Search This Blog

23.10.14

இதுதான் வால்மீகி இராமாயணம்-37

இதுதான் வால்மீகி இராமாயணம்

அயோத்தியா காண்டம்

ஒன்பதாம் அத்தியாயம் தொடர்ச்சி


சருக்கம் 12-இல் என் மூத்த மகனான இராமனைப் பார்க்கப் பார்க்க எனக்குப் பிரீதி வளர்கிறது. அவனை ஒரு கணம் பார்க்காமலிருந்தாலும் என் உயிர் போய்விடும். இராமனில்லாமல் என் தேகத்தில் பிராணன் நிற்காது என்று கதறிக் கொண்டு தசரதன் கைகேயி காலில் விழுகிறான். நான்கு பிள்ளைகளுக்கும் இந்த நாட்டைச் சமமாகப் பிரித்துக் கொடுக்கிறேன். அல்லது பரதனுக்கு முடி சூட்டுவிக்கிறேன். இராமன் மாத்திரம் வயது சென்ற என்னருகில் இருக்கும்படி ஒப்புக்கொள். இப்படிச் செய்யாவிட்டால் உன் எண்ணம் நிறைவேறாது என்று மறுபடியும் கூறுகிறான்.

இராமன் காட்டுக்குப் போகேனென்று கூறிவிட்டால் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருமே என்று இராமனுடைய பொய்யொழுக்கத்தை விரும்புகிறான். பின் விடைபெறவந்த இராமனை முரட்டுத்தனத்தால் அரசனாகும்படி தூண்டுகிறான். இவ்விதமெல்லாம் செய்வதற்குக் காரணம் அவன் இராமனிடம் கொண் டிருந்த காமமேயாகும்.

இராமனுக்கு அரசைத் தரப் பலவிதத்திலும் முயன்றும் பலன் பெறாமல் காட்டிற்குப்போகும் இராமனைத் தொடர்ந்து ஓடுகிறான். இலக்குவனைப் பற்றி அவன் பேசவுமில்லை, வாழ்த்தவுமில்லையென முன்னரே குறித்துள்ளோம். பரதனை வேண்டுமென்று நாட்டை விட்டனுப்பினான். இராமனை அனுப்ப வருந்துகிறான். இராமன் போகும் போது அவனை நோக்கி வருந்துகிறான். இலக்குவனை நோக்கி ஒரு சிறிதும் வருந்தவில்லை. இராமன் விரைவாகப்போக அவன் கண்ணுக்கு மறைகிறவரை அவனைப்பார்த்தபடியே நிற்கிறான். அவ்விடத்திலிருந்து தன் கண்களை அவன் எடுக்கவேயில்லை. இராமனை வழியனுப்புமுன் தசரதன் (சருக்கம் 34) இன்று இரவு நீ புறப்படுவதில் எனக்குக் கொஞ்சமேனும் பிரியமில்லை. நீ போகவே கூடாது. 

 உன்னை ஓர் இரவு முழுவதும் பார்க்கும் வாய்ப்பாவது எனக்குக் கிடைக்கு மல்லவா? என்று கூறி அன்றிறவு மட்டுமாவது அவனைத் தன்னருகில் வைத்துப் பார்க்க விழைகிறான். இராமன் போனபின் திரும்பி வரும்போது தசரதன், நல்ல சந்தனங்களால் அலங்கரிக்கப்பட்ட உடலுடன் சுகமான தலையணைகளின் மேல் சாய்ந்து கொண்டு அழகு வாய்ந்த வேலைக்காரிகள் விசிறிபோடத் தூங்கிய இராமன், இன்றிரவு எந்தக் காட்டிற்படுப்பான்? இராமனில்லாமல் ஒரு நொடியாவது என்னால் பிழைக்க முடியாது (சருக்கம் 42) என்று இராமன் உடலழகையே நினைத்து நினைத்து அதைப் பார்த்து மார்புறத் தழுவ இடமில்லையே என்று ஏங்குகின்றான். இராமன் இவ்விதமான செயல்களுக்கும் மனமிசைந்தவனே என்பது, வாயில் காவலராகிய கிழவரும் அவனைக் காணும்தோறும் மார்புறத் தழுவுவர் என்று முந்திய கட்டுரையில் இனிது விளக்கினோம். அழகிய பெண்கள் பலர் விசிற இராமன் படுத்துறங்குவானென்பதுதான் அவனுடைய ஒழுக்கநிலை இன்ன தன்மையதென விளங்குகிறது (சுருக்கம்)

அரண்மனையைடைந்தவுடன் தசரதன், இராமன் தாயான கோசலை வீட்டிற்கு என்னைச் சீக்கிரத்தில் கொண்டு போய் விடுங்கள். அதைத் தவிர வேறிடத்தி லிருந்தால் என் ஏக்கம் தணியாது என்கிறான். கோசலை யின் அந்தப்புரம் அடைந்தவுடன் கட்டிலில படுத்துக் கொண்டு இரவில் தசரதன் கோசலையைப் பார்த்து, உன் கையால் நன்றாக என்னைத் தொடு, இராமனுடன் காட்டிற்குப் போன கண்கள் இன்னும் திரும்பவில்லை. 

அவனைப் பார்க்கும் நல்வினை எனக்கு இல்லாமற் போனாலும், அவனைப் பெற்ற உன்னையும் பார்க்க என் கண்களால் முடியவில்லை. அவனைப் பார்த்த கண்கள் அவனுடைய அழகிலேயே ஈடுபட்டு அவனுடன் போயின. போனவை திரும்பி வருமா? இராமனைப் பார்க்காமல் தவிக்கும் எனக்கு அவனைப்பெற்ற உன்னைத் தொட்டால் அந்தத் தாபம் நீங்கும். இராமனைப் பார்க்காவிட்டாலும் அவனுடைய தாயான உன்னைப் பார்த்துப் பேசித்தொடுவதால் அதற்குச் சமமான சுகம் கிடைக்கும். என்னை மன்னித்து உன் கைகளால் அன்புடன் தொடு என்று தவிக்கிறான். இது துன்ப மிகுதியால் அவனுடைய உள்ளக்கிடை வெளியான இடம். 

இதனால் தசரதன் இராமனாகிய ஆண் மகனுடைய அழகில் ஈடுபட்டு மிகக் கிழவனானதால் அவனைப் பக்கத்தில் வைத்துப் பார்த்துப் பேசி அவனைத்தொட்டு மார்போடு அடிக்கடி அணைப்பதால் ஏதோ சுகம் கிடைக்கிறதென மயங்கி அச்சுகத்திலேயே ஈடுபட்டு, அதனால் அச்சுகம் தரும் இராமனுக்காகத் தனது மகனான பரதனை வஞ்சித்துப் பல அக்கிரமமான செயல்களைச் செய்யத்துணிந்து, புரிகின்றனனென்பது வெள்ளிடை மலைபோல் விளங்குகின்றது.

தசரதன் தன்னைத் தொடுமாறு எத்தனை தடவை புலம்பினாலும் கோசலை எண்ணம் சுயநலத்திலேயே இருக்கிறது. அவள் அவனைத் தொடாமல் கைகேயி தனக்குச் செய்யவிருக்கும் கேடுகளை நினைத்துப் புலம்பி இராமனைக் காட்டுக்கனுப்பாதிருந்தால், அவனைப் பிச்சை எடுத்தேனும் பிழைக்கச் செய்கிறேனென்று அகங்காரத்துடன் கூறி மேலும் மேலும், அவனை வருத்தத் தொடங்குகிறாள். இத்தகைய கோசலையைக் கற்புடையாளுக்கோர் எடுத்துக்காட்டாகக் கூறுதல் மிகவும் பொருத்தமன்றோ? என்னே, அவளுடைய இழிதகைமை!

கோசலை சீதையை வழியனுப்பும்போது கூறிய பேச்சால் அவளும் சீதையின் நடையில் அய்யுறவுடை யவளாகவே தெரிகிறது. அதற்கு சீதை கூறிய மறுமொழி பொருத்தமானதே! கடைசியாகச் சுமித்திரை கோசலை யைத் தேற்றும்போது கூறும் மொழிகளால் அவர் களெல்லோரும் எப்படியாவது பரதனைக் கொன்றேனும் இராமன் நாடுபெற வேண்டுமெனவே சூழ்ந்திருந்தன ரென்பது தெளிவாகிறது. நிற்க. இவ்வரலாற்றைக் கம்பர் எவ்வாறு கூறுகின்றனரென ஆராய்வோம்.

முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது இயலுமா? என ஒரு பழமொழி வழங்குகிறது. அதன் கருத்து பூசணிக்காய் மிகவும் பெரிய உருவினதாதலின், அதை உண்ணுவதற்காக இலையில் படைத்துள்ள சோற்றில் மறைத்தல் இயலாது என்பது அதாவது பெரிய பொய்களைக் கூறினால் உலகம் கண்டுபிடித்துவிடும் என அறியலாம். கம்பரோ முழுப்பூசணிக்காயைச் சோற்றிலே மறைத்துள்ளார். அதாவது கம்பர் இக்கட்டுரையிலுள்ள கதை முழுவதையுமே மறைத்து விட்டார். இத்தகைய பெரும் புளுகரைத் தமிழ்தாய் எங்ஙனம் பெற்றாள்! அவரால் தமிழன்னைக்கு அவ மானமே ஒழிய பெருமையன்று. சிலர் திருவள்ளு வருடன் இக்கம்பரையும் இணையாகக் கூறுகின்றனர். அவர்கள் இக்கம்பருடைய பொய்மை நிறைந்த உருவினையும் திருவள்ளுவருடன் இக்கம்பரையும் இணையாகக் கூறுகின்றனர். அவர்கள் இக்கம்பருடைய பொய்மை நிறைந்த உருவினையும் திருவள்ளு வருடைய உண்மை உருவினையும் சற்றுத் தம் சித்தத்தில் சிந்திப்பரேல், தாம் எண்ணுவது மிகவும் தீமையைத் தரும் எண்ணமென உணர்வது திண்ணம். ஏனெனில் மெய்மையே ஓருருவாம் தெய்வப்புலமைத் திருவள் ளுவர் முன் பொய்மையே ஓருருவாம் கம்பரையும் எண்ணுவது அறக்கொடுஞ்செயலே.

கம்பர் தசரதனைப் பிரேதம் போலக்கிடத்திவிட்டு இராமனை அவன் முன்னிலையில் போனதாகவே கூறாமல் தாய்மார்களிடம் விடைபெற்றுத் தேரேறிச் சென்றான் எனக்கூறிச் செல்கின்றனர். இக்கதையைக் கூறும் அவர் பாடல்கள் மூன்றே அவை பின்வருவன:

1. தாதைவாயிற் குறுகினன் சார்தலும்
கோதைவில்லவன் தாயரைக் கும்பிடா
ஆதி மன்னனை ஆற்றுமின் நீர் என்றான்
மாதராரும் விழுந்து மயங்கினார்.

2. ஏத்தினார் தம்மகனை மருகியை
வாழ்த்தினார் இளையோனை வழுத்தினார்
காத்து நல்குமின் தெய்வதங்காளென்றார்
நாத்தழும்ப அரற்றி நடுங்குவார்!

3. அன்னதர் அரிதின் பிரிந்தபின்
முன்னர் நின்ற முனிவனைக் கைதொழா
தன்னதாருயிர்த் தம்பியும் தாமரைப் பொன்னும் தானும் ஓர் தேர்மிசைப் போயினான்!


வால்மீகி வரலாற்றுப்படி இராமன் வசிட்டனை வணங்கவில்லை. கம்பர் வணங்கிச் சென்றானென் கின்றார்.
-------------------------- தொடரும்--------------”விடுதலை” -22-10-2014

13 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நீராடினால்...

மயிலாடுதுறையில் அய்ப்பசி மாதத்தில் 30 நாட்களில் காவிரி தீர்த் தத்தில் துலாக் கட்டத்தில் நீராடுவார்கள் பாவங் களும், நோய்களும் பறந் தோடி விடும். கங்கையும், யமுனையும் கூட தங் களின் பாவங்களைப் போக்கிக் கொள்ள துலாக் கட்டத்துக்கு வந்து காவிரி யில் மூழ்கி எழுவார்கள். முடவன் ஒருவன் 30 நாள் முடிந்து மறுநாள் வந்தா னாம். மூழ்குவதற்கு தாமதமாக வந்த தனக்குக் கெதி மோட்சம் வேண்டி இறைவனிடம் மன்றாடி னானாம். இறைவன் முட வன் முன்தோன்றி கார்த் திகை முதல் நாளில் நீராடு உனக்கு அருள் செய் வோம் என்றானாம். அதன்படி முடவன் நீராட முடம் நீங்கியதாம். அது முதல் இந்நாளுக்கு முட முழுக்கு என்று பெயராம்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் முடவர்கள் நீராடிக் கொண்டுதானே இருக்கிறார்கள். எந்த முடவனுக்கு முடம் நீங்கியது?

ஆன்மிகம் என்றாலே அண்டப் புளுகு ஆகா யப் புளுகுதானா!

Read more: http://viduthalai.in/e-paper/89865.html#ixzz3H3t2ZXwK

தமிழ் ஓவியா said...

இலங்கையில் பார்ப்பன அர்ச்சகர் கைது!

கொழும்பு, அக்.24- இலங்கையில் உள்ள சிலாபம், முன்னேஸ்வரம் கோவிலின் உதவி குருக் களாக உள்ள பார்ப்பனர் இலங்கைக் காவல்துறை யினரால் கைது செய்யப் பட்டார். முன்னேஸ்வரம் கோவிலின் உட்பிரகாரத் தில் அமைந்திருந்த பூஜை மண்டபத்தை இடித்துக் கட்டியதால் கைது செய் யப்பட்டுள்ளார். முதன் மையான அர்ச்சகராக உள்ள பார்ப்பனர் தலை மறைவாகிவிட்டார்.

முன்னேஸ்வரம் கோவில் சுமார் 2300 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். தற் போதுள்ள கட்டடம் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் பராக்கிரமபாகு என் கிற மன்னன் கட்டியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இந்தக் கட் டடத்தின் பழமைகருதி 2009ஆம் ஆண்டு முதல் இக்கோவிலை தொல் பொருள் துறையின் தன் னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. எனவே, அங்கு எவ்வித மான மாற்றம் செய்வதாக இருந்தாலும், தொல் பொருள் துறை அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில் தொல் பொருள் துறையின் முன் அனுமதியின்றி கோவில் உள்பகுதியில் இருந்த பூஜை மண்டபத்தை இடித்து, அதனைப் புதுப் பிக்க முயன்றதான குற்றச் சாட்டில் சந்தேக குற்ற வாளியாக கோவிலின் உதவி குருக்கள் சர்வேஸ் வரய்யர் பத்மநாப குருக் கள் என்கிற பார்ப்பனர் கைது செய்யப்பட்டுள் ளார். கோவிலின் பிரதம குருக்களான பார்ப்பனர் தலைமறைவாகிவிட்டார். அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக தொல் பொருள் துறையின் சார்பில் அறிவிக்கப்பட் டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/89858.html#ixzz3H3tEOZVW

தமிழ் ஓவியா said...

குடியைக் கெடுக்கிறது!குடிகுடியைக் கெடுக்கும் என்பது ஏதோ வெறும் வார்த்தை சோடனையல்ல.

கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் டாஸ்மாக்கில் பணிபுரிந்த 2500 ஊழியர்கள் மரணம் அடைந்துள்ளனர். பெரும்பாலும் 30 -40 வயதுக் கிடையே உள்ளவர்கள்தாம் - படித்த பட்டதாரி இளை ஞர்கள் இவர்கள்.

மரணம் அடைந்த 2500 பேர்களுடன் முடிந்து விடு கிறதா இந்தக் குடி?

2500 பெண்கள் துணை வரை இழந்தனர், 5000 குழந் தைகள் தந்தையை இழந் துள்ளனர். டாஸ்மாக்களில் பணியாற்றும் 30 ஆயிரம் பேர்களில் சரிப் பாதிப் பேர் குடியால் பாதிக்கப்பட்ட மனநோயாளிகளாம்!

Read more: http://viduthalai.in/e-paper/89857.html#ixzz3H3tWi6VG

தமிழ் ஓவியா said...

பெயர்கள் மாறுகின்றன

மத்திய அரசின் திட்டங்களுக்கு இந்துத்துவா சார்பில் உள்ளவர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன. டிசம்பர் 31 வாஜ்பேயி பிறந்த நாளாம். மத்திய ஊரக வீடு கட்டும் திட்டத்திற்கு வாஜ்பேயி பெயரும் சூட்டப்பட உள்ளதாம்.

ரூ.15 லட்சம் என்று வருமோ?

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைத் திருப்பிக் கொண்டு வந்தால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ரூ.15 லட்சம் கிடைக்கும் என்று மக்களவைத் தேர்தலின்போது நரேந்திரமோடி கூறினார். பிஜேபி ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களில் கருப்புப் பணத்தை மீட்போம் என்றார் ராஜ்நாத்சிங். நாட்கள் 150 ஓடி விட்டன. நான் உட்பட இந்தியர்கள் அனைவரும் காத்தி ருப்பது நம் ஒவ்வொருவர் கையிலும் ரூ.15 லட்சத்தை எதிர் பார்த்து தான்.

- அஜய்மக்கான், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்

அடுத்த ஓர் அபாய அறிவிப்பு

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இந்த முறை பொறுப்பு ஏற்றவுடன் அவசர அவசரமாக மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால் விலை உயர்வுகளை அறிவித்தது அல்லவா!
இப்பொழுது டிசம்பர் இறுதிக்குள் ஆவின்பால் விலையை 30 சதவீதம் உயர்த்திடத் திட்டமாம்.

Read more: http://viduthalai.in/e-paper/89859.html#ixzz3H3tmj7GG

தமிழ் ஓவியா said...

அறிவுப் பிரச்சாரம்


மக்களை முட்டாள்களாக்கப் பஜனை செய்யுமாறு பிரச்சாரம் செய்வதை விட்டு, மக்களை அறிவுள்ள மக்களாக்க அறிவுப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.
(விடுதலை, 5.1.1972)

Read more: http://viduthalai.in/page-2/89841.html#ixzz3H3tzDV3o

தமிழ் ஓவியா said...மழைக்காலத்தில் மின்சாரத்தை பாதுகாப்பாக கையாள்வது எப்படி?

மின் ஆய்வுத்துறை விளக்கம்


சென்னை, அக்.24: மழைக் காலத்தில் மின்சாரத்தை பாதுகாப் பாக கையாளுவது எப்படி என்பது குறித்து மின் ஆய்வுதுறை விளக்க மளித்துள்ளது. தமிழ்நாடு அரசு மின்ஆய்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ளதால், எதிர்வரும் காலங்களில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பொருட்கள் சேதம், மனித மற்றும் விலங்கினங்கள் உயிரிழப்பு ஏற்படக்கூடும். இதுபோன்ற நேரங்களில் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்வது குறித்தும், அன்றாட வாழ்க்கையில் மின்சாரத்தை பயன் படுத்தும் போது மேற்கொள்ள வேண் டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்தும் பொது மக்களிடம் விழிப் புணர்வு அவசியமாகும். மின்சாரத்தை பாதுகாப்பாக கையாளும் வழி முறைகள்:

அய்எஸ்அய் முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உடைந்த மின் சாதனங்களை உடனே மாற்றிவிடுங்கள்.
வீடுகளில் சரியான எர்த் பைப் போடுவதுடன், அதனை குழந் தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் பராமரிக்கவும்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் ஒயரிங்குகளை சோதனை செய்து மாற்றி கொள்ள வேண்டும்.
குளியலறையிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சை பொருத்துவதை தவிர்க்கவும்.
சுவரில் ஒயரிங் செய்யப்பட்டுள்ள இடங்களில் ஆணி அடிக்க கூடாது.
மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்த கூடாது. விளம்பர பலகைகள் வைக்க கூடாது.
அறுந்து விழுந்த மின் கம்பிகளின் அருகில் செல்லாதீர்கள். உடனடி யாக மின்சார அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.
மின் சாதனங்கள் உபயோகத்தில் இல்லாத பட்சத்தில் சுவிட்சை ஆப் செய்து வைக்க வேண்டும்.
மின்சாரத்தினால் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.
இடி அல்லது மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்காதீர்கள். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளி லும் நிற்க கூடாது.
இடி அல்லது மின்னலின் போது தொலைக்காட்சி மிக்சி, கிரைண் டர், கணிணி, தொலைப்பேசி பயன்படுத்த கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Read more: http://viduthalai.in/page-2/89848.html#ixzz3H3uaeuQY

தமிழ் ஓவியா said...

கிருஸ்தவர்கள் பாதரட்சை அணியலாமா?


(அப்போஸ்தலர்: 7:33)இல் பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப் போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது என்றும்.

(அப்போஸ்தலர்: 12:79)இல் தூதன் பேதுருவை எழுப்பி; பேதுருவை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட் சைகளைத் தொடுத்துக் கொள் என்றான். அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின் சென்று.... என்றும் இருக்கிறது. இதிலிருந்து பேதுரு இயேசுவின் கட்டளையை நம்பவில்லை என்றுதானே தெரியவருகிறது?

ஒரு வானொலி நிலையத்தின் ஒலிபரப்பில் கிருஸ் தவர்கள் கோவிலுக்குள்ளும் செருப்பு அணிந்து செல்கின் றனரே? என்ற கேள்வி எழுந்தது. இதிலிருந்து இயேசுவை கிருஸ்தவர்கள் கூட நம்பவில்லை என்று தெரிய வில்லையா? (ஆதாரம்: இந்திய வேதாகமச் சங்கத்தாரால் 1978இல் வெளியிடப்பட்ட புதிய ஏற்பாடு)

தகவல்: ர.பார்த்தசாரதி, சென்னை - 34

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89877-2014-10-24-10-39-19.html#ixzz3H3vSmp8C

தமிழ் ஓவியா said...

மதமும் லெனினும்

மதம் மக்களுக்கு அபின் என்று மார்க்ஸ் கூறினார். இந்தக் கூற்று மதம் பற்றிய மார்க்சீய சித்தாந்தம் முழுவதற்கு உறைகல்லாகும். தற்கால மதங்கள், மத ஸ்தாப னங்கள், சகல விதமான மத சங்கங்கள் ஆகிய அனைத் தும் தொழிலாளர் வர்க் கத்தை மூடத்தனத்தில் ஆழ்த்தி, தங்கள் சுரண்டலை ஆதரிக்கும் நோக்கம் படைத்த பூர்ஷ்வா பிற்போக்குப் பிண்டங்களின் கைக் கருவிகள் தான் என்று மார்க்சீயம் கருதி வந்துள்ளது.

உழைக்கின்ற மக்களை சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி முதலாளித்துவத்தின் கண்மூடித்தனமான சக்திகளுக்கு முன்னே அவர்கள் ஒன்றுமே செய்ய முடியாத வகையற்ற நிலையிலுள்ளவர்கள் போன்று நிற்கும்படி செய்யும் அளவு வரைக்கும், இன்றைய மதம் ஆழமாக வேர்விட்டிருக்கிறது.

முதலாளித்துவத்தின் இந்த கண் மூடித்தனமான சக்திகள் சாதாரண உழைப்பாளி மக்களுக்கு யுத்தம், பூகம்பம் போன்ற எப்பொழுதாவது நடக்கின்ற சம்பவங்களால் ஏற்படும் பயங்கரமான துன்பமும் வேதனையையும் விட ஆயிரம் மடங்கு அதிகமான துன்பத்தையும், வேதனையையும் நாள்தோறும் இடைவிடாமல் விளைவித்து வருகின்றன.

- மதத்தைப்பற்றி லெனின்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89877-2014-10-24-10-39-19.html#ixzz3H3va5462

தமிழ் ஓவியா said...

படக்காட்சியில் காமச்சுவை!

காட்சி என்ன கண்ணோடு வருகிறதா? என்று கிராமப் புரத்து மக்கள் கேள்வி எழுப்புவர். ஆனால் படக் காட்சியிலே பாமரர்களின் உள்ளம் படிந்துதான் கிடக்கிறது.

கடலன்ன காமங் கொண்டாலும் மடலேறா மாண்பு மங்கையொருத்திக்கு உண்டென்பான் வள்ளுவன்.

விரிந்து, பரந்து கிடக்கும் கடலைக் கண்டால் புலவர் பெருமக்கள் பழம் பனுவல்களையெல்லாம் பாழும் வயிற்றில் பதுக்கிக் கொண்டாயே என்று புழுங்கி ஏங்குவர். நீலக்கடலின் நீள்கரையில் நின்று, கடல்நீர் நீலமாக இருப்பதேன்? என்று அறிவியல் உலகம் வினா எழுப்பி விடை கண்டது.

அலைக்கும் கடல் முத்துக்களைக் கொடுத்து தமிழர்களின் சொத்துக்களைப் பறித்துக் கொண்டது என பழங்கால வரலாற்றைப் பாங்குற அறிந்தோர் பகர்வர்.

பாம்பின் படங்கண்டும், விடங்கொண்ட பார்ப்பானை விரைந்து அடி, பாம்பு தப்பினாலும் பரவாயில்லை என்றார் தந்தை பெரியார்.

கடலையும், நிலத்தையும் பாம்பு தாங்குவதாக மூடத் தனத்தின் முழுமுதற்கருத்தைத் தமிழ் மண்ணில் விதைத்தனர்.

பெண்ணைப் பேரின்பப் பொருளாக்கி பேரிடியைத் தமிழர் வாழ்வில் விழ வைத்த பேதை மனிதர், மூடப் பழக்கத்தைப் புகுத்தியன்றோ தமிழர்களின் தன் மானத்தை இழக்க வைத்தனர்! ஒன்றா இரண்டா, ஓராயிரம் அன்ன உன்மத்தர் களால் உலா வந்தன பாடல் உருவிலே.

ஆண்ட இனம் ஆரியத்திற்கு அடிமைப்பட்டது அதனாலன்றோ? கோள்கள் தங்களின் ஈர்ப்புச் சக்தியால் இயங்கி வரு கின்றன என்பது அறிவியல் கண்ட கண்டுபிடிப்பு. ஆனால், ஆத்திகர்களோ கடல், நிலச்சுமையைப் பாம்பு தாங்கு வதாகப் பொய்யையே புனைந்து வைத்துத் தமிழர்களை மாய்க்க, இன்பத்தை ஊட்டினர்.

ஆயிரந்தலைப் பாம்பு படமெடுத்து மூடியதைப் போல, பெண்ணொருத்தி தன் மறைவிடத்தை மேகலை எனும் ஆபரணங் கொண்டு மறைத்தாள் என்று பிரபுலிங்க லீலையில் பேசப்படுகிறது. பெண்ணின் உறுப்பைப் பெரிதாக்கி பாம்பின் படம் அதற்கு உவமை என்பர் புலவர் பெருமக்கள்.

ஆனால், லிங்கத்தின் லீலையை பாடவந்த புலவன், மறைவிடத்தை நீள அகலங்கண்டு மீளமுடியாமல் - ஆயிரந்தலைப் பாம்பின் படங்களைக் கொண்டு மூடி அழகு பார்க்கிறான் - அளவு போடுகிறான் ஆத்திகப் புலவன். என்னே கடவுள் பக்தி! பக்திச் சுவையைப் பாட வந்தவன் பாவையின் படம் பற்றி சுவையொழுகப் பாடுகிறான்.

பக்தி வருமா? புத்தி அழியுமா? பாடலை மனப்பாடம் செய்யும் பக்தர்களே! பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியது, உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்குகிறதன்றோ!

பாடலையே தருகிறோம். படித்தின்புறுங்கள்.

பாயும் வெண்திரைக் கருங்
கடல் நிலச்சுமைப் பாம்பின்
ஆயிரம் படங்களுந்திரை
யிட்டன வனைய
மீயி லங்கொளி விரிமணி
மேகலை வேய்ந்தாய்
மாயை மங்கைத னல்குலி
னொருதிரு மடந்தை
(பிரபு லிங்கலீலை, பக்கம். 67)

- தஞ்சை ஆடலரசன்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89878-2014-10-24-10-42-20.html#ixzz3H3vhytOL

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் மதம் - தர்மம்


பார்ப்பனர்கள் எந்த காரியத்திலானாலும் எந்தத்துறையிலானாலும் தங்கள் சொந்த ஜாதி (உயர்வு) நலனை அடிப் படையாகக் கொண்டுதான் பார்ப்பார்களே தவிர, மக்களின் பொது நலனைப் பற்றிய கவலையே அவர் களுக்கு ஏற்படுவதில்லை.

பார்ப்பனர்களுக்கு மதம், தர்மம் என்பதே அவர்களது ஜாதி பாது காப்பாகத்தான் ஆகி விட்டது

- தந்தை பெரியார் 22.5.1967 விடுதலை தலையங்கத்தில் ஒரு பகுதி

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89876-2014-10-24-10-35-16.html#ixzz3H3w0gf36

தமிழ் ஓவியா said...

சரக்கு கேடு; டப்பி அழகு!

பிறநாட்டினர் இயற்கை முறையில் தமது முகப் பொலிவை உண்டாக்கி, உருவத்திலும் சமூக ஒற்றுமை கொண்டிருக்கின்றனர். நம்நாட்டினர் சரக்கு கேடாயிருந் தாலும் அதனுடைய டப்பியை அழகுபடுத்துவது போல், வற்றிய முகத்தில் நாமம், விபூதி முதலிய வைகளை எழுதிக் கொண்டு சமூக பேதத்தை வளர்த்துக் கொண்டு போகின்றனர்.

- புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89876-2014-10-24-10-35-16.html#ixzz3H3w8WoBq

தமிழ் ஓவியா said...

லாலாலஜபதி கூறுகிறார்!

சென்னை மாகாணத்தில் உள்ள கோவில்கள் அதன் பூஜை முதலிய நடைமுறைகள் நம்மை சமூக வீழ்ச்சி என்னும் நரகத்திற்குக் கூட்டிச் சென்று, அழுத்திக் கொண்டிருக் கிறது என்பது எனக்கு நன்றாய்ப் புலப்பட்டு விட்டது.

நமது நாட்டுக்கு ஒரு சமுதாய விடுதலை வேண்டுமானால் எதற்கும் அஞ்சாத ஒரு சமுதாயச் சீர்திருத்த வீரன் தோன்றியாக வேண்டு மென்று எனக்கு ஏற்பட்டு விட்டது.

-லாலாலஜபதிராய்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89876-2014-10-24-10-35-16.html#ixzz3H3wHohMC

தமிழ் ஓவியா said...

இருமுடி மகிமை!

அப்பா (சலூன்காரரிடம்): இந்தாப்பா! என் மகனுக்கு மொட் டையடி! கவனமா இரண்டு முடியை மட்டும் விட்டுடு! மறந்துடாதே.

சலூன்காரர்: அது என்னங்க? இரண்டு முடியை மட்டும் விட்டுடச் சொல்றீங்க?

அப்பா: பையன் இருமுடியோட அய்யப்பன் கோயி லுக்கு போறதா பிரார்த்தனை செஞ்சுக்கிட்டிருக்கான்பா?

- பெரியார் வளவன், திருத்தணி.

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89876-2014-10-24-10-35-16.html#ixzz3H3wR7vy5