Search This Blog

26.10.14

தீபாவளிப் பண்டிகையைப் பற்றி விவாதம் விமர்சனம் செய்ததற்காக ஆர்ப்பாட்டமா?

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா?


தீபாவளிப் பண்டிகையைப்பற்றி ஒரு தனியார் தொலைக் காட்சியில் விவாதம் நடைபெற்றுள்ளது (22.10.2014).


பேராசிரியர் சுப.வீரபாண்டியன், எழுத்தாளர் எஸ்.இராம கிருஷ்ணன், பேராசிரியர் முனைவர் வீ.அரசு, வழக்குரைஞர் இராமமூர்த்தி ஆகியோர் விவாதத்தில் கலந்துகொண்டுள்ளனர்.


தீபாவளி என்றால் என்ன? அதற்கும், தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? மூடத் தீபாவளியைப்பற்றிய அறிவுக்குப் பொருந்தாத மூடக் கதைகள்பற்றி எல்லாம் விவாதத்தில் எடுத்துரைக்கப்பட்டன.


இதனைத் தொடர்ந்து 23 ஆம் தேதி இந்து முன்னணி - ஆர்.எஸ்.எஸ். கும்பல் சிலர் ஒன்று கூடி அந்தத் தனியார் தொலைக்காட்சிமுன் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.


மாற்றுக் கருத்தை மதிக்கக் கற்றுக்கொள்ளாத பாசிஸ்டுகள் இப்படித்தான் அராஜகமாக நடந்துகொள்வார்கள். கருத்தைக் கருத்தால் சந்திக்க முடியாத கோழைகளின் கூப்பாடு இது. இந்த அணுகுமுறை கண்டிக்கப்படவேண்டும். இதனை அனுமதித்தால் நாட்டில் எந்தவித விவாத அரங்கமும் நடைபெற முடியாது.


எடுத்துக்கொண்ட பொருள்பற்றிய விவாதத்தில் ஒரு சாராருக்கு ஏற்புடையதாக இல்லாமலிருக்கலாம்; சில நேரங்களில் சங்கடமாகவும் இருக்கலாம். அதற்காக சம்பந்தப்பட்டவர்கள் ஒன்று கூடி எதிர்ப்பது என்று ஆரம்பித்தால், அறிவுக்கும், விமர்சனத்துக்கும் இடமில்லாமல் போய்விடும்.
உண்மையைச் சொல்லப்போனால், தீபாவளி என்பது தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிரானது. தமிழர்களாகிய திராவிடர்களை இழிவுப்படுத்தக் கூடியதாகும்.


வேதங்களிலும், இதிகாசங்களிலும், புராணங்களிலும் சொல்லப்படும் அசுரன், அரக்கன், ராட்சதன் என்பவர்கள் எல்லாம் திராவிடர்கள்தான்; ஆரியர் - திராவிடர் போராட்டத்தில் ஆரியப் பார்ப்பனர்கள் தங்களின் எதிரிகளாகிய திராவிடர்களை இழிவுப்படுத்தவே இந்தச் சொற்களைக் கையாண்டுள்ளனர் என்று பார்ப்பன வரலாற்று ஆசிரியர்கள் உள்பட - இன்னும் சொல்லப்போனால், இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்த விவேகானந்தர் மற்றும் ஜவகர்லால் நேரு உள்பட எழுதியுள்ளனரே! மறுக்க முடியுமா?


சுரன் என்றால் சுரா பானம் குடித்தவன் - ஆரியப் பார்ப்பான்; அசுரன் என்றால் பானம் குடிக்காதவன் - குடியை மறுத்தவன்; ஆனால், இதனைத் தலைகீழாக மாற்றி, சுரனை ஒழுக்கவான் போலவும், அசுரனை கொடியவன் போலவும் சித்தரித்த ஆரிய நயவஞ்சகத்தை என்னென்று சொல்லுவது!


இரண்யாட்சன் என்ற திராவிட வீரன் ஆரியர்களை எதிர்த்து இருக்கிறான்; ஆரியப் பார்ப்பனர்களின் உயிர்ப் பலி யாகங்களை அழித்தவன்! மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தான் என்று கதை கட்டி சூழ்ச்சியால் அம்மாவீரனைக் கொன்றனர்.


இரண்யனின் மகன் பிரகலாதனையே அப்பனுக்கு எதிராக துரோகம் செய்யும் வலையை விரித்தவர்களும் பார்ப்பனர்களே!


இந்தப் பின்னணியில் தீபாவளியை முன்னிறுத்தும் அத்தனை யையும் எதிர்க்கவேண்டிய கடமை உணர்வு திராவிடர்களுக்கு உண்டு. தீபாவளிக்காக திராவிடர்கள்தான் தீயெனக் கொந்தளித்து எழவேண்டுமே தவிர, தீபாவளியைக் கொச்சைப்படுத்தாதே! என்று அப்பாவி தமிழர்கள் நாம் என்ன செய்கிறோம் என்ற விவரம் தெரியாத தமிழர்கள் குரல் கொடுப்பது வெட்கக்கேடானது!


அந்த அளவுக்குப் பார்ப்பனீயம் நம் தமிழ் மக்களை மூளைச் சாயம் ஏற்றியிருக்கிறது; பக்திப் போதையால் ஏற்பட்ட தடுமாற்றத்தின் தீய விளைவு இது.


சொந்த வீட்டுக்காரன் படுகொலையை வீட்டுக்கு உரியவன் கொண்டாடுவானா? அப்படி கொண்டாடுகிறான் என்றால், அதன் பொருள் என்ன? எந்த இடத்திலோ அவன் மூளை பழுது பட்டுள்ளது என்று பொருள்.


தீபாவளியைப்பற்றி விமர்சனம் செய்ததற்காக ஆர்ப்பாட்டம் நடத்தியதில் அனேகமாக பெரும்பாலும் நம் தமிழர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்; அண்ணன் இராவணனைக் காட்டிக் கொடுத்து ஆழ்வார் பட்டம் பெற்ற விபீஷணர்களின் பரம்பரை இன்னும் தொடர்வது வேதனைக்குரியது. அவர்கள்மீது கோபப் படுவதைவிட அனுதாபப்படத்தான் வேண்டும்; அவர்களுக்கும் நல்லறிவு கொடுக்கவேண்டியதும் நமது கடமை என்றுதான் கருதுகிறோம். நம்முடைய பிரச்சாரம் இன்னும் தீவிரம் அடையவேண்டும் என்பதைத்தான் இது காட்டுகிறது.


இந்த நேரத்தில், நாம் கவனிக்கவேண்டியது - கருதவேண் டியது ஒன்று உண்டு. காவல்துறையின் முன் அனுமதி பெறாமல் ஒரு கும்பல் திடீரென்று சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிமுன் ஆர்ப்பாட்டம் நடத்தியது எப்படி?


பொதுவாக ஓர் இயக்கமோ, கட்சியோ, அமைப்போ அறப்போராட்டங்களுக்கு அனுமதி பெறவேண்டும் என்றால், 5 முழு நாள்கள் இடைவெளி இருக்கவேண்டும் என்று நிபந்தனை வைக்கும் மாநகரக் காவல்துறை, திடீரென்று நினைத்து, திடீரென்று கூடி, ஒரு நிறுவனத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்திட அனுமதி கொடுத்ததா? அப்படி அனுமதி கொடுக்கும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டு என்றால், அந்த வாய்ப்பு மற்ற அமைப்புகளுக்கும் கிடைத்திட வாய்ப்புண்டா? என்ற கேள்வியை முன்வைக்க விரும்புகிறோம்.


அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது; 5 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்கவேண்டும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதுதான் காவல்துறையின் நிலைப்பாடு என்று கூறப்படு மேயானால், தனியார்த் தொலைக்காட்சிமுன் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், அது சட்ட விரோதம் என்று கைது செய்யாதது ஏன்? உரிய நடவடிக்கைகளை எடுக்காதது ஏன்? என்று கேட்க விரும்புகிறோம்.

சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதானே! மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி நடக்கிறது; அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம்; சட்டத்தை, நடைமுறைகளை மதிக்கத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசோ, அதன் காவல்துறையோ எழுதப்படாத ஒரு சட்டத்தைக் கைவசம் கொண்டுள்ளதா?


தமிழ்நாட்டில் ஏற்கெனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இந்த நிலையில், சங் பரிவார்க் கும்பலை தானடித்த மூப்பாக நடந்துகொள்ள அனுமதித்தால், அது தேவையில்லாத பிரச்சினைகளை உண்டாக்கும் - அதன் பயன் ஆட்சிக்குத்தான் - காவல்துறைக்குத்தான் கெட்ட பெயரை ஏற்படுத்தும்.


கடைசியாக ஒன்று, நான்கு பேர் கூடி ஆர்ப்பாட்டம் செய்தால், பாவ மன்னிப்புக் கோருவதுபோல, இந்தத் தனியார் தொலைக் காட்சி விளக்கம் அளிப்பது சரிதானா? இது ஒரு பலகீனமான அணுகுமுறையல்லவா?


ஒரு முடிவை எடுத்தால், அதில் உறுதியாக இருக்கவேண்டும். ஓடுகிறவனைக் கண்டால் விரட்டுகிறவன் வீரனாகிவிடுவானே!

                         -------------------------------”விடுதலை” தலையங்கம் 25-10-2014

40 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உலகம் எதுவாக இருக்கிறது என்று கேட்ட மைத்ரேயன் கேள்விக்குப் பதிலாக,

இந்த உலகம் விஷ்ணுவிடமிருந்து தோன்றியது. பிரளய காலத்தில் இது அவ னையே சென்று சேரும். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களையும் நிகழ்த் துபவனும் அவனே. இந்த உலகம் முழுவதும் அவனே வியாபித்து இருக்கிறான் என்று ஓர் ஆன்மிக இதழ் கூறுகிறது.

படைத்தல் - பிரம்மா, காத்தல் - விஷ்ணு, அழித் தல் - சிவன் என்று சொல்லி வந்தது எல்லாம் என்னாயிற்று?

விஷ்ணுதான் எல்லாம் என்று அய்யங்கார் சொல்லுவதை ஸ்மார்த் தர்கள் ஏற்றுக்கொள் கிறார்களா?

அட குழப்பமே, முரண்பாடே, இதுதான் இந்து ஆன்மிகமா?

Read more: http://viduthalai.in/e-paper/89959.html#ixzz3HD4tHr9f

தமிழ் ஓவியா said...


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தீண்டாமை:

திராவிடர் கழகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் போராட்டம்

காஞ்சிபுரம், அக்.25_ காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அன்றாடம் நடைபெறும் தீண்டாமையை எதிர்த் துப் போராட்டம் நடத் தப்பட்டது.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலினுள் மணவாள மாமுனி சன் னதி உள்ளது. இந்த சன்ன தியினுள் பார்ப்பனர்கள் மட்டும் உள்ளே சென்று வழிபாடு செய்து வருகின் றனர். பார்ப்பனர் அல் லாதவர்களுக்கு இந்த சன் னதியினுள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்திருக்கின்றது. பார்ப் பனர்களுக்கு தனி வழி. பார்ப்பனல்லாதார்க்கும், பொதுமக்களுக்கும் தனி வழி ஒதுக்கியுள்ளனர். பார்ப்பனரல்லாதவர்கள் வெளியே அமர்ந்து தான் பாடல் பாடி வழிபட வேண்டும்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு

இந்தத் தீண்டாமைக் கொடுமையைக் கண்டித்து பார்ப்பனல்லாத மாதவ ராமானுஜதாசர் கடந்த 2008 -ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்து வெற்றியும் அடைந்துள் ளார். உயர்நீதிமன்றம் அனைத்து ஜாதியினரும் உள்ளே சென்று பாடல் பாடி வழிபடலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு எண்:...25845/2008 , இந்து அறநிலைய துறை ஆணை நகல் எண்கள்:35/2003 தேதி: 23.12.2003 மற்றும் 168/2009 தேதி: 17.8.2009. இத்தீர்ப்பு மற்றும் ஆணை நகலைக் காண் பித்த பின்னரும்கூட பார்ப்பனர்கள், பார்ப்பன ரல்லாத மாதவ ராமானுஜ தாசர் உள்ளிட்டவர்களுக் குத் தொடர்ந்து வழி பாட்டு உரிமை மறுக்கப் பட்டு வந்திருக்கின்றனர்.

ராமானுஜ தாசர் காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர் களுடன் தொடர்ந்து இதற்கான களப் பணி களில் ஈடுபட்டு வந்தனர். தீண்டாமை ஒழிப்பு முன் னணியினர் காஞ்சி மாவட்ட ஜனநாயக அமைப்புகளைத் தொடர்பு கொள்கின்ற னர். திராவிடர் கழகத்தி னரும், விடுதலைச்சிறுத் தைகள் கட்சியினரும் களத்தில் இணைகின்ற னர்.

கடந்த 15.10.2014 அன்று காஞ்சிபுரம் மாவட்ட இந்து அறநிலை யத் துறை அலுவலரைச் சந்தித்து சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தக் கோரியும், 19.10.2014 முதல் 28.10.2014 நடைபெறவுள்ள உற்சவத்தை ஜாதி பாகு பாடின்றி நடத்திடக் கோரியும் மனு கொடுத்த னர்.

மீறுவோர்மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பினைக் கட்டாயம் முழுமையாக கடைப்பிடித்திடவேண்டும். இல்லையென்றால் மீறு வோர்மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் நிர் வாகத்திற்குக் கடிதம் கொடுக்கின்றது.

இருப்பினும் ஆதிக்க ஜாதித் திமிர்ப்பிடித்த பார்ப்பன பூசாரிகள், பார்ப்பனரல்லாதவர்களை உள்ளே அனுமதிக்க வில்லை.

காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் தலைமையில் 21.10.2014 அன்று மாதவ ராமானுஜ தாசர், செந்தில்நாதன் மற் றும் போராட்டக் குழுவி னரும் கோவிலுனுள்ளே மணவாள மாமுனிவர் சன்னதி உள்ளே சென்ற னர்.

பார்ப்பனர்கள், மாதவ ராமானுஜ தாசர் மற்றும் செந்தில்நாதனையும் வழி மறித்து, ஆபாச வார்த் தைகளால் மிரட்டினார் கள்.

தடையை மீறி உள்ளே சென்ற பார்ப்பனரல்லாத மாதவ ராமானுஜ தாசர், செந்தில்நாதன் உள் ளிட்டவர்கள் பார்ப்பனர் களைவிட சிறப்பாகவே நாலாயிர திவ்யப் பிரபந் தம் பாடலைப் பாடி வழி பட்டனர்.

பார்ப்பனர்கள், காவல் துறையினரை அழைத்து வந்தனர். போராட்டக் குழுவினரும் உயர்நீதி மன்ற தீர்ப்பானையைக் காண்பித்து வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். காவல் துறை உதவியுடன் மாதவ ராமானுஜ தாசர் உள் ளிட்ட பார்ப்பனர் அல் லாதவர் அனைவரையும் சன்னதியை விட்டு வெளி யேற்றினார்கள்.

அடுத்தகட்ட நடவ டிக்கைபற்றி ஒத்த கருத்து கொண்ட அமைப்புகளை ஒன்றிணைத்து மிகப் பெரிய மக்கள் போராட் டம் நடத்த போராட்டக் குழு முடிவு செய்துள்ளது.

பங்கேற்றோர்

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திராவிடர் கழகத் தோழர் கள் இளையவேல், வேலா யுதம், சக்திவேல், அர் ஜூன், ரவிந்திரன், அருண் குமார், தங்கராஜ், கோபி நாத், கோவிந்தராஜ், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த பாசறை செல்வராசு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி காஞ்சி மாவட்ட செயலாளர் தோழர் பாரதி அண்ணா, தோழர் லாரன்சு மற்றும் பல தோழர்கள்
விடுதலை செய்தியாளர் இரா.சக்திவேல், காஞ்சிபுரம்.

Read more: http://viduthalai.in/e-paper/89973.html#ixzz3HD52auYN

தமிழ் ஓவியா said...

காந்திக்குப் பதிலாக நேருவைத்தான் கோட்சே கொலை செய்திருக்கவேண்டுமாம்:
சொல்வது கேரளா ஆர்.எஸ்.எஸ்.!

மகாத்மா காந்தியைப் படுகொலை செய்ததற்கு பதிலாக நேருவைத்தான் நாதுராம் கோட்சே கொலை செய்திருக்கவேண்டும் என்று கேரளா ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகார பூர்வ ஊடகமாக வெளிவருவது கேசரி. கடந்த 17 ஆம் தேதியிட்ட கேசரி இதழில் பி.ஜி.கோபாலகிருஷ்ணன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இவர் சாலக் குடி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டவரும் கூட!

Read more: http://viduthalai.in/e-paper/89977.html#ixzz3HD5FqHnC

தமிழ் ஓவியா said...

தேவையைப் பொறுத்ததே நாணயம்

சாதாரண மனிதனுடைய நாணயம், ஒழுக்கம், நேர்மை என்பதெல்லாம் நூற்றுக்குத் தொண்ணூறு அவனவனுடைய இலட்சியத்தையும், தேவையையுமே பொறுத்ததாகும்.
_ (குடிஅரசு, 17.11.1961)

Read more: http://viduthalai.in/page-2/89978.html#ixzz3HD5Y8F95

தமிழ் ஓவியா said...

தீபாவளி பரிசோ! தீபாவளியால் காற்று மாசு: அகமதாபாத் முதலிடம்; சென்னை இரண்டாமிடம்


சென்னை, அக்.25- முடிந்து போன தீபாவளியால் நாம் சுவாசிக்கும் சுத்தமான காற்று அதிகபட்சமாக மாசு அடைந்து போய் இருக்கிறது. இந்த மாசு இன்னும் 2 நாள்கள் காற்றில் கலந்திருக்கும். அவ் வாறு அசுத்தம் பெற்ற நகரங்கள் பட்டிய லில் அகமதாபாத் முதலிடத்திலும், சென்னை 2 ஆவது இடத்திலும் அங்கம் பெற்றுள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீபாவளி கொண்டாட்டத்தால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசு அளவு களை அறியும் ஆய்வுகளை, நடத்தியது.

நைட்ரஜன் டை ஆக்சைடு: சென்னை, மதுரை, சேலம், கோவை, திருச்சி, கடலூர், நெல்லை, ஓசூர், திருப்பூர், வேலூர் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. தீபாவளிக்கு முன், அக்.,15 ஆம் தேதியும், தீபாவளி யான, 22 ஆம் தேதியும் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், காற்றில் மிதக்கும் நுண் துகள்கள், கந்தக டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு, ஆய்வு நடத்தப்பட்ட அனைத்துப் பகுதி களிலும், அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில், காற்றில் மிதக்கும் நுண்துகள்கள், 15 ஆம் தேதி ஆய்வில், 37 மைக்ரோ கிராமாக இருந்தது, 22 ஆம் தேதி ஆய்வில், 297 ஆக உயர்ந்துள்ளது. கந்தக டை ஆக்சைடு, 12-லிருந்து, 32 ஆகவும், நைட்ரஜன் டை ஆக்சைடு, 13-லிருந்து 20 மைக்ரோ கிராமாகவும் அதிகரித்துள்ளது.

சேலம், சாரதா மந்திர் மெட்ரிக் பள்ளி பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில், காற்றில் மிதக்கும் மின் துகள்கள், 30-லிருந்து, 168; சேலம் சிவா டவரில், 47-லிருந்து, 197 மைக்ரோ கிராமாகவும் அதிகரித்து காணப்படுகிறது. டில்லியில் நடத்திய ஆய்வில், ஒரு கியூபிக் மீட்டர் காற்றில் 210 மைக்ரோகிராம் நைட்ரஜன் டை ஆக்ஸைடும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சல்பர் டை ஆக்ஸைடு அதிகபட்சமாக 503 மைக்ரோ கிராமாக வும், சென்னையில் 393 மைக்ரோ கிரா மாகவும், இருந்தது.

இது குறித்து அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மய்ய எக்ஸ்கியூடிவ் டைரக்டர் அனுமித்தா ராய்சவுத்திரி கூறுகையில், கடந்த 2 நாள்களாக காற்றில் மிகுந்த மாசு கலந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. தட்ப வெப்ப சூழல் குளிராக இருந்ததால் காற்று ஏதுமில்லை. இதனால் இந்த காற்றில் கலந்த புகை மாசுக்கள் எளிதில் கடந்து செல்ல முடியாமல் இருந்தது. இந்த மாசுக்கள் காற்றில் இன்னும் இரண்டு நாள்கள் கலந்து தான் இருக்கும். தற் போதைய காற்று மாசு எங்களுக்குக் கவலை தருகிறது என்றார்.

Read more: http://viduthalai.in/page-2/89982.html#ixzz3HD5jxw6q

தமிழ் ஓவியா said...

அக்.25: தகவல் அறியும் உரிமை சட்ட நாள்

அரசு, அரசிடம் உதவி பெறும் நிறுவனங் களிடமிருந்து தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ஆம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ஆம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. காஷ்மீருக்கு இச்சட்டம் பொருந்தாது.

இன்று மக்களிடம் இச்சட்டம் பரவலாக சென்று சேர்ந்துள்ளது. ஏராளமான அதிர்ச்சியூட்டும், வியக்கவைக்கும் தகவல்கள் இதன் மூலம் பெறப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் தகவல் பெறலாம். இச்சட்டம் ஜனநாயகத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.

2005 மே 11இல் மக்களவையிலும், மே 12இல் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜூன் 15ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். ஜூன் 21இல் அரசிதழில் வெளியிடப் பட்டு, அக்.12ஆம் தேதி அன்று நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும், அறிய விரும்பும் தகவல்களை பெற உரிமை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் வெளிப்படையாக இருப்பதும், யார் கேட்டாலும் அவர்களுக்கு தகவல்களை தெரிவிப் பதும் அரசின் கடமை என இதில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல்களை தாமாக முன் வந்து தெரிவிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.

தகவலை பெற விரும்புவோர் அது குறித்து எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பிப் போர் பெயர், முகவரி மற்றும் கையெழுத்துடன் அனுப்பப்படும் விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவசரத் தகவலுக்கு 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, போர்யுக்தி போன்ற சில பிரிவின் கீழ்வரும் தகவல்களை அரசு தெரிவிக்க தேவையில்லை. நாடாளுமன்ற, சட்டசபைக்கோ மறுக்கப்படாத தகவல்கள், தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பது இச்சட்டத்தின் நோக்கம் குறித்த நேரத்தில் தகவல் தராமலும், தவறான தகவலை தருவதும் குற்றம். இதன்படி தவறு செய்யும் அரசு அதிகாரிகளை தண்டிக்கவும், அபராதம் வழங்கவும் மத்திய, மாநில தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இச்சட்டத்தை மக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் லஞ்சம், ஊழலை தடுக்கலாம். பயனற்ற தகவல்களை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசு எந்திரம் சரியாக செயல்படவும், அதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவும் இச்சட்டம் வழி வகுக்கிறது.

Read more: http://viduthalai.in/page-3/89989.html#ixzz3HD6AS8Ob

தமிழ் ஓவியா said...

தந்தி டிவி பாண்டேமீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகோரி

அனைத்திந்திய வழக்குரைஞர்கள் சங்கம் வேண்டுகோள்

டில்லி, அக்.25 புதுடில்லியில் உச்ச நீதிமன்றத்தின் அனைத்திந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் அதீஷ் சி.அகர்வாலா உச்சநீதிமன்றத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திர மைதானிக்கு அனுப்பியுள்ள கடிதத்தின்மூலம் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து தந்தி டிவி பாண்டேமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவேண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேண்டுகோளில் அவர் குறிப்பிட்டதாவது:

18.10.2014 அன்று தந்தி தொலைக்காட்சி ஜெயலலிதா பிணை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஃபாலி நார்மன் வாதுரைகளை ஒளிபரப்பி உள்ளது. இதில் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து தந்தி டிவி பாண்டேமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவேண்டி அது தொடர்பான உண்மைத் தகவல்களை தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

நீதிமன்ற நடவடிக்கைகளை பதிவு செய்வது மற்றும் ஒளிபரப்புவது என்பது பொருத்தமற்றதும், இழிவு படுத்தவதும் ஆகும். 18.10.2014 அன்று தந்தி தொலைக்காட்சியில் ஜெயலலிதா பிணை கோருவதில் ஃபாலி நாரிமனின் வாதுரைகளை ஒளிபரப்பி உள்ளது மாண்பமை உச்சநீதிமன்றத்தை இழிவுபடுத்துவதாக உள்ளதால், மாண்பமை உச்சநீதிமன்றம் இதில் தொடர்புடைய பதிவு மற்றும் ஒளிபரப்பிய பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்காக வழக்குரைஞர்கள் சங்கம் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் வலிமையாக வாதிட்டாலும், நீதிமன்ற நடவடிக் கைகளை பதிவு செய்வது மற்றும் ஒளிபரப்புவது உள்பட நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் செய்யக்கூடாது. ஆகவே, இதில் தொடர்புள்ள அனைத்திலும் மிகுந்த கவலையுடன் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பைக் கண்டித்து நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

-இவ்வாறு அனைத்திந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் அதீஷ் சி. அகர்வாலா உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/89994.html#ixzz3HD6jMlJP

தமிழ் ஓவியா said...

விருதுநகர் சுயமரியாதை மகாநாடு


விருதுநகர் சுயமரியாதை மகாநாடு ஜூன் முதல் வாரத்திலாவது, இரண்டாவது வாரத்திலாவது நடத்துவதாக உறுதி செய்யப்பட்டு வேண்டிய ஏற்பாடுகள் செய்து வந்ததில் மகாநாட்டுத் தலைவர் திரு. சர். ஹரி சிங்கவர் அவர்கள் நீலகிரியில் இருந்து உடல் நலமில்லாமல் திரும்பிப்போய் விட்டதாலும் வெய்யில் கடுமையை உத்தேசித்து வேறு தக்க தலைவர் சமீபத்தில் கிடைப்பதற் கில்லாமல் இருப்பதால் மகா நாட்டை ஆகஸ்டு வாக்கில் நடத்துவதாக தள்ளிப்போட்டு விட்டதாய் விருதுநகர் மகாநாட்டு வரவேற்புக் கமிட்டியார் தீர்மானம் செய்திருப்பதாக தெரிவித்துவிட்டார்கள்.

மகாநாட்டு விஷயமானது இந்தப்படி அடிக்கடி மக்கள் ஏமாற்றமடையும்படி நடந்து வருவது பலருக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுக்கக் கூடியதாயிருந்தாலும் அதற்கு அனுகூலமாக சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றதை நாம் மறுப்பதற்கில்லை என்பதையும் ஒருவாறு தெரிவித்துக் கொள்ளுகின்றோம். இதை ஆதாரமாய் வைத்துக் கொண்டு நமது இயக்க எதிரிகள் விசமப் பிரச்சாரம் செய்யக் கூடும்.

ஆனாலும், வரவேற்புக் கமிட்டியார் இதை உணராதவர்கள் என்று சொல்லிவிட முடியாது. இதற்காக அவர்கள் மகாநாட்டை எந்த முறையில் நடத்த வேண்டுமென்று கருதியிருக் கின்றார்களோ, அதை மாற்றிக்கொள்ள அவர்கள் இஷ்டப்படவில்லை. ஆகையால் நண்பர்கள் இந்த ஒரு தவணையையும் பொறுத்துக் கொள்ள வேண்டுகின்றோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 31.05.1931

Read more: http://viduthalai.in/page-7/89913.html#ixzz3HD71NYdI

தமிழ் ஓவியா said...

பிரச்சார போதனாமுறை - பள்ளிக்கூடம்

சுயமரியாதை இயக்கத் தத்துவங்களைப் பிரச்சாரம் செய்ய ஈரோட்டில் போதனா முறை பாடசாலை ஒன்று ஏற்படுத்தி சிறிது காலத்திற்குப் பயிற்சி கொடுப்பது என்பதாக ஏற்பாடு செய்து கொஞ்ச நாளைக்கு முன் அதற்காக ஒரு திறப்பு விழாவும் கொண்டாடப்பட்டது ஞாபகமிருக்கலாம்.

அந்தப்படி அவ்வப்போது தனித் தனியாக சிலர் வந்து பயிற்சி பெற்றுப் போனார்கள் என்றாலும், ஒரு முறையாக வைத்து அப்போதனா முறை பயிற்சி செய்யப்படவில்லை.

ஆனால், இப்போது இந்த ஜூன் 15ஆம் தேதியில் இருந்து முறையாகவே பள்ளிக்கூடப் பயிற்சி முறையில் ஒரு பயிற்சிசாலை ஏற்படுத்த நிச்சயித்திருப்பதால் அதில் சுமார் 20,25 பேர்களையே சேர்த்துக் கொள்ளக்கூடும். ஆதலால் வர இஷ்டம் உள்ளவர்கள் தயவுசெய்து 8ஆம் தேதிக்குள் இவ்விடம் வந்து சேரும்படியாக விண்ணப்பம் அனுப்ப வேணுமாய்க் கோரப்படுகிறார்கள்.

விண்ணப்பம் எழுதுகின்றவர்கள் அந்தந்த ஜில்லாவில் உள்ள, சுயமரியாதை இயக்கத்தில் பற்றுள்ள பிரமுகர்களின் மூலம் அறிமுகச் சீட்டு வாங்கி அனுப்பவேண்டும்.

குடிஅரசு - செய்திக் குறிப்பு - 31.05.1931

Read more: http://viduthalai.in/page-7/89913.html#ixzz3HD7A2g11

தமிழ் ஓவியா said...

இரண்டு தமிழ் தினசரி பத்திரிகைகள்

இவ்வாரம் திராவிடன், இந்தியா என்கின்றதான இரண்டு தமிழ் தினசரிப் பத்திரிகைகள் வெளிவந்திருக்கின்றன. இவற்றுள் முன்னையது முன்னாலேயே இருந்துவந்தது. சிறிது காலம் நிறுத்தப்பட்டு, மறுபடியும் புத்துயிர் பெற்றுத் தோன்றியதாகும். பின்னையது புதிதாகவே தோன்றிய தாகும்.

எப்படி இருந்த போதிலும் இவை இரண்டும் சமய சமூக மத விஷயங்களுக்கு, வக்காலத்து பேசும் வகையில் நமக்கு மத எச்சரிக்கை செய்து கொண்டே புறப்பட்டிருக் கின்றபடியால் நமது கொள்கைகளுக்கு இவைகளால் ஆதரவு எதிர் பார்ப்பதற்கில்லை என்றே கருத வேண்டி யிருக்கின்றது.

ஏனெனில், நாமோ பல மதங்களையும் பல சமய பிரிவுகளையும், சமூகப் பிரிவுகளையும் ஒழித்து மக்கள் யாவரையும் ஒரே சமூகமாக்க வேண்டும் என்னும் கொள்கையின் மீது பல சமயக் கொள்கைகளையும், பல மதக் கொள்கைகளையும், சமுகக் கொள்கைகளையும், அவற்றுள் இருக்கும் உட்பிரிவுக் கொள்கைகளையும் அதனால் இருந்து வரும் வேற்றுமை உயர்வு தாழ்வு வித்தியாசத்தையும் தங்களுடைய சமூகமோ, சமயமோ மேலானது என்கின்ற எண்ணத்தையும் அடியோடு தொலைத்தாகவேண்டும் என்ற முடிவு செய்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததாகும்.

அதோடு மாத்திரமில்லாமல் கடவுளுக்கும், ஆத்மாவுக்கும் சம்பந்த முண்டாக்குவதே மதம் என்றும் அல்லது கடவுளுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தை உணரச் செய்வதே மதம் என்றும் சொல்லும்படியான மதக் கொள்கையும் சமயக் கொள்கையையும் கண்டித்து. அவைகள் முட்டாள் தனம் என்பதற்காக நிருபித்து மக்களின் இவ்வுலக வாழ்க்கைக்கு மட்டும் ஏதாவது ஒரு மதம் (கொள்கை) இருப்பதனால் அதற்குத் தகுந்தபடி இருக்கட்டும். இல்லாவிட்டால் ஒழியட்டும் என்பதன் மூலம் மதங்களிடம் துவேஷிக்கின்றோம் என்னும் பெயர் பெற்று இருக்கின் றோம்.

அதுபோலவே சில சமுகத்தாரும் சில சமயத் தாரும் மக்களை ஏமாற்றி, தங்கள் சமுகமே மேலான தென்று வஞ்சித்துஆதிக்கம் பெற்று அவ்வாதிக்கத்தை நிலை நிறுத்த அரசியல் என்றும் தேசியம் என்றும் காந்தியம் என்றும் சத்தியாக்கிரகம் என்றும் பல சூழ்ச்சித் துறைகளை உண்டாக்கி அதன் மூலம் மேலும் மேலும் மக்களை வஞ்சித்துவரும் அயோக்கிய சமூக சமயத்தை ஒழிக்கும் முறையிலும் அவர்களது தந்திரங்களை வெளியாக்கிக் கிளர்ச்சி செய்யும் முறையில் சில சமயக்காரருடன், சில சமுகக்காரருடனும் சண்டை தொடுக்க வேண்டியவர் களாகவும் இருக்கின்றோம். இதனால் பல சண்டைகளைக் கிளப்ப வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.

இதனால் தேசிய ஒற்றுமை கெடுவது மாத்திரமல்லாமல் தேசிய உணர்ச்சி கூட ஒழிவதானாலும் நாம் லட்சியம் செய்யாதவர்களாகவும் இருக்கின்றோம். ஆதலால் மேல்கண்ட கொள்கைகளையுடைய நமக்கு மேல்கண்ட இரண்டு பத்திரிகைகளும் அனுகூலமில்லாததோடு எதிர்ப்பாக இருக்க நேரிடும் என்பதை அவை தாராளமாய் வெளிப்படுத்தி இருக்கின்றன.

எப்படி எனில் ஒன்று அதாவது திராவிடன் தனது முதல் இதழில் சமயத்துவேஷம், சமுகத்துவேஷம், மதத்துவேஷம், முதலியன இல்லாமல் காக்கும் என்று தன்னை விளம்பரப் படுத்தி கொண்டிருக்கின்றது.

இரண்டு. இந்தியா தனது முதல் இதழில் சமய சமூகச் சண்டைகளைக் கிளப்பி தேசிய ஒற்றுமைக்கு இடர்செய்யும் இயக்கங்களை எப்பொழுதும் எதிர்த்துப் போராடும் என்று எழுதிக் கச்சைகட்டி நின்று கொண்டு இருக்கின்றது. ஆகவே இந்தியா திராவிடனை விட ஒருபடி முன்னேறி இருக்கின்ற தென்றே சொல்லுவோம்.

எனவே குடிஅரசுக்கு, சுய மரியாதை இயக்கத்திற்கு முன்னுள்ள எதிரிகளைவிட மற்றும் சற்று அதிக பலம் கொண்ட சரியான எதிரிகள் இருவர் தோன்றி இருக்கின்றார்கள் என்றுதான் முடிவு கட்டிக் கொண்டு தயாராயிருக்க வேண்டும். மற்றபடி காங்கிரசுக்கும் சமயத் திற்கும், மதத்திற்கும் (ஆதிக்கம் பெற்ற) சில சமுகங் களுக்கும், கூட்டத்தாருக்கும் ஆப்தமான இரு நண்பர்கள் தோன்றி இருக்கின்றார்கள் என்றும் சொல்ல வேண்டும்.

எப்படி இருப்பினும் பொது மக்களுக்கு உலக நடப்பை உணர்த்துவது பத்திரிகை களாகும் என்னும் கருத்தின் மீது அப்பத்திரி கைகளையும் ஆதரித்து, அதன் உள் எண்ண மனப்பான் மையை உணர்ந்து கொள்வதைக் கொண்டு தள்ளுவதைத் தள்ளும் உறுதியான மனோ திடத்தில் ஆதரிக்க வேண்டுமாய் மறுபடியும் பொது மக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.

இப்பத்திரிகைகளின் பத்திராதிபர்கள் இருவரும் பார்ப்ப னரல்லாதவர்கள் என்பதோடு இருவரும் பத்திராதிபர்களாக வும் இருந்தவர்களாவார்கள். ஆதலால், அவர்களது கருத்தையும், திறத்தையும், நலனையும் மக்கள் ஏற்கனவே நன்றாய் உணர்ந்தவர்கள் ஆவார்கள். ஆதலால் அதைப்பற்றி அதிகம் எழுத வேண்டியதில்லை என்றே விட்டு விடுகின்றோம்.

விலாசம்:

திராவிடன்
14, மவுண்ட் ரோடு, சென்னை
இந்தியா
11, ஜெனரல் பாட்டர்ஸ் ரோடு,
மவுண்ட்ரோடு, சென்னை.

குடிஅரசு - கட்டுரை - 10.05.1931

Read more: http://viduthalai.in/page-7/89921.html#ixzz3HD7VK2kl

தமிழ் ஓவியா said...

அனுமனும் ஆதவனும்


- ஆசிரியர்: குபேரன்

கரமொன்றில் மலைதனை ஏந்தியபடி நிலப்பரப்பின் மீது பறந்து வந்தார். கனியென்று நினைத்து பறந்து சென்று கதிரவனைப் பற்றிப்பிடித்தார், கடல் மீது இலங்கைக்கு பறந்து சென் றார்... இப்படிப்பட்ட பல சாதனை களுக்கு சிகரமானவர் அனுமன். இவ ருக்காக நாடெங்கும் கோயில்கள், இவர் ஒருவரை மட்டுமே வணங்கி வழிபடு பவர்களும் இருக்கிறார்கள்.

அனுமன் என்பவரின் சாகசங்கள் தொடர்பான இரண்டு தகவல்களை மட்டும் ஆய்வுக்குட்படுத்தி உங்களின் சிந்தனைக்கு விருந்தாக இந்தக் கட் டுரையைச் சமர்ப்பிக்கிறேன். முதலா வதாக குழந்தை அனுமன் பரிதி மண்டலம் சென்றார். அவரிடம் வரம் பெற்றார். இரண்டாவதாக அவர் ஒரே நாளில் கதிரவனின் பின் சென்றபடியே அவரிடம் சகல கல்விகளையும் கற்றுத் தேர்ந்து பூமிக்கு திரும்பிவிட்டார்!...

அனுமனைப் பற்றிய செவிவழிச் செய்திகளும் கவிமொழிக் கதைகளும் ஒரு மாபெருந்தொகுப்பு பக்தர்களின் மனத்திரையில் அணிவகுப்பு!...

மும்பை மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமதாசு சுவாமிகள். மன்னர் சிவாஜி யின் குருநாதர். இவர் அனுமனின் திருக்காட்சியைப் பெற்றவர். அவர் மூலமாக இராம என்னும் சொற்றொ டரை வரமாகப் பெற்று அதனை பாரதமெங்கும் பரப்பிவிட்டார்.

இந்தியில் இராமாயணம் எழுதிய துளசிதாசர் என்பவர் தாம் எழுதிய அனுமன் சாலீஸா என்னும் புகழ் மாலையில் பாடுகிறார்...

யுக ஸஹஸ்ர யோஜன பரபாநு!

லீல்யோ தாஹி மதுர பலஜானு!..

பொருள்: பல ஆயிரம் யோசனை தூரத்திலிருந்த கதிரவனை இனிப்பான பழம் என்று நினைத்து விளையாட்டாய் தாவிப் பிடித்தாய்... கம்பர், தமது கவி மலர்களால் அனுமனுக்கு அருச்சனை செய்து மகிழ்கிறார்.

காதல் நான்முகனாலும் கணிப்பரிய கலையனைத்தும்

தமிழ் ஓவியா said...

கதிரோன் முன்சென்று ஓதியவன்..
கனிக்கு அடர் கதிர் தொடர்ந்தவன்...
காய்கதிர் இரவிமேல் பாய்ந்த போர் அனுமன்...
சிவந்த கனி எனச்சொல்லி
பரிதிமேல் பண்டு பாய்ந்தவன் -
பண்டை நூல் கதிரோன் சொல்லப்படித்தவன்...
பார் உலகு எங்கும் பேரிருள் நீக்கும்
பகலவனின்

தேர்முன் நடந்தே ஆரிய நூலும் தெரிவுற்றீர்...

சீர்காழி அருணாசலக் கவிராயர் என்பவர், தமது இராம நாடகக் கீர்த்தனைகளில் பக்திப்பரவசத்துடன் பாடுகிறார்...

பரிதியைக் கனியென்று பாய்ந்து
பிடித்திழுத்த சூரனே! - முன்னர்
பருத்த சஞ்ஜீவி மலை எடுத்து
நொடிக்குள் வந்த தீரனே!...

இப்படியெல்லாம் இவர்கள் தீட்டிய கவிதைகளுக்கு முன்னோடி - ஆதிகவி என்று சொல்லப்படும் வால்மீகி என்பவர். உத்தரகாண்டத்தில் (ஸர்க்கம் 36) அவர் நிகழ்வை நேரிலே பார்த்தவர் போல குறிப்பிடுக்கிறார்...

சூரிய பகவான் விநாடிக்கு 9,70,000 யோசனை தூரம் சஞ்சரிப்பவர். தன் பாதையில் சஞ்சாரம் செய்துவரும் போதே அவரிடம் அனுமன் கைகூப்பி அவரைப் பார்த்தபடியே பின்னால் நகர்ந்து கொண்டே சகல வேத - சாத்திர - புராண - இதிகாச - வியாகரணங்களை யும் ஒரே நாளில் அப்பியாசம் செய்து தேர்ந்தான்...

இப்போதும் இராமாயண விரிவுரை யாளர்கள் மாருதியின் மகிமைகளை இப்படியெல்லாம் சொல்லிக் கொண் டிருக்கிறார்கள்.

வானத்தில் உதயமான சூரியனை குழந்தை அனுமன் பழம் என நினைத்து ஆகாயத்தில் எழுத்து அவர் மேல் பாய்ந்தது. அன்று அமாவாசையான படியால் சூரியனைப் பிடிக்க வந்தான் இராகு. அவனையும் ஒரு பழம் என்று குழந்தை அனுமன் நினைத்து சூரியனை விட்டுவிட்டு இராகுவின் மேல் பாய்ந்தது!... கதிரவன் கூறினாராம்.

தமிழ் ஓவியா said...

என் ஒளியில் நூற்றில் ஒரு பங்கினை இவனுக்குத் தருகிறேன். கற்கத்தகுந்த வயதினை இவன் அடையும்போது சகல சாஸ்திரங்களையும் இவனுக்கு நானே கற்றுக்கொடுக்கிறேன்... அனுமனின் மற்றுமொரு மகிமை என்னவென்றால் - இவர் தையலர் மையலை தவிர்த்தவர். மல்லிகை மயக்கம், மங் கையின் நெருக்கம், மடியிலே சுவர்க்கம் என்பதையெல்லாம் மறுத்தவர், வெறுத்தவர்!

மகத்துவம் மிகுந்த இந்த மாருதி,. இப்போது எங்கே இருக்கிறார் - என்ன செய்கிறார் - எப்படி இருக்கிறார்?,,, பக்தி இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.

அக்கினி குண்டம்! அதிலே தள்ளப் பட்ட சீதையுடன் இராமல் செல் கின்றார் வைகுண்டம்! உடன் வருமாறு அனுமனை அழைத்தார். வைகுண் டத்தில் தாங்கள் இதே உருவத்துடன் இருப்பீர்களா? அங்கு இராம என்று திருப்பெயர் முழங்கப்படுமா? இராம என்னும் திருப்பெயர் உச்சரித்துக் கொண்டே நான் இந்தப் பூமியிலே இருந்துவிடுகிறேன். இராமநாமத்தில் நான் அடையும் இன்பம் வைகுண்டத் தில் இருக்காது எனக்கு வேண்டாம் வைகுண்டம்!

இப்பவும் அனுமன் என்பவர், அம் மையார் சீதையிடமிருந்து அசோகவனத் தில் பெற்றுக்கொண்ட வரங்களின் மகிமையால் என்றும் சாகாதவராக இன்றும் இருந்து கொண்டிருக்கிறார். (இன்றென இருத்தி: சீதை - கம்பராமாயணம்.)

அனுமனால் கனியென்று கருதப் பட்ட சூரியன் இந்தப் பூமியைப் போல் 13 லட்சம் பூமிகளின் கொள்ளளவு கொண்டது, 3,30,000 மடங்கு அதிக எடையுள்ளது, 109 மடங்கு விட்டம் மிகுந்தது - சுற்றளவு 41,60,000 கி.மீ. பூமியிலிருந்து (15 கோடி கி.மீ) 9 கோடியே 30 லட்சம் மைல்கள் தொலை விலுள்ள பரிதியை, பச்சிளங் குழந்தை யாக இருந்த அனுமன் பழம் என நினைத்துப் பற்றிவிட்டான் என்பதெல் லாம் பித்தர்களின் பிதற்றல் - விவேக மற்றவர்களின் விபரீதக் கற்பனை!

தமிழ் ஓவியா said...


நெருப்புக் கோளமான ஞாயிறு, ஒரு வெப்பப்பெருங்கடல். 1,30,000 கி.மீ. உயரத்திற்கு சுடர்எழுச்சி கொண்டது. புறவெப்பம் 600000C சென்டிகிரேடு, உட்புற வெப்பநிலை 2 கோடி டிகிரி செல்ஸியஸ். விண்வெளியிலிருக்கும் 10,000 கோடி நட்சத்திரங்களில் ஒன்று, மணிக்கு 68,000 கி.மீ.வேகத்தில் தனது ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட கோள்கள், துணைக்கோள்கள் முதலான பரிவாரங் களுடன் பால்வெளி மய்யத்தை (Galaxy) சுற்றி வருகிறது. ஆரியப் புராணங்கள் சொல்லுகின்ற ஆதவன் ஒரு ஆள் தத்துவம் (individual personality) அல்ல!

தினகரனின் ஆற்றல் 200 கோடியில் ஒரு பங்குதான் பூமிக்குக் கிடைக்கிறது, போதுமானதாகவும் இருக்கிறது. இப்படியிருக்க, சூரியன் என்பவர் தமது ஆற்றல்களில் நூறில் ஒரு பங்கினை வரமாகக் கொடுத்தார். அனுமார் பெற்றுக்கொண்டார் என்பதும், அவரது மனைவி உஷா - அவர் ஏழுகுதிரைகள் பூட்டிய தேரில் பூமியைச் சுற்றி வருகின் றார் என்பதும் விக்கிரமாதித்தன் கதைகளிலும் விட்டலாச்சாரியா அவர்களின் மந்திரஜாலப் படங்களிலும் இடம் பெறலாம், இந்த கணிப்பொறி விஞ்ஞான காலத்தில் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய தகவல்கள் ஆகும்.

கதிரவன் மண்டலம் சென்று வரம் வாங்கி வந்த மாருதி கண்டேன் சீதையை என்னும நற்செய்தியை சொல்லிய சாதனையாளர் - என்றும் சிரஞ்சீவியாக இருந்து வருபவர், விண் வெளியில் கண்ட காட்சிகளை விவரிப் பாரா... இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது எனும் உண்மையைத் தெரிந்து கொண்டாரா! கோள்கள் வட்டப் பாதையில் சூழன்று வருகின்றனவா - அல்லது நீள்வட்டப்பாதையில் சுற்று கின்றனவா, சிவப்பு, நீலம், மஞ்சள், கருஞ்சிவப்பு வண்ணங்களில் ஒளிரும் விண்மீன்களைக் கண்டறிந்தாரா! இல்லை... ஏனென்றால் அனுமன் ஒரு கற்பனை. விஞ்ஞானத்திற்கும் பகுத்தறி வுக்கும் முரண்பாடான அனுமன் கதைகளை இன்னமும் மக்கள் நம்புகின் றார்கள். ஏனென்றால் அவையெல்லாம் கடவுளர் திருக்காட்சி பெற்று வரம் வாங்கியவர்கள் எழுதியவை ஒன்பது கோள்களால் உருவாகும் தோஷங்கள் என்னும் குறைபாடுகள் அனுமன் வழிபாடு மூலம் நீங்கிவிடும், வாழ்விலே வளங்கள் ஓங்கிவிடும்... இப்படி வரம் பெற்ற கவிஞர்கள் தீட்டியதெல்லாம் வரம்பற்ற கற்பனைகள்!


தமிழ் ஓவியா said...

மூளைகளை முற்றுகையிட்ட கடவுளரின் காட்சிகள் - வரங்கள் - உள வியல் ரீதியாக யோசித்துப் பார்த்தால்... மூன்று தலைமுறை காலமாக உண்மையென நம்பி ஏற்றுக்கொண்ட புராணங்களின் அடிப்படையில், ஒரு பக்த சிகாமணி ஒரு குறிப்பிட்ட உரு வத்தை இலக்காக வைத்து கொள் கிறான்... அதனை இஷ்டதேவதையாக (விருப்பக்கடவுள்) வழிபடுகிறான்! நினைத்துக் கொண்ட உருவம் (விருப்ப தெய்வம்) கண்முன் காட்சியளிக்கிறது - அந்த உருவமாகவே அவனது மனமும் மாறிவிட்டது. இது சுயகற்பனை. (self imagination)
இத்தகைய உருவக் காட் சிகள் வாயிலாக வெளிப்படும் வரங் களும் கவிதைகளும் உபதேசங்களும் பக்தனின் சொந்த கருத்துகளே -(Auto - suggestions) மூன்று தலைமுறை காலமாக மூளையில் பதிவாகியிருந்த, புராணங்கள், உபதேசங்கள் அனைத்தும் இஷ்டதெய்வத்தின் அருள்வாக்காக சொல்லிவருகிறார்கள்...

நான் மீண்டும் ஆதவனை (கைப்) பற்றிய அனுமனைப் பற்றுகிறேன்... சாகாதவராக இன்றும் இருந்து கொண்டிருக்கிறானாம் அனுமன்! இராமாயணத்தைக் கேட்டுகேட்டு மெய்சிலிர்த்து நெக்குருகுகிறார், இராம என்னும் சொற்றொடரை உச்சரித்து மகிழ்கிறார்...

தமிழ் ஓவியா said...


சோகம், துன்பம், மன உருக்கம், கொலை வெறி, பழிக்குப்பழி, சதி, சூழ்ச்சி ஆகிய எதிர்மறை சிந்தனை களின் தொகுப்புதான் இராமாயணம். கதாநாயகனும் நாயகியும் கடைசிவரை ஒரு இனிய இல்லறவாழ்க்கை நடத்த வில்லை. இப்படிப்பட்ட துன்பமுடிவைக் கொண்ட கோர்க்கதைகளை நாம் வாசிக் கத்தான் வேண்டுமா... தேவையில்லை.

இந்த இராமனின் கதை என்ன வென்றால் -
மூவுலகம் அளந்து நின்றான்... ஆகா!
பூவுலகம் பிளந்து சென்றான்... ஓகோ!

வால்மீகி சூட்டினார் புகழாரம் - வைகுண்ட வாசனின் அவதாரம் - வைதேகி சீதையாக அவர்தாரம் - வானரங்கன் பரிவாரம்! ஆனால்... அந்த அகிலத்தின் ஆண்டவன் அயோத்தி யின் ஆண்டவன் ஆவதற்குள் பட்ட பாடுகள் எத்தனை! நாடு துறந்தார், வீடு துறந்தார், மகுடம் இழந்தார். மனைவியை பிரிந்தார் அந்தோ... பரிதாபம்! .... இப்படிப்பட்ட இராமனை வணங்கிக்கொண்டிருக்கும் அனுமனை வணங்கினால் கோள்நிலைக் குறை பாடுகள் நீங்கிவிடுமா? நான் கேட் கிறேன். அனுமனால் இராமர் - சீதை யின் இல்லற வாழ்க்கையை ஏற்புடைய தாக மாற்ற முடியவில்லையே! பாற்கடலில் பாம்புப்படுக்கையில் யுகம்பல சுகம்பல கொடுத்த சீதை, இராமனால் அக்கினி குண்டத்தில் தள்ளப்பட்டாள். அவள் பதிவிரோதி அல்ல - பதிவிரதி என்று இராமர் ஏன் பறைசாற்ற வில்லை?... விரும்பத் தகாத இந்த நிகழ்வை ஆதவனிடம் வரம் பெற்ற அனுமனால் தவிர்க்க முடிய வில்லை! இராமர் சீதையின் வாழ்வைச் சீரமைக்க முடியாத ஆஞ்சநேயர் - பக்த சிகாமணிகளின் வாழ்வை எப்படிச் சீரமைக்க முடியும்?

மொத்தத்தில் - அனுமனின் கதையை உள்ளடக்கிய இராமாயணம் ஒரு கற்பனைக்கதை இனியும் இந்த இரா மனையும், அனுமனையும் நினைத்துப் பார்ப்பதும் நம்மவர்க்கு அழகல்லவே!

தலை எழுத்து எழுதிவரும் பிரம்மனின் ஐந்தாவது தலை கிள்ளப் படுகிறது, காக்கும் கடவுள் தம் மனை வியைக் காப்பாற்றவில்லை. படியளக் கும் பரமசிவன் பிச்சை எடுக்கிறார்... ஆணுக்குப் பிறந்தவன் அய்யப்பன், ஆனைக்குப் பிறந்தான் விநாயகன்! தூணுக்குள் தோன்றினான் நரசிம்மன் - துளசி மாலையென தோளிலே தொங் குகிறாள் மாற்றானின் மனைவி! இந்தப் புராணங்கள் நமக்குத் தேவைதானா?...

சிவபெருமான் பெற்றுக்கொண்ட தினக்கூலி, பிட்டு! திருப்பதியில் பிர சாதம், லட்டு! நான்முகன் தலையிலே வேலவன் கொடுத்தான் குட்டு! இந்தக் கதைகளால் நமக்கு ஆவதென்ன - பார்ப்பானுக்குக் கிடைக்கின்றது துட்டு - கனக்கின்றது. காணிக்கைத் தட்டு! புராணங்கள் என்னும் வைரஸ்களை மூளை என்னும் கம்ப்யூட்டரிலிருந்து நீக்கிவிடுங்கள்!..(VIRUS)

வாழ்க பெரியார்!

வாழ்க சுயமரியாதை!

Read more: http://viduthalai.in/page2/89914.html#ixzz3HD7zxYPM

தமிழ் ஓவியா said...

பெரியாரின் போர்வாள் எம்.ஆர். ராதா

போர்வாள் என்ற நாடகத்தில் ஒரு அருமை யான காட்சி.

பெரியாரின் படம் வைக்கப்பட்டிருக்கும்.
எம் ஆர் .ராதாவை பார்த்து அவரது நண்பர் கேட்பது போல் ஒரு காட்சி .
பெரியார் படத்த வீட்டுல வைச்சிருக்கியே ....
அப்படி என்ன செஞ்சிட்டார் ?
உடனே எம் ஆர் .ராதா சொல்லுவார்
என்ன செய்தாரா ....? உன் நெத்திய பாரு
என் நெத்திய பாரு ..
ஏன் ? அதுல ஒண்ணுமில்லெ;
யார் செஞ்சாங்க அய்யாதான் செய்தார் .இல்லேன்னா உன் நெத்தியில
நீளமாக ஒரு மார்க்,என் நெத்தியில குறுக்க ஒரு மார்க் இருந்திருக்கும்.
மார்க் டிபரென்ஸ் வந்தாலே பிரச்சனைதானேடா'......
நீங்க சொல்றது சரிதான் '.
இன்னொன்னு ....ஓட்டல்ல போய் உக்காந்துகிட்டு .நம்ம காசை கொடுத்துட்டு சாமி ஒரு காபி குடுங்கன்னு கேட்டிருந்தோமே ...
இப்ப என்ன பண்றோம்? ஓய் அய்யர் ஒரு காபி குடுங்கன்னு கேட்குறோம் .
இந்த சவுண்டு யார்ரா குடுத்தது பெரியார் தானே?'
என்று எம் ஆர்.ராதா கேட்க நாடக அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.
உண்மையாகவே பெரியாரின் துருப்பிடிக்காத போர்வாள் எம்ஆர் .ராதா,

- ஆனந்த் தமிழீழம்

Read more: http://viduthalai.in/page3/89917.html#ixzz3HD8tm7ka

தமிழ் ஓவியா said...

அட மானங்கெட்டவனே இனியாவது பெரியாரைப் படி...

அட மானங்கெட்டவனே இனியாவது பெரியாரைப் படி...
நான் பெத்த மகனே நில்லு
நான் பட்ட வேதனை கேளு...
முலைவரி கொடுக்கச்சொன்னார்கள்
மனம்நொந்து கொடுத்தோம் ...
இலவசமாய் உழைக்க சொன்னார்கள்
இடுப்பொடிய உழைத்தோம் ...
மணமகளை 'அனுப்ப' சொன்னார்கள்
அழுதுகொண்டே அனுப்பினோம் ...
"செருப்பு அணியாதே சக்கிலியா" என்றார்கள்
'சரி' என்று சொல்லி பணிந்தோம் ...
"தொட்டால் தீட்டுடா பறையா" என்றார்கள்
தயங்கியபடியே தள்ளி நின்றோம்...
"பார்த்தால் பாவமடா பஞ்சமா" என்றார்கள்
புழுங்கியபடி விலகிச் சென்றோம்...
வேசிபுத்திரன் என்றே அழைத்தார்கள்
கூசியபடியே கடந்து சென்றோம்...
சாணிப்பாலை குடிக்கத் தந்தார்கள்
நாணியபடி குடித்துத் தொலைத்தோம்...
சாட்டையால் அடித்துத் தோலுரித்தார்கள்
நாதியின்றி துடித்துக் கிடந்தோம் ..
காரிருளில் வெள்ளி முளைத்தது போல
ஈரோட்டுக்காரன் ஒருவன் வந்தான்...
"சுயமரியாதை உயிரினும் பெரியது "
தாடிக்காரன் சொல்லித் தந்தான்...
சூழ்ச்சிகரச் சடங்குகளை செருப்பால் அடித்தான்
ஏமாற்று வித்தைகளை எட்டி எட்டி மிதித்தான்.
பார்ப்பனியப் பிசாசுகள் பயந்து நடுங்கின
ஆரிய அரக்கர்கள் அஞ்சி ஒடுங்கினர்...
அடடா இனி பயமில்லை - என்
சந்ததிகள் யார்க்கும் அடிமையில்லை
என்றே மகிழ்ந்திருந்தோமடா...
அட சூழ்ச்சியறியாத் தெண்டமே
நான் பெத்த சதைப் பிண்டமே
அந்த தாடிக் கெழவன - நீ
எப்படிடா மறந்த முண்டமே
அப்போ ஓடிப்போன பாப்பான்
இப்போ வேற வடிவத்துல வந்திருக்கான் ...
வாழ ஆரம்பிச்சதும் வயிறு எரியறான்
பைக்குல போனா பதறுறான்
ஜீன்சு போட்டதுக்கு அன்னிக்கு அடிக்கறான்
ஓட்டுப் போடலைன்னு இன்னிக்கு அடிக்கறான்
உன்னோட ஆத்தா கொடுத்த முலை வரியை
உன்னோட பேத்தி கொடுக்கனுமா ...??
வேண்டான்னு நீ நெனச்சா பெரியாரப் படி...
உன்னோட தாத்தா குடிச்ச சாணிப்பால
உன்னோட பேரன் குடிக்கனுமா...??
வேண்டான்னு நீ நெனச்சா பெரியாரப் படி...
"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு"
இந்த ஒருவரி உன்ன உசுப்ப வேண்டாமா...?
நீ மானத்தோட வாழறத பாத்து - இந்த
பெத்த வயிறு குளிர வேண்டாமா...?
பெரியார் என்பது பெயரல்ல சித்தாந்தம்
பெரியார் என்பது பெயரல்ல சுயமரியாதை ...
கல்லைவிட்டு எறிஞ்சா நாய் கூட
கொல்லுனு எதிர்த்து குலைக்குதடா
கொல்லப்புறமா வந்த சாதிவெறி நாயிக
குடிசைய எரிச்சுட்டு போகும்போது
கல்லு மாறி சொரணையில்லாம இருக்கியேடா ...
அடிச்ச அடிக்கு திருப்பி அடிக்கலன்னா
அப்புறம் என்னடா ஆம்பளை நீ....?
அட மானங்கெட்டவனே
இனியாவது பெரியாரைப் படி
இனி எவனாவது அடிச்சான்னா
அப்பவே திருப்பி அடி ....

- தோழர் சம்சுதீன் கீரா

Read more: http://viduthalai.in/page3/89917.html#ixzz3HD95lSrI

தமிழ் ஓவியா said...

உயிர்களைப் படைத்தவன் பிர்மாவா?

உயிர்த் துளியை (க்ரோமோசோம்) உண்டாக்கி கடவுள் நம்பிக்கையை நொறுக்கினர் விஞ்ஞானிகள்.

கலிபோர்னியா மாகாணம் சாண்டி யாகோவில் இருக்கும் ஜேகிரேய்க் வெண்டர் இன்ஸ்டிட்டிட்டில் மைக்ரோ பிளாஸ்மா லேபரேட்டோரியம் எனும் உலகின் மனிதன் படைத்த முதல் செயற்கை உயிர் என்று கருதப்படும் க்ரோமோசோமை கிரேய்க்வென் டரும் அவரது குழுவினரும் உருவாக்கி உள்ளனர். ஆராய்ச்சியின் அதிகார பூர்வ முடிவை இன்னும் சில நாட்களில் அறிவிக்க உள்ளார் கிரேய்க்.

அவரது கண்டுபிடிப்பினைப்பற்றி கிரேய்க் வென்டர் கூறியது:

ஓர் உயிரை அப்படியே அச்சு அசலாகப் பிரதி எடுக்கும் க்ளோனிங் தொழில் நுட்பத்தைவிட உன்னத மானது இது! எந்த இயற்கையான பொருளின் உதவியும் இல்லாமல், பரிசோதனைக்கூட அமிலங்களின் துணை கொண்டே, க்ரோமோசோம் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். இந்த உயிர்த் துளியை அடிப்படையாக வைத்து, நாம் விரும்பும் எந்தவிதமான உயிர் வடிவத்தையும் படைத்துக் கொள்ளலாம். இனி உயிர்களைப் படைப்பது கடவுளிடம் மட்டுமே உள்ள உரிமை அல்ல.

நாங்கள் கண்டுபிடித்த இந்தச் செயற்கை க்ரோமோசோம் ஓர் அஸ்திவாரம் போன்றது. இந்த அஸ்தி வாரத்தின் மேல் நாம் எந்தவிதமான உயிர் அமைப்பையும் உருவாக்கலாம். இந்தச் செயற்கை க்ரோமோசோமை ஒரு செல்லில் புகுத்தினால், அதன் செயல்பாடுகளை கண்ட்ரோல் செய்து, உயிர் கொடுக்க நடவடிக்கைகளைத் தூண்டிவிட்டு, அந்த செல்லின் இயல்பான வளர்ச்சியை வேகப்படுத்தி, முழு உயிரினமான மாற்றி விடும். இதில் இன்னும் அதிநவீனத் தொழில் நுட்ப எல்லைகளைத் தொடும்போது தக்காளி முதல் டைனோசர் வரை நம்மால் படைக்க முடியும்!

கார்பன்டை ஆக்சைடை உட் கொண்டு அழிக்கும் பாக்டீரியாக்களை உருவாக்கினால், குளோபல் வார்மிங், ஒரு கட்டுப்பாட்டுக்கு வரும். கரும்புச் சக்கைகளை நொதிக்கச் செய்யும் பாக்டீரியாக்களை உருவாக்கினால், பியூட்டேன் அல்லது ப்ரோபேன் எரிவாயுக்களை உருவாக்கலாம். இப்படி எங்களது இந்தக் கண்டுபிடிப்பு மனித குலத்துக்கு ஆக்கபூர்வமான விஷயங்களுக்குப் பயன்படும் என்று பெருமையாகக் கூறுகிறார் கிரேய்க் வென்டர்.

(ஆனந்தவிகடன் 17.10.2007 இதழில் வந்த கட்டுரையை ஆதாரமாகக் கொண்டது).

Read more: http://viduthalai.in/page4/89918.html#ixzz3HD9LvFcS

தமிழ் ஓவியா said...

பட்டாசு விபத்தில் மடியும் மனித உயிர்கள்: 15 ஆண்டுகளில் 353 பேர் பலியான பரிதாபம்!


விருதுநகர், சிவகாசி பகுதி பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல், சட்ட விரோதமாக செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், கடந்த 15 ஆண்டுகளில் நடந்த 218 வெடி விபத்துக்களில் 353 பேர் பலியாகி உள்ளனர். இதில் பாரபட்சம் காட்டா மல் அதிகாரிகள் கடுமையான நட வடிக்கை எடுத்தால் மட்டுமே, தொடர் உயிர்பலியை தவிர்க்க முடியும்.

விருதுநகர் மற்றும் சிவகாசி சுற்றுப்பகுதிகளில் 800க்கு மேற்பட்ட பெரிய, சிறிய பட்டாசு ஆலைகள் உள்ளன. நாக்பூர் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை (பெசோ) மற்றும் டி.ஆர்.ஓ.,லைசென்ஸ் பெற்று இவை இயங்குகின்றன. ஏராளமான தொழி லாளர்களின் வாழ்வாதாரமாக திகழ் கின்றன. விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு இயங்கும் ஆலைகளினால் அடிக்கடி வெடிவிபத்து, தொழிலா ளர்கள் உயிர்பலி, படுகாயம் ஏற்படு கிறது. விதிமுறைகள் முறையாக கடை பிடிக்கப்படாததும், தொழிலாளர் களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தாததுதான் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.பட்டாசிற்கு தேவையான மூலப்பொருளான கருந் திரி தயாரிப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிசைத்தொழிலாகவே சட்டவிரோதமாக நடக்கிறது.

ஆலைகளில் விபத்திற்குப்பின் அடுத்த ஒரு சிலநாட்களுக்கு ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகளின் நட வடிக்கை கடுமையாக இருக்கும். ஆனால் அதற்கடுத்த சில நாட்களில் அந்த பரபரப்பு அடங்கிவிடும். தீபாவளி நெருங்குவதையொட்டி மாவட்டத்தில் இந்த ஆலைகளில் விறுவிறுப்பான பட்டாசு உற்பத்தி நடந்துவருகிறது. இதில் விபத்தை தவிர்க்க விதிமுறை களை முறையாக பின்பற்றுமாறு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் கண்டிப்புடன் வலியுறுத்த வேண்டும். விபத்தின்றி பட்டாசு தயாரிப்பதற்கான போதுமான விழிப்புணர்வை தொழி லாளர்களிடம் ஏற்படுத்த வேண்டும். கண்காணிப்பு, நடவடிக்கையை கடு மையாக்கினால்தான் விபத்து, உயிர்ப் பலியை தவிர்க்க முடியும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

வருவாய்த்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பட்டாசு விபத் துக்களில் கடந்த 15 ஆண்டுகளில் 218 விபத்துக்கள் நடந்துள்ளன. 353 பேர் பலி யாகி உள்ளனர். 262 பேர் காயமடைந் துள்ளனர். பட்டாசு ஆலைகளில் விதி முறை மீறல், சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு தொடர்பாக உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த ஆலைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது.

விபத்தை தவிர்ப்பது குறித்து தொழிலாளர்களுக்கும் பயிற்சி யளிக்கப்படுகிறது ,என்றார்.

Read more: http://viduthalai.in/page4/89919.html#ixzz3HD9UnjMS

தமிழ் ஓவியா said...

ஜெவை காப்பாற்றாத யாகங்களும் பூஜைகளும்!


கடந்த காலங்களில் ஜெயலலிதா வின் நலனுக்காகவும், வெற்றிக்காகவும் அவராலும் அவரது தோழியாலும் நடத்தப்பட்ட ஹோமங்கள் 9217

யாகங்கள் 6424 என்றும் அவர்களோடு, அமைச்சர்களும் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் சேர்ந்து கோவில்களில் செய்த அபிசேகங்கள் 27,019 அர்ச்சனைகள் 43,672 என்றும் 86,332 மன்னார்குடி வட்டாரத்திலிருந்து செய்திகள் கசிகின்றன. அவர் பெங் களூருவில் உள்ளே இருந்த காலங் களில் இங்கே இருப்பவர்கள் கிடைத்த ஓய்வில் இந்தக் கணக்கு போட்டார் களோ என்னவோ!

இந்த 86,332 வேண்டுதல்களில் இவர்களின் தொண்டர்களும் அமைச் சர்களும் மண்சோறு சாப்பிட்டதும் அங்கப் பிரதட்சணமும் சேரவில்லை யாம். இத்தனையும் செய்த பிறகுதான் இவருக்கு தண்டனையும், தண்டமும், பதவிப் பறிப்பும் கிடைத்துள்ளது என்பதையும் பிணை கிடைப்பதுகூட தாமதமாகியது என்பதையும் சிந்தித் தால் பெரியார் பெரும் படையின் கடவுள் மறுப்பு எவ்வளவு தீர்க்கமானது என்பது புரியும்.

ஒவ்வொரு பரிகாரமும் பார்ப்பனர் களின் வருமானத்துக்குரியது என்பதால் இந்த 86,332 வேண்டுதல்களால் பயன் (தட்சணை) பெற்ற பார்ப்பனர்களின் எண்ணிக்கை 78,642 என்கின்றனர். இவைகளை சிந்திந்தால் பகுத்தறிவு வந்து விடுமே என்றுதான் இன்னும் கொங்கணேஸ்வரர் கோயில் யாகம், பால்குடம், அங்கப் பிரதட்சணம் என ஊருக்கு ஊர் அசத்துகின்றனர். வக்கீல் களாக, டாக்டர்களாக, முனைவர்களாக பேராசிரியர்களாக உள்ள அமைச் சர்களும் நிர்வாகிகளும் தங்கள் தொண்டர்களுக்கு அறிவு வந்து விடக் கூடாது என்பதில் கவனமாயுள்ளனர்.

இதையெல்லாம் எதிர்பார்த்துத் தான்,தொலைநோக்கு சிந்தனை கொண்ட பேரறிஞர் அண்ணா 70 ஆண்டுகட்கு முன்பே ஏ! தாழ்ந்த தமிழகமே! என்றாரோ!

- தி. சோமசுந்தரத் தேவர், தஞ்சை வட்டம்

Read more: http://viduthalai.in/page5/89925.html#ixzz3HD9zqg2D

தமிழ் ஓவியா said...

செவ்வாய்க்குச் செல்லும் 13 வயது சிறுமி!

அமெரிக்காவைச் சேர்ந்த 13 வயது சிறுமி, நாசா மூலம் முதன் முறையாக செவ் வாய்க் கிரகத்துக்குச் செல்லவிருக்கிறார்.
அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த அலிசா கார்சன் (13) என்ற அச்சிறுமி நாசாவில் இதற்கான பயிற்சிகளைத் தற்போது மேற்கொண்டு வருகிறார்.

சிறுமி அலிசாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும், அவர் ஏற்கெனவே இதற்கான பயிற்சியில் இருப்பதாகவும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மய்யம் தெரி வித்துள்ளது. அலிசா அறிவியல் மற்றும் பல மொழிகளைப் படிப்பதோடு, நாசாவின் மூன்று உலக விண்வெளி முகாம்களிலும் கலந்து கொண்ட முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் முயற்சி குறித்து அலிசா கூறுகையில், இந்தப் பயணத்தின் மூலம் நான் மற்றவர்களிடம் இருந்து சிறந்தவள் என்று தனித்து விளங்க முடியும் என்றார்.

Read more: http://viduthalai.in/page5/89926.html#ixzz3HDA81vFA

தமிழ் ஓவியா said...

கொழுப்பு கூடிருச்சா? உங்களுக்கான உணவுகள்


கொழுப்புப் பிரச்சினையால் அவதிப் படுபவர்கள், ஆரோக்கியமான உணவின் மூலம் அதனை குறைக்கலாம்.

பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண் ணுதல், கொழுப்பின் அடர்த்தியைக் குறைக் கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே, உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். ஆப்பிள் உடலில் கொழுப்புச் செல் களைக் குறைக்க உதவுகிறது. ஆப்பிளின் தோலில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செயல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க் கைகளை நீக்க உதவுகிறது. பீன்ஸ் குறைந்த கொழுப்பையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச் சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. இது நல்ல விதத்தில் கொழுப்பை கரைக்கும் உண வாக விளங்குகிறது.

ஒட்ஸ் உணவு மெதுவாக, செரிமான மாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவைக் கட்டுப் பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப் பைக் கரைய வைத்து துரிதப்படுத்தவும் உதவுகிறது. இப்படி மெதுவாக, செரிமானமாவதால், தன்மையினால் எடையைக் குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும். க்ரீன் டீ எனப்படும் பச்சைத் தேயிலை யில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்ப தோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை.

Read more: http://viduthalai.in/page5/89930.html#ixzz3HDAQ54kX

தமிழ் ஓவியா said...

இதோ ஆர்.எஸ்.எஸ். தலைமையின் கீழ் இயங்கி வரும் பல்வேறு அமைப்புகளின் பட்டியல்

1) அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (மாணவர் அமைப்பு), 2) வித்யாபாரதி (கல்வி), 3) பாரதீய ஜனதா கட்சி (அரசியல்), 4) பாரதீய இந்து பரிஷத், 5) பஜ்ரங்தள், 6) துர்காவாகினி, 7) தரமசன்சட், 8) அகில பாரதீய வன்வாசி கல்யாண் ஆஷ்ரம் (மலைவாசி), 9) பாரதீய மஸ்தூர் சங்கம் (தொழிற்சங்கம்), 10) பாரதீய விவசாய சங்கம் (விவசாயிகள்), 11) ராஷ்டிரிய சேவிகா கமிட்டி (தேசிய மகளிர் கமிட்டி), 12) சேவ பாரதி மற்றும் டாட்சம் (சமூக சேவை அமைப்பு), 13) விஸ்வ விபாக் (வெளியுறவு விவகாரம்), 14) அகில பாரதீய ராஷ்ட்ரிய சேக்சிக் மகா சங்கம் (ஆசிரியர்கள்), 15) பாரதீய சிக்சா மண்டல் (கல்வி), 16) ராஷ்டிரிய சீக்கிய சங்கட் (சீக்கியர்கள் மத்தியில் இந்துத்துவாவை பரப்புவதற்கு), 17) சுதேசி ஜகரன் மன்ச் (பிரச்சாரம், கோடிக்கணக்கான ரூபாய்களை அரசாங்கத்திடமிருந்து பெற்று தங்கள் செயல்பாடுகளை நடத்தி வருகின்றன), 18) தீனதயால் சோத் சன்ஸ்தான் (ஆராய்ச்சி), 19) பாரத் விகாஸ் பரிசத் (வளர்ச்சி செயல்பாடுகள்), 20) பாரதீய இதியாஸ் சன்கலான் யோஜ்னா (வரலாறு), 21) சமஸ்கிருத பாரதி (சமஸ்கிருத மொழி), 22) சன்ஸ்கார் பாரதி (இந்துக்கள் கலாசாரத்தை பெருக்க), 23) அகில பாரதீய ஆதி வக்ஷா பரிஷத் (வழக்கறிஞர்கள்), 24) இந்து ஜகரன் மன்ச் (சிறுபான்மை யினருக்கு எதிராக), 25) சமஜீத் சம்ராஷ்டா மன்ச் (இடஒதுக்கீடு எதிர்ப்பு முன்னணி), 26) அகில பாரதீய சாஹித்ய பரிஷத் (வரலாறு), 27) பரக்யா பாரதி (மதம்), 28) விஜயன் பாரதி (அறிவியல்), 29) லகு யுத்யக் பாரதி (சிறுதொழில் நிறுவனங்கள்), 30) அகில பாரதீய கிரஹாக் பஞ்சாயத் (நுகர்வோர்), 31) ஷேகர் பாரதி (கூட் டுறவு, அதிக அரசு நிதி கிடைக்கப் பட்டு வருகிறது), 32) பூர்வ சைனிக் சேபா பரிஷத் முன்னாள் ராணுவத் தினர்), 33) பாரத் பிரகாஷன் (வெளி யீட்டகம்), 34) சுருச்சி பிரகாஷன், டில்லி, 35) கியான் கங்கா பிரகாஷன், ஜெய்ப்பூர், 36) லோகிட் பிரகாஷன், லக்னோ, 37) அர்ச்சனா பிரகாஷன், போபால், 38) ஆகாஷ்வானி பிரகா ஷன், ஜலந்தர், 39) பாரதீய விசார் சாதனா, நாக்பூர், 40) சாதனா பிரகாசன் குஜராத் மற்றும் இந்தியாவில் உள்ள 10 வெளியீட்டகங்கள், 41) இந்து முன்னணி (தமிழ்நாடு), 42) பிராமணர் சங்கம் (தமிழ்நாடு), 43) தர்ஷக மண்டல (மதத் தலைவர்கள்), 44) முக்தியக்ஞ சமிதி 45) ராமஜென்ம பூமி நியாஸ் மன்ச் (அறக்கட்டளை), 46) கிராமப் பூசாரிகள் சங்கம் (தமிழ்நாடு), 47) சிசு மந்திர் 48) முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச்.

- ஜனசக்தி: 14.7.2014, தகவல்: பஞ்சாபகேசன், திருவண்ணாமலை

Read more: http://viduthalai.in/page5/89932.html#ixzz3HDAgSIB0

தமிழ் ஓவியா said...

இதுதான் கந்தசஷ்டி!

இந்த சுப்ரமணியன் பிறப்பு அல்லது கந்தசஷ்டி என்பது புராண ஆபாசங்களில் மோசமான ஒன்றாகும். ஒரு சமயம் தேவர்கள் எல்லாம் போய் சிவனிடம் கேட்டார்களாம். உலகில் ராட்சதர் கொடுமை அதிகமாகி விட்டது. அதை எங்களால் தாங்க முடியவில்லை. ஆகவே அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு அவர்களை அழிக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற்றுத் தரவேண்டும்" என்று வேண்டினார்கள் . அதற்குச் சிவனும் இணங்கி பார் வதியைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளை பெறும் முயற்சியில் அவளோடு கலவிசெய்ய இறங்கினானாம்.

தொடர்ந்து 1,000 வருடங்கள் கலவி செய்துகொண்டே சிவனும் பார்வதியும் இருந்தார் களாம். ஆனால் குழந்தை பிறக்காததைக் கண்டு தேவர்கள், இனி பிள்ளை பிறந்தால் இந்த உலகே தாங்காது அவ்வளவு வலிமை உள்ளதாக இருக்கும். அது இந்த உலகத்தையே அழித்தாலும் அழித்து விடும் என்று தேவர்கள் கருதி சிவனிடம்சென்று வேண்டிக் கலவி செய்வதை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டனர்.

அதற்கு சிவன், "நீங்கள் சொல்லுவது போல் நிறுத்திக் கொள்வதில் எனக்கு ஒன்றும் ஆட் சேபணை இல்லை. நிறுத்தினால் அதிலிருந்து வரும் வீரியத்தை என்ன செய்வது" என்றதும், உடனே தேவர்கள் தங்கள் கைகளை ஏந்தி அதில் விடும்படிக் கேட்டார்களாம். அதன்படி தேவர்கள் அனைவரின் கையிலும் வீரியத்தைவிட்டு, சிவன் குடிக்கும்படி கூற அவர்களும் குடித்தனராம். மீதி வீரியத்தை சிவன் கங்கையில் விட்டானாம்.

கங்கை அதைத் தாங்காமல் கொதிக்க ஆரம்பித்து விட்டதாம். வீரியத்தைக் குடித்த தேவர்களுக்குக் கர்ப்பநோய் வந்துவிட்டதாம்.

அவர்கள் சிவபிரானிடம் சென்று வணங்கி, தங்கள் கர்ப்பநோய்க்கு மருந்து கேட்க, அவர் அதற்கு 'காஞ்சிபுரத்திலுள்ள சுரகரீஸ்வரர் குளத்தில் மூழ்கினால் கர்ப்பம் கலையும்' என்று கூறினாராம். அதன்படி தேவர்கள் அக்குளத்தில் மூழ்கிக் கர்ப்பத்தைக் கலைத்துக் கொண்டார் களாம்.

கங்கையில் ஓடிய சிவ வீரியமானது, ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடியதால், ஆறு குழந்தைகள் ஆயிற்றாம். அதனை ஆறு பெண்கள் எடுத்து பால் கொடுத்து வளர்த்தனராம். ஆறு பேர்கள் பால் கொடுப்பது என்பது சிரமமாக இருப்பதாக எண்ணி அவர்கள் ஆறுபேரையும் ஒன்றாக அணைத்துப் பால் கொடுக்கையில், முகம் 6 ஆகவும் (தலைகள்) கைகள் 12 ஆகவும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத்தின் கதை யாம். ஸ்கலிதத்திலிருந்து உதித்ததால் ஸ்கந்தன் என்று பெயர் உண்டாயிற்றாம்.

ஸ்கந்தம் என்றால், விந்து என்று பொருள். கந்தன் என்ற சுப்பிரமணியக் கடவுளின் பிறப்பு யோக்கியதையைக் கண்டீர்களா!

Read more: http://viduthalai.in/page-2/90020.html#ixzz3HGTx7wMH

தமிழ் ஓவியா said...

’விடுதலை’யின் கேள்விக்குப் பதில்

விடுதலை, 4.10.2014 இதழின் தலையங்கத்தில், மீண்டும் இராவண லீலா நடக்க வேண்டுமா? என்ற கேள்வியை, பெரியார் தொண்டர்களாகிய விடுதலை வாசகர்களுக்கு ஒரு கேள்வியாகத் தொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு என் பதில்: ஆம்! இராவணலீலா மீண்டும் நடத்தப்படவேண்டும் என்பதே. ஏனைய விடுதலை வாசகர் களும் பதில் கூறட்டும்.

கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிந்தித்து கருத்தை கேட்டு முடிவெடுக்கட்டும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் (குறள் 466)

செய்ய வேண்டியதற்கான நல்ல பல காரணங்களை தலையங்கத்திலேயே காணமுடிகிறது. திராவிட இனத்தை இழிவுபடுத்தும் செயலைத் தடுத்து காக்கத் தவறினால் கெடுதிதானே விளையும்?

எச்சரித்துக்கொண்டுதானே இருக்கிறார்

தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கும் ஆபத்துக்களை ஒன்றன் பின் ஒன்றாக அறிக்கைகள்மூலம் உடனுக்குடன் ஆசிரியர் அவர்கள் எச்சரித்துக் கொண்டுதானே இருக் கிறார். தொடர் வண்டியில் உள்ள அபாயச் சங்கிலியை இழுக்கவேண்டிய நிலை ஏற்படுவதற்கான நிலை உருப் பெற்று வருகின்றது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத் தூண்டில் போட்டு பார்க்கிறார்கள். நட்சத்திர மீன் (STAR FISH) ஏன் இன்னும் மேலாக (SUPER STAR FISH) கிடைக்காதா என்று காத்திருக்கிறார்கள்.

ரத, கஜ, துரக, பதாதி என்ற நால்வகைப் படைகள் என, இந்துத்துவா, சமஸ்கிருதம், கீதை, இந்தி திணிப்பு, ஊடக ஆக்கிரமிப்புப் படைகளென, இன அழிப்பு வேலையில் இறங்கியுள்ளன.

முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் நாளை பள்ளி மாணவர்கள் ஒரு வாரம் கொண்டாட வேண்டும் என்று இன்றைய பிரதமர் கேட்டுக்கொண்டுள் ளார். நேரு ஒரு நாத்திகர் என்பதையும், இராமாயணம் ஆரிய - திராவிடப் போராட்டம் என்று கூறியதையும் மாணவர்கள் அறியச் செய்ய வேண்டும். இந்திமொழித் திணிப்பை ஏற்காதவர் நேரு என்பதையும் மாணவர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டாமா? பிரதமர் மோடி அவர்கள் இதனை செய்வார் என்று நம்பலாமா?

தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வையாலும், இனமானக்காப்பு உந்துதலாலும், இன்று ஓரளவு, தமிழ னென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று பாட்டிசைக்க முடிகிறது. இல்லையென்றால் பார்ப்பன இனம் திராவிட இனத்தை கபளீகரம் செய்திருக்கும். தற்போது சாதகமான காற்று வீசுவதால், இந்துத்துவா படகில் ஆரியம் ஆவேசமாக துடுப்பை சுழற்றுகிறது. இதற்கு அணை கட்ட நம் கழக இளைஞர்கள் தோள் உயர்த்த வேண்டிய காலம் இது அவசரமும் கூட.

திராவிடர் கழகம், இனம், மானம், மொழி, உரிமை காக்க அறப்போராட்டங்களை நடத்தியது புதிய செய்தியல்ல. போராட்டப் புனலில் நீந்தியே வாழ்ந்தவர் தந்தை பெரியார்.

இந்திமொழி ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டம்.

மண் பிள்ளையார் பொம்மையை உடைக்கும் போராட் டம்.

இந்திய வரைபடம் எரிப்புப் போராட்டம்.

கம்பராமாயண எதிர்ப்புக் கூட்டங்கள் இன்னும் பலப்பல.

எனவே இராவணலீலா மீண்டும் மற்றவர்கள் நியாயம் உணரும் வரை நடத்தவே வேண்டும்.

இந்த நேரத்தில் அன்னை மணியம்மையார் நடத்திய இராவண லீலா நிகழ்ச்சியில் பங்கு கொண்டதை நினைத்துப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. காவல்துறை யினர், தொண்டர்களை கைது செய்யும் வேளையில், இராணுவப்பள்ளியில் பணியாற்றிய என்னை, பணிக் கட்டுப்பாட்டைக் கருதி நிர்வாகி சம்பந்தம் அய்யா அவர் கள், மாடியில் இருந்த வீட்டில் இரவு தங்க வைத்ததையும், மறு நாள் உடுமலைப்பேட்டை திரும்பியதும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. இனிமேல் நடக்க இருக்கும் இராவண லீலாவில் கலந்து கொள்வதில் எனக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை.

- மு.வி.சோமசுந்தரம்

Read more: http://viduthalai.in/page-2/90019.html#ixzz3HGU6aK7P

தமிழ் ஓவியா said...

தென்கிழக்கு ஆசியாவில் பெரியார் ஈ.வெ.ரா.வின் பயணத்தின் தாக்கம் என்னும் தலைப்பில் டாக்டர் கி.வீரமணி உரையாற்றுகிறார்


சிங்கப்பூரில் இயங்கிவரும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வு நிறுவனம் சார்பில் நடைபெறும் கருத்தரங்கில் தென்கிழக்கு ஆசியாவில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் பயணத்தின் தாக்கம் என்கிற தலைப்பில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி உரை ஆற்றுகிறார்.

சிங்கப்பூர் 119620, எண் 29, ஹெங் மியூய்கெங் டெர்ரஸ், பி-பிளாக், 9ஆவது மாடி (09-06), அய்எஸ் ஏ எஸ் போர்ட் அறை 28.10.2014 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணிமுதல் 4.30 மணி முடிய கருத்தரங்கு நடைபெறுகிறது.

நிகழ்விடத்துக்கான வரைபடத்துக்கு http://bit.ly/isasmap இணையத்திலும், கருத்தரங்கில் பங்கேற்பாளர்கள் பதிவு செய்வதற்கு http://k-veeramani.eventbrite.sg என்ற இணையத்திலும் தொடர்பு கொள்ள வேண்டுமாய் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிப்பதுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறார்கள். கருத்தரங்கில் வரையறுக்கப்பட்ட இடங்களே உள்ளன.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடம் ஒதுக்கப்படும். jordanang@nus.edu.sg என்கிற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-8/90027.html#ixzz3HGVQhzHQ

தமிழ் ஓவியா said...

நேருவைக் கொன்றிருக்கவேண்டும் என்பவர்மீதான நடவடிக்கை என்ன?

காந்தியாரைப் படுகொலை செய்ததற்குப் பதிலாக பண்டித ஜவகர்லால் நேருவைத்தான் நாதுராம் கோட்சே கொலை செய்திருக்கவேண்டும் என்று கேரள ஆர்.எஸ்.எஸ். ஏடான கேசரியில் (17.10.2014) பி.ஜே.பி. பிரமுகர் பி.ஜி.கோபாலகிருஷ்ணன் என்பவர் எழுதியுள் ளார். இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிக் கொண்டவர்.

இதன்மூலம் இவர் என்ன சொல்ல வருகிறார்? காந்தியார் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் அதேவேளையில், அவரைவிட நேருவைக் கொன்றிருக்கவேண்டும் என்று எழுதியுள்ளார்.

தங்களுக்கு விரோதமான கொள்கைகளை, கோட்பாடுகளைக் கொண்டவர்களைக் கொல்லுவது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர் என்பதும் இதன்மூலம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

காந்தியார் கடவுள் நம்பிக்கையற்றவரல்ல, மத மறுப்பாளரும் அல்ல; இவற்றில் எவரையும்விட அதிகமான நம்பிக்கையும், பிடிப்பும் கொண்டவர்! அதேநேரத்தில், இந்து - முசுலிம் பிரச்சினையில் சிறுபான்மை மக்கள் பக்கம், நியாயத்தின் பக்கம் நின்றவர்.

எனவே, மதவெறிக் கண்கொண்டு மிகப்பெரிய திட்டத்தை வகுத்துக் கொண்டு காந்தியாரைச் சுட்டுக் கொன்றனர்.

அப்பொழுது ஆஙகிலேய அரசு சொன்னது, எங்கள் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட காந்தியாரை நாங்கள் காப்பாற்றிக் கொடுத்தோம் - பாதுகாத்துக் கொடுத்தோம்; உங்களுக்குச் சுதந்திரம் கொடுத்த ஆறு மாதங்களுக்குள் அவரைக் காப்பாற்றத் தவறிவிட்டீர்களே, படுகொலை செய்துவிட்டீர்களே? என்று அவர்கள் எழுப்பிய அந்த வினாவுக்கு, இதுவரை உலக நாடுகளுக்கு இந்தியாவால் பதில் சொல்ல முடியவில்லை!

இன்னும் சொல்லப்போனால், அன்று தலைகுனிந்த இந்தியா இன்றுவரை தலைநிமிர முடியாமல் வெட்கத்தால் நாணிக்கோணித்தான் நிற்கிறது.

அதற்குப் பின்னால் 44 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்தம் முக்கிய தலைவர்களின் வழிகாட்டுதலோடு பல்லாயிரக்கணக் கானோர் ஒன்றுகூடி ஒரு பட்டப்பகலில் இடித்துத் தரைமட்டமாக்கினர்.

உலகமே கைகொட்டி ஏளனமாகச் சிரித்தது. இதன்மூலம் இரண்டாவது தடவையாகவும் இந்தியா மேலும் தலையை தொங்கப் போடும் அநாகரிக நிலையை அடைந்தது.

உலகம் இகழ்ந்த நிலைக்குப் பிறகாவது - அறிவு பெற்றனரா? நல்ல புத்தி ஏற்பட்டதா? நேருவைக் கொலை செய்திருக்கவேண்டும் என்று கூச்சமில்லாமல் எழுதுகிறார்களே - அதுவும் நேருவின் 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடுவது குறித்த சிந்தனைகள் பேசப்படும் இந்தக் காலகட்டத்தில், இப்படியொரு ஆபாசப் புத்தியை, அநாகரிக மூர்க்கக் குணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருப்பது - வெட்கக்கேட்டின் எல்லையாகும்.

காந்தியாரைவிட நேருமீது பார்ப்பனர்களுக்குக் கடும் வெறுப்பும், எதிர்ப்பும் இருப்பதற்கு முக்கிய காரணம், தன்னை ஒரு சனாதனவாதியாகக் காட்டிக் கொள்ளாததோடு, பல நேரங்களில் அவற்றைச் சாடவும், விமர்சிக்கவும் தயங்காதவர் நேரு. அந்தக் கோபம் இத்தனை ஆண்டுகாலம் ஆகியும் இந்துத்துவா கூட்டத்தை விட்டு அகலவில்லை என்பதைத்தான் ஆர்.எஸ்.எஸ். ஏடான கேசரியில் எழுதப்பட்ட கட்டுரை வெளிப் படுத்துகிறது.

கேசரி என்ற ஏடு - ஒரு காலகட்டத்தில் பாலகங்காதரர் என்ற இந்துத்துவா வெறிபிடித்த ஒரு தலைவரால் நடத்தப்பட்ட, ஆரிய நஞ்சை, வர்ணாசிரம தர்மத்தைக் கக்கிய ஏடாகும்; இன்னும் சொல்லப்போனால், மகாராட்டிர மாநிலத்தில் இந்துத்துவா வெறியைச் சாகும்வரை விசிறி விட்டுக் கொண்டிருந்த பார்ப்பனர் திலகர் ஆவார்.

பிளேக் நோய் அம்மாநிலத்தில் ஏற்பட்டு, மக்கள் கொத்துக் கொத்தாய் சாவின் மடியில் விழுந்த அந்த நேரத்தில், வெள்ளை அரசாங்கம் பிளேக் நோய்க்குக் காரணம் எலிகள் என்பதால், எலிகளை வேட்டையாட முனைந்தது. அப்பொழுது இந்தத் திலகர் என்ன சொன்னார் தெரியுமா?

எலி என்பது நமது இந்து மதக் கடவுளான விநாயகர் வாகனம் - வெள்ளைக்கார மிலேச்சர்!

நமது மதக் கலாச்சாரத்தில் தலையை நுழைக்கிறார்கள் என்ற வெறியை இந்துக்களிடத்தில் கிளப்பியவர். அந்த வெறியின் காரணமாக வெள்ளைக்கார அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தப் படுகொலைக்குக் காரணமாக இருந்த திலகரும், குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டதும் உண்டு.

அந்தக் கேசரி பெயரைக் கொண்ட ஏடு இப்பொழுது கேரளாவில் சங் பரிவார்க் கும்பலால் நடத்தப்பட்டு வருகிறது. அதில்தான் காந்தியாருக்குப் பதிலாக நேரு படுகொலை செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று எழுதியுள்ளார்.

இந்தப் பத்திரிகை மீதோ, கட்டுரையை எழுதியவர் மீதோ கேரள அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இவ்வளவுக்கும் கேரளாவில் நடப்பது காங்கிரஸ் ஆட்சிதானே!

இதனை ஒரு கட்சிப் பிரச்சினையாகப் பார்க்காமல் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கண்டனங்கள் வெடித்துக் கிளம்பவேண்டும். சட்டப்படி கட்டுரையை எழுதிய குற்றவாளிமீது நடவடிக்கை எடுக்கவும் வுற்புறுத்தவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-2/90078.html#ixzz3HLMwdbgf

தமிழ் ஓவியா said...

பரிகார முயற்சி...

எங்கு அளவுக்கு மீறிய, தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ, அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண்டெழவும், சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும்.
_ (குடிஅரசு, 4.10.1931)

Read more: http://viduthalai.in/page-2/90077.html#ixzz3HLN5LbBY

தமிழ் ஓவியா said...

மன நோயாளியின் பிதற்றல் என்று ஒதுக்கி விடுவதா?


மன நோயாளியின் பிதற்றல் என்று ஒதுக்கி விடுவதா?
இல்லை, கயவாளிகளின் கைக்கூலி என கட்டம் கட்டுவதா?

- குடந்தை கருணா

தன்னை விட வயதில் மூத்த வர்கள், தன்னை நேரே வணங்காமல், கார் டயரை வணங்குவதை ரசிக்கும் ஒருவர், வயதில் இளையவர்களைப் பார்த் தாலும், வாங்க என எழுந்து நின்று வரவேற்ற மனிதநேயருக்கு வாரிசா?

சிக்கனத்தை கடைப்பிடிக்கப் பிறருக்குச் சொன்னதுடன், தானும் கடைப்பிடித்து, மக்களுக்கு எடுத்துக் காட்டாய் விளங்கிய சமூக அக்கறை கொண்ட மனிதருக்கு யார் வாரிசு? பகவத் கீதை அதைச் சொன்னது; இதைச் சொன்னது என்று சொல்லி, ஒன்று பாக்கி இல்லாமல், எல்லா இந்து மதப்பண்டிகைக்கும் விழுந்தடித்து வாழ்த்து சொன்னவர்,

இந்த பண்டிகைகளெல்லாம், நம்மை, திராவிடர்களை இழிவு படுத்தும் பண்டிகைகள் என மக்களுக்கு அறிவு வெளிச்சம் தந்த அறிவாசானுக்கு வாரிசா?

காவடி எடுப்பதும், அலகு குத்திக் கிறதும், மொட்டை அடிச்சிக்கிறதும், பக்த கோடிகளின் வேலை; அந்தப் பணியை தங்கள் தலைமைக்கு செலுத் துகிறார்கள் என்றால், அந்தத் தலை மையைத் தெய்வமாக கருதுகிறார்கள் என்றுதானே பொருள்?

அப்படின்னா, கட்டுரைக்கு, தெய் வங்களின் வாரிசு அம்மாதான், அப்படின்னு வைக்கறதுதானே சரியா இருக்கும்.

ஆனாலும், இந்தக் கிழவன், நம்மை எல்லாம் பகுத்தறிவோடு இருங்கன்னு சொன்னதாலே, நாம, யார் எதைச் சொன்னாலும், கேட்டு கிட்டு, சும்மா கட்டுரையிலே பதில் சொன்னா போதும்னு நினைச்சுட் டோமோ?

கொஞ்சம் யோசிப்போம், இந்த களவாணிகளை என்ன செஞ்சா சரியா வருவாங்கன்னு.

Read more: http://viduthalai.in/page-2/90083.html#ixzz3HLNKD2AM

தமிழ் ஓவியா said...

பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வா? மக்கள் நல அரசு என்பதற்கு உகந்ததல்ல!


தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருளான பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு என்பது மக்கள் நல

அரசு என்பதற்கு எதிரானது; தமிழ்நாடு அரசு இதனைக் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளார்.
அறிக்கை வருமாறு:

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி 2011 இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் வராததுமாக பால் விலை, மின் கட்டணம்,

பேருந்துக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியது.

அன்றே எழுதினோம்!

அப்பொழுதே அதுகுறித்துக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டோம்.

மத்திய அரசு அண்மையில் பெட்ரோல் விலை ஒன்றுக்கு ரூ.2.10 ஏற்றியதற்கு எவ்வளவுக் கடுமையாக அறிக்கை

வெளியிட்டார் நமது முதலமைச்சர்? நாமும் அந்த விலையேற்றத்தைக் கண்டித்தோம். பெட்ரோலைப்

பயன்படுத்துபவர்கள் வாக்காளர்களில் ஒரு பகுதிதான். ஆனால், அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான

பால், பேருந்துக் கட்டணங்கள் தமிழக அரசால் பல மடங்கு ஏற்றப்பட்டு, நடைமுறைக்கு அமலில் உடனடியாக

வரும் என்று அறிவிக்கப்பட்டு விட்டதே!

வரலாறு காணாத அளவுக்கு 75 விழுக்காடு பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டது. மின்சாரக்

கட்டணத்தை உயர்த்துமாறு மின்வாரியத்திற்குப் பரிந்துரை செய்து அனுமதியளித்துள்ளனர். பால், பேருந்து,

மின்சாரம் இவைகளைப் பயன்படுத்துவோர் அம்பானிகளோ, கிருபானிகளோ, டாடா, பிர்லாக்களோ, ஆலை

முதலாளிகளோ, பெருமுதலாளிகளோ மட்டும் அல்ல; பெரும்பாலும் இந்த ஆட்சிக்கு வாக்களித்த ஏழை, எளிய

மக்கள்தான்.

வாக்களித்தவர்களுக்கு ஆறு மாதத்திற்குள் இந்த அரசு தரும் பரிசு இதுதானா? இது நம்முடைய கேள்வியல்ல -

மெஜாரிட்டி ஆட்சி என்று மார்தட்டும் முதலமைச்சரை அவரது ஆட்சியை நோக்கி மக்கள் எழும்பிக் குமுறும்

குரல்கள் ஆகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தேன். (விடுதலை, 21.11.2011)

மக்கள் தலையில் இடியோ!

இப்பொழுது இன்னொரு ஆபத்தான இடியை ஏழை, எளிய, நடுத்தரப் பாட்டாளி மக்கள் தலையில் இறக்கி

வைத்துள்ளது தமிழ்நாட்டை ஆளும் அ.இ.அ.தி.மு.க. அரசு; லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 அளவுக்கு பால் விலை

உயர்வாம்; ஓர் அத்தியாவசியமான அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருள்மீது இவ்வளவு அபாயகரமான

விலை ஏற்றம்; இது என்ன கொடுமை!

நட்டம் ஏற்படுகிறது என்பதற்காக இப்படி ஒரு ஈவு இரக்கமற்ற, மனிதநேயமற்ற செயலில் ஈடுபடலாமா?
2011 நவம்பரில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.6.25 உயர்த்தியதும் இதே அ.தி.மு.க. ஆட்சிதான். இப்பொழுதோ ரூ.10

அதிகம்.

பால் விலை உயர்வு என்றால், அத்தோடு முடியக் கூடியதல்ல; அது தொடர்புடைய 43 பொருள்கள்

இருக்கின்றன. அவை அத்தனையும் 15 சதவிகிதம் அளவுக்கு உயர்கின்றன.

ஆட்சி நடத்துவது வியாபாரம் அல்ல!

எல்லாத் துறைகளிலும் இலாபம் வரும் என்று அரசு எதிர்பார்க்கக்கூடாது; அப்படி எதிர்பார்ப்பது தனிப்பட்ட

வியாபாரிகளுக்கான தர்மமாக இருக்கலாமே தவிர, அரசின் தர்மமாக இருக்க முடியாது. (வியாபாரிகள்கூட

தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலையைக் கண்மூடித்தன மாக ஏற்றிவிட முடியாது; அதற்கும் அரசு சில கட்டுப்

பாடுகளை விதித்துள்ளது) அரசோ அப்படிப்பட்டதல்ல - மக்கள் நலன் சார்ந்தது! (Welfare State).
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முக்கிய கட்சிகளும் எதிர்த்துள்ளன - போராட்டங்களையும் அறிவித்துள்ளன.

இன்னும் சொல்லப்போனால், அ.இ.அ.தி.மு.க.வை ஆதரிப்பவர்கள்கூட இந்தப் பால் விலை உயர்வை

விரும்பவில்லை - எதிர்த்துக் கருத்துக் கூறியுள்ளனர்.

மறுபரிசீலனை தேவை!

தமிழ்நாடு அரசு இதில் மறுபரிசீலனை செய்யவேண்டும்; மறுபரிசீலனை என்ற பெயரில் ஒரு ரூபாய், இரண்டு

ரூபாய் குறைப்பு என்ற கண் துடைப்பு வேலையில் இறங்கினாலும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்

என்பதையும் இடித்துச் சொல்லுவது நமது கடமையாகும்.

அடுத்து மின்கட்டண உயர்வு என்ற அதிர்ச்சி (ஷாக்) அச்சாரம் போட்டுக்கொண்டு இருக்கிறது. அரசு

கொள்ளிக் கட்டையை எடுத்துக்கொண்டு தலையைச் சொரிய ஆசைப்பட்டால், யார்தான் என்ன செய்ய

முடியும்?


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/90121.html#ixzz3HUgHkVRK

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்தி இவ்வளவுதானா?

குமரி மாவட்டத்தில் கோவில்கள் கொள்ளையோ கொள்ளை!

குமரி மாவட்டம், குளச்சல் அருகே மேற்கு நெய்யூரில் இருக்கும் இசக்கி அம்மன் கோவிலுக்கு நேற்று காலை

கோவில் நிர்வாகி சிவராம் சென்று பார்க்கும்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த

நகை திருட்டுப் போயி ருந்தது.

உடனடியாக அவர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்

தனது நகையைக் கூட பாதுகாக்க இயலாத இந்தக் கடவுளா பக்தர்களைப் பாதுகாக்கப் போகிறது?

ராஜாக்க மங்கலத்தில்...

குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் பண்ணயூரில் உள்ள இசக்கியம்மன் கோவில் பூசாரி ராஜேஷ் நேற்று

முன்தினம் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு பின்னர் கோவிலுக்குள் வந்து பார்க்கும்போது கோவில்

உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் ரூ2ஆயிரம் திருடப்பட்டிருந்ததைப் பார்த்தார்
உடனே ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதுபோல ராஜாக்கமங்கலம் அருகே பாம்பன் விளையில் உள்ள விநாயகன் கோவிலிலும் பூட்டு உடக்கப்பட்டு

பணம் திருட்டுப் போய் உள்ளது. அந்த கோவில் பூசாரியும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்

தொடர்ச்சியாக கோவிலில் பணம் திருடப்பட்ட போதும் இந்த சக்தியற்ற கடவுளர்களை நம்பி கோவிலுக்குப்

போவதை பக்தர்கள் என்றுதான் நிறுத்துவார்களோ.


கும்மிடிப்பூண்டி:

கோவில் பூட்டை உடைத்து திருட்டு

கும்மிடிப்பூண்டியை அடுத்த காட்டுக்குளம் கிராமத்தில் பழைமை வாய்ந்த பொற்காளியம்மன் கோவில் உள்ளது.

நேற்று காலை கோவில் பூசாரி ராஜீ(வயது 50) கோவிலை திறக்கச் சென்றார். அப்போது கோவிலின் முன்பக்க

இரும்பு கதவு மற்றும் அதனை அடுத்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி

அடைந்தார்.

யாரோ சிலர் கோவிலின் 2 கதவு பூட்டுகளையும் உடைத்து உள்ளே புகுந்து அங்கு இருந்த இரண்டு

உண்டியல்களையும் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணம் மற்றும் சில்லறை காசுகளை அள்ளிச் சென்று

உள்ளனர். மேலும் அங்கு இருந்த இரும்பு பெட்டியை தூக்கிச்சென்று சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ள

வயல்வெளியில் வைத்து அதனை உடைத்து அதில் இருந்த அரை பவுன் எடை உள்ள தங்கக் காசுகளையும்

அவர்கள்அள்ளிச்சென்று விட்டனர். இதுபற்றி கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கடந்தாண்டு இந்தக் கோவிலின் கோபுரத்தில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ளஅய்ம்பொன் கலசங் களை யாரோ

சிலர் திருடிச்சென்று விட்டது குறிப் பிடத்தக்கது.


Read more: http://viduthalai.in/e-paper/90124.html#ixzz3HUgd3OVv

தமிழ் ஓவியா said...

மக்களை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசு மரபணு மாற்றம் கத்திரிக்காய் அனுமதி!


புதுடில்லி, அக். 28- மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் பற்றி கள ஆய்வு நடத்த மத்திய அரசு

அனுமதி அளித்துள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட வேளாண் விளை பொருள்கள் பற்றி கள ஆய்வு நடத்த முந்திய அய்க் கிய

முற்போக்குக் கூட்டணி அரசில் தடை விதிக்கப் பட்டிருந்தது.ஆனால் 18 மாதங்களுக்குப் பிறகு தற் போது

இந்தத் தடையை பா.ஜ.க. அரசு நீக்கியுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் மற்றும் கடுகு

ஆகியவை பற்றி கள ஆய்வு நடத்த சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு சுற்றுசூழல் அமைச்சகம் பதிலளித் துள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுபற்றி ஆய்வு நடத்துவதற்கு டில்லி பல்கலைக்கழகத்துக்கு அனுமதி

அளிக்கப்பட்டது. மரபணு மாற்றம் செய்யப் பட்ட கத்திரிக்காய் பற்றி ஆய்வு நடத்த மராட்டிய மாநிலத்தைச்

சேர்ந்த பிஜோ சீட்ஸ் பிரைவேட் லிமி டெட் என்ற நிறுவனத்துக்கு அனுமதியளிக்கப் பட் டது. கடந்த ஆகஸ்டு

21 இல் இவ்வாறு அனுமதி அளித் தோம் என சுற்றுசூழல் அமகம் பதிலளித்துள்ளது.


Read more: http://viduthalai.in/e-paper/90123.html#ixzz3HUglL3Cp

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

மறைக்க முடியுமா?

செய்தி: சென்னை ஓமாந் தூரார் வளாகத்தில் அடுத்த ஆறு மாதத்தில் மருத்துவக் கல்லூரி அமையும்.

சிந்தனை: என்ன வந் தால் என்ன? அது கலை ஞர் காலத்தில் கட்டப் பட்ட கட்டடம் என்பதை மறைக்க
முடியுமா?

Read more: http://viduthalai.in/e-paper/90128.html#ixzz3HUguMyoO

தமிழ் ஓவியா said...

சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்!!


நடிகர் ரஜினிகாந்த் பிஜேபிக்கு வர வேண்டும் என்று அழைப்புக் கொடுத்த தமிழக பிஜேபியின் தலைவர்

டாக்டர் தமிழிசை, ரஜினியை நம்பி பிஜேபி இல்லை என்று இப்பொழுது கூறியுள்ளார்.

சீச்சீ... இந்தப் பழம் புளிக் கும் என்பது இதுதானோ!

Read more: http://viduthalai.in/e-paper/90127.html#ixzz3HUh5B9dU

தமிழ் ஓவியா said...

வாழ்க்கைக்கேற்ற அறிவுரை


நெருப்பைத் தொட்டால் கடவுள் தண்டிப்பார் என்பதைவிட, கை சுடும் தொடாதே என்று அனுபவ முறையில்

நன்மை தீமைகளைக் கற்பிப்பதின்மூலம் சீக்கிரம் சுலபத்தில் கண்டிப்பாய் ஒழுக்கமான வாழ்க்கையை உண்டாக்க

முடியாதா? - (குடிஅரசு, 7.4.1929)

Read more: http://viduthalai.in/page-2/90129.html#ixzz3HUhIMkBh

தமிழ் ஓவியா said...
இந்தியாவில் 3 இல் ஒரு குழந்தை பசித்த வயிற்றுடன் படுக்கைக்குச் செல்கிறது ஆய்வுத் தகவல்

பசித்த வயிறுகளுடன் தூய்மை இந்தியா
திட்டம் எப்படி நிறைவேறும்? - அமர்த்தியாசென்

புதுடில்லி, அக். 28_ இந்தியாவில் 3 இல் ஒரு குழந்தை பசித்த வயிற் றுடன்தான் படுக்கைக்குச் செல்கிறது. 30.7

விழுக்காடு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் குறைந்த எடையுடன் தான் உள்ளனர் என சர்வதேச உணவுக்

கொள்கை ஆய்வு நிறுவனத் தின் அறிக்கை தெரிவித்துள்ளது. தூய்மை இந்தியா என்பது பசித்த வயிறுகளுடன்

எப்படி நிறைவேறும்? என்று நோபல் பரிசு பெற்ற நிபுணர் அமர்த்தியாசென் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனமே உலகளவில் பசிக் கான அளவீடுகள் தயாரித்து ஆண்டு

தோறும் வெளியிடுகிறது. டில்லியில் கடந்த ஞாயிறன்று இவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி

யுள்ளதாவது:

76 நாடுகளைக் கொண்ட பசியில் வாடும் நாடுகளின் பட்டியலில் இந் தியா 55 ஆவது இடத்தில் இருக்கிறது.

இந்நிலைமை இந்திய குழந்தைகளின் உண்மை நிலையை தெளிவுபடுத்து கிறது. 2005_2006 இல் 5 வயதிற்

குட்பட்ட குழந்தைகளில் எடை குறை வானவர்கள் 45.1 விழுக்காடு இருந் தனர். தற்போது அது 30.7 விழுக்

காடாக குறைந்துள்ளது என்றாலும் இது கவலைக்குரிய நிலைமையாகவே உள்ளது. ஏனெனில் பிறந்ததிலிருந்து

5 வயதுவரைதான் மூளையின் வளர்ச்சி விரைவாக நடைபெறும். அப்போது சத்தான உணவு அவசியம்.

ஆனால் இவ்வயதில் சத்தின்மையோ ,போதாக் குறை சத்துணவோ அல்லது எந்த உணவுமின்றி பசியால்

வாடுவதோ குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும்.

இதனால் நாட்டின் எதிர்கால தலைமுறையின் வளர்ச்சியே பாதிப் புக்குள்ளாகி விடும். இவ்வாறு உண வின்றி

தவிக்கும் குழந்தைகள் வய துக்கு வருவது தாமதமாகும். இப் பாதிப்புகளைக் கவனத்தில் கொண்டே மதிய

உணவுத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் போன்றவை கொண்டு வரப்பட்டன. ஆனால்

இத்திட்டங்களில் உள்ள குறைபாடு இத்திட்டங்களைக் கொண்ட பள்ளியில் படிக்க வரும் குழந்தைகளுக்கு

மட்டுமே பொருந் தும். பள்ளிக்கு வராத, கல்வி முறை யிலிருந்து வெளியேற்றப்பட்ட மிக ஏழைக்

குழந்தைகளுக்கு திட்டத்தின் பயன்கள் கிடைக்காது. ஏழை மக் களின் வேலையில்லாத் திண்டாட் டத்தை

குறைக்கவும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் கொண்டுவரப்பட்டது.

இத்திட்டங்களின் மூலமாக கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டு மிகக்குறைந்த அளவிலான உணவைபெற

முடியும் என்பதால் இத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. பொது விநியோகத்திட்டமும் இவர் களுக்கு உதவி

புரிந்தது. இருப்பினும் இத்திட்டங்களின் மூலம் கிடைக்கும் சொற்ப வரு வாய் மற்றும் மானியங் களின் மூலம்

உணவுப் பொருள்களும் போதுமான ஊட்டச்சத்தை அளிப் பதில்லை என்பதும் உண்மையாக இருக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமர்த்தியாசென் கண்டனம்

இதற்கிடையில் பாஜக அரசு, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தைப் படிப்படியாக குறைத்து,

அதை ஒழித்துக் கட்ட முயற்சித்து வருவதற்கு நோபல் பரிசு பெற்ற பொருளியல் நிபுணர் அமர்த்தியாசென்

மற்றும் பேராசிரியர் ஜீன் டிரெஸ் ஆகியோர் கடும் கண் டனங்களை தெரிவித்துள்ளனர். அமர்த்தியாசென்

மற்றும் ஜீன் டிரெஸ் ஆகியோரும் உணவு உரிமைக்கான கூட்டமைப்பினரும் இணைந்து அறிக்கை ஒன்றை

வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:

இதுபோன்ற வேலை வாய்ப்பு, உணவு மானியத் திட்டங்கள் மற்றும் பொது விநியோகத் திட்டங்களை

குறைப்பதும் ரத்து செய்வதும் ஒரு நாட்டின் எதிர்காலத் தலைமுறைக்கு இழைக்கப் படும் அநீதியாகும். கீளின்

இந்தியா என்ற பிரச்சாரத்தில் இது போன்ற மிக முக்கியமான விசயங்கள் குறித்த விவாதங்கள் அனைத்தும்

புறந்தள்ளப்பட்டுவிட்டன. மேலும் இதுபோன்ற அடிப்படை யான விசயங்களை எல்லாம் விவா திப்பது

கிட்டத்தட்ட காலப்போக்கில் மறைந்து போன வழக்கமாகி வருகிறது. தூய்மை இந்தியா என்பது பசித்த

வயிறுகளுடன் எப்படி நிறைவேறும். இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-2/90131.html#ixzz3HUhhwE00

தமிழ் ஓவியா said...

இந்நாள்: போலியோவுக்குத் தடுப்பூசி கண்ட பெருமகன் எட்வார்ட் சாக் பிறந்த நாள்


(போலியோவிற்கான தடுப்பூசியைக் கண்டறிந்த ஜொன்ஸ் எட்வார்ட் சாக் அவர்களுக்கு நூற்றாண்டு விழா;

பிறந்த நாள் அக்டோபர் 28, 1914)

மனித இனம் தோன்றிய நாள் முதல் பல்வேறு நோய்களுக்காட்பட்டு மரண மடைந்து வந்தான். ஆனால் ஒரு

நோய் மரணமடையவும் விடாமல், வாழவும் விடாமல் வாழ்நாள் முழுவதும் மனி தனை அலைக்கழித்து வந்தது,

அது இளம்பிள்ளைவாதம் என்றழைக் கப்படும் போலியோ நோயாகும்.

வனவிலங்குகளின் மலத்தின் மூலம் மனித இனத்திற்கு பரவிய இந்த வைரஸ் கிருமி ஏற்படுத்திய பாதிப்பு

எகிப்திய மம்மிகளிடமும் காணப்படுகிறது. டுடங் காமன் என்ற மன்னனின் (கி.மு 4000) இளவரசர் ஒருவரின்

மம்மியை ஆய்வு செய்தபோது அந்த மம்மி போலியோ வால் பாதிக்கப்பட்டது எனத் தெரிய வந்ததுள்ளது.

வியர்வை, மலம், சிறுநீர்மூலம் இந்தக் கிருமி நீர் நிலைகளில் கலந்து பரவுகிறது. போலியோவை உண்டாக்கும்

வைரஸ் தண்டுவடத்தை பாதித்து நரம் புகளை செயலிழக்கச் செய்கிறது. போலியோ பெரும்பாலும் இடுப்புக்கு

கீழ் பகுதி நரம்பு மண்டலத்தை கடு மையாக பாதித்து, அவரின் வாழ்க் கையை முடக்கி விடுகிறது.

உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட இந்த நோய் குறித்து அறிவியலாளர்கள், இந்த நோய் அணுகுண்டைவிட

ஆபத்தானது என் பர். இரண்டு உலகப்போர்களாலும் பாதிக் கப்பட்ட மக்களைவிட போலியோ நோயினால்

பாதிக்கப்பட்டவர்களே அதிகம். போலியோ நோய்பரப்பும் வைரஸ்கள் குறித்த இயக்கங்கள் நவீன

நுண்ணோக்கிகள் கண்டறியப்படாத நிலையில் சரியாக அடையாளங்காண இயலவில்லை. அமெரிக்காவைச்

சேர்ந்த ஜோன்ஸ் எட்வர்ட் சாக் என்பவர் தன்னுடைய சிறுவயதில் தனது தங்கைக்கு போலியோ தொற்றி

அவள் முடமாகி இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். சிறுவயதில் இருந்தே போலியோ நோயின்

கொடுமையை அறிந்த கார ணத்தால் தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்ததும் மருத்துவம் பயிலத் துவங்

கினார். முக்கியமாக அவர் நோய்களை ஏற்படுத்தும் நச்சுக்கிருமிகள் குறித்து இரவு பகலாக ஆய்வு செய்தார்.

பெரி யம்மை தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு உலகம் முழுவதும் பரவலான பிறகு போலியோ குறித்த ஆய்வும்

உலக அறிவியலாளர்களால் முன்னேடுக்கப் பட்டது. ஜோன்ஸ் எட்வர்ச் சாக் பெரி யம்மை தடுப்பூசி

போன்றே போலியோ விற்கும் தடுப்பூசி கண்டறியும் ஆய்வை தொடர்ந்து செய்துவந்தார்.

1948 ஆம் ஆண்டிலிருந்து 1955 ஆம் ஆண்டு வரை நீண்ட ஆய்வில் ஈடுபட்ட அவர் அமெரிக்காவில் ஒரு

லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, தான் கண்டுபிடித்த தடுப்பூசியை போட்டு நோய் பரவாமல் தடுப்பதில்

வெற்றியும் கண்டார். போலியோ நோயால் பாதிக்கப்பட்ட வர்களை முழுமையாக குணப்படுத்தா விடினும்

நோய் வராமல் தடுக்கும் தடுப்பூசியை 1955 ஆம் ஆண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதே ஆண்டு

ஏப்ரல் 12 ஆம் தேதி இவரது தடுப்பூசி உலகிற்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போது இவர்

உலகின் அதிசய மனிதர் என்றே கரு தப்பட்டார். காரணம் உலகெங்கிலும் போலியோ பாதிக்கப்பட்டவர்கள்

கடவு ளின் சாபத்தால் பிறந்தவர்கள் என்று கருதப்பட்டது. அந்தக் கடவுளின் சாபத்தை முறியடித்துக்

காட்டியவர் என்று அமெரிக்க இதழ்கள் புகழாரம் சூட்டின.

எந்த ஒரு தனிப்பட்டவருக்கும் உரிமையானதல்ல...

தொலைக்காட்சி ஒன்றின் நேர் காணலின்போது இந்தத் தடுப்பூசிக்கான உரிமையை நீங்கள் கோருவீர்களா என்ற

கேள்விக்கு, ஜோன்ஸ் அளித்த பதில் சூரியனுக்கு யாரும் உரிமை கோர முடியுமா அது உலகத்திற்கு பொது

வானது அதுபோலவே, என்னுடைய போலியோ தடுப்பூசி கண்டுபிடிப்பும் எந்த ஒரு தனிப்பட்டவருக்கும்

உரிமை யானதல்ல; இது மனித குலத்திற்கே உரிமையானது என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/90133.html#ixzz3HUhr65mW

தமிழ் ஓவியா said...

இந்துக்கள் 10 குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டுமாம்! சொல்லுகிறார் சிவசேனை தலைவர்

லக்னோ, அக். 28 இந்துக்கள் பெரும்பான்மை யினர் தகுதியை தக்க வைத்துக் கொள்ள இந்து குடும்பங்கள் 10

குழந்தை களுக்கும் மேல் பெற்றெ டுக்க வேண்டும் என உத்தரப்பிரதேச சிவசேனா தலைவர் அனில் சிங் தெரி

வித்திருப்பது பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்துக்கள் பெரும்பான் மையினர் என்ற தகுதியை தக்க வைத்துக்கொள்ள இந்து குடும்பங்கள் 10

குழந்தைகளுக்கும் மேல் பெற்றெடுக்க வேண்டும். அவ்வாறு பத்து அல்லது பத்துக்கும் மேற்பட்ட குழந் தைகள்

பெற்றுக்கொள்ளும் குடும்பத்திற்கு தலா ரூ.21,000 வெகுமதி வழங் கப்படும். அக்குடும்பங் களுக்கு தேசிய நலன்

கருதி மக்கள் தொகையை அதி கரித்ததற்காக பாராட்டு சான்றிதழும் அளிக்கப் படும் என அனில் சிங்

கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவசேனா தலைவரின் இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மற்றொரு தலைவரான சுரேந்திர

ஷர்மா, இந்துக் களின் எண்ணிக்கை குறைந் தால் நமது தேசத்தில் நாமே சிறுபான்மையின ராக மாறிவிடுவோம்

என கூறியிருக்கிறார்.

இக்கருத்திற்கு பிற கட்சிகள் கண்டனம் தெரி வித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரீட்டா

பகுகுணா ஜோஷி, உத்தரப்பிரதேசத்தில் வகுப்புவாத கலவரங்களை தூண்டும் வகையில் நடந்து கொள்ளும்

சிவசேனா வெட்கப்படவேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த் ஷாகித் சித்திக்கி கூறுகையில், 10 குழந்தைகளை பெற்றுக் கொள்வது

பெண்களுக்கு வேதனையானது. சிவசேனா இதற்காக ரூ.21,000 மட்டும் தருவதாக தெரிவித்துள்ளது. அவர்கள்

ரூ.21 லட்சம் கொடுக்க வேண்டும். ஆனால், அப்படி அதிக தொகை கொடுத்தாலும் இந்த எண்ணம் தவறானது.

வளர்ந்த நாடுகள் மக்கள் தொகையை குறைக்க நட வடிக்கை மேற்கொண்டு வரும் வேளையில், சிவ சேனா

மக்கள் தொகையை அதிகரிக்க ஆலோசனை கூறியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/90136.html#ixzz3HUi5fTLg

தமிழ் ஓவியா said...

ஹிட்லரை எதிர்த்த சோபி ஸ்கால்


உலகம் முழுவதுமே மிக மோசமான பின் விளைவு களை ஏற்படுத்திய இரண்டாம் உலகப் போர் காலகட்டம்... ஹிட்லர் தலைமையில் ஜெர்மனிதான் இந்தப் போருக்குத் தலைமை தாங்கியது. ஆனாலும், எல்லா ஜெர்மனியர்களும் போருக்கு ஆதரவாக இல்லை. அப்படி, சொந்த நாடாக இருந்தாலும், சொந்த நாட்டு அதிபராக இருந்தாலும் ஹிட்லரை எதிர்த்தவர்களில் ஒருவர் சோபி ஸ்கால்!

1921 மே 9 அன்று பிறந்தார் சோபி. சோபி நிறையப் படிப்பார்... ஓவியங்கள் தீட்டுவார்... இசையிலும் ஆர்வம் இருந்தது. பள்ளியில் படிக்கும்போது மாணவர் தலைவராக இருந்து, திறமையாகச் செயல்பட்டார். நாஜி இளைஞர் படை, பெண்கள் படை போன்றவற்றில் இணைந்து பணி புரிந்தார். பள்ளி இறுதி முடித்தவர்கள் கட்டாயம் தேசச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று சட்டம் இருந்தது.

அதற்காக பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, ஆசிரியராக சிறிது காலம் வேலை செய்துகொண்டிருந்தார் சோபி. பிறகு, முனிச் பல்கலைக் கழகத்தில் படிக்கச் சென்றார். அங்கேதான் சோபியின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.

யூதர்களுக்குத் தனிப் பள்ளி, தனிக் கடைகள், உடையில் சின்னம் அணிந்திருக்க வேண்டும், குறிப்பிட்ட நேரங் களில்தான் வெளியில் வரவேண்டும், மற்றவர்களுடன் பேசக்கூடாது என்றெல்லாம் நாஜிகள் மிக மோசமான சட்டங்களைக் கொண்டு வந்தனர். இவற்றைக் கண்டு அதிர்ந்து போனார் சோபி.

இன்னொரு பக்கம் ஹிட்லரை எதிர்த்தவர் களுக்குக் கிடைத்த தண்டனைகளும் அவரை நிலைகுலையச் செய்தன. சோபியின் அப்பா ஹிட்லரின் நடவடிக்கைகளை எதிர்த்த காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு தனிநபரின் கைகளில் முழு அதிகாரமும் இருந்தால், அவர் எந்த அளவுக்கு சர்வாதிகாரியாக நடந்துகொள்வார் என்பதை அப்போது புரிந்துகொள்ள முடிந்தது. அண்ணன் ஹான்ஸ் மற்றும் அவர் தோழர்களுடன் சேர்ந்து ஹிட்லரை எதிர்க்கும் போராட்டங்களில் பங்கேற்றார் சோபி.

ஒயிட் ரோஸ் என்ற அமைப்பு உருவானது. 1942 ஜூன் முதல் 1943 பிப்ரவரி வரை இந்த அமைப்பு மிகவும் தீவிரமாகச் செயல்பட்டது. ஹிட்லருக்கு எதிரான செயல்களில் ஈடுபட் டதாக குற்றம் பதிவு செய்யப்பட்டது. வெகு விரைவில் விசாரணை முடிந்தது. சோபி, ஹான்ஸ் மற்றும் தோழர்களுக்கு கெல்லட்டின் கொண்டு தலை வெட்டும் தண்டனை வழங்கப் பட்டது.

1943 பிப்ரவரி 22... ஹான்ஸ், நண்பர் கிறிஸ்டோப் ப்ராப்ஸ்ட், சோபி மூவரையும் தண்டனை அளிப்பதற்காக அழைத்துச் சென்றனர், வேண்டும் சுதந்திரம் என்றபடி ஹான்ஸ் கொலை மேடைக்குச் சென்றார். அவர் தலை துண்டிக்கப்பட்டது. 21 வயதே நிரம்பிய சோபி, துணிச்சலுடன் கண்களை இமைக்காமல் மரணத்தை எதிர்கொண்டார்.

Read more: http://viduthalai.in/page-7/90156.html#ixzz3HUilLc6O