Search This Blog

5.10.14

கிராம சீர்திருத்தம் என்பது ஏமாற்று வார்த்தை-பெரியார்

கிராம வாழ்க்கையும் ஆசிரியர் கடமையும்
கிராம சீர்திருத்தம் என்பது ஏமாற்று வார்த்தை

தோழர்களே! இன்று கொடுக்கப்பட்டிருக்கும் விஷயம் மிகவும் முக்கியமான விஷயம். இதைப்பற்றி ஒவ்வொருவரும் தங்கள் தங்களபிப் பிராயங்களைச் சொன்னார்கள். நான் தலைவர் என்கின்ற முறையில் முடிவுரையாக என் அபிப்பிராயத்தை கூறுகிறேன்.

நான் ஒரு எதிர் நீச்சக்காரன். என்ன காரணத்தாலோ நம் நாட்டு மக்களின் பெரும்பான்மையான அபிப்பிராயத்துக்கு நான் மாறுபட்டவனாக இருந்து வருகிறேன். பழமையைப் பாராட்டுவது நமது மக்களுக்கு ஒரு பெருமையாய்க் காணப்படுகிறது. நானோ பழமைப்பித்தை வெறுக்கிறவனாக இருக்கிறேன். அதனாலேயே நான் வெகு பேர்களால் வெறுக்கப்படுகிறேன். ஆனாலும் அறிவாளிகள் சீக்கிரம் என் பக்கம் திரும்பிவிடுவார்கள் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது.

கிராமமும் ஆசிரியரும் என்கின்ற பொருள் இன்றைய கூட்ட விஷயமாகும். அதைப்பற்றி மூவர் பேசினார்கள். அது சம்பந்தமாய் என் அபிப்பிராயத்தை தலைவர் முடிவுரை என்கின்ற முறையில் நான் பேசுகிறேன். ஆசிரியர்களை முதலில் எடுத்துக்கொள்ளுவோம்.

இன்றைய ஆசிரியர்களைப் பற்றி எனக்கு அதிக மதிப்புக் கிடையாது. அவர்கள் அறிவுக்கு முட்டுக்கட்டை ஆனவர்கள் என்பதே எனது அபிப்பிராயம். இந்த நாட்டில் யாருக்காவது கல்வி அவசியம் என்றால் அது ஆசிரியர்களுக்கே ஆகும். பயன் இல்லாததும் பொறுப்பில்லாததுமான பதவி ஒன்று இருக்கின்றது என்றால் அது ஆசிரியர் பதவியே ஆகும். எனது தோழர்களிலும் சிலர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அறிவு உண்டு என்று நான் நினைத்திருக்கிறேன். ஆனால் அந்த அறிவை அவர்கள் ஆசிரியத் தன்மையில் பயன்படுத்த முடிவதில்லை. ஏனெனில் அவர்கள் படிப்புக்குப் பொறுப்பாளிகளும் அல்ல; பிள்ளைகளின் அறிவுக்குப் பொறுப்பாளிகளும் அல்ல. அவர்கள் கவலையும் பொறுப்பும் தங்கள் எஜமானர்களை திருப்தி செய்து வாழ்க்கை நடத்த வேண்டியது என்கின்ற ஒன்றேயாகும். "பாப்பாத்தியம்மா மாடு வந்ததா பிடித்து கட்டிக்கொள்" என்பதோடு மேய்ப்பவன் பொறுப்பு தீர்ந்துவிடுகிறது. அதுபோல்தான் இன்றைய உபாத்தியாயர்கள் பொறுப்பு. அவர்கள் மீது எனக்குள்ள வெறுப்பினால் நான் இப்படிச் சொல்லவில்லை. அவர்களை அந்த அளவுக்கே நிர்பந்தப்படுத்தி வைத்திருக்கும் ஆசிரியர் தன்மையையே நான் சொல்லுகிறேன். பரீக்ஷையில் பிள்ளைகள் தேரும் கணக்கைப் பாருங்கள். பிறகு அந்தப்படிப்பு எதற்கு பயன்படுகிறது என்கின்ற அனுபவத்தைப் பாருங்கள். அதற்கு ஏதாவது கேள்விமுறை இருக்கிறதா என்பதையும் பாருங்கள். இப்படிப்பட்ட பலனுக்கு காரணஸ்தர்களாய் இருக்கிற ஆசிரியர்களை எந்த அளவுக்கு நாம் மதிக்கக்கூடும். இங்கிலீஷ் ஆட்சி ஏற்பட்டு 200 வருஷமாகின்றது. இதுவரை 100க்கு 8 பேரே படிக்க முடிந்திருக்கிறது. அதிலும் பட்டணங்களை தள்ளிவிட்டு கிராமங்களை எடுத்துக் கொண்டால் எத்தனை பேர் படித்திருக்க முடியும். அதிலும் மேல்ஜாதிக்காரர்கள் பிரபுக்கள் என்கின்ற கூட்டத்தார்களை தள்ளிவிட்டால் கிராம பாமர மக்களில் 100க்கு 2 பேராவது படித்து இருக்க முடியுமா? படிப்பின் செலவு எவ்வளவு என்று பாருங்கள். இந்நாட்டில் ஒரு மனிதனுடைய சராசரி வரும்படிக்கு மேல் ஒரு மாணாக்கனுடைய படிப்புக்கு செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது கல்வி நிலையைவிட ஆசிரியத் தன்மை நிலை மோசமாக இருக்கிறது.

கல்விக்கு எப்படி உத்தேசமே இல்லாமல் படிப்பதும், படிப்பிப்பதும் பிறகு படித்த கல்வியும் மனிதனுக்கு பெரும்பான்மையோருக்கு சஞ்சலத்துக்கும் துக்கத்துக்கும் பயன்படுகின்றதோ, அதுபோல் தான் ஆசிரியர் நிலையும் உத்தேசமே இல்லாமல் ஏற்பட்டு வெறும் வயிற்றுப் பிழைப்புக்கு ஆகவே ஒரு வியாபாரம் போலவும் ஒரு ஜீவனோபாய தொழில் முறை போலவுமே பயன்படுத்தப்பட்டு வருவதாகும். வியாபாரமும், தொழில் முறையும் என்றால் நாணயத்தை பிரதானமாக எண்ணாமல் லாபத்தையே பிரதானமாய் எண்ணும் காரியங்களாகும். ஆகவே இவர்கள் எப்படி மக்களுக்கு அல்லது அறிவுக்கு பொறுப்பாளியாவார்கள்? இவர்களிடம் எப்படி குழந்தைகளை ஒப்புவித்து பிற்கால வாழ்வின் கதியை நிர்ணயிக்க முடியும்?

எதற்கு ஆக கல்விபடிப்பு என்கின்றோமோ, அதற்கு ஏற்ற ஆசிரியர்கள் மிகமிக அருமையாய் இருக்கிறது. ஆசிரியர்கள் என்கின்ற மனிதர்களைப் பற்றி நான் குறைகூறவில்லை. ஆசிரியத்தன்மை என்பதற்கு உள்ள யோக்கியதையைப் பற்றியே நான் சொல்லுகிறேன்.

நான் ஆசிரியரானாலும் சரி, மற்றும் வேறு ஆசிரியர்கள் ஆனாலும் சரி இவ்வளவுதான் முடியும். ஏனென்றால் ஆசிரியர்கள் தயார் செய்யும் நிலை அப்படிப்பட்டது. ஆசிரியர் தனக்கு ஏற்பட்ட உத்திரவுப்படிதான் கல்வி கற்பிக்க வேண்டியவர்களே ஒழிய, தங்களுக்குள்ள அறிவுப்படியோ சக்திப்படியோ கற்பிக்கக் கூடாதவர்களாயிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிர்பந்தத்தில் பட்டவர்களாய் இருக்கிறார்கள். ஆசிரியர் பரீக்ஷையென்பதே நிர்பந்தங்கள் பரீக்ஷையென்று சொல்லவேண்டுமே ஒழிய அறிவை உண்டாக்கும் கல்வியை போதிப்பதற்கு தகுதியாக்கும் பரீக்ஷை என்று சொல்லுவதற்கு இல்லை.

இந்த லக்ஷணத்தில் ஒரு ஆசிரியர் பழமைப் பித்தனாகவோ, ஜாதி மத வெறியனாகவோ இருந்துவிட்டால், பிள்ளைகளின் கதி அதோகதிதான். குளிக்கப்போய் சேற்றைப் பூசிக்கொண்ட மாதிரி புத்தி படிக்கப்போய் முட்டாள் தனத்தை ஏற்றுமதி செய்துகொண்டு வந்தது போலவே முடியும்.

ஆதலால் ஆசிரியர்கள் பயன்படக்கூடியவர்களாகயிருக்க வேண்டு மானால் அவர்கள் ஒரு அளவுக்காவது சுதந்தர புத்தியுள்ளவர்களாகவும் பகுத்தறிவுக்கு சிறிதாவது மதிப்புக் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆசிரியரிடம் படிக்கும் பிள்ளைகளே பரீக்ஷை பாஸ் செய்யாவிட்டாலும் அறிவுடையவர்களாகவாவது ஆகலாம்.

ஆதலால் நான் முதல் ஆசிரியர்களையே கேட்டுக் கொள்ளுகிறேன். சுதந்தர புத்தியுடையவர்களாக இருங்கள். பகுத்தறிவை நேசியுங்கள். அதை கனம் பண்ணுங்கள். இரட்டை மனப்பான்மையை ஒழியுங்கள். அதாவது உங்கள் சொந்த அபிப்பிராயம் ஒன்று, உங்கள் மதத்துக்கு ஆகவோ, ஜாதிக்காகவோ பின்பற்றி நடப்பது வேறொன்று, பிள்ளைகளுக்கு போதிப்பது மற்றொன்று என்கின்ற மாதிரியான இரட்டை மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள்.

இப்படிச் செய்வதற்கு ரொம்ப தைரியம் வேண்டும். ஒரு அளவுக்கு கஷ்ட நஷ்டங்களை ஏற்கவும் தயாராய் இருக்க வேண்டும்.

கிராம சீர்திருத்தம்

இனி கிராமம் என்பது பற்றி சில பேசுகிறேன்.

கிராமம் என்பது மிக பரிதாபகரமான காக்ஷியாகும். கிராம ஜனங்கள் நிலை மிகவும் பரிதாபகரமானதாகும். பட்டணத்துக்காகவே கிராமங்கள் இருந்து வருகின்றன. கிராம சீர்திருத்தம் என்பது பட்டணங்களில் வாழ்பவர்களின் சௌகரியத்துக்கு ஆக செய்யப்படும் காரியமேயாகும். கசாப்புக் கடைக்காரன் ஆட்டைப்பற்றி கவலை கொள்ளுவது போல்தான் பட்டணக்காரன் கிராமத்தைப் பற்றி கவலை கொள்ளுவதாய் இருக்கிறது. அரசியல் தானாகட்டும், சமூக இயல் தான் ஆகட்டும் எவ்வளவுதான் முற்போக்கடைந்தாலும் கிராமக்காரனின் நிலை ஒரே மாதிரிதான். அவன் பாடுபட்டு உழைத்து வஸ்துக்களை உண்டாக்க வேண்டியதும், அதன் பலனை பட்டணக்காரன் அனுபவிப்பதுமல்லாமல் வேறு என்ன நன்மை கிராமக்காரனுக்கு இருக்கிறது? கால்நடை வளர்ப்பைப்பற்றி கிராமவாசிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ஒருவர் சொன்னார், கால்நடைகள் வளர்க்கப்பட்டால் கிராமத்துக்கு என்ன லாபம்? பட்டணத்தில் இருப்பவன்தான் பால், தயிர், மோர், நெய் நன்றாக சாப்பிடுவான். கிராமத்தான் சாதத் தண்ணீர் விட்டுத்தான் சாப்பிடுவான். அதுதான் உடலுக்கு பலம் தருமென்று அவன் கற்பிக்கப்பட்டிருக்கிறான். ஒரு கிராமத்தான் குழந்தை தனக்கு கொஞ்சம் நெய்விடும்படி கேட்டால் அவன் தாய்க்கு உடனே கோபம் வந்துவிடும். "உனக்கு நெய்யை ஊற்றிவிட்டால் நாளைக்கு நெய்க்கார மாப்பிள்ளைக்கு என்ன ஊற்றுவது" என்று கேட்பாள். (நெய்க்கார மாப்பிள்ளை என்றால் கிராமங்களில் சுற்றி நெய் வாங்கிக்கொண்டு போய் பட்டணங்களில் விற்கும் நெய் வியாபாரி) இவ்வளவு சிக்கனமாக கிராமத்தார்கள் பிழைத்தும் பயன் என்ன? மீத்து வைத்த பணங்களை வக்கீல்களும், போலீஸ்களும், ரிவினியு கிரிமினல் அதிகாரிகளும் கொள்ளை அடித்துக் கொண்டு போதாக்குறைக்கு அவர்களிடம் பாண்டு எழுதிக் கொள்ளுகிறார்கள்.

கிராமவாசிகளின் சௌகரியத்தைப் பாருங்கள். அவர்களுக்கு நல்ல தண்ணீர் கிடையாது, வெளிச்சம் கிடையாது, சுகாதாரம் கிடையாது, நாடகம் கிடையாது, சினிமா கிடையாது, பார்க்கு, சிங்காரத் தோட்டம் கிடையாது. அதிகாலையில் இருட்டில் போகவேண்டும், அந்தியில் இருட்டின பிறகு வீட்டுக்கு வரவேண்டும். அவனால் அரசன், வியாபாரி, லேவாதேவிக்காரன், மற்ற உத்தியோகஸ்தர்கள் எல்லோரும் பிழைக்கிறார்கள். அப்படிப்பட்டவனுக்கு பட்டணத்தில் வசிக்கும் ஒரு கக்கூசுக்காரன், தெருக் கூட்டி, மேஸ்திரி ஆகியவர்களுக்கு இருக்கும் சௌகரியமும் இல்லை. ஜாதிமுறையில் பறையன் என்றொரு ஜாதி வருணாச்சிரம முறையில் வகுத்திருப்பது போலவே கிராமம் கிராமத்தான் என்கின்ற இரண்டும் வாழ்க்கை முறையில் கீழ்ஜாதியார்கள் போல் வகுக்கப்பட்டிருக்கின்றன.

கிராமம் என்பதாக ஒன்று ஏன் இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. பட்டணத்தான் சௌகரியத்துக்கு என்பதல்லாமல் மற்றபடி கிராமம் எதற்கு என்பது எனக்கு விளங்கவில்லை. இப்படிப்பட்ட கிராமங்களை எல்லாம் அழித்துவிடவேண்டும், எல்லோரையும் பட்டணங்களுக்கு போகும்படி செய்யவேண்டும். அதுதான் கிராம சீர்திருத்தம் என்பேன். "கிராமங்களுக்குப் போ" என்பது இப்போது ஜன தலைவர்கள் என்பவர்கள் உபதேசமாக இருக்கிறது. இதில் ஏதாவது நாணயம் இருக்க முடியுமா? B.A.யும், M.A.யும் கிராமத்துக்குப் போய் மக்களுக்கு என்ன செய்யமுடியும்? கூடவே காப்பி, கோக்கோ, சிகரட்டு, பீடி, கிராமபோன், ரேடியோ கொண்டுபோனால் ஒழிய அங்கு அரை நிமிஷம் B.A., M.A.க்காரன் தங்க முடியுமா? இல்லா விட்டால் தலைவலி, உடல் வலி, தூக்கம் பிடியாமை, மூளை வேலை ஓடாமை என்கின்ற வியாதி வந்துவிடாதா? B.A., M.A. படிப்புக்கும் கிராம முன்னேற்ற வேலைக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா. இவர்கள் கிராமத்துக்குப் போவதால் கிராமக்காரனுக்கு அதிக தொல்லையே அல்லாமல் இவனால் நல்லது என்ன ஆகக்கூடும்?

விவசாய விஷயத்தில் B.A., M.A.க்கு என்ன தெரியும்? கால்நடை விஷயத்தில் என்ன தெரியும்? சுகாதார விஷயத்தில் என்ன தெரியும்? இவன் சொன்னால் கிராமத்தான் கேட்க வேண்டாமா? அவன் புத்தி பழமையில் ஒட்டிக்கொண்டிருக்கும் போது B.A., M.A. யாருக்குச் சொல்லுவான்? சொன்னபடி கிராமத்தான் கேட்பதாயிருந்தாலும், அந்தப்படி செய்ய இருவருக்கும் பணம் முதலிய சாதன சௌகரியங்கள் எங்கே என்று பாருங்கள். கிராமங்களுக்கு போ என்பது ஒரு பித்தலாட்டமான சொல், அல்லது அர்த்தமற்ற சொல். கிராமத்தானுக்கு இருக்கும் பழமைப்பித்தும், மூடநம்பிக்கையும் ஒழிய வேண்டும்.

இன்றைய B.A., M.A.யும் மூடநம்பிக்கைக்காரனாகவே இருக்கிறான். பழமை பித்தனாகவே இருக்கிறான். பழமைப் பித்துதான் இன்று தேசியமாய் இருக்கிறது. அதை போதிப்பதிலேயே எல்லோரும் ஜனத்தலைவர்களாகி விடுகிறார்கள். இன்று கிராமப்புனருத்தாரண வேலையில் முதல் திட்டம் எல்லோரும் பனங்கருப்பட்டியும் கைக்குத்து அரிசியும் சாப்பிடவேண்டும் என்பதாகும். இதற்கு யார் ஒப்புவார்கள்? இத்தனை பேருக்கும் கைக்குத்து அரிசிக்கு எத்தனை பேர் குத்தவேண்டும்? ஆண் பிள்ளைகள் நெல் குத்துவார்களா? பெண்கள்தான் இனி நெல் குத்துவார்களா? பட்டணங் களிலுள்ள பெண்கள் முறத்தகலம் பட்டுக்கரை சீலையும், வைர நகைகளையும் பூட்டிக்கொண்டு ஆர்மோனியம், வீணை, சதுர்ப்பாட்டு, கதை காலக்ஷேபம் பழகிக்கொண்டு உல்லாசமாய் கேளிக்கையில் இருக்கும்போது கிராமத்து பெண்களை நெல்லுக்குத்தவும், கருப்பட்டி காய்ச்சவும் சொன்னால் அவர்கள் எப்படிக் கேட்பார்கள்? சில மூடங்கள் கேட்பதாகவே வைத்துக்கொண்டாலும் நாம் சொல்வது தான் யோக்கியமாகுமா?

கிராமத்தில் பிறந்ததற்கு ஆக நெல் குத்த வேண்டியதா என்று கேட்கின்றேன்.

ஒரு தோழர் கிராமக் கைத்தொழிலைப் பற்றி பேசினார். கிராமக் கைத் தொழில் என்று ஒன்று ஏன் இருக்க வேண்டும்? பட்டணத்துக்காரனுக்கு எந்திரத் தொழிலும், கிராமத்தானுக்கு கைத்தொழிலும் என்று யார் சிருஷ்டித்தார்கள்? ஏன் அப்படி சிருஷ்டிக்கவேண்டும்? ராட்டினம் சுற்றுவதும், தொடையில் கயிறு திரிப்பதும், மண்வெட்டியிலும், கோடாலியிலும், சுத்தியிலும், மண்வெட்டி, மரம் பிளந்து கல் உடைப்பதும்தான் கிராமத்தானுக்கு சொந்தமா இது தான் கிராம முன்னேற்றமா என்று கேட்கின்றேன். எவ்வித முன்னேற்ற முயற்சியும் இல்லாமல் பட்டணத்தான் எவ்வளவு கொள்ளை அடிக்கிறான். வியாபாரி, லேவாதேவிக்காரன், வக்கீல், வைத்தியன், அதிகாரி, உத்தியோகஸ்தன் ஆகியவர்களின் கொள்ளையை பாருங்கள். இதை ஒழிப்பதல்லவா கிராம முன்னேற்றமாகும். இந்தக் கூட்டத்தாரல்லவா கிராமங்களை கசக்கிப் பிழிகின்றவர்கள். இதைவிட்டுவிட்டு இந்த சாதாரண வாத்தியார்கள் அதிலும் கஞ்சிக்குப் போதாத ஏழை வாத்தியார்கள் மாதம் 15 ரூபாய்க்கு தாளம் போடும் இந்த வாத்தியார்கள் கிராமத்திற்குப் போய் என்ன செய்ய முடியும் என்று கேட்கின்றேன்.

ஏதாவது நீங்கள் கிராமத்துக்குப்போய் செய்ய வேண்டுமானால் அவர்களுடைய பழமைப்பித்தை ஒழியுங்கள் மூடநம்பிக்கையை அகற்றுங்கள். அவர்களை பட்டணவாசிகள் எப்படி எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டி கண்விழிக்கச் செய்யுங்கள். தலைவிதியை மறக்கடித்து பகுத்தறிவை உண்டாக்குங்கள், அவர்களையெல்லாம் பட்டணங்களுக்கு குடிபோக விரட்டுங்கள். இவ்வளவு நீங்கள் செய்தால் அதுவே கிராம முன்னேற்றமான வேலையாகும். மற்றபடி நீங்கள் என்ன செய்தாலும் அது பயன்படாது. உங்களுக்கும் அதற்கு மேல் சக்தி இருக்காது. சௌகரியமும் சாதனமும் கிடையாது.

உதாரணமாக இராமநாதபுரம் ஜில்லாவில் ஒரு கிராமத்துக்குப் போயிருந்தேன். அங்கு மீட்டிங்குக்கு 400 பேர்கள் வந்திருந்தார்கள். அவர் களின் 375 பேர்களுக்கு நரம்புச் சிலந்தி நோய் இருந்தது. அந்த ஊர்க்கிணறு, கிணற்று தண்ணீர் மேலே வருவதைவிட மேலேயிருக்கும் தண்ணீர் கிணற்றுக்குள் சுலபத்தில் போகத் தகுந்த மாதிரியான மேயோ கிணறாகும். அதன் தண்ணீரை பரிசுத்தம் செய்ய யாருக்கும் புத்தி கிடையாது. உபாத்தியாயர் ஒருவர் இருந்தார். அவரும் காலில் கட்டுப்போட்டுக் கொண்டுதான் இருந்தார். நான் கேட்டதற்கு அவர் கவனிக்கிறதற்கு ஒருவருமில்லை நான் என்ன செய்ய முடியுமென்று பதில் சொன்னார். இவைகள் எல்லாம் அரசாங்கத்தை பொறுத்த வேலையே ஒழிய பொது ஜன சேவையால் ஆகக்கூடிய காரியமோ, ஒரு திண்ணைப் பள்ளிக்கூட வாத்தியாரால் ஆகக்கூடிய காரியமோ அல்ல. அரசாங்கத்தின் கையில் இருந்த பொறுப்பை ஜனத் தலைவர்கள் என்பவர்கள் பிடுங்கிக்கொண்டு தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள்.

இவைகள் மாற்றமடைய வேண்டுமானால் பகுத்தறிவை மக்களுக்கு போதியுங்கள் என்பதுதான் எனது ஆசை. பகுத்தறிவு விஷயத்திலும் நீங்கள் அடிமைப்பட்டிருக்கிறீர்கள். அது விஷயத்தில் உங்கள் அறிவுப்படி நீங்கள் போதிக்க முடியாது. உங்கள் அறிவுப்படி நீங்கள் நடக்கவும் முடியாது என்கின்ற நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். ஒரு உபாத்தியாருக்கு மூன்று புத்தி இருக்கின்றன.

அதாவது அவருக்கு சரியென்று தோன்றும் ஆராய்ச்சி புத்தி ஒன்று. பிள்ளைகளுக்கு இன்னபடிதான் கற்பிக்கவேண்டும் என்று படிப்பித்த நிர்பந்த புத்தி இரண்டு. தனக்கு தோன்றுகிறபடியும் தான் படிப்பிக்கிறபடியும் நடக்க முடியாத பழமைப்பித்தும் கட்டுப்பாட்டு நிபந்தனையும் கொண்ட கோழைப் புத்தி மூன்று. இந்த மூன்று புத்திகளுடன் நீங்கள் கிராமங்களை புனருத்தாரணமோ சீர்திருத்தமோ செய்வதென்றால் அது பயப்படக்கூடிய காரியம் தான். ஆனாலும் பகுத்தறிவை பயன்படுத்த தைரியம் கொண்டு விட்டால் இந்த கஷ்டங்கள் சுலபத்தில் ஒழிந்துபோகும் என்றே நினைக்கிறேன்.

-----------------------------: 23.07.1936 இல் லண்டன் மிஷன் காம்பௌண்ட் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற ஈரோடு லண்டன் மிஷன் போதனா முறை பாடசாலை லிட்டரரி சொசைட்டியின் கூட்டத்தில் பெரியார் அவர்கள் ஆற்றிய தலைமை உரை. -”குடி அரசு” சொற்பொழிவு 02.08.1936

20 comments:

தமிழ் ஓவியா said...

இராமன் காக்கவில்லையே! இராவணனைவதம் செய்யச் சென்ற 33 பக்தர்கள் பாட்னாவில் பலி!

பாட்னா, அக்.4: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத் தில் நேற்று நடந்த தசரா விழாவில், கூட்ட நெரி சலில் சிக்கி 33 பேர் பலி யாயினர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

நவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டா டப்பட்டது. 10ம் நாளான நேற்று ராவணனை, ராமர் வதம் செய்யும் நிகழ்ச்சி வடமாநிலங் களில் நடந்தது. பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத் தில் தசரா விழா நேற்று மாலை கொண்டாடப் பட்டது. இதைக் காண, சுற்றுப்புற நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள், தங்கள் குழந்தை களுடன் வந்திருந்தனர். இதனால் காந்தி மைதா னத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த விழாவை காண முதல்வர் ஜிதன் ராம் மன்ஜியும் வந்திருந்தார்.

தசரா விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, 60 அடி உயர பத்து தலை ராவணனின் உருவ பொம்மை, அம்பு எய்தி தீ வைத்து கொளுத்தப்பட் டது. அப்போது வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதை கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்த மக்கள் மைதானத்தை விட்டு வெளியேறத் தொடங் கினர்.

மைதானத்தை ஒட்டி யுள்ள குறுகலான தெரு வழியாக மக்கள் கூட்டம் வெளியேறிக் கொண் டிருந்தது. மைதானத்தில் இருந்த ஒரு வழியாக மட்டுமே மக்கள் வெளி யேற அனுமதிக்கப்பட் டனர். அப்போது திடீ ரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் போதிய காவல் துறையினர் இல்லாததால், மக்கள் போட்டி போட் டுக் கொண்டு மைதா னத்தை விட்டு வெளி யேறினர்.

இந்த நெரிசலில் சிக்கிய குழந்தைகளும், பெண்களும் அலறினர். பலர் மயங்கி கீழே விழுந் தனர். மைதானத்தில் இருந்து வெளியேறும் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பலர் கூட்டத்தில் மிதி பட்டனர். மயங்கி விழுந்து படுகாயம் அடைந்தவர் கள் உடனடியாக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந் தனர். மொத்தம் 33 பேர் பலியானதாக பீகார் உள்துறை செயலாளர் அமிர் சுபானி தெரிவித் துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை அறி வித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/88698.html#ixzz3FE8QdxxD

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரும் அல்லாதாரும்


ஆண்களும் பெண்களும் கோயில் களுக்குச் சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடிக் கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணியக் காரியம் என்கிறார்கள். எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?
(விடுதலை, 29.8.1950)

Read more: http://viduthalai.in/page-2/88704.html#ixzz3FE8zblAk

தமிழ் ஓவியா said...

69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாப்பு - சில சிந்தனைகள்

தமிழ்நாட்டில் தற்போது செயல் பட்டுவரும் 69 விழுக்காடு இடஒதுக் கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப் பியது தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை 30.9.2014 அன்று திரா விடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் 69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாப்பது தொடர்பான பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் தற்போது உள்ள 69 விழுக்காடு சட்டம் 1994-இல் அன் றைய அதிமுக அரசால் நிறை வேற்றப்பட்டபோது, திராவிடர் கழகம் எடுத்த முயற்சிகளை நாடு அறியும்

1. தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு, அரசமைப்பு சட்டம் 31 சி விதியின் அடிப்படையில் தமிழக அரசால் 1994-ஆம் ஆண்டு சட்டமாக நிறைவேற் றப்பட்டு, அரசமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டுள்ளது இதன் மூலம், நீதிமன்ற குறுக்கீடுகள் இந்த சட்டத்திற்கு இருத்தல் கூடாது என அரசமைப்பு சட்டம் 31-பி கூறுகிறது. இந்த சட்டம் அரசமைப்பு சட்டத்தில் 76ஆ-வது திருத்தத்தின்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப் படையான காரணத்தை, அதிமுக அரசு, உச்ச நீதிமன்றத்திற்கு தெளிவு படுத்த வேண்டும்.

2. 50 விழுக்காட்டிற்குமேல் இட ஒதுக்கீடு மீறக் கூடாது என இந்திரா சகானி (1992) வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், சில அசாதாரண மான சூழ்நிலைகளில், இந்த விதியில் சில விலக்குகள் அளித்திடுவது அவசி யமாகிறது என ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு அதே தீர்ப்பில் கூறியுள்ளது.

3. 1992 இந்திரா சகானி வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தனது வாதத்தில் 50 விழுக்காட்டிற்கு மேல், இட ஒதுக்கீடு கூடாது என பாலாஜி வழக் கில் கூறப்பட்டது நீதிபதியின் கருத்து மட்டும்தான்; (obiter dicta) தீர்ப்பு அல்ல என கூறியிருப்பதையும் அரசு கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

4. 1992 இந்திரா சகானி வழக் கின் ஒன்பது நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் தனது தீர்ப்புரையில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான திட்டங்கள் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும்; நிறை வேற்றப்பட வேண்டும் என முடிவு செய்வது, முழுவதும் ஓர் அரசின் வரம்புக்குட்பட்டது; இந்த விஷயங் களில் நீதித்துறை நுழைவதும், மறுஆய்வு செய்வதும் சாதாரணமாக நீதித்துறையின் அதிகாரத்திற்குள் வருவது இல்லை எனக் கூறியுள்ளார்.

5. இதற்குப்பிறகு, 77-வது அரச மைப்பு சட்டத்தின் திருத்தமாக கொண்டுவரப்பட்டு 16(4) பிரிவில் அ பிரிவு சேர்க்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடருவதற்கான திருத் தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி யுள்ளது. மேலும் பல திருத்தங்களும் செய்யப்பட்டன.

தமிழ் ஓவியா said...

இந்த திருத்தங்கள் தொடர்பான வழக்கில் ( நாகராஜ் வழக்கு 19.10.2006), உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, இந்த திருத்தம் செல்லும் என தீர்ப்பளித்து, மேலும், இந்த திருத்தத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கும்போது, நான்கு விச யங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, இட ஒதுக்கீடு பிரிவினரின் எண்ணிக்கை அளவு, அவர்களின் பிற்படுத்தப்பட்ட தன்மை, போதுமான பிரதிநிதித்துவம் இல் லாமல் இருப்பது, இவற்றுடன், இந்த இடஒதுக்கீட்டால் திறமை பாதிக்கப் படகூடாது அதற்கான புள்ளிவிவர அளவினை அரசு தெரிந்துகொண்டு செய்திட வேண்டும் என கூறியுள்ளது.

(the Constitution Bench held that the State is not bound to make reservation for Scheduled Castes and Scheduled Tribes candidates in matters of promotion but if it wished, it could collect quantifiable data touching backward ness of the applicants and inadequacy of representation of that class in public employment for the purpose of compliance with Article 335 of the Constitution.)

இந்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழ் நாட்டில், தற்போது உள்ள 69 விழுக்காடு தரப்படுவதற்கான நியா யத்தை, மத்திய அரசின் புள்ளியியல் துறை நடத்திய மாதிரி ஆய்வு அறிக்கையில் உள்ள புள்ளி விவரங் களை தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்திற்கு தெரி வித்து, அவர்கள் ஒப்புதலுடன், உச்ச நீதிமன்றத்தில் அளித்திட வேண்டும். 6. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ் நாட்டில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து முடித்து, பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களின் மக்கள் தொகையினை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இடைப் பட்ட நேரத்தில், மத்திய அரசின் புள்ளியியல் துறையின் தேசிய மாதிரி சர்வேயின் (National Sample Survey) 62-ஆவது சுற்று சர்வே (2004-_05) அறிக்கை மத்திய அரசால் வெளி யிடப்பட்டுள்ளது. இந்த சர்வேயில், தமிழ் நாட்டில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட் டோர், மலைவாழ் மக்கள், 73.5, 22.16 மற்றும் 1 விழுக் காடாக உள்ளனர் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரத் தையும், அரசு பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

7. மொத்த மக்கள் தொகையில் 96 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் தமிழகத்தில் உள்ளனர். இவர்களுக்கு 69 விழுக்காடு தான் தரப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் பிரிவு 16(4)-படி, போதிய அளவு இட ஒதுக்கீடு என்கிற அளவுகோலில் இது வழங்கப்பட்டுள் ளது நியாயமானதுதான்.

தமிழ் நாட்டில் நீதிக்கட்சி காலத்தி லிருந்து நடைமுறையில் இருக்கும் சமூக நீதிக் கோட்பாடும், 1994-ல் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு சட் டமும், இந்தியாவிற்கே ஓர் வழி காட் டியாக இருக்கிறது. ஆகவே, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, 69 விழுக்காடு சட்டத்தினை பாதுகாத் திட அனைத்து முயற்சிகளையும் தமிழ் நாடு அரசு செய்யும் என்று எதிர் பார்க்கிறோம்.

- கோ. கருணாநிதி

Read more: http://viduthalai.in/page-2/88706.html#ixzz3FE987Qz9

தமிழ் ஓவியா said...

தெருக்கூட்டுவது அல்ல -வாக்கைப் பெருக்குவதே மோடியின் வித்தை - தூய்மை இந்தியா!


புதுடில்லி, அக்.4 பிரதமர் மோடி வாக்கு களைப் பெறுவதற்கு மக்கள் நலத்திட்டம் என்ற பெயரில் பல தந்திர வித்தை களை செய்துகொண்டு வரு கிறார். அதற்காக நீண்ட காலத்திட்டம் என்ற பெயரில் நாட்டில் இருக்கும் பல்வேறு சிக்கல்களை தனக்குச் சாதகமாகப் பயன் படுத்துவதையே மோடி தனது உத்தியாகக் கொண்டு உள்ளார்.

எடுத்துக்காட் டாக ஆட்சிக்கு வந்த 60 நாட்களில் இந்தியாவின் அனைத்துப் பகுதிக்கும் மின்சாரம் என்றார். (12.3.2013 எக்னாமிகஸ் டைம்ஸ்) ஆனால் இன்று வரை அவரது சொந்த மாநிலத்தில் கூட எல்லா இடங்களிலும் மின்சாரம் சேரவில்லை. இதின் தொடர்ச்சியான ஒன்றுதான் நேற்றுமுன் தினம் பாரத் சுவச்சா அப்யான(இந்தியா தூய்மைத் திட்டம்) இந்தத் திட்டம் நேற்று காலை முதல் அனைத்து ஆங்கில இந்தி தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளி பரப்பிக் கொண்டு இருக்கின்றன. மோடி அமெரிக்கா சென்றுவந்தது தொடர்பாக எவ்வகையான பயன்கள், நலத்திட்டங்கள், அமெரிக் காவுடன் வெளியுறவுக் கொள்கையில் ஏற்படுத்தப் பட்ட மாற்றம் குறித்தோ இதுவரை எந்த அதிகாரப் பூர்வமான செய்தியாளர்கள் சந்திப்பை வைக்காத நிலை யில் திடீரென விளக்கு மாற்றைத் தூக்கிகொண்டு புறப்பட்டுவிட்டார். உண்மையில் பார்க்கப் போனால் தேசிய சுகா தாரத்திட்டம் ஜனதாகட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்த போது அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட திட்டம், இதனை இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, தேவகவுடா, அய்.கே.குஜ்ரால், வாஜ்பாய் அரசில் கூட இந்த திட்டம் செயல்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக மன்மோகன்சிங் தலை மையில் இயங்கிய அய்க்கிய முற் போக்கு அரசு விளம் பரம் ஏதுமின்றி இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வந்தது.

தமிழ் ஓவியா said...

மோடி ஆட்சிக்கு வந்த துமே தற்போதுள்ள சிக்க லான பிரச்சினைகளைக் களைவது போன்ற ஒரு போலித் தோற்றத்தை மக்களிடம் உண்டுபண்ண வேண்டும் என்ற எண்ணம் தேர்தல் பிரச்சாரத்தின் போதே தெரிந்துகொள்ள முடிந்தது. இந்நிலையில் மோடியின் அரசு செயல் பாட்டில் எந்த ஒரு முன் னேற்றமும் இல்லாமல் இருந்த காரணத்தால் தொடர்ந்து இடைத் தேர்தல்களில் தோல்வி யைச் சந்தித்து வந்தது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இத்தொடர் தோல்வி மோடியின் அலை எங்கும் வீசவில்லை, பத்து ஆண்டு களாக தவறான ஆட்சிக் கொள்கையை கடைப் பிடித்த மன்மோகன் அரசின் மீதான வெறுப்பே என்பதைக் காட்டியது. பெருவாரியான ஊட கங்கள் மோடி அரசின் தவறான கொள்கையை மறைத்து அவரின் பொய் களையும் மக்களை மயக்கும் தந்திர சொற்களையுமே இரவும் பகலும் ஒளிபரப்பி வருகின்றன. தொடர்ந்து மக்களிடம் காட்டும் மோடிவித்தைகள் எல்லாம் ஆதாயத்தைக் மேற்கொண்டுதான் என்பது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பாஜகவின் நடவடிக்கைகளில் தெரியும் முக்கியமாக அரியானா மாநிலத்தில் நடக்கும் தேர்தலை மனதில்வைத்து தான் முந்தைய அரசுகள் தொடர்ந்து செய்து வந்த தேசிய சுகாதார திட்டத் திற்கு வர்ணம் பூசி புதிய தாக காட்ட முயற்சிக்கிறார்.

அரியானா மற்றும் பஞ்சாபில் தலித்துகளின் மக்கள் தொகை 29 விழுக் காட்டை எட்டியுள்ளது, இந்தியாவிலேயே அதிகம் தலித் மக்கள்தொகை கொண்ட மாநிலம் பஞ்சாப் ஆகும். முக்கியமாக அரி யானா மற்றும் பஞ்சாபில் வால்மிகி இனத்தவரின் வாக்குகள் தேர்தலில் வேற்றி பெற தேவையான வாக்குகளாக உருவெடுத் துள்ளது. இதுவரை நேரடியாக பாஜக. தலித்துகளின் வாக்குகளைப் பெற்ற தில்லை. மேலும் அரியானா வில் கூட்டணிகளின்றி தனித்து களமிறங்கியுள்ள பாஜக தலித்துகளின் ஓட் டைப் பெற்றால் மாத்திரமே பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் அமர முடியும். ஆனால் தலித்துகள் இதுநாள் வரை காங்கிரசின் பக்கமே இருந்து வந்துள்ளனர். தேர்தலில் தலித்துகளின் வாக்குகளைப்பெறவே டில்லியில் வால்மிகி இனமக்களின் தெருக்களில் சென்று விளக்குமாற்றை ஏடுத்து கூட்டிக்கொண்டு நிகழ்படத்திற்கு காட்சி கொடுக்கின்றார். டில்லி யை ஒட்டியுள்ள மாநில மாக அரியானா இருக் கின்ற படியால் இந்த வால்மிகி தெருக்களில் வலம் வந்த நிழற்படத்தால் அரியானாவில் உள்ள தலித்துகளின் வாக்கு களைப் பெற்றுவிட முடி யும் என்ற எண் ணத்தில் காந்தியாரின் பிறந்த நாளையே வாக்குவாங்கப் பயன் படுத்திவிட்டார். முக்கியாக மோடி தனது உரையில் இதை அரசிய லாக்க வேண்டாம் என்று கூறினார். அதாவது இது அரசியலாக்கப்படும் என்று தெரிந்தே அரசியலாக்க வேண்டாம் என்று கூறுவது எதிர்கட்சிகளை மடக்கும் திட்டமாகும். மகராட்டிர மாநிலத்தில் தற்போது இஸ்லாமியர் களின் வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்காச் செல்லும் முன்பு இந்திய இஸ்லா மியர்கள் இந்தியா விற்காக உயிரையும் கொடுப் பார்கள் என்று கூறிய மோடி அமெரிக்காவிற்கு சென்று இந்தியாவில் தீவிரவாதம் இறக்குமதி செய்யப்படுகிறது என் கிறார். அவரது கட்சிக்காரர் களோ இந்திய மதரா சாக்கள் அனைத்தும் தீவிரவாதப் பயிற்சி மய்யம் என்று கூறிவருகின்றனர். அமெரிக்காவில் மோடி நாட்டிற்காக என்ன கொண்டு வந்தார் என்ற விவாதங்களை மறைக்கவும் அரியானா மற்றும் மகாராஷ்டிராவில் நடக்கும் தேர்தலில் மீண்டும் ஒருமுறை தனது அலை இருப்பதாக காட்டிக் கொள்ளவும் திட்டமிட்டு செய்த நாடகம் தான் இந்த தூய்மை இந்தியத்திட்டம்.

Read more: http://viduthalai.in/page-3/88729.html#ixzz3FE9oIHto

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். காலூன்ற திட்டமிட்டு தாழ்த்தப்பட்டவர்களை குறி வைக்கிறது


தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். காலூன்ற திட்டமிட்டு தாழ்த்தப்பட்டவர்களை குறி வைக்கிறது
பெல்லில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் கழகத் துணைத் தலைவர் பேச்சுதிருச்சி, அக்.4_ பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா திருச்சி பெல் திராவிடர் தொழிலாளர் கழகம் சார்பில் நேற்று முன்தினம் (அக்.2) வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பெல் சமுதாய கூடத்தில் பெல் தி.தொ.க தலைவர் ம.ஆறுமுகம் தலைமையில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தி.க. தலைவர் மு.சேகர், மாவட்ட செயலாளர் கணேசன், ஒன்றிய தலைவர் மாரியப்பன், செயலாளர் தமிழ்ச்சுடர், பெல் தி.தொ.க துணை செயலாளர் சுதர்சன், துணைத் தலைவர் ஆண்டிராசு, பொருளாளர் அசோக்குமார், பகத்சிங், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்கத்தில் பெல் தி.தொக. பொதுச் செயலாளர் செ.ப.செல்வம் வரவேற்புரையாற்றினார்.

வினா_ விடைப் போட்டி

இப்பிறந்த நாள் விழாவையொட்டி மாலை 4 முதல் 6 மணி வரை பெரியார் ஆயிரம் வினாவிடை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பெல் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளும், இளைஞர்களும் இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசுகள் பெற்றனர். முன்னதாக பெரியார் பிறந்த நாளையொட்டி செப்.14 ஆம் தேதி அன்று நடைபெற்ற பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர். பரிசு பெற்றோர்

வினா _ விடை போட்டியில் இரா.தமிழ்ச்சுடர், சுதர்சனம் ஆகியோர் முதல் பரிசும், சு.தனலெட்சுமி, பவதாரிணி ஆகியோர் 2 ஆம் பரிசினையும், ப.தமிழரசன், இராசா ஆகியோர் மூன்றாம் பரிசினையும் பெற்றனர். பேச்சு போட்டியில் செ.வெங்கடேசன் முதல் பரிசும், கோ.இராசா 2 ஆம் பரிசும், தமிழரசன் 3 ஆம் பரிசும் பெற்றனர். கட்டுரைப் போடடியில் முதல் பரிசினை வெ.கார்த்திக்காவும், 2 ஆம் பரிசினை தமிழரசன், வெங்கடேசன் மற்றும் 3 ஆம் பரிசினை கோ.இராசாவும் பெற்றனர். கவிதை போட்டியில் கார்த்திகேயன் முதல் பரிசும், விடுதலை கிருஷ்ணன் 2 ஆம் பரிசும், தமிழரசன் 3 ஆம் பரிசும் பெற்றனர்.

தமிழ் ஓவியா said...

கழகத் துணைத் தலைவர்

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வெற்றி பெற்றவர்களுக்கு இயக்க புத்தகங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். மேலும் அவர் பேசும் போது, தந்தை பெரியார் 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை உலகெங்கும் வாழக்கூடிய தமிழர்கள் மிகச் சிறப்போடும், எழுச்சியோடும் கொண்டாடி வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் உலகநாடுகள் எல்லாம் பெரியார் விழாவை கொண்டாடுகின்றனர். கடந்த ஆண்டை விட இவ்வாண்டு பெரியார் பிறந்த நாள் விழாவை பல்வேறு அமைப்புகள் அரசியல் கட்சிகள், உற்சாகத்தோடும், எழுச்சியோடும் கொண்டாடியதை காண முடிந்தது. இவ்வாண்டு இவ்வளவு சிறப்புக்கு என்ன காரணம் என்பதை பற்றி ஆழமாக நினைத்த போது, இந்தியாவில் இந்துத்துவாவின் ஆதிக்க சக்தி அதிகார பீடத்தில் அமைந்ததால் அந்த அதிகார தன்மைகள் நடந்து கொள்ளும் போக்கினை புரிந்து கொண்டதால், இன்றைக்கு அனைத்து அமைப்புகளும் பெரியாரை கொண்டாடுகின்றனர்.பெரியார் எப்போதெல்லாம தேவைப்படுகிறார் என்று இப்போது புரிகிறதா? ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இந்த நாட்டில் பெண்கள் அதிகமாக ஊதியம் வாங்குகிறார்கள். கணவரை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள்.

இதனால் குடும்ப தன்மை பாழாகி வருகிறது என்று பெண்களை அடிமைப்படுத்தி பேசி இருப்பதை காண முடிகிறது. மதச்சார்பின்மை பின்பற்றுகிறதாக சொல்லி ஆட்சி நடத்துவோம் என்று கூறிவிட்டு, இந்துத்துவா தன்மையை பேசி வருவது சரியானதா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இந்துத்துவாவில் உள்ள அஜெண்டாதான் தற்போதைய பா.ஜ.க ஆட்சியின் வெளிப்படுத்தக் கூடிய தன்மையாக உள்ளது. அதில் ஒன்றுதான் கங்கையை தூய்மைப்படுத்தும் பணி. கடந்த ஆண்டை விட இவ்வாண்டு பிள்ளையார் சதுர்த்தி விழா அதிகளவில் கொண்டாடினார்கள். அதில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களை ஈடுபடுத்தினார்கள். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். காலூன்ற திட்டமிட்டு தாழ்த்தப்பட்டவர்களை குறி வைக்கிறார்கள். இதனை முறியடிக்க வேண்டும். அதற்கு சரியான பாதை பெரியார் பாதையை நோக்கி செல்வதுதான். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பெல் பூபாலன், அசோக் ராஜா, தாமஸ், கவிஞர் இனியன், கணேசன், பாலகிருஷ்ணன், மேகநாதன், ராஜேந்திரன், காட்டூர் காமராஜ், சங்கிலிமுத்து, மாநகர அமைப்பாளர் விடுதலை செல்வம், வி..சி.வில்வம், விஜயா மாரியப்பன், சித்ரா, மகாராசி, மதுமதி, கயல்விழி, புனிதா, ராணி, தனலட்சுமி, புவனேஸ்வரி, ரேஸ்மா உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும், நிருவாகிகளும் கலந்து கொண்டனர். நிறைவாக பெல் தி.தொக. துணை செயலாளர் சி.கிருஷ்ண குமார் நன்றி கூறினார்.

Read more: http://viduthalai.in/page-3/88730.html#ixzz3FEA1nRrn

தமிழ் ஓவியா said...

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு


மூன்றாவது சுயமரியாதை மகாநாடு

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு இவ்வருஷம் ராமநாதபுரம் ஜில்லாவில் நடத்தப்பட வேண்டுமென்று அந்த ஜில்லா வாசிகளால் ஈரோடு மகாநாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது யாவரும் அறிந்ததாகும். அந்தப்படி இவ்வருஷம் மார்ச் மாதம் கடைசியிலாவது ஏப்ரல் முதலிலாவது நடைபெற வேண்டியது மிகவும் அவசியமாகும். ராமநாதபுரம் ஜில்லாவில் மகாநாடு நடத்து வதற்கு தகுந்த இடம் விருதுநகர் என்றே கருதுகின்றோம். ஏனெனில், ரயில் போக்குவரத்து சவுகரியமும், உற்சாகமும், ஊக்கமும், செல்வமும் பொருந்திய சுயமரியாதைவீரர்கள் மிகுதியும் நிறைந்த நகரமும் மற்றும் அவ்வித வீரர்கள் மலிந்த சுற்றுப்பிரதேசங்களுக்கு மத்யஸ்தலமாகவும் மதுரைக்கு 25 மைல் தூரத்தில் மிக சமீபமாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி முதலிய இடங் களுக்கும் அருப்புக்கோட்டை முதலிய இடங்களுக்கும் மத்யபாகமாகவும் இருப்பதாகும்.

ஆகவே, இந்த வருஷம் மாகாண மகாநாடு விருது நகரில் நடைபெறுதல் மிக்க நலமென்றே கருதுகிறோம். மகாநாட்டின் வரவேற்புக் கழகத் தலைவராய் திரு. டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியன் அவர்களும், மகாநாட்டு காரியதரிசிகளாய் திருவாளர்கள் செந்தில் குமார நாடார், வி.வி. ராமசாமி முதலியவர்களும் மற்றும் பல காரியங்களுக்கு திருவாளர் அருப்புக்கோட்டை கோபால கிருஷ்ணசாமி நாயக்கர், சிவகங்கை எஸ். ராமச்சந்திரன், முருகப்பா முதலியவர்களும் பிரதானமாக இருந்து துவக்கப்பட்டால் மகாநாடு கண்டிப்பாய் இதுவரை நடந்து வந்ததைப்பார்க்கிலும் விசேஷமாக நடைபெறக்கூடும் என்பதில் நமக்கு எவ்வித அய்யமுமில்லை.

தலைவர் ஸ்தானத்திற்கு சென்ற வருஷம் போலவே வட நாட்டிலிருந்து ஒரு பெரும் சீர்திருத்தவாதியாகவும், தலைகீழ் கிளர்ச்சிக்காரராகவும் பார்த்து ஒரு கனவானை திரு. ஆர்.கே. சண்முகம் அவர்கள் தயவால் அழைத்து வரலாம் என்கின்ற தைரியம் இருக்கிறது. இம்மகாநாட்டில் இன்னும் முற்போக்கான பல தீர்மானங்கள் செய்யப்பட வேண்டியதாகவும், அமலில் நடத்த வேண்டியதாகவும் இருப்பதால் தமிழ்நாட்டு இளைஞர்கள் யாவரும் தவறாமல் பங்கு எடுத்து உழைத்து வெற்றி பெறச்செய்ய வேண்டிய தவசியமாகும். தண்ணீர் சவுகரியத்தை உத்தேசித்து அதே சமயத்தில் வேறு பல மகாநாடுகளும், 3,4 நாட்களுக்கு நடத்த உத்தேசிக்கப்பட்டிருப்பதாய் தெரியவருகிறது. விருதுநகர் கனவான்கள் சுலபத்தில் ஒரு காரியத்தில் தலையிடமாட்டார்கள் என்பதும், தலையிட்டுவிட்டால் அவர்களைப் போல எடுத்துக் கொண்ட காரியங்களை ஒழுங்காகவும் வெற்றிகரமாகவும் முடிப்பவர்கள் அரிது என்பதையும் நாம் தமிழ் நாட்டிற்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இதை உத்தேசித்தே மேற்கொண்ட காரியங்களைப் பற்றி யோசிக்க ஈரோட்டில் இம்மாதம் கடைசி வாரத்தில் நிர்வாக கமிட்டி மீட்டிங்கை தலைவர் திரு. பாண்டியன் அவர்கள் கூட்டியிருக்கிறார்.

- குடிஅரசு - கட்டுரை - 04.01.1931

Read more: http://viduthalai.in/page-3/88692.html#ixzz3FEARnreE

தமிழ் ஓவியா said...

காரைக்குடியில் பார்ப்பனியத் தாண்டவம்

காரைக்குடியில் சுயமரியாதைப் பிரச்சாரத்திற்கு எப்படியாவது இடையூறு செய்யவேண்டு மென்று சில பார்ப்பன அதிகாரிகளும், பல வைதிகப் பணக்கார நாட்டுக் கோட்டையாரும் முயற்சி செய்து கொண்டு வரும் விஷயமாய் கொஞ்ச நாளாக நமக்கு அடிக்கடி சேதி வந்து கொண்டிருந்தது.

தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து கடைசியாக வேட்டைக்குத் தயாராகிவிட்டது என்ற பழமொழி போல் எந்த எந்த விதத்திலோ தொல்லை விளைவித்தும், அது பயன்படாமல் போகவே இப்போது அதிகாரிகளின் மூலமாகவே ஏதோ ஒரு நொண்டிச் சாக்கை வைத்து உயர்திருவாளர்கள் சொ.முருகப்பா, அ.பொன்னம் பலனார், ப. சிவானந்தன் ஆகியவர்களுக்குக் காரைக்குடி முனிசிபல் எல்லைக்குள் எவ்விதக் கூட்டம் கூட்டவோ. பிரசங்கங்கள் புரியவோ கூடாதென்று 144 தடை உத்தரவு போட்டுத் தடுக்கப்பட்டிருக்கின்றது. இது பின்னே வரப்போகும் இன்னும் கடினமான தொல்லைக்கு அறிகுறியென்றே கருதவேண்டியிருக் கின்றது. காரைக்குடியானது உண்மையிலேயே பணக்கார ஆதிக்கமும், வைதிக ஆதிக்கமும் கொண்டது என்பதற்கு அதன் முனிசிபாலிட்டியில் பெண்களுக்காவது. மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்காவது, குறைந்த எண்ணிக்கை யுள்ள சமூகத்தாருக்காவது யாதொரு பிரதிநிதி ஸ்தானமும் ஒதுக்காமல் தீர்மானம் செய்த ஏதேச்சதிகார மனப் பான்மை ஒன்றே போதுமானதாகும். அப்படிப்பட்டவர்கள் ஆதிக்கத்தில் உள்ள அந்த நாடு சுயமரியாதையைப் பற்றியும், தீண்டாதவரின் சமத்துவத்தை பற்றியும், பெண்களின் உரிமையைப் பற்றியும் பேசுவது முனிசிபல் நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுமென்று கருதி, அதிகாரிகளின் தயவைச் சம்பாதித்து 144 போடச் செய்ததில் நமக்கு ஆச்சரியமொன்றுமில்லை.

ஆனால், இந்த மாதிரி பணக்கார ஆதிக்க வாழ்வும், அதிகாரிகள் அவர்களுக்கு அடிமையாகி தலைவிரித்தாடும் பொறுப்பற்ற அதிகாரவர்க்க ஆட்சியும் நமது நாட்டில் தாண்டவமாட இன்னும் விட்டுக் கொண்டிருப்பதுவே நமக்கு மிக ஆச்சரியமாகத் தோன்றுகிறது.

அதோடு நமது நாட்டுப் போலீசாரின் யோக்கியதை நாம் அறிந்ததேயாகும். அதிலும் பார்ப்பனப் போலீசாரைப் பற்றியோ வென்றால் அறியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் அதிலும் சுயமரியாதை இயக்கத்தைக் கண்டால் அவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதேயில்லை.

உதாரணமாக, ஒரு குரங்கு கள்ளைக் குடித்து அதைத் தேளும் கொட்டி விட்டால் எப்படி அது தலை கால் தெரியாமல் கண்டதையெல்லாம் கடிக்குமோ அது போலவேதான் நமது பார்ப்பனப் போலீசு நிர்வாகம் இருக்க முடியும். போதா குறைக்கு இவர்களுடைய தயவை பைத்தியக் கார பணக்காரச் செட்டியார்மார்கள் எதிர்பார்த்து தூபம் போடுவதும் சேர்ந்து விட்டால் 144 உத்தரவு மாத்திரமல்லாமல் இன்னமும் என்ன வேண்டுமானாலும் செய்யப் பின் வாங்க மாட்டார்கள். இந்தக் காரியத்திற்குத் திருப்பத்தூர் டிவிஷனல் ஆபீசர் சம்மதித்துத் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததை நாம் கண்டிக் காமல் விட முடியவில்லை. ஆகையால் இராமநாதபுரம் ஜில்லா கலெக்டர் இதில் பிரவேசித்து உண்மையை விசாரித்து, நீதியை வழங்க வேண்டியது அவருடைய கடமையென்பதோடு, காரைக் குடியில் உள்ள பார்ப்பனியப் போலீஸ் ஆதிக்கத்தை உடனே குறைக்க வேண்டிய காரியமும் செய்ய வேண்டுமாய் வலியுறுத்துகின்றோம். குட்டி குலைத்து பட்டி தலையில் விழாமல், பார்த்துக் கொள்ள வேண்டியது யோக்கியமான சர்க்கார் கடமை என்பதையும் வலியுறுத்துகின்றோம்.
- குடிஅரசு - கட்டுரை - 08.03.1931

Read more: http://viduthalai.in/page-3/88692.html#ixzz3FEAaIF2q

தமிழ் ஓவியா said...

சுசீந்திரம் எச்சரிக்கை

சுசீந்திரம் தெருவில் நடக்கும் உரிமை சம்பந்தமாய் திருவாங்கூர் அய்க்கோர்ட்டில், அந்த ஊர் பாதைகளில் யாவருக்கும் நடக்கும் உரிமை உண்டென்று தீர்ப்புக் கிடைத்து தண்டிக்கப்பட்ட சத்தியாக்கிரகிகள் விடுதலை அடைந்தும்கூட, பார்ப்பன விஷமத்தனத்தின் பலனாய் மறுபடியும் பொது ஜனங்கள் நடக்க தடையேற்பட்டு மறுபடியும் சத்தியாக்கிரகம் நடக்க வேண்டிய அவசியம் வந்து கொண்டிருக்கிறது.

இதற்கு நாம் என்ன செய்யலாம்? வம்புச்சண்டைக்குப் போகாமல் இருக்கலாமே ஒழிய, வலியவரும் சண்டையை எப்படி விட முடியும் என்று திருவாங்கூர் அரசாங்கத் திற்குப் பணிவான எச்சரிக்கை செய்கின்றோம்.

- குடி அரசு - கட்டுரை - 04.01.1931

Read more: http://viduthalai.in/page-3/88692.html#ixzz3FEAgy72V

தமிழ் ஓவியா said...

திரு. சி.ராஜகோபாலாச்சாரி - ஈ.வெ.இராமசாமி சந்திப்பு

திருவாளர் சி. ராஜகோ பாலாச்சாரியார் 29ஆம் தேதி காலையில் சென்னையிலிருந்து ஆமதாபாத் செல்வதற்காக சென்னை சென்டிரல் ஸ்டே ஷனில் கிரான்ட் டிராங்க் எக்ஸ் பிரஸில் ஏறி வண்டியின் முகப்பில் நின்று கொண்டி ருந்தார். பல கனவான்கள் பக்கத்தில் நின்று கொண்டி ருந்தார்கள்.

திரு. ஈ.வெ. இராமசாமி 29 ஆம் தேதி காலை மங்களூர் மெயிலில் சென்னைக்கு வேறு காரியமாக வந்தார். திரு. ராஜகோபாலாச்சாரியார் நின்ற வண்டிக்கு நேராகவே திரு. ஈ.வெ. இராமசாமி வந்த வண்டியும் வந்து நின்றது. வண்டியை விட்டு இறங்கும்போது எதிரிலிருந்த கூட்டத்தைக் கவனிக்கும்போது திரு. ஆச்சாரியாரை பார்த்து ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொண்டார்கள். ஆச்சாரியாரின் வண்டியினருகில் சென்று பொதுவாக இரண்டொரு வார்த்தைகள் பேசிக் கொண் டார்கள். அங்கு பக்கத்தில் உட்கார்ந்து இருந்த திரு. பட்டாபி சீதாராமை யாவையும் கண்டு மரியாதை செய்தார். அந்தச் சந்திப்பு 5 வருஷத்திற்கு முன்னிருந்த ஒற்றுமையையும் கூட்டு வேலையையும் எல்லோருக்குமே ஞாபகப்படுத்தியது என்பதில் ஆட்சேபணை இல்லை. பிறகு வண்டி புறப்பட்டதும் திருவாளர்கள் எஸ். இராமநாதன், கண்ணப்பர் ஆகியவர்களுடன் திரு. இராமநாதன் அவர்கள் ஜாகைக்குப் புறப்பட்டு விட்டார்கள்.

இந்த விஷயம் ஏன் தெரிவிக்கப்பட்டது என்றால், பத்திரிகைகளில் ஈ.வெ.இராமசாமி அங்கிருந்த விஷ யத்தைக் குறிப்பிட்டதைப் பற்றி பலர் பலவிதமாகப் பேசியதாக தெரிய வந்ததால் எழுத வேண்டியதாயிற்று. திரு. ஆச்சாரியாரைப் பார்க்கவே அங்கு சென்றிருந்ததாக வைத்துக்கொண்டாலும் திரு. ஆச்சாரியாரைப் பார்க்கக் கூடாதான விரோதம் ஒன்றும் இருவருக்குள்ளும் கிடையாது. பார்த்ததினால் இருவர் கொள்கை யிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது என்று சொல்லவும் முடியாது.

திரு. ஈ.வெ. இராமசாமியைப் பொருத்த வரையில் தனது கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. அன்றியும் இன்றைய காங்கிரசில் சேரும் உத்தேசமும் இல்லை.

மக்கள் விடுதலை அடைவதற்குச் செல்வம் ஒரே பக்கம் சேராமல் பார்ப்பதும், ஜாதியையும், அதற்காதாரமான மதத்தையும் ஒழிப்பதும் ஆகிய தத்துவங்கள் இந்திய தேசிய காங்கிரசின் முக்கியக் கொள்கையாகும் என்ற நிலைமை ஏற்படும் போது யாருடைய தயவையும் எதிர்பாராமல் காங்கிரஸ் வாதியாயிருப்பார். ஆதலால் இதற்காக யாரும் சந்தேகப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - செய்தி விளக்கம் -01.02.1931Read more: http://viduthalai.in/page-3/88692.html#ixzz3FEAo1HZM

தமிழ் ஓவியா said...

ஜெயலலிதாமீதான சொத்துக்குவிப்பு வழக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து

கேள்வி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புபற்றி தாங்கள் எதுவுமே கூற வில்லையே?

கலைஞர்: இந்தத் தீர்ப்புபற்றி நான் கூறுவதை விட இந்த வார ஆனந்த விகடன் தீர்ப்பு தரும் பாடம் என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங் கத்தில் சில பகுதிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

அது வருமாறு:- இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு! நீதி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது; நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜெய லலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம், சொத்துக்கள் பறிமுதல் என்ற பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தின் தீர்ப்பு இந்திய அரசியல் வர லாற்றில் மிக மிக முக்கியமானது. நீதிமன்றத் தீர்ப் பால் பதவி பறிக்கப்பட்டுள்ள முதல மைச்சர் ஜெயலலிதா தான்! மாதம் ஒரு ரூபாய் வீதம் ஒருவர், 66 கோடி ரூபாய் எப்படிச் சம் பாதித்தார்? என்பதே ஜெயலலிதா மீதான இந்த வழக்கின் எளிய தர்க்கம். சாட்சிகள் மிகத் தெளி வாக உள்ள இதுபோன்ற வழக்கைக் கூட, ஒருவர் 17 ஆண்டுகளாக இழுத்தடிக்க முடியும் என்ற நிலை மிகவும் வருந்தத்தக்கது. செயற்கையாக உண்டாக்கப்பட்ட இந்தக் கால தாமதம், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழ மொழிக்கு ஆகச் சிறந்த உதாரணம்! சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடித்ததன் மூலம், ஜெய லலிதா தனக்கான அதிகபட்சத் தண்டனையை தானே வலியப் பெற்றிருக்கிறார். தீர்ப்பு வந்த நாளில், மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் தொற்றியது; பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டன; கடைகள் இழுத்து மூடப்பட்டன. ஒரு நெருக்கடி நிலைக்கான பதற்றத்துடன் இருந்தது மாநிலம். இத்தகைய சூழல் ஏற்படும் என்பதைக் கணித்து, கட்சித் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு எந்தத் தொந்தரவும் அளிக்கக் கூடாது என்ற அமைதிப்படுத்தும் அறிக்கை கூட ஜெயலலிதா தரப்பில் இருந்து வெளி வரவில்லை.காவல் துறையினரோ, ஆளும் கட்சி யினரின் வன்முறைகளை வெறு மனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

தீர்ப்பு பற்றி நடுநிலை வார ஏடாம் ஆனந்த விகடனில் வெளிவந்த தலையங்கம்தான் இது! ஆனந்த விகடன் மட்டுமல்ல; டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டில் 2.10.2014 அன்று எழுதிய தலையங்கத்தில், தண்டனை நியாய மற்றது என்று கருதினால், இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி மேல் முறையீடு செய்து கொள்வதற்கான வழிமுறை கள் நிரம்ப இருக்கின்றன. சட்டத்தின் முடிவு களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டுமென்று கட்சியின் தொண்டர்களுக்கு, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வின் தலைமை முறையாக அறிவுறுத்த வேண்டும் என்றும் விளக்கமாக எழுதியுள்ளது. கேள்வி: முக்கியமான வழக்குகளை மாநிலம் விட்டு வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவம் வேறு ஏதாவது உண்டா?

கலைஞர்: உச்சநீதிமன்றம் பல வழக்குகளை வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம் பவங்கள் உண்டு. ஏன், நான் ஆட்சிப் பொறுப்பில் முதலமைச்சராக இருந்தபோதே என் மகன் மு.க.அழகிரி மீதான வழக்கு, சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் மீதான வழக்கு களை உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு மாற்றியது. அண்மைக் காலத் திலேகூட அமித்ஷா பற்றிய வழக்குகளை குஜராத் மாநிலத்திலிருந்து மராட்டிய மாநிலத் திற்கு உச்சநீதிமன்றம்தான் மாற்றியது. ஜெய லலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றியதுகூட, 2003 ஆம் ஆண் டில், தமிழ்நாட்டில் பாரபட்சமற்ற நியாயமான தீர்ப்புக் கிடைக்காது என்ற நிலையில் பேரா சிரியர் விடுத்த வேண்டுகோளின்படி, உச்சநீதி மன்றமே நியாயமான தீர்ப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த வழக்கினை கருநாடக மாநிலத்திற்கு மாற்றியது. இந்த விவரங்களை எல்லாம் இந்து நாளேடே வெளியிட்டுள்ளது.

(முரசொலி, 4.10.2014)

Read more: http://viduthalai.in/page-3/88725.html#ixzz3FEBNGgpR

தமிழ் ஓவியா said...

எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களாம்!

எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களாம்!

இஸ்லாமிய நாடுகளிலிருந்து இந்தியாவில் தீவிரவாதம் பெருகுகிறதாம்!

அரசு தொலைக்காட்சியைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். தலைவரின் அப்பட்டமான பாசிசப் பேச்சு!

புதுடில்லி, அக்.4-_ அரசு தொலைக்காட்சியைப் பயன் படுத்தி ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய தலைவர் (சர்சங் சலாக்) மோகன் பகவத் அப்பட்டமான மதவெறி நஞ் சைக் கக்கியுள்ளார் (3.10.2014). அவர் உரை வருமாறு:

சென்ற ஆண்டிற்கு பிறகு மீண்டும் நாம் நமது ஆண்டு விழாவைக் கொண்டாடக்கூடியுள்ளோம். இந்த ஆண்டு இந்தியாவின் நிலை நமது பக்கம் திரும்பி இருக்கிறது. செவ்வாய்க்கலன் முதல் வெற்றி நமது இந்தியாவை உலகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்துவிட்டுள்ளது இது குறித்து ஒவ்வொரு இந்துவும் பெருமைப்படவேண்டும்.இந்த ஆண்டு நமது மதத் திற்கு தென்னிந்தியாவில் புத்துயிர் ஊட்டிய ராஜேந் திர சோழனின் வெற்றிக் கதைகளை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

உலக நாடுகள் பல கல்வியில் முன்னேறி இருக் கின்றன. அங்கு வளர்ச்சி உள்ளது ஆனால் அங்கு அமைதி மனித ஒழுக்கம் அந்த நாடுகளின் பண் பாடு எதுவுமில்லை. நமது நாடு வெறும் கல்வி மற்றும் பொருளதார வளர்ச்சியில் உயர்ந்தால் மாத்திரம் போதாது; நமது இந்துக்கலாச்சாரத்தின் பாதையில் செல்லவேண்டும். அதுதான் உண்மை யான வளர்ச்சி! நமது இந்துக் கலாச்சாரம் இன்று வரை பாது காப்பதால் தான் நமது நாடு உலகில் உள்ள எல்லா நாடுகளையும் விட கலாச்சாரத்தில் உயர்ந்துள்ளது. அயல்நாடுகளில் வாழும் இந்துக்கள் தங்கள் கலாச்சாரத்தை அங்கும் பரப்புகிறார்கள். அதனால் அவர்களுக்கு கவுரவம் மற்றும் மரியாதை கிடைக்கிறது, இதனால் நாம் அமைதியாக இருந்துவிடக் கூடாது நமது ரிஷிகள், உபநிடதங்கள், வேதங்கள் காட்டிய வழியில் அனைவரையும் செல்ல வலியுறுத்தவேண்டும் அதற்காக பிரச்சாரம் செய்யவேண்டும். நமது நினை வில் வேறு எந்த ஒரு நினைவு வரக்கூடாது. சில அந்நிய சக்திகள் நமது நாட்டிற்குள் புகுந்து சமூகத்தில் கலந்து பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் ஆசை வார்த்தைகள் மூலம் மக்களின் மனதை மாற்ற முயற்சித்து வருகின்றன.

நமது முன்னோர்கள் சமூகத்தின் வளர்ச்சியை அமைதியை கருதி சில கொள்கைகளை வகுத்துள் ளனர். ஆனால் அவற்றை தவறானது என்று பிரச்சாரம் மேற்கொள்ளும் சூழ்ச்சி கடந்த 60 ஆண்டு களாக நடந்து வருகிறது. நமது நாட்டில் அந்நியர் களின் படையெடுப்பால்தான் பிரச்சினை ஏற்பட்டதே தவிர இந்துமக்கள் அவர்களுக்கு என்று வகுக்கப்பட்ட வாழ்க்கை முறைகளை சீராகக் கடைப்பிடித்து வந்தனர்.

நமது நாட்டின் கலாச்சாரம் இயற்கையைப் பாது காப்பதை மய்யமாகக் கொண்டு உரு வாக்கபட்டது. ஆனால் பிற நாட்டுக் நிறுவனங்கள் நமது நாட்டில் கால் ஊன்றியது. நமது இயற்கைவளம் சீரழியத் துவங்கிவிட்டது. ஆனால் நமது நாட்டுப் பொருளா தார வளர்ச்சிக்கு சில தியாகங்களைச் செய்யவேண் டியுள்ள நிலையில் இயற்கையைப் பாதுகாக்கும் நோக் கில் அந்த நிறுவனங்கள் செயல்படவேண்டும். இதற் காக நமது பிரதமர் மோடி அவர்கள் முழுமையாகத் திட்டம் வகுத்து செயலாற்றிக்கொண்டு இருக்கிறார்.

தமிழ் ஓவியா said...


மத்திய ஆசியாவில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் இருந்து தீவிரவாதம் வளர்கிறது. இன்று அய்எஸ் அய்எஸ் என்ற தீவிரவாத அமைப்பு மிகவும் கோர முகம் கொண்ட ஓர் அமைப்பாக உருவெடுத்து வரு கிறது. இதை அனைவரும் சேர்ந்து அழித்தொழிக்க வேண்டும். வெறும் மேல்மட்ட நடவடிக்கை மூலமாக உலகம் இதை முடிவிற்கு கொண்டு வரமுடியாது. மோடி தலைமையினால் ஆன அரசு எடுக்கப் போகும் நடவடிக்கை தீவிரவாதிகள் இனி இந்தி யாவைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியாதவாறு இருக்கும் என்று நம்புகிறோம். இதனால்தான் இன்று விஜயதசமி அன்று நான் உங்கள்முன் நின்று பேசிக் கொண்டு இருக்கிறேன். நாம் இழந்து விட்ட கலாச் சாரத்தை மீண்டும் விரைவில் மீட்டெடுக்கவேண்டும். இதற்காக நாம் அனைவரும் முன்வரவேண்டும். மோடி அரசு வந்து சில மாதங்கள் தான் ஆகிறது. இந்த சில மாதங்களில் நாம் எதையும் எதிர்பார்த்து விடமுடியாது. ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தின் போது சுயம்சேவக் உறுப்பினர்களின் சேவைகளை உலகம் பாராட்டும் தூரம் அதிகமில்லை. நமது சேவக்குகள் இந்துக்களின் பாதுகாவலர்கள் என்பதை ஜம்மு காஷ்மீரில் நடந்த மீட்புப் பணிகளின்போது உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளனர். எல்லோரும் இந்துக்களே!

நமது சுயம் சேவக்குகள் நாட்டு நலனில் அக் கறை யுள்ளவர்கள், எங்கு அநீதி நடந்தாலும் தட்டிக்கேட் பவர்கள், அதேபோல் ஆபத்து என்றால் தாங்களே முன்னின்று அதை எதிர் கொள்பவர்கள், நாம் அனை வரும் இந்திய மக்களி டையே சென்று மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து செயல்படவேண்டும். காஷ்மீர் முதல் குமரிவரை உள்ள மக்கள் அனைவரும் இந்துக்களே! இந்தியாவில் உள்ளவர்கள் இந்துக்கள். அவர்கள் எந்த மதத்தில் இருந்தாலும் சரி, இந்துத்துவ கொள்கைகளை தனக்குள் எடுத்துச் செல்பவர்களே, குடியரசு என் பது மக்களுக்கானது! மக்களின் நன்மைக்காக எடுக் கப்படும் முடிவுகள்தான் சட்டமாக்கப்படுகின்றன. சில சட்டங்கள் காலப்போக்கில் செல்லாதவைகளக மாறும்போது அதை நாம் திருத்தி அல்லது புதிய சட்டங்களை இயற்றி அதை அரசியல் சாசனத்தில் சேர்க்கவேண்டும். தென்னிந்திய தீவிரவாதம் நமது நாட்டின் தெற்குப் பகுதியில் தீவிரவாதம் தற்போது தலைதூக்கி இருக்கிறது. அங்கு நமது நாட்டின் சேவகர்கள் கொலை செய்யப்பட்டு வரு கின்றனர். அந்த மாநில அரசுகள் தீவிரவாதிகளின் வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க் கின்றன. முக்கியமாக தமிழ் நாடு மற்றும் கேரளவில் தீவிரவாதிகள் தற்போது அதிகம் தங்களது வேலையை காட்டி வருகின்றனர். இது நமது உளவுத்துறை கொடுத்த அறிக்கையாகும். மேற்கு வங்கம் மற்றும் அசாமில் பிற மதத்து மக்கள் அதிகம் ஊடுருவி நமது இந்து சகோதரர் களின் தினசரி வாழ்க்கைக்கு ஆபத்தாக மாறிவிட்ட னர். அவர்களை, களையெடுக்கும் காலம் வந்து விட்டது. நாம் அரசின் பார்வைக்கு இதைக் கொண்டு செல்லவேண்டும். தற்போது நவீன சாதனங்கள் மூலமாக நமது கலாச்சாரத்தை சீரழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கயவர்களை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் விரைவில் வெளிக் கொண்டு வந்து கயவர்களை பிடித்து சட்டத்தின் பிடியில் ஒப்படைக்கவேண்டும். இல்லை யென்றால் நமது இளம் தலைமுறை யினரை சீரழித்து விடுவார்கள். இந்த நாட்டில் அனைவரும் இந்துத்துவ கொள்கையைக் கடைப் பிடிக்கும் பட்சத்தில் பேதங்கள் ஏற்பட வாய்ப் பில்லையே! அதனால்தான் கூறுகிறேன் நாம் அனைவரும் இந்து என்ற ஒரே மய்யப்புள்ளியில் இணையவேண்டும். இது தீமைகளை வென்று வெற்றியை நிலை நாட்டிய தினமாகும். நாம் இந்த வெற்றியை கொண்டாடக் கூடியுள்ளோம். இந்த ஆண்டு நாம் கொண்டாடும் வெற்றிவிழா நமது ஆட்சி மலர்ந்த பொன்னாளாகக் கொண்டாடவேண்டும். இந்துத் தர்மத்தை அது காட்டும் வழியில் வழுவாமல் நின்று வாழவேண்டும். வரும் ஆண்டுகளில் அந்நியர்களிட மிருந்து நாம் இழந்த கலாச்சாரத்தை மீட்கவேண்டும்.

_ இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தமது பாசிச உரையை நிகழ்த்தியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/88728.html#ixzz3FEBamBCp

தமிழ் ஓவியா said...

தமிழகம் ஜிகாதிகளின் உறைவிடமாம்! மோகன் பகவத்தின் அடாவடிப் பேச்சு!

There is a serious upsurge in the jehadi activities in the southern parts of Bharat, especially in Kerala and Tamil Nadu. No effective policy imperatives, efforts are visible in curbing such activities.

தென்னிந்தியா ஜிகாதிகளின் உறைவிடமாக மாறிவருகிறது. இது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும். முக்கியமாக கேரளா மற்றும் தமிழ் நாட்டில் ஜிகாதி நடவடிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தை ஆளும் மாநில அரசுகள் தீவிர வாதிகளின் வளர்ச்சி குறித்து கவலைப்படுவதில்லை.

Read more: http://viduthalai.in/page-3/88728.html#ixzz3FEBnsLlp

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கபாலம்

திருக்கண்டியூரில் உள்ள தீர்த்தத்தில் சிவன் நீராடியதால் கபாலம் நீங்கியது. இதற்கு திரு மாலுக்கு நன்றி தெரிவிக்க சிவபெருமான் தானே இவ்விடத்தில் கோயில் கொண்டார். இங்குள்ள சிவபெருமான் திருமால் அருளால் துயர் நீங்கி ய தைக் கண்டு மன மகிழ்ந்து சரஸ்வதி தேவியுடன் பிரம்மதேவர் கோவில் கொண்டுள்ளாராம்.

-வைணவர்களின் இந்தக் கதையை ஸ்மார்த் தர்கள் சைவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/88749.html#ixzz3FK9iz1Up

தமிழ் ஓவியா said...

பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில் 1948 காந்தி கொலையும், 1975 காமராசர் மறைவும் வரலாற்றுத் தகவல்கள

சென்னை, அக்.5- சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம் மையார் அரங்கில் பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில் 1948 காந்தி கொலையும், 1975 காமராசர் மறைவும் வரலாற்றுத் தகவல்கள் என்ற தலைப் பில் வழக்குரைஞர் சு.குமார தேவன் உரையாற்றினார். பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்திய நாராயணசிங் தலைமையில் துணை செயலாளர் சுப்பிர மணியன் வரவேற்றார். பொருளாளர் மனோகரன் இணைப்புரை வழங்கினார். புலவர் வெற்றியழகன், மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, மருத்துவர் க.வீரமுத்து, வை.கலையரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வழக்குரைஞர் சு.குமார தேவன் சிறப்புரையில், 1948 ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அன்று ஆர்.எஸ்.எஸ். மத வெறியர்களின் திட்ட மிட்ட சதியால் காந்தி கொல்லப்பட்டார். அந்தக் கொலை சதியில் ஆர்.எஸ். எஸ். அமைப்பினரின் தொடர்ச்சியான திட்ட மிட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்து ரைத்தார். காந்தி கொலை சதியில் வீரசவர்க்கர் மூளையாக செயல்பட்டவர் என்ப துடன் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப் பட்டவர்களில் தப்பி ஓடிய வர்களாக உள்ள மூன்று பேர்குறித்த தகவல் இன்று வரை ஏதும் வெளிவர வில்லை என்று குறிப் பிட்டார்.

கொலைவழக்கு விசார ணைகள், குற்றம் சுமத்தப் பட்டவர்கள், அவர்களின் மதவெறிப் பின்னணி கொலைக்கான நோக்கங் களாக கோட்சே குறிப்பிட் டவை உள்ளிட்ட பல் வேறு தகவல்களை எடுத்துக் கூறினார். காந்தி கொலையுண்டபோது, தமிழ்நாட்டில் சில இடங்களில் ஏற்பட்ட கல வரசூழலை அடக்குவதற்கு பார்ப்பன எதிர்ப்பாளராக இருக்கும் தந்தை பெரியார் வானொலியில் மக்களிடம் உண்மையை எடுத்துக்கூறி அமைதி திரும்ப காரண மாக இருந்ததையும், அதே நேரத்தில் மகாராட்டி ரத்தில் பார்ப்பனர்கள் காங்கிரசைவிட்டு வெளி யேற்றப்பட்டு தாக்கப்பட்ட தையும் குறிப்பிட்டார்.

1975 ஆம் ஆண்டில் அக்டோபர் 2ஆம் நாளில் கல்வி வள்ளல் காமராசர் மறைவுக்கு முக்கியக்காரண மாக இந்திரா காந்தியின் நெருக்கடிக் காலமே இருந் துள்ளது என்றும், நெருக் கடிக்காலத்தில் காங்கிர சுக்கு எதிரானவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கொடு மைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் தமிழ்நாட்டில் நெருக்கடிக்காலத்தில் காமராசரைக் கைது செய்யமறுத்த கலைஞரின் உறுதியால், திமுக ஆட்சிக் கலைப்பு, அதைத் தொடர்ந்து தலைவர்கள் கைது செய்யப்பட்டது குறித்தும், மொத்தத்தில் நெருக்கடிக்காலம் என்பது குறித்து சுருக்கமாகக் கூறும் போது, பத்திரிகைகள், நீதித்துறை, அரசு நிர்வாகத் துறை அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததைக் கூறினார். நெருக்கடிப் பிரகடனத் துக்கு காரணமாக இந்திரா காந்திமீதான வழக்கு, அவ்வழக்கில் நீதிபதி சின்கா, மேல்முறையீட்டில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய் யர் ஆகியோர் அளித்த தீர்ப்பே பெரிதும் காரண மாக அமைந்தது என்பதை விரிவாக வழக்குரைஞர் சு.குமாரதேவன் குறிப் பிட்டார். கூட்ட முடிவில் மல்லிகா ராவணன் நன்றி கூறினார்.

Read more: http://viduthalai.in/page-3/88762.html#ixzz3FK9zDlL6

தமிழ் ஓவியா said...

பெரியாரைப் பின்பற்றுவோம்!

பெரியார் என்ற சொல்லுக்கு மனிதநேயம் என்றே பொருள்! இதை அகராதியில் அச்சிட்டாலும் அதில் பிழையேதும் இல்லை.

ஆம். பெரியார் என்ற ஒற்றைச் சொல்லின் உள்ளடக்கம் மிகப் பெரியது. ஈ.வெ.ராமசாமி என்பவருக்குப் பெண்கள் அளித்த சிறப்புப் பெயர் பெரியார் என்றாலும், அப்பெயர் அவரால் தனித் தன்மையும், தனிப் பெருமையும், உயர்தகுதியும் பெற்றுவிட்டது என்பதே உண்மை!

பெரியார் என்ற தனி மனிதர் வழக்கமாக உலகில் பிறந்து, வாழ்ந்து, மறையும் சராசரி மனிதர் அல்லர். அல்லது மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் ஒரு சிலரைப் போன்றவரும் அல்லர்.

அவர் ஒரு சகாப்தம்! காலகட்டம்! சரித்திரம்! திருப்புமுனை! தீர்க்கதரிசி! உலக நாயகர்! சிந்தனைச் சுரங்கம்! ஆதிக்கம் அழித்த சமதர்மச் சிற்பி! இப்படி எத்தனையோ இலக்கணங்களுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர்! அதனால்தான், உலக அமைப்பான அய்.நா.மன்றம் இவரை இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி என்று, இவ்வுலகில் எவருக்கும் அளிக்காத பெருமையை அளித்தது.

அவர் ஒரு தொலைநோக்காளர் என்பதற்கு அவரது இனிவரும் உலகம் என்ற நூலே சான்று. அவர் ஒரு தத்துவ மேதை என்பதற்கு அவரது தத்துவ விளக்கம் என்ற நூலே சான்று. அவர் ஒரு பத்திரிகையாளர் என்பதற்கு குடியரசு, விடுதலை, உண்மை போன்ற இதழ்கள் சான்று!

அவர் ஒரு புரட்சியாளர் என்பதற்கு அவரது போராட்டங்கள் சான்று.

அவர் ஒரு சாதனையாளர் என்பதற்கு அவரது பிரச்சாரப் பயணங்களும், மேடை முழக்கங்களும் சான்று.

அவர் ஒரு கொள்கையாளர் என்பதற்கு அவரது வாழ்வே சான்று!

புரட்சி, போராட்டங்கள் நடத்தி தன் வாழ்விலே விடிவும் கண்டு, விளைவுகளையும் கண்டவர் பெரியார் மட்டுமே!

தன்னைப் போலவே, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உணர்வுள்ளவன், உரிமையுள்ளவன், மானமுள்ளவன், மதிக்கப்பட வேண்டியவன், சமமானவன், உறவு கொண்டு வாழ வேண்டியவன். ஆண்டான் அடிமை இல்லை; தீண்டத்தகாதவன், வணங்கத்தக்கவன் இல்லை! பிறப்பொக்கும் எல்லா மனிதர்க்கும் என்பதே இவரது கொள்கை. இவற்றிற்காகவே வாழ்ந்தார்; இவற்றிற்காகவே போராடினார்.

எனவேதான் பெரியார் என்றால், மனிதநேயம் என்று சொன்னேன்!

ஆனால் ஆதிக்கவாதிகள், குறிப்பாக ஆரியப் பார்ப்பனர்கள், பெரியாரின் பரந்துபட்ட இந்த உணர்வைச் சுருக்கி, குறுக்கிக்கூட அல்ல, மறைத்து, குறைத்து, மாற்றி, திரித்துக் கூறினர். பெரியாரின் பெருமையை, புகழை, சிறப்பை, புரட்சியை பிறர் அறியாமலிருக்கும்படிச் செய்தனர்; செய்தும் வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக, செப்டம்பர் மாதம் பிறந்த தலைவர்களைப் படம் போட்டுக் காட்டிய தினமணி சிறுவர் மணி, பெரியார் படத்தைப் போடவில்லை. முதலில் போடவேண்டிய பெரியாரின் படத்தை முற்றாக நீக்கினர். சிறுவர்கள் பெரியாரை அறியக்கூடாது என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்; கவனமாக இருக்கின்றனர்.

பெரியார் என்றால் கடவுள் இல்லை யென்பார்; பார்ப்பானைத் திட்டுவார் என்ற அளவில் பெரியாரை பிறர் அறியும்படிச் செய்கின்றனர்.

ஆனால், இவ்வளவுதான் பெரியாரா? பிஞ்சுகள் சிந்திக்க வேண்டும்; தெரிந்துகொள்ள வேண்டும்.

பெரியார் செய்தது இவை மட்டுமென்றால், அய்.நா.மன்றம் எப்படி உலகில் யாருக்கும் அளிக்காத பெருமையை _ பட்டத்தை பெரியாருக்கு அளித்துச் சிறப்பித்திருக்கும்? என்ற வினாவோடு பெரியாரைத் தேடவேண்டும்; பெரியாரின் சிந்தனைகளைக் கிளற வேண்டும்; தோளிட வேண்டும்.

அப்படிச் செய்தால் பெரியாரின் பல்துறைச் சிந்தனைகள், பணிகள், போராட்டங்கள், புரட்சிகள் வெளிப்படும்.

வெளிப்பட்டவற்றை விடாது பிடித்துச் சிந்தித்தால், தெளிவு, துணிவு, ஒழுக்கம், நாணயம், நேர்மை, தொண்டு, சமத்துவம் போன்ற பல உயரிய கொள்கைகள் நம்முள் குடிகொள்ளும்; நம்மை வழிநடத்தும்.

பெரியாரின் சிந்தனைவழிச் சென்றால், தன்மான உணர்வு தானே வரும். தன்மான உணர்வு தலைதூக்கினால், நம் இழிவு, தாழ்வு, அறியாமை எல்லாம் அகலும். நாமும் மனிதன், நாம் யாருக்கும் அடிமையல்ல என்ற உண்மை உள்ளத்துள் பதியும். விழிப்பு, துணிவு, தெளிவு, காரணம் கேட்கும் சிந்தனை வரும்போது நம் வாழ்வு சிறக்கும் _ உயரும். நம் தலைமுறை தலைநிமிரும்.

பெரியார் வழி நடக்கும் பிஞ்சுகள், வாழ்வில் என்றும் வீழ்வதில்லை. எனவே, பெரியாரைப் பின்பற்றுவோம், வாழ்வில் சிறப்போம்; பிறர் வாழ்வு சிறக்கவும் உழைப்போம்! இதுவே இக்காலத்தில் நம் உள்ளத்தில் கொள்ள வேண்டிய உறுதி!

தமிழ் ஓவியா said...

மில்டனின் சொல்லாற்றல்

லண்டனில் பிறந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றவர் மில்டன். கவிஞர் மட்டுமன்றி, சிறந்த மேதையாகவும் விளங்கியவர். மில்டனின் எழுத்துகளை, காலத்தால் அழியாத எழுத்துகளும் அறிவும் செய்து கொண்ட திருமணம் என்று வோர்ட்ஸ்வொர்த் கூறியுள்ளார்.

மில்டன் பெரும் பிரச்சினைகள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். முதலாம் சார்லஸ் மன்னன் கொல்லப்பட்டது சரியே என்று மில்டன் கூறினார். இந்தக் கூற்றைக் கேட்டுக் கோபமடைந்தார் சார்லசின் மகன் இரண்டாம் ஜேம்ஸ். மில்டனை அழைத்து, முதலாம் சார்லஸ் மன்னரின் கொலையினை நியாயப்படுத்துவதால்தான் உங்கள் கண்கள் குருடாகி விட்டன. உங்களுக்கு தெய்வம் தந்த தண்டனை இது என்றார் மன்னர்.

இதனைக் கேட்ட மில்டன், நடக்கும் சில துரதிர்ஷ்டவசமான நிகழ்ச்சிகள் தெய்வ கோபத்தின் குறியீடுகள் என்று மேன்மை பொருந்திய மன்னர் நினைத்தால், தங்கள் தந்தையாரின் முடிவு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அட, எனக்காவது 2 கண்கள் மட்டும்தான் போயின; உங்கள் தந்தைக்கு தலையே போய்விட்டதே என்றாராம்.