Search This Blog

20.10.14

இதுதான் வால்மீகி இராமாயணம் -36


இதுதான் வால்மீகி இராமாயணம்

அயோத்தியா காண்டம்
ஒன்பதாம் அத்தியாயம் தொடர்ச்சி


பரதனுக்குரிய அரசை இராமனுக்கு தர தசரதன் முயல்கிறான். பரதனை வேண்டுமென்றே நாட்டைவிட்டு அனுப்பினான். இப்போது இராமன் நாட்டைவிட்டு அதுவும் ஒரு குறித்த கால அளவுக்குப் பிரிந்திருக்க சம்மதிக்கமாட்டேனென்கிறான். இராமனோ இலக்குவனோடு காட்டுக்குப் போகிறான். ஆனால் இலக்குவன் போவதைப்பற்றித் தசரதன் ஒரு சொல்லும் சொல்லவில்லை. அவன் காடேகுவதைப் பற்றிய கவலையும் தசரதனுக்குக் கொஞ்சமும் இருந்த தாகத் தெரியவில்லை. இதை மொழி பெயர்பாளரு ளொருவராகிய சீனிவாசய்யங்காரும் கவனித்து ஒரு குறிப்புமெழுதியிருக் கிறார். அயோத்தியா காண்டம் சருக்கம் 38, பக்கம் 164-இல் இலட்சுமணனைப் பற்றித் தசரதர் பேசுவதே யில்லை. இந்த இடத்தில் ஏதோ வாய் தவறி அவனுடைய பெயரைச் சொல்லி விட்டார் போலும். காட்டிற்குப் போகையிலும் அவனுடன் பேசவில்லை, ஆசிர்வதிக்கவு மில்லை, வருந்தவுமில்லை. ஆச்சரியம்! என்று அவர் ஆச்சரியத்துடன் குறித்துள்ளார். இவ்விதமாக மற்றைய மக்களிடத்தில் பாராமுக மாகவும் வெறுப்பாகவும் நடந்து கொள்வதற்கும், இராமனிடத்தில்மட்டும் மிகவும் பற்றுதலோடு நடப்ப துடன், அவனுக்காகத் தன் உயிரையும் கொடுக்கத் தயாராயிருப்பதற்கும் வேறு காரணம் வேண்டும். இல்லையேல் இத்தசரதன் இவ்வாறு நடக்கக் காரணமே யில்லை. தசரதனுக்கு எண்ணிறந்த மனைவியர் இருந்தன ரென அறிகிறோம். அவர்களுள் கைகேயியைத் தவிர இராமனுடைய தாயாகிய கோசலையுட்பட எல்லா மனைவியரையும் தசரதன் வெறுத்தனனென்றும் அறிகிறோம். இதைப்பற்றி இராமன் கூட காடேக விடைபெறும் பொழுது, அவனைக் கண்டிக்கிறான். இதற்குக் காரணம் ஏனெய பெண்களிலும் கைகேயி பெற்றிருந்த அழகும் அறிவுமே. அவளுடைய பேரழகில் அவன் தானே ஈடுபட்டான். அவளுடைய அறிவால் அவனுக்கு மிகவும் அன்பு டையாள் போல் நடந்த நடை, அவனை அவளிடத்தில் மேலும் மேலும் அதிகமான பற்றுதலோ டிருக்குமாறு செய்தது. இவ்விதமானதே இவனுக்கு இராமனிடத்தில் ஏற்பட்ட பற்றுதலும்.


இராமன் இயல்பாகவே பேரழகன். அவனுடைய சிறந்த அறிவாலும் தசரதனிடத்தில் நெருங்கிப் பழகி அவனுடைய பற்றுதலுக்கும் இடமானான். தசரதன் இராமனுடைய அழகில் ஈடுபட்டுப் போலி ஒழுக்கத்தால் மேலும் மயங்கிக் கிழவனானபடியால் கைகேயியிடத்தில் கொண்ட பற்றைப் போல இவனிடத்திலும் பற்றுதல் கொண்டு இவனை எப்போதும் தன் பக்கத்தில் வைத்துப் பார்க்க வேண்டும் என்றும், அடிக்கடி மார்போடு தழுவ வேண்டும் என்றும் மிகவும் விரும்பினான். இதனாலேயே தசரதன் இராமனை ஏனைய மக்களினும் அதிகமாக நேசித்து, அவனுக்காக எத்தகைய வஞ்சகத் தீய செயல் களையும் கள்ளத்தனமாகச் செய்யத் தயாராகிறான்.

விசுவாமித்திர முனிவன் இராமனை அழைக்க வந்தபோது தசரதன், (பாலகாண்டம் சருக்கம் 20) இராமன் நால்வரில் மூத்தவன், மற்றவர்களைவிட அவனிடத்தில் எனக்கு விசேஷ பிரேமை, அவனைவிட்டுப் பிரிந்தால் ஒரு முகூர்த்தமாவது என் உயிர் தங்காது என்று கூறுகிறான். அயோத்தியா காண்டம் முதல் சருக்கத்தில் மற்றைய பிள்ளைகளைவிட இராமனிடம்  அவன் அதிகப் பற்றுதல் வைத்திருந்தானென வால்மீகி கூறுகிறார். அதனாலேயே அவனுக்கு முடிசூட்டி அவனழகைப் பார்க்க விரும்புகிறான். மூன்றாம் சருக்கத்தில் வால்மீகி நமது கருத்தைத் தெளிவாகக் கூறுகிறார். இராமனுடைய அழகை எத்தனை தடவை பார்த் தாலும் போதுமென்று தோன்றாது. உத்தம இலட் சணங்களும் அழகும் வாய்ந்த புருசனைக் கண்டு  ஸ்திரீகளுடைய மனம் களிக்கும். தன்னைப் பார்க்கும் புருஷர்களுடைய கண்களையும் மனத்தையும் இராமன் கொள்ளை கொள்ளுகிறவன். கோடைகாலத்து வெயிலில் தப்பியவர்கள் மழையைப் பெய்து குளிர்ச்சியைக் கொடுக்கும் மேகத்தை எத்தனைமுறை பார்த்தாலும் திருப்தியடையாதது போலத் தன்னை நோக்கிவரும் இராமனைப் பார்த்துப் பார்த்துத் தசரதன் திருப்தி அடையவில்லை. அவன் இராமனைக் கைகளாற்பற்றியெடுத்து இறுகத் தழுவி ஆனந்த பரவச மானான் எனக்கூறுகிறார். அயோத்தியா காண்டம் சருக்கம் பதினொன்றில் இதையே வால்மீகி முனிவர் தசரதன் வாக்காலும் மிகவும் விளக்கமாகக் கூறுகிறார். தசரதன் கைகேயியைத் தூக்கி மடிமீது வைத்துக் கொண்டு, அழகில் ஈடற்றவளே பெண்களுக்குள் உன்னைக் காட்டிலும் எனக்குப் பிரியமானவர்களு முண்டோ? என் உயிரினும் சிறந்தவனாகிய அந்த இராமன் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். ஒரு முகூர்த்தகாலமாவது எவனைப் பார்க்காமலிருந்தால் என் உயிர் தரிக்காதோ, அந்த இராமன்மேல் ஆணை யிடுகிறேன். உன் எண்ணத்தைச் சொல். என் தேகத் தையும், பிராணனையும், பரதன் முதலிய மற்ற புத்திரர் களையும், மற்ற பந்துக்களையும் இழக்கச் சம்மதிப்பேன், இராமனை மாத்திரம் விட்டுப்பிரியச் சம்மதிக்க மாட்டேன், அவன்மேல் ஆணையிட்டுச் சொல்லு கிறேன்; உன் மனத்திலிருக்கும் விருப்பத்தைச் சொல் என்று வேண்டிக்கொள்கிறான். இது கைகேயி வரத்தைக் கேட்காத முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சி. இதனால் இராமனிடம் அவன் கொண்ட மோகம் இன்னவிதமான தென்று கூறுகிறான். குடிவெறியரும், காமவெறியரும், கவலைமிக்கு மனமுடைந்தாரும் தங்கள் மனத்திலுள்ள உண்மை எண்ணங்களைப் பிறரறியுமாறு கூறுவரென்பது அறிஞர்கள் முடிவு. அவ்வாறே காமவெறி மிக்குடைய தசரதன் தன் மனத்தில் தோன்றுகிற எண்ணங்களை ஒளியாமல் வெளியிட்டுள்ளான். அதுவும் கைகேயி முன்னிலையிலேயே உன் மேல் அன்பு கொண்டதுபோல ஆணான இராமனிடமும் அன்புடையேன், உன் மகன் பரதன் முதலியோரை இழக்கச் சித்தமாயிருக்கிறேன். ஆனால் இராமனைச் சிறிது நேரம் விட்டுப் பிரியவும் சம்மதியேன் என்று கூறவேண்டுமானால், அவன் இராமனிடம் கொண் டிருந்த மயக்கம் எத்தன்மையதாயிருத்தல் வேண்டும்?

                          -----------------------"விடுதலை”17-10-2014

Read more: http://viduthalai.in/page1/89461.html#ixzz3GVhtUq3q

14 comments:

தமிழ் ஓவியா said...

அவசியம்


கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மையோடு நடந்து கொள்வதே முக்கியமும் அவசியமுமாகும்.
(விடுதலை, 17.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/89624.html#ixzz3GhBuLlqc

தமிழ் ஓவியா said...

பலவித வெள்ளத்தில் மக்கள் தவிப்பு!


திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்கள் ஒரு முறை எழுதி இருந்தார்கள். ஒரு 24 மணி நேரம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மழை பெய்தால் தலைநகரம் மக்கள் நடமாட, புழங்கிடத் தகுதியற்றதாக, சகஜ வாழ்க்கைக்கு லாயக்கற்றதாக மாறி விடுகிறது என்று எழுதினார்.

36 ஆண்டுகளுக்குப் பிறகும் தலைநகரமான சென்னை அதே நிலையில் தானிருக்கிறது என்பது வருத்தத்திற்கு உரியது.

எங்கு பார்த்தாலும் மழை நீர்த் தேக்கம், போக்குவரத்துப் பாதிப்பு, அலுவலகங்களுக்குச் செல்ல முடியாத ஊழியர்களின் பரிதாப நிலை, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் கட்டாய நிலை. இத்தியாதி இத்தியாதி வசதிக் குறைவுகள் சென்னை மாநகரைப் புரட்டிப் போட்டுள்ளன.

இவ்வளவு மழை பொழியும் என்று எதிர்பார்க்க வில்லை; உடனடியாகப் பரிகாரம் செய்ய முடியாது, படிப்படியாகத்தான் செய்ய முடியும் என்கிறார் வணக்கத்திற்குரிய மேயர்.

மக்கள் நடந்து செல்ல முடியவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இரு சக்கர வாகனங்களில் செல்லக் கூடியவர்களின் நிலை ஆபத்துக்குரியதாக இருக்கிறது.

ஆங்காங்கே குழிகள் திறந்து கிடப்பதால் அதில் வாகனங்கள் விழுந்து உயிருக்கே ஆபத்தாகும் நிலை. மின் கம்பிகள் அறுந்து விடுவதால், ஏற்படும் விபரீதம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும்போது மட்டும் இதுபற்றியெல்லாம் பேசபடுகிறதே தவிர, அந்தப் பருவம் முடிந்தவுடன் அதனைப்பற்றிப் பொது மக்களும் சிந்திப்பதில்லை. அரசு - மாநகராட்சியும் திட்டமிடுவதில்லை.

சென்னைப் பெரு நகரின் எல்லைகள் விரிவடைந்து கொண்டே செல்லுகின்றன - மக்கள் பெருக்கம் இன்னொரு பக்கம் அச்சுறுத்தல்; வெளியூர்களிலிருந்து தலைநகருக்கு வரும் பொது மக்கள் நாள்ஒன்றுக்குப் பல லட்சம் - வாகனங்கள் பெருக்கம் என்பவையெல் லாம் சேர்ந்து சென்னைப் பெருநகரத்தை மூச்சுத் திணறலுக்கு ஆளாக்கி விடுகின்றன.

அரசியல் காழ்ப்புணர்வால் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பூங்காக்கள் எல்லாம் குப்பைத் தொட்டிகளாகி விட்டன. எதில்தான் அரசியல் பார்ப்பது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.

போதும் போதாதற்கு இந்த மூடத்தனப் பண்டி கைகள்! அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மெச்ச வேண்டும் என்பதற்காகக் கடன் வாங்கியாவது பண்டிகைகளைத் தாம்தூம் என்று கொண்டாடும் மூடத்தனங்கள்; தீபாவளி இதில் முதல் இடத்தை வகிக்கிறது.

தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் என்பதை அறியாமலேயே அதன்மீது ஒரு கவர்ச்சி! வியாபாரிகள் மக்கள் பணத்தைக் கைப்பற்றிட கைத்திறன் காட்டும் விளம்பர யுக்திகள் - இவற்றின் காரணமாக கொட்டு மழையிலும் கூட துணிக் கடைகளிலும், நகைக் கடைகளிலும் நெரிசலோ நெரிசல்! மக்களிடம் பகுத்தறிவு வளர்ச்சி பெருகாவிட்டால் எல்லா வகையிலும் இடர்ப்பாடுகளை வருந்தி அழைத்து அவதிப்பட வேண்டியநிலை!

அதுவும் விஞ்ஞானம் பெற்றெடுத்துக் கொடுத்த இந்த ஊடகங்கள் செய்யும் அநியாயம் இருக்கிறதே - அவற்றிற்கு மன்னிப்பே கிடையாது.

அப்பப்பா, ஒவ்வொரு மாதமும் வந்து போகும் பண்டிகைகளைப் பற்றி சற்றும் அறிவுக்குப் பொருந்தாத அளப்புகள் போட்டிப் போட்டுக் கொண்டு காகித ஊடகங்கள் ஆன்மிக இணைப்பு இதழ்களை வெளி யிட்டு, அதிலும் மக்களின் பணத்தைப் பறிக்கின்றனர்.

மூடத்தனமான தல புராணக் குப்பைக் கதைகளை அதில் கொட்டி, கடைசி வரியில் என்பது... நம்பிக்கை... ...என்பது ஆன்மிகம் என்று பொறுப்பைத் தட்டிக் கழித்து வெளியிடும் மோசடித்தனம்!.

தடுக்கி விழுந்தவன் அரிவாள்மணையில் விழுவது போல பக்தியால் புத்தி கெட்டுப் போன மக்களை மேலும் மேலும் பழி வாங்குகின்றனவே இந்த ஊடகங்கள் நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகை என்பதையும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கூறியதை நினைத்துப்பார்த்தால் ஆகா எவ்வளவு தொலை நோக்கோடு இந்த அறிவுலக ஆசான் கணித்துள்ளார்! என்று வியக்க வைக்கிறது.

மழையில் ஆரம்பித்து பத்திரிகை வரை கடுமையாக விமர்சிக்கப்படுகிறதே என்று எண்ண வேண்டாம். மூடச் சங்கிலி ஒவ்வொன்றையும் தொட்டுத் தொட்டு, இணைக்கிறதே என் செய்ய!

மழை வெள்ளத்திலும் தீபாவளிச் சந்தை கொடி கட்டிப் பறக்கிறது. ஜேப்படிக்காரர்களின் கைவரிசை இன்னொரு பக்கம்.

பள்ளிப் பருவத்தில் பாடத் திட்டத்தில் ஆரம்பித்து , பாட்டி சொல்லும் கதைகள் முதல் ஒரு பெரிய மாற்றம், மறுமலர்ச்சி வரவில்லை என்றால் இந்த மக்கள் மேலும் மேலும் துன்பச் சுமையால் முதுகெலும்பு முற்றிலும் முறிந்து பக்கவாதத்தில் வாழ்வைத் தொலைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

Read more: http://viduthalai.in/page-2/89625.html#ixzz3GhC3WpzT

தமிழ் ஓவியா said...

ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் பலே மோடி?


-குடந்தை கருணா

சனிக்கிழமை அன்று நடை பெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மோடி அரசு ஒரு முடிவை எடுத்து அறிவித்துள்ளது.

இனி, காந்தி அடிகள் பிறந்த, மறைந்த நாள் மட்டும் தான், மத்திய அரசின் நிகழ்வாக நடத் தப்படும்.

இதுவரை கொண்டாடப் பட்டு வந்த பிற தலைவர்களின் நிகழ்வுகளை, அரசு நிகழ்ச்சியாக இனி இருக்காது என்ற முடிவை மோடி அரசு எடுத்துள்ளது.

ஆகா, மோடியைப் பார், அனாவசியமாக, அரசு விழாக்கள் எடுத்து செலவு செய்வதை எப்படி தடுத்து நிறுத்தி, சிக்கனத்தைக் கடைப்பிடித்து, நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு இட்டு செல்கிறார் என ஊடகங்களும், நம்மூர் குருமூர்த்திகளும், சோக்களும், வரிந்து கட்டிக்கொண்டு பேசு வார்கள்.

ஆனால், அரசு விழாவாக இது நாள் வரை, நிகழ்த்தப்பட்ட தலைவர்களின் பிறந்த நாள், மறைந்த நாள் என நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சரண்சிங், போன் றோரின் நிகழ்வுகள் இனி நடைபெறாது என்பதை, மறைமுகமாக மோடி அரசு கூறியுள்ளது.

அதுமட்டுமல்ல, இந்த பட்டி யலில் பாபாசாகிப் அம்பேத்கர், பாபு ஜெகஜீவன்ராம் ஆகியோரும் அடங்குவர் என்பதையும் நாம் புரிந்துகொண்டால்தான், மோடியின் ஆர்.எஸ்.எஸ். அரசு, இந்த முடிவை எந்த கோணத்தில் எடுத்துக்கொண்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்த முடிவை இங்கே உள்ள ஊடகங்கள் பெரிதாக செய்தி வெளியிட்டதாக தெரியவில்லை;

அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் பெயரில் ஒவ்வொரு திட்டமாக இனி அறிவிக்க இருக் கிறார்கள். அதன் முதல் துவக்கம் தான், அக்டோபர் 16-ஆம் தேதி யன்று, மோடி துவக்கிய பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஸ்ராமேவ் ஜெயதே கார்யகிரம் திட்டம்; அதாவது, தீன்தயாள் உபாத்யாயா தொழிலாளர் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

ஆர்.எஸ்.எஸில் முழு நேர பிரச்சாரக இருந்து, ஜனசங்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும் இருந்த தீன்தயாள், சங்கராச்சாரியா,ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெக்டேவர் ஆகியோ ரின் வாழ்நாள் சரித்திரத்தைப் பற்றி எழுதியவர்.

அவரது வாழ்நாளில், தொழி லாளர் போராட்டம் எதிலும் கலந்து கொண்டதாக ஒரு குறிப்பும் நமக்கு இல்லை; இருந்தாலும், அவரது பெயரில் தொழிலாளர் திட்டம் ஒன்று துவக்கப்பட்டிருக் கிறது மோடி அரசால் என்றால், இவர்களின் போக்கு எப்படி செல்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.

இந்த அய்ந்து ஆண்டுகளில், மோடி அரசில் இன்னும் ஆர். எஸ்.எஸ். தலைவர்களின் பெயரில் பல திட்டங்கள் சூட்டப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.

ஆக, ஒரு பக்கம், ஏற்கனவே, இருந்த தலைவர்களின் நிகழ்வுகள், மெல்ல மெல்ல இருட்டடிப்பு செய்யப்படும்; ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் பெயரில் திட் டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

இது தான், மோடி அரசுக்கு உள்ள உண்மையான அஜெண்டா. ஒரு கல்லில் பல மாங்காய் அடிக் கும் வித்தை இது தான்.

Read more: http://viduthalai.in/page-2/89627.html#ixzz3GhCQJG9G

தமிழ் ஓவியா said...

ஜெயலலிதாவுக்காக நாரிமன் வாதாடியது தெளிவான விதிமீறல்: முன்னாள் நீதிபதி கருத்து


சென்னை, அக்.20- சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக் கப்பட்டு பெங்களூரு சிறையில் இருந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தனக்கு இடைக் கால பிணை வழங்கக் கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் சார்பில் மூத்த வழக்குரைஞர் களில் ஒருவரான பாலி எஸ்.நாரிமன் ஆஜராகி வாதாடி னார்.

அதன் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கும் அவருடன் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட அவரது தோழி சசிகலாவுக்கும், அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரனுக்கும் நிபந்தனையுடனான இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.

அதே சமயம், பாலி எஸ்.நாரிமன், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இந்த வழக்கில் வாதாடியது தவறு என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

காரணம் இந்த சொத்துக் குவிப்பு வழக்கு உள்பட ஜெயலலிதாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பல்வேறு ஊழல் வழக்குகள் தொடர் பான விசாரணைகளை எதிர்த்து ஜெயலலிதா முன்னர் வழக்கு தொடுத்தபோது, இதே நாரிமன், தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பாகவும், திமுக சார்பாகவும், ஜெயலலிதாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்திலும்,

இந்திய உச்சநீதிமன்றத்திலும் வாதாடியிருப்பதாக கூறும் திமுகவைச் சேர்ந்த வழக் குரைஞர் சண்முகசுந்தரம், இப்படி கடந்த காலத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடியவர், அதே வழக்கு தொடர்பான இந்த பிணை கோரும் வழக்கில் ஜெயல லிதாவின் சார்பில் வாதாடுவது வழக்குரைஞர்களுக்கான தார்மீக நெறிமுறைகளை மீறும் செயல் என்று சண்முக சுந்தரம் விமர்சித்திருந்தார்.

சண்முகசுந்தரம் முன்வைக்கும் விமர்சனம் சரியே என்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு. இதில் நாரிமன் வெறும் தார்மீக நெறி முறைகளை மட்டும் மீறவில்லை;

மாறாக வழக்குரைஞர் களுக்கான இந்திய பார் கவுன்சிலின் நடத்தை விதி முறைகளையும் தெளிவாக மீறியிருப்பதாக கூறும் நீதிபதி சந்துரு, இதற்காக நாரிமன்மீது டில்லி பார் கவுன்ஸிலும், இந்திய பார் கவுன்ஸிலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், பாலி எஸ்.நாரிமனின் மகன், இந்திய உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் சூழலில் நாரிமன் இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக் குரைஞராக பணிபுரிவதே தவறு என்கிறார் நீதிபதி சந்துரு.

இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உறவினர் கள் யாரும், அந்த நீதிபதிகள் பணிபுரியும் உயர்நீதி மன்றங்களில் பணிபுரியக் கூடாது என்று இதே இந்திய உச்சநீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தி, வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார் நீதிபதி சந்துரு.

இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அவர்களின் உறவினர்களில் இருக்கும் வழக்குரைஞர்களுக்கும் இந்திய உச்சநீதிமன்றம் பரிந்துரைக்கும் அந்தக் கட்டுப் பாடுகள் மற்றும் வழிமுறைகள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும்,

அவர்களின் உறவினர்களுக்கும்கூட அப்படியே பொருந்தும் என்று தெரிவித்த நீதிபதி சந்துரு, இது தொடர்பில் இந்திய பார் கவுன்சில் வழக்குரை ஞர்களுக்கான நடத்தை விதிமுறைகளில் ஒரு சிறு திருத்தம் செய்வது இதை மேலும் வலுப்படுத்தும் என்றும் வலியுறுத்தினார்.

Read more: http://viduthalai.in/page-2/89649.html#ixzz3GhD6411m

தமிழ் ஓவியா said...

புறந்தள்ளும் காய்கறிகளில் உண்டு எல்லையற்ற பயன்கள்

இன்றைய நவீன உலகில், உணவு கூட சத்தின்றி மாறியுள்ளது. இதனாலேயே பல்வேறு நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது. இதில், பெரும்பாலான வர்களுக்கு உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை.

இதனாலேயே பல மருத்துவர்கள், காய் கறிகளை அதிகளவில் உணவில் சேர்க்க வலியுறுத்து கின்றனர். ஆனாலும், பலரும் சத்தில்லாத காய்கறிகளை மட்டுமே உணவில் சேர்க்கின்றனரே தவிர, சத்தான காய் கறிகளை புறந்தள்ளி விடுகின்றனர். நாம் புறம்தள்ளும் காய்கறிகளில், சத்துகள் மட்டுமல்ல;

பல நோய்களுக்கு மருத்துவ சக்தியும் உள்ளது. அந்த வகையில், சில காய்கறிகளும் அதில் உள்ள குணங்களும்:

கத்திரிக்காய்: பொதுவாக கத்திரிக்காய் என்றாலே பலருக்கு பிடிப்பதில்லை. சிலருக்கு இது எட்டி காயாக கூட இருக்கலாம். ஆனால், இதில் அரிய குணங்கள் இருப்பது யாருக்கும் தெரியாது. ஆனால், இதை தரம் பிரித்து உண்பதிலும் கவனம் இருப்பது அவசியம் கத்திரிக்காயில் பல வண்ணங்கள் உண்டு, என்றாலும் அனைத்திலும் உள்ள சத்துக்கள் ஒன்றுதான்.

பிஞ்சு கத்திரிக்காய் சமைப்பதற்கு ஏற்றது. முற்றின கத்திரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி, சிரங்கை ஏற்படுத்தும். இதில், தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தரும் வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால், வாயு, பித்தம், கபம் போகும். அதனால்தான், பத்தியத்துக்கு இக் காயை பயன்படுத்துகின்றனர். அம்மை நோயால் பாதிக்கப் படுபவர்கள் இதை உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அவரைக்காய்: அவரையிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரை பிஞ்சு நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இது சூட்டுடம் புக்கு மிகவும் ஏற்றது. ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் உகந்தது. மேலும், இதில் உள்ள நார்ச் சத்து உடலை வலுவாக்கும் என்பதுடன், அதிக எடை உள்ளவர்கள் இதை உட்கொண்டால், உடம்பு இளைக்கவும் உறுதுணை புரியும்.

வெண்டைக்காய்: பொதுவாக வெண்டைக்காயை மூளை வளர்ச்சிக்கு ஏற்றது என்று குறிப்பிடுவது உண்டு. ஆனால், இதன் சுபாவம் குளிர்ச்சி தருவது. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது.

இது வறண்ட குடலை பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி உயிர்சத்துக்கள் உள்ளன. இதை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட வயிற்றுப்போக்கும் நீங்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். வெப்ப இருமலை குணமாக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/89643.html#ixzz3GhDTYvgb

தமிழ் ஓவியா said...

இதயம் காக்க எளிய வழிகள்!


இதயம் காக்க எளிய வழிகள் நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து கொண்டால் போதும். மாரடைப்பு வாய்ப்பை 95 சதவீதம் குறைத்துவிடலாம். அதற்குத்தான் இந்த யோசனைகள்...

ரத்த அழுத்தம் சரியாக இருக்கட்டும்!

மாரடைப்பு ஏற்படுவதற்கு உயர் ரத்த அழுத்தம் ஒரு முக்கியக் காரணம். சாதாரணமானவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. ரத்த அழுத்தம், 120/80 என்பதுதான் நார்மல். இது 140/90 என்ற அளவைத் தாண்டக்கூடாது. அதேநேரம் 90/60 என்ற அளவுக்குக் கீழேயும் இறங்கி விடக்கூடாது.

ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் உணவில் உப்பைக் குறைப்பது, புகைப்பழக்கத்தைக்கைவிடுவது, ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், அப்பளம், வடாம், சிப்ஸ் போன்ற உப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துக் கொள்வது என்று வாழ்க்கைமுறைகளைச் சரி செய்துகொண்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இவர்கள் மாதம் ஒருமுறை ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துங்கள்!

ரத்தத்தில் சர்க்கரை அளவு வெறும் வயிற்றில் 80-100 மி.கி. / டெ.லி. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 120-140 மி.கி. /டெ.லி. என்று இருக்க வேண்டும். இந்த அளவுகள் மிகுந் தால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்று பொருள்.

மற்றவர்களைவிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 2 மடங்கு அதிகரிக்கிறது. ஆகவே, சரியான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றியும், தேவையான மாத்திரை, இன்சுலின் போன்ற சிகிச்சைகளை எடுத்துக்கொண்டும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வேண்டியது முக்கியம்.

கொழுப்பு கவனம்!

மாரடைப்புக்கு வாய்ப்புள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை ரத்தக் கொழுப்பு அளவுகளைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு மொத்தக் கொழுப்பு 200 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாகவும், டிரைகிளிசரைட் கொழுப்பு 150 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாகவும், எல்.டி.எல். எனும் கெட்ட கொழுப்பு 100 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாகவும், ஹெச்.டி.எல். எனும் நல்ல கொழுப்பு 40 மி.கி./ டெ.லி.க்கு அதிகமாகவும் இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவுப்பழக்கம்

அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு மற்றும் முழுத் தானி யங்கள், நார்ச்சத்து மிகுந்த பயறு வகைகள், ஓட்ஸ், துவரை, பட்டாணி, அவித்த கொண்டைக்கடலை, வெண்ணெய் நீக்கப்பட்ட பால், மோர், கீரைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள். தக்காளி, அவரை, வெண்டைக்காய், வெள்ளைப் பூண்டு, முருங்கை, புடலங்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், முட்டைக்கோஸ், காளிஃபிளவர், புரோக்கோலி ஆகியவை இதயம் காக்கின்ற உணவுகள்.

அசைவம் சாப்பிடுபவர்கள் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியைச் சாப்பிடலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்குப் பாதுகாப்பு தரும் ஒரு சத்துப்பொருள். இது மீனில் உள்ளது. மீனையும், கோழி இறைச்சியையும் எண்ணெயில் பொரிக்காமல் வேகவைத்து குழம்பாக்கிச் சாப்பிடுவது நல்லது.

பழங்களில் ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், கொய்யா, மாதுளை, அன்னாசி நல்லது. காபிக்குப் பதிலாக க்ரீன் டீ குடிக்கலாம். இந்த உணவுகளில் கொழுப்பு குறைவு. கலோரிகளும் அதிகரிக்காது. ஆகவே, இவற்றை இதயத்துக்கு இதம் தரும் உணவுகள் என்கிறோம்.

தவிர்க்கவேண்டியவைகள்

பாமாயில், தேங்காய் எண்ணெய், வனஸ்பதி (டால்டா), முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி. தயிர், வெண்ணெய், பாலாடை மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள், தேங்காய், முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, அப்பளம், வடை, பஜ்ஜி, போண்டா, பூரி, சிப்ஸ், சீவல், சமோசா, எண்ணெயில் ஊறிய, வறுத்த, பொரித்த உணவுகளை ஓரங்கட்டுங்கள்.

செயற்கை இனிப்புகள், நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், விரைவு உணவுகள் ஆகியவற்றை ஒதுக்கிவிடுங்கள். எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கிப் பயன்படுத்துவதைத் தவிருங் கள். மதுவையும் தவிர்த்து விடுங்கள். 40 வயதுக்குப் பிறகு உப்பு, இனிப்பு, கொழுப்பு இந்த மூன்றையும் குறைத்துக் கொள்வது மிக நல்லது.

நல்ல சமையல் எண்ணெய் எது?

ஒரு சிறந்த சமையல் எண்ணெயில் செறிவுற்ற கொழுப்பு அமிலம், ஒற்றைச் செறிவற்ற கொழுப்பு அமிலம், பலவகை செறிவற்ற கொழுப்பு அமிலம் ஆகிய மூன்றும் 1 : 1 : 1 என்ற அளவில்தான் இருக்க வேண்டும்.

ஆனால், இப்போது நாம் பயன்படுத்தும் எண்ணெய்களில் இந்த விகிதத்தில் எந்த எண்ணெயும் இல்லை. இந்த விகிதத்தில் கொழுப்பு அமிலங்கள் கிடைப்பதற்கு பலவித எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து, அளவோடு பயன்படுத்தலாம்.

சூரியகாந்தி எண்ணெய், வறுப்பதற்குக் கடலை எண்ணெய், தாளிக்க நல்லெண்ணெய் என்று வாரம் ஒருமுறை சுழற்சி முறையில் பயன்படுத்தினால் கொழுப்பு அமிலங்கள் மிகாது. இதயத் துக்கும் நல்லது.

Read more: http://viduthalai.in/page-7/89644.html#ixzz3GhDlQNHg

தமிழ் ஓவியா said...

வெந்நீர் அருந்துங்கள் இளமையாக இருக்கலாம்


என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக்கேட்டிருப்போம்.

ஆனால், மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறுகின்றனர்.

உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும்.

வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் இன்னும் சிறந்தது. டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும் முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும்.

அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன் முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி நல்ல வளர்ச்சி அடையும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும்.

மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள். அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும். உடற்பயிற்சி மய்யத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தான்.

மதியநேர சாப்பாட்டிற்கு பின் சிறிது வெந்நீர் பருகினால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புக்களை அகற்றிவிடும் ஆற்றல் கொண்டது. காலை வேளையில் மலம் எளிதில் வரவில்லையா ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும்.

Read more: http://viduthalai.in/page-7/89645.html#ixzz3GhDw4MZk

தமிழ் ஓவியா said...

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மதுராந்தகம் ஏழுமலை மறைந்தாரே!


செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலை வரும் ஆற்றல்மிகு கழக செயல்வீரருமான மதுராந்தகம் மானமிகு மு.ஏழுமலை (85) அவர்கள் இன்று மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரி தும் வருந்துகிறோம்.

தந்தை பெரியார் அவர்களை அழைத்து மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தி அனைத்து மக்களையும் திரும்பிப் பார்க்கச் செய்தவர். தையற் கலைஞரான அவர் வாய் எப்பொழுதும் தந்தை பெரியார் கொள்கையைப் பிரச்சாரம் செய்த வண்ணமாகவே இருக்கும். கழகம் போராட்டத்தை அறிவித்தால், முன்னணித் தோழராக விரைந்து வரக்கூடியவர்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில், உள்ளூரில் அனைத்து மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கருஞ்சட்டை வீரர்.

விலை மதிப்பில்லாத அவர்தம் இயக்கத் தொண்டுக்கு, அந்தச் சுயமரியாதைச் சுடரொளிக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம்! அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக் கும் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், இரங் கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்துவார்.

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page-8/89656.html#ixzz3GhECxLd5

தமிழ் ஓவியா said...

தீபாவளி கவிதை

தீபாவளி
கொண்டாடும்
திராவிடா!
உன்னைத்தான்.

திக்கித் திணறாமல்
நேருக்கு நேர்
பதில் கூறு பார்க்கலாம்

எழவு வீட்டிலா
திருமணம்?
திராவிடர் வீட்டிலா
தீபாவளி?

என்னடா
வெட்கக்கேடு?
கன்னக்கோலா
செங்கோல்?

சாக்கடையா
சந்தனம்?
பூக்கடையா
பொதிசேறு?

தமிழர் பண்பாட்டு
தாடை மூக்கு
தட்டுப்படுகிறதா
கூறு!

ஆரியன் வைத்த கண்ணியிலே
அறுந்தது திராவிட
வேரல்லவா!

சங்க இலக்கியத்தில்
உண்டா? தமிழர்
சரித்திரத்தில்தான்
கண்டவொன்றா?

கிருஷ்ண பரமாத்மா
சத்தியபாமா
சத்தியமா
சொல்லுக!

என்ன உறவு?
என்ன உறவு?
இந்தத் திராவிட
இனத்துக்கு?

இருளுக்கு எதிரி
சூரியனே? இன
உரிமைக்கு எதிரி
ஆரியனே!

பூமியைப் பாயாகச்
சுருட்டுவதா?
புத்தியுள்ளோர் - இதைப்
போய் நம்புவதா?

வராக (பன்றி)
அவதாரத்திற்கும்
பூமாதேவிக்கும்
பிள்ளை பிறக்குமா?

சரி சரி
அதை விடுங்கள்
ஒரு கேள்வி
கேட்க ஆசை!

பன்றி அவதாரத்திற்கு
தீபாவளியன்று
எதை வைத்துப் படைக்க உத்தேசம்?

நல்லாதான்
வருது வாயில்!
நாக்கைப் பிடுங்க
நாலு வார்த்தை கேட்கும் முன்

மரியாதையாக
மாறிவிடு!
மூடக் கழுதையை
உதைத்துவிரட்டு

மானமும் அறிவும்
மனிதனுக்கழகு - இது
ஞாலப் பெரியார்
ஞானத் திரட்டு!

- கவிஞர் கலி. பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...

பூரிசங்கராச்சாரியைக் கைது செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு!


தலித்துகள், சூத்திரர்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று கூறிய

பூரிசங்கராச்சாரியைக் கைது செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு!

டில்லியில் பூரிசங்கராச்சாரியார் கொடும்பாவி எரிப்பு!

பூரிசங்கராச்சாரியாரின் ஜாதி வெறிப் பேச்சை நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த ஆளுநரும் வரவேற்றுள்ளார்


ராஞ்சி, அக்.21-_ தாழ்த் தப்பட்டவர்களும், சூத்தி ரர்களும் கோயிலுக்குள் நுழையக் கூடாது. சாத்திரம் அனுமதிக்கவில்லை என்று கூறிய பூரி சங்கராச் சாரியாரைக் கைது செய்ய வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. பூரி சங்கராச்சாரியாரை எதிர்த்து டில்லியில் கண் டன ஆர்ப்பாட்டம் நடத் தப்பட்டன - _ போராட் டக்காரர்கள் பூரி சங்கராச் சாரியார் உருவப் பொம்மையை எரித்தனர்.

கோவில் என்பது தூய் மையாக இருக்கவேண்டிய ஓர் இடமாகும் இங்கு தூய்மைப்பணியாளர்களுக்கு என்ன வேலை,? வர்ணாஷ் ரமம் கூறியத்தை தெளி வாகப் பின்பற்றவேண்டும் என்று பூரி சங்கராச் சாரியார் பேசி உள்ளார்.

ராஞ்சியில் நடந்த மத விழா ஒன்றில் பூரி சங்க ராச்சாரியார் நிச்சலானந்தா பேசும் போது பகவத் கீதை யில் 16-ஆவது அத்தியா யத்தில் வர்ணாஷ்ரமம் பற்றி குறிப்பிடப்பட்டுள் ளது. அதாவது நான்கு வர்ணங்கள் மனித குலத் தின் நன்மைக்காக உரு வாக்கப்பட்டவைகள். அவரவர்கள் அவர் களுக்கான பணியைச் செய் வதே சிறப்பான ஒன்றாகும், இதற்காகத்தான் வர்ண முறையை உருவாக்கினார் கள். ஆனால் இந்த வர்ண முறையை மீறி அதற்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக தற்போது நடந்து வருகிறார்கள்.

அதாவது சனாதனிகள் கோவிலுக்கு நுழைய தடையில்லை, ஆனால் சூத்திரர்கள் தலித்துகள் எப்படி கோவி லுக்குள் நுழையலாம்? வர் ணாஷ்ரம கொள்கையின் படி தூய்மையானவர்கள் மாத்திரமே கோவிலுக்குள் நுழைய முடியும், அப்படி இருக்க தூய்மைப் படுத்தும் பணியில் உள்ளவர்கள் கோவிலுக்குள் நுழைய எப்படி அனுமதிக்க முடி யும்? இது அவர்களாகவே புரிந்து கொண்டு கோவி லுக்குள் நுழைவதைத் தவிர்க்கவேண்டும் இது சாஸ்திரத்தில் கூறியுள்ளது. என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிர தேச ஆளுநர் ராம் நரேஷ் மற்றும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்தியப்பிரதேச ஆளுநர் ராம்நரேஷ் கூறிய தாவது சங்கராச்சாரியாவின் பேச்சில் எந்த தவறும் இல்லை அவர் சாஸ்தி ரத்தை மேற்கோள்காட்டிப் பேசினார் என்று கூறி யிருந்தார்.

சங்கராச்சாரியாரின் இந்த பேச்சிற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரி வித்த நிலையில் ஞாயிறு (19.10.14) தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையம் ஜார்கண்ட் காவல்துறை பூரி சங்கராச்சாரியார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தர விட்டது. பல்வேறு அமைப்புகள் கண்டனம் பூரி சங்கராச்சாரியின் தலித் விரோதப் பேச்சின் காரணமாக சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக் கும் உயர்சாதியினருக்கும் உள்ள ஜாதி பேதத்தை மேலும் அதிகரித்து ஜாதீய தீண்டாமையைத் திணிப் பவர்களுக்கு துணிச்சலை ஊட்டும் செயலாக இருக் கிறது என்று பல்வேறு அமைப்புகள் சங்கராச்சாரி யாருக்கு கண்டனம் தெரி வித்துள்ளன. கடந்த சனிக்கிழமை அன்று கிழக்கு டில்லியின் பல்வேறு சமூக அமைப் பின் தலைவர்கள் ஒன்று கூடினர். பிறகு சங்கராச் சாரியாரின் உருவப் பொம்மை தீவைத்துக் கொளுத்தப்பட்டது.

கான்பூர் டில்லி முக்கிய சாலையில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் சங்க ராச்சாரியாரை உடன டியாகக் கைது செய்யச் சொல்லி சாலைமறியலில் ஈடுபட்டனர். தூய்மைப் பணியாளர் கழகம், தலித் சமூக அமைப்பு, அகில பாரதிய சபாய் மஸ்தூர் காங்கிரஸ் மற்றும் வால்மிகி மஸ்தூர் சங் போன்ற அமைப்புகள் டில்லியில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தின. டில்லி மாநகராட்சி தூய்மைப்பணி தொழி லாளர் கழகத்தின் தலைவர் சஞ்சய் கேலத் கூறும் போது சமூகத்தில் கல்வி கற்று மருத்துவர்களாகவும், இந்திய அரசு ஆட்சிப் பணியாளர்களாகவும் (அய்.ஏ.எஸ்) மற்றும் அரசியல் துறையில் பல் வேறு உயர் பொறுப் புகளில் இருக்கும் தலித் துகளை மிகவும் கீழ்த் தரமாக தூயமையற்றவர்கள் என்று கூறிய சங்கராச் சாரியை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக் கிறோம்.

அவர் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்து விட்டனர் என்ற செய்தி வருகிறது. சமூகத் தில் ஒருவர் தீண் டாமையை பச்சையாக ஆதரிக்கிறார் அவர் ஒரு மதத்தலைவர் என்றதும் அவருக்கு காவல்துறை சிறப்பு மரியாதை தருகிறது. அவரது பேச்சு சட்ட விரோதமானது என்று காவல்துறைக்கு தெரிய வில்லையா? அல்லது அவர்களுக்கு மேலுள்ள வர்கள் இச்சாமியாருக்கு ஆதரவானவர்களா? என்று கண்டன ஆர்ப் பாட்டத்தின் போது அனல் கக்கப் பேசினார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/89677.html#ixzz3GppEJj28

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வறுமைக்கோடு

தீபாவளியன்று குத்து விளக்கில் ஒருமுகம் ஏற்றி வைத்தால் மத்திம பலன், இரண்டு முகங்கள் ஏற்றி வைத்தால் குடும்ப ஒற்றுமை; மூன்று முகங் கள் ஏற்றி வைத்தால் புத்திரனால் சுகம், நான்கு முகங்கள் ஏற்றி வைத் தால் பசு போன்ற செல் வம், அய்ந்து முகங்கள் ஏற்றி வைத்தால் செல்வப் பெருக்கம்; ஒரு முகம் ஏற்றி வைத்தால் கிழக் கைப்பார்த்து விளக்கை வைக்க வேண்டுமாம்.

ஏன் ஆறுமுகம் வைத் தால் இன்னும் கூடுத லாகப் பலன் கிடைக் காதா? குத்து விளக்கு என்றால் என்ன என்று தெரியாத நாட்டில் உள்ள மக்கள் எல்லாம் செல்வச் செழிப்போடு வாழ்கிறார் களே - குத்து விளக்கை ஏற்றி வைத்து நம் மக்கள் கண்ட பலன் வறுமைக் கோடுதானே?

Read more: http://viduthalai.in/e-paper/89684.html#ixzz3GppNxAB5

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு


மதம், மதத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனிதச் சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொள்கிறது.
(விடுதலை, 14.10.1971)

Read more: http://viduthalai.in/page-2/89685.html#ixzz3GppheY3s

தமிழ் ஓவியா said...

மோடி வீசிய மோசடி வலை


தீபாவளி தசரா
விஜயதசமி ஆயுதபூஜை போகி சபரிமலை இன்னும் பலப்பல ....

இப்படி ஹிந்து மதப்பண்டிகைகள் குப்பை கொட்டுவதையே கொண்டாட்டமாக்கி மனநோயாக மாற்றி வைத்திருக்கும் போது
அந்த சனாதன தர்மத்தின் இன்றைய அரசியல் தலைவர் தூய்மை இந்தியா பற்றி திருவாய் மலர்ந்திருக்கிறார்
வெளி நாடுகளில் குப்பை போடாமலிருப்பது பொது ஒழுக்கம்
இந்தியாவில் மதப்பண்டிகைகளால் குப்பைகளைப் போடுவதே பொது ஒழுக்கமாக
இருக்கிறது. காணிக்கை என்ற பெயரில் கடவுளிடமிருந்து தொடங்கி பொது ஒழுக்கமாய் மாறிப் போயிருக்கிற லஞ்சம் மாதிரி.
இந்த மனநோயை மாற்றுவற்கு ஒன்பது பிரமுகர்கள் என்ன செய்துவிட முடியும்?
வேண்டுமானால் நஞ்சை செலுத்தியவர்களே உறிஞ்சி எடுக்கட்டும்
செய்ய வைப்பாரா பிரதமர்?

- உடுமலை வடிவேல்

Read more: http://viduthalai.in/page-2/89690.html#ixzz3GpqNwljj

தமிழ் ஓவியா said...

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆச்சரியத்தை அளிக்கிறது!


பிரபல வழக்குரைஞர் ராஜீவ் தவான் விமர்சனம்


புதுடில்லி, அக். 21- சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு 21 நாள்களிலேயே ஜாமீன் வழங்கியிருப்பது, பாரபட்சமானது என்று உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான் தெரிவித்துள்ளார். கொலைக் குற்றவாளிகளும், கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்களும் உடல்நலத்தை காரணம் காட்டி, மேல்முறையீடு செய்வதற்குக் கால அவகாசம் கோரி ஜாமீன் பெற முடியுமா என்று ராஜீவ் தவான் கேள்வி எழுப்பியுள்ளார்.

உச்சநீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு, ஏன் ஜாமீன் வழங்கியது என்ற தலைப்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், டெய்லி மெயில் என்ற நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார்.

அந்தக் கட்டுரையில் கூறியிருப்பதாவது:- இந்தக் குற்றத்திற்காக, ஜெயலலிதா 18 ஆண்டுகளாக ஜாமீன்தான் பெற்றிருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சுமார் ஓராண்டுக்குப் பிறகும், தேசிய லோக் தளக் கட்சியின் தலைவர் சவுதாலா, இரண்டு மாதங் களுக்குப் பிறகும்தான் ஜாமீன் பெற்றனர் என்று கூறியுள்ளார். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஓராண்டு சிறையில் இருக்க நேர்ந்தது என்றும், சத்யம் நிறுவனத்தின் அதிபர் மூன்றாண்டுகளாக சிறையில் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேல்முறையீட்டிற்கான தயாரிப்பு வேலைகளை செய்வதற்காக ஜாமீனா?

ஆனால் நான்காண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு 21 நாள்களிலேயே ஜாமீன் வழங்கப்பட் டிருப்பது நீதித்துறையின் ஆச்சரியம் என்றும் அவர் கூறியுள்ளார். மேல்முறையீட்டிற்கான தயாரிப்பு வேலை களை செய்வதற்காக ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப் படவேண்டும் என்று அவரது வழக்குரைஞர் உச்சநீதி மன்றத்தில் வாதிட்டிருக்கிறார். இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றிருக்குமானால், இதேபோல கொலைக் குற்றவாளிகள், கற்பழிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கும், மேல்முறையீட்டுக்கான தயாரிப்புகளை செய்வதற்கு ஜாமீன் வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தீர்ப்பில் குறை இருப்பதாக பாலி நாரிமன் கூறிய வாதமும் அடிப்படையற்றது என்பதை சுட்டிக் காட்டியுள்ள தவான், குற்றவாளிஎன்ற தீர்ப்பை நிறுத்தி வைப்பதற்கும், தண்டனையை நிறுத்தி வைப்பதற்கும் வேறுபாடு உள்ளது என ஜெயலலிதாவின் வழக்குரைஞர் வாதாடியிருப்ப தையும் சுட்டிக் காட்டியுள்ளார். தண்டனையை நிறுத்தி வைத்து மட்டுமே ஜாமீன் பெற்றிருப்பதால் ஜெயலலிதா தேர்தலில் நிற்பது சாத்திய மற்றது என்றும், அப்படி தேர்தல் நேரத்தில் தீர்ப்பையும் நிறுத்தி வைக்குமாறு ஜெயலலிதா நீதிமன்றத்தை அணு கினால் தற்போதைய வாதம் அவருக்கு எதிராகத் திரும்பும் என்றும் தவான் கூறியுள்ளார். இதற்கு முன்னரும்கூட, தீர்ப்பை நிறுத்தி வைப்பதற்கும், தண்டனையை நிறுத்தி வைப்பதற்கும் இடையிலான வேறுபாட்டை சுட்டிக்காட்டி ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்றாலும், எந்த வழக்கிலும் இவ்வளவு விரைவாக 21 நாள் களில் ஜாமீன் வழங்கப்பட்டதில்லை என்றும் வழக்குரைஞர் தவான் தெரிவித்துள்ளார்.

அரசை ஆட்டுவிப்பார் ஜெயலலிதா!

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஜாமீன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு சாதகமாக செயல்பட்டிருக்கிறதோ என பொதுமக்களை எண்ணத் தூண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அரசமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக நின்று ஜெயலலிதா தமிழக அரசை ஆட்டுவிப்பதற்கும்தான் இது உதவும் என்று கூறியுள்ளார். நீதிமன்றத்தில், தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு என பொதுவான நெறி முறைகள் இல்லை என்றும், தற்போது வழங்கப்பட்டுள்ள ஜாமீன், ஏழை, எளியோருக்கு எதிரான பாரபட்சம் என்றும் ராஜீவ் தவான் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/89700.html#ixzz3GprdTyG2