Search This Blog

1.10.14

இந்து மதத்தைத்தானே விமர்சிக்கிறீங்க இஸ்லாமையோ கிறித்துவத்தையோ ஏன் தொடுவதில்லை?

நம்பிக்கையை காயப்படுத்தலாமா?

 

பகுத்தறிவாளர்களே! உங்க குடும்பத்திலே இருக்கிறவங்க கோவிலுக்கு போறாங்க! அதை உங்களாலே திருத்த முடியலை, ஊரைத் திருத்த வரீங்களா? 

நாத்திகம் பேசுறவங்க இந்து மதத் தைத்தானே விமர்சிக்கிறீங்க இஸ் லாமையோ கிறித்துவத்தையோ ஏன் தொடுவதில்லை ? 

உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கையே இல்லையே அப்புறம் கோயில்ல யார் பூஜை செய்தா உங்களுக்கென்ன ? எந்த மொழியில அர்ச்சனை செய்தால் உங்களுக்கு என்ன?  கோவில் நுழைவுப் போராட் டத்துக்கும் உங்களுக்கும் சம்பந்தம் என்ன ? 

நீங்களும் எவ்வளவு காலமா கத்திப்பாக்குறீங்க ஜனங்க ஏன் உங்களை ஏத்துக்கலை? பெரியார் பிள்ளையார் சிலையை உடைச்சார் ஆனால் இப்போ முக்குக்கு முக்கு மூலைக்கு மூலை பிள்ளையார் சிலை முளைத்துள்ளதே ! உங்க பாதை தப்புன்னு இப்பவாவது புரிஞ்சுக்கோங்க! 
அறிவியல் பகுத்தறிவு எனச் சொல்லி ஆத்திகர் மனதை புண்படுத்தலாமா ? -

இப்படிப்பட்ட கேள்விகளை சாதா ரண பாமரன் கேட்டால் பரவாயில்லை; அறியாமை என விளக்கலாம் . ஆனால் இது போன்ற குதர்க்கமான கேள்வி களை மெத்தப் படித்தவர்கள் முக நூலிலும் இணையதளத்திலும் குயுக்தி யாகக் கேட்கும் போது சற்று வேதனை யாக இருப்பினும் அறிவியல் ரீதியாக நாம் பயணம் செய்யவேண்டியது நெடுந்தூரம் எனப் புரிகிறது . மறுபக்கம் இந்தக்கேள்விகளுக்கு நாம் பொறுமை மயாகப் பதில் சொல்லியாக வேண்டும் . வேறு வழியில்லை .
  • பகுத்தறிவாளர்களே! உங்க குடும்பத்திலே இருக்கிறவங்க கோவி லுக்கு போறாங்க! அதை உங் களாலே திருத்த முடியலை, ஊரைத் திருத்த வரீங்களா? 
இந்த வாதமே தனிமனித உரி மையைக் கிள்ளுக்கீரையாக் கருதும் ஆதிக்க கண்ணோட்டமாகும் . என் அப்பா அம்மா பெரும் பக்திமான்கள். ஆனால் நான் பகுத்தறிவாளன். கம் யூனிஸ்ட். பெற்றோரை மதிப்பது வேறு; எனது சுயசிந்தனையும் தேடலும் என் உரிமை.  அதை நான் விட்டுக் கொடுக்க வில்லை. என் பிள்ளைகளுக்கும் அவர்கள் பாதையை தேர்ந்தெடுக்க  முழு உரிமை உண்டு.  மனைவி கணவனை நேசிப்பது வேறு; தன் சுயத்தை இழந்து கணவனை மனைவியோ அல்லது மனைவியைக் கணவனோ கண்மூடி பின்பற்றத் தேவை இல்லை . அவர்களுக்கு சுயசிந் தனை, சுய உரிமை எல்லாம் உண்டு. வேடிக்கை என்ன தெரியுமா முற் போக்காளர்கள் மனைவியின் சுய சிந்தனையை சுய உரிமையை மதிக் கிறார்கள். ஆனால் மதம் பெண்களுக்கு  சுயம்  இல்லை என மறுக்கிறது. மத நம்பிக்கையாளர்களும் பெண்களின் சுயத்தை சுயசிந்தனையை சுய உரிமையை ஏற்கமறுப்பதன் எதி ரொலியே மேலே உள்ள கேள்வி. ஒவ்வொருவரும் கடவுள் நம்பிக்கை யுள்ளோராகவோ அறிவியல் பாதையில் நடப்போராகவோ இருக்க முழு உரிமை படைத்தவர்கள்.  யார் மீதும் யாரும் எதையும் திணிப்பவராக இருக்க முடியாது. திணிப்புக்கு தலைவணங்குப வராகவும் இருக்கக்கூடாது .

குடும்பத்தாரையும் தன் லட்சியப் பயணத்தில் இணைக்க எடுத்துரைக் கலாம். பயிற்றுவிக்கலாம். ஆனால், ஒரு போதும் கட்டாயப்படுத்தக் கூடாது. அதே நேரம் யாரும் பிறருக்காக தன் கொள்கையில் சமரசம் செய்யவும் கூடாது. வேற்றுமையில் ஒற்றுமை நாட்டுக்கு மட்டுமல்ல; வீட்டுக்கும் தேவை.
  • நாத்திகம் பேசுறவங்க இந்து மதத்தைத்தானே விமர்சிக்கிறீங்க இஸ்லாமையோ கிறித்துவத்தையோ ஏன் தொடுவதில்லை?
ஐரோப்பாவில் எழுதப்படுகிற பகுத்தறிவு நூல்களாகட்டும் இதர நூல்களாகட்டும் அவை இந்து மதத்தைத் தொடுவதில்லை. இங்கர்சால் எழுதிய நூல்களைப் பாருங்கள் கிறித்துவ மதமே விமர்சனத்துக்குள் ளாகி இருக்கும். சமீபத்தில் இணையத் தில் உலாவந்த போது அகப்பட்ட எல்லாக் கட்டுரைகளும் அந்தந்த நாட் டில் பெரும்பான்மையோரின் மத நம்பிக்கை சார்ந்தே கேள்வி எழுப்பி யுள்ளன.

இதுவே இஸ்லாமிய நாடு களிலும் உள்ள நிலை. வலைத் தளத் தில் தேடினால் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் நாத்திகர் படையைக் காணலாம். பெரும்பாலும் அங்கெல் லாம் இந்து புராணங்கள் சார்ந்து அல்ல அந்தந்த நாட்டின் புராணங் களே கேள்விக்கு உள்ளாக்கப்படுவதைக் காணலாம்.  அவர்கள் பட்டியல் தருவ தானால் ஏராளம் பக்கங்கள் தேவை.
போய்த் தேடுங்கள் உண்மை அறிய லாம். இங்கேயும் டாக்டர் கோவூர் எழுதிய நூல்களில் கிறித்துவ மதம் சார்ந்த நம்பிக்கைகள் கேள்விக்குள் ளாக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம் காரணம் அவர் கிறித்துவச் சூழலில் பிறந்தவர். பெரியார் பெரிதும் இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளை கேள்விக் குள்ளாக்கினார். அவர் பிறந்த சூழல் அப்படி அதே சமயம் இங்கர்சாலின்  நான் ஏன் கிறித்துவனல்ல  என்ற நூலையும் மாவீரன் பகத்சிங்கின்  நான் ஏன் நாத்திகனானேன்?, நூலையும் மொழிபெயர்த்து அச்சிடச்செய்தவர் அவரே.
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் எல்லா மதத்தினரின் மூடநம்பிக்கை களையும் கேள்விக்குள்ளாக்கினார். ஒருவர் அவர் பிறந்த மதச்சூழல்  பிறப் பால் அவர் மீது திணிக்கப்பட்ட மதம் இவற்றையே நன்கு அறிவார் ; எனவே அது சார்ந்து பேசுவதே இயல்பு. மாறாக பிற மதத்தை விமர்சிக்கப்புகின் தேவையற்ற மதமோதலுக்கு வழி கோலிவிடக் கூடுமல்லவா?
  • உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கையே இல்லையே அப்புறம் கோயிலில் யார் பூஜை செய்தா உங்களுக்கென்ன? எந்த மொழியில அர்ச்சனை செய்தா உங்களுக் கென்ன? கோவில் நுழைவுப் போராட்டத்துக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?
இது மதநம்பிக்கை சார்ந்த பிரச் சனை அல்ல . மனித உரிமை சார்ந்த பிரச்சனை . சமத்துவம் சார்ந்த பிரச் சனை. நாம் அவர்களைப் பார்த்து கேட்க ஆசைப்படும் கேள்வி இதுவே ,  கடவுளை நீயும் நம்புகிறாய் ; அவனும் நம்புகிறான் . அப்படியிருக்க உனக்கு மட்டுமே பூஜை செய்ய உரிமையும் பாத்தியதையும்  உண்டு அவனுக்கு இல்லை என்பது என்ன நியாயம்? கடவுள் எல்லொருக்கும் பொது என்பது பொய்யா? ஒரு சாராருக்கு மட்டுமே உரியவரென்றால் அவர் எப்படிக் கடவுளாவார் ? உமது நம்பிக் கைப்படி கடவுள்தாம் உலகத்தைப் படைத்தார் எனில் அவர் ஒரு சாராரை மட்டும் படைத்தாரா எல் லோரையும் படைத்தாரா? கடவுளுக்கு ஒரு மொழிதான் தெரியுமா?

உண் மையில் நாத்திகரைவிட கடவுளை அதிகம் கேவலப்படுத்துகிறவர் யார்? இப்படி பிறர் உரிமையை மறுப்ப வரல்லவா? உங்களுக்கேன் அக்கறை என முற்போக்காளரை நோக்கி கேட்பவரே, உரிமை எல்லோருக்குமானது . அதனை ஒருசாராருக்கு மறுக்கும் போது எதிர்த்துக் கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு .அடுத்தவீட்டுக்காரன் மனைவியை தூக்கிப் போட்டு அடிக்கும் போதோ மிதிக்கும் போதோ தலையிட்டுக் கேட்பதில்லையா? எரிவது என் வீடல்ல என சும்மா இருப்பது அறமா?

உரிமை மிதிக்கப்படும்போது பாதிக்கப்பட்டவருக்காக குரல் கொடுப்பது சமூகநியாயமே!
  • நீங்களும் எவ்வளவு காலமா கத்திப்பார்க்குறீங்க ஜனங்க ஏன் உங்களை ஏத்துக்கலை? பெரியார் பிள்ளையார் சிலையை உடைச்சார் ஆனால் இப்போ முக்குக்கு முக்கு மூலைக்கு மூலை பிள்ளையார் சிலை முளைத்துவிட்டதே! உங்க பாதை தப்புன்னு இப்பவாவது புரிஞ்சுக் கோங்க!
பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்தது சரியா, தவறா ? இது நீண்ட நாட்களாக நடக்கும் விவாதம். அவர் காலத்தில் புரையோடிப்போன சமூ கத்தை சீர்திருத்த சில அதிரடி  நடவடிக்கைகள் அவருக்குத் தேவைப் பட்டது. சுயநலத்துக்காகவோ,  கலவ ரத்தைத் தூண்டி பதவி நாற்காலியை பிடிப்பதற்காகவோ எந்த வழிபாட்டு தலத்தையும் அவர் இடிக்கவில்லை. அவர் பிள்ளையார் சிலை உடைத்த தால் இன்று மூலைக்கு மூலை பிள்ளை யார் சிலை வரவில்லை; மாறாக பிள் ளையார் சதுர்த்தி ஒரு மதவெறி அரசியல் செயல்பாடாக மாற்றப் பட்டதன் பின்னணியில்தான் பிள்ளை யார் சிலை பெருக்கம் என்பதறிக! மனித வரலாற்றில் மதம் எப்போது வந்தது? கடவுள் எப்போது வந்தது? இன்னும் பல கடவுள்கள் பல மதங்கள் என பிரிந்து மோதுவது ஏன்? இந்தக் கேள்விகளை எழுப்பி விடைதேட முயன்றால் அதற்கான விடை சமூக அறிவியலில்தான் கிடைக்கும். அம்மை நோய்க்கும் பிளேக் நோய்க்கும் ஒரு குறிப்பிட்ட கடவுள் தான் காரணம் என எத்தனை நூற் றாண்டுகளாக மனிதகுலம் நம்பி வந்தது. அந்நோய் ஒழிக்கப்பட்டது சுமார் இருநூறாண்டுகளுக்குள்தானே! அதுபோல் அறிவியல் உண்மைகளை சமூகம் ஏற்க பல்லாண்டாகலாம். எவ்வளவு காலம் என்பது முக்கிய மில்லை.
எவ்வளவு பேர் ஏற்கிறார்கள் என்பது முக்கியமில்லை. இது விழிப் புணர்வுக்கான தொடர் போராட்டமே! மக்களில் பெரும்பாலோர் கடவுள் நம்பிக்கையில் ஆழ்ந்து கிடப்பதற்கு அறியாமை ஒரு காரணமெனில் சமூகச்சூழல் இன்னொரு காரணம். அறிவியல் ஒளி பரவப் பரவ அறியாமை பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடியிருக்க வேண்டும்; ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

இதனால் மக்கள் இன்னும் முட்டாளாகவே இருக்கிறார்கள் என வறட்டு நாத்திகவாதிகள்போல் கூறலாமோ. கூடாது. காரணம் சமூக ஏற்ற தாழ்வும் வறுமையும் கையறு நிலையும் மக்களை மேலும் மேலும் கடவுள் நம்பிக்கையின் பக்கம் தள்ளுகின்றன. ஆகவேதான் மதம் அபின் என்று சொன்ன மார்க்ஸ் அது இதயமற்றவர்களின் இதயமாக  ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சாக இருக்கிறது என்கிற உண்மையையும் சுட்டிக்காட்டினார். ஆக, சமூக ஏற்ற தாழ்வுக்கும் வறுமைக்கும் எதிரான போராட்டத்தில் மக்களை ஒன்று படுத்துவதன் மூலமே அவர்களை சரியான பாதைக்குத் திருப்ப முடியும். வெறும் போராட்டம் மட்டுமே சாதித் துவிடாது. இடைவிடாது தத்துவமும் அறிவியல் போதனையும் இணையும் போதுதான் நீடித்த பலன் கிட்டும் .
  • அறிவியல் பகுத்தறிவு எனச் சொல்லி ஆத்திகர் மனதைப் புண் படுத்தலாமா ?
எதையும் மனதைக் காயப்படுத்தி திணிக்க முடியாது. காயப்படுத்துவதும் கூடாது; ஆயின் காயப்படுத்துவது என்பதென்ன? உண்மையைச் சொல் வதும்; அறிவியலாய் கேள்வி எழுப்பு வதும் காயப்படுத்துவதாகுமா ?  ஒரு காலத்தில் நரபலி மத நம்பிக்கையாக இருந்தது. அதை எதிர்த்து முறியடிக் காமல் அக்கொடிய பழக்கத்திலிருந்து மீண்டிருக்க முடியுமா? அன்று நர பலியை கேள்வி கேட்ட போது மத நம்பிக்கையில் தலையிடுவதாகத்தானே கூச்சல் போட்டார்கள்.

தங்கள் உள்ளம் காயப்பட்டிருப்பதாக கூறினார்கள்.  உடன்கட்டை ஏறுவது மத நம் பிக்கையாக இருந்தது; அதனை எதிர்த்தபோது மதவாதிகள் தங்கள் மதத்தில் தலையிடுவதாகக் கூச்சல் போட்டனர்.  ஆயினும் விடாது போரா டியதால்தானே அக்கொடிய பழக்கம் ஒழிக்கப்பட்டது. இன்னும்  சதிமாதா கி ஜே என்போரை விமர்சனம் செய் வது எப்படிக் காயப்படுத்துவதாகும்? தேவதாசி முறை ஒழிப்பு, தீண்டாமைக்கு எதிரான போராட்டம் எல்லாம் மனிதனை மேம்படுத்தவே! இது யாரையேனும் காயப்படுத்துவதாக இருப்பின் திருந்த வேண்டியவர்கள் அவர்களே தவிர வேறல்ல. உலகம் தட்டையல்ல உருண்டை; பூமியை சூரியன் சுற்றவில்லை சூரி யனைத்தான் பூமி சுற்றுகிறது ; உடலில் இரத்த ஓட்டம் உள்ளது; உடலில் எலும்புகள் இத்தனை;  சந்திரனுக்கு சுய ஒளி கிடையாது, சூரியனின் பிரதி பலிப்பே; இப்படி எந்த அறிவியல் உண்மையைச் சொல்லும் போதும் அது மத நம்பிக்கைக்கு எதிராகவே இருந்தது; அதனால் பலர் தண்டிக்கப்பட்டனர்.  மத நம்பிக்கை காயப்படுகிறது என உலகம் இந்த விஞ்ஞான உண்மைகளை ஏற்காமல் விட்டிருந்தால் நாம் இன்று அனுபவிக்கும் அத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகளும் (சமூக வலைத் தளத்தில் உரையாடும் வசதி உட்பட) இல்லாமல் போயிருக்குமே!
மனித குல வளர்ச்சிக்கு முன்னேற் றத்துக்கு வளவாழ்வுக்கு எதிராக இருக்கும் தவறான பழக்க வழக்கங்களை அறிவியல் நோக்கில் சுட்டிக் காட்டுவது எப்படி காயப்படுத்துவதாகும்? மாறாக அறிவியலின் அனைத்து பலன்களையும் அனுபவித்துக்கொண்டே அறிவியல் ரீதியான கேள்விகளை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்? ஆத்திகம் ஒரு சாரார் உரிமை எனில், நாத்திகம் இன் னொரு சாரார் உரிமை. இதை ஏற்க மறுப்பது ஏன்? இந்தியச் சிந்தனை மரபு முழுவதும் ஆத்திகருடையது என்பது விவரம் தெரியாதவர்கள் கூற்றே! இன்னும் சொல்லப் போனால் லோகாயவாதம் எனப்படுகிற பொருள்முதல்வாத மரபு வலிமையானது . தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய நூல்களில் இதற்கான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன . குறிப்பாக சமீபத்தில் வெளிவந்த  இந்திய நாத்திகம்  எனும் நூல் உரக்கப் பேசும். உலகம் முழுவதும் மூடநம்பிக்கைகளையும் கண்மூடிப் பழக்க வழக்கங்களையும் சாடிச்சாடி கேள்வி கேட்டு கேள்வி கேட்டு பெறப் பட்ட முன்னேற்றம்தான் ;  நாத்திகரும் ஆத்திகரும்  - அனைவரும் அனுபவிக் கும் அனைத்துமாகும். இந்திய தத்துவ மரபில் விவாதம் முக்கியமானது . அதில்   சாமான்ய சள  என்றொரு வகை உண்டு . அதனை தத்துவஞானிகள் ஏற்பதில்லை.
ஏனெனில் சாமன்ய சள என்பது விவாதத்தின் மையத்தை விட்டுவிட்டு குதர்க்கமாக குறுக்குசால் ஓட்டுவதாகும். இந்த குயுக்தியை அவர்கள் நிராகரிப்பர். மேலே கேட்ட கேள்விகள் அத்தகைய சாமான்ய சளதான். ஆயினும் குழப்பம் நீக்கிட பதில் சொல்லவேண்டியது கட் டாயமாகிவிட்ட்து. எல்லா விமர் சனங்களுக்கும் முதன்மையானது மதங்களைப் பற்றிய விமர்சனமே என்பது மார்க்சிஸ்ட்கள் உறுதியான முடிபு; அதே நேரம் மார்க்சிய விமர்சனம் வசைபாடுவதோ அவதூறு பொழிவதோ அல்ல, சமூக அறிவியல் நோக்கில் பகுத்தாய்வதே ஆகும். அதனைத் தொடர்ந்து செய்வோம். யாரையும் காயப்படுத்த அல்ல; விழிப் புணர்வுக்காக  சமூக சமத்துவத்துக்காக  சமூக நீதிக்காக  சமூக முன்னேற்றத் துக்காக.

----------------   சு.பொ.அகத்தியலிங்கம்(நன்றி: தீக்கதிர் வண்ணக்கதிர் 14.09.2014)

63 comments:

தமிழ் ஓவியா said...

தீண்டாமை நோய்!


பிகார் முதலமைச்சர் ஜிதன் ராம்மஞ்ஜி, மது மானி மாவட்டம் மகா சிவன் கோவிலுக்குள் சென்று வந்ததால், கோவில் தீட்டாகிவிட்டது - சன்னிதானம் தீட்டாகி விட்டது - கர்ப்பக்கிரகம் தீட்டாகி விட்டது என்று கூறி, கோவிலை இழுத்து மூடி கங்கையிலிருந்து தண்ணீரைக் கொண்டு வந்து கழுவி, சிறப்பு யாகங்கள் செய்து சுத்தி கரித்த பிறகே கோவிலைப் பொதுமக்களுக்குத் திறந்து விட்டுள்ளனர்.

ஒரு முதலமைச்ச ருக்கே இந்த நிலை! அர்த்த முள்ள இந்து மதத்தின் அழுக்கு நிறைந்த அர்த்தம் இதுதான்!

தீண்டாமை அதிகாரப் பூர்வமாக கோவிலுக்குள் - அதன் கருவறைக்குள் அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்துகொண்டு இருக் கிறது என்பது இப்பொழுது புரிகிறதா? தந்தை பெரி யார் கோவில் கர்ப்பக்கிரகப் போராட்டத்தை அறிவித் ததன் அடிப்படை இப் பொழுது விளங்குகிறதா?

இதில் கைவைத்தால் மற்ற மற்ற இடங்களில் எல்லாம் இந்தத் தீண் டாமை இருள் பஞ்சாய்ப் பறந்துவிடுமே!

கேரள மாநிலத்தில் பதிவுத்துறை அதிகாரியாக (அய்.ஜி.) இருந்தவர் ஏ.கே. ராமகிருஷ்ணன். இவர் 2011 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியோடு ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்றுச் சென்ற பிறகு, அவர் பயன்படுத்திய அறை, மேசை, நாற்காலி, அலுவலகக் கார் ஆகிய வற்றின்மீது பசுவின் சாணி யைக் கரைத்து ஊற்றி சுத்திகரித்தனர்.

இதனை இந்த அதி காரியே மனம் நொந்து சொன்ன சேதி தினமணி யில் வெளிவந்தது (8.4.2011).

நான் தலித் சமுதாயத் தைச் சேர்ந்தவன் ஆகை யால், இதுபோன்ற செயல் களில் ஈடுபட்டுள்ளனர். இது மனித உரிமைகளை யும் குடிமக்கள் சுதந்திரத் தையும் மீறுவதாகும். இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் தக்க நடவடிக் கைகள் எடுக்கவேண்டும் என்றும் கூறினார்.

இந்த வழக்கைப் பதிவு செய்த மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி என்.திலகர் சம் பந்தப்பட்ட துறை ஆணை யருக்குத் தாக்கீது ஒன்றைப் பிறப்பித்தார். புகார் தொடர் பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார்.

தனிப்பட்ட நபரை இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு மட் டும் இவ்வாறு செய்யப்பட வில்லை. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்கு தலாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. அர சில் உயர்பதவி வகித்த வருக்கே இதுபோன்ற தீண்டாமைச் சம்பவங்கள் என்றால், சாதாரண பொது மக்களின் நிலைமை என்ன வென்று சொல்லுவது? என்றும் அவர் கூறினார்.

பெரியாரியலை சமு தாயம் புரிந்து, பெரியாரி யலை உள்வாங்கச் செய் வது ஒன்றே முடிவான தீர்வு என்பதைக் கருத வேண்டும் - அடுத்து செயல் படுத்தவும் வேண்டும் - புரிகிறதா?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/88501.html#ixzz3EttAFLWO

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?நவராத்திரி - ஏழாம் நாளான இன்று 8 வயது சிறுமியை சாம்பவி அம்மனாகப் பாவித்து வழி பட்டால், புருசன் - பெண் ஜாதிக்குள் அன்யோன் யம் ஏற்படுமாம்.

அப்படியானால், குடும்ப நீதிமன்றத்தை இழுத்து மூடிவிடலாம் - அப்படித்தானே?

Read more: http://viduthalai.in/e-paper/88511.html#ixzz3Ettdb127

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்


வித்தியாசம்!

செய்தி: நம் நாட்டுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் இப்பொழுதுதான் பேசும் பிரதமர் கிடைத்துள்ளார்.
- அமித்ஷா (பி.ஜே.பி. தலைவர்)

சிந்தனை: ஆமாம்; அவர் பேசாமல் கெடுத்தார் - இவர் பேசிக் கெடுக்கிறார். அவ்வளவுதானே வித்தி யாசம்!

Read more: http://viduthalai.in/e-paper/88509.html#ixzz3Etto1AUM

தமிழ் ஓவியா said...
ஆன்மிகத் தலைநகரமாக ஆக்குவார்களாம்!

உத்தரப்பிரதேசத்தில் கோமதி நதியைச் சுத்தப்படுத்தும் பணியின் தொடக்க விழாவில் பங்குகொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவை உலகின் ஆன்மிகத் தலைநகராக்குவோம் என்று திருவாய் மலர்ந்தருளி யுள்ளார்!

ஆமாம், பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமன் கோவிலைக் கட்டி இந்து ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவதற்கு இவர்கள் கொடுத்துள்ள பெயர்தான் இந்த ஆன்மிகம்!

இதுதான் கல்வியா?

நாய்க்கூண்டில் நான்கு வயது குழந்தை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 4 வயது குழந்தையை நாய்க் கூண்டில் பள்ளி ஆசிரியை அடைத்தாராம். அந்தக் குழந்தை செய்த தவறு என்ன? அடுத்த குழந்தையுடன் பேசிக்கொண்டு இருந்ததாம்.

அந்தப் பள்ளியை கேரள அரசு இழுத்து மூடிவிட்டது.

இந்த ஆசிரியை அதிக மதிப்பெண் பெற்று பணியில் சேர்ந்தாலும், சேர்ந்திருக்கக்கூடும்;

இப்பொழுது தகுதியெல்லாம் வெறும் மார்க்தானே!

Read more: http://viduthalai.in/e-paper/88504.html#ixzz3EttypMLc

தமிழ் ஓவியா said...

நறுக்கான நான்கு தீர்மானங்கள்!

தமிழ்நாட்டில் கல்வி, வேலை வாய்ப்புகளில் 69 சதவிகித இட ஒதுக்கீடு 1980 முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. தொடக்கத்தில் ஆணையாகவும், 1994 முதல் சட்ட ரீதியாகவும் இந்தச் செயல்முறை இருந்து வருகிறது. இந்தியாவிலேயே இட ஒதுக்கீடு சட்டப்படியாகச் செயல்படுவது தமிழ்நாட்டில்தான். இந்த நிலைக்கு முதுகெலும்பாக பாடுபட்டது திராவிடர் கழகம் - அதன் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களே!

69 சதவிகிதப் பாதுகாப்புத் தொடர்பாக சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் எல்லாம் இதனைக் குறிப்பிட்டு, நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இந்த 69 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின் போதெல்லாம் உயர்ஜாதிக்காரர்களின் பின்பலத்தோடு வழக்குத் தொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவிகிதத்துக் கான சட்டம் செல்லாது என்று எந்த ஒரு கட்டத்திலும் உச்சநீதிமன்றம் கூறியது கிடையாது. இட ஒதுக்கீட்டின் அளவு இத்தனை சதவிகிதம் மட்டும்தான் என்று அரசமைப்புச் சட்டத்திலும் கூறப்படவுமில்லை.

50 சதவிகித இட ஒதுக்கீடு செயல்பாடு இருந்தால், திறந்தபோட்டியில் உள்ளவர்களுக்கு எத்தனை இடங்கள் கிடைக்குமோ அந்த இடங்களை அதிகரித்துக் கொடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டு வருகிறது. இவ்வாண்டும் அதேபோன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் முதன்முறையாக 69 சதவிகித இட ஒதுக்கீடு எந்த அடிப் படையில் தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது என்ற விளக்கத்தைக் கேட்டுள்ளது. இதற்கு இரண்டு மாத கால அவகாசத்தையும் நீதிமன்றம் அளித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

இந்தச் சூழ்நிலையில்தான் சமூகநீதியை உயிர் மூச்சாகக் கொண்டு செயல்படும் திராவிடர் கழகம் - அதன் தலைவரால் நேற்று (30.9.2014) அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது.
கட்சிக் கண்ணோட்டம் இல்லாமல் ஆளும் கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் அக்கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் சில கட்சிகள் கலந்துகொள்ளா விட்டாலும்கூட, இட ஒதுக்கீடுக்கு அவர்கள் யாரும் எதிர்ப் பானவர்கள் அல்லர்; ஏதோ காரணத்துக்காக அவர்கள் வரத் தவறியிருக்கலாம் என்று கூட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் சொன்னது உண்மை யானதே!

உடனடியாக 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான பாதுகாப்புதான் கூட்டத்தில் முக்கிய அடிநாதமாக இருந்தது.

மண்டல் குழுப் பரிந்துரையை எதிர்த்துப் போடப்பட்ட இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பில் (ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு) இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்தை விஞ்சக் கூடாது என்று கூறப்பட்டு இருந்தாலும், சில விசேட காரணங் களுக்காக அதனையும் விஞ்சலாம் என்று கூறப்பட்டுள்ளது.

நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட முதல் தீர்மானத்தில் இது சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகை 73.5 சதவிகிதம் என்றும், தாழ்த்தப்பட்டோர் மக்கள் தொகை 22.16 சதவிகிதம் என்றும், மலைவாழ் மக்கள் தொகை ஒரு சதவிகிதம் என்றும், மத்திய புள்ளியியல் மற்றும் திட்டம் செயல்படுத்தும் துறை தெரிவித்துள்ளதை தீர்மானம் எடுத்துக்காட்டியுள்ளது. இதன்படி 96 சதவிகிதம் கொண்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 69 சதவிகிதம் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், 69 சதவிகித இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுவது எல்லா வகையிலும் நியாயமாகும்.

விசேடக் காரணங்களால் 50 சதவிகித இட ஒதுக்கீட்டை விஞ்சலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதற்கு இந்தப் புள்ளி விவரம் போதுமான அளவு திருப்தி அளிக்கக்கூடியதே!

இப்பொழுதுகூட வடகிழக்கு மாநிலங்களில் மலைவாழ் மக்களுக்கு 80 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுத்தானே வருகிறது.

எல்லா வகையிலும் தமிழ்நாட்டின் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்த வலுப்படுத்த காரணங்கள் ஏராளமாகவே உள்ளன. இவற்றை ஒருமுனைப்படுத்தி, உச்சநீதிமன்றத்தில், மூத்த திறமையான வழக்குரைஞர்களைக் கொண்டு தமிழ்நாடு அரசு வாதாடச் செய்து, அரும்பாடு பட்டுத் தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்டு வரும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கட்டிக் காக்கவேண்டியது தமிழ்நாடு அரசின் மிக முக்கிய கடமையாகும்.

நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் உயிர்த் துடிப்பான தீர்மானமும், கோரிக்கையும் இதுவேயாகும். அக்கூட்டத்திற்கு வர வாய்ப்பில்லாத கட்சித் தலைவர்களும், இந்தப் பிரச்சினையை வலியுறுத்திக் கருத்துகளைத் தெரிவிப்பார்கள் என்றும் எதிர்ப்பார்க்கிறோம்.

இட ஒதுக்கீடு தொடர்பான வேறு சில பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒன்பதாவது அட்டவணையில் பாதுகாப்புக் கருதி சேர்க்கப்பட்ட தமிழ்நாட்டின் சட்டத்தின்மீதும் உச்சநீதிமன்றம் தலையிடலாம் என்ற புதிய நிலையை உச்சநீதிமன்றம் உருவாக்கியுள்ளது.
எந்தக் காரணத்துக்காக ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு உருவாக்கப்பட்டுள்ளதோ, அதன் ஆணி வேரையே வீழ்த்தக்கூடிய கருத்து அது.

மேலும் புதியதோர் சட்டத் திருத்தம் கொண்டுவந்து நீதிமன்றம் தலையிடவே முடியாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படவேண்டும்; இட ஒதுக்கீட்டுப் பாதுகாப்புக்காக தனிச் சட்டம்; பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் நிலுவையில் உள்ளதையும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதுகுறித்துத் தனியே கூடி கருத்துருவை ஏற்படுத்துவது என்றும் கருத்துத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அமைப்புத் தொடர்ந்து சமூகநீதித் திசையில் வெற்றிகரமாக பயணிக்கும் என்பதில் அய்யமில்லை; திராவிடர் கழகத்தின் அழைப்பை ஏற்று கூட்டத்தில் கலந்துகொண்டு மிகச் சிறந்த ஆலோசனைகளை வழங்கிய அனைவருக்கும் நன்றி! நன்றி!!

Read more: http://viduthalai.in/page-2/88513.html#ixzz3EtuGSULq

தமிழ் ஓவியா said...

உலக முதியோர் நாளில், பயனுறு சிந்தனைகள்!

இன்று அக்டோபர் ஒன்றாம் தேதி - உலக முதியோர் நாள்! World Elders Day - 1.10.2014)
எதிர்பாராத வகையில், பிரபல மருத்துவர் எம்.எஸ்.இராமச்சந் திரன் அவர்களுடன் உரையாடும் வாய்ப்புப் பெற்றேன். அப்போது முதியோர்நலம், பாது காப்பு - வாழ்வியல் முறைப்பற்றி சில அரிய குறிப்புகளை அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

அக்குறிப்புகள் அனைத்து முதி யோர்களுக்கும் பயனுள்ளதாக இருக் கும் என்ற நம்பிக்கையில், கருத்துகளை எழுதுவதில் பெருமகிழ்ச்சியும், மன நிறைவும் அடைகிறேன்.

1. வயதாவதின் காரணமாக பலவகை உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பேயாகும். அதற்காக யாரும் மனத்தளர்ச்சியோ, விரக்தியோ, அச் சமோ கொள்ளவேண்டியதில்லை.

2. நீண்ட காலம் முன்பு நிகழ்ந்த நினைவுகள் அனைத்தும் நம்முள் அழியாமல் நினைவில் இருக்கும்; எளிதில் மறக்காது; ஆனால், அண்மை யில் நடந்த நிகழ்வுகளை நம் நினைவில் இருந்து மறக்கக்கூடும்; இதைத் தான் ஆங்கிலத்தில் டாக்டர்கள் ‘‘Short term Memory Loss’’
என்று கூறுகிறார்கள்!

நரம்பு மண்டலங்கள் முதுமை யினால், அவற்றின் பலம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவரத் தொடங் குவது இயற்கை; தவிர்க்க முடியாதவை. இது கால்களிலும், பாதங்களிலும் நன்றாய் உணரக்கூடியதாகும். (தடுமாறி விழவும் கூடும்).

மூளையின் ரத்த ஓட்டம் குறையத் தொடங்கும். மூளையின் எடைகூட ஆண்களுக்கு 10 சதவிகிதமும், பெண் களுக்கு 12 சதவிகிதமும் குறையக் கூடும்!

அதுபோலவே, எலும்புகளின் பலம் ஆண்களுக்கு முதுமை காரணமாக 3 சதவிகிதமும், 10 ஆண்டுகாலத்தில் பெண்களுக்கு 8 சதவிகிதமும் குறைவு ஏற்படும்.

தசைகளின் (Muscles) பலமும் குறையும். சில நேரங்களில் விரைத்து Stiffness எளிதில் மடக்குவது இயலாத நிலை - அதன் காரணமாக உடல் வலி களும் ஏற்படுவது தவிர்க்க இயலாததாக வும் அமையலாம்!


தமிழ் ஓவியா said...

இந்த Muscles Mass என்பது (சதையின் தோற்றப் பொலிவு) 25 முதல் 30 சதவிகிதம் குறையவே செய்யும்.

காதுகளின் கேட்கும் திறன் பெரிதும் குறையவே செய்யும்.

இதயத்தின் செயல்பாடும், பலமும் கூட முன்பைவிட முதுமை ஏற ஏற, சற்று குறைந்து காணுதல் - இரத்த அழுத்தம் (Blood Pressure) மேலே உள்ள அளவீடு (Systolic BP) கூடுதலாக ஆக வாய்ப்புண்டு. காரணம், இரத்த ஓட்டத்தை இதயத்திற்குக் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்கள் நெகிழ்வுத் தன்மை (Elasticity) க்கு இழப்பு ஏற்பட்டு குறைந்து வரக்கூடும்.

இதன் விளைவு இதய நோய் (Coronary Heart Disease) வர வாய்ப்பு அதிகம் உண்டு.

சிறு நீரகங்கள் செயல்பாடு - முதுமை காரணமாக 60 சதவிகித செயல் திறன் குறைவு ஏற்படும் (குறைந்தே இயங்கிடும் தன்மையை அடையக் கூடும்). நோய் ஏதும் ஏற்படாமலேயே!

பொதுவாக உணவு எடுத்துக் கொள்ளுதலும் குறையவே செய்யும்.

முன்புபோலவே, வேகமாக நடத்தல், எதையும் துடிப்புடன் விரைந்து செய்தல் என்பதன் வேகத் தன்மை குறையும்; இந்த மாறுதல் பளிச்சென்று தெரியும் - நமக்கே புரியும்.

பல்வேறு பிரச்சினைகள் - குடும்பப் பிரச்சினைகள் காரணமாக மன உளைச்சல் காரணமாக மன அழுத்தம் (Depression) முதுமையில் ஏற்படுவதும் சர்வ சாதாரணம் ஆகும்!

இவைகளுக்கெல்லாம்கூட விதி விலக்கானவர்கள் நாட்டில் இல்லாமல் இல்லை; எனவே இவற்றைப் படிக்கும் முதியவர்கள் அனைவரும் பயம் கொள்ளத் தேவையில்லை.

பொதுவான உடல்நலம்பற்றிய முது மையின் உடல்கூறுகள்பற்றிய மருத் துவத் தகவல்கள்தான் மேலே உள்ளவை.

எல்லா விதிகளுக்கும் விலக்குகள் உண்டு என்று கருதி, நலவாழ்வும், நீண்ட ஆயுளும் பெற்று வாழுபவர்கள் பலரும் இருந்திருக்கிறார்கள்; இருந்து கொண்டும் இருக்கிறார்கள்; கடும் உழைப்பு - மனமகிழ்ச்சி - எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் மனப் பக்குவம்தான் எல்லாவற்றையும்விட பெரும் மருந்து அருமருந்து மறவாதீர்!

Read more: http://viduthalai.in/page-2/88514.html#ixzz3EtugVYNk

தமிழ் ஓவியா said...

ஆர்எஸ்எஸ் புத்தகங்களில் பொய் மூட்டைகள்!

- சீதாராம் யெச்சூரி எம்.பி.,


சமூக ஒடுக்குமுறை என்பது சாதிய ஒடுக்குமுறையையும் (caste oppression) பாலின ஒடுக்குமுறையையும் (gender oppression) உள்ளடக்கிய ஒன்று. இவற்றை ஆர்எஸ்எஸ் தங்களுடைய இந்து ராஷ்ட்ரத்தை நிறுவிடும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே மேற் கொண்டு வருகிறது. அதன் சமீபத்திய நிகழ்வுதான் பாஜக ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில், பிகானீர் -ஜெய் பூரில் உள்ள அரசுப் பள்ளிக்கூடம் ஒன்றில், உயர்சாதி ஆசிரியருக்காக வைத்திருந்த மண்பானையிலிருந்து தண்ணீர் குடித்தார்கள் என்று கார ணம் காட்டி பதினொரு தலித் மாண வர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்ப தாகும். நம் நாட்டில் சாதிய மற்றும் சமூக ஒடுக்குமுறை இப்போதும் மிகவும் உச்சத்தில் இருப்பதையே இந்நிகழ்வு வெளிப்படுத்துகிறது.

தமிழ் ஓவியா said...

இவ்வாறு ஒரு பக்கத்தில் தலித் மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அதே சமயத்தில், ஆர்எஸ்எஸ் இயக் கத்தின் தலைவர் தலித்துகள் இவ் வாறு ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருப்பதற்குத் தாங்கள் காரணம் அல்ல என்பதைக் காட்டும் விதத்தில் மூன்று புத்தகங்களை வெளியிட்டிருக் கிறார். அந்தப் புத்தகங்கள் மூன்றிலும், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பல இதர ஒடுக்கப்பட்ட குழுவினர் மீது ஒடுக்குமுறை ஏவப்படுவதற்குத் தாங்கள் காரணம் அல்ல என்றும், மத்தியக் காலத்தில் அயல்நாடுகளிலி ருந்து படையெடுத்து வந்த முஸ்லிம் கள்தான் காரணம் என்றும் அந்தப் புத்தகங்களுக்கு அணிந்துரை அளித் துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். (தி இந்துஸ்தான் டைம்ஸ், செப்டம்பர் 22, 2014). தங்கள் இயக்கத்தின் அரசியல் அங்கமாகத் திகழும் பாஜக மத்திய அரசாங்கத்தில் அமர்ந்திருப்பதால் தைரியம் அடைந்துள்ள ஆர்எஸ்எஸ் இந்தியாவில் உள்ள அனைத்துக் குழு வினரையும் ஒன்றாக்கி, ஒரே நூலின் கீழ், ஒரே இந்து அடையாளத்தின் கீழ் கொண்டுவந்து, அதனை சட்டப்படி செல்லத்தக்கதாக மாற்றவும் முயற்சி களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு, மாபெரும் நம் நாட்டின் பல நூறு ஆண்டுகால வரலாறு, அவர்கள் விடும் சரடுகளுக்கு ஏற்ப, திருத்தி எழு தப்பட்டாக வேண்டியது அவசிய மாகும்.

தற்போதைய நவீன மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, அவர்கள் கருத்தாக்கமான இந்து ராஷ்ட்ரமாக மாற்றி அமைப்பதற்கு, இது அவசியமாகும். பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா வில் இருந்துவரும் பலதரப்பட்ட கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், பழக்க வழக்கங்கள், மொழிகள் கொண்டவர்களை இந்துயிசம் என்னும் ஒரே குடையின்கீழ் அடைத் திட அவர்கள் முயற்சிக்கிறார்கள். இரண்டாவதாக, ஓர் அயலக எதிரியை (இந்துக்களுக்கு அயலாக உள்ளவரை அதாவது முஸ்லிம்களை,) உருவாக்க வேண்டியது அவர்களுக்குத் தேவை. தங்கள் குறிக்கோளை எய்துவதற்காக இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட் டுள்ளார்கள்.

தமிழ் ஓவியா said...

வரலாற்றை மாற்றி எழுதும் முயற் சியில் ஈடுபட்டுள்ள ஆர்எஸ்எஸ் தன்னுடைய சமீபத்திய நடவடிக் கையாக, இந்து சுவடிகளின்படி சூத்திரர்கள் எப்போதுமே தீண்டத் தகாதவர்களாக இருந்ததில்லை, என்று கூறியிருக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக் கத்தின் குருமார்கள் அமைப்பில் இரண்டாவது குருமாராக இருக்கும், பையாஜி ஜோஷி, இவ்வாறு கூறி யிருக்கிறார். மத்தியக் காலத்தில் இஸ் லாமியர்களின் அட்டூழியங்கள்தான் தீண்டத்தகாதவர்கள், தலித்துகள் மற்றும் இந்திய முஸ்லிம்கள் உரு வானதற்குக் காரணம் என்றும் கூறுகிறார். இதே தொனியை எதி ரொலித்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மற்றொரு மூத்த தலைவர், இஸ்லா மியர் காலம் தொடங்கிய காலத்தில், பிராமணர்களுக்கும் சத்திரியர் களுக்கும் எதிராக அட்டூழியங்கள் நடைபெற்றதன் விளைவாகத்தான், ஒடுக்கப்பட்ட சாதிகளும், கீழ் சாதி களும் தோன்றின என்றும் தலித்துகள் என்போர் துருக்கியர், முஸ்லிம்கள் மற்றும்மொகலாயர் சகாப்தத்தில் சிருஷ்டிக்கப்பட் டனர் என்றும் எழுதி இருக்கிறார்.

இந்திய வரலாற்றை இவ்வாறு திரித்து எழுதும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் அமைப்பு ஒன்று சமீபத்தில் ரகசியக் கூட்டம் ஒன்று நடத்தியதாகவும் அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வரலாற்றாசிரியர்கள் பங்கேற்று, தற்போதுள்ள பாடத் திட்டங்களில், இந்துக்கள் அனை வரையும் ஒருமுகப்படுத்தும் தங்கள் குறிக்கோளை எய்திடுவதற்காக சாதி அல்லது கீழ் சாதி ஆகியவற்றிற்கும் அப்பால் இந்து அடையாளத்தை நிலைநிறுத்தக்கூடிய விதத்தில், மாற்றங்களைக் கொண்டுவருவது தொடர்பாக விவாதித்தார்கள் என்றும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. சாதிய அமைப்பும் அதனையொட்டி நடை பெற்று வரும் சமூக அட்டூழியங்களும் புராதன இந்து சமூகத்தில் எப் போதுமே நடந்ததில்லை என்பது போலவும், முஸ்லிம்கள் படை யெடுத்து வந்தபின்னர்தான் சமூகத்தில் இவை உருவாயின என்று கூறுவதும் இதுவரை எழுதப்பட்டுள்ள வர லாற்றையும், காலங்காலமாக வாய் மொழி வழியாகக் கூறி வரும் வள மான அனுபவங்களையும் முழுமை யாகத் திரிக்கும் செயலாகும்.

தமிழ் ஓவியா said...

உண்மையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூலவேர்கள், `இந்து சட்டத்தின் (‘Hindu code’)
மத ரீதியான ஒப்புதலுடன் அமைக்கப் பட்டு, அவைஆர்எஸ்எஸ் இயக்கத் தினரால் மிகவும் புனிதமாகப் போற்றப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மாதவ சதாசிவ கோல்வால்கரால் சரி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவை களாகும்.1939 இல் நாம் அல்லது வரையறுக்கப்பட்டநம் தேசம் (We or Our Nationhood defined (1939,) என்று கோல்வால்கர் எழுதிய தன் புத்த கத்தில், கோல்வால்கர் மனுவை உலகின் முதலாவதும், மாபெரும் சட்ட வல்லுநருமாவார் என்று போற்றிப் பாராட்டியிருப்பதுடன், அவர்தான் தன்னுடைய மனு தர்மத்தில், உலகில் உள்ள அனைத்து மக்களும் இந்துஸ்தானுக்குச் சென்று அந்நாட்டிலுள்ள `முதலில் பிறந்த பிராமணர்களின் புனிதக் காலில் விழுந்து வணங்கி, தங்களுடைய கடமைகள் என்ன என்பதைக் கற்றுத் தெளிய வேண்டும், என்றும் கட்ட ளையிட்டிருக்கிறார். (கோல்வால்கர், 1939, பக். 55-56). பிராமணன் தலை யிலிருந்து பிறந்தவன், சத்திரியன் (அரசன்) கைகளிலிருந்து பிறந்தவன், வைசியன் தொடைகளிலிருந்து பிறந்தவன், சூத்திரன் கால்களிலிருந்து பிறந்தவன்.

இதன் பொருள் மக்கள் இவ்வாறு நான்கு மடிப்புகளாக ஆக்கப்பட்டி ருக்கிறார்கள் என்பதே, அதாவது இந்து மக்கள் நம் கடவுள். இப்போது மனுஸ்மிருதி என்ன கூறுகிறது என்று பார்ப்போம். சூத்திரனுக்கு மிகவும் சிறந்த இயற்கையாய் அமைந்த செயல் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்வதுதான் என்று பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. இதைத் தவிர அவன் வேறு எதைச்செய்தாலும் அவனுக்குப் பலனளிக்காது.`` (123, அத்தியாயம் 10)பின்னர் மனுஸ்மிருதி சமூகத்தில் சாதியற்றவர்கள் என்றும் தீண்டத் தகாதவர்கள் என்றும் குறிப்பிடப் படுபவர்களை வரையறுப்பதைத் தொடர்கிறார். அவர்களுக்கு சமூகத் தில் எந்த இடமும் எப்போதும் கிடையாது என்று கூறும் அவர், அவர்களது இழி செயல்பாடுகள் குறித்தும் வரையறுக்கிறார்.

சகித்துக் கொள்ள முடியாத சாதியக் கட்டமைப்பு கோல்வால்கரின் நூலிலும் இன்றைய காவிப் படை யினரிடத்திலும் எதிரொலிப்பதைக் காணலாம். ஏனெனில் மனுஸ்மிரு தியும் `ஆரியர் சமூக அமைப்பின் அடிப்படையில் அமைந்த ஒன்றுதான். ஆரியர் அல்லாதவர்களுக்குள்ள முரட்டுத்தனம், கொடூரமானவனாக இருத்தல் மற்றும் சடங்குகளைப் புரியும்போது வழக்கமாகத் தோல் வியுறுதல் அனைத்தும் இந்த உலகில் அவர்கள் கறைபட்ட கருப்பையி லிருந்து பிறந்தவர்கள் என்பதைத் தெளிவாய்க் காட்டும். (58, அத்தியாயம் 10). ஆயினும் தாங்கள் விரும்பும் `இந்து ராஷ்ட்ரம் நிறுவப்படவேண் டுமாயின், அதற்கு ஆரியர்கள் இந்த நிலத்தின் பூர்வகுடியினர்தான் என்றும், அவர்கள் வேறெங்கிருந்தும் வந்தேறியவர்கள் அல்ல என்றும் மறுக்கவியலாத அளவிற்கு மெய்ப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

நம்பிக்கையின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் அனைத்து வரலாற்றுச் சான்றுகளையும் தள்ளுபடி செய்து விடுகிறது. வரலாற்றாசிரியர் ரொமிலா தாபர், சமஸ்கிருத வேதத்தின் மொழி யியல் சாட்சியமானது ஈரானிலிருந்து ஓர் இந்தோ-அய்ரோப்பிய மொழி இந்தியாவிற்குள் வந்தது, ஆனால் அது இந்தியா ஆரியர்களின் தாய்நாடு என்னும் கற்பிதத்தினை ஆதரித்திட வில்லை, (செமினார் 400, டிசம்பர் 1992) என்று நிறுவியிருக்கிறார். இவ்வாறு ஆர்எஸ்எஸ் கூட்டத்தினர், வரலாற்றிற்கு மேல் புராணத்தையும், தத்துவஞானத்திற்கு மேல் மத நம் பிக்கையையும் வைத்து, `நம்பிக்கையின் அடிப்படையில் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இத்தகைய கேடுகெட்ட சமூக அமைப்புதான் இன்றைய இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து அநீதிகளை இழைத்து வருகிறது. நீதிக்கான போராட்டத்தைத் தொடங்கிட இந்த சமூக நிலைமை தூக்கி எறியப்பட்டாக வேண்டும்.

இந்திய வரலாற்றை மாற்றி எழு திக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ்/ பாஜக நிகழ்ச்சி நிரலானது, யார் யார் எல்லாம் இந்துக்கள் கிடையாது என்று அவர்கள் கருதுகிறார்களோ அவர்கள்அனைவருக்கும் அடிப்படை மனித உரிமைகளை மறுக்க வகை செய்வதுடன், இத்தகைய ஏற்றுக் கொள்ள முடியாத சமூக ஒடுக்கு முறையும் தொடர்ந்து நீடித்திருக்கக் கூடிய விதத்தில் வரையப்பட்டு வருகிறது.

நன்றி: தீக்கதிர், 1.10.2014

Read more: http://viduthalai.in/page-2/88515.html#ixzz3EtuzQhDf

தமிழ் ஓவியா said...

வாழ்வியல் சிந்தனை

அய்யா,

தங்களது வாழ்வியல் சிந்தனைகள் மூன்றாம்பாகம் படித்தேன். வாழ்க்கை முறை எப்படிப்பட்டது என்பதை அனை வரும் அறிந்து கொள்ள வேண்டிய அற்புதமான நூல்.
மனித சமூகத்திற்கு எழுதப்பட்ட சிறப்பான நல்ல நூல். இந்த நூலைப் படித்து மனநிறைவு அடைந்தேன்.

இன்பம் வரும்போதும், துன்பம் வரும்போதும் துலாக்கோல் போல சமநிலையுடன் மனதைப் பக்குவப் படுத்திக் கொண்டால் எப்போதும் மகிழ்ச் சியாகவே மனிதன் வாழலாம் என்று முக்கியமாக சொல்லப்பட்டிருக்கிறது,

நான் சிறு வயதில் கஷ்டப்படும் காலத்தில் தமிழ்வாணனின் துணிவே துணை என்ற தலைப்பில் கற்கண்டு நூலைப் படிப்பேன். துன்பம் என்றால் என்ன என்பதே தெரியாமல் வாழ்ந்த வன். அதுமட்டுமல்ல, ஏவிஎம் மெய் யப்பச் செட்டியார் அவர்கள் முயற்சி திருவினையாக்கும் என்ற சொல்லைக் கேட்டிருக்கிறேன்.

என்னுடைய சிறு முன்னேற்றத்தி லும் வாழ்வியல் சிந்தனையின் பெரும் பங்கு எனக்கு உண்டு என்பது தெளிவு. பார்த்தேன்; படித்தேன்; சிந்தித்தேன். படிக்கப் படிக்க தேன்போல் இனிமை யாகத் தித்தித்தது. பகுத்தறிவுப் பணிக்கு என் இனிய வாழ்த்துகள். நன்றி!

- ம.ச.நாராயணன்

Read more: http://viduthalai.in/page-2/88517.html#ixzz3EtvRClDI

தமிழ் ஓவியா said...

ஊழல்களைச்சொல்லி திராவிட கட்சிகளுக்குப்பதில் பிஜேபி அதிகாரத்திற்கு வரத்துடிக்கிறது -எச்சரிக்கை!


அம்பத்தூர் பொதுக்கூட்டத்தில் தமிழர்தலைவர் ஆசிரியர் உரை

அம்பத்தூர், அக். 1- திராவிட கட்சிகளைக்குறைகூறி ஆட்சி அதிகாரத்தில் ஆரிய பிஜேபி அமரத்துடிக்கிறது என்ற எச்சரிக்கை விடுத்து திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அம்பத்தூரில் 29.9.2014 அன்று நடைபெற்ற தந்தை பெரியார் 136ஆவது ஆண்டு பிறந்த நாள்விழாப் பொதுக்கூட்டத்தில் எச்சரிக்கையாகக் குறிப் பிட்டதாவது:

தமிழர் தலைவர் உரை

ஒரு புதிய முதலமைச்சர் இன்றைக்கு பதவி ஏற்றிருக் கிறார். திராவிடர்கழகத்தின் சார்பிலே மட்டுமல்ல. தமிழர் களின் சார்பிலும் அவருக்கு வாழ்த்தைத் தெளிவாக சொல்லி இருக்கிறோம். ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தைச் சார்ந்தவர் அவர். அம்மையார் அவர்கள் தண்டிக்கப் பட்டார்கள்.

அவர் ஜாமீன் மனு போட்டிருக்கிறார். அந்த வழக்குக்குள்ளேயோ, அதைப்பற்றியெல்லாமோ இங்கு பேசவில்லை. ஆனால், நண்பர்களே, ஊழல் ஒழிப்பு, ஊழலுக்குத் தண்டனை அவருக்கு கொடுக்கப்பட்டிருக் கிறது. அடுத்து இன்னொரு பெரிய ஊழல், திமுகவிலே இருக்கிறது என்றெல்லாம் பத்திரிகைகள் உடனே எழுத ஆரம்பித்திருக்கிறார்கள் பாருங்கள்!

இவை பற்றி திராவிட தமிழ் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. ஒரு எச்சரிக்கை மணியை திராவிடர் கழகம்தான் அடிக்க முடியும் என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஊழலை ஆதரிக்கவில்லை

நாங்கள் யாரும் ஊழலை ஆதரிக்கிறவர்கள் அல்ல. தவறு நடந்தால் நியாயப்படுத்துவது எங்கள் வேலையும் அல்ல. ஆனால், நண்பர்களே, இந்த ஜனநாயக அமைப்பு இருக்கிற வரையிலே, தேர்தல் முறையை மாற்றினால் ஒழிய ஊழலை ஒழிக்க முடியுமா? 200ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுகிறவன், 500ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுகிறவன், வாக்காளர் செலவு செய்யக்கூடிய வேட்பா ளர் யாராக இருந்தாலும், அந்த உச்சவரம்பு இருக்கிறது பாருங்கள் 25 இலட்சம் ரூபாய், 75 இலட்சம் ரூபாய் என்றால், அதுக்குமேல் ஒரு ரூபாய்கூட செலவு செய்யவில்லை என்று பொய்க்கணக்குதானே கொடுக்கிறார்கள்.

இதை யாராவது மறுக்க முடியுமா? அதாவது கோர்ட்டிலே ஏறி சத்தியமா சொல்கிறேன் என்று சொல்லுகிறார்கள் பாருங் கள். அதுமாதிரி இது சாட்சி சொல்கிறவர் எல்லாரும் சத்திய மாகச் சொல்கிறேன் என்று சொல்கிறார்கள். கொலை செய்தவனைப் பார்த்தேன் என்று சொல்கிறவரும் சத்தியமா கத்தான் சொல்கிறார். இல்லீங்க இல்லவே இல்லீங்க என்று சொல்லுகிறார் பாருங்கள் அவரும் சத்தியமாகத்தான்னு சொல்கிறார்.

அதுவும் கடவுள் பேரால் சத்தியமாக என்று சொல்கிறார். அந்த கடவுள் பார்த்துக்கொண்டு சும்மாதான் இருக்கிறார். இருந்தால் சும்மா இருப்பாரா? ஏண்டா, என்னை வம்புக்கு இழுக்கிறீங்க என்று கேட்டிருக்க மாட்டாரா? யோசனை பண்ணிப்பார்க்க வேண்டாமா? அதுமாதிரி நண்பர்களே, நாங்கள் நியாயப்படுத்துகிறோம் என்று சொல்லவில்லை.

தமிழ் ஓவியா said...

ஆனால், இன்றைக்கு இப்போதும், இன்னமும் ஆரியத்தாலே, பார்ப்பனீயத்தாலே மிகப்பெரிய அளவிற்கு மதவாத சக்திகளாலே ஒரு வியூகம் தமிழ் நாட்டைக் குறிவைத்து அமைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவிற்கு மாறுதலை உண்டாக்கி, சமூக நீதிப்பிரச்சினையாக இருந்தாலும், வேறு பிரச்சினையாக இருந்தாலும் இந்தியாவுக்கே ஒளியூட்டக் கூடிய ஒரு மாநிலம் இருக்கிறதென்றால், அது தமிழ்நாடு தான். வடநாட்டிலே நாங்கள் செல்லும்போது கேட்கிறார் களே.

உங்க மாநிலத்திலேதான் 69 சதவீதம் இருக்கிறது. எங்க மாநிலத்திலே 5 சதவீதம்கூட கொடுக்கவில்லையே. புரட்சி என்று சொல்லக்கூடிய மேற்கு வங்காளத்திலே இன்னமும் இட ஒதுக்கீடு போதிய அளவிலே கிடையாது. ஜோதிபாசு இருந்த நேரத்திலேயே நாங்கள் போய் போராடி னோம். இல்லை என்று சொல்ல முடியாது.

சந்திரஜித் யாதவ், நாங்களெல்லாம் போய் குரல் கொடுத்தபின்புதான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 5 சதவீதம். தனியாக அமைச்சரவைகூட கிடையாது என்றிருந்த சூழ்நிலை களும் உண்டு. அதைப்பற்றியெல்லாம் எழுதினோம். பிறகு அவர்கள் முன்வந்தார்கள். 5 பிறகு 7 ஆனது. ஏழும் பத்துக்குள்ளேதான் இன்னமும் இருக்கின்றது. தமிழ் நாட்டிலேதான் 69 சதவீதம்.

அந்த 69 சதவீதமும் யாருடைய காலத்திலே? பிரதமர் நரசிம்மராவ் பார்ப்பனர். அதேமாதிரி முதல்வர் ஜெயலலிதா அவர் யாரென்று உங்களுக்குத் தெரியும் பார்ப்பன அம்மையார். ஆனால், 69 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றியாக வேண்டும் என்று சொன்ன உடனே அந்த அம்மையார் நம்முடைய கருத்தை ஏற்றுச் செய்தார்கள். ஆகவே, நன்றி உணர்ச்சியோடு சமூக நீதிக்காத்த வீராங்கனை என்றும் சொன்னோம். அதற்குப் பின்பு கலைஞர் வந்தார். மகளிருக்கு அவர்தான் சொத் துரிமை கொடுத்தார்.

உடனே ஒரு பெரிய விழா நடத்தி மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர் என்றும் நாம் சொன்னோம். திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையிலே யார் நல்லதைச் செய்தாலும், எந்த ஆட்சி சரியாக சமூகநீதியைச் செய்தாலும், எங்களுக்குக் கட்சிக் கண் ணோட்டம் கிடையாது. கொள்கைப் பார்வைதான் எங்க ளுக்கு உண்டு என்று சொல்லக்கூடிய அளவிலே செய்தோம்.

தமிழ் ஓவியா said...

மதவாதம் உள்ளே வர வேண்டுமா?

இன்றைக்கு என்னதான் இவர்களுக்குள் பிரச்சினைகள் இருந்தாலும், 42 சதவீதம் வாக்கு அதிமுகவுக்கும், திமுக வுக்கு 24 சதவீத வாக்கு இரண்டையும் கூட்டிப்பாருங்கள். 66 சதவீதம்! என்ன திட்டம் தீட்டுகிறார்கள் என்றால், இவர்கள் மொழிவுணர்வு உள்ளிட்ட மாநில உரிமைகள் பேசும் இரண்டு பேரையுமே (தி.மு.க. - அ.இ.அ.தி.மு.) அழிக்க வேண்டும். அந்த இடத்திலே மதவாதம், பார்ப்ப னர்கள் உள்ளே வரவேண்டும். இதுதான் சுப்பிரமணிய சாமிகளுடைய திட்டம்.

ஆழமாக யோசித்துப்பாருங்கள். நம்மிடையே ஒருவருக்கொருவர் பகைமை உணர்ச்சி! ஊழல் அப்புறம், அடுத்த படியாக என்ன சொல்கிறார்கள் என்றால் 2ஜி ஒரு இலட்சத்து எழுபதாயிரம், பூச்சியம் பூச்சியம் என்று போட்டுவிட்டார்கள். அது நடந்ததா? அதிலே யாருக்காவது ஏதாவது நட்டம் ஏற்பட்டிருக்கிறதா? இரண்டும் ஒரே தன்மையானதா? கிடையவே கிடையாது. வித்தியாசமானது. இப்ப அந்த ஆராய்ச்சிக்கூட வேண்டாம்.

திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மோதல் என்றால், இரண்டு பேரையும் ஒழித்த இடத்திலே வந்து தாம் வந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்ற வியூகத்தை ஆரியம் திட்டமிட்டிருக்கிறது. இதில் மக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நம் இனம் அழிந்ததற்கு யார் காரணம்?

முதலில் இந்த இனம் அழிந்ததற்கு யார் காரணம்? வரலாற்றிலும்சரி, புராணக்காலத்திலும் சரி நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாத காரணத்தால்தான் நண்பர்களே இந்தச் சூழ்நிலை ஏற் பட்டிருக்கிறது. பிஜேபியைப் பாருங்கள். அடுத்தது எங்களுக்குத்தான் பெரிய வாய்ப்பிருக்கிறது என்றும், மக்கள் எல்லாம் ரெடியாக இருக்கிறார்கள் என்றும் சொல்வதனுடைய நோக்கம் என்ன? இந்த மண்ணையே காவி மண்ணாக்கிவிடலாம் என்கிற எண்ணத்திலே இன்றைக்கு நடத்துகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

அதுவும் தேசிய ஆட்சியை அமைத்துவிடலாம் என்று இவரை இந்த ஊழலைச் சொல்லி ஒழிக்க வேண்டும். அவரை அந்த ஊழலைச்சொல்லி ஒழிக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்தபின்னாலே சவுகரியமாகப் போய் அங்கே நிதானமாக உட்கார்ந்து கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் நண்பர்களே, தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு ஏமாளிகள் அல்ல. காரணம் கருப்புச்சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக் காரன்.

இது வெறும் விடுகதை மட்டுமல்ல. இது தமிழ்நாட்டு வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதி. அந்த அடிப்படையிலே பார்க்கிறபோது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியம். சாதாரணமாக நினைக்காதீர்கள். சுப்பிரமணிய சாமிகளுடைய கனவுகள், சுப்பிரமணியசாமி என்கிற நபரைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. ஆரியம் எந்த ரூபத்தில் வருகிறது? இது இப்போது ஆரம்பிக்க வில்லை. பழைய வரலாறு தெரிந்த வயதானவர்களுக்கு நான் சொல்கிறேன்.

1971இலே தேர்தல், கலைஞர் ஆட்சிக்கு வருகிறார். அப்போது திமுக பிளவு படவில்லை. எம்ஜிஆர் வெளி யேறவில்லை. அப்போது மீண்டும் திமுக வந்துவிடக் கூடாது என்று நினைத்தவர்கள் எதைச் செய்தார்கள் என்றால், இரண்டு மந்திரிகள் வீடு வாங்கினார்கள் என்றனர். கலைஞர் உடனே நடவடிக்கை எடுத்தார். அவர்கள் விலக்கப்பட்டார்கள்.

உடனே நடவடிக்கை எடுத்ததைப் பாராட்டாமல், பார்த்தீர்களா ஊழல் வந்துவிட்டது என்று 1970 தேர்தலில் சொல்லவில்லையா? இந்த ஊழல் என்பதை எடுத்துக்காட்டி அதன்மூலமாக திராவிட மண்ணைக் காவி மண்ணாக்கலாம் அல்லது தேசிய முத்திரை குத்திவிடலாம் என்று நினைக்கிறார்கள். இதை எச்சரிக்கையோடு அணுகவேண்டும், நம் இன மக்கள் என்பதுதான் பெரியார் பிறந்தநாள்விழாவில் விடுக்கின்ற மிகப்பெரியதொரு செய்தி

கொக்குக்கு ரொம்ப ஆசை,

கடல் வற்றி கருவாடு தின்ன, குடல் வற்றி செத்ததாம் கொக்கு என்ற ஒரு பழமொழி உண்டு. அதுமாதிரி கடல் வற்றாதா என்று பார்க்கிறான். கடல் வற்றி, அதிலே கருவாடு தேடி நீ சாப்பிடலாம் என்று நினைத்தால், உன் குடல்வற்றி நீதான் சாகவேண்டும், குடல் வற்றி சாகுமாம் கொக்கு என்கிற பாட்டுமாதிரி. என்னுடைய கருத்து வித்தியாசமாகக் கூட இருக்கலாம், எல்லோரையும் ஆதரித்துவிடுவார் போலிருக்கிறதே என்று குழம்பவேண்டாம்.

நாங்கள் இந்த விசயத்தில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கிறோம். பெரியார் கண்ணாடியைப் போட்டிருக்கக் கூடியவர்கள் நாங்கள். இன்றைக்கு காவிரிப்பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினையில் தேசியக்கட்சிகளின் நிலைப் பாடு என்ன? நமக்குத் தெரியாதா? அருள்கூர்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? யார் மாற்றாக வருவோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் மாற்றாக ஈழத்தமிழர் பிரச்சினையிலே இந்த இயக்கம் செய்ததை விட தீவிரமாக நாங்கள் செய்வதற்குத் தயார் என்று காட்டி இருக்கிறார்களா?

அப்படி என்றால் நாம் ஏமாறலாமா? முல்லைப்பெரியாறு பிரச்சினையாக இருக்கட்டும், காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினை ஆகட்டும், ஈழத்தமிழர் வாழ்வுரிமை பிரச்சினை ஆகட்டும், அதேபோல மனித உரிமையில் ராஜபக்சேவைக்கண்டிப்பதில் ஆகட்டும், மீனவர் பாதுகாப்புப் பிரச்சினை ஆகட்டும் இவை அத்தனையிலும் இந்த திராவிட இயக்கங்களை விட்டால் வேறு யாராவது மற்றவர்கள் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்களா? இப்போது இடதுசாரித் தோழர்கள் நம் பக்கம் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மாற்றம் ஏற்பட்டு, தெளிவுடன் வந்திருக்கிறார்கள். வரவேற்போம்.

ஆனால் நாங்கள் தேசியம் பேசுவோம், அவர்களுக்கு நாங்கள் மாற்றாக வருவோம், நாங்கள்தான் ஊழலை ஒழிப்போம் என்று சொல்லுகிறார்களே பிஜேபி யினர். இந்த ஊழலை ஒழிப்பதில்கூட அவர்கள் எவ்வளவு தூரம் சுத்தம் சுயப்பிரகாசமானவர்கள் என்பதைச் சொல்ல வேண்டுமானால், இந்த கட்சிகளைப்பார்த்து மற்ற ஊழலைப்பற்றி சொல்லுகிறார்களே, நிலக்கரி ஊழல்குறித்து இப்போது உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு கூறி உள்ளது? 1993லிருந்து 200 லைசன்சு கேன்சல் செய்துள்ளது.

காங்கிரசு மட்டுமின்றி பாஜக ஆட்சியிலும் வருகிறது. மருத்துவரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக்கொள்ளுங்கள். தமிழகத்திலே நாம் ரொம்ப விழிப்போடு பார்க்க வேண்டும்.

-இவ்வாறு தமிழர் தலைவர் பேசினார்.

Read more: http://viduthalai.in/page-8/88542.html#ixzz3Etw9T078

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரும்... 'அம்மா' ஜெயலலிதாவும்!

தங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர்களை உறவுமுறை சொல்லி அழைப்பது இந்திய அரசியல் வரலாற்றில் மரபான ஒன்றுதான். தேசத்தந்தை, காந்தி தாத்தா, நேரு மாமா, தாத்தா ரெட்டமலை சீனிவாசன், அண்ணா என்றெல்லாம் தலைவர்களை மக்கள் அழைத்து மகிழ்ந்தனர். இப்போது ஜெயலலிதாவை 'அம்மா' என்று அவரது கட்சிக்காரர்கள் அழைக்கத் தொடங்கி, அது பொதுவாக எல்லோரும் அழைக்கப்படும் பெயராக மாற்றப்பட்டுவிட்டது.

தந்தை பெரியாருக்கும் சரி, 'அம்மா' ஜெயலலிதாவுக்கும் சரி இருவருக்குமே குழந்தைகள் கிடையாது. ஆனால் குழந்தைகள் இல்லாத அவர்களை, 'தந்தை' என்றும் 'அம்மா' என்றும் தமிழர்கள் அழைத்தார்கள், அழைக்கிறார்கள் என்பது சுவாரஸ்யமான ஆச்சர்யம்தான். பெரியாருக்குக் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளாத பெரியார் திருமணம், குழந்தைப்பேறு ஆகியவற்றுக்கும் ஆணாதிக்கத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து தொடர்ந்து பேசினார். முதன்முறையாக கருத்தடை, குடும்பக்கட்டுப்பாடு செய்வது குறித்து தமிழகத்தில் பிரசார இயக்கத்தை நடத்தினார்.

தமிழ் ஓவியா said...

இன்னும் ஒருபடி மேலே போய், "பெண்கள் விடுதலை அடைய வேண்டுமானால் குழந்தை பெறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் விடுதலை" என்றார். "பிள்ளை பெற்றுக்கொள்வதாலேயே ஒருவன் அயோக்கியனாகவும் கோழையாகவும் மாறுகிறான்" என்ற பெரியாரின் வார்த்தைகளை 'வாழ்ந்து' நிரூபித்து வருகிறார்கள் நமது வாரிசு அரசியல் தலைவர்கள்.

இருக்கட்டும், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 'அம்மாவுக்கு அநீதி இழைக்கப்பட்டது' என்ற கூக்குரல்கள் சுற்றிலும் கேட்கின்றன. 'அம்மா' பற்றி நினைக்கும்போது, தந்தை பெரியார் குறித்த இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. பெரியார் காங்கிரஸுக்கு வருவதற்கு முந்தைய காலகட்டம். ஈரோட்டில் தன் அப்பாவுடன் மண்டி வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது சில வியாபார விஷயங்களில் அப்பாவுக்கு பதிலாக அவருடைய கையெழுத்தை பெரியாரே போட்டிருந்தார். இது அப்போதிருந்த வணிகச் சூழலில் சகஜமான ஒன்றாகத்தானிருந்தது.

ஆனால் பெரியாரைப் பிடிக்காத சிலர் அவர்மீது ஃபோர்ஜரி என்று புகார் கொடுக்க, வழக்குப் பதியப்பட்டது. தன் மகனுக்குச் சிறை கிடைக்குமோ என்று கலங்கிப்போன பெரியாரின் அப்பா வெங்கடப்பர், வழக்கை எதிர்கொள்வதற்காக ஈரோட்டில் பிரபலமான வழக்கறிஞரை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், பெரியாரோ நீதிமன்றத்தில் பொய் சொல்ல மாட்டேன் என்று உறுதியாக மறுத்துவிட்டார். பணக்காரக் குடும்பத்தில் பிறந்த அவர், கட்டிலில் படுப்பதைத் தவிர்த்துவிட்டு, தரையில் படுத்து உறங்கத் தொடங்கினார். சிறைக்குச் சென்றால் தரையில்தான் படுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிப் படுத்துப் பழகிக்கொண்டார். நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது "அப்பாவின் கையெழுத்தை நான்தான் போட்டேன்" என்றே வாக்குமூலம் அளித்தார். அவருடைய நேர்மையைப் பாராட்டிய நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

பிறகு பெரியார் காங்கிரஸில் இணைந்து காந்தியின் சீடராக இருந்த காலகட்டம். அப்போது ஒருவருக்குப் பெரியார் கடனாக அளித்திருந்த 50,000 ரூபாய் வசூலாகவில்லை. அதற்காக ஏற்கெனவே புரோநோட் எழுதி வாங்கியிருந்தார் பெரியார். கடன் வசூலாகாத சூழலில் நீதிமன்றத்துக்குச் சென்றுதான் பணத்தை வசூலிக்க வேண்டும் என்கிற நிலை. அன்றைய காலகட்டத்தில் 50,000 ரூபாய் எவ்வளவு விலை மதிப்புடையது என்பதைச் சொல்லத்தேவையில்லை. ஆனால் நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணிப்பது என்று காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதை ஏற்றுக்கொண்ட பெரியார், 50,000 ரூபாய் பணத்தை விட்டுக்கொடுக்கத் தயாரானார். அப்போது அதே காங்கிரஸில் இருந்த சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற பிரபல வழக்கறிஞர் "நீங்கள்தானே வசூலிக்கக் கூடாது? பணம் வசூலிக்கும் உரிமையை எனக்கு வேண்டுமானால் மாற்றித்தாருங்கள்" என்று கேட்டார். ஆனால் பெரியாரோ "நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணிப்பது என்று முடிவெடுத்தபிறகு, அதை யார் வழியாக மேற்கொண்டாலும் தவறுதான்" என்று உறுதியாக மறுத்துவிட்டார்.

தமிழ் ஓவியா said...

இது தந்தை பெரியார் என்ற மகத்தான மனிதரின் கதை. இனி 'அம்மா' கதைக்கு வருவோம். 'அம்மாவுக்கு எதிராகச் சதி', 'அம்மாவைப் பொய்வழக்கில் உள்ளே தள்ளிவிட்டார்கள்' என்ற கூக்குரல்களைச் சுற்றிலும் கேட்கும்போது, நடப்பது பிரிட்டிஷ் ஆட்சியோ, உப்புச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு ஜெயலலிதா உள்ளே போய்விட்டாரோ என்ற பிரமை ஏற்படுகிறது. கொஞ்சம் அழுத்தமாக நம்மை நாமே கிள்ளிப் பார்த்தால்தான், ஜெயலலிதா உள்ளே போனதற்குக் காரணம் உப்புச் சத்தியாகிரகம் அல்ல. ஊழல் வழக்கு என்ற உண்மை உறைக்கிறது.

17 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடித்து, தீர்ப்புக்கு முதல்நாள் வரைகூட மனு போட்டு வழக்கை இழுத்தடிக்க முயன்ற ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதற்கு இத்தனை கூக்குரல்களா? இத்தனை நாள் இழுத்தடித்ததுகூட சரி, தீர்ப்பை எதிர்கொள்வதற்கு முதல்நாள்கூட ஜெயலலிதா தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போயிருக்கலாம். ஒருவேளை அவர் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு வந்திருந்தால் கம்பீரத்தோடு பதவி ஏற்ற பெருமையும் அவருக்குக் கிடைத்திருக்கும். ஆனால் ஜெயலலிதாவோ அரசு மரியாதைகளுடன் போய் குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டது, அவர் தனக்குத்தானே தேடிக்கொண்ட அவமானம்.

தமிழ் ஓவியா said...

'அம்மா மீது பொய்வழக்கு', 'அம்மா சிறையிலா?' என்ற கண்ணீர்க் குரல்களைப் பார்க்கும்போது அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. இப்போது ஜெயலலிதாவுடன் சேர்த்து தண்டிக்கப்பட்ட சுதாகரன் மீது கஞ்சா வழக்கு, ஒரு நீதிபதியின் மீது கஞ்சா வழக்கு என ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் பலர்மீது வழக்குகள் போடப்பட்டன. அப்படிப் போடப்பட்ட வழக்குகளில் பெரும்பாலானவற்றைப் பொய் வழக்குகள் என்று நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. கருணாநிதி, ஸ்டாலின், வைகோ, நெடுமாறன், கொளத்தூர் மணி என மாற்றுக்கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களைச் சிறையில் அடைத்ததும் ஜெயலலிதா அரசுதான்.

தமிழக அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் பெரியார், அண்ணா, காமராஜர், ராஜாஜி, கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருமாவளவன், சீமான், நெடுமாறன், நல்லகண்ணு, தா.பாண்டியன், ஜி,ராமகிருஷ்ணன், சங்கரய்யா, வீரமணி, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் என போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற வரலாறு நிறையவே உண்டு. ஆனால் ஜெயலலிதாவுக்கோ போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற அரசியல் அனுபவமே கிடையாது. இதோடு சேர்த்து இரண்டு முறைகளும் அவர் ஊழல் குற்றச்சாட்டில்தான் உள்ளே போயிருக்கிறார். ஆனால் அவரை ஏதோ சமூகப்போராளி போலச் சித்தரிக்கிற அவலம் நிகழ்கிறது.

இன்றைய சூழ்நிலையில் சட்டத்தின் வார்த்தைகளில் சொல்வது என்றால், ஜெயலலிதா நிரூபிக்கப்பட்ட ஊழல் குற்றவாளி, தண்டிக்கப்பட்ட ஊழல் அரசியல்வாதி. ஆனால் அவரைச் சமூகப் போராளியாகச் சித்தரிப்பது சட்டப்படி மட்டுமல்ல, தார்மீக ரீதியாகவும் தவறு.

ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் போராட்டத்தைத் தொடங்கியபோது நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த பலர் இங்கே தமிழகத்திலும் போராட்டம் நடத்தினார்கள். இதோ ஜெயலலிதா என்ற ஊழல் அரசியல்வாதி தண்டிக்கப்பட்டதற்கு எதிராக தமிழகத்தின் வன்முறைகளும் கேலிக்கூத்துகளும் நடக்கின்றனவே, அந்த ஊழல் எதிர்ப்புப் போராளிகள் எல்லாம் எங்கே போனார்கள்?

இன்னொருபுறம் ஊழல் அரசியல்வாதிகளுக்குக் கருடபுராணம் தொடங்கி, சொத்துக்களைப் பறிமுதல் செய்வது, குடும்பத்தில் இருப்பவர்களுக்குக் கல்லூரியில் இடம் தரக் கூடாது, ரேஷன் கார்டு தரக் கூடாது என்றெல்லாம் ரூம் போட்டு படங்களில் சீன் வைத்த சினிமாக்காரர்கள், இப்போது உண்ணாவிரதம் என்ற பெயரில் சீன் போடுகிறார்கள்.

எந்த சுயகூச்சமும் இன்றி, தண்டிக்கப்பட்ட ஊழல் அரசியல்வாதியை நியாயப்படுத்தி, அவர் புகழ் பாடுகிறார்கள். 'தெய்வத்தை மனிதன் தண்டிக்கலாமா?' என்று அவர்கள் வைக்கும் பேனர் நீதித்துறையை மட்டுமல்ல, கடவுளை நம்புபவர்களையும் சேர்த்தே அவமதிக்கிறது.

இப்படியாக, தந்தை பெரியார் காலத்திலிருந்து 'அம்மா' காலத்துக்கு நாம் வழுக்கி விழுந்து வந்து சேர்ந்திருப்பதற்குப் பெயர்தான் மதிப்பீடுகளின் வீழ்ச்சி.

- சுகுணா திவாகர் http://bit.ly/1nJZhlX

தமிழ் ஓவியா said...

ஆம், நான் பெண்தான். எனக்கு மார்புகள் உண்டு


இந்தி திரைப்பட நடிகை தீபிகா படுகோனே ஓராண்டுக்கு முன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் காணொளியை, தனது இணையதளத்தின் பொழுதுபோக்குப் பக்கத்தில் ஓ மை காட்: தீபிகா படுகோனேவின் மார்புப்பிளவுக் காட்சி என்று தலைப்பிட்டு வெளியிட்டது. இதைக் கண்டு கோபமடைந்த தீபிகா, இந்தியாவின் மிக முக்கியமான ஒரு நாளேட்டுக்கு இது தான் முக்கியச் செய்தியா? வேறு எதுவுமில்லையா? என்று சூடாகக் கேட்டார். தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதிய தீபிகா, ஆம். நான் பெண்தான். எனக்கு மார்புகள் உண்டு. ஒரு மார்புப் பிளவும் (Cleavage) உண்டு.

அதனால் உனக்கெதுவும் பிரச்சினையா? என்று கொதித்துவிட்டார். அடுத்தடுத்து திரைப்பட நடிகர் நடிகைகளும் தீபிகாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். எங்களுக்கான முதல் குரலை நீ கொடுத்திருக்கிறாய் என்று பாராட்டினார் பிரியங்கா சோப்ரா. இதற்குப் பதிலளிக்கிறோம் என்று தீபிகா படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்த கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு, இதற்கென்ன பதில் என்று கேட்டிருக்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா. கதாபாத்திரங்களுக்காக நான் நடிக்கும் போது அது என் தொழில்.

ஆனால், தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பதா? என்று கேட்டிருக்கிறார். அய்யய்யோ... ஆபாசமாக இருக்கிறார்களே என்று ஊளையிடும் ஊடகங்கள் அந்தப் படங்களைப் போட்டுத்தானே பிழைப்பு நடத்துகின்றன.

இந்தப் பிரச்சினையிலும் அதே தான் நடந்தது. அது எந்தப் படம், எந்தப் படம் என்று திரும்பத் திரும்பப் போட்டும் பிழைத்தன சில பத்திரிகைகள்.

தமிழ் ஓவியா said...

இந்தியப் பெண்களின் நிலை


இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 92 பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாவதாக தேசிய குற்ற ஆவண அமைப்பு வெளியிட்டுள்ளது.

2012ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 24,923 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி இருந்தன. 2013ஆம் ஆண்டில் 33,707ஆக உயர்ந்துள்ளது. 2013ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களில் 15,556 பேர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் வன்முறைக் குற்றத்தில் டில்லி முதல் இடத்தில் உள்ளது. டில்லியில் ஒரு நாளைக்கு சராசரியாக 4 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர். 2012இல் 706 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி இருந்தன. 2013இல் 1,636ஆக உயர்ந்துள்ளது. மும்பை, ஜெய்ப்பூர், புனே நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

சொல்றாங்க...


2009 இறுதிப் போரில் தமிழ் மக்கள் அங்கு அனுபவித்த சிரமங்கள் நமக்குத் தெரியும். அப்போது பாதுகாப்பாக தமிழகத்தில் இருந்த மக்கள் இனியாவது அங்கு சென்று அவர்களுக்கு தோளோடு தோளாக நின்று தங்களின் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களின் கடமை இது.

இல்லாத ஒரு நாட்டையே இஸ்ரேல் என்ற பெயரில் யூதர்கள் கட்டியெழுப்பினர். நாங்கள் இருக்கிற நாட்டைக் காப்பாற்ற வேண்டாமா? தமிழகத்தில் உள்ள ஏதிலியர்கள் முதலில் தாயகம் திரும்பினால், அதைப் பின்பற்றி உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்கள் வந்து சேருவார்கள்.

- சந்திரஹாசன், ஈழ அகதிகள் மறுவாழ்வு இயக்கம்.

தமிழ் ஓவியா said...

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வசிப்பதாக தமிழர்களிடம் அச்ச உணர்வு மேலோங் கியுள்ளது. கடந்த காலங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பலமுறை வன்முறைச் சம்பவங்கள் நேரிட்டுள்ளன. எனவே, 13ஆவது சட்டத் திருத்தத் தில் காவல்துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாண அரசுக்கு வழங்கப்படாது என்று கூறுவதை ஏற்க முடியாது. ராணுவ அதிகாரம் வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க காவல் துறை அதிகாரத்தை மட்டுமே கேட்கிறோம். இது அதிகாரப் பகிர்வின் முக்கிய அங்கமாகும். இது தொடர்பாக, இந்தியாவிடமும் அய்.நா.சபையிடமும் இலங்கை அரசு ஏற்கெனவே உறுதி அளித்துள்ளது.

- இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்.

தமிழ் ஓவியா said...

திருமணத்திற்கு முன்பு மட்டுமல்ல, பின்பும்கூட ஆண்டுக்கு ஒருமுறையாவது ஆண், பெண் இருவருமே முழு உடல் பரிசோதனை செய்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது இல்லறத்திற்கு வலு சேர்க்கும். இதனால் கணவனுக்குத் தெரிந்துவிடும் என்று மனைவியோ, மனைவிக்கு தெரிந்துவிடும் என்று கணவனோ அச்சப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் நோயை வளர்த்து உயிரைப் பறிகொடுக்கும் நிலையும் தடுக்கப்படும்.

- கவிஞர் சல்மா

தமிழ் ஓவியா said...


மதச்சார்பற்றவர்கள் விரும்பியபடி திருமணங்களைச் செய்துகொள்ளலாம் இண்டியானாவில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புஅமெரிக்காவில் இண்டியானா பகுதியில் மனிதநேய அமைப்பைச் சேர்ந்த தம்பதியர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு முன்பாக அத்திருமணங்கள் சட்டப்படி செல்லாதவையாக இருந்துள்ளன.

அப்படி மாற்றமுடியாத சட்டத்தை சிகாகோவை மய்யமாகக் கொண்டுள்ள அமெரிக்காவின் ஏழாம் சர்க்குயூட் நீதிமன்றம், மனித நேயர்களுக்கான திருமண உரிமையை கடவுள் நம்பாமல் இருப்பதைக் காரணமாகக் காட்டி, மறுப்பது என்பது அரசியலமைப்பு முதல் விதி கூறுகின்ற மத ரீதியிலான சுதந்திரம் குறித்த உரிமைகளை மறுப்பதாக ஆகிவிடும் என்று நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

1950ஆம் ஆண்டின் சட்டத்தின்படி இண்டியானாவில் திருமணங்கள் மதரீதியில் உடையணிந்தவர் (மதக்குரு) நடத்திட வேண்டும் அல்லது அரசு அலுவலர்களைக் கொண்டு நடத்த வேண்டும் என்று உள்ளது. மனுதாரரான மனிதநேயர் வாதிடும்போது, மனிதநேயர்களின் திருமண உரிமையை மறுப்பது என்பது தத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதை மறுப்பதாகும். மதரீதியில் உள்ளவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்ததாக ஆகிவிடும் என்று கூறினார்.

மனிதநேயரான ரேபா போயிட் உட்டன் கூறும்போது, நீதிமன்றம் தேவையான உரிமையைப் பெற்றுள்ளது என்றார். மதச் சார்பற்ற மணமகன் என்று மனுதாரருக்குச் சான்றளிக்கும் அவர் மேலும் கூறும்போது, ஒருவர் நாத்திகராகவோ, கடவுளை நம்புவதில் அய்யம் உள்ளவராகவோ, மனிதநேயராகவோ அல்லது மதரீதியிலான திருமணத்தைச் செய்ய விரும்பாதவராகவோ இருந்தாலும் தற்போது, இதுபோன்ற அற்புதமான நேரங்களில் தங்களுடைய கவுரவத்தைக் காத்துக் கொள்வார்கள். அவர்களின் வாழ்வில் நடைபெறும் விழாக்களையும் மகிழ்வாகப் பகிர்ந்து கொள்வார்கள் என்று உட்டன் கூறியுள்ளார்.

புளோரிடா, மெய்ன் மற்றும் தெற்குக் கரோலினா ஆகிய பகுதிகளில் நோட்டரி பப்ளிக் மூலம் சான்று பெற்றபின், மனிதநேயர்களுக்கு அலுவல்ரீதியாக திருமணம் செய்வதற்கு அனுமதி உள்ளது. அதுபோன்றே இண்டியானாவிலும் அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுபோல் இரண்டு டசன் மக்கள் மனிதநேயர்களாகப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

மனிதநேயர்களுக்கான அமைப்பின் விசாரணை மய்யத் தலைமைச் செயல் அலுவலர் மற்றும் அதன் தலைவராக உள்ள ரொனால்ட் ஏ. லிண்ட்சே கூறும்போது, அனைத்து மதச் சார்பற்ற அமெரிக்கர்களுக்கும் இது மிகப் பெரிய வெற்றியாகும். ஏற்க முடியாத அளவில் அமெரிக்க அய்க்கிய நாடுகளில் மக்கட்தொகையில் ஒரு பிரிவினர் வேகமாக நம்பிக்கையாளர்களாக வளர்ந்து வருவதாகக் கூறப்பட்டாலும், பாரபட்சமாக நடத்தப்படுவதாலும், மதரீதியில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாலும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது என்று கூறினார்.

வடக்கு கரோலினாவிலும் திருமணச் சட்டங்கள் சவாலாகத்தான் உள்ளன. திருமணம் செய்து கொள்பவர்கள் சட்டப்படியான திருமண உரிமைச் சான்று (Legal Marriage Licence) பெற்றிருக்க வேண்டும் என்று யுனைடெட் சர்ச் ஆஃப் கிறிஸ்ட் பாஸ்டர்கள் என்கிற மதக் குழுவினர் அரசு கேட்பதாகக் கூறித் தொல்லை கொடுத்து வருகின்றனர். வடக்குக் கரோலினாவில் ஓரினத் திருமணங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஓரினத் திருமணச் சடங்குகளை நிறைவேற்றக்கூடிய பாதிரிகள்மேல் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அந்தப் பாதிரிகளும், மற்றவர்களும் அவர்களின் நம்பிக்கைப்படி ஓரினத் திருமணங்களையும் நடத்திட வலியுறுத்தி வருகின்றனராம்.

நன்றி: வாஷிங்டன் போஸ்ட், 14.7.2014

தமிழ் ஓவியா said...

மதமற்றவர் என்று அறிவித்துக்கொள்ளும் உரிமை!


தன்னை மதமற்றவர் என்று அறிவித்திட தனி மனிதனுக்கு உரிமை உண்டு; அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது என்று மண்டையில் அடித்ததுபோல மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள எவரிடமும் அவர் தனது மதம்பற்றிக் குறிப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமை எந்த அரசுக்கும் கிடையாது என்ற திட்டவட்டமான தீர்ப்பு ஒன்றை மும்பை உயர் நீதிமன்றம் 23.9.2014 அன்று அளித்து வரலாறு படைத்துள்ளது!

கிறித்துவ மதப் பிரிவில் ஒன்றான Full Gospel Church of God என்ற அமைப்பில் உள்ள சில உறுப்பினர்கள், அவர்கள் ஏசு கிறிஸ்துவை நம்புகிறவர்கள்தான்; ஆனால், கிறித்துவ மதத்தை நம்பாதவர்கள் என்ற நிலைப்பாடு உடையவர்கள்!

அம்மூவர் (டாக்டர் ரஞ்சித் மொய்ட்டி, கிஷோர் நசாரே, சுபாஷ் ரணவேர் என்பவர்கள்) மராத்திய அரசின் அச்சகப் பதிவிதழில் (கெசட்டில்) நாங்கள் கிறிஸ்துவர்கள் அல்ல; எந்த மதத்தையும் சேராதவர்கள் என்று வெளியிட (கட்டணம் கட்டி) விண்ணப்பித்திருந்தார்கள்.

அவர்களது விண்ணப்பங்களை மராத்திய அரசும், அச்சகத்துறையும் ஏற்று வெளியிட மறுத்துவிட்டன. அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது.

எனவே, அவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (PIL) ஒன்றினைத் தாக்கல் செய்து, நீதி கேட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜஸ்டீஸ் அபய் ஒக்கா, ஜஸ்டீஸ் ஏ.எஸ்.சந்துர்கர் ஆகிய இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மேற்கூறியவாறு, அரசு யாரையும் மதத்தைப் போடவேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது, தங்களுக்கு மதமில்லை (“No Religion”) என்று அறிவிப்பதற்கு எவருக்கும் முழு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்துவிட்டனர்!

மதம் என்ற கேள்விக்கு நேராக அரசின் எந்த மனுவையும், பூர்த்தி செய்யும்போது மதமற்றவர் எனக் குறிப்பிடலாம் _- இத்தீர்ப்பின்மூலம் மதம் என்பது சட்டப்படி தெளிவாக்கப்பட்ட தனி மனித உரிமையாகிவிட்டது!

எனக்கு எந்த மதத்தின்மீதும் நம்பிக்கை இல்லை; நான் எந்த மதத்தையும் சேர்ந்தவனல்ல என்று கூறும் உரிமை ஒவ்வொரு தனி மனிதருக்கும் உண்டு என்று ஆணியடித்த தீர்ப்பை மிகச் சிறப்பாக நாட்டோருக்கு அளித்துள்ளது!

மதச்சார்பற்ற (செக்குலர்) அரசின் கீழுள்ள மக்கள் மதங்களைச் சாராதவராகவோ, மதம் பிடிக்காதவர்களாகவோ இருக்க முழு உரிமையுடையவர்கள் ஆவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது _- இத்தீர்ப்பின் மூலம்.

இந்திய அரசியல் சட்டத்தின் 25ஆம் பிரிவின்கீழ் இவ்வுரிமை -_ அடிப்படை உரிமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்!

நாட்டில் மதங்களால் ஏற்பட்ட நன்மைகள் ஏதாவது இருப்பின், அது துளியளவே; ஆனால் தீமைகளோ மலையளவு!

வரலாற்றில் ரத்த ஆறு எப்பொழுதெல்லாம் ஓடியதாகக் கூறப்படுகிறதோ, காட்டப் படுகிறதோ அவை மதங்களால் உருவான சண்டைகளால்தானே!

புனிதப் போர்கள், சிலுவைப் போர்கள் எல்லாம் நல்ல எடுத்துக்காட்டுகள் அல்லவா? மதங்களைப் பரப்பிட வாள் முனையைத்தானே பல மதங்கள் இன்றளவும் நம்புகின்றன?
ஈராக்மீது போர் தொடுத்து சதாம் உசேனை அழித்த (ஜூனியர்) ஜார்ஜ் புஷ்- _ கடவுள் தான் இந்தப் போரை நடத்தும்படி தனக்குக் கட்டளையிட்டார் என்று புளுகவில்லையா? கடவுள், மதத்தினால் மனிதகுலம் பெற்ற நன்மைகள் இவை!

மதங்களின் அடிப்படைவாதிகள் (Fundamentalists) என்ற வெறியர்கள் தலிபான் போன்றவர்கள் - மற்ற பிரிவினர், கிறித்துவ, ஹிந்துமத சாமியார், சாமியாரிணிகளும் எவ்வளவு வன்முறை வெறியாட்டங்களை நடத்தியுள்ளனர்!

பாபர் மசூதி இடிப்பும், அதன் எதிர் விளைவுகள் எவ்வளவு கொலை, கொள்ளைகள், உயிர்ச்சேதங்கள், அமைதியற்ற கொடுமைகளை இன்றளவும் உருவாக்கிக் கொண்டுள்ளன!

இந்து மதம் சகிப்புத் தன்மையுடைய மதமாம்! நேற்று முன்தினம் வந்த நீதிமன்ற வழக்கு என்ன? அதே மதத்தின் ஒரு பிரிவினர் ஊர்வலம் போனால், வைணவப் பிரிவின் மற்றொரு கடவுள் சிலையைத் திரை போட்டு மூடி, கதவைச் சாத்திய கேலிக் கூத்தைப் பார்க்கவில்லையா? அடிதடி நடக்கவில்லையா? வழக்கு மன்றத்தில் நிலுவையில் இப்பிரச்சினை இருக்கிறதே! இதுதான் சகிப்புத்தன்மையின் அடையாளமா? வெட்கமாக இல்லையா?

உண்ணுதலில், உடுத்துவதில், எண்ணுதலில் எல்லாம் அன்றாட வாழ்க்கையில்கூட மதம் புகுந்து மனிதர்களிடையே வேற்றுமையைத்தானே உருவாக்கியுள்ளது!

யானைக்குப் பிடிக்கும் மதத்தைவிட ஆபத்தானது!

யானைக்கு மதம் பிடித்தால் ஏற்படும் கேட்டைவிட, மக்களுக்கு மதம் பிடித்தால் ஏற்படும் கேடுகளை, கலவரங்களை நாடு அன்றாடம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது!

எனவே, மதமற்ற மக்களாக வாழுங்கள், மதம் பிடிக்காத மனிதநேயம் உள்ளவர்களாக மாறுங்கள் தோழர்களே, தோழியர்களே!

- கி.வீரமணி, ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

வாழ்வைக் கெடுத்த ஜாதகம்!

எனது கட்சிக்காரர் (Client) அவர்களுக்கு சுமார் 65,70 வயதிருக்கும். அவரின் ஒரே மகளுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பு பெண்ணின் ஜாதகத்தையும் பையனின் ஜாதகத்தையும், வயதும் அனுபவமிக்கவரும் கைராசிக்காரருமான ஜாதகக்காரரிடம் கொடுத்து ஜாதகத்தைக் கணிக்கும்படிச் சொல்லியிருக்கிறார். ஜாதகக்காரரும் இருவரின் ஜாதகத்தையும் பார்த்து பஞ்சாங்கங்களையும் புரட்டி கூட்டல் கழித்தல் கணக்குப் போட்டு இருவர் ஜாதகமும் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் அனைத்துப் பொருத்தங்களும் இருப்பதனாலும் இருவருக்கும் ஆயுள் மிக கெட்டியாக இருப்பதாலும் திருமணம் செய்யலாம் என்று நல்வாக்குக் கொடுத்துவிட்டார். ஜாதகக்காரரின் பேச்சை நம்பி பெண்ணின் தகப்பனார் ஏராளமாக செலவு செய்து பார்ப்பனப் புரோகிதனை வைத்து சமஸ்கிருத மந்திரங்களை ஓதி சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைத்தார்.

திருமணமான 6, 7 மாதங்கழித்து மாப்பிள்ளை தனியாக அடிக்கடி ஒரு புற்றுநோய் மருத்துவரைச் சந்தித்து ரகசியமாக சிகிச்சைப் பெற்றுள்ளார். ஒரு நாள் பெண்ணின் தகப்பனார் சந்தேகப்பட்டு, மாப்பிள்ளையைப் பின்தொடர்ந்து சென்றபோது மாப்பிள்ளை புற்றுநோய் மருத்துவரைச் சந்தித்தது தெரியவந்தது. மாப்பிள்ளை வெளியில் வந்த பிறகு, பெண்ணின் தகப்பனார் அந்த டாக்டரை விசாரித்தபோது, அவருடைய மாப்பிள்ளைக்கு இரத்தப் புற்றுநோய் (Blood Cancer) இருப்பதாகவும், தான் அவருக்குச் சில ஆண்டுகளாக வைத்தியம் பார்ப்பதாகவும், அவருக்குத் திருமணமான விவரம் தனக்குத் தெரியாது என்றும் அவர் திருமணமே செய்திருக்கக் கூடாது என்றும் கூறினார். திருமணமான 11ஆவது மாதத்தில் மாப்பிள்ளை இரத்தப் புற்று நோயால் இறந்தார். அப்பொழுது அந்தப் பெண் 6, 7 மாத கர்ப்பிணி.

கணவன் இறந்து 2, 3 மாதத்தில் அந்தப் பெண்ணிற்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. சந்தேகத்தின்பேரில் அந்தக் குழந்தையின் இரத்தத்தைப் பரிசோதித்ததில் அந்தக் குழந்தைக்கும் இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு இன்றுவரை (வயது 11) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் தன் சக்திக்கு மீறி பல லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து தன் பேரனுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார். திருமணமான 11 மாதத்தில் விதவைக்கோலம் கொடுமையிலும் கொடுமை. ஜாதகக்காரனால் 10 பொருத்தம் பார்த்தவனால் பையனுக்குத் தீராத நோய் இருப்பதைக் கண்டறிந்து சொல்ல முடியவில்லை. மாறாக, நீண்ட ஆயுள் உள்ளதாக சொல்லி உள்ளான்.

அவன் பேச்சை நம்பி திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின் சாஸ்திர சம்பிரதாயப்படி பார்ப்பனப் புரோகிதனை வைத்து சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லப்பட்டு முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாகச் செய்யப்பட்ட மண வாழ்க்கையின் ஆயுள் வெறும் 11 மாதங்களே.

ஜாதகம் பொய்! பார்ப்பனப் புரோகிதன் சமஸ்கிருதத்தில் சொல்லும் மந்திரம் பொய்!! இதை மக்கள் உணரும் நாள் எந்நாளோ?

-ஆர்.டி. மூர்த்தி, திருச்சி

தமிழ் ஓவியா said...

பெரியாராம் பேரண்டம்!


இருளை வெடிவைத்துப்
பிளந்த எரிமலை!
இன உணர்வை ஏற்றிய தீபம்!

ஆயிரங் காலத்து
அடிமைச் சேவகத்தை
அடி தெரியாமல் நொறுக்கிய பூகம்பம்!

ஆணவச் சிரிப்பின்
அடங்கா ஆரியத்தை
அக்னிச் சிரிப்பால்
அழித்திட்ட அரிமா!

பிறவிப் பேத
சமுத்திரக் காட்டை
அறிவுப் புனலால்
உறிஞ்சிய அகழி!

எங்கே எங்கே
ஏற்றத் தாழ்வென்று
முகவரி தேடி
மோதிய வேழம்!

மதமாம் யானையை
சம் ஹாரம் செய்து
மன்பதை காத்திட்ட
மானுட மீட்பர்!

அமைதித் தேன்குழல் தென்றல் காற்றை
வையத்து வாயினில்
ஊட்டிய செவிலி!

யாரிந்த மானுடர்?
ஈரோட்டுத் தொட்டிலில் குழந்தையாய்ப் பிறந்த
பெரியாராம் பேரண்டம்!

- கவிஞர் கலி. பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...தலைவர்கள் போற்றும் தலைவர்!


கொள்கைக் குன்றம்

இன்று நான் கழகப் பணியாற்றுவதாயிருப்பினும், பொதுப் பணி ஆயினும், கலைப் பணி ஆயினும், எழுத்துப் பணி ஆயினும், கொள்கைப் பிரச்சாரப் பணியாயினும், முரசொலி நாளேட்டுப் பணியாயினும் ஓய்வு கொள்ளாமல், உறக்கம் கொள்ளாமல், உணவு கூட அருந்தாமல் உழைப்பதற்குப் பயிற்சி பெற்றிருப்பது, குடிஅரசு அலுவலகத்திலும் ஈரோடு இல்லத்திலும் அந்தக் கொள்கைக் குன்றம் பகுத்தறிவுப் பகலவனிடம்தான் என்பதை எண்ணியெண்ணி இப்போதும் இன்பம் காணுகிறேன்.

- முத்தமிழறிஞர் கலைஞர்ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி

ஆயிரம் ஆண்டெனும்
மூதாட்டி
அவள் அணிந்திராத
அணியாவார்
அறிந்திராத அறிவாவார்
இப்பெரிய தமிழர்நாடு
கணந்தோறும்
எதிர்பார்க்கும்
தலைவராவார்
கழறவோ அவர் பெயர்தான்
இராமசாமி.

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்


பெரியாரிடத்தில் நம்பிக்கை வைத்து நடந்து கொள்ளுங்கள்

பார்ப்பனரல்லாதோருக்கு நான் சொல்வது என்னவென்றால் - தலைமைத்துவம், மக்கள் ஒற்றுமை, தலைவரிடம் மரியாதை ஆகியவற்றை மாற்றார்களிடமிருந்து பார்த்துப் படித்துக் கொள்ளுங்கள். காலம் கடவா முன்னர் கற்றுக் கொள்ளுங்கள். ஆதலால் உங்கள் தலைவரைக் குறைகூறுவது புத்திசாலித்தனமான காரியமாகாது. எனவே, தலைவர் பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வைத்து மதித்து நடந்து கொள்ளுங்கள்.

- அண்ணல் அம்பேத்கர் (குடிஅரசு, 30.9.1944)


நீதிமன்றின்...


நோபல் பரிசு

பெரியார் அவர்கள் மட்டும் தமிழ்நாட்டிலே பிறவாமல் இருந்து, மற்ற நாடுகளிலே பிறந்து, இத்தகைய கருத்துகளைச் சொல்லியிருப்பாரேயானால், அவருக்குக் கண்டிப்பாக நோபல் பரிசு கிடைத்திருக்கும். அவ்வளவு சிந்தனை மிக்க கருத்துகளைச் சொல்லி இருக்கிறார்; எழுதியிருக்கிறார்.

- நீதிபதி பி.வேணுகோபால்


பதவியை விரும்பாத தலைவர்

அய்யா அவர்கள் பதவியை விரும்பவில்லை; அரசியலை விரும்பவில்லை; பதவியை வெளிப்படையாக வெறுத்தார்; ஊரைத் திருத்த வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். மக்கள் மானத்தோடும், மரியாதையோடும் வாழ வழி சொல்லிப் பிரச்சாரம் செய்தார். அதில் பெரும் அளவிற்கு வெற்றி கண்டார் என்றே சொல்லலாம்.

- நீதிபதி ஏ.வரதராசன்பெரியார் இல்லை என்று சொன்னால்...

பகுத்தறிவு மேதை, பகலவன் போல் கதிரொளி வீசிய தலைவர் பெரியார் இல்லை என்று சொன்னால் இன்று உயர் நீதிமன்றத்திலே இத்தனை பேர் நம்மவர்களாக வந்திருக்க முடியாது! அறிவுக் கண்களைத் திறந்துவிட்ட ஒரே தலைவர் பெரியார்.

- நீதிபதி எஸ்.மோகன்


ஆயுட்காலம் முழுவதும்
ஆயுட்காலம் முழுவதும் மனத்திலே இருக்கின்ற மாசினையும் அறிவிலே இருக்கின்ற திருக்கத்தையும் ஒழிக்கப்பாடுபட்ட ஒருவர் பெரியார்.
- நீதிபதி எம்.எம்.இஸ்மாயில்


தன் அறிவை முன்வைத்து...

கீழைநாடுகளைப் பற்றிப் பெர்ட்ரண்ட் ரசல் ஒரு நூலில் எழுதும் பொழுது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும், பேசினாலும் மேற்கோள் காட்டிப் பேசுவதுதான் வழக்கம். தனது கருத்து என்று வெளியிட மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். நான் அறிந்தவரையில் மேற்கோள் காட்டிப் பேசாமல், தனது அறிவையே முன்வைத்துப் பேசும் தனித்த சிந்தனையாளர் பெரியார் ஒருவர்தான்!

- நீதிபதி ஏ.எஸ்.பி. (அய்யர்)

தமிழ் ஓவியா said...

விநாயகனின் மர்ம விளையாட்டுகள்


கிராமங்களில் இந்துக்கள் என்ற அடையாளத்தோடு தாழ்த்தப்பட்டோர் குடியிருக்கும் சேரிக்குள்ளும் வரச் சொன்னால், தனக்குத் தீண்டாமை ஒட்டிக் கொள்ளும் என்று சிலிர்த்துக் கொண்டு போகும் இந்துக் கடவுள்கள்;

நகரங்களில் தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு இந்துக்கள் என்று முக்கியத்துவம் கொடுத்து;

இந்துக்கள் அல்லாத இஸ்லாமியர் தெருவழியாக அதுவும் மசூதிகள் வழியாகத்தான் போவேன் என்று பிள்ளையார் அடம் பிடிப்பதன் மர்மம் என்ன?

சென்னை மீனவர்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தி, விநாயகரை மீனவர் குடியிருப்புகளுக்கும் மீனவரை விநாயகர் ஊர்வலத்திற்கும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்துச் செல்லும் இந்து அமைப்புகள்;

திருவல்லிக்கேணி அக்ரஹாரத்தைச் சுற்றி, அடிக்கடி பல்லக்கில் உலா வரும் பார்த்தசாரதியையும், மயிலாப்பூர் கோவிலை சூத்திர பக்தர்கள் சும்மா சும்மா சுற்றி சுற்றி வருவதைப் போல், அடிக்கடி அக்ரஹாரத்தைச் சுற்றி வருகிற மயிலை கபாலிஸ்வரனையும், மிக அருகில் இருக்கும் மீனவர் குப்பத்திற்குள் வீதி உலா அழைத்துச் செல்லாமல் இருப்பதன் மர்மம் என்ன?

2004 டிசம்பர் 26 அன்று சென்னை மண்ணின் மைந்தர்களான மீனவர்களைப் பலி கொண்டது சுனாமி.

எஞ்சியவர்கள் உயிர் தப்ப அருகிலிருந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை கபாலிஸ்வரர் கோவில்களை நாடி ஓடினார்கள்;

ஆனால் அந்த மாபெரும் இந்துக் கோவில் கதவுகள் மீனவ இந்துக்களுக்குத் திறந்து தங்க இடம் தந்தால் அசுத்தம் செய்து விடுவார்கள், தீட்டாகி விடும் என்று மூடியே இருந்தது.

100 சதவீதம் இந்துக்களான சென்னை மீனவர்களுக்கு சுனாமி தாக்குதல்களின் போது, கிறித்துவ சாந்தோம் சர்ச் கதவுகளே திறந்து அடைக்கலம் தந்தது.

அடைக்கலம் தந்தவன் மீனவர்களுக்கு அந்நிய மதக்காரன் விரட்டி விட்டவன் சொல்கிறான்.

சுனாமியின் போது விரட்டி அடித்தவர்கள் இப்போது விநாயகன் சிலையோடு மீனவக் குப்பங்களுக்குள் இந்து விளையாட்டு விளையாட வருவதன் மர்மம் என்ன?

கோவில்களில் விநாயகர் உட்பட சமஸ்கிருத மந்திரங்கள் சொல்லி வணங்கும் கடவுள்களுக்கு, வழக்கமாக மிருதங்கம், கடம், வீணை, புல்லாங்குழல் போனறவைதான் இசைக்கப்படும்; வீதி உலா புறப்படும்போது நாதஸ்வரம், தவில் கொண்டுதான் வாசிப்பார்கள்.

ஆனால் இப்போது விநாயகர் நகர் உலா புறப்படும்போது பறை அடித்துக் கொண்டாடுவதன் மர்மம் என்ன?

- வே.மதிமாறன்

தமிழ் ஓவியா said...

பெரியார் வாழ்வில்....


நம் பிள்ளைகள் அரசுப் பணிக்குப் போகவேண்டும்

தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தந்தை பெரியாருக்கு உதவியாளராக வந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த இளைஞருக்கு அரசுப் பணி வாய்ப்பு வந்து, அதற்கான ஆணையும் கிடைத்தது. அந்த ஆணையை எடுத்துக்கொண்டு இளைஞரை அழைத்துச் செல்ல அவருடைய உறவினர் வந்திருந்தார். ஆனால் அய்யாவுக்கு உதவியாக இருப்பதே தனக்குப் பெரிதும் மகிழ்ச்சி என்றும், அய்யாவுடனிருக்கும் வாய்ப்பைத் தான் இழக்க விரும்பவில்லை என்றும் அந்த இளைஞர் அரசுப் பணியை மறுக்கும் எண்ணத்தை வெளியிட்டார். இதனை புலவர் இமயவரம்பன் மூலம் அறிந்த தந்தை பெரியார், நம் பிள்ளைகள் அரசுப் பணியில் _ அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதற்காகத்தானே நான் பாடுபட்டு வருகிறேன். அப்படி வந்த பணியை விட்டுவிடுவதா? எனக்கு உதவிக்கு வேறு ஆட்களைப் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் சென்று பணியில் சேருங்கள். என்று அந்த இளைஞருக்கு எடுத்துச் சொல்லி, உறவினருடன் அனுப்பி வைத்தார். தந்தை பெரியார் என்பது சும்மா அழைக்கப்பட்ட பெயரா என்ன?

தமிழ் ஓவியா said...


பெண்களைப் பற்றி அந்தக் காலத்தி லேயே அறிவுப்பூர்வமாகப் பேசியவர் பெரியார். அந்தக் காலத்துக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. இன்றைக்கும் அது பொருத்தமாகத்தான் இருக்கிறது. பெண்களைப்பற்றி இத்தனை கரிசனத்துடன் ஒருவர் சிந்தித்தது நினைத்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

முக்கியமாக இந்து தர்மத்தைக் காப்பாற்றியதாகச் சொல்லப்படுகிற முனிவர்களும், ரிஷிகளும் பெண்களை எவ்வளவு கேவலப்படுத்தியவர்கள் என்பதை முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் பெரியார்தான்.

நம் தெய்வீகத் திரைப் படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் மிக உயரத்தில் தூக்கி வைத்துச் சித்திரித்துக் காட்டும் இந்த ரிஷிகள், முனிகளின் பிம்பத்தை உடைத்துக் காட்டவேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டு. அந்த வேலையை மிகச் சாதாரணமாகச் செய்துவிட்ட துணிச்சல்காரர் பெரியார். அந்தத் துணிச்சலை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

- இராஜம் கிருஷ்ணன் (எழுத்தாளர்)

தமிழ் ஓவியா said...

இந்திய உபகண்டத்திலேயே ஜாதி ஒழிப்புக்காகவும், ஜாதி ஆணவ ஆதிக்கங்களை ஒழிப்பதற்காகவும் உண்மையிலேயே பாடுபட்டு உழைத்து வருபவர் பெரியார். இந்த இருபதாம் நூற்றாண்டிலேயே பெரியார் ஒருவர்தான் இருக்கிறார். ஆகவே, ஜாதி ஒழிப்பில் ஆர்வமிக்க அனைவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் பெரியார் அவர்களுடன் ஒத்துழைப்பதுடன், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மேடைகளில் அவரது அறிவுரைகளைக் கேட்கும்படி வசதி ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

- பாபு ஜெகஜீவன்ராம் (விடுதலை, 18.10.1960)

தமிழ் ஓவியா said...

கடவுள் மறுப்பு மட்டுமல்ல

1967இல் தந்தை பெரியார் கடவுள் மறுப்பு வாசகத்தை அறிமுகப்படுத்திய பிறகு கழகக் கூட்டங்களில் தொடக்கத்திலேயே அதைச் சொல்வதுண்டு. அன்று பெரியார் பிஞ்சுகளாக இருந்த நாங்கள் (என் சகோதரர் மற்றும் சகோதரி) தேவகோட்டையில் ஆர்ச் அருகில் தந்தை பெரியார் பங்கேற்ற கூட்டத்தில் கடவுள் மறுப்பு வாசகத்தை மனப்பாடம் செய்து மேடையில் கூறினோம். அதைக் கவனித்த அய்யா அவர்கள், அதோடு போதாது; ஆத்மா மறுப்பும் சொல்ல வேண்டும். அது தெரியுமா? என்று கேட்டு, பின்னர் அவர்கள் வைத்திருந்த ஓர் அட்டையில் எழுதப்பட்டிருந்த ஆத்மா மறுப்பைக் காட்டி, அதைப் பார்த்துப் படிக்கச் சொன்னார்கள். தன் கொள்கையில் முழுமையும், தெளிவும் அவசியம் என்பதில் உறுதியோடிருந்தவர் பெரியார்.

- இறைவி

தமிழ் ஓவியா said...

நனவாகுமா? நீதிபதிகள் கேள்வி

பதவியேற்றவுடன் 2500 கோடி ரூபாயை கங்கையைச் சுத்தப்படுத்த ஒதுக்கப்(!) போகிறோம் என்றது பா.ஜ.க. அரசு.

கங்கை நதியைச் சுத்தப்படுத்துவது தொடர்பாக நீங்கள் (மத்திய அரசு) தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்து பார்த்தால் இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும்கூட கங்கையைச் சுத்தப்படுத்துவது என்பது ஒரு கனவுத் திட்டம். மாசில்லாத சுத்தமான கங்கையை நம்மால் பார்க்க முடியுமா? முடியாதா? என்று தெரியவில்லை என சவுக்கைச் சுழற்றியிருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்குர், ஆர் பானுமதி ஆகியோர்.

தமிழ் ஓவியா said...

அய்யாவின் அடிச்சுவட்டில்... கடந்த பாதை...


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தன் வரலாறு அய்யாவின் அடிச்சுவட்டில்... என்ற தலைப்பில் புதிய பார்வை 1995 _ செப்டம்பர் 1ஆம் இதழில் தொடராக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து உண்மை இதழில் கடந்த சில ஆண்டுகளில் நான்கு பாகங்களாக வெளிவந்து, புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. 1933 ஆசிரியர் கி.வீரமணி பிறப்பு முதல் அறிஞர் அண்ணா மறைவு (1969) வரை முதல் பாகமாகவும், 1969 முதல் தந்தை பெரியார் மறைவு (1973) வரை இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களாகவும், அய்யா காலத்திற்குப் பின் அன்னை மணியம்மையார் தலைமையிலான காலப் பதிவுகள் (1974_1978) நான்காம் பாகமாகவும் வெளிவந்துள்ளன.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் காலத்திற் குப் பிறகு இயக்கத்தின் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்து தொடங்குகிறது அய்யாவின் அடிச்சுவட்டில் அய்ந்தாம் பாகம்.

இதழ்களின் பார்வையில்...

தமிழ்நாட்டின் கடந்த அரை நூற்றாண்டு அரசியல் வரலாற்றை உள்ளடக்கியதாக, இந்நூல் அமைந்துள்ளது. சுவையும் விறுவிறுப்பும் கலந்த நடையில், வீரமணி இப்புத்தகத்தை எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்வுகள் பற்றிய அபூர்வமான ஆவணமாக இந்தப் புத்தகம் திகழ்கிறது.

- தினத்தந்தி 31.12.2008

தந்தை பெரியாரிடம் அறிமுகமானது முதல், அவரது நிழலாக வளர்ந்தது வரையிலான காலத்து, தனது வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்தளித்திருக்கிறார் கி.வீரமணி. தமிழக அரசியலைப் புரட்டிப் போட்ட பல அரசியல் நிகழ்வுகளை பெரியாரின் அருகிலிருந்து பார்த்த அவர், சுவாரசியம் குறையாத நடையில் அவற்றை விவரிக்கிறார். திராவிட இயக்க அரசியல்மீது ஆர்வம் காட்டும் எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

- தினகரன் 4.1.2009

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி 1944ஆம் ஆண்டு முதன்முறையாக ஈ.வெ.ரா பெரியாரைச் சந்தித்ததில் இருந்து 1971ஆம் ஆண்டு வரையும் அவருக்குக் கிடைத்த பல்வேறு அனுபவங்களைப் பதிவு செய்துள்ள நூல். மாணவப் பருவத்தில் அவர் பங்கு கொண்ட இயக்கங்கள், போராட்டங்கள், எதிர் கொண்ட இடர்ப்பாடுகள் அனைத்தும் கூறப்பட்டுள்ள நூல், திராவிட இயக்க வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும்.

- தினமணி 5.1.2009

வாழ்க்கை வரலாற்று நூல்களில் மிகமிகக் குறைவான பொய்கள் இடம் பெறுவது சுயவரலாற்று நூல்களில்தான் என்கின்ற பொருள்படும் ஆங்கிலப் பொன்மொழி உண்டு. தாமறிந்த தம்முடைய வரலாற்றுச் செய்திகளை முடிந்தவரை பதிவு செய்வது என்பது மிக மிக அவசியமான வரலாற்றுக் கடமை. அதனைச் செய்ததற்காக கி. வீரமணிக்குப் பாராட்டுகள். அய்யாவின், அடிச்சுவட்டில் உறுதியாகப் பயணம் செய்பவர் வீரமணி. இதில் சந்தேகம் இல்லை. இந்நூல் அதனை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

- தீக்கதிர் 18.1.2009

பெரியாரின் அணுக்கத் தொண்டராக அவரின் கடைசி வாழ்நாள் வரையிலும் அருகில் இருந்த கி. வீரமணியின் தன் வரலாற்று நூல். அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பெரியாரோடு இணைந்ததுதான் என்ற அளவில், பெரியாரின் பண்புகளையும், கொள்கைகளையும் சிறப்பாக நம்முன் வைக்கிறது. தன் வரலாறு என்பதைவிட, வரலாற்றுப் பார்வை என்பதே பொருத்தமாக இருக்கும். தமிழகத்தின் மகா புருஷனுக்கு அருகிருந்து பணி செய்த அனுபவத்தை நேர்த்தியுடன் விவரித்திருக்கும் பாங்குதான் இந்தப் புத்தகத்தின் அருமையான பண்பு!

- ஆனந்த விகடன் 14.1.2009

ஒரு தன் வரலாறு எழுதப்படும்போது மேதாவித்தனமும், சிலிர்ப்பும், பெருமை கூட்டி எழுதுவதும் வழக்கம். அப்படிச் செய்யாமல் தனது அறிவாசானின் நிழலில் நின்று நிதானமாக இயல்பாக மிக நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார் தனக்குத் தானே எடை போட்டு மதிப்பீடு செய்யும் முயற்சிதான் தன் வரலாறு என்பதை உணர்ந்த ஆசிரியர் கி. வீரமணி. இவ்வகையிலும் இந்நூல் முக்கியக் கவனத்திற்குரியதாகிறது. அடுத்தடுத்த பாகங்கள் எப்போது வரும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது இந்த முதல் பாகம்.

- புதிய பார்வை ஜனவரி 1 -15, 2009

தமிழ் ஓவியா said...

பெரியாரைப் பின்பற்றுவோம்!


பெரியார் என்ற சொல்லுக்கு மனிதநேயம் என்றே பொருள்! இதை அகராதியில் அச்சிட்டாலும் அதில் பிழையேதும் இல்லை.

ஆம். பெரியார் என்ற ஒற்றைச் சொல்லின் உள்ளடக்கம் மிகப் பெரியது. ஈ.வெ.ராமசாமி என்பவருக்குப் பெண்கள் அளித்த சிறப்புப் பெயர் பெரியார் என்றாலும், அப்பெயர் அவரால் தனித் தன்மையும், தனிப் பெருமையும், உயர்தகுதியும் பெற்றுவிட்டது என்பதே உண்மை!

பெரியார் என்ற தனி மனிதர் வழக்கமாக உலகில் பிறந்து, வாழ்ந்து, மறையும் சராசரி மனிதர் அல்லர். அல்லது மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் ஒரு சிலரைப் போன்றவரும் அல்லர்.

அவர் ஒரு சகாப்தம்! காலகட்டம்! சரித்திரம்! திருப்புமுனை! தீர்க்கதரிசி! உலக நாயகர்! சிந்தனைச் சுரங்கம்! ஆதிக்கம் அழித்த சமதர்மச் சிற்பி! இப்படி எத்தனையோ இலக்கணங்களுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர்! அதனால்தான், உலக அமைப்பான அய்.நா.மன்றம் இவரை இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி என்று, இவ்வுலகில் எவருக்கும் அளிக்காத பெருமையை அளித்தது.

அவர் ஒரு தொலைநோக்காளர் என்பதற்கு அவரது இனிவரும் உலகம் என்ற நூலே சான்று. அவர் ஒரு தத்துவ மேதை என்பதற்கு அவரது தத்துவ விளக்கம் என்ற நூலே சான்று. அவர் ஒரு பத்திரிகையாளர் என்பதற்கு குடியரசு, விடுதலை, உண்மை போன்ற இதழ்கள் சான்று!

அவர் ஒரு புரட்சியாளர் என்பதற்கு அவரது போராட்டங்கள் சான்று.

அவர் ஒரு சாதனையாளர் என்பதற்கு அவரது பிரச்சாரப் பயணங்களும், மேடை முழக்கங்களும் சான்று.

அவர் ஒரு கொள்கையாளர் என்பதற்கு அவரது வாழ்வே சான்று!

புரட்சி, போராட்டங்கள் நடத்தி தன் வாழ்விலே விடிவும் கண்டு, விளைவுகளையும் கண்டவர் பெரியார் மட்டுமே!

தன்னைப் போலவே, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உணர்வுள்ளவன், உரிமையுள்ளவன், மானமுள்ளவன், மதிக்கப்பட வேண்டியவன், சமமானவன், உறவு கொண்டு வாழ வேண்டியவன். ஆண்டான் அடிமை இல்லை; தீண்டத்தகாதவன், வணங்கத்தக்கவன் இல்லை! பிறப்பொக்கும் எல்லா மனிதர்க்கும் என்பதே இவரது கொள்கை. இவற்றிற்காகவே வாழ்ந்தார்; இவற்றிற்காகவே போராடினார்.

எனவேதான் பெரியார் என்றால், மனிதநேயம் என்று சொன்னேன்!

ஆனால் ஆதிக்கவாதிகள், குறிப்பாக ஆரியப் பார்ப்பனர்கள், பெரியாரின் பரந்துபட்ட இந்த உணர்வைச் சுருக்கி, குறுக்கிக்கூட அல்ல, மறைத்து, குறைத்து, மாற்றி, திரித்துக் கூறினர். பெரியாரின் பெருமையை, புகழை, சிறப்பை, புரட்சியை பிறர் அறியாமலிருக்கும்படிச் செய்தனர்; செய்தும் வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக, செப்டம்பர் மாதம் பிறந்த தலைவர்களைப் படம் போட்டுக் காட்டிய தினமணி சிறுவர் மணி, பெரியார் படத்தைப் போடவில்லை. முதலில் போடவேண்டிய பெரியாரின் படத்தை முற்றாக நீக்கினர். சிறுவர்கள் பெரியாரை அறியக்கூடாது என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்; கவனமாக இருக்கின்றனர்.

பெரியார் என்றால் கடவுள் இல்லை யென்பார்; பார்ப்பானைத் திட்டுவார் என்ற அளவில் பெரியாரை பிறர் அறியும்படிச் செய்கின்றனர்.

ஆனால், இவ்வளவுதான் பெரியாரா? பிஞ்சுகள் சிந்திக்க வேண்டும்; தெரிந்துகொள்ள வேண்டும்.

பெரியார் செய்தது இவை மட்டுமென்றால், அய்.நா.மன்றம் எப்படி உலகில் யாருக்கும் அளிக்காத பெருமையை _ பட்டத்தை பெரியாருக்கு அளித்துச் சிறப்பித்திருக்கும்? என்ற வினாவோடு பெரியாரைத் தேடவேண்டும்; பெரியாரின் சிந்தனைகளைக் கிளற வேண்டும்; தோளிட வேண்டும்.

அப்படிச் செய்தால் பெரியாரின் பல்துறைச் சிந்தனைகள், பணிகள், போராட்டங்கள், புரட்சிகள் வெளிப்படும்.

வெளிப்பட்டவற்றை விடாது பிடித்துச் சிந்தித்தால், தெளிவு, துணிவு, ஒழுக்கம், நாணயம், நேர்மை, தொண்டு, சமத்துவம் போன்ற பல உயரிய கொள்கைகள் நம்முள் குடிகொள்ளும்; நம்மை வழிநடத்தும்.

பெரியாரின் சிந்தனைவழிச் சென்றால், தன்மான உணர்வு தானே வரும். தன்மான உணர்வு தலைதூக்கினால், நம் இழிவு, தாழ்வு, அறியாமை எல்லாம் அகலும். நாமும் மனிதன், நாம் யாருக்கும் அடிமையல்ல என்ற உண்மை உள்ளத்துள் பதியும். விழிப்பு, துணிவு, தெளிவு, காரணம் கேட்கும் சிந்தனை வரும்போது நம் வாழ்வு சிறக்கும் _ உயரும். நம் தலைமுறை தலைநிமிரும்.

பெரியார் வழி நடக்கும் பிஞ்சுகள், வாழ்வில் என்றும் வீழ்வதில்லை. எனவே, பெரியாரைப் பின்பற்றுவோம், வாழ்வில் சிறப்போம்; பிறர் வாழ்வு சிறக்கவும் உழைப்போம்! இதுவே இக்காலத்தில் நம் உள்ளத்தில் கொள்ள வேண்டிய உறுதி!

தமிழ் ஓவியா said...

நாவலாசிரியரின் நகைச்சுவை

இங்கிலாந்தின் மிகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்களுள் சார்லஸ் டிக்கன்ஸ் குறிப்பிடத்தக்கவர். டிக்கன்ஸ், பத்திரிகை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபோது, ஓர் இளம் கவிஞர் நாரில் கோர்த்து வைத்த நன்மணிகள் என்ற தலைப்பில் கவிதை எழுதி டிக்கன்சின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இளம் கவிஞரின் கவிதையைப் படித்த டிக்கன்ஸ் எழுதியவருக்கே கவிதையைத் திருப்பி அனுப்பினார். அப்பொழுது, என் அன்புக்குரிய இளம் கவிஞரே! நாரில் கோர்த்த நன்மணிகள் என்ற தங்கள் கவிதையைப் படித்தேன். நார் அதிகமாக இருக்கிறது. திருப்பி அனுப்பி இருக்கிறேன் என்று எழுதிய கடிதத்தையும் வைத்து அனுப்பியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

அறிஞர்களின் வாழ்வில்....
Print E-mail

மில்டனின் சொல்லாற்றல்

லண்டனில் பிறந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றவர் மில்டன். கவிஞர் மட்டுமன்றி, சிறந்த மேதையாகவும் விளங்கியவர். மில்டனின் எழுத்துகளை, காலத்தால் அழியாத எழுத்துகளும் அறிவும் செய்து கொண்ட திருமணம் என்று வோர்ட்ஸ்வொர்த் கூறியுள்ளார்.

மில்டன் பெரும் பிரச்சினைகள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். முதலாம் சார்லஸ் மன்னன் கொல்லப்பட்டது சரியே என்று மில்டன் கூறினார். இந்தக் கூற்றைக் கேட்டுக் கோபமடைந்தார் சார்லசின் மகன் இரண்டாம் ஜேம்ஸ். மில்டனை அழைத்து, முதலாம் சார்லஸ் மன்னரின் கொலையினை நியாயப்படுத்துவதால்தான் உங்கள் கண்கள் குருடாகி விட்டன. உங்களுக்கு தெய்வம் தந்த தண்டனை இது என்றார் மன்னர்.

இதனைக் கேட்ட மில்டன், நடக்கும் சில துரதிர்ஷ்டவசமான நிகழ்ச்சிகள் தெய்வ கோபத்தின் குறியீடுகள் என்று மேன்மை பொருந்திய மன்னர் நினைத்தால், தங்கள் தந்தையாரின் முடிவு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அட, எனக்காவது 2 கண்கள் மட்டும்தான் போயின; உங்கள் தந்தைக்கு தலையே போய்விட்டதே என்றாராம்.

தமிழ் ஓவியா said...

சிங்கப்பூர் நாட்டின் தமிழ்ப் புதையல்கள் (1)சிங்கப்பூர் நாட்டின் தமிழ் மொழி உணர்வும், தமிழ் இலக்கியம் பண்பாடு காக்க, சிங்கைத் தமிழ்ப் பெரு மக்களிடையே பூத்துக் குலுங்கும், புலமை மிக்கோர் ஏராளம். அவர்களது தமிழ் மொழி உணர்வு கெட்டுப் போகவுமில்லை. பட்டுப் போன பழங்கதையாகவும் ஆனதில்லை.
தமிழ் ஆசிரியர்கள் பலரும், தமிழ் எழுத்தாளர்கள், படைப்பாளிகள், இலக்கியத் தேனீக்கள் ஏராளம், ஏராளம்!

சிங்கப்பூர் சிந்தனையாளரும், செந்தமிழ்ப் புலமையாளருமான திருவாளர் சிங்கப்பூர் சித்தார்த்தன் அவர்களது பல அரிய சிந்தனைக் கட்டுரைகளைக் கொண்ட சிறந்த தொகுப்பினை,
மெய்ப்பொருள் காண்போம்
மேனிலை அடைவோம்,

என்ற தலைப்பில் 41 அரிய கருத்துக் கருவூலக் கட்டுரைகளைக் கொண்ட பன்னூல் பொதிந்த ஒரு நூல் இது! என்ற அறிமுகத் துணைத் தலைப் பையும் அடக்கி வெளியிட்டுள்ளனர் சென்னை நர்மதா பதிப்பகத்தவர்கள். (சிறந்த நூல்களை வெளியிடும் ஒரு நல்ல புத்தக வெளியீட்டாளர்கள் இவர்கள்)

பல்வேறு தலைப்புகளில் பன்முகப் பரிமாணங்களில் பயனுறு கட்டுரைகள் உள்ள நவில்தொறும் நூல் நயம் கொண்ட நூல் இது!

மனிதநேயம் என்கிற தலைப்பில் அருமையான கருத்துக்களை தனது எழுதுகோல் மூலம் சொடுக்கி சாட்டையாகப் பயன்படுத்தியுள்ளார் சிங்கப்பூர் சித்தார்த்தன்.

இனச் சண்டை, பணச்சண்டை, சாதிச் சண்டை, சமயச் சண்டை, இளைத்தவன் - வலுத்தவன், ஏழை - பணக்காரன் என்ற வேறுபாடு - இப்படி எங்கு பார்த்தாலும் போரும், பூசலும், போட்டியும், பொறா மையும், பகைமையும், பழி உணர்ச்சியும், தலைதூக்கி நிற்பதையல்லவா காண முடிகிறது? இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன? அன்பு அருகி, அருள் குறைந்து, மனிதநேயம் மங்கி விட்டதால் தான் இந்நிலை என்பதைச் சிந்தித்துப் பார்ப்ப வர்கள் உணர முடியும்.

அன்பின் வழியது உயிர்நிலை என்ற வள்ளுவரின் அமுத மொழியை, ஆருயிர்க்கெல்லாம் அன்பு செயல் வேண்டும் என்ற வள்ளலார் வாய் மொழியை ஏட்டில் படித்ததோடு நின்று விட்டோம்; மறந்து விட்டோம்.

இந்த நிலை இனியும் நீடிக்கலாமா? நீடிக்க விடலாமா? கூடாது... கூடாது... அறவே கூடாது... என்று மனித மனம் படைத்தோர் கூறுவது கேட்கிறது!

நமது சிந்தனை செயல்வடிவம் பெறு வதற்குப் புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் வழி காட்டுகிறார்!

என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்! அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு!

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
இப்படி பற்பலக் கருத்து முத்துக்கள்.

இப்படி எத்தனையோ அருமை யான அறிவுரைகள் அற உரைகள் - வாழ்க்கையில் ஒளியேற்றும் விளக் கின் வெளிச்சங்களாக விரவிக் கிடக்கின்றன.

தமிழைப் பாழ்படுத்தும் தகாத செயல் என்ற தலைப்பில் நான்கு கட்டுரைகளில், தமிழைப் பாழ் படுத்துவோரை அம்பலப்படுத்தி மீண்டும் தனது எழுதுகோலை வாளாகச் சுழற்றி, வையகத்தினை விழிக்கச் செய்கிறார்.

அந்நூலைப் படியுங்கள் - பயன் பெறுங்கள். மற்றொரு அரிய புதையலாக சில நாள்களுக்கு முன் சிங்கப்பூர் செம்மொழி ஆசிரியர், இலக்கியவாதி நண்பர் இலியாஸ் மூலம் தந்து அனுப்பினார் அறிவிலும், ஆற்றலிலும், ஆட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றும் இன்றும் கல்வித் தொண்டைச் செய்வதில் சலிக்காது ஈடுபட்டுள்ள சிங்கப்பூரின் பெருமை மிகுந்த மேனாள் குடிஅரசுத் தலைவர் மேதகு எஸ்.ஆர். நாதன் அவர்களது தன் வரலாறு - தமிழ்ப் பதிப்பு உழைப்பின் உயர்வு என்ற தலைப்பில் 678 பக்கங்களைக் கொண்ட மிக அருமை யான அனுபவக் களஞ்சியமாகத் திகழும் சுவைத் தேனாக உள்ள சிறந்த நூல் ஆகும்.

அதுபற்றி நாளை எழு துகிறேன்.- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/88581.html#ixzz3F2j1uwWX

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பல்லி

என் நண்பர் 3 லட்சம் ரூபாய் செலவு செய்து பார்த்துப் பார்த்து 6 மாதங்களாக கஷ்டப்பட்டு மிக அழகான வீட்டைக் கட்டினார். மிகச் சிறப்பாக திறப்பு விழா செய்தார். 5 லட்சம் செலவு செய்தால் கூட அப்படி ஒரு அம்ச மான வீட்டை கட்ட முடியாது. இருந்தாலும் குடும்பத்தோடு குடிபோன வர் 6 மாதங்களில் கட்டிய வீட்டை மிகக் குறைந்த விலைக்கு விற்று விட்டார். காரணம், ஒரு பல்லிகூட வீட்டில் இல்லையாம். பல்லி இருந்தால்தான் வீட்டில் லட்சுமி இருப்பாள். பல்லி இல்லாத வீடு பாழ டைந்த வீடு என்றார். இந்தக் காலத்தில் இப்படியுமா மனிதர்கள்? ஒரு வார மலரில் இப்படி ஒரு பெட்டிச் செய்தி.

அதெல்லாம் சரி, அந்த லட்சுமியான பல்லி சமையலில் விழுந்து, அதனைச் சாப்பிட்டிருந்தால் நேர டியாக பரலோகம் தானே!

Read more: http://viduthalai.in/e-paper/88560.html#ixzz3F2jeZXfa

தமிழ் ஓவியா said...

நவகண்டம்


தி தமிழ் இந்து ஏட்டில் (21.9.2014, பக்கம் 11) விஜய நகர பேரரசு கால செப்பேடு கண்டுபிடிப்பு என்ற தலைப் பில் ஒரு தகவல்:

வரலாற்று ஆய்வாள ரும், எழுத்தாளருமான இரா.முருக வேள் எழுதியிருக் கும் மிளிர்கல் வரலாற்று நாவலில் தங்கள் தலையைத் தாங்களே அறுத்து உயிர்த் தியாகம் செய்பவர் களைப்பற்றி குறிப்பிட்டிருப்பார். அவரிடம் இதுகுறித்து கேட்டோம்: 200 ஆண்டு களுக்கு முன்புவரை தமிழ் சமூகத்தில் சுயபலிகள் இருந் தன. மன்னர் உடல்நலம் பெறு வதற்கு, போரில் வெற்றி பெறு வதற்கு மற்றும் ஊர்ப் பொது நன்மைக்கு இது போன்ற சுய பலிகள் நடத்தப்பட்டன. இதில் தலை முடியை ஒரு கயிற்றில் கட்டி, மரத்திலோ, ஒரு கம்பத் திலோ இணைத்து கட்டி விடுவார் கள். பின்னர் சம்பந்தப்பட்ட நபர் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொள்வார். இதன் பெயர் நவகண்டம். இதில் பெரும் பாலும் தாழ்த்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த குழந்தை களும், பெண்களுமே பலி யிடப்பட்டனர் என்றார் என்று தமிழ் இந்து ஏட் டில் செய்தி வெளிவந்துள்ளது.

தனது தலையை ஒரே முயற்சியில் தானே அரிந்து கொள்வதற்கு அரிகண்டம் என்று பெயர். நவகண்டம்/அரிகண்டம் கொடுப்பதற்கு முன் உறவினர்கள் அனை வரும் அழைக்கப்படுவர். நவகண்டம் கொடுப்பவர் இடையில் உடை வாளும், மார்பில் கவசமும் தரித்து, போர் வீரன்போல் போர்க் கோலம் பூண்டு இருப்பார். கொற்றவைக்குப் பூஜை முடித்து பின்பு, தனது இடது கையி னால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட் டிக் கொண்டு இறப்பார்களாம்.

இதற்குச் சொல்லப்படும் காரணங்கள்!

1. வலிமையான எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற தருணங்களில் தெய்வத்தின் அருள் நாடப்படு கிறது. துர்க்கைக்குப் பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக் கையில் நவகண்டம் கொடுக் கப்பட்டது.

2. சில சமயங்களில் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அர சனுக்கு, அவன் நலம் திரும்ப அவரது விசுவாசிகளால் நவ கண்டம் கொடுக்கப்பட்டது.

3.நோயினால் சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒருவன், நோயினால் சாக விரும்பாமல், வீர சொர்க்கம் அடைய விரும்பி நவகண் டம் கொடுத்துக் கொள்வது.

4.குற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் மரண தண்டனைக்குள்ளாகும் போது, அவ்வாறு சாகாமல் அரசின் அனுமதியுடன் நவ கண்டம் கொடுத்துக்கொண்டு வீர சொர்க்கம் அடைவது.

5.ஒருவன் போர்க் காயத் தினாலோ, நோயினாலோ சாகும் தறுவாயில் அவனுக்கு முடிக்கவேண்டிய கடமை கள் ஏதும் இருக்குமாயின், தனது இறப்பை தள்ளிப் போடுமாறு இறைவனிடம் வேண்டுவது. அப்படி நடக் கும் பட்சத்தில் அந்தக் கடமை நிறைவேறியதும் நவகண்டம் கொடுத்துக் கொள்வது.

6.ஒருவன் மிகப்பெரிய அவமானத்தை பெற்ற பின், அதற்குமேல் வாழ விரும் பாமல், சாக விரும்புகிறான். ஆனால், கோழை மாதிரி சாக விரும்பாமல், வீரச்சாவை விரும்பி நவகண்டம் கொடுத் துக் கொள்வது.

பிற்காலத்தில் கோவில் கட்டுவதற்கு, தடைப்பட்ட தேரோட்டத்தை நடத்துவது உள்பட்ட காரணங்களுக்காக வும் மேல்ஜாதிக்காரர்களால் கீழ்ஜாதிக்காரர்கள், தாழ்த் தப்பட்டவர்கள் நவகண்டம் செய்துகொள்ள கட்டாயப் படுத்தப்பட்டார்கள்; இதில், கீழ்ஜாதிப் பெண்களும், குழந் தைகளும் கூட விதிவிலக்கு இல்லையாம்.

என்ன கொடுமையடா இது! கொடூரமான மூட நம் பிக்கை என்பது ஒருபுறம் இருக்கட்டும்; அதற்குக்கூட தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கா ரர்கள்தான் கிடைத்தார்களா?
நவகண்டம்/அரிகண்டம் என்ற சொற்களைப் பார்க்கும் பொழுது, இவை தமிழ்ச் சொற் கள் அல்ல. இது அயல்வழி ஆரிய ஆதிக்கத் திணிப் பாகவே தோன்றுகிறது.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/88140.html#ixzz3F2jxtcOc

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உல்டாவா?

கோவில்= கோ+இறை வன். இல் - இல்லம்; அதா வது இறைவன் தங்கும் இடம் என்று பொருள். ஆலயம் என்ற சொல் லுக்கு ஆன்மா லயிக்கும் இடம் என்று பொருள். கடவுள் என்றாலும் இதே பொருள் உண்டு. கட என் றால் கடந்தவர் என்று அர்த் தம். உள் என்றால் உள்ளம் என்று பொருள். கடவுள் என்பவர் உள்ளத்தையும் கடந்தவர் என்று பொருளா கும் என்கிறது ஓர் ஆன் மிக இதழ் (19.8.2014).

உள்ளத்தையும் கடந்த வர் கடவுள் என்றால், உள்ளமே கோவில்; அதில் உறைபவன்தான் இறை வன் என்று சொல்லுவ தெல்லாம் உல்டா தானா?

Read more: http://viduthalai.in/page1/88146.html#ixzz3F2kA4Ueg

தமிழ் ஓவியா said...

மூன்று பேய்கள் - அய்ந்து நோய்கள்!


நமது நாட்டைப் பிடித்துள்ள பேய்கள் மூன்று. அவை 1. கடவுள், மதம், சாஸ்திரம் 2.ஜாதி 3.ஜனநாயகம்.

நம்மை அரித்துவரும் நோய்கள் அய்ந்து. அவை 1. பார்ப்பான் 2.பத்திரிகை 3.அரசியல் கட்சி 4.தேர்தல் 5. சினிமா

Read more: http://viduthalai.in/page1/88147.html#ixzz3F2kL1XYy

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அம்பிகை

அம்பிகையாகிய அன்னையை நவராத்திரி காலத்தில் தியானிப்பதால் வழிபடுவதால் சகல பாவங்களும் நிவர்த்தி யாகும், சிறப்பும் மேன் மையும் ஏற்படும் என்பது அய்தீகமாம்.
கடந்த வருடம் இதே நவராத்திரியில் அம்பி கையை வழிபட்டவர் களுக்கு என்னென்ன பாவங்கள் நீங்கின? என் னென்ன மேன்மைகள் சிறப்புகள் வரவுகள் அமைந்தன என்று எந்தப் பக்தராலாவது கணக்குப் போட்டுச் சொல்ல முடி யுமா? நேரமும், பொரு ளும் பூஜைக்காக செல வழிக்கப்பட்டதைத் தவிர கண்ட பலன் என்னவாம்?

Read more: http://viduthalai.in/page1/88108.html#ixzz3F2ktvWO5

தமிழ் ஓவியா said...

செத்தான்


நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோ மானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.
(விடுதலை, 14.3.1970)

Read more: http://viduthalai.in/page1/88110.html#ixzz3F2l6Oep9

தமிழ் ஓவியா said...

பதில் கூறட்டுமே!

செண்பகக் காட்டிலும் (தினைப்புனத்து) பரண்மீதும், உயர்ந்த சந்தனக் காட்டிலும் உறைந்த குறமகள் (வள்ளி யின்) செம்பொன்னாலாய சிலம்பணிந்த மலரடிகளை யும், வளையல்களை அணிந்த புதுமூங்கில் அனைய தோள் களையும், சந்திரனை ஒத்த (குளிர்ந்த) ஒளி வீசும் முக மென்னும் தாமரையையும், கஸ்தூரி, குங்குமம் இவை அணிந்த மலையன்ன இரண்டு கொங்கைகளையும் இனிமை இன்பம் தருவதான பண் இந்தளம்( நாத நாமக்கிரியை) போன்ற அமிருத மொழிகளையும், பற்களையும், அழகு வாய்ந்த தம்பலப்பூச்சி (இந்திரகோபம்) போன்ற (சிவந்த) வாயிதழ்களையும், பச்சை நிறத்தையும், இந்தர சாபம் (இந்திரவில் - வானவில்) போன்ற புருவத்தையும், இரண்டு குழைகளைத் தூக் குகின்ற காதணியும், இந்த்ர நீலம் (நீலோற்பவ மலர்) போன்ற கண்களையும் மடலின் கண் எழுதி மகிழ்ந்த பெருமாளே வள்ளியின் பல அங்கங்களை வரைவது சிரமமல்ல. ஆனால் எழுதுவ தற்கு அரிதான வள்ளியின், இந்தளாம்ருத வசனத்தை யும் எழுதினார் என்கிறார் அருணகிரிநாதர். இது முருகன் திறத்தைக் காட்டு கிறது. அவர் நினைத்த காரியங்கள் எவற்றையும் நிறைவேற்ற வல்லவர் என் கிறார் உரையாசிரியர் செங்கல்வராய பிள்ளை. முருகன் வள்ளியின் உரு வத்தை சித்திரம் தீட்டி யதைப் போல திருப்புகழ் வெள்ளி விழா மலரின் (திருப்புகழ் வைபவம்) அட் டையில் ஓர் அற்புதமான ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.

திருப்புகழ் வெள்ளி விழா மலர் இணையதளம்

கடவுளைக் கற்பித்தவர் கள் எப்படியெல்லாம் தங்கள் கை வண்ணங்களைக் காட் டுகிறார்கள். முருகக் கடவுள் ஓவியராம். வள்ளியின் அங் கங்களை எல்லாம் அப் படியே தீட்டினாராம்.

முருகனாகட்டும், சிவனா கட்டும், விநாயகனாகட்டும், பார்வதியாகட்டும், லட்சுமி யாகட்டும், சரஸ்வதியாகட் டும், விஷ்ணுவாகட்டும், பிரம் மாவாகட்டும், ராமனாகட் டும், கிருஷ்ணனாகட்டும் இவர்களையெல்லாம் நேரில் பார்த்தவர்கள் யார்? படம் பிடித்தவர்கள் யார்?

மணிவர்மா என்ற ஓவி யரும் கொண்டையராஜ் போன்ற ஓவியரும் இல்லா விட்டால் இந்தக் கடவுள் களின் உருவங்கள் யாருக்குத் தெரியும்?

உண்மையிலேயே இந்தக் கடவுள்களைப் படைத்த பிரம்மாக்கள் இந்த ஓவியர்கள் தாம்.

பிரபல சிற்பியான கணபதி ஸ்தபதி அவர்கள் கல்கி இதழுக்கு ஒரு முறை பேட்டி அளித்தார்!

ஒரு கடவுள் சிலையை வடிக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்காங்க கடவுளை? அவர் எப்படி இருப்பார்ன்னு யாருக்குத் தெரியும்? எங்களால மட்டும் எப்படி அத்தனை தத்ருபமா ஒரு கல்லில் அவரைக் கொண்டு வர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனை பரவசப்பட றீங்க?

நீங்க அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு சிலையா மாறணும். அந்தக் கல்லுக்கு உயிர் வரணும். அப்பதான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்கிறாங்க? நாங்க தானே! எங்கக்கிட்ட அப்படி என்னதான் விந்தை இருக் குன்னு தெரிஞ்சுக்க வேண் டாமா? (கல்கி 11.6.2006)

இப்படி சொல்லியிருப்ப வர் சாதாரணமானவர் அல்லர்! எத்தனையோ கடவுள் சிலைகளை உரு வாக்கிக் கொடுத்த மிகப் பெரிய சிற்பி!

டாண்டாண் என்று கேள்வி கேட்கிறாரே!

கல்லைக் கடவுள் என்று கும் பிடும் பக்த சிரோன்மணி களும், தினமணிகளும் பதில் கூறட்டுமே பார்க்கலாம்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/88067.html#ixzz3F2m4Tz8Y

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நவராத்திரி

நவராத்திரியில் சந்தனக் காப்பு செய்து பூஜை முடிந்த பிறகு கலைத்த சந்தனத்தை பிள்ளையார் போல் செய்து கொலுவில் வைத்து வணங்கினால் திரு மணமாகாத பெண்க ளுக்கு திருமண யோகம் கிட்டுமாம்.

திருமணம் ஆகாத ஆண்கள் இருந்தால் திருமண யோகம் கிட்டாதா? இதன் மூலம் ஆண்கள் நவராத் திரியைப் புறக்கணிக்க வேண்டும் என்று தெரிகிறது.

Read more: http://viduthalai.in/page1/88075.html#ixzz3F2mCBFVq

தமிழ் ஓவியா said...

சிறிதும் இராது


பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்க வேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மை பற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர் பற்றியோ கவலை சிறிதும் இராது.

- (விடுதலை, 10.6.1968)

Read more: http://viduthalai.in/page1/88056.html#ixzz3F2mRHbih

தமிழ் ஓவியா said...

நினைவிருக்கட்டும்! 25 கறுப்பு தினம்!


செப்டம்பர் 25ஆம் தேதி நினைவிருக்கிறதா? அன்றுதான் இனப்படுகொலையாளன் இலங்கை அதிபர் ராஜபக்சே அய்.நா. மன்றத்தில் உரை நிகழ்த்தப் போகிறாராம்!

அப்படி என்னதான் உரை நிகழ்த்த முடியும்? ஈழத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினையை அதற்காகப் போராடிய உண்மையான வீரர்களை வன்முறையா ளர்கள் - பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி - அத்தகையவர்களை ஒழித்துக் கட்டினோம் என்று மார்தட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதற்கு முன் இப்படித்தான் அவர் கூறியிருக்கிறார்; இந்தியத் துணைக் கண்டத்துக்குள் நடமாடும் பார்ப்பன ஊடகங்களும் இதனைத்தானே வாந்தி எடுத்துக் கொண்டுள்ளன.

இன்னொரு பொய்யையும் கொட்டி அளப்பார். ஈழத் தமிழர்களின் மறு வழ்வுக்காக இலங்கை அரசு ஏராளம் செய்து கொண்டுள்ளது. இதில் வெளியார் யாரும் தலையிட வேண்டாம் என்று கொட்டி அளப்பார். சார்க் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் மேலும் அதிகாரத் தொனியில் பேசுவார்.

இவை எப்படியோ இருந்து தொலைக்கட்டும்; ஈழத் தமிழர் படுகொலையின்போது அய்.நா. தன் கட மையைச் செய்யவில்லை என்று அய்.நா.வின் செய லாளர் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தாரா இல் லையா? அதற்குக் கழுவாயாக அய்.நா.வின் இனப்படுகொலையாளர் பேசுவதைத் தடுத்திருக்கலாம்.

ராஜபக்சேவைத் தடுப்பதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு, உண்டு! இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் மார்க்சுகி தாருஸ்மான் தலைமையில் அமெரிக்காவின் சட்ட வல்லுநர் ஸ்டீவன்ரெட்னர், தென்னாப்பிரிக்க அறிஞர் யாஷ்மீன் சூக்கா ஆகியோர் கொண்ட மூவர் குழு ஈழத்தில் ராஜபக்சே நடத்திய இனப்படுகொலைபற்றி அறிக்கையை அய்.நா.வின் செயலாளரிடம் அளித்ததே (13.4.2011).

அந்த அறிக்கையை முற்றிலும் நிராகரிப்பதாக ஒரே வரியில் சொன்னவர் தானே இலங்கை அதிபர் ராஜபக்சே? இது அய்.நா.வுக்குத் தெரியாதா? இதைவிட அய்.நா.வை எப்படித்தான் அவமதிக்க முடியும்?

இரண்டாவதாக ஜெனிவா - மனித உரிமை ஆணையம் அமைத்த சர்வதேச விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கவே முடியாது என்று இலங்கை அதிபர் கூறிவிடவில்லையா?

இந்த அவமானத்தையும் பொறுத்துக் கொண்டு இலங்கை அதிபர் அய்.நா.வில் பேசத் தான் வேண்டும் என்ற நிர்ப்பந்தம் என்ன? உலக நாடுகளின் அமைப்பான அய்.நா.வுக் கென்று ஒரு மரியாதை கிடையாதா?

இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டுதான் 28.8.2014 அன்று சென்னையில் கூடிய டெசோ கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

இலங்கையில் தமிழர்கள்மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீதான மீறல்கள் குறித்து விசாரணை செய்ய அய்.நா. மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப் பட்ட விசாரணைக் குழுவினரை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாதென்று அறிவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை 25.9.2014 அன்று தொடங்கும் அய்.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவினரையே அனுமதிக்க மறுத்த ராஜபக் சேவையோ, அந்த நாட்டின் வேறு எந்தப் பிரதி நிதியையோ, அய்.நா.வின் பொது உறுப்பினர் கூட்டத்தில் அனுமதிக்கக் கூடாது என்று டெசோ அமைப்பின் இந்த அவசரக் கூட்டம் அய்.நா.வைக் கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டதோடு இதனை வலியுறுத்தும் வகையில் இம்மாதம் 3ஆம் தேதி டெசோவின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டதே!

ஜனநாயக ரீதியாக இந்த வேண்டுகோளை அய்.நா. தன் செவியில் போட்டுக் கொள்ளவில்லை; இந்திய அரசும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து உரிய வகையில் எந்த அசைவையும் காட்டவில்லை.

அடுத்த கட்டமாக டெசோவின் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அய்.நா.வில் கொடுங் கோலன் - இனப்படுகொலையாளன் ராஜபக்சே உரையாற்றும் அந்த நாளில் (செப்டம்பர் 25இல்) கறுப்புச் சட்டை அணிந்தும், கறுப்புச் சின்னம் அணிந்தும், வீடுகளில் கறுப்புக் கொடியேற்றியும் அதிருப்தியைக் காட்ட வேண்டும் என்ற வேண்டு கோளினை விடுத்தார்கள் (16.9.2014) அதனை வரவேற்று திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களும், விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் மானமிகு தொல். திருமாவளவனும் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள்.

இது ஒரு கட்சிப் பிரச்சினையல்ல; ஒட்டு மொத்த மான தமிழர்களின் பிரச்சினை; இன்னும் சொல்லப் போனால் மனித உரிமைப் பிரச்சினையாகும்.

25ஆம் தேதி எங்கெங்கும் கறுப்புச் சின்னங்கள் அலை மோதட்டும்! கட்சிகளைக் கடந்து ஒட்டு மொத்த தமிழர்களும் ஓரணியில் நின்று இந்த உணர்வை வெளிப்படுத்துவோம்.

இந்தக் கறுப்புத் தினம் வரலாற்றில் என்றென்றும் பேசப்படும் வகையில் தமிழினப் பெருங்குடி மக்களே வெளியில் வாருங்கள்! கறுப்புக் கொடியேற்றுங்கள்!! கறுப்புடை அணியுங்கள் - குறைந்தபட்சம் கறுப்புச் சின்னத்தையாவது அணியுங்கள் - இதுகாலத்தின் குரல்!

Read more: http://viduthalai.in/page1/88059.html#ixzz3F2mb9pLh

தமிழ் ஓவியா said...

பக்கவாதத்தை போக்கும் ஜாதிக்காய்

ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் மேசின் என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருள்களிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

ஜாதிக்காய் எண்ணெயில் அடங்கியுள்ள மிரிஸ்டிசின் என்ற வேதியல் பொருள் பலவிதமான நோய்களைக் குண மாக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. ஜாதிக்காயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் ஒலியோரேசின் கொழுப்பு, வெண்ணெய் போன்றவை வாதம் மற்றும் தசைப் பிடிப்பிற்கு மருந்தாகவும் பாக்டீரியா மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுகிறது.

ஜாதிக்காய் பொடியை அரைகிராம் அளவாக பாலில் கலந்து ஒரு நாளைக்கு 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு தீரும், விந்திறுகும், உடல் வெப்பகற்றும், இரைப்பை, ஈரல் ஆகியவற்றை பலப்படுத்தும், மன மகிழ்ச்சியை அளிக்கும். நடுக்கம், பக்கவாதம் ஆகிய வற்றைப் போக்கும்.

சிறு அளவில் உண்டுவரச் செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும். எண்ணையில் இட்டு காய்ச்சி இவ்வெண்ணையை காதுக்கு 2 துளி விட்டால் காது நோய், காது வலி தீரும்.10 கிராம் ஜாதிக்காய் பொடியுடன் புதிய நெல்லிக்காய்ச் சாறு ஒரு மேஜைக் கரண்டியளவு கலந்து சாப்பிட்டால் அதிமறதி, விக்கல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு ஆகியவை குணமாகும்.

ஜாதிக்காய் தூள் சுமார் 10 கிராம் எடுத்து ஆப்பிள் ரசம் (அ) வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட செரிமான மின்மையால் ஏற்படும் வயிற்றுப் போக்கு தீர்ந்து விடும். ஜாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் தண்ணீர் வீதம் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி பேதி நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.

ஜாதிக்காயை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது அவை போதையை உண்டாக்கும். ஆகவே ஜாதிக்காய் வெப்பமுண்டாக்கி, அகட்டுவாய்வகற்றி, மூர்ச்சையுண்டாக்கி, உரமாக்கி போன்ற மருத்துவப் பண்புகளைப் பெற்றுள்ளது. இதன் தைலம் பல்வலி, வாதம், வாயு, கழிச்சல் போன்ற வற்றையும் கட்டுப்படுத்துகிறது.

Read more: http://viduthalai.in/page1/88077.html#ixzz3F2nBuAtH

தமிழ் ஓவியா said...

அட, அண்டப்புளுகு தினமலரே!

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி தினமலரும் தன் பங்குக்கு ஏதாவது ஒரு கட்டுரையை வெளியிட வேண்டாமா?

வெளியிட்டது - ஆனால், விஷமமாக!

இதோ தினமலர்....

நட்புக்கு மரியாதை பெரியார் - ராஜாஜி இருவரும் இரண்டு துருவங்களாக இருந்த போதும், இறுதிவரை நல்ல நண்பர்களாக இருந்தவர்கள்.

பெரியார் நாத்திகர், ராஜாஜி ஆத்திகர்; கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் நட்பு நீடித்தது. ராஜாஜி இறந்தபோது மயானம் வரை சென்று கண் கலங்கி அழுதவர், பெரியார். பெரியாரின் தந்தை, பெரியார் இளைஞராக இருந்தபோது பொறுப்பில் லாமல் இருக்கிறார் என்று தன் சொத்துக் களை பழனி முருகனுக்கு என்று உயில் எழுதி வைக்க, பெரியார், ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டபோது ராஜாஜி சொன்னார்:

கவலை வேண்டாம். பழனியில் இருப் பது தண்டாயுதபாணிதான்; பழனியில் ஒரு இடம் வாங்கி முருகன் கோவில் கட்டி, நீங்களே அந்தக் கோவிலுக்குத் தர்மகர்த்தா ஆகிவிடுங்கள். சொத்துகள் உங்கள் வசமே இருக்கும் என்று ஆலோசனை வழங்கி னார். அன்று தொடங்கிய அவர்களின் தூய நட்பு, மூச்சு உள்ளவரை தொடர்ந்தது தினமலர் (17.9.2014) எழுதுகிறது.

தந்தை பெரியார் அவர்களைப் பெருமையாகக் கூறுவதுபோல முற்பகுதி - பிற்பகுதியிலோ அதற்கு மாறான - தாறுமாறான அக்கப்போர்!

தினமலர் இப்படி கிறுக்கியுள்ளதே - இதற்கு ஆதாரம் என்ன? அதை நாணய மாக வெளிப்படுத்தவேண்டாமா?

இதே பாணியில் நாம் எழுத முடியாதா? செத்துப்போன சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஒரு கட்டத்தில் பணமுடை ஏற்பட்டு யாருக்கும் தெரியாமல் ஈரோடு சென்று பெருந்தனவந்தரரும், பக்திமானுமான பெரியாரின் தந்தையார் வெங்கட்ட நாயக்கரிடம் சென்று பண உதவி கேட்டார்;

என் மகன் ராமசாமியிடம் வர்த்தகத்தையெல்லாம் ஒப்படைத்து விட்டேன்; அவனிடம் எதற்கும் கேட்டுப் பாருங்கள் என்று சொன்னார். ஈ.வெ.ரா. விடமா? அது நடக்குமா? என்ற யோச னையில் காஞ்சிபுரம் திரும்பி விட்டார் என்று எங்களால் எழுத முடியாதா?

கவர்னர் ஜெனரலாக இருந்த தனது நண்பர் ராஜாஜியிடம் - திருமண ஏற்பாடு, சம்பந்தமாக ஆலோசனை கேட்க, அப் பொழுது ராஜாஜி சொன்ன யோசனை யையே தூக்கி எறிந்துவிட்டு தன் போக்கில் நடந்துகொண்டு, அதில் முழு வெற்றியும் பெற்றவர் தந்தை பெரியார் என்பதெல்லாம் இந்த இனமலர்களுக்குத் தெரியுமா? தெரிந்தாலும் நாணயமாக அவற்றை யெல்லாம் ஏற்றுக்கொள்ளும் நற்புத்தியும் தான் ஏது?

தினமலரே! தினமலரே! ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக்கொள் ளாதே - எச்சரிக்கை!

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/page1/88079.html#ixzz3F2nQsAnV

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மந்திரம்

மனமது செம்மை யானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்கின்றனரே ஆன்மிக வாதிகள் - அப்படியா னால் மந்திரம் ஜெபிப் பவர்கள் எல்லாம் மனமது செம்மையாகாதவர்கள் தானே? சரி இவர்கள் நம்பும், ஜெபிக்கும் கட வுள்களே கொலை, விபச் சாரம் போன்ற ஆசாபா சங்களை உடையவர் களாகத் தானே எழுதி வைத்துள்ளனர்?

கடவுளுக்கே மனமது செம்மையாக இல்லையே!

Read more: http://viduthalai.in/page1/88014.html#ixzz3F2nx5ZPQ

தமிழ் ஓவியா said...

பெரியார் அய்யா பரவாயில்லையே!

திராவிட முன்னேற்றக் கழக முன்னணித் தலைவர் களுள் ஒருவரான டி.ஆர்.பாலு அவர்களைச் சந்தித்து உடல் நலம் பேணிட பரிந்துரைத்த பின்னர், மும்பை பிரிச் கேண்டி மருத்துவமனையிலிருந்து கிளம்பிய தமிழர் தலைவர் வாகனப் பயண நேரத்தில் உடன் பயணித்த இயக்கப் பொறுப்பாளர்களுடன், கடந்த காலங்களில் மும்பை நகருக்கு வந்து, நிகழ்ச்சிகளில் பங்கேற்றிட்ட நாள்களை நினைவு கூர்ந்தார். தோழர் சு.குமணராசன் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா 1979 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பொழுது அதில் தமிழர் தலைவர், திராவிடர் இயக்க முன்னோடித் தலைவருள் ஒருவரும் மேனாள் நாடாளு மன்ற உறுப்பினருமான ஏ.வி.பி. ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டதை எடுத்துச் சொன்னார். அந்நாளில் மும்பைக்கு தந்தை பெரியார், இயக்க நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் பொழுதெல்லாம், தோழர்களின் இல்லத்தில் தங்கி, அவர்கள் ஏற்பாட்டில் சமைக்கப்பட்ட உணவினை அருந்தி மகிழ்வது வழக்கம். தந்தை பெரியாரது மறைவிற்குப் பின்னர் தமிழர் தலைவரும் அதே வழக்கத்தினைக் கைக் கொண்டார்.

நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக முடிந்த வேளையில், உணவருந்த தனியார் உணவகத்திற்குச் செல்லலாமே! என ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்கள் கூறிய வேளையில், உணவகத்திற்கு ஏன் செல்லவேண்டும் தோழர்கள் ஏற்பாடு செய்து சமைத்த உணவினையே அருந்தலாமே! என தமிழர் தலைவர் பதிலுரைத்த நிலையில், பெரியார் அய்யா பரவாயில்லையே! என அன்பு கலந்த மனநிலையினை ஏ.வி.பி.ஆசைத்தம்பி வெளிப் படுத்தினார். சிக்கனம் என்பது பெரியார் இயக்கத்தவரின் தனித்துவப் பண்பாடு, என தமிழர் தலைவர் கூறியது உடன் பயணித்த தோழர்களின் கவனத்தை - கருத்தை ஈர்த்தது.

Read more: http://viduthalai.in/page1/88040.html#ixzz3F2oicDfq

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அழகே அழகு!

கடவுள்களில் வித்தி யாசமாக யானை முகம் உடையவர் விநாயகர். இவருக்கு சுகமன் என்று பெயர் உண்டு. இதற்கு நல்ல முகத்தை உடை யவர் என்று பொருளாம் - ஆன்மிக இதழ் ஒன்று இவ்வாறு கூறுகிறது.

சிரிக்காதீர்! ஆன்மிகத்தில் எதுவுமே அனர்த்தம் தான் விநாயகன் அழகன் என்றால் பக்தர்கள் வீட் டில் விநாயகர் போல் பிள்ளை பிறந்தால் கொஞ்சுவார்களா?

Read more: http://viduthalai.in/page1/87975.html#ixzz3F2pFrk00

தமிழ் ஓவியா said...

பிருந்தாவன விதவைகள் இந்து மதத்தின் அடையாளங்கள்

இந்திய பெண்கள் ஆணையம் (NATIONAL COMMISSION FOR WOMEN) வெளியிட்ட ஒரு அறிக்கை கூறுகிறது, பிருந்தாவனத்தில் உள்ள மொத்த விதவைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேல் தாண்டும். பிருந்தாவனத்தில் உள்ள முக்கிய 4 மிகப்பெரிய ஆசிரமங்களில் 30,000 விதவைகள் உள்ளனர்.

அங்கு மொத்தம் 400-க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள் உள்ளன. இவற்றில் 30 ஆசிரமங்கள் தவிர மற்ற அனைத்துமே அனுமதியின்றி சட்டவிரோதமாக துவங்கப்பட்டவை; விதவைப்பெண்கள் அனைவரும் அயல்நாட்டு நன்கொடைகளைப் பெறுவதற்காக மாத்திரம் பராமரிக்கப் படுகின்றனர்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து கணவனை இழந்த பெண்களை மதுராவிற்குக் கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதற்காக பல தரகர்கள் வேலை பார்க்கின்றனர். சில ஆசிரமங்களில் விதவைகளை கொண்டுவருவதற்காக தரகர்களுக்கு கையூட்டு கொடுக்கப்படுகிறது. அனுமதிபெற்ற ஆசிரமங்கள் விதவைப் பெண் களுக்கு கொடுக்கும் ஊதியம் படித்தவர்களாக இருந்தால் மாதம் 5 ரூபாய், படிக்காதவர்களாக இருந்தால் 2 ரூபாய். விதவைகளில் பெரும்பாலானோர் படிக்காதவர்கள் 15 முதல் 20 வயதுக்குட்பட்ட விதவைகள் 2005 ஆம் ஆண்டு 60 பேருக்கு மேல் இருந்தனர்.

20 முதல் 30 வயதுக்குட்பட்ட விதவைகள் இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். பிரபல அரசு அனுமதிபெற்ற ஆசிரமங்களில் 140 இளம் விதவைகளும், அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இயங்கும் ஆசிரமங்களில் 800 க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

திருவிழா நாட்களில் இவர்களுக்கு கொடுக்கும் உணவுப்பண்டம், பணம் மற்றும் இதரப் பொருட்களை பள்ளிக் குழந்தைகள், பார்ப்பனர்கள் மற்றும் உயர் சாதி சாமியார்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டுமாம்.

இங்குள்ள 27 அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் வெறும் 302 விதவைகளுக்கு மாத்திரம் வங்கிக்கணக்கு உண்டு ;அதுவும் முதியோர் பென்சன் பெறுவதற்காக; அதிலும் கையூட்டு பெற்றுக்கொண்டு தான் மீதிப் பணம் தரப்படுகிறது.

இது போன்ற கேடு கெட்டத்தனம் இந்த அர்த்தமற்ற இந்து மதத்திற்கே உரித்தான தனிக் குணாம்சமாகும். கணவனை ஒரு பெண் இழந்து விட்டால் அத்தோடு அந்தப் பெண்ணின் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்து விட்டதாகவே பொருள். உயிரோடு வாழ்வதாக இருந்தாலும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் விதவை என்று முத்திரை குத்தப்பட்ட அந்த பெண், பல்வேறு அவமானங்களைச் சுமந்தே தீர வேண்டும். தோற்றம், நடை, உடை பாவனை சாப்பிடும் உணவு வரை எல்லாவற்றிலுமே அவமானப்படுத்தப்படும் நிலைதான்.

உயர் ஜாதி என்றும், பிர்மாவின் நெற்றியில் பிறந்ததாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பார்ப்பனர்கள் வீட்டில்கூட கணவனை இழந்த பெண் மொட்டை அடிக்கப்பட்டு, வெள்ளைப் புடவையை உடுக்கச் செய்து, மொட்டைப் பாப்பாத்தி என்ற அழைக்கப்படும் நிலைதான்.

ஏதோ தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தோன்றி, சுயமரியாதை இயக்கம் கண்டு, மறுமலர்ச்சி உண்டாக்கப்பட்டதால் பார்ப்பனர்கள் வீட்டில்கூட பெண்களுக்கு மரியாதை கிடைத்தது. தந்தை பெரியார் தோன்றாத வட இந்தியாவிலோ என்ன நிலை என்பதற்கு அடையாளம்தான் இந்தியப் பெண்கள் ஆணையம் தந்துள்ள புள்ளி விவரங்களும், தகவல் களும் - பிருந்தாவனத்தில் நடந்து கொண்டிருக்கும் அநாகரிகங்களும் ஆகும். இந்து ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போவதாக நீட்டி முழக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலும், ராமராஜ்ஜியத்தை உண்டாக்க எங்களுக்கு வாக்களி யுங்கள் என்று உத்தரப்பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலின்போது வாக்கு சேகரித்த நரேந்திர மோடியும் முதலில் பிருந்தாவனம் செல்லட் டும்; அந்த விதவைப் பெண்களின் மறுவாழ்வுக்கு வழிவகை செய்யட்டும்!

இந்து மதத்தில் பெண்கள் அதிலும் குறிப்பாக விதவைப் பெண்கள் இப்படித்தான் கேவலப்படுத்தப் படுவார்கள்; இந்த அவமதிப்பு சாஸ்திர ரீதியானது என்று ஒருக்கால் இந்த இந்துத்துவா கூட்டம் சொன்னாலும் சொல்லும், யார் கண்டது?

இந்த நேரத்தில் நாம் வைக்கும் வேண்டுகோள் -இந்துப் பெண்களே, உங்களின் உரிமையும், மரியாதை யும் காப்பாற்றப்பட வேண்டுமானால் முதலில் இந்த இந்து மதத்துக்கு முழுக்குப் போடுங்கள். இந்து மதத்தில் அவமானப்படுத்தப்படும் பெண்களை மீட்டெடுங்கள்!

Read more: http://viduthalai.in/page1/87987.html#ixzz3F2pQvktb

தமிழ் ஓவியா said...

பொன்மொழிகள்


தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன்

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்

மதம் எப்போதும் கலைகளுக்கும், ஆராய்ச்சிக்கும் அறிவியலுக்கும் எதிரியாக இருந்து வருகிறது. - இங்கர்சால்

பெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும் கவர்ச்சிகரமானது. சிறந்தது. - காண்டேகர்

ஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் நமக்கு ஏன் என்று இருந்து விட்டால், கெட்ட மனிதர்களின் அராஜகத் திற்கு அளவிருக்காது.
- ஸ்டேட்ஸ்மென்

தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்கு பதிலாக தலையால் நடப்பதற்கு இணை யாகும். - எமர்சன்

சோம்பேறித்தனம் என்பது மனித சமுதாயத்தின் கொடுமையான விரோதி. ஊக்கத்தை வளர்த்துக் கொள்வார்களானால் ஒருபோதும் தோல்வி என்பது இல்லை. - டென்னிசன்

நம்நாடு முன்னேற வேண்டுமானால், ஜாதகத் தையோ, ஜோதிடத்தையோ நம்பி பயன் இல்லை. உழைப்பு - உழைப்பு கடுமையான உழைப்புதான் தேவை.

Read more: http://viduthalai.in/page1/87993.html#ixzz3F2psDiNy

தமிழ் ஓவியா said...

கிறிஸ்து மதமும் பணச் செலவும்

அமெரிக்க சர்வ கலா சாலையொன்றில் பேராசிரியராக திகழும் இந்திய தோழர் டாக்டர் சுதந்திர போஸ் பிரபுத்த பாரத என்ற பத்திரிகையில், கீழ்நாட்டில் கிறிஸ்துவ பாதிரிகள் செய்யும் வேலையைப் பற்றி எழுதியுள்ள குறிப்பின் சாராம்சம் வருமாறு:-

அமெரிக்க யுனைடெட் ஸ்டேட்ஸ் பிராட் டஸ்டான்ட் சர்ச்சானது வெளிநாடுகளில் தன் மதத்தை பரப்புவதற்காக மதப் பாதிரிகளை அனுப்பி வைக்கின்ற செலவு 4 கோடி டாலர்கள் ஆகின்றது. அதாவது ரூ.12 கோடி ரூபாய்களாகும்.

ரிபப்ளிக் நாடான சைனாவில் புராடஸ்டான்ட் மதத்தைச் சார்ந்தவர்களில் 120 பிரிவுகளுக்கு மேல் இருக்கின்றார்கள். இதுவரையில் அந்த நாட்டில் மாத்திரம் அரை லட்சம் கோடி டாலர்கள் செலவு செய்திருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் சைனா நாட்டில் உள்ள 700 நகரங்களில் 8000 பிராட்டஸ் டான்ட் மிஷினரிகள் இருந்து வந்தார்கள். ஆனால் இன்றைய தினமோ 5000 மெஷினரிகள் தான் 400 நகரங்களில் மாத்திரம் வசித்து வருகிறார்கள். கத்தோலிக் கிறிஸ்துவ பாதிரி மிஷினிகளோ, சில ஆண்டுகளுக்கு முன்பு 4000 பேர்கள் இருந்தவர்கள், இன்றைய தினம் 200, 300 மிஷினரிகளுக்கும் குறை வாகவே இருந்து வருகிறார்கள்.

அய்க்கிய அமெரிக்க நாட்டின் லுதர்ன் சர்ச் பொருளாளரான டாக்டர் கிளாரன்ஸ் இ.மில்லர் சமீபத்தில் தெரிவிக்கிறதாவது:- ஒரு சைனாக்காரரை கிறிஸ்துவர் என்ற மதமாற்றத்திற்கு கொண்டு வருவதற்கு ரூ.1300 வீதம் செலவாகி வருகிறது. இந்த கணக்குப்படி இயேசுநாதரின் பெயரை சைனா நாட்டில் நிலை நிறுத்த வேண்டுமானால் 175 லட்சம் கோடி டாலர்கள் ரிசர்வ் ஆக்க வேண்டும்.

இதிலிருந்து கோடிக்கணக்கான டாலர்களை மதத்தின் பேரால் செலவு செய்யும் கிறிஸ்து மதமாகட்டும், அன்றி வேறு எந்த மதமாகட்டும் முன்னேறுவதற்கு வழியின்றி சிதைந்து வருவது ஏன் என்று மக்கள் ஆலோசித்து பார்ப்பார்களாக.

- 30.7.1933, குடிஅரசு

Read more: http://viduthalai.in/page1/87994.html#ixzz3F2qHsH4K

தமிழ் ஓவியா said...

வடமொழியில் சிபாரிசா?

தமிழ் தந்த சிவனார்க்கு
வடமொழியில் சிபாரிசா
சாற்றாய் என்று தமிழறி குன்றக் குடியார் ஒரு சொல்லால் ஒருசாட்டை
தருதல் கேட்டுச்
சிமிட்டாவை தூக்கியே
ஓடி வந்தார் பார்ப்பனர்கள்
சிரைப்பதற்கே
அமை வாகச் சங்கரரும்
தூக்கி வந்தார் அடைப்பத்தை
அடங்கார் யாரோ?

- புரட்சிக் கவிஞர், குயில், புதுச்சேரி, 12.8.1958

Read more: http://viduthalai.in/page1/87995.html#ixzz3F2qRjsGr

தமிழ் ஓவியா said...

மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்...

பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞான முடைய எவனும் கூற முன் வரமாட்டான். சமூக வாழ் வில் ஒருவன் பெற்றி

ருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படு கிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான் றாகும். இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரி களுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன?

ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயி ருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்தி ரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடையவனாயிருக்கிறான்.

- டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page1/87995.html#ixzz3F2qZHm6Q

தமிழ் ஓவியா said...

இந்தி திணிப்பு வேண்டாமே!

பிற இதழிலிருந்து

இந்தி திணிப்பு வேண்டாமே!


இந்தி திணிப்பு என்பதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இந்த மண்ணில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது இன்று, நேற்றல்ல, 1937ம் ஆண்டே தந்தை பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்துகொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் இந்தியை கட் டாயமாக கற்றுக்கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, பெரியார் பொங்கி எழுந்தார். மூன்று ஆண்டுகள் நடந்த இந்த போராட்டத் தில் தாளமுத்து, நடராஜன் ஆகியோர் சிறையில் உயிரிழந்தனர். 1,198 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட் டத்தின் விளைவாக காங்கிரஸ் அர சாங்கம் ராஜினாமா செய்தது. அப்போது கவர்னராக இருந்த எர்ஸ்கின் பிரபு இந்த உத்தரவை திரும்பப்பெற்றார். அன்று பெரியார் ஏற்றிவைத்த இந்தி எதிர்ப்பு உணர்வு, இன்றும் தமிழர்கள் நெஞ்சங்களில் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

இந்தி திணிப்பில் பலமுறை முயன்று தோல்வி அடைந்த மத்திய அரசாங்கம், மீண்டும் 1965ம் ஆண்டில் ஜனவரி 26ந் தேதி குடியரசு தினம் முதல் இந்தி ஆட்சி மொழியாகும் என அறிவித்தது. அவ்வளவுதான் ஒட்டு மொத்த தமிழ்நாடே போர்க்களம் ஆகியது. அண்ணா தலைமையில் தி.மு.க.வின் மாபெரும் போராட்டமாக தொடங்கி அவரும், மற்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். கருணாநிதி பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப் பட்டார். இந்தி எதிர்ப்பு போராட்டம் எதிரொலியாக சி.பா.ஆதித்தனார் பாது காப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு கோவையில் தனிமை சிறையில் அடைக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டமாக பற்றி எரிந்தது. 18 நாட்கள் நடந்த போராட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 63 பேர் பலியானார்கள். அதைத் தொடர்ந்து 1967ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கும், அன்று முதல் தி.மு.க., அ.தி.மு.க. என்று மாறி, மாறி ஆட்சிக்கு வருவதற்கும் வித்திட்டது, இந்த இந்தி திணிப்பு முயற்சிதான். அதன்பிறகும் தொடர்ந்து இந்த முயற்சி கள் தலையெடுத்த நேரத்தில் எல்லாம் கிள்ளி எறியப்பட்டன.

இந்த நிலையில், பா.ஜ.க. ஆட்சி அமைத்தவுடன், பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தி மொழிபேசும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் ஆட்சியில் இந்தி திணிப்பு இருக்காது என்றே அனைவரும் எண்ணினர். ஆனால், இந்தி அவரையும் கையில் எடுத்துக்கொண்டது. சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசாங்க அதிகாரிகள் டுவிட்டர், பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அலுவல் ரீதியான உத் தரவுகளை தெரிவிக்கும்போது ஆங்கிலத் தோடு, இந்தியையும் பயன்படுத்த வேண் டும் என உத்தரவிடப்பட்டது. தமிழ் நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியவுடன், இல்லை, இல்லை இது இந்தி பேசும் மாநிலங்களுக்குத்தான் என்று சால்ஜாப்பு சொல்லப்பட்டது. சமூக வலைத்தளங்கள் இந்தி பேசும் மாநிலங்களுக்கு என தனியாக இல்லையே, இது எப்படி சரியாக இருக்கும் என்பது இன்றுவரை புரியாத புதிராக இருக்கிறது.

இப்போது திடீரென பட்டப்படிப்பு களில் இந்தியும், ஆங்கிலமும் முக்கிய பாடமாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என அனைத்து பல்கலைக்கழகங்களுக் கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள் ளது. இது மட்டுமல்லாமல், ரெயில்வே துறை, பொது காப்பீட்டுத்துறை போன்ற வற்றின் மத்திய அரசாங்க ஊழியர்கள் கண்டிப்பாக இந்தி கற்கவேண்டும், சுற்றறிக்கைகள், அறிவிப்புகள் இந்தி யில் வெளியிடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திடீரென நாட்டில் 55 சதவீத மக்கள் இந்தி பேசுகிறார்கள், 85 முதல் 90 சதவீதம் வரை மக்கள் இந்தி தங்கள் தாய்மொழி இல்லையென்றா லும், அந்த மொழியை புரிந்து கொள் வார்கள் என கூறி, ஏதோ ஒரு முயற் சிக்கு அச்சாரமிட்டு இருக்கிறார். இதுமட்டுமல்லாமல், சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய், இந்தி உள்பட அனைத்து மொழிகளும் அந்த தாய்க்கு பிறந்த சகோதரிகள் என கூறியிருக்கிறார். ஒரு வாதத்துக்காக அவர் சொல்வதை ஏற்றுக் கொண் டாலும், எல்லா மொழிகளும் சகோ தரிகள் என்ற நிலையில், ஒரு சகோதரி யான இந்திக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது சரியா?, நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொள்ளவேண்டிய நேரத்தில், இந்தி திணிப்பு வேண்டாமே!

நன்றி: தினத்தந்தி தலையங்கம் 17.9.2014

Read more: http://viduthalai.in/page1/87937.html#ixzz3F2rFE19Q