Search This Blog

13.10.14

ஜாதியில் ஏது கவுரவம்?

ஜாதியில் ஏது கவுரவம்?


ஜாதி என்பதே அநாகரிகமானது, ஆபாசமானது அருவருக்கத்தக்கது, அறிவுக்கும் பொருத்தமற்றது, மனித மாண்புக்கு எதிரானது, சமத்துவத்துக்கு முரணானது, சகோதரத்துவத்தைக் குழி தோண்டிப் புதைக்கக் கூடியது! 

பகுத்தறிவுள்ள மனிதனால் ஒழிக்கப்பட வேண்டியது  அப்படியிருக்க அதில் என்ன கவுரவம் வேண்டிக் கிடக்கிறது? ஜாதி மாறித் திருமணம் செய்து கொண்டால் கவுரவம் போய் விட்டதாமே - அதனால் பெற்ற மகளையே மனதைக் கல்லாக்கிக் கொண்டு, கொலை செய்கிறார்கள், கொளுத்து கிறார்கள். யாருக்கும் தெரியாமல் காதும் காதும் வைத் தாற்போல சுடுகாட்டில் அடக்கம் செய்து விடுகிறார்கள் என்றால் - இவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டாமா?


உசிலம்பட்டி பூதிப்புரத்தில் நடந்துள்ள நிகழ்வு மனிதத்தைத் தலை குனிய வைக்கிறது. விமலா தேவியும், திலீப்குமாரும் காதலித்து விட்டார்களாம். 
 இருவருக்கும் திருமண வயது வந்து விட்டதா இல்லையா என்று தானே பார்க்க வேண்டும்? காதலுக் குள் ஜாதி என்ற வேலி எப்படி வந்து முளைக்கும்? 


திலீப்குமார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராம். பெண் சற்று மேல் ஜாதியாம் - அதாவது மட்டத்தில் உசத்தி!


பார்ப்பன இந்து தர்மப்படி எல்லாப் பார்ப்பனர் அல்லாத மக்களும் சூத்திரர்கள்தானே? சூத்திரர்களை மனு தர்மத்தில் விபச்சாரி மகன் என்று எழுதி வைத்திருக்கிறானே - அதற்கு வராத கோபம் இதில் மட்டும் குமுறி எழுவானேன்? இன்னும் சொல்லப் போனால் தாழ்த்தப்பட்டவர்கள் இந்தச் சூத்திரப் பட்டத்தின் கீழ் வர மாட்டார்கள்; ஒரு வகையில் இந்த அவமானத்திலிருந்து தப்பி விட்டதற்காகப் பெருமை கொள்ளலாம்.


ஜாதி வெறியர்களின் பிடிக்குள் சிக்காமல் காதல் ஜோடிகள் வெளியூர் சென்று திருமணம் செய்து கொண்டார்கள். அப்படி அவர்கள் செய்து கொண்ட தற்குக் காரணம் சுற்றுச்சூழலின் முரட்டுத்தனமான அழுத்தமே!


அந்த இணையர்களைத் தேடி காவல்துறையினர் பிடித்து வந்துள்ளனர். காவல்துறை என்ன செய்திருக்க வேண்டும்? திருமணத்திற்குத் தகுதியான வயதை அடைந்தவர்களா என்று பார்க்க வேண்டியதுதானே அவர்களின் வேலை? அதைவிட்டு விட்டு பெற் றோர்களிடம் விமலாதேவியை ஒப்படைத்தது சட்டப் படி சரியா? காவல்துறையினரின் வேலை கட்டப் பஞ்சாயத்தை நடத்துவதுதானா?

கடந்த அக்டோபர் முதல் தேதி விமலாதேவி தற் கொலை செய்து கொண்டதாகக் கதை கட்டி பிரே தத்தை எரித்துள்ளனர்.


இதில் வெட்கக்கேடு என்னவென்றால், சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் உள்ளவர்களும் அரசியல் கட்சிப் பிரமுகர்களும், சிலரும் ஜாதி வெறிக் கண்ணோட்டத்தில் நடந்துள்ள தன்மைதான்.


பொது அமைப்புகள் போர்க் கொடி தூக்கியதால் காவல்துறை ஏழு பேர்களைக் கைது செய்துள்ளதாம். இதில் காவல்துறை முறையாக நடந்திருந்தால் இந்தக் கொடுமை நடந்திருக்குமா?


தருமபுரி மாவட்டத்திலும் ஜாதி அடிப்படையில்தான் காதலித்த இணை வாழ்வைப் பறி கொடுத்தது - அங்கு இளவரசன் தற்கொலை என்றால் இங்கு விமலாதேவி.

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட 32 இளம்பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது வெட்கக் கேடானது.
இது சம்பந்தப்பட்ட வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு, கடுமையான தண்டனை கொடுக்கப் பட வேண்டியது அவசியமாகும். அந்தத் தண்டனை பெரிய அளவுக்கு விளம்பரமும் படுத்தப்பட வேண்டும்.

தந்தை பெரியார் பிறந்த மண்ணிலே, ஜாதி ஒழிப்புக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட கருஞ்சட்டைத் தோழர்கள் வீறு நடைபோடும் பூமியிலே இத்தகைய ஜாதி வெறி நடவடிக்கைகளா? என்ற கேள்வி ஒருபுறம் எழுவதை அறிவோம்.


கொள்கைகளும், தத்துவங்களும், சித்தாந்தங்களும் அறவே இல்லாத அரசியல் நடத்த விரும்புபவர்களுக்கு இந்த ஜாதி ஒரு கூர்மையான ஆயுதமாகி விட்டது என்பதுதான் யதார்த்தமாகும்.


காகித ஊடகங்களும், மின்னூடகங்களும் கொஞ்சம் கை கொடுத்தால் இந்த ஜாதிக் கள்ளிகள் இருக்கும் இடம் தெரியாமல் ஒழிந்து போயிருக்கும்.


திராவிடர் கழகப் பிரச்சாரத்துக்கு, தந்தை பெரியார் கருத்துகளுக்கு உரிய இடத்தை ஊடகங்கள் வழங்க முன் வரட்டும்; அய்ந்தே ஆண்டுகளில் ஜாதி இருந்த இடத்தில் புல் முளைத்துப் போய் விடாதா?


மன்றல் என்ற பெயரில் நாட்டின் பல பகுதிகளிலும் திராவிடர் கழகம் ஜாதி மறுப்பு, மத மறுப்பு மற்றும் விதவைத் திருமணங்களை ஏற்பாடு செய்து நடத்தித் தான் வருகிறது.


ஊடகங்கள் அதற்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்து வெளியிடுகின்றனவா? ஒளி பரப்புகின் றனவா? அதே நேரத்தில் மூட நம்பிக்கைகளை பரப்புவதற்கென்றே முன்னறிவிப்புகள் கொடுத்து நேரம் ஒதுக்கி மணிக்கணக்கில் பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுகின்றனவே!


ஆனால், பேச்சைப் பாருங்கள்! திராவிடர் கழகத் தின் பணிகள் பிரச்சாரங்கள் முன்புபோல் இல்லை என்று விமர்சனம் செய்வதில் மட்டும் குறைச்சலில்லை.


நான்காவது தூண் என்று சொல்லப்படக் கூடிய ஊடகங்களுக்குச் சமுதாயப் பொறுப்பு இல்லாத வரை எந்த சீர்திருத்தமும் எடுபடுவது ஒரு கடினமான பணியாகத்தான் இருக்க முடியும்.

கவுரவக் கொலை உசிலம்பட்டியோடு முற்றுப் பெற வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு!

                 ---------------------------”விடுதலை” தலையங்கம் 13-10-2014

15 comments:

தமிழ் ஓவியா said...

" பெரியார்ஒரு கிளர்ச்சிக்காரர், சிந்தனைச் சிற்பியாக இருப்பதாலேதான் அரசியல் என்றால், பஞ்சாயத்து போர்டிலிருந்து தொடங்கிப் பாராளும் உறுப்பினராவது என்ற ஏணி அரசியலைக் கொள்ளாமல், இன விடுதலை என்னும் இடர் மிகுந்த காரியத்தில் இறங்கினார்.

அவருக்கு நிச்சயமாகத் தைரியம் இருக்கிறது. வீறுகொண்ட தமிழன் வைதீகத்தைக் கூறு கூறாக்குவான் என்று!

அவர் ஒரு கற்பனை உலகைக் காட்டத் தேவையுமில்லை; தமிழர் ஆள ஒரு வெளிநாட்டைப் பிடிக்கத் தேவையுமில்லை!

தமிழன் ஒரு நாட்டுக்குச் சொந்தக்காரன்!
தமிழன் ஆண்டு பழக்கப்பட்டவன்!

இன்று ஆண்டவனுக்கு அன்பு செலுத்துவதாகக் கருதிக்கொண்டு மாற்றாரின் அடிமையாக உழல்கிறான்!

ஆட்சிக்கேற்ற அருங்குணமும், நாட்டைப் பாதுகாக்கும் நல்வீரமும் தமிழனுக்கு உண்டு.

இகம், பரம் என்ற மாய மொழி கேட்டு ஏமாந்ததால், இகத்தை இவன் இகழ்ந்து வதைப்படுகிறான்.

எனவே, பெரியார் தமிழா! நீ தனி இனம்! தமிழா! நீ தரணி ஆண்டவன்! தமிழா! உன்னை நீ உணராமல் உலுத்தருக்கு அடிமையானாய்! பகுத்தறிவுப் படை தொடு! விடுபடு! என்று கூறினார், தமிழரின் உள்ளத்திலே அந்த உணர்ச்சி வேகம் பாய்ந்தால், கிளம்பிற்று காண் தமிழர் சிங்கக் கூட்டம் என்று கவிபாடும் காட்சியாகும் அது!

எனவேதான், பெரியார் தைரியம் பெற்றிருந்தார்!

அந்தத் தைரியத்துக்குப் பக்கபலமாக இருப்பது, தளரா உழைப்பு!

அந்தத் தைரியம் பெரியாருக்கு இருக்கிறது!

(திராவிடநாடு - 03.06.1945)

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஸ்லோகம்

பூஜை நேரத்தில் மட்டுமல்ல; வீட்டில் சமைக்கும்போதுகூட ஸ்லோகங்களைச் சொல் லிக் கொண்டே வேலை செய்யலாமாம் - இதனால் பலன் கிடைக்குமாம்.

அது சரி, பிள்ளைகள் பாடம் படிக்கும் பொழுது எப்படி ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்க முடியும்? சமைக்கும் போது ஸ்லோகம் சொல் லிக் கொண்டிருந்தால் கவனம் தப்பி உப்பும், காரமும் அதிகமாகி மருத் துவமனையில் சேர வேண்டியதுதானா?

Read more: http://viduthalai.in/e-paper/89212.html#ixzz3G4tccVQM

தமிழ் ஓவியா said...

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை


சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக் கூடாது.

அதற்கான காரணங்களைத் தெரிந்துகொள் ளுங்கள்.

* உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது ஏன்?

வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.

* தேநீர் குடிக்கக் கூடாது. ஏன்?

தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும்.

* புகை பிடிக்கக் கூடாது. ஏன்?

உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

* இடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது. ஏன்?

சாப்பிட்ட பிறகு லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட உணவு உடனடியாக குடலுக்குச் சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.

* குளிக்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது.

* உடனே நடக்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.

* சாப்பிட்டதும் தூங்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/89193.html#ixzz3G4vCG9cI

தமிழ் ஓவியா said...

அனைத்து வயதினரையும் தாக்கும் மறதி நோய்


என்னமோ சொல்லணும்னு நினைச்சேன்.. மறந் துட்டேன்... மன்னிச்சுக்கோ.. இன்னிக்கு உன்னோட பிறந்தநாள் இல்ல... மறந்தே போயிட்டேன்... ஆமா... இங்கே எதுக்கு வந்தோம்?

இவரை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கு... ஆனா, யாருன்னு தெரியலையே..! எப்போதாவது மறதி வருவது இயல்பானதுதான். ஆனால், அடிக்கடி இதுபோல் எதை யாவது மறந்துவிட்டு அவஸ்தைப்படுகிறீர்களா? இது மறதி நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறது மருத்துவ உலகம். வயதானால் மறதி வரத்தானே செய்யும்? என்கிறீர்களா?

இது வயதானவர்கள் சமாச்சாரம் அல்ல..! இருபது வயதில் இருக்கும் இளம் பருவத்தினருக்கும் உள்ள பிரச்சினை. 20 முதல் 40 வயது வரையிலான காலகட்டத்தில் தான் படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தைகள் என்று வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வுகள் நடக்கின்றன.

இந்த நேரத்தில் ஒருவர் தெளிவான சிந்தனையோடும் நடவடிக்கைகளோடும் இருந்தாக வேண்டும். மறதி நோய் ஏற்பட்டால், இரண்டு திறன்களும் பாதிக்கப்பட்டு தான் போய் சேர விரும்புகிற இடத்தை ஒருவரால் அடைய முடியாமல் போகலாம். மறதியினால் நிறைய இழப்பீடு வருவதை தவிர்க்கவேமுடியாது என்று எச்சரிக்கை செய்கிறார் நரம்பியல் சிகிச்சை நிபுணர் சிறீனிவாசன்.

சின்ன வயதிலேயே எதனால் மறதி வருகிறது? மறதி ஏற்படாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? என்பது உட்பட மேலும் பல சந்தேகங்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கிறார் அவர்.

எல்லாமே தலைமைச் செயலகம்தான்...மறதி ஏன் வருகிறது என்பதற்கு முன்னால் மறதி என்றால் என்ன வென்று அறிவியல்பூர்வமாகக் கொஞ்சம் பார்ப்போம். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது என எல்லாவற்றையும் பதிய வைத்துக் கொள்வது நமக்குத் தலைமைச் செயலகமாக இருக்கும் மூளையில்தான்.

அடுக்கடுக்காக மூளையில் பதிவாகும் இந்த கோப்புகளை நமக்குத் தேவைப்பட்டபோது எடுக்க முடியாவிட்டால் அதைத்தான் மறதி என்கிறோம். இதற்குக் காரணம் மூளையில் இருக்கும் நியூரோ டிரான்ஸ்மீட்டர்களின் செயல்களில் ஏற்படும் பாதிப்புதான்.

மறதியில் மூன்று வகை

இளைஞர்களுக்கு ஏற்படும் மறதி நோய்க்கு அம்னீசியா என்று பெயர். இந்த அம்னீசியாவில் மூன்று வகைகள் இருப்பதாக சமீபத்திய அமெரிக்க ஆய்வில் கண்டறிந் திருக்கிறார்கள். இளைஞர்கள் பெரும்பாலும் பாதிக்கப் படுவது முதல் வகையில்தான். இந்த பாதிப்பு ஏற் பட்டால் இளைஞர்களின் அறிவுத்திறன் பாதிக்கப்படும்.

சம்பவங் களை மனதில் பதிந்து வைத்துக் கொள்ள முடியாது. பழைய நிகழ்வுகள் நினைவிருக்காது. பெயர்களில் குழப்பம் இருக்கும். போன பாதையில் திரும்பி வருவதற்குக் கூட சிரமப்படுவார்கள். கடைகளில் சில்லறை வாங்க மறப்பது முதல் செல்பேசியை வைத்துவிட்டுத் தேடுவது வரை பல அன்றாடப் பிரச்சினைகள் அடங்கிய மறதி இது.

மனதில் இருப்பதை வெளியில் சொல்லத் தடுமாறுவார்கள். இரண்டாவது வகை Retrograde Amnesia. இது விபத்துகளால் ஏற்படும் மறதி நோய். சினிமாக்களில் பார்த்திருப்போம், தலையில் அடிபட்டவுடன் பழைய நிகழ்ச்சிகளை மறந்துவிடுவார்கள். மூன்றாவது வகை Transient Global Amnesia. கொஞ்சம் வினோதமானது.

இயல்பாக ஒருவருடன் பார்த்து, பேசி, பழகுவார்கள். ஆனால், சில நிமிடங்களிலேயே தான் பேசிக் கொண்டிருந்த நபரை அடையாளம் தெரியாது.

பேசியதும் நினைவிருக்காது.இது தவிர சமீபத்தில் டிஜிட்டல் டிமென்ஷியா என்ற மறதி நோயும் இளைஞர்களிடம் பரவி வருகிறது. தேவைக்கதிகமாக அலைபேசி, கணிப்பொறி, தொலைக்காட்சி, திரைப்படம் என்று மின்னணு சாதனங் களைப் பயன்படுத்துவதால் வரும் மறதி நோய் இது.

இந்தப் பயன்பாடுகளைக் குறைத்தாலே டிஜிட்டல் டிமென்ஷியாவுக்கு ஆளாகாமல் தப்பிக்க முடியும். இந்தக் காரணங்கள் தவிர மரபியல் காரணங்களாலும் மனநலக் கோளாறுகளாலும் சிலருக்கு மறதி நோய் வரலாம்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

மறதி நோய் பொதுவாக 20 வயது முதல் 90 வயது வரை யாருக்கு வேண்டுமானாலும் வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், வயதானவர்களுக்கு வருகிற மறதிநோய்களை அவர்களுடைய குழப்பமான நடவடிக்கையே காட்டிக் கொடுத்து விடும்.

அதனால்,கண்டுபிடிப்பது சுலபம். ஆனால், இயல்பான நடவடிக்கைகளோடு இருக்கும் இளைஞர்களின் மறதிநோயை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. தங்களைத் தாங்களாகவே உன்னிப்பாகக் கவனித்தாலோ அல்லது அருகில் இருப்பவர்கள் சுட்டிக் காட்டினால் ஒழிய இதைக் கண்டறிவது கொஞ்சம் சிரமம்.

மறதி நோய் இருப்பதாக சந்தேகப்பட்டால் உடனடியாக ஒரு மனநல மருத்துவரிடமோ அல்லது மனநல நரம்பியல் சிகிச்சை நிபுணரிடமோ சென்று ஆலோசனை செய்து கொள்ளலாம்.

அவர்கள் சில பரிசோதனைகளை செய்து மறதி நோய் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடித்து விடுவார்கள். மறதி நோயைக் கண்டுபிடித்த பிறகு, நரம்பியல் சிகிச்சை நிபுணரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/89192.html#ixzz3G4vMrZH7

தமிழ் ஓவியா said...

மருத்துவக் குணம் நிறைந்த முருங்கைக் கீரை

கிராமங்களில் முருங்கை தின்னா முன்னூறு வராது என்று சொல்வார்கள். முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300 நோய்க ளுக்கு மேல் வராமல் பாதுகாக்கப்படுவார்கள் என் கிறது பழமொழி. முருங்கை இலை, பூக்கள், காய் என அனைத்தும் மிகச்சிறந்த உணவுப்பொருளாகப் பயன்படுகிறது.

முருங்கை இலையை உருவி எடுத்துவிட்டு அதன் காம்புகளை நறுக்கி மிளகு ரசம் செய்து சாப்பாட்டுடன் சாப்பிடலாம்.. முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும்.

முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் இருக்கிறது. ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி நிறைந்திருக்கிறது-. வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கேரட்டைவிட 4மடங்கு வைட்டமின் ஏ உள்ளது. பாலைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக் களையும் முருங்கையிலை கொண்டுள்ளது என பட்டிய லிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஏழைக்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப் படுகிறார்கள் என அனைவரிடமும் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் நடுத்தரக் குடும்பத்தில் உள்ள குழந்தைகள்கூட ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப் படுகிறார்கள் என்று கருத்து கணிப்பு சொல்கிறது. ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் அன்றாட உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்து இருப்பதில்லை.

எனவே முருங்கைக் கீரையை அடிக்கடி சமையலில் சேர்த்து சாப்பிடவேண்டும். முருங்கைக் கீரை சாப்பிடாத வர்கள் முருங்கை இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போன்றவற்றில் சேர்த்து சாப்பிட லாம். தினமும் 8 முதல் 24 கிராம் முருங்கைப்பொடி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும்.

சாதாரண வீடுகளில் காணப்படும் முருங்கை மரத்தை மருத்துவ செல்வம் என்றே சொல்லவேண்டும். ஏனெனில் முருங்கை பல நோய்களைக் குணப்படுத்தும் சக்திகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும். பச்சை கீரைகளில் எண்ணி லடங்கா பயன்கள் இருக்கிறது நாம் தான் அதனை முறையாக பயன்படுத்த மறந்துவிட்டோம். இனிமேல் தவற விடாதீர்கள்.

Read more: http://viduthalai.in/page-7/89186.html#ixzz3G4vW1H7c

தமிழ் ஓவியா said...

உண்மையைக் கக்கினார் சோ

கேள்வி: கொள்கையை விளக்கும் நோட்டீஸ் கொடுத்து வாக்குக் கேட்ட காலம் மாறி, ரூபாய் நோட்டைக் கொடுத்து ஓட்டுக் கேட்கும் காலம் வந்து விட்டதே?

பதில்: கடவுள் முன் வேண்டுகோள் வைக்கிற பக்தன் கூட ரூபாய் நோட்டு வைக்கிறான். தன்னு டைய வேண்டுதல் அப்போது ஆண்டவனிடம் சரியாக விளக்கப்படும் என்று நம்புகிறான். வேண்டுகோளுக்கே விளக்கம் தருகிற ரூபாய் நோட்டு, கொள்கைக்கு விளக்கம் தராதா, என்ன?

(துக்ளக், 15.10.2014 பக்கம் 9

என்னதான் இந்துத்துவா பேசினாலும், கடவுள், மதம், பக்தி என்று வாய் நீளம் காட்டினாலும் கடைசியில் பகுத்தறிவாளர் கருத்துப் பக்கம்தான் வந்தாக வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன், வேண்டுதல், வேண்டாமை இலான் என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் தாசில்தாரிடம் கையொப்பம் வாங்க கீழே உள்ள வரை காணிக்கை கொடுத்துக் கவனிக்க வேண்டும் என்பது போலத்தான். கடவுள் கடாட்சம் பெறவும் கவனிக்க வேண்டியவர்களையும் கவனிக்க வேண்டியுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால் எல்லாம் - பேரம்தான்! கடவுளே நான் உனக்கு இதைத் தருகிறேன் - நீ எனக்கு நான் கொடுக்கும் பட்டியலை நிறைவேற்றிக் கொடு என்பதெல்லாம் சர்வ சாதாரணம் தானே!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா

என்று அவ்வையார் பாடுவதைக் கூட எடுத்துக் கொள்ளலாமே!

நான் உனக்கு நான்கு அயிட்டங்களைத் தருகிறேன். நீ எனக்கு மூன்று அயிட்டங்களைத் தருவியாம் என்பது வியாபாரம், பேரம்தானே!

ஓட்டுக்கு நோட்டுக் கொடுப்பதும், கடவுளுக்கு நோட்டு (காணிக்கை) கொடுப்பதும் ஒன்றே என்று காலங்கடந்தாவது ஒப்புக் கொண்ட சோ வகையறாக் களின் அறிவு நாணயத்தை வரவேற்கிறோம். இது தொடரட்டும்.

Read more: http://viduthalai.in/page-3/89274.html#ixzz3G7vRff9w

தமிழ் ஓவியா said...

அக்டோபர் 14: உலகத் தர நாள்


ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு பொருட்கள் தரமானவையா என்பதை நம்பிக்கைக்கு உட்பட்டு வாங்கிவந்தனர். ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு நவீனமயமாதல் காரணமாக கலப்படம் உருவாகியது. இதற்கு முக்கியக் காரணம் தொழிற்போட்டி என்று கூறினாலும் பேராசையும் ஒரு காரணமாகிவிட்டது. முக்கியமாக உணவுப்பொருள் கலப்படம் அதிக அளவில் நடக்கத் துவங்கியது.

இந்தியா போன்ற ஏழைகள் அதிகம் வாழும் நாட்டில் தரக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு மிகவும் தேவையான ஒன்றாகும். விடுதலையடைந்த பிறகு இந்தியாவில் நடுத்தர மக்களிடம் தரக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது.

தற்போது உலகம் முழுவதும் பல்வேறு பொருட்கள் பல நாடுகளுக்கு இடையே ஏற்றுமதி-இறக்குமதி நடைபெறும் நிலையில் நிலையில் தரக்கட்டுப்பாடு பற்றிய பொதுத்திட்டத்தை வரையறை செய்வது முக்கியமான ஒன்றாகி விட்டது. இதன் காரணமாக அய்.எஸ்.ஓ என்ற அமைப்பு 1974-ஆம் ஆண்டு ஜெனி வாவில் துவங்கப்பட்டது.

அய்.எஸ்.ஓ அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட அக்டோபர் 14 ஆம் தேதியே உலகத் தர தினம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தில் தரமான பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதற்கு அறிவுரை மற்றும் ஆலோ சனைகள் வழங்கப்படுகின்றன. பன்னாட்டு தேசிய தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கு உயர் அமைப்பாக உலகத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் விளங்குகிறது.

உலகம் முழுவதும் பயன்படுத்தக் கூடிய தர நிர்ண யங்களைப் பொருள்களுக்கு ஏற்படுத்தி உலக நாடு களிடையே தடையின்றி வர்த்தகம் வளர வழி செய்வதே முக்கிய குறிக்கோளாகும். ஆரம்ப காலத்தில் இந்த அமைப்பில் வளர்ந்த நாடுகள் மட்டுமே உறுப்பினராக இருந்தன. படிப்படியாக அனைத்து நாடுகளும் உறுப்பினராகி இருக்கின்றன. 500-க்கும் மேற் பட்ட நிறுவனங்கள் உலகத் தர நிர்ணய நிறுவனத் துக்கு ஒத்துழைப்பைத் தந்து தரக்கட்டுப்பாட்டை, விதிகளுக்கு உட்பட்டு கடைப்பிடித்து வருகின்றன.

இந்தியத் தர நிர்ணய அமைப்பு (அய்.எஸ்.அய்) ஆரம்ப காலத்திலிருந்தே, உலகத்தர நிர்ணய நிறுவனம், உலக மின்தொழில் நுட்பக்குழு ஆகிய நிறுவனங் களோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியத் தர நிர்ணய நிறுவனம், உலகத் தர நிர்ணய நிறுவனத்தின் தொழில் நுட்பக்குழுக்கள், உலக மின்தொழில் நுட்பக் குழுக்கள், தொழில் நுட்பக் குழுக்கள் போன்றவற்றில் உறுப்பினராக உள்ளது.

அய்.எஸ்.அய். தர முத்திரையிடப்பட்ட பொருள் களை வாங்குவதால் நுகர்வோருக்கு என்ன பயன்?

கலப்படப் பொருள்கள் மற்றும் தரமற்ற பொருள்களால் ஏற்படும் விபத்துகள், ஆபத்து களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களின் தரம், சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படுகிறது. தரமான பொருள்கள் என்பதால் விற்பனை அதிகமாகவும், விரைவாகவும் இருக்கிறது. இதனால், அதிக உற்பத்தி, குறைந்த விலை சாத்தியமாகிறது.

மத்திய அரசு நுகர்வோர் நலன் கருதி, உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களையும், விபத்து ஏற்படுத்தும் பொருள்களையும் கட்டாய அய்.எஸ்.அய். தர முத்திரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. தரக்கட்டுப்பாடு மூலம் கிடைக்கும் நற்பயன்களை நுகர்வோர் உணர்வது இல்லை. நுகர்வோர்களிடம் தர விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், உற்பத்தி யாளர்களிடையே தரம் உயர்ந்த பொருள்களை உற்பத்தி செய்யும் எண்ணத்தை உண்டாக்கவும் உலகத் தர தினத்தில் கருத்தரங்கள், கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியத்தர நிர்ணய தலைமைச் செயலகம் டில்லியிலும், கிளைஅலுவலகங்கள் கொல்கத்தா, மும்பை, சண்டிகார், சென்னை போன்ற இடங்களிலும் அமைந்துள்ளன.

அக்மார்க் விவசாயத்தை முதன்மைத் தொழிலாக கொண்ட நம்நாடு உணவுப்பொருட்களில் தனித்துவம் கொண்ட முத்திரையை அய்.எஸ்.ஓ.வின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு செயல்படுத்தி வருகிறது. தரம் மற்றும் தூய்மைக்கு அடையாளமாக அக்மார்க் அடையாளம் இருக்கிறது. பொதுமக்களாகிய நாம், தரக்கட்டுப்பாட்டில் மிகவும் அக்கறை செலுத்த வேண்டும். முன்பு கூறியது போல் கலப்படம் என்பது முழு சமூகத்தையே பாதிக்கும் ஒன்றாகும்.

லாபம் மற்றும் பேராசை காரணமாக கலப்படம் மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனைச் செய்யும் நபர்களைப் பற்றி தெரிந்தால் உடனே மாநகராட்சி தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் புகார் கொடுக்கவேண்டும்.

அயல்நாடுகளில் தரக்கட்டுப்பாடுகள் குறித்து அக்டோபர் 14 அன்று பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் இந்தியாவில் தனியார் நடத்தும் சில கல்வி நிறுவ னங்கள் மட்டும் விளம்பரத்திற்காக இந்த நாளைக் கொண்டாடிவருகின்றனர்.

நாகரிகம் மற்றும் தொழில் நுட்பம் பெருகி விட்ட காலத்தில் தரக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை நாமும் பெற்று மற்றவர்களுக்கும் இவ்விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-5/89250.html#ixzz3G7vo1REf

தமிழ் ஓவியா said...

பிரச்சாரக் கதைகள்

திராவிட மக்களை ஆரிய வலையில் விழச் செய்து அவர் களைத் தன்மான மற்றவராக, பகுத் தறிவற்றவராக ஆக்கி மனிதத் தன்மையை இழக்கச் செய்யும் பிரச்சாரக் கதைகளே பாரதம், இராமாயணம், பாகவதமாகும்.
(விடுதலை, 18.2.1968)

Read more: http://viduthalai.in/page-2/89238.html#ixzz3G7wJPqt5

தமிழ் ஓவியா said...

குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை


முஸ்லிம் பெண்கள் கல்விக்கு எதிராக தாலிபன்கள் மேற்கொண்டு வரும் பிற்போக்குத்தனத்தை எதிர்த்துத் துணிவாகப் போராடி வரும் சிறுமி மலாலாவுக்கும், குழந்தைகள் நல உரிமை என்னும் கண்ணோட்டத்தில் குறிப்பாக குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதை ஓர் இயக்கமாக நடத்தி வரும் கைலாஷ் சத்யார்த்தி என்பவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நலன் பற்றிய திசையில் இந்நிகழ்ச்சி ஓர் உரத்த சிந்தனையைத் தட்டி எழுப்பியிருக்கிறது - எழுப்பிடவும் வேண்டும். இந்தியாவில் 50 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக தன்னார்வ அமைப்பான க்ரெய் பில்லிப்ஸ் தெரிவித்துள்ளது.

உலக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக ஒரு நாள் கடைபிடிக்கப்படுகிறது. (ஜூன் 1) இதையொட்டி, மத்திய புள்ளியியல் துறையின் கீழ் உள்ள தேசிய மாதிரி சர்வே நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் 50 லட்சம் குழந்தைத் தொழி லாளர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரகண்டில் 17.5 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர்.

அதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் 5.5 லட்சம், ராஜஸ்தானில் 4 லட்சம், குஜராத்தில் 3.9 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். இது குறித்து சேவ் தி சில்ட்ரன் அமைப்பை சேர்ந்த தாமஸ் சாண்டி கூறும்போது, 14 வயதுக்கு உட்பட்டவர்களை, வீடுகளி லும் ஓட்டல்களிலும் வேலைக்கு வைக்கத் தடை உள்ளது. இருந்த போதிலும் ஏராளமான குழந்தைகள் ஓட்டல்களிலும், ஆபத்துகள் நிறைந்த தொழிற் சாலைகளிலும் வேலைக்கு விடப்படுகின்றனர் என்றார்.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடே பின்பற்றட்டும்! 56 ஆண்டுகளாக தீபாவளியைப் புறக்கணிக்கும் 12 பட்டி கிராமங்கள்


தீபாவளி பற்றி துளி கூட பரபரப்பு இன்றி, சிவகங்கை அருகே 12 பட்டி கிராமத்தினர் கடந்த 56 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடா மல் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றி யத்தைச் சேர்ந்த எஸ். மாம்பட்டி ஊராட்சி. இதில் மாம்பட்டி, ஒப்பி லான்பட்டி, சந்திரபட்டி, தும்பைப்பட்டி, இடைய பட்டி, கிலுகிலுப்பைப் பட்டி, திருப்பதிபட்டி, வலையபட்டி, கச்சப்பட்டி, கழுங்குப்பட்டி, தோப் புபட்டி, இந்திரா நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தீபாவ ளியே கொண்டாடுவ தில்லை.வட்டி மேல் வட்டி கட்டி நொந்த கிராமத்தினர் அய்ப்பசி மழைக்காலத்தில் பாசனப் பணிகளை தொடங்குவ தும், அதற்காக கடன் வாங்கி விதைப்பு செய்வ தும் விவசாயிகள் வழக்கம். தை மாதம் அறுவடை யின்போது, வாங்கிய கடனுக்கு வட்டியாக நெல், தானியங்களை கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அய்ப்பசி மாதத்தில் வரும் தீபாவளி பண்டிகைக்காக கூடுத லாகக் கடன் பட்டு வட்டி மேல் வட்டி கட்டி பெருந் துயரம் தொடர்ந்துள்ளது.

இதற்கு முடிவு கட்ட, கடந்த 1958ஆ-ம் ஆண்டு பெரிய அம்பலகாரர் பெரி.சேவுகன் அம்பலம் தலைமையில் ஊர்க்கூட் டம் போட்டுள்ளனர். அப் போது கிராம தெய்வ மான காடுகாவலர்சாமி மீது ஆணையாக, இனி தீபாவளி கொண்டாடுவ தில்லை என ஒருமித்து முடிவெடுத்தனர்.

விவசாயிகளை வாட்டி வதைக்கும் தீபாவளியை, துறப்பது என்ற கொள்கை முடிவை கடந்த 56 ஆண் டுகளாக இப்போதும் கடைப்பிடித்து வருகின் றனர்.

இதுகுறித்து பெரிய அம்பலகாரர் சே. சபாபதி கூறியதாவது: தீபாவளி வர்ற காலம் மழைக்கால மாகவும், விதைப்பு செய் யும் காலமாகவும் இருக் கும். அப்போ யாரு கைல யும் காசு இருக்காது. கையில இருக்குற நெல், தானியக் கையிருப்பும் கரஞ்சு, வெளியில வட் டிக்கு வாங்குற நெலம ஏற்பட்டுச்சு.

அப்போல்லாம், வட் டிக்கு வாங்கின 100 ரூபாய்க்கு ஒரு மூட்டை நெல் கொடுக்கணும். அந்த நேரத்தில வர்ற தீபா வளிய, கடன் வாங்கித் தான் கொண்டாடணும்ங் கிற நிலைமை. அது எல்லாருக்கும் கஷ்டத்த கொடுத்துச்சு. அப்பத்தான் கூட்டம் போட்டு, தீபா வளியை நிப்பாட்டிட்டு, அதுக்கு பதிலா பொங்கல சிறப்பா கொண்டாடுற துன்னு முடிவெடுத்தாங்க. தீபாவளிக்கு என்னென்ன பயன்படுத்துறோமோ அத பொங்கலன்னிக்கி பயன் படுத்தி கொண்டாட லாம்னு எல்லாரும் சேர்ந்து முடிவு செஞ் சாங்க. தீபாவளிய இருக்கிற வங்க கொண்டாடுவாங்க, இல்லாத வீட்டுப் புள் ளைக என்ன செய்யும்?

இருக்குற வீட்டுப் புள்ளைங் கோடி (புத் தாடை) கட்டி நிக்கும் போது, இல்லாத வீட்டுப் புள்ளைங்க பழசோட நின்னா மனசு எவ்வளவு கஷ்டப்படும். அதப்பாக் குறப்போ புள்ளைய பெத் தவங்களும் நொந்து போவாங்க.

அதனால, எல்லாரும் சந்தோஷமா இருக்குற நாளை தீபாவளியா கொண்டாடுவோம்னு நிப்பாட்டி 56 வருஷமாச்சு.

இந்த ஊரைச் சேர்ந் தவங்க எங்க இருந்தாலும், தீபாவளியன்னிக்கி பலகாரம் கூட போடாம சாதம், கஞ்சியத்தான் குடிப்பாங்க. தீபாவளி யன்னிக்கி இங்க பொண்ணு எடுத்தவங்களை விருந்துக்கு அழைக்கமாட் டோம், வெளியில பொண்ணு கட்டுனவங் களும் விருந்துக்கு போக மாட்டாங்க. மனக்குறை வந்துட கூடாதுங்கிறதால தோதுப்பட்ட இன்னொரு நாளில விருந்து வெப் பாங்க. சின்னப் புள்ளையில இருந்து பெரியாளுக வரைக்கும் இதை கடைப் புடுச்சி வர்றோம். 56 வரு ஷமா தைப்பொங்கலத் தான் தீபாவளியா கொண்டாடுறோம். என் றார்.

இக்கிராமத்தில் பெரிய வர்கள் வகுத்த கொள் கைக்காக சிறுவர்களும் பட்டாசு வெடிக்கும் ஆசைகளை துறந்து, விவசாயப் பணிகளுக்கு ஒத்துழைப்பு தருவது குறிப்பிடத்தக்கதாகும்.

பொருளாதாரம் காரணமாகக் கூறப்பட் டாலும் தீபாவளி என்பது மூடப்பண்டிகை மட்டு மல்ல - திராவிடர்களை இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டது என்பது மிகவும் முக்கியமானது.

Read more: http://viduthalai.in/e-paper/89260.html#ixzz3G7wifdfc

தமிழ் ஓவியா said...

‪‎பார்ப்பனர்_குறித்து‬
‪‎தந்தை_பெரியார்_அவர்களின்_கூற்று‬ :
" ஆங்கிலோ - இந்தியர்கள் எப்படியோ அதே போலத்தான் இந்நாட்டு பார்ப்பனர்களும் ; ஆங்கிலோ - இந்தியர்கள் நம் நாட்டு தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்கள் தாமே. ஆனால் அவர்களுக்கு சற்றாவது நம் நாட்டு உணர்ச்சி இருக்கிறதா? நமது மக்களைப் பார்த்தால் டேய் டமில் மனுஷா என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார்? எந்த நாட்டில் பிறந்தவர்கள்? என்ற வரலாற்றை அறியாமல், தாம் ஏதோ அய்ரோப்பாவில் பிறந்து இங்கு வந்து குடியேறியதுபோலச் சாதி ஆணவத்துடன் அல்லவா நடக்கிறார்கள்!
அதைப் போலவே இந்நாட்டு பார்ப்பனர்களும் மேல் நாட்டில் இருந்து வந்து குடியேறிய ஆரியர்களுக்கும் நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாய் இருந்தும் கூட, ஆரிய சாதி முறைகளையும் அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம்மைக் கீழ் சாதிகளாக அடிமைகளாக மிதித்து நடத்துகிறார்கள்.
(குடியரசு 8-5-1949)
‪அண்ணல்_அம்பேத்கர்_அவர்களின்_கூற்று‬ :
" தமது மூதாதையர்கள் உருவாக்கிய பார்ப்பானிய தத்துவத்தை ஒவ்வொரு பார்ப்பானும் நம்புகிறான். இந்துச் சமுதாயத்திலேயே அவன் ஒரு அன்னியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்தள் என்று கருதுபவர்களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த இரண்டு பிரிவினரும் இரு வேறு அயல் நாட்டினரைப் போலத்தான் தோன்றுவார்கள். ஒரு ஜெர்மனியனுக்கு ஒரு பிரெஞ்சுக்காரன் எப்படி அந்நியனோ, ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அந்நியனோ, அது போலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான். "
(காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன?, பக்கம் 215)

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவரின் நூல்பற்றி தி இந்து!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதி வெளிவந்த கீதையின் மறுபக்கம் நூல்பற்றி இன்றைய தி இந்து (தமிழ்) நாளிதழ் எழுதி யிருப்பதாவது:

கீதையின் மறுபக்கம் பகவத் கீதையைப் பகுத்தறிவு கண்ணோட்டத்தில் விமர்சிக்கும் நூல்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதியுள்ள இந்நூல் கீதையை அறிவியல் பார்வையுடனும், வரலாற்றுக் கண்ணோட்டத்துடனும் தீவிரமாக விமர்சிக்கிறது.

திராவிடர் கழகம் 1998 இல் வெளியிட்ட இந்நூல் கீதையைபற்றிய மாற்றுப் பார்வையைத் தர்க்கப் பூர்வமாக முன்வைக்கிறது.

- இதுதான் இந்துவின் விமர்சனம்.

Read more: http://viduthalai.in/e-paper/89327.html#ixzz3GDy3Nl2f

தமிழ் ஓவியா said...

பிச்சைக்காரன் யார்?பாடுபடச் சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு ஏமாற்றுவதாலும், சண்டித்தனத்தாலும் கெஞ்சிப் புகழ்ந்து வாழ்பவர்கள். - (குடிஅரசு, 19.9.1937)

Read more: http://viduthalai.in/page-2/89347.html#ixzz3GDyk22rX

தமிழ் ஓவியா said...

ஜெர்மனியின் கொல்ராபி என்ற அருமையான உணவுத் தண்டு!


காய்கறி தண்டுகளில் ஜெர்மனி மொழியில் ”கொல் ராபி” (Kohl rabi)என்று அழைக்கப்படும் காய்கறித் தண்டுபற்றி இணையத்தில் கிடைத்த செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள் வதில் மகிழ்ச்சி.

கேபேஜ் முட்டைகோசு - டர்னிப் என்ற காய்கறி குடும்ப வகையறாவைச் சார்ந்த மெல்லிய தண்டு - Purple (ஊதா) கலரில் வடிவமைப்பில் உள்ளது.

இதில் உள்ள ஏராளமான பொட்டா ஷியம் சத்து காரணமாக, இதைச் சாறாக ஆக்கியும்கூட குடிக்கிறார்களாம்!

நம் நாட்டு மருத்துவர்களேகூட, நோயாளிகளுக்கு பொட்டாஷியம் சத்துக் குறைவாக இருக்கிறது; கூட்ட வேண்டும் என்று கருதும்போது, இளநீரைக்கூட கொடுக்கச் சொல்வதும் உண்டு (பொட்டாஷியத்தை உடலில் குறைக்கவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் இளநீர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் என்று அறிவுரை கூறுவர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இளநீர் குடிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றும் கூறுவர்).

கேபேஜ் என்ற முட்டைக்கோசு, காலிப் பிளவர், பிராக்லி (Broccoli), கேல்(Kale), Collard Greens என்ற கீரை வகைகள், பிரசல்ஸ் ஸ்பரட்டுஸ் (Sproats) என்ற முளைகள் இவை களின் குடும்பத்தைச் சேர்ந்தது இது!

வெள்ளைக் கலரிலும் மற்றும் பல கலர்களிலும் கூட இந்த கொல் ராபி கடைகளில் அங்கே கிடைக்கிறது.

இது நார்ச்சத்து அதிகம் தரக்கூடியது (Rich dietary Fiber) மட்டுமல்ல, காரோட்டனாய்டுஸ் (Carotenoids) மற்றும் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பி வைட்டமின்கள் எல்லாம் ஏராளம் உடையதாகும்!

இது நல்ல Antioxident ம் ஆகும். உடலின் நலத்திற்கு ஊறு செய்பவை களைத் தடுத்து நிறுத்தும்.

மேலே கூறிய வைட்டமின்கள் மட்டுமா இதில் உள்ளன? மேலும் வியப் பாக உள்ளது கால்சியம், பொட்டா ஷியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், மாங்கனீஸ், செம்பு (Copper) சத்து களும் இதில் அடக்கம்!

ரத்தத்தைச் சுத்தப்படுத்தி நல்ல ரத் தமாக வைக்க இது பெரிய போர் வீரன் போல உதவவும் தயாராக உள்ளது!

அசிடோசிஸ் (Acidosis) என்ற அதிகமான ஆசிட் சுரத்தலை உடலில் தடுக்கவும், ஆஸ்துமா, புற்றுநோய் (கேன்சர்) முதலியவைகளுக்கு எதிரான சத்தை இது உடலுக்குத் தருகிறது. அந்த நோய்க் கிருமிகளை அழிக்கவும் முந்துகிறதாம்!

பச்சை ஆப்பிள் ஜூசில் (திரவத்தில்) (Juice) கலக்கி, இதனைக் குடித்தால் கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்து கிறதாம்!

இருதயத்தையும்கூட - இதிலுள்ள பொட்டாஷிய சத்து காரணமாகப் பாதுகாக்கவும் உதவுகிறதாம்!
செரிமானத்திற்கும் இது பெரிதும் உதவுகிறதாம்!

தசை, நரம்புகளைப் பலப்படுத்திட இது மிகவும் பயன்படுகிறதாம்!

பிராஸ்டேட், கொலோன் கேன்சர் இவைகளுக்கு எதிராகவும் இது ஒரு உதவிடும் பாதுகாப்புப் பணியாளனாம்!

தோல் - சருமத்தையும் பாதுகாக் கிறது. எடை குறைக்கவும் உதவிடுமாம்!

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/89349.html#ixzz3GDysRMJT

தமிழ் ஓவியா said...

அமீத் ஷாவின் ஆதங்கம் நமக்கு புரிகிறது?


- குடந்தை கருணா

மகாராஷ்டிரா தேர்தல் பிரச் சாரத்தில் பேசிய பாஜகவின் தலைவர் அமீத் ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது மனைவிக்குப் பிறகு, இன்னொரு பெண்மணியிடம் பேசினார் என்றால், அது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் மட்டும் தான் என்று பேசியுள்ளார்.

அமீத் ஷா தனது பேச்சின் மூலம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எப்போதும் யாரிடமும் பேசுவதில்லை; ஆனால், தற்போதைய பிரதமர் மோடி, சிறப்பாக மக்களிடையே பேசுகிறார் என சொல்ல வருகிறார்.

இது மிகவும் தரக்குறைவான பேச்சு, இது முன்னாள் பிரதமரை மட்டுமல்ல, பெண்களையே இழிவு படுத்தும் பேச்சு, இதற்கு, அமீத் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.

இதெல்லாம், அமீத் ஷா பரி வாருக்கு பெரிய விஷயமே அல்ல. அய்.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் 2011-ல் தொடுத்த வழக்கில், தன்னிடம் வேலை பார்த்த ஒரு பெண்மணியை, தொடர்ந்து வேவு பார்க்கும் வேலையை, அப் போதைய உள்துறை அமைச்சராக இருந்த, தற்போதைய பாஜக தலைவர் அமீத் ஷாவின் உத்தரவின் பேரில், அதிகாரிகள் செய்ததாகவும், அந்த பெண்மணியின் தொலைப்பேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், புகார் மனுவில் கூறி இருந்தார்.

இவையெல்லாம், குஜராத்தில் சர்வ அதிகாரம் படைத்தவராக திகழ்ந்த மோடிக்காக செய்யப்பட்டது என்ற புகார் எழுந்தது. அந்தப் பெண் மணியை, மோடி அடிக்கடி சந்தித்த தாகவும், இந்த விஷயம், பிரதீப் சர்மா விற்கு தெரிந்த காரணத்தால், அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சர்மா, தனது புகார் மனுவில் கூறி இருந்தார். இது சம்பந்தமாக, குஜராத் அரசே, ஒரு கண்துடைப்பு விசாரணை கமிஷனை அமைத்தது.

இப்போது, மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், எல்லா வழக்குகளையும் போல, இந்த விசாரணையையும், மூடி விட்டார்கள்.

இப்படி தனி மனிதரை வேவு பார்க்கும், கீழ்த்தர பணியை மேற்கொண்ட, தங்களைப்போல், மன் மோகன் சிங் நடந்து கொள்ளாமல் இருந்தாரே, என்ற ஆதங்கத்தில், அமீத் ஷா பேசியிருப்பது நமக்குப் புரிகிறது.

Read more: http://viduthalai.in/page-2/89353.html#ixzz3GDz1O7GE