Search This Blog

9.10.14

எந்தப் போராட்டத்திலாவது ஒரு பார்ப்பனன் அடி - உதைப்பட்டிருப்பானா?-பெரியார்

பார்ப்பனப் பத்திரிக்கைகள்!


தோழர்களே, திராவிடர் இயக்கத்தைப் பற்றி இன்றைய நிலையிலும் கூட தேசியப் பத்திரிகைகள் என்று கூறப்படும் பார்ப்பனப் பத்திரிகைகள் மக்களிடையே தவறான பிரசாரத்தைச் செய்து வருகின்றன. அதுமட்டுமல்ல, பிற கட்சித் தலைவர்களை மனிதத்தன்மையின்றித் தூஷித்து எழுதி வருகின்றன. வெள்ளையர்களை ஓட்டுவதில் திராவிடர் கழகமும், முஸ்லிம் லீகும் பிற கட்சிகளும் முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக கூப்பாடு போட்டு வந்தன. இதை மக்கள் நம்பி ஏமாந்து இன்று ஒரளவு உண்மை தெரிந்து வருவதுடனல்லாது தேசியப் பத்திரிகைகளின் பித்தாலாட்டத்தைத் தெரிந்து வருகின்றனர்.

இந்நாட்டில் நடைபெறும் வகுப்புக் கலவரங்களுக்குக் காரணம் தேசியப் பத்திரிகைகளின் தூண்டுதலும், போக்குமேயாகும். இப்பத்திரிகைகள் அனைத்தும் பார்ப்பனர்களுடையது; இன்று மத்யசர்க்காரிலிருந்து பெரும்பாலான மாகாணங்களில் ஆட்சி செலுத்துபவர்களும் பார்ப்பனர்கள். எனவே தான் இன்று விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், மற்றும் திராவிட மக்களுக்கும் ஏற்பட்டுள்ள தீராத் தொல்லைகளைப் பற்றி இந்தப் பார்ப்பன பத்திரிகைகள் கண்டித்து ஒருவரிடம் கூட எழுதுவது கிடையாது. அதே சமயத்தில் உண்மைக்கு மாறாக நாட்டு மக்களை ஏமாற்றும் முறை அல்லது அவமதிக்கும் வகையில் ரேடியோ பிரசாரம் வரை பார்ப்பனர்களால் செய்யப்பட்டு வருகிறது. எனது நாட்டு மக்களே! இனியாவது தேசியம் என்ற பேரால் பார்ப்பனர் கொள்ளையடித்து வருவதையும் அத்துடன் அக்கூட்டம் வட நாட்டுக்காரனுக்கும், வெள்ளையருக்கும் தகராயிருந்து நம் நாட்டைச் சுரண்டுவதற்கும் இடம் கொடுக்காதீர்கள்.


தோழர்களே! இன்னும் கூறுவேன் - யான் இவ்வாறு கூறுவதால் நீங்கள் அனைவரும் திராவிடர் கழகத்தில் வந்துவிட வேண்டுமென்று கூறுவதாகக் கருத வேண்டாம். திராவிடர் மக்களாகிய நீங்கள் திராவிடர் கழகத்தில் சேர்ந்தாலும் சேராவிட்டாலும், அல்லது வேறு கட்சியிலிருந்தாலும் "திராவிடன்" என்ற இன உணர்ச்சியடைந்தால் போதுமானது; பார்ப்பானைப் பாருங்கள்! தேசியப் பார்ப்பான் என்று கூறிக் கொள்பவர்களும், தேசியத்திற்கு விரோதிகளாயிருந்து வரும் சர்.சி.பி.ராமசாமி அய்யர் போன்ற பார்ப்பனர்களும், காப்பிக்கடையில் பிளேட் அலம்பும் பார்ப்பனர் வரை அவன் எங்கிருந்தாலும் பார்ப்பனர் என்ற இன உணர்ச்சி, அதற்கேற்ப அவர்களின் போக்கும், பிராமண சேவா சங்கத்தில் எல்லாப் பார்ப்பானும் கூடுகிறார்கள். நாமோ எனில் பார்ப்பனர் பேச்சைக் கேட்டு, நமக்குள்ளாகவே அடித்துக் கொண்டு கட்சி வேற்றுமைகளிலும், ஜாதிப் பிரிவுகளிலும் காலங்கடத்தி இன்று அடிமைகளாக, எடுப்பார் கைப்பிள்ளைகளாக, ஈன ஜாதிகளாக, சூத்திர மக்களாக, வாழ்ந்து வருகின்றோம். எனவே கால நிலை மாறுகிறது; நமக்குள் இனி, இந்த வீண் வம்புகள் வேண்டாம்.

இன்னுங் கூறுவேன். இதுவரை நம் நாட்டில் நடைபெற்ற எந்தப் போராட்டத்திலாவது ஒரு பார்ப்பனன் அடி - உதைப்பட்டிருப்பானா? நம்முடைய இனந்தான் சுயராஜ்யத்திற்காக அடி, உதை, தியாகம், சொத்தழிவு ஆகியவை அடைந்தன. ஆனால், இன்று பலன் கிடைக்கும்போது அத்தனையும் பார்ப்பனர்களுக்கு. அதுவும் தேசத் துரோகப் பார்ப்பனர்களுக்குப் பகிரங்கமாகக் கொடுக்கப்பட்டு வருகிறதே! இதை எனதருமை காங்கிரஸ் திராவிடர்களே, சிந்திக்க வேண்டாமா? எங்களுக்காக மட்டுமா நாங்கள் திராவிடர் இயக்கத்தை நடத்தி வருகிறோம். பொதுவாக திராவிட இனத்திற்காகவல்லவா?


எனவே, திராவிடர் இயக்கம் இந்நாட்டுப் பழங்குடி மக்களும், ஆண்ட சமுதாயத்தினருமாகிய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் முதற் மற்ற எல்லாத் தோழர்களின், பொதுவாக பாட்டாளி மக்களின் உரிமைக்காகவுமே பாடுபட்டு வருகிறது. இதற்கு முட்டுக் கட்டையாக இருந்து துரோகம் செய்து வருவது பார்ப்பனிய - பரங்கியரின் கூட்டுச் சக்தியாகும். அதற்கு உற்ற துணையாயிருந்து வருவதுதான் "பார்ப்பன தேசியப்" பத்திரிகைகளின் இன்றைய போக்காயிருந்து வருகிறது. இத்தகைய சதியை ஒழிப்பது பிரமாதமல்ல; ஆனால், திராவிட இனத்தவர்களாகிய நாம் இன்றுள்ள நிலை போன்ற கட்சிப் பிணக்குகளை விட்டு இன உணர்ச்சி பெற்றால் பார்ப்பன - பரங்கியர் கூட்டுச் சதி மட்டுமல்ல; மற்ற எந்தெந்த சதியும் சக்திகளும் தூள் தூளாகத் தகர்க்கப்படும்.

இன்றில்லாவிட்டாலும், தோழர்களே, இனி வருங்காலத்தில் நம் நாட்டை இன்று இழிவுபடுத்தி வரும் அந்நியர்களாகிய பரங்கியர், பார்ப்பனர், வடநாட்டுக்காரர் ஆகியோரின் சூழ்ச்சிகளை ஒழித்தே தீரப் போகிறோம்" என்ற உறுதி எனக்குண்டு. வருங்கால திராவிட இன உணர்ச்சியை எந்த கூட்டுச் சதியும் அசைக்க முடியாது.

அதுமட்டுமல்ல, எனதருமை காங்கிரஸ் திராவிடர்களே, அப்போது நம்முடன் சேர்ந்து போரிடப்போவது திண்ணம். எனவே காங்கிரசிலுள்ள திராவிடர்கள் எங்களை இதுவரை பார்ப்பனர் பேச்சைக் கேட்டுச் சந்தேகித்து தொல்லை விளைவித்து வந்ததை விட்டு இனியாவது இன உணர்ச்சி கொள்ள வேண்டுகிறேன்.

இந்த அரிய சந்தர்ப்பத்தில் நாம் ஒன்றுபடாவிட்டால் வருங்காலத்தில் நமக்கு வாழ்வில்லாது போய்விடும் என்பதுடன் வெள்ளையனுக்கு அடிமைப்பட்டிருந்தது போன்று வடநாட்டானுக்கும், முதலாளித்துவ ஆட்சிக்கும் திராவிட நாடும் திராவிட இனமும், இன்னும் 300-ஆண்டுகள் கேடுகெட்ட அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதை எச்சரிக்கை செய்கிறேன். இதைத் தொழிலாளர்த் தோழரும் கவனித்து இனியும் தேசியப் பித்தலாட்டத்தில் சிக்க வேண்டாம் என்று எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

அந்நிய நாட்டு வெள்ளையரால் பலன் அடைந்தது அந்நிய நாட்டு பார்ப்பனர்களேயாகும். வெள்ளையருக்கு நாணயமோ, யோக்கியதையோ, நன்றியறிதலோ இருந்திருந்தால் இந்நாட்டை ஆண்ட, உரிமையாளரான மக்களிடந்தானே நாட்டைவிட்டுப் போக வேண்டும்? அதை விடுத்து பார்ப்பனரிடத்தும், வடநாட்டுக்காரனிடத்தும் பேரம் பேசுகிறார்களே இது நேர்மையா, ஏன் இவ்வாறென்றால் நம்மிடையே ஒற்றுமையில்லாததனாலேயே! இரண்டு அந்நிய நாட்டுப் பேர் வழிகளும் நம் நாட்டைப் பங்கு போட முனைந்து விட்டனர். எனவே, வெள்ளையர் ஆதிக்கத்தை காங்கிரஸ்காரர் போன்று பேச்சளவில் இல்லாது நடைமுறையில் ஒழிக்கப் போவது நம் நாட்டைப் பொறுத்தவரை திராவிடர் கழகத்தின் எதிர்கால வேலைகளில் ஒன்று. வெள்ளையனுக்குப் பார்ப்பானும் - மார்வாரியும் வக்காலத்து வாங்க இன்றே ஆரம்பித்துவிட்டனர்.

வெள்ளையனால் அவனது ஆட்சியினால் பலன் அடைந்தது பார்ப்பனியம்; திராவிட இயக்க வளர்ச்சியைக் கண்டு ஆத்திரமடைகிறது. சூழ்ச்சி செய்கிறது. ஏன் அலறுகிறது என்று கூட கூறுவேன். பார்ப்பனியத்தின் கடைசி ஆயுதத்தை பிரயோகித்து நம்மிடையே கலவரத்தை உண்டாக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது. அதில் சிக்காதீர்கள் திராவிடத் தோழர்களே, இனி நாட்டிலே தேசியத்தின் பேரால் கலகம் உண்டாக்கப்பட்டால் என தருமை காங்கிரஸ் திராவிடர்களே நீங்கள் சற்று விலகியிருந்து பார்ப்பனர்களை முன் தள்ளுங்கள். அப்போது வெட்ட வெளிச்சமாகிவிடும் உண்மை.

என்றும் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் கடவுள் தன்மை, ஆகியவைகளைப் பற்றியும் பேசினார். (கூட்டத்தினர் மிக அமைதியாக இருந்து பெரியாரின் பேருரையைக் கேட்டனர்.  சுருங்கக்கூறுமிடத்து பெரியாரின் சொற்பொழிவு சேந்தமங்கலத்தில் ஓர் புத்துணர்ச்சியை உண்டாக்கியிருக்கிறதென்றே கூறவேண்டும்.)


-------------------------------- 19.05.1947- இல் சேந்தமங்கலத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. ”விடுதலை”, 20.05.1947

30 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நந்தி?

சிவன் சந்நிதிக்கு எதிரே நந்தி இருப்பது எதற்காம்? சிவனையும் உமாதேவியையும் தரிசிக் கப் பக்தர்கள் இவரிடம் அனுமதி பெற வேண் டுமாம்.

ஜீவாத்மா பரமாத் மாவை தரிசிக்க குறுக்கே ஏன் நந்தி? என்று பக்தர் களின் சாபத்திற்கு ஆளாக மாட்டாரா இந்த நந்தி?

Read more: http://viduthalai.in/e-paper/89000.html#ixzz3FnKJM8pw

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

அய்ந்து ஆண்டுகளாக நீரிழவு நோயாளியா நீங்கள்? கண்களில் நரம்புத் திரை பாதிப்புக்கு உள்ளாகும். 20 ஆண்டு நீரிழிவு நோயா ளியா நீங்கள்? 100 சதவீதம் இந்த நோய்த் தாக்குதலுக்கு ஆளாவீர்கள்! எச்சரிக்கை!

விஞ்ஞானியின் அறிவுரை

மாணவர்கள் அறிவியலில் கவனம் செலுத்த வேண்டும் என்று நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ள அமெரிக்காவில் வாழும் இந்தியரான ராம மூர்த்தி ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

(இந்தச் செய்தியை வெளியிட்ட ஏடுகள் முதலில் ராசி பலன் போடுவதை நிறுத்துமா?)

என்ன நியாயமோ!

இதய நோய், நீரிழிவு நோய்கள் உட்பட 108 உயிர் காக்கும் மருந்துகளில் விலைக் கட்டுப்பாடு முறையை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்குக் கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியுள்ளது. உச்சநீதி மன்றத்தில் அரசின் முடிவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

(கங்கையை சுத்தப்படுத்து வதுதானே இந்த ஆட்சிக்கு முக்கியம்?)

தங்கமே தங்கம்!

2008இல் தங்கத்தின் மீதான முதலீட்டில் கிடைத்த லாபம் 25.95 சதவீதம்; 2009இல் - 22.77 சதவீதம்; 2010இல் - 23.28 சதவீதம்; 2011இல் - 32.12 சதவீதம்; 2012இல் வீழ்ச்சி (12.49 சதவீதம்).

Read more: http://viduthalai.in/e-paper/89005.html#ixzz3FnKTKlij

தமிழ் ஓவியா said...

30 ஆயிரம் தொழிலாளர்களின் நிலைக்குப் பரிகாரம் என்ன?

சென்னைக்கு அருகே சிறீபெரும்புதூரில் நோக்கியா தொழிற்சாலை கடந்த 2005ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இங்கு, 8,500 நிரந்தர ஊழியர்களும், 6,000 பயிற்சியாளர்களும், 6,000 ஒப்பந்தத் தொழி லாளர்களும் பணியாற்றி வந்தனர். இதனுடைய சார்பு நிறுவனமான பாக்ஸ்கான், பெரலஸ் (லைட் ஆன் மொபைல்) ஆகியவற்றில் சுமார் 7,000 பேர் பணியாற் றினர். இதில், லைட் ஆன் மொபைல் நிறுவனத்தை கடந்த 2 ஆண்டுகளாக கைவிட்டது. இதனால், அந்நிறுவனம் வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து தன்னை தக்க வைத்துள்ளது.

இந்நிலையில், மிகப்பெரிய மென்பொருள் நிறுவன மான மைக்ரோ சாப்ட் நிறுவனம், உலகமெங்கும் உள்ள நோக்கியா நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. இதேபோல், இந்தியாவிலுள்ள நோக்கியா இந்தியா லிட் நிறுவனத்தையும் வாங்கியது. ஒரு நிறுவனத்தை மற்றொருவருக்கு விற்றாலோ அல்லது வேறு நிறுவனம் வாங்கினாலோ இந்திய கம்பெனி சட்டத்தின் அனுமதி பெற வேண்டும். கம்பெனி லா போர்டு, மத்திய, மாநில அரசுகளின் தடையில்லா சான்றிதழ் பெறாமல் ஒரு நிறுவனத்தை விற்கவோ, வாங்கவோ இயலாது.

ஆனால், விற்று முடிந்தவுடன் பொறுப்பேற்க வந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம், நோக்கியா செலுத்த வேண்டிய வரிப் பாக்கியை நீங்கள் செலுத்த வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை நிராகரித்தது. இதனால், நோக்கி யாவிடம் இந்த பிரச்சினையை தீர்த்து கொடுத்தால்தான் இந்தியாவிலுள்ள உங்கள் நிறுவனத்தை ஏற்றுக் கொள்வோம் என இந்திய நிறுவனத்தை மைக்ரோ சாப்ட் கைவிட்டது.

மைக்ரோ சாப்ட் - நோக்கியா ஒப்பந்தப்படி உலகளவில் கைப்பேசி தயாரிக்கும் உரிமம் நோக்கியா நிறுவனத்திற்கு கிடையாது. இதனால், இந்திய நோக்கியா நிறுவனம், இதனை சார்ந்த இதர நிறுவனங்களில் பணிபுரியும் 27,000 தொழிலாளர்களின் நிலை கேள்விக் குறியாகி உள்ளது. நோக்கியா நிறுவனம், மைக்ரோ சாப்ட் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பிரச்சினை முடியும் வரை மைக்ரோ சாப்ட் கம் பெனிக்கு ஒப்பந்த முறையில் கைப்பேசி தயாரிக்கும் நிறுவனமாக வைத்துக் கொள்வதாக நோக்கியாவை ஏற்றுக் கொண்டது.

ஆனால், நோக்கியா நிறுவனம் இந்தியாவிலுள்ள தன் நிறுவனத்தை மூட முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டது. தேர்தலில் வாக்களிக்கும் வரை அமைதி காக்க வைக்கப்பட்டது. தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தவுடன் ஒப்பந்த தொழிலாளர்கள் 10,000 பேரை முதல் வாரத்திலும், அடுத்த வாரத்தில் பயிற்சி யாளர்கள் 6,000 பேரையும் வெளியேற்றின. ஒட்டு மொத்தமாக 30,000 தொழிலாளர்கள் சந்தடியின்றி சிறப்பு பொருளாதார மண்டலத்திலிருந்து காலி செய்யப்பட்டு விட்டார்கள்.

மேக் இன் இந்தியா என்று எந்த வாயால் பிரதமர் அமெரிக்கா செல்லும் முன் அறிவித்தாரோ அந்த வார்த்தை மறையும் முன்னே 30,000 மக்கள் தங்கள் குடும்பத்துடன் தத்தளிக்கப் போகின்றனர்.

30 ஆயிரம் மக்கள் பிரச்சினைமீது மாநில, மத்திய அரசுகள் உரிய கவனம் செலுத்தவில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதில் முந்தைய அரசும் சரி, இன்றைய அரசும் சரி பந்தயக் குதிரைகள்தான். ஆனால், நடைமுறை விளைவுகள் எல்லாம் வேறு மாதிரியாகத்தான் உள்ளன. 13 நாட்களே ஆட்சியில் இருந்த வாஜ்பேயி தலைமையிலான மத்திய அரசு என்ரான் என்னும் பன்னாட்டு நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டது.

மகாராட்டிய மாநிலத்தில் மின் உற்பத்தி செய்ய என்ரான் நிறுவனத்துக்கு உரிமை அளிக்கப்பட்டது. 2001இல் அந்த நிறுவனம் மூடப்பட்டது என்பதெல்லாம் பழைய கதை. என்ரான் நிறுவனத்தின் தலைமை நிருவாகி ஜெஃபரிஸ்கில் லிங்க் செய்த ஊழல் குற்றத்துக்காக அமெரிக்க நீதிமன்றத்தால் 24 ஆண்டு கள் 4 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உண்மையைச் சொல்லப் போனால் தனியார் நிறுவனங்களைவிட பொதுத்துறை நிறுவனங்கள்தான் சிறப்பாகச் செயல்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்காக இந்திய அரசு கொட்டிக் கொடுக்கும் சலுகைகள் வசதிகள், விதி விலக்குகள் கொஞ்ச நஞ்சமல்ல; இருந்தாலும் என்ன பயன்?

நோக்கியாவை நம்பிய 30 ஆயிரம் குடும்பங்கள் நடுத் தெருவில் நிற்கப் போகின்றனவே. ஏற்கெனவே வேலை வாய்ப்பின்மை என்னும் எரிமலை தன் குழம்பைக் கக்கிக் கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில், 30 ஆயிரம் பேர் வேலை இழப்பு என்றால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?

மத்திய அரசு வாய் ஜாலம் காட்டாமல் காரியத்தில் தன் கைத் திறனைக் காட்ட வேண்டும் என்பதே வெகு மக்களின் எதிர்ப் பார்ப்பு!

Read more: http://viduthalai.in/page-2/89013.html#ixzz3FnKmIKKO

தமிழ் ஓவியா said...

மொழியைப்பற்றி...


தமிழனைப்பற்றித் தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் மொழியைப்பற்றி நான் எவ்விதப் பிடிவாதம் கொண்டவனுமல்ல.
(குடிஅரசு, 26.1.1946)

Read more: http://viduthalai.in/page-2/89012.html#ixzz3FnKuS4bF

தமிழ் ஓவியா said...

இதுக்கு பேர்தான், வாயாலேயே வடை சுடறதுன்னு சொல்றது!

- குடந்தை கருணா

நம்ம மோடி ஆட்சிலே, எல்லாமே, வித்தியாசமாத்தான் இருக்குது. நிறைய பேசுறார் இந்த மனுசன். ஊர் ஊரா, நாடு நாடா, போய் பேசுறார். காந்தி பிறந்த நாளைன்னைக்கு, நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு, துடைப்பத்தை எடுத்துக்கிட்டு போய் எப்படி குப்பையை கூட்டறதுன்னு ஒரு கிளாஸ் எல்லோருக்கும் எடுத்தார். அன்னைக்கே, எல்லோரும் இனிமே, கதர் துணியை வாங்குங்க. அப்படி வாங்குனா, ஒரு ஏழைக்கு உதவுற மாதிரி இருக்கும்னு சொன்னாரு. எல்லோரும், ஆகா, எப்படி பாருங்க, நம்ம பிரதமர். ஏழைக்கு எப்படி உதவலாம்னு சொல்றாரு பாருங்க.

இதுக்கு முன்னாடி யாராச்சும் சொல்லியிருக்காங்களான்னு கேட்டாங்க. ஆனா, நம்ம மோடி போடற டிரஸ் இருக்கே, அது கதரா? அப்படின்னு நாம கேட்கக் கூடாது.

அவருக்கு எப்படி டிசைன் டிசைனா டிரஸ் தைக்கறதுன்னு வெளி நாட்டிலிருந்து ஆட்கள் வந்துல்ல, யோசனை சொல்றாங்க. அவரு ஒரு நாள் போட்டுக்குற டிரஸ் இருக்கே, அதுலே, நம்ம ரெண்டு, மூணு, குடும்பம், ஒரு வருஷத்துக்கு, மளிகை சாமான், தாராளமாக வாங்கலாம். அம்புட்டு, சீப்பா, நம்ம பிரதமர் டிரஸ் போடறார்.

அப்புறம், இப்ப தேர்தல் கால மாச்சே. மகாராஷ்டிராவில் பேசுறார். என்னை பிரதமர்னு நினைக்காதீங்க. நான் சேவகன். சாதாரண மக்களுக் காக பாடுபடுற சேவகன். அப்படின் னுட்டார்.

அமெரிக்காவிலே என்ன பேசி னார். அங்கே உள்ள வட நாட்டு குஜராத்திகள், இன்னும் அந்த கூட்டத்துக்கு போன, விவரம் தெரியாத நம்மூர் ஆள்கள் மத்தியிலே பேசினார். என்கிட்டே, பெரிய திட்டம் ஏதாவது இருக் கான்னு கேட்கிறாங்க. நான் சொன் னேன், என்கிட்டே, சின்ன சின்ன திட்டம்தான் இருக்கு. ஆனா பெரிய விளைவு ஏற்படுத்தும்னு பேசினார். கையை தட்டுனான் பாரு, நம்ம ஆளு. அங்க அமெரிக்காவிலே தட் டுனது. இங்கே வரைக்கு கேட்டுச்சு.

ஆகா, இப்படி சாதாரண மக்களுக்குன்னே, பிறந்த ஒரு மனு சனைத்தான்யா நாம தேடிக்கிட்டு இருந்தோம்னு நினைச்சோம்.

வந்தார்யா, அமெரிக்கா போயிட்டு. இப்ப வர பண்டிகைக்கு, எல்லோரும் இருக்குற இடத்திலே கொண்டாடினா சரியா வராதுன்னு, மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு, குடும்பத்தோட ஊர்லே போய் பட்டாசு கொளுத்தலாம்னு கிளம்ப லாம்னு நெனெச்சு, ரயில் டிக்கெட்டை பார்த்தா, அது துறந்த அன்னைக்கே முடிஞ்சிடிச்சுன்னுட்டான். சரி, எப்படியும் சிறப்பு ரயில் உடுவாங் கான்னு நம்மாளு பார்த்துக்கிட்டே இருந்தான்.

மோடியுன் அறிவிச்சார்லே. அது ஸ்பெசல் ரயில் இல்லை. பிரிமியம் ரயில்னு பேரை மாத்தினார். உடனே, நம்மாளு, பாருய்யா, நமக் காக ஆறு ரயிலை தமிழ் நாட்டிலே விட்டாரய்யா. அப்படின்னு, நம்ம தமிழிசையும், ராகவனும் கோரஸ் வேற பாடுனாங்க.

ஆனா, நேரா நம்மாள் டிக்கெட் எடுக்க போய் காலையிலேயே நின்னான். கவுன்டர்கிட்ட போனா, அந்தாள் சொல்றாரு. அய்யா, இங்கே கிடையாது. ஆன்லைன்லே தான் பண்ணனும்னுட்டார். சரின்னு, ஆன்லைன்ல பண்றதுக்கு, இண் டெர்னெட் செண்டர்லே பணத்தை கட்டி, டிக்கெட் எடுக்கலாம்னா, எல் லாரும் ஏற்கனவே, மயக்கம் போட்டு கிடக்கிறாங்க. என்னய்யான்னு கேட்டா, எல்லாம், டிக்கெட் கட் டணத்தை பார்த்து மயக்கம் போட்டாங்கறார், கடைக்காரார்.

அப்படி என்னதான் கட்ட ணம்னு பார்த்தா, சென்னையிலி ருந்து கோயம்புத்தூருக்கு, சாதார ணமா மூன்றாவது ஏசி கட்டணம் ரூ.800 தான். ஆனா, நம்ம சேவகர் மோடி விட்ட பிரிமியம் ரயில்லே, வெறும் ரூ.3032 ஒன்லி. அப்புறம், மயக்கம் என்ன, மாரடப்புல்ல வரனும்.

இதுலே வேடிக்கை என் னான்னா, நம்மாளு ஊருக்கு, தனியா போகலை, குடும்பத்தோட வேற போகனும். என்னாச்சு, ஒரு வழிக்கே, ஆளுக்கு ரூ.3032 வச்சா, நாலு பேரு போறதுக்கு, ரூ. 12000 ஒன்லி. அப்புறம் திரும்புறதுக்கு, மறுபடியும், ரூ. 12000 கிடைச்சா உண்டு. ஆக, ரூ. 24000 கொடுத்தா, கோயம்புத்தூர் நாலு பேர் சொகுசா, பிரிமியம் ரயில்லே போகலாம். நீங்க, முன்கூட்டியே, விமானத்துலே ஒருமணி நேரத்துலே போகனும்னு டிக்கெட் வாங்கியி ருந்தா, ஆளுக்கு, ரூ.1900 கொடுத்தா, போகலாம். அப்ப, போய்ட்டு வர நாலு பேருக்கு, ரூ.16000 தான் வரும். தனியா கார் எடுத்து போனாலே, போய்ட்டு வர ரூ.12000 தான் வரும்.

இருந்தாலும், நம்ம மோடி, அதான் சேவகர் மோடி விட்ட பிரிமியம் ரயில் மாதிரி வருமா? இதுக்கே, நாம பயந்தா எப்படி? இன் னும் புல்லட் ரயில் இருக்கு. அதுலே இன்னும் ஸ்பெசல் எல்லாம் இருக்கு. ஆக, பேசுறது ஒன்னு, நடக்கிறது ஒன்னு. இதுக்கு பேர் தான், வாயாலே வடை சுடறது.

உங்களுக்கு வேணுமா?

Read more: http://viduthalai.in/page-2/89026.html#ixzz3FnL2FVed

தமிழ் ஓவியா said...

விஞ்ஞானியும்-பார்ப்பானும்!


ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சி சாலையில் கண்டறிந்த உண்மை யானது, மறுநாளே, விளையாட்டு சாமான் செய்யும் தொழிலாளியையும் கூட 8 அணா சம்பாதிக்க வைக்கும்படி மேல்நாட்டில் வசதி ஏற்பட்டிருக்கிறது. நமது நாட்டிலோ கோவில் பார்ப்பனன் ஏற்பாடு செய்த புஷ்பப்பல்லக்குக்கு மறுநாளே ஆயிரக்கணக்கான மைல் தூரமுள்ள ஏழைகளின் பணத்தையும் இழக்க வசதி உண்டு.

அரிது! அரிது!!

ஒன்றை ஆக்குதல் அரிது; அழித்தல் எளிது என்பது பழமொழி. இது எல்லா விஷயத்திலும் சரியில்லை. கடவுள் பெயரால் வெகு எளிதாகப் புளுகி வைத்துள்ளார்கள். அவைகளை அழிப்பது மிக அரிதாகவே முடிகிறது.

கடவுளும் மனிதனும்!

கடவுளுக்கும் மனிதனுக்கும் சம்பந்தம் உண்டு! உண்டு!! உண்டு!!! உதாரணம்:- மனிதன் சுருட்டுப்பிடித்து விடும் புகை கடவுளிருக்கும் வானத்தை நோக்கிப் போகிறதல்லவா?

- புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/page-7/89027.html#ixzz3FnLOcNmL

தமிழ் ஓவியா said...

காசியில் இறக்க முக்தி!

சில தொண தொண பேர் வழிகள் எதையாவது எழுதிக் கொண்டு வந்து தங்களது அந்தக் கவிதையை சரிபார்த்து தரும்படியோ அல்லது அதற்கு மதிப்புரை தரும்படியோ புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களிடம் தொல்லை தருவார்கள் காசியில் இறக்க முக்தி, கைலையில் பிறக்க முக்தி என்று இப்படியாக 3 அடிகள் எழுதிய ஒருவர், 4ஆவது அடி தமக்கு வரவில்லை என்றும் அதை முடித்துத் தரவேண்டும் என்றும் ஒருவர் புரட்சிக் கவிஞரிடம் வேண்டினார்.

கவிஞர் தமக்குள் சிரித்துக் கொண்டே காசியில் இறக்க முக்தி, கைலையில் பிறக்க முக்தி எனும் புராண கூற்றினை ஏற்பதில் இல்லை புத்தி என்று கடைசி வரியை முடித்துக் கவிதையை வந்தவன் கையில் கொடுத்தார். வந்தவன் முகத்தில் வழிந்த அசட்டுத் தனத்தைப் பார்க்க வேண்டுமே!

Read more: http://viduthalai.in/page-7/89027.html#ixzz3FnLVZZCy

தமிழ் ஓவியா said...

ஒரு பார்ப்பனரின் கணிப்பு!

தீண்டாமை என்பது சமய சம்பந்தப்பட்டிருக் கிறது. அதை சமய சம்பந்தத்தினால் தீர்க்க முடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைவன் என்ற முறையிலும் உங்களிடம் பேசுகிறேன். நல்ல ஒழுக்கமுள்ள ஹரிஜன் எப்பொழுது சங்கராச்சாரி பீடத்தில் அமருகின்றாரோ அப்பொழுதுதான் தீண்டாமை ஒழிந்ததாக கருதமுடியும்.

-காகா கலேல்கார்
ஆதாரம்: பெரியார் படைக்க விரும்பிய புதிய மனிதன் என்ற நூல்

Read more: http://viduthalai.in/page-7/89027.html#ixzz3FnLbb4oa

தமிழ் ஓவியா said...

லிங்க லீலை!

ஆடல் காணீரோ கூடல் மாநகரில் என்றும் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினையும் நேயமுடன் மானிடப் பிறவிகட்கு எடுத்துரைத்த சிவனென்றும் ஆத்தீகர்களாலே புகழப்படுகின்ற பரமசிவனின் இலிங்க லீலைகள் பலவுண்டு.

ஆண்டு பன்னிரண்டு உருண்டோடி ஆண்டவன் லீலைகளை அகிலத்திற்கு மீண்டும் விளக்கிட மகாமகம் வருகிறது. மாசியிலே மகம் வரும். மனிதர்களுக்கு மதம் எப்போதும் பிடித்திருக்கும்.

மகாமகத்திற்கு ஆத்திகர்கள் சென்று மூடத்தனத்தால் மூத்திரங்கலந்த புனித நீரை பக்திப் பரவசத்தால் பருகிவிடுவர். ஆனால், அரசு அலுவலர்களோ லிங்கமும் அய்ந்து தலைபாம்பும் கொண்ட டாலர் விற்பனையில் ஆர்வங் காட்டியுள்ளனர்.

கண்டனக் கணைகள் துளைக்கின்ற நேரத்தில் இலிங்கத்தின் லீலைகளையும் அரவத்தின் உவமைகளையும் எடுத்தியம்புவது சாலப்பொருத்தம் என்றே கருதுகிறோம்.

பூமியும், நிலவும் சூரியனுக்கு நேர்கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது என்று அறிவியல் கூறுகிறது. ஆத்திகம் பேசுகிறவர்களும் அறிவியலைச் சொல்ல வேண்டிய காலம். பாம்பு பகலவனைக் கவ்விக் கொள்கிறது என்று பழைமைப் புராணம் பாடுகிறது.

அந்தப் புராணத்திற்கு முன்னோடும், பிரபுலிங்க லீலை க்காட்சி இதோ படித்தின்புறுங்கள்.

பாம்பு பகலவனைக் கவ்விக் கொண்டதை போல, பரந்து கிடக்கின்ற மறைவிடத்தை குளிர் சாந்தினைப் பூசியும், முத்துப்போன்ற பற்களாலும், கொலை செய் வேலைப் போன்ற புருவத்தையும் கொண்ட கோடி இந்திராணிகள் வாழ்த்துரை வழங்கினர் என பொருள் லீலையைக் காட்டி நிற்கும் லிங்க லீலையில் சொல்லப்படும் பாம்பின் படம் டாலரில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

பாடலை படிக்கவும்:

அரவு கவ்விய கதிரெனப் பட்டசாந் தாற்றி பரவை அல்குல்வென் முத்துவாள் நகைக்கொலை - பயில்வில்
புருவ மென்மலர்க் குழற்சசி கோடிகள் புகன்று மருவி அம்பிகை மருங்குநின் றசைந்தனர் மன்னோ.

பிரபுங்க லீலை, பக்.23

முனிவனின் மனைவியைப் பெண்டாள நினைத்த சிவபெருமானின் லிங்கம் (ஆண்குறி) இற்று விழக்கடவது என்று முக்காலமும் உணரும் முனிவன் கூறினானாம். மனைவியைக் கூடுவதற்கு முன் அந்த முனிவனால் தன்னுடைய ஞானக் கண்ணால் காணமுடியவில்லையே!

அதுதான் போகட்டும் அந்த லிங்கம் அறுந்து விழும்போது பூமாதேவி தாங்க முடியாமல் தவிப்பாளே என்று பார்வதி தேவி பாய்ந்து தன்னுடைய பெண்ணுறுப்பைக் காட்டி ஏந்திக் கொண்டாளாம். அந்த லிங்கம்தான் டாலர் வடிவில் விற்கப்படுகிறது.

அருவியை, அழகை, மலரை மாலைக் காலத்து கோலஞ் செய் காட்சியை, இன்னோரன்ன இயற்கை யைப் புகழ்ந்த புலவர்கள் ஆண்டவனின் ஆண்குறியையும் அழகுபட அதன் வடிவம் அது ஆற்றியிருக்கும் அருஞ் செயல் லீலைகள் அத்தனையையும் பித்தர்களாகமாறி பிதற்றியிருக்கிறார்கள்.

அவைகளிலே லிங்கத்தின் லீலைகளைப் பாடி மகிழும் சிவப் பிரகாச சுவாமிகள் அருளிய பிரபுலிங்க லீலையைப் பாருங்கள். வீரசைவ மரபில் தோன்றி லிங்கத்தின் ஆறு உருவங்களையும் அழகுபடக் கூறுகிறார்.

1. ஆசாரலிங்கம், 2. குருலிங்கம், 3. சிவலிங்கம், 4. சங்கமலிங்கம், 5. பிரசாத லிங்கம், 6. மகாலிங்கம்.

ஒவ்வொரு லிங்கத்திற்கும் சிறப்புக்கள் உண்டு. அன்றியும் பணிகளும் வெவ்வேறானவை. பாடல் இதோ:

பங்க வளற்று வழிமாற்றி ஒருநல்

வழியைப் பகர்வார் போல் தங்கள் மதியிற்

பலபிதற்றுஞ் சமய ருரைகள் தமை நீக்கி

அங்க நிலையிற் றிலிங்கநிலை யிற்றென்

றருளும் வீரசைவ சிங்க நிலைத்த

அருட்சென்ன வசவன் திருத்தாள்சிரத்தணிவாம்

பிரபுலிங்க லீலை, பக்.5

பொழிப்புரையைத் தருகிறோம்.

குற்றம் பொருந்திய சேற்று வழியை நீக்கி தங்களின் அறிவால் அங்கங்களின் நிலையை இத்தன்மையது என்றும், அதில் இலிங்கங்களின் நிலைமை இத்தன்மையது என்றும் எடுத்துக்கூறிய வீரசைவ வழியிற்சிங்கம்போல் சிறந்தவன் என்று காப்புச் செய்யுளில் கூறுகிறார்.

அந்த இலிங்கங்கள் செய்த லீலைகளை ஏடுகளில் எழுதிக் காட்டி முட்டாளாக்கியது போதாது என்று மகாமக டாலர் உருவில் உலாவந்து கொண்டிருக்கிறது.

ஆறுலிங்கம் மட்டுமா? வைத்தியலிங்கம், பூரணலிங்கம், சங்கரலிங்கம், ஆத்மலிங்கம், அமிர்தலிங்கம், தருமலிங்கம் என்று எத்தனையோ லிங்கங்கள் உலாவருகின்ற ஞானம் செறிந்த பூமி. குகைகளிலே வாழ்ந்து இலைதழைகளைத் தின்று இச்சைக்கு வால்கா முதல் கங்கைவரை என்ற நூலிலே குறிப்பிடுவதைப் போல வாழ்ந்த காட்டு மிராண்டிகளை விட மகாமகப் பித்தர்கள் எந்த வகையிலே சிறந்தவர்கள்.

ஆகையால் தான் தந்தை பெரியார் அவர்கள் கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்கள்.

செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி, திரி, தரு திசையும்
வறிது நிலையிய காயமும் என்றிவை
சென்றளந் தறிந்தோர் போல என்றும்
இளைத்தென் போரும் உளரே (புறம்)
புறமும் உண்டு. புராணமும் உண்டு. இருக்கலாமா?

தஞ்சை ஆடலரசன்

Read more: http://viduthalai.in/page-7/89032.html#ixzz3FnLjs0qc

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் மதம் - தர்மம்


பார்ப்பனர்கள் எந்த காரியத்திலானாலும் எந்தத் துறையிலானாலும் தங்கள் சொந்த ஜாதி (உயர்வு) நலனை அடிப்படையாகக் கொண்டுதான் பார்ப்பார்களே தவிர, மக்களின் பொது நலனைப் பற்றிய கவலையே அவர் களுக்கு ஏற்படுவதில்லை.

பார்ப்பனர் களுக்கு மதம், தர்மம் என்பதே அவர்களது ஜாதி பாதுகாப்பாகத்தான் ஆகி விட்டது

- தந்தை பெரியார் 22.5.1967 விடுதலை தலையங்கத்தில் ஒரு பகுதி

Read more: http://viduthalai.in/page-7/89029.html#ixzz3FnLteemg

தமிழ் ஓவியா said...

கடவுள்களின் தலை எழுத்து!

முருகனும் - கணபதியும்: (பிரமனை நோக்கி) அண்டசராசரங்களையும் படைத்த பிரம்ம தேவரே! யானை முகத்தையும் ஆறுமுகத்தையும் தாங்கிக் கொண்டு நாங்கள் படும்பாடு உமக்கு தெரியாதா? ஏனிந்த சிரமம் எங்களுக்கு?

பிரமன்: மைந்தர்காள்! உங்களுக்குத் தானா அந்த கஷ்டம்? என்னைப் பாருங்கள் - நான்கு தலைகளும் எட்டுக் கைகளுமாக நானுந்தான்.... என்ன செய்வது? எல்லாம் தலை எழுத்தப்பா, தலை எழுத்து!

- திராவிட நாடு 17.3.1946

Read more: http://viduthalai.in/page-7/89029.html#ixzz3FnM14EJd

தமிழ் ஓவியா said...

புத்தர் அறிவுரைகள்

இரக்கத்தோடும் உபகார சிந்தையோடும் இருப்பது மகிழ்ச்சியோடு இருப்பதாகும்.

------------------------

உலகத்தில் உள்ளும் புறமும் அறிவற்ற வஸ்து எதுவும் கிடையாது. உலகத்தின் பொருள்கள் யாவும் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டேயிருக்கின்றன. தோன்றியது அழியும்.

------------------------

கோவணாண்டி கோலமோ ஜடை முடியோ, அழுக்கேறிய உடம்போ, பட்டினி கிடத்தலோ, மண்மீது புரளுவதோ, மூச்சை அடக்கி உட்கார்ந்திருத்தலோ, ஆசையை வெல்லாத ஒருவனை பரிசுத்தவானாக்கி விடாது.

------------------------

முட்டாள்களுடன் கூடி வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல்.

Read more: http://viduthalai.in/page-7/89029.html#ixzz3FnM7NBQj

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நமஹ

சமஸ்கிருதத்தில் மமஹ என்றால் என்னுடை யது என்று பொருள். அதோடு நமமஹ என்றால் என்னுடையது இல்லை என்று அர்த்தம் உண்டா கும். நமமஹ என்பதுதான் நமஹ என்றானதாம். எல் லாம் கடவுளுக்கே சொந்த மானது - நமக்கென்று ஏதும் கிடையாது என்பதை விளக் கவே இந்த நமஹவாம்.

அப்படி என்றால் அந்தக் கடவுளுக்குச் சொந்தமான பொருள்கள் அழிகின்றனவே தீயால், வெள்ளத் தால் - நில நடுக்கத்தால் - அந்த அழிவிலிருந்து அந்தப் பொருள்களைக் காக்க அந்தக் கடவுள் தவறுவது ஏன்?

Read more: http://viduthalai.in/page1/88955.html#ixzz3FnMpEV00

தமிழ் ஓவியா said...

கண்டுபிடித்து விட்டார்களய்யா - கண்டுபிடித்து விட்டார்களய்யா!!

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட 4 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டது. ஜெயலலிதாமீது தொடரப் பட்ட பல வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு பாதகமாக அமைந்த தற்கு பல அரசியல் காரணங்கள் கூறப்பட்டாலும், கோயில் கருவறை சுவாமி சிலைகளை போட்டோ எடுக்க ஜெயலலிதா அரசு உத்தர விட்டதே முக்கிய காரணம் என்கிறார்கள்.

தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்து 600-க்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இவற்றின் கருவறையில் உள்ள மூலவர் சிலைகளை போட்டோ எடுத்து அனுப்பும்படி கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிடப்பட, கருவறையில் உள்ள சிலைகள் போட்டோ எடுக்கப்பட்டன. அதே நேரம், ஆகம விதிப்படி இதுபோன்று படம் எடுக்கக் கூடாது.

தெய்வத்தின் உக்கிரம் காரணமாக தோஷம் தாக்கும் என அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அரசு உத்தரவை மீற முடியாது எனக் கூறி கோயில் செயல் அதிகாரிகள், உதவி ஆணையர், துணை ஆணையர், இணை ஆணையர் அளவிலான அதிகாரிகள் கருவறையில் உள்ள சுவாமி சிலைகள், உற்சவர், புராதன பொருட்கள், வீதி உலா செல்லும் வாகனங்கள் ஆகியவற்றைத் தனித் தனியாக போட்டோ எடுத்து, அதன் விவரங்களை அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 50 சதவீதத்துக்கும் அதிக மான கோயில்களில் இருந்து போட்டோ மற்றும் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கோயில் கருவறையில் இருக்கும் சிலையை அர்ச்சகர்கள் அல்லாத யாரும் தொடக்கூடாது என்று கூறப் படும் நிலையில், சுவாமி சிலைகளை போட்டோ எடுக்க ஜெயலலிதா அரசு உத்தரவிட்டதால்தான் இப்போது அவருக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது என்று சிவாச்சாரியார்கள் மற்றும் அறநிலையத்துறை அதி காரிகள் பேச ஆரம்பித்திருக் கிறார்களாம் எப்படி? (தினமலர் (வேலூர் பதிப்பு) நாள் 30.9.2014)

தகவல்: கு. பஞ்சாட்சரம், திருவண்ணாமலை

அது சரி, எத்தனை வழிபாடுகள், எத்தனை யாகங்கள் இவை எல்லாம் கை கொடுக்காதது ஏன் என்று சிந்திக்க வேண்டாமா!

இந்தக் கோயில் சிலைகள் கடத்தப் படுகின்றனவே -_ அப்பொழுது எங்குப் போனது இந்தக் கடவுள் சக்தி?

Read more: http://viduthalai.in/page1/88947.html#ixzz3FnN0dWyu

தமிழ் ஓவியா said...

இயற்கைத் தடைகள்


நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மையும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத் தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன்மானத்திற்கு இயற்கைத் தடைகள்.
(குடிஅரசு, 9.1.1927)

Read more: http://viduthalai.in/page1/88940.html#ixzz3FnNOo0kA

தமிழ் ஓவியா said...

பகல் கொள்ளை, பகல் கொள்ளைன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னாய்யா?கேள்வி: ஏன்யா, பகல் கொள்ளை, பகல் கொள்ளைன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னாய்யா?

பதில்: அதென்னய்யா, நீ உலகம் புரியாத ஆளா இருக்கிறீயே, சிறப்பு ரயிலை, பிரிமியம் ரயிலை உட்ராறு பாரு, நம்ம மோடி, அதுக்குப் பெயர்தான், பகல் கொள்ளை.

கேள்வி: எப்படிய்யா, பிரிமியம் ரயிலை பகல் கொள்ளைன்னு சொல்றே,

பதில்: பண்டிகை காலத்துலே, கூட்ட நெரிசலை குறைக்க, சிறப்பு ரயில்ன்னு, விடுவாங்க. அந்த சிறப்பு ரயிலுக்கும் அதே கட்டணம்தான். ஆனா, நம்ம மோடி இருக்கார்லே, அதாவது, நான் டீ போட்டவன், சாதாரண ஆள்னு சொல்லிகிட்டு, அதானிங்கிற தொழிலதிபர் விமானத்திலே பறந்துகிட்டு இருக்கிற ஏழை மகராசன், அவர் என்ன செஞ்சிட்டார்னா, சிறப்பு ரயிலை, பிரிமியம் ரயில்ன்னு பேரை மாத்தினார். அதோட, கட் டணத்தை, அய்ந்து மடங்கு உசத்திப்புட்டார். அப்புறம், நீங்க டிக்கெட் வாங்கிட்டு, போக லைன்னா, பணமும் திருப்பி கிடைக்காது.

இப்ப புரியுதா, இதுக்குப் பெயர்தான், பகல் கொள்ளைன்னு.

கேள்வி கேட்டவர்: ஆகா, பேஷா புரியுது. ஆப் கி பார், மோடி சர்க்கார்ன்னு புரியுது.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page1/88905.html#ixzz3FnOxIgvJ

தமிழ் ஓவியா said...

முதலாளிகளின் பின்பலம்


அரசாங்கம் முதலாளிகளுக்கு அனுசரணையாக இல்லையானால், தொழிலாளிகளின் சமூகத்தை எதிர்த்துத் தனிப்பட்ட முதலாளிகள் எத்தனை நாள் வாழ முடியும்?
_ (விடுதலை, 20.1.1948)

Read more: http://viduthalai.in/page1/88901.html#ixzz3FnP6OqFM

தமிழ் ஓவியா said...

பயன்படவேண்டும்

சுக போகத்தினால் இன்பம் காணுவதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காணுவதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்கு ஆகவும், தொண் டுக்கு ஆகவும் நம் வாழ்வு இருக்க வேண்டும் என்று கருதவேண்டும்.

(விடுதலை, 2.7.1962)

Read more: http://viduthalai.in/page1/88858.html#ixzz3FnPbgFia

தமிழ் ஓவியா said...

மதமும் - பக்தியும் படுத்தும் பாட்டைப் பாரீர்!

ஆந்திரா : கோவில் விழாவில் சிறுவன் பலி! பக்தர்கள் பெருங்காயம்!

நகரி, அக். 6 ஆந்திர மாநிலம் கர் னூல் மாவட்டம் தேவரக்கட்டு கிராமத் தில் மாலமல் பேலஸ்வரி தாயார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் வன்னி உற்சவம் நடைபெறும்.

கிராம மக்கள் இரு பிரிவாக பிரிந்து தடி மற்றும் தீப்பந்தங்களுடன் மோதிக் கொள்வதே இந்த விழாவின் சிறப்பம்சமாகும். இதில் வெற்றி பெறும் கிராமத்தில் கோவில் உற்சவர் 1 ஆண்டு பூஜைக்கு வழங்கப்படும். இந்த வினோத திருவிழா நேற்று நடந்தது.

மாலமல்லேஸ்வரி தாயார், பால மல்லேஸ்வரர் சாமி பல்லக்கில் எடுத்து வந்தனர். நீரணி, நீரணிக்க தண்டா, கொத்தப்பேட்டை ஆகிய கிராம மக்கள் ஒரு புறமும், மீலேகால், நித்ர வட்டி, அரிசரா, அரிக்கே தண்டா உள் ளிட்ட பல கிராம மக்கள் மறுபுறமுமாக விழாவில் திரண்டு நின்றனர்.

திடீரென அவர்கள் ஒருவரை யொருவர் தடியால் அடித்தும், தீப்பந் தங்களால் தாக்கியும் மோதிக் கொண் டனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி மகேஷ் என்ற 10 வயது சிறுவன் மிதிபட்டு பலியானான். 68 பேர் பெருங்காயம் அடைந்தனர். இத னால் நிலைமை விபரீதமானது.

விழாவையொட்டி ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தும் அவர்களால் பக்தர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியில் தடியடி நடத்தி பக்தர்களை விரட் டினர். வழக்கமாக சாதாரணமாக தடி யால் அடித்துக் கொள்ளும் பக்தர்கள் இந்த முறை கல்வீச்சிலும், தீப்பந்தங் களை வீசியும் மோதிக் கொண்டார்கள். அதுவே விபரீத முடிவுக்கு காரணமாக அமைந்து விட்டது என்பது காவல் துறையினர் தெரிவித்தனர்.

கண்காணிப்பு கேமிரா மூலம் கல்வீசியவர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். காயம் அடைந்தவர்களில் 4 பேர் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக மருத் துவர்கள் தெரிவித்தனர்.

வைஷ்ண தேவியின் ஆசி?

ஜம்மு, அக்.6- வட இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்த லங்களில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பகுதியில் அமைந்துள்ள வைஷ் ணவ தேவி ஆலயமும் ஒன்றாகும்.

கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 5200 அடிகள் உயரத் தில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு ஆண்டு தோறும் சுமார் 8 லட்சம் பக் தர்கள், அன்னை வைஷ்ணவி தேவியின் அருள் வேண்டி வருகின்றனர்.

திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவி லுக்குப் பிறகு மிகவும் அதிகமாக பக்தர் கள் திரளாக வந்து இறைவனை வழி படும் இடங்களில் ஜம்மு வைஷ்ணவி தேவி ஆலயம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வ தற்காக வந்த சிலர் கத்ரா என்ற இடத் தில் இருந்த மலயடிவார முகாமில் தங்கியிருந்தனர். அவர்களில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அஷோக் பாபா என்பவர் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் சுருண்டு விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். களக்காட்டில் தசரா விழாவில் மேளக்காரர் மீது தாக்குதல் களக்காடு, அக்.6 களக்காட்டில் தசரா விழாவையொட்டி நேற்று முன்தினம் சத்திய வாகீஸ்வரர் கோவில் முன்பு அப்பகுதியை சேர்ந்த கோவில் களின் சப்பரங்கள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செண்டை மேளம் வாசிப்பதற்காக அம்பை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுதன் (22) மற்றும் அவரது குழுவினர் வந்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த களக்காடு கோட்டை யாதவர் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (25) மற்றும் 10 பேர் , சுதனிடம் நீ சரியாக மேளம் வாசிக்க வில்லை என்று கூறி அவரிடம் தகராறு செய்தனர். தகராறு முற்றவே வெங்க டேஷ் உள்பட 10 பேரும் சேர்ந்து சுதனை சர மாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர் பாளை அரசு மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். இது குறித்த புகாரின் பேரில் களக் காடு காவல்துறையினர் விசா ரணை நடத்தி 11 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page1/88802.html#ixzz3FnQS2C46

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

சொல்லுவது பிஜேபி

செய்தி: மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா ஆட்சியில் அம்மாநிலம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது.
- பி.ஜே.பி.

சிந்தனை: ஆர்.எஸ்.எஸின் தீவிரவாதத்தையும் கடந்த பயங்கரவாதத்தைவிடவா? இதன் அடிப்படை அணுகு முறையே வன்முறைதானே! பாபர் மசூதி இடிப்பு ஒன்று போதாதா? இந்துக் கடவுள்களின் கையில் ஆயுதங்கள் இருப்பதன் பொருள் என்ன?

Read more: http://viduthalai.in/page1/88801.html#ixzz3FnQaLEHJ

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உம்மிடம் அடைக் கலம் புகுவோர் அனை வரும் மகிழ்வர். அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப் பரிப்பர். நீர் அவர்களைப் பாதுகாப்பீர்! உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர்.
- திருப்பாடல் 4:3

அன்றாடம் உம்மை (கடவுளை) அண்டி கோவில்களைச் சுற்றிக் கூடிக் கிடப்பவர்கள் பிச்சைக்காரர்கள்தாம்! அடைக்கலம் புகுவோர் நிலை இதுதானே?

Read more: http://viduthalai.in/page1/88796.html#ixzz3FnQlj94S

தமிழ் ஓவியா said...

உலகத் தாய்மொழிகள் நாள்
6-10-2014

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய நம் தமிழ் மொழி, உலகில் எந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகளைக் கொண்டது நம் உயிரினும் மேலான தமிழ் மொழியை ,இந்த உலகம் இருக்கும் வரை வாழ வைக்க வேண்டும். இதை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாய் கொள்ள வேண்டும் . இன்று முதல் பேச்சு வழக்கில் உள்ள ஆங்கிலச் சொற்களை நீக்கி, தமிழ் சொற்களை பயன்படுத்த உறுதி ஏற்போம்!

நமது தாய்மொழியான தமிழ் இன்று இந்துத்துவ மனநிலை கொண்ட ஆட்சியா ளர்களால் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. தொலைக்காட்சியில் இதுகாறும் இந்தி விளம்பரங்களை தமிழாக்கம் செய்து ஒளிபரப்பி வந்த வர்கள். இன்று நேரடியாக எந்த ஒரு விளக்கமும் இன்றி இந்தியில், ஒளிபரப்பி வருகிறார்கள். அவர்கள் எண்ணம் தெளிவாகத்தெரிகிறது அதாவது 2016-ஆம் ஆண்டிற்குள் இந்தியை தமி ழகத்திற்குள் கொண்டு வந்து விட வேண்டும். மொழிக்கலப்பு ஏற்பட்டு விட்டால் எளிதில் மக்களைக் குழப்பி தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் திட்டமாகத்தான் தொடர்ந்து சமஸ்கிருதவாரம், இந்தி வளர்ச்சி அமைப்பு, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அதிகாரிகள் நிலையில் கட்டாயம் இந்தி கற்றல், மற்றும் குரு உத்சவ் போன்றவை. அதே போல் விளம்பரங்களில் எல்லாம் இந்தி மொழிச் சொற்களை அப்படியே தமிழில் மாற்றி எழுதும் போக்கும் தற்போது மிகவும் அதிகரித்து விட்டது, சமீபத்தில் வந்த பாரத் சுவச்சா அப்யான் என்ற புரியாத ஒன்று ஒருபக்கத்திற்கு விளம்பரமாக வந்திருந்தது, அதில் இந்தி மொழிச் சொற்கள் அனைத்தும் தமிழில் அச்சாகி இருந்தன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழனின் காலத்தில் அவனால் ஆதரிக் கப்பட்ட பார்ப்பனர்கள் தமிழ் மொழிச் சொற்களில் வடமொழியை எழுதிவந் தார்கள். அதனால் தான் பெரியார் தனித்தமிழ் இயக்கம் ஆரம்பிக்கும் வரை இன்று நாம் பெருமையுடன் கூறும் வணக்கம் வழக்கில் இருந்து அழிந்து, நமஸ்காரமாகி இருந்தது. இப்போதும் கூட கிராமங்களில் நமஸ்காரம் சாமி என்று சொல்லும் வழக்கம் இருப்பதை நாம் கவனித்திருக்கக் கூடும். மீண்டும் பார்ப் பனர்களின் ஆதிக்கம் நமது தாய் மொழியைச் சிதைக்கும் வேலையை மிகவும் தீவிரமாகச் செய்து வருகிறது. ஆனால் நாம் இதைப் பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் தமிழில் பேசுவ தற்கும், எழுதுவதற்கும் நிறைய வெட்கப் பட்டு தாய்மொழியில் பேசுவதை, எழுதுவதை தவிர்த்து வருகிறோம்.
ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷ்ய நாடு தமிழைக் கொண் டாடுகிறது என்றால் வியப்பாக இருக்கிறதல்லாவா? அந்நாட்டு அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளனர். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷ்யத்திலும், இரண் டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும்,உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள். தமிழை விட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்பட் டாலும் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு

தமிழ்மொழியில் தங்கள் நாட்டு அதிபர் மாளிகையின் பெயரை எழுதிய தற்கு அவர்கள் கூறும் காரணம் தமிழர் களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக உள்ளது.
"உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை.அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சமஸ்கிருதம் ஆகியவை. இந்த ஆறு மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக்கில் இல்லை.இலக்கியம், வரலாற்றுச் செழுமை பெற்ற மொழிகளை ஆராய்ந் தோம். எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக "தமிழ் மொழி" தென்பட்டது. அந்த மொழி யைச்சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை" என தமிழில் எழுதியுள்ளோம் என்கின்றனர். உலகத் தாய்மொழி நாளில் நாம் தமிழ் மொழிக்கு உரிய மரியாதையளிப்போம் முடிந்தவரை எளிமையான வடமொழிக் கலப்பில்லாத தூய தமிழிலேயே பேசுவோம்.

Read more: http://viduthalai.in/page1/88806.html#ixzz3FnQyiMAQ

தமிழ் ஓவியா said...

பிரச்சாரக் கதைகள்

திராவிட மக்களை ஆரிய வலையில் விழச் செய்து அவர்களைத் தன்மான மற்றவராக, பகுத் தறிவற்றவராக ஆக்கி மனிதத் தன்மையை இழக்கச் செய்யும் பிரச்சாரக் கதைகளே பாரதம், இராமா யணம், பாகவதமாகும்.
(விடுதலை, 18.2.1968)

Read more: http://viduthalai.in/page1/88803.html#ixzz3FnR8GNA7

தமிழ் ஓவியா said...

நாக்பூரின் காகபட்டருக்கு இல்லாத அதிகாரமா?

- குடந்தை கருணா

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நாக்பூரில் அமைந்துள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் விஜயதசமி நாள் என உரையாற் றினார். ஆர்.எஸ்.எஸின் துவக்க நாளும் இது தான். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் அதன் தலைவர் உரையாற்றுவது உண்டு. அது ஒரு செய்தியாக மறு நாள் செய்தித்தாளில் வரும்; சில தொலைக்காட்சிகளிலும் சில நொடிகள் அல்லது ஒரு நிமிடம் செய்தியாக ஒளிபரப்பியதும் உண்டு.

ஆனால் இந்த ஆண்டு, மோகன் பகவத்தின் முழு உரையும் நேரடி ஒளிபரப்பாக அரசுத் தொலைக் காட்சியில் ஒளிபரப்பபட்டுள்ளது. அரசின் இயந்திரம், ஆர்.எஸ்.எஸி-ன் பிரச்சாரத்திற்கு துணைபோவதாக எதிர்கட்சிகள்கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், மோகன் பகவத்தின் நிகழ்ச்சி ஒரு முக்கிய நிகழ்ச்சி என்பதால் ஒளிபரப்பி னோம் என அரசுத் தொலைக் காட்சியில் இயக்குநர் பதிலளித் துள்ளார். இயக்குநரின் பதில் முட்டாள்தனமானது என சி.பி.எம். தலைவர் பிருந்தா காரத் கண்டித் துள்ளார்.

ஆர்.எஸ்.எஸில் முழு நேர பிரச் சாரகராக இருந்து அமெரிக்காவிற்கு மூன்று முறை பிரச்சாரத்திற்கு சென்று வந்தவர்தான் இன்றைக்கு பிரதமராக பதவி வகிக்கும் நரேந்திர மோடி.
ஆகவே, அவரது ஆட்சியில் அவரது தலைவருக்கு இல்லாத உரிமையா? அல்லது அதிகாரமா? அரசுத் தொலைக்காட்சியில் ஒளி பரப்பியதோடு விட்டு விட்டாரே; அதனையும் தாண்டி, அனைத்து பள்ளிக்குழந்தைகளும், அனைத்து அரசுப் பணியாளர்களும் இந்த நேரடி ஒளிபரப்பை கேட்க வேண்டும் என உத்தரவிடாமல் விட்டாரே என நாம் மகிழ்ச்சி அடைந்து கொள்வதைத் தவிர வேறு வழி?

இதைவிட மிக முக்கியம், மோகன் பகவத் பேச்சில் மூன்று முக்கிய செய்திகள் கூறியதைத் தான் நாம் கவனிக்க வேண்டும்.

ஒன்று, இந்த நாடு பல ஆயிரம் ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்து உண்மையையும், அகிம்சை யையும் போதித்ததாம். இந்த தேச எண்ணத்திற்குக் காரணம் ஹிந்துத்துவா என்கிறார் மோகன் பகவத். ஆக இந்த நாட்டில் மன் னர்களிடையே சண்டை நடந்தது; மக்களிடையே பிறவி பேதம் இருந்தது எல்லாம் பொய் என்கிறார், ஆர்.எஸ்.எஸ். தலைவர்.

இரண்டு, இப்போது பதவி ஏற்றுள்ள மோடி அரசு, இந்த நாட்டின் மிகப் பெரிய தலைவர்கள் தங்களது தொலைநோக்குப் பார்வையாலும், அனுபவத்தாலும் சொன்ன செய்திகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். சரி. யார் அந்த தலைவர்கள், லோகமான்ய பாலகங்காதரத் திலகர், வீர சவர்க்கார், குரு கோல்வார்க்கர், பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா இவர்களோடு, காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகியோரையும் சேர்த்துக் கொண்டார். லோகியாவாதிகளும், அம்பேத்கரிஸ்டுகளும் கவலைப்பட வேண்டும். பெரியாரும், ஜோதிராவ் பூலேயும் இவரிடமிருந்து தப்பித்து விட்டனர். சவர்க்காரும், கோல் வால்கரும் அகண்ட பாரதம் உருவாகிட வேண்டும், சிறுபான்மை யினர் தங்களது அடையாளத்தை இழந்து ஹிந்து மதக் கொள்கையை ஏற்க வேண்டும் என்ற பாசிச சிந்தாந்தத்தை கூறியவர்கள்.

மூன்றாவது, இதுதான். மிக முக்கியமானது தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டிலும், கேரளாவிலும், புனிதப்போர் எனப்படும் தீவிரவாத நடவடிக்கை கள் அதிகரித்துள்ளன. இதனை தடுக்க மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆக, தமிழ் நாட்டில் காலூன்ற, தீவிரவாதம் என்ற பெயரைச் சொல்லி, மத்திய அரசின் உளவுத்துறை பாஜக காலூன்ற வழிவகை செய்கிறது என்பதை மோகன் பகவத்தின் உரை நமக்கு தெளிவுபடுத்துகிறது.

தமிழகம் என்றைக்கும் வன் முறையை ஓர் ஆயுதமாக பயன் படுத்தவில்லை; காரணம் இது பெரியார் பிறந்த மண்.

ஆனால், இன்று, மோகன் பகவத் பேச்சை நம்பி, மோடி செயல்படு வாரானால், வரலாறு விட்டுச்சென்ற செய்தி நமக்கு நினைவுக்கு வருகிறது. சூத்திர மன்னன் மராட்டிய சிவாஜி, ஆட்சியில் அமர்ந்ததும், காசியி லிருந்து காகபட்டர் வருகை தந்து, சிவாஜிக்கு உபதேசம் செய்ததன் விளைவு, சிவாஜியின் பேரரசு வீழ்ந்ததுதான் வரலாறு. அதே போல், இன்றைய நவீன காகபட்டராக இருக்கும் நாக்பூர் மோகன் பகவாத் பேச்சை கேட்டு மோடி செயல்பட் டால், அவருக்கும் சிவாஜிக்கு ஏற் பட்ட நிலைமைதான் நிச்சயம் ஏற்படும்.

Read more: http://viduthalai.in/page1/88812.html#ixzz3FnRGvgzc

தமிழ் ஓவியா said...

முப்பது வயதிலேயே முதுகுவலி!

புகைப்பிடிப்பவர்களுக்கு சவ்வில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அடிமுதுகுவலி வரும். ஆல் கஹால் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு எலும்பு நலிவடைந்து வலி ஏற்பட வாய்ப்பு இருக் கிறது. ஆரோக்கியத்தை இழந்து 30 வயதுக்குள்ளேயே மருத்துவமனைகளின் வரவேற்பறைகளில் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் எக்கச்சக்கம்.

இந்த ஆரோக்கிய அச்சுறுத்தலில் முதுகுவலிக்கு முக்கிய இடம் உண்டு. உடல் உழைப்பு குறைந்ததும், கணினிக்கு முன்னால் நாள் முழுக்க அமர்ந்து இருக்கிற வேலைகளுமே முதுகுவலிக்கான காரணம் என மேலோட்டமாகப் புரிந்துகொள்ள முடியும்.

எலும்பு மற்றும் முடநீக்கு இயல் நிபுணர் சு.ரமேஷ் பாபு இது குறித்து விரிவாகப் கூறுகிறார்: கழுத்துப் பகுதி, நடுமுதுகுப் பகுதி, அடிமுதுகுப் பகுதி, வால் பகுதி என்று நான்கு பகுதிகளாக முதுகைப் பிரிக்கலாம். இளைஞர்களிடம் பொதுவாக கழுத்து மற்றும் அடிமுதுகுப் பகுதிகளில்தான் வலிகள் ஏற்படுகின்றன.

இந்த இரண்டு வகை முதுகுவலிகளும் உட்காரும் முறை, நடக்கும்முறை, அதிக உடல் எடை போன்ற பழக்க வழக்கங்களினாலேயே பெரும்பாலும் ஏற்படுகின்றன. அரிதாக அலர்ஜி, நோய்த்தொற்று போன்ற காரணங்களால் நடுமுதுகுப் பகுதியிலும் வலி ஏற்படலாம்.

கழுத்து வலி ஏன் வருகிறது?

கழுத்துப் பகுதியில் மொத்தம் 7 எலும்புகள் இருக் கின்றன. இந்த எலும்புகளின் இருபுறமும் சவ்வுகளும் சின்னச் சின்ன இணைப்புகளும் இருக்கின்றன. இதில், உடலுக்கு ஏற்படும் அதிர்வுகளை உள்வாங்கிக் கொண்டு முதுகெலும்புக்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பதுதான் சவ்வுகளின் வேலை. நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு சவ்வில் அழுத்தம் ஏற்பட்டு கழுத்து வலி வரலாம்.

சவ்வில் அழுத்தம் அதிகமாவதால் சவ்வு விலகி அருகில் இருக்கும் நரம்புகளைத் தொடும். இதனால் கைகளிலும் வலி ஏற்பட்டு மரத்துப் போவது, பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு கைகளில் தோன்றும்.

தவிர்ப்பது எப்படி?

படுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது, புத்தகம் படிப்பது கூடாது. தூங்கும்போது மெலிதான தலை யணைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒன்றுக்கும் அதிகமான தலையணைகள் பயன்படுத்தக் கூடாது. கழுத்துப் பகுதி, நடு முதுகுப் பகுதி, அடிமுதுகுப்பகுதி, வால் பகுதி என அந்தந்தப் பகுதிகளுக்கு என தனிப்பட்ட பயிற்சிகள் இருக்கின்றன. மருத்துவரிடம் கலந்தாலோசித்து விட்டு அதற்கான பயிற்சிகளைச் செய்யவேண்டும்.

அடிமுதுகுப் பகுதியில் வரும் வலி ஏன்?

அதிக நேரம் உட்கார்ந்து பணிபுரிபவர்களுக்கு அடிமுதுகுப் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்படுவதால் சவ்வு தேய்மானம் அடைந்து இடம்மாறும். சவ்வில் ஏற்படும் அழுத்தம் காரணமாக அடிமுதுகுப் பகுதியில் வலி வரும். இந்த வலி அடிமுதுகிலிருந்து கால்களுக்கும் பரவும். நீண்ட நேரம் நிற்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு இந்த அடிமுதுகுப் பகுதி வலி அதிகமாக ஏற்படுகிறது. இரவு நேரப் பணி, எப்போதும் ஏசியின் பயன்பாடு போன்றவற்றால் வைட்டமின் டியை தரும் சூரிய ஒளி உடலில் படுவதில்லை.

எனவே, வைட்டமின் டி குறைபாடு இன்றைய இளைஞர்களுக்கு அதிகமாக இருக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டால் கால்சியம் சத்தை உடல் உள்வாங்கிக் கொள்வதும் குறையும். எலும்புக்கு ஆதாரமான இந்த இரண்டு சத்துகளும் குறைவதால் தசைகள் பலவீன மடைந்து அடிமுதுகில் வலி ஏற்படும்.

நீண்ட தூரம் பயணம் செய்வதாலும் அடிமுதுகுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாகிறது. போதுமான உடற்பயிற்சி இல்லாததும் ஒரு முக்கியக் காரணம். சமீபத்திய ஆய்வுகளில் புகைப்பிடிப்பவர்களுக்கு சவ்வில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அடிமுதுகு வலி வருவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆல்கஹால் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு எலும்பு நலிவடைந்து வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

நீண்ட தூரப் பயணங்களாக இருந்தால் ரயிலில் செல்வது சிறந்தது. பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தால், முன்பகுதி யிலேயே அமரவேண்டும். பின்பக்கம் சாய்ந்து நிமிர்ந்து உட்கார வேண்டும். நீண்ட தூரப் பயணத்துக்கு இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது. வேகத்தடைகளில் நிதானமாகச் செல்வதும், பழு தடைந்த சாலைகளைத் தவிர்ப்பதும் நல்லது. சீக்கிரம் செல்லலாம் என்று குண்டும் குழியுமான குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவது முதுகுவலியை வரவழைக்கும்.

முதுகுவலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

முதுகுவலி வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் என்று பரிசோதனைகள் செய்து பார்த்தால் என்ன பிரச்சினை என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.

நோய்த் தொற்று, ரத்த ஓட்டத்தில் தொந்தரவு, எலும்புத் தேய்மானம், அடிமுதுகுப் பகுதியில் அரிதாக புற்று நோய்கூட வரலாம். அதனால், வலி ஏற்பட்டால் நாமே மருந்து எடுத்துக்கொண்டு அலட்சியமாக இருக்கக் கூடாது!

Read more: http://viduthalai.in/page1/88783.html#ixzz3FnRwRbmS

தமிழ் ஓவியா said...

காது குடையலாமா?


அடிக்கடி காதை சுத்தம் செய்வதும் பிரச்சினை தான்... சுத்தம் செய்யாமலே விட்டு வைத் திருந்தாலும் சிக்கல்தான்!

உடலில் ஏற்படும் அழுக்கு, வியர்வை, துர்நாற்றத்தைப் போக்கி, சுறுசுறுப்பாகச் செயல்படுவதற் காகவே நாள்தோறும் குளிக்கிறோம். அதேபோன்று, நமது காதின் வெளிப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் மெழுகு சுரப்பதையும் சுத்தம் செய்யவேண்டும். அப்படி சுரக்கும் மெழுகுகூட ஒரு வகையில், நம் ஆரோக்கியத்துக்கு நல்லதுதான்.

உண்மையில் காதில் பரவும் பாக்டீரியா மற்றும் காளான்களை மெழுகு அழிக்கிறது. கிருமிகள் அதிகரிக் காமல் தடுக்கும் ஒரு வகை மருந்தாக மெழுகு இருக்கிறது. சிலருக்கு காதில் அதிகமாக மெழுகு சேரும். அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பார்கள். சிலர் நாள்தோறும் காதில் ஏற்படும் மெழுகை ஒரு வேலையாகவே சுத்தம் செய்வார்கள். இது நன்மையா? தீமையா? எப்படிச் சுத்தம் செய்வது?

நாள்தோறும் நாம் காதில் சுரக்கும் மெழுகை சுத்தம் செய்வதனால் மட்டும் மெழுகு குறையாது. அதற்காக காதை சுத்தம் செய்யாமல் இருப்பதனாலும் பிரச்சினைகள் உருவாகும். மெழுகை சுத்தம் செய்யாமல் இருப்பவர் களுக்கு, என்றைக்காவது ஒருநாள் முக்கியமான இடத்தில் இருக்கும் போதுதான் காதில் பயங்கரமாக முணுமுணு என அரிப்பு கிளம்பும்.

அப்போது, கையில் எது கிடைக்கிறதோ, அதைக் கொண்டு காதை சுத்தம் செய்வார்கள். ஊக்கு, கொண்டை ஊசி, தீக்குச்சியின் கீழ்ப்பகுதி, பென்சிலின் அடிப்பகுதி என பலவற்றையும் காதில் போட்டு குடைவார்கள். இதுபோன்ற பொருள்கள் நடுக்காது வரை நுழைவதால், காயங்கள் ஏற்பட்டு தொற்றுக்கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது.

காதுக்கு எந்தப் பாதிப்பும் இன்றி பொறுமையாகவும், மென்மையாகவும் சுத்தம் செய்யவேண்டும். தினமும் குளித்துவிட்டு வெளியே வந்தவுடன், டவல் அல்லது கைக்குட்டையின் நுனியை வைத்து சுத்தம் செய்யலாம். அது குளிக்கும்போது காதினுள் செல்லும் தண்ணீரை வெளியே கொண்டு வரும். பாதுகாப்பான முறையில் தரமான பட்ஸ் கொண்டு தேவையான போது சுத்தம் செய்வதே நல்லது.

காதில் வலி, சீழ் வடிவது, இரைச்சலாக இருப்பது, காது சரியாக கேட்காமல் இருப்பது போன்ற அறிகுறிகள் ஏதும் இருந்தால், உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

Read more: http://viduthalai.in/page1/88786.html#ixzz3FnS5xgTu

தமிழ் ஓவியா said...

இரவில் நன்றாக தூங்க...

தூக்கமின்மை என்பது நம்மில் நிறையபேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகும். அல்லது நாள்தோறும் வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.

அதை எப்படியாவது சரி செய்துவிடவேண்டும் என்று பாதிக்கப்பட்ட அனைவரும் படித்து கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு நமது தூக்கமின்மையை போக்குவதற்கு முயற்சி மேற் கொள்வோம்.

அப்படி தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்து தவிக்கும்போது , ஒன்றிலிருந்து 100 வரை எண்ணவேண்டும். நூறு எண்ணி முடிப்பதற்குள் உறக்கம் வந்துவிடும். பலன் என்னவாக இருக்கும்னு, நினைக்கிறீங்களா? வேறு ஒன்றுமில்லை, குழப்பம்தான். சில சமயம் நூறு எண்ணி முடிப்பதற்குள் தூக்கம் வந்துவிடும். பல சமயங்களில் 1000 வரை எண்ணிக் கொண்டி ருந்தாலும்கூட தூக்கம் வராது.

ஆனால், இப்போது, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள்பற்றியும், உறக்கம் வர காரணமாக அவற்றில் இருக்கும் வேதியியல் பொருள்களையும் பற்றி விளக்கமாக தெரிந்துகொள்ளுங்கள்.

செர்ரி பழங்கள்: மெலடோனின் என்ற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம்தான் இந்த செர்ரிப் பழங்கள். இதனால் இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்

வாழைப்பழம்: இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் வாழைப்பழத்தில் நிறைய இருக்கு. இது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் என்கிற அமிமோ அமிலமும் வாழைப்பழத்தில் இருக்கிறது. இந்த எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலமானது.

மூளைக்குள்ளே சென்று 5 எச்.டி.பி. என்கிற ரசாயனமாக மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 எச்.டி.பி.யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.

டோஸ்ட்: நாம் பொதுவாக காலை உணவாக அதிகம் சாப்பிடுகிறது டோஸ்டுக்கும், தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஓட்ஸ் மீல்: ஓட்ஸ் கஞ்சி என்று சொல்லுவாங்களே அதைத் தான் அமெரிக்காவில் ஓட்ஸ் மீல்சொல் சொல்லுவார்கள்.

கதகதப்பான பால்: உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில் நாம இன்றைக்கு பார்த்ததில் மேற்கண்ட நான்கு உணவுகளும் புதிதானது. பால் மட்டும் பழையதுதான்.

Read more: http://viduthalai.in/page1/88782.html#ixzz3FnSEZ4hB

தமிழ் ஓவியா said...

பெரியார்மேளா

பெரும்பான்மை மக்களாய் ஒன்றிணைவோம்! பெரியாரின் கனவை வென்றெடுப்போம் என்ற முழக்கத்தோடு பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் 136 ஆவது பிறந்த நாள் விழா நிகழ்வாக திருப்பூர், ராயபுரம், ஒய் டபிள்யூ.சி.ஏ அருகில் மாலை 5.30 மணிக்கு கலையரங்கு, கருத்தரங்கு பொது அரங்கு என மூன்று பிரிவுகளாக பெரியார் மேளா எனும் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.

தமிழர் தலைவர் சிறப்புரை

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தனது எழுச்சியுரையில் குறிப்பிட்டதாவது:-

திருப்பூரில் ஒரு அத்தியாயம் படைக்கப்பட்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் கான்சிராம் அவர்கள் கொள்கையுடனும், இலட்சியத்துடனும், உறுதியுடனும் இருந்த அம்மையார் மாயாவதி அவர்களுக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தார். உத்தரபிரதேசத்தில் பெரியார் மேளா மிகப்பெரிய அளவுக்கு நடத்தப்பட்டது. எந்த நேரத்தில் எந்தத் தலைவரை அடை யாளப்படுத்த முடியுமோ! அந்த வகையில் அங்கு செய்தார்கள். அது இந்தியாவை உலுக்கிற்று. அதிலிருந்து பார்ப்பனர்களால் மீளமுடியாத சூழல் அதே போன்ற நிலைமை உருவாக்க கால்கோள் விழா நடத்தியிருக்கிறீர்கள். 1000 இளைஞர்களை கொள்கைவாதிகளாக உருவாக்கி அவர்களை பயிற்சி பெறச்செய்தால் மிகப்பெரிய மாற்றம் வரும்.

பெரியாரும், அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அரசியலில் அம்பேத்கர் பங்கு கொண்டார். அதை தவிர இருவருக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. இரு கருத்து சம அளவினாலானவையே. இரு தலைவர்களும் சமுதாய புரட்சிக்கான அறிவாயுதத்தை தூக்கக்கூடிய புரட்சியை, வழிமுறைகளைக் கொடுத்தார்கள். 5 பேரை இவ்விருவரும் அடையாளம் காட்டினார்கள் 1) ஜோதி பாபூலே 2) சாகு மகராஜ் 3) நாராயணகுரு 4) கன்சிராம் 5) மாயாவதி இதில் ஜோதி பாபூலே அவர்கள் 19 ஆம் நூற்றாண்டில் இவ்வுணர்வுக்கு அடிப்படையான பண்பாட்டுப் புரட்சியை உருவாக்கினார். அதுவும் ஈரோட்டுப் பாதையும் ஒன்று தான்.

கான்சிராம் அவர்களைப் பற்றி LEADERSHIP OF DALID என்ற நூலில் பத்ரிநாராயணன் என்பவர் 40 ஆவது பக்கத்தில் சொல்கிறார். அவர் இந்தியா முழுமைக்கும் சுற்றுப்பயணம் செய்தார். ஒரு இரும்புப் பெட்டியை கொண்டு போவார். அதில் பாபாசாகேப், பீம்ராவ் அம்பேத்கர், ஜோதி பாபூலே, தந்தை பெரியார் போன்ற சமூகப் புரட்சியாளர்களின் படங்களை எடுத்துச்சென்று இவர்கள் தான் இந்தியாவில் புரட்சியை உருவாக்கியவர்கள்.

இவர்களின் கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று மக்களிடையே எடுத்துக் கூறுவார். எந்தக்கிளர்ச்சி சம்பந்தப்பட்ட விசயமாக இருந் தாலும் தமிழகத்தை பொறுத்த அளவிலே திராவிடர் கழகத்தை கேட்டு கருத்துப்பெறாமல் கன்சிராம் அவர்களும் சரி அம்மையார் அவர்களும் சரி முடிவெடுத்ததே கிடையாது. ஆட்சியை பற்றிக் கவலைப்படாமல் பெரியாரை மக்களிடையே அடையாளம் காட்டினால் அது மிகப்பலன் தரும் என்று கன்சிராம் அவர்களே சொல்வார்கள்.

அவ்வாறே மாயாவதி அவர்களும் அறை கூவல் விடுத்து பயணம் செய்தார்கள். தலைவர்களின் பிறந்த நாளை தத்துவ ரீதியாக கொண் டாடினார்கள். உத்தரபிரதேசத்தில் அதாவது கும்பமேளா நடத்திய இடத்தில் பெரியார் மேளாவை நடத்திக் காட்டிய பெருமை பகுஜன் சமாஜ் கட்சிக்கு உண்டு.

பெரியார் மேளாவில், தந்தை பெரியார், டாக்டர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர், ஜோதிராவ் பாபூலே, நாராயண குரு, சாகு மகராஜ், கான்சிராம் ஆகியோரின் படங்களுக்குத் தலைவர்கள் மரியாதை செலுத்தினர் (4.10.2014).

எல்லா ரயில்களும் லக்னோவை நோக்கி அணிவகுக்க திராவிடர் கழக சார்பில் நாங்களும் பெரியார் மேளாவுக்கு சென்றோம். அதற்காக கன்சிராம் அவர்களையும், அம்மையார் மாயாவதி அவர் களையும் திருச்சிக்கு வரவழைத்து பெரிய பாராட்டு விழாவை நடத்திய இயக்கம் திராவிடர் கழகம்.

ஜெய் பீம் என்றாலும், அம்பேத்கர் வாழ்க! என்றாலும் தந்தை பெரியார் வாழ்க! என்றாலும் அர்த்தம் ஒன்று தான்.

எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கும் சமுதாயம் நோக்கி நடக்கட்டும் இவ்வையம், வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page1/88805.html#ixzz3FnSULUuO

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கபாலம்

திருக்கண்டியூரில் உள்ள தீர்த்தத்தில் சிவன் நீராடியதால் கபாலம் நீங்கியது. இதற்கு திரு மாலுக்கு நன்றி தெரிவிக்க சிவபெருமான் தானே இவ்விடத்தில் கோயில் கொண்டார். இங்குள்ள சிவபெருமான் திருமால் அருளால் துயர் நீங்கி ய தைக் கண்டு மன மகிழ்ந்து சரஸ்வதி தேவியுடன் பிரம்மதேவர் கோவில் கொண்டுள்ளாராம்.

-வைணவர்களின் இந்தக் கதையை ஸ்மார்த் தர்கள் சைவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

Read more: http://viduthalai.in/page1/88749.html#ixzz3FnSzwAeF

தமிழ் ஓவியா said...

பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில் 1948 காந்தி கொலையும், 1975 காமராசர் மறைவும் வரலாற்றுத்

சென்னை, அக்.5- சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம் மையார் அரங்கில் பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில் 1948 காந்தி கொலையும், 1975 காமராசர் மறைவும் வரலாற்றுத் தகவல்கள் என்ற தலைப் பில் வழக்குரைஞர் சு.குமார தேவன் உரையாற்றினார். பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்திய நாராயணசிங் தலைமையில் துணை செயலாளர் சுப்பிர மணியன் வரவேற்றார். பொருளாளர் மனோகரன் இணைப்புரை வழங்கினார். புலவர் வெற்றியழகன், மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, மருத்துவர் க.வீரமுத்து, வை.கலையரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வழக்குரைஞர் சு.குமார தேவன் சிறப்புரையில், 1948 ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அன்று ஆர்.எஸ்.எஸ். மத வெறியர்களின் திட்ட மிட்ட சதியால் காந்தி கொல்லப்பட்டார். அந்தக் கொலை சதியில் ஆர்.எஸ். எஸ். அமைப்பினரின் தொடர்ச்சியான திட்ட மிட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்து ரைத்தார். காந்தி கொலை சதியில் வீரசவர்க்கர் மூளையாக செயல்பட்டவர் என்ப துடன் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப் பட்டவர்களில் தப்பி ஓடிய வர்களாக உள்ள மூன்று பேர்குறித்த தகவல் இன்று வரை ஏதும் வெளிவர வில்லை என்று குறிப் பிட்டார்.

கொலைவழக்கு விசார ணைகள், குற்றம் சுமத்தப் பட்டவர்கள், அவர்களின் மதவெறிப் பின்னணி கொலைக்கான நோக்கங் களாக கோட்சே குறிப்பிட் டவை உள்ளிட்ட பல் வேறு தகவல்களை எடுத்துக் கூறினார். காந்தி கொலையுண்டபோது, தமிழ்நாட்டில் சில இடங்களில் ஏற்பட்ட கல வரசூழலை அடக்குவதற்கு பார்ப்பன எதிர்ப்பாளராக இருக்கும் தந்தை பெரியார் வானொலியில் மக்களிடம் உண்மையை எடுத்துக்கூறி அமைதி திரும்ப காரண மாக இருந்ததையும், அதே நேரத்தில் மகாராட்டி ரத்தில் பார்ப்பனர்கள் காங்கிரசைவிட்டு வெளி யேற்றப்பட்டு தாக்கப்பட்ட தையும் குறிப்பிட்டார்.

1975 ஆம் ஆண்டில் அக்டோபர் 2ஆம் நாளில் கல்வி வள்ளல் காமராசர் மறைவுக்கு முக்கியக்காரண மாக இந்திரா காந்தியின் நெருக்கடிக் காலமே இருந் துள்ளது என்றும், நெருக் கடிக்காலத்தில் காங்கிர சுக்கு எதிரானவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கொடு மைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் தமிழ்நாட்டில் நெருக்கடிக்காலத்தில் காமராசரைக் கைது செய்யமறுத்த கலைஞரின் உறுதியால், திமுக ஆட்சிக் கலைப்பு, அதைத் தொடர்ந்து தலைவர்கள் கைது செய்யப்பட்டது குறித்தும், மொத்தத்தில் நெருக்கடிக்காலம் என்பது குறித்து சுருக்கமாகக் கூறும் போது, பத்திரிகைகள், நீதித்துறை, அரசு நிர்வாகத் துறை அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததைக் கூறினார். நெருக்கடிப் பிரகடனத் துக்கு காரணமாக இந்திரா காந்திமீதான வழக்கு, அவ்வழக்கில் நீதிபதி சின்கா, மேல்முறையீட்டில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய் யர் ஆகியோர் அளித்த தீர்ப்பே பெரிதும் காரண மாக அமைந்தது என்பதை விரிவாக வழக்குரைஞர் சு.குமாரதேவன் குறிப் பிட்டார். கூட்ட முடிவில் மல்லிகா ராவணன் நன்றி கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/88762.html#ixzz3FnT9Y3dw