Search This Blog

8.10.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 33

இதுதான் வால்மீகி இராமாயணம்

அயோத்தியா காண்டம்

ஒன்பதாம் அத்தியாயம் தொடர்ச்சி

கைகேயிக்கு அடங்காத கோபமுண்டாயிற்று. அவள், சகரன், அசமஞ்சனாகிய தன் மகளைத் தனியே துரத்தியது போல் துரத்தும் என்றாள்.

அப்போது சித்தார்த்தனென்ற ஒரு பிரதானி, அசமஞ்சன் ஊர்ப் பிள்ளைகளைத் தண்ணீரில் தள்ளிக்கொன்று வேடிக்கை பார்த்த கொடுஞ் செயலுக்காகத் துரத்தப்பட்டான். இராமன் என்ன குற்றம் செய்தான்? இராமனுக்கு அரசைக்கொடு; இல்லை யானால் உலகத்தார் உன்னை நிந்திப்பார்கள் என்றான். தசரதன், அடி, சண்டாளி, சித்தார்த்தன் கூறியது கேட்டதா? உன் மனம் எங்கே திரும்பப்போகிறது? நானும் இராமனுடன் காட்டிற்குப்போகிறேன். நீயும் பரதனும் சுகமாக அரசாளுங்கள் என்றான். இராமன் மன்னனைப் பார்த்து, எனக்குச்சேனையும் செல்வமும் எதற்கு? யானையைத் தந்தவன் அதைக்கட்டும் கயிற்றில் ஆசை வைக்கலாமா? யானையே போகும்போது கயிறு ஒரு பொருட்டா? தாங்கள் எனக்குக் கொடுப்பதாக உத்தேசித்த பொருள்களையெல்லாம் நான் பரதனுக்குக் கொடுத்துவிட்டேன், நான் உடுக்க மரவுரியும், கூடை, மண்வெட்டி, கோடரி முதலியவற்றையும் வேலைக்காரர் கொண்டுவந்து கொடுத்தார். இராமனும் இலக்குவனும் அதை உடுத்திக்கொண்டனர். சீதை கட்ட முயன்றும் தெரியாமல் வெட்கத்துடன் நின்றாள். உடனே இராமன் அதை அவருக்குக் கட்டிவிட்டான்.


அப்போது வசிட்டன், அடீ, தீயவளே! சீதை காட்டிற்குப் போகக்கூடாது. இராமனுக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டிய சிம்மாசனத்தில் அவளே இருந்து அரசாளட்டும். இல்லையென்றால், நாமெல்லோரும் காட்டிற்கு போவோம். பரதன் தசரதருக்குப் பிறந்தவ னானால், அவர் அன்புடன் கொடுக்காத இந்நாட்டை ஆளச்சம்மதியான். அவனுடைய தந்தையைக் கொன்ற உன்னுடனும் வாழான். மூத்தவனிருக்க இளையவன் நாடாளலாமா? சீதை காடேகினால் வேண்டிய செல்வங்களோடு போகட்டும் என்று கூறினான்.
சீதை மரவுரியுடுத்தியதைக் கண்டாரனைவரும், சீ, சீ; என்ன காரியம் செய்தீர் என்று சினந்தனர். தசரதனோ கைகேயியை நோக்கி, சண்டாளி! சீதை உனக்கென்ன செய்தாள்? அவளையும் ஏன் காடேகச் சொல்கிறாய்? சீதையையும் இலக்குவனையும் காட்டுக்குத் துரத்தி நீ என்ன நன்மை பெறுவாய்? என்று புலம்பினான், பின் தலைகுனிந்து வெட்கத்தோடு உட்கார்ந்திருந்தான். அப்போது இராமன், தந்தையே! எனக்கும் ஒரு வரம் தர வேண்டுகிறேன். என் தாயை மிகவும் ஆதரவோடு நடத்த வேண்டும். அவளுடைய பகைவர்கள் கையில் அவளைக் காட்டிக் கொடுக்கக் கூடாது. இன்னு மொருமுறை வேண்டிக்கொள்ளுகிறேன். என்னைப் பிரிந்த கவலையால் அவள் உயிரை விடாமலிருக்க வேண்டும். நான் காட்டிலிருந்து திரும்பி வந்து என் தாயை யமனுடைய பட்டணத்தில் போய்த் தேடும்படி வைக்காமல் இருப்பது உம்முடைய பொறுப்பு என வேண்டினான்.
தசரதன், என் உயிர் போகேனென்கிறதே என ஓலமிட்டுப் பின் சுமந்திரனைப் பார்த்து, நல்ல குதிரைகள் பூட்டிய தேரைத் தயாரித்து அதில் இராமனை ஏற்றித் தெற்கே அழைத்துக் கொண்டு போ என்று சொன்னான். சுமந்திரன் அவ்வாறே தேர் கொண்டுவந்து நிறுத்தினான். தசரதன் செல்வத் தலைவனை அழைத்துச் சீதைக்குப் போதுமானபடி ஆடைகளையும், நகைகளையும் கொண்டு வநது தரச்சொல்ல, அவனும் அவ்வாறே செய்தான். சீதை அந்த விலையுயர்ந்த நகைகளால் தன்னை அலங்கரித்துக் கொண்டாள். அதைக்கண்டு கோசலை அவளைத் தழுவிக் கொண்டு, பத்தினிப் பெண்கள் கணவனையே தெய்வமாக நினைப்பார்கள். கெட்ட பெண்களோ கணவனுக்குக் கேட்டையும், சோர நாயகனுக்கு நலத்தையும் நினைப்பார்கள். என் மகன் நல்ல நிலையிலிருந்தவன்; இப்போது வினைவசத்தால் நாட்டிலிருந்து விலக்கப்பட்டிருந்தவன். இதை ஒரு காரணமாகக் கொண்டு நீ அவனை இகழாமல் தெய்வமாக நினைத்து நட என்றாள். சீதை, அம்மா! இந்த விவரமெல்லாம் நான் அறிவேன். தாங்கள் என்னைப் பதிவிரதையல்லாத கெட்ட பெண்களுடன் சேர்த்துப் பேசக்கூடாது. என் தாயைப்போன்ற மகா பதிவிரதைகளிடமிருந்து அந்தத் தருமத்தை நன்றாகக் கேட்டறிந்திருக்கிறேன். ஆகையால் என் கணவனைக் கனவிலும் அவமதியேன் என்றாள். கோசலை கண்ணீர் வடித்தாள். பிறகு இராமன் கோசலையைப் பணிந்து, மற்ற முந்நூற்றைம்பது சிறிய தாய்மாரையும் கும்பிட்டு, நான் உங்கட்கு ஏதாவது குற்றம் செய்திருந்தால், மன்னிக்க வேண்டும்; அப்படிச் செய்வதாகச் சொன்னாலொழிய, என் மனத்துக்குச் சமாதானம் வராது எனக்கூறி விடைகேட்டான். அவர்கள் அழுதார்கள்.


பிறகு இராமனும், இலக்குவனும், சீதையும் தசரதனைக் காலைத் தொட்டு வணங்கி, சோசலை யையும் வணங்கினர். இலக்குவன் தன் தமையன் செய்ததைப் போலக் கோசலையை வணங்கித் தன் தாயான சுமித்திரையையும் வணங்கினான். சுமித்திரை, இராமன் சொற்படி கேட்டு நட. அவனை உன் தந்தையென நினை. சீதையே உன்தாய் என்று புகன்றாள். பிறகு சுமந்திரன், காட்டில் வாழவேண் டியதில் இது முதல்நாள் ஆதலின் இப்போதே புறப்படும் எனக்கூற, இராமன் சீதையைத் தேரிலேற்றித் தானும் தம்பியுடன் ஏறிக்கொண்டான். உடனே சுமந்திரன் வேகமாகத் தேரை நடத்தினான். குடிகளெல்லோரும் அழுது தேரை நிறுத்தச் சொல்லிப் பின் தொடர்ந்தனர்.
தசரதனும் அவனுடைய மனைவிமாரும், எங்கள் அருமைக்குழந்தையை இன்னுமொருமுறை பார்க்கப் போகாமலிருப்போமா? என்று வெளியில் ஓடிவந்தனர். தசரதன் ஓட முடியாமல் கீழே விழுந்தான்.

                 --------------------------------"விடுதலை” 8-10-2014

8 comments:

தமிழ் ஓவியா said...

முதலாளிகளின் பின்பலம்


அரசாங்கம் முதலாளிகளுக்கு அனுசரணையாக இல்லையானால், தொழிலாளிகளின் சமூகத்தை எதிர்த்துத் தனிப்பட்ட முதலாளிகள் எத்தனை நாள் வாழ முடியும்?
_ (விடுதலை, 20.1.1948)

Read more: http://viduthalai.in/e-paper/88901.html#ixzz3FYtx3gVF

தமிழ் ஓவியா said...

என்.எல்.சி. போராட்டம்!

பொதுத் துறை நிறுவனங்களில் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், போபால் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியுள்ளன.

இருப்பினும், நீண்ட நாள்களாக நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்க ஒப்பந்த ஊழியர்களை நிர்வாகம் நிரந்தரத் தொழிலாளர்களாக பணியமர்த்த மறுத்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடந்துகொண்டு இருக்கிறது. போராட்டங்கள் தீவிரமடையும் போதெல்லாம் நிர்வாகம் ஏதாவது ஒரு வாக்குறுதி கொடுக்கிறது, பணியாளர்களும் அதை நம்பி வேலைக்குத் திரும்புகின்றனர். ஆனால், பணியாளர்கள் வேலைக்குத் திரும்பியதும் மீண்டும் நிர்வாகம் ஒப்பந்தப் பணியாளர்கள் தொடர்பான விவகாரத்தை அப்படியே மூடி வைத்துவிடுகிறது.

தற்போதுள்ள பொருளாதாரச் சூழலில் நீண்டகால ஒப்பந்தப் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் சம்பள விகிதத்தில் பெருத்த வேறுபாடு காணப்படுகிறது. இதனால், உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், பணி நிரந்தரம் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்து என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதியிலிருந்து 35 நாள்களாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பல சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துவிட்டது. என்.எல்.சி. நிறுவனத்தின் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரத் தன்மையுள்ள பணிகளை குறைந்த ஊதியத்தில் செய்து வருகிறார்கள். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அவர்களது கோரிக்கை நியாயமானது ஆகும்.

தங்களது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி மறியல் அறப்போர் நடத்திய 2,000 ஒப்பந்தத் தொழிலாளர் கள் கைது செய்யப்பட்டனர். காவலில் வைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும் அவர்களின் பட்டினிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் என்ன கொடுமையென்றால் 13 ஆயிரம் தொழி லாளர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரிவதுதான்.

20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், பொருளாதாரப் பயன்களின்றி வெளியேறினர்; அவர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டு இருந்தால் நல்ல அளவுக்கு ஒரு தொகையைப் பெற்று இருப்பார்கள்.

பொதுத் துறை நிறுவனங்கள் என்று வரும்பொழுது தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காய் என்பது போல பல பொதுத் துறை நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழி லாளர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளனர். இரயில்வேயில் அவ்வாறு நடந்திருக்கிறது. அரித்துவாரில் உள்ள பெல் நிறுவனத்திலும் நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் அதே பெல் நிறுவனம் திருவெறும் பூரில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்து வதில்லை. உயர்நீதிமன்றம் (மதுரை) தீர்ப்பு வழங்கியும்கூட அதனைச் செயல்படுத்த திருவெறும்பூர் பெல் நிறுவனம்முன் வரவில்லை.

ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்சினையில் மத்திய அரசு பொதுவாக குறிப்பிட்ட ஆண்டுகள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றியவர்களை நிரந்தரப் படுத்துவது தொடர்பாக ஒரு கொள்கை முடிவினை ஏன் எடுக்கக்கூடாது?

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் ஆதரவு கொடுத்துள்ளனவே!

இதில் ஆச்சரியமான ஒன்று என்னவென்றால், தமிழ்நாடு அரசு - 35 நாள்களாக நடைபெற்றுவரும் இந்த வேலை நிறுத்தம்பற்றிக் கவனம் செலுத்தாததுதான். தி.மு.க. ஆட்சியில் என்.எல்.சி.யில் வேலை நிறுத்தம் நடந்தபோது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலையிட்டு சுமூக முடிவை எடுத்ததை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அதுமட்டுமல்லாமல், தி.மு.க. ஆட்சியில் மின்வாரியம், தமிழ்நாடு காகித ஆலை முதலிய நிறுவனங்களில் பணி யாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி இந்தியாவுக்கே வழிகாட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

35 நாள்களாக தொடர் வேலை நிறுத்தம் நடந்து வந்தும் மத்திய பி.ஜே.பி. அரசு இதனைக் கண்டுகொள்ளாதது - அதன் நிர்வாகத் திறனுக்கான அத்தாட்சிதான் போலும்!

தமிழ் ஓவியா said...

இது ஏதோ குறிப்பிட்ட நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர் பிரச்சினை என்று கருதிவிட முடியாது; நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தென் மாநிலங்களுக்கே மின்சாரத்தை வழங்கக்கூடிய ஒரு நிறுவனம். அதிலுள்ள தொழிலாளர்களின் பிரச்சினை என்பது - பொது மக்கள் பிரச்சினைதான்; அதன் காரணமாகத்தான் நெய்வேலி சுற்று வட்டாரத்தில் வாழும் பொதுமக்களும், தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துக் குரல் கொடுத்தும் வருகின்றனர்.

இவ்வளவுக்கும் இந்தியாவில் நவரத்தினம் என்று சொல்லப்படும் பட்டியலில் இடம்பெற்று கோடிக்கணக்கான இலாபத்தைக் கொண்டுவந்து குவிக்கிறது. இந்த இலாப ஈட்டில் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்புக்கும் முக்கிய பங்கு உண்டே!

ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்தலும் மற்றும் ஒழுங்குபடுத்தும் சட்டம் 1970 இன்படி தொடர் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றினால், அவர்களுக்கு நிரந்தரத் தொழிலாளர்களுக்குரிய ஊதியம் மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்படவேண்டும்.

சட்டத்தையும் மதிப்பதில்லை; நீதிமன்ற தீர்ப்புகளையும் மதிப்பதில்லை என்றால், அதற்காகக் கடுமையான விலையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுக்க நேரும் என்று எச்சரிக்கின்றோம்.

நெய்வேலியில் நடைபெறும் போராட்டத்திற்குத் திராவிடர் தொழிலாளர் கழகம் தன் முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.

Read more: http://viduthalai.in/e-paper/88902.html#ixzz3FYuAL6zf

தமிழ் ஓவியா said...

வெயிட்டேஜ் என்ற சமூக அநீதி!


பிற இதழிலிருந்து....

வெயிட்டேஜ் என்ற சமூக அநீதி!

கல்வியியலில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இடப்பட்ட சாபம் தான் வெயிட்டேஜ் முறை. சமூகத்தின் ஒரு பிரிவு மக்களே ஆசிரியர்களாக ஆக முடியும் என்ற நெடுங்கால ஒடுக்குமுறையை உடைத்தெறிந்து, எல்லோரும் ஆசிரியர்களாகலாம் என்ற நிலை உருவானது சில பத்தாண்டு களுக்கு முன்னர்தான். அப்படியிருந்தும், சொத்தையெல்லாம் விற்றோ, அடமா னம் வைத்தோ கல்வியியல் பட்டயமோ பட்டமோ பெற்றவர்கள், வேலை கிடைக்காமல் அவதியுறும் நிலை தற்போது உருவாகியிருக்கிறது.

பதில் இல்லாத கேள்விகள் வேலை இல்லாத வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி நிற் கிறார்கள் முதல் தலைமுறை ஆசிரியர் கள். மறுபுறம், போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளும் திணறிவருகின்றன.

தேசிய ஆசிரியர் கல்வி மன்றத்தின் (என்.சி.டி.இ.) தெளிவற்ற வழிகாட்டுதலே இந்தச் சிக்கலுக்கு அடிப்படைக் கார ணம். இந்தச் சூழலில் சில கேள்விகள் எழுகின்றன. ஆசிரியராகப் பணிபுரிய அடிப்படைத் தகுதியான கல்வியியல் பட்டயம்/ பட்டம் பெற்ற ஒருவருக்கு, தகுதித் தேர்வு தேவையா? தேவை யென்றால் என்ன காரணம்? அந்தப் படிப்புகளில் போதிய பயிற்சி வழங்கப் படவில்லை என்று என்.சி.டி.இ கருது கிறதா? கணிதத்தில் பட்டம் பெற்ற ஒரு வரை, அறிவியலில் பட்டம் பெற்ற ஒரு வர் எழுதும் அதே 30 கேள்விகளுக்குப் பதில் எழுதச் சொல்வது சரிதானா என்ற கேள்வியே இல்லாமல் ஒரு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுவிட்டது ஏன்? பல குழப்பங்களுடன் வெளியான என்.சி.டி.இ-யின் வழிகாட்டுதலில், பள்ளி நிர்வாகங்கள் மதிப்பெண் தளர்வு வழங்குவதற்குப் பரிசீலிக்கலாம் என்றும் ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்றும் தெளி வற்ற பிரிவுகள் இருக்கின்றன. இவை குறித்து விளக்கம் கோராமலேயே தகுதித் தேர்வு நடைமுறைப்படுத்தப் பட்டது. அதனால்தான், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு முறை பின்பற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் மிகுந்த குழப்பத்துடன் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியானது. தகுதித் தேர்வு தகுதிப்படுத்தவா, வேலைவாய்ப்பு வழங் கவா? என்ற தெளிவு நீதிமன்றங்களுக் குக்கூட ஏற்படவில்லை.

தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு

தமிழ் ஓவியா said...

ஆசிரியராகப் பணியாற்ற மேற் கொள்ளப்படும் தொழிற்பயிற்சிதான் கல்வியியல் பட்டயம்/ பட்டம். இந்தத் தகுதியை அடிப்படையாகக் கொண்டு எழுதப் படும் தகுதித் தேர்வில் ஒருவர் தேர்ச்சி பெறவில்லை என்றால், தன் வாழ்வாதாரத்துக்காக எந்தத் தொழிலை மேற்கொள்ள பயிற்சி எடுத்துக்கொண் டாரோ அந்தத் தொழிலை மேற் கொள்ள முடியாமல் போய்விடும். இது ஒருவரின் வாழ்வாதாரத்தையே பறிப்ப தாகும். வாழ்வாதாரத்துக்கான எந்தத் தேர்விலும் இடஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. சட்டம் தொடங்கி, வழிகாட்டுதலை நடைமுறைப் படுத்தும் அரசாணை வரை மதிப்பெண் தளர்வு வழங்க வாய்ப்பளிக்கப்பட்டது. எனி னும், தமிழ்நாடு அரசு மதிப்பெண் தளர்வு வழங்காததால் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர், இதுதொடர்பாக தேசிய ஆதி திராவிடர் ஆணையம், தமிழ்நாடு அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதன்பின் மறு ஆய்வும் நடத்தப்பட் டது. சட்டமன்றத்தில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறி வித்தார். இந்த வரலாறு தெரியாமலா சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, மதிப்பெண் தளர்வை ரத்து செய்து உத்தரவிட்டது? ஒரு தொழி லைச் செய்யவே கூடாது என்று பின் தள்ளப்பட்ட ஒரு பிரிவினருக்கு, அந்தத் தொழிலை மேற்கொள்ள வழங்கப்படும் முன்னுரிமைகள்தான் இட ஒதுக்கீடும் அதற்கான மதிப்பெண் தளர்வும். மதிப் பெண் தளர்வை ரத்துசெய்த உயர்நீதி மன்றத் தீர்ப்பு, அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்துக்கு எதிரானது. கூடுதல் மதிப்பின் குழப்பம் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலு வலகப் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் மேற் கொள்ளப்பட்டது. அதை மாற்றி, போட்டித் தேர்வு நடத்தி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றது. இவை எவற்றிலும் 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பு களில் பெற்ற மதிப்பெண்களுக்கு கூடுதல் மதிப்பு(வெயிட்டேஜ்) வழங்கப் பட்டது கிடையாது. வழக்கு ஒன்றில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அரசு ஒரு குழு அமைத்திருப்பதாகவும், அந்தக் குழு தரும் பரிந்துரையின் அடிப் படையில் பணி நியமனம் மேற்கொள் வதாகவும் கூறியிருந்தார். நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டது. சென்னை உயர் நீதிமன்றம் 29.04.2014 அன்று வழங்கிய தீர்ப்பில் இந்தக் குழுவின் செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித் திருந்தது.


தமிழ் ஓவியா said...

ஒரே நாளில் ஆந்திர, மேற்கு வங்க மாநில நடைமுறைகளைப் பின் பற்றி தமிழ்நாட்டுக்கு ஒரு நடைமுறை வகுக்கப்பட்டது. அந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறையின் சாதக, பாதக அம்சங்களை இந்தக் குழு ஆய்வு செய்யவில்லை என்று குறிப்பிட்டி ருந்தது. மேலும், வேறு அறிவியல்பூர் வமான வகையில் கூடுதல் மதிப்பு அளித்து, பணி நியமனம் மேற்கொள் ளலாம் என்பதை அரசு ஆராய்ந்து விரைவில் முடிவெடுக்கவேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. இவ்வாறான கருத்துகள் நீதிமன் றத்தால் வெளியிடப்பட்ட பிறகும் முழு மையான மறு ஆய்வு மேற்கொள்ளா மல் அடுக்குமுறைக்குப் பதிலாக ஒவ் வொரு மதிப்பெண் சதவீதத்துக்கும் வெயிட்டேஜ் என்ற முறையைக் கொண்ட அடுத்த அரசாணை வெளி யிடப்பட்டது. எழுத்தறிவற்ற குடும்பச் சூழலில் பிறந்து போராடி, ப்ளஸ்-டூ முடிக்கும் மாணவர்களில் பலர் முதலில் தேர்ச்சி பெறத் தவறி, அதற்குப் பின் தேர்ச்சி பெற்று, தன் அறிவை விரிவு படுத்தி, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, அரசுப் பணியில் பல நிலை களில் பணியாற்றிவருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

தன் தகுதியை மேம்படுத்திக் கொண்ட ஒருவரை, அவர் ப்ளஸ்-டூவில் குறைந்த மதிப்பெண் எடுத்தார் என்ற காரணத்துக்காக வேலைவாய்ப் பில் பின்னுக்குத் தள்ளுவது நியாயமற்ற நடைமுறை. 2012 இல் தொடங்கி முற் றுப்பெறாமல் தொடர்ந்துகொண்டி ருக்கும் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர அரசு ஏன் முயற்சிக்க வில்லை? வெயிட்டேஜ் என்பது நால் வர் குழு உருவாக்கமே தவிர, அமைச் சரவை மேற்கொண்ட கொள்கை முடிவல்ல. எனவே, மதிப்பெண் தளர்வு வழங்குதல், வெயிட்டேஜ் முறையைக் கைவிடுதல் ஆகிய கோரிக்கைகளை உரிய முறையில் அரசு பரிசீலிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப் பெண் தளர்வு வழங்கி, பணி நிய மனத்தில் பதிவு, மூப்பு மற்றும் வயது ஆகியவற்றுக்கு முன்னுரிமை தந்து பணி நியமனங்களை மேற்கொள்வது மட்டுமே இந்தச் சிக்கலைச் சுமூகமாகத் தீர்க்க வழி செய்யும்.

- தொடர்புக்கு: பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச்செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை. tnpcommonschool@gmail.com

நன்றி: தி இந்து (தமிழ்), 8.10.2014

Read more: http://viduthalai.in/e-paper/88903.html#ixzz3FYuOMN8o

தமிழ் ஓவியா said...

பகல் கொள்ளை, பகல் கொள்ளைன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னாய்யா?கேள்வி: ஏன்யா, பகல் கொள்ளை, பகல் கொள்ளைன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னாய்யா?

பதில்: அதென்னய்யா, நீ உலகம் புரியாத ஆளா இருக்கிறீயே, சிறப்பு ரயிலை, பிரிமியம் ரயிலை உட்ராறு பாரு, நம்ம மோடி, அதுக்குப் பெயர்தான், பகல் கொள்ளை.

கேள்வி: எப்படிய்யா, பிரிமியம் ரயிலை பகல் கொள்ளைன்னு சொல்றே,

பதில்: பண்டிகை காலத்துலே, கூட்ட நெரிசலை குறைக்க, சிறப்பு ரயில்ன்னு, விடுவாங்க. அந்த சிறப்பு ரயிலுக்கும் அதே கட்டணம்தான். ஆனா, நம்ம மோடி இருக்கார்லே, அதாவது, நான் டீ போட்டவன், சாதாரண ஆள்னு சொல்லிகிட்டு, அதானிங்கிற தொழிலதிபர் விமானத்திலே பறந்துகிட்டு இருக்கிற ஏழை மகராசன், அவர் என்ன செஞ்சிட்டார்னா, சிறப்பு ரயிலை, பிரிமியம் ரயில்ன்னு பேரை மாத்தினார். அதோட, கட் டணத்தை, அய்ந்து மடங்கு உசத்திப்புட்டார். அப்புறம், நீங்க டிக்கெட் வாங்கிட்டு, போக லைன்னா, பணமும் திருப்பி கிடைக்காது.

இப்ப புரியுதா, இதுக்குப் பெயர்தான், பகல் கொள்ளைன்னு.

கேள்வி கேட்டவர்: ஆகா, பேஷா புரியுது. ஆப் கி பார், மோடி சர்க்கார்ன்னு புரியுது.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/e-paper/88905.html#ixzz3FYukpTch