Search This Blog

25.10.14

பெரியாரின் வாரிசு ஜெயலலிதாவா? பெரியார் தொண்டர்களிடம் கட்டுப்பாடு விதிப்பது ஏன்?

                                        பெரியாரின் வாரிசு ஜெயலலிதாவா?


தி இந்து (தமிழ்) நாளேட்டில் பெரியா ரின் வாரிசுதான் ஜெயலலிதா - எனும் தலைப்பில் க. திருநாவுக்கரசு (திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க. திருநாவுக் கரசு அல்ல இவர்) என்பவர் கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார். (22.10.2014)

தலைப்பைப் பார்த்தவுடன் பலருக்கும் பகீர் என்றாகி விட்டது; ஏராளமான தொலைப் பேசிகள். யார் இந்த திருநாவுக்கரசு? அபாண்டமாக அள்ளித் தெளித்த கோலமாக, அரை குறைப் பிரசவமாக எழுதப் பட்ட கட்டுரையின் முகத் திரையைக் கிழியுங்கள்! என்ற அன்பு வேண்டுகோள் வேறு.

சுயமரியாதைக்கென இயக்கம் கண்ட ஒரு மாநிலத்தில் இப்படி நடைபெறுவது மாபெரும் முரண் நகையாகத் தோன்றக்கூடும். ஆனால் சுயமரியாதை அழித் தொழிப்பு இன்று தமிழக அரசியலில் முழுமை பெற்றிருக்கிறது என்றால், அதற்கான தொடக்கம் பெரியார் உருவாக்கி வளர்த்த சுயமரியாதை இயக்கத்திலும், திராவிடர் கழகத்திலும் இருக்கிறது. திராவிட இயக்கத்தின் வரலாறு தெரியாதவர்களுக்கு இது சற்று அதிர்ச்சியாக இருக்கக் கூடும்.


ஆனால், அதுவே உண்மை. நான் சொல்வது சரியா, தவறா என்று சிந்தித்துப் பார்த்துச் சரியென்று பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பொது மக்களிடம்  மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்ட பெரியார்  ஒருபோதும் அந்தச் சிந்தனைச் சுதந்திரத்தைத் தனது இயக்கத்திலிருந்த பிற தலைவர்களுக்கோ, தொண்டர்களுக்கோ வழங்கவில்லை என்பது கட்டுரையாளரின் ஒரு குற்றச்சாற்று.


நம்பு - நம்பினால் நடராஜா; நம்பா விட்டால் எமராஜா என்று கூறும் மதவாத அச்சுறுத்தல் போன்றதல்ல - தந்தை பெரியார் அவர்களின் கருத்தோட்டம்.

பொது மக்களின்  சிந்தனைச் சுதந்திரத் துக்கு விரிவான இடம் கொடுக்கும் தந்தை பெரியார் தொண்டர்களிடம் கட்டுப்பாடு விதிப்பது ஏன்?

அதைப்பற்றி பெரியாரே சொல்கிறார்:

தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக 18ஆவது மாநில மாநாட்டில் (8.5.1948, 9.5.1948) உரையாற்றிய தந்தை பெரியார் குறிப்பிட்டதாவது:

நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல; உங்கள் மனசாட்சி என்பதைக்கூட மூட்டை கட்டி வைத்து விட வேண்டியதுதான். கழகத்தில் சேருமுன்பு நீங்கள் உங்கள் பகுத் தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம், என்னுடன் வாதாடலாம்.

ஒரு ஜில்லா சூப்பிரண்டெண்டு சுடு என்று போலீஸ்காரனுக்கு உத்தரவு போட, அவன் என் மனசாட்சி அதற்கு இடம் கொடுக்கவில்லையே என்று கூறினால் அந்த சூப்பிரண்டெண்ட்ன்ட் நிலை என்னாவது? கசாப்புக் கடையில் வேலை பார்க்க ஒப்புக் கொண்டவன் அந்த ஆட்டை வெட்டுடா என்றால், வேலைக் காரன் அய்யோ என் மனசாட்சி மாட்டேன் என் கிறதே; நான் என்ன செய்யட்டும்? என்று கூறினால்  ஏண்டா மடப்பயலே, முன்னாடியே உனக்குத் தெரியாமல் போன தென்னடா? அப்போது உன் மனசாட்சி எங் கேடா போயிருந்தது? என்று கேட்பானா இல்லையா?


ஆகவே, மனசாட்சியோ சொந்த பகுத்தறிவோ, கழகக் கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமானால், உடனே விலகிக் கொள்வதுதான் முறையே ஒழிய, உள்ளிருந்து கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது விஷமத்தனமேயாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப் படுகிறேன் என்று குறிப்பிட்டார்கள்.

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற வடமண்டல திராவிடர் மாணவர் மாநாட் டில் (21.2.1948) மாணவர்கள் மத்தியில் ஆற்றிய உரையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மாணவர் கழகத்தின் சார்பாக அழைக் கப்படும் யாரும் மாணவர்களைப் புகழாமல் செல்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். மாணவர்கள் நிலை நிரந்தரமான தல்ல.  என்றுமே ஒன்றுபோல் இருப்ப தில்லை. நேற்று குழந்தைகளாயிருந்த வர்கள் தான் இன்று பள்ளியிலும்; கல்லூரி யிலும் மாணவர்களாய்ப் படித்து வருகி றீர்கள். நாளை நீங்கள் தான் பெரிய வர்களாய் வாழ்க்கை நடத்தப் போகிறீர்கள். இந்த நிலையற்ற பருவத்தில், எது நல்ல காரியம் என்று உங்களால் சிந்தித்து சுலபத்தில் அறிந்து கொள்ள முடியாது. மாணவர்கள் தாமாகவே ஒரு நல்ல காரியத்தை ஆராய்ந்தறிந்து அதைச் செய்து முடிக்கக் கூடிய சக்தி படைத்த வர்கள் என்று என்னால் நினைக்க முடிய வில்லை. அவர்களைக் கொண்டு  பல நல்ல காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்றுதான் நான் அபிப்பிராயப்படுகிறேன். ஆகவே, அவர்கள் தம்மைத்  தம்முடைய திரண்ட சக்தியை நல்ல தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இப்படிக் கூறுவ தற்காக மாணவர்கள் என்மீது கோபித்துக் கொள்ளக் கூடாது. மாணவர்கள், தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்கக் கூடிய வர்கள். சொல்லிக் கொடுப்பதைப் படிக்கக் கூடியவர்கள். ஆதலால் தமக்கு எல்லாம் தெரிந்து விட்டதாக அவர்கள் ஒரு போதும் நினைத்துக் கொள்ளக் கூடாது.

அப்படி நினைப்பவர்களிடமிருந்துதான் காலித்தனம் கட்டுப்பாட்டுக்கும் அடங்காத தன்னிச்சைத்தனம் விரைவில் புறப்படுகிறது. ஆகவே, அவர்கள் மிக ஜாக்கிரதையாக விஷயங்களைச் சிந்திக்க வேண்டும். தம்மால் கூடுமான அளவுக்கு நல்ல தலைவர்களை அவர்கள் தேடித் திரிதல் வேண்டும். எந்த அளவுக்குத் தாம் அன்பு செலுத்துகிறார்களோ, அந்த அளவுக் கேனும் தம்மீது அன்பு செலுத்தக் கூடிய; தம்மை நல் வழிப்படுத்துவதில் ஆசையும், அக்கறையும் உள்ள தக்க பெரியார் களைத்  தேடிப் பிடிக்க வேண்டும் அவர்கள். அந்த வழியில் நாங்கள் முயற்சி செய்து, அவர் களில் ஒரு சிலரையாவது எங்களையும், எங்கள் கொள்கைகளையும் நம்பச் செய்து, அப்படிப் பெற்ற சிலரை நாங்கள் எங்க ளுக்குச் சொந்தமான பெருஞ் சொத்தாக மதித்து நாங்கள் மகிழ்ந்து வருகிறோம்.

மாணவர்கள் நல்ல ஜோல்ஜர்கள்; நல்ல ஜெனரல்கள் அல்ல. மாணவர்கள் நல்ல சிப்பாய்கள்; நல்ல கமாண்டர்கள் அல்ல. ஆகவே நல்ல சிப்பாய்களைப் போல் அவர்கள் பல கட்டுத் திட்டங்களுக்குட் பட்டு நடக்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் பேசினார் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் அவர்களின் மிகவும் வெளிப்படையான ஒளிவு மறைவிற்கு இடம் இல்லாத இந்த உரைகளில் இழைந் தோடும் இலட்சியத்தையும், நோக்கத்தை யும், அறிவு நாணயத்தையும்  அதனை நிறைவேற்ற கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்பதையும் பார்க்கத் தவறிய தன் விளைவே தமிழ் இந்து நாளேட்டில் வெளிவந்த - அந்தக் கட்டுரையாகும்.

தந்தை பெரியார் அவர்களால் உருவாக் கப்பட்ட திராவிடர் கழகம் ஓர் அரசியல் கட்சியல்ல; மாபெரும் சமூகப் புரட்சி இயக்கமாகும். அதன் இலட்சியமும், கோட் பாடுகளும், கொள்கைகளும் பல்லாயிரம் ஆண்டுகாலமாக வேரோடிப் போயிருந்த பழைமைகளை, பிறவிப் பேதங்களை மூடத் தனங்களை, முரட்டுத்தனமான பிடிவாதங் களை தலைகீழாகப் புரட்டிப் போடும் இயக்கமாகும்.

அதன் தோற்றுநர் தத்துவ கர்த்தா அதற்கான ஒரு இயக்கத்தை உருவாக்கும் நிலையில் வழி நடத்துபவர் அவராகத் தானே இருக்க முடியும்?

அப்படி இந்த இயக்கத்தை வழி நடத்திய தால்தானே இங்கு ஒரு மாபெரும் சமுதாய மாற்றம் நடந்திருக்கிறது.

இந்தியாவில் இரண்டாயிரம் வருடத் தில் மகத்தான ஒரு சமுதாயப் புரட்சி தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது. திரா விடர் கழகத் தலைவர் பெரியார்தான் அந்தப் புரட்சியைச் செய்தார் என்பது அமெரிக்கா விலுள்ள மூத்த பேராசிரியர்களின் கருத்து ஆகும்

- பேராசிரியர் ஜான்ரைலி (ஆனந்தவிகடன் 16.7.1972)

இத்தகைய புரட்சியை நடத்துவதற்குத் தலைவரின் ஆணையை உயிரெனப் போற்றி சர்வ பரித் தியாகங்களையும் செய் யக் கூடிய தொண்டர்கள் தேவை என்ப தைப் புரிந்து கொள்வதற்கு சமூகப் புரட்சி மீதான அக்கறை தேவை; அப்படி  ஆணை யிடும் தலைவர்தான் அந்தக் களத்தின் முதல் பலி! திராவிட இயக்கத்தின் வரலாறு தெரியாதவர்களைப் பற்றி பேனா பிடிக்கும் தோழருக்கு இந்த வரலாறு தெரியுமா? உதாரணமாக முதல் சுயமரியாதை  மாநாட்டின் தலைவராக சவுந்திரபாண்டி யனைப் பெரியார் முன் மொழிந்தபோது இனிமேல் வந்து இங்கு அவரை ஒருவர் பிரேரிக்கவோ, ஆட்சேபிக்கவோ உண்மை யாக யாருக்கும்  அதிகாரமும், யோக்கி யதையும் கிடையாது. பிரேரணையோ ஆமோதிப்பதோ, ஆதரிப்பதோ கொஞ்ச மும் அவசியமே இல்லை என்று பெரியார் சொன்னதைக் குற்றப்படுத்துகிறார் கட்டு ரையாளர்.
மாநாட்டுக்குத் தலைவர் யார் என்று முடிவு செய்து அழைப்பிதழும் அச்சிட்டு விளம்பரப்படுத்தியபிறகு பிரேரேணை, ஆமோதிப்பது என்கிற சடங்கு எதற்கு?  தந்தை பெரியார் எழுப்பிய வினாவில் குற்றம் காண என்ன இருக்கிறது?  இன்னும் சொல்லப் போனால்  மாநாட்டுத் தலைவரை மிகவும் உயர்த்திதானே அதில் குறிப்பிட் டுள்ளார். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஒருவரை மாநாட்டின் தலைவராக் கிப் பெருமையல்லவாபடுத்தியிருக்கிறார். மாநாட்டுக்கு மட்டுமல்ல; தாம் கண்ட சுயமரியாதை இயக்கத்துக்கும் அவரைத் தலைவராக்கி, தன்னைத் துணைத் தலைவ ராக ஆக்கிக் கொண்ட அந்த  விசால அறிவின் ஊற்றை எடை போட அரைகுறை களால் முடியவே முடியாது. எதையாவது எழுத வேண்டும் என்ற தினவெடுத்து எழுதியிருப்பதுபோல் தோன்றுகிறது.


சர்வாதிகாரியாக நடந்து கொள்வதை ஒப்புக் கொள்ளும் பெரியார் இது கழகத்தின் லட்சியத்துக்காக, பொது நன்மைக்காக என்கிறார். எல்லா சர்வாதிகாரிகளும் சொல் லும் அதே நியாயத்தைத்தான் பெரியாரும் சொல்கிறார் என்று பெரிய மேதாவி போல துடுக்குத்தனமாக எழுதியுள்ளாரே!

பொத்தாம் பொதுவாக எல்லா சர்வாதி காரிகளும் சொல்லக் கூடியதுதான் என்று சொல்லுவது நாணயமானதுதானா?

சர்வாதிகாரி என்று அறியப்பட்ட இட் லரும், முசோலினியும்  செய்தது  மாதிரி, நடந்து கொண்ட மாதிரி பெரியார் நடந்து கொண்டாரா?

அரசியல், அதிகாரப் பசி எடுத்து ஆட்டம் போட்ட சர்வாதிகாரிகளோடு பாசிஸ்டுகளோடு அரசியல், பதவிகளைத் துச்சமெனத் தூக்கி எறிந்து, செல்வச் செழிப்புகளை எல்லாம் உதறித் தள்ளி, எளிமையின் சின்னமாக 95 ஆண்டு முதுமையிலும் மூத்திர வாளியைத் தூக்கிக் கொண்டு, ஊர் ஊராய் அலைந்து மக்கள் மத்தியிலே புரட்சி எண்ணங்களை விதைத்த தந்தை பெரியாரை மற்ற பாசிஸ்டு தலைவர்களோடு ஒப்பிடுவது - ஒழுங் கானது தானா - அறிவு நாணயமானது தானா? வரலாற்று அறிவை உள்ளடக்கியது தானா?

பெரியார் சொன்ன அந்தக் கட்டுப்படும் தன்மை எத்தகையது தெரியுமா?
ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? சுதந்திரம் இருக்கும் நாட்டில் ஜாதி இருக்கலாமா? என்று வினா தொடுத்து, அந்த ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப் புச் சட்டப் பிரிவைக் கொளுத்தும் போராட் டத்தை அறிவித்தாரே - அப்படி கொளுத் தினால் மூன்றாண்டு கடுங்காவல் தண் டனை என்று பெரியார் அறிவித்த போராட் டத்துக்காகவே - அவசர அவசரமாக சட்டம் கொண்டு வந்த நிலையிலும், அதனைத் துச்சமாகத் தூக்கி எறிந்து, தலைவர் பெரியாரின் ஆணை ஒன்றே தலையானதாகக் கொண்டு 10 ஆயிரம் பேர் அப்போராட்டத்தில் குதித்தார்களே, இந்த வரலாறு எல்லாம் வக்கணை எழுத் தாளருக்குத் தெரியுமா?

இந்த அதிசயம் எப்படி நடந்தது? தந்தைபெரியார் தம் தொண்டர்களுக்கு விதித்த அந்தக் கட்டுப்பாடு,  தலைவர் ஆணையை நிறைவேற்றும் அந்த நெருப் பான பத்தியத்தால்தான் இதனைச் சாதிக்க முடிந்தது. வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று நிதானமின்றி எழுதுவது நேர்மையன்று.
இன்று கழகங்கள் நிகழ்த்தும் தனி நபர் வழிபாட்டின் ஆரம்பப் புள்ளியே பெரியார் தானாம்!

தந்தை பெரியார்பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாதவர் என்று இதன் மூலம் தமக்குத் தாமே நிரூபித்துக் கொண்டுள் ளார். மேடைகளில் பொருளில்லாது புகழ்ச்சி மொழிகள் தலைதூக்கினால் பெரியார் பேச மாட்டார்; அவர் கைத்தடிதான் பேசும்!  ஒரு மேசையில் ஒரு தட்டுத் தட்டி னால் அத்தோடு பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அதற்குப் பொருள். ஒரு தலைவரைப் பற்றி எழுதும்போது போது மான பொறுப்புணர்ச்சியோடும், தகவல்களைத் துல்லியமாக தெரிந்து கொண்டும் எழுத வேண்டும் என்ற பால பாடம் கூடத் தெரியாதவர்கள் எல்லாம் பேனா பிடித்தால் இப்படித்தான்.

காலில் விழும் கலாச்சாரத்தைக் கனலாக எரித்தவர் பெரியார். ஒருபோது தந்தை பெரியார் வந்தபோது ஒருவர் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார்;  இதனை இன்னொரு தோழர் குற்றமாகக் கூறியபோது பெரியார் என்ன சொன்னார் தெரியுமா? அவன் காலை அவன் கால்மேல் போட்டுக் கொண்டுள்ளான் உனக்கு என்ன நோக்காடு? என்று கேட்ட மனித உரிமையின் சிகரம் பெரியார்.

நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பெண்கள் விடுதலை மாநாட்டில் திடீ ரென்று ஒருவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் கால் களில் வந்து விழுந்து விட்டார். உரை யாற்றிக் கொண்டிருந்த தலைவர் அவரை அறியாமலேயேஅனிச்சை செயல் போல் (Reflex Action) அந்த மனிதரின் முதுகில் ஓர் அறை விட்டார். இதன் பொருள் என்ன? திராவிடர் கழகத்திலும் ஏதோ ஒரு புள்ளி தொடர்கிறது என்ற கூற்றில் சற்றும் உண்மையில்லை என்பதற்கு அடையாளம் இது அல்லவா!


ஒரு கட்சித் தலைவரின் பலகீனத்தைப் புரிந்து கொண்டு, கட்சி அலுவலகத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வரு வதைக்கூட அதிசயமாக்கி, பதாகைகளைக் கட்டி மேளதாளங்கள் ஏற்பாடு செய் கிறார்கள் என்றால், பதவிப் பிச்சையை எதிர்பார்த்து. செய்கிறார்கள்.

இதனோடு சமுதாயச் சழக்குகளைச் சாடி, எதிர் நீச்சல் போட்டு, ஏச்சுப் பேச்சு களைச் சகித்துக் கொண்டு,  கல்லடி, சொல் லடிகளைச் சந்தித்து, பொது வாழ்வை ஒரு தொண்டறமாக, புதிய கலை வண்ணமாக வடித்துத் தந்த ஒரு தலைவரோடு யாரை ஒப்பிடுவது என்ற விவஸ்தை வேண் டாமா?


சொத்துக்குவிப்பு வழக்கில்  - ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் நான்காண்டு தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராத மும்  விதிக்கப்பட்ட ஒருவரை - இந்தச் சூழலில் பெரியாரின் வாரிசுதான் ஜெய லலிதா என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதுவதன் மூலம் பொது மக்கள் என்ன உணர்வைப் பெற வேண்டும் என்ற எண் ணத்தில் எழுத்தாணியைப் பிடித்துள்ளார்? இதில் உள்நோக்கமும் விஷமத்தனமும் கைகோர்க்கவில்லையா?


தந்தை பெரியார் என்னும் அப்பழுக் கற்ற பொதுத் தொண்டின் இமயத்தைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற கீழ்ப்புத்திதான் இதன் பின்னணியில் இருக்கிறது என்று சொன்னால் குற்றமா குமா? 

கொள்கையில் ஒட்டை விழுந்தால் கூட பரவாயில்லை. ஆனால் நாணயத்தில் ஒழுக்கத்தில் தவறு இருக்கக் கூடாது - அதுதான் நம் கழகத்தின் முக்கிய பலம் (விடுதலை 11.10.1964) 

என்று சொன்ன தலைவரின் வாரிசு என்று ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரைக் குறிப்பிடுவது போக்கிரித்தனம் அல்லவா!


தந்தை பெரியார் அவர்களைவிட புரட்சிகரமான போராட்டங்களை நடத்திய வர்கள் யார்? பிள்ளையார் உடைப்பு, ராமன் படம் எரிப்பு, அரசியல் சட்ட எரிப்பு, தேசியக் கொடி எரிப்பு என்று எவரும் நினைத்துப் பார்க்கவே தொடை நடுங்கும் போராட்டத்தை  நடத்திய போதுகூட ஒரு துளி வன்முறைக்கு இடம் உண்டா?
போராட்டத்தில் ஈடுபடும் தொண்டர் கள் எப்படி எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று போராட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே தந்தை பெரியார் விடும் அறிக்கை பொது வாழ் விற்குப் பெருமை சேர்க்கும் அணிகலன் அல்லவா!


1948  - இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நள்ளிரவில் கைது செய்து தந்தை பெரியார் அவர்களை லாரியில் அழைத்துச் சென்று அலைக்கழித்தபோதுகூட தந்தை பெரியார் என்ன அறிக்கை வெளியிட்டார்?


வெளியில் இருக்கும் அண்ணாதுரை சொல்லுவதுபோல நடவுங்கள்: சாந்தமாய் இருங்கள், நிதானம் தவறினால் கோழைகள் ஆவார்கள்.   தோல்வியை ஒப்புக் கொண் டவர்கள் ஆவீர்கள். அமைதி, சாந்தம், கட் டுப்பாடுடன் சிறிதும் பலாத்கார உணர்ச் சியே இல்லாமல் சகிப்புத் தன்மையுடன் இருங்கள் கண்டிப்பாய் வெற்றி நமதே! என்று சொன்ன தலைவர் எங்கே?

ஊழலுக்காக தண்டிக்கப்பட்டவருக்காக பேருந்துகளையும் பொதுச் சொத்துகளை யும் நாசப்படுத்தும் நிலைப்பாடு எங்கே?

 
1948இல் கருப்புச் சட்டைப் படை தடை விதிக்கப்பட்டது! தந்தை பெரியாரும் கைது செய்யப்படக் கூடிய சூழ்நிலை, தொண் டர்கள் தகத்தக எனக் கனன்று எழுந்த நேரம்! அப்பொழுது  தந்தை பெரியார் என்ன எழுதினார் தெரியுமா?

விரைவில் என்னைக் கைது செய்தா லும் செய்வார்கள். செய்தால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ஜெயிலை இடித்துச் சிறை மீட்கப் போகிறீர்களா? அதெல்லாம் மகா முட்டாள்தனம்; என்னைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றால் நீங்கள் அந்தப் பக்கம் ஒருவர்கூட வரக் கூடாது! பின் என்ன செய்ய வேண்டும்?


அதற்காக வருந்தும் ஒவ்வொருவரும் உடனே கருப்புச் சட்டை போட்டுக் கொள்ள வேண்டும். உங்கள் தோழர் களையும் கருப்புச் சட்டை அணிந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும் என்று எழுதினார் என்றால் அதற்குக் காரணம் அது இலட்சியப் போராட்டம்! ஊழல் செய்தவர்களை விடுவிக்கப் பேருந்துகளை எரிக்கும் கூட்டத்தோடு யாரை ஒப்பிடுவது  - எதை இணைப்பது? வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் வேறுபாடு தெரியாத தற்குறிகளா இவர்கள்?


தந்தை பெரியாரை எந்த வகையி லாவது கொச்சைப்படுத்த வேண்டும் என்று ஆத்திரப்படும் இவர்கள் யார்?


கொலைக் குற்றத்திற்காக சிறைக்கூடம் சென்று வந்தவர் எப்படி ஜெகத் குரு - லோகக் குரு? என்று இவர்களை எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம். அப்படியே வேறு யாராவது எழுதினாலும், அதனை இந்து ஏட்டிலே வெளியிடச் சொல்லுங்கள் பார்க்கலாம்.


ஒரு விஷக் கிருமி கூட்டம் திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி, தமிழ் மண்ணிலே பார்ப்பனீயத்துக்குப் பல்லக்கு ஜோடித்து விடலாம்; பா.ஜ.க.வை அரிய ணையில் ஏற்றி விடலாம் இந்து வெறியை அரங்கேற்றலாம் என்ற திட்டத்தோடு வரிந்து  கட்டி புறப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. திராவிட இயக்கத்தின் மூல வேரான பெரியாரை நோக்கியே அதை ஆரம்பிக்கலாம்; அடி வேரையே அசைத்து விட்டால் மற்றவற்றை ஆட்டம் காண செய்யலாம் என்ற தீய நோக்கம் இருக்கக் கூடும். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லக் கூடிய விபிஷணர்களும் கிடைத் திருக்கிறார்கள் என்ற தெம்பு வேறு கிடைத்திருக்கிறது.

பெரியார் என்றால் கடவுள் மறுப்பாளர் - மத எதிர்ப்பாளர் என்பதையும் தாண்டி, திராவிட இயக்கப் போர்வையில் பார்ப் பனீய ஆன்மிக அக்கிரகார திமுகவாக உருபெற்றுள்ள (அதிமுக) பார்ப்பனரைத் தலைவராகக் கொண்ட ஒருகட்சி திராவிட இயக்கத்தில் ஊடுருவி தன் வேலையைச் செய்து வரும் சூழ்நிலை - தங்களுக்குச் சாதகமானது என்று நினைக்கிறார்கள். ஈரோட்டுக் கண்ணாடிப் போட்டுப் பாருங்கள் - இதன் உண்மை விளங்கும்!


எதிர்ப்பு நெருப்பாற்றினை  நீந்தி வெற்றிகளைக் குவித்தது இந்த இயக்கம்; எதிர்க்க எதிர்க்கத்தான் எங்கள் இளை ஞர்கள் புலிப் போத்தாய்ப் புறப்படுவார்கள்.
இந்துத்துவா தனது சேட்டையைத் தொடங்கும் ஒரு வேளையில், பெரியார் இந்தியாவுக்கு தேவைப்படும் ஒரு கால கட்டம் இது! சேட்டையை ஆரம்பியுங்கள்! எங்கள் இளைஞர்களை சாட்டையோடு கிளப்பிவிட அது பேருதவியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
 

நீதிமன்றத்தில் நின்ற நெடுங்குரல்!


அது 1938 டிசம்பர் 5,6 நாட்கள்; இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தானைத் தலைவராக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறார் தந்தை பெரியார்.
எதிர் வழக்காட வேண்டும் என்று சர் ஏ.டி. பன்னீர்செல்வமும், குமாரராஜா முத்தையா செட்டியார் போன்றவர்களும் மன்றாடுகின்றனர் - தலைவர் பெரியாரிடம் - மசியவில்லை, மாறாக இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் நோக்கம், தமது கொள்கைக் கோட்பாடுகளை விளக்கும் அறிக்கை ஒன்றை வழக்கு மன்றத்தில் தாக்கல் செய்கிறார்.


இதோ அந்தக் அறிக்கையின் சில வைர வரிகள்!


நான் சம்பந்தப்பட்ட சுயமரியாதை இயக்கமும், தமிழரியக்கமும், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும், ஜஸ்டிஸ் இயக்கமும் எதுவும் சட்டப்படி, சட்டத்திற்குட்பட்டுக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்கிற கொள்கை கொண்டதேயாகும். இதுவரை அந்தக் கொள்கை மாற்றப்படவேயில்லை. என்னுடைய பேச்சுப் பூராவையும் படித்துப் பார்த்தால் இது விளங்கும். ஆகவே கோர்ட்டார் அவர்கள், தாங்கள் திருப்தி அடையும் வண்ணம் அல்லது மந்திரிமார்கள் திருப்தி அடையும் வண்ணம் எவ்வளவு அதிக தண்டனை கொடுக்க முடியுமோ, அவைகளையும், பழி வாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்புக் கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து விடும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன். எவ்வளவு நியாயமான லட்சியத்தை அடைய வேண்டுமானாலும், அதற்காகக் கஷ்ட நஷ்டமடைதல் என்னும் விலை கொடுக்க வேண்டுமாதலால் அவ்வாறு வேண்டிக் கொள்கிறேன் என்ற உலக வரலாறு கண்டிராத ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவரை யாரோடு ஒப்பிடுவது? (இரு குற்றங்கள் ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒவ்வொரு ஆண்டு கடுங்காவல், ஒவ்வொரு ஆயிரம் ரூபாய் அபராதம், அபராதம் செலுத்தத் தவறினால், மீண்டும் அவ்வாறு  மாத சிறைத் தண்டனை இரண்டு தண்டனைகளையும் இரண்டு தனித் தனிக் காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பது தீர்ப்பு()


நியாயமாக இந்துவில் கட்டுரை எழுதியவர் என்ன எழுதி இருக்க வேண்டும்? தந்தை பெரியார் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின்போது நீதிமன்றத்தில் நெஞ்சை நிமிர்த்தி நெடுங் குரல் கொடுத்தாரே - அதையல்லவா அதிமுக பொதுச் செயலாளர் பின்பற்றி இருக்க வேண்டும் என்று எழுதியிருந்தால், அந்த எழுத்தில் கொஞ்ச நஞ்சம் யோக்கியதையாவது மிஞ்சி இருக்கும். தலை கீழாகப் புரட்டும் ஒரு புரட்டு வேலையில் அல்லவா புன்மை பொங்க எழுதியுள்ளார்.


என்னை இந்த நீதிபதிதான் விசாரிக்க வேண்டும்; அரசு  தரப்பில் இந்த வக்கில்தான் வாதாட வேண்டும் என்றா பெரியார் சொன்னார்?
பெரியாரின் வாரிசு என்று எழுத கை நடுங்கி இருக்க வேண்டாமா - அறிவு நாணயம் இருந்திருந்தால்?

------------------------------------------------------------------------------------------------------------------------


பெரியாருக்கு வாரிசு யார்?

கடவுள் மறுப்பாளர், மத எதிர்ப்பாளர், பகுத்தறிவுச் சிந்தனையாளர், நாத்திகத்தின் எல்லை, ஜாதி ஒழிப்பாளர் அதற்காக அரசியல் சட்டத்தையே எரித்தவர் மூடநம்பிக்கைகளை முற்றும் ஒழிப்பவர்; பழைமைப் பாசிகளை மிச்ச சொச்சமின்றி அழித்து முடிப்பவர், இவற்றின் ஒட்டு மொத்த வடிவமான பார்ப்பனீயத்தைப் பொசுக்கி முடிப்பவர், பெண்ணுரிமைப் போராளி, வகுப்புரிமைக்காக வகுப்புவாதி என்ற பட்டம் பெற்றவர்! பதவிப் பக்கம் போகாதவர், வந்த பதவிகளையும் உதறித் தள்ளியவர், உலகத் தலைவர் பெரியார்!

இந்தப் பட்டியலில் கிட்டே நெருங்க முடியாததோடு மட்டுமல்லாமல், இதற்கு நேர் எதிராக மண் சோறு சாப்பிடும் வரை சென்றவர்கள் எல்லாம் பெரியாரின் வாரிசா? வாரிசு என்பதை ஏற்காதவராயிற்றே அந்த வைக்கம் வீரர்! எனது நூல்கள்தான் என் வாரிசு என்று கூறியவராயிற்றே! அந்த இமயத்துக்கு வாரிசு என்று ஒருவரை அடையாளம் காட்டுவது ஆணவம் அல்லவா? அடி முட்டாள்தனம் அல்லவா?

வாரிசு என்று வரித்துக் கொள்ள எல்லா வகையான தகுதிகள் இருந்தும் அதனை ஏற்றுக் கொள்ளாது தந்தை பெரியாரின் மாணவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுபவர் எங்கள் தலைவர் ஆயிற்றே!
இந்த நிலையில் யாருக்கு யார் வாரிசு? நிதானம் தேவை!

-----------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------------------
     ----------------------  மின்சாரம்அவர்கள் 25-10-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
 

23 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உலகம் எதுவாக இருக்கிறது என்று கேட்ட மைத்ரேயன் கேள்விக்குப் பதிலாக,

இந்த உலகம் விஷ்ணுவிடமிருந்து தோன்றியது. பிரளய காலத்தில் இது அவ னையே சென்று சேரும். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களையும் நிகழ்த் துபவனும் அவனே. இந்த உலகம் முழுவதும் அவனே வியாபித்து இருக்கிறான் என்று ஓர் ஆன்மிக இதழ் கூறுகிறது.

படைத்தல் - பிரம்மா, காத்தல் - விஷ்ணு, அழித் தல் - சிவன் என்று சொல்லி வந்தது எல்லாம் என்னாயிற்று?

விஷ்ணுதான் எல்லாம் என்று அய்யங்கார் சொல்லுவதை ஸ்மார்த் தர்கள் ஏற்றுக்கொள் கிறார்களா?

அட குழப்பமே, முரண்பாடே, இதுதான் இந்து ஆன்மிகமா?

Read more: http://viduthalai.in/e-paper/89959.html#ixzz3HD4tHr9f

தமிழ் ஓவியா said...

தேவையைப் பொறுத்ததே நாணயம்

சாதாரண மனிதனுடைய நாணயம், ஒழுக்கம், நேர்மை என்பதெல்லாம் நூற்றுக்குத் தொண்ணூறு அவனவனுடைய இலட்சியத்தையும், தேவையையுமே பொறுத்ததாகும்.
_ (குடிஅரசு, 17.11.1961)

Read more: http://viduthalai.in/page-2/89978.html#ixzz3HD5Y8F95

தமிழ் ஓவியா said...

தீபாவளி பரிசோ! தீபாவளியால் காற்று மாசு: அகமதாபாத் முதலிடம்; சென்னை இரண்டாமிடம்


சென்னை, அக்.25- முடிந்து போன தீபாவளியால் நாம் சுவாசிக்கும் சுத்தமான காற்று அதிகபட்சமாக மாசு அடைந்து போய் இருக்கிறது. இந்த மாசு இன்னும் 2 நாள்கள் காற்றில் கலந்திருக்கும். அவ் வாறு அசுத்தம் பெற்ற நகரங்கள் பட்டிய லில் அகமதாபாத் முதலிடத்திலும், சென்னை 2 ஆவது இடத்திலும் அங்கம் பெற்றுள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீபாவளி கொண்டாட்டத்தால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசு அளவு களை அறியும் ஆய்வுகளை, நடத்தியது.

நைட்ரஜன் டை ஆக்சைடு: சென்னை, மதுரை, சேலம், கோவை, திருச்சி, கடலூர், நெல்லை, ஓசூர், திருப்பூர், வேலூர் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. தீபாவளிக்கு முன், அக்.,15 ஆம் தேதியும், தீபாவளி யான, 22 ஆம் தேதியும் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், காற்றில் மிதக்கும் நுண் துகள்கள், கந்தக டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு, ஆய்வு நடத்தப்பட்ட அனைத்துப் பகுதி களிலும், அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில், காற்றில் மிதக்கும் நுண்துகள்கள், 15 ஆம் தேதி ஆய்வில், 37 மைக்ரோ கிராமாக இருந்தது, 22 ஆம் தேதி ஆய்வில், 297 ஆக உயர்ந்துள்ளது. கந்தக டை ஆக்சைடு, 12-லிருந்து, 32 ஆகவும், நைட்ரஜன் டை ஆக்சைடு, 13-லிருந்து 20 மைக்ரோ கிராமாகவும் அதிகரித்துள்ளது.

சேலம், சாரதா மந்திர் மெட்ரிக் பள்ளி பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில், காற்றில் மிதக்கும் மின் துகள்கள், 30-லிருந்து, 168; சேலம் சிவா டவரில், 47-லிருந்து, 197 மைக்ரோ கிராமாகவும் அதிகரித்து காணப்படுகிறது. டில்லியில் நடத்திய ஆய்வில், ஒரு கியூபிக் மீட்டர் காற்றில் 210 மைக்ரோகிராம் நைட்ரஜன் டை ஆக்ஸைடும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சல்பர் டை ஆக்ஸைடு அதிகபட்சமாக 503 மைக்ரோ கிராமாக வும், சென்னையில் 393 மைக்ரோ கிரா மாகவும், இருந்தது.

இது குறித்து அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மய்ய எக்ஸ்கியூடிவ் டைரக்டர் அனுமித்தா ராய்சவுத்திரி கூறுகையில், கடந்த 2 நாள்களாக காற்றில் மிகுந்த மாசு கலந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. தட்ப வெப்ப சூழல் குளிராக இருந்ததால் காற்று ஏதுமில்லை. இதனால் இந்த காற்றில் கலந்த புகை மாசுக்கள் எளிதில் கடந்து செல்ல முடியாமல் இருந்தது. இந்த மாசுக்கள் காற்றில் இன்னும் இரண்டு நாள்கள் கலந்து தான் இருக்கும். தற் போதைய காற்று மாசு எங்களுக்குக் கவலை தருகிறது என்றார்.

Read more: http://viduthalai.in/page-2/89982.html#ixzz3HD5jxw6q

தமிழ் ஓவியா said...

மத்திய அமைச்சர்களில் 3 பேரின் சொத்து மதிப்பு கடந்த 5 மாதங்களில் அதிகரித்துள்ளது!


மத்திய அமைச்சர்களில் 3 பேரின் சொத்து மதிப்பு கடந்த 5 மாதங்களில் அதிகரித்துள்ளது. இது குறித்து தேசிய தேர்தல் கண் காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அசோசியேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அமைச்சர்கள் 3 பேரின் சொத்து மதிப்பு கடந்த 5 மாதங்களில் அதிகரித்துள்ளது. மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் சொத்துமதிப்புதான் சட்டென்று அதி கரித்துள்ளது.

மக்களவைத் தேர்தலின் போது வேட்பு மனு தாக்கல் செய்த அவர் தன்னிடம் ரூ.9.88 கோடி சொத் துக்கள் உள்ளதாக தெரிவித்தார். ஆனால், தற்போது அவருடைய சொத்து மதிப்பு ரூ.10.46 கோடி அதி கரித்து ரூ.20.35 கோடியாகவிட்டது.

கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் சொத்து மதிப்பு ரூ.2.98 கோடியும், மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லியின் சொத்து மதிப்பு ரூ.1.01 கோடியும் அதிகரித்துள்ளது.

மத்திய அமைச்சர்களில் பலர் கோடீஸ்வரர்கள். அதில் ரூ.114.03 கோடி சொத்துடன் அருண்ஜேட்லி தான் பணக்கார அமைச்சர் ஆவார்

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/89983.html#ixzz3HD5uEVqV

தமிழ் ஓவியா said...

தந்தி டிவி பாண்டேமீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகோரி

அனைத்திந்திய வழக்குரைஞர்கள் சங்கம் வேண்டுகோள்

டில்லி, அக்.25 புதுடில்லியில் உச்ச நீதிமன்றத்தின் அனைத்திந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் அதீஷ் சி.அகர்வாலா உச்சநீதிமன்றத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திர மைதானிக்கு அனுப்பியுள்ள கடிதத்தின்மூலம் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து தந்தி டிவி பாண்டேமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவேண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேண்டுகோளில் அவர் குறிப்பிட்டதாவது:

18.10.2014 அன்று தந்தி தொலைக்காட்சி ஜெயலலிதா பிணை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஃபாலி நார்மன் வாதுரைகளை ஒளிபரப்பி உள்ளது. இதில் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து தந்தி டிவி பாண்டேமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவேண்டி அது தொடர்பான உண்மைத் தகவல்களை தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

நீதிமன்ற நடவடிக்கைகளை பதிவு செய்வது மற்றும் ஒளிபரப்புவது என்பது பொருத்தமற்றதும், இழிவு படுத்தவதும் ஆகும். 18.10.2014 அன்று தந்தி தொலைக்காட்சியில் ஜெயலலிதா பிணை கோருவதில் ஃபாலி நாரிமனின் வாதுரைகளை ஒளிபரப்பி உள்ளது மாண்பமை உச்சநீதிமன்றத்தை இழிவுபடுத்துவதாக உள்ளதால், மாண்பமை உச்சநீதிமன்றம் இதில் தொடர்புடைய பதிவு மற்றும் ஒளிபரப்பிய பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்காக வழக்குரைஞர்கள் சங்கம் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் வலிமையாக வாதிட்டாலும், நீதிமன்ற நடவடிக் கைகளை பதிவு செய்வது மற்றும் ஒளிபரப்புவது உள்பட நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் செய்யக்கூடாது. ஆகவே, இதில் தொடர்புள்ள அனைத்திலும் மிகுந்த கவலையுடன் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பைக் கண்டித்து நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

-இவ்வாறு அனைத்திந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் அதீஷ் சி. அகர்வாலா உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/89994.html#ixzz3HD6jMlJP

தமிழ் ஓவியா said...

இரண்டு தமிழ் தினசரி பத்திரிகைகள்

இவ்வாரம் திராவிடன், இந்தியா என்கின்றதான இரண்டு தமிழ் தினசரிப் பத்திரிகைகள் வெளிவந்திருக்கின்றன. இவற்றுள் முன்னையது முன்னாலேயே இருந்துவந்தது. சிறிது காலம் நிறுத்தப்பட்டு, மறுபடியும் புத்துயிர் பெற்றுத் தோன்றியதாகும். பின்னையது புதிதாகவே தோன்றிய தாகும்.

எப்படி இருந்த போதிலும் இவை இரண்டும் சமய சமூக மத விஷயங்களுக்கு, வக்காலத்து பேசும் வகையில் நமக்கு மத எச்சரிக்கை செய்து கொண்டே புறப்பட்டிருக் கின்றபடியால் நமது கொள்கைகளுக்கு இவைகளால் ஆதரவு எதிர் பார்ப்பதற்கில்லை என்றே கருத வேண்டி யிருக்கின்றது.

ஏனெனில், நாமோ பல மதங்களையும் பல சமய பிரிவுகளையும், சமூகப் பிரிவுகளையும் ஒழித்து மக்கள் யாவரையும் ஒரே சமூகமாக்க வேண்டும் என்னும் கொள்கையின் மீது பல சமயக் கொள்கைகளையும், பல மதக் கொள்கைகளையும், சமுகக் கொள்கைகளையும், அவற்றுள் இருக்கும் உட்பிரிவுக் கொள்கைகளையும் அதனால் இருந்து வரும் வேற்றுமை உயர்வு தாழ்வு வித்தியாசத்தையும் தங்களுடைய சமூகமோ, சமயமோ மேலானது என்கின்ற எண்ணத்தையும் அடியோடு தொலைத்தாகவேண்டும் என்ற முடிவு செய்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததாகும்.

அதோடு மாத்திரமில்லாமல் கடவுளுக்கும், ஆத்மாவுக்கும் சம்பந்த முண்டாக்குவதே மதம் என்றும் அல்லது கடவுளுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தை உணரச் செய்வதே மதம் என்றும் சொல்லும்படியான மதக் கொள்கையும் சமயக் கொள்கையையும் கண்டித்து. அவைகள் முட்டாள் தனம் என்பதற்காக நிருபித்து மக்களின் இவ்வுலக வாழ்க்கைக்கு மட்டும் ஏதாவது ஒரு மதம் (கொள்கை) இருப்பதனால் அதற்குத் தகுந்தபடி இருக்கட்டும். இல்லாவிட்டால் ஒழியட்டும் என்பதன் மூலம் மதங்களிடம் துவேஷிக்கின்றோம் என்னும் பெயர் பெற்று இருக்கின் றோம்.

அதுபோலவே சில சமுகத்தாரும் சில சமயத் தாரும் மக்களை ஏமாற்றி, தங்கள் சமுகமே மேலான தென்று வஞ்சித்துஆதிக்கம் பெற்று அவ்வாதிக்கத்தை நிலை நிறுத்த அரசியல் என்றும் தேசியம் என்றும் காந்தியம் என்றும் சத்தியாக்கிரகம் என்றும் பல சூழ்ச்சித் துறைகளை உண்டாக்கி அதன் மூலம் மேலும் மேலும் மக்களை வஞ்சித்துவரும் அயோக்கிய சமூக சமயத்தை ஒழிக்கும் முறையிலும் அவர்களது தந்திரங்களை வெளியாக்கிக் கிளர்ச்சி செய்யும் முறையில் சில சமயக்காரருடன், சில சமுகக்காரருடனும் சண்டை தொடுக்க வேண்டியவர் களாகவும் இருக்கின்றோம். இதனால் பல சண்டைகளைக் கிளப்ப வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.

இதனால் தேசிய ஒற்றுமை கெடுவது மாத்திரமல்லாமல் தேசிய உணர்ச்சி கூட ஒழிவதானாலும் நாம் லட்சியம் செய்யாதவர்களாகவும் இருக்கின்றோம். ஆதலால் மேல்கண்ட கொள்கைகளையுடைய நமக்கு மேல்கண்ட இரண்டு பத்திரிகைகளும் அனுகூலமில்லாததோடு எதிர்ப்பாக இருக்க நேரிடும் என்பதை அவை தாராளமாய் வெளிப்படுத்தி இருக்கின்றன.

எப்படி எனில் ஒன்று அதாவது திராவிடன் தனது முதல் இதழில் சமயத்துவேஷம், சமுகத்துவேஷம், மதத்துவேஷம், முதலியன இல்லாமல் காக்கும் என்று தன்னை விளம்பரப் படுத்தி கொண்டிருக்கின்றது.

இரண்டு. இந்தியா தனது முதல் இதழில் சமய சமூகச் சண்டைகளைக் கிளப்பி தேசிய ஒற்றுமைக்கு இடர்செய்யும் இயக்கங்களை எப்பொழுதும் எதிர்த்துப் போராடும் என்று எழுதிக் கச்சைகட்டி நின்று கொண்டு இருக்கின்றது. ஆகவே இந்தியா திராவிடனை விட ஒருபடி முன்னேறி இருக்கின்ற தென்றே சொல்லுவோம்.

எனவே குடிஅரசுக்கு, சுய மரியாதை இயக்கத்திற்கு முன்னுள்ள எதிரிகளைவிட மற்றும் சற்று அதிக பலம் கொண்ட சரியான எதிரிகள் இருவர் தோன்றி இருக்கின்றார்கள் என்றுதான் முடிவு கட்டிக் கொண்டு தயாராயிருக்க வேண்டும். மற்றபடி காங்கிரசுக்கும் சமயத் திற்கும், மதத்திற்கும் (ஆதிக்கம் பெற்ற) சில சமுகங் களுக்கும், கூட்டத்தாருக்கும் ஆப்தமான இரு நண்பர்கள் தோன்றி இருக்கின்றார்கள் என்றும் சொல்ல வேண்டும்.

எப்படி இருப்பினும் பொது மக்களுக்கு உலக நடப்பை உணர்த்துவது பத்திரிகை களாகும் என்னும் கருத்தின் மீது அப்பத்திரி கைகளையும் ஆதரித்து, அதன் உள் எண்ண மனப்பான் மையை உணர்ந்து கொள்வதைக் கொண்டு தள்ளுவதைத் தள்ளும் உறுதியான மனோ திடத்தில் ஆதரிக்க வேண்டுமாய் மறுபடியும் பொது மக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.

இப்பத்திரிகைகளின் பத்திராதிபர்கள் இருவரும் பார்ப்ப னரல்லாதவர்கள் என்பதோடு இருவரும் பத்திராதிபர்களாக வும் இருந்தவர்களாவார்கள். ஆதலால், அவர்களது கருத்தையும், திறத்தையும், நலனையும் மக்கள் ஏற்கனவே நன்றாய் உணர்ந்தவர்கள் ஆவார்கள். ஆதலால் அதைப்பற்றி அதிகம் எழுத வேண்டியதில்லை என்றே விட்டு விடுகின்றோம்.

விலாசம்:

திராவிடன்
14, மவுண்ட் ரோடு, சென்னை
இந்தியா
11, ஜெனரல் பாட்டர்ஸ் ரோடு,
மவுண்ட்ரோடு, சென்னை.

குடிஅரசு - கட்டுரை - 10.05.1931

Read more: http://viduthalai.in/page-7/89921.html#ixzz3HD7VK2kl

தமிழ் ஓவியா said...

ஆரியக் கூலி கம்பனால் விளைந்த கேடு!


கம்பர், நடவாத பொய்க் கதையாகிய இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துச் செய்தமையால் வடமொழிப் பொய் வழக்கில் பழகிவிட்ட அவரது நா, அதன்கண் இலக்கியச்சுவை தோன்ற கூற வேண்டிய இடங்களிலும் பொய்யானவனவே புனைந்து கூறி இழுக்கினார். இங்ஙனமே, கம்பர்க்கு பின் வந்த தமிழ்ப் புலவர்களெல்லோரும், பொதுமக்களை ஏமாற்றுதற் பொருட்டுப் பார்ப்பனருங் கோயிற் குருக்கண்மாரும் வடமொழியில் வரைந்து வைத்த பொய்யான புராணங்களையும் தல புராணங்களையுமே பெரும்பாலும் தமிழில் மொழி பெயர்த்து வைத்துப் பண்டைத் தண்டமிழ் மெய் வழக்கினை அடியோடழித்து விட்டனர்.

இப்பிற்காலமொழி பெயர்ப்பு நூல்களிலும் ஒரோவிடங் களிலும் இலக்கியச் சுவை காணப்படுமேனும், முதலிலிருந்து முடிவரையில் அவற்றினைப் பொய்யாகவே தொடுக்கப்பட்டிருத்தலால், அவற்றின் பயிற்சி மக்கட்கு மெய்யுணர்வினையும் மெய்யறிவு விளக்கத்தினையுந்தராது.

- மறைமலையடிகள் (முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவர் பக்கம் -145)

Read more: http://viduthalai.in/page2/89915.html#ixzz3HD8UyVKv

தமிழ் ஓவியா said...

அட மானங்கெட்டவனே இனியாவது பெரியாரைப் படி...

அட மானங்கெட்டவனே இனியாவது பெரியாரைப் படி...
நான் பெத்த மகனே நில்லு
நான் பட்ட வேதனை கேளு...
முலைவரி கொடுக்கச்சொன்னார்கள்
மனம்நொந்து கொடுத்தோம் ...
இலவசமாய் உழைக்க சொன்னார்கள்
இடுப்பொடிய உழைத்தோம் ...
மணமகளை 'அனுப்ப' சொன்னார்கள்
அழுதுகொண்டே அனுப்பினோம் ...
"செருப்பு அணியாதே சக்கிலியா" என்றார்கள்
'சரி' என்று சொல்லி பணிந்தோம் ...
"தொட்டால் தீட்டுடா பறையா" என்றார்கள்
தயங்கியபடியே தள்ளி நின்றோம்...
"பார்த்தால் பாவமடா பஞ்சமா" என்றார்கள்
புழுங்கியபடி விலகிச் சென்றோம்...
வேசிபுத்திரன் என்றே அழைத்தார்கள்
கூசியபடியே கடந்து சென்றோம்...
சாணிப்பாலை குடிக்கத் தந்தார்கள்
நாணியபடி குடித்துத் தொலைத்தோம்...
சாட்டையால் அடித்துத் தோலுரித்தார்கள்
நாதியின்றி துடித்துக் கிடந்தோம் ..
காரிருளில் வெள்ளி முளைத்தது போல
ஈரோட்டுக்காரன் ஒருவன் வந்தான்...
"சுயமரியாதை உயிரினும் பெரியது "
தாடிக்காரன் சொல்லித் தந்தான்...
சூழ்ச்சிகரச் சடங்குகளை செருப்பால் அடித்தான்
ஏமாற்று வித்தைகளை எட்டி எட்டி மிதித்தான்.
பார்ப்பனியப் பிசாசுகள் பயந்து நடுங்கின
ஆரிய அரக்கர்கள் அஞ்சி ஒடுங்கினர்...
அடடா இனி பயமில்லை - என்
சந்ததிகள் யார்க்கும் அடிமையில்லை
என்றே மகிழ்ந்திருந்தோமடா...
அட சூழ்ச்சியறியாத் தெண்டமே
நான் பெத்த சதைப் பிண்டமே
அந்த தாடிக் கெழவன - நீ
எப்படிடா மறந்த முண்டமே
அப்போ ஓடிப்போன பாப்பான்
இப்போ வேற வடிவத்துல வந்திருக்கான் ...
வாழ ஆரம்பிச்சதும் வயிறு எரியறான்
பைக்குல போனா பதறுறான்
ஜீன்சு போட்டதுக்கு அன்னிக்கு அடிக்கறான்
ஓட்டுப் போடலைன்னு இன்னிக்கு அடிக்கறான்
உன்னோட ஆத்தா கொடுத்த முலை வரியை
உன்னோட பேத்தி கொடுக்கனுமா ...??
வேண்டான்னு நீ நெனச்சா பெரியாரப் படி...
உன்னோட தாத்தா குடிச்ச சாணிப்பால
உன்னோட பேரன் குடிக்கனுமா...??
வேண்டான்னு நீ நெனச்சா பெரியாரப் படி...
"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு"
இந்த ஒருவரி உன்ன உசுப்ப வேண்டாமா...?
நீ மானத்தோட வாழறத பாத்து - இந்த
பெத்த வயிறு குளிர வேண்டாமா...?
பெரியார் என்பது பெயரல்ல சித்தாந்தம்
பெரியார் என்பது பெயரல்ல சுயமரியாதை ...
கல்லைவிட்டு எறிஞ்சா நாய் கூட
கொல்லுனு எதிர்த்து குலைக்குதடா
கொல்லப்புறமா வந்த சாதிவெறி நாயிக
குடிசைய எரிச்சுட்டு போகும்போது
கல்லு மாறி சொரணையில்லாம இருக்கியேடா ...
அடிச்ச அடிக்கு திருப்பி அடிக்கலன்னா
அப்புறம் என்னடா ஆம்பளை நீ....?
அட மானங்கெட்டவனே
இனியாவது பெரியாரைப் படி
இனி எவனாவது அடிச்சான்னா
அப்பவே திருப்பி அடி ....

- தோழர் சம்சுதீன் கீரா

Read more: http://viduthalai.in/page3/89917.html#ixzz3HD95lSrI

தமிழ் ஓவியா said...

உயிர்களைப் படைத்தவன் பிர்மாவா?

உயிர்த் துளியை (க்ரோமோசோம்) உண்டாக்கி கடவுள் நம்பிக்கையை நொறுக்கினர் விஞ்ஞானிகள்.

கலிபோர்னியா மாகாணம் சாண்டி யாகோவில் இருக்கும் ஜேகிரேய்க் வெண்டர் இன்ஸ்டிட்டிட்டில் மைக்ரோ பிளாஸ்மா லேபரேட்டோரியம் எனும் உலகின் மனிதன் படைத்த முதல் செயற்கை உயிர் என்று கருதப்படும் க்ரோமோசோமை கிரேய்க்வென் டரும் அவரது குழுவினரும் உருவாக்கி உள்ளனர். ஆராய்ச்சியின் அதிகார பூர்வ முடிவை இன்னும் சில நாட்களில் அறிவிக்க உள்ளார் கிரேய்க்.

அவரது கண்டுபிடிப்பினைப்பற்றி கிரேய்க் வென்டர் கூறியது:

ஓர் உயிரை அப்படியே அச்சு அசலாகப் பிரதி எடுக்கும் க்ளோனிங் தொழில் நுட்பத்தைவிட உன்னத மானது இது! எந்த இயற்கையான பொருளின் உதவியும் இல்லாமல், பரிசோதனைக்கூட அமிலங்களின் துணை கொண்டே, க்ரோமோசோம் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். இந்த உயிர்த் துளியை அடிப்படையாக வைத்து, நாம் விரும்பும் எந்தவிதமான உயிர் வடிவத்தையும் படைத்துக் கொள்ளலாம். இனி உயிர்களைப் படைப்பது கடவுளிடம் மட்டுமே உள்ள உரிமை அல்ல.

நாங்கள் கண்டுபிடித்த இந்தச் செயற்கை க்ரோமோசோம் ஓர் அஸ்திவாரம் போன்றது. இந்த அஸ்தி வாரத்தின் மேல் நாம் எந்தவிதமான உயிர் அமைப்பையும் உருவாக்கலாம். இந்தச் செயற்கை க்ரோமோசோமை ஒரு செல்லில் புகுத்தினால், அதன் செயல்பாடுகளை கண்ட்ரோல் செய்து, உயிர் கொடுக்க நடவடிக்கைகளைத் தூண்டிவிட்டு, அந்த செல்லின் இயல்பான வளர்ச்சியை வேகப்படுத்தி, முழு உயிரினமான மாற்றி விடும். இதில் இன்னும் அதிநவீனத் தொழில் நுட்ப எல்லைகளைத் தொடும்போது தக்காளி முதல் டைனோசர் வரை நம்மால் படைக்க முடியும்!

கார்பன்டை ஆக்சைடை உட் கொண்டு அழிக்கும் பாக்டீரியாக்களை உருவாக்கினால், குளோபல் வார்மிங், ஒரு கட்டுப்பாட்டுக்கு வரும். கரும்புச் சக்கைகளை நொதிக்கச் செய்யும் பாக்டீரியாக்களை உருவாக்கினால், பியூட்டேன் அல்லது ப்ரோபேன் எரிவாயுக்களை உருவாக்கலாம். இப்படி எங்களது இந்தக் கண்டுபிடிப்பு மனித குலத்துக்கு ஆக்கபூர்வமான விஷயங்களுக்குப் பயன்படும் என்று பெருமையாகக் கூறுகிறார் கிரேய்க் வென்டர்.

(ஆனந்தவிகடன் 17.10.2007 இதழில் வந்த கட்டுரையை ஆதாரமாகக் கொண்டது).

Read more: http://viduthalai.in/page4/89918.html#ixzz3HD9LvFcS

தமிழ் ஓவியா said...

பட்டாசு விபத்தில் மடியும் மனித உயிர்கள்: 15 ஆண்டுகளில் 353 பேர் பலியான பரிதாபம்!


விருதுநகர், சிவகாசி பகுதி பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல், சட்ட விரோதமாக செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், கடந்த 15 ஆண்டுகளில் நடந்த 218 வெடி விபத்துக்களில் 353 பேர் பலியாகி உள்ளனர். இதில் பாரபட்சம் காட்டா மல் அதிகாரிகள் கடுமையான நட வடிக்கை எடுத்தால் மட்டுமே, தொடர் உயிர்பலியை தவிர்க்க முடியும்.

விருதுநகர் மற்றும் சிவகாசி சுற்றுப்பகுதிகளில் 800க்கு மேற்பட்ட பெரிய, சிறிய பட்டாசு ஆலைகள் உள்ளன. நாக்பூர் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை (பெசோ) மற்றும் டி.ஆர்.ஓ.,லைசென்ஸ் பெற்று இவை இயங்குகின்றன. ஏராளமான தொழி லாளர்களின் வாழ்வாதாரமாக திகழ் கின்றன. விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு இயங்கும் ஆலைகளினால் அடிக்கடி வெடிவிபத்து, தொழிலா ளர்கள் உயிர்பலி, படுகாயம் ஏற்படு கிறது. விதிமுறைகள் முறையாக கடை பிடிக்கப்படாததும், தொழிலாளர் களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தாததுதான் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.பட்டாசிற்கு தேவையான மூலப்பொருளான கருந் திரி தயாரிப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிசைத்தொழிலாகவே சட்டவிரோதமாக நடக்கிறது.

ஆலைகளில் விபத்திற்குப்பின் அடுத்த ஒரு சிலநாட்களுக்கு ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகளின் நட வடிக்கை கடுமையாக இருக்கும். ஆனால் அதற்கடுத்த சில நாட்களில் அந்த பரபரப்பு அடங்கிவிடும். தீபாவளி நெருங்குவதையொட்டி மாவட்டத்தில் இந்த ஆலைகளில் விறுவிறுப்பான பட்டாசு உற்பத்தி நடந்துவருகிறது. இதில் விபத்தை தவிர்க்க விதிமுறை களை முறையாக பின்பற்றுமாறு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் கண்டிப்புடன் வலியுறுத்த வேண்டும். விபத்தின்றி பட்டாசு தயாரிப்பதற்கான போதுமான விழிப்புணர்வை தொழி லாளர்களிடம் ஏற்படுத்த வேண்டும். கண்காணிப்பு, நடவடிக்கையை கடு மையாக்கினால்தான் விபத்து, உயிர்ப் பலியை தவிர்க்க முடியும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

வருவாய்த்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பட்டாசு விபத் துக்களில் கடந்த 15 ஆண்டுகளில் 218 விபத்துக்கள் நடந்துள்ளன. 353 பேர் பலி யாகி உள்ளனர். 262 பேர் காயமடைந் துள்ளனர். பட்டாசு ஆலைகளில் விதி முறை மீறல், சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு தொடர்பாக உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த ஆலைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது.

விபத்தை தவிர்ப்பது குறித்து தொழிலாளர்களுக்கும் பயிற்சி யளிக்கப்படுகிறது ,என்றார்.

Read more: http://viduthalai.in/page4/89919.html#ixzz3HD9UnjMS

தமிழ் ஓவியா said...

நிலத்தடி நீரை சேமிப்போம்


இந்திய நகரங்கள் பலவும் தற்போது நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தவிக் கின்றன. தண்ணீரைத் தேடி ராட்சத துளையிடும் எந்திரங்கள் மூலம் பல்லாயிரம் அடிக்கு துளையிட்டாலும் காற்றுதான் வருகிறது. பூமியின் அடிப்பகுதியில் இருந்து பல லட்சம் லிட்டர் நீரை நாம் நாள்தோறும் உறிஞ்சுகிறோம். அதில் 75 சதவீதத்தை கழிவு நீராக மாற்றுகிறோம்.

பூமிக்குள் இருந்து எடுக்கும் நீரில் 4ல் 3 பங்கையாவது மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும். அப்படி நடந்தால் பூமிக்கடியில் இருந்து எப்போதும் தண் ணீர் கிடைக்கும். அதற்கு 2 வழிகள் உள்ளன. முதலாவது மழை நீரை சேமிப் பது, அடுத்தது நிலத்தடியில் இருந்து எடுத்த நீரை, மீண்டும் அங்கேயே சேர்ப்பது. மழைநீர் சேமிப்பு என்பது பூமியின் அடிப்பகுதியில் உள்ள உவர்ப்பு நீரை யும் நன்னீராக மாற்றும். தண்ணீரில் தாது உப்புக்களின் கூட்டுத் தொகை அதிகபட்சம் 500 மில்லி கிராம் இருக்க வேண்டும். அது அதிகரித்தால் நீர் உவர்ப்பாக மாறும்.
இது தொடர்பான ஆய்வின் முடி வுகள் நமது நாட்டில் பெரும்பாலும் நிலத்தடியில் உவர்ப்பு நீர்தான் உள்ளதாக கூறுகிறது. இதனை மழைநீர் சேமிப்பின் மூலம் சரி செய்யலாம்.

அடுத்ததாக நாம் பயன்படுத்திய நீரை மீண்டும் சுத்திகரித்து நிலத்தடியில் செலுத்துவது, கூழாங்கற்கள், ஆற்று மணல், நிலக்கரி, சரளைக்கற்கள் வழி யாக நாம் பயன்படுத்திய நீரை செலுத் தினால் அது பெருமளவு கத்திகரிக்கப் படும். ஒவ்வொரு வீட்டிலும் அதிக செலவு இல்லாமல் இதனை அமைக் கலாம். வீடுகளின் குளியல் அறையில் இருந்து வெளியேறும் நீரை இதுபோல சுத்திகரித்து நிலத்தடியில் சேர்க்கலாம்.

அத்துடன் மழைநீரை சுத்தமான தொட்டிகளில் சேகரித்து குடிநீராக பயன்படுத்தலாம். நிலத்தடி நீர் பற்றாக் குறை அதிகம் உள்ள பகுதிகளில் மழை நீரை பெரிய கலன்களில் சேமித்து அதில் தேத்தான் கொட்டை என்ற ஒரு தாவர விதையை போட்டு மூடி வைத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துகிறார் கள். தேத்தான் கொட்டையின் தன்மை யினால் மழைநீர் அதன் தன்மை மாறாமல் இருக்கும்.

குழந்தைகளின் எதிர்காலம் கருதி பணம், பொருட்களை பலரும் சேமிக் கின்றனர். ஆனால் அவர்களுக்கு நீரும் தேவை என்பதை உணர மறுக்கின்றனர். நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் கருத்தின்படி நிலத்தடியில் நீரை சேமிக்கா விட்டால் நமது சந்ததி களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பது மறுக்க முடியாத உண்மை.

- தகவல்: சீ. இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை-45

Read more: http://viduthalai.in/page4/89920.html#ixzz3HD9d1GEI

தமிழ் ஓவியா said...

பேரறிஞர் அண்ணா


நமது இலட்சியம் அரசியல் வேட் டையல்ல, மந்திரி நாற்காலியல்ல. நாலாறு பெறுவதல்ல. நமது மூதா தையர் ஆண்ட நாட்டை மீண்டும் பெறுவது - புதிய அரசை அமைப் பது, அதுதான் நம்முடைய நோக்கம்.

பல திறப்பட்ட கருத்துக்கள் உலவி ஒன்றோடொன்று போரிடும் தன்மை படைத்ததோர் போர்க்களம்தான் பேச்சு மேடை. அந்தக் களத்திலே பரிசும் உண்டு, பகையும் உண்டு.

- பேரறிஞர் அண்ணா

Read more: http://viduthalai.in/page4/89924.html#ixzz3HD9kfIlM

தமிழ் ஓவியா said...

ஜெவை காப்பாற்றாத யாகங்களும் பூஜைகளும்!


கடந்த காலங்களில் ஜெயலலிதா வின் நலனுக்காகவும், வெற்றிக்காகவும் அவராலும் அவரது தோழியாலும் நடத்தப்பட்ட ஹோமங்கள் 9217

யாகங்கள் 6424 என்றும் அவர்களோடு, அமைச்சர்களும் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் சேர்ந்து கோவில்களில் செய்த அபிசேகங்கள் 27,019 அர்ச்சனைகள் 43,672 என்றும் 86,332 மன்னார்குடி வட்டாரத்திலிருந்து செய்திகள் கசிகின்றன. அவர் பெங் களூருவில் உள்ளே இருந்த காலங் களில் இங்கே இருப்பவர்கள் கிடைத்த ஓய்வில் இந்தக் கணக்கு போட்டார் களோ என்னவோ!

இந்த 86,332 வேண்டுதல்களில் இவர்களின் தொண்டர்களும் அமைச் சர்களும் மண்சோறு சாப்பிட்டதும் அங்கப் பிரதட்சணமும் சேரவில்லை யாம். இத்தனையும் செய்த பிறகுதான் இவருக்கு தண்டனையும், தண்டமும், பதவிப் பறிப்பும் கிடைத்துள்ளது என்பதையும் பிணை கிடைப்பதுகூட தாமதமாகியது என்பதையும் சிந்தித் தால் பெரியார் பெரும் படையின் கடவுள் மறுப்பு எவ்வளவு தீர்க்கமானது என்பது புரியும்.

ஒவ்வொரு பரிகாரமும் பார்ப்பனர் களின் வருமானத்துக்குரியது என்பதால் இந்த 86,332 வேண்டுதல்களால் பயன் (தட்சணை) பெற்ற பார்ப்பனர்களின் எண்ணிக்கை 78,642 என்கின்றனர். இவைகளை சிந்திந்தால் பகுத்தறிவு வந்து விடுமே என்றுதான் இன்னும் கொங்கணேஸ்வரர் கோயில் யாகம், பால்குடம், அங்கப் பிரதட்சணம் என ஊருக்கு ஊர் அசத்துகின்றனர். வக்கீல் களாக, டாக்டர்களாக, முனைவர்களாக பேராசிரியர்களாக உள்ள அமைச் சர்களும் நிர்வாகிகளும் தங்கள் தொண்டர்களுக்கு அறிவு வந்து விடக் கூடாது என்பதில் கவனமாயுள்ளனர்.

இதையெல்லாம் எதிர்பார்த்துத் தான்,தொலைநோக்கு சிந்தனை கொண்ட பேரறிஞர் அண்ணா 70 ஆண்டுகட்கு முன்பே ஏ! தாழ்ந்த தமிழகமே! என்றாரோ!

- தி. சோமசுந்தரத் தேவர், தஞ்சை வட்டம்

Read more: http://viduthalai.in/page5/89925.html#ixzz3HD9zqg2D

தமிழ் ஓவியா said...

செவ்வாய்க்குச் செல்லும் 13 வயது சிறுமி!

அமெரிக்காவைச் சேர்ந்த 13 வயது சிறுமி, நாசா மூலம் முதன் முறையாக செவ் வாய்க் கிரகத்துக்குச் செல்லவிருக்கிறார்.
அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த அலிசா கார்சன் (13) என்ற அச்சிறுமி நாசாவில் இதற்கான பயிற்சிகளைத் தற்போது மேற்கொண்டு வருகிறார்.

சிறுமி அலிசாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும், அவர் ஏற்கெனவே இதற்கான பயிற்சியில் இருப்பதாகவும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மய்யம் தெரி வித்துள்ளது. அலிசா அறிவியல் மற்றும் பல மொழிகளைப் படிப்பதோடு, நாசாவின் மூன்று உலக விண்வெளி முகாம்களிலும் கலந்து கொண்ட முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் முயற்சி குறித்து அலிசா கூறுகையில், இந்தப் பயணத்தின் மூலம் நான் மற்றவர்களிடம் இருந்து சிறந்தவள் என்று தனித்து விளங்க முடியும் என்றார்.

Read more: http://viduthalai.in/page5/89926.html#ixzz3HDA81vFA

தமிழ் ஓவியா said...

கொழுப்பு கூடிருச்சா? உங்களுக்கான உணவுகள்


கொழுப்புப் பிரச்சினையால் அவதிப் படுபவர்கள், ஆரோக்கியமான உணவின் மூலம் அதனை குறைக்கலாம்.

பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண் ணுதல், கொழுப்பின் அடர்த்தியைக் குறைக் கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே, உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். ஆப்பிள் உடலில் கொழுப்புச் செல் களைக் குறைக்க உதவுகிறது. ஆப்பிளின் தோலில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செயல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க் கைகளை நீக்க உதவுகிறது. பீன்ஸ் குறைந்த கொழுப்பையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச் சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. இது நல்ல விதத்தில் கொழுப்பை கரைக்கும் உண வாக விளங்குகிறது.

ஒட்ஸ் உணவு மெதுவாக, செரிமான மாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவைக் கட்டுப் பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப் பைக் கரைய வைத்து துரிதப்படுத்தவும் உதவுகிறது. இப்படி மெதுவாக, செரிமானமாவதால், தன்மையினால் எடையைக் குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும். க்ரீன் டீ எனப்படும் பச்சைத் தேயிலை யில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்ப தோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை.

Read more: http://viduthalai.in/page5/89930.html#ixzz3HDAQ54kX

தமிழ் ஓவியா said...

மாற்று கர்ப்பப்பை மூலம் குழந்தை பெற்ற பெண்

மாற்றுகர்ப்பப்பை பொருத்திய சுவீடனைச் சேர்ந்த 36 வயதுப் பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். இச்சிகிச்சை வழியாகப் பிறந்துள்ள உலகின் முதல் குழந்தை இதுதான்.

பரிசோதனை முயற்சியாக இப்பெண் ணுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. கடந்த மாதம் அந்த ஆண் குழந்தை சற்றுக் குறை மாதத்தில் பிறந்திருந்தாலும் தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர். ஆய்வுப் பரிசோ தனையாக கர்ப்பப்பை மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட 9 பெண்களில் இந்தப் பெண்ணும் ஒருவர். சிகிச்சைக்குப் பின் இவரைத் தவிர வேறு இரண்டு பெண் களும் கருத்தரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பரிசோதனை முயற்சியின் வெற்றியின் மூலம், பிறவியிலேயே கர்ப் பப்பை இல்லாமலோ அல்லது புற்று நோய் வந்து கர்ப்பப்பை இழந்தோ இருக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வழி பிறந்துள்ளது.

ஆனால் தற்போதைக்கு இந்த கர்ப் பப்பை மாற்று சிகிச்சை ஓர் அறிவியல் பரிசோதனை என்ற அளவில்தான் உள்ளது.

Read more: http://viduthalai.in/page5/89929.html#ixzz3HDAYPeHq

தமிழ் ஓவியா said...

இதுதான் கந்தசஷ்டி!

இந்த சுப்ரமணியன் பிறப்பு அல்லது கந்தசஷ்டி என்பது புராண ஆபாசங்களில் மோசமான ஒன்றாகும். ஒரு சமயம் தேவர்கள் எல்லாம் போய் சிவனிடம் கேட்டார்களாம். உலகில் ராட்சதர் கொடுமை அதிகமாகி விட்டது. அதை எங்களால் தாங்க முடியவில்லை. ஆகவே அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு அவர்களை அழிக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற்றுத் தரவேண்டும்" என்று வேண்டினார்கள் . அதற்குச் சிவனும் இணங்கி பார் வதியைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளை பெறும் முயற்சியில் அவளோடு கலவிசெய்ய இறங்கினானாம்.

தொடர்ந்து 1,000 வருடங்கள் கலவி செய்துகொண்டே சிவனும் பார்வதியும் இருந்தார் களாம். ஆனால் குழந்தை பிறக்காததைக் கண்டு தேவர்கள், இனி பிள்ளை பிறந்தால் இந்த உலகே தாங்காது அவ்வளவு வலிமை உள்ளதாக இருக்கும். அது இந்த உலகத்தையே அழித்தாலும் அழித்து விடும் என்று தேவர்கள் கருதி சிவனிடம்சென்று வேண்டிக் கலவி செய்வதை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டனர்.

அதற்கு சிவன், "நீங்கள் சொல்லுவது போல் நிறுத்திக் கொள்வதில் எனக்கு ஒன்றும் ஆட் சேபணை இல்லை. நிறுத்தினால் அதிலிருந்து வரும் வீரியத்தை என்ன செய்வது" என்றதும், உடனே தேவர்கள் தங்கள் கைகளை ஏந்தி அதில் விடும்படிக் கேட்டார்களாம். அதன்படி தேவர்கள் அனைவரின் கையிலும் வீரியத்தைவிட்டு, சிவன் குடிக்கும்படி கூற அவர்களும் குடித்தனராம். மீதி வீரியத்தை சிவன் கங்கையில் விட்டானாம்.

கங்கை அதைத் தாங்காமல் கொதிக்க ஆரம்பித்து விட்டதாம். வீரியத்தைக் குடித்த தேவர்களுக்குக் கர்ப்பநோய் வந்துவிட்டதாம்.

அவர்கள் சிவபிரானிடம் சென்று வணங்கி, தங்கள் கர்ப்பநோய்க்கு மருந்து கேட்க, அவர் அதற்கு 'காஞ்சிபுரத்திலுள்ள சுரகரீஸ்வரர் குளத்தில் மூழ்கினால் கர்ப்பம் கலையும்' என்று கூறினாராம். அதன்படி தேவர்கள் அக்குளத்தில் மூழ்கிக் கர்ப்பத்தைக் கலைத்துக் கொண்டார் களாம்.

கங்கையில் ஓடிய சிவ வீரியமானது, ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடியதால், ஆறு குழந்தைகள் ஆயிற்றாம். அதனை ஆறு பெண்கள் எடுத்து பால் கொடுத்து வளர்த்தனராம். ஆறு பேர்கள் பால் கொடுப்பது என்பது சிரமமாக இருப்பதாக எண்ணி அவர்கள் ஆறுபேரையும் ஒன்றாக அணைத்துப் பால் கொடுக்கையில், முகம் 6 ஆகவும் (தலைகள்) கைகள் 12 ஆகவும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத்தின் கதை யாம். ஸ்கலிதத்திலிருந்து உதித்ததால் ஸ்கந்தன் என்று பெயர் உண்டாயிற்றாம்.

ஸ்கந்தம் என்றால், விந்து என்று பொருள். கந்தன் என்ற சுப்பிரமணியக் கடவுளின் பிறப்பு யோக்கியதையைக் கண்டீர்களா!

Read more: http://viduthalai.in/page-2/90020.html#ixzz3HGTx7wMH

தமிழ் ஓவியா said...

’விடுதலை’யின் கேள்விக்குப் பதில்

விடுதலை, 4.10.2014 இதழின் தலையங்கத்தில், மீண்டும் இராவண லீலா நடக்க வேண்டுமா? என்ற கேள்வியை, பெரியார் தொண்டர்களாகிய விடுதலை வாசகர்களுக்கு ஒரு கேள்வியாகத் தொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு என் பதில்: ஆம்! இராவணலீலா மீண்டும் நடத்தப்படவேண்டும் என்பதே. ஏனைய விடுதலை வாசகர் களும் பதில் கூறட்டும்.

கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிந்தித்து கருத்தை கேட்டு முடிவெடுக்கட்டும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் (குறள் 466)

செய்ய வேண்டியதற்கான நல்ல பல காரணங்களை தலையங்கத்திலேயே காணமுடிகிறது. திராவிட இனத்தை இழிவுபடுத்தும் செயலைத் தடுத்து காக்கத் தவறினால் கெடுதிதானே விளையும்?

எச்சரித்துக்கொண்டுதானே இருக்கிறார்

தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கும் ஆபத்துக்களை ஒன்றன் பின் ஒன்றாக அறிக்கைகள்மூலம் உடனுக்குடன் ஆசிரியர் அவர்கள் எச்சரித்துக் கொண்டுதானே இருக் கிறார். தொடர் வண்டியில் உள்ள அபாயச் சங்கிலியை இழுக்கவேண்டிய நிலை ஏற்படுவதற்கான நிலை உருப் பெற்று வருகின்றது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத் தூண்டில் போட்டு பார்க்கிறார்கள். நட்சத்திர மீன் (STAR FISH) ஏன் இன்னும் மேலாக (SUPER STAR FISH) கிடைக்காதா என்று காத்திருக்கிறார்கள்.

ரத, கஜ, துரக, பதாதி என்ற நால்வகைப் படைகள் என, இந்துத்துவா, சமஸ்கிருதம், கீதை, இந்தி திணிப்பு, ஊடக ஆக்கிரமிப்புப் படைகளென, இன அழிப்பு வேலையில் இறங்கியுள்ளன.

முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் நாளை பள்ளி மாணவர்கள் ஒரு வாரம் கொண்டாட வேண்டும் என்று இன்றைய பிரதமர் கேட்டுக்கொண்டுள் ளார். நேரு ஒரு நாத்திகர் என்பதையும், இராமாயணம் ஆரிய - திராவிடப் போராட்டம் என்று கூறியதையும் மாணவர்கள் அறியச் செய்ய வேண்டும். இந்திமொழித் திணிப்பை ஏற்காதவர் நேரு என்பதையும் மாணவர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டாமா? பிரதமர் மோடி அவர்கள் இதனை செய்வார் என்று நம்பலாமா?

தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வையாலும், இனமானக்காப்பு உந்துதலாலும், இன்று ஓரளவு, தமிழ னென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று பாட்டிசைக்க முடிகிறது. இல்லையென்றால் பார்ப்பன இனம் திராவிட இனத்தை கபளீகரம் செய்திருக்கும். தற்போது சாதகமான காற்று வீசுவதால், இந்துத்துவா படகில் ஆரியம் ஆவேசமாக துடுப்பை சுழற்றுகிறது. இதற்கு அணை கட்ட நம் கழக இளைஞர்கள் தோள் உயர்த்த வேண்டிய காலம் இது அவசரமும் கூட.

திராவிடர் கழகம், இனம், மானம், மொழி, உரிமை காக்க அறப்போராட்டங்களை நடத்தியது புதிய செய்தியல்ல. போராட்டப் புனலில் நீந்தியே வாழ்ந்தவர் தந்தை பெரியார்.

இந்திமொழி ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டம்.

மண் பிள்ளையார் பொம்மையை உடைக்கும் போராட் டம்.

இந்திய வரைபடம் எரிப்புப் போராட்டம்.

கம்பராமாயண எதிர்ப்புக் கூட்டங்கள் இன்னும் பலப்பல.

எனவே இராவணலீலா மீண்டும் மற்றவர்கள் நியாயம் உணரும் வரை நடத்தவே வேண்டும்.

இந்த நேரத்தில் அன்னை மணியம்மையார் நடத்திய இராவண லீலா நிகழ்ச்சியில் பங்கு கொண்டதை நினைத்துப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. காவல்துறை யினர், தொண்டர்களை கைது செய்யும் வேளையில், இராணுவப்பள்ளியில் பணியாற்றிய என்னை, பணிக் கட்டுப்பாட்டைக் கருதி நிர்வாகி சம்பந்தம் அய்யா அவர் கள், மாடியில் இருந்த வீட்டில் இரவு தங்க வைத்ததையும், மறு நாள் உடுமலைப்பேட்டை திரும்பியதும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. இனிமேல் நடக்க இருக்கும் இராவண லீலாவில் கலந்து கொள்வதில் எனக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை.

- மு.வி.சோமசுந்தரம்

Read more: http://viduthalai.in/page-2/90019.html#ixzz3HGU6aK7P

தமிழ் ஓவியா said...

தென்கிழக்கு ஆசியாவில் பெரியார் ஈ.வெ.ரா.வின் பயணத்தின் தாக்கம் என்னும் தலைப்பில் டாக்டர் கி.வீரமணி உரையாற்றுகிறார்


சிங்கப்பூரில் இயங்கிவரும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வு நிறுவனம் சார்பில் நடைபெறும் கருத்தரங்கில் தென்கிழக்கு ஆசியாவில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் பயணத்தின் தாக்கம் என்கிற தலைப்பில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி உரை ஆற்றுகிறார்.

சிங்கப்பூர் 119620, எண் 29, ஹெங் மியூய்கெங் டெர்ரஸ், பி-பிளாக், 9ஆவது மாடி (09-06), அய்எஸ் ஏ எஸ் போர்ட் அறை 28.10.2014 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணிமுதல் 4.30 மணி முடிய கருத்தரங்கு நடைபெறுகிறது.

நிகழ்விடத்துக்கான வரைபடத்துக்கு http://bit.ly/isasmap இணையத்திலும், கருத்தரங்கில் பங்கேற்பாளர்கள் பதிவு செய்வதற்கு http://k-veeramani.eventbrite.sg என்ற இணையத்திலும் தொடர்பு கொள்ள வேண்டுமாய் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிப்பதுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறார்கள். கருத்தரங்கில் வரையறுக்கப்பட்ட இடங்களே உள்ளன.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடம் ஒதுக்கப்படும். jordanang@nus.edu.sg என்கிற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-8/90027.html#ixzz3HGVQhzHQ

தமிழ் ஓவியா said...

இந்தி ஒலிபரப்பு இல்லை பின்வாங்கியது வானொலி


கழகத் தலைவர் அறிக்கைக்குக் கைமேல் பலன்
இந்தி ஒலிபரப்பு இல்லை
பின்வாங்கியது வானொலி

சென்னை, அக்.27- வானொலியில் இந்தித் திணிப்பு கிடையாது, அத்தகைய திட்டம் ஏதும் இல்லை என்று பின்வாங்கியது வானொலி.

இதுகுறித்து சென்னை வானொலி உதவி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதிலும், நம்முடைய தேசத்தின் பெருமைமிக்க பண்பாட்டை பாதுகாப்பதற்கான நடவடிக்கையிலும் அகில இந்திய வானொலி எப்போதுமே முன்னின்று செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் மூன்று உள்ளூர் வானொலி நிலையங்கள் உள்பட நாடு முழுவதிலும் 86 உள்ளூர் வானொலி நிலையங்களின் ஒலிபரப்பு கட்டமைப்பு பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகள் நடைபெறு கின்றன. இந்த முயற்சிகளின் போது ஒலிபரப்பில் ஏற்படும் இடைவெளியை விட்டு நிரப்பவும் மக்களுக்கு மகிழ்ச்சித் தரும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழ் மொழியில் இடம் பெறச் செய்யவும் அகில இந்திய வானொலி சேவை புரிந்து வருகிறது.

ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பகுதிகளில், வேறு ஒரு மொழி நிகழ்ச்சிகளை அகில இந்திய வானொலி திணிக்காது.

அகில இந்திய வானொலி நம்முடைய பாரம் பரியத்தை பாதுகாப்பதிலும், மாநில மொழியை வளர்ப்பதிலும் என்றும் தொடர்ந்து ஈடு பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய வானொலியில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தெரிவித்த கருத்துக்கு, அகில இந்திய வானொலி நிலையம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

Read more: http://viduthalai.in/headline/90074-2014-10-27-10-01-04.html#ixzz3HLMeKinw

தமிழ் ஓவியா said...

நேருவைக் கொன்றிருக்கவேண்டும் என்பவர்மீதான நடவடிக்கை என்ன?

காந்தியாரைப் படுகொலை செய்ததற்குப் பதிலாக பண்டித ஜவகர்லால் நேருவைத்தான் நாதுராம் கோட்சே கொலை செய்திருக்கவேண்டும் என்று கேரள ஆர்.எஸ்.எஸ். ஏடான கேசரியில் (17.10.2014) பி.ஜே.பி. பிரமுகர் பி.ஜி.கோபாலகிருஷ்ணன் என்பவர் எழுதியுள் ளார். இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிக் கொண்டவர்.

இதன்மூலம் இவர் என்ன சொல்ல வருகிறார்? காந்தியார் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் அதேவேளையில், அவரைவிட நேருவைக் கொன்றிருக்கவேண்டும் என்று எழுதியுள்ளார்.

தங்களுக்கு விரோதமான கொள்கைகளை, கோட்பாடுகளைக் கொண்டவர்களைக் கொல்லுவது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர் என்பதும் இதன்மூலம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

காந்தியார் கடவுள் நம்பிக்கையற்றவரல்ல, மத மறுப்பாளரும் அல்ல; இவற்றில் எவரையும்விட அதிகமான நம்பிக்கையும், பிடிப்பும் கொண்டவர்! அதேநேரத்தில், இந்து - முசுலிம் பிரச்சினையில் சிறுபான்மை மக்கள் பக்கம், நியாயத்தின் பக்கம் நின்றவர்.

எனவே, மதவெறிக் கண்கொண்டு மிகப்பெரிய திட்டத்தை வகுத்துக் கொண்டு காந்தியாரைச் சுட்டுக் கொன்றனர்.

அப்பொழுது ஆஙகிலேய அரசு சொன்னது, எங்கள் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட காந்தியாரை நாங்கள் காப்பாற்றிக் கொடுத்தோம் - பாதுகாத்துக் கொடுத்தோம்; உங்களுக்குச் சுதந்திரம் கொடுத்த ஆறு மாதங்களுக்குள் அவரைக் காப்பாற்றத் தவறிவிட்டீர்களே, படுகொலை செய்துவிட்டீர்களே? என்று அவர்கள் எழுப்பிய அந்த வினாவுக்கு, இதுவரை உலக நாடுகளுக்கு இந்தியாவால் பதில் சொல்ல முடியவில்லை!

இன்னும் சொல்லப்போனால், அன்று தலைகுனிந்த இந்தியா இன்றுவரை தலைநிமிர முடியாமல் வெட்கத்தால் நாணிக்கோணித்தான் நிற்கிறது.

அதற்குப் பின்னால் 44 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்தம் முக்கிய தலைவர்களின் வழிகாட்டுதலோடு பல்லாயிரக்கணக் கானோர் ஒன்றுகூடி ஒரு பட்டப்பகலில் இடித்துத் தரைமட்டமாக்கினர்.

உலகமே கைகொட்டி ஏளனமாகச் சிரித்தது. இதன்மூலம் இரண்டாவது தடவையாகவும் இந்தியா மேலும் தலையை தொங்கப் போடும் அநாகரிக நிலையை அடைந்தது.

உலகம் இகழ்ந்த நிலைக்குப் பிறகாவது - அறிவு பெற்றனரா? நல்ல புத்தி ஏற்பட்டதா? நேருவைக் கொலை செய்திருக்கவேண்டும் என்று கூச்சமில்லாமல் எழுதுகிறார்களே - அதுவும் நேருவின் 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடுவது குறித்த சிந்தனைகள் பேசப்படும் இந்தக் காலகட்டத்தில், இப்படியொரு ஆபாசப் புத்தியை, அநாகரிக மூர்க்கக் குணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருப்பது - வெட்கக்கேட்டின் எல்லையாகும்.

காந்தியாரைவிட நேருமீது பார்ப்பனர்களுக்குக் கடும் வெறுப்பும், எதிர்ப்பும் இருப்பதற்கு முக்கிய காரணம், தன்னை ஒரு சனாதனவாதியாகக் காட்டிக் கொள்ளாததோடு, பல நேரங்களில் அவற்றைச் சாடவும், விமர்சிக்கவும் தயங்காதவர் நேரு. அந்தக் கோபம் இத்தனை ஆண்டுகாலம் ஆகியும் இந்துத்துவா கூட்டத்தை விட்டு அகலவில்லை என்பதைத்தான் ஆர்.எஸ்.எஸ். ஏடான கேசரியில் எழுதப்பட்ட கட்டுரை வெளிப் படுத்துகிறது.

கேசரி என்ற ஏடு - ஒரு காலகட்டத்தில் பாலகங்காதரர் என்ற இந்துத்துவா வெறிபிடித்த ஒரு தலைவரால் நடத்தப்பட்ட, ஆரிய நஞ்சை, வர்ணாசிரம தர்மத்தைக் கக்கிய ஏடாகும்; இன்னும் சொல்லப்போனால், மகாராட்டிர மாநிலத்தில் இந்துத்துவா வெறியைச் சாகும்வரை விசிறி விட்டுக் கொண்டிருந்த பார்ப்பனர் திலகர் ஆவார்.

பிளேக் நோய் அம்மாநிலத்தில் ஏற்பட்டு, மக்கள் கொத்துக் கொத்தாய் சாவின் மடியில் விழுந்த அந்த நேரத்தில், வெள்ளை அரசாங்கம் பிளேக் நோய்க்குக் காரணம் எலிகள் என்பதால், எலிகளை வேட்டையாட முனைந்தது. அப்பொழுது இந்தத் திலகர் என்ன சொன்னார் தெரியுமா?

எலி என்பது நமது இந்து மதக் கடவுளான விநாயகர் வாகனம் - வெள்ளைக்கார மிலேச்சர்!

நமது மதக் கலாச்சாரத்தில் தலையை நுழைக்கிறார்கள் என்ற வெறியை இந்துக்களிடத்தில் கிளப்பியவர். அந்த வெறியின் காரணமாக வெள்ளைக்கார அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தப் படுகொலைக்குக் காரணமாக இருந்த திலகரும், குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டதும் உண்டு.

அந்தக் கேசரி பெயரைக் கொண்ட ஏடு இப்பொழுது கேரளாவில் சங் பரிவார்க் கும்பலால் நடத்தப்பட்டு வருகிறது. அதில்தான் காந்தியாருக்குப் பதிலாக நேரு படுகொலை செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று எழுதியுள்ளார்.

இந்தப் பத்திரிகை மீதோ, கட்டுரையை எழுதியவர் மீதோ கேரள அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இவ்வளவுக்கும் கேரளாவில் நடப்பது காங்கிரஸ் ஆட்சிதானே!

இதனை ஒரு கட்சிப் பிரச்சினையாகப் பார்க்காமல் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கண்டனங்கள் வெடித்துக் கிளம்பவேண்டும். சட்டப்படி கட்டுரையை எழுதிய குற்றவாளிமீது நடவடிக்கை எடுக்கவும் வுற்புறுத்தவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-2/90078.html#ixzz3HLMwdbgf

தமிழ் ஓவியா said...

பரிகார முயற்சி...

எங்கு அளவுக்கு மீறிய, தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ, அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண்டெழவும், சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும்.
_ (குடிஅரசு, 4.10.1931)

Read more: http://viduthalai.in/page-2/90077.html#ixzz3HLN5LbBY

தமிழ் ஓவியா said...

மன நோயாளியின் பிதற்றல் என்று ஒதுக்கி விடுவதா?


மன நோயாளியின் பிதற்றல் என்று ஒதுக்கி விடுவதா?
இல்லை, கயவாளிகளின் கைக்கூலி என கட்டம் கட்டுவதா?

- குடந்தை கருணா

தன்னை விட வயதில் மூத்த வர்கள், தன்னை நேரே வணங்காமல், கார் டயரை வணங்குவதை ரசிக்கும் ஒருவர், வயதில் இளையவர்களைப் பார்த் தாலும், வாங்க என எழுந்து நின்று வரவேற்ற மனிதநேயருக்கு வாரிசா?

சிக்கனத்தை கடைப்பிடிக்கப் பிறருக்குச் சொன்னதுடன், தானும் கடைப்பிடித்து, மக்களுக்கு எடுத்துக் காட்டாய் விளங்கிய சமூக அக்கறை கொண்ட மனிதருக்கு யார் வாரிசு? பகவத் கீதை அதைச் சொன்னது; இதைச் சொன்னது என்று சொல்லி, ஒன்று பாக்கி இல்லாமல், எல்லா இந்து மதப்பண்டிகைக்கும் விழுந்தடித்து வாழ்த்து சொன்னவர்,

இந்த பண்டிகைகளெல்லாம், நம்மை, திராவிடர்களை இழிவு படுத்தும் பண்டிகைகள் என மக்களுக்கு அறிவு வெளிச்சம் தந்த அறிவாசானுக்கு வாரிசா?

காவடி எடுப்பதும், அலகு குத்திக் கிறதும், மொட்டை அடிச்சிக்கிறதும், பக்த கோடிகளின் வேலை; அந்தப் பணியை தங்கள் தலைமைக்கு செலுத் துகிறார்கள் என்றால், அந்தத் தலை மையைத் தெய்வமாக கருதுகிறார்கள் என்றுதானே பொருள்?

அப்படின்னா, கட்டுரைக்கு, தெய் வங்களின் வாரிசு அம்மாதான், அப்படின்னு வைக்கறதுதானே சரியா இருக்கும்.

ஆனாலும், இந்தக் கிழவன், நம்மை எல்லாம் பகுத்தறிவோடு இருங்கன்னு சொன்னதாலே, நாம, யார் எதைச் சொன்னாலும், கேட்டு கிட்டு, சும்மா கட்டுரையிலே பதில் சொன்னா போதும்னு நினைச்சுட் டோமோ?

கொஞ்சம் யோசிப்போம், இந்த களவாணிகளை என்ன செஞ்சா சரியா வருவாங்கன்னு.

Read more: http://viduthalai.in/page-2/90083.html#ixzz3HLNKD2AM