Search This Blog

24.10.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 38

இதுதான் வால்மீகி இராமாயணம்

அயோத்தியா காண்டம்

ஒன்பதாம் அத்தியாயம் தொடர்ச்சி

தசரதனுக்குக் கோசலை முதலிய மூவரும் நீங்கலாக முன்னூற்றைம்பது (350) மனைவியரே இருந்தனரென வால்மீகி (அயோத்தியா காண்டம் சருக்கங்கள் 34, 39) கூறுகின்றனர். கம்பரோ அவனுக்கு அறுபதினாயிரம் (60,000) மனைவியரிருந்தன ரென் கின்றனர். அயோத்தியா காண்டம் தைலமாட்டுப்படலம் எழுபத்தேழாவது செய்யுளில், மாதரார்கள் அறுபதினா யிரருமுள்ளம் வலித்திருப்ப என்று கம்பர் கூறுகிறார். முந்நூற்றைம்பதுக்கும் அறுபதினாயிரத்துக்கும் எவ் வளவு தூரம்? கம்பர் கதை கட்டும் திறம் வியக்கத்தக்கதே! என்னே இவர்தம் பொய்மை? இவ்வெண்ணிக்கை இவர் யாண்டுக் கண்டனரோ?


திருவாளர் சந்திரசேகரப் பாவலரவர்களை வினவும் வினாத்தொடர்
பாவலர் அவர்களே! தாம் குடி அரசு இதழில் இதிகாசங்கள் என்ற தலைப்பின் கீழ் எழுதிவரும் இராமாயணத்தைப் பற்றிய கட்டுரைகள் வான்மீகத்தைப் பின்பற்றியே வெளியிட்டு வருவதாகப் பன்முறையும் தெரிவித்திருக்கின்றீர்களாதலின், ஈண்டுச் சில அய்ய வினாக்களுக்கு விடையளிக்குமாறு விரும்புகின்றேன்.


1) 25.11.28-இல் வெளிப்போந்த குடி அரசு இதழில் அயோத்தியா காண்டம் கட்டுரை 6-இல் கைகேயியை மணஞ்செய்யும்போது அவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே அரசைத் தருவதாக வாக்குறுதி செய்தான பின் அதற்கு மாறாக இராமனுக்குப் பட்டங்கட்ட முயலு கின்றான் தசரதன் என்று வெளியிட்டிருக்கின்றீர்கள். இவ்விவரம் அயோத்தியா காண்டத்தில் எந்த அத்தி யாயத்தில் எவ்வெண்ணோடொத்த சுலோகத்தில் கூறியிருக்கின்றது.


2) அவ்வாறாயின், பட்டம் பரதனதேயாக வேண்டுமென வாதிடுவதை விட்டு, என்றோ, சம்பரன் போரிற்கிடைத்த இரு வரங்களை யாசித்து ஈரேழாண்டு பரதன் நாடாளவும், இராமன் அதுகாலம் வரை காடேகவும், அதனால் சொற்பகாலம் வரை அற்ப சுகமடைந்து அதற்காக தீராக்கோபம் போராய் விளைவித்துக் கொள்வானேன்? இது உள்ளங்கைத் தேனை ஒழுகவிட்டு முழங்கையை நக்கும் முட்டாள் தனமாகத் தோன்ற வில்லையா?


3) ஒரு பெண்ணாகிய கைகேயியைக் காட்டிலும் ஓர் ஆணாகிய இராமனிடத்தில் அளவற்ற ஆசை கொண்டு பிரியமாட்டாமல் தவிப்பதற்கு ஏதாவது தகுந்த காரணங்களிருக்க வேண்டும். இராமனைத் தசரதன் மிகுந்த அழகுள்ளவனாகப் புகழ்வதனால் உலகத்தில் சிலரைப் போல ஆண் பித்துக்கொண்டவன் போலும், தன் ஆசைக்கு இருப்பிடமான இராமன் அருகில் இல்லாததால், கோசலை மேல் சாய்கின்றான் என்கிற ஆண் பித்து கொள் ளுதல் என்றதன் கருத்தென்ன?


4) ஆரியர் வணங்கும் திருமால் வேறு, நம் தமிழ் மக்கள் வணங்கும் திருமால் வேறு என்று கூறி, இதைப் பின்பு கூறுவதாயுரைத்து நீண்ட காலமாகியும் இதுவரை அது வெளியிடப்படவில்லை. அத்திருமாலைப்பற்றி எந்த நூலின் வாயிலாயுணரத் தகும்?


5) இராவணனுக்கு முக்கோடி வயதெனக் கூறியிருப்பதாக எடுத்தாண்டிருக்கின்றீர்கள். அவ்வாறு வான்மீகத்தில் யாண்டுளது?
இவ்வினாக்களுக்குத் தயவு செய்து தக்க நூல்களின் ஆதரவுடன் பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

                -------------சுயமரியாதை அன்பன் கே.கூத்தப்பன், மேலூர்


கே.கூத்தப்பன் அவர்களின் வினாத் தொடருக்கு விடை நண்பர் கே.கூத்தப்பன் விடுத்த வினாத் தொடரைக் கண்ணுற்றோம். வினாக்களில் ஒன்று இரண்டு மூன்றுக்கு விடை அயோத்தியா காண்டம் ஒன்பதாவது கட்டுரையிற் பாக்களாக வினாக்கள் நான்கும் அய்ந்தும் இராவணனைப் பற்றி ஆராயுமிடத்து விளக்கப்படும். அதுவரை நண்பரை அன்பு கூர்ந்து பொறுத்திருக்க வேண்டுகிறோம்.


குறிப்புகள்

இக்கட்டுரையில் நாம் நம் சொந்த மொழியாக ஒன்றும் கூறோம். கதைத் தொடர்ச்சியிலும் செல்லோம். ஆயின் மொழி பெயர்ப்பாளராகிய சென்னை சமஸ்கிருத காலேஜ் உபாத்தியாயர் சி.ஆர்.சீனிவாச அய்யங்கார் தமது வால்மீகி இராமாயண வசம் - அயோத்தியா காண்டக் குறிப்புகள் என்ற தலைப்பிட்டு எழுதும் பாகத்திலுள்ள கீழே கண்ட குறிப்பு களை மட்டும் அவர் எழுதியுள்ளபடியே கீழே குறிக்கின்றோம். அவற்றை நண்பர்கள் கவனித்துப் படித்து உண்மையுணர்வார்களாக! கதைத் தொடர்ச்சியும் ஆராய்ச்சியும் அடுத்த கட்டுரையில் எழுதுவோம்.


1) தசரதர் முன்பு தான் கைகேயிக்கு இரண்டு வரங் களைக் கொடுத்து, எதை வேண்டுமானாலும் கேட்கலா மென்று அஜாக்கிரதையாக வாக்களித்ததை மறந்ததும்


2) அவளை விவாகம் செய்தபொழுது அவளுக்குப் பிறக்கும் புத்திரனுக்கே இராஜ்யத்தைக் கொடுப்பேனென்று செய்த ஒப்பந்தத்தை மறந்ததும்,
3) அறுபதினாயிரம் வருஷங்களான பிறகும் காம சுகத்திற்கு அடிமைப்பட்டு தன் மூத்த பார்யைகளான கோசலை, சுமித்திரைகளைத் தகுந்தபடி நடத்தாமல் அலட்சியஞ் செய்ததும்,


4) கைகேயியின் கோபத்தைத் தணிப்பதற்காக எதைக் கேட்டாலும் கொடுக்கிறேனென்று அஜாக்கிரதையாக வாக்களித்ததும்,


5) முன் கைகேயிக்கும் அவளுடைய பிதாவுக்கும் செய்த பிரதிக்ஞைக்கு விரோதமாக இராமனுக்கு அதே இராஜ்யத்தைக் கொடுப்பேனென்று ஜனங்களுக்கு முன்பாகப்
பிரதிக்ஞை செய்ததும்,


6) பிறகு கைகேயி கேட்ட வரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டியதால் இராமனைக் காட்டிற்கனுப்பி, அந்தப் பிரதிக்ஞை வீணானதும்,


7) இப்படியெல்லாம் நியாய விரோதமாக நடந்ததால் அவருடைய பூர்வ பிரதிக்ஞையின்படி பரதனுக்குக் கிடைக்க வேண்டிய இராஜ்யத்தை அவன் அடையாமற் போனதும்,


8) வசிட்டருடைய சொற்படி இக்ஷ்வாகு வமிசத்தில் பல தலைமுறைகளாய் மூத்த புத்திரனுக்கே இராஜ்யம் கிடைக்க வேண்டுமென்ற குல தர்மத்தைக் கேவலம் காமத்தால் தூண்டப்பட்டு ஒரு பெண்ணை விவாகஞ் செய்வதற்காகத் தசரதர் மாற்றியதும்,


9) நான் அஜாக்கிரதையால் செய்த பிரதிக்ஞையின் பயனை வருந்தாமல் அனுபவிக்க வேண்டியிருக்க அவர் கைகேயியைக் குற்றஞ்சாட்டி நிந்தித்துச் சபித்து அந்த வரங்களை விட்டுக் கொடுக்கும்படி பிரார்த்தித்ததும்,


10) தன்னையும் தன் தன்மையையும் மறந்து அவளுடைய கால்களைப் பிடித்துக் கொள்ள முயன்றதும்,


11) முன்பு நடந்த விஷயங்களை நன்றாக அறிந்த சுமந்திரரும் வசிட்டரும் தசரதரை எச்சரித்து ஞாபகப்படுத்தி இராமனுக்கு அபிஷேகம் செய்ய நிச்சயிப்பது பூர்வ பிரதிக்ஞைக்கு விரோதமென்று தடுக்காமலிருந்ததும்,


12) மூன்று காலங்களையும் அறிந்த வசிட்டர் மேற்சொன்னதை மறந்து இராமனுக்கு யுவராஜ்யாபிஷேகம் நடக்காதென்று தெரிந்தும் அதற்கு முகூர்த்தம் வைத்துச் சகல ஏற்பாடுகளையும் செய்ததும்,


13) தனக்கு நியாயமாகக் கிடைத்த வரங்களைப் பூர்த்தி செய்யும்படி கேட்ட கைகேயியை வசிட்டரும் சித்தார்த் தரும் சுமந்திரரும் தடுக்கப் பார்த்ததும் - கண்டித்ததும்,


14) இராமனுடைய அபிஷேகத்திற்குப் பிரஜைகளின் சம்மதியை அபேக்ஷித்த தசரதர் பிறகு கைகேயிக்கு வரங்களைக் கொடுத்து அதன்படி இராமனைக் காட்டிற் கனுப்பிய பொழுது மந்திரிகளையும் மஹரிஷிகளையும் பிரஜைகளையும் கொஞ்சங்கூடக் கலந்து கொள்ளாமல் யதேச்சதிகாரமாக நடந்ததும்,


15) அதே ஜனங்களும் மந்திரிகளும் அவருடைய நடத்தையைக் கண்டித்து அப்படிச் செய்யக்கூடாதென்று தடுக்காமலிருந்ததும்,


16) தன் வமிச சரித்திரத்தையும் இராஜ்ய இரகசியங் களையும் நன்றாயறிந்திருக்க வேண்டிய இராமனும் பரதனும் முன்பு தசரதர் கைகேயியை விவாகஞ் செய்த பொழுது அவருடைய புத்திரனுக்கே ராஜ்யத்தைக் கொடுப்பதென்று செய்த ஏற்பாட்டை அறியாமலிருக்க முடியாதென்பது (அயோத்தியா காண்டம் சரு 107) அப்படி இருந்தும் தசரதர் தன்கு அபிஷேகம் செய்விப்பதாய்ச் சொன்னபொழுது அவருக்குப் பூர்வ விருத்தாந்தத்தை ஞாபகப்படுத்தாமல் அபிஷேகஞ் செய்து கொள்ள இராமன் சம்மதித்ததும்,


17) இம்மாதிரி காரியங்களுக்குப் பலவகை இடையூறுகள் நேரும், உன் தம்பி பரதன் மிகவும் நல்ல எண்ண முடையவனே, இந்திரியங்களை ஜயித்தவனே, தயை யுள்ளவனே, ஆனாலும் அவன் இங்கிருந்து அம்மான் வீட்டுக்குப் போய் நாளாயிற்று, தர்ம சிந்தனை யுள்ளவர்களாயும், சாதுக்களாயும், பிறரால் கலைக்க முடியாத மனமுள்ளவர்களாயுமிருக்கும் மனிதர்களுடைய மனமும் மாறிவிடும். ஆகையால் பரதன் ஊருக்கு வருவதற்கு முந்தியே இந்தக் காரியத்தை முடிப்பது நல்லது என்று (அயோ) தசரதர் சொன்னதால், பரதனை வஞ்சித்து அவனுக்குக் கிடைக்க வேண்டிய இராஜ்யத்தை நயமாக இராமனுக்குக் கொடுக்க நிச்சயித்ததும், இராமன் அதற்கு ஆட்சேபிக்காமல் அதை ஒப்புக் கொண்டதும்,


18) இராமனுக்குக் கிடைக்கவேண்டிய இராஜ்யத்தைத் தான் பரதனுக்குக் கொடுக்கும்படி முடிவில் ஒரு வேளை நேரிட்டால் அந்த அக்கிரமத்தை ஜனகர் ஒப்புக் கொள்ளாமல் கண்டிப்பாரென்று அவருக்குச் சமாச்சாரம் அனுப்பாததும்,

                                           ------------------------------"விடுதலை” 24-10-2014

39 comments:

தமிழ் ஓவியா said...

மூடத்தீபாவளியால் ஏற்பட்ட விபரீதங்கள்!


காற்று, ஒலி மாசு அதிகரிப்பு!
ஏராளமான இடங்களில் தீ விபத்து!
43 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள்!
30 பேர்களின் கண்கள் பாதிப்பு!

மூடத்தீபாவளியால் ஏற்பட்ட விபரீதங்கள்!

சென்னை, அக்.24-_ திராவிடர்களை இழிவு படுத்தும், மூடநம்பிக்கைப் பண்டிகையாம் தீபாவளி யால் ஏற்பட்ட விபரீதங் கள் ஒன்றா, இரண்டா? சுற்றுச்சூழல் மாசு, தீ விபத்துகள் உடல் பாதிப்பு, - சாலை விபத்துகள் உள் ளிட்ட ஏராளமான கேடு கள் நாட்டில் ஏற்பட தீபாவளியே காரண மாகும்.

காற்று, ஒலி மாசு அதிகரிப்பு! மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

தமிழகத்தில் தீபா வளித் தினத்தன்று காற்று மாசு, ஒலி மாசு அதிகரித் ததாக மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் கூறி யுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் வெளி யிட்டுள்ள ஆய்வறிக்கை யில் கூறப்பட்டு இருப்ப தாவது:-

தீபாவளிப் பண்டிகை யையொட்டி சென்னை திருவல்லிக்கேணி, பெசண்ட் நகர், நுங்கம்பாக்கம், சவு கார்பேட்டை, தியாக ராயநகர் ஆகிய 5 இடங்களில் ஏற்படும் காற்று மாசு மற்றும் ஒலி மாசு அளவுகளை அறியும் ஆய்வை கடந்த ஆண் டைப் போலவே, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டு தலின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது.

மதுரை, சேலம், கோவை, திருச்சி, கடலூர், நெல்லை, ஓசூர், திருப்பூர், வேலூர், திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் இந்த ஆய்வு நடத்தப் பட்டது. தீபாவளிக்கு முந்தைய ஆய்வாக, காற் றுத் தரத்தின் ஆய்வு 15.10.14 அன்று காலை 6 மணியில் இருந்து மறு நாள் காலை 6 மணிவரை நடத்தப்பட்டது.

தீபாவளி அன்று நடத்தப்பட்ட ஆய்வு, 22-ஆம் தேதி காலையில் இருந்து மறுநாள் காலை 6 மணிவரை நடத்தப் பட்டது. அதுபோல் இரண்டு ஒலி மாசு ஆய்வுகளும் நடத்தப் பட்டன.

சென்னை திருவல்லிக் கேணியில் நடத்தப்பட்ட ஆய்வில், தீபாவளிக்கு முந்தைய காற்று மாசு பற் றிய கணக்கெடுப்பின்படி, சுவாசிக்கும்போது உட லுக்குள் செல்லும் மிதக் கும் நுண்துகள்களின் அளவு, கந்தக டை ஆக் சைடின் அளவு, நைட் ரஜன் டை ஆக்சைடு அளவு ஆகியவை முறையே 37, 12, 13 என்றிருந்தன. தீபாவளியன்றைய கணக்கெடுப்பின்படி திருவல்லிக்கேணியில் அவை முறையே 297, 32, 20 என்ற அளவில் இருந் தன.

அதுபோல் பெசண்ட் நகரில் 49, 8, 10 என்று தீபாவளிக்கு முன்னிருந்த அளவுகள், தீபாவளியன்று 110, 14, 17 என்றும் நுங்கம் பாக்கத்தில் 34, 9,11 என்று காணப்பட்ட அளவுகள் தீபாவளியன்று 180, 14, 17 என்றும், சவுகார்பேட்டை யில் 43, 13, 13 என்று காணப்பட்ட அளவுகள், தீபாவளியன்று 196, 22, 20 என்றும், தியாகராயநகரில் 145, 11, 15 என்று தீபா வளிக்கு முன்பிருந்த அளவுகள், 180, 16, 19 என்றும் உயர்ந்தன.

இதுபோன்ற நிலை மதுரை, கோவை, கடலூர், நெல்லை, ஓசூர், திருப்பூர், வேலூர், திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் பெரும்பாலும் அதிகரித் திருந்தன. நெல்லை நகரம், சமாதானபுரம், பேட்டை யில் குறைவான காற்று மாசு அளவிடப்பட்டது.

ஒலிஅளவும் மேற் கூறப்பட்ட இடங்களில் உயர்ந்திருந்தன. திரு வல்லிக்கேணியில் தீபா வளிக்கு முன்பு 70 என்றிருந்த ஒலி அளவு, தீபாவளியன்று 82 ஆக உயர்ந்தது. பெசண்ட் நகரில் 59-ல் இருந்து 73-ஆகவும், நுங்கம்பாக்கத் தில் 62-ல் இருந்து 82-ஆக வும், சவுகார்பேட்டையில் 76-ல் இருந்து 83-ஆகவும், தியாகராயநகரில் 75-ல் இருந்து 80 ஆகவும் ஒலி அளவு உயர்ந்திருந்தது.

கடலூர் சேகர்நகரில் 74-ல் இருந்து 72 ஆகவும், நெல்லை நகரத்தில் 79-ல் இருந்து 72 ஆகவும் ஒலி யளவு குறைந்திருந்தது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. சென்னையில் 43 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் தீபாவளி பண்டி கையையொட்டி, சென் னையில் 43 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் தரம் பிரித்து எடுக்கப்பட்டன.

தமிழ் ஓவியா said...

15 மண்டலங்களை உள்ளடக்கிய சென்னை மாநகராட்சியில் நாள் தோறும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் டன் குப் பைகள் அகற்றம் செய்யப் பட்டு வருகின்றன. தீபா வளி உள்பட பண்டிகை காலங்களில் கூடுதலாக குப்பைகள் அகற்றம் செய்யப்படும். அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசுகள் வெடித்ததன் மூலமாக கடந்த 21 மற்றும் 22-ஆம் தேதி மட்டும் 43 மெட்ரிக் டன் பட்டாசு குப்பை கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் எங்கும் குப்பைகளையும் தேங்க விடாமல் போர்க்கால நடவடிக்கையில் அதிரடி யாக அகற்றம் செய்தனர்.

இதுதொடர்பாக அந்த அதிகாரி கூறும்போது, பட்டாசுகள் வெடிப்பதன் மூலம் ஏற்படும் குப்பை கழிவுகளை தரம் பிரித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று முதன்முறையாக தமிழ்நாடு மாசுக்கட் டுப்பாட்டு வாரியம் அனைத்து மாநகராட்சி களையும் அறிவுறுத்தியது.

அதன்படி, தீபாவளி பண்டிகைக்கு முந்தைய தினம், தீபாவளி பண்டி கையன்று அகற்றம் செய் யப்பட்ட குப்பைகள் சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் உள்ள ராசாயன தொழிற் சாலைகளுக்கு அனுப்ப பட்டு தரம் பிரிக்கப் பட்டன. இதில் 43 மெட் ரிக் டன் பட்டாசு கழிவு கள் கிடைத்தன. என்றார்.

நாடெங்கும் தீ விபத்துகள்

கடலூர் மாவட்டத் தில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததில் 9 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டது.

தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பதால் தீ விபத்துகள் அதிகளவு ஏற்படுவது வழக்கம். இந் தாண்டு வங்கக் கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 14ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இந் நிலையில் வடகிழக்குப் பருவமழை துவங்கியதால் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

தீபாவளி அன்று மட்டும் பல இடங்களில் மழை இல்லாமலும், சில இடங்களில் குறைவாகவும் மழை பெய்தது. இதனால் கடந்த 3 நாட்களாக பட்டாசு வெடித்ததால் தீ விபத்துகள் கணிசமாக குறைந்துள்ளது.இந்தாண்டு தீபாவளி தினத்தில் மாவட்டத்தில் 9 இடங் களில் தீ விபத்து ஏற்பட் டுள்ளது. இதில் கடலூர், தேவனாம்பட்டினம், கடலூர் முதுநகர் பகுதி யில் 2 இடங்களிலும், குறிஞ்சிப்பாடியில் ஒன்றும், நெல்லிக்குப்பம், பண்ருட்டி தலா 2 இடங் களிலும் விருத்தாசலத்தில் ஓரு இடத்திலும் தீ விபத்து ஏற்பட்டு சேத மடைந்தன. இதில் விருத் தாசலத்தில் ஜவுளி கடை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. அம்மன் கோயில் பஸ்பம்! தீபாவளிக்கு வெடித்த பட்டாசு விழுந்து அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற் பட்டது. வேளச்சேரியில் உள்ள திரவுபதி அம்மன்


கோயிலில் வரும் ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக, தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது.


தமிழ் ஓவியா said...

கோபுரம் கட்டும் பணிக்காக, தென்னங்கீற்றில் தடுப்பு அமைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தீபாவளியை முன்னிட்டு அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது ராக்கெட் வெடி, தென்னங்கீற்றில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வேளச்சேரி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள், தீயை அணைத்தனர்.

உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அண்ணாநகர்: அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையை சேர்ந் தவர் மகேஷ்கண்ணா (30). செனாய் நகர் அய்யாவு தெருவை சேர்ந்தவர் வேலு. இவர்கள் இருவரும் சொந்தமாக கார் வைத்துள்ளனர். அவற்றை, கடந்த 21ம் தேதி இரவு அமைந்தகரை வெள்ளாளர் தெருவில் வழக்கம் போல் நிறுத்தினர்.

நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையையொட்டி அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது, பட்டாசு தீப்பொறி கார் மீது போடப்பட்டு இருந்த தார்பாய் மீது விழுந்து தீப்பிடித்தது. இதில், மகேஷ்கண்ணாவின் கார் முழுவதும் எரிந்து நாசமானது. வேலுவின் காரின் ஒரு பகுதி எரிந்தது. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் ஓடிவந்து உடனடியாக தீயை அணைத்தனர். புகாரின்பேரில் அமைந்தகரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பட்டாசு வெடிப்பதில் மோதல்: 3 பேருக்கு அரிவாள் வெட்டு மேலப்பாளையம் அருகே உள்ள மேல கருங்குளம் பகுதியில் ஒரு பிரிவினர் நேற்று இரவு தீபாவளி வெடி களை வெடித்து கொண்டு இருந்தனர். அந்த தெரு வழியாக மற்றொரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் நடந்து சென்றனர். அப்போது தங்களுக்கு பின்னே வேண்டும் என்றே பயம் காட்ட வெடி போடுதாக கூறி 2 தரப்பு இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஒரு பிரிவினர் வெடி போட்டு கொண்டு இருந்த இளைஞர்களை திடீர் என்று அரி வாளால் சரமாரி வெட்டினார்கள். இதனால் அங்கு கூடி நின்ற ஆண்களும், பெண்களும் சிதறி ஓடினார்கள்.

அரிவாள் வெட்டில் வள்ளிநாயகம் (வயது18), பேச்சிமுத்து (22), கணேசன் (25) ஆகிய 3 வாலிபர்கள் உயிருக்கு போராடினார்கள். அவர்களை உடனடியாக பாளை அய்கிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

படுகாயம் அடைந்த 3 பேரின் உறவினர்கள் எதிர்தரப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சாலை மறியல் செய்ய திரண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரண் உத்தரவின் பேரில் துணை ஆணையர் சுரேஷ்குமார், மேலப்பாளையம் ஆய்வாளர் ராஜ் மற்றும் ஏராளமான காவல்துறையினர் விரைந்து சென்று மறியலுக்கு வந்தவர்களை சமரசப்படுத்தினர்.

இது தொடர்பாக மேலப்பாளையம் காவல்துறை யினர் விசாரணை நடத்தி சக்தி கண்ணன், பேராச்சி, செல்வம், செல்லப்பா, பாலமுருகன் ஆகிய 5 பேர் களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று பாலமுருகன் (25) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

இந்த சம்பவம் தொடர்பாக மேலப்பாளையம், கருங்குளம் பகுதியில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 பிரிவினர் வசிக்கும் பகுதியிலும் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

பட்டாசு வெடித்ததில் தகராறு இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: 5 பேருக்கு வலை பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தகராறில் இளைஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய 5 பேரை காவலர்கள் தேடி வருகின்றனர். கொருக்குப்பேட்டை, கருமாரி அம்மன் நகரை சேர்ந்தவர் சூர்யா (22), கூலி தொழிலாளி. இவர், தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே பட்டாசு வெடித்து கொண்டி ருந்தார். அப்போது, அவ்வழியாக நடந்த சென்ற குமார் (25) என்பவர் மீது பட்டாசு விழுந்தது. இதை குமார் கண்டித்ததால், இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து குமாரை சரமாரி யாக தாக்கினர். இதையடுத்து அங்கிருந்து சென்ற குமார், தனது நண்பர்களான வினோத் (21), கண்ணன் (26), ராஜேஷ் (25), லோகேஷ் (22) ஆகியோரை அழைத்து வந்து, சூர்யா மற்றும் அவரது நண்பர் மகேஷை சரமாரியாக தாக்கினார். பின்னர், சூர்யாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பியது. இதில் சூர்யா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக் கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆர்.கே நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய குமார் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

தக்கலை அருகே பட்டாசு வெடித்ததில் குழு மோதல்: ஒருவர் கைது! தக்கலை அருகே தென்கரை தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுபிள்ளை, (வயது 51). இவரது மனைவி சண்முக கனி, மகன் ரெஜிஸ்.

நேற்று தீபாவளியை யொட்டி தங்கள் வீட்டு முன்பு இவர்கள் பட்டாசு வெடித்து கொண்டிருந் தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜமணி அந்த வழியாக நடந்து சென்றார். அவர் மீது பட்டாசு தீப்பொறி விழுந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அவர், பொன்னு பிள்ளையிடம் இதுபற்றி தட்டிக் கேட்டார். இது கோஷ்டி மோதலாக மாறியது. ராஜமணியின் மகன்கள் ராஜேஷ், நிஷாந்த், உறவினர் மகாமணி ஆகியோர் ராஜமணிக்கு ஆதரவாக தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த கோஷ்டி மோதலில் பொன்னுபிள்ளை, சண்முக கனி, ரெஜிஸ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றிய புகாரின் பேரில் தக்கலை காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜ மார்த்தாண்டன் வழக்குப் பதிவு செய்து ராஜமணியை கைது செய்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பட்டாசு வெடித்து சிறுவன் காயம் திண்டுக்கல் குளத்து?ரில் பட்டாசு வெடித்து சிறுவனின் முகம் முழுவதும் காயம் ஏற்பட்டது. திண்டுக்கல் குளத்தூரை சேர்ந்த ராஜ்குமார் மகன் சிறீதர் (7). பட்டாசு வெடித்த போது தீ பரவி முகத்தில் காயம் ஏற்பட்டது. சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறான்.

திண்டுக்கல் மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரபாகரன் கூறுகையில், சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர் அருகில் இருக்க வேண்டும். வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். மத்தாப்புகளில் நீளமான குச்சிகளை பயன் படுத்த வேண்டும். பட்டாசு அருகில் குழந்தைகளை செல்ல விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், என்றார்.

இளைஞரின் விரல்கள் துண்டாயின

சேலம் மாவட்டத்தில் பட்டாசு வெடிக்கும் போது சிலருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதற்காக அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

சேலம் அருகே உள்ள நிலவாரப்பட்டி அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் மோகன்(வயது 20). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டு முன்பு பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பட்டாசு வெடித்து சிதறியதில் மோகனின் இடது கையின் 2 விரல்கள் துண்டாயின.

வலியால் அலறி துடித்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருதுவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மகன் அர்ஜூனன் (13). பட்டாசு வெடிக்கும் போது இவர் மீது தீக்காயம் பட்டது.

இதற்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். இதேபோல், சேலம் செவ்வாய் பேட்டை பகுதியை சேர்ந்த சாந்தமூர்த்தி என்பவரும் பட்டாசு வெடிக்கும் போது கையில் தீக்காயம் ஏற்பட் டது. இதற்காக அவர் மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். தீபாவளி பண்டிகையன்று மட்டும் சேலம் அரசு மருத்துவமனையில் 5 பேர் பட்டாசு வெடித்து காயத்திற்காக சிகிச்சை பெற்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/89855.html#ixzz3H3sfH1ci

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நீராடினால்...

மயிலாடுதுறையில் அய்ப்பசி மாதத்தில் 30 நாட்களில் காவிரி தீர்த் தத்தில் துலாக் கட்டத்தில் நீராடுவார்கள் பாவங் களும், நோய்களும் பறந் தோடி விடும். கங்கையும், யமுனையும் கூட தங் களின் பாவங்களைப் போக்கிக் கொள்ள துலாக் கட்டத்துக்கு வந்து காவிரி யில் மூழ்கி எழுவார்கள். முடவன் ஒருவன் 30 நாள் முடிந்து மறுநாள் வந்தா னாம். மூழ்குவதற்கு தாமதமாக வந்த தனக்குக் கெதி மோட்சம் வேண்டி இறைவனிடம் மன்றாடி னானாம். இறைவன் முட வன் முன்தோன்றி கார்த் திகை முதல் நாளில் நீராடு உனக்கு அருள் செய் வோம் என்றானாம். அதன்படி முடவன் நீராட முடம் நீங்கியதாம். அது முதல் இந்நாளுக்கு முட முழுக்கு என்று பெயராம்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் முடவர்கள் நீராடிக் கொண்டுதானே இருக்கிறார்கள். எந்த முடவனுக்கு முடம் நீங்கியது?

ஆன்மிகம் என்றாலே அண்டப் புளுகு ஆகா யப் புளுகுதானா!

Read more: http://viduthalai.in/e-paper/89865.html#ixzz3H3t2ZXwK

தமிழ் ஓவியா said...

இலங்கையில் பார்ப்பன அர்ச்சகர் கைது!

கொழும்பு, அக்.24- இலங்கையில் உள்ள சிலாபம், முன்னேஸ்வரம் கோவிலின் உதவி குருக் களாக உள்ள பார்ப்பனர் இலங்கைக் காவல்துறை யினரால் கைது செய்யப் பட்டார். முன்னேஸ்வரம் கோவிலின் உட்பிரகாரத் தில் அமைந்திருந்த பூஜை மண்டபத்தை இடித்துக் கட்டியதால் கைது செய் யப்பட்டுள்ளார். முதன் மையான அர்ச்சகராக உள்ள பார்ப்பனர் தலை மறைவாகிவிட்டார்.

முன்னேஸ்வரம் கோவில் சுமார் 2300 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். தற் போதுள்ள கட்டடம் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் பராக்கிரமபாகு என் கிற மன்னன் கட்டியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இந்தக் கட் டடத்தின் பழமைகருதி 2009ஆம் ஆண்டு முதல் இக்கோவிலை தொல் பொருள் துறையின் தன் னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. எனவே, அங்கு எவ்வித மான மாற்றம் செய்வதாக இருந்தாலும், தொல் பொருள் துறை அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில் தொல் பொருள் துறையின் முன் அனுமதியின்றி கோவில் உள்பகுதியில் இருந்த பூஜை மண்டபத்தை இடித்து, அதனைப் புதுப் பிக்க முயன்றதான குற்றச் சாட்டில் சந்தேக குற்ற வாளியாக கோவிலின் உதவி குருக்கள் சர்வேஸ் வரய்யர் பத்மநாப குருக் கள் என்கிற பார்ப்பனர் கைது செய்யப்பட்டுள் ளார். கோவிலின் பிரதம குருக்களான பார்ப்பனர் தலைமறைவாகிவிட்டார். அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக தொல் பொருள் துறையின் சார்பில் அறிவிக்கப்பட் டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/89858.html#ixzz3H3tEOZVW

தமிழ் ஓவியா said...

கோயில் கருவறைக்குள் நுழைந்த சிறுவனுக்கு அடி உதை


பெங்களூரு, அக்.24- பெங்களூருவில் பிரசாதம் வாங்குவதற்காக கோயில் கருவறைக்குள் நுழைந்த சிறுவனை கோயில் பூசாரி அடித்து உதைத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவின் புறநகர்ப்பகுதியான நெலமங்கலா பகுதியிலுள்ள ருத்ரேஸ்வரா சுவாமி கோயில் வளாகத்தில், சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பூசாரி பிரசாதத்தை வழங்கத் துவங்கினார்.

பலமுறை முயன்றும் பிரசாதம் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த சிறுவன், பூசாரியின் பின்னாலேயே சென்று பிரசாதம் வாங்குவதற்காக கருவறைக்குள் சென்றான். இதைக் கண்ட பூசாரி கடும் ஆத்திர மடைந்து அந்த சிறுவனை அடித்து உதைத்தார். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

Read more: http://viduthalai.in/e-paper/89861.html#ixzz3H3tM2W11

தமிழ் ஓவியா said...

குடியைக் கெடுக்கிறது!குடிகுடியைக் கெடுக்கும் என்பது ஏதோ வெறும் வார்த்தை சோடனையல்ல.

கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் டாஸ்மாக்கில் பணிபுரிந்த 2500 ஊழியர்கள் மரணம் அடைந்துள்ளனர். பெரும்பாலும் 30 -40 வயதுக் கிடையே உள்ளவர்கள்தாம் - படித்த பட்டதாரி இளை ஞர்கள் இவர்கள்.

மரணம் அடைந்த 2500 பேர்களுடன் முடிந்து விடு கிறதா இந்தக் குடி?

2500 பெண்கள் துணை வரை இழந்தனர், 5000 குழந் தைகள் தந்தையை இழந் துள்ளனர். டாஸ்மாக்களில் பணியாற்றும் 30 ஆயிரம் பேர்களில் சரிப் பாதிப் பேர் குடியால் பாதிக்கப்பட்ட மனநோயாளிகளாம்!

Read more: http://viduthalai.in/e-paper/89857.html#ixzz3H3tWi6VG

தமிழ் ஓவியா said...

பெயர்கள் மாறுகின்றன

மத்திய அரசின் திட்டங்களுக்கு இந்துத்துவா சார்பில் உள்ளவர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன. டிசம்பர் 31 வாஜ்பேயி பிறந்த நாளாம். மத்திய ஊரக வீடு கட்டும் திட்டத்திற்கு வாஜ்பேயி பெயரும் சூட்டப்பட உள்ளதாம்.

ரூ.15 லட்சம் என்று வருமோ?

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைத் திருப்பிக் கொண்டு வந்தால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ரூ.15 லட்சம் கிடைக்கும் என்று மக்களவைத் தேர்தலின்போது நரேந்திரமோடி கூறினார். பிஜேபி ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களில் கருப்புப் பணத்தை மீட்போம் என்றார் ராஜ்நாத்சிங். நாட்கள் 150 ஓடி விட்டன. நான் உட்பட இந்தியர்கள் அனைவரும் காத்தி ருப்பது நம் ஒவ்வொருவர் கையிலும் ரூ.15 லட்சத்தை எதிர் பார்த்து தான்.

- அஜய்மக்கான், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்

அடுத்த ஓர் அபாய அறிவிப்பு

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இந்த முறை பொறுப்பு ஏற்றவுடன் அவசர அவசரமாக மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால் விலை உயர்வுகளை அறிவித்தது அல்லவா!
இப்பொழுது டிசம்பர் இறுதிக்குள் ஆவின்பால் விலையை 30 சதவீதம் உயர்த்திடத் திட்டமாம்.

Read more: http://viduthalai.in/e-paper/89859.html#ixzz3H3tmj7GG

தமிழ் ஓவியா said...

அறிவுப் பிரச்சாரம்


மக்களை முட்டாள்களாக்கப் பஜனை செய்யுமாறு பிரச்சாரம் செய்வதை விட்டு, மக்களை அறிவுள்ள மக்களாக்க அறிவுப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.
(விடுதலை, 5.1.1972)

Read more: http://viduthalai.in/page-2/89841.html#ixzz3H3tzDV3o

தமிழ் ஓவியா said...

திருப்பதி கோயிலின் முகவர் ஆகும் அஞ்சல் துறை

திருப்பதி தரிசன அனுமதிச் சீட்டு (டிக்கெட்) அஞ்சல் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்ற ஓர் அறிவிப்பு வெளி வந்துள்ளது.

மதச் சார்பற்ற அரசு என்ற கூறப்படும் இந்தியாவில் மத்திய அரசுத் துறையான அஞ்சல்துறை குறிப்பிட்ட இந்து மதத்தின் ஒரு கோயிலுக்காக தரிசன டிக்கெட்டுகளை விற்பது எந்த வகையில் சரியானது என்ற கேள்வி எழத்தானே செய்யும்? அப்படி எழத்தானே வேண்டும்?

அஞ்சல்துறை என்பது சேவைப் பணியைச் சேர்ந்தது. ஆனால் அண்மைக்காலமாக அது பொது மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது.

அஞ்சல் பட்டுவாடா என்பது நம்பகத் தன்மையை இழந்து விட்டது; அதன் காரணமாக தனியார் கொரியர் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடித்து வருகின்றன. இதனைச் சரிப்படுத்திக் கொண்டு தன் பணியைச் செவ்வனே மேற் கொள்ளுவதற்குப் பதிலாக கோயிலுக்குத் தரிசன டிக்கெட் விற்பதுதான் அஞ்சலகத்தின் வேலையா?

திருப்பதி கோயில் தரிசன டிக்கெட் விற்பனை என்று வந்தால் அடுத்து கிறிஸ்தவர் வேளாங்கன்னி கோயில் தரிசன டிக்கெட்டையும், அரசுத் துறைகள் விற்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க மாட்டார்களா? முஸ்லிம்களும் முன் வந்தால் அது குற்றமாகுமா?

அரசியல் கட்சிக்காரர்கள் மாநாட்டு டிக்கெட்டுகளை விற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டால் அதற்கும் கட்டுப்பட்டுதானே ஆக வேண்டும்?

மத்தியில் பிஜேபி ஆட்சி வந்தாலும் வந்தது; இந்துத்துவாவாதிகளுக்குப் புதுத்தெம்பு முளைத்து விட்டது - அதிகாரத்தை எப்படி வேண்டுமானாலும் வளைத்துக் கொள்ளலாம் என்ற திமிர் அவர்களுக்கு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

தொடக்கத்தில் முதலில் இப்படியெல்லாம் வாலை நுழைத்துப் பார்க்கிறது (Feeler) இதற்குச் சமூகத்தில் எந்த அளவுக்கு எதிர்ப்பு இருக்கிறது? என்று எடை போட்டுப் பார்க்க திட்டமிடுவதாகத்தான் இதனைக் கருத வேண்டும்.

இந்தியா என்றால் எல்லோரும் இந்து; இந்தியாவில் வாழக் கூடிய அனைவரும் இந்துக்கள்தான் என்று பிஜேபியின் ஞான பீடமான ஆர்.எஸ்.எஸின் தலைவர் ஒரு தடவை மட்டுமல்ல; பல முறை கூறி முடித்து விட்டார்.

இன்றைய பிரதமர் நரேந்திர மோடிகூட நான் ஒரு இந்து நேஷனலிஸ்ட் என்று வெளிப்படையாகச் சொல்லவில்லையா?

தமிழ் ஓவியா said...

தீபாவளியைக் கொண்டாட முஸ்லிம்கள் அதிகம் வாழும் காஷ்மீரை ஏன் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளார்? என்பதையும் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மதச் சார்பற்ற நாட்டின் பிரதமர் என்றால் எந்த மதத்திற்கும் அப்பாற்பட்டவராக நடந்து கொள்ள வேண்டாமா? மதச் சார்பின்மை என்பதற்கு இதுதானே சட்ட ரீதியான பொருள்!
ஆனால் இந்தியப் பிரதமர் இந்து மதப் பண்டிகைகளுக்கு மட்டுமே வாழ்த்துக் கூறுபவராக இருக்கிறாரே! இதனை மற்ற சிறுபான்மை மக்கள் கவனிக்க மாட்டாரகளா? மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் மத ரீதியான சிந்தனையைத்தான் முன்னிறுத்த முயற்சிக்கிறார்கள்.

கங்கையைச் சுத்திகரிப்பதுதான் நாட்டுக்குத் தேவையான முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய முக்கியமான பணியா?

தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பு திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை இல்லாத ராமன் பாலத்தைக் காட்டி முடக்குவது தான் மக்கள் நல அரசா? மதவாதம் தலை தூக்கி நிற்கக் கூடிய இந்த ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களை எதிர்ப்பார்க்க முடியுமா? கர்ம பலனில் நம்பிக்கை உள்ளவராயிற்றே பிரதமர் நரேந்திர மோடி!

மலம் எடுப்பவர்கள் தெய்வப் பணியில் ஈடுபடுபவர்கள்; அது அவர்களின் கர்மபலன் என்று அரசு வெளியீடாகப் புத்தகமாகப் போட்டவராயிற்றே - குஜராத் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் கர்மயோக் என்ற அந்த நூலை திராவிடர் கழகம் எரிக்கவில்லையா?

கர்மாவில் நம்பிக்கையுள்ளவர்கள் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்தை விரும்புவார்களா? வர்ணா சிரம இந்து மதப் பிடிப்புள்ளவர்கள் தீண்டாமை ஒழிப்பு- ஜாதி ஒழிப்புக்கு அந்தரங்க சுத்தியாக முன்வருவார்களா?

எந்தக் காலத்திலும் அதிகாரத்திற்கு வரக் கூடாத பார்ப்பனீய பிற்போக்கு சக்தியின் கைகளில் பாமரத் தனமாக நாட்டு மக்கள் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்து விட்டார்கள் - அதன் பலா பலன்களை அனுபவித்துத் தானே தீர வேண்டும். உப்புத் தின்ற அளவுக்குத் தண்ணீர் குடித்துத்தானே தீர வேண்டும்!

திருப்பதி கோயிலின் கிளைகள் சென்னையிலும் நாகர்கோயிலிலும் திறக்கப்பட்டுள்ளன. முனியாண்டி விலாஸ் ஓட்டல் ஊர் முழுவதும் தொடங்கப்படுவதில்லையா? பக்தி என்பது வியாபாரமாக ஆன நிலையில், கோயில்களின் கிளைக் கடைகள் திறக்கப்படத் தானே செய்யும். இன்றைய பக்தி என்பது பிசினஸ் ஆகி விட்டது என்று கனம் ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியே ஏற்கனவே ஒப்புக் கொண்டு விட்டார். அது இப்பொழுது ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவே ஆகிவிட்டது.

முதலில் அஞ்சல் துறையை திருப்பதி கோயில் டிக்கெட் விற்கும் முகவராக மாற்றி விட்டார்கள். தொடக்கக் கட்டத்திலேயே மதச் சார்பற்ற சக்திகளும் இடதுசாரிகளும் எதிர்த்துக் குரல் எழுப்பிட வேண்டும். திராவிடர் கழகம் வழக்கம் போல முதல் குரலை இதன் மூலம் பதிவு செய்கிறது மற்றவர்களும் தொடர வேண்டும்.

இந்தியா பல மாநிலங்கள், பல இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள், பல மதங்கள், ஒரு மதத்துக் குள்ளேயேகூட மாறுபட்ட பிரிவுகள் மற்றும் மத நம்பிக் கையற்றவர்கள் வாழக் கூடிய ஒரு துணைக் கண்டம்.

இதில் இந்து வெறியைத் தூக்கிக் கொண்டு விளையாடிப் பார்க்கலாம் என்று ஆசைப்பட்டால் விபரீதம்தான் - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/89842.html#ixzz3H3u6Yv10

தமிழ் ஓவியா said...


அய்க்கிய நாடுகள் சபையின் தற் போதைய நடவடிக்கை சில வளரும் நாடுகளுக்கு அடங்கிச்செல்லும் நிலை யில் உள்ளது, பாலஸ்தீனப் பிரச்சனை, வளைகுடாநாடுகளிடையேயான உள்நாட்டுப்போர் மற்றும் அனைத்துலக நாடுகளிடையே நிலவும் எல்லைப் பிரச்சனைகள். மற்றும் கடல்வழிப் போக்குவரத்தில் வளரும் நாடுகளின் ஆக்ரமிப்பு, ஏழை நாடுகளை தங்களின் குப்பை குவிக்கும் இடமாக பயன்படுத்தும் போக்கு, உலக வெப்பமயமாதலுக்கு முழுக்க காரனமாக இருந்த மேலை நாடுகள் தங்களின் செயலுக்கு உலக நாடுகளையும் பங்கெடுத்துக் கொள்ளச் சொல்வது, ஏழை நாடுகளை கட்டாயமாக கடன்வாங்க வற்புறுத்துதல் போன்ற பல்வேறு சிக்கல்களை அய்க்கியநாடுகள் சபை தடுக்கமுடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. முக்கியமாக 1990-வளைகுடாப் போருக்குப் பிறகு அய்க்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் முழு அதிகாரத் திற்குள் வந்துவிட்டது போன்ற ஒரு சூழல் உருவாகிவிட்டது. பாதுகாப்புச்சபை மற்றும் மனித உரிமைகள் சபை அய்க்கிய நாட்டுச்சபை யின் அதிமுக்கிய அங்கமாகும்.

ஆனால் பாதுகாப்புச்சபையில் உள்ள பணக்கார நாடுகள் மற்றும் சந்தை பொருளாதாரத்தை ஆக்கிரமித்து இருக்கும், நாடுகள் தங்களின் லாபத்திற்கு ஏற்ப மனித உரிமைச்சபையை ஆட்டு விப்பது தற்போது கண்கூடாக நடக்கிறது.

முக்கியமாக இந்தியா பாதுகாப்புச் சபையில் அங்கமில்லாத நிலையிலும் இந்தியாவின் மிகபெரிய சந்தை மூலம் லாபத்தை கொள்ளையடிக்கத் துடிக்கும் பணக்கார நாடுகள், இலங்கையின் மீதான மனித உரிமை தொடர்பான விசாரனை யில் இந்தியா மற்றும் சில ஆசியப்பிராந்தி நாடுகளின் அழுத்தததினால் போர்க் குற்றவிசாரனையில் பல்வேறு தடை களை போட்டு வருகிறது,

முக்கியமாக மனித உரிமைச்சபைக் மேற்குலக நாடுகள் முற்றிலும் நிதி ஒதுக்குவதை தவிர்த்து விசாரணை தாமதமாக்க முயல்வது குறித்து தற் போதைய மனித உரிமை ஆணையத் தலைவரே தன்னுடைய அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அய்க்கிய நாடுகள் சபையின் தற்போதைய நடவடிக்கைகள் ஏழை நாடுகளுக்கு பாதகமாகவும் பணக்கார மேற்குலக நாடுகளுக்குச் சாதகமாகவும் உள்ளது. அய்க்கிய நாடுகள் சபை தற்காலத்தில் தொடர்ந்து செய்துவரும் பிழைகளை திருத்திக்கொள்ளாவிட்டால் மூன்றாம் உலகப்போர் என்பது கட்டாயம் உருவாகிவிடும். அப்படி ஒன்று உருவா னால் 400 கோடி உயிர்ப்புள்ள பூமி மனி தன் என்னும் அறிவுள்ள விலங்கினால் விரைவில் அழிந்துவிடும். அய்க்கிய நாடுகள் தினமான இன்று அய்க்கிய நாடுகள் சபை பாரபட்சம் காட்டாமல் இருக்கவேண்டும் என்பதே மனிதநேயம் மிக்கவர்களின் பேரலா. கேட்குமா அய்.நா.

Read more: http://viduthalai.in/page-2/89844.html#ixzz3H3uFVzYg

தமிழ் ஓவியா said...

கிருஸ்தவர்கள் பாதரட்சை அணியலாமா?


(அப்போஸ்தலர்: 7:33)இல் பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப் போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது என்றும்.

(அப்போஸ்தலர்: 12:79)இல் தூதன் பேதுருவை எழுப்பி; பேதுருவை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட் சைகளைத் தொடுத்துக் கொள் என்றான். அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின் சென்று.... என்றும் இருக்கிறது. இதிலிருந்து பேதுரு இயேசுவின் கட்டளையை நம்பவில்லை என்றுதானே தெரியவருகிறது?

ஒரு வானொலி நிலையத்தின் ஒலிபரப்பில் கிருஸ் தவர்கள் கோவிலுக்குள்ளும் செருப்பு அணிந்து செல்கின் றனரே? என்ற கேள்வி எழுந்தது. இதிலிருந்து இயேசுவை கிருஸ்தவர்கள் கூட நம்பவில்லை என்று தெரிய வில்லையா? (ஆதாரம்: இந்திய வேதாகமச் சங்கத்தாரால் 1978இல் வெளியிடப்பட்ட புதிய ஏற்பாடு)

தகவல்: ர.பார்த்தசாரதி, சென்னை - 34

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89877-2014-10-24-10-39-19.html#ixzz3H3vSmp8C

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் மதம் - தர்மம்


பார்ப்பனர்கள் எந்த காரியத்திலானாலும் எந்தத்துறையிலானாலும் தங்கள் சொந்த ஜாதி (உயர்வு) நலனை அடிப் படையாகக் கொண்டுதான் பார்ப்பார்களே தவிர, மக்களின் பொது நலனைப் பற்றிய கவலையே அவர் களுக்கு ஏற்படுவதில்லை.

பார்ப்பனர்களுக்கு மதம், தர்மம் என்பதே அவர்களது ஜாதி பாது காப்பாகத்தான் ஆகி விட்டது

- தந்தை பெரியார் 22.5.1967 விடுதலை தலையங்கத்தில் ஒரு பகுதி

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89876-2014-10-24-10-35-16.html#ixzz3H3w0gf36

தமிழ் ஓவியா said...

சரக்கு கேடு; டப்பி அழகு!

பிறநாட்டினர் இயற்கை முறையில் தமது முகப் பொலிவை உண்டாக்கி, உருவத்திலும் சமூக ஒற்றுமை கொண்டிருக்கின்றனர். நம்நாட்டினர் சரக்கு கேடாயிருந் தாலும் அதனுடைய டப்பியை அழகுபடுத்துவது போல், வற்றிய முகத்தில் நாமம், விபூதி முதலிய வைகளை எழுதிக் கொண்டு சமூக பேதத்தை வளர்த்துக் கொண்டு போகின்றனர்.

- புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89876-2014-10-24-10-35-16.html#ixzz3H3w8WoBq

தமிழ் ஓவியா said...

லாலாலஜபதி கூறுகிறார்!

சென்னை மாகாணத்தில் உள்ள கோவில்கள் அதன் பூஜை முதலிய நடைமுறைகள் நம்மை சமூக வீழ்ச்சி என்னும் நரகத்திற்குக் கூட்டிச் சென்று, அழுத்திக் கொண்டிருக் கிறது என்பது எனக்கு நன்றாய்ப் புலப்பட்டு விட்டது.

நமது நாட்டுக்கு ஒரு சமுதாய விடுதலை வேண்டுமானால் எதற்கும் அஞ்சாத ஒரு சமுதாயச் சீர்திருத்த வீரன் தோன்றியாக வேண்டு மென்று எனக்கு ஏற்பட்டு விட்டது.

-லாலாலஜபதிராய்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89876-2014-10-24-10-35-16.html#ixzz3H3wHohMC

தமிழ் ஓவியா said...

இருமுடி மகிமை!

அப்பா (சலூன்காரரிடம்): இந்தாப்பா! என் மகனுக்கு மொட் டையடி! கவனமா இரண்டு முடியை மட்டும் விட்டுடு! மறந்துடாதே.

சலூன்காரர்: அது என்னங்க? இரண்டு முடியை மட்டும் விட்டுடச் சொல்றீங்க?

அப்பா: பையன் இருமுடியோட அய்யப்பன் கோயி லுக்கு போறதா பிரார்த்தனை செஞ்சுக்கிட்டிருக்கான்பா?

- பெரியார் வளவன், திருத்தணி.

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89876-2014-10-24-10-35-16.html#ixzz3H3wR7vy5

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உலகம் எதுவாக இருக்கிறது என்று கேட்ட மைத்ரேயன் கேள்விக்குப் பதிலாக,

இந்த உலகம் விஷ்ணுவிடமிருந்து தோன்றியது. பிரளய காலத்தில் இது அவ னையே சென்று சேரும். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களையும் நிகழ்த் துபவனும் அவனே. இந்த உலகம் முழுவதும் அவனே வியாபித்து இருக்கிறான் என்று ஓர் ஆன்மிக இதழ் கூறுகிறது.

படைத்தல் - பிரம்மா, காத்தல் - விஷ்ணு, அழித் தல் - சிவன் என்று சொல்லி வந்தது எல்லாம் என்னாயிற்று?

விஷ்ணுதான் எல்லாம் என்று அய்யங்கார் சொல்லுவதை ஸ்மார்த் தர்கள் ஏற்றுக்கொள் கிறார்களா?

அட குழப்பமே, முரண்பாடே, இதுதான் இந்து ஆன்மிகமா?

Read more: http://viduthalai.in/e-paper/89959.html#ixzz3HD4tHr9f

தமிழ் ஓவியா said...


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தீண்டாமை:

திராவிடர் கழகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் போராட்டம்

காஞ்சிபுரம், அக்.25_ காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அன்றாடம் நடைபெறும் தீண்டாமையை எதிர்த் துப் போராட்டம் நடத் தப்பட்டது.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலினுள் மணவாள மாமுனி சன் னதி உள்ளது. இந்த சன்ன தியினுள் பார்ப்பனர்கள் மட்டும் உள்ளே சென்று வழிபாடு செய்து வருகின் றனர். பார்ப்பனர் அல் லாதவர்களுக்கு இந்த சன் னதியினுள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்திருக்கின்றது. பார்ப் பனர்களுக்கு தனி வழி. பார்ப்பனல்லாதார்க்கும், பொதுமக்களுக்கும் தனி வழி ஒதுக்கியுள்ளனர். பார்ப்பனரல்லாதவர்கள் வெளியே அமர்ந்து தான் பாடல் பாடி வழிபட வேண்டும்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு

இந்தத் தீண்டாமைக் கொடுமையைக் கண்டித்து பார்ப்பனல்லாத மாதவ ராமானுஜதாசர் கடந்த 2008 -ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்து வெற்றியும் அடைந்துள் ளார். உயர்நீதிமன்றம் அனைத்து ஜாதியினரும் உள்ளே சென்று பாடல் பாடி வழிபடலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு எண்:...25845/2008 , இந்து அறநிலைய துறை ஆணை நகல் எண்கள்:35/2003 தேதி: 23.12.2003 மற்றும் 168/2009 தேதி: 17.8.2009. இத்தீர்ப்பு மற்றும் ஆணை நகலைக் காண் பித்த பின்னரும்கூட பார்ப்பனர்கள், பார்ப்பன ரல்லாத மாதவ ராமானுஜ தாசர் உள்ளிட்டவர்களுக் குத் தொடர்ந்து வழி பாட்டு உரிமை மறுக்கப் பட்டு வந்திருக்கின்றனர்.

ராமானுஜ தாசர் காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர் களுடன் தொடர்ந்து இதற்கான களப் பணி களில் ஈடுபட்டு வந்தனர். தீண்டாமை ஒழிப்பு முன் னணியினர் காஞ்சி மாவட்ட ஜனநாயக அமைப்புகளைத் தொடர்பு கொள்கின்ற னர். திராவிடர் கழகத்தி னரும், விடுதலைச்சிறுத் தைகள் கட்சியினரும் களத்தில் இணைகின்ற னர்.

கடந்த 15.10.2014 அன்று காஞ்சிபுரம் மாவட்ட இந்து அறநிலை யத் துறை அலுவலரைச் சந்தித்து சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தக் கோரியும், 19.10.2014 முதல் 28.10.2014 நடைபெறவுள்ள உற்சவத்தை ஜாதி பாகு பாடின்றி நடத்திடக் கோரியும் மனு கொடுத்த னர்.

மீறுவோர்மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பினைக் கட்டாயம் முழுமையாக கடைப்பிடித்திடவேண்டும். இல்லையென்றால் மீறு வோர்மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் நிர் வாகத்திற்குக் கடிதம் கொடுக்கின்றது.

இருப்பினும் ஆதிக்க ஜாதித் திமிர்ப்பிடித்த பார்ப்பன பூசாரிகள், பார்ப்பனரல்லாதவர்களை உள்ளே அனுமதிக்க வில்லை.

காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் தலைமையில் 21.10.2014 அன்று மாதவ ராமானுஜ தாசர், செந்தில்நாதன் மற் றும் போராட்டக் குழுவி னரும் கோவிலுனுள்ளே மணவாள மாமுனிவர் சன்னதி உள்ளே சென்ற னர்.

பார்ப்பனர்கள், மாதவ ராமானுஜ தாசர் மற்றும் செந்தில்நாதனையும் வழி மறித்து, ஆபாச வார்த் தைகளால் மிரட்டினார் கள்.

தடையை மீறி உள்ளே சென்ற பார்ப்பனரல்லாத மாதவ ராமானுஜ தாசர், செந்தில்நாதன் உள் ளிட்டவர்கள் பார்ப்பனர் களைவிட சிறப்பாகவே நாலாயிர திவ்யப் பிரபந் தம் பாடலைப் பாடி வழி பட்டனர்.

பார்ப்பனர்கள், காவல் துறையினரை அழைத்து வந்தனர். போராட்டக் குழுவினரும் உயர்நீதி மன்ற தீர்ப்பானையைக் காண்பித்து வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். காவல் துறை உதவியுடன் மாதவ ராமானுஜ தாசர் உள் ளிட்ட பார்ப்பனர் அல் லாதவர் அனைவரையும் சன்னதியை விட்டு வெளி யேற்றினார்கள்.

அடுத்தகட்ட நடவ டிக்கைபற்றி ஒத்த கருத்து கொண்ட அமைப்புகளை ஒன்றிணைத்து மிகப் பெரிய மக்கள் போராட் டம் நடத்த போராட்டக் குழு முடிவு செய்துள்ளது.

பங்கேற்றோர்

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திராவிடர் கழகத் தோழர் கள் இளையவேல், வேலா யுதம், சக்திவேல், அர் ஜூன், ரவிந்திரன், அருண் குமார், தங்கராஜ், கோபி நாத், கோவிந்தராஜ், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த பாசறை செல்வராசு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி காஞ்சி மாவட்ட செயலாளர் தோழர் பாரதி அண்ணா, தோழர் லாரன்சு மற்றும் பல தோழர்கள்
விடுதலை செய்தியாளர் இரா.சக்திவேல், காஞ்சிபுரம்.

Read more: http://viduthalai.in/e-paper/89973.html#ixzz3HD52auYN

தமிழ் ஓவியா said...

காந்திக்குப் பதிலாக நேருவைத்தான் கோட்சே கொலை செய்திருக்கவேண்டுமாம்:
சொல்வது கேரளா ஆர்.எஸ்.எஸ்.!

மகாத்மா காந்தியைப் படுகொலை செய்ததற்கு பதிலாக நேருவைத்தான் நாதுராம் கோட்சே கொலை செய்திருக்கவேண்டும் என்று கேரளா ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகார பூர்வ ஊடகமாக வெளிவருவது கேசரி. கடந்த 17 ஆம் தேதியிட்ட கேசரி இதழில் பி.ஜி.கோபாலகிருஷ்ணன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இவர் சாலக் குடி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டவரும் கூட!

Read more: http://viduthalai.in/e-paper/89977.html#ixzz3HD5FqHnC

தமிழ் ஓவியா said...

தேவையைப் பொறுத்ததே நாணயம்

சாதாரண மனிதனுடைய நாணயம், ஒழுக்கம், நேர்மை என்பதெல்லாம் நூற்றுக்குத் தொண்ணூறு அவனவனுடைய இலட்சியத்தையும், தேவையையுமே பொறுத்ததாகும்.
_ (குடிஅரசு, 17.11.1961)

Read more: http://viduthalai.in/page-2/89978.html#ixzz3HD5Y8F95

தமிழ் ஓவியா said...

தீபாவளி பரிசோ! தீபாவளியால் காற்று மாசு: அகமதாபாத் முதலிடம்; சென்னை இரண்டாமிடம்


சென்னை, அக்.25- முடிந்து போன தீபாவளியால் நாம் சுவாசிக்கும் சுத்தமான காற்று அதிகபட்சமாக மாசு அடைந்து போய் இருக்கிறது. இந்த மாசு இன்னும் 2 நாள்கள் காற்றில் கலந்திருக்கும். அவ் வாறு அசுத்தம் பெற்ற நகரங்கள் பட்டிய லில் அகமதாபாத் முதலிடத்திலும், சென்னை 2 ஆவது இடத்திலும் அங்கம் பெற்றுள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீபாவளி கொண்டாட்டத்தால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசு அளவு களை அறியும் ஆய்வுகளை, நடத்தியது.

நைட்ரஜன் டை ஆக்சைடு: சென்னை, மதுரை, சேலம், கோவை, திருச்சி, கடலூர், நெல்லை, ஓசூர், திருப்பூர், வேலூர் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. தீபாவளிக்கு முன், அக்.,15 ஆம் தேதியும், தீபாவளி யான, 22 ஆம் தேதியும் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், காற்றில் மிதக்கும் நுண் துகள்கள், கந்தக டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு, ஆய்வு நடத்தப்பட்ட அனைத்துப் பகுதி களிலும், அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில், காற்றில் மிதக்கும் நுண்துகள்கள், 15 ஆம் தேதி ஆய்வில், 37 மைக்ரோ கிராமாக இருந்தது, 22 ஆம் தேதி ஆய்வில், 297 ஆக உயர்ந்துள்ளது. கந்தக டை ஆக்சைடு, 12-லிருந்து, 32 ஆகவும், நைட்ரஜன் டை ஆக்சைடு, 13-லிருந்து 20 மைக்ரோ கிராமாகவும் அதிகரித்துள்ளது.

சேலம், சாரதா மந்திர் மெட்ரிக் பள்ளி பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில், காற்றில் மிதக்கும் மின் துகள்கள், 30-லிருந்து, 168; சேலம் சிவா டவரில், 47-லிருந்து, 197 மைக்ரோ கிராமாகவும் அதிகரித்து காணப்படுகிறது. டில்லியில் நடத்திய ஆய்வில், ஒரு கியூபிக் மீட்டர் காற்றில் 210 மைக்ரோகிராம் நைட்ரஜன் டை ஆக்ஸைடும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சல்பர் டை ஆக்ஸைடு அதிகபட்சமாக 503 மைக்ரோ கிராமாக வும், சென்னையில் 393 மைக்ரோ கிரா மாகவும், இருந்தது.

இது குறித்து அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மய்ய எக்ஸ்கியூடிவ் டைரக்டர் அனுமித்தா ராய்சவுத்திரி கூறுகையில், கடந்த 2 நாள்களாக காற்றில் மிகுந்த மாசு கலந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. தட்ப வெப்ப சூழல் குளிராக இருந்ததால் காற்று ஏதுமில்லை. இதனால் இந்த காற்றில் கலந்த புகை மாசுக்கள் எளிதில் கடந்து செல்ல முடியாமல் இருந்தது. இந்த மாசுக்கள் காற்றில் இன்னும் இரண்டு நாள்கள் கலந்து தான் இருக்கும். தற் போதைய காற்று மாசு எங்களுக்குக் கவலை தருகிறது என்றார்.

Read more: http://viduthalai.in/page-2/89982.html#ixzz3HD5jxw6q

தமிழ் ஓவியா said...

அக்.25: தகவல் அறியும் உரிமை சட்ட நாள்

அரசு, அரசிடம் உதவி பெறும் நிறுவனங் களிடமிருந்து தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ஆம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ஆம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. காஷ்மீருக்கு இச்சட்டம் பொருந்தாது.

இன்று மக்களிடம் இச்சட்டம் பரவலாக சென்று சேர்ந்துள்ளது. ஏராளமான அதிர்ச்சியூட்டும், வியக்கவைக்கும் தகவல்கள் இதன் மூலம் பெறப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் தகவல் பெறலாம். இச்சட்டம் ஜனநாயகத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.

2005 மே 11இல் மக்களவையிலும், மே 12இல் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜூன் 15ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். ஜூன் 21இல் அரசிதழில் வெளியிடப் பட்டு, அக்.12ஆம் தேதி அன்று நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும், அறிய விரும்பும் தகவல்களை பெற உரிமை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் வெளிப்படையாக இருப்பதும், யார் கேட்டாலும் அவர்களுக்கு தகவல்களை தெரிவிப் பதும் அரசின் கடமை என இதில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல்களை தாமாக முன் வந்து தெரிவிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.

தகவலை பெற விரும்புவோர் அது குறித்து எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பிப் போர் பெயர், முகவரி மற்றும் கையெழுத்துடன் அனுப்பப்படும் விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவசரத் தகவலுக்கு 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, போர்யுக்தி போன்ற சில பிரிவின் கீழ்வரும் தகவல்களை அரசு தெரிவிக்க தேவையில்லை. நாடாளுமன்ற, சட்டசபைக்கோ மறுக்கப்படாத தகவல்கள், தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பது இச்சட்டத்தின் நோக்கம் குறித்த நேரத்தில் தகவல் தராமலும், தவறான தகவலை தருவதும் குற்றம். இதன்படி தவறு செய்யும் அரசு அதிகாரிகளை தண்டிக்கவும், அபராதம் வழங்கவும் மத்திய, மாநில தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இச்சட்டத்தை மக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் லஞ்சம், ஊழலை தடுக்கலாம். பயனற்ற தகவல்களை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசு எந்திரம் சரியாக செயல்படவும், அதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவும் இச்சட்டம் வழி வகுக்கிறது.

Read more: http://viduthalai.in/page-3/89989.html#ixzz3HD6AS8Ob

தமிழ் ஓவியா said...

தந்தி டிவி பாண்டேமீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகோரி

அனைத்திந்திய வழக்குரைஞர்கள் சங்கம் வேண்டுகோள்

டில்லி, அக்.25 புதுடில்லியில் உச்ச நீதிமன்றத்தின் அனைத்திந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் அதீஷ் சி.அகர்வாலா உச்சநீதிமன்றத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திர மைதானிக்கு அனுப்பியுள்ள கடிதத்தின்மூலம் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து தந்தி டிவி பாண்டேமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவேண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேண்டுகோளில் அவர் குறிப்பிட்டதாவது:

18.10.2014 அன்று தந்தி தொலைக்காட்சி ஜெயலலிதா பிணை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஃபாலி நார்மன் வாதுரைகளை ஒளிபரப்பி உள்ளது. இதில் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து தந்தி டிவி பாண்டேமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவேண்டி அது தொடர்பான உண்மைத் தகவல்களை தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

நீதிமன்ற நடவடிக்கைகளை பதிவு செய்வது மற்றும் ஒளிபரப்புவது என்பது பொருத்தமற்றதும், இழிவு படுத்தவதும் ஆகும். 18.10.2014 அன்று தந்தி தொலைக்காட்சியில் ஜெயலலிதா பிணை கோருவதில் ஃபாலி நாரிமனின் வாதுரைகளை ஒளிபரப்பி உள்ளது மாண்பமை உச்சநீதிமன்றத்தை இழிவுபடுத்துவதாக உள்ளதால், மாண்பமை உச்சநீதிமன்றம் இதில் தொடர்புடைய பதிவு மற்றும் ஒளிபரப்பிய பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்காக வழக்குரைஞர்கள் சங்கம் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் வலிமையாக வாதிட்டாலும், நீதிமன்ற நடவடிக் கைகளை பதிவு செய்வது மற்றும் ஒளிபரப்புவது உள்பட நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் செய்யக்கூடாது. ஆகவே, இதில் தொடர்புள்ள அனைத்திலும் மிகுந்த கவலையுடன் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பைக் கண்டித்து நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

-இவ்வாறு அனைத்திந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் அதீஷ் சி. அகர்வாலா உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/89994.html#ixzz3HD6jMlJP

தமிழ் ஓவியா said...

இரண்டு தமிழ் தினசரி பத்திரிகைகள்

இவ்வாரம் திராவிடன், இந்தியா என்கின்றதான இரண்டு தமிழ் தினசரிப் பத்திரிகைகள் வெளிவந்திருக்கின்றன. இவற்றுள் முன்னையது முன்னாலேயே இருந்துவந்தது. சிறிது காலம் நிறுத்தப்பட்டு, மறுபடியும் புத்துயிர் பெற்றுத் தோன்றியதாகும். பின்னையது புதிதாகவே தோன்றிய தாகும்.

எப்படி இருந்த போதிலும் இவை இரண்டும் சமய சமூக மத விஷயங்களுக்கு, வக்காலத்து பேசும் வகையில் நமக்கு மத எச்சரிக்கை செய்து கொண்டே புறப்பட்டிருக் கின்றபடியால் நமது கொள்கைகளுக்கு இவைகளால் ஆதரவு எதிர் பார்ப்பதற்கில்லை என்றே கருத வேண்டி யிருக்கின்றது.

ஏனெனில், நாமோ பல மதங்களையும் பல சமய பிரிவுகளையும், சமூகப் பிரிவுகளையும் ஒழித்து மக்கள் யாவரையும் ஒரே சமூகமாக்க வேண்டும் என்னும் கொள்கையின் மீது பல சமயக் கொள்கைகளையும், பல மதக் கொள்கைகளையும், சமுகக் கொள்கைகளையும், அவற்றுள் இருக்கும் உட்பிரிவுக் கொள்கைகளையும் அதனால் இருந்து வரும் வேற்றுமை உயர்வு தாழ்வு வித்தியாசத்தையும் தங்களுடைய சமூகமோ, சமயமோ மேலானது என்கின்ற எண்ணத்தையும் அடியோடு தொலைத்தாகவேண்டும் என்ற முடிவு செய்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததாகும்.

அதோடு மாத்திரமில்லாமல் கடவுளுக்கும், ஆத்மாவுக்கும் சம்பந்த முண்டாக்குவதே மதம் என்றும் அல்லது கடவுளுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தை உணரச் செய்வதே மதம் என்றும் சொல்லும்படியான மதக் கொள்கையும் சமயக் கொள்கையையும் கண்டித்து. அவைகள் முட்டாள் தனம் என்பதற்காக நிருபித்து மக்களின் இவ்வுலக வாழ்க்கைக்கு மட்டும் ஏதாவது ஒரு மதம் (கொள்கை) இருப்பதனால் அதற்குத் தகுந்தபடி இருக்கட்டும். இல்லாவிட்டால் ஒழியட்டும் என்பதன் மூலம் மதங்களிடம் துவேஷிக்கின்றோம் என்னும் பெயர் பெற்று இருக்கின் றோம்.

அதுபோலவே சில சமுகத்தாரும் சில சமயத் தாரும் மக்களை ஏமாற்றி, தங்கள் சமுகமே மேலான தென்று வஞ்சித்துஆதிக்கம் பெற்று அவ்வாதிக்கத்தை நிலை நிறுத்த அரசியல் என்றும் தேசியம் என்றும் காந்தியம் என்றும் சத்தியாக்கிரகம் என்றும் பல சூழ்ச்சித் துறைகளை உண்டாக்கி அதன் மூலம் மேலும் மேலும் மக்களை வஞ்சித்துவரும் அயோக்கிய சமூக சமயத்தை ஒழிக்கும் முறையிலும் அவர்களது தந்திரங்களை வெளியாக்கிக் கிளர்ச்சி செய்யும் முறையில் சில சமயக்காரருடன், சில சமுகக்காரருடனும் சண்டை தொடுக்க வேண்டியவர் களாகவும் இருக்கின்றோம். இதனால் பல சண்டைகளைக் கிளப்ப வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.

இதனால் தேசிய ஒற்றுமை கெடுவது மாத்திரமல்லாமல் தேசிய உணர்ச்சி கூட ஒழிவதானாலும் நாம் லட்சியம் செய்யாதவர்களாகவும் இருக்கின்றோம். ஆதலால் மேல்கண்ட கொள்கைகளையுடைய நமக்கு மேல்கண்ட இரண்டு பத்திரிகைகளும் அனுகூலமில்லாததோடு எதிர்ப்பாக இருக்க நேரிடும் என்பதை அவை தாராளமாய் வெளிப்படுத்தி இருக்கின்றன.

எப்படி எனில் ஒன்று அதாவது திராவிடன் தனது முதல் இதழில் சமயத்துவேஷம், சமுகத்துவேஷம், மதத்துவேஷம், முதலியன இல்லாமல் காக்கும் என்று தன்னை விளம்பரப் படுத்தி கொண்டிருக்கின்றது.

இரண்டு. இந்தியா தனது முதல் இதழில் சமய சமூகச் சண்டைகளைக் கிளப்பி தேசிய ஒற்றுமைக்கு இடர்செய்யும் இயக்கங்களை எப்பொழுதும் எதிர்த்துப் போராடும் என்று எழுதிக் கச்சைகட்டி நின்று கொண்டு இருக்கின்றது. ஆகவே இந்தியா திராவிடனை விட ஒருபடி முன்னேறி இருக்கின்ற தென்றே சொல்லுவோம்.

எனவே குடிஅரசுக்கு, சுய மரியாதை இயக்கத்திற்கு முன்னுள்ள எதிரிகளைவிட மற்றும் சற்று அதிக பலம் கொண்ட சரியான எதிரிகள் இருவர் தோன்றி இருக்கின்றார்கள் என்றுதான் முடிவு கட்டிக் கொண்டு தயாராயிருக்க வேண்டும். மற்றபடி காங்கிரசுக்கும் சமயத் திற்கும், மதத்திற்கும் (ஆதிக்கம் பெற்ற) சில சமுகங் களுக்கும், கூட்டத்தாருக்கும் ஆப்தமான இரு நண்பர்கள் தோன்றி இருக்கின்றார்கள் என்றும் சொல்ல வேண்டும்.

எப்படி இருப்பினும் பொது மக்களுக்கு உலக நடப்பை உணர்த்துவது பத்திரிகை களாகும் என்னும் கருத்தின் மீது அப்பத்திரி கைகளையும் ஆதரித்து, அதன் உள் எண்ண மனப்பான் மையை உணர்ந்து கொள்வதைக் கொண்டு தள்ளுவதைத் தள்ளும் உறுதியான மனோ திடத்தில் ஆதரிக்க வேண்டுமாய் மறுபடியும் பொது மக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.

இப்பத்திரிகைகளின் பத்திராதிபர்கள் இருவரும் பார்ப்ப னரல்லாதவர்கள் என்பதோடு இருவரும் பத்திராதிபர்களாக வும் இருந்தவர்களாவார்கள். ஆதலால், அவர்களது கருத்தையும், திறத்தையும், நலனையும் மக்கள் ஏற்கனவே நன்றாய் உணர்ந்தவர்கள் ஆவார்கள். ஆதலால் அதைப்பற்றி அதிகம் எழுத வேண்டியதில்லை என்றே விட்டு விடுகின்றோம்.

விலாசம்:

திராவிடன்
14, மவுண்ட் ரோடு, சென்னை
இந்தியா
11, ஜெனரல் பாட்டர்ஸ் ரோடு,
மவுண்ட்ரோடு, சென்னை.

குடிஅரசு - கட்டுரை - 10.05.1931

Read more: http://viduthalai.in/page-7/89921.html#ixzz3HD7VK2kl

தமிழ் ஓவியா said...

ஆரியக் கூலி கம்பனால் விளைந்த கேடு!


கம்பர், நடவாத பொய்க் கதையாகிய இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துச் செய்தமையால் வடமொழிப் பொய் வழக்கில் பழகிவிட்ட அவரது நா, அதன்கண் இலக்கியச்சுவை தோன்ற கூற வேண்டிய இடங்களிலும் பொய்யானவனவே புனைந்து கூறி இழுக்கினார். இங்ஙனமே, கம்பர்க்கு பின் வந்த தமிழ்ப் புலவர்களெல்லோரும், பொதுமக்களை ஏமாற்றுதற் பொருட்டுப் பார்ப்பனருங் கோயிற் குருக்கண்மாரும் வடமொழியில் வரைந்து வைத்த பொய்யான புராணங்களையும் தல புராணங்களையுமே பெரும்பாலும் தமிழில் மொழி பெயர்த்து வைத்துப் பண்டைத் தண்டமிழ் மெய் வழக்கினை அடியோடழித்து விட்டனர்.

இப்பிற்காலமொழி பெயர்ப்பு நூல்களிலும் ஒரோவிடங் களிலும் இலக்கியச் சுவை காணப்படுமேனும், முதலிலிருந்து முடிவரையில் அவற்றினைப் பொய்யாகவே தொடுக்கப்பட்டிருத்தலால், அவற்றின் பயிற்சி மக்கட்கு மெய்யுணர்வினையும் மெய்யறிவு விளக்கத்தினையுந்தராது.

- மறைமலையடிகள் (முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவர் பக்கம் -145)

Read more: http://viduthalai.in/page2/89915.html#ixzz3HD8UyVKv

தமிழ் ஓவியா said...

அட மானங்கெட்டவனே இனியாவது பெரியாரைப் படி...

அட மானங்கெட்டவனே இனியாவது பெரியாரைப் படி...
நான் பெத்த மகனே நில்லு
நான் பட்ட வேதனை கேளு...
முலைவரி கொடுக்கச்சொன்னார்கள்
மனம்நொந்து கொடுத்தோம் ...
இலவசமாய் உழைக்க சொன்னார்கள்
இடுப்பொடிய உழைத்தோம் ...
மணமகளை 'அனுப்ப' சொன்னார்கள்
அழுதுகொண்டே அனுப்பினோம் ...
"செருப்பு அணியாதே சக்கிலியா" என்றார்கள்
'சரி' என்று சொல்லி பணிந்தோம் ...
"தொட்டால் தீட்டுடா பறையா" என்றார்கள்
தயங்கியபடியே தள்ளி நின்றோம்...
"பார்த்தால் பாவமடா பஞ்சமா" என்றார்கள்
புழுங்கியபடி விலகிச் சென்றோம்...
வேசிபுத்திரன் என்றே அழைத்தார்கள்
கூசியபடியே கடந்து சென்றோம்...
சாணிப்பாலை குடிக்கத் தந்தார்கள்
நாணியபடி குடித்துத் தொலைத்தோம்...
சாட்டையால் அடித்துத் தோலுரித்தார்கள்
நாதியின்றி துடித்துக் கிடந்தோம் ..
காரிருளில் வெள்ளி முளைத்தது போல
ஈரோட்டுக்காரன் ஒருவன் வந்தான்...
"சுயமரியாதை உயிரினும் பெரியது "
தாடிக்காரன் சொல்லித் தந்தான்...
சூழ்ச்சிகரச் சடங்குகளை செருப்பால் அடித்தான்
ஏமாற்று வித்தைகளை எட்டி எட்டி மிதித்தான்.
பார்ப்பனியப் பிசாசுகள் பயந்து நடுங்கின
ஆரிய அரக்கர்கள் அஞ்சி ஒடுங்கினர்...
அடடா இனி பயமில்லை - என்
சந்ததிகள் யார்க்கும் அடிமையில்லை
என்றே மகிழ்ந்திருந்தோமடா...
அட சூழ்ச்சியறியாத் தெண்டமே
நான் பெத்த சதைப் பிண்டமே
அந்த தாடிக் கெழவன - நீ
எப்படிடா மறந்த முண்டமே
அப்போ ஓடிப்போன பாப்பான்
இப்போ வேற வடிவத்துல வந்திருக்கான் ...
வாழ ஆரம்பிச்சதும் வயிறு எரியறான்
பைக்குல போனா பதறுறான்
ஜீன்சு போட்டதுக்கு அன்னிக்கு அடிக்கறான்
ஓட்டுப் போடலைன்னு இன்னிக்கு அடிக்கறான்
உன்னோட ஆத்தா கொடுத்த முலை வரியை
உன்னோட பேத்தி கொடுக்கனுமா ...??
வேண்டான்னு நீ நெனச்சா பெரியாரப் படி...
உன்னோட தாத்தா குடிச்ச சாணிப்பால
உன்னோட பேரன் குடிக்கனுமா...??
வேண்டான்னு நீ நெனச்சா பெரியாரப் படி...
"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு"
இந்த ஒருவரி உன்ன உசுப்ப வேண்டாமா...?
நீ மானத்தோட வாழறத பாத்து - இந்த
பெத்த வயிறு குளிர வேண்டாமா...?
பெரியார் என்பது பெயரல்ல சித்தாந்தம்
பெரியார் என்பது பெயரல்ல சுயமரியாதை ...
கல்லைவிட்டு எறிஞ்சா நாய் கூட
கொல்லுனு எதிர்த்து குலைக்குதடா
கொல்லப்புறமா வந்த சாதிவெறி நாயிக
குடிசைய எரிச்சுட்டு போகும்போது
கல்லு மாறி சொரணையில்லாம இருக்கியேடா ...
அடிச்ச அடிக்கு திருப்பி அடிக்கலன்னா
அப்புறம் என்னடா ஆம்பளை நீ....?
அட மானங்கெட்டவனே
இனியாவது பெரியாரைப் படி
இனி எவனாவது அடிச்சான்னா
அப்பவே திருப்பி அடி ....

- தோழர் சம்சுதீன் கீரா

Read more: http://viduthalai.in/page3/89917.html#ixzz3HD95lSrI

தமிழ் ஓவியா said...

உயிர்களைப் படைத்தவன் பிர்மாவா?

உயிர்த் துளியை (க்ரோமோசோம்) உண்டாக்கி கடவுள் நம்பிக்கையை நொறுக்கினர் விஞ்ஞானிகள்.

கலிபோர்னியா மாகாணம் சாண்டி யாகோவில் இருக்கும் ஜேகிரேய்க் வெண்டர் இன்ஸ்டிட்டிட்டில் மைக்ரோ பிளாஸ்மா லேபரேட்டோரியம் எனும் உலகின் மனிதன் படைத்த முதல் செயற்கை உயிர் என்று கருதப்படும் க்ரோமோசோமை கிரேய்க்வென் டரும் அவரது குழுவினரும் உருவாக்கி உள்ளனர். ஆராய்ச்சியின் அதிகார பூர்வ முடிவை இன்னும் சில நாட்களில் அறிவிக்க உள்ளார் கிரேய்க்.

அவரது கண்டுபிடிப்பினைப்பற்றி கிரேய்க் வென்டர் கூறியது:

ஓர் உயிரை அப்படியே அச்சு அசலாகப் பிரதி எடுக்கும் க்ளோனிங் தொழில் நுட்பத்தைவிட உன்னத மானது இது! எந்த இயற்கையான பொருளின் உதவியும் இல்லாமல், பரிசோதனைக்கூட அமிலங்களின் துணை கொண்டே, க்ரோமோசோம் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். இந்த உயிர்த் துளியை அடிப்படையாக வைத்து, நாம் விரும்பும் எந்தவிதமான உயிர் வடிவத்தையும் படைத்துக் கொள்ளலாம். இனி உயிர்களைப் படைப்பது கடவுளிடம் மட்டுமே உள்ள உரிமை அல்ல.

நாங்கள் கண்டுபிடித்த இந்தச் செயற்கை க்ரோமோசோம் ஓர் அஸ்திவாரம் போன்றது. இந்த அஸ்தி வாரத்தின் மேல் நாம் எந்தவிதமான உயிர் அமைப்பையும் உருவாக்கலாம். இந்தச் செயற்கை க்ரோமோசோமை ஒரு செல்லில் புகுத்தினால், அதன் செயல்பாடுகளை கண்ட்ரோல் செய்து, உயிர் கொடுக்க நடவடிக்கைகளைத் தூண்டிவிட்டு, அந்த செல்லின் இயல்பான வளர்ச்சியை வேகப்படுத்தி, முழு உயிரினமான மாற்றி விடும். இதில் இன்னும் அதிநவீனத் தொழில் நுட்ப எல்லைகளைத் தொடும்போது தக்காளி முதல் டைனோசர் வரை நம்மால் படைக்க முடியும்!

கார்பன்டை ஆக்சைடை உட் கொண்டு அழிக்கும் பாக்டீரியாக்களை உருவாக்கினால், குளோபல் வார்மிங், ஒரு கட்டுப்பாட்டுக்கு வரும். கரும்புச் சக்கைகளை நொதிக்கச் செய்யும் பாக்டீரியாக்களை உருவாக்கினால், பியூட்டேன் அல்லது ப்ரோபேன் எரிவாயுக்களை உருவாக்கலாம். இப்படி எங்களது இந்தக் கண்டுபிடிப்பு மனித குலத்துக்கு ஆக்கபூர்வமான விஷயங்களுக்குப் பயன்படும் என்று பெருமையாகக் கூறுகிறார் கிரேய்க் வென்டர்.

(ஆனந்தவிகடன் 17.10.2007 இதழில் வந்த கட்டுரையை ஆதாரமாகக் கொண்டது).

Read more: http://viduthalai.in/page4/89918.html#ixzz3HD9LvFcS

தமிழ் ஓவியா said...

பட்டாசு விபத்தில் மடியும் மனித உயிர்கள்: 15 ஆண்டுகளில் 353 பேர் பலியான பரிதாபம்!


விருதுநகர், சிவகாசி பகுதி பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல், சட்ட விரோதமாக செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், கடந்த 15 ஆண்டுகளில் நடந்த 218 வெடி விபத்துக்களில் 353 பேர் பலியாகி உள்ளனர். இதில் பாரபட்சம் காட்டா மல் அதிகாரிகள் கடுமையான நட வடிக்கை எடுத்தால் மட்டுமே, தொடர் உயிர்பலியை தவிர்க்க முடியும்.

விருதுநகர் மற்றும் சிவகாசி சுற்றுப்பகுதிகளில் 800க்கு மேற்பட்ட பெரிய, சிறிய பட்டாசு ஆலைகள் உள்ளன. நாக்பூர் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை (பெசோ) மற்றும் டி.ஆர்.ஓ.,லைசென்ஸ் பெற்று இவை இயங்குகின்றன. ஏராளமான தொழி லாளர்களின் வாழ்வாதாரமாக திகழ் கின்றன. விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு இயங்கும் ஆலைகளினால் அடிக்கடி வெடிவிபத்து, தொழிலா ளர்கள் உயிர்பலி, படுகாயம் ஏற்படு கிறது. விதிமுறைகள் முறையாக கடை பிடிக்கப்படாததும், தொழிலாளர் களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தாததுதான் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.பட்டாசிற்கு தேவையான மூலப்பொருளான கருந் திரி தயாரிப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிசைத்தொழிலாகவே சட்டவிரோதமாக நடக்கிறது.

ஆலைகளில் விபத்திற்குப்பின் அடுத்த ஒரு சிலநாட்களுக்கு ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகளின் நட வடிக்கை கடுமையாக இருக்கும். ஆனால் அதற்கடுத்த சில நாட்களில் அந்த பரபரப்பு அடங்கிவிடும். தீபாவளி நெருங்குவதையொட்டி மாவட்டத்தில் இந்த ஆலைகளில் விறுவிறுப்பான பட்டாசு உற்பத்தி நடந்துவருகிறது. இதில் விபத்தை தவிர்க்க விதிமுறை களை முறையாக பின்பற்றுமாறு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் கண்டிப்புடன் வலியுறுத்த வேண்டும். விபத்தின்றி பட்டாசு தயாரிப்பதற்கான போதுமான விழிப்புணர்வை தொழி லாளர்களிடம் ஏற்படுத்த வேண்டும். கண்காணிப்பு, நடவடிக்கையை கடு மையாக்கினால்தான் விபத்து, உயிர்ப் பலியை தவிர்க்க முடியும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

வருவாய்த்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பட்டாசு விபத் துக்களில் கடந்த 15 ஆண்டுகளில் 218 விபத்துக்கள் நடந்துள்ளன. 353 பேர் பலி யாகி உள்ளனர். 262 பேர் காயமடைந் துள்ளனர். பட்டாசு ஆலைகளில் விதி முறை மீறல், சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு தொடர்பாக உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த ஆலைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது.

விபத்தை தவிர்ப்பது குறித்து தொழிலாளர்களுக்கும் பயிற்சி யளிக்கப்படுகிறது ,என்றார்.

Read more: http://viduthalai.in/page4/89919.html#ixzz3HD9UnjMS

தமிழ் ஓவியா said...

நிலத்தடி நீரை சேமிப்போம்


இந்திய நகரங்கள் பலவும் தற்போது நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தவிக் கின்றன. தண்ணீரைத் தேடி ராட்சத துளையிடும் எந்திரங்கள் மூலம் பல்லாயிரம் அடிக்கு துளையிட்டாலும் காற்றுதான் வருகிறது. பூமியின் அடிப்பகுதியில் இருந்து பல லட்சம் லிட்டர் நீரை நாம் நாள்தோறும் உறிஞ்சுகிறோம். அதில் 75 சதவீதத்தை கழிவு நீராக மாற்றுகிறோம்.

பூமிக்குள் இருந்து எடுக்கும் நீரில் 4ல் 3 பங்கையாவது மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும். அப்படி நடந்தால் பூமிக்கடியில் இருந்து எப்போதும் தண் ணீர் கிடைக்கும். அதற்கு 2 வழிகள் உள்ளன. முதலாவது மழை நீரை சேமிப் பது, அடுத்தது நிலத்தடியில் இருந்து எடுத்த நீரை, மீண்டும் அங்கேயே சேர்ப்பது. மழைநீர் சேமிப்பு என்பது பூமியின் அடிப்பகுதியில் உள்ள உவர்ப்பு நீரை யும் நன்னீராக மாற்றும். தண்ணீரில் தாது உப்புக்களின் கூட்டுத் தொகை அதிகபட்சம் 500 மில்லி கிராம் இருக்க வேண்டும். அது அதிகரித்தால் நீர் உவர்ப்பாக மாறும்.
இது தொடர்பான ஆய்வின் முடி வுகள் நமது நாட்டில் பெரும்பாலும் நிலத்தடியில் உவர்ப்பு நீர்தான் உள்ளதாக கூறுகிறது. இதனை மழைநீர் சேமிப்பின் மூலம் சரி செய்யலாம்.

அடுத்ததாக நாம் பயன்படுத்திய நீரை மீண்டும் சுத்திகரித்து நிலத்தடியில் செலுத்துவது, கூழாங்கற்கள், ஆற்று மணல், நிலக்கரி, சரளைக்கற்கள் வழி யாக நாம் பயன்படுத்திய நீரை செலுத் தினால் அது பெருமளவு கத்திகரிக்கப் படும். ஒவ்வொரு வீட்டிலும் அதிக செலவு இல்லாமல் இதனை அமைக் கலாம். வீடுகளின் குளியல் அறையில் இருந்து வெளியேறும் நீரை இதுபோல சுத்திகரித்து நிலத்தடியில் சேர்க்கலாம்.

அத்துடன் மழைநீரை சுத்தமான தொட்டிகளில் சேகரித்து குடிநீராக பயன்படுத்தலாம். நிலத்தடி நீர் பற்றாக் குறை அதிகம் உள்ள பகுதிகளில் மழை நீரை பெரிய கலன்களில் சேமித்து அதில் தேத்தான் கொட்டை என்ற ஒரு தாவர விதையை போட்டு மூடி வைத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துகிறார் கள். தேத்தான் கொட்டையின் தன்மை யினால் மழைநீர் அதன் தன்மை மாறாமல் இருக்கும்.

குழந்தைகளின் எதிர்காலம் கருதி பணம், பொருட்களை பலரும் சேமிக் கின்றனர். ஆனால் அவர்களுக்கு நீரும் தேவை என்பதை உணர மறுக்கின்றனர். நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் கருத்தின்படி நிலத்தடியில் நீரை சேமிக்கா விட்டால் நமது சந்ததி களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பது மறுக்க முடியாத உண்மை.

- தகவல்: சீ. இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை-45

Read more: http://viduthalai.in/page4/89920.html#ixzz3HD9d1GEI

தமிழ் ஓவியா said...

பேரறிஞர் அண்ணா


நமது இலட்சியம் அரசியல் வேட் டையல்ல, மந்திரி நாற்காலியல்ல. நாலாறு பெறுவதல்ல. நமது மூதா தையர் ஆண்ட நாட்டை மீண்டும் பெறுவது - புதிய அரசை அமைப் பது, அதுதான் நம்முடைய நோக்கம்.

பல திறப்பட்ட கருத்துக்கள் உலவி ஒன்றோடொன்று போரிடும் தன்மை படைத்ததோர் போர்க்களம்தான் பேச்சு மேடை. அந்தக் களத்திலே பரிசும் உண்டு, பகையும் உண்டு.

- பேரறிஞர் அண்ணா

Read more: http://viduthalai.in/page4/89924.html#ixzz3HD9kfIlM

தமிழ் ஓவியா said...

ஜெவை காப்பாற்றாத யாகங்களும் பூஜைகளும்!


கடந்த காலங்களில் ஜெயலலிதா வின் நலனுக்காகவும், வெற்றிக்காகவும் அவராலும் அவரது தோழியாலும் நடத்தப்பட்ட ஹோமங்கள் 9217

யாகங்கள் 6424 என்றும் அவர்களோடு, அமைச்சர்களும் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் சேர்ந்து கோவில்களில் செய்த அபிசேகங்கள் 27,019 அர்ச்சனைகள் 43,672 என்றும் 86,332 மன்னார்குடி வட்டாரத்திலிருந்து செய்திகள் கசிகின்றன. அவர் பெங் களூருவில் உள்ளே இருந்த காலங் களில் இங்கே இருப்பவர்கள் கிடைத்த ஓய்வில் இந்தக் கணக்கு போட்டார் களோ என்னவோ!

இந்த 86,332 வேண்டுதல்களில் இவர்களின் தொண்டர்களும் அமைச் சர்களும் மண்சோறு சாப்பிட்டதும் அங்கப் பிரதட்சணமும் சேரவில்லை யாம். இத்தனையும் செய்த பிறகுதான் இவருக்கு தண்டனையும், தண்டமும், பதவிப் பறிப்பும் கிடைத்துள்ளது என்பதையும் பிணை கிடைப்பதுகூட தாமதமாகியது என்பதையும் சிந்தித் தால் பெரியார் பெரும் படையின் கடவுள் மறுப்பு எவ்வளவு தீர்க்கமானது என்பது புரியும்.

ஒவ்வொரு பரிகாரமும் பார்ப்பனர் களின் வருமானத்துக்குரியது என்பதால் இந்த 86,332 வேண்டுதல்களால் பயன் (தட்சணை) பெற்ற பார்ப்பனர்களின் எண்ணிக்கை 78,642 என்கின்றனர். இவைகளை சிந்திந்தால் பகுத்தறிவு வந்து விடுமே என்றுதான் இன்னும் கொங்கணேஸ்வரர் கோயில் யாகம், பால்குடம், அங்கப் பிரதட்சணம் என ஊருக்கு ஊர் அசத்துகின்றனர். வக்கீல் களாக, டாக்டர்களாக, முனைவர்களாக பேராசிரியர்களாக உள்ள அமைச் சர்களும் நிர்வாகிகளும் தங்கள் தொண்டர்களுக்கு அறிவு வந்து விடக் கூடாது என்பதில் கவனமாயுள்ளனர்.

இதையெல்லாம் எதிர்பார்த்துத் தான்,தொலைநோக்கு சிந்தனை கொண்ட பேரறிஞர் அண்ணா 70 ஆண்டுகட்கு முன்பே ஏ! தாழ்ந்த தமிழகமே! என்றாரோ!

- தி. சோமசுந்தரத் தேவர், தஞ்சை வட்டம்

Read more: http://viduthalai.in/page5/89925.html#ixzz3HD9zqg2D

தமிழ் ஓவியா said...

கொழுப்பு கூடிருச்சா? உங்களுக்கான உணவுகள்


கொழுப்புப் பிரச்சினையால் அவதிப் படுபவர்கள், ஆரோக்கியமான உணவின் மூலம் அதனை குறைக்கலாம்.

பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண் ணுதல், கொழுப்பின் அடர்த்தியைக் குறைக் கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே, உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். ஆப்பிள் உடலில் கொழுப்புச் செல் களைக் குறைக்க உதவுகிறது. ஆப்பிளின் தோலில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செயல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க் கைகளை நீக்க உதவுகிறது. பீன்ஸ் குறைந்த கொழுப்பையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச் சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. இது நல்ல விதத்தில் கொழுப்பை கரைக்கும் உண வாக விளங்குகிறது.

ஒட்ஸ் உணவு மெதுவாக, செரிமான மாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவைக் கட்டுப் பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப் பைக் கரைய வைத்து துரிதப்படுத்தவும் உதவுகிறது. இப்படி மெதுவாக, செரிமானமாவதால், தன்மையினால் எடையைக் குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும். க்ரீன் டீ எனப்படும் பச்சைத் தேயிலை யில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்ப தோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை.

Read more: http://viduthalai.in/page5/89930.html#ixzz3HDAQ54kX

தமிழ் ஓவியா said...

இதோ ஆர்.எஸ்.எஸ். தலைமையின் கீழ் இயங்கி வரும் பல்வேறு அமைப்புகளின் பட்டியல்

1) அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (மாணவர் அமைப்பு), 2) வித்யாபாரதி (கல்வி), 3) பாரதீய ஜனதா கட்சி (அரசியல்), 4) பாரதீய இந்து பரிஷத், 5) பஜ்ரங்தள், 6) துர்காவாகினி, 7) தரமசன்சட், 8) அகில பாரதீய வன்வாசி கல்யாண் ஆஷ்ரம் (மலைவாசி), 9) பாரதீய மஸ்தூர் சங்கம் (தொழிற்சங்கம்), 10) பாரதீய விவசாய சங்கம் (விவசாயிகள்), 11) ராஷ்டிரிய சேவிகா கமிட்டி (தேசிய மகளிர் கமிட்டி), 12) சேவ பாரதி மற்றும் டாட்சம் (சமூக சேவை அமைப்பு), 13) விஸ்வ விபாக் (வெளியுறவு விவகாரம்), 14) அகில பாரதீய ராஷ்ட்ரிய சேக்சிக் மகா சங்கம் (ஆசிரியர்கள்), 15) பாரதீய சிக்சா மண்டல் (கல்வி), 16) ராஷ்டிரிய சீக்கிய சங்கட் (சீக்கியர்கள் மத்தியில் இந்துத்துவாவை பரப்புவதற்கு), 17) சுதேசி ஜகரன் மன்ச் (பிரச்சாரம், கோடிக்கணக்கான ரூபாய்களை அரசாங்கத்திடமிருந்து பெற்று தங்கள் செயல்பாடுகளை நடத்தி வருகின்றன), 18) தீனதயால் சோத் சன்ஸ்தான் (ஆராய்ச்சி), 19) பாரத் விகாஸ் பரிசத் (வளர்ச்சி செயல்பாடுகள்), 20) பாரதீய இதியாஸ் சன்கலான் யோஜ்னா (வரலாறு), 21) சமஸ்கிருத பாரதி (சமஸ்கிருத மொழி), 22) சன்ஸ்கார் பாரதி (இந்துக்கள் கலாசாரத்தை பெருக்க), 23) அகில பாரதீய ஆதி வக்ஷா பரிஷத் (வழக்கறிஞர்கள்), 24) இந்து ஜகரன் மன்ச் (சிறுபான்மை யினருக்கு எதிராக), 25) சமஜீத் சம்ராஷ்டா மன்ச் (இடஒதுக்கீடு எதிர்ப்பு முன்னணி), 26) அகில பாரதீய சாஹித்ய பரிஷத் (வரலாறு), 27) பரக்யா பாரதி (மதம்), 28) விஜயன் பாரதி (அறிவியல்), 29) லகு யுத்யக் பாரதி (சிறுதொழில் நிறுவனங்கள்), 30) அகில பாரதீய கிரஹாக் பஞ்சாயத் (நுகர்வோர்), 31) ஷேகர் பாரதி (கூட் டுறவு, அதிக அரசு நிதி கிடைக்கப் பட்டு வருகிறது), 32) பூர்வ சைனிக் சேபா பரிஷத் முன்னாள் ராணுவத் தினர்), 33) பாரத் பிரகாஷன் (வெளி யீட்டகம்), 34) சுருச்சி பிரகாஷன், டில்லி, 35) கியான் கங்கா பிரகாஷன், ஜெய்ப்பூர், 36) லோகிட் பிரகாஷன், லக்னோ, 37) அர்ச்சனா பிரகாஷன், போபால், 38) ஆகாஷ்வானி பிரகா ஷன், ஜலந்தர், 39) பாரதீய விசார் சாதனா, நாக்பூர், 40) சாதனா பிரகாசன் குஜராத் மற்றும் இந்தியாவில் உள்ள 10 வெளியீட்டகங்கள், 41) இந்து முன்னணி (தமிழ்நாடு), 42) பிராமணர் சங்கம் (தமிழ்நாடு), 43) தர்ஷக மண்டல (மதத் தலைவர்கள்), 44) முக்தியக்ஞ சமிதி 45) ராமஜென்ம பூமி நியாஸ் மன்ச் (அறக்கட்டளை), 46) கிராமப் பூசாரிகள் சங்கம் (தமிழ்நாடு), 47) சிசு மந்திர் 48) முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச்.

- ஜனசக்தி: 14.7.2014, தகவல்: பஞ்சாபகேசன், திருவண்ணாமலை

Read more: http://viduthalai.in/page5/89932.html#ixzz3HDAgSIB0

தமிழ் ஓவியா said...

இதுதான் கந்தசஷ்டி!

இந்த சுப்ரமணியன் பிறப்பு அல்லது கந்தசஷ்டி என்பது புராண ஆபாசங்களில் மோசமான ஒன்றாகும். ஒரு சமயம் தேவர்கள் எல்லாம் போய் சிவனிடம் கேட்டார்களாம். உலகில் ராட்சதர் கொடுமை அதிகமாகி விட்டது. அதை எங்களால் தாங்க முடியவில்லை. ஆகவே அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு அவர்களை அழிக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற்றுத் தரவேண்டும்" என்று வேண்டினார்கள் . அதற்குச் சிவனும் இணங்கி பார் வதியைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளை பெறும் முயற்சியில் அவளோடு கலவிசெய்ய இறங்கினானாம்.

தொடர்ந்து 1,000 வருடங்கள் கலவி செய்துகொண்டே சிவனும் பார்வதியும் இருந்தார் களாம். ஆனால் குழந்தை பிறக்காததைக் கண்டு தேவர்கள், இனி பிள்ளை பிறந்தால் இந்த உலகே தாங்காது அவ்வளவு வலிமை உள்ளதாக இருக்கும். அது இந்த உலகத்தையே அழித்தாலும் அழித்து விடும் என்று தேவர்கள் கருதி சிவனிடம்சென்று வேண்டிக் கலவி செய்வதை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டனர்.

அதற்கு சிவன், "நீங்கள் சொல்லுவது போல் நிறுத்திக் கொள்வதில் எனக்கு ஒன்றும் ஆட் சேபணை இல்லை. நிறுத்தினால் அதிலிருந்து வரும் வீரியத்தை என்ன செய்வது" என்றதும், உடனே தேவர்கள் தங்கள் கைகளை ஏந்தி அதில் விடும்படிக் கேட்டார்களாம். அதன்படி தேவர்கள் அனைவரின் கையிலும் வீரியத்தைவிட்டு, சிவன் குடிக்கும்படி கூற அவர்களும் குடித்தனராம். மீதி வீரியத்தை சிவன் கங்கையில் விட்டானாம்.

கங்கை அதைத் தாங்காமல் கொதிக்க ஆரம்பித்து விட்டதாம். வீரியத்தைக் குடித்த தேவர்களுக்குக் கர்ப்பநோய் வந்துவிட்டதாம்.

அவர்கள் சிவபிரானிடம் சென்று வணங்கி, தங்கள் கர்ப்பநோய்க்கு மருந்து கேட்க, அவர் அதற்கு 'காஞ்சிபுரத்திலுள்ள சுரகரீஸ்வரர் குளத்தில் மூழ்கினால் கர்ப்பம் கலையும்' என்று கூறினாராம். அதன்படி தேவர்கள் அக்குளத்தில் மூழ்கிக் கர்ப்பத்தைக் கலைத்துக் கொண்டார் களாம்.

கங்கையில் ஓடிய சிவ வீரியமானது, ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடியதால், ஆறு குழந்தைகள் ஆயிற்றாம். அதனை ஆறு பெண்கள் எடுத்து பால் கொடுத்து வளர்த்தனராம். ஆறு பேர்கள் பால் கொடுப்பது என்பது சிரமமாக இருப்பதாக எண்ணி அவர்கள் ஆறுபேரையும் ஒன்றாக அணைத்துப் பால் கொடுக்கையில், முகம் 6 ஆகவும் (தலைகள்) கைகள் 12 ஆகவும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத்தின் கதை யாம். ஸ்கலிதத்திலிருந்து உதித்ததால் ஸ்கந்தன் என்று பெயர் உண்டாயிற்றாம்.

ஸ்கந்தம் என்றால், விந்து என்று பொருள். கந்தன் என்ற சுப்பிரமணியக் கடவுளின் பிறப்பு யோக்கியதையைக் கண்டீர்களா!

Read more: http://viduthalai.in/page-2/90020.html#ixzz3HGTx7wMH

தமிழ் ஓவியா said...

’விடுதலை’யின் கேள்விக்குப் பதில்

விடுதலை, 4.10.2014 இதழின் தலையங்கத்தில், மீண்டும் இராவண லீலா நடக்க வேண்டுமா? என்ற கேள்வியை, பெரியார் தொண்டர்களாகிய விடுதலை வாசகர்களுக்கு ஒரு கேள்வியாகத் தொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு என் பதில்: ஆம்! இராவணலீலா மீண்டும் நடத்தப்படவேண்டும் என்பதே. ஏனைய விடுதலை வாசகர் களும் பதில் கூறட்டும்.

கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிந்தித்து கருத்தை கேட்டு முடிவெடுக்கட்டும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் (குறள் 466)

செய்ய வேண்டியதற்கான நல்ல பல காரணங்களை தலையங்கத்திலேயே காணமுடிகிறது. திராவிட இனத்தை இழிவுபடுத்தும் செயலைத் தடுத்து காக்கத் தவறினால் கெடுதிதானே விளையும்?

எச்சரித்துக்கொண்டுதானே இருக்கிறார்

தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கும் ஆபத்துக்களை ஒன்றன் பின் ஒன்றாக அறிக்கைகள்மூலம் உடனுக்குடன் ஆசிரியர் அவர்கள் எச்சரித்துக் கொண்டுதானே இருக் கிறார். தொடர் வண்டியில் உள்ள அபாயச் சங்கிலியை இழுக்கவேண்டிய நிலை ஏற்படுவதற்கான நிலை உருப் பெற்று வருகின்றது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத் தூண்டில் போட்டு பார்க்கிறார்கள். நட்சத்திர மீன் (STAR FISH) ஏன் இன்னும் மேலாக (SUPER STAR FISH) கிடைக்காதா என்று காத்திருக்கிறார்கள்.

ரத, கஜ, துரக, பதாதி என்ற நால்வகைப் படைகள் என, இந்துத்துவா, சமஸ்கிருதம், கீதை, இந்தி திணிப்பு, ஊடக ஆக்கிரமிப்புப் படைகளென, இன அழிப்பு வேலையில் இறங்கியுள்ளன.

முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் நாளை பள்ளி மாணவர்கள் ஒரு வாரம் கொண்டாட வேண்டும் என்று இன்றைய பிரதமர் கேட்டுக்கொண்டுள் ளார். நேரு ஒரு நாத்திகர் என்பதையும், இராமாயணம் ஆரிய - திராவிடப் போராட்டம் என்று கூறியதையும் மாணவர்கள் அறியச் செய்ய வேண்டும். இந்திமொழித் திணிப்பை ஏற்காதவர் நேரு என்பதையும் மாணவர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டாமா? பிரதமர் மோடி அவர்கள் இதனை செய்வார் என்று நம்பலாமா?

தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வையாலும், இனமானக்காப்பு உந்துதலாலும், இன்று ஓரளவு, தமிழ னென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று பாட்டிசைக்க முடிகிறது. இல்லையென்றால் பார்ப்பன இனம் திராவிட இனத்தை கபளீகரம் செய்திருக்கும். தற்போது சாதகமான காற்று வீசுவதால், இந்துத்துவா படகில் ஆரியம் ஆவேசமாக துடுப்பை சுழற்றுகிறது. இதற்கு அணை கட்ட நம் கழக இளைஞர்கள் தோள் உயர்த்த வேண்டிய காலம் இது அவசரமும் கூட.

திராவிடர் கழகம், இனம், மானம், மொழி, உரிமை காக்க அறப்போராட்டங்களை நடத்தியது புதிய செய்தியல்ல. போராட்டப் புனலில் நீந்தியே வாழ்ந்தவர் தந்தை பெரியார்.

இந்திமொழி ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டம்.

மண் பிள்ளையார் பொம்மையை உடைக்கும் போராட் டம்.

இந்திய வரைபடம் எரிப்புப் போராட்டம்.

கம்பராமாயண எதிர்ப்புக் கூட்டங்கள் இன்னும் பலப்பல.

எனவே இராவணலீலா மீண்டும் மற்றவர்கள் நியாயம் உணரும் வரை நடத்தவே வேண்டும்.

இந்த நேரத்தில் அன்னை மணியம்மையார் நடத்திய இராவண லீலா நிகழ்ச்சியில் பங்கு கொண்டதை நினைத்துப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. காவல்துறை யினர், தொண்டர்களை கைது செய்யும் வேளையில், இராணுவப்பள்ளியில் பணியாற்றிய என்னை, பணிக் கட்டுப்பாட்டைக் கருதி நிர்வாகி சம்பந்தம் அய்யா அவர் கள், மாடியில் இருந்த வீட்டில் இரவு தங்க வைத்ததையும், மறு நாள் உடுமலைப்பேட்டை திரும்பியதும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. இனிமேல் நடக்க இருக்கும் இராவண லீலாவில் கலந்து கொள்வதில் எனக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை.

- மு.வி.சோமசுந்தரம்

Read more: http://viduthalai.in/page-2/90019.html#ixzz3HGU6aK7P

தமிழ் ஓவியா said...

தென்கிழக்கு ஆசியாவில் பெரியார் ஈ.வெ.ரா.வின் பயணத்தின் தாக்கம் என்னும் தலைப்பில் டாக்டர் கி.வீரமணி உரையாற்றுகிறார்


சிங்கப்பூரில் இயங்கிவரும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வு நிறுவனம் சார்பில் நடைபெறும் கருத்தரங்கில் தென்கிழக்கு ஆசியாவில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் பயணத்தின் தாக்கம் என்கிற தலைப்பில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி உரை ஆற்றுகிறார்.

சிங்கப்பூர் 119620, எண் 29, ஹெங் மியூய்கெங் டெர்ரஸ், பி-பிளாக், 9ஆவது மாடி (09-06), அய்எஸ் ஏ எஸ் போர்ட் அறை 28.10.2014 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணிமுதல் 4.30 மணி முடிய கருத்தரங்கு நடைபெறுகிறது.

நிகழ்விடத்துக்கான வரைபடத்துக்கு http://bit.ly/isasmap இணையத்திலும், கருத்தரங்கில் பங்கேற்பாளர்கள் பதிவு செய்வதற்கு http://k-veeramani.eventbrite.sg என்ற இணையத்திலும் தொடர்பு கொள்ள வேண்டுமாய் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிப்பதுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறார்கள். கருத்தரங்கில் வரையறுக்கப்பட்ட இடங்களே உள்ளன.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடம் ஒதுக்கப்படும். jordanang@nus.edu.sg என்கிற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-8/90027.html#ixzz3HGVQhzHQ