Search This Blog

4.10.14

ஜிதன்ராம் ஜிந்தாபாத்!தீண்டாமை ஜாதியை ஒழிப்போம்!

ஜிதன்ராம் ஜிந்தாபாத்!
-

இது சுதந்திர நாடு! ஆமாம் அப்படித் தான் சொல்லுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15 அன்று சாக்லெட் கிடைக்கும் பள்ளிப் பிள்ளைகளுக்கு.


ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே என்று ஆடுவோமே - என்ற பாரதியாரின் பாடலுக்கு ஆட்டப் பாட்டம் அதிகமாகவே உண்டு.

இந்தச் சடங்கு ஒவ்வொரு ஆண்டும் வந்துவந்து போகும். ஆனால், அந்தச் சுதந் திரம் என்பதற்கு அர்த்தம் தெரியாமலேயே அது வந்துபோகிறது.

தந்தை பெரியார் கேட்டார் - சுதந்திர நாட்டில் சூத்திரன் இருக்கலாமா? பஞ்சமன் இருக்கலாமா? என்ற கேள்வியைக் கேட் டார். இவர்கள் கூறும் சுதந்திரத்திற்கு முன்பும் கேட்டார்; இவர்கள் கூறும் சுதந்திரத்திற்குப் பிறகும் நன்றாகவே கேட்டார் நாக்கைப் பிடுங்கிக் கொள் ளுமாறும் நறுக்கென்றுதான் கேட்டார். யாருக்கும் ரோஷம் வரவில்லையே! அந்தக் கேள்வியின் சுணை தாங்க முடி யாமல் சூடான வார்த்தைகளை சொன்ன துண்டே தவிர, அந்தக் கேள்வியில் அடங்கியுள்ள அறிவு நாணயத்துக்கு மட்டும் அறிவார்ந்த பதில் மட்டும் கிடைக்கவில்லை; அப்பொழுது மட்டும் இல்லை; இன்றுவரை ஏன் நாளையும் கூட கிடைப்பதற்குத் துப்பும் இல்லை.


கடந்த ஒருவார காலமாக ஒரு செய்தி ஏடுகளில் சும்மா தூள் பறக்கிறது. விவா தங்கள் வேல் வீச்சாக நடந்து கொண்டுதான் உள்ளன.

இப்பொழுது நம் ஊடகங்களுக்கெல் லாம் கொறித்துக் கொள்ள ஏதாவது தீனி கிடைத்தாக வேண்டும். அப்பொழுதுதான் இந்த ஊடகத் தொழிலின் வயிறு நிரம்பும்.

பீகார் மாநிலத்தில் முதல் அமைச்சராக இருக்கக் கூடியவர் ஜிதன்ராம் மஞ்ஜி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.


பீகார் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன் இடைத் தேர்தல் நடந்தது அல்லவா! அப்பொழுது தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றிருந்தார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் மதுபான மாவட்டத்தில் மகாசிவன் கோயில் ஒன்றுக்குச் சென்றுள்ளார். அதுவும் அவராகப் போகவில்லை. கட்சிக்காரர்கள் விடுத்த வேண்டுகோளை மதித்துச் சென்றுள்ளார்.


என்ன நடந்தது தெரியுமா? நினைத் தாலே நெஞ்சு கொதிக்கிறது. ஆத்திரம் அலை மோதுகிறது.. இந்த 2014லும் கழுதை புரண்ட களமாக அல்லவா நாடு இருக்கிறது என்று நாலு கெட்ட வார்த்தை சொல்லி திட்டலாம் போலத்தான் தோன்றுகிறது.


முதல் அமைச்சர் சாமி கும்பிட்டு விட்டு வெளியேறியவுடன் என்ன செய்திருக் கிறார்கள்? கோயிலை இழுத்து மூடியிருக்கிறார்கள். கங்கையிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு கழுவப்பட்டது, கடவுள் சிலை உட்பட! (கங்கையைவிடவா வேறு ஒரு சாக்கடை இருக்கிறது?) சிறப்பு யாகங் களையும் நடத்தியிருக்கின்றனர்.


இதுபற்றிக் குமுறி இருக்கிறார் முதல் அமைச்சர் - சமூக நீதியாளர் போலோ பஸ்வான் சாஸ்திரி அவர்களின் பிறந்த நாள் விழாவில்.


நாம் இன்னும் பத்துவயது குழந்தையாகத்தான் இருக்கிறோமா? இந்த உலகத்தை நாம் புரிந்து கொள்ளப் போவது எப்போது? என்னை முதல் அமைச்சராக்கினார் நிதீஷ்குமார். அப்பொழுதே பலரின் முகம் கோணிக் கொண்டு போனது. மனிதனை மனிதன் ஜாதி வைத்துப் பார்க்கக் கூடாது பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கிறோம்; ஆனால் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்? ஒரு முதல் அமைச்சரான நிலையிலும் தீண்டாமை நாகம் கொத்துகிறதே என்று குமுறியிருக்கிறார்.

இப்படித்தான் முன்பு நமது பாபு ஜெகஜீவன் ராம் அவர்களுக்கு நடந்தது. அப்பொழுது அவர் பாதுகாப்புத்துறை அமைச்சர் - முப்படைகளுக்கும் அவர்தான் அதிகாரி.


பனாரஸ் பல்கலைக் கழக வளாகத்திலே  வேத விற்பன்னர் சம்பூர்ணானந்து சிலையைத் திறந்து வைத்தார் (24.1.1978). அவ்வளவுதான். அவர் சிலையைத் திறந்து சென்றபிறகு பணாரஸ் பல்கலைக் கழகப் பார்ப்பன மாணவர்களும், ஆசிரியர்களும் கங்கையிலிருந்து நீரைக் கொண்டு வந்து உயர் ஜாதி சம்பூர்ணானந்தின் சிலையைக் கழுவினார்கள்.


பள்ளர் வகுப்பில் பிறந்த ஜெகஜீவன் ராமெல்லாம் உயர் ஜாதிக்காரரின் சிலையைத் திறந்தால் எங்களுக்குச் செருப்பு தைப்பது யார்? என்று ஆரிய ஆணவத்தின் உச்சி மேட்டில் நின்று ஓங்கிக் குரல் கொடுத்தனர்.
அடுத்து பாபுஜி சென்னை வந்தார் - மயிலை மாங்கொல்லைப் பொதுக் கூட்டத்தில் கொட்டித் தீர்த்தார்! பெரியார் பிறந்த மண்ணில்தான் இதனைக் கூற முடியும் - கூறவும் வேண்டும் என்று தன்மானப் புயலாய் வெடித்துக் கிளம் பினாரே நினைவிருக்கிறதா?


எத்தனையோ நிகழ்ச்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம் - இந்தப் பாரதப் புண்ணிய பூமியின் முகம் கிழியக் கிழியப் பேசலாம் தான்.


1998இல் உத்தரப்பிரதேசத்தில் உயர்நீதி மன்றம் உள்ள அலகாபாத்தில் தான் அந்த நிகழ்வு! மாவட்ட நீதிபதியாக இருந்தவர் பாரதி பிரசாத் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.


அவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான்; இவர் மாவட்ட நீதிபதியாக இருந்த இடத்திற்குப் பொறுப்பேற்க ஒருவர் வந்தார்; அவர் பெயர் ஏ.கே. சீனிவாஸ்தவா - பெயரைப் பார்க்கும் பொழுதே பார்ப் பனர்தான் என்று பளிச்சென்று புரியுமே!


என்ன செய்தார் அவர்? தாழ்த்தப் பட்டவர் அமர்ந்த நாற்காலியில் அவர் அலுவலகம் இருந்த அறையில் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர் போய்ப் புழங்க முடியுமா? கீழ் ஜாதிக்காரன் அமர்ந்த நாற்காலியில் போய் உட்காரலாமா? அபச்சாரம் அபச்சாரம் அல்லவா!


வழக்கம்போல என்ன நடந்தது? கங்கையிலிருந்து ஜலம் கொண்டு வரப்பட்டது. அறையில் மட்டுமல்ல! நீதிமன்றம் முழுவதும் சுத்திகரிக்கப்பட்டது.


இந்தச் செய்தி வெளியான நிலையில் உச்சநீதிமன்றமே அதனை வழக்காக ஏற்றுக் கொண்டது. ஆர்.கே. ஜெயின் என்ற நீதிபதி விசாரணைக்காக அமர்த் தப்பட்டார்.


அய்யன்மார்கள் காட்டிக் கொடுத்து விடுவார்களா? அவாள்ஆத்து நீதிபதிக்குத் தண்டனையைக் கிடைக்கத்தான் விடு வார்களா?


ஒரு கதையை ஜோடித்தனர்; பதவி யேற்க வந்த  நீதிபதி சீனிவாஸ்தா ஆஸ்துமா நோயாளி, அதனால்தான் அவர் அறை தூய்மைப்படுத்தப்பட்டது; அதே நேரத்தில் நீதிமன்றத்தில் பூஜையெல்லாம் தற்செயல் நிகழ்வே என்று சாக்குப் போக்குச் சொல்லி (சிஷீநீளீ ணீஸீபீ ஙிறீறீ ஷிஷீக்ஷீஹ்) வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட் டார்கள்.


இதில் என்ன கொடுமை தெரியுமா? அந்தத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி பாரதி பிரசாத் அவர்களை மணிப்பூருக்கு மாற்றினார்களே பார்க்கலாம். 

மனுவாதி  ஒரு குலத்துக்கொரு நீதி  என்று மனோன்மணீயம் சுந்தரனார் சும்மாவா சொன்னார்?


இன்னும் எத்தனை எத்தனையோ உண்டு - எடுத்துக்காட்டி விளக்கின் பக்கங்கள் நீளும்.


இந்து ராஜ்யத்தை அமைக்கப் போகிறேன்; இராம ராஜ்யத்தை உருவாக்கப் போகிறேன் என்று தோள் தட்டி, தொடை தட்டி முண்டாவை ஏற்றி முழக்கமிடும் ஆர்.எஸ்.எஸின் பாம்புக் குட்டிகள் இப் பொழுது இந்தியாவின் ஆட்சி அதி காரத்தில்

நான் ஒரு இந்து நேஷனலிஸ்ட்! என்று மார்தட்டிக் கொள்ளும் மனிதர்தான் பிரதம மந்திரி

நாடு எங்கே போய்க் கொண்டு இருக் கிறது? தந்தை பெரியார் அன்றே கேட்டாரே!


சுதந்திர நாட்டில் சூத்திரன் இருக்க லாமா? பஞ்சமன் இருக்கலாமா? பிராமணன் என்பானும் இருக்கலாமா? என்று எரி மலையாய்த் தகித்துக் கேட்டாரே! 

அதற்கு விடை எங்கே? விடை எங்கே? தந்தை பெரியார் ஒவ்வொரு நொடியும் நினைக்கப்படுகிறார் - தேவைப்படுகிறார்! பெரியாரை உலக மயமாக்குவோம் என்ற தமிழர் தலைவரின் குரல் முக்கியமானது! மிகவும் முக்கியமானது!!


தீண்டாமை ஒழிக்கப்படுகிறது; எந்த வடிவத்தில் அது பின்பற்றப்பட்டாலும் அது சட்டப்படி குற்றம் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவு கூறுகிறதே - அது எங்குப் போய் ஓடி ஒளிந்து விட்டது?

கோயில் கருவறைக்குள் தீண்டாமை - அதன் அம்மையப்பனாகிய ஜாதி பத்திர மாக ஒளிந்து கொள்ள இடம் கோயில்  கர்ப்பக்கிரகம்தானே!
அதில் ஏன் கை வைத்தார் வைக்கம் வீரர் பெரியார் என்பது இப்பொழுது புரிகிறதா?


செவ்வாய்க்கிரகம் செல்லலாம்; கோயில் கர்ப்பக் கிரகத்திற்குச் செல்ல முடியாது என்று பார்ப்பான் ஆணி அடித் துக் கெட்டிப்படுத்தி வைத்திருக்கிறானே - அதனை நீட்டிக்க விடலாமா?


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன் என்பதன் இரகசியம் இன்னும் புரியவில்லையா?


அதுதான் சரியான ஆப்பு! அமாவாசை கர்ப்பக்கிரகத்திலும் ஆராவமுத அய்யங் கார் கம்பிக்கு வெளியிலும் நின்று என் பெயரில் அர்ச்சனை செய்யுங்கோ! என்று கெஞ்ச வேண்டும். சங்கர மடத்தில் நந்தன் பரம்பரை சங்கராச்சாரியாராக அமர வேண்டும். அந்த அடிதான் இந்தக் கொடுமைகளைத் தலைகீழாகப் புரட்டி யடிக்கும்!


தந்தை பெரியார் அவர்களின் 136ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தி - தீண்டாமை ஜாதியை ஒழிப்போம்! என்று தமிழர் தலைவர் - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கூறியுள்ளதை முன்னெடுப்போம் வாரீர்! வாரீர்!!


ஜிதன்ராம் ஜிந்தாபாத்!

----------------------மின்சாரம்  அவர்கள் 04-10-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
Read more: http://viduthalai.in/page-1/88666.html#ixzz3FAhzHrUI

40 comments:

தமிழ் ஓவியா said...

கங்கை நீரைக் கழிவு நீர் ஆக்கியது யார்? பகுத்தறிவுவாதியா? பார்ப்பனீயவாதியா?


கங்கையில் எச்சில் துப்பினால் மூன்று மாத சிறை, பத்தாயிரம் அபராதம்? அப்படியானால் வெறும் எச்சிலால் தானா விஷமாகி உள்ளது கங்கை? துப்பியவர் யார்? இப்போது புரிகிறதா பாம்பையும் பார்ப்பன னையும் ஒன்றாகக் கண்டால் பாம்பை விடு பார்ப்பனனை அடி என்ற வாக்கியம்தான் நினைவிற்கு வருகிறது. அதனால் தானே அவர் பெரியார்! இறங்கிக் குளிப்பவன் உச்சாப்போனால் எப்படி தெரியும், யாரிடம் அபராதம் வசூலிப்பீர்? அவாள் கழிக்கும் சிறுநீரும் மோடியின் ஆட்சியில் கோமியம் ஆகலாம்.

கங்கையின் புனிதம் உண்மையில் எச்சில் துப்பியதால் தான் கெட்டதா? இல்லை. அந்த நதியில் கலக்கும் பிணங்களும், இதர சடங்குகளும், தொழிற்சாலைக் கழிவுகளும் தான் கங்கையின் சீர்கேட்டுக்கு பிரதானமான காரணம். இதில் எதையுமே மோடியால் தடுக்க இயலாது தடுத்தால் நிம்மதியாக ஆட்சி செய்ய இயலாது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.. விவரம் இதோ...

1) ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கான பிணங்கள் கங்கை நதி தீரத்தில் எரிக்கப்படுகின்றன. பல்லா யிரக்கணக்கான பிணங்கள் அப்படியே ஆற்றில் வீசப்படுகின்றன. வாரணாசி யில் சுமார் நூறு சுடுகாடுகள் உள்ளன. இவற்றில் பெரிய சுடுகாடான மணி கர்னிகாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40,000 பிணங்கள் எரிக்கப்படுகின்றன. பிணத்தை முழு வதும் எரிக்காமல் பாதி வெந்த நிலை யில் ஆற்றில் 330 டன் அளவிற்கு இறக்கி விடப்படுகிறது. 16 ஆயிரம் டன் சாம்பல் ஆற்றில் கொட்டப்படுகின்றது.

தமிழ் ஓவியா said...

இதற்கான காரணம் என்ன? முழுவதுமாக எரிந்துவிட்டால் மறு பிறவி இருக்காதாம், அதனால்தான் பிணத்தை நேரடியாகவும், பாதி எறிந்த நிலையிலும் வீசுகிறார்கள் பார்ப்பனீய வாதிகள். இறந்தவனின் மறு ஜென்மத்திற்காக இருப்பவனின் ஆயுளைக் குறைப்பதை உணராத அறிவிலிகள் தான் சுத்தம் செய்யப் போகிறார்களாம்.

2) காளி பூஜை விமரிசையாக நடக்கும் பிரதேசங்கள் இவை என்பதால், ப்ளாஸ் டர் ஆப் பாரீஸ் வேதிக் குழம்பினால் வார்க்கப்பட்ட துர்கா பொம்மையை கங்கை நீரில்தான் வீசுகிறார்கள்.

3) வாரணாசியில் இருந்து சுமார் இருபது கிலோ மீட்டர்கள் தொலை வில் மெஹ்திகன்ச் என்கிற சிறுநகரம் ஒன்றில் அமைந்துள்ள கோகோ கோலா நிறுவனத்தின் தொழிற்சாலை, அங்கே உள்ள நிலத்தடி நீரை கடந்த பதினைந்து ஆண்டுகளில் முற்றாக உறிஞ்சித் தீர்த்து, காட்மியம் நிறைந்த தனது ஆலைக் கழிவை கங்கையில் கலந்து விஷமாக்கியுள்ளது. கோகோ கோலாவுக்கு உரிமம் வழங்கியதும் திரு வாஜ்பேயி தலைமையிலான அரசுதான்.

4) ஆண்டுதோறும் 9000 கிழப் பசுக் கள் உயிரோடு கங்கையில் தள்ளப் பட்டுக் கொல்லப்படுகின்றன. ஏன் ஆற்றில் இறக்க வேண்டும்? பசு மோட் சத்திற்கு போக வேண்டுமாம். மற்றும் இறைச்சிக்காக யாரும் பயன்படுத்தி விடக் கூடாது என்பதாலும் தான். ஆனால் பசுவதை தடை சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அரசியல் செய்வதும் இவர்கள் தான் என்பது வேடிக்கை. ஒரு வேளை வயதில் மூப்படைந்த அத்வானிக்கு மத்திய மந்திரி பதவி பொருந்தாதது போல் கிழப் பசுவிற்கு சட்டம் பொருந்தாதோ? என்ன கருமமோ?

5) ஆற்றின்மீது ஆக்கிரமித்துக் குடியிருப்பவர்களாலும் ஆற்றின் நிலைமை மோசமாகியுள்ளது. 2013 அக்டோபரில் அங்கீகாரமில்லாமலே புதிதாக கட்டப்பட்ட 22 கட்டடங்கள் சரிந்து விழுந்தன. அப்பகுதி வாழ் பிரமுகர் திரிபாதி கூறும்போது 12க்கும் மேலான வீடுகளின் சுற்றுச்சுவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டன. ஆனாலும், ஆறே மாதங்களில் மீண்டும் அனைத்துமே அதே இடத்தில் கட்டப்பட்டன. இதில் மறைந்து கிடக்கும் உண்மை என்னவென்றால் இந்த வீடுகளின் கழிவுநீர் கங்கை யில்தான் கலக்கின்றது.

தமிழ் ஓவியா said...

6) கான்பூரில் மட்டும் 420 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன. அத்தொழிற்சாலைக் கழிவுகள் ஆற்றில் கலக்கப்பட்டு வாரணாசியை அடை கின்றன.

கங்கை நதியைச் சுற்றி ஏராளமான மூடநம்பிக்கைகள் இந்துக்களிடையே நிலவுகின்றன. இறந்தவர்களைக் கங்கைக் கரையில் எரியூட்டினால் பிறப்புச் சங்கிலி அறுந்து மறுபிறப்பிலிருந்து தப்பலாம். கங்கையில் குளித்தால் பாவங்கள் அகலும், அந்த நதியானது சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் ஏற்படும் மாசுபாட்டைக் களைந்து கொண்டு தன்னைத் தானே சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்று கங்கையின் புனிதத்தை நிலைநாட்ட பின்னப்பட் டுள்ள மூடத்தனங்களின் பட்டியல் மிக நீண்டது. ஆனால், உண்மை இதற்கு நேர்மாறானது.

பனாரஸ் இந்து பல்கலைக் கழக மய்யத்தின் முன்னாள் தலைவர் யு.கே. சவுத்ரி கூறும்போது, நிலத்துக்கு மேலாக நீரோட்டமாக, கழிவு நீராக இன்னும் பிற கிளைகளிலிருந்து பெறும் நீராகவே காணப்படுகிறது என்கிறார். பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், தேசிய கங்கை ஆற்று முகமையின் உறுப்பினருமாகிய பி.டி. அகர்வால் கூறும்போது, வட இந்தியா முழுமையாக மிக மோசமான அசுத்தங்களின் உறைவிடமாக கங்கை இருக்கிறது என்கிறார்.

பாகீரதி இயற்கை பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்டு அங்கு நிறைவேற்றப்பட இருந்த 13 திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெற்ற நிலையில் தேசிய கங்கை ஆற்று முகமையால் நிறுத்தப்பட்ட தகவல் நேர்மறையான வெளிப்பாடாக உள்ளதாக திரிபாதி தெரிவித்தார். இதன் விளைவுகளோ இன்னும் அபாயகரமாக உள்ளன. கங்கை நதி பாயும் உத்தரபிரதேசம் பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. கங்கை முழுவதும் மாசடைந்துள்ளதால் அதில் உள்ள ரசாயனப் பொருட்கள் ஆற்றங் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்து கின்றன மேலும் பித்தப்பை புற்று நோயில் கங்கை வடிகால் பகுதிகள், உலகிலேயே இரண்டாவது இடத் திலும், விந்துப்பை புற்றுநோயில் நாட்டிலேயே முதல் இடத்திலும் உள்ளன என்று அறிவிக்கின்றது.

கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம் மோடி அரசு ஒன்றும் புதிதாக அறி வித்து விடவில்லை. 1986-இல் மத்திய அரசால் கங்கை செயல் திட்டம் தொடங்கப்பட்டு பின்னர் பிரதமரைத் தலைவராகவும், கங்கை பாயும் மாநிலங்களின் முதலமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்டு தேசிய கங்கை பாசன மேலாண்மைத் துறை அமைக்கப்பட்டது. கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்காக இதுவரை பல்லாயிரம் கோடி ரூபாய்கள் கொட்டப்பட்டுள்ளன. கடைசியாக மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் 2,600 கோடி ரூபாய் கங்கையைத் தூய் மைப்படுத்தும் பணிக்காக ஒதுக்கப் பட்டது. கடந்த 28 ஆண்டுகளாக 26,000 கோடிகளை (மாத்திரைகளை) விழுங்கியும் மூடநம்பிக்கை செரிமானம் ஆகாமல் கழிவுகளாக கங்கையில் மிதக்கின்றன.

அங்கே மிதப்பது பிளாஸ்டிக் குப்பைகளும், ரசாயனக் கழிவுகளும் மட்டுமல்ல அதற்கெல்லாம் மூலகாரண மான இந்து மதத்தின் மிதமிஞ்சிய மூடநம்பிக்கைகளும், பழமைவாதமும் தான். எனவே கங்கையைச் சுத்தப் படுத்துவதற்கு முன் இக்கொடிய மூடப்பழக்கங்களுக்கு மூடுவிழா செய்து முற்றுப் புள்ளி வைத்து விட்டு கங் கையில் கை வையுங்கள். இல்லை யெனில் ஓட்டைப் பானையை வைத்துக் கொண்டு ஒகனேக்கல் நீர் முழுவதையும் ஒரே பானையில் நிரப்புவேன் என்பது போலத்தான்.

- நரசிம்மன் நரேஷ், சிங்கப்பூர்

Read more: http://viduthalai.in/page2/88667.html#ixzz3FAk1egbN

தமிழ் ஓவியா said...

கடவுளின் கதை !

வயல் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் திருச்சி செவனா விடுதியில், நடைபெற்றது. "கடவுளின் கதை" என்ற தலைப்பில் பேராசிரியர் அருணன் பேசியதாவது:

கடவுளும், சிக்கலும்!

கடவுளின் கதைக் குறித்துப் பேசச் சொல்கிறார்கள். தலைப்பிலே கதை வருவதால், கடவுளும் கதைதான் என்பதை அறியலாம். பொதுவாகக் கடவுளின் கதைகளை எழுதவே எனக்கு வாய்ப்பு இருந்தது. யாரும் பேச அழைத்ததில்லை. ஒருவேளை சிக்கல் வரக்கூடும் என நினைத்திருக்கலாம். உலகில் மாறாதவை இரண்டு!

உலக வரலாறுகளை நான் வாசிக்கத் தொடங்கிய நேரம், அது நிறைய செய்திகளை யோசிக்கக் கொடுத்தது. ஆண்டான் அடிமை யுகத்தைவிட, நிலப் பிரபுத்துவம் சிறந்தது. நிலப்பிரபுத்துவ யுகத்தைவிட, முதலாளித்துவம் சிறந்தது என உலகம் மாறிக் கொண்டே வந் திருக்கிறது. முதலாளித்துவ யுகத்தைவிட, சிறந்த இன்னொரு யுகம் வர வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். "நாகரிகக் கதை" என்கிற நூலின் 11 பாகத்தையும் நான் முடித்திருந்த நேரம். அந்த நூல்தான் எனக்குக் "கடவுளர்களின் கதையை" அறிமுகம் செய்து வைத்தது. இந்த உலகில் எல்லாமும் மாறி இருக்கிறது. ஆனால் கடவுளும், மதமும் அப்படியே இருக்கிறது. ஆதி கால மனிதன் மரத்தைக் கும்பிட்டான். இன்றைக்கும் மரத்தைக் கும்பிடுகிறான். தன்னை எதுவெல்லாம் மிரட்டியதோ, அதற்கெல்லாம் பணிந்தான். தனக்குக் கட்டுப்படாத ஒன்றைக் கண்டு பயந்தான் அல்லது கெஞ்சினான் அல்லது இறைஞ்சி வணங்கினான். அதனால் தான் கடவுளர்களின் எண் ணிக்கை அதிகமானது. இறந்தாலும் சாகமாட்டோம்!

தமிழ் ஓவியா said...

முதன்முதலில் ஒரு மனிதன் சக மனிதனையே வணங்கினான். தாத்தா நெருப்பு உண்டாக்குவதைப் பெயரன் ஆச்சர்யமாய் பார்த்தான். முன் னோர்கள் அதிசயம் வாய்ந்தவர்கள் என எண்ணினர். அவர்கள் இறந்தா லும் சாகவில்லை, உயிரோடு வாழ்வ தாக நினைத்தனர். அதுதான் ஆன்மா என்பது அவர்களின் நம்பிக்கை. ஆக கடவுளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது இந்த ஆன்மா. எகிப்தில் "மம்மி' என்பது பிணம். அதற்குப் பயன்படும் பிரேதப் பெட்டியில் ஒரு வரைபடம் இருக்கும். அந்த வரைபடத்தில் மேல் உலகம் செல்வதற்கான வழி இருக்கு மாம். இறந்தவர்கள் வழி தெரியாமல் தடுமாறக் கூடாதல்லவா? ஆக ஆன் மாக்கள் எல்லோரும் ஒன்றாய் வாழ்வ தாய் நம்பினர். அவர்களுக்கான தலை வர்தான் கடவுள். உலகில் கடவுள் தொகை !

கடவுளின் வாமன வடிவம் மனிதன் என்றார்கள். ஆனால் மனிதனின் விஸ்ப ரூபமே கடவுள்! மனிதன் தன்னிடம் இருக்க வேண்டிய அனைத்தையும் கடவுளிடம் கொடுத்து விட்டு, தான் ஒன்றும் இல்லாதவன் ஆகிவிட்டான். உலகம் ஒன்றுதான், அதில் மனிதகுலமும் ஒன்றுதான். பின் ஏன் இத்தனைக் கடவுள்கள்? ரோம ராஜ்ஜிய நூலில், "மனித எண்ணிக்கையை விட, கடவுள் எண்ணிக்கை அதிகம்", என அப்போதே எழுதினார்கள். இந்தியா வில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கடவுளர்கள் அதிகம். கடவுள்களின் சித் தரிப்பு விதவிதமாக உள்ளது. ஆப்பிரிக்கக் கடவுள் கருப்பாகவும், வெள்ளையர் கடவுள் சிவப்பாகவும் இருப்பதில் ஆச்சர்யமில்லை. மனிதன் தான் கடவுளைப் படைத்தான் என்ப தற்கான உதாரணம் அது. பறவை களுக்குக் கடவுள் இருந்திருந்தால், அக்கடவுளுக்கு இறக்கைகள் இருந் திருக்கும். பிராந்தியத்திற்கு ஏற்பவும், அக, புறச் சூழலுக்கு ஏற்பவும் கடவு ளர்களை நிறைய உருவாக்கித் தள்ளி னார்கள். கடவுள் எண்ணிக்கையைக் குறையுங்கள்!

கடவுளர் எண்ணிகையில் மிரண்டு போன மனிதன், அதனைக் குறைக்கச் சிந்தித்தான். ஒரு உலகத்திற்கு, ஒரு மனிதக் குலத்திற்கு ஏன் ஒரே கடவுள் இல்லை என்கிற கேள்வி எழுந்தது. விளைவு, கிறிஸ்துவ மதத்தில் கர்த்தர், குமாரர், பரிசுத்த ஆவி என மூன்றாகச் சுருங்கியது. இசுலாமில் ஏகக் கடவுள் ஒருவரே, அவர் பெயர் அல்லா என் றார்கள். பல கடவுள் வழிபாடு தேவை யில்லை, ஒரே கடவுள் போதும், அதற்கு உருவ வழிபாடும் தேவையில்லை என இந்து மதமும் முடிவு செய்தது. ஆனால் அவர்களால் இன்று வரை முடிய வில்லை. கடவுள் தேவையா ? இல்லையா?

தமிழ் ஓவியா said...

கடவுள் உண்டா? இல்லையா? என்பது போய், கடவுள் தேவையா? இல்லையா? எனச் சிந்திக்கிற காலம் வந்தது. கடவுள் இல்லை என்பது தெரி யும். அதனால் என்ன? உண்டாக்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். கடவுள் இல்லையென்றால் ஒழுங்கு, தர்மம் போய்விடும் என்றார்கள் சிலர். அதேநேரம் ஒழுங்கு, தர்மம் என்பது அது தன்னளவில் நிலையானதாக இருக்க வேண்டும். அதற்குக் கடவுள் என்கிற கைத்தடி தேவையில்லை. அதனால் நீண்ட காலத்திற்கு முட்டுக் கொடுக்க முடியாது என்றும் பேசப் பட்டது. முதலாளித்துவத்தில் முதலா ளித்துவத் தர்மமும், சோசலிசத்தில் சோசலிசத் தர்மமும் பேசப்பட்டு, தர்மங்கள் மாறிக் கொண்டே இருக்கும். இதில் கடவுள் தர்மம் என்பது கிடை யாது என வாதிடப்பட்டது. மேலும் ஒரு அறிஞர்," சுத்த அறிவைக் கொண்டு கடவுள் இருப்பதை நிராகரிக்க முடியும். ஆனால் நடைமுறைச் சூழலைக் கொண்டு கடவுள் இருப்பதை நம்புகிறார்கள்", என்றார். ஒரு விசயம் நமக்குப் பயன்பட்டால், அது உண்மை என்றே வலியுறுத்தப்பட்டது. ஆக உண்மை என்பதற்கு என்னதான் பொருள் ? அதற்குத் தனிப் பொருள் ஏதும் இல்லையா? உலகம் உருண்டையா? தட்டையா ? எனில், தட்டை எனச் சொல்வதால் பயன் இருக்கிறது என்றால், தட்டை என்றே சொல்வோம் என்கிறார்கள். இந்தச் சிந்தனைதான் அமெரிக்கா முழுவதும் இருக்கிறது. கடவுள் இருந்தால் இலாபமா? இல்லாவிட்டால் இலாபமா? என்பதே கணக்காக இருந்துள்ளது. மற்றபடி "கடவுள் நம்பிக்கை" என்பது தனித்த பொருளாக எப்போதும் இருந்த தில்லை. இதில் பாமர மக்களின் நிலை வேறு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மதங்களில் பகுத்தறிவு!

தமிழ் ஓவியா said...

அய்ரோப்பாவில் பிசப்புகள், பெரும்பாலும் நிலப்பிரபுத்துவ மனிதர்களாகவே இருந்துள்ளனர். கிறிஸ்துவ மதம் நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவம் நோக்கி வளர்ந்த நேரம். அப்போதுதான் பிரெஞ்ச் புரட்சி ஏற்படுகிறது. அது அரசியல் புரட்சி என்று நிறைய பேர் நினைத்தார்கள். ஆனால் அது மதத்திற்கு எதிரான, பகுத்தறிவு புரட்சி ! கடவுள் நம்பிக்கை இருந்தாலும் மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்கிற எண்ணம் உருவானது. அதற்காக ஓர் இயக்கமும் துளிர்த்தது. அவ்வகையில் கிறிஸ்துவ மதத்தில்தான் முதலில் பகுத்தறிவு நுழைந்தது. அதில் உருவானதே 'புராட்டஸ்டண்ட்' பிரிவு. ரூசோ சொன்னார்,"குழந்தைகளின் 18 வயது வரை கடவுள், மதம் குறித்துப் பேசாதீர்கள். வளர்ந்த பின்பு அவர் களாகவே முடிவு செய்து கொள்ளட் டும்", என்றார். இந்நிலையில் கத்தோ லிக்கர் மட்டுமே வழக்கறிஞராக முடியும். புராட்டஸ்டண்ட் பிரிவுக்கு அந்த வாய்ப்பு இல்லை என்ற நிலையெல்லாம் இருந்தது. 1789_1804 ஆம் ஆண்டுகளில் மூட நம்பிக்கை களுக்கு எதிரான இயக்கமும், கடவு ளுக்கு எதிரான சிந்தனையும் பெருகி வந்த நேரம். அந்த நேரத்தில் தன்னைத் தளர்த்திக் கொண்டு, பகுத்தறிவுக்கு இடம் கொடுத்ததால், கிறிஸ்துவ மதத்தில் ஏராளமான அறிவியலார் உருவாகினர். அதேநேரம் இஸ்லாம், பௌத்தம், இந்து மதங்கள் தங்களை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை. அதனால் அவற்றிற்கு வளர்ச்சியும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் இல்லா மலே போய்விட்டன. கடவுள்களின் தோல்வி!

அய்ரோப்பாவில், ஜோதிடத்தை எதிர்த்து 1600 ஆண்டுகளுக்கு முன்பே கேள்வி எழுந்தது. ஒரே நேரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் வாழ்வு கூட, ஒரே மாதிரியாய் இருப்ப தில்லையே என்றார்கள். வரலாற்றில் கடவுளர் கதைகள் எப்போதும் பின் வாங்கியே வந்துள்ளன. அப்படியிருந்த காரணத்தாலே மனிதம் வளர முடிந்தது. ஆதி காலத்திலும் நாத்தி கர்கள் இருந்துள்ளனர். கோடிக் கணக்கான மக்கம் கடவுளை நம்பும் போது, நாத்திகர்கள் உலகில் சிறு பான்மையே. ஏங்கெல்ஸ் 1882 இல் எழுதினார்,"கடவுள், மதம் கற்பிதம். சமுதாயச் சூழல் அவர்களை அப்படி நம்ப வைக்கிறது. எப்போது கடவுள், மதம் ஒழியும்? மனிதனால் உருவாக்கப் பட்ட கடவுளும், மதமும் மனித சமுதாயம் ஒழியும் போது, ஒழியும் என் றார். இந்து மதம் திருந்த வேண்டும் !

புண்ணிய பூமியில் உள்ள இந்து மதத்தில், எந்த மாற்றமும் இன்று வரை வரவில்லை. உங்கள் கடவுள், மதத்தை வைத்துக் கொள்ளுங்கள். பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கு வழி கொடுங்கள். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக மாறுங்கள். கடவுள் உண்டா? இல்லையா? என விவாதிக்கத் தொடங்குங்கள்! இந்திய அரசியல் சாசனம் கூட, விஞ்ஞான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதன் படியாவது நடங்கள். இந்த மண்ணை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கோலோச்சி வந்துள்ளது பிராமணீய மதம். ஆனாலும் 800 ஆண்டுகள் இஸ்லாமும், 200 ஆண்டுகள் கிறிஸ்து வமும் இந்தியாவைத் தன் கட்டுப் பாட்டில் வைத்திருந்தன. காரணம் பிராமணீய மதம் பகுத்தறிவுக்கும், விஞ்ஞானத்திற்கும் எதிராக மட்டுமே இருந்துள்ளன. மூடநம்பிக்கை என்பது உங்கள் கடவுளுக்கே எதிரானது என்பதையாவது அறியுங்கள். அய் ரோப்பாவில் அந்த அளவில் பகுத் தறிவுக்கு இடம் கொடுத்ததாலே, உலகில் வளர்ச்சி நிலையையும், அறிவியல் ஆச்சர்யத்தையும் வழங்கி வருகிறார்கள். இந்தியாவும் அந்த நிலைக்கு வர வேண்டும். முயற்சி செய் யுங்கள்! இன்னும் காலம் இருக்கிறது!

தொகுப்பு : வி.சி.வில்வம்

Read more: http://viduthalai.in/page4/88670.html#ixzz3FAkRwFXn

தமிழ் ஓவியா said...

அறிவியல் பார்வை இல்லாவிட்டால் குத்துக்கல்லும் குழந்தை பெறும்


சில நாட்களுக்குமுன் நாசா அனுப்பிய விடியோ என்ற பெயரில் போலியான வீடியோ ஒன்று யூ டியூப் மூலம் சில விசமிகளால் பரப்பபட்டது அதில் நிலவில் மனிதர் ஒருவர் நடக்கிறார் அவரது நிழல் படிந்துள்ளது, இதுவேற்று கிரகமனிதராக இருக்கலாமா? நாசா ஏன இதை மறுக்கிறது என்றெல்லாம் பல்வேறு கேள்விகளோடு சுமார் 2 நிமிடம் ஓடக்கூடிய இந்த விடியோ படமும் ஏதோ ஒரு உருவமும் காட்டப்படுகிறது. இந்த வீடியோவை சுமார் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது உண்மையா பொய்யா என்ற ஆய்வு இருக்கட்டும்; முதலில் நிலவின் மீது எப்படி நிழல் விழும் என்ற கேள்வி யாருக்காவது எழுந்ததுண்டா. நமது பூமி போல் நிலவில் சூரிய ஒளிவிழுவதில்லை. அதே போல் நமது பூமியும் சூரியனின் ஒளியை நிலவில் பிரதிபலிப்பதில்லை. எப்போதும் இருட்டான ஒரு பகுதியில் அப்படியே ஒருவர் நடந்தாலும் நிழல் எப்படி விழும் என்பது இந்த விடியோவை ஒளிபரப்பிய விசமிகளும் இதனை உண்மை என்று நம்பி உலகம் முழுவதும் பரப்பிவரும் அறிவிலிகள் இதற்கு விளக்கம் கொடுப்பார்களா?

Read more: http://viduthalai.in/page4/88671.html#ixzz3FAkhmckg

தமிழ் ஓவியா said...

மதம் பிடித்துத் திரியும் கூட்டம்


மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, நாட்டில் சகிப்புத்தன்மையற்ற நிலைக்கான அறிகுறி தென்படுகிறது என்று காங் கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக டில்லியில் நடை பெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது:

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரும் போதெல்லாம், நாட்டில் மதக் கலவ ரங்கள் அதிகரிக்கின்றன. இது, காங் கிரஸ் கட்சிக்கு சவாலான காலகட்ட மாகும். நாடாளுமன்றத்தில் முன்பு எப் போதும் இல்லாத அளவுக்கு, காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. எனினும், அதனால் நாம் சோர்வடைந்து விடக்கூடாது.


தமிழ் ஓவியா said...

நாடாளுமன்றம் மட்டுமே நாம் பணியாற்றும் இடமாக கருதக்கூடாது. வாக்காளர்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பை அதிகரிக்கும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டும்.

மோடி அரசுக்கு புதிய திட்டங்கள் கிடையாது: நரேந்திர மோடி அரசுக்கு என்று, புதிதாக திட்டங்கள் எதுவும் கிடையாது. கடந்த 10 வார பாஜக ஆட் சியில் இருந்து, இதை புரிந்து கொள் ளலாம். எந்தவித குறிக்கோள்களும் இல் லாமல், அவர்கள் நம்மை குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அவர்கள் தான் தற்போது திட்டங்கள் இன்றி ஆட்சி செய்கின்றனர். நமது திட்டங் களையும், ஆலோசனைகளையும் அவர்கள் திருடுவதை வரவேற்கிறேன்.
நாடாளுமன்றத்தில் தன்னிச்சையாக வும், குறுகிய மனப்பான்மையுடன் புதிய அரசு நடந்து கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


6 மாதங்களில் 308 வகுப்புக் கலவரங்கள்

நிகழாண்டு ஜனவரி முதல் ஜுன் மாதம் வரையில் நாட்டில் 308 வகுப்புக் கலவரங்கள் நிகழ்ந்ததாக உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

உத்தரப் பிரதேசத்தில் 56 கலவரங் களும், மகாராஷ்டிரத்தில் 51 கலவரங் களும், கர்நாடகத்தில் 44 கலவரங்களும், ராஜஸ்தானில் 33 கலவரங்களும், பிகாரில் 32 கலவரங்களும், குஜராத்தில் 26 கலவரங்களும் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டில் நாடு முழுவதிலும் 823 வகுப்புக் கலவரங்கள் நிகழ்ந்தன.

அதில், உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 247 கலவரங்கள் நிகழ்ந்தன. மகாராஷ்டிரத்தில் 88 கலவரங்களும், மத்தியப் பிரதேசத்தில் 84 கலவரங்களும் நிகழ்ந்தன. கர்நாடகத்தில் 73, குஜராத் தில் 68, பிகாரில் 63, ராஜஸ்தானில் 52 கலவரங்கள் நிகழ்ந்தன.

கடந்த 2012ஆம் ஆண்டில் மொத்தம் 668 கலவர சம்பவங்கள் நிகழ்ந்தன. அதில் உத்தரப் பிரதேசத்தில் 118 கல வரங்களும், மகாராஷ்டிரத்தில் 94 கலவரங்களும், மத்தியப் பிரதேசத்தில் 92 கலவரங்களும் நிகழ்ந்தன. கர்நாடகத் தில் 69, ஆந்திரத்தில் 60, குஜராத்தில் 57, கேரளத்தில் 56, ராஜஸ்தானில் 37 கலவரங்கள் நிகழ்ந்தன என்று கிரண் ரிஜிஜு கூறினார்.

காங்கிரஸ்தான் மதவாத கட்சி: பாஜக

காங்கிரஸ்தான் தீவிர மதவாத கட்சி என்று பாஜக விமர்சித்துள்ளது. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு, நாட்டில் மதவாத மோதல்கள் அதி கரித்து விட்டதாக சோனியா காந்தி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு இவ்வாறு பாஜக பதில் கூறியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சரு மான பிரகாஷ் ஜாவ்டேகர் கூறியதா வது: தேர்தலில் காங்கிரஸை மக்கள் நிராகரித்து விட்டனர். இதனால் நம் பிக்கை இழந்த நிலையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தெரி விக்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக இதுபோல் அவர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். வாக்குவங்கி அரசியலுக்காக மதவாத கொள்கையை காங்கிரஸ் பின்பற்றுகிறது. ஹைதராபா தில், அனைத்து இந்திய மஜ்லிஸ்--இத்திஹாதுல் முஸ்லிமின் கட்சியுட னும் (ஏஐஎம்ஐஎம்), கேரளத்தில் முஸ்லிம் லீக் கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கிறது' என்று ஜாவ்டேகர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page5/88673.html#ixzz3FAkuHiwt

தமிழ் ஓவியா said...

தெரிந்து கொள்க!


கழிவறைக்குச் சென்று திரும்புகிறோம். கைப்பிடியைப் பிடித்து இழுத்துக் கதவைத் திறந்து வீட்டுக்குள்ளோ, அலுவலகத்துக்குள்ளோ செல்கிறோம். கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் கைப்பிடியில் ஒட்டிக் கொள்ளும். கதவைத் திறக்கும் இன்னொருவர் கைகளில் கிருமிகள் பயணத்தைத் தொடரும். அதிகம் பேர் வேலை செய்யும் அலுவலகங்களில், யார், எந்த அளவுக்குக் கையைச் சோப்புப் போட்டுக் கழுவி சுத்தமாக வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. கழிவறை என்றில்லை. பேருந்தின் நாம் இறுகப் பற்றும் இடங்களில் உள்ள கிருமிகள் வீடு வரை, அலுவலகம் வரை வந்து விடுகின்றன. இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க இப்போது கதவுகளில் பொருத்த ஒரு புதுவிதமான கைப்பிடி Pull Clean என்ற பெயரில் வந்துள்ளது. இந்தக் கைப்பிடியின் உள் பகுதியில் கிருமியை அழிக்கும் பொருள் நிரப்பப்பட்டிருக்கும். கதவைத் திறக்கும்போது கைப்பிடியின் கீழ்ப்பகுதியை அழுத்தினால் கைப்பிடியின் உள்ளிருந்து அந்த கிருமியை அழிக்கும் பொருள் கைகளுக்கு வரும். அதை இரு உள்ளங்கைகளிலும் தேய்த்துக் கொண்டால் போதுமானது. கிருமிகள் அழிந்துவிடும்.
(தினமணி கதிர் 28.9.2014)

Read more: http://viduthalai.in/page5/88674.html#ixzz3FAl5ZfbG

தமிழ் ஓவியா said...

திராட்சை


எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்ட மின் ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும்.

பொதுவாக சரியாகப் பசி எடுக்காமல் வயிறு மந்த நிலை யில் காணப்படுபவர் கள் கருப்பு திராட்சை எனப்படும்
பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதகக் கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த தீர்வாகும்.

மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாகவும், அதிகமாகவும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும்.
திராட்சைச் சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டி ருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். திராட்சைச் சாற்றை தினமும் அருந்தினால் இந்தத் தொல்லைகள் நீங்கும்.


Read more: http://viduthalai.in/page5/88675.html#ixzz3FAlS5E1w

தமிழ் ஓவியா said...

கேட்பவன் கேணையன் என்றால்...

அபிராமி பட்டர் என்பவருடைய ஊர் திருக்கடவூர். இவர் தேவி வழி பாட்டில் சிறந்தவர்.

ஒரு முறை தஞ்சை சரபோஜி மன்னனர் ஆலயம் வந்தபோது, அதைக் கவனிக்காமல் அபிராமி பட்டர் மட்டும் தேவியை மனதில் இருத்தி தியானம் செய்துகொண்டிருந்தார். மகாராஜா அவரிடம் இன்று திதி என்ன என்று கேட்டார். அதற்கு அபிராமி பட்டர் பவுர்ணமி திதி என்று கூறி விட்டார்.

ஆனால், அன்றைய தினம் அமா வாசை திதியாகும். இதனால் கோப மடைந்த மகாராசா அதை நிரூபிக்க முடியுமா, என்று கேட்டார். அம்மா வாசையை பவுர்ணமி என்று கூறியதை வாதிக்கும் பொருட்டு, அபிராமி பட்டரும் முடியும் என்றார்.

பிறகு உமாதேவியைப் பிரார்த்தித்துக் கீழே வெட்டி குழியிலே நெருப்பு எரிய விட்டு மேலே தூக்கிய நூறுவடம் கொண்ட உறிஒன்றிலே ஏறினார். அபிராமி அருளவில்லை என்றால் இந்த நெருப்பில் வீழ்ந்து உயிர் துறப்பேன் என்றார்.

இவ்வாறு கூறி அபிராமி அம்மைமீது அந்தாதி ஒன்று பாடத் தொடங்கினார். அவ்வாறு பாடுகையில் ஒரு பாடல் முடிவில் ஒரு வடமாக உறியின் ஒவ்வொரு வடத்தையும் அறுத்தார்.

பாடல் முடிய தேவியும் வெளிப் பட்டாள். அவள் தன்னுடைய காது தோடுகளுள் ஒன்றைக் கழற்றி ஆகாயத்தில் வீசினாள். அந்த தோடு நிலவாக மாறி பவுணர்மி போல காட்சி அளித்தது. இதனால் தேவியின் அருளைப் பாராட்டி மற்ற பாடல் களையும் பாடி முடித்தார் அபிராமி பட்டர்.
இத்தகைய சிறப்புமிக்க அபிராமி அந்தாதியை பாராயணம் செய்பவர் களுக்கு பக்தியும் சித்தியும் கைவரப் பெறும் என்பது உறுதி.

கேட்பவன் கேணையன் என்றால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொல்ல மாட்டானா?

இவ்வளவு அபத்தமான அறிவுக்குச் சற்றும் பொருத்தமில்லாதவற்றை விற்றுப் பிழைப்பதும் ஒரு பிழைப்பா?

Read more: http://viduthalai.in/page7/88679.html#ixzz3FAmEKezG

தமிழ் ஓவியா said...

செந்தமிழைக் காக்க உலக நாடுகள் சபை அறைகூவல்
உலக நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனமான Unesco 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாளன்று உலகத் தாய்மொழி நாள் பத்தாவது ஆண்டு விழா கொண் டாட்டத்தின்போது, பல நாடுகளின் மொழிகள் அழிவை நோக்கிச் செல் கின்றனவென பிரெஞ்சு நாட்டின் தலைநகர் பாரீஸ் மாநகரில் உலகுக்கு அறிவித்தது. இச்செய்தியை அங்கிருந்து வெளியாகும் கார்டியன் நாளேடு 20.02.2009 அன்று வெளியிட்டுள்ளது. குறிப்பாக தாராளமயமாக்கல் கொள் கையால் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, பிரேசில் நாடுகளின் மொழி கள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. ஆனால் இச்செய்தியை எந்த தமிழ் ஏடும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. மிக முக்கியமான இச்செய்தி ஊடகங் களில் முக்கியத்துவம் பெறவில்லை. ஆனால் டாக்டர் நன்னன் அவர்கள் பல ஆண்டுகளாகக் கூறுகிறார்.

ஒரு மொழியின் சீரழிவுக்கு முக்கிய காரணிகளையும் வெளியிட்டுள்ளது. அவற்றில் சில:

1. தமது தாய்மொழியின் அருமை பெருமைகளை அறியாமல் ஊதாசீனப் படுத்துவதும், தம் பண்பாட்டின் உயர் தன்மையை உணராது வெளிநாட்டு மோகத்தில் மூழ்கிக் கிடத்தலும்,

2. பிரெஞ்சு, ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகள் பிற மொழிகளை அழிக்கும் காலனி ஆதிக்க கொலை மொழிகள்(so called colonical killer languages) என்பதனை அறியாமையும்,

3. இம்மொழிகளை ஒரு நாட்டில் பரவ அனுமதித்தால் அந்நாட்டின் தாய் மொழியையே அழிக்கும் வல்லாண்மை வாய்ந்தவை என அறியாமையும்,

4. உலக வழக்கத்தை மறுத்து, தம் மாணவர்களுக்கு தாய்மொழி மூலம் கல்வி கற்பிக்காமையாலும்,

5. கொலைகார காலனி ஆதிக்க மொழி மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பித்தலும், 6. ஆட்சியிலும் கல்வியிலும் நீதி யிலும் வழிபாட்டிலும் தாய் மொழிக்கு முதல் மரியாதை வழங்காத நிலை யிலும்,

7. தாய்மொழியைச் சரளமாகப் பேசாமல் மொழிக் கலப்படம் செய்யும் நிலையிலும்,

8. குறிப்பாகவும் சிறப்பாகவும் இளை ஞர்களை தாய்மொழிப் பயன்பாட்டை உளமார விரும்பி பயன்படுத்த பழக்காமையாலும்,
9. ஊடகங்கள் தாய்மொழியை சிதைக்கும் வகையில் மொழிக் கலப் படம் செய்வதாலும்,

10. சுருங்கக் கூறிடின், எந்த நாட்டில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் வழங் காமல் -_ ஆட்சியில், கல்வியில், நீதியில், வழிபாட்டில், பயன்பாட்டில், செய்தித் தொடர்பில், ஊடகங்களில் காலனி ஆதிக்க கொலைகார மொழியான ஆங் கிலத்தை அனுமதிக்கும் நிலையாலும், ஓரு நாட்டின் தாய்மொழி ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகின்றது! காலப் போக்கில் அம்மொழி காணாமல் போகின்றது!

11. அந்த வகையில் நம் செந்தமிழ் யுனெஸ்கோ கூறும் பட்டியலில் 8ஆம் இடத்தில் உள்ளதாக கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்து அவர்கள் கூறி யுள்ளார். (இந்து தமிழ் நாளேடு நாள்: 14.7.2014).

மேற்கண்ட காரணிகளால் சிதை வுற்று வரும் சாமானிய மொழியைக்கூட அழிவிலிருந்து மீட்டெடுக்கலாமென யுனெஸ்கோ கூறுவது நமக்கு ஆறு தலையும் உற்சாகத்தையும் தருகின்றது. செந்தமிழ் உலகில் மூத்த செம்மொழி. இலக்கண இலக்கியங்கள் நிறைந்த வளம்மிக்க செம்மொழி! இதனைக் காப்பது கடமை! இம்மொழி வழக்கழிந் தால் தமிழகத்திற்கு மட்டும் இழப்பல்ல! பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பி ருந்தே பண்பாட்டை உலகுக்கு வழங்கி வரும் மொழியாதலால் உலகுக்கே இழப்பாகும் என முன்னாள் துணை வேந்தர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தின் எல்லா தமிழ் அமைப்பு களும், எல்லா கல்வி நிறுவனங்களும், அரசும், எல்லா அரசியல் கட்சிகளும் மாச்சரியமின்றியும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மக்களும் அயராது தளராது சுயநலமின்றி தன்னம்பிக்கையுடன் உழைக்க வேண்டுமாம்.

2009ஆம் ஆண்டில் பாரீசில் வெளியிடப்பட்ட இச்செய்தி நமக்குத் தெரியவில்லை. தக்க நடவடிக்கை எடுத்து எல்லாம் வல்ல செந்தமிழைக் காக்க வேண்டுமென யுனெஸ்கோ ஊக்கப்படுத்துகிறது. இதற்கு யுனெஸ்கோ ஒரு எடுத்துக்காட்டையும் விளம்பியுள்ளது!

அது என்ன? இங்கிலாந்து ஒரு பூர்வீக கேல்சிய நாடு (Celtic nation) அங்கே பூர்வீக மொழிகள் பிரிட்டனி, வேல்ஸ், ஸ்காட்டிஷ், அய்ரிஷ், கார்னிஷ், மாணெக்ஸ் மொழிகளாகும். பிரிட்டனி மொழி பேசி வந்தபிரிட்டனின் மீது பலர் -_ ரோமானியர், ஜெர்மானியர், ஆங்கிலி, சாக்சன், ஜூட், பிரெஞ்சு தேசத்தின் நார்மன், சுவீடிஷ், டச்சு, ஸ்கேன்டிநேவியன் எனப் பலரும் படையெடுத்ததன் விளைவாக பிரிட் டினி மொழி சிதைக்கப்பட்டு ஒரு கலவை மொழியாக ஆங்கில மொழி உருவாக்கப்பட்டது! பின்னர் இங்கி லாந்து எனவும் அய்க்கியப் பேரரசு எனவும் புதுப்பெயர் பூண்டு கெல்சிய நாடுகளை தன்வயப்படுத்திய ஏகாதிபத் தியத்தின் விளைவாக கெல்சிய மொழிகளும் அம்மக்களும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.

தமிழ் ஓவியா said...


எனவே, கேல்சிய காங்கிரசு என்ற அரசியல் சாரா அமைப்பும் கேல்சிய லீக் என்ற அரசியல் அமைப்பும் போராடி தம் உரிமை பெற்று 1998-_99 முதல் வேல்ஸ், ஸ்காட்டிஷ், அய்ரிஷ், கார்னிஷ் மற்றும் மாணெக்ஸ் மொழி கள் தன்னுரிமை கொண்ட பாராளு மன்றம் அல்லது சட்டமன்றங்கள், கவுன்சில்கள் மூலம் போதுமான சட் டங்கள் இயற்றி தம் தாய்மொழிகளை ஆட்சியிலும் கல்வியிலும் முழுமையாக பயன்பாட்டிலும் மீளக் கொணர்ந்துள் ளனவாம். (படிக்க வலைதளங்கள்: Many languages under threat - Unesco /Britany/ Celtic nations etc).

எந்த நாட்டில் தாய்மொழிக்கு முதல் மரியாதை வழங்கி ஆட்சியில், கல்வியில், வழிபாட்டில், நீதியில், ஊடகங்களில், பயன்பாட்டில் முழுமையாக போற்றப் படுகின்றதோ அம்மொழியை அழிவி லிருந்து மீட்டெடுப்பது எளிதாம்!

தமிழ் ஓவியா said...


செந்தமிழின் தொன்மை ஆளு மையை சொல் வளத்தை பிற மொழி களுடன் ஒப்பிடுகையில் செந்தமிழே முதலிடம் பெறுகின்றது என மொழி யறிஞர்கள் போற்றுகின்றனர். நமது பண்பாட்டின் மேன்மையை மேலை நாடுகள் பின்பற்றத் தொடங்கியுள்ளன. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பிரெஞ்சு, ஜெர்மனி, டென்மார்க் போன்ற நாடுகள் நமது ஒழுக்கமிக்க பண்பாட்டைப் பின்பற்ற வேண்டுமென தம் மக்களுக்கு எடுத்துக் கூறி வருகின் றது. நல்ல பண்பான குழந்தைகளைப் பொறுப்புடன் வளர்க்கின்ற - தொடர்ந்து இணைந்து வாழ்கின்ற குடும்பத் தம்பதிகளுக்கு வரிச்சலுகை கூட அறிவித்துள்ள நிலை நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றது. மேலை நாடுகளில் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பண்பாட்டு மேன்மை தாமும் போற்ற வேண்டுமென்ற நிலைப்பாட்டில் செயல்படுகின்றனர்.

இந்நிலையில் நாம் செந்தமிழை பெருமைக்குரிய மொழியாகப் பேசிக் கொண்டே, பயன்பாட்டுக்கு காலனி ஆதிக்க மொழியை பயன்படுத்துவது சரியல்ல _ அபாயகரமானது. அரசு உடனடியாக களமிறங்க வேண்டும். தாய்மொழி மூலமாக தரமான கல்வி கிடைப்பதனை உறுதி செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழ் நமது அடையாளம் மட்டுமல்ல, நம் ஆதாரம் என இந்து நாளேடு 12.06.2014 அன்றைய தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதனை மனத்தில் இருத்தி அனைவரும் ஒருங்கிணைந்து தமிழுக்கு முதல் மரியாதை வழங்கா விட்டால் நம்மை வரலாறு பழித்துக் கூறும்! உலகமும் நம் பிற்கால சந்ததியும் நம்மை இழித்துக் கூறும்!

எனவே, செந்தமிழை நம் உயிரைப் போல காத்து போற்றி வளர்ப்போம்! அன்னிய மொழியால் தமிழகத்திற்கு மட்டுமல்ல நம் இந்தியத் திரு நாட்டிற்கே நன்மையைவிட தீமையே அதிகம் என்பதனை உலக நாடுகள் சபையே எடுத்துரைப்பதனை உணர்ந்து செயல்படுவோம். ஒன்றுபட்டு செயல் பட்டு, செந்தமிழைக் காப்பதும், கற் பதும், கற்பிப்பதும், போற்றுவதும் நமது கடமையாகும்.

பெ. சிவசுப்பிரமணியன்
நன்றி: தமிழ் இலெமுரியா 2045 ஆனி மாத இதழ்

Read more: http://viduthalai.in/page7/88678.html#ixzz3FAmO28OX

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்


ஏழை மக்களுக்கு உதவி செய்வது என்பது, ஏழைத் தன்மையிலிருந்து மற்றவர்களுடன் உயர்த்துவதே யொழிய, அங்கொருவனுக்கும், இங்கொருவனுக்கும் உணவளிப்பதல்ல.

சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதன்று. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம்தான் சேவை.

பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. பக்தி இல்லாவிட்டால் ஒன்றும் நட்டமில்லை. ஆனால் ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.

நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மையும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத் தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன்மானத்திற்கு இயற்கைத் தடைகள்.


Read more: http://viduthalai.in/page8/88682.html#ixzz3FAmno73Y

தமிழ் ஓவியா said...

தி.மு.க. ஊழல், அ.இ.அ.தி.மு.க. ஊழல் என்று பிரச்சாரம் செய்து நாங்கள்தான் உத்தமபுத்திரர்கள் என்று கூறி உள்ளே நுழையத் துடிக்கும் பிஜேபி!


தி.மு.க. ஊழல், அ.இ.அ.தி.மு.க. ஊழல் என்று பிரச்சாரம் செய்து

நாங்கள்தான் உத்தமபுத்திரர்கள் என்று கூறி உள்ளே நுழையத் துடிக்கும் பிஜேபி!

நாகைப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் எச்சரிக்கை!

நாகப்பட்டணம் அக்.4- தி.மு.க.வையும், அ.இ.அ.தி.மு.க.வையும் ஊழல் கட்சிகள் என்று கூறி, நாங்கள்தான் உத்தமப்புத்திரர்கள் என்று மக்களை நம்ப வைத்து, அதிகாரத்துக்கு வரத் துடிக்கும் பிஜேபியின் தந்திரம் - திட்டம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் நேற்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் எச்சரித்தார்.

நாகப்பட்டினம் அபிராமி திடலில் நேற்று (3.10.2014) மாலை நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் உரை யாற்றுகையில் அவர் பேசியதாவது:

இப்போது ஒரு பெரிய வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், கடந்த 50 ஆண்டுகாலமாக இதுவரையில் அகில இந்திய கட்சிகள் தேசியம் பேசக்கூடியவர்கள் யாரும் பதவிக்கு வர முடியவில்லை. எப்படியாவது ஆட்சியில் இருப்பவர்களைக் கீழே தள்ள வேண்டும்; அதுதான் மிக முக்கியம். அதை எதைச் செய் தாவது தள்ளவேண்டும் அதுதான் மிக முக்கியம். எதை எதையோ சொல்லிப் பார்த்தார்கள், அவர்களால் அது முடியவில்லை.

நீங்கள் தள்ளுவதற்கு உரிமை உண்டு என்கிற காரணத்தினாலேதான், சொல்லுவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு!

இப்பொழுது கடைசியாக, யாரும் சுலபமாக ஏமாறக் கூடிய ஒரு செய்தி. அது என்னவென்று சொன்னால், ஊழல்! அதுதான் மிக முக்கியம். ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொன்னவுடன், நம்மாள்களும் ஆமாங்க, ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஊழல்களை நாங்கள் ஆதரிப்பவர்கள் அல்ல; ஊழலை ஒழிக்கவேண்டும்; ஊழல் இருக்கக்கூடாது; நேர்மையான ஆட்சி நடக்கவேண்டும். ஆனால், நண்பர்களே, நடுநிலையில் இருந்து நீங்கள் சிந்திக்கவேண்டும். இந்தக் கருத்துகளை ஏற்கவேண்டும் என்பது அவசியமில்லை. தள்ளலாம், கொள்ளலாம். ஆனால், நீங்கள் தள்ளுவதற்கு உரிமை உண்டு என்கிற காரணத்தினாலே தான், சொல்லு வதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என்கிற உணர்வோடு உங்கள் முன்னாலே இதனை நான் வைக்க விரும்புகிறேன்.

எச்சரிக்கை மணியை அடிக்கக்கூடிய தகுதி எங்கள் ஒருவருக்குத்தான் உண்டு


தமிழ் ஓவியா said...

அரசியலில் இந்தக் கட்சி ஊழல் செய்தது; அந்தக் கட்சி ஊழலில் மாட்டிக் கொண்டது; அடுத்த கட்சி ஊழலில் சிக்கப் போகிறது. ஆகவே, இந்த இரண்டு கட்சியையும் ஒழித்துவிட்டு நாங்கள் தான் ஊழலற்ற உத்தமப் புத்திரர்கள் என்று கூறி, பிரச்சாரம் செய்து நாம் வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அண்ணன் எப்பொழுது சாவான்; திண்ணை எப்பொழுது காலியாகும் என்று நினைக் கிறார்கள்; எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்த எச்சரிக்கை மணியை அடிக்கக்கூடிய தகுதி எங்கள் ஒருவருக்குத்தான் உண்டு. இதனைப் பெருமையாகச் சொல்லவில்லை, வேதனையோடு சொல்கிறோம்.

மற்றவர்கள் எல்லாம் இந்த வேலைக்கு வரவில்லை. எல்லோருக்கும் அரசியல் பார்வை; எல்லோருக்கும் தேர்தல் கண்ணோட்டம்! எங்களுக்கு அடுத்த தேர்தல் கண்ணோட்டம் அல்ல நண்பர்களே, எங்களுக்கு அடுத்த தலைமுறை கண்ணோட்டம்; மானமுள்ள தலைமுறை; உரிமையுள்ள தலைமுறை; அந்தத் தெளிவான தலைமுறை; பகுத்தறிவு உள்ள ஒரு தலைமுறை; அந்தத் தலைமுறை வரவேண்டும் என்கிற உணர்வோடு சொல்கிறோம்.

இந்தக் கட்சி ஊழல் செய்தது என்று இவரை ஒழித்துவிடுவோம்; அந்தக் கட்சி ஊழல் செய்தது என்று அவரை ஒழித்துவிடுவோம். பிறகு நாம் வந்துவிடலாம் என்று வந்து உட்கார்ந்தால், அப்புறம் ரகுபதி ராகவ ராஜாராம், பஜீத பாவன சீதாராம்! என்பதிலே ரொம்பத் தெளிவாக இருப்பவர்களை அடையாளம் காண வேண்டும்.

சமஸ்கிருத வாரம் என்ன - சமஸ்கிருதமே நாட்டின் மொழியாக வரக்கூடிய அளவிற்கு வாய்ப்பை ஏற்படுத்தத் திட்டம் தீட்டுகின்றனர். இந்தி மொழியா - உடனே கதவை அகலமாகத் திறந்துவிடத் திட்டம்! நாங்கள் தாய்க்கழகம் மட்டுமல்ல, பொதுநிலையில் இருக்கின்றவர்கள்

இன்றைக்கு உருவாகி இருக்கிற சூழலைப் பயன் படுத்துகிறார்கள். எல்லா ஊழல்களும் ஒரே மாதிரியா? நிச்சயம் கிடையாது. ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தீர்ப்பு வரவேண்டிய நிலை வேறு!

இரண்டு சாராரும் கவனிக்கவேண்டும்; இரண்டு கட்சி நண்பர்களுக்கும் சொல்லிக் கொள்கிறோம். நாங்கள் தாய்க்கழகம் மட்டுமல்ல, பொதுநிலையில் இருக்கின்ற வர்கள் என்கிற உரிமையை எடுத்துக்கொண்டு, இந்தக் கசப்பான, வேதனையான உண்மையை உங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறோம். நடக்காததை, நடந்த மாதிரி பிரச்சாரம் செய்தார்கள் என்றால், அதையும் நம்மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
யாராவது பதில் சொல்லட்டும் இந்தக் கேள்விக்கு!

இன்றைய ஜனநாயகத்தில் இன்றைய தேர்தல் முறை இருக்கின்ற வரையில், இந்த ஊழலை எப்பேர்ப்பட்டவர் களாலும் ஒழிக்க முடியுமா? என்றால், முடியாது!

என்ன காரணம் என்று சொன்னால், தெளிவாக வேட்பாளர்கள், அவர் எந்தக் கட்சி வேட்பாளராக இருந்தாலும் சரி, அவருக்கு 75 லட்சம் ரூபாய் என்று ஒரு வரையறை வைத்திருக்கிறார்கள் என்றால், முன்பைவிட செலவு குறைவாக அல்லவா இருக்கவேண்டும்; ஒழுக்க மான அரசியல்வாதியாக இருந்தால்; ஜனநாயகம் திருந்தி இருக்கிறது என்றால், முன்பு எவ்வளவு உச்சவரம்பு வைத்தார்களோ, அதைவிட குறைவாக வைக்கலாமே! முன்பைவிட அதிகமான ரூபாயை வரையறையாக வைத்தால், அதற்கு என்ன காரணம்?

சரி, அந்த வரையறைக்குள்தான் வேட்பாளர்கள் கணக்குக் கொடுக்கிறார்கள் என்று யாராவது சொல்லட்டும்! உண்மையை மறைக்காமல், அவர்களுடைய நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும். நான் கையெழுத்துப் போட்டேன் பாருங்கள், அந்த வரையறைக்குள்தான் செலவு செய்திருக்கிறேன்; அதற்குமேல் செலவே செய்யவில்லை என்று சொல்லட்டுமே!


நான் சுயமரியாதைக்காரன், ஒரு சமுதாய விஞ்ஞானி!

அவர் எந்தக் கட்சி வேட்பாளராக இருந்தாலும் சரி, இது ஒரு பொது உண்மை. ஒரு விஞ்ஞானியினுடைய பார்வை; நான் சுயமரியாதைக்காரன், ஒரு சமுதாய விஞ்ஞானி. எனவே, அந்தப் பார்வையில் பார்த்து உங்களிடம் இந்தக் கருத்தைப் பகிர்ந்துகொள்கிறோம். கேளுங்கள், சிந்தி யுங்கள்! முடிவுக்கு வாருங்கள் என்றுகூட சொல்ல மாட்டோம்.

சாதாரண பஞ்சாயத்து உறுப்பினரிலிருந்து, நாடாளு மன்ற உறுப்பினர் வரையில் லட்சக்கணக்கான ரூபாயி லிருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப் படுகின்றன.

தமிழ் ஓவியா said...


பிறகு என்ன ஊழலைப்பற்றி பேசுவதற்கு யாருக்கு என்ன தகுதி இருக்கிறது? எல்லாவற்றையும்விட, ஆமாங்க, இதெல்லாம் ஊழல்தானுங்க என்று சொல்கின்ற நம்மில் எத்தனை பேர் பணம் வாங்காமல் ஓட்டுப் போட்டிருக் கிறோம்? ஒவ்வொருவருக்கும் 200 ரூபாய், 500 ரூபாய் கொடுத்தால் ஓட்டு போடுவார்கள் என்று சொல்வது இன்றைக்கு வெளிப்படை. விரும்பினாலும், விரும்பா விட்டாலும் பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார்கள் என்கிற குற்றச்சாட்டு இருக்கிறதா, இல்லையா?

ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொல்வது- யாரை ஏமாற்ற?

எனவே, இவ்வளவும் கணக்கில் வருகிறதா, நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

வாக்கை விற்கக்கூடிய வாக்காளர்கள்; பொய் சொல்லி செலவை அதிகமாகச் செய்யக்கூடிய வேட்பாளர்கள்; இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு ஒரு ஜனநாயகம், அதுமட்டுமல்ல, கட்சிக்கு தாராளமாக பணம் கொடுக்கலாம். அது கணக்குக் காட்டவேண்டிய அவசியமில்லை. அதை எந்த அரசியல் கட்சியும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். தகவல் அரசியல் சட்டத்தில்கூட, அந்தத் தகவல்களையெல்லாம் கேட்கக்கூடாது.

இவ்வளவையும் வைத்துக்கொண்டு, அப்புறம் என்ன ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொல்வது - யாரை ஏமாற்ற? முதலில் இந்த நடைமுறை மாறினால்தானே, ஊழலை ஒழிக்க முடியும்.

இவர் ஊழல் செய்தார் என்று, இவரை ஒழி! அடுத்து அவர் ஊழல் செய்தார் என்று அவரை ஒழிங்க! அடுத்தது நாங்க! இந்தியைக் கொண்டு வருவதற்கு, சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதற்கு, தேசியம் பேசிக்கொண்டு மிகவும் சவுகரியமாக வருவோம் என்று சொல்லி இந்த நாட்டில் சுப்பிரமணிய சாமிகள் புறப்பட்டுள்ளனர். ஆரியம் திட்டமிடுகிறது. தமிழ்நாட்டினுடைய வரலாற்றையே மாற்றிக் காட்டவேண்டும் என்பதற்குத் தயாராகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

இப்பொழுது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நாங்கள் அடுத்ததாக வந்துவிடுவோம். மக்கள் எல்லோரும் எங்கள் பக்கம் திரும்பி விட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

அவர் வந்து இவரை நீக்கிவிடுவார்; அவருக்கு மிகவும் சந்தோஷம். அடுத்தது இவருடைய முறை. அதுதான் மிக முக்கியம்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் என்ன மாறுதல் வந்தது?

அடுத்தது என்னாகும்? இந்த சிந்தனையை நாம் நன்றாக நினைத்து, நாங்கள் ஒருபோதும் மீண்டும் சுக்ரீவர் களாகவோ, வாலிகளாகவோ மாறுவதற்குத் தயாராக இல்லை. மாறாக, இரண்டு பேருமே உணர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் வரும்.

இன்றைக்கு அரசாங்கம் மாறியது; மோடி அரசாங்கம் வந்தது. ஈழத் தமிழர் பிரச்சினையில் என்ன மாறுதல் வந்தது? காங்கிரசு அரசாங்கத்திலிருந்து என்ன மாறுதல்? இங்கே நாகை மீனவர்கள் எப்பொழுது பார்த்தாலும் போராடிக் கொண்டுதானே இருக்கிறார்கள். மீனவர்களை விடுதலை செய்கிறோம் என்று சொல் கிறார்கள். அதேநேரத்தில், மீனவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு என்ன தேவை? படகுகள் இல்லாமல் அவர்கள் எப்படி தங்களுடைய தொழிலை செய்ய முடியும்? படகுகளை கொடுக்கமாட்டோம் என்கிறார்கள்; நாள்தோறும் ஒரு நாடகம் நடைபெறுகிறது.

மீனவர்களுக்கு வாழ்க்கையே போராட்டமாகத்தான் இருக்கவேண்டுமா? முன்பு இருந்த காங்கிரஸ் அரசாங்கம் இதற்கு ஒரு முடிவு காணவில்லை என்று சொல்லி அனுப்பி விட்டாகிவிட்டது. சரி, இப்பொழுது வந்திருக்கின்ற அரசாங்கம், ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறதா இல்லையா? இதில் முன்பு இருந்த அரசாங்கத்தைவிட ஒருபடி மேலே போயிருக்கிறார்களா, இல்லையா?
அறிவு வயப்பட்டு சிந்திக்கவேண்டிய மிக ஆழமான ஒரு செய்தி!

தமிழ் ஓவியா said...

ஈழப் பிரச்சினை, வெளிநாட்டு உறவுப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை; மொழியில் இரு மொழிக் கொள்கை; அண்ணா உருவாக்கினாரே, அந்த இருமொழிக் கொள்கை, இந்த கொள்கையுடைய அரசு இருக்கின்ற வரையில்தானே இருக்கும். அவர்கள் வந்துவிட்டால் என்னாகும்? சமஸ் கிருதம் மேலே வந்து உட்கார்ந்துவிடுமே! வணக்கம் சொன் னால், அபராதம் போடுவார்கள். நமஸ்காரம் என்றுதானே சொல்லவேண்டும் என்பார்கள்.

இப்பொழுதே, காலில் விழுகின்ற கலாச்சாரம் வட நாட்டில் இருந்து வந்து விட்டதே! கயிறு கட்டுகின்ற கலாச்சாரம் வந்துவிட்டதே!

ஆகவே, நண்பர்களே! இது ஒரு தொலைநோக்கோடு பார்க்கவேண்டிய பிரச்சினை. இதை உடனடியாகப் பார்த்தீர்களேயானால் உங்களுக்குத் தெரியாது. உணர்ச்சி வயப்பட்டு சிந்தித்தாலும் தெரியாது. இது அறிவு வயப்பட்டு சிந்திக்கவேண்டிய மிக ஆழமான ஒரு செய்தி.

வடபுலத்தில் இருந்து நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள்; குரங்கு அப்பத்தைப் பங்கிட்டதுபோல, மூன்றாவது ஆள் மத்தியஸ்தம் செய்து, அது எனக்கே சொந்தம் என்று சொல்வார்.

அய்யங்கார் வழக்குரைஞர் வேடிக்கையாக ஒருமுறை சொன்னார் என்ற கதையுண்டு.

அண்ணன் - தம்பி இரண்டு பேருக்கும் சொத்தைப் பிரிக்கின்ற வழக்கில், வழக்குரைஞரிடம் இந்த சொத்து எனக்கு வருமா? என் அண்ணனுக்கு வருமா? என்று தம்பி கேட்டார்.

தமிழ் ஓவியா said...

உடனே அந்த கெட்டிக்கார வழக்குரைஞர் சொன்னார்; உங்க இரண்டு பேருக்குமே வராது; எனக்குத்தான் வரும். இரண்டு பேரும் சண்டை போட்டு என்னிடம்தான் வருவீங்க! முழுச் சொத்தும் என்னைப் போன்ற வழக்குரைஞர்களிடம்தான் வரும் என்று சொன்னார்.

இது வேடிக்கையான கதையல்ல.

ஊழல் யார் செய்தாலும், தண்டனை என்றால், அவர்கள் தண்டனையை பெற்றுத் தீரவேண்டும்!

இன்றைக்கு சமுதாயத்தில் இருக்கக்கூடிய சூழல் என்னவென்று சொன்னால், இன்றைக்குத் தமிழ்நாட்டின் நிலை இதுதான். இதனை உங்களுக்குத் தெளிவாக நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

திராவிடர் கழகத்தினுடைய கண்ணோட்டத்தில் இவரை எதிர்க்கிறோம், அவரை ஆதரிக்கிறோம் என்ப தல்ல, ஊழலை நியாயப்படுத்துகிறோம் என்பதல்ல. ஊழல் யார் செய்தாலும், தண்டனை என்றால், அவர்கள் தண்டனையை பெற்றுத் தீரவேண்டும். மனமாற்ம் அடைய வேண்டும் திருந்த வேண்டும்; குற்றம் செய்யவில்லை யென்றால் அதற்குரிய வழிமுறை என்னவோ, அந்த வழிமுறையில்தான் செல்லவேண்டும், அதுதான் மிக முக்கியம்.

சட்டப்படி அதற்கு வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளைக் கையாளவேண்டுமே தவிர, பொதுமக்களுக்கோ அல்லது பொதுச்சொத்துக்கோ, பொது அமைதிக்கோ பங்கம் ஏற்படுத்தக்கூடாது. இதைச் சொல்வதற்கு எங்களுக்கு முழு உரிமையும், கடமையும் இருக்கிறது.

தமிழ் ஓவியா said...


நாளைக்குத் தலைகுப்புற கவிழ்ந்துவிடக்கூடாது

ஆகவேதான் இதனைத் தெளிவாகச் சொல்கிறோம்.

பெரியாருடைய காலத்திலேயே அய்யா அவர்கள் சுட்டிக்காட்டினார். நாங்கள் பெரியார் இல்லை. பெரியாரின் தொண்டர்கள். ஆகவே, பெரியார் தந்த புத்தி எங்களுக்கு இருக்கிறது. ஆகவே, அதை வைத்து சமுதாயத்திற்கு, இன்றைய காலகட்டத்திலே, தயவுசெய்து வெறும் அரசியல் பார்வையோடு பார்க்காதீர்கள். லட்சியப் பார்வையோடு, கொள்கை பார்வையோடு, சமுதாயம் இன்றைக்குப் பெற்றிருக்கின்ற எழுச்சியெல்லாம் நாளைக்குத் தலைகுப்புற கவிழ்ந்துவிடக்கூடாது என்பதை எண்ணிப் பாருங்கள்.

இன்றைக்கு அதிகாரமெல்லாம் டில்லியில் குவித்து வைத்துக்கொண்டு, ஒரு ஆட்சி அங்கே மிகப்பெரிய அளவிற்கு வந்துவிட்டது என்று சொல்கின்ற நேரத்தில், இங்கு நமக்கு இதுவரையில் இருந்த வாய்ப்பு களையெல்லாம் அடியோடு மாற்றுவதற்கு, இதுதான் சரியான நேரம் என்று சொல்லி, திட்டமிடுகிறார்கள்.

கடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று நினைக்கிறார்கள்

நான் சென்னையில்கூட உரையாற்றும்பொழுது சொன்னேன், ஒரு பாட்டு உண்டு; கடல் வற்றி கருவாடு தின்ன ஆசைப்பட்ட கொக்கு,
குடல் வற்றி செத்ததாம்
என்று ஒரு பழமொழி உண்டு.

அதுபோல், வடக்கே இருந்து வருகிறவர்கள் எல்லாம், கடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அதற்கு ஏமாறமாட்டார்கள்.

நீங்கள் அந்த ஆசையிலேயே குடல் வற்றி சாகவேண்டியதுதான்; சாக வேண்டும் என்று ஆளை சொல்லவில்லை. இந்த முயற்சிகள் வெற்றி பெறாது என்று சொல்கிறோம். கறுப்புச் சட்டைக்காரன்; காவலுக்குக் கெட்டிக்காரன். அந்த உணர்வோடுதான் இதைச் சொல்லுகிறோம்.

நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் கைதட்டுகிறீர்களா? கல் எடுத்துப் போடுகிறீர்களா? என்பதைப்பற்றி எங் களுக்குக் கவலையில்லை. ஆனால், இன்றைக்கு நாங்கள் சொல்வது, நாளைக்கு நடைபெறும் என்று சொல்லகூடிய அளவிற்கு, தொலை நோக்கோடு, கவலையோடு சொல்கிறோம். மகிழ்ச்சியோடு அல்ல. அல்லது ஒரு சார்பு நிலை என்று எடுத்துக்கொண்டு சொல்லவில்லை.

அறிவுப் புரட்சியினால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறோம்!

இதனை நன்றாகப் புரிந்துகொண்டு, நம்முடைய சகோதரர்கள், நம்முடைய தோழர்கள் சிந்திக்கவேண்டும்.

வெறும் உணர்ச்சியைக் கொட்ட வேண்டிய நேரமல்ல; அறிவைப் பயன்படுத்தவேண்டியது மிக முக்கியம். பெரியார் இந்த இயக்கத்தை வெற்றி பெற வைத்ததே, ஆயுதம் தூக்கியல்ல; ஆயுதத்தைத் தூக்கு என்று சொல்லி யிருந்தால், இது எப்பொழுதோ தோற்றுப் போயிருக்கும். மாறாக, அறிவாயுதத்தைத் தூக்கு என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்; அதன் காரண மாகத்தான் இன்றைக்கும் இங்கே அமைதி நிலவுகிறது; அறிவுப் புரட்சியினால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறோம் என்று சொல்லி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

வணக்கம்!

உற்சாகத்தோடு இந்தப் பணியை செய்கின்ற தோழர் களுக்கு வாழ்த்துக்கள்!

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/headline/88691-2014-10-04-10-11-01.html#ixzz3FAnUXzO4

தமிழ் ஓவியா said...

மீண்டும் இராவண லீலா நடக்க வேண்டுமா?


விஜயதசமி என்ற பெயரால் இந்தியாவின் தலைநகரமான டில்லியில் ராம்லீலா நடத்தப்பட் டுள்ளது. திராவிடர்களான இராவணன், இந்திரஜித், கும்பகர்ணன் ஆகியோர் உருவங்கள் அம்பு எய்து தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. இதில் பங்கு கொண்ட வர்கள் யார் யார் தெரியுமா?

இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் பங்கு கொண்டு குதூ கலித்துள்ளனர்; அரசியலில் எதிரும் புதிருமாக உள்ளவர்கள் இதில் மட்டும் கைகோக்கும் காட்சியை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இது அப்பட்டமான அரசமைப்புச் சட்ட மீறலாகும். ராம்லீலா என்று சொல்லும் பொழுது, அது முழுக்க முழுக்க இந்து மத சம்பந்தப்பட்டதாகும். மகாவிஷ்ணு வின் அவதாரம் ராமன் என்று சொல்லுகிறபோது, அது கண்டிப்பாக மதம் சார்ந்ததாக ஆகிவிடுகிறது.

குறிப்பிட்ட இந்து மத நிகழ்ச்சியில் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் பங்கு கொண்டது - இராவணாதிகளை எரித்தது மட்டுமல்ல; நாட்டின் மதச் சார்பின்மைக் கொள்கையையும், அதனை வலியுறுத்தும் இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் எரித்ததேயாகும். வேலியே பயிரை மேயுமானால் பயிருக்கு என்னதான் பாதுகாப்பு என்ற கேள்வி எழத்தானே செய்யும்.

இதில் முக்கியமாக மற்றொரு முக்கிய பிரச்சினையும் இருக்கிறது - அதுதான் இனப்பிரச்சினையாகும். இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டம் என்று வரலாற்று ஆசிரியர்கள் ஆதாரங்களோடு எழுதி இருக்கிறார்கள்.

முன்னாள் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு மட்டுமல்ல; பார்ப்பன வரலாற்று ஆசிரியர்களே எழுதியுள்ளனர். இன்னும் சொல்லப் போனால் இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்பியதாகப் பெருமையடித்துக் கொள்கிறார்களே, அந்த விவே கானந்தரேகூட இந்த உண்மையை ஒப்புக் கொண் டுள்ளார். அப்படி இருக்கும்போது தென்னாட்டில் வாழக் கூடிய திராவிடர்கள் உணர்வைக் காயப்படுத்தும் வகையில் திராவிடர்களாகிய இராவணாதிகளைக் கொளுத்தலாமா? இது ஆரியர் - திராவிடர் என்பதோடு மட்டுமல்லாமல், வடவர், தென்னிந்தியர் என்கிற வேறுபாட்டுத் தீயையும் தூண்டி விடுவது ஆகாதா?

மற்றொரு தகவலும் உண்டு; இராவணனை குல தெய்வமாக வழிபடுபவர்கள் வடநாட்டில் இருக் கிறார்கள் இராவணணுக்கு கோயில்கூட உண்டு. அப்படி இருக்கும் பொழுது இராவணனை தெய்வமாகக் கும்பிடுபவர்களின் உணர்வைப் புண்படுத்த இவர் களுக்கு உரிமைகளைக் கொடுத்தவர்கள் யார்?

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவோம் என்று இந்தியாவின் அதிகாரத்தில் அமர்ந்துள்ள கட்சியினர் கூறிக் கொண்டு இருக்கும் இந்தத் தருணத்தில், அவர்களோடு சேர்ந்து கொண்டு ஒரே மேடையில் காங்கிரசைச் சேர்ந்த சோனியா காந்தியும் மன்மோகன்சிங்கும் இணைந்து பங்கு கொண்டு மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டால், ராமன் கோயிலைக் கட்டுவோம் என்று வெறி பிடித்துக் குரல் கொடுக்கும் கும்பலுக்கு மேலும் ஊக்கத்தையும் துணிவையும் கொடுத்தது ஆகாதா?


தமிழ் ஓவியா said...

எந்த வகையில் பார்த்தாலும், டில்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியானது மன்னிக்கத் தக்கதல்ல; பெரிய பொறுப்பில் இருக்கக் கூடியவர்களே நெறி தவறும் ஒரு வேலையில் இறங்கி, அதன் மூலம் மக்களையும் தவறான வழிக்கு இழுத்துச் செல்லும் - இழிதகைச் செயலே!

இந்தப் போக்குத் தவறானது என்று சுட்டிக் காட்டத்தான் திராவிடர் கழகத் தலைவராக இருந்த அன்னை மணியம்மையார் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளினை யொட்டி (25.12.1974) சென்னைப் பெரியார் திடலில் இராவண லீலாவை நடத்திக் காட்டி, வரலாற்றின் எழுச்சி மிக்க மகுடத்தைச் சூட்டிக் கொண்டார்கள்!

அந்நிகழ்ச்சியில் ராமன், சீதை, இலட்சுமணன் ஆகியோர் உருவங்கள் எரிக்கப்பட்டன. அன்னை மணியம்மையார் அவர்களே அந்த ஆரிய உருவங் களுக்குத் தீ மூட்டினார்கள். பெரியார் திடலே மக்களின் தலைகள் தான் தெரிந்தன. அப்பொழுது ஏற்பட்ட எழுச்சி - உணர்ச்சி என்பது எந்த மொழியின் சொற்களாலும் அளவிட்டோ, வருணித்தோ கூற முடியாததாக இருந்தது அப்படியொரு எழுச்சி எரிமலை!

வழக்குத் தொடுக்கப்பட்டது; கீழ்நீதிமன்றத்தில் அது குற்றம் என்று கூறப்பட்டு இருந்தது. மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட திராவிடர் கழகத்தினருக்கு உரிமை உண்டு; பெரியார் ஈ.வெ.ரா. தொடர்ந்து இந்தப் பணியைச் செய்து கொண்டுதான் இருந்தார் என்று கூறி கீழ்நீதிமன்றத் தீர்ப்பைச் செல்லாது என்று கூறி அனைவரையும் விடுதலை செய்வதாக மாவட்ட நீதிபதி சோம சுந்தரம் தீர்ப்புரை புகன்றாரே!

ராம் லீலாவுக்கு விரோதமாக மறுபடியும் இராண லீலாவை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க் கிறார்களா? அப்படி செய்வது உணர்வுப் பூர்வமாகவும் வரலாற்றுப் பூர்வமாகவும், சட்டப் பூர்வமாகும் சரியானதுதானே!

பொறுப்பான பதவிகளில் உள்ளவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள முன்வரட்டும்!

Read more: http://viduthalai.in/home/71-2010-12-25-09-37-00/88705-2014-10-04-10-36-35.html#ixzz3FAo6UUmS

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சூரியகிரகம்

சூரியகிரகம் அதன் அண்ட சக்தி நமது வாழ் வில் நற்பலன்களையும், கெடுபலன்களையும் ஏற் படுத்துகின்றன. இப்படி ஒரு விளம்பரம் தின மணியில்.

ஒரே ஒரு கேள்வி. சூரி யன் கிரகமே இல்லையே. அது நட்சத்திரம் ஆயிற்றே - அறிவியல் உண்மை இவ்வாறு இருக்க சூரி யனைக் கிரகப் பட்டியலில் சேர்க்கும் அறியாமையை எண்ணினால் சிரிப்புதான் வருகிறது

Read more: http://viduthalai.in/e-paper/88700.html#ixzz3FE8EkML8

தமிழ் ஓவியா said...

69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாப்பு - சில சிந்தனைகள்

தமிழ்நாட்டில் தற்போது செயல் பட்டுவரும் 69 விழுக்காடு இடஒதுக் கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப் பியது தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை 30.9.2014 அன்று திரா விடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் 69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாப்பது தொடர்பான பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் தற்போது உள்ள 69 விழுக்காடு சட்டம் 1994-இல் அன் றைய அதிமுக அரசால் நிறை வேற்றப்பட்டபோது, திராவிடர் கழகம் எடுத்த முயற்சிகளை நாடு அறியும்

1. தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு, அரசமைப்பு சட்டம் 31 சி விதியின் அடிப்படையில் தமிழக அரசால் 1994-ஆம் ஆண்டு சட்டமாக நிறைவேற் றப்பட்டு, அரசமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டுள்ளது இதன் மூலம், நீதிமன்ற குறுக்கீடுகள் இந்த சட்டத்திற்கு இருத்தல் கூடாது என அரசமைப்பு சட்டம் 31-பி கூறுகிறது. இந்த சட்டம் அரசமைப்பு சட்டத்தில் 76ஆ-வது திருத்தத்தின்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப் படையான காரணத்தை, அதிமுக அரசு, உச்ச நீதிமன்றத்திற்கு தெளிவு படுத்த வேண்டும்.

2. 50 விழுக்காட்டிற்குமேல் இட ஒதுக்கீடு மீறக் கூடாது என இந்திரா சகானி (1992) வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், சில அசாதாரண மான சூழ்நிலைகளில், இந்த விதியில் சில விலக்குகள் அளித்திடுவது அவசி யமாகிறது என ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு அதே தீர்ப்பில் கூறியுள்ளது.

3. 1992 இந்திரா சகானி வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தனது வாதத்தில் 50 விழுக்காட்டிற்கு மேல், இட ஒதுக்கீடு கூடாது என பாலாஜி வழக் கில் கூறப்பட்டது நீதிபதியின் கருத்து மட்டும்தான்; (obiter dicta) தீர்ப்பு அல்ல என கூறியிருப்பதையும் அரசு கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

4. 1992 இந்திரா சகானி வழக் கின் ஒன்பது நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் தனது தீர்ப்புரையில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான திட்டங்கள் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும்; நிறை வேற்றப்பட வேண்டும் என முடிவு செய்வது, முழுவதும் ஓர் அரசின் வரம்புக்குட்பட்டது; இந்த விஷயங் களில் நீதித்துறை நுழைவதும், மறுஆய்வு செய்வதும் சாதாரணமாக நீதித்துறையின் அதிகாரத்திற்குள் வருவது இல்லை எனக் கூறியுள்ளார்.

5. இதற்குப்பிறகு, 77-வது அரச மைப்பு சட்டத்தின் திருத்தமாக கொண்டுவரப்பட்டு 16(4) பிரிவில் அ பிரிவு சேர்க்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடருவதற்கான திருத் தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி யுள்ளது. மேலும் பல திருத்தங்களும் செய்யப்பட்டன.

தமிழ் ஓவியா said...

இந்த திருத்தங்கள் தொடர்பான வழக்கில் ( நாகராஜ் வழக்கு 19.10.2006), உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, இந்த திருத்தம் செல்லும் என தீர்ப்பளித்து, மேலும், இந்த திருத்தத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கும்போது, நான்கு விச யங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, இட ஒதுக்கீடு பிரிவினரின் எண்ணிக்கை அளவு, அவர்களின் பிற்படுத்தப்பட்ட தன்மை, போதுமான பிரதிநிதித்துவம் இல் லாமல் இருப்பது, இவற்றுடன், இந்த இடஒதுக்கீட்டால் திறமை பாதிக்கப் படகூடாது அதற்கான புள்ளிவிவர அளவினை அரசு தெரிந்துகொண்டு செய்திட வேண்டும் என கூறியுள்ளது.

(the Constitution Bench held that the State is not bound to make reservation for Scheduled Castes and Scheduled Tribes candidates in matters of promotion but if it wished, it could collect quantifiable data touching backward ness of the applicants and inadequacy of representation of that class in public employment for the purpose of compliance with Article 335 of the Constitution.)

இந்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழ் நாட்டில், தற்போது உள்ள 69 விழுக்காடு தரப்படுவதற்கான நியா யத்தை, மத்திய அரசின் புள்ளியியல் துறை நடத்திய மாதிரி ஆய்வு அறிக்கையில் உள்ள புள்ளி விவரங் களை தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்திற்கு தெரி வித்து, அவர்கள் ஒப்புதலுடன், உச்ச நீதிமன்றத்தில் அளித்திட வேண்டும். 6. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ் நாட்டில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து முடித்து, பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களின் மக்கள் தொகையினை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இடைப் பட்ட நேரத்தில், மத்திய அரசின் புள்ளியியல் துறையின் தேசிய மாதிரி சர்வேயின் (National Sample Survey) 62-ஆவது சுற்று சர்வே (2004-_05) அறிக்கை மத்திய அரசால் வெளி யிடப்பட்டுள்ளது. இந்த சர்வேயில், தமிழ் நாட்டில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட் டோர், மலைவாழ் மக்கள், 73.5, 22.16 மற்றும் 1 விழுக் காடாக உள்ளனர் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரத் தையும், அரசு பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

7. மொத்த மக்கள் தொகையில் 96 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் தமிழகத்தில் உள்ளனர். இவர்களுக்கு 69 விழுக்காடு தான் தரப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் பிரிவு 16(4)-படி, போதிய அளவு இட ஒதுக்கீடு என்கிற அளவுகோலில் இது வழங்கப்பட்டுள் ளது நியாயமானதுதான்.

தமிழ் நாட்டில் நீதிக்கட்சி காலத்தி லிருந்து நடைமுறையில் இருக்கும் சமூக நீதிக் கோட்பாடும், 1994-ல் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு சட் டமும், இந்தியாவிற்கே ஓர் வழி காட் டியாக இருக்கிறது. ஆகவே, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, 69 விழுக்காடு சட்டத்தினை பாதுகாத் திட அனைத்து முயற்சிகளையும் தமிழ் நாடு அரசு செய்யும் என்று எதிர் பார்க்கிறோம்.

- கோ. கருணாநிதி

Read more: http://viduthalai.in/page-2/88706.html#ixzz3FE987Qz9

தமிழ் ஓவியா said...

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு


மூன்றாவது சுயமரியாதை மகாநாடு

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு இவ்வருஷம் ராமநாதபுரம் ஜில்லாவில் நடத்தப்பட வேண்டுமென்று அந்த ஜில்லா வாசிகளால் ஈரோடு மகாநாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது யாவரும் அறிந்ததாகும். அந்தப்படி இவ்வருஷம் மார்ச் மாதம் கடைசியிலாவது ஏப்ரல் முதலிலாவது நடைபெற வேண்டியது மிகவும் அவசியமாகும். ராமநாதபுரம் ஜில்லாவில் மகாநாடு நடத்து வதற்கு தகுந்த இடம் விருதுநகர் என்றே கருதுகின்றோம். ஏனெனில், ரயில் போக்குவரத்து சவுகரியமும், உற்சாகமும், ஊக்கமும், செல்வமும் பொருந்திய சுயமரியாதைவீரர்கள் மிகுதியும் நிறைந்த நகரமும் மற்றும் அவ்வித வீரர்கள் மலிந்த சுற்றுப்பிரதேசங்களுக்கு மத்யஸ்தலமாகவும் மதுரைக்கு 25 மைல் தூரத்தில் மிக சமீபமாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி முதலிய இடங் களுக்கும் அருப்புக்கோட்டை முதலிய இடங்களுக்கும் மத்யபாகமாகவும் இருப்பதாகும்.

ஆகவே, இந்த வருஷம் மாகாண மகாநாடு விருது நகரில் நடைபெறுதல் மிக்க நலமென்றே கருதுகிறோம். மகாநாட்டின் வரவேற்புக் கழகத் தலைவராய் திரு. டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியன் அவர்களும், மகாநாட்டு காரியதரிசிகளாய் திருவாளர்கள் செந்தில் குமார நாடார், வி.வி. ராமசாமி முதலியவர்களும் மற்றும் பல காரியங்களுக்கு திருவாளர் அருப்புக்கோட்டை கோபால கிருஷ்ணசாமி நாயக்கர், சிவகங்கை எஸ். ராமச்சந்திரன், முருகப்பா முதலியவர்களும் பிரதானமாக இருந்து துவக்கப்பட்டால் மகாநாடு கண்டிப்பாய் இதுவரை நடந்து வந்ததைப்பார்க்கிலும் விசேஷமாக நடைபெறக்கூடும் என்பதில் நமக்கு எவ்வித அய்யமுமில்லை.

தலைவர் ஸ்தானத்திற்கு சென்ற வருஷம் போலவே வட நாட்டிலிருந்து ஒரு பெரும் சீர்திருத்தவாதியாகவும், தலைகீழ் கிளர்ச்சிக்காரராகவும் பார்த்து ஒரு கனவானை திரு. ஆர்.கே. சண்முகம் அவர்கள் தயவால் அழைத்து வரலாம் என்கின்ற தைரியம் இருக்கிறது. இம்மகாநாட்டில் இன்னும் முற்போக்கான பல தீர்மானங்கள் செய்யப்பட வேண்டியதாகவும், அமலில் நடத்த வேண்டியதாகவும் இருப்பதால் தமிழ்நாட்டு இளைஞர்கள் யாவரும் தவறாமல் பங்கு எடுத்து உழைத்து வெற்றி பெறச்செய்ய வேண்டிய தவசியமாகும். தண்ணீர் சவுகரியத்தை உத்தேசித்து அதே சமயத்தில் வேறு பல மகாநாடுகளும், 3,4 நாட்களுக்கு நடத்த உத்தேசிக்கப்பட்டிருப்பதாய் தெரியவருகிறது. விருதுநகர் கனவான்கள் சுலபத்தில் ஒரு காரியத்தில் தலையிடமாட்டார்கள் என்பதும், தலையிட்டுவிட்டால் அவர்களைப் போல எடுத்துக் கொண்ட காரியங்களை ஒழுங்காகவும் வெற்றிகரமாகவும் முடிப்பவர்கள் அரிது என்பதையும் நாம் தமிழ் நாட்டிற்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இதை உத்தேசித்தே மேற்கொண்ட காரியங்களைப் பற்றி யோசிக்க ஈரோட்டில் இம்மாதம் கடைசி வாரத்தில் நிர்வாக கமிட்டி மீட்டிங்கை தலைவர் திரு. பாண்டியன் அவர்கள் கூட்டியிருக்கிறார்.

- குடிஅரசு - கட்டுரை - 04.01.1931

Read more: http://viduthalai.in/page-3/88692.html#ixzz3FEARnreE

தமிழ் ஓவியா said...

காரைக்குடியில் பார்ப்பனியத் தாண்டவம்

காரைக்குடியில் சுயமரியாதைப் பிரச்சாரத்திற்கு எப்படியாவது இடையூறு செய்யவேண்டு மென்று சில பார்ப்பன அதிகாரிகளும், பல வைதிகப் பணக்கார நாட்டுக் கோட்டையாரும் முயற்சி செய்து கொண்டு வரும் விஷயமாய் கொஞ்ச நாளாக நமக்கு அடிக்கடி சேதி வந்து கொண்டிருந்தது.

தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து கடைசியாக வேட்டைக்குத் தயாராகிவிட்டது என்ற பழமொழி போல் எந்த எந்த விதத்திலோ தொல்லை விளைவித்தும், அது பயன்படாமல் போகவே இப்போது அதிகாரிகளின் மூலமாகவே ஏதோ ஒரு நொண்டிச் சாக்கை வைத்து உயர்திருவாளர்கள் சொ.முருகப்பா, அ.பொன்னம் பலனார், ப. சிவானந்தன் ஆகியவர்களுக்குக் காரைக்குடி முனிசிபல் எல்லைக்குள் எவ்விதக் கூட்டம் கூட்டவோ. பிரசங்கங்கள் புரியவோ கூடாதென்று 144 தடை உத்தரவு போட்டுத் தடுக்கப்பட்டிருக்கின்றது. இது பின்னே வரப்போகும் இன்னும் கடினமான தொல்லைக்கு அறிகுறியென்றே கருதவேண்டியிருக் கின்றது. காரைக்குடியானது உண்மையிலேயே பணக்கார ஆதிக்கமும், வைதிக ஆதிக்கமும் கொண்டது என்பதற்கு அதன் முனிசிபாலிட்டியில் பெண்களுக்காவது. மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்காவது, குறைந்த எண்ணிக்கை யுள்ள சமூகத்தாருக்காவது யாதொரு பிரதிநிதி ஸ்தானமும் ஒதுக்காமல் தீர்மானம் செய்த ஏதேச்சதிகார மனப் பான்மை ஒன்றே போதுமானதாகும். அப்படிப்பட்டவர்கள் ஆதிக்கத்தில் உள்ள அந்த நாடு சுயமரியாதையைப் பற்றியும், தீண்டாதவரின் சமத்துவத்தை பற்றியும், பெண்களின் உரிமையைப் பற்றியும் பேசுவது முனிசிபல் நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுமென்று கருதி, அதிகாரிகளின் தயவைச் சம்பாதித்து 144 போடச் செய்ததில் நமக்கு ஆச்சரியமொன்றுமில்லை.

ஆனால், இந்த மாதிரி பணக்கார ஆதிக்க வாழ்வும், அதிகாரிகள் அவர்களுக்கு அடிமையாகி தலைவிரித்தாடும் பொறுப்பற்ற அதிகாரவர்க்க ஆட்சியும் நமது நாட்டில் தாண்டவமாட இன்னும் விட்டுக் கொண்டிருப்பதுவே நமக்கு மிக ஆச்சரியமாகத் தோன்றுகிறது.

அதோடு நமது நாட்டுப் போலீசாரின் யோக்கியதை நாம் அறிந்ததேயாகும். அதிலும் பார்ப்பனப் போலீசாரைப் பற்றியோ வென்றால் அறியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் அதிலும் சுயமரியாதை இயக்கத்தைக் கண்டால் அவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதேயில்லை.

உதாரணமாக, ஒரு குரங்கு கள்ளைக் குடித்து அதைத் தேளும் கொட்டி விட்டால் எப்படி அது தலை கால் தெரியாமல் கண்டதையெல்லாம் கடிக்குமோ அது போலவேதான் நமது பார்ப்பனப் போலீசு நிர்வாகம் இருக்க முடியும். போதா குறைக்கு இவர்களுடைய தயவை பைத்தியக் கார பணக்காரச் செட்டியார்மார்கள் எதிர்பார்த்து தூபம் போடுவதும் சேர்ந்து விட்டால் 144 உத்தரவு மாத்திரமல்லாமல் இன்னமும் என்ன வேண்டுமானாலும் செய்யப் பின் வாங்க மாட்டார்கள். இந்தக் காரியத்திற்குத் திருப்பத்தூர் டிவிஷனல் ஆபீசர் சம்மதித்துத் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததை நாம் கண்டிக் காமல் விட முடியவில்லை. ஆகையால் இராமநாதபுரம் ஜில்லா கலெக்டர் இதில் பிரவேசித்து உண்மையை விசாரித்து, நீதியை வழங்க வேண்டியது அவருடைய கடமையென்பதோடு, காரைக் குடியில் உள்ள பார்ப்பனியப் போலீஸ் ஆதிக்கத்தை உடனே குறைக்க வேண்டிய காரியமும் செய்ய வேண்டுமாய் வலியுறுத்துகின்றோம். குட்டி குலைத்து பட்டி தலையில் விழாமல், பார்த்துக் கொள்ள வேண்டியது யோக்கியமான சர்க்கார் கடமை என்பதையும் வலியுறுத்துகின்றோம்.
- குடிஅரசு - கட்டுரை - 08.03.1931

Read more: http://viduthalai.in/page-3/88692.html#ixzz3FEAaIF2q

தமிழ் ஓவியா said...

சுசீந்திரம் எச்சரிக்கை

சுசீந்திரம் தெருவில் நடக்கும் உரிமை சம்பந்தமாய் திருவாங்கூர் அய்க்கோர்ட்டில், அந்த ஊர் பாதைகளில் யாவருக்கும் நடக்கும் உரிமை உண்டென்று தீர்ப்புக் கிடைத்து தண்டிக்கப்பட்ட சத்தியாக்கிரகிகள் விடுதலை அடைந்தும்கூட, பார்ப்பன விஷமத்தனத்தின் பலனாய் மறுபடியும் பொது ஜனங்கள் நடக்க தடையேற்பட்டு மறுபடியும் சத்தியாக்கிரகம் நடக்க வேண்டிய அவசியம் வந்து கொண்டிருக்கிறது.

இதற்கு நாம் என்ன செய்யலாம்? வம்புச்சண்டைக்குப் போகாமல் இருக்கலாமே ஒழிய, வலியவரும் சண்டையை எப்படி விட முடியும் என்று திருவாங்கூர் அரசாங்கத் திற்குப் பணிவான எச்சரிக்கை செய்கின்றோம்.

- குடி அரசு - கட்டுரை - 04.01.1931

Read more: http://viduthalai.in/page-3/88692.html#ixzz3FEAgy72V

தமிழ் ஓவியா said...

திரு. சி.ராஜகோபாலாச்சாரி - ஈ.வெ.இராமசாமி சந்திப்பு

திருவாளர் சி. ராஜகோ பாலாச்சாரியார் 29ஆம் தேதி காலையில் சென்னையிலிருந்து ஆமதாபாத் செல்வதற்காக சென்னை சென்டிரல் ஸ்டே ஷனில் கிரான்ட் டிராங்க் எக்ஸ் பிரஸில் ஏறி வண்டியின் முகப்பில் நின்று கொண்டி ருந்தார். பல கனவான்கள் பக்கத்தில் நின்று கொண்டி ருந்தார்கள்.

திரு. ஈ.வெ. இராமசாமி 29 ஆம் தேதி காலை மங்களூர் மெயிலில் சென்னைக்கு வேறு காரியமாக வந்தார். திரு. ராஜகோபாலாச்சாரியார் நின்ற வண்டிக்கு நேராகவே திரு. ஈ.வெ. இராமசாமி வந்த வண்டியும் வந்து நின்றது. வண்டியை விட்டு இறங்கும்போது எதிரிலிருந்த கூட்டத்தைக் கவனிக்கும்போது திரு. ஆச்சாரியாரை பார்த்து ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொண்டார்கள். ஆச்சாரியாரின் வண்டியினருகில் சென்று பொதுவாக இரண்டொரு வார்த்தைகள் பேசிக் கொண் டார்கள். அங்கு பக்கத்தில் உட்கார்ந்து இருந்த திரு. பட்டாபி சீதாராமை யாவையும் கண்டு மரியாதை செய்தார். அந்தச் சந்திப்பு 5 வருஷத்திற்கு முன்னிருந்த ஒற்றுமையையும் கூட்டு வேலையையும் எல்லோருக்குமே ஞாபகப்படுத்தியது என்பதில் ஆட்சேபணை இல்லை. பிறகு வண்டி புறப்பட்டதும் திருவாளர்கள் எஸ். இராமநாதன், கண்ணப்பர் ஆகியவர்களுடன் திரு. இராமநாதன் அவர்கள் ஜாகைக்குப் புறப்பட்டு விட்டார்கள்.

இந்த விஷயம் ஏன் தெரிவிக்கப்பட்டது என்றால், பத்திரிகைகளில் ஈ.வெ.இராமசாமி அங்கிருந்த விஷ யத்தைக் குறிப்பிட்டதைப் பற்றி பலர் பலவிதமாகப் பேசியதாக தெரிய வந்ததால் எழுத வேண்டியதாயிற்று. திரு. ஆச்சாரியாரைப் பார்க்கவே அங்கு சென்றிருந்ததாக வைத்துக்கொண்டாலும் திரு. ஆச்சாரியாரைப் பார்க்கக் கூடாதான விரோதம் ஒன்றும் இருவருக்குள்ளும் கிடையாது. பார்த்ததினால் இருவர் கொள்கை யிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது என்று சொல்லவும் முடியாது.

திரு. ஈ.வெ. இராமசாமியைப் பொருத்த வரையில் தனது கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. அன்றியும் இன்றைய காங்கிரசில் சேரும் உத்தேசமும் இல்லை.

மக்கள் விடுதலை அடைவதற்குச் செல்வம் ஒரே பக்கம் சேராமல் பார்ப்பதும், ஜாதியையும், அதற்காதாரமான மதத்தையும் ஒழிப்பதும் ஆகிய தத்துவங்கள் இந்திய தேசிய காங்கிரசின் முக்கியக் கொள்கையாகும் என்ற நிலைமை ஏற்படும் போது யாருடைய தயவையும் எதிர்பாராமல் காங்கிரஸ் வாதியாயிருப்பார். ஆதலால் இதற்காக யாரும் சந்தேகப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - செய்தி விளக்கம் -01.02.1931Read more: http://viduthalai.in/page-3/88692.html#ixzz3FEAo1HZM

தமிழ் ஓவியா said...

ஜெயலலிதாமீதான சொத்துக்குவிப்பு வழக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து

கேள்வி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புபற்றி தாங்கள் எதுவுமே கூற வில்லையே?

கலைஞர்: இந்தத் தீர்ப்புபற்றி நான் கூறுவதை விட இந்த வார ஆனந்த விகடன் தீர்ப்பு தரும் பாடம் என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங் கத்தில் சில பகுதிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

அது வருமாறு:- இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு! நீதி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது; நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜெய லலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம், சொத்துக்கள் பறிமுதல் என்ற பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தின் தீர்ப்பு இந்திய அரசியல் வர லாற்றில் மிக மிக முக்கியமானது. நீதிமன்றத் தீர்ப் பால் பதவி பறிக்கப்பட்டுள்ள முதல மைச்சர் ஜெயலலிதா தான்! மாதம் ஒரு ரூபாய் வீதம் ஒருவர், 66 கோடி ரூபாய் எப்படிச் சம் பாதித்தார்? என்பதே ஜெயலலிதா மீதான இந்த வழக்கின் எளிய தர்க்கம். சாட்சிகள் மிகத் தெளி வாக உள்ள இதுபோன்ற வழக்கைக் கூட, ஒருவர் 17 ஆண்டுகளாக இழுத்தடிக்க முடியும் என்ற நிலை மிகவும் வருந்தத்தக்கது. செயற்கையாக உண்டாக்கப்பட்ட இந்தக் கால தாமதம், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழ மொழிக்கு ஆகச் சிறந்த உதாரணம்! சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடித்ததன் மூலம், ஜெய லலிதா தனக்கான அதிகபட்சத் தண்டனையை தானே வலியப் பெற்றிருக்கிறார். தீர்ப்பு வந்த நாளில், மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் தொற்றியது; பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டன; கடைகள் இழுத்து மூடப்பட்டன. ஒரு நெருக்கடி நிலைக்கான பதற்றத்துடன் இருந்தது மாநிலம். இத்தகைய சூழல் ஏற்படும் என்பதைக் கணித்து, கட்சித் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு எந்தத் தொந்தரவும் அளிக்கக் கூடாது என்ற அமைதிப்படுத்தும் அறிக்கை கூட ஜெயலலிதா தரப்பில் இருந்து வெளி வரவில்லை.காவல் துறையினரோ, ஆளும் கட்சி யினரின் வன்முறைகளை வெறு மனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

தீர்ப்பு பற்றி நடுநிலை வார ஏடாம் ஆனந்த விகடனில் வெளிவந்த தலையங்கம்தான் இது! ஆனந்த விகடன் மட்டுமல்ல; டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டில் 2.10.2014 அன்று எழுதிய தலையங்கத்தில், தண்டனை நியாய மற்றது என்று கருதினால், இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி மேல் முறையீடு செய்து கொள்வதற்கான வழிமுறை கள் நிரம்ப இருக்கின்றன. சட்டத்தின் முடிவு களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டுமென்று கட்சியின் தொண்டர்களுக்கு, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வின் தலைமை முறையாக அறிவுறுத்த வேண்டும் என்றும் விளக்கமாக எழுதியுள்ளது. கேள்வி: முக்கியமான வழக்குகளை மாநிலம் விட்டு வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவம் வேறு ஏதாவது உண்டா?

கலைஞர்: உச்சநீதிமன்றம் பல வழக்குகளை வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம் பவங்கள் உண்டு. ஏன், நான் ஆட்சிப் பொறுப்பில் முதலமைச்சராக இருந்தபோதே என் மகன் மு.க.அழகிரி மீதான வழக்கு, சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் மீதான வழக்கு களை உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு மாற்றியது. அண்மைக் காலத் திலேகூட அமித்ஷா பற்றிய வழக்குகளை குஜராத் மாநிலத்திலிருந்து மராட்டிய மாநிலத் திற்கு உச்சநீதிமன்றம்தான் மாற்றியது. ஜெய லலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றியதுகூட, 2003 ஆம் ஆண் டில், தமிழ்நாட்டில் பாரபட்சமற்ற நியாயமான தீர்ப்புக் கிடைக்காது என்ற நிலையில் பேரா சிரியர் விடுத்த வேண்டுகோளின்படி, உச்சநீதி மன்றமே நியாயமான தீர்ப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த வழக்கினை கருநாடக மாநிலத்திற்கு மாற்றியது. இந்த விவரங்களை எல்லாம் இந்து நாளேடே வெளியிட்டுள்ளது.

(முரசொலி, 4.10.2014)

Read more: http://viduthalai.in/page-3/88725.html#ixzz3FEBNGgpR

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கபாலம்

திருக்கண்டியூரில் உள்ள தீர்த்தத்தில் சிவன் நீராடியதால் கபாலம் நீங்கியது. இதற்கு திரு மாலுக்கு நன்றி தெரிவிக்க சிவபெருமான் தானே இவ்விடத்தில் கோயில் கொண்டார். இங்குள்ள சிவபெருமான் திருமால் அருளால் துயர் நீங்கி ய தைக் கண்டு மன மகிழ்ந்து சரஸ்வதி தேவியுடன் பிரம்மதேவர் கோவில் கொண்டுள்ளாராம்.

-வைணவர்களின் இந்தக் கதையை ஸ்மார்த் தர்கள் சைவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/88749.html#ixzz3FK9iz1Up

தமிழ் ஓவியா said...

பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில் 1948 காந்தி கொலையும், 1975 காமராசர் மறைவும் வரலாற்றுத் தகவல்கள

சென்னை, அக்.5- சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம் மையார் அரங்கில் பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில் 1948 காந்தி கொலையும், 1975 காமராசர் மறைவும் வரலாற்றுத் தகவல்கள் என்ற தலைப் பில் வழக்குரைஞர் சு.குமார தேவன் உரையாற்றினார். பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்திய நாராயணசிங் தலைமையில் துணை செயலாளர் சுப்பிர மணியன் வரவேற்றார். பொருளாளர் மனோகரன் இணைப்புரை வழங்கினார். புலவர் வெற்றியழகன், மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, மருத்துவர் க.வீரமுத்து, வை.கலையரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வழக்குரைஞர் சு.குமார தேவன் சிறப்புரையில், 1948 ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அன்று ஆர்.எஸ்.எஸ். மத வெறியர்களின் திட்ட மிட்ட சதியால் காந்தி கொல்லப்பட்டார். அந்தக் கொலை சதியில் ஆர்.எஸ். எஸ். அமைப்பினரின் தொடர்ச்சியான திட்ட மிட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்து ரைத்தார். காந்தி கொலை சதியில் வீரசவர்க்கர் மூளையாக செயல்பட்டவர் என்ப துடன் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப் பட்டவர்களில் தப்பி ஓடிய வர்களாக உள்ள மூன்று பேர்குறித்த தகவல் இன்று வரை ஏதும் வெளிவர வில்லை என்று குறிப் பிட்டார்.

கொலைவழக்கு விசார ணைகள், குற்றம் சுமத்தப் பட்டவர்கள், அவர்களின் மதவெறிப் பின்னணி கொலைக்கான நோக்கங் களாக கோட்சே குறிப்பிட் டவை உள்ளிட்ட பல் வேறு தகவல்களை எடுத்துக் கூறினார். காந்தி கொலையுண்டபோது, தமிழ்நாட்டில் சில இடங்களில் ஏற்பட்ட கல வரசூழலை அடக்குவதற்கு பார்ப்பன எதிர்ப்பாளராக இருக்கும் தந்தை பெரியார் வானொலியில் மக்களிடம் உண்மையை எடுத்துக்கூறி அமைதி திரும்ப காரண மாக இருந்ததையும், அதே நேரத்தில் மகாராட்டி ரத்தில் பார்ப்பனர்கள் காங்கிரசைவிட்டு வெளி யேற்றப்பட்டு தாக்கப்பட்ட தையும் குறிப்பிட்டார்.

1975 ஆம் ஆண்டில் அக்டோபர் 2ஆம் நாளில் கல்வி வள்ளல் காமராசர் மறைவுக்கு முக்கியக்காரண மாக இந்திரா காந்தியின் நெருக்கடிக் காலமே இருந் துள்ளது என்றும், நெருக் கடிக்காலத்தில் காங்கிர சுக்கு எதிரானவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கொடு மைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் தமிழ்நாட்டில் நெருக்கடிக்காலத்தில் காமராசரைக் கைது செய்யமறுத்த கலைஞரின் உறுதியால், திமுக ஆட்சிக் கலைப்பு, அதைத் தொடர்ந்து தலைவர்கள் கைது செய்யப்பட்டது குறித்தும், மொத்தத்தில் நெருக்கடிக்காலம் என்பது குறித்து சுருக்கமாகக் கூறும் போது, பத்திரிகைகள், நீதித்துறை, அரசு நிர்வாகத் துறை அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததைக் கூறினார். நெருக்கடிப் பிரகடனத் துக்கு காரணமாக இந்திரா காந்திமீதான வழக்கு, அவ்வழக்கில் நீதிபதி சின்கா, மேல்முறையீட்டில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய் யர் ஆகியோர் அளித்த தீர்ப்பே பெரிதும் காரண மாக அமைந்தது என்பதை விரிவாக வழக்குரைஞர் சு.குமாரதேவன் குறிப் பிட்டார். கூட்ட முடிவில் மல்லிகா ராவணன் நன்றி கூறினார்.

Read more: http://viduthalai.in/page-3/88762.html#ixzz3FK9zDlL6

தமிழ் ஓவியா said...

பெரியாரைப் பின்பற்றுவோம்!

பெரியார் என்ற சொல்லுக்கு மனிதநேயம் என்றே பொருள்! இதை அகராதியில் அச்சிட்டாலும் அதில் பிழையேதும் இல்லை.

ஆம். பெரியார் என்ற ஒற்றைச் சொல்லின் உள்ளடக்கம் மிகப் பெரியது. ஈ.வெ.ராமசாமி என்பவருக்குப் பெண்கள் அளித்த சிறப்புப் பெயர் பெரியார் என்றாலும், அப்பெயர் அவரால் தனித் தன்மையும், தனிப் பெருமையும், உயர்தகுதியும் பெற்றுவிட்டது என்பதே உண்மை!

பெரியார் என்ற தனி மனிதர் வழக்கமாக உலகில் பிறந்து, வாழ்ந்து, மறையும் சராசரி மனிதர் அல்லர். அல்லது மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் ஒரு சிலரைப் போன்றவரும் அல்லர்.

அவர் ஒரு சகாப்தம்! காலகட்டம்! சரித்திரம்! திருப்புமுனை! தீர்க்கதரிசி! உலக நாயகர்! சிந்தனைச் சுரங்கம்! ஆதிக்கம் அழித்த சமதர்மச் சிற்பி! இப்படி எத்தனையோ இலக்கணங்களுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர்! அதனால்தான், உலக அமைப்பான அய்.நா.மன்றம் இவரை இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி என்று, இவ்வுலகில் எவருக்கும் அளிக்காத பெருமையை அளித்தது.

அவர் ஒரு தொலைநோக்காளர் என்பதற்கு அவரது இனிவரும் உலகம் என்ற நூலே சான்று. அவர் ஒரு தத்துவ மேதை என்பதற்கு அவரது தத்துவ விளக்கம் என்ற நூலே சான்று. அவர் ஒரு பத்திரிகையாளர் என்பதற்கு குடியரசு, விடுதலை, உண்மை போன்ற இதழ்கள் சான்று!

அவர் ஒரு புரட்சியாளர் என்பதற்கு அவரது போராட்டங்கள் சான்று.

அவர் ஒரு சாதனையாளர் என்பதற்கு அவரது பிரச்சாரப் பயணங்களும், மேடை முழக்கங்களும் சான்று.

அவர் ஒரு கொள்கையாளர் என்பதற்கு அவரது வாழ்வே சான்று!

புரட்சி, போராட்டங்கள் நடத்தி தன் வாழ்விலே விடிவும் கண்டு, விளைவுகளையும் கண்டவர் பெரியார் மட்டுமே!

தன்னைப் போலவே, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உணர்வுள்ளவன், உரிமையுள்ளவன், மானமுள்ளவன், மதிக்கப்பட வேண்டியவன், சமமானவன், உறவு கொண்டு வாழ வேண்டியவன். ஆண்டான் அடிமை இல்லை; தீண்டத்தகாதவன், வணங்கத்தக்கவன் இல்லை! பிறப்பொக்கும் எல்லா மனிதர்க்கும் என்பதே இவரது கொள்கை. இவற்றிற்காகவே வாழ்ந்தார்; இவற்றிற்காகவே போராடினார்.

எனவேதான் பெரியார் என்றால், மனிதநேயம் என்று சொன்னேன்!

ஆனால் ஆதிக்கவாதிகள், குறிப்பாக ஆரியப் பார்ப்பனர்கள், பெரியாரின் பரந்துபட்ட இந்த உணர்வைச் சுருக்கி, குறுக்கிக்கூட அல்ல, மறைத்து, குறைத்து, மாற்றி, திரித்துக் கூறினர். பெரியாரின் பெருமையை, புகழை, சிறப்பை, புரட்சியை பிறர் அறியாமலிருக்கும்படிச் செய்தனர்; செய்தும் வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக, செப்டம்பர் மாதம் பிறந்த தலைவர்களைப் படம் போட்டுக் காட்டிய தினமணி சிறுவர் மணி, பெரியார் படத்தைப் போடவில்லை. முதலில் போடவேண்டிய பெரியாரின் படத்தை முற்றாக நீக்கினர். சிறுவர்கள் பெரியாரை அறியக்கூடாது என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்; கவனமாக இருக்கின்றனர்.

பெரியார் என்றால் கடவுள் இல்லை யென்பார்; பார்ப்பானைத் திட்டுவார் என்ற அளவில் பெரியாரை பிறர் அறியும்படிச் செய்கின்றனர்.

ஆனால், இவ்வளவுதான் பெரியாரா? பிஞ்சுகள் சிந்திக்க வேண்டும்; தெரிந்துகொள்ள வேண்டும்.

பெரியார் செய்தது இவை மட்டுமென்றால், அய்.நா.மன்றம் எப்படி உலகில் யாருக்கும் அளிக்காத பெருமையை _ பட்டத்தை பெரியாருக்கு அளித்துச் சிறப்பித்திருக்கும்? என்ற வினாவோடு பெரியாரைத் தேடவேண்டும்; பெரியாரின் சிந்தனைகளைக் கிளற வேண்டும்; தோளிட வேண்டும்.

அப்படிச் செய்தால் பெரியாரின் பல்துறைச் சிந்தனைகள், பணிகள், போராட்டங்கள், புரட்சிகள் வெளிப்படும்.

வெளிப்பட்டவற்றை விடாது பிடித்துச் சிந்தித்தால், தெளிவு, துணிவு, ஒழுக்கம், நாணயம், நேர்மை, தொண்டு, சமத்துவம் போன்ற பல உயரிய கொள்கைகள் நம்முள் குடிகொள்ளும்; நம்மை வழிநடத்தும்.

பெரியாரின் சிந்தனைவழிச் சென்றால், தன்மான உணர்வு தானே வரும். தன்மான உணர்வு தலைதூக்கினால், நம் இழிவு, தாழ்வு, அறியாமை எல்லாம் அகலும். நாமும் மனிதன், நாம் யாருக்கும் அடிமையல்ல என்ற உண்மை உள்ளத்துள் பதியும். விழிப்பு, துணிவு, தெளிவு, காரணம் கேட்கும் சிந்தனை வரும்போது நம் வாழ்வு சிறக்கும் _ உயரும். நம் தலைமுறை தலைநிமிரும்.

பெரியார் வழி நடக்கும் பிஞ்சுகள், வாழ்வில் என்றும் வீழ்வதில்லை. எனவே, பெரியாரைப் பின்பற்றுவோம், வாழ்வில் சிறப்போம்; பிறர் வாழ்வு சிறக்கவும் உழைப்போம்! இதுவே இக்காலத்தில் நம் உள்ளத்தில் கொள்ள வேண்டிய உறுதி!

தமிழ் ஓவியா said...

மில்டனின் சொல்லாற்றல்

லண்டனில் பிறந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றவர் மில்டன். கவிஞர் மட்டுமன்றி, சிறந்த மேதையாகவும் விளங்கியவர். மில்டனின் எழுத்துகளை, காலத்தால் அழியாத எழுத்துகளும் அறிவும் செய்து கொண்ட திருமணம் என்று வோர்ட்ஸ்வொர்த் கூறியுள்ளார்.

மில்டன் பெரும் பிரச்சினைகள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். முதலாம் சார்லஸ் மன்னன் கொல்லப்பட்டது சரியே என்று மில்டன் கூறினார். இந்தக் கூற்றைக் கேட்டுக் கோபமடைந்தார் சார்லசின் மகன் இரண்டாம் ஜேம்ஸ். மில்டனை அழைத்து, முதலாம் சார்லஸ் மன்னரின் கொலையினை நியாயப்படுத்துவதால்தான் உங்கள் கண்கள் குருடாகி விட்டன. உங்களுக்கு தெய்வம் தந்த தண்டனை இது என்றார் மன்னர்.

இதனைக் கேட்ட மில்டன், நடக்கும் சில துரதிர்ஷ்டவசமான நிகழ்ச்சிகள் தெய்வ கோபத்தின் குறியீடுகள் என்று மேன்மை பொருந்திய மன்னர் நினைத்தால், தங்கள் தந்தையாரின் முடிவு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அட, எனக்காவது 2 கண்கள் மட்டும்தான் போயின; உங்கள் தந்தைக்கு தலையே போய்விட்டதே என்றாராம்.

தமிழ் ஓவியா said...

நாவலாசிரியரின் நகைச்சுவை

இங்கிலாந்தின் மிகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்களுள் சார்லஸ் டிக்கன்ஸ் குறிப்பிடத்தக்கவர். டிக்கன்ஸ், பத்திரிகை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபோது, ஓர் இளம் கவிஞர் நாரில் கோர்த்து வைத்த நன்மணிகள் என்ற தலைப்பில் கவிதை எழுதி டிக்கன்சின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இளம் கவிஞரின் கவிதையைப் படித்த டிக்கன்ஸ் எழுதியவருக்கே கவிதையைத் திருப்பி அனுப்பினார். அப்பொழுது, என் அன்புக்குரிய இளம் கவிஞரே! நாரில் கோர்த்த நன்மணிகள் என்ற தங்கள் கவிதையைப் படித்தேன். நார் அதிகமாக இருக்கிறது. திருப்பி அனுப்பி இருக்கிறேன் என்று எழுதிய கடிதத்தையும் வைத்து அனுப்பியுள்ளார்.