் துக்கொண்டது. ஆய்வில் 62 விழுக் காட்டினர் பொறியாளர்களாக உள் ளனர். 11 விழுக்காட்டினர் துறைக் குள்ளேயே நுழையவில்லை. 21 விழுக்காட்டினர் துறையில் பணி யாற்றியவர்கள் அய்ந்து ஆண்டு களுக்குமுன் துறையைவிட்டு விலகி உள்ளனர். 6விழுக்காட்டினர் கடந்த அய்ந்து ஆண்டுகளுக்குள்ளாக துறை யைவிட்டு விலகியுள்ளனர். மூன்றில் இரண்டு பங்கினர் நல்ல வாய்ப்பு மற்ற துறைகளில் கிடைத்து சென்று விட்ட தாக கூறியுள்ளனர். மற்றவர்கள் பணிசெய்யுமிடங்களில் உரிய அளவில் ஏற் பாடுகள் இல்லாமையால், குழந்தைகளைப் பெற் றுக்கொண்டு வீட்டி லேயே இருந்துவிட்டனர். பொறியியல் பட்ட தாரிப் பெண்கள் பணிக்கு செல்வோரில் 54 விழுக் காட்டினர் நிறுவனங்களின் நிர் வாகிகளாகவும், 22 விழுக் காட்டினர் மேலாண்மைப்பணிகளிலும், 24 விழுக் காட்டினர் அலுவலக ஊழியர்களாக வும் உள்ளனர்.

அய்ந்து ஆண்டுகளுக்குமுன்பாக பொறியியல் பட்டம் முடித்த பெண்கள் துறையைவிட்டு விலகியதற்கு 17 விழுக் காட்டினர் பாதுகாப்பு பொறுப்பின்மை யையும், 12 விழுக்காட்டினர் போதுமான முன்னேற்றமின்மையையும், 12 விழுக் காட்டினர் துறையின்மீது ஆர்வமின் மையையும் காரணங்களாகக் குறிப் பிட்டுள்ளனர். அவர்களில் மூன்றில் இரு பங்கினர் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் 55 விழுக்காட்டினர் நிர்வாகிகளாகவும், 15 விழுக்காட்டினர் மேலாளர்களாகவும், 30 விழுக்காட்டினர் அலுவலக ஊழியர் களாகவும் உள்ளனர்.

பெண்கள் பொறியாளர்களாகப் பணிபுரியும்போது, வாரத்தில் 44 மணிநேரங்கள் பணிபுரிந்தார்கள் என்றால் ஓர் ஆண்டில் 76ஆயிரம் டாலர் முதல்125ஆயிரம் டாலர்வரை (இந்திய மதிப்பில் ரூ.46,55,700 முதல் ரூ.76,57,500வரை) ஊதியம் பெறு கின்றனர். அதேபோல் 15 விழுக்காட் டினர் நிர்வாகிகளாக இருப்பவர்கள், திட்ட மேலாளர்களாக இருப்பவர்கள், மற்றவர்கள் அலுவலக ஊழியர்களாக பணிபுரிந்துவருகின்றனர்.
ஆதரவாக இருக்கக்கூடிய முத லாளிகள், உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஒத்துழைப்போடு பயிற்சி பெற்று, முன்னேற்றத்துக்கு உரிய வழிமுறைகளைக்கண்டு வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையானவையாக இருப்பதால் பெண்கள் பணிகளில் தொடர்கின்றனர் என்று ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன.

Read more: http://viduthalai.in/page8/88681.html#ixzz3FAmcWf9C

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்


ஏழை மக்களுக்கு உதவி செய்வது என்பது, ஏழைத் தன்மையிலிருந்து மற்றவர்களுடன் உயர்த்துவதே யொழிய, அங்கொருவனுக்கும், இங்கொருவனுக்கும் உணவளிப்பதல்ல.

சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதன்று. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம்தான் சேவை.

பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. பக்தி இல்லாவிட்டால் ஒன்றும் நட்டமில்லை. ஆனால் ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.

நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மையும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத் தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன்மானத்திற்கு இயற்கைத் தடைகள்.


Read more: http://viduthalai.in/page8/88682.html#ixzz3FAmno73Y

தமிழ் ஓவியா said...

இராமன் காக்கவில்லையே! இராவணனைவதம் செய்யச் சென்ற 33 பக்தர்கள் பாட்னாவில் பலி!

பாட்னா, அக்.4: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத் தில் நேற்று நடந்த தசரா விழாவில், கூட்ட நெரி சலில் சிக்கி 33 பேர் பலி யாயினர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

நவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டா டப்பட்டது. 10ம் நாளான நேற்று ராவணனை, ராமர் வதம் செய்யும் நிகழ்ச்சி வடமாநிலங் களில் நடந்தது. பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத் தில் தசரா விழா நேற்று மாலை கொண்டாடப் பட்டது. இதைக் காண, சுற்றுப்புற நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள், தங்கள் குழந்தை களுடன் வந்திருந்தனர். இதனால் காந்தி மைதா னத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த விழாவை காண முதல்வர் ஜிதன் ராம் மன்ஜியும் வந்திருந்தார்.

தசரா விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, 60 அடி உயர பத்து தலை ராவணனின் உருவ பொம்மை, அம்பு எய்தி தீ வைத்து கொளுத்தப்பட் டது. அப்போது வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதை கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்த மக்கள் மைதானத்தை விட்டு வெளியேறத் தொடங் கினர்.

மைதானத்தை ஒட்டி யுள்ள குறுகலான தெரு வழியாக மக்கள் கூட்டம் வெளியேறிக் கொண் டிருந்தது. மைதானத்தில் இருந்த ஒரு வழியாக மட்டுமே மக்கள் வெளி யேற அனுமதிக்கப்பட் டனர். அப்போது திடீ ரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் போதிய காவல் துறையினர் இல்லாததால், மக்கள் போட்டி போட் டுக் கொண்டு மைதா னத்தை விட்டு வெளி யேறினர்.

இந்த நெரிசலில் சிக்கிய குழந்தைகளும், பெண்களும் அலறினர். பலர் மயங்கி கீழே விழுந் தனர். மைதானத்தில் இருந்து வெளியேறும் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பலர் கூட்டத்தில் மிதி பட்டனர். மயங்கி விழுந்து படுகாயம் அடைந்தவர் கள் உடனடியாக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந் தனர். மொத்தம் 33 பேர் பலியானதாக பீகார் உள்துறை செயலாளர் அமிர் சுபானி தெரிவித் துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை அறி வித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/88698.html#ixzz3FE8QdxxD

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரும் அல்லாதாரும்


ஆண்களும் பெண்களும் கோயில் களுக்குச் சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடிக் கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணியக் காரியம் என்கிறார்கள். எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?
(விடுதலை, 29.8.1950)

Read more: http://viduthalai.in/page-2/88704.html#ixzz3FE8zblAk

தமிழ் ஓவியா said...

69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாப்பு - சில சிந்தனைகள்

தமிழ்நாட்டில் தற்போது செயல் பட்டுவரும் 69 விழுக்காடு இடஒதுக் கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப் பியது தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை 30.9.2014 அன்று திரா விடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் 69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாப்பது தொடர்பான பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் தற்போது உள்ள 69 விழுக்காடு சட்டம் 1994-இல் அன் றைய அதிமுக அரசால் நிறை வேற்றப்பட்டபோது, திராவிடர் கழகம் எடுத்த முயற்சிகளை நாடு அறியும்

1. தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு, அரசமைப்பு சட்டம் 31 சி விதியின் அடிப்படையில் தமிழக அரசால் 1994-ஆம் ஆண்டு சட்டமாக நிறைவேற் றப்பட்டு, அரசமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டுள்ளது இதன் மூலம், நீதிமன்ற குறுக்கீடுகள் இந்த சட்டத்திற்கு இருத்தல் கூடாது என அரசமைப்பு சட்டம் 31-பி கூறுகிறது. இந்த சட்டம் அரசமைப்பு சட்டத்தில் 76ஆ-வது திருத்தத்தின்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப் படையான காரணத்தை, அதிமுக அரசு, உச்ச நீதிமன்றத்திற்கு தெளிவு படுத்த வேண்டும்.

தமிழ் ஓவியா said...

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு


மூன்றாவது சுயமரியாதை மகாநாடு

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு இவ்வருஷம் ராமநாதபுரம் ஜில்லாவில் நடத்தப்பட வேண்டுமென்று அந்த ஜில்லா வாசிகளால் ஈரோடு மகாநாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது யாவரும் அறிந்ததாகும். அந்தப்படி இவ்வருஷம் மார்ச் மாதம் கடைசியிலாவது ஏப்ரல் முதலிலாவது நடைபெற வேண்டியது மிகவும் அவசியமாகும். ராமநாதபுரம் ஜில்லாவில் மகாநாடு நடத்து வதற்கு தகுந்த இடம் விருதுநகர் என்றே கருதுகின்றோம். ஏனெனில், ரயில் போக்குவரத்து சவுகரியமும், உற்சாகமும், ஊக்கமும், செல்வமும் பொருந்திய சுயமரியாதைவீரர்கள் மிகுதியும் நிறைந்த நகரமும் மற்றும் அவ்வித வீரர்கள் மலிந்த சுற்றுப்பிரதேசங்களுக்கு மத்யஸ்தலமாகவும் மதுரைக்கு 25 மைல் தூரத்தில் மிக சமீபமாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி முதலிய இடங் களுக்கும் அருப்புக்கோட்டை முதலிய இடங்களுக்கும் மத்யபாகமாகவும் இருப்பதாகும்.

ஆகவே, இந்த வருஷம் மாகாண மகாநாடு விருது நகரில் நடைபெறுதல் மிக்க நலமென்றே கருதுகிறோம். மகாநாட்டின் வரவேற்புக் கழகத் தலைவராய் திரு. டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியன் அவர்களும், மகாநாட்டு காரியதரிசிகளாய் திருவாளர்கள் செந்தில் குமார நாடார், வி.வி. ராமசாமி முதலியவர்களும் மற்றும் பல காரியங்களுக்கு திருவாளர் அருப்புக்கோட்டை கோபால கிருஷ்ணசாமி நாயக்கர், சிவகங்கை எஸ். ராமச்சந்திரன், முருகப்பா முதலியவர்களும் பிரதானமாக இருந்து துவக்கப்பட்டால் மகாநாடு கண்டிப்பாய் இதுவரை நடந்து வந்ததைப்பார்க்கிலும் விசேஷமாக நடைபெறக்கூடும் என்பதில் நமக்கு எவ்வித அய்யமுமில்லை.

தலைவர் ஸ்தானத்திற்கு சென்ற வருஷம் போலவே வட நாட்டிலிருந்து ஒரு பெரும் சீர்திருத்தவாதியாகவும், தலைகீழ் கிளர்ச்சிக்காரராகவும் பார்த்து ஒரு கனவானை திரு. ஆர்.கே. சண்முகம் அவர்கள் தயவால் அழைத்து வரலாம் என்கின்ற தைரியம் இருக்கிறது. இம்மகாநாட்டில் இன்னும் முற்போக்கான பல தீர்மானங்கள் செய்யப்பட வேண்டியதாகவும், அமலில் நடத்த வேண்டியதாகவும் இருப்பதால் தமிழ்நாட்டு இளைஞர்கள் யாவரும் தவறாமல் பங்கு எடுத்து உழைத்து வெற்றி பெறச்செய்ய வேண்டிய தவசியமாகும். தண்ணீர் சவுகரியத்தை உத்தேசித்து அதே சமயத்தில் வேறு பல மகாநாடுகளும், 3,4 நாட்களுக்கு நடத்த உத்தேசிக்கப்பட்டிருப்பதாய் தெரியவருகிறது. விருதுநகர் கனவான்கள் சுலபத்தில் ஒரு காரியத்தில் தலையிடமாட்டார்கள் என்பதும், தலையிட்டுவிட்டால் அவர்களைப் போல எடுத்துக் கொண்ட காரியங்களை ஒழுங்காகவும் வெற்றிகரமாகவும் முடிப்பவர்கள் அரிது என்பதையும் நாம் தமிழ் நாட்டிற்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இதை உத்தேசித்தே மேற்கொண்ட காரியங்களைப் பற்றி யோசிக்க ஈரோட்டில் இம்மாதம் கடைசி வாரத்தில் நிர்வாக கமிட்டி மீட்டிங்கை தலைவர் திரு. பாண்டியன் அவர்கள் கூட்டியிருக்கிறார்.

- குடிஅரசு - கட்டுரை - 04.01.1931

Read more: http://viduthalai.in/page-3/88692.html#ixzz3FEARnreE

தமிழ் ஓவியா said...

காரைக்குடியில் பார்ப்பனியத் தாண்டவம்

காரைக்குடியில் சுயமரியாதைப் பிரச்சாரத்திற்கு எப்படியாவது இடையூறு செய்யவேண்டு மென்று சில பார்ப்பன அதிகாரிகளும், பல வைதிகப் பணக்கார நாட்டுக் கோட்டையாரும் முயற்சி செய்து கொண்டு வரும் விஷயமாய் கொஞ்ச நாளாக நமக்கு அடிக்கடி சேதி வந்து கொண்டிருந்தது.

தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து கடைசியாக வேட்டைக்குத் தயாராகிவிட்டது என்ற பழமொழி போல் எந்த எந்த விதத்திலோ தொல்லை விளைவித்தும், அது பயன்படாமல் போகவே இப்போது அதிகாரிகளின் மூலமாகவே ஏதோ ஒரு நொண்டிச் சாக்கை வைத்து உயர்திருவாளர்கள் சொ.முருகப்பா, அ.பொன்னம் பலனார், ப. சிவானந்தன் ஆகியவர்களுக்குக் காரைக்குடி முனிசிபல் எல்லைக்குள் எவ்விதக் கூட்டம் கூட்டவோ. பிரசங்கங்கள் புரியவோ கூடாதென்று 144 தடை உத்தரவு போட்டுத் தடுக்கப்பட்டிருக்கின்றது. இது பின்னே வரப்போகும் இன்னும் கடினமான தொல்லைக்கு அறிகுறியென்றே கருதவேண்டியிருக் கின்றது. காரைக்குடியானது உண்மையிலேயே பணக்கார ஆதிக்கமும், வைதிக ஆதிக்கமும் கொண்டது என்பதற்கு அதன் முனிசிபாலிட்டியில் பெண்களுக்காவது. மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்காவது, குறைந்த எண்ணிக்கை யுள்ள சமூகத்தாருக்காவது யாதொரு பிரதிநிதி ஸ்தானமும் ஒதுக்காமல் தீர்மானம் செய்த ஏதேச்சதிகார மனப் பான்மை ஒன்றே போதுமானதாகும். அப்படிப்பட்டவர்கள் ஆதிக்கத்தில் உள்ள அந்த நாடு சுயமரியாதையைப் பற்றியும், தீண்டாதவரின் சமத்துவத்தை பற்றியும், பெண்களின் உரிமையைப் பற்றியும் பேசுவது முனிசிபல் நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுமென்று கருதி, அதிகாரிகளின் தயவைச் சம்பாதித்து 144 போடச் செய்ததில் நமக்கு ஆச்சரியமொன்றுமில்லை.

ஆனால், இந்த மாதிரி பணக்கார ஆதிக்க வாழ்வும், அதிகாரிகள் அவர்களுக்கு அடிமையாகி தலைவிரித்தாடும் பொறுப்பற்ற அதிகாரவர்க்க ஆட்சியும் நமது நாட்டில் தாண்டவமாட இன்னும் விட்டுக் கொண்டிருப்பதுவே நமக்கு மிக ஆச்சரியமாகத் தோன்றுகிறது.

அதோடு நமது நாட்டுப் போலீசாரின் யோக்கியதை நாம் அறிந்ததேயாகும். அதிலும் பார்ப்பனப் போலீசாரைப் பற்றியோ வென்றால் அறியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் அதிலும் சுயமரியாதை இயக்கத்தைக் கண்டால் அவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதேயில்லை.

உதாரணமாக, ஒரு குரங்கு கள்ளைக் குடித்து அதைத் தேளும் கொட்டி விட்டால் எப்படி அது தலை கால் தெரியாமல் கண்டதையெல்லாம் கடிக்குமோ அது போலவேதான் நமது பார்ப்பனப் போலீசு நிர்வாகம் இருக்க முடியும். போதா குறைக்கு இவர்களுடைய தயவை பைத்தியக் கார பணக்காரச் செட்டியார்மார்கள் எதிர்பார்த்து தூபம் போடுவதும் சேர்ந்து விட்டால் 144 உத்தரவு மாத்திரமல்லாமல் இன்னமும் என்ன வேண்டுமானாலும் செய்யப் பின் வாங்க மாட்டார்கள். இந்தக் காரியத்திற்குத் திருப்பத்தூர் டிவிஷனல் ஆபீசர் சம்மதித்துத் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததை நாம் கண்டிக் காமல் விட முடியவில்லை. ஆகையால் இராமநாதபுரம் ஜில்லா கலெக்டர் இதில் பிரவேசித்து உண்மையை விசாரித்து, நீதியை வழங்க வேண்டியது அவருடைய கடமையென்பதோடு, காரைக் குடியில் உள்ள பார்ப்பனியப் போலீஸ் ஆதிக்கத்தை உடனே குறைக்க வேண்டிய காரியமும் செய்ய வேண்டுமாய் வலியுறுத்துகின்றோம். குட்டி குலைத்து பட்டி தலையில் விழாமல், பார்த்துக் கொள்ள வேண்டியது யோக்கியமான சர்க்கார் கடமை என்பதையும் வலியுறுத்துகின்றோம்.
- குடிஅரசு - கட்டுரை - 08.03.1931

Read more: http://viduthalai.in/page-3/88692.html#ixzz3FEAaIF2q

தமிழ் ஓவியா said...

சுசீந்திரம் எச்சரிக்கை

சுசீந்திரம் தெருவில் நடக்கும் உரிமை சம்பந்தமாய் திருவாங்கூர் அய்க்கோர்ட்டில், அந்த ஊர் பாதைகளில் யாவருக்கும் நடக்கும் உரிமை உண்டென்று தீர்ப்புக் கிடைத்து தண்டிக்கப்பட்ட சத்தியாக்கிரகிகள் விடுதலை அடைந்தும்கூட, பார்ப்பன விஷமத்தனத்தின் பலனாய் மறுபடியும் பொது ஜனங்கள் நடக்க தடையேற்பட்டு மறுபடியும் சத்தியாக்கிரகம் நடக்க வேண்டிய அவசியம் வந்து கொண்டிருக்கிறது.

இதற்கு நாம் என்ன செய்யலாம்? வம்புச்சண்டைக்குப் போகாமல் இருக்கலாமே ஒழிய, வலியவரும் சண்டையை எப்படி விட முடியும் என்று திருவாங்கூர் அரசாங்கத் திற்குப் பணிவான எச்சரிக்கை செய்கின்றோம்.

- குடி அரசு - கட்டுரை - 04.01.1931

Read more: http://viduthalai.in/page-3/88692.html#ixzz3FEAgy72V

தமிழ் ஓவியா said...

திரு. சி.ராஜகோபாலாச்சாரி - ஈ.வெ.இராமசாமி சந்திப்பு

திருவாளர் சி. ராஜகோ பாலாச்சாரியார் 29ஆம் தேதி காலையில் சென்னையிலிருந்து ஆமதாபாத் செல்வதற்காக சென்னை சென்டிரல் ஸ்டே ஷனில் கிரான்ட் டிராங்க் எக்ஸ் பிரஸில் ஏறி வண்டியின் முகப்பில் நின்று கொண்டி ருந்தார். பல கனவான்கள் பக்கத்தில் நின்று கொண்டி ருந்தார்கள்.

திரு. ஈ.வெ. இராமசாமி 29 ஆம் தேதி காலை மங்களூர் மெயிலில் சென்னைக்கு வேறு காரியமாக வந்தார். திரு. ராஜகோபாலாச்சாரியார் நின்ற வண்டிக்கு நேராகவே திரு. ஈ.வெ. இராமசாமி வந்த வண்டியும் வந்து நின்றது. வண்டியை விட்டு இறங்கும்போது எதிரிலிருந்த கூட்டத்தைக் கவனிக்கும்போது திரு. ஆச்சாரியாரை பார்த்து ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொண்டார்கள். ஆச்சாரியாரின் வண்டியினருகில் சென்று பொதுவாக இரண்டொரு வார்த்தைகள் பேசிக் கொண் டார்கள். அங்கு பக்கத்தில் உட்கார்ந்து இருந்த திரு. பட்டாபி சீதாராமை யாவையும் கண்டு மரியாதை செய்தார். அந்தச் சந்திப்பு 5 வருஷத்திற்கு முன்னிருந்த ஒற்றுமையையும் கூட்டு வேலையையும் எல்லோருக்குமே ஞாபகப்படுத்தியது என்பதில் ஆட்சேபணை இல்லை. பிறகு வண்டி புறப்பட்டதும் திருவாளர்கள் எஸ். இராமநாதன், கண்ணப்பர் ஆகியவர்களுடன் திரு. இராமநாதன் அவர்கள் ஜாகைக்குப் புறப்பட்டு விட்டார்கள்.

இந்த விஷயம் ஏன் தெரிவிக்கப்பட்டது என்றால், பத்திரிகைகளில் ஈ.வெ.இராமசாமி அங்கிருந்த விஷ யத்தைக் குறிப்பிட்டதைப் பற்றி பலர் பலவிதமாகப் பேசியதாக தெரிய வந்ததால் எழுத வேண்டியதாயிற்று. திரு. ஆச்சாரியாரைப் பார்க்கவே அங்கு சென்றிருந்ததாக வைத்துக்கொண்டாலும் திரு. ஆச்சாரியாரைப் பார்க்கக் கூடாதான விரோதம் ஒன்றும் இருவருக்குள்ளும் கிடையாது. பார்த்ததினால் இருவர் கொள்கை யிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது என்று சொல்லவும் முடியாது.

திரு. ஈ.வெ. இராமசாமியைப் பொருத்த வரையில் தனது கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. அன்றியும் இன்றைய காங்கிரசில் சேரும் உத்தேசமும் இல்லை.

மக்கள் விடுதலை அடைவதற்குச் செல்வம் ஒரே பக்கம் சேராமல் பார்ப்பதும், ஜாதியையும், அதற்காதாரமான மதத்தையும் ஒழிப்பதும் ஆகிய தத்துவங்கள் இந்திய தேசிய காங்கிரசின் முக்கியக் கொள்கையாகும் என்ற நிலைமை ஏற்படும் போது யாருடைய தயவையும் எதிர்பாராமல் காங்கிரஸ் வாதியாயிருப்பார். ஆதலால் இதற்காக யாரும் சந்தேகப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - செய்தி விளக்கம் -01.02.1931Read more: http://viduthalai.in/page-3/88692.html#ixzz3FEAo1HZM

தமிழ் ஓவியா said...

தமிழகம் ஜிகாதிகளின் உறைவிடமாம்! மோகன் பகவத்தின் அடாவடிப் பேச்சு!

There is a serious upsurge in the jehadi activities in the southern parts of Bharat, especially in Kerala and Tamil Nadu. No effective policy imperatives, efforts are visible in curbing such activities.

தென்னிந்தியா ஜிகாதிகளின் உறைவிடமாக மாறிவருகிறது. இது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும். முக்கியமாக கேரளா மற்றும் தமிழ் நாட்டில் ஜிகாதி நடவடிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தை ஆளும் மாநில அரசுகள் தீவிர வாதிகளின் வளர்ச்சி குறித்து கவலைப்படுவதில்லை.

Read more: http://viduthalai.in/page-3/88728.html#ixzz3FEBnsLlp

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கபாலம்

திருக்கண்டியூரில் உள்ள தீர்த்தத்தில் சிவன் நீராடியதால் கபாலம் நீங்கியது. இதற்கு திரு மாலுக்கு நன்றி தெரிவிக்க சிவபெருமான் தானே இவ்விடத்தில் கோயில் கொண்டார். இங்குள்ள சிவபெருமான் திருமால் அருளால் துயர் நீங்கி ய தைக் கண்டு மன மகிழ்ந்து சரஸ்வதி தேவியுடன் பிரம்மதேவர் கோவில் கொண்டுள்ளாராம்.

-வைணவர்களின் இந்தக் கதையை ஸ்மார்த் தர்கள் சைவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/88749.html#ixzz3FK9iz1Up

தமிழ் ஓவியா said...

பெரியாரைப் பின்பற்றுவோம்!

பெரியார் என்ற சொல்லுக்கு மனிதநேயம் என்றே பொருள்! இதை அகராதியில் அச்சிட்டாலும் அதில் பிழையேதும் இல்லை.

ஆம். பெரியார் என்ற ஒற்றைச் சொல்லின் உள்ளடக்கம் மிகப் பெரியது. ஈ.வெ.ராமசாமி என்பவருக்குப் பெண்கள் அளித்த சிறப்புப் பெயர் பெரியார் என்றாலும், அப்பெயர் அவரால் தனித் தன்மையும், தனிப் பெருமையும், உயர்தகுதியும் பெற்றுவிட்டது என்பதே உண்மை!

பெரியார் என்ற தனி மனிதர் வழக்கமாக உலகில் பிறந்து, வாழ்ந்து, மறையும் சராசரி மனிதர் அல்லர். அல்லது மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் ஒரு சிலரைப் போன்றவரும் அல்லர்.

அவர் ஒரு சகாப்தம்! காலகட்டம்! சரித்திரம்! திருப்புமுனை! தீர்க்கதரிசி! உலக நாயகர்! சிந்தனைச் சுரங்கம்! ஆதிக்கம் அழித்த சமதர்மச் சிற்பி! இப்படி எத்தனையோ இலக்கணங்களுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர்! அதனால்தான், உலக அமைப்பான அய்.நா.மன்றம் இவரை இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி என்று, இவ்வுலகில் எவருக்கும் அளிக்காத பெருமையை அளித்தது.

அவர் ஒரு தொலைநோக்காளர் என்பதற்கு அவரது இனிவரும் உலகம் என்ற நூலே சான்று. அவர் ஒரு தத்துவ மேதை என்பதற்கு அவரது தத்துவ விளக்கம் என்ற நூலே சான்று. அவர் ஒரு பத்திரிகையாளர் என்பதற்கு குடியரசு, விடுதலை, உண்மை போன்ற இதழ்கள் சான்று!

அவர் ஒரு புரட்சியாளர் என்பதற்கு அவரது போராட்டங்கள் சான்று.

அவர் ஒரு சாதனையாளர் என்பதற்கு அவரது பிரச்சாரப் பயணங்களும், மேடை முழக்கங்களும் சான்று.

அவர் ஒரு கொள்கையாளர் என்பதற்கு அவரது வாழ்வே சான்று!

புரட்சி, போராட்டங்கள் நடத்தி தன் வாழ்விலே விடிவும் கண்டு, விளைவுகளையும் கண்டவர் பெரியார் மட்டுமே!

தன்னைப் போலவே, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உணர்வுள்ளவன், உரிமையுள்ளவன், மானமுள்ளவன், மதிக்கப்பட வேண்டியவன், சமமானவன், உறவு கொண்டு வாழ வேண்டியவன். ஆண்டான் அடிமை இல்லை; தீண்டத்தகாதவன், வணங்கத்தக்கவன் இல்லை! பிறப்பொக்கும் எல்லா மனிதர்க்கும் என்பதே இவரது கொள்கை. இவற்றிற்காகவே வாழ்ந்தார்; இவற்றிற்காகவே போராடினார்.

எனவேதான் பெரியார் என்றால், மனிதநேயம் என்று சொன்னேன்!

ஆனால் ஆதிக்கவாதிகள், குறிப்பாக ஆரியப் பார்ப்பனர்கள், பெரியாரின் பரந்துபட்ட இந்த உணர்வைச் சுருக்கி, குறுக்கிக்கூட அல்ல, மறைத்து, குறைத்து, மாற்றி, திரித்துக் கூறினர். பெரியாரின் பெருமையை, புகழை, சிறப்பை, புரட்சியை பிறர் அறியாமலிருக்கும்படிச் செய்தனர்; செய்தும் வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக, செப்டம்பர் மாதம் பிறந்த தலைவர்களைப் படம் போட்டுக் காட்டிய தினமணி சிறுவர் மணி, பெரியார் படத்தைப் போடவில்லை. முதலில் போடவேண்டிய பெரியாரின் படத்தை முற்றாக நீக்கினர். சிறுவர்கள் பெரியாரை அறியக்கூடாது என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்; கவனமாக இருக்கின்றனர்.

பெரியார் என்றால் கடவுள் இல்லை யென்பார்; பார்ப்பானைத் திட்டுவார் என்ற அளவில் பெரியாரை பிறர் அறியும்படிச் செய்கின்றனர்.

ஆனால், இவ்வளவுதான் பெரியாரா? பிஞ்சுகள் சிந்திக்க வேண்டும்; தெரிந்துகொள்ள வேண்டும்.

பெரியார் செய்தது இவை மட்டுமென்றால், அய்.நா.மன்றம் எப்படி உலகில் யாருக்கும் அளிக்காத பெருமையை _ பட்டத்தை பெரியாருக்கு அளித்துச் சிறப்பித்திருக்கும்? என்ற வினாவோடு பெரியாரைத் தேடவேண்டும்; பெரியாரின் சிந்தனைகளைக் கிளற வேண்டும்; தோளிட வேண்டும்.

அப்படிச் செய்தால் பெரியாரின் பல்துறைச் சிந்தனைகள், பணிகள், போராட்டங்கள், புரட்சிகள் வெளிப்படும்.

வெளிப்பட்டவற்றை விடாது பிடித்துச் சிந்தித்தால், தெளிவு, துணிவு, ஒழுக்கம், நாணயம், நேர்மை, தொண்டு, சமத்துவம் போன்ற பல உயரிய கொள்கைகள் நம்முள் குடிகொள்ளும்; நம்மை வழிநடத்தும்.

பெரியாரின் சிந்தனைவழிச் சென்றால், தன்மான உணர்வு தானே வரும். தன்மான உணர்வு தலைதூக்கினால், நம் இழிவு, தாழ்வு, அறியாமை எல்லாம் அகலும். நாமும் மனிதன், நாம் யாருக்கும் அடிமையல்ல என்ற உண்மை உள்ளத்துள் பதியும். விழிப்பு, துணிவு, தெளிவு, காரணம் கேட்கும் சிந்தனை வரும்போது நம் வாழ்வு சிறக்கும் _ உயரும். நம் தலைமுறை தலைநிமிரும்.

பெரியார் வழி நடக்கும் பிஞ்சுகள், வாழ்வில் என்றும் வீழ்வதில்லை. எனவே, பெரியாரைப் பின்பற்றுவோம், வாழ்வில் சிறப்போம்; பிறர் வாழ்வு சிறக்கவும் உழைப்போம்! இதுவே இக்காலத்தில் நம் உள்ளத்தில் கொள்ள வேண்டிய உறுதி!

தமிழ் ஓவியா said...

மில்டனின் சொல்லாற்றல்

லண்டனில் பிறந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றவர் மில்டன். கவிஞர் மட்டுமன்றி, சிறந்த மேதையாகவும் விளங்கியவர். மில்டனின் எழுத்துகளை, காலத்தால் அழியாத எழுத்துகளும் அறிவும் செய்து கொண்ட திருமணம் என்று வோர்ட்ஸ்வொர்த் கூறியுள்ளார்.

மில்டன் பெரும் பிரச்சினைகள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். முதலாம் சார்லஸ் மன்னன் கொல்லப்பட்டது சரியே என்று மில்டன் கூறினார். இந்தக் கூற்றைக் கேட்டுக் கோபமடைந்தார் சார்லசின் மகன் இரண்டாம் ஜேம்ஸ். மில்டனை அழைத்து, முதலாம் சார்லஸ் மன்னரின் கொலையினை நியாயப்படுத்துவதால்தான் உங்கள் கண்கள் குருடாகி விட்டன. உங்களுக்கு தெய்வம் தந்த தண்டனை இது என்றார் மன்னர்.

இதனைக் கேட்ட மில்டன், நடக்கும் சில துரதிர்ஷ்டவசமான நிகழ்ச்சிகள் தெய்வ கோபத்தின் குறியீடுகள் என்று மேன்மை பொருந்திய மன்னர் நினைத்தால், தங்கள் தந்தையாரின் முடிவு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அட, எனக்காவது 2 கண்கள் மட்டும்தான் போயின; உங்கள் தந்தைக்கு தலையே போய்விட்டதே என்றாராம்.