Search This Blog

19.10.14

தமிழர்களும் - தீபாவளியும்

தமிழர்களும் - தீபாவளியும்

 

தீபாவளிப் பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை.


அக்கதையின் கருத்து “தேவர்கள் அசுரனைக்’’ கொன்றதாகவும், அக்கொலையானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலையென்பதும், அதற்கு ஆக மக்கள் அந்தக் கொலை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும்.


சாதாரணமாக தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை. அதாவது வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகையில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப் படுகிறது. தீபாவளிப் பண்டிகை தினத்தை ‘நரக சதுர்த்தசி’ என்றும் சொல்லுவதுண்டு. இதற்குக் காரணம் நரகாசுரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்ட நாள் என்பதாகும். இந்தக் கதை விளக்கம் என்ன வென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும், ஆரியர்களின் இழி நிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதா ரத்துக்கு ஆக அதையும் ஆரியர் புராணப் படியே சற்று சுருக்கமாக விளக்குவோம்.


அதாவது இரண்யாட்சன் என்னும் ராட்சசன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம்.
மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத்திரத்தில் இருந்து வெளியாக்கிப் பூமியைப் பிடுங்குவதற்கு ஆக பன்றி உருவமெடுத்துப் போய் ராட்சசனைப் பிடித்து பாய்போல் சுருட்டப்பட்டிருந்த பூமியைப் பிடுங்கி விரித்து விட்டுவிட் டாராம்.


அந்த சமயத்தில் அந்தப் பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பிக் கலந்தாளாம். அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். 

அக்குழந்தைக்குத்தான் நரகா சுரன் என்று பெயராம்.  இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும், இவன் தேவர் களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணுவிடத்தில் முறையிட் டார்களாம்.
விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் நரகா சுரனைக் கொன்றாராம்.


நரகாசுரன் விஷ்ணுவைத் தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். அதற்கு ஆக விஷ்ணு அந்தத் தினத்தை உலகம் கொண்டாடும்படிச் செய்தாராம். இதுதான் தீபாவளியாம்.


தோழர்களே! ஆரியரின் கதை ஜோடிக் கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை  எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில், பூமியை ஒரு ராட்சசன் பாயாகச் சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான்?


சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்து கொண்டான் என்றால் அப்போது சமுத் திரம் எதன்மேல் இருந்திருக்கும்?


கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியை யும், நரகாசுரனையும் “வா’’ என்று அழைத் தவுடன் வந்திருக்காதா?


அப்படித்தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவ உருவெடுக் காமல் மலம் சாப்பிடும் ஜீவ உரு எடுப் பானேன்?


அந்த அழகைப் பார்த்து பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டா ளென்றால் பூமி தேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது. “நம்’’ பாரதத் தாயின் கற்புக்கும், காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லிக் கொள் ளுவது? அவருடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாய் இருந் திருக்க வேண்டும்? பூமாதேவியும் சமுத் திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரத தேவியும் அரபிக் கடலும் வங்காள குடாக்கடலும் தானா? இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?


இப்படிக் கொலை செய்யப்பட்ட நரகா சுரன் என்பவன் நமது தோழர்கள் முத்துரங்கம், ராமநாதன் முதலியவர்கள் போன்றார்களாய் இருந்திருந்தால்தானே கொலை செய்யப்பட்ட அவமானத்தை உலகம் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருப்பான்? இவற்றை யெல்லாம் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள் தமிழர்களை, தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், சண்டையில் சிறைப் பிடித்த கைதிகள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்ன என்னமோ சொல்லுவதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே அந்நிய மக்கள் நினைப்பார்கள்.


ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், பார்ப்பன அடிமை களான பல பார்ப்பனரல்லாத காங்கிரஸ் காரர்களுக்குச் சுரணை இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டு இருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய் கவனித்துப் பார்த்து பண்டிகை கொண்டாடாமல் இருந்து மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா என்று கேட்கின்றோம்.


இந்தி ஆரிய பாஷை என்றும், ஆரியப் புராணங்களைத் தமிழர்களுக்குத் படிப் பித்து ஆரியக் கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவே இந்தியைக் கட்டாயமாய் ஆரியர்கள் புகுத்துகிறார்கள் என்றும் சொல்லிக் கொள்ளுவது உண்மை யானால் - அதற்கு ஆக தமிழ் மக்கள் அதிருப்தியும், மனவேதனையும் படுவது உண்மையானால் - தமிழ் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடுவார்களா?


------------------------------ தந்தை பெரியார்- ‘குடிஅரசு’ - கட்டுரை மறுவெளியீடு,  31.10.1937

19 comments:

தமிழ் ஓவியா said...

குழந்தை மணம்


பெண்ணை ருதுகாலத் திற்கு முன்பு தக்கவரனுக்குக் கல்யாணம் செய்து கொடாத தந்தையும், மனைவியை ருது காலத்தில் புணராத கணவனும், கணவன் இறந்த பின்பு தாயைக் காப்பாற்றாத பிள்ளையும் நிந்திக்கப்படுவர்.
-மனுதர்மம் - அத்தியாயம் 9

குலம், நல்லொழுக்கம் இவைகளால் உயர்ந்தவரை யும், பெண்ணுக்குத் தக்க ரூபம் உடையவனாயும் இருக்கின்றவனுக்குத் தனது பெண் 8 வயதுக்கு உட்பட்டு இருந்தாலும் விதிப்படி விவா கம் செய்து கொடுத்து விட லாம்.
- மனுதர்மம் அத்தியாயம் 9

8 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப்ப வன் சுவர்க்க லோகத்தையும், 9 வயதுப் பெண்ணை விவா கம் செய்து கொடுப்பவன் வைகுண்டத்தையும், 10 வயதுப் பெண்ணை விவா கம் செய்து கொடுப்பவன் பிரம்மலோகத்தையும் அடை கின்றான். அதற்கு மேற் பட்டுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் ரௌர வாத நரகத்தை அடைகிறான்.
- பராசரர்

ஆஜ்மீர் - மொர்வாராத் தொகுதியில் இருந்து டில்லி சட்டசபைக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட ராய்சாகிப் ஹரிபிலாஸ் சாரதா என்பார் இந்துக் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் திருமண வயது சீர்திருத்த மசோதா” என்ற ஒன்றைக் கொண்டு வந்தார் (1.2.1927).

இது குறித்து வைதிகப் பார்ப்பனர்கள் பூமிக்கும் வானுக்கும் வானரமாய்த் தாவிக் குதித்தார்கள். நாக்கை நான்கு முழம் நீட்டி முழங்கும் அரசியல் பிரமுகரான திரு வாளர் சத்தியமூர்த்தி அய்யர் அப்பொழுது கூறினார்.

“அரசாங்கம் இந்துக்களு டைய விவாகத்தில் தலை யிட்டால் இந்துச் சமூகமே கெட்டு இந்து மதமே பாழாகி விடும். பெண்களுக்கு 10,12 வயதுக்கு முன்னமேயே விவாகம் செய்துவிட வேண் டும். இல்லையேல் பாவம் வந்து சூழும் என்று பராசரர் எழுதி இருக்கிறார். நாங்கள் பாவத்திற்குப் பயப்படு வோமா? அல்லது உங்கள் சட்டத்திற்குப் பயப்படு வோமா?” என்று கூறினார் என்றால் அவர்களின் வைதி கப் பித்துக்கு என்ன அளவு கோல் இதைவிடத் தேவை?

கவர்னர் ஜெனரலாக இருந்த லார்டு இர்வின் வரை சென்று பார்த்தனர் 12 வயதுக்குப் பிறகு விவாகம் செய்தால் மதமே கெட்டுப் போய் விடும் என்று வைசி ராய்க்குச் சங்கராச்சாரியார் தந்தியே கொடுத்தார்.

“சாரதா சட்டம் என்பது மதப் பிரச்சினை, வகுப்புப் பிரச்சினை சம்பந்தப்பட்ட தல்ல. இது வைத்தியம் மற் றும் சுகாதாரம் சம்பந்தப்பட் டது என்று கூறி அவாள் கூக் குரல்களைக் குப்பைக் கூடை யில் ஒதுக்கித் தள்ளினார்.

சர்தார் பகதூர் காப்டன் ஹீராசிங் பிரார் என்ற பஞ்சா பியர் இதுகுறித்து இந்தியா சட்டசபையில் பேசினார்.

“நம் நாட்டில் சிசு மரணம் அதிகமாய் ஏற்படுவது பல கீனமான குழந்தைகளைப் பெறுவதால் தான்; இதற்குத் தாயும், தந்தையுமே காரணம். நிலைமை இவ்விதமிருக்க பெண்களும், ஆண்களும் தக்க வயதும், பருவமும் அடைந்த பின்னரே மணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் முயற்சித்தால், உடனே வைதீகர்களுக்கு ஆத்திரம் பொங்கி, அவர்கள் இதைப் பலமாகக் கண்டிக்கப் புறப்பட்டு விடுகின்றனர்.

9 அல்லது 10 வயதுள்ள ஒரு பெண்ணையும் பத்து அல்லது 12 வயதுள்ள ஓர் ஆணையும் மனைவி புருஷன் என அழைப்பது உங்களுக்கு வெட்கமில் லையா? என்று கேட்டபோது “இல்லை - இல்லை” என்று பார்ப்பனர்கள் சத்தம் போட்டனர். என்றால் பார்ப் பனர்களின் சட்டசபையில் பிற்போக்குத்தனத்தை எந்த வெட்கம் கெட்ட மையினால் எழுதித் தொலைப்பது?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/89581.html#ixzz3GazSY22g

தமிழ் ஓவியா said...இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பின்மீதான தடையை நீக்க 2010ஆம் ஆண்டிலேயே குரல் கொடுத்தது திராவிடர் கழகம்

அய்ரோப்பிய யூனியன் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகாவது இந்திய அரசு தடையை நீக்கட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைவிடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கி அய்ரோப்பிய யூனியன் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், இந்திய அரசும் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

விடுதலைப்புலிகள் அமைப்பு ஒன்றும் பயங்கரவாத ஒன்றல்ல; எனவே, பயங்கரவாத அமைப்புப் பட்டியலி லிருந்து நீக்கி அந்த அமைப்பை விடுதலை செய்ய வேண்டும் என்று அய்ரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்திய அரசும் முடிவை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தமிழ்நாட்டில் முன் வைக்கப்படுகிறது.

2010ஆம் ஆண்டிலேயே கழகம் சொன்ன கருத்து

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டு இருப்பது நீக்கப்பட வேண்டும் என்று அறிக்கையை வெளியிட்டோம் (7.10.2010) அந்த அறிக்கை வருமாறு:

தமிழ் ஓவியா said...


“இலங்கையில் உள்ள தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்பதே மனிதநேயம் உள்ள அனைத்து மக்களின் தலையாய கடமையாகும். இன்னமும் அங்குள்ள நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள், தாய்மார்கள், குழந்தைகள், முதியோர்கள் உள்பட முள்வேலிக்குள் பல முகாம்களில் சிறைப்பிடிக்கப்பட்டு இருக்கும் நிலையிலிருந்து அவர்களுக்கு விடிவு ஏற்படவில்லை.

சிங்கள ராஜபக்சே ஆட்சியின் மனித உரிமைப் பறிப்புகள் பற்றி, அய்.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், வெளிப்படையாகவே கூறியுள்ளார். உலகப் போர் நெறிமுறைகளை மீறி தவறாக ராஜபக்சே நடந்துகொண்ட குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று பலமுறை கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றும், விடுதலைப்புலிகள் என்றும் இலங்கை சிறையில் மனித உரிமைகளைப் புறந்தள்ளிவிட்டு, கொடுமைக்கு ஆளாகியுள்ள பல்லாயிரவர் பற்றி அய்க்கிய நாட்டு அமைப்புகளின் 60 சட்ட வல்லுநர்கள் கண்டனம் உள்பட சில நாள்களுக்குமுன் உலக ஏடுகளில் செய்தியாக வந்தது.

இந்நிலையில், அவதிப்படும் ஈழத் தமிழர்களுக்கென பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இந்திய அரசு (தமிழக அரசின் உதவியும் இணைத்து) இலங்கைக்கு அனுப்பப்பட்டது. அந்நிதி உரிய முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் பயன்பட்டதாகவோ, படுவதாகவோ தெரியவில்லை.

தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை சிங்களக் குடியேற்றங் களாக்கப்படும் கொடுமை தொடர்கதையாகி வருகின்றது!

மீண்டும் தடையை நீட்டிப்பதா?

இந்நிலையில், கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்னும் பழமொழிக்கொப்ப, இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இங்குள்ள தடையை மீண்டும் இந்திய அரசு நீடிப்பது, உலகத் தமிழர்களின் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாக்கிவிடும்!

தமிழ் ஓவியா said...


இலங்கை அரசே இங்கே விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று கூறிவிட்ட நிலையில், நம் நாட்டில் மீண்டும் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத் திற்குத் தடை நீடிக்கும் சடங்கு சம்பிரதாய சட்டத்தைத் தொடருவது எந்த நியாயத்தின் அடிப்படையிலோ என்று நமக்குப் புரியவில்லை.

காஷ்மீரிலும் சரி, மற்ற நக்சலைட்கள் பெருகிய பல வட மாநிலங்களிலும் சரி, அவர்களை மத்திய அரசும், நம் பிரதமரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, பேசி சுமுகத் தீர்வு காணும் நல்லெண்ண முயற்சிகளை மேற்கொள்வது அறிவிப்பது நல்ல அணுகுமுறையே!

அதே அரசு, இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் மீண்டும் தடையை நீடித்துக் கொண்டே போவது சரிதானா? ஈழ அகதிகளாகி, அகதியாக, வாழ்க்கையை தமிழ்நாட்டிலும், வேறு சில இடங்களிலும் வாழும் ஈழத் தமிழர்கள் இளைஞர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் நிம்மதியற்ற வாழ்வினை (அவர்களுக்கு) தரத்தான் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பினை ஏற் படுத்தக்கூடும்.

எனவே, மத்திய அரசு இதுபற்றி மனிதநேய அடிப் படையில் பிரச்சினையை ஈர மனதுடன் அணுகவேண்டும். நிர்ப்பந்தப்படுத்தப்பட வேண்டிய இலங்கை அரசை நிர்ப்பந்தப்படுத்தி, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க உதவிடவேண்டும் முன்னுரிமை அதற்குத் தான் தரப்படவேண்டும்” என்று இன்றைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தோம்.

கழகத்தின் நியாயத்தை, சட்டப்படியான நிலையை இந்திய அரசு கவனம் செலுத்தத் தவறினாலும், அய்ரோப் பிய யூனியன் நீதிமன்றம் உணர்ந்து தீர்ப்பளித்திருப்பது - வரவேற்கத்தக்கதாகும்.

உலகமும் புரிந்து கொண்டது

இந்தியா மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் அமைப்பின்மீது தவறாகப் பிரச்சாரம் செய்யப்பட்டதால், அந்த அமைப்பைப்பற்றி தவறான புரிதல் இருந்திருக்குமேயானால், அதிலிருந்தும் விடுபட இத்தீர்ப்புப் பெரிதும் பயன்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் திடீரென்று ஒரு நாள் காலையில் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டு விடவில்லை.

ஈழத் தமிழினமே இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து இனப்படுகொலையில் ஈடுபட்டது சிங்கள அரசு.

விடுதலைப்புலிகள் ஆயுதம் தூக்கியது ஏன்?

தமிழீழப் பெண்களை கதறக் கதறப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்களே சிங்கள இனக் காடையர்கள்! தமிழன் மாமிசம் கிடைக்கும் என்று விளம்பரப் பலகைகளைத் தொங்க விடவில்லையா சிங்கள வெறியர்கள்?

தந்தையின் முன் மகளையும், அண்ணன் முன் தங்கையையும், மகன் முன் தாயையும் நிர்வாணப்படுத்தி வன்புணர்ச்சிகளில் ஈடுபட்டதைப் பார்த்த பிறகும் மானமுள்ள எந்த மனிதன்தான் ஆயுதம் தூக்காமல் அமைதியாய் - சோற்றாலடித்த பிண்டமாய் இருப்பான்? அதுதானே ஈழத்தில் நடந்தது!

காலங் கடந்தாலும் விடுதலைப்புலிகளின் உண்மையான போராட்டம் என்ன என்பது இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்து விட்டதே!

இந்தியா குறித்து நீதிமன்றம்

இந்த நேரத்தில் இந்திய அதிகாரிகள் வர்க்கம்பற்றி அய்ரோப்பிய யூனியன் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து மிகவும் முக்கியமானது - சரியானது!

“விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எதிரான மோதல் பிரச்சினையில் இந்திய அதிகாரிகளின் பாகுபாடான நிலைப்பாடு காரணமாக இந்தியத் தரப்பிலான தகவல்கள் நம்பத் தகுந்ததாகக் கருத முடியாது” என்று அய்ரோப்பிய யூனியன் நீதிமன்றத்தின் கருத்தும், கணிப்பும் சாதாரணமானதல்ல!

உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மீதான மதிப்பு எந்த வகையில் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

தவறுக்குப் பரிகாரம்

அந்தத் தவறுகளுக்குப் பரிகாரமாக, இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை உடனே நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மேலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் அணுகுமுறையில் புதிய மாற்றம் வருமேயானால் அது மிகவும் வரவேற்கத் தக்கதாகவே இருக்கும்.

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/89586.html#ixzz3GazbsDeB

தமிழ் ஓவியா said...

1கோடியே,-68லட்சத்து,-97ஆயிரத்து-425-ரூபாய்,-மற்றும்-88-கிராம்-தங்கம்,-149-கிராம்-வெள்ளி-நகைகள்

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை தமிழ்க அரசின் இந்து சமய அறநிலையத்துறை எடுத்துக் கொண்டு 2009ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி செயல் அலுவலரை அரசு நியமித்தது. இதனையடுத்து நடராஜர் கோயிலில் 9 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில், செயல் அலுவலர் நியமனத்தை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் கடந்த ஜனவரி 6ம் தேதி உத்தரவிட்டது. மீண்டும் தீட்சிதர்களின் நிர்வாகத்தின் கீழ் கோயில் வந்தது. 2014 அக்டோபர் 7-ஆம்தேதி கடைசியாக உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் 25 முறை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் கிடைத்த மொத்த தொகை இது. சராசரியாக ஆண்டொன்றுக்கு 35 லட்ச ரூபாய்க்கும் மேல் வருமானம் கிடைத்த உண்டியல்கள் அகற்றப்பட்டு, இனி தீட்சதர்களின் தொப்பை தான் உண்டியலாகப்போகிறது. இப்படி தீட்சதர்கள் கைக்குக் கோயில் போகுமாறு ஆணையிட்டது உச்சநீதிமன்றம்! பார்ப்பனப் பண்ணையம்!

தமிழ் ஓவியா said...

அ.தி.மு.க. தலைமை சிந்திக்கட்டும்!


வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருக்கும், அவருடன் மற்ற மூவருக்கும் பெங்களூரு தனி நீதிமன்றம் கடந்த 27.9.2014 அன்று நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் வழங்கியுள்ளதைக் கண்டு அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியும், துயரமும் அடைவது இயற்கைதான்.

அதற்கென இனி உள்ள சட்டபூர்வ வாய்ப்புகள் - பிணை (ஜாமீன்) கோரி, தண்டனையை நிறுத்தி வைக்கவும் அல்லது ரத்து செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் போன்ற மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் பரிகாரம் தேடி, வெளியே வர முயற்சிப்பதும்தான் சரியான வழிமுறை.

நீதிபதியை மனம்போனபடி விமர்சிப்பது, கருநாடக அரசு, மத்திய அரசு போன்றவற்றில் பொறுப்பில் உள்ளவர்களை உணர்ச்சிவசப்பட்டு தாக்கிப் பேசிடுவது, பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய அளவில் இடையூறுகளைத் தானே உண்டாக்கும்? ஆங்காங்கே துண்டு துண்டாக நினைத்தபடி கிளர்ச்சிகளை, கடையடைப்புகளை, தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் களை - குறிப்பாக கலைஞர் போன்ற மூத்த தலைவர்களை வசைபாடுவதோ, பிரச்சினைக்குத் தீர்வை கொண்டு வந்து சேர்க்காது; மாறாக சட்டப்பூர்வமான ஆக்க ரீதியான மேல்முறையீடுகளைச் செய்யலாம்.

அனுதாப அலை என்றெல்லாம் காட்ட ஆவேசம், உணர்ச்சிவயப்பட்டு சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, மனம்போன போக்கில், பதிவாகவேண்டும் நம் எதிர்ப்பு - உரியவர்கள் கவனத்திற்குச் சேர வேண்டும், எதிர்கால பதவி அரசியலுக்கு இதுவே ஒரு அரிய வாய்ப்பு என்றும் நினைக்கலாமா? வன்முறை அல்லது பொது அமைதிக்குக் கேடு விளைவித்தல்மூலம், மக்களின் வெறுப்புதான் வளருமே தவிர, வேறு உருப்படியான பலன் கிடைக்காது.

இப்போது இவர்கள் நீதிமன்றங்களைக் கடுமையாக விமர்சிப்பது, நீதிபதிகளைத் தரக்குறைவாக உள்நோக்கம் கற்பித்துப் பேசுவது, எழுதுவது, தீர்மானங்களை தாங்கள் வகிக்கும் பொறுப்பான மன்றங்களில் நிறைவேற்றுவது போன்றவை எந்த அளவுக்கு அம்மையார் ஜாமீனில் வெளியே வருவதற்குத் துணை புரியும் என்பதை அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கவேண்டும்.


எல்லாவற்றையும்விட, இக்கட்சியினர் தமிழகத்தில் ஆளுங்கட்சி என்ற பொறுப்பில் இருந்துகொண்டு ஆட்சி நடத்துகின்ற நிலையில், அவர்களுக்குச் சட்டம் - ஒழுங்கு, பிரச்சினையை ஏற்படுத்தலாமா? அன்றாட அரசியல் ஆளுமை, மின்வெட்டு முதலான பல்வேறு பிரச்சினை களுக்குத் தீர்வு காண்பதல்லவா அவசியம்!
இவ்வாட்சியை இவர்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பதுபோல மத்திய அமைச் சர்கள் இங்கே விடுக்கும் எச்சரிக்கைகளை - எல்லாம் மனதிற்கொண்டு, தங்களது நடவடிக்கைகளை ஆளும் கட்சியினர், ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டியதே இப்போது அவசியமாகும்!

மீறி நீதிமன்ற நடவடிக்கைகள், தாறுமாறான விமர் சனங்கள் - அவர்களது தலைவி வெளியே வருவதற்கு இத்தகு நடவடிக்கைகள் உதவுவதற்குப் பதிலாக, எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்; ஊடகங்கள்மூலம் நீதித் துறையும், உலகமும், பொதுவானவர்களும் பார்த்துக் கொண்டு, முகம் சுளிக்கவும் செய்கின்றனர்!

நாம் இப்படி எழுதுவது அக்கட்சி-யினருக்குக் கசப்பாகக் கூட இருக்கலாம். முதியவர்கள் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்னே கசந்து பின்னே இனிக்கும் என்பது பழமொழி. அ.தி.மு.க.வினரின் நடவடிக்கை எதுவாயினும் - இந்த இக்கட்டான தருணத்தில் அவர்கள் தலைவிக்கு உதவுமா? கேடு செய்யுமா? என்றே யோசிக்கவேண்டுமே தவிர, ஆத்திரக்காரர்களுக்கு அறிவு மட்டு என்ற முறை யில் ஆவேசம், ஆர்ப்பாட்டம், தரமற்ற வசைமாரிகளால் கேடுகளும், எதிர்-விளைவுகளும்-தான் மிஞ்சும்.

யார் வழக்குப் போட்டது என்று ஆத்திரப்படுவதைவிட, ஏன் வழக்கு வந்தது? என்று சம்பந்தப்பட்டவர்கள் சுயபரிசோதனை செய்து, இனி எதிர்கால பொதுவாழ்க்கை எப்படி அமைத்துக் கொள்ளப்படவேண்டும் என்று முடிவு எடுத்துச் செயல்பட்டால், அது பயனுறு விடையாக, தீர்வாக உண்மையிலே அமையும்!

இப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் தைரியத்தில் விரும்பத்தகாத செயல்கள் மேலும் மேலும் பிரச்சினைகளை சிக்கலாக்கும் என்பதை உணர்ந்து, அத்தலைமையே முன்வந்து இவர்களுக்கு அறிவுரை கூறினால், அது அவருக்கும், கட்சிக்கும், ஆட்சிக்கும் பயன்படக் கூடும்.

அரசியல் பார்வை இதில் ஏதுமில்லை!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


1925 ஆண்டு காங்கிரஸ்காரரான கோவை அய்யாமுத்து புதுப் பாளையத்தில் நடத்தி வந்த ஆதிதிராவிடர் பாடசாலையில் பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்ற பாரதி பாடலை மாணவர்கள் பாடி வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதைப் பாடக் கூடாது என்று தடை போட்டவர் சந்தானம் அய்யங்கார் என்ற பார்ப்பனத் `தேசியத்' தலைவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கருத்து


மேல்நாடுகளில் சிறந்த கல்விமுறை வேண்டி ஆசிரியர்கள் போராடு-கின்றனர். ஆனால், இங்கே அதற்காக எந்த ஆசிரியரும் போராடவில்லை. சம்பள உயர்வு கேட்டுத்தான் போராடுகின்றனர். கல்வி முறையும் உலக நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் மோசமாக உள்ளது.

-தங்கர் பச்சான், திரைப்பட இயக்குநர்.

முதியவர்கள் மீதான நம்முடைய அன்பும் அக்கறையும் கூடுதலாகத் தேவைப்படுகிறது. தங்களின் பெற்றோர்களைக் கவனிக்க வேண்டியது ஒவ்வொரு இளைஞனின் கடமையாகும். இதனைக் கடமை என்று மட்டும் எண்ணாமல், பெற்றோர்களுக்கு முதுமைக் காலத்தில் உறுதுணையாக இருப்பது பெருமை எனக் கருத வேண்டும்.

- கே.ரோசய்யா, தமிழக ஆளுநர்

தரமான விதைகள், தடையில்லா மின்சாரம், உயர்தர உரம் போன்றவற்றை வழங்கினாலே விவசாயம் செழிக்கும். மானியமே வேண்டாம் என பிகார் விவசாயிகள் என்னிடம் தெரிவித்துள்ளனர். குறைந்த நீரில் அதிக மகசூல் செய்யும் விதைகளை ஆராய்ச்சி செய்து அதனைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

-அப்துல் கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்


இந்தியாவில் மனித உரிமை மீறல்கள், அனைத்துத் துறைகளிலும் நடக்கின்றன. மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஆண்டு-தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் வருகின்றன. இதில், போலீசார் மீதான புகார்களே அதிகமாக உள்ளன.

-கே.ஜி.பாலகிருஷ்ணன், மனித உரிமைகள் ஆணையர்

புகையிலைப் பொருள்கள் பயன்-படுத்தாதவர்-களுக்கும் புற்றுநோய் ஏற்படுகிறது. வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோயால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்-படுகின்றனர். இது குறித்த ஆராய்ச்சிகளில் முன்னேற்றம் காண வேண்டும்.

- மருத்துவர் வி.சாந்தா, அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மய்யத் தலைவர்சொல்றாங்க....

காஷ்மீர் பிரச்சினையைப் பொருத்தவரை, அதை இனியும் மூடிமறைக்க முடியாது. காஷ்மீர் மக்கள் தங்களது நிலையை சுய நிர்ணயம் செய்து கொள்ளும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அய்.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 60 ஆண்டு-களுக்கு மேலாகிவிட்டது. இதுவரை அந்தப் பொது வாக்கெடுப்பு நடைபெறவில்லை. காஷ்மீர் மக்களின் உரிமையை நிலைநாட்டுவதுதான் பாகிஸ்தானின் லட்சியம் ஆகும்.

- நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் பிரதமர்

ஜம்மு காஷ்மீர் மக்கள் உலகம் முழுவதும் ஏற்றுக்-கொண்ட ஜனநாயக கொள்கைகள் மற்றும் நெறி-முறைகளின் அடிப்படையில் தங்களது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுத்து அமைதியான முறையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். அதையே அவர்கள் தொடர்வார்கள் என்பதையும் பெருமைமிக்க இந்தச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். எனவே, பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

- அபிஷேக் சிங், அய்.நா.சபைக்கான இந்தியத் தூதரக முதன்மைச் செயலாளர்

தமிழ் ஓவியா said...

சிம்சாங் கார்ட்டூனும் யோகன் கார்ட்டூனும்

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விவாதத்திற்குரிய கருத்துப் படம் ஒன்றை வெளியிட்டதாகப் பரபரப்பு கிளம்பியது.

அறிவியலாளர்கள் உள்ள பணக்கார நாடுகளின் Elite Space Clubக்குள் தலைப்பாகை, வேட்டியுடன் இந்தியர் ஒருவர் மாடு ஓட்டிக்கொண்டு வந்து அலுவலகக் கதவைத் தட்டுவது போன்று கருத்துப் படம் வரையப்பட்டுள்ளது.

இந்தியர்களை, குறிப்பாக மலையாள மக்களை இந்தக் கருத்துப்படம் கோபப்படுத்தி உள்ளதாம். (அவர்கள் ஆதிக்கம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகம் உள்ளதால் இருக்குமோ?) நியூயார்க் டைம்ஸ் பன்னாட்டுப் பதிப்பில் தலையங்கத்தை ஒட்டி வெளியிடப்பட்ட இந்த கருத்துப்படம் சிங்கப்பூர் ஓவியர் ஹெங் சிம்சாங் என்பவரால் வரையப்பட்டது.பணக்கார, மேற்கத்திய நாடுகளால்தான் முடியும் என்பதை மாற்றி, இந்தியா செவ்வாய்க்கலன் ஏவியுள்ளது என்பதையே கருத்துப் படத்தின் ஓவியர் கருத்துப்படத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துப்படத்தின் மூலம் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினால், நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பைக் கோருகிறோம். ஓவியர் ஹெங் எந்தவிதத்திலும் இந்தியாவையோ, அதன் அரசு மற்றும் குடிமக்களையோ எதிராகக் கருதவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் செய்திப் பிரிவின் சார்பில் அந்தப் பக்கத்திற்கான ஆசிரியர் ஆன்ட்ரியூ ரோசன்-தால் தெரிவித்துள்ளார்.

கோபம் எதற்கென்றால், தலைப்பாகை, கையில் மாடு என்று ஏழை வடநாட்டுக் குடியானவன் போல படம் போட்டு விட்டார்கள் என்பதற்காகவாம். சம்பந்த-மில்லாமல் தேசபக்தியும், ரோசமும் பொத்துக்-கொள்ளும் இவர்களுக்கு! இப்படித்தான் இந்த நாட்டின் வெகுமக்கள் இருக்கிறார்கள். அப்படியே இப்படம விமர்சிக்கிறது என்றாலும் அது மேலை நாடுகளையே ஏளனம் செய்கிறது. இந்தியாவைப் பாராட்டத்-தான் செய்கிறது. போகட்டும். இவர்களை இப்படியா விமர்சிப்பது? மங்கள்யானை அனுப்புவதற்கு கோயில், நாள், நேரம் என்று திரிந்தவர்கள் எங்கு எதை அனுப்பினால் என்ன? அடிப்படை அறிவில்லாவிட்டால் செவ்வாய்க்கலன் அனுப்பி என்ன பயன்? மைல் கல்லைக் கும்பிடும் இந்தக் கும்பலுக்கும், ராக்கெட் மாதிரியைக் காட்டி பகவானிடம் அப்ரூவல் வாங்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? எனக்கென்னமோ, சிம்சாங்கின் கார்ட்டூனை விட, நம் கார்ட்டூனிஸ்ட் யோகனின் கார்ட்டூன்தான் இதற்கு சரியென்று படுகிறது.

தமிழ் ஓவியா said...

டில்லியில் இராவணன் விழா : தெலங்கானாவில் நரகாசுரன் விழா :


டில்லியில் இராவணன் விழா :

தெலங்கானாவில் நரகாசுரன் விழா :

மைசூரில் இராவணனுக்குக் கொண்டாட்டம் :

இராமாயணத்தால் இழிவுபடுத்தப்பட்ட தென்னாட்டு மக்களைத் தொடர்ந்து இழிவு-படுத்தும் விதமாக ஆண்டுதோறும் இராவணன், கும்பகர்ணன்,மேகநாதன் உருவங்களைக் கொளுத்தி ராமலீலா கொண்டாடு-கின்றனர் வடநாட்டார். அதற்கு எதிர்வினையாக இராமன், லட்சுமணன், சீதை உருவங்களைக் கொளுத்தி அன்னை மணியம்மையார் நடத்திய இராவணலீலா வடநாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது வரலாற்றுக் குறிப்பு. எனினும் இன்னும் இராமலீலா நடைபெற்றே வருகிறது.

அண்மைக்காலமாக, தமிழ்நாட்டில் மட்டும் ஒலித்த இராமலீலாவுக்கு எதிரான குரல், இப்போது பரவலாக பல இடங்களிலுமிருந்து வருகிறது. தில்லி ஜவகர்லால் பல்கலைக்-கழகத்தின் உயர்பொறுப்பில் இருப்போர் இத்தகைய விழாக்களில் பங்கெடுப்பதைக் கண்டித்தும், நாங்கள் இராவண லீலா நடத்தினால் இராமனைக் கொளுத்த வருவீர்களா என்று கேட்டும், அப்பல்கலைக்கழகத்தின் துணை-வேந்தருக்கு மாணவர்கள் ஒரு திறந்த மடலை எழுதியுள்ளனர். தமிழ்நாட்டில் இராவணலீலா நடந்தபோது அன்றைய பிரதமர் இந்திராகாந்திக்கு அன்னை மணியம்மையாரின் சார்பாக ஆசிரியர் கி.வீரமணி எழுதிய கடிதத்தையும் அதில் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள் மாணவர்கள். மேலும் தந்தை பெரியாரின் படத்தையும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்-கிறார்கள்.

தெலங்கானா உஸ்மானியா பல்கலைக்-கழக மாணவர்கள் அக்டோபர் 31 அன்று திராவிட வீரன் நரகாசுரன் நினைவுநாளை அனுசரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்நிலையில், கர்நாடகா பி.ஜெ.பி. தலைவர் பிரகலாத் ஜோஷி,இராவணன், லங்கேஷ் என்று பெயர் வைத்திருப்பவர்கள் எல்லாம் மாமாக்கள். என்று உளறிக் கொட்ட, கான்பூர் முதல் கன்னியாகுமரி வரை, மைசூர் உள்பட பலவிடங்களிலும் இராவணனைக் கொண்டாடும் மக்கள் இருப்பதை எடுத்துக் காட்டி பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் கன்னட இளைஞர்கள். திராவிடர் இயக்கம் வைத்த இன உணர்வுத்தீ நாடெங்கும் பற்றிப் பரவுகிறது என்பதைத்தானே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

தமிழ் ஓவியா said...

தூர்தர்ஷன் துஷ்பிரயோக்


மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிறுவப்பட்ட நாள் நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பாகவத் ஆற்றிய உரை அரசு ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்சனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கு நாடெங்கும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. கண்டனம் தெரிவித்து டில்லி காங்கிரஸ் சார்பில் அக்டோபர் 5 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இன்றைய தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சு தூர்தர்ஷனில் நேரலை செய்யப்பட்டது நாட்டின் மதச் சார்பின்மை கொள்கையின் அடிப்படையையே தகர்த்துள்ளது. நாடெங்கும் மதக் கலவரங்களைப் பரப்பி வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சி நாட்டில் முதல் முறையாக அரசுத் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டுள்ளது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

இதுபோன்று மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத் தகர்க்கும் மத்தியில் ஆளும பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளையும், தூர்தர்ஷனை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊதுகுழலாக மாற்ற முயற்சிப்பதையும் காங்கிரஸ் கட்சி பொறுத்துக் கொள்ளாது. என்றார் டில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங். இடதுசாரிகள், முற்போக்காளர்கள், மதச்சார்பற்றோர் முன்னமே எதிர்பார்த்த மோடி அரசின் இந்தப் போக்கு மோடிக்கு வாக்களித்தவர்கள் மத்தியிலேயே வெறுப்பைத் தோற்றுவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

மேடிசன் மோடி... மோகன்’லால்’ காந்தி!


பிரச்சாரத்திற்குப் போன காலத்திலெல்லாம் தப்புந்தவறுமாக வரலாற்றுச் செய்திகளைச் சொல்லிக் கொண்டுதிரிந்த மோடி, பத்தாண்டுகளாக நுழைய முடியாமலிருந்த அமெரிக்காவுக்குப் போவதற்காகவே பிரதமராகி, சகிக்க முடியாமல் அவர்களும் அனுமதித்துவிட்டார்கள். விசா மறுக்கப்பட்டுவந்த மோடிக்கு, அங்கே ரொம்ப காலமாக சம்மன் மட்டும் தயாராக இருந்தது வேறு கதை! நம் கதை... சாரி... மேடிசன் சதுக்கத்தில் பேசிய மோடியின் கதை என்னவென்றால், காந்திக்குப் புதுப்பெயர் வைத்தது தான். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று ஒன்னாப்பு படிக்கும் பிள்ளைக்குக் கூட சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் நாட்டின் பிரதமரோ மோகன்லால் காந்தி என்றார். கமுக்கமாகச் சிரித்தார்கள் அமெரிக்கக் காவலர்கள்! (முன்குறிப்பு: மேடிசனில் மட்டுமல்ல... ராஜஸ்தானில் கடந்த ஆண்டு பேசும்போதும் காந்தியை அவர் மோகன் லால் என்று குறிப்பிட்டதை அப்போதே பத்திரிகைகள் எடுத்துக் காட்டின.) வாட் டு டூ? மோடி கேட்ச்சுடு ரேபிட் ஹாஸ் திரி லெக்ஸ்பா! அட, புரியலையா... அவர் புடிச்சா முயலுக்கு மூணு காலுதான். சப்போஸ், நாலு காலுன்னு முயல் சொன்னா, ஒரு காலை உடைச்சுட்டு இப்போ மூணு தானே என்பார். சோ, மூணு என்று ஒப்புக்கொள்ளுதல்தானே முயலுக்கு நல்லது. அதுமாதிரி காந்தியே வந்து பெயரை மாற்றினாலும் மாற்றிக் கொள்ளக்கூடும்.

தமிழ் ஓவியா said...

முக்கியமான வேலை வாய்ப்புத் தகவல்


சிபிஎஸ்இ மற்றும் யுஜிசி சார்பில் நடத்தப்படும் உதவி பேராசிரியர் அல்லது இளநிலை ஆராய்ச்சி யாளர் உதவித்தொகை மற்றும் உதவி பேராசிரியர் களுக்கான தகுதித் தேர்வு எழுத விண்ணப்பிக்க பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பு:-

தேர்வு தேதி: 28.-12.-2014

தேர்வு மய்யம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம்
எந்தெந்த பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்?

தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்கள் , கலைப்பிரிவு பாடங்கள் , கணினி அறிவியல், மின்னணுவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட 79 பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு முடித்த மற்றும் படிக்கும் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

இத்தேர்வை எழுத விரும்புவோர் சிபிஎஸ்இ இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து, பின் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள லாம்.

விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?

பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.450.
ஒபிசி விண்ணப்பதாரர்கள் ரூ. 225.

எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர் கள் ரூ.110 தேர்வு கட்டணத்தை செலுத்தி அதற்கான ரசீதை (சலான்) பெற்று கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சாதி மற்றும் கல்விச் சான்றிதழ் வங்கி ரசீது (சலான்) நகல், நிழற்படம் மற்றும் உரிய சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.

எந்த முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்?

ஒருங்கிணைப்பாளர், விரிவுரையாளருக்கான தகுதித் தேர்வு, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி -24

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25-.11.-2014 மாலை 5 மணி.

தேர்வுக்கான விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்ய இறுதி நாள்:-

மேலும் தகவல்களுக்கு : www.cbscnet.nic.in

Read more: http://viduthalai.in/e-paper/89629.html#ixzz3GhBh6kmK

தமிழ் ஓவியா said...

அவசியம்


கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மையோடு நடந்து கொள்வதே முக்கியமும் அவசியமுமாகும்.
(விடுதலை, 17.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/89624.html#ixzz3GhBuLlqc

தமிழ் ஓவியா said...

பலவித வெள்ளத்தில் மக்கள் தவிப்பு!


திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்கள் ஒரு முறை எழுதி இருந்தார்கள். ஒரு 24 மணி நேரம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மழை பெய்தால் தலைநகரம் மக்கள் நடமாட, புழங்கிடத் தகுதியற்றதாக, சகஜ வாழ்க்கைக்கு லாயக்கற்றதாக மாறி விடுகிறது என்று எழுதினார்.

36 ஆண்டுகளுக்குப் பிறகும் தலைநகரமான சென்னை அதே நிலையில் தானிருக்கிறது என்பது வருத்தத்திற்கு உரியது.

எங்கு பார்த்தாலும் மழை நீர்த் தேக்கம், போக்குவரத்துப் பாதிப்பு, அலுவலகங்களுக்குச் செல்ல முடியாத ஊழியர்களின் பரிதாப நிலை, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் கட்டாய நிலை. இத்தியாதி இத்தியாதி வசதிக் குறைவுகள் சென்னை மாநகரைப் புரட்டிப் போட்டுள்ளன.

இவ்வளவு மழை பொழியும் என்று எதிர்பார்க்க வில்லை; உடனடியாகப் பரிகாரம் செய்ய முடியாது, படிப்படியாகத்தான் செய்ய முடியும் என்கிறார் வணக்கத்திற்குரிய மேயர்.

மக்கள் நடந்து செல்ல முடியவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இரு சக்கர வாகனங்களில் செல்லக் கூடியவர்களின் நிலை ஆபத்துக்குரியதாக இருக்கிறது.

ஆங்காங்கே குழிகள் திறந்து கிடப்பதால் அதில் வாகனங்கள் விழுந்து உயிருக்கே ஆபத்தாகும் நிலை. மின் கம்பிகள் அறுந்து விடுவதால், ஏற்படும் விபரீதம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும்போது மட்டும் இதுபற்றியெல்லாம் பேசபடுகிறதே தவிர, அந்தப் பருவம் முடிந்தவுடன் அதனைப்பற்றிப் பொது மக்களும் சிந்திப்பதில்லை. அரசு - மாநகராட்சியும் திட்டமிடுவதில்லை.

சென்னைப் பெரு நகரின் எல்லைகள் விரிவடைந்து கொண்டே செல்லுகின்றன - மக்கள் பெருக்கம் இன்னொரு பக்கம் அச்சுறுத்தல்; வெளியூர்களிலிருந்து தலைநகருக்கு வரும் பொது மக்கள் நாள்ஒன்றுக்குப் பல லட்சம் - வாகனங்கள் பெருக்கம் என்பவையெல் லாம் சேர்ந்து சென்னைப் பெருநகரத்தை மூச்சுத் திணறலுக்கு ஆளாக்கி விடுகின்றன.

அரசியல் காழ்ப்புணர்வால் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பூங்காக்கள் எல்லாம் குப்பைத் தொட்டிகளாகி விட்டன. எதில்தான் அரசியல் பார்ப்பது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.

போதும் போதாதற்கு இந்த மூடத்தனப் பண்டி கைகள்! அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மெச்ச வேண்டும் என்பதற்காகக் கடன் வாங்கியாவது பண்டிகைகளைத் தாம்தூம் என்று கொண்டாடும் மூடத்தனங்கள்; தீபாவளி இதில் முதல் இடத்தை வகிக்கிறது.

தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் என்பதை அறியாமலேயே அதன்மீது ஒரு கவர்ச்சி! வியாபாரிகள் மக்கள் பணத்தைக் கைப்பற்றிட கைத்திறன் காட்டும் விளம்பர யுக்திகள் - இவற்றின் காரணமாக கொட்டு மழையிலும் கூட துணிக் கடைகளிலும், நகைக் கடைகளிலும் நெரிசலோ நெரிசல்! மக்களிடம் பகுத்தறிவு வளர்ச்சி பெருகாவிட்டால் எல்லா வகையிலும் இடர்ப்பாடுகளை வருந்தி அழைத்து அவதிப்பட வேண்டியநிலை!

அதுவும் விஞ்ஞானம் பெற்றெடுத்துக் கொடுத்த இந்த ஊடகங்கள் செய்யும் அநியாயம் இருக்கிறதே - அவற்றிற்கு மன்னிப்பே கிடையாது.

அப்பப்பா, ஒவ்வொரு மாதமும் வந்து போகும் பண்டிகைகளைப் பற்றி சற்றும் அறிவுக்குப் பொருந்தாத அளப்புகள் போட்டிப் போட்டுக் கொண்டு காகித ஊடகங்கள் ஆன்மிக இணைப்பு இதழ்களை வெளி யிட்டு, அதிலும் மக்களின் பணத்தைப் பறிக்கின்றனர்.

மூடத்தனமான தல புராணக் குப்பைக் கதைகளை அதில் கொட்டி, கடைசி வரியில் என்பது... நம்பிக்கை... ...என்பது ஆன்மிகம் என்று பொறுப்பைத் தட்டிக் கழித்து வெளியிடும் மோசடித்தனம்!.

தடுக்கி விழுந்தவன் அரிவாள்மணையில் விழுவது போல பக்தியால் புத்தி கெட்டுப் போன மக்களை மேலும் மேலும் பழி வாங்குகின்றனவே இந்த ஊடகங்கள் நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகை என்பதையும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கூறியதை நினைத்துப்பார்த்தால் ஆகா எவ்வளவு தொலை நோக்கோடு இந்த அறிவுலக ஆசான் கணித்துள்ளார்! என்று வியக்க வைக்கிறது.

மழையில் ஆரம்பித்து பத்திரிகை வரை கடுமையாக விமர்சிக்கப்படுகிறதே என்று எண்ண வேண்டாம். மூடச் சங்கிலி ஒவ்வொன்றையும் தொட்டுத் தொட்டு, இணைக்கிறதே என் செய்ய!

மழை வெள்ளத்திலும் தீபாவளிச் சந்தை கொடி கட்டிப் பறக்கிறது. ஜேப்படிக்காரர்களின் கைவரிசை இன்னொரு பக்கம்.

பள்ளிப் பருவத்தில் பாடத் திட்டத்தில் ஆரம்பித்து , பாட்டி சொல்லும் கதைகள் முதல் ஒரு பெரிய மாற்றம், மறுமலர்ச்சி வரவில்லை என்றால் இந்த மக்கள் மேலும் மேலும் துன்பச் சுமையால் முதுகெலும்பு முற்றிலும் முறிந்து பக்கவாதத்தில் வாழ்வைத் தொலைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

Read more: http://viduthalai.in/page-2/89625.html#ixzz3GhC3WpzT

தமிழ் ஓவியா said...

ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் பலே மோடி?


-குடந்தை கருணா

சனிக்கிழமை அன்று நடை பெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மோடி அரசு ஒரு முடிவை எடுத்து அறிவித்துள்ளது.

இனி, காந்தி அடிகள் பிறந்த, மறைந்த நாள் மட்டும் தான், மத்திய அரசின் நிகழ்வாக நடத் தப்படும்.

இதுவரை கொண்டாடப் பட்டு வந்த பிற தலைவர்களின் நிகழ்வுகளை, அரசு நிகழ்ச்சியாக இனி இருக்காது என்ற முடிவை மோடி அரசு எடுத்துள்ளது.

ஆகா, மோடியைப் பார், அனாவசியமாக, அரசு விழாக்கள் எடுத்து செலவு செய்வதை எப்படி தடுத்து நிறுத்தி, சிக்கனத்தைக் கடைப்பிடித்து, நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு இட்டு செல்கிறார் என ஊடகங்களும், நம்மூர் குருமூர்த்திகளும், சோக்களும், வரிந்து கட்டிக்கொண்டு பேசு வார்கள்.

ஆனால், அரசு விழாவாக இது நாள் வரை, நிகழ்த்தப்பட்ட தலைவர்களின் பிறந்த நாள், மறைந்த நாள் என நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சரண்சிங், போன் றோரின் நிகழ்வுகள் இனி நடைபெறாது என்பதை, மறைமுகமாக மோடி அரசு கூறியுள்ளது.

அதுமட்டுமல்ல, இந்த பட்டி யலில் பாபாசாகிப் அம்பேத்கர், பாபு ஜெகஜீவன்ராம் ஆகியோரும் அடங்குவர் என்பதையும் நாம் புரிந்துகொண்டால்தான், மோடியின் ஆர்.எஸ்.எஸ். அரசு, இந்த முடிவை எந்த கோணத்தில் எடுத்துக்கொண்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்த முடிவை இங்கே உள்ள ஊடகங்கள் பெரிதாக செய்தி வெளியிட்டதாக தெரியவில்லை;

அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் பெயரில் ஒவ்வொரு திட்டமாக இனி அறிவிக்க இருக் கிறார்கள். அதன் முதல் துவக்கம் தான், அக்டோபர் 16-ஆம் தேதி யன்று, மோடி துவக்கிய பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஸ்ராமேவ் ஜெயதே கார்யகிரம் திட்டம்; அதாவது, தீன்தயாள் உபாத்யாயா தொழிலாளர் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

ஆர்.எஸ்.எஸில் முழு நேர பிரச்சாரக இருந்து, ஜனசங்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும் இருந்த தீன்தயாள், சங்கராச்சாரியா,ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெக்டேவர் ஆகியோ ரின் வாழ்நாள் சரித்திரத்தைப் பற்றி எழுதியவர்.

அவரது வாழ்நாளில், தொழி லாளர் போராட்டம் எதிலும் கலந்து கொண்டதாக ஒரு குறிப்பும் நமக்கு இல்லை; இருந்தாலும், அவரது பெயரில் தொழிலாளர் திட்டம் ஒன்று துவக்கப்பட்டிருக் கிறது மோடி அரசால் என்றால், இவர்களின் போக்கு எப்படி செல்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.

இந்த அய்ந்து ஆண்டுகளில், மோடி அரசில் இன்னும் ஆர். எஸ்.எஸ். தலைவர்களின் பெயரில் பல திட்டங்கள் சூட்டப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.

ஆக, ஒரு பக்கம், ஏற்கனவே, இருந்த தலைவர்களின் நிகழ்வுகள், மெல்ல மெல்ல இருட்டடிப்பு செய்யப்படும்; ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் பெயரில் திட் டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

இது தான், மோடி அரசுக்கு உள்ள உண்மையான அஜெண்டா. ஒரு கல்லில் பல மாங்காய் அடிக் கும் வித்தை இது தான்.

Read more: http://viduthalai.in/page-2/89627.html#ixzz3GhCQJG9G

தமிழ் ஓவியா said...

ஜெயலலிதாவுக்காக நாரிமன் வாதாடியது தெளிவான விதிமீறல்: முன்னாள் நீதிபதி கருத்து


சென்னை, அக்.20- சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக் கப்பட்டு பெங்களூரு சிறையில் இருந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தனக்கு இடைக் கால பிணை வழங்கக் கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் சார்பில் மூத்த வழக்குரைஞர் களில் ஒருவரான பாலி எஸ்.நாரிமன் ஆஜராகி வாதாடி னார்.

அதன் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கும் அவருடன் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட அவரது தோழி சசிகலாவுக்கும், அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரனுக்கும் நிபந்தனையுடனான இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.

அதே சமயம், பாலி எஸ்.நாரிமன், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இந்த வழக்கில் வாதாடியது தவறு என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

காரணம் இந்த சொத்துக் குவிப்பு வழக்கு உள்பட ஜெயலலிதாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பல்வேறு ஊழல் வழக்குகள் தொடர் பான விசாரணைகளை எதிர்த்து ஜெயலலிதா முன்னர் வழக்கு தொடுத்தபோது, இதே நாரிமன், தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பாகவும், திமுக சார்பாகவும், ஜெயலலிதாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்திலும்,

இந்திய உச்சநீதிமன்றத்திலும் வாதாடியிருப்பதாக கூறும் திமுகவைச் சேர்ந்த வழக் குரைஞர் சண்முகசுந்தரம், இப்படி கடந்த காலத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடியவர், அதே வழக்கு தொடர்பான இந்த பிணை கோரும் வழக்கில் ஜெயல லிதாவின் சார்பில் வாதாடுவது வழக்குரைஞர்களுக்கான தார்மீக நெறிமுறைகளை மீறும் செயல் என்று சண்முக சுந்தரம் விமர்சித்திருந்தார்.

சண்முகசுந்தரம் முன்வைக்கும் விமர்சனம் சரியே என்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு. இதில் நாரிமன் வெறும் தார்மீக நெறி முறைகளை மட்டும் மீறவில்லை;

மாறாக வழக்குரைஞர் களுக்கான இந்திய பார் கவுன்சிலின் நடத்தை விதி முறைகளையும் தெளிவாக மீறியிருப்பதாக கூறும் நீதிபதி சந்துரு, இதற்காக நாரிமன்மீது டில்லி பார் கவுன்ஸிலும், இந்திய பார் கவுன்ஸிலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், பாலி எஸ்.நாரிமனின் மகன், இந்திய உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் சூழலில் நாரிமன் இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக் குரைஞராக பணிபுரிவதே தவறு என்கிறார் நீதிபதி சந்துரு.

இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உறவினர் கள் யாரும், அந்த நீதிபதிகள் பணிபுரியும் உயர்நீதி மன்றங்களில் பணிபுரியக் கூடாது என்று இதே இந்திய உச்சநீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தி, வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார் நீதிபதி சந்துரு.

இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அவர்களின் உறவினர்களில் இருக்கும் வழக்குரைஞர்களுக்கும் இந்திய உச்சநீதிமன்றம் பரிந்துரைக்கும் அந்தக் கட்டுப் பாடுகள் மற்றும் வழிமுறைகள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும்,

அவர்களின் உறவினர்களுக்கும்கூட அப்படியே பொருந்தும் என்று தெரிவித்த நீதிபதி சந்துரு, இது தொடர்பில் இந்திய பார் கவுன்சில் வழக்குரை ஞர்களுக்கான நடத்தை விதிமுறைகளில் ஒரு சிறு திருத்தம் செய்வது இதை மேலும் வலுப்படுத்தும் என்றும் வலியுறுத்தினார்.

Read more: http://viduthalai.in/page-2/89649.html#ixzz3GhD6411m

தமிழ் ஓவியா said...

புறந்தள்ளும் காய்கறிகளில் உண்டு எல்லையற்ற பயன்கள்

இன்றைய நவீன உலகில், உணவு கூட சத்தின்றி மாறியுள்ளது. இதனாலேயே பல்வேறு நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது. இதில், பெரும்பாலான வர்களுக்கு உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை.

இதனாலேயே பல மருத்துவர்கள், காய் கறிகளை அதிகளவில் உணவில் சேர்க்க வலியுறுத்து கின்றனர். ஆனாலும், பலரும் சத்தில்லாத காய்கறிகளை மட்டுமே உணவில் சேர்க்கின்றனரே தவிர, சத்தான காய் கறிகளை புறந்தள்ளி விடுகின்றனர். நாம் புறம்தள்ளும் காய்கறிகளில், சத்துகள் மட்டுமல்ல;

பல நோய்களுக்கு மருத்துவ சக்தியும் உள்ளது. அந்த வகையில், சில காய்கறிகளும் அதில் உள்ள குணங்களும்:

கத்திரிக்காய்: பொதுவாக கத்திரிக்காய் என்றாலே பலருக்கு பிடிப்பதில்லை. சிலருக்கு இது எட்டி காயாக கூட இருக்கலாம். ஆனால், இதில் அரிய குணங்கள் இருப்பது யாருக்கும் தெரியாது. ஆனால், இதை தரம் பிரித்து உண்பதிலும் கவனம் இருப்பது அவசியம் கத்திரிக்காயில் பல வண்ணங்கள் உண்டு, என்றாலும் அனைத்திலும் உள்ள சத்துக்கள் ஒன்றுதான்.

பிஞ்சு கத்திரிக்காய் சமைப்பதற்கு ஏற்றது. முற்றின கத்திரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி, சிரங்கை ஏற்படுத்தும். இதில், தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தரும் வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால், வாயு, பித்தம், கபம் போகும். அதனால்தான், பத்தியத்துக்கு இக் காயை பயன்படுத்துகின்றனர். அம்மை நோயால் பாதிக்கப் படுபவர்கள் இதை உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அவரைக்காய்: அவரையிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரை பிஞ்சு நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இது சூட்டுடம் புக்கு மிகவும் ஏற்றது. ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் உகந்தது. மேலும், இதில் உள்ள நார்ச் சத்து உடலை வலுவாக்கும் என்பதுடன், அதிக எடை உள்ளவர்கள் இதை உட்கொண்டால், உடம்பு இளைக்கவும் உறுதுணை புரியும்.

வெண்டைக்காய்: பொதுவாக வெண்டைக்காயை மூளை வளர்ச்சிக்கு ஏற்றது என்று குறிப்பிடுவது உண்டு. ஆனால், இதன் சுபாவம் குளிர்ச்சி தருவது. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது.

இது வறண்ட குடலை பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி உயிர்சத்துக்கள் உள்ளன. இதை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட வயிற்றுப்போக்கும் நீங்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். வெப்ப இருமலை குணமாக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/89643.html#ixzz3GhDTYvgb

தமிழ் ஓவியா said...

வெந்நீர் அருந்துங்கள் இளமையாக இருக்கலாம்


என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக்கேட்டிருப்போம்.

ஆனால், மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறுகின்றனர்.

உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும்.

வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் இன்னும் சிறந்தது. டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும் முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும்.

அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன் முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி நல்ல வளர்ச்சி அடையும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும்.

மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள். அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும். உடற்பயிற்சி மய்யத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தான்.

மதியநேர சாப்பாட்டிற்கு பின் சிறிது வெந்நீர் பருகினால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புக்களை அகற்றிவிடும் ஆற்றல் கொண்டது. காலை வேளையில் மலம் எளிதில் வரவில்லையா ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும்.

Read more: http://viduthalai.in/page-7/89645.html#ixzz3GhDw4MZk