விழா
என்பது வேறு - பண்டிகை என்பது வேறு. விழா ஓர் இனத்தின் பண்பாட்டுடன்
கூடியது - வரலாற்றை உள்ளடக்கியது இதற்கொரு எடுத்துக்காட்டுதான் தமிழர்
புத்தாண்டை உள்ளடக்கிய பொங்கல் விழா.
பண்டிகை என்பதோ மூடக் கள்ளிகளை மூலதனமாகக்
கொண்டது; பகுத்தறிவுச் சுனையின் முன் கிழிந்து தொங்கக் கூடியது - இதற்கொரு
எடுத்துக்காட்டு தான் தீபாவளி!
தீபாவளியைப் பொறுத்தவரை தமிழர்
பண்பாட்டுக்கோ, வரலாற்றுக்கோ எவ்விதத்திலும் தொடர்புடையது அல்ல. ஏதோ இதனை
தந்தை பெரியாரும், திராவிடர் கழகத்தினரும் இட்டுக் கட்டிச் சொல்லுவதாக
நினைக்கக் கூடாது; அப்படி நினைப்பது உண்மைக்கு எதிரானது. 5
நூற்றாண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களால் திணிக்கப்பட்டது என்கிறார்
பேராசிரியர் அ.கி. பரந்தாமனார்.
தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் அவர்களோ இவ்வாறு கூறுகிறார்.
பார்ப்பனர் தமது உயிர்க் கொலை வேள்விக்கு
உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க் கொலை
வேள்விக்கு உட்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய
கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்ற சொற்றொடரின் பொருளை ஆராயுங்கள்;
அத்திரு நாளுக் கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு
இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவலி என்பது தீப ஆவலி எனப் பிரிந்து
விளக்கு வரிசை என்று பொருள் தரும் - என்று வேறு ஒரு கண்ணோட் டத்தில்
கூறுகிறார் மறைமலை அடிகள்.
எது எப்படியாயினும் தமிழர்களுக்கும்,
தீபாவளிக்கும் எட்டுணையும் ஒட்டு உறவுடையதன்று என்பது வெள் ளிடை மலை.
ஆரியர்- திராவிடர் போராட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆரியப்
பண்பாட்டுப் படையெடுப்பின் வெளிப்பாடு என்பதுதான் வரலாற்று ஆய்வு நோக்கில்
சரியானதாக இருக்க முடியும்.
இந்தப் பண்டிகைகக்காக கட்டி
வைக்கப்பட்டுள்ள கட்டுக் கதை - மூடத்தனத்தின் மொத்த வடிவம் என்பது
மட்டுமல்ல; ஆபாசச் சேற்றை அள்ளி அப்பிக் கொண்ட தன்மை உடையதாகும். பூமியைப்
பாயாகச் சுருட்டி கடலில் வீழ்ந்தான் இரண்யாட்சன் என்பது மூடத் தனத்துக்கு
முக்கியமான எடுத்துக்காட்டு.
பூமிக்கும், பன்றிக்கும் பிள்ளை பிறந்தது என்பது ஆபாசத்தனத்தின் அப்பட்டமான படப்பிடிப்பாகும்.
உலகமெங்கும் வேளாண் திருவிழா, அறுவடைத்
திருவிழா நடைபெற்று வருகிறது. அந்தக் கண்ணோட்டத் தில் தமிழர்களுக்கு தை
முதல் நாள் வரும் பொங்கல் என்பது நமது அறுவடைத் திருவிழா - வேளாண்
திருவிழாவாகும். இந்த விழாவுக்கு ஏராளமான ஆதாரங்கள் தமிழ் இலக்கியங்களில்
காணக் கிடக்கின்றன. ஆனாலும், பார்ப்பனர்களும் அவர்கள்தம் ஊடகங்களும்
தீபாவளிக்குக் கொடுக்கும் முன்னுரிமை முக்கியத்துவத்தை தமிழர் விழாவான
பொங்கலுக்குக் கொடுக்க மாட்டார்கள்.
பார்ப்பனர்களைப் பொறுத்தவரை விவசாயம் பாவத் தொழிலாச்சே! எப்படி ஏற்பார்கள்?
தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு
என்று மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் ஆட்சியில் அறிவித்ததையும்,
ஜெயலலிதா அம்மையார் முதல் அமைச்சராக வந்தபோது அந்தச் சட்டத்தை ரத்து
செய்ததையும் ஒப்பிட்டுப் பார்த்தால் - ஆரியர், திராவிடர் போராட்டம் என்பது
காலத்திற்கேற்ப புதிய முகமூடியுடன் நடந்து கொண்டு வருகிறது என்பதை
அறியலாம்.
இதனை உண்மையான திராவிடர் இயக்கக் கண்
கொண்டு பார்ப்போமேயானால், இதற்குள் உள்ளீடாகக் கொண்ட ஆரியர் - திராவிடர்
உணர்வின் முத்தாய்ப்பைப் புரிந்து கொள்ளலாம்.
இதில் ஒரு வெட்கக் கேடு என்னவென்றால்,
கட்சியின் பெயரில் அண்ணாவையும், கட்சியின் அதிகார பூர்வக் கொடியில்
அண்ணாவின் உருவத்தையும் பொறித்துக் கொண்டும், கட்சியின் பெயரில் திராவிட
என்ற இனச் சுட்டுப் பண்பாட்டுப் பெயரை இணைத்துக் கொண்டும் இருக்கிற
அ.இ.அ.தி.மு.க.வோ இவற்றிற்கு நேர் எதிராகப் பார்ப்பனப் பண்பாட்டின்
அடையாளமாகக் காட்டிக் கொடுப்பதாகும். திராவிடர் இயக்கத்தில் ஆரிய வேர்
ஊடுருவியதால் ஏற்பட்ட தீய விளைவு இதுவாகும்.
புத்திக் கேடு, நேரக் கேடு, பொருளாதாரக்
கேடு - இவற்றிற்கும் மேலான திராவிட இனத்தின்மீதான இழிவு - இவற்றை தூக்கிச்
சுமப்பதன் அடையாளம்தான் தீபாவளிப் பண்டிகையாகும்.
தீபாவளி என்பதன் பின்னணியை குடிஅரசு
விடுதலை உண்மை இதழ்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் வெளிப்படுத்திதான்
வந்திருக்கின்றன. தந்தை பெரியார் அவர்கள் விளக்கமாக எடுத்துக் கூறி
வந்திருக்கிறார். தீபாவளி மூடத்தன துண்டு அறிக்கைகளை மக்கள் மத்தியில்
வழங்கிக் கொண்டே வந்திருக்கிறோம்.
ஆனால் அறிவியலின் நன்கொடையான அச்சுத்
துறையைப் பயன்படுத்தி ஆபாச, அருவருப்பும், மூடத்தனமும் முகிழ்ந்து
காணப்படும் தீபாவளிக்காக பக்கம் பக்கமாக வரிந்து கட்டிக் கொண்டு
எழுதுவதும், வெளியிடுவதும் வெட்கம் கெட்ட செயல்பாடாகும்! எவ்வளவோ எடுத்துக்
கூறியும் இந்த ஊடகங்கள் தீபாவளிக்காகக் கொடுக்கும் முக்கியத்துவம் அசல்
மானக்கேடாகும். நாய் விற்ற காசு குரைக்காது என்றபழ மொழியின்படி பிழைப்பு
நடத்துவது மிகப் பெரிய கேவலமாகும்.
சிவகங்கை மாவட்டத்தில் பல கிராமங்களில்
அரை நூற்றாண்டு காலமாக தீபாவளியைப் புறக்கணித்து பொங்கலை மிகப் பெரிய
விழாவாகக் கொண்டாடும் அந்தப் பெற்றியைப் பலபடப் பாராட்டக் கடமைப்
பட்டுள்ளோம்.
தீபாவளியன்று தன்மானமுள்ள தமிழர்களே!
கறுப்புடையோ, கறுப்புச் சின்னமோ அணிந்து துக்கத்தை வெளிப்படுத்துங்கள்;
திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள துண்டு அறிக்கைகளைத் தமிழர்களிடம் வழங்கிப்
படிக்கச் செய்யுங்கள். குறிப்பாக மாணவர்களுக்கு, இளைஞர் களுக்கு,
சிறுவர்களுக்கு அறிவு புகட்டுங்கள். கல்வி கற்று கைநிறைய சம்பாதித்து
விட்டால் போதுமா? அறிவைச் சம்பாதிக்க வேண்டாமா? இனமானத்தைக் காப்பாற்றிக்
கொள்ள வேண்டாமா? சிந்திப்பீர்!
------------------------"விடுதலை” தலையங்கம் 21-10-2014
17 comments:
தீபாவளி கவிதை
தீபாவளி
கொண்டாடும்
திராவிடா!
உன்னைத்தான்.
திக்கித் திணறாமல்
நேருக்கு நேர்
பதில் கூறு பார்க்கலாம்
எழவு வீட்டிலா
திருமணம்?
திராவிடர் வீட்டிலா
தீபாவளி?
என்னடா
வெட்கக்கேடு?
கன்னக்கோலா
செங்கோல்?
சாக்கடையா
சந்தனம்?
பூக்கடையா
பொதிசேறு?
தமிழர் பண்பாட்டு
தாடை மூக்கு
தட்டுப்படுகிறதா
கூறு!
ஆரியன் வைத்த கண்ணியிலே
அறுந்தது திராவிட
வேரல்லவா!
சங்க இலக்கியத்தில்
உண்டா? தமிழர்
சரித்திரத்தில்தான்
கண்டவொன்றா?
கிருஷ்ண பரமாத்மா
சத்தியபாமா
சத்தியமா
சொல்லுக!
என்ன உறவு?
என்ன உறவு?
இந்தத் திராவிட
இனத்துக்கு?
இருளுக்கு எதிரி
சூரியனே? இன
உரிமைக்கு எதிரி
ஆரியனே!
பூமியைப் பாயாகச்
சுருட்டுவதா?
புத்தியுள்ளோர் - இதைப்
போய் நம்புவதா?
வராக (பன்றி)
அவதாரத்திற்கும்
பூமாதேவிக்கும்
பிள்ளை பிறக்குமா?
சரி சரி
அதை விடுங்கள்
ஒரு கேள்வி
கேட்க ஆசை!
பன்றி அவதாரத்திற்கு
தீபாவளியன்று
எதை வைத்துப் படைக்க உத்தேசம்?
நல்லாதான்
வருது வாயில்!
நாக்கைப் பிடுங்க
நாலு வார்த்தை கேட்கும் முன்
மரியாதையாக
மாறிவிடு!
மூடக் கழுதையை
உதைத்துவிரட்டு
மானமும் அறிவும்
மனிதனுக்கழகு - இது
ஞாலப் பெரியார்
ஞானத் திரட்டு!
- கவிஞர் கலி. பூங்குன்றன்
பூரிசங்கராச்சாரியைக் கைது செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு!
தலித்துகள், சூத்திரர்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று கூறிய
பூரிசங்கராச்சாரியைக் கைது செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு!
டில்லியில் பூரிசங்கராச்சாரியார் கொடும்பாவி எரிப்பு!
பூரிசங்கராச்சாரியாரின் ஜாதி வெறிப் பேச்சை நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த ஆளுநரும் வரவேற்றுள்ளார்
ராஞ்சி, அக்.21-_ தாழ்த் தப்பட்டவர்களும், சூத்தி ரர்களும் கோயிலுக்குள் நுழையக் கூடாது. சாத்திரம் அனுமதிக்கவில்லை என்று கூறிய பூரி சங்கராச் சாரியாரைக் கைது செய்ய வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. பூரி சங்கராச்சாரியாரை எதிர்த்து டில்லியில் கண் டன ஆர்ப்பாட்டம் நடத் தப்பட்டன - _ போராட் டக்காரர்கள் பூரி சங்கராச் சாரியார் உருவப் பொம்மையை எரித்தனர்.
கோவில் என்பது தூய் மையாக இருக்கவேண்டிய ஓர் இடமாகும் இங்கு தூய்மைப்பணியாளர்களுக்கு என்ன வேலை,? வர்ணாஷ் ரமம் கூறியத்தை தெளி வாகப் பின்பற்றவேண்டும் என்று பூரி சங்கராச் சாரியார் பேசி உள்ளார்.
ராஞ்சியில் நடந்த மத விழா ஒன்றில் பூரி சங்க ராச்சாரியார் நிச்சலானந்தா பேசும் போது பகவத் கீதை யில் 16-ஆவது அத்தியா யத்தில் வர்ணாஷ்ரமம் பற்றி குறிப்பிடப்பட்டுள் ளது. அதாவது நான்கு வர்ணங்கள் மனித குலத் தின் நன்மைக்காக உரு வாக்கப்பட்டவைகள். அவரவர்கள் அவர் களுக்கான பணியைச் செய் வதே சிறப்பான ஒன்றாகும், இதற்காகத்தான் வர்ண முறையை உருவாக்கினார் கள். ஆனால் இந்த வர்ண முறையை மீறி அதற்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக தற்போது நடந்து வருகிறார்கள்.
அதாவது சனாதனிகள் கோவிலுக்கு நுழைய தடையில்லை, ஆனால் சூத்திரர்கள் தலித்துகள் எப்படி கோவி லுக்குள் நுழையலாம்? வர் ணாஷ்ரம கொள்கையின் படி தூய்மையானவர்கள் மாத்திரமே கோவிலுக்குள் நுழைய முடியும், அப்படி இருக்க தூய்மைப் படுத்தும் பணியில் உள்ளவர்கள் கோவிலுக்குள் நுழைய எப்படி அனுமதிக்க முடி யும்? இது அவர்களாகவே புரிந்து கொண்டு கோவி லுக்குள் நுழைவதைத் தவிர்க்கவேண்டும் இது சாஸ்திரத்தில் கூறியுள்ளது. என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிர தேச ஆளுநர் ராம் நரேஷ் மற்றும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்தியப்பிரதேச ஆளுநர் ராம்நரேஷ் கூறிய தாவது சங்கராச்சாரியாவின் பேச்சில் எந்த தவறும் இல்லை அவர் சாஸ்தி ரத்தை மேற்கோள்காட்டிப் பேசினார் என்று கூறி யிருந்தார்.
சங்கராச்சாரியாரின் இந்த பேச்சிற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரி வித்த நிலையில் ஞாயிறு (19.10.14) தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையம் ஜார்கண்ட் காவல்துறை பூரி சங்கராச்சாரியார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தர விட்டது. பல்வேறு அமைப்புகள் கண்டனம் பூரி சங்கராச்சாரியின் தலித் விரோதப் பேச்சின் காரணமாக சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக் கும் உயர்சாதியினருக்கும் உள்ள ஜாதி பேதத்தை மேலும் அதிகரித்து ஜாதீய தீண்டாமையைத் திணிப் பவர்களுக்கு துணிச்சலை ஊட்டும் செயலாக இருக் கிறது என்று பல்வேறு அமைப்புகள் சங்கராச்சாரி யாருக்கு கண்டனம் தெரி வித்துள்ளன. கடந்த சனிக்கிழமை அன்று கிழக்கு டில்லியின் பல்வேறு சமூக அமைப் பின் தலைவர்கள் ஒன்று கூடினர். பிறகு சங்கராச் சாரியாரின் உருவப் பொம்மை தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
கான்பூர் டில்லி முக்கிய சாலையில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் சங்க ராச்சாரியாரை உடன டியாகக் கைது செய்யச் சொல்லி சாலைமறியலில் ஈடுபட்டனர். தூய்மைப் பணியாளர் கழகம், தலித் சமூக அமைப்பு, அகில பாரதிய சபாய் மஸ்தூர் காங்கிரஸ் மற்றும் வால்மிகி மஸ்தூர் சங் போன்ற அமைப்புகள் டில்லியில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தின. டில்லி மாநகராட்சி தூய்மைப்பணி தொழி லாளர் கழகத்தின் தலைவர் சஞ்சய் கேலத் கூறும் போது சமூகத்தில் கல்வி கற்று மருத்துவர்களாகவும், இந்திய அரசு ஆட்சிப் பணியாளர்களாகவும் (அய்.ஏ.எஸ்) மற்றும் அரசியல் துறையில் பல் வேறு உயர் பொறுப் புகளில் இருக்கும் தலித் துகளை மிகவும் கீழ்த் தரமாக தூயமையற்றவர்கள் என்று கூறிய சங்கராச் சாரியை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக் கிறோம்.
அவர் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்து விட்டனர் என்ற செய்தி வருகிறது. சமூகத் தில் ஒருவர் தீண் டாமையை பச்சையாக ஆதரிக்கிறார் அவர் ஒரு மதத்தலைவர் என்றதும் அவருக்கு காவல்துறை சிறப்பு மரியாதை தருகிறது. அவரது பேச்சு சட்ட விரோதமானது என்று காவல்துறைக்கு தெரிய வில்லையா? அல்லது அவர்களுக்கு மேலுள்ள வர்கள் இச்சாமியாருக்கு ஆதரவானவர்களா? என்று கண்டன ஆர்ப் பாட்டத்தின் போது அனல் கக்கப் பேசினார்கள்.
Read more: http://viduthalai.in/e-paper/89677.html#ixzz3GppEJj28
இன்றைய ஆன்மிகம்?
வறுமைக்கோடு
தீபாவளியன்று குத்து விளக்கில் ஒருமுகம் ஏற்றி வைத்தால் மத்திம பலன், இரண்டு முகங்கள் ஏற்றி வைத்தால் குடும்ப ஒற்றுமை; மூன்று முகங் கள் ஏற்றி வைத்தால் புத்திரனால் சுகம், நான்கு முகங்கள் ஏற்றி வைத் தால் பசு போன்ற செல் வம், அய்ந்து முகங்கள் ஏற்றி வைத்தால் செல்வப் பெருக்கம்; ஒரு முகம் ஏற்றி வைத்தால் கிழக் கைப்பார்த்து விளக்கை வைக்க வேண்டுமாம்.
ஏன் ஆறுமுகம் வைத் தால் இன்னும் கூடுத லாகப் பலன் கிடைக் காதா? குத்து விளக்கு என்றால் என்ன என்று தெரியாத நாட்டில் உள்ள மக்கள் எல்லாம் செல்வச் செழிப்போடு வாழ்கிறார் களே - குத்து விளக்கை ஏற்றி வைத்து நம் மக்கள் கண்ட பலன் வறுமைக் கோடுதானே?
Read more: http://viduthalai.in/e-paper/89684.html#ixzz3GppNxAB5
பகுத்தறிவு
மதம், மதத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனிதச் சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொள்கிறது.
(விடுதலை, 14.10.1971)
Read more: http://viduthalai.in/page-2/89685.html#ixzz3GppheY3s
மோடி வீசிய மோசடி வலை
தீபாவளி தசரா
விஜயதசமி ஆயுதபூஜை போகி சபரிமலை இன்னும் பலப்பல ....
இப்படி ஹிந்து மதப்பண்டிகைகள் குப்பை கொட்டுவதையே கொண்டாட்டமாக்கி மனநோயாக மாற்றி வைத்திருக்கும் போது
அந்த சனாதன தர்மத்தின் இன்றைய அரசியல் தலைவர் தூய்மை இந்தியா பற்றி திருவாய் மலர்ந்திருக்கிறார்
வெளி நாடுகளில் குப்பை போடாமலிருப்பது பொது ஒழுக்கம்
இந்தியாவில் மதப்பண்டிகைகளால் குப்பைகளைப் போடுவதே பொது ஒழுக்கமாக
இருக்கிறது. காணிக்கை என்ற பெயரில் கடவுளிடமிருந்து தொடங்கி பொது ஒழுக்கமாய் மாறிப் போயிருக்கிற லஞ்சம் மாதிரி.
இந்த மனநோயை மாற்றுவற்கு ஒன்பது பிரமுகர்கள் என்ன செய்துவிட முடியும்?
வேண்டுமானால் நஞ்சை செலுத்தியவர்களே உறிஞ்சி எடுக்கட்டும்
செய்ய வைப்பாரா பிரதமர்?
- உடுமலை வடிவேல்
Read more: http://viduthalai.in/page-2/89690.html#ixzz3GpqNwljj
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆச்சரியத்தை அளிக்கிறது!
பிரபல வழக்குரைஞர் ராஜீவ் தவான் விமர்சனம்
புதுடில்லி, அக். 21- சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு 21 நாள்களிலேயே ஜாமீன் வழங்கியிருப்பது, பாரபட்சமானது என்று உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான் தெரிவித்துள்ளார். கொலைக் குற்றவாளிகளும், கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்களும் உடல்நலத்தை காரணம் காட்டி, மேல்முறையீடு செய்வதற்குக் கால அவகாசம் கோரி ஜாமீன் பெற முடியுமா என்று ராஜீவ் தவான் கேள்வி எழுப்பியுள்ளார்.
உச்சநீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு, ஏன் ஜாமீன் வழங்கியது என்ற தலைப்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், டெய்லி மெயில் என்ற நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார்.
அந்தக் கட்டுரையில் கூறியிருப்பதாவது:- இந்தக் குற்றத்திற்காக, ஜெயலலிதா 18 ஆண்டுகளாக ஜாமீன்தான் பெற்றிருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சுமார் ஓராண்டுக்குப் பிறகும், தேசிய லோக் தளக் கட்சியின் தலைவர் சவுதாலா, இரண்டு மாதங் களுக்குப் பிறகும்தான் ஜாமீன் பெற்றனர் என்று கூறியுள்ளார். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஓராண்டு சிறையில் இருக்க நேர்ந்தது என்றும், சத்யம் நிறுவனத்தின் அதிபர் மூன்றாண்டுகளாக சிறையில் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேல்முறையீட்டிற்கான தயாரிப்பு வேலைகளை செய்வதற்காக ஜாமீனா?
ஆனால் நான்காண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு 21 நாள்களிலேயே ஜாமீன் வழங்கப்பட் டிருப்பது நீதித்துறையின் ஆச்சரியம் என்றும் அவர் கூறியுள்ளார். மேல்முறையீட்டிற்கான தயாரிப்பு வேலை களை செய்வதற்காக ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப் படவேண்டும் என்று அவரது வழக்குரைஞர் உச்சநீதி மன்றத்தில் வாதிட்டிருக்கிறார். இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றிருக்குமானால், இதேபோல கொலைக் குற்றவாளிகள், கற்பழிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கும், மேல்முறையீட்டுக்கான தயாரிப்புகளை செய்வதற்கு ஜாமீன் வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தீர்ப்பில் குறை இருப்பதாக பாலி நாரிமன் கூறிய வாதமும் அடிப்படையற்றது என்பதை சுட்டிக் காட்டியுள்ள தவான், குற்றவாளிஎன்ற தீர்ப்பை நிறுத்தி வைப்பதற்கும், தண்டனையை நிறுத்தி வைப்பதற்கும் வேறுபாடு உள்ளது என ஜெயலலிதாவின் வழக்குரைஞர் வாதாடியிருப்ப தையும் சுட்டிக் காட்டியுள்ளார். தண்டனையை நிறுத்தி வைத்து மட்டுமே ஜாமீன் பெற்றிருப்பதால் ஜெயலலிதா தேர்தலில் நிற்பது சாத்திய மற்றது என்றும், அப்படி தேர்தல் நேரத்தில் தீர்ப்பையும் நிறுத்தி வைக்குமாறு ஜெயலலிதா நீதிமன்றத்தை அணு கினால் தற்போதைய வாதம் அவருக்கு எதிராகத் திரும்பும் என்றும் தவான் கூறியுள்ளார். இதற்கு முன்னரும்கூட, தீர்ப்பை நிறுத்தி வைப்பதற்கும், தண்டனையை நிறுத்தி வைப்பதற்கும் இடையிலான வேறுபாட்டை சுட்டிக்காட்டி ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்றாலும், எந்த வழக்கிலும் இவ்வளவு விரைவாக 21 நாள் களில் ஜாமீன் வழங்கப்பட்டதில்லை என்றும் வழக்குரைஞர் தவான் தெரிவித்துள்ளார்.
அரசை ஆட்டுவிப்பார் ஜெயலலிதா!
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஜாமீன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு சாதகமாக செயல்பட்டிருக்கிறதோ என பொதுமக்களை எண்ணத் தூண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அரசமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக நின்று ஜெயலலிதா தமிழக அரசை ஆட்டுவிப்பதற்கும்தான் இது உதவும் என்று கூறியுள்ளார். நீதிமன்றத்தில், தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு என பொதுவான நெறி முறைகள் இல்லை என்றும், தற்போது வழங்கப்பட்டுள்ள ஜாமீன், ஏழை, எளியோருக்கு எதிரான பாரபட்சம் என்றும் ராஜீவ் தவான் கருத்துத் தெரிவித்துள்ளார்.
Read more: http://viduthalai.in/page-8/89700.html#ixzz3GprdTyG2
தீபாவளிப் பண்டிகை என்பது இதுதான்!
மது விற்பனையில் முதலிடம்! றீகடன் வாங்கி செலவழிப்பதில் முதலிடம் றீவிபத்துகளுக்கோ பஞ்சமில்லை
தீபாவளிப் பண்டிகை என்பது இதுதான்!
சென்னை, அக்.22-_ தீபாவளிப் பண்டிகை அறி வுக்குப் பொருத்தமான தல்ல என்பது மட்டுமல்ல; சகல விதத்திலும் மக்களுக் குக் கேடானது என்பதே உண்மையாகும்.
மது
நாள் ஒன்றுக்கு மது விற்பனை சராசரியாக ரூ.65 கோடி. சனி, ஞாயிறு களில் விற்பனையோ ரூ.90 கோடி. தீபாவளியிலே ரூ.150 கோடி.
ஹி.... ஹி... மதமும் பண் டிகையும் ஒழுக்கத்தை வளர்க்கிறதாம். இப்படி சொல்லுகின்ற ஆன்மிக வாதிகளை நினைத்தால் வாயால் சிரிக்க முடிய வில்லையே!
விவசாயிகளுக்கு தலைவலி
அய்ப்பசி அடை மழைக் காலத்தில் வரும் தீபாவளி, காவிரிப்படுகை விவசாயிகளுக்குப் பெரும் தலைவலிதான். வரவே இல்லாத காலத்தில் ஒரு பெருஞ்செலவு. அப்போது தான் சம்பா நடவுக்குச் செலவு செய்து கை ஓய்ந்திருப்பார்கள். பிறந்த வீட்டுப் பெண்களுக்கு வரிசை, துணிமணி என்று தவிர்க்க முடியாத செல வினமாக தீபாவளி வந்து நிற்கும். இப்போதுபோல் நான்கு லட்சம் ஏக்கர் அளவுக்கு குறுவை பயிரி டுவது இல்லை. ஒரு ஏக்கர், அரை ஏக்கரில் தீபாவளிச் செலவுக்கு ஆகும் என்று நட்டு வைப்பார்கள். சரியான மழையில் அறுவடைக்கு வரும். அதை நெல் மண் டிக்குக் கொண்டு சென் றால், தீபாவளி நெருக் கடியை ஆதாயமாக விலை குறைத்துக் கேட் பார்கள்.
ஒரு தீபாவளியின் போது மூட்டை நெல் பதினெட்டு, பதினாறு ரூபாய்க்கு விற்க வேண்டி யிருந்தது. கடைத் தெரு வில் விவசாயிகளின் குமுறல் துணிமணி, பல காரம் இல்லையென்றால் தீபாவளி போக மாட் டேன்னு சொல்லுமா? இப்படிக் கேட்டுக் கொண்டே ஒரே ஒரு மூட்டை நெல்லை விற்று, தலைக்கு எண்ணெயும், சாமி கும்பிட பழம், பாக்கு வெற்றிலை மட்டும் வாங்கிக் கொண்டு மற்ற மூட்டைகளைத் திருப்பி எடுத்துச் சென்றார்கள்.
- தி இந்து (தமிழ்) 22.10.2014
Read more: http://www.viduthalai.in/e-paper/89746.html#ixzz3GsdDB9GC
85% சதவீத மக்கள் விரும்பவில்லை
தீபாவளியை கடன் வாங்கி கொண்டாட 85 சதவீதம் பேர் விரும்ப வில்லை என்பது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டா டப்பட்டாலும், அதன் பின்னணியில் குடும்பப் பொருளாதாரம் முதுகெ லும்பாக உள்ளது. வரு மானத்துக்கும், குடும்பப் பொருளாதாரத்துக்கும் ஏற்ற வகையில் செலவு செய்யும் குடும்பம்தான் எல்லா நாட்களிலும் மகிழ்ச்சியுடன் காணப் படுகிறது. ஆனாலும் தீபாவளி போன்ற பண் டிகை தினங்களில் செல வுகள் எப்போதுமே கை தாண்டி செல்லுவது வழக்கமானதுதான். இதில் நடுத்தர மக்கள் நிலை பரிதாபமானது.
-தினத்தந்தி 22.102014
எண்ணூர்
தீபாவளி மூடப்பண்டி கையால் பட்டாசு வெடித் துக் கொண்டாடியதால் நேற்று (21.10.2014) இரவு சென்னை எண்ணூர் பெரிய காசி கோயில் குப் பத்தில் ஒரு குடிசைமீது ராக்கெட் வெடி பட்ட தால் அந்த குடிசை எரிந்து சாம்பலானது.
மேற்கு தாம்பரம்
மேற்குத் தாம்பரம் காந்தி சாலையில் மாடி ஒன்றில் போடப்பட்டி ருந்த கொட்டகையில் ராக்கெட் வெடிபட்ட தால் எரிந்து சாம்பலா னது. மேலும் நேற்று இரவு மட்டும் தீபாவளியை யொட்டி பட்டாசு வெடித் ததில் ஏற்பட்ட காயத் தால் மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொருக்குபேட்டை
இன்று (22.10.2014) காலை சென்னை கொருக் குப்பேட்டையில் பட் டாசு வெடித்ததில் ஒரு குடிசை எரிந்தது. அதே போன்று வியாசர்பாடியில் ஒரு குடிசையும், புது வண்ணை ஜீவா நகர் மாடியில் போடப்பட்டி ருந்த கொட்டகையில் பட்டாசு தீ பட்டு எரிந் தது. மந்தவெளி செயின்ட் மேரி சாலையில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்துகள் குறித்த தகவல்கள் வந்ததும் தீய ணைப்பு வீரர்கள் உடன டியாகச் சம்பவ இடத் திற்குச் சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தால் இன்றும் மட்டும் சென்னையில் 8 பேர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read more: http://www.viduthalai.in/e-paper/89746.html#ixzz3GsdTlhhB
மின்கம்பி அறுந்து விழுந்ததில்
மாமனார், மருமகன் மரணம்
ராமநாதபுரம் மாவட் டம், ராமேஸ்வரம் மார்க் கெட் தெருவை சேர்ந் தவர் சிதம்பரம் (45). மீன வர். இவரது மகள் கவி தாவுக்கும் (18), கோவில் பட்டியை சேர்ந்த முருகன் (28) என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன் திரு மணம் நடந்தது. முருகன் சென்னை அம்பத்தூரில் இரும்புக் கடை வைத் துள்ளார். தலை தீபா வளியை கொண்டாடுவ தற்காக மனைவி கவிதா வுடன் 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் வந் தார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சிதம்பரம், மருமகன் முருகனை அழைத்துக் கொண்டு பட்டாசு வாங் குவதற்காக வெளியே சென்றார். பட்டாசுகளை வாங்கி கொண்டு இரு வரும் மார்க்கெட் தெரு வில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சாலை யோரத்தில் இருந்த மின் கம்பத்திலிருந்து அறுந்து தொங்கிய கம்பி, காற்றில் அசைந்து எதிர்பாராத விதமாக இவர்கள் மீது விழுந்தது. இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இரு வரும் கருகி பரிதாபமாக உயிரி ழந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப் பகுதி மக்கள் உடனடியாக மின் வாரியம் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர் கள் மின்சாரத்தை துண் டித்து, அறுந்து கிடந்த மின்கம்பியை சீர் செய் தனர். ராமேஸ்வரம் கோயில் காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு, பிரேத பரிசோத னைக்காக அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைத் தீபாவளி கொண்டாட வந்த இடத்தில் மருமக னும், மாமனாரும் உயிரி ழந்த சம்பவம் அப் பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
-தினத்தந்தி 22.102014
பட்டாசு தொழிற்சாலையில் விபத்து; எம்.பி.ஏ. மாணவர் பலி!
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தின் கடற்கரையோரத் தலை நகரான மசூலிப்பட்டினத் தில் உள்ள பட்டாசு தயா ரிக்கும் தொழிற்சாலை அலகில் நேற்று மாலை ஏற்பட்ட விபத்தில் எம். பி.ஏ. பயிலும் மாணவர் ஒருவர் பலியானார்.
பலியான ஜோகி கிரண்(23) என்ற அந்த மாணவருடன் இந்த விபத்தில் சிக்கி காய மடைந்த ஜோகி லட்சுமி, ஜோகி துளசி ஆகியோர் பயங்கர தீக்காயங்களுடன் கிருஷ்ணா மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப் பட்ட வீடு முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.
பட்டாசுக் கடைகளில் பயங்கர தீ விபத்து
தலைநகர் டில்லிக்கு அருகே உள்ள பரிதாபாத் தில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசுக் கடை மார்க் கெட்டில் நேற்று இரவு திடீரென்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அங்கிருந்த 230க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் எரிந்து சாம்ப லாகின. பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அந்தப் பகுதி முழுவதுமே, புகை மண்டலமாக காட்சி அளித்தது.
தீபாவளியையொட்டி, அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள என்ஐ.டி. பகுதியில் அமைந்துள்ள தசரா மைதானத்தில் சுமார் 230_க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் வைக்கப்பட்டிருந்தன. பட்டாசுகள் விற்பனை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், நேற்று இரவில் திடீரென ஒரு கடையில் தீ பிடித்தது. அதில் அங்கிருந்த பட் டாசுகள் வெடித்து சிதறின. இதனால் தீ மள மளவென்று மற்ற கடைகளுக்கும் பரவியது. அங்கிருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதில் அங்கு அமைக்கப்பட்டி ருந்த 230-_க்கும் மேற்பட்ட கடைகளும் தீயில் கருகின.
தீ விபத்து ஏற்பட்ட தைப் பார்த்ததும், பட் டாசுகள் வாங்க வந்திருந்த மக்களும், வியாபாரிகளும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த விபத்தில் 3 பேர் தீக் காயங்களுடன் அரு கில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட் டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். அப்பகுதி புகை மண்டல மாக இருப்பதால், தீயில் யாராவது சிக்கியுள்ளனரா என்ற விவரம் தெரிய வில்லை. தீயை முழுவது மாக அணைத்தப் பிறகே முழு விவரம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
Read more: http://www.viduthalai.in/e-paper/89746.html#ixzz3GsdfYtzg
ஜீவா
இயக்குநர் சுசீந்திரன் ஜீவா என்ற திரைப்படம் மூலம் கிரிக்கெட்டில் பார்ப் பனர்கள் சாம்ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறப்பதைத் தோலுரித்துக் காட்டினார். இன்னும் சொல்லப் போனால் தோளில் கையைப் போட்டு முதுகில் பூணூல் தொங்குகிறதா என்று தேடிய காட்சி - திரை யரங்கையே அதிர வைக் கக் கூடிய வகையில் கை தட்டல் இடியை ஏற் படுத்தியது.
இந்தியக் கிரிக்கெட் வாரியம் என்பது ஒரு பணம் காய்ச்சி மரம்! ஆயிரக்கணக்கான கோடிகளில்தான் பணப் புழக்கம்.
கிரிக்கெட் வாரியத் தில் ஆரம்பிக்கும் பூணூல் ஆதிக்கம் விளை யாட்டுக்காரர்களைத் தேர்வு செய்வது வரை நீண்டு கொண்டே போகும்.
கிரிக்கெட் விளை யாட்டுக் குழுவில் இடம் பெற்றாலே போதும் - அதற்கப்புறம் கோடி யிலே புரள வேண்டியது தான்; ஆண்டு சம்பளம் ஒரு பக்கம்; ஒவ்வொரு ஆட்டத்திற்கும் இலட்சக் கணக்கில் வருவாய்; அதுவும் உள்ளூரில் ஆடி னால் ஒரு ரேட், வெளி நாடுகளில் ஆடினால் இன்னொரு ரேட்!
ஆட்டத்தில் விளை யாடாமலேயே 12 ஆவது 13ஆவது ஆளாக இருந் தாலும் (Substitute) ஆடி யவர்களுக்கு என்ன சம் பளமோ, அதே தொகை இவர்களின் சட்டைப் பையிலும் திணித்து விடு வார்கள்.
இவை அல்லாமல் 4 ஓட்டம் அடித்தால் அதற் கொரு பரிசுத் தொகை; ஆறு ஆட்டம் (Sixer) அடித்தால் அதற்கொரு தொகை ஆட்ட நாயக னாக (Man of the Match)வந்தால் அதற்கொரு காசோலை.
கிரிக்கெட்டுக்காரர் என்றால் விளம்பரங்கள் வந்து குவியும்; அரசின் சலுகைகள், வருமான வரி சலுகை இத்தியாதி - இத்தியாதி.
பார்ப்பனர்களின் இந்தக் கிரிக்கெட் பகற் கொள்ளையை ஜீவா படம் தோலுரித்து விட்ட தாம் துக்ளக் அய்யர்வா ளுக்கு ரத்தக் கொதிப்பு எகிறி விட்டது.
ஜீவா படத்தில் கூறப் பட்ட கிரிக்கெட் மீதான குற்றப் பத்திரிகையைப் பற்றி அவரால் ஒன்றும் விமர்சிக்க முடியவில்லை; காரணம் உண்மையைத் தானே போட்டு உடைத்து இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்
அதனால் துக்ளக் என்ன செய்தது? திரைக் கதை சரியல்லை, நிகழ்ச்சி கள் கதையோடு ஒட்ட வில்லை, பாட்டு சரி யில்லை; ரிதம் சரியில்லை என்று மோடி ராகம் வாசிக்கிறது துக்ளக்.
ஆக ஜீவாவின் வெற்றி இதில்தான் இருக் கிறது. உண்மையை உடைத்துச் சொல்லி பார்ப்பன வட்டாரத்தில் குருதிக் கொதிப்பை ஏற் படுத்தியதுதான் இப்படத் தின் வெற்றியின் நறுக் கான நற்சான்றிதழ்!
- மயிலாடன்
Read more: http://www.viduthalai.in/e-paper/89744.html#ixzz3GsdwB7Kg
இன்றைய ஆன்மிகம்?
தீபாவளி
தீபாவளியன்று நீரில் கங்கையும், எண் ணெயில் மகாலட்சுமியும், புதுத்துணியில் பார்வதி யின் அம்சமும், விளக் கில் விஷ்ணுவும், பட் டாசில் சிவனும், உணவில் அன்னபூரணியும், தீபா வளி லேகியத்தில் பிரம் மாவும், புதுக்கணக்கில் சரஸ்வதியும், பலகாரங் களில் தேவர்களும் நிறைந்து நம்மை மகிழ் விக்கிறார்களாம்!
கடவுள்களா சூப்பர் மார்க்கெட் அயிட் டங்களா? மற்ற நாள்களில் எல்லாம் இவர்கள் எங்கே குடியிருப்பார்களாம்? சரி, இத்தனைக் கடவுள்கள் குடியிருக்கும் தீபாவ ளியை எத்தனை ஆண்டு களாகக் கொண்டாடி யிருக்கிறார்கள் - இந்த மக்களின் வாழ்வில் ஏற்பட்ட வளமை என்ன? 29.5 சதவீத வறுமைக் கோடுதானே?
Read more: http://www.viduthalai.in/e-paper/89747.html#ixzz3Gse5KwQT
கேழ்வரகில் நெய் வடிகிறது கேளுங்கள்! கேளுங்கள்!
ஒரு தனியார் தொலைக்காட்சி நேற்றிரவு சிறப்புச் செய்தி என்று ஒன்றை அவிழ்த்து விட்டது.
கருநாடகாவில் ஹாசனம்பா என்று ஒரு கோயிலாம்! ஆண்டுக்குப் பத்து நாட்கள் மட்டும் - தீபாவளியை ஒட்டித் திறக்கப்படுமாம் - வழிபாடு நடக்குமாம்!
இந்தக் கோயிலுக்கு ஒரு விசேஷம்! இந்த ஆண்டு ஏற்றி வைக்கப்படும் விளக்கு அடுத்த ஆண்டுவரை எரியுமாம் - இந்த ஆண்டு அணிவிக்கப்படும் மாலைகள் அடுத்த ஆண்டு வரை காய்ந்து போகாமல் இருக்குமாம்.
சவாலை ஏற்கப் பகுத்தறிவாளர்கள் தயார் - பக்திமான்கள் நிரூபிக்கத் தயார் தானா? அறிவியல் கொடுத்த ஒரு சாதனத்தை இப்படி சாக்கடையாக்கு கிறார்களே - என் சொல்ல!
Read more: http://www.viduthalai.in/e-paper/89754.html#ixzz3GseGxpgC
பிஜேபி மனப்பால் குடிக்க வேண்டாம்!
நடந்து முடிந்த மகாராட்டிரம், அரியானா மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பிஜேபி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரியானாவில் அறுதிப் பெரும்பான்மையை எட்டியுள்ளது; மகாராட்டி ரத்தில் அந்த நிலை கிட்டவில்லை; என்றாலும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிஜேபிக்கு உண்டு.
மகாராட்டிரத்தில் பிஜேபி பெற்ற வாக்குகளின் சதவீதம் 28; இந்தளவு குறைந்த விகிதத்தில் வாக்கு களைப் பெற்ற கட்சி ஆட்சியை அமைக்கிறது. அரியானாவில் 33 சதவீதம் பெற்று ஆட்சியை அமைக்கிறது.
50 சதவீதமோ, அதற்கு மேலோ வாக்குகளைப் பெற்று இருந்தால், அந்த வெற்றி ஜனநாயக ரீதியானது என்று ஒப்புக் கொள்ளலாம்; ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இந்தப் பலகீனமே ஆட்சி அமைக்கும் பலமாக இருக்கிறது என்பது விசித்திரமே!
விகிதாசாரத் தேர்தல் முறையே சரியானது என்று அவ்வப்பொழுது சொல்லிக் கொண்டிருந்தாலும், அது நடைமுறைக்கு வருவதற்கான சாத்தியக் கூறு கண்ணுக்கு எட்டியவரை தெரியவில்லை.
மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பிஜேபிக்கும் இதே நிலைதான். மட்டத்தில் உசத்தி என்கிற வாய்ப்புதான் பிஜேபிக்கு! மகாராட்டிரம், அரியானா மாநிலங்களைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் 15 ஆண்டுக் காலம் ஆட்சியில் இருந்து விட்டதால் மக்கள் மத்தியில் மாற்றம் என்ற தாகம் ஏற்படுவது இயல்பே!
பிஜேபிக்கு என்ன வாய்ப்பு என்றால் தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக அது இருப்பதுதான்; நியாயமாக இடதுசாரிகள் அந்த இடத்தைப் பிடித் திருக்க வேண்டும். அந்த நிலை எட்டப்படாததால், மதவாத பிஜேபிக்குக் கொண்டாட்டமாகி விட்டது.
அரியானாவிலும், மகாராட்டிரத்திலும் வெற்றி பெற்றவர்களில் கிரிமினல்கள் அதிகம். அதில் முதல் இடம் பிஜேபிக்கும் சிவசேனாவுக்கும்தான்! ஆள் பலம், பண பலம்; கிரிமினல்தனம் வெற்றிக்குத் துணை போனது வெட்கக் கேடே!
பிஜேபிகூட தேர்தல் நேரத்தில் என்ன தந்திரம் செய்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்; அவர்கள் மதவாத அரசியல் என்னும் வாலை சுருட்டி வைத்துக் கொண்டு நாட்டில் விலைவாசி உயர்ந்து விட்டது; ஊழல் பெருகி விட்டது; நாங்கள் வந்தால் விலைவாசியைக் குறைப்போம்; ஊழலை ஒழிப்போம் என்று நீட்டி முழங்குவதை மக்கள் நம்பும்படியான ஒரு நிலை ஏற்பட்டு விடுகிறது.
உண்மையைச் சொல்லப் போனால் பொருளாதாரக் கொள்கையிலும் சரி, வெளிநாட்டுக் கொள்கையிலும் சரி, காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் இடையில் குறிப்பிடத்தக்க எந்த வேறுபாடு இருக்கிறது? இன்னும் போகப் போக பிஜேபி ஆட்சியின் இலட்சணம் அம்பலத்திற்கு வரும் பொழுது இந்த உண்மையை வாக்காளர்கள் அப்பட்டமாகவே புரிந்து கொள்ளும் சூழல் ஏற்படத்தான் போகிறது.
பல மாநிலங்கள், பல இன மக்கள், பல மொழியினர், பல பண்பாடுகளைக் கொண்ட இந்தியா என்பது ஒரு துணைக் கண்டமாகும்.
இப்படிப்பட்ட ஒரு நாட்டில் பிஜேபி என்ற இந்து மதவெறி கொண்ட ஓர் ஆட்சி நீடிக்க முடியாது வேண்டுமானால் அந்தத் தன்மையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்; அப்படி விடுபடும் நிலை அதற்கு ஏற்படப் போவதில்லை; காரணம் அதன் லகான், சிண்டு ஆர்.எஸ்.எஸிடம் இருக்கிறது.
அயோத்தியில் ராமன் கோயிலைக் கட்டுவது, யுனிஃபார்ம் சிவில்கோட், காஷ்மீருக்குரிய சிறப்புத் தகுதிகள் நீக்கம் இவற்றைச் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் சாட்டையைச் சுழற்றும் போதுதான் மோடியின் முகவிலாசம் தெரியப் போகிறது.
இந்த மூன்றிலும் கை வைக்குமானால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை இந்தியாவை ஆளும் மத்திய அரசே ஏற்படுத்தியதாகி விடும். குஜராத் மாநிலத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறுபான்மை யினரை வேட்டையாடிய அனுபவம் மோடிக்கு உண்டு என்று சிலர் நினைக்கலாம்.
இன்று வரைகூட அந்தக் கறையை முற்றிலுமாகக் கழுவிக் கொள்ள படாதபாடுதான் பட்டுக் கொண் டுள்ளார் மோடி! இந்த நிலையில் 125 கோடி மக்கள் உள்ள ஒரு நாட்டில் சட்ட ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்திட முன் வருமா? அப்படி செய்தால் அதை விட தற்கொலை ஒன்று இருக்க முடியுமா? அடுத்து வரும் காலம் பிஜேபிக்கு சோதனை நிறைந்ததாக இருக்கப் போகிறது.
செய்தி ஊடகங்கள் கார்பரேட்டுகளின் கைகளிலும், உயர் ஜாதிப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலும் இருக்கிற காரணத்தால் அந்தத் துணையோடு தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், அது மனப்பால் குடிக்கும் ஒரு பரிதாப நிலையே!
Read more: http://viduthalai.in/page-2/89730.html#ixzz3Gseq0MBl
ஒழுக்கமும் - நாணயமும்!
நாம் உண்மையான பகுத் தறிவுவாதிகளாக ஆகிவிடுவோ மேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும்.
(விடுதலை, 16.11.1971)
Read more: http://viduthalai.in/page-2/89728.html#ixzz3Gsf2kYoY
ஜெயலலிதாவுக்கு ஆதரவு... ராஜபக்சேவுக்கு விருது!
திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் கண்டன அறிக்கை
சென்னை, அக்.22_ ராஜபக் சேவுக்குப் பாரத ரத்னா விருது கொடுக்கக் கூறும் சு.சாமிக்குக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்.
பெங்களூருவில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில், நான் காண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டுச் சிறையில் இருந்த, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பிணையில் வெளிவந்துள்ளார். பெங் களூரு சிறையில் இருந்து தமிழகம் வந்த ஜெயலலிதாவை, தமிழ்நாட்டின் காவல்துறை அதிகாரிகள் சிலர் விமான நிலையத்தில் வரவேற்ற மரபு மீறல்கள் நடந்துள்ளன.
மத்திய அமைச்சரின் அதனைவிடப் பெருங் கொடுமை யாக, மத்திய இணை அமைச்சராக உள்ள மேனகா காந்தி, ஜெயலலி தாவை வரவேற்றும், ஆறுதல் கூறியும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தன்னுடைய ஆதரவு அவருக்கு என்றும் உண்டு என்று உறுதி அளித்திருக்கிறார். மத்திய அரசில் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர், நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு முழு ஆதரவு வழங்குவதாகக் கூறுவது பல் வேறு சந்தேகங்களுக்கு இடமளிக் கிறது.
ஜெயலலிதாவின் வழக்கு மேல் முறையீட்டுக்குச் செல்ல இருக்கும் வேளையில், உயர் நீதிமன்றங்களில் நீங்கள் விடுதலையாகி வந்துவிடு வீர்கள் என்று ஓர் அமைச்சர் நம் பிக்கை தெரிவிப்பதும், எந்த உதவியும் செய்யத் தயார் என்று கூறுவதும் வெறும் மரபு மீறல் மட்டுமன்று, சட்டத்திற்கும் புறம்பானது. மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் அறிக்கையைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை கடுமையாகக் கண்டிக்கிறது.
ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் முக்கியமானவர்களில் ஒருவர் என்று கூறிக்கொள்ளும், சுப்பிரமணியசாமி, லட்சக்கணக்கான தமிழ் உறவுகளைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மேனகா காந்தியின் அறிக்கை லஞ்சம் ஊழலுக்கு ஆதரவாக இருக்கிறது என்றால், சுப்பிரமணியசாமியின் அறிக்கை தமிழர்களுக்கும், தமிழின உணர்வுக்கும் மனிதநேயத்திற்கும் எதிரானதாக உள்ளது. இருவர் மீதும் பாரதீய ஜனதா கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ் வாறு எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்றால், பா.ஜ.க.வின் நிலைப்பாடே அதுதான் என்று உறு திப்படும். ஒட்டுமொத்த தமிழினத்தின் கண்டனத்திற்கு உள்ளாகும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச் செயலாளர் அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.
Read more: http://viduthalai.in/page-2/89734.html#ixzz3GsfBzMfv
வாடிகனில் போப் பரிந்துரைகளை கத்தோலிக்க ஆயர்கள் ஏற்க மறுப்பு
வத்திகான், அக்.22- கத்தோலிக்கத் திருச்சபையின் கோட்பாடுகள் ரீதியான நிலைப்பாடுகளில் மாற்றம் கோரி முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை வத்திக்கான் ஆயர்களின் உயர் பேரவை நிராகரித்துள்ளது.
இது தொடர்பில் கத்தோலிக்க ஒருபால் உறவுக் காரர்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
போப்பின் பரிந்துரைகளுக்கு ஆயர்கள் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்க வில்லை. ஒருபால் உறவுக்கார்கள், விவாகரத்தின் பின்னர் மறுமணம் புரிபவர்கள் உள்ளிட்ட தரப்பின ரையும் அங்கீகரிக்கும் விதத்தில் கத்தோலிக்கத் திருச் சபையின் நிலைப்பாடுகள் அமையவேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை இந்த முன்வரைவு- ஆவணம் வலியுறுத்தியிருந்தது.
ஆனால், இந்தப் பரிந்துரைகளை அங்கீகரிக்காத ஆயர்களின் உயர் பேரவை, குறித்த ஆவணத்தை மீள மாற்றியமைத்துள்ளது. இருந்தாலும், ஒருபால் உறவுக்காரர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படு வது தவிர்க்கப்படவேண்டும் என்று இறுதி ஆவணம் கூறியுள்ளது.
போப் பிரான்சிஸ் அளித்த அனைத்து பரிந்துரை களுக்கும், ஆயர்களிடமிருந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை.
நவீனகால அணுகுமுறைகளுக்கு ஏற்ப கத்தோலிக் கத் திருச்சபையின் போதனைகள் அமைய வேண்டும் என்ற கண்ணோட்டத்திலேயே போப் பிரான்சிஸ் தம்முடைய பரிந்துரைகளை முன்வைத்திருந்தார்.
ஆனாலும், கருத்தடை சாதனங்களின் பயன்பாடு தொடர்பில் கத்தோலிக்கர்கள் எடுக்கும் ஒழுக்கம் சார்ந்த தெரிவுகளுக்கு திருச்சபை மதிப்பளிக்க வேண்டும் என்கின்ற மாற்றத்திற்கு மட்டும் ஆயர் களின் உயர் பேரவை ஏற்றுக்கொண்டது.
Read more: http://viduthalai.in/page-8/89748.html#ixzz3GsfXtoe4
சபாஷ் பொலிவியா!
கடந்த வாரம் லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவில் நடந்த அதிபர் தேர்தலில் ஈ.வோ. மொராஸிஸ் 60 சதவீத வாக்குகள் பெற்று மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இது உலகிலேயே அதிக நிதி சேமிப்புக் கொண்ட நாடாக ஒளிர்கிறது! பெண்கள் உயர்வு வியக்க வைக்கிறது. நாடாளு மன்றத்தில் 28% செனட்டில் 47% அமைச்சரவையில் 50 சதவீதம் பெண்கள் கொடி கட்டி ஆளுகின்றனர்.
Read more: http://viduthalai.in/e-paper/89752.html#ixzz3GsfuNdyq
Post a Comment