Search This Blog

27.10.14

பெண்களே கணவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்-பெரியார்

பெண்களே கணவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்


நாம் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்று சொல்லுகிறோம். ஆனால் மணமக்களை வாழ்த்துவது என்பதும் கூட ஒரு மூட நம்பிக்கையே ஆகும். அதையே இப்போது பலர் செய்தார்கள்.


இது ஒரு சம்பிரதாயமே ஆகும். இந்த முறையையேப் பார்ப்பான் காசு பறிப்பதற்காக ஏற்பாடு செய்ததே ஆகும். அவர்களுடைய வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற அறிவுரை கூறவே இதுபோன்ற நிகழ்ச்சியாகும்.


நாகரசம்பட்டியார் குடும்பம் நமக்கு மிக வேண்டிய குடும்பம் தான் என்றாலும், சொன்னால் வெட்கப்பட வேண்டும். சுயமரியாதைப்படி நடக்கிறதாகச் சொல்லிக் கொண்டு செய்யும் இத்திருமணமானது, சுயமரியாதைக் கொள்கைக்கு ஏற்றதாக இல்லை. இதை இப்படி ஏன் சொல்கிறேன் என்றால், இந்த இரண்டு திருமணங்களும் அவர்கள் சாதிக்குள்ளேயே செய்து கொண்டார்கள். அப்படி கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதில் சம்பந்தம் அவர்களுக்கு இடித்துக் கூட சொல்ல வேண்டிய உரிமை எனக்கு உண்டு.


இந்தச் சிறு வயதிலேயே அவர் தனது பெண்ணுக்குத் திருமணம் ஏற்பாடு செய்திருக்க வேண்டியதில்லை. அதை இன்னும் நல்ல முறையில் படிக்க வைத்திருக்கலாம். அது இன்னும் மற்ற தாய்மார்களும் தங்கள் பெண்களுக்கு அவசரப்பட்டுத் திருமணம் செய்யக் கூடாது. நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். அவர்களே, தங்களின் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படிச் செய்ய வேண்டும்.


மூட நம்பிக்கையான காரியங்களை விட்டு விட வேண்டும். நமக்கு வேண்டியதெல்லாம் நம் நாட்டைப் பொறுத்தவரை அறிவின்மைக் குறை நீங்க வேண்டியதே ஆகும். அதைக் கொண்டு எல்லாவற்றையும் சரி செய்து கொள்ள வேண்டும். சமத்துவம் வரவேண்டும்.


கொஞ்ச காலத்திற்காவது பிள்ளை பெறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நம் நாட்டில் உள்ள குறைகளில் மிகப் பெரியது இந்தப் பிள்ளைப்பேறுதான் ஆகும். இனி வரப் போகும் அரசாங்கமும் இதைத் தடுக்க முயற்சிக்கும் வகையில் பெண்களின் வயதை 21-ஆக்கப் போகிறது. பிள்ளைப் பெறுவது தங்களின் பிற்காலத்தில் தங்களுக்குச் சம்பாதித்துப் போட வேண்டுமே என்று கருதுகிறார்கள். இனி சக்தி குறைந்தால், சர்க்கார் மான்யம் கொடுக்கும். மனிதன் சந்தோஷப்பட வேண்டுமானால் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதிகமாகப் பெற்றுக் கொண்டு அவஸ்தைக்கு ஆளாகக் கூடாது. காமராசரின் அரசாங்கத்தால் இப்போது கல்வி பரவி இருக்கிறதே ஒழிய, நம் மக்களால் கல்வி பரவவில்லை. படித்தவர்கள் எல்லோரும் சர்க்கார் உத்தியோகம் வேண்டுமென்று நினைக்கிறார்கள். அது நமக்கும் தொல்லை; சர்க்காருக்கும் தொல்லை. படிப்பைக் கொண்டு தொழில் செய்ய வேண்டும். தொழில் துறையில் நாம் ரொம்பவும் முன்னுக்கு வரவேண்டும்.


படித்தவர்கள் மனம் அரசாங்கத்தில் தான் வேலை பார்க்க வேண்டும் என்ற நிலையில் இருக்கிறது. இது மாற வேண்டும்.


நாம் நமக்காகத் தான் வாழ்கிறோம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு - மற்ற மக்களுக்குத் தங்களால் ஆன தொண்டுகளைச் செய்ய வேண்டும்.


நம் மக்களுக்கு இன உணர்ச்சி பெருக வேண்டும். மற்ற பிற இனத்தானுக்கு இருப்பது போல் தன் இனம் முன்னேற வேண்டும். பார்ப்பானை எடுத்துக் கொள்ளுங்கள் - அவன் பிச்சைக்காரனாக இருந்தாலும், சங்கராச்சாரியாக இருந்தாலும், இராஷ்டிரபதியாக இருந்தாலும் அவன் எண்ணமெல்லாம் தனது இனத்தின் முன்னேற்றத்தைப் பற்றியதாகவே இருக்கும். அதுபோன்ற எண்ணம் நமக்கு வர வேண்டும். நம் மக்கள் முன்னேற வேண்டுமென்பதில் ஒவ்வொருவருக்கும் எண்ணம் இருக்க வேண்டும். அதற்காகப் பாடுபட வேண்டும்.


மணமக்கள் வரவிருக்கு மேல் செலவிடக் கூடாது. ஆடம்பரமாகத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் சராசரி மனித வாழ்வு வாழ வேண்டும். மற்ற மக்களோடு சரி சமமாகப் பழக வேண்டுமென்று கேட்டுக் கொள்வதோடு, இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மணமக்கள் குடும்பத்தினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


---------------------------------21.05.1967- அன்று நாகரசம்பட்டி திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. 'விடுதலை', 28.05.1967

18 comments:

தமிழ் ஓவியா said...

இந்தி ஒலிபரப்பு இல்லை பின்வாங்கியது வானொலி


கழகத் தலைவர் அறிக்கைக்குக் கைமேல் பலன்
இந்தி ஒலிபரப்பு இல்லை
பின்வாங்கியது வானொலி

சென்னை, அக்.27- வானொலியில் இந்தித் திணிப்பு கிடையாது, அத்தகைய திட்டம் ஏதும் இல்லை என்று பின்வாங்கியது வானொலி.

இதுகுறித்து சென்னை வானொலி உதவி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதிலும், நம்முடைய தேசத்தின் பெருமைமிக்க பண்பாட்டை பாதுகாப்பதற்கான நடவடிக்கையிலும் அகில இந்திய வானொலி எப்போதுமே முன்னின்று செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் மூன்று உள்ளூர் வானொலி நிலையங்கள் உள்பட நாடு முழுவதிலும் 86 உள்ளூர் வானொலி நிலையங்களின் ஒலிபரப்பு கட்டமைப்பு பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகள் நடைபெறு கின்றன. இந்த முயற்சிகளின் போது ஒலிபரப்பில் ஏற்படும் இடைவெளியை விட்டு நிரப்பவும் மக்களுக்கு மகிழ்ச்சித் தரும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழ் மொழியில் இடம் பெறச் செய்யவும் அகில இந்திய வானொலி சேவை புரிந்து வருகிறது.

ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பகுதிகளில், வேறு ஒரு மொழி நிகழ்ச்சிகளை அகில இந்திய வானொலி திணிக்காது.

அகில இந்திய வானொலி நம்முடைய பாரம் பரியத்தை பாதுகாப்பதிலும், மாநில மொழியை வளர்ப்பதிலும் என்றும் தொடர்ந்து ஈடு பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய வானொலியில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தெரிவித்த கருத்துக்கு, அகில இந்திய வானொலி நிலையம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

Read more: http://viduthalai.in/headline/90074-2014-10-27-10-01-04.html#ixzz3HLMeKinw

தமிழ் ஓவியா said...

நேருவைக் கொன்றிருக்கவேண்டும் என்பவர்மீதான நடவடிக்கை என்ன?

காந்தியாரைப் படுகொலை செய்ததற்குப் பதிலாக பண்டித ஜவகர்லால் நேருவைத்தான் நாதுராம் கோட்சே கொலை செய்திருக்கவேண்டும் என்று கேரள ஆர்.எஸ்.எஸ். ஏடான கேசரியில் (17.10.2014) பி.ஜே.பி. பிரமுகர் பி.ஜி.கோபாலகிருஷ்ணன் என்பவர் எழுதியுள் ளார். இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிக் கொண்டவர்.

இதன்மூலம் இவர் என்ன சொல்ல வருகிறார்? காந்தியார் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் அதேவேளையில், அவரைவிட நேருவைக் கொன்றிருக்கவேண்டும் என்று எழுதியுள்ளார்.

தங்களுக்கு விரோதமான கொள்கைகளை, கோட்பாடுகளைக் கொண்டவர்களைக் கொல்லுவது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர் என்பதும் இதன்மூலம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

காந்தியார் கடவுள் நம்பிக்கையற்றவரல்ல, மத மறுப்பாளரும் அல்ல; இவற்றில் எவரையும்விட அதிகமான நம்பிக்கையும், பிடிப்பும் கொண்டவர்! அதேநேரத்தில், இந்து - முசுலிம் பிரச்சினையில் சிறுபான்மை மக்கள் பக்கம், நியாயத்தின் பக்கம் நின்றவர்.

எனவே, மதவெறிக் கண்கொண்டு மிகப்பெரிய திட்டத்தை வகுத்துக் கொண்டு காந்தியாரைச் சுட்டுக் கொன்றனர்.

அப்பொழுது ஆஙகிலேய அரசு சொன்னது, எங்கள் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட காந்தியாரை நாங்கள் காப்பாற்றிக் கொடுத்தோம் - பாதுகாத்துக் கொடுத்தோம்; உங்களுக்குச் சுதந்திரம் கொடுத்த ஆறு மாதங்களுக்குள் அவரைக் காப்பாற்றத் தவறிவிட்டீர்களே, படுகொலை செய்துவிட்டீர்களே? என்று அவர்கள் எழுப்பிய அந்த வினாவுக்கு, இதுவரை உலக நாடுகளுக்கு இந்தியாவால் பதில் சொல்ல முடியவில்லை!

இன்னும் சொல்லப்போனால், அன்று தலைகுனிந்த இந்தியா இன்றுவரை தலைநிமிர முடியாமல் வெட்கத்தால் நாணிக்கோணித்தான் நிற்கிறது.

அதற்குப் பின்னால் 44 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்தம் முக்கிய தலைவர்களின் வழிகாட்டுதலோடு பல்லாயிரக்கணக் கானோர் ஒன்றுகூடி ஒரு பட்டப்பகலில் இடித்துத் தரைமட்டமாக்கினர்.

உலகமே கைகொட்டி ஏளனமாகச் சிரித்தது. இதன்மூலம் இரண்டாவது தடவையாகவும் இந்தியா மேலும் தலையை தொங்கப் போடும் அநாகரிக நிலையை அடைந்தது.

உலகம் இகழ்ந்த நிலைக்குப் பிறகாவது - அறிவு பெற்றனரா? நல்ல புத்தி ஏற்பட்டதா? நேருவைக் கொலை செய்திருக்கவேண்டும் என்று கூச்சமில்லாமல் எழுதுகிறார்களே - அதுவும் நேருவின் 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடுவது குறித்த சிந்தனைகள் பேசப்படும் இந்தக் காலகட்டத்தில், இப்படியொரு ஆபாசப் புத்தியை, அநாகரிக மூர்க்கக் குணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருப்பது - வெட்கக்கேட்டின் எல்லையாகும்.

காந்தியாரைவிட நேருமீது பார்ப்பனர்களுக்குக் கடும் வெறுப்பும், எதிர்ப்பும் இருப்பதற்கு முக்கிய காரணம், தன்னை ஒரு சனாதனவாதியாகக் காட்டிக் கொள்ளாததோடு, பல நேரங்களில் அவற்றைச் சாடவும், விமர்சிக்கவும் தயங்காதவர் நேரு. அந்தக் கோபம் இத்தனை ஆண்டுகாலம் ஆகியும் இந்துத்துவா கூட்டத்தை விட்டு அகலவில்லை என்பதைத்தான் ஆர்.எஸ்.எஸ். ஏடான கேசரியில் எழுதப்பட்ட கட்டுரை வெளிப் படுத்துகிறது.

கேசரி என்ற ஏடு - ஒரு காலகட்டத்தில் பாலகங்காதரர் என்ற இந்துத்துவா வெறிபிடித்த ஒரு தலைவரால் நடத்தப்பட்ட, ஆரிய நஞ்சை, வர்ணாசிரம தர்மத்தைக் கக்கிய ஏடாகும்; இன்னும் சொல்லப்போனால், மகாராட்டிர மாநிலத்தில் இந்துத்துவா வெறியைச் சாகும்வரை விசிறி விட்டுக் கொண்டிருந்த பார்ப்பனர் திலகர் ஆவார்.

பிளேக் நோய் அம்மாநிலத்தில் ஏற்பட்டு, மக்கள் கொத்துக் கொத்தாய் சாவின் மடியில் விழுந்த அந்த நேரத்தில், வெள்ளை அரசாங்கம் பிளேக் நோய்க்குக் காரணம் எலிகள் என்பதால், எலிகளை வேட்டையாட முனைந்தது. அப்பொழுது இந்தத் திலகர் என்ன சொன்னார் தெரியுமா?

எலி என்பது நமது இந்து மதக் கடவுளான விநாயகர் வாகனம் - வெள்ளைக்கார மிலேச்சர்!

நமது மதக் கலாச்சாரத்தில் தலையை நுழைக்கிறார்கள் என்ற வெறியை இந்துக்களிடத்தில் கிளப்பியவர். அந்த வெறியின் காரணமாக வெள்ளைக்கார அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தப் படுகொலைக்குக் காரணமாக இருந்த திலகரும், குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டதும் உண்டு.

அந்தக் கேசரி பெயரைக் கொண்ட ஏடு இப்பொழுது கேரளாவில் சங் பரிவார்க் கும்பலால் நடத்தப்பட்டு வருகிறது. அதில்தான் காந்தியாருக்குப் பதிலாக நேரு படுகொலை செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று எழுதியுள்ளார்.

இந்தப் பத்திரிகை மீதோ, கட்டுரையை எழுதியவர் மீதோ கேரள அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இவ்வளவுக்கும் கேரளாவில் நடப்பது காங்கிரஸ் ஆட்சிதானே!

இதனை ஒரு கட்சிப் பிரச்சினையாகப் பார்க்காமல் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கண்டனங்கள் வெடித்துக் கிளம்பவேண்டும். சட்டப்படி கட்டுரையை எழுதிய குற்றவாளிமீது நடவடிக்கை எடுக்கவும் வுற்புறுத்தவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-2/90078.html#ixzz3HLMwdbgf

தமிழ் ஓவியா said...

பரிகார முயற்சி...

எங்கு அளவுக்கு மீறிய, தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ, அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண்டெழவும், சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும்.
_ (குடிஅரசு, 4.10.1931)

Read more: http://viduthalai.in/page-2/90077.html#ixzz3HLN5LbBY

தமிழ் ஓவியா said...

மன நோயாளியின் பிதற்றல் என்று ஒதுக்கி விடுவதா?


மன நோயாளியின் பிதற்றல் என்று ஒதுக்கி விடுவதா?
இல்லை, கயவாளிகளின் கைக்கூலி என கட்டம் கட்டுவதா?

- குடந்தை கருணா

தன்னை விட வயதில் மூத்த வர்கள், தன்னை நேரே வணங்காமல், கார் டயரை வணங்குவதை ரசிக்கும் ஒருவர், வயதில் இளையவர்களைப் பார்த் தாலும், வாங்க என எழுந்து நின்று வரவேற்ற மனிதநேயருக்கு வாரிசா?

சிக்கனத்தை கடைப்பிடிக்கப் பிறருக்குச் சொன்னதுடன், தானும் கடைப்பிடித்து, மக்களுக்கு எடுத்துக் காட்டாய் விளங்கிய சமூக அக்கறை கொண்ட மனிதருக்கு யார் வாரிசு? பகவத் கீதை அதைச் சொன்னது; இதைச் சொன்னது என்று சொல்லி, ஒன்று பாக்கி இல்லாமல், எல்லா இந்து மதப்பண்டிகைக்கும் விழுந்தடித்து வாழ்த்து சொன்னவர்,

இந்த பண்டிகைகளெல்லாம், நம்மை, திராவிடர்களை இழிவு படுத்தும் பண்டிகைகள் என மக்களுக்கு அறிவு வெளிச்சம் தந்த அறிவாசானுக்கு வாரிசா?

காவடி எடுப்பதும், அலகு குத்திக் கிறதும், மொட்டை அடிச்சிக்கிறதும், பக்த கோடிகளின் வேலை; அந்தப் பணியை தங்கள் தலைமைக்கு செலுத் துகிறார்கள் என்றால், அந்தத் தலை மையைத் தெய்வமாக கருதுகிறார்கள் என்றுதானே பொருள்?

அப்படின்னா, கட்டுரைக்கு, தெய் வங்களின் வாரிசு அம்மாதான், அப்படின்னு வைக்கறதுதானே சரியா இருக்கும்.

ஆனாலும், இந்தக் கிழவன், நம்மை எல்லாம் பகுத்தறிவோடு இருங்கன்னு சொன்னதாலே, நாம, யார் எதைச் சொன்னாலும், கேட்டு கிட்டு, சும்மா கட்டுரையிலே பதில் சொன்னா போதும்னு நினைச்சுட் டோமோ?

கொஞ்சம் யோசிப்போம், இந்த களவாணிகளை என்ன செஞ்சா சரியா வருவாங்கன்னு.

Read more: http://viduthalai.in/page-2/90083.html#ixzz3HLNKD2AM

தமிழ் ஓவியா said...

பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வா? மக்கள் நல அரசு என்பதற்கு உகந்ததல்ல!


தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருளான பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு என்பது மக்கள் நல

அரசு என்பதற்கு எதிரானது; தமிழ்நாடு அரசு இதனைக் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளார்.
அறிக்கை வருமாறு:

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி 2011 இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் வராததுமாக பால் விலை, மின் கட்டணம்,

பேருந்துக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியது.

அன்றே எழுதினோம்!

அப்பொழுதே அதுகுறித்துக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டோம்.

மத்திய அரசு அண்மையில் பெட்ரோல் விலை ஒன்றுக்கு ரூ.2.10 ஏற்றியதற்கு எவ்வளவுக் கடுமையாக அறிக்கை

வெளியிட்டார் நமது முதலமைச்சர்? நாமும் அந்த விலையேற்றத்தைக் கண்டித்தோம். பெட்ரோலைப்

பயன்படுத்துபவர்கள் வாக்காளர்களில் ஒரு பகுதிதான். ஆனால், அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான

பால், பேருந்துக் கட்டணங்கள் தமிழக அரசால் பல மடங்கு ஏற்றப்பட்டு, நடைமுறைக்கு அமலில் உடனடியாக

வரும் என்று அறிவிக்கப்பட்டு விட்டதே!

வரலாறு காணாத அளவுக்கு 75 விழுக்காடு பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டது. மின்சாரக்

கட்டணத்தை உயர்த்துமாறு மின்வாரியத்திற்குப் பரிந்துரை செய்து அனுமதியளித்துள்ளனர். பால், பேருந்து,

மின்சாரம் இவைகளைப் பயன்படுத்துவோர் அம்பானிகளோ, கிருபானிகளோ, டாடா, பிர்லாக்களோ, ஆலை

முதலாளிகளோ, பெருமுதலாளிகளோ மட்டும் அல்ல; பெரும்பாலும் இந்த ஆட்சிக்கு வாக்களித்த ஏழை, எளிய

மக்கள்தான்.

வாக்களித்தவர்களுக்கு ஆறு மாதத்திற்குள் இந்த அரசு தரும் பரிசு இதுதானா? இது நம்முடைய கேள்வியல்ல -

மெஜாரிட்டி ஆட்சி என்று மார்தட்டும் முதலமைச்சரை அவரது ஆட்சியை நோக்கி மக்கள் எழும்பிக் குமுறும்

குரல்கள் ஆகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தேன். (விடுதலை, 21.11.2011)

மக்கள் தலையில் இடியோ!

இப்பொழுது இன்னொரு ஆபத்தான இடியை ஏழை, எளிய, நடுத்தரப் பாட்டாளி மக்கள் தலையில் இறக்கி

வைத்துள்ளது தமிழ்நாட்டை ஆளும் அ.இ.அ.தி.மு.க. அரசு; லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 அளவுக்கு பால் விலை

உயர்வாம்; ஓர் அத்தியாவசியமான அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருள்மீது இவ்வளவு அபாயகரமான

விலை ஏற்றம்; இது என்ன கொடுமை!

நட்டம் ஏற்படுகிறது என்பதற்காக இப்படி ஒரு ஈவு இரக்கமற்ற, மனிதநேயமற்ற செயலில் ஈடுபடலாமா?
2011 நவம்பரில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.6.25 உயர்த்தியதும் இதே அ.தி.மு.க. ஆட்சிதான். இப்பொழுதோ ரூ.10

அதிகம்.

பால் விலை உயர்வு என்றால், அத்தோடு முடியக் கூடியதல்ல; அது தொடர்புடைய 43 பொருள்கள்

இருக்கின்றன. அவை அத்தனையும் 15 சதவிகிதம் அளவுக்கு உயர்கின்றன.

ஆட்சி நடத்துவது வியாபாரம் அல்ல!

எல்லாத் துறைகளிலும் இலாபம் வரும் என்று அரசு எதிர்பார்க்கக்கூடாது; அப்படி எதிர்பார்ப்பது தனிப்பட்ட

வியாபாரிகளுக்கான தர்மமாக இருக்கலாமே தவிர, அரசின் தர்மமாக இருக்க முடியாது. (வியாபாரிகள்கூட

தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலையைக் கண்மூடித்தன மாக ஏற்றிவிட முடியாது; அதற்கும் அரசு சில கட்டுப்

பாடுகளை விதித்துள்ளது) அரசோ அப்படிப்பட்டதல்ல - மக்கள் நலன் சார்ந்தது! (Welfare State).
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முக்கிய கட்சிகளும் எதிர்த்துள்ளன - போராட்டங்களையும் அறிவித்துள்ளன.

இன்னும் சொல்லப்போனால், அ.இ.அ.தி.மு.க.வை ஆதரிப்பவர்கள்கூட இந்தப் பால் விலை உயர்வை

விரும்பவில்லை - எதிர்த்துக் கருத்துக் கூறியுள்ளனர்.

மறுபரிசீலனை தேவை!

தமிழ்நாடு அரசு இதில் மறுபரிசீலனை செய்யவேண்டும்; மறுபரிசீலனை என்ற பெயரில் ஒரு ரூபாய், இரண்டு

ரூபாய் குறைப்பு என்ற கண் துடைப்பு வேலையில் இறங்கினாலும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்

என்பதையும் இடித்துச் சொல்லுவது நமது கடமையாகும்.

அடுத்து மின்கட்டண உயர்வு என்ற அதிர்ச்சி (ஷாக்) அச்சாரம் போட்டுக்கொண்டு இருக்கிறது. அரசு

கொள்ளிக் கட்டையை எடுத்துக்கொண்டு தலையைச் சொரிய ஆசைப்பட்டால், யார்தான் என்ன செய்ய

முடியும்?


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/90121.html#ixzz3HUgHkVRK

தமிழ் ஓவியா said...

டிவிட்டரை நாத்திகர்களே அதிகம் பயன்படுத்துகிறார்கள்! ஆய்வுத் தகவல்


வாஷிங்டன், அக்.28-_ டிவிட்டர் சமூக வலைத் தளத்தில் ஆத்திகர்களை விட நாத்திகர்களே அதி கமாக

செயல்படுகின்றனர் என ஆய்வுத்தகவல்கள் கூறுகின்றன.

நாத்திகர்கள் பொது வாக சிறுபான்மையராக இருப்பதாக கருதப்பட்டா லும், சமூக வலைத்தள மான

டிவிட்டரில் நுழை யும்போது, நாத்திகர் களுக்கு ஏராளமான நண் பர்களும், அவர்களைப் பின்பற்றுவோர் உள்ள

தாகவும், டிவிட்டரில் அதிகமாக கருத்துக்களை யும் பதிவிடுகிறார்கள் என்றும் அமெரிக்க ஆய் வுத்தகவல்

கூறுகிறது.

அதேபோன்று ஆய் வுத்தகவலில் ஒரு குறிப் பிட்ட மத நம்பிக்கையா ளர்களாக அடையாளப் படுத்திக்கொண்டு

இருப்ப வர்கள், அவர்களைப் போன்றே அதே நம்பிக் கையில் இருப்பவர்களு டன் மட்டுமே மற்றவர்

களைக்காட்டிலும் பதிய விட்டுக் கொள்கிறார்கள் என ஆய்வுத்தகவல் கூறு கிறது.

டிவிட்டர் பயன்படுத் துவோர் குறித்த தகவல் களை ஆய்வு செய்த போது, கிறித்துவர், யூதர், முசுலீம், புத்தம்,

இந்து மற்றும் நாத்திகர் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதை ஆய் வில் கண்டறியப்பட்டுள் ளது.

இந்த 6 அடையாளங் களைக் கொண்டுள்ளவர் கள் அடிக்கடி பதியவிட் டுக் கொண்டுள்ளார்கள். அவர்களில்

அமெரிக்க மக்கள் தொகையின் எண் ணிக்கையில் சிறுபான்மை யராக உள்ள நாத்திகர்கள் சிறப்பானவர்களாக

அறி வார்ந்தவர்களாக உள்ள தாக பியீயீவீஸீரீஷீஸீ றிஷீ இத ழில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ பகுதியைச் சார்ந்த ரைட் பல்கலைக் கழகத்தின் முனைவர் பட் டத்துக்கான மாணவர்

லூசென் என்பவர் கூறும் போது, சராசரியாக நாம் சொல்ல வேண்டுமானால், நாத்திகர்கள் ஏராளமான

நண்பர்களைக் கொண்டி ருக்கிறார்கள். அவர்கள் பதிவைப் பின்பற்றுபவர் கள் அதிகமானவர்கள் உள்ளனர்.

அவர்கள் ஏரா ளமாக பதிவுகளையும் செய்கின்றனர் என்றார்.

டிவிட்டர் சமூக வலைத் தளத்தைப் பயன்படுத்துப வர்கள் குறித்து ஆய்வா ளர்கள் ஆராயும்போது,

2,50,000பேர் டிவிட்டர் பயன்படுத்துகிறார்கள். 9,60,00,000 பதிவுகளை செய்கிறார்கள் என்று கண்டறிந்துள்ளனர்.

மேலும், டிவிட்டரைப் பயன்படுத்துவோர் டிவிட் டரில் யாரைப் பின்பற்று கிறார்கள், அவர்களைப்

பின்பற்றுபவர்கள் யார் என்பது குறித்தும் ஆய்வு செய்துள்ளனர்.

டிவிட்டர் சமூக வலைத் தளத்தைப் பயன்படுத்துப வர்கள் தங்களைப்பற்றிய அடையாளங்களைக்

குறிப்பிடும்போது, மதத் தைச் சார்ந்தவராகவோ, நாத்திகராகவோ அடை யாளப்படுத்தியுள்ளனர். ஆய்வு

மேற்கொண்ட வர்கள் அமெரிக்காவில் உள்ள டிவிட்டர் பய னாளிகள்குறித்தே ஆய் வுத் தகவல்கள் அளித்

துள்ளனர்.

யாரெல்லாம் மதமற்ற வர்களாகப் பதிவு செய்து கொண்டுள்ளார்கள் என்கிற அடிப்படையில் ஆய்வு

மேற்கொண்டனர். டிவிட்டர் பயன்படுத்து பவர்கள் பெரும்பாலும் அன்பு, வாழ்வு, பணி மற்றும் மகிழ்ச்சி ஆகிய

சொற்களையே பயன் படுத்தி உள்ளனர்.

லூசென் கூறும்போது, மனிதர்களில் பலரும் எந்த விஷயத்தில் பெரி தாக நம்பிக்கொண்டிருக் கிறார்களோ,

அப்படி எதுவும் இல்லை என்று கூறுகிறார்.

கத்தார் கணினிமுறை ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இங்மார் வெபெர் மற்றும் கேம்டன் ரட் ஜர்ஸ்

பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த ஆதாம் ஒக் குலிக்ஸ்-கோஸரைன் ஆகி யோருடன் இணைந்து லூசென் இந்த

ஆய்வை நடத்தியுள்ளார்.

மக்கள் அவர்களின் அன்றாட வாழ்வு குறித்து அதிக அக்கறை கொள் கின்றனர். அதேபோல், அன்பு,

நல்வாழ்வு, உலகு குறித்து அக்கறை, மற்ற வர்கள்குறித்து அக்கறை எடுத்துக்கொள்வதைப் போன்றதுதான்

இதுவும் என்கிறார் லூசென்.

Read more: http://viduthalai.in/e-paper/90122.html#ixzz3HUgU2WJ3

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்தி இவ்வளவுதானா?

குமரி மாவட்டத்தில் கோவில்கள் கொள்ளையோ கொள்ளை!

குமரி மாவட்டம், குளச்சல் அருகே மேற்கு நெய்யூரில் இருக்கும் இசக்கி அம்மன் கோவிலுக்கு நேற்று காலை

கோவில் நிர்வாகி சிவராம் சென்று பார்க்கும்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த

நகை திருட்டுப் போயி ருந்தது.

உடனடியாக அவர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்

தனது நகையைக் கூட பாதுகாக்க இயலாத இந்தக் கடவுளா பக்தர்களைப் பாதுகாக்கப் போகிறது?

ராஜாக்க மங்கலத்தில்...

குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் பண்ணயூரில் உள்ள இசக்கியம்மன் கோவில் பூசாரி ராஜேஷ் நேற்று

முன்தினம் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு பின்னர் கோவிலுக்குள் வந்து பார்க்கும்போது கோவில்

உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் ரூ2ஆயிரம் திருடப்பட்டிருந்ததைப் பார்த்தார்
உடனே ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதுபோல ராஜாக்கமங்கலம் அருகே பாம்பன் விளையில் உள்ள விநாயகன் கோவிலிலும் பூட்டு உடக்கப்பட்டு

பணம் திருட்டுப் போய் உள்ளது. அந்த கோவில் பூசாரியும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்

தொடர்ச்சியாக கோவிலில் பணம் திருடப்பட்ட போதும் இந்த சக்தியற்ற கடவுளர்களை நம்பி கோவிலுக்குப்

போவதை பக்தர்கள் என்றுதான் நிறுத்துவார்களோ.


கும்மிடிப்பூண்டி:

கோவில் பூட்டை உடைத்து திருட்டு

கும்மிடிப்பூண்டியை அடுத்த காட்டுக்குளம் கிராமத்தில் பழைமை வாய்ந்த பொற்காளியம்மன் கோவில் உள்ளது.

நேற்று காலை கோவில் பூசாரி ராஜீ(வயது 50) கோவிலை திறக்கச் சென்றார். அப்போது கோவிலின் முன்பக்க

இரும்பு கதவு மற்றும் அதனை அடுத்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி

அடைந்தார்.

யாரோ சிலர் கோவிலின் 2 கதவு பூட்டுகளையும் உடைத்து உள்ளே புகுந்து அங்கு இருந்த இரண்டு

உண்டியல்களையும் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணம் மற்றும் சில்லறை காசுகளை அள்ளிச் சென்று

உள்ளனர். மேலும் அங்கு இருந்த இரும்பு பெட்டியை தூக்கிச்சென்று சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ள

வயல்வெளியில் வைத்து அதனை உடைத்து அதில் இருந்த அரை பவுன் எடை உள்ள தங்கக் காசுகளையும்

அவர்கள்அள்ளிச்சென்று விட்டனர். இதுபற்றி கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கடந்தாண்டு இந்தக் கோவிலின் கோபுரத்தில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ளஅய்ம்பொன் கலசங் களை யாரோ

சிலர் திருடிச்சென்று விட்டது குறிப் பிடத்தக்கது.


Read more: http://viduthalai.in/e-paper/90124.html#ixzz3HUgd3OVv

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

மறைக்க முடியுமா?

செய்தி: சென்னை ஓமாந் தூரார் வளாகத்தில் அடுத்த ஆறு மாதத்தில் மருத்துவக் கல்லூரி அமையும்.

சிந்தனை: என்ன வந் தால் என்ன? அது கலை ஞர் காலத்தில் கட்டப் பட்ட கட்டடம் என்பதை மறைக்க
முடியுமா?

Read more: http://viduthalai.in/e-paper/90128.html#ixzz3HUguMyoO

தமிழ் ஓவியா said...
இந்தியாவில் 3 இல் ஒரு குழந்தை பசித்த வயிற்றுடன் படுக்கைக்குச் செல்கிறது ஆய்வுத் தகவல்

பசித்த வயிறுகளுடன் தூய்மை இந்தியா
திட்டம் எப்படி நிறைவேறும்? - அமர்த்தியாசென்

புதுடில்லி, அக். 28_ இந்தியாவில் 3 இல் ஒரு குழந்தை பசித்த வயிற் றுடன்தான் படுக்கைக்குச் செல்கிறது. 30.7

விழுக்காடு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் குறைந்த எடையுடன் தான் உள்ளனர் என சர்வதேச உணவுக்

கொள்கை ஆய்வு நிறுவனத் தின் அறிக்கை தெரிவித்துள்ளது. தூய்மை இந்தியா என்பது பசித்த வயிறுகளுடன்

எப்படி நிறைவேறும்? என்று நோபல் பரிசு பெற்ற நிபுணர் அமர்த்தியாசென் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனமே உலகளவில் பசிக் கான அளவீடுகள் தயாரித்து ஆண்டு

தோறும் வெளியிடுகிறது. டில்லியில் கடந்த ஞாயிறன்று இவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி

யுள்ளதாவது:

76 நாடுகளைக் கொண்ட பசியில் வாடும் நாடுகளின் பட்டியலில் இந் தியா 55 ஆவது இடத்தில் இருக்கிறது.

இந்நிலைமை இந்திய குழந்தைகளின் உண்மை நிலையை தெளிவுபடுத்து கிறது. 2005_2006 இல் 5 வயதிற்

குட்பட்ட குழந்தைகளில் எடை குறை வானவர்கள் 45.1 விழுக்காடு இருந் தனர். தற்போது அது 30.7 விழுக்

காடாக குறைந்துள்ளது என்றாலும் இது கவலைக்குரிய நிலைமையாகவே உள்ளது. ஏனெனில் பிறந்ததிலிருந்து

5 வயதுவரைதான் மூளையின் வளர்ச்சி விரைவாக நடைபெறும். அப்போது சத்தான உணவு அவசியம்.

ஆனால் இவ்வயதில் சத்தின்மையோ ,போதாக் குறை சத்துணவோ அல்லது எந்த உணவுமின்றி பசியால்

வாடுவதோ குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும்.

இதனால் நாட்டின் எதிர்கால தலைமுறையின் வளர்ச்சியே பாதிப் புக்குள்ளாகி விடும். இவ்வாறு உண வின்றி

தவிக்கும் குழந்தைகள் வய துக்கு வருவது தாமதமாகும். இப் பாதிப்புகளைக் கவனத்தில் கொண்டே மதிய

உணவுத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் போன்றவை கொண்டு வரப்பட்டன. ஆனால்

இத்திட்டங்களில் உள்ள குறைபாடு இத்திட்டங்களைக் கொண்ட பள்ளியில் படிக்க வரும் குழந்தைகளுக்கு

மட்டுமே பொருந் தும். பள்ளிக்கு வராத, கல்வி முறை யிலிருந்து வெளியேற்றப்பட்ட மிக ஏழைக்

குழந்தைகளுக்கு திட்டத்தின் பயன்கள் கிடைக்காது. ஏழை மக் களின் வேலையில்லாத் திண்டாட் டத்தை

குறைக்கவும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் கொண்டுவரப்பட்டது.

இத்திட்டங்களின் மூலமாக கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டு மிகக்குறைந்த அளவிலான உணவைபெற

முடியும் என்பதால் இத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. பொது விநியோகத்திட்டமும் இவர் களுக்கு உதவி

புரிந்தது. இருப்பினும் இத்திட்டங்களின் மூலம் கிடைக்கும் சொற்ப வரு வாய் மற்றும் மானியங் களின் மூலம்

உணவுப் பொருள்களும் போதுமான ஊட்டச்சத்தை அளிப் பதில்லை என்பதும் உண்மையாக இருக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமர்த்தியாசென் கண்டனம்

இதற்கிடையில் பாஜக அரசு, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தைப் படிப்படியாக குறைத்து,

அதை ஒழித்துக் கட்ட முயற்சித்து வருவதற்கு நோபல் பரிசு பெற்ற பொருளியல் நிபுணர் அமர்த்தியாசென்

மற்றும் பேராசிரியர் ஜீன் டிரெஸ் ஆகியோர் கடும் கண் டனங்களை தெரிவித்துள்ளனர். அமர்த்தியாசென்

மற்றும் ஜீன் டிரெஸ் ஆகியோரும் உணவு உரிமைக்கான கூட்டமைப்பினரும் இணைந்து அறிக்கை ஒன்றை

வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:

இதுபோன்ற வேலை வாய்ப்பு, உணவு மானியத் திட்டங்கள் மற்றும் பொது விநியோகத் திட்டங்களை

குறைப்பதும் ரத்து செய்வதும் ஒரு நாட்டின் எதிர்காலத் தலைமுறைக்கு இழைக்கப் படும் அநீதியாகும். கீளின்

இந்தியா என்ற பிரச்சாரத்தில் இது போன்ற மிக முக்கியமான விசயங்கள் குறித்த விவாதங்கள் அனைத்தும்

புறந்தள்ளப்பட்டுவிட்டன. மேலும் இதுபோன்ற அடிப்படை யான விசயங்களை எல்லாம் விவா திப்பது

கிட்டத்தட்ட காலப்போக்கில் மறைந்து போன வழக்கமாகி வருகிறது. தூய்மை இந்தியா என்பது பசித்த

வயிறுகளுடன் எப்படி நிறைவேறும். இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-2/90131.html#ixzz3HUhhwE00

தமிழ் ஓவியா said...

இந்நாள்: போலியோவுக்குத் தடுப்பூசி கண்ட பெருமகன் எட்வார்ட் சாக் பிறந்த நாள்


(போலியோவிற்கான தடுப்பூசியைக் கண்டறிந்த ஜொன்ஸ் எட்வார்ட் சாக் அவர்களுக்கு நூற்றாண்டு விழா;

பிறந்த நாள் அக்டோபர் 28, 1914)

மனித இனம் தோன்றிய நாள் முதல் பல்வேறு நோய்களுக்காட்பட்டு மரண மடைந்து வந்தான். ஆனால் ஒரு

நோய் மரணமடையவும் விடாமல், வாழவும் விடாமல் வாழ்நாள் முழுவதும் மனி தனை அலைக்கழித்து வந்தது,

அது இளம்பிள்ளைவாதம் என்றழைக் கப்படும் போலியோ நோயாகும்.

வனவிலங்குகளின் மலத்தின் மூலம் மனித இனத்திற்கு பரவிய இந்த வைரஸ் கிருமி ஏற்படுத்திய பாதிப்பு

எகிப்திய மம்மிகளிடமும் காணப்படுகிறது. டுடங் காமன் என்ற மன்னனின் (கி.மு 4000) இளவரசர் ஒருவரின்

மம்மியை ஆய்வு செய்தபோது அந்த மம்மி போலியோ வால் பாதிக்கப்பட்டது எனத் தெரிய வந்ததுள்ளது.

வியர்வை, மலம், சிறுநீர்மூலம் இந்தக் கிருமி நீர் நிலைகளில் கலந்து பரவுகிறது. போலியோவை உண்டாக்கும்

வைரஸ் தண்டுவடத்தை பாதித்து நரம் புகளை செயலிழக்கச் செய்கிறது. போலியோ பெரும்பாலும் இடுப்புக்கு

கீழ் பகுதி நரம்பு மண்டலத்தை கடு மையாக பாதித்து, அவரின் வாழ்க் கையை முடக்கி விடுகிறது.

உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட இந்த நோய் குறித்து அறிவியலாளர்கள், இந்த நோய் அணுகுண்டைவிட

ஆபத்தானது என் பர். இரண்டு உலகப்போர்களாலும் பாதிக் கப்பட்ட மக்களைவிட போலியோ நோயினால்

பாதிக்கப்பட்டவர்களே அதிகம். போலியோ நோய்பரப்பும் வைரஸ்கள் குறித்த இயக்கங்கள் நவீன

நுண்ணோக்கிகள் கண்டறியப்படாத நிலையில் சரியாக அடையாளங்காண இயலவில்லை. அமெரிக்காவைச்

சேர்ந்த ஜோன்ஸ் எட்வர்ட் சாக் என்பவர் தன்னுடைய சிறுவயதில் தனது தங்கைக்கு போலியோ தொற்றி

அவள் முடமாகி இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். சிறுவயதில் இருந்தே போலியோ நோயின்

கொடுமையை அறிந்த கார ணத்தால் தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்ததும் மருத்துவம் பயிலத் துவங்

கினார். முக்கியமாக அவர் நோய்களை ஏற்படுத்தும் நச்சுக்கிருமிகள் குறித்து இரவு பகலாக ஆய்வு செய்தார்.

பெரி யம்மை தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு உலகம் முழுவதும் பரவலான பிறகு போலியோ குறித்த ஆய்வும்

உலக அறிவியலாளர்களால் முன்னேடுக்கப் பட்டது. ஜோன்ஸ் எட்வர்ச் சாக் பெரி யம்மை தடுப்பூசி

போன்றே போலியோ விற்கும் தடுப்பூசி கண்டறியும் ஆய்வை தொடர்ந்து செய்துவந்தார்.

1948 ஆம் ஆண்டிலிருந்து 1955 ஆம் ஆண்டு வரை நீண்ட ஆய்வில் ஈடுபட்ட அவர் அமெரிக்காவில் ஒரு

லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, தான் கண்டுபிடித்த தடுப்பூசியை போட்டு நோய் பரவாமல் தடுப்பதில்

வெற்றியும் கண்டார். போலியோ நோயால் பாதிக்கப்பட்ட வர்களை முழுமையாக குணப்படுத்தா விடினும்

நோய் வராமல் தடுக்கும் தடுப்பூசியை 1955 ஆம் ஆண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதே ஆண்டு

ஏப்ரல் 12 ஆம் தேதி இவரது தடுப்பூசி உலகிற்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போது இவர்

உலகின் அதிசய மனிதர் என்றே கரு தப்பட்டார். காரணம் உலகெங்கிலும் போலியோ பாதிக்கப்பட்டவர்கள்

கடவு ளின் சாபத்தால் பிறந்தவர்கள் என்று கருதப்பட்டது. அந்தக் கடவுளின் சாபத்தை முறியடித்துக்

காட்டியவர் என்று அமெரிக்க இதழ்கள் புகழாரம் சூட்டின.

எந்த ஒரு தனிப்பட்டவருக்கும் உரிமையானதல்ல...

தொலைக்காட்சி ஒன்றின் நேர் காணலின்போது இந்தத் தடுப்பூசிக்கான உரிமையை நீங்கள் கோருவீர்களா என்ற

கேள்விக்கு, ஜோன்ஸ் அளித்த பதில் சூரியனுக்கு யாரும் உரிமை கோர முடியுமா அது உலகத்திற்கு பொது

வானது அதுபோலவே, என்னுடைய போலியோ தடுப்பூசி கண்டுபிடிப்பும் எந்த ஒரு தனிப்பட்டவருக்கும்

உரிமை யானதல்ல; இது மனித குலத்திற்கே உரிமையானது என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/90133.html#ixzz3HUhr65mW

தமிழ் ஓவியா said...

இந்துக்கள் 10 குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டுமாம்! சொல்லுகிறார் சிவசேனை தலைவர்

லக்னோ, அக். 28 இந்துக்கள் பெரும்பான்மை யினர் தகுதியை தக்க வைத்துக் கொள்ள இந்து குடும்பங்கள் 10

குழந்தை களுக்கும் மேல் பெற்றெ டுக்க வேண்டும் என உத்தரப்பிரதேச சிவசேனா தலைவர் அனில் சிங் தெரி

வித்திருப்பது பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்துக்கள் பெரும்பான் மையினர் என்ற தகுதியை தக்க வைத்துக்கொள்ள இந்து குடும்பங்கள் 10

குழந்தைகளுக்கும் மேல் பெற்றெடுக்க வேண்டும். அவ்வாறு பத்து அல்லது பத்துக்கும் மேற்பட்ட குழந் தைகள்

பெற்றுக்கொள்ளும் குடும்பத்திற்கு தலா ரூ.21,000 வெகுமதி வழங் கப்படும். அக்குடும்பங் களுக்கு தேசிய நலன்

கருதி மக்கள் தொகையை அதி கரித்ததற்காக பாராட்டு சான்றிதழும் அளிக்கப் படும் என அனில் சிங்

கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவசேனா தலைவரின் இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மற்றொரு தலைவரான சுரேந்திர

ஷர்மா, இந்துக் களின் எண்ணிக்கை குறைந் தால் நமது தேசத்தில் நாமே சிறுபான்மையின ராக மாறிவிடுவோம்

என கூறியிருக்கிறார்.

இக்கருத்திற்கு பிற கட்சிகள் கண்டனம் தெரி வித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரீட்டா

பகுகுணா ஜோஷி, உத்தரப்பிரதேசத்தில் வகுப்புவாத கலவரங்களை தூண்டும் வகையில் நடந்து கொள்ளும்

சிவசேனா வெட்கப்படவேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த் ஷாகித் சித்திக்கி கூறுகையில், 10 குழந்தைகளை பெற்றுக் கொள்வது

பெண்களுக்கு வேதனையானது. சிவசேனா இதற்காக ரூ.21,000 மட்டும் தருவதாக தெரிவித்துள்ளது. அவர்கள்

ரூ.21 லட்சம் கொடுக்க வேண்டும். ஆனால், அப்படி அதிக தொகை கொடுத்தாலும் இந்த எண்ணம் தவறானது.

வளர்ந்த நாடுகள் மக்கள் தொகையை குறைக்க நட வடிக்கை மேற்கொண்டு வரும் வேளையில், சிவ சேனா

மக்கள் தொகையை அதிகரிக்க ஆலோசனை கூறியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/90136.html#ixzz3HUi5fTLg

தமிழ் ஓவியா said...

ஹிட்லரை எதிர்த்த சோபி ஸ்கால்


உலகம் முழுவதுமே மிக மோசமான பின் விளைவு களை ஏற்படுத்திய இரண்டாம் உலகப் போர் காலகட்டம்... ஹிட்லர் தலைமையில் ஜெர்மனிதான் இந்தப் போருக்குத் தலைமை தாங்கியது. ஆனாலும், எல்லா ஜெர்மனியர்களும் போருக்கு ஆதரவாக இல்லை. அப்படி, சொந்த நாடாக இருந்தாலும், சொந்த நாட்டு அதிபராக இருந்தாலும் ஹிட்லரை எதிர்த்தவர்களில் ஒருவர் சோபி ஸ்கால்!

1921 மே 9 அன்று பிறந்தார் சோபி. சோபி நிறையப் படிப்பார்... ஓவியங்கள் தீட்டுவார்... இசையிலும் ஆர்வம் இருந்தது. பள்ளியில் படிக்கும்போது மாணவர் தலைவராக இருந்து, திறமையாகச் செயல்பட்டார். நாஜி இளைஞர் படை, பெண்கள் படை போன்றவற்றில் இணைந்து பணி புரிந்தார். பள்ளி இறுதி முடித்தவர்கள் கட்டாயம் தேசச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று சட்டம் இருந்தது.

அதற்காக பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, ஆசிரியராக சிறிது காலம் வேலை செய்துகொண்டிருந்தார் சோபி. பிறகு, முனிச் பல்கலைக் கழகத்தில் படிக்கச் சென்றார். அங்கேதான் சோபியின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.

யூதர்களுக்குத் தனிப் பள்ளி, தனிக் கடைகள், உடையில் சின்னம் அணிந்திருக்க வேண்டும், குறிப்பிட்ட நேரங் களில்தான் வெளியில் வரவேண்டும், மற்றவர்களுடன் பேசக்கூடாது என்றெல்லாம் நாஜிகள் மிக மோசமான சட்டங்களைக் கொண்டு வந்தனர். இவற்றைக் கண்டு அதிர்ந்து போனார் சோபி.

இன்னொரு பக்கம் ஹிட்லரை எதிர்த்தவர் களுக்குக் கிடைத்த தண்டனைகளும் அவரை நிலைகுலையச் செய்தன. சோபியின் அப்பா ஹிட்லரின் நடவடிக்கைகளை எதிர்த்த காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு தனிநபரின் கைகளில் முழு அதிகாரமும் இருந்தால், அவர் எந்த அளவுக்கு சர்வாதிகாரியாக நடந்துகொள்வார் என்பதை அப்போது புரிந்துகொள்ள முடிந்தது. அண்ணன் ஹான்ஸ் மற்றும் அவர் தோழர்களுடன் சேர்ந்து ஹிட்லரை எதிர்க்கும் போராட்டங்களில் பங்கேற்றார் சோபி.

ஒயிட் ரோஸ் என்ற அமைப்பு உருவானது. 1942 ஜூன் முதல் 1943 பிப்ரவரி வரை இந்த அமைப்பு மிகவும் தீவிரமாகச் செயல்பட்டது. ஹிட்லருக்கு எதிரான செயல்களில் ஈடுபட் டதாக குற்றம் பதிவு செய்யப்பட்டது. வெகு விரைவில் விசாரணை முடிந்தது. சோபி, ஹான்ஸ் மற்றும் தோழர்களுக்கு கெல்லட்டின் கொண்டு தலை வெட்டும் தண்டனை வழங்கப் பட்டது.

1943 பிப்ரவரி 22... ஹான்ஸ், நண்பர் கிறிஸ்டோப் ப்ராப்ஸ்ட், சோபி மூவரையும் தண்டனை அளிப்பதற்காக அழைத்துச் சென்றனர், வேண்டும் சுதந்திரம் என்றபடி ஹான்ஸ் கொலை மேடைக்குச் சென்றார். அவர் தலை துண்டிக்கப்பட்டது. 21 வயதே நிரம்பிய சோபி, துணிச்சலுடன் கண்களை இமைக்காமல் மரணத்தை எதிர்கொண்டார்.

Read more: http://viduthalai.in/page-7/90156.html#ixzz3HUilLc6O

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


1932 இல் காஞ்சி பெரியவாள் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி தஞ்சாவூரிலிருந்து காசிக்கு நடந்தே போனாராம். ஆறு மாதம் நடந்தாராம். எவ்வளவோ கேட்டுக் கொண்டும், மறுபடியும் நடந்தே திரும்பினாராம்.

அப்படியென்றால், விமானத்தில் பறந்து திரி யும் ஜெயேந்திர சரஸ்வதி சாஸ்திரத்தை மீறியவர் ஆகவில்லையா!

நடந்து போனவரும் ஜெகத்குரு, விமானத்தில் பறப்பவரும் ஜெகத்குரு தானா?

என்னே, பார்ப்பனப் பற்று!

தமிழ் ஓவியா said...


மதவாதம் - அறிஞர்களின் மவுனம் ஆபத்தானது!

வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் எச்சரிக்கை!

புதுடில்லி, அக்.29_- மதவெறி நோக்கில் பாடப் புத்தகங்கள் திருத்தப் படுவது குறித்தும், மதச் சார்பின்மை அடிப்படை யிலான புத்தகங்கள் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்படுவது குறித்தும் அறிஞர்கள் கேள்வி எழுப்பவேண்டும் என்று வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் வற் புறுத்தினார். புதுடில்லியில் நிகில்சக் கரவர்த்தி நினைவு அறக் கட்டளை சார்பில், கேள்வி எழுப்புவதா? கேள்வி எழுப்பாமல் இருப்பதா? -இதுதான் இப்போதைய கேள்வி என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.

முன்பை விட இப் போது ஏராளமான அறி ஞர்கள் உள்ளனர். ஆனால், அதிகாரத்தோடு மோத அவர்கள் மறுக்கின்றனர். சிந்தனை சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுக் கப்படும்போதுகூட அவர் கள் மவுனம் சாதிக்கின் றனர். ஏனெனில் அவர் கள் சர்ச்சையற்ற முறை யில் இயங்க விரும்புகின் றனர் அல்லது தங்களது அறிவாற்றலை அமுக்கிக் கொள்ள சம்மதிக்கின் றனர் என்று அவர் குறிப்பிட்டார்.பண்டைய இந்தியாவில் பிராமணர் அல்லாத சிந்தனையாளர் கள் நாத்திகர்கள் அல்லது கடவுள் மறுப்பாளர்கள் என்று முத்திரை குத் தப்பட்டு ஒடுக்கப்பட்ட னர். தற்போது இந்துத் துவா போதனைகளை ஏற்க மறுப்பவர்கள் அத் தனை பேரும் மார்க்சிஸ்ட் டுகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படு கின்றனர் என்று ரொமிலா தாப்பர் குறிப் பிட்டார்.

பகுத்தறிவுச் சிந்தனை என்பதுதான் நம்முடைய அறிவுலகின் பாரம்பரியம். அதை முன்னெடுத்துச் செல்ல அறிஞர்கள் துணிச்சலுடன் முன்வர வேண்டும் என்று குறிப் பிட்ட அவர், இனவெறி, மதவெறி அடிப்படையில் மனித உரிமைகள் மறுக் கப்படுவதற்கு எதிராக அறிஞர்கள் குரல் கொடுக்கவேண்டும் என் றார்.

மவுன சாட்சியாகி விடுகின்றனர்

இன்றைய நாளில் அறிஞர்கள் என்று அறியப்படுபவர்கள் அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்ப அஞ்சுகின்றனர்.

அதிகாரத்தில் உள்ளவர் கள் தங்களது சிந்தனைகளை திணிக்கும்போது அதற்கு எதிராக எதுவும் பேசாமல் மவுன சாட்சி யாகி விடுகின்றனர் என் றார் அவர்.

மதச்சார்பற்ற கோட் பாடுகளை முன்வைக்கும் புத்தகங்கள் தடை செய் யப்படுகின்றன. பாடத் திட்டங்கள் மதவெறி அடிப்படையில் திருத்தி எழுதப்படுகின்றன.

மத மற்றும் அரசியல் தலை யீடுகளின் காரணமாக இவ்வாறு நடக்கிறது. அரசியல் அதிகாரத்தை கண்டு அறிஞர்கள் அஞ்சு வதால்தான் சிறு எதிர் வினையைகூட செய்வ தற்கு இவர்கள் தயங்கு கின்றனர் என்று குறிப் பிட்ட ரொமிலா தாப்பர், மத அடிப்படையிலான அரசியல் திட்டமிட்டு வளர்க்கப்படுவதால் மக் களிடையே பகைமை உருவாக்கப்படுகிறது. இதனால் சுதந்திரமான சிந்தனை மறுக்கப்படு கிறது. அறிஞர்கள் இத் தகைய போக்கை எதிர்த்து மேலும் மேலும் கேள்வி எழுப்ப வேண்டும். அறி வுத்தளத்தில் போர்புரிய வேண்டும். ஆனால், இதுமிகவும் குறைவாகவே உள்ளது என்று அவர் குறிப்பிட் டார்.

Read more: http://viduthalai.in/e-paper/90194.html#ixzz3HaOgZcvR

தமிழ் ஓவியா said...

காஞ்சி சங்கர மடத்தில் ரூ.3992 கோடி கருப்புப் பணம்! திடுக்கிடும் தகவல்!


காஞ்சி சங்கர மடத்தில்
ரூ.3992 கோடி கருப்புப் பணம்!
திடுக்கிடும் தகவல்!

விசாரணை தொடங்குகிறது!

காஞ்சிபுரம், அக்.29_ காஞ்சிபுரம் சங்கர மடத் திற்கு ரூ.3992 கோடி ரூபாய் வங்கிகளில் வைக் கப்பட்டுள்ளது. இந்தப் பண வருவாய்க்கான விவரங்கள் இல்லை; கணக்கில் வராத இந்தக் கருப்புப் பணம் குறித்து விசாரணை தொடங்கப் படுகிறது.

2011_2012 ஆம் ஆண் டில் சங்கர மடத்திற்கு ரூபாய் 3992 கோடி நன் கொடையாக வந்த விவரம் குறித்து மத்தியப் புலனாய் வுத்துறை விசாரணையைத் துவங்கியுள்ளது. தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் காஞ்சி சங்கராச்சாரியாரைத் தலை வராகக் கொண்டு காஞ்சி காமகோடி மடம் செயல் பட்டு வருகிறது. இம்மடத் திற்கு சொந்தமான வங்கிக் கணக்கில் 2011_2012 ஆம் ஆண்டிற்கான வரவாக ரூபாய் 3992 கோடி வைப்பு நிதியாக செலுத்தப்பட் டது. இதை காஞ்சி மடத் தின் தலைமைக் கணக் காளர் எஸ்.சிறீதர் உறுதி செய்தார்.

இதுகுறித்து மத்திய வருமான ஆய்வுக்குழுத் தலைவர் அசோக்குமார் என்பவருக்கு காஞ்சி சங் கரமடம் எழுதிய கடிதத் தில் 2011_2012 ஆம் ஆண்டு எங்களுக்கு நன்கொடை மூலம் ரூ.3992 கோடி வரு வாய் வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ரூபாயை காஞ்சி மடத்தின் மூன்று வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு சரியான வரு வாய் ஆதாராமுமின்றி 3992 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறையில் புகார் கொடுக்கப்பட்டது. அதில், காஞ்சி சங்கர மடத்தின் நன்கொடையா ளர்கள் பட்டியலில் 100 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையில் நன்கொடை கொடுத்தவர்களின் பெயர் தான் உள்ளது.

இதில் யாரும் லட்சங்கள்கூட கொடுக்கவில்லை. மேலும் கடந்த இரண்டு ஆண்டு களாக மடத்தின் கணக்கில் 15 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் காட்டப்பட்டுள் ளது.

ஆனால், திடீரென 2011_2012 ஆம் ஆண்டில் சங்கரமடத்தின்சார்பில் ஆக்ஸிஸ் வங்கி, அய்.சி. அய்.சி.அய் வங்கி மற்றும் சிட்டி யூனியன் வங்கிக் கணக்கில் 3992 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தொகைக்கு மேல் நேரடியாக நன் கொடை பெற இயலாத நிலையில் சங்கரமடம் எப்படி கோடிக்கணக்கில் அதுவும் ஓர் ஆண்டிற்குள் நன்கொடையாக பெற்றி ருக்க முடியும்? இந்த நன் கொடையாகப் பெற்ற பணம் யாரிடமிருந்து வந்தது என்பதையும் சரிவர கணக்கில் காட்டவில்லை என்று புகாரில் கூறப்பட் டுள்ளது. இப்புகாரைக் குறித்து விசாரணை செய்து வரும் மத்திய புலனாய்வுத் துறை யின் இணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) அபிசேக் கோயல் கூறும்போது,

சங்கரமடத்தில் நடந்த இந்தப் பண மோசடி தொடர்பாக தனிப்பிரிவு அமைத்து விசாரணை செய்து வருகிறோம்.

ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள நீலகண்டாச்சாரியா ஸ்வாமிகள் மற்றும் எட்டு நபர்கள் எங்களின் விசா ரணை வளையத்திற்குள் வந்துள்ளனர். பெங்களூரு மற்றும் சென்னையில் பல் வேறு இடங்களில் சோதனை நடத்தியுள் ளோம். இது தொடர்பாக விஜயநகர் காவல்நிலை யத்தில் 15 பேர்மீது பண மோசடி மற்றும் தவறான வழியில் பணம் சேர்த்தல் தொடர்பான குற்றப்பிரி வில் வழக்கு பதிவு செய் துள்ளோம்.

சங்கர மடத்தில் நடக்கும் இந்த பண மோசடி சில கருப்புப் பண முதலைகளுக்கு தங்களது பணத்தை வெள்ளையாக்க உதவி புரிந்துள்ளது. அத்துடன் சங்கரமடத்திற்கும் தரகுத் தொகைக் கிடைத்துள்ளது.

இதுகுறித்து மேலும் விரிவான விசாரணை நடந்து வருகிறது, என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/90183.html#ixzz3HaOqrDmr

தமிழ் ஓவியா said...

பேயை விரட்ட பிரார்த்தனையாம் குமரியில் இளம்பெண் சாவு!


கன்னியாகுமரி, அக்.29- குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்துள்ள சாலூர் பகுதியைச் சேர்ந்த ரூபனின் மனைவி சுபிதா (வயது 27) உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த சுபிதாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் உடல் நிலை சரியாகாததால் அவருக்கு பேய் பிடித்திருக்கலாம் என சந்தேகப்பட்டு காட்டா விளை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் அவரை தங்கவைத்து ஜெபம் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஜெபக்கூட வளாகத்தில் தீயில் உடல் கருகிய நிலையில் சுபிதா பிணமாகக் கிடந்தார். இந்தத் தகவல் அறிந்ததும் பொது மக்கள் கடையாலு மூடு காவல்நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். சுபிதாவின் உடல் அருகே மண்ணெண்ணெய் கேன் இருந்தது. அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக காவல்துறையினர் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

பேய் என்பது இல்லாத ஒன்று. பேய் அந்தப்பெண்ணுக்கு (சுபிதா) பிடித்திருப்பதாகக் கூறி அந்த பெண்ணை ஜெபக்கூட்டத்தில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். ஜெபக்கூட்டங்களுக்குச் சென்றால் நோய் குணமாகி விடுமா?

பேய், ஜெபக்கூட்டம் போன்ற மூடநம்பிக்கைகளை நம்பாமல் உரிய முறையில் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்திருந்தால் அந்தப் பெண்ணைக் காப்பாற்றி இருக்கலாம். மூடநம்பிக்கை என்ற பெயரால் அந்தப் பெண் சாகடிக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை. இனியாவது திருந்துவார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/90191.html#ixzz3HaP0NmVg

தமிழ் ஓவியா said...

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் தகவல்


டில்லி, அக்.29- பாலியல் தொழிலுக்கு சட்டப்படியான அங்கீகாரம் வழங்குவதன் மூலம் பாலியல் தொழிலாளர்களுக்கு பணி நேர வரையறை, ஊதியம், உடல் நலம் மற்றும் அவர்களின் குடும்பத் தினருக்கு கல்வி மற்றும் பொருளாதார மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று லலிதா குமாரமங்கலம் கூறுகிறார்.

தேசிய மகளிர் ஆணையத்தின் National Commission for Women (NCW) தலைவர் லலிதா குமாரமங்கலம் பாலியல் தொழிலை ஒரு தொழிலாக முறைப் படுத்தி, அத்தொழிலில் பணத்துக்காக ஈடுபட்டுள்ள பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றப்போவதாகவும், பாலியல் தொழிலை சட்டப்படியாக ஒரு தொழிலாக அங்கீகரிப்பதுடன், பாலியலில் ஈடுபட்ட பெண்கள் எச்.அய்.வி. நோய் மற்றும் பாலியல் நோய்களிலிருந்தும் பாதிக்கப்படு வதைக் குறைக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, பெண் களுக்கான தேசிய ஆணையத்தின் சார்பில் 8.11.2014 அன்று அதிகாரமுள்ள குழுக்கூட்டம் நடைபெறும். அக்கூட்டத் தில் சட்ட ரீதியிலான அங்கீகாரத்தை வாங்கி ஒரு தொழிலாகவும் முறைப்படுத் தப்படும். ஏராளமான பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளனர். சட்ட அங்கீகாரம் வழங்கியபிறகு, பாலியல் தொழிலில் கட்டாயமாகத் தள்ளப்படுவது கடும்நடவடிக்கைகளால் குறைந்துவிடும் என்று லலிதா குமாரமங்கலம் கூறுகிறார்.

பாலியல் தொழில் முறைப்படுத்தப் படாமல் இருப்பதால் அத்தொழிலில் உள்ள பெண்கள் விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஆணு றைகள் இல்லாமல் சுகாதாரமற்ற நிலை ஏற்படுகிறது. எச்.அய்.வி. மற்றும் பிற எஸ்.டி.டி. போன்ற பாலியல் நோய்கள் பரவிவிடும்.

கொல்கட்டாவில் உள்ள சோனாகச்சி (பாலியல் தொழிலுக்கான பகுதி)யில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கம் நன்றாக செயல்பட்டு வருகிறது. அவர்களின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. வாடிக்கை யாளர்களாக வருபவர்கள் வழக்கத்துக்கு மாறாக ஆணுறைகளைப் பயன்படுத்த விரும்பாததால் நோய்களைப் பரப்புபவர் களாக உள்ளனர். பாலியல் தொழிலாக முறைப்படுத்தப்படும்போது இவை யாவும் மாற்றப்படும்.

பணிநேர வரையறை, ஊதியமுறை, உடல்நலம் ஆகியவை பாலியல் தொழி லாளர்களுக்கு வரையறுக்கப்படும். அவர்கள் குடும்பத்தாருக்கு கல்வி, பொருளாதார மாற்று ஏற்பாடுகள் உரு வாக்கப்படும். பெண்களுக்கு பாலியலைத் தவிர்த்து மற்ற பணிவாய்ப்புகளும் அளிக்க வேண்டிய தேவை உள்ளது. பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திவரும் இடைத்தரகர்கள், பாலியல் முகவர்கள் ஆகியோர் பெண்களைப்பயன்படுத்தி வருகின்றனர்.

பாலியல் தொழிலாக, சட்ட ரீதியான அங்கீகாரம் அளிக்கப்படும்போது, அவர்களுக்கு இடமில்லாமல் போகும். பெண்களுக்காகப் போராடிவருபவர்கள் பாலியல் தொழிலாக அங்கீகரிப்பதை ஏற்காமல், எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அப்னே ஆப் விமன் வேர்ல்ட்வைட் Apne Aap Women Worldwide என்னும் பாலியல் தொழிலை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய ஆணிவேர் போன்ற அமைப் பின் சார்பில் டிங்கு கன்னா கூறுகையில்,

பாலியல் தொழிலாக சட்ட அங்கீகாரம் அளித்தால் விபச்சாரத்தை ஊக்கப்படுத்திவிடும். எங்கள் அனுபவத் தின் அடிப்படையில் பெண்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அவர் களின் விருப்பமில்லாதநிலையிலும் பாலி யல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறார்கள். பாலியல் தொழிலில் உள்ள பெண்கள் அவர்களுக்காக மட்டும் வேலை செய் வதில்லை. அவர்களும் அத்தொழிலில் ஒருவர் என்றுதான் உள்ளனர். இடைத் தரகர்கள் தொழிலில் இருக்கிறார்கள். அவர்கள் பாலியல் தொழிலால் லாப மடைகிறார்கள். சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டால், அப்பெண் களுக்காகப் பணியாற்றிவரும் நாங்கள் எங்கள் பணிகளை முடித்துக் கொள் ளுவோம். என்றார்.

உச்சநீதிமன்றத்தின் வழக்குரைஞரும், தொண்டு நிறுவனத் தலைவருமாகிய சக்தி வாகினி ரவி காந்த் பாலியல் தொழிலை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டு மின்றி, பெண்களை பாலியல் தொழிலில் தள்ளுகின்றவர்களுக்கு கடுமையான தண்டனையும் அளிக்க வேண்டும் என்றார். மேலும் அவர் கூறும்போது, இதுபோன்ற மோசமான சமூகக் கேட் டைக் களைவதற்கு உச்சநீதிமன்றம் பல்வேறு சிபாரிசுகளை செய்துவந்தாலும், எந்த அரசும் உரிய நடவடிக்கையை எடுப்பதே இல்லை என்றார்.

Read more: http://viduthalai.in/page-2/90176.html#ixzz3HaPGxGJV

தமிழ் ஓவியா said...

மனிதன் என்றால்...


மனிதன் யார் என்றால் நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப்பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சியும் வாழும் ஜீவப் பிராணிகளேயாகும்.

- (குடிஅரசு, 23.10.1943)

Read more: http://viduthalai.in/page-2/90174.html#ixzz3HaPaSImt